Powered By Blogger

Saturday, March 24, 2018

நெருங்குது ஏப்ரல்....!!

நண்பர்களே,


வணக்கம். LMS-ல் வெளியான டைலன் டாக்கின் சாகஸம் நமக்கு மறந்திராதென்று நினைக்கிறேன்! அந்தக் கதையின் அசாத்தியப் புள்ளியே ஒரு நிஜ மண்டலம்…இன்னொரு திரிசங்கு நிலை மண்டலம் என்பது தானே ?! எனக்குமே கூட இந்த வாரம் முதலாகவே இரட்டைக் கால மண்டலத்தில் பயணிப்பது போலவே ஒரு பீலிங்கு ! நடப்பு இதழ்கள் + மே மாதத்தின் ஒரு பாதி ஏற்கனவே தயாராகி மூடாக்குக்குள் துயில் பயில – நான் பணி செய்து வருவதோ ஜுன் மாதத்து லார்கோவிலும், ஜூலையின் லக்கி லூக்கிலும் ! நமது DTP அணியோ ஒட்டுமொத்தமாய் ஆகஸ்டின் டைனமைட் ஸ்பெஷல் + இ.ப. தொகுப்புக்குள் தொபுக்கடீரெனக் குதித்திருக்க – என் மேஜையில் தினமும் குவிவது ஜுன், ஜூலை & ஆகஸ்டின் பக்கங்களே! நாமிருப்பதோ மார்ச்சில் என்பதை அவ்வப்போது யாராவது நினைவுபடுத்தி வராது போனால் – இப்போதே “இரத்தப் படலத்துக்கு டப்பா செய்யக் கொடுக்கலியா ?கூரியரிலே சொல்லி வைச்சாச்சா ? “ என்று சவுண்ட் விட ஆரம்பித்து விடுவேன் போலுள்ளது !


Jokes apart – மெய்யாகவே இப்போதெல்லாம் ஒரு சின்ன உதறலோடே நாட்கள் நகர்கின்றன ! என்னதான் கடந்த ஐந்தாறு ஆண்டுகளின் அனுபவங்கள் முதுகெலும்பாகி நின்றாலும் – இம்முறை நாம் தலையைக் கொடுத்துள்ள 2 ப்ராஜெக்ட்களுமே அசாதாரண ரகத்திலானவை ! 

852 பக்கங்கள் + 777 பக்கங்கள் = 1629 பக்கங்கள் = 4 ஹார்ட்கவர் புத்தகங்கள் = ரூ.2900 = மலையளவு எதிர்பார்ப்புகள் = விண்ணளவுப் பொறுப்புகள் = டான்ஸ் ஆடும் பேஸ்மெண்ட் ! 

ஆக, மஜாவாக அறிவிப்புகளைப் போட்டோமா; தயாரிப்புப் பணிகளைப் பார்த்தோமா ; புக்குகளை கையிலேந்தி ரசித்தோமா ; வாயெல்லாம் பல்லாய் உங்கள் முன்னே ஆஜரானோமா என்பனவெல்லாம் எனது பகற்கனவுகளாய் மாத்திரமே இருந்திட முடியும் ! இப்போதைக்கும், ஆகஸ்டுக்கும் மத்தியில் முழுசாய் 4¼ மாதங்கள் எஞ்சியிருந்தாலுமே இந்த அவகாசம் போதுமா – இந்த மாரத்தான் பணிகளைத் திருப்தியாக நிறைவேற்றிட? என்பதை கணிக்கத் தெரியவில்லை ! தலைக்குள் வெவ்வேறு பொறுப்புகளும், பணிகளும் நீந்திக் கொண்டேயிருந்தாலுமே – “ஆகஸ்ட்” சார்ந்த பரபரப்பு தான் சகலத்தையும் ஓரம்கட்டி விட்டு முன்னே நிற்கின்றது!
திருத்தங்கள் செய்யப்படா பக்கங்கள்....!
இரத்தப் படலம்” மறு-மறு-பதிப்பே என்பதால் அங்கே என் பேனாவுக்குப் பெரிதாய் வேலைகளின்றித் தப்பிக்க சாத்தியமாகிறது ! ஆனால் 3 தனித்தனி ஆல்பங்கள் எனும் போது – 3 செட் அட்டைப்படத் தயாரிப்புகள் ; இமயத்தில் ஏறுவதை ஒத்த அச்சுப் பணிகள் ; ஹார்ட்கவர் ஆல்பங்களைத் திறந்தவுடன் எதிர்படும் அடர்வண்ணத்திலான தாட்கள் ; அப்புறம் சிலபல நகாசு வேலைகள் என்று தயாரிப்பின் சுமை, செம மிரட்டலாகவே உள்ளது ! அப்புறம் “Cinebook-ல் நம்ம XIII-ஐப் பார்த்தப்போ கண்ணுக்குக் கீழான கருவளையம் இவ்ளோ ஜாஸ்தியாக இல்லையே…?" என்ற ரேஞ்சுக்கு இதனை நண்பர்கள் அங்குலம் அங்குலமாய் அலசக் காத்துள்ளார்கள் எனும் போது – அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஈடுதரும் சக்தியும் ; துளியூண்டு குறை கண்ணில்பட்டால்கூட மொத்தமாய் Surf Excel கம்பெனியின் உற்பத்திகளை இங்கு திசைதிருப்பிடும் அவசியம் ஏற்படக்கூடுமென்ற ஞானமும் – எனது பேஸ்மெண்ட் நடனத்துக்கு ஜதி சொல்லி வருகின்றன ! ஆண்டவன் காப்பாராக !!! 


ஆனால் நானிந்தத் தருணத்தில் நமது DTP அணியின் பங்களிப்பைச் சிலாகிக்காது போனால் – நண்பர் XIII-ன் அம்னீஷியா எனக்குமே தொற்றி விட்டதாகத்தான் அர்த்தமாகிடும் ! ராக்கூத்தின் பலனாக – லார்கோவின் மொழிபெயர்ப்பை பேப்பரில் கொஞ்சமும் வாய்ஸ் ரெக்கார்டரில் கொஞ்சமுமாய் அனுப்பி வைத்தால் ; அடுத்த 2 மணி நேரத்திற்குகள் நான் அனுப்பிய சகலத்தையும் போட்டுத் தாக்கி பிரிண்ட்-அவுட்களை எடுத்துத் தயாராக வைத்திருப்பார்கள் ! “இரத்தப் படலம் அவசரம் ; இல்லே… இல்லே… ‘மேக் & ஜாக்‘ முடிச்சாகணும் ; no...அதை வச்சிட்டு ட்யுராங்கோவைப் பாருங்கம்மா…;ஙே… கலர் டெக்ஸ் இணைப்பு அவசரமாச்சே… அதை முடிச்சிடுங்க” என்று கள் குடித்த குரங்காட்டம் நான் எதை எதையாவது சொல்லிக் குழப்பி வைத்தாலும் – துளியும் அசராது அத்தனைக்கும் ஈடு தரும் பொறுமைசாலிகள் ! காத்திருக்கும் 4 வாரங்களுக்குள் இரத்தப் படலம் மொத்தத்தையும் ரெடி செய்து – அச்சுக்குக் கொண்டு போகும் தயார் நிலையில் வைத்திருக்க, மே துவக்கத்தை deadline ஆகக்கொண்டு பணி செய்து வருகிறோம் ! ஜுனில் அச்சு & பைண்டிங் ; ஜுலையில் பிரதிகள் well in advance தயாராக இருந்திட வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டு வருகிறேன் ! ஆனால் அதற்கு மத்தியில் ஒரு லட்சம் கூத்துக்கள் காத்திருப்பது நிச்சயம் எனும் போது, கனவுகள் மெய்ப்பட ஏகமாய் பெரும் தேவன் மணிடோவை வேண்டி நிற்கிறேன்.


“இத்தனை வாய் பேசுறான்...ஆனாக்கா டைனமைட் ஸ்பெஷல்” பற்றி வாய் திறக்கிறானா பாரேன் ; கல்லுளிமங்கன் !" என்ற மைண்ட்வாய்ஸ் கேட்கத் தான் செய்கிறது! ஆனால் – இம்முறையோ கடைசித் தருணம் வரை பெவிகால் சட்டிக்குள் வாயை மட்டுமன்றி, மொத்தமாய் மண்டையையே அமிழ்த்தி வைத்திருப்பதெனத் தீர்மானித்துள்ளேன் ! ”இரத்தப் படலம்” மறு-மறு பதிப்பே எனும் போது – இதழின் making-ஐ ரசிப்பதைத் தாண்டி, புதிதாய் அங்கே ஏதுமிருக்கப் போவதில்லை தான் ! So அதனுடன் அதிரச் செய்யக் காத்திருக்கும் டெக்ஸின் 70-வது பிறந்த நாள் மலரிலாவது இயன்றளவிற்குக் கொஞ்சம் சஸ்பென்ஸைக் கொணரலாமே என்று நினைத்தேன் ! So இதழைக் கையில் ஏந்தும் கணம் வரை – என்ன கதை? எத்தனை பக்கங்கள் ? இத்யாதிகளெல்லாமே under wraps இருந்து விட்டுப் போகட்டுமே?
அதிரடி இதழ்கள் பற்றிய topic-ல் இருக்கும் போது – கூப்பிடு தொலைவிலுள்ள “கோடை மலர் 18” பற்றியும் ! மீசையும்… தாடியும்…வழுக்கையும்…தொப்பையும் நம்மோடு பயணிப்பது சகஜமாகி விட்ட போதிலும், மனதளவில் நம்மில் பலர் இன்னும் பச்சாக்களே என்பதற்கு – இந்தக் “கோடை மலர்” என்ற வார்த்தைகள் உருவாக்கிடும் தாக்கத்தை உதாரணமாகச் சொல்லிடலாம் ! 30 ஆண்டுகளுக்கு முன்பாக முற்றிலும் வேறானதொரு உலகத்தில், பள்ளி விடுமுறைகளை மனதில் நிறுத்தி நாமடித்த குண்டுபுக்குக் கூத்துக்கள், நம்மில் பலருக்கும் இன்றளவும் பசுமை நினைவுகளாய்த் தொடர்வது கண்கூடு ! கவலைகளற்ற அந்த நாட்களை உங்களோடு சேர்ந்து அசைபோடும் வேளைகளில், எனக்குமே மனது இலகுவாகி விடுகிறதை மறுப்பதிற்கில்லை ! அப்போதெல்லாம் ஓராண்டு அட்டவணை…ஒரு மாமாங்கத்துத் திட்டமிடல் என்பதெல்லாம் வீசம்படிக்குக் கூடக் கிடையாது! காலையில் கட்டிலிலிருந்து வலப்பக்கமாய்  இறங்கினால் – ஆர்ச்சி கதை அடுத்த மாதத்திற்கு ; இடப்பக்கம் இறங்க நேரிட்டால் ஸ்பைடர் கதை என்பதே அப்போதைய ”விஞ்ஞானபூர்வமான தேர்வு வழிமுறைகள்”! ஒரு நீள சைஸ் பைண்டிங் செய்யப்பட்ட கோடு போட்ட கட்டுரை நோட்புக்கை என் மேஜையில் அடித்தட்டில் வைத்திருப்பேன் ! அதை எடுத்து, புதிதாய் ஒரு பக்கத்தைப் புரட்டும் கணத்தில் – மனதில் நிழலாடும் முதல் நாயகரே தொடரும் மாதத்து slot-ஐ ஆக்ரமிப்பது வழக்கம். 

