Wednesday, May 11, 2016

தேவை : Author -களின் சேவை !!

நண்பர்களே, 

வணக்கம். கடந்த பதிவு load more பொதிக்குள் சிக்கிக் கிடப்பதாலும்  ; காத்திருக்கும் நமது மின்னும் மரண நாயகரின் ஸ்பெஷல் இதழின் காலியான பக்கங்களை ரொப்பிட வேண்டியுள்ள அவசியத்தை / அவசரத்தை  உங்களுக்கு நினைவூட்டும் பொருட்டும் - இதொவொரு மினி ; quickie பதிவு !! 

இன்னமும் "என் பெயர் டைகர்" இதழினில் அந்த 3 பக்கங்களை நிரப்பிட உங்கள் ஒத்தாசை எனக்குத் தேவைப்படுகிறது  folks !! அது பற்றி எனக்குத் தோன்றியதொரு மகா சிந்தனை இதோ : 

என்றோ-எங்கோ- உலக வரைபடத்தின் ஒரு தூரத்துக் கோடியில் வசித்த இந்த வன்மேற்கின் கௌபாய்கள் மீது நமக்கு இத்தனை லயிப்பு நேர்ந்திடக் காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள் ? எவ்வளவோ genre -கள் இருப்பினும், கௌபாய் தொடர்களை நாம் விடாப்பிடியாய் ஆராதிப்பதற்கு காரணங்கள் என்ன ? உங்கள் பார்வைகளில் இங்கே கொஞ்சம் அலசத் தயாரா ? இது பற்றி சில பல ஆண்டுகளுக்கு முன்பாய் இங்கே நாம் நிறைய பட்டிமன்றங்கள் நடத்தியது நினைவுள்ளது ; but சமீப ஆண்டுகளில் கௌபாய் quota உச்சத்தைப் பிடித்து வரும் நிலையில் - இது பற்றி இன்னும் கொஞ்சம் in depth சென்று பார்ப்போமா மறுபடியும் ? 

சுவாரஸ்யமான சமாச்சாரமாய் இது உருப்பெற்றால் - இதனையே இதழின் காலிப் பக்கங்களில் பயன்படுத்திக் கொள்வேனே ? WILD WEST COLLECTION என்று வெளியாகவுள்ள இந்த இதழில் வேறு சுலபமான கார்ட்டூன் filler pages போடுவது பொருத்தமாயிராது என்பதால் - இந்த முயற்சி எடுபடுமா என்று தான் பார்ப்போமே ? நாமெல்லாமே author -கள்  ஆகிட இதொவொரு வாய்ப்பு !! Give it a shot pardners ? 

And இதோ - நமது முயற்சிகளுள் இன்னொரு அட்டைப்பட preview !! கவனிக்க : இதுதான் நாம் பயன்படுத்தப் போகும் ராப்பர் என்று கருதிடல் வேண்டாம் ! முயற்சிகளுள் இதுவொரு விதம் என்பதைக் காட்டவே இங்கே upload செய்துள்ளேன் ! Bye all ! See you around !

ஞாயிறு வரையிலும் புதிய பதிவை எதிர்பார்த்திராத நண்பர்களுக்கும் இது பற்றிக் காதில் போட்டு உதவிடுங்களேன் folks ? And - மே மாத review -களையும்  இங்கே  தொடரலாமே !

187 comments:

  1. Replies
    1. டுமீல் டுமீல் என்று முழங்கி வரும் பிஸ்டல் பிரளயக்காரர்களின்
      தோட்டா தோரணங்களில் நானும் மூழ்கியவன். வன் மேற்கு என்று
      நீங்கள் கூறினாலும் அதில் உள்ள நியாய தர்ம யுத்தங்களை
      ருசிக்கக் களம் ஒன்று கிடைத்து அதில் அளவில்லா தோட்டா
      மழைகளும், குண்டு வீச்சுகளும், அப்பாவிப் பொதுஜனங்களும்,
      அவர்களுக்காக, அவர்கள் பக்கம் நின்று மோதும் தீரனும்,
      அவன் எதிரிகளிடம் சிக்கி சின்னபின்னமாகினாலும் இறுதியில்
      வெல்லும் அவனது நியாயமும். அப்பப்பா. வன் மேற்கு. வன்மேற்காக
      மட்டுமல்லாமல், எங்கள் இதயங்களில் குடிகொண்டு எங்களை
      நிரப்பி, எங்களை மகிழ வைத்து, எங்களையும் வீரதீர
      சூரர்களாக நினைக்க வைத்து. அதில் என்னைப் போன்று துப்பாக்கி
      தேசத்தின் பிரதிநிதியாக்கி விட்டது இந்த வன்மேற்கின்
      கதைகளே. அதுவும் சித்திரக்கதைகளே. டுமீல், டுமீல், டுமீல்.

      Delete
    2. சூப்பர் போலிஸ்கார்

      Delete
  2. புதிய காமிரேட்ஸ் நல்ல எழுத்து நடை உள்ளவர்கள் இங்கு நிறைய பேர் உள்ளனர் ..

    அவர்கள் விரைவாக தங்கள்படைப்புகளை
    அனுப்பவும் ...

    ReplyDelete
    Replies
    1. selvam abirami : அட..ஜோதியில் நீங்களும் ஐக்கியம் ஆகுங்கள் சார் !

      Delete
    2. @ ஏற்கனவே டைகரின் மாபெரும் காவியத்தில் பெயர் வரச் செய்து மிக பெரும் கௌரவம் அளித்து இருக்கிறீர்கள் சார்...

      அதனால் தயங்கினேன் சார்....


      புதிய நண்பர்கள் தங்கள் பெயரினை புது நூலில் கண்டால் பெரும் ஊக்கம் பெறுவார்கள் அல்லவா?

      Delete
    3. புதியவர்கள் என்று இங்கே வருவது அபூர்வமானவர்கள் மட்டுமே செல்வம். வருபவர்கள் தங்கள் இளமையை நம்முடன் கலந்துகொண்டவர்கள். புதிய அலைகள் மிக மிக அபூர்வமே. விக்ரம் விஜயன் மாதிரி இளம் பட்டாளங்கள் இங்கே கரம் கோர்த்ததெனில்
      அது உண்மையான ஆற்றல் வீச்சைக் கொண்டு வரும். நடக்கும். நடந்தே தீரும்.

      Delete
  3. KAVITHAI MATTUM VENADVE VENDAM PLZ PLZ PLZ

    ReplyDelete
    Replies
    1. R.Anbu : பதிவைப் படிக்கக் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளுங்களேன் சார் ?

      Delete
  4. வணக்கம் சார்...
    வணக்கம் நட்பூஸ் ...

    ReplyDelete
    Replies
    1. பதிவு வந்திருக்கிறது என இங்கே வந்து பார்த்தால் ...பதிவை காணோம் ....க்ர்ர் ...

      Delete
  5. சார்... இந்த தடவையாவது தங்க தலைவனின் முகத்தை அட்டைப் படமாக்குங்களேன்... அந்த முரட்டு முகமே நான் எதிர்பார்ப்பது...

    ReplyDelete
    Replies
    1. கிர்ர், கிர்ர், தலை டைகரின் முகமே எப்போதும் அனலைக் கொட்டிப் பட்டையைக் கிளப்பும். அந்த நெருப்பு சவுக்கினை மறக்க முடியுமா என்ன? இம்முறை டைகர் எந்த
      ஆயுதத்துடன் தலையைக் காட்டப் போகிறாரோ?

      Delete
  6. ஆசிரியர் & நண்பர்களுக்கு வணக்கங்கள்.

    ReplyDelete
  7. சார்... இந்த தடவையாவது தங்க தலைவனின் முகத்தை அட்டைப் படமாக்குங்களேன்... அந்த முரட்டு முகமே நான் எதிர்பார்ப்பது...

    ReplyDelete
    Replies
    1. ஏன் ரம்மி இது வரை ஆசிரியர் டைகர் கதைக்கு டைகர் முகத்தை தானே அட்டை படமாக போட்டு வருகிறார் .பின்னர் அதில் டெக்ஸ் முகமா இருக்கு ,??

