Powered By Blogger

Wednesday, October 18, 2017

சந்தோஷ தீபாவளி !

நண்பர்களே,

வணக்கம் ! அட்டகாசமான தீபாவளி நல்வாழ்த்துக்கள் ! நம் இல்லங்களில் ஒளியும் ... மகிழ்வும்.. நலமும்.. வளமும் செழிக்கட்டும் ! 
இன்றைய பொழுதை - மைசூர்பாகு போலவும்...அதிரசங்கள் போலவும்...சீடைகள் போலவும் காட்சி தரும் சில பல மர்ம வஸ்துக்களோடு கொண்டாடத்  தயாராகிக் கொள்ளுவோமே ? அப்புறம் நேரம் கிடைக்கும் போது நமது தீபாவளி மலர்களில் ஏதோவொன்றை  - நின்று கொண்டோ ; குந்திக் கொண்டோ ; ஒருக்கா சைடாய்த் திரும்பிக் கொண்டோ ; மல்லாக்கப் படுத்துக் கொண்டோ படிக்கவும் நேரம் ஒதுக்க முடிகிறதாவென்றும் பார்க்கலாமே ? 

As promised இன்று முன்னிரவு  - 2018-ன் அட்டவணையோடு ஆஜராகிடுவேன் ! அதற்கெனவும் கொஞ்சம் நேரம் ப்ளீஸ் ? 

Safety pin குறிப்பு : இன்றைய மின்னஞ்சலில் அன்பர் ஒருவரிடமிருந்தான சேதி :

டியர் சார்,

பின் வரும் சேந்தம்பட்டி நண்பர்களுக்கு தீபாவளி அன்புப் பரிசாக அவர்களின் 2018 சந்தாவிற்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500 வழங்குகிறேன். 

வழக்கம் போல் அனாமதேயமாக. என்னுடைய கணக்கில் இருந்து கழித்து கொள்ளவும். 

இந்த பட்டியலில் 4 பேர் விடுபட்டு உள்ளது. அவர்களுக்கு வேறு பரிசு வேறு தருணத்தில்.

Karur Saravanan
Tiruppur Prabakar
Ravi Kannan
RummiXIII (A) Ramesh
Jeyakumar
Yuva Kannan (a) Kirubakaran
Saint Satan (a) SomaSundaram
Tiruppur Blueberry
Thalivar Paranitharan
Salem Tex Vijay
Baby Smurf (a) Suseendran
Postal Phonex (a) Mayilai Raaja
Ravi (A) Arivarasu

So மேலுள்ள பட்டியலில் உள்ள நண்பர்கள் சந்தா செலுத்திடும் சமயம் ரூ.500 கழித்துக் கொண்டு அனுப்பினால் போதுமானது !! 

பின்குறிப்பு 2 : இன்றைய "குமுதம்" அரசு கேள்வி பதில் பகுதியில் நமது பெர்லின் கிராபிக் நாவலுக்குக் கிட்டியுள்ள அட்டகாச அங்கீகாரத்தைப் பார்த்தீர்களா guys ? குமுதம் ஆசிரியருக்கும், அவர்தம் குழுவுக்கும் நமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் !! 
Bye all....see you around soon !

70 comments:

 1. எங்கள் குடும்பத்தில் ஒருவரான ஆசிரியருக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ஆசிரியர் குடும்பதிற்க்கும் மற்றும் காமிக்ஸ் அன்பர்கள் அனைவருக்கும் திபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்

  ReplyDelete
 4. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!!

  ReplyDelete
 5. Happy deepavali valthukal to our beloved editor sir&family.

  ReplyDelete
 6. Welcome a delightful comics new year.

