Powered By Blogger

Sunday, November 25, 2018

ஒரு காமிக்ஸ் எழுச்சி !!

நண்பர்களே,

வணக்கம். அதிசயங்கள் ஓய்வதில்லை! போன சனி மாலை ‘டொய்ங்‘ என்ற ஓசையோடு எனது செல்போனில் SMS தகவலொன்று பதிவானது. மறுக்கா ஏதாச்சும் ஜவுளிக்கடையிலிருந்து ஆஃபர் சார்ந்த சேதியாகவோ; அல்லது க்ரெடிட் கார்டின் பாக்கியைக் கட்டாங்காட்டி உன்னையே தூக்கிப் போகவா ? என்ற மாதிரியான நினைவூட்டலாகவோ இருக்குமென்ற நினைப்பில் அசுவாரசியமாய்ப் பார்த்தால் – பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து அவசர அழைப்பு என்றிருந்தது! இது என்னடா புதுக் கூத்து ? என்றபடிக்கே மண்டையைச் சொறிய – திங்கட்கிழமை பதிவுத்தாலில் ஒரு நோட்டீஸும் வந்து சேர்ந்தது. அடித்துப் பிடித்து, செவ்வாய் கிழமை காலை மதுரையிலுள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்குப் போனால் – செம கூட்டம்! ‘சரி, இன்றைய பொழுது இங்கே தான்!‘ என்றபடிக்கே தேவுடா காக்க, சுமார் 4 மணி நேரக் காத்திருப்புக்குப் பின்பாய் உள்ளே கூப்பிட்டு விட்டார்கள் ! எனக்கோ, இது போன வருடம் நான் இத்தாலியில் சிலபல வில்லங்கப் பாட்டிகளிடம் பறிகொடுத்திருந்த பாஸ்போர்ட் தொடர்பான விசாரணையிது என்பது மட்டும் மேலோட்டமாய்த் தெரிந்திருந்தது. “எவனாச்சும் நம்ம கடவுச்சீட்டைக் கொண்டு போய் ஏதாச்சும் வில்லங்கம் பண்ணித் தொலைச்சு, அது நம்ம சொட்டைத் தலைக்கு ஏழரையைக் கொண்டு வந்திருக்குமோ?” என்றெல்லாம் கலர் கலராய்ப் பீதிப்படலங்கள் தலைக்குள் படையெடுக்க, விசாரணை அதிகாரியானதொரு லேடி போன வருடத்து நிகழ்வுகளைப் பற்றி விசாரித்தார். நானும் சொந்தக்கதை, சோகக்கதையையெல்லாம் கொட்டிய கையோடு – அங்கே மிலன் தூதரகத்தில் வாங்கிய தற்காலிகப் பாஸ்போர்ட்டைக் காட்டினேன். அதையும் வாங்கிப் பரிசீலித்தவர் – ‘உங்க கிட்டே இருக்கிற மொத்த பாஸ்போர்ட்களையும் எடுத்துக்கிட்டு அடுத்த working day-ல் வந்து பாருங்க!‘ என்றபடிக்கு என்னை அனுப்பி விட்டார். 

'இது என்னடா வம்பாக் கீதே?' என்றபடிக்கு ஊர் திரும்பி, பீரோவில் தூங்கிக் கொண்டிருந்த 1985 முதலான பாஸ்போர்ட்களைத் தேடியெடுத்தேன் ! சும்மா கறுகறுவென்ற கேசம் தலைநிறைய ஆக்ரமித்திருந்த 1985-ன் பாஸ்போர்ட்டில் துவங்கி, அடுத்த 30+ ஆண்டுகளுக்குள்ளான பல்வேறு காலாவதியான / காலியாகிப் போன பாஸ்போர்ட்களைப் புரட்டப் புரட்ட – அவற்றிலிருந்த ஃபோட்டோக்கள் வாழ்க்கையின் / வழுக்கையின் பரிணாம வளர்ச்சியை பறைசாற்றியது போலிருந்தது! பெருமூச்சோடு அவற்றைத் தூக்கிப் பைக்குள் அடுக்கிக் கொண்டு, மறுநாள் மிலாடி நபியாக இருந்ததால் – வியாழன்று மறுபடியும் ‘சலோ மதுரை‘ என்று புறப்பட்டேன். திரும்பவும் அதே ஆபீஸ்; அதே வாட்டம் நிறைந்த பல மாவட்ட மக்கள் நெரிசல்; அதே ஜன்னலோர தேவுடாப் படலம் என்று எனது திருமணநாள்ப் பொழுது ரம்யமாய்த் துவங்கியது!! இம்முறை சித்தே முன்ஜாக்கிரதையாய் கையிலொரு முரட்டு காமிக்ஸ் தொகுப்பை எடுத்துச் சென்றிருக்க – நேரம் மெதுமெதுவாய் ஓடிடத் தொடங்கியது ! மதியம் வரைக்கும் என்னைக் கூப்பிடக் காணோம் ; கையிலிருந்த புக்குமே ஒருவித மொக்கையாகத் தொடர – தூக்கம் தான் கண்ணைச் சுழற்றியது! செல்போனையும் உள்ளே பயன்படுத்தக் கூடாதென்பதால், நெட்டை உருட்டவும் வழியின்றிப் போக, ஏதோ தகவல் தொடர்புகளற்ற கஜா தாக்கிய பூமியில் இருப்பது போல்ப்பட்டது ! மதியம் பக்கத்திலிருந்த ஹோட்டலில் வரட்டி போலிருந்த 2 சப்பாத்திகளை உள்ளே தள்ளிய கையோடு மறுக்கா காத்திருப்பைத் தொடர, என்னோடு குந்தியிருந்த ஒவ்வொருவராய் வேலை முடிந்து கிளம்பத் துவங்கினர். நாலரை மணிவாக்கில் பார்த்தால் அங்கே எஞ்சியிருந்தது நான் மாத்திரமே ! ‘கிழிஞ்சது போ…. இன்று போய் நாளை வா!‘ என்றாகிடுமோ என்ற பீதியுடன் நான் திருட்டு முழி முழித்து நிற்க,ஒரு மாதிரியாக என்னை உள்ளே அழைத்தார்கள் ! சிறுகச் சிறுக அதே அதிகாரி விளக்கிய பின்னே தான் புரிந்தது சேதி : ஒன்றரையாண்டுகளுக்குப் பிற்பாடு, இத்தாலிய போலீஸார் வேறு ஏதோ திருட்டுக்களைப் புலனாய்வு செய்த சமயம், அதே வில்லங்க பாட்டிமார்கள் வசமாய் அகப்பட்டிருக்கின்றனர் போலும். அவர்களது வீட்டைச் சோதனை போட்ட போது, எனது பாஸ்போர்ட்(கள்) உட்பட ஏகப்பட்ட தேட்டை சிக்கியுள்ளது! (Of course – என்னிடம் லவட்டிய பணத்தை பாட்டிமாக்கள் அன்றைக்கே ஸ்வாஹா பண்ணியிருப்பார்கள் என்பதால் அது கிடைத்திருக்க வாய்ப்பில்லை தான்!) So பாஸ்போர்ட்களை இத்தாலிய போலீஸார் முறைப்படி அங்குள்ள தூதரகங்களில் ஒப்படைக்க, அவர்களும் இங்கே மதுரைக்கு forward செய்துள்ளனர். ஆக லவட்டப்பட்டவற்றை உரிய விசாரணைக்குப் பின்பாய் திரும்ப ஒப்படைக்கவே என்னைக் கூப்பிட்டுவிட்டிருப்பது புரிந்தது ! மாலை ஐந்து மணி சுமாருக்கு ‘ஈஈஈஈ‘ என்ற இளிப்போடு புறப்பட்டவனுக்கு இத்தாலியின் போலீஸார் மீது எக்கச்கக்க மரியாதை துளிர்விட்டிருந்தது! என்னயிருந்தாலும் நமது ரேஞ்சரின் தேசமல்லவா? அங்கே சட்ட பரிபாலனம் நிச்சயமாய் நம்மவர் போட்டுக் காட்டியிருக்கும் கோடுகளை ஒட்டியே இருந்திடும் போலும் என்று நினைத்துக் கொண்டேன் ! So வாரத்தின் 2 தினங்களை மதுரையில் ஒரு அரசுத்துறையின் சேரைத் தேய்ப்பதிலேயே செலவிட்டு விட்ட கவலை ஒருபக்கமிருப்பினும், பாட்டிமாக்களிடமிருந்து மீண்ட பாஸ்போர்ட்கள் மகிழச் செய்தன ! Viva Italia !!!

Moving on கடந்த ஒரு வாரமும் காலத்தில் பின்நோக்கியதொரு பயணம் செய்த மாதிரியான உணர்வைக் கொணர்ந்தது - இம்முறையோ - இங்கிலாந்தின் புண்ணியத்தினில் ! குறிப்பாய்ச் சொல்வதானால் உபயம் : The Action Special!! இன்றைக்கு பிரான்கோ-பெல்ஜியம்; பஜ்ஜியும்-சொஜ்ஜியும் என்று எங்கெங்கெல்லாமோ சுற்றித் திரிந்தாலுமே – நமது முத்து காமிக்ஸிற்கும் சரி; லயனிற்கும் சரி - துவக்கப் புள்ளியானது பிரிட்டனின் காமிக்ஸ்களில் தானே ? ஆரம்ப நாட்களது நமது அத்தனை ஆரவார ஹிட்களுமே Fleetway குழுமத்தின் பலரகப்பட்ட கதைகளின் தமிழாக்கங்கள் தான் என்பதில் ஏது இரகசியம் ?

- இரும்புக்கை மாயாவி

- CID லாரன்ஸ் டேவிட்

- ஜானி நீரோ

- ஸ்பைடர்

- இரும்பு மனிதன் ஆர்ச்சி

- இரட்டை வேட்டையர்

- இரும்புக்கை நார்மன்

- ஜான் மாஸ்டர்

- செக்ஸ்டன் ப்ளேக்

- விச்சு & கிச்சு

- ஜோக்கர்

- ஒற்றைக் கண் ஜாக்

- மர்ம மண்டலம்

- Mr. Z

- ஸ்பைடர் குள்ளன்

-குண்டன் பில்லி 

- அதிரடிப் படை

- பெருச்சாளிப் பட்டாளம்

etc... etc...

என்று அவர்களது கதைக்களஞ்சியங்களிலிருந்து நாம் சேகரித்து ரசித்துள்ள தொடர்களுக்குத் தான் எத்தனை ரம்யம் ! ஆனால் மெதுமெதுவாய் நமது வயதுகளும், ரசனைகளும் கூடிப் போக – சிறுகச் சிறுக இத்தாலிய சாகஸங்கள் + ப்ரான்கோ-பெல்ஜியப் படைப்புகள் நமது செல்லப்பிள்ளைகளாகத் தொடங்கினார்கள்! And அதன் பின்விளைவாய் பிரிட்டனின் நேர்கோட்டுக் கதைகளெல்லாமே – ஏதோவொரு தூரத்து நாளின் ஞாபகங்களாய் மாத்திரமே நமக்கு உருமாறிடத் தொடங்கி விட்டன ! 

