நண்பர்களே,
வணக்கம். நமது ரேஞ்சர் குழுவினரிடம் இரவல் வாங்கிய வரிகளோடு பதிவுக்கொரு துவக்கம் தருவதே பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன் !! "அனைவருக்கும் அதிரடியான..அதகளமான...ஆசமான...அற்புதமான...அட்டகாசமான...தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக !! இல்லமெங்கும் சந்தோஷமும், ஒளியும் பரவட்டும் - நிலைக்கட்டும் !!
ஒவ்வொரு தீபாவளிக்கும் கழுத்துச் சுளுக்கிக் கொள்ளும் அளவுக்குப் பின்னே திரும்பிப் பார்த்த வண்ணம் - 1984 தீபாவளி மலரிலிருந்து, தொடர்ந்திட்ட ஒவ்வொரு memorable ஸ்பெஷல் இதழ் பற்றியும் சிலாகிப்பது நமக்கொரு வாடிக்கை !! 'அந்த நாள் போல வருமா ? ; அந்தக் கதைகள் போல் வருமா ?' என்று சப்புக் கொட்டிக் கொள்வதுமே இந்நேரத்து template தானன்றோ ? ஆனால் இந்தவாட்டியும் அதே வாடகைச் சைக்கிளை எடுத்துக் கொண்டு, அதே சேரன் போல, அதே ரிவர்ஸ் கியரைப் போடாது - ஒரு மாறுதலுக்கு, நமது சட்டித் தலையனின் கால இயந்திரமான "கோட்டை"யை இரவல் வாங்கிக் கொண்டு ஒரு பத்துப் பன்னிரண்டு வருடங்கள் முன்னே போய்ப் பார்த்தாலென்ன என்று தோன்றியது !! Maybe அடுத்த decade-ல் நமது தீபாவளி மலர் திட்டமிடல் எவ்விதம் இருக்குமோ என்று தான் யோசித்துப் பார்ப்போமே ?
இன்னுமொரு யுகமாயினும் நாம் அந்த மஞ்சள் சொக்காய் மனுஷன் மீதான மையலைத் தொலைத்திருக்க மாட்டோம் என்பதை யூகிக்க ரின்டின் கேனுக்கே சாத்தியப்படும் எனும் போது- 2030-ன் தீபாவளி மலருக்கான probables பட்டியலின் உச்சியில் TEX என்று கொட்டை எழுத்தில் இருக்குமென்பது திண்ணம் ! நிச்சயமாய் அதற்குள்ளாக போனெல்லி இன்னொரு 400 இதழ்களையாவது டெக்ஸ் தொடரில் போட்டுத் தாக்கி, அதகளம் செய்திருப்பார்கள் எனும் போது - TEX 1000 என்ற ராட்சச மைல்கல்லை தொட்டிருப்பார்கள் ! நாமும் 'தஸ்ஸு..புஸ்ஸு..' என்று மூச்சிரைக்கவாவது ஒரு 1500 பக்க TEX மேக்சியோ-மேக்சி ஆல்பத்தின் முஸ்தீபில் இறங்கி, வழக்கம் போலவே விழி பிதுங்கி நின்று கொண்டிருப்போம் ! அந்நேரத்திற்குள் கதாசிரியர் மௌரோ போசெல்லி டெக்சின் இளம் பிராயத்து தேடல்களை இன்னமும் துல்லியமாய்ப் புட்டுப் புட்டு வைத்திருப்பார் எனும் போது - "சிங்கத்தின் சிறுவயதில்.." என்று பெயரிட்டு டெக்சின் யூத் சாகசங்களோடு ஒரு 500 பக்கத்தையும் ; மெபிஸ்டோ + யமா கூட்டணியிலான வில்லன்களோடு நமது ரேஞ்சர்கள் மோதும் அட்டகாசத்தை இன்னொரு 1000 பக்கங்களுக்குப் போட்டு நிரப்பிட நம்மிடம் திட்டமிடல் இருக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை !! நமது இத்தாலிய ஓவியர் தனது சுகவீனத்திலிருந்து எப்போதோ மீண்டு, நமக்கு நிறையவே சித்திரங்களை போட்டுக் கொண்டிருக்க - ஒரு ராப்பரை அவரும், பின்னட்டையை நமது வயோதிக மாலையப்பனும் போட்டிருப்பார்கள் ! நானோ மூக்கில் ஒரு கண்ணாடியை மாட்டிக் கொண்டு - காமிக் லவர் பரிந்துரைத்த "சாவுக்கு சங்கு" என்ற தலைப்பை ஞாபகம் வைத்துக் கொண்டு, அதையே மெபிஸ்டோ சாகசத்துக்கான தலைப்பாக்கி விட்டு, " மரணதேவனுக்குப் பிரியமான பிரதிநிதி நானாக்கும் !! பரலோகத்தில் பிளாட் போட்டுத் தரும் நிபுணன் நான் !!" என்ற ரீதியில் அப்போதும் பன்ச் எழுதிக் கொண்டிருப்பேனோ என்னவோ ?! 'மனுஷன் ரிட்டையர் ஆனாலும் - பேனாவுக்கு விடுதலை தர மாட்டாரோ ?" என்று அப்போதைய எடிட்டர் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கக்கூடும் !
அந்நேரத்திற்கு black & white என்பதெல்லாம் முழுசுமாய்க் காலாவதியாகிப் போயிருக்காதா - என்ன ? So முழுசாய் 1500 பக்கங்களும் வண்ணத்தில் தக தகத்திட வேண்டுமென்று திட்டமிட்டிருப்போம் ! டெக்ஸ் அணியினில் அன்றைக்குமே அத்தனை பேரும் single பசங்களாகவே சுற்றித் திரிய, maybe சற்றே சுவாரஸ்யத்தைக் கூட்டிடும் பொருட்டு - ஒரு பெண் ரேஞ்சரையும் எப்படியேனும் உள்ளே நுழைத்திட போனெல்லி வழி கண்டுபிடித்திருக்கக்கூடும் ! சும்மாவே சாமியாடும் நமது வெள்ளிமுடியார் கார்சன் - ஒரு அழகான யுவதியோடு சாகசம் செய்யும் பட்சத்தில், அலப்பரைகளுக்குப் பஞ்சமே வைத்திடாது - கதை நெடுக நமக்கு கிச்சுக் கிச்சு மூட்டிடுவது விளைவாகிடக் கூடும் ! And கிட் வில்லருக்கும், அந்தப் பெண் ரேஞ்சுருக்குமிடையே ஒரு மெல்லிய ரொமான்ஸ் இழையோடுவது போல் அவ்வப்போது track அமையின் - சுவாரஸ்ய மீட்டர் இன்னமும் எகிறிடக் கூடும் ! "வோ'...; ஆகட்டும் இரவுக் கழுகாரே..' என்ற ரீதியில் மட்டும் சிக்கனமாய்ப் பேசிக் சுற்றி வரும் டைகருக்குமே கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டு - பழங்குடி மக்களின் சில பல வரலாற்றுத் தகவல்களோடு பின்னிப் பிணைந்த சாகசங்களும் உருவாகிடக் கூடும் ! அப்புறம் அந்த "வன்மேற்கு மாத்திரமே " என்ற ஆடுகளம் ஏற்கனவே சிறுகச் சிறுக மாற்றம் கண்டு, கனடா..மெக்சிகோ ; க்யூபா ; ஆர்ஜென்டினா என்று விரிந்து நிற்பது - மேற்கொண்டும் சிறகு விரித்து - ஐரோப்பாவில் நம்மவர்கள் கால் பதிப்பது போலவும் உருமாற்றம் கண்டிடலாம் !! யார் கண்டது - இத்தாலியிலேயே அவர்களை சாகசம் செய்யச் செய்து (சு)வாசிக்கும் நாளொன்று புலர்ந்திடவும் கூடுமோ ? எது எப்படியோ - கீழேயுள்ள இந்தப் பகடியான உருவம் அன்றைக்குமே நம்மவருக்கு இருந்திடாது - அப்போதும் ஆணழகராகவே மிளிர்ந்திடுவார் என்று தைரியமாய் நம்பலாம் !
ஒருகட்டத்தில் TEX spin-offs என கார்சனுக்கு ; கிட் வில்லருக்கு ; டைகர் ஜாக்குக்கு - என்றும் தனித்தனியாய்த் தொடர்கள் உருவாகிடக் கூடுமோ ? அவ்விதமாகும் பட்சத்தில் ஒரு பாக்ஸ் செட்டில் - 4 ரேஞ்சர்களின் சாகசங்களடங்கிய ஆல்பங்களைத் திணித்து - THE ULTIMATE COLLECTION என்று பெயரிட்டிட மாட்டோமா - என்ன ? Of course - "டெக்ஸ் ஓவர்டோஸ்" என்று ஒலிக்கும் குரல்கள் அன்றைக்கும் இருக்கும் தான் ; ஆனால் இன்றைக்குப் போலவே, அன்றைய பொழுதிலும் - கூரியர் டப்பாவினை உடைத்த கையோடு முதல் புக்காக டெக்சின் சாகஸத்தைத் தான் அவர்கள் எடுத்துப் புரட்டுவார்கள் என்பதும் நிச்சயம் !
அப்போதெல்லாம் கூரியர்கள் ரொம்பவே personalize ஆகிப் போயிருக்க, GPS டிராக்கிங் சகிதம் தேடிடச் சாத்தியமானதாக ஆகியிருக்கக் கூடும் ! அப்போதும், அதே புல்லட் வண்டியை உருட்டிக் கொண்டேயாவது போய், நமது கோவைக் கவிஞர்,கோவைக்கு 15 மைல் முன்னேயே கோழிகூவும் முன்பாகவே மடக்கி கூரியரைப் பெற்றுக் கொண்ட கையோடு - "என் வாழ்நாளில் பார்த்த அட்டைப்படத்தில் இது தான் பெஸ்ட் !" என்று ஒவ்வொரு மாதமும் கவிதைகளாய்ப் பொழிந்திடுவார் ! நமது பொருளாளர்ஜியோ - "சங்க இலக்கியமும், டெக்சின் மீதான மையலின் காரணமும்" என்றொரு நெடும் ஆராய்வை சமர்ப்பிக்க - அதன் மீதான அலசல்கள் சும்மா தெறித்து ஓடும் !! அப்போதுமே - "இந்த 1500 பக்க புக்கைப் படிக்க உங்களுக்கு எத்தனை நேரமாகிறது ? சித்தே நேரத்தைக் குறித்துச் சொல்லுங்களேன் !" என்று நான் தலையை நுழைக்க - சோடாப்புட்டிக் கண்ணாடிகளோடே வலம் வரக் கூடிய முக்கால்வாசி நண்பர்கள் - "8 மணி நேரம்...10 மணி நேரம்" என்று பதிலளிக்கக் கூடும் ! எத்தனை தம் பிடித்தாவது புக்கை முழுசுமாய்ப் பிடிக்காது தூங்க மாட்டோம் என்ற மட்டுக்கு உறுதியைச் சொல்லலாம் தானே ?!
அந்நேரத்துக்குள் எதிர்காலம் சார்ந்த கதைகளுக்குமே நாம் சிறுகச் சிறுகத் தயாராகியிருப்போம் என்றும் ஒரு பட்சி சொல்கிறது என் காதில் ! கரூர் டாக்டர் ராஜா மன்றாடிக் கோரி வரும் வலெரியன் தொடரானதோ ; The Incal தொடரோ அப்போது நம்மிடையே சூப்பர்ஹிட் தொடர்களாக வலம் வந்திடும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கக் கூடும் !! So ஒரு வலெரியன் மெகா இதழும் ; Incal தொகுப்பும் கூட தீபாவளி மலராய் தட தடக்கும் வாய்ப்புகள் ஏகம் என்பேன் ! 'தலையிலாப் போராளி' சைசில், ஹார்டுகவரில்..முழு வண்ணத்தில்...ஒரு பாக்ஸ் செட்டோடு வெளியாகிடக் கூடிய இந்த ஆல்பம் "இரத்தப் படலம்" ஏற்படுத்திய சாதனைகளையும் முறியடிக்கக் கூடும் ! அதே சமயம் - "ச்சை...எனக்கு ராக்கெட் விடக் கூடப் புடிக்காது ; இந்த அழகிலே ராக்கெட்டிலே போற மனுஷாள் கதைலாம் நான் கேட்டேனா ?" என்று ஒரு கணிசமான அணியானது முகம் முழுக்க கடுப்பைச் சுமந்து நிற்கக் கூடிய வாய்ப்புகளும் பிரகாசமாயிருக்கக் கூடும் ! அந்நேரத்துக்கு FB ; வாட்சப் க்ரூப்கள் என்பனவெல்லாம் புராதனங்களாகிப் போயிருக்க, அடுத்த கட்டமாய் face to face chat-களை பதிவு செய்து அவற்றை வலையில் உலாவிடச் செய்யும் app-கள் எக்கச்சக்கமாய் இருந்திடக்கூடும் ! So படித்த கையோடு ஆங்காங்கே குத்தாட்டம் போடும் அழகுகளையும் ; சும்மா "கிழி..கிழி..கிழி.."என்று தொங்கப் போடும் ரம்யங்களையும் நாம் ரசிக்க இயலும் !
