Powered By Blogger

Sunday, October 28, 2018

ஒரு சோம்பலான ஞாயிறின் பதிவு !

நண்பர்களே,

வணக்கம். அட்டவணை 2019 ; 2020 என்று எங்கெங்கோ நாம் பயணம் போகியிருக்க - 'மக்கா...இங்கே நாங்க குத்துக்கல்லாட்டம் இருக்கிறதை மறந்துப்புடாதே !!" என்று நவம்பர் & டிசம்பர் இதழ்கள் உரக்கக் கூவுவது போலொரு பீலிங் எனக்கு ! And அதிலுமே "தீபாவளி மலர் " ; லக்கி கிளாஸிக்ஸ் 2 ; ஜேம்ஸ் பாண்ட் (ஜம்போ) ; Action Special என்று சில பல ஸ்பெஷல் இதழ்கள் இந்த 2 மாதங்களுக்கென காத்திருக்க - சுடப் போகும் அடைக்காக, சுட வேண்டிய தோசையை மறந்து விடப்படாது !! என்ற உறுத்தல் உள்ளுக்குள் !! So first up - நவம்பர் இதழ்களின் updates !

ரெகுலர் சந்தாவினில் இம்முறை இரண்டே இதழ்களே - சந்தா B சார்பாய் - டெக்சின் தீபாவளி மலர் +  சந்தா C-ன் சார்பாய் one last time (at least for now !!) - நமது நீலப் பொடியர்களின் "காசு...பணம்...துட்டு..!" நடப்பாண்டில் திட்டமிடல்களை சற்றே கூர்ந்து நோக்குபவராய்  நீங்களிருக்கும் பட்சத்தில் - "அட்டவணையில் இல்லாத இதழாச்சே ? இது எப்படி உள்ளே ? " என்று புருவத்தை உயர்த்துவது உறுதி ! 2019 எனும் தென்னையில் கொட்டிய தேளின் புண்ணியத்தில் நடப்பாண்டில் லேசாய் நெரி கட்டியுள்ளது - வேறென்ன ?!!  சுட்டிப் புயல் பென்னியின் இடத்தில smurfs களமிறங்குகிறார்கள் - தவிர்க்க இயலா காரணங்களினால் ! 

3 ஆண்டுகளுக்கு முன்பாய் smurfs கதைகளை வெளியிடத் தீர்மானித்து உரிமைகளைப் பெற்ற போது மொத்தம் நாம் வாங்கியது 8 கதைகள் ! அவற்றைத் தொடரும் ஆண்டுகளில் வெளியிடுவது & 2018 -ல் அடுத்த batch கதைகளை கொள்முதல் செய்வது என்றும் ஏற்பாடு ! அவர்களிடம் பேசி விட்டு புறப்பட்டவனுக்கு, சுட்டிப் புயல் பென்னியையுமே கொசுறாய் சேர்த்து வாங்கி வெளியிடுவோமே என்ற ஆசை தலைதூக்கிட - பிடித்த பிடியில் பென்னியின் தொடரின் முதலிரண்டு கதைகளையும் காண்டிராக்டினுள் நுழைத்து - 8 smurfs + 2 பென்னி = ஆக மொத்தம் 10 கதைகள் என்று திருத்தி அமைக்கச் செய்தேன் ! ஊருக்கும் திரும்பி ; பொடியர்களும் களம் கண்டு ; அப்புறமாய் பென்னியும் அறிமுகமாகிட - 2016 ; 2017 & நடப்பாண்டினில் இதுவரையிலும் 7 smurfs + 2 பென்னி கதைகளை வெளியிட்டு விட்டோம் ! 'சரி...எப்படியும் 2018 -ல் அடுத்த set கதைகளைக் கொள்முதல் பண்ணுவோம்லே...அதிலே இருந்து பென்னியின் ஆல்பம் # 3 -ஐ எடுத்து நடப்பாண்டு டிசம்பரில் வெளியிட்டுக் கொள்ளலாம் !" என்ற நினைப்பில் பென்னியை 2018-ன் அட்டவணையில் கோர்த்திருந்தேன் ! ஆனால் smurfs & பென்னி பக்கமாய் ஆதரவுக் காற்று மிதமாகவே வீசிடுமென்றோ  - சித்தே அவர்களுக்கொரு பிரேக் தரும் நிலை எழுமென்றோ  நான் துளியும் எதிர்பார்த்திருக்கவில்லை ! So புதுக் கதைகளை வாங்காத நிலையில் கைவசமிருந்த smurfs ஆல்பம் # 8-ஐ வெளியிடுவதைத் தவிர்த்து வேறு மார்க்கமில்லை ! So நீலக் குட்டி மனுஷாளை இன்னொருவாட்டி சந்திக்கக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை நாமும் ; நம்மோடு கரம் குலுக்கக் கிட்டியிருக்கும் வாய்ப்பினை அவர்களும் உருப்படியாய்ப் பயன்படுத்திக் கொண்டிட முடிந்தால் ஷேமமே என்று தோன்றுகிறது ! எப்போதும் போலவே -  ஒரிஜினலையே அட்டைப்படமாக்கியுள்ளோம் - நமது எழுத்துருக்களின் சேர்க்கையோடு மட்டுமே ! 

கதையைப் பொறுத்தவரையிலும் புதிதாய் என்னவிருக்கப் போகிறது - நான் சொல்லிட ? As always - மனிதனின் வாழ்வியல் முறைகளின் முரண்களை அட்டகாசமாய்ப் பகடி செய்யும் பாணி இம்முறையும் தொடர்கிறது !! இதற்கெனப் பயன்படுத்தப்படும் நாயகர்கள், சுட்டு விரல் சைசிலான ஆசாமிகள் என்பதாலோ- என்னவோ ; நம்மில் நிறைய பேருக்கு இவர்கள் கதைகளில் பெருசாய் சாரம் இருக்காதென்றே ஒருவித நம்பிக்கை ஏற்கனவே குடி கொண்டுள்ளது ! So கதையோடு ஒன்றிட இயலாது தடுமாறுகின்றனர் ! "காசு...பணம்..துட்டு.." அந்த நம்பிக்கையைத் தகர்க்க முற்படும் ஒரு கடைசி அஸ்திரமென்று வைத்துக் கொள்வோமே ?!! ஏதேனுமொரு அதிசயம் நிகழ்ந்து, ஒற்றை ராவினில் smurfs காதல் நம்மிடையே பிரவாகமெடுப்பின் - பெல்ஜியத்துக்கான அடுத்த பிளைட்டில் ஷ்டாண்டிங்கிலாவது ஒரு டிக்கெட்டைப் போட்டுக் கிளம்பி விடுவேன் !!  And நிறைய நண்பர்களுக்கு அந்தப் பொடி பாஷை பெரும் நெருடலை தந்திடுவதால் - இம்முறை அதை 90% ஓரம் கட்டி விட்டோம் ! இயன்றமட்டிலும் சகஜ நடையிலேயே கதை பயணிக்க முயற்சித்துள்ளோம் ! So இனி தீர்ப்பு - ஜூரிவாள் கைகளில் !! பார்த்துப் பண்ணுங்கோ sirs !! "பண்ணிடாதீங்கோ !!"
And இம்முறை பிரிண்டிங்கும் தீயாய் அமைந்துள்ளது - நீல லோகத்தின் ரம்யத்தை நம் கண்களுக்கொரு விருந்தாக்கிட ! அது மாத்திரமின்றி - 2019-ன் கலர் அட்டவணையின் ஒரு பிரதியும் இந்த இதழோடு உண்டு - கடைகளில் வாங்கிடக் கூடிய வாசகர்களுக்கும் சேர்த்தே ! So இந்த இதழை வாங்கச் செய்திட இதற்கு மேலும் தடிப் போடுவதாயின் - சிபாரிசுக்கு விராட் கோலியைத் தான் கூட்டி வர வேண்டியிருக்கும் !! Give it a try folks - an unbiased try !! Please !!

நவம்பரின் பார்ட்டி # 2 - இது போல் கெஞ்சிடக் கூடிய ஆசாமியே கிடையாது ! :"இப்போ இன்னான்றே ?" என்றபடிக்கே ஆகிருதியாய் முன்னே நின்றாலே, maybe ஒரு பெங்களூர்வாழ் நண்பர் தவிர்த்து, பாக்கி அத்தனைப் பேருமே அந்த மஞ்சள் சட்டைக்காரரின் கட்சிக்கு பச்சக் பச்சக் என்று வோட்டு போட்டு விடுவோமென்பதில் ஏது சந்தேகம் ? "காதலும் கடந்து போகும்" ஒரு அக்மார்க் டெக்ஸ் சாகசம் ! இதோ அதன் அட்டைப்படத்தின் முதல் பார்வை ! 
முன் + பின் அட்டைகள் ஒரிஜினல்களின் வார்ப்புக்களே - மெலிதான வர்ண மாற்றங்களோடு மட்டும் ! And இதுவொரு MAXI Tex குண்டு சாகசமெனும் போது 341 பக்க புஷ்டியான ஆக்ஷன் மேளா waiting !! இது உட்பக்கங்களில் ஒன்றிரண்டு :

கூரியரில் இதழ் # 3 ஆக இடம்பிடிக்கவிருப்பது ஜம்போவின் JAMES BOND !! மீண்டுமொருமுறை சொல்லி விடுகிறேன் guys - "பனியில் ஒரு பிரளயம்" - ஜம்போ காமிக்சின் வெளியீடு மாத்திரமே ! So இதையும் ரெகுலர் சாந்தாவின் ஒரு அங்கமாய் கருதி - "புக்கைக் காணோம்"  என்று நம்மவர்களை கட்டி வைத்து உரித்திட வேண்டாமே - ப்ளீஸ் ? அதே போல - "நான் ரெகுலர் சந்தாவில் உள்ளேன் ; ஜம்போவிற்கு  சந்தா கட்டவில்லை ! ஆனால் இப்போது ரூ.200 அனுப்பியிருக்கிறேன் ; ஜேம்ஸ் பாண்டை என் கூரியரில் இணைத்திடுங்கள் !" என்ற கோரிக்கைகளும் நடைமுறை சாத்தியமற்றவை guys !! தனியாய் அதற்கெனவொரு ஆர்டர் செய்திடத் தான் தேவைப்படும் ! ஸ்டெல்லாவும் தாய்மையின் காரணமாய் பணியிலிருந்து விலகியிருக்க - நமது தற்போதைய front office முழுக்கவே new look கொண்டது ! So இந்த திடீர் திடீர் request-களை பூர்த்தி செய்திடல் இப்போதைக்கு அவர்களுக்கு சிரமமே !!

