Powered By Blogger

Sunday, January 31, 2016

ஒரு ஜாலியான அவஸ்தை !

நண்பர்களே,

வணக்கம். பொன் கிடைத்தாலும் கிடைக்கா புதனில் பிப்ரவரி மாதத்து இதழ்கள் இங்கிருந்து கூரியரில் புறப்படவிருக்கின்றன! இம்முறை டெக்ஸின் உட்பக்கங்களது தயாரிப்பினில் கொஞ்சம் தாமதமாகிப் போய் விட்டது; இத்தாலிய மொழிபெயர்ப்பினில் எனக்கெழுந்த சில சந்தேகங்களின் பொருட்டு! என்னதான் கூகுள் translator-ல் மொழிமாற்றங்கள் சாத்தியமாகினும் – சில உள்ளூர் சொற்றொடர்களை கணினிகள் உருமாற்றித் தரும் போது தூர்தர்ஷனில் சீரியல்களைப் பார்த்தது போலவே தோன்றுகிறது! So எடிட்டிங்கின் போது எனக்குக் கூடுதல் தெளிவு அவசியமான பக்கங்களை கடைசி நிமிடத்தில் இத்தாலிக்கு அனுப்பி, அவர்களிடமிருந்து நான் எதிர்பார்த்த விதத்தில் வரிகள் கிட்டிடுவதில் கிட்டத்தட்ட ஒரு வாரம் விரயமாகிப் போய் விட்டது! அதனால் இம்முறை கொஞ்சம் தாமதம் guys! ஆனால் ஒருமொத்தமாய் ‘தி..டெக்ஸ்‘ படிக்கும் போது இந்தத் தாமதம் ஒரு விஷயமேயல்ல என்று தோன்றப் போவது நிச்சயம்!

And – இதோ பிப்ரவரி இதழ்களுள் நீங்கள் இது வரைப் பார்த்திரா “மஞ்சள் பூ மர்மம்” மறுபதிப்பின் அட்டைப்பட முதல் பார்வை! இம்முறை முன்னட்டை நமது ஓவியரின் கைவண்ணமே – 100%! லாரன்ஸும், டேவிட்டும், கோட்-சூட்-தொப்பியென கலக்கலாகப் புன்னகைப்பது போல எனக்குப்பட்டது; So- கதையின் உட்பக்கங்களிலிருந்து சேகரித்த சித்திரங்களை நம்மவர் அட்டைப்பட டிசைனாகத் தயாரித்துத் தந்த போது சந்தோஷமாகயிருந்தது! இந்த இதழின் (தமிழ்) முதல் பதிப்பு வெளியான சமயம் கூட – உட்பக்க சித்திரங்களின் collage தான் ஒரு மஞ்சளான பின்னணியில் அட்டைப்படமாக்கப்பட்டிருந்தது எனக்கு நினைவில் உள்ளது! அதனை இன்னமும் பத்திரமாய் வைத்திருப்போர் உங்களுள் இருக்கும்பட்சத்தில் அந்த ராப்பரை ஸ்கேன் செய்து அனுப்பிடுங்களேன் – நமது FB பக்கத்தில் போட்டு விடலாம்!

Moving on – மார்ச் மாதத்திற்கென காத்திருக்கும் 4 இதழ்களிலுமே பணிகள் ஜரூராய் நடந்து வருகின்றன! And மீண்டுமொரு முறை அதகள அதிரடியை தனதாக்கப் போவது நமது இரவுக்கழுகாரே! “விதி போட்ட விடுகதை“ நிச்சயமாய் இன்னுமொரு blockbuster என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை! ஒரு விபத்தில் ஜுனியர் டெக்ஸ் நினைவை இழந்திட, சந்தர்ப்ப சூழல்கள் அவரது தந்தையையே எதிரியாக்கி அவர் முன்னே நிறுத்திட – பக்கத்துக்குப் பக்கம் பட்டாசு வெடிக்காத குறை தான்! திகில் நகரில் டெக்ஸ்” நம்மவரை ஒரு டிடெக்டிவ்வாக சித்தரிக்கிறதெனில் – “வி.போ.வி.” வினில் ஒரு பாசமான தந்தையாய் கதை நெடுகிலும் அவர் வலம் வரவிருப்பதை ரசித்திடலாம்! And இந்த இதழுக்கென நமது டிசைனர் தயாரித்துள்ள அட்டைப்படம் உங்களை நிச்சயம் ‘மெர்சலாக்கும்‘!! ஒரிஜினல் போனெல்லி சித்திரம் – ஆனால் பின்னணியில் ஒரு மெகா மாற்றம் என்ற இந்த டிசைன் மார்ச்சின் showstpper ஆக  இருந்திடப் போகிறது – without a doubt! இதோ மார்ச் அட்டைப்படத்திற்கென நாம் முயற்சித்த டிசைன் ஒன்றின் preview !! ஆனால் தேர்வாகியுள்ளது இதுவல்ல !! வரக் காத்திருக்கும் டிசைனை இன்னொரு நாளையப் பதிவில் கண்ணில் காட்டுகின்றேனே !! இது ஒரு சாம்பிளுக்கு மட்டுமே என்று வைத்துக் கொள்ளுங்களேன்.. !
This is NOT the cover we will be using though...!
மாதந்தோறும் டெக்ஸ்‘ என்ற விதமாய் அட்டவணையை அமைத்த போது – ‘சாமி... அணுகுண்டென நினைத்துப் பற்ற வைக்கிறோம்; ஆனால் ‘பிம்பிலிக்கா பிலாக்கி‘யென புஸ்வாணமாகிடக் கூடாதே!‘ என்ற சிறு பயம் எனக்குள் ஒரு ஓரமாய் குடியிருந்தது நிஜமே! என்ன தான் டெக்ஸின் மாஸ் அப்பீல், வாசக ஆதரவு என்ற சங்கதிகள் துணைநிற்கும் உறுதியிருந்த போதிலும் – ஓவர்டோஸாகிடக் கூடாதேயென்ற சிந்தனையும் அவ்வப்போது டாலடித்துச் சென்று கொண்டுதானிருந்தது என்  மனதில்  ! கதைகளின் தேர்வில் இயன்ற வேறுபாடுகளைக் கொணர நிறையப் பிரயத்தனம் மேற்கொண்ட போதிலும் – ஒரு கதைக்குள் முழுமையாய் இறங்கிப் பணியாற்றும் சமயம் கிட்டிடும் firsthand knowledge – இன்டர்நெட் ஆராய்ச்சிகளிலும், அபிப்பிராயக் கோரல்களிலும்; மேலோட்டமான கதைச் சுருக்க வாசிப்பினிலும் கிடைப்பதில்லை தானே? So- தைரியமாய் நிறைய பில்டப்களை முன்வைத்த போதிலும் – கதைகள் ஹிட்டடித்தால் தவிர எனது உதார்கள் எல்லாமே வெற்று வரிகளாகிப் போய்விடுமென்றுப் புரிந்தேயிருந்தேன்! ஒரு வழியாய் 2016-ம் புலர்ந்தது! மாதம்தோறும் ஒரு கதைக்குள் குதிக்கும் வாய்ப்புக் கிட்டிய போது – ‘டெக்ஸின் மேஜிக்‘ துளிப் பிசிறின்றி நம்மைக் கரைசேர்க்குமென்பது புரியத் தொடங்கியது! ஏப்ரலில் காத்திருக்கும் பெரிய சைஸிலான ”தலையில்லா போராளி”யினை முழுமையாய் நான் படிக்க நேரம் கிட்டவில்லை; ஆனால் அதன் சித்திரங்களைப் பற்றிக் காலத்துக்கும் நாம் சிலாகிக்கப் போகிறோமென்பது பக்கப் புரட்டல்களின் போது அப்பட்டமாய்த் தெரிகிறது! ஓவியர் சிவிடெல்லி படைத்துள்ள இந்தச் சித்திர விருந்தை தினமும் சில நிமிடங்களாவது புரட்டி கொண்டேயிருக்கிறேன்! So- டெக்ஸின் முதல் 4 மாதங்களது செயல்பாட்டை தொடரும் காலங்களுக்கானதொரு குறியீடாய் நாம் பார்ப்பதெனி்ல் we are on a winning track for sure!

இதழோரத்து ‘டெக்ஸ் ஜலப்பிரவாகம்‘ இதற்கு மேல் வேண்டாமென்பதால்  – இன்னொரு பக்கம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நமது உடைந்த மூக்காரின் ஸ்பெஷலின் பணிகள் பற்றிக் கொஞ்சம் எழுதுகிறேனே...? சமீப வாரங்களி்ல் – நமது ஆன்லைன் ஆர்டர்களுள் ஒரு பெரும் பகுதி “என் பெயர் டைகர் (வண்ண) இதழின் முன்பதிவுகளாகவே இருந்து வருகின்றன! இடையிடையே b&w பதிப்பிற்கும் ஆர்டர்கள் வராதில்லை தான்! நாம் நிர்ணயித்திருந்த முன்பதிவு இலக்கினைத் தொட்டு விட அதிக தூரமில்லை என்பதால் இதழின் வேலைகளைச் சுறுசுறுப்பாய்த் தொடங்கி விட்டோம்! இதுவரையில் நீங்கள் பார்த்திராத புதுவித (டைகர்) சித்திர பாணியோடு நகர்ந்து செல்லும் ”என் பெயர் டைகர்” வசன மழைக்கு மத்தியில் மிதந்திடும் ஒரு சாகஸம்! ஏராளமான வரிகள்; பக்கத்திற்கு – சுமார் 40 பலூன்கள் என்றெல்லாம் ஆங்காங்கே சரளமாய்ப் பார்த்திட முடிகின்றது! சென்றாண்டு இதே வேளையில் “மின்னும் மரணம்” இதழின் பொருட்டு நமது ஒட்டுமொத்த DTP பணியாளர்களையும் பிசியாக்கியதைப் போலவே இம்முறையும் பணிகளைப் பகிர்ந்து தந்து  அனைவரையும் பெண்டு நிமிர்த்தத் தொடங்கி விட்டேன்! ஓரிரு வாரங்களுள் ஒட்டுமொத்தமாய் 5 பாகங்களையும் அவர்கள் என் மேஜையினில் அடுக்கி விட்டுச் சென்றான பின்பு – இன்று நான் செய்திடும் நிமிர்த்தல்; கழற்றல் பணிகள் என் பின்பக்கத்தைத் தேடிடத் தொடங்குவது நிச்சயம்! And அட்டைப்பட டிசைனுக்கென நமது தேடல்களையும் தொடங்கி விட்டோம்! இந்த தொடரின் ஆல்பம் # 1 அட்டகாசமான ஒரிஜினல் டிசைன் கொண்டதே என்பதால் அதனையே கொஞ்சம் வித்தியாசமான பாணியில் பயன்படுத்திடவும் முயற்சிக்கப் போகிறோம்! எது எப்படியோ – சித்திரையில் முத்திரை பதிக்க நமது சிகுவாகுவா சில்க்கின் காதலர் தயாராகிடுவார்!

ஏப்ரலில் ‘தல & தளபதி‘ மட்டும் தானென்றில்லாமல் இன்னும் சில heavy weight நாயகர்களைக் களமிறக்குவதாக உள்ளேன்! BAPASI நடத்திட எண்ணியிருக்கும் (ஏப்ரல்) சென்னைப் புத்தக விழா வழக்கமான பிரம்மாண்டத்துடன் அரங்கேறிடும் பட்சத்தில்; நமக்கங்கு ஸ்டாலும் கிடைத்திடும் பட்சத்தில் நிச்சயமாய் வாணவேடிக்கைகளுக்குப் பஞ்சமிராதென்று பட்சி சொல்கிறது! நம்பிக்கையோடு காத்திருப்போம்!

