நண்பர்களே,
வணக்கம். சில பல வாரங்களுக்கு முன்பாய் 2018-ன் முதல் 5 மாதங்களது இதழ்களை அலசி ஆராய்ந்திருந்தோம் – “க்வாட்டரும் கடந்து போகும்” என்றதொரு அறிவுபூர்வமான தலைப்பின் கீழ் ! தொடரும் பொழுதினில் இந்தாண்டின் அடுத்த சில மாதங்களை நோக்கி zoom செய்திடுவதாய் திட்டமிட்டிருந்தேன்; ஆனால் 2019-ன் அட்டவணை அறிவிப்பு; ஜேம்ஸ் பாண்ட்; நவம்பர் இதழ்களது அலசல்கள் என்று இடையினில் heavyweight topics தலைநுழைக்க, திட்டம் பணாலாகிப் போனது! Anyways – டிசம்பர் இதழ்கள் மீதான எனது பணிகள் முடிந்து ஏக காலமாகியிருக்க – கிடைத்திருக்கும் குட்டியூண்டு அவகாசத்தினில், விடுபட்டுப் போன பணிகளையெல்லாம் செய்து வருகிறேன்! இதுவே waiting list-ல் உள்ள பணி தான் எனும் போது – இந்த ஞாயிறை அதற்கென ஒதுக்கினால் தேவலாமென்று பட்டது ! So here goes!
ஜுன்’18 பெரியதொரு ஆரவாரமிலா ; ஸ்பெஷல் இதழ்கள் ஏதுமிலா மாதமாய் அமைந்திருப்பினும் – அந்த மாதம் களம் கண்ட 3 நாயகர்களுமே தத்தம் பிரிவுகளில் ஜாம்பவான்களே!
- லார்கோ வின்ச் - டெக்ஸ் வில்லர் - மாயாவி
என்ற பெயர்களை ஒருசேரப் பார்க்கும் கணம் – “அட்றா சக்கை... ஒரு செம விருந்து காத்துள்ளது!” என்ற எண்ணம் தலைதூக்கியிருப்பின் நிச்சயம் அதனில் தவறு இருந்திராது தான்! ஆனால் ஜாம்பவான்களும் சில வேளைகளில் ஜாங்கிரியென்று பிலிம் காட்டி விட்டு – ஜுர மருந்தை வாயில் ஊற்றிட வல்லவர்களே என்பதை ஜுன்’18 நிரூபித்துக் காட்டியது! இதில் கொடுமை என்னவென்றால் – காத்திருப்பதொரு ‘பிம்பிலிக்கா பிலாக்கி‘ அனுபவமே என்பது எனக்குத் தெள்ளத் தெளிவாய், ரொம்ப முன்னமே தெரியும் ! லார்கோ தொடரில் – “வான் ஹாம் பணியாற்றிய இறுதி ஆல்பம்!” என்ற பில்டப்போடு ஆல்பங்கள் 19 & 20 தயாரான சமயமே நமக்கு இந்த ஆக்கங்களின் preview பிரெஞ்சில் கிட்டியிருந்தன ! படம் பார்க்கையில் வழக்கம் போல லார்கோவின் மெர்சலாக்கும் ஆக்ஷன்; ஒரு புதிரான அழகி; லண்டனின் ரம்யமான பின்னணிகள் என்று வசீகரமானதொரு சாகஸமாகவே தென்பட்டது! ஆனால் Cinebook வெகு சீக்கிரமே இவற்றை ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்க – அவற்றைத் தருவித்திருந்தேன் முதல் வேலையாக ! அதைப் படிக்கத் துவங்கிய போதே மெதுமெதுவாய் ஜெர்க் அடிக்கத் துவங்கியது ! முதல் பாகத்தைப் படித்து முடிந்த சமயமே எனக்கு வியர்க்கத் துவங்கியிருந்தது – இதனை தமிழில் எவ்விதம் கையாள்வதென்ற யோசனையில் ! And பாகம் இரண்டையும் முடித்த சமயம் சந்தேகமேயின்றித் தெரிந்தது – இந்த ஆல்பம் நாம் பார்த்துப், பழகி, ரசித்து வந்த லார்கோவைக் கண்ணில் காட்டிடும் ரகமல்லவென்று ! ஆனால் ஒரு prime நாயகரின் ஆல்பம் ; அதுவும் வான் ஹாம் போன்ற அசுரரின் கைவண்ணத்திலானது எனும் போது – அதனை ஓரம்கட்டுவது சுலபமல்ல என்பதும் புரிந்தது ! So மொத்துக்கள் நிச்சயம் ; சில தீவிர லார்கோ அபிமானிகளுக்கு ஏமாற்றமும் நிச்சயமென்ற புரிதலோடே தான் “பிரியமுடன் பிரளயம்” இதழினுள் பணியாற்றப் புகுந்தேன் ! கதைநெடுக பாட்டையாக்களும்; பாட்டிமார்களும் அடிக்கும் லூட்டிகள் ஒரு பக்கமெனில்; சொகுசுக் கார் ட்ரைவர் ; கப்பலின் கேப்டன் ; ஜெட் விமானத்தின் பைலட் – என எதிர்ப்படும் சகலருமே ஜல்சாவோ-ஜல்சா மூடில் சிக்கித் திரிய, எனக்கோ மொழிபெயர்ப்பதற்குள் முழி பிதுங்கி விட்டது ! சில இதழ்கள் ”நிச்சயிக்கப்பட்ட ஹிட்கள்” என்றிருப்பதைப் போல – சொற்பமான சிலவோ “நிச்சயிக்கப்பட்ட சொதப்பல்கள்” என்பதை நெற்றியிலேயே பச்சை குத்தித் திரிவதுண்டு ! இரண்டு சூழ்நிலைகளிலுமே நான் செய்யக் கூடியது பெரிதாய் ஏதுமிராது – இயன்றமட்டிலும் டயலாக்குகளை உயிர்ப்போடு அமைக்க முனைவதைத் தாண்டி! “பிரியமுடன் பிரளயத்திலோ” – நான் முயற்சித்தது விரசங்களை இயன்றமட்டிலும் கட்டுக்குள் வைத்திட மாத்திரமே ! ஆங்கில ஒரிஜினலையும், நமது தமிழ்ப் பதிப்பையும் ஒருசேரப் படித்துப் பார்த்தோருக்கு என் பாடின் பரிமாணம் நிச்சயம் புரிந்திருக்கும்! So அழகானதொரு அட்டைப்படம், powerful ஆனதொரு நாயகர்; கலக்கலான கலரிங் என்றிருந்தாலும் “பிரியமுடன் பிரளயம்” – 2018-ன் “பப்படம் of the Year” என்ற பட்டத்துக்குப் போட்டி போட்டதே ஜுனின் சோகம் !
ஆனால் லார்கோவின் சறுக்கலை ஈடு செய்வது போலொரு செம வீரியமான ஆக்ஷன் மேளாவை டெக்ஸ் வில்லர் நடத்திக் காட்டியதால் மாதம் # 6-ல் நம் தலைதப்பியது ! “நடமாடும் நரகம்” அந்த classic பாணிச் சித்திரங்கள் + பட்டாசாய்ப் பொரியும் கதைக்களத்தோடு 200+ பக்கங்களுக்குத் தடதடக்க – எனக்குள் பெரியதொரு நிம்மதிப் பெருமூச்சு ! மிதமான நாயக / நாயகியர் கோட்டை விட்டால் கூட அத்தனை பெரிய ரணம் தெரிய மாடேன்கிறது ; ஆனால் மெகா ஸ்டார்கள் தடுமாறிட்டால் ரணகளமாகிறதல்லவா ? புனித தேவர் மணிடோவின் புண்ணியத்தில் ஜுனின் சேதாரங்கள் massive ஆக இருந்திடவில்லை ! And மாயாவியின் “நடுநிசிக் கள்வன்” அம்மாதத்து இறுதி இதழ் என்ற போது, வண்டி சகஜமாய் ஓடிவிட்டது ! என்னைப் போலவே நீங்களுமே லார்கோவின் பொருட்டு கொண்ட கவலை ஜுனின் அலசல்களில் தெறிப்பதை நிரம்பவே பார்க்க முடிந்தது ! And அடுத்த லார்கோ ஆல்பம் இரண்டு மடங்கு வீரியமாய் அமைந்திட வேண்டி வரும் என்ற எண்ணத்தை அடக்கவும் முடியவில்லை ! Fingers crossed !
ஜுலைகள் நமது லயனின் ஆண்டுமலர் மாதங்கள் எனும் போது – எப்போதுமே எனக்குள்ளே ஒருவிதக் குஷி குடியேறி விடும் ! சில வருடங்களுக்கு முன்பாக கேப்டன் பிரின்ஸ் சிறுகதைகள் + பெட்டி பார்னோவ்ஸ்க்கியின் spin-off என்ற தலைநோவுக் கூட்டணி சொதப்பியதைத் தவிர்த்து – ஆண்டுமலர் இதழ்கள் பெரியதொரு மொக்கை போட்டதாய் எனக்கு நினைவே இல்லை ! இம்முறையோ – “லூட்டி with லக்கி” ஆண்டுமலராய் களமிறங்க – செம ஜாலியான அனுபவம் all the way! 2 புத்தம் புதிய கதைகள் ; அதிலும் லக்கியின் கார்ட்டூன்கள் என்ற போதே பேனா பிடிக்க என் விரல்களில் நமைச்சல் எடுத்தது ! அதிலும் “திசைக்கொரு திருடன்” சூப்பர்-டூப்பர் கதையென மனதுக்குப்பட – எழுதும் போதே இதனை நீங்கள் எவ்விதம் சிலாகிப்பீர்களென்ற ரேஞ்சிற்கு என் கற்பனைகள் சிறகுகள் விரித்தன! கிருஸ்துமஸ் புலரும் முன்பாக வான்கோழி பிரியாணியை எண்ணிச் சப்புக் கொட்டுவது முறையல்ல தான்; ஆனால் லக்கி லூக் + 4 டால்டன்கள் என்ற ரகளையான கூட்டணி பிரித்து மேயும் போது – வெற்றிக்கு 99% உத்தரவாதம் உண்டென்ற தைரியம் தான் என்னுள் ! அந்த ஆல்பத்தின் இரண்டாவது கதையான “ஸ்டேட் பாங்க் of டால்டனிலும்” டால்டன்களின் மொத்தப் பரிவாரமுமே கூத்துக்களைத் தொடர்ந்திட, ஆண்டுமலர் – ஆரவார மலரானதில் no surprises! And ஹார்ட்கவர் பைண்டிங்; சூப்பரான அட்டைப்படம் என்ற icings, கேக்கை மேலும் சுவையூட்ட – ஜுலை ‘ஓஹோ‘வென்று துவங்கியதில் வியப்பில்லை தான் !
புதுசாய் நம் பக்கம் கரை சேர்ந்த கனடாவின் காவல் வீரர் ட்ரெண்ட் ஜுலைக்கொரு X-factor-ஐத் தந்த புண்ணியவான்! நான் வழக்கம் போல “வீரன்... சூரன்...”! என்று கொடுத்திருந்த பில்டப்பை எத்தனை தூரம் சீரியஸாக எடுத்திருந்தீர்களோ - தெரியாது; ஆனாலும் இவர் மீதொரு எதிர்பார்ப்பு இருந்தது நிச்சயம் ! “பனிமண்டல வேட்டை” கலக்கலான கலரில்; அட்டகாசமான சித்திரங்களோடு, நீட்டாக வந்து இறங்க – எனக்குள் இதனை நீங்கள் வரவேற்கக் காத்திருக்கும் விதம் சார்ந்து பெரியதொரு குறுகுறுப்பு ! ‘ஏக் மார் – தோ துக்கடா; பக்கடா‘ என்றெல்லாம் இந்தப் புதுவரவு ஆக்ஷன் கதக்களி ஆடப் போவதில்லையென்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்பதால் – ouy & out ஆக்ஷன் ரசிகர்களுக்கு இவரொரு ‘ஙே‘ பார்ட்டியாகவே தென்படுவாரென்பது குறித்து எனக்குள் ஐயங்களில்லை ! ஆனால் நிச்சயமாய் ஒரு ஓரமாய் குந்திக் கொண்டு மிக்சர் சாப்பிட வேண்டிய பார்ட்டியுமல்ல இவர் என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது ! எனது யூகங்கள் சரியே என்று சொல்லும் விதமாய் – இந்த இதழ் மீதான தீர்ப்பு split verdict ஆகவே இருந்தது ! But இந்திய கிரிக்கெட் அணியில் K.L. ராகுல் போன்ற சில வீரர்களை தொலைநோக்கோடு ஆதரிப்பதைப் போலவே – இந்தக் கனடா காவலரை ‘எடுத்தோம்-கவிழ்த்தோம்‘ என்ற ரீதியில் அணுகிடாது இவரைப் பொறுமையாகக் கையாள்வதென்று நான் முன்னமே தீர்மானித்திருந்தால் 50-50 தீர்ப்பு கூட எனக்கு ஓ.கே. என்றே பட்டது !
ஜுலையின் இதழ் # 3 வண்ணத்தில் “எரிமலைத் தீவில் பிரின்ஸ்” என்பதால் அங்கேயும் thumbs-up சுலபமாய்ச் சாத்தியப்பட்டது ! மறுபதிப்புகள் – அதுவும் உங்கள் தேர்வுகளின் அடிப்படையிலான மறுபதிப்புகள், என் பிழைப்பை எப்போதுமே எளிதாக்கிடுவதால் – நோகாமல் ஒரு ‘ஹிட்‘டைப் பதிவு செய்த திருப்தி!
ஜுலையின் highlight என்னைப் பொறுத்த வரையிலும் “ஜம்போ காமிக்ஸின்” debut தான் ! “லயன் + ஜுலை” என்ற அதே கெமிஸ்ட்ரி தொடரட்டுமே என்ற பகுத்தறிவு நிறைந்த சிந்தனை உரமேற்ற – இளம் TEX-ன் “காற்றுக்கேது வேலி?” அதிரடியாய் உங்களோடு கைகுலுக்கத் தயாரானது ! Truth to tell – இந்த இதழை பந்தாவாய் அறிவித்து விட்டேனே தவிர – நிறையவே starting troubles ! அட்டைப்படம் துவக்கத்தில் உருப்படியாய் ‘செட்‘ ஆகவில்லை ; கதையின் ஓட்டத்திலுமே மெலிதாயொரு கிலேசம் எனக்கு! நாம் இது நாள் வரை பார்த்துப் பழகியிருந்த டெக்ஸ் template-லிருந்து மாறுபட்டு ஓடும் இளம் டெக்ஸின் saga-வை எவ்விதம் ஏற்றுக் கொள்வீர்களோ ? என்ற தயக்கமே அதன் பின்னணி ! அதே போல – “why ஜம்போ?” என்ற கேள்விகளுக்குப் பத்தி பத்தியாய் பதில் எழுதாது – செயலில் பதிலைப் பதிவிட வேண்டுமென்ற ஆசை இருக்கவே, இதழின் தயாரிப்பிலும் இயன்றமட்டிற்குக் குட்டிக்கரணம் அடிக்க முனைந்தோம்! கிட்டத்தட்ட மொத்த மொழிபெயர்ப்பையுமே இதன் பொருட்டு redo செய்தோம் ; அட்டைப் படத்தில் ; தயாரிப்பில் ; சாத்தியமான நகாசு வேலைகளைச் செய்தோம் ! So ஜம்போ #1 உங்கள் கைகளை எட்டிப்பிடித்த வேளையில் இங்கே நான் மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருந்தேன் – reactions எவ்விதம் இருக்கப் போகின்றனவோ என்ற டர்ரில் ! ஆரம்பமே ஈனஸ்வரமாகிப் போயின் – ஜம்போவின் ட்ரவுசர் கழன்றிடுமே என்ற பயம் தான் ! பற்றாக்குறைக்கு அந்த ஜம்போ லோகோவுக்கும் உங்களது take என்னவாக இருந்திடுமோவென்றும் யூகிக்கத் தெரியவில்லை ! ஆனால் ஆபத்பாந்தவரான போனெல்லியின் பிரியமான புதல்வர் – என் பயங்கள் சகலத்தையும் துவம்ஸம் செய்த கையோடு உங்கள் அனைவரின் ஏகோபித்த கரகோஷங்களையும் ஈட்டித் தந்து ஜுலையை ஒரு அட்டகாசப் பொழுதாக்கி விட்டார் ! துளியும் சந்தேகங்களின்றி இந்த இதழொரு smash hit என்பதை உணர்ந்த போது – “TEX” என்ற அந்த மந்திரச் சொல்லின் மகிமை ஆயிரத்துப் பதினெட்டாவது தடவையாக ஊர்ஜிதமானது ! எனது துவக்கத் திட்டமோ ஜம்போவின் முதல் இதழாக James Bond-ஐக் களமிறக்குவதே! ஆனால் அதனை மொழிபெயர்க்கும் பொருட்டு பொறுமையாய் அமர நேரம் கிடைக்காதே போனதால் – அதனிடத்தில் “காற்றுக்கேது வேலி” யை உட்புகுத்தினேன் – அதன் மொழிபெயர்ப்பை நமது கருணையானந்தம் அவர்கள் செய்து தந்து விடுவாரே என்ற எதிர்பார்ப்பில் ! ஆனால் அதை ஏகமாய் redo செய்கிறேன் பேர்வழியென்று – James Bond-க்குச் செலவிடக் கூடிய அவகாசத்தை விட இரட்டிப்பு நேரம் செலவிட்டதெல்லாம் கிளைக் கதை! So ஒரு சோம்பலின் பலனாய் ஜம்போ #1 அதிரடித் துவக்கம் கண்டது தான் நிஜம்!