      Delete
  8. இனிய இரவு வணக்கம் எடிட்டர் சார்!!!
    இனிய இரவு வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  9. //என்றோ-எங்கோ- உலக வரைபடத்தின் ஒரு தூரத்துக் கோடியில் வசித்த இந்த வன்மேற்கின் கௌபாய்கள் மீது நமக்கு இத்தனை லயிப்பு நேர்ந்திடக் காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள் ? எவ்வளவோ genre -கள் இருப்பினும், கௌபாய் தொடர்களை நாம் விடாப்பிடியாய் ஆராதிப்பதற்கு காரணங்கள் என்ன ? //

    எங்களுக்கு வேறு வழி எதுவும் இல்லை என்பதே காரணம். வேறு வகையான கதைகளை நீங்கள் அதிகம் வெளியிடவில்லை என்பதே உண்மை :)

    ReplyDelete
  10. முன் அட்டை இன்னும் சிறப்பாக இருந்தால் நலம் என்று தோன்றுகிறது ஆசிரியரே,மின்னும் மரணத்துக்கு இணையாக போட இன்னும் சற்று முயற்சிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஏன்ப்பா ரவி விட்டால் அதே படத்தை போட சொல்வீர் போல இருக்கே ? விடுங்கப்பா இது நல்லாவே இருக்கு

      Delete
    2. ராஜா காமெடியாக்கும்.

      Delete
    3. ராஜா காமெடியாக்கும்.

      Delete
  11. தங்க தலைவன் படம் போடுங்கள் ஆனால் மின்னும் மரணம் மாதிரி குளோஸ் அப்பா போடாதீங்கப்பா . தூரத்தில் குதிரை மேலே உள்ள மாதிரி போடுங்கள் அய்யா .

    ReplyDelete
  12. வணக்கம் எடிட்டர் சார்...!
    வணக்கம் நண்பர்களே...!

    ReplyDelete
  13. அட்டைப்படம் நன்றாகவே இருக்கிறது சார். இன்னும் முற்றுப்பெறாத டிசைன் என்று நினைக்கிறேன். கலர் மட்டும் இப்போதைக்கு டல்லாக இருப்பதாக தோன்றுகிறது. ஆனால் டைகரின் அந்த அண்ணாந்து பார்க்கும் போஸ் அட்டைக்கு கெத்தாக இருப்பதாகவே எனக்கு படுகிறது. !!!

    ReplyDelete
    Replies
    1. இல்லை நண்பரே ... இந்த முன் அட்டை அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை என்பதே எனது எண்ணம் ...

      விஜயன் சார்... நாங்கள் எதிர்பார்ப்பது ... இன்னும் இதை விட சிறப்பாக ... _/\_

      Delete
    2. இன்னும் சிறப்பாக வந்தால் இன்னும் மகிழ்ச்சிதான் நண்பரே.!

      இருந்தாலும் எனக்கென்னவோ „டைகர இந்த அட்டைப்படத்துல கொடுத்திருக்கும் போஸைப் பார்க்கும்போது
      "ஃபேர்வெல் பார்ட்டில நிக்குற ஃப்ரெண்டை பாக்குற மாதிரியே ஒரு ஃபீலிங்கு " :-)

      Delete
    3. illai nanbargaley nanraga parental editor symbolism in the album black and white coloril randy veliidaga varuvathai sutikatugirar.irandukum seethe prey attaipadam super sir.2kku enrichment.

      Delete
  14. Sir, Regarding the selection of wrappers for " Yen Paer Tiger" instead of using lot of colours and pictures in the wrapper, y don't v try a simple wrapper with a golden shadow image of tiger in a dark black back ground- Hope it will be very classy & catchy... Bcoz for lot of our readers, Minnum maranam wrapper was a bit disappointed!!!

    ReplyDelete
  15. இப்பக் காட்டுற அட்டைப் படமெல்லாம் ச்சும்மா லுலுவாய்க்கு! அவ்வளவு சீக்கிரம் திருப்தியடைஞ்சுடுவாரா நம்ம வாத்தியாரு? பிரம்மாண்டமா ஒன்ன ரெடி பண்ணி வச்சிருப்பாரு... அந்த அட்டைப்படம் அசத்தலா வரப்போறது உறுதி! அதனால நிம்மதியா இருங்க நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. ஙே!! இது எப்படி சாத்தியமாச்சு உங்களுக்கு?!!! அதுவும் இவ்வளவு சீக்கிரத்தில்!!!! அ..அப்படீன்னா... அந்த அட்டைப் படத்தை வடிவமைச்சது நீங்கள்தானா?!!!!"

      Delete
    2. திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : Nice Edit :-)

      Delete
    3. நாகு ஜி நீங்களுமா?ஙே,எல்லாம் வேகமாக கற்றுக் கொள்கிறீர்கள் போலும்.

      Delete
    4. அருமையாக இருக்கிறது நாகு ஜி ...

      Delete
    5. திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் @@ நீங்களும் டைகர் முகத்தை அட்டை படத்தில் காண்பிக்க மாட்டிங்களா? :-)

      Delete
    6. நாக்ஜீ அருமை ....எப்படி இப்படி ...;--)

      Delete
    7. நன்றி நண்பர்களே ...

      // இல்லை நண்பரே ... இந்த முன் அட்டை அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை என்பதே எனது எண்ணம் ...
      விஜயன் சார்... நாங்கள் எதிர்பார்ப்பது ... இன்னும் இதை விட சிறப்பாக ... _/\_ //

      முன் அட்டை நன்றாக இல்லை என்றவுடனே, சரி நமக்கு பிடித்த மாதிரி ஒரு டிசைன் செய்யலாமே என்று முயற்சித்ததே இது ... நமது ஈரோடு விஜய் பாணியில் சொன்னால் இது 'சும்மா ஒரு லுல்லாயிக்கு...'

      இதை எல்லாம் விட சிறப்பாக அட்டை படத்தை ஆசிரியர் ரெடி செய்து வைத்திருப்பார் நண்பர்களே... :)

      Sir, We are waiting ...

      Delete
  16. பிற நிறுவன காமிக்ஸ் இதழ்களை மேற்கோள் காட்டலாமா?
    அனுமதி கிடைத்தால் ஒரு பக்கத்தின் சுவாரஸ்யத்திற்கு நான் பொறுப்பு ஏற்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. சுவாரசியமாக இருந்தால் கண்டிப்பா இடம்பெறும், அனுமதி ஏற்கனவே கொடுக்கபட்டு விட்டது. தயங்காமல் படைப்புகளை முதலில் அனுப்புங்கள்.

      Delete
    2. நன்றி சகோதரரே!
      எவ்விதம் அனுப்பவேண்டும்?

      Delete
  17. Replies
    1. @ KiD ஆர்டின் KannaN :

      Super! மிகவும் அருமை!

      எடிட்டர் சார், மேல உள்ளதையே நானும் சொல்ல நினைச்சேன் :-)) !

      Delete
    2. இந்த மேச்சேரி கலா ரசிகர் என்னை மாரியே யோசிக்கிறாரே....

      நாம மாத்தி யோசிப்போம்

      Delete
    3. கண்ணன்..


      அருமை...ஆனால் "ராஜ குலோத்துங்க" வை விட்டு விட்டீர்கள்..

      "செவ்விந்தியர்களை" சொன்னேன்...:-)

      கபால்னு ஒரு நான்கு வரி எழுதி போடுங்க..:-)

      Delete
    4. @ மேச்சேரி மாட்டுப்பையன் (கெளபாய்)

      காரணங்களை அழகாக அடுக்கியிருப்பது அழகு! செம!!

      //. இன்றைய சூழலில் இந்த கெட்டப்பில் நான் திரிந்தால் என் குடும்பத்தாரே என்னை குற்றாலத்திற்கு கூட்டிப்போய் எலுமிச்சம் பழம் தேய்த்து குளிக்க வைத்துவிடுவார்கள்.///

      சே..சே! அப்புறம் நண்பர்கள் நாங்க எதுக்கு இருக்கோம்ன்றேன்? :P

      Delete
    5. நன்றி நண்பர்களே!

      செனா அனா! ,

      திருத்திடுறேன் திருத்திடுறேன்.


      குருநாயரே!, :):):)

      Delete
    6. ///சே..சே! அப்புறம் நண்பர்கள் நாங்க எதுக்கு இருக்கோம்ன்றேன்? :P////


      Ha..ha..ha...

      அப்புறம் எங்க ஊரு பக்கம் எலுமிச்சை சல்லிசான விலையில் கிடைக்கும்.:-)

      Delete
    7. எனக்கு ஏன் இந்த கௌபாய்களின் மீது இத்தனை காதல்??