And கொடுமையோ -- கொடுமை : இங்கிலாந்தின் காமிக்ஸ் மார்க்கெட்டும் கழுத்தை தேய்ந்து கட்டெறும்பாய் இழைத்துப் போயிருந்தது ! முன்பெல்லாம் - இங்கிலாந்துக்கு வேறு பணிகளின் நிமித்தம் போனாலும், அங்குள்ள அங்காடிகளில்  ; புத்தகக் கடைகளில் குவிந்து கிடக்கும் காமிக்ஸ் இதழ்களை பராக்குப் பார்ப்பது அத்தனை ரம்யமான அனுபவமாய் இருப்பதுண்டு ! ஆனால் அங்கும் (காமிக்ஸ்) வாசிப்பின் மீதான ஈர்ப்பு சரியத் துவங்கிட, எக்கச்சக்கமான இதழ்கள் மூட்டை கட்டப்பட்டன ! So பரிதாபமாய்க் காட்சி தந்து வந்தது பிரிட்டிஷ் காமிக்ஸ் சந்தையானது ! இந்த நிலையில் தான் இங்கிலாந்தின் முன்னணிப் பதிப்பகமான Rebellion Publishing, காணாமலே போகத் துவங்கியிருந்த 1960s...’70s' & 80s' களின் Fleetway கதைகளை / தொடர்களை தம் தேசத்துப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வைக்கும் முயற்சியாகவும் ; பெருசுகளின் nostalgia மோகத்துக்குத் தீனி போடும் விதமாகவும் கையில் எடுத்திருந்தனர் – வெகு சமீபமாய்! Fleetway குழுமத்தினை வெவ்வேறு பதிப்புலக ஜாம்பவான்கள் வாங்கி / விற்று / கைமாற்றியிருக்க –இறுதியாய் சிலபல முக்கிய தொடர்களின் உரிமைகள் Rebellion வசம் வந்து சேர்த்துவிட்டன ! Black & White ஆல்பங்களாகவே இந்த மறுபதிப்புத் தொகுப்புகளை அவர்கள் திட்டமிட்டிருந்தாலும் – இயன்றமட்டுக்கு சித்திரங்களைத் துல்லியமான, மெருகுடன் வழங்கிட வேண்டுமென்ற உத்வேகத்தில் ரொம்பவே மெனக்கெட்டிருந்தனர் ! So 

இது தொடர்பான செய்திகள் காதில் விழுந்த பிற்பாடு, இருப்புக் கொள்ளவில்லை எனக்கு ! எங்கெங்கோ நாம் சுற்றித் திரிந்தாலும், நமது நதிமூலம் பிரிட்டனே எனும் போது, Rebellion நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளத் துவங்கினேன் - அவர்களது மறுவருகைக்கு ஒரு சலாம் போடும் விதமாய் !  அதைத் தொடர்ந்து சென்றாண்டு இலண்டனில் நடந்த புத்தக விழாவின் போது அவர்களை சந்தித்தது ரொம்பவே அற்புதமானதொரு அனுபவம் ! இந்த Fleetway மறுபதிப்புப் பணிகளை முன்நின்று கவனித்து வரும் நிர்வாகியும் – நம்மைப் போலவே அந்நாட்களில் ஸ்பைடரையும், ஆர்ச்சியையும், அதிரடிப்படையையும் படித்து, ரசித்து, வளர்ந்து வந்ததொரு அதிதீவிர காமிக்ஸ் காதலர்  போலும் ! ஒரு அரைமணி நேரத்துக்கு அவரோடு பேசியது – ஒரு முன்னணிப் பதிப்பகத்தின் டாப் நிர்வாகியோடு உரையாடிய உணர்வைத் துளியும் தந்திடவில்லை ; மாறாக – நாடி நரம்பெல்லாம் பிரிட்டிஷ் காமிக்ஸ் மீதான காதலோடு வாழ்ந்து வரும் ஒரு ஜாம்பவானுடன் ஜாலியாகப் பொழுதைக் கழித்த சந்தோஷமே மேலோங்கியது ! நாம் அந்நாட்களில் வெளியிட்டிருந்த Fleetway தொடர்களைப் பற்றி நானும் அள்ளி விட, ‘அட... இத்தனை பிரிட்டிஷ் படைப்புகள் உங்கள் மண்ணில் உலவியுள்ளனரா ?‘ என்று விழிகள் விரியக் கேட்டு வைத்தார் ! அந்தச் சந்திப்பின் நீட்சியாய், நமது துவக்கப் புள்ளிகளுக்கு சிறிதேனும் மரியாதை செய்திடும் விதமாய் ஒரு Fleetway ஸ்பெஷல் இதழைத் தயார் செய்திட வேண்டுமென்ற உத்வேகம் எனக்குள் ! எந்தவொரு template-ம் அல்லாத ஜம்போ காமிக்ஸ் தான் இதற்கு வாகான களமென்று தீர்மானித்தவனாக “The Action Special”-ஐத் திட்டமிட்டேன்!

அவர்களது மறுபதிப்புகளுள் முதலாவதாய் அமைந்திருந்த “ஒற்றைக்கண் ஜாக்” நமது மினி லயனிலும் ஏற்கனவே நமக்கு அறிமுகமான தொடரே என்பதால் வேகமாய் ‘டிக்‘ அடித்தேன்! அவர்களோ ஒரு 128 பக்க நீள இதழினை இந்த முரட்டு NYPD காவலருக்கென ஒதுக்கியிருந்தனர் ! ஆனால் நமக்கோ கொஞ்சம் புளியோதரை; கொஞ்சம் லெமன் ரைஸ்; கொஞ்சம் தயிர் சாதம் என்று கலந்து கட்டியடிக்கப் பிடிக்குமென்பதால் – “எச்யூஸ் மீ... ஒரு கூட்டணி இதழாய் அமைத்துக் கொள்ள அனுமதிப்பீர்களா?” என்று கேட்டு வைத்தேன் ! துளியும் தயக்கமின்றி – ”ஓ... யெஸ்! கதைத் தேர்வுகளைச் செய்து விட்டுச் சொல்லுங்கள் !” என்று பதில் போட்டார்கள்! அப்போது தான் அவர்களது அடுத்த புராஜக்டின் அறிவிப்பும் வெளியாகியிருந்தது! 

The Thirteenth Floor” என்ற பெயரில் ஒரிஜினலாய் வெளியான கதைகளை நாம் “மர்ம மண்டலம்” என்ற பெயரில் முயற்சித்திருந்தோம் – திகில் காமிக்ஸில் ! அந்தத் தொடரும் பிரிட்டனில் மறுபதிப்பாகிடவுள்ள சேதி தெரிந்தவுடன் – அதனையே நமது இதழின் கதைத்தேர்வு # 2 ஆக்கினேன்! உங்களில் எத்தனை பேருக்கு அந்தத் தொடர் நினைவுள்ளதோ - தெரியலை; ஆனால் செம புதிரான concept & கதைக்களம் என்பது அதனைப் படித்திருப்போர் அத்தனை பேருமே அறிவர் ! எனக்கும் அந்தத் தொடர் ஒரு personal favorite என்பதால் ‘சட்‘டென்று டிக் # 2 போட்டு வைத்தேன்! நாம் அதைத் தேர்வு செய்திருந்த வேளையில், இங்கிலாந்தில் அந்த இதழ் வெளியாகிட நிறையவே அவகாசமிருந்தது. பொதுவாய் இது மாதிரியான சூழல்களில், அங்கே இதழ் வெளியான பிற்பாடே டிஜிட்டல் கோப்புகளை நம்மோடு பகிர்ந்திடுவர் ! ஆனால் நாம் Fleetway சமுத்திரத்தில் காலமாய் மூழ்கிய முட்டைக்கண்ணர்கள் என்பதால் – இந்தத் தொகுப்புகளின் file-கள் சகலத்தையும் முன்கூட்டியே அனுப்புவதில் துளியும் தயக்கம் காட்டிடவில்லை ! 

M.A.C.H. 1” என்ற ஒரிஜினல் பெயருடன் அவர்களது மறுபதிப்பின் இன்னுமொரு திட்டமிடல் என் கண்ணில்பட, அதுவுமே நாம் மினி லயனில் வெளியிட்ட சாகஸம் என்று நினைவுக்கு வந்தது! “விடாதே... அதையும் அமுக்கு!!” என்று தயாரானேன்! So 3 வெவ்வேறு பாணிகளிலான தொடர்கள் என்ற combo தயாராய்பட்டது ! சன்னமாய் கார்ட்டூனும் இருந்தால் படிக்க சற்றே இலகுவாய் இருக்குமென்று தோன்றிட – “பலமுக மன்னன்” என்ற பெயரில் தமிழில் வெளிவந்த FACEACHE தொடரானதும் Rebellion-ன் மறுபதிப்புத் திட்டமிடலில் இருப்பதைச் சுட்டிக் காட்டினார்கள்! அப்புறமென்ன – “ரப்பர் மண்டையன் ரிக்கி” என்ற பெயர்சூட்டலோடு இந்தப் பொடியனையும் இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டேன்! Thus concluded the திட்டமிடல் for The Action Special!

இந்தச் சமாச்சாரங்களெல்லாம் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பாகவே அரங்கேறியிருக்க, கதைகள் சகலமுமே அப்போதே கைக்கு வந்து,   மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டு பீரோவினுள் கிடந்தன ! அடுத்தடுத்த இதழ்கள்; பணிகள் என்ற ஓட்டத்தில் சுத்தமாய் ஞாபகத்திலிருந்து Action ஸ்பெஷல் விலகியிருந்தது – போன மாதம் வரையிலும் ! அட்டைப்படத்தை உருவாக்கிடும் நேரம் வந்த போது தான் உதைக்கத் துவங்கியது ! பெரும்பாலும் Fleetway-ன் வாராந்திர காமிக்ஸ் பக்கங்களின் தொகுப்புகளை ஒன்றிணைத்து இதழாக்கிடும் போது ஒரிஜினல் அட்டைப்படம் என்று எதுவுமேயிருப்பதில்லை ! So அவை சகலத்துக்குமே நமது ஓவியர் தான் அந்நாட்களில் அட்டைப்பட டிசைன் போட்டிருப்பார் ! ஆனால் இப்போதோ – ஏவோவொரு கோவிலில் சாமி சித்திரங்கள் வரையும் கான்டிராக்டில் நமது ஓவியர் சில மாதங்களாக பிசியாகயிருக்க – என்ன செய்வதென்ற ரோசனையில் மூழ்கினேன். Rebellion பயன்படுத்திய அட்டைப்பட டிசைன் நமக்கு அத்தனை சுகப்படாது என்பதை ஒரே நொடியில் அனுமானிக்க முடிந்ததால் – அதன் நிழலில் தஞ்சமடைய சாத்தியப்படவில்லை ! அப்புறமாய் அதன் நடுநாயகமாயிருந்த ஒற்றைக்கண் ஜாக்கை மட்டும் லவட்டிக் கொண்டு, பின்னணிகளை இங்கும், அங்குமாய்த் தேற்றிட முற்பட்டோம் ! இறுதியில் தயாரான டிசைன் – நொடியில் Rebellion-ன் சம்மதத்தை ஈட்டியது! இதோ பாருங்களேன்!

 தொடர்வன – உட்பக்கங்களது preview-களும்!




இவற்றினுள் எடிட்டிங்கின் பொருட்டு உட்புகுந்த வேளையில் தான் ஏகமாய் nostalgia ! ஆங்கிலத்திலேயே கதைகள் இருப்பதால், புரிந்து கொள்ளல் சுலபமாகிடல்; சந்து-பொந்து; இண்டு-இடுக்கு என்றெல்லாம் சுற்றிடாது நேர் கோடாய்ப் பயணிக்கும் கதைகள்; பார்த்து, பரிச்சயப்பட்ட சித்திர பாணிகள் என்று ஏகப்பட்ட plus points இங்கே கண்ணில் பட்டன ! இந்த black & white கதைகளை, ஜாலியாய் நியூஸ்பிரிண்ட்டில் வெளியிட்டு,  நெஞ்சை நிமிர்த்தித் திரிந்த நாட்களை எண்ணி ஒரு ஏக்கப் பெருமூச்சை உதிர்த்தேன்! நமது வயதுகளும் சரி, ரசனைகளும் சரி இன்றைய அளவுகளை எட்டியிரா சமயங்களில் தான் வாழ்க்கை எத்தனை சுலபமாயிருந்தது?! பெருமூச்சோடே உலாவிய நொடியில் லேசாய் சில கேள்விகளும் எட்டிப் பார்க்கத் துவங்கின!