அதே போல இன்னுமொரு தகவல் + கோரிக்கையும் folks :

உள்நாட்டுச் சந்தாவாயினும் சரி ; அயல்நாட்டுச் சந்தாவாயினும் சரி - உங்களது தேர்வுகளுக்கேற்ப சரியான தொகைகளை மட்டுமே இனி அனுப்பிடுங்களேன் - ப்ளீஸ் ! உருட்டுப் பொதியாய் ஒரு தொகையை அனுப்பி விட்டு, ஒவ்வொரு மாதமும் கணக்கு வைத்துக் கொள்ளும் பாணிகளில் சிக்கல்கள் நாக்குத் தள்ளச் செய்கின்றன ! So இனி அந்த roundsome தொகைகள் சார்ந்த பாணிகளைத் தொடர்ந்திட மாட்டோம் என்பதால், உங்கள் புரிதல்களைக் கோருகிறோம் - ப்ளீஸ் !! 

அப்புறம் நவம்பரின் இதழ்கள் எல்லாமே ரெடியாய் உள்ளன !! வரும் புதனன்று (31 அக்டோபர்) அவை இங்கிருந்து கிளம்பிடும் - நவம்பரின் முதல் தேதியில் உங்களை எட்டிப் பிடித்திட !! So தீபாவளிக்கு வெகு முன்பாகவே போனெல்லியின் அதிர்வேட்டுக்கள் உங்கள் கைவசமிருக்கும் guys !! And இந்த ரகப் பட்டாசுகள் மாசுக் கட்டுப்பாட்டின் கண்காணிப்பில் வராதென்பதால் ; உச்ச நீதிமன்றமும் கண்டு கொள்ளாது !! So நீங்கள் இஷ்டப்படும் போதெல்லாம் இந்த வாண வேடிக்கைகளை அரங்கேற்றலாம் !! 

Before I sign off - ரொம்ப நாள் கழித்தொரு  caption contest ! இதோவுள்ள படத்துக்கேற்ப செமையாய் டயலாக் எழுதும் நண்பருக்கு ஒரு LMS புக் நம் அன்பளிப்பு !! And வெற்றி பெரும் டயலாக்கை இங்கேயே, உங்களுள் ஒருவர் தீர்மானம் செய்திடட்டுமே ? Maybe காமிக் லவர் ? அல்லது பொருளாளர் ?  Bye all....see you around ! Have a cool Sunday !
P.S : ஒரு கோரிக்கையும் ; ஒரு கேள்வியுமே : 

1 .கேள்வி : நடப்பாண்டில் "கொலைகாரக் கானகம்" - TEX சாகசம் பெண்டிங்கில் உள்ளது ! கதையில் அழுத்தம் குறைவு என்பதால் அட்டைப்படமெல்லாம் அச்சாகி, கதையும் 90% மொழிபெயர்க்கப்பட்டு, டைப்செட் செய்யப்பட்டுள்ள நிலையில் - தொங்கலில் உள்ளது ! அதற்குப் பதிலாய் வேறொரு கதையை தயார் செய்து 2019-க்கு கொண்டு சென்று விடுவோமா ? அல்லது - 'சிங்கிள் ஆல்பம் தானே - அஜீஸ் பண்ணிக்கலாம் ; இந்த வருஷக் கோட்டாவை இந்த வருஷமே தீர்த்துப்புடுவோம் !' என்று தீர்மானிப்போமா ? 

2 . கோரிக்கை : "பழிக்கு பழி" டெக்ஸ் இதழ் யாரிடமேனும் இருப்பின், நமக்கொரு ஜெராக்ஸ் மட்டும் அனுப்பிட இயலுமா guys ? 

3. கோரிக்கை # 2 : சந்தா 2019-க்கு உங்களின் ஆதரவு !! தீபாவளி ஷாப்பிங் முடிந்திருப்பின், இதற்குமொரு பட்ஜெட் போட்டிட முயற்சியுங்களேன் folks ?!! 

4. கோரிக்கை # 3 : நமது புது இத்தாலிய ஓவியரிடமிருந்து நேற்றைக்கு வந்த மின்னஞ்சல் ரொம்பவே வருந்தச் செய்தது !அவருக்குப் புற்று நோய் இருப்பதாய் மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றதால், தீவிர பரிசோதனைகளின் பொருட்டு தொடரும் மாதம் முழுக்க பிஸியாகிட உள்ளாராம் ! "எனது எதிர்காலம் இருட்டாய் தென்படும் நேரமிது" என்று அவர் எழுதியிருந்ததைப் படிக்கும் போது உள்ளுக்குள் பிசைந்தது ! ஏகமாய்க் கனவுகளையும், லட்சியங்களையும் தாங்கி நிற்கும் திறமைசாலி ! அவர் நலம் பெற்றிட அவரை நம் பிரார்த்தனைகளில் நினைவு கூர்ந்திடுவோமென்று ஆறுதலாயொரு பதில் போட்டுள்ளேன் ! அதனை நிஜத்திலும் செயல்படுத்திடுவோமா folks ? பிரார்தனைகளின் பலன்களைத் தான் பிரபஞ்சமே அறியும் ?!

201 comments:

  1. ஞாயிறு வணக்கம்.

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர்களே....

    ReplyDelete
  3. உள்ளேன் அய்யா _/|\_
    .

    ReplyDelete
  4. கொலைகார கானகம் இந்த வருடமே போட்டு விடுங்கள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. இந்த பெயரில் ஏற்கனவே.....கேப்டன் பிரின்ஸ் கதை வந்து விட்டது தானே......

      Delete
  5. இத்தாலிய ஓவியர் நலம்பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
    🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  6. வந்தாச்சு உள்ள...

    ReplyDelete
    Replies
    1. இத்தாலிய ஓவிய நண்பர் நலம் பெற்று நீடூழி வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்...

      Delete
  7. வாவ்....வாவ்..வாவ்...

    ஆகா... அட்டைப்படம் அசத்தல் சார்...

    தீபாவளிமலர் 2018என்ற எழுத்துக்கள்+ பட்டாசு வாணவேடிக்கை கிளப்பும் ராக்கெட் பார்த்தவுடன் மனசெலாம் மத்தாப்புகொட்டுது. 🎆🎇🎊🎉🎇🎆🎉

    ReplyDelete
  8. ஓவியர் குணமடைய கடவுளை பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  9. Dear sir, அந்த ஓவியர் பெயரை குறிப்பிட்டால் ஜெபம் செய்து கொள்ள உதவும்.
    டெக்ஸ் கொலைகார கானகமே தரலாமே..
    பழிக்குப்பழி பிடிஎப் வடிவில் எனில் உடன் அனுப்பி வைக்கவும்..இன்னும் இதுபோன்று தேவையான மிஸ்ஸிங் புத்தகங்களை அனுப்பி வைக்கவும் நண்பர்கள் தயாராகவே உள்ளனர். கிட்டத்தட்ட அனைத்தையுமே டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கும் அரும்பணியை சிரமேற்கொண்டு செய்தே வருகிறார்கள்.நன்றி..

    ReplyDelete
    Replies
    1. //டெக்ஸ் கொலைகார கானகமே தரலாமே..//
      +1

      Delete
  10. //எனது எதிர்காலம் இருட்டாய் தென்படும் நேரமிது//
    வருத்தமுடன் வார்த்தைகளை பகிர்ந்து கொண்ட ஓவியர் மிக விரைவில் "ஒளிமயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகிறது" என்று மகிழ்சியுடன் நம்முடன் வார்த்தைகளை பகிர்ந்து கொள்ளும் நாள் மிக விரைவில் நிச்சயம் மலரும் என்ற நம்பிக்கையுடன் அவர் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  11. விரைவில் குணமடைந்து வர எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்

    ReplyDelete
  12. ///பிரார்தனைகளின் பலன்களைத் தான் பிரபஞ்சமே அறியும் ?!///

    கடல்கடந்ததொரு தூர தேசத்தில் வசிக்கும் இத்தாலிய ஓவியருக்கு நோயினை எதிா்க்கும் மனோபலத்தினை எல்லாம் வல்ல இறைவன் நல்குவாராக!

    ReplyDelete
  13. இத்தாலி ஓவியர் விரைவில் குணம்பெற்று பணிக்குத் திரும்ப எல்லாம் வல்ல இறையைப் பிரார்த்திக்கிறேன்..!!

    ReplyDelete
    Replies
    1. இத்தாலி ஓவியர் விரைவில் குணம்பெற்று பணிக்குத் திரும்ப எல்லாம் வல்ல இறையைப் பிரார்த்திக்கிறேன்..

      Delete
  14. காசு.. பணம்.. துட்டு.. மணி.. மணி..

    கடேசியா ஒருவாட்டி வருது! படிக்காதவய்ங்கோ ஒருவாட்டிக்கு.. ரண்டுவாட்டி பட்சுகினு அப்பாலே விமா்சனம்ன்ற போ்ல எதுனா எழுதுங்கோ சாமியோவ்!!📣📣📣📣📣📣

    ReplyDelete
    Replies
    1. ஸ்மர்ஃப்பின் அந்த ஒருபக்க டீசரில் பொடிபாசையே காணவில்லை மிதுன்.! பொடி பாசையால் அந்நியப்பட்டுத்தெரிந்த ஸ்மர்ஃப் இம்முறை நிச்சயம் அனைவரையும் கவருமென்று நம்புகிறேன்..!

      Delete
    2. பொடிச்சிட வேண்டியதே..

      Delete
  15. இத்தாலிய ஓவியர் சீக்க்கிரமே குணமடைந்து விரைவிலியே பணிக்கு திரும்ப பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  16. ///கொலைகாரக் கானகம்" - TEX சாகசம் பெண்டிங்கில் உள்ளது ! கதையில் அழுத்தம் குறைவு என்பதால் அட்டைப்படமெல்லாம் அச்சாகி, கதையும் 90% மொழிபெயர்க்கப்பட்டு, டைப்செட் செய்யப்பட்டுள்ள நிலையில் - தொங்கலில் உள்ளது !///


    90% தயாராகிவிட்ட கதையை ஏன் தொங்கலில் விடவேண்டும்...! இந்தாண்டே வெளியிடுங்கள் சார்.!

    அழுத்தமான கதையை சந்தா Eல் படித்துக்கொள்கிறோமே..!
    இக்கதை வரவேண்டும் என்பதற்கு., அது
    டெக்ஸ் வில்லர் கதை என்ற ஒரு காரணமே போதுமானதுன்னு நேக்கு தோன்றது ..!

    ReplyDelete
    Replies
    1. ரொம்பவும் சரியானதே.

      ஏறக்குறைய ரெடியான கதையை ஏன் தவிர்க்க வேண்டும்.சுமாரான கதையென்ற அம்சம் டெக்ஸ் வில்லரை பாதிக்காது.

      Delete
    2. // 90% தயாராகிவிட்ட கதையை ஏன் தொங்கலில் விடவேண்டும்...! இந்தாண்டே வெளியிடுங்கள் சார். //
      வழிமொழிகிறேன்.

      Delete
    3. I do agree. Please release it this year only.

      Delete
    4. ஏற்கெனவே சுமாரான கதைகளை படித்த அனுபவம் எங்களுக்கு உண்டு.அதை வெளியிட்டு விட்டு சாத்து வாங்கிய அனுபவமும் உங்களுக்கு உண்டு.அப்புறம் என்ன சார்,go ahead.