      பொதுவாக நம்மில் பலருக்கு குறிப்பாக எனக்கு வரலாற்றின் மீது ஒரு விளக்க இயலாத ஈர்ப்பு எப்போதும் உண்டு.
      இன்று நாம் வாழும் மண்ணில் ஐநூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த நம் மூதாதையரின் வாழ்க்கை முறையையும் பண்பாட்டையும் பற்றி படிக்கும்போதே மனக்கண்ணில் காட்சிகளாய் விரியும்.
      இன்று கான்க்ரீட் கானகத்தின் புழுதிகளில் புழுங்கித் திரியும் நம் மனதிற்கு அந்த கற்பனை காட்சிகள் வடிகால்களாக இருப்பதில் வியப்பேதுமில்லை.

      நமக்கும் நம்முடைய கலாச்சாரத்திற்கும் துளியும் தொடர்பற்ற ஒரு மேலை நாட்டு கௌபாய்களின் கதைகளின் மீது இத்தனை ஈடுபாடு ஏற்பட்டதற்கும் அவர்களின் அன்றைய வாழ்க்கை முறை, நாகரிகம், முக்கியமாக நமக்கு கிடைத்திராத அந்த கட்டுப்பாடற்ற சுதந்திரம் போன்றவையும் காரணமாக இருக்கலாம்.
      எனக்கும் கூட இடைபெல்ட்டில் இரண்டு துப்பாக்கிகள், வலது கையில் ரைபிள், இடது கையில் சவுக்கு இவற்றோடு கம்பீரமான ஒரு குதிரை மீதமர்ந்து வலம்வர வேண்டும் என்று ஆசை. இன்றைய சூழலில் இந்த கெட்டப்பில் நான் திரிந்தால் என் குடும்பத்தாரே என்னை குற்றாலத்திற்கு கூட்டிப்போய் எலுமிச்சம் பழம் தேய்த்து குளிக்க வைத்துவிடுவார்கள்.
      அந்த ஆசையை இந்த கதைகளின் மூலம் கற்பனை செய்து தீர்த்துக்கொள்கிறேன்.

      வன்மேற்கின் பரந்து விரிந்த நிலப்பரப்பு, இரண்டு மூன்று தெருக்களோடு முடிந்திடும் சிறு நகரங்கள், கோச்சு வண்டி பயணங்கள், ஒவ்வொரு ஊரிலும் தவறாமல் திறந்திருக்கும் சலூன்கள், ஆடல் அழகிகள், போக்கர் பந்தயங்கள், நெரிசல் இல்லாத விசாலமான தூரம்தூரமான நகரங்கள், இயற்கையோடு இயைந்து தனித்தனி குழுக்களாக வாழும் செவ்விந்திய பழங்குடியினர், அவர்தம் ஆடை அலங்காரங்கள், குறிப்பாக இறகு தொப்பி, போருக்கு ஒரு வண்ணம் சமாதானத்திற்கு ஒரு வண்ணம் என்று முகச்சாயங்கள், மாந்த்ரீக நம்பிக்கைகள், வேட்டை உணவை பொதுவில் வைத்து பகிர்ந்துண்ணும் மாண்பு, வெள்ளையர் செவ்விந்தியர் ஒப்பந்தங்கள் , எல்லைகளுக்கும் தலைமைக்கும் கீழ்ப்படியும் கட்டுக்கோப்பான கிராம அமைப்புகள் இவற்றையெல்லாம் பார்க்கும்போது,
      (எங்கு போனாலும் க்யூவில் நிற்க்கும் சிரமங்கள், மரங்கள் மறந்த மாடி குடியிருப்புகள், விழித்தெழுந்தது முதல் விழி மூடும் வரை பணத்தைத் தேடியே ஓடியாக வேண்டிய வாழ்க்கை முறை போன்றவற்றோடு குப்பை கொட்டும் நமக்கு)
      ஒரு இனம்புரியாத ஈடுபாடு ஏற்படுவதும் இயற்கைதானே?

      கடலளவு முயன்றாலும் நம்மால் அந்த கௌபாய் உலகில் வாழவே முடியாது எனும்போது, இந்த கற்பனை கதைகளே கைகொடுக்கின்றன.
      இந்த கதைகளை படிக்கும் ஒவ்வொரு முறையும் மானசீகமாக நானொரு கௌபாயாக மாறி அந்த ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.!!!

      எத்தனை கதைகளை படித்தாலும் அலுப்பூட்டாத இரண்டு genre கள் இருக்கிறதென்றால் அவை கௌபாய் தொடர்களும் காமெடி கார்ட்டூன்ஸ்ம்தான்.

      நானொரு கௌபாய் காதலனும் கூட.!!!

      Delete
    8. செனா அனா!

      பரிகாரம் செய்தாகிவிட்டது :-)

      Delete
    9. ///எனக்கும் கூட இடைபெல்ட்டில் இரண்டு துப்பாக்கிகள், வலது கையில் ரைபிள், இடது கையில் சவுக்கு இவற்றோடு கம்பீரமான ஒரு குதிரை மீதமர்ந்து வலம்வர வேண்டும் என்று ஆசை.///

      எல்லாம் சரி... சவுக்கு கயிறு எதுக்காம்?! கொஞ்சூண்டு லாஜிக் உதைக்குதே... கோச் வண்டி, குருதை வண்டி, மாட்டு வண்டி - இதெல்லாம் ஓட்டுறவங்களுக்குத்தானே சவுக்குத் தேவைப்படும்? ஒருவேளை... சுருக்குக் கயிறைத்தான் அப்படிச் சொல்றீகளோ என்னமோ?! ;)

      Delete
    10. கண்ணன்..... செம...செம...!!!!!!

      Delete
    11. ///ஒருவேளை... சுருக்குக் கயிறைத்தான் அப்படிச் சொல்றீகளோ என்னமோ?! ;)///

      இல்லை குருநாயரே! சவுக்கு கயிறைத்தான் சொன்னேன். (ஹி.ஹி.நம்ம ஊரு நம்பியார் பாதிப்பு)
      சுருக்குக் கயிறு மாடுபிடிக்கத்தானே (அஃகோர்ஸ் சிலவேளைகளில் மனிதர்களையும்) உபயோகப்படும்.
      நம்ம கற்பனை நீதியை நிலைநாட்டுவதிலேயே நிலைத்துவிட்டதால், தப்பை தட்டிக் கேட்க சவுக்கு!!!!!

      எப்பூடீஈஈ??!?!?!! :-)

      Delete
    12. கண்ணன் அருமையான விளக்கம்.

      Delete
    13. கெளபாய் மற்றும் கார்ட்டூன் என இரட்டை சவாரி செய்யும் உங்கள் எழுத்துக்கள் சபாஷ் சொல்ல வைக்கிறது மாமா அவர்களே..என்னுடைய ஓட்டு ச்சே பாராட்டு உங்களுக்கே ....

      Delete
    14. KiD ஆர்டின் KannaN @ அருமை!!!

      Delete
    15. கண்ணண் ஜி அருமையான வர்ணணை

      சூப்பர்
      உங்க எழுத்துக்கள் நல்லா மெருகேரிட்டே வருது

      Delete
  18. டியர் எடிட்டர்

    ஒரு சின்ன கமெண்ட்:

    அவதாரம் இது என்று போடுங்கள் .. பொருந்தவில்லை என்றால் 'Avataar இது' என்று போடுங்களேன். அவதாரிது என்பது என்னமோ போல் உள்ளது.

    அப்புறம் எமக்கு கௌபாய் காமிக்ஸ் ஏன் பிடிக்கும் என்றால்:

    குருதை மேல குந்திக்கிட்டு இன்னொரு குருதையோட பின்னுக்கா பாத்து 'டுமீல் டுமீல்'னு சுடுறதாலீங்கோ :-)

    ReplyDelete
  19. @ ஆசிரியர்....

    கவ் பாய் கதைகளை எனக்கு பிடித்துப் போவதற்கு மூன்றே காரணம்... வெயில்...வெயில்...மேலும் வெயில்.

    ஆமாம் பின்னட்டையில் 'குவானா' ஏன்...அவர்(ன்) வருவது 'இரத்தக் கோட்டை'-அல்லவா.

    ReplyDelete
  20. இந்த அட்டை படம் அருமையாக உள்ளது!!!

