Powered By Blogger

Sunday, March 13, 2016

அதிரடி ஏப்ரல்...!

நண்பர்களே,
           
வணக்கம். என்ன தான் சர்வதேச அசுரர்கள் இந்திய சந்தைக்குள் அதிரடியாகப் புகுந்து, மாதமொரு புது டிசைனில் டூ வீலர்...4 வீலர் என்றெல்லாம் தங்கள் தயாரிப்புகளைக் களமிறக்கினாலும் – நம் எல்லோரது ஆதர்ஷ வாகனமும் அந்த சைக்கிள் தான் என்பது எனது அபிப்பிராயம்! கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் ஒரு வாடகைச் சைக்கிளைத் தேடிப் பிடித்துக் கொண்டு – ‘ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே‘ என்று ஹாயாகச் சவாரி செய்வதே நம் எல்லோரது அவாவாகவும் இருப்பது நூற்றியோறாவது முறையாக நிரூபணமாகியுள்ள போது – என் அபிப்பிராயத்தில் தவறில்லை என்று தோன்றுகிறது! ஒரு பொழுதுபோகாத மதியப் பொழுதில் நமது இதுவரையிலான பதிவுகளையும் – அவற்றின் மீதான உங்கள் பார்வைகளின் எண்ணிக்கைகளையும் நமது லியனார்டோவைப் போல ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன்! NBS; LMS; லயன் 250; முத்து 350; சென்னை / ஈரோட்டுப் புத்தகத் திருவிழாக்கள் போன்ற landmark தருணங்களின் பதிவுகள் செமையாக ஹிட்டடித்திருந்தன! No surprises too! ஆனால் அவற்றை எட்டிப் பிடித்து – தோளோடு தோள் உரசி நிற்கும் இதரப் பதிவுகளின் பெரும்பான்மையினில் நமது பால்யங்களின் நினைவூட்டல் சமாச்சாரங்கள் தூக்கலாக இருந்து வந்துள்ளன! 

சென்ற ஞாயிறு பதிவில் கூட நயமான பல உரையாடல்களுக்கு மத்தியில் ‘பாட்டில் பூதமும்‘ ஒளிவட்டத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது தானே? So- என்ன தான் பீட்ஸா; பர்கர்; டக்கிலோ; ஸ்ப்ரிங் ரோல்; கபாப் என்று ருசி பார்த்தாலும் – என்றைக்கோ வீட்டு மொட்டை மாடியில் சாப்பிட்டுப் பழகிய நிலாச்சோறுகளும்; பள்ளிக்கூட இன்டர்வலில் வாங்கித் தின்ன கடலைமிட்டாய்களும், குச்சி ஐஸ்களும் இன்றைக்கும் நாவில் ஜலம் ஊறச் செய்வது ஒரு ஜாலியான முரணல்லவா ? Anyways – ‘ஜெயிக்க முடியாததை கெலித்துக் காட்டுகிறேன் பேர்வழி‘ என்று மண்டையைப் புடைக்கச் செய்வதை விட அதனோடு கைகோர்த்து நம் சக்கரங்களைச் சுழலச் செய்திடப் பழகுவதே உருப்படியான காரியம் என்பதை நான் உணர்ந்து ஏக காலமாகி விட்டது! So- முத்து மினி காமிக்ஸ் முதல் சுற்றின் 6 இதழ்கள் மே மாதம் கிடைத்திடும் என்பதே இந்த வாரப் பதிவின் ஆரம்பச் சேதி! இதற்கென சந்தா – இத்யாதிகள் என்று ஏதும் கிடையாதென்பதால் 6 x 20 = ரூ.120 + கூரியர் ரூ.30 = ரூ.150/- வீதம் அனுப்பினால் உங்கள் வீடு தேடி இதழ்கள் வந்திடும்! ‘இவற்றுள் எனக்கு இந்தந்த புத்தகங்கள் வேண்டும்; இவை வேண்டாம்!' என்ற  ரீதியில் pick & choose செய்திடும் சுதந்திரம் மாத்திரம் இருந்திடாது! புத்தக விழாக்களில் தனித்தனிப் பிரதிகளாக வாங்கிக் கொள்ளலாமே தவிர; நம்மிடம் வாங்கும் போது – ஆறு இதழ்கள் இணைந்த pack ஆக மட்டுமே வாங்கிடலாம்! Hope for your understanding guys! So ரூ.150/- வீதம் நீங்கள் பணம் அனுப்பி விட்டு, சின்னதாகவொரு மின்னஞ்சலும் தட்டி விடுங்களேன் – நமது முன்பதிவுகளுக்கு!

From the past to the future – ஏப்ரலில் காத்துள்ள அதிரடிகளில் ஒரு பாதி அச்சுக்குச் செல்லும் நிலையில் தயாராகவுள்ளன! நாளைய தினம் (திங்கட்கிழமை) நமது கோடீஸ்வரர் லார்கோ ஒரு கடன் தீர்க்கக் கிளம்புவதை நமது அச்சகத்தில் பதிவிடப் போகிறோம் ! லார்கோவின் இந்த சாகஸம் முழுக்க முழுக்க ஹாங்காங்கில் நடந்தேறும் அதிரடி! அட்டைப்படத்தைப் பொறுத்த வரை – 2016-ன் theme ஆன – “ஒரிஜினல்களே – உள்ளது உள்ளபடி !!” இம்முறையும் தொடர்கிறது! லார்கோ போன்றதொரு சமகால – நவீன சித்திர பாணிகள் தாங்கிய கதைத் தொடருக்கு – நமது ஓவியங்கள் சரிப்படாது என்பதால் ‘சிவனே‘ என்று ஒரிஜினல்களையே கையாண்டு வருகிறோம்! இதோ – அட்டைப்படத்தின் முதல் பார்வை :
ஓவியர் பிலிப் ப்ரான்க் ஒவ்வொரு சாகஸத்திற்கும் சித்திரப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பாக அந்தந்த நகர்களைப் பிரத்யேகமாக ‘விசிட்‘ அடித்து, ஏராளமான ஃபோட்டோக்களை எடுத்து – எக்கச்சக்கமாய் ‘ஹோம் ஒர்க்‘ செய்வது வழக்கமென்று படித்திருக்கிறேன்! “கடன் தீர்க்கும் நேரமிது” ஆல்பத்தை நீங்கள் புரட்டும் போது இந்த மனுஷனின் அசகாய ஆற்றல்களும், ஹாங்காங்கின் பிரமிப்பூட்டும் அழகும் நம்மைப் பிடரியோடு அறைவதை உணரப் போகிறீர்கள்! பாருங்களேன் ஓவியரும், கதாசிரியரும் ஹாங்காங்கில் - இந்த ஆல்பத்துக்குப் பூர்வாங்கத் திட்டமிடல்களின் பொழுது !! "பொம்மை புக் தானே !! "என்று வெளிப்பார்வைக்குப் பரிகசிக்கப்படும் இந்த காமிக்ஸ் உலகின் பின்னணியில் தான் எத்தனை அசுர உழைப்பு !! 
கேமராவைக் கையில் கொண்டிருப்பவர் தான் ஓவியர் !
ஒரு பரபரப்பான ஷாப்பிங் மாலில் சல்மான்கான் பாணியில் மேல்சட்டையில்லாமல் நம்மாள் ஓடி வரும் அந்தச் சித்திரங்களையும்; பேக்கிரவுண்ட்களையும் இந்த இதழின் teaser ஆக இதோ உங்கள் முன்னே பதிவிடுகிறேன்! 

வழக்கம் போல லார்கோ கதைகள் முன்வைத்திடும் எடிட்டிங் / சென்சார் இக்கட்டுகள் இம்முறையும் தொடர்ந்தன தான் – சற்றே சிறியதொரு பரிமாணத்தில்! ‘ஒட்டுங்கம்மா வசன பலூன்களை வில்லங்கமான பார்ட்டிகள் மீது !‘ என்று என் சார்பாக மைதீனே சொல்லி வைக்க – ‘பலூன் ஒட்டும் படலம்‘ இனிதே நடந்து முடிந்துள்ளது! As always இதன் பொருட்டு சில உஷ்ணமான "வாழ்த்துக்கள்" நமதாகிடும் என்பதில் சந்தேகமில்லை என்றாலும் எல்லைகளை இதற்கு மேல் விஸ்தீரணம் செய்திடும் ‘தம்‘ நம்மிடமில்லை. Anyways சிவகாசிப் பட்டாசாய் பரபரக்கும் இந்த சாகஸத்தினை லயித்துப் படிக்கும் போது இந்த சமாச்சாரங்கள் நிச்சயமாய் ஒரு பொருட்டாகவே தெரிந்திடாது என்ற நம்பிக்கையில் உள்ளேன்! Fingers Crossed!

