Powered By Blogger

Thursday, March 03, 2016

மலைகோட்டை மாநகரில் புத்தக விழா - நாளை !

நண்பர்களே,

வணக்கம்.மலைக்கோட்டை மாநகரில் நாளை (மார்ச் 4-வெள்ளிக்கிழமை) துவங்கிடும் புத்தக விழாவில் நமது ஸ்டால் நம்பர் 54! 

இடம் : மாநகராட்சித் திடல், தென்னூர்.திருச்சி 

குடும்பத்துடன் வாருங்களேன் !!!!!

உங்கள் நண்பர்களுக்கு, திருச்சி நகரின் சுற்றுப்புறங்களிலுள்ள நட்புக்களுக்கு தகவலைப் பரிமாறிடுங்களேன் ? Thanks in advance !!

163 comments:

 1. திருச்சி புக்ஃபேரில் நமது காமிக்ஸ்கள் விற்பனையில் பட்டையை கிளப்ப வாழ்த்துகள்...!

  ReplyDelete
  Replies
  1. இதே பெயரில் Facebookல் உள்ளது நீங்கள் தானா நண்பரே

   Delete
  2. ஆமாம் நண்பரே....!

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 2. இளவரசியின் அசத்தலான போஸ்டர் சூப்பர்....!

  ReplyDelete
  Replies
  1. தேவதை எப்போதுமே அசத்தல் தானே நண்பரே

   Delete
  2. செந்தில்....!இளவரசி எனும் பதத்தை விட தேவதை ன்னும் அம்சமாக உள்ளது.

   Delete
  3. //இளவரசியின் அசத்தலான போஸ்டர்.//

   //தேவதை எப்போதுமே அசத்தல்தானே //

   //இலவரசி எனும் பதத்தை விட தேவதை ...//

   " மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.!"

   Delete
 3. உலக காமிக்ஸ் வரலாற்றில் முதல் முறையாக 3 வது

  ReplyDelete
  Replies
  1. ஒரு வேளை திருச்சி வந்தால் உங்களை சந்திக்க முடியுமா sundaramoorthy j

   Delete
  2. இல்லை ஜி.... நான் திருச்சி வரவில்லை..... முடிந்தால் சென்னை விழாவில் சந்திப்போம்

   Delete
 4. நண்பர்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கங்கள்

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. நேற்று மதியம் சிறு வேலையாக சிவகாசி சென்றிருந்தேன். நமது லயன் காமிக்ஸ் அலுவலகம் போனபோது எடிட்டர் சாரை பார்க்கமுடியுமா என்றேன். ஒரு நிமிடம் என்று உள்ளே போன மைதீன் சார் சார் சாப்பிடக் கிளம்பிட்டாங்க இருந்தாலும் வரச்சொல்றாங்க உள்ள போங்க அப்படின்னு சொன்னவுடனே கொஞ்சம் தயக்கத்துடனே உள்ளே போனேன். மெல்லிய சிரிப்புடன் வரவேற்று கிட்டத்தட்ட 1மணி நேரம் ஒதுக்கி பசி வேளையிலும், பலதரப்பட்ட அலுவல்களுக்கிடையிலும் அன்புடன் உரையாடினார். நன்றி சார். வாழ்க்கையின் சந்தோசமான தருணங்களில் ஒன்றாக நேற்றைய ஆசிரியருடனான சந்திப்பு அமைந்தது. நன்றி சார்

  ReplyDelete
 7. தமிழ் சினிமாவில் வழக்கமாக இடம் பெறும் இரண்டு அபத்தங்கள்
  1.எல்லாரையும் பட் பட் என்று சுட்டு கொல்லும் வில்லன், ஹீரோ மற்றும் அவரை சார்ந்தவர்களை சுற்றி வளைத்து கொல்வான்... அவர்கள் எளிதில் தப்பிக்க வசதியாக....

  2.ஹீரோ எப்படி சுட்டாலும் வில்லன்கள் இறந்துவிட......வில்லன் ஹீரோவின் தலையில் சுட்டாலும் எப்படியாவது அவர் பிழைத்து விடுவார்....

  இதற்கு நமது காமிக்ஸும் விதிவிலக்கில்லை போலிருக்கிறது....

  மார்ச் மாத டெக்ஸ் கதையை படித்தவுடன், எனக்கு தோன்றியது...

  ReplyDelete
 8. திருச்சி புத்தகத் திருவிழா திருப்பத்தை ஏற்படுத்த வாழ்த்துக்கள் சார்

  ReplyDelete
 9. இம்முறை திருச்சிராப்பள்ளி புத்தக விழா வெற்றிகரமாக அமைய முன்கூட்டிய வாழ்த்துக்கள் சார் ....

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் சார்..

  ReplyDelete
 11. 12வது சார் . வாழ்த்துக்கள் !!!

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete
 14. திருச்சிக்கு ஆசிரியர் விஜயம் உண்டா ?

  ReplyDelete
 15. திருச்சி புத்தக திருவிழாவில் நமது ஸ்டால் வெற்றி அடைய மனபூர்வ வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. என் மனதில் உள்ளதை அப்படியே கூறியுள்ளிர்கள் சார் மாடஸ்டிக்கு குறைந்தது 3 வாய்ப்புகள் கொடுக்கலாம் எங்கே ஆசிரியர் நாம் கூறுவதை ஆசிரியர் கண்டு கொள்ள மாட்டேன்கிறார்

   Delete
  2. ராஜேந்திரன் சார்....!
   மேலே உள்ள மாடஸ்டியின் படத்தை பார்க்கும்போது என் மனதில் தோன்றிய கேப்ஷன்...!
   டியர் மிஸ்டர் விஜயன்....! அடுத்த வருஷம் எனக்கு மூணு ஸ்லாட் ஒதுக்கலைன்னா...சுட்டேபுடுவேன்....!!!

   Delete
  3. @ JSK

   ஹாஹாஹா! செம! :)))

   நானும்...

   "வாத்தியாரே... போராட்டக்குழுவின் கோரிக்கையை ஏத்துக்கலைன்னா விசையை படக்குன்னு அழுத்திப் பிடுவேன். டுமீல்'னு சவுண்டு கேட்டதுக்கப்புறம் 'ஐயோ அம்மா'னு கத்திப் பிரயோஜனமில்லை... சொல்லிப்புட்டேன்!"

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. ஏ.டி.ராஜேந்திரன் சார்.

   " ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சார்.! "

   நமது காமிக்ஸில் முன்பு டாக்டர் பாலசுப்பிரமணியம் என்பவர் வாககர் கடிதத்தில் தவறாமல் ஒவ்வொரு கதைக்கும் தனது கருத்துக்களை அழகாக சுட்டிக்காட்டுவார்.எடிட்டருக்கு அடுத்தபடியாக அவரது ஒப்பீனியனை தவறாது படிப்பேன்.அவரது கடிதம் பிரசுரம் ஆகவில்லை என்றால் ஏமாற்றமாக இருக்கும்.நீண்ட இடைவெளிக்கு பின் சமீபத்தில் அவரது கடிததை பார்த்ததும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.அதுவும் அவர் மாடஸ்டி ரசிகர் என்றவுடன் இரட்டிப்பு சந்தோசமாக இருந்தது.

   அதேபோல் உங்களையும் கண்டு இரட்டிப்பு சந்தோசம் அடைகிறேன்.!நன்றி.!


   ஜேடர் பாளையத்தாரே.! உங்கள் கேப்சன் கமெண்ட்ஸ் அட்டகாசம்.!