- 1. இன்றைய சூழலில் அந்நாட்களது பிரிட்டிஷ் காமிக்ஸ் தொடர்கள் / பாணிகள் ஈர்ப்பைத் தக்க வைக்குமென்று எதிர்பார்த்திடல் practical தானா ? மாயாவி; இஷ்பைடர் போன்ற மறு-மறு பதிப்புகளைப் பற்றிய கேள்வியல்ல அது ! மாறாக – நாம் அதிகம் துவைத்துத் தொங்கப் போட்டிரா second-line பிரிட்டிஷ் நாயகர்களைச் சார்ந்த வினா இது! What would be your general thoughts folks?

- 2. The Action Special உங்கள் கைகளை எட்டியான பின்னே, அதனைப் போலவேயொரு combo இதழை ஆண்டுக்கொரு தபா திட்டமிடலாமா ? Maybe – இதே நாயகக் கூட்டணியென்றில்லாது – வேறு சிலவற்றோடு ?

- 3. பிரான்கோ – பெல்ஜியப் படைப்புகள்; இத்தாலிய கிராபிக் நாவல்கள் என்று ஏதேதோ ஆறுவழிச் சாலைகளில் பயணித்துப் பழகியான பின்னே, இந்தப் பிரிட்டிஷ் பாணிகளை எவ்விதம் ஒப்பிடுவீர்களோ? என்றதொரு curiosity என்னுள் ! How would this style of story-telling rank in comparison?

இக்கேள்விகளைக் கேட்க காரணங்கள் இல்லாதில்லை folks! இங்கிலாந்தில் இந்த மறுவருகைக்கு செமையான வரவேற்பு கிட்டி வருவதால் – Fleetway-ன் offbeat கதைகளை / தொடர்களைத் தோண்டிப் பிடித்து, மெருகூட்டிப் பதிப்பிட்டு வருகிறார்கள் ! மேற்கொண்டும் எக்கச்சக்க காமிக்ஸ் பக்கங்களுக்கான உரிமைகளை Rebellion வெகு சமீபமாயும் கொள்முதல் செய்துள்ளது ! Misty என்ற திகில் வாரயிதழின் கதைகள் சில; Valiant-ல் வெளியான தொடர்களின் தொகுப்புகள் ; Scream ; Jinty ; Roy of the Rovers என்று ஏராளமான ஆல்பங்களைக் குவித்து விட்டனர். So நமக்குமே இவற்றின் மீது ஆர்வம் துளிர்விட வாய்ப்பிருப்பின் – தொடரும் ஆண்டுகளின் திட்டமிடலில் அவற்றை இணைத்துக் கொள்ள இயலும் தான் ! இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் guys ? இவற்றையெல்லாம் நாம் தாண்டித் தட தடத்து விட்டோமா ? அல்லது - இவற்றுள் மூழ்கிடும் ஆற்றல் இன்னமும் நம்மிடம் உள்ளதென்பீர்களா ? 

பாருங்களேன் - கொட்டிக் கிடக்கும் பிரிட்டிஷ் காமிக்சின் இரண்டாம் வருகையின் பிரதிநிதிகளை !! 











Rebellion முன்னெடுத்திருக்கும் இந்த அதகள முயற்சி, பிரிட்டிஷ் காமிக்ஸ் வாசகர்களை செமத்தியாய்க் குதூகலிக்கச் செய்துள்ளது !  என்றோ ஒரு தூரத்துப் பழம்நாளில் படித்த கதைகளையெல்லாம் தற்சமயம் செம தரத்தில், மறுக்கா தரிசிப்பதை பெருசுகள் ரவுண்ட் கட்டிச் சிலாகிக்க ; சூப்பரஹீரோக்களையே ரசித்து வந்த இளசுகளுமே இந்த black & white ஜாலி கதைகளை ரசித்து வருகின்றனர் !! நாமும் இந்தப் புரட்சியில் ஒரு சிறு அங்கமாகிடல் சுகப்படுமா ? Would love to hear your thoughts !!

Before I sign out - சில ஜாலியான updates :

  1. நமது பிரார்த்தனைகளின் பலனோ ; அவரது ஆண்டவரின் கருணையோ - அல்லது இரண்டின் கலவையோ - தெரியாது ; ஆனால் நமது இத்தாலிய ஓவியர் இப்போது நலமாயுள்ளார் ! ஏகப்பட்ட பரிசோதனைகளுக்குப் பின்பாய் அவருக்கு சிறுநீரகத்தினில் நேர்ந்துள்ள பாதிப்பு - புற்று நோயல்ல என்று கண்டுள்ளனர் ! So முறையான வைத்தியங்கள் செய்து இப்போது நலமாகி, மீண்டும் நமக்காக படம் போடத் துவங்கி விட்டார் !! 2019-ல் அவரை நாம் அடிக்கடி சந்திக்கவிருக்கிறோம் !! 
  2. திண்டுக்கல் நகரில் இம்மாத இறுதியில் புத்தக விழா துவங்குகிறது ! இம்முறை நாமும் அங்கே பங்கேற்கிறோம் ! நமது ஸ்டால் நம்பர் 81 ! இங்கு நமக்கு இதுவொரு புது அனுபவமே என்பதால் - என்ன எதிர்பார்ப்பது என்ற யூகங்களின்றிப் பயணிக்கிறோம் ! Fingers crossed !!
  3. டிசம்பரில் இறுதியில் கும்பகோணம் நகரில் நடைபெறவுள்ள புத்தக விழாவிலும் பங்கேற்க எண்ணியுள்ளோம் ! Again - புதுக் களம் நமக்கு !! 
  4. அச்சிட்டதே குறைவான பிரதிகளே என்றாலும், அதன் இரண்டாம் தொகுப்பு வெளியாவதற்கு முன்பாகவே - ஜெரெமியா முதல் இதழ் விற்றுத் தீர்ந்து விட்டது !! Phew !!! 
  5. And "மின்னும் மரணம்" கூட ஒரு மாதிரியாய் 20-க்குக் குறைவான கையிருப்பை எட்டி விட்டது !! So கங்காரூ குட்டியைத் தூக்கித் திரிவது போல இனி தொடரும் புத்தக விழாக்களுக்கு "மி.ம" பிரதிகளைத் தூக்கித் திரிய அவசியப்படாது !! Phewwwwww !!
  6. எங்களது திருமண நாளினில் வாழ்த்துச் சொல்லிய நண்பர்கள் அனைவருக்கும் belated நன்றிகள் ! அன்றைய பொழுது முழுவதும் சேர்தேய்ப்புப் படலத்தில் ஓடிவிட்டிருக்க, இங்கே எட்டிக்கூடப் பார்த்திட இயலவில்லை !! Thanks guys !! 
  7. சந்தாப் புதுப்பித்தல்கள் இப்போது தான் வேகம் எடுக்கத் துவங்கியுள்ளது ! நேற்றைக்கு மாத்திரமே 20 + சந்தாக்கள் !!! Thanks a ton folks !! இதே வேகம் தொடர்ந்திட்டால் அற்புதமாக இருக்கும் !! மனசு வையுங்கள் ப்ளீஸ் ! 
Bye for now !! See you around !! Have a lovely Sunday !

211 comments:

  1. Yes..மீண்டும் முதலாவதாக

    ReplyDelete
  2. வணக்கம் காமிக்ஸ் நண்பர்களே..

    ReplyDelete
  3. Me two...அந்த டூ இல்லீங்கோ!!!...

    ReplyDelete
  4. அப்பிடின்னு கமென்ட் போட்டுட்டு பார்த்தா வரிசையில் வர சொல்லிட்டாங்க

    ReplyDelete
  5. இது போன்ற மறுபதிப்பு காணாத இதழ்களை Combo ஆக வெளியிடலாம் ஜம்போ தளத்தில் . கண்டிப்பாக வரவேற்க்கப்படும்.

    ReplyDelete
    Replies
    1. Action Special எவ்விதம் வரவேற்கப்படுகிறது என்று பார்த்த கையோடு யோசிப்போம் சார் !

      Delete
    2. Action Special எவ்விதம் வரவேற்கப்படுகிறது என்று பார்த்த கையோடு யோசிப்போம் சார்

      #####

      இதை வழிமொழிகிறேன் சார்..ஆக்‌ஷன் ஸ்பெஷல் பிடிச்சு போனவங்க மறக்காம விமர்சனம் போடலைனாலும் பரவால பிடிச்சுருக்குன்னாவது சொல்லுங்க நண்பர்களே

      அப்பதான் ஆக்‌ஷன் நான் ஸ்டாப்பா போய்ட்டே இருக்கும்..:-)

      Delete
  6. Gaunt மனித எரிமலை, இரட்டை வெட்டையை, ஜான் மாஸ்டர் எல்லாம் இறக்கி விடுங்கள் சார்..

    ReplyDelete
    Replies
    1. மேற்படித் தொடர்களெல்லாம் Rebellion -ன் திட்டமிடலில் முதலில் இடம் பிடிக்கட்டும் நண்பரே !!

      Delete
    2. பல வருட காத்திருப்பு வீண் போகவில்லை. கண்டிப்பாக தனித் தடத்தில் வெளியிடவும்

      Delete
  7. வணக்கம் எடிட்டர் சார் மற்றும் நண்பர்களுக்கு,, இது போன்ற மறுபதிப்பு காணாத இதழ்களை ஒரு குண்டு புத்தகமாக ஆண்டுக்கு ஒரு முறை வெளியிடலாம். ஓர் வித்தியாசமான ரசனை+ புது வகை சேகரிப்பு ஆகவும் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. // இது போன்ற மறுபதிப்பு காணாத இதழ்களை ஒரு குண்டு புத்தகமாக ஆண்டுக்கு ஒரு முறை வெளியிடலாம்.//
      அதே,அதே...

      Delete
    2. //ஆண்டுக்கு ஒரு முறை வெளியிடலாம். ஓர் வித்தியாசமான ரசனை+ புது வகை சேகரிப்பு ஆகவும் இருக்கும்.//

      +111 sir !

      Delete
  8. மறுபடியும் ஜாமக்கோடாங்கி

    ReplyDelete
    Replies
    1. நல்லகாலம் பொறக்குது !
      நல்லகாலம் பொறக்குது !
      நல்லகாலம் பொறக்குது !
      நல்லகாலம் பொறக்குது !
      நல்லகாலம் பொறக்குது !
      நல்லகாலம் பொறக்குது !

      Delete
    2. பழசு வருது
      பழசு வருது
      பழசு வருது

      Delete
    3. நல்லகாலம் பொறக்குது !
      நல்லகாலம் பொறக்குது

      Delete
    4. நம்ம ராசி அப்படி சார் !

      நான் எழுதித் தருவது மாலை 6 மணிக்கென்றாலும், டைப்படித்து வந்து சேர்வது நடுசாமத்தில் ! ஞான் என்ன பண்ணும் ?

      Delete
  9. Dear Edi,

    Ever since gearing about Rebellion taking over all of British classics, I was hoping there would be a post like this from you, to revive those back in print. Finally it happened.