And தற்போது திருப்பூரில் நடந்து வரும் புத்தக விழாவில் மிதமான வரவேற்போடு வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது! 100+ ஸ்டால்கள் மாத்திரமே என்பது மட்டுமன்றி, விடுமுறைகள் சகலமும் முடிந்து விட்ட தருணமிது என்பதால் ‘ஆஹா... ஓஹோ...‘ விற்பனைகளை எதிர்பார்த்திடுவது நடைமுறை சாத்தியமாகாது என்பது புரிகிறது! வரும் கூட்டத்தில் ஒரு கணிசமான பங்கு நம் ஸ்டாலை ஆர்வத்தோடு பார்வையிடுவதும், ‘அட... இன்னுமா இதெல்லாம் வருகிறது?என்ற கேள்விகளையும் முன்வைக்கும் போது – இது நிச்சயமாய் ‘விளம்பரம்‘ என்ற ரீதியிலும் நமக்கொரு முதலீடாகவே பார்த்திடத் தோன்றுகிறது! கடைசி நிமிட ஸ்டால் ஒதுக்கீடு; திடீர் திட்டமிடல்கள் என்பது ஒரு பக்கமிருக்க – பிப்ரவரி மாதத்து இதழ்களின் தாமதங்களை ஈடு செய்திடும் பொருட்டு நாங்கள் ஞாயிறன்றும் (இன்று) வேலை செய்திடவுள்ளதால் என்னால் திருப்பூர் டிரிப் அடித்திட இயலவில்லை! நமது நண்பர் பட்டாளம் திருப்பூரைத் தாக்கவிருப்பதாய் சேதிகள் கிட்டிய போதிலும், அவர்களைச் சந்திக்க இயலாது போவதில் எனக்கு நிஜமான வருத்தம்! ஏப்ரலில் சென்னையில் இதனை ஈடு செய்திடலாமென்ற எண்ணம் தான் ஆறுதல் தருகிறது!

தவிர, இங்கே மேஜையில் குவியத் தொடங்கியிருக்கும் கதைகளின் எண்ணிக்கைகளைப் பைசல் பண்ணுவதற்கும் ஞாயிறுகள் எனக்கொரு முக்கிய நாளாகிப் போய் வருவதால் – அன்றைய நாளின் பணிகள் தட்டிப் போய் விட்டால் ரொம்பவே அல்லாட வேண்டியுள்ளது! கர்னல் க்ளிப்டனின் கூத்துக்கள் பிரதானமாய் என் கவனங்களைக் கோரி வருகின்றன தற்சமயமாய்! 'அட... கார்ட்டூன் கதைகள் தானே...? ஊதித் தள்ளி விடலாமென்ற' அசட்டு நம்பிக்கைகளை குள்ளவாத்து மீசைக்காரர் போன மாதம் சேதப்படுத்தியிருந்தாரெனில்; கேரட் மீசைக்காரர் இப்போது ஆசை தீர மூக்கில் குத்து மழையைப் பொழிந்து வருகிறார்! பிரிட்டிஷ்காரா்களின் dry humour இழையோடும் வசன நடையினைக் கையாள்வதும் சரி; காமெடிக்குத் தந்திட வேண்டிய முக்கியத்துவத்தைச் சமாளிப்பதும் சரி- துவைத்துத் தொங்கப் போட்டு வருகிறது என்னை! இன்னொரு பக்கமோ நமது ஊதாக் குட்டி மனுஷர்களின் அடுத்த கதையின் வேலைகளும் நடந்து வருகின்றன! பக்கத்திற்கு சுமார் 15 கட்டங்களெனும் போது அங்கேயும் no cakewalk! சந்தா C-ன் கார்ட்டூன் மேளாவின் பெரும்பகுதிக் கதைகளை ‘எனக்கே எனக்காய்‘ நான் கவ்விக் கொண்டிருப்பதால் – ரின் டின் கேன்; சுட்டி பயில்வான் பென்னி; டாக்புல் & கோ – என வரிசையாக சிரிப்புப் பார்ட்டிகள் லைன் கட்டி நிற்கிறார்கள்! ‘ஜாலியான அவஸ்தை‘ என்ற சொல்லுக்கு யாரேனும், என்றைக்காவது அகராதியினில் அர்த்தம் பதிக்க விரும்பிடும் பட்சத்தில் அவர்கள் என்னிடம் பேசினால் சரிவருமென்று தோன்றுகிறது! கலப்படமிலா சந்தோஷம் தரும் அனுபவம்; அதே சமயம் கத்தி மேல் நடப்பதற்கு ஈடான ரிஸ்க் கொண்டது; எழுத எழுதக் குறையவே குறையாது நீண்டு கொண்டே செல்லும் பட்டியல் என்ற combo-வை வர்ணிக்க ‘அழகிய அவஸ்தை‘ என்ற சொற்கள் பொருத்தமானவை தானே? டெக்ஸின் கதைகளையோ; ஷெல்டன்; கமான்சேக்களையோ அடித்தம் திருத்தமின்றி கடகடவென்று எழுதிப் போவது எனக்கும் சரி, நமது கருணையானந்தம் அவர்களுக்கும் சரி- பழகிய பணியாகி விட்டது! ஆனால் ‘பெளன்சர்‘ போன்ற வில்லங்கப் பார்ட்டிகளையோ; கார்ட்டூன் உலகின் கிச்சுக் கிச்சு மாந்தர்களையோ கையாளும் போது – இரவின் எழுத்துக்கள் பகலில் பல்லைக் காட்டுவது போலப் படுவதும், பகலில் எழுதுவது இரவில் பேத்தலாகத் தெரிவதும் சகஜமாகவே இருந்து வருகின்றன ! ஏராளமான அடித்தங்கள் – திருத்தங்கள் என ரணகளமாய் பக்கங்கள் காட்சி தருவதை நமது DTP பெண்கள் எப்படியோ சமாளித்து வருகின்றனர்! அவர்களுக்கு இங்கொரு நன்றி சொல்லியாக வேண்டும்!

ஒரு சில updates :

1.CINEBOOK ஆங்கில இதழ்களுள் BLAKE & MORTIMER கதைகளின்  விற்பனை திடீர் சூடு பிடித்துள்ளது !(http://comics4all.in/2853-blake-mortimerAnd சென்னையில் THREE ELEPHANTS புத்தகக் கடையினிலும் இனி நமது CINEBOOK ஸ்டாக் கிடைத்திடும் !
2.நாம் மாதமொரு டெக்ஸ் வெளியிடுவது இத்தாலியில் உள்ள காமிக்ஸ் சேகரிப்பாளர்களுக்கு தெரிந்துள்ளது !! இப்போதெல்லாம் ரெகுலராய் பீட்சா தேசத்துக்குப் பார்சல்கள் பறந்து வருகின்றன !! அவர்கள் மறக்காது கேட்கும் கேள்வி - "NO DD s  ?" என்பதே !! முதலாவது DD - DYLAN DOG & இரண்டாம் DD - DANGER DIABOLIK !! 

3.அட்டைப்பட டிசைனிங்கில் முன்பு போல் வாசகர்கள் தங்கள் திறமைகளைக் காட்டிட விரும்பிடும் பட்சத்தில்  - we are game for it! ஆர்வமுள்ள நண்பர்கள் கை தூக்குங்களேன் - ப்ளீஸ் ? 


4.KING SPECIAL கிட்டத்தட்ட ஸ்டாக் காலி !! And surprise...surprise....! சமீப நாட்களின் கணிசமான ஆன்லைன் ஆர்டர்கள் "தேவ இரகசியம் தேடலுக்கல்ல" & "இரவே..இருளே..கொல்லாதே.." இதழ்களுக்கும் இருந்து வருகிறது !! 


5.சிங்காரச் சென்னையை உருப்படிக் கணக்கில் கூட COMIC CON INDIA ஏற்றுக் கொள்வதாகத் தெரியக் காணோம் ! பிபரவரியில் புனே நகரில் புதிதாகக் கால் பதிக்கத் திட்டமிட்டுள்ளனர் - ஆனால் "நீ அதுக்கு சரிப்பட மாட்டே...!!" என்றே சென்னைக்கு இன்னமும் முத்திரை தொடர்கிறது !! 


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம் guys! அது வரை – have fun! Bye for now!

230 comments:

  1. Replies
    1. படித்து விட்டு 1000 இதழ்களுடன் (பக்கங்கள்) மலரவேண்டிய 2M hits பற்றி பகிர்கிறேன்.

      Delete
  2. வணக்கம் காமிக்ஸ் நண்பர்களே...

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் சார்.. தயவு செய்து டெக்ஸ் கதைகளின் முன்னோட்டங்களைப் போட வேண்டாம்... அதை படித்து விட்டு அது வெளிவரும் நாளுக்காக ஏங்க வைக்கிறது...

      Delete
  3. இல்லை இரண்டாவது

    ReplyDelete
  4. காலை வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. இன்று பிறந்த நாள் கொண்டாடும்
      நண்பர் ரவி க்கு காமிக்ஸ் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
      இன்று போல் என்றும் வாழ்க

      Delete
    2. அடடே..!பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே!

      Delete
    3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழரே

      வாழ்க
      வளமுடன்
      நலமுடன்
      புகழுடன்

      Delete
    4. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

      Delete
    5. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.!

      Delete
    6. இனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள் நண்பரே!

      Delete
    7. நமது வாழ்த்துக்களும் ரவி சார் !

      Delete
    8. வாழ்த்துக்களுக்கு வணக்கங்கள் ஆசிரியர் & நண்பர்களே.நான்
      எட்ட நின்று இரசித்த வியந்த ஆசிரியரிடம் இன்று வாழ்த்து பெறுவது மிக மகிழ்ச்சியான விஷயம்.

      Delete
  5. அதிகாலை வணக்கம் சார்....
    வணக்கம் நட்பூஸ்....
    திருப்பூர் புத்தக விழாவுக்கு கிளம்பியாச்சு.. பாண்டவர்களாக...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார் போன பதிவுல நீங்க கேட்ட கேள்விக்கு பதில் 'நான் அவர் இல்லீங்க'.புதுவாசகன் சார் :-)

      Delete
    2. எதிா்பாா்த்து காத்துக் கொண்டிருப்பேன்..!இரும்பு நகரத்தாரே..உங்களுக்காகவும்..உற்ற நண்பர்களுக்காகவும்..!

      Delete
    3. டெக்ஸ் ஜாலியான பயணத்திற்கு வாழ்த்துக்கள்

      Delete
    4. உங்கள்
      அனைவரையும்
      எதிர்பார்த்து

      Delete
  6. ஹை முதல் பத்துக்குள்ள

    ReplyDelete
  7. நண்பா்களுக்கும்,எடிட்டா் அவா்களுக்கும் காலை வணக்கங்கள்!

    ReplyDelete
  8. நன்பர்களுக்கு வணக்கம் பிறகு வருகிறேன்.

    ReplyDelete
  9. "டெக்ஸின் இமேஜ் துளிப் பிசிறின்றி நம்மை கரை சோ்க்குமென்று புரியத் தொடங்கி விட்டது" சந்தேகத்தோடு பயணித்த பயணம் முதல் முப்பது நாட்களிளேயே சந்தோசப் புள்ளியாய் மாறியிருப்பதில் சந்தோசமே..!

    ReplyDelete
  10. மஞ்சள் பூ மர்மம் அட்டைபடம் அருமை!

    என் பெயர் டைகர் முன்பதிவும் வேகமெடுத்து உள்ளது சந்தோசம். ஏப்ரலில் இரு வேறு "துருவ" கௌபாய்களை சந்திக்க ஆர்வமாக உள்ளேன்.

    ஏப்ரல் மாதம் இவர்களுடன் வர உள்ள மற்ற "heavy weight" நாயகர்களை பற்றி சில வரிகள் சொல்லலாமே?

    அடுத்த மாதம் வரவுள்ள நான்கு இதழ்கள் எவை என சொல்ல முடியுமா?

    அப்பறம் விதி போட்ட விடுகதையின் அட்டைபடம் அருமையாக உள்ளது.