ஆனால் ஏப்ரல் – மே மாதங்கள் நெருங்கி விட்டால் ஒட்டுமொத்தமாய் ஸ்பைடர் & ஆர்ச்சி மேனியா ஆட்கொள்ளத் துவங்கி விடும் ! ‘ஈஈஈஈஈஈ….‘யென்று இளிக்கும் ஒரு ஸ்பைடர் பெயிண்டிங்கை, சடுதியாய்ப் போட்டு வாங்கி விட்டு – அவரோடு பக்கவாத்தியம் வாசிக்கும் உருப்படிகளாக யாரைப் போடுவதென்ற யோசனையில் ஈடுபடுவது வழக்கம். அந்த நாட்களையெல்லாம் நினைவு கூர்ந்திடும் போது ‘பளிச்‘ சென்று முன்நிற்கும் ஒற்றைச் சிந்தனையானது – “என்ன மாதிரியான carefree நாட்களவை?” என்பதே !! ஒரு நூறு எழுத்துப் பிழைகளை அன்றைக்கு அனுமதித்திருப்போம் ; நயமான நியூஸ்பிரிண்டில் – வைக்கோல் கலரில் தான் இதழ்களின் பெரும்பான்மை அமைந்திருக்கும் ; பைண்டிங்கிலும் இந்தப் பக்கம் மேலே – மறுபக்கம் கீழே என்று கோக்குமாக்காக பணி செய்திருப்பார்கள்; கதைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம் – நேர்கோட்டு – சுலபக் களங்கள் ; பல தருணங்களில் இலவச இணைப்பாய் ஒரு லோடு புய்ப்பங்களோடு ! ஆனால் இவை சகலத்தின் பிற்பாடுமே அன்றைக்கு பரிசாய் ஒரு நூறு போஸ்ட்கார்டுகள் கிட்டிடும் – “ஆஹா… ஓஹோ…” என்ற சிலாகிப்புகளோடு ! 20,000 பிரதிகள் ; maybe 20,000+ வாசகர்கள் என்ற போதிலும், அன்றைக்கு சகலமுமே ஒரு சந்தோஷப் பொழுதுபோக்காக மாத்திரமே பார்க்கப்பட்டது ! “அட… படிக்கப் போகிறோம்! பிடித்தால் மறுக்காவும் படிக்கப் போகிறோம்… நெருடினால் தாண்டிப் போகப் போகிறோம்” என்றிருந்தன அந்நாட்களது சிந்தனைகள் ! ‘இங்னக்குள்ளே நெருடுதோ ? எப்டினாலும்  இங்கே நெருடாமல் போகாதே ?‘ என்ற ஷெர்லக் ஹோம்ஸ் கண்ணோட்டங்கள் அன்றைக்குக் கிடையாது தானே ? Maybe இன்றைய விமர்சனப் பாணிகளும், பாங்குகளும் அப்போதே நிலவியிருப்பின் சத்தியமாய் அத்தனை அந்தர்பல்டிக்கள் அடிக்கும் “தெகிரியம்” எனக்கு அந்நாட்களில் வந்திருக்கவே செய்யாது ! So ”கோடை மலர்”களோடு நான் நேசமாய் நினைவு கூர்ந்து கொள்வது அந்தக் தளைகளில்லா நாட்களையுமே ! 

ஆனால் அந்த நாட்களுக்கும், வயதுகளுக்கும் அது சரிப்பட்டது ; maybe இன்றைக்குமே அதே சுதந்திரம் நிலவின் ”சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்“ களாய்ப் போட்டுத் தாக்கி உங்களையெல்லாம் ஒருவழியாக்கியிருப்பேன் என்பதுமே வாஸ்தவமே ! இன்றைய விமர்சனப் பார்வைகள் எங்களுள் ஏகமாய் கவனங்களை விதைப்பதோடு – ஒட்டுமொத்தப் பணிகளுக்குமே ஒருவிதச் சவால்தன்மையை நல்குவதை உணர்கிறேன் ! விமர்சனங்களுக்கு இடம்தராது செயல்பட்டிட வேண்டுமென்ற உத்வேகம் ஒரு பக்கம் ; வியப்பில் உங்கள் புருவங்களை உயரச் செய்திட எவ்வளவு மெனக்கெட்டாலுமே தப்பில்லை என்ற எண்ணங்கள் மறுபக்கமென இன்றைய பொழுதுகள் ஓடுகின்றன ! ஏழு கழுதை வயதான இத்தருணத்தில், சவால்களில்லா பணிகள், நெய்யில்லாத பணியாரம் போலவே வசீகரமற்றுத் தோற்றமளிப்பதும் இந்த யுகத்தின் மகிமையே ! So சுதந்திர சுவாசத்தின் சுகந்தம் ஒரு தினுசெனில் ; மைக்ரோஸ்கோப்பின் ஆராய்வுப் பார்வையிலும் சாத்தியப்படும் சாகசங்களின்  த்ரில் இன்னொரு பக்கம் ! Moving with the times...!


துலுக்கப்பட்டியில் துவங்கி, துபாய் வரைப் பயணமாகி விட்டேன் என்பதால் அப்படியே ஒரு யு-டர்ன் போட்டு, ஆரம்பித்த இடத்துக்கே திரும்பி விடுகிறேனே…?! 2017-ன் ஆரம்பமே அதகளமாகிப் போக பெருமளவு உதவிய ட்யுராங்கோ தான் காத்திருக்கும் மே மாதத்து கோடை மலரின் நாயகன் ! “மௌனமாயொரு இடிமுழக்கம்” தொடரின் ஆல்பங்கள் # 5, 6 & 7. கிட்டத்தட்ட 15 மாத இடைவெளிக்குப் பின்பாய் மனுஷன் களமிறங்கியிருந்தாலும் – துளி கூடத் தொய்வின்றி அவரோடு சாகஸங்களில் ஐக்கியமாகிட முடிகிறது ! And இந்த ஆல்பம் வெளியாகி, நீங்கள் படிக்கும் போதே நிச்சயமாய் ஒரு விஷயம் உங்கள் கவனங்களை ஈர்க்காது போகாது என்றுபடுகிறது ! அதுதான் – நாயகருக்குக் கதையின் ஓட்டத்தோடு கதாசிரியர் நல்கியிருக்கும் பரிணாம வளர்ச்சி ! சித்திரங்களிலும் சரி, கதையில் ட்யுராங்கோவின் பங்களிப்புகளிலும் சரி – ஒரு striking improvement தென்படுகிறது ! கதைகள் ஒவ்வொன்றுமே தனியாகப் படித்து ரசித்திடும் பாணியிலேயே அமைக்கப்பட்டிருந்தாலும் – முந்தைய பாகத்திலிருந்து மெல்லிய நூலொன்றை தொடர்ந்திடும் யுக்திகளும் கையாளப்பட்டுள்ளன ! So “சத்தமின்றி யுத்தம் செய்” இதழை ஒருவாட்டி எடுத்து அந்த இறுதிப் பாகத்தை லேசாகப் புரட்டிய கையோடு இந்தத் தொகுப்பினுள் புகுந்தால் இன்னும் அட்டகாசமாக ரசிக்குமென்பேன்! இங்கே சன்னமாய் உங்களது ஒத்தாசை தேவை guys - சின்னதொரு முன்கதைச் சுருக்கம் என்ற ரூபத்தில் ! 2 பக்கங்களுக்குள் அடங்கிடும் வகையில் crisp ஆகவொரு “ட்யுராங்கோ – இது வரை” ரெடி செய்து அனுப்பினீர்களெனில், சங்கச் செயலர் எனக்கு வெட்டவிருக்கும் Rs.40,000 மாலில் ஒரு பாதியை… ஆங்… மூணில் ஒரு பங்கை…. ம்ம்ம்ம்…. கால் வாசியையாவது…. சரி...சரி...….ஒரு கணிசமான இக்ளியூண்டையாவது உங்கள் பெயரில் fixed டெபாசிட்டாகப் போட்டு விடுவேன் ! ஒரு வார அவகாசத்துக்குள் முடியுமா guys ?


அதே போல – ட்யுராங்கோ பற்றி ஒரு கேள்வியுமே ! தொடரவிருக்கும் 2019-ல் இவரது சாகஸங்களை one shot சிங்கிள் ஆல்பங்களாக வெளியிட்டால் எவ்விதமிருக்கும் என்பீர்கள் ? ஒரே தொகுப்பாய் இதுவரையிலும் ரசித்து வந்திருக்கும் மனுஷனை – ஆண்டுக்கு 3 one shots என்றால் எவ்விதம் பார்த்திடுவீர்கள்? Just a random thought......!
சரி – ஒரு மௌன கௌ-பாயிலிருந்து அடுத்ததாய் நாம் தாவவிருப்பது – நமது அதகளக் கௌ-பாய் டெக்ஸ் பக்கமாய் ! ஏப்ரலில் TEX வெளியீடாக “காலனின் கானகம்” இதழினை அறிவித்திருந்தது நீங்கள் அறிந்ததே ! ஆனால்… ஆனால்… ஆனால்… இந்தக் கதைக்குள் புகுந்து, பணியாற்றி, வெளியேறினால், என் முகமெல்லாம் வெளுத்துப் போனது தான் மிச்சமாகயிருந்தது ! அற்புதமான artwork; அட்டகாசமான கதை ஆரம்பம்…டெக்சின் இன்னொரு 110 பக்க ஹிட் ! என்று குறியீடுகள் சகலமுமே பிரகாசமாய்த் தான் ஒளிர்ந்தன ! ஆனால் போறேன்…போறேன்… டெக்ஸோடு கானகத்துக்குள் போறேன்…சுடறேன்….சுடறேன்….சுடறேன்… அப்பாலிக்கா “சுபம்” போட்டு விட்டுக் கிளம்பறேன்… கிளம்பறேன் ! இந்தக் கதை more of a visual treat என்பதையும், சித்திரங்களை நாளெல்லாம் ரசித்துக் கொண்டேயிருக்கலாம் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது ! ஆனால் நாம் எதிர்பார்த்திடும் அந்த TEX டிரேட்மார்க் இங்கே குறைவு என்பதும் புரிந்தது ! So இதை வெளியிட்டு, விமர்சனங்களை நாமே வரவழைத்தது போலாக வேண்டாமேயென்று தீர்மானித்து – ‘காலனின் கானகத்தை‘த் தற்காகலிகமாவது ஒத்திப் போடுகிறோம் ! 

அதன் இடத்தில் “பவளச் சிலை மர்மம்” வண்ண TEX மறுபதிப்பு இடம்பிடித்திடவுள்ளது இம்மாதத்து கூரியர் டப்பாவுக்குள் ! Sorry guys – ஆனால் இரவுக் கழுகாருக்கென நம் மனங்களில் நாம் எழுப்பி வைத்துள்ள கோட்டைகளை – மத்திமமான எனது கதைத் தேர்வுகளின் பொருட்டு கோட்டைவிட என் மனம் ஒப்பவில்லை ! அட்டவணையில் இந்த ரூ.65/- ஸ்லாட்டை நிச்சயமாய் வேறொரு TEX அதிரடியைக் கொண்டு நிரப்பிடுவோம் ! And “காலனின் கானகம்” maybe ஏதேனும் புத்தக விழாக்களின் வெளியீடாக அமைத்துக் கொள்வது பற்றியும் யோசிக்கலாம் !  எத்தனை தான் கண்ணில் நல்லெண்ணெய்… விளக்கெண்ணெய்… என்றெல்லாம் விட்டுக் கொண்டு கதைத் தேர்வுகளைச் செய்திட முயன்றாலும் – இது போன்ற சொதப்பல்களைத் தவிர்ப்பது சிரமமாகவே இருந்து வருகிறது! மோவாயைத் தடவும் படங்கள் ஒரு டஜன்! And இதோ - "பவளச் சிலை மர்மத்தின்" வண்ண preview ! 33 ஆண்டுகளுக்கு முந்தையதொரு ஜூலையில் ஒரிஜினலாய் வெளியான இதழிது எனும் போது, எனக்கு கதை சுத்தமாய் நினைவில் நிற்கவே இல்லை ! So ஒரு பரபரப்பான ஆக்ஷன்   த்ரில்லரை புதுசாய் ரசித்த உணர்வே கிட்டியது ! வண்ணத்தில் மின்னுவதைப் பாருங்களேன் ? 
And இம்மாதத்து கூரியர் டப்பாவினுள் “கலர் டெக்ஸ்” இணைப்பும் இடம்பிடிக்குமென்ற சேதியோடு நான் கிளம்புகிறேன் ! So இம்மாதத்து இதழ்கள் சகலமுமே முழு வண்ணத்தில் தான் ; no black & whites at all !! இதற்கு முன்னரும் இது போல் மாதங்கள் ஏதேனும் அமைந்துள்ளனவா என்று நினைவில்லை ! உங்களுக்கு நினைவுள்ளதா folks ? 