ஏப்ரலில் சும்மாவே அக்னிப் பிரவாகம் இருந்திடும் கோடையின் புண்ணியத்தில்! இம்முறை நமது இரவுக் கழுகாரின் உபயத்தில்; அந்த ‘மெகா‘ சைஸ் சித்திரங்களின் துணையோடு – ”தலையில்லாப் போராளி” நமது நாடித்துடிப்புகளை ஒரு உச்சத்துக்குக் கொண்டு செல்லப் போவது உறுதி! மாதாமாதம் ஒவ்வொரு புது இதழுக்கும் நான் ‘பில்டப்‘ கொடுப்பது புதிதல்ல; ‘விடுதலையே உன் விலையென்ன?‘ முதல் ‘விண்ணில் ஒரு வேங்கை‘ வரை இதைச் செய்து வருகிறேன் தான் ; ஒவ்வொரு புதுப் பாணிக்குள் நுழைந்திடும் வேளைகளிலெல்லாம் அவற்றிலுள்ள plus points மாத்திரமே என் கண்களில் படுவது வாடிக்கையே! ஆனால் – இந்த முறை; இரவுக் கழுகாரின் இந்த ‘மெகா‘ இதழின் வாயிலில் நிற்கும் வேளைகளில் – ஒரு முற்றிலும் ‘வேறு மாதிரியான‘ அனுபவம் நமக்குக் காத்துள்ளதென்று பட்சி சொல்கிறது! ஓவியர் சிவிடெலியின் சித்திரங்களை மெகா சைஸில் பார்ப்பதே பரவசமெனில் கதாசிரியர் மௌரோ போசெல்லியின் ‘வூடு கட்டியடிக்கும் பாணி‘யைக் கண்டு எகிப்திய மம்மிகளே மீண்டுமொருமுறை வாய் பிளந்து விடும் எனலாம்! இரவுக்கழுகாரின் முழு டீமும் இம்முறையும் ஆஜராகிட, ஆக்ஷன்; அமானுஷ்யம்; மர்மம்; த்ரில் என நம்மை சீட்களின் விளிம்பில் தொற்றிக் கொள்ளச் செய்யும் அக்னி – கதையின் ஒவ்வொரு அங்குலத்திலும் இழையோடுகிறது! முதன்முறையாக டெக்ஸ் வில்லர் தொடருக்குள் கால் பதிக்கும் புது வாசகர்கள் யாரேனும் இருப்பின் – நமது 4 நண்பர்களும் 68 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு இத்தாலியக் கதாசிரியரின் சிந்தையில் உதித்த கற்பனைக் கதாபாத்திரங்களென்று சத்தியமாய் நம்பிடமாட்டார்கள்! சிவிடெல்லியின் ஓவியங்கள் ஒவ்வொன்றும் நிஜ மனிதர்களின் ஃபோட்டோக்களை நகல் எடுத்தது போல உயிரோட்டத்தை உமிழ்ந்திட – கார்சனும், டெக்ஸும், கிட்டும் மட்டுமன்றி – கதையின் மையத்தில் வந்திடும் ஒரு யுவதியும் கண்ணைப் பறிக்கிறார்கள்!! சில்வர் மூனின் மீதிருந்த மையலே தணிந்திருக்கா தருணத்தில் இந்தப் புதுவரவு நிறைய இதயங்களைத் தனதாக்கிக் கொள்ளப் போவது உறுதி! இதோ – உங்கள் பார்வைக்கென ஒரு மினி டீசர்! ”தலையில்லாப் போராளி” – தகிக்கச் செய்யப் போகிறான் நம்மை! 
இது டிஜிடல் பைலின் நகல் அல்ல....என்னிடம் வீட்டில் தற்சமயம் உள்ள ஜெராக்ஸ் மாத்திரமே 
இதற்கென நாம் தயாரித்து வரும் ராப்பர் ஏராளமான நகாசு வேலைகளுக்கு ஆளாகி வருகிறது! மாலையப்பனின் ஓவியம்; அதன் மீது பொன்னனின் பணிகள்; பற்றாக்குறைக்கு நெட்டிலிருந்து நான் லபக்கித் தந்த சித்திரப் பின்னணிகள் என்ற கலவையில் இந்த ராப்பர் உருவாகி வருகிறது! தினமொரு மாற்றமும், திருத்தமும் எனக்குத் தலைக்குள் உதயமாவதால் பொன்னன் இந்த வாரம் முழுவதும் பாயைப் பிறாண்டாத குறை தான்! அடுத்த ஒன்றிரண்டு நாட்கள் பணிகளின் க்ளைமேக்ஸ் தினங்கள் என்பதால் – பொன்னன் பாடும் சரி; மைதீனின் பாடும் சரி – பரிதாபத்திற்குரியதே! ஆனால் – முதன்முறையாக இந்த மெகா சைஸிற்குள் நாம் பிரவேசிக்கும் போது – அட்டைப்படமும் அந்தத் தருணத்திற்கு நியாயம் செய்யும் விதமாய் அமைந்திட வேண்டுமே என்ற வேட்கை எனக்குள்! முயற்சித்துக் கொண்டிருக்கும் சிலபல டிசைன்களுள் இதுவும் ஒன்று ! Just a trial....not a cover yet !!
இந்தக் கூத்து ஒரு பக்கமெனில் – பார்த்த முதல் டிசைனிலேயே டபுள் ஓ.கே. சொல்லச் செய்தது நமது உட்சிட்டிப் பெரும்புள்ளிகளின் காமெடி மேளாவின் அட்டைப்படம்! இம்முறையும் ஒரிஜினல் டிசைனே என்றாலும் – முதல் முயற்சியிலேயே பொன்னனின் மெருகூட்டல் அட்டகாசமாய் அமைந்து போய் விட்டது! அடுத்த வாரத்துப் பதிவில் இவர்களது உறுதிசெய்யப்பட்ட அட்டைப்பட first looks! 

திருச்சிப் புத்தக விழாவின் இறுதி தினம் இன்று ! வார நாட்கள் அத்தனை விறுவிறுப்பாக இல்லையென்ற போதிலும் – ஒட்டுமொத்த விற்பனை திருப்பூருக்கும், சேலத்துக்கும் இடைப்பட்டதொரு நிலையிலிருக்குமென்று தெரிகிறது! பசித்துக் கிடப்பவனுக்குப் புளியோதரையோ; குஸ்காவோ கடவுளின் கொடையே எனும் போது – இந்த மித விற்பனை விழாக்களும் கூட நமக்கு இன்றியமையாதவைகளாக மாறிப் போகின்றன! 100+ டைட்டில்கள் ஸ்டாக்கில் உள்ளதெனும் போது – இது போன்ற புதுக்களங்களில் நம் ஸ்டாலுக்கு வருகை தரும் புதியவர்கள் நிஜமாக மலைத்துப் போவதை அறிய முடிகிறது! ‘அட... இதெல்லாம் இன்னுமா வருகிறது?‘ என்ற கேள்வி சற்றைக்கெல்லாம் ‘அடடா... இப்படியெல்லாமா வந்து கொண்டிருக்கிறது?‘ என்று மாறுகிறது! And இந்த வாரத்து ஆன்லைன் ஆர்டர்களைக் கொஞ்சம் மேலோட்டாய்க் கவனித்த போது – அவற்றின் ஒரு கணிசமான பகுதி திருச்சி; தஞ்சாவூர் பகுதிகளிலிருந்து கிட்டியிருப்பது தெரிந்தது! இது புத்தக விழா அறிமுகத்தின் பலனா? அல்லது ஒரு தற்செயலான நிகழ்வா? என்று தெரியாது தான்; ஆனால் புதிதாய் வாசகர்கள் எந்தத் தண்டவாளத்தின் புண்ணியத்தில் கிடைத்தாலும் நமக்கதில் சந்தோஷமே! 

ஜுன் மாதம் சென்னையில்; ஜுலையில் நெய்வேலியில்; ஆகஸ்டில் ஈரோட்டில்; செப்டம்பரில் மதுரையில் என கண்முன்னே நிறையப் பெருநகர விழாக்களின் அணிவகுப்பு தென்படுகிறது! ஜுன் மாத chennai விழா பற்றி அதிகாரபூர்வமாய் அறிவிப்புகள் ஏதுமில்லை என்றாலும் – பாக்கி 3 விழாக்களும் ஆண்டாண்டுகளாக நடந்து வருபவை! அங்கெல்லாம் நமக்கு ஸ்டால்கள் கிடைத்திடும் பட்சத்தில் நமது கிட்டங்கியின் சுமை சற்றே குறைந்திடக் கூடும் ! அதைவிடவும் முக்கியமாக புது அறிமுகங்கள் ; மறந்து போன நட்புகளின் மறுபரிச்ச்சயம் என எல்லாமே சாத்தியமாகும் ! So நம்பிக்கையோடு காத்திருப்போம்! And உங்களைச் சந்திக்கவும் இவையொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திடும் என்பதால் – இந்த விழாக்கள் பற்றிய எதிர்பார்ப்பு வழக்கத்தை விடவும் கூடுதலாக என்னுள் உள்ளன! மறுபதிப்புகள் ; சந்தா Z; இரத்தப் படலம் வண்ணப் பதிப்பு etc.... etc... என்று பேசிட விஷயங்கள் நிறையவே உள்ளதல்லவா? 

And இதோ உள்ளது – ‘என் பெயர் டைகர்‘ கலர் & b&w இதழ்களுக்கான updated முன்பதிவுப் பட்டியல்! நம்மாட்கள் உங்களுக்கு ஸ்டைலான புதுப் பெயர்கள் வழங்கியிருந்தாலோ; உங்கள் பெயர்களையே பட்டியலுக்குக் கொணர்ந்திராது 'ஸ்வாகா' செய்திருந்தாலோ – அருள்கூர்ந்து மின்னஞ்சல் மூலம் அதனைத் தெரியப்படுத்தக் கோருகிறேன்! திருத்தங்களை உடனே செய்து விடலாம்! இதன் பொருட்டு நமது பதிவில் பின்னூட்டங்கள் பிரயோஜனப்படாதென்பதால் மின்னஞ்சல்கள் மட்டுமே- ப்ளீஸ்!

நண்பர்களின் ஓவியத் திறமைகள் அவ்வப்போது நம் முன்னே பவனி வருவது வாடிக்கையே ! அவற்றின் ஒரு சமீப மாதிரி இதோ ! ஜாலியாய் லைன் டிராயிங்கில் நமது கூர்மண்டையரை வரைந்து அவர் அனுப்பியதை பாருங்களேன் ! அவரது அனுமதியோடு - இதனை இந்த வார caption எழுதும் போட்டிக்குப் பயன்படுத்திடுகிறேன் !! நயமான வரிகளுக்கு ஒரு முந்தைய (லயன்) ஸ்பைடர் புக் பரிசாக அனுப்பிடவுள்ளோம் ! Caption எழுதுவதோடு - இதனை வரைந்தனுப்பிய நண்பர் யாரென்பதையும் யூகித்துப் பார்க்கலாமே ?
வாசக ஓவியப் பங்களிப்பினில் முழுமை பெற்றுள்ளதொரு டிசைனைப் பாருங்களேன்  ! நண்பர் (பொடியன்) பிரதீப்பின் கைவண்ணம் இது  !! நான் சொன்ன அத்தனை மாற்றங்களுக்கும், மெருகூட்டல்களுக்கும் சளைக்காது ஒத்துழைத்த நண்பருக்கு நமது நன்றிகள் ஓராயிரம் உரித்தாகுக  !! அவரது பொறுமைக்கும், இந்த உழைப்புக்கும், மெனக்கெடலுக்கும் ஒரு பெரிய "ஓஓ ஓ ஓ ஓ " போடலாமே guys ? 
Before I sign off - சின்னதொரு கொசுறுச் சேதியும் கூட ! மே மாதம் உங்கள் சந்தா கவர்களில் ஒரு குட்டியான சர்ப்ரைஸ் காத்திருக்கும் ! அது என்னவாக இருக்குமென்ற யூகத்தில் நீங்கள் ஆழ்ந்திடும் வேளையில் நான் தூக்கத்தில் ஆழ்ந்திடப் புறப்படுகிறேன் ! See you around all....bye for now ! Have a lovely weekend !!

352 comments:

  1. Replies
    1. ரட்ஜா சார்

      2014 ஈரோடு புக்பேரில் சந்தித்தது நலம்தானே?

      Delete
    2. நலமே Mr சம்பத் ! மீண்டும் இந்த வருடம் அங்கே சந்திப்போம் :-)

      Delete

    3. எதிர்நோக்குகிறேன் ரட்ஜா சார்

      அன்று யாரிடமும் பேசிட நேரமில்லை உங்களுக்கு
      உங்கள் புதல்வியின் டான்ஸ் ப்ரோக்ராம் என்பதாக சொன்னதாய் ஒரு சிறு ஞாபகம்

      இந்தவருடம் ப்ரியாக வாருங்கள்
      இது என் அன்பு வேண்டுகோள்

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  2. அதிரடி ஆரம்பம்

    ReplyDelete
  3. ஓ. அப்போ இனி காலைப்பொழுதில்தான் பதிவுவரும்போல என்று நினைத்தவேளை... பதிவு வந்தேவிட்டது!

    ReplyDelete
    Replies
    1. @Podiyan : Superb artwork . Two thumbs up !!!