  ReplyDelete
 7. தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 9. தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. ////பின்குறிப்பு 2 : இன்றைய "குமுதம்" அரசு கேள்வி பதில் பகுதியில் நமது பெர்லின் கிராபிக் நாவலுக்குக் கிட்டியுள்ள அட்டகாச அங்கீகாரத்தைப் பார்த்தீர்களா guys ? குமுதம் ஆசிரியருக்கும், அவர்தம் குழுவுக்கும் நமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் !! ////

  "பொ்லின் சுவா்" என்ற தலைப்பிட்டிருந்தால் இன்னும் நிறைய பேரை கவா்ந்திருக்கும் சாா்!

  வரலாறு சாா்ந்து படிக்கும் ஆா்வம் மக்களிடையே நிறைய இருக்கவே செய்கிறது!

  ReplyDelete
 11. Tex Weller-ariyapadatha alumaigal-kalathal aliyada comics katha pathiram-em madham kumudham Theeranadhi yil velivandulladu.kanga.

  ReplyDelete
 12. 🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
  🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  மூத்த எடிட்டர் சார், பாசத்திற்குரிய அம்மா அவர்கள், ஆசிரியர் சார், ஜூனியர் எடிட்டர் விக்ரம் ஜி & டீம் லயன் முத்து காமிக்ஸ்....

  உயிரினும் மேலான அன்பு நண்பர்கள்- அனைவருக்கும் தித்திப்பான தீவாவளி நல்வாழ்த்துக்கள்...🍫🍫🍫🍫🍫🍫🍫🍫
  🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆

  🙏🙏🙏---சேலம் Tex விஜயராகவன்,
  தாமரை விஜயராகவன் &
  நிரஞ்சன் ஜூனியர்...

  ReplyDelete
  Replies
  1. //அதைவிட எளிய வழி உள்ளது,நாங்கள் இருவரும் இருவேறு நண்பர்கள் என நீங்கள் அறிந்து கொள்ள..//
   அன்பின் விஜயராகவன் இதுவரை என்வாழ்வில் மாங்கா... என்று அழைக்கப்படும் நபர்களை சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது,அது ஒரு பெரிய குறையாகவும் இருந்தது,அந்த குறையும் உங்களை பார்த்ததில் காணமல் போய்விட்டது ஐயன்மீர்,அறிவரசு மட்டுமல்ல,உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள அனைவரையுமே சென்னையிலும்,ஈரோட்டிலும் பார்த்து பேசி இருக்கிறேன்,உங்களை போன்ற ஒரு மேதாவியிடம் வஞ்சப்புகழ்ச்சியையும் உள்குத்து நையாண்டியையும் பயண்படுத்தியது என்னுடைய தவறுதான்,நேரடியாகவே சொல்லிவிடுகிறேனே ராகவன் அவர்களே,ஏற்கனவே அறிவரசு சொன்ன அதே விஷயத்தை ஒரு நாள் களத்து சொல்லிவிட்டு,நான்தான் சொன்னேன்,நான் சொன்னதால்தான் நடந்தது என்று பீற்றிக்கொள்கிறீர்களே என்பதைத்தான் அய்யா அப்படி சுற்றிவளைத்து கூறியிருந்தேன்.உங்களுடைய சுயதம்பட்டம்தான் எல்லோருக்கும் தெரியுமே,நான் இருவரும் ஒரு ஐடி என நினைத்துவிட்டதாக உங்க மேதாவிலாசத்தை காட்டிவிட்டேர்களே ஐயன்மீர்,உங்க புகழை பரப்ப இன்னொரு ரகசியம் சொல்லவா ஸ்லீப்பர்செல் ராகவன்,ஆசிரியருக்கு என்னைவிட நெருக்கமான கொம்பன் எவனுமே இல்லை என்ற மாதிரியான உங்க சுயதம்பட்டங்களாலும் நீங்க நல்லபேர் வாங்கனும்னு மத்தவங்கள போட்டுகொடுத்த உங்க நல்ல குணத்தாலும் மனம் உடைந்த ஒரு நல்லமனிதர் இப்போது உங்க நட்பு குழுவில் இருந்து விலகி இருக்காராமே?ஆசிரியர் எல்லா விசியத்தையும் என்னிடம் சொல்லிவிட்டே செய்வார்னு வாட்ஸ்ஆப்பில் நடக்கும் உரையாடல்களை ஸ்க்ரீன்ஷாட் அனுப்பசொல்லி அவரே விரும்பிக் கேட்பதாகவும் பீற்றிக்கொள்வீர்களாமே ராகவன் அவர்களே? நீங்க இத்தனை தூரம் மதிக்கும் ஆசிரியரை முன்னொரு சமயம் வியாபாரி,என்ன ஹேருக்கு நான் ப்ளோக்கு வரணும்னு சொல்லிட்டு போனிங்களே ஐயா? அதுமட்டுமா மாமா செயலர் தலைவர்னு உங்க நட்புகலையே கேவலப்படுத்தி எழுதியது ஏனோ ஐயன்மீர்? உங்க தம்பட்டங்களால் வெறுத்து வெளியேறிய நண்பர் பாவம் நல்ல மனிதர் காமிக்ஸ் குழந்தை,அவரை வருத்தி புலம்ப வைத்துவிட்டேர்களே ராகவன்,ஆசிரியரின் முடிவுகளை முன்னதாகவே யூகித்துவிடும் நீங்கள் வரப்போகும் பதவின் தலைப்பை மட்டும் சொல்லிவிடுங்க மலைகுகையில் ஒரு சிலையே வைத்துவிடுகிறோம்.