ஆகஸ்ட் ‘18 பற்றிய பேச்செடுத்தாலே உங்கள் காதுகளில் தக்காளிச் சட்னி ஓடிடுமென்பதில் சந்தேகம் லேது ! ஈரோடு வாசக சந்திப்பு பற்றியும் ; இரத்தப் படலம் வண்ணத் தொகுப்பு ரிலீஸ் பற்றியும், வண்டி வண்டியாய்; லோடு லோடாய் எழுதி விட்டாச்சு தானே ? So புதிதாய் அதன் வரலாறு ; பூகோளம் பற்றியெல்லாம் எழுதுவதைக் காட்டிலும் – அந்த நாட்களின் அனுபவங்களை ஒரு பறவையின் பார்வையில் பார்த்தலே நலமென்றுபடுகிறது! துளியும் சந்தேகமின்றி – நமது இத்தனை ஆண்டுக் கூத்துப் பட்டறைகளின் போக்கில், வெளியிடுவதற்கு முன்பாகவும், பின்பாகவும், இது போன்றதொரு ஆரவாரத்தைக் கிளப்பிய இதழை நாம் பார்த்ததில்லை என்பது மெய்யே ! அச்சிட்டது பிசாத்து 800 பிரதிகளே என்றாலும் அவற்றை விற்பனை செய்திட நிச்சயமாய் சில மாதங்களாவது செலவாகும் என்றே எண்ணியிருந்தேன்! ஆனால் இத்தனை துரிதத்தில் கிட்டங்கியைக் காலி செய்யச் சாத்தியமானதன் புண்ணியம் முழுக்க முழுக்கவே உங்களையே சாரும் ! இதழின் கதையில் புதுமைகள் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் – அதன் making-ல் நாம் காட்டிய மெனக்கெடலை நீங்கள் தலையில் தூக்கிக் கொண்டாடியதே – அசுவாரஸ்யமாய் இருந்த விளிம்புநிலை வாசகர்களையும் சுழலினுள் ஈர்த்த காரணி ! அது நாள் வரைக்கும்... “ம்ம்ம்... பாத்துக்கலாம்... பாத்துக்கலாம்... ம்ம்ம்... வாங்கிக்கலாம்... வாங்கிக்கலாம்” என்றிருந்தோரையும் கூட ஒற்றை நாளில் சூடேற்றிட உங்களது சிலாகிப்புகள் எனும் மாயாஜாலமே உதவியது ! So எண்ணி 25 நாட்களில் நாம் கையைத் தட்டி விட்டு, டெண்ட் கொட்டகையைப் பிரிக்கும் அதிசயம் நிகழ்ந்தது! அதே சமயம் – “தொலைநோக்குப் பார்வையோடு” இதனில் ஒன்றுக்கு மேற்பட்ட இதழ்களை வாங்கிப் போட்ட நண்பர்களையும் ஒரு காரணமாகச் சொல்லிடலாம் – இந்த இதழ் காலியானதற்கு ! 😄
And இதற்கு முந்தைய மெகா இதழ் சார்ந்த நமது அனுபவப் பாடமுமே “இரத்தப் படலம்” சமாச்சாரத்தில் உதவியது என்பதில் ஐயமில்லை ! விலை குறைய உதவுமே!” என்ற எண்ணத்தில் 1300? 1400? பிரதிகளை அச்சிட்டு விட்டு – மூன்றரை வருஷங்களாய் குட்டியைச் சுமந்து திரியும் குரங்கு போல “மின்னும் மரணம்” இதழ்களை சுமந்து வருவது தலைக்குள் சைரன் ஒலிக்கச் செய்ய – இரத்தப் படலத்தின் பிரிண்ட்ரன்னை மூன்றிலக்கத்திலேயே நிறுத்திக் கொள்வதென்ற முன்ஜாக்கிரதை குடிகொண்டது என்னுள் ! Of course – மிகக் குறைவான நம்பரே என்பதால் ஒரு சிலருக்கு இந்த இதழ் கிடைக்காது போய் விட்டது தான்! ஆனால் இப்போது சகலமும் டிஜிட்டல் கோப்புகளே எனும் போது சில பல ஆண்டுகளுக்குப் பின்பாய் – “ரொம்பவே அத்தியாவசியம்" எனும் பட்சத்தில் மறு-மறு பதிப்பு சுலபமே ! இங்கே தான் நண்பர்கள் சிலரின் ”ஆவணப்படுத்தும் வேட்கை” நெருடலாகி நிற்கிறது !
மாதா மாதம் வெளியாகும் இதழ்களைப் படிக்கவே நேரம் குறைச்சலாகிக் கிடக்கும் சூழலில் – எல்லா இதழ்களையும் சுடச்சுட ஸ்கேன் செய்து pdf பைல்களாக்கிச் சுற்றில் விடும் சிலரது ஆர்வங்களை எவ்விதம் பார்த்திடுவதென்று எனக்குச் சுத்தமாய்ப் புரியவில்லை ! ”ஆவணப்படுத்துதல்” அவசியமாவது – ஒரு சமாச்சாரம் காணாதோ – அழிந்தோ போய் விடக் கூடுமென்ற அபாயம் இருக்கும் பட்சங்களில் மட்டுமே என்று சொல்கிறது எனது சிற்றறிவு ! ஆனால் தடித் தாண்டவராயன்கள் போல அத்தனை ஒரிஜினல் டிஜிட்டல் கோப்புகளையும் பத்திரப்படுத்திக் கொண்டு நாங்கள் இங்கே குந்திக் கிடக்க – வெளியாகும் இதழ்களை சூட்டோடு சூடாய் ஸ்கேன் செய்து சாதிக்கப் போவது என்னவோ - புரியவில்லை !? Maybe இன்னொரு ஐந்து+ ஆண்டுகளில் புதுச் சுற்று வாசகர்களின் பொருட்டு,குறிப்பிட்ட சில out of print இதழ்களை மறு பதிப்பு செய்து வெளியிட நமக்குள்ள வாய்ப்புகளை, வீதிக்கு வீதி சுற்றி வரும் இந்த வாட்சப் க்ரூப் pdf-கள் சிதைத்து விடக்கூடுமென்பதைப் புரிந்திடல் அத்தனை பெரிய சிரமம் தானா ? “நான் விக்கலியே... சும்மா சேகரிப்புக்குத் தானே?” என்று லாஜிக்கான கேள்விகளை(!!!) ஆவணப்படுத்தும் நமது ஆர்வல நண்பர்கள் முன்வைக்கலாம் ! ஆனால் நாங்கள் இப்போதைக்காவது ஜார்கண்டுக்கோ ; பீகாருக்கோ ; டும்பக்குட்டூவுக்கோ குடிமாறிப் போகும் அபிப்பிராயத்திலில்லை எனும் போது இந்த முயற்சிகளுக்கு முகாந்திரங்கள் தான் என்னவென்று புரியமாட்டேன்கிறது ! ரெண்டு ரூபாய்க்கும் ; மூன்று ரூபாய்க்கும் சாணித் தாளில் அச்சிட்டு ; நாங்களுமே பழைய பிரதிகளாய் மட்டும் ஆவணங்களை வைத்திருக்கும் ஆதிகாலத்து இதழ்களைப் பத்திரப்படுத்த, ‘தம்‘ கட்டிய முன்னாளது ஸ்கேனிங் படலங்களைக்கூட ஏதோவொரு கோணத்தில் புரிந்து கொள்ள முடிகிறது ! ஆனால் இதோ இந்த ஜுலையில் வெளியான “பனிமண்டல வேட்டையை”க் கூட ஸ்கேன் செய்து இப்போதே சுற்றில் விடும் பாங்கை என்னவென்பதோ ? நம் கிட்டங்கியிலுள்ள ஸ்டாக் தீருவதற்குள் நான் போய்ச் சேர்ந்து ஒரு மகாமகம் ஆகியிருக்கும் என்பது தான் யதார்த்தம் எனும் போது – இது மாதிரியான அவசியமிலா வியர்வைச் சிந்தல்கள், என்றைக்கோ ஒரு தூரத்து நாளில் நம் நிறுவனம் ரெண்டு காசு பார்க்கக் கூடிய வாய்ப்புகளை சுத்தமாய் நசுக்கிடும் சமாச்சாரங்களாகிடாதா ? இதோ “மின்னும் மரணம்” இதழைச் சுமந்து திரிந்து கொண்டிருக்கும் போதே – அதனையும் ஸ்கேன் செய்து சுற்றில் விட்டுள்ள அன்பர்களின் திசையை நோக்கித் திரும்பி தலையைச் சொரியத் தான் தோன்றுகிறது ! இவற்றையெல்லாம் இலை மறை-காய் மறைச் செயல்களாய்ச் செய்து வந்த நாட்கள் மலையேறி – ‘இதெல்லாம் ஒரு மேட்டரா?‘ என்ற ஜாலியோடு தத்தம் தொழில்நுணுக்கப் பாண்டித்துவங்களின் வெளிப்பாடுகளாய் இப்போது செய்து வருவதற்கு காமிக்ஸ் காதலென்று பெயருமல்ல ; நிச்சயம் ஆரோக்கியமான போக்குமல்ல ! ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு உங்களின் திறன்கள் பயனாகிடும் பட்சத்தில், பலன்கள் நம் அனைவருக்குமே ! அதை மாத்திரம் ஞாபகப்படுத்திய கையோடு கிளம்புகிறேன் – ஜனவரியின் கார்ட்டூன் மேளாவினுள் பணியாற்ற !
‘போதனை பண்ணிடும் ரேஞ்சுக்கு நீ புத்தனல்ல!‘ என்ற ஒரு சில இலக்குகளில் நெற்றி நரம்புகள் புடைக்கலாமென்பதும் ; சில பல வாட்சப் க்ரூப்களில் எனக்கு surf excel குளியல் தரும் முஸ்தீபுகள் சுறுசுறுப்படையக்கூடும் என்பதும் புரிகிறது தான் ! ஆனால் புத்தனோ – பித்தனோ – இது நிச்சயம் போதனையல்ல ; நட்பின் வட்டங்களே சில தருணங்களில் தெரிந்தும், தெரியாதும் ஏற்படுத்திடும் சேதங்கள் சார்ந்த ஆதங்கமே ! தவிர, தனிப்பட்ட அபிப்பிராய பேதங்களுக்கு வடிகால்கள் தேடிட, இவற்றையோரு யுக்தியாய்க் கையில் எடுப்பதும் எந்தவூர் ராஜ தந்திரமோ - தெரியவில்லையே ! நிதானமாய் ; உஷ்ணங்கள் குன்றியதொரு வேளையில், மேலுள்ள பத்தியை மறுக்கா படித்துத் தான் பாருங்களேன் – யதார்த்தம் புரிந்திடக் கூடும் ! ஆகச் சின்ன வட்டத்தின் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் முயற்சி இது guys ! "அட..ஜாலிக்காண்டி தானே ?!" என்றபடிக்கு குதிரையையே வேக வைத்து சூப் போட்டுப் பார்க்க வேண்டாமே என்பது மாத்திரமே எனது வேண்டுகோள் ! எப்படியோ – இந்த ஞாயிறை சுறுசுறுப்பாக்கிடவும் ; சில “அர்சசனைத் திறமைகளை” பட்டை தீட்டிக் கொள்ளவும் அடியேனின் மேற்படி வேண்டுகோள் உதவியிருக்குமென்ற நம்பிக்கையோடு நடையைக் கட்டுகிறேன் !
Before I sign out - இதோ டிசம்பரில் இதழ்களின் preview சார்ந்ததொரு முதல் பார்வை !! நம் அபிமான ஒல்லிப்பிச்சான் கௌபாயின் LUCKY CLASSICS-2 தயாராகி வருகிறது - 2 crackerjack மறுபதிப்புகளோடு !! வெளியான காலத்தில் - "மேடையில் ஒரு மன்மதன்" இதழும் சரி ; "அதிரடிப் பொடியன்" சாகசமும் சரி - பட்டையைக் கிளப்பிய கதைகள் !! அவற்றை இப்போது மேம்படுத்தப்பட்ட தரத்தில் வாசிக்கும் அனுபவம் நிச்சயம் ரம்யமூட்டும் என்பது உறுதி ! இதோ அந்த இதழின் அட்டைப்படத்துக்கான முயற்சிகளிலிருந்து ஒரு சாம்பிள் ! இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று ஓ.கே.வெனில் - உங்கள் தேர்வு ஏதுவாக இருக்கும் folks ?
Bye guys! See you around!
ME?!!
ReplyDeleteYeah It's you only :-)
Deleteஇனிய காலை வணக்கம்
ReplyDeleteஇரண்டு அட்டையில் சிகப்பு வண்ணத்திற்கு எனது வாக்கு.
Deleteஇனிய காலை வணக்கம் நணபர்களே
ReplyDeleteஆவலுடன் லக்கியை எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteவந்தாச்சி.
ReplyDelete10kullaa
ReplyDeleteHai.
ReplyDeleteHi GOOD MORNING TO ALL
ReplyDeleteI AM 9 TH
காலை வணக்கம் 🙏
ReplyDelete// இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று ஓ.கே.வெனில் - உங்கள் தேர்வு ஏதுவாக இருக்கும் folks ? //
ReplyDeleteமுதல் அட்டை கலரிங் தூக்கலா இருந்தாலும் நல்லா இருக்கு.
வெளிவருவதே நம்முடைய காமிக்ஸ் மட்டும்தான் சார். அதையும் குறைகளாலும், ஸ்கேன்லேஷனாலும் முடக்கவே சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவது கண்கூடாக தெரிகிறது. அதன் விளைவே தற்போது வெளிவரும் புது புத்தகங்களையும் ஸ்கேன்லேஷனை சுற்றலில் விடுவது!
ReplyDeleteபுரிகிறது சார் ; இதனில் கஷ்டமோ / நஷ்டமோ - நம்மோடு மட்டும் போவதில்லை என்பதே நெருடலின் உச்சம் ! மாதா மாதம் கிட்டத்தட்ட 60 முகவர்கள் நம்பிக்கையோடு இதழ்களை வாங்கி ஸ்டாக் வைத்து வருகின்றனர் ! இந்த ஸ்கேன் முயற்சிகள் அவர்கள் முதலீடுகளுக்கும் சங்கடத்தை ஏற்படுத்திடக் கூடாதே என்பது தான் எனது பிரதான கவலை !
Delete//குறைகளாலும், ஸ்கேன்லேஷனாலும் முடக்கவே //
Deleteவருத்தமான விசயம் தான். ஆசிரியரின் வேண்டுகோளில் உள்ள நியாயத்தை சம்பந்தப்பட்டவர்கள் உணருவார்கள் என நம்புவோமாக.
13 என் ஃபேவரிட்..!
ReplyDeleteமுதல் அட்டை...
ReplyDeleteஇப்போது சகலமும் டிஜிட்டல் கோப்புகளே எனும் போது சில பல ஆண்டுகளுக்குப் பின்பாய் – “ரொம்பவே அத்தியாவசியம்" எனும் பட்சத்தில் மறு-மறு பதிப்பு சுலபமே
ReplyDeleteவணக்கம் விஜயன் சார், நண்பர்களே
மீண்டும் ஜேஸன் மக்லேனா? எங்கே?
எப்போது? ஆவலுடன்!
வணக்கம்!
ReplyDeleteஅப்படியே அந்த XIII ஸ்பின் ஆஃப்
ReplyDeleteகதைகளுக்கு ஒரு தனித்தடம் போட்டால்
குமுதா ஹேப்பி அண்ணாச்சி.
இதுவரையிலான spin-offs களை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் விற்றுத் தீர்க்கவே புனித தேவன் மனிடோவைத் தான் தேடித் திரிகிறோம் சார் ! இதில் தனி தடம் வேறா ? Phew.......
Deleteஆல் ஸ்கேன் பார்ட்டீஸ்!!
