Powered By Blogger

Sunday, January 24, 2016

எட்டும் தூரத்தில் பிப்ரவரி !


நண்பர்களே,

வணக்கம். அது என்னவோ தெரியவில்லை...முன்பெல்லாம் மாதமொரு முறை இதழ்களை வெளியிட்டு வந்த சமயங்களில் முப்பது நாள் இடைவெளியானது ரொம்ப ரொம்பக் குறைச்சலாகத் தெரிந்து வந்தது! ஆனால் இப்போது அதே முப்பது நாட்களுக்கு மத்தியினில் 4 இதழ்கள் வெளிவந்தாலும் – மாதத்தின் முதலிரண்டு வாரங்கள் கழிந்தான பின்னே தொடரும் பொழுதுகளை ஜவ்வாக இழுத்துச் செல்வது போலொரு பிரமை! ஜனவரியின் 4 இதழ்களும் வெளியானது ஏதோ ஒரு யுகத்தில் என்பது போலத் தோன்றிட – இதோ கூப்பிடு தொலைவில் காத்து நிற்கின்றது பிப்ரவரி! And பிப்ரவரியின் கறுப்பு-வெள்ளை ஆதிக்கத்தை ஆரம்பித்து வைப்பது நமது இளவரசியார் எனும் போது – அவரது preview சகிதம் இந்தப் பதிவை ஆரம்பிப்போமே?!

சரியாக 100 சாகஸங்கள் கொண்ட மாடஸ்டி பிளைஸி தொடரினில் நாம் இதுவரையிலும் எத்தனை வெளியிட்டிருப்போமென்ற கணக்கெல்லாம் என்னிடமில்லை – தோராயமாய் 25 கதைகள் என்பது அனுமானம்! ராணி காமிக்ஸில் நம்மை விட இன்னும் அதிகமான கதைகளை வெளியிட்டிருப்பார்கள் எனும் போது – இன்னமும் fresh ஆகக் காத்துள்ள மா.பி. சாகஸங்களை ஒரு விடுமுறை நாளில் பட்டியல் போட்டாக வேண்டும்! இதோ- இம்மாதம் காத்திருக்கும் “சட்டமும், சுருக்குக் கயிறும்” இதழின் அட்டைப்பட முதற்பார்வை மீண்டுமொருமுறை ஓவியர் + டிசைனர் கூட்டணியே பணி செய்துள்ளது இந்த அட்டைப்படத்தினில் ! Peter Romero-வின் ஒரிஜினல் black & white டிசைனை நமது ஓவியர் வண்ணத்தில் வரைந்திட – பின்னணி ; வர்ண மாற்றங்கள் என டிசைனரின் கைவண்ணம் தொடர்ந்துள்ளது ! ஒன்றுக்கு 4 வர்ணப் பின்னணிகளைப் போட்டு பொன்னன் நமக்குக் காட்டிட – இதோ அந்த நான்குமே ! அவற்றுள் ஒன்றைத் தேர்வு செய்துள்ளோம்! அந்தத் தேர்வு எதுவாகயிருக்குமென்று யூகித்துப் பார்க்கலாமே?
பூர்த்தியடையா டிசைன்கள் இவை...!! மறந்து விட வேண்டாம் !!
இம்முறை இளவரசிக்கு டெய்லர் வேலை பார்த்திட வாய்ப்புகள் ரொம்பவே குறைந்து போய் விட்டன என்பதை நான் சொல்லியே தீர வேண்டும்! Simply becos – கதையின் ஓட்டத்திலேயே ‘காற்றோட்டமான உடுப்புகள்‘ அத்தியாவசியமாகிப் போகின்றனஅவற்றை நான் பர்தா போட்டு மூட எத்தனித்தால் துடைப்பங்கள் நிச்சயம் பார்சலில் தேடி வரும் எனும் போது, ‘நடப்பது நடக்கட்டுமே‘ என்று ஒதுங்குவதைத் தாண்டி வேறெதுவும் செய்திட இயலவில்லைகதையில் அனலும்உடையில் ஜிலீரும் கொண்ட இந்த இதழ் மடிப்பாக்கத்துக்காரரை மாத்திரமின்றி – நம்மில் பலரையும் ரசிகர் மன்ற உறுப்பினர் படிவங்களைக் கோரிடச் செய்யுமென்று நம்புகிறேன்பார்ப்போமே!

Black & White இதழ்களுள் ‘தல‘ டெக்ஸின் 224 பக்க சாகஸமும் இம்மாதம் உண்டென்பதை நாமறிவோம்! “திகில் நகரில் டெக்ஸ்” பற்றி இன்னமும் கொஞ்சம் பில்டப் தருவதில் தப்பில்லை என்று தோன்றுவதால் here goes! “டெக்ஸ் கதைகளில் என்றைக்குமே ஒரு பெரிய ட்விஸ்ட் இருந்ததில்லைவில்லன் யாரென்பதை குழந்தைப்புள்ள கூடக் கண்டுபிடித்து விடுமெனும் போது – பெரிதாய் சஸ்பென்ஸ் ஏதும் இருப்பதில்லை” என அவ்வப்போது சில குரல்கள் பதிவாவதை நாம் கவனித்து வருவது நிஜம் தானேஆனால் இந்த சாகஸம் அந்தக் குற்றச்சாட்டை நிராகரிக்கச் செய்யப் போகிறதென்ற நம்பிக்கை எனக்குள்ளதுவழக்கம் போல சலனமற்றதொரு சிறு நகரம்உள்ளுர் தாதா கும்பல் என்ற ஓப்பனிங் இருப்பினும் – 215-ம் பக்கம் வரையிலும் ‘யார் வில்லன்?‘ என்ற கேள்விக்கு விடை சொல்லாமலே கதையைக் கொண்டு செல்கிறார் கதாசிரியர்! And க்ளைமேக்ஸில் அரங்கேறும் ஒரு சன்னமான ட்விஸ்ட் – நிச்சயமாய் இரவுக் கழுகின் நேர் கோட்டுக் கதை சொல்லும் பாணிகளுக்குப் புதுசேஒரு slam bang அதிரடி ஆசாமியாக வலம் வராது – அடக்கி வாசிக்கும் கைதேர்ந்த துப்பறிவாளராக நம்மவர் இதழ் முழுவதிலும சுற்றி வருவதும் சமீப காலங்களில் நாம் பார்த்திரா பாணிகுரூரமாய்க் கொலையுண்டு போகும் அழகுப் பெண்களின் எமன் யாரோஎன்பதை டெக்ஸோடு துப்பறிந்திடும் இந்த அனுபவத்தை எழுதும் போது ரொம்பவே  ரசித்தேன் !  டெக்ஸின் ஃபார்முலாவை ரொம்ப நோண்டி விடக் கூடாதே என்பதற்காக ஆங்காங்கே சில ணங் – கும் – சத் – டுமீல் – பூம் – பணால் எல்லாம் இருந்தாலும் – this is a very subtle Tex at work this time! ‘ஓக்லஹோமா‘ கதைக்கு சித்திரங்கள் போட்ட அதே ஓவியா் தான் இந்த சாகஸத்திலும் பணியாற்றியுள்ளார் என்பதால் –pleasant ஆன இரவுக் கழுகாரை ரசித்திடவும் முடிந்திடும்கதையும் அழகுஓவியங்களும் decent என்றால் – டெக்ஸின் presence அந்த சாகஸத்தை ஹிட்டடிக்கச் செய்து விடாதா – என்ன? So - மனதில் பதியப் போகும் ஒரு வித்தியாசமான டெக்ஸ் சாகஸத்திற்கு தயாராகுங்கள் folks!

அதெல்லாம் சரிதான் – ஆனால் இந்தக் கதையை இத்தனை காலமாய் பரணிலேயே உறங்க அனுமதித்தது ஏனோ?” என்ற உங்களின் mind voice எனக்குக் கேட்காமலில்லைநிஜத்தைச் சொல்வதானால் – ‘காமிக்ஸ் எக்ஸ்பிரஸ்‘ முயற்சியானது வாங்கிய தர்ம அடியில் சில பல காலத்திற்கு இந்தக் கதையைக் கையில் ஏந்திடவே தயக்கமாகயிருந்ததுஅந்த வீரத் தழும்புகளெல்லாம் மறைந்து மறந்து போன காலகட்டத்தில் இந்த இதழை நிறையத் தடவைகள் எடுத்துப் பரபரவென்று புரட்டியிருக்கிறேன் தான்ஆனால் கதையோட்டத்தில் தென்பட்ட சற்றே குறைச்சலான ஆக்ஷன் என் தலைக்குள் அபாய மணிகளை ஒலிக்கச் செய்ததுடிரேட்மார்க் ஆக்ஷன்அதிரடிகள் கம்மியாக இருப்பின் அது நமக்கு ஒத்துவராதென்ற எண்ணத்தில் இந்தக் கதையை ரொம்பத் தீவிரமாய் பரிசீலிக்க முனையவில்லைஅது மட்டுமின்றி – சென்றாண்டு ‘ஓக்லஹோமா‘ கதை வெளிவரும் வரையிலும் எனக்கு ஓவியர் லெட்டரீயின் பாணி மீது ஏனோ தெரியவில்லைஅத்தனை பெரிய மையல் ஏற்பட்டதில்லை! So “திகில் நகரில் டெக்ஸ்” பக்கங்களைப் புரட்டி விட்டு – அதைவிட ஒரு படி மிரட்டலான ஓவியங்களும்ஆக்ஷனும் கொண்ட இதர கதைகளுக்கு ‘ஜே‘ போட்டு விடுவதே என் வழக்கமாயிருந்ததுஆனால் 2016-ல் டெக்ஸின் slot கூடிப் போனதால் – எல்லாக் கதைகளுமே ஒரே டமால் – டுமீல் பாணியில் அமைந்துவிடக் கூடாதே என்ற ஆதங்கமும் எனக்குள் குடிபுகுந்ததுஅப்போது “தி..டெ” ஒரு welcome change ஆக இருக்குமென்று தோன்றியதால் – இதனை முழுமையாக மொழிபெயர்க்க இத்தாலிக்கு அனுப்பினோம்! And ஆங்கிலத்தில் திரும்பி வந்த ஸ்கிரிப்டை எடுத்துப் பணியாற்றத் தொடங்கிய போது – திருப்தியாக இருந்தது! So லேட்டாக வந்தாலும் – லேட்டஸ்டாக வரக் காத்திருக்கும் டெக்ஸ் நமக்கொரு புதுப் பரிமாணத்தைக் காட்டவிருக்கிறார் 

இம்மாதத்தின் இறுதி b & w இதழான “மஞ்சள்பூ மர்மம்” பற்றி நான் புதிதாகச் சொல்ல என்ன இருந்திடப் போகிறதுவெளியான தருணத்தில் அட்டகாச வெற்றி கண்ட இதழிது என்றமட்டிற்கு எனது பால்ய நினைவுகள் உள்ளனதேம்ஸ் நதி முழுவதிலும் படர்ந்து கிடக்கும் அந்த மஞ்சள் மலர்களை நான் ‘ஆ‘வென்று வாய் திறந்து புரட்டிப் புரட்டிப் பார்த்த ஞாபகம் இன்றளவிற்கும் உள்ளதுஅதே போன்ற nostalgic moments-களின் நினைவூட்டலாக இது பலருக்கும் அமைந்திடுமென்பது நிச்சயம்ஞாபக அலைகளைக் கிளறி விடும் இதழாக மட்டுமே இதனைப் பார்த்திடாது – ஒரு தெளிந்த நீரோடை போலான துப்பறியும் கதையாகவும் இதனை ரசித்திடலாம் என்று புது வாசகர்களுக்குத் தைரியமாக recommend செய்வேன்இந்த இதழை அந்நாட்களில் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்திட்டவர் கோவையைச் சேர்ந்தவொரு மூத்த வாசகரே ! நமது இதழ்களைத் தீவிரமாய் ரசித்து வரும் அந்த அன்பான குடும்பம் இன்றைக்கு இந்த மறுபதிப்பினை சற்றே கூடுதலாய் பத்திரப்படுத்துவர் என்பது நிச்சயம்! And அவ்வப்போது நமது வலைப்பதிவையும் அவர்கள் படிப்பதுண்டு எனும் போது – இதனை அவர்கள் படிக்க நேரிடும் பட்சத்தில் ஒரு ஆன்லைன் வணக்கத்தை சொல்லி விடுகிறேனே ! And இந்த இதழின் அட்டைப்படத்தை – கூரியர்கள் கிளம்பிடும் தினத்தன்றைய பதிவில் உங்களுக்குக் காட்டிட எண்ணியுள்ளேன்நமது ஓவியர் மாலையப்பனின் டிசைன் பிரமாதமாக அமைந்துள்ளது!