    Survival, Monster, Doomlord, Thirteenth Floor, Faceache, these are classics which would never go out of fashion. I am happy that you are also considering this in your plans, looking away from the done and dusted, Spider-Steelclaw genre.

    Hoping to see them feature with 2 or 3 titles in 2019, at the minimum.

    Only worry, Pala Muga Mannan Joe, being remande as Rick. Can we maintain that naming, even if not titles by us, for that nostalgia of Siruvar Malar. Please consider.

    ReplyDelete
    Replies
    1. தினமலர் குழுமம் சூட்டிய பெயரையே வைப்பது வீண் சிக்கல்களை உருவாக்கும் என்று இருக்கலாம்..

      Delete
    2. பல முக மன்னன் ஜோ என்னும் பெயர் மனதில் பசுமையாய்ப் பதிந்து விட்டதோன்று. அந்த பெயரிலேயே தொடர முடியுமா. பாருங்களேன்.ஒரே சிக்கலென்னவெனில் அந்தப் பத்திரிகைக் குழுமம் அதே பெயரினால் அவர்களே தயாரித்த சில டுபாக்கூர் கதைகளையும் வெளியிட்டுள்ளது தான்.

      Delete
    3. @ Rafiq Raja : காலத்தின் கொடுமையைப் பார்த்தீர்களா சார் ?

      ஒரிஜினல் பெயர்களை மாற்றக் கூடாதென்று அடம் பிடிக்கும் நீங்களே, இன்றைக்கொரு மாற்றுப் பெயருக்குப் பரிந்துரை செய்கிறீர்கள் !!

      ஆனால்.....

      "ஜிம்..ஜாம்..ஜானி " என்றெல்லாம் இஷ்டத்துக்குப் பெயர் சூட்டித் திரிந்த நானோ, ஒரிஜினல் பெயரோடு பயணிக்கும் நிர்ப்பந்தத்தில் உள்ளேன் !! Irony of life !!!

      Delete
    4. டியர் எடி, என்னுடைய வாதத்தை நானே மறப்பேனா... இப்போதும் ஒரிஜினல் பெயர்களை அப்படியே உபயோகபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை அப்படியே தான் தொடர்கிறது...

      ஆனாலும் ஃபேஸ்ஏக் என்ற பெயருக்கு ரப்பர் மண்டையன் என்ற துணை பெயரை விட, பழகி போன பல முக மன்னன் எவ்வளவோ மேல் என்பதால் தான் மேற்படி வேண்டுகோள்.... :)

      Delete
  10. சார் மீண்டும் மீண்டு ஒரு அட்டகாச அட்டைகளின் அணி வகுப்பு பதிவு . அதிலும் அந்த மான்ஸ்டரை விட்டீர்கள்ன்னா அந்த அற்புதத்தை இன்றைய தலைமுறையும் அனுபவிக்கலாம் . மர்ம மணடலத்தை மறக்க இயலுமா ! ஒன்று மட்டும் தெளிவாகத் தெரியுது , மிஸ்டி , ஜிண்டி , ஈ , ட்ராகுலா போன்ற கதைகளை வெளியிடாம எங்க பால்யத்தைக் காய வைத்துள்ளீர்கள் . ஆனா அந்த பால்யம் துளிர்க்க இந்த ஆக்சன் இதழ் வெற்றி பெற செந்தூர் வேலவனின் பரிபூரண அருளை வேண்டுகிறேன் . சார் இந்தக் கலவைகளில் ஒரு குண்டு புத்தகம் தரிசிக்க ஆசைதான் , ஆனால் ஒரு வேளை இவை சிறுவர்களை கவரவாய்ப்பிருக்கமோ எனப் படுவதால் பெரிய சைசுல மிஸ்டி , ஜிண்டிகள தனியிதழ்களாகத்தான் வெளியிட்டால் நன்றாக இருக்குமோ என கோடை மலர்களின் வசந்தத்தை நினைத்துத் தெறிக்கிறது ஏக்கப் பெருமூச்சு ! அட்டைப்படம் ஜாக்குடன் தகிக்குது . நமது பழைய இதழ்களுக்கான அட்டைகளில் இதுதான பெஸ்ட் எனும் வார்த்தைகளுக்குததான் ஐயமேது! பாஸ்போர்ட் கிட்டி உங்கள எங்க மனதின் ஏக்கங்கள இங்க அள்ளிக் கொட்டிய இறைவனஇன் விளையாடல்களை நினைத்தாலே இனிக்கும் . தொடரட்டும் இவர்களின் அட்டகாச வருகைகள் !

    ReplyDelete
    Replies
    1. //மிஸ்டி , ஜிண்டி , ஈ , ட்ராகுலா போன்ற கதைகளை வெளியிடாம எங்க பால்யத்தைக் காய வைத்துள்ளீர்கள் //

      கவிஞரே....நாலு இஸ்பய்டர் கதைக்கும், சட்டித் தலையன் கதைக்குமே நீங்கள் இத்தனை கவிதைகளை அள்ளி விடும் போது- ஈ ; டிராகுலா ; பூதம் என்றெல்லாம் கண்ணில் காட்டியிருந்தால் - தமிழகத்தின் கதி என்னவாகியிருக்கும் ?

      Delete
  11. ஆண்டுக்கு ஒருமுறை அல்லது 2 முறை கூட பிரிட்டன் காமிக்ஸ்களை வெளியிடலாம் சார். ஏற்கனவே லயன்-முத்துவில் வந்த கதைகள், வராதவை என எதுவாக இருந்தாலும்... .:)

    ReplyDelete
  12. பிரிட்டிஷ் ஸ்பெஷல் அப்படின்னு வருடம் இரண்டு புக் போடுங்க சார்

    ReplyDelete
  13. Rebellion's rebellion.

    நாம் பண்ணாத புரட்சியா

    ஒரு நடை போய்விட்டு வரும்போது தெரிந்து விடும்.

    அது அந்த சுகமான பயணங்கள் பின்னோக்கி எனும்போது

    நியூஸ் பிரிண்ட் காமிக்ஸ்கள் கைகளில் எடுத்து படிக்கும் சுகமே தனி.

    ஏக்கங்களின் எதிர்பார்ப்பு
    ஆக்கங்களாய் அதிரும்போது
    துக்கங்ளெல்லாம் உதிருமே
    பக்கங்களின் சடசடப்பில
    சிக்கல்கள் சிதறுமே.
    முதல் முத்தங்களின்
    முகிழ்த்த மழலைகளை
    விக்கல்களோடு வரவேற்று
    தரவேற்றுவோம்.

    ReplyDelete
    Replies
    1. ஒற்றை வாரமே ACTION SPECIAL உங்களை எட்டிப் பிடிக்க !

      Delete
  14. மின்னல் படையினரையும் ஜான் மாஸ்டரையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் ஹேப்பி சார். வணக்கம் திண்டுக்கல் வண்டிய கெளப்பவேண்டியது தான்.....

    ReplyDelete
  15. பிரிட்டிஷ் காமிக்ஸ் வருடந்தோறும் ஒன்றோ, இரண்டோ குண்டு புக்காக போட்டு அசத்தலாம் சார். அப்படியே பரணுக்கு போன நாயகர்களை கொஞ்சம் கொஞ்சமாக ஜம்போவில் களம் இறக்கிப் பார்க்கலாம்.ரசனைகள் மாறாமல் விற்பனையில் சாதிக்கத் தொடங்கினால் தொடர்ந்து வாய்பளிக்கலாம். என்னதான் புதிய கதைகள் புதிய நாயகர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும், பழைய கதைகள், பழைய நாயகர்களின் மீதுள்ள ஈர்ப்பை குறைத்து விடவில்லை.அதனால் அப்பப்போ சிறிய மாற்றமாக பழைய நாயகர்களை உள்ளே கொண்டு வந்து பாருங்கள் .

    ReplyDelete
    Replies
    1. அழகாக சொன்னீர்கள் கலீல்!
      ஆவலுடன் காத்திருக்கிறோம்!
      👍

      Delete
    2. பழமையின் தடங்கள் ஆளை அசத்தாத வரைக்கும் -ஓ.கே. என்பேன் சார் !!

      Delete
    3. கொலைகாரக் கலைஞன். மஞ்சள் பூ மர்மம், நடுநிசிக்கள்வன், என்று போகாமல் இருந்தால் சரி.

      Delete
  16. வணக்கம் சார். ஜம்போவை அப்படியே பிரிட்டிஷ் கதைத்தொடர்களுக்காக ஒதுக்கிவிடுங்கள் சார். அருமையாக இருக்கும். நிச்சயம் ஜம்போ சந்தா பலமடங்கு எகிறி அடிக்கும் சார்

    ReplyDelete
    Replies
    1. ஜம்போவில் Fleetway .....! டிக் !

      ஜம்போவே Fleetway ஆக...! No டிக் !

      Delete
    2. // ஜம்போவே Fleetway ஆக...! No டிக் //

      +1

      Delete
    3. Why not ? Let us start one more comics ' Fleetway Jumbo'

      Delete
  17. அப்படியே ஆண்டுக்கு ஒரு ஜம்போ கோடைமலர், தீபாவளி மலர் பாக்கெட் சைசில் 400,500 பக்கங்களில்.

    ReplyDelete
    Replies
    1. பித்துப் பிடிக்க வைக்கிறீங்களே சார்!
      👌👌👌

      Delete
    2. ரொம்ப நாள் கழித்து என்ட்ரி கொடுக்கும் போதே 400 ; 500 என்று தெறிக்க விடுகிறீர்களே சார் ?

      Delete
  18. ஆசிரியருக்கு வணக்கம்,
    இலங்கை காமிக்ஸ் வாசகர்களின் சிறிய எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு இன்னமும் பிரிட்டிஷ் காமிக்ஸ்கள் மீதான காதல் ஓயவே இல்லை. நிச்சயமாய் வரவேற்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சூப்பர்!!

      Delete
    2. //இலங்கை காமிக்ஸ் வாசகர்களின் சிறிய எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு இன்னமும் பிரிட்டிஷ் காமிக்ஸ்கள் மீதான காதல் ஓயவே இல்லை//

      அட...அப்படியா ? Interesting !!

      Delete
  19. பிரிட்டிஷ் காமிக்ஸ்களில் குறிப்பாக, திகில் தொடர்களுக்கு நிச்சயம் கொண்டாட்டமான வரவேற்பு இருக்கும்!

    ReplyDelete
  20. Fleetway publication stories......1000000% OK sir. Publish all posts.

    ReplyDelete
  21. Dear edi, வருடம் இரண்டு முறை பிரிட்டிஷ் கலெக்சன் களம் இறக்கி விடவும், monster, டிராகுலா கண்டிப்பா வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Monster சித்தே தமிழ் சீரியல் பாணியில் உள்ளது சார் ! Dracula இன்னும் பரிசீலிக்கவில்லை !

      Delete
  22. இத்தாலிய ஓவியர் உடல் நலம் தேறியது மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
  23. // சந்தாப் புதுப்பித்தல்கள் இப்போது தான் வேகம் எடுக்கத் துவங்கியுள்ளது ! //
    சூப்பர் சார்,தொடரட்டும் இந்த வேகம்.

    ReplyDelete
  24. Our childhood is filled with British comics memories sir. Please go ahead once or twice in a year with the combos. And no matter what and all you try for us. U always exceed our expectations and bring joy to us. Waiting for more and more British comics.

    ReplyDelete
    Replies
    1. அன்புக்கும், நம்பிக்கைக்கும் நன்றிகள் சார் !

      Delete
  25. ஆக்ஷன் காமிக்ஸ் அட்டைப்படம் சிறப்பாக உள்ளது.Scream misty போன்ற கதைகள் சிறுவர்களையும் கவரக்கூடியாத இருக்கும் போலிருக்கிறது!