   இருந்தாலும் , நம்ம ராஜேந்திரன் சார் சொல்றமாதிரி.கேப்சனில் போட்டில் எதிரிகள் கழுவி கழுவி ஊற்ற வாய்ப்புகள் அதிகம்.எதிரிகள் நடமாட்டம் தெரிகிறது.ஏனெனில் என் காதுமடல் அரிக்கிறது.!

   ஈரோடு விஜய்.!

   அபாச்சே பிடிவாத குணமும் வைரம் போன்ற உறுதியான மனம்கொண்ட நமது செயலாளர் நம் அணியில் இருப்பதால்
   வெற்றி நிச்சயம்

   " நல்லவர் இலட்சியம்.,வெற்றி நிச்சயம்.!"

   Delete
  6. This comment has been removed by the author.

   Delete
  7. // மாடஸ்டி ஸ்பெஷல் குண்டு புத்தகம் வெளியிட வேண்டும்.//

   +11111111111111111111111111111111111111111111111111111111111111......

   //அதில் கழுகுமலைக்கோட்டை வெளியிட வேண்டும்.! //

   மலைக்கோட்டை நகர் புத்தக கண்காட்சியில் கழுகு மலைக்கோட்டை புத்தகம்.! ஆகா !நல்ல டைமிங்.!நல்ல ரைமிங்.!

   Delete
 17. மலைக்கோட்டை மாநகர் காமிக்ஸை மறக்க இயலா கோட்டையாக மாற வாழ்த்துக்கள் ஸார்.

  ReplyDelete
 18. திருச்சிக்கு ஆசிரியர் விஜயம் உண்டா ?

  ReplyDelete

 19. நண்பர்கள் அனைவருக்கும் குட்நைட்.

  ReplyDelete

 20. நண்பர்கள் அனைவருக்கும் குட்நைட்.

  ReplyDelete
 21. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இரவுக் கழுகின் இரவு வணக்கம்

  ReplyDelete
 22. ஆசிரியரே தேவதையின் போஸ்டர் சூப்பரில்லை அதுக்கும் மேல

  ReplyDelete
 23. கழுகு மலைக்கோட்டை மலைக்கோட்டை மர்மம் போனற புத்தகங்களை ரீபிரிண்ட் செய்து இருந்தால் ஃஃஃ

  ReplyDelete
 24. திருச்சி புத்தகத் திருவிழா வெற்றியடைய வாழ்த்துகள்!

  ReplyDelete
 25. மாடஸ்டியை மலைக்கோட்டை நகரில் மலைக்கோட்டை மர்மம் அட்டையி் ல் இதே போசில் போட்டிருந்தா....வேண்டா நா சொன்னா சிரிச்சுருவாங்க....MV நீங்களே சொல்லுங்க...

  ReplyDelete
 26. **** ஆப்பரேசன் இ.பி.பா *****

  எண்ணற்ற காமிக்ஸ் பிரியர்களின் ஏகோபித்த ஆதரவுடன்...

  ஒரு லட்சியப் போராட்டம்...

  தொடர்கிறது...!

  ReplyDelete
  Replies
  1. பிரியாணின்னா சாப்பிட்டு விடனும் ...
   கிரிக்கட்ன்னா பார்த்து விடனும்...

   காமிக்ஸ்ன்னா படித்து விடனும் ...


   Delete
  2. சிங்கத்தின் சிறுவயதில் ,4,5மாதமாக வெளிவராததை எதிர்த்து போராட்டம் நடத்தும் ஈரோடு விஜய் , இந்த.
   இ.பி . பாடல் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு புத்தகத்தை தேர்வு செய்து அதை படிக்க மாட்டார், சகோதரி.....நிறைய நண்பர்கள் ஆதரவு (???) தருவதாக வதந்தி பரவல்.....
   இம்மாதம் கமான்சே செலக்ட்டாம்..., அடுத்த மாதம் டெக்ஸ் கதை செலக்ட் ஆக வாழ்த்துவோம் ....

   Delete
  3. சகோவுக்கு நம் போராட்டப் பின்னணியை கோடிட்டுக் காட்டியமைக்கு நன்றி டெக்ஸ் விஜய்!

   SeaGuitar சகோவும் ஆதரவு தருவார் என்று நம்புகிறேன்... _/\_

   போராட்டம் மேலும் வலுப்பெறுவதை கேள்விப்பட்ட எதிரணித் தலைவருக்கு (மேலும்) கண்ணாமுழி பிதுங்குகிறதாமே...?

   Delete
  4. ஆம் நானும் கவனித்தேன் எப்போதும் சிங்கத்தின் சிறுவயதில் முதலில் படித்து விட்டு
   கதையை அப்புறம் தான் படிப்பேன்
   என்னுடைய ஆதரவு கண்டிப்பாக உண்டு brothers :)

   Delete
  5. @ seaGuitar

   போராட்டக்குழுவுக்கு ஆதரவளித்ததற்கு நன்றி சகோ!

   இத்தளத்தைப் பார்வையிடும் மற்ற சகோக்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து நீதியை நிலைநாட்ட(!) உதவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்! _/\_

   @ எதிரணித் தலைவருக்கு

   ஹாஹாஹா! ( கொஞ்சம் P.S. வீரப்பா பாணியிலான சிரிப்பு இது)
   போராட்டத்தின் பிடி இறுகுவதை உணரவில்லையா நீங்கள்? மூச்சு முட்டுமளவு பிடியின் தன்மை கடுமையாவதற்குள் இந்தப் பிரச்சினை முடிவுக்குக் கொண்டுவர உங்களுக்குள் எச்சரிக்கை மணி அடிக்கவில்லையா? கொஞ்சம் உற்றுக் கேளுங்கள்....

   டாங்.. டாங்.. டாங்ங்ங்...

   ஆங்! அதுவேதான்! :D

   Delete
  6. This comment has been removed by the author.

   Delete
  7. @ A.T.R

   ஹாஹாஹா! செம! :)))))

   ஆதரவுக்கு என் நன்றிகளும்! _/\_

   Delete
  8. @விஜய்

   பாஸு!
   நம்ம ஏன் இந்த மாசம் ஒரு புக்!
   அடுத்த மாசம் ரெண்டு புக்!
   மூணாவது மாசம் மூணு புக்!
   நாலாவது மாசம் நாலு புக் ன்னு போராட்டத்தை தீவிர படுத்த கூடாது!

   ஒன்னு நம்ம லட்சியம் நிறைவேறும் !
   இல்லன்னா....
   ஒரு மூணு நாளு லீவ் போட்டுட்டு...
   "அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமட அதுன்னு ஒரே சமயத்துல பத்து புக் ஒன்னா படிக்கலாம்!"

   எப்படியும் election டைம்'ல நம்மள மறந்துருவாங்க!

   என்ன ஒரு சிலர் மட்டும்....
   "ஏப்பா.....
   இங்க ஈரோடு விஜய்..
   ஈரோடு விஜயனு ஒரு மானஸ்தன் இருந்தாரு பார்தீங்கலன்னு நம்ம கவுண்டர் பாணில கலாய்பாங்க!"

   "அட அது யாருங்க அது!
   ஏன் பேரு இத்தாலி விஜயகோனுட்டு..."
   நம்ம அடுத்த rhymes ரெடி பண்ணிற வேண்டியதுதான் !

   Delete
  9. @ Saravanan

   ஹாஹாஹா! செமத்தியான ஐடியாஸ் தான்! :)))

   அடுத்தமாதம் இரண்டு புத்தகங்கள் என்பதை நான் ஏற்கனவே லேசாய் யோசித்திருந்தேன். இப்ப நீங்களும் சொல்லீங்க. செஞ்சுடுவோம்!
   ஆனால், "இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்"னு கவர்ன்மென்ட்டே சொல்லியிருப்பதால அதுக்கு மேல வேண்டாம்! நான் பாவம்ல? ;)

   Delete
  10. @ விஜய்

   பாஸ்!
   இல்ல... நம்ம நாலு மாசம் நாலு புக் படிக்கலன்னு தெரிஞ்சா.....