அப்புறம் நம்மிடையே கிராபிக் நாவல் காதலானது கொஞ்சம் கொஞ்சமாய் வீரியமேறி - அப்போதைக்கு ஒரு அசைக்க இயலா ரசனையாய் மாறிப் போயிருப்பினும் வியப்பதற்கில்லை !! "எட்டுத் திக்கிலிருந்தும் உருவாகும், எவ்வித கி.நா.க்களும் இங்கே படித்து ; சுவைத்து ; ரசித்து ; ருசித்து ; அலசப்படும் !" என்று போர்டு வைக்காத குறையாக - கிராபிக் நாவல்களை ஆவலாய் எதிர்நோக்கியிருப்போம் !! JAYBIRD என்ற பெயரில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பாய் வெளியான ஒரு சித்திர மெகா விருந்தைக் கூட ருசி பார்க்கும் தில் அந்நாளில் நமக்கு வந்திருக்குமோ - என்னவோ ? மொத்தக் கதையிலும் பத்தே வரிகளுக்கு மிகுந்திடாது வசனங்கள் !! ஒரு பூட்டப்பட்டுக் கிடக்கும் வீட்டினுள் வசிக்கும் 2 சிறு குருவிகள் தான் இந்த நாவலின் பாத்திரங்களே ! சுகவீனமாயுள்ள தாய்க் குருவி, மிரண்டு போயிருக்கும் தனது பிள்ளையை வீட்டை விட்டு வெளியேறிட விடாது, வீட்டினுள்ளேயே வைத்திருக்கப் பிரியப்படுகிறது ! அவற்றின் நம்பிக்கைகள் ; பயங்கள் ; குழப்பங்கள் என்றொரு இருண்ட வாழ்க்கையினை ஒரு சித்திரப் பிரளயத்தில் சொல்ல முற்படும் ஆல்பமிது ! ஒன்றரை வருடங்களாய் இதனை எடுத்துப் புரட்டுவது ; பக்கங்களைப் பார்த்துக் கொண்டே யோசிப்பது ; அப்புறமாய் மீண்டும் பீரோவுக்குள் வைத்துப் பூட்டுவது என்றான வாடிக்கைக்கு அந்த தூரத்து ஆண்டினில் நிச்சயமாய் மாற்றமிருக்கும் என்று தோன்றுகிறது !!
அந்நேரத்துக்கு "இரத்தப் படலம்" சுற்று # 5 துவங்கியிருக்க, "நண்பர் XIII-ன் பூர்வீகம் ஆஸ்திரேலியாவில்" என்றொரு knot-ல் கதை புதியதொரு திக்கில் தடதடத்துக் கொண்டிருக்கக் கூடும் ! அந்நேரத்துக்கு மேற்கொண்டும் ஒரு ஏழோ-எட்டோ பெயர்கள், நம்மவருக்குச் சூட்டப்பட்டிருப்பது நிச்சயம் ! And மெயின் கதைத் தொடரின் துரிதத்துக்கு ஈடு தரும் விதமாய் spin -offs களுமே துவம்சம் பண்ணிச் சென்றிட - "மறுக்கா XIII - மொத்தமாய் ; முழுசாய் ; பெருசாய் !!" என்ற கோரிக்கை வலுப்பெற்றிடக் கூடும் ! So "இரத்தப் படலம் - ஒரு புதிய பார்வை !!" என்ற பெயரில் 2030-ன் தீபாவளி மலர் தயாராகிடும் சாத்தியங்களையும் ஒரேயடியாய் தள்ளுபடி செய்வதற்கில்லை !!
And கதாசிரியர் வான் ஹாம் அப்போதும் அட்டகாசமாய் உட்புகுந்து - XIII தொடருக்கு அதிரடியாய்ப் பங்களிப்புகளைத் தொடர்ந்திடவே செய்வார் - தற்போது அறிவித்திருக்கும் "புலன்விசாரணை - II"-ன் பாணியினில் !! And அன்றைக்குமே நமக்கு மூச்சிரைக்கும் - J VAN HAMME என்ற அந்தப் பெயரினை ஒரு பிரெஞ்சு ஆல்பத்தின் முகப்பில் பார்த்திடும் போதெல்லாம் !!
10 ஆண்டுகளின் தூரத்தில் - கார்ட்டூன்கள் பாகுபாடுகளின்றி ரசிக்கப்படக்கூடியதொரு ஜானராக புரொமோஷன் கண்டிருக்கும் என்பதிலும் எனக்கு ஐயமில்லை ! இதோ - தொடரவிருக்கும் ஒற்றை ஆண்டை - அரை டஜன் கார்டூன்களோடு மட்டுமே கரை கடக்கவிருக்கிறோம் எனும் போதே 'பளிச்'என்று தெரிந்து விடும் - நாம் எதை miss செய்கிறோமென்று !! So நிச்சயமாய் 2030-களின் தீபாவளி மலர் - ஒரு "ALL GENRE SPECIAL " என்று அமைந்திருந்து - ஒரே பாக்ஸ் செட்டினுள் - கார்ட்டூன் ஆல்பம்ஸ் ; TEX மெகா இதழ் ; கிராபிக் நாவல் என்றிருப்பினும் வியப்பு கொள்ள வேண்டியிராது என்று தோன்றுகிறது!
இன்றைய கனவுகளே, நாளைய நிஜங்கள் என்பதை எண்ணற்ற தடவைகள் பார்த்து விட்டோமெனும் போது - தகிரியமாய்க் கனவுகளில் திளைப்பதில் தப்பில்லை என்பேன் !! இதோ - இந்தப் பண்டிகை நாளில் குடும்பத்துடன் நேரம் செலவிட்ட பிற்பாடு - நீங்களும் உங்களின் (காமிக்ஸ்) கனவுகளை இங்கே களமிறக்கித் தான் பாருங்களேன் ? சும்மா-சும்மா பின்னே திரும்பிப் பார்த்துப் பெருமூச்சிடுவதற்குப் பதிலாய், இந்த looking ahead பாணியானது நமக்கொரு ஆரோக்கியமான மாற்றமாய் அமைந்திட்டால் - all will be well !!
Have a safe Diwali all !!! Bye & see you around !!
P.S : இன்னுமொரு LMS புக் கைவசமுள்ளது - இதோ இந்தச் சித்திரத்துக்குப் பொருத்தமாய் கேப்ஷன் எழுதும் வெற்றியாளருக்கு !! Go for it guys !!
காசு பணம் துட்டு
ReplyDeleteபணம் என்றால் என்ன என்று தெரியாத நமது நீல பொடியர்கள் உலகில் நுழைந்த பணம் அவர்களை எப்படிப்படுத்தி எடுக்கிறது என்பதை அழகாக அதே நேரத்தில் பணம் என்பதன் பின்னால் ஓடினால் நமது எல்லா சந்தோஷங்களையும் இழந்து விடுவோம் என்பதை அழுத்தமாகச் சொல்லும் கதை.
பணம் என்ற பேயை முழுவதுமாக புரிந்து கொள்ளாமல் அதனை நீலப் பொடியர்கள் ஒரு விளையாட்டாக ஆரம்பிக்க முதலில் சந்தோஷமாக பின்னர் அது அவர்களுக்குள் ஏற்ற இறக்கங்களை கொண்டு வருவதை மிகவும் அழகாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புரிந்து கொள்ளும்படி கதையை அமைத்த விதம் சூப்பர்.
பணத்தின் வீரியத்தை எப்போதும் சோம்பித்திரியும் நமது சோம்பேறி பொடியன் வேலை செய்ய ஆரம்பிப்பதன் மூலம் தெரிந்தது கொள்ளலாம்.
பொடியர்கள் பெரியவர்கள்.
+1
Deleteஎல பணம் படைச்சவனும் இதபஃபஓலவஏ விளையாட்டா ஆரம்பிச்சிருப்பானோன்னு தோணுது ....இப்ப பணமே விளையாட்டா வச்சு விளையாடுறோம்!
Deleteஎல பணம் படைச்சவனும் இதபஃபஓலவஏ விளையாட்டா ஆரம்பிச்சிருப்பானோன்னு தோணுது ....இப்ப பணமே விளையாட்டா வச்சு விளையாடுறோம்!
Deleteமுதலாவது....
ReplyDeleteHappy Deepawali Folks !! :-D
ReplyDeleteஇரண்டாமிடம்.....
ReplyDeleteதீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்.
ஆமா .. அப்போ (2030) ஆண்டுச் சந்தா எவ்ளோ இருக்கும்? அந்த 1500 பக்க புக்கு எவ்ளோ விலை இருக்கும்? :-)
ReplyDeleteநம்ம பணத்தோட மதிப்பு உயர்ந்து நாலுகாசா இருக்கும் சந்தா! புத்தகம் இலவசமா கிடைக்கும் ஸ்மர்ப்வில்லால போர!
Deleteவிஜயன் சார், உங்களின் 2030 முன்னோக்கி பயணத்தில் கார்டூன் கதைகளை மையமாக்கி எழுதி இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்.
ReplyDeleteஇந்த பதிவு வித்தியாசமான கற்பனை பதிவு. ஆனால் சுவாரசியம் கொஞ்சம் குறைவு.
ReplyDelete"Singathin Siruvayadhil " over ah sir?
ReplyDeleteடெக்ஸ் தொடர்வார்!
DeleteHappy deepavali to all
ReplyDeleteI am 9 th
10வது
ReplyDelete11 th. Happy Deepavali to all
ReplyDeleteசிங்கத்தின் சிறுவயதில்.." என்று பெயரிட்டு டெக்சின் யூத் சாகசங்களோடு ஒரு 500 பக்கத்தையும் ; மெபிஸ்டோ + யமா கூட்டணியிலான வில்லன்களோடு நமது ரேஞ்சர்கள் மோதும் அட்டகாசத்தை இன்னொரு 1000 பக்கங்களுக்குப் போட்டு நிரப்பிட நம்மிடம் திட்டமிடல் இருக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை !!
ReplyDeleteஇது நல்லா இருக்கு இப்பவே செயல் படுத்தி விடலாம் சார்.
அந்த மூணு புக்ல இதும் ஒண்ணு நண்பரே !
Deleteகாலம் மாறும் டெக்ஸ் ரசனை என்றும் மாறாது.
ReplyDeleteசீனியர் எடிட்டருக்கும், எடிட்டருக்கும், ஜூனியர் எடிட்டருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், பணியாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், அனைத்து நண்பர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeleteஎங்கள் வீட்டின் முத்த மகன் என் அண்ணன் விஜயன் அவர்களுக்கும் அவரது அலுவலக பணியாளர்களுக்கும் மற்றும் நம் தளத்து நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.
ReplyDeleteWishing you all happy deepavali.
ReplyDeleteNot sure about Tex in full color in 10 years, Tex looks better in B & W :)
1500 பக்க டெக்ஸ் ஸ்பெசலுக்கு எதற்கு 2030 வரை காத்திருக்க வேண்டும். டெக்ஸ75 2023 லயே வந்துடும். நீங்க பாட்டுக்கு போட்டுத் தாக்கலாம்.
ReplyDeleteஇன்கல், வலேரியன் எல்லாம் ஜம்போவில் வரலாமே....
ஏன் 2020 தெர்லயோ
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பர்களே
ReplyDelete21st
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTex:mm kathai ethirparthathu pola punch illa ...karsannu pidikkum vena eduthu poren..ok..
ReplyDeleteDialoaik:mm ennum unnaku intha uthar pogala ..ethu 2030..(anaka unnoda Kathi ennum Marana mass than po _feeling).
எடிட்டர் சாருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் லயன் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் மற்றும் காமிக்ஸ் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..!!
ReplyDeleteஜுனியர் எடிட்டர் விக்ரம் தம்பதியினருக்கு இனிய தலைதீபாவளி வாழ்த்துகள்..!!
ஆசிரியர், குடும்பத்தினர், அலுவலக பணியாளர்கள், வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஹா ஹா ஹா!! அருமையான பதிவு எடிட்டர் சார்!!
ReplyDeleteகடந்தகால சம்பவங்களை எழுத்தில் வடிக்கும் உங்கள் ஆற்றலை நாங்கள் நன்கறிவோம்! ஆனால் இப்படி எதிர்காலத்தில் கால்வைத்து, கற்பனையை ஊற்றாக்கி, உண்மையையும், உங்கள் ஆசைகளையும், கடந்தகால அனுபவங்களின் எதிர்கால விளைவுகளையும் யதார்த்தோடு கலந்து எழுதி - இப்படியொரு பதிவை துளியும் எதிர்பார்த்திடவில்லை இந்தத் தீபாவளி தினத்தில்!! செம்ம்ம்ம!!!
உங்களும், வாசக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!!
////டெக்ஸ் அணியினில் அன்றைக்குமே அத்தனை பேரும் single பசங்களாகவே சுற்றித் திரிய, maybe சற்றே சுவாரஸ்யத்தைக் கூட்டிடும் பொருட்டு - ஒரு பெண் ரேஞ்சரையும் எப்படியேனும் உள்ளே நுழைத்திட போனெல்லி வழி கண்டுபிடித்திருக்கக்கூடும் ! சும்மாவே சாமியாடும் நமது வெள்ளிமுடியார் கார்சன் - ஒரு அழகான யுவதியோடு சாகசம் செய்யும் பட்சத்தில், அலப்பரைகளுக்குப் பஞ்சமே வைத்திடாது - கதை நெடுக நமக்கு கிச்சுக் கிச்சு மூட்டிடுவது விளைவாகிடக் கூடும் ! And கிட் வில்லருக்கும், அந்தப் பெண் ரேஞ்சுருக்குமிடையே ஒரு மெல்லிய ரொமான்ஸ் இழையோடுவது போல் அவ்வப்போது track அமையின் - சுவாரஸ்ய மீட்டர் இன்னமும் எகிறிடக் கூடும் !////
ReplyDeleteஅழகான கற்பனை!! இந்த ஐடியாவை மட்டும் பொனெல்லியிடம் சொல்லிப்பாருங்களேன்... அடுத்த வருடத்திலேயே இப்படியொரு 'யுவதி ரேஞ்சரை' களமிறக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!!
எடிட்டர் சாருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் லயன் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் மற்றும் காமிக்ஸ் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..!!