      Delete
    2. Podiyan
      ji

      முன்னட்டை மிகப்பிரமாதமாய் வரைந்திருக்கறீங்க

      சூப்பர் ஆர்ட்

      வாழ்த்துக்கள் ஜி

      Delete
    3. மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு Tex Sampath ஜி

      Delete
    4. //@Podiyan : Superb artwork . Two thumbs up !!!//

      +1

      Delete
    5. Thank you Mahendran Paramasivam!

      Delete
    6. பொடியன் கலக்கிட்டிங்க வாழ்த்துக்கள்

      Delete
    7. படம் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

      Delete
    8. வாழ்த்துக்கள் பாஸ்!

      Delete
    9. வாழ்த்துக்கள் bro...

      Delete
    10. உங்கள் அன்புக்கு நன்றி Senthil Sathya, Ganeshkumar Kumar, Saravanan R, daibolik akkik brothers.

      Delete
    11. வாழ்த்துக்கள் பொடியன் சார். அற்புதம்

      Delete
    12. சூப்பர் சித்திரங்கள் பொடியன் ஸார். கலக்கிடீங்க போங்கோ. வாழ்த்துக்கள்.

      Delete
    13. நன்றி rajasekarvedeha and Thiruchelvam Prapananth.

      Delete
  4. //இரவுக்கழுகாரின் முழு டீமும் இம்முறையும் ஆஜராகிட, ஆக்ஷன்; அமானுஷ்யம்; மர்மம்; த்ரில் என நம்மை சீட்களின் விளிம்பில் தொற்றிக் கொள்ளச் செய்யும் அக்னி //

    எடிட்டர் சார்,
    சிம்ப்ளா சொல்லனும்னா, இன்னுமொரு டெக்ஸ் சூப்பர் டூப்பர் ஹிட் கதை என்று சொல்லுங்கள்!

    ReplyDelete
  5. இம் மாதமும்
    டெக்ஸ் கூட்டணி
    சூப்பர் அடுத்ததொரு அதகளம் தான்

    இம்மாத வெயிலுக்கு மல்லையா பீர் வார்த்தீர்கள் டேங்ஸ் எடி சார்

    ReplyDelete
    Replies
    1. சம்பத் இம் மாதம் மட்டுமல்ல இனி வரப் போகும் எல்லா மாதங்களுமே டெக்ஸ் கலக்க போவது உறுதி

      Delete
    2. செந்தில் சத்யா ஜி
      இது உறுதியாகத்தான் படுகிறது

      எனக்கென்னவே
      எடி டெக்ஸ் கதை செலக்ஸனுக்கென தனி இலாகா ஒதுக்கியிருப்பாறென்று தெரிகிறது

      Delete
  6. இனிவரும் மாதங்களில் ஒவ்வொரு ஊரிலும் புக்பேரில் கலந்து கொள்வதென்பது நமது வாசகர் வட்டங்களை மகிழ்ச்சி யில் ஆழ்த்தப்போகும் விஷயமாகும்

    ReplyDelete
  7. வணக்கம் எடிட்டர் சார்...!
    வணக்கம் நண்பர்களே....!

    ReplyDelete
  8. லார்கோ, டெக்ஸ் டீஸர்கள் கடைவாயோரம் குற்றால அருவிகளை உற்பத்தி செய்கினறன...!நண்பர் பொடியனின் கைவண்ணமும் மனதை அள்ளுகிறது.வாழ்த்துக்கள் நண்பரே...!

    ReplyDelete

  9. வணக்கம் எடிட்டர் சார்...!
    வணக்கம் நண்பர்களே....!

    Reply

    ReplyDelete
  10. வாரம் ஒரு புக் வந்தால் நல்ல்ல்ல்லா இருக்கும்....

    ReplyDelete
  11. என் பெயர் டைகர் வண்ண முன்பதிவில் என் பெயர் இல்லையே சார்!இதே போல ஏப்ரல் வெளியீடுகள் ஏமாற்றாது என நம்புகிறேன்

    ReplyDelete
  12. \\இரவுக்கழுகாரின் முழு டீமும் இம்முறையும் ஆஜராகிட; ஆக்ஷன்,அமானுஷ்யம்,த்ரில் என...//

    ஐயையோ...இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாக்கிடறாரே...!

    ReplyDelete
  13. எடிட்டர் சார் T-SHIRTதானே அந்த SURPRISE?! டெக்ஸ் வில்லர் பின் அட்டை பிரமாதம் !

    ReplyDelete
    Replies
    1. நானும் அந்த சர்ப்ரைஸ் டி ஷர்ட்தான் என்று நினைக்கிறேன்..!

      Delete
    2. சந்தா கட்டியவர்களுக்கு கிட் ஆர்டின் காமிக்ஸ் இலவசமா அனுப்பி வைக்கிறேன் சொன்னாரே அதுவா இருக்குமோ?

      Delete
    3. எனக்கென்னவோ
      சந்தா கட்டினவங்களுக்கு மட்டும் டெக்ஸ் பற்றின டீடெய்ல் அ டைஜிஸ்ட் னு ஏதோ தருவதாக சொன்னாரே? அதுவாகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்

      அது எது ??
      (இந்த சமயத்துக்கு ஞாபகம் வரமாட்டிங்குதே எண்ட குருவாயூரப்பா)

      ஈரோடு பூனையாரே கொஞ்சம் ஞாபகப்படுத்தும் தும் ம்

      Delete
  14. \\மாதாமாதம் ஒவ்வொரு புது இதழுக்கும் நான்'பில்டப்'கொடுப்பது புதிதல்ல; விடுதலையே உன் விலை என்ன? முதல் விண்ணில் ஒரு வேங்கை வரை இதைச்செய்து வருகிறேன்தான்//

    கதைகள் சூப்பரோ சுமாரோ..,நீங்கள் தரும் பில்டப்கள் நிச்சயமாய் எங்கள் ஆர்வத்தையும்,எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச்செய்கின்றன சார்...!

    ReplyDelete
  15. முத்து மினி காமிக்ஸ்க்கு பணம் அனுப்பிவிட்டேன் !

    ReplyDelete
    Replies
    1. என்னா வேகம்!!!

      அப்படியே எனக்கும் ஒன்னு

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  16. சார் லார்கோ அட்டை படம் வெகு சுமாராய் தெரிகிறது . வண்ணச் சேர்க்கையில் ஏதேனும் செய்திருக்கலாம் என படுகிறது . லார்கோ ஒரு பக்கம் அசத்தல் .
    டெக்ஸ் இதயே அட்டை படமாக்கலாமோ....தூள்....ஒரு பக்கமும்...
    பொடியன் அட்டை படம் சூப்பர் .அருமை நண்பரே...
    ஸ்பைடர் நெளிகிறார் .முகம்தான்...
    அதிரடி மாதத்திற்காக i m waiting

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நான்தான் நன்றி சொல்ல வேண்டும் .இவ்வளவு பிரம்மாதமான அட்டையை வழங்கியதற்கு...அதுவும் பின்னட்டையில் அந்த குழுவினருக்கு உடைகளில் வழங்கிய வண்ணங்களும் ....ஓவியங்களும் மனதை கொள்ளை கொள்கிறது..உங்கள் பணி தொடரட்டும் இதே போல ெங்களை மயக்கும் வண்ணம்

      Delete
  17. 32வது . இன்று என்னக்கு மார்ச் மாத இதழ்கள் போஸ்டில் வந்து கிடைத்து விட்டன . ரொம்ப நன்றிகள் சார் !அண்ணாச்சி ரொம்ப ஹாப்பி !

    ReplyDelete
  18. ஸ்பைடர் கேப்ஷன்;

    நூற்றாண்டின் நாயகனும் நானே...!

    நூற்றாண்டின் குற்றச்சக்ரவர்த்தியும் நானே...!

    மைண்ட் வாய்ஸ்.;

    என்னடா இது ..! நான் பாட்டுக்கு கத்திக்கிட்டிருக்கேன்..! ஒருத்தரும் கண்டுக்கமாட்டேங்கிறாங்க...!

    ReplyDelete
    Replies
    1. பின்னே ஸ்பைடர் பாட்டை மாடஸ்டி ரசிகர் பாடினா
      யார் கண்டுக்குவாங்க lol

      Delete
    2. ஜி...! நாங்கள்லாம் ஆறாங்கிளாஸ் படிச்ச காலத்திலிருந்தே ஸ்பைடர் ஃபேன்ஸ்..!

      அதுக்கப்புறந்தான் மாடஸ்டி, டெக்ஸ் மத்தவங்கல்லாம்....!!!

      Delete

  19. நண்பர்களுக்கும், எடிட்டர்களுக்கும் எனது ஞாயிறு காலை வணக்கங்கள்!

    * 'தலையில்லாப் போராளி'யின் ஓவியங்கள் பிரம்மிக்கச் செய்கின்றன! இருட்டில் ஒளியை உமிழும் அந்தத் துப்பாக்கிகள் - தீபாவளி இரவுகளை ஞாபகப்படுத்துகின்றன! கடைசி ஃப்ரேமை விட்டு கண்கள் அகல மறுக்கிறது! (ம்ம்ப்.. ம்ம்ப்... ஊஹும் எவ்வளவு முயற்சித்தும் பிரயோஜனமில்லை) அட்டைப்படம் - ஆஸம்; பின்னட்டைக்கு உகந்தது! ( Hardbound அட்டை எனில் பட்டையைக் கிளப்பும்!)

    * அந்த ஸ்பைடர் படத்தை வரைந்தது நண்பர் சாரதி என்பது என் யூகம்! ( நண்பர் ௮'அஜய் சாமி'யாக இருக்குமோ என்ற யூகமும் உண்டு!)

    * முத்து-மினி எனக்கு பரிட்சயமில்லாத ஒன்று என்பதால் மே மாதம் நம் கைகளில் தவழயிருக்கும் அவை பற்றிய ஒரு mixed feeling எனக்குள்! காத்திருக்கிறேன்...

    * நண்பர் பொடியன் aka ப்ரதீப்'பிற்கு மீண்டும் எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் மீண்டும்!

      Delete
  20. ஸ்பைடர் கேப்ஷன் ;
    பெலஹாம்.., நீங்கள் கண்டுபிடித்த இந்த வசியக்கதிர்வீச்சுக்கருவி அட்டகாசமாய் வேலை செய்கிறது.! இனி இந்த ஸ்பைடரின் எதிரிகள் அனைவரையும் வசியப்படுத்தி,இந்த ஒப்பற்ற மாமேதையின் காலடியில் விழச்செய்வேன்...! ஸ்பைடரா கொக்கான்னானாம்...!!!

    மைண்ட் வாய்ஸ் :

    இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வில்லன்களோட கட்டிப்புரண்டு சண்டை போடறது...?

    இந்தக்கருவியக்கொண்டு ரிச் கேர்ளா.....நச் ஃபிகரா வசியம் பண்ணி கட்டிபுடிச்சு டூயட் பாடி,லைஃப்ல செட்டில் ஆயிரனும்ப்பா....!!!

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் இம்புட்டு ஆசை கூடாது ஜேசகு ஜி

      Delete
    2. இன்னொருவாட்டி ஹி.....ஹி....!