    ReplyDelete
  26. காசு,பணம்,துட்டு,

    பணம் எனும் பொருள் மனங்களை எப்படி படிப்படியாக இயல்பு மன நிலையில் இருந்து சுயநலன் சார்ந்த சிந்தனைக்கு மாற்றுகிறது என்பதை அருமையாக விளக்குகிறது கதை,மேலோட்டமாக பார்க்கும்போது சாதரணமான கதைக்களமாக தோன்றினாலும் உண்மையில் கருத்தாழமிக்க களத்தை கதை கொண்டுள்ளது என்பதே உண்மை.
    எந்த கவலையும் இல்லாமல் வாழ்வை அதன் போக்கில் இயல்புடன் வாழும் ஸ்மர்ப்ஸ்களின் வாழ்க்கையை புரட்டிப் போடும் பொருளாய் மாறுகிறது பணம்,
    உண்மையில் நம்மை அந்த நிலையில் பொருத்திப் பார்க்கவே தோன்றுகிறது.ஆதிமனிதனின் பண்ட மாற்று முறைக்கும் பின்னர் பணத்தின் அடிப்பிடையிலான வாழ்வியல் முறைக்குமான நகைமுரண்களையே நாம் இதில் காண முடிகிறது,மதி நுட்பமான கருத்துகளை கதைக் களத்தில் அபாரமாக கொடுத்துள்ளார்கள், நாம் சிறு பிராயத்தில் படித்த நீதிக்கதைகள் ஏனோ நினைவுக்கு வருகின்றன, இந்த கதைகளை குழந்தைகளுக்கு சரியான முறையில் நாம் விளக்கிச் சொல்ல வேண்டும்.
    தேனில் குழைத்த மருந்தாய் நகைச்சுவையையும்,கருத்தையும் கொடுத்திருப்பது சிறப்பு,இழையோடும் நகைச்சுவையோடு வசனங்கள் அமைந்திருப்பது கதையின் போக்கிற்கு நன்கு துணை செய்கின்றது.
    "ஏதோ வட்ட வட்டமா தயார் பண்ணிங்களாமே,என்ன அது ரவுண்ட் பன்னா",
    " மாங்கா பொடியன்",
    "அடத்தூ இதுலயும் அதே சத்தம் தான் வருது"
    "நமஸ்காரம் பைனான்ஸ் பொடியரே,இன்னிக்கு ச்சும்மா தகதகன்னு மின்றிங்க'.
    -ஹாஹாஹா செம,செம.
    இந்த இதழ் என் மனதை ஏனோ மிகவும் கவர்ந்து விட்டது.
    இது ஸ்மர்ப்ஸின் கடைசி இதழ் என்பதாலோ என்னவோ தனது தடத்தை பொடியர்கள் அழுத்தமாய் பதிவு செய்து விட்டு சென்று விட்டார்கள்,
    விரைவில் பொடியர்கள் உலகில் மீண்டும் சஞ்சரித்து மகிழ்வோம் என்ற நம்பிக்கையுடன்,டாட்டா பொடியர்களே.
    எனது ரேட்டிங்-100/100.

    ReplyDelete
    Replies
    1. //நாம் சிறு பிராயத்தில் படித்த நீதிக்கதைகள் ஏனோ நினைவுக்கு வருகின்றன, இந்த கதைகளை குழந்தைகளுக்கு சரியான முறையில் நாம் விளக்கிச் சொல்ல வேண்டும்.//

      இயந்திர கதியிலான இன்றைய வாழ்க்கையில் யாருக்கு சார் உள்ளது - அதற்கான பொறுமை ?

      Delete
  27. பனியில் ஒரு பிரளயம்,

    இரத்தம் தெறிக்கும்,அனல் பறக்கும் ஒரு ஆக்‌ஷன் டிராமா,
    தேவையான இடங்களில் மட்டும் வசனம்,வழக்கமான கும்,நங்,சத்,டுமீல்களை தவிர்த்து வாசகர்களின் பார்வையிலேயே ஒரு மெளன யுத்தத்தை உருவாக்கும் முயற்சி,அபாரமான கலரிங்,சித்திர பாணிகள்.
    கிட்டத்தட்ட தியேட்டரில் ஒரு ஹாலிவுட் படத்தை பார்த்த உணர்வுகளை உண்டாக்கியது,007 அடுத்த சாகஸத்திற்காக ஆவலுடன் வெயிட்டிங்.
    வன்முறை கொஞ்சம் தூக்கலாக இருந்தது போல் ஒரு பீலிங்,நவீன
    பாண்டின் களத்தில் மென்முத்தங்களை விட வன்சத்தங்கள் அதிகமோ???
    எனது ரேட்டிங்-90/100.

    ReplyDelete
  28. இன்றைய பொழுது கா.க.போ வோடு...

    ReplyDelete
  29. அதிரடி படை மற்றூம் பெருச்சாளி பட்டாளம் மாதிரி Army கதைகளை பார்த்து வெகுநாள் ஆகிவிட்டது.
    2015 ஜனவரி சென்னை Book Fairல் வாங்கிய மின்னும் மரணம் இந்த தீபாவளி வாரம் படித்து முடித்தேன், ஒரு வார விடுமுறையை டைகருடன் பயணித்தேன். அரம்பித்தாள் முடிந்துவிடுமெ என்ற பயத்திலே 3 வருடம் கடத்திவிட்டென்.நன்றி to ST கூரியர் சொதப்பலுக்கு.இந்த மாத இதழ் கையில் கிடைத்து Nov10. அந்த Book Fairல் ஆசிரியரிடம் வைத்த கோரிக்கை இரத்த படலம் முலு தொகுப்பு, அதற்கு வாய்ப்பு இல்லவெ இல்லை என்றார். இன்றோ அது Sold out. மின்னும் மரணமும் sold out ஆக வாழ்த்துக்கள். இரண்டும் காமிக்ஸ் உலகின் இராமாயணம் & மகாபாரதம்.

    நன்றி
    கிரி

    ReplyDelete
    Replies
    1. //2015 ஜனவரி சென்னை Book Fairல் வாங்கிய மின்னும் மரணம் இந்த தீபாவளி வாரம் படித்து முடித்தேன், //

      ஆனாலும் நீங்க செம பொறுமைசாலி தான் சார் !!

      Delete
  30. விஜயன் சார்,
    இது போன்ற மறுபதிப்பு காணாத இதழ்களை Comboவாக வருடத்திற்கு ஒருமுறை ஜம்போ தளத்தில் வெளியிடலாம்.

    அடுத்த அடுத்த வருடங்களில் ஆதரவு அதிகரித்தால் இதன் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.

    ReplyDelete
    Replies
    1. வருடம் இரு முறை குண்டு குண்டாக..!!

      Delete
  31. பிரிட்டன்காரர்களை மட்டும் ஜம்போ இதழிலேயே தொடரச்செய்யலாம். அவர்களுக்கான தனித்தடமாக அது இருந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. கீழே scroll ப்ளீஸ் நண்பர்களே ; பதில் போட்டுள்ளேன் - இதே கேள்விக்கு !

      Delete
  32. விஜயன் சார்,
    // அச்சிட்டதே குறைவான பிரதிகளே என்றாலும், அதன் இரண்டாம் தொகுப்பு வெளியாவதற்கு முன்பாகவே - ஜெரெமியா முதல் இதழ் விற்றுத் தீர்ந்து விட்டது !! //

    சந்தோஷமாக உள்ளது. அப்ப ஜம்போ 2வில் ஜெரெமியா முன்றாம் பாகத்தை வெளியிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாகம் 2 அவரது எதிர்காலத்தை நிர்ணயம் செய்யட்டும் சார் - நம் மத்தியினில் !

      Delete
  33. விஜயன் சார்,
    பாட்டிகள் சுருட்டிச் சென்ற உங்களின் பாஸ்போர்ட் திரும்ப கிடைத்தது சந்தோஷம்.

    ReplyDelete
  34. // நமது இத்தாலிய ஓவியர் இப்போது நலமாயுள்ளார் //

    சூப்பர். மகிழ்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
  35. // கொட்டிக் கிடக்கும் பிரிட்டிஷ் காமிக்சின் இரண்டாம் வருகையின் பிரதிநிதிகளை !! //
    புதிய தொகுப்புகள் ஆர்வத்தை கிளப்பவே செய்கின்றன சார்,தாராளமாக இவற்றை இணைத்துக் கொள்ளலாம்.நமக்கும் நிறைய கதைகள் இருப்பில் இருந்தால் கதை பஞ்சமே வராது.எல்லாத்தையும் கலந்து ஒரு காக்டெயில் மேளாவே நடத்தலாம்...
    ஜம்போ சந்தா மாதிரி முடிந்தால் “F” சந்தான்னு ஒரு தடத்தைக் கூட உருவாக்கிடலாம், ”F”-Fleetway சந்தா.
    எப்பூடி.....

    ReplyDelete
    Replies
    1. F for fleetway..
      டைட்டிலே வச்சாச்சு..!

      Delete
    2. மொத்தமே 26 எழுத்துக்கள் தானே சார் ? போகிற போக்கில் G for GLENAT ; H for HUMANOIDS - என்று இருக்கும் ஒவ்வொரு பதிப்பகத்தின் வெளியீட்டுக்கு ஒரு தடத்தைப் போட்டு விடலாமோ ?

      Delete
    3. தேனாக பாய்கிறது உம்மொழி ஐயா.

      காமிக்ஸ் தேனாறும் பாலாறும் ஓடட்டும்

      Delete
  36. திண்டுக்கல் மற்றும் கும்பகோணம் நகரில் நடக்கும் புத்தகத் திருவிழாவில் நமது காமிக்ஸ் விற்பனை சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய வாழ்த்நுகளும்..

      Delete
  37. // இன்றைய சூழலில் அந்நாட்களது பிரிட்டிஷ் காமிக்ஸ் தொடர்கள் / பாணிகள் ஈர்ப்பைத் தக்க வைக்குமென்று எதிர்பார்த்திடல் practical தானா ? //
    இதுவும் ஒரு டேஸ்ட் தானே சார்,அதுவுமில்லாமல் பழைய டிராக்கில் இருப்பதில் தேர்வு செய்யப்பட்ட இதழ்களை மட்டுமே வெளியிடுவதாக தோன்றுகிறது,இதில் நமக்கு ஏற்புடையதை தேர்வு செய்து இரசிப்போமே...

    ReplyDelete
  38. // The Action Special உங்கள் கைகளை எட்டியான பின்னே, அதனைப் போலவேயொரு combo இதழை ஆண்டுக்கொரு தபா திட்டமிடலாமா ? //
    தாரளமாக திட்டமிடலாம் சார்,கொஞ்சம் குண்டா,கொஞ்சம் பெரிசா....

    ReplyDelete
  39. // பிரான்கோ – பெல்ஜியப் படைப்புகள்; இத்தாலிய கிராபிக் நாவல்கள் என்று ஏதேதோ ஆறுவழிச் சாலைகளில் பயணித்துப் பழகியான பின்னே, இந்தப் பிரிட்டிஷ் பாணிகளை எவ்விதம் ஒப்பிடுவீர்களோ? //
    என்னதான் கருத்தான படங்களைப் பார்த்தாலும்,இரசித்தாலும்,அவ்வப்போது கமர்ஷியல் படங்களையும் இரசிக்கவும், வரவேற்கவும் தானே செய்கிறோம்....எல்லா களங்களையும் முயற்சிப்பதில் தவறில்லை,அதில் பிடித்ததை தொடர்வோம்,வேறு வேறு களங்கள் நமது எல்லைகளை இன்னும் விரிவாக்கும்...