   அஞ்சாவது மாதம் நம்ம விஜயன் பாஸு......

   "என் இனிய பரோட்டா (சரிரிரி...சரிரிரிரி...போராட்ட...போராட்ட :)) தோத்தான் கோலிஸ்ஸ்ஸ்......
   இந்தாங்க 'சந்தா Z'.... இந்த மாதம் அஞ்சு புத்தகம் படிக்காம இருங்கன்னு சொன்னாலும் சொல்லுவார்!

   ஹ்ம்ம்.......என்ன பண்றது!
   நாலு பேர் நல்ல இருக்கணும்னா நாலு புக் படிக்காம இருக்கறதுல தப்பே இல்ல....
   டொன்...டொன்....டொங்க்க்க்க்க்......... டொங்ங்ங்ங்க் :(


   Delete
 27. @ திரு விஜயன்

  நெடுநாள் ஆதங்கம், இனியும் சொல்லாமல் விட்டால் தவறாகிவிடும்..! நானும் எவ்வளவோ எக்கசக்கமான காமிக்ஸ் பிராண்ட்களை பார்த்திருக்கிறேன்.யாருமே விட்டுத்தராத ஒரு விஷயத்தை அசால்டாக விட்டுதருகிறீர்கள்..! எங்கோ அடித்த தேசிய சின்னம் தாங்கிய ரூபாய் நோட்டை ஒரு மடிப்பு தாண்டி, என் வாழ்நாளில் இரண்டாவது மடிப்பு மடித்ததேயில்லை சார்..!ஆனால் நீங்கள் அசால்ட்டாக கஷ்டப்பட்டு உருவாகிய காமிக்ஸ் ராஜாங்க சின்னங்களை பலவாறு நீட்டுகிறிர்கள், உயரத்தை கூட்டுயும்..அகலத்தை அகலப்படுத்தி விளம்பரங்களை,அறிவிப்புகளை டிஸைன் செய்வது... ரூபாய் நோட்டை கசக்குவது போல மனதை கசக்குகிறது ஸார்..! பிராண்ட் லோகோவின் அளவுகளில் கைவைப்பது, நம் பிள்ளைகளை நாமே மதிக்காதது போல் உள்ளது. டிஸைன் செய்பவரிடம் உறுதியாக இந்த விஷயத்தில் கைவைக்க கூடாது என கண்டிப்புடன் சொல்லிடுங்களேன்,ப்ளிஸ்..!

  ReplyDelete
  Replies
  1. திருச்சி கண்காட்சியில் இருந்து இப்போதுதான் வெளியே வந்தோம். போட்டோ எப்படி அப்டேட் செய்வது என்று தெரியவில்லை

   Delete

 28. உலக காமிக்ஸ் வரலாற்றில் முதல் முறையாக 5 வது

  Reply

  ReplyDelete
 29. தற்போது புதிய கம்பெனியில் பணி புரிவதால் திருச்சிக்கு வருவது கடினமே.

  ReplyDelete
 30. எடிட்டருக்கு காலை வணக்கம்.
  புத்தகத் திருவிழா அன்று நமது பழைய்ய்ய்ய்யயயய பதிப்புகளை நான்கு வீதம் மறுபதிப்பு செய்து வெளியிடலாமே.அது புத்தக திருவிழாவில் மட்டுமே கிடைக்குமாறும் (வர இயலாதவர்கள் நண்பர்கள் மூலமாக பெற்று கொள்ளலாம்) செய்யலாம்.இதனால் புத்தக திருவிழா களை கட்டுவதோடு சந்தா மற்றும் ரெகுலராக வாங்குவோருக்கும் புத்தக திருவிழாவில் புதிய புத்தகம் கிடைக்கும்.ஏற்கனவே மூவரணி மறுபதிப்பு ஆவதால் அதைத்தவிர மற்ற கதைகளை போடலாம்.

  ReplyDelete
 31. காலை வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.சென்ற ஆண்டின் பதிவு சாதனையை இந்தாண்டு எளிதில் உடைத்து விடுவோம் என்று நம்புகிறேன்.
  மலைக்கோட்டை மாநகரில் நடக்கும் புத்தக திருவிழாவில் நமது இதழ்கள் நல்ல விற்பனையைக் காண வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 32. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. @ Rajendran A.T
   பெண் வாசகர்கள் மாடஸ்டிக்கு என் போன்ற ரசிகைகள் நிறையவே இருக்கின்றனர், சிறு வயதில் இருந்து நான் மாடஸ்டியின் தீவிர ரசிகை, என் குடும்பத்தில் உள்ள அனைவரும் ரசிகர்கள், என்னுடைய ஆசிரியருக்கும் மாடஸ்டியை பிடிக்கும்.
   எடிட்டர் தான் மாடஸ்டிக்கு அதிகம் வாய்ப்பு தரவில்லை

   Delete
  2. அப்படி செய்தால்தான் மாடஸ்டி ஏக்கம் கொஞ்சமாவது தணியும்

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. @ Editor Sir
   மாடஸ்டிக்கு நிறைய பெண் ரசிகைகள் உண்டு என்பதால்
   மாடஸ்டியின் தீவிர ரசிகை என்ற உரிமையோடு
   மாடஸ்டிக்கு அதிக வாய்ப்பு தருமாறு கேட்டு கொள்கிறேன் Sir

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
  6. மாடஸ்ட்டிக்கு பலத்த ஆதரவு பெருகிவருவது மகிழ்ச்சியளிக்கிறது!

   அடுத்தவருடம் "Dial M for Mesmerizing Modesty Blaise"னு ஒன்னை டயல் பண்ணச் சொன்னாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை போலிருக்கே...!

   இனி தமிழகக் காமிக்ஸிலும் பெண்கள் ஆட்சிதானோ? ;)

   Delete
  7. This comment has been removed by the author.

   Delete
  8. Modesty Blaise Fans:
   Even the current slot is too much.....You should pray that, it hold a slot for next year. Asking for a separate subscription is over the top. But I will be happy for a separate subscription, so that I can skip Modesty Blaise totally.

   Delete
  9. @ Editor Sir
   ஆதலால் மாடஸ்டிக்கு கூடுதல் வாய்ப்பு தருவீராக

   Delete
  10. எடிட்டர் சார்.!

   நான் திருமணம் செய்யும் முன்னார் மாடஸ்டி கதைகளை ஆழ்ந்து படித்தது கிடையாது.திருமணமான புதிதில் நான் வேலைக்கு சென்றபின்னர் என் மனைவி எனது காமிக்ஸ் கலெக்ஷ்னை எடுத்து படிப்பது வழக்கம்.அப்போது டெக்ஸ் கதையையும் மாடஸ்டி கதைகளையும் விரும்பி படிப்பாள்.அப்போது மாடஸ்டியின் அழத்தமான கதைகளையும் ஆழகான ஓவியங்கள் பற்றியும் விவாதிப்பதையும் தொடர்ந்து நானும் ரசிகனாகிவிட்டேன்.!

   மேலும் 2014 சென்னை புத்தக கண்காட்சியில் ஒரு சகோதரி மாடஸ்டி கதைகளை அதிகம் வெளியிட வேண்டும் என்று முற்றுகையிட்டது இன்னும் கண்முன்னே நிற்கிறது.!

   என் மனைவியை பெண்கள் சார்பில் பதிவிடகோரியபோது தயக்கம் காரணமாக பதிவிடமுன் வரவில்லை.!