   Delete
  2. எது எப்படியோ இதில் என்பெயரை இழுக்க வேண்டிய அவசியம் என்ன மிஸ்டர் கிருஷ்ணா?
   இதை இத்துடன் முடிக்கவும்.

   Delete
  3. 🙄😳
   ஐயா தெய்வமே
   எங்கியா இருந்தீங்க இத்தன நாளா 🤔🤷🏻‍♂

   நானும் அந்த குரூப்புதானுங்கோ

   நீங்க சொல்லித்தான் இந்த விசயமே தெரியவந்திச்சுங்கோ 🙏🏻

   முன்னமே சொல்லியிருந்தா நல்லாயிருந்திருக்கும்

   வருத்தபட்டு போனாரா 😳

   ஊருக்கு போறேன்னு சொல்லிட்டுதானே போனாரு

   குரூப்புல நடந்த நடந்திட்டு இருக்க நடக்க போகிற எல்லாவற்றையும் தெரிந்த/ சொல்லக்கூடிய தாங்களா இப்படி சொல்லுவது
   தப்பாச்சே 🤷🏻‍♂

   வேணுமுன்னா இப்படி வச்சிக்கலாம்

   சரியாக விசாரித்து சொல்லுங்க

   உங்களுக்கு சென்னையில் நீங்களே தேர்ந்தெடுக்கும் ஒரு இடத்துல உங்களோட சிலையை சேந்தம்பட்டி சார்பாக வச்சுடுறோமுங்க
   நன்றிங்கோ 🙏🏻
   .

   Delete
  4. //வருத்தபட்டு போனாரா 😳ஊருக்கு போறேன்னு சொல்லிட்டுதானே போனாரு //
   ஊருக்கு போனவரு இன்னுமா திரும்பி வராமே இருக்கார்,உங்க குரூப்ல மட்டும் ஊருக்கு போயிருக்காரே,மத்த குரூப்ல அப்படியேதானே இருக்கார்.அந்த காமிக்ஸ் குழந்தை வருத்தப்பட்டது குரூப்ல இருக்கும் உங்களைவிட வெளியில் இருக்கும் எங்களுக்குத்தான் நல்லா தெரியும் சித்தர் அவர்களே.

   Delete
 13. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
 14. ///பின் வரும் சேந்தம்பட்டி நண்பர்களுக்கு தீபாவளி அன்புப் பரிசாக அவர்களின் 2018 சந்தாவிற்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500 வழங்குகிறேன்.///---

  அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்...🙏🙏🙏 நெகிழ்ச்சி நண்பரே...!!!

