Powered By Blogger

Sunday, October 22, 2017

கதைகளின் கதையிது !

நண்பர்களே,

வணக்கம். ஒரு வண்டிப் புதுக் கதைகள் தாங்கிய அட்டவணை ; அவை தொடர்பான அலசல்கள் ; விவாதங்கள் ; சர்ச்சைகள் என்று இந்த வாரத்தை ஒரு மெர்செல் வாரமாக்கியுள்ளோம் ! கமான்சே எங்கே ? சிஸ்க்கோ கிட் எங்கே ? டயபாலிக் எங்கே ? ரிப்கிர்பி எங்கே ? அப்புசாமி தாத்தா எங்கே ? சீதாப்பாட்டி எங்கே ?  சாம்பு எங்கே ? என்று கேள்விகள் சும்மா பும்ராவின் யார்கர்கள் போல் பறக்க - அவரவர் புரிதல்களுக்கேற்ப விளக்கங்கள் சொல்ல / மறுக்க முனைய - "சை...எனக்கு விளக்கங்களே புடிக்காது !!" என்று சிலர் கை கட்டி ஓரமாய் நிற்க - ஒரு அக்மார்க் நீலப்பொடியர் கிராமத்து effect கண்ணில்பட்டது எனக்கு ! சரி, இதற்கெல்லாம் வரிக்கு வரி பதில் சொல்லுகிறேன் பேர்வழி என்று நானும் நாலைந்து கோலி சோடாக்களைக் காலி பண்ணுவதற்குப் பதிலாய் நண்பர் காமிக் லவர் ராகவன் சொன்னது போலொரு "சிங்கத்தின் சிறுவயதில்" எடுத்து விட்டால் தேவலை என்றுபட்டது ! என்ன ஒரே வித்தியாசம் - இந்த "சி.சி.வ" பதிவில் சில பல கேள்விகளுக்குமான விடைகள் இலவச இணைப்பாகக் கிட்டவும் கூடும் ! அது மட்டுமன்றி - தலீவரின் உண்ணும் விரதத்தை ஒரு முடிவுக்கு கொணர இது ஒரு வகையில் பயன்பட்டாலும் நலமே என்று நினைத்தேன் ! So here goes : 

ஒவ்வொரு புத்தக விழாவிலும் சரி, இங்கு நமது பதிவுகளிலும் சரி - கேட்கப்படும் கேள்விகள் இந்த ரீதியில் இருப்பது மாமூல்  : "வேதாளரை ஆண்டுக்கு ஒருமுறையாச்சும் கண்ணில் காட்டுங்களேன் ?" ; "காரிகன் ; சார்லி ; ஜார்ஜ் ஒரேயொரு புக் மட்டும் ப்ளீஸ் ?" One ஆர்ச்சி மட்டுமாச்சும் ?" நானும் "இப்போ ராகு காலம் ; அடுத்து எம கண்டம் ; அஷ்டமி-நவமி வருது ; அடுத்த மாசம் வடகிழக்குப் பருவ மழை ஆரம்பிக்கப் போகிறது இத்யாதி..இத்யாதி" என்று எதையேனும் சொல்லிச் சமாளிப்பது வழக்கம் ! "அட - முன்னரெல்லாம் முத்துவிலும் சரி, லயனிலும் சரி, இந்த வேதாளர் ; மாண்ட்ரேக் ; கிர்பி ; காரிகன் etc கதைகளை சரளமாய் வெளியிட்டீர்களே ? ; இப்போது ஒன்றே ஒன்றை மட்டுமாச்சும் ஆண்டுக்கொரு தபா கண்ணில் காட்ட ஏனிந்த கிராக்கி ?" என்ற பல மைண்ட்வாய்ஸ்கள் loud & clear ஆக எனக்கு கேட்காதுபோவதில்லை ! காரணம் ரொம்பவே சிம்பிள் :

முன்பெல்லாம் அந்த அமெரிக்க strip comics களுக்கு இங்கே ஏஜெண்ட்கள் இருந்தனர் & பல இந்திய மொழிகளில் ஏதேதோ போணியாகி வந்ததால் - ஏதோவொரு வகையில் வண்டி ஓடிக் கொண்டிருந்தது ! மலையாளத்தில் ஏதோ விற்பனையாகும், வங்காள மொழியில், ஹிந்தியில் என நம்மைப் போன்ற பதிப்பகங்கள் இயன்றதைச் செய்து கொண்டிருப்பார்கள் அந்நாட்களில் ! ஆனால் இன்றைக்கு அவர்கள் போன தடமும் கிடையாது ; இருந்த சுவடும் தெரியாது !  So செய்தித் தாள்களில் வெளியாகும் அந்த ஒற்றை panel ; ரெட்டைப் panel கார்ட்டூன்களுக்கு மட்டுமே கவனம் செலுத்தினாலே  -   அந்த வருமானமே ஒரு முரட்டுத் தொகையாகி விடுகிறது, இங்குள்ள முகவர்களுக்கு ! So நம்மைப் போன்ற பெட்டிக் கடைப் பதிப்பகங்களோடு நேரம் செலவிட ஏஜெண்ட்களும் பிரியம் காட்டுவதில்லை ; அங்குள்ள தாய் நிறுவனங்களுக்கு அவகாசமோ, பொறுமையோ ; ஆட்பலமோ இருப்பதில்லை ! So ஆண்டுக்கொரு சிஸ்கோ ; சார்லி ; காரிகன் என்று போடக் கோரும் நண்பர்களுக்கு நான் கையைப் பிசைந்து கொண்டே தான் சாக்குச் சொல்ல வேண்டிவருகிறது ! மெய்யாக ஒரு தொடரினுள் இறங்கிட வேண்டுமா ? அப்படியெனில் - அதற்கென கணிசமான slots & ஒரு மிகக் கணிசமான முன்தொகையை தூக்கி மேஜையில் வைக்கும் சத்து நமக்கிருக்க வேண்டும். இவை இரண்டுமே  இல்லாத வரையிலும்  அமெரிக்கப் படைப்பாளிகளை சந்திக்கலாம் ; மரியாதை நிமித்தம் அவர்கள் தரும் கோக்கையோ, பெப்ஸியையோ உறிஞ்சலாம் ; ஊருக்குப் போய்க் கடுதாசி போடுவதாய்ச் சொல்லி விட்டு, போலியாகச் சிரித்துக் கொண்டே கைகுலுக்கி விட்டு வீட்டைப் பார்த்துக் கிளம்பலாம் ! அதைத் தாண்டி நாம் சாதித்தது வேறெதுவுமாய் இராது !  

Start : "சி.சி.வ." : 5 ஆண்டுகளுக்கு முன்பாய் நமது மும்மூர்த்திகள் + ஸ்பைடர் மறுசுற்று reprints தொடர்பாய் அமெரிக்க நிறுவனமான DC காமிக்ஸில்  பேசிட முனைந்த  போது நடந்தது அட்சர சுத்தமாய் இதுவே ! New York-ன் ஒரு வெட வெடக்கும் பனி நாளில் 'ஜிலோ' நடை போட்டு DC Comics ஆபீசில் ஆஜரானேன் - முன்னாட்களைப் போல நம் தேவைகளுக்கேற்ப அவ்வப்போது கதைகளை வாங்கி கொள்ளலாமென்ற பகல் கனவோடு ! அவர்களும் கண்ணியமாய் வரவேற்று, நமது வரலாறு, பூகோளம் பற்றியெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள் ! 'அடடே...இவ்ளோ நல்ல ஜனமா இருக்காங்க ; இத்தனை ராட்சச  நிறுவனம் என்ற பந்தா துளி கூட இல்லாது பழகுறாங்களே !!" என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன் ! இது முன்னமே தெரிந்திருந்தால் கோட்டு-சூட்டெல்லாம்  போட்டுக் கொண்டு "டார்லிங்..டார்லிங்.." கல்லாப்பெட்டி சிங்காரம் போல ஆஜராகாமல், ஒழுங்காக வந்திருக்கலாமோ ? என்றும் தோன்றியது ! பேச்சுவாக்கில் அப்படியே நமது எதிர்பார்ப்புகளை ; கோரிக்கைகளை முன்வைத்து விட்டு அவரது முகத்தில் ஓடும் ரியாக்ஷனுக்குப் பொருள் என்னவாக இருக்குமென்று யூகிக்க முயன்று கொண்டிருந்தேன் ! நான் எழுதியிருந்த காகிதத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தவர் சன்னமான குரலில் பேச ஆரம்பித்த போது, எனக்கு மெது மெதுவாய் அறையில் குளிர் கூடுவது போலவே தோன்றத் தொடங்கியது ! வேறு மாதிரி ஆட்களாய் இருந்திருப்பின், நான் சலனமின்றி முன்வைத்த கோரிக்கைகளைக் கேட்டு கெக்கேபிக்கே என்று சிரித்து வைத்திருப்பார்கள் ; ஆனால் அற்புத மனிதர்கள் அவர்கள் ! பொறுமையாய் தங்களது பணிமுறைகளைப் பற்றி விளக்கிச் சொல்லி ; நாட்களும், சர்வதேச வருவாய் எதிர்பார்ப்புகளும் எத்தனை மாறிவிட்டன என்பதையும் சுட்டிக் காட்டினர் ! பதினோராவது மாடியில் உள்ள அவரது அறையில் அமர்ந்து, அந்த ஜன்னல்கள் வழியாகப் பார்க்கும் போது கீழே தேனீக்களின் கூட்டம் போல் மனிதத் தலைகளால் நிறைந்து கிடக்கும் டைம்ஸ் சதுக்கமே என்னைப் பார்த்து "இத்தனை பெரிய நிறுவனத்தில்- இப்படியொரு கோரிக்கையோடு ஆஜராகியிருக்கிறாயே -லூசாப்பா நீ ?" என்று கேட்பது போலிருந்தது ! "புரிகிறது ; ஊருக்குப் போய் யோஜனை செய்து தாக்கல் சொல்கிறேன்" என்றபடிக்கு ஓட்டம் பிடித்தவனுக்கு நியூயார்க்கின் சப்வே ரயிலில் ஏறிய பின்னரும் கூட யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்கத் திராணி இருக்கவில்லை ! 

ஆழம் தெரியாது கால் விட்டு நிற்கிறோம் ; நிறைய விஷயங்கள் மாற்றம் கண்டுள்ளன ; உலகம் நம்மைத் தாண்டி எப்போதோ பயணித்து விட்டிருக்கிறது என்பதெல்லாம் சப்வேயில் தொங்கிக் கொண்டே பயணம் செய்த நிமிடங்களில் கொஞ்சம் கொஞ்சமாய் எனக்குள் sink ஆகத் துவங்கியது ! ரூமுக்குத் திரும்பிய ரொம்ப நேரத்துக்கு மோட்டு வளையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கத் தோன்றியது ! அதுவும் நியூயார்க் நகர ஹோட்டல்களின் கட்டணங்களை பார்த்தாலே - பூர்வீகச் சொத்துக்களை விற்றுக் காசாக்கினால் மட்டுமே இங்கே தங்க முடியுமென்பது புரியும் ; so சிக்கன நடவடிக்கையாய்  நான் அங்குள்ளதொரு YMCA-வில் தான் தங்குவேன். ரொம்பச் சின்ன அறை ; TV கிடையாது ; பாத்ரூம் கூட பொதுவானது தான் ! மனதளவில் ரொம்பவே தளர்ந்து போயிருந்தவனுக்கு அந்த அறையின் இறுக்கமும்  மண்டைநோவை உருவாக்க - காலாற வெளியே நடந்தால் தேவலாம் என்று தோன்றியது ! குளிர் நாளென்றாலுமே Central Park-ல் அந்த ஊர் குட்டீஸ்களும், குட்டீஸ்களை பெற்றோரும் ; பெற்றிடத் திட்டமிட்டோரும் ரகளையாய்ப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர் ! ஆனால் எனக்கோ உலகமே அந்நாட்களது AVM ராஜனின் கேவா கலர் திரைப்படம் போல் மங்கலாய்த் தெரிந்தது ! அது தான் நமது Comeback-க்குப் பின்பாய் - மாயாவி ; ஸ்பைடர் ; லாரன்ஸ்-டேவிட் இத்யாதிகளை அறிவித்திருந்த முதல் தருணம் ! 