    ReplyDelete
  11. குண்டு புத்தகம் பற்றி நாம் விவாதிக்கும் போது, அதன் பக்கம்கள் பற்றி விவாதிக்கும் நாம் அதன் விலையை பற்றி கொஞ்சம் சிந்தனையை செலுத்தினால் நன்றாக இருக்கும். குண்டு புத்தகம் அனைவரும் வாங்கும் விலையில் இருக்க வேண்டும் என்பது எனது முதல் ஆவா. அதே போல் போதுமான கால அவகாசம் இருந்தால் பணம் ரெடி பண்ண வசதியாக இருக்கும் என்பது இரண்டாவது ஆவா. ஏன் என்றால் இந்த வருடம் z (zig zag) சந்தா பற்றிய அறிவிப்பு இன்னும் வரவில்லை, எனவே இதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Rs.1000 ஓரு பக்கத்துக்கு ஓரு ரூபாய்.

      Delete
    2. குண்டு புத்தகம் ஐ நூறு ருப்யா விலை போதும்தானே ...

      Delete
    3. இந்தக் கருத்தை முழுமனதாய் வரவேற்கிறேன்.விலையும் குண்டாகும் போது எத்தனை போ் வாங்க முடியாமல் ஏங்கிப் போவாா்கள் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.நன்றி,பெங்களூா் பரணி அவா்களே..!

      Delete
    4. \\அனைவரும் வாங்கும் விலையில்..//

      நண்பர்கள் வேணடுவது கருப்பு வெள்ளை தொகுப்பு என்பதால் விலை கையை கடிக்கா வண்ணம் இருக்கும் என்றே நம்புகிறேன்...!

      Delete
    5. வெட்டுக்கிளி வீரையன்...!

      ஐநூறு என்பது சரியான விலைதான்...!



      Delete
    6. 1000 பக்கத்த Xerox ஓரு பக்கத்துக்கு 50 பைச 1000க்கு 500 ரூபாய் சரியான
      விலையக தெரியும் ஆன பின்வரும் points கடந்து தான் குண்டு காமிக்ஸ் வர போகுது
      1.வெளி நாட்டு பதிபகத்திற்கு ஓரு கனிசமான தொகை.
      2.அதை தமிழில் மொழி பெயர்க்க ஓரு தொகை.
      3.DTP வேலை செய்பவர்களுக்கு சம்பளம்.
      4.மை மற்றும் பேப்பர் செலவு.

      5.printing machine ஓட்டுபவர்க்கு மாத சம்பளம்.
      6.கூரியர் பேக்கிங் மற்றும் அனுப்பும் செலவு.
      இவ்வளவு செலவு செய்ய வேண்டும். (Xerox கடையில் கரண்ட் ,கடை வாடகை , DTP வேலை சம்பளம் மூன்று மட்டும் போதும். அதுவும் குறைந்த பட்ச வாடகை ,சம்பளம்)

      7.கரண்ட் பில்(குண்டு புக்கிற்கு)

      இவ்வளவு மிறியும் ஆசிரியர் 500 கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஓரு புத்தக துக்கு Rs.25 லாபம் கிடைக்கலாம்.

      Delete
    7. நண்பர்களே.!

      ஹாஹாஹா.......இன்னும் ஆடை ஓனர் வாங்கல.! அதுக்குள்ள நாம் போட்டி எனக்கு லிவர் உனக்கு கிட்னி அவனுக்கு என்று பேச ஆரமித்துவிட்டோம்.உங்க விவாதத்தில லெக் பீஸ எனக்கு கொடுக்க மறந்துடாதீங்க சார்.!

      Delete
    8. ஆடு வாங்ககுறதுக்கு முன்பு தானே விலை பேச முடியும்???.ஆடு வாங்கறதா இருந்த எவ்வளவுக்கு வாங்கலம் அல்லது வாங்க நம்ளாள முடியுமா??? இல்லைன்னா இருக்கிற சிக்கனே போதும் விட்டு விடலாமா???. என்று தான பரணி பதிவு செய்து கேட்டு இருந்தார்

      Delete
    9. மாடஸ்டி ரசிக்கர் மன்ற தலைவருக்கு லெக் பிஸ் கிடைக்க என் உயிர் உள்ள வரை பேராடுவேன்

      Delete
    10. 1000 பக்கதுல 500வது மாடஸ்டி கதை வேணும். அதுதான நீங்க கேட்கும் லெக் பிஸ் M.V சார்??.

      Delete
    11. குமார் சார்.!ஹாஹாஹாஹா..................குமார் சார்.! லெக் பீஸ் கேட்டால்தான் எடிட்டர் போட்டியாவது(குடல் கறி) தருவார்.!

      Delete
    12. @ FRIENDS : காதும் குத்தியாச்சு...யானையும் ஆசீர்வாதம் பண்ணிடிச்சு...இன்னும் கிடா வெட்டலியாப்பா ? "என்று கவுண்டர் அல்லாடுவது தான் ஞாபகத்துக்கு வருகிறது !!

      2 மில்லியனைத் தொட இன்னமும் நிறைய தூரம் உள்ளதல்லவா நண்பர்களே..? நெருங்கிடும் போது யோசிப்போமே..?!

      Delete
  12. 'எ.பெ.டை' நிரய வசனங்கள் அப்ப வரலாற்று பின்னியேடு கலக்கும்னு நினைக்கிறேன். ஏப்ரல்லுக்கு இரண்டு மாசம் இருக்கே(லியானேர்டகிட்ட சொல்லி டைம் மிஷன் கண்டுபிடிங்கப்பா.)

    ReplyDelete

  13. 'மஞ்சள் பூ மர்மம்' அட்டைப்பட விமர்சனம் (!!)

    * அருமையாக வந்திருக்கிறது!
    * லாரன்ஸ் & டேவிட் அந்தப் பெண்ணைப் பார்த்து வழிவது இயல்பாய், அழகாய் வந்திருக்கிறது ( லா & டே ரோஸ்கலர் லிப்ஸ்டிக்கை தவிர்த்திருக்கலாம்)
    * கீழே டேவிட்டின் மாறுவேட போஸ் அருமை! ஆனால் காமிராவைப் பார்த்துக்கொண்டே இலக்கின்றி சுடும் பழக்கத்தை வருங்காலங்களில் அவர் மாற்றிக்கொள்ளலாம் ( பின்னே, ஒரு புல்லட் 50 ரூபாய் இல்ல?). தவிர, அவர் சுட்ட புல்லட் - முத்து காமிக்ஸ் லோகோவை உரசிட்டுப் போய்டுச்சு பாருங்க!

    ReplyDelete
    Replies
    1. விஜய் சேகா் அவா்களின் விஜயம் திருப்பூருக்கு உண்டா..?!

      Delete
    2. இதோ கிளம்பிக்கிட்டிருக்கேன் குணா அவர்களே!
      வாங்க கலக்கிப்புடுவோம்! :)

      Delete
    3. ஹய்யா..ஜாலி!ஜாலி!!

      Delete
  14. என் பெயா் டைகரில் பக்கங்களுக்கு அதிக பலூன்கள் என்கிற விஷயம்..கொஞ்சம் கலக்கத்தைத் தருகிறது..!ஏற்கனவே சுமாரான கதை என்கிற நிலையில்,அதிக வசனங்கள் எனும் சங்கதி கதையின் மித வேகத்துக்கு மேலும் வலு சோ்க்குமோ என்ற அச்சமும் எழாமலில்லை..!

    ReplyDelete
    Replies
    1. கதை வலுவாகா இருந்தால் அதிக பலுன் என்பது தவிர்க்க முடியாது.(உதாரணமாக மி.மரணம் , துரத்தும் தலைவிதி(லார்கோ))

      Delete
  15. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  16. விதி போட்ட விடுகதை இந்த அட்டைபடமே கலக்கலாக உள்ளது சார் ..ஏப்ரலில் தல தளபதி யோடு லார்கோ வந்தால் இன்னும் தூள் பறக்குமே சார்..

    ReplyDelete

  17. 'விதிபோட்ட விடுகதை' அட்டைப்பட விமர்சனம்(!)

    * அருமை! அருமை! அருமை! அள்ளுகிறது!!
    * துளிகூட முகத்தையே காட்டாமல் 'தல' அட்டைப் படத்தில் வருவது நமக்கு இதுவே முதல்முறையென்று நினைக்கிறேன்.
    * தன் மகன் தனக்கு எதிராய் துப்பாக்கியை நீட்டியிருக்க, தடுமாறி நிற்கும் டெக்ஸின் நிலையே ஒராயிரம் கதை சொல்கிறதே! ஓவியரின் திறமை அபாரம்!
    * பின்னணி மாற்றம் (நிழலுருவ மரங்கள்) அபாரம்! ஆனால் அந்த செவ்விந்தியக் குடிசைகள் பின்னணியை சற்றே செயற்கைப் படுத்துகின்றன. அந்தக் குடிசைகள் இல்லாதிருந்தால் இன்னும் கச்சிதமாகப் பொருந்திவரும் எ.எ.தாழ்மையான க!

    ReplyDelete
    Replies
    1. செயலாளர் அவர்களே ..

      நில் கவனி சுடு கதை அட்டைபடத்தில் கூட தல தலையை காட்டமாட்டார் ..;-)

      Delete
    2. எனக்கும் அது ஞாபகத்துக்கு வந்தது தலீவரே! ஆனால் சைடுல கொஞ்சம் முகம் தெரிகிற மாதிரி அவர் நின்னுக்கிட்டிருந்ததாக ஒரு ஞாபகம்! ஆனா நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் தலீவரே!

      Delete
  18. BLAKE & MORTIMER, Lady S போன்றோரை தமிழில் தரிசிப்பது எப்போது?

    ReplyDelete
    Replies
    1. காத்துக்கொண்டிருக்கிறோம் சார்...!

      Delete
  19. இன்று திருப்பூர் பயணமாகும் சேந்தம்பட்டி போராட்ட குழுவினருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ...

    (ஆனாலும் ஒரு கிர்ர்ர் ...)

    ReplyDelete
    Replies
    1. ஆனால்......
      தலைவர் வராதது
      வர நினைக்காதது
      கண்டணத்துக்குரியதே

      Delete
    2. சம்பத் சார் ..நானும் வர நினைத்தேன் ...எனக்காகவும் நண்பர்கள் காத்திருந்தனர் ..ஆனால் இந்த மாதம் பொங்கல் விடுமுறைக்காக அதிக நாட்கள் வெளிநாட்டு பயணத்தில் (ஹீஹீ )இருந்த காரணத்தால் இன்றைய ஞாயிறு கண்டிப்பாக அலுவலகத்தில் இருக்க வேண்டிய நிலை ..மன்னிக்கவும் ..

      விரைவில் கண்டிப்பாக சந்திப்போம் ...;-)

      Delete
  20. \\1000 பக்க குண்டு ஸ்பெஷலை என்ன கதைகளை கொண்டு நிரப்புவது //

    அப்டீன்னு எடி ரொம்பத்தீவிரமான யோசனைல இருக்கறதா பட்சி சொல்லுச்சு...
    சரி ...நாமளும். ஏதாவது ஐடியா குடுக்கலாமேன்னு நேத்து நைட்டு 12 மணி வரைக்கும் புரண்டு புரண்டு படுத்து யோசிச்சும்....
    ஒண்ணுமே தோணலை.....

    அப்டியே தூங்கிட்டேன்...
    விடியக்காலைல ஒரு கனவு வந்தது....

    கனவுல ஒரு கூரியர் வந்தது....

    கூரியர்ல ஒரு பார்சல்.....

    பார்சல பிரிச்சு பாத்தா......

    ப்பாபா......

    ஹார்ட் பவுண்ட் அட்டையோட குண்ண்ண்டா ஒரு புக்....

    அட்டைல 'ரீபரிண்ட் ஸ்பெஷல் 'ன்னு டைட்டில் தகதகன்னு ஜொலிக்குது...
    புரட்டிப்பாத்தா....

