Powered By Blogger

Sunday, October 14, 2018

அதகளம் இங்கே ஆரம்பம் !

நண்பர்களே,

வணக்கம். தொந்தி அதுபாட்டுக்கு ஒரு பக்கம் தொங்கித் திரிந்தாலும், திடீரென ஏழெட்டு கிலோ குறைந்து, சும்மா லக்கி லூக் ஆகி விட்டாற்போலோரு பீலிங்கு ! "லாலாக்கு டோல் டப்பி மா" ரகத்திலான பாடல்கள் கூட இப்போது கவிதையாய்த் தோன்றுகின்றன ! கச கசவென புழுக்கம் எடுக்கும் இந்த அக்டொபரின் வெயிலில், கடைத் தெருவில் நடக்கும் போதுமே, யாரையும் மூக்கோடு சேர்த்துக் குத்தும் எரிச்சலெல்லாம் தோன்ற மாட்டேங்குது ! 'அட...இந்தத் திடீர் இலகுத்தன்மை ஏனோ ?' என்று யோசிக்கிறீர்களா ? வேறொன்றுமில்லை guys - நவம்பர்  இதழ்களில், எனது பணிகளைப் பூரணமாய் முடித்துவிட்டதன் தொடர்ச்சியாய் - இந்த 2018  அட்டவணையின் சகல toughies-களுக்குமே மங்களம் பாடியாச்சு  ! And காத்திருக்கும் டிசம்பரின் இதழ்கள் just a breeze எனும் போது - ஓராண்டின் பயணத்தினை முழுசாய் நிறைவு செய்திடும் தருணம் வெகு அருகே இருப்பது புரிகிறது ! அதன் பலனாய் உள்ளுக்குள்ளே மெலிதாய்ப் பிரவாகமெடுக்கும் அந்தக் குதூகலம் தான் இளையராஜாவின் BGM சகிதம் ஒரு ரம்யத்தைத் தருகிறது !

2018-ன் அட்டவணையின் முற்பாதி அத்தனை மென்னி முறிக்கும் பணிகளைத் தாங்கியிருக்கவில்லை தான் ; வழக்கமான ட்யுராங்கோ ; தோர்கல் போன்ற சில ஸ்பெஷல் இதழ்கள் நீங்கலாக ! ஆனால் இரண்டாம் பாதியிலோ "இரத்தப் படலம்" ; "டைனமைட் ஸ்பெஷல்" என்ற இரு WWF பயில்வான்கள் மட்டுமன்றி, "தீபாவளி மலர்" ; ஜம்போவில் JAMES BOND என்று back to back மாதங்களில் நிறையவே மிரட்டலான பணிகள் ! So நடப்பின் ஏப்ரலைத் தாண்டிய போதே மண்டைக்குள் ஒரு புயல் எச்சரிக்கைச் சின்னத்தை ஏற்றியது போலொரு உணர்வு குடிகொள்ளத் துவங்கிவிட்டது ! And தொடர்ந்த நாட்களில் ஒரு பணியிலிருந்து - அடுத்த பணிக்கான தாவல் என்று சதா நேரமும் ஒரு அரூப டென்ஷன் வேதாளமாய் என்னோடே தொங்கிக் கொண்டு பயணம் செய்வது போலவே இருந்தது ! அந்த பருமனான இதழ்கள் ஒன்றொன்றாய்க் கரை சேரத் துவங்கிய பிற்பாடே - இங்கே என் தோளிலிருந்த பளு கம்மியாகிக் கொண்டே போவதை ரசித்திட முடிகிறது ! Latest in that line - ஜம்போவின் இதழ் # 3 ஆக அமையவுள்ள ஜேம்ஸ் பாண்ட் 007 -ன் "பனியில் ஒரு பிரளயம்" !

தம்மாத்தூண்டு குழந்தைக்குக் கூட இந்தப் பெயரானது செம பரிச்சயம் எனும் போது - இவருக்கோசரம் நான் ஒரு அறிமுகமோ - பில்டப்போ தருவதெல்லாம் அனாவசியம் தானே ? அதற்குப் பதிலாய் - இம்முறை நாம் சந்திக்கவுள்ள BOND பற்றி லேசாயொரு கோடு மட்டும் போட்டுக் காட்டல் தேவலாம் என்று பட்டது ! ஷான் கானரியில் ஆரம்பித்து ; ராஜர் மூர் ; பியர்ஸ் ப்ராஸ்னன் ;  டானியல் கிரைக் என்று நிறைய வெள்ளித்திரை பாண்ட்களை நாம் பார்த்தாச்சு ! காமிக்ஸ் மேடையிலும் செய்தித் தாள் தொடர்களாய் ; சில முழுநீள ஆல்பங்களாய் - வெவ்வேறு வித artwork களில் 007-ஐ நாம் பார்த்திருக்கிறோம் ! ராணி காமிக்சின் முதல்சுற்றில் சும்மா திளைக்கத் திளைக்க இவர் தானே வலம் வந்தவர் ? அந்நாட்களில் இவரது கதையுரிமைகள், மயிரிழையில் நம் கையை விட்டுப் போயிருக்க -  அது குறித்து ஏகப்பட்ட கவலை எனக்குண்டு ! ஆனாலும் - "சீ..சீ...இது புளிக்கிற பழமாக்கும் ; ஐயே...படம்லாம் ரெம்போ சுமார் !!" என்று எனக்குள்ளேயே என்னைச் சமாதானம் செய்து கொள்வேன் ! மாதம் முதல் தேதிக்கான அவர்களது "அடுத்த வெளியீடு" விளம்பரம் மீது ரொம்பவே அக்கறை எடுத்துக் கொள்வேன் - simply becos அந்த ஒண்ணாம் தேதி இதழ் "ஜேம்ஸ் பாண்ட்" சாகசமாய் இருந்திடும் பட்சத்தில், நாம் ஏதாச்சும் ஏப்பை சாப்பையான நாயகரைக் களமிறக்கி வைத்து, உதைபடக் கூடாதே எனும் பொருட்டு ! So JB வர்றார் என்று தெரிந்தால் - நான் நம்ம இஸ்பைடரையோ ; சட்டித் தலையன் ஆர்ச்சியையோ தயார் பண்ணிவிடுவது வாடிக்கை !  நாட்கள்  நிறையவே ஓடிவிட்டன - எண்பதுகளின் அந்த வேளைகளிலிருந்து ! And ஜேம்ஸ் பாண்டுமே ஏகமாய் மாற்றம் கண்டுவிட்டுள்ளார் - இடைப்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில் ! சிலபல ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் 007-க்கு புதியதொரு இன்னிங்ஸ் துவக்கிட  டைனமைட் காமிக்ஸ் நிறுவனம் ஆர்வம் காட்டிட - "அட..!" என்றவொரு சிறு சுவாரஸ்யத்தைத் தாண்டிப் பெரிதாய் நான் வேகம் காட்டிடவில்லை ! அமெரிக்க பாணிகள் இந்த பிரிட்டிஷ் ரகசிய ஏஜெண்ட்க்கு எத்தனை தூரம் சுகப்படுமோ என்ற சந்தேகம் தான் ! ஆனால் முதல் இதழ் வெளியான போது நெட்டில் கிட்டிய படங்களும் சரி ; அலசல்களும் சரி - இதுவொரு அதிரடியின் ஆரம்பப் புள்ளி என்பதை உணர்த்தின ! அதைத் தொடர்ந்து மெது மெதுவாய் 007-ன் புது அவதாரின் முன்னேற்றத்தை தொடர்ச்சியாய்க் கவனித்துக் கொண்டே வந்தேன் ! இரண்டாவது ஆல்பமும் மிரட்டலாய் வெளியாகி தூள் கிளப்ப - எனக்கு இருப்புக் கொள்ளவில்லை ;  டைனமைட்டோடு தொடர்பைத் துவங்கி, போன வருஷமே JB-ன் உரிமைகளை வாங்கியும் விட்டோம் !

ஜம்போவின் முதல் இதழாய் இவரையே தயார் செய்வது தான் எனது முதல் எண்ணம் ! ஆனால் அதற்குப் பின்பாய் இளம் TEX கதைகளை போனெல்லியில் ஒரு புது பாணியில் முன்னெடுத்துச் செல்லவிருக்கும் விபரம் தெரிய வந்த போது - "இளம் தல' ஜம்போவின் தடத்துக்கு சூப்பர் ஆரம்பமாய் இருப்பாரென்று பட்டது ! சரி, இதழ் # 2 JB தான் என்று மனதை மாற்றிக் கொண்டேன் ! அப்போது தான் ஹெர்லக் ஷோம்சின் ஏஜெண்ட்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது - தொடரின் பிதாமகரான ஜூல்ஸ் அவர்களின் 90-வது பிறந்தநாள் நெருங்குகிறது என்றும் ; நமது அட்டவணையினில் அவ்வேளைக்கு ஹெர்லக் வெளிவருவதாயின் சிறப்பாகயிருக்குமென்றும் ! நம்மையும் ஒரு உருப்படியாய் மதித்து அவர்கள் ஒரு கோரிக்கையை முன்வைக்கும் போது - மறுக்கவாவது தோன்றுமா ? சத்தமின்றி இதழ் # 2 என்ற ஸ்தானத்தை "ஒரு குரங்கு சேட்டை"க்கு நல்கிய கையோடு - JB-க்கு அதன் அடுத்த நம்பரை ஒதுக்கினேன் !

வழக்கம் போல் பணிகளை முடித்து விட்டு, அச்சுக்குத் தயாராகும் தருணத்தில் - "ஒரு சர்வதேச ஸ்டார் நாயகரின் இதழிது ; அட்டைப்படங்களை அவர்கள் ஒரு தபா பார்த்து ஓ.கே. சொல்லிவிட்டால் தேவலாம் !" என்று தோன்றிட, ராப்பரை அவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தேன்  ! எனது அந்தத் தீர்மானத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு ! ஜேம்ஸ் பாண்டின் அமெரிக்க வெளியீடுகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட டிசைன்களில் ராப்பர்கள் தயார் செய்துள்ளனர் ! இந்த பாணிக்கு "Variant covers" என்று பெயர் ! So கதை ஒன்றே எனினும் அதற்கு டிசைன் டிசைனாய் வெவ்வேறு ராப்பர்கள் இருப்பதுண்டு ! (ஆர்வலர்களும் ஒவ்வொரு ராப்பரிலும் ஒரு புக் வாங்கிடுவார்கள் போலும் !! ) So நமக்கு வந்திருந்த டிஜிட்டல் கோப்புகளில் மொத்தம் 9 வெவ்வேறு அட்டை டிசைன்கள் இருந்தன ! ஒவ்வொன்றுமே மிரட்டலாய் இருக்க, நிறையவே இன்னிக்கி-பிங்கி -பாங்க்கி போட்டுப் பார்த்த பிற்பாடே ஒரு டிசைனைத் தேர்வு செய்தேன். அது பொருத்தமாய் உள்ளதா ? என்பதை படைப்பாளிகளே பார்த்துச் சொல்லிவிட்டால் தேவலாம் என்று மனத்துக்குப் பட்டது ! டிசைனை அனுப்பிவிட்டுக் காத்திருந்தால் - அந்த ஒப்புதல் வழங்கும் ப்ராசஸ் கொஞ்சம் நேரமெடுத்தது ! சின்னச் சின்ன குறைகளையும் அவர்கள் துல்லியமாய்ச் சுட்டிக்காட்டி, திருத்தங்கள் போடச் செய்ய - அட்டை இன்னமும் மெருகேறியது புலப்பட்டது ! And இதோ - அந்த அட்டையின் முதற்பார்வை folks :
முன்னட்டையும் சரி ; பின்னட்டையும் சரி - 100 சதவிகிதம் ஒரிஜினல்களே - நமது பெயர்களையும் லோகோவையும் நுழைக்கும் வேலைகள் நீங்கலாக ! இருப்பினும், இதிலுமே அவர்கள் காட்டிய கவனம் செம அற்புதம் ! "இந்த ஸ்டைல் font வேண்டாம் ; இதை இங்கே பொருத்துங்கள் ; அதை அங்கிருந்து நகற்றுங்கள்" என்ற ரீதியில் அவர்கள் தந்த input களை ஜூனியர் எடிட்டரின் மேற்பார்வையில் செய்தோம் ! இறுதியான result - ரொம்பவே வித்தியாசமானதொரு அட்டைப்படம் என்று எனக்குப் பட்டது ! உங்களுக்குமே "RK பாணியில்" கலையுணர்வுடனான விமர்சனங்கள் தோன்றாது - "அடடே..!!" என்பது தான் தீர்ப்புகளாய் இருந்திடும் பட்சத்தில் பிரமாதமாய் இருந்திடும் !