காரியத்தில் கோட்டை விட்டு விட்டோமென்பதை உங்களிடம் சொல்வது எப்படி ? முகத்தில் குவியவிருக்கும் அசடை அளப்புவது எப்படி ? என்பது தெரியாதே விமானத்தில் ஏறி அமர்ந்தேன் ஊர் திரும்பும் பயணத்தில் ! நான் சென்றிருந்த மிஷினரி பணி வெற்றி பெற்றிருந்தாலும் கூட, அதன் பொருட்டு எனக்குள் மகிழ்ந்திடத் தோன்றவில்லை ! அதில் தோற்றிருந்தேன் எனில் of course ரெண்டு காசு பார்க்க முடியாது போயிருக்கும் தான்  ; ஆனால் அது எங்கள் அளவோடு முடிந்திருக்கும். என்பதால்நாலைந்து நாட்களுக்குள் அடுத்த சிந்தனையில் மூழ்கியிருப்பேன் ! ஆனால் இதுவோ, பொதுவெளியில் உதைபடப் போவதற்கானதொரு சூழல் எனும் பொழுது உள்ளுக்குள் எல்லாமே உதறியது ! Oh yes - இண்டிகேட்டர்களை இப்டிக்கா போட்டுவிட்டு, அப்டிக்கா போவதெல்லாம் நமக்கு ரஸ்க் சாப்பிடுவது போலவே தான் என்றாலும் - நாறிப் போய்க் கிடந்த பெயரை சிறுகச் சிறுக மீட்டெடுக்க நான் முட்டிக் கொண்டிருந்த நாட்களவை என்பதால் ரொம்பவே கஷ்டமாக இருந்தது ! ஆனால் அன்றைக்கு ஒரு தற்காலிக பாராசூட்டைத் தந்தார் நமது பெரும் தேவன் மனிடோ !! என் நல்ல காலமோ, என்னவோ தெரியவில்லை - அந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் சுத்தமாய் முன்பதிவுகளில் உற்சாகம் காட்டவே இல்லை ! ரெண்டோ, மூன்றோ மாதங்களில் மொத்தமே எழுபது, எழுபத்திரண்டு புக்கிங்குகள்  மட்டுமே அதற்குக் கிட்டிய போது - "என் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா !!" என்று அதகளம் செய்யும் ஜனகராஜைப் போலவே நான் உள்ளுக்குள் குதூகலித்தேன் என்பது தான் நிஜம் ! முதல்முறையாக ஒரு முயற்சியின் தோல்வியிலும் நானொரு வெற்றி கண்டது போல் உணர்ந்தேன் ! Maybe அன்றைக்கு நீங்கள்  'மொது -மொது' வென்று புக்கிங்களை செய்திருப்பின், நான் என்ன கதி ஆகியிருப்பேனோ - சத்யமாய்ச் சொல்லத் தெரியவில்லை ! எது எப்படியோ, மூச்சு விடத் தற்காலிகமாயொரு வாய்ப்பு கிட்டியதில் உள்ளுக்குள் நிம்மதி !  

ஆனால் தொடரும் நாட்களில் உங்களின் பழமைத் தேடல்கள் வேகம் கண்டன & எப்போதும் போலவே - இல்லாததன் மீது நமது மையல் கூடிக் கொண்டே சென்றது  ! And இன்றைய மெர்செல் சர்ச்சை ரேஞ்சுக்கு - "மறுபதிப்புகள் வருமா - வராதா ?"  என்ற அலசல்கள் ஒடத் துவங்கிய போது தான் சந்துக்குள் சிக்கிய பெருச்சாளி போல் விழிக்கத் துவங்கினேன் ! உள்ளதை உங்களிடம் ஒப்பித்திருக்கலாம்தான் ; "இன்ன மாதிரி, இன்ன மாதிரி, ஒரு பெரும் தொகைக்கு காண்டிராக்ட் அவசியமாகிறதென்று" சொல்லி சரணாகதி ஆகியிருக்கலாம் ! ஆனால் அந்த  2013 / 2014-ன் நாட்கள் - நமது இரண்டாம் வருகையின் தவழும் நாட்களே ! நமது credibility அன்றைக்கெல்லாம் அத்தனை பெரிதாய் இருந்ததாய் நான் உணர்ந்திடவில்லை ! (இன்றைக்கு அது எங்குள்ளது என்பது இன்னொரு நாளின் பதிவிற்கு !!) So நான் நிஜத்தை ஒப்பித்திருந்தாலுமே அதனை ஒரு சப்பைக் கட்டு என்று கருதி இருப்பீர்களா  ?அல்லது  face value-வில் ஏற்றுக் கொண்டிருப்பீர்களா ? என்பதை கணிக்கும் தைரியமெல்லாம் எனக்கு இருக்கவில்லை  ! க்ரே மார்க்கெட்டில் வேறு, அந்நாட்களில்  புழக்கத்தில் இல்லாத இந்த மும்மூர்த்தி இதழ்கள் சக்கை போடு போட்டு வர, நண்பர்கள் அங்கே எழுதிய மொய்களின் தொடர்பான கோபங்கள் இயல்பாய் நம் பக்கம் திரும்பியதாகவும் எனக்குத் தோன்றியது ! வேறு மார்க்கமே தெரியாத போது துணிந்தேன் - ஒரு ராட்சஸத் தொகையை புரட்ட வாக்குக் கொடுத்து விட்டு இந்த Fleetway புராதன சமாச்சாரங்களின் மறுபதிப்புகளுக்கு ஒப்பந்தம் செய்து விடுவதென்று!

ஜூனியர் எடிட்டர் சென்னையில் கல்லூரியில் இருந்த சமயமது ; நான் அடிக்க எண்ணியிருந்த கூத்தைப் பற்றி விக்ரமிடம் மட்டும் சொல்லி விட்டு - வேறொரு பணி நிமித்தம் அமெரிக்கா செல்லும் வாய்ப்போடு DC Comics மறு சந்திப்புக்கும் தேதி வாங்கி விட்டிருந்தேன் ! இம்முறையும்  அதே நியூயார்க் ; அதே டைம்ஸ் சதுக்கம் ; அதே ஜன நெரிசல் - ஆனால் நானோ "அபியும், நானும்' பிரகாஷ்ராஜைப் போல நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வீறு நடை போட்டுக் கொண்டிருந்தேன் (முண்டா பனியனை மட்டும் போட்டுக் கொண்டல்ல சாமி !!) அவர்களிடம் ஒருமாதிரியாகப் பேசி - கதைகளின் பட்டியலை ஒப்படைத்து, காண்டிராக்டுக்கு ஏற்பாடு செய்யக் கோரிய சமயம் - அவருக்கே ஆச்சர்யம் : ஊர் உலகத்தில் எத்தனை-எத்தனையோ அட்டகாச கதைத்தொடர்கள், BATMAN ; SUPERMAN இத்யாதி ; இத்யாதி என்று காத்திருக்கும் போது, இந்த ஹைதர் அலி காலத்துக் கதைகளுக்காக இந்தப் பாடு படுவானேன் ? என்று ! "இல்லீங்க சார் ; இந்தக் கதைகளோடு நான் ஊர் திரும்பாங்காட்டி  - சொட்டை மண்டையை - மொட்டை மண்டையாக்கி  - கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி - "ஆஹொய் - அல்லாஹொய்" கோஷங்களோடு என்னைக் கழுதை மேல் ஊர்வலமாய் ஏற்றி விடும் ஆபத்து உண்டு சார் !" என்று அவரிடம் என் இக்கட்டைச் சொல்ல முடியுமா என்ன ? So 'ஹி.ஹி' என்ற இளிப்ஸ் சகிதம் - "இந்தக் கதைகளை எங்க ஊரிலே வாசகர்கள் இன்னமும் கொண்டாடுறாங்க சார் ; you see - in 1972 முத்து காமிக்ஸ் my dad started ; I am start in 1984!!" என்று நான் என் ராகத்தை எடுத்து விட, அவரோ "இன்னும் ரெண்டு கதைனாக் கூடப் போட்டுத் தந்திடுறேன் ; ஆளை விடுப்பா சாமி " என்பது போல் அவஸ்தைப்பட - நான் ஒரு மாதிரியாய் வாய்க்குப் பூட்டுப் போட்டுக் கொண்டேன் ! இடைப்பட்ட தருணத்தில் அவரது உதவியாளர் எட்டிப் பார்த்து ஏதோ கேட்க, சில நிமிடங்களுக்கு தலைமை நிர்வாகி அடுத்த அறைக்குள் புகுந்து பேசத் தொடங்கினார் ! 

தனிமையில் இருந்த நான் அந்தச் சிறு அறை முழுவதும் இறைந்து கிடந்த புத்தகங்களை 'ஆ'வென்று வாய் பார்த்துக் கொண்டிருந்தேன் !  அப்போது ஒரு சைட் ரேக்கில் நிறைய BATMAN பொம்மைகள் ; CATWOMAN பொம்மைகள் என்று அடுக்கிக் கிடப்பதைப் பார்த்தேன் ! ஒரு டப்பாவைத் திறந்து தில்லாக லுக் வீட்டுக் கொண்டிருந்த BATMAN -ஐ கையில் ஏந்த நான் முயற்சித்த போதே -"would you like to take one home for your son or daughter ?" என்றபடிக்கே மனுஷன் உள்ளே நுழைந்தார் ! "நோ..நோ..நம்மள் கி நோ daughter ; ஒன்லி son & அவரும் பொம்மை வைச்சு ஆடும் வயதல்ல !" என்றபடிக்கே அந்த டப்பாவில் பின்பக்கத்தைப் பார்த்தால் கச்சாங்-முச்சாங் என்று சீன பாஷையில் எழுதியிருப்பதைக் கவனித்தேன் ! அப்புறம் அவர் சொல்லித் தான் தெரிந்தது,  சீன மார்க்கெட்டில் அட்டகாசமாய் விற்பனையாகும் BATMAN ; SUPERMAN காமிக்ஸ்களோடு - இது போன்ற பொம்மைகள், டி-ஷர்ட்கள் ; இன்ன பிற gift item-களும் சக்கை போடு போடுகின்றன என்று ! இவையெல்லாமே DC படைப்புகள் என்பதால் - பொம்மைகளின் விற்பனையில் ; டி-ஷர்ட்களின் விற்பனையிலும்  கணிசமான ராயல்டி செலுத்துகிறார்கள் -சீனர்கள் ! புன்னகையோடே - அவரது சிஸ்டத்தை என் பக்கமாய்த் திருப்பினார் ; ஒரு சீனப் பதிப்பகம் மீதானதொரு ராயல்டி இன்வாய்ஸ் திரையில் நின்றது ! அதன் கீழே டாலர்களில் இருந்த தொகையைப் பார்த்த போது என் சப்த நாடியும் அடங்கிப் போய் விட்டது !  எனது 33 ஆண்டு கால அனுபவத்தில், நானிதுவரைக்கும் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களுள் தொகையில் ஆகக் கூடுதல் மதிப்பிலானது  இந்த Fleetway புராதனங்களுக்கோசரம் நான் அன்றைக்கு சம்மதம் சொன்ன ஒப்பந்தம் தான் ! ஆனால் நான் திரையில் பார்த்த அந்தச் சீன பில்லின் தொகை, கிறுகிறுக்கச் செய்யும் ஒரு அசாத்திய நம்பர் ! இதே போல ஒரு நூறு தேசங்களில் அவர்கள் தினமும் தொழில் செய்து வருகிறார்கள் எனும் பொழுது - நமது "முரட்டு லெக்பீஸ் காண்டிராக்ட்" அவர்களுக்குப் பல் குத்தும் குச்சிக்கு சமானமே என்பது மண்டையில் உறைத்தது ! அந்த நிமிடம் வரைக்கும் -"இந்த டைம்ஸ் சதுக்கம் என்ன விலை ? இந்த ஆபீஸ் என்ன விலை ? " என்ற ரீதியில்  தெனாவட்டாய்  குஷன் சேரில் குந்தியிருந்த எனக்கு, திடீரென பிட்டத்தில் கரப்பான் கூட்டமொன்று ஊர்வது போலிருந்தது ! அன்பாய், மிகுந்த மரியாதையோடு அவர்  என்னிடம் பேசிக் கொண்டிருந்தாரென்றாலும் - எனக்குள்ளோ ஒரு குறுகுறுப்பு ; "ரொம்ப நேரம் மொக்கை போட்டு அவரது நேரத்தை வீணடித்து விட்டோமோ ?" என்று ! ஒப்பந்தத்துக்குத் தேவையான விபரங்கள் அனைத்தையும் ஒப்படைத்து விட்டு ஓட்டமும், நடையாய் விடைபெற்றுக் கிளம்பினேன் ! இம்முறையும் அதே சப்வே ; அதே நெரிசல் ; and இம்முறையும் யாரையும் நிமிர்ந்து பார்க்கவே தோன்றவில்லை எனக்கு ! 3 வாரங்களுக்குள் மின்னஞ்சலில் காண்டிராக்ட் வந்து விடும் ; அதற்குள் அதற்கான தொகையினைப் புரட்டிட வேண்டும் என்ற பீதி அப்போதே அடிவயிற்றைக் கலக்கிக் கொண்டிருந்தது ! 