ReplyDeleteஅடங்குங்கப்பா ப்ளீஸ்!! அடுத்தவர் பிழைப்பை எப்படியெல்லாம் கெடுக்கலாம்னு யோசிக்கறதை விட்டுட்டு, ஏதாச்சும் நேர்மையான பிழைப்பு நடத்தி பிள்ளைகுட்டிகளை படிக்க வைக்கிற வழியப் பாருங்கப்பு!!
மற்ற நண்பர்களும் இந்த ஸ்கேன் பார்ட்டிகளின் முயற்சிகளுக்கு கைதட்டலைப் பரிசாக்கி ( நன்றியுணர்வாக்கும்? அடப்போங்கப்பா!!) அவர்களை ஊக்குவிப்பதைத் நிறுத்திக் கொள்ளலாமே ப்ளீஸ்?
இக்கட கை தட்டினால் அதுக்கு "ஜால்ரா...காலரா ..." என்று பொருள்படுமே ? Maybe அதனால் கைதட்டல்களை இன்ன பிற இடங்களுக்கென நண்பர்கள் ஒதுக்கீடு செய்திருக்கலாம் அல்லவா ?
Deleteபுரியாத புதிராகவும், 'பிடிக்கவே முடியாது'ன்னு எல்லோராலும் நம்பப்பட்டதுமான '5.75 கோடி ரயில் கொள்ளை' திருடர்களும் இன்று ஜெயிலில்!!
Deleteஏனோ சொல்லணும்னு தோனுச்சு!!
///மற்ற நண்பர்களும் இந்த ஸ்கேன் பார்ட்டிகளின் முயற்சிகளுக்கு கைதட்டலைப் பரிசாக்கி ( நன்றியுணர்வாக்கும்? அடப்போங்கப்பா!!)///
Deleteபக்கத்துவீட்டுக்காரன் புள்ளைய கிட்நா பண்ணிக்கிட்டு போய் காது குத்தி பேருவெச்சி மொய் வாங்குற கதைதான் இது.!
நண்பர்களும் கெடாவிருந்து கிடைக்குதேன்னு கை தட்டிடுறாங்க போல ..!
////இக்கட கை தட்டினால் அதுக்கு "ஜால்ரா...காலரா ..." என்று பொருள்படுமே ? Maybe அதனால் கைதட்டல்களை இன்ன பிற இடங்களுக்கென நண்பர்கள் ஒதுக்கீடு செய்திருக்கலாம் அல்லவா ?////
Deleteஇப்படி கைதட்டுபவர்களில் பலரும் சொல்லுகின்ற காரணம் - "காமிக்ஸ் விலையேறிப் போச்சு... எங்களால வாங்க முடியலை"!
பெட்ரோல் விலையேறிப் போச்சுன்னு குருடாயிலையா வண்டிக்கு ஊத்திக்கறீங்க? ஹஹ்?!!
ஆமா! கேக்காமலே ஸ்கேன் அனுப்பும் நண்பர்களும் மின்னும் மரணம் போன்ற புத்தகங்கள் கூட வருவத உணர்ந்து விற்பனய பாதிக்கும் என ஆசிரியரின் கூற்ற உணர்ந்து, வருங்கால வாசகர்கள் இணைவத தடுக்கப்படும்கிறத உணர்ந்து இதனை தவிர்க்கவும்! இதனை காமிக்ஸ் வளர்ச்சிக்காக நம்ம லயனின் முன்னேன்றத்துக்காய் செய்யவும் நண்பர்களே பரப்புவதை தவிர்க்கவும்! அனுப்பினால் நாசூக்காய் மறுக்கவும் செய்யலாமே!
Delete////பக்கத்துவீட்டுக்காரன் புள்ளைய கிட்நா பண்ணிக்கிட்டு போய் காது குத்தி பேருவெச்சி மொய் வாங்குற கதைதான் இது.!
Deleteநண்பர்களும் கெடாவிருந்து கிடைக்குதேன்னு கை தட்டிடுறாங்க போல ..! ////
அருமையான உதாரணம் KOK!!
திருடன வளக்கிறது நம்ம கஆம
Deleteஇகஃஅஸஃ சந்ததிய பாதிக்கும் என்மத உணரவும், ,,, பழய கத மாறி புதுசு வருது, ,வராததும்ல வருது,,,,உணர்வோம்,,,,திருடனை வளர்க்கிறோம்னு சொல்லல யான் திருட்டுப்புத்திய மறைமுகமா வளக்காதிய நண்பர்வளே
////பக்கத்துவீட்டுக்காரன் புள்ளைய கிட்நா பண்ணிக்கிட்டு போய் காது குத்தி பேருவெச்சி மொய் வாங்குற கதைதான் இது.!
Deleteநண்பர்களும் கெடாவிருந்து கிடைக்குதேன்னு கை தட்டிடுறாங்க போல ..! ////
நெத்தியடி..!
I pick the second attai which looks fabulous in purple. A change from our regular red color
ReplyDelete///! இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று ஓ.கே.வெனில் - உங்கள் தேர்வு ஏதுவாக இருக்கும் folks ?///
ReplyDeleteஇதுல ஒண்ணு ..அதுல ஒண்ணு..!!
உள்ளேன் ஐயா ..!!
:-)
DeleteDear Editor,
Please have the frontal chess board design for both front and back - front purple, back red. You may discard the current back cover !! Just an Idea to have both designs !! :-D
I25
ReplyDeletePassword retrieve ஆகவில்லை
ReplyDeleteசந்தா கட்ட முடியாமல் சிரமத்தில் உள்ளேன்.
சீக்கிரம் சரி செய்யவும்....சார்
எந்தத் தளத்தில் சார் ?
DeletePlease see spam messages
Deleteலயன் காமிக்ஸ் டாட் இன் sir.....
DeleteSpam மெசேஜ்ல் உள்ளது
Deleteநன்றி
Hi..
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeleteபனியில் ஒரு பிரளயம் :
ReplyDeleteஎன்னெத்தை சொல்றது...ஒத்தை வரியில சொல்லணும்னா ....
ஜேம்ஸ்பாண்ட் 007ஐ இதுவரையில் காமிக்ஸ் கதையாய் படித்துக்கொண்டிருந்த நாம் இனிமேல் திரைப்படமாய் பார்க்கப்போகிறோம்..!
முதல் பத்துப்பக்கங்களுக்கு வரும் சேஸிங் சீனும், தொடர்ந்து வரும் Bondன் ஆக்ஷனும் அச்சு அசல் சினிமாவேதான் ..!
சீன் கானரி, ரோஜர் மூர் போன்றோர் மிகச்சிறந்த ஜேம்ஸ்பாண்ட் படங்களை கொடுத்திருந்தாலும் எனக்குப் பிடித்தது பியர்ஸ் ப்ராஸ்னன்தான்.! பாண்ட் கதாப்பாத்திரத்திற்கே உரிய முகவெட்டும் அசத்தல் நடிப்புமென ப்ராஸ்னன் நான்கு படங்களிலும் (Golden eye, Tomorrow never dies, World is not enough, die another day ) கலக்கியிருந்தார்.! அதன்பின் டேனியல் க்ரைக் நடித்து வெளியான Casino Royal பார்த்தபோது படம் பிடித்திருந்தாலும் ஏதோ ஒரு ஒட்டுதல் குறைந்தது போல தெரிந்தது. காரணம் ..ப்ராஸ்னனை மனதில் Bondஆக வரித்துக்கொண்டதால் சட்டென்று டேனியலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை போலும். ஆனால் Casino royalஐ மறுமுறை பார்த்தபோதுதான் டேனியலின் அசுரநடிப்பு பிடிபட்டது ..! தொடர்ந்து Quantum of solace, Skyfall, Spectre என மனிதர் புகுந்து விளையாடிக்கொண்டு இருக்கிறார்.! இந்தக்கதை எதற்கு என்றால் நம் காமிக்ஸ் ஜேம்ஸ்பாண்ட் 2.0 என்பது அட்சுரசுத்தமாக டேனியல் க்ரைக்கின் வருகை போன்றது.! பழைய உருவகத்தை மறந்துவிட்டு பார்த்தோமானால் பாண்ட் 2.0 தமிழுக்கு ஒரு அட்டகாச அறிமுகம்.!
ஆக்ஷன் காட்சிகளை வரைந்திருக்கும் விதமும் ஆங்கிள்களும் மெர்சலாக்குகின்றன. அதுவும் புதிய கண்டுபிடிப்பான அந்த தோட்டாவின் (இலக்கைத் தாக்கியதும் எட்டாய் பிரிந்து சேதத்தை விளைவிக்கும்) பாதையைக்கூட மிரட்டலாய் வரைந்திருக்கிறார்கள்.! சுகமோ வலியோ எதையுமே உணரமுடியாத அந்தப்பெண் மற்றும் அவளுடைய பாய் ஃப்ரெண்ட் இருவரிடமும் பாண்ட் மோதும் காட்சிகள்., வெப்பமூட்டப்பட்ட அறையில் இருந்து தப்பும் காட்சி... இப்படி சொல்ல நிறையவே இருக்கிறது.! வெப்ப அறையிலிருந்து தப்பிவெளியேறி ரிலாக்ஸாக தம்மடிக்கும் இடத்தில் 1.0வோ 2.0வோ பாண்ட் எப்போதும் பாண்ட்தான் என நிரூபிக்கிறார்.!
ஜேம்ஸ்பாண்ட் 2.0வை தமிழுக்கு ஆரவாரத்துடன் விசிலடித்து வரவேற்கிறேன்..!
பனியில் ஒரு பிரளயம் - சித்திரவிருந்து
ரேட்டிங் : 10/10
செம!!
Delete'தம்' போடாது அடுத்த தபா ஒரு புல்லை வாயில் வைத்து மேய்ந்து கொள்ளச் சொல்லிக் கோரிக்கை விடணும் பாண்ட் சமூகத்திடம் !
Deleteபோச்சு ..ஜேம்ஸ்பாண்டையும் கெடுக்கப் பாக்குறாங்க ...! :-)
DeleteEditor please add other bond comics in our future jumbo comics plan....5 stories in the line...Sema mass thank you sir 10/10
Deleteஐயோ எடிட்டர் சர்கார்ஜி .. இது நான் எழுதணும்னு வெச்சிருந்த பாண்ட் விமர்சனம். கிட் கண்ணன் எழுதிட்டாப்ல. நான் பாக்யராஜ் சார போய் பாத்துட்டு வறேன் !
DeleteRaghavan @
Deleteஹிஹி...:))))
விமர்சனத்தை பதிவு பண்ணி வெச்சிருக்கீங்களா.? :-)
ரண்டுமே அருமை,,,முன்னட்டைல ஒன்னு
ReplyDeleteபின்னட்டைல ஒன்னுனு போடலாமே சார்
பின் அட்டையில் லக்கி லூக்கின் வாயிடமிருக்கும் ஃபில்லரை மாற்றிட இயன்றால் நலம்.
Deleteபார்க்கையில் அவர் முகம் ஆர்ச்சி காமிக்ஸ் கதைகளில் வரும் ஜக்ஹெட் போல தோன்றுகிறது. (மீசையுடன்)
சிகப்பு அட்டை ஓக்கே.
ReplyDeleteஇப்போது சகலமும் டிஜிட்டல் கோப்புகளே எனும் போது சில பல ஆண்டுகளுக்குப் பின்பாய் – “ரொம்பவே அத்தியாவசியம்" எனும் பட்சத்தில் மறு-மறு பதிப்பு சுலபமே
ReplyDeleteநல்ல செய்தி எனது மகள்கள் வந்து இரத்தப்படலம் கேட்டால் கிடைக்கும் மகிழ்ச்சி சார்
அது வரைக்கும் நமக்கு 'தம்' தொடர்ந்திட ஆண்டவனை வேண்டிக் கொள்ளுங்கள் பழனிவேல் !
Deleteகவலைய விடுங்க சார். நாம தொடர்ந்திடுவோம்...
Deleteசுற்றலில் இருக்கும் fileகளின் ஒரு மெயில் லிங்கைப் பிடித்து கேஸ் போடுங்கள் சார். அப்புறம் எவனும் பண்ணமாட்டான்.
Deleteஸ்கேன்லேசன் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி எனக்கு பிடித்தவற்றை வாங்கித்தான் படிக்கின்றேன்.
ReplyDeleteநன்றிகள் சார் !
Delete+1111
Deleteசார் எனக்கு தெறிந்து புத்தகத்தின் ஸ்பரிசம் அந்த காதல் அச்சுமையின் நெடியை உணர்ந்து படிப்பவர்கள் ஸ்கேனை படிக்க விரும்பமாட்டார்கள் ஏதோ என்கிட்ட இருக்கு என்ற ரீதியில்தான் இருக்கும்...சார்
ReplyDeleteஎல்லோரும் ஒரே ரசனையோடு இருப்பது சிரமம் தானே ? 'எனக்கு இது போதும் !" என்று எண்ணிடக் கூடிய வாசகர்கள் விலகிச் செல்வது தானே நிகழ்ந்திடும் ?
Deleteஈரோட்ரடில் இரத்தப்பலத்தை கையில் வாங்கி பிரித்துப்பார்த்து அதை முகர்ந்து பார்க்கும் போது எனது மனைவி பார்த்த அந்த கேவலமான லுக்கை என்ன சொல்வது யோவ் ஏன் என்னாச்சு உனக்கு என பார்வையிலே கேட்டது போல் இருந்தது.....
ReplyDeleteகாசு பணம் துட்டு
ReplyDeleteபணம் எவ்வாறு உருவாகி இருக்கும என்பதை இந்த காமிக்ஸை விட எளிதாக எவரும் சொல்ல முடியாது.
இதை வரியின் வரலாறோடும் ஒப்பிடலாம். ஆரம்பத்தில் பணக்காரர்களுக்கு மட்டும் தான் வரி போட ஆரம்பித்தனர்.
கொஞ்சம் கொஞ்சமாக நடுத்தர வர்க்க மக்களுக்கும் வரி போட்டார்கள். இன்று பணக்காரன் தன்னுடைய வருமானம் அனைத்தையும் "Investment" செய்கிறேன் என்று கூறி கொண்டு வரி கட்டுவதே இல்லை. நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மட்டுமே இன்றைய நிலையில் தங்களது வருமானத்தில் ஏதாவது ஒரு வகையில் சுமார் 50 % வரியாக அரசுக்கு செலுத்தி கொண்டு மற்றும் செலுத்தி கொண்டே இருக்கும்.
நகைச்சுவை என்பதோடு மட்டும் இல்லாமல் கடின உழைப்பை எவ்வாறு ஒரு சில புத்திசாலிகளால் சுரன்ட படுகிறது என்பதை நகைச்சுவை கலந்து அருமையாக சொல்ல பட்டு இருக்கிறது.
சோகமான விஷயங்களை நகைச்சுவை யோடு கூறுவது ஒரு கலை. அதுவும் ஸ்மர்ப்ஸ் ஆசிரியரின் கண்ணோட்டம் கண்டு நான் பிரம்மிப்படைகிறேன்.
ஸ்மர்ப்ஸ் நம்மவர்களுக்கு பிடித்தால் தான் ஆச்சரியம். ஓட்டுக்கு காசு வாங்கும் கூட்டம் தானே நாம் என்று டயலாக் எல்லாம் பேசாமல், அடுத்த வருடத்தில் இருந்து ஆங்கிலத்தில் ஸ்மர்ப்ஸ் படிக்க ஆரம்பிக்க வேண்டியது தான்.
//அடுத்த வருடத்தில் இருந்து ஆங்கிலத்தில் ஸ்மர்ப்ஸ் படிக்க ஆரம்பிக்க வேண்டியது தான்//
DeletePapercutz USA ஒரு வண்டி இதழ்களோடு தயாராய் உள்ளது சார் ! நானும் அங்கே தான் தஞ்சம் அடைந்துள்ளேன் !
///நகைச்சுவை என்பதோடு மட்டும் இல்லாமல் கடின உழைப்பை எவ்வாறு ஒரு சில புத்திசாலிகளால் சுரன்ட படுகிறது என்பதை நகைச்சுவை கலந்து அருமையாக சொல்ல பட்டு இருக்கிறது.
Deleteசோகமான விஷயங்களை நகைச்சுவை யோடு கூறுவது ஒரு கலை. அதுவும் ஸ்மர்ப்ஸ் ஆசிரியரின் கண்ணோட்டம் கண்டு நான் பிரம்மிப்படைகிறேன்.///
+1
அருமை கணேஷ் ..!!
// கடின உழைப்பை எவ்வாறு ஒரு சில புத்திசாலிகளால் சுரன்ட படுகிறது என்பதை நகைச்சுவை கலந்து அருமையாக சொல்ல பட்டு இருக்கிறது.//
Delete+1
அடியேன் ஏற்கனவே கா சோ புண்ணியத்தில் papercutzசிடம் தஞ்சம். ஆனால் discount இல்லாத புத்தகங்கள் காம்பெக்ட் சைசில் 400 ரூபாய்கள் :-( Hmm .. இனிமே வேற வழி இல்லே !