      Delete
  17. இத்தாலிய ஓவியர் பூரண குணமடைய ஆண்டவனை மனம் உருக வேண்டுகிறேன்.

    ReplyDelete
  18. தீபாவளி மலரின் அட்டைப்பபடம் செமத்தியாக உள்ளது.நேரில் பார்க்கும் போது ஒரு ரவுண்டு மேலும் தூக்கலாகவே இருக்கும் என பட்சி சொல்கிறது.

    உட்பக்க ஓவியங்களும் தோட்டாவைப் போலவே சீறிப் பாய்கின்றன.

    ReplyDelete
  19. இத்தாலிய ஓவியர் பரிபூர்ணமாக குணமடைய இறைவனை வேண்டுகிறேன் .

    ReplyDelete
  20. Caption. :1

    கார்சன் : அட நிஜமாத்தான்பா சொல்றேன்.! தினமும் ரெண்டு ப்ளேட் வறுத்தகறி சாப்பிட்டா, தோல் சுருக்கமெல்லாம் நீங்கி ..முகம் பளபளப்பாயிடுமாம்..!

    டெக்ஸ் : ஆமாமா...உன்னோட முகத்தைப் பார்த்தாலே தெரியுது கார்சன்..!

    ஹோட்டல்காரர் : கார்சன் மாதிரி ஒரு கஸ்டமர் தொடர்ந்து வந்தாலே போதும் ...நம்ம கடையை ஃபைவ்ஸ்டார் ஹோட்டலா டெவலப் பண்ணிடலாம்.!

    ReplyDelete
  21. டியர் எடிட்டர்

    டிசம்பர் மத்தியில் தொடங்கும் அமெரிக்க இருவார விடுமுறையை முன்னிட்டு ஏகமாய் பணிகள் குவிந்துள்ளது சார். எனவே caption contest judgement இன்னொரு முறை எடுத்துக்கொள்கிறேனே. எதையாவது நான் விட்டு விட்டால் பங்கெடுக்கும் நண்பர்களுக்கு அநீதியாகிவிடும் என்பதன் பொருட்டு.

    --x--

    Smufs ஹைலைட்டே பொடி பாஷை தான். ஆனால் பொடி-ஸ்மர்பி கலவை பாஷை கொஞ்சம் படுத்திவிட்டது. ஏதாவது ஒன்று வைத்திருக்கலாம். Otherwise A WARM WELCOME BACK TO SMURFS. KIDS ARE GOING TO ENJOY WITH PARENTS.

    --x--

    கொலைகாரக் கானகம் வெளியிடுங்கள் சார். பிரளயமே பார்த்துட்டோம் - இதென்ன ஜுஜுபி - ஹி ஹி ;-)
    ஒரு சரவெடி Tex உடன் இணைத்து வெளியிட்டாலும் சரியே.

    --x--

    அப்போ டிசெம்பருக்கு மந்திரியார் மற்றும் லக்கி லூக்கா ? கார்ட்டூன் மாதம் ?? :-)

    ReplyDelete
  22. டியர் எடிட்டர்,

    அந்த ஓவிய நண்பரின் பெயரும் பிறந்த நாளும் கிடைக்குமா ? ஒரு பிரார்த்தனை செலுத்தி விடலாமே - உங்களூரிலும் எங்களூரிலும்.

    ReplyDelete
  23. இத்தாலிய ஓவிய நண்பர் விரைவில் பூரண நலமடைந்து முன்போல் நமது இதழ்களில் சாகஸம் செய்து மீண்டு (ம்) வர எனது மனமார்ந்த வேண்டுதல்கள்.

    ReplyDelete
    Replies
    1. இத்தாலிய ஓவிய நண்பர் விரைவில் பூரண நலமடைந்து முன்போல் நமது இதழ்களில் சாகஸம் செய்து மீண்டு (ம்) வர எனது மனமார்ந்த வேண்டுதல்கள்.

      Delete
  24. கொலைகார கானகம் இதழையே வெளியிடுமாறு பணிவன்புடன் வேண்டிகொள்கிறேன்.

    எங்க டெக்ஸ் கதையையே சுமார்ன்னு நீங்களே சொல்ற அளவுக்கு எங்க தல சாகஸம் இதுவா என நாங்க செக் பண்றதுக்காகவது கண்டிப்பா அந்த இதழை வெளியிடுங்கள் சார்..;-)

    ReplyDelete
    Replies
    1. // நாங்க செக் பண்றதுக்காகவது கண்டிப்பா அந்த இதழை வெளியிடுங்கள் சார்..;-) //
      +111111

      Delete
  25. இத்தாலிய ஓவியர் நலம் பெற எனது பிரார்த்தனைகள்...

    தீபாவளி வெளியீடுகள் அருமை சார் .

    ReplyDelete
  26. //ரொம்ப நாள் கழித்தொரு caption contest ! இதோவுள்ள படத்துக்கேற்ப செமையாய் டயலாக் எழுதும் நண்பருக்கு ஒரு LMS புக் நம் அன்பளிப்பு !! And வெற்றி பெரும் டயலாக்கை இங்கேயே, உங்களுள் ஒருவர் தீர்மானம் செய்திடட்டுமே ? Maybe காமிக் லவர் ? அல்லது பொருளாளர் ? //
    கார்சன் : கேப்ஷன் போட்டிக்கு ஜட்ஜாக இருக்க போவது பொருளாளரா ? காமிக் லவரா ?
    டெக்ஸ் : காமிக் லவருக்கு சென்ஸ் ஆப் ஹியுமர் அதிகம் ....தவிர பர்சனல் மெசேஜ்-ல பொருளாளர் –க்கு ரவுண்டு பன் அனுப்பறதா தகவல் சொன்னாலே மார்க் போட்டுருவாரு ..
    பட்லர் : இவங்களுக்கு பொருளாளர் பத்தி தெரியல ...அவர் அழகி போட்டிக்கு மட்டும்தான் ஜட்ஜா போட்டா வருவாரு ..
    ஜோக்கிங் !!!
    ராகவன்ஜி பதிவை இப்போதுதான் பார்த்தேன் ...அவரை எடுத்து கொள்ள வேண்டிஇருந்தேன் ..
    அட ! ஜட்ஜா மாறியாச்சு !

    ReplyDelete
  27. செயலரே நீங்க ரொம்ப பிஸின்னு நல்லாவே எனக்கு தெரியும்.

    இருந்தாலும் கொஞ்சம் ஓரமாவது வந்து தலையை காட்டிட்டு போனா கொஞ்சம் சந்தோசமா இருக்கும்..

    இல்லைன்னா நேர்ல வந்து தலைலை தண்டனை கொடுக்குறத தவிர வேற வழியில்லை...:-(

    ReplyDelete
    Replies
    1. தோ... வந்திட்டேன் தலீவரே! உங்க கையால குட்டுப்பட அத்தனை இஷ்டம் இல்லை எனக்கு!! :)

      உங்கள் அன்புக்கு நன்றி தலீவரே! _/\_

      Delete
  28. பழிக்குப்பழி டெக்ஸ் கதை மட்டும் என்னிடம் தனிபுத்தகமாக உள்ளது விஜயன் சார்...
    புத்தகமாகவே அனுப்பி வைக்கலாமா ? சரி என்று கூறினால் அனுப்பி வைக்கிறேன் சார் ...

    நீங்கள் இதை ஸ்கேனிங் செய்து திருப்பி அனுப்பி வைத்தாலும் சரி ...

    முடிவு உங்கள் கையில்

    ReplyDelete
  29. கேப்சன்..!

    கார்சன் :
    டெக்ஸ் உனக்கு ஒண்ணு தெரியுமா? டெய்லி ரெண்டு சுக்கா ரோஸ்ட் சாப்பிட்டா லிவருக்கு ரொம்ம்ப நல்லதாம்.நேத்துதான் டாக்டர் சொன்னாரு..ஹி...ஹி..

    டெக்ஸ்:
    டெய்லி நாலுவாட்டி சரக்கடிச்சாலும் லிவருக்கு நல்லதுன்னு சொல்லியிருப்பாரே ? ஹி...ஹி...

    ஓட்டல்காரர் :
    சரக்கடிச்சாலும் ,சுக்கா ரோஸ்டை கடிச்சாலும், நமக்குஎப்டியும் பிஸ்னஸ் ஆகுது அதுவரைக்கும் அயாம் ஹேப்பி அண்ணாச்சி..!

    ReplyDelete
  30. டெக்ஸ் இதழின் அட்டைப்படம் அட்டகாசமாக அமைந்து உள்ளது சார் .பாராட்டுகள்..

    சமர்ப் பொடி பாஷை கொஞ்சம் படுத்தியது என்னவோ உண்மை தான் சார்..
    இந்த முறை எப்படி அமைகிறது என பார்க்கலாம் ..:-)

    ReplyDelete
  31. நம்முடைய இத்தாலிய ஓவியர் கூடிய சீக்கிரத்தில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்...

    ReplyDelete
  32. ஓவியர் பூரண குணமாக திருச்செந்தூரில் இருப்பதால் செந்தூரு வேலவனை வேண்டுகிறேன். ஸ்டெல்லாவும் நல்லபடியாய் குழந்தை பெற முருகன் அருளட்டும்

    ReplyDelete
  33. இத்தாலிய ஓவியர் இந்த நோயில் இருந்து முழுவதுமாக, சீக்கிரமாக வெளி வர என்னுடைய பிரார்த்தனைகள்.

    smurfs விட பென்னி பிடிக்கும், மிஸ்ஸிங் பென்னி.

    கொலைகாரக் கானகம் - இந்த வருடமே போட்டு முடித்து விடுங்கள், உங்களுக்கும் நிம்மதி எங்களுக்கும் நிம்மதி.

    பழையது:
    ---------

    1.a) தனியே ஒரு வேங்கை
    1.b) கொடூர வனத்தில் டெக்ஸ்
    1.c) துரோகியின் முகம் - கடைசி அத்தியாயம் இந்த டெக்ஸ் கதைகளில்.
    இது கொத்துக்கறி போடாமல் ஒரே புத்தகமாக வந்து இருக்கும் பட்சத்தில், பட்டையை கிளப்பி இருக்கும். இந்த சீரிஸ் என்னுடைய டாப் 5 டெக்ஸ் கதைகளில் ஒன்று.

    2. ஓநாய் வேட்டை - டெக்சின் ஒரு வழக்கமான பாணி சாதாரண கதை. டர்பின் கொள்ளை கும்பலின் தலைவன் மட்டும் தப்பித்து கொள்கிறான், பின்னாளில் டெக்ஸை பழி வாங்க திட்டம் போடுகிறான், அம்புடுதேன்...