    ReplyDelete
  21. எடிட்டர் மற்றும் நண்பர்களுக்கு காலை வணக்கம்.
    டைகரின் அட்டைப்படம் நன்றாக இல்லை.சுமாரில் சுமார்தான்.
    சில பல வாரங்களுக்கு முன் நம் பதிவில் வந்த(டைகரின் புதிய கதை பற்றி)ப்ளுஃபெரி அட்டைபடம் போன்ற அருமையா தேர்வாக குர்ருதையில் இருப்பது போல் போடுங்கள் சார்.

    ReplyDelete
  22. எல்லோரமே டைகரை குளோஸப் ல பாத்தாவே பயந்துகிறாங்களே ....;-)

    ReplyDelete

  23. வரயிருக்கும் 'ரின்டின்கேன்' புத்தகத்தில் பக்கங்கள் ஏதேனும் காலியாக இருக்கிறதா எடிட்டர் சார்?
    'பிராணிகளின் உலகின் மீது நமக்கு ஏன் இத்தனை லயிப்பு ஏற்படுகிறது?' என்று கேட்டீர்களானால், 3 மணி நேரத்தில் 30 பக்கக் கட்டுரையை எழுதித் தள்ளிப்புடலாம்!
    ன்னான்றீங்க? :P

    ReplyDelete
    Replies
    1. ஈரோட்டு புலிக்குட்டிக்குந்தான் என் மீது எவ்வளவு பாசம்,
      குரு புலியாரே

      கணகள் வேர்க்கும் படங்கள் 10

      Delete
    2. ஹா ஹா . ஒரிஜினல் ரின் டின் கேன் நினைப்பது போல நல்ல காமெடி நடை . வாழ்த்துக்கள் நண்பரே .

      Delete
    3. ஹா ஹா . ஒரிஜினல் ரின் டின் கேன் நினைப்பது போல நல்ல காமெடி நடை . வாழ்த்துக்கள் நண்பரே .

      Delete
    4. நான் நடப்பது இந்த கலா ரசிகருக்கு காமெடியா தெரியுதாமே...

      பூபூவ்வ்வ் .... பூபூவ்வ்வ்..

      அழும் படங்கள் அஞ்சரை

      Delete
    5. நான் நடப்பது இந்த கலா ரசிகருக்கு காமெடியா தெரியுதாமே...

      பூபூவ்வ்வ் .... பூபூவ்வ்வ்..

      அழும் படங்கள் அஞ்சரை

      Delete
  24. டைகர்:
    எதிர் பாக்கல இல்ல!
    திடிர்னு இப்படி வெள்ளையா மூக்கு தெரியற மாதிரி வருவேன்னு எதிர் பாக்கல இல்ல!
    ;-)

    அட...
    அட...
    அட...
    கொஞ்சூண்டு வெள்ளையா படம் போட்டா.....
    நம்ம கண்ணுல தான் கோளாரோனு அவிங்க பான்ஸ்கே சந்தேகம் வந்துருது !
    அடேய் டைகர்!
    நீ நிச்சயமா அவதார்(ரம்) தான் டோய் ;-)

    (விஜயன் பாஸு! என்ன மாத்தினாலும் அந்த அவதார்ன்ற வார்த்தையை மட்டும் மறக்காம போட்டுடுங்க :))

    ReplyDelete
    Replies
    1. //எதிர் பாக்கல இல்ல!
      திடிர்னு இப்படி வெள்ளையா மூக்கு தெரியற மாதிரி வருவேன்னு எதிர் பாக்கல இல்ல!//

      :D செம!

      Delete
  25. முன்னட்டையில் டைகரை போடலாமே? :-P

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா! நையாண்டியின் உச்சம்!! :))))

      Delete
    2. இப்பத்தான் கவனிக்கிறேன்...


      :-))))))

      ROFL........      இன்னும் சிரிப்பை அடக்க முடியல..

      Delete
    3. டைகர்:
      கண்டேடே புடிக்க முடியல இல்ல !
      கொஞ்சூண்டு 'சில்க்' பவுடர் போட்ருகன் ;-P

      Delete
  26. @எடிட்டர்:

    நண்பர்களின் கருத்துக்களுக்கு பதிலாக ஒரிஜினல் இல் வெளியான, தொடரின் எழுத்தாளர் சார்லியர் எழுதிய "The life and times of Blueberry" கட்டுரையை வரலாற்று படங்களுடன் அப்படியே போடலாமே? "என் பெயர் டைகர்" தான் தொடரின் கடைசி அத்தியாயம் எனும் போது இந்த கட்டுரை சிறப்பான ஒரு காலவரிசை யாக அமையும்.

    அந்த சில பக்கங்கள் இங்கே: http://misterblueberry.blogspot.in/2012/12/the-life-times-of-lt-mike-blueberry-by.html

    ReplyDelete
    Replies
    1. Prasanna @ நல்ல யோசனை!!! இதில் உள்ள சுவாரசியமான விசயம்களை மட்டும் கொண்டு 3 பக்கத்திற்குள் வருமாறு யாராவது தொகுத்து கொடுத்தால் நம்ப ஆசிரியருக்கு வசதியாக இருக்கும்.

      Delete
    2. திரு பிரசன்னாவின் இக்கூற்றை மறுதலிக்கிறேன்.......

      தமிழ் இலக்கணத்தில் தகுதி வழக்கு என்று ஒன்றுண்டு....

      அதில் ஒன்று மங்கல வழக்கு...

      உப்புளதோ வணிகரே என கேள்வி கேட்டால்

      அவ்வணிகர் பருப்புளது என்பார்.....

      உப்பில்லை என சொல்லமாட்டார்...

      இங்கேயும் எடிட்டர் மூன்று பக்கத்திற்கு என்ன செய்யலாம் என வினா எழுப்பவில்லை....

      வாசகர் பங்களிப்பு வேண்டும் என்கிறார்.....

      அதற்கு ஒரு இணைய பதிவினையோ, விக்கி பீடியாவையோ கை காட்டுவது எஞ்ஞனம் நியாயமாகும்....

      மங்கல வழக்குக்கு மற்றுமோர் உதாரணமாக திரு பிரசன்னாவின் கூற்றை எண்ணுவதல்லாது வேறொன்றும் தோன்றவில்லை....

      மேச்சேரி கண்ணன் தனது பங்களிப்பை செய்துள்ளார்.....
      இன்னும் எத்தனையோ நண்பர்கள் ஈமெயில் மூலம் தங்கள் படைப்புகளை ஏற்கனவே அனுப்பியிருக்க கூடும்....
      வாசகர்களுக்கு ஊக்கம் அளிக்கும் ஒரு முயற்சியாக இதை எண்ணலாம்...
      அதை விடுத்து................................

      Delete
    3. @ செனா அனா

      அசத்தலான ஆதங்கம் போங்க! 'மங்கல வழக்கு' உதாரணத்தை இதோடு இணைத்தது - செம! செம!!

      எப்பிடித்தான் இப்படியெல்லாம் தோனுதோ!!!

      Delete
    4. @ Selvam sir and friends:

      I realize editor has invited readers opinions on the subject. I have only made an alternate recommendation. Having read that particular Charlier essay with all those historical photographs and all, i just thought it'd make an excellent filler page material, though might need more than 3 pages. besides this En Peyar Tiger being the final arc of the Charlier/Giraud's collaboration, i thought it would be fitting to have a timeline of events right from the beginning of Capt Tiger stories. hence my suggestion.

      so please take no offense here.

      Delete
    5. //திரு பிரசன்னாவின் இக்கூற்றை மறுதலிக்கிறேன்.......

      தமிழ் இலக்கணத்தில் தகுதி வழக்கு என்று ஒன்றுண்டு....

      அதில் ஒன்று மங்கல வழக்கு...

      உப்புளதோ வணிகரே என கேள்வி கேட்டால்

      அவ்வணிகர் பருப்புளது என்பார்.....

      உப்பில்லை என சொல்லமாட்டார்...

      இங்கேயும் எடிட்டர் மூன்று பக்கத்திற்கு என்ன செய்யலாம் என வினா எழுப்பவில்லை....

      வாசகர் பங்களிப்பு வேண்டும் என்கிறார்.....

      அதற்கு ஒரு இணைய பதிவினையோ, விக்கி பீடியாவையோ கை காட்டுவது எஞ்ஞனம் நியாயமாகும்....