   தற்போது ஒரு ககோதரியே முன் வந்து கோரிக்கை வைப்பது , பாட்சா சொல்றமாதிரி நூறூபேர் கேட்டதற்கு சமம்.! கடலில் பனிப்பாறை மிதந்து வரும்போது அதில் ஒரு சதவீதம் மட்டுமே தண்ணீரின் மேல்மட்டத்தில் தெரியும் .மீதி ஒன்பது சதவீதம் தண்ணீர் அடியில் இருக்கும்.!

   அதைப்போல மௌனமாக காமிக்ஸ் படிக்கு அனைத்து சகோதரிகளின் பிரதிபலிப்பாக எடுத்துக்கொண்டு.,போர்கால அடிப்படையில் மாடஸ்டி கதைகள் இரண்டை இந்த வருட சந்தாவில் சேர்த்து நமது காமிக்ஸ் உலகத்தில் மகளிர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.!

   Delete
  11. This comment has been removed by the author.

   Delete
 33. Modesty looks awesome Sir
  Good wishes for Malaikottai Book Festival :)

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete

  2. // T.R. ன் வீராசாமி படத்தை 1000 முறை பார்க்க வைப்போம். //

   1000 முறை என்பது நேர விரயம்! அதற்குப் பதிலாக 'காலத்தின் காலச் சுவடுகளில்' 10 முறை படிக்க வைப்போம். ரெண்டும் ஒரே எஃபெக்ட் தான்! :D

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. ஹாஹாஹா! உண்மைதான்! விடக்கூடாது... வீராச்சாமியையே பார்க்க வைப்போம்! "1000 தபா பார்த்து முடித்தால் - 10 தபா Absolutely FREE!!!"னு அறிவிப்போம்! பார்த்து ரசிக்கட்டும்! ;)

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
  6. காயப்படுத்திட வாய்ப்பில்லை! ஒருவேளை காயப்படடுவிட்டதாக அவரே சொன்னாலும்கூட வீராச்சாமி படத்தை இன்னும் 100 தபா இலவசமா பார்க்க வச்சோம்னா சமாதானமாகிடுவார்! :D

   Delete
  7. This comment has been removed by the author.

   Delete
  8. இத்தாலி விஜய் வீராசாமியில் டி.ராஜேந்தர் வேட்டியை அவிழ்த்து ஆடும் ஆட்டத்தை எடிட்டர் ஒரு முறை பார்த்தாலே நாம் என்ன கோரிக்கை வைத்தாலும் கன நேரத்தில் நிறைவேற்றிவிடுவார் இதில் 1000 முறை பார்த்தால் எடிட்டரின் முழிகள் பிதுங்கி வெளியே வந்து விடும் அனுகுண்டை கூட ஆசிரியர் எளிதில் கையாள்வார் ஆணால் வீராசாமியை நினைத்தாலே பல மைல் ஓட வாய்ப்புண்டு பாவம் ஆசிரியர் நம் கோரிக்கைகளை கட்டாயம் நிறைவேற்றுவார்

   Delete
  9. @ திரு ராஜேந்திரன்.AT

   ஏற்கனவே நம்ம எடிட்டரருக்கு நியாபக மறதி லைட்டா இருக்கு, இதுல வீராசாமி பார்த்தாருன்னா சுத்தம்...அடுத்த மாசம் மொத்தபேரும் சிவகாசிக்கு பஸ்ஸை பிடிச்சி "நீங்கெல்லாம் யாரு இந்த வீராசாமியை எதுக்கு ஷுட்டிங் டைம்ல டிஸ்டப் பண்றிங்க, நான் 'பீப்' சாங் பாடறதுக்குள்ள எல்லாரும் எஸ் ஆயிடுங்க.." கிற டயலாக்கை அங்கபோய் கேட்டு வரவேண்டியிருக்கும்..!

   சும்மா லைட்டா பூச்சாண்டி காட்ட இதை கட்டுங்க போதும், மூனே நிமிடம் சோழிமுடிச்சிடும் ..ஹாஹஹா...பார்க்க...இங்கே'கிளிக்'

   Delete
  10. This comment has been removed by the author.

   Delete
  11. @ திரு ராஜேந்திரன்.AT

   இந்நேரம் எடிட்டர் அந்த மூனு நிமிஷத்தை 'கிளிக்' பண்ணி பார்த்து 1983,மார்ச்-4 ம் தேதி மதியம் 2 மணியிலஇருந்து அன்னிக்கு நைட் வரை நடந்ததை மட்டும் சுமார் 300 பக்கங்கள் எழுதி முடிச்சிருப்பார்.ஒரு நாள் கதையை சுமார் 300 பக்கம் கணக்கா அவர் எழுதி தள்ள...போராட்டம் பண்ணினவங்க,அதை படிச்சே அதே குழியில வயசாகி வயசாகி..வயசாகி...டைட்டானிக் ரோஸ் இன்னிக்கு இருக்குற கணக்கா வெளியவந்து..வேண்டாம் தோர்கல் 'தயாள தெய்வங்கள்' கணக்கா வயசாகி வெளியவந்து... "என்னது ஜூனியரின் சிறுவதில் 300 வது தொடர் போய்ட்டிருக்கா கககககக...." கேட்டுட்டு மயக்கம் போட்டு சாயபோறாங்க...ஹே..ஹாஹஹா...!!!!

   அப்புறம் நீங்க வயசுல மூத்தவர் அதுதான் திரு...நான் பொடிபையன் சும்மா பேர் போட்டு கூப்பிடுங்க ..அவுக்...!

   Delete
  12. //நான் பொடிபையன் சும்மா பேர் போட்டு கூப்பிடுங்க ..அவுக்...!///---- அலோ மாயா சார் அதெல்லாம் நாங்க , மீன்ஸ் நானு,ஈ.வி., கிட் மாமா ,2பரணீஸ் , ப்ளூபெர்ரி, கணேஷ் , ரம்மி ,கிருஷ்ணா , குணா, சம்பத்,குமார் ,சல்லூம் ,சீ நா பா , தினகரன் , யுவா,ரவி ,பிளேடு,ஜெயக்குமார் ,சரவணன் ,க்ளா,2சத்யா,பீனிக்ஸ்,சுந்தர் ,.....இன்னும் இன்னும் பெயர் விட்டுப்போன ஏராளமான நேரில் பார்த்த மற்றும் பார்க்காத யூத் நண்பர்கள் ,இப்படி .....ஆனால்

   மூத்த வாசகர்கள் ஆன நீங்கள் மீன்ஸ்
   திரு மாயாவி சிவா,திரு AT.ராஜேந்திரன் ,திரு RT முருகன் ,திரு ராகவன் ,திரு மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன் ,திரு S.V.V.,திரு விஸ்வா, திரு அருண் ,திரு ரஃபீக்,திரு சுரேஷ் சந்த்,திரு ஜேடர்பாளையம் சரவணகுமார், திரு ஸ்டாலின் ,திரு புனித சாத்தான் , திரு பிரபாகர் ......இன்னும் பெயர் விட்டுப்போன சீனியர் நண்பர்கள் முக்கியமாக நமது ஆசிரியர்,என உங்களையெல்லாம் நாங்கள் திரு போட்டு தானே அழைக்கவேணும் ....
   இதுவரை அவ்வாறு அழைக்காதமைக்கு நாங்கள் ஆல் யூத்ஸ்ம் சன்னமான சாரியை கேட்டுக்கொள்கிறோம்...ஹி...ஹி..ஹி...