So - பிப்ரவரியுமே ஒரு அமர்க்கள வாசிப்பு அனுபவத்தைத் தரக் காத்துள்ளதென்பதில் எனக்கு ஐயமில்லைஆண்டின் 12 மாதங்களும் சீராய் – தரமாய் – classy ஆன கதைகளோடு அமைந்திடும் பட்சத்தில் – ஜென்மம் சாபல்யமடைந்திடாதாகனவுகளில் எனக்கு நடந்திடும் இந்த சமாச்சாரம் – நனவிலும் என்றேனும் நிஜமாகிடாதாஎன்ற தேடலில் எங்கள் ஓட்டம் தொடர்கிறது!

அப்புறம் ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி‘யின் வெளியீட்டுக் கோரிக்கையோடு சென்ற பதிவில் நண்பர்கள் ஜாலியாகவொரு பிள்ளையார்சுழியைப் போட்டிருந்ததை நான் கவனிக்காதில்லைஏற்கனவே “என் பெயர் டைகர்” ஸ்பெஷல் இதழ் இன்னமும் வெளிச்சத்தைப் பார்த்திரா சூழலில் அடுத்த கட்டைவிரல் கதக்களிக்குத் தயாராவது நம் தில்லாலங்கடி அளவுகோல்களின்படி கூட ரொம்பவே ஓவர் என்பேன்தவிரஓராயிரம் பக்கங்களை நாங்கள் தயாரிக்கத் தயாராகவே இருக்கிறோமென்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் கூட – அத்தனை பக்கங்களை நிரப்புவது எதைக் கொண்டு என்ற கேள்விக்குத் திருப்தியான பதில் தேடிட வேண்டுமல்லவா பிரான்கோ-பெல்ஜிய ஆல்பங்களின் தனித்தனிப் படைப்பாளிகள் பதிப்பகங்கள் கூட்டாஞ்சோற்றுக்கு க்ரீன் சிக்னல் தரத் தயங்குகின்றனர் என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் தவிர – அந்தக் கதைத் தொடர்களின் சகலமுமே வண்ணத்திலான ஒரிஜினல்கள் எனும் போது – அவற்றை நாம் b&w ல் வெளியிடுவதும் ரசிக்காது! So அந்தக் கதவைத் தட்டுவதில் பிரயோஜனமில்லை எனும் போது – பிறவியிலேயே b&w அவதாரம் கண்ட இத்தாலியக் கதைகளையோபிரிட்டிஷ் படைப்புகளையோ தான் நாடியாக வேண்டும்திரும்பிய திசையெல்லாம் டெக்ஸ் தான் என 2016-ன் அட்டவணை ஆன பிற்பாடு – இது போன்றதொரு தொகுப்பினுள் இன்னொரு ராட்சஸ டெக்ஸ் கதையைச் செருகிடும் பட்சத்தில் – திகட்டிப் போய் விடாதாஅது மட்டுமன்றி, 1000 பக்கங்களெனும் மைல்கல்லை சும்மாகாச்சும் தொட்டு விடும் ஆசையின் காரணத்தினால் மாத்திரமே இது போன்ற முயற்சிக்குள் குதிப்பது சற்றே செயற்கையாக இருக்குமல்லவாஒரு பொருத்தமான தருணம் நெருங்கிடும் சமயம்அதனை சிறப்பிக்கும் விதமாய் திட்டமிடுவது இயல்பாக இருப்பதோடு – பணியாற்றவும் ஒரு உத்வேகத்தைத் தந்திடும்! So- சற்றே பொறுமை ப்ளீஸ்அதற்காக கனவுகள் காண வேண்டாமென்றோ ; ஆசைகளை வெளிப்படுத்திட வேண்டாமென்றோ நான் சொல்லப் போவதில்லை! In fact ஒவ்வொரு லாத்தலான வேளையினிலும் - ஏதேனுமொரு மெகா இதழின் மகா சிந்தனை (!!!) என் தலைக்குள் ஓடிக்கொண்டே இருப்பது தான் வாடிக்கை ! சரியான சந்தர்ப்பம் அமையும் போது - அலாவுதீன் பூதம் போல அறிவிப்பும் உங்கள் முன்னே ஆஜராகி நிற்கும் !! 

சென்னையில் 26 ஜனவரி வரையில் நடந்திடும் ‘பொங்கல் புத்தக விழாவினில்‘ வார நாட்களில் மிதமான விற்பனையும்வாரயிறுதிகளில் சுறுசுறுப்பான விற்பனைகளும் நடந்தேறி வருகின்றன நமது ஸ்டாலில் !தொடரும் நாட்களில் அழகான விற்பனை கிட்டின் –BAPAS! விழாவின் வசூலில் ஒரு பகுதியைத் தொட்டிருப்போம்பசித்துக் கிடந்தவனுககு தலப்பாகட்டி பிரியாணி கிடைக்காவிட்டாலும்சரவணபவன் வெரைட்டி ரைஸாவது கிடைத்ததே என்ற திருப்தியில் நடையைக் கட்டிடுவோம்! Fingers crossed! வழக்கமாய் 750 ஸ்டால்கள் கொண்ட BAPASI விழாவில் எங்கோ ஒரு மூலையில் நாம் கிடந்தால் கூடநம்மவர்களின் உற்சாகங்களும்ஆர்வங்களும் நிறையவே கவனிக்கப்படுவது வாடிக்கைஇம்முறையோ இது 200 ஸ்டால்களே கொண்ட விழா எனும் போது – நமக்குச் சேர்ந்திடும் ஜனத்திரள் கூடுதல் உன்னிப்போடு கவனிக்கப்பட்டு வருகிறதுஅதிலும் இரு பத்திரிகையுலக ஜாம்பவான்களின் டீம்கள் நமது இதழ்கள் சகலத்தையும் வாங்கிச் சென்றுள்ளனர் எனும் போது ரொம்பச் சீக்கிரமே ‘காமிக்ஸ்‘ என்ற வார்த்தை பலரது அகராதிகளுக்குள் ‘திடும்‘ பிரவேசம் செய்திடப் போவது உறுதி என்று நினைக்கத் தோன்றுகிறது நமது “மின்னும் மரணம்” & LMS இதழ்கள் பதிப்பக உலகினில் பல உயரும் புருவங்களுக்குக் காரணமாகியிருப்பதை ஏற்கனவே மார்க்கெட்டிலிருந்து கிட்டிய சேதிகள் வாயிலாக அறிய முடிந்திருந்தது இம்முறையோ அவற்றை இன்னமும் தீர்க்கமாய் பார்க்க முடிந்துள்ளது ! முன்பெல்லாம் புதுசாய்போட்டிக்குக் காமிக்ஸ் ஏதேனும் வருகிறதெனில் காது வழியாய் புகை படர்வது வாடிக்கைஆனால் இன்றைக்கோ – சன்னமானதொரு சட்டிக்குள் குதிரையோட்டிப் பழகிவிட்ட நிலையில் துணைக்கு யாரேனும் வந்தால் தேவலையே என்ற எண்ணம் இல்லாதில்லை. And- பெரிய நிறுவனங்கள் காமிக்ஸ் உலகினுள் கால்பதிக்கும் பட்சத்தில் மீடியாவின் பார்வைகளும் காமிக்ஸ் எனும் துறை மீது விழுவது நிச்சயம்நெல்லுக்குப் பாயும் நீர் – புல்லுக்கும் சற்றே பாய்ந்தாலும் சந்தோஷம் தானேகொஞ்சம் கொஞ்சமாக ‘பொம்மை புக்‘ என்ற stigma விலகிட புதுவரவுகள் உதவிட்டால் அதை விடச் சந்தோஷம் கொள்ளச் செய்யும் சேதிகள் வேறு இருக்க முடியுமாஎன்ன

விழாவின் ஒரு மாலைப் பொழுதினில், அமைப்பாளர்கள் நமது ஸ்டாலுக்கு ஆள் அனுப்பி - நடிகரும், டைரக்டருமான திரு.பொன்வண்ணன் அவர்கள் வரவுள்ளதாகச் சொல்லிச் சென்றிருந்தனர் ! திரு.பொன்வண்ணன் அவர்கள் நமது மூத்த பணியாளர் இராதாகிருஷ்ணன் நம்மிடம் பணியிலிருந்த நாட்கள் முதலாகவே ரொம்பவே ஆர்வமான காமிக்ஸ் ரசிகர் ! ஸ்டாலுக்கு வந்தவர் போனில் ரொம்பவே சகஜமாய்ப் பேசிய கையோடு வாட்சப்பில் போட்டோக்களையும் அனுப்பி வைத்தார் !! பால்யம் முதலே காமிக்ஸ் ரசனைக்குள் ஐக்கியமானது பற்றியும்,  "பாம்புத் தீவு" இதழைப் பற்றியும், இரும்புக்கை மாயவியைப் பற்றியுமவர் சிலாகித்த பொழுது - நமது மின்சார மன்னன் கலக்காத திக்கே கிடையாது என்பது புரிந்தது ! நமது நன்றிகள் திரு.பொன்வண்ணன் அவர்களது  அன்புக்கு ! 

அப்புறம், தொடரக் காத்திருக்கும் திருப்பூர் புத்தக விழாவினில் குறைவான ஸ்டால்களே இடம்பெற இருப்பதால் நமக்கு "இடம் நஹி!" என்று கையை விரித்து  விட்டார்கள்  ! So கோவை & திருப்பூர் மண்டலங்களில் நாம் கடைபோடும் வாய்ப்பு இன்னமும் அமைந்த பாடைக் காணோம் ! காத்திருப்போம் பொறுமையாய் !! சரி, உறக்கம் ஆளை அசத்துவதால் bye சொல்லிவிட்டுப் புறப்படுகிறேன் ! See you around all ! Have an awesome weekend !

280 comments:

  1. 01.படித்துவிட்டு வருகிறேன் நண்பர்களே . . .

    ReplyDelete
  2. அதிகாலை வணக்கங்கள்!
    இளவரசியின் அட்டைகளில் நீங்கள் தேர்வுசெய்தது 4 ஆவதாக இருக்குமோ?