      Delete


  21. ****** லூட்டிக்கு ******

    ஸ்பைடர் : ரப்பரால் செய்யப்பட்ட இந்த விஷேட லெக்கிங்ஸ் தான் என் சூப்பர்ஹீரோ இமேஜ் டர்ர்ர் ஆகிடாமல் காத்துவருகிறது! பிரிஸ்மா'வுக்கு நன்றி! லலலலா... ஸ்டைலுமாஆஆ... பிரிஸ்மா லெக்கிங்ஸ்மா...

    ((மனதுக்குள்)) ஹிஹி.. என் யூகப்படி, அந்தப் பய சூப்பர்-மேன் இந்நேரம் 'சுடர்மணி பிராண்ட் ஜட்டிகள்' விளம்பரத்துலதான் நடிச்சிக்கிட்டிருக்கணும்!

    ReplyDelete
  22. ஞாயிறு வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.

    ReplyDelete
  23. தல அட்டப்படம்,டீஸர் இரண்டுமே சும்மா அள்ளுது போங்க.

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. அச்சச்சோ! எடிட்டர் சார்... "போட்டிக்கோ அல்லது லூட்டிக்கோ; ஒருவருக்கு தலா மூன்று வாய்ப்புகள் மட்டுமே" அப்படீன்ற வரியை நீங்க மறந்துட்டீங்கபோலிருக்கே? :P

    ReplyDelete
  26. Red background image looks awesome.. If the font was little fine tuned this would be the best

    ReplyDelete
  27. /// மே மாதம் உங்கள் சந்தா கவர்களில் ஒரு குட்டியான சர்ப்ரைஸ் காத்திருக்கும் ! ///

    நிழல் 1 நிஜம் 2 ஆக இருக்கும் என்பது என்னுடைய (ஆசை) யூகம் சார்.!!

    /// அந்த ஸ்பைடர் படத்தை வரைந்தது நண்பர் சாரதி என்பது என் யூகம்! ( நண்பர் ௮'அஜய் சாமி'யாக இருக்குமோ என்ற யூகமும் உண்டு!)///

    எனக்கும் அதே ரத்தம். (Same blood)

    ///* நண்பர் பொடியன் aka ப்ரதீப்'பிற்கு மீண்டும் எனது வாழ்த்துகள்!///

    வாழ்த்துகள் பொடிய்ன் சார்! !!

    ReplyDelete
    Replies
    1. //நிழல் 1 நிஜம் 2 ஆக இருக்கும் என்பது என்னுடைய (ஆசை) யூகம் சார்//

      சரியான யூகமாகவே படுகிறது!

      Delete
    2. எனக்கென்னவோ
      சந்தா கட்டினவங்களுக்கு மட்டும் டெக்ஸ் பற்றின டீடெய்ல் அ டைஜிஸ்ட் னு ஏதோ தருவதாக சொன்னாரே? அதுவாகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்

      அது எது ??
      (இந்த சமயத்துக்கு ஞாபகம் வரமாட்டிங்குதே எண்ட குருவாயூரப்பா)

      ஈரோடு பூனையாரே கொஞ்சம் ஞாபகப்படுத்தும் தும் ம்

      Delete
    3. நன்றி KiD ஆர்டின் KannaN!

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  28. பொடியன் சார் ..அட்டகாச படுத்திட்டீங்க ..சூப்பர் ....பின் அட்டையில் ஒரிஜினல் அட்டை கொண்டு வந்தது நல்ல ஐடியா ...வாழ்த்துக்கள் ...

    ******

    அப்பாடா .....நகர சூப்பர் ஸ்டார் லார்கோவை பார்த்து எத்தனை காலங்கள் ஆகி விட்டது..ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன் ...பின் அட்டை டெக்ஸ் அவர்களும் சரி ...முன் அட்டை லார்கோ அவர்களும் சரி அடர் சிவப்பில் கண்ணை பதம் பார்க்கிறார்கள் சார் ..;-)

    **********

    ReplyDelete
    Replies
    1. நன்றி Paranitharan K.

      /பின் அட்டையில் ஒரிஜினல் அட்டை கொண்டு வந்தது நல்ல ஐடியா //
      கடந்தவார ப்ளாக்கில், பழைய அட்டைகளையே பயன்படுத்துங்கள் என்று பல நண்பர்களும் ஆசிரியரிடம் தங்கள் கருத்துக்களை பதிவிமுன்பேயே நடைமுறைப்படுத்தப்பட்ட ஐடியா அது. நானும் அந்த 'க்ளாஸிக்' காலத்தின் ரசிகன்தான் தான்!!

      Delete
  29. நகர சூப்பர் ஸ்டார் ...கெளபாய் சூப்பர் ஸ்டார் இருவரும் உட்பக்க டீசரில் அதகள படுத்துகிறார்கள் ..ஓவியங்கள் பட்டைய கிளப்புகிறது சார் ...இரு சூப்பர் ஸ்டார்களும் ஒரே சமயத்தில் படை எடுக்கிறார்கள் ..முந்த போவது யார் என்று ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன் ...

    ********

    சார் ...முத்து மினி காமிக்ஸ் இதழுக்கு சந்தா 150 கட்ட தபால் அலுவலகத்தை தேடி நான் ஓட வேண்டும் சார் ..எப்பொழுது நேரம் கிடைக்க போகிறதோ தெரியவில்லை ...தபால் அலுவலகத்திலும் காலை முதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே கட்ட முடியும் ..எப்படியும் பத்து நாள்களுக்குள் கட்டி விடுகிறேன் சார் ...அதற்குள் இதழ்கள் மாயாமாகி விடாமல் இருக்க வேண்டுகிறேன் சார் ..;-)

    ReplyDelete
  30. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய ஞாயிறு வணக்கங்கள்

    ReplyDelete
  31. ஹசன் என்கிற எனதுபெயரை "காசன்" இருந்தாலும் பிரச்னையிலை, குரியர் சரியான அட்ரசுக்கு வருவதால்.

    முத்து மினிக்கு உங்கள் ஆபிஸுக்கே மெயில் பண்ணுறேன்.

    அனைத்து அட்டை படங்களும் சூப்பர்

    ReplyDelete
  32. ஹசன் என்கிற எனதுபெயரை "காசன்" இருந்தாலும் பிரச்னையிலை, குரியர் சரியான அட்ரசுக்கு வருவதால்.

    முத்து மினிக்கு உங்கள் ஆபிஸுக்கே மெயில் பண்ணுறேன்.

    அனைத்து அட்டை படங்களும் சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. @ ஹசன்

      காசன்-க்கு பதில் கார்சன்-ன்னு போட்டிருந்தாலாவது, பிழைக்குப் பரிகாரமாக நாலு ப்ளேட் வறுத்தக் கறியை அனுப்பச் சொல்லியிருக்கலாம், ம்ம்ம்ம். ஜஸ்ட் மிஸ்டு ..

      Delete
  33. எடிட்டர் சார்..!
    'முத்து மினி'க்கு பதிவுத்தபால் கட்டணம் எவ்வளவு சார்..?

    ReplyDelete
  34. ஆசிரியரே தலையில்லா போராளி ஓவியங்கள் கண்ணில் ஒற்றி கொள்ளலாம் போலிருக்கிறது அருமை

    ReplyDelete
  35. லார்கோ இந்தியா வருவாரா சார்...?

    ReplyDelete
  36. மறுபதிப்புகள் ; சந்தா Z; இரத்தப் படலம் வண்ணப் பதிப்பு etc.... etc... என்று பேசிட விஷயங்கள் நிறையவே உள்ளதல்லவா? மகிழ்ச்சி

    ReplyDelete
  37. Edi சார் திருச்சி புத்தக திருவிழாவில் ப்ளு கோட் வெள்ளி கிழமை out of stock ஆகிவிட்டது(தங்கம் தேடிய சிங்கம் மட்டுமே இருந்தது).லக்கி லூக்கும் நிறைய வெளியீடு இல்லை. இனி வரும் புத்தக விழாக்களில் சிறுவர்களுக்கான புத்தகங்கள் அதிகம் வையுங்கள்.

    ReplyDelete
  38. பொடியன் அல்ல..பிர(மாண்டன்)தீப்-க்கு மனப்பூர்வமான பாராட்டுகள்....

    அட்டை மனதை கவர்கிறது.....

    ReplyDelete
  39. லார்கோவின் டீசர் பக்கங்களே தீ பற்ற வைக்கிறது... வாராதோ ஏப்ரலே

    ReplyDelete
  40. மே மாத இதழுடன் சர்பரைஸ் எனக்கு நன்றாகவே தெரிந்து விட்டது சார் ...


    நிழல் ஒன்று நிஜம் இரண்டு வண்ண இதழ் அல்லது டீ சர்ட் அல்லது டெக்ஸ் பற்றிய நாளிதழ் ..

    சரிதானே சார் ...;-)

    ReplyDelete
  41. ஆசிரியர் சார் ...

    இனையதளம் நோக்காத நண்பர்கள் முத்து மினி மறு பதிப்பு பற்றியோ ..விலை பற்றியோ ..வருகை பற்றியோ அறிந்து இருக்க மாட்டார்கள் ..எனவே ஏப்ரல் இதழில் அவ்விதழ்களை பற்றி உங்கள் அறிவிப்பை மறவாமல் தெரிவித்து விடுங்கள்..இதுவரை அறியா நண்பர்கள் இன்ப அதிர்ச்சியில் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது உறுதி ..

    ReplyDelete
  42. இனிய காலை வணக்கங்கள் எடிட்டர் சார் :)
    காமிக்ஸ் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள் :)

    ReplyDelete
    Replies
    1. காமிக்ஸ நண்பிக்கும் இனிய ஞாயிறு வணக்கம் தொடர்ந்து கருத்துக்களை பதிவு செய்யுங்கள் கதைகளை விமர்சனம் செய்யுங்கள் உங்கள் விமர்சனங்களை படிக்க ஆவலாய் உள்ளோம்

      Delete
  43. சுமாராக இருந்தாலும் இந்த சிறுவனின்(!!!) மனங்கோணக்கூடாது என்பதற்காக பாராட்டி வாழ்த்துச் சொல்லும் அத்தனை நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இன்னுமொரு வாய்ப்பு கிட்டினால், மேலும் முயற்சிகள் செய்வேன் இந்த உற்சாக வாழ்த்துக்களின் துணையோடு!

    ReplyDelete
    Replies
    1. சுமாரெல்லாம் இல்லை பொடியன் .. நிஜமாகவே நன்றாய் வந்துள்ளது - glossy கவர் பிரிண்ட் செய்தால் சூப்பரா அமையும்.

      சுமார் கவர்களைதான் அடிக்கடி இங்கன புரட்டி காயப் போடுறோமே (உ.தா : மின்னும் மரணம் கவரு - ஹி ஹி :-p இன்னும் அந்த கவர் ஆசாமி கதையில எங்க வர்றாருன்னு புரியவே இல்ல ;-) )

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. @Podiyan, அட்டைப் படம் பலவிதங்களிலும் நிறைவாக உள்ளது. மறுபதிப்பு என்கிறவகையில் கலரிங் பாணியும் பொருத்தமாக உள்ளது! Keep up the good work!