    3. திகில் இதழ் 1 அண்ட் 3 - நான் இதை சின்ன வயசில் திகிலில் முதல் இதழ் வாங்கியபோது, இதன் முன் பின் அட்டைகளை நான் ரொம்ப நேரம் ரசித்து கொண்டு இருந்தது ஞாபகம் வருகிறது. ஒவ்வொரு கதையும் ஒரு முத்து, தேர்ந்தெடுத்து கோர்த்த அற்புத கதைகள். இந்த கதைகளை மறுபடியும் படிக்கும்போது ஏற்படும் nostalgic feelingsku அளவே இல்லை.

    திகிலில் நான் எதிர்பார்த்தது வெறும் திகில் கதைகளை மட்டுமே , ஆனால் கேப்டன் பிரின்ஸ், XIII, ரிப்போர்ட்டர் ஜானி என்று தடம் மாறி விட்டது. அந்த கதைகளை முத்து, மற்றும் லயன் வழியே வெளியிட்டு இருக்கலாம்.

    ஆசிரியருக்கு வேண்டுகோள், திரும்பவும் ஒரு புது சந்தா ஏற்படுத்தி திகில் லை மீண்டும் REBOOT பண்ண முடியுமா? (In 2020, should contain only horror) வருஷத்துக்கு 4 புத்தகங்கள், one for each quarter. அதாவது நம்முடைய கிராபிக் நாவல் போல தனி தடத்தில் பிடித்தவர்கள் மட்டும் வாங்கி கொள்ளும் பாணியில் கொண்டு வர முடியுமா?

    புதியது:
    -------

    1. விடுதலையே உன் விலை என்ன - நல்ல கதை ஆனால் மெதுவாக போவதினால், போர் அடிக்க ஆரம்பித்து விடுகிறது.
    2. ஒரு சிப்பாயின் சுவடுகளில் - கதை என்னவோ நல்ல தான் இருக்கு, ஆனால் கசப்பு மாத்திரையை முழுங்குவது போல் படித்து முடிப்பதற்கு கஷ்டமாக இருந்தது.

    3. வல்லவர்கள் வீழ்வதில்லை - இப்படி பட்ட டெக்ஸ் கதை தான் தேவை. நல்ல ஆழமான கதை. மெக்ஸிகோவையும், அயர்லாண்டையும் இணைக்கும் கதை. இதில் இரண்டாவது ஹீரோவாக ஷானை எடுத்து கொள்ளலாம். அந்த முடிவு ஒரு கிராபிக் கதை ஏற்படுத்தும் தாக்கத்துக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல.

    4. காற்றுக்கு எது வேலி? - நான் டெக்ஸ் பேன் கிடையாது, ஆனால் நான் இந்த இளம் டெக்ஸுக்கு பேன் ஆகி விட்டேன். அழகான சித்திரங்கள், அட்டகாசமான கதை. படிக்கும்போது கண் முன்னே ஒரு சினிமா பார்ப்பது போல தோன்றுகிறது.

    5. பனி மண்டல வேட்டை - மிதமான அமைதியான கதை.. எந்த அதிரடியும் இல்லாமல் அமைதியாக படிக்க ஏற்ற கதை. படிக்கும்போது குளிரெடுத்தது, பால்கனியில் வந்த சில்லென்ற காற்று காரணமா இல்லை சித்திரங்களில் வந்த பனி கொடுத்த குளிரா என்று சொல்ல தெரியவில்லை.

    6.XIII அம்பின் பாதையில் - விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை, XIII தனியாக எங்கும் இருக்க கூடாது, ஒரு அழகிய பெண் எப்பொழுதும் XIII கூடவே ஒட்டி கொண்டு இருக்க வேண்டும் என்று எழுத்தாளர்கள் முடிவு பண்ணியே இந்த சீரீஸை நகர்த்தி செல்வதாய் நினைக்கிறேன். இதில் புது வரவு அன்னிக்கா.

    7. ஒரு விதிமுறை வில்லங்கம் - வழக்கமான மாடஸ்டி பாணி, மிகவும் பிடித்தது. தயவு செய்து வருஷத்துக்கு ஒரு மாடஸ்டி என்று வெளியிட்டு என்றும் உயிர்ப்புடன் வைத்து இருங்கள்.

    ஷானியா, ஜூலியா எல்லோரும் சீசனுக்கு வந்து மறையும் ஹீரோயினிகள், மாடஸ்டி is லேடி சூப்பர்ஸ்டார்.

    ReplyDelete
    Replies
    1. "மாடஸ்டி is லேடி "சூப்பர் ஸ்டார்"..
      சூப்பர் ஸார். iii

      Delete
  34. இத்தாலிய ஓவியர் நலம்பெற்று மீண்டு வர பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  35. சர் இன்ப அதிர்ச்சி காசு ,பணம், துட்டு மணி, எப்பயோ விளம்பரபடுத்திய இதழ் ! அருமை
    அட்டை சூப்பர்
    டெக்ஸ் அட்டை பின்னுது, பெரிய சைசு குண்டு புக்கு சூப்பர்,,,டைகருக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன், இது வரை வந்த டெக்சிலே அட்டகாசமான அட்டை இதான்! கதையும் இதாத்தானிருக்குமோ!

    ReplyDelete
  36. டெக்ஸ் வில்லரை பல ஓவியர்கள் வரைந்திருந்தாலும் என் மனதில் உருவகப்படுத்திதி இருந்த "டெக்ஸ் வில்லரை" முகப்பு அட்டையில் கொண்டு வந்த " இத்தாலிய ஓவியர் "பூரண நலம் பெற்று மீண்டும் ஓவியப் பணியில் ஈடுபட பிரார்த்தனை செய்கிகிறேன்..
    ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டாலும் நம் மனதிற்கு பிடித்த காரியத்தை செய்யும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வே செய்யும்..
    எனவே 'மனதை தளரவிடாமல் இருக்கும்படி ஓவியரைக் கேட்டுக் கொள்கிறேன்...

    ReplyDelete
  37. இத்தாலிய ஓவியரின் நிலை வருத்தத்தில் ஆழ்த்துகிறது! அவர் விரைவில் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைசக்தியைப் பிரார்த்திக்கிறேன்! _/\_

    ReplyDelete
  38. ஒண்ணாந்தேதியே புக்ஸ் கெடைச்சாலும் ,தீபாவளி மலரை நான் தீபாவளி அன்னைக்குதான் நான் படிப்பேன்..!

    ஏன்னா...,

    நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு....ஸ்ட்ரிக்ட்டு..!

    ReplyDelete
  39. டெக்சின் கொலைகாரக் கானகமே வரட்டும்

    ReplyDelete
  40. Tex தீபாவளி மலர் ஓவியம் கொச்சம் மொக்க மாதிரி இருக்கு

    ReplyDelete
  41. Tex தீபாவளி மலர் ஓவியம் கொச்சம் மொக்க மாதிரி இருக்கு

    ReplyDelete
    Replies
    1. +1... Antha square shape ah avoid pannirukkalam sir...

      Delete
  42. எதிர்பாரா விதத்தில் இந்த நீலப்பொடியர்களின் (கடைசி?!?) அட்டைப் படத்தைப் பார்க்கும்போது - தூக்கிமேடையில் நிற்பவனுக்கு உலக அழகியின் உம்மா கிடைத்தமாதிரி - ஒரு கலவையான மனநிலை ஏற்படுகிறது!!

    ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து அந்த நீலப்பொடியர்களை நாம் அனைவருமே அரவணைத்துக்கொள்ளும் வாய்ப்பு வராதா என்று இக்கிளுயூண்டு ஏக்கம் எழுகிறது!

    ReplyDelete
    Replies
    1. ///ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து அந்த நீலப்பொடியர்களை நாம் அனைவருமே அரவணைத்துக்கொள்ளும் வாய்ப்பு வராதா என்று இக்கிளுயூண்டு ஏக்கம் எழுகிறது!///

      எனக்கும் அதே ஏக்கம்தான் குருநாயரே ..!
      அந்த ஒருபக்க விளம்பரம் ..நல்லது நடக்கும்னு நினைக்க வைக்குது ..!

      நம்பிக்கை ...அதானே எல்லாம்..!

      Delete
    2. // ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து //
      நீலப் பொடியர்களின் உலகம் அலாதியானது,விரைவில் பொடியர்கள் அடுத்த சுற்றுக்கு தயாராக காத்திருப்போம்.

      Delete
    3. நடக்கும் நல்லதாகவே

      Delete
  43. 🎉🎆🎇🎊🎊🎇🎆🎉🎉🎆🎇🎊🎊🎇🎆🎉
    தீபாவளிமலர்:-

    ---------இந்த வார்த்தை கொணரும் சுகமே தனியொரு உற்சாகம்தான்.....
    நண்பர்கள் பலரது ப்ளாக்குகளிலும் லயன் தீபாவளிமலர்களை பற்றி கவர் ஸ்டோரிகள் நிறைந்து கிடைப்பதே இதற்கு சாட்சி......

    இந்த ஆண்டின் தீபாவளி மலர் வியாழன் வந்து விடும். அதற்கான நாள் நெருங்க நெருங்க அந்த தீபாவளி மலர் பற்றிய எதிர்பார்ப்பு சுமார் 20வருடங்களுக்கு முன்பு இருந்தை போலவே சற்றும் குறையாமல் இருக்கிறது.

    அதற்கு முன்பு இன்னுமும் சிறிய வயதில் அந்த அனுபவத்தை உணர்ந்த சில பல மூத்த நண்பர்களை பார்த்தால் இன்றும் பொறாமையாக உள்ளது.

    1990களின் ஆரம்பத்தில் லயன் தீபாவளி மலரில் ஒன்றான பழிவாங்கும் புயலோடு என்னுடைய லயன் காமிக்ஸ் பயணத்தை துவங்கினேன். அந்த புத்தகத்தை பழைய புத்தக கடையில் வாங்கிய நானே ஏக மகிழ்ச்சி அடைந்தேன். அப்போது அந்த புத்தகத்தை எதிர்பார்த்து தினமும் கடைக்கு சென்று ரூபாய் 6க்கு வாங்கிய நண்பர்களின் மகிழ்ச்சிக்கு இணை ஏதும் உண்டா????

    காலக்கோட்டையில் பயணித்து சாகசங்களை செய்யும் இரும்பு மனிதன் ஆர்ச்சியின் அறிமுகத்துடன் துவங்கிய தீபாவளி மலர்கள் இன்றும் காலவெள்ளத்தை வென்று நிற்கின்றன. நமக்கும் அப்படி ஒரு விக்டரும், தாம்சனும் அமைந்தால் நாமும் ஒரு கோட்டையில் பயணித்து 1980களின் தமிழ்நாட்டில் ஒரு விசிட் அடிக்கலாம் தான்.

    இருக்கவே இருக்கிறது நம்முடைய கால கோட்டையான பழைய இதழ்கள்.

    லயன் காமிக்ஸ்ஸின் முதல் தீபாவளி மலர் 1984 நவம்பரில் ரூபாய் 4க்கு இருவண்ணத்தில் பெரிய மெகா சைசில், "இரும்பு மனிதன்" வெளியானது. அப்போது நான் 7வயது சிறுவன், அந்த சமயத்தில் வாங்கி படித்த நண்பர்கள் யாரேனும் இருப்பின் உங்கள் மகிழ்ச்சியை இங்கே பகிரலாமே..அல்லது ஓரிரு வருடங்களுக்கு பிறகு படித்தவர்கள் கூட ......