    ReplyDelete
    Replies
    1. //இளவரசியின் அட்டைகளில் நீங்கள் தேர்வுசெய்தது 4 ஆவதாக இருக்குமோ?//

      என் எண்ணமும் அதே :-)

      Delete
  3. ஒவ்வொரு வருடமும், முந்தைய வருடத்தைவிட புத்தகவிற்பனை, வாசகர்களின் எண்ணிக்கை,மீடியாக்களின்
    நமது காமிக்ஸ் மீதான பார்வைகள் என சகலமும் முன்னேற்றம் கண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. . .

    ReplyDelete
  4. மாடஸ்டி 2-வது அட்டை நன்றாக உள்ளது.

    ReplyDelete
  5. இரவு வணக்கம்....நான்காவது நபராக நுழைகிறேன்.....!!!!

    ReplyDelete
  6. முன்றாவது அட்டை....!

    ReplyDelete
  7. Good morning to editor and all comics lovers.

    ReplyDelete
  8. "சட்டமும் சுருக்கு கயிறும்" உங்கள் தேர்வு 3 ம் அட்டை என்று நினைக்கிறேன் ஸார். நடிகரும் டைரக்டருமான திரு. பொன்வண்ணன் ஸார் ஒரு தீவிர காமிக்ஸ் ரசிகர் என்பதும் அவரே நமது ஸ்டாலுக்கு நேரடியாகவே விஐயம் செய்தார் என்று கேட்கும்போது, நெஞ்சம் புழகாங்கிதம் கொள்கிறது.

    ReplyDelete
  9. மன்னிக்கவும் அஹமது அவர்களே...உண்டமயக்கத்தில் சற்றே கண்ணயர்ந்தேன்...!?

    ReplyDelete
  10. பெப்ரவரியில் 4 இதழ்கள்தானே ஸார். கார்டூன் ஆக வெளிவர உள்ள இதழ் என்ன ஸார்?

    ReplyDelete
    Replies
    1. தாங்க்ஸ் ஸார். நான் மறந்தே போய்விட்டேன். சூப்பர்.

      Delete
  11. ஆசிரியரக்கும்,நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்..

    ReplyDelete
  12. ஆகா.!சூப்பர்!இளவரசியின் வருகை ஆனந்ததத்தை தருகிறது.! :-)))))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. அடுத்த இளவரசி கதை அடுத்த வருஷம்தான்னு நெனக்கறப்போ துக்கம் தொண்டைய அடைக்குது......!
      எடிட்டர் சார்....!
      இனிமே மாடஸ்டிக்கு 30,40 ங்குற விலையே வேண்டாம்...!
      60,70ன்னு விலை வச்சு ரெண்டு மூனு கதைகளை ஒட்டு மொத்தம போட்டுடுங்க.....!

      Delete
    2. M.v.சார் இவ்வளவு நாள் ஆக்ஸனில் பட்டயை கிளப்பிய தேவதை இந்த இதழில் கிளாமரில் கலக்க போகிறாள் இதை நினைக்கும் போது குத்தாட்டம் போட தோன்றுகிறது

      Delete
  13. எடிட்டருக்கும், நண்பர்களுக்கும் மற்றுமொரு உற்சாகமான ஞாயிறு காலை வணக்கங்கள்!
    மாடஸ்டியின் காதலரான எடிட்டர் அவர்களே... 'சட்டமும் சுருக்குக் கயிறும்' முன் அட்டைப் படத்தில் மாடஸ்டியின் முகம் 'கரகாட்டக்காரன்' கனகாவைப் போல் இருப்பது சற்றே உறுத்தலாய் இருக்கிறது ( மூக்குக்குக் கீழான வாய், தாடைப் பகுதிகளில் ஒரு muscle கூடிப்போனதே காரணம்!). சற்றே எட்ட வைத்து மொத்த அட்டைப்படத்தையும் ரசிக்கும்போது இந்தக் குறை தெரியாதுதான் எனினும், மாடஸ்டியின் வசியமான முகம் (நான் உள்ளிட்ட) எல்லா மாடஸ்டி ரசிகர்களாலும் உற்றுநோக்கப்பட்டு 'ஙே' க்கு ஆளாக வாய்ப்பிருப்பதாகத் தோன்றுகிறது! ( கார்வினின் முகம் -ஓகே! ஆனால் அவரது தோள்பட்டை சற்றே உயரம் குறைவாக வரையப்பட்டுள்ளதும் ஒரு சிறுகுறையே! ) ஏதாவது செய்யமுடியுமா பாருங்கள் சார்! முன்-பின் அட்டைகளை அப்படியே swap செய்வது சரிப்படுமா என்றும் யோசியுங்களேன் ப்ளீஸ்!

    சென்னை புத்தகத் திருவிழாவில் நமது இதழ்கள் நல்ல விற்பனை கண்டுவருவது மகிழ்ச்சியையும், 'மி.ம' உள்ளிட்ட நமது வெளியீடுகள் ஜாம்பவான்களால் கவனிக்கப்படுவது பெருமைகலந்த ஒருவித த்ரில் அனுபவத்தையும் தருகிறது!
    'திகில் நகரில் தல'க்காக ஆவலோடு வெயிட்டிங்...

    ReplyDelete
    Replies
    1. ///( கார்வினின் முகம் -ஓகே! ஆனால் அவரது தோள்பட்டை சற்றே உயரம் குறைவாக வரையப்பட்டுள்ளதும் ஒரு சிறுகுறையே! ) ஏதாவது செய்யமுடியுமா பாருங்கள் சார்.!///

      குருநாயரே.,

      இது தங்களுக்கே வேடிக்கையாக இல்லை?

      (இதெல்லாம் நெம்ப சாஸ்தி., ஆமா!!! )

      Delete
    2. @ கிட்ஆர்ட்டின்

      உளிகள் ஏற்படுத்தும்
      வலிகள் சிற்பத்திற்கொன்றும் புதிதல்லவே! ;)

      Delete
    3. நம் காமிக்ஸஸில் வரும் நம்மவர் வரைந்த எந்த ஒரு படமும் anatomyயோடு ஒத்து போவது கிடையாது. நான் animation துறையில் இருப்பதாலும்,எனக்கு batchler of fineart நண்பர்கள் நிரைய பேரை தெரியும். மேலும் human anatomy புரிந்து கொண்டு வரைய குரைந்தபட்சம் ஐந்து வருடங்கள் ஆகும்.(எ friend படம் கண்ல ஒத்திக்ற மாதிரி வரைவாங்க)

      Delete
    4. "கரகாட்டக்காரன் கனகா மாதிர்.!"

      ஹாஹாஹாஹாஹாஹா........!

      Delete
    5. Erode VIJAY : எனக்குக் கூட நம்மாள் கார்வினைப் பார்க்கும் போது மீசையில்லா ராமராஜனைப் போல் தெரிகிறது ! So ஜோடிப் பொருத்தம் o.k. தானே ?

      Delete
  14. ஞாயிறு வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.

    ReplyDelete
  15. இளவரசியின் அட்டை படம் இரண்டாவதை தவிர மற்ற மூன்றும் எடுப்பாகவே உள்ளன.

    ReplyDelete

  16. கும்புட்டுக்கிறேனுங்க!!!

    ReplyDelete
  17. வணக்கம் எடிட்டர் சார்...!
    வணக்கம் நண்பர்களே....!

    ReplyDelete
  18. சார் ...

    நீங்கள் இளவரசிக்கு எந்த அட்டை தேர்ந்தெடுத்து உள்ளீர்களோ தெரியவில்லை .ஆனால் எனக்கு "மஞ்சள் முகமே வருக"என்ற இனிய பாடலோடு முதல் அட்டை நிரம்ப பிடித்துள்ளது ..;-)

    ReplyDelete
  19. ///! அந்தத் தேர்வு எதுவாகயிருக்குமென்று யூகித்துப் பார்க்கலாமே?///

    மூன்றாவது நிரம்ப பிடித்திருக்கிறது. (எனக்கு) . மற்றபடி நான்குமே நன்றாகவே இருக்கின்றன.!

    ReplyDelete
  20. சார் எப்படியோ ..எந்த விதத்திலோ ...ஆயிரம் பக்க மொட்டுக்கள் மலர்ந்தால் சரி ...அது வண்ண வண்ண பூக்களாக இருந்தாலும் சரி ..ஆனால் விரைவில் பூ மலர நீரை ஊற்றி வாருங்கள் ...பறித்து பூச்சூட ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறோம் ..எந்தெந்த மலரை மலர செய்ய வேண்டும் என்று இப்போது இருந்தே திட்டமிட்டு விடுங்கள் ...ஆனால் மலரின் தொகுப்பு ....மி்.மரணம் ...lms என்ற ரோஜா மொட்டுகள் போல அமையாமல் மெகா ட்ரீம் ஸ்பெஷல் ..இரத்த படலம் போல தாமரை மொட்டுகளாக மலர செய்யுங்கள் ...



    விடியுல் மலரை நோக்கி ஆவலுடன் காத்திருக்கும் ...


    பூந்தோட்ட காவல்காரன் பலர்......
    ;-)

    ReplyDelete
    Replies
    1. @தலைவரே:
      //மெகா ட்ரீம் ஸ்பெஷல் ..இரத்த படலம் போல தாமரை மொட்டுகளாக மலர செய்யுங்கள்//

      சூப்பர் தலைவரே :-):-):-)

      எடிட்டர் சார் ' இரத்தப்படலம்' complete collection in color
      கூட ட்ரை பண்ணலாமே சார்...

      Delete
  21. /// ஒவ்வொரு லாத்தலான வேளையினிலும் - ஏதேனுமொரு மெகா இதழின் மகா சிந்தனை (!!!) என் தலைக்குள் ஓடிக்கொண்டே இருப்பது தான் வாடிக்கை ! சரியான சந்தர்ப்பம் அமையும் போது - அலாவுதீன் பூதம் போல அறிவிப்பும் உங்கள் முன்னே ஆஜராகி நிற்கும் !! ///


    அந்த சரியான சந்தர்ப்பம் சீக்கிரமே வரவேண்டும் என்பதே எங்கள் அனைவரின் ஆசை சார்.!

    ///திரும்பிய திசையெல்லாம் டெக்ஸ் தான் என 2016-ன் அட்டவணை ஆன பிற்பாடு – இது போன்றதொரு தொகுப்பினுள் இன்னொரு ராட்சஸ டெக்ஸ் கதையைச் செருகிடும் பட்சத்தில் – திகட்டிப் போய் விடாதா?///

    ஆனால் நண்பர்களில் ஒருவர்கூட இதனை பதிவு செய்யவில்லை என்பதும் , அந்த நீளமான டெக்ஸ் கதைக்கு இந்த ஷ்பெசலே சரியான வாய்ப்பு என்பதும் சிறியேனின் சிறு கருத்து சார்.!

    ReplyDelete
    Replies
    1. அடியேனின் கருத்தும் ...

      Delete
    2. எனக்கு டெக்ஸ் கதைகள் சுத்தமாக பிடிப்பது இல்லை. என்னை மதிரி ஆட்கள் minority என்றாலும் எங்கள் உணர்வுகளுக்கு கெஞ்சமாவது மதிப்பு கொடுங்கள்.

      Delete
  22. மாடஸ்டி ஸ்பெஷல் குண்டு புக் ஒன்று போடுங்க சார்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்.. ஆமாம்... அதானே...:-)

      Delete
    2. நிச்சயம் வேண்டும்.....!