DeletePresent sir
ReplyDeleteலக்கி சிவப்பு அட்டை அழகு...
ReplyDelete// இந்த ஜுலையில் வெளியான “பனிமண்டல வேட்டையை”க் கூட ஸ்கேன் செய்து இப்போதே சுற்றில் விடும் பாங்கை என்னவென்பதோ ? நம் கிட்டங்கியிலுள்ள ஸ்டாக் தீருவதற்குள் நான் போய்ச் சேர்ந்து ஒரு மகாமகம் ஆகியிருக்கும் என்பது தான் யதார்த்தம் எனும் போது – இது மாதிரியான அவசியமிலா வியர்வைச் சிந்தல்கள், என்றைக்கோ ஒரு தூரத்து நாளில் எங்கள் நிறுவனம் ரெண்டு காசு பார்க்கக் கூடிய வாய்ப்புகளை சுத்தமாய் நசுக்கிடும் சமாச்சாரங்களாகிடாதா //
ReplyDeleteஉண்மை சார். இதனை செய்யும் நண்பர்கள் சரியான முறையில் புரிந்து கொண்டு உடனே இதனை நிறுத்துவது பல நன்மைகளை கொடுக்கும். முக்கியமாக முகவர்களின் விற்பனை அதிகரிக்கும், ஆசிரியரின் கிட்டங்கி விரைவில் காலியானால் நமக்கு கிடைக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த புக்க ஸ்கேன் செஞ்ச அந்த மனிதரை நேர்ல பார்த்தா நாலு கேள்வி வெச்சிருக்கேன் :-D (யார்றா இவன் சந்தடி சாக்கில் கோல் போடறவன்?) :-)
Delete//“மின்னும் மரணம்” இதழ்களை சுமந்து வருவது தலைக்குள் சைரன் ஒலிக்கச் செய்ய – இரத்தப் படலத்தின் பிரிண்ட்ரன்னை மூன்றிலக்கத்திலேயே நிறுத்திக் கொள்வதென்ற முன்ஜாக்கிரதை குடிகொண்டது என்னுள் ! Of course – மிகக் குறைவான நம்பரே என்பதால் ஒரு சிலருக்கு இந்த இதழ் கிடைக்காது போய் விட்டது தான்! //
ReplyDeleteஇதுபோலவே, மார்ட்டினின் மெல்லத் திறந்தது கதவு, மாடஸ்டியின் கழுகு மலைக்கோட்டை போன்றவையும் பலருக்கும் கிடைக்காமல் ஏமாற்றமே. இனிவரும் காலத்திலாவது இப்படியான பிரிண்ட் ரன் குறைவான இதழ்களில் வெளியீட்டின்போது கடல் கடந்திருக்கும் வாசகர்களுக்காக நீங்கள் லேசாய்க் கருணை காட்டிட வேண்டுகிறோம். நாட்டில் நடக்கும் கூத்துக்களைப் பார்க்கும்போது 2019 இன்னமும் சோதனை தரும் காலமாக இருக்குமென்று தெரிகிறது. புனித மானிடோ தேவன் எம்பக்கம் தன் கருணைக் கடைக்கண் பார்வையை செலுத்தவாராக!
விஜயன் சார்,
ReplyDeleteலக்கி லூக் இரண்டாவது அட்டைப்படம் நன்றாக உள்ளது. குறிப்பாக அந்த வண்ணம்.
மற்றும் ஒரு குறிப்பிட்ட வேண்டிய விஷயம் பின் அட்டையில் லக்கியின் முகத்தின் அவுட் லைன் போட்டு அதற்குள் பல லக்கி படத்தை கொண்டு வந்தது பாராட்டுக்கு உரியது.
காசு ..பணம் ..துட்டு :
ReplyDeleteஸ்மர்ஃப்ஸின் தனித்துவமே அந்த பொடிபாஷைதான்.! ஆனால் ஸ்மர்ஃப் நண்பர்களில் ஒரு சாராருக்கு பிடிக்காமல் போனதற்கு அந்த ப்ரத்யேக பாஷை முக்கிய காரணமாக இருந்திருக்கக்கூடும். எனவே எடிட்டர் இம்முறை அந்த பாஷையை வெகுவாக குறைத்து மற்ற கார்ட்டூன்களைப் போலவே இதனையும் கொடுத்துள்ளார்.!
பாகுபாடின்றி சமத்துவமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் பொடியர்கள் உலகில் பணம் நுழைந்ததும் ஏற்படும் எற்றத்தாழ்வுகளையும் பிரச்சினைகளையும் அதற்கான தீர்வையும் அழகாக நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார்கள்.!
பொடியர்கள் உலகில் திர்வு ஏற்பட்டுவிட்டாலும் மனிதர்கள் உலகில் பணத்தால் ஏற்படும் சகலவித பிரச்சினைகளுக்கும் தீர்வு இதுவரை எட்டப்படவேயில்லை ..இனியும் ஏற்படப்போவதில்லை.!
போய்வாருங்கள் பொடியர்களே ....ப்ராப்தமிருந்தால் மீண்டும் சந்திப்போம் ..!
காசு ..பணம் ..துட்டு : டாட்டா ..பை..பை ....!!
அருமை கண்ணா. கடைசி இரண்டு வாக்கியங்களை நீக்கி விடுங்களேன்; அடுத்த வருடம் இவர்கள் எப்படியாவது வருவார்கள் என நம்பிக்கை உள்ளது.
Delete//போய்வாருங்கள் பொடியர்களே ....ப்ராப்தமிருந்தால் மீண்டும் சந்திப்போம் ..!//
Deleteநிஜமாகவே நெஞ்சம் கனக்கிறது ...இந்த வரியைப் படிக்கும் போது !
PfB @
Deleteநம்பிக்கை ..அதானே வாழ்க்கை.!
Smurf திரும்ப வருவார்கள் என நம்புவோம்.!
கடைசிக் கதைக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு நூலிழை நம்பிக்கையை விதைத்திருக்கிறது..!!
எடிட்டர் சார்...!
கனத்த நெஞ்சோடுதான் எழுதினேன்...!
ஒற்றை நபர் அல்லாமல் ஒட்டுமொத்த கதைமாந்தர்களையுமே ஹீரோக்களாக கொண்ட நல்ல தொடர் நம்மைவிட்டு போகிறதே என்ற ஆதங்கமே காரணம்..!!
// ஒற்றை நபர் அல்லாமல் ஒட்டுமொத்த கதைமாந்தர்களையுமே ஹீரோக்களாக கொண்ட நல்ல தொடர் //
Deleteமிகவும் சரி. இதனை யாரும் இன்னும் புரிந்து கொள்ளவில்லையே?
ஆன்லைன் ஆர்டர்களில் ஜேம்ஸ் பாண்ட் & TEX பட்டையைக் கிளப்பி வர, பொடியர்களுக்கோ அங்கும் டெபாசிட் காலி !!
DeleteOur bond always bonding with demand sir...
DeleteOur bond always bonding with demand sir...
Deleteகண்ணா @ ஸ்மர்ப் எங்கள் குடும்பத்தில் ஐக்கியமாகி விட்டார். ஸோ நோ டா டா பை பை பார் தெம் எங்கள் குடும்பத்தில் இருந்து.
Delete///ஆன்லைன் ஆர்டர்களில் ஜேம்ஸ் பாண்ட் & TEX பட்டையைக் கிளப்பி வர, பொடியர்களுக்கோ அங்கும் டெபாசிட் காலி !!///
Deleteஇப்போதான் நூலிழை நம்பிக்கைன்னு சொல்லி வாயைமூடினேன் ...நூல் அறுந்து போச்சே ...ப்பூபூவ்வ்..!!
///ஸ்மர்ப் எங்கள் குடும்பத்தில் ஐக்கியமாகி விட்டார். ஸோ நோ டா டா பை பை பார் தெம் எங்கள் குடும்பத்தில் இருந்து.///
சூப்பர் பரணி ..!
///பொடியர்கள் உலகில் திர்வு ஏற்பட்டுவிட்டாலும் மனிதர்கள் உலகில் பணத்தால் ஏற்படும் சகலவித பிரச்சினைகளுக்கும் தீர்வு இதுவரை எட்டப்படவேயில்லை ..இனியும் ஏற்படப்போவதில்லை.!///
Deleteநிதர்சனமான பதிவு கண்ணன்.
முதல் அட்டை அருமை
ReplyDeleteலக்கி க்கு புளு அட்டை சூப்பர்.
ReplyDeleteஞாயிறு காலை வணக்கம் காமிக்ஸ் காதலர்களே...
ReplyDeleteகாதலும் கடந்து போகும் :
ReplyDeleteதீபாவளி மலருக்கு முழுக்க முழுக்க நியாயம் செய்த அருமையான கதை.!
டைகர் ஜாக்கின் காதலியைத் தேடி நாமும் ஓடுவது போலொரு உணர்வே கதைநெடுக வியாபித்திருந்தது.! (க்ளைமாக்ஸில் கண்கலங்கியதை மறைக்க விரும்பவில்லை..!)
கடத்தப்பட்ட காதலியைத் தேடி ரிலேரேஸ் போல ஒவ்வோர் இடமாக டைகர் ஜாக் அலையும்போது சீக்கிரம் தானியா கிடைத்துவிடக்கூடாதா என நம் மனமும் ஏங்குகிறது.! டெக்ஸ் வில்லர் கதைநெடுக வந்தாலும் இக்கதையின் ஹீரோ டைகர்ஜாக் தான்.! இதற்குமுன் ஓரிரு வார்த்தைகளையும் அவ்வபோது வோ வையும் தாண்டி பெரிதாக பேசியேயிராத டைகரின் பின்னால் இப்படி ஒரு காதல் கதையா ..!?
தானியாவைத் தேடி ஒவ்வொரு இடமாக சென்று அங்கிருந்து அவள் வேறிடத்திற்கு அனுப்ப பட்டுவிட்டாள் என்று தெரிந்ததும் டைகர் ஜாக்கிற்கு வரும் வெறியும் கோபமும் துளியும் குறையாமல் நமக்கும் வரும்.! கடத்தல் கும்பலை டைகர் குத்திக் கிழிக்கும்போது ...அவனை நார்நாரா கிழிச்சித் தொங்கவிடு டைகர்னு நம் மனக்குரல் சொல்லும்.!
க்ளைமாக்ஸ் இப்படித்தான் முடியும் என்று யூகித்திருந்தாலும் அந்த இடம் வரும்போது கலங்காமல் இருக்க முடியவில்லை ..ஏனெனில் கிட்டத்தட்ட 300 பக்கங்களுக்கு டைகர் ஜாக்கோடு நாமும் ஓடிய தேடுதல் ஓட்டத்தின் சக்தி அப்படி.!
இப்போது யாருக்கு தொண்டை கம்முகிறதென்று முதுகில் தட்டிக்கொடுக்கிறாய் என்ற கார்சனின் வசனத்தை டைகர் ஜாக்கோடு சேர்ந்து நாமும் சொல்லிக்கொண்டு கதையை முடிக்கவேண்டியதுதான் ..!
காதலும் கடந்து போகும் - (ஆனால் இந்த) கதை (நம்மை எளிதில்) கடந்து போகாது ..!
சூப்பர் விமர்சனம் ஜி.
Deleteடெக்ஸ் கதையில் சாரி டைகர் ஜாக் கதையில் ஒரு மைல் கல்.
இது வண்ணத்தில் ஜொலிக்கிரது.
ஆனால் கறுப்பு வெள்ளை தான் ஆத்ம திருப்தி.
நன்றி நண்பரே ..!!
Deleteகாமிக்ஸ் படிப்பதே இன்றைய மெஷின் வாழ்கையில் இருந்து ரிலாஸ்க் செய்ய என்று நண்பர்கள் பலர் நினைக்கும் இந்த நிலையில் எளிதான வாசிப்புக்கு உகந்த கார்டூன் கதைகளுக்கும் ஆதரவு தாருங்களேன் நண்பர்களே 🙏🙏🙏🙏
ReplyDelete+1
Delete+888 888 8888
DeleteI always love the cartoons. All this started with lucky Luke's super circus. Till date I love cartoons. But definitely it's a set back this time in the year 2019
Delete////இதற்குமுன் ஓரிரு வார்த்தைகளையும் அவ்வபோது வோ வையும் தாண்டி பெரிதாக பேசியேயிராத டைகரின் பின்னால் இப்படி ஒரு காதல் கதையா ..!? ///
Deleteவோ!
விஜயன் சார்,
ReplyDelete// Papercutz USA ஒரு வண்டி இதழ்களோடு தயாராய் உள்ளது சார் ! நானும் அங்கே தான் தஞ்சம் அடைந்துள்ளேன் ! //
இங்கே சென்று புத்தகங்கள் விலையை பார்த்தேன் மயக்கம் வந்து விட்டது. என்னால் முடியாது.
காத்திருக்கிறேன் நமது காமிக்ஸில் ஸ்மர்ப் மீண்டும் வரும் காலத்தை.
தீபாவளிக்கு ஊருக்கு (கோவை) போக மாட்டேன்னு நெனச்சிட்டு இருந்த நான் திடீருன்னு போக வேண்டிய சூழ்நிலை. ஹே பரவாயில்லை அக்டோபர் மற்றும் நவம்பர் இதழ்களை அள்ளி கொண்டு வரலாம் என்ற
ReplyDeleteநினைத்து இருந்த என் நினைப்பில் மண்.
அக்டோபர் இதழ்கள் மட்டுமே இருந்தன, நவம்பர் இதழ்கள் இன்னும் வரவில்லை என்றார் என் உறவினர், இதற்கும் தேதி 8 நவம்பர். இதனால் ஜேம்ஸ் பாண்ட் என் கைகளுக்கு கிடைக்க டிசம்பர் கடைசி ஆகிவிதும்.
ஹ்ம்ம் .
எடிட்டர் சார், சந்தாதாரர்களுக்கு சென்று அடையும் வேகத்திலேயே கடைகளுக்கும் வந்து சேருமாறு ஏற்பாடுகள் செய்தால் நலம்.
எனக்கு முதல் டிசைன் பிடித்து இருக்கிறது, இரண்டாவது கொஞ்சம் டல் ஆக இருக்கிறது.
சரி இப்பொழுது இந்த வாரம் படித்து முடித்த கதைகள்
ReplyDeleteபழையது:
---------
1. விண்வெளி கொள்ளையர் - மாயாவி தன் செப்பு கவச சூப்பர் ஹீரோ அவதாரில் விண்ணில் இருந்து வந்த கொள்ளையர்களுடன் போடும் சண்டை. மாயாவி ரசிகர்களுக்கு அருமையான விருந்து.
2. மாய வித்தை - இந்த கதை எனோ எனக்கு எப்பொழுது படித்தாலும் ஒரு நோஸ்டால்ஜிக் பீலிங்கை உருவாக்க தவறுவதில்லை (லைக் 96 ). இந்த இதழின் கலர் ஒவ்வொரு இரண்டு பக்கத்துக்கும் மாறி இருக்கும், அது மட்டும் அல்ல, சில இடத்தில கருப்பு வெள்ளை, சில இடங்களில் மட்டும் கலர். நான் டைம் ட்ராவல் பண்ணி என்னுடைய 7 8 வயதுக்கு செல்ல வேண்டும் என்றால், இந்த புத்தகத்தை படித்தால் போதும்.
புதியது:
-------
1. ப்ரியமுடன் பிரளயம் - என்ன ஒரு ஒற்றுமை, நான் படித்த அதே வாரத்தில் எடிட்டரும் இந்த கதையை பத்தி அலசி இருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒரு எதிர்பார்ப்போடு ஆரம்பிக்கறது அதுக்கு அப்புறம் கதை மிட் நைட் மசாலா ரேஞ்சிற்கு சென்று விடுகிறது. எப்பொழுதும் கசமுசா கதையோடு ஒன்றி இருக்கும், ஆனால் இதில் அதற்க்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கதையை ஓரம் கட்டி இருக்கிறார்கள். ஆமாம் லார்கோ கதையில் இருந்தாரா ?
2. ஒரு குரங்கு சேட்டை - இது தான் நான் படிக்கும் முதல் ஷெர்லாக் ஸோமஸ் கதை. எனக்கு பிடிக்கவே இல்லை, ரொம்ப குழந்தைத்தனமாக பட்டது.
3. இரத்த படலம் - The end ? : ஓரளவிற்கு முடிவிற்கு கொண்டு வந்து இருந்தாலும் இது கண்டிப்பாக தொடரும். அந்த விதமாக தான் கதையை முடித்து இருக்கிறார்கள். 2040 வரை செல்லும் என்று நினைக்கிறேன். சித்திரங்கள் அருமை அருமை.