    2வது லயன் தீபாவளி மலர்.....நவம்பர்1985.... தமிழ் காமிக்ஸ் ஐயே புரட்டி போட்ட அறிமுகம்.....

    "காமிக்ஸ்னா டெக்ஸ்........
    டெக்ஸ்னா காமிக்ஸ்......... "
    ----------என அன்றும் இன்றும் என்றும் சரவெடியாய் வெடித்து கொண்டிருக்கும் டெக்ஸ் டெக்ஸ் டெக்ஸ் அறிமுகம்....
    ஆசிய துணைகண்டத்திலேயே , அழகு தமிழில்.... தலை வாங்கி குரங்கு- பெரிய சைசில் ரூபாய்3க்கு வெளியானது. இன்றும் அதன் அட்டைப்படம் பார்க்கும் போது மனசில் ஒரு மெல்லிய சிலிர்ப்பு ஓடும்....

    கருப்பு குதிரையில் ஆரோகணித்து வரும் வாலில்லா குரங்கு(?) இரவில் தனியாக பயணம் செய்பவர்களின் தலையை வெட்டி கையில் கொடுத்து விடுகிறது.
    அந்த மர்மத்தை கட்டவிழ்க்க வரும் டெக்ஸ் அறிமுக காட்சியே ஆர்ப்பாட்டமாக இருக்கும். தொடர்ந்து டெக்ஸ் குரங்கு மர்மத்தை விடுவிப்பது செம்ம த்ரில் அந்த வயதில். முதலில் எனக்கு கிடைத்த புக்ல டெக்ஸ் அந்த கழுகு குளத்தின் குகையில் சென்று குரங்கின் உடுப்பை காணும் காட்சி வரைதான் கிடைத்தது. சில வருடங்கள் கழித்தே முழு புத்தகமும் கிடைத்து, பரோரா தான் அந்த குரங்கு என தெரிந்து கொண்டேன்.

    அதில் இருந்து பெரும்பாலான தீபாவளி மலர்களில் டெக்ஸ் ஆதிக்கம் செலுத்தி வர்றார். டெக்ஸ் இல்லாத தீபாவளி மலர்னா ஏதோ குறைவது போலத் தோணுவது இயல்பே!


    தீபாவளிமலர்கள் டைடில்ஸ்....

    1.இரும்பு மனிதன்-1984

    2.தலைவாங்கி குரங்கு-1985

    3.தீபாவளிமலர்-1986

    4.லயன் சூப்பர் ஸ்பெசல்-1987

    5.இரத்தமுத்திரை-1988

    6.அதிரடிக் கணவாய்-1989

    7.மீண்டும் ஸ்பைடர்-1990

    8.பழிவாங்கும் புயல்-1991

    9.கழுகு வேட்டை-1992

    10.நள்ளிரவு வேட்டை-1996

    11.இரத்தப்படலம் 7-1997

    12.இரத்தப்படலம் 8-1998

    13.இரத்தநகரம்-1999

    14.மரண தூதர்கள்-2000

    15.சாத்தான் வேட்டை-2003

    16.தீபாவளிமலர்2013-நீதியின் நிழல்&மெக்ஸிகோ பயணம்.

    17.இரவே இருளே கொல்லாதே-2014

    18.தீபாவளி வித் டெக்ஸ்-2015-டைனோசரின் பாதையில் & எமனின் வாசலில்.

    19.சர்வமும் நானே-2016

    20.ஒரு தலைவன் ஒரு சகாப்தம்-2017

    21.காதலும் கடந்து போகும்-2018---இதற்காக ஆவலுடன் வெயிட்டிங்... வெயிட்டிங்... வெயிட்டிங்
    *******#######******#####

    ReplyDelete
  44. " காதலும் கடந்துபோகும் "

    அருமையான தலைப்பு விஜய் சேதுபதி மடோனா செபாஸ்டியன் இணைந்து நடித்த காதல் காவியம் போல் சூப்பராக இருக்கும் என்று படிக்க ஆவலாய் உள்ளேன்.!!

    ReplyDelete
  45. Caption :

    கார்சன் : ஏம்பா டெக்ஸு கேள்விப்பட்டியா. இந்தவாட்டி தீபாவளிக்கு ரெண்டு மணி நேரம்தான் பட்டாசு வெடிக்கனுமாம். இன்னாபா இது அநியாயமாக் கீது...

    டெக்ஸ் : கண்டிப்பா சட்டத்த மதிக்கனும் கார்சன். இந்த தீபாவளிக்கு என் பையன் கிட்டுக்கு ரெண்டு மணி நேரம் மட்டும் வெடிக்கிற அளவுக்கு பட்டாசு வாங்கி குடுத்துட வேண்டியதுதான்.

    சர்வர் : ரூல்ஸ மதிக்கிற மூஞ்சுல பாரு. விட்டா ரெண்டு வாரம் நான்ஸ்டாப்பா அரிசோனாவே அதிர்ர மாதிரி துப்பாக்கிய முழங்குங்க இதுங்க பேசுதுங்க...

    ReplyDelete
  46. இத்தாலிய ஓவியர் விரைவில் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்! _/\_

    ReplyDelete
  47. " மாசு இல்லாத அதிர்வேட்டுக்களை உச்சநீதிமன்றம் கண்டுகொள்ளாது.! "

    ஹிஹிஹிஹி......நக்கல் சார் உங்களுக்கு.!!!

    ReplyDelete
  48. 🎂🎂🎂🎂🎂🎂
    🎈🎈🎈🎈🎈🎈
    💐💐💐💐💐💐

    இன்று பிறந்தநாள் காணும் அன்பு நண்பர் கோவிந்தராஜ் பெருமாள் இன்று போல் என்றும் கைநிறைய காமிக்ஸ்ம்,
    நெஞ்சி நிறைந்த மகிழ்ச்சியும் பெற்று வாழ வாழ்த்துகள்.

    💞🎷🎵💕🎶🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

    ReplyDelete
    Replies
    1. 🎂🎂🎂🎂🎂🎂
      🎈🎈🎈🎈🎈🎈
      💐💐💐💐💐💐

      இன்று பிறந்தநாள் காணும் அன்பு நண்பர் கோவிந்தராஜ் பெருமாள் இன்று போல் என்றும் கைநிறைய காமிக்ஸ்ம்,
      நெஞ்சி நிறைந்த மகிழ்ச்சியும் பெற்று வாழ வாழ்த்துகள்.

      💞🎷🎵💕🎶🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

      Delete
    2. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

      என்றும் போல் இன்றும் வாழ்க!
      (ஒரு சேஞ்சுக்காண்டி)

      🎂🎂🎂🎂🎂🎂

      Delete
    3. திரு.கோவிந்தராஜ் பெருமாள் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

      Delete
    4. நண்பர் கோவிந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

      Delete
    5. 🎂🎂🎂🎂🎂🎂
      🎈🎈🎈🎈🎈🎈
      💐💐💐💐💐💐

      இன்று பிறந்தநாள் காணும் அன்பு நண்பர் கோவிந்தராஜ் பெருமாள் இன்று போல் என்றும் கைநிறைய காமிக்ஸ்ம்,
      நெஞ்சி நிறைந்த மகிழ்ச்சியும் பெற்று வாழ வாழ்த்துகள்.

      💞🎷🎵💕🎶🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

      Delete
    6. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பரே..

      Delete
    7. உங்கள் அனைவரின் இதயத்தில் எனக்கு ஒரு இடமிருப்பதை அறிந்ததே என் பிறந்தநாள் செய்தியைவிட மிகவும் பிரகாசமான செய்தி..!🙏🙏🙏🙏🙏

      Delete
    8. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஜிபி. இனிவரும் வருடங்கள் இன்னும் அமோகமா அமைய பிரார்த்தனைகள்.

      Delete
    9. இனிய நண்பர் ஜிபிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
      🎂🎂🎂🎁🎁🎁💐💐💐🌹🌹🌹🎊🎊🎊🎆🎆🎆🎉🎉🎉🎷🎷🎷🎷🎈🎈🎈🍰🍰🍰🍰

      Delete
    10. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே

      Delete
  49. Caption 2

    கார்சன் : இவ்வளவு பெரிய ஹோட்டலையும் ஒட்டடையடிச்சி கழுவித் துடைச்சதுல பயங்கரமாப் பசிக்குது டெக்ஸ் ..! கடுமையான உழைப்புக்குப் பிறகு வயிறார சாப்பிடுறதே அலாதி சுகம்தான்.. இல்லையா ..?

    டெக்ஸ் : ஏற்கனவே வயிறார சாப்பிட்டுட்டு பில்லுக்கு பணம் பத்தலைன்னுதானே ஹோட்டலை கழுவவிட்டாங்க ...திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறியே கார்சன்.!

    ஹோட்டல்காரர் : கடவுளே... ! பில்லுக்கு மேல வேலை செஞ்சிட்டோம்னு திரும்ப சாப்பிட உக்காந்துட்டாங்களே., இப்போ செஞ்ச வேலைக்கு மேல சாப்பிட்டாங்கன்னா என்ன பண்றதுன்னு தெரியலையே..!?

    ReplyDelete
    Replies
    1. இந்த கேப்சன் ரூல்டு அவுட்டுய்யா!

      நவஹோ தங்கத்தை அபகரிக்கத்தானே அத்தனை பி்ரளயம். அவுங்களாவது சாப்பிட்டு விட்டு காசு இல்லீனு மாவாட்டுவதாவது..!! ஹி...ஹி...!!!

      இன்னும் நல்லதா எதிர் பார்க்கிறோம்!

      Delete
    2. அட ராமா....!

      கற்பனைக்கு ரூல்ஸ் போட்டா விளங்காதுய்யா ..!

      Delete
    3. இங்கே கதை மொழிபெயர்க்ப்படவில்லை மாம்ஸ்.! ஒற்றைப் பேனலில் உள்ள படத்தைப் பார்த்து அவரவர்க்கு தோன்றும் கற்பனைகளை கேப்ஷனாக எழுதவேண்டும் அவ்வளவுதான்.! ஹிஸ்ட்ரி ஜ்யாக்ரபில்லாம் பாத்துக்கிட்டு இருந்தா அல்லேலூயாதான்..!

      Delete
    4. கதை மொழி பெயர்ப்பெலாம் பட்டையை கிளப்புவாய் எனத் தெரியும் மாம்ஸ்.
      வசனங்கள் வேறு லெவல்ல மாற்றி அமைப்பாய்...! அதை அறிவோம் அனுபவித்தும் உள்ளோம்....

      அதனால் தான் இன்னும் வேறு லெவல்ல எதிர் பார்க்கிறோம்.

      பரிசு LMS எனும்போது ரூல்ஸ்ம் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்லியா தான்யா இருக்கும்! ஹி..ஹி..ஹி!