      Delete
    3. கண்டிப்பாக வேண்டும் ஆசிரியரே

      Delete
    4. ravanan iniyan & others : தலைவி ஸ்லிம்மாக...சிக்கென்று இருப்பது தானே அழகு ? So தலைவியின் இதழ்களையும் அதே பாணியிலேயே தொடர்வோமே ?

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. ராவணன் சார்.! சூப்பர்.! சூப்பர்.!அருமையான ஐடியா.!இனிப்பான செய்தி சொன்ன உங்களுக்கு., உங்கள் வாயில் சர்க்கரை அள்ளி போடவேண்டும்.!

      Delete
    7. அதான் எடி கடிவாளம் போட்டுட்டாரே..அப்புறம் எங்கே சா்க்கரையைப் போடுவது..?! பெவிக்கால் வேணா ஆா்டர் பண்ணலாம்..!

      Delete
  23. ஆரம்பத்தில் மாதகடைசி என்றாலே வெறுப்பும் ...சலிப்பும் ஏற்படும் ...இப்போது எல்லாம் மாத கடைசி ஆனவுடனே நமது இதழ்கள் பாய்ந்தோடி வரும் செய்தியே அந்த வெறுப்பையும் சலிப்பையும் மறந்தடித்து விடுகிறது ....


    போட்டிக்கு எத்தனை இதழ்கள் வந்தாலும் உங்கள் இதழ்களுடன் போட்டி இடும் அளவிற்கு இதழ்கள் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை ....

    ஏற்கனவே ஒரு மெகா இதழை ஆவலுடன் வாங்கி ஏமாந்து போன நண்பர்கள் பலர் ...

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : அட..போட்டியாவது, புடலங்காயாவது தலீவரே ! நாம் ஆடுவது ஜாலியான தெருமுனை கிரிக்கெட் ! பெரியவர்கள் ஆடினால் களம் வேறாக இருக்குமன்றோ ?

      Delete
    2. உண்மை தான் ஆசிரியரே ...

      ஆனால் எவ்வளவு பெரிய டீம் போட்டிக்கு வந்தாலும் "சென்னை 28" போல தெருமுனை பசங்களான நமது வெற்றி என்றுமே உறுதியானது சார் ...

      Delete
    3. ஹா..ஹா..!!சந்திர நாசம் தானே தலைவரே..!

      Delete
    4. ஹா..ஹா..!!சந்திர நாசம் தானே தலைவரே..!

      Delete
  24. வணக்கம் காமிக்ஸ் நண்பர்களே... மாதம் ஒரு முறை நான்கு இதழ்கள் வெளியிடுவதற்கு பதிலாக மாதம் இருமுறை இரண்டு இரண்டு இதழ்களாக வெளியிடலாமே.. கூரியர் சார்ஜ் தான் அதிகமாகும்.... நான் வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு போயிட்டேனுங்கோ... உருட்டு கட்டையோடு ஆட்டோ அனுப்பி பிரயோஜனம் இல்லீங்கோ....

    ReplyDelete
    Replies
    1. எப்போ ஊருக்கு திரும்புவிங்க கரூராரே!?
      இல்லேன்னா எந்த ஊருக்கு போயிருக்கிங்கன்னு சொன்னா கூட போதும்!
      (ஆட்டோ தயாரா இருக்கு! )

      Delete
    2. கிட் ஆர்ட்டின் கண்ணன்.!

      ஹாஹாஹாஹா.......!

      Delete
  25. மாடஸ்டிக்கு உடை விஷயத்தில் தாரளமய கொள்கைக்கு மாறியதற்கு நன்றி!பிப்ரவரி இதழ்கள் எப்போது எங்கள் கையில் கிடைக்கும்?

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : இது தவிர்க்க இயலாத் தாராளமயம் நண்பரே ! So தற்காலிகமானதே !!

      Delete
    2. தற்காலிகம் என்பதை தற்காலிகமா நிறுத்தி வைக்க கூடாதா?(ஓரு இருபது வருஷம் தற்காலிக நிறுதூங்களேன்)

      Delete
  26. ///காமிக்ஸ் எக்ஸ்பிரஸ்‘ முயற்சியானது வாங்கிய தர்ம அடியில் சில பல காலத்திற்கு இந்தக் கதையைக் கையில் ஏந்திடவே தயக்கமாகயிருந்தது! ////

    என் ஞாபகசக்தி சரியெனில்.

    டைகரின் பரலோக பாதை

    வில்லரின் தி.நகரில் டெக்ஸ்

    லக்கியின் ஜேன் இருக்க பயமேன்.

    கடோசியா பெயர் மறந்து போன மாயாவி மாமாவோட கதை ஒண்ணு.

    காமிக்ஸ் எக்ஸ்ப்ரெஸில் வந்தது மேற்கண்ட நாலு கதைகள்தானே! (இரும்புக்கை எத்தன் இதழோடு வந்ததாக நினைவு)

    ஜேன் இருக்க பயமேன்.,
    பரலோக பாதை இரண்டும் அப்போதே வெளியாகிவிட்டன.
    இப்போது திகில் நகரில் டெக்ஸ் ம் வரப்போகிறது.
    அந்த ஸ்டீல் கை அங்கிள் கதை வெளியாகிவிட்டதா சார்?

    ReplyDelete
    Replies
    1. யெஸ்....!
      மெகா டரீம் ஸ்பெஷலில் 'பூமியிலோர் படையெடுப்பு' என்ற பெயரில் மறுபதிப்பாக வந்தது.!
      அதன் முதல் பதிப்பு ரொம்ப காலத்துக்கு முன்பாக முத்துவில் 'சைத்தான் சிறுவர்கள்' என்ற பெயரில் பாக்கெட் சைஸில் வந்துள்ளது....!

      Delete
  27. “சட்டமும், சுருக்குக் கயிறும்” அனேகமாக 3வது அட்டைபடம் தேர்வாகியிருக்கும் என்பது என் கணிப்பு

    ReplyDelete
  28. அதென்ன கார்டூன் ஓக்லஹோமாவைப் பற்றி ஒன்றும் குறிப்பிடாமல் விட்டு விட்டீர்..!

    ReplyDelete
    Replies
    1. Guna Karur : பாருங்களேன் போன வாரத்துப் பதிவை !

      Delete
    2. ஆமால்ல..ஹி..ஹி..!

      Delete
  29. ///, "பாம்புத் தீவு" இதழைப் பற்றியும், இரும்புக்கை மாயவியைப் பற்றியுமவர் சிலாகித்த பொழுது - நமது மின்சார மன்னன் கலக்காத திக்கே கிடையாது என்பது புரிந்தது ! நமது நன்றிகள் திரு.பொன்வண்ணன் அவர்களது அன்புக்கு ! ///

    அருமை சார்.!


    இன்னொரு பிரபல நாவலாசிரியரும் ஸ்டாலுக்கு வருகை தந்திருந்து., இரும்புக்கை மாயாவியை மிகவும் சிலாகித்ததோடு., பல இதழ்களை வாங்கிச்சென்றதாக கேள்விப்பட்டோம் சார்.! !

    மிகவும் சந்தோஷமாக உணர்கிறோம்!!!

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : //இன்னொரு பிரபல நாவலாசிரியரும் ஸ்டாலுக்கு வருகை தந்திருந்து., இரும்புக்கை மாயாவியை மிகவும் சிலாகித்ததோடு., பல இதழ்களை வாங்கிச்சென்றதாக கேள்விப்பட்டோம் சார்.! ! //

      எனக்கே இது செய்தி நண்பரே !

      Delete
  30. Sunday coffee with vijayan:

    மாடஸ்டியின்,மூன்றாவது அட்டைபடம் நன்றாக இருப்பதாக படுகிறது.
    சென்னை புத்தக விழாவில் காமிக்ஸ் விற்பனை களைகட்டியிருப்பது மகிழ்ச்சி.
    1000பக்க கதம்ப இதழுக்கான, உங்கள் விளக்கத்தை பார்த்தபிறகு, கதம்ப இதழ் இவ்வாண்டே மலரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது:-)

    ReplyDelete
    Replies
    1. ///1000பக்க கதம்ப இதழுக்கான, உங்கள் விளக்கத்தை பார்த்தபிறகு, கதம்ப இதழ் இவ்வாண்டே மலரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது///

      அடுத்த பதிவிலேயே அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது! ;)

      Delete
    2. //ஆஹா.....
      எப்படி Ball போட்டாலும் கோல் போட்டுற்றாங்களே..//

      Delete
    3. @ Friends : நான் சரியாத் தானே பேசிட்டிருக்கேன்...?

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  31. 'துப்பாக்கியும், பிச்சுவா கத்தியும்' அந்த மூன்றாவது பச்சை வர்ண அட்டைப்படத்தின் மேல் எனக்கொரு ஈர்ப்பு அதிகமாகவேயிருக்கிறது!

    போன முறை 'முத்து'வில் உலாவந்த இளவரசி இந்த முறை லயனில், ஏனிந்த 'அந்தர் பல்டி'...?

    ReplyDelete
    Replies
    1. இதைப் பார்க்கும்போது எனக்கு கவுண்டரின் 'நம்ம நாட்டுல பஸ் டைம் மாறிப்போச்சு, ரயில் டைம் மாறிப்போச்சு, மந்திரி சபை மாறிப்போச்சு, என்ன என்னவோ மாறிப்போச்சு ஏன் இது மாறக்கூடாதா' காமெடி தான் நினைவுக்கு வருகிறது...

      Delete
    2. MH Mohideen : 'அந்தர் பல்டி' அல்ல சார் ; ஒவ்வொரு டிசைனுக்கும் barcode நம்பர் செட் பண்ணும் வேளையில் தான் அததன் லோகோ, மற்றும் வெளியீட்டு நம்பர்கள் சரிபார்க்கப்படும் ! அது வரையிலும் நம்மாட்கள் கைக்குச் சிக்கியதைப் போட்டுப் பார்த்திடுவது வழக்கம் ! அதனால்தான் டிசைன்களுக்குக் கீழே "பூர்த்தியடையா ராப்பர் இது" என்று போடுவது !

      Delete
  32. Good Morning friends and editor sir
    Thank You editor sir for thinking along 1000+ pages

    ReplyDelete
  33. எடிட்டர் அவர்களுக்கும் காமிக்ஸ் தோழர்களுக்கும் இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  34. இனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!
    இனிய காலை வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  35. @எடிட்டர் சார்:
    நமது ஆஸ்தான நாயகர் 'தல' டெக்ஸின் 'ஒரு நாயகன் ஒரு சகாப்தம்' என்னவாயிற்று சார்?!

    ReplyDelete
    Replies
    1. Sathiya : ஏற்கனவே இங்கு அதுபற்றிப் பேசியிருக்கிறோம் தானே சத்யா !

      Delete
  36. எங்கள் காமிக்ஸ் உலக அண்ணா விஜயன் அவர்களுக்கும் மற்றும் நம் நண்பர்களுக்கும் இனிய ஞாயிறு வணக்கம்

    ReplyDelete
  37. இன்னொரு பிரபல நாவலாசிரியரும் ஸ்டாலுக்கு வருகை தந்திருந்து., இரும்புக்கை மாயாவியை மிகவும் சிலாகித்ததோடு., பல இதழ்களை வாங்கிச்சென்றதாக கேள்விப்பட்டோம் சார்.! !