      Delete
    4. பொடியன் சுமாரே இவ்வளவு சூப்பராக இருக்கிறதென்றால் சூப்பர் எப்படி இருக்கும் விமர்சிக்க வார்த்தைகள் கிடைக்காது போலிருக்கிறது பழைய ஞாபகங்களை கொண்டு வந்து விட்டீர்கள் நண்பரே அதற்கே உங்களுக்கு கணக்கிலடங்கா நன்றிகள் சொல்ல வேண்டும் தொடர்ந்து கலக்குங்கள் நண்பரே

      Delete
    5. பொடியன் அட்டைப்படம் பக்க சூப்பா்

      Delete
    6. இதுதான் சுமாரெனுல் இது போல சுமாராய் ஸ்பைடரும்..

      Delete
    7. என்னது சுமாரா
      சும்மா கலர்ல அள்ளுது ஜி

      நல்லாத்தேன் பண்ணிருக்கீங்க

      Delete
    8. நன்றி நண்பர்களே! காமிக்ஸ் அட்டை வரைந்து தயார் பண்ணுவது எனக்கும் புது அனுபவம். அட்டை அச்சில் வந்த பின்னர், மேலும் உங்கள் கருத்துக்களை தெரிவித்திடுங்கள்.

      Delete
  44. அடுத்த மாதம்
    விஜய்
    அஜித்
    சூரியா
    எம்ஜியாா்எம்ஜியாா் அப்புறம்
    கவுண்டமணி+செந்தில்

    ReplyDelete
  45. ஸ்பைடா்:நான் இந்த நுற்றன்டின் நாயகன் நான் தான்
    ஸ்பைடா்: (mindvoice)என்னையை எவனவது எதுத்து பேசுன vijaசாா்கிட்ட சொல்லிடுவேன்!!!

    ReplyDelete
  46. சாாி பாஸ் அது vija இல்லை vijayan சாா் தான்

    ReplyDelete
  47. போட்டியிள் சேய்பேன் என்று நம்பிக்கை எனக்குள்ளது

    ReplyDelete
  48. லாா்கோ அட்டைபடம் சும்மா மிறட்டுகிறது
    ஓவியங்கள் சூப்பா்
    காந்த மலை மா்மம் அட்டை சூப்பா்
    முத்து மினி ஈரோடு selvam புக் stallல கிடைக்குமா?? சாா்

    ReplyDelete
  49. This comment has been removed by the author.

    ReplyDelete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. பொடியன் சார் அட்டைப்படம் செமையா இருக்கு MM ஸ்டைல்லனா கிழி கிழி கிழி(அட்டைய இல்லீங்க சாமியோவ்)

    ReplyDelete
  52. பொடியன் சார் அட்டைப்படம் செமையா இருக்கு MM ஸ்டைல்லனா கிழி கிழி கிழி(அட்டைய இல்லீங்க சாமியோவ்)

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நல்ல வேளையா நண்பர்கள் போனா போகட்டும்னு பாராட்டு சொல்றாங்க, கிழிக்காம விட்டுட்டாங்க - நட்புக்காக.

      Delete
  53. A ......டெக்ஸ் வில்ல ரு ,லா ர்கோ,டைகரு.....யாராயிருந்தாலும் எனக்கு அப்புறம் வந்த சின்னப் பசங்க தான் ..என்னோட கதைகள்தான் எப்பவுமே டாப்பு...இந்த ஸ்பைடரை வெல்ல எவனாலும் முடியாது ...நானே ராஜா ...
    B......ம்ஹ்ம்..எத்தனை நாளைக்குதான் அடிவாங்காத மாதிரியே நடிக்கிறது...எல்லாப் பசங்களும் ஏகப்பட்ட கதைகளை கைவசம் வச்சிருக்காங்க ...நமக்கோ எடிட்டர் மனசு வச்சிப் போடுற பழைய கதைங்கதான் ...இப்படியே
    மெயிண்டென் பண்ணுடா ஸ் பைடரு

    ReplyDelete
  54. A ...இந்த ஸ்பைடரை ஆர்டினியோட பார்த்திருப்பீங்க ...பெல்காமோட பார்த்திருப்பீங்க ..ஏன் ..ஏகப்பட்ட வில்லன்களோட பார்த்திருப்பீங்க ..எங்கேயாவது அரைகுறை அழகிகளோட பார்த்தி ருக்கீங்களா..?கோடுபோ ட்டு மறைக்க வேண்டிய அவசியமே இல்லாத ஜென்டில்மேன் கதைங்க..... நம்ம கதைங்க ...
    B .....ம்ஹ்ம் நானும் நல்லவன் மாதிரி எவ்வளவு நாள்தான் நடிக்கிறது....மத்த ஹீரோக்களைப் பார்த்தா பொறாமையா இருக்கு ..ஒரு சின்ன கிளுகிளுப்புக்கு இடமிருக்கா என்னோட கதைகள்ளே ..?நானும் ஊதுற சங்கை ஊதிட்டேன் ...இனிமேலாச்சும் ஒரு சின்ன ஜோடி சேர்த்து விடுங்கய்யா கதாசிரியருங்களா ...

    ReplyDelete
  55. கொஞ்சம் லேட் தான் . சட்டதிற்க்கொரு சவக்குழி புத்தகத்தில் தோட்டா டைமில் ஆசிரியர் கேட்ட கேள்வி. இந்த கதைக்கு ஓவியம் வரைந்தவர் வேறு ஒரு பிரபலத்துக்கும் வரைந்துள்ளார் என்று. அது சிஸ்கோ அண்ட் பாஞ்சோ என்று நினைக்கிறேன் . சரிதானா நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் லேட் அல்ல சார் ..ரொம்பவே லேட் தான் ......;-))


      ஆனால் பதில் தான் தப்பா போயிறுச்சு ...நீங்கள் சொன்ன பதிலை தான் நானும் சொல்லியிருந்தேன் ..ஆனால் அது தவறு அந்த ஓவியர் காரிகன் கதைகளுக்கு ஓவியம் வரைந்தவர்..என்று ஆசிரியர் சொல்லி விட்டார் சார் ...;-)

      Delete
  56. A . எல்லா பயபுள்ளைகளும் மாடஸ்டி புராணம் பாடுதே. அன்னைக்கு இஸ்தான்புல் நாடகம் கொடுத்த உதையிலிருந்து எடிட்டரை காப்பாத்தியது நாந்தான்.
    B . இந்த வாய்கொழுப்புதான் நம்ம விட்டு போக மாட்டேங்குது.

    ReplyDelete

  57. A. மறுபதிப்பில் நம்மளை இறக்கிவிட்டுட்டாங்கே!

    B. இதுதான் சரியான நேரம், தமிழக தேர்தலில் குதிச்சிற வேண்டியதுதான்!!!

    ReplyDelete
  58. Can the existing subscribers get Muthu mini,without courier charges as both books can be combinely despatched?

    ReplyDelete
  59. ஸ்பைடர் : ஆர்டினி ஒரு டஜன் வடை பார்சல்
    மைண்ட் வாய்ஸ் : வலை மன்னன் வலை மன்னன்னு சொன்னாங்க இப்ப நான் வடை மன்னன் ஆயிட்டேன்

    ReplyDelete
  60. ****** லூட்டிக்கு ******

    ஸ்பைடர் : இன்னும் என்ன சந்தேகம் மானிடப்பதர்களே...? ஈரேழு லோகத்திலும் சர்வ வல்லமை பொருந்திய ஒரே ஹீரோ - இந்த ஸ்பைடர் மட்டும்தான்னு ஒவ்வொரு புத்தகத் திருவிழா விற்பனைகள்ளேயும் புரியவச்சுட்டுத்தானே இருக்கேன்..!

    ((மனதுக்குள்)) ஆர்டினியையும், பெல்ஹாமையும் மாறுவேஷத்துல அனுப்பி அத்தனை புத்தகங்களையும் நானே மாறி மாறி வாங்கிக்கிட்டிருக்கிற விசயத்தை இந்தப் பயலுவ யாரும் கண்டுபிடிச்சுடாம இருக்கணும் கடவுளே...

    ReplyDelete
  61. ஸ்பைடர் : நான் ஜெயிச்சிட்டேன் இந்த நூற்றாண்டின் சிறந்த ஹீரோ யார் அப்படின்னு எடிட்டர் வச்ச போட்டியிலே நான் ஜெயிச்சிட்டேன்
    மைண்ட் வாய்ஸ் : ஜேடர்பாளையம் சரவணக்குமார் கரூர் குணா ஸ்பைடர் ஸ்ரீதர் செந்தில் சத்யா இவங்கல்லாம் கள்ள ஓட்டூ போட்டதால் ஜெயிச்சோம் இல்லன்னா கோவிந்தா

    ReplyDelete
  62. This comment has been removed by the author.

    ReplyDelete

  63. ****** லூட்டிக்கு ******

    ஸ்பைடர் : வயசானா என்ன பாஸு? இந்த வயசிலேயும் சிக்ஸ்பேக்ஸ் வச்சுக்கிட்டு இந்த சிலிண்டர்களையும் தூக்கிக்கிட்டு இப்படி சிரிச்சா மாதிரி போஸ் கொடுக்க இங்கே எவன் இருக்கான்.. சொல்லுங்க பாக்கலாம்?
    ((மனதுக்குள்)) கடவுளே... ட்ரெஸ்ஸுக்குள் சுருட்டி வச்சிருக்கும் பஞ்சுகள் எல்லாம் கீழே விழுந்து தொலைச்சுடாம இருக்கணும்!

    ReplyDelete
  64. A வெற்றிவேல்...வீரவேல்...லயன் வாழ்க ..முத்து வாழ்க ..A சந்தா வாழ்க..B சந்தா வாழ்க ..C சந்தா வாழ்க..டி சந்தா வாழ்க...இனி வரப்போற EFGHZ வரைக்கும் உள்ள சந்தா வாழ்க...
    B ... ..என்ன கூவு கூவினாலும் ஸ் பைடருக்கு ஒரு தனி சந்தான்னு யாரும் சொல்ல மாட்டேங்கிரா ங் களே

    ReplyDelete
  65. கேப்ஷன்.
    ஸ்பைடர்: யாராலும் நெருங்கக் கூட முடியாத ஆப்பிள் ஆராய்ச்சி கூடத்தை, ஐயா உடைச்சி, வரவிருக்கும் ஐ போன் 7ன் பிளானை வெற்றிகரமாக திருடியாச்சு. மானிடர்களே! என் காலில் விழுங்கடா, காலி செய்யாமல் இருக்கிறேன்.

    மைண்ட்வாய்ஸ்: அப்பாடி சீக்கிரம் முடிச்சாச்சு. என் மணி விழா தொடங்க இன்னும் 10 நிமிஷம் தான் இருக்கு. கெளம்பு ஸ்பைடர்.

    ReplyDelete
  66. கேப்ஷன்.
    ஸ்பைடர்: பாருங்களடா இந்த ஸ்பைடரின் திறமையை! உகாண்டா நாட்டு மக்களிடையே இந்த வாயுவை பீச்சி, அவங்க எல்லாரையும் என் அடிமையாக்கிடேன். ஹா ஹா ஹா. இனிமேல் நான் சொல்வதை அப்படியே செய்வார்கள். உலகம் என் காலடியில் விழும்.