ஊருக்குத் திரும்பினேன் ; and நமது வங்கிக் கையிருப்பில் வழக்கம் போல நான்கைந்து எட்டுக்கால்பூச்சிகளின் நூலான்படையை மட்டுமே பார்க்க முடிந்த பொழுது எடுக்கத் தொடங்கிய பேதிக்கு அல்லோபதியும் சுகப்படவில்லை ; ஆயுர்வேதமும் கை கொடுக்கவில்லை ! 3 வாரங்களும் அநியாயத்துக்கு பேய் வேகத்தில் ஓட்டம் பிடிக்க, மின்னஞ்சல் நம்மை எட்டிய சமயம் கிட்டத்தட்ட பாதித் தொகை பள்ளம் ! என்னதான் மொக்கை போட்டாலும், நமது பதிப்பகக் கணக்கு வழக்குகளையும், நமது இதர தொழில்களின் வரவு செலவுகளையும்  நான் ஒருநாளும் ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொள்வதில்லை ! இங்கே காசு இருந்தால் சம்பளம் ; இல்லாவிட்டால் ஈரத் துணி ; அங்குள்ள பிழைப்பு அங்கேயே என்பதே நமது எழுதப்படா விதி ! ஆனால் எனக்கு வேறு மார்க்கமே இல்லையென்பதால் ஒரு மாதிரியாய் என் தம்பியிடம் நிலவரத்தை விளக்கிச் சொல்லி, நமது மற்ற நிறுவனங்களில் இருந்து பணத்தை கடனாய்ப் பெற்று இங்கே மாற்றல் செய்து DC-க்கு அனுப்பி வைத்தேன் ! 

என்ன அதிசயம் ? பணம் அனுப்பிய தினமே பேதி காணாது போய் விட்டது  ; ஆனால் அல்சர்  வந்தது போலொரு உணர்வு ! தொடரும் புத்தக விழாக்களில் ஆகும் வசூல்களிலிருந்து கடனாய் வாங்கிய தொகையைத் திருப்பித் தந்துவிடுவதாய் promise செய்திருந்தேன் ; அதே போல தட்டுத் தடுமாறி செய்தும் காட்டி விட்டேன் ! அன்றைக்கு என் தம்பி மட்டும்  முகம் சுழித்திருப்பின், நிச்சயமாய் வெளியில் கையேந்தி தான் நான் நின்றிருக்க வேண்டும் ! என்ன தான் நான் மூத்தவன், தொழிலின் துவக்கப் புள்ளி என்றாலும்,  ஒரு சம பங்காளியென்ற மரியாதையை தம்பிக்குத் தருவது அவசியம் என்பது எனது நிலைப்பாடு ! Of course - நான் பாட்டுக்கு எதுவும்  கேட்காமலும் பணத்தை எடுத்து அனுப்பியிருக்கவும் செய்திருக்கலாம் தான் & அண்ணன் எதைச் செய்திருந்தாலுமே  அதனில் நிச்சயமாய் ஒரு அத்தியாவசியம் இருந்திருக்கும் என்பதை தம்பி புரிந்திருப்பான் தான் ! ஆனாலும் அன்றைக்குக் கேட்க்காது செய்ய மனசு கேட்கவில்லை ! ஆக ஒரு நயாகரா குளியலை மாயாவிகாரு போட சாத்தியமானதும், ஒரு சிரசாசன SMS மறுபடிக்கும் நம் முன்னே ஆஜரானதும் இவ்விதமே !  "ஆக நீ சொல்ல வரும் கருத்து என்னவோ ? என்று கேட்கிறீர்களா ? " ; நான் கருத்தே சொல்லவரவில்லை என்பது தான் கருத்தே ! சிங்கத்தின் சமீப நாட்களின் விவரிப்பிது ; நீங்கள் இதனிலிருந்து எதையேனும் கிரஹித்துக் கொண்டீர்களெனில் good for you !!   

Back to the present - 2 நாட்களுக்கு முந்தையதொரு மின்னஞ்சலில் இன்னொரு  நண்பரோ - "ரிப் கிர்பி ஸ்பெஷல் போடலாமே - இரத்தப்  படலத்தில் நேரத்தையும், பணத்தையும் முடக்குவதற்குப் பதிலாக ??" என்று விசனப்பட்டு நீண்டதொரு  மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் !! "நான் கரடியாய்க் கத்தினாலுமே நீ  போட மாட்டாய் என்பது தெரியும் தான் ; சப்பைக்கட்டுக்கு பஞ்சமே இராது என்பதும்  தெரியும் தான் ; ஆனாலும் சொல்லத் தோன்றியதை சொல்லி விட்டேன் " என்று ஓடியது அந்த மெயில் !  கையில் சற்றேற 10 + ஆண்டுகளுக்கு மேலாய்  உள்ள கதைகளைக் கூடப் போடப்  பயந்து, பெட்டிக்குள் வைத்துப் பூட்ட அவசியமாகிடும் ரிப் கிர்பியையும் - இரண்டரை மாதங்களுக்குள் சுமார் ஐந்தரை லட்சம் ரூபாயை முன்பதிவினில் கொணர்ந்துள்ள இரத்தப் படலத்தையும் ஒப்பீடு செய்து பார்க்கும் நண்பருக்கு எவ்விதம் பதிலளிக்க என்று தெரியாது விழிக்கிறேன் ! தனிப்பட்ட முறையில் நானுமே ரிப் கிர்பி ரசிகன் தான்  ; ஆனால் இந்நாட்களது விற்பனையில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் நிதர்சனத்தைப் பார்க்கும் போது - என் காதலே பிரதானமென்று சொல்ல சாத்தியமாவதில்லையே ? 

XII-ம் எனக்குப் பங்காளியல்ல ; கிர்பியும் பகையாளியல்ல - சில தருணங்களில் நான் வாசகர்கள்  முகம் பார்க்கும் ஒரு கண்ணாடி மாத்திரமே என்பதை நண்பர்களுக்குப் புரியச் செய்ய சத்தியமாய் எனக்கு வழி தெரியவில்லை ! ஒரு டயபாலிக்கின் உரிமைகளை பெற்று, உங்களுக்கு அறிமுகம் செய்திட ஒருநூறு அந்தர் பல்டிக்கள் அடித்தவனே நான் தான் என்பதோ , அவரை நம்மின் வெகுஜன ரசனை நிராகரிக்கும் போது வலியோடுஅந்தத் தீர்ப்பை  ஒத்துக் கொள்பவனும் நானே என்பதோ - எனது அதுவரையிலுமான முயற்சிகள் சகலமும் வியர்த்தமாகிப் போயிருப்பதை ஏமாற்றத்துடன் ஏற்றுக் கொள்பவனுமே நான் தான்  என்ற நிஜங்களோ  - காற்றுவாக்கில் காணாது போய்விடுவதன் மர்மம் சத்தியமாய் எனக்குப் புரிவதில்லை !  நொடி நேரத்தில், நானந்த நாயக / நாயகியரின்  எதிரியாய் உருமாறிப் போய் விடுகிறேன் & நண்பர்களோ  தம்மை அந்த நாயக / நாயகியரின் பாதுகாவலர்களாக உருவகம் செய்து கொள்கிறார்கள் ! 

காலங்கள் மாறிவிட்டன ; ரசனைகளும்  நகன்று வருகின்றன ; மாயாவியே இன்றைக்கு விந்தி நடக்கத் துவங்கி விட்டார் ; இச்சூழலில் நல்ல நாளைக்கே நாழிப் பால் கறக்கும் மனிதரைக் கொண்டு ஒரு "ரிப் கிர்பி ஸ்பெஷல்"  போடுவதென்பது கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றினுள் நானும் குதித்து, உங்களையும் சேர்த்து இழுத்துப் பார்க்கும் முயற்சியாகாதா ? தத்தம் ரசனைகள் மீதான ஆதர்ஷம், எனது தரப்பின் சிரமங்களை மறக்கச் செய்கிறதா ? அல்லது நான் உங்களிடம் காட்டிவரும் ஒரு பீலா முகத்தின் வீரியம் - "இந்த ஆந்தைக்கண்ணனுக்கு  எல்லாமே சாத்தியம் !" என்று நம்பச் செய்கிறதா  ? எது காரணி என்று தெரியவில்லையே ?! 

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒவ்வொரு படைப்பாளியிடமும் உரிமைகளைக் கோரிப் பெற்றிட நான் அடிக்கும் கூத்துக்களை மூன்றாம் பிறையின்  கிளைமாக்சில் கமலஹாசன் கூட அடித்திருக்க மாட்டார் ! ஆனால் அவற்றையெல்லாம் சொல்லி உங்களைச் சங்கடப்படுத்துவானேன் ? ; யாரது தொழிலில் தான் சிரமங்கள்   இருப்பதில்லை ?  என்று - "கனடாலே  எங்க மம்மி ஒரு western classical டான்சர்.....டாடி ஒரு drums மேஸ்ட்ரோ " என்று அள்ளி விடுவது உண்டு ! ஏதோ    - சரவணா பவனில் போய் மினி மீல்ஸ் ஆர்டர் செய்யும் லாவகத்தில் நமக்குக் கதைகளும் கிட்டுவது போல் உதார் விட்டு வருகிறேன் ! ஒவ்வொரு கதைத் தொடரின் பின்னணியிலும் எத்தனை எத்தனை குட்டிக் கரணங்களும், குரங்கு வித்தைகளும் செல்லுகின்றன என்பதை நான் சொல்லத் துவங்கினால் - அதற்கெனவே தொடர்ச்சியாய் "சிங்கத்தின் குரங்கு பல்டிக்கள்" என்றொரு தொடருமே எழுத அவசியப்படும் !அப்புறம் அதையுமே  விடாமல் தொடரக் கோரி தலீவரும், செயலரும் இன்னொரு பஸ் நிலையத்தில்   இரகசிய சந்திப்பு மேற்கொள்ள அவசியமாகிடக்கூடும் ! தேசத்து தலீவர்களை அப்படித் தொந்தரவு செய்வதெல்லாம் தப்பு என்பதால் அவர்களுக்கு அந்தச் சிரமத்தை நான் வைக்க விரும்புவதில்லை ! 

அதற்காக உங்கள் கனவுகளை cold storage-ல் போடச் சொல்வதும் எனது நோக்கமல்ல guys ! உங்கள் ஒவ்வொருவரின் சின்னச் சின்ன கோரிக்கைகளும், அபிலாஷைகளும் என்னுள் ஒரு ஓரத்தில் பதிவாகிக் கொண்டே தான் வருகின்றன ! வாகான முதல் சந்தர்ப்பத்தில் அவற்றை நிச்சயமாய் நடைமுறை செய்திடத் தவற மாட்டேன் என்ற நம்பிக்கையோடு கனவுகளைத் தொடருங்களேன் என்பது மாத்திரமே எனது கோரிக்கை ! ஒவ்வொரு தேர்வின் பின்னேயும், தீர்மானத்தின் பின்னும், உங்கள் ஆர்வங்களும், வியாபார சாத்தியங்களும் சம விகிதத்தில் கலந்து நிற்கின்றன என்பதையும் மறந்திட வேண்டாமே ப்ளீஸ் ? நீங்கள் கொடி பிடித்துத் தூக்கி விட்டால் தானென்றில்லை ; விற்பனையில் சாதித்துக் காட்டினாலே ஒவ்வொரு நாயகனும், நாயகியும் என்னைக் குமட்டோடு குத்தி விட்டு அட்டவணைக்குள் இடம் பிடித்திடுவார்கள் என்பது தானே நிதர்சனம் ? விற்பனைகள் எனும் அந்தத் தேர்வில் தோல்வி காண்போருக்கு இடம் நம் மனதில் மாத்திரமே என்பதை நான் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா ? 