    மிகவும் சந்தோஷமாக//// உணர்கிறோம்!!!/////கண்ணன், அடிச்சி கேட்டாலும் அந்த பிரபலம் எழுத்தாளர் பட்டுகோட்டைபிரபாகர்தான்னு சொல்லிடாதீங்கோ:-)

    ReplyDelete
    Replies

    1. சுந்தர் @ ,
      கூழாங்கற்களில் மின்சாரம் தயாரிக்கும் ஆராய்ச்சி செய்த "சேட்டை கோபி " யின் சாகசத்தை நேற்றும் படித்தேன் என்பதையும் சத்தியமாக சொல்லவே மாட்டேனே!!!

      Delete
    2. ப.கோ.பி.யின் பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் நினைவில் இருக்கிறது.!

      Delete
    3. Dr.Sundar,Salem.: ஆஹா...எனக்கே தெரியாத விஷயம் !!

      Delete
    4. @ திரு விஜயன்

      இரும்புக்கை மாயாவி எவ்வளவு ஆழமாக தமிழர்கள் நெஞ்சில் வேரூன்றியுள்ளார், காமிக்ஸ் மேல் உள்ள காதல் இன்னும் எவ்வளவு பசுமையாக பலர் நெஞ்சங்களின் உறங்குகிறது..? காமிக்ஸ்கள் வருவதே தெரியாமல் எத்தனைபேர் வெறும் நினைவுகளை மட்டுமே சுமந்துகொண்டு உலாவருகிறார்கள் என்பதற்கும், "ஆஹா...எனக்கே தெரியாத விஷயம் !!" என நீங்கள் ஆச்சரியபடறதுக்கும் உள்ள தூரத்தை இந்த ரெண்டு PKP பேஸ்புக் கிளிக் கொஞ்சம் குறைக்க உதவும்ன்னு நினைக்கிறேன்..!

      இங்கே'கிளிக்'-1
      இங்கே'கிளிக்'-2

      Delete
    5. சென்னை புத்தகத்திருவிழாவில் நமது காமிக்ஸ் ஸ்டாலில் 'புதியதலைமுறை டிவியினர்' எடுத்த வாசகர் பேட்டிகள் பற்றிய குட்டி வீடியோ தொகுப்பை பார்க்க...இங்கே'கிளிக்'

      Delete
    6. ஹலோ..க்ளிக் ஜி! வந்தாச்சா..!போன வாரம் ஆளயே காணலியே..! ரொம்ப பொங்கீட்டீங்ளோ..!

      Delete
  38. எடிட்டர் சார்....!
    "பெரிய நிறுவனங்கள் காமிக்ஸ் உலகினுள் கா
    ல்பதிக்கும் பட்சத்தில்........"
    என்ற உங்களது வரிகள் ஏதோவொரு செய்தியை மறைமுகமாகச்சொல்கிறதே....?
    புதிதாய் ஏதாவது காமிக்ஸ் இதழ் வரப்போகிறதா என்ன....?

    ReplyDelete
    Replies
    1. ஜேடர்பாளையம் சரவணகுமார் : //புதிதாய் ஏதாவது காமிக்ஸ் இதழ் வரப்போகிறதா என்ன....?//

      வரும் வாய்ப்புகள் பிரகாசம் என்று சொல்ல வந்தேன் சார்! கொஞ்ச காலமாகவே நிறையப் பதிப்பகங்கள் நம்மை சத்தமின்றிக் கவனித்து வருகின்றன ! காமிக்ஸ் ரசிப்பதொரு சிறு வட்டமெனினும்,இது கவனத்தைக் கோரும் வட்டமல்லவா ? So நிறையப் பேருக்கு இதனில் கால்பதிக்கும் அவா ஏற்படுவதில் வியப்பில்லை ! ஆனால் மார்கெட்டில் காமிக்ஸ் என்றவுடன் விற்பனையாளர்கள் தந்துவரும் சுரத்தில்லா வரவேற்பே இதுநாள் வரையிலும் புது வரவுகளை இத்துறைக்குள் நுழைவதில் தயக்கம் காட்டச் செய்து வருகின்றன !

      Delete
  39. நடிகர் பொன்வண்ணன் நமது ஸ்டாலுக்கு வருகை தந்தது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது...

    உண்மையைச் சொல்வதனால் நமது காமிக்ஸ் திரும்பவும் வெளிவருவது நிறையப் பேருக்குத் தெரியவில்லை...

    அவர்கள் அனைவருக்கும் இரும்பு க்கையார் திரும்பவும் வெளியீடு செய்யப் படுகிறார் என தெரிய வரும்பொழுது தான், நமது இரும்புக்கையாரின் ரசிகர்களின் விஸ்வரூபம் தெரிய வரும்...

    அந்த அளவுக்கு அனைவரையும் கவர்ந்துள்ளார் இரும்புக்கையார்!!!

    அவருக்கு 'க்ராண்டேல்' என ஆங்கில பெயரையே தமிழில் வைக்காமல் அனைவரையும் கவரும் வகையில் 'இரும்புக்கை மாயாவி' எனப் பெயர் வைத்து பட்டி தொட்டி எங்கும் பரவ வைத்த பெருமை நமது சீனியர் எடிட்டரையே சாரும்!!!

    எடிட்டர் சார்:'சீனியரின் சிறுவயதில்' எப்போ சார்?!

    ReplyDelete
    Replies
    1. Sathiya : //'க்ராண்டேல்' என ஆங்கில பெயரையே தமிழில் வைக்காமல் அனைவரையும் கவரும் வகையில் 'இரும்புக்கை மாயாவி' எனப் பெயர் வைத்து பட்டி தொட்டி எங்கும் பரவ வைத்த பெருமை நமது சீனியர் எடிட்டரையே சாரும்!!!//

      Of course !!

      Delete
  40. Dear Editor,

    Instead of going for the discussion of 500, 1000, 1500 pages, etc. Please give importance to the quality of the stories/art/characterization/better translation/Story prologue.

    Captain Tiger (Blueberry) books really need a good prologue. Hope you do some ground work on that, in the forthcoming Tiger collection and future books. I have all the limited hardcover edition of Blueberry released by Graphitti Designs(http://www.graphittidesigns.com/), we can't compare our Minnum Maranam collector edition with the Graphitti design's blueberry books on the art size or the production quality, since the price range of Graphitti design is of difference universe. But one thing we can compare is the prologue/forward to the story, which our Minnum Maranam collection miserably fails.

    Don't go for any cocktail specials from Bonelli Editore in the future. Please give every story/character his-her own space.

    Thanks
    Rama

    ReplyDelete
    Replies
    1. @ வரா வரம் வந்து பதிவிங்கள் அல்லது மாதம் இருமுறை பதிவிங்கள். நம்ம பிளாக்ல வரவங்க கரகாட்ட கோஷ்டி மாதிரி ஓரே ஆட்டத ஆடிக்கிட்டு இருப்பாங்க.

      Delete
    2. @Ganeshkumar Kumar

      ரமா கார்த்திகை அவங்களோட கருத்தை ஆசிரியருக்கு சொல்லியிருக்கிறார்கள்,
      அதுக்கு நீங்க ஏங்க கரகாட்ட கோஷ்டிய எல்லாம் கூப்பிடுரீங்க,

      இந்த காமிக்ஸ் தளம் உள்ளவரை கரகாட்ட கோஷ்டியும் இருக்கும் ;)

      Delete
    3. Rama Karthigai : ஒவ்வொருவருக்குமொரு ரசனை...ஒவ்வொரு அபிப்பிராயம் ! கூட்டணி இதழ்களின் விஷயத்திலும் இது தானே நடைமுறை ?

      Delete
  41. ஆசிரியரே இந்தியா டெஸ்ட்டில் நம்பர்1 இடத்தை பிடித்தால் ஸ்பெஷல் இதழ் தருவதாக வாக்குறுதி கொடுத்தீர்கள் இப்போது இந்தியா நம்பர்1 இடத்தை பிடித்து விட்டது ஸ்பெஷல் பற்றிய அறிவிப்பு எப்போது சீக்கிரம் ஆசிரியரே அரசியல்வாதிகள் போல் இல்லாமல் கொடுத்த வாக்குறுதியை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என நம்பும் காமிக்ஸ் ரசிகர்கள்

    ReplyDelete
    Replies
    1. அடுத்தவன் தோத்து நாம் no1 ஆக கூடாது, செந்தில் அய்யா...
      நாம ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, சவுத்ஆப்பிரிக்கா என டெஸ்ட்ல செயித்து டாப்புக்கு வரனும்...ஹீ..ஹீ..ஹீ...

      Delete
    2. எவன் எப்படி தோத்தா என்ன டெக்ஸ் சார் ...நாம் வெற்றி பெற்று விட்டோம் அல்லவா ...அது போதும் ...

      முதலிட ஸ்பெஷல் புத்தகம் கூட ஆயிரம் பக்கத்தில் வரலாமே ...;-)

      Delete
    3. நாம இன்னும் செயிக்கல தலீவர் அய்யா....
      அட டாப்புக்கு வர வேணாம்...
      ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இரு இடங்களிலும் போய் வெற்றி பெறவில்லை... அங்கே போய் தொடரை வென்று வரும் பட்சத்தில் இரத்த படலம் வண்ண மறுபதிப்பை ,ஆசிரியர் ஏற்கெனவே உறுதி அளித்தவாறு கேட்கலாம்... அதுதான் உண்மையான வெற்றி மலர்...

      Delete
    4. @ Friends : நம் வலுவினில் ஜெயித்து விட்டு காலரைத் தூக்கி விட்டால் சிறப்பாக இராதா ?

      Delete
    5. கிரிக்கெட்ல எத்தனை கோல் போட்டா ஜெயிக்க முடியும் ன்னு கூட எனக்கு தெரியாதெ டெக்ஸ் ..ஆனால் ஆசிரியர் இந்தியா வெற்றி பெற்றால் சிறப்பிதழ் என்றால் அது எவ்வாறு எங்கே எப்படி கோல் போட்டாலும் சரி ...;-)

      Delete
  42. வணக்கம் சார்.....
    வணக்கம் நட்பூஸ்....
    ///குரூரமாய்க் கொலையுண்டு போகும் அழகுப் பெண்களின் எமன் யாரோ? என்பதை டெக்ஸோடு துப்பறிந்திடும் இந்த அனுபவத்தை எழுதும் போது ரொம்பவே ரசித்தேன் ////---ஆகா , "டிடெக்டிவ்" டெக்ஸ் -என பேர் வாங்கி தர காத்திருக்கும் சாகசத்தை எதிர்நோக்கி....

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : ஒரு விதத்தில் இது ரிப்போர்ட்டர் ஜானி சாகசம் போலிருக்கும் என்றால் பாருங்களேன்...!

      Delete
    2. வாவ் ....வாவ்..சூப்பர் சார்...
      கொளபாய்ஸ் க்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த தொடர் ஜானி,பிரின்ஸ் ..
      ஜானியைப்போலவே என்றால் முடிவும் எதிர்பாராத ஒன்றாகவே அமையும்...
      இப்போதே வெளியீட்டு தேதிக்காக ஏங்க வைத்து விட்டீர்கள் சார்.....

      Delete
    3. அப்பண்னா இந்த கதை எனக்கு புடிக்கும் போல தெரியுது. பார்போம்!@@

      Delete
  43. விஜயன் சார், இளவரசியின் அட்டைபடம் அருமை, அதுவும் கார்வினுடன். கார்வின் முகத்தை இன்னும் கொஞ்சம் சிறப்பாக கொண்டு வந்து இருக்கலாம் :-( மஞ்சள் கலர் background அட்டைபடம்தான் சிறப்பாக உள்ளது.