தகிக்கத் தொடங்கி விடும் கோடைக்கு இதமாய் நமது first ever அதிரடியான 1986 கோடை மலரை எடுத்துப் புரட்டப் போகிறேன் நான் ! உங்களிடமும் அந்த இதழ் இருக்கும் பட்சத்தில் – சேர்ந்தே பயணித்துப் பார்ப்போமா – அதன் பக்கங்களினூடே?!
Bye all! See you around! Have a lovely weekend !

399 comments:

  1. Replies
    1. நாங்களும் ரவுடியாயிட்டோம்ல

      Delete
    2. நீங்க எப்போதும் ரவுடி தான் ஜி:-)

      Delete
  2. I jolly april வருது. More comics more jolly

    ReplyDelete
  3. 10 க்குள்ள

    ReplyDelete
  4. பவளச் சிலை மர்மம் இது வரை படித்து இல்லை. கனவு நிறைவேற போகிறது. நன்றி விஜயன் சார் இந்த surprise மாற்றத்திற்கு.

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசமான ஆக்சன் அதிரடி காத்துள்ளது சார்

      Delete
  5. விஜயன் சார்,
    // ஒரே தொகுப்பாய் இதுவரையிலும் ரசித்து வந்திருக்கும் மனுஷனை – ஆண்டுக்கு 3 one shots என்றால் எவ்விதம் பார்த்திடுவீர்கள்? Just a random thought.....//

    இவரை இந்த அளவு ரசிக்க ஒரு காரணம் 3 கதைகளாக வருவது, படித்த முழுத் திருப்தியை கொடுப்பதே. இவரை தற்போது வரும் முறையில் தொடர்ந்து வெளியிட வேண்டுகிறேன்.

    ReplyDelete
  6. உள்ளேன் ஐயா!!!.

    ReplyDelete
  7. // கட்டிலிலிருந்து வலப்பக்கமாய் இறங்கினால் – ஆர்ச்சி கதை அடுத்த மாதத்திற்கு ; இடப்பக்கம் இறங்க நேரிட்டால் ஸ்பைடர் கதை என்பதே அப்போதைய ”விஞ்ஞானபூர்வமான தேர்வு வழிமுறைகள்” //

    அருமை. நம்பகமான வழிமுறை :-)

    ReplyDelete
    Replies
    1. அட...இதை விடவும் "விஞ்ஞானபூர்வ" வழிமுறைகளுமே உண்டு !! எப்போதாவது அதைப் பற்றியும் சொல்கிறேன் !

      Delete
  8. இன்றைய பொழுது ஆபீசில் மராமத்து முழு வீச்சில் நடைபெற்றிட, வேலைக்குச் செல்லாது வீட்டிலிருந்தபடிக்கே புதுப் பதிவு + மொழிபெயர்ப்பு என்று பொழுதைக் கடத்தியிருந்தேன் ! So முந்தைய பதிவின் பின்னூட்டங்களுள் அரங்கேறியுள்ள களேபரங்களை கவனிக்காது போய் விட்டேன் ! சர்ச்சை எங்கே ஆரம்பித்தது? ; எங்கே பயணித்தது ? என்பதையெல்லாம் ஆராய்ந்து ; அதற்கொரு பஞ்சாயத்தும் பண்ண முற்படும் பாணிகள் இனி நடைமுறையில் இருந்திடப் போவதில்லை ! பரஸ்பர பின்னூட்ட மோதல்கள் யாரது நலத்துக்கும் உகந்தவையல்ல என்பதால், அவற்றை அப்படியே delete செய்திடுகிறேன் ! Please do bear with me all !! And we just move on !!

    Period !

    ReplyDelete
    Replies
    1. நான் வழிமொழிகிறேன் சார்

      Delete
    2. நன்றிகள் சார்..:-)

      Delete
    3. நீக்கமும் நல்லது சார்...🙏🙏🙏🙏🙏

      Delete
    4. TO. J
      பிள்ளையாருக்கே பிள்ளையார் சுழி
      போட்டவர் நீங்கள்.

      Delete
    5. புரிதலுக்கு நன்றிகள் நண்பர்களே !!

      இதுவொரு virtual உலகமே என்றாலும், இங்கிருந்து கொண்டு செல்லும் சந்தோஷங்களோ, சங்கடங்களோ- நமது அன்றாடங்களையும் பாதிப்பது நிஜம் ! உள்ளபடிக்கே ஒவ்வொரு தினத்தையும் சமாளிப்பது சிரமமாகி வரும் காலகட்டத்தில், இங்கிருந்து சுமையைக் கொண்டு சென்று நோவை கூட்டிக் கொள்ளுவானேன் ?

      Delete
    6. //இதுவொரு virtual உலகமே என்றாலும், இங்கிருந்து கொண்டு செல்லும் சந்தோஷங்களோ, சங்கடங்களோ- நமது அன்றாடங்களையும் பாதிப்பது நிஜம் ! உள்ளபடிக்கே ஒவ்வொரு தினத்தையும் சமாளிப்பது சிரமமாகி வரும் காலகட்டத்தில், இங்கிருந்து சுமையைக் கொண்டு சென்று நோவை கூட்டிக் கொள்ளுவானேன் ?//
      Rightly Said and did 👏 👍 Please feel free to continue

      Delete
    7. Excellent decision!! Let's just move on...

      Delete
    8. வாசகர்கள் மட்டும் இல்லாமல் நீங்கள் காயபட்டதாக(ஆசிரியர்) உணர்ந்தால் கூட அந்த பதிவை நீக்கி விடுங்கள்.

      Delete
    9. புனித மனிடோவின் அருளால், 'மொதோ தபா' நான் கேட்டு நம்ம எடிட்டர் ஒரு விஷயம் பண்ணியிருக்காரு.
      I'm happy...
      I'm very very happy...

      Delete
  9. // கனவுகள் மெய்ப்பட ஏகமாய் பெரும் தேவன் மணிடோவை வேண்டி நிற்கிறேன்.//

    நானும் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்க வேண்டுகிறேன். நல்ல படியாக அமையும் நடக்கும் என நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக முடியும் சார்

      Delete
    2. நிறையவே அவகாசம் கொடுத்து பணியாற்ற முனைந்து வருகிறோம் !!! So தாக்குப் பிடித்து விடலாமென்ற நம்பிக்கையுள்ளது நண்பர்களே !

      Delete
  10. // எனக்குமே கூட இந்த வாரம் முதலாகவே இரட்டைக் கால மண்டலத்தில் பயணிப்பது போலவே ஒரு பீலிங்கு ! நடப்பு இதழ்கள் + மே மாதத்தின் ஒரு பாதி ஏற்கனவே தயாராகி மூடாக்குக்குள் துயில் பயில – நான் பணி செய்து வருவதோ ஜுன் மாதத்து லார்கோவிலும், ஜூலையின் லக்கி லூக்கிலும் ! //

    அப்ப நாம ரொம்ப முன்னேறிவிட்டோம் எனச் சொல்லுங்கள். சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. இது ஆபீஸ் மராமத்தும், ஆகஸ்டின் பயமும் கொணர்ந்துள்ள முன்னேற்றம் சார் ! அதன் பின்னேயும் இந்த வேகம் தொடருமா என்பதைப் பார்த்தால் தான் தெரியும் !

      Delete
    2. பயம் இருந்தால் மார்க்கம் உண்டுன்னு சொல்லுங்க! பயமும் நல்லது!

      Delete
  11. // தொடரவிருக்கும் 2019-ல் இவரது சாகஸங்களை one shot சிங்கிள் ஆல்பங்களாக வெளியிட்டால் எவ்விதமிருக்கும் என்பீர்கள் ? //
    தயவுசெய்து வேண்டாம் என்பது என் கருத்து,ட்யுராங்கோவை ஹார்ட் பைண்டில் சற்றே நீண்ட சாகசங்களில் வாசிப்பதே அலாதியானது.

    ReplyDelete
    Replies
    1. "செஞ்சிடுவோம் "!!

      Delete
    2. தனியா வேண்டாம் சார்
      மூணு கதைகளை சேத்து போட்டு தாக்குங்க சார்

      Delete
    3. மும்மூன்றாய்ப் போட்டால் இன்னுமொரு 3 ஆண்டுகளுக்குத் தாக்குப் பிடிக்கும் சார் ! அதற்குள் அடுத்த அதிரடியாளரைத் தேடிப் பிடிக்க வேண்டியது தான் !

      Delete
    4. // அதற்குள் அடுத்த அதிரடியாளரைத் தேடிப் பிடிக்க வேண்டியது தான் ! //

      அதுதான் வேண்டும்! அப்படி என்றால்தான் நிறைய புதிய கதைகளை படிக்க முடியும்!!

      Delete
    5. ஏற்கனவே இன்னொரு அதிரடி பார்ட்டி தீவிரப் பரிசீலனையில் இருக்கிறார் !! அவருமே குதிரைக்காரரே !

      Delete
    6. ரொம்ப காலமாவே போக்கு காட்டி வரும் ஜானதன் கார்ட்லேன்டாங் சார் அது????

      Delete
  12. பவள சிலை மர்மம்...!!    ஹைய்யா....!

    ReplyDelete
  13. //‘காலனின் கானகத்தை‘த் தற்காகலிகமாவது ஒத்திப் போடுகிறோம் ! //
    அடடே வட போச்சே.

    ReplyDelete
    Replies
    1. வடை எங்கேயும் போகவில்லை ; இந்தாண்டு வேறு கிடுக்கிப்பிடியிலா சந்தர்ப்பத்தில் casual ஆக வெளிவந்திடும் !!

      Delete
  14. // அதன் இடத்தில் “பவளச் சிலை மர்மம்” வண்ண TEX மறுபதிப்பு இடம்பிடித்திடவுள்ளது இம்மாதத்து கூரியர் டப்பாவுக்குள் ! //
    ஹைய்யா பாயசமே ரெடியா இருக்கு போல.

    ReplyDelete
    Replies
    1. பாயசம் 3 வாரம் முன்பே கிண்டியாச்சு என்பதால் இன்றைக்கு என் தலை தப்பிக்குது !! இல்லையேல் - இது TEX இல்லா மாதமாகிப் போயிருக்கக்கூடும் !

      Delete
  15. பவள சிலை மர்மம் எனது ஆல் டைம் பேவரைட் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
    என் பழய இதழ் இப்போது என்னிடத்தில் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. நிறைய பேரிடம் இராது என்றே நினைக்கிறேன் !

      Delete
    2. உங்கள் கூற்று சரியாக இருக்கும் சார்.

      Delete
  16. // டெக்ஸின் 70-வது பிறந்த நாள் மலரிலாவது இயன்றளவிற்குக் கொஞ்சம் சஸ்பென்ஸைக் கொணரலாமே என்று நினைத்தேன் ! //
    சஸ்பென்ஸ் நல்லது,ஆனா எனக்கு ஒரு கெஸ் இருக்கு சார், அது பலிச்சா சந்தோஷம்.

    ReplyDelete
    Replies
    1. ஆளுக்கொரு guess இருந்தாலுமே சுவாரஸ்யம் தானே சார் ?