    ReplyDelete
    Replies
    1. கரீட்டா சொல்லிட்டீங்க..

      Delete
    2. //என்னதான் கருத்தான படங்களைப் பார்த்தாலும்,இரசித்தாலும்,அவ்வப்போது கமர்ஷியல் படங்களையும் இரசிக்கவும், வரவேற்கவும் தானே செய்கிறோம்...//

      அப்படீங்கிறீங்க ? சிந்தித்தால் போச்சு சார் !!

      Delete
  40. மெல்லத் திறந்தது கதவு:: இந்த கதையை கடந்த வாரம் படிக்கலாம் என வெளியே எடுத்து வைத்தேன். எங்கள் வீட்டில் காமிக்ஸ் மற்றும் ஈசா காட்டுப்பூ தவிர வேறு புத்தகங்கள்/நாளிதழ்கள் எதுவும் நாங்கள் வாங்குவது இல்லை.

    அதேநேரம் எங்கள் வீட்டிற்கு வந்த உறவினர் படிக்க எதாவது இருக்குமா என தேடியவர் இந்த புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்து மூன்று நாட்களில் படித்து விட்டார். எனக்கு இவர் சும்மா பக்கங்களை புரட்டுகிறார் என நினைத்தால் முழுவதையும் படித்து விட்டார். அவரிடம் இந்த கதை உங்களுக்கு புரிகிறதா என கேட்டேன். ஆம் ஒன்றுக்கொன்று அங்கங்கே தொடர்ந்து உள்ளது, அழகாக சொல்லி உள்ளார்கள் என சொன்னார். எனக்கு ஆச்சரியம், அவர் எனது மனைவியின் பெரியம்மா, அவரின் வயது 72.

    அவருக்கு வீட்டில் சும்மா இருக்க பிடிக்காது எதாவது படிக்க விருப்பப்படுவார். நமது காமிக்ஸ் அவரின் சில தினங்களை சந்தோஷமாக்கியது எனக்கு சந்தோஷம்.

    இப்போது அவருக்கு தோர்கலின் கடவுளரின் தேசம் படிக்க கொடுத்து உள்ளேன்.

    காமிக்ஸ் படிக்க/ரசிக்க மனது இருந்தால் போதும்.

    ReplyDelete
    Replies
    1. //காமிக்ஸ் படிக்க/ரசிக்க மனது இருந்தால் போதும்.//

      +111

      Delete
  41. இன்றைய பதிவு " சிங்கத்தின் சிறு வயதில் " போல மிகுந்த சுவையுடன் சென்று சடாரென முடிந்தது போல ஓர் எண்ணம்..

    ReplyDelete
    Replies
    1. தலீவரே......கவலையே வாணாம் - ஜம்போ சீசன் -2 -ன் முதல் இதழாய் 288 பக்கங்களில் "சிங்கத்தின் சிறுவயதில்" !! போடறோம்-தாக்கறோம் !! ஓ.கே வா ?

      Delete
    2. வண்ணத்திலா? கருப்பு & வெள்ளையிலா சார்?
      ஹிஹிஹி....

      Delete
    3. தலீவரே......கவலையே வாணாம் - ஜம்போ சீசன் -2 -ன் முதல் இதழாய் 288 பக்கங்களில் "சிங்கத்தின் சிறுவயதில்" !! போடறோம்-தாக்கறோம் !! ஓ.கே வா ?

      #####


      விளம்பரத்தல அந்த தலைப்பை பாத்தவுனே செம சந்தோசமா ஆனாலும்

      தொகுப்பை நினைக்கும் போது


      "வெந்த புண்ணுல கொடுவாளை பாச்சுற மாதிரியே ஒரு பீலிங்கு " சார்...:-((


      அந்த ஜம்போ இதழ் "சிங்கத்தின் சிறு வயதில் " என தலைப்பு கொண்டு அந்த இதழிலிழும் சி்சி.வ தொடராது போனால் போராட்ட குழுவின் சாபம் உங்களை சும்மா விடாது சார்..:-)

      Delete
  42. பாஸ்போர்ட் திருடியது பாட்டியாக இருந்தாலும் குற்றம் ,குற்றமே என அவர்களை பிடித்ததுடன் அயல்நாட்டில் இருந்து சரியான நபரிடம் பாஸ்போர்ட்டை சேர்ப்பித்த எங்கள் டெக்ஸ் தேசத்து காவலர்களுக்கு பாராட்டும் ,வாழ்த்துகளும்..

    ReplyDelete
  43. நமது பிரார்த்தனைகளின் பலனோ ; அவரது ஆண்டவரின் கருணையோ - அல்லது இரண்டின் கலவையோ - தெரியாது ; ஆனால் நமது இத்தாலிய ஓவியர் இப்போது நலமாயுள்ளார் ! ஏகப்பட்ட பரிசோதனைகளுக்குப் பின்பாய் அவருக்கு சிறுநீரகத்தினில் நேர்ந்துள்ள பாதிப்பு - புற்று நோயல்ல என்று கண்டுள்ளனர் ! So முறையான வைத்தியங்கள் செய்து இப்போது நலமாகி, மீண்டும் நமக்காக படம் போடத் துவங்கி விட்டார் !! 2019-ல் அவரை நாம் அடிக்கடி சந்திக்கவிருக்கிறோம் !!

    #########


    மிகுந்த மகிழ்ச்சியான செய்தி ...அவரின் "அட்டகாசத்தை " ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்..

    ReplyDelete
  44. கண்டிப்பாக நமது ஆரம்ப நாயகர்களின் சாகஸத்தை வருடம் தோறும் "குண்டு ஸ்பெஷலாக " ஒன்றுக்கு மேலாகவும் வருவதற்கு எனது மனமார்ந்த வரவேற்புகள் சார்..புது புது நாயகர்கள் பட்டையை கிளப்பி கொண்டு வந்தாலும் பழைய நாயகர்களின் பெயரை கேட்டவுடன் மனதில் ஓர் இனம் புரியா துள்ளல் ஏற்படுவதை தன்னால் உணரமுடிகிறது.ஆக்‌ஷன் ஸ்பெஷலை படிக்கும் பொழுது அது இன்னும் கூடுதலாக ஏற்பட போகிறது என்பதும் உண்மை.

    காத்திருக்கிறோம்..:-)

    ReplyDelete
  45. டியர் எடிட்டர்

    புதிய (பழைய) பிரிட்டிஷ் காமிக்ஸ் பரீட்சார்த்தமாக ஜம்போவில் சேர்க்கும் வரை நலமே. காம்போ இதழ் பிரியர்களையும் திருப்தி செய்தது போலவும் இருக்கும். பழங்காமிக்ஸ் நல சங்கத்தை நம்பி தனித்தடம் காணுதல் வேண்டாம். அப்புறம் மூணு வருஷம் கழித்து "கண்காட்சியில் விக்கலே டோய்" என்று வந்து கொண்டிருக்கும் புதிய காமிக்ஸ்களுக்கும் துண்டு விழுந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.

    பழைய / இழந்து விட்ட விஷயங்களின் மீதான கிளர்ச்சி அவ்வப்பொழுது எழுவது வாழ்வின் இயல்பு. ஆனால் இது முன்னோக்கிச் செல்ல வேண்டிய தருணம்.

    ReplyDelete
    Replies
    1. //பழைய / இழந்து விட்ட விஷயங்களின் மீதான கிளர்ச்சி அவ்வப்பொழுது எழுவது வாழ்வின் இயல்பு.//

      ஸ்பஷ்டமான சிந்தனை !! Very true !!

      Delete
  46. நண்பர்களே ...

    "சந்தா கட்டி சந்தோசமா இருக்க"


    எனது மனமார்ந்த வாழ்த்துகள்..



    இப்படிக்கு ,

    சந்தா கட்டிய சந்தோஷன்..:-)

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நிறைய சந்தோஷர்கள் தேவை ப்ளீஸ் !!

      Delete
  47. பிரிட்டிஷ் காமிக்ஸ்களுக்கு ஜே!
    ஜம்போ ஸ்பெஷல் இதழ்களை பிரிட்டிஷ் நாயகர்களுக்காக ஒதுக்கலாம்!
    பரிச்சயமான பழைய நாயகர்களையும் களமிறக்குங்கள்!
    ஆவலோடு காத்திருக்கிறோம் ஆசிரியர் அவர்களே..!
    👌👌👌
    💐💐💐
    ☺️☺️☺️

    ReplyDelete
    Replies
    1. ஜம்போவுக்கென ஏற்கனவே உள்ள திட்டங்களை அம்போவென விட முடியாதே சார் ? ஜம்போவுக்குள் ஒரு சதவிகிதத்தில் Fleetway சாத்தியமே ; but ஜம்போவே Fleetway ஆவது...நஹி !

      Delete
    2. // ஜம்போவுக்குள் ஒரு சதவிகிதத்தில் Fleetway சாத்தியமே ; but ஜம்போவே Fleetway ஆவது...நஹி ! //

      இது செம பதில்.

      Delete
  48. மெல்லத் திறந்தது கதவு: மற்றுமொரு சுவாரசியமான விஷயம் எங்கள் வீட்டு பொடியன் கடந்த இரண்டு நாட்களாக இந்த புத்தகத்தை புரட்டி படம் பார்த்து வருகிறான். அதில் உள்ள மரங்கள் மற்றும் க்ஸாரினாவை வரைய பழகிக் கொள்ள ஆரம்பித்து விட்டான்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு Junior வான்ஸ் பெங்களூரில் உருவாகினால் ஆச்சர்யமில்லை போலும் !!

      Delete
  49. // என்றோ ஒரு தூரத்துப் பழம்நாளில் படித்த கதைகளையெல்லாம் தற்சமயம் செம தரத்தில், மறுக்கா தரிசிப்பதை பெருசுகள் ரவுண்ட் கட்டிச் சிலாகிக்க ; சூப்பரஹீரோக்களையே ரசித்து வந்த இளசுகளுமே இந்த black & white ஜாலி கதைகளை ரசித்து வருகின்றனர் !! நாமும் இந்தப் புரட்சியில் ஒரு சிறு அங்கமாகிடல் சுகப்படுமா ? Would love to hear your thoughts !! //

    We also love to see them atleast yearly once in around 300 pages sir _/|\_
    .

    ReplyDelete
    Replies
    1. "300" என்று அது என்ன கணக்கு சார் ?

      Delete
    2. அது ஒரு சின்ன கணக்கு சார்...
      300 என்றால் ஒரு 2 அல்லது 3 கதைகளை ஒன்றாக வெளியிட வேண்டும் என்று அர்த்தம் சார்...

      Delete
  50. //நாமும் இந்தப் புரட்சியில் ஒரு சிறு அங்கமாகிடல் சுகப்படுமா ? Would love to hear your thoughts !!//

    Fleet way.?? No way !!!

    Sir! Please don't do this...don't tread on beaten path ..again..

    ReplyDelete
    Replies
    1. //Fleet way.?? No way !!!//

      :-) :-) ஆனாலும் இந்த டீலை சிம்பிளாக நீங்கள் முடித்துள்ள விதம் சூப்பர் சார் !

      Delete
  51. ஆசிரியருக்கு, ரெண்டு நாளாக பாஸ்போர்ட் ஆஃபிஸில் இருந்தாலும் பாஸ்போர்ட் பிரச்சனை தீர்வுக்கு வந்து விட்டது. தெய்வம் நின்று வெல்லும். பாட்டி ஜெயிலுக்கு செல்லும்.

    இத்தாலிய ஓவியர் நலமாய் உள்ளது கேட்டு சந்தோஷம்.