சரி...எல்லாம் ரைட்டு....ஆனால் இப்போது உரிமைகள் வாங்கியிருக்கும் ஜேம்ஸ் பாண்ட் 007-ம் அமெரிக்கத் தயாரிப்பு தானே ? அது மாத்திரம் எப்படியாம் ? என்று கேட்கும் அன்பர்களும் நிச்சயமாய் இருப்பார்கள் என்பது புரிகிறது ! அது இன்னொரு தூரத்து நாளின் பதிவுக்கென  இருக்கட்டுமே ? Bye all ! See you around !! 
சுடும் பனி (Lady S )
பின்குறிப்பு : 
 • சந்தாப் புதிப்பித்தல்கள் & புதுச் சந்தா சேர்க்கைகள் - இரண்டுக்குமே கொஞ்சம் நேரமும், பணமும் ஒதுக்கிட முயற்சியுங்களேன்  - ப்ளீஸ் guys ?
 • அப்புறம் நமது POSTAL PHOENIX சாருக்கொரு A B C D சந்தா சுடச் சுட - "அனாமதேயரின்" அன்போடு !! 
 • ப்ளஸ், கடலூர்  AT ராஜேந்திரன் சாருக்கும் ஒரு A B C D சந்தா வழங்கிட இன்னொரு அன்பர் பணம் அனுப்பியுள்ளார் !! 

326 comments:

 1. அப்பாடா, நானும் 10ல 1-னா ஒருமுறை வந்திட்டேன். நன்றி மஹிஜி.
  (நானும் ரவுடிதான்... நானும் ரவுடிதான்...)

  ReplyDelete
 2. அப்பாடா..நானும் வந்துவிட்டேன்.!!
  பத்துக்குள் வந்துவிட்டேன்!!!!!!!!!!!!.
  நானும் ரவுடிதான்!!!!!!!

  ReplyDelete
 3. நாய் சேகரே இங்கே இருக்கும் போது - நீங்கல்லாம் என்ன சின்னப் புள்ளைங்களாட்டம் ??

  நாய் சேகர்.....நாய்....சேகர்....நாய் சேகர்...!

  ReplyDelete
  Replies
  1. ஹா,ஹா,ஹா,சார் வர வர உங்களுக்கும் காமெடி சென்ஸ் அதிகமாயிடுச்சிங்க சார்.

   Delete
  2. ஹா,ஹா,ஹா,சார் வர வர உங்களுக்கும் காமெடி சென்ஸ் அதிகமாயிடுச்சிங்க சார்.

   Delete
  3. எப்பேர்பட்ட ரவுடிங்கன்னே புரியலியே
   மாமோய்

   Delete
 4. எல்லா௫க்கும் அதிகாலை வணக்கம்.
  வணக்கம் வைப்பவர் தேனி மாவட்டம் சின்னமனூர் பி.சரவணன்.
  வணக்கம் வைக்கும் நேரம் சரியாக அதிகாலை 3:11.

  ReplyDelete
 5. ஆசிரியர் உங்கள் வலியும் வேதனையும் எனக்குப் புரிகின்றது.
  நான் என்றும் தங்கள் பக்கம் இ௫ப்பேன்.நல்லதே நடக்கட்டும்.

  ReplyDelete
 6. Good Morning Vijayan sir ! neenhda padhivu ! But ? Manasu aengathan seikirathu eppo oru Rip Kirby / Sisco Kit collectors spl velhivarum ?

  ReplyDelete
 7. நான் ஒ௫ சாதாரண வாசகன். என்னால் சந்தாவுலாம் கட்டமுடியாது,ஏன் என்றால் என்னால் மொத்தமாகப் பணம் புரட்ட இயலாது. ஆனால் மாதா மாதம் சிவகாசி வந்தோ இல்லை கூரியர் மூலமாகவோ இதழ்களை வாங்கி சுவாசிப்பேன்.காலையில் இ௫ந்து இரவு வரை நாயாய் உழைத்து விட்டு வ௫ம் எனக்கு மனதிற்கு இதம் த௫ம், மேலும் உழைக்க ஊக்கம் த௫ம் காமிக்ஸ்களை இழக்க எனக்கு மனம் இல்லை.எனக்கு மனச்சோர்வு நீக்கும் அ௫ம௫ந்தன்ன அமுதசுரபியே தங்கள் காமிக்ஸ்கள் தான்.எனவே இப்பதிவு மூலம் நீங்கள் சொல்லாமல் சொல்ல வந்த அனைத்து உண்மைகளும் உள்ளங்கை நெல்லிக்கனியாய் எங்களுக்கு விளங்குகின்றன. நீங்கள் அஞ்சேல் நாங்கள் இ௫க்கின்றோம் உங்களுக்குப் பக்கபலமாக!!!!!!!!!!!.
  இந்தச் சிறு வாசகர் வட்டத்திற்காக அல்லும் பகலும் அயராது உழைக்கும் ஆசிரியர் அவர்களை வாழ்த்த வயதில்லை, வணங்கி மகிழ்கின்றேன். நன்றி வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. @ saravanan

   அருமை நண்பரே!

   Delete
  2. This is what keeps our editor going, I salute you bro

   Delete
  3. சூப்பர் சரவணன் சந்தா கட்ட முடிகிறதோ இல்லையோ புத்தகங்களை (புதையல்களை) தவறவிடக்கூடாது கண்டிப்பாக கடையிலாவது வாங்கி விட வேண்டும்

   Delete
  4. ஒஒவ்வொன்றும் பொன் வரிகள்....💐💐💐💐💐💐

   Delete
  5. கலக்கலான காமிக்ஸ் காதலை வெளிப்படுத்தும் விதம் அருமை நண்பரே...👏👏👏

   Delete
 8. "அதற்காக உங்கள் கனவுகளை cold storage-ல் போடச் சொல்வதும் எனது நோக்கமல்ல guys ! உங்கள் ஒவ்வொருவரின் சின்னச் சின்ன கோரிக்கைகளும், அபிலாஷைகளும் என்னுள் ஒரு ஓரத்தில் பதிவாகிக் கொண்டே தான் வருகின்றன ! வாகான முதல் சந்தர்ப்பத்தில் அவற்றை நிச்சயமாய் நடைமுறை செய்திடத் தவற மாட்டேன் என்ற நம்பிக்கையோடு கனவுகளைத் தொடருங்களேன் என்பது மாத்திரமே எனது கோரிக்கை !"
  சூப்பர் பாஸ்!

  ReplyDelete
 9. உண்மை நிலவரம் சுடுகிறது

  ReplyDelete
 10. அதிகாலை வணக்கம்

  ReplyDelete
 11. ///அப்புறம் நமது POSTAL PHOENIX சாருக்கொரு A B C D சந்தா சுடச் சுட - "அனாமதேயரின்" அன்போடு !!
  ப்ளஸ், கடலூர் AT ராஜேந்திரன் சாருக்கும் ஒரு A B C D சந்தா வழங்கிட இன்னொரு அன்பர் பணம் அனுப்பியுள்ளார் !! ///

  வாழ்த்துக்கள் திரு. Postal Phoenix & திரு.ATR சார்...

  அன்பு அனாமதேயருக்கும் மற்றொரு அன்பருக்கும் எல்லாம் வல்ல இறை சக்தி அனைத்து சந்தோசங்களையும் அளிக்க மனமாற வேண்டிக்கொள்கிறேன்.. இந்த காமிக்ஸ் நேசம் என்றும் தழைக்கட்டும்...

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய வாழ்த்துக்களும் போஸ்டல் மாப்பு ராஜாவுக்கும்,
   மரியாதைக்குரிய நண்பர் ATR sirக்கும்...🎉🎉🎉🎉👏👏👏👏

   அன்புள்ள அனாமதேயருக்கு பாராட்டுக்கள்👌👌👌👌
   காமிக்ஸ் நேசம் வாழ்க வளர்க💖💖💖💖💖

   Delete
 12. போகும்பாதை எதுவாயினும் சேரும் இடம் கோவில் தானே சார்...

  ReplyDelete
 13. Totally understand you sir.
  It is extremely difficult to run this niche / boutique publication for such small audience. We know, "Wafer thin" profits is not the reason you run this, it is just the "love" of doing it. We respect it and we will support as long as it goes.
  When the day comes that it is unsustainable to run any more, we will part with great respect, memories and gratitude.
  Thank you.

  Friends, just enjoy the ride while we have it "now" and could afford it "now". Just enjoy the moment, enjoy reading comics, any story, any hero, any genre, any origin, no hard feelings.
  Just love the comics reading journey, destination is not important. And support the last standing man and his team.

  ReplyDelete
  Replies
  1. அப்படியெல்லாம் நினைக்காதீங்க. அடுத்த 50 வருசத்துக்கும் இப்படியே கலக்க போறோம்.

   Delete
  2. ///அப்படியெல்லாம் நினைக்காதீங்க. அடுத்த 50 வருசத்துக்கும் இப்படியே கலக்க போறோம்.///

   என்னாது "இப்படியேவா"..

   Delete
  3. //இப்படியேவா//. நான் 45 இதழ்கள் + ரத்தப்படலம் வண்ண கலெக்டர் பதிப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு சொன்னேன். இந்த சின்ன சின்ன பிரச்னைகள் இருந்து கொண்டே தான் இருக்கும் அதெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது.

   Delete
  4. Red Coat : ஆயிரம் அந்தர் பல்டிக்கள் அடித்த அபூர்வ சிகாமணிகள் சார் நாங்கள் ; எதையுமே உழைப்பின்றி சுலபமாக ஈட்ட முடியாதென்ற பால பாடத்தை எங்கள் கந்தக பூமி எங்களுக்குள் ஆழமாய் விதைத்துள்ளது ! வெயிலோ, மழையோ, புயலோ - பயணங்கள் தொடர்ந்தே தீரும் என்பதில் ஐயம் வேண்டாம் சார்

   Delete
  5. உங்கள் பாதை எங்கள் வழித் தடம்...

   Delete
  6. பயணங்களும் பாதைகளும் தொடரப்படும் தொய்வின்றி😎😎😎

   Delete
  7. வாங்க பயணிச்சிட்டே பழகலாம்

   Delete
 14. ஞாயிறு வணக்கம் சபையோர்களே

  ReplyDelete
 15. Oh my God . This much problem in getting our old heroes stories? Time destroys everything. Thanks for your greaaaaat effort sir. But this makes us value our old heroes more and more.

  ReplyDelete
  Replies
  1. மாறும் காலங்களோடு நாமுமே மாறிக் கொள்ள வேண்டிய அவசியங்களை உணர்த்தும் ஆசான்களாய் இந்த அனுபவங்களை பார்த்திடுகிறேன் சார் !

   Delete
  2. நாங்களும் அப்படியே.

   Delete
 16. But pls never pay from ur pocket without any gain sir.

  ReplyDelete
 17. அவரவர் புரிதல்களுக்கேற்ப விளக்கங்கள் சொல்ல / மறுக்க முனைய - "சை...எனக்கு விளக்கங்களே புடிக்காது !!" என்று சிலர் கை கட்டி ஓரமாய் நிற்க - ஒரு அக்மார்க் நீலப்பொடியர் கிராமத்து effect கண்ணில்பட்டது எனக்கு


  ########  :-))))))

  ReplyDelete
 18. Hello Good morning & have a nice day 🌺🌺🍒🍒🌻🌻🌼🌼🌹🌹

  ReplyDelete
 19. வாழ்த்துக்கள் எங்கள் மயிலை அரசருக்கும்...,திரு ஏடிஆர் சார் அவர்களுக்கும்....

  ப்ளஸ் அந்த "அ" நா நண்பருக்கும்..:-)

  ReplyDelete
 20. இந்த பதிவினை படித்ததும்...

  சில இடங்களில் மனது வலித்தது போல் ஒரு உணர்வு..சில இடங்களில் ஒரு நெகிழ்வான உணர்வு..,சில இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்த சந்தோச உணர்வு...சில இடங்களில் இனியாவது நண்பர்கள் புரிந்து கொண்டு ஆசிரியருக்கு தோள் கொடுப்பார்களா என்ற ஏக்கமான உணர்வு என கலந்து கட்டி ஏற்பட்டது சார்.

  இந்த இனிய காலைபொழுதில் பலவிதமான உணர்வுகளை தட்டி எழுப்பிய உங்களின் இந்த பதிவு அருமையான ..,அழகான சிங்கத்தின் சிறுவயது கட்டுரையே...

  ReplyDelete
  Replies
  1. சரியான பதிவு தலீவரே!நம்ம பொம்ம புக்கு நம்ம கைக்கு வரதுக்குள்ள எத்தனை பஞ்சாசாயதது,எத்தனை சிரமம் .சி ங்கதின் சம வயதிலும் "மெர்ஸலாக்கிட்டீங்க"எடிட்டர் சார்.

   Delete
  2. // இந்த இனிய காலைபொழுதில் பலவிதமான உணர்வுகளை தட்டி எழுப்பிய உங்களின் இந்த பதிவு அருமையான ..,அழகான சிங்கத்தின் சிறுவயது கட்டுரையே. //
   அதே,அதே.