கதையைப் பொறுத்தவரை - ஒற்றை வரியில் சொல்வதானால் - "ரணகள அதகளம்!" என்று மட்டுமே சொல்வேன் ! இயன் பிளெமிங்கின் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரம் ஒரிஜினலாய்த் துவக்கம் கண்டது அவரது ஒரு டஜன் நாவல்களில் தான் ! 1954-ல் துவங்கிய இந்த நாவல் வரிசையின் சகலத்தையும் படிக்கும் வாய்ப்பு கிட்டியிருப்போருக்கு ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரம் பற்றி ஒரு லெவல் கூடுதலான புரிதலிருக்கும் என்பது நிச்சயம் ! ஒவ்வொரு பணியின் போதும் JB அணியும் உடையிலிருந்து, கொண்டு போகும் ஆயுதம் வரைக்கும் காட்டும் அக்கறைகளை சிலாகிக்க இயன் பிளெமிங் நிறையவே மெனெக்கெட்டிருப்பார் ! அது போதாதென்று - ஒவ்வொரு தருணத்திலும் ஜேம்ஸ் பாண்ட் பருகும் ட்ரிங்க் பற்றியுமே ; அவரது பெண்தோழிகள் பற்றியுமே விலாவரியாக தகவல்கள் பார்த்திட இயலும் ! அப்புறம் அந்த பிரிட்டிஷாருக்கே உரித்தான ஒரு dry humor-ம் ஹீரோவிடம் தெறிக்கும் விதமாய் சம்பாஷணைகள் இருப்பது வாடிக்கை ! "The Man with a License to Kill !!" என்பதே கதாசிரியர் உருவாக்கப்படுத்திய JB-ன் அறிமுகம். ஆக பணியில் அவர் துளி கூட ஈவு-இரக்கம்  காட்டாது போட்டுத் தள்ளிக் கொண்டே போவது தான் இவரது வாடிக்கை !  இந்த ஒட்டு மொத்த package தான் ஜேம்ஸ் பாண்ட் எனும் கதாப்பாத்திரம் எனும் போது, தினசரிகளில் மும்மூன்று கட்டங்களாய் வெளியாகிடக்கூடிய strip feature கதைகளில் இதன் சாரத்தை முழுமையாய்க் கொணர்வது ரொம்ப ரொம்ப கஷ்டம் ! ஆனால் இந்த முழு நீள ஆல்பத்திலோ - கதாசிரியர் இயன் பிளெமிங் மனதில் உருவாக்கப்படுத்தியிருந்த அக்மார்க் 007-ஐ படு சிரத்தையாய் புதியதொரு வார்ப்பில் உருவாக்க முனைந்துள்ளதை பார்க்கலாம் ! அந்த வெள்ளித்திரையில் நாம் பார்த்து பிரமிக்கும் action sequences இங்கும் ஏராளமாய் உண்டு ! சித்திரங்களை அவர்கள் வரைந்துள்ள கோணங்களை ரசிக்க மட்டுமே ஒரு நாள் முழுசும் எடுத்துக் கொள்ளலாம் ! அப்புறம் இன்னொரு சுவாரஸ்ய விஷயமும் கூட ! "டமால்..டுமீல்.கும்... நங்..." என்ற காமிக்ஸ் sound effects எதுவுமே ஒரிஜினலில் தந்திட  படைப்பாளிகள் முனைந்திடவில்லை ! So நாமுமே மௌனமே அங்கு தேவலாம் என்று விட்டு விட்டோம் !! ஒரு புதுவித அனுபவம் காத்துள்ளது guys - ஆக்ஷன் தெறிக்கும் பக்கங்களில் ! ஒரிஜினலின் அதே ஆணழகர் ; கோட் மடிப்புக் கலைந்து போகுமே என்று கவலை கொள்பவர்  ; துப்பாக்கிகளை காதலிகளாய் நேசிக்கும் ஆர்வலர் ; துளியும் தயங்காது கண்ணுக்குள் விரலை (literal ஆகவுமே !!) விடும் சாகசக்காரர் என்று இங்கே ஒரு faithful reproduction of the real 007 காத்துள்ளது என்பேன் !! எழுதும் போதே கதையின் பரபரப்பு என்னையும் தொற்றிக் கொள்ள - மொத்தத்தையும் மூன்றே நாட்களில் நிறைவு செய்ய சாத்தியப்பட்டது ! எனக்கு நினைவிருக்க, சமீபத்தில் இத்தனை வேகமாய் நான் பணி செய்த கதை இதுவே !

அப்புறம் அந்த ஓவியம் + கலரிங் பாணிகள் பற்றியும் சொல்லாது போக இயலாது ! எதிராளியை சம்மட்டியைக் கொண்டு JB சாத்தும் போது, வாசிக்கும் உங்களுக்குமே தலையைக் குனிந்து கொள்ள தோன்றினால் - எனக்கு ஆச்சர்யம் இராது ! அத்தனை நேர்த்தி ஓவியங்களில் ! And வர்ணச் சேர்க்கையின் மிரட்டலை விளக்க தொடரும் உட்பக்கங்கள் போதுமென்பேன் :

ஏதேனும் ராசியா - என்று சொல்லத் தெரியவில்லை - ஆனால் இதுவரைக்குமான ஜம்போ இதழ்களின் அச்சு ; தயாரிப்புத் தரங்கள் தாமாய் set ஆகி விட்டுள்ளன ! இம்முறையும் அதற்கொரு விதிவிலக்கல்ல என்பேன் ! கண்ணில் ஒற்றிக் கொள்ளும் விதத்தில் அச்சு அமைந்துவிட்டுள்ளது ! அச்சான பக்கங்களை புரட்டும்  இந்த வேளையிலேயே  எனக்குக் குளிர் ஆட்டுகிறது - முதல் பார்வையில் உங்களது reactions களை அறிந்திடும் ஆசையினில் !! ஜம்போவுக்கு சந்தா செலுத்தியிரா வாசகராய் நீங்கள் இருப்பின் - you are missing out on something special ! குறைவான பிரிண்ட்ரன் மட்டுமே எனும் போது கடனுக்கு வாங்கிடும் முகவர்களுக்கு இது அனுப்பப்பட மாட்டாது ! ஆன்லைனில் தான் முந்திட வேண்டி வரலாம் !

நவம்பரின் "தெறிக்கும் ஆக்ஷன்" ஜம்போவில் மட்டும் தான் என்றில்லை ; நம் 'தல'யின் தீபாவளி மலரிலும் தான் !! டைனமைட் ஸ்பெஷல் ஒரு சாத்வீக டெக்ஸைக் கண்ணில் காட்டியதெனில் - இம்முறையோ ஒரு தீபாவளிப் பட்டாசு ரக இரவு கழுகு waiting !! இந்த ஆல்பம் நிச்சயமாய் சுகப்படுமென்று இதனைத் தேர்வு செய்த போதே எனக்குப் புரிந்து கொள்ள முடிந்தது தான் ; ஆனால் கதையினுள் பணியாற்றும் போது தான் அதன் முழு வீச்சும் ; வீரியமும் புரிபட்டது !! டைகர் ஜாக்கும் சரி ; நம்மவரும் சரி - சும்மா பின்னிப் பெடல் எடுத்துள்ளார்கள் !! வழக்கமான பில்டப் போலவே இதுவும் தோன்றலாம் தான் ; ஆனால் trust me guys - நவம்பர் 6 தேதிக்கு நீங்கள் வெடிக்கவிருக்கும் எங்கள் ஊர் சமாச்சாரங்களுக்குத் துளியும் விடுதலிலா அதிரடி இது !!

And பற்றாக்குறைக்கு இம்மாதத்து விலையில்லா Color Tex -ம் ஒரு கண்குளிர் விருந்து ! "புனிதப் பள்ளத்தாக்கு" yet another வித்தியாசமான டெக்ஸ் சிறுகதை !! கதையின் விஸ்தீரணம் குன்றிடும் போதெல்லாமே கதாசிரியர்கள் காட்டிடும் கற்பனை வளம் இம்முறையும் பிரமிக்கச் செய்கிறது ! Here you go - ஒரு டீசரோடு !!
அச்சுப் பணிகள் இப்போதே 90 % நிறைவுற்றுவிட்ட நிலையில் - சிரமங்களே இல்லாது - மாதக் கடைசிக்கு முன்பாய் இதழ்களை உங்களிடம் ஒப்படைத்து விடுவது உறுதி guys ! நீங்களே சொல்லுங்களேன் - எப்போது வேண்டுமென்ற தேதியை !! மீண்டும் சந்திப்போம் folks ; Bye for now !! Have a terrific Sunday !

P.S : அடுத்த பதிவு - (அதாவது அடுத்த ரெகுலர் பதிவு) 2019ன் அட்டவணையுடனான பதிவாக அமைந்திடவுள்ளது ! வரும் வெள்ளிக்கிழமை -  ஆயுத பூஜைக்கு மறுநாள் விடுமுறை தானே ? டி.வி.களுள் மூழ்கிடும் நேரத்தில் இங்கேயும் கொஞ்சம் எட்டிப் பார்த்தீர்களெனில் அட்டவணையை அரங்கேற்றி விடலாம் ! What say all ? 

282 comments:

 1. வணக்கம் சார்...
  வணக்கங்கள் நட்பூஸ்..
  மீ பர்ஸ்ட்...

  ReplyDelete
 2. ம். இனி ஆட்டத்தை ஆரம்பிக்கலாம்!

  ReplyDelete
 3. காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼

  ReplyDelete
 4. அனைவருக்கும் காலை வணக்கம் 🙏🙏🙏🙏...P.Sயிலிந்து வருகிறேனே....பல நாட்களாக காத்திருக்கும் பதிவு(2019 அட்டவணை)...டிவியாவது சினிமாவது முதலில் அட்டவணையை பார்த்து ரசித்து பின்பு அலசுவது தான் எங்கள் முதல் வேலை.தல எத்தனை கதை என்பது தானே முதல் வேலை(குறைந்து இருக்குமாயின் கதைகள் ஈங்களிடம் சண்டை போட வேண்டாமா😅😅😅😅)..

  ReplyDelete
 5. அடுத்த பதிவை தாங்க முடியாத ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்

  ReplyDelete
 6. 007ன் ப்ரீவியூ பக்கங்கள் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கின்றன.
  வழக்கத்துக்கு மாறான ஓவிய பாணியும், படைப்பாளியின் கற்பனைச்சிறகும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பைஏற்படுத்துகின்றன.

  ReplyDelete
 7. We would love to have the list of 2019 on Thursday itself sir on saraswathi pooja. She's a God of kalvi and that day would be the best to release the list sir. And I would prefer to have this month comics on 27th sir.

  ReplyDelete
 8. 007 stunning still.
  Action sequences super.
  James jumbo bond.

  ReplyDelete
  Replies
  1. Yes 007 looks superb. I too thought u r gonna release bond as the first book of jumbo. Anyways it just look awesome. I'm expecting 007 to fill the void left by Largo. Racy stories from the start till the end. I'm waiting

   Delete
 9. காலை வணக்கங்கள் காமிக்ஸ் காதலர்களே!!!

  ReplyDelete
 10. // நீங்களே சொல்லுங்களேன் - எப்போது வேண்டுமென்ற தேதியை !! //
  முன்னாடியே கிடைச்சா சந்தோஷம்தான்,ஆனா தீபாவளி நேரத்தில் படிக்க புக் எதுவும் இருக்காது.அதனால் 31 ந் தேதி கையில் கிடைத்தால் கூட போதும் சார்,முன்பே கிடைத்தாலும் மகிழ்ச்சியே.

  ReplyDelete
 11. // அடுத்த பதிவு - (அதாவது அடுத்த ரெகுலர் பதிவு) 2019ன் அட்டவணையுடனான பதிவாக அமைந்திடவுள்ளது. //
  மிக மிக மிக ஆவலுடன் காத்திருக்கிறோம் சார்.

  ReplyDelete
 12. Morning Friends Will come back after reading

  007 art is stunning sir!!

  ReplyDelete
 13. 2019ன் அட்டவணைகாக படபடக்கும் இதயத்துடன் வெயிடிங் சார். சும்மா தூள் பறத்துங்கள் சார்.

  ReplyDelete
 14. இந்த ஆண்டில் ஆரவாரமாக காத்திருந்து வரவேற்க தயாராக ரசிகர்கள்..மாபெரும் வெற்றிப் படைப்பை ருசிக்க ரெடியாகுங்கள்...

  ReplyDelete
 15. /lRK பாணியில்" கலையுணர்வுடனான விமர்சனங்கள்//

  தனக்கென்று ஒரு பாணியை வகுத்த இந்த ஆர் கே வை எனக்கே பாக்கணும் போல இருக்கே.

  ஆனாக்க முகமூடி போட்டு திரிகிற அவங்கள எப்படி பார்க்கிறது

  ReplyDelete
 16. காலை வணக்கம் நண்பர்களே...

  ReplyDelete
 17. //// அடுத்த பதிவு - (அதாவது அடுத்த ரெகுலர் பதிவு) 2019ன் அட்டவணையுடனான பதிவாக அமைந்திடவுள்ளது. //---

  வியாழன் அன்று, ஆயுதபூஜை நாளில் மாலை ஒரு 7மணி வாக்கில் வெளியிடலாம் சார்.

  சென்றாண்டும் தீபாவளியன்று முன் இரவு ரிலீஸ் செய்திருந்தீர்கள்.

  நள்ளிரவு வரையில் அலசலை ஆரவாரமாக்கிட்டு,அடுத்த நாளும் தொடரலாம்....!!

  ReplyDelete
  Replies
  1. பண்ணீட்டாப் போச்சி...

   Delete
 18. அன்பு எடிட்டர் வணக்கம் ரெகுலர் சந்தா, ஜம்போ சந்தா இரண்டையும் ஒரே நேரத்தில் அறிவித்தால் பணம் செலுத்த வசதியாக இருக்கும்.வருட நடுவில் பணம் செலுத்த அனுமதி வாங்க பிரயத்தனப்பட வேண்டியிருக்கும்

  ReplyDelete
 19. ஜம்போ மகா தேவா!!!!!!!

  ஜேம்ஸ் பாண்டுரங்கா !!!!!!