ReplyDeleteஜுனியர் எடிட்டர் விக்ரம் தம்பதியினருக்கு இனிய தலைதீபாவளி வாழ்த்துகள்..!!
/////அதே புல்லட் வண்டியை உருட்டிக் கொண்டேயாவது போய், நமது கோவைக் கவிஞர்,கோவைக்கு 15 மைல் முன்னேயே கோழிகூவும் முன்பாகவே மடக்கி கூரியரைப் பெற்றுக் கொண்ட கையோடு - "என் வாழ்நாளில் பார்த்த அட்டைப்படத்தில் இது தான் பெஸ்ட் !" என்று ஒவ்வொரு மாதமும் கவிதைகளாய்ப் பொழிந்திடுவார் ! ////
ReplyDeleteஷா ஷா ஷா!!! :)))))))
காளங்காத்தளே கெச்சபிச்சேன்னு சிறிக்க வச்சுடீங்க எடிட்டர் சார்!!
காலங்காத்தால கெக்கேபிக்கேன்னு சிரிக்க வச்சுட்டீயள. ஆசிரியரே !இதான் நேரங்றதோ!
Deleteஎடிட்டர் சாருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் லயன் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் மற்றும் காமிக்ஸ் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..!!
ReplyDeleteஜுனியர் எடிட்டர் விக்ரம் தம்பதியினருக்கு இனிய தலைதீபாவளி வாழ்த்துகள்..!!
Happy deepavali to all.😀😁
ReplyDelete****** ச்சும்மாக்காண்டி!! நோ பரிசுக்காண்டி *****
ReplyDeleteடெக்ஸ் : உன்ர புக்கத்தான் படிச்சிக்கிட்டிருக்கேன் டயபாலிக்! மாறுவேஷம்லாம் போட்டு நல்லாத்தான் சாகஸம் பண்ணியிருக்க! எல்லாம் சரிதான்... ரோட்டிலே நடந்துபோன போன அந்த பாட்டீம்மா உன்னை என்னப்பா பண்ணுச்சு?? அதை ஏன் போற போக்கிலே போட்டுத்தள்ளினே? ராஸ்கோல்!!
டயபாலிக் : காரணமில்லாம நான் எதையும் செய்யறதில்லே டெக்ஸ்... மிலன் நகர் ரயிலில் நம்ம சிவகாசி எடிட்டர்ட்ட பாஸ்போர்ட்டையும், பணத்தையும் ஆட்டையை போட்ட பாட்டீம்மா தான் அது!
ஈ.வி நான் நினைச்சதில் பாதிய சொல்லிட்டிங்களே,ஞான் எந்து செய்யும்....
Deleteஒவ்வொரு மாதமும் மும்மாரி பொழிகின்ற,நம் லயன்,முத்து காமிக்ஸ் ஆசிரியர், மூத்த ஆசிரியர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்,தலை தீபாவளி காணும் இளைய ஆசிரியர் அவர்களுக்கும்,கனவுகளை நனவாக்கி நமக்கு வழங்கும், நம் அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் நம் காமிக்ஸ் நண்பர்கள் சார்பாக இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.. மேலும் காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான வாழ்த்து.
Deleteஆசிரியர், குடும்பத்தினர், அலுவலக பணியாளர்கள், வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஐ 39
ReplyDeleteஎடிட்டர் சாருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் லயன் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் மற்றும் காமிக்ஸ் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..!!
ReplyDeleteஜுனியர் எடிட்டர் விக்ரம் தம்பதியினருக்கு இனிய தலைதீபாவளி வாழ்த்துகள்..!!
அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
ReplyDeleteலயன் காமிக்ஸ் குடும்பத்தார் & வாசகர்கள் அனைவருக்கும்
ReplyDeleteஇனிய தீபாவளி திருநல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஎடிட்டர் சாருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் லயன் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் மற்றும் காமிக்ஸ் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..!!
ஜுனியர் எடிட்டர் விக்ரம் தம்பதியினருக்கு இனிய தலைதீபாவளி வாழ்த்துகள்..!!
(நன்றி சுசிண்ணா_/|\_)
.
பரால்ல சிபி தாத்தா!!!
Deleteவிதை விதைச்சி வெள்ளாமை பண்றது வெள்ளையப்பன் ..
Deleteஅதை தெனாவெட்டா தின்னுட்டுப் போறது திண்ணையப்பன்...!
இன்னா கொள்ளுத்தாத்தாஸ் ...!?
சார் அப்ப நான் ஹெலி காப்டர்ல பறந்து வந்து சிவகாசிலயே வாங்கிடுவனோ என்னமோ! நம்ம இதல்கள்ல ஸ்மர்ஃப்ஸ் கத்தையா வரலாம்! இரத்தப்டலம் படா சைசுல தலையில்லா போராளி சைசுல கத்தையா ஆனா ஒத்தயா இலவச இணைப்பா ஸ்பின் ஆஃப் கதைகள் ஒரே கத்தயா ! கோவைல வெளியாகும் இவ்விதழ வெளியிட நானும் நீங்களும் புல்லட்ல போய்....கவனிக்க புல்லட்ல போய் வான்ஹாம்மேவ ட்ரிபிள்ஸ்ல அழைத்து வந்து வெளிஇடலாம்!
ReplyDeleteஅப்புறம் வரும் நம்ம கேட்டதுக்கிணங்க லார்கோ கதைகள எழுதிக் குடுத்து தேவயான ஓவியர பிடிச்சி வரஞ்சுக்கங்கங்ன்னு சொல்ல நாம மறுக்கா அப்ப கண்டு பிடிச்ச புஷ்பக விமானத்ல போயி வான்ச அழைச்சு வந்த விடிவதற்குள் முடியும் கதைய படைச்சிருபபோம்! டெக்ஸ் இந்தியா வந்து சிவகாசில தோட்டாக்கள , அணுகுண்ட செய்து வாங்கி டைனோசர்களோட மோத போற கதய. போனல்லி உருவாக்க போய்ட்டு வரும் வரை கார்சன உங்களோட
ஆஃபீஸ்ல ஜாலியா காமெடி மொழிபெயர்க்க துணையா விட்டுட்டு போறாப்ள கதை உருவாக்கலாம்!
டெக்ச அப்டியே நம்ம அம்புலி மாமா, மாயாஜால உலகிற்கு பறக்கும் குதிரையில் மாய அரக்கியின் உயிர பறிக்க அனுப்றப்ல உங்க சஜசன கேட்டு கத படைக்கலாம்! நம்ம ஸ்பைடரோட அந்த குண்டு புத்தகம் விற்பனையால அதிர்ந்து விழித்தெழும் ஃபிளீட் வே ஸ்பைடர் 2.0வ வெளி இடலாம், துணையா ஆர்ச்சியயுமே !
தீபாவளி வாழ்த்துக்கள் விஜயன் சார், நண்பர்களே. வண்ண இரத்தப்படலம்
ReplyDeleteநிகழ்த்திய இமாலய சாதனையை இனி
எந்த ஒரு புத்தகமும் தகர்க்க இயலாது.
34வருடங்கள் கழித்தும் அதே காதலுடன்
XIIIன் வாசிப்பை தொடரும் உலக ரசிகர்கள் இருக்கும் வரை என்றும் இ ப
ஜேஸன் தான் டாப்.
This comment has been removed by the author.
Deleteஅப்ப நாம ஆசபட்டாப்ல த இ போ சைசுல ஒரே இதழா
Deleteசொல்ல மறந்த கனவு
ReplyDeleteஅப்ப Iorn man ,பேட்மேன் ஸ்பைடர்மேன், வேதாளன்லா கொண்ட வண்ணமிகு மலர் நம்ம என்பதுகள அதிர வைத்தார் போல பிரம்மாண்ட மலராய் லயனின் ஐம்பதாம் ஆண்டுமலராய் வருமே அடடா !
கருப்பு வெள்ளைல அதிரடி கதைகள் ஐம்பதின் தொகுப்பும் சும்மா அதிரடி கதம்ப இதழா துணையா வரணுமல்லவோ முருகா !
அப்டியே ஆஸ்ட்ரிக்சும், ஜான் ரேம்போவும், கராத்தே டாக்டரும்!
Deleteஆசிரியர் விஜயன் அவரது குடும்பத்தினர் அலுவலக ஊழியர்கள் மற்றும் காமிக்ஸ் வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய உளங்கனிந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள் !
ReplyDeleteடெக்சின் நண்பர் டைகர் ஜாக்கின் கதை என்பதால் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. டெக்ஸ் கதைகளில் தேவைப் படும் அணைத்து அம்சமும் இடத்தில் இருக்கிறது. வீரம், நகைச்சுவை சோகம் நண்பர்களுக்கிடையே ஆனா நெருக்கம் என்று சொல்லி அடிக்கிறது இந்த கதை.
ReplyDeleteசாண்டா பெ யில் ஓரிடத்தை காட்டி இந்த இடம் உனக்கு நினைவிருக்கிறதா டைகர் என்று கேட்க்கிறார் டெக்ஸ். அதை ஆமோதிக்கிறார் டைகர். டெக்ஸும் டைகரும் முதன் முதலில் சந்தித்த இடம் என்பதை மோப்பம் பிடிக்கும் கிட்டும் , கார்சனும் அந்த நிகழ்வு தங்களுக்கு தெரியாததால் அதை அறிய ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் தலை வழக்கம் போல பேச்சை மாற்றி விடுகிறார். ஆனால் வெள்ளி முடியாரின் தோண தொணப்பையும் நண்பர்களுக்குள் ரகசியம் இருக்க கூடாது என்ற வாதத்தினாலும் டைகரிடம் அனுமதி பெற்று விட்டு சொல்ல தொடங்குகிறார்.
முதலில் நான் தலை தான் ஹீரோ அதனால் அவர் சொல்லும் படி கதாசிரியர் வைத்திருக்கிறார் என்று நினைத்தேன். ஆனால் சொல்லப் போவது டைகரின் சோக கதை அதை அவர் வாயாலே சொல்ல வைத்து ஏதாவது ஒரு தருணத்தில் டைகர் பழைய நினைவுகளால் உடைந்து தன நண்பன் அழக்கூடாது என்ற ஜாக்கிரதையால் தான் டெக்ஸ் அப்படி சொல்கிறார் என்பது அப்புறம் புரிந்தது.
நண்பர்கள் என்ற பதத்திற்கு டெக்ஸும் அவர் நண்பர்களும் பெருமை சேர்ப்பவர்கள். கலாய்ப்பதில் மட்டுமல்ல அவர்களுடய மென் உணர்வுகளை புரிந்து கொள்வதிலும் அக்கறை கொண்டவர்களாக காட்டுவது அந்த கதா பாத்திரங்களுடன் ஒன்ற உதவி செய்கிறது.
எப்பபோதும் தலை இருக்கும் இடத்தில்தான் ரத்தக் களரி இருக்கும் இந்த கதையில் டைகர் செய்யும் ரத்தக் களரியை பார்த்து தனி ஒருவன் எப்படி இதனை பேரைக் கொல்ல முடியும் என்று திடுக்கிடுகிறார் டெக்ஸ். அவர் அனுமானிப்பது போலவே அது ஒரு பழிக்குப் பழி தான்.
ஒரே சோகமாக பிழிந்து எடுக்காமல் இடையிடையே நகைச்சுவைக்கும் இடம் கொடுத்திருக்கிறார்கள். ஒளிந்திருக்கும் டைகர் ஜாக் அதி காலையில் புனித மானிடோவை சத்தம் போட்டு கும்பிட்டு முழு ஹோட்டலையே எழுப்பி விடுவது ஒரு துளி. சாண்டா பெயின் ஷெரிப் டெக்ஸ் டைகரை காப்பாற்றும் விஷயத்தை தெரிந்து கொண்டாலும், டைகரால் அந்த ஊர் சுத்தமானதினால் அதைப் பற்றி கண்டு கொள்ளாமல், டெக்ஸுடன் நக்கலாக பேசும் அந்த இடம் மிகப் பிடித்திருந்தது. டைகரின் கதையை கேட்டு தொண்டையை அடைத்து கண் கலங்கும் கார்சன், ஆனாலும் உங்களுக்கு இலவம் பஞ்சு மனசு அங்கிள் என்று கிட் சொல்ல, கண்ணு வேர்க்குது என்று சமாளிப்பது கலகலப்பு.
தோழனுக்கு தோள் குடுத்திருந்தாலும் க்ளைமாக்ஸில் தான் சட்ட அதிகாரி என்பதால் வில்லனை கொல்வதை தடுக்கிறார். தன காதலி இறந்ததை அறிந்து சோகத்தில் இருக்கும் டைகர் தான் கொலை கும்பலை அழித்து தானும் செத்து விடும் நோக்கத்துடன் இருப்பதை அறிந்து டைகரையும் அந்த பெண்ணையும் முன்னே அனுப்பி விட்டு தானே கொலை கும்பலை எதிர் கொள்கிறார். அதன் மூலம் டைகரை காப்பாற்றுகிறார். மொத்த கும்பலும் தம்மை துரத்தும் என்பதை யூகித்து இருமலைகள் இடையே வெடி வைத்து தகர்த்து கும்பல் பின் தொடர முடியாமல் பண்ணுவது நல்ல யுக்தி.