      Delete
    5. ஏற்கனவே LMS போட்டி பெண்டிங்ல இருக்கு..!

      Delete
    6. ///ஏற்கனவே LMS போட்டி பெண்டிங்ல இருக்கு..!///

      நான் ஆத்தாவுக்கு கூழூத்துற கதை மாதிரிதான்! ;)

      Delete
  50. விஜயன் சார், ஸ்மர்ப் தீபாவளி கொண்டாட்டமாக அமையப் போகிறது எங்கள் வீட்டு சுட்டிகளுக்கு.

    தீபாவளி மலரின் அட்டைப்படத்தில் உள்ளது டெக்ஸா? மஞ்சள் சட்டை இல்லாததால் தோன்றிய கேள்வி.

    பதிவு மிகவும் சிறியதாக உள்ளது. பதிவை கொஞ்சம் சுவாரசியமாக ஆக்கியது நீலப்பொடியர்கள் சாகசம்.

    அடுத்த (டிசம்பர்) மாதம் வரவுள்ள கார்டூன் கதை எது? மதியில்லா மந்திரி?

    கொலைகார கானகம் கதையை அறிவித்தபடி வெளியீடுகள்.

    கொலைகார கானகம் ஏன்ற தலைப்பில் நமது காமிக்ஸில் ஏற்கனவே வேறு கதை வந்து உள்ளதா? ப்ரின்ஸ் கதை🤔?

    ReplyDelete
  51. ///கேள்வி : நடப்பாண்டில் "கொலைகாரக் கானகம்" - TEX சாகசம் பெண்டிங்கில் உள்ளது ! கதையில் அழுத்தம் குறைவு என்பதால் அட்டைப்படமெல்லாம் அச்சாகி, கதையும் 90% மொழிபெயர்க்கப்பட்டு, டைப்செட் செய்யப்பட்டுள்ள நிலையில் - தொங்கலில் உள்ளது ! அதற்குப் பதிலாய் வேறொரு கதையை தயார் செய்து 2019-க்கு கொண்டு சென்று விடுவோமா ? அல்லது - 'சிங்கிள் ஆல்பம் தானே - அஜீஸ் பண்ணிக்கலாம் ; இந்த வருஷக் கோட்டாவை இந்த வருஷமே தீர்த்துப்புடுவோம் !' என்று தீர்மானிப்போமா ?--///

    டெக்ஸை ரசிக்க அழுத்தமான கதை எல்லா நேரங்களிலும் வேண்டியிராது சார்.

    கொலைகாரக்கானகத்தையே டிசம்பரில் ரிலீஸ் செய்யலாம்!

    ReplyDelete
  52. இத்தாலிய ஓவியர் விரைவில் அடுத்த காமிக்ஸூ உற்சாகமாக வரைய ஆரம்பித்து விடுவார் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  53. இத்தாலிய ஓவியர் பூரண நலமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  54. இத்தாலிய டெக்ஸ் ஓவியர் பூரண நலம் பெற எல்லாம் வல்ல கடவுளை பிரார்த்தனை செய்கிறேன் சார்.

    அடுத்த தீபாவளி மலர்2019 ன் அட்டை படத்தை அவர் வரையும் படி நலமடைய ஆண்டவன் அருள் புரிவார்.

    ReplyDelete
  55. Please give chance to Smurfs. Our kids search every time for Smurfs or the Benny .

    ReplyDelete
  56. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் GP.

    ReplyDelete
  57. கடந்த மூன்று மாதங்களாக நமது காமிக்ஸ் புத்தகங்களை பக்கத்து வீட்டுகாரரிடம் கொடுத்து படிக்கச் செய்ததில் ஒரு சிறிய சந்தோஷம்.

    அவரும் நமது சந்தாதாரராக விருப்பம் தெரிவித்து உள்ளார். அவர் ABCக்கு விருப்பம் தெரிவித்து உள்ளார். விரைவில் பணம் செலுத்துவார் என்று நம்பிக்கையுடன் உள்ளேன்.

    அவர் மார்டின் டெக்ஸ் ஜூலியா மற்றும் லக்கி லூக் கதைகளை விரும்புகிறார். மிகவும் அடர்த்தியான கதைகளான பௌன்சர் மற்றும் க்ராபிக் நாவல்கள் அவருக்கு விருப்பமில்லை.

    இவர் தனது சிறிய வயதில் நமது மும்மூர்த்தி கதைகளை படித்து உள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. அருமையான பணி பரணியாரே!💐💐💐💐💐💐

      Delete
    2. ///அவரும் நமது சந்தாதாரராக விருப்பம் தெரிவித்து உள்ளார். அவர் ABCக்கு விருப்பம் தெரிவித்து உள்ளார். விரைவில் பணம் செலுத்துவார் என்று நம்பிக்கையுடன் உள்ளேன். ///

      Well done PfB ..!!

      Delete
  58. இத்தாலிய ஓவியர் விரைவில் நலம் பெற்று மேலும் பல ஓவியங்களை வரைய நீண்ட ஆயூளை தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  59. ***** ரொம்ப நாள் ஆச்சோல்லியோ... அதான் ச்சும்மாக்காண்டி **** நெசமாலும்மே நோ போட்டிக்காண்டி *****

    கார்ஸன் : பாத்தியா டெக்ஸ்... பத்து எண்றதுக்குள்ள பயபுள்ள வறுத்தகறியோட வந்து நிப்பான்னு நான் சொன்னேன்ல? எடு, பத்து டாலரை!

    டெக்ஸ் : மற்ற புலன்களெல்லாம் மயானத்துக்குப் போய் ஒரு மாமாங்கம் ஆச்சுதுன்னாலும், உனக்கு நாக்கும் மூக்கும் மட்டும் நவஹோ கூடாரத்தில் வளரும் நாய்களோடதைவிடவும் செயல்திறன் வாய்ந்தவையா இருக்குன்ற விசயம்தான் இந்த ஊரறிஞ்ச ரகசியமாச்சே.. என் கிழ நண்பா? தெரிஞ்சேதான் தோற்றேன்னு வெச்சுக்கோயேன்!

    சமையல்காரர் (மனதுக்குள்) : ஓ.. இதான் விசயமா..!! 'கிச்சனைவிட்டு வெளியேறும்போது இருமுறை இருமிட்டு வாப்பா'ன்னு இந்தக் கிழம் என்னைத் துப்பாக்கிமுனையில் வச்சு மிரட்டினப்பவே லைட்ட்ட்டா டவுட்டு ஆனேன்!

    ReplyDelete
    Replies
    1. நெசமாலும்மே super !! Though I have relinquished being the Judge this time ;-)

      Delete
    2. ஈவிக்கொரு LMS பார்சேல்!...💐

      Delete
    3. சூப்பரபு குருநாயரே ..!!:)))

      Delete
    4. @Raghavan, Sivakumar Jegadeeswaran, Govindaraj Perumal, சேலம் Tex விஜயராகவன், KiD ஆர்டின் KannaN

      நன்றி நண்பர்களே! _/\_

      Delete
  60. கார்சன்:ஏம்பா டெக்ஸ்..சுக்கா கறி ஏதேனும் தீபாவளி டிஸ்கண்டில் இருக்கிறதா என்று கேளாம்????
    டெக்ஸ்:தின்றதுக்கு திறக்கிற வாயை தொறந்து நீயே கேட்க வேண்டியது தானே???...
    சர்வர்:(மனதிற்குள் )..ஆமா ..நீங்க மட்டும் துப்பாக்கி எடுத்து சுடும் போது டிஸ்கவுண்டிலா சுடுறீங்க..

    ReplyDelete
  61. டெக்ஸின் அட்டை படம் வெகு நாட்கள் கழித்து சிவப்பு சட்டையில் வந்துள்ளார் மிக அருமையாக உள்ளது..அதிலும் புத்தகத்தின் சைடு தீபாவளி வானவேடிக்கை உடன் சூப்பர்...💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. சைத்தான் சாம்ராஜ்யம் அட்டையில் டெக்ஸ் சிவப்பு சட்டைதான் நண்பரே

      Delete
  62. ஓவியர் விரைவில் குணமடைய இறைவனை இறைஞ்சுகின்றேன்

    ReplyDelete
  63. டெக்ஸ் கதையை இந்தவருடமே போட்டுதாக்கிவிடுவது நல்லது....

    ReplyDelete
  64. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    பெருமாள்

    ReplyDelete
  65. பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  66. டெக்ஸ் : கார்சன் வறுத்த கறி வாங்கி கொடுத்தா எனக்கு 2019 சந்தா கட்டுறேன்னு சொல்லிருக்க மறந்திடாதா,

    கார்சன் : டெக்ஸ் நான் நவஹோ கூடாரத்துல இருக்கி சாந்தாவைத்தான் கட்டி வைக்கிறேன்னு சொன்னேனன், நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட,

    சர்வர் : அடப்பாவி முதலாளிக்கு தெரியாம இன்னொரு வறுத்த கறி கொடுத்தா Jumbo சந்தா கட்டுறேன்னு கார்சன் சொன்னாரே, இப்பதான் தெரியுது அது சாந்தா அவங்க அம்மா Jumbo சாந்தா ன்னு😥😥😥😥

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் ஆட்டத்தில் உண்டு நண்பரே!

      Delete
    2. /// இப்பதான் தெரியுது அது சாந்தா அவங்க அம்மா Jumbo சாந்தா ன்னு😥😥😥😥///

      ஹாஹாஹா...!

      கணேஷ் ...சூப்பர் ..!

      Delete
  67. இத்தாலிய ஓவியர் விரைவில் நலம் பெற இறைவனை பிரார்திக்கின்றேன். அட்டை படங்கள் செம. “கொலைகாரக் கானகம்” இதழினை இந்தாண்டே களம் இறக்குங்கள் சார்.

    ReplyDelete
  68. இத்தாலிய ஓவியர் பூரண நலமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  69. கேள்வி 1.

    //மாசு படினும் மணிதன் சீர்குன்றாதாம்

    பூசுகொளினும் இரும்பின்கண் மாசுண்டாகும்//

    அழுக்கு படியினும் நன்மணியின் ஒளி குன்றாது..

    கழுவி வைத்தாலும் இரும்பில் மாசு உண்டாகும்

    டெக்ஸ் நன்மணி மாதிரி...

    கொலைகார கானகத்தை தைரியமாக போடுங்கள்...

    கோரிக்கை 2...சந்தா அனுப்பியாச்.

    ReplyDelete
    Replies
    1. கோரிக்கை 3 படித்தபோது ( என்ன ஒரு துன்பவியல் நிகழ்வு) ஞாபகம் வந்தது.


      Netflix வைத்திருப்பவர்கள் annihilation படம் இதுவரை பார்க்கவில்லை எனில் பாருங்கள்...அதன் பின்ணனி கேன்சர்தான்...