      Delete
  17. தொடரவிருக்கும் 2019-ல் இவரது சாகஸங்களை one shot சிங்கிள் ஆல்பங்களாக வெளியிட்டால் எவ்விதமிருக்கும் என்பீர்கள் ? /


    பலமான நோ சார்...ஏதோ இப்படி வர்றப்ப தான் கொஞ்சமாவது குண்டு புக்கு வர்ற பீலிங்கு வருது.இல்லைன்னா இந்த மாசம் மாதிரியே இருக்கு...அதனால் தொகுப்புக்கு தான் ஓட்டு சார்..

    ReplyDelete
    Replies
    1. நள்ளிரவாகுதே தலீவரே ? ஏது முழிச்சு இருக்கீங்க ?

      Delete
    2. அது ஓரு சோக கதை சார்...!

      Delete
  18. பவள சிலை மர்மம் இதழை நான் 30% தின்றது போக மீதி கரையான் தின்றதை பார்க்க பார்க்க வேதனையில் துடிக்கும் எனக்கு

    இம்மாத பவளசிலை உண்மையிலும் பவளமே....:-)

    ReplyDelete
    Replies
    1. பவளம் மட்டுமல்ல வைரம் வைடூரியம் என்ன வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்

      Delete
  19. ##### ட்யுராங்கோ பற்றி ஒரு கேள்வியுமே ! தொடரவிருக்கும் 2019-ல் இவரது சாகஸங்களை one shot சிங்கிள் ஆல்பங்களாக வெளியிட்டால் எவ்விதமிருக்கும் என்பீர்கள் ? ஒரே தொகுப்பாய் இதுவரையிலும் ரசித்து வந்திருக்கும் மனுஷனை – ஆண்டுக்கு 3 one shots என்றால் எவ்விதம் பார்த்திடுவீர்கள்? ####

    ஒரே தொகுப்பாக வெளியிடுங்கள் சார்..

    ReplyDelete
    Replies
    1. சும்மா ஒரு அபிப்பிராயக் கோரல் மாத்திரமே சிவா !! "தொகுப்பு" என்பதே ட்யுராங்கோவின் அடையாளமாய்த் தொடர்ந்திடும் !

      Delete
    2. மிக்க மகிழ்ச்சி சார்..

      Delete
    3. நன்றி விஜயன் சார் இதனை உறுதி செய்ததற்கு.

      Delete
    4. தொகுப்பு இல்லீனா இன்னொரு தங்க தலைவன் மான்..

      Delete
  20. ஜெராமையாவும்,ட்யுரங்கோவும் முதல் தொகுப்பில் வெளியிட்டது போல் வரட்டுமே.தனித் தனி இதழ்களாக ஆண்டுக்கு மூன்றாக வெளியிட்டால் கதைமீது மிகப்பெரிய ஈர்ப்பு ஏற்படுத்தாது.ஏனைய நண்பர்களின் கருத்துகளையும் உள்வாங்கி கொண்டு சிறப்பான முடிவெடுப்பீர்கள் என கருதலாம்.

    ReplyDelete
  21. பவளசிலை மர்மம்
    சென்ற மாதம்தான் ஸ்ரீதர் ஸ்ரீ அண்ணா அன்பளிப்பாக வழங்கினார்
    அடுத்த மாதமே வண்ணத்தில் வாசித்தாலும் மகிழ்ச்சியே..

    ReplyDelete
    Replies
    1. சூப்பர். நமக்கு இப்படி யாரும் எதுவும் பரிசு கொடுத்து இல்லை.

      Delete
  22. 1986 கோடை மலர் அட்டைப்படத்தை பார்க்கும் போது படித்த ஞாபகம் உள்ளது. ஆனால் இந்த புத்தகம் தற்போது என்னிடம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. என்னிடமும் இல்லை என்ன செய்வது மோவாயில் கை வைத்து கவலைப்படும் படங்கள் பல நூறு

      Delete
  23. சார்...இந்த மாசம் சின்ன சின்ன புக்கா கொடுத்த தால இந்த மாச மறுபதிப்புல

    நாலு டெக்ஸ்...மார்ட்டினின் கனவின் குழந்தைகள்..அன்ட் அண்டர் டேக்கரும்..எல்லாம் புதுசா படிச்ச மாதிரியே இருந்தது.

    ட்யூராங்கோ சொல்லிட்டீங்க தானே நாளைக்கே எடுத்து வச்சுறேன்..

    ReplyDelete
  24. // ஒரே தொகுப்பாய் இதுவரையிலும் ரசித்து வந்திருக்கும் மனுஷனை – ஆண்டுக்கு 3 one shots என்றால் எவ்விதம் பார்த்திடுவீர்கள்? Just a random thought.....// ..
    Durango தொகுப்பாக வந்தால் தான் நன்றாக இருக்கும் .. One shots try பண்ண வேண்டாம் சார் ..

    ReplyDelete
  25. ###காலையில் கட்டிலிலிருந்து வலப்பக்கமாய் இறங்கினால் – ஆர்ச்சி கதை அடுத்த மாதத்திற்கு ; இடப்பக்கம் இறங்க நேரிட்டால் ஸ்பைடர் கதை என்பதே அப்போதைய ”விஞ்ஞானபூர்வமான தேர்வு வழிமுறைகள்”! ###

    கட்டிலில் இருந்து நேராக எழுந்து "ஆர்ச்சி & ஸ்பைடர் ஒன்று வெளியிடுமாறு கேட்டு கொள்கிறேன் சார்..

    ReplyDelete
    Replies
    1. வொய் திஸ் கொலை வெறி சிவா ?

      Delete
    2. கொலை வெறியெல்லாம் கிடையாது ஆசிரியரே எங்களுக்கெல்லாம் பழமை பித்து பிடித்திருக்கிறது இந்த பித்தை தெளிய வைக்கும் வைத்தியர் நீங்களே அதனால்தான் உங்களை படுத்தியெடுக்கிறோம் தயவு செய்து ஆர்ச்சியை கண்ணில் காட்டுவீர்களா

      Delete
  26. தகிக்கத் தொடங்கி விடும் கோடைக்கு இதமாய் நமது first ever அதிரடியான 1986 கோடை மலரை எடுத்துப் புரட்டப் போகிறேன் நான் ! உங்களிடமும் அந்த இதழ் இருக்கும் பட்சத்தில் – சேர்ந்தே பயணித்துப் பார்ப்போமா – அதன் பக்கங்களினூடே?!


    ###₹₹₹#


    ஆஹா...ஆஹா...ஆஹா....இந்த கோடையை தான் தேடி தேடி அலைஞ்சு ஓஞ்சு போனேன் சார்.
    அப்படியே அதையே மறுக்கா போட்டா தான் என்னால பயணம் பண்ண முடியும் சார்...என்ன பண்ணலாம்..?!...:-)

    ReplyDelete
    Replies
    1. இப்போதைக்கு குறட்டை லோகத்துக்குள் ஐக்கியமாகிடுங்கள் தலீவரே ! மிச்சத்தை நாலைக்குப் பார்த்துக் கொள்ளலாம் !

      Delete
    2. தாரை பரணி @ இதற்கு ஓரு முடிவு தெரிஞ்ச பிறகு தூங்குங்கள்.

      Delete
  27. // So இம்மாதத்து இதழ்கள் சகலமுமே முழு வண்ணத்தில் தான் ; no black & whites at all !! இதற்கு முன்னரும் இது போல் மாதங்கள் ஏதேனும் அமைந்துள்ளனவா என்று நினைவில்லை ! உங்களுக்கு நினைவுள்ளதா folks ? //
    சென்ற ஆண்டு 2017 லிலேயே வந்ததாக நினைவு சார்,5 இதழ்கள் என ஞாபகம்.

    ReplyDelete
    Replies
    1. எந்த இதழ்களெல்லாம் சார் ?

      Delete
    2. 1.ஒரு காகிதத்தைத் தேடி-ஷெல்டன்,
      2.இது கொலையுதிர் காலம்-டைலன் டாக்,
      3.மரணத்தின் நிறம் பச்சை-டெக்ஸ்,
      4.இரத்தக் கோட்டை-டைகர்
      5.கர்னல் ஆமோஸ்.

      Delete
  28. இதுக்கு மேலே முடில சார்..

    ஆசிரியருக்கும் ,நண்பர்களுக்கும் இரவு வணக்கத்தை தெரிவித்து கொண்டு கடமையை தொடர்கிறேன்..:-)


    கொர்ர்ர்....

    ReplyDelete
  29. ஆசிரியர் அவர்களுக்கு;
    கடற் கொள்ளையர்களை பற்றிய தொடர் அறிவித்ததாக நினைவில் உள்ளது. பாரகுடா_லாங் ஜான் சில்வர் இருவரில் உங்களுடைய தேர்வு எதுவென்று தெரிந்து கொள்ள ஆர்வம்.அண்டர் டேக்கரின் அசாத்திய வெற்றிக்குப் பிறகு சேவியர் டேரிசன்-ரால்ப் மேயரின் கூட்டணியில் உருவான லாங் ஜான் சில்வர் மீது அதிக எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. சின்ன தவறு சார் ; லாங் ஜான் சில்வரின் கதாசிரியர் சேவியர் டோரிசன் தான் ; ஆனால் சித்திரங்கள் மேத்யூ லாபிரே ! அண்டர்டேக்கரின் சித்திர துல்லியம் இங்கே lacking !

      Delete
  30. கோடைமலர் 1986 ஆசிரியர் சார்தான் புரட்டுவாரா...!!!! ஏன் நாமும் அவரோடு பயணிக்க கூடாது. நாளைக்கு ஏன் வைத்து இருந்த கோடைமலர் பாகம்2 இதோ....

    ReplyDelete
  31. கோடைமலர்-1986

    *மார்ச் மாத தகிக்கும் வெள்ளிக்கிழமை அது. சார்ஜா மைதானம், சேத்தன் சர்மா ஓடிவந்து ஒரு யார்க்கர் வீசப் பார்க்க, பதட்டத்தில் அது லோ ஃபுல்டாசாக மாற மிட்விக்கெட் திசையில் மக்கள் கூட்டத்தின் நடுவே பந்து பறந்து விழுந்தது. அடுத்த 10ஆண்டுகளுக்கு பாகிஸ்தானைப் பார்த்து இந்தியாவை மிரளச் செய்த சிக்ஸர் அது. அந்த சிக்ஸ் தூக்கியது ஜாவேத் மியான்தத்; 1986சார்ஜா கப் பைனலின் கடேசி பந்து அது, வெற்றிக்கு 4ரன்கள் தேவை எனும்போது சிக்ஸ் அடித்து கபில்தேவ் கையில் இருந்த கோப்பையை பறித்து சென்றார் தத்.

    *கிரிக்கெட் ரசிகர்களுக்கு 10ஆண்டுகள் ஆனது கணக்கை நேர் செய்ய. 1996 பெங்களூரு மைதானத்தில், எக்ஸ்ட்ரா கவர் திசையில் வக்கார் யூனிஸ் பந்துகளை பிரம்மாண்டமான சிக்ஸர்களாகப் பறக்க விட்டார் அஜய் சதேஜா. உலகக் கோப்பையின் கால்இறுதி ஆட்டம் அல்லவா அது. அதே ஆட்டத்தில் அமீர் சோஹைலின் ஸ்டம்புகளை பறக்க விட்டு, பைபை சொன்னார் வெங்கடேஷ் பிரசாத். இந்த காட்சிகள் கிரிக்கெட் ரசிகர்கள் பேவரைட்ல என்றும் உண்டு.

    *பேக் டூ 1986; கிரிக்கெட் ரசிகர்களாகவும் இருந்த தமிழ் காமிக்ஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் இருந்து மீட்டது 10ஏ நாட்களில் அடிக்கப்பட்ட மற்றொரு சிக்ஸர். அடித்தவர் நம்ம அன்புக்குரிய 20வயது எடிட்டர் சார். 6முத்தான சித்திரக்கதைகளின் பேக்கேஜே அந்த அற்புத சிக்ஸர். அதன் பெயர் கோடை மலர்1986.