  👌👌👌👌👌👌👌👌

  ReplyDelete
  Replies
  1. நாயத்துகெழம ஒருத்தரையும் காணோமே.

   புலவங்க அல்லாரும் தீவாளிக்கி dress எடுக்க போயி சிக்கி சின்னா பின்னமாயி கெடக்காங்களோ....

   Delete
  2. தீவாளிக்கி கொஞ்சமே முன்னால கெடக்கட்டும்.

   Delete
  3. தீவாளிக்கு ட்ரெஸ் எடுக்கும் நம்ம கதையை 2ஆண்டு முன்னாடியே போட்டேன் ஜி. அப்ப தாங்கள் மெளன வாசகர்னு நினைக்கிறேன். மீண்டும் தேடி போடுறேன், போரான சமயத்தில்...!!!!

   Delete
  4. நம்ப கதய கீழ போட்றுக்கேன் டெ வி..

   Delete
 20. ///மாதக் கடைசிக்கு முன்பாய் இதழ்களை உங்களிடம் ஒப்படைத்து விடுவது உறுதி guys ! நீங்களே சொல்லுங்களேன் - எப்போது வேண்டுமென்ற தேதியை !! ///----

  நவம்பர்6-செவ்வாய் தீபாவளி

  அக்டோபர் 31புதன்கிழமை அல்லது

  நவம்பர்1 வியாழன் அனுப்பலாம் சார்.

  வார இறுதியில் பார்சலை கைப்பற்றி கொண்டு, தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் நண்பர்களுக்கு வசதிப்படும்.

  எங்களை போன்ற லோக்கல்லயே இருக்கும் நண்பர்களுக்கு என்று அனுப்பினாலும் ஓகேதான் சார்.

  இம்முறை வெளியூர் செல்லும் நண்பர்களுக்கு முன்னுரிமை தாருங்கள். அவர்கள் பண்டிகையை உற்சாகத்தோடு செலிபரேட் செய்ய இது வகை செய்யும்.

  ReplyDelete
 21. ஆசிரியர் சார் @

  ஆனா இந்த வாரம் ஜூன் டூ அக்டோபர் இதழ்கள் பற்றிய ரிவியூ பார்ட் 2என்று தானே அறிவித்து இருந்தீர்கள்???

  பதிவு மாறிய மர்மம் என்னவோ!!!

  ReplyDelete
  Replies
  1. அதானே! எங்கேயோ இடிக்குதே,
   என்னமோ மிஸ் ஆவுதேன்னு பாத்தேன்!!

   Delete
  2. The reason behind this change is just 3 words..

   BOND...JAMES BOND..!!!

   Delete
 22. ராணி காமிக்ஸ்ல ஜேம்ஸ் பான்ட் பிச்சி உதறியிருப்பார். என்னோட கனவு நாயகனாக திகழ்ந்தவர். இப்பொழுது நம்ம காமிக்ஸ்ல. டண்டணக்கா ஜாலி

  ReplyDelete
 23. sir, "singathin siru vayathil" padithathu pol ullathu.Kindly share your experience with Rani comics , Metha comics and Megala comics heroes like this.It will be another form of Largo Winch Stories.

  ReplyDelete
 24. நெவர் சே நெவர் எகெயன்- 007 படம் மொத மொத மாரியம்மன் திருவிழாவில் பார்த்தது. அப்போலோம் திருவிழா என்றால் இரவில் வேஷ்டியை சுவரில் திரையாக கட்டி தினம் 2படம் போடுவாங்க. அதான் கிராமத்தில் பாட்டு கச்சேரிக்கு முந்தையது.

  அப்போது பதிந்த 007, பிறகு ராணி காமிக்ஸ்ல பார்த்து பரவசப்பட்டேன்.

  இப்போது மீண்டும் அசத்தலான வண்ணத்தில், அசாதரமான தரத்தில் 007ஐ பார்க்கையில், அதே 15 வயது உற்சாகத்தோடு உள்ளம் துள்ளுது.

  ReplyDelete
  Replies
  1. டன்டட டன்டட டன்டட டன்டாஆஆன்...டூமீல்.. பாண்ட்...மை நேம் ஈஸ் ஜேம்ஸ் பாண்ட்!---- என 007அறிமுகம் ஆகும் போது பறக்கும் விசில் இந்த அட்டை படத்தை பார்த்த உடன் பின்னணியில் ஒலிக்கிறது!


   செமத்தியான ஒர்க் சார்! வாழ்த்துகள் 🎊

   Delete
  2. துப்பாக்கி குண்டு சீறிப்பாயும் மஞ்சள் தீ-கழுத்தை துளைக்கும் நீல வண்ணம்-சிதறடிக்கும் சிவப்பு இரத்தம்... 3பேனல்களில் 3ஜாலங்கள். கதை முழுமையாக எப்படி இருக்குமோ?????

   உடனடியாக 1ம் தேதி வராதாஆஆஆஆ!!!!

   Delete
  3. நெவர் ஸே நெவர் அகெய்ன் வந்தப்ப ,ரோஜர்மூர் பட்டய கெழப்புன தி மூன் ரைடர் வந்திச்சே....

   ரெண்டு பாண்டு படம்ல அப்ப ரிலீஸு

   Delete
  4. ///நெவர் ஸே நெவர் அகெய்ன் வந்தப்ப ,ரோஜர்மூர் பட்டய கெழப்புன தி மூன் ரைடர் வந்திச்சே....///

   அது 'மூன் ரேக்கர் ' சார்.

   ரெண்டுமே யாருமே எதிர்பார்க்காத வகையில ஒரே வருஷத்துல ரீலீஸ் ஆனது.ஆனா ஜெயிச்சதென்னமோ ரோஜர் மூர்தான்.

   Delete
  5. @STV

   ///நெவர் சே நெவர் எகெயன்- 007 படம் மொத மொத மாரியம்மன் திருவிழாவில் பார்த்தது///

   மாரியம்மன் கோவில் விஷேசத்துல பாண்ட் படமா ?

   Delete
  6. ஒருவேளை ஆத்தா பாண்ட் ரசிகரா இருப்பாங்களோ.

   Delete
  7. GP@ & ஃப்ரெண்ட்ஸ் @ பண்டிகை சமயத்தில் ஊர் ஒன்று கூடி மகிழ நான் சின்ன பயலா இருந்தபோது கூத்து கலைஞர்களின் கூத்து நடக்கும்.

   ஒரு கட்டத்தில் பட்ஜெட்டை சமாளிக்க ஒருநாள் கூத்தும், மற்ற நாட்களில் இப்படி திரைப்படங்களும் போடுவாங்க. தமிழ் படம் ஏதோஒன்னு பெரும்பாலும் அய்யா MGR திரைப்படம் தான். அது முடிந்தவுடன் ஒருநாள் ப்ரூஸ்லீ, மறுநாள் ஜாக்கி சான், அடுத்த நாள் 007னு போடுவாங்க. சில பாட்டிகள் நூங்காம எங்களோடயே விடியற்காலை வரை பார்ப்பாங்க!

   அதெல்லாம் ஒருகாலம்; இனி நினைவில் மட்டுமே ஞாபக படுத்தி மகிழ முடியும்.

   Delete
  8. // உடனடியாக 1ம் தேதி வராதாஆஆஆஆ!!!!//
   வரும்,உடனே காலண்டரை எடுங்க,தேதிகளை கிழிங்க,17 சீட்டை கிழிச்சா போதும் நவம்பர் 1 ந் தேதி வந்துடும்,ஹிஹி.

   Delete
  9. ரவி@ஹா...ஹா...! அதுக்கு முன்னாடி 18ந்தேதியை கிழிச்சி அட்டவணை பார்த்துடுவோம்!

   Delete
  10. அதா ஆசிரியர் நல்லநாள் பாத்து கேளுங்கங்றாறே,,,நமக்கு எல்லா நாளும் நல்லநாள்தாமே!நாளிக்கே கேட்டா போது, வாணாம்னா சொல்லப்பூராரு

   Delete
 25. This comment has been removed by the author.

  ReplyDelete
 26. ஹலோ சார்..

  James bond pictures are rocking. ராணி காமிக்ஸில் ஜேம்ஸ் பாண்டின் நெற்றியில் சுருண்டு விழும் முடி அழகு என்றால், இதில் படங்கள் மிக மிக நேர்த்தி . முகம் சரியாய் தெரியவில்லை. ஆனால் படங்களும் தரமும் உண்மையில் கண்ணில் ஒத்திக் கொள்ளுமளவு இருக்கும் போல. அதுவும் அந்த தோட்டா கழுத்தில் செல்வதை எக்ஸ்ரேயில் காட்டுவது புதியது. அருமை.

  Welcome to THALA.
  #நீங்களே சொல்லுங்களேன் - எப்போது வேண்டுமென்ற தேதியை !! #

  நீங்க ஏன் எல்லா புத்தகங்களையும் 16 ந்தேதி சரஸ்வதி பூஜைக்கு அனுப்பிட்டு, பாஸ்டா ஓரு ஸ்பெஷல் டெக்ஸ் தீவாளி மலர் போடக் கூடாது. இல்ல சும்மாதான் இருக்கேன்னு சொன்னீங்களே அதான் :-)
  Think it over. ஏன்னா நம்மெல்லாம் சும்மா இருக்கவே கூடாது. ஏதாவது டென்ஷன்ல உர்ருனு மோட்டுவளைய பார்த்துக்கிட்டே இருக்கணும்

  ReplyDelete
  Replies
  1. இதுங்கூட தேவலாம் போலருக்கே...

   எடிட்டரய்யா

   கட்ட வெரல முழுங்க ரெடியா...

   Delete
 27. சார் உண்மய சொல்ல என்பதுகளின் மத்திக்கே சென்று வருகிறேன் ! நான் படித்த முதல் இதழ் இரும்பு மனிதன் என ஆயிரத்து பதிமூனாம் முறை சொன்னாலும் அலுப்பதில்லை! அதை படிதுததும் எனக்குள் ஒரு பரபரப்பு , இதப்போல கதைகள் அகப்படுமா என ஏழரை வயதில் லயிக்க, கடையில் தட்டுபட்டது சுறா வேட்டை. அப்ப மீன்கள் , ஆறுகள்னா உயிர், அந்தக்காலம் எங்க ஊருக்கு விடுமுறைக்கு படையெடுக்க இதான் காரணம் ! ஆனா அந்த கதய வாங்குனேனான்னு நினைவில்லை! உண்மய சொன்னா பிறகு வந்த ஜேம்ஸ் கதைகளை ஒதுக்கி அடுத்து வரும் கௌ பாய், ஷெரீஃப், இராணுவ கதைகள தேடி மகிழ்வேன். நம்ம லயனோ முத்துவோ எது வந்தாலும் வாங்குவேன் !இஃப பாண்ட் கதைகள்னா அட்டகாசம தோணுது மாடஸ்டி போலவே!

  ReplyDelete
  Replies
  1. அப்ப ஜேம்ஸ் பிடிக்காத காரணம் உடைகள் , முத்தம் காரணம், ,,,நம்ம இதழுகள் சூப்பர் ஹீரோக்கள், சரித்திர கௌபாய் கதைகள் என அனைத்தும் பிரம்மிப்பே, சிறுவர்கள கவர அயர்ன்மேன், ஸ்பைடர் மேன்னு விட்டா என்னன்னு தோணுது, ஏன்னா நானிருப்பது என்பதுகளின் மத்தியில் .வெளில தற்காலத்துக்கு வந்தா ஜேம்ஸ் இப்ப அசத்துறார் ராணி காமிக்ஸிலும் , அசத்துவார் லயனிலும் ...

   Delete
 28. புனிதப்பள்ளதாக்கு- மினிவில்லர் அற்புதம்.

  இருளின் மைந்தர்கள்-ன் ட்ரெய்லரை ஞாகப்படுத்துகிறது.