    மைன்ட் வாய்ஸ்: இன்னமுமா இந்த உலகம் நம்மள நம்பிகிட்டிருக்கு!!!

    ReplyDelete
  67. This comment has been removed by the author.

    ReplyDelete
  68. இந்த அட்டைப்படமே அட்டகாசம் சார். இதுவரையில் வந்த நமது வெளியீடுகளில் நிச்சயம் இது போன்ற ஸ்டைலில் அட்டைப்படத்தை பார்த்த ஞாபகம் இல்லை சார்.நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கும் அனைவரும் விரும்க்கூடியதாகவும் இருக்கும்

    ReplyDelete
  69. கேப்ஷன்
    ஸ்பைடர்: இனி ஸ்பைடருக்கு ஜெயமே. ஆர்டினி அற்பப்புழுவே, என் அசாத்திய மதியூகத்தை கண்டாயா?

    மைன்ட் வாய்ஸ்: ஆசிரியர் டெக்ச்க்கும், ஸ்மர்ப்ஸ்க்கும் நல்ல மொழிநடையை கொடித்திட்டு, என்னை இப்படி பினாத்த வெச்சிட்டாரே!!! So Sad...

    ReplyDelete
  70. ஓவியர் சிவிடெலியின் சித்திரங்களை மெகா சைஸில் பார்ப்பதே பரவசமெனில் கதாசிரியர் மௌரோ போசெல்லியின் ‘வூடு கட்டியடிக்கும் பாணி‘யைக் கண்டு எகிப்திய மம்மிகளே மீண்டுமொருமுறை வாய் பிளந்து விடும் எனலாம்! இரவுக்கழுகாரின் முழு டீமும் இம்முறையும் ஆஜராகிட, ஆக்ஷன்; அமானுஷ்யம்; மர்மம்; த்ரில் என நம்மை சீட்களின் விளிம்பில் தொற்றிக் கொள்ளச் செய்யும் அக்னி – கதையின் ஒவ்வொரு அங்குலத்திலும் இழையோடுகிறது! நீண்ட நெடு நாட்களுக்குப்பின் டெக்ஸ்ன் முழு டீமும் புகுந்து விளையாடும் அமானுஷ்ய கதைக்களத்தில் மூழ்கிட ஆவலுடன் காத்திருக்கிறோம் சார்.

    ReplyDelete
  71. கேப்ஷன்.
    ஸ்பைடர்: கூர் மண்டை இருக்கிறவனுக்கு தாண்டா கூர் மூளையும் இருக்கும். ஹாஹாஹா அற்பப் பதர்களே

    மைன்ட் வாய்ஸ்: கோரமா இருக்கிறதுக்கு இப்படி ஏதாவது சொல்லி சமாதானப் பட்டுக்க வேண்டியது தான். ஹூம்...

    ReplyDelete
  72. ஸ்பைடா்:ஏப்பூடி என்னோட six pack

    ஸ்பைடா்(mindvoice):நம்ம திறமைக்கு wwe championshipய வாங்கலாம்

    ReplyDelete
  73. கேப்ஷன்.

    ஸ்பைடர்: ஜடப் பொருட்களை உயிரூட்டும் துப்பாக்கி கிடைத்து விட்டது. என்னைப் போல் பலாக்கிரமசாலி உண்டா?

    மைன்ட் வாய்ஸ்: இத வச்சு, போன மாசம் லவட்டின ஆன்ஞலினா ஜோலி பொம்மைக்கு உயிரூட்டி, கல்யாணம் பண்ணிட வேண்டியது தான். நமக்கு எவன் பொண்ணு கொடுப்பான்.

    ReplyDelete


  74. ****** இதுவும் லூட்டிக்கே ******

    ஸ்பைடர் : ஏம்ப்பா தம்பி... இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இப்படியே நிக்கணும்? காலு நோவுதுப்பா... சிவனேன்னு நடந்துபோய்க்கிட்டிருந்த என்னைக் கூப்பிட்டு இந்த உடுப்பெல்லாம் மாட்டிவிட்டு நீ பாட்டு வரைஞ்சுக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்ங்கறேன்? கசகசனு வருதுப்பா!

    ((மனதுக்குள்)) பயபுள்ள சீக்கிரமா வரைஞ்சு முடிக்கணும். இன்னும் சித்த நேரம் இப்படியே காலை விரிச்சு வச்சுக்கிட்டிருந்தா, அப்பால வூட்டுக்கு போறப்ப நண்டு மாதிரி சைடுல தான் நடக்கணும் போலிருக்கே!

    ReplyDelete
  75. ஸ்பைடர் : ஹலோ நண்பர்களே என்னோட ஆர்ம்ஸ பாத்தீங்களா? எப்படி சும்மா கிண்ணுனு இருக்கு. என்னோட சிக்ஸ் பேக்க பாத்தீங்களா? ச்ச்சும்மா ஹாலிவுட் திரைப்பட ஹீரோஸ் மாதிரி இல்ல?

    ((மனதுக்குள்)) நல்ல வேளை கடவுளே... காலுக்கு கீழே இருக்கிற இளவட்ட கல்ல யாரும் பாக்கல! இதுக்காக
    என்னெல்லாம் குரங்கு சேட்ட பண்ண வேண்டி இருக்கு...ஹு..ம்..ம்.

    ReplyDelete
  76. A :
    டேய்ய்ய் !
    வாங்கடா!
    வாங்கடா!
    ஒரு கை பார்போம் வாங்கடா!

    B : (மனதுக்குள்)
    ஏப்பா!
    யார் பார்த்த வேல இது!
    இந்த போஸ்ல வாங்கடா....வாங்கடான்னா தப்பா நெனைக்க மாட்டாங்க!

    ReplyDelete
  77. (ஸ்பைடர்)
    A :
    டேய்! ஆர்டினி !
    நல்லா கேட்டியா!
    போலீஸ் year end வீடியோ கேட்டாங்க சரி !
    ஆனா இந்த ஒரே Pose'ல half an hour வீடியோ கேட்டாங்கனா சொல்ற ?

    B : (மனதுக்குள்)
    பய புள்ள !
    இது கண்டிப்பா பழச மனசுல வச்சுக்கிட்டு பழி வாங்குதுனு நெனகரன்!
    இருடி ! உன்ன வலை துப்பாக்கில கட்டி இதே போஸ்'ல நாள் பூரா தொங்க விடறேன் !

    ReplyDelete
  78. டாக்டர் டக்கர் :-

    சிக்கென்று அளவான அழகான புத்தகம். பிரித்ததும் வழவழப்பான பக்கங்கள் மனதை கொள்ளைகொண்டன.
    முந்தைய மொரமொரப்பான தாள்களை விடவும் இந்த வழுவழுப்பான தாள்கள் அருமையாக தெரிகின்றன. (எனக்கு) .

    சித்திரங்களும் தெளிவாக., திருத்தமாக அமைந்திருந்தன.

    மொத்தத்தில் டாக்டர் டக்கர் நல்ல புத்தகமாக இருந்தது.!!


    என்னங்க?

    கதையப் பத்தி ஒண்ணுமே சொல்லலையேன்னு கேக்குறிங்களா?

    அது வந்து . . . ,

    கதை. . .,

    கதை. . . . ,

    வந்து. . . .,

    அது கதையேதான் சார்.!!!

    ReplyDelete
    Replies
    1. :D செம!

      டாக்டர் டக்கரை நானும் படிக்க ஆரம்பித்து, பல்வேறு முயற்சிக்குப் பிறகும் பாதிக் கதை(?) வரை மட்டுமே புரட்டி, இறுதியில் தோற்று... ஹம்... முப்பது வருடங்களுக்கு முன்பு இந்தக் கதைகளின் மேல் பித்துப் பிடித்து அலைந்த அந்த நாட்களை நினைத்தால் சற்றே ஆச்சர்யம், கேள்வி, வேதனை என எல்லாம் ஒருசேரத் தாக்குகிறது!

      Delete
    2. நான் முழுக்கதையையும் ஒரே மூச்சுல படிச்சு முடிச்சுட்டேன்ப்பா...!
      மத்த ஸ்பைடர் கதைகளை விட இது.கொஞ்சம் ஜாஸ்தி பூச்சுத்தல்தான்...!இருந்தாலும் வேடிக்கை,வினோத கதைகள் வரிசையில இந்ந கதையையும் வச்சு படிச்சா பிரச்சினையில்ல...!லார்கோ, கிராபிக் நாவல் படிக்கிற மனநிலை தானைத்தலைவன் விஷயத்துல வேலைக்கு ஆகாது...! மைண்ட் செட் முக்கியம் அமைச்சரே....!!!

      (அப்பாடி ஸ்பைடர் இமேஜை காப்பாத்த என்னவெல்லாம் சொல்லவேண்டியிருக்கு....!!? )

      ஹி...ஹி....ஹி....

      ஸ்பைடரா கொக்கான்னானாம்.....!!!

      Delete

  79. Caption :

    A : இது போன்ற கட்டுக்கோப்பான உடலமைப்பைப் பெற., உடனடியாக வாங்கி சாப்பிடுங்கள்., "சிக்ஸ் பேக் சிக்கிமுக்கி லேகியம் " . ஒன்று வாங்கினால்., அது மட்டுமே இலவசம். இச்சலுகை இன்று ஒரு நாள் மட்டுமே. முந்துங்கள்! முந்துங்கள்!!

    B : (மைண்ட் வாய்ஸ்) எவ்வளவு பெரிய குற்றச் சக்கரவர்த்தி.. , இப்படி லேகியத்துக்கு மாடலா வநதுட்டு., வெக்கமே இல்லாமே சிரிக்கிறானேன்னு பாக்குறிங்களா ப்ரதர்.!
    அட! . , நான் பரவால்லிங்க., பெல்ஹாமும் ஆர்டினியும்., "வாலிப வயோதிக அன்பர்களே " விளம்பரத்துல நடிக்கப் போயிருக்காங்க. அந்த கூத்தை நினைச்சுத்தான் சிரிச்சிட்டு இருக்கேன்.!!!

    ReplyDelete
  80. பொடியன், இந்த தளத்தில் இதுவரை அனைவரும் ஒரு மனதோடு பாராட்டிய விசயம் என்றால் உங்களின் இந்த அட்டை பட டிசைன். நன்றாக உள்ளது! தொடரட்டும் இது போன்ற சிறப்பான அட்டை படம்கள் உங்கள் கைவண்ணத்தில்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் படைப்பை இங்கு வெளிச்சம் போட்டு காட்டிய விஜயன் சார் அவர்களுக்கும் எனது பாராட்டுகள்!

      Delete
    2. நன்றி நண்பரே! நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல இது மிகப்பெரியதொரு வாய்ப்பு எனக்கு. தாய் குழந்தையை விளையாடவிட்டுப் பார்ப்பதுபோல....