    வேதாளர் மாண்ட்ரேக் காரிகன் சார்லி சிஸ்கோ கிட் விங் கமாண்டர் ஜார்ஜ் இரும்புக்கை நார்மன் இரட்டை வேட்டையர் புயல் வேக இரட்டையர் ஜான் மாஸ்டர் மாடஸ்டி ஸ்பைடர் ஆர்ச்சி மினி லயனோட முதல் நாலு கதைகள் ....
    அப்டின்னு ஏகப்பட்ட நாயகர்களோட ஏகப்பட்ட கதைகள்.....
    ப்ரண்ட்ஸ்...!
    இப்படி ஒரு புக் வந்தா எவ்ளோ ஜோரா இருக்கும்....
    ஆமான்னு சொல்றவங்க எல்லாம் ஜோரா கை தட்டுங்க....!
    இது மட்டும் நடந்திருச்சின்னா......
    இந்தியாவுலயே...ஏன் வோர்டுலயே...கார் வச்சிருக்கற கரகாட்ட கோஷ்டின்னா...
    அடச்சே..
    கவுண்டர் வேற குறுக்கால வர்றார்....
    இதுமட்டும் நடந்திருச்சின்னா இந்தியாவுலயே...
    ஏன்...வோர்டுலயே ரீபிரிண்டுக்குன்னு குண்டு ஸ்பெஷல் போட்ட ஒரே கம்பெனி அது நம்ம கம்பெனியாதான் இருக்கும்....

    அப்புறம் ப்ரெண்ட்ஸ்...
    விடியக்காலைல கண்ட கனவு பலிக்கம் சொல்றாங்களே.....
    அது நெசமா.....?

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக பலிக்கும் என நம்புவோம் !

      Delete
    2. நல்ல யோசனை நண்பரே.

      Delete
    3. ஆஹா..ஆஹா..ஆஹாஹா..!!!!

      Delete
    4. தோழரே ரிப் கிர்பியை விட்டுவிட்டீரே

      Delete
    5. ஓகே ஓகே கனவு பலிக்க எனது வாழ்த்துக்ளும் தோழரே ...;-)

      Delete
    6. நண்பரே எனக்கும் இதே போல் கனவுகள் அடிக்கடி வருவதுண்டு கனவு பழிக்க ஆசிரியரை வேண்டுவோம்

      Delete
    7. Sentil Sathya@
      ///கனவு பழிக்க///வா சரியாதான் சொல்றிங்களா.

      Delete
    8. ராஜேந்திரன் சார்...!
      ரிப் கிர்பியும் லிஸ்டில் இருந்தார்.டைப் பண்ணும்போது விடுபட்டுப்போய்விட்டது.நல்லவேளை ஞாபகப்படுத்தனீர்கள்..!

      Delete
    9. @ ஈரோடு விஜய்..
      திருப்பூர் கிளம்புற குஷியில் இருந்த உங்களை கன்ஃப்யூஸ் பண்ணிட்டேன் போல....!

      Delete
    10. ஜேடர் பாளையத்தார்.!

      சூப்பர் கனவு.!சூப்பர் ஹிரோ ஸ்பெஷலில் எடிட்டர் விதைத்த விதை முளைக்காமல் போய்விட்டது.!ஹும் .......இந்த கனவு ம நிறைவேறுமா.......?

      நீங்கள் குறிப்பிட்ட பட்டியலில் அப்பாடக்கர் படைப்பாளிகள் இல்லையா?.அப்போ காக்டெயில் குண்டுக்கு தடையில்லை.....!

      Delete
    11. Clap..clap...clap...clap....

      யாருங்க அது...? மீட்டிங் முடிஞ்சு ஒரு மணி நேரமாகியும் இன்னும் கை தட்டிட்டு இருக்கறது...!
      அட்ரா சக்கை...அட்ரா சக்கை...
      நம்ம எடிட்டர்தாங்க இன்னும் கை தட்டிட்டிருக்கார்....!
      அப்போ என் கனவு பலிச்சுடும் போல தெரியுதே....???

      Delete
    12. கணேஷ் குமார் பலிக்க என்பது பழிக்க என்றாகிவிட்டது

      Delete
    13. சாரே.. அதுல என்னா விலைன்னு போட்டு இருந்துச்சா... இல்லைன்னா மறுபடியும் போத்தி படுத்து தூங்கிப் பாருங்க.. ஏன் கேக்கறேன்னா அட்வான்ஸ் செய்ய வசதியா இருக்கும்... அதுக்கு தான்....

      Delete
    14. கரூர் சரவணன் சார்....!
      விலையெல்லாம் எடிட்டர்தான் முடிவு பண்ணனும்...!
      மறுபடியும் போத்தி படுத்து தூங்கி பார்த்தேன்....!
      கனவு கன்டினியூ ஆகமாட்டேங்குது...!

      Delete
    15. @ கரூர் சரவணன், JSK

      :))))

      Delete
    16. கரூர் சரவணன் சார்....!
      விலையெல்லாம் எடிட்டர்தான் முடிவு பண்ணனும்...!
      மறுபடியும் போத்தி படுத்து தூங்கி பார்த்தேன்....!
      கனவு கன்டினியூ ஆகமாட்டேங்குது...!

      Delete
    17. அப்படியே திகில் கதையும் கனவு-ல வரலயா?

      Delete
  21. “மஞ்சள் பூ மர்மம்” அட்டைபடம் அருமை!குறிப்பாக ஒரிஜினல் artwork பயன்படுத்தியது பின் அட்டை படமாக்கியது!

    ReplyDelete
  22. TIGER arrival during April!!! Mouth watering update!!! 60+ days to go..!! Tx vijayan sir!!

    ReplyDelete
  23. காலை வணக்கம் நண்பர்களே :)

    ReplyDelete
  24. எடிட்டர் மற்றும் அனைத்து காமிக்ஸ் தோழர்களுக்கும் இனிய காலை வணக்கம்.

    ReplyDelete
  25. இன்று திருப்பூர் பயணமாகும் சேந்தம்பட்டி போராட்ட குழுவினருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ...

    (ஆனாலும் ஒரு கிர்ர்ர் ...)

    ReplyDelete
  26. இன்று திருப்பூர் பயணமாகும் சேந்தம்பட்டி போராட்ட குழுவினருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ...

    (ஆனாலும் ஒரு கிர்ர்ர் ...)

    ReplyDelete
  27. எடிட்டர் சார் எனக்கென்னவோ மும்மூர்த்திகளின் தற்போதைய அட்டை படங்களை விட முன்பு வந்த அட்டை படங்களே நன்றாக இருந்ததாக தோன்றுகிறது. எனக்கு மட்டும்தான் இப்படி தோன்றுகிறதா?

    ReplyDelete
    Replies
    1. உங்களின் எண்ணம்.. மிகச் சரியானதே!:)))

      Delete
    2. உங்களின் எண்ணம்.. மிகச் சரியானதே!:)))

      Delete
  28. எங்கள் காமிக்ஸ் உலக அண்ணா
    விஜயன் சாருக்கும் நண்பர்களுக்கும்
    ஞாயிறு வணக்கம்

    ReplyDelete
  29. மீள் வாசிப்பில் சமீபத்தில் நமது காமிக்ஸை வாசிக்க நேரம் கிட்டியது.அதில் தலயோட பூதவேட்டையும்,சிகப்பாய் ஒரு சொப்பனம் ஆகியனவும் உண்டு.
    பூதவேட்டையில் நம்ம தலகிட்ட கார்ஸன் பேசும்போது பச்சை வேதாளங்களை சமீபத்தில் தானே அழித்தோம் என்று ஒரு வசனம் வருவதாக ஞாபகம்.
    தலயோட அந்த சாகசம் பழைய இதழ்களில் ஏதேனும் வந்துள்ளதா? அப்படி வரவில்லை எனில் எப்போது வர வாய்ப்புண்டு?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே....!
      டெக்ஸின் முதல் வண்ண சாகஸமான 'நிலவொளியில் ஒரு நரபலி' தான் அது...!

      Delete
    2. ஹி ஹி ஓகே நண்பர்களே.

      Delete
    3. @ FRIENDS : நிஜத்தைச் சொல்வதானால் அந்த டயலாக் எனது இடைசெருகல் என்றே நினைக்கிறேன் - ஏனெனில் ஒரிஜினல் வரிசைப்படி "பூத வேட்டை" ரொம்பவே முன்னதாய் வெளிவந்த கதையாகும் !

      Delete
  30. சிகப்பாய் ஒரு சொப்பனம் மீண்டும் வாசிக்க சுவராஸ்யமாக இருந்தது.
    கார்ஸன் பேசும் வசனங்கள் ஆங்காங்கே புன்னகையையும்,சிரிப்பையும் வரவழைத்தது
    நல்ல மொழிபெயர்ப்பு ஆசிரியரே.

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : அவற்றை எழுதியது நேற்றைக்குப் போலுள்ளது....ஆண்டுகள் 3 ஓடிவிட்டன என்று நினைக்கிறேன் !

      Delete
    2. ரவி சார்.! ஓவியம்,கதை,விலை என்று சாமுத்ரிகா இலட்சணம் போல் அழகாக அமைந்த ஒரு சூப்பர் இதழ்.இந்த இதழ் ஐரோப்பாவில் ஒரு காமிக்ஸ் அருங்காட்சியகத்தில்,எடிட்டரிடம் கேட்டு வாங்கிய பெருமைக்குரிய இதழ் அது.!

      Delete
    3. நல்ல தகவல் நண்பரே.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  31. இன்று
    திருப்பூர்
    புத்தகத்திருவிழாவில்
    நமது
    ஸ்டாலுக்கு
    வருகைதரும்
    சேந்தம்பட்டி
    கரகாட்டக்கோஷ்டியையும்
    மற்றும்
    நமது காமிக்ஸ் நண்பர்கள்
    அனைவரையும்

    வருக
    வருக
    என
    வரவேற்க்கிறோம்

    ReplyDelete
  32. மனமகிழ்ச்சிக்காக பலர் எங்கெங்கொ செல்கின்றனர்,எவ்வளவோ செலவு செய்கின்றனர்.ஆனால் முழு மகிழ்ச்சி கிட்டுகிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி?
    அப்படி எல்லாம் இல்லாமல் நமக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி.
    ஆம்,அவ்வப்போது கிடைக்கும் நேரத்தில். பழைய இதழ்களை வாசிப்பது மிக மகிழ்ச்சியான விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை சார்.! எனக்கு மனச்சோர்வு வரும்போது என் காமிக்ஸ் கலெக்ஷனை எடுத்து ஆசை தீர பார்க்கும்போது பல மணி நேரமும் சில நிமிடங்கள் போல் தோன்றும்.!

      Delete
  33. விதி போட்ட விடுகதையின் அட்டைபடம் அருமையாக உள்ளது

    ReplyDelete
  34. தங்க தலைவனின் வரகைக்காக வெயிட்டிங்.... சித்திரையே சீக்கிரம் வாராதோ...

    ReplyDelete
    Replies
    1. ரம்மி எத்தனை மணிக்கு வர்றீங்க?

      Delete
  35. எடிட்டர் சார் எனக்கென்னவோ மும்மூர்த்திகளின் தற்போதைய அட்டை படங்களை விட முன்பு வந்த அட்டை படங்களே நன்றாக இருந்ததாக தோன்றுகிறது. எனக்கு மட்டும்தான் இப்படி தோன்றுகிறதா?

    ReplyDelete
  36. எடிட்டர் மற்றும் அனைத்து காமிக்ஸ் தோழர்களுக்கும் இனிய காலை வணக்கம்.

    ReplyDelete
  37. ஆசிரியரே டெக்ஸை நம்பினோர் கை விடப்படார்

    ReplyDelete
    Replies
    1. அப்படினா இந்த வருடம் சந்தா எண்ணிக்கை கூடி இருக்க வேண்டும். கூட வேண்டாம் குறையாமளவது இருந்து இருக்கலாம் இல்லை???

      Delete
    2. சென்னையில் நிறைய சந்தாக்கள் மழை பாதிப்பு கட்ட முடியாமல் போனது ஒரு காரணம் நண்பரே
      புத்தக திருவிழாவில் டெக்ஸ் புக் அனைத்துமே விற்பனையில் சக்கை போடு போட்டது தெரியும் தானே நண்பரே

      Delete
    3. @ Ganeshkumar Kumar : சென்றாண்டின் எண்ணிக்கையை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் தானிருக்கிறோம் இப்போது ! And டிசம்பரின் மழைகளும், சென்னைப் புத்தக விழாவின் (பபாசி) ரத்தும் சந்தாவின் சுணக்கத்துக்கு முக்கிய காரணங்கள் என்பதை மறுப்பதற்கில்லை !