  தீபாவளியன்று சர்ப்ரைஸ் ஆக பரிசு வழங்கிய அந்த அன்பருக்கு சேந்தம்பட்டி நண்பர்கள் சார்பில் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
 15. ///As promised இன்று முன்னிரவு - 2018-ன் அட்டவணையோடு ஆஜராகிடுவேன்.../// 10மணி நேரத்திற்கும் குறைவாகவே உள்ளது...கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்....😍😍😍😍

  ReplyDelete
 16. அன்பு எடிட்டர் ஜூ.எடிட்டர்,சீ.எடிட்டர் அனைத்து காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 17. Happy தீபாவளி to all, especially
  திரு அனாமதேயா..! _/|\__/|\_

  ReplyDelete
 18. காமிக்ஸால் இணைந்த அனைத்து நண்பர்களின் சார்பாக ஆசிரியர் விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர், ஊழியர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!!

  ReplyDelete
 19. சீனியர் எடிட்டர், எடிட்டர், ஜூனியர் எடிட்டர், அலுவலக பணியாளர்கள் மற்றும் அனைத்து காமிக்ஸ் நண்பர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ....

  //பின் வரும் சேந்தம்பட்டி நண்பர்களுக்கு தீபாவளி அன்புப் பரிசாக அவர்களின் 2018 சந்தாவிற்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500 வழங்குகிறேன். //

  முகமறியா அன்பு நண்பருக்கு சேந்தம்பட்டி நண்பர்கள் சார்பாக நன்றிகள் பல ...

  ____/\____

  ReplyDelete
 20. அன்பு எடிட்டர் ஜூ.எடிட்டர்,சீ.எடிட்டர் அனைத்து காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

  /// பின் வரும் சேந்தம்பட்டி நண்பர்களுக்கு தீபாவளி அன்புப் பரிசாக அவர்களின் 2018 சந்தாவிற்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500 வழங்குகிறேன். 

  வழக்கம் போல் அனாமதேயமாக. என்னுடைய கணக்கில் இருந்து கழித்து கொள்ளவும். ///

  அனாமதேய அன்பு நண்பருக்கு சேந்தம்பட்டி சொந்தங்களின் சார்பில் நெகிழ்வான வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 21. ஆகா ...நண்பர்கள் சொன்னவுடன் தான் "முன்னிரவு " அதற்குள் வந்துவிட்டதை அறிந்தேன்.

  நன்றியோ நன்றி சார்...படித்துவிட்டு வருகிறேன்..:-)

  ReplyDelete
  Replies
  1. ஒரு பதிவும் ஒரு பதிவும் ஒரு பதிவுதான்; ஆனால் ஒரே பதிவல்ல...

   Delete
 22. Dear Editor sir and friends,

  Happy Deepavali 2017

  ReplyDelete
 23. தீபாவளி திருநாளில் " இன்ப அதிர்ச்சி " அதிகமாகவே...

  உங்கள் இந்த பதிவே இன்ப அதிர்ச்சி...


  எனில் ..


  மீண்டும் குமுதம் இதழில் நமது சிறப்பு இன்னும் கூடுதல் இன்ப அதிர்ச்சி...சந்தோசம் மட்டுமல்ல பெருமையும் கூட...


  அடுத்து இன்னும் ..இன்னும்..இன்ப அதிர்ச்சி .

  அந்த முகமறியா அன்பருக்கு சேந்தம்பட்டி நண்பர்கள் சார்பாக மீண்டும் மீண்டும் நன்றியை மனமார்ந்து தெரிவித்து கொள்கிறேன் ..

  இந்த பாசத்தை எங்களுக்கு சொந்தமாக்கிய ஆசிரியர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..