   Delete
  3. //சில இடங்களில் மனது வலித்தது போல் ஒரு உணர்வு..சில இடங்களில் ஒரு நெகிழ்வான உணர்வு..,சில இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்த சந்தோச உணர்வு...சில இடங்களில் இனியாவது நண்பர்கள் புரிந்து கொண்டு ஆசிரியருக்கு தோள் கொடுப்பார்களா என்ற ஏக்கமான உணர்வு என கலந்து கட்டி ஏற்பட்டது சார்.//
   சேம் பிளட் தலைவரே. நீங்கள் அழகாக எழுத்தில் வடித்து விட்டீர்கள்.

   எதிர்கட்சி தாற்காலிகமா பணிந்தாலும் நம்போராட்டத்தை கைவிட்டுடக் கூடாது்தலைவரே. தீவிரப்படுத்தனும்.

   Delete
  4. இப்டி உள்ளூரில் ஒருத்தர் உசுப்பி விட்டே தலீவரை c/o பதுங்கு குழி என்றாக்கி விட்டார் ; இப்பொது டெக்சாஸில் இருந்து !!

   என்னமோ தலீவரே பாத்து சூதானமா இருந்துக்கோங்க !!

   Delete
  5. :-))))


   பதுங்கு குழி அல்ல சார் பதுங்கு பாதாளத்தையிலேயே அடைத்தால் கூட சி.சி.வயதிலுக்கான எங்கள் போராட்டம் ஓயாது...:-(

   Delete
 21. முயற்சிகள் சகலமும் வியர்த்தமாகிப் போயிருப்பதை ஏமாற்றத்துடன் ஏற்றுக் கொள்பவனுமே நான் தான் என்ற நிஜங்களோ - காற்றுவாக்கில் காணாது போய்விடுவதன் மர்மம் சத்தியமாய் எனக்குப் புரிவதில்லை ! நொடி நேரத்தில், நானந்த நாயக / நாயகியரின் எதிரியாய் உருமாறிப் போய் விடுகிறேன் & நண்பர்களோ தம்மை அந்த நாயக / நாயகியரின் பாதுகாவலர்களாக உருவகம் செய்து கொள்கிறார்கள் !


  #########


  இந்த உண்மையை மட்டும் அனைத்து நண்பர்களும் புரிந்து கொண்டால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் ..:-(

  ReplyDelete
 22. காமிக் லவர் ராகவன் சொன்னது போலொரு "சிங்கத்தின் சிறுவயதில்" எடுத்து விட்டால் தேவலை என்றுபட்டது


  ####


  உங்களால் ஒரு மிக அழகான பதிவு..நன்றி ராகவன் சார்..:-)

  ReplyDelete
  Replies
  1. இந்த அழகான சி.சிறுவயது கட்டுரையை முன்னிட்டு இதுவரை கையில் அழகு பார்த்து கொண்டு இருந்த வலைமன்னனின் "குற்ற தொழிற்சாலை " இன்று திறப்பு விழா காண்கிறது.!

   Delete
  2. ///வலைமன்னனின் "குற்ற தொழிற்சாலை " இன்று திறப்பு விழா காண்கிறது.!///

   முன்னெச்சரிக்கையா ஆபீசுக்கு லீவு போட்டுட்டிங்கதானே தலீவரே?? :-)

   Delete
  3. அய்யகோ...தலீவருக்கு ஒரு கிளாஸ் ஜூஸ் வழங்கக் கூட செயலரையோ ; பொருளாளரையோ காணோமே ?

   Delete
  4. முன்னெச்சரிக்கையா ஆபீசுக்கு லீவு போட்டுட்டிங்கதானே தலீவரே?? :-


   ######


   இல்லை ரவி ....வீட்ல இருந்தா ஏதாவது வேலை இருந்துட்டே இருக்கும்..அதனால் off day ஆபிஸ் வந்தாயிற்று.நிம்மதியா படிக்கலாம்..:-)

   Delete
 23. நல்ல வேளை ஜேம்ஸ் பாண்டு உலகம் முழுவதும் வெளியிட படுவதால் கிடைத்துள்ளது. நம் வாத்தியார் ஒருவேளை delcourt அல்லது panini இடம் ஒப்பந்தம் செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சார் ....delcourt ; panini எல்லாமே ஐரோப்பிய நிறுவனங்கள் !

   Delete
 24. உங்கள் ஒவ்வொருவரின் சின்னச் சின்ன கோரிக்கைகளும், அபிலாஷைகளும் என்னுள் ஒரு ஓரத்தில் பதிவாகிக் கொண்டே தான் வருகின்றன ! வாகான முதல் சந்தர்ப்பத்தில் அவற்றை நிச்சயமாய் நடைமுறை செய்திடத் தவற மாட்டேன் என்ற நம்பிக்கையோடு கனவுகளைத் தொடருங்களேன்.

  #######


  கண்டிப்பாக சார்...!

  ReplyDelete
 25. "சீதாப்பாட்டி" கிர்ர் கிர்ர் "கறுப்புக் கிழவி"...எனக்கு வலைப்பூ வரதே பிடிக்கலை...நல்ல நகைச்சுவையாக எழுதுகிறீர்கள் சார்... இதற்கே ஒவ்வொரு முறையும் வந்து சிரித்து விட்டுப் போகலாம். உண்மையில் கதைகளை விட அந்நாட்களில் உங்கள் ஹாட் லைன் படிக்கவே என் குடும்பத்தார் வரிசை கட்டி நிற்பார்கள். அதிலும் புதுப்புது வெளியீடுகள் குறித்த விளம்பரங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். அவற்றைக் கண்டாலே முழு காமிக்ஸ் படித்த நிறைவு எட்டும். கதையெல்லாம் இரண்டாம் பட்சம்தான்... சந்தா இருக்கிறவங்களுக்கு...இல்லாதவங்களுக்கு இங்கே வலைப்பூவுக்கு வந்தாலே நடக்கிற அத்தனை விஷயங்களும் இப்போது அத்துப்படியாகி விடும்... தவிர நடக்கிற கலாட்டாக்களும் அடிக்கிற கூத்துக்களும் மிகவும் ஜாலியாகப் பொழுது போக்குக்கு உதவிடும்... என்ன லோட் மோரால் டென்ஷன் ஆகி சிலர்(ஹி ஹி நானும்) கமெண்ட் பக்கம் வருவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை..ஒவ்வொருவருக்கும் தனித்தனி உலகம்.. தனித்தனிப் பார்வைகள், தனித்தனி சிந்தனைகள்...இம்முறை கமெண்ட் பக்கம் வந்ததும் உங்கள் நகைச்சுவை நிரம்பிய எழுத்து வீச்சைப் பாராட்டத்தான்.. அடுத்த வருடம் டெக்ஸ் மட்டுமே வருகிறார் என்கிற ரீதியில் கொஞ்சம் கடுப்பிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். ஓவர் டோஸ்ஆ இல்லை பக்கா மாஸா என்பது அடுத்த ஆண்டு இறுதிக்குள் எப்படியும் தெரிந்து விடும்... ட்ரென்ட் இன்னும் சில புது வரவுகள் ஆச்சரியத்துடன் காத்திருக்க வைத்துள்ளது..பதிமூன்றுக்கும் பணம் கட்டணும் சாந்தாவுக்கும் ஏற்பாடு செய்யணும்.. இதில் லாயல்டி பாயிண்டுக்கு எங்கே போறது என்ற மண்டை பிய்த்தலும் நாக்குத் தள்ளுதலும் நடந்து வருவதைக் கண்டிப்பாகக் கவனித்திருப்பீர்கள்.
  வரும் வருடமும் சிறப்பானதொரு ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. // புதுப்புது வெளியீடுகள் குறித்த விளம்பரங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். அவற்றைக் கண்டாலே முழு காமிக்ஸ் படித்த நிறைவு எட்டும். //
   Same feeling

   Delete
 26. ஒவ்வொரு தேர்வின் பின்னேயும், தீர்மானத்தின் பின்னும், உங்கள் ஆர்வங்களும், வியாபார சாத்தியங்களும் சம விகிதத்தில் கலந்து நிற்கின்றன என்பதையும் மறந்திட வேண்டாமே ப்ளீஸ் ? நீங்கள் கொடி பிடித்துத் தூக்கி விட்டால் தானென்றில்லை ; விற்பனையில் சாதித்துக் காட்டினாலே ஒவ்வொரு நாயகனும், நாயகியும் என்னைக் குமட்டோடு குத்தி விட்டு அட்டவணைக்குள் இடம் பிடித்திடுவார்கள் என்பது தானே நிதர்சனம் ? விற்பனைகள் எனும் அந்தத் தேர்வில் தோல்வி காண்போருக்கு இடம் நம் மனதில் மாத்திரமே என்பதை நான் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா ? Unmai sir

  ReplyDelete
 27. வாழ்த்துக்கள் எங்கள் மயிலை அரசருக்கும்...,திரு ஏடிஆர் சார் அவர்களுக்கும்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கள் மயிலை ராஜாவுக்கும்,அன்பு அனாமதேயருக்கும்.

   Delete
  2. வாழ்த்துக்கள் ராஜா, ஏடிஆர் சார்!

   Delete
  3. வாழ்த்துக்கள் மயிலை ராஜா &
   அன்பு அனாமதேயர்

   Delete
 28. ///அப்புறம் நமது POSTAL PHOENIX சாருக்கொரு A B C D சந்தா சுடச் சுட - "அனாமதேயரின்" அன்போடு !!
  ப்ளஸ், கடலூர் AT ராஜேந்திரன் சாருக்கும் ஒரு A B C D சந்தா வழங்கிட இன்னொரு அன்பர் பணம் அனுப்பியுள்ளார் !! ///

  அன்புள்ள அனாமதேயாவிற்கும், அந்த இன்னொரு நண்பருக்கும் பாராட்டுகளும், மயிலை ராஜா, ATR சார் இருவருக்கும் வாழ்த்துகளும்..!!!


  💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  ReplyDelete

 29. எனக்கு சந்தா அன்பளிப்பு தந்த அந்த அன்புள்ளத்துக்கு ஆனந்தக் கண்ணீருடன் கூடிய எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.
  ஆசிரியர் சந்தா அட்டவணையை வெளியிட்ட நாள்முதல் நம் தளத்துக்கு வந்து பதிவென்ற பெயரில் அவ்வப்போது அளந்து விட்டுக் கொண்டிருந்தாலும் அடுத்து எதை விற்று சந்தாதொகையை செலுத்தலாமென்ற எண்ணமே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. சொந்த பிரசனைகளினால் பலவற்றையும் இழந்துவரும் எனக்கு இன்றைய ஆசிரியரின் பதிவு மூலம் வரப்போகும் ஆண்டிற்கான சங்கடங்களை எதிர்கொள்ள ஊக்கமளிக்கும் நமது காமிக்ஸ்களை மாதாமாதம் பெற்றுக்கொள்ள வாய்ப்பளித்த அந்த அன்புள்ளத்துக்கு மறுபடி எனது நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.

  ReplyDelete
 30. எங்க மயிலை கிங்குக்கும், ATR க்கும் வாழ்த்துகள்!!!!

  ReplyDelete
 31. எனக்கு சந்தா பரிசளித்த அந்த முகம் தெரியாத அன்புள்ளத்துக்கும்,
  அந்த தகவலை பதிவில் தெரிவித்த நமது மரியாதைக்குரிய ஆசிரியருக்கும்,
  எனக்கு கிடைத்த சந்தா பரிசுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துகள் சொன்ன அன்புள்ளங்களுக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 32. டியர் விஜயன் சார், இந்த பதிவை படித்தவுடன் எனக்கு வேறெதுவும் தோணவில்லை.
  நெகிழ்ச்சி!!!!!!

  ஒவ்வொரு படக்கதைக்கு பின்னும் சிவகாசி டீமின் உழைப்பு உள்ளதென தெரியும். ஆனால் அந்த கதைகளுக்கு பின்னால் உள்ள கதையை இப்போதுதான் அறிந்து கொண்டேன்.என் மனதில் இப்போது தோன்றுவது நெகிழ்ச்சி, நெகிழ்ச்சீ மட்டுமே! !!!!

  ReplyDelete
  Replies
  1. நேக்கும் அப்படித்தான்!

   Delete
  2. இதுதான் வியாபர உலகின் மறுக்க முடியா,வெளியில் சொல்ல முடியாத இன்னொரு மறுபக்கம்..

   Delete
  3. ஒவ்வொரு வியாபாரமும் இன்று இப்படி சிரமங்களை தாண்டியே நடக்கிறது....

   ஒவ்வொரு ஆர்டர் முடிப்பதற்குள் நாக்குத் தள்ளி, ஒரு குழந்தையை பெறுவது போன்ற நிம்மதி கலந்த உணர்வுக்கு கொண்டு போய் விட்டார்கள்...