      Delete
  81. (ஸ்பைடர்)
    A :
    டேய்!
    நீங்க எல்லாம் டாக்டர் டக்கர் ஒட ஆளுங்களா?
    இல்ல கொலை படையா ?
    சரி....யார வேணா இருந்துட்டு போங்க!
    (கைய தூக்கி)
    ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டு! பாக்கறியா! பாக்கறியா!

    B : (மனதுக்குள்)
    ஹ்ம்ம்...எங்க பார்க்கறது!
    கண்ணு சரியா தெரியலன்னு கைய தூக்கி பார்ப்பதற்கு எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு !

    ReplyDelete
  82. A: ஏ... அற்ப கரப்பான் எதிரியே உன்னை அழித்து என் பலத்தை காட்ட பெல்ஹாம் தயாரித்த பேகான் ஸ்பிரே துப்பாக்கியுடன் இதோ என் ஹெலிகாரில் வருகிறேனடார் குற்றவியல் சரித்திரத்தில் மீண்டு மோர் சாதனை படைக்க ,
    B: இந்த ஆர்டினி பய ஹெலிகாரை சர்வீஸ் பண்ண எடுத்துட்டுப் போய் ரொம்ப நேரம் ஆகுதே.ஹெலிகாரை அடகு வச்சுட்டு டாஸ்மாக் ல குடிக்கு தோ அந்த நாயி .நான் வேற குடிக்க . ச்சீ சண்டை போட போறதுக்கு நேரமாகுதே

    ReplyDelete
  83. Caption:
    A: இந்த ஸ்பைடர் நினைத்தால் கோழி முட்டையின் மீதும் பஸ்கி எடுக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் அற்ப பதர்களே
    B: (mindvoice) முட்டை உடைந்து மேல தெறிக்கிறதுக்கு முன்னாடி இறங்கிடணும் இல்ல எல்லாரும் என்னை கூமுட்டையா ஆக்கிய போறானுங்க

    ReplyDelete
  84. Caption:
    A:500, 501,502 பஸ்கி எடுப்பதில் இந்த குற்றசக்ரவர்த்தியை மிஞ்ச உலகில் எவனும் உண்டா
    B:(mindvoice) நானும் காலையில இருந்து முக்கி முக்கி பார்க்கிறேன் ஆ. வரமாட்டேங்குதே

    ReplyDelete
  85. Caption:
    A:500, 501,502 பஸ்கி எடுப்பதில் இந்த குற்றசக்ரவர்த்தியை மிஞ்ச உலகில் எவனும் உண்டா
    B:(mindvoice) நானும் காலையில இருந்து முக்கி முக்கி பார்க்கிறேன் ஆ. வரமாட்டேங்குதே

    ReplyDelete
  86. (ஸ்பைடர்)
    A :
    நான் கொஞ்ச நாள் இந்த விண்வெளி கொள்ளையரை தேடி போய்ட்டு வந்தா...........
    அதுக்குள்ள என்னோட பூமில என்ன என்னமோ பண்ணி வச்சு இருக்கீங்க!

    யாரோ தலையாம்!
    அவருக்கு தனி சந்தாவாம் !
    தளபதிக்கு ஸ்பெஷல் எடிசன்னாம்!
    மாடஸ்தி தொடங்கி....ரின் டின் கேன் வரைக்கும் தனி சந்தா கேட்டு போராட்டமாம் !
    டாம்மிட்!
    எங்க அந்த "வாத்தியார்" விஜயன் !
    என்ன.....
    எனக்கு தனி சந்தா போடற ஐடியா இருக்கா!
    இல்ல.....
    உங்க ஆபிஸ கண்டம் விட்டு கண்டம் கடத்திருவேன்! ஜாக்கிரதை!


    B : (மனதுக்குள்)
    (இந்த KiD ஆர்டின் கண்ணன், Erode விஜய் நமாள காலாய்கிறதா நோட் பண்ணிட்டுத்தான் இருக்கேன் !
    உங்க வீட்டு பாப்பாவுக்கு படிக்க கொடுக்கணும் !
    அதா விட்டுட்டு..........
    முப்பது வருசமா ஒரே புக் படிச்சா போர் அடிக்கமா என்ன பண்ணும்!!!

    எல்லாரும் ஒத்துமையா எனக்கு தனி சந்தா கேட்டு போராட்டம் பண்ணா பொழச்சாங்க !
    இல்லனா...ஈரோடு புத்தக திருவிழாவிற்கு வருவாங்க இல்ல !
    இருக்கு !
    அன்னைக்கு இருக்கு !
    என் வலை துப்பாக்கிக்கு கண்டிப்பா வேல இருக்கு !
    )


    ReplyDelete

  87. ஜில்ஜோர்டன், கர்னல் க்ளிப்டன் - இருவருமே கார்ட்டூன் பாணியிலான டிடெக்டிவ் கதைக் களங்களைப் பொதுவில் கொண்டிருந்தாலும், பரபரப்பாக கதையை நகர்த்துவதிலாகட்டும்; காமெடியிலாகட்டும்; ஜில்'லை விட பல படிகள் மேலிருப்பது க்ளிப்டனே எ.எ.க!

    இப்படியாக, ஜில்லுக்கான ஸ்லாட்டுகளுக்கு க்ளிப்டனால் சங்கூதப்படுகிறது. ஊ..ஊ..ஊ...

    ஜில்லின் ஆதரவாளர்களுக்கு இது புரிஞ்சால் சரிதான்!

    என்னமோ சொல்லணும்னு தோனிச்சு! ;)

    ReplyDelete
  88. Sir, I sent my amount Rs. for Muthu Mini. I am eagerly waiting for my own old fantasy world of comics.

    ReplyDelete
  89. ஸ்பைடா்:(ஆங்காரக் கொக்காிப்போடு..)
    ஹா..!ஹா..!!ஹாா..!!!

    எத்தனை யுகங்கள் கடந்தாலும்,எத்தனை லாா்கோக்கள்,ஷெல்டன்கள் வந்தாலும் இந்த ஸ்பைடாின் பராக்கிரமத்தை வெல்ல எவராலும் முடியாது..!இப் பூவுலகின் குற்றச் சக்ரவா்த்தி நான் ஒருவன் மட்டுமே..! ஹா!ஹா!ஹா!!
    மனதினுள்:(விரைவில் சட்டித் தலையனும் களம் காணப் போகிறான் என்பது மகிழ்ச்சியான செய்தியே..!வரட்டும்..ஒரு கை பாா்த்து விடுவோம்..! அந்நாளில் என்னோடு கை கோா்த்து பயணித்தவன் என்பதால் அவனை எதிா் கொள்வது சுலபம்! இந்த மாமேதைக்கு ஈடு கொடுக்கக் கூடியவன் அவன் ஒருவன் மட்டுமே..!)

    ReplyDelete
  90. ஸ்பைடா்:நண்பா்களே! ஆசிாியரோட கேப்சன் போட்டிய கவனிச்சீங்களா..!உங்க கற்பனை குதிரைய கட்டவுத்து விட்டு தாறுமாற ஓட விடுங்க..!ஒரு கை பாா்த்துடுவோம்..!வெற்றி நமக்கே..!
    மனதினுள்:(யாா் கெலிச்சா நமக்கென்ன..!! எப்படியும் கெலிச்சவங்க நம்ம சாகஸத்த தானே படிக்கப் போறாங்க..ஹி!ஹி!ஹி!!)

    ReplyDelete
  91. a ...வானம் கீழே வந்தாலென்ன பூமி மேலே போனாலென்ன...
    b....இப்படியே இளிச்சுகிட்டு நின்னா லார்கோ கூட சுத்துன ரெண்டு பெண்கள நம்ம கூட ஆட உடுவாரு ஆசிரயர்னு அந்த செம்மூஞ்சி குரங்கு ஆர்டினி சொன்னத நம்பி நின்னா கிழவி பென்னிய அனுப்பிட்டாரே....துப்பாக்கி விசய அமுக்கி பறந்துடலாமா வல பின்னி..

    ReplyDelete
  92. ஸ்பைடரா கொக்கா ....
    இந்த குற்ற சக்ரவர்த்தியை வீழ்த்த இன்னும் எந்த நீதி காவலனும் பிறந்து கூட வரமுடியாது ...அந்த டக்கரே டவுசரே காணோம்ன்னு ஓடி போய்ட்டான் ...மத்தவன் எல்லாம் ....ஹாஹா .....


    மைன்ட் வாய்ஸ் ....

    ஹா ...இப்படி எல்லாம் வாய் சவாடல் விடுவேன்ட்டு தான் ஆசிரியர் போட்டியை வச்சுட்டு அப்படியே எஸ்கேப் ஆயிட்டாரோ ..ஆளையை காணோம் ...ஹூம் எல்லாரையும் பெல்ஹாம் ஆர்ட்டினியா நினைச்சா வேலைக்கு ஆவாது போல ...

    ReplyDelete
  93. ****** லூட்டிக்காண்டிதான் ******

    ஸ்பைடர் : ஸ்பீல்பெர்க் டைரக்டு பண்ற 'இம்சை சக்கரவர்த்தி 23ம் ஸ்பைடர்கேசி' படத்துல நான்தான் நடிக்கணும்னு ரொம்பக் கெஞ்சினாங்க... சரினுட்டேன்! இதோ என் காலடியிலிருக்கும் டைனோசர் முட்டையிலிருந்து ஆக்ரோஸமா வெளியேறப்போற டி-ரெக்ஸ் குட்டியை ஐயா இந்த வலைத்துப்பாக்கியை பிரயோகிச்சு முடக்கிப்போடும் சாகஸத்தைத் தான் இப்ப படமாக்கப் போறாங்க கண்ணுகளா... பார்த்து ரசியுங்கள் இந்த ஸ்பைடரின் பராக்கிரமத்தை! ஹோ ஹோ ஹோ!

    ((மனதுக்குள்)) 'வலையை ஈசியா கிழிச்சுப் போட்டுட்டு அந்த டைனோசர் குட்டி என் முகத்தில் காறித் துப்புற சீனை நல்லவேளையா நாளைக்குத்தான் படமாக்கப்போறாங்க.. ஹீ..ஹீ...ஹீ..

    ReplyDelete
  94. spider:
    என்னை பார்த்து பூச்சி மருந்து அடிக்குறவன் என்று சொன்னவன் எவன்டா ??!!