      மங்கல வழக்குக்கு மற்றுமோர் உதாரணமாக திரு பிரசன்னாவின் கூற்றை எண்ணுவதல்லாது வேறொன்றும் தோன்றவில்லை....

      மேச்சேரி கண்ணன் தனது பங்களிப்பை செய்துள்ளார்.....
      இன்னும் எத்தனையோ நண்பர்கள் ஈமெயில் மூலம் தங்கள் படைப்புகளை ஏற்கனவே அனுப்பியிருக்க கூடும்....
      வாசகர்களுக்கு ஊக்கம் அளிக்கும் ஒரு முயற்சியாக இதை எண்ணலாம்...
      அதை விடுத்து...............................//

      தேவையில்லாத நாட்டாமை :(

      அமங்கலம், அமங்கலம் :(

      மொத்தத்தில் அதிகபிரசங்கித்தனம் :(

      இது அபச்சாரம் மக்களே :(

      Delete
  27. விஜயன் சார், ஒருபக்கத்தில் இந்த புத்தகத்திற்கு முன் பதிவு செய்தவர்களின் (அனைவரின்) ஸ்டாம்ப் சைஸ் போட்டோவை கொண்டு டைகர் முகம் வரும்மாறு செய்யலாமே!

    ReplyDelete
    Replies
    1. இதுவும் நல்ல ஐடியா தான் ....முயலுமா என யோசித்து பாருங்கள் ஆசிரியர் சார் ...

      Delete
  28. விஜயன் சார், அது என்ன எப்ப பார்த்தாலும் டைகர் புத்தகத்தில் மட்டும் 2 பக்கம் சும்மா இருக்கு 3 பக்கம் சும்மா இருக்கு, அதுல என்ன போடலாம்ன்னு யோசனை கேட்பது.... இது டெக்ஸ் புத்தகத்துக்கு எல்லாம் பொருந்தாதா என்ன (அ)நியாயம் இது!!

    இந்த இருவரையும் விரும்பும்... இவர்கள் இருவரின் ரசிகர்களின் விவாதத்தை ரசிக்கும் ஒருவனின் கேள்வி இது!!

    ReplyDelete
    Replies
    1. ஆனா ...பரணி சார் ...ஹிட் நாயகன் படத்திற்கு தொலைகாட்சியில் கேக்காம விளம்பரமா குவியும் ..சுமாரான நாயகனுக்கு கேட்டா கூட விளம்பரம் கிடைக்காது ....என்ன பன்றது போங்க ....ஏதோ சொல்லனும்னு தோணுச்சு அவ்ளோ தான் சார் ...தப்பா நினைச்சுகாதீங்க ....

      வருங்கால காமிக்ஸ் ஜனாதிபதி டைகர் வாழ்க ..வாழ்க ...;-))

      Delete
    2. @Paranitharan K :
      ஐஐஐயோ !
      பாஸு! இப்படி சத்தமா பேசாதீங்க !
      அப்புறம் குளிக்காம வந்து உங்கள கட்டி பிடிச்சிர போறாரு ;)

      Delete
  29. Hit of cow boy story
    கௌபாய் தொடரின் காலத்தைதாண்டிய வெற்றிக்கு காரணம் அதில் வித்தியாசமான சுவை இருப்பதே.
    பரந்த எல்லை கொண்ட பிரதேசம்.கட்டுப்பாடுகள் குறைந்த வாழ்க்கை முறை.மிக நுணுக்கமான செயல் திட்டங்கள் மற்றும் போர் நுணுக்கங்கள்.தனிமனித தந்திரங்கள்.
    மேற்கத்திய வித்தியாசமான பூமி அமைப்புடைய அனல் கக்கும் பாலைவனம் ஒருபுறம் உறைய வைக்கும் பனிபிரதேசம் ஒருறம் செழிப்பான மலைப்பகுதி ஒருபுறம் கரடுமுரடான பரந்த புல்வெளி ஒருபுறம்.மற்றும் புதிர் பிரதேசங்கள்.

    இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கை முறையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுவது,வாகனமுறை பயணங்கள்,ஜீவனோடு ஓடும் இரும்பு குதிரைகள் அதன் சுவாரஷ்யமான பின்னனிகள் அதனூடே நடக்கும் யுத்தங்கள்.
    சட்டதிட்ட ஆட்சி முறைகள்,கோட்டைகள்,தங்க வேட்டைகள்,யுத்தங்கள்,இவையனைத்தும் நமக்கு பரிச்சையம் இல்லாததால் அதன் சுவை மேலும் கூடி கௌபாய் கதைகள் நமக்கு தித்திப்பாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. @ ஜெயக்குமார்

      அப்படியே பொங்கிட்டீங்க! செம!!

      Delete
    2. ஜெயகுமார் சார் ....நன்று ..நன்று ...;-)

      Delete
    3. Soooper
      ஜெயக்குமார் :) :) :)

      Delete
  30. கெளபாய் கதைகள் ஏன் பிடிக்கின்றன ?

    பரந்த எல்லை கொண்ட பிரதேசம்.கட்டுப்பாடுகள் குறைந்த வாழ்க்கை முறை.மிக நுணுக்கமான செயல் திட்டங்கள் மற்றும் போர் நுணுக்கங்கள்.தனிமனித தந்திரங்கள்.
    மேற்கத்திய வித்தியாசமான பூமி அமைப்புடைய அனல் கக்கும் பாலைவனம் ஒருபுறம் உறைய வைக்கும் பனிபிரதேசம் ஒருறம் செழிப்பான மலைப்பகுதி ஒருபுறம் கரடுமுரடான பரந்த புல்வெளி ஒருபுறம்.மற்றும் புதிர் பிரதேசங்கள், சுட்டெரிக்கும் பாலைவனங்கள் , தகிக்கும் பாறை முகடுகள், மதிப்பு மிக்க தண்ணீர் , நியாயம் கிலோ எத்தனை டாலர்கள் விலை என கேட்கும் முரடர்கள் , அதே முரட்டு கரங்கள் கொண்டு இவர்களை அடக்கும் கெளபாய்கள், வன்மேற்கின் பரந்து விரிந்த நிலப்பரப்பு, இரண்டு மூன்று தெருக்களோடு முடிந்திடும் சிறு நகரங்கள், கோச்சு வண்டி பயணங்கள், ஒவ்வொரு ஊரிலும் தவறாமல் திறந்திருக்கும் சலூன்கள், ஆடல் அழகிகள், போக்கர் பந்தயங்கள், நெரிசல் இல்லாத விசாலமான தூரம்தூரமான நகரங்கள் !

    ReplyDelete
  31. எடிட்டர் சார்,

    காலியா கிடக்கும் அந்த 3 பக்கத்துல நம்ம பிரண்ட்ஸ் எழுதின கட்டுரைகளை போட்டுத்தாக்கியதுபோக மிச்சம்மீதி ஏதாச்சும் இடம் இருந்தா அதுல 'விரைவில் வருகிறது' அப்படீன்னு போட்டு 'இரத்தக் கோட்டை - வண்ண மறுபதிப்பு' சமாச்சாரத்தை இறக்கிவிட்டீங்கன்னா செம செமயா இருக்குமில்லையா?!!

    'விரைவில்' அப்படீன்னா கழுத 'அடுத்த வருஷம்'னு இருந்துட்டுப் போகட்டுமே! ன்னான்றீங்க நீங்க?

    ReplyDelete
    Replies
    1. கசமுசான்னு நாங்க ஏதாவது போராட்டம் கீராட்டம்னு நடத்தி அப்புறமா நீங்க அறிவிக்கிறதைக் காட்டிலும் இது ரெண்டு தரப்புக்கும் சேதாரமில்லாம இருக்குமில்லையா?

      Delete
    2. அட..! நல்ல யோசனையா இருக்கே..!

      Delete
    3. அட..! நல்ல யோசனையா இருக்கே..!

      Delete
  32. அய்யோ ஆண்டவனே ...என் கமெண்ட்ஸ் ஐ காணோம்...
    இதென்ன சோதனை ....
    கெளபாய் கதைகள் பிடிக்க காரணமென்ன ?--- என எழுதி இருந்தேன். செனா அனா ஜியும் பாராட்டி இருந்தார் ...ஆனால் ஆனால் இப்போ அந்த செட் கமெண்ட்ஸ்களை காணலயே...

    ReplyDelete
  33. Oops !! Sorry sir....was removing some double entries, when yours must have been deleted too by mistake !!