    திகில் நகரில் டெக்ஸ் அட்டை படத்தை காண்பிக்கலாமே? கதையை படிக்க ஆர்வமுடன் உள்ளேன்.

    இந்த வருட அட்டவணையின் சிறப்பு, மாதம்தோறும் நான்கு புத்தகம்கள், அதில் ஒன்று மும்மூர்த்தி, காமெடி (குழந்தைகளுக்கு), டெக்ஸ், புதிய கதை என வீட்டில் உள்ள அனைவரையும் கவரும் வகையில் அமைத்தது சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : "திகில் நகரில் டெக்ஸ்" cover தான் இரு வாரங்களுக்கு முன்பாகவே பார்த்து விட்டோமே சார் ?

      Delete
    2. சாரி. மறந்து விட்டது!

      Delete
  44. மாடஸ்டி அட்டைப்படம் மஞ்சள் வண்ண பின்னணியில் அருமையாக உள்ளது சார்.....!

    ReplyDelete
  45. எடிட்டர் சார் பிப்ரவரி மாத நான்காவது இதழ் என்னவென்று சொல்ல வில்லையே? அப்படியே பிப்ரவரி இதழ்கள் அனுப்பப்படும் நாளையும் தெரிவித்து விடுங்கள். மாதம் நான்கு புத்தகங்கள் போதவில்லை சார். மாதமிருமுறை நான்கு இதழ் என்றிருக்ககூடாதா என்று மனம் ஏங்குகிறது சார். அதுவும் பிப்ரவரி மாதம் அறிவித்த மூன்று கதைகளும் நாளையே பிரதிகள் கூரியரில் புறப்படாதா என்று ஆவலை ஏற்படுத்திவிட்டன சார்.

    ReplyDelete
    Replies
    1. Rajendran A.T : போன வாரமே லக்கி லூக்கின் "ஒரு பட்டாப் போட்டி" preview பார்த்து விட்டோமே சார் ? அது தான் பிப்ரவரியின் இதழ் # 4 !

      Delete
  46. ///மெகா இதழின் மகா சிந்தனை (!!!) என் தலைக்குள் ஓடிக்கொண்டே இருப்பது தான் வாடிக்கை ! சரியான சந்தர்ப்பம் அமையும் போது - அலாவுதீன் பூதம் போல அறிவிப்பும் உங்கள் முன்னே ஆஜராகி நிற்கும் !! ////---இதுபோதுமே......
    இதுதான் அந்த டிஸ்கசனின் நோக்கம் சார்..
    உங்கள் பாணியில் சொல்வதானால், கூப்பிடு தூரத்தில் 2 million hits ஸ்பெஷல் காத்துள்ளது சார்...
    இன்னும் சற்றே பொறுத்து பார்த்தால் முத்து 400, லயன் 300என வரீசையாக தங்க தருணங்கள் வர உள்ளன...
    சாய்ஸ் ஈஸ் யுவர்ஸ் சார்....ஹீ..ஹீ..ஹீ..
    ஆனால் 1000 பக்கங்கள்,ஒரே புத்தகமாக வந்தே தீரணும் சார்....

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : 2 மில்லியனைத் தொட இன்னமும் 8 மாதங்கள் உள்ளன ! And லயன் 300 - முத்து 400 - என சகலமும் 2017-க்குத் தான் சாத்தியப்படுமல்லவா ?

      Delete
    2. ///இன்னமும் 8 மாதங்கள் உள்ளன///--அப்ப தீபாவளி & 2மில்லியன் ஹிட் ஸ்பெசல்னு இரு டைட்டில்கள் ஒரே இதழுக்கு எதிர்பார்க்கலாம் போல...சார்...

      /// And லயன் 300 - முத்து 400 - என சகலமும் 2017-க்குத் தான் சாத்தியப்படுமல்லவா ?///--- குழப்புதே, இந்த 8 மாதங்களில் இல்லை...2017வெகு தூரத்தில்...
      அப்டீன்னா....அப்டீன்னா.....
      ஆகா 2016ல் என்னவோ திட்டம் இருக்கு....

      Delete
    3. ///குழப்புதே, இந்த 8 மாதங்களில் இல்லை...2017வெகு தூரத்தில்...
      அப்டீன்னா....அப்டீன்னா.....
      ஆகா 2016ல் என்னவோ திட்டம் இருக்கு....///

      ஜூன் மாசம் எனக்கு ஆப்பீ பர்த்டே வருது.!!!

      (பேட் வேர்ட்ஸ் பேசாதீகப்பு)

      Delete
    4. சூனுக்கு முன்பே என்னுடைய பிறந்த நாள் ஏப்ரலில் வர்ரதுங்கோ....
      அந்த ஏப்ரல் கி.நா. சந்தா கூடவே இந்த க.வெ. ஆயிரமலர் அறிவிப்பும் வருமோ????.....

      Delete
  47. As erode vijay suggested the anatomy is not correct... please correct it.

    ReplyDelete
  48. T-SHIRT என்னாச்சு. Size எதுவும் கேப்பிங்களா. இல்லாங்காட்டிக்கு எல்லா ருக்கும் free size தான.

    ReplyDelete
    Replies
    1. டீ சர்ட் விரைவில் ...சைஸை சந்தாவில் குறித்து அனுப்ப சொன்னார்களே நண்பரே ...

      மறந்து விட்டீர்களா ....;-))

      Delete
    2. அப்படியா நான் சரியா படிக்காம இல்லைன்ன பதிவ பார்க்காம விட்டுருப்ப. தகவலுக்கு நன்றி.(ஆன onlineல கட்டபோது எப்படி size சொல்ல முடியும்.)

      Delete
    3. Please senf mail to editor with you t_shirt size.

      Delete
    4. @ ALL : இந்த வாரம் டி -ஷர்ட் ஆர்டர்களை இறுதி செய்யும் வேலைகளைத் துவங்கிடவுள்ளோம் ! So இதுவரையிலும் சைஸ் தெரிவித்திருக்கா நண்பர்கள் உடனே உங்கள் சந்தா நம்பர்களோடு ஒரு மின்னஞ்சல் தட்டிவிடக் கோருகிறேன் !

      Please note - இது குறைந்த பட்சம் 3 வகைச் சந்தாக்களுக்காவது (A+B+C or A+B+D) subscribe செய்திருக்கும் நண்பர்களுக்கு மாத்திரமே !

      Delete
    5. சார் எனக்கு சைஸ் எல்லாம் தெரியாது ..இருக்கிறதிலேயே சின்னதா இருக்கிறதை அனுப்பினால் போதுமானது ...;-)

      Delete
    6. சந்தா எண்ணா???? சரி அத office போன் போட்டு கேட்டுக்குற. DCTC என்ன வேகம் சனிக்கிழமை onlineல கட்டிட்டு திங்கள் கிழமை 10 மணி அனுப்பிட்டிங்களா விசாரிச்சுட்டு வைக்கிற அடுத்த நிமிடம் சார் உங்களுக்கு courier ன்னு கால் வருது......

      Delete
  49. எத்தனை காமிக்ஸ் காமிக்ஸ் பதிப்பகங்கள் வந்தாலும்,தமிழ் காமிக்ஸ் ரசனை உங்களால் உருவாக்கப்பட்டது.அது காலப்போக்கில் உங்கள் ரசனை+வாசகர்கள் வழிநடத்தல் என்று சென்றுகொண்டிருக்கிறது.

    " ஊருல இலட்சக்கணக்கில் வாசகரசிகர்களை வைச்சிருக்கிவனெல்லாம் சந்தோசமா இருக்கான் நான் ஆயிரக்கணக்கில் வாசகரசிகர்களை வைத்துக்கொண்டு நான் படுற அவஸ்தை இருக்கே........அய்யய்யய்யோ" என்று சந்தானம் பாணியில் புலம்புவது தெரிகிறது.இனி எப்படி இருக்கும் என்பதை நான் அறிய ஆவலுடன் உள்ளேன்.!

    ReplyDelete
    Replies
    1. Madipakkam Venkateswaran : சார் ...கண்ணாடியில் முகம் பார்க்கும் வேளைகளில் யதார்த்தமே பிரதிபலிக்கும் ! வயதாகும் வேளைகளில் வெண்முடிகள் அரும்பத் தொடங்கினால் - பிம்பத்திலும் அது தானே தெரியும் ? அதற்கென கண்ணாடியை நோவுகிறோமா - என்ன?

      வாசக அபிப்பிராயங்களும் அதே போலத் தானே - நம்மிடமுள்ள நிறை-குறைகளின் வெளிப்பாடுகளாய் அமைவதனில் ? So "அவஸ்தை" என்று சத்தியமாய் ஒருநாளும் நான் எண்ணியதே கிடையாது !

      Delete
    2. //அவஸ்தை என்றும்ம் ஒருபோதும் நினைத்தது கிடையாது.//


      நன்றி சார்.!

      Delete
  50. லயன்&ராணி காமிக்ஸில் இதுவரை வந்த இளவரசியின் கதைகளை கணக்கெடுத்து ஆசிரியருக்கு உதவுங்கள் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. பக்கா பட்டியல் பல வருடங்களாக TCU வில் காத்திருகின்றனவே..! பார்க்க..இங்கே'கிளிக்'

      Delete
  51. இன்மொரு கேள்வி இந்த வருடம் சந்தா கட்டியவர்கள் எண்ணிக்கை போன வருடத்திற்கு அதிகமா,கம்மியா(சந்தா கட்ன உரிமயில கேக்குற சொல்லுங்க)

    ReplyDelete
    Replies
    1. போன வருட எண்ணிக்கையை இன்னும் தொட வில்லை என்று போன பதிவில் அறிவித்து இருந்தாரே ....


      மறந்து விட்டீர்களா நண்பரே ...;-))

      Delete
  52. எடி,ஸார்.
    மாடஸ்டியின் மூன்றாவது அட்டைப்படம் உங்கள் தேர்வாக இருக்கும் என்று நினைக்கிறேன்.அட்டைப்படத்தில் ஒரு குறை உள்ளது கார்வினுக்கு பதில் அடியேனை போட்டிருந்தால் இன்னும் பிரமாதமாக வந்திருக்கும் ஹி ஹி.

    ReplyDelete
    Replies
    1. Jaya Kumar : இந்தக் கதையில் கார்வினும் வில்லனை போட்டுப் பின்னி எடுப்பார்....அதைப் பார்த்தான பின்னேயும் நீங்கள் இதே கோரிக்கையை முன்வைக்கிறீர்களா என்பதைப் பார்க்கலாமே நண்பரே !!