    ஒன்று மட்டும் தெளிவாக விளக்குங்கள். Fleetway காமிக்ஸை Rebellion நிறுவனம் வாங்கி விட்டதா ?

    எதுவாயினும் சரி கண்டிப்பாக ஒரு இதழ் விடாமல் அத்தனையும் இறக்குங்கள். எனக்கு கலரை விட கருப்பு வெள்ளை தான் அதிகம் பிடித்து இருக்கிறது. பால்ய கால நினைவுகள் பதிந்து போனதால் இருக்கலாம்.

    2019 அல்லது 2020 இல் வருடத்துக்கு ரெண்டு குண்டு புக் தொகுப்பு Rebellion (Fleetway ) ஜம்போவில் இறக்குங்கள்.

    1 Action ஸ்பெஷல் - ஒற்றை கண் ஜாக், பலமுக மன்னன் ஜோ, jinty , lepord , charleys war போன்ற action , காமெடி , sci - fi , adventure , war collection

    2 Horror ஸ்பெஷல் - misty , monster , screem , invasion , டிராகுலா போன்ற திகில் கதைகளின் தொகுப்பு. (காமெடி இதில் வேண்டாம்)

    வருடா வருடம் இந்த சீரிஸ் தொடர்ந்தால் ஆஹா பேஷ் பேஷாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. //வருடா வருடம் இந்த சீரிஸ் தொடர்ந்தால் ஆஹா பேஷ் பேஷாக இருக்கும்.//

      எல்லோருக்கும் பிடித்து விட்டால் - என்பாடு சுலபமே ! Let's see !!

      Delete
  52. நமது பிரார்த்தனைகளின் பலனோ ; அவரது ஆண்டவரின் கருணையோ - அல்லது இரண்டின் கலவையோ - தெரியாது ; ஆனால் நமது இத்தாலிய ஓவியர் இப்போது நலமாயுள்ளார் ! ஏகப்பட்ட பரிசோதனைகளுக்குப் பின்பாய் அவருக்கு சிறுநீரகத்தினில் நேர்ந்துள்ள பாதிப்பு - புற்று நோயல்ல என்று கண்டுள்ளனர் ! So முறையான வைத்தியங்கள் செய்து இப்போது நலமாகி, மீண்டும் நமக்காக படம் போடத் துவங்கி விட்டார் !! 2019-ல் அவரை நாம் அடிக்கடி சந்திக்கவிருக்கிறோம் !!

    #########

    மகிழ்ச்சி...

    ReplyDelete
  53. வருடத்தில் ஒரு முறை வெளியிடலாம்.

    வாங்குவனான்னு தெரியல.. வாங்கினாலும் படிப்பனான்னு தெரியில..

    ReplyDelete
    Replies
    1. //வாங்குவனான்னு தெரியல.. வாங்கினாலும் படிப்பனான்னு தெரியில.//

      நெத்தியடி !

      Delete
  54. ஆனா

    இருக்கும் 36ஐ குறைக்க மாட்டீரே.

    ReplyDelete
  55. பழையது:
    ---------

    1. மீண்டும் முதலைகள் - புருனோ பிரேசில் தாய்லாந்தில் புதைந்து கிடந்த பழைய nuclear bomb ஏவுவதை தடுக்கும் சாகசம். ஓகே

    2. குள்ள நரிகளின் இரவு - கௌச்சோ குடும்பத்தையும் அந்த ஊரையும் மிரட்டி காசு பறிக்கும் ஒரு பெரிய அளவிலான கும்பலை, மொத்த முதலை பட்டாளமும் சேர்ந்து முறியடிப்பது தான் கதை.. செம சூப்பர், நன்றாக இருந்தது.

    20 வருடம் கழித்து படிப்பதினால், எல்லா பழைய காமிக்ஸ்சும் புது காமிக்ஸ் போல தான் இருக்கிறது.

    புதியது
    -------

    1. Dynamite ஸ்பெஷல் -
    புயலுக்கொரு பிரளயம் - கொஞ்சம் கூட தொய்வில்லாமல் இத்தனை பக்கங்களுக்கு டெக்ஸ் பாதி கதையில் இல்லாமல் இருந்தும் கொண்டு சென்று இருப்பது சிறப்பு. கிட்டும், டைகர் ஜாக்கும் அபாச்சேகளை ஒரு இடத்தில் காப்பாற்ற, கார்சன் வில்லரை வெளி எடுக்க ஒரு இடத்தில் இருந்து செயலாற்ற,, கடைசியில் ஆள் யார் என்று தெரிந்தும் அவசர படாமல் நிதானமாக அவனை நிராதரவாகி கடைசியில் அவனே தன் முடிவை தேடி கொள்வது என்று தெள்ள தெளிவான குழப்பமே இல்லாத கதை. மிக சிறப்பு.

    தெற்கே ஒரு தங்க தேட்டை - ஒரே வரியில் அதிரடி. இது இது இது தான் வேணும். சும்ம்மா அதிரனும்.

    Dynamite ஸ்பெஷல் கதைகள் ஒரு perfect காம்போ.

    2. தெய்வம் நின்று கொல்லும் - ராபினின் சுமாரான கதை, கை சீவம்மா கை சீவு, மை டியர் மம்மி போன்ற வலுவான கதைகள் மட்டுமே தேர்வு செய்யுங்கள்.

    3. பனியில் ஒரு பிரளயம் - பெரிய விசில் அடித்து வரவேற்கிறேன். இது இது தான் இந்த காலத்து ஜேம்ஸ் பாண்ட் 007 version 2 .௦ . ஆரம்ப ரெண்டு பக்கத்திற்கு ஜேம்ஸ்சின் முகம் காமிக்காமல் அந்த ஆக்ஷன் செம செம.. எனக்கு ஏதோ 70 mm படம் தியேட்டரில் உட்கார்ந்து பார்த்தது போல் இருந்தது. படம் படிக்கும்போது என் பின் மண்டையில் ஆக்ஷன் சீன் வரும் போது எல்லாம் 007 தீம் மியூசிக் ஓடுகிறதே !!!

    நான் காமிக்ஸ் படிக்கிறேனா அல்லது படம் பார்த்து கொண்டு இருக்கிறேனா என்றே தெரியவில்லை. சும்மா ரத்தம் தெறிக்குது.

    நான் இந்த புது பாண்டின் பேன்.

    ReplyDelete
    Replies
    1. //20 வருடம் கழித்து படிப்பதினால், எல்லா பழைய காமிக்ஸ்சும் புது காமிக்ஸ் போல தான் இருக்கிறது.//

      எனெக்கெல்லாம் 2 வருஷங்களுக்குப் பின் புரட்டினாலே சகலமும் புதுசாய்த் தோணும் !!

      Delete
  56. தங்க முட்டையிடும் வாத்தை அறுத்துப் பார்க்கக்கூடாது. வருடத்துக்கு ஒரு தொகுப்பே சிறப்பு. ஜம்போ ஜம்போவாகவே வரவிடுங்கள் நண்பர்களே!

    ReplyDelete
  57. I read Monster stories 2 volumes in Mehta Comics and still I have those books.... Very nice artwork. I wish I could read that in Jumbo or Lion sir.

    ReplyDelete
  58. Replies
    1. //யாருப்பா அது//

      possibly an overzealous patriotic Indian who doesn't want to be ruled by British again except for a goodwill ambassador like James Bond..:)

      Joking!! Let everyone Voice his/ her rumination..

      Delete
  59. // பலமுக மன்னன் / FACEACHE / ரப்பர் மண்டையன் ரிக்கி //

    +1

    // மற்றவை //

    +0

    ReplyDelete
  60. Fleetway...

    இந்த வருட சந்தாவின் ஸ்பெஷலே தூக்க மாத்திரைகளை தூக்கி வீசுனது தான். மறுபடி எதுக்கு அவற்றைப் பற்றி யோசிக்கனும்?

    உலகப்போரை மையமா வைச்சு நூத்துக்கணக்குல படங்கள் வந்திருந்தாலும் Where Eagles Dare மாதிரியான விரல் விட்டும் எண்ணும் அளவிலான படங்களே இப்ப பாக்க முடியுது.

    ஏதாவது நல்லா தெரிஞ்ச கிளாசிக் இதழ்களை மட்டும் வருடத்துக்கு தொகுத்து ஒன்றாக போடலாம். இதற்கு செலவிடும் நேரத்தை புதுக்களங்களில் செலவிடுவதே நன்று.

    அந்த ஒரு தொகுப்பு கூட கல்லாக் கட்டினா போடுங்க. இல்லன்னா வேணாம்.

    ReplyDelete
  61. சார்...
    Exam காரணமாக இங்கு நேரம் கழிக்க முடியவில்லை...சாரி...




    Fleetway புத்தகங்கள் மீண்டும் வருவதில் மிகவும் மகிழ்ச்சி...
    The leopard from என்ற புக்கின் அட்டை என்னை மிகவும் கவர்ந்து இருக்கிறது...




    ஜம்போவில் British புக்கை வெளியிடுங்கள் சார்...மிகவும் நன்றாக இருக்கும்...

    ReplyDelete
  62. காத்து கிடக்கிறேன் சார்

    ReplyDelete
  63. பல முக மன்னன் ஜோ வர்றார்....றார்...

    ReplyDelete
  64. இன்னும் பார்க்காத ஸ்பைடர் கதைகள் ..பாக்கெட் சைஸ் ஒரு முறை ப்ளீஸ்..

    ReplyDelete
  65. வருகிறது என்று சொல்லி வராமல் விட்டு விட்ட கதைகளை வெளியிட்டாலே 3 குண்டு புக்ஸ் ஸ்பெஷல் வெளியிடலாம்.

    ReplyDelete
  66. Sir ...
    திண்டுக்கல் bookfair நடைபெறும் நாட்கள், நேரம் & முகவரி please send

    ReplyDelete
    Replies
    1. 29-november to 09-december

      Scheme road, Southside of Dindigul Busstand, DINDIGUL.