  ReplyDelete
 29. காலங்காத்தால 4 மணிக்கி எந்திரிச்சி கெய்சர்ல சுடுதண்ணிய போட்டு , மீசை-தாடிக்குள்ளாற பல்லு எங்கன இருக்குன்னே தெரியாத யோகா சாமியாரு கம்பெனி பேஸ்ட்ட எடுத்து ,

  நரகாசுரன கொல்றதுக்கு முன்னால படார்னு பனமரத்த புடுக்கி பல்லு வெளக்குன பீமசேனன் மாதிரி நம்பளோட டூத்ப்ரஷ்ஷ எடுத்து நறநறன்னு தேச்சி,

  வெள்ளப்பூடு போட்டுக் காச்சுன எண்ணெய எடுத்து ஒடம்பு முழுக்க தேச்சிட்டு(வழுக்கி விழுந்த கிண்ணிய சகதர்மிணிக்கி தெர்யாம எடுக்கலாம்னு நெனக்கிறப்ப, 007 னவிட வேகமாக துப்பறிஞ்சி காலங்காத்தால திட்ற வூட்டுக்காரம்மாவ ரசிச்சிக்கிட்டு (வேற என்ன பண்றது),

  ஊரே வேட்டு விட்றப்ப தூங்கீட்டுறுக்குற ( நடு ராத்திரி வர மூஞ்சி மொகர தெரியாதவங்களுக்கெல்லாம் தீவாளி வாழ்த்து சொல்லி சிரிச்சிட்டு பேருக்குகூட பெத்தவங்கள வாழ்த்தாத )நம்ம வாரிசுகள எழுப்ப கர்ண கடூரமா கொரல் கொடுத்து அவங்களோட திட்டுகள எண்ண ஊத்துன காதுல வாங்கி கட்டிக்கிட்டு ,

  நம்ப பால்யத்துல குளிச்ச அந்த வெட்டவெளி கொல்லப்புர வெறகடுப்பு வெந்நி நாட்கள நெனச்சி கலங்கி, பழய நெனப்புடான்னு சீயக்கா தூள தலைக்கி தேய்ச்சி அப்பறமா பத்தாம ஷாம்ப்ப போட்டு மீதி எண்ண வழுவழுப்ப கரச்சிட்டு ( ஊடால பாத்ரூம் டைல்ஸ்ல குளிச்ச எண்ண பிசுக்குல வழுக்கி),

  தொவட்ட துண்ட எடுக்க மறந்த நம்மள நாமே திட்டிக்கிட்டு ஊட்டுக்காரம்மாட்ட எடுத்தாரச் சொல்லி தெகட்ட தெகட்டத் திட்ட வாங்கிட்டு,

  வெற்றி( வெட்டி) வீரனா வெளியவந்து எப்பயோ நம்மள வுட்டுப் போயிட்ட நம்ம பெருசுங்க போட்டோகள எடுத்து வச்சி, அவுக முன்னாடி நுனி வாழ எலய விரிச்சி ( எனக்கென்ன ஏழுக் கையா இருக்கு)) இட்லிய வச்சு சட்னி சாம்பாரு கேசரி ஸ்வீட் இத்யாதியெல்லாம் படச்சிட்டு ,

  புதுத்துணிகளுக்கு மஞ்சத்தடவி வைங்கன்னு வசவ இந்தக்காதுல வாங்கி அந்த எண்ணைத்தோய்ந்த காதுல வுட்டுட்டு,

  அக்கடான்னு உக்காந்து டீ தர்றியாம்மான்னு கேக்கப் போயி எனக்கு யாரு தர்றாங்கன்னு புழுங்குற பொண்டாட்டிய சம்மாதானப்படுத்தரேன்னு போயி வடச்சட்டியில சூட வாங்கி வெரல ஊதிக்கிட்டு பரிதாபமா முழிக்கிற நம்மளப்பாத்து சிணுங்குற அவளோட தலய கோதிவிட்டுட்டு ,

  இதுக்குள்ளாற மணி எட்டுங்கிறதால மறுபடியும் போயி நம்ம அதிமேதாவி பசங்கள எழுப்புனா.....

  டேய்... தீவாளிடா... எந்திரிங்க...

  (எந்திரிச்சி....)
  எண்ண தேச்சிக் குளிக்கணும்ல...

  (குளிச்சி....)
  புது ட்ரெஸ்லாம் போடணும்ல...
  ((போட்டு ...)

  பட்டாசு விடணும்ல...
  ( நீ போயி வுடு ....)

  இந்த டயலாக்கல்லாம ரசிச்சி...
  சிலபல இனிப்புகள பயந்துகிட்டே நைசா உள்ள தள்ளி டிபன் முடிக்கிறப்ப பணி பத்தாயிடும்.....

  டேபிள் மேல வா வான்னு கூப்புட்ற தீவாளி காமிக்ஸ் தடிபுக்க (அதுவரக்கும் வைராக்கியமா படிக்காம இருந்த) எடுத்துட்டு உக்கார்ற அந்த சொகமிருக்கே.......


  ஆஹா.....
  அனுபவிச்சவங்களுக்குப் புரியும்....

  அதாலதா சொல்றேஞ்சார்....
  நவம்பர்ல ஒண்ணோ ரெண்டோ புக்க அனுப்புங்கங்கங்க எடிட்டரய்யா....

  ReplyDelete
  Replies
  1. மலரும் நினைவுகள் அற்புதம்.பேச்சு வழக்கை வழக்குல படிப்பதே தனி சுகம்தான்.

   Delete
  2. செம J ji😁😁😁

   //
   டேய்... தீவாளிடா... எந்திரிங்க...

   (எந்திரிச்சி....)
   எண்ண தேச்சிக் குளிக்கணும்ல...

   (குளிச்சி....)
   புது ட்ரெஸ்லாம் போடணும்ல...
   ((போட்டு ...)

   பட்டாசு விடணும்ல...
   ( நீ போயி வுடு ....)///---

   இதான் இன்று எல்லா வீட்லயும் நிலை. நையாண்டி யாக ரியாலிட்டி யை எடுத்துரைக்கும் வித்தை கலக்குது. தொடரட்டும் கலக்கல்கள்.

   Delete
 30. சாமியோவ்

  "பிரளயம்"னு தமிழ் காமிக்ஸ் பேரு பாத்தாலே லைட்டா செரிமானம் ப்ராப்லம் வருது சாமியோவ் ;-) இந்த தபா ராக்சன் (Action) நல்லா இருந்தா சரி - அம்புட்டுதேங் !

  பி.கு : என்னோட பாஸ் நமது நெடுநாள் tex ரசிகர் உங்களுக்கு ஒரு மிரட்டல் கடிதம் எழுதலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் :-) இந்த வரி உடான்ஸ் அல்ல :-) :-)

  ReplyDelete
  Replies
  1. ரசனைகள் பலவிதம் என்பது உண்மை தான் போல..எனக்கு அந்த "பிரளய " கதை செம மாஸாக தோன்றியுத சார் இரண்டாம் கதையை விட...:-)

   Delete
  2. இரண்டாம் கதை டைனமைட் தோற்றது போங்கள் ....முதல் கதையில் புயலாய் அழகாய் அற்புதமாய் வலிமை பெற்று இரண்டாம் கதையில் டைனமைட்டாய் பிரளயம்

   Delete
 31. Dear Editor,

  On a serious note: Been waiting for this title for some time now. Glad that two are coming in Jumbo and I hope with better reception more 007 will follow. FC !

  ReplyDelete
 32. உங்களின் ஜேம்ஸ் பாண்ட் முன்னோட்டமே இதழை காண இதயம் பலமடங்கு துடிக்கிறது.ராணிகாமிக்ஸ் ஜேம்ஸ்பாண்டிற்கும் இந்த ஜேம்ஸ் பாண்டிற்கும் சித்திர மாறுதல்கள் காணப்பட்டாலும் மிக சிறப்பாகவே இருக்கிறது.எது மாறினாலும் " மை நேம் இஸ் பாண்ட்....ஜேம்ஸ் பாண்ட் " என்ற அறிமுக வசனத்தை மட்டும் மிஸ் செய்யாதீர்கள் சார்.அந்த வரிகளை படிக்கும் பொழுதே ஒரு சிலிர்ப்பு தன்னால் பாயும்.

  கூடவே தல டெக்ஸ் எனும்போது வரும் மாதம் அதகள அட்டகாசமாக இருக்க போகிறது என்பது மறுக்க முடியா உண்மை..

  இதழை அனுப்ப நாளையே நீங்கள் ரெடி என்றாலும் எங்களுக்கு சம்மதமே ...ஓகேவா சார்..:-)

  ReplyDelete
  Replies
  1. //இதழை அனுப்ப நாளையே நீங்கள் ரெடி என்றாலும் எங்களுக்கு சம்மதமே ...ஓகேவா சார்..:-)//அனுப்பியாச்னு நாளை இரவே ஒரு பதிவு வரலாம்

   Delete
 33. தொலைக்காட்சி மோகம் எல்லாம் எப்பொழுதோ போய்விட்டது சார்.ஆனால் காமிக்ஸ் மோகமும் ,உங்கள் பதிவு மோகமும் இறுதிவரை குறைய போவதில்லை என்பது மட்டும் நன்றாகவே உணர முடிகிறது.

  எனவே அடுத்த பதிவை விரைந்து போட்டு தாக்குங்கள்..

  ஆல் வெயிட்டிங்...:-)

  ReplyDelete
 34. வாவ் ஜேம்ஸ் அட்டை படம் அதகளம் சார்...இது போன்ற கிளாசிக் அட்டயையே நான் டெக்ஸ் ஸ்பெசலுக்கு கோரிக்கை வைக்கிறேன்.. அந்த கண்களை நெருடாத கலர் மற்றும் அந்த சீரிசான முகம் அருமை அருமை அருமை.. கதையை படிக்க ஆவலுடன்.

  ReplyDelete
  Replies
  1. கதையின் வகையை பொறுத்து ஜி.. ஆனாலும் இந்த வகை அட்டைப்படங்களில் ஒரு மிடுக்கு இருப்பதுபோல் எனக்கு தோன்றுகிறது

   Delete
 35. நண்பர் Prakasam Kathiresan அவர்களின் பதிவு!
  எப்பொழுதும் தோட்டாக்களோடு உறவாடிக் கொண்டிருக்கும் ரேஞ்சர், வன்மேற்கின் நீதிக்காவலர் "Tex Willer" உடன் ஒரு நேர்காணல். நான் : வணக்கம். (சாய்வாக அமர்ந்திருந்த அந்த உருவம் சற்றே நிமிர்ந்து முன்னுக்கு வந்து வணக்கம் என்றது.ஆம்! அது சாட்சாத் டெக்ஸ் வில்லரேதான்!!). நான் : (முன்ஜாக்கிரதையாக) உங்கள் பரபரப்பான ஓட்டத்திற்கிடையேயும் பேட்டி கொடுப்பதற்கு நன்றி.கேள்விகள் கொஞ்சம் பாதகமாக இருந்தால் முஷ்டியை முறுக்கி விடாதீர்கள். டெக்ஸ் : ஹா..ஹா..ஹா..(அண்ணாந்து சிரிக்கிறார்)..பயப்படாதீர்கள்.. என்னைமீறி என் கைகள் வேலைசெய்துவிடாது. நான் : பொதுவாகவாகவே நீங்கள் முரட்டு சுபாவம் உள்ளவர்.. என்னதான் துஷ்டர்களாகயிருந்தாலும் நீங்கள் அவர்களிடம் மிகவும் மூர்க்கமாக நடந்து கொள்கிறீர்கள் என்றெல்லாம் சொல்கிறார்களே.. டெக்ஸ் : இல்லை.. நான் எதிரிகளிடம் போரிடும்போது நீங்கள் என் பின்னால் நின்று பார்க்கிறீர்கள்.. அதனால் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது.. நீங்கள் எதிரியின் பின்னால்சென்று அந்தக் கோணத்திலிருந்து பார்க்க வேண்டும்.. நான் : கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் .. டெக்ஸ் : அதாவது நான் கையாளும் எதிரிகள் ரொம்பவும் முரடர்கள்.எந்த பாதகத்தையும் செய்யத் துணிந்தவர்கள்.. ஆகவே அவர்களிடம் நாங்களும் முரட்டுத்தனத்தைக் காட்டவேண்டியுள்ளது.முள்ளை முள்ளால் எடுப்பதுபோல.. நான் : ஆனால் நீங்கள் அந்த துஷ்டர்களை சட்டத்தின் பிடியில் ஒப்படைக்கத்தான் விரும்புவீர்கள் இல்லையா? டெக்ஸ் : கண்டிப்பாக..ஏனென்றால் சட்டத்தின் மூலம் அவர்கள் தண்டிக்கப்பட்டால்தான் தண்டனையோடு சேர்ந்து அவர்கள் ஊரறிந்த குற்றவாளிகளாக அறியப்படுவார்கள். ரேஞ்சர்களாகிய நாங்களே தண்டித்தோமானால் இது ஏதோ பழிவாங்கல் என்பதாக சுருங்கிவிடும். நான் : நீங்கள் சரியாக சிந்திக்கிறீர்கள்... டெக்ஸ் : ஆமாம்.. நாங்கள் பாலைவனத்திலே இருந்தாலும் எங்கள் மூளை வறண்டுவிடவில்லை.. நான் : இருந்தாலும் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் நீங்கள் துப்பாக்கியோடும் தோட்டாக்களோடும் அலையப்போகிறீர்கள்? ஒரு நாகரிக உலகத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் உங்களுக்கு இல்லையா? டெக்ஸ் : அதற்காகத்தான் நாங்கள் துப்பாக்கியோடு அலைகிறோம்..என்றாவது நாகரிகம் அடையவேண்டுமென்றுதான் இன்று நாங்கள் போராடுகிறோம்..சுருங்கச்சொன்னால் எதிர்காலத்தில் நீங்கள் போராடாமல் சுகமாக வாழ்வதற்குத்தான் இன்று நாங்கள் போராடுகிறோம்.. நான் : ஆனால் சிலர் உங்கள் மீது கோபமும் வருத்தமும் எரிச்சலுமடைகிறார்களே? டெக்ஸ் : புகழ்பெற்றவர்களின்மீது இம்மாதிரி எரிச்சல் ஏற்படுவது சகஜம்தான்..எங்களளவில் எந்தத் தவறுமில்லை. நான் : ஆனால் இதற்கு மாறாக உங்கள் பிறந்த நாளை உலகம் முழுவதும் சமீபத்தில் கொண்டாடினார்களல்லவா? டெக்ஸ் : ஆமாம்.. அவர்களுக்கு என் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்...(தொப்பியின்மீது கைவைத்து மரியாதை செய்கிறார்). நான் : சரி இப்போது உங்கள் நண்பர்களைப்பற்றிக் கூறுங்கள்..முதலில் கார்ஸன்..(டெக்ஸின் முகம் மலர்கிறது)... டெக்ஸ் : கிழம் கிழடு என்றெல்லாம் நான் அவரை சீண்டினாலும் அவரொரு அற்புதமான வீரர்..பலமுறை களத்தில் எனது உயிரைக் காப்பாற்றியுள்ளார்.. என் ஆத்ம நண்பர்.. நான் : உங்கள் மகன் கிட்? டெக்ஸ் : வளர்ந்து வரும் ஒரு ரேஞ்சர்..வேண்டுமென்றேதான் அவரை இப்பணியில் ஈடுபடுத்தினேன்.அவர் என்னுடைய மகனாக இருந்தாலும் களத்தில் ஆபத்தான பணிகளில் அவரை ஈடுபடுத்த நான் தயங்கியதேயில்லை! நான் : டைகர்? டெக்ஸ் : சமரசமில்லா போராளி.. நீதியின் பக்கம் இருப்பவர்..அதற்காகத் தன் செவ்விந்திய இனத்தையும் எதிர்க்கத் துணிந்தவர்..நியாயமென்றால் நியாயம்தான்! அவரிடம் நானே சற்று ஜாக்கிரதையாக இருப்பேன்! நான் : சரி..இப்போது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மறக்கவே முடியாத கொடூரம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்?.. டெக்ஸ் : (