    ReplyDelete
    Replies
    1. ஏதோ வைரஸ் நம்ம ப்ளாக்கை அட்டாக் பண்ணி இருக்கும் போல சார் ....உங்கள் கமெண்ட்ஸ் கூட 3முறை பப்ளிஷ் ஆகி உள்ளது...
      டைகர் வைரஸ் ஆக இருக்குமோ!!!

      Delete
    2. ///டைகர் வைரஸ் ஆக இருக்குமோ///

      டைகரே வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வடக்குப்பட்டி ராமசாமி மாதிரி தானே இருக்காரு! :P

      Delete
    3. @ERODE VIJAY
      Hope Captain Tiger comes and show the cat who is the Hero

      Delete
    4. எல்லோரும் டைகர் அழகை பற்றி கலாய்ப்பது எனக்கு கஷ்டமாக உள்ளது.சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.அதற்காக எங்களது இளவரசியின் படத்தையா அட்டையில் போட முடியும்.இந்த சதிவேலைக்கு நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்.

      வேண்டுமானால் அந்த காலி பக்கங்களை கொஞ்சம் அதிகப்படுத்தி கலரில் ஒரு குட்டி இளவரசி கதையை வெளிட்டால் மட்டுமே அட்டயில் இளவரசி படத்தை வெளியிட ஒத்துக்கொள்ளமுடியும்.அதுவும் நிபந்தனையின் பெயரில்.!!!

      Delete
    5. @ கடல்யாழ்

      //Hope Captain Tiger comes and show the cat who is the Hero ///

      அதெல்லாம் வேணாம் சகோ! ரின்டின்கேன் புகழ்ச்சியை விரும்பறதில்லை... பயலுக்கு கூச்ச சுபாவம் கொஞ்சம் ஜாஸ்தி! :D

      Delete
    6. ஈ.வி.! ரகளை பண்ணாதீங்கோ..!

      Delete
  34. கௌபாய் கதையிலே வரும் தங்கம்தான் குடியேற்றகாரர்களை மட்டும் கவரந்து இழக்காமல் நம்மையும் கவர்ந்து இழக்க காரணமாக அமைந்து உள்ளது.!

    தங்க கல்லறையில் தங்கம்தேட கஸ்டாப் ஜிம்மி மட்டுமல்ல நாமுமே பரபரப்பாய் தேடிபடித்தோம் என்பதே உண்மை.! டைகர் ஜிம்மி மட்டுமே தண்ணீர் இல்லாமல் அந்த பிரமாண்டமான பாலைவனங்களில் உள்ள வறண்ட மலைத்தொடரை பார்த்து பிரமித்து நாமும் சிக்கிக்கொண்டது போல் ஒரு உணர்வு.!

    அதேபோல் மின்னும் மரணமும் தங்கம்தான் கதையின் விறுவிறுப்பிற்கு காரணம்.இதன் முதல்பாதில் தங்கம் கிடைக்கவில்லை என்றவுடன் அமெரிக்க அரசை விட நம் வாசகர்கள்தான் அதிகம் ஆவேசப்பட்டனர்.!

    இரண்டாவதாக தெளிவான அரசும் தெளிவான சட்டங்கள் இல்லாத காலகட்டத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து குடியேறிய பேராசையும் சுயநலமும் கொண்ட சமூகத்தில் நீதிக்காக ஹீரோ துப்பாக்களை முழக்கி நல்லவர்களை காப்பாற்றும்போது நாமும் மெய்மறந்து ரசிக்கின்றோம்.!

    அதேபோல் நான் பிறந்து குழந்தையாக இருந்த காலத்தில் ஆரம்பித்த மின்னும் மாரணம் எவ்வித மாற்றமோ நெருடலோ இல்லாமல் இன்றுவரை ரசிக்கச் செய்வது கௌபாய் கதைகளால் மட்டுமே முடியும்.!

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் சென்ற பதிவில் டைகரை பற்றி பாராட்டி ஒன்று இரண்டு என்று வரிசைபடுத்தி பாராட்டி எழதச்சொன்னார்.நானும் எடிட்டரின் ஆணைகளுகிணங்க பழைய டைகர் புத்தகங்களை எடுத்து படிக்க ஆரமித்தேன். முதலில் தங்க கல்லறையும் மின்னும் மரணமும் படித்தேன் புல்லரித்தது.! என் மனம

      Delete
    2. சூப்பர் M.V சார்!

      Delete
    3. எம்.வி.சார்! அருமை!

      Delete
  35. வருடக்கணக்கிலே சுட்டெரிக்கும் வெயிலையும், பாலைவனப் புழுதியையும் மட்டுமே பார்த்திருந்த மொகலாயர்கள், பாரத தேச பிரவேசம் கண்ட நொடிமுதல் 'ஹா'வென அதிர்ந்து போனோர்கள்! அதுவரை அவர்கள் பார்த்திராத பசுமைகளைக் கண்டதும் பல்லிளித்துப் போனார்கள்!
    அது போலத்தான்....,
    சரித்திரத்தின் பவித்திரத்தையும்,தரித்திரத்தயும்,
    சமூகத்தின் வளங்களையும், அவலங்களையும்,
    நவீனத்தின் நாகரீகக் கோமாளித் தனங்களையும் கண்டு சலித்துப்போன நாம்....,
    இதுவரை நிஜத்தில் கண்டிராத வன் மேற்க்கைக் கண்டதும் பைத்தியங்களாய் அடிக்கப்படுகிறோம்!
    தொப்பிகளும், குதிரைகளும், உடையலங்காரங்களும் நம்மை புதியதோர் உலகு நோக்கி துரித நடை பயில வைக்கின்றன...!
    நாள் கணக்கில்.வாட்டும் வெயிலில் தன்னந் தனியாகப் பயணிப்பதும்,இடையிடையே பெம்மிகானை வழுங்கிக் கொள்வதும், விஷ ஜந்துக்கள் நடமாடும் புதர் வெளிப் பொட்டல்களில் இரவுகளைக் கழிப்பதும், தண்ணீர் நிரப்பிய குடுவைகளும், குடுவைகள் காலியானதும் கற்றாளைகளின் வேர் கடித்து உறிஞ்சுவதும்......!!
    அட..அட..இன்னும் என்னென்ன..என்னென்ன...,!!
    செவ்விந்தியர்கள் என்பதாலோஎன்னவோ அவர்கள் மீதொரு தனிப் பிரேமை ஊற்றெடுப்பதை தடுக்க முடியவில்லைதான்..!
    எத்தனைப் பிரிவுகள்..எத்தனைக் குணங்கள்..
    கட்டுமஸதான செவ்விந்திய இளைஞர்கள்,
    அழகு ததும்பும் செவ்விந்திய யுவதிகள்..,
    சடங்குகள், சம்பிரதாயங்கள்...ஹா!
    கதைக் களத்தினுள் நுழைந்த பின் அந்தத் தொப்பி வாலாக்களோடு சேர்ந்து நாமும் சாகசம் செய்வதைப் போன்ற உணர்வு..!
    மர வீடுகளையும்,
    கோச் வண்டிகளையும்,
    பாறை முகடுகளையும்,
    புகை சமிக்ஞைகளையும்,
    புழுதிப் படலங்களையும் கண்ணில் காண மாட்டோமா என்ற ஏக்கம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!!
    இன்னும் எத்தனை யுகங்கள் கடந்துபோனாலும் வரலாற்றில் கௌ பாய்களுக்கென்று ஓர் தனியிடம் எப்போதும் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மையோ அது போல கௌபாய்களை நமக்கு சீராய்,நேர்த்தியாய் அறிமுகம் செய்திட்ட லயன் காமிக்ஸிற்கு நமது இதய சிம்மாசனத்தில் எப்போதும் தனியிடம் உண்டு என்பதும் திண்ணமே..!

    ReplyDelete
  36. என் பேரு டைகர் க்கு பதிலா
    பெர்ர்ர்ரர்ர்ர்ர்ரிரி ரி ரி (தேறி)...................
    அல்லது......
    பெர்ர்ர்ரர்ர்ர்ர்ரிரி ரி ரி டா (நெருப்புடா .....)

    பேர் வைக்க மந்திரி சபை (ஹி ...ஹி .... நான் மட்டும் தான் )பரிந்துரைக்கிறது

    ReplyDelete
  37. இன்று பதிவு தபாலில் ஒரு வழியாக எனக்கு புதையல் வந்து கிடைத்து விட்டது . நன்றிகள் கோடி சார் .