தன் நண்பனை காப்பாற்றுவது மட்டுமில்லாமல் அவன் துக்கத்திலும் உடன் இருக்கிறார். அவன் துயரத்திலேயே மூழ்கிவிடாமல் இருக்க அவனை இட மாற்றத்துக்கு தன கிராமத்திற்கு அழைத்து செல்கிறார். ஆனால் அங்கும் நிம்மதி இல்லாமல் டைகர் தான் தனியே புனித நவஹோ மலைகளுக்கு சென்று தங்க இருப்பதை சொன்ன வுடன் அது உனக்கு நிம்மதி தருமென்றால் செல் என்று அனுப்பி வைக்கிறார். பெரிய துக்கத்துக்கு பின் நமக்கு ஒரு சாதாரண வாழ்வில் இருந்து ஒரு பிரேக் தேவைப் படுகிறது. தனிமையில் ஒரு தவத்தை முடித்து டைகர் மீண்டும் டெக்சின் கிராமத்திற்கு வருவதுடன் இந்தக் கதை முடிவடைகிறது.
எனக்கு இந்தக் கதை சொல்லிக் கொடுத்தவை
1) ஒரு நல்ல நண்பன் இருந்தால் எந்த துயரத்தில் இருந்தும் மீண்டு விடலாம் .
2) நண்ப னை எந்த நிலையிலும், முக்கியமாக அவன் துயரத்தில் இருக்கும் போது அவனை நல்ல நண்பர்கள் தாங்கி பிடிக்க வேண்டும் .
3) எப்படிப் பட்ட துயரம் இருந்தாலும் காலத்தின் சக்தியால் நாம் மீண்டு வரலாம் என்ற நம்பிக்கை விதையை நம்முள் விதைக்கிறது.
4) நம்முடைய வாழ்வில் இடையில் ஒரு பிரேக் எடுத்து தனிமையில் அல்லது ஒரு பயணத்தில் இருப்பது நம்மை நாமே உணர்ந்து அறிய உதவும்.
இந்தக் கதை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஒவ்வொரு வாழ்க்கை பற்றிய ஒவ்வொரு கோணத்தை வழங்க வல்லது. தத்துவார்த்தமான வசனங்கள் இந்த கதையை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்கின்றன. இந்த மாதிரியான வீரம், நெகிழ்ச்சி நட்பு கலந்த கதையை தான் எதிர் பார்த்தோம். இது ஆயிரம் வாலா பட்டாசு மட்டுமல்ல, வாழ்க்கையின் பல பரிமாணங்களை வர்ணஜாலங்களாக காட்டும் பேன்சி பட்டாஸும்தான் .
சூப்பர் டா
Deleteநண்பரே விமர்சனம் மிகவும் அருமை. தங்களது எழுத்து நடை அருமையாக உள்ளது.
Deleteனியில் ஒரு பிரளயம்
ReplyDelete========================
என் கல்லூரி நாட்களில் முதன் முதலில் மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரில் பார்த்த படம் "The Spy who loved me" Roger Moore நடிப்பில் வந்த பிரமாண்டமான படத்தை பார்த்து விட்டு வந்ததில் இருந்து 007 தான் என் ஆஸ்தான சினி நாயகன் ஆனார். ராணி காமிக்சில் வந்த 007 காமிஸ்களை படித்திருக்கிறேன். ஆனால் இந்த புக் வேற லெவல். ப்ளூ ஜீன்ஸ் இல்லாத இடத்தை 007 நிரப்புவார் என்பதை அடித்து சொல்லலாம். அடுத்த வருடம் மெயின் சந்தாவில் ப்ரோமோஷனும் கிடைக்கலாம்.
அட்டைப் படமே அள்ளுது. வேற லெவல் அட்டைப் படம். இந்த கதை நாம் வாசிக்கும் காமிக்ஸ்சின் அடுத்த வெர்சன் என்றே சொல்லலாம். கதை வழக்கமான 007 கதைதான் என்றாலும் வரைந்த விதத்திலும், கோணங்களிலும் , தேர்ந்தெடு த்த வண்ணங்களிலும் கலக்கி இருக்கிறார்கள். அதிக ரத்தக் களரி என்பதால் வன்முறை அதிகம் என்று சில நண்பர்கள் நினைக்கலாம். தன மீதான கொலை முயற்சிக்குப் பின் ஒன்றும் நடவாதது போல் தன சூட் கேஸை எடுத்துக் கொண்டு நடக்கும் ஒரு காட்சி போதும் 007 கெத்தை காட்டுவதற்கு.
வேற லெவல் சார் வேற லெவல். எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.
காசு பணம் துட்டு
===================
எப்பவுமே பொடியன் கதைகளை அ ல்பமாக எடுத்துக் கொள்ளும் நண்பர்கள் இதையும் அப்படி எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு பொடியன்களை பிடிக்காவிட்டாலும் இந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள். பணம் நம் வாழ்வை எப்படி எல்லாம் மாற்றுகிறது என்று தெரியும். பணம் எப்படி ஏற்ற தாழ்வுகளை உருவாக்கு கிறது. பேங்க் எப்படி நம்மை கொள்ளை அடிக்கிறது. பணம் எப்படி நம்மை "நீ சம்பாதித்தால் தான் பிழைக்க முடியும்" என்று பிடிக்காத தொழில் தள்ளுகிறது. க்ளைமாக்சில் அந்த கிராமமே தனக்கு சொந்தம் என்றிருந்தாலும் கூட யாரும் இல்லாத நிலையை பைனான்ஸ் பொடியன் போல எல்லா பணக் காரர்களும் அனுபத்திருந்தும் பணத்தின் பின் தான் ஓடுகிறார்கள்.
பணம் முக்கியமல்ல மனிதர்கள் தான் முக்கியம் என்று பாடம் சொல்லித்தரும் புத்தகம் இது. பொடியர்கள் திரும்ப வர வேண்டும்.
மூன்று புத்தகங்களும் மூன்று முத்துக்கள். ஒரு மாதத்தின் எல்லா புத்தகங்களும் ஹிட் அடிப்பது எல்லா மாதங்களும் நடக்காது. தீபாவளியை காமிக்சுடன் கொண்டாடுவோம்.
காமிக்ஸ் அட்டவணை பெரிய சைசில் வந்திருப்பது சூப்பர். சும்மா ஒரு புக் மார்க்கர் அனுப்பாமல் எல்லோருக்கும் உபயோகப் படுகிற மாதிரி காலெண்டர் கொடுத்தது அருமை.
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
//பணம் எப்படி நம்மை "நீ சம்பாதித்தால் தான் பிழைக்க முடியும்" என்று பிடிக்காத தொழில் தள்ளுகிறது. க்ளைமாக்சில் அந்த கிராமமே தனக்கு சொந்தம் என்றிருந்தாலும் கூட யாரும் இல்லாத நிலையை பைனான்ஸ் பொடியன் போல எல்லா பணக் காரர்களும் அனுபத்திருந்தும் பணத்தின் பின் தான் ஓடுகிறார்கள்.
Deleteபணம் முக்கியமல்ல மனிதர்கள் தான் முக்கியம் என்று பாடம் சொல்லித்தரும் புத்தகம் இது. பொடியர்கள் திரும்ப வர வேண்டும்.
//அப்டி போடுங்க வெடிய
ஸ்மர்ப் பற்றி எனது கருத்தும் இதே.
Deleteஆசிரியர், குடும்பத்தினர், அலுவலக பணியாளர்கள், வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஎடிட்டர் சார்,
1250 பக்க மெகா கதை ஒன்றைப் பற்றி ஒருமுறை சொல்லியிருந்தீர்கள். அடுத்த தீபாவளி மலருக்கு ப்ளான் பண்ண முயற்சிக்கலாமே!!
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteசார் அந்த சிட்டுக்குருவிய இப்பயே போடலாமேலகுறைந்த அளவிலாவது!
ReplyDeleteஅனைவருக்கும் தீபஒளித் திருநாள் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஆசிரியர் அவர்களுக்கும் ,அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் ,நிறுவன பணியாளர்களுக்கும் ,இங்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கும்
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..
OO7 jumbo top class .....don't miss this series ....we need all the books one by one..thanks
ReplyDeleteகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா கூறிய 1500 பக்க கொவ்பாய் காமிக்ஸ் எப்போது வெளியிடப்படும்..
ReplyDeleteஅது ஆசிரியர் சொன்னது நண்பரே ...அந்த மூணுல அதும் ஒன்னு ஈரோட்ல வெளி வரும் ஆகஸட்ல
Deleteகாதலும் கடந்து போகும் - டெக்ஸ் கடந்து போக மாட்டார் என்பதை மீண்டும் நிரூபித்த சாகஸம்.
ReplyDeleteஓவர்...:-)
oo7 தொடரும் மாதங்களிலும் இதேபோல் தொடருமாயின் டெக்ஸ் வில்லாின் முதலிடம் பறிபோவது உறுதியாகிவிடும்!!
ReplyDeleteஆக்ஷன் கதைகளை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்வதாகவே oo7 அமைந்துள்ளது!!
அச்சுத்தரமும், ஓவியமும், மிக அற்புதம்!
மேலோட்டமாக பக்கங்களை புரட்டும்போது அப்படியொன்றும் பொிய ஈா்ப்பை உண்டாக்கவில்லை தான்! ஆனால் கதையை படிக்கும்போது ஒருபடி கூடுதலாக ஓவியங்கள் கவனத்தை ஈா்க்கிறது!
டமால், டுமீல் இல்லாததும், அவற்றை நம் கற்பனைக்கே விட்டுருப்பதும் முற்றிலும் புதிய அனுபவத்தை உண்டாக்குகிறது!!
ஆக மொத்தத்தில் நெடுங்காலமாய் வெள்ளித்திரையில் பாிச்சமான, "oo7" இந்த story board format-லும் 100 % கவனத்தை ஈா்த்து சிறப்பு செய்கிறது!!
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏
ReplyDeleteமெபிஸ்டோ + யமா, மேஜிக் special ஒரு சிறப்பு வெளியீடு சார், கொஞ்சம் மனசு வைங்க சார் please.
Deleteஎன்னுடைய கனவு வேதாளர் மட்டுமே
ReplyDeleteடெக்ஸ்....கொலகாரப்பாவி!
ReplyDeleteடயபாலிக்....இங்க மட்டும் என்ன வாழுதாம்!
டெக்ஸ்....ஐயோ ஐயோ
ReplyDeleteடயபாலிகு ஐயய்யோ
டயபாலிக் ...பேசாம எங்கூட சேந்துக்கயேன் ....கையாலே பெட்டகங்கள ஒடச்சிரலாமே
ReplyDeleteடெக்ஸ் ...இன்னொருக்கா சொல்லு பாக்கலாம்
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
ReplyDelete🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
சீனியர் எடிட்டர் சார்,
ஆசிரியர் சார்,
ஜூனியர் எடிட்டர்,
லயன்-முத்து பணியாளர்கள்,
&
ஆருயிர் நண்பர்கள்
அனைவருக்கும்---
இனியி இனிப்பான தீபாவளி நல்வாழ்த்துகள்....!!!!
💐💐💐💐💐💐💐💐💐💐
🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎉🎊
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
டெக்ஸ்....எங் கதக்குள்ள நீ வா....மொகரய பேக்கறேன்
ReplyDeleteடயபாலிக்....வராமலயா! கார்சனா உங்கூட வர்ரது யாராம்
அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். அதுக்காக இப்படியா ? தீபாவளிக்கு பதிவு போட வேண்டுமேன்னு போட்ட மாதிரி இருக்கு. புஸ்வாணம் புஸ் ஸுன்னு ஆன மாதிரி ஒரு feeling.
ReplyDelete// மெபிஸ்டோ + யமா கூட்டணியிலான வில்லன்களோடு நமது ரேஞ்சர்கள் மோதும் அட்டகாசத்தை இன்னொரு 1000 பக்கங்களுக்குப் போட்டு நிரப்பிட நம்மிடம் திட்டமிடல் இருக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை !! //
ReplyDeleteஒன்னு நல்லா தெரியுது டெக்ஸ் + மெபிஸ்டோ,டெக்ஸ் + யமா கூட்டணி,ஏதாவது ஒரு நாளில் சாத்தியம்தான், அந்த நாள் எப்போது புலரும் என்றுதான் தெரியவில்லை,காத்திருப்போம்..........
Still not received courier. called that courier office, mobile numbers are not reachable. Called area manager and shared the tracking number. still no response from him...(Chennai, santhosapuram)...
ReplyDeleteகேப்ஷன் போட்டி : 1
ReplyDeleteடெக்ஸ் : தம்பி டயபாலிக்! ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்,நம்ம சிவகாசி எடிட்டர் 7 ல இருந்து 77 வரைக்கும்னு காமிக்ஸ் படிக்கச் சொல்லி கேட்டுக்கிட்டு இருக்கார்,நீ என்னடான்னா 7 ல இருந்து 77 வரைக்கும் பாரபட்சம் இல்லாம போட்டுத் தள்ளிகிட்டு இருக்க,இது நியாயமா ???
டயபாலிக் : அட ஏன் டெக்ஸ் நீ வேற,டெய்லி ஒருத்தரையாவது போட்டுத் தள்ளலைன்னா எங்கையெல்லாம் நடுங்குதுப்பா,நான் என்ன பண்ணட்டும்....
கேப்ஷன் போட்டி : 2
Deleteடெக்ஸ் : டே டயபாலிக்! நேத்து சாப்பிட்ட இட்லிக்கு காசு கேட்டுச்சுன்னு இட்லி கடை ஆயாவையே போட்டுத் தள்ளிட்டியாமே ???
டயபாலிக் : எனக்கு காசு புடிங்கித்தான் பழக்கம்,கொடுத்து பழக்கம் இல்ல,டெக்ஸு நாம வாழனும்னா நாலு பேத்தை போட்டுத் தள்றதில் தப்பே இல்லை...... அது......
2வது கேப்சன் மாப்பு...
Deleteடயபாலிக் ஏன் நம்மை கவரலனா இதனால் தான்... இட்லி கெலாம் கொலை பண்ணறது தான்... செம ரவி..!!
....டாப்பு...