    *பாம்பு டான்ஸ் ஆடிய "பாக்கெட் டைனமைட்" முஷ்பிகுர் ரஹமானை போன வாரம் பார்த்தோம். பாக்கெட் சைசில் வெளிவந்த அந்த கோடைமலரை பார்த்து டான்ஸ் ஆடிய சீனியர் பாம்புகள் ச்சே ரசிகர்கள் யாராவது இருக்கீங்களா சார்ஸ்???

    *324பக்கங்கள், 6அற்புதமான கதைகள் (அஃப்கோர்ஸ் விச்சு கிச்சும் உண்டு); பளபளானு மின்னும் அட்டை இத்தனையும் எத்தனை பணம் இருக்கும்????
    நம்புங்க நட்பூஸ் ஜஸ்ட் 5ரூபாய் தான்.

    *டெக்ஸ் வில்லர் கதை இல்லாத இத்தகைய இதழ் இன்று கற்பனையில் கூட இருக்க முடியுமா????. அன்று இருந்தது. ஆட்டநாயகன், தன்னிகரில்லா தானைத்தலைவன், லயனின் ஒரே ஜாம்பவான், வலைத்துப்பாக்கி மன்னன், ஹெலிகாரில் பறக்கும் ஹெட் வெயிட் மண்டையன், "ஸ்பைடர்" அட்டையில் சிரித்தாலே அந்த இதழ் மாஸ் ஹிட்தான்.

    *ஸ்பைடர் இழிக்க, ஆர்ச்சி கையாட்ட, ஈகிள்மேன் ஒரு பக்கம் பறக்க பக்காவான அட்டைப்படம் இருபக்கமும். இத்தனையும் தாண்டி ஒரு 32பக்கங்கள் கலரில் வேறு தந்திருந்தார். அட்டையை திறந்தவுடன் ஈபிள் டவரில் நின்று கொண்டு இருக்கும் ஈகிள்மேன் நம் எண்ணங்களை சிறகடிக்கச் செய்வார். மடமடவென பக்கங்கள் பறந்தோட நாம் கிராஸ் செய்திருக்கும் நாயகர்கள்,

    ----ஈகிள்மேன் கலரிலும்,கருப்பு வெள்ளையிலும்.

    ---இரும்புக்கை (யார்சார் அது விசில் அடிப்பது;இவர்வேறு) நார்மன்-பனிமலையில் ஒரு கொலை.

    ---ஆர்ச்சியின் கானக மோசடி

    ---ஸ்பைடர் ன் குற்றத்தொழிற்சாலை. முழு நீஈஈஈளக் கதையான இது சென்ற அக்டோபரில் மறுபதிப்பாக வந்ததை அனைவரும் அறிவோம். நான் கூட அப்போது இதற்கு பிழை திருத்தம் செந்திருந்தேன்.

    ---கானாமல் போன விஞ்ஞானி-லாரன்ஸ் & டேவிட்

    ---இரட்டை வேட்டையர்கள் ஜார்ஜ் & ட்ரேக் தோன்றும் கொலை வெறியன்(க்ளைமாக்ஸ் வண்ணத்தில்)

    * பிரமிப்பில் இருந்து விடுபடவே பலமணி நேரங்கள் ஆகும். பாக்கெட் சைசில் வந்த 5அற்புதமான இதழ்களின் துவக்கமே இந்த மலர். இவற்றை சேர்ப்பது காமிக்ஸ் ரசிகர்களின் கனவு. இந்த செட்டில் வந்த திகில் கோடைமலர் மட்டும் இதுவரை கிட்டல...

    *டெக்ஸ் ரசிகர்களுக்கு மிஞ்சியது என்னவோ ஆண்டுமலர் பவளசிலை மர்மத்தின் விளம்பரம் மட்டுமே, அசத்தலான வண்ணத்தில்.

    #அடுத்த ஸ்டாப் ஆண்டுமலர்-1987.

    ReplyDelete
    Replies
    1. கடேசி வரி... கோடைமலர்1987...

      Delete
    2. எப்படிப்பா இவ்வளவு வேகமாக மொபைல்ல டைப் செய்யறிங்க! அதுவும் பழைய நினைவுகளை இணைத்து! வாழ்த்துக்கள்!!

      Delete
    3. //எப்படிப்பா இவ்வளவு வேகமாக மொபைல்ல டைப் செய்யறிங்க!//

      +101 !!!

      Delete
    4. கோடைமலர் 1986உள்பக்க படங்கள் சில பார்க்கலாம் இந்த லிங்கில்...
      https://m.facebook.com/groups/1723924691198965?view=permalink&id=2026215557636542

      Delete
    5. 7/37, Srinithi apartment
      Name: Rummi13
      Tirupur
      இருக்கு அந்த எல்லாம் தெரிஞ்ச நண்பர் சொன்னது போல..்
      . அந்த புத்தகத்தை உடனே மேற்காட்டிய முகவரிக்கு உடனே அனுப்பவும்.

      Delete
    6. பரணி@ தேங்யூ நண்பரே...

      ரம்மி@ அலோ அலோ லைனே கெடக்கலயே....டொக்...

      Delete
    7. சேலம் டெக்ஸ். ஆகஸ்ட்ல அனேகமா உங்க வீட்டு ஓட்டைத்தான் பிரிக்கனும் போல.

      Delete
    8. நீங்க ஓட்டைப் பிரிங்க நான் நேர்மையாக கள்ள சாவி போட்டு கதவை திறந்து வர்றேன்

      Delete
    9. அந்த கால கட்டத்துக்கு இழுத்து போய்ட்டீங்க

      Delete
    10. We need 1986 kodai malar colour reprint :) ...koluthi poduvom.

      Delete
  32. 2015 ஜூனில் கூட வந்துள்ளதாக குறிப்புகள் கூறுகின்றன,நண்பர்கள் சரி பார்த்தால் உறுதியாகும்.

    ReplyDelete
    Replies
    1. 2014 ல் கூட ஒரே மாதத்தில் செப்,பிப்ரவரியில் வந்துள்ளதாக குறிப்புகள் கூறுகின்றன.
      நண்பர்கள் கிராஸ் செக் செய்யவும்,ஹி,ஹி.

      Delete
    2. 4 புக்குகள் கொண்ட மாதமா ? என்பதையும் சரி பாருங்களேன் நண்பரே ?

      Delete
    3. 2015 ஜுனில்,
      1.தங்கம் தேடிய சிங்கம்,
      2.துணைக்கு வந்த தொல்லை,
      3.விடுதலையே உன் விலை என்ன.

      Delete
    4. செப்டம்பர் 2014 இதழ்கள் வந்துள்ளதாக குறிப்புகள் இருக்கு சார்,
      1.காதலிக்கக் குதிரையில்லை-ப்ளூகோட்,
      2.செங்குருதிச் சாலைகள்-கமான்சே,
      3.தேவ ரகசியம் தேடலுக்கல்ல,
      4.வீதியெங்கும் உதிரம்,
      5.கார்சனின் கடந்த காலம்,
      6.காலனின் கைக்கூலி.
      -இது மட்டும் உறுதியான்னு தெரியல சார்.

      Delete
    5. ஆம் ரவி யூ ஆர் கரெக்ட், 6வது அக்டோபரில் வந்தது... அந்த மாதமும் எல்லாம் கலர்தான் போல...

      Delete
  33. மௌனமாயொரு இடிமுழக்கம்” தொடரின் ஆல்பங்கள் # 5, 6 & 7. கிட்டத்தட்ட 15 மாத இடைவெளிக்குப் பின்பாய் மனுஷன் களமிறங்கியிருந்தாலும் – துளி கூடத் தொய்வின்றி அவரோடு சாகஸங்களில் ஐக்கியமாகிட முடிகிறது ! And இந்த ஆல்பம் வெளியாகி, நீங்கள் படிக்கும் போதே நிச்சயமாய் ஒரு விஷயம் உங்கள் கவனங்களை ஈர்க்காது போகாது என்றுபடுகிறது ! அதுதான் – நாயகருக்குக் கதையின் ஓட்டத்தோடு கதாசிரியர் நல்கியிருக்கும் பரிணாம வளர்ச்சி ! சித்திரங்களிலும் சரி, கதையில் ட்யுராங்கோவின் பங்களிப்புகளிலும் சரி – ஒரு striking improvement தென்படுகிறது ! அது ட்யுராங்கோவின் வயது முதிர்ச்சி சரியாக சொல்லி விட்டேனா சார்?

    ReplyDelete
    Replies
    1. பாகம் 4 முடிந்த சற்றைக்கெல்லாமே பாகம் 5 ஆரம்பிப்பதாய் கதைக்களமுள்ளது ! So ஒரே இரவில் வயது கூடியதாய்க் காட்டிட இயலாதே !

      நான் சொல்ல முற்பட்டது - ட்யுராங்கோ தொடருக்கு அங்கே கிட்டியிருக்கக்கூடிய வரவேற்பினைத் தொடர்ந்து கதாசிரியர் கூடுதல் சுதந்திரத்தோடு புதுக் களங்களை அமைக்க முற்பட்டுள்ளதை !

      Delete
    2. விளக்கம் அளித்தர்க்கு நன்றி சார்.

      Delete
  34. விஜயன் சார்,

    852 பக்கங்கள் + 777 பக்கங்கள் = 1629 பக்கங்கள் = 4 ஹார்ட்கவர் புத்தகங்கள்

    அடேங்கப்பா எத்தனை பக்கங்கள்! ஆகஸ்ட் மாத விருந்து செம! சீக்கிரம் ஆகஸ்ட் வர வேண்டும் என்று விரும்புகிறேன் :-)

    ReplyDelete
    Replies
    1. அட...நீங்க ஏன் சார் வயித்தில புளிய கரைச்சிட்டு ?

      பனங்கிழங்கு smurf கதை பத்திச் சொல்லுங்க ; கேட்டுப்போம் !!

      Delete
    2. அப்ப இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க :-

      ஆல் இன் ஆல் ஸ்மர்ப்ஸ் மற்றும் மெக்கானிக் ஸ்மர்ப்ஸ் இருவரும் ஒரே நபரா ? இல்லை இரு வேறு நபர்களா?

      Delete
    3. சார். நம்ம பரணிக்கு மட்டும் நீங்க அதிகமா சந்தா சார்ஜ் பண்ணனும். பரணியோட கேள்விகளுக்கு மட்டும் இல்லாம சுட்டி பரணியோட கேள்விகளுக்கும் பதில் தர வேண்டியிருப்பதால்.

      @pfb. ஆகஸ்டில சுட்டி பரணியோட வாங்க. ஆசிரியரை மாட்டி விட்டுட்டு வேடிக்கை பாக்கலாம்.

      Delete
    4. முயற்சி செய்கிறேன் ம.ப.ஆசிரியர் பயந்து வராமல் இருந்து விடக்கூடாது.

      எங்கள் வீட்டு பொடியன் கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவன். அதுவும் கூட்டத்தைக் கண்டால் இன்னும் சிரமம். பார்க்கலாம்.

      Delete
    5. கூட்டிட்டு வாங்க பரணி ....எல கூட்டிட்டு வால

      Delete
  35. பதிவை படிச்சு முடிச்சவுடனே ஆகஸ்ட் இப்பவே வந்தா நல்லாருக்கும்னு மனசு துடிக்குது.

    ReplyDelete
    Replies
    1. டிக்கெட் போட்டாச்சா சார் ? நிறைய பிரியாணி commitments இருக்கிறதே ?!!

      Delete
    2. டிசம்பர்லயே போட்டாச்சுங்க சார். ஆகஸ்ட் நாலு வீட்டம்மா பொறந்த நாள்ஙகிறதால அன்னிக்கு வீட்ல இல்லாம போறதுக்கு நிறய தாஜா செஞ்சு ஈரோடு வரதுக்கும் பர்மிசன் வாங்கியாச்சு. ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஈரோட்டில்.