4. காலனின் கை கூலி - இந்த spin-offகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதை படிக்கும் போது தான், கதை இன்னும் தெளிவாகிறது. மிகவும் நன்றாக தானே இருக்கிறது ஏன் இது பிளாப் ஆனது ?!?
பிரபு சூப்பர்.
Deleteபிளாப் ஆகவில்லை ஜி.இரத்த படலம் நிறைய பேர் படிதிருக்கவில்லை அதனால் இருக்கலாம்.
Deleteகையில் புத்தகம் ஏந்தி படிக்கும் சுகம் எதிலும் எப்போதும் கிடைக்காது
ReplyDeleteசார்,ஸ்கேன்லேஷன் பற்றிய தங்களின் ஆதங்கம் நியாயமானதே.நான் இதுவரை சந்தா கட்டி இதழ்களை பெற்றதில்லை. மாறாக புத்தக விழாக்களிலும், கடைகளிலும் மட்டுமே வாங்கியதுண்டு. என்னிடம் இல்லாத புத்தகங்கள் ஏராளம். இருந்தாலும் இந்த ஸ்கேன்லேஷன் சங்கதி எனக்கு ரசிக்க வில்லை. சொல்லப்போனால் இந்த ஆண்ட்ராய்டு போனை இரு மாதங்களுக்கு முன்புதான் வாங்கி சில வாரங்களாக நம் தளத்தில் கலந்து வருகிறேன். எனக்கே இந்த ஸ்கேன்லேஷன் பிடிக்காதபோது என்னை விட தீவிரமான,ஆர்வமான வாசகர்கள் ஏன் இதை செய்கிறார்கள் என புரிய வில்லை.
ReplyDeleteசந்தோஷம் மகேஷ்.
DeleteBond was amazing. Credit goes to the "மௌன பாஷை". No டுமீல், சத், etc.
ReplyDeleteIn fact for the first time, I spent like a min on each panel to see the pictures. Normally I read the balloons and just give a passing glance to the pictures. This time, it was totally different.
I find no need to exercise empathy upon smurf fans.
ReplyDeleteBut it hurts to be aware of the fact that the breakage of bond created between a father and his offsprings by telling smurf stories.
So i will support smurf only for this reason..and naturally i will buy them if they find a way to come in future..
Many selectively buying comirades may not choose this option..financial constraints might limit this little luxury ..Alas!!
+ 100000
Deleteலேப்ட், ரைட்டுனெல்லாம் பேசும்போதே எனக்கு மைல்டா ஒரு டவ்ட்டு வந்துச்சு! இப்போ கன்பாா்ம் ஆயிடுச்சு!!
Delete@ மிதுன் !!
DeleteI don't understand what you are trying to convey..
I assume you got confused by the term comirade...
Though" comrade " carries many meanings
It's well known meaning is fellow socialist or Communist..
In truth it signifies fellow member of any organized group or community..
I used the term comirade which can point out anybody who reads comics in a passionate manner.
Hence it's comirade.. Not comrade..
It's my RIGHT to clear things so that you will not be LEFT with misconceived ideas..:-)
Bond is licensed to kill
Deleteசெ அ you killed the license comirade
இந்த மாத அனைத்து கதைகளுமே அருமை..
ReplyDeleteஆனால் அடுத்த கதைகளைப் படிக்க இன்னும் இருபது நாள் இருக்கே..
டிசம்பர் இதழ்களை அடுத்த வாரம் அனுப்ப ஆவண செய்யவும்..
எனக்கு படிக்க டெக்ஸ் இன்னும் உள்ளது ஜி:-)
Deleteபனியில் ஒரு பிரளயம்:
ReplyDeleteமுதல் 10 பக்கங்களில் வசனமே இல்லாத ஆக்சன் சித்திரங்கள் இறுதியில் பான்ட் ஜேம்ஸ் பாண்ட். அட்டகாசமான மீள் அறிமுகம்.
அடுத்த சில பக்கங்களில் நமது நாயகர் செய்ய வேண்டிய வேலையை உயர் அதிகாரி சொல்ல தனது சிறு பிஸ்டலுடன் கிளம்புகிறார். அடுத்த அடுத்த பக்கங்களில் போதை கும்பலை ஒழிக்க இரத்தம் தெறிக்கும் ஆக்சனுடன் விறுவிறுப்பாக கதையை சொன்ன கதாசிரியர் பாராட்டுக்கு உரியவர்.
ஜேம்ஸ் பாண்ட், தனித்துவமான கஜேட் எதுவும் இல்லை, தேவையில்லாத விஷயங்கள் இல்லை. முழுக்க முழுக்க ஜேம்ஸ் என்ற மனிதன் துணிவு மற்றும் ஆக்சனை மட்டும் நம்பி கதையை அமைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.
கதையில் முக்கியமாக குறிப்பிட்ட வேண்டிய விஷயம், சித்திரங்கள். சித்திரத்தில் ஆக்சன் காட்சிகளை அழகாகவும், துல்லியமாகவும் அதனை ரசிக்கும்படி வரைந்த ஓவியருக்கு தலை தாழ்த்தி எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். ஓவ்வொரு ஆக்சன் காட்சிகளில் பல விஷயங்களை நுணுக்கமாக அழகாக காட்டி உள்ளார். பக்கம் 125 முதல் பேனலில் உள்ள படத்தை மிகவும் ரசித்தேன்.
பனியில் ஒரு பிரளயம்:- ஆக்சன் அவதார்
பனியில் ஒரு பிரளயம்: வசனங்கள் குறைவு, சண்டை காட்சிகள் அதிகம். இப்போது வரும் எந்த படங்களில் கூட இவ்வளவு அருமையான சண்டை பார்த்து இல்லை. அவ்வளவு ஏன் கடந்த இருபது வருடங்களில் வந்த ஜேம்ஸ் பாண்ட் படங்களில் கூட இப்படி இருந்தது இல்லை, அதிக வசனங்கள், தேவையயில்லாத காட்சிகள், கொஞ்சம் ஆக்சன் என்றே வந்துள்ளன. குறிப்பாக பெண்கள் சம்மந்தப்பட்ட விஷயங்கள் குறைவு; இது இவரின் கதையை எல்லோரும் படிக்க வகை செய்யும்.
ReplyDeleteகதையில் கிடைத்த சந்தில் ஜேம்ஸ் அடிக்கும் நக்கல்களை நான் மிகவும் ரசித்தேன்.
ஆக்சன் அதிரடி என்ற விஷயத்தில் லார்கோவேல்லாம் இவர் நிழலை கூட தொடமுடியாது.
ஆக்சன் என்றால் ஜேம்ஸ்பாண்ட்தான்.
ஜேம்ஸ்பாண்ட் தனது மறுவரவை இந்த கதை மூலம் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
Deleteலக்கி கிளாஸிக்ஸ்-2 ல் இரண்டாவது அட்டைப்படம் கண்ணுக்கு உறுத்தாமலும் சற்று ரிச்னஸ் ஆகவும் இருக்கிறது.
ReplyDeleteI think editor is partial to the word பிரளயம்
ReplyDeleteஇந்த வருடத்தில்
லார்கோவின் ப்ரியமுடன் பிரளயம்
டெக்ஸின் புயலுக்கு ஒரு பிரளயம்
௦௦7-ன் பனியில் ஒரு பிரளயம்
அடுத்த வருடம் கிராபிக் நாவல் பிரளயம்
பிரளயம் எடிட்டரோட சிக்னேச்சர் வார்த்தை போல :)
ஏற்கனவே இரத்தம், மர்மம், மரணம், படலம் ஆகிய வார்த்தைகளுக்கு தடை போட்டுட்டாங்க! ( உபயம் : காமிக் லவர்?)
Deleteஇப்போ இந்த லிஸ்ட்டில் பிரளயமும்!
கேப்ஷன் போட்டிக்குப் பதிலா தலைப்புப் போட்டி வையுங்க எடிட்டர் சார்! சரமாரியாய் வந்துவிழும் 'சாவுக்கு சங்கு' மாதிரியான அருமையான தலைப்புகளில் ஒரு அம்பது அறுபதை நோட் பண்ணி வச்சீங்கன்னா அவ்வப்போது ஒன்றிரண்டை யூஸ் பண்ணிக்கிடலாம்!!
இதோ என்னுடைய பங்கிற்கு :
'உச்சந்தலையில் நச்'
'சுளுக்கெடுக்கும் சூறாவளி'
'நெருங்கி வா நீசனே'
'கிடுக்கிப்பிடி கிராதகன்'
எடிட்டர் சார்,
ReplyDeleteலக்கிலூக்கின் அட்டைப்படம் இரண்டுமே எனக்குப் பிடித்திருக்கிறது! எது வந்தாலும் சந்தோசமே!
ஆனால், பின்னட்டையில் இருக்கும் உருவம் லக்கிலூக் தான் என்று ஒப்புக்கொள்ளும்படி நீங்கள் ஒரு பெட்டி நிறைய பணத்தைக் காட்டிக் கேட்டாலும் நான் அந்த மாபாதகக் காரியத்தைச் செய்ய மாட்டேன்!
எந்தக் கோணத்தில் எவ்வளவு நேரம் பார்த்தாலும் லக்கிலூக் போல தெரியவே மாட்டேங்குது சார்!
பார்த்து ஏதாவது பண்ணுங்க சார் ப்ளீஸ்!
பின்னட்டையில் எனக்குமே அத்தனை பிடித்தம் நஹி ! "மேடையில் ஒரு மன்மதன்" ராப்பரை பெரிதாக்கிப் போட நினைத்துள்ளேன் !
DeleteComirades,
ReplyDeleteScanlation of original contents from Europe/UK/US stops that books from getting released in Tamil. And with this scanlation & distribution of recent releases Lion/Muthu will certainly make sunset of Tamil comics books soon from them. Our scanlation friends and its supporters in online groups should keep their ego out and think wisely.
We can't predict the future of Tamil comics, let us give them proper support by our own deeds.
Thanks
//Our scanlation friends and its supporters in online groups should keep their ego out//
DeleteHit the nail on it's head sir !
எடிட்டிங்கும் பிரளயமும் :
ReplyDeleteபிரளயம் - முகாரி ராகம்
சுட்டது பாதி பிரளயம் மீதி
துள்ளுவதோ பிரளயம்
பாலைவனத்தில் பிரளயம்
பிரளயத்துக்கோர் பிரளயம்
பிரபல பிரளயம்
சுடு குத்து பிரளயம்
கும்மாங்குத்து பிரளயம்
என்னதான் ரகசியமோ பிரளயம்
இன்னபிற பிரளயம்
எடிட்டர் சார்,
ReplyDeleteஇது போன்ற ஒல்லிப்பிச்சான் இதழ்களின் பேக்கிங்கில் ஒரு அட்டை உருளை வைத்து அனுப்புவீர்கள். அது மிஸ்ஸான காரணத்தால் இரண்டு இதழ்களின் முனைகளுமே மடங்கி வந்திருந்த்து. ப்ளீஸ் கவனிக்கவும்.
பார்த்துக் கொள்கிறேன் சார் !
Deleteமிக்க நன்றி சார்!!! ஒவ்வொரு இதழுமே தலைமுறை கடந்து பாதுகாக்கப் பட வேண்டியவை என்பது என் எண்ணம். அதனாலே மிகுந்த சிரத்தை எடுத்து பத்திரப்படுத்துவேன்!! சிறுவயது பழக்கம்.
DeleteON SCANS AND SCANLATIONS :
ReplyDeleteஆவணப்படுத்தும் வேட்கை” - பற்றி :
சார் இது ஆவணப்படுத்தும் அவசியம் சார்ந்தது மட்டுமல்ல. கடந்த 2012 முதல் நமது காமிக்ஸ் ஒரு 230-240 வந்திருக்குமா? ஒரு வருடம் தவிர மற்றைய வருடங்கள் நான் சந்தா செலுத்தி இருந்தாலும் அத்தனை புத்தகங்களும் இன்று என்னிடம் இல்லை. அவ்வப்போது நமது பழைய வெளியீடுகளில் சிலவற்றை நண்பர்களுக்கு கொடுத்து விடுவதுண்டு. Same about the English comics I purchase.
இத்தனைக்கும் 60ல் retirement - அதற்கின்னும் 18 ஆண்டுகள் உண்டு - எனவே அதுவரை வருடம் 50 காமிக்ஸ் என்றாலும் 900 காமிக்ஸ்க்கு இடம் வேண்டும் என்று வீட்டில் சண்டையே போட்டிருக்கிறேன் இரு முறை. எனினும் பலத்த எதிர்ப்பு காரணமாய் பல காமிக்ஸ்களை கொடுக்க நேர்ந்துள்ளது - இது தொடரும் கூட. இந்நிலையில் எனக்கு scans ஒரு வரமாகத்தான் தோன்றுகிறது - இன்னும் அந்தப் பக்கம் செல்லவில்லை என்றாலும்.
இந்த இடமின்மைப் பிரச்னையை மனைவியிடமும் அம்மாவிடமும் சொல்லிச் சொல்லி நேரம் கடப்பது தான் மிச்சம். மற்றபடிக்கு குவிந்து கிடக்கும் புத்தகங்களில் ஒரு செட் வருடா வருடம் தூக்கி எறியப்படும் மகளிரணியால். So scans appear to the only viable option for the future.
SCANLATION on the other hand is here to stay. இதனில் விற்பனை முகாந்திரங்கள் இல்லை. கொட்டிக்கிடக்கும் டைட்டில்களில் (சில ஆயிரம்) பத்துக்கும் குறைவாகத்தான் ஒரு வருடத்தில் scanlate செய்யப்படுகிறது. நீங்கள் வெளியிடுகிறீர்கள் என்று தெரிந்த வுடன் அந்த டைட்டில்கள் நிறுத்தப்படுகின்றன உடனடியாக - உதாரணம் SMURFS, JADAWORSKY !!
Technology விரிந்து பரவும் பொழுது இத்தகைய சவுகரியங்களை (!) மக்கள் ஏற்பது தடுக்க முடியாதது - that though has its own harsh realities :-(
Hi Raghavan,
DeleteYour words are totally true about technology & harsh realities of piracy of original contents. Always there is difference between archiving for personal use and all other uses.
//SCANLATION on the other hand is here to stay. இதனில் விற்பனை முகாந்திரங்கள் இல்லை. கொட்டிக்கிடக்கும் டைட்டில்களில் (சில ஆயிரம்) பத்துக்கும் குறைவாகத்தான் ஒரு வருடத்தில் scanlate செய்யப்படுகிறது. நீங்கள் வெளியிடுகிறீர்கள் என்று தெரிந்த வுடன் அந்த டைட்டில்கள் நிறுத்தப்படுகின்றன உடனடியாக - உதாரணம் SMURFS, JADAWORSKY !!//
If you are the original authors of the above contents, whether you will tell the same words? You have 1000+ contents; I'm only taking 2 of your contents! for my entertainment with my friends group :)
Being myself working in IT product development area, I know value of intellectual properties. We don't allow others to take credit of your ideas or developments within your own department. At the end of the day, its money!
Thanks- Again:) :)
This comment has been removed by the author.
DeleteRama Karthigai,
DeleteI am also in an IT / Telecom MNC leading a Product Development Division in India with reportees from US and Europe as part of my team. I further represent standards committee (both Techincal and Process committees) as a Lead representative. I have around 32 published patents and 16 yet to be published works on my name - all of which are security based and hence are used only at highest echelons of so called "civilized" world :-) To the rest of the world they remain confidential. Usually I do not brag about these things - but this is for you to know how closely I interact with IP rights authorities.
Having blurted all this out, still I see most Indians using Pirated MS suite for their daily operations, date changed anti-virus software day in and day out - especially in the home front.
It operates slightly differently in the comics world - Scanlations are not only in Tamil - in fact English scanlations lead the market. The large publishers do not bother about it as it serves as a publicity of their original volumes that sell literally in lacs !
However as I had declared above, one of the side tracks of the harsh realities is that small publishers get hit. But trust me, the kind of titles that get scanlated are not small brands and hence their volumes are huge which is why in first place the publishers do not bother. It serves as their publicity platform.
Again I am not taking sides of YES vs NO. All I am saying is it has come to stay!