Deleteடயபாலிக்....உங்கதய படிச்சதும் நானும் திருந்திட்டேன்
ReplyDeleteடெக்ஸ் ...அப்ப நம்ம தமிழாசிரியருக்குண்டான விபரீத கற்பனைய போக்க துணையா ஒன்ன போடலாம்னு படைப்பாளிட்ட ஒடனே பேசிருவோம் வா!
எடி சார், 2030 வாக்கில் லயன்முத்து காமிக்ஸ் என்னவெல்லாம் வருமெனும் கற்பனை நன்றாகவே இருக்கு. ஆனாலும் அப்ப சந்தா தொகை எவ்ளவாக இருக்கும்னு கற்பனை பண்ணி பார்த்தால் பயமா கிடக்குது சார். 😄
ReplyDeleteஅப்ப இருக்கும் சிலிண்டர் விலை,பெட்ரோல விலை எல்லாம் நினைச்சிப் பாருங்க நண்பரே,பயம் போயிடும்...ஹிஹிஹி...
Delete///அப்ப இருக்கும் சிலிண்டர் விலை,பெட்ரோல விலை எல்லாம் நினைச்சிப் பாருங்க நண்பரே,பயம் போயிடும்...ஹிஹிஹி...///
Deleteஹா...ஹா..
என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க, சப்சிடில சிலிண்டர் வாங்கிற கூட்டத்து ஆளு நானு. காமிக்சுக்காக ஒரு சிலிண்டர் என்ன ரெண்டு சிலின்டரே வேண்டாம்னு வைக்கலா..
Deleteஅனைவருக்கும் வணக்கம் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஎடிட்டர் சாருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் லயன் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் மற்றும் காமிக்ஸ் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..!!
ReplyDeleteஜுனியர் எடிட்டர் விக்ரம் தம்பதியினருக்கு இனிய தலைதீபாவளி வாழ்த்துகள்..!!
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.!!!
ReplyDeleteகேப்ஷன் போட்டி : 3
ReplyDeleteடெக்ஸ் : டே ரப்பர் மண்டையா,நீ என்ன வரவங்க,போறவங்க எல்லாத்தையும் வகை தொகை இல்லாம போட்டுத் தள்ளிகிட்டு இருக்கியாம்,நிறைய புகார் வருது,ஒழுங்கா இரு இல்லைன்னா நானே உன்ன என்கவுண்டரில் போட்டுத் தள்ளிடுவேன்....
டயபாலிக் : அட என்னா தல என்னைப் பார்த்து இப்படி சொல்லிட்ட,நான் பாட்டுக்கு போனேனா,கொள்ளை அடிச்சேனா,வந்தேனான்னு இருக்கேன், நானா யாரையும் போட்டுத் தள்ள மாட்டேன்,தானா வந்து இடைஞ்சல் பண்ணா போட்டுத் தள்ளாம விட மாட்டேன்,இதான் என் பாலிசி,மத்தபடி நான் ரொம்ப நல்லவன் தல.....
ஹாய் நண்பர்களே...
ReplyDeleteமுதலில் ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
(கொண்டாட சில பிஜிலி வெடிகள் இதோ....)
கேப்சன்1:
A.ஒரு ரேஞ்சர் கையில திருடனோட புக்...என்ன கொடுமைடா இது...
B.ஒரு திருடன் கையில ரேஞ்சரோட புக்...என்ன கொடுமைடா இது...
கேப்சன்:2
A.என்னப்பா...ரொம்ப நேரமா ஒரு பக்கத்தயே வெறிச்சு பார்த்துகிட்டு இருக்க..அய்யோ பாவம்..படிக்க தெரியாதோ?
B.ஹி..ஹி..தெரியாதுப்பா..நீ மட்டும் என்னவாம்? ஒரு மணி நேரமா புத்தகத்த தலைகீழாதான் பிடிச்சுகிட்டு இருக்கற..முதல்ல நேரா வை
கேப்சன்:3
A.ட..யா...பா...லி...க்....
B.டெ...க்...ஸ்....
(நம்ம Mind voice:-
அடேய்...இது முதியோர் பள்ளிகூடண்டோய்..)
கேப்சன்:4
A.இவ்ளோ நாளா பொம்ம கததானேனு தப்பா நினைச்சுட்டேன்...எவ்ளோ நல்ல விசயம்லாம் இதுல இருக்குன்னு படிக்கறப்பதான் தெரியுதுல்ல...
B.ஆமாம் டெக்ஸ்...இதெல்லாம் படிச்சு வளர்ந்திருந்தா நான் கெட்டவனாவே ஆகிருக்க மாட்டேன்..இன்னைக்கே சந்தாவுக்கு புக் பண்ணிட வேண்டியதுதான்
கேப்சன்:5
B.என்ன டெக்ஸ்...முகம் வாட்டமா இருக்க?
என் கதை பிடிக்கலையா
A.கதைலாம் நல்லாதான் இருக்கு...தீபாவளிக்கு புது டிரெஸ் வாங்கி வச்சுருக்கேனு கார்சன் சொன்னான்...ஆசையா வந்து பார்த்தா அதே ரேஞ்சர் டிரெஸ்.சூப்பர் ஹீரோவா இருக்கத விட கஷ்டம் எவ்ளோ வெயிலயும் நல்ல நாளுலயும் இந்த யூனிபார்மோட இருக்கதுதான்..
B.மி டூ டெக்ஸ்
கேப்சன்:6
A.தப்பு பண்ணதுக்கு தண்டனையா இவன் புக்க படிக்க கொடு்த்துட்டாங்களே... தூக்குல போட்டிருந்தா கூட நிம்மதியா இரண்டு நிமிசத்துல உயிர விட்ருக்கலாம்..
B.தப்பு பண்ணதுக்கு தண்டனையா இவன் புக்க படிக்க கொடு்த்துட்டாங்களே... தூக்குல போட்டிருந்தா கூட நிம்மதியா இரண்டு நிமிசத்துல உயிர விட்ருக்கலாம்...
கேப்சன்:7
A.நமக்குள்ள என்ன ஒற்றுமை இருக்குனு நம்மள ஒண்ணா கேப்சனுக்கு போட்ருகாங்க
B.ஏன் இல்ல டெக்ஸ்...நீ தப்பு பண்ணா சுடுவ..நான் தப்பு பண்ண சுடுவேன்..
சுருக்கமா நீ ரேஞ்சர்...நான் டேன்ஜர்...
கேப்சன்:8
A.என்னதான் ஆன்லைன் புக்ஸ்,கிண்டுல் அது இதுனு நிறைய வந்துட்டாலும் கூட இப்படி இயற்கையோட இணைந்து காகிதத்தாள் காத்துல படபடக்க,புது புத்தகத்தோட வாசனையையும் சேர்த்து படிக்கற சுகமே தனிதான்ல டயாபாலி்க்
B.உண்மைதான் டெக்ஸ்...
கேப்சன்:9
A.பன்றி காய்ச்சல்டெங்கு காய்ச்சல் எலிக்காய்ச்சல்லாம் இங்க நம்ம இத்தாலில இல்லையே ஏம்ப்பா...
B.அதெல்லாம் தமிழ்நாட்ல தான் டெக்ஸ்..இங்க நம்ம புக்ஸ் ரிலீஸ் ஆகறப்ப வர டெக்ஸ் பீவர்,டயாபாலிக் பீவர் மட்டும்தான்...
கேப்சன்:10
B.இந்த மக்கள பரிஞ்சுக்கவே முடியல டெக்ஸ்..பாரு நல்லவனா இருக்கற உன்னயும் ரசிக்கறாங்க.கெட்டவனா இருக்கற என்னையும் கொண்டாடுறாங்க
A.காரணம் ரொம்ப சிம்பிள்தான்...உன் வில்லதனத்த மனசுக்குள்ள ஔிச்சு வச்சுருந்தும்,என் நல்லதனத்த பொய்யா வெளிய காமிச்சு நடிக்கறவங்கதானே அவங்க..அதான்...
-மரு.பெ.பார்த்தீபன்,கரூர்.
நன்றி.
@edi and all
ReplyDeleteHappy Diwali
Plz bring out jaybird.. English version is 2300!!!!!
Deepavli greetings
ReplyDeleteHappy deepavalli folks
ReplyDeleteடயபாலிக்: வாசகர்கள் மத்தியிலே உன் அளவுக்கு நான் ஏன் ஜெயிக்க ல.
ReplyDeleteடெக்ஸ்: ஒருவேளை சூப்பர் ஹீரோ மாதிரி நீயும் பேண்ட்க்கு மேல ஜட்டி போட்டிருந்தா ஜெயிச்சிருப்பியோ
டயாபாலிக் : ஏம்பா டெக்ஸூ, என்னோட டயாபாலிக் டயாபடீஸ் ஸ்பெஷல் படிக்கிறியாக்கும்.
ReplyDeleteடெக்ஸ்: நாடு முழுக்க டாக்டர் வேஷத்துல நீ கொல்லு கொல்லுன்னு போட்டுத்தள்றியேப்பா....
டயாபாலிக்: அட போப்பா, உன்ன மாதிரி முகமூடி செஞ்சு ஆள் மாறாட்டம் பண்ணி சுருள்கேப் பட்டாசு சுட்டதுக்கு , நேரம் தப்பி பட்டாசு விட்டதா ஆறு மாசம் உள்ள தள்ளீட்டாங்க.....
டயபாலிக்: ஏன் தல ... சோகமா தலையை கவுந்து புக்கு பாத்துட்டு இருக்கீங்க?
ReplyDeleteடெக்ஸ்: 2030 ல என்னோட போட்டோன்னு சொல்லி எனக்கு பதிலா தளத்துல கிட் ஆர்டின் கண்ணர் போட்டோவ ஆசிரியரு போட்டுட்டாருப்பா...
ஹா ஹா
Deleteநல்லாத்தானே இருக்கும்..!!
Deleteஞானொரு கறுப்பு டெக்ஸ்வில்லராக்கும்..!!
அந்த போட்டோவை பார்த்தவுடனே லைட்டா ஒரு டவுட் வந்தது.. இப்போ கன்பார்ம் ஆயிடுச்சு...
Deleteவாயும் வயிறுமா இருக்கும் புள்ளைகிட்ட என்னய்யா அங்க சத்தம்...!!!
Deleteசும்மா பேசிகிட்டிருக்காங்க மாமா
Delete@ MP
Deleteஹா ஹா ஹா!! செம நக்கல்!! :)))))))
டெக்ஸ் : ஏம்பா நிலாவுல சாய்பாபா தெரிஞ்சாராமே அங்கேயிருந்த ஆயா எங்க போச்சி
ReplyDeleteடயபாலிக் : அந்த ஆயாவுக்கு தெரியாம நான் வடைய திருட பாத்தேன் ஆயா பாத்திருச்சி அதனால போட்டு தள்ளிட்டேன் ப்ரோ
டெக்ஸ் : அடப்பாவி
டயபாலிக்... டயபாலிக்... டயபாலிக் ராக்ஸ்...ஹா..ஹா..👏
Deleteநண்பர்களே...யாரிடமாவது மாடஸ்தியின் கழகு மலை கோட்டை இரண்டு பிரதி இருந்தால்...ஒன்றை விலைக்கு தர முடியுமா...முடியும் என்றால் இதில் பதில் தரவும்...நான் முகவரி மற்றும் கைப்பேசி எண் தருகிறேன்.
ReplyDeleteஆசிரியர், குடும்பத்தினர், அலுவலக பணியாளர்கள், வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteடயபாலிக்: என்னாடெக்ஸு.. ஏன் சோகம்?
ReplyDeleteடெக்ஸ்: தீபாவளிக்கு ஒரு மணி நேரம் தான் பட்டாசு வெடிக்கணும் என்று சொன்னாங்க. நான் அதுக்கு ' நாங்கள் எல்லாம் ஒற்றை நொடி.ஒன்பது தோட்டா டைம்சு. ஒரு மணி நேரமே ஜாஸ்தி அப்படிண்ணேன்'.போய் ஓரமா உக்கார்ந்து லயன் காமிக்ஸ் தீபாவளி மலர் வந்திருக்கு.சத்தம் போடாம படின்னு அனுப்பிட்டாங்க..'
ட்யாலிந்:(நாம பரவாயில்ல போல.)
கேப்ஷன் போட்டிக்கு நாங்களும் வருவோம்
ReplyDeleteA : நீ என்னதான் அந்த 'மாறுவேட மன்னன்' மாதிரியே மாஸ்க் போட்டுட்டடு வந்தாலும் நான் சுலபமா கண்டுபிடுச்சுடுவேன் கார்சன்...
B : அடப்பாவி! நான்தான் கார்சன்'னு எப்படி கண்டுச்சே டெக்ஸ்? டைகரை வேவு பார்க்க சொன்னியா?
A : ஊஹும். அந்த புக்ல மூணாவது பக்கத்துல 'அந்த அழகான இளம் யுவதி தன் இரு கரங்களிலும் சூடான வறுத்தகறி பிளேட்டுகளோடு வந்தாள்'னு நீ வாசிக்கும் போதே உன் வாயில இருந்து ஜலப்பிரவாகம் வழியுதே.அத வச்சுத்தான்.
Clap! Clap! Clap!....concept of this caption is awesome....good one...
Deleteநைஸ் ஒன் மகேஷ்...!!!
Delete@ magesh kumar
Deleteஹா ஹா ஹா! பொருத்தமான கற்பனை!! :))))
super ji!
Deleteடெக்ஸ் : ஏம்பா டயபாலிக்.நீ எவ்வளோ கொலை பண்ணாலும் கொள்ளை அடிச்சாலும் பொண்ணுங்க எல்லாம் உன்ன பாத்துதான் மயங்குறாங்கன்னு நம்ம கார்சன் புலம்புறாம்பா. ஆமா.. எப்படி இதெல்லாம்..?