      Delete
  38. யாரவது லார்கோ வின் 'கான்கிரிட் கானகம்' ஏந்த தொகுப்பில் உள்ளது என்று சொல்லுங்களேன்(நான் Bangalore பரனியிடம் வாங்கி படித்து கொள்வைன்)

    ReplyDelete
  39. ஆசிரியரே இரட்டை வேட்டையர்கள்
    ஜார்ஜ் ட்ரேக் கதைகள் அடுத்த வருடமாவது வருமா
    ஏக்கத்துடன் நான்

    ReplyDelete
    Replies
    1. Senthil Sathya & others : எட்டாக்கனிகள் நண்பரே !! இன்றைய டிஜிட்டல் உலகினில் படைப்பாளிகளால் பாதுக்காக்கப்படா ஒரிஜினல்கள் எல்லாமே காற்றோடு போனது போலத் தான் - மீட்க வழி கிடையாது ! 1990-களிலேயே அவர்களது லண்டன் ஆபீசில் ஒரு வாரயிறுதியின் போது தண்ணீர் பைப் வெடித்து வெள்ளக்காடாக்கியிருந்தது ! பேஸ்மெண்டில் இருந்த அவர்களது காமிக்ஸ் சேகரிப்பில் என்னவெல்லாம் அடித்துப் போயிருந்ததோ - ஆண்டவனுக்கே வெளிச்சம் ! அதன் பின்னே நிறுவனம் கைமாறி ; மீண்டும் கைமாறி என்னென்னவோ ஆகிப் போயுள்ளது !

      Delete
    2. //பைப் லைன் வெடித்து ஆபீஸை வெள்ளக்காடாக்கியது.!//

      எங்கேயோ எப்பவோ ஹாட்லைனில் படித்ததாக ஞாபகம்.!

      Delete
    3. @ எடிட்டர் சார்...!
      இரட்டைவேட்டையரை விடுங்கள். தாங்கள் முன்பு அறிவித்த மினி லயன் டைஜஸ்ட்., டிடெக்டிவ் ஸ்பெஷல் இவையாவது வெளிவர வாய்ப்பிருக்கிறதா..?
      மும்மூர்த்திகளின் படலம் பூர்த்தியான பிறகுதான்....!
      தயவுசெய்து
      சொல்லுங்கள் சார்...!
      இந்த கதைகள்தான் வரும்..இவை வர வாய்ப்பில்லை என குறிப்பிட்டு சொல்லிவிட்டால் நாங்கள் அமைதியாகி விடுவோம். வீணாக உங்களை தொந்தரவு செய்யமாட்டோமில்லையா.....?

      Delete
    4. @ எடிட்டர் சார்...!
      இரட்டைவேட்டையரை விடுங்கள். தாங்கள் முன்பு அறிவித்த மினி லயன் டைஜஸ்ட்., டிடெக்டிவ் ஸ்பெஷல் இவையாவது வெளிவர வாய்ப்பிருக்கிறதா..?
      மும்மூர்த்திகளின் படலம் பூர்த்தியான பிறகுதான்....!
      தயவுசெய்து
      சொல்லுங்கள் சார்...!
      இந்த கதைகள்தான் வரும்..இவை வர வாய்ப்பில்லை என குறிப்பிட்டு சொல்லிவிட்டால் நாங்கள் அமைதியாகி விடுவோம். வீணாக உங்களை தொந்தரவு செய்யமாட்டோமில்லையா.....?

      Delete
    5. @ எடிட்டர் சார்...!
      இரட்டைவேட்டையரை விடுங்கள். தாங்கள் முன்பு அறிவித்த மினி லயன் டைஜஸ்ட்., டிடெக்டிவ் ஸ்பெஷல் இவையாவது வெளிவர வாய்ப்பிருக்கிறதா..?
      மும்மூர்த்திகளின் படலம் பூர்த்தியான பிறகுதான்....!
      தயவுசெய்து
      சொல்லுங்கள் சார்...!
      இந்த கதைகள்தான் வரும்..இவை வர வாய்ப்பில்லை என குறிப்பிட்டு சொல்லிவிட்டால் நாங்கள் அமைதியாகி விடுவோம். வீணாக உங்களை தொந்தரவு செய்யமாட்டோமில்லையா.....?

      Delete
    6. @ எடிட்டர் சார்...!
      இரட்டைவேட்டையரை விடுங்கள். தாங்கள் முன்பு அறிவித்த மினி லயன் டைஜஸ்ட்., டிடெக்டிவ் ஸ்பெஷல் இவையாவது வெளிவர வாய்ப்பிருக்கிறதா..?
      மும்மூர்த்திகளின் படலம் பூர்த்தியான பிறகுதான்....!
      தயவுசெய்து
      சொல்லுங்கள் சார்...!
      இந்த கதைகள்தான் வரும்..இவை வர வாய்ப்பில்லை என குறிப்பிட்டு சொல்லிவிட்டால் நாங்கள் அமைதியாகி விடுவோம். வீணாக உங்களை தொந்தரவு செய்யமாட்டோமில்லையா.....?

      Delete
  40. ஆசிரியரே டெக்ஸ் அட்டை படம் மிக அருமை

    ReplyDelete
  41. ஆசிரியரே மார்ச் மாத இதழ்கள் எவை என தெரிவிக்க முடியுமா

    ReplyDelete
    Replies
    1. சத்யா அண்ணா ...பிப்ரவரி இதழ்கள் கைக்கு வரட்டும் ...அதுவரைக்கும் கொஞ்சம் சஸ்பென்ஸ் இருந்தால் தான் கொஞ்சம் கிக்கும் இருக்கும் ...;-)

      Delete
    2. தலீவர் தீர்ப்பே ஜூப்பர் !!

      Delete
  42. டியர் எடிட்டர்,

    நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று sunday ஒரு working day-வாய் அமைந்ததால் விரிவாய் கமெண்ட் இட டைம் கிடைத்துள்ளது :-) [குரு ஈரோடு விஜய் மன்னிச்சு !]

    1) சமீபத்தில் நான் ரசித்த இரு மிக நல்ல டெக்ஸ் கதைகள் - தீபாவளி ஸ்பெஷல் இரண்டாம் கதையாக வந்ததும், ஜனவரி மாதம் வந்த ஷெரீப் வில்லன் கதையும். இரண்டுமே detective feel கொடுக்கத் தவறவில்லை. அருமையாக இருந்தன. கண்டிப்பாக காமிக்ஸ் ரசிகர்கள் அனைவரும் படிக்க வேண்டியது.

    (நமது மசாலா கதைகள் எல்லாவற்றின் பெயரும் ஒரே மாதிரி இருப்பதால் அவைகள் நினைவில் தங்குவதில்லை - ஒரு template ஆக "என்னமோ ஒரு எதுவோ" என்று எழுதிகிறேன் - நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள். ["என்னமோ"விற்கு பதிலாய் "பச்சை(யாய்)", மஞ்சளாய் , சிகப்பாய் என்றும் "எதுவோ"விற்கு பதிலாய் "மர்மம்", "மனிதன்","மரணம்","காட்டேரி", "அதகளம்" என்று அடித்து விடவும் ! ;-) ) சிலசமயம் "ஒரு" விற்கு பதிலாக "பூ","காட்டேரி","நிறம்" .. தட்'ஸ் ஈட் :-p]

    2) இந்த லாரன்ஸ் டேவிட் அட்டைப்படம் ஒரு திருஷ்டி பரிகாரம் - நமது ஸ்டாலில் பெரிய சைஸ் போஸ்டர் ஓட்டினால் ஊர் கண் எல்லாம் படாமல் தப்பிக்கலாம். அந்த ரோஸ் உதடுகள் - லாரன்ஸ், டேவிட் - இருவரையும் "ஓ .. அவனா நீயி .." என்ற ரேஞ்சுக்கு இட்டுச் செல்கின்றது :-)

    3) "இரவே .. இருளே .. கொள்ளாதே", "தேவ ரகசியம் காமிக்ஸ்" .. இரண்டும் வெற்றி (தாமதமாகவேனும்) பெற்றதில் ஆச்சர்யம் இல்லை. வெளி வந்தே பொழுதே எழுதி இருந்தேனே ! சென்னை பொருட்காட்சியில் புதியவர்கள் பலர் விரும்பி அலசிப் பார்த்தது இவற்றையே.

    4) And yes . Blake and Mortimer is way too addictive if you are fan of science and detective stories .. அறிவியல் கூற்றுகள் மிகை என்பதால் மொழி பெயர்ப்பு செய்வதற்குள் நாக்கு தள்ளிவிடும். Please try reading "The Strange Encounter" and "The Gondwana Shrine" when you find time !

    ReplyDelete
    Replies
    1. ////நமது மசாலா கதைகள் எல்லாவற்றின் பெயரும் ஒரே மாதிரி இருப்பதால் அவைகள் நினைவில் தங்குவதில்லை - ஒரு template ஆக "என்னமோ ஒரு எதுவோ" என்று எழுதிகிறேன் - நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள். ["என்னமோ"விற்கு பதிலாய் "பச்சை(யாய்)", மஞ்சளாய் , சிகப்பாய் என்றும் "எதுவோ"விற்கு பதிலாய் "மர்மம்", "மனிதன்","மரணம்","காட்டேரி", "அதகளம்" என்று அடித்து விடவும் ! ;-) ) சிலசமயம் "ஒரு" விற்கு பதிலாக "பூ","காட்டேரி","நிறம்" .. தட்'ஸ் ஈட் :-p].//////****

      ROFL.....


      ////இந்த லாரன்ஸ் டேவிட் அட்டைப்படம் ஒரு திருஷ்டி பரிகாரம் - நமது ஸ்டாலில் பெரிய சைஸ் போஸ்டர் ஓட்டினால் ஊர் கண் எல்லாம் படாமல் தப்பிக்கலாம். அந்த ரோஸ் உதடுகள் - லாரன்ஸ், டேவிட் - இருவரையும் "ஓ .. அவனா நீயி .." என்ற ரேஞ்சுக்கு இட்டுச் செல்கின்றது :-)/////***


      ஹா...ஹா...LOL....

      Delete

    2. ////நமது மசாலா கதைகள் எல்லாவற்றின் பெயரும் ஒரே மாதிரி இருப்பதால் அவைகள் நினைவில் தங்குவதில்லை - ஒரு template ஆக "என்னமோ ஒரு எதுவோ" என்று எழுதிகிறேன் - நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள். ["என்னமோ"விற்கு பதிலாய் "பச்சை(யாய்)", மஞ்சளாய் , சிகப்பாய் என்றும் "எதுவோ"விற்கு பதிலாய் "மர்மம்", "மனிதன்","மரணம்","காட்டேரி", "அதகளம்" என்று அடித்து விடவும் ! ;-) ) சிலசமயம் "ஒரு" விற்கு பதிலாக "பூ","காட்டேரி","நிறம்" .. தட்'ஸ் ஈட் :-p].//////****

      நானும் ROFL..... அட்டகாசம் பண்றீங்க காமிக் லவரே! :)))))

      Delete
    3. Raghavan : Blake & Mortimer ரொம்பவே கனமான கதைக் களங்கள் என்பதில் ஐயமில்லை ! இன்றைக்கே இப்படித் தோன்றும் இந்தக் கதைத் தொடரினை 1986-ல் முயற்சிக்க நப்பாசை தோன்றியது ! ஆனால் நல்ல காலம் அந்த விஷப் பரீட்சையைக் கையில் எடுக்கவில்லை !!

      Delete
    4. மேல English காமிக்ஸ் online ல உள்ளதா?. உள்ளது என்றால் நாளைக்கே order செய்து விடுவேன்.