      Delete
  70. அன்பின் ஆசிரியருக்கு,
    2019 அட்டவணையில் ஸ்மர்ப்ஸ் இல்லாததால் கொஞ்சம் வருத்தமாக இருந்தது, நவம்பரில் வருவது மகிழ்ச்சியாக உள்ளது.ரொம்ப நன்றி ஆசிரியரே.

    நண்பர்களே நீலப்பொடியர்களை விரும்புபவர்கள் ஆதரவு தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  71. நவம்பர் மாத புத்தகங்களை எல்லோருக்கும் தீபாவளிக்கு இரண்டு நாள் முன்னதாக கிடைக்கும் படி செய்தால் நலம். ஏஜெண்ட், கடைகள் உட்பட. ஏனென்றால் தீபாவளி அன்று படிப்பதற்கு ஏதுவாக இருக்கும். அடவானஅட் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    மகிழ்ச்சியுடன்

    ஐ.வி.சுந்தரவரதன்
    சின்ன காஞ்சிபுரம்

    ReplyDelete
  72. வியாழ கிழமை எப்ப வர்றது என் மன உளைச்சல் எப்படி தீர்றது...:-(

    ReplyDelete
  73. ஆவலுடன் வியாழனை எதிர் பார்க்கிறேன்..இத்தாலிய ஓவியர் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..

    ReplyDelete
  74. Dear Editor

    சந்தா டிஸ்கௌவுண்ட் எவ்வளவு. கூரியர் செலவு என்ன என்பதையும் குறிப்பிடவில்லை. போனதடவை இவ்விவரங்களை பதிவிட்டடிருந்தீர்கள்.

    ReplyDelete
  75. இத்தாலிய ஓவியர் நலம்பெற்று மீண்டு வர பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  76. இத்தாலிய ஓவியர் டெக்ஸ் கலா ரசிகர் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாக

    ReplyDelete
  77. Waiting for Thursday it's a big wait for Diwali Malar. Subscription done full ABCDE so happy :)

    ReplyDelete
  78. இத்தாலி ஒவியர் குணமாக வாழ்த்துக்கள்

    ReplyDelete
  79. GP happy bday belated wishes...,

    ReplyDelete
    Replies
    1. சர்வர் : (மைண்ட் வாய்ஸ்) இன்னமும் சாப்டவே ஆரம்பிக்கலை அதுக்குள்ள ஏப்பம் விடுதே பெருசு....

      கார்ஸன்: தம்பி அது பசி ஏப்பம். அது சரி நீ மொதல்ல தட்டுல லவட்டுன ஒரு பீஸ் சுக்கா சாப்ஸ திரும்ப உள்ளாற போயி எடுத்துட்டு வந்துடு.

      டெக்ஸ் : கார்ஸன்... டெங்கு, பறவை, பன்றிக் காய்ச்சல்லாம் பரவுதாம்ல . கொஞ்ச நாள் சுக்கா சாப்டாம இருந்தா என்ன..

      கார்ஸன்: ஏம்பா. உங்கறி சுத்தமானது தான ..

      சர்வர் : எங்கறியா.....ஐய்யய்யோ

      டெக்ஸ்: சர்வர்.புரட்டாசி முடிஞ்சு கறித் திங்க வந்திருக்கு பெருசு...உள்ளாற போயிருப்பா...உங்கறியவே கடிச்சு தின்னுறுவாம் போலருக்கு...

      கார்ஸன்: ஏம்பா சுக்கா கறி வேகலையே...

      டெக்ஸ்: கடை வாசல்ல வேகத்தடை! (speed breaker) இருந்ததை நீ பாக்கலையா....

      கார்ஸன் & சர்வர் : ஙேங்ஙே !!!!!!!

      Delete
    2. J @

      வேகத்தடை ...ஹாஹாஹா..!!

      Delete
    3. கத்தி பழம்பீசு, சைஸா ஸ்லைஸ் பண்ணுது. ஓல்டு ஈஸ் கோல்டு!

      மாஸ்டர் பீஸ் J ji👏👏👏👏👏

      Delete
  80. Dear Editor Sir,

    I try to subscribe 2019 pack but I could not see option for A+B+C+E within chennai. Can you please add above in your website please.

    ReplyDelete
  81. சார் சொல்ல மறந்த கதை
    இந்த பதிவில் அதிரடியாய் ஈர்த்த, எதிர்பாரா விசயங்கள் இரண்டு
    ஸ்மர்ஃப் இல்லயா என காய்'ந்திருந்த போது இருக்குண்ணு காளான் வீட்டுக்குள் பூத்த மலர்' ஒன்னு
    பழிக்குப்பழிய அதிரடியா நுழைக்க தயார் எனும் திரு'மறை வாசகம்
    ஆக மொத்த சந்தோசங்க மேலும் இரண்டு கூடுது டைகரின் காதல் கதை மற்றும் பாண்டுடன் தீபாவளியை வெடிக்காமல் வெடி வைத்து கொண்டாடிட
    காளான் வீட்டுக்குள் குடி போவது கடந்த சிறு வயதில் ஸ்பைடரை தரிசிக்க காதுதிருந்தத போல மனமெங்கும் மத்தாப்பு

    ReplyDelete
  82. கண்டிப்பாக கொலைகாரக் கானகம் வெளியிடுங்கள் சார்.

    ReplyDelete
  83. கேப்சன் போட்டி:-

    கேப்சன்1:
    கா:என்னப்பா டெக்ஸ்...வறுத்த கறிலாம் ஆர்டர் பண்ணிருக்க..காசு இருக்கா.. என்கிட்ட காசு இல்ல சொல்லிட்டேன்

    டெ:காசா.?இருந்ததெல்லாம் சந்தாவுக்கும் ஜம்போவுக்கும் அனுப்பிட்டேனே...நீ வச்சுருப்பேன்ல நினைச்சேன்

    ச:(அட இவங்களும் நம்ம மாதிரிதான் போல..பரவால்ல என் விருந்தா இருந்துட்டு போகட்டும்..காமிக்ஸ் குடும்பம்னு தெரிஞ்சும் விட்ர முடியுமா)

    கேப்சன்:2
    கா:இது நாம சுட்ட மானுதானே...இப்ப அளவு கொறச்சலா தெரியுது..

    டெ:மான் கறினு வெளிய சொல்லிடாத..அரெஸ்ட் பண்ணிட போறாங்க..

    ச:(விட்டா மானோட லெக்பீஸே கேட்பாங்க போல)

    கேப்சன்:3
    கா:யாருப்பா சமையல்காரர் புதுசா தெரியுது

    டெ:அவரு சேந்தம்பட்டி குழுவுக்கே சமைச்சு போட்டவராம்...அப்படினா எந்தளவுக்கு இருப்பார்னு தெரியுதுலல

    ச:(வாரத்துக்கு இரண்டு டைம்னா கூட பரவால்ல..நாளுக்கு இரண்டு தடவ கறி சோறு கேட்டா..அதான் தப்பிச்சு இங்க ஓடியாந்துட்டேன்)

    கேப்சன்:4
    கா:எப்படியோ சந்தாவுக்குள்ள வழக்கம்போல வந்துட்ட போல

    டெ:ஆமாப்பா...அதுக்கு நான் பட்ட கஷ்டம் எனக்குதான் தெரியும்..சர்வரே இன்னைக்கு என்ன வறுத்த கறி ஸ்பெசல்?

    ச:(வேறென்ன "ஸ்மர்ப்தான்..."

    கேப்சன்:5
    கா:ஏம்பா டெக்ஸ்...நாம துரத்திகிட்டு போனதுல கடைசியா ஒருத்தன் சரண்டர் ஆவ தயாரா இருந்தானே அவனையும் ஏன் சுட்ட

    டெ:அவன்தான் லஞ்சம் வாங்க மத்தவங்களயும் தூண்டினவன்..அதான்

    ச:(ஆஹா டிப்ஸ் கேட்டா ரெண்டு தோட்டாதான் கிடைக்கும் போல)

    கேப்சன்:6
    டெ:கார்சன் இங்க பாரு..சாப்பிட்டு பில் நான்தான் கொடுப்பேன்

    கா:அஸ்க்கு...அதெல்லாம் விடமாட்டேன்..தகராறு பண்ணுணீணா ஒத்தைக்கு ஒத்தை நிண்ணு பார்த்துடலாம்

    ச:(இவிங்கதான் அந்த சின்னதம்பி பெரியதம்பியா...தெரியாம போய்டுச்சே)

    கேப்சன்:7
    டெ:எத்தனை நாளைக்குதான் உன்கூடயும் வறுத்த கறியோடயும் வாழ்க்கைய ஓட்டறதோ.தல தீபாவளினு மாமியார் வீட்டுக்கெல்லாம் போகவே முடியாது போல...

    கா:நாம மாமியார் வீட்டுக்கு போகாட்டியும் மத்த எல்லோரையும் அங்க கூட்டிகிட்டு போறதுதானே நம்ம வேலை...அதுமில்லாம நீ இருந்தாலே அது "தல தீபாவளி" தானே டெக்ஸ்

    ச:(புகழ்ந்துட்டாரா...ஓசி கறி கன்பார்ம்)

    கேப்சன்:8
    கா:வாட்ஸ்அப் ஆடியோ,டெங்கு, பன்றி காய்ச்சல்,நீதிமன்ற தீர்ப்பு இதெல்லாம் கேள்விபட்டியா டெக்ஸ்

    டெ:அதெல்லாம் நமக்கெதுக்கு...நல்லவேல நாம தமிழ்நாட்டுல பொறக்கலனு சந்தோசபட்டுக்க வேண்டியதுதான்

    ச:(பாவம் இந்த வறுத்த கறிய விட அங்க இருக்க மக்கள் ரொம்ப வறுபடறாங்க போல)

    கேப்சன்:9
    கா:தீபாவளிக்கு காற்று மாசுபடறத தடுக்க புது ரூல்ஸ்லாம் போட்ருகாங்களாமே

    டெ:ஆமாம் டெக்ஸ்..யாரையாவது சுடணும்னா கூட எட்டு டூ பத்துக்குள்ள தான் சுடணும்...இல்லேன்னா பட்டாசுதான் வெடிச்சோம்னு நினைச்சு அரெஸ்ட் பண்ணிடுவாங்க

    ச:(இப்படி பேசி பேசிதான் காத்தே கெட்டு கிடக்கு)

    கேப்சன்:10
    கா:ஏதோ கேப்சன் போட்டியாமே

    டெ:ஆமாம்..போன வருசம் ஜெயிச்சவங்களுக்கு ஒரு வருச சந்தா தந்தாங்க...இப்ப LMSஆம்

    ச:(எதுனா என்ன...எல்லாரும் சேர்ந்து உங்கள வறுத்தெடுக்க போறது உறுதி)

    -மரு.பெ.பார்த்தீபன்,கரூர்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா...!

      எல்லாமே செம..!!

      Delete
    2. சூப்பர் பார்த்தீபன். வழக்கம் போல கலக்கிட்டீங்க.

      Delete
    3. பார்த்தீபன் ஜி@ அருமை...கலக்கலான கேப்சன்கள்...