ReplyDeleteடயபாலிக் : அதாங்க இந்த பொண்ணுங்க மென்டாலிட்டி.. அவங்களுக்கெல்லாம் உத்தம புருஷன்களைவிட 'உத்தம வில்லன்'களை தான் ரொம்ப பிடிக்கும்.
Thanks friends
ReplyDeleteValerian and Laureline.... ஒரு அற்புதமான உலகம்.... அதில் தமிழில் உலா வரும் இனிய வேளை, வெறும் கற்பனையாக போய்விடுமோ என்று அச்சமாக உள்ளது.... Jumboவில் வரக்கூடும் என எண்ணியிருந்தேன்.... ம்ம்ம்ம்.... நண்பர்கள் உதவினால் நல்லது நடக்கும்....
ReplyDeleteசார் பாண்ட் பிரம்மாதம். திரைப்படம் பார்த்தத போல இருந்தது! உணர்ச்சி வலி கூட இல்லாதவர்கள பாக்கயில பரிதாபப்பட வேண்டியது நம்மையா, அவர்களையா எனத் திகைப்பு! ஆனா பாண்ட் தயங்காம சிகப்பாய் தகித்து கொல்கிறார் !முடிவில் வில்லன் தன்னைப் போன்ற நண்பர்கள தேடி அவர்களுடன் தானும் சந்தோசத்த அனுபவிக்க முயல்வதா கூறுவது இனம் இனத்தோடு சேரும் என்ற உளவியல் தத்துவத்த போதிக்கும் மொழி பெயர்ப்பு அருமை! வண்ணச்சேர்க்கை அபாரம் ! அதும் கடைசி பக்கங்களில் பனி சோர்வாய் என்னுள்ளும் பரவியது !வாழ்க்கையில் ஒவ்வோருவருக்கும் ஒரு நியாயம்! அடுத்த பாண்ட் எப்பவோ?
ReplyDeleteடிசம்பர் மாதம் எத்தனை என்ன இதழ்கள் நண்பர்களே?
ReplyDeleteஆசிரியர் சார் டிசம்பரில் டெக்ஸ் வில்லரின் கொலைகாரக் கானகம் உண்டா?
ReplyDeleteகலீல்ஜி போன பதிவிலேயே
Deleteகாலனின் கானகம் -னு திருத்தி சொல்லியிருந்தாரே!!!!
இம்மாத இதழ்கள் விளம்பரத்திலும் காலனின் கானகம் -னு தெளிவா இருக்கு
சரவணன் சார் !!!
மன்னிக்கவும் சார்.
Deleteகாலனின்கானகம் டிசம்பரில் உண்டு என்ற நல்ல செய்தி தந்ததற்கு நன்றி செல்வம் அபிராமி சார்.
எங்கே நம்ம நண்பர்களை எல்லாம் காணவில்லையே..?
ReplyDeleteபனியில் ஒரு பிரளயம் ..
ReplyDeleteநம்மூரு மாதிரி அமெரிக்க சுப்ரீம் கோர்ட்லேயும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு காமிக்ஸ்லேயும் இவ்வளவு டெசிபல் சத்தம்தான் இருக்கணும்னு உத்தரவு போட்டு இருக்காங்களான்னு தெரியல . :)
அதுவே ரொம்ப வித்தியாசமா நல்லாவே இருக்கு ...
கதையின் உள்ளடக்கம் , தயாரிப்பு தரம் ,சித்திர விசித்திரங்கள் அப்டின்னு களை கட்டியிருக்கு !!!
நைட்ரஜன் டை ஆக்சைடின் வெப்பநிலை சார்பு குறித்து பாண்ட் அறிந்து அதை வைத்து தப்பிக்க முயல்வதாக –அம்முயற்சி தோல்வி அடையினும் – காட்டியிருப்பது செம ! கெமிக்கல் கைனட்டிக்ஸ் !!!
Oxytocin -ஒரு லவ் ஹார்மோன் – என்பதாக காட்டியிருப்பது சிரிப்பை வரவழைத்தது ..
Sex , சமூக ,குடும்ப உறவுகள் போன்றவற்றில் Oxytocin-க்கு ஆண்களை பொறுத்தமட்டில் பங்கு இருப்பினும்
அது ஒரு சோஷியல் bonding ஹார்மோன் என்பதே நிஜமாய் இருக்க கூடும் .....
எல்லாவகையிலும் இம்மாதத்தின் மிக சிறந்த இதழ் ...
ஆங்காங்கே சிரிப்பு துணுக்குகள் ..உதாரணத்துக்கு
மணி பென்னியின் கமெண்ட்டுக்கு பாண்டின் பதில்
பணியிடத்தில் என்ன மாதிரியெல்லாம் பாலியல் தொல்லைகள் பாரேன் !!!
9.9/10 வில்லனின் கடைசி பக்க எக்சன்ட்ரிக் பதிலுக்கு ௦.1 குறைச்சாச்சு..
காதலும் கடந்து போகும்
Deleteடெக்ஸ் கதைகள் மிக சிறந்த பொழுது போக்கு இதழ்கள் என்பதை மறுபடியும் நிரூபணம் செய்யும் இதழ் ....
9/1௦
புனித பள்ளத்தாக்கு ..
Deleteமினி டெக்ஸ் எப்பாவாவது வழுக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டான கதை .
வலது காதில் ஸ்பைடர் ரேஞ்சுக்கு வாழைப்பூவும் இடது காதில் கருப்பு கிழவி கதை ரேஞ்சுக்கு கனகாம்பரமும் வைக்க பார்க்கிறார்கள் ..
பு . பள்ளதாக்கு .... டிசம்பர் பூக்கள் ..அழகுண்டு ; வாசமில்லை
விராட் கோலியாலும் எல்லா மேட்சிலும் ரன் எடுக்க முடியாதுதான் ..
காசு ..பணம் ..துட்டு
Deleteமாஸு..மயங்குது மனம் ..ஹிட்டு என எழுத ஆசைதான் ..
ஆனால்
TO PUT SUCCINCTLY
SMURFS IS OVERRATED..
SO …
A LA PROCHAINE LES SCHTROUMPFS !!!!
OR
SHOULD I SAY
ADIEU LES SCHTROUMPFS !!!!
///பு . பள்ளதாக்கு .... டிசம்பர் பூக்கள் ..அழகுண்டு ; வாசமில்லை ///
Deleteடிசம்பர் பூக்களை ஒருமாசத்துக்கு முன்னாடியே கையில வச்சுக்கிட்டு மோந்து மோந்து பாத்துகிட்டிருந்தா வாசம் எப்படி வரும்னேன்? :D
///A LA PROCHAINE LES SCHTROUMPFS !!!!///
///ADIEU LES SCHTROUMPFS ///
இந்த மருந்தை மூனுவேளையும் சாப்பிட்டணுங்களா டாக்டர்?!! :D
நேற்று திருச்சியிலிருந்து சென்னைக்கு மதிய ரயிலில் வந்துகொண்டிருந்த பொழுது விழுப்புரம் முதல் செங்கல்பட்டு வரை James Bond வாசிப்பு - அதகள அனுபவம். விரிவான விமர்சனம் நாளை - புதிய பதிவில். இதுவொரு தவற விடக்கூடாது action மேளா என்பது வரைக்கும் இங்கே.
DeleteSMURFS பற்றி சொல்ல வேண்டும் என்றால் இதே கதையை சில மாதங்களுக்கு முன் ஆங்கிலத்தில் படித்த பொது ஒரு விறுவிறுப்பு குறையாமல் இருந்தது. எனவே நல்ல கதை என்று இங்கே குறிப்பிட்டிருந்தேன். இப்போது தமிழில் படித்துக்கொண்டிருக்கிறேன். Something gets lost in translation ? Unable to fathom.
நாளைய வாசிப்புக்கு Tex தீபாவளி மலர்.
இம்மாத புத்தகங்கள் பற்றி நண்பர்கள் தந்துள்ள விமர்சனங்கள் அருமை.
ReplyDeletesir ,
ReplyDeleteintha masa book innum delivery agale ..konjam kavaneenga sir plz :)
Nice Post..... I am enjoyed ... Tech News in bangla
ReplyDeleteஅட ! நாம வந்த நேரம் திரும்ப கேப்சன் போட்டியா...சூப்பர்! நம்மளும் ட்ரை பண்ணுவோம்...
ReplyDeleteDisclaimer :
(இந்த போட்டியில் வரும் காமெடிகள் அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையே!
எங்கள் வயதறியா இளம் சிங்கம் தல அவர்களை காயப்படுத்தும் நோக்கமோ...
புழுதியிலே விழுந்து புரண்டாலும்.. தன் மொத்த அழகையும் தன் மூக்கின் மேல் வைத்திருக்கும் புலி அவர்களை குதூகுல படுத்தும் நோக்கமோ..
எமக்கு கிஞ்சித்தும் இல்லை என்பதை பணிவன்போடு தெரிவித்து கொண்டு......)
Caption : 1
டெக்ஸ்:
(மனதிற்குள்):
அண்ட புளுகு ! ஆகாச புளுகு!
அதெப்படி ஒருத்தன் 10 நிமிசத்துல 5 மாறுவேஷம் போட முடியும்....
ஸ்ஸ்ஸ்ப்பா...மிடியல......
டயாபாலிக்:
(மனதிற்குள்):
அட பாவிகளா! ஆறு குண்டுல அறுவத்தி ஆறு பேர் காலி.....அதுவும் ஆறே பக்கத்துல!
ஐயோ....இன்னும் ஐநூறு பக்கமா....?
ஸ்ஸ்ஸ்ப்பா...இப்பவே கண்ண கட்டுதே....
Caption : 2
டெக்ஸ்: அட! என்னப்பா இது....நா இன்னும் பத்து பக்கம் கூட படிக்கல...நீ அதுக்குள்ள கடைசிக்கு வந்துட்ட....
டயாபாலிக்:
நானும் பத்து பக்கம் தான் படிச்சேன் ! என்ன ஒன்னு...முதல் அஞ்சு பக்கம் வில்லன் யாருன்னு பார்த்தேன்...
அப்பறம் straightaஆ கடைசி அஞ்சு பக்கம் நீங் எப்டி அவன போட்டு தள்ளரீங்கனு படிச்சா போதுமே...
நடுவுல எதுக்கு வெட்டியா இந்த மானே தேனே எல்லாம் 500 பக்கத்துக்கு படிசிட்டு......
(மனதிற்குள்) (அடேய் டயபாலிக் கைப்புள்ள.....தல புரிஞ்சு துப்பாக்கி எடுக்கறதுக்குள்ள... டக்குனு கெட்டப் change பண்ணி எஸ்கேப் ஆயிரு டோய் .....)
///புழுதியிலே விழுந்து புரண்டாலும்.. தன் மொத்த அழகையும் தன் மூக்கின் மேல் வைத்திருக்கும் புலி அவர்களை குதூகுல படுத்தும் நோக்கமோ..///
Delete////முதல் அஞ்சு பக்கம் வில்லன் யாருன்னு பார்த்தேன்...
அப்பறம் straightaஆ கடைசி அஞ்சு பக்கம் நீங் எப்டி அவன போட்டு தள்ளரீங்கனு படிச்சா போதுமே...
நடுவுல எதுக்கு வெட்டியா இந்த மானே தேனே எல்லாம் 500 பக்கத்துக்கு படிசிட்டு......///
ஹா ஹா ஹா!! :))))))))
சூப்பர் சரவணன்.
Deleteநன்றி ஈ வி! நன்றி பரணி !
Deleteகேப்ஷன் போட்டிக்கு 3வது டயலாக்.
ReplyDeleteடெக்ஸ் : எங்கெல்லாம் அநியாயம்,அக்கிரமம் நடக்குதோ அங்கெல்லாம் நீ இருக்க. ஏன்னா அதை எல்லாம் உண்டாக்கிறதே நீதான். சுருக்கமா சொல்லனும்னா, நீ கெட்டவனுக்கு கெட்டவன்...நல்லவனுக்கும் கெட்டவன்.
டயபாலிக்: உண்மையா சொல்லனும்னா என் ஏரியாவுல நீங்க இல்லாத தைரியத்துலதான் அதெல்லாம் என்னால செய்ய முடியுது.ஏன்னா,நீங்க நல்லவனுக்கு நல்லவன்...எந்ந்ந்ந்த வல்லவனுக்கும் வல்லவன்.
ReplyDeleteகேப்சன் பாேட்டி:
கேப்சன்:1
A.அடேயப்பா...எவ்ளோ மாறுவேசம் போட்டு எப்படிலாம் திருடிருக்க..இப்படி கெட்ட பேர் வாங்காம வேற வேல செய்ய வாய்ப்பிருந்தா எந்த வேலைய செலக்ட் பண்ணிருப்ப டயாபாலிக்?
B.வேறெது..அரசியல்தான் டெக்ஸ்...பெயர் கெடாம திருட இருக்கற ஒரே சாய்ஸ் அதானே..
கேப்சன்:2
A.இந்த மீம்ஸ்னா என்ன டெக்ஸ்?
B.சும்மா தேமேனு இருக்க நம்ம போட்டோவ போட்டு கேப்சன் எழுத சொல்லி எல்லோராலாயும் தாளிக்க விடறாங்களே..இதுதான்..
கேப்சன்:3
A.சர்க்காருக்கு டிக்கெட் வாங்கிட்டு வரேனுட்டு போய்ட்டு இப்ப புக்க படிங்கனு கையில கொடுக்கற..என்னாச்சு?
B.அத ஏம்பா கேட்கற...தியேட்டர் முழுக்க அவ்ளோ கூட்டம்...விஜயோட கெட்டப் போட்டு கூட ட்ரை பண்ணிட்டேன்...ம்கூம்...