  ReplyDelete
 24. முன்னிரவு எனில் ஒன்பது மணிக்குள்ளாகவா என்பது தெரிய வில்லை..அப்படி ஒன்பது மணிக்குள் எனில் அலசி ஆராய இன்று விடிகாலை வரை முழித்திருக்கவும் சபதம் ஏற்கிறேன்..:-)

  ReplyDelete
  Replies
  1. பின்குறிப்பு..( பதிவை கண்டால் மட்டுமே..:-)

   Delete
 25. ஆசிரியர் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும்,
  நாம் மனம் மகிழ மாதம்தோறும் சலிக்காமலும்,சளைக்காமலும் ஆசிரியருடன் இணைந்து பணியாற்றும் தோழர்களுக்கும்,
  ஆயிரம் பணிகளுக்கிடையேயும் தவறாமல் நம் தளத்தில் பங்கேற்று பட்டாசாய் பதிவுகளை பிரசவித்துவரும் அனைத்து நல் இதயங்களுக்கும் எனது மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.நம் அனைவருக்கும் நமது காமிக்ஸ்களை கையிலேந்தும் ஒவ்வொரு தருணமும் தீபாவளிதான் என்றாலும் ஆண்டிற்கு ஒரு முறையே வரும் இத் தீபாவளிக்கும் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.
  பி.கு. அடுத்த ஆண்டின் அட்டவணை பற்றிய கனவில் நம் வீட்டு குழந்தைகள் பாதுகாப்பாய் பட்டாசினை வெடிப்பதை கவனிக்க மறக்க வேண்டாமென்ற வேண்டுகோளுடன் விடைபெறுகிறேன்.நன்றி.

  ReplyDelete
 26. எடிட்டர்,உள்ளிட்ட காமிக்ஸ் குடும்பத்தினர் அனைவருக்கும் திகட்டாத தீபாவளி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 27. அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 28. அனைவ௫க்கும் இனிய தித்தித்திக்கும் தீபாவளித் தி௫நாள் நல் வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!
  என்றென்றும் அன்புடன்,
  பி.சரவணன்.
  சின்னமனூர், தேனி மாவட்டம்.

  ReplyDelete
 29. தீபாவளிக்கு புத்தகம் இந்தமுறை இல்லை என்பதால்தான் டெக்ஸ் மற்றும் கருப்பு வெள்ளை கிராப்பிக் நாவலை படிக்காமல் வைத்து உள்ளேன். நாளைக்கு படிக்க ஆரம்பிக்க வேண்டும்.

  ReplyDelete
 30. சீனியர் எடிட்டர்,எடிட்டர்,ஜீனியர் எடிட்டர் மற்றும் காமிக்ஸ் பணியாளர்கள் அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

  நண்பர்களாகிய அனைத்து காமிக்ஸ் வாசகர்களுக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 31. பின் வரும் சேந்தம்பட்டி நண்பர்களுக்கு தீபாவளி அன்புப் பரிசாக அவர்களின் 2018 சந்தாவிற்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500 வழங்குகிறேன்.

  வழக்கம் போல் அனாமதேயமாக. என்னுடைய கணக்கில் இருந்து கழித்து கொள்ளவும்.

  இந்த பட்டியலில் 4 பேர் விடுபட்டு உள்ளது. அவர்களுக்கு வேறு பரிசு வேறு தருணத்தில்.///
  நெகிழ்ச்சி நண்பரே,உங்களுக்கு என்மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
  தீபச்சுடர் போல் நமது காமிக்ஸ் நட்பு மேன்மேலும் ஒளிரட்டும்.

  ReplyDelete
 32. அறியாமையாகிய

  ஆணவ இருள் அரக்கனாய்

  பேரலையாய் பொங்கி
  பரவி விரிந்து

  சீற்றமாய் வருகின்றபோது

  மெய்பொருளாகிய அடிப்படையாம்

  ஆன்மஜோதியெனும் இறைவனின்

  ஞானமாகிய வேலெடுத்து விரட்ட,

  விடியலாய் வெட்டவெளி தோன்றும்,

  விளக்கமெலாம் புரியும்,

  மனசுக்குள் மத்தாப்பு சிரிக்கும்.