      Delete
    2. Remembering Dubai kurukku ssanthu Dubai 😂

      Delete
  67. பிளாக்பஸ்டர் ஹிட்ஸ் 2018
    ----------------------------
    கடவுளரின் தேசம் - தோர்கல்
    மௌனமாயொரு இடிமுழக்கம் - ட்யூராங்கோ
    மெல்லத் திறந்தது கதவு - மார்ட்டின்
    லூட்டி வித் லக்கிலுக் (ஆண்டு மலர்)
    காற்றுக்கேது வேலி - டெக்ஸ் வில்லர்
    இரத்தப்படலம் - XIII
    டைனமைட் ஸ்பெஷல் - டெக்ஸ் வில்லர்
    காதலும் கடந்து போகும் - டெக்ஸ் வில்லர்
    பனியில் ஒரு பிரளயம் - ஜேம்ஸ் பாண்ட்
    சேற்றுக்குள் சடுகுடு - ப்ளூகோட்ஸ்

    சூப்பர் ஹிட்ஸ் 2018
    --------------------
    ஒரு கணவாய் யுத்தம் - டெக்ஸ் வில்லர்
    பவளச்சிலை மர்மம் - டெக்ஸ் வில்லர்
    கொலைகாரக் காதலி - சிக் பில்
    நடமாடும் நரகம் - டெக்ஸ் வில்லர்
    எரிமலைத்தீவில் பிரின்ஸ் - பிரின்ஸ்
    களவும் கற்று மற - ட்ரெண்ட்
    ஒரு குரங்கு சே/வேட்டை - ஹெர்லக் ஷோம்ஸ்
    மரணம் சொல்ல வந்தேன் - ஜானி
    காசு பணம் துட்டு - ஸ்மர்ஃப்ஸ்
    வாடகைக்கு கொரில்லாக்கள் - மேக் & ஜாக்
    என் நண்பேண்டா - ரின் டின் கேன்
    யார் அந்த மிஸ்டர்.எக்ஸ் - க்ளிப்டன்
    பனி மண்டல வேட்டை - ட்ரெண்ட்

    ஆவரேஜ் ஹிட்ஸ் 2018
    -----------------------
    மரணம் ஒரு முறையே – ஷெல்டன்
    சைத்தான் சாம்ராஜ்யம் - டெக்ஸ் வில்லர்
    வெண்பனியில் செங்குருதி - டெக்ஸ் வில்லர்
    பாலைவனத்தில் புலனாய்வு - டெக்ஸ் வில்லர்
    தோட்டா தலைநகரம் – டைகர்
    ஒரு விடுமுறை வில்லங்கம் - மாடஸ்டி
    தெய்வம் நின்று கொல்லும் - ராபின்
    நண்பனுக்கு நாலு கால் - சிக் பில்

    சுமார் 2018
    -----------
    பூமிக்கொரு போலிஸ்காரன் - லேடி எஸ்
    மர்மக் கத்தி - ரோஜர்
    பிரியமுடன் ஒரு பிரளயம் - லார்கோ வின்ச்
    கடிதமும் ஒரு கறுப்பு ஓநாயும் - ஜில் ஜோர்டன்

    ReplyDelete
    Replies
    1. //கடிதமும் ஒரு கறுப்பு ஓநாயும் - ஜில் ஜோர்டன்//

      சுமார் பட்டியலில் இந்த இதழ் மட்டுமே நெருடல் - என்னைப் பொறுத்தவரையிலும் ! Definitely deserved better !!

      Delete
    2. I always loved Gil Gordan stories, there is something in the story that keeps a thrilling element alive.

      Delete
  68. Fleetway இதழ்கள் திரும்ப வந்தால் மிக்க மகிழ்ச்சி.. உலக யுத்த கதைகளை தவிர்த்துவிட்டு மர்மம், டெடெக்டிவ் கதைகளஒ போடலாம். இவற்றை பழையவை என பார்க்காமல் புதிய கதைகளாகவே பார்க்கலாம். இவை நிச்சயம் ரசிக்கும் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. //இவற்றை பழையவை என பார்க்காமல் புதிய கதைகளாகவே பார்க்கலாம்.//

      சிக்கலே அதனில் தான் சார் !

      Delete
  69. சந்தா டிஸ்கௌவுண்ட் எவ்வளவு. கூரியர் செலவு என்ன என்பதையும் குறிப்பிடவில்லை. போனதடவை இவ்விவரங்களை பதிவிட்டடிருந்தீர்கள்.

    ReplyDelete
  70. In the front cover of " The Thirteenth floor" the Skeleton dressed in Green middy looks so cute sir!.

    ReplyDelete
  71. குருநாயரையும் சிஷ்யப் பிள்ளையையும் இன்னும் காணோமே??

    ReplyDelete
    Replies
    1. சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் ரீப்ரிண்ட் கேட்டா குருநாயரும் மாடஸ்டி குண்டு ஸ்பெஷல் கேட்டா சிஷ்ய பிள்ளையும் அலறி அடிச்சுகிட்டு வந்துடுவாங்களோ?

      Delete
  72. சார்,மூணு பதிவுக்கு முன்னாடி கேப்ஷன் கான்டெஸ்ட் வெச்சிங்களே.. இன்னும் தீர்ப்பே சொல்லலியே.இந்த ஸ்கேன்லேஷன் டென்ஷன் மறந்திட்டிங்களா. இதுக்காக ரூம் போட்டெல்லாம் யோசிச்சிருக்கோம்.

    ReplyDelete
  73. 1998ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், அந்த வருடம் வெளிவந்த கதைளிலேயே Top Hit ஆகி No.1 இடத்தை பிடித்தது மின்னல் படையின் "மரண மண்டலம்". அந்நாட்களில் பல முறை படித்து வியந்து போய் எனது All time favorite listல் இருந்த கதை.

    ஆனால் இன்று நடைமுறையில் உள்ள கதைகளுக்கு மத்தியில் படிக்கும் போது வரும் நமட்டு சிரிப்பை அடக்க முடியவில்லை. மரண மண்டலமமே இந்த ரீதியில் இருக்கும் போது Action specialல் உள்ள கதைகளை எவ்வாறு ஜீரணிப்பது என்ற கலக்கம் இருந்தது.

    ஆனால் முதல் பார்வையிலேயே அட்டைபட டிசைன் அந்த கலக்கத்தை முறியடித்து விட்டது. கதைகளும் அவ்வாறே இருந்துவிட்டால் நலம். மேலும் நான்கு கதை தொடர்களையும் இதற்கு முன் படித்ததில்லை என்பதால் முன்கூட்டியே விமர்சிக்க விரும்பவில்லை. Waiting.

    மேலும் சான்ஸ் கொடுப்பது என்று ஆனபின் இரட்டை வேட்டையர் மற்றும் நார்மனை முயற்சிக்கலாம். காலம் கடந்தாலும் இவர்கள் சாகஸம் எடுபடும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  74. விஜயன் சார், அடுத்த மாதம் வர உள்ள டெக்ஸ் கதை எது?

    ReplyDelete
  75. நண்பர் திருநாவுக்கரசர் அவர்களே,இரட்டை வேட்டையரின் திக்கு தெரியாத தீவில் எனும் நான்-ஸ்டாப் ஆக்ஷன் கதை நினைவிருக்கிறதா.பாக்கெட் சைஸில் பட்டையை கிளப்பிய இதழ் அது.

    ReplyDelete
  76. Fleetway - Not sure, there are several books (particularly mayavi) sitting in my book shelf ideal - couldn't finish it.

    ReplyDelete
  77. 'MONSTER' - ஏற்கனவே அசோக் அல்லது மேத்தா காமிக்ஸ்-ல் வந்தது சுமார் ரகம்.


    'JINTY' - - நன்றாக இருக்கும் போலுள்ளது.

    ReplyDelete
  78. திக்குத் தெரியாத தீவில்,

    மறக்கக் கூடிய இதழா அது நன்பரே,

    நான் முதன் முதலில் படித்த/வாசகனான லயன் வெளியீடு இதுதான்.
    ஒரு போலி கொள்ளையை அறங்கேற்றி, போலீசாரால் தேடப்படும் போக்கிரிகளாக கொள்ளையர் தீவில் தஞ்சம் அடைகிறது ஜார்ஜ் & ட்ரேக் கூட்டணி. கொடூர கொலைகாரர்கள் மற்றும் சமூக விரோதிகளுக்கு மட்டுமே அடைக்கலம் கொடுக்கும் சொர்க்கபுரியாக திகழ்கிறது இப்பூமி. கேளிக்கைகளுக்கு பஞ்சமில்லாத இப்பூமியில், எல்லை மீறுபவர்க்கு தண்டணை மிகக் கடுமை. தீவு முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் அனைத்தையும் தனது கட்டுக்குள் வைத்திருக்கிறான் ஒரு மர்ம முகமூடி மனிதன். ஒரு வம்பு ச்ண்டையில் மாட்டிக்கொள்ளும் இரட்டையர்களுக்கு தண்டனையாக, ஒரு பிரம்மாண்டமான் கொலையரங்கில் அனைவருக்கும் மத்தியில் ஒரு ட்ரக் சண்டையை அரங்கேற்றுகின்றனர். எதிராளிகளின் மூன்று ட்ரக்குகளையும் காலி செய்து விட்டு, கிடைத்த ஒரு ட்ரக்கின் மூலம் தப்பிக்க முயன்று பின்பு பிடிபட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

    குரூர குணம் கொண்ட முகமூடி இரட்டையர்களை வைத்து ஒரு மரண விளையாட்டை ஆரம்பிக்கிறான். புதைகுளிகள், புதிர்குகைகள், டாங்கிகள் என தினுசு தினுசாக மரணங்கள் துரத்தி வர, அவை ஒவ்வொன்றையும் முறியடிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் அசர வைக்க, டிவியில் கண்டுகளிக்கும் கொள்ளையர் கும்பல் விசிலடித்து ஆராவாரமாக ரசிக்கிறது. ஒரு கட்டத்தில் அனைத்து சவால்களையும் இரட்டையர்கள் முறியடிக்க, அடுத்த வெடியைக் கொளுத்திப் போடுகின்றான் முகமூடி.

    இம்முறை மனிதவேட்டை,
    சன்மானத்தோடு ஒரு பெரிய ஆயுதகிடங்கை காட்டி, இஷ்டபட்டதை எடுத்துக் கொண்டு இரட்டையர்களை வேட்டையாட கொள்ளையர்களை ஏவி விடுகிறான். அவர்களும் கைக்குகிடைத்த கோடாரி, வில்அம்பு, துப்பாக்கி, மெஷின்கன், ப்யர்கன் என தத்தம் ஆயுதங்களோடு வெறிகொண்டு கானகத்தினுள் பாய, இரட்டை வேட்டையர்களும் பல்வேறு யுக்திகளை கையாண்டு வெல்கின்றனர். இறுதியில் இரட்டையர்களுக்கு அல்வா கொடுத்து விட்டு தனது மொத்த சேமிப்பையும் அள்ளிக்கொண்டு வானில் பறக்க, அப்பொழுது ட்ரேக் "அளவுக்கதிகமான ஆசை அளிவில் தான் முடியும்" என்று புன்னகைக்க, பாரம் தாங்காமல் ஹெலிகாப்டர் வெடித்து சிதறுகிறது.

    முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை அசுர வேகம். Action ரசிகர்களுக்கு செம தீனி. இது போல் ஒரு full & full action கதையை பார்ப்ப்து மிகவும் அரிது. பாக்கெட் சைஸில் ரூ.5 விலையில் கோடை மலராக வெளிவந்த இந்த இதழ் one of my all time favorite.

    ReplyDelete
    Replies
    1. Yes yes yes. So brilliantly said sir. One of the awesome stories I've ever read. I don't know how much time I've read the story again and again. And still I remember the story till date. Y don't we ask our editor for the reprint of the same.

      Delete
    2. செம ஜி உங்கள் நினைவு

      Delete
  79. எடிட்டர் சார்,

    அடுத்த Action special க்கு தி.தெ.தீ. வெளியிட வாய்ப்புகள் இருக்கிறதா சார். விருப்பமுள்ள நண்பர்கள் தங்கள் ஆதரவை பதிவிடலாமே.

    ReplyDelete
  80. விஜயன் சார், நவம்பரில் டிசம்பர் மாத இதழ்களைத் தரிசிக்க முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. டிசம்பர் முதல் தேதிக்கே சார் !

      Delete
    2. ஐ.....இன்னும் ஒரே நாள்...

      Delete
  81. Fleetway

    வருடம் ஒரு தொகுப்பு போடலாம்.

    ReplyDelete
  82. நீங்கள் போட்டு தாக்குங்கள் சார். ஐ ஆம் வெயிட்டிங்.

    ReplyDelete
  83. நமது ஜூனியர் எடிட்டர் திரு.விக்ரம் அவர்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.கடந்த வருடம் இதே நாளில் எங்கள் காமிக்ஸ் குடும்ப விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி....

    ReplyDelete
  84. வாய்ப்பிருந்தால் திக்குத்தெரியாத தீவில்க்கு எனது ஓட்டு..

    ReplyDelete
  85. "இளைய ஆசிரியருக்கு "


    இனிய திருமண நாள் வாழ்த்நுகள்..:-)

    ReplyDelete