@ Salem Tex Vijayaraghavan : சார்.....லயனில் வெளியாகா எந்தத் தொடரையும் ஸ்கேன்லேஷன் செய்யலாம் ; அதுவொரு அடிப்படை உரிமை என்பது போலுள்ள உங்களின் வாதத்தின் லாஜிக் துளியும் புரியவில்லை எனக்கு ! Oh yes ...ஸ்கேன்லேஷன் உலகெங்கும் நடைமுறையில் உள்ளதொரு சமாச்சாரம் தான் - மறுக்கவில்லை ! அதன் பலனை நானுமே சில சந்தர்ப்பங்களில் அனுபவித்திருக்கிறேன் ! ஆனால் "எனக்கு தமிழில் கிடைக்காத கதைகளையெல்லாம் இப்படித் தான் படிக்க வேண்டுமாக்கும் ; படிப்பேனாக்கும் !" என்று மார்தட்டிச் சொல்வது சரி தானென்று தோன்றுகிறதா ?
Deleteசாலையோரம் பார்க் செய்திருக்கும் நம் டூ-வீலர் மீது சாய்ந்து கொண்டு எவனாச்சும் தம் அடிப்பதை பார்த்த மறுகணமே கண்கள் சிவப்பது நம் இயல்பு தானே ? ஆனால் எங்கோ ஒரு உலக மூலையில் உள்ளவரின் படைப்பை உரிமையோடு புழங்குவதை, இத்தனை அனாயாசமாக நியாயப்படுத்துவது பொருத்தம் தானா ?
இங்கே நான் முன்வைக்கும் விமர்சனம் ஸ்கேன்லேஷன் மீதல்ல சார் ; அவையொரு அடிப்படைக் குடியுரிமை என்பது போல் பாவிக்கும் உங்களின் சிந்தனை மீதே ! Least of all - let them at least be discreet !!
"சத்தமின்றிச் செய்துவிட்டால் அது நியாயமாகிடுமாக்கும் தம்பி ?" என்ற ஏளனக் கேள்விகள் சுடச் சுட எழுந்திடக் கூடுமென்பது புரிகிறது ! ஆனால் அத்தகையதொரு கேள்வியிலேயே உரிய பதிலும் அடங்கியிருக்கும் என்பதால் மேற்கொண்டு விவரிக்க தம் கட்டப் போவதில்லை !
Delete@ Raghavan : //I am not taking sides of YES vs NO. All I am saying is it has come to stay!//
DeleteFor sure !! The flipside of technology !
டெக்ஸ் விஜயின் கருத்துகள் எனக்கு அதிர்ச்சியளிக்கின்றன!! என்ன ஆச்சு விஜய் உங்களுக்கு?!!
Delete@ Raghavan & Rama Karthigai : நம் வாசக வட்டத்தின் ஆற்றல்களை எண்ணி நான் வியக்கும் படலம் தொடர்கிறது ! Awesome !!
Deleteஅப்புறம் "இதைப் பத்தியெல்லாம் பேச உனக்கேது சாமி அருகதை ?" என்ற கேள்வியுமே எழும் என்பது புரியாதில்லை ! ஒரு தூரத்து நாளின் புத்தி பிசகலை எண்ணி நான் அனுதினமும் கூனிக் குறுகுவதற்கு அந்த ஆண்டவனே சாட்சி ! அந்நாட்களது பிழைகளை எண்ணி இன்றளவிற்கும் சத்தியமாய் வருந்திடுகிறேனே தவிர்த்து - நியாயப்படுத்த ஒரு போதும் நினைத்ததில்லை !!
Deleteஅப்புறம் அந்த XIII spin-offs கூட நாம் முழுமையாய்க் கால்பதித்து நிற்குமொரு தொடரே ! கொஞ்ச காலம் கழித்து அதனுள் நாம் நுழைந்திடும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை !
DeleteSo "நீ இப்போதைக்குப் போடப் போறதில்லேன்னு சொல்லிட்டேல்லே...நாங்க போட்டுக்குறோம் !" என்ற வாதத்துக்கு இங்கு இடமிராது ! நினைவிருக்கட்டும் ப்ளீஸ் !
விஜயராகவன் @ இது தவறு என்று தெரிந்த விஷயத்தை இப்படி சால்ஜாப்பு சொல்லி சமாளிப்பதும் தவறுதான்.
Deleteஉங்கள் விவாதத்தை பார்த்தால் உங்களிடமும் இந்த ஸ்கேனிங் & ஸ்கேன்லேசன் உள்ளது என எடுத்துக் கொள்ளலாமா? அதேநேரம் இதனை செய்பவர்கள் யார் என்றும் எடுத்துக் கொள்ளலாமா?
This comment has been removed by the author.
Deleteஸ்கேன்லேஷனை (ஸ்கேன் + ட்ரான்ஸ்லேஷன்) தவிருங்கள் என பொதுவெளியில் சொல்லும் உரிமை எவருக்குமே உண்டு. ஸ்கேன்லேஷன் அவசியம் / உபயோகமானது / சில நேரங்களில் நான் ஆதரிக்கிறேன் / அது ஒரு தேவை என நினைப்போர் அதனை பொதுவில் சொல்லாமல், அதற்கான கட்டுக்கோப்பான தளங்களில் மட்டும் பேசுவது குறைந்தபட்ச நியாய உணர்வை உறுதிப்படுத்தும்.
Delete// இங்கே நான் முன்வைக்கும் விமர்சனம் ஸ்கேன்லேஷன் மீதல்ல சார் ; அவையொரு அடிப்படைக் குடியுரிமை என்பது போல் பாவிக்கும் உங்களின் சிந்தனை மீதே ! Least of all - let them at least be discreet !! //
Well said. Hope this helps some understanding.
This comment has been removed by the author.
Deleteவிஜயராகவன் @ வழக்கம் போல் மிகவும் "அழகாக" எழுதி உங்களை "அழகாக" வெளிப்படுத்தி உள்ளீர்கள்! நன்றி!
Delete// என்னோட கருத்துக்களை எடிட்டர் சார் அறிவார். அவர் பதில் போடறார். நாங்கள் தொடர்கிறோம். ஊடால உங்களுக்கு என்ன வந்தது? //
அதே நேரம் இனிவரும் காலங்களில் ஆசிரியரிடம் யாராவது கேள்வி/கருத்து கேட்டால்/சொன்னால் நடுவில் வந்து நீங்கள் பதில் சொல்லாமல் இருந்தால் சந்தோசபடுவேன்!!
// ஸ்கேன்லேசன் என்பது பிரெஞ்சுல வரும் புத்தகங்களை ஆங்கிலத்தில் மாற்றி உலகெங்கும் புதிய தொடர்களை பாப்புலர் செய்ய கையாளப்படும் யுக்தி. இது பல ஆண்டுகளாக இருக்கு. பெரிய கம்பெனிகள் இதை தடைசெய்ய முயல்வதில்லை. //
DeleteWhere it is written? or have you got the agreement with the publishers for doing ஸ்கேன்லேசன்? don't assume!!
@ டெக்ஸ் விஜய்
Delete///புதிய கதைகள் ஸ்கேனிங் தவறு, தடுக்கப்பட வேண்டியது என தெளிவாக போட்டுள்ளேன . ஏன் அதை பார்க்க வில்லை இருவரும்.????///
ஓ... பார்த்துட்டேனே!!
///ஈவி@ முதலில் நான் எடிட்டருக்கு எதிராக கருத்தை பதிவு செய்திருப்பதாக சித்தரிப்பதை நிறுத்துங்க. ///
உங்கள் மேல் புழுதியை வாரித் தூற்ற இன்னொருத்தர் தேவையில்லை டெக்ஸ் விஜய்... அதான் அந்தப் பணியை நீங்களே செவ்வனே செய்யத் துவங்கிட்டீங்களே?
///ஈவி@ பரணி@ போன மாதம் டைனமைட் ஸபெலை "குப்பை"---எஎன்ற கருத்தை பேஸ் புக்ல சில நண்பர்கள் உலவி விட்டார்கள். ஒருவாரம் கலீல் ஜியொட சேர்ந்து விவாதம் செய்து அந்த கருத்தை மாற்றி கொள்ள போராடிட்டு இருக்கேன். விசயம் தெரியாமல் பேசிட்டு இருக்கீங்க. ///
நல்ல விசயம்! என் பாராட்டுகள்!!
////" குப்பை "னு சொன்னது உங்க இருவருக்கும் கூட தெரியும். ஆனா நீங்கள் தலையை சாய்த்து கொண்டு கண்டுக்காம போனது ஏனோ???///
தெரியாது! கடந்த சில வாரங்களாக ஏக பிஸி என்பதால் எனக்கு இங்கே தளத்தில் கமெண்ட் போடவே நேரம் கிடைக்கவில்லை! இன்னும் டைனமைட் ஸ்பெஷலின் இரண்டாவது கதையைக்கூட படிக்க நேரமில்லாமல் அல்லாடுகிறேன் என்றால் என் நிலைமையை பார்த்துக்கொள்ளுங்களேன்!!
ஒருவேளை தெரிந்திருந்தாலுமே கூட, ஒரு கதை பிடிக்காமல் 'குப்பை' என்று கூறியவர்களிடம் விவாதத்தில் ஈடுபட்டிருப்பேனா என்பதும் தெரியாது!
///மொதல்ல உங்க பக்கம் சரி பண்ணுங்க. பிறகு அடுத்தவங்களுக்கு புத்தி சொல்லலாம்.////
சரி பண்ணவேண்டியது எந்தப் பக்கம்? லெஃட்டுலயா, ரைட்டுலயா? நடு மண்டையிலயா?
////என்னோட கருத்துக்களை எடிட்டர் சார் அறிவார். அவர் பதில் போடறார். நாங்கள் தொடர்கிறோம். ஊடால உங்களுக்கு என்ன வந்தது??////
////தேவையில்லாமல் என் பர்னாலிட்டிக்கு சேதம் விளைவிக்கும் கருத்தை போட வேணாமே...////
உங்களுடைய பெயரைக் கெடுத்து, பர்சனாலிட்டிக்கு சேதம் விளைவித்துத்தான் நான் புகழ் ஈட்டவேண்டுமென்ற அவசியமிருக்கிறதா, டெக்ஸ் விஜய்?!! அப்படியொரு நிலை வந்தால் அதைவிடவும் இழிவான நிலை எனக்கு வேறு என்னவாக இருந்துவிட முடியும்?!! ஹஹ்? :)
// தேவையில்லாமல் என் பர்னாலிட்டிக்கு சேதம் விளைவிக்கும் கருத்தை போட வேணாமே.. //
Deleteநான் அப்படி எதுவும் எழுதவில்லை! ஆனால் உங்களின் பின்னூட்டத்தை மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள் உண்மை புரியும் ஜி!
// "குப்பை "னு சொன்னது உங்க இருவருக்கும் கூட தெரியும். ஆனா நீங்கள் தலையை சாய்த்து கொண்டு கண்டுக்காம போனது ஏனோ???? //
Deleteநான் facebook பக்கம் போவதே எப்போதாவது! அதே நேரம் நீங்கள் உங்கள் கருத்தை பலமாக பதிவு செய்த பின் வேறு எதுவும் தேவையில்லை என்பது எனது நிலைப்பாடு!
நான் அதிகம் பார்ப்பது ஆசிரியரின் இந்த தளம் மட்டுமே! இங்கும் எனக்கு முடித்த நேரத்தில்/விஷயத்தில் மட்டுமே எனது கருத்தை பதிவு செய்கிறேன்!
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Delete// என்னை கெட்டவன்னு சொல்லி நீங்க நல்லபெயர் வாங்குவதுதான் நீங்கள் கற்றறிந்த ஒன்றா??? //
Deleteநீங்களாக இப்படி அனுமானித்தால் நான் செய்வது ஏதும் இல்லை! எனது கருத்து உங்களுக்கு அப்படி ஒரு எண்ணத்தை கொடுத்தால் மன்னித்து விடுங்கள்!
அப்படி ஒரு எண்ணம் என்றைக்கும் எனக்கு இருந்தது இல்லை! இருக்க போவதும் இல்லை!! அது எனக்கு பிடிக்காத விஷயம்!
//// நீங்கள் அதிர்ச்சியை தர்ற அளவு அதில் என்ன கண்டீர்கள்.???////
Deleteஇது கேள்வி!!
அதிர்ச்சி #1 :
////பெளன்சர் பாகம் 8&9= நம்ம நிறுவனத்தில் வெளியிடும் அளவை தாண்டிய அதீத வன்முறை& ஆபாச காட்சிகள் இருப்பதால் வெளியிடும் வாய்ப்பு துளியும் கிடையாது என எடிட்டர் அவர்களால் பலமுறை உறுதி செய்யப்பட்டு விட்டது. பிறகு இதை படிக்க என்ன வழி??? எத்தனை பேருக்கு ஆங்கிலம் தெரியும்! இங்கே ஸ்கேன்லேசன் தான் சிறந்தது. ///
பெளன்ஸர் பாகம் 8 & 9ல ஏக வன்முறை + ஆபாசம்'னு தானே எடிட்டரே 'அது நமக்கு சரிப்பட்டுவராது மக்களே'னு அதை தூக்கிக் கடாசியிருக்கார்? ஒரு பொறுப்பான மூத்த சகோதரனின் ஸ்தானத்திலிருந்து அவர் நமக்கு வேணாம்னு சொன்னதை நீங்க எதுக்காக தேடித் தேடிப் புடிச்சுப் படிக்கணும்? அப்படியொரு வன்முறை + ஆபாசம் நிறைந்ததைத் தேடிப்பிடித்துப் படிக்க 'ஸ்கேன்லேஷனே சிறந்தது'னு ஓபன் ஸ்டேட்மென்ட் விட்டீங்கன்னா அதிர்ச்சியடையாம என்ன பண்றதாம் டெக்ஸ் விஜய்?!!
அதிர்ச்சி #2 :
////மேலே பார்த்தீங்களா, இரத்தப்படலம் ஸ்பின் ஆப்கள் இதுவரை லயன்ல வந்தவை விற்கவே அடுத்த 10வருடங்கள் ஆகும், எனவே அதுபற்றி நினைக்காதீங்க என எடிட்டர் சார் தெரிவித்து உள்ளார். இந்த இடத்தில் தான் ஸ்கேன்லேசன் உதவுகிறது. ////
இதற்கு எடிட்டரின் பதிலைப் பாருங்களேன்...
////அப்புறம் அந்த XIII spin-offs கூட நாம் முழுமையாய்க் கால்பதித்து நிற்குமொரு தொடரே ! கொஞ்ச காலம் கழித்து அதனுள் நாம் நுழைந்திடும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை !
So "நீ இப்போதைக்குப் போடப் போறதில்லேன்னு சொல்லிட்டேல்லே...நாங்க போட்டுக்குறோம் !" என்ற வாதத்துக்கு இங்கு இடமிராது ! நினைவிருக்கட்டும் ப்ளீஸ் !///
மேற்குறிப்பிட்டது மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாகவே எடிட்டரின் பதிலை (உங்களின் பெயர் குறிப்பிட்டு அவர் அளித்திருக்கும் பதிலை) பாருங்களேன்... என் அதிர்ச்சியின் அளவீடு புரியும்!
ஆனால், இனி அதிர்ச்சியடைப் போவதில்லை!
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteஆரம்பிச்சாச்சா , வேலையப் பாருங்கப்பா.
Deleteவேலைன்னா முருகன் கையில் இருக்கும் வேலை சொன்னேன்.
கந்த சஷ்டியாக்கும்.
@ ஈரோட் விஜய், @ Parani From Banglore. கடந்த வருடம் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களையடுத்து தளத்தின் மௌனப்பார்வையாளனாகவே இருந்து வந்த எனக்கு இன்றைய விவாதத்தின் XIII தொடர்பான கருத்துக்களில் சற்று தொடர்பிருப்பதனால் இங்கு வரவேண்டியதாகிவிட்டது. WhatsApp மற்றும் fb யில் XIII spin off தொடர்பில் மீண்டும் மீண்டும் கேள்விகளை கேட்டு அதன் வருகையை வெளிப்படையாக ஆவலுடன் எதிர் பார்த்த வெகு சிலரில் நானும் ஒருவன். ஆனால் 2019 இல் XIII spin off இற்கு சந்தர்ப்பம் இல்லவே இல்லை என STVR அடித்து சொன்னபோதும் நம்பவில்லை. பழனிவேல் எடிட்டரிடம் கேட்டதற்கு அவர்கூறிய பதிலாலும் நான் நம்பவில்லை. இம்முறை எடிட்டரிடம் K V Ganesh அண்ணன் கேட்டபோதும் அதற்கு எடிட்டர் சொன்ன பதிலை நம்பவில்லை. ஆனால் 2019 books list வந்தபோது ஏதும் special release ஆக வரலாம் என்றே நம்பினேன். ஏனென்றால் lady s, smurfs என்பவற்றை தற்காலிகமாக கைவிடும் நடவடிக்கைகளுக்காக எடிட்டர் கேட்ட கேள்விகள் மற்றும் countdown steps ஏதும் XIII spin off தொடர்பாக இடம்பெறவேயில்லை. மாறாக நான் மீண்டும் மீண்டும் spin off தொடர்பில் வினவியபோது , அதன் stock மற்றும் விற்பனையில் எதிர்பார்த்த அளவு சோபிக்காததற்கான காரணங்களை ஒவ்வொன்றாக பெற்றுத்தந்தார். ஆனாலும் நான் நம்பிக்கையிழக்காமல் spin off தொடர்பாக வாசகர் வட்டத்தில் போதிய விளம்பரம் மற்றும் அறிமுகம் காணாமல் இருக்கலாம் எனவே அது தொடர்பில் ஓர் பதிவை எடிட்டர் போட்டால் ஏற்கனவே இருக்கும் stock உடன் வர இருப்பதும் விற்பனையாவதுடன் அதன் முக்கியத்துவத்தை வாசகர் வட்டத்திற்கு அறிமுகப்படுத்துவதாக இருக்குமென்று கூறியிருந்தேன். ஏனெனில் விற்காமல் இருக்கும் stock தான் வர இருக்கும் spin off ஐ தடுக்கும் காரணமாக இருந்தால் அதன் மூலம் ஏதும் பலன் கிடைக்கலாம் எனும் ஆர்வம்தான். அது தொடர்பில் STVR அவை அடுத்த சில வருடங்களுக்கு சாத்தியமில்லை எனினும் எடிட்டர் தரப்பில் இருந்து தகவல் கிடைக்க முயலுகிறேன் என்றார். So இங்கே அவர் எம் பொருட்டு கேட்டதால் ஏற்பட்ட குளப்பமாக இருக்கலாம். நண்பர்களிடையே சண்டை வேண்டாம்.