   Delete
  13. டுமீல்னு துப்பாக்கியை முழக்கி வரும் சீனியர் நம்ம திரு ஜானி அய்யா ,பாருங்கள் இந்த திரு மாயாவி சிவா பொடிப்பையன்னு தன்னை சொல்லிக்கிறார்,கொஞ்சம் கேளுங்கள் ....

   Delete
  14. // டி.ஆர். ரின் வீராச்சாமி படத்தை 1000 முறை பார்க்க வேண்டும் //

   நமது எடிட்டர் இதற்கு எல்லாம் அஞ்சமாட்டார்.,விதி போட்ட விடுகதையில் வரும் டைகர் ஜாக் மாதிரி அசைந்து கொடுக்க மாட்டார்.!

   Delete
  15. This comment has been removed by the author.

   Delete
  16. This comment has been removed by the author.

   Delete
  17. டுமீல்னு துப்பாக்கியை முழக்கி வரும் சீனியர் நம்ம திரு ஜானி அய்யா ,பாருங்கள் இந்த திரு மாயாவி சிவா பொடிப்பையன்னு தன்னை சொல்லிக்கிறார்,கொஞ்சம் கேளுங்கள் ....

   Delete
 34. கொட்டும் மழையில் மார்த்தா வைத் தாங்கிப்பிடிக்கும் xiii ...வண்ணத்தில் பார்க்கும்பொழுது அவ்வளவு திருப்தி..நிறைவு .சினிபுக்கின் புத்தகம் கைக்குக் கிடைத்து,மீண்டும் மீண்டும் பார்த்துப் பரவசம் அடைகின்றேன் .யான் பெற்ற இன்பம் அனைவரும் பெற அடுத்த வருடத்திற்குள் இரத்தப்படலம் வண்ணத்தில் வருவதற்கு வேண்டுகிறேன்.....மலைக்கோட்டை காமிக்ஸ்கோ ட்டையாகி வெற்றி பெற வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 35. சேலத்தில் எதிர்பார்ப்பு அதிகம் இல்லாமல் ஸ்டால் அமைத்து எதிர்பார்க்கா வகையில் அதிரிபுதிரி ஹிட் அடித்து கொண்டாடியது போல மலைகோட்டை மாநகரிலும் வெற்றியை கொண்டாட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் .....


  ReplyDelete
 36. போராட்டம் தொடர்கிறது ...


  வலை மன்னன் காத்து கொண்டே இருக்கிறார் எனது தழுவலுக்காக ....


  பட் ......ஐயம் தீவிர போராட்ட மேன் ....காத்திரு வலை மன்னரே .....

  ReplyDelete
 37. ஒரு லூட்டிக்காண்டி வசன போட்டி மேலே மாடஸ்தி படத்திற்காக ....

  மாடஸ்தி &ஆசிரியர் ...  ஆசிரியரே ......நான் கேப்ரியலை கூட மன்னிச்சுருவேன் ..ஆனா சி.சி .வயதில் எழுதாமல் எனது போராட்ட சிஷ்ய கோடிகளை பதட்டத்திலும் ..வருத்ததிலுமே தாங்கள் வைத்து கொண்டிருந்தால் உங்களுக்கு மன்னிப்பே கிடையாது ...

  இளவரசி ....உறுதியாக அடுத்த இதழில் சிங்கத்தின் கட்டுரையை எழுதி விடுகிறேன் ..ப்ளீஸ் ..துப்பாக்கியை இறக்கு ....தீபாவளி துப்பாக்கியை என் சன் விக்ரம் நீட்டினாலே என் கால்கள் படை நடுங்கும் ...நீங்கள் நீட்டினால் ..நோ .....


  ஓகே ....பட் ...இந்த ஒரு துப்பாக்கியை பாத்துட்டு அடுத்த ஒரு இதழுக்கு ஒரு பார்ட் எழுதிட்டு திரும்ப காணாமல் போனா நான் மட்டுமல்ல அடுத்து வில்லியும் கத்தியோடு வருவான் ...மறவாதீர்கள் ....


  அ....அ.....அது வந்து இளவரசி ...சில சமயம் ...பக்க குறைவு ...பட்ஜெட் ....அப்படி ..இப்படி ....ன்னு ....  அப்படி இப்படியா ...அப்ப முதல்ல என்ன பண்றீங்க ...அந்த சிங்கத்தின் சிறு கட்டுரையை ராவோட ராவா கடைசி பார்ட் வரைக்கும் எழுதி பட படன்னு பைன்டிங் பண்ணி தொகுப்பா சென்னை புத்தக காட்சிக்கு கொண்டு வந்துறுங்க ....இல்லை ...கத்தி மட்டுமல்ல கார்வின் காங்கோ வோடவும் வருவான் ....

  ஆஹா ...டெக்ஸ் கிட்ட கூட தப்பிச்சுரலாம் போல ...இந்த பொம்பளபுள்ளைக கிட்ட தப்பிக்க முடியாது போல ...என்ன சொல்லலாம் ....


  ஆசிரியரே ...என்ன யோசிக்கிறீங்க ...வாழைபூ வடைக்கும் ...நண்டு வறுவலுக்கும் என்னோட பாவபட்ட போராட்ட குழு ஏதோ தெரியாம அப்ப மயங்கியிருக்கலாம்....ஆனா என் கிட்ட வாழைபூ வடை இல்ல ...அந்த ஆமை வடையே கொண்டு வந்தாலும் இந்த பாட்சா பலிக்காது ...அதுமட்டுமல்ல இப்ப என் சிஷ்ய கோடிகள் எதுக்கும் மயங்கறதா இல்ல ...சீக்கிரமா முடிவை சொல்லுங்க ஆசிரியரே ...


  இளவரசி ...மறக்க மாட்டேன் ..என்னை மன்னிச்சுறு ...இனி மாசா மாசம் சிங்கத்தின் சிறு வயது கட்டுரையை போட்டுறேன் ...பக்கம் பத்தலைன்னா கதையை ரெண்டா பிரிச்சு கதையை கூட அடுத்த பாகம்ன்னு அடுத்த இதழில் கொண்டு வரேன் ..இனி நிறுத்தாம அந்த பகுதி வந்துறும் ...முதல்ல அந்த துப்பாக்கியை கீழே இறக்கு ..கேப்ரியலை நினைச்சு பொசுக்குன்னு விரலை அழுத்திராதே ....

  ஓகே ...வரேன் ஆசிரியரே ...ஆனா வேதாளம் திரும்ப முருங்கை மரம் ஏறுனா நான் மட்டுமல்ல கூட அந்த வேதாளரே டெவிலோட வருவார் ...ஜாக்கிரதை ...


  என்னது டெவிலா ...ஏதோ ரின் டின் கேனா இருந்தா கூட சமாளிச்சுறலாம் ...ஹூம் ..இனி வேலைக்கு ஆகாது ...டைகர் மொழி பெயர்ப்பை கூட நாளைக்கு பாத்துக்கலாம் ..முதல்ல இந்த சிறு வயது கட்டுரையை முழுசா முடிச்சுட்டு வந்துறேன் ....

  இந்த போராட்ட பயபுள்ளக பதுங்கு குழில உக்காந்துட்டு வடையும் நண்டு வறுவலும் தின்னுட்டு ஒழுங்கா தானே இருந்தாங்க ..திடீர்னு இப்படி வீரத்துல பொங்கிறானுங்க ..இனி மீதி இருக்குற வாழைபூ வடையும் ..நண்டு வறுவலும் நான் தான் திங்கனுமா ..ஐயோ நான் வேற சைவத்துக்கு மாறீ ரொம்ப நாளாச்சே ...வேற வழியே இல்ல ...போராட்ட குழுக்கு அடுத்த எலி பொறியை ரெடி பண்றவரைக்கும் ....பண்ற வரைக்கும் ...பண்றவரைக்கும் ....  ஐயம் வெயிட்டிங் ......