   இன்றைய ஆசிரியர் சாரின் பதிவும் ரொம்ப காலமாகவே அவர் இந்த அத்தர் பல்டிகளை அடித்தே சாதித்து வருகிறார் என உணர்த்தியது. இப்போது சாதாரணமாக தெரியும் ஒரு சில நாயகரது புத்தகங்களை கூட இனி அதற்குரிய கவனத்துடன் கையாள தோணுது...

   ஹேட்ஸ் ஆஃப் டூ யூ ஆசிரியர் சார்🙏🙏🙏🙏🙏🙏

   Delete
  4. எக்சாக்ட்லி

   Delete
 33. // அதற்காக உங்கள் கனவுகளை cold storage-ல் போடச் சொல்வதும் எனது நோக்கமல்ல guys ! உங்கள் ஒவ்வொருவரின் சின்னச் சின்ன கோரிக்கைகளும், அபிலாஷைகளும் என்னுள் ஒரு ஓரத்தில் பதிவாகிக் கொண்டே தான் வருகின்றன ! வாகான முதல் சந்தர்ப்பத்தில் அவற்றை நிச்சயமாய் நடைமுறை செய்திடத் தவற மாட்டேன் என்ற நம்பிக்கையோடு கனவுகளைத் தொடருங்களேன் என்பது மாத்திரமே எனது கோரிக்கை !//
  அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது சார்,என்றேனும் ஒருநாள் அந்த கனவை நீங்கள் சாத்தியம் ஆக்குவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு,மேலும் நீங்கள் காமிக்ஸுக்காக அடிக்கும் அந்தர் பல்டிகளும் காமிக்ஸின் மேல் உள்ள காதலால் மட்டுமே சாத்தியம்.
  உங்கள் அனுபவங்கள் எங்களுக்கு பல்வேறு புரிதல்களை ஏற்படுத்தியுள்ளது.

  ReplyDelete
 34. 'கெக்கபிக்கே' என சிரிக்கவைத்த பதிவு இது!
  'பார்டா!' என வியக்கவைத்த பதிவு இது!
  'அச்சச்சோ!' என வருந்தவைத்த பதிவு இது!
  'க்ரேட்!' என பெருமைப்படவைத்த பதிவு இது!

  இப்படிக் கலவையான பதிவு போட்டுத்தாக்கிட எங்கள் எடிட்டருக்கே சாத்தியம்!

  சூப்பர் சார்!

  ReplyDelete
  Replies
  1. வரிக்கு வரி்+1 செயலரே

   Delete
  2. எப்படி இப்படி எல்லாம்....என்னமோ போங்க....😜😜😜😜

   Delete
  3. தலைவரும் செயலாளரும் ஒரே ஸ்டைலில் எழுதுகிறத பார்க்கும் போது இந்த ஒரு விஷயத்தில் மட்டும்மாவது ஒற்றுமையாக இருக்காங்களேன் என்று சந்தோசமாக உள்ளது. :-)

   Delete
  4. ///எப்படி இப்படி எல்லாம்....///

   எல்லாம் டெக்ஸ் கதைகள் படித்துத்தான் நண்பரே! (இதை அந்த கணேஷ்குமார்ட்ட சொல்லிடாதீங்க. செம கடுப்பாய்டுவாரு!)

   Delete
  5. அடித்து கேட்டாலும் சொல்ல மாட்டேன்....😭😭😭

   Delete
 35. டெக்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும் ஏனென்றால்,

  சிறுவயதிலிருந்து டெக்ஸீடன் பயணித்துள்ளேன். சிறுவயதில் என் வீட்டருகே ஒரு பாட்டி காமிக்ஸ் லெண்டிங் லைப்ரரி வைத்திருந்தார். அங்கேயே உட்கார்ந்து படித்தால் பத்துகாசு.வீட்டுக்கு எடுத்து வந்து ஒரு நாள் வைத்திருந்து படித்து தந்தால் இருபத்தைந்து காசுகள். அவ்வப்போது அந்த பாட்டி சொல்லும் வேலையை செய்தால், கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருவது போன்ற, ஒரு காமிக்ஸை அங்கேயே உட்கார்ந்து இலவசமாக படிக்கலாம். டெக்ஸின் சைத்தான் சாம்ராஜ்யமும், பழிக்குபழியும் அப்படி எத்தனைமுறை வாசித்தீருப்பேன் என்பது நினைவில் இல்லை. சைத்தான் சாம்ராஜ்யத்தில் வரும் புகை சமிக்சையை நானும் என் சகோதரனும் பக்கத்து தெருக்களில் குப்பையை எரித்து ட்ரை செய்திருக்கிறோம் என்பது எங்கள் தெரு வரலாறு. இது நிற்க.

  தெருவில் ஏதோ கலாட்டா நடக்கும்போதோ, இல்லை பேங்க் வேலையாக பேங்கிற்கு சென்றால், மிக அலட்சியமாக காதை குடைந்துகொண்டு பதில் சொல்லும் சில பேர்களை பார்க்கும்போதோ(பெரும்பான்மையோர் அல்ல) இப்ப மட்டும் டெக்ஸ் இந்த இடத்துல இருந்திருந்தா நடு மூக்குல நச்சுன்னு குத்தியிருப்பாரோ என்று யோசித்திருக்கிறேன். எப்போது மனசோர்வு வரும்போதும் நான் திரும்ப திரும்ப வாசிக்கும் புத்தகம் நள்ளிரவு வேட்டை மற்றும் பழிக்கு பழி. இப்போ சமீபமா தலையில்லா போராளி.
  டெக்ஸ் ஓவர்டோஸ் என சிலர் சொல்லலாம். அது அவர்கள் கருத்து.
  என்னுடைய கருத்து டெக்ஸிற்கு ஸ்லாட் குறைவு. எனவே டெக்ஸிற்கான கதை எண்ணிக்கையை அதிகபடுத்துங்கள் என்பதுதான்.

  சந்தா கட்டுபவர்களுக்கு மட்டும் கலர் டெக்ஸ் இலவசம் என்று சொன்னவுடன் சேலத்தில் சந்தா கட்டாமல் கடையில் வாங்கும் இரண்டு நண்பர்கள் அடுத்த வருடம் சந்தா கட்டலாம் என்றிருக்கிறோம் என்றார்கள்.

  டெக்ஸ் கதை பாத்திரம் அல்ல.நம்முடன் இரத்தமும் சதையுமாக உலாவருகிறாரோ என்றே எண்ண தோன்றுகிறது...

  ReplyDelete
  Replies
  1. டாக்டர் சார்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

   Delete
  2. டாக்டர் சார்,செம,செம,அருமையான கருத்து.
   +123456789

   Delete
  3. பின்னிப் பெடலெடுத்துட்டீங்க டாக்டர்!!
   உங்க ஆப்பரேசன் சக்ஸஸ்! :)

   ///சந்தா கட்டுபவர்களுக்கு மட்டும் கலர் டெக்ஸ் இலவசம் என்று சொன்னவுடன் சேலத்தில் சந்தா கட்டாமல் கடையில் வாங்கும் இரண்டு நண்பர்கள் அடுத்த வருடம் சந்தா கட்டலாம் என்றிருக்கிறோம் என்றார்கள்.///

   அட்டகாசம்!!! வாழ்க டெக்ஸ்!!!

   Delete
  4. டாக்டர்.. மிகச் சரியாக சொன்னீரிகள்.. 👍🏼👍🏼👌🏼👌🏼 ஆனால் எனக்கு ஒரு தீபாவளியின் போது புத்தகத்தை காலையில் வாங்கிவந்து மாடியில் மறைத்து வைத்து படித்துவிட்டு அரைமணி நேரம் நின்றே திட்டு வாங்கியது இன்னும் வலிக்கிறது..

   Delete
  5. மெய்யாலுமே பாட்டி கடைதானா சுந்தர்? :-)

   Delete
  6. பாட்டி கடையா இருந்தா டெய்லி கடைக்கு போயிரப்பாரா ன்னுதான் சந்தேகமா இருக்கு...:-)

   Delete
  7. செம சுந்தர்...

   சிறு வயதில் இந்த சொர்கங்களை அனுபவித்த உம்மை பார்த்தால் லைட்டா பொறாமையாக கூட இருக்கு...😜😜😜

   10வயசுல பாட்டி கடைகள தான் பலரது சொர்க்கம்...

   டெக்ஸின் மகுடத்தில் மற்றொரு வைரம் இந்த பதிவு...👏👏👏👏

   Delete
  8. டெ.வி
   எங்கூர்ல
   5 பைசாவுக்கு 3 புக் படிப்பேன்.
   1978.☺☺☺☺☺

   Delete
 36. மயிலை ராஜாவுக்கும், உயர்... சரி வேணாம்.. கோவிச்சுக்குவாரு.. திரு.ATR அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்!
  பரிசளித்த அன்புள்ள அநானமதேயாக்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்!

  காலாத்தால் செய்த உதவி சிறிதெனினும்... _/\_

  ReplyDelete
  Replies
  1. கோபமல்ல திரு.விஜய்.
   வையாபுரியை பார்த்து நீங்கள் அர்னால்ட் போல இருக்கிறீர்கள் என்றால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது எனக்கு.
   வடிவேலிடம் என்னத்தெ கன்னையா "சும்மா எம்.ஜி.ஆர் மாதிரி தகதகன்னு இருக்கிறீங்கன்னு" சொல்லும் போது வடிவேலுக்கு உண்டாகும் ஃபீலிங்குதான் எனக்கு.வேறொன்றுமில்லை.

   Delete
  2. திரு.விஜய் இப்போது திருதிரு விஜய்! :)

   Delete
  3. திருதிருன்னு முழிக்கும் விஜய்!!
   பர்ரால்லியா.....
   சும்ம்ம்மா விளையாட்டுக்குத்தான்!!!

   Delete
 37. 2012 க்கு முன் காமிக்ஸ் வராதா .. இனி தமிழில் காமிக்ஸ்ன் நிலை அவ்வளவு தான் என்று நினைத்தேன் ..
  ஆனால் 2012 ல் நம் மீள் வருகைக்கு பின் நிலைமை மாறியது .. எனக்கு பிடித்த சில heroes வராததால் எனக்கும் வருத்தம் உண்டு .. அதை editor இடம் book fair ல் கேட்பேன் . அவர் அதற்கான காரணம் பொறுமையாக சொல்வார் .. கேட்பது நம் உரிமை .. அந்த சுதந்திரம் அவர் நமக்கு தந்துள்ளார் .. அதை misuse பண்ண வேண்டாம் .. 2012 க்கு முன் இருந்த நிலமை நமக்கு தெரியும் .. அந்த நிலமை மீண்டும் வராமல் பார்த்து கொள்வோம் ..

  ReplyDelete
 38. எனக்கு சந்தா பரிசளித்து இன்ப அதிர்ச்சி அளித்த அந்த முகம் தெரியாத அன்பு இதயம் தெரிந்த அன்புள்ளத்துக்கும்,
  அந்த தகவலை பதிவில் தெரிவித்த நமது மரியாதைக்குரிய ஆசிரியருக்கும்,
  எனக்கு கிடைத்த சந்தா பரிசுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துகள் சொன்ன அன்புள்ளங்களுக்கும் ATR சாருக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 39. ஷானியாவின் முகத்தையே காட்டாமல் வெளியிடப்பட்டிருக்கும் அந்த ஒருபக்க ட்ரெய்லருக்கு என் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

  திட்டமிட்ட சதி!

  ReplyDelete
  Replies
  1. முக்கிமமான சமாச்சாரங்களை ட்ரெய்லர்ல காட்டமாட்டாங்க குருநாயரே!!

   Delete
  2. சிவகாசி சதியாக கூட இருக்கலாம்...

   ஷானியா ..ஷானியா


   சொக்க வைக்கும் ஷானியா...


   ஆக்‌ஷனில் நீ எந்த வகை கூறு...:-)

   Delete
  3. சொக்க வைக்கும் ஷானியா மட்டுமல்ல
   அழகினால் அனைவரையும் சிக்க வைக்கும் ஷானியா

   Delete
  4. ஜொள்ளோ ஜொள்ளு.

   Delete
 40. வெற்றிகரமாக நான்கு பதிவுகளைத் தந்த ஆசிரியர் அவர்களுக்கும்,
  தரவைத்த காமிக்ஸ் சொந்தங்களுக்கும் கோடானு கோடி நன்றிகள் சாமியோவ்.......!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 41. Guys how about this idea?