  ReplyDelete
  Replies
  1. டெக்ஸ் : (முகவாட்டத்துடன்) முதலாவது..எனது மனைவி லிலித் கொடூரமாக சுடப்பட்டு இறந்தது..இரண்டாவது.. நான் : இரண்டாவது? டெக்ஸ் : எப்போதும் களத்தில் துப்பாக்கி முழக்கங்களுக்கிடையே நீதிக்காகப் போராடும் ஒரு களப் போராளியை இப்படி ஆறஅமர பேட்டி காண்கிறீர்களே இதைவிட வேறென்ன கொடூரம் இருக்கமுடியும்?.. என்று கேட்டபடியே ஹா..ஹா..ஹாவென்று சிரிக்கிறார்..இருந்தாலும் உங்களுக்கு என் வாழ்த்துகள்..எனக் கூறியபடியே நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளி எழுகிறார்...ஆறடி உயரமுள்ள அந்தக் கம்பீரமான உருவம் எழுந்து கைகுலுக்குவதற்காகத் தன்னுடைய முரட்டுக்கையை நீட்டியபோது நானும் அந்தக் கையைப்பற்றிக் குலுக்கினேன்.அந்த இரும்புக்கையில் பஞ்சுபோன்ற ஒரு மிருதுத்தன்மை இருப்பதை உணர்ந்தேன்..அவர் முகத்தில் ஒரு அப்பழுக்கில்லாத புன்னகையையும் கண்டேன்..!

   Delete
  2. அட்டகாசமான பேட்டி..

   படைத்த நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்..

   Delete
  3. அருமை,அருமை,டெக்ஸ் வில்லரின் நிஜ தரிசனத்தை பார்த்த் உணர்வு.
   👏👏👏👏👏👏

   Delete
  4. அருமையான பேட்டி..

   "இரும்புக் கையில் பஞ்சு போன்ற மிருதுத் தன்மை"

   நல்ல உதாரணம்.

   Delete
  5. பிரமாதம்! ஓவியமே இல்லாமல் டெக்ஸை கண்முன்னே நிறுத்தியிருக்கிறீா்கள்! அற்புதம்!

   Delete
  6. nice article!!

   ///முதலாவது..எனது மனைவி லிலித் கொடூரமாக சுடப்பட்டு இறந்தது.///

   lilith had not been shot dead....she had been one of the victims of the mini biological warfare waged against navajos ..she died as a result of an infectious disease...though tex had been the primary target he had escaped as he had been away from the territory ...

   Delete
  7. பகிர்ந்தமைக்கு நன்றி தல. நண்பர் பிரகாசமுக்கு வாழ்த்துகள் மற்றும் இங்கியும் வந்து உங்கள் கருத்துகளை பதியுங்கள் என்ற வேண்டுகோளும்.

   Delete
  8. லிலித் இறந்தது திட்டமிட்டு போர்வைகள் மூலம் பரப்பப்பட்ட அம்மைத் தொற்றுக்கிருமிகள் வாயிலாக.

   Delete
  9. அருமை !லலித் இறப்பு மட்டும் நண்பர்கற் கூறியபடி மாறிடுச்சி

   Delete
 36. தினகரன் நாளிதழின் வெள்ளிமலர் பகுதியில் ஜேம்ஸ்பாண்ட் பற்றி திரு.யுவகிருஷ்னா அவர்கள் வாரம்தோறும் ஒரு தொடர்கதையாக எழுதி வருகிறார்.

  பாண்டைப் பற்றிய ஏகப்பட்ட விசயங்கள் கொட்டிக் கிடைக்கிறது.

  பாண்ட் விசிறிகளுக்கு லிமிடெட் மீல்ஸ் காலவரையின்றி..!(எனக்கும் சேர்த்து) .

  ReplyDelete
  Replies
  1. அந்த தொடர் முடிஞ்சவுடன் புக்கா போட்டாக் கூட வாங்கிடலாம்.

   Delete
  2. // And வர்ணச் சேர்க்கையின் மிரட்டலை விளக்க தொடரும் உட்பக்கங்கள் போதுமென்பேன். //
   அட்டைப்படம், 007 டீஸர் எல்லாம் கலக்குது சார், கதையும் அசத்தும் என்று நம்புகிறேன்,
   தீபாவளிக்கு முன்பே இதழ்களைப் படித்து முடிக்க வாய்ப்பு இருப்பதால்,தீபாவளியன்று கையில் குண்டு புக் இல்லை என்றால் கூட பரவாயில்லை,அன்றைக்கு ஒரு குண்டு புக் ஸ்பெஷல் அறிவிப்பாவது வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் சார்,உங்கள் அறிவிப்புகளே எங்களுக்கு தித்திப்பான பலகாரங்கள்,உங்கள் அறிவிப்புகளே எங்களுக்கு உண்மையான தீபாவளி....

   Delete
  3. //"புனிதப் பள்ளத்தாக்கு" yet another வித்தியாசமான டெக்ஸ் சிறுகதை.//
   மினி டெக்ஸ் கதைகள் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது சார்,இதை முடிந்தவரை ஆண்டுதோறும் தொடர்ந்தால் மகிழ்ச்சி.

   Delete
  4. சார்.i நானும் அந்த தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன். ஆனால், அது வெள்ளித்திரையில் ஜேம்ஸ் பாண்ட் - யின் வெற்றி பற்றியது.
   நாம் காமிக்ஸ் ரசிகர்களாய் இருப்பதால் சித்திர கதைகளாக ஜேம்ஸ் பாண்டின் பங்க ளிப்பு என்ன? ராணிக் காமிக்ஸ் - யில் வெளிவந்த கதைகள் அனைத்தும் இயான் ப்ளமிங் -எழுதிய கதைகள் தானா? அல்லது வேறு Team _ ஆ. என்க்குக்கு ஜேம்ஸ் பாண்ட் என்றால் ராணிக் காமிக்ஸில் வெளிவந்த பாண்ட் தான். அந்த ஓவியரின் கைவண்ணத்தில் நல்ல நே ரம் எம்ஜிஆர் போல் ஒரு மிடுக்கு இருக்கும்.So, அந்தஓவியர், கதாசிரியர்கள் பற்றி தகவல்கள் ப்ளீஸ் i
   முன்பு நமது ஆசிரியர் ஜேம்ஸ் பாண்ட் வெளியிட்ட போது பான்ட் - இருக்க வேண்டிய இடம் பரண் தான் என்று கமெண்ட் வந்தது. ஆனால் தற்போது நிறைய ஆதரவு இ ருப்பது சந்தோசம்-(நிச்சயம் லார்க் கோவிற்குகு ஒரு மாற்றாக இருப்பார் என்று கருதுகிறேன்).

   Delete
  5. சார்.i நானும் அந்த தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன். ஆனால், அது வெள்ளித்திரையில் ஜேம்ஸ் பாண்ட் - யின் வெற்றி பற்றியது.
   நாம் காமிக்ஸ் ரசிகர்களாய் இருப்பதால் சித்திர கதைகளாக ஜேம்ஸ் பாண்டின் பங்க ளிப்பு என்ன? ராணிக் காமிக்ஸ் - யில் வெளிவந்த கதைகள் அனைத்தும் இயான் ப்ளமிங் -எழுதிய கதைகள் தானா? அல்லது வேறு Team _ ஆ. என்க்குக்கு ஜேம்ஸ் பாண்ட் என்றால் ராணிக் காமிக்ஸில் வெளிவந்த பாண்ட் தான். அந்த ஓவியரின் கைவண்ணத்தில் நல்ல நே ரம் எம்ஜிஆர் போல் ஒரு மிடுக்கு இருக்கும்.So, அந்தஓவியர், கதாசிரியர்கள் பற்றி தகவல்கள் ப்ளீஸ் i
   முன்பு நமது ஆசிரியர் ஜேம்ஸ் பாண்ட் வெளியிட்ட போது பான்ட் - இருக்க வேண்டிய இடம் பரண் தான் என்று கமெண்ட் வந்தது. ஆனால் தற்போது நிறைய ஆதரவு இ ருப்பது சந்தோசம்-(நிச்சயம் லார்க் கோவிற்குகு ஒரு மாற்றாக இருப்பார் என்று கருதுகிறேன்).

   Delete
 37. தமிழில் புதிய அவதாரத்தில் தோன்றும் ஜேம்ஸ் பாண்டிற்கு மலர் கொத்துடன் வரவேற்பு! அட்டை படம் சூப்பர்!

  ReplyDelete
 38. ரஷ்யா, அமரிக்காவ நினைவுறுத்தும் அட்டை..பின்னட்டை பிரம்மாதம்! ஸ்பெசலா என்ன செஞ்சிருப்பீங்க!!!!
  சார் தீபாவளி வெடில்லா வெடிக்குது....டைகர் கதய கார்சனின் கடந்த கால அளவுக்கு எதிர் பார்க்கும் எனக்கு உங்க பதிவு ஆவல தூண்டுது ....நாளைக்கே அனுப்பலாமே! அட்டவணைய தீவாளி கொண்டாட்டத்துக்கு வெச்சிக்குவமே?

  ReplyDelete
 39. சட்டையில்லாமலும், அட்டையில்லாமலும் பட்டய கிளப்புது மினி டெக்ஸ்

  ReplyDelete
 40. wow ! aesthetics of bond pictures !!! shaken with delight ; but not stirred !!

  ReplyDelete
  Replies
  1. Few one liners from bond movies

   Octopussy

   Magda: “He suggests a trade. The egg for your life.”
   Bond: “Well, I heard the price of eggs was up, but isn’t that a little high?”
   On her Majesty's service


   (A villain chases Bond and skis into a snow-blower, which then sprays red snow.)
   Bond: “He had a lot of guts!”

   Tomorrow never dies

   Whilst Bond is in bed with his Scandinavian language tutor.)
   Bond: “I always enjoyed learning a new tongue.”

   Delete
  2. Also nostalgic செ அ....

   Delete
 41. புத்தகங்கள் ரெடியான உடனே அனுப்பவும். டைனமைட் ஸ்பெசல் மற்றும் தீபாவளி மலருக்காக வெயிட்டிங்.

  ரத்தப்படலம் நேத்து ஆரம்பிச்சி ஸ்பேட்ஸ் படிச்சிட்டு இருக்கேன். அருமையா போயிட்டு்இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. நான் போன ஆகஸ்ட்ல வந்த புக்கெல்லாமே இப்ப தான் படிக்கிறேன் ஜே சார். இந்த ஆகஸ்ட்ல வந்த புக்கை படிக்கிறது்பெரிய விசயமாச்சே. அதுவும் இதை டிசம்பர் லீவுல படிக்கலாம்னு இருந்தேன். தினம் 4-5 மணி நேரம் படிக்க வாய்பபு கிடைச்ச பயணம் ஒன்றினால் இப்பவே ஆரம்பிச்சுட்டேன்.

   Delete
  2. அப்ப 16 முடிஞ்சு 15 வயசு நடக்குதுன்னு சொல்றீங்க

   ஏன்னா நாங்கள்ளாம் முன்னால படிச்ச மூத்தவங்களாயிட்டம்ல

   Delete
  3. நான் இப்போது ரோகா நெக்ரா சிறையில் இருக்கிறேன்.

   Delete
 42. 007 ஐ படிக்க ஆவலாக காத்திருப்பேன்...

  ReplyDelete
 43. Vijayan sir, can you please send the next month book his month end (31st oct) So that we can get the book on thursday or friday!

  ReplyDelete
  Replies
  1. எல தம்பி நாளைக்கே அனுப்புவாறு , பொறுமை! பொறுமை?

   Delete
 44. ஒரு மாறுதலுக்கு வெளி நாட்டுசந்தாதாரர்களுக்கு முன்பே கிடைக்கும் படி அனுப்புங்கள் சார். ஒவ்வொரு முறை இதழ்கள் கிடைக்கும்போதும் இங்கே கச்சேரி ஓய்ந்திருக்கும்... மற்றபடி உங்கள் வேகம்கண்டு மகிழ்ச்சி. கலக்குங்கள் சார்.

  007 முதலில் படிக்க ஆவல்.

  ReplyDelete
  Replies
  1. ஆமா சார் இப்பயே அனுப்புங்க கோவை வாழ் வெளிநாட்டு மக்களுக்குமப்டியே

   Delete
  2. I totally support this. If possible send it early 😊

   Delete
 45. அந்த டெக்ஸ் மெபிஸ்டோ மாயஜாலக்கதையை முழுவதுமாக கலரில் போடுங்க சார்.