      Delete
    5. Ganeshkumar Kumar : http://comics4all.in/2853-blake-mortimer

      Delete
    6. ///சமீபத்தில் நான் ரசித்த இரு மிக நல்ல டெக்ஸ் கதைகள் - தீபாவளி ஸ்பெஷல் இரண்டாம் கதையாக வந்ததும், ஜனவரி மாதம் வந்த ஷெரீப் வில்லன் கதையும். இரண்டுமே detective feel கொடுக்கத் தவறவில்லை. அருமையாக இருந்தன. கண்டிப்பாக காமிக்ஸ் ரசிகர்கள் அனைவரும் படிக்க வேண்டியது///--- சத்தியமான வார்த்தைகள் ராக்ஜி.....
      அருமையாக சொன்னீங்க, இன்னொரு முறை சொல்லுங்கள்,தேனாக ஒலிக்கட்டும்...

      Delete
  43. // தேவரகசியம் தேடலுக்கு அல்ல.,இ.இ.கொ.கதை ஆன்லைன் விற்பனையில்....//

    சூப்பர் சார்.!ஒரு வாசகர் இந்த தளத்தில் ஒரு விஷயம் கூறினர் அது.,

    "கி.நா.கதைகள் கமல்படம் மாதிரி .ரிலீஸ் ஆனவுடனே பிக்கப் ஆகாகது இரண்டு வருடங்களுக்கு பின் சூப்பர் ஹிட் ஆகும் " என்று அது உண்மையோ என்று தோன்றுகிறது.!

    ReplyDelete
    Replies
    1. @ M.V

      //"கி.நா.கதைகள் கமல்படம் மாதிரி .ரிலீஸ் ஆனவுடனே பிக்கப் ஆகாகது இரண்டு வருடங்களுக்கு பின் சூப்பர் ஹிட் ஆகும் " என்று அது உண்மையோ என்று தோன்றுகிறது.!///

      எல்லா கி.நா'களையும் இந்த லிஸ்ட்டில் கொண்டுவந்துட முடியாதுன்னாலும் உண்மை அதுதான்!
      இன்னும் சில/பல வருடங்களுக்குப் பிறகே 'க்ரீன்மேனர்' கி.நா'வின் அருமையையும் இக்காமிக்ஸ் உலகம் உணரும். அன்று க்ரீன்மேனர் புத்தகங்களைத் தேடி பலரும் பேயாய் அலையப்போவது உறுதி!

      Delete
    2. பௌன்ஸார் குருரம் கதையில் வரும்.

      ஆனால் 'கிரின் மேனரில்' குருரம் தான் கதையே. ஆனால் அதையும் படிக்கும் விதத்தில் எழுதி இருப்பது இது ஓரு சிறந்த படைப்பு என்பதற்கு எடுத்து காட்டு. நீங்கள் சொல்வது போல் எல்லோரும் தேடி அலையப்போவது உறுதி.

      Delete
    3. ஈரோடு விஜய்.! &குமார்.!

      உண்மை.! உண்மை.!கிரீன் மேனர் கதைகளை இரண்டு எக்ட்ரா வாங்கி வைக்க வேண்டியதுதான் பின்னாடி உதவும்.!

      Delete
    4. Madipakkam Venkateswaran : மடிப்பாக்கத்துக்கு ரெண்டு கிரீன் மேனர் பார்சல்ல்ல்ல்ல்ல் !!

      Delete
    5. மீண்டும் ஒரு மேனர் ,சந்தா Zல் வருமா சார்????

      Delete
  44. இந்த வாரத்தில் 2012 இதழ்களை புரட்ட வாய்ப்பு அமைந்தது.அதில் டிடெக்டிவ் ஸ்பெஷல் 60/- க்கு என்ற அறிவிப்பை பார்த்து ஏக்கப் பெருமூச்சுதான் விட முடிந்தது.அதில் எனக்கு பிடித்த ரிப் கெர்பி சாகஸமும் ஒன்று.
    ம் அதெல்லாம் மீண்டும் மறுபதிப்புகளாய் வர வாய்ப்புண்டா ஆசிரியரே?

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : இல்லாதவை என்றுமே ஏக்கப் பெருமூச்சுகளை உண்டாக்கும் காரணிகளாய் அமைந்து போவது தான் வாழ்க்கையின் நியதியாச்சே சார் ?

      நமது கண்ணாடிக்கார டிடெக்டிவ் ரெகுலராய் வெளிவந்து கொண்டிருந்த நாட்களிலேயே பெரிதாய் சிலாகிப்புகளையோ, வெற்றிகளையோ அவர் ஈட்டவில்லை எனும் போது - இன்றைக்கு அவரை மறுபடியும் களமிறக்குவது என்ன பிரயோஜனம் தரக் கூடும் ? என் மேஜையில் இன்னமும் பிரசுரம் ஆகாப் புது ரிப் கிர்பி கதைகள் மூன்றோ, நான்கோ துயில் பயின்று வருகின்றன !! அவற்றையே வெளியிட இன்றைய சூழலில் slot இல்லை என்பது தானே நிதர்சனம் நண்பரே ?

      Delete
    2. ரவி சார்.!

      நமது லயன் மீள் வருகையின்போது, நமது எடிட்டர் கிளாசிக் காமிக்ஸ் சந்தா சூப்பர் ஹீரோ ஸ்பெஷலில் அறிவித்தார்.!அருமையான தேர்வுகள்.!(இன்று ஜேடர் பாளையத்தாரின் கனவு போல் ஏறத்தாழ ஒரு தேர்வு.!) அது என்ன நேரமோ தெரியவில்லை எல்லோருக்கும் பிடித்த இந்த கதை தேர்வுக்கு மிககுறைந்த அளவு சந்தாக்கள் மட்டுமே செலுத்தப்பட்டது.பொறுத்து பார்த்த நமது எடிட்டர் , பல வருடங்களாகவே இதழ்கள் விற்பனையாகமல் குடோனை நிரப்பி வழி தெரியாமல் திணறிகொண்டிருந்தவர்.தான் அறிவித்த கிளாசிக் சந்தாவை கேன்சல் செய்துவிட்டார்.இந்த அறிவிப்பை ஒரு ஞாயிறு பதிவில் வெளியிட்டார்.அன்று மட்டும் பார்வை 3000 மேல்,கமெண்ட் 500 க்கு மேல் இந்த தளமே ஸ்தம்பித்து விட்டது.! அனைவரும் எவ்வளவோ மன்றாடியும்., " நான் ஒரு முடிவு எடுத்துவிட்டால் என் பேச்சை நானே கேட்கமாட்டேன்.!"என்று விஜய் போல் விஜயன் சார் உறுதியாக இருந்துவிட்டார்.அதன் பின் கிளாசிக் லக்கிலூக்,கேப்டன் பிரின்ஸ் என்று கலரில் பயணமாகி விட்டோம்.ஜேடர் பாளையத்தாரின் கனவில் வந்த மெகா க.வெ.குண்டு வந்தால்தான் இதற்கு விமோசனம்.!

      Delete
    3. மடிப்பாக்கத்தாரே என்னை நண்பரே என்று அழைக்கலாமே,சார் எல்லாம் எதற்கு.

      Delete
  45. டெக்ஸ் உடன் அவருடைய விசுவாசம் மிக்க டைகர் ஜாக் சாரலும் செய்து ஆண்டுகள் பல ஓடி விட்டன.

    எதிர்பார்க்கிறேன் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. சாரலும் = சாகசம்

      Delete
    2. discoverboo : மார்ச் வரைக் காத்திருங்களேன்..!

      Delete
  46. Friends, I am on the way to Tiruppur book festival...

    ReplyDelete
  47. லைவ் ஃப்ரம் திருப்பூர் ஸ்டால்...
    காலை 8 மணிக்கு மாயாவிசார் காரில் நான்,கிட்,யுவா,ஜேகே என ஐவரும் கிளம்பி,வழியில் பெருந்துறையில் நெய் ரோஸ்ட்+பூரியை விழுங்கி விட்டு 11.30அளவில் முத்து காமிக்ஸ் ஸ்டாலை அடைந்தோம்......
    நண்பர் குமார் நம்மை ஆவலுடன் வரவேற்றார்....
    விற்பனை யில் உள்ள மேனேஜர் கணேஷ் உடன் பேசி விட்டு மற்ற ஸாடால்களை பார்த்து வருகிறோமா.....
    இப்போது தான் கூட்டம் பிக் அப் ஆகி வருகிறது...

    ReplyDelete
    Replies
    1. சூப்பர்.தொடருங்கள் .!தொடர்கிறோம்.!

      Delete
    2. .....திருப்பூர் டெக்ஸ் சம்பத் ,சற்று நேரத்தில் வந்து சேர்ந்தார்....
      ஈரோட்டுக்கு பிறகு நண்பர்கள் சந்திக்கும் பெரிய சந்திப்பு இது.....
      கூட்டம் கொஞ்சம் பிக் ஆகவும் ஓரளவு விற்பனை களை கட்ட துவங்கியது....
      நாங்களும் ஒருசில டெக்ஸ் கதைகளை நண்பர்களுக்கு கிஃப்ட் தர வாங்கி கொண்டோம்...
      பசி வயிற்றை கிள்ளவும்,சாப்பட கிளம்பி விட்டோம்....
      உணவு இடைவேளைக்கு பின், T.பிரபாகர் (எ)சிபி,ஈரோடு ஸ்டாலின், புனித சாத்தான்,இத்தாலி விஜய், சல்லூம் , ப்ளூபெர்ரி,கரூர் சரவணன், பர்த்டே பாய் ரவி,ரம்மிX111,தேவராஜ்..&சில நண்பர்கள் நம்மோடு இணைய விருக்கிறார்கள்.....
      20 நண்பர்களுக்கு மேல் வர இருப்பதால் மாலை ,ஒரே ஜாலி தான்....தொடரும்....

      Delete
    3. மேலே,முதல் கமெண்ட்ல பாருங்கள்... ///நான்,கிட்///--என குறிப்பிட்டுள்ளேன்...கிட் ஆர்ட்டின் இல்லாமல் வண்டி கிளம்பாதே..

      Delete
    4. சேலம் விஜயராகவன்.!

      ஒ.கே!.ஒ.கே.!

      Delete
    5. .....மதிய உணவுக்குப் பின் ,திருப்பூர் நண்பர் சிபி (எ) பிரபாகர் ஏற்பாடு செய்திருந்த பெரிய கேக்கை நேற்றைய பர்த்டேபாய் ப்ளூபெர்ரி+இன்றைய பர்த்டேபாய் ரவி ,இருவரும் நண்பர்களின் வாழ்த்துகளிடையே கட் செய்து உண்டு மகிழ்ந்தோம்...
      மாலை 4 மணிக்கு மீண்டும் லயன் காமிக்ஸ் ஸ்டாலில் தஞ்சமடைந்தோம்...
      10க்கும் மேற்பட்ட வெளியூர் நண்பர்கள்+ உள்ளூர் நண்பர்கள் சிபி,குமார், ப்ளூபெர்ரி,ரம்மி,சம்பத்,தேவராஜ் என அனைவரும் ஸ்டாலுக்கு எதிரே ,மீட்டிங் கிரவுண்டில் அரட்டை கச்சேரியில் இறங்கினோம்....
      நண்பர்களுக்கு புத்தகங்கள் நினைவுப் பரிசுகள் , க்ளிக்குகள் என மட மட வென நேரம் கரைந்து போனது...
      மதியத்திற்கு பிறகு ஓரளவு கூட்டம்+ விற்பனை இருந்தது....
      கரூர் நண்பர் குணா ஆவலுடன் அனைவருடன் ,தன்னுடைய முதல் சந்திப்பில் குதூகளித்து மகிழ்ந்தார்...
      தலீவர் பரணி+ ஜேடர் பாளையத்தார் இருவரும் வராதது சிறு குறை.....
      இன்றைய நாளை இனிய நாளாக ஆக்கிய மாயாவி சார் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள், நன்றிகள், நன்றிகள்...
      மீண்டும் இதைப்போன்ற ஒரு நாளை எதிர்நோக்கி.........

      Delete
    6. டெக்ஸ் ஜி!இரண்டவது சந்திப்பு இது..ஈரோட்டிலே பரீட்சயம் இல்லாமலே கொஞ்சூண்டு பழகிப் பாா்த்த்திருககிறோம்..!