  Those who can invest Rs.100000 (refundable) minimum 5 years gets subscription free for 5 years. Please don't calculate profit/loss. If possible people can invest more. As a start I'm ready to invest the amount if editor sir approves. This is my own opinion. I take all responsibility for your comments.

  ReplyDelete
  Replies
  1. Mahesh : சார் ...உங்களின் அன்புக்கு நன்றிகள் ; ஆனால் உங்களளவில் ஆளுக்கொரு சந்தாவும் இந்த காமிக்ஸ் நேசம் தழைக்க நேரமும் ஒதுக்கினாலே போதும் - டைம்ஸ் சதுக்கத்தையே ABT ஆஞ்சநேயரைப் போல உள்ளங்கையில் சுமக்கும் ஆற்றல் எனதாகிடும் !

   நீங்கள் ஒவ்வொருவருமே எங்கள் மீது ஆத்மார்த்தமாக காட்டி வரும் அன்பும் , அக்கறையுமே ஒரு கோடி பெறுமே ? - அதனை முதலீடாக்கி தூள் கிளப்பிட மாட்டேனா

   Delete
  2. Sir,

   I know you keep publishing comics out of love and we keep purchasing comics out of love(saravanan sir's post is a example), I thought why stop this love there itself, let's share the burden. I was little bit worried what reaction you will be showing, if you agree I will be depositing the money as a encouragement for keeping this circle going. These words are my from heart, don't mistake me sir.

   Delete
  3. @ Mahesh

   உங்கள் நல்ல மனம் வாழ்க! இந்த எண்ணங்களில் ஒரு கால்வாசி அளவுக்காவது - காமிக்ஸ் படிக்கும் எல்லோருக்குமே - இருந்துவிட்டால், எடிட்டரின் கனவுகளில் ஒன்றான '1000 சந்தாக்கள்' என்ற இலக்கு எளிதாக நிறைவேறிடும்!

   Delete
  4. Subscription matters my dear Mahesh.
   It is purely comics love.

   Mr.Vijayan can fit himself and mould.He never expects except our love for comics which is his driving force.
   See the strain he voluntarily tooks to go ahead despite hardships whether in the form of financial hurdles or other.
   No matters here.
   HE IS A SINCERE COMICS LOVER AND IT IS REVEALED IN EACH AND EVERY TIME HE EXCELS.

   Delete
 42. காலை வணக்கம்.
  தம்பி உடையான் படைக்கஞ்சான்.என்ன
  வயசு கம்மியாயிருந்தா சின்னத்தம்பி
  வயசு அதிகமாஇருந்தா பெரிய தம்பி.
  இப்படிக்கு தங்கள் குட்டித்தம்பி.

  ReplyDelete
 43. வணக்கம் நண்பர்களே...
  நான் எப்போதும் மவுன வாசகனே... கடந்த ஒரு வாரமாக நடந்த டெக்ஸ் ஓவெர்டோஸ் பற்றி என் கருத்து...
  நான் எப்போதும் முகவர் மூலமே மாதாமாதம் புத்தகங்களை வாங்குவேன்... அப்படித்தான் 2014 முதல் வாங்கி வருகிறேன்...
  ஆனால், இந்த முறை டெக்ஸ் இலவசப்புத்தகம் வருவதால்... கண்டிப்பாக சந்தா செலுத்த போகிறேன்.... Simply because, I'm also TEX Lover😍😍
  கண்டிப்பாக டிசம்பரில் சந்தா கட்ட முயற்சிக்கிறேன்.... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. @ Karthikeyan L

   👏👏👏👏👏👏👏👏👏👏👏

   Delete
  2. அருமை.
   இது போன்று பலர் மெளனம் கலைப்பது,முதன்முறையாக சந்தா கட்டப் போகிறேன் என்று அறிவிப்பது நம் ஆசிரியரை உற்சாகப்படுத்தும்.அவரின் 2018 அட்டவணை மற்றும் இலவச மெகா சர்ப்ரைஸ்கள் பலரை தேன்குடித்த வண்டாக மாற்றப் போகின்றது என்பதற்கு இதுவே சான்று.

   Delete
  3. இதாம்பா டெக்ஸ் சாதித்தது.... இதற்கு தானா அந்த "அப்பிராணி" மேல அம்புட்டு காண்டு.... காலம் பதில் சொல்கிறது, டெக்ஸினால் அதிகமாகும் சந்தாக்கள் வாயிலாக...🙏🙏🙏🙏🙏

   டெக்ஸூடா👊👊👊👊

   Delete
  4. யார் அந்த அப்பிராணி...

   Delete
  5. யார் அந்த அப்பிராணி 😭😭😭😭😭

   Delete
 44. நாம் எல்லோ௫ம் காமிக்ஸ் காதலர்கள் தான்.நமக்குள் ஏன் பிரிவினைகள், சண்டைகள்? வாக்குவாதங்கள் ஏன்? நாம் எல்லோ௫ம் ஒன்று கூடி இழுக்க வேண்டிய தேர் அல்லவா இது? நம் நிறுவனத்திலி௫ந்து வ௫ம் துண்டு துக்கடா பேப்பரைக் கூட வி௫ம்பிப் படிப்பவன் தான்.நான் டெக்ஸ் ரசிகன் என்றாலும் டைகரையும் வி௫ம்பிப் படிப்பவன் தான். இதுவரை டைகர் புக் ஒன்றைக் கூட வாங்காமல் விட்டது கிடையாது. டைகர் புக் நீங்கள் ஏன் அதிகம் வெளியிடலாம் எனக் கேள்வி கேட்பவனும் கிடையாது.சந்தோசமாக காமிக்ஸ் படிப்போம், சந்தோசமாக இ௫ப்போம் , பிறரையும் சந்தோசப் படுத்துவோம், சந்தோசமாக வைத்தி௫ப்போம்!!!!!!!!!

  ReplyDelete
 45. லேடி Sன் முதல் பாகம் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. சுடும் பனி அதே போல் நன்றாக அமைந்தால் மிகவும் சந்தோசம். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. @பரணி. ஆங்கிலத்தில் வாசித்திருக்கிறேன். மீதி உள்ள பாகங்கள் வாசித்த பொழுது முதல் பாகம் சுமாரோ என்று தோன்றும் அளவுக்கு சுவராஸ்யமாக இருந்தது.

   Delete
 46. விஜயன் சார், எதற்கு இத்தனை விளக்கம்கள். என்னை பொறுத்தவரை தேவையில்லை, காரணம் உங்கள் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.இது ஆண்டுகள் பல ஆனாலும் கடுகளவு கூட குறையப்போவது இல்லை.

  ReplyDelete
 47. நான் முதன் முதலில் படித்த டெக்ஸ் கதை நள்ளிரவு வேட்டை... நள்ளிரவு வேட்டையை படித்து விட்டு டெக்ஸ்க்கு ரசிகர் ஆகவில்லை எனில் அவர் கண்டிப்பாக.... காமிக்ஸ் ரசிகராக இருக்கவே முடியாது... அப்படியான அனல் தெறிக்கும் கதை அது....
  அனால் நான் இப்பொது சொல்ல வந்த கதை வேற.... எனக்கு மிகமிகமிக பிடித்த டெக்சின் மரண நடை.....தான் அது...
  அதுபற்றி விரைவில்....

  ReplyDelete
  Replies
  1. ///நான் முதன் முதலில் படித்த டெக்ஸ் கதை நள்ளிரவு வேட்டை... நள்ளிரவு வேட்டையை படித்து விட்டு டெக்ஸ்க்கு ரசிகர் ஆகவில்லை எனில் அவர் கண்டிப்பாக.... காமிக்ஸ் ரசிகராக இருக்கவே முடியாது...///


   வாவ்..!! நள்ளிரவு வேட்டை பலமுறை படிக்த்தூண்டிய கதை.!
   ஒற்றை ஆள்தான் போட்டுத்தள்ளிடலாம் என்று அந்த எல்மொரோவின் ஆட்கள் மந்தையுடன் வரும்போது, பாதையில் முள்வேலி கட்டிவிட்டு கமான்சேக்களுடன் டெக்ஸ் நிற்கும் கெத்து.. அடாஅடா..

   That's why we love Tex villar 😍

   Delete
  2. அந்த கதையை மறக்கத்தான் முடியுமா?? ஒவ்வொரு பக்கமும் அனல் தெறிக்குமே👌👌👌

   Delete
  3. தனித்திருக்கும் டெக்ஸை கொல்ல வரும் கயவர் கும்பல் வீட்டைத் தாக்க,
   இவர்களின் வஞ்சக எண்ணைத்தை அறிந்த டெக்ஸ் வெளியே இருந்து இவர்களை "கவனிக்க" வந்த கயவர்களோ காலனின் பிடியில்... கதை முழுதும் இதே போன்ற உத்தி தோரணங்கள்... வருடம் ஒருமுறை வாசிப்பு பட்டியலில் உள்ள கதை இது...

   டெக்ஸால் சந்தா அதிகரிக்க அதிகரிக்க இந்த கதையின் பாத்திரங்கள் தான் என் கண் முன்னே வந்து வந்து போகுது...

   Delete
  4. சூப்பர் மியூசிக் - ஆடு வேச டைகர் ஜாக்

   Delete
 48. குற்ற தொழிற்சாலை....


  முதலில் அட்டைப்படத்திற்கு சுற்றி போட வேண்டும் .அவ்வளவு அட்டகாசம்..பச்சை நிறத்தில் பளீரென வைரமாய் ஜொலிக்கிறார் இந்த வலைமன்னன்.ஆரம்ப முதல் இதழில் இந்த கதையை படிக்கவில்லை எனினும் இதன் மறுபதிப்பு மீண்டும் ஒரு முறை லயனில் வந்த நினைவு.ஆனால் மிக பொடி எழுத்துகளால் குழந்தையாக இருந்த பொழுதே படிக்க திணறிய பொழுது மறுவாசிப்பிற்கு இன்றைய இளைய வயதில் நான் என்ன செய்ய முடியும்.இதற்கு வடிகாலாக அமைந்த இந்த இதழ் மிக மிடுக்குடன் அமைந்து வெளி வந்து அட்டகாசபடுத்தி விட்டது.காதில் பூ சுற்றல் கதை தான் .ஆனால் இவ்வளவு விறுவிறுப்புடன் சுற்ற வைத்தால் பூசெண்டை கூட என் காதில் வையுங்கள் என கூறலாம் அளவிற்கு விறுவிறுப்பு.

  மொத்தத்தில் இது குற்ற தொழிற்சாலை மட்டும் அல்ல...அட்டகாச தொழிற்சாலையும் கூட ...!


  நன்று....
  ( தடங்கலுக்கு சாரி தாமதத்திற்கு வருந்துகிறோம்.எல்லாம் "அவர் " செயல் ..)

  ReplyDelete
 49. என்றும் டெக்ஸ் என்றென்றும் டெக்ஸ் டெக்ஸ் தான் நமது நம்பிக்கை நட்சத்திரம்.

  ReplyDelete
 50. vijayan sir,
  ஒரு தலைவன் ஒரு சகாப்தம் in mega size is really rocking.
  Sorry, one of my previous comments, I wrote it does not require mega size, after reading it fully now, i realized the need of mega size for this book.
  Looking forward for more mega size books.
  Regards,
  Mahesh

  ReplyDelete
  Replies
  1. @ Mahesh kumar S

   தவறை உணர்வதும், உணர்ந்த தவறை உரியவரிடம் சொல்லி மன்னிப்பு கேட்பதும் - நல்ல மனிதத்தி்ன் அழகான குணங்கள்!

   க்ரேட்டுங்க நீங்க!

   Delete
 51. Sir,

  Next year sandha 2018 was very excellent. Sandha amount also acceptable. But a some small requests,

  1. To publish pavala silai marmam in same size in first print because if reduce pictures and artwork size book not worthy.
  2. To publish 007 stories with good quality like vidai kodu sania and hardbound. Then only 007 looks very good. Kindly drop jil Jordan and smurfs.

  the above my suggestions.

  Always a good valued client for lion comics group.

  Finally reduce the price rathapadalan colour version. Maximum rs.2000/- is enough for sandha payers. Apart from sandha payers you can charge extra 25℅.must give some special discounts for sandha payers. Kindly make a note.

  Yours

  I.V.SUNDARAVARADAN
  LITTLE KANCHERPURAM
  CELL: 7667291648 AND 9283796806.  ReplyDelete
 52. Looking forward for more Tex Willer reprints in 2018..
  Why can't one more extra subscription for Super 6 Tex Special?
  We can start publishing it from May onwards....
  By doing that, you will enable us to relive those good old days (Nostalgia feelings).