  அனைவருக்கும் இனிய தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்! 🙏🏼🙏🏼🙏🏼💥⚡✨🌟💫

  ReplyDelete
 33. அன்பு எடிட்டர் ஜூ.எடிட்டர்,சீ.எடிட்டர் அனைத்து காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

  /// பின் வரும் சேந்தம்பட்டி நண்பர்களுக்கு தீபாவளி அன்புப் பரிசாக அவர்களின் 2018 சந்தாவிற்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500 வழங்குகிறேன்.

  வழக்கம் போல் அனாமதேயமாக. என்னுடைய கணக்கில் இருந்து கழித்து கொள்ளவும். ///

  அனாமதேய அன்பு நண்பருக்கு சேந்தம்பட்டி சொந்தங்களின் சார்பில் நெகிழ்வான வாழ்த்துக்கள்..___/\_/\_

  ReplyDelete
 34. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உதவிக்கு அந்த அநாமதேய நண்பருக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.
  🙏🙏🙏🙏🙏🙏

  ReplyDelete
 35. //
  டியர் சார்,

  பின் வரும் சேந்தம்பட்டி நண்பர்களுக்கு தீபாவளி அன்புப் பரிசாக அவர்களின் 2018 சந்தாவிற்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500 வழங்குகிறேன். //


  யாருப்பா அந்த தெய்வம் 🙏🏼🙏🏼🙏🏼

  ரொம்ப ரொம்ப பெரியமனசுகாரராத்தான் இருக்கோணும்

  அவரோட நல்ல மனசுக்கு ரொம்பநாள் நல்லா இருந்து இதுபோல சிரமத்திலிருக்கும் அனைவருக்கும் உதவும் மனத்தையும் தகுதியையும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼

  அப்படியே ஆகட்டும் 🙏🏼

  நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
  .

  ReplyDelete
 36. //
  பின்குறிப்பு 2 : இன்றைய "குமுதம்" அரசு கேள்வி பதில் பகுதியில் நமது பெர்லின் கிராபிக் நாவலுக்குக் கிட்டியுள்ள அட்டகாச அங்கீகாரத்தைப் பார்த்தீர்களா guys ? குமுதம் ஆசிரியருக்கும், அவர்தம் குழுவுக்கும் நமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் !! //

  வாவ் அருமையான செய்தி சார்
  .

  ReplyDelete
 37. அனாமதேய அன்பர்களுக்கு என்னுடைய நன்றிகளும் உரித்தாகுக உங்களால் காமிக்ஸ் உலகம் வேறு லெவலுக்கு போய்க் கொண்டிருக்கிறது அனாமதேய நண்பர்களால் நானடைந்த பலன்கள்
  1. 2016 சந்தா
  2.இரத்தக் கோட்டை
  3. இரத்தப் படலம் முன் பதிவு
  4.தலையில் அடி பட்டிருந்த போது கிட்டத்தட்ட 18 ஆயிரம் போன்று பல அன்பளிப்புகளை
  ( உதவிகளை) அள்ளி வழங்கினார்கள் வாழ்வின் கடினமான தருனங்களில் எனக்கு கை கொடுத்த முகமறியா நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  ReplyDelete
 38. // இன்றைய "குமுதம்" அரசு கேள்வி பதில் பகுதியில் நமது பெர்லின் கிராபிக் நாவலுக்குக் கிட்டியுள்ள அட்டகாச அங்கீகாரத்தைப் பார்த்தீர்களா guys ? //

  SUPEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEER NEWWWWWWWWWWWWWWWWWWWWWS!!! Thank you! Thank you!! Thank you!!! KUMUDAM!