      Delete
    7. ஒவ்...அப்படியா....அடடே அன்று நிறைய நண்பர்கள் வந்திருந்தும் அறிமுகம் ஆகாமலே கிளம்பி விட்டோம் என தெரிகின்றது....

      Delete
    8. @ டெக்ஸ் விஜய்.....!

      தவிர்க்கவே முடியாத காரணத்தால் என்னால் வர இயலாமல் போய்விட்டது.....!

      தம்பி குணா வீடு திரும்பியவுடன் அலைபேசியில் அழைத்து நண்பர்களுடனான சந்தோஷ தருணங்களை குதூகலத்துடன் விவரித்தான்...!

      திருப்பூர் நிகழ்வில் பங்கு கொள்ளா வருத்தம் பன்மடங்கு கூடி விட்டது...!

      போகட்டும்...

      ஈரோட்டில் கலக்கிவிடுவோம்.....!

      Delete
  48. “தங்கக்கல்லறை - கருப்பு & வெள்ளை நினைவுகள்” புதிய பதிவைக்காண tamilcomicseries.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. Blog open ஆகவில்லை நண்பரே. சரியான address கொடுக்கவும்.

      Delete
  49. எடிட்டர் சார் மும்மூர்த்திகளின் இறுதி பதிப்பு என்று வெளியிடும் தாங்கள் தயவுசெய்து அட்டைபட ஓவியரை மாற்றுங்கள். காலத்தால் அழியா நாயகர்கள் அட்டை படங்களில் காமெடி நாயகர்களாக காட்சியளிக்கிறார்கள். தோழர் சண்முக சுந்தரம்.S. அவர்கள் தமது இணைய பக்கத்தில் டைகரை அருமையாக வரைந்துள்ளார். இரு வாரங்களுக்கு முன்பு அதனை பதிவிட்டுள்ளார். அது போன்று நமது நாயகர்களை அவர் பாணியில் முடிந்தால் அவரையே பயனபடுத்தினால் நன்றாக இருக்கும். தோழர் இதற்கு முன்வருவாரா என்று தெரியவில்லை. எடிட்டரும் தோழர் சண்முகசுந்தரமும் மனது வைத்தால் இது நிகழ வாய்புள்ளது. தோழரின் அனுமதியில்லாமல் அவர் பெயரை குறிப்பிட்டதற்கு வருத்தப்பட மாட்டார் என்ற நம்பிக்கையில் கூறிவிட்டேன். தவறாக இருப்பின் மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. Rajendran A.T : ஒரே ஒருமுறை உங்களிடமிருக்கக் கூடிய "மஞ்சள்பூ மர்மம்" முந்தைய இதழைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு இந்தக் குறிப்பிட்ட சித்திரம் இடம்பெறும் பக்கத்தைப் புரட்டுங்கள். அப்புறமாய் நமது ஓவியரின் பணியினில் குறைகள் தெரியும் பட்சத்தில் சொல்லுங்கள்..!

      நண்பர்களில் நிறையப் பேருக்குத் தெரிந்திருக்கா விஷயம் என்பதால் அதனை இங்கே பகிர்ந்திடுகிறேன்.....! நமது அட்டைப்படங்களின் முக்கால்வாசி டிசைன்களில் நாயகர்களை நாம் வரைவதே கிடையாது - தேர்வாகும் ஒரிஜினல் ஸ்டில்லின் பெரிதாக்கப்பட்ட ஜெராக்சினை மவுண்டில் ஓட்டிவிட்டு அதனை அப்படியே டிரேஸ் செய்தான பின்னே வர்ணங்கள் பூசுவது மட்டும் தான் ஓவியரின் பணி ! So அடித்தளத்தில் இருப்பது நூற்றுக்கு நூறு ஒரிஜினல் (அயல்நாட்டு ஓவியரின்) சித்திரமே ! வர்ணச் சேர்க்கை மட்டுமானால் நம் ஓவியரின் பங்களிப்பாக இருக்கும். அப்படியிருக்கையில் சட்டியில் இருப்பதே அகப்பையிலும் வரும் தானே ? மிகச் சிறிய வேளைகளில் ஒரிஜினல் ஸ்டில் தெளிவாய் அமையாது போனால் மட்டுமே, நம்மவராக அடித்தளப் படத்தையும் போடுவது உண்டு !

      இம்மாத மாடஸ்டி ராப்பரும் கூட ஓவியர் பீட்டர் ரோமேரோவின் ஒரிஜினல் டிராயிங்கில் பூசப்பட்ட வர்ணமே !

      Delete
  50. தங்க தலைவனின் வரகைக்காக வெயிட்டிங்.... சித்திரையே சீக்கிரம் வாராதோ...

    ReplyDelete
  51. அடுத்த டெக்ஸ் இதழின் அட்டைப்படம் வேறு விதமாக இருப்பின் இந்த டெக்ஸ் அட்டை படத்தை மற்ற கதைகளுக்கு கூட பயன்படுத்தலாமே சார் ..

    அவ்வளவு அட்டகாசமாக உள்ளது ....

    ReplyDelete
  52. //அட்டைப்பட டிசைனிங்கில் முன்பு போல் வாசகர்கள் தங்கள் திறமைகளைக் காட்டிட விரும்பிடும் பட்சத்தில் - we are game for it! ஆர்வமுள்ள நண்பர்கள் கை தூக்குங்களேன் - ப்ளீஸ் ? //
    முன்பே நான் குறிப்பிட்டதுபோல ஒரே அட்டைப்படத்துக்கு பல நண்பர்களை டிசைனிங் செய்ய வைக்காமல், இரண்டு அல்லத 3 பேருக்கு ஒரு அட்டையையோ, அல்லது ஒருவருக்கு ஓர் அட்டை என்றோ கொடுத்து முயற்சித்தால் ஒரே நேரத்தில் பல அட்டைப்படங்கள் தயாராக வாய்ப்புள்ளதல்லவா?

    ReplyDelete
    Replies
    1. அட்டை பட போட்டிக்கு நான் கை தூக்குகிறேன்

      Delete
  53. எடிட்டர் சார் தங்களிடம் இந்த பதில் வரும் என்று தெரியும். உள்ளே உள்ள படத்தை அட்டையில் போடுவதுதான் குறையாக தெரிகிறது. 122 பக்க கதைக்கு அந்த படம் குறையாக தெரியாது. ஆனால். முழு கதையை உள்ளடக்கிய புத்தகத்தின் அட்டையை அதே படத்தை கொண்டு அலங்கரிப்பதுதான் குறையாக தெரிகிறது. மும்மூர்த்திகளை அட்டையில் இன்றைய வாசகர்களையும் கவர்கின்ற மாதிரி சற்றே கவனம் செலுத்தி வித்தியாசமாக முயற்சிக்கலாமே. மற்ற கதைகளின் அட்டைக்கு எடுத்துக் கொள்ளும் கவனம் இவர்களின் கதைகளுக்கு இல்லை. இவ்வளவு ஏன் சீனியர் எடிட்டர் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட அட்டை படங்களையும் இன்று நீங்கள் தயாரிக்கும் அட்டைபடங்களையும் ஒப்பிட்டு பாருங்களேன். அன்றைய காலத்தில் அவர் அட்டையில் கொண்டுவந்த புதுமை 40 ஆண்டுகள் கழித்து நீங்கள் வெளியிடும் புத்தகத்தில் இல்லை. இன்றைய உங்கள் அட்டைபடம் இன்றைக்கு நமது காமிக்ஸுடன் போட்டிக்கு வந்த பல டம்மி காமிக்ஸ்களின் அட்டை போலிருக்கிறது. இதற்கு பதிலாக சீனியர் எடிட்டர் வெளியிட்ட அட்டை படங்களையே நீங்களும் போட்டுவிடலாமே. உங்களுக்கும் வேலை மிச்சம். எங்களுக்கும் எந்த குறையும் தெரியப்போவதில்லை. இதில் ஏதாவது சங்கடம் உள்ளதா சார்

    ReplyDelete
    Replies
    1. சார்...பழமையினை ரசிப்பதில் நிச்சயமாய்த் தவறில்லை ; and பழசினுள் நமக்குப் பிரயோஜனமாகக் கூடிய எதுவிருந்தாலும் அதனை அரவணைப்பதில் எனக்கு நிச்சயமாய்த் தயக்கமே கிடையாது ! ஆனால் - கொஞ்சமே கொஞ்சமாய் யதார்த்தம் என்னவென்ற புரிதலும் அங்கே அவசியமாகிடாதா ? உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்த வேளையில் எனது மேஜையில் நமது NBS இதழும் கிடந்தது ; முத்து காமிக்ஸின் முந்தைய இதழின் பட்டியலை அதனுள் பார்க்க முடிந்தது ! ஒரு பென்சிலை எடுத்துக் கொண்டு முத்துவின் முதல் 120 இதழ்களுள் வெளியான மும்மூர்த்திகளின் கதைகளுக்கான அட்டைப்படங்களது அமைப்பினை வரிசைப்படுத்தினேன் ! இதோ கிட்டிய விடைகள் :

      * Fleetway 'ன் ஒரிஜினல் அட்டைப்பட டிசைன்கள் அப்படியே தமிழிலும் ராப்பர்களானது - 14
      * நமது ஓவியர்கள் போட்ட சித்திரங்கள் - 11
      *கதைகளின் உட்பக்கங்களிலிருந்து ஜெராக்ஸ் எடுத்து - அவற்றிற்கு நெகடிவ்களில் வர்ணம் பூசுவதற்கு லைன் டிராயிங் with கலர் பில்லிங் என்று பெயர். இங்கே ஓவியருக்கு அவசியமே கிடையாது ; நான்கைந்து படங்களை சேகரித்து ஒரு collage போல் அமைத்து - கதையின் பெயரை எழுதி விட்டால் போதும் ; பாக்கியை நெகடிவ்களில் பார்த்துக் கொள்வார்கள். அனால் இந்த முறையில் உள்ள சிக்கல் என்னவெனில் - கலர்களில் gradation கொண்டு வர இயலாது ; லைட் மஞ்சள் என்றால் ஏகத்துக்கு லைட் மஞ்சள் மாத்திரமே இருக்கும் ; டார்க் ப்ளூ என்றால் அங்கே டார்க் ப்ளூ மாத்திரமே கிடைக்கும்....! So இந்த முறையில் தயாரிக்கப்பட்ட ராப்பர்களின் எண்ணிக்கை 15 !
      * And நம்பினால் நம்புங்கள் - அந்நாட்களில் என் தந்தையின் அச்சகத்தில் ரெடிமேட் நோட்புக் ராப்பர்களும் தயாரித்து விற்பனை செய்து வந்தார்கள். அதன் பொருட்டு தயாராக இருக்கும் டிசைன்களை அவசர ஆத்திரத்துக்கு காமிக்ஸ் அட்டைப்படங்களாக உருமாற்றிய தருணங்களும் உண்டு ! அவ்விதம் உருவான ராப்பர்கள் 3 !

      So இதனில் எந்த வழிமுறையை நாம் copy செய்தால் சிறப்பாக இருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்களோ - தெரியவில்லையே !

      Fleetway ஒரிஜினல் டிசைன்கள் அழகாய் சாத்தியமாகும் ஒவ்வொரு தருணத்திலும் அவற்றை மறுபதிப்புகளுக்கு நாம் பயன்படுத்தத் தவறப் போவதில்லை ! கொள்ளைக்கார மாயாவி ; சிறைப் பறவைகள் அட்டைகள் Fleetwayஒரிஜினல்களே !

      And உட்பக்கச் சித்திரங்களைக் கொண்டு நாம் ராப்பர்களைத் தயாரிப்பது வேண்டாமென்று நீங்கள் கருதினால் - அந்நாட்களது லைன் ட்ராயிங்க்ஸ் with கலர் பில்லிங் ராப்பர்கள் நிச்சயமாய் கதைக்கு ஆகாது ! நாமாவது ஒன்றோ இரண்டோ சித்திரங்களை அட்டைக்குக் கொணர்ந்துள்ளோம் ; அந்நாட்களில் குறைந்தது மூன்று நான்கு frames ராப்பரினில் இடம்பிடித்திருக்கும் !