    ReplyDelete
  38. நான் சிறுவயது முதல் லயன் ஸ்பெஷல்கள் என்றால் என் வயிற்றில் ஒரு இன்பமான ஒரு வலி தோன்றும். ரீலீசாசாம் முன் இரண்டு நாட்கள் நீண்ட நாட்கள் போன்று தோனறும்

    இந்த இன்பமான அடி வயிற்றில் ஏற்படும் வலி இன்றும் அதேபோல் தொய்வின்றி இன்றுவரை ஏற்படுகிறது.! இதைக் கண்டு ஒவ்வொரு முறையும் வியந்து உள்ளேன்.ஆசிரியர் ரூம் போட்டு யோசிப்பாரா? அல்லது எப்படி யோசிக்கிறார் என்ன புதுமையை ஒவ்வொரு ஸ்பெஷலிலும் புகுத்துகிறார் என்பதை கணிக்கவே முடியாது.!

    உதாரணமாக,


    நான் ஆரம்பத்தில் முதலில் வியந்தது சைத்தான் விஞ்ஞானி அதன் பாக்கெட் சைஸ் குண்டு வயிற்றில் பூராண் ஓடுவதுபோல் செய்தது.அதைத்தொடர்ந்து மீடியமான பெரியசைஸ் இரும்புகை நார்மன்.பின்பு மெகா பெரிய சைசில் கலரில் கொலைப்படை.

    பின் பாக்கெட் சைசில் அதகளம் முதலில் ₹ 5 ரூபாயில் குண்டு சைஸ் வெளியிட்டு ஆச்சர்யப்படவைத்தார் .பிறகு ₹ 10 ரூபாய்க்கு மிமிககககககப்பெரிய குண்டு வெளியிட்டு திக்குமுக்காடச் செய்தார். அதன் பின் ,என்.பி.எஸ்.,ஜாலி ஸ்பெஷல்.,கௌபாய் ஸ்பெஷல்,800 பக்கத்தில் ஜம்போ ஸ்பெஷல் என்று கலக்கினார்.பின்பு எல்.எம்.எஸ்.ஸை ஹார்டு பைண்டிங் போட்டு திக்குமுக்காட செய்தார்.பிறகு கிப்ட் பாக்ஸில் அசத்தல். ,பின்பு தலையில்லாத போராளி எவ்வித அறிவிப்பும் இல்லாமல் மெர்சல் ஆக வைத்தார்.!

    என் பெயர் டைகர் கதையில் பெரிய எதிர்பார்ப்பு இல்லை.என்றாலும் ஏதாவது அசத்துவார் என்றே உள் மனது கூறுகிறது.!

    ReplyDelete
    Replies
    1. @ SSPS
      மிஸ்டர் பிரசன்னாவின் கருத்தை மறுத்து பதிவிட எனக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு எனது கருத்தை மறுத்து பதிவிட தங்களுக்கு உரிமை உள்ளது.....
      மேலே பதிவிட்டு உள்ளீர்கள்.....நான் அதை ஏற்று கொள்கிறேன்.......

      ஆனால் அப்பாவித்தனம், வெகுளித்தனம் மிக்க நல்லவர் ஒருவரின் காமிக்ஸ் பற்றிய உணர்வுகளை CROOKED ஆன பார்வையுடனும், MALICIOUS CONTENT உள்ள கோணத்தில் திரித்தும் WICKED HUMOUR உடனும் பதில் அளிப்பதை சகிக்க முடியாத காரணத்தால் எனது கண்டனங்களை உங்களது இந்த பதிவிற்கு
      பதிவு செய்கிறேன்

      Delete
    2. MV சாரின் கமெண்டில் ,பாதியை மட்டும் எடுத்து MALICIOUS CONTENT உள்ள கோணத்தில் திரித்து உள்ளஷேம் ஷேம் பப்பி ஷேம்ன் விசமத்தனமான கமெண்டை எதிர்த்து நானும் என்னுடைய கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்...

      Delete
    3. @ SSPS

      :(

      @ M.V

      சூப்பரா சொன்னிங்க!

      Delete
  39. நண்பர்களே.!

    காமாலை காரனுக்கு கண்ணில் பட்டதல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும்.!


    இருந்தாலும் ஒரு விளக்கம்.

    ரோலர் கோஸ்ட் ,அதிவிரைவாக கண்ரோல் இல்லாமல் செல்லும் வயிற்றில் மெல்லிய ஒரு வலி தோன்றும்.இது இனிமையாக இருக்கும் .ஆனால் இது இயல்பாக மற்றுமே வரும்.வரவைக்க நினைத்தால் முடியாது.

    இளமைக்காலங்களில் காதலியை சந்திக்க அப்பாயிண்மெண்ட் கிடைத்தால் இவ்வாறு தோன்றும்.தற்போது 50 லட்சம் நாளை பீஸாக கிடைக்கப்போகிறது என்னும் சூழ்நிலையில் நினைத்தாலே இவ்வாறு தோன்றும்.!


    நாளை எல்.எம்.எஸ் கூரியரில் வரப்போகிறது என்று கேட்டவுடன் உற்சாகத்தில் இது தோன்றியது.ஸபெஷல் வெளியீட்டின் போதெல்லாம் உற்சாகத்தினால் எனக்கு தோன்றும்.! எனக்கு காமிக்ஸ் மேல் அவ்வளவு வெறித்தனமான பற்று. தவறாக நினைக்காமல் எனக்கு ஏற்பட்ட பீலிங்கை எழதினேன்.

    இதை எழத முக்கிய காரணம் என் பெயர் டைகர் ஸ்பெஷலுக்கு எனக்கு எதுவுமே தோன்றவில்லை.!

    செல்வம் அபிராமி சார்.!

    இவ்வாறு ஏற்பட என்ன காரணம்.வயிற்றில் சுரக்கும் ஆஸிட்டா.? இதனால் அல்சர் வருமா.?

    ReplyDelete
    Replies
    1. ம வெ சார்........

      நீங்கள் சொன்ன எல்லா விஷயங்களும் பரிவு நரம்பு மண்டலம் (SYMPATHETIC NERVOUS SYSTEM) தூண்டப்பட்டு அட்ரினலின், கார்டிசால் அதிகமாக சுரப்பதால் ஏற்பட கூடியது....
      அதீத உணர்ச்சிவசப்பட்டு ஒரு விஷயத்தை அணுகும்போது இது எல்லோருக்கும் ஏற்பட கூடியதுதான்......
      அமில சுரப்பு அதிகரிக்கும்..அந்த நேரத்தில் மட்டும்...
      ஆனால் அல்சர் அல்ல.....
      /////இளமைக்காலங்களில் காதலியை சந்திக்க அப்பாயிண்மெண்ட் கிடைத்தால் இவ்வாறு தோன்றும்//////

      இந்த விஷயம் குறித்து மேல் விவரம் வேண்டுமானால் அத்துறையின் எக்ஸ்பர்ட் ஒப்பினியன் வாங்க வேண்டும்...
      ஈனா வினா வின் அப்பாயிண்மெண்ட் கிடைக்குமா என பாருங்கள்...:-)

      ஆனால் ஒன்று உறுதி.... காதலியின் அண்ணன் அர்னால்ட் சைசில் இருந்தால் இந்த உணர்வு பலமடங்கு அதிகரிக்கலாம் :D

      /////இதை எழத முக்கிய காரணம் என் பெயர் டைகர் ஸ்பெஷலுக்கு எனக்கு எதுவுமே தோன்றவில்லை.!///////
      சார்....இதற்கு டைகரின் முகத்தை குளோசப்பில் கற்பனை செய்து பின்னர் என் பெயர் டைகர் இதழ் பற்றி யோசித்தால் போதும்:D


      Delete
    2. ///ஆனால் ஒன்று உறுதி.... காதலியின் அண்ணன் அர்னால்ட் சைசில் இருந்தால் இந்த உணர்வு பலமடங்கு அதிகரிக்கலாம் ///

      முற்றிலும் உண்மை! அர்னால்டு சைசில் அண்ணனைப் பார்க்கும்போது அந்த அமிலத் தன்மை பன்மடங்கு அதிகரித்து, ஒருசில நிமிடங்களிலேயே பேதியாக மாறிவிடும்! :D

      Delete
    3. அனுபவஸ்தர்கள் சொன்னா கேட்டுக்க வேண்டியதுதான்!