      Delete
  36. Sir please inform about jumbo comics 🙆🙆🙆😮😮😔😔

    ReplyDelete
  37. ட்யுராங்கோ வை சிங்கிள் ஷாட்டில் ரசிக்க முடியாதென்றுதான் நினைக்கிறேன்

    ReplyDelete
  38. கார்ஸனின் கடந்தகாலம் வரும் வரை எனது ஆல்டைம் பேவரிட் டெக்ஸ் கதை என்றால் அது பவளச்சிலை மர்மம் தான் சார். கதை முழுக்க ஆக்ஷன் மேளாதான் வித்தியாசமான சைஸில், வண்ணத்தில் அசத்தல்தான். இன்னொரு குதிரை நாயகர் ரிங்கோ விளம்பரத்தோடேவே நிற்கிறார். எப்போது களம் காணுவார் சார். நமது லயனில்???

    ReplyDelete
  39. ///
    அதன் இடத்தில் “பவளச் சிலை மர்மம்” வண்ண TEX மறுபதிப்பு இடம்பிடித்திடவுள்ளது இம்மாதத்து கூரியர் டப்பாவுக்குள் ! ///---வாவ்...பலியாக இருந்து தப்பும் அந்த செவ்விந்திய இளம் அழகியை கலரில் காணலாம்...

    புத்தகத்தின் அளவு சிறிய சைஸா பெரிய சைசாங் சார்...???

    ReplyDelete
    Replies
    1. தயவுசெய்து பெரிய சைசா போடுங்க சார் அப்போது தான் சித்திரம் மற்றும் வசனத்தை ரசிக்க முடியும்.

      Delete
    2. இன்னும் ஓரிரு நாளில் அனுப்பப் படும் எனும் போது,என் ஐயம் பிரிண்ட் செய்துள்ளது எந்த அளவில் என்பதே..!!!
      எதா இருந்தாலும் கும் கும் தான்...
      110பக்கமும் சும்மா தெறிக்கும் க்ளைமாக்ஸ் தான்...

      Delete
  40. I pray God there was no powerer cut in tamilnadu specifically sivakasi, coming months during hot season. Prepare any back up facility's to avoid power cuts. KADAVUL IRRUKKAN XIII AND TEXU.

    ReplyDelete
  41. டியூராங்கோ 3 பாகமாக ஒரே செட்டாக கார்டு பவுண்டில் வெளியிடுங்கள் சார்.....
    அன்பான வேண்டுகோள்
    இது...

    ReplyDelete
  42. ஏப்ரலில் ஜாம்போ காமிக்ஸ் , கிராபிக் நாவல் பற்றி அறிவிப்பதாக சொன்னதாக ஞாபகம் சார் . ...

    ReplyDelete
  43. எல்லா௫க்கும் வணக்கம்.
    ட்யூராங்கோ வை மும்மூன்று பாகங்களாய் வெளியிட்டால் உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகும் சார்!!!

    ReplyDelete
  44. ஆகஸ்ட் மாதம் எப்போது வ௫ம் என்று ஏங்க வைக்கிறது .ஏக்கத்தை மேலும் ஏத்துகின்றன ஆசிரியரின் பதிவுத் தகவல்கள்!!!

    ReplyDelete
  45. ஆகஸ்ட் இதழ்களுக்கு பல்வேறு சாகசங்களில் ஈடுபடும் teamக்கு வாழ்த்துகள். கிளாச்சிக் கோடை மலர் நினைவு படுத்தியதற்கு நன்றி ஆசிரியரே !

    ReplyDelete
  46. Durango 2019ல் oneshot albumஆக வெளியிடுவது வரவேற்கத்தக்கது

    ReplyDelete
  47. நான் இன்றைக்கு தான் வியாழக்கிழமை மொழிபொர்காக விஷயங்களை பார்த்தேன்.
    புலனாய்வு மொழிபெயர்ப்பு மிகவும் கடிமானது தான்.

    ஆனால் எனக்கு XIII புலனாய்வு மிகவும் பிடித்துள்ளது.
    எக்கசக்கமான உண்மை சரித்திர நிகழ்வுகளை ஆசிரியர் கதையோட்டத்தில் இனைத்துள்ளர்.
    கென்னடி மரணத்தை அப்படியே வான் ஹாம்மே இது போன்று நடந்தது இருக்கலாம் என்ற பார்வையில் எழுதி உள்ளார்.
    இன்றைக்கு டிகிரி தோஸ்தாக இருக்கும் அமெரிக்க, இஸ்ரேல் ஒரு கலாத்தில் முட்டிகொண்டது. இதன் உண்மை காரணத்தை குறிப்பாக கூறியுள்ளார்.

    காமிக்ஸ் என்பது எப்போதும் பொழுது போக்கிற்கு மட்டும் இல்லாமல், சில நேரங்களில் தகவல் களஞ்சியம் மாகவும் அனுக வேண்டும் என்பது என் கருத்து.

    இதில் வரும் உண்மை வரலாற்று அரசியல் சம்பவங்கள் வைத்தே கிளை கதை எழுதலாம்.
    வான் ஹாம்மே கூட ஒரு இடத்தில் தவறு செய்திருக்கிறார். அது என்னவென்று புலனாய்வு வந்த பிறகு புலனாய்வு செய்யலாம்.
    கிட ஆர்டினன் மற்றும் சிலருக்கு பிடித்த பக்கங்கள் உள்ளன.
    A4 இல்லாமல், எங்களுக்கு அனுப்பிய sizeல் வெளியிட்டால் எனக்கு தெரிந்த வரை DTP யில் எந்த ஒரு பிரச்சனையும் வராது.
    A4 size இருந்தால் கூட பலுன்கள் இல்லாத காரணத்தால் படங்களை சற்று மேலும் கீழுமாக நகர்தினால் தேவையான
    இடம் கிடைத்தது விடும்.

    கடைசியாக ஓரு வேண்டுகோள். கதையின் தன்மை தெரியாமல் ஆசிரியரை
    வாக்கு கொடுத்து விட்டிர்கள் என்று corner செய்ய வேண்டாம். வாக்கு தவறுவது கொடுங்குற்றம் கிடையாது. டிஜிட்டல் கோப்பு வரும் வரை அவருக்கே கூட புலனாய் மொழிபெயர்ப்பில் இவ்வளவு வேலை இருக்கும் என்று உணராமல் இருந்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. சிறப்பாக வர வாழ்த்துகள் கணேஸ்ஜி.

      Delete
    2. அருமை கணேஷ் குமார் உங்கள் இடை விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள்

      Delete
    3. கணேஷ் அப்ப சூப்பர் சைசுல படிக்க போறோம் . சூப்பர் . சார் ப்ளீஷ்...பப்ளீஷ்...

      Delete
    4. டியர் கணேஷ் உங்களின் தன்னலம் பாராத உழைப்பிற்கு நன்றிகள் பல....

      இரத்தபடலம் என்ற மெகா கனவு நிறைவேறுமா என்று பலரும் ஏக்கத்துடன் எதிர்பார்த்த நேரத்தில் இரத்தபடலம் கலரில் அட்டகாசமானதரத்தில் வெளிவரபோகிறது என்பது எவ்வளவு பெரிய செய்தி.. அதனை பெரியகொண்டாட்டமாக செய்யவேண்டாமா....
      ஈரோட்டில் நம் மறதி மன்னனை கொண்டாடுவோம்.


      புலன்விசாரணை வேண்டும் எனகூற சிலவாசகர்களுக்கு எப்படி உரிமையுள்ளதோ அதே போல புலன்விசாரணை தற்சமயம் வேண்டாம் என கூறவும் சில வாசகர்களுக்கு உரிமையுண்டு. எல்லா கதையும் எல்லோருக்கும் பிடிக்கும் எனசொல்லமுடியாது...எனவே


      ஈரோட்டில் இரத்தபடலத்தை கொண்டாட தயாராகுவோம்... புலன்விசாரணை இல்லையென்றாலும்....

      Delete
    5. கணேஷ்@ சவாலான பணியை செய்வதற்கு வாழ்த்துகள்...

      சுந்தரா@ ///புலன்விசாரணை வேண்டும் எனகூற சிலவாசகர்களுக்கு எப்படி உரிமையுள்ளதோ அதே போல புலன்விசாரணை தற்சமயம் வேண்டாம் என கூறவும் சில வாசகர்களுக்கு உரிமையுண்டு. எல்லா கதையும் எல்லோருக்கும் பிடிக்கும் எனசொல்லமுடியாது...///...நடுநிலையான கருத்து இதை வரவேற்கிறேன்.

      ///ஈரோட்டில் இரத்தபடலத்தை கொண்டாட தயாராகுவோம்... புலன்விசாரணை இல்லையென்றாலும்....///...இது டாப்பான மேட்டர்பா, தாரை தப்பட்டைகளோட "அனைத்து" ஏற்பாடுகளும் நடக்கட்டும்....

      இரத்தப்படலம் வண்ண முழு தொகுப்பிற்கு அஃபிசியலாக முதல் குரலை 2012லேயே பதிவு செய்துள்ளேன்.(பார்க்க சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெசல்). அதில் நான் தெரிவித்துள்ள கனவுகள் அனைத்தும் நிறைவேறிய நிலையில் இதுவும் நனவாகப் போவதில் ஏக மகிழ்ச்சி.....

      Delete
    6. டாக்டர் சார்...நச்சுன்னு ..பட்டுன்னு தெளிவா சொல்லிட்டீங்க..

      வழிமோழிகிறேன்.:-)

      Delete
  48. Happy Sunday
    Welcome colour full April

    ReplyDelete
  49. கல்கிக்கு பொன்னியின் செல்வன் ,குமுததுக்கு கடல்புறா, விகடனுக்கு தில்லானா மோகனாம்பாள் போல லயன் காமிக்ஸ் க்கு ரத்தப்படலம்.(ஏம்ப்பா நான் சரியாத்தான் சொல்றேன்?)

    ReplyDelete
    Replies
    1. சரி தான்ன்ன்ன்ன்ன்ன்ன்..................
      ஆனா இரத்தப்படலத்தைவிட மின்னும் மரணம் 'கொஞ்சம் ஒஸ்தி' என்பது எனது தனிப்பட்ட கருத்து நண்பரே.
      (நண்பர்கள் கோபப்படவேண்டாம், இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே. மேலும் எனக்கு எல்லா காமிக்ஸ்சும் ஒன்றுதான்)

      Delete
    2. "மின்னும் மரணம்" மாஸான கதைதான்; பிரம்மாண்டமான களம், ஆனா லயன் காமிக்ஸ்ன் பிராண்ட்ல அது வர்லயே...(ஒரேயொரு பாகம் மட்டுமே லயனில் வந்தது) முத்து காமிக்ஸ்க்கு டாப்பாக இருக்கும் அது... முத்துவிலும் கூட, டியூராங்கோ அனைத்து கதைகளும் வெளிவந்து முடித்த பிறகு "டியூராங்கோ vs மின்னும் மரணம்"--எது டாப்புனு பார்ப்பதே சமமான போட்டிக் களம்...

      ஆனா லயனின் டாப்பாக வருவதற்கு அத்தனை தகுதிகளும் இருக்கும் கதை இரத்தப்படலம் மட்டுமே... கெளபாய் கதைகளங்கள் பல வரக்கூடும் எதிர்காலத்தில்... இரத்தப்படலம் போன்ற களமே அதற்கு எளிதாக டாப் இடத்தைப் பெற்றுத் தருகிறது...

      இப்ப, கம்பேக்கிற்கு பிறகு நமக்கு வருவது ஓரே பிராண்ட்... அது "லயன்-முத்து"...

      லயன்-முத்துவின் டாப் எதுவென்ற கேள்விக்கு பதில் கூறுவது சற்று ஆழமான கேள்வி....

