Powered By Blogger

Sunday, May 01, 2016

Hello May !

நண்பர்களே,
            
வணக்கம். மே மாதத்துப் பிரதிகள் சகலமும் தயாராகிட வெள்ளிக்கிழமை பின்மதியப் பொழுதாகிப் போய்விட- அதன் பின்னே கூரியரில் சேர்ப்பிக்கும் படலத்தை ஆரம்பித்தால் அன்றைய லோடுகளில் பாதிதான் சிவகாசியிலிருந்து புறப்படும் என்பதை அனுபவம் சொல்லியது. So சனிக்கிழமையன்று ஒரு சாராருக்கு இதழ்கள் கிடைத்திட; பாக்கிப் பேருக்கு திங்கள் வரைக் கடுப்பில் காத்திருக்கும் “குஷி“ மட்டுமே மிஞ்சும் என்பதால் அந்த ‘ரிஸ்க்‘ வேண்டாமெனத் தீர்மானித்து- ஒட்டுமொத்தப் பார்சல்களையும் நேற்று (சனிக்கிழமை) தான் டெஸ்பாட்ச் செய்துள்ளோம்! So மாதத்தின் முதல் working day-ல் நமது புது இதழ்கள் ஒரு மினி சர்ப்ரைஸோடு உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டக் காத்துள்ளன! அந்த surprise என்னவாகயிருக்கும் என்ற யூகங்களை உங்களிடமே விட்டு விடுகிறேன்- இன்றைய பொழுது வரைக்கும்! மே மாத இதழ்கள் எல்லாமே diet-ல் இருக்கும் நமது தலீவரின் “புஷ்டியில்“ இருப்பதால் இம்முறை அவற்றை வாசித்திடவும்; rate செய்திடவும் அதிக நேரம் எடுக்காதென்று தோன்றுகிறது! இதுவும் கூட for a change வித்தியாசமான அனுபவமாகத் தான் தோன்றுமென்று நினைக்கிறேன்! Fingers crossed!

மே மாதத்துப் புது இதழ்களை ஆன்லைனில் வாங்கிட இங்கே கிளிக் செய்யுங்களேன்:   http://lioncomics.in/monthly-packs/20942-may-2016-pack.html

அதற்கு நேர்மாறாய் ஜுன் மாதம் காத்திருப்பதோ ஒரு லாரி லோடுக்கான காமிக்ஸ் என்று சொல்வேன்! “என் பெயர் டைகர்“ hard cover-ல் ஒரு வரலாற்றுப் பின்னணியோடு 5 பாகங்கள் கொண்ட ஆல்பமாய் வரக்காத்திருப்பது ஒரு பக்கமெனில்- கமான்சே ஒரு one shot ஆல்பத்தோடு வண்ணத்தில் இன்னொரு பக்கம் வலம் வரக் காத்துள்ளனர்! And க்ரிமினாலஜிஸ்ட் ஜுலியா b&w-ல் 2 ஆண்டு இடைவெளிக்குப் பின்பாய் ஒரு ரொம்பவே வித்தியாசமான கதையோடு உங்களை சந்திக்கக் காத்துள்ளார்! இது போதாதென்று ரின்டின்கேன் கார்ட்டூன் கோட்டாவில் கோதாவில் இறங்க– நமது இரவுக் கழுகாரோ ஆண்டின் முதல் வண்ண அவதாரில் அசத்தக் காத்துள்ளார்- “பழிவாங்கும் புயல்“ (வண்ண) மறுபதிப்பின் வழியாக! இது மட்டுமன்றி- முத்து மினி காமிக்ஸின் 6 மறுபதிப்புகளும் இணைந்திடும் போது- ஜுன் மாதக் கோட்டா மொத்தம் 1000+ பக்கங்கள் என்றாகிறது! வழக்கமாய் பள்ளிக்கூட விடுமுறைகள் என்ற முறையில் நமது உச்ச முயற்சிகளை மே மாதத்திற்கென ஒதுக்கி விட்டு- பள்ளிகள் திறக்கும் ஜுன் மாதத்தைக் கொஞ்சம் cautious ஆக அணுகிடுவதே நமது வாடிக்கை! ஆனால் காலங்கள் ரொம்பவே மாறி விட்டதால் – நிலைமை இன்றைக்குத் தலைகீழாய் நிற்கின்றன! ஊரெங்கிலும் "மாற்றங்கள்" என்பதே தலையாய கவனத்தைப் பெறும் வார்த்தையாக விளங்கி வரும் இத்தருணத்தில் நாமும் அதற்கு விதிவிலக்கில்லை என்பதை இங்கே நான் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன் வாக்காளப் பெருமக்களே...oops....... வாசகப் பெருமக்களே!

தேர்தல் ஜுரம் மாநிலத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் ; திரும்பிய திசையிலெல்லாம் ஒவ்வொரு ஊடகத்திலும் கருத்துக் கணிப்புக் கோரல் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நாமுமே அந்த bandwagon-ல் தொற்றிக் கொண்டால் என்னவென்று தோன்றியது! முத்து மினி காமிக்ஸின் வருகையோடு நமது ABSOLUTE CLASSICS மறுபதிப்புகளின் திட்டமிடல்களையும் சீரியசாகத் துவங்கும் வேலை சீக்கிரமே புலர்ந்திடும் என்பதால் இந்தக் கேள்விகள் படலம் ! So இந்த வாரப் பதிவில் சரமாரியாய் கேள்விகள் கேட்பதோடு என் வேலை பூர்த்தியாகிறது! அவற்றிற்குப் பொறுமையாய் பதில் சொல்வதே உங்கள் "காமிக்ஸ் கடமையாக" இருந்திடப் போகிறது! Here goes:

1. இந்தக் கேள்வியை வெவ்வேறு காலகட்டங்களில் கேட்டுள்ளோம் தான்; பலவிதமான பதில்கள் அவ்வப்போது கிடைத்தும் உள்ளன தான்! ரசனைகளின் மாற்றத்திற்கேற்ப நமது தேர்வுகளும் மாறிடும் என்பதால் – at this point in time இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்னவாகயிருக்குமென்று அறிந்திட ஆவல்!

* 1972-ல் துவங்கியுள்ள நமது 44 ஆண்டுப் பயணத்தின் ALL TIME Top நாயகராக யாரைத் தேர்வு செய்வீர்கள்? மாயாவியில் ஆரம்பித்து, வேதாளரில் பயணித்து; ஸ்பைடர் & ஆர்ச்சியில் தொடர்ந்து; டெக்ஸ் வில்லர்; கேப்டன் டைகர்; லக்கி லூக்; XIII; லார்கோ வின்ச்; என்று ஏகப்பட்ட நாயகர்களைப் பார்த்து விட்டோம்! ஆனால் அவர்களுள் ஒரே ஒருவரை மட்டும் ABSOLUTE ALL TIME BEST எனத் தேர்வு செய்வதாயின்- அந்த ஹீரோ யாராக இருப்பார் ? காலவோட்டங்களையும் தாண்டி ; ரசனை மாற்றங்களையும் மீறி, எல்லா அளவுகோல்களிலும்  'பளிச்' என முன்னணியில் நிற்பவர் யாரோ - அவரை நமது ABSOLUTE CLASSICS-ன் முதல் மறுபதிப்பில் கௌரவிக்கலாமே ?  நாயகர் யாரென்று இப்போது கண்டறிந்துவிட்டால் - அப்புறமாய் அவரது (மறுபதிப்பிற்கான) சாகசத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம் !

2. டிடெக்டிவ் நாயகர்கள் நமது ஆரம்பகால இதழ்களுள் ரொம்பவே popular! இன்று கௌ-பாய்கள் அந்த உச்ச இடத்தைத் தமதாக்கிக் கொண்டாலும், a good detective is still gold dust! C.I.D. லாரன்ஸ், டேவிட்டில் தொடங்கும்  பட்டியல் ஜானி நீரோ... ரிப் கிர்பி.... காரிகன்... ஷெர்லாக் ஹோம்ஸ்; ஜெஸ்லாங்... இரட்டை வேட்டையர்... ஜேம்ஸ் பாண்ட்... ரிப்போர்ட்டர் ஜானி... CID ராபின் என்று நீண்டு செல்கிறது! இவர்களுள் TOP DETECTIVE என்று அடையாளம் காண்பதாயின் யாரை நோக்கி விரலை நீட்டிடலாமோ ?  நிதானமாய் துவக்கம் முதல் இப்போதுவரையிலான துப்பறியும் நாயகர்களை உங்கள் அலசல்களுக்குள் உட்படுத்துங்களேன் ? இதனில் வெற்றி காண்பவர் - நமது ABSOLUTE  CLASSICS -ல் இடம்பிடித்திடுவார் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா ?  

3. 1987 முதல் கார்ட்டூன்கள் (தமிழில்) நமக்குப் பரிச்சயம்! பிள்ளையார்சுழி போட்ட நமது லக்கி லூக்கில் ஆரம்பித்து, சிக் பில் & கோ; வால்ட் டிஸ்னி; சுஸ்கி விஸ்கி; க்ளிப்டன்; Smurfs; லியனார்டோ; மதியில்லா மந்திரி; ஹெர்லக் ஹோம்ஸ்; ரின் டின் கேன் என எத்தனையோ சிரிப்பு ஸ்பெஷலிஸ்ட்களைப் பார்த்தாகி விட்டோம்! Again நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது ஒரு ALL TIME BEST COMEDIAN யாரென்பதையே! விச்சு கிச்சு; குண்டன் பில்லி போன்ற துக்கடாக் கதை நாயகர்களை ஆட்டத்தில் சேர்க்க வேண்டாமே? முழுநீளக் கதைகளில் கிச்சு கிச்சு மூட்டியோர் மட்டுமே - ப்ளீஸ் ? 

4. ‘ADVENTURE’ என்ற genre-க்குள் நுழைந்தால் வேதாளரில் தொடங்கி... சாகஸ வீரர் ரோஜரில் புகுந்து... கேப்டன் பிரின்ஸில் U டர்ன் எடுத்து... இன்றைய தோர்கல் வரைக்கும் தினுசு தினுசாய் நாயகர்கள் கண்முன்னே வந்து செல்கிறார்கள்! அவர்களுள் ALL TIME BEST ADVENTURER என்ற பட்டத்துக்கு யாரைத் தேர்வு செய்வீர்கள்? வரும் ஆண்டுகளில் இந்தவகைக் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பற்றியும் உங்கள் எண்ணங்களைச் சொல்லிடலாமே ? 

5. இவர்களை “டிடெக்டிவ்“ என்றும் சொல்ல முடியாது... “Adventurers” என்றும் சொல்ல முடியாது; நிச்சயமாய் சூப்பர் ஹீரோவோ; கௌ-பாயோ; கார்ட்டூன் நாயகரோ கிடையாது- “ரகமே பிரிக்க இயலாத ரகத்தின் பிரதிநிதிகள் இவர்கள்“ என்று சொல்வதாயின்:

- மாயாஜால மன்னன் மான்ட்ரேக்
- மாடஸ்டி பிளைஸி
- லார்கோ வின்ச்
- மர்ம மனிதன் மார்டின்
- டைலன் டாக்
- ஏஜெண்ட் ஜான் சில்வர்
- டேஞ்சர் டயபாலிக்
- XIII

என்று நிறையப் பேர் ஆஜராவதைப் பார்த்திடலாம்! இவர்களுள் ஒருவரை "THE BEST IN THEIR CLASS" என்று தேர்வு செய்வதாக இருப்பின்- யாருக்கு உங்கள் ஓட்டு ? இந்தத் தேர்வானது உடனடியாய் மறுபதிப்புகளின் பொருட்டன்று ;  offbeat நாயகர்களுள் டாப் யாரென்று தெரிந்து கொண்டால் அந்த ரசனைக்கொரு வாய்ப்பு வளங்கிடுவது பற்றி யோசிக்கலாம் ! 

6. இந்தக் கேள்விக்கு பதிலை விட சர்ச்சைகளே அதிகம் கிட்டிடும் என்பதால் ALL TIME BEST COWBOY யாரென்ற கேள்வியை இப்போது நான் முன்வைக்கப் போவதில்லை! Maybe 2016 முழுவதுமாய் இரவுக்கழுகார் & கோ வெளியான பின்னே; “என் பெயர் டைகர்“ வெளியான பின்னே இந்தக் கேள்விளைக் கேட்டுப் பார்க்கலாம்! இப்போதைக்கு கேள்வி # 6 வேறு விதமானது!

2012-ல் தொடங்கிய நமது இரண்டாவது innings-ல் இன்னமும் ஏதேனும் புதுசாய் ஒரு சுவையை நுழைப்பதாயின் - உங்கள் தேர்வு என்னவாக இருக்கும் ? இது 2017-ன் அட்டவணையின் பொருட்டு உங்கள் முன்வைக்கும் கேள்வி ! 

இந்த 6 கேள்விகளுக்கும் உங்களின் பதில்கள் + வலைக்கு அப்பாலுமுள்ள நண்பர்களின் பதில்களையும் அறிந்தான பின்னே ABSOLUTE CLASSICS கதைத் தேர்வினுள் குதித்திடலாம் ! So இன்றைய ஞாயிறை இதற்கென ஒதுக்கிடலாமே - ப்ளீஸ் ? 

Before I sign off - சின்னச் சின்ன updates :

1.இரத்தப் படலம் இறுதிப் பாகத்தின் டிஜிட்டல் பைல்கள் நமக்குக்கிடைத்து விட்டன !! மிரளச் செய்யும் artwork - ஓவியர் "வூடு கட்டி அடித்திருக்கிறார் " என்று தான் சொல்ல வேண்டும் ! ஜூன் மாதம் அங்கே இந்த ஆல்பம் வெளியாகும் அதே வேளைதனில் நாமும் தெறிக்க விடுவதாயின் - கமான்சேக்குப் பதிலாய் "பெல்ஜிய சஞ்சய் ராமசாமியை"  களமிறக்கிடலாம் ! What say all ?

2.சிதம்பரம் நகரிலிருந்து நமது வாசக நண்பர் டாக்டர்.கணேஷின் உதவிகளோடு - பள்ளிகளில் நமது காமிக்ஸ் இதழ்களை சேர்ப்பிக்கும் முயற்சி துவங்கியுள்ளது ! நமது பட்டியலில் பள்ளி மாணாக்கர்களுக்கு உகந்த இதழ்களையும் ; CINEBOOK இதழ்களுள் உள்ள தோதான பிரதிகளையும் தேர்வு செய்து சிதம்பரத்தின் பெரிய பள்ளிகளுக்கு சப்ளை செய்திட நண்பர் உதவி வருகிறார் ! வரும் நாட்களில் நமது மார்கெட்டிங் முயற்சிகளில் பள்ளிகளை target செய்திடுவதும் தீவிரமாய் இடம்பிடிக்கக் காத்துள்ளது ! வளரும் பருவங்களில் இந்த காமிக்ஸ் ரசனையை உணர மானவர்களுக்கொரு வாய்ப்புக் கிட்டின், நிச்சயமாய் அதுவொரு தொடர்கதையாகிடும் என்பதில் ஐயமேது ? 

3.அயல்நாட்டுச் சந்தா நண்பர்களுள் இன்னமும் நிறையப் பேர் T SHIRT அளவுகளைக் குறிப்பிடவில்லை ! Please guys?

4.MANGA படிக்கும் ஆர்வமுள்ளதா நண்பர்களே ? இந்த வகைக் கதைகளை உருவாக்கும் புதியதொரு பதிப்பகம் நம்மோடு கைகோர்க்க ஆர்வம் தெரிவித்துத் தொடர்பு கொண்டுள்ளது !!! 

மீண்டும் சந்திப்போம் ; stay cool until then !! மே தின வாழ்த்துக்கள் !!! Bye for now !!

409 comments:

  1. வணக்கம்... நான் தான் மொதல்லயா...

    ReplyDelete
    Replies
    1. அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள்.... XIII ஐ உடனே வெளியிடலாம்...

      Delete
    2. 1. ஆர்ச்சி
      2. சிஐடி ராபின்
      3. லக்கி லூக்
      4. கேப்டன் பிரின்ஸ்
      5. XIII
      6. உலக போர்கள் பின்னணியில் உள்ள கார்டூன்கள்

      Delete
  2. ஆசிரியர் மற்றும் நம் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நமது தளத்திலும் தளத்திற்கு அப்பாலும் உள்ள அனைத்து உழைப்பாளர் தோழர்களுக்கும் எனது உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள். நான் உலக இணையதள வரலாற்றில் இன்று முதலாக வந்துவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு நிமிட தாமதம் எனவே இரண்டாவது நான்.

      Delete
    2. இந்த கலாரசிகர் பெரிய கோவக்கார்ரோ?

      Delete
  3. அனைவரும் மே தின நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு காலை வணக்கம்.. இந்த மாத புத்தகம் காலை 6 மணிக்கு S.T கொரியரில் பெற்றுவிட்டேன்..

    ReplyDelete
    Replies
    1. Tiruppur Kumar : ஆஹா !!!

      Delete
    2. திருப்பூர் கலாரசிகர் வாங்கின ஸ்வீட்ல ஓன்னு எனக்கு தருவாரா தெரியலயே

      Delete
    3. அனைவருக்கும் முன்னரே புத்தகத்தை கை பற்றிய அதிர்ஷ்டசாலி தோழரே.வாழ்த்துக்கள். அப்புறம் அந்த மினி சர்ப்ரைஸ் என்னவென்று யார் கேட்டாலும் சொல்லி விடாதீர்கள். அடிச்சி கேட்டாலும் சொல்லி விடாதீர்கள். சொல்லி விட்டால் சஸ்பென்ஸ் போய்விடும். பொக்கிஷங்களை கை பற்றும் வரை சஸ்பென்ஸ் நீடிக்கட்டுமே...Please.

      Delete
    4. அப்ப என் காதுல மட்டும் ...யார் அடிச்சு கேட்டாலும் சொல்ல மாட்டேன...சிக்குன்னு இருக்கும...

      Delete
    5. தோழரே பதிலை சொன்னால் உங்களுக்கு சிக்குனு இருக்கும். எனக்கோ அந்த தோழர் பதிலை சொல்லிவிடப் போகிறாரே என்று உள்ளுக்குள் திக்குனு இருக்கும். பக்குனும் இருக்கும்.

      Delete
    6. ஒரு வேளை, முத்து மினி ஒரு இதழா? Wow

      Delete
    7. ATR சார் , பேர்ல TR இருக்குறதாலதான் இப்படியா?

      Delete
    8. அதெல்லாம் இல்லை சரவணன் ஸ்ரீனிவாசன் சார். வெய்யிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாக இருக்குதில்லயா? அதுதான். இப்பவே இப்படி!! இன்னும் அடுத்தமாதம் எப்படியோ!!

      Delete
  5. மே தின வாழ்த்துக்கள் நண்பர்களே

    ReplyDelete
  6. ஞாயிறு வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. மே தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. ஆசிரியருக்கு இனிய காலை வணக்கம் மற்றும் மே தின நல்வாழ்த்துக்களுடன்... மு.பாபு,கெங்கவல்லி..

    ReplyDelete
  9. மே தின வாழ்த்துக்கள்... my vote, NO Manga.

    ReplyDelete
  10. 1. Captain Tiger, xiii
    2. Reporter Jhonny
    3. Lucky Luke
    4. Captain prince
    5. Diabolik

    ReplyDelete
  11. இனிய காலை வணக்கங்கள் எடிட்டர் சார் :)
    இனிய காலை வணக்கங்கள் காமிக்ஸ் நண்பர்களே :)

    ReplyDelete
    Replies
    1. அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள் :)

      Delete
    2. ம்மே தினம் மாதிரி லொள் லொள் தினம் எப்போ

      வரக் வரக் என சொறியும் படங்கள் 8

      Delete
    3. //வரக் வரக் என சொறியும் படங்கள் 8//

      Choow Cute ரின் டின் கேன் :D :D :D :P

      Delete
  12. My opinion for the 6Qustions asked;
    1) Tex
    2) Reporter Johny
    3) Lucky Luke
    4) Thorgal
    5) Marma Manithan Martin
    6) Tiger

    மே தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. // கமான்சேக்குப் பதிலாய் "பெல்ஜிய சஞ்சய் ராமசாமியை" களமிறக்கிடலாம் ! What say all ? //
    தாரளமாக களமிறக்கிடலாம் ஆசிரியரே,நினைவை துரத்துபவரை வாசிப்பது வித்தியாசமான ஒரு அனுபவம்.

    ReplyDelete
  14. 1.டெக்ஸ் வில்லர்
    2.லாரன்ஸ் டேவிட்
    3.லக்கி லூக்
    4.வேதாளர்
    5. XIII (அ) லார்கோ வின்ச்
    6.
    5.

    ReplyDelete
  15. தலைவரின் டீசருக்கு இணையான ஆர்வத்தோடு பதிவை எதிர்பார்த்து கொண்டிருந்தேன்......

    ReplyDelete
  16. //சிதம்பரம் நகரிலிருந்து நமது வாசக நண்பர் டாக்டர்.கணேஷின் உதவிகளோடு - பள்ளிகளில் நமது காமிக்ஸ் இதழ்களை சேர்ப்பிக்கும் முயற்சி துவங்கியுள்ளது ! நமது பட்டியலில் பள்ளி மாணாக்கர்களுக்கு உகந்த இதழ்களையும் ; CINEBOOK இதழ்களுள் உள்ள தோதான பிரதிகளையும் தேர்வு செய்து சிதம்பரத்தின் பெரிய பள்ளிகளுக்கு சப்ளை செய்திட நண்பர் உதவி வருகிறார் !//

    Gr8 News Sir :)
    Happy Happy Happy abt this :)

    ReplyDelete
  17. இனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!
    இனிய காலை வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  18. உழைப்பாளிகள்- எடிட்டர் சமூகத்திற்கும்...
    உழைப்பாளிகள்- அலுவலகப் பணியாளர்களுக்கும்...
    உழைப்பாளிகள் - காமிக்ஸ் வாழ் நண்பர்களுக்கும்...
    உழைப்பாளினிகள் - காமிக்ஸ் வாழ் சகோதரிகளுக்கும்...

    'உழைப்பாளி' ஈனா வினாவின் உழைப்பாளர் தின மற்றும் ஞாயிறு நல்வாழ்த்துகள்! :)

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவு பவ்வயமான Profile dp
      வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரரே :)

      Delete
  19. // MANGA படிக்கும் ஆர்வமுள்ளதா நண்பர்களே ? இந்த வகைக் கதைகளை உருவாக்கும் புதியதொரு பதிப்பகம் நம்மோடு கைகோர்க்க ஆர்வம் தெரிவித்துத் தொடர்பு கொண்டுள்ளது !!! //
    முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை,சுவைத்து பார்த்தால் தானே ருசி தெரியும்,சுவை அலாதியாக இருந்தால் தொடரலாம்,இல்லையேல் விட்டுவிடலாம்.

    ReplyDelete
    Replies
    1. மாங்கா காயா, பழம்மா

      சர்ர்ர்ரப்

      Delete
    2. @Arivarasu @ Ravi Sir
      +9 :)

      @ரின் டின் கேன்
      மாங்கா தமிழில் வரும்
      சுவைத்து பார்த்து காய பழமா என்று தங்களுடைய மொழியில் கூறி விடுங்கள் :)

      Delete
  20. //சிதம்பரம் நகரிலிருந்து நமது வாசக நண்பர் டாக்டர்.கணேஷின் உதவிகளோடு - நமது பட்டியலில் பள்ளி மாணாக்கர்களுக்கு உகந்த இதழ்களையும் ; CINEBOOK இதழ்களுள் உள்ள தோதான பிரதிகளையும் தேர்வு செய்து சிதம்பரத்தின் பெரிய பள்ளிகளுக்கு சப்ளை செய்திட நண்பர் உதவி வருகிறார் !//
    நல்ல முயற்சி,வரவேற்கப்பட வேண்டிய முயற்சி.

    ReplyDelete
  21. அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  22. // நமது இரவுக் கழுகாரோ ஆண்டின் முதல் வண்ண அவதாரில் அசத்தக் காத்துள்ளார்- “பழிவாங்கும் புயல்“ (வண்ண) மறுபதிப்பின் வழியாக!//
    செவிக்கு இனிய தகவல்,இரவுக் கழுகாரின் அசத்தல் சாகசத்தை காண ஆவலுடன்.

    ReplyDelete
  23. MANGA படிக்கும் ஆவல் வண்டி வண்டியாய் உள்ளது சார். நெடுங்காலத்திற்கு முன் உங்களது பதிவுகளில் மட்டுமே இடம் பிடித்த அந்த MANGA வை புத்தகமாய் காண ஆவல் அதிகமாய் உள்ளது சார். அப்புறம் நம்ம கமான்சேவுக்கு பதிலாக சஞ்சய் ராமசாமியையே களத்தில் இறக்கி விடலாமே..

    ReplyDelete
  24. பள்ளி வினாக்களுக்கு பதில் அளித்து விடுமுறை விட்ட பிறகு விடுமுறை நாளிலும் வினாக்களுக்கு பதில் சொல்லும் இந்த மே மாத வினாக்கள் ஒரு பள்ளி வினாக்களை போல் அல்லாமல் சுவையான வினாக்களாகவே தோன்றுகின்றன ....

    இதோ பதில்கள் சார் ....வினாக்கள் நீள நீளமாக இருப்பினும் பதில்கள் டக் டக் என்று ஒரே வரியில் .....

    ஆல் டைம் பெஸ்ட் ஹீரோ ...

    டெக்ஸ் வில்லர் ...

    டாப் டிடெக்டிவ் ஹீரோ

    ரிப்போர்ட்டர் ஜானி ...

    ஆல் டைம் பெஸ்ட் காமெடியன்

    லக்கி லூக் ..


    பெஸ்ட் அட்வென்ச்சர் ஹீரோ ...

    வேதாளர் ....(நமது படைப்பில் இவரின் ஒரே கதையை தான் படித்து உள்ளேன் ..ஆனால் அதிலியே டெக்ஸ் போல மனதை கவர்ந்து விட்டார் )

    எதிலுமே பிரிக்க முடியாத பெஸ்ட் டாப் நாயகன்


    லார்கோ வின்ச் ...

    ReplyDelete
  25. // ஜுன் மாதக் கோட்டா மொத்தம் 1000+ பக்கங்கள் என்றாகிறது! //
    அசத்தலான முன்னேற்றம்,விதவிதமான சுவைகளில் விருந்து காத்துள்ளது.

    ReplyDelete
  26. ஆஹா...ரொம்ப ரொம்ப கஷ்டமானா கேள்வியா கேட்டுள்ளீர்களே சார்...பதுலே தெரியாத கேள்விக்குக் கூட ஏதோ ஒரு பதிலை எழுதிடலாம்...ஆனால் இப்படி மனசுக்குப் பிடிச்ச எல்லா காமிக்ஸ் ஹீரோ க்கள் லிஸ்ட்டைப் போட்டுட்டு ஒண்ணே ஒண்ணை செலக்ட் பண்ண சொந்னா ரொம்ப கஷ்டம் சார்...

    ReplyDelete
  27. science-fiction தொடர்பான கதைகளை முயற்சி செய்திடலாம்.. அல்லது சிறுவர்களை கவர்ந்திட cartoon comic களை அதிகபடுத்தலாம்.. எங்க வீட்டு வாண்டுக்கு 3வயசாகுது..ஸமர்ப் comic-அ ஒவ்வொரு பக்கமா திருப்பி வச்சு கதை கேகுரான்..

    ReplyDelete
  28. Best detective Rip kirupy best cartoon character lucky luke

    ReplyDelete
  29. 2017 ல் புதிதாய் எந்த சுவையை இணைக்கலாம் என்றால் ...

    இந்த விண்வெளி ...வான்வெளி ...ஆகாயவெளி சுவையை தவிர வேறு ஏதாவது சுவையை மட்டுமே ரசிக்க தாருங்கள் சார் ....

    ReplyDelete
  30. ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு மே தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. // 1972-ல் துவங்கியுள்ள நமது 44 ஆண்டுப் பயணத்தின் ALL TIME Top நாயகராக யாரைத் தேர்வு செய்வீர்கள்? //
    மிகக் கடினமான கேள்வி ஆசிரியரே,இப்படி கேட்டால் நாங்கள் என்னால் சொல்ல,ஒவ்வொரு நாயகரும் ஏதேனும் ஒரு வகையில் அசத்தவே செய்கிறார்,
    எனினும் வேறு வழியில்லாமல் கட்டாயம் தேர்வு செய்ய வேண்டுமெனில்,
    1.டெக்ஸ்வில்லர்.
    எப்போதும் எல்லோருக்கும் பிடித்தவர்,
    மற்றவர்களும் போட்டியில் சளைத்தவர்கள் இல்லை.

    ReplyDelete
  32. ஆஹா ஜூன் மாதம் ஜூலியா. நாம படிக்கலாம் ஜாலியா.. பாவம் இம்முறையாவது ஜூலியா கரையேறுவாரா அல்லது அனைத்து காமிக்ஸ் நாயகர்களின் ஆரவார அலைகளில் அடித்து செல்லப் போகிறாரா பார்ப்போம்.

    ReplyDelete
  33. Replies
    1. 1.Absolute Class என்றால் என் ஃபேவரைட் ""LARGO WINCH ""தான்..!வேறு எந்த நாயகனின் சாகஸமும் இந்த அளவில் பிரமிப்பாக ரசிக்க வைக்கவில்லை.....!
      2.TOP DETECTIVE என்றால் ரிப் கிர்பி எனலாம்..!
      3.BEST COMEDIAN நம் அபிமான லக்கி லூக்கை தாண்டி யோசிக்க முடியவில்லை.
      4.BEST ADVENTURER நம் காமிக்ஸ் சகாப்த த்தின் TREND மாற்றியமைத்த The Great கேப்டன் பிரின்ஸ் .
      5.Best in their class -நம் அபிமான மாடஸ்டி பிளைஸி..!
      6. SUPER COW BOY OF ALL TIME :நம் ஆதர்ஷ நாயகன் டெக்ஸ் வில்லர்.


      Delete
  34. இரத்தபடலம் இறுதி episode தாராளமாக வெளியிடலாம்.but manga comics...விஷப்பரிட்சை தேவையா சிந்திப்பீர் வாக்களர்பெருமக்களே

    ReplyDelete
    Replies
    1. கி.நா. , பெளன்சர் ன்னு பார்த்த பின் தயக்கம் ஏனோ நண்பரே ...
      மேலும் எவ்வளவு நாள் இந்த கெளபாய் குதிரைகளை நம்பியே இருக்க முடியும் ....

      Delete
  35. // TOP DETECTIVE என்று அடையாளம் காண்பதாயின் யாரை நோக்கி விரலை நீட்டிடலாமோ ? //
    ரிப்போர்ட்டர் ஜானியை தாரளமாக தேர்வு செய்யலாம்,மற்றவர்களும் துப்பறிவதில் மன்னர்கள் எனினும் ஜானியின் களம் எப்போதுமே சவாலான களமாக இருக்கும்,மூளைக்கு வேளை வைக்கும்,சிந்தனையை தூண்டும்.

    ReplyDelete
  36. எல்லா காமிக்ஸ் நாயகர்லும் பிடிக்கும்
    ஒருவரை தான் கை காட்ட வேண்டும் என்று சொல்லி விட்டிர்கள்
    கையில் பத்து ரூபாய் இருக்கும் ஒரு புத்தகம் தான் வாங்கி தரப்படும் என்று சொல்லும் போது ஒன்றை தான் தேர்வு செய்ய முடியும்(இப்போது இல்லை அப்போதைய நிலைமை அப்பிடி)
    1.வேதாளர்
    2.ரிப்போர்ட்டர் ஜானி
    3.சிக் பில் & கோ
    4.தோர்கல்
    5.கண்டிப்பாக என்னால் ஒருவரை கை காட்ட முடியாது
    ஒவ்வரும் அவர்களுடைய பாணியில் Special, Sorry Sir
    அனைவரையும் ரொம்ப பிடிக்கும்
    6.இதற்கு பலவித suggestions குடித்திடலாம் தற்போதைய என் suggestion
    மெல்லிய ரொமன்ஸ் அல்லது Sc-Fi Genre

    ReplyDelete
  37. கமான்சே விற்கு பதிலாக நண்பர் பதிமூன்றை இறக்கலாமா.....என்றால் கண்டிப்பாக இறக்கி விடலாம் சார் ....டக் டக்குன்னு அவர் ஜோலியை முடிச்சுட்டா பொறுமையா நம்ம ஜோலியை பாக்கலாம் சார் ....எனவே இதற்கு பலமாகவே ஆதரவு உண்டு ....

    சிதம்பரம் டாக்டர் கணேஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ....

    டி சர்ட் அளவு நானும் இன்னும் சொல்ல வில்லை சார் ...ஆனா இருக்குறதில்லியே ரொம்ப சின்னதா இருக்கிறதை அனுப்பினால் எனக்கு போதுமானது சார் ..;-)

    மங்கா .....என்ன சொல்றதுன்னு தெரில சார் ...சுவைத்தால் தான் ருசி புலப்படும் ...ஒரே ஒரு மாங்காய் வாங்கி குடுங்க ....கடிச்சு பாத்துட்டு இதுவே போதுமா ..இல்ல இன்னும் வாங்கி கொடுங்க அப்படின்னு அழுது அடம்பிடிக்கலாமான்னா பார்க்கலாம் சார் ..;-)

    ReplyDelete
  38. வணக்கம் எடிட்டர் சார்...!
    வணக்கம் நண்பர்களே....!

    ReplyDelete
  39. // நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது ஒரு ALL TIME BEST COMEDIAN //
    வேறு யார் நம்ம லக்கிலுக் தான்.

    ReplyDelete
  40. ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு - மே தின வாழ்த்துக்கள் !!!

    ஆசிரியரின் கேள்விகளுக்கு என் மனதில் வந்துவிழுந்த பதில்கள்!

    1 - வேதாளர்
    இவருக்கு மனதில் மட்டுமே இடம் என்று தயவுசெய்து சொல்லிவிடாதீர்கள் சார். எங்கே பெங்காலியாவில் அவர் சாகசம் புரிந்தாலும், மனதுக்கு மிக நெருக்கமானவராகிவிட்டார்!!

    2- ரிப் கிர்பி
    டிடெக்டிவ் - என்றாலே இவர்தானே? மாற்றுக் கருத்து ஏது??? கதைகளும் ஓவியர்களும் யம்ம்மா... (காரிகன் 2 வது இடத்தில் உள்ளர்!)

    3 - லக்கி லூக்
    தமிழில் இவரை இவரது முதல் கதை முதல் உங்கள் எழுத்துக்களால் நீங்கள் பெரியதொரு உயரத்தில் கொண்டுபோய் வைத்துவிட்டீர்கள். அதனால் வேறு யாருக்கும் இடம் கிடையாது!

    4 - பேட் - மேன்
    இவர் மீண்டும் நமது காமிக்ஸ்க்கு வந்தால், ஒரு க்ளாஸ் எஃபெக்ட் வந்திடும் சார். ப்ளீஸ்!!!

    அட்வெஞ்சர் ரக கதைகளுக்கு முக்கியத்துவம் கட்டாயம் வேண்டும். எங்கள் சிறுவயதுகளில் நாங்கள் உலகெங்கும் சுற்றி சாகசம் புரிவதான கற்பனை விருத்திக்கு அத்தகைய கதைகளே உதவின. இன்று அவை மிஸ்ஸிங்! (லார்கோ, ஷெல்டன் போன்றவர்கள் பரவலாக அலைந்து திரிந்தாலும் அவர்களை சிறுவர்களால் ஏற்றுக்கொள்வது கடினமாகவே உள்ளது!)


    5- மான்ட்ரெக் - என்னதான் காதில் பூச்சுற்று ரகமாயிருந்தாலும் - என்னமோ இருக்கு சார் அவர்கிட்ட!!

    6- Sci - fi / Thriller - ஹாரர் கதைகள் வேண்டும். சும்மா பேய் பூதம் என்றில்லாமல் - க்ளாஸிக் கதைகளாக தேர்வுசெய்தால் சூப்பர்ர்ர்ர்ர்!!!!

    ReplyDelete
  41. 1.ஆல் டைம் டாப் நாயகர்,ஆல் டைம் பெஸ்ட் எண் பதிமூன்று என்பதில் சந்தேகம் வேண்டாம் சார். நம் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் அம்சங்களான கண்களை உறுத்தாத துல்லியமான ஆர்ட்வொர்க்,பல அடுக்குகள் கொண்ட செறிவான கதைக்களம். இன்றுவரை வெளியாகும்போது எதிர்பார்ப்பை உருவாக்கும் சக்தி.
    2.டாப் டிடெக்டிவ் 007தான் என்றாலும் அதனை வெளியிடுவதில் உள்ள சிரமங்களைக்கருத்தில்கொண்டு அவரை விட்டுவிடுவோம்.எனவே சிறந்த துப்பறியும் நாயகர் ரிப்போர்ட்டர் ஜானி என்று அழைக்கப்படும் ஹிக் ஹோஷே.தரமான சித்திரங்கள்,கதை முடியும்வரை விலகாத மர்மம் இது போதுமே.
    3.பெஸ்ட் காமெடியன் ஒன்லி ஒன் லக்கி லுக்.விளக்கம் தேவை இல்லை அல்லவா....
    4. ALL TIME BEST ADVENTURER என்று பார்க்கும்போது மனக்கண்முன்னே உடனே வருவது ஜின்,பார்னே மற்றும் கழுகு ஆகியோர் தோன்றும் பெர்நார்ட் பிரின்ஸ் சாகசங்களே.கண்கவரும் அட்டகாசமான சித்திரங்கள்,அழுத்தமான கதைகள்.இவற்றில் பதினெட்டு கதைகளில்,பதினேழு கதைகள் வெளிவந்துள்ளது.இருந்தாலும் சில கதைகள் மட்டுமே வண்ணம் கொண்டு வந்துள்ளன.
    5. THE BEST IN THEIR CLASS எனில் மர்ம மனிதன் மார்ட்டின் முன்னே நிற்கிறார்.அறிவியல் மற்றும் தத்துவம் கலந்த சற்று வேறுபாடான சுவைகொண்ட கதைகள்.
    6. புதுசாய் ஒரு சுவை நுழைக்கலாம் என்றால் மங்காவே இருந்திடலாம்...
    அப்புறம் கமான்சேவுக்கு பதில் பதிமூன்றை வெளிஇடுங்கள்.புத்தம்புதிய ஆல்பம் பிரான்ஸ் வாசகர்களுக்கு இணையாக நாமும் வாசிக்கலாமே...

    ReplyDelete
  42. @விஜயன் சார்
    இரத்தபடலம் ஜூன்-இல் தங்கள் கொண்டு வரலாம் சார்

    மங்கா படிக்க ரெடி சார்
    தமிழ்நாட்டில் மங்கா படிக்கும் நிறைய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உண்டு
    அவர்களை நம் பக்கம் இழுக்க வாய்ப்புண்டு
    அவர்களில் ஜப்பானிய மற்றும் ஆங்கில மொழியில் படிப்பவர்கள் உள்ளனர்
    If we r bringing in Tamizh we need to catch their attention

    தாங்கள் தமிழில் மங்கா கொண்டு வருவாதாயின் சிவகாசிக்கு வந்து தங்களுக்கு உதவி புரிந்திட நான் ரெடி சார் :)

    ReplyDelete
  43. // ALL TIME BEST ADVENTURER என்ற பட்டத்துக்கு யாரைத் தேர்வு செய்வீர்கள்?//
    கேப்டன் பிரின்ஸ்

    ReplyDelete
  44. 1) ABSOLUTE ALL TIME BEST - டெக்ஸ் வில்லர்

    2) ஜெஸ்லாங்

    3) சிக் பில் & கோ;

    4) கேப்டன் பிரின்ஸ்

    5) மர்ம மனிதன் மார்டின்

    //MANGA படிக்கும் ஆர்வமுள்ளதா நண்பர்களே// அட்டகாசம் சார், இதில் டாப் ரக கதைகள் ஏராளம் உண்டு. ப்ளீஸ் proceed சார்

    ReplyDelete
  45. // “ரகமே பிரிக்க இயலாத ரகத்தின் பிரதிநிதிகள் இவர்கள்“ என்று சொல்வதாயின்,//
    1. மர்ம மனிதன் மார்ட்டின்,
    2. XIII.
    ஹி,ஹி மனசு கேட்கல அதான் ரெண்டு பேரா போட்டுட்டேன்.

    ReplyDelete
  46. // 2012-ல் தொடங்கிய நமது இரண்டாவது innings-ல் இன்னமும் ஏதேனும் புதுசாய் ஒரு சுவையை நுழைப்பதாயின் - உங்கள் தேர்வு என்னவாக இருக்கும் ?//
    திரில்லர் & ஹாரர் வகை கதைகளாக தேர்வு செய்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  47. எனது பல்கலைகழக ஆசிரியருக்கு வேதாளர் பிடிக்கும்

    Bat-man தமிழில் கொண்டு வந்தால் சந்தோஷ படுவார்

    ReplyDelete
  48. Bat-man தமிழில் கொண்டு வந்தால் சந்தோஷ படுவார்



    #####

    வழி மொழிகிறேன் சார் ...

    ReplyDelete
  49. பது பதார்த்தத்தை (மங்கா) கொஞ்சூண்டு டேஸ்ட் பண்ணக்கொடுங்கள் சார்....! சுவைத்துப்பார்த்துவிட்டு சொல்கிறேன்....!!!

    ReplyDelete
  50. ///ஜுன் மாதக் கோட்டா மொத்தம் 1000+ பக்கங்கள் என்றாகிறது! ////---
    ஆயிரம் இரண்டாயிரம் பக்கங்கள் வந்தாலும் இந்த "பழி வாங்கும் புயல்"-வண்ணத்தில் வீசப் போகும் புயலையே அதிக எதிர்பார்க்கிறேன் சார்.....

    இரத்தப்படலம் இறுதி பாகத்தை உடனடியாக வெளியிடுங்கள் சார் ...இம்முறையாவது காமிக்ஸ் ஆலிவுட்டில் படம் ரிலீஸ் ஆவும்போதே நாமும் ரசிப்போம்...

    டாக்டர் கணேஷ் சாரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள் ....

    மங்கா -படிக்கலாம் சார் , அதிலும் ஏதாவது கெளபாய் வந்து உள்ளார்களா ??? ...ஹி...ஹி..

    ReplyDelete
    Replies
    1. கெளபாய் மங்கா உண்டு சகோதரரே :)

      Delete
    2. வாவ்..தகவலுக்கு நன்றி சகோ...
      முதல் முயற்சியாக மங்கா-கெளபாய் க்கே என்னுடைய ஓட்டு சார்...

      Delete
  51. Good morning edit sir,
    1.My all time favorite was spider for his heroism. (mass-u)
    2.Reporter Johnny for his realism.
    3.chick bill for their group comedy
    4.largo winch
    5.matin mystery
    6.war stories


    ReplyDelete
  52. தங்களுடன் தொடர்பு கொண்ட பதிப்பகதினரிடம் "Rurouni Kenshin" இருந்தால்
    தமிழில் கொண்டு வரலாம் சார்
    இங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் அக்ஷன் பிடிக்கும்
    அதனால் நமது சாமுராயை பிடிக்கும் என்று நம்புகிறேன்
    Kenshinai Anime-இல் தான் பார்த்திருக்கிறேன்
    படித்தது இல்லை தமிழில் படிக்க ஆர்வமாக உள்ளேன்

    நம் சகோதரர் மற்றும் தோழர்கள் சுவைத்து பார்க்க ரெடியாக இருப்பதால் இது என்னுடைய Suggestion சார்,
    கதைகளை படித்து இறுதி முடிவு எடுப்பது தாங்கள் தான் சார் :)

    ReplyDelete
  53. எனக்கு எல்லா காமிக்ஸூம் வேண்டும். எனக்கு எல்லா காமிக்ஸ் நாயகர்களையும் பிடிக்கும். அதனால் எப்போதுமே வாக்களிப்பையெல்லாம் எட்ட நின்று வேடிக்கை பார்ப்பதோடு சரி. இம்முறையும் தோழர்கள் ஓட்டெடுப்பில் யார் வெற்றி பெற்று வந்தாலும் சந்தோஷமே.நமது காமிக்ஸ் இதுவரை நுழையாத சந்து பொந்து எல்லாம் நுழைந்து இன்னும் புதுப்புது நாயகர்களும் புதுப்புது கதைகளுடன் வந்தாலும் சந்தோஷமே. என் காமிக்ஸ் பசி அகோரப் பசி. எவ்வளவு காமிக்ஸ் கிடைத்தாலும் என் பசி அடங்காது.

    ReplyDelete
  54. My choices
    1 Tex
    2 Johnny
    3 Chick bill
    4 wing commander George
    5 Modesty
    6 Tiger

    ReplyDelete
  55. 1....13
    2....லாரன்ஸ்
    3.....ஸ்மர்ஃஸ்
    4....வேதாளர்
    5....13 லார்கோ
    6....டெக்ஸ்...இப்பவே ...அழுத்தமாய்

    ReplyDelete
  56. 1.ABSOLUTE ALL TIME BEST

    Tex..Tex..Tex..

    2.TOP DETECTIVE

    007

    3.ALL TIME BEST COMEDIAN

    சுஸ்கி-விஸ்கி

    4.ALL TIME BEST ADVENTURER

    கேப்டன் பிரின்ஸ்

    5."THE BEST IN THEIR CLASS"

    இளவரசி

    6.2017ல் புதிய சுவை...

    சரித்திர காமிக்ஸ்

    ReplyDelete
  57. good morning to all.
    1 Tex willer
    2 rib
    3 lucky luke
    4 prince
    5 largo
    6 Tex willer

    ReplyDelete
  58. என்னென்னமோ வாயில் நுழையாத அப்படியே நுழைந்தாலும் நாக்கு கடி படுகிற மாதிரியான பெயர்களையெல்லாம் நமது தோழர்கள் சொல்லும் போது வாயை பிளந்து வேடிக்கை பார்க்கத்தான் முடிகிறது. தோழர்கள் இன்று குறிப்பிடும் கதைகளையோ பெயர்களையோ கொஞ்சமும் எனக்கு தெரியாது. தெரிந்து கொள்வதற்கான சூழ்நிலையும் இல்லை. ஆயுள் முழுக்க ஓட்டம்தான்.ஆனால் தோழர்கள் குறிப்பிட்டு சொல்லும் கதைகளை தாங்கள் வெளியிட முன்வந்தால் இப்போதாவது அதை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது என்று மகிழ்ச்சியடைவேன்.

    ReplyDelete
  59. Q1: ABSOLUTE ALL TIME BEST - TEX WILLER
    Q2: TOP DETECTIVE - C.I.D. ROBIN
    Q3: ALL TIME BEST COMEDIYAN - LUCKY LUKE
    Q4: ALL TIME BEST ADVENTURER - THORGAL
    Q5: THE BEST IN THEIR CLASS - XIII
    Q6: ALL TIME BEST COWBOY - CAPTAIN TIGER.


    //இரத்தப் படலம் இறுதிப் பாகத்தின் டிஜிட்டல் பைல்கள் நமக்குக்கிடைத்து விட்டன !! மிரளச் செய்யும் artwork - ஓவியர் "வூடு கட்டி அடித்திருக்கிறார் " என்று தான் சொல்ல வேண்டும் ! ஜூன் மாதம் அங்கே இந்த ஆல்பம் வெளியாகும் அதே வேளைதனில் நாமும் தெறிக்க விடுவதாயின் - கமான்சேக்குப் பதிலாய் "பெல்ஜிய சஞ்சய் ராமசாமியை" களமிறக்கிடலாம் ! What say all ? //

    OK.!!

    //MANGA படிக்கும் ஆர்வமுள்ளதா நண்பர்களே ? //

    YES.

    ReplyDelete
  60. சார் கமான்சே எப்படா வருவார் என ஏங்க வைத்த கடைசி கத ....13 அ முன்னிறுத்தியதும் கேட்ட முதல் கேள்வி இதென்ன சிறு புள்ள வெளாட்டு ...13 முதல்ல....அடுத்த மாதமே வந்தா நாமும் சேர்ந்தடிப்போமே கும்மி....ஆனந்தக்கும்மி...நேற்றுதான் இவ்வருட அட்டவணய பாத்து ப.வா.பு.டெக்ஸ் ...கமான்சே...13...எப்படான்னு...கேள்வி பிறந்தது அன்று ...நல்ல பதிலும் கிடைத்தது இன்று....

    ReplyDelete
  61. 1)daibolik
    ரிப்போட்டா் ஜானி
    3)bluecloat,luke,chick bill,gil jourdan
    4)adventure means only roger.....
    5)daibolik.....

    ReplyDelete
  62. 1.டெக்ஸ் வில்லர்
    2.ரிப்போர்ட்டர் ஜானி
    3.லக்கி லூக்
    4.கேப்டன் பிரின்ஸ்
    5.லார்கோ

    ReplyDelete
  63. Manga வரலாம்
    ஜூன் மாதம் ரோஜா்,பிாின்ஸ்,ஜானி வந்தால் நன்று

    ReplyDelete
    Replies
    1. எங்கே நமது இளையதிலகம் அகிக் அவர்களை அடிக்கடி பார்க்க முடிவதில்லை?

      Delete
  64. மூன்று வாரங்களாக ஆப்சென்டில் இருக்கும் கிட் ஆர்டினார் உடனடியாக இங்கே ஆஜராகவேணும் என கேட்டுக்கொள்ளப்படிகிறார்....

    கவுண்டர் ,செந்தில் ,வடிவேலு சேர்ந்து பாட்டு பாடி கூப்டுவாகளே அப்படி ....
    கிட் ஆர்டன் ஒஸ்தாவையா ,கிட் ஆர்டன் ஒஸ்தாவையா ,ரின் டின் கேன் தேடுதையா...ரின் டின் கேன் தேடுதையா...

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்கோ கிட் சீக்கிரம் வந்து சேருங்க.

      Delete
  65. சார் புதயல் ...புதை பொருள் ஆராய்ச்சி பிரமிட் போல...சிறார் துப்பறியும் கதைகள்...மறுபதிப்பில் வேதாளன் என்பது பழய வாசகர்களயும் ...இடை நிலை வாசரயும் ...புதிய வாசகரயும் ஈர்க்கும்...உம் மாயாவி

    ReplyDelete
  66. /// ABSOLUTE ALL TIME BEST ஹீரோ ? ///

    டெக்ஸ்

    //// TOP DETECTIVES ///

    1.ஷெர்லக் ஹோம்ஸ்,
    2.ராபின்,
    3.ரிப்போர்டர் ஜானி

    ///ALL TIME BEST COMEDIANS ///

    1.லக்கிலூக்
    2. சிக்பில்
    3. ரின்டின்கேன்
    4. மதியில்லா மந்திரி
    5. க்ளிப்டன்
    6. லியனார்டோ

    ////ALL TIME BEST ADVENTURER ///

    1. கேப்டன் பிரின்ஸ்


    ////THE BEST IN THEIR CLASS///

    1. XIII
    2. லார்கோ
    3. மர்ம மனிதன் மார்ட்டின்
    4. மாடஸ்டி

    ///ஏதேனும் புதுசாய் ஒரு சுவையை நுழைப்பதாயின் - உங்கள் தேர்வு என்னவாக இருக்கும் ? ///

    History/ உண்மைச் சம்பவங்களைத் தழுவிய Adventures , பல்வேறு நாடுகளின் புராணங்கள் / இதிகாசங்கள் காமிக்ஸ் வடிவில்...

    இவற்றோடு ஒரு மெல்லிய... ஹிஹி!


    ReplyDelete
    Replies
    1. //History/ உண்மைச் சம்பவங்களைத் தழுவிய Adventures , பல்வேறு நாடுகளின் புராணங்கள் / இதிகாசங்கள் காமிக்ஸ் வடிவில்...//

      nice suggestion

      //இவற்றோடு ஒரு மெல்லிய..//
      hmmmmmmmmmmmmmmm ;)

      Delete
  67. கேள்வி எண் 1:
    ஆல் டைம் பெஸ்ட் நாயகர்

    மும்மூர்த்திகள், ஸ்பைடர்,ஆர்ச்சி போன்றோர் எனது அரை டிரவுசர் காலங்களில் அசாத்திய நாயகர்களாய் வலம் வந்தனர்.ஆனால் இன்று....? ஆகவே ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.
    வேதாளரை நமது இதழ்களில் படித்ததில்லை.ராணி காமிக்ஸின் மொக்கையான மொழி பெயர்ப்பில் நிறைய படித்திருக்கிறேன்.பெரிதாய் என்னை கவரவில்லை.ஆகவே விலக்கப்படுகிறார்.
    கேப்டன் டைகர்....!
    தங்கக்கல்லறையும்,மின்னும் மரணமும் என்னுள் விவரிக்கமுடியா தாக்கங்களை ஏற்படுத்தியவை.ஆனால் தற்போது வரும் கதைகள் மிகச்சுமாராகத்தான் தோன்றுகின்றன.டைகர் எனும் மாஸ் ஹீரோவின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு படைப்பாளிகள் காலம் தள்ளுகிறார்கள்.ஆகவே விலக்கப்படுகிறார்
    லக்கி,லார்கோ,XIII போன்றோர் ஆளுக்கொரு பாணியில் கலக்கினாலும்....., எஞ்சி இருப்பவர் நமது இரவுக்கழுகார் மட்டுமே....! தலைவாங்கியில் தொடங்கி இன்றுவரை நம்மை தன் மந்திரத்தால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்.ஆகவே எனது ஆல் டைம் பெஸ்ட் நாயகர் நம்ம தலதான்...!!!

    ReplyDelete
    Replies
    1. //வேதாளரை நமது இதழ்களில் படித்ததில்லை.ராணி காமிக்ஸின் மொக்கையான மொழி பெயர்ப்பில் நிறைய படித்திருக்கிறேன்.பெரிதாய் என்னை கவரவில்லை.ஆகவே விலக்கப்படுகிறார்.//
      கதைத் தேர்வுகளும் மொழிபெயர்ப்பும் நமது முத்து காமிக்ஸ்இல் பிரமாதமாய் இருந்தன நண்பரே! ஒரேயொரு கதையையாவது தேடிப் படித்துப் பாருங்கள். வேண்டும்... வேண்டும் என்பீர்கள். எனது சேகரிப்புகள் அழிந்துபோய்விட்டன. இல்லையெனில் ஒரு புத்தகத்தை சாம்பிள் அனுப்பியிருப்பேன் உங்களுக்கு!

      Delete
    2. @ பொடியன்

      தேடினாலும் கிடைக்காத அரிய இதழ்களாகிவிட்டன முத்துவின் வேதாளர் கதைகள்.

      Delete
  68. அதிகாலை 4 மணிவரை விழித்திருந்து ஏமாந்தேன்....
    காலை 9 மணிக்கு post போட்டுருக்கார்னு இப்பதான் தெரிஞ்சுது....
    அனைவருக்கும் காலை வணக்கங்கள்!

    ReplyDelete
  69. கேள்வி எண் 2:
    டாப் டிடெக்டிவ் : யோசிக்கவே வேண்டியதில்லை.ராபினும்,ரிப்.ஜானியும் முதலிடம் பிடிக்கிறார்கள்.
    லாரன்ஸ்-டேவிட்,ஜானி நீரோ,காரிகன்,ரிப் கிர்பி,ஷெர்லக் ஹோம்ஸ்,ஜெஸ் லாங் கதைகளில் தென்படும் புராதனம் படிக்கும்போது நிறையவே சங்கடத்தை தருகிறது.ஜேம்ஸ் பாண்ட் என்பிரியத்திற்குரிய நாயகர்தான்.அவரை விட எனக்கு இரட்டை வேட்டையர்களை மிகப்பிடிக்கும்.தமிழில் வந்த இவர்களது கதைகளை ஒன்றிணைத்து ஒரு டைஜஸ்ட் வெளியிட்டால் அட்டகாசமாக இருக்கும்.(வாய்ப்பிருக்கிறதா சார்..?)

    ReplyDelete
    Replies
    1. இரட்டை வேட்டையர்கள் டைஜஸ்ட் நல்ல யோசனை.

      Delete
    2. ஆமாமா..!!நல்ல யோசனை தான்..!

      Delete
  70. கேள்வி எண் 3:
    All time best comedian
    லக்கி லூக்
    லக்கி லூக்
    லக்கிலூக்

    ReplyDelete
  71. கேள்வி எண் 4:
    All time best adventurer
    கேப்டன் பிரின்ஸ்
    கேப்டன் பிரின்ஸ்
    கேப்டன் பிரின்ஸ்

    ReplyDelete
    Replies
    1. இந்த கலா ரசிகர் முக நூல்லில் நல்லவராவும், இங்க கோவக்கார்ராவும் இருக்காரே

      நமக்கேங்க வம்பு மடயிலேறி கொஞ்சிடுவோம

      Delete
  72. ///நமது இரவுக் கழுகாரோ ஆண்டின் முதல் வண்ண அவதாரில் அசத்தக் காத்துள்ளார்- “பழிவாங்கும் புயல்“ (வண்ண) மறுபதிப்பின் வழியாக!///

    ஆஹா ஆஹா ஆஹா! இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!

    டெக்ஸின் பெஸ்ட் கதையான. பழிவாங்கும் புயலை வண்ணத்தில் காணவேண்டுமென்ற பலவருடக் கனவு

    ReplyDelete
  73. All Time Best Hero TEX WILLER
    1.டெக்ஸ் வில்லா்
    2.007
    3.லக்கி லூக்
    4.வேதாளா்
    5.லாா்கோ
    6.டெக்ஸ் வில்லா்

    ReplyDelete
    Replies
    1. Rajasekar S : 007 - சுவாரஸ்யமான தேர்வு !!

      Delete
  74. நண்பர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  75. ரகம் பிரிக்க இயலா ரகத்தின் பிரதிநிதி நிச்சயம் மார்ட்டின்தான்.
    இவரது கதைகளில் அழிந்துபோன மூ கண்டத்தை தேடி அலைவார்.புதிர் அரங்கங்களுக்கு ஒரு சர்பரைஸ் விசிட் அடிப்பார்.திடீரென்று ஏலியன்கள் பிரசன்னமாகும்.டி.வி.பெட்டியால் உறிஞ்சப்பட்டு வேற்று மண்டல வாசல்களை அடைக்கப்போராடுவார்.ஹெய்லிஜ் வாளை சக்தி இழக்கச்செய்ய கண்டம்விட்டு கண்டம் பாய்வார்.ஆதி மனிதனை அஸிஸ்டெண்டாக வைத்துக்கொண்டிருப்பார்.இன்னும் நிறைய.....நிறைய.....சொல்லலாம்...!

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் ஜி. நம்ம ராமாயண கால வானரங்கள், ராவணனுடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்புன்னு நம்ம இதிகாசத்த வெச்சுகூட மார்ட்டின் ஆசிரியர் ஒரு கதை பண்ணி இருக்காரு, அதைலாம் தமிழ்ல பார்க்கனும்ன்னு ஆசை.

      Delete
    2. ஆஹா...! சூப்பர்...!

      எடிட்டர் சார்.....

      நோட் பண்ணுங்க

      நோட் பண்ணுங்க

      Delete
    3. @ FRIENDS : ம.ம.மார். தொடரின் ஆசிரியரே ஒரு சின்ன லிஸ்ட் கொடுத்துள்ளார் - டாப் கதைகள் பற்றி ! So இந்தத் தொடருக்கு நம்மிடையே இன்னமும் ஒரு லெவல் கூடுதல் வரவேற்புக் கிட்டின் - கூடுதலாய் slots ஒதுக்கிட இயலும் ! பார்ப்போமே !

      Delete
    4. ///நம்ம ராமாயண கால வானரங்கள், ராவணனுடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்புன்னு நம்ம இதிகாசத்த வெச்சுகூட மார்ட்டின் ஆசிரியர் ஒரு கதை பண்ணி இருக்காரு, அதைலாம் தமிழ்ல பார்க்கனும்ன்னு ஆசை///

      அடடே! ஆச்சர்யமா இருக்கே!

      தேடிப் பிடிச்சு சீக்கிரமா ஏற்பாடு பண்ணுங்க எடிட்டர் சார்!

      Delete
  76. கபாலி டீஸர் பார்த்த #மகிழ்ச்சியோடு இங்க வந்தா ஏகபட்ட கேள்வீஸ். எத்தன பொறுமையா மூளை யோசிச்சாலும் மனசு டெக்ஸையே சுத்தி சுத்து வருது. பார்போம், அலமாரில இருக்குற புத்தக பெட்டிய குடைஞ்சு பார்த்து பதில்கள் சொல்லனும்! :)

    ReplyDelete
    Replies
    1. cap tiger : தலைவரின் டீசரைப் பார்த்த பின்னே கொஞ்ச நேரம் ஸ்தம்பித்துப் போவதில் வியப்பில்லை தான் நண்பரே !

      Delete
  77. 2017 ல் புதிய சுவையாக சயின்ஸ்-ஃபிக்ஷன் கதைகளை முயற்ச்சிக்லாம்.

    ReplyDelete
  78. டாக்டருக்கு நன்றி கலந்த வாழ்த்துகள்.... அனைத்து நண்பர்களுக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  79. 'Best comedian' என்று லக்கிலூக்கையோ, சிக்பில்லையோ சொல்வதில் லாஜிக் இல்லை. ஏனெனில் இருவருமே காமெடி செய்வதில்லை. லக்கிலூக் கதைகளில் லக்கிலூக் தவிர்த்த ஏனைய கதை மாந்தர்களும் (இதில் ஜாலிஜம்பரும் சேர்த்தி), சிக்பில் கதைகளில் ஷெரீஃப் டாக்புல்-கிட்ஆர்ட்டின் ஜோடிகளுமே காமெடி செய்வதை நினைவுறுத்த விரும்புகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : லக்கி லூக்கைப் பார்த்தாலாவது சிரிப்பு வரும் ; ஆனால் சிக் பில்லை அவ்விதம் கருதிடவும் வாய்ப்புக் கிடையாது தான் ! சி.பி. தொடரின் undisputed நாயகர்கள் வுட்சிடியின் கவுண்டர்-செந்தில் ஜோடியே !

      Delete
  80. நீங்களெல்லாம் நினைப்பது போல் அவர் ஹீரோயின் மட்டும் அல்ல.எல்லா தடைகளையும் தாண்டி துணிவோடு எதிர்த்து நின்று வெற்றியீட்டும் ஹீரோ அவர் .
    நடிகை ஏஞ்சலினா ஜூலி பற்றி நடிகர் பிராட் பிட் கூறியது. அது போலவே கடந்த 44 ஆண்டு காமிக்ஸ் பயணத்தில் எல்லா ஆண்டும் பங்கு பெற்று வெற்றி நடை போடும் நாயகர் மாடஸ்டியே

    ReplyDelete
    Replies
    1. இராவணன் இனியன்.!

      " ஒரு வாசகம் சொன்னாலும் திரு வாசகம் சார்."


      +1111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111112221111111222211111111111111111111111111111222333444567788765443223567889998776554321245677889998765443322456789999900086542111111111111112221111111111111111120000000000000000000000000000000000000000

      Delete
    2. ஙே..! இது என்னா கணக்கு..??!!

      Delete
    3. இந்த கலா ரசிகர் நெறைய 1 வுடுறாரே.!

      Delete
    4. @ ரின்டின்கேன்

      :D LOL

      Delete
    5. ravanan iniyan : எல்லா ஆண்டிலும் இடம் பிடித்துள்ளாரா ? அட...இதென்ன புதுத் தகவலாக உள்ளது ரா.இ. சார் ?

      Delete
    6. எலெக்ஷன் டைம்னா புள்ளி விவரங்களும் கொஞ்சம் அப்படி இப்படி இருப்பது சகஜம்தானே எடிட்டர் சார்? :P

      Delete
  81. 1)ஆல் டைம் பெஸ்ட் எங்க இளவரசிதான்.

    2)மாடஸ்டி

    3)மதியில்லா மந்திரி.

    4)ரோஜர்.

    5)மாடஸ்டி பிளைசி.

    6) மங்கா

    ReplyDelete
    Replies
    1. காலை பொழுதில் "வைதேகி காத்திருந்தாள்" படப்பாடல் நன்றாக இருந்தது சகோதரரே :)

      Delete
    2. மீதி 3கேள்விகளுக்கும் இளவரசின்னு சொல்லியிருந்தா வேளை சுளுவா முடிஞ்சதே MV சார் ...

      Delete
    3. வாழ்க இ.மு.க !!

      Delete
  82. பார்வையிழந்தவரிடம் உனக்கு ஊட்டி போனால் பிடிக்குமா? கொடைக்கானல் போவது பிடிக்குமா என்று கேட்பதை போலிருக்கிறது MANGA வை பற்றி பேசும் போது. MANGA கதைகளை பற்றிய விவரம் பற்றி தோழர் யாரேனும் சிறு குறிப்பு வரைந்தால் நலமாக இருக்கும

    ReplyDelete
  83. 1)ABSOLUTE ALL TIME BEST :தனது முதலாவது கதை தொடக்கம் இன்றுவரை ஒரே களம் என்றாலும் ஒரு போதும் போரடிக்காத கதைகளை தந்த டெக்ஸ் வில்லர்தான்.
    2) TOP DETECTIVE:டிடெக்டிவ் என்றாலே ஷெர்லாக் ஹோம்ஸ்தான்.அவரை நாம் முழுமையாக இன்னும் பயன்படுத்தவில்லை.ரிப்போர்ட்டர் ஜானியும் அருமை.
    3) ALL TIME BEST COMEDIAN: மதியில்லா மந்திரி.
    ஷெர்லாக்கை ஹெர்லாக் என டைப் செய்தது கூட பரவாயில்லை.ஆனால் அவரை காமெடி ரகத்தில் சேர்த்ததைத்தான் .......................
    4) ALL TIME BEST ADVENTURER:சாகஸ வீரர் ரோஜர்...(டெக்ஸ் காட்டாத சாகசங்களா!??)
    5)THE BEST IN THEIR CLASS:மர்ம மனிதன் மார்ட்டின்...வித்தியாசமான கதை களங்களோடு அவர் பாணியில் நல்ல கதைகளை தந்துள்ளார்.
    6) ALL TIME BEST COWBOY:இன்னும் 50 வருடம் கழித்துக் கேட்டாலும் மாறாத ஒரே பதில்.டெக்ஸ் வில்லர்
    7)சூப்பர் ஹீரோ என்றொருவரும் இருந்தால் 2017 இன்னமும் நன்றாக இருக்கும்..!

    ReplyDelete
    Replies

    1. @ kavinth

      ////ஷெர்லாக்கை ஹெர்லாக் என டைப் செய்தது கூட பரவாயில்லை.ஆனால் அவரை காமெடி ரகத்தில் சேர்த்ததைத்தான் ....................///

      ஷெர்லக் ஹோம்ஸை கார்ட்டூன் பாணியில் காமெடியாக சித்தரித்து ( ஹெர்லக் ஷோம்ஸ் என்ற உல்ட்டா பெயரில்) நமது ஜூனியர் லயனில் முன்பு கதைகள் வெளியாகியுள்ளன நண்பரே! எனவேதான் காமெடி ரகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது!

      Delete
    2. Kavinth JeevA : "எழுந்து வந்த எலும்புக்கூடு" ; "விற்பனைக்கு ஒரு பேய்" - போன்றவற்றை படித்ததில்லை நீங்கள் என்பது புரிகிறது ! மினி-லயனின் ஹிட் கதைகளுள் அவையும் உண்டு !

      Delete
  84. ///முத்து மினி காமிக்ஸின் வருகையோடு நமது ABSOLUTE CLASSICS மறுபதிப்புகளின் திட்டமிடல்களையும் சீரியசாகத் துவங்கும் வேலை சீக்கிரமே புலர்ந்திடும் என்பதால்///

    லயன், மினிலயன், ஜூனியர் லயனின் தேர்ந்தெடுத்த கதைகள் விரைவில் மறுபதிப்பாக அவதாரம் எடுக்கும் வேளை நெருங்கிக் கொண்டிருக்கிறது - என்று நேரடியாகச் சொல்லியிருக்கலாம் எடிட்டர் சார்! கி.நா பாணியில் சொல்லி சிலபல விசிலடிப்புகளைக் குறைச்சுட்டீங்களே...

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : பூவைப் புஷ்பம் என்றும் சொல்லலாம் ; புய்ப்பம் என்றும் சொல்லலாம் தானே ?

      Delete
    2. நீங்க சொன்னா "புஸ்ஸூ.. புஸ்ஸூ"னு வேணாலும் சொல்லத் தயார் எடிட்டர் சார்! :D

      Delete
  85. சார், என்னென்னவோ பண்றீங்க. ஒரு டிடெக்டிவ் டைஜஸ்ட் ரொம்ப காலமா பென்டிங் சார். Absolute Classic - இல் முத்து நாயகர்களுக்கும் இடம் உண்டென்றால் ரிப் கிர்பி என்னுடைய choice.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார்...!
      டிடெக்டிவ் டைஜஸ்ட்டுடன் கூடவே மினி லயன் டைஜட்டும் ரொம்ப நாளாகவே பெண்டிங்கில் உள்ளது...!

      Delete
    2. @ FRIENDS : பெரும்பான்மைத் தேர்வுகள் என்னவாக இருக்குமென்பதை அறிந்து கொண்ட பின்னே திட்டமிடலைத் துவக்கிடவுளோம் !

      Delete
  86. ரிப்கிர்பி மற்றும் காரிகன்.

    ReplyDelete
  87. Q1: ABSOLUTE ALL TIME BEST - TEX WILLER
    Q2: TOP DETECTIVE - C.I.D. ROBIN
    Q3: ALL TIME BEST COMEDIYAN - LUCKY LUKE
    Q4: ALL TIME BEST ADVENTURER - THORGAL
    Q5: THE BEST IN THEIR CLASS - XIII
    Q6: ALL TIME BEST COWBOY - CAPTAIN TIGER.

    Thanks Jagath Kumar

    ReplyDelete
    Replies
    1. Aldrin Ramesh : Q6 : இந்தக் கேள்வி வினாத்தாளிலேயே (இப்போதைக்கு) இல்லையே !

      Delete
  88. சென்ற புத்தகவிழாவில், எல்லாரும் ஆசிரியரை சூழ்ந்து கொண்டு, மறுபதிப்புச் விண்ணப்பங்களை போட்ட போது, இன்னும் இந்த இரத்த கோட்டை, படலத்தையே சுத்தி சுத்தி வர்றீங்களே, கொஞ்சம் வெளியே வாங்க என்று சொன்ன ஆசிரியர், இன்று top gearஇல் nostalgic journey துவங்கியிருப்பது எங்களைப் போல வாசகர்களுக்கு ஜாலி

    ReplyDelete
    Replies
    1. //nostalgic journey துவங்கியிருப்பது எங்களைப் போல வாசகர்களுக்கு ஜாலி///---உண்மை ..உண்மை ..உண்மை

      Delete
    2. saravanan srinivasan : Given a choice - இன்னமும் எனது முதல் தேர்வு மறுபதிப்புகளாக இராதுதான் நண்பரே ! ஆனால் சில நேரங்களில், சில சூழல்கள், சில முடிவுகளைத் தவிர்க்க இயலாதவைகளாக ஆக்கிவிடுகின்ற போது - நமது விருப்பு-வெறுப்புகள் பின்செல்வது அவசியமாகிறது ! இதுவும் அத்தகையதொரு சூழல் தானே ?

      Delete
  89. 1. வேதாளர்
    2. ரிப் கிர்பி
    3. லக்கி லூக்
    4. கேப்டன் பிரின்ஸ்
    5. மாடஸ்டி பிளைசி
    6. Introduction of detective comics which suits matured audiences or TINTIN!

    Thanks.

    ReplyDelete
    Replies
    1. Senthil Kumar : TINTIN கதைகளை எட்டிப் பிடிக்க நமக்கின்னும் நிறைய உயரம் தேவை நண்பரே !

      Delete
    2. அப்போ வேதாளர். ரிப் கெர்பி
      கொண்டு வாங்க

      Delete
    3. "லட்சியம் - TINTIN
      நிச்சயம் - ரின்டின்கேன்" அப்படீன்னு வச்சுக்கிடுவோமா எடிட்டர் சார்? :P

      Delete
    4. Erode VIJAY : இப்படி வைத்துக் கொள்வோமே - "இன்றைக்கு ரின்டின்...நாளைக்கு டின்டின்!!"

      Delete
    5. // "இன்றைக்கு ரின்டின்...நாளைக்கு டின்டின்!///

      புரிந்துகொண்டேன் எடிட்டர் சார். செம! செம!

      Delete
  90. Hi 🙋 friends
    Hi 🙋 editor sir

    My answer for above qns
    1.Tex willer
    2.reporter johney
    3.luckyluke
    4.captain prince
    5.Modesty blaise
    6. Mysteries

    👋👯

    ReplyDelete
  91. 1. ABSOLUTE ALL TIME BEST…..டெக்ஸ்( அப்பத்தான் மறுபதிப்பு கிடைக்கும்..:-)


    2. TOP DETECTIVE….ரிப்போர்ட்டர் ஜானி

    3 .ALL TIME BEST COMEDIAN…..கிட் ஆர்ட்டின்& டாக்புல்( சிக்பில்& கோ)

    4.ADVENTURE….. கேப்டன் பிரின்ஸ்

    5.மாடஸ்டி

    6.புதிய சீரிஸ்.....ஹாரர்

    ரத்த படலம் புதியது........கமான்சேக்கு பதில் தாராளமாக போடலாம்

    மங்காவுக்கு .....ஒரு பெரிய எஸ்....

    ReplyDelete
    Replies
    1. selvam abirami : இ.மு.க.வின் சார்பாய் தலைவர் MV சாரும், துணைத் தலைவர் ராவணன் இனியன் சாரும் அரியலூருக்கு ஒரு ரசகுல்லா டப்பா ஆர்டர் செய்துள்ளதாய் FLIPKART தகவல் சொல்கிறது !

      Delete
  92. புத்தகங்களை ஒழுங்கா பாதிபேருக்காச்சும் வெள்ளியன்றே அனுப்பியிருக்கலாம். உங்க சர்ப்ரைஸ் என்னாங்கிறது பேஸ்புக்ல வெளியாயிடுச்சு. :-))) அதோடு, இன்றைக்குப்பார்த்து ஒரு வேலையாய் நெல்லைக்குக் கிளம்புகிறேன். திரும்ப புதன்கிழமையாகிடும். அதுவரை புத்தகங்களைக் காணாமல் காத்திருக்க வேண்டும். அவ்வ்வ்!!

    கேள்வி பதில் ஏரியா சீனியர்களுக்கானது. மீ நைஸாக எஸ்கேப்பாகி விடுகிறேன். பொதுவா ஏதாச்சும் சொல்லணுனா.. அப்சலூட் கிளாஸிக்ஸ் மீது இப்போதே ஆர்வம் பிறந்துவிட்டது எனக்கு. முதல் கேள்வி/ ஐந்தாம் கேள்விக்கான பதில், நமது ஹீரோக்கள் ஒவ்வொருவருமே தனித்துவமானவர்கள். அவர்களில் ஒருவரைக் குறிப்பிடுவதெல்லாம் ஆகிற கதையுல்ல, (நியாயமுமல்ல)! நீங்களாக பாத்து எது செய்தாலும் சரிதான். நண்பர்களும் கிளாஸிக்ஸ் தேர்வுக்கு முனைப்புடன் பங்கெடுப்பார்கள் என நம்புகிறேன். டிடெக்டிவ்ஸைத்தான் ரொம்ப மிஸ் பண்ணுவது போல தோன்றுகிறது. விரைவில் ஒரு டைஜஸ்ட் போடுவதற்கு ஆவனசெய்யுங்கள்!

    இரத்தப்படலம் 2 பாகங்கள் சேர்ந்து வருவதுதான் என் தேர்வு எனினும், ஒரிஜினலுக்கு ஈக்குவலாய் நாமும் ரிலீஸ் செய்வது முதல்முறையாக ஒரு மைல்கல்லாக இருக்குமென்பதால் ஒன்றாய்த் தெறிக்கவிடலாம்! என்பது என் கருத்து!

    ஏனோ மங்காவின் மீது மட்டும் என் ஆர்வம் சற்று குறைவே, ஆயினும் சோதனை முயற்சியாக அடுத்த ஆண்டில் நான்கைந்து ஸ்லாட்கள் ஒதுக்கிப் பார்க்க பச்சைக்கொடி உயர்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆதி தாமிரா : சஸ்பென்ஸ் ரொம்ப நேரம் நீடிக்காது என்பது தெரிந்துதான் அது பற்றிப் பெரிதாய் பில்டப்பெல்லாம் கொடுக்கவில்லை !! And பாதிப் பேருக்கு புக் கிடைக்க - மீதிப் பேர் கடுப்பாகி நிற்பதையும் நிறையத் தடவைகளாய்ப் பார்த்து விட்டதால் தான் அந்த தவறையும் இம்முறை செய்திட முனையவில்லை !

      நாங்களும் பாடம் படிப்போம்லே !! :-) :-)

      Delete
  93. நண்பர்களே....அந்த மே மாத சஸ்பென்ஸ் என்ன என்று பேஸ்புக்ல நம்ம தம்பி சம்பத் வெளியிட்டுள்ளார் . சூப்பர் ..அட்டாக்ஸ் ..தொடர்ந்து 100விசில் அடிக்கும் படங்கள் ...
    அது ...






    அது ...






    அது...










    மீண்டும் நம்முடைய பால்யங்களுக்கு ஒரு "மினி "விசிட் அடிக்க மீண்டும் வாய்ப்பு ...
    மிகப்பெரிய நன்றிகள் பல ஆசிரியர் சார் ...

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : கொஞ்ச நாட்களுக்கு முன்பாய் மண்டையில் தோன்றியது...சன்னமாய் ஒரு வடிவம் கொடுத்துப் பார்த்துள்ளோம் !

      Delete
    2. ஆசிரியர் என்ன சர்ப்ரைஸ் வைத்திருக்கிறார் என்று பொக்கிஷம் கையில் வந்து சேர்கிற வரை தோழர்கள் அதை பற்றி சொல்லாமல் இருந்தால் சரி. அப்ப தானே ஆசிரியர் வைத்த சர்ப்ரைஸ்க்கு ஒரு அர்த்தம் கிடைக்கும். ஆசிரியரே தனது பதிவில் அதை குறிப்பிடமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். விடுமுறை நாளான இன்று கூட பொறுப்பாய் தனது கடமையை செய்யும் கூரியர் சர்வீஸ்கள் வாழ்க.

      Delete
  94. இதுவரை மங்கா கதைகள் எதையும் நான் படித்ததில்லை என்பதால் அதைப் பற்றிச் சொல்லத் தெரியவில்லை. முயற்சி செய்வதில் தவறுமில்லை.

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : ஒரு ரொமான்ஸ் MANGA ?

      தலீவர் பீகார் பக்கமாய் பஸ் பிடித்து ஓடும் படங்கள் ஒரு நூறு !

      Delete
    2. ஹா ஹா! தலீவருக்கு தாரமங்கலத்து டவுன் பஸ்ஸே இன்னும் பிடிக்கம் தெரியாது சார்... பீகாராவது?! :D

      Delete
  95. ஆசிரியர் அவர்களுக்கு ஒரு பலமான கோரிக்கை ......சூப்பர் ஸ்டார் டெக்ஸ் ஒவ்வொரு முறையும் கலக்கி கொண்டு வந்தாலும் மறுபதிப்பு என்ற நிலை வந்தால் மட்டும் அவரின் தோற்றம் எடுபடாமல போய் விடும் அபாய தோற்றமே நிகழ்கிறது ...தலைவாங்கி குரங்கு ஆகட்டும் ..கார்சனின் கடந்த காலம் ஆகட்டும் இரண்டுமே சித்திர அளவுகளில் ...மாறுபட்டு ஒரு முழு திருப்தியை அளிக்க தவறி விடுகிறார் ...எனவே அடுத்த மாதம் வர இருக்கும் பழி வாங்கும் புயல் வண்ண மறுபதிப்பு இக்குறைகள் ஏதும் இல்லா அளவில் மற்ற மறுபதிப்பு நாயகர்களை போல வெற்றி கரமாக. கொண்டு வர இப்போதே வேண்டி கொள்கிறேன் சார் ....

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : கவலைப்படேல் !

      Delete
    2. செமத்தியான வேண்டுதல் தலீவரே! எடிட்டரும் உறுதி கொடுத்திருப்பதால்... உஷ் அப்பாடி!

      Delete
  96. ஆல் டைம் பெஸ்ட் ஹீரோ ...
    டெக்ஸ்

    டாப் டிடெக்டிவ் ஹீரோ
    ரிப்கெர்பி...

    ஆல் டைம் பெஸ்ட் காமெடியன்
    சிக் பில்.

    பெஸ்ட் அட்வென்ச்சர் ஹீரோ ...
    பிரின்ஸ்

    எதிலுமே பிரிக்க முடியாத பெஸ்ட் டாப் நாயகன்
    லார்கோ வின்ச் ...

    புது முயற்சி..
    சூப்பர் hero

    ReplyDelete
    Replies
    1. SIV : அட....ஜென்டில்மேன் டிடெக்டிவ் -க்கு "ALL TIME பெஸ்ட்" பட்டமா ? உங்களைப் போல இன்னும் நிறைய நண்பர்கள் இருந்தால் என் மேஜையினுள் துயிலும் ரிப் கதைகளுக்கு சடுதியில் விடுதலை சாத்தியமாகும் !!

      Delete
    2. எடிட்டர் சார் ரிப் கிர்பி, காரிகன், சார்லி, ஜார்ஜ் இவர்களையெல்லாம் மறக்க முடியுமா சார். சரியான சந்தர்ப்பம் அமையும்போது இவர்களையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள் சார்.

      Delete
    3. AT Rajan : நான் தயார் சார் ! ரிப் கிர்பி...காரிகன்...விங் கமாண்டர் ஜார்ஜ் கதைகளுக்குள் முடங்கிக் கிடக்கும் தொகை கணிசமானதே ! குறைந்தபட்சம் மூன்றிலும் சேர்த்து நம்மிடம் தூங்கிக் கிடக்கும் (புதுக்) கதைகளின் எண்ணிக்கை ஒரு டஜனுக்குக் குறையாது !

      Delete
  97. 1. ஆர்ச்சி
    2. ரிப் கிர்பி
    3. மதியில்லா மந்திரி
    4. கேப்டன் பிரின்ஸ்
    5. XIII & டேஞ்சர் டயபாலிக்
    6. Thriller & Detective stories

    ReplyDelete
  98. ///
    1.இரத்தப் படலம் இறுதிப் பாகத்தின் டிஜிட்டல் பைல்கள் நமக்குக்கிடைத்து விட்டன !! மிரளச் செய்யும் artwork - ஓவியர் "வூடு கட்டி அடித்திருக்கிறார் " என்று தான் சொல்ல வேண்டும் ! ஜூன் மாதம் அங்கே இந்த ஆல்பம் வெளியாகும் அதே வேளைதனில் நாமும் தெறிக்க விடுவதாயின் - கமான்சேக்குப் பதிலாய் "பெல்ஜிய சஞ்சய் ராமசாமியை" களமிறக்கிடலாம் ! What say all ?///

    XIIIஐ சுடச்சுட களமிறக்குவது சந்தோசமான விசயம்தான் எடிட்டர் சார். ஆனால் அதற்காக கமான்சே'யை பலிகொடுப்பதை மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. கமான்சேக்கு சேதாரமில்லாத வேறு மார்க்கம் ஏதாவது இருந்தால் யோசியுங்களேன் ப்ளீஸ்?

    ReplyDelete
  99. அ..அப்புறம் எடிட்டர் சார்... உலகையே திரும்பிப் பார்க்க வைத்த எங்களது 'ஆப்பரேசன் இ.பி.பா'வை நீங்க இன்னும் மறக்கலைதானே?

    ReplyDelete