  My favorite is பழிக்கு பழி. Looking forward those old reprints bit faster along with new Tex Willer stories.

  ReplyDelete
  Replies
  1. அச்சச்சோ! மறுபடியும் 'கைய புடிச்சு இழுத்தியா' ஆரம்பிச்சுடும் போலிருக்கே! ;)

   Delete
  2. Dear
   Pl think our friends who are thinking ten times to subscribe because of time, family ,work,health constraints .

   Delete
 53. We can understand your situation editor sir ( aanalum suski wiski enga,rip kirpy enga nu ketukittey than iruppom)

  ReplyDelete
 54. சுவாரஸ்யமான பதிவு.

  ReplyDelete
 55. சார் வானசின் மர்மக்கத்தி வண்ணத்தில் இல்லயா....பொடியர்களுக்கு ஒரே இடம்தானா..மற்றபடி சந்தா அருமை....அட்டகாசம்

  ReplyDelete
  Replies
  1. கொலைகாரககாதலி..அந்த படம் வரயுமிடம்...ரொம்ப எதிர்பார்க்கிறேன்...

   Delete
  2. மர்மகத்தி வண்ணத்தில்தான்லே

   Delete
 56. சந்தா கட்டியாச்சு.இன்னும் ஒரு வருஷத்துக்கு கவலை இல்லை.
  சந்தா E எப்ப வரும்
  சந்தா F & F எப்ப வரும்.
  ஜம்போ காமிக்ஸ் எப்ப வரும்.
  விக்ரம் ஆரம்பிக்கப்போகும்
  விக்ரம் காமிக்ஸ் எப்ப வரும்.
  ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
  எனக்கு மைசூர்ப்பா ஜாங்கிரி லட்டு
  பாதுஷா ஜிலேபி குலோப்ஜாமூன்
  பாசந்தி ரசகுல்லா சோன்பப்டி
  அதிரசம் எல்லாம் வேண்டும்.
  அல்வா மட்டும் வேண்டாம்.

  ReplyDelete
  Replies
  1. //சந்தா E எப்ப வரும்
   சந்தா F & F எப்ப வரும்.//

   Subscription E is changed to F&F, both are same

   Delete
 57. யோவ் ஸ்டீலு நேற்றுதானே மர்மகத்தி
  தோட்டா தலைநகரம் இரண்டும் கலர்
  என்று சொன்னேன்.ஆசிரியரே அதை
  பிரிண்டிங் மிஸ்டேக் என்று சொன்னாரே.

  ReplyDelete
  Replies
  1. நேத்து எங்க சொல்லவிட்டாங்கே.?

   Delete
  2. காமன் ரீடர்ஸ்க்கு தொந்தரவா இருக்கும்னு சொன்னா எங்க கேட்கிறாங்க...

   Delete
 58. டெக்ஸ் கதைகள் பிடிக்காது; டெக்ஸையே பிடிக்காதுன்னு சொல்லிக்கிட்டு டெக்ஸ் மேல கொலைவெறியோட சுத்தறவங்களைப் பார்த்தா, அவங்கள்ல்லாம் போன ஜென்மத்துல மெபிஸ்டோவா பிறந்திருப்பாங்களோன்னு ஒரு டவுட்டு வருது! :P

  ReplyDelete
  Replies
  1. அப்போ ரின் டின் கேன் வேண்டாம்னு சொல்றவங்க எல்லாம் யாரா இருந்திருப்பாங்க

   Delete
 59. எல்லாஞ் சரி தான்

  என்னமோ டெக்ஸ் டெக்ஸ் னு ஆளாளுக்கு அதகளம் பண்றாங்களே
  மைசூர் பாகுபலி டெக்ஸா
  பாதுஷா கார்சனா
  அப்ப டைகர் ஜாக்....?
  கிட்.................?

  ReplyDelete
 60. என் ஹோட்டல் மெனு இது தான் சாப்பிட்டால் சாப்பிடுங்கள்.இல்லையெல் சென்று விடுங்கள் .இது தான் ஒரு முதலாளியின் குணமாக இருக்க முடியும்.அதை விட்டு இதை செய்ததால் தான் என்னால் சமாளிக்க முடியும் .அதில் இவ்வளவு கஷ்டம் இதில்பிராப்ளம் என்று சொல்லி கொண்டு இருக்க மாட்டார்கள்..தொழிலை வியாபாரமாக நினைக்காமல் இதுவும் ஒரு கலை தான் என்று நேசிப்பவர்கள் மட்டுமே இப்படி எல்லாம் யோசிக்க முடியும். திரை உலகின் உலக நாயகன் போன்று. ...
  இந்த இடத்தில் சில அரசியல் பேசலாம் என்று நினைக்கிறேன் .தவறாக இருந்தால் மன்னித்து கடந்து விடுங்கள்...ப்ளீஸ். ....
  டிவி,வாட்ஸ்அப் எங்கு பார்த்தாலும் ரஜினி, கமல் அரசியல் பேச்சி தான்.அதில் ரஜினி நல்லவர்.கமல் வல்லவர்.கமல் என்ற பேரை சொன்னவுடன் கிடைக்கும் கை தட்டலை விட ரஜினி பெயர் சொன்னதும் கிடைக்கும் கை தட்டல் அதிகம்....அதை பார்க்கும் போது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. எவன் ஒருவன் தன் தொழிலை வாசித்து சுவாசித்து நேர்மையாக இருக்கிறானோ..அவனே சிறந்த மனிதன்....(தன் வரியை ஒழுங்காக செலுத்தி தன் தொழிலை தெய்வமாக நினைக்கும் உலக நாயகனை அல்லவா..நல்லவன் என்று சொல்ல வேண்டும். ஏன் இந்த முரண்பாடு. ...பதில் தேடுகிறேன்..கிடைக்க வில்லை...)
  கமலை போல் நமது ஆசிரியரும் இருப்பதாலோ என்னவோ..கடும் விமர்சனத்திற்கு ஆளாகிறாரோ என்னவோ.!!!!!(இதுவும் விடை தெரியா கேள்வியே?...👍👍👍👍

  ReplyDelete
 61. டீ குடிக்க சில தியாகங்கள் செய்கிறேன்(கடந்த 4 வருடங்களாக)

  சில பல சினிமாக்கள் தியேட்டருக்கு போகாமல் தவிர்த்து வருகிறேன்.

  சிகரட் ரொம்ப கஷ்டப்பட்டு விட்டுள்ளேன்.(ஆனால் டென்ஷனாயிட்டா..... பூ பூ பூ.
  நேத்து ரொம்ப டென்சனாக்கிட்டாங்கே
  இரண்டே இரண்டு... வாழ்க )

  அப்பிடி இப்பிடீன்னு ஒரு மூணாயிரம் தேறீரும்.

  அப்பறமாட்டி
  கொஞ்சமா..., வீட்டு அகிலாண்டேஸ்வரிட்ட ஒரு இளிப்பு(எல்லாம் நவம்பர் மாசம் அரங்கேறும்)
  வீட்டு வேலைகள இழுத்து போட்டு செஞ்சு ...

  போன வருசம் சமாளிச்சுசுசு...


  இந்த வருசம்

  இப்பவே ஆரம்பிக்கணும்.
  வயசாயிட்டா யாரு மதிக்கிறாங்கே....

  பாப்போம்....
  பாழாப்போன காமிக்ஸ் கிறுக்கு மட்டும் விட முடியலலலலலல.......

  j


  ReplyDelete
  Replies
  1. அருமை அருமை!

   கொஞ்சமாவது கஷ்டப்பட்டு கிடைக்கிற/படிக்கிற காமிக்ஸுலதான் ஒரு கிக் கிடைக்கும்!

   Delete
 62. எடிட்டருக்கு, பழைய கதைகளின் ரீபிரிண்ட் பற்றி நீங்கள் பேச ஆரம்பித்தபோதே ''இதற்குள் முதலிடுவதைத் தவிர்த்து புதிக கதைக்களங்களை கொண்டுவாருங்கள் சா.....ர்ர்ர்ர்.....!'' என்று கை வலிக்க வலிக்க பதிவிட்டவர்களின் சார்பில் ஒரு கேள்வி சார்...

  ''இவ்வளவு கஷ்டப்பட்டு அலைந்து, அவமானப்பட்டு, பணத்தைச் செலவழித்துத்தான் - 'இது ஆரம்பத்துக்கு மட்டுமே வொர்க் அவுட் ஆகும்' என்ற ஞானத்தை நீங்கள் அடையவேண்டுமா சார்...?''

  வெளியே க்ரே மார்க்கெட்டில யானை விலை, குதிரை விலை என்று கூவி உங்களை உசுப்பேற்றியவர்கள், இந்த ரீ பிரிண்டுகளை வாங்கி, இலவசமாக நண்பர்களுக்குத் தந்து விற்பனையை ஊக்கப்படுத்தியிருக்க முடியுமே சார்? இல்லை, களத்தில் இறங்கி விற்பனையாளர்களையேனும் தேடிப்பிடித்துத் தந்து உதவியிருக்கலாமே? இல்லை, குநை;த பட்சம் தங்கள் பேஸ்புக்கிலோ, டுவிட்டரிலோ, ப்ளாக்கிலோ எழுதி பிரபலப்படுத்தியிருக்கலாமே?

  ஆக, உசுப்பேத்துபவர்களை இனியும் .....

  ReplyDelete
 63. சார்! 2019-திலாவது டெக்ஸ்சின் 'மரண முள்' முழு வண்ணத்தில் வெளியிடுங்கள் சார்!

  ReplyDelete
 64. Real comics lovers always support our editor sir👍👍✋✋

  ReplyDelete
 65. Real comics lovers always support our editor sir👍👍✋✋

  ReplyDelete
 66. ////Start : "சி.சி.வ." : 5 ஆண்டுகளுக்கு முன்பாய் நமது மும்மூர்த்திகள் + ஸ்பைடர் மறுசுற்று reprints தொடர்பாய் அமெரிக்க நிறுவனமான DC காமிக்ஸில் பேசிட முனைந்த போது நடந்தது அட்சர சுத்தமாய் இதுவே////

  போராட்டக்குழ தலீவருக்கு ஒரு திறந்த மடல்! (கடுதாசிக்கே கடுதாசியா?!!)

  5 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு விசயம் ( அதாவது, சிங்கத்தின் 45வது வயதில் நடந்த விசயம்) எப்படி 'சிங்கத்தின் சிறு |வயதில்' ஆக இருக்கமுடியும்னு யோசிச்சீங்களா? எதிரணித் தலைவர்தான் இதை 'சி.சி.வ'னு சொல்லி உங்க தலையிலே மிளகாய் அரைச்சுருக்கார்னா... நீங்களும் வாகாய் தலையைக் குனிந்துகொடுத்து ஏமாந்துட்டீங்களே தலீவரே?!! 'சி.சி.வ'னு தலைப்பு வச்சு, நேத்திக்கு நடந்ததைப்பற்றி அவர் எழுதியிருந்தாக்கூட இதுதான் சாக்குன்னு 'குற்றத் தொழிற் சாலை'யை எடுத்துப் படிச்சிருப்பீங்க போலிருக்கே?!! ( வெறிபுடிச்ச மாதிரி வேகவேகமா படிச்சுட்டு உடனே ஒரு விமர்சனம் வேற!)

  இந்தப் பதிவுல இன்டைரக்டா ஒரு மெசேஜ் சொல்லியிருக்காரே அதையாவது கவனிச்சீங்களா...? ம்க்கும், நானே சொல்லிடறேன்! அடுத்த மாசம் வெளியாகப் போகும் புத்தகங்களிலும் சி.சி.வ போராட்டக்குழுவுக்கு பட்டை நாமம் சாத்தப்படும் - என்பதே அது!

  இதுகுறித்து உங்கிட்டே கொஞ்சம் பேசணும் தலீவரே! எல்லா ஊர் பஸ் ஸ்டான்டுலேயும் எதிரணித் தலைவர் தன் உளவுப்படையை நிறுத்தி வச்சுருக்கிறார்ன்றதால, நாம நாளைக்கு சாயந்திரம் சங்ககிரி ஆட்டோ ஸ்டாண்டுல மீட் பண்ணிப் பேசிக்குவோம். முழுக்க முழுக்க சங்கேத பாஷைலயே பேசிக்குவோம் தலீவரே... நமக்கே புரியலைன்னாலும் பரவாயில்ல!

  இப்ப டிக்கி,
  சினம் கொண்ட செயலர்

  ReplyDelete
 67. எங்களுக்காவது புரிகின்ற மாதிரி பேசுங்களேன்...நாங்க பாவமில்லையா😰😰😰😰😰😰

  ReplyDelete