  ReplyDelete
 46. 007-ஐ விட தீபாவளி மலருக்காகத்தான் ஆவலோடு காத்திருக்கிறேன். கார்சனின் கடந்த காலம் போல, புயலுக்கொரு பிரளயம் போல டைகர் ஜாக்கின் இந்த காதல் கதையும் டெக்ஸின் டாப் 10 கதைகளுள் ஒன்றாக இருக்கும்.

  ReplyDelete
 47. இது ஒரு ஜாலியான கருத்து பரிமாற்றமே. நமது நாயகர்களை வரிசை படுத்தி பார்க்கும் பழக்கம் எனக்குள் நீண்டகாலமாகவே உண்டு. ஒரு சிலர்
  நிரந்தரமாக நிலைத்து நிற்க, பலர் ஒவ்வொரு மாதமும் வெளியாகும் கதைகளுக்கேற்ப இடம் மாறுவதுண்டு.
  கரண்ட் ட்ரெண்டில் உள்ள Top 35 நாயகர்கள் பட்டியல் இதோ,

  1. டெக்ஸ் (போட்டியின்றி தேர்வு)
  2. XIII (தரம் தலைமுறைக்கும்)
  3. லக்கி லூக் (7 முதல் 77 வரை)
  4. பிரின்ஸ் & கோ
  5. டைகர்
  6. லார்கோ
  7. பவுன்சர்
  8. ரிப்போர்ட்டர் ஜானி
  9. தோர்கல்
  10.சிக்பில் & கோ
  11.அண்டர்டேக்கர்
  12.C.I.D. ராபின்
  13.கமான்சே & கோ
  14.ஷெல்டன்
  15.லேடி S
  16.மேஜிக் விண்ட்
  17.புளூகோட்ஸ்
  18.ஜில் ஜோர்டான்
  19.மந்திரி
  20.ரின்டின்கேன்
  21.சுட்டி பென்
  22.டியுராங்கோ
  23.ஸ்மர்ப்
  24.மர்ம மனிதன் மார்டின்
  25.டயபாலிக்
  26.டைலன் டாக்
  27.கிளிப்டன்
  28.ஜெரெமெயா
  29.மேக் & ஜேக்
  30.டிரென்ட்
  31.மாடஸ்டி
  32.ஜூலியா
  33.புரூனோ ப்ரேசில்
  34.ரோஜர்
  35.லியானார்டோ

  இது எனது தனிப்பட்ட கருத்துக்களே. இதே போல் நண்பர்களின் பட்டியலையும் அறிந்திட ஆவல்.


  ReplyDelete
 48. எனது அபிமான ஹீரோ விங்-கமாண்டர் ஜார்ஜ்-ஐ விட்டுவிட்டீர்களே? இவரது சாகசங்கள் மீண்டும் வர வாய்ப்புள்ளதா?

  ReplyDelete
 49. warm welcome bond.
  bond my name is jamesbond.
  ஆவலுடன் 007 ஐ காணக் காத்திருக்கின்றேன்.அக் 30 அன்று எல்லாருக்கும் இதழ்கள் கிடைக்குமாறு செய்யலாம்.

  ReplyDelete
 50. வெள்ளிக் கிழமை அட்டவணையா.....!!!!!
  ஏ டண்டணக்க ஏ டண்டணக்கா
  ஏ டண்டணக்க ஏ டண்டணக்கா
  ஏ டண்டணக்க ஏ டண்டணக்கா

  அப்படிப் போடறா சரவணா குத்தாட்டத்தா !!!!.

  ReplyDelete
 51. புயலுக்கு (அட்டவணை பதிவு) முன் அமைதி.

  ReplyDelete
 52. நண்பர்களே வணக்கம்.
  வெள்ளிக்கிழமை வரவிருக்கின்ற 2019 அட்டவணையை நினைத்து அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

  கடந்த 2018 சந்தா எண்ணிக்கை 2017 சந்தா எண்ணிக்கையை விட 15சதவீதம் குறைவு என ஆசிரியர் ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.காரணம் விலை ஏற்றமா? அல்லது பிடித்த புத்தகங்களை மட்டும் வாங்கி கொள்ளலாம்? என்ற நிலைப்பாடா தெரியவில்லை.

  நான் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தது என் தந்தையின் வழிகாட்டுதல்.எனது தந்தை இரும்புக்கை மாயாவியின் தீவிர ரசிகர்.முத்து காமிக்ஸ் அனைத்தையும் சேகரித்து வைத்திருந்தார்.

  விமான கட்டுமான கம்பெனியில் பொறியாளராக பணியாற்றி வந்த எனது தந்தை பைபிள்(விவிலியம்)மேல் கொண்ட பற்றினால் பொறியாளர் பணியை விட்டு போதகராக பணியாற்றினார் அதனால் காமிக்ஸ் படிப்பதை விட்டார்.எனினும் எனக்கு காமிக்ஸ் தவறாமல் வாங்கி கொடுத்து விடுவார்.

  பின்நாட்களில் என் தந்தையிடம் இது பற்றி கேட்டபோது காமிக்ஸ் படிப்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத மகிழ்ச்சியை கொடுப்பது அந்த இனம்புரியாத சந்தோஷத்தை நீயும் பெற வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து வாங்கி கொடுத்தேன் என்று சொன்னார்.

  இன்று என் தந்தை என்னோடு இல்லாவிட்டாலும் அவர் நினைவாக காமிக்ஸ் புத்தகங்களை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன்.

  இதை நான் எதற்காக சொல்கிறேன் என்றால் இன்று நண்பர்கள் பலர் தங்களுக்கு பிடித்த காமிக்ஸ் மட்டும் வாங்குகின்றனர், குறிப்பாக கார்டூன் காமிக்ஸ் வாங்க ரொம்பவே யோசிக்கிறார்கள்.தங்கள் வீட்டு சிறார்கள் இதை விரும்புவார்களே என யோசிப்பது இல்லை.

  யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதை யாம் பெற்ற இன்பம் பெறுக நம் பிள்ளைகள் என்று சொல்லி பாருங்கள் எவ்வளவு நன்றாக இருக்கும்.

  மகிழ்வித்து மகிழ்வி என்பதை நம் (காமிக்ஸ்)குடும்பத்தில் செயல்படுத்துவோம்.கார்டூன் காமிக்ஸ்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்போம்.

  எல்லாவிதமான சந்தாக்களையும் செலுத்தி ஆசிரியருக்கு பக்கபலமாக இருப்போம்.ஆசிரியரின் உற்சாகம்தான் நமக்கு இன்னும் நல்ல பல காமிக்ஸ்களை பெற்று தரும்.

  என்னுடைய வீட்டிலும் 2 குட்டீஸ்கள்(மகன்கள்)இருக்கிறார்கள் ஆரம்பமே ஸ்மர்ப்ஸ் வைத்துதான் கதை சொல்லி கொண்டிருக்கிறேன்.

  மேலே நான் சொன்னவற்றில் யாருக்காவது மன வருத்தம் இருந்தால் மன்னித்துக்கொள்ளவும்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா....உங்கள் தந்தையை சந்திக்கும் வாய்ப்பில்லாம போய் விட்டதே! அவர் சொன்ன
   //பின்நாட்களில் என் தந்தையிடம் இது பற்றி கேட்டபோது காமிக்ஸ் படிப்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத மகிழ்ச்சியை கொடுப்பது அந்த இனம்புரியாத சந்தோஷத்தை நீயும் பெற வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து வாங்கி கொடுத்தேன் என்று சொன்னார்.//சத்தியமான வார்த்தைகள், புக்க வாங்றது அத விட சந்தோசம், புதிய புஷ்டியான பெரிய வெளியீடுகள் கூடுதல் சந்தோசத்துக்கு உத்ரவாதம், ஆசிரியருக்குமே! ?

   Delete
  2. verner readinger @ well said!! excellent one!!

   Delete
 53. //புக்க வாங்றது அத விட சந்தோசம், புதிய புஷ்டியான பெரிய வெளியீடுகள் கூடுதல் சந்தோசத்துக்கு உத்ரவாதம், ஆசிரியருக்குமே! ?//

  Pointu pointu

  ReplyDelete
 54. This comment has been removed by the author.

  ReplyDelete
 55. "நிஜங்களின் நிசப்தம்" - மனதின் இருண்ட ஆழங்களில் ஒரு பயணம்.
  ------------------

  "என்ன இருந்தாலும் நீங்கள் இதை செய்திருக்கக் கூடாது"

  அடர்த்தியான. கறுப்பு வெள்ளை ஓவியங்கள் மட்டுமே மௌனமாக நகரும் பத்து பக்கங்களை கடந்த பின் மேற்கண்ட உரையாடலுடன் துவங்குகிறது
  " நிஜங்களின் நிசப்தம்" கிராபிக் நாவல். ஐரோப்பிய சிறு நகரொன்றில் போருக்கு பிறகான காலகட்டத்தில் நிகழ்கிறது கதை. ஒரு போர் நிகழ்ந்து முடிந்த பின் சராசரி மனிதர்களிடத்தில் அது ஏற்படுத்தும் அகம் கொள்ளும் பதற்றங்களும் நிலையற்ற தன்மையுமே கதையின் மையம்.

  போரின் காரணமான ஆன்மாவை தொலைத்துவிட்டு வாழும் ஒரு மக்கள் கூட்டத்தினிடையே எங்கிருந்தோ வந்து சேர்கிறான் ஒரு அநாமதேய வழிப்போக்கன். நடைபிணங்களை போல் வாழ்ந்து வரும் மக்களிடையே முழு உயிர்ப்போடு அவன் வலம் வருகிறான். அவனின் உயிரோட்டமான இருப்பு அவர்களிடையே ஒரு வித பதற்றத்தை உருவாக்குகிறது. அவன்¸ அவர்கள் அணிந்திருக்கும் எல்லா முகமூடிகளையும் தாண்டி ஒவ்வொருவரின் நிஜ முகத்தையும் காணக்கூடியவனாக இருக்கிறான். அதை அவர்கள் உணர்ந்த பின்¸ எல்லோருமாக சேர்ந்து ஒரு கொடூரத்தை அரங்கேற்றுகிறார்கள்.

  ப்ரோடெக்¸ போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தாலும் தன் ஆன்மாவை இழந்து விடாமல்¸ அவர்களிடையே வாழ்ந்து வரும் ஒரு எளிய மனிதன். அந்நகரின் சுற்றுச்சூழலைப் பற்றி அரசுக்கு அறிக்கைகள் எழுதி பிழைப்பு நடத்துபவன். தாங்கள் நிகழ்த்திய கொடூரத்தைப் பற்றி ஓர் அறிக்கை எழுதிக் கொடுக்கும்படி ப்ரோடெக்கை ஊர் மக்கள் நிர்பந்திக்கிறார்கள். அதில் அவர்கள் தங்கள் தரப்பு நியாயங்களை பதிவு செய்ய நினைக்கிறார்கள். ப்ரோடெக்கும் அறிக்கையை எழுதத் தொடங்குகிறான்.

  இந்த கதை மேலோட்டமாக பார்க்கும் போது போரின் விளைவுகள் பற்றி பேசுவதாக தோன்றினாலும்¸ மிக நுட்பமாக தனி மனித உளவியலை¸ அதன் ஆழங்களை பேசுகிறது. இப்படைப்பின் மிக முக்கியமான கூறு¸ எந்த கருத்தியலையும் தத்துவத்தையும் அறக்கோட்பாட்டையும் அடிப்படையாக கொள்ளாமல் முகத்தில் அறைந்தார்போல் மிக நேரடியாக மனித மனதை அணுகுவதுதான்.

  இந்தக் கதைக்கு வரையப்பட்டுள்ள ஓவியங்கள் அசாத்தியமானவை. இவ்வளவு வீரியமான¸ நுட்பமான¸ கதையின் ஆன்மாவை எள்ளளவும் மாறாமல் பிரதிபளிக்கும் ஓவியங்களை சமீபத்தில் எந்த காமிக்ஸிலும் கிராஃபிக் நாவலிலும் நான் பார்க்கவில்லை. ஓரு திரைப்படம் கூட இந்தளவிற்கு நுட்பமாகவும் வீரியமாகவும் வெளிப்படுத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.

  தமிழில் 2017 ல் லயன் கிராஃபிக் நாவல் வெளயீடாக வந்த இதழ். 2007 ல் Le Rapport de Brodeck என்ற பெயரில் பிலிப் க்ளாடெல் என்ற பிரஞ்சு நாவலாசிரியர் எழுதிய படைப்பு. 2010ல் ஜான் கல்லெனால் (Brodeck's Report )ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. 2015 ல் மனு லார்செனெட் ன் அசாத்தியமான ஓவியங்களுடன் கிராஃபிக் நாவலாக உருபெற்றது. Prix Goncourt des Lycéens மற்றும் Independent Foreign Fiction Prize ஆகிய சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது.
  - Director Jayaprakash


  https://www.facebook.com/jeya.prakash.39395033/grid?lst=100014729658505%3A100014729658505%3A1539685337&subkey=manage

  ReplyDelete
  Replies
  1. அற்புதம் நண்பரே!