  ReplyDelete
  Replies
  1. தலீவரே... பின்றீங்க தலீவரே! :))))

   Delete
  2. தலைவரே.!


   " சாது மிராண்டால் காது கொள்ளாது.!"

   சூப்பர் தலைவரே.!

   Delete
 38. ஆசிரியரே விதி போட்ட விடுகதை விறு விறுப்பான கதை மட்டுமல்லாது வசனங்களும் பிரமாதப்படுத்துகிறது கார்சனிடம் டெக்ஸ் காலனிடம் என் பிள்ளை அத்தனை சீக்கிரத்தில் சரணடைந்திருக்கமாட்டான் என கூறும் இடத்தில் டெக்ஸ் கம்பீரம் வெளிப்படுகிறது இந்த வேதனைக்கு நான் அந்நியனல்ல காதலின் ஆழத்தையும் பிரிவின் துயரத்தையும் உணர்ந்திருக்கிறேன் நானும் என மகனுக்கு ஆறுதல் கூறும் தன் ஆழ் மனதின் வேதனையை காட்டுகிறது கிட் தன் காதலியின் சமாதியில் இந்த மண்ணில் என் ஆன்மாவின் ஒரு பாகத்தை விட்டு செல்கிறேன் பதிலுக்கு நேசத்தையும் பாசத்தையும் காதலையும் எனக்கு கற்றுத் தந்த உன்னை என் சுவாசத்தில் சுமந்து செல்கிறேன் நிம்மதியாக துயில் கொள் என் தேவதையே என கண் கலங்குவது வசனம் எல்லோரையும் கண் கலங்க வைத்து விடுகிறது மொத்தத்தில் நிறைவான இதழ்

  ReplyDelete
 39. மலைகோட்டை மாநகர் புத்தகவிழாவில் நம் காமிக்ஸ் வணிக ரீதியில் மகத்தான வரவேற்பை பெறநல்வாழ்த்துகள்

  ReplyDelete
 40. செந்தில்குமார் ஞாயிற்றுக்கிழமை கண்காட்சியில் சந்திப்போமா ?

  ReplyDelete
 41. புது ஆபீஸ் லீவ் கிடைக்கல

  ReplyDelete
 42. வேதாளர் DIGEST வேண்டும்

  ReplyDelete
 43. மின்னும் மரணம் கண்காட்சியில் கிடைக்குமா?

  ReplyDelete
  Replies
  1. மின்னும் மரணம் is available in book shop (3 Elephant@ Chennai) also.

   Delete
  2. தகவலுக்கு நன்றி சார்! :)

   Delete
 44. " சி.சி.வயதில் தொடரை கடந்த சில மாதங்களாக படிக்கமுடியாததால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறோம்" என்று நமது போராட்டக்குழுவின் மகளிரணி ஒரு அறிக்கை விட்டால் போதும்!.....
  "வெளிவரும் எல்லா இதழ்களிலுமே இனி சி.சி.வயதில் கண்டிப்பாக இடம்பெறும்" என்று எதிரணித் தலைவர் அவராகவே (விசுக் விசுக் என விம்மிக்கொண்டே) ஒரு அறிவிப்பு வெளியிடும்படி செய்துவிடலாம்!

  அப்படியே 'சீனியர் சிங்கத்தின் சிறுவயதில்'... 'ஜூனியர் சிங்கத்தின் குழந்தை வயதில்' போன்ற தொடர்களுக்கு ஒரு பிள்ளையார்சுழி போடவும் வாய்ப்புக் கிடைக்கும்!

  ஹோ ஹோ ஹோ! ( இது வலைமன்னனின் வில்லங்கச் சிரிப்பு)

  ReplyDelete
  Replies
  1. //அப்படியே 'சீனியர் சிங்கத்தின் சிறுவயதில்'... 'ஜூனியர் சிங்கத்தின் குழந்தை வயதில்' //

   @Erode Vijay : LOL ! Super

   Delete
  2. ஈரோடு விஜய்.!

   எடிட்டர் சென்ற ஞாயிறு பதிவில் அவர் செஸ் பிரியர் என்று தெரிந்து கொண்டேன்.!

   நாம் சில வருடங்களாக சீனியர் எடிட்டரின் மலரும் நினைவுகளையும் அறிய ஆவலுடன் இருந்தோம்.மறுபதிப்பில் மட்டுமாவது சீனியர் எடிட்டரின் எழத்துக்களை கேட்டோம்.! விடியட்டும் என்றார் . இப்போது சி.சி.வ.வருவதில்லை. " உள்ளதும் போச்சுடா நொள்ள கண்ணா" என்று ஆகிவிட்டது.இதில் சதுரங்க ஆட்டம் உள்ளதோ.?

   Delete
 45. ஸார் டெக்ஸ் ஓவியங்களுக்கு முதல்ப்ளஸ்...குதிரயில் விரையும் ஒவ்வரு ப்ரேமும் கெத்து...தந்தையின் பாசம்...காதல் அழகு...தந்தை மகன் மோதல் பெரிய அளவில் பதைபதைக்க செய்யவில்லை....ஆனாலும் தெள்ளத் தெளிவாய் நீரோடை போல விரைந்தோடும் பக்கங்கள் அடுத்த மாத டாக்ஸை ஆவலோடு எதிர் நோக்கச் செய்கின்றன.

  ReplyDelete
 46. திருச்சி கண்காட்சியில் இருந்து இப்போதுதான் வெளியே வந்தோம். போட்டோ எப்படி அப்டேட் செய்வது என்று தெரியவில்லை

  ReplyDelete
  Replies
  1. @ திருச்சி விஜய்

   போட்டோக்களை எனக்கு மெயில் செய்தால் அப்டேட்க்கு உதவுகிறேன்..! id:mayavisivakumar@gmail.com

   Delete
 47. திருச்சிக்கு ஆசிரியர் விஜயம் உண்டா ?

  ReplyDelete
 48. மான் விழி மாடஸ்டி கதை ஒன்றை
  முழு வண்ண பதிப்பாக விரைவில்
  வெளியிட எனது வேண்டுகோள்
  ( MV அவர்கள் சார்பாகவும்)

  ReplyDelete
 49. அடச்சே! இத்தனை வருடங்களுக்கப்புறம் இப்பத்தான் ஒரு உண்மையக் கண்டுபிடிச்சேன்...

  நாம சாதாரணமா செய்யக்கூடிய ஒரு விசயத்தை நம்ம 'வலைமன்னன்' ஸ்பைடரால செய்யவே முடியாது. அது என்னன்னு யாராவது சொல்ல முடியுமா? ( சரியான விடை சொல்றவங்களுக்கு வழக்கம்போலவே சிங்கிள்-டீ வித் ரவுண்டு பன் பரிசாக வழங்கப்படும்)

  பி.கு: எடிட்டர்களும் இப்போட்டியில் கலந்துக்கலாம். அவங்களுக்கு மட்டும் 3 வாய்ப்புகள்(மட்டுமே) :P

  ReplyDelete
  Replies
  1. Very simple Vijay, he can never sleep on bed (24 X 7 he is with his jet pack)

   Delete
  2. @ Dr. Sundar, Senthil Vinayagam

   இருவருமே சரியான பதிலளித்து ஆளுக்கு ஒரு சிங்கிள்-டீயும், ஒரே ரவுண்டு பன்னை (தனித்தனியாக் கொடுத்தா கம்பேனிக்கு கட்டுப்படியாகாது பாஸ்) இருவரும் சமமாகப் பகிர்ந்துகொள்கிறீர்கள்! ( நல்லவேளை.. பத்துப் பேர் சரியான பதிலளித்திருந்தால் பன்'னின் நிலைமை என்னவாகியிருக்கும்!!!) :P

   உங்களுக்கான பரிசு EBF/CBFன் போது வழங்கப்படும்!