Deleteபலமுறை STVR சொல்லும் தகவல் எது வேண்டும் என எடிட்டர் கேட்கும்போது யாரும் எதுவும் கூறாமல் பின்னர் குத்துது குடையுது என்பதே! Spin off தொடர்பில் தளத்தில் பழனி மற்றும் கணேஷ் அண்ணன் கேட்கும்போது பெரும்பாலும் நாருமே அதற்கு ஆதரவு தெரிவிப்பதில்லை ஆனால் Whatsapp இல் fb யில் 600 ,700 பேர் வரை ஆதரவுக்குரல் கொடுக்கிறார்கள். இந்த முரண்பாடே என் குளப்பத்திற்குக் காரணம்.
குரல்கள் ஒலிப்பது எங்கென்பதில் பெரியதொரு நெருடலில்லை சார் ! ஒலிப்பது எங்காய் இருப்பினும், விற்பனை நிகழ்ந்திட வேண்டியது நம்மிடம் தானே ? அவை சரளமாய் விற்றுப் போகும் பட்சத்தில், யாரது சிபாரிசுகளுக்கும் அவசியங்களின்றி தாமாய் அட்டவணைக்குள் இடம் பிடித்து விடுமன்றோ ? ஜெயிக்கும் குதிரையை யார்தான் உதாசீனப்படுத்துவார்கள் ? படுத்த முடியும் ?
DeleteProof of the pudding is in the eating என்பார்கள் ! 600 /700 குரல்கள் ஒலிப்பது பெரிதல்ல - அவை சகலமும் விற்பனைகளாய் மாற்றம் கண்டால் தானே பலன் தரும் !
இந்தாண்டின் முழுமையிலும் ஆன்லைனில் spin -offs விற்றுள்ளது ஒற்றை இலக்கத்தில் ! அதுவும் 4 இதழ்களிலும் சேர்த்தே !!
யாரை நான் நோவது - சொல்லுங்கள் ? அட்டவணையில் யாரது இடத்தில இவற்றைப் புகுத்துவது என்றும் சொல்லுங்கள் ?
//வேலையப் பாருங்கப்பா.
Deleteவேலைன்னா முருகன் கையில் இருக்கும் வேலை சொன்னேன்.
கந்த சஷ்டியாக்கும்.//
வேல் !! வேல் !!
@madhu Prashenna
Deleteஉங்களின் பொருட்டு STVR இங்கே குரலெழுப்பியது குறித்து மகிழ்ச்சி ஜி!
'எறும்பூர கல்லும் தேயும்'னு சொல்வாங்களே... அதுபோல தொடர்ந்து நமக்குப் பிடித்ததை அவ்வப்போது இங்கே எடிட்டரிடம் கேட்டு வைப்போம் - அவர் தரும்போது தரட்டும்!
மற்றபடி, உங்களைப் போன்ற நண்பர்கள் மெளனம் கலைவார்களெனில் நான் STVRஉடன் தினமும் வேண்டுமானாலும் சண்டைப்போட ரெடி தான்! :)
ஒரு மெகா இதழ் ; ஒரு ராட்சஸ Collector 's edition - என்ற அடையாளங்களே "இரத்தப் படலம்" வண்ணத் தொகுப்பை தோளில் சுமந்து சென்றன ! ஆனால் ஒரு நார்மல் spin -off இதழுக்கோ அவ்வித பின்புலம் இல்லாது போகும் போது - வாசகர்கள் அவற்றைத் தவிர்த்து விடுகிறார்கள் என்பதே விற்பனையின் மந்தம் சொல்லும் சேதி !
DeleteMaybe ஒரு தூரத்து நாளில் எஞ்சியுள்ள 9 spin -off கதைகளையும் தனித்தனி புக்குகளாய் ஒரே தருணத்தில் வெளியிட்டு - அவற்றை மொத்தமாய் ஒரு பாக்ஸ் செட்டில் அடைத்து - மறுக்கா 800 என்ற சொற்ப பிரிண்ட்-ரன்னோடு - முன்பதிவுக்கு மட்டுமே என்ற ரீதியில் சந்தைப்படுத்த முயற்சிக்கலாம் ! 500 முன்பதிவுகள் கிட்டின் டீல் ; இல்லாங்காட்டி பணம் வாபஸ் என்ற நிபந்தனையோடு ! But அதற்கெல்லாம் காலம் கடந்தாக வேண்டும் !
பட்டாசு வெடிப்பதற்கே உச்ச நீதிமன்றம் நேரம் காலம் வரையறை செய்திருக்கும் போது - உங்கள் பர்ஸ்களுக்கு வைக்கும் வெடிகளுக்கும் ஒரு கணிசமான break அவசியம் தான் !
///500 முன்பதிவுகள் கிட்டின் டீல் ///
Deleteகீர்த்தி மிக்க 'இ.ப'வுக்கே 400தானே முன்பதிவு இலக்கா வச்சீங்க?!! ஸ்பின்-ஆப்புகளுக்கு 500ஆ?!!!
50 வையுங்க எடிட்டர் சார்.. சரியா இருக்கும்! அஞ்சாறு மாசத்திலே இலக்கு எட்டப்பட வாய்ப்பிருக்கு!
//கீர்த்தி மிக்க 'இ.ப'வுக்கே 400தானே முன்பதிவு இலக்கா வச்சீங்க?!! ஸ்பின்-ஆப்புகளுக்கு 500ஆ?!!!//
Deleteகொஞ்சம் ஆவேசப்பட்டு விட்டேனோ ?
விஜயன் சார்,
ReplyDeleteஇந்த
தீபாவளிக்கு பலகாரங்களைப் போலவே மூன்று சுவைகளில் இதழ்களைத் தந்து விட்டீர்கள்.இனிப்பு , காரம், மொறுமொறுப்பென்று.
இனிப்பு : ஸ்மர்ப்ஸ்
காரம் : ஜேம்ஸ் பாண்ட்
ெ மாறுமொறுப்பு: டெக்ஸ் & டைகர் ஜாக்
சூப்பராய் அமைந்து விட்டது.iii
டெக்ஸ் & டைகர் ஜாக்.. ரொம்ப நாள் கழித்து என்க்கு பிடித்த பாதையில் கதை பயணித்தது. (மீண்டும் ஒருமுறை உடனடியாக படிக்க தூண்டும் விதத்தில் இருந்தது.)
ஜேம்ஸ் பாண்ட் -க்கும்.. முதலில் படித்து முடித்ததும் ஜீரணமாகவில்லை. காரம் தூக்கல்தான் (ஒரே ரத்தக்களறி). என்ன i இன்னும் ஜேம்ஸ் பாண்ட் எனில் " ராணி காமிக்ஸ் "பாண்ட் - யிடம் இருந்தும் , வெள்ளித்திரை "பியர்ஸ் ப்ராஸ்எஎனி"டம் இருந்தும் மனம் மீண்டு வரவில்லை.. பார்க்கலாம். இவரது அடுத்த சாகசத்தில் தான் ஒன்றமுடியும் என்று கருதுகிறேன்.. (ஏனென்றால் டேனியல் க்ரேக் - கை என்னால் ஸ்கைபால் - யிலிருந்து தான் ரசிக்க முடிந்தது.( ஹீரோயிசத்தை விட கதாசிரியரின் மனவோட்டம் தான் மே லோங்கி இருந்தது .)
லக்கி க்ளாசிக் - யின் பின் அட்டையில் லக்கி லூக் - யின் முகத்தின் உள்ளே படங்கள் அமைத்து இருந்தது நன்றாக இல்லையே. முன்பு சிம்பில் - லைப் போல் ல க்கி லூக் முகத்தையும் வண்ளித் தில் வெளியிட்டு கீழே படக்காட்சிகளை அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே.ii.நன்றி.
ஜேம்ஸ் பாண்ட் புதிய version-ல் கதாசிரியரும், ஓவியரும் முந்தைய முன்மாதிரிகளை விட்டு விலகியே பயணித்திட வேண்டுமென்பதில் ரொம்பவே தீவிரமாய் இருந்துள்ளனர் ! So துவக்க நாட்களது b & w கதைகளை நாம் மனதில் இருத்திடும் பட்சத்தில், நிச்சயமாய் இந்தப் புதிய பாணியோடு ஒன்றிட இயலாது சார் !
Deleteடைகர் ஒரு பிரளயம் காதல் :
ReplyDeleteஇஷ்டப்பட்டு காதலிச்சு
இருபது குதிரையை அவ கழுத்திற்கு கொண்டு வந்து
கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ற நேரத்துல
காணாமல் போயிடறா தானியா.
சிங்கிளா சிங்கமா டைகரு
சினங்கொண்டு சீறி ஊழித்தாண்டவம்
ஆடுற பிரளயம்.
டெக்ஸ் வில்லரே கதி கலங்குறார்
டைகரோட தனி ஆவர்த்தனம் கண்டு.
டெக்ஸ் சிக்கிக்கிட்டா கூட என்ன?
வடிவேலு மாதிரி லஜக்-மொஜக்-கஜக் தான்.சத்தம் மட்டுமே வித்தியாசம் - சதக்-பொதக்-கொதக் தான்....
கடைசியில் கற்ப காப்பாத்த தற்கொலை பண்ணிக்கிறா காதலி.
எல்லா பிரயத்தனங்கள் வீண்.
மனசொடிஞ்சு போறாரு டைகரு.
மனச மாத்த உயிர்வலி போராட்டத்தில் தனித்து ஈடுபட்றார் .
காலம் ரணமாற்ற மனக்கனல் புனலாகிறது.
காதலும் கடந்து போகிறது டைகரின் வாழ்வில்....
@ j
Deleteஅருமையா கவிதை நடையில விமர்சனம் எழுதியிருக்கீங்க ஜி!! செம!!
ஆனால், இதுவரை இக்கதையைப் படிக்காதவர்கள் படிக்க நேரும்போது அவர்களின் சுவாரஸ்யம் மட்டுப்படாமலிருக்க கதையின் சில முக்கிய நிகழ்வுகளை வெளிச் சொல்லாமலிருப்பது நல்லதில்லையா? :)
உண்மை.
Deleteடயாபாலிக்: என்னங்க டெக்ஸ், கஜா புயல் வருதாம்ல
ReplyDeleteடெக்ஸ்: புயலே ஒரு பிரளயம் தான் டயாபாலிக்.
டெக்ஸ்: சர்கார் எப்படி இருக்காம் டயாபாலிக்கு.
Deleteடயாபாலிக்: சவர்காரம் மாதிரி இருந்தது டெக்ஸ்.
டியர் எடிட்,
ReplyDeleteஆத்மார்த்தமான, வலியுடன் கூடிய உங்கள் கோரிக்கைகள், புதிய இதழ்களை சூட்டோடு சூடாக ஸ்கான் செய்யும் நபர்களின் மண்டையில் உரைக்கும் என்று நம்புவோமாக...
நம்மை விட அதிகமான ரசிக வட்டத்தை கொண்ட ஹிந்தி பிராந்திய மொழி ரசிகர்களிடம் இருக்கும் அந்த சுயகட்டுபாடு நமது வட்டத்தில் இல்லாமல் இருப்பது... வருந்த்ததக்ககூடியது.
லக்கி அட்டைக்கு எனது தேர்வு, இரண்டாவது... சிவப்பு கலருக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாம்.
/* ஆத்மார்த்தமான, வலியுடன் கூடிய உங்கள் கோரிக்கைகள், புதிய இதழ்களை சூட்டோடு சூடாக ஸ்கான் செய்யும் நபர்களின் மண்டையில் உரைக்கும் என்று நம்புவோமாக */
Delete+100000
Well said Rafiq. Scanning itself involves copyrights which is why I am not yet for storing in that form. However circulating 'hot' scans is even more a crime !
//ஹிந்தி பிராந்திய மொழி ரசிகர்களிடம் இருக்கும் அந்த சுயகட்டுபாடு நமது வட்டத்தில் இல்லாமல் இருப்பது... வருந்த்ததக்ககூடியது.//
DeleteNews to me !! எல்லா மொழிகளுக்கும் நம் பிரச்சனை பொதுவானது என்று நினைத்துக் கொண்டிருந்தேன் !
@ Editor,
Deleteசுற்றலில் இருக்கும் scan fileகளின் ஒரு மெயில் லிங்கைப் பிடித்து கேஸ் போடுங்கள் சார். அப்புறம் எவனும் பண்ணமாட்டான்
போடுவதாயின் நிறையவே போட வேண்டி வரும் சார் ! இன்றைக்கு மட்டுமே ஒரு 10 லிங்குகளை அங்கங்கிருந்து நண்பர்கள் அனுப்பியுள்ளனர் !
DeleteRafiq Raja
Delete+1000000
Just put one sir - that will serve as a warning !
Deleteமற்ற மொழிகளை விட நம்மகடந ஒன்றுமை குறைவு என படித்து, கேள்விப்பட்டு, அனுபவித்து இருக்கிறேன். இப்போதும் அதுதான். நமக்கு நாமே எதிரி 😢
Delete// ஆத்மார்த்தமான, வலியுடன் கூடிய உங்கள் கோரிக்கைகள், புதிய இதழ்களை சூட்டோடு சூடாக ஸ்கான் செய்யும் நபர்களின் மண்டையில் உரைக்கும் என்று நம்புவோமாக //
Delete+1
Dear Editor,
Deleteஉங்களது சமீப வெளியீடான ட்ரெண்டின் ஸ்கேன் லிங்க் இருக்கும் குரூப் பற்றி IT செல்லிடம் புகார் செய்யுங்கள் சார். பின்னர் ஒரு Ethical Hacker hire செய்து எந்த குரூப்பில் யார் பகிர்ந்தார் என்று கண்டு பிடித்து புகாரில் annexe செய்யுங்கள். ஒரே முறை செய்யவும். எல்லாருக்கும் ஒரு warning ஆக இருக்கும். கொஞ்சம் செலவுதான்- அனால் வணிகத்தில் நீங்கள் பார்த்திராத செலவுகளா? Just tag it as part of annual expenditure spread over 2 years sir.
// உங்களது சமீப வெளியீடான ட்ரெண்டின் ஸ்கேன் லிங்க் இருக்கும் குரூப் பற்றி IT செல்லிடம் புகார் செய்யுங்கள் சார். பின்னர் ஒரு Ethical Hacker hire செய்து எந்த குரூப்பில் யார் பகிர்ந்தார் என்று கண்டு பிடித்து புகாரில் annexe செய்யுங்கள். //
Delete+1
இந்த விஷயத்தில் வாசகர்கள் இணைந்து ஒரு குழுவாக எடிக்கு உதவினால் (சைபர் செல் அணுகுவது தொடர்பாக) என்ன?
DeletePrunthaban - while folks may hesitate and precious time may be lost, Editor in tandem with Media personalities like Priya Kalyanaraman may
Deletea) First lodge a complaint in IT Cell on TRENT scans with links
b) Hire an Ethical Hacker to decode the group in which they were shared and the servers in which they are stored.
It would be expensive but one-time expense can be footed to avoid future happenings if action is taken on just ONE culprit.