    (மனசுக்குள் : எப்படித்தான் கண்டுபிடிக்குரான்களோ !! ஒரு வேள மாறுவேசத்தில கொண்டைய மறந்திட்டமா??!! )

    ReplyDelete
  95. Caption3:
    A: என்னுடைய அழகுக்கும் கவர்ச்சிக்கும் நான் எப்பொழுதும் நம்புவது ராணி புறா ( புரிஞ்சவங்க சிரிச்சிகங்க புரியாதவங்க complan குடிங்க)
    B: மார்கெட் போயிட்டா நம்மள எந்த மாதிரி விளம்பரத்திற்குனா மார்கெட் பண்றாய்ங்க அவ்வ்வ்

    ReplyDelete
  96. Caption3:
    A: என்னுடைய அழகுக்கும் கவர்ச்சிக்கும் நான் எப்பொழுதும் நம்புவது ராணி புறா ( புரிஞ்சவங்க சிரிச்சிகங்க புரியாதவங்க complan குடிங்க)
    B: மார்கெட் போயிட்டா நம்மள எந்த மாதிரி விளம்பரத்திற்குனா மார்கெட் பண்றாய்ங்க அவ்வ்வ்

    ReplyDelete
  97. ஸ்பைடர் : எனக்கு தனி சந்தா கேட்காதவங்களுக்கு வாயில ஒரு குத்து முதுகுல ரெண்டு மொத்து
    மைண்ட் வாய்ஸ் : என்ன மெரட்டுனாலும் யாரும் பயப்படபோறதில்லை சுனாமியிலேயே சும்மிங்க போடறவங்க நம்மாளுங்க

    ReplyDelete
  98. ஸ்பைடர் : ஏய் நானொரு கருப்பு சரித்திரம்
    மைண்ட் வாய்ஸ் : நல்ல வேளை ஆர்டினி இல்லை இருந்திருந்தா நீயொரு கருப்பு தரித்திரம்னு நினைச்சிருப்பான் பனாதை பயல்

    ReplyDelete
    Replies
    1. @ செந்தில்

      ஹாஹாஹா! செம! :))))

      Delete
    2. நன்றி இத்தாலி விஜய்

      Delete
  99. லார்கோ இன் அட்டை படம் சுமார்தான் . ஆனால் ஒரிஜினல் அப்படித்தான் என்னும்போது , அதற்கு பதிலாக உட்பக்கங்களின் சித்திரங்கள் எல்லாமே சூப்பர் சார். அதுவும் தலை இல்லா போராளி இன் சித்திரங்கள் கண்ணில் ஒற்றி கொள்ளலாம் போல் உள்ளது . ஓவியருக்கும் , இந்த கதையினை தெரிவு செய்த உங்களுக்கும் பாராட்ட வார்த்தைகளே இல்லை .

    ReplyDelete
  100. This comment has been removed by the author.

    ReplyDelete
  101. This comment has been removed by the author.

    ReplyDelete
  102. A :
    (குற்ற சக்கரவர்த்தி ஸ்பைடர்)

    கை குடு வாத்தியரே!
    ஏன் போட்டோ போட்டு......
    அதுக்கு போட்டி வச்சு......
    என் வீர பராக்கிரமத்தை பரிசா அறிவிச்சு....!!!

    ஹ்ம்ம்...சோக்கா பண்ற வாத்தியரே!
    இப்போ பாரு! கமெண்ட்ஸ் section பிச்சுக்கும்!!!
    உலகம் பூரா இன்டர்நெட் down ஆக போகுது !
    உங்க blog 'ஐ பத்தி ஒபாமாவே white ஹவுஸ்'ல பேச போறாரு !!!
    அநேகமா எனுக்கு தனி சந்தா போடா சொல்லி தீர்மானம் போட போறங்கனு நெனைகரன்!!!

    B:
    (மனசாட்சி: நீதிக்காவலன் ஸ்பைடர்)
    என்ன சார் நீங்க !
    என் பழைய போட்டோ போட்டீங்க சரி !
    ஆனா ஜெயிச்சா....ஏன் என்னோட பழைய புக் பரிசுன்னு சொன்னீங்க ?

    இப்போ பாருங்க.....!
    வழக்கமா போட்டில கலந்துகரவங்க கூட ஓடறாங்க பாருங்க!
    அட! உங்க blog ஹிட்சே கொறையுதுனா பாருங்க!

    என்னை எல்லாம் பார்த்த உடனே பிடிக்காம போகாது சார் !
    ஆனா கண்டிப்பா பார்க்க பார்க்க பிடிக்காம போயிரும் !

    ReplyDelete
  103. A ஹையா ..இந்த அதிபராக்கிரம ஸ்பைடர் பெல்காம் வடிவமைச்ச அதிநவீன ஜெட் உதவியோடு நேரடியா நிலாவிலே கால் பதிச்சிருக்கேன் ..இந்த அதியற்புத சாகசத்தை பூமியிலே உள்ள சகல ஜனங்களும் பார்த்து பாராட்டுவாங்கன்னு நினைக்கிறேன்
    B .. சை .....இன்னிக்கு அமாவாசைங்கி ரதை மறந்து தொலை ச்சுட்டேன் ..பூமியிலே நிலாவே தெரியாதே.. அப்புறம் எப்படி என்னோட சாகசம் தெரியும்...வரவர என்னோட சாகசம் சுப்பாண்டியின் சாகசம் மாதிரி ஆயிட்டு வருதே

    ReplyDelete
    Replies
    1. //வரவர என்னோட சாகசம் சுப்பாண்டியின் சாகசம் மாதிரி ஆயிட்டு வருதே//

      :D

      செம! :))))

      Delete
  104. இரண்டுநாள் தாமதமான வணக்கங்கள்..!

    கர்னல் க்ளிப்டன் கதைகள் விமர்சனம்...
    [பயணம் காரணமாக ரெண்டுநாள் லீவில் டைப்பியதால் நீளமா போச்சி...கொட்டாவி வந்த ஒரு ஜம்பு ப்ளிஸ்]

    Steven Spielberg டைரக்ட் பண்ணின டாம் குருஸ் நடிச்ச MINORITY REPORT கிற சைன்ஸ் பிக்சன் படம் என்னை ரொம்பவே கவர்ந்த படத்துல ஒன்னு. அடுத்து யார் யாரை கொல்லபோறாங்கன்னு முன்கூட்டியே கம்பியூட்டர் மூலமா தெரிஞ்சிட்டு கொலையை தடுப்பதுதான் கான்செப்ட்.

    இந்த கான்செப்டை உல்டாவா...[முதலில் வந்திருந்தாலும் கூட] யார் கொல்லபடவேண்டியவன்..? அதை யார் கையில் கொடுத்து முடிக்கவேண்டும்..! என தீர்மானிக்கும் சூப்பர் [காமெடி]கம்பியூட்டர் காரியத்தில் இறங்கும் கலாட்டா கதை, கர்னல் க்ளிப்டனின் 7 நாட்களில் எமலோகம்! ஆனால் ஏனோ அந்த கதையை அதிகம் ரசிக்கமுடியவில்லை, காரணம் சூப்பர் கம்பியூட்டர் தேர்ந்தெடுக்கும் அளவிற்கு கர்னல் க்ளிப்டனின் திறமை எப்படின்னு தெரியாததா..? கதையின் நீளமா..? ஸ்பீல்பெர்க் படத்தின் மேல் இருந்த மோகமா என தெரியவில்லை.

    ஆனால் இந்த மாத க்ளிப்டன் ரெண்டு கதையிலும் அவர் திறமை ஸும்மா அள்ளி தெறிக்குது..! கொள்ளையடிப்பது ஒரு சாமார்த்தியம், இங்கே கொள்ளையடிக்க போகிறேன் என அறிவித்துவிட்டு கொள்ளையடிப்பது படு சாமர்த்தியம், அதுவும் சிக்காமல் விதவிதமாய் கொள்ளையடித்து கொண்டித்துக்கொண்டே போவது...அதை பயங்கர கலாட்டவுடன் கதை நகர்த்து என கலந்து கட்டியிருகிறார்கள் நில்..சிரி..திருடு..!கதையில்..!

    '7 நாட்களில் எமலோகம்' ஓவியங்களில் ஏதோவொரு கடுப்பை பிரதிபலிக்கும் முகபாவங்களே அதிகம் இருந்தது மட்டுமின்றி, பின்னணி தகவல்களும் ரொம்பவே குறைவு..! வரைந்தவர் ஒரே ஓவியர் என்றாலும்கூட, அதற்கு நேர்மாறாக இந்த மாத க்ளிப்டன் ஓவியங்கள் ஒரு நேர்த்தியும், பின்னணி ஓவியங்களும் அருமை..! வண்ணகலவையும் குளிர்ச்சியான ஒன்று..!!

    அடுத்து என்ன? அடுத்து என்ன? என விறுவிறுப்பில் 'நில்..சிரி..திருடு' 'நகரும் குரல் மர்மம்' இரண்டு கதையும் சரியான ஏட்டிக்கும் போட்டி. 'நகரும் குரல் மர்மம்' கதை கார்ட்டூன் சீரியலில் வருவதால் பப்பி சேம்,பட்டர் கட்டர்,இன்க்கி பிங்க்கி பிரபு,மாக்கான் மேங்கோ என சுட்டிகள் வட்டார பெயர்கள் பயன்படுத்தியிருந்தாலும்...கதை சீரியசான ஒன்று மட்டுமல்ல, நமக்கு ரொம்பவே பிடித்த வேறு ஒரு பிரபல துப்பறிவாளரின் கான்செப்ட்சாயல் தெரிவது எனக்கு மட்டும்தனா...???
    [அந்த பிரபல துப்பறிவாளர் யார் என யூகிக்க முடிகிறதா..?]

    மீண்டும் கையில் எடுக்கும் காலம்...அடுத்தமாதம்..! காரணம் பள்ளி விடுமுறையில் சுற்றுவட்டார சிறுவர்களுக்கு கொடுக்கத்தான்..!

    ReplyDelete
    Replies
    1. ///[அந்த பிரபல துப்பறிவாளர் யார் என யூகிக்க முடிகிறதா..?] ///

      ரிப்போர்டர் ஜானி?

      Delete
    2. இத்தலியாரே சந்தேகமேயில்லாமல் அவரே..!பன் with டீ உங்களுக்கு பிடிக்காது..உங்களுக்கு பிடித்த வாழைக்காய் பஜ்ஜி with டிகிரி காபி அடுத்த சந்திப்பில்...[கேரட் மீசையார் சிரிக்கும் படங்கள் மூன்று]

      Delete
  105. ஸ்பைடர் : (பாட்டு) வில்லாதி வில்லனையும் பென்டெடுப்பேன் நான் ராஜாதி ராஜனையும் தோற்கடிப்போம்
    மைண்ட் வாய்ஸ் : பாட்டுல மட்டும் இல்ல நெஜத்துலயும் மாயாவி லாரண்ஸ் டேவிட் லார்கோ ஷெல்டன் டைகர் எல்லோரையும் பென்டெடுப்பேன்

    ReplyDelete
  106. ஸ்பைடர் : நான் ஒரு தடவை குத்துனா நூறு தடவை குத்துன மாதிரி
    மைண்ட் வாய்ஸ் : ஹும் ஆர்டினி பெல்ஹாமை குட கணோம் நான் யாரை குத்துறது

    ReplyDelete
  107. அட்டை ஓவியங்கள் அருமை. இருந்தாலும் முழுக்க முழுக்க ஒரிஜினல் டிசைனையே பயன்படுத்தி நம்முடைய இயல்பான தனித்துவத்தை இழப்பது போல் எனக்கு தோன்றுகிறது. டெக்ஸை பொறுத்தவரை மாலையப்பனின் டிசைன் தான் பெஸ்ட்

    ReplyDelete
  108. முத்து மினி காமிக்ஸ், 6 புத்தகங்களும், என்னவென்று சொல்லமுடியுமா? நன்றி..

    ReplyDelete