      Delete
  53. எடிட்டர் சார் குண்டு புத்தகம் உங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதற்கு நன்றி. என்ன கதைகள் என்பதை நீங்கள் தீர்மானியுங்கள். அது உங்கள் விருப்பம். ஏனென்றால் இப்போதெல்லாம் எங்கள் விருப்பமும் உங்கள் விருப்பமும் ஒன்றாகவே இருக்கிறது. அதற்கு இந்த ஆண்டு நீங்கள் அறிவித்துள்ள மொக்கையில்லா இதழ்களே சாட்சி. எனவே பக்கம் 1500க்கு மேல் என்பதை மட்டும் எங்களை தீர்மானிக்க விடுங்கள். அப்புறம் தோராயமாக விலை அறிவிப்பு வெளியிடுங்கள். பின்னர் சற்று அதிகமாக ஆனாலும் பரவாயில்லை. அதற்கு நாங்கள் தயார். இதனை சரிகட்ட சந்தா தொகையை இரண்டு தவணையாக செலுத்த ஏற்பாடு செய்யுங்கள். முதல் தவணையை அறிவித்தபின்பு கதை மற்றும் பக்க எண்ணிக்கை முடிவானதும் இரண்டாவது தவணை தொகையை அறிவித்து விடுங்கள். (தோழர்கள் என் கருத்தை எதிர்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன்) நாங்கள் இப்போதே முதல் தவணை செலுத்த ரெடி. நீங்கள் ரெடியா சார். சீக்கிரம் அப்புறம் உங்கள் மனம் மாறிவிட போகிறது. எவ்வளவோ செய்து விட்டீர்கள். இதை செய்யமாட்டீர்களா?

    ReplyDelete
    Replies
    1. Rajendran A.T : நண்பரே....கல்யாணத் தேதி குறிக்கும் முன்பாய் பந்தியில் பரிமாற வேண்டியவற்றைப் பற்றிப் பேசுவானேன் ? 1000- 1500 பக்கங்கள் என்பதெல்லாம் விளம்பரங்களுக்கு சுகமாய் இருந்திடலாம் தான் ; ஆனால் அவை சகலமும் உங்கள் சுவாரஸ்யங்களை ஈட்டிடும் விதமாய் அமைதல் தானே பிரதானம் ? அதற்கான கதைக் களங்களின் தேடலுக்கு பலன் கிடைக்கும் நாளில் நாம் விரிவாகப் பேசுவோமே ?

      "சிறப்பிதழ்" என்பதை ஒரு சிறப்பான தருணம் கொணரட்டுமே ?

      Delete
    2. இத ஓரு சேலஞ்ச எடுத்துகிட்டு 1000க்கும் புது hero அறிமுகம் செய்யுங்கள். (Hero,hroine, கதை எதுவுமே தெரியாம படம் பாக்றது ஓரு சுவாரஸ்யம் தான?.)

      Delete
    3. வண்ணச் சிறப்பிதழே தான் வேணும்னு அவசியம் இல்லை,கருப்பு & வெள்ளை சிறப்பிதழாக கூட வெளியிடலாம்.
      அது 2000 பக்க வெளீயிடாக இருந்தாலும் விலையில் பெரிய எண்ணிக்கையை எட்டாது.
      அதிக பக்கங்கள், அதிக கதைகள், சரியான விலை.
      இந்த டீல் ஓகே வா ஆசிரியரே.

      Delete
    4. வண்ணச் சிறப்பிதழே தான் வேணும்னு அவசியம் இல்லை,கருப்பு & வெள்ளை சிறப்பிதழாக கூட வெளியிடலாம்.
      அது 2000 பக்க வெளீயிடாக இருந்தாலும் விலையில் பெரிய எண்ணிக்கையை எட்டாது.
      அதிக பக்கங்கள், அதிக கதைகள், சரியான விலை.
      இந்த டீல் ஓகே வா ஆசிரியரே.

      Delete
  54. எனக்கென்னவோ இம்முறையும் மாடஸ்டி இதழின் பின்னட்டைதான் பிடித்திருக்கிறது...!

    ReplyDelete
    Replies
    1. ஆமா
      பின்னட்டை பின்னுது

      Delete
    2. ஆனால் முதன் முறையாக இளவரசிக்கு இனையாக கார்வினும் அசத்தல் போஸ் கொடுப்பது இந்த முறை தான் ...

      இதற்காகவே எனக்கு அட்டை படம் மிகவும் பிடித்துள்ளது ...;-)

      Delete
    3. ஜேடர்பாளையம் சரவணகுமார் : தலீவர் சொல்லுவதிலும் சாரமுள்ளது....கார்வினுக்கு முதல்முறையாக அட்டைப்படப் புரமோஷன் கிட்டியுள்ளதன் பொருட்டாவாது முன்னட்டை மாற்றமின்றி இருந்துவிட்டுப் போகட்டுமே ?

      Delete
    4. பல அட்டைப்படங்களில் கார்வின் வந்துள்ளாரே? திகில் தீவின் ஹாட் லைனை ஒருக்கா படிக்கவும்.

      Delete
    5. உண்மைதான் நண்பரே ...ஆனால் அவற்றில் கார்வினின் அட்டைப்படம் குளோசப்பில் இருந்தாலும் சமாராகவே இருந்தன ...ஒரு ஆக்‌ஷன் ஸ்டார் போல முதன் முதலாக தோன்றுவதையே

      "
      ஆனால் முதன் முறையாக இளவரசிக்கு இனையாக கார்வினும் அசத்தல் போஸ் கொடுப்பது இந்த முறை தான் "


      என குறிப்பிட்டு இருக்கிறேன் ....;-))

      Delete
  55. ஆனால் இப்போது அதே முப்பது நாட்களுக்கு மத்தியினில் 4 இதழ்கள் வெளிவந்தாலும் – மாதத்தின் முதலிரண்டு வாரங்கள் கழிந்தான பின்னே தொடரும் பொழுதுகளை ஜவ்வாக இழுத்துச் செல்வது போலொரு பிரமை! ஜனவரியின் 4 இதழ்களும் வெளியானது ஏதோ ஒரு யுகத்தில் என்பது போலத் தோன்றிட //

    same feeling சார்

    இதனை தவிர்க்க நமது நண்பர்கள் கேட்டுக்கொண்டது போல 1000 பக்க குண்டு இதழ்களை வருடத்திற்கு இருமுறை வெளியிடலாமே சார் :))
    .

    ReplyDelete
  56. // சரியாக 100 சாகஸங்கள் கொண்ட மாடஸ்டி பிளைஸி தொடரினில் நாம் இதுவரையிலும் எத்தனை வெளியிட்டிருப்போமென்ற கணக்கெல்லாம் என்னிடமில்லை – தோராயமாய் 25 கதைகள் என்பது அனுமானம்! //

    முத்து - 1
    லயன் - 29 இம்மாதம் வரை :))
    .

    ReplyDelete
  57. // ஒன்றுக்கு 4 வர்ணப் பின்னணிகளைப் போட்டு பொன்னன் நமக்குக் காட்டிட – இதோ அந்த நான்குமே ! அவற்றுள் ஒன்றைத் தேர்வு செய்துள்ளோம்! அந்தத் தேர்வு எதுவாகயிருக்குமென்று யூகித்துப் பார்க்கலாமே? //

    நான்காவது தான்
    சரியா சார் :))
    .

    ReplyDelete
  58. // அப்புறம், தொடரக் காத்திருக்கும் திருப்பூர் புத்தக விழாவினில் குறைவான ஸ்டால்களே இடம்பெற இருப்பதால் நமக்கு "இடம் நஹி!" என்று கையை விரித்து விட்டார்கள் ! So கோவை & திருப்பூர் மண்டலங்களில் நாம் கடைபோடும் வாய்ப்பு இன்னமும் அமைந்த பாடைக் காணோம் ! காத்திருப்போம் பொறுமையாய் !! //

    அய்யகோ :((
    .

    ReplyDelete
  59. // ராணி காமிக்ஸில் நம்மை விட இன்னும் அதிகமான கதைகளை வெளியிட்டிருப்பார்கள் எனும் போது – இன்னமும் fresh ஆகக் காத்துள்ள மா.பி. சாகஸங்களை ஒரு விடுமுறை நாளில் பட்டியல் போட்டாக வேண்டும்! //

    விஜயன் சார்

    28 கதைகளே ராணியில் வந்துள்ளன ( நண்பர்கள் சரி பார்க்கவும் )
    இறுதியாக அதில் மூன்று அல்லது நான்கு ரீ ப்ரிண்டாக இருக்க வாய்ப்பு உள்ளது

    அப்படியானால் நாம்தான் அதிகமாக வெளியிட்டுள்ளோம் :))
    ( M V சார் நல்லா நோட்பண்ணுங்க
    இன்னமும் ஒரு 45 கதைகளாவது பாக்கி இருக்கும்
    உங்க போராட்டத்த இப்பவே ஆரம்பிச்சா தான் ஒரு 10 வருடத்திற்குள்ளாவது படிக்கமுடியும்

    சொல்லுறத சொல்லிட்டேன் இனி நீங்களாச்சு விஜயன் சாராச்சு :))
    )

    .

    ReplyDelete
    Replies
    1. Prabakar T : MV சார் சும்மாவே பரதம் ஆடுவார் இளவரசியின் பெயரைக் கேட்டாலே,,! இதில் 45 புதுக் கதைகள் உள்ள சேதியறிந்தால் குச்சிபுடி ; கதக்களி என்று தூள் கிளப்பி விடுவாரே !!

      Delete
    2. எடிட்டர் சார்.!

      இப்போ நான் தனி ஆள் இல்லை.! தற்போது மாடஸ்டிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.!(அதில் நிறையப்பேர் யூத்ஸ்)

      Delete
    3. ஓஹோ ...நானும் மாடஸ்தி ரசிகர்கள் லிஸ்ட்ல சேர்ந்ததை இப்படி குறிப்பிடுகிறீர்களா MV சார்...ரெம்ப ஆப்பி....

      Delete
    4. அது நீங்கள் தான் டெக்ஸ் ...ஆனால் ப்ரேக்கட்ல இருக்கிறது நீங்க இல்ல ...;-)))

      Delete
    5. M.V.சாா்!உங்களுக்கு பின்னாடி திரண்டு நிக்கிற கூட்டத்துல நானும் ஓருத்தன்! டெம்ப்போ எல்லாம் வச்சி கடத்தியிருக்கோம்..! பாத்து பொருளாளர் போஸ்ட்டிங்கை போட்டு குடுங்க..!ஹி..!ஹி..!!

      Delete
  60. மாதமொரு முறை இதழ்களை வெளியிட்டு வந்த சமயங்களில் முப்பது நாள் இடைவெளியானது ரொம்ப ரொம்பக் குறைச்சலாகத் தெரிந்து வந்தது! ஆனால் இப்போது அதே முப்பது நாட்களுக்கு மத்தியினில் 4 இதழ்கள் வெளிவந்தாலும் – மாதத்தின் முதலிரண்டு வாரங்கள் கழிந்தான பின்னே தொடரும் பொழுதுகளை ஜவ்வாக இழுத்துச் செல்வது போலொரு பிரமை///
    சர்க்கரைப்பொங்கல் பண்டிகை தினத்தன்று(சராசரி வருடம் பத்து இருக்கலாம்) சாப்பிட்டால் திகட்டாமல் இனிக்கும்.அடுத்து எப்போது வரும் என எதிர்பார்ப்பு கூடும்.அதுபோல தற்போது வெளிவரும் காமிக்ஸ் எண்ணிக்கை சரியான அளவில் உள்ளது.அதிகபட்சம் ஒன்று கூட்டலாம் என்பது என் கருத்து ஸார்.

    ReplyDelete
  61. எனக்கென்னவோ இம்முறையும் மாடஸ்டி இதழின் பின்னட்டைதான் பிடித்திருக்கிறது...!

    ReplyDelete
  62. அதிகபட்சம் மாதம் ஒன்று கூட்டலாம் என்று படிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. ///அதிகபட்சம் மாதம் ஒன்று கூட்டலாம் என்று படிக்கவும்.///

      அப்படித்தான் படிப்போம் ஜெயகுமார். !