ஸ்கேன் பகிர்வதில் இருக்கும் ஒற்றுமை நம்மவர்களுக்கு ஸ்கேன் செய்தவரைப் பகிர்வதில் இருக்காது :-)
இதனில் தலை நுழைத்துக் கிடப்போர் அனைவருமே பரிச்சயமானவர்களே என்பதால் திடமாய் நடவடிக்கைகள் எடுக்கத் தோன்றவில்லை எனக்கு ! தவிர, சந்திலும், பொந்திலும் அரங்கேறும் சமாச்சாரங்களுக்கு நாமாகவே விளம்பரம் தருவானேன் என்று அமைதியாய் இருந்தேன் ! ஆனால் இன்றைக்கோ இதை பகிரங்கமாய், துளியும் தயக்கமின்றிச் செய்வதைப் பார்க்கும் போது - இனியும் இதே போக்கு சுகப்படாது என்பது புரிகிறது !
Deleteஅதன் முதல் படியாய் நமது லயன் காமிக்ஸ் & முத்து காமிக்ஸ் இதழ்களை முறைப்படி அரசாங்கத்தின் Trademarks Registry-ல் பதிவு செய்து, அதற்கான சான்றிதழும் பெற்று விட்டோம். So இந்த இரு ஆக்கங்களும், இனி "அறிவுசார் சொத்து" (Intellectual Property ) என்ற முறையில் உரிய பாதுகாப்பிற்கு தகுதி பெறுகின்றன ! இனிமேற்கொண்டு ஸ்கேனிங் செய்து pdf ஆக்கிச் சுற்றில் விடுவதோ ; டிஜிட்டல் பிரிண்ட் போட்டுப் பரிமாறிடுவதோ ; தத்தம் வலைத்தளங்களில் வெளியிடுவதோ - நிகழ்வின் நிச்சயமாய் சட்ட நடவடிக்கைகள் எடுக்கத் தயங்கிட மாட்டோம் !
//ஸ்கேன் பகிர்வதில் இருக்கும் ஒற்றுமை நம்மவர்களுக்கு ஸ்கேன் செய்தவரைப் பகிர்வதில் இருக்காது :-)//
Deleteநூற்றில் ஒரு வார்த்தை !!
//உங்களது சமீப வெளியீடான ட்ரெண்டின் ஸ்கேன் லிங்க் இருக்கும் குரூப் பற்றி IT செல்லிடம் புகார் செய்யுங்கள் சார். பின்னர் ஒரு Ethical Hacker hire செய்து எந்த குரூப்பில் யார் பகிர்ந்தார் என்று கண்டு பிடித்து புகாரில் annexe செய்யுங்கள். ஒரே முறை செய்யவும். எல்லாருக்கும் ஒரு warning ஆக இருக்கும். கொஞ்சம் செலவுதான்- அனால் வணிகத்தில் நீங்கள் பார்த்திராத செலவுகளா? Just tag it as part of annual expenditure spread over 2 years//
DeleteHave taken note sir ....will seriously ponder on it !
நண்பர்களே எனக்குப் புத்தகங்களாகத் தான் படிக்கப்பிடிக்கும்.இன்னும் எத்தனை விஞ்ஞான வடிவங்கள் வந்தாலும் அச்சுப் புத்தகங்கள் தரும் இன்பத்தை வேறு எதுவாலும் தரமுடியாது.நமது லயன் குழுமத்திற்கு என் ஆதரவு என்றென்றும் உண்டு.லயனில் வரும் அனைத்துப் புத்தகங்களையும் தவறாது வாங்கிப் படித்துவருகின்றேன்.ஆசிரியர் விஜயன் சாருக்கு என்றும் என் ஆதரவு உண்டு.காமிக்ஸ் நண்பர்களும் ஆதரவு தர இரு கை கூப்பி வேண்டுகின்றேன்.2012க்கு முன் காமிக்ஸ் என்ற ஒன்று வராத நிலையில் நாம் எவ்வளவு தத்தளித்தோம் என்பது நாம் நினைவில்கொள்ளவேண்டிய ஒன்றல்லவா?
ReplyDelete//.இனும் எத்தனை விஞ்ஞான வடிவங்கள் வந்தாலும் அச்சுப் புத்தகங்கள் தரும் இன்பத்தை வேறு எதுவாலும் தரமுடியாது//
Delete+111
வேறெங்கியோ படித்ததில் பிடித்தது.
ReplyDelete//பிடிப் வெளியிட்டடால் ப்ரிண்ட் புத்தகங்கள் வாங்கமாட்டார்கள் என்ற அனுமானம்..பிடிப் வெளியிட்டாலும் ப்ரிண்ட் புத்தகங்கள் வாங்குவார்கள் என்ற அனுமானத்தை விட வலுவானது..உரிமை வைத்திருப்பவர் சொல்வதை கேட்கலாம்..நமக்கு நல்லது..சேர்ந்தே வளருவோம்..
//
Adhiradipodiyan made me laugh like anything. I lost the book. I welcome its reprint
ReplyDelete2019- Subscribed my booking no:1045
ReplyDeletesuper JI!
Deleteடியர் எடிட்டர்
ReplyDeleteஇன்று ஸ்கேனிங் & ஸ்கேன்லேசன் பிரச்சனைகள் இந்த அளவுக்கு சென்றதற்கு நீங்கள்தான் முதல் காரணம். ஆரம்பத்திலேயே அதிரடியாக முடிவெடுத்து சட்ட ரீதியாக கையாண்டிருந்தால் இவைகள் அனைத்தும் கட்டுக்குள் வந்திருக்கும். இனியும் நீங்கள் மென்மையான போக்கை கையாண்டால் இன்னும் அவர்களுக்கு குளிர் விட்டுப்போகும். இனியும் காலம் தாழ்த்தாமல் தயவு செய்து சட்ட ரீதியாக சில நடவடிக்கைகளில் இறங்குங்கள்.
// காலம் தாழ்த்தாமல் தயவு செய்து சட்ட ரீதியாக சில நடவடிக்கைகளில் இறங்குங்கள். //
Delete+1
நிஜம் தான் சார் ; இதனில் தலை நுழைத்துக் கிடப்போர் அனைவருமே பரிச்சயமானவர்களே என்பதால் திடமாய் நடவடிக்கைகள் எடுக்கத் தோன்றவில்லை எனக்கு ! தவிர, சந்திலும், பொந்திலும் அரங்கேறும் சமாச்சாரங்களுக்கு நாமாகவே விளம்பரம் தருவானேன் என்று அமைதியாய் இருந்தேன் ! ஆனால் இன்றைக்கோ இதை பகிரங்கமாய், துளியும் தயக்கமின்றிச் செய்வதைப் பார்க்கும் போது - இனியும் இதே போக்கு சுகப்படாது என்பது புரிகிறது !
Deleteஅதன் முதல் படியாய் நமது லயன் காமிக்ஸ் & முத்து காமிக்ஸ் இதழ்களை முறைப்படி அரசாங்கத்தின் Trademarks Registry-ல் பதிவு செய்து, அதற்கான சான்றிதழும் பெற்று விட்டோம். So இந்த இரு ஆக்கங்களும், இனி "அறிவுசார் சொத்து" (Intellectual Property ) என்ற முறையில் உரிய பாதுகாப்பிற்கு தகுதி பெறுகின்றன ! இனிமேற்கொண்டு ஸ்கேனிங் செய்து pdf ஆக்கிச் சுற்றில் விடுவதோ ; டிஜிட்டல் பிரிண்ட் போட்டுப் பரிமாறிடுவதோ ; தத்தம் வலைத்தளங்களில் வெளியிடுவதோ - நிகழ்வின் நிச்சயமாய் சட்ட நடவடிக்கைகள் எடுக்கத் தயங்கிட மாட்டோம் !
நண்பர்களே - இனியும் நமது இதழ்களை "ஆவணப்படுத்தும் " முயற்சிகளில் பொழுதுகளை செலவிட வேண்டாமே - ப்ளீஸ் !
ஒரு அழகான பொழுதுபோக்கை - பொழுதுபோக்காக மட்டுமே தொடரச் செய்வோமே ?
நல்ல முடிவு சார்,இந்த முடிவு பல பிரச்சனைகளுக்கும்,சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி என்று நம்புவோமாக.
Deleteவாவ்!! அருமையான முடிவு எடிட்டர் சார்!!
Deleteசீக்கிரமே 'லயன் கி.நா'க்கும், 'ஜம்போ'வுக்கும் ரெஜிஸ்ட்டர் பண்ணிடுங்க! இல்லேன்னா பயபுள்ளைக அதையும் பக்கத்துக்குப் பக்கம் ஸ்கேன் பண்ணி தள்ளிப்புடுவாங்ய்க!
//சீக்கிரமே 'லயன் கி.நா'க்கும், 'ஜம்போ'வுக்கும் ரெஜிஸ்ட்டர் பண்ணிடுங்க! இல்லேன்னா பயபுள்ளைக அதையும் பக்கத்துக்குப் பக்கம் ஸ்கேன் பண்ணி தள்ளிப்புடுவாங்ய்க!//
Delete:-) :-)
கொஞ்சம் தாமதமானாலும் சரியான முடிவு சார் ..!
Delete///சீக்கிரமே 'லயன் கி.நா'க்கும், 'ஜம்போ'வுக்கும் ரெஜிஸ்ட்டர் பண்ணிடுங்க! இல்லேன்னா பயபுள்ளைக அதையும் பக்கத்துக்குப் பக்கம் ஸ்கேன் பண்ணி தள்ளிப்புடுவாங்ய்க!///
:)))))
அருமையான முடிவு.
Deleteஆன்லைனில் வாங்குவோருக்கு ஸ்மர்ப்ஸ் உடன் கிடைக்கும் 2019 அட்டவணை இல்லையா சார்? எனக்கு வரவில்லையே! தங்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது தங்களிடம் கேட்டு சொல்வதாகக் கூறினார்கள். இன்னும் விவரம் கிடைக்கவில்லை. அட்டவணைக்காக நான் இன்னொரு புத்தகம் ஏஜென்ட்டிடம் வாங்கவேண்டுமா?
ReplyDeleteஅனுப்பிடச் சொல்கிறேன் சார் !
Deleteஸ்கேனிங்/ஸ்கேன்லேஷன் தவறு,தவறில்லை என்று வீணாக விவாதித்துக்கொள்ள வேண்டாம் நண்பர்களே.. இதை வேறுவிதமாக பார்க்க வேண்டுமென்றால் மிக குறைந்த விலையில் போன்,கேமரா,மளிகைபொருட்களை ஆன்லைனில் வாங்குவதற்கும் நமக்கு பழக்கமான நெருக்கடியான நேரங்களில் கடனுக்கு தரும் அண்ணாச்சி கடைகளில் வாங்குவதற்கும் வித்தியாசம் உள்ளது.
ReplyDeleteநமது பழைய இதழ்களை ஸ்கேனிங் செய்வது பற்றி ஏற்கனவே சென்றாண்டு உங்களிடம் கேள்வி எழுப்பியிருந்தேன்...
ReplyDeleteஇப்போதவது நீங்களே பீடிஎப் வழங்குவது பற்றியும் கொஞ்சம் பரீசீலனை செய்யுங்கள் சார்...
அந்த பின்னூட்டம் இதோ 👇👇👇

sivakumar siva17 September 2017 at 12:47:00 GMT+5:30
அன்பாா்ந்த ஆசிரியர்
அவர்களுக்கு.....
இந்த வார பதிவுதனில் நீங்கள் கோாியிருந்த யோசனைகளில் ஒன்று...
###இது போல் ஏதேனும் நடைமுறை சாத்தியம் கொண்ட சிந்தனைகளுக்கு நம் செவிகள் எப்போதும் திறந்திருக்கும் #####
ரீ பிரிண்ட் கதைகளை நான் படிக்கிறேனோ இல்லையோ வாங்கி கொண்டுதான் இருக்கிறேன்...
நமது தளத்தில் மறுபதிப்பு சம்பந்தமான தகவல்களை ஏதேனும் நீங்கள் பகிர்ந்தால் அந்த பதிவுக்கு மட்டும் உப பதிவு போடுமளவிற்க்கு கமென்ட் வருவதை நீங்கள் கண்கூடாக உணர்ந்திருப்பீா்கள்...
அந்த வகையில் பாா்த்தால் இன்னும் என் போல் நிறைய நண்பர்கள் மறுபதிப்பு கதைகள் வேண்டும் என்போா் சரிபாதி பேராகதான் இருந்து வருகிறோம்(றாா்கள் )...
ஏற்கனவே நீங்கள் நமது முத்து மினி ஆறு புத்தகங்கள் வெளியிட்டதன் காரணமே அது போன்ற பழைய புத்தகங்கள் கள்ளமாா்கெட்டில் அதிக விலைக்கு விற்ற தகவல் உங்களை எட்டியதால்தான் ...
அப்படியிருக்க நமது பழைய இதழ்களை மறுபதிப்பிற்க்கு செலவு செய்யும் நேரத்திற்க்கு பதிலாக தற்போது வளர்ந்து விட்ட technology க்கு தகுந்தாற்போல் நாமும் நமது பழைய இதழ்களை scan செய்து ஒவ்வொரு இதழ்களுக்கு (கதைகளுக்கு )ஒரு பாா்கோடு முறையை பின்பற்றி பணம் செலுத்தினால் தரவிறக்கம் செய்து படித்து கொள்ள மட்டும் செய்து பகிர இயலாதவாறு ஆன்லைனில் அதற்கென்று ஒரு application யோ அல்லது மின்னதழ்கள் மாதிாி ஏதேனும் ஒன்றை உருவாக்கினால் வேண்டும் என்பவர்கள் பணம் செலுத்தி தரவிறக்கம் செய்து படித்து கொள்ளும் வகையில் உருவாக்கினால் நமது பழைய இதழ்களை அநியாய விலைக்கு விற்பதையும் தடுக்கலாம் ...
இதே வழிமுறையில் தான் மாா்வல் மற்றும் டீசி காமிக்ஸ்களின் விற்பனைகளும் நடைபெறுகின்றன...
எப்படியும் உங்களிடம் ஒவ்வொரு இதழின் பர்ஸ்ட் காப்பி இருக்கும் ...
அப்படியில்லாவிடில் நமது நண்பர்களிடம் அந்த பிரதி பாதுகாப்பாக இருக்கும் அதை ஒரு விலைக்கு வாங்கியோ இல்லை அந்த வாசகர் மனமுவந்து கொடுத்தாலோ அதை scan செய்து பதிவேற்றினால் அந்த இதழ் காலத்திற்க்கும் அழியாது...
இன்னும் எத்தனை காலத்திற்க்குத்தான் அந்த பழைய இதழ்களை பராமரிக்க இயலும்...
நம்முடைய குடும்ப உறுப்பினர் கூட அதன் அருமையை தொியாதவர்களாக இருக்கும்பொழுது நமது சந்தோஷத்திற்க்காக எத்தனைநாள் அவர்களுடன் போராடி இதனை பத்திப்படுத்தி வைப்பது....
அந்த மறுபதிப்பு தடத்தில் வேறு ஏதேனும் புதிய முயற்ச்சிகளையும் பரீட்சித்து பாா்க்கலாம்...
நீங்கள் scan செய்யபோவது ஒருமுறைதான் ஆனால் ஆண்டான்டு காலத்திற்க்கும் அழியாது நிரந்தரமாய் அடுத்த தலைமுறைக்கும் இருக்குமல்லவா
போதாதகுறைக்கு உங்கள் குடோனையும் நிறைத்து வைத்திருக்காது....
இதற்க்கு தேவை ஒரு நபரும் ஒரு நவீன scanner machine மட்டுமே...
வாரத்திற்க்கு ஒரு புத்தகம் என்று வைத்து கொண்டாலும் மாதத்திற்க்கு நான்கு பழைய புத்தகங்களை ஆன்லைனில் லிஸ்டிங் இட முடியும்...
தவிர இந்த புத்தகங்களின் originality ம் அப்படியே எங்களுக்கும் கிடைக்கும் ...
இதற்க்கு ஒரு பரீட்சாா்த்த முயற்ச்சியாக ஆறு இதழ்களை மட்டும் முயற்ச்சி செய்து பாருங்கள் அதன் வரவேற்ப்பை பொறுத்து நீங்கள் முடிவெடுக்கலாம்...
இதன் சாதக பாதகங்களை நண்பர்கள் விவரிக்கலாம்...
ReplyDelete
Replies

Vijayan17 September 2017 at 13:20:00 GMT+5:30
//இதன் சாதக பாதகங்களை நண்பர்கள் விவரிக்கலாம்...//
சிவா...சாதக பாதகங்களை நாம் அலசுவதை விடவும் - படைப்பாளிகள் அலசுவது தானே பிரதானம் ? ஆன்லைன் பதிப்புகளுக்கு அவர்கள் பெரியதொரு தடா போட்டிருக்கும் வேளையில் இந்தப் பாதையினில் பயணம் போவதை பற்றி சிந்திக்கக் கூட வழியேது.