      "இரத்தப்படலம்" முழுவண்ணத் தொகுப்பு, பதிப்பக உலகில் ஏற்படுத்தும் தாக்கம் இதற்கு பதில் தரக்கூடும்..... வெயிட்டிங் கேம் ஸ்டார்ட்ஸ் நவ்....

      Delete
  50. சார் அருமையான பதிவு . இப இது லரை இது போல இதழில்லை என வியக்கச் செய்வது உறுதி என தாங்கள் தெரிவித்த போதே அட்டகாசமான அட்டைகளுடன் தயாராகி விட்டீர்கள் என்பது உறுதியாகி இருந்தது . இப்ப இன்னும் எகிறியுள்ள தங்களஂஉற்ச்சாகம் , அடுத்த உபவில் இபவின் அட்டைபடத்தை கண்ணில் காட்டுமென பட்சி சொல்கிறது . இப ஒரு பக்கம் மின்னுது . டெக்சின் பசிம தகதகக்குது . கோடை மலர் தந்த பரவசத்த எதும் தந்தாதான் வியப்பே . அந்த வவார்த்தய படிச்சாலே எங்கோ போகும் மனமே சாட்சி . தமிழிலே அழகிய வசீகர வார்த்தைன்னாலே காதலுக்கு அடுத்து கோடைமலராத்தானே இருக்கும் கோடை இடி முழக்கமாய் மலர உள்ள ட்யூராங்கோ தொகுப்பாயே வர்ட்டும் வருங்காலமெல்லாம் . கோடை மலர படிச்சு , தாங்கி எழுந்ததும் ,ஸ்பைடர வெளியிட எந்தக் கக பக்கமா எழுந்தா ஸ்பைடர வெளியிடுவீங்களோ அந்த கை பக்கமா எழுந்து அந்த கையால சின்ஸ்டர் செவன தூக்கி படிச்சு வியந்து , அத தீபாவளிி மலரா வெளியிடுவீங்கன்னு பட்சி கத்துறது மெய்யா சார் .

    ReplyDelete
  51. தொடரவிருக்கும் 2019-ல் இவரது சாகஸங்களை one shot சிங்கிள் ஆல்பங்களாக வெளியிட்டால் எவ்விதமிருக்கும் என்பீர்கள் ? /

    எனது பதிலும் 3 பாக கதைகளே.. காரணம் தனித்து வந்தால் மற்றவர்களின் ஸ்லாட்களில் கை வைக்க வேண்டும்

    ReplyDelete
  52. இப வின் இந்த ஒரு பக்கமே வண்ண வித்தைகளயும் , கதை மன்னரின் விறுவிறுப்பான பாணியையும் காட்டுகிறது....

    ReplyDelete
  53. சார்...இந்த பதிவுல கூட புக்கை எப்ப அனுப்புவீங்கன்னு சொல்லலையே ..

    தேதி 25 ஆயிருச்சு சார்..:-(

    ReplyDelete
  54. யாராவது கவனிச்சிங்களான்னு தெரியல,தளத்தின் பார்வைகள் இருபத்தி எட்டு லட்சத்தை தாண்டிருச்சி,விரைவில் முப்பது லட்சத்தை எட்டிவிடும்,அதற்கு ஒரு ஸ்பெஷல் விட்டே ஆகணும்,என்ன ஸ்பெஷல்னு ஆசிரியர் விரைவில் அறிவித்தால் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. அட போங்க ஜி. பத்து லட்சம் பார்வைக்கு பின் இருபது லட்சம் பார்வைக்கு இன்னும் ஸ்பெஷல் புத்தகம் வரவில்லை; முதலில் இதற்கு ஒரு ஸ்பெஷல் புத்தகம் கேட்போம் அதன் பின் முப்பது லட்சம் பார்வையை பார்த்துக் கொள்வோம்.

      Delete
    2. சூப்பர் சிக்ஸில் வந்த ஜெராமியா தான் அந்த இருபது லட்சம் ஹிட் பரணி. அதில் ஹாட் லைனில் ஆசிரியர் சார் குறிப்பிட்டு இருப்பார் பாருங்க...

      Delete
    3. ஆமால.அதானே...

      இருபது லட்சம் முடிஞ்சுறுச்சு இத்தனை நாள் கழிச்சு அதுக்கு ஸ்பெஷல் கேட்டா ஆசிரியர் உடனே வாழைபூ வடையை தான் கொடுப்பாரு ..அதானால சிசிவ இதுவரை வந்த தொகுப்பை வெளியிடுமாறு அ.உ.சி.சி.வ.ம.வின் வேண்டுகிறோம்..

      Delete
    4. சூப்பர் சிக்ஸில் வந்த ஜெராமியா தான் அந்த இருபது லட்சம் ஹிட் பரணி. அதில் ஹாட் லைனில் ஆசிரியர் சார் குறிப்பிட்டு இருப்பார் பாருங்க.

      #####

      போச்சுடா ...இது வேறய்யா..சரி ஜெராமியா சரியான வெற்றி பெறாத காரணத்தால் இது ஒத்துக்கபடாது என அறிவித்து கொண்டு சிசிவ தொகுப்பை வெளியிடுமாறு வேண்டிகொள்கிறோம்.

      Delete
    5. தலீவரே@ 30லட்சம் ஹிட் ஸ்பெசலுக்கு சி.சி.வ. தொகுப்பாக போட கேட்கும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்க முன்மொழிகிறேன்...

      Delete
  55. சிகப்பாய் ஒரு சொப்பனம் - விமர்சனம்,
    வெளியீட்டு ஆண்டு – 2013 ஜனவரி, வெளியீட்டு எண் – 215, பக்கங்கள் – 240, விலை – 50 /-
    கதைக் கரு: தவறான சிந்தனையால் தனது செவ்விந்திய இனத்தை மோசமாக வழிநடத்தி வெள்ளை இனத்தவர்களை மிகப் பெரும் போரால் அடக்க முனையும் மனிடாரி எனும் செவ்விந்தியனை நமது இரவுக் கழுகார் டெக்ஸ் தனது குழுவினருடன் சென்று அடக்குவது.
    வன்மேற்கின் ஹுவால்பை எனும் ஒரு செவ்விந்திய கிராமத்தின் மலைமுகட்டின் விளிம்பில் தொடங்குகிறது கதையின் களம், நிசப்தமாக அமர்ந்திருக்கும் ஹுவால்பை செவ்விந்தியன் மனிடாரியின் முன் வானில் பிரசன்னமாகும் காவல் தேவதை தனது அசரீரியின் மூலம் அனைத்து செவ்விந்தியர்களையும் ஒன்று சேர்க்குமாறும்,வெள்ளை இனத்தவர்களை எதிர்த்து போரிட்டு வெல்ல தயாராகுமாறும் கட்டளையிட்டு மறைகிறது,
    இச்சம்பவங்களுக்கு பின்னர் அடுத்த ஆறு மாதங்கள் கழித்து நமது அதிரடி நாயகர் தனது குழுவினருடன் ஷெல்லர் கோட்டையை நோக்கி பயணிக்கிறார்,அவர்கள் பேச்சினிடையே ஷெல்லர் கோட்டையின் கர்னல் கிளிப்டனின் ஆணையை ஏற்று வருகை புரிவதாக அறியமுடிகிறது. பயணத்தினிடையே செவ்வேந்தியக் கும்பலால் மோசமாக தாக்கப்பட்டு மரணமடைந்து கிடக்கும் ஒரு வெள்ளை படைக்குழுவை எதிர்கொள்ள நேரிடுகிறது.தாக்கிய அம்புகளை வைத்து இத்தீச்செயலை புரிந்தது ஹுவால்பை செவ்விந்தியர்கள்தான் என்று அறிந்து கொள்கின்றனர், வருத்தத்துடன் கோட்டையை நோக்கி பயணமாக,திடீரென செவ்விந்தியக் கும்பல் ஒன்று டெக்ஸ்வில்லர் குழுவினரின் மேல் அதிரடி தாக்குதல் நடத்த முயல்கிறது,லேம்டாக் என்பவன் தலைமையில் வரும் அச்சிறுபடைதான் கோட்டையின் படைக்குழுவை தாக்கியிருக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளும் டெக்ஸ் குழு தற்காலிகமாக பின்வாங்கும் உத்தியை கையாள முடிவு செய்து பின்வாங்குகின்றனர்.
    மலை முகட்டை நோக்கி நகரும் டெக்ஸ் குழு தாக்குதல் தொடுக்க முடிவெடுத்து துப்பாக்கி சண்டையில் இறங்க செவ்விந்தியர்களின் அதிரடியால் டெக்ஸ் மற்றும் கார்சனின் குதிரைகளை இழந்து நெருக்கடியில் சிக்குகின்றனர்,அச்சூழலில் அதிர்ஷ்டவசமாக அங்கே வரும்
    ஷெல்லர் கோட்டையின் மற்றொரு படைப்பிரிவு டெக்ஸ் குழுவை காப்பாற்றுகிறது.பின்னர் அவர்களுடன் பேச்சு கொடுக்கும்போது யுடே இனத்தை சேர்ந்த மாந்திரீக கிழவர் இருள்மேகம் என்பவர் கோட்டையில் இருப்பதாகவும்,அவர் டெக்ஸுடன் மட்டுமே பேச விரும்பியதால் கர்னல் கிளிப்டன் டெக்சை அழைத்ததாகவும் தெரிந்து கொள்கின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. பின்னர் ஷெல்லர் கோட்டையை சென்றடையும் டெக்ஸ் குழு கர்னலின் உதவியுடன் இருள்மேகத்தை சந்திக்க டெக்ஸுடன் தனிமையில் உரையாடும் இருள்மேகம் ஹுவால்பையின் தற்போதைய செவ்விந்திய தலைவன் மனிடாரியின் கெட்ட நோக்கத்தையும்,தடுக்க முயன்ற தான் தாக்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக கோட்டைக்கு வந்தடைந்ததையும், மனிடாரி கிங்மேன் நகரை சேர்ந்த ஆயுத வியாபாரி கேரிஸன் மூலம் ஆயுதங்களை பெற்று போருக்கு தயாராவதையும் கூறுகிறார்.
      உங்களால் மட்டும்தான் இப்போர் சூழலை தற்போது தடுத்து நிறுத்தவும், மனிடாரியை அடக்கவும்,செவ்விந்தியர்கள் இனத்தை அழிவில் இருந்து காக்க முடியும் என்று கூறும் இருள்மேகத்தின் கோரிக்கையை ஏற்கும் டெக்ஸ் உடனடியாக ஒரு திட்டம் வகுக்கிறார்.தனது திட்டத்தை கர்னலிடம் விளக்கும் டெக்ஸ் மனிடாரிக்கு ஆயுதம் கிடைக்கவுள்ள பத்துநாள் அவகாசம் உள்ளதாகவும் அதற்குள் தனது திட்டப்படி மனிடாரியை காணாமல் போகச் செய்வேன் என்றும் கர்னலினிடம் வாக்களித்து விட்டு தனது குழுவினருடன் கிளம்புகிறார்.
      பின்னர் டெக்ஸின் திட்டப்படி கிட்டும்,கார்சனும் கிங்மேன் நகரை நோக்கியும்,டெக்ஸும்,டைகரும் மனிடாரி கிராமத்தை நோக்கியும் பிரிகின்றனர், கிங்மேனை சென்றடையும் கார்சன் கிட்டின் துணையுடன் ஆயுத வியாபாரி கேரிசனின் உதவியாளன் எட்விங்கை கடத்தி அவனிடம் விவரங்களை கேட்டறிகிறார்,லால் கிராமத்தின் அருகே மேற்திசையில் கொலராடோ செல்லும் வழியில் டென்ஷிப் சுனையருகே ஆயுத பரிமாற்றம் நிகழும் என்று அறியும் கார்சனும்,கிட்டும் தாமதத்தை ஈடுகட்ட வேகமாக விரைகின்றனர்.