  ReplyDelete
 39. ஆசிரியருக்கும்,குடும்பத்தாருக்கும் மற்றும் அங்கு பணிபுரியும் சகோத ,சகோதரிகள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள். 💐💐💐💐

  ReplyDelete
 40. சார்ந்தோர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ! :)

  ReplyDelete
 41. இந்த முன் இரவு எப்போ வருமோ?

  யாராவது சொல்லுங்கப்பா!!

  ReplyDelete
  Replies
  1. இன்னும் முன் இரவு வரலையா??

   Delete
  2. அண்டா்டேக்கா் இல்லையா??

   Delete
 42. நட்புகளுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்ததுகள். தீமை எனும் இருள் விலகி நன்மை எனும் ஒளி மலர்வதைக் கொண்டாடுவோம்.

  ReplyDelete
  Replies
  1. ///தீமை எனும் இருள் விலகி நன்மை எனும் ஒளி மலர்வதைக் கொண்டாடுவோம்.///+100

   Delete
 43. தீபாவளி பரிசு பெற்ற சக சேந்தம்பட்டி நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்!

  வழக்கம்போலவே தன் முகத்தை மறைத்து, அன்பை மட்டுமே வெளிக்காட்டிக்கொண்டிருக்கும் 'அந்த' அன்புள்ள அனாமதேயாவுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்!

  அடுத்த வருசத்துக்கு நான் சொன்னமாதிரியே செஞ்சுடுங்க அ.அனாமதேயா! ( ஹிஹி! இப்படி எதையாவது சொல்லிவச்சாத்தான் அ.அனாமதேயாவை எனக்கு நல்லா தெரியும்னு இங்கே உதார் விட்டுக்கிட முடியும்!)

  மறக்காம ஜூ.எடி கல்யாணத்து வந்துடுங்க அ.அனாமதேயா! நிறையப் பேசவேண்டியிருக்கு!

  ReplyDelete
 44. ///இன்றைய "குமுதம்" அரசு கேள்வி பதில் பகுதியில் நமது பெர்லின் கிராபிக் நாவலுக்குக் கிட்டியுள்ள அட்டகாச அங்கீகாரத்தைப் பார்த்தீர்களா guys ? ///

  தொடர்ந்து ஆதரவளித்துவரும் அரசு அவர்களுக்கும், குமுதம் இதழ் நிர்வாகத்தினருக்கும் நன்றிகள் பல!_/\_

  ReplyDelete
 45. @ ALL : ஞான இவ்விட ரெடியாயிட்டு ! குறைச்ச சமயத்தில் பதிவோடு ஆஜராகும் !

  ReplyDelete
  Replies
  1. காலையிலோ்ந்து 200 தபா பிளாக்-க பாத்து பாத்து ???!!

   Delete
  2. ஹைய்யா..! ஞங்களும் ரெடியாயிட்டு இருக்கி..!

   Delete
  3. குறைச்ச சமயம்னா 6 மணி நேரம் இல்லாங்களே!!

   Delete
 46. ///As promised இன்று முன்னிரவு - 2018-ன் அட்டவணையோடு ஆஜராகிடுவேன்///

  ஆங்! சூரியன் மறைஞ்சிடுச்சு. இருட்டாயிடுச்சு. ஸ்ட்ரீட் லைட்டெல்லாம் கூட போட்டுட்டாங்க. இ..இதானே முன்னிரவு? அப்படீன்னா அட்டவணை, as promised?!!

  ReplyDelete
 47. எடிட்டரின் அட்டவணைப் பதிவு ரெடி நண்பர்களே?

  ReplyDelete
 48. எடிட்டர் அவர்களுக்கும், நண்பர்களுக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் சொல்லும்.... இங்கே'கிளிக்'

  ReplyDelete
 49. Diwali wishes!!!

  அன்புள்ள எடி, விக்ரம் மற்றும் நமது காமிக்ஸ் குடும்பத்தினருக்கும்,
  எனது உளங்கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!!

  ReplyDelete