கிடைக்கலயே...
கேப்சன்:4
A.தீபாவளி லீவ் நாலு நாளுல மட்டும் 650 கோடிக்கு டாஸ்மாக் விற்பனையாம்...
B.வெடிக்கறதுக்கு பதிலா குடிக்கறதுக்கு தான் தடை போட்டிருக்கணும் போல...
கேப்சன்:5
A.ஒரு ரேஞ்சர் கையில திருடனோட புக்...என்ன கொடுமைடா இது...
B.ஒரு திருடன் கையில ரேஞ்சரோட புக்...என்ன கொடுமைடா இது...
கேப்சன்:6
A.என்னப்பா...ரொம்ப நேரமா ஒரு பக்கத்தயே வெறிச்சு பார்த்துகிட்டு இருக்க..அய்யோ பாவம்..படிக்க தெரியாதோ?
B.ஹி..ஹி..தெரியாதுப்பா..நீ மட்டும் என்னவாம்? ஒரு மணி நேரமா புத்தகத்த தலைகீழாதான் பிடிச்சுகிட்டு இருக்கற..முதல்ல நேரா வை
கேப்சன்:7
A.ட..யா...பா...லி...க்....
B.டெ...க்...ஸ்....
(நம்ம Mind voice:-
அடேய்...இது முதியோர் பள்ளிகூடண்டோய்..)
கேப்சன்:8
A.இவ்ளோ நாளா பொம்ம கததானேனு தப்பா நினைச்சுட்டேன்...எவ்ளோ நல்ல விசயம்லாம் இதுல இருக்குன்னு படிக்கறப்பதான் தெரியுதுல்ல...
B.ஆமாம் டெக்ஸ்...இதெல்லாம் படிச்சு வளர்ந்திருந்தா நான் கெட்டவனாவே ஆகிருக்க மாட்டேன்..இன்னைக்கே சந்தாவுக்கு புக் பண்ணிட வேண்டியதுதான்
கேப்சன்:9
B.என்ன டெக்ஸ்...முகம் வாட்டமா இருக்க?
என் கதை பிடிக்கலையா
A.கதைலாம் நல்லாதான் இருக்கு...தீபாவளிக்கு புது டிரெஸ் வாங்கி வச்சுருக்கேனு கார்சன் சொன்னான்...ஆசையா வந்து பார்த்தா அதே ரேஞ்சர் டிரெஸ்.சூப்பர் ஹீரோவா இருக்கத விட கஷ்டம் எவ்ளோ வெயிலயும் நல்ல நாளுலயும் இந்த யூனிபார்மோட இருக்கதுதான்..
B.மி டூ டெக்ஸ்
கேப்சன்:10
A.தப்பு பண்ணதுக்கு தண்டனையா இவன் புக்க படிக்க கொடு்த்துட்டாங்களே... தூக்குல போட்டிருந்தா கூட நிம்மதியா இரண்டு நிமிசத்துல உயிர விட்ருக்கலாம்..
B.தப்பு பண்ணதுக்கு தண்டனையா இவன் புக்க படிக்க கொடு்த்துட்டாங்களே... தூக்குல போட்டிருந்தா கூட நிம்மதியா இரண்டு நிமிசத்துல உயிர விட்ருக்கலாம்...
கேப்சன்:11
A.நமக்குள்ள என்ன ஒற்றுமை இருக்குனு நம்மள ஒண்ணா கேப்சனுக்கு போட்ருகாங்க
B.ஏன் இல்ல டெக்ஸ்...நீ தப்பு பண்ணா சுடுவ..நான் தப்பு பண்ண சுடுவேன்..
சுருக்கமா நீ ரேஞ்சர்...நான் டேன்ஜர்...
கேப்சன்:12
A.என்னதான் ஆன்லைன் புக்ஸ்,கிண்டுல் அது இதுனு நிறைய வந்துட்டாலும் கூட இப்படி இயற்கையோட இணைந்து காகிதத்தாள் காத்துல படபடக்க,புது புத்தகத்தோட வாசனையையும் சேர்த்து படிக்கற சுகமே தனிதான்ல டயாபாலி்க்
B.உண்மைதான் டெக்ஸ்...
கேப்சன்:13
A.பன்றி காய்ச்சல்டெங்கு காய்ச்சல் எலிக்காய்ச்சல்லாம் இங்க நம்ம இத்தாலில இல்லையே ஏம்ப்பா...
B.அதெல்லாம் தமிழ்நாட்ல தான் டெக்ஸ்..இங்க நம்ம புக்ஸ் ரிலீஸ் ஆகறப்ப வர டெக்ஸ் பீவர்,டயாபாலிக் பீவர் மட்டும்தான்...
கேப்சன்:14
B.இந்த மக்கள பரிஞ்சுக்கவே முடியல டெக்ஸ்..பாரு நல்லவனா இருக்கற உன்னயும் ரசிக்கறாங்க.கெட்டவனா இருக்கற என்னையும் கொண்டாடுறாங்க
A.காரணம் ரொம்ப சிம்பிள்தான்...உன் வில்லதனத்த மனசுக்குள்ள ஔிச்சு வச்சுருந்தும்,என் நல்லதனத்த பொய்யா வெளிய காமிச்சு நடிக்கறவங்கதானே அவங்க..அதான்...
-மரு.பெ.பார்த்தீபன்,கரூர்.
நன்றி.
// A.நமக்குள்ள என்ன ஒற்றுமை இருக்குனு நம்மள ஒண்ணா கேப்சனுக்கு போட்ருகாங்க
DeleteB.ஏன் இல்ல டெக்ஸ்...நீ தப்பு பண்ணா சுடுவ..நான் தப்பு பண்ண சுடுவேன்..
சுருக்கமா நீ ரேஞ்சர்...நான் டேன்ஜர் //
Super
கேப்ஷன் போட்டிக்கு 4வது டயலாக் (இன்னும் 5,6,7,8ன்னு தாக்கிட்டே இருப்போம்ல)
ReplyDelete( கார்சன் ரசிகர்கள் மன்னீச்சூ)
டெக்ஸ் :என்ன டயபாலிக்..நீ வான்கோழி பிரியாணி,வறுத்த கறின்னு தீபாவளிக்கு விருந்து வெக்கிறேன்னு சொன்னே..? தீபாவளியும் போயிருச்சு.நம்ம கார்சன், டைகர்,கிட் மூணு பேரையும் வேற காணோம்.
டயபாலிக் : விசாரிச்சேன் தல. உங்க பையன் கிட் டைம் கோர்ட் உத்தரவை மீறி பட்டாசு வெடிச்சான்னு தூக்கிட்டு போய்ட்டாங்க..
டெக்ஸ் : அடக்கடவுளே..டைகரு?
டயபாலிக்: அவன் பாவம் கிராமத்துல இருக்கிற நண்பர்களுக்கு புகை சமிக்ஞை மூலமா தீபாவளி வாழ்த்து சொல்லி இருக்கான். அதை தப்பா புரிஞ்சிக்கிட்ட ஒருத்தி அவனை #metoo-ல சிக்க வெச்சுட்டாளாம்..
டெக்ஸ் : அப்ப கார்சன் எங்கே.?
டயபாலிக் : அது வந்து...தீபாவளிக்கு ஆர்டர் பண்ண அசைவ அயிட்டம் எல்லாம் சென்னைல இருக்கிற '---- பிரியாணி கடை'ல வாங்குனது'ன்னு சும்மா தமாஷ் பண்ணேண்..வயித்தை பிடிச்சிக்கிட்டு வாந்தி எடுக்க ஓடினாரு.. இனிமே கதைல கூட கறி சாப்பிட மாட்டாராம்..
Super ji
Deleteஜேம்ஸ் பாண்ட் அட்டகாசம். சிலிர்க்க வைத்த சித்திரங்கள், அசத்தலான ஸ்டைல், மிஸ்டர் கூல் என பாண்டின் வழக்கமான தூள் கதையமைப்பு. வன்முறை சற்றே ஓவர் என்றாலும் திகைக்க வைக்கிறது. ஒரே நாளில் இரு முறை படிக்க வைத்த இதழ்.
ReplyDeleteஸ்மர்ப் அருமையான கதை. மிகவும் யோசிக்க வைத்தது. காமெடியும் அட்டகாசம். இவ்வளவு அருமையான ஒரு தொடரை ஏன் ரசிகர்கள் விரும்பவில்லை எனத் தெரியவில்லை.
டெக்ஸ் வழக்கம் போல் விறுவிறு.
Caption contest
ReplyDeleteEntry 1
டெக்ஸ் : ஏம்ப்பா, இவ்ளோ டைட்டா டிரெஸ் போட்ருக்கியே, வேர்க்கல?
டயபாலிக்: அடிக்கிற வெயிலுக்கு ஜீன்ஸ் போட்டுக்கிட்டு போறியே, உனக்கு சொரியல?
Entry 2
டெக்ஸ் : தம்பி, என்ன இந்தப்பக்கம்? எனக்கு சமமா உக்காந்து பேசுறியே?
டயபாலிக்: அண்ணாச்சி, நான் திருடனாலும் காமிக்ஸ் ஹீரோ தான். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.
Entry 3
டெக்ஸ் : அந்தக் காலத்துல பெரியவங்களை நாங்க எப்படி மதிச்சோம் தெரியுமா? நீங்களும் தான் இருக்கீங்களே.
டயபாலிக்: யப்பா சாமி, சும்மா ஏதாவது கதை உடக் கூடாது. உங்க சின்ன வயசு சாகசம் தான் இப்ப வந்திக்கிட்டு இருக்கே. அதே மூக்கு சில்லு உடைப்பு, பின் மண்டையில அடின்னு பெரியவங்களுக்கு நீங்க கொடுத்த மரியாதை தான் ஊருக்கே தெரியுதே.
கேப்ஷன் போட்டிக்கு 5வது டயலாக்.
ReplyDeleteடெக்ஸ் : என்னப்பா..நீயும் உன் நண்பன் குற்ற மன்னன் ஸ்பைடரும் சேர்ந்து ஏதோ கட்சி ஆரம்பிக்கப்போறீங்களாமே..? கட்சிக்கு என்ன பேரு..?
டயபாலிக் : நேஷனல் "சிஸ்டம் சர்வீஸ்-மய்யம்"
****** காதலும் கடந்து போகும் ******
ReplyDelete'டைகர் ஜாக்கின் காதல் கதை' என்று அறிவிக்கப்பட்டபோது என்னமாதிரியான கதையாகக் கற்பனை செய்திருந்தேனோ அதைவிடவும் பலமடங்கு வீரியமாக, பரபரப்பான சாகஸங்கள் நிறைந்த, மனதை நெகிழ வைக்கும் ஒரு மென்மையான (கொஞ்சம் வன்முறைகள் நிறைந்த) காதல் கதை இது!
டெக்ஸின் கா.கதை, கார்ஸனின் கா.கதை, கிட்வில்லரின் கா.கதை என்று நாம் ஏற்கனவே படித்திருந்தாலும், டைகர் ஜாக்கிற்கு மட்டும் இப்படியாப்பட்ட கதை ஏதும் இல்லாதிருந்தது இத்தனைநாளும் ஒரு உறுத்தலாகவே இருந்துவந்தது! அது தற்போது நிவர்த்தி செய்யப்பட்டிருக்கிறது - அதுவும் மிக விறுவிறுப்பான ஆக்ஷன் களத்தோடு!!
ஒரு செவ்விந்திய இளைஞனுக்கே உரிய வீரம், ரெளத்திரம், காதல், மூர்க்கம், பழிவாங்கும் உணர்வு, மனோதிடம், எக்ஸட்ரா எக்ஸட்ரா - ஆகிய அனைத்தையும் கொண்டு கதைநெடுக கம்பீரமாக வலம் வருகிறான் டைகர் ஜாக்! டைகரை டெக்ஸ் முதன்முதலாக சந்திக்கும் நிகழ்வு, இவர்களிடையேயான புரிதல்கள், இருவரும் சேர்ந்து பயணிக்க வேண்டிய சூழ்நிலை - எல்லாமே நேர்த்தியாக, நேர்கோட்டுப் பாதையில் சொல்லப்பட்டிருக்கிறது!
இறுதிப் பக்கங்களில் டெக்ஸின் மனைவி லிலித்தும் வந்துபோவது - அடடே!!
கதையைப் படித்துமுடிக்கும்போது உங்கள் மனதில் ஒரு மென்சோகமும், கனத்த அமைதியும் குடிகொள்ளவில்லையென்றால் "தம்பீ... எங்க மனசையெல்லாம் நாங்க இரும்பிலே செஞ்சு வச்சிருக்கோமாக்கும்" என்று தாராளமாக நீங்கள் பெருமையடித்துக் கொள்ளலாம்!
என்னுடைய ரேட்டிங் : 9.9/10
சேம் பீலிங் ஜி.
Deleteடெக்ஸ் டைகரை முதன்முதலில் சந்தித்ததாக கார்சனுக்கும், கிட்டுக்கும் காட்டும் அந்த இடம் ஃப்ளாஷ்பேக்கில் இரண்டாவது முறையாக காட்டும் சம்பவம் கைத்தட்ட வைக்கிறது.
Deleteடைகரின் இளமையான முகம் வீரக்களையாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல ஆவலை உண்டாக்குகிறது. ஆனால், ஃப்ளாஷ்பேக்கில் வரும் டெக்ஸின் முகம்தான் இளவயது முகம் போல இல்லாமல் வயதானவர் முகம்போல இருக்கிறது. ஓவியரின் பிழை இது. கிட் பிறப்பதற்கு முன் நடக்கும் கதையில் டெக்ஸின் முகம் தணியாத தணலில் வருவது போல இளமையாக இருக்க வேண்டுமே. ஆனால் முன்தலை சொட்டையாக 50 வயதை கடந்தவர் போல இருக்கிறார்.