   அற்புத படைப்புகளை அதன் உண்மைக்கு நெருக்கமாக, மெய்ப்பொருள் மாறாது புாிந்து கொள்ளும் பேறு அனைவருக்கும் வாய்ப்பதில்லை! அந்த வகையில் நாம் அதிா்ஷ்டசாலிகளே!

   எனது டாப் 10 புத்தகங்கள் வாிசையில் இடம் பிடிக்கும் ஒரேயொரு காமிக்ஸ் புத்தகம் "நிஜங்களின் நிசப்தம்" மட்டும் தான்! இதுபோன்ற இன்னொரு படைப்பு கிடைப்பதெல்லாம் அாிதிலும் அாிது!

   உண்மையிலேயே நமது எடிட்டா் சாரை நினைத்தால் பெருமையாகவே உள்ளது! நமது காமிக்ஸ்களில் இப்படிப்பட்ட கதைகளையும் வெளியிடுவதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும்!!

   Delete
  2. மிதுன் பரவால்ல மாதிரி தோணுச்சு! உங்க இருவர் முன்னால் படித்தால் நானும் ரசிகனாயிருவனோ

   Delete
  3. @ yathi : அழகான விமர்சனம் சார் ; நன்றிகள் !

   @ MITHUN : "துணிச்சல்" என்பதை விட, "நம்பிக்கை" என்பது சரியான வார்த்தைத் தேர்வாக இருக்கும் என்பேன் சார் ! படைப்பின் வலிமை மீதும் ; அதன் தாக்கத்தை உணர்ந்திடும் உங்களின் பொறுமைகள் மீதும், பக்குவங்கள் மீதும் என்னுள் நம்பிக்கை இருந்தது ! அவை மெய்யானதால் இன்றைக்கு நாமெல்லாம் மகிழ்கிறோம் !

   "நிஜங்களின் நிசப்தம்" - ரசனைகளின் பயணத்தினைப் பறைசாற்றுமொரு உரத்த கூவல் !

   Delete
  4. ////"நிஜங்களின் நிசப்தம்" - ரசனைகளின் பயணத்தினைப் பறைசாற்றுமொரு உரத்த கூவல் !///

   கண்டிப்பாக சாா்!

   Delete
 56. அட்டவணை பதிவு வரட்டும்,அன்னிக்கே 300 கமெண்ட்ஸ் உத்தரவாதம், சும்மா கிழி,கிழி,கிழி தான்.

  ReplyDelete
  Replies
  1. ஓவர் பில்டப்பை நினைத்தால் இக்கட கொஞ்சம் கிலி...கிலி...கிலி..!

   Delete
  2. சார் ட்யூராங்கோ மௌனமாயொரு இடி முழக்கம் நேற்றொரு பகம், இன்றொரு பாகம் முடித்தேன் . என்னா கத சார் ! சும்மா வண்ணமய உலகில் பாலை வனங்கள் , கள்ளிகள் நண்பர்கள் அதகளங்கள் என பட்டய கிளப்புது சார்! டைகர் என்ன , டெக்ஸ் என்ன நம்மாள் ட்யூரங்கோ முன்னல பத்தடி தள்ளி நிக்கனும்! மிக மிக அற்புதமான அனுபவத்த வழங்கிய கதைகள்ல இதும் ஒன்று! ட்யூராங்கோ காதலி, ஆமோஸ் சாவு மட்டும் கொஞ் சம் வருத்ததம் தந்தது! அதும் மோச காக்க ட்யூராங்கோ துப்பாக்கியுடன் கொல்லன் பட்டறைக்குள் நுழைவாரே விசிலடித்தது மனது. வழியெங்கும் அற்புத பயணத்த நானும் தொடர உதவிய உங்கள வாழ்த்த வார்த்தை ஏது!

   Delete
  3. ஆனா மூனாவதுதான் ணூப்பர்னு நீங்க. எழுதிய நினைவு ...ஒரு ராஜபுமாரனின் கதை உள்ளட்டை அசத்தல் ...நாளை அந்தக் கதய கேட்டுப் படிக்கிறேன்...சான்சே இல்ல சார் உங்களருளால் நான் பார்த்த /படித்த அற்புத படைப்பு ட்யூராங்கோ

   Delete
 57. ஆசிரியரே அட்டவணையை வியாழனன்று பாதி வெள்ளியன்று பாதி என வெளியிட்டால் நன்றாக இருக்கும்

  ReplyDelete
 58. ///அட்டவணை பதிவு வரட்டும்,அன்னிக்கே 300 கமெண்ட்ஸ் உத்தரவாதம், சும்மா கிழி,கிழி,கிழி தான்.///
  I AM (WE ARE) WAITING

  ReplyDelete
 59. /// ஆசிரியரே அட்டவணையை வியாழனன்று பாதி வெள்ளியன்று பாதி என வெளியிட்டால் நன்றாக இருக்கும் ///
  நோ! சிங்கம் சிங்கிளாத்தான் வரணும்

  ReplyDelete
  Replies
  1. No worries...சிங்கிளாகவே தான் வரும் சார் !

   Delete
 60. Replies
  1. நாங்க எப்போவோ ரெடி கவிஞரே !

   Delete
  2. அப்ப நாளைக்கு பொறி(ரி) பறக்கும்னு சொல்லுங்க.😂😂😂

   Delete
 61. சிறு வயதில் ஜேம்ஸ்பாண்டை காமிக்ஸில் ரசித்ததோடு சரி. எனக்கு ரொம்பவே பிடித்த காரெக்டர். John Mclusky மற்றும் Yaroslav கைவண்ணத்தில் ஏகப்பட்ட பாண்ட் கதைகள் சல்லிசாகவே காணக் கிடைத்தன. . காசுக்கும் கிடைத்தன.

  இரண்டு ஓவியர்களின் ஓவிய பாணியும் முற்றிலுமே வேறுவேறானவை என்றாலும், குறையில்லாதவையே..!

  தெளிந்த கண்ணாடி போன்ற தெளிவான ஓவியங்கள், சிந்தனையை எங்கும் சிதற விடாத வகையில், பின்புலத்திற்கு ரொம்ப மெனக் கெடாமல், கட்டத்திற்கு தேவையானவற்றை மட்டுமே நேர்த்தியாக வரைவது ஓவியர் Mcluky பாணி. இவரது கை வண்ணத்தில் ஜேம்ஸ் பாண்ட் கம்பீரமாக, அழகாக தோன்றினாலும், சற்றே முதிர்ச்சியாகவே தென்படுகிறார். ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள், காமிக்ஸாக உருமாற்றம் அடைந்தபோது, உயிர் கொடுத்தவர் Mcluky.

  இளமை ததும்பும் பாண்ட், ஈர்ப்பான பாண்ட் ,அதிரடி ஆணழகன் பாண்ட், கண்ணுக்கு விருந்தாகும் கட்டழகிகள் என அசர வைக்கும் ஓவியங்கள் Yaroslavவினுடையது. துப்பாக்கி பாயும் காட்சியில் கூட அதன் பரபரப்பு நம்மையும் தொற்றும்படி அசத்தி விடுவார். பெண்களை வரைந்த விதத்தில் ஏகப்பட்ட உள்ளங்களைக் கொள்ளையடித்தவர். ஆக்சன் காட்சிகளை வித்தியாசமான கோணங்களில் பரிமாறியவர். சில பல கோடுகளை முன்பின் இழுத்து படபடவென வரையும் போது ஆச்சரியமாகவே இருக்கும்.

  விண்ணை முட்டும் வித்தியாசங்கள் இருந்தாலும், இருவரும் ஒரு விசயத்தில் ஆச்சரியமூட்டும் வகையில் ஒற்றுமை காட்டியுள்ளனர்...அது...,

  "நெற்றில் சுருண்ட முடி "

  ReplyDelete
  Replies
  1. "நெற்றில் சுருண்ட முடி" + 1

   Delete

 62. டெக்ஸ் வில்லர்
  இதுவொரு மந்திரச்சொல்.
  இந்தப்பெயரைக்கேட்டாலே போதும்....அவரது ரசிகப்பெருமக்கள் நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி பரவசமாகிப்போவார்கள்.
  வன்மேற்கின் பூர்வகுடிகளுள் ஒரு பிரிவினரான நவஹோ செவ்விந்தியர்கள
  ுக்கும்.., இன்ன பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அவர் ஒரு பரமாத்மா மாதிரி....! எங்கும் இருப்பார்.எப்போதும் இருப்பார். எங்கெல்லாம்...எப்போதெல்லாம் அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறத
  ோ....அங்கெல்லாம் தக்க சமயத்தில் தோன்றி....அநீதியையும்.., அராஜகத்தையும் வேரோடும்...வேறட
  ி மண்ணாகவும் களைந்து சமூக விரோதிகளுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்பவர்.
  1948 ல் இத்தாலியில் ஓச்சியோ க்யூபோ என்ற வாள் வீரனுக்கு துணை கதாபாத்திரமாக அறிமுகமாகி......பின்னர் பிரதான பாத்திரமாய் மாறி....படிப்பட
  ியாய் அவரது படைப்பாளிகளால் செதுக்கப்பட்டு ..ரேஞ்சர் அவதாரத்தில் "சர்வமும் நானே" என்று மார்தட்டும் மாஸ் ஹீரோவாக விஸ்வரூபமெடுத்த
  ிருக்கிறார்.
  இது டெக்ஸ் வில்லரின் 70 ஆம் ஆண்டு.அதை சிறப்பிக்கும் வகையில் வண்ணத்திலும் கருப்பு வெள்ளையிலுமாக இரண்டு சூப்பர் டூப்பர் கதைகளுடன் மகா மெகா ஸ்பெஷலாய் உருவாகியிருக்கிறது டைனமைட் ஸ்பெஷல்.
  புயலுக்கொரு பிரளயம் தமிழின் முதல் நீ...ள....மா...ன டெக்ஸ் கதை என்ற பெருமையை தட்டிச்செல்கிறது.
  பூர்வ குடிகளின் நிலத்தில் கொட்டிக்கிடக்கும் இயற்கை வளங்களை....தம்முடையதாக்கிக்கொள்ள அவர்களை அந்த பூமியிலிருந்து விரட்டியடிக்க நினைக்கும் அதிகார...ஆணவ வர்க்கத்தின் கதையேதான் இதுவும்.ஆண்டாண்டு காலமாய் நடக்கும் அவலம்.
  பெரும் தடைக்கல்லாக இருக்கும் டெக்ஸை.... மிரா என்ற வஞ்சகியின் துணை கொண்டு....ஜோடிக்கப்பட்டதொரு வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு....சிறையில் தள்ளி விடுகிறார்கள். ஆனானப்பட்ட டெக்ஸையே முடக்கிப்போடுகிறார்கள் என்றால் சதிகாரர்களின் பண பலமும்...ஆள் பலமும்...அரசியல் செல்வாக்கும் எப்படிப்பட்டது என்பதை யூகித்துக்கொள்ள
  லாம்.
  ஆஹா....! சிங்கத்தை சிறையில் அடைத்தால் ..அது சினம் கொண்டு சிறைச்சாலையையே தகர்த்துவிடுமே.
  .என்று எதிர்பார்த்தால்....அப்படி ஏதும் நடக்க வில்லை.சிச்சுவேஷன் அப்படி.கன ஜோராய் டெக்ஸ் வில்லருக்கு மண்டகப்படி நடக்கிறது.சீறுகிறார்....திமிரும் தெனாவெட்டுமாய் வசனம் பேசுகிறார்....! அவ்வளவுதான்.வேறொன்றும் செய்யமுடியா கையாலாத நிலைமை.
  சத்திய சோதனை.
  தலையிருக்கும் போது வால் ஆடக்கூடது.
  ஆனால் " தல"யே உள்ளே கிடந்து லோல் பட்டுக்கொண்டிருக்கும் போது...வால்கள் ஆடித்தானே ஆக வேண்டும்.பிரமாதமாய் ஆடுகின்றன டெக்ஸ் வில்லரின் வால்கள்.
  கிட் வில்லர்..டைகர் ஜாக்கின் துணை கொண்டு தன் மக்களை காக்க வகுக்கும் வியூகங்கள் சபாஷ் போட வைக்கின்றன.
  தன் உயிருக்கு உயிரான நண்பன் சிறையில் வாட....மனம் கலங்கும் கார்ஸன் ...அதை வெளிக்காட்டாமல்....அமைதியாய்..
  ..டெக்ஸை மீட்க எடுக்கும் முயற்சிகளாகட்டும்.....மிராவிடம் நக்கலும் நையாண்டியுமாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு.....அவளை மிரள விடுவதாகட்டும்.....அதகளப்படுத்
  தியிருக்கிறார் கார்ஸன்.
  கதை முழுக்க...பொறுப்புகளை தன் சகாக்களிடம் விட்டுவிட்டு ரொம்பவே அடக்கி வாசித்திருக்கிறார் டெக்ஸ்.
  தெறிக்க வைக்கும் ஆக்ஷன் காட்சிகள் சொல்லிக்கொள்ளும் படியாக ஏதுமில்லை.இருந்தாலும் கதையின் தலைப்புக்கேற்ப புயலாய் பறக்கிறது கதை.
  507 பக்கங்ளை முடித்த பின்பும் இவ்வளவு நீளமான கதையை வாசித்த அயர்ச்சி இல்லை.அதுவே இக்கதையின் மாபெரும் வெற்றி.