      இம்முறை பொருளாளர் ஜியின் பாடு படுதிண்டாட்டம் தான்!

      Delete
    4. அனைத்துமே அருமை நண்பரே..

      வாழ்த்துகள்..

      Delete
    5. நன்றி நண்பர்களே

      Delete
  84. கேப்சன் புகழ், அமெரிக்க வாழ்,

    "கேப்சன் சரவணன்"---

    எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரவும்....!

    ReplyDelete
  85. டும்..,..டும்....டும் ....
    நீலப் பொடியர்கள் அதிர்ஷ்டவசமாய் திடுமென கதவை தட்டுறாங்க, திறந்து வைப்போம்
    டும்..,..டும்....டும்....
    கார்சனின் கடந்த காலத்த மிஞ்சும் டைகர்ஜாக்கின் இறந்த காலத்துக்குள் பயணிப்பமா
    டும்..,..டும்....டும்....
    உலகதரத்தில் முதன்முறையா 007 சுட்டு திறக்கிறார் நம் கதவ
    டும்..,..டும்....டும்....
    அடுத்த வருட வண்ண உலக கையில் காட்டும் அட்டவண
    டும்..,..டும்....டும்....
    கலர் டெக்சு மத்தாப்பாய்

    டும்..,..டும்....டும்....
    நாளை மறுநாள் கதவத் தட்ட
    டும்..,..டும்....டும்....

    ReplyDelete
  86. சார்...
    டெக்ஸின் காலனின் கானகம் (கொலைகார கானகமல்ல) புத்தகத்தை வரும் டிசம்பரிலே வெளியிடுமாறு ஆவன செய்யவும். கதை மொக்கையோ சூப்பரோ பிரச்சனை அதுவல்ல. அட்டைபடத்தையும் உள்பக்கத்தையும் கண்ணில் காட்டி விட்டீர்கள் அதுதான் இப்போ பிரச்சனையே. டெக்ஸ் எப்படி இருந்தாலும் விற்பனையில் சோடைபோனதில்லை. அதுவும் சிறிய கதை வேறு. பிறகு ஏன் சார் தயக்கம்?
    இத்தாலிய ஓவியர் நலம்பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  87. சார் சந்தோச குண்டு தாங்கிய ஏவுகணைகள் கிளம்பியாச்சா இலக்கைத் தேடி

    ReplyDelete
  88. அனுப்பிட்டாங்க...ஆகா..அனுப்பிட்டாங்க....எனிடைம் எடிட்டர் சாரின் பதிவு வரும்...!!!

    🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
    ஹேப்பி தீபாவளி 2018
    🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
    🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
    🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    ReplyDelete
  89. Replies
    1. என்ன அநியாயம்...!! கவிஞர் கார்சன் மேல ஒரு Metoo புகார் கூட இல்லையா ..!?

      அய்யகோ...!!

      Delete
    2. புயலுக்கு ஒரு பிரளயத்துலே டெக்ஸ் மேலேயே #MeToo புகார் சொல்லிட்டாங்களே? :(

      Delete
    3. ரொம்பவே current ஆன கேப்ஷன் எனும் போது - எனது வோட்டு யுவகிருஷ்ணாவுக்கே !!! What say judges ?

      Delete
    4. @editor ! Sure sir! ...

      Yuvakrishna is declared as winner!:-)

      Delete
  90. நான் ரெடி பேனா ரெடியா?
    என்னப்பா கார்சன் இவ்வளவு டிஷ் கொண்டு வந்து இருக்காரு ..பேனாகேட்கிறியே !
    அது வேறே ஒண்ணுமில்லே டெக்ஸ் சார் ..நீங்க இன்னிக்குதானே வந்து இருக்கீங்க ..கார்சன் சார் பதினஞ்சு நாளா இங்கே தங்கி இருக்காரு .கிட்டத்தட்ட ஒரு ஆட்டு மந்தையையே காலி பண்ணிட்டாரு ..அதான் அவரோட சொத்து பத்திரத்தை வச்சி ஒரு சின்ன கையெழுத்து ..

    ReplyDelete
  91. அடேய் வஞ்சகா நம்பிக்கைத்துரோகி நீ நல்லா இருப்பியா ன்னு ஒரு குரல் கேட்டுகிட்டே இருக்கு டெக்சு
    எப்போ இருந்து கார்சன் யாரு குரல் அது?
    என்னோட வயிறோட குரல்தான்..நாலு பிளேட்டுக்கு எடம் இருந்தும் வெறும் ரெண்டு பிளேட் வறுத்த கறிக்கு டெக்ஸ் ஆர்டர் பண்ணுறான் ..பார்த்துகிட்டு சும்மா இருக்கியேன்னு ஒரே கூக்குரல் ..

    ReplyDelete
  92. ஏம்பா கார்சன் மூணு நாளைக்கி முன்னாடியே நாம கிளம்பி இருக்கணும் கல்லுப்பிள்ளையாராட்டம் இங்கேயே உட்கார்ந்து இருக்கியே ..யாராச்சும் உளவாளியை எதிர் பார்த்து காத்திருக்கியா?
    நம்பு டெக்சு ..நம்பிக்கை ..அதானே வாழ்க்கை
    கார்சன் சார் ஒரு சந்தோச செய்தி ..தீபாவளிக்காக நாம எதிர்பார்த்து இருந்த கொழுகொழு வெள்ளாட்டுமந்தை இன்னிக்கு வந்து சேர்ந்துடிச்சி .

    ReplyDelete
  93. ஏம்பா கார்சன் போனவாரம் இந்தக்கடைக்கு கூப்பிட்டப்போ கறி நல்லா இருக்காது வரமாட்டேன்னுட்டே இன்னிக்கு கையைப்பிடிச்சி இழுத்துட்டு வந்திருக்கே?
    ஹி ஹி ஒரு எதிர்பார்ப்புதான்
    கார்சன் சார் ரெண்டுநாளக்கிமுன்னே புதுசா சேர்ந்த டான்ஸ் பாப்பா நீங்க வந்துட்டீங்களான்னு பார்த்துட்டு வர சொன்னா ..

    ReplyDelete
  94. இந்த கடையோட எனக்கு இருபது வருஷ அட்டாச்மெண்ட் உண்டு டெக்சு
    பார்த்தேன் பார்த்தேன் உங்களால் நாங்கள் வளர்கிறோம் னு வாசகத்தோடஒரு ஆட்டோடு நீ நிக்கிற மாதிரி கடை வாசல்லே ஒரு கட்டவுட் இருக்கும்போதே சந்தே கப்பட்டேன் ..

    ReplyDelete
    Replies
    1. வீரையன் @ வழக்கம் போல எல்லா கலகல. அதுவும் இந்த கேப்சன் டாப்.

      Delete
  95. டெக்ஸ்: ஏம்பா கார்சன்! ஊரெல்லாம்
    ' MeToo...MeToo' ன்னு பரபரப்பாக இருக்கே! 'MeToo' ன்னா என்னன்னு தெரியுமா?
    கார்சன்: என்ன டெக்ஸ்! ஒரு அறிவாளியை பார்த்து கேக்குற கேள்வியா இது? 'MeToo' ன்னா ஒரு இருபத்தைந்து வயசுப் பையன் ஒரு பெண்ணிடம் ஏடாகூடமாக நடந்துக் கொண்டான்னு வை. அந்த விசயத்த அந்த பொண்ணு ஒரு முப்பது வருசம் கழிச்சி அந்த பையன் தாத்தாவான பின் ஊரைக் கூட்டி அசிங்கப்படுத்துவதுக்கு பேர்தான் 'MeToo'!!
    கடைக்காரர்: அட! இந்த பெருசு இந்த வயசுலேயும் எட்டு ப்ளேட் வறுத்த கறியை அசால்ட்டாக உள்ளே தள்ளுதே! இது இருபத்தைந்து வயசில் என்னவெல்லாம் பண்ணியிருக்குமோ?

    ReplyDelete
  96. கேப்சன் போட்டி கிட்டதட்ட முடிந்தது எனினும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத (நாந்தான்) விக்கிரமாதித்தனின் இன்னுமோர் முயற்சி..
    (கஷ்டபட்டு டைப் பண்ணியாச்சு..எதயாச்சும் சொல்லி போட்ருவோம்ல...)

    கேப்சன்:11
    டெ:நல்லவேள கார்சன் நீயாவது துப்பாக்கியோட வந்திருக்க...என்னோடத ஆயுத பூஜைக்கு படைச்சுட்டு எடுக்க மறந்துட்டேன்

    கா:அட நீ வேறப்பா...இது தீபாவளி துப்பாக்கி..பெரிய வெடினா கொஞ்சம் பயம்பா...அதான் சின்னதா வெடிச்சுகிட்டு இருக்கேன்

    ச:(ம்க்கூம்...)


    கேப்சன்:12
    கா:எழுபது வருசம் ஆனதுக்கப்புறமும் அப்படியே இருக்கியே...அதே இளமை, வீரம்..உற்சாகம்...எப்படி டெக்ஸ்?

    டெ:தேடல்தான் காரணம் கார்சன்.
    அதான் எப்பவும் என்னை இளமையா வச்சிருக்கு.குற்றங்களுக்கும் குற்றவாளிகளுக்கும் குறைவில்லா வரை இந்த டெக்சும் இருப்பேன்

    ச:(சல்யூட் ரேஞ்சர்ஸ்)


    கேப்சன்:13
    கா:நல்லவேளை ஜாக்கும் கிட்டும் இந்த போட்டோல இல்லை.இருந்திருந்தா ஜாக் பொழப்பு ஜோக் ஆயிருக்கும்.கிட்டுக்கு என்னென்னமோ கிட்டியிருக்கும்

    டெ:கேப்சன்னாலே நாமதான் ஒரே ஆப்சன் போல...பாவம் இந்த சர்வர் வேற யாருனே தெரியல...பக்கத்து டேபிளுக்கு சர்வ் பண்ண போறப்ப தெரியாம மாட்டிகிட்டாரு

    ச:(ஹி...ஹி..)


    கேப்சன்14:
    கா:டெக்ஸ்.. 96 மாதிரி நாமளும் ஒரு மீட் அரேன்ஜ் பண்ணலாமா..நாமலாம் நட்ப மறக்காதவங்களாச்சே

    டெ:கண்டிப்பா பண்ணலாம்தான்..ஆனா அத சுடுகாட்டுல தான் நடத்த முடியும்.எல்லோரயும்தான் ஏற்கனவே அங்க அனுப்பிட்டமே

    ச:(மனச தொட்டு சொல்லுங்க...இது 1996ஆ 1896ஆ)

    -மரு.பெ.பார்த்தீபன்,கரூர்.

    ReplyDelete
  97. கேப்ஷன் போட்டியின் வெற்றியாளறாக யுவகிருஷ்ணா அறிவிக்கப்படுகிறார்..

    வாழ்த்துகள் யுவகிருஷ்ணா.!!!!

    ReplyDelete
  98. எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete