Powered By Blogger

Sunday, May 22, 2016

பசித்துப் புசிப்போமா ?

நண்பர்களே,
            
வணக்கம். உங்களில் எத்தனை பேர் வட இந்தியத் திருமணங்களுக்குச் சென்றுள்ளீர்களோ தெரியாது - ஆனால் அதற்கொரு வாய்ப்புக் கிடைத்தால் தவறவே விட்டு விடாதீர்கள் என்று மட்டும் சொல்லிடுவேன் ! அன்பான வரவேற்போடு தொடங்கும் உங்களது அனுபவம்- அடுத்த ஒரு மணி நேரத்திற்காவது இந்திய (சைவ) உணவுகளின் ஒரு திருவிழாவோடு அதகளமாகிடுவது சர்வ நிச்சயம்! "கலர் கலரான இனிப்புகள்... ஹைய்யோ... அதென்ன ரசகுல்லாவா? அட.... இந்த பர்பி வகைகளை ருசி பார்க்கலாம்... அங்கே குவிந்திருப்பது பேல் பூரி... பானி பூரியா?... ஷப்பா... விதவிதமான பரோட்டாக்கள்!... இது பிரியாணியா- ப்ரைடு ரைஸா? ...ஏவ்வ்வ்... மறுபடியும் ஸ்வீட்களா?" என்று உங்கள் கண்களும்; நாக்கின் taste buds களும்; சகலத்தையும் ஸ்வாஹா செய்து கொள்ளப் போகும் வயிறும் குதூகலமான பிசியில் இருப்பதை நான் சிலபல முறைகள் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்! கடந்த ஓரிரு வாரங்களாக நமது அலுவலகமே ஒரு மினி வட இந்தியத் திருமண மண்டபமாகி விட்டது போலவும்; வீட்டிலுள்ள எனது அலுவல் அறையானது விருந்து மேஜையாக உருமாறி விட்டது போலவும்... ‘அவுக்... அவுக்‘ என வாய் நிறைய எதையாவது நான் ரைஸ்மில் போல அரைத்துக் கொண்டேயிருப்பது போலவும் ஒரு ஃபீலிங்கு! என்ன ஒரே வித்தியாசம்- அந்த நிஜக் கல்யாண வீட்டில் லட்சணமான ஒரேயொரு வட இந்திய மாப்பிள்ளை ஒரேயொரு சொங்கிக் குதிரையில் ‘என்ட்ரி‘ ஆவார்! ஆனால் எனது கனவுலகிலோ மந்தை மந்தையாய் குதிரைகளில் மந்தை மந்தையாய் குளிக்காத ஆசாமிகள் அதகளம் செய்து வருகிறார்கள்! "ஹைய்யோ டெக்ஸ் வில்லர் பாதுஷாவா? தித்திக்கிறதே... அவுக்... அவுக்‘! அடடே... கமான்சே பேல் பூரியா...? பின்னிப் பெடல் எடுக்கிறது... ; ‘அதென்ன ஜுலியா ஆலு பரோட்டாவா...? awesome! ; ஹை...! ரின் டின் கேன் பாயாசமா....? உர்ர்ர்ர்ர்...; ‘அட்ரா சக்கை... அட்ரா சக்கை... டைகர் பிரியாணியைப் பார்த்தாலே நாக்கு நமநமக்கிறதே...; ‘இதென்னாது... டிசைன் டிசைனாய் பீ்டாக்கள்? ஓ... முத்து மினி மறுபதிப்புகளா? "என்று நித்தமும் நான் விடும் ஏப்பச் சத்தங்கள் ஏகாந்தமாய் பிராந்தியத்தை நிறைத்து வருகின்றன!

தெரிந்தோ- தெரியாமலோ; வெவ்வேறு தருணங்களில் திட்டமிடப்பட்ட சில பல additional இதழ்கள் இந்த ஜுன் மாதத்திலேயே சென்னைப் புத்தக விழாவின் பெயரைச் சொல்லிச் சங்கமித்திருப்பதால் தான் இந்த non-stop விருந்து அவசியமாகிறது என்பதை நாமறிவோம் தானே? குதூகலம் ஒரு பக்கமிருக்க, காலெண்டரில் தேதிகளைக் கிழிக்கும் ஒவ்வொரு காலையிலும் வயிற்றுக்குள் ஒரு பட்டாம்பூச்சிப் பட்டாளமே ‘நின்னுக் கோரி வரணும்... வரணும்!!‘ என்று ராகம் இசைப்பதை உணர முடிகின்றது! தாண்டிச் செல்லும் ஒவ்வொரு நாளிலும் நாம் பூர்த்தி செய்யும் பணிகள் ஒரு சதவிகிதமெனில்- புதிதாய் துளிர் விடும் பணிகள் ஒரு வண்டி! 

ஜுன் மாத ரெகுலர் இதழான கமான்சேவின் “நெஞ்சில் ஒரு நட்சத்திரம்” இதழில் துவங்குகிறது இந்தக் குட்டிக் கர்ணப் படலம்! சில பல மாதங்களுக்கு முன்பாகவே இதற்கான தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தது ; in fact 2015-ன் இறுதி முதலே என் மேஜையில் துயில் பயின்று வரும் ஆல்பமிது! சென்றாண்டில் நாம் இங்கும், அங்குமாய் நடத்தியிருந்த மொழிபெயர்ப்பாளர் தேடலின் பலனாய் திறமையானதொரு புது வரவு நமக்குக் கிட்டியிருந்தார். ஏற்கனவே நாம் பிரசுரித்து முடித்திருந்த சில இதழ்களின் ஆங்கில ஸ்கிரிப்ட்களை அவரிடம் ஒப்படைத்து- அதன் மீது மெது மெதுவாய் பயிற்சி எடுக்கச் செய்து அவரைத் தயார்ப்படுத்திட முனைந்தோம். ‘ஓ.கே.‘ என்று எனக்குத் தோன்றிய போது- புதியதொரு ஆல்பத்தின் பணிகளைத் தந்திட நான் நினைத்த வேளையில் என் கண்ணில் பட்ட முதல் ஸ்கிரிப்ட் இந்த “நெஞ்சில் ஒரு நட்சத்திரம்” தான்! பிரெஞ்சிலிருந்து நமது மொழிபெயர்ப்பாளர் ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்து அனுப்பியிருந்த பக்கங்களை  அப்படியே நமது டீமின் புது அங்கத்தினருக்கு அனுப்பி விட்டு அதைப் பற்றி மறந்தே போய் விட்டேன். சில வார அவகாசத்திற்குப் பின்பாய் அந்தத் தமிழாக்கம் நம்மை எட்டிட, மேலோட்டமாய் சில பக்கங்களைப் புரட்டி விட்டு- ‘not bad at all’ என்றபடிக்கு மைதீனிடம் தந்து விட்டு அப்போதைய பணிகளுக்குள் மூழ்கி விட்டேன்! And ஜுன் மாதம் இந்த இதழின் ரிலீஸ் தேதி என்றான பின்னே நம்மவர்கள் ‘மள மள‘ வென்று டைப்செட்டிங் செய்து முடித்து என் மேஜையில் அடுக்கி விட்டுப் போய் விட்டனர்! “சாத்தானின் உள்ளங்கையில்...” இந்தாண்டின் better இதழ்களுள் ஒன்று என்ற நிலையில் நானும் அதன் அடுத்த அத்தியாயமான இந்தக் கதைக்குள்ளே புகுந்திடும் ஆர்வத்தில்- சென்ற ஞாயிறன்று வீட்டுக்குத் தூக்கிப் போயிருந்தேன்! ஆனால் அன்றைய பொழுதின் பெரும் பகுதியை ஜுலியாவோடு (அட... நம் க்ரைம் டிடெக்டிவ் மேடமோடு தான்!!) செலவிட்டான பின்னே, கமான்சேக்குள் திங்கள் இரவு தான் தலை நுழைக்க நேரம் கிட்டியது! ஆங்கில ஸ்கிரிப்டை ஒரு பக்கம் வைத்துக் கொண்டே, தமிழ் வார்ப்பை எடிட் செய்ய முயன்ற போதுதான் என் பற்கள் தாளம் போடத் தொடங்கின! வசனங்கள் சுலப நடையில் அழகாய், எளிமையாய் இருந்த போதிலும்- ஆங்காங்கே பிசிறடிப்பது போலத் தோன்றிட; பக்கங்களைப் புரட்டப் புரட்ட எனது நெருடல்கள் அதிகமாயின! சிக்கல் எழுந்துள்ளது எங்கே? என்று நிதானமாய் அலசிட முனைந்த போது தான் இந்தக் கதையின் ஒரிஜினல் ஸ்கிரிப்ட் எத்தனை அசாத்திய வீரியம் வாய்ந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது! நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் அனுப்பியிருந்த ஆங்கில ஸ்கிரிப்டை மட்டும் வைத்துக் கொண்டு படங்களோடு படிக்க முனைந்த போது ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டுவதற்குள் நாக்குத் தொங்கிப் போய் விட்டது! நாயகன் ரெட் டஸ்ட் ஒரு அழுத்தமான ஆசாமி; அவனது வரிகள் எப்போதுமே சற்றே கரடுமுரடாய்; ஏளனம் தொனிக்கும் பாணியில் இருப்பது நாமறிந்ததே! ஆனால் இம்முறையோ- ரெட் டஸ்டைப் போலவே அரை டஜன் rough & tough ஆசாமிகள் ஓரணியாகிக் களமிறங்குவது தான் கதையோட்டம் என்பதால் கதை நெடுகிலும் ஒவ்வொருத்தனின் பேச்சிலும் கதாசிரியர் கொணர்ந்திருக்கும் தெனாவட்டு... நையாண்டி... அழுத்தம் சொல்லி மாளா ரகம்! 

And பிரெஞ்சின் பொதுவான பாணியே இது தானா ? அல்லது கதாசிரியர் க்ரெக் இந்தத் தொடருக்கென பயன்படுத்தியுள்ள பேச்சுப் பாணி இதுவா? என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை ; ஆனால் XIII-ன் இடியாப்ப ஸ்கிரிப்டைக் கூட ‘குழந்தைப் புள்ளை‘ சமாச்சாரமாக்கும் விதமாய் இந்தக் கதையின் ஒரிஜினல் வசன நடை ஆழமோ ஆழம்! சில இடங்களில் சுத்தமாய் எதுவுமே புரியாது போக- ‘பெக்கே பெக்கே‘ என்று திருட்டு முழி முழித்துக் கொண்டே மண்டையைப் பிறாண்டினால்- மெதுமெதுவாய் அங்கே கதாசிரியர் சொல்ல வரும் விஷயம் புரியத் தொடங்கியது! ‘ஆண்டவா! இப்படியொரு கதையை ஒரு புது மொழிபெயர்ப்பாளருக்கு அனுப்பி வைத்து அவரை நோகச் செய்த என் மடைமையை என்னவென்பது?! என்று என்னை நானே தலையில் குட்டிக் கொள்ளத்தான் தோன்றியது! சிற்சிறுப் பகுதிகளை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும்; பாக்கி எல்லாமே புதுசாய் எழுதப்பட வேண்டும்! என்பது உறைக்கத் தொடங்க- செவ்வாய் இரவு முதலாய் இந்த “Operation ஆரம்பம் முதல்” துவங்கியுள்ளது! ரின் டின் கேன் போன்ற ‘ஜுஜுலிப்பா‘ கதைகளைக் கையில் வைத்துக் கொண்டு; இது மாதிரியான கரடுமுரடான கதைகளை சக மொழிபெயர்ப்பாளரிடம் தள்ளி விட முயன்ற எனது ‘கெட்டிக்காரத்தனம்‘ என்னைப் பார்த்துப் பல்லை இளிப்பது போல்பட்டது ! இறுதி 15 பக்கப் பணிகள் மட்டுமே பாக்கியுள்ள நிலையில்- மேல் மூச்சு, கீழ் மூச்சு, சைடு மூச்சு எல்லாமே ஒட்டு மொத்தமாய் வாங்குவதால், ஒரு ‘பிரேக்‘ எடுத்துக் கொண்டு இந்த வாரப் பதிவைத் தயார் செய்யத் தண்டவாளம் மாறியுள்ளேன்! பேனா பிடிப்பதில் நான் பெரிய கில்லாடியென்று ஊருக்குச் சொல்வதல்ல என் நோக்கம் ; மாறாக ஆனமட்டிலும் முயற்சித்துள்ள பின்பாகவும் இந்த ஆல்பத்தில் ஏதேனும் தவறுகள் தென்பட்டால் அதன் பொருட்டு முன்ஜாமீன் வாங்குவதே இந்த விளக்கப்படலத்தின் பின்னணி! என்ன தான் தலைகீழாய் நின்று ‘மடக் மடக்‘ கென்று தண்ணீரை லிட்டர் லிட்டராய் குடித்தாலும் ஒரு அன்னிய மொழியை அதன் தாய்மொழிப் பேச்சாளரால் மட்டுமே முழுமையாய் கிரகித்துக் கொள்ள முடியுமென்பதை நடுமண்டையில் ஒரு போடு போட்டு எனக்கு ஞாபகப்படுத்தியுள்ள ஆல்பமிது! இயன்ற சகலத்தையும் செய்துள்ளோம் folks; சன்னமாய் தவறுகள் அதை மீறியும் உட்புகுந்திருப்பின் அதன் பொருட்டு உங்கள் புரிதலை கோரிடுகிறேன்!

இரவெல்லாம் இந்த ‘ரெட் டஸ்ட்‘ காலட்சேபம்  தொடர்ந்திட- பகல்களில் ‘தல‘ கச்சேரி தான்‘! நமது ஆதர்ஷ நாயகரின் அதகள வெற்றிக்குக் காரணமென்னவென்பதை இதை விடவும் ‘பளிச்‘சென்று யாரும் எனக்குப் புரியச் செய்திட முடியாதெனறு நினைக்கிறேன்! “பழி வாங்கும் புயல்” மறுபதிப்புதான் என்ற போதிலும்; ஏதோவொரு மாமாங்கத்து நினைவுகளாய் மட்டுமே எனக்குள் தொடர்ந்து வந்தன! And இந்த இதழின் proof-reading பணிகளை நண்பரொருவர் மேற்கொண்டிருந்ததால்- மேலோட்டமாய் ஒரு பார்வையை பதித்தான பின்னே இதற்கு ‘பை... பை‘ சொல்லி விடலாம் என்று நினைத்திருந்தேன்! ஆனால் லேசாகப் பக்கங்களைப் புரட்டப் புரட்ட- நினைவுகள் தடதடக்கத் தொடங்கின! And இரவுக் கழுகாரின் ராஜதந்திர அவதாரத்திற்கு அட்டகாசமானதொரு உதாரணமான இந்தக் கதையின் முதல் 10 பக்கங்களைப் படிக்க ஆரம்பித்த பின்பாக பிரளயமே நேர்ந்தாலும் மிச்சத்தைப் படிக்காது விட முடியாது என்பதை புரிந்து கொண்டேன்! 192 பக்கங்களையும் ‘ஏக் தம்மில்‘ படிக்க ; ஆங்காங்கே திருத்தங்கள் செய்ய என்று அட்டகாசமாய் பொழுது போனது வியாழன் காலையில்! நேர் கோட்டில் செல்லும் கதை; மூக்கைச் சுற்றி மீசையை வருடும் பாணிகள் இங்கே கிடையாது; பற்களை ஆடச் செய்யும் வசன அழுத்தங்களா? –no way! என்ற பாணி இரவுக் கழுகாருக்கு அடையாளமாக இருக்கும் வரை- ‘நீ கலக்கு தல!‘ என்று மட்டும் தான் சொல்ல முடிகிறது! ஒரு பிரான்கோ- பெல்ஜியக் குதிரைவீரனுக்கும், இந்த இத்தாலியக் கௌபாய்க்கும் களங்கள் ஒன்றேயாக இருந்தாலும்- தாக்கங்கள் தான் எத்தனை மாறுபடுகின்றன? Oh boy!! 

கொஞ்ச மாதங்களாகவே டெக்ஸ் & டீமைக் கறுப்பு-வெள்ளையிலேயே பார்த்து விட்டு- இம்மாதம் வண்ணத்தில் பார்க்கும் வேளையில் ‘ஜிவ்‘வென்று ஒரு உணர்வு மேலோங்குவதை இப்போதைக்கு நான் அனுபவித்து வருகிறேன்; இந்த “ஜிலீரை” இன்னும் 2 வாரங்களில் நீங்களும் ரசிப்பீர்களென்பது உறுதி! And இதோ “பழி வாங்கும் புயலுக்கான” அட்டைப்பட preview! 

As always, இது இன்னமும் சிற்சிறு நகாசு வேலைகளுக்கு உட்பட்டதே என்பதால் நீங்கள் பார்த்திடப் போகும் இறுதி வடிவம் இதுவே என்று நான் சொல்ல மாட்டேன்! அரசியல் கூட்டணிகள் தேர்தலில் மண்ணைக் கவ்வியிருந்தாலும்- நமது creative கூட்டணி தோற்காது என்பது எங்களது திட நம்பிக்கை! இம்முறையும் நமது ஓவியர் மாலையப்பனின் சித்திரத்திற்கு, டிசைனர் பொன்னன் வர்ணமூட்டியுள்ளார்! டெக்ஸின் அந்த கம்பீரத்தை நம்மவர் அழகாய் கொண்டு வந்துள்ளதாய் எனக்குத் தோன்றியது! What say folks? ‘தல‘ புராணத்திலிருந்து topic மாறும் முன்பாக- குட்டியானதொரு சேதி மட்டும்! 2017-ன் ABSOLUTE CLASSICS வரிசையில் நமது டாப் ஹீரோவின் வண்ண அதளகத்தின் முதல் சாகஸத்தைத் தேர்வு செய்தாகி விட்டோம்! அது என்னவாகயிருக்குமென்ற யூகங்களை உங்களிடமே விட்டு விடுகிறேனே!
ஒரு இத்தாலிய சூப்பர் ஸ்டாரின் பக்கமிருந்து இன்னொரு இத்தாலிய நாயகி பக்கமாய் பார்வையைத் திருப்புவோமா? “ஜுலியா” என்ற பெயரைக் கேட்டவுடன் சில பல நண்பர்களின் வயிறுகளில் நயம் புளி ஒரு கிலோவாவது கரைவது நானறியா விஷயமல்ல! ஆனால் கிட்டத்தட்ட 180+ சாகஸங்கள் கொண்டதொரு நாயகிக்கு ஒரே வாய்ப்போடு தீர்ப்பெழுதுவது நிச்சயமாய் அபத்தம் என்பதில் என்னுள் மாற்றுக் கருத்தில்லை. “நின்று போன நிமிடங்கள்” இம்மாதத்து black & white ஆல்பம்! And trust me guys– எது மாதிரியும் இல்லாததொரு terrific கதையிது! துவங்கிய முதல் பத்துப் பக்கங்களுக்குள்ளாகவே டாப் கியரை எட்டிப் பிடிக்கும் கதை- க்ளைமேக்ஸ் வரையிலும் அதே உச்சத்திலேயே பயணிப்பதை சீக்கிரமே பார்த்திடப் போகிறீர்கள்! தொடரும் காலங்களில், இந்த அம்மணி நமது அட்டவணையில் ஒரு ரெகுலராக அமைந்திடப் போவது உறுதியென்று எனக்கொரு பட்சி சொல்கிறது! Julia is here to stay!

நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் ஒரு இல்லத்தரசி; தம் பணிகளைத் தாண்டி காமிக்ஸ் கதைகளோடு பெரியதொரு பரிச்சயமில்லாதவர்! ஆனால் அவரது பட்டியலில் ‘டாப்‘ கதைகளெனில்- அது கிட்-ஆர்டின் கதைகளும்; நமது நாலுகால் நான்சென்ஸ் ரின்டின் கேனின் கதைகளுமே! இது வரையிலும் 3 ரின் டின் கேன் கதைகளை மொழிபெயர்த்துள்ளவர் – அண்ணாரின் தீவிர ரசிகையாகி விட்டார்! இதோ மினுமினுக்கும் வண்ணத்தில் அச்சாகித் தயாராகி நிற்கும் ரி.டி.கே. வின் ஒரு சின்ன preview!
அச்சாகி பைண்டிங் சென்றிருக்கும் இதழ்களின் பட்டியலில்- 6x முத்து மினி காமிக்ஸ் பிரதிகளும் சேரும்! ‘ஒட்டுமொத்தமாய் அத்தனை இதழ்களும் அடுத்த 10 நாட்களுக்குள் வேண்டும் சாமி‘- என்ற வேண்டுகோளோடு பைண்டிங் நண்பரைத் தயார் செய்து வருகிறோம்!

கல்யாண வீட்டு அலங்காரங்களைப் பற்றி; சமையலைப் பற்றி; கச்சேரியைப் பற்றி; கூட்டத்தைப் பற்றியெல்லாம் பேசி விட்டு- மாப்பிள்ளையைப் பற்றிப் பேசாமல் போனால் சாமி கண்ணைக் குத்துகிறாரோ இல்லையோ- தங்கத் தலைவனின் தொண்டர்படை அந்தப் பணியைச் செய்து விடாதா? So லேட்டாக வந்தாலும்- அந்த topic-ன் லேட்டஸ்ட் தகவல்கள் இதோ! “என் பெயர் டைகர்” வண்ணப் பிரதிகளின் அச்சுப் பணிகள் பூரணமாய் முடிந்து விட்டன! அட்டைப்படமும் தயார் என்பதால் தொடரும் நாட்களில் மாதிரிப் பிரதி என் கைகளை எட்டி விடும்! நிறையவே Wild West-ன் பின்னணிகளை இணைத்து இழையோடும் கதையிது என்பதால்- அவை தொடர்பான குறிப்புகள்; ஃபோட்டோக்கள் என நிறையவே தயார் செய்துள்ளோம்! And ‘கௌ-பாய் காதல் ஏனோ?‘ என்ற கேள்விக்கான நம்மவர்களின் பதில்கள் இதழில் இடம்பிடிக்கின்றன! கார்ட்டூன்கள்; மொக்கையான filler pages என இதழின் mood-ஐ மட்டுப்படுத்தும் சமாச்சாரங்கள் இதனில் கிடையாதென்பதை முன்கூட்டியே சொல்வி விடுகிறேன் folks! Of course சின்னதொரு அறிமுக காமிக்ஸ் டைம் பக்கம் உண்டு தான்; அது நீங்கலாய் பாக்கிக் பக்கங்கள் எல்லாமே தங்கத் தலைவனுக்கும்; அவரது இந்த சாகஸம் சார்ந்த பின்னணிகளுக்கும்  மாத்திரமே!

அப்புறம் “எ.பெ.டை”யின் black & white பதிப்பானது grey scale-ல் வெளிவரயிருப்பதாய் நான் சென்ற வாரம் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்! முதன் முறையாக ஒரு வாரம் முழுவதுமாய் பதிவு பக்கமாய்த் தலைவைத்தே படுக்க நேரமில்லை என்பதால் அந்த அறிவிப்பை உங்களில் யாரேனும் கவனித்தீர்களா-இல்லையா ? என்பதைக் கூட நான் தெரிந்திருக்கவில்லை ; ஆனால் அந்தத் திட்டத்தில் சின்னதொரு மாற்றம்! திட்டமிட்டபடியே greyscale-ல் அச்சும் துவக்கினோம்; ரொம்பவே அழகாய் தோன்றவும் செய்தது தான்! ஆனால் பின்பக்கம் அச்சிடும் போது- கறுப்பின் அடர்த்தி காரணமாய் முன்பக்கத்துச் சித்திரங்கள் பின்னே ரொம்பவே தெரிந்தது போலப்பட்டது ! அதிலும், கதையின் நிறையப் பகுதிகள் முழு இருளில் நடைபெறுவது போல் இருப்பதால் அங்கெல்லாமே கருப்பின் depth ரொம்பவே மறுபக்கம் தெரியத் தொடங்கியது !  ஏற்கனவே ”பேப்பர் சரியில்லை; மை சரியில்லை” என்ற ரீதியில் சின்னதாகக் குறைபாடுகள் காதில் விழுந்து வரும் தருணத்தில்- இந்த விசேஷப் பதிப்பில் அதற்கொரு இடம் தந்தது போலாகி விடுமே என்று கவலை தொற்றிக் கொள்ள- அச்சான பக்கங்களைத் தூக்கிக் கடாசி விட்டு நார்மலான black & white லைன் டிராயிங்களோடு புதிதாய் அச்சிடத் தொடங்குகிறோம்! வெள்ளை வெளேர் பின்னணி நிறையப் பக்கங்களில் இருந்தாலும்- அது தவிர்க்க இயலா விஷயமே என்றபடிக்கு பணிகளில் இறங்குகிறோம்! என்றைக்கேனும் கனந்த art paper-ல் கறுப்பு & வெள்ளை இதழொன்று வெளியிட சாத்தியமாகிடும் எனில்- அதனில் இந்த greyscale effects கொண்ட பக்கங்களை அச்சிட்டுப் பார்க்கலாம்! நிஜமாகவே b&w ன் வெறுமையை மறக்கச் செய்யும் விதத்தில் ரொம்பவே வித்தியாசமாய் இந்த பாணி உள்ளது! 
Artist Giraud ...!!
தொடரும் ஒன்றிரண்டு நாட்களில் “என் பெயர் டைகர்” b&w இதழும் அச்சாகி முடிந்திடும் போது- ஜுன் மாதத்து பரீட்சையினில் முக்கால் பங்கைத் தாண்டியிருப்போம்! ஆக்டோபஸின் கரங்களை விட எனது விரல்கள் அனைத்தையும் cross பண்ணி வைத்துக் காத்திருக்கிறேன்- சொதப்பல்களின்றி நமது திட்டமிடல்கள் அரங்கேறிட வேண்டுமென்ற வேண்டுதலில் ! சென்னைப் புத்தக விழாவின் ஸ்டால் ஒதுக்கீடுகள் பற்றிய விபரம் நாளைய தினமே (மே 23) தெரிய வருமென்பதால் ஆவலாய்க் காத்திருப்போம் சேதியறிய!

சில நாட்களுக்கு முன்பாய் சிவகாசி வந்திருந்த சென்னை நண்பரொருவர் ரொம்பவெ சுவராஸ்யமாய் பேசிக் கொண்டிருந்த போது- "வாரம் 2 பதிவு போடுங்கள் !" என்ற கோரிக்கையை வைத்தார்! ஒரு பதிவுக்கே தள்ளாட்டம் காணும் நிலையில்- வாரம் 2 எனில் சட்னியாகிப் போவோம் என்பதை அவரிடம் சொல்லி வைத்தேன்! சென்ற ஞாயிறு பதிவுக்குள் பகலில் சிறிது நேரம் உலவித் திரிந்ததற்குப் பின்பாக பெரியதொரு ஈடுபாடு காட்டவே இயலாமல் போய் விட்டது! Sorry folks! அங்கே ஏதேனும் முக்கிய கேள்விகள் எழுப்பியிருக்கும் பட்சத்தில் சிரமம் பாராது இங்கே repeat செய்திடுங்களேன்- இயன்றளவுக்கு பதில் தர முயற்சிக்கிறேன்?!

குவிந்து கிடக்கும் பணிகளுக்கு மத்தியில்- புதிய சில கிராபிக் நாவல்கள் பற்றிய திறனாய்வுகள்; கதைச் சுருக்கங்களை ஜுனியர் எடிட்டர் தயார் செய்து என் மேஜையில் வைத்துள்ளார். மறக்காமல் அதன் பக்கமாகவும் பார்வையினை ஓடவிட வேண்டும் என்ற reminder செட் பண்ணிக் கொண்டே கமான்சேவின் எஞ்சியுள்ள 15 பக்கப் பணிகளுக்குள்  மறுபிரவேசம் செய்திடப் புறப்படுகிறேன்! பல்சுவை மெகா விருந்தொன்று தயாராகி வருகிறதென்பதால்- ஒரு ‘ஃபுல் கட்டு‘ கட்டும் திறனோடு தயாராகிக் கொள்ளுங்கள் folks! ஜுனில் துவங்கும் இந்தத் திருவிழா- தொடரும் மாதங்களிலும் 32-வது லயன் ஆண்டுமலர் ; "ஈரோட்டில் இத்தாலி" என்றெல்லாம்  உச்சத்திலேயே தொடரக் காத்திருப்பதால்- எங்களுக்கு இப்போதைய தேவை உங்களது பகாசுர காமிக்ஸ் பசி மட்டுமே! வயிற்றைச்  சுத்தம் செய்து கொண்டு get ready all !!! மீண்டும் சந்திப்போம்! Savor the Sunday !!

P.S : ரொம்ப நாள் ஆச்சல்லவா ? - இதோ உங்கள் ஆதர்ஷ ஜோடிக்கொரு caption தான் எழுதுங்களேன் - ஆளுக்கு மூன்றே வாய்ப்புகள் எடுத்துக் கொண்டு ! பரிசு : முத்து காமிக்ஸ் 1-50 பட்டியலின் ஏதேனும் ஒரு vintage இதழ் !  
நண்பர்களே, ஜூன் 1-13 வரையிலும் சென்னைத் தீவுத் திடலில் நடைபெறவிருக்கும் சென்னைப் புத்தக விழாவினில் நமது ஸ்டால் எண்: 159.
"முத்து காமிக்ஸ்" என்ற பெயரிலேயே இம்முறை நமது அரங்கு அமைந்திருக்கும் !
குடும்பத்துடன் வருகை தாருங்களேன் all ?

இடம்: 
தீவுத் திடல்

அண்ணா சாலை,
பார்க் டவுன்,
சென்னை – 600 003
நாள்: 01.06.2016 முதல் 13.06.2016
நேரம்:
விடுமுறை நாட்களில்: காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
வேலை நாட்களில்: மதியம் 2:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை


377 comments:

 1. Replies
  1. அடடே இட்ஸ் யு சகோதரரே ;)

   Delete
 2. பழி வாங்கும் புயலை கலரில் பார்பதற்கு கொள்ளை அழகாக இருக்கிறது :-))

  ReplyDelete
 3. Replies
  1. COMICSPRIYAN@SALEM.AMARNATH : கறுப்பு-வெள்ளையிலேயே வாய்ப்பின்றி உலவி வரும் இந்த நாயகர்களை வர்ணத்தில் எங்கே நுழைக்க இயலும் ? Nopes !

   Delete
 4. டெக்ஸ் : உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கெட்டுது கார்சன்

  கார்சன் :கெட்டும் பா கெட்டும் நி மட்டும் கல்யாணம் குழந்தை எல்லாம் பார்துட்ட வாழ்நாள் முழுதும் உன் குட அலைந்ததுக்கு தாடி நரைத்து முதுகு வலி வந்தது தன் மிச்சம்

  ReplyDelete
 5. வணக்கம் சார் ...
  அனைவரும் ஆவலுடன் எதிர்பாரத்து இருந்த சென்னை புத்தக விழா பற்றிய செய்திகளை காணோம் ????
  ஸ்டால் உறுதியானதா ???
  நீங்கள் வரும் நாட்கள் எவை???
  சந்திக்க புத்தகங்கள் வெளியிட அங்கே இம்முறை என்ன ஏற்பாடு ???

  ReplyDelete
  Replies
  1. Viji : சற்றே பொறுமையாய் பதிவைப் படியுங்களேன் சார்...!

   Delete
  2. //சென்னைப் புத்தக விழாவின் ஸ்டால் ஒதுக்கீடுகள் பற்றிய விபரம் நாளைய தினமே (மே 23) தெரிய வருமென்பதால் ஆவலாய்க் காத்திருப்போம் சேதியறிய!///---இவ்வளவு பெரிய அப்டேட் என்பதால் என் கண்ணில் முதல் தேடலில் தட்டுப்படலை போல சார் ...ஹி...ஹி...
   நாளை நல்ல செய்தி கிடைக்க முன்கூட்டியே வாழ்த்துக்கள் சார்.

   Delete
 6. TEX:kannai thudai karsa kalyanathuku pokanum.

  ReplyDelete
 7. Vijayan sir,

  I like CID Robin (Nice Raider) stories very much (it gives a movie watching experience).
  If majority votes for him, please give him few chances to rule in next year.
  Thanks.
  Regards,
  Mahesh kumar S

  ReplyDelete
  Replies
  1. +1
   அப்படிக் கேளுங்க மகேஷ் சார்!

   Delete
  2. Thanks Vijay.
   I hope you remember me. We met during "Minnum Maranam" release (TKPT ..)

   Delete
  3. ம்ம்ம்...... அப்போ நீங்க தாடி வச்சிருந்ததா ஞாபகம் மகேஷ் சார்! ஆனால் என் ஞாபக சக்தியின் மீது எனக்குத் துளியும் நம்பிக்கை கிடையாது...! :)

   Delete
  4. BTW, வரும் 4,5 தேதிகளில் CBFல் மீண்டும் சந்திப்போமா மகேஷ் சார்?

   Delete
  5. Mahesh Kumar : ஆகஸ்டில் ராபின் கலரில் கலக்கக் காத்துள்ளார் !! And அக்டோபரில் ஒரு b&w சாகசம் !

   Delete
  6. Vijayan sir, Thanks for the info. And thanks a lot for introducing Nick Raider to us.

   Delete
  7. Erode Vijay,
   Never mind. I thought you are the one working for BSNL.
   Unfortunately due to other priorities, I will not be able to visit bookfair in June 4,5,6 timeframe. And please truncate the suffix " Sir", when you address me again :) .
   Many thanks.
   I hope we will meet sometime in CBE or in Chennai in near future.
   Regards,
   Mahesh kumar .S

   Delete
 8. ///2017-ன் ABSOLUTE CLASSICS வரிசையில் நமது டாப் ஹீரோவின் வண்ண அதளகத்தின் முதல் சாகஸத்தைத் தேர்வு செய்தாகி விட்டோம்! அது என்னவாகயிருக்குமென்ற யூகங்களை உங்களிடமே விட்டு விடுகிறேனே!///---
  நான் யுரோப்பியன் கால்பந்தாட்ட ரசிகன் சார் ...அங்கே ஆண்டின் சிறந்த வீரனை நேர்ந்தெடுக்க சிறந்த விளையாட்டு பத்திரிகை ஆசிரியர்கள் முதல் சாய்ஸ் ,இரண்டாம் சாய்ஸ் ,மூன்றாம் சாய்ஸ் என மூவரை செலக்ட் செய்வார்கள் ...அதிக பேரின் முதல் சாய்ஸ் வாங்குபவர் வெற்றி ,அதில் சம அளவு எனில் 2ம் சாய்ஸ் ...இப்படி அதேபோல

  1.பவள சிலை மர்மம்-1St choice
  2.ட்ராகன் நகரம் -2nd choice
  3.சைத்தான் சாம்ராஜ்ஜியம் -3rd choice
  மற்ற நண்பர்கள் ஓட்டுக்களை பார்ப்போம் ...

  ReplyDelete
  Replies
  1. அட! நம்ம 'டெக்ஸ் விஜயராகவன்' தான் இந்த Viji யா?!

   Delete
  2. இல்லை அய்யா நான் அவன்(ர்) இல்லை...

   Delete
  3. டெக்ஸ் வில்லரின் புகழ் பட்டி தொட்டியெல்லாம் விரவி பரவியுள்ளது அய்யா...யாமும் அந்த புகழின் நீட்சி எட்டிய நபரே...நீங்கள் குறிப்பிட்டவரை போல "டெக்ஸ்" என சேர்த்து எழுதும் அளவுக்கு முற்றிய கேஸ் அல்ல நாம்...

   Delete
  4. இல்லை அய்யா நான் அவன்(ர்) இல்லை...

   Delete
  5. @Viji Sir
   செயலாளர் தன் நண்பரை இங்கு காணதாதால் கேட்டு விட்டார்
   அதற்காக சேலம் டெக்ஸ் விஜயராகவன் சகோதரரை முற்றிய கேஸ் என்று கூற வேண்டாம் என்று தாழ்மையுடன் வேண்டுகோள் வைக்கிறேன்
   ஒவ்வொரும் ஒவ்வொரு விதம் :)

   Delete
  6. இதோ என் தேர்வு.! இளவரசி கதைகள் அனைத்துமே சூப்பர் டூப்பர்தான் .இருந்தாலும் கஷ்டப்பட்டு எடுத்த கதைகள்.!

   1) பழிவாங்கும் புயல்

   2) மரணப்பிடி

   3) கார்வின் யாத்திரைகள்.!

   நானும் " முற்றிய " கேசுதான்!

   Delete
 9. ///! 2017-ன் ABSOLUTE CLASSICS வரிசையில் நமது டாப் ஹீரோவின் வண்ண அதளகத்தின் முதல் சாகஸத்தைத் தேர்வு செய்தாகி விட்டோம்! அது என்னவாகயிருக்குமென்ற யூகங்களை உங்களிடமே விட்டு விடுகிறேனே!///

  'டிராகன் நகரம்' தானே சார்?

  //இது வரையிலும் 3 ரின் டின் கேன் கதைகளை மொழிபெயர்த்துள்ளவர் – அண்ணாரின் தீவிர ரசிகையாகி விட்டார்///

  3வது கதையும் தயாரா? ஆஹா!!

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY : சேதி தெரியுமோ ? 2017-ன் பிரெஞ்சு மொழிபெயர்ப்புப் படலம் நிறைவு பெற்ற நிலையில் 2018-க்குள் அடியெடுத்து வைக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறோம் !!

   நம்பக் கஷ்டமாக இருப்பினும், நிஜம் இது !!

   Delete
  2. //சேதி தெரியுமோ ? 2017-ன் பிரெஞ்சு மொழிபெயர்ப்புப் படலம் நிறைவு பெற்ற நிலையில் 2018-க்குள் அடியெடுத்து வைக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறோம் !! //

   ஓ. அருமை. அப்படியே சந்தா z க்கான கதைகளையும், அறிவிப்பினையும்....

   Delete
  3. ////சேதி தெரியுமோ ? 2017-ன் பிரெஞ்சு மொழிபெயர்ப்புப் படலம் நிறைவு பெற்ற நிலையில் 2018-க்குள் அடியெடுத்து வைக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறோம் !!

   நம்பக் கஷ்டமாக இருப்பினும், நிஜம் இது ////


   அடக்கடவுளே! எப்படியிருந்த நாம் இப்படியாகிட்டோமே!!

   செம!! :)

   Delete
 10. பழி வாங்கும் புயலின் அட்டை படங்கள் சூப்பர் ஆக வந்து உள்ளத்துக்கு வாழ்த்துக்கள் சார் ! abasalute classic இல் உங்கள் தேர்வு டிராகன் நகரம் அல்லது பவள சிலை மர்மம் என்றே நினைக்கிறேன்.

  ReplyDelete

 11. டெக்ஸ் : ஏன் கண்ணைக் கசக்கிக்கிட்டிருக்க கார்சனு...? எடிட்டரோட டேபிள் மேல ஜூனியர் எடிட்டர் செலக்ட் பண்ணி வச்சிருக்கற கி.நா'களில் எதையாவது தெரியாமப் படிச்சுத் தொலைச்சுட்டியா?

  கார்சனு : அட இல்லப்பா! இப்பல்லாம் நம்ம ப்ளாக்குல சில பின்னூட்டங்களைப் படிச்சாலே இப்படி கண்ணுகள்ல கரைபுரண்டோட ஆரம்பிச்சுடுதுனா பார்த்துக்கோயேன்!

  ReplyDelete
  Replies
  1. @ Erode Vijay:
   பாஸு!
   இன்னும் இந்த வாரம் "ஏரி"ய திறக்கல போல ;-)

   Delete
  2. பூனயைாரே! கார்சனின் பன்ச்...!
   டைமிங் ரைமிங்...!
   சூப்பர்..சூப்பர்...!!

   Delete
  3. //டெக்ஸ் : ஏன் கண்ணைக் கசக்கிக்கிட்டிருக்க கார்சனு...? எடிட்டரோட டேபிள் மேல ஜூனியர் எடிட்டர் செலக்ட் பண்ணி வச்சிருக்கற கி.நா'களில் எதையாவது தெரியாமப் படிச்சுத் தொலைச்சுட்டியா?

   கார்சனு : அட இல்லப்பா! இப்பல்லாம் நம்ம ப்ளாக்குல சில பின்னூட்டங்களைப் படிச்சாலே இப்படி கண்ணுகள்ல கரைபுரண்டோட ஆரம்பிச்சுடுதுனா பார்த்துக்கோயேன்!
   Reply
   Replies

   Saravanan R22 May 2016 at 04:10:00 GMT+5:30
   @ Erode Vijay:
   பாஸு!
   இன்னும் இந்த வாரம் "ஏரி"ய திறக்கல போல ;-)

   Guna karur22 May 2016 at 05:51:00 GMT+5:30
   பூனயைாரே! கார்சனின் பன்ச்...!
   டைமிங் ரைமிங்...!
   சூப்பர்..சூப்பர்...!!

   கடல்யாழ்922 May 2016 at 09:48:00 GMT+5:30
   hmmmmmmmmmmmm :D//

   அடப்பாவி மக்கா.... இந்த சீனியர்ஸோட ""க்கு அளவே இல்லையா :(

   தெய்வமே _/\_

   Delete
  4. //டெக்ஸ் : ஏன் கண்ணைக் கசக்கிக்கிட்டிருக்க கார்சனு...? எடிட்டரோட டேபிள் மேல ஜூனியர் எடிட்டர் செலக்ட் பண்ணி வச்சிருக்கற கி.நா'களில் எதையாவது தெரியாமப் படிச்சுத் தொலைச்சுட்டியா?

   கார்சனு : அட இல்லப்பா! இப்பல்லாம் நம்ம ப்ளாக்குல சில பின்னூட்டங்களைப் படிச்சாலே இப்படி கண்ணுகள்ல கரைபுரண்டோட ஆரம்பிச்சுடுதுனா பார்த்துக்கோயேன்!
   Reply
   Replies

   Saravanan R22 May 2016 at 04:10:00 GMT+5:30
   @ Erode Vijay:
   பாஸு!
   இன்னும் இந்த வாரம் "ஏரி"ய திறக்கல போல ;-)

   Guna karur22 May 2016 at 05:51:00 GMT+5:30
   பூனயைாரே! கார்சனின் பன்ச்...!
   டைமிங் ரைமிங்...!
   சூப்பர்..சூப்பர்...!!

   கடல்யாழ்922 May 2016 at 09:48:00 GMT+5:30
   hmmmmmmmmmmmm :D//

   அடப்பாவி மக்கா.... இந்த சீனியர்ஸோட "ராகிங்"க்கு அளவே இல்லையா :(

   தெய்வமே _/\_

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
 12. ABSOLUTE CLASSICS :

  டிராகன் நகரம் !
  (அதுவா இருக்கணுமுன்னு ஆண்டவனை வேண்டுவோமாக!)

  ReplyDelete
 13. Welcome tax and tiger. Next ABSOLUTE classic Pavala Sinai marmam.

  ReplyDelete
 14. Absolute classics பவளசிலை மர்மம்!

  ReplyDelete
 15. தங்கதலைவனை ஜூனில் சந்திக்க தயாராகிவிட்டோம்! ஜூனில் விருந்து இருப்பதால் இன்னும் இரு வாரங்களுக்கு பத்திய உணவுதான் (மீள்வாசிப்பைத்தான் சொல்கிறேன்)!

  ReplyDelete
 16. டெக்ஸ்; ஏம்ப்பா அழுவுற சொல்லிட்டு அழுப்பா நானும் சேர்ந்து அழுவம்ல
  கார்சன்: அட போப்பா நாம மாசக்கணக்குல பாலை வனத்துல மண்ணைத்தின்னு மரத்தை தின்னு அவருக்கு மாசம் ஒரு இதழ் வெளியிட உதவியிருக்கோம் ஆனா நம்மள விட்டுட்டு அவரா போயி வட நாட்டு விருந்த ஒரு பிடி பிடிச்சுட்டு வந்திருக்காரு. அவருக்கு மட்டும் ரசகுல்லா, பாதுஷா, பாதாம்கீர், எனக்கு மட்டும் வறுத்த கறியும் பீன்சுமா அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 17. டெக்ஸ்: ஏம்ப்பா அழுவுற சொல்லித்தொலைச்சிட்டு அழுப்பா
  கார்சன்: அவரு, அவரு, அவரு, அவரு மட்டும் அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 18. எடிட்டர் சார்...!
  சென்ற வாரம் சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகளை முயற்சித்து பார்க்கலாமா...? என கேட்டிருந்தீர்கள்...!
  போனெல்லி குழுமத்தின் நாதன் நெவர் கூட சயின்ஸ் ஃபிக்ஷன் ரகம்தான் என்று நண்பர் ஒருவர் சொன்னார். அது நமக்கு ஏற்ற தொடர்தானா..? நம் காமிக்ஸ்களில் வர வாய்ப்பிருக்கிறதா...?

  ReplyDelete
  Replies
  1. ஜேடர்பாளையம் சரவணகுமார் : சயின்ஸ் ஃபிக்ஷன் ரகங்களில் நேதன் நெவர் என்றுதானில்லை ; எக்கச்சக்க நாயகர்கள் ; கதைத் தொடர்கள் உள்ளன !! அந்த genre -ஐ நாம் ரசிக்க ரெடியா என்பதே கேள்வி !

   Delete
 19. டிடெக்டிவ் ஜெரோமுக்கும் இன்னொரு வாய்ப்பளிக்கலாமே சார்.....!
  க/ வெ.யில் வந்த இரு இதழ்களும் சுமார் என்றாலும், அவ்வளவு மோசமில்லை என்பது என் கருத்து.மீண்டும் வந்தால் வண்ணத்திலும் ரசிக்கலாமே....?

  ReplyDelete
  Replies
  1. ஜேடர்பாளையம் சரவணகுமார் : இன்றளவுக்கு அந்தக் கதைகள் சோபிக்காது போனதன் காரணத்தை நானறியேன் !! நிச்சயமாய் ஜெரோம் பரண் செல்ல வேண்டிய பார்ட்டி அல்லதான் !!

   Delete
 20. நம் டாப் நாயகரின் அடுத்த வண்ண மறுபதிப்பு :-
  சைத்தான் சாம்ராஜ்யம்
  அல்லது
  டிராகன் நகரம்

  ReplyDelete
 21. டெக்ஸ்: ஏன்...! என்னாச்சு..!
  கார்சன்: என்னதான் நாம அதகளம், மெகா சைஸூன்னு அலப்பரை பண்ணாலும் இந்த டைகர் பய மாதிரி ஒரே சமயத்துல கருப்பு வெள்ளையிலும் கலரிலயும் வர முடியலியேப்பா..!
  இந்த ரெக்கார்ட எப்ப நாம முறியடிக்கிறது..!
  அத நெனச்சாத் தான்... மூச்..மூச்...!!

  ReplyDelete
 22. டெக்ஸ்: என்னப்பா கார்சன்...! கண்ணுல தூசி விழுந்துடுச்சா..!
  கார்சன்: அட இல்லப்பா..! இந்த வாரப் பதிவுல எடிட்டர் என்னென்னவோ புதுசு புதுசா இனிப்பப் பத்தி சொல்லி நாக்குல ஜலம் வர வச்சுட்டார்..!
  அதெல்லாம் நாம சாப்பிடனும்னா ஆர்ச்சியோட கோட்டைல ஏறி கடந்த கால இந்தியாவுக்குத்தான் போகனும் போல..!!
  அதான்..அழுகைய அடக்க முடியல...!

  ReplyDelete
 23. Caption : 1

  டெக்ஸ்: எதிரிய சுட்டுட்டு இப்போ ஏம்பா அழுவுற ?

  கார்சன்:
  இல்ல!
  சாகும் போது கூட..................
  நீநீநீங்க ............
  ரொம்பப....
  நல்லாஆஆ.....
  சுடறீங்கனு சொல்லீட்டு செத்துட்டானே....!
  (உஉஉ.... இம்...இம்..இம்)

  ReplyDelete
 24. ஞாயிறு வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.

  ReplyDelete
 25. Caption : 2

  டெக்ஸ்:
  என்னபா!
  ரொம்ப நேரமா மேக்கப் போட்டுட்டு ஒரே சிரிப்போட போன.....
  இப்போ அழுதுக்கிட்டே வர?


  கார்சன்:
  (அவ்வ்வ்.....)
  இல்ல!
  இந்த கொஞ்சூண்டு பித்த நரைய பார்த்துட்டு 'டோனா' என்ன தாத்தானு சொன்னது கூட பரவால்ல........
  ஆனா 'லீனா'வும்......என்ன....
  (அவ்வ்வ்.....உஉஉ....)

  ReplyDelete
  Replies
  1. @ சரவணன்

   ஹாஹாஹா அசத்தல்!! :)))))

   Delete
 26. சார் ..நாளை புத்தக காட்சி தேதி உறுதிபட்டவுடன் தங்கள் வருகையை மறவாமல் நாளை தெரிவித்து விடுங்கள் ..நண்பர்கள் அதற்கேற்றார் போல பங்கு கொள்ள அப்பொழுது முன்னேற்பாடு செய்ய முடியும் ....;-)


  என்னை பொறுத்த வரை டாப் டெக்ஸ் மறுபதிப்பு ...எது இருந்தாலும் ஓகே ....காரணம் அனைத்துமே டாப் க்ளாஸ் தான் சார் ..;-)

  ReplyDelete
 27. சார் ....இந்த கேப்ஷன் போட்டி வைக்குறப்போ ...செல்பி வித் டெக்ஸ் போல ஒரு தனி பதிவாக வைத்து விடுங்களேன் ...கருத்து சிதறலில் இந்த கமெண்ட்ஸை தாங்கள் தேடி எடுப்பதும் சுலபமாக இருக்கும் ...நாங்களும் கருத்துகளையும் கமெண்ட்ஸ்களையும் பிரித்து படிக்க ஏதுவாக இருக்கும் ...;-)

  ReplyDelete
  Replies
  1. தலீவரே! நீங்க ஒரு அன்னப்பறவை மாதிரி தலீவரே!

   Delete
  2. முட்டை போடுவாரா???

   Delete
  3. அந்த முட்டைய ஆம்லெட் போட முடியுமா?

   Delete
  4. அந்த ஆம்லெட்டை சாப்பிட முடியுமா?

   Delete
  5. கடேசி அன்னபறவையும் நளமகா ராசா காலத்திலேயே அழிஞ்சி போச்சுதாமாம்....
   ஏற்கெனவே யாரோ சொன்ன அகுடியாவுக்கு இவருக்கு ஏம்பா விசிறி???

   Delete
  6. அன்னப்பறவை பிரியாணி நான் சாப்பிட்டதே இல்லை.....

   Delete
  7. தலீவரே... உங்களை சூப்பு வச்சு சாப்பிட்டே ஆகணும்னு இங்கே ஒரு குரூப் சுத்திக்கிட்டிருக்கா மாதிரி இருக்கு! ஓடிப்போய் பதுங்கு குழியில பாய்ஞ்சுடுங்க!

   Delete
  8. அருமை செயலரே ! அருமை !
   வெளிய இருந்தாலாவது ஒரு சான்ஸ் இருக்கு !
   பதுங்கு குழின்னா கண்டிப்பா பிரயாணி தான் !
   சண்டே லஞ்ச் ரெடி ஆகுது போல ல் ;P

   Delete
  9. ஹிக்! 'கிராதகர்கள்'னா எப்படி இருப்பாங்கன்னு எங்கிட்டே அடிக்கடி கேட்பீங்களே... பாத்துக்கோங்க தலீவரே... பாத்துக்கோங்க! :D

   Delete
  10. @ FRIENDS : தலீவருக்கு நண்டு ப்ரை ஆசைகாட்டி காரியம் சாதிக்க நினைத்த நாட்கள் போய் - தலீவரே ப்ரையாகும் நாளா ? என்ன கொடுமை சார் ?

   Delete
  11. ஒரு வேளை இந்தப் பதிவின் தலைப்பின் காரணமாய் இப்போதே பசிக்கத் தொடங்கி விட்டதோ நம்மவர்களுக்கு ?

   Delete
  12. கெராதகர்ள்னா அல்லாரும் தானே விசய் பாசு !!!...

   Delete
  13. //முட்டை போடுவாரா??//

   ஹி..ஹி...ஹி... ஷேம் ஷேம் பப்பி ஷேம் ;)

   "குரு" வைப் போய் "முட்டை " அது இது என்று கூறவேண்டாம் நாயனாரே :))

   Delete
  14. தலீவர் இன்னும் போன வாரம் பிறந்த நாள் ட்ரீட் குடுக்க வில்லை
   பிரியாணி கிடைத்தால் நன்றாக தான் இருக்கும் :D ;)

   Delete
 28. டெக்ஸ் அவர்களின் பழிவாங்கும் புயல் முதல் அட்டைபடம் பட்டைய கிளப்புகிறது சார் ...

  ReplyDelete
 29. டெக்ஸ் :- என்ன ஆய்டுச்சுன்னு இப்ப கண்ண கசக்கிக்கிட்டு நிக்கற....?

  கார்ஸன் :- உன் மகன் பொண்ணு பாக்க கிளம்பிட்டிருந்தான்பா..! நானும் கூட வர்றேன்னு சொன்னதுக்கு " நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே"ன்னு சொல்லிட்டாம்பா.......!

  நீயே சொல்லு...! என்னப்பாத்து அப்டியெல்லாம் சொல்லலாமா...? ப்ப்பூவ்....ப்பூவ்வ்வ்.....!!!

  ReplyDelete
 30. WHO IS JULIYA.???
  MAGNUM SPL'லில் ஒரு AEROPLANE கடத்தல் கதையில் வந்த ஹீரொயின்னா.???

  ReplyDelete
 31. கடந்த19சிவகாசி சென்று ஆசிரியரை சந்தித்தேன்.எனக்காக தனது பொன்னான
  90 நிமிடங்களை என்னுடன் செலவிட்டு
  மகிழ்ச்சியுடன் உரையாடினார்.மறக்க முடியாத
  தருணம். மீண்டும் சென்னையில் சந்திக்க
  ஆவலாக உள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. சகோதரரே, வாரம் ரெண்டு பதிவு என்று கோரிக்கை வைத்ததாக சொன்னதை படித்துடனே ஆசிரியர் குறிப்பிட்ட வாசகர் தாங்களாக தான் இருக்கும் என்று நினைத்தேன்

   Happy for U brother

   Delete
 32. Absolute classic லக்கி லூக்காக இருக்குமோ?

  டெக்ஸ் இந்த வருசம் நிறைய்ய பாத்துட்டதாலே லக்கி லூக்கிற்கே என் வோட்டு.!!!

  ReplyDelete
  Replies
  1. //லக்கி லூக் கதையாக இருக்குமோ //


   ஒத்து.! ஒத்து.! ( இல்லை.! இல்லை.! )சாட்சாத் எங்கள் இளவரசியே !

   எங்கள் இளவரசி கதையை ஒன்று இரண்டு என்று எல்லாம் வரிசை படுத்தி பாட முடியாது.ஏனென்றால் அனைத்தும் கோகினூர் வைரமே.....!

   Delete
  2. எல்லாமே டாப்ப்பா இருங்கணும்னு நினைக்கிறதுதான்!!!

   Delete
  3. ////கோயினுரு வெய்ரமா ???ஹெ..ஹெ...
   அல்லாமே அடுப்பு கரி சாரே..
   வயிரம் ,கெராபைட்டு ,கரி அல்லாமே கார்பனு என்ற கெமிக்கலோட பொற வேத்தும தான் சாரே...
   பொருளு ஒண்ணுதான் கெளமேட்டுல மாறிபூடும்,அப்டிதான் ஒருவருக்கு கோயினூர் னா மத்தவாளுக்கு அடுப்பு கரி...////

   என்னா பிஎஸ்சி மேஸ்திரி மாமா, சௌக்கியமா?!?!

   Delete
 33. சூப்பர் பதிவு.! ஜாக்கி ஜான் படத்தில் படம் முடிந்த பின் ,படம் எடுக்கும்போது நடந்த சிரமங்கள் ,சுவராஸ்யங்களை போட்டு காட்டுவார்கள்.அதுபோல் இந்தபதிவு.! என்ன யானை கல்லறை கதைபோல் முன்னாடியே சொல்லிவிட்டீர்கள்.!சூப்பர் சார்.! ஜீன் மாத இதழ்களைப்பற்றி ஆவலை அதிகபடுத்தி விட்டீர்கள்.!

  ReplyDelete
 34. கேப்ஷன் 1 :-

  டெக்ஸ் : கார்சன்! நீதாம்பா உண்மையான நண்பன். பஞ்ச் டயலாக் பேசியே வில்லனை விரட்டி விட்டுட்டேனே, அந்த திறமையப் பாத்து அப்படியே கண் கலங்கி நின்னுட்டே! சரிதானே!?

  கார்சன் : நீ பஞ்ச் டயலாக் பேசினதெல்லாம் சரிதாம்பா. ஆனா ஆவேசமா கைய ஆட்டி பேசுறப்போ, அக்கம் பக்கம் ஆள் இருப்பாங்கன்னு எப்பதான் புரிஞ்சிக்கப் போறியோ!?
  கண்ணைக் குத்திட்டியேப்பா!!

  ReplyDelete

 35. 'பழிவாங்கும் புயல்' அட்டைப் படம் அட்டகாசம் தான்! ஆனாலும் ஏதோ ஒன்னு குறையறாப்ல இருந்துச்சு. நைட்டெல்லாம் நல்லா யோசிச்சப்புறம் என்ன தோனிச்சின்னா....
  துப்பாக்கிய வச்சுக்கிட்டு பொத்தாம் பொதுவா போஸ் கொடுத்துக்கிட்டு நிக்காம, பட்டாசான இந்தக் கதையின் அட்டகாசமான சம்பவங்களில் ஒன்றை அழகா வரைஞ்சிருந்தா இன்னும் செமயா இருந்திருக்காது? உதாரணத்திற்கு, ராவணுவ வீரர்களில் சிலரை டெக்ஸ் துப்பாக்கி முனையில் நிறுத்திவச்சுருக்கிற மாதிரி! பார்த்தவுடன் 'அட! டெக்ஸு ஏன் ராணுவ வீரர்களைக் குறிவைக்கணும்?' அப்படீன்னு ஒரு ஆர்வத்தைக் கிளப்பிவிடுமில்லையா?

  ச்சும்மா அப்படியே மல்லக்கப் படுத்துக்கிட்டு யோசிச்சது! :)

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY : ஹீரோன்னாலே போஸ் கொடுக்க வேண்டுமென்பது காலம் காலமாய் தமிழ் சினிமாக்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ள பாடங்கள் அல்லவா ? இரவுக் கழுகாரும் அந்த எழுதப்படா விதிக்கு இணக்கமாய் காட்சி தருகிறார் !

   Jokes apart, அவ்வளவாகப் பெரிய சைஸ் அல்லாத அட்டைப்படங்களில் நிறையப் பேர் நிற்பது போல் டிசைன் செய்யும் சமயம் யாருக்கும் முக்கியத்துவம் இல்லாதது போலாகி விடுமே என்ற பயம் தான் எனக்கு ! Collage effect -ல் இங்கும் அங்குமாய் சித்திரங்களை வரைந்து நெருடலின்றி அவற்றை ஒன்று சேர்க்கும் கலையில் நம் ஓவியருக்குக் கெட்டிக்காரத்தனம் பற்றாதுதான் ! நிச்சயமாய் இள ரத்தம் அதன் பொருட்டு அவசியமே !

   இன்றைக்கு எல்லாமே கணினிமயம் என்றான நிலையில் creative drawing செய்திட ஆர்வலர்கள் வெகு சொற்பமே ! அவ்விதம் உள்ளோரை ஓசையின்றி அவ்வப்போது நாங்கள் அணுகிடத் தான் செய்கிறோம் ; ஆனால் அவர்களிடம் திறமை உள்ள அளவுக்குப் பொறுமை இருப்பதில்லை என்பதே சிக்கல் ! "இந்த இந்த மாற்றங்கள் அவசியம் !" என்று நாம் சொல்லும் போதே அவர்களின் தொனியில் சலிப்பு தலைதூக்குகிறது !

   அது சரி....நமது ஈரோட்டு (ஓவிய) நண்பர் சாரதி இங்கிருப்பின், ஒரு மின்னஞ்சல் அனுப்பிடுங்களேன் ?

   Delete
  2. //இன்றைக்கு எல்லாமே கணினிமயம் என்றான நிலையில் creative drawing செய்திட ஆர்வலர்கள் வெகு சொற்பமே !//

   சார், கணினியிலும் இன்று வரைதல் செய்கிறோம் - தூரிகை பிடிப்பதுபோலவே. வெட்டி ஒட்டுதல் ஒரு ரகம் - முழுமையாய் கணினியிலேயே வரைதல் இன்னொரு ரகம். பணிகளும், பாணிகளும் வேறுபட்டுள்ளன. தூரிகையில் வரைவதைவிட கணினியில் வரைதல் சவால்கள் நிறைந்தது. அதே வேளை மீள் திருத்துதலுக்கு வாய்ப்புகள் அதிகம் தருவது.

   Delete
  3. // அவ்வளவாகப் பெரிய சைஸ் அல்லாத அட்டைப்படங்களில் நிறையப் பேர் நிற்பது போல் டிசைன் செய்யும் சமயம் யாருக்கும் முக்கியத்துவம் இல்லாதது போலாகி விடுமே என்ற பயம் தான் எனக்கு ! Collage effect -ல் இங்கும் அங்குமாய் சித்திரங்களை வரைந்து நெருடலின்றி அவற்றை ஒன்று சேர்க்கும் கலையில் நம் ஓவியருக்குக் கெட்டிக்காரத்தனம் பற்றாதுதான் ! நிச்சயமாய் இள ரத்தம் அதன் பொருட்டு அவசியமே ! //


   டெக்ஸ் வில்லரின் படைப்பாளர்களிடமிருந்து ஒரிஜினல் அட்டை சித்திரங்கள் கிடைக்கும்பட்சத்தில் அவற்றையே பயன்படுத்தலாம். ஓவியர் மாலையப்பன் அவர்களின் சித்திர பாணியில் எல்லா டெக்ஸ் வில்லர் கதைகளுக்கும் அட்டைப்படம் அமைப்பது ரொம்ப பளுவான விஷயம்!

   Delete
 36. விஜயன் சார், நான் ஜூலியாவை (கதையை) ஆர்வமுடன் எதிர்பார்கிறேன். இவரின் முதல் கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது, பலதரப்பட்ட மக்களின் எண்ணங்களை கதையின் கதாபாத்திரம்கள் பரிதிபளித்தன.

  எல்லா திட்டமிடல்களும் சரியாக இருந்தாலும் சிலநேரம் இதுபோன்ற (காமன்சே கதை மொழி பெயர்ப்பு) புதிய விஷயம்கள் முளைகத்தான் செய்யும், கடந்த சில வருடம்களில் பெற்ற அனுபவும் கைகொடுக்கும். வெற்றி நமக்கே!!

  ReplyDelete
 37. விஜயன் சார்,
  எனக்கு இது போன்ற சமயங்களில் புத்தகம்கள் எல்லாம் தயார் செய்து அட்டை பெட்டியில் அடைக்கும் அந்த கடைசி ஒருவாரம் உங்கள் அலுவலகத்தில் ஒருவாரம் உடன் இருந்து வேலை செய்ய ஆசை! இது போன்ற பரபரப்பு எனக்கு மிகவும் பிடித்தது, இந்த வேலைகளை வெற்றிகரமாக முடித்த பின் மனதிற்கு கிடைக்கும் அந்த அமைதி வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : நமக்கு மட்டும் தானென்றில்லை ; பொதுவாகவே இதழியலில் இறுதிக் கட்டப் பணிகளும், அவை சார்ந்த டென்ஷன்களும் சீக்கிரமே தலை நரைக்க சுலப வழிகள் !!

   Delete
  2. எப்படி என்றாலும் தலை முடி நரைக்கதான் போகிறது அதனால் என்ன சார்.

   Delete
  3. //எப்படி என்றாலும் தலை முடி நரைக்கதான் போகிறது அதனால் என்ன சார்// lol

   Delete
 38. விஜயன் சார், டெக்ஸ் அட்டை படம் அருமை, இந்த வருடம் இதுவரை வந்த இவர் இதழ்களில் இந்த அட்டைபடம்தான் டாப். எனது வாழ்த்துக்களை நமது ஓவியர் மற்றும் டிசைன்னரிடம் சொல்லிவிடவும்.

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : ரசனைகள் பலவிதம் என்பது இதோ இங்கேயே வெளிச்சமாகித் தெரிகிறதே ! பின்தொடரும் பின்னூட்டங்களைப் பாருங்களேன் !

   Delete
  2. ரசனைகள் பலவிதம் :-)

   Delete
 39. 'பழி வாங்கும் புயல்' தலைப்புக்கு டெக்ஸ் வில்லரின் வழக்கமான கேமரா போஸ் பொருத்தமாக இல்லை. அட்டைப்படம் கதையின் போக்கை காண்பிக்கும் விதத்தில் அமைந்தால் நன்றாக இருக்கும் (செவ்விந்தியர்கள் இடம்பெறுவது பொருந்தும்). முன்பு பார்த்த பழி வாங்கும் புயலின் தாக்கத்தை இந்த அட்டைப்படம் மட்டுப்படுத்துவதாகத் தோன்றுகிறது.

  அத்தோடு டெக்ஸ் வில்லரின் கதைகள் எண்ணிக்கையில் அதிமாகிக்கொண்டே செல்வதால் மஞ்சள் சட்டையும் ப்ளூ ஜீன்ஸும் அட்டைக்குப் போதாது!

  ReplyDelete
  Replies
  1. Ramesh Kumar : மஞ்சள் சட்டையும், ப்ளூ ஜீன்சும் அல்லாது உடுப்பு மாற்றம் பொருந்துமா என்ன ?

   Delete
  2. // மஞ்சள் சட்டையும், ப்ளூ ஜீன்சும் அல்லாது உடுப்பு மாற்றம் பொருந்துமா என்ன ? //

   By yellow shirt and blue jeans I meant Tex Willer, and didn't mean changing the dress color ;)

   Tex Willer alone is not sufficient for wrapper especially when we have 12+ Tex Willer books per year.

   Delete
 40. அன்பு ஆசிரியரே....!
  டெக்ஸ் அட்டை ஏற்கனவே பார்த்த உணர்வை தருகிறது.ஒரே பார்வையோடு தாண்டி போகவைக்கும் ரகம்.
  உயிர்நாடியான எழுத்து,மொழியாக்கத்திலேயே நண்பர்களின் ஆக்கங்களை நாடும் தாங்கள் (கர்ர்ர்...)அட்டைப்பட விஷயத்திலும் உதவ கோரலாமே..்?
  குறிப்பாக டெக்ஸ் அட்டைப்படங்கள் சமீபத்தியவை அனைத்தும் சொதப்பல்.

  ReplyDelete
  Replies
  1. AHMEDBASHA TK : //எழுத்து,மொழியாக்கத்திலேயே நண்பர்களின் ஆக்கங்களை நாடும் தாங்கள் (கர்ர்ர்...)அட்டைப்பட விஷயத்திலும் உதவ கோரலாமே..்?//

   அட...நான் என்ன மாட்டேன் என்றா சொல்லப் போகிறேன் ? இந்தப் பணிக்கான நேரமும், பொறுமையும், ஆற்றலும் யாரிடம் உபரியாய் உள்ளதென்று சொல்லுங்களேன் ப்ளீஸ் ?

   பழக்கமாகி விட்டால் பேனா பிடிப்பது சுலபமாகிடலாம் ; ஆனால் ஓவியக் கலை என்பது அத்தனை சுலபமல்ல சார் ! அதுவொரு வரம் !

   Delete
 41. Caption Dhamaash! - 01

  டெக்ஸ்: என்னாப்பா... என்ன ஒரே ஃபீலிங்க்கு?

  கார்ஸன்: நேத்து மெக்ஸிகோ பார்டரை நாம க்ராஸ் பண்ணினப்போ ஒருத்தன், ''யாருப்பா அது நம்ம கிட் கார்சன் பக்கத்துல மஞ்சள் சட்டையோட போறது?'' ன்னு கேட்டானே.... அத நெனச்சேன் கண்ணு வேர்த்துடுச்சுப்பா....!

  ReplyDelete
 42. டெக்ஸ் :- சத்தியமா அந்த பொண்ணு உன்னதான் பாத்தாப்பா !!!!

  கிட்: - மெய்யாலுமா, இந்த வயசுல இப்படி ஒரு அழகான பொண்ணு என்ன பாக்குறானு நினைக்கும் போது வர அழுகைய அடக்க முடியலம்மா!!!

  ReplyDelete
 43. விஜயன் சார், டெக்ஸ் அட்டை படம் வேறு மாற்றுங்கள், டெக்ஸ் இப்படி தனி ஆளாக நிற்கும் மாதிரியான அட்டை படங்கள் சோர்வை தருது. நல்ல ஆர்பாட்டமா ஒரு அட்டை படம் ரெடி பண்ணுங்க சார்.

  ReplyDelete
  Replies
  1. மாடலை மாத்துங்க எடி சார்!

   Delete
 44. Caption Dhamaash! - 02

  டெக்ஸ்: ஏன் நண்பா அழுகை?

  கார்ஸன்: நம்ம கதை அட்டைய பத்தி ஒரு நண்பர் ''விஜயன் சார், டெக்ஸ் அட்டை படம் அருமை. இந்த வருடம் இதுவரை வந்த இவர் இதழ்களில் இந்த அட்டைபடம்தான் டாப்! எனது வாழ்த்துக்களை நமது ஓவியர் மற்றும் டிசைன்னரிடம் சொல்லிவிடவும்!!'' அப்படீங்கறார்... இன்னொருத்தர், ''அன்பு ஆசிரியரே....! டெக்ஸ் அட்டை ஏற்கனவே பார்த்த உணர்வை தருகிறது! ஒரே பார்வையோடு தாண்டி போகவைக்கும் ரகம்!! குறிப்பாக, டெக்ஸ் அட்டைப்படங்கள் சமீபத்தியவை அனைத்தும் சொதப்பல்!!!'' அப்படின்றார்... எடியோட நெலமைய நெனச்சேன்... அழுகை வந்திருச்சு..!

  (Note: எடிட்டர் அறிவித்துள்ள பரிசை குறிவைத்து எழுதப்பட்டுள்ளதால் நண்பர்கள் தங்களை கிண்டலடிப்பதாக நினைத்திடவேண்டாம், ப்ளீஸ்)

  ReplyDelete
 45. இதே மாதிரி அட்டை படங்கள் எல்லா கதையும் ஒரே கதை என்ற தாக்கத்தை புதிதாக புத்தக திரு விழாவிற்கு வருபவர்களுக்கு ஏற்படுத்தலாம். Please design something special to attract more readers.

  ReplyDelete
  Replies
  1. Sir why don't you consider the original pali vaangum puyal cover art. still it looks awesome and very attractive. you could use the same cover after doing some enhancements in it. Please think about it.

   Delete
  2. Giridharan V : பழைய டிசைனிலும் டெக்ஸ் ஒண்டி ஆளாய்க் குதிரையில் காட்சி தருவார் தானே ? இங்கே தரையில் நிற்கிறார் ; அங்கே குருதையில் சவாரி என்பது மாத்திரம் தானே வேற்றுமை ?

   Delete
  3. //பழைய டிசைனிலும் டெக்ஸ் ஒண்டி ஆளாய்க் குதிரையில் காட்சி தருவார் தானே ? இங்கே தரையில் நிற்கிறார் ; அங்கே குருதையில் சவாரி என்பது மாத்திரம் தானே வேற்றுமை ?///

   பழைய அட்டையிலாவது புயல் ஒன்று குதிரையில் ஏறி ஆவேசமாய் பழிவாங்கக் கிளம்புகிற மாதிரி ஒரு ஃபீல் இருந்தது சார்!

   தற்போதைய அட்டையில் அந்த ஃபீல் கொஞ்சம் மிஸ்ஸிங்!

   Delete
  4. // வேசமாய் பழிவாங்கக் கிளம்புகிற மாதிரி ஒரு ஃபீல் இருந்தது சார்! // +1
   அந்த ஆவேசம் மிஸ்ஸிங் என்பதை ஒத்துகொள்கிறேன்!

   Delete
  5. ஏனப்பா டொக்சு வில்லருது இந்த கதெ தான் பொயலு கணக்கா வீசுமாமே...பொறவு அட்டைய பத்தி இன்னாதுக்கு ரோசனெ...

   Delete
  6. இல்ல விஜி... அட்டையை கிழிச்சுட்டா எல்லா டெக்ஸ் கதையும் ஒண்ணுதான்னு சொல்லுதாங்களே, அதுக்குதான் பயமாகீதுப்பா... ஆமா அது உண்மையாப்பா...????

   Delete
 46. @Vijayan Sir
  //அங்கே ஏதேனும் முக்கிய கேள்விகள் எழுப்பியிருக்கும் பட்சத்தில் சிரமம் பாராது இங்கே repeat செய்திடுங்களேன்-//

  போன வாரத்திற்கு முந்தைய வாரம் கொங்கு மண்டலம் வந்து விட்டு சொல்லாமல் சென்றது ஏனோ சார்
  ஸ்டீல் களா சகோதரரிடம் கூட சொல்ல வில்லை

  தங்களுக்கு நிறைய வேலைகள் என்று புரிகிறது
  ஆனாலும் 5 நிமிடங்கள் ஒதுக்கி இருக்கலாமே சார்... ஒரு செல்பி போட்டோ எடுதிருப்போம்ல :D

  ReplyDelete
  Replies
  1. கடல்யாழ்9 : செல்பி with டெக்ஸ் சூப்பராக இருக்கும் தான் ; ஆனால் செல்பி with வெள்ளிமுடியார் காமெடியாகவல்லவா இருக்கும் ? :-)

   Delete
  2. @vijayan Sir
   தாங்கள் Visit செய்த விஜயா பதிப்பகத்திற்கு கொஞ்சம் தொலைவில் தான் வீடு
   இரவு நேர வேலை என்பதால் பகலில் வீட்டில் தான் இருந்தேன்
   ரொம்ப அருகில் இருந்து பார்க்க முடியாமல் போனதால் கொஞ்சம் வருத்தமே சார்

   Delete
  3. கடல்யாழ்9 : அட...கோவையில் ஒரு புத்தக விழா வராமலா போய் விடும் ? 'பல்ப்' வாங்காப் பயணமொன்றை கோவைக்கு மேற்கொள்ள அதுவொரு வாய்ப்பாகிடும் அல்லவா ?!! அப்போது நிச்சயம் சந்திக்கலாம் !

   Delete
  4. நானும் கோவை புத்தக விழாவினை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் சார் :)
   no announcement yet
   hoping for good news
   if there is Kovai book fair...i am ready to handle the full charge for our stall Sir :)

   Delete
  5. ///if there is Kovai book fair...i am ready to handle the full charge for our stall Sir :) ///

   உங்களது ஈடுபாடு ஆச்சர்யமளிக்கிறது சகோ! மகிழ்ச்சி மகிழ்ச்சி! :)

   Delete
  6. @Erode VIJAY
   நன்றி சகோதரரே :)

   தங்கள் அளவுக்கு இல்லை சகோதரரே
   இங்கு இருக்கும் நமது காமிக்ஸ் நண்பர்களின் ஆர்வத்திற்கு முன்னால் என்னுடையது மிகவும் சிறியது
   அவர்களின் ஆர்வத்தை கண்டு நான் பல முறை ஆச்சிரிய பட்டிருக்கிறேன்

   Delete
 47. ஜூலியா செம்ம ஜாலியா படிச்சிட்டு இருக்குறதைப் பாத்தா ஜோலியே இல்லாம இருக்குறாப் போல தெரியுதே!!

  ஆனா அதுக்காக,

  வேலியே இல்லாம காலியா இருக்குற ஜூலியா கழுத்துல தாலியா கட்டமுடியும்.!!!

  ReplyDelete
  Replies
  1. என்னா பாஸு!
   தலக்கு caption போட சொன்னா...
   நீங்க ஜூலியாவுக்கு பிராக்கெட்...
   i mean caption .... caption ..... போடறீங்க ;-)

   Delete
  2. KiD ஆர்டின் KannaN : சீக்கிரமே ஜூலியா ரசிகர் மன்றத் தலைவர் பதவிக்கு போட்டி தொடங்குமென ஒரு பீலிங்கு !!

   Delete
  3. //வேலியே இல்லாம காலியா இருக்குற ஜூலியா கழுத்துல தாலியா கட்டமுடியும்.!!!///--- ஒற்றை மீசிக் போட்டதும் துண்டை காணோம் திணியை காணோம் னு உங்கள் முத்துனு கேஸ் மாமு சூட் உட்டதும் உம்ம சோலியை காட்டுரேளே !!!

   Delete
  4. உம்ம மீசிக்குக்கு பயந்து யாரும் சூட் வுடலிங் சாரே!
   எடிட்டருக்கு சங்கடம் வேண்டாமுன்னுதான்!!!!

   எங்க சோலிய நாங்க எப்பவும் செஞ்சிகிட்டேதான் இருப்போம்.
   உம்மைப்போல நெறிய்ய்ய பாத்தாச்சு சாமி!!
   வேற எதுனா ட்ரை பண்ணுங்க.!!!

   Delete
  5. கிட் ஆர்ட்டின் கண்ணன்.!

   ஜாலியா இருந்தாலும் ,ஜோலியா இருந்தாலும் எங்க இளவரசி க்கு சமமாக முடியுமா. ?


   புலியை பார்த்து பூனை சூடு போட்டமாதிரி.!

   கருவாடு மீனாகாது.!

   ஊர் குருவி பருந்தாகாது.!

   ஆங்ங் சொல்லி போட்டேன்.!

   Delete
  6. Madipakkam Venkateswaran
   KiD ஆர்டின் KannaN

   என் இனிய சகோதரர்களே நம்மிடையே தேவைன்றி பிரச்சனை செய்ய காத்திருப்போருக்கு கமெண்ட்ஸ் போடும் வாய்ப்பை தர வேண்டாம்

   நான் ஏதேனும் தவறாக புரிந்து கொண்டிருந்தால் என்னை மனிக்கவும் சகோதரர்களே
   காமிக்ஸ் வாழ்க காமிக்ஸ் வாழ்க

   Delete
  7. கடல்யாழ் சகோ! ,
   அவர்களுக்கு வாய்ப்பை நாம்தான் தரவேண்டும் என்றில்லை. அவர்களாகவே எடுத்துக்கொள்வார்கள் :-) .

   Saravanan @

   ///நீங்க ஜூலியாவுக்கு பிராக்கெட்...
   i mean caption .... caption ..... போடறீங்க ;-)///

   ஹிஹி! ஜூலியாவே பிராக்கெட் மாதிரிதானே பாஸ் இருக்காங்க.!!

   பெட்டி பார்னோவ்ஸ்கி ன்னு ஒரு மேடம் வருவாங்க பாருங்க!!!:-)

   Delete
 48. ஒருவேல...
  பின்னட்டைல எல்லாரும் கூடி பேசறத முன்னட்டைல போட்ட பொருத்தமா இருக்குமோ என்னோமோ ?

  ReplyDelete
 49. சகோ #கடல்யாழ் சொல்ல மறந்துவிட்டேன்
  ஆசிரியர்&ஜூஎடிவிக்ரம் இருவருடன் என் மொபைலில் போட்டோ எடுத்துக்கொண்டது.
  இனிமையான தருணம்.

  ReplyDelete
 50. சார்,

  பழிவாங்கும் புயல் என பெயரை வைத்துவிட்டு, இப்படி டெக்ஸ்சை சாந்த சாந்தாராமாக அட்டையில் போட்டால் எப்படி..? வேறேதாவது alternative ராப்பர் எடுத்து விடுங்களேன்...?

  ReplyDelete
  Replies
  1. ///பழிவாங்கும் புயல் என பெயரை வைத்துவிட்டு, இப்படி டெக்ஸ்சை சாந்த சாந்தாராமாக அட்டையில் போட்டால் எப்படி..?///

   +1

   Delete
 51. சார், வணக்கம், எ.பெ
  டை. அச்சில் எந்த தவறும் வந்து விட கூடாது என நீங்கள் எடுக்கும் சிரத்தைக்கு தலை வணங்குகிறோம்.
  த.வா.கு; ப.வா.பாவை, மாயாவி மறுபதிப்புகளுக்கு பயன் படுத்தியது போல் ஒரிஜினல் ரேப்பர் ஏதேனும் ஒரு பக்கத்தில், ப.வா.புயலுக்கு பயன்படுத்தி இருக்கலாமே சார்

  ReplyDelete
 52. Dear Sir,

  வணக்கம். பழி வாங்கும் புயல் டெக்ஸ்வில்லர் அட்டைப்படம் நன்றாக உள்ளது. இருந்தாலும் கதைக்கு தொடர்புடைய சித்திரங்களையே அட்டைப்படமாக முயற்சித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து. கடல் கடந்து இருப்பதால், கடந்த 4 மாத புத்தகங்களை சமிபத்தில்தான் பெற்றேன். விதி போட்ட விடுகதை, தலையில்லாப் போராளி, திகில் நகரில் டெக்ஸ் - கதைகள் மற்றும் அட்டைப்படங்கள் மிகவும் அருமை. மாதம் ஒருமுறை டெக்ஸ்க்கு நன்றி சார்.

  ReplyDelete
 53. டெக்ஸ் அட்டைப்படம் நன்றாகத்தானே உள்ளது.?

  ஏங்க நான் சரியாத்தானே பேசறேன் .? (சங்கிலி முருகன்.! டயாலாக் )

  ReplyDelete
  Replies
  1. மடிப்பாக்கம் வெங்கடேசு ;

   //ஏங்க நான் சரியாத்தானே பேசறேன் .?//

   ஹி..ஹி... உங்களுக்கே டவுட் வந்தாச்சா.. ஹி..ஹி.. சரி தான் :)

   Delete
 54. வாரம் ஒரு Fake ID யா? தாங்காதுப்பா!!

  ReplyDelete
  Replies
  1. பொடியன் என்ற பிரதீப் from இலங்கை!!

   Delete
  2. //Viji22 May 2016 at 13:35:00 GMT+5:30
   அண்ணே நம்ம பேரு என்னாங்க,
   சொந்தம் பந்தம்லாம் கூடி வச்ச பேருங்களா ????...
   உங்கள் பேரை மொதல்ல உண்மையா வைங்க ...//

   எங்கப்பன் குதிருக்குள்ள இல்லே என்று நீங்க வந்து தொப்பிய போட்டுக்கிறீங்க.
   நம்ம பேர் இன்று நேற்றல்ல - 2009 இல் இருந்து இணையத்தில் பதியப்பட்டுருக்கு. இது முகத்தை மறைக்க அல்ல - இந்தப் பேர்லயே பலருக்கும் நம்மள பரிச்சயம்கிறதால.

   Delete
  3. //Parani from Bangalore22 May 2016 at 14:54:00 GMT+5:30
   பொடியன் என்ற பிரதீப் from இலங்கை!!//
   நீங்க எதுக்கு நண்பரே இவங்களுக்கெல்லாம் வௌக்கம் சொல்லிக்கிட்டு!

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. கடல்யாழ்9; //22 May 2016 at 17:06:00 GMT+5:30//

   I have deleted my comment. நீங்களும் அவ்வாறே செய்துவிடலாமே :)

   Delete
  6. @ஷேம் ஷேம் பப்பி ஷேம்
   Done...thank U for the understanding Friend

   Delete
 55. இந்த ப்ளாக்குக்கு சொந்தகார் சார் @ எல்லா போலி ,புனைபெயர் எல்லாத்தையும் எடுக்க சொல்லுங்கள் !
  அதையும் மீறிவந்தாக்க எல்லா போலியும் புனையும் Ban ன்னு சொல்லுங்கள் ,நான் கும்பிடு போட்டு கிளம்புகிறேன் சார் ...

  ReplyDelete
 56. ஆசிரியருக்கும் & நண்பர்களுக்கும் இனிய ஞாயிறு வணக்கங்கள் லயன் பிளாக்கில் நான் பதிவிட்டதுதான் என் வாழ்நாளில் மிகப்பெரிய சாதனை உங்களுடன் நான் கழித்த நாட்கள் மறக்க முடியாது ஆசிரியரின் கேள்விக்கு நான் சரியாக பதில் சொன்னதும் ஆசிரியர் என்னை பாராட்டியதும் வாழ்க்கையில் கூடாத நினைவுகள் இந்த இனிய நினைவுகளோடு உங்களிடமிருந்து விடை பெறுகிறேன் இந்த தளத்தின் மூலமாக அறிமுகமான இனிய நண்பரொருவர் தவறான புரிதலின் காரனமாக என்னை சிறிது மட்டமாக நினைத்து விட்டார் நான் அவரிடம இனி இந்த தளத்திற்கு வர மாட்டேன் என சொல்லியிருந்தேன் இப்போது நான் இங்கு அவருடன் பதிவிடுவது சங்கடமாக உள்ளது நண்பர் டெக்ஸுக்கு பிரச்சனை என்றவுடன் என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை நான் இந்த தளத்திற்கு வருவதற்க்கு ரொம்ப என்னை ஊக்குவித்தது டெக்ஸ்தான் அதனால் இங்கு போன வாரம் பதிவிட்டேன் கலவரம் முடிந்து விட்டது சந்தோஷமாக விடை பெறுகிறேன் ஆசிரியருக்கு ஒரு மிகப் பெரிய நன்றி சொல்ல வேண்டியதிருக்கிறது மாடஸ்டி கலரில் என அறிவித்ததற்கு நான் ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்திய கோரிக்கை அது மிகவும் நன்றி சார் சீக்கிரம் கலரில் தாருங்கள் காத்திருக்கிறேன் என் இனிய நண்பர் என்னை புரிந்து கொண்டு என்னை அழைப்பார் நான் அன்று சந்தோஷமாக இங்கு திரும்பி வருகிறேன் சென்னை புத்தக விழாவில் நமக்கு ஸ்டால் கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன் நண்பர்களே புத்தக திருவிழாவில் என்னால் கலந்து கொள்ள முடியாது மண்ணியுங்கள் மனதில் கஷ்டத்தோடு சந்தோஷமாக இருக்க முடியாது விரைவில் உங்களை சந்திக்கிறேன் சரவணாரே உங்கள் கமெண்ட்ஸ் சூப்பர் ஏரி திறந்து விட்டது எல்லோருக்கும் இனிமையான வணக்கங்கள் பாய்

  ReplyDelete
  Replies
  1. @ செந்தில்

   பிரச்சினையின் பின்னணி பற்றி சரியாகப் புரியவில்லை எனினும் நீங்கள் இத்தளத்திலிருந்து விடைபெறுவதாகக் கூறுவது மிகுந்த வருத்தமளிக்கிறது! மிகுந்த உத்வேகத்தோடு சென்ற வருடத்தில் மூன்றுநாட்கள் தங்கியிருந்து EBFஐ நண்பர்களோடு கலந்து கொண்டாடி மகிழ்ந்த செந்திலை இங்கே நினைவுகூர்கிறேன்!

   ஆயிரம் பிரச்சினைகள் வந்தாலும் இது நம் தளமல்லவா? பிரச்சினைகளைக் கண்டு விலகிச் செல்வது நம் சொந்த வீட்டைவிட்டு வெளிக்கிளம்புவது போலாகிவிடாதா?
   இங்கே இருப்பதையோ விலகிச் செல்வதையோ தீர்மானிக்கும் இரு காரணிகள் நீங்களும், எடிட்டருமே யன்றி மூன்றாவது நபருக்கு அதில் இடமேது?

   கொண்டாட்டங்களும் குதூகலங்களும் நிறைந்த நீண்டதொரு பயணம் நம் முன் காத்திருக்கிறது நண்பரே...

   விலகி நிற்கும் எண்ணம் வேண்டாமே ப்ளீஸ்?

   Delete
  2. ஏங்க செந்தில் சத்யா சார் ...உங்க வீட்ல ஏதாவது வருத்தம்ன்னா வீட்டுக்கே போகாம இருந்துருவீங்களா ...உண்மையை சொன்னா வாழ்வின் வருத்தங்களை மறக்க தானே இந்த காமிக்ஸ் படைப்புகளும் ..இந்த காமிக்ஸ் தளமும் ...எப்போதும் போல வாருங்கள் ஐயா ....ஏடிஆர் போன்ற காமிக்ஸ் நண்பர்களும் தான் ....ஜாலியாக வந்து ஜாலியாக இருந்து ஜாலியாக செல்லுங்கள்...

   சில வேறுபாடுகள் வர தான் செய்யும் ...அதை கடந்து செல்வோமே .....இதுவும் கடந்து போகும் என்பதை தாங்கள் அறியாதவரா ...;-)

   Delete
  3. //உங்க வீட்ல ஏதாவது வருத்தம்ன்னா வீட்டுக்கே போகாம இருந்துருவீங்களா ...உண்மையை சொன்னா வாழ்வின் வருத்தங்களை மறக்க தானே இந்த காமிக்ஸ் படைப்புகளும் ..இந்த காமிக்ஸ் தளமும் ...எப்போதும் போல வாருங்கள் ஐயா ....ஏடிஆர் போன்ற காமிக்ஸ் நண்பர்களும் தான் ....ஜாலியாக வந்து ஜாலியாக இருந்து ஜாலியாக செல்லுங்கள்...

   சில வேறுபாடுகள் வர தான் செய்யும் ...அதை கடந்து செல்வோமே .....இதுவும் கடந்து போகும் என்பதை தாங்கள் அறியாதவரா //

   உண்மை தான் பரணீதரன் சார். எப்போதும் போல் நான் இந்த தளத்திற்கு வருகை தருவேன். கவலை வேண்டாம் நண்பரே _/\_

   Delete
  4. @Senthil Sathya
   சாரி பாஸ் !
   சத்தியமா எனக்கு என்ன பிரச்னைனு புரியல !
   Hope you will comeback soon :-(

   Delete
  5. @Senthil Sathya
   இங்கு தங்களை வர வேண்டாம் என்று யாரும் நினைக்க வில்லை, யாரும் மட்டமாக நினைக்க வில்லை
   மாடஸ்டி கலரில் வர இருக்கும் போது, இங்கு தங்கள் வந்து பதிவிட வராமல் விலகி இருந்தது தான் நன்றாக இல்லை தோழரே
   இங்கு கூடி நட்புடன் ஜாலியாக பேசினால் நன்றாக இருக்கும் தோழரே
   தங்களை இங்கு வெகு நாட்களுக்கு பின்பு இங்கு பார்த்ததில் மகிழ்ச்சியே
   அனைவரையும் பார்க்காமல் ஆசிரியருடன் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்காது தோழரே
   சென்னை புத்தக காட்சி இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பித்து விடும்
   காமிக்ஸ் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி குதுகலிக்கும் நேரம் அல்லவா :)

   நம் நண்பர் சேலம் TEx விஜயராகவன் Sir சொன்னது நம்மில் ஒலிக்க வேண்டும்
   காமிக்ஸ் வாழ்க காமிக்ஸ் நட்பு வாழ்க :)

   நண்பர்கள் அனைவரும் தங்களை வழக்கம் போல பதிவிட நட்புடன் வேண்டுகோள் குடுதுள்ளதால் ரொம்ப செண்டிமெண்ட் ஆகாமல் மகிழ்ச்சியுடன் பதிவிடமாறு கேட்டு கொள்கிறேன் தோழரே

   Delete
 57. கார்சன் : பீரும், வறுத்தக் கறியும் வாங்கிட்டு தான் ஓட்டு போட்டேன். இருந்தும் கட்சிக்காரங்க அடிச்சிட்டங்கப்பா டெக்ஸ் : வாங்கிறதை வாங்கிட்டு நோட்பாவுல போட்டேன்னு அவங்க கிட்ட சொன்னா பின்னே உன்னை கொஞ்சுவாங்களா?

  ReplyDelete
 58. 1.பவள சிலை மர்மம்
  2.ட்ராகன் நகரம்
  3.சைத்தான் சாம்ராஜ்ஜியம்

  ReplyDelete
 59. செயலாளர் அவர்களே ...நீங்கள் சொன்னது கரீட்டோ. .கரீட்டு .....கிராதகர்கள் கூட நேரிடையாக சண்டை போட பதுங்கு குழியில் இருந்து வெளியே வர்றது ஓகே தான் ...ஆனா அதுக்காக முந்தானை பின்னாடி சாரி முகமூடி பின்னாடி மாட்டிகிட்டு சண்டை போடறதுக்கு எல்லாம் கண்டெய்னர்ல பணம் அனுப்பி பதுங்கு குழியை மூடறது எல்லாம் டூ மச்சா தெரியுது ....அதனால் எப்பவுமே போல நம்ம சங்க ஆளுங்களை பதுங்கு குழியிலேயே பாது காப்பா இருக்க சொல்லுங்க ...நானும் தான் ..நானும் தான் ....நேக்கு மட்டும் வேற எந்த மாளிகையை தெரியும் ....

  பொடியன் சார் ..உங்களை பற்றி இங்கு அனைவருக்குமே தெரியும் ....தீடீர் வரவுகள் சில இந்த் அழகான காமிக்ஸ் பூங்காவில் விதைகளுடன் நஞ்சை கலக்க முடியுமா என திரிந்து வருகிறது ...தாண்டி செல்வோம் ...

  நண்பர்களே ....இந்த தளத்தில் வீண் விவாதங்கள் நடைபெற என்றே பல முகமூடிகளை கைகளில் ஏந்தி கொண்டு சில முகமூடிகள் வருகை தருகிறது சமீபமாக ...நாம் பதிலுக்கு பதில் பேச வே காத்து கொண்டு இருக்கும் கிராதகர்களை இனி அமைதியாகவே தாண்டி செல்வோம்....முகமூடிகள் காற்றுடன் கத்தியை வீசி போரிட்டு கொண்டு இருக்கட்டும் .....

  இதற்கும் முகமூடிகளிடம் இருந்து நக்கல் கமெண்ட் வரும்தான் ...விரைவாக தாண்டி செல்லுங்கள் ....நானா .....

  ஆஹாஹா ....


  நான் பதுங்கு குழியிலேயே இருந்து தானே இந்த புறா தூதேயே விடறேன் ...

  ஏய் ....பாத்துக்க ..நானும் பதுங்குகுழி வீரன் தான் ...பதுங்குகுழி வீரன் தான் ...பதுங்கு குழி வீரன் தான் ....;-)

  ReplyDelete
  Replies
  1. //இதற்கும் முகமூடிகளிடம் இருந்து நக்கல் கமெண்ட் வரும்தான் ...விரைவாக தாண்டி செல்லுங்கள் ....நானா .....

   ஆஹாஹா ....


   நான் பதுங்கு குழியிலேயே இருந்து தானே இந்த புறா தூதேயே விடறேன் ...

   ஏய் ....பாத்துக்க ..நானும் பதுங்குகுழி வீரன் தான் ...பதுங்குகுழி வீரன் தான் ...பதுங்கு குழி வீரன் தான் ....;-)//


   என்னமோ சொன்னீங்களே... கல்லு ஃபுல்லுனு 8) அவ்வளவு தானா, "வீராப்பு காந்த்" அப்படினு ஊருக்குள்ளே பேசிக்கிறாங்களே தம்பி சார் :)

   Delete
  2. ///நண்பர்களே ....இந்த தளத்தில் வீண் விவாதங்கள் நடைபெற என்றே பல முகமூடிகளை கைகளில் ஏந்தி கொண்டு சில முகமூடிகள் வருகை தருகிறது சமீபமாக ...நாம் பதிலுக்கு பதில் பேச வே காத்து கொண்டு இருக்கும் கிராதகர்களை இனி அமைதியாகவே தாண்டி செல்வோம்....முகமூடிகள் காற்றுடன் கத்தியை வீசி போரிட்டு கொண்டு இருக்கட்டும் .....///

   +1 சரியாச் சொன்னிங்க தலீவரே!

   Delete
 60. நண்பர்களே.....!
  அட்டகாசமான அட்டைப்படங்களை தயார் செய்து சீக்கிரம் நமது எடிட்டரிடம் ஒப்படையுங்கள்.
  சரியான நேரம் பார்த்து இந்த மாயாவியை வேறு காணோம்.மனிதர் சகலாகலாவல்லவர்.
  அப்படியே ஜான் சைமன்,சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் மற்றும் கிரிதரனும் களத்தில் இறங்கினால் பல வெரைட்டியில் அட்டைப்படங்களை ரசிக்கலாம்.
  ஆதிதாமிரா அவர்களே...
  டெக்ஸ் அட்டைப்படம் ஒன்றை தயார் செய்யுங்கள்.

  ReplyDelete
 61. என்னன்னே தெரியலை டெக்சு ..மே 19 லே இருந்து கண்ணிலே தண்ணி வந்துகிட்டே இருக்கு நிக்க மாட்டேங்குது ...
  அது ஆனந்த கண்ணீரா துக்க கண்நீரான்னு சீக்கிரம் சொல்லிடு கார்சன் ..வெளியே நாலஞ்சு பேரு ரெடியா நிக்கிறாங்க

  ReplyDelete
 62. விடுப்பா கார்சன் இதுக்கெல்லாமா வருத்தப் படுவாங்க ..விடு விடு
  வர்ற உள்ளாட்சி தேர்தல்லே யாவது நமீதா பிரச்சாரத்துக்கு அவசியம் வரும்லே டெக்சு ..?

  ReplyDelete
 63. சரி சரி வேறே டாக்டர் கிட்டே போவோம் அழுகையை நிறுத்து
  மூலை முடுக்கெல்லாம் கொலாஸ்ட் ரல் நிரம்பிப் போய் இருக்கு இனி வருத்த கறி வாடையே ஆகாதுன்னு டாக்டர் எனக்கு சொல்லிட்டாரே டெக்சு ..அழாம என்ன பண்றது ..?

  ReplyDelete
 64. பப்பி ஷேம்.!

  உனக்கு ஒருமுறை அன்பான வேண்டுகோள்.!


  நீங்கள் யார் என்று ரெகுலராக வரும் அனைவரும் அறிவார்.! உங்கள் எழத்தும் சாணிக்கும் சந்தனத்திற்கும் வித்தியாசம் தெரியாத உங்களை ஈசியாக அடையாளம் கண்டுகொண்டோம்.

  நீங்கள் எந்த ஐ.டியில் வந்தாலும் எளிதில் கண்டுபிடித்து விடுவோம்.! உங்கள் மண்டையில் இருக்கும் கொண்டை காட்டி கொடுத்துவிடும்.!


  எடிட்டர் அவர்கள் , குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பதன் அடிப்படையில் ,வாசகர்கள் என்ற பெயரில் நீங்கள் அடிக்கும் கொட்டத்தை சகித்து கொள்கிறார்.!

  அவர் வேண்டுமானால் வாசகர்களை மூனு கண்ணன் வாரான் என்று கொஞ்சி இடுப்பில் வைத்து சோறு ஊட்டட்டும்.அவர் பக்குவப்பட்டவர்.! பொறுத்து கொள்வார்.! ஆனால் நான் உங்களைப்போல் சராசரி வாசகன்.!

  நமக்கு எல்லாம் ஏழு கழுதை வயதாகிவிட்டது. உங்களுக்கு வேலை வெட்டி கிடையாது. ஜாலி மனிதர்.!


  எங்களுக்கு அப்படி அல்ல., சொந்த காலில் நிற்க்கிறோம்.! கண்ட கண்ட அக்யூஸ்ட்களையெல்லாம் சமாளித்து நொந்து நூடுல்ஸ் ஆகி இங்கு வருகிறேன்.! என்ன ஏடிஆர் கஷ்டத்தை சொல்லிவிட்டார்.நான் மனதில் வைத்துள்ளேன் அவ்வளவுதான்.!

  வக்கீல் என்னும் முகமூடியை அணிந்து சதுரங்க ஆட்டம்போல் மண்டையை பிசைந்து சோர்ந்து போய் இங்கு ,ஸ்மெர்ப்ஸ் கிராமம் போல் குதூகலமாக இருக்க இங்கு வருகிறேன்.!  என்னிடம் அவதூறாக வம்பு வைத்தால் சைபர் க்ரைமில் புகார் செய்து கொத்தோடு அள்ளி வந்து களி + சிக்கன் சாப்பிட வைத்துவிடுவேன்.!சைபர் க்ரைமில் உன்னை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்துவிடுவார்கள்.! பீஸ் கொடுக்கிறவனுக்கே வேலை பார்க்க முடியவில்லை.! இதில் உன் ரோதனை வேற !வேண்டாம் ! பீஸ் இல்லாமல் வேலை பார்கக வைத்துவிடாதே.!

  பின்னர் விஜயன் சாரோ ! மற்ற நண்பர்களோ சொன்னால் கூட கேட்க மாட்டேன்.ஜாக்கிரதை.!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் MV sir....
   பீ கூல் என எங்களுக்கு சொல்லி விட்டு நீங்கள் இந்த வீணர்களின் வார்த்தைக்கு செவி சாய்த்து விட்டீர்கள் ...
   விட்டு தள்ளுங்கள் சார்...
   ஆசிரியர் பெரிய ப்ராஜெக்ட் ல இருக்கும் ஒவ்வொரு முறையும் இவர்களுக்கு இதே வாடிக்கை...
   நீங்களும் என்னை போல தாண்டி செல்லுங்கள் என்பதே என் வேண்டுகோள்...

   Delete
  2. தற்போதைய 12கதைகளின் வேலையில் ஆசிரியர் கவனத்தை சிதைத்து ,ஏதாவது தடங்கள் ஏற்படுத்தி ,அதில் ஏற்படும் சின்ன சின்ன மிஸ்டேக் குகளை கும்பலாக கும்மி அடித்து குளிர் காய்வார்கள்...
   நமக்கு காமிக்ஸ் புதையல் கிடைக்கும் கடினமான வேளையில் ஆசிரியர் ஈடுபட்டுள்ள இவ்வேளையில் ,ஆசிரியருக்கு பக்க பலமாக இருப்போம் ...
   இதைப்போன்ற பஞ்சாயத்துகளில் ஆசிரியரின் நேரத்தை நாம் வீணடிக்க வேணாமே...

   Delete
  3. // உனக்கு ஒருமுறை அன்பான வேண்டுகோள்.

   சைபர் க்ரைமில் புகார் செய்து கொத்தோடு அள்ளி வந்து களி + சிக்கன் சாப்பிட வைத்துவிடுவேன்.!சைபர் க்ரைமில் உன்னை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்துவிடுவார்கள்.! பீஸ் கொடுக்கிறவனுக்கே வேலை பார்க்க முடியவில்லை.! இதில் உன் ரோதனை வேற !வேண்டாம் ! பீஸ் இல்லாமல் வேலை பார்கக வைத்துவிடாதே.!

   பின்னர் விஜயன் சாரோ ! மற்ற நண்பர்களோ சொன்னால் கூட கேட்க மாட்டேன்.ஜாக்கிரதை.//

   மரியாதை என்றால் என்னவென்று இந்த தளத்தில் பலருக்கு தெரியாது போல் இருக்கிறது. இங்கேயும் வந்து தன் தொழில் புத்தியைக் காட்டுகிறாகள்.

   இன்னும் எத்தனை பேரை தான் இந்த தளம் காவு வாங்கப்போகிறதோ :(

   இந்தளவு போன பிறகு உங்கள் சகவாசம் எனக்கு வேண்டாம். தேவையில்லாமல் நீங்களும் என் விஷயத்தில் தலையிட வேண்டாம் :(

   இங்கே மேலுக்கு தான் காமிக்ஸ் போலிருக்கிறது _/\_

   Delete
  4. நண்பரே பப்பி @ ஆசிரியர் வெளியிடுகிறார் என்பதால் தான் வாங்குகிறோம் என்ற தங்களின் கருத்துக்கு -1போட்டது என்ன இமாலய தவறா ???அதற்காக பரிகாசம் செய்வீர்களா நண்பரே ???
   உங்கள் கருத்துக்கு தான் நாங்கள் எதிரிகளேயன்றி உங்களுக்கு அல்ல..
   நாம் அனைவரும் இணைந்தது தானே இந்த காமிக்ஸ் உலகம்...நாங்களும் மற்ற நண்பர்கள் உரிமையில் தலையிடுவதில்லை என தாண்டி தானே செல்கிறோம் , பிறகும் துவேசம் தொடர்வது ஏனோ ???

   Delete
  5. //இன்னும் எத்தனை பேரை தான் இந்த தளம் காவு வாங்கப்போகிறதோ////--மனதை சங்கட படுத்தும் நிலை யாருக்கும் நண்பரே...
   உங்கள் உண்மை பெயரில் வாருங்கள் ஜாலியாக கலாய்த்து மகிழுங்கள்...

   நானே சில சமயங்களில் வேணாம் ப்ளாக் என ஒதுங்கி இருந்தாலும் ,நம் அனைவரின் நெஞ்சுக்கு நெருக்கமான காமிக்ஸ் இங்கே மீண்டும் மீண்டும் என்னை ஈர்த்து வருகிறது ,நீங்களும் என்னை போல தானே ,உங்கள் வலி புரிந்து கொள்ள முடிகிறது. நண்பர்களின் பரிகாசத்தால் உங்கள் உள்ளம் காயப்பட்டு இருந்தால் அதற்காக வருத்தும் தெரிவிக்கிறேன்.ஏனெனில் பரிகாசத்தால் நானும் வலியை இங்கே பலமுறை அனுபவித்து உள்ளேன்.யாருக்கும் மீண்டும் அது நடக்க வேணாமே.
   ஆசிரியரின் கையை பலப்படுத்துவோம் நண்பரே ,உங்கள் கை இல்லாமல் நிச்சயமாக அது முடியாது . தருவீர்களா உங்கள் கரங்களை...

   Delete
  6. சேலம் Tex விஜயராகவன்;

   நண்பரே அன்பான வார்த்தைகளுக்கு முதலில் நன்றிகள்_/\_

   "ஷேம் ஷேம் பப்பி ஷேம்" என்ற பெயரை வைத்துக்கொண்டு நான் வேறு எங்கே செல்ல முடியும் ? எனவே நான் இங்கே தொடர்ந்து வருவேன் :)

   நான் ஈரோடு விஜயின் பரம ரசிகன். அவர் கிண்டல் செய்தால் அனைவரும் சிரிக்கிறார்கள். நான் செய்தால் மட்டும் உதைக்கிறார்கள். இது என்ன ஞாயம்?

   அது மட்டுமா நண்பரே, அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னியாகவும், தனக்கு வந்தால் ரத்தமாகவும் இங்கே பார்க்கிறார்கள்...

   அன்று, stop the music என்று தோழி சொன்னார், இது வேறு ம்யூசிக் என்று செனாஅனா சொன்னார், நான் இது நெத்தியடி / மரண அடி என்ற அர்த்தத்தில் ஸாவ் ம்யூசிக் என்று தான் சொன்னேன். கருத்துக்குத் தான் அந்த வார்த்தையே தவிர உங்களை குறிப்பிட்டு அல்ல :)

   Delete
  7. நண்பர் ஈரோடு விஜய் ன் பரம ரசிகர் என்பது மகிழ்ச்சி ...

   //நான் ஈரோடு விஜயின் பரம ரசிகன். அவர் கிண்டல் செய்தால் அனைவரும் சிரிக்கிறார்கள். நான் செய்தால் மட்டும் உதைக்கிறார்கள். இது என்ன ஞாயம்?//--நிச்சயமாக வரவேற்போம் . ஈ.வி. எப்போதும் லிமிட்டேசனை தாண்டுவதில்லை கலாய்ப்பதில்,அதைப்பற்றி நீங்களும் அதே மாதிரி லிமிட்டேசன் தாண்டாமல் கலாய்த்து, எங்களையும் மகிழ்வித்து மகிழுங்கள்.
   இதோ சரியான உதாரணமாக ரின் டின் திகழ்கிறார் ,வந்தது 5,6பதிவுகள் என்றாலும்கூட ரின் டின்னுக்கு நான் ரசிகன்.ரசிக்கும் படி நையாண்டி செய்யுங்கள்.நையாண்டி இல்லையேல் மனித வாழ்வில் ஒரு சுவையும் இல்லை...

   Delete
  8. ///அது மட்டுமா நண்பரே, அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னியாகவும், தனக்கு வந்தால் ரத்தமாகவும் இங்கே பார்க்கிறார்கள்...///---பேசி தீர்க்க முடிகிற விசயம்தான் இது நண்பரே,அனைவரும் சற்றே இறங்கி வரவேண்டும்,அவ்வளவே....

   உங்கள் பேரை கொஞ்சம் மாற்ற பரிசீலனை பண்ணுங்களேன்....
   இந்த பெயரில் நையாண்டி செய்தால் ரசிக்க கொஞ்சம் யோசனை செய்வார்கள் நண்பர்கள்.ஏன் நானே தவறான புரிதலுக்கு வழி வகுத்தது அது...

   Delete
 65. டெத் மியூசிக் வாசிக்கப்பட்ட நானே தாண்டி செல்கிறேன் சார்....
  நீங்கள் கொஞ்சம் பொறுத்து ஆசிரியருக்கு ஒத்தாசை செய்யுங்கள்...

  ஆஃப்டர் ஆல் அவர்களும் நம்மை போல் காமிக்ஸ் நண்பர்களே...
  என்ன கொஞ்சம் குறும்பு+மிஸ்அன்டர்ஸ்டான்டிங் நிலவுகிறது ,அதை சரிப்படுத்த பார்ப்போம்...

  ஆசிரியருக்கும் அனைத்து நண்பர்களின் ஆதரவும் தற்போது தேவையல்லவா...

  ReplyDelete
 66. டெக்ஸ்: அட ஏம்ப்பா கண் கலங்குறா

  கார்சன் : அடுத்த முதல்வர் வேட்பாளர் நான் தான்னு நம்ம நால்வர் அணியில சொன்னாங்கப்பா !

  ReplyDelete
 67. ஆசிரியர் ...சார் .புத்தகங்கள் சென்னை புத்தக காட்சிக்கு முன்னரே சந்தாவில் வந்து விடுமா ....?

  ReplyDelete
 68. M v @

  சாந்தி! சாந்தி!

  உங்கள் மனநிலை புரிகிறது நண்பரே!


  போலி ஐடி என்பது பல காரணங்களுக்காக தன்னை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத நண்பர்கள் வைத்துக் கொள்வது.
  அதில் நல்ல விசயங்களையும் சொல்லாம். அப்படிப்பட்ட நண்பர்களையும் நாம் பார்த்துதான் இருக்கிறோம்.
  ஆனால் சில போலி ஐடிக்களின் கமெண்ட்ஸ் ரசிக்கும்படி இல்லாதது வருத்தம்தான்.!!

  Once again i request you mr. M V

  சாந்தி!! சாந்தி.!!!

  (யாரு அவங்கன்னு கேட்டுடாதிங்க. சாந்தின்னா அமைதின்னு பொருள்) :-)

  ReplyDelete
  Replies
  1. //போலி ஐடி என்பது பல காரணங்களுக்காக தன்னை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத நண்பர்கள் வைத்துக் கொள்வது. //

   நண்பரே, இது என்ன அரசியல் அல்லது குற்றவியல் சம்பந்தமான தளமா, பயப்பட்டு போலி ஐடியில் வர? ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு புனைபெயரை வைக்க நேர்வது இயல்புதான். ஆனால், தம்மை வெளிப்படுத்தவே முடியாத அளவுக்கு அதில் என்ன சிதம்பர இரகசியம்? ஐடியே போலி எனும்போது அதன் மூலமாக வரும் கருத்துக்களுக்கு இடமேது? இவர்கள் இப்படி வந்து குழப்பம் பண்ணிவிட்டுப் போவதால் எத்தனையோ ஆரம்பகால வலை நண்பர்கள் இங்கே பதிவிடுவதேயில்லை. அவர்களை மனம் நோகச்செய்து விரட்டிவிடுகிறார்களே?

   Delete
  2. இப்போது குறித்த ஒருவரே இரண்டு போலி ஐடியில் மாறி மாறி இங்கே குழப்பம் செய்வதை பார்க்கமுடிகிறதே! இதெல்லாம் திட்டமிட்டு செய்யும் வேலையாகவே படுகிறது. பொறுத்துப் போய்க்கொண்டிருந்தாலும் விடுவதாக இல்லையே? பொறுமைக்கும் எல்லை உண்டு அல்லவா?

   Delete
 69. Where is Nicole, Calamity Jane and ரின் டின் கேன்?????

  ReplyDelete