  ReplyDelete
  Replies
  1. அருமையான விமர்சனம் ஜி

   Delete
  2. நல்ல விமர்சனம் ஜி,
   👏👏👏👏👏👏

   Delete
  3. //தலையிருக்கும் போது வால் ஆடக்கூடது.
   ஆனால் " தல"யே உள்ளே கிடந்து லோல் பட்டுக்கொண்டிருக்கும் போது...வால்கள் ஆடித்தானே ஆக வேண்டும்.பிரமாதமாய் ஆடுகின்றன டெக்ஸ் வில்லரின் வால்கள்.//

   :-) :-)

   Delete
 63. I am waiting for 2019 list.

  வீட்டில , "என்னது இந்த நடுராத்திரியில பிசாசு மாதிரி ஐபேட நோண்டிகிட்டு இருக்கீங்கனு" முனகல் .,

  ReplyDelete
  Replies
  1. கவலையே வேண்டாம் சார் ; சாமக் கூத்துக்களின்றி, நாளைக்கு காலையில் நிதானமாய் அட்டவணை சமாச்சாரத்தை அரங்கேற்றிடுவோம் !! விடுமுறை தினம் தானே ! Maybe 9 -30 க்கு !

   Delete
  2. செல்லாது...செல்லாது...
   வேணும்... வேணும்..
   இன்று மாலை அட்டவணை வேணும்...

   பூசை போட்டு முடிச்சாச்சு, பொரி கடலை, சுண்டல், ஆப்பீள்லாம் சாப்பிட்டாச்சு...இனி வெயிட்டிங் பார் அட்டவணை சார்.

   ஒரு மதிய தூக்கம் போட்டு எழுத்து, மாலை ரிலீஸ் பண்ணுங்க....🙏🙏🙏🙏🙏🙏

   Delete
 64. அக்டோபர் அதகளம் :

  CID ராபின் vs Reporterஜானி

  ராபின் : வாங்க ஜானி. பார்த்து ரொம்ப நாளாச்சு. இப்போ என்ன கேஸ் போயிட்டிருக்கு?
  ஜானி: வழக்கம்போலதான் சார். எதாச்சும் இடியாப்ப சிக்கல்ள மாட்டிவிட்றாங்க. எவனோ ஒரு கிறுக்கன் கிராமத்தில சிலர் போட்டுத்தள்ளிட்டு இருக்கான். அவன் யார்னுதான் தேடிட்டு இருக்கேன்.
  ரா : நீதான் கொலையாளியோன்னு உன் மேலேயே சந்தேகப்படுவானுங்களே. அதானே உன்னோட கதையில வழக்கம்.
  ஜா : ஆமாம் ராபின். உதவப்போனா நம்மலையே ஆழம் பாப்பானுங்க. அதுசரி உங்க கேசு எப்படி போயிட்டிருக்கு.
  ரா : இங்க மட்டும் என்ன வாழுதாம். சினிமா கூட்டாளிகளுக்கு மத்தியில என்னப் பிரச்சினையோ தெரியல, அவனுங்களுக்குள்ள ஒவ்வொருத்தனா மண்டைய போட்டுட்டு இருக்கான்.
  ஜா : ஏதாச்சும் துப்பு கெடச்சுதா?
  ரா : ம்ம்ம்... இவனுங்க ஏதோ லேடிஸ் விசயத்துல வீக்குன்னு நெனக்குறேன். யாரோ பழி வாங்குகிறார் போல தெரியுது. ஒரு வீடியோ ஆதாரம் சிக்கியிருக்கு. எப்படியும் அத வச்சி கேசமுடிச்சிடுவேன். நீயாச்சும் பரவாயில்ல கலர்ஃபுல்லா துப்பறியுர. இங்கே ஒரே கருப்பு வெள்ளையாத்தான் போயிட்டிருக்கு.
  ஜா : உங்களுக்கே தெரியுமே, நானும் கருப்பு வெள்ளையில குப்பை கொட்டிட்டு இருந்தவந்தான்.
  ரா : நாமாச்சும் பரவால்ல. நம்ம மஞ்சள் சட்டைக்காரர் இந்த தடவை டுமீல் டுமீல்னு சுடவும் முடியாம, எவன் மூக்கையும் பேக்கவும் முடியாம அவரையே பொரட்டி எடுக்குறானுவபோல.
  ஜா : அதெல்லாம் அடுத்தவாட்டி வட்டியும் முதலுமா சேர்த்து குடுத்துடுவாறு.
  ரா : இந்த கர்னல் தாத்தாவுக்குதான் பிரச்னையே இல்லை. அவர் எது செஞ்சாலும் சிரிச்சுட்டு போய்டுவாங்க. லாஜிக்கெல்லாம் தேவப்படாது.
  ஜா : ஓ.. மெசேஜ் வந்திருக்கு. நான் சந்தேகப்பட்டா மாதிரி அந்த சிறுக்கிதான் என்னைய இந்த கேசுல கோத்து விட்டிருக்கா. நான் போய் கிளைமாக்ஸ் முடிக்கிறேன்.
  ரா : எனக்கும் மெசேஜ் வந்திருக்கு. இங்கயும் நான் சந்தேகப்பட்டாப்போல ஒரு லேடிதான் எல்லாத்தையும் பன்னியிருக்கா. ஆனா அதுல ஒரு நியாயமான காரணம் இருக்குமோன்னு ஒரு டவுட் இருக்கு. அப்படி இருந்தால் அவளுக்கு கிளைமாக்ஸ்ல உதவி பன்னலாம்னு இருக்கேன். ஓகே பை ஜானி.
  ஜா : பை பை ராபின்

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே. இன்னும் விரிவான பதிவா கொண்டு போகலாம்தான் ஆனாக்கா மொபைல்ல டைப் பண்ண பொறுமை இல்லை ! 😊

   Delete
 65. தெய்வம் நின்று கொல்லும்:

  இந்த கதையின் தலைப்பை அட்டைப்படத்தில் எழுதிய விதம் அருமை; விளக்கு அப்புறம் கத்தி! கம்ப்யூட்டர் காலத்தில் இது போன்று கைகளால் தலைப்பை எழுதிய விதம் ரசிக்க செய்தது!

  அடுத்து அடுத்து ஒரு சினிமா குழுவில் விழும் தொடர் கொலைகள்! அதனை விசாரிக்க தொடங்கும் ராபின் அன் கோ! இடையில் இந்த சினிமா குழுவில் உள்ள ஒரு பெண் ராபினுக்கு விசாரணையில் உதவுகிறார்! மூன்று கொலைகள் நடந்த பின் குற்றவாளி நான்காவது கொலையை செய்வதற்கு முன் கண்டுபிடித்து கைது செய்து விடுகிறார்! ஆனால் குற்றவாளியின் பக்கம் நியாயம் இருப்பதால் கதையை படிக்கும் நாம் அந்த நான்காவது நபர் கொல்லப்பட வேண்டும் என விரும்ப ஆரம்பிக்கும் நேரத்தில் நமக்காக ராபின் அவனை கொள்கிறார்! வித்தியாசமான அனைவராலும் ஏற்று கொள்ளக் கூடிய முடிவு!

  இந்த கதையில் நான் மிகவும் ரசித்தது (ஹைலைட்), அந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை வார்த்தைகளால் வெளிப்படுத்தியது. பாதிக்க பட்ட அந்த பெண்ணின் மனநிலை அவளின் கோபம் அதனை வார்த்தைகளால் அழகாக வெளிப்படுத்தியது எனது மனதை மிகவும் பாதித்தது!

  ராபின் உண்மையான துப்பறிவாளன்!

  ReplyDelete
 66. One more this month all wrappers VERY EXCELLANT except Tex Willer. I hate green colour.

  ReplyDelete
 67. Replies
  1. யாரந்த மிஸ்டர் X

   பாதுகாப்பு நிறைத்த சிறைச்சாலை அங்கே குற்றவாளியை முகமூடி அணிந்த ஒரு மனிதன் வந்து வித்யாசமான கருவிகளின் உதவியுடன் காப்பாற்றுகிறார்! காப்பாற்றியவன் குற்றவாளியின் கூட்டாளியாக இருப்பான் என்று நினைத்தால் அங்கே ஒரு ஆச்சரியம் , அந்த ஆச்சரியம் நமது கர்னல் தன! இந்த ஆரம்ப கட்ட காட்சிகள் ஹாலிவூட் படங்களை நினைவு படுத்தியது! இது நமது காமெடி கர்னலுக்கு அருமையாக பொருந்தி உள்ளது!

   அதனை தொடர்ந்து கர்னல் அந்த குற்றவாளியிடம் நன்மதிப்பினை பெற்று அந்த குற்றக் கும்பலில் இணைவது! இறுதியில் அந்த கும்பலில் ஒருவன் மட்டும் தான் உண்மையான குற்றவாளி மற்ற அனைவரும் யார் என சொல்லி இருப்பது சிரித்து சிந்திக்க வைத்த இடங்கள்! உணவகத்தில் கர்னல் குற்றவாளியுடன் உணவருந்தும் போது தங்கள் நாட்டு உணவு சாப்பிடும் முறையை வைத்து நடக்கும் கூத்துக்கள் ரசிக்க செய்தது! பல இடங்களில் வாய்விட்டு சிரித்தேன்!


   வண்ணத்தில் ரசிக்க செய்த கதை! இந்த கதையின் மிக பெரிய பலமாக நான் பார்த்தது வழிய சென்று காமெடி என்று எதையும் திணிக்காமல் தேவைபடும் இடத்தில் மட்டும் காமெடியை தூவியது, கதையை விறுவிறுப்பாகவும் ரசிக்கும் படியும் செய்தது!

   காமெடி கர்னல் என்றும் எனக்கு காமெடி கர்னல் தான்.

   Delete
 68. ஆசிரியரே, தமிழ்பட டீசர் வெளியிடும் போது நேரம் தெரியப்படுத்தி விடுவார்கள் அதேபோல் நீங்களும் அட்டவணை வெளியிடும் நேரம் தெரியப்படுத்தி விட்டால் நன்றாக இருக்கும்.

  முதல் பதிவு போடுபவர்களுக்கு பரிசு அறிவிக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. From our editor:

   // கவலையே வேண்டாம் சார் ; சாமக் கூத்துக்களின்றி, நாளைக்கு காலையில் நிதானமாய் அட்டவணை சமாச்சாரத்தை அரங்கேற்றிடுவோம் !! விடுமுறை தினம் தானே ! Maybe 9 -30 க்கு //

   Delete
 69. நண்பர்களே நாளை அடுத்த வருடத்திற்கான நமது காமிக்ஸ் அட்டவணை வெளி வரும் சந்தோச நேரத்தில் நமது கருத்துக்களை பதிவிடும் போது இன்றைய காமிக்ஸ் தொடர்ந்து வெளிவர நமது காமிக்ஸ் சந்தா முக்கிய காராணி என்ற விஷயத்தை மட்டும்மாவது மனதில் வைத்து கொண்டு பதிவிட வேண்டுகிறேன். நமக்கு பிடிக்காத கதைகள், அல்லது நாயகர்கள் அல்லது விஷயங்கள் இருந்தால் அதனை நயமாக பதிவுடுங்கள்! பிடிக்காத சில விஷயங்களை விட பிடித்த பல விஷயங்கள் அட்டவணையில் இருக்கும் அதனை கொண்டாடுவோம்!

  நம் அனைவரையும் சந்தோச படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் முயற்சிக்கிறார்! அதில் இப்போது ஓரளவு ஆசிரியர் வெற்றி பெற்று வருகிறார் என நம்புகிறேன்! இந்த முறையும் நமக்கு பிடித்ததை தருவார் என்று நம்புகிறேன்!

  தயவு செய்து எனக்கு இது பிடிக்கவில்லை அதனால் சாந்த செலுத்த மாட்டேன் என பதிவிட வேண்டாமே! அதே நேரத்தில் உங்களுக்கு பிடிக்காத ஒரே விஷத்தை சொல்லும் பொது பிடித்த பல கதைகள் அட்டவணையில் இருக்கலாம் அதற்காக நீங்கள் சந்தா செலுத்தினால் என்ன என யோசிக்கலாமே!

  நமக்கு தொடர்ந்து காமிக்ஸ் வர வேண்டும்! முடித்த அளவு அனைவரும் சந்தா செலுத்துவோம் சந்தோசமாக காமிக்ஸ் படிக்க அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல!

  ReplyDelete
  Replies
  1. பரணி , மிக சிறந்த கருத்து .

   Delete
 70. அய்யா தங்களது பதிவுக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம். டெக்ஸ் விஜய் சொன்னது போல எல்லா வேலைகளும் முடிந்து விட்டன. காலையில் இருந்து இது வரை 100 முறை blog வந்து பார்த்து விட்டேன்

  ReplyDelete
  Replies
  1. Tomorrow only comics calendar is going to be released!

   Delete
  2. பரணி sir மாற்றம் ஒன்றே மாறாதது. So we are trying our best . மிக்க நன்றி நண்பரே அனைவருக்கும் பொறுப்பாக reply செய்கின்றார்

   Delete
 71. நான் நேற்று இரவு முதல் இங்கேயே தான் இருக்கேன் - அவ் அவ் அவ் அவ் -யுவர் ஆனர் .

  ReplyDelete
  Replies
  1. Tomorrow only comics calendar is going to be released!

   Delete
  2. Sham1881 உண்மையாகவே நீங்கள் great . Editor sir சரஸ்வதி பூஜை தினத்தன்று காமிக்ஸ் அட்டவணை வெளியிடுவது மிகவும் சிறந்தது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. தயவு கூர்ந்து ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன்

   Delete