   Delete
 50. முதுகு சொரிவது தானே விஜய்.;-)

  ReplyDelete
 51. திருச்சி..... 1998 ஆம் வருடம் மலைக்கோட்டை வாசலில் இரவு 9 மணிக்கு ஒரு தள்ளுவண்டியில் சுடச்சுட விதவிதமான கலவை சாதம் சாப்பிட்ட நினைவுகள்., இன்றும் என் நெஞ்சில் நீங்காமல் உள்ளன......

  ReplyDelete
 52. டாக்டர்...,! நீங்க ஒரு தீர்க்கதரிசி.....

  ReplyDelete
 53. திருச்சி புத்தகத் திருவிழாவில் நம்ம வெற்றிக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 54. Friends , anyone send full address of trichy book fair and bus route..

  ReplyDelete
  Replies
  1. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தென்னூர் வழியாக செல்லும் பஸ்ஸில் ஏறி தென்னூர் அக்ரஹர்ரம் அல்லது தென்னூர் ஆஞ்சநேயர் கோவில் ஸ்டாப்பில் இறங்கி உக்கிர காளி அம்மன் கோவில் போகணும்னு கேட்டிங்கன்னா புத்தக விழாவுக்கு வந்துடலாம்

   Delete
 55. அய்யாய்யா,,,,500 பேஜுக்கு கதையை ராபகலா வேலை செஞ்சி சோக்கா தமிழ் பண்ணி கொடுத்திருக்காரு,அத பத்தி எதுனா பேசாம ஸ்கூல்ல பாடத்தை கவனிக்காம பக்கத்து பெஞ்சு பையன்ட்ட தொன தொனன்னு பேசற கணக்கா மயிலாட்டம்,போராட்டம்,சிலம்பாட்டம்ன்னு கடுப்பேத்துறிங்களே.500 பேஜ் அற்புதத்தை படிக்காம அத எப்படி செஞ்சிங்க?அந்த கதை சொல்லுங்கன்னு நச்சுபண்ணறது வாத்தியார் உழைப்ப மதிக்கறாப்பலையாக இருக்கு.கதையை பத்தி நாலுவரி எழுதநினைகிறவன் கூட நடையை கட்டிடுவான்,இதெல்லாம் ஒரு பத்து நாள் தள்ளி செய்யக்கூடாதாப்பா. -உடுமலைபேட்டை,ராம்மூர்த்தி

  ReplyDelete
 56. அனைவருக்கும் வணக்கம். வாரா வாரம் எடிட்டரின் பிளாக் பகுதியை ஆவலுடன் படித்து மகிழும் ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கு நானும் ஒருவன். ஒவ்வொரு முறை எடியின் புதிய பதிவு வந்தவுடன் நண்பர்கள் ஆவலாக கருத்துகளை பதிவிடுவதும், அதற்கு சிலர் பதில் கூறுவதும் வாடிக்கையான ஒன்றுதான் என்றபோதும், பலமுறை இது மிகவும் நீண்டு, loadmore வந்துவிடுகிறது. இதில் சில ஆர்வமுள்ள வாசகர்களின் பதிவுகள் திரும்ப திரும்ப வருவதை பார்க்க முடிகிறது. இது நல்ல விஷயம்தான் என்றபோதும், இதனால் புதிய வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட முடி்யாத சூழநிலை உள்ளது. Legendary வாசகர்கள், வாரம் ஒருமுறை ஒன்று அல்லது இரண்டு நீண்ட பதிவுகளோடு நிறுத்தி கொண்டால் பல புதிய வாசகர்கள் விவாதத்தில் பங்கு கொள்ளும் ஆரோக்கியமான சூழல் உருவாகும். எத்தனை புது வாசகர்கள் வாராவாரம் பதிவிடுகிறார்கள் என்று பார்த்தால் இது புரியும். இது என்னுடைய தாழ்மையான கருத்து.

  ReplyDelete
  Replies
  1. நண்பர் சரவணன் அவர்களுக்கு ...

   நீங்கள் கூறிய இதே கூற்றை (குறையை )சில காலங்களுக்கு முன்னர் வேறு நண்பர்களும் தெரிவித்து இருந்தனர் ..அதை ஏற்று ரெகுலராக தனது கருத்துக்களை இங்கே தெரிவிக்கும் நண்பர்களுமே ஒரே பதிவுடனும் ...சில காலம் மெளனமாகவே இருந்தும் இந்த காரணங்களுக்காக தான் வரமுடியவில்லை என்று இருந்த எந்த நண்பரும் புதிதாக வரவில்லை ...இந்த தளமே மெளன விரதம் இருந்தது போல அப்பொழுது அமைந்தது ...எனவே எப்பொழுதும் இங்கே தனது கொண்டாட்டத்தை மனமாற பகிரும் தளத்தை மீண்டும் கொண்டாட்ட தளமாக மாற்றி கொண்டனர் ...மேலும் லோட் மோர் என்ற பிரச்சனைக்காக தான் எந்த புதிய நண்பரும் வர முடியவில்லை என்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்றே என்பது உண்மை ...காரணம் ஆசிரியர் ஒவ்வொரு ஞாயிறும் இப்போது தவறாமல் பதிவு இடும் பொழுது லோட் மோர் தான் பிரச்சனை எனில் புதிய நண்பர்கள் அன்றே களமிறங்கினால் இந்த குறை ஏது ..?எனவே நண்பர்கள் இங்கே மெளன மாக இருப்பதன் காரணம் ...தமிழாக்கம் அதிகம் அறியாமல் இருப்பதாலும் ...தங்கள் கருத்து மற்றவர்களை மன காயபடுத்தி விடுமோ என்ற ஆதங்கம் ...அதே போல அவர்களின் கருத்துக்கு நண்பர்களின் பதில் தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தி விடுமோ போன்ற தயக்கங்கள் தான் இங்கே அவர்களை வர விடாமல் செய்கிறது ...ஆனால் அந்த தயக்கங்களை உடைத்து இந்த தளம் வெளியாரிடம் அல்ல ..இது நமது இல்லம் ..இங்கே கூடும் அனைவருமே சகோதர ..சகோதரிகளே ..நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்பதை நிரூபிக்கவே இங்கே ஜாலி ..கிண்டல் ...பதிவிகளும் நண்பர்களால் பதிவிட படுகிறது ...இந்த தளத்தின் நெருக்கத்தால் உறவினர் போல மாறீய நட்புகள் ஏராளம் ..ஏராளம் ....எனவே நண்பர்கள் அனைவருமே இங்கே பதிவிட வர வேண்டும் என்பதே இங்கே ஆசிரியரின் கருத்தை போல நண்பர்களின் கருத்தும் ...அவர்களின் தயக்கங்களை உடைத்து இங்கே மனம் திறக்கலாம் என்று முடிவெடுத்தாலே போதும் லோட் மோர் என்பது பிரச்சனை அல்ல என்பது புரிந்து விடும் ....மற்ற படி தாங்களும் எப்பொழுதும் போல இங்கே வந்து தங்கள் கருத்துக்களை அடிக்கடி பகிர வேண்டும் அன்பு நண்பர்களின் சார்பாக வேண்டி கொள்கிறேன் ...