      Delete
    4. @MV sir

      வயிற்றில் பட்டாம்பூச்சி

      பற்றிய என் கவிதை      சிறு வயதில்
      சிறு தவறுக்கு
      சிக்கிய போது
      தவறால் ,

      மரமொன்றில் ஏறி
      மல்லாக்க விழுந்த போது
      பயத்தால் ,

      பேச்சிற்கும்,
      கவிதைக்கும்
      பரிசு
      பெற்ற போது
      பெருமையால்,

      காதலியிடம்
      பெற்ற முதல்
      முத்தத்தின் போது
      காமத்தால்,

      மனையாளுக்கு
      மாலை
      சூடும் போது
      மன மகிழ்ச்சியால் ,

      என் அடி வயிற்றில்
      பட்டாம்பூச்சிகள்
      பறப்பதை
      உணர்ந்திருக்கிறேன் .

      ஆனால்
      வயிற்றில்
      பட்டாம்பூச்சிகளோடு ,
      கண்ணில் நீரையும்
      உணர்ந்தேன்
      உன் வாய் மொழிந்த
      ''அப்பா"
      எனும் மழலை மொழியில் .

      என் ஆசை மகளே...........!

      Delete
    5. கவிதை கிறுக்கன் @ சூப்பர்....

      Delete
    6. வயித்ல பூச்சின்னா டாக்டர பாக்கஆம இங்க வந்து சொல்லிட்டுருந்தா எப்படி குணமாகும்

      கன்னத்தில் கை வைத்து வருத்தப்படும் படங்கள் பல

      Delete
    7. @ கி.கி

      செம! செம! செம!

      Delete
    8. ஷல்லூம்ஜி... சூப்பர்... காதலியே மனைவியாய் அமையாவிட்டால்..

      Delete
    9. @ M V

      இது மனசு சம்பந்தப்பட்ட விஷயம். உங்களுக்கு ஒரு விஷயத்தில் விருப்பமில்லாமல் போனால், அதற்கு எவ்வளவுதான் மவுசிருந்தாலும் அதை கொண்டாட முடியாது. அதைப்போல் ஒரு மொக்கையான விஷயத்தை கூட உங்கள் மனம் நாடிவிட்டால், நீங்கள் நினைத்தாலும் அந்த இன்பத்தை உங்களால் தடுக்க முடியாது. (உதாரணம், மாடஸ்டி சும்மா ஒரு பேச்சுக்கு...)

      சில நண்பர்களின் தேவையில்லாத கேலியும், கிண்டலும் (அது விளையாட்டாக இருந்தாலும்) கூட தங்கத் தலைவனை தள்ளி வைத்து பார்க்க ஒரு காரணமாகி விட்டது என்பது ஒரு வருத்தமான விஷயம். PREMIUM விலையில் மின்னும் மரணம் 1000/- ரூ. என்றாலும் கூட ஆறே மாதத்தில் 6௦௦+ புக்கிங்யை அடைந்ததும், அதைப்போல் PREMIUM விலையில் என் பேர் டைகர் 450/- ரூ. ஆறே மாதத்தில் 6௦௦+ புக்கிங்யை அடைந்ததும் சாதாரண நிகழ்வல்ல. வேறெந்த ஒரு நாயகருக்கும் இந்த மாதிரியான விலையில் விற்பனைகள் சாத்தியாமாவென்றால் சந்தேகமே...?

      இனி எத்துனை கௌபாய் நாயகர்கள் பிறந்து வந்தாலுமே தங்கத் தலைவனின் இடத்தை இட்டு நிரப்ப முடியுமா என்பது சந்தேகமே...? இதுதான் தங்கத் தலைவனின் LAST & FINAL முழு ஆல்பம் எனும் பொழுது முழு மனதுடனும், உற்சாகத்துடனும் வரவேற்க தயராவோமே...!

      PS:

      Delete
    10. //தங்கத் தலைவனின் LAST & FINAL முழு ஆல்பம் //

      மீதம் இருக்கும் young blueberry-ன் 8+ ஆல்பங்களையும் இணைத்து ஒரு கஸ்டம் ஸ்பெஷல் கேட்கலாமே...

      Delete
    11. ///
      சில நண்பர்களின் தேவையில்லாத கேலியும், கிண்டலும் (அது விளையாட்டாக இருந்தாலும்) கூட தங்கத் தலைவனை தள்ளி வைத்து பார்க்க ஒரு காரணமாகி விட்டது என்பது ஒரு வருத்தமான விஷயம். ///

      :(

      Delete

  40. நேத்திக்கு சூர்யாவின் '24' படம் பார்த்தேன். Time machineஐ அடிப்படையாகக் கொண்ட Sci-fi படம்! எல்லாமே நன்றாகவே இருந்தது... ஒரு முழுநீள காமிக்ஸ் படித்ததைப் போன்ற உணர்வு எனக்குள்! ஆனாலும் தியேட்டரில் 30 பேருக்கு மேல் இல்லையென்பது கொஞ்சம் அதிர்ச்சியளித்தது!
    நம் எடிட்டரிடம் 'Sci-fi வேணும்'னு கேட்டு அடம்பிடித்து அழுவதை கொஞ்சநாள் ஒத்திப்போட்டுவிடலாமா என்றுகூட தோன்றியது!

    ஆனால், 'கனவின் குழந்தைகள்' உள்ளிட்ட சில sci-fi ரகக் கதைகள் ஏற்கனவே ஹிட் அடித்துள்ளதால் நாம் பீரிட்டழுவதை கன்ட்டினியூ பண்ணுவதிலும் தப்பில்லைதான்! ;)

    ReplyDelete
    Replies
    1. //////நாம் பீரிட்டழுவதை கன்ட்டினியூ பண்ணுவதிலும் தப்பில்லைதான்! ;)////


      HA....HA...HA.....

      Delete
    2. // நம் எடிட்டரிடம் 'Sci-fi வேணும்'னு கேட்டு அடம்பிடித்து அழுவதை கொஞ்சநாள் ஒத்திப்போட்டுவிடலாமா என்றுகூட தோன்றியது! //

      Sci-fi காமிக்ஸ்களின் மீதுகொஞ்சம் நம்பிக்கை கொள்ளுவோம் Please. 24 படத்தை Over Masala Fantacy வரிசையில் சேர்க்கலாம். Sci-Fi ரகத்தில் நாமே சேர்த்து, அதன் வரவேற்பைப் பற்றி குழம்பவேண்டாம். 24 படம் நல்ல Entertainment என்றாலும் நான் பார்த்தவரையில் Sci-Fi காமிக்ஸ்களின் தரம் மற்றும் ஆழம் சிறப்பானது. குறைந்தது ஒரேவொரு Sci-Fi இதழ் வெளிவரும்வரை எடிட்டரை தடுமாறவிடவேண்டாம் எனத்தோன்றியதால் இந்த கருத்து, Sorry.

      Delete
    3. @ MR RK.....

      MISSING YOUR REGULAR UNBIASED OPINIONS, UNPREJUDICED TOPIC DISCUSSIONS...


      Delete
    4. ஒரே நாளில் 24 படங்களா,
      எப்பூடீ....


      Delete
    5. @ Rin Tin can

      ஹா ஹா ...lol, அதுசரி, பேந்த பேந்த விழிக்கும் படங்கள் பத்து என்று போடாம விட்டுடீங்களே...?

      Delete
  41. நண்பர்களே, தாக்குப் பிடிக்க இயலாப் பணிச் சுமைகள் ஜூனின்ஒரு வண்டி இதழ்களின் பொருட்டு ! So புதிய பதிவு - காலை 9 மணிக்கே ! Catch you tomorrow !

    ReplyDelete
    Replies
    1. பொறவு அல்லாம் போய் தூங்குங்கய்யா, இறவு பறவைகளா !..(எனக்கு மிகவும் பிடித்த சுபா நாவல் )...

      Delete
    2. மேலேயுள்ள , நான் போட்ட கமெண்ட் சனிக்கிழமை கணக்கா ??? ஞாயிறு கணக்கா செனா அனா ஜி...

      Delete
    3. 00.00.00 ஆயிருச்சுன்னாவே அடுத்த நாள் தான் சேலம் தல..

      Delete
  42. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :))

    ReplyDelete