      Delete
    2. மறுபுறம் மனிடாரியை தேடிச் செல்லும் வழியில் முதலில் சந்தித்த லேம்டாக் குழு தங்க வேட்டைக்காக வெள்ளையர் குழுவை வேட்டையாடுவதைக் காணும் டெக்ஸும்,டைகரும் லேம்டாக் குழுவை பின்தொடர முடிவெடுக்கின்றனர்,இடையே அசந்தர்ப்பமாக அவர்களை காணும் செவ்விந்தியக் குழுவினர் துரத்த,ஒரு குறுகிய வளைவில் செல்ல நேரிடும்போது எதிர்பாரா வகையில் மலைச்சரிவில் டைகர் விழ நேரிட,கையில் சிக்கும் ஒரு கிளையை பிடித்துத் தொங்கும் டைகர் பாதுகாப்பு கருதி டெக்சை உடனே கிளம்ப சொல்கிறார்,பின் செவ்விந்தியர்களின் கவனத்தை திசை திருப்ப காப்பாற்றக் கோரி டைகர் சத்தமாக குரல் எழுப்ப கவனம் சிதறும் லேம்டாக் குழுவினர் அவரைக் காப்பாற்றி மேற்படி விவரம் அறிந்து கொள்ள தமது தலைவன் மனிடாரியிடம் கொண்டு செல்ல முடிவெடுக்கின்றனர்.
      மீண்டும் அவர்களை கண்டறிந்து டெக்ஸ் மறைமுகமாக தொடர,எதிர்பாரா ஒரு தருணத்தில் இரண்டு மலைச்சிங்கங்களின் மூலம் வரும் ஆபத்தை தவிர்க்க ஆயுதத்தை பயன்படுத்த,அச்சத்தம் லேம்டாக் குழுவின் கவனத்தை ஈர்க்க அவர்களிடமிருந்து தப்பிக்க முனையும் டெக்ஸ் ஓடும் வழியில் நீர்வீழ்ச்சியின் அருகே உள்ள ஒரு சுரங்கத்தில் விழுகிறார்.
      இதனிடையே கிடைக்கும் வாய்ப்பில் நழுவுகிறார் டைகர்,செல்லும் வழியில் சுரங்கத்திலிருந்து வரும் டெக்சை சந்திக்க இருவரும் மனிடாரியின் கிராமத்தை நோக்கி மீண்டும் பயணமாகின்றனர்,டெக்சை துரத்திய லேம்டாக் குழு நேரமின்மையால் தேடுதலை கைவிட்டு தங்கப் பாளத்தை மனிடாரியிடம் ஒப்படைத்து விட்டு இரவு விருந்தில் கலந்து கொள்ள கிளம்புகின்றனர்.
      மறுபுறம் டென்ஷிப் சுனையை நோக்கி பயணிக்கும் கார்சனும்,கிட்டும் லால் கிராமத்தில் படகு செய்யும் க்ளாக் என்ற நபரை சந்திக்க க்ளாக்குடனான உரையாடலில் கார்சனின் அவசர சூழலையும்,தேவையையும் புரிந்துக் கொள்ளும் க்ளாக் அவர்களுக்கு ஒரு படகை தந்து உதவ,அப்படகில் கார்சனும் கிட்டும் டென்ஷிப் சுனையை நோக்கி மின்னலாய் கிளம்புகின்றனர்.

      Delete
    3. இன்னோர்புறம் மனிடாரியை சந்திக்கும் லேம்டாக் குழுவினர் கொள்ளையடித்த தங்கத்தை ஒப்படைத்துவிட்டு இரவு விருந்தில் ஆர்ப்பாட்டத்துடன் கலந்து கொள்கின்றனர்.அத்தருணத்தில் பின்தொடர்ந்த டெக்ஸ் வந்து சேர,அங்கு மனிடாரி உரைநிகழ்த்தி விட்டு கூடாரம் செல்வதை காணுகிறார்,,பின்னர் மனிடாரியின் கூடாரத்தின் பின்புறமாக சென்று கூடாரத்தை கிழித்து உள்ளே செல்கிறார்,இடையே இரவு விருந்தில் மாறுவேஷத்தில் கலக்கும் டைகர் டென்ஷிப் சுனையருகே ஆயுதப் பரிமாற்றம் நிகழப் போகிறது என்று உரையாடும் சில செவ்விந்தியர்கள் பேச்சை தற்செயலாக கேட்கிறார், கூடாரத்தில் புகும் டெக்ஸ் மனிடாரி தனது காதலி ஜடாவுடன் போதையில் உருள்வதை கண்டு “ஆகா ஆன்மமீக குரு அழகியின் அரவணைப்பில் கிடக்கிறாரா?” என்று நகைக்கிறார்,பின் ஜடாவை சப்தமின்றி கட்டிப் போட்டு மனிடாரியை தனது முஷ்டி பிரயோகத்தால் மயக்குமுறச் செய்து அவனுடன் நழுவுகிறார்,
      தனது கட்டுக்களை அவிழ்த்து தப்பிக்கும் ஜடா சப்தமெழுப்ப, கடும் கோபத்துடன் செவ்விந்தியர்கள் குழு டெக்சை பின்தொடர,இக்குழப்பத்தை பயன்படுத்தி நழுவும் டைகர் டெக்சுடன் இணைந்து கொண்டு தான் கூட்டத்தில் இருந்த போது கேட்ட டென்ஷிப் சுனை சந்திப்பை பற்றி விளக்குகிறார்.இதனால் மனிடாரியுடன் அங்கே செல்ல டெக்ஸ் முடிவெடுக்கிறார்.

      Delete
    4. அங்கே படகில் செல்லும் கார்சனும், கிட்டும் டென்ஷிப் சுனையை நெருங்கி ஆயுதப் படகை நோட்டமிடுகின்றனர்,அவர்களை மோப்பம் பிடிக்கும் ஒரு செவ்விந்தியனால் இருவரும் துப்பாக்கியை பிரயோகிக்கும் சூழல் ஏற்பட கடும் சண்டை ஏற்படுகிறது.நெருக்கடியை குறைக்க கிட் படகின் பின்புறத்திற்கு சென்று தாக்குதல் தொடுக்க கிட்டின் அதகளத்தில் படகில் உள்ளவர்கள் சிலர் மேல் லோகத்தை எட்டிப் பார்க்க மீதி உள்ளோர் சரணடைகின்றனர்.
      அதே நேரத்தில் டெக்ஸும்,டைகரும் மனிடாரியுடன் ஆயுதப் படகை நெருங்குகின்றனர்,படகில் ஒன்று சேரும் டெக்ஸ் குழுவினரை வீழ்த்த முயலும் செவ்விந்தியக் குழுவிற்கு கடுக்காய் கொடுத்து விட்டு மனிடாரியுடன் கிளம்புகிறது இரவுக் கழுகாரின் குழு.
      “வழிநடத்த ஒரு தலைவனும் இல்லை,போதிய ஆயுதங்களும் கையிருப்பில் இல்லை, என்றாகி விட்டபடியால் அருள் வாக்குப்படி போரிட்டு வெற்றி ஈட்டும் ஹுவால்பைகளின் ஆசை இப்போது பகற்கனவாகிவிட்டது” என்ற டெக்ஸின் வசனத்துடன் கதை நிறைவடைகிறது.
      இந்தக் கதை முதலில் “எமனின் ஏஜெண்ட்” என்ற தலைப்பில் வருவதாக ஆசிரியரால் விளம்பரம் செய்யப்பட்டதாக நினைவு.
      ஏனோ பின்னர் “சிகப்பாய் ஒரு சொப்பனம்” என்ற பெயரில் இந்த டெக்ஸின் சாகசம் வெளியானது.
      ஆங்காங்கே டெக்ஸ் கதைக்குண்டான பஞ்ச் வசனங்களும் இடம் பெற்றுள்ளன.அவற்றை கதையின் போக்கில் படிப்பதே சிறப்பாக இருக்கும்.இதை விமர்சனம் என்பதா, நீண்டதொரு கதை விவரிப்பு என்பதா என்று தெரியவில்லை.மிதமான ஓவியங்களை இச்சாகசம் கொண்டிருந்தாலும் கதையின் மேலும்,களத்தின் மேலும் அபாரமான ஒரு ஈர்ப்பை கொடுப்பதே இதன் பலம்.இந்த சாகசத்தை எத்தனை முறை வாசித்தாலும் சலிப்பதில்லை,செவ்விந்தியக் களத்தில் நடக்கும் டெக்ஸின் சாகசங்கள் என்றுமே அலாதியானவை.
      // இதே போன்ற செவ்விந்திய களத்தை அடிப்படையாக கொண்டு வரும் ஆகஸ்ட் 2018 டெக்ஸ் 70 ஸ்பெஷலில் ஒரு மெகா சாகசம் வந்தால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி.//

      Delete
    5. அடேங்கப்பா எவ்ளோ பெரிய மாத்திர....
      உங்கள் உழைப்புக்கு தலைவணங்குகிறேன்....

      Delete
    6. ரவி சார்...

      அடேங்கப்பா ..அடேங்கப்பா...

      செம....உங்களுக்கு கூட இப்படி கதை சொல்ல நேரம் இருக்கா ..

      பாராட்டுகளோ பாராட்டுக்கள்..

      Delete
    7. சூப்பர் ரவி...நச்...
      உங்கள் பதிவில் முதல் வரியை இப்படி போட்டு என்னுடைய பதிவாகவும் காப்பி பேஸ்ட் செய்துடறேன்.

      "5ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் டெக்ஸ் சாகசம் எனும் போது எதிர்பார்ப்புகள் ஏகமாய் எகிறிக் கிடந்தன;அதற்கு ஏற்றவாறு அத்துனை அம்சங்களையும் கொண்டு சக்கை போடுபோட்டு, மறுவரவின் முதல் சாகசமே மெகா ஹிட்டாக அமைத்து போனது; தொடர்ந்து வரும் வில்லர் விருந்துக்கு கட்டியம் கூறவுது போல அமைந்தது"


      அப்ப டியூராங்கோ சுருக்கமாக எழுதி உடனடியாக அனுப்ப பாருங்க ரவி...

      Delete
    8. 👏👏👏....//செவ்விந்தியக் களத்தில் நடக்கும் டெக்ஸின் சாகசங்கள் என்றுமே அலாதியானவை.//+1

      Delete
    9. சூப்பர் ரவி அருமையான நீண்ட. கதையை மீண்டும் படிக்கத்தோன்றும் விமர்சனம்

      Delete
  56. // இதே போன்ற செவ்விந்திய களத்தை அடிப்படையாக கொண்டு வரும் ஆகஸ்ட் 2018 டெக்ஸ் 70 ஸ்பெஷலில் ஒரு மெகா சாகசம் வந்தால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி.//
    எனக்குமே அதே.
    அறிவரசு சார் அசத்தல்.

    ReplyDelete
  57. டியர் எடிட்டர்,
    டியுராங்கோ கதைகள் தொகுப்பாகவே வெளியிடுங்கள். தனி புத்தகங்களாக வேண்டவே வேண்டாம். தயவு செய்து... ☺☺

    ReplyDelete
  58. Sir please announce about jumbo comics & super 6💆💆😯😯😮🙆💆🙆💆

    ReplyDelete
  59. டெக்ஸ் குழுவினர் முதன்முதல் தோன்றிய சாகசம் பளிங்குச்சிலை மர்மம்..அற்புதமான சித்திரங்களுடன் பெரிய சைஸ் புத்தகம் வண்ணத்தில் வருவது கண்டு மகிழ்ச்சி .எத்தனை முறை படித்தாலும் அலுக்காத கதை. வரவேற்கிறேன் ..புலன் விசாரணை தமிழ்ப் படுத்தும் நண்பர்கள் ஊக்கத்துடன் செயல்பட்டுக்கொண்டு இருப்பது தெம்பைத்தருகிறது..புலன் விசாரணை அவசியம் வேண்டும் என்போரில் நானும் ஒருவன் .

    ReplyDelete