      டைகரு முகத்துல லைட் அடிச்சி போட்டோ எடுத்திருக்கலாம். ஒரே இருட்டா கீதே வாத்யாரே!!!

      Delete

    2. டைகரு முகத்துல லைட் அடிச்சி போட்டோ எடுத்திருக்கலாம். ஒரே இருட்டா கீதே வாத்யாரே!!!///

      இன்னாஃபா கிட் ஆர்டின் ஆங்கிள் பார்த்து தொலைவு பார்த்து இருட்டு இல்லாதது டைகர் போட்டோ எடுத்து கொடுத்ததே நீதான் என்று யாரிடமும் நான் சொல்லமாட்டேன்.

      Delete
  63. மதிய வணக்கங்கள்..!

    //முன்பெல்லாம் புதுசாய், போட்டிக்குக் காமிக்ஸ் ஏதேனும் வருகிறதெனில் காது வழியாய் புகை படர்வது வாடிக்கை! ஆனால் இன்றைக்கோ – சன்னமானதொரு சட்டிக்குள் குதிரையோட்டிப் பழகிவிட்ட நிலையில் துணைக்கு யாரேனும் வந்தால் தேவலையே என்ற எண்ணம் இல்லாதில்லை. And- பெரிய நிறுவனங்கள் காமிக்ஸ் உலகினுள் கால்பதிக்கும் பட்சத்தில் மீடியாவின் பார்வைகளும் காமிக்ஸ் எனும் துறை மீது விழுவது நிச்சயம்! நெல்லுக்குப் பாயும் நீர் – புல்லுக்கும் சற்றே பாய்ந்தாலும் சந்தோஷம் தானே? //

    ஒருகாலத்துல கொடிகட்டி பறந்த காமிக்ஸ்துறையின் மொத்த கடிவாளத்தையும் இன்னைக்கு ஒற்றை தமிழனின் [உங்க] கையில கைமாத்திட்டு போன சோகம் ஒருபக்கமிருந்தாலும்...முடிந்தமட்டும் இழுத்து பிடித்து போராடும் அந்த ஒற்றை தமிழனின், மண்ணின் மைந்தரின் நியாயமான ஏக்கமாக உங்களோட மேற்கண்ட எண்ணத்தை பார்க்கிறேன் சார்..! காலம் ஒரு சக்கரம்..!! மேல் உள்ளதை கீழ் இறக்குவது மட்டுமல்ல, கீழுள்ளதை மேலேற்றும் [ஏக்கம் தீரும்] நேரம் நெருங்கிவிட்டதாவே நம்புகிறேன்..!!! ஒரு உண்மையான மண்ணின் மைந்தரான உங்களுக்கு ஒரு ராயல் ஸல்யூட் ஸார்..!

    இது கௌபாய் சீசன்..! இதை கௌபாய் ஸ்டைல்ல சொல்லணும்னா...

    ஓடிபிடிச்சி பந்தயத்துல [ஓக்கலஹோமா,ஒரு பட்டா போட்டி மாதிரி] விழுந்தடிச்சி வந்து புதிய நகரின் மையத்துல இடம் பிடிச்சி, கடைவிரிச்சி, புழுதிபறக்க குதிரையில பாலைவனத்துல பயணம் செஞ்சி மொத்த சரீரமும்வறண்டு போய் தொங்கிய நாக்குடன் வரும் கௌபாய்களுக்கு 'ஜில்'ன்னு டிரிங்ஸ்சும்,சுட வறுத்தகறியும் தந்து ஹோட்டல் கல்லாகட்டி ஜோரா இருக்குற நேரத்துல எதிர்ல ஒரு மேயரோ, பண்ணையாரோ ஜாலியா கடையை விரிச்சி கல்லா கட்டுவது பாக்கற கடுப்பு போய்ய்ய்ய்...

    ஜேஜேன்னு இருந்த ஊர்ல ஆள்வரத்து குறைஞ்சி போய், எவ்வளவுதான் சீமை சரக்கும்,சூடா வாத்துகறி சமைச்சு வெச்சிருந்தாலும்...அதிகம் ஆளே வராம இருக்கறப்போ, எதிர்ல ஒரு பண்ணையாரோ,மேயரோ போட்டிய வந்தாலும் பரவாயில்லை கடையை விரிச்சி ஊர்ல நாலுபயலுங்க நடமாட்டமாவது கூட்டினா தேவலாம்...

    என நினைக்கறதுதான் மண்ணின்பெருமை...! உங்க நினைப்புக்கு ஒரு 'ஹோ'..!

    ReplyDelete
    Replies
    1. என்னா ஒரு கற்பனை! தமிழ்ல பூந்து விளையாடுறீங்க மாயாவி அவர்களே! :)

      Delete
  64. மாடஸ்டியின் தமிழ் கதைகள் பற்றி: https://www.google.co.in/?gws_rd=ssl#q=modesty+blaise+in+india

    ReplyDelete
  65. எடிட்டர் சார்,

    //கார்வினுக்கு முதல்முறையாக அட்டைப்படப் புரமோஷன் கிட்டியுள்ளதன் பொருட்டாவாது//

    உன்களுக்கு என்ன கதையை பிரசுரித்தோம் என்பது தான் மறந்துவிடும் என்றல், கார்வின் அட்டையில் வந்தது கூடவா மறந்து விடும்?

    லயன் காமிக்ஸ் 141 திகி தீவின் அட்டை மறந்து விட்டதா?

    அல்லது ஏற்கனவே வந்த நடுக்கடலில் அடிமைகள், மந்திர மண்ணில் மாடஸ்டி எல்லாமும் நினைவிலில்லையா?

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே ...ஆனால் அவற்றில் கார்வினின் அட்டைப்படம் குளோசப்பில் இருந்தாலும் சமாராகவே இருந்தன ...ஒரு ஆக்‌ஷன் ஸ்டார் போல முதன் முதலாக தோன்றுவதையே

      "
      ஆனால் முதன் முறையாக இளவரசிக்கு இனையாக கார்வினும் அசத்தல் போஸ் கொடுப்பது இந்த முறை தான் "


      என குறிப்பிட்டு இருக்கிறேன் ....;-))

      Delete
    2. @ தலீவரே
      // சமாராகவே //
      //இனையாக//

      என்ன ஆச்சு தலீவரே? இன்னிக்கு மாயாவி சிவாவை நேரில் சந்தித்தீர்களா? ;)

      Delete
    3. ஹீஹீ ....

      தப்பை யாராவது கண்டுபிடிக்கிறீங்களா ன்னு டெஸ்ட். பண்ணி பார்த்தேன் செயலாளர் அவர்களே ..

      ஆனால் நீங்களே கண்டுபிடித்து விட்டீர்கள் என்றவுடன் ஆச்சர்யபட்டு விட்டேன் ...



      ஹீஹீ ..

      Delete
  66. நீங்கள் இவை தயாரிப்பில் உள்ள அட்டைகள் என்று டிஸ்க்ளைமர் போட்டு இருந்தாலுமேகூட,

    முதல் அட்டையில் சுறுக்கு என்றும் மற்ர அட்டைகளில் சுருக்கு என்று இருப்பதும் உறுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. நலமா அருண் அவர்களே?
      மும்பையின் ட்ராஃபிக் வெள்ளத்தில் இப்போதும் கஷ்டப்படுகிறீர்களா? :)

      Delete
    2. இப்போது சென்னையிலிருக்கிரேன். இரண்டு நாட்கள் இருப்பேன்.

      பிறகு மும்பைதான். நன்றி

      Delete
  67. சென்னைக்கு வந்து இருக்கிறேன். நாளைக்கு பொங்கல் புத்தக கண்காட்சிக்கு செல்லலாம் என்று இருக்கிறேன்.

    LMS கிடைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. Yes LMS Part 1 is available ... Part two is not available at the stall!

      Delete
    2. 400 ரூபாய் புக்கா?

      Delete
  68. Pattukottai Prabhakar visit our stall and bought some of our Iron claw books !!! He posted in his Facebook page. He also reveals that he was very excited to saw his favorite IRUMBUKAI MAYAVI after a long time!!!

    ReplyDelete
    Replies
    1. பெருமையளிக்கும் செய்தி! நன்றி குமரேசன் அவர்களே!

      Delete
  69. This comment has been removed by the author.

    ReplyDelete
  70. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. //காமிக்ஸ் வட்டம் பெரிதாக ஆக்கபூர்வமாக செயல் படுவோமே. நமக்குள் பகை எதற்கு//
      +1

      Delete
  71. சசந்தா z என்ன்ஆச்சு சார்.....?

    ReplyDelete
  72. எடிட்டர் சார் பாலசந்தர் சிவாஜிராவ் என்ற பெயரை ரஜினிகாந்த் என்று மாற்றி புகழ்பெற வைத்ததுபோல நமது சீனியர் எடிட்டர் க்ரான்டேல் என்ற பெயரை இரும்புக்கை மாயாவி என்று வைத்து பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற செய்துள்ளார். அந்த காலத்தில் இரும்புக்கை மாயாவி என்றால் தெரியாதவர்கள் குறைவு. இதில் வேடிக்கை என்னவென்றால் இரும்புக்கை மாயாவியை பார்த்து நம்மூரில் ஏகப்பட்ட உள்ளூர் மாயாவிகள் உலவினர். காமிக்ஸ் என்ற வார்த்தை ஒன்றை பிடித்துக்கொண்டு மின்னல்மாயாவி, வஜ்ரக்கை மாயவன், மாத்திரையை வாயில் போட்டு மறையும் மாயாவி, மர்மக்காட்டு மாயாவி என்று எத்தனையோ காமெடி பீஸ் மாயாவிகள் உலவினர். எல்லாம் புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையாகிப்போனது. சீனியர் எடிட்டர் அவர்களுக்கு எத்தனை முறை நன்றி கூறினாலும் தகும். எங்கள் பால்ய காலத்து நினைவுகள் என்றாலே அதில் மாயாவி என்ற. ஒரு மனிதன் இல்லாமல் யோசிக்கவே முடியாது. சென்ற வாரம் பெங்களூருக்கு பஸ் பயணம் மேற்கொண்ட போது ஒரு குடும்பம் பஸ்ஸில் பயணம் செய்தனர். அவர்கள் கையில் நமது காமிக்ஸ். பார்த்தவுடன் அவர்களை கவனிக்க தோன்றியது. கணவன் மனைவி இருவர் கையில் ஒன்றுமில்லை. அதில் தாத்தா எழுபது வயதிருக்கும். நயாகராவில் மாயாவி படிக்கிறார். பேரன் கையில் பாம்புத்தீவு. பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்த்து. உண்மையில் சாகாவரம் பெற்றவர் நமது மாயாவி. நம் காலத்திற்கு பின்னும் வாழ்வார் என்று நினைத்துக்கொண்டேன்

    ReplyDelete
    Replies
    1. அழகான பகிர்தலுக்கு நன்றி ராஜேந்திரன் அவர்களே!

      Delete
    2. மகிழ்ச்சி தரும் பகிர்தல் கூட...

      Delete
  73. 2015 ல் மின்னும் மரணம். லயன் 250,
    என்று இரண்டு குண்டு புக்ஸ். 2016. ல் அவசியம் குண்டு புக் வேண்டும்

    ReplyDelete