   தங்கள் புரிதலுக்காக தான் இந்த பதில் ...உங்களை மன வருத்தம் அடைய செய்ய அல்ல ...அப்படி எனது பதில் தங்களை காயபடுத்தி இருந்தால் மனமாற எனது மன்னிப்பை முன் கூட்டியே வேண்டி கொள்கிறேன் ....

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. @ தலீவரே

   எம் தலீவர் பரணிதரனின் கடுதாசிக்கு கண்கலங்காதவரும் இத் தரணியில் உண்டோ?! செம பதில்!

   @ A.T.R

   தெளிவான, நியாயமான, ஆழ்ந்த கருத்துகளுக்கு +100000!

   Delete
  4. தலீவரின் கடிதத்தை மீறிய அஹிம்சை ஆயுதமும் உலவோ பட்டாங்கில் உளபடி

   Delete
 57. சரவணன் சார்.!


  இங்கு அதிகமாக பதிவிடுவது என்பது நிரந்தரம் கிடையாது.! கடவுளின் அருளால் வாழ்க்கை என்னும் படகு சமதளத்தில் செல்லும் வரைதான்.! வாழ்கையில் தொழில் மாற்றம் அளவுக்கு அதிகமான பிரச்சினைகள் வந்தால் காணாமல் போய்விடுவோம்.! அதுவரை வேவ் லென்த் ஒத்துப்போகும் நண்பர்களிடம் ஜாலியாக அரட்டை அடிப்பதில் தடைபோடுவது நியாயம் இல்லை.! மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதுபோல் லோடுமோர் ஒரு பிரச்சினையே இல்லை.

  அதுவும் எடிட்டரின் வருகையின் முதல் இரண்டு நாட்கள் தனிப்பட்ட விவாதங்கள் யாரும் செய்வதிலலை.!

  ReplyDelete
 58. தளம் நிதம் தோறும் காமிக்ஸ் செய்திகளால் நிரம்பி வழிதலே அழகு ....நீங்களும் வாங்க

  ReplyDelete
 59. கிளிப்டன் கதை படிச்சுடேங்கோ.! பார்க்க அவ்வளவு ஈர்ப்பு இல்லையென்றாலும் படிக்க இரண்டு கதைகளும் சூப்பரா இருந்ததுங்கோ.அப்போ நான் கும்பிட்டு விடை பெறுகிறேனுங்கோ.!

  இந்த வருடம் முதல் மூன்று மாத வெற்றியுடன் ஹாட்ரிக் அடித்துவிட்டார்.!


  நமது அபாச்சே பிடிவாத செயலாளரின் ஆணைகளுக்கிணங்க கமான்சே கதையை படிக்கவில்லை.!

  (இருந்தாலும் இங்கு அந்த கதையும் நன்றாக இருப்பதாக பல நண்பர்கள் கூறியதால் இந்த ஹாட்ரிக் அறிவிப்பு.!)

  ReplyDelete
 60. டக்கர் கதை டக்கர்...அபார சித்திரங்கள்...தெளிவாக...அற்புதமான தாள்..அச்சு..அசத்தல்.வில்லன்....வில்லாதி இல்லனாய் நமது தானைத்தலைவன்...விறுவிறுப்பான பக்கங்கள்..10ருடங்கள் முன்பு ராஜேஸ்ரி லெண்டிங் லைப்ரரியில்நூறு ரூபாய்க்கு ஆட்டய போட்டதில் முதலிரண்டு பக்கமே நினைவில்....ஆனால் பாலம் மேல் நிற்கும் ஸ்பைடர் 30ருடங்களாய் நினைவில்....காலத்தை வென்று நிற்கும் ஸ்பைடர் நம் இளய தலைமுறயயும் கொள்ளை கொள்வதுறுதி...அட்டையில் முகம் தவிர நிறைவானிதழ்...100/100

  ReplyDelete
 61. இந்த மாத இதழ்களை தினமும் பத்து பக்கங்கள் என்று படித்துக்கொண்டிருக்கிறேன்....... எடுத்தேன், படித்தேன், முடித்தேன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு எதுவும் இல்லை. எல்லாம் சுமார் ரகம் தான்.

  ReplyDelete
 62. சார் இன்றைய இரவு் அ.மா. டெக்ஸ் அட்டை மற்றும் எ.பெ.டை. மற்றும் xiii குறித்த அருஞ்செய்திகளுக்காக i am waiting......

  ReplyDelete
 63. நாளை பதிவு எதைப்பற்றியதாக இருக்கும்.??

  கிட் ஆர்ட்டின் கண்ணன்.!

  எங்கே ஆளையே காணோம்.? நலமா.?

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் ஒரு மலரும் நினைவு பதிவு .....????

   Delete
 64. This comment has been removed by the author.

  ReplyDelete
 65. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. ராஜேந்திரன் சார்.!

   விடியட்டும் விடைகிடைக்கட்டும்.!

   Delete
 66. நண்பர்களே, சமீபத்தில் லயன் காமிக்ஸ் முக புத்தகத்தில் ஒரு நன்கு அறிமுகமான நண்பர் ஒருவர், ஒரு கருத்தை பதிவிட்டு, இதை பிளாகில் சொன்னால் கும்மி எடுத்துவிடுவார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். அது ஏன் என்று யோசித்தன் விளைவே இந்த பதிவு. புது (பிளாகிற்கு, காமிக்ஸுக்கு அல்ல) மற்றும் மெளன வாசகர்கள் பெரும்பாலோனார் முன் வந்து தங்களுடைய கருத்துகளை பதிவிட வழி செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே...நண்பர்களின் உற்சாகம் பிறரையும் ஊக்குவிக்கும் காரணிகளே...தயக்கம் களைந்தால் நல்லது பிறக்கும்..கலந்துரையாடல் நமது தேவைகளின் ஏணிப்படிகளாய் இருக்கட்டுமே..

   Delete
 67. காமான்சே புத்தகம் மட்மே பாக்கி உள்ளது.!

  சங்க செயலாளர் ஆணைகளுக்கிணங்க படிக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.! நாளைய பதிவில் சமரசம் ஏற்பட்டால் .,காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் பாய்ந்த மாதிரி பாய்ந்துவிடுவேன்.

  வெயிட்டிங்.................

  ReplyDelete
 68. I am waiting .next post thalai Villa porali.

  ReplyDelete
 69. ஆசிரியரின் புதிய பதிவு ரெடி....
  இன்னும் கொஞ்ச நேரத்துல போட்ருவாரே...

  ReplyDelete
 70. 'விதி போட்ட விடுகதை' யில்...

  * டைகர் ஜாக்கை எதிரிகள் வதைக்கும்போது ஒரு - ஐயோ!
  * கிட்வில்லர் சுட்டுவீழ்த்தப் படும்போது ஒரு - ஐயய்யோ!
  * டெக்ஸைக் கொல்ல கிட் புறப்படும் விதியின் விளையாடல் ஒரு - அச்சச்சோ!
  * தன்னைக் கொல்லப் பாய்ந்துவரும் தன் மகனிடம் "மகனே... நான்தான் உன் டாடி" என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் டெக்ஸின் பரிதாப நிலை ஒரு - உச் உச் உச்!
  * கனமான க்ளைமாக்ஸ் ஒரு - ப்பூஊவ் மூச் மூச்!


  இத்தனை அதிர்ச்சிகளை இந்தப் பிஞ்சு நெஞ்சு ( என்ட்ர நெஞ்சுதானுங்க) எப்படித் தாங்கும்றேன்?

  ReplyDelete
 71. #####மாடஸ்டி படத்துடன் ஆரமித்த ஆரவாரம் ###

  ################ சுபம் ########################

  ReplyDelete
 72. This comment has been removed by the author.

  ReplyDelete