      And அந்நாட்களது பெயிண்டிங்குகளை நாம் மீண்டும் பயன்படுத்தாமலும் இல்லையே - ஜானி நீரோவின் மலைக்கோட்டை மர்மத்தின் முன்னட்டை அந்நாட்களது டிசைனே !

      இன்றைய சமகாலப் புதுப் படைப்புகளுக்கு பெரும்பாலும் ஒரிஜினல் ஐரோப்பிய ஓவியங்களின் தழுவல்களையே நாம் பயன்படுத்தி வருவதால் அவற்றிற்கும் தற்போதைய மு.மூ.மறுபதிப்புகளுக்கும் உள்ள ராப்பர் தரத்தில் விடுதல் தெரிவது புரிகிறது ! ஆனால் அதனைச் சரி செய்ய back to the past செல்வது வழியாகாது !

      புதிதாய் திறமைசாலிகளைத் தேடுவதே அதற்கான மார்க்கமாய் இருக்கக்கூடும் !

      Delete
    2. மேற்படி ரமணா ஸ்டைல் புள்ளிவிபரங்களில் கொஞ்சமாய் +/- இருக்கலாம் தான் ; நான் நினைவுபடுத்திப் பார்த்த ராப்பர்களின் அடிப்படையில் எழுதியுள்ளேன் ! நிச்சயமாய் இதனில் பெரியளவில் மாற்றங்களிருக்க சான்ஸ் இல்லை என்ற மட்டிலும் நிச்சயம் !

      Delete
  54. "விதி போட்ட விடுகதை ' இன் அட்டைபடம் சூப்பர் ! "மஞ்சள் பூ மர்மம் " இன் அட்டை படமும் மிக நன்று . ஆனால் கோட் சூட் போட்ட லாரன்சும் டேவிட் உம் அட்டை படத்தில் உள்ள அழகி உடன் உள்ளதுதான் சிறு உறுத்தல் மட்டுமே . நான் "மஞ்சள் பூ மர்மம் " இன்னும் படிக்கவில்லை என்றே நினைக்கிறேன் . எப்போது ஏப்ரல் வரும் என்று காத்துள்ளேன் சார்.

    ReplyDelete
  55. அட்டை பட போட்டிக்கு நான் ரெடி. Cartoon படமாக இல்லமல் realistic படம்(டைகர்,டெக்ஸ் போன்ற படங்கள்) கொடுங்கள். அவை தான் கடினமானவை. நான் Gaming and animation industry தான் வேலையில் உள்ளேன். Computer ரில் படம் வரைவதுதான் என் முழு நேர வேலை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் படைப்புகளைக் காண ஆவலாய் இருக்கிறோம் கணேஷ்குமார்! உங்களது விருப்பத்தை எடிட்டரின் ஈமெயில் ஐடியிலும் தெரிவித்துவிடுங்களேன்!

      Delete
    2. ஆமாம் சார்.!தீயா வேலை செய்யும் குமாரின் திறமையை காண ஆவல்.!

      Delete
    3. கண்டிப்பாக ஒரு outstanding அட்டை படம் உருவாக முயற்சி செய்வேன்.

      Delete
  56. மஞ்சள் பூ மர்ம்ம் அட்னட சூப்பர்.....
    தலயின் மார்ச் மாத அட்னடயும் அருனம.....

    ReplyDelete

  57. நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று திருப்பூரில் நமது காமிக்ஸ் நண்பர்களைச் சந்திக்க நேர்ந்தது ஒரு உற்சாகமான அனுபவம்! நண்பர்கள் ப்ளூபெர்ரியும், சிபியும் வருகை தந்த நண்பர்களை அன்பால் உபசரிக்க,
    நண்பர்கள் திருப்பூர் குமாரும், டெக்ஸ் சம்பத்தும் நமது ஸ்டாலில் தீவிரம் காட்டியிருந்தனர். நமது ஸ்டாலில் வகை வாரியாக, நாயகர்கள் வாரியாக அடுத்தடுத்து புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டேன். விசாரித்ததில் அது டெக்ஸ் சம்பத்தின் வேலையென்று தெரிந்தது.
    தீயாய் வேலை செய்ததில் திருப்பூர்குமார் சற்று களைப்போடிருந்தார். புத்தகத் திருவிழா தொடங்குவதற்கு முன்பு காலியாய் இருந்த ஒரு ஸ்டாலை அடையாளம் கண்டு அமைப்பாளர்களிடம் பேசியது சம்பத் என்றால்; ஒடிவந்து ஸ்டாலுக்கான வாடகைத் தொகையைத் தானே செலுத்தி நமக்கான ஸ்டாலை உறுதிப் படுத்தியதோ நண்பர் திருப்பூர் குமார்! இருவருக்கும் மீண்டும் தமிழ்காமிக்ஸ் வாசகர்கள் அனைவரது சார்பாகவும் வாழ்த்துகளும் நன்றிகளும்! இன்றைய விதையே நாளைய விருட்சமாகிடும்! தற்போது சுமாரான விற்பனையே கண்டாலும் நம் நண்பர்களின் இதுபோன்ற ஈடுபாடு எதிர்காலத்தில் கணிசமான பலனை ஈட்டித் தரும் என்பது உறுதி! வாழ்க நம் காமிக்ஸ் நேசம்!

    (இன்றைய நிகழ்வின் மேலும் பல updatesஐ வழங்கிட டெக்ஸ் விஜய் மற்றும் மாயாவி சிவா உள்ளிட்டோர் விரைவில் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்)

    ReplyDelete
    Replies
    1. @ ALL : எப்போதும் போலவே நமக்காக உழைப்பையும், நேரத்தையும் செலவிட்டு வரும் அத்தனை நண்பர்களுக்கும் நமது மனமார்ந்த நன்றிகள் ! போட்டோக்கள் கொஞ்சம் அனுப்புங்கள் நண்பர்களே..நமது FB பக்கத்தில் போட்டு விடுவோம்..!

      Delete
    2. நேற்றையதினம் திருப்பூர் வேடந்தாங்கலுக்கு வந்த பல தேசத்துபிரஜைகள்...

      ஈரோடில் இருந்து...
      ஸ்டாலின்
      புனித சாத்தான்
      இத்தாலி விஜய்

      கரூரின் இருந்து...
      குணா
      சரவணன்

      நாகர்கோவிலில் இருந்து...
      சல்லூம்

      மேச்சேரியில் இருந்து...
      கிட் ஆர்ட்டின் கண்ணன்
      ஜெயகுமார்

      மல்லுரில் இருந்து..
      அறிவரசு@ரவி

      சேலத்தில் இருந்து...
      டெக்ஸ் விஜயராகவன்
      யுவா கண்ணன்

      திருப்பூர்....
      குமார்
      டெக்ஸ் சம்பத்
      சிபி
      புளுபெர்ரி நாகராஜன்
      ரம்மிXIII
      தேவா

      என இவர்களுடன் நடந்த கொண்டாட்டம் பற்றி அனுபவத்தை சொல்லும் முன்...மாதத்தின் முதல்நாள்,திங்கள்கிழமை வேலைகளை முடித்துக்கொண்டு வருகிறேனே..!

      அதுவரையில் சும்மா தமாஸுக்கு ஒரு...இங்கே'கிளிக்'

      Delete
    3. @ மாயாவி

      :)))) LOL.

      செம!

      Delete
  58. எடிட்டர் சார் தங்களின் விளக்கத்திற்கும் பதிலுக்கும் நன்றிகள் பல. தங்களை என்னுடைய கேள்விகள் வருத்தமடைய செய்திருந்தால் மன்னியுங்கள். என்னுடைய ஒரே வேண்டுகோள் என்னவென்றால் மும்மூர்த்திகளின் அட்டை படங்கள் பொம்மை உருவங்களாக காட்சியளிக்காமல் இன்றைய கால நவீன பாணி ஓவியங்களாக அமைத்தல் நலமாக இருக்கும். திரும்ப திரும்ப இதை கூற காரணம் இன்றைய தலைமுறையினரை கவர மும்மூர்திகள் இன்னும் அட்டகாசமாக அட்டையில் காட்சியளித்தால் இன்றைய தலைமுறை வாசகர்களையும் அவர்கள் சென்றடைவது எளிதாகும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்தாகும். இதற்கு இன்றைய தலைமுறை ஓவியர்கள்தான் பொறுத்தமாக இருப்பர். மின்னும்மரணம் அட்டையையே எடுத்துக்கொள்ளுங்கள். டைகர் முகம் மற்றும் அதனை சுற்றி மெருகேற்றிய அழகு மிக அருமை. உட்பக்க டைகர் படத்தை மட்டும் அட்டையில் கொண்டு வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும். இந்த அளவு அருமையான அட்டைபடம் கிடைத்திருக்குமா? நான் சொல்ல வருவது தங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன். இதேபோல மும்மூர்திகளையும் கலக்கலாக அட்டையில் கொண்டுவாருங்கள் என்றுகூறி முடித்துக்கொள்கிறேன். நன்றி

    ReplyDelete
  59. அட்டை படம் தான் இந்த புத்தகத்தை வாங்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும்.(புதிய வாசகர்களுக்கு). எனவே அதில் மிகுந்த கவனம் தேவை.

    ReplyDelete
  60. திரு.கணேஷ்குமார் குமார் நான் சொல்லவந்த கருத்தை தலையை சுற்றி வாயை தொட்டது போல் எழுதி குழப்ப நீங்களோ கையை நேரே வாய்க்கு கொண்டு செல்வதைபோல் நச் சென்று கூறிவிட்டீர்கள். அதற்கு என் நன்றி. மும்மூர்த்திகள் மறுபதிப்பை வாங்குவதில் கண்டிப்பாக 70% சதவீதம் சற்று வயதானவர்களாகத்தான் இருப்பர். நிலமை இப்படி உள்ள போதே மும்மூர்த்திகள் விற்பனை தூள் கிளப்பும்போது இவர்களுடன் இளயதலைமுறை வாசகர்களும் சேர்ந்து கொண்டால் விற்பனை இன்னும் சூடு பிடிக்குமே என்ற எண்ணத்தில்தான் அட்டை படத்தை கலக்கலாக கொண்டு வரச்சொன்னேன். ஆனால் எடிட்டர் அவர்கள் நான் ஏதோ குறைகூற எழுதியதாக நினைத்து நீண்ட விளக்கம் அளித்துள்ளார். நான் சொல்ல வந்த கருத்தை தெளிவாக உங்களைபோல் ஒரே வரியில் சொல்ல முயற்சிக்காத்தால் வந்த நிலமை இது.

    ReplyDelete
  61. original
    http://static.comicvine.com/uploads/scale_large/2/27783/1035016-secret_26.jpg

    011 - http://lh3.ggpht.com/_bENwDlcaWz0/S4oKgfnv7hI/AAAAAAAAAYk/Ki174mUajhE/s1600-h/011%20Manjal%20Poo%20Marmam%5B4%5D.jpg

    147 - http://lh6.ggpht.com/_bENwDlcaWz0/S4oKiAhHt4I/AAAAAAAAAYs/s4ya3VhlyyI/s1600-h/147%20Manjal%20Poo%20Marmam%20%28Reprint%29%5B4%5D.jpg

    cc reprint - http://lh6.ggpht.com/_bENwDlcaWz0/S4oKkTtqPDI/AAAAAAAAAY0/UgYfa1D6alA/s1600-h/CC%2008-1%5B4%5D.jpg

    ReplyDelete
    Replies
    1. original is much better
      http://static.comicvine.com/uploads/scale_large/2/27783/1032688-secret_6.jpg

      Delete
  62. வாங்க மிஸ் ஜுனைதா ......

    ReplyDelete
    Replies
    1. அடே ஜால்ரா பாய்...
      வீட்டம்மா பிறந்த நாள் ஞாபகம் இல்லை .......
      மஞ்சள் பூ மர்மம் ஹீரோயினி பேர் நல்லா ஞாபகம் இருக்கு .....


      ஹ ஹா ஹா




      Delete