Delete@ Jagath Kumar
Delete///ஃப்ளாஷ்பேக்கில் வரும் டெக்ஸின் முகம்தான் இளவயது முகம் போல இல்லாமல் வயதானவர் முகம்போல இருக்கிறது. ///
குட் போயிண்ட்!!
போலவே, மெக்ஸிகன் போக்கிரிகளின் முகத்தை குரூரமாகக் காட்டுவதில் 100% வெற்றி பெற்றிருக்கும் ஓவியருக்கு, இள மங்கைகளின் முகத்தை - அதிலும் காதல் கொண்ட இள மங்கையின் முகத்தை - அழகுற காட்டுவதிலும் பின்தங்கிவிட்டார் என்றே சொல்வேன்! குறிப்பாக, இறுதியில் லிலித்தைக் காட்டும்போது "அடப்போங்கப்பா" என்றிருந்தது! (பெண்களின் முகத்தை அழகாகக் வரையத் தெரியாத ஓவியர்லாம் என்ன ஓவியர்ன்றேன்?!!)
என்னுடைய ரேட்டிங்கில் 0.1 குறைவுக்குக் காரணமும் இதுவே! ஹிஹி!!
இன்றுதான் புத்தகங்களை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். தீபாவளி கூட்டத்தின் காரணமாக புத்தகத்தை புரட்டிப் பார்க்க மட்டுமே நேரமிருந்தது.
ReplyDelete"புனிதப் பள்ளத்தாக்கு" மட்டுமே இதுவரை படித்திருக்கிறேன். டெக்ஸை எதிரிகள் வீழ்த்துவதும், ஒருவர் வந்து டெக்ஸை காப்பாற்றுவதும், மீண்டும் டெக்ஸ் அவர்களிடம் மோதி கீழே விழுவதும், மீண்டும் அவரே வந்து டெக்ஸை காப்பாற்றுவதும் ... இந்த கதையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
"காதலும் கடந்து போகும்" இப்போதுதான் 145-வது பக்கத்தில் இருக்கிறேன். செம விருவிருப்பு. இந்த ஆண்டின் சிறந்த கதை இதுதான் என்று தெரிகிறது.
This comment has been removed by the author.
ReplyDeleteபுனிதப் பள்ளத்தாக்கு - பலவருடங்களுக்கு முன் புனிதப் பள்ளத்தாகில் ஒரு நபரை வீழ்த்த அதே நபர் பலவருடம் கழித்து அங்கே வரும் டெக்ஸை அவரது எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார்! எப்படி என்பதே புனிதப் பள்ளத்தாக்கு! கதையில் இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை வைத்து கதையை நகர்த்தியது அருமை! இந்த கதையில் டெக்ஸுக்கு வேலையில்லை ஏன் என்றால் கதையின் மையமே இந்த புனித பள்ளத்தாக்கு.
ReplyDeleteபுனிதப் பள்ளத்தாக்கு - புனிதமான பூ சுற்றல்!
2030 பற்றி எல்லாம் சரிதான்! ஆனால் ஒரு முக்கிய விஷத்தை ஆசிரியர் எப்படி விட்டு விட்டார் என தெரியவில்லை :-) 2030-லேயும் தாரை பரணீதரன் சிங்கத்தின் சிறுவயதில் வேண்டும் என்று போராட்டம் நடத்துவார், ஆனால் ஆசிரியர் வழக்கமாக கொடுக்கும் வாழைப்பூ வடை பதிலாக பர்கர் மற்றும் பீசா கொடுத்து பரணீதரனுடன் போராட்டகளத்தில் உள்ளவர்களை அமைதிபடுத்திவிடுவார் :-)
ReplyDeleteDear Sir , DYNAMITE special Ippa than padithu mudithen. 1st story romba sumaar. 2nd, super. DIWALI MALAR pattaiya kilapputhu. sema viru viru . Ithu ponra kathaigalaiye ethir paarkiren. DOCTOR TEX pola chinna kathai ya irunthaalum pattasaa vedikanum.
ReplyDeleteகாசு..பணம்...துட்டு....!
ReplyDelete" ச்சை......! எனக்கு கார்ட்டூனே புடிக்காது....! அதிலயும் ஸ்மர்ஃபுன்னா ..புடிக்கவே புடிக்காது...! "
என்ற கருத்தைக்கொண்டவன் நான்.ஆனால்...இம்மாதம் வந்திருக்கும் இந்த நீலப்பொடியர்களின் கதை ரொம்பவே பிரமாதமாய் வந்திருக்கிறது.
" பணம் " என்ற ஒன்றையே அறிந்திராமல் ஏகாந்தமாய் ஸ்மர்ஃப் வில்லாவில் வாழ்ந்து வரும் பொடியர்கள்....மனிதர்கள் பயன்படுத்தும் பணப்பரிமாற்ற முறைகளை தங்களது வாழ்வில் கொணரும் போது ஏற்படும் சுவாரஸ்யமான கலாட்டாக்களே இக்கதை...!
மிகவும் ரசித்துப்படித்தேன்....!
அருமை...அருமை...அருமை...!
நீண்ட நாட்களுக்குப்பி
ReplyDeleteறகு....தமிழில் பாண்ட்...!
அதுவும் முழுவண்ணத்தில்....!
007 ன் ரசிகர்களுக்கு அசத்தலான ஆக்ஷன் விருந்து.
வெள்ளித்திரையில் ஷான் கானரி...ரோஜர் மூர்....பியர்ஸ் பிராஸ்னன் என்று பார்த்துவிட்டு ...புது பாண்டாக டேனியல் க்ரேக் அறிமுகமான போது...அவரது பாணி சற்று ஏமாற்றமாய் இருந்த போதும்....போகப்போக நம்மை முழுதும் வசீகரித்தார் .
அதுபோல....நமது முந்தைய இதழகளிலும்...ராணி காமிக்ஸிலும் பார்த்துப்பழகிய பாண்டுக்கு இவர் ரொம்பவே மாற்றம் கண்டிருக்கிறார்.
வசனங்களே இல்லாமல் ஓவியங்களே நிறைய பக்கங்களை நகர்த்திச்செல்க
ின்றன.
சித்திர பிரம்மாண்டத்துக்கு பெருமை சேர்க்கும் கதைகளுள் இதுவுமொன்று.
அசால்ட்டாக...டூர் போகிற மாதிரி தனது மிஷனை முடிக்கும் நேர்த்தி....எத்தனையோ நவீன டெக்னாலஜி வெப்பன்கள் இருந்தாலும் தனது பழைய மாடல் துப்பாக்கியை நேசிக்கும் செண்டிமென்ட்...."ஒத்தாசைக்கு அங்கே அழகிய பெண்கள் இருப்பார்களா " எனக்கேட்கும் குசும்பு....க்ளைமேக்ஸில் டர்னர் பின் வாங்கி விடு எனச்சொல்லும்போது..."ரொம்பவே குளிர்கிறது..இல்லையேல் அசிங்கமான எதையாவது சொல்லிவிடுவேன் " என கடுப்பாவது என்று செம ஜாலியாய் விறுவிறுப்பாய் செல்கிறது.
புது பாணி 007க்கு சிவப்புக்கம்பள வரவேற்பை தாராளமாய் வழங்கலாம்.
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
நீண்ட நாட்களுக்குப்பி
ReplyDeleteறகு....தமிழில் பாண்ட்...!
அதுவும் முழுவண்ணத்தில்....!
007 ன் ரசிகர்களுக்கு அசத்தலான ஆக்ஷன் விருந்து.
வெள்ளித்திரையில் ஷான் கானரி...ரோஜர் மூர்....பியர்ஸ் பிராஸ்னன் என்று பார்த்துவிட்டு ...புது பாண்டாக டேனியல் க்ரேக் அறிமுகமான போது...அவரது பாணி சற்று ஏமாற்றமாய் இருந்த போதும்....போகப்போக நம்மை முழுதும் வசீகரித்தார் .
அதுபோல....நமது முந்தைய இதழகளிலும்...ராணி காமிக்ஸிலும் பார்த்துப்பழகிய பாண்டுக்கு இவர் ரொம்பவே மாற்றம் கண்டிருக்கிறார்.
வசனங்களே இல்லாமல் ஓவியங்களே நிறைய பக்கங்களை நகர்த்திச்செல்க
ின்றன.
சித்திர பிரம்மாண்டத்துக்கு பெருமை சேர்க்கும் கதைகளுள் இதுவுமொன்று.
அசால்ட்டாக...டூர் போகிற மாதிரி தனது மிஷனை முடிக்கும் நேர்த்தி....எத்தனையோ நவீன டெக்னாலஜி வெப்பன்கள் இருந்தாலும் தனது பழைய மாடல் துப்பாக்கியை நேசிக்கும் செண்டிமென்ட்...."ஒத்தாசைக்கு அங்கே அழகிய பெண்கள் இருப்பார்களா " எனக்கேட்கும் குசும்பு....க்ளைமேக்ஸில் டர்னர் பின் வாங்கி விடு எனச்சொல்லும்போது..."ரொம்பவே குளிர்கிறது..இல்லையேல் அசிங்கமான எதையாவது சொல்லிவிடுவேன் " என கடுப்பாவது என்று செம ஜாலியாய் விறுவிறுப்பாய் செல்கிறது.
புது பாணி 007க்கு சிவப்புக்கம்பள வரவேற்பை தாராளமாய் வழங்கலாம்.
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
காசு..பணம்...துட்டு....!
ReplyDelete" ச்சை......! எனக்கு கார்ட்டூனே புடிக்காது....! அதிலயும் ஸ்மர்ஃபுன்னா ..புடிக்கவே புடிக்காது...! "
என்ற கருத்தைக்கொண்டவன் நான்.ஆனால்...இம்மாதம் வந்திருக்கும் இந்த நீலப்பொடியர்களின் கதை ரொம்பவே பிரமாதமாய் வந்திருக்கிறது.
" பணம் " என்ற ஒன்றையே அறிந்திராமல் ஏகாந்தமாய் ஸ்மர்ஃப் வில்லாவில் வாழ்ந்து வரும் பொடியர்கள்....மனிதர்கள் பயன்படுத்தும் பணப்பரிமாற்ற முறைகளை தங்களது வாழ்வில் கொணரும் போது ஏற்படும் சுவாரஸ்யமான கலாட்டாக்களே இக்கதை...!
மிகவும் ரசித்துப்படித்தேன்....!
அருமை...அருமை...அருமை...!
சரவணக்குமார் சார் உங்கள் விமர்சனங்கள் இன்னும் புத்தகம் வாங்காத என்னை உடனே வாங்கத் தூண்டுகின்றன.வெல்டன் சார்.
Deleteசூப்பர்.
Deleteசூப்பர்! உங்களைப் போலவே மற்ற நண்பர்களும் ரசிக்க ஆரம்பித்துவிட்டால் 2020லாவது ஒரு ஸ்லாட் வாங்கிப்புடலாம்!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAre you the NAATAAMAI Ramesh Kumar? :-)
Delete//Are you the NAATAAMAI Ramesh Kumar?//
DeleteCould not be ragavanj!
MR.RK's writing style is much more refined..
And his lexicon is within the accepted conventions of English grammar..
No offence rameshkumar,please.!
Ramesh Kumar @ don't worry!soon we can hear good news on this!!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteடெக்ஸ் : தமிழ் ராக்கர்ஸ் படத்தை ரிலீஸ் பண்ணீட்டாங்களாம்ல....
Deleteடயாபாலிக்: இந்த ராஜதந்திரம் யாருக்கு வரும்..இது கூட தெரியாம சென்சார் பண்ணி என்ன புண்ணியம்....
டெக்ஸ் : அப்ப உலக செல்போன் வரலாற்றில் முதன்முறையாக .....உலகமே பார்த்து வியக்குது... ஹஹ்ஹஹ்ஹா....
டயாபாலிக்: ஏன் டெக்ஸ் டல்லா உட்கார்ந்து இருக்கீங்க..
Deleteடெக்ஸ் : கோனார் மெஸ்ஸுல கோலா சாப்ட்டு வரேன்னு போன கார்சன இன்னும் காணோம்...நவஜோ ரிசர்வேசனுக்கு சீக்கிரம் திரும்பணும்...
டயாபாலிக் : நீங்க கெளம்புன மாதிரிதான்....அங்க இருந்து இப்பத்தான் வந்தேன்.ஆட்டுக்கால் பாயா ஆட்டுதாடி நனைய நனைய குடிச்சிட்டு இருந்தாரு..கறிதோசைய சைட் டிஸ்ஸா உள்ள அமுக்கிட்டு இருந்தாரு...பத்தாத குறைக்கி பத்து கோலா சாப்பிட ஆர்டர் பண்ணிட்டு ,இருபது கோலா பார்சல் கேட்டாரு ...
டெக்ஸ் : ஙே....
டயாபாலிக் : எந்திரன் 2.0 பாத்தீங்களா டெக்ஸ்.
Deleteடெக்ஸ் : நான்லாம் என்ன சுட்றேன்..தலீவரு சும்மா 360 டிகிரிக்கு 360 துப்பாக்கிகள ஒண்ணா ஒட்டவச்சி சுட்டு தள்றாரு. பாத்துட்டு நானே டரியலாயிட்டேன்னா பாத்துக்க..
super! I expect more from you!!
Deleteசார்
ReplyDeleteபுதிய
பதிவுக்காக
,,,,,,
i too (not me too)
ReplyDeleteஇன்னும் பதிவக் காணலியே... ம்?!!!
ReplyDeleteஎடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!! :)
ReplyDeletelakshmipur news
ReplyDelete