Powered By Blogger

Tuesday, January 26, 2016

ஒரு விடுமுறை நாள் பதிவு...!

நண்பர்களே,

குடியரசு தின வாழ்த்துக்களும், வணக்கங்களும் ! 

சென்னைப் பொங்கல் புத்தக விழாவினில் இன்று மதியம் நமது ஸ்டாலுக்கு தி.மு.க.வின் பெருமதிப்பிற்குரிய தளபதி திரு.ஸ்டாலின் அவர்களும், முன்னாள் அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்களும், சென்னையின் முன்னாள் மேயர் திரு.சுப்ரமணியன் அவர்களும்,தொண்டர்கள் சகிதம் வருகை தந்திருந்தனர் ! சுமார் 5 நிமிடங்களுக்கு நமது இதழ்கள் சகலத்தையும் ரசித்துப் பார்த்துவிட்டு - மின்னும் மரணம் பிரதியினை வாங்கிச் சென்றுள்ளனர் - தலைவரிடமும் காட்டுவதாகச் சொல்லி !! தலைவணங்கி நன்றி சொல்கின்றோம் அவர்களது வாழ்த்துக்களுக்கு !!
நண்பரொருவர் அனுப்பிய லின்க்கைப் பின்பற்றிச் சென்ற பொழுது, சென்றாண்டின் ஒரு சமயத்தில் நமது "தேவ ரகசியம் தேடலுக்கல்ல" இதழின் சுவாரஸ்யமான review கண்ணில் பட்டது ! முன்னமே இதனை வாசித்திருக்கக் கூடிய நண்பர்களுக்கு இது கி.மு. காலத்து செய்தியாகப்படலாம் தான் ; but எனக்கிந்த லிங்க் கிட்டியது நேற்றைக்கே என்பதால்  - "சுடச்  சுட " (!!) உங்கள் பார்வைக்கு முன்வைக்கிறேன் :


"நமக்குப் பார்ப்பதற்கு நிலையாகத் தெரியும் தீபத்தில் பற்றியெரியும் சுடரானது பற்றவைத்த வினாடி முதல், ஒவ்வொரு கணமும் மறைவதும் புதியதாய் உருப்பெருவதுமாய் செயல்படுகிறது. தீபச்சுடர் நிலையான ஒருசுடர் அல்ல, மாறாக ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றி மறையும் கோடிக்கணக்கான சுடர்கள். இந்தக் கணப்பொழுதில் தோன்றும் சுடர் அடுத்த கணத்தில் தோன்றப்போகும் சுடரை தோற்றுவித்து மறைகிறது. அடுத்தகணம் தோன்றப்போகும் சுடர், அதனையடுத்த சுடரைத் தோற்றுவித்து மறையும். இவ்வுலகில் உள்ள அனைத்து உயிருள்ள உயிரற்ற பொருட்களும் இந்தத் தொடர் மாறுதலுக்குட்பட்டே இங்கே வாசம் செய்கின்றன."
-புத்தர்-

காமிக்ஸ் என்றால் நம்மில் பலருக்கு சட்டென்று மனதினுள் தோன்றுவது ஆங்கிலத்தில் உலகப்புகழ் பெற்ற டின்டின் (TINTIN), ஆஸ்டெரிக்ஸ் (ASTERIX) மற்றும் டிஸ்னி (DISNEY). காமிக்ஸ் என்பது சிறு பிள்ளைகள் சமாசாரம் என்பதையும் தாண்டி இதில் பல்வேறு அழுத்தமான சங்கதிகள் அடங்கியுள்ளன என்பதை அறிந்தவர்கள் சிலரே. ஒரு கிராபிக் நாவலாக வடிவம் எடுக்கும் ஒரு காமிக்ஸ் இதழின் வீரியம் ஒரு ஹாலிவூட் படத்தையும் விஞ்சும் என்பது உண்மை. சமீபத்தில் “லயன் காமிக்ஸ்” எனும் காமிக்ஸ் மாத இதழில் வெளியிடப்பட்ட “தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல” எனும் கதை இதற்கான சரியான சான்று.

வெற்றி பெறும் ஒவ்வொரு கதைக்கும் எப்போதும் தொடக்கம் நம்மைக் கட்டிப்போடுவதாக அமைய வேண்டும். மெல்லிய தென்றல் வருடிச்செல்லும் ரம்மியமான இரவு தொடங்கும் வேளையில் வியர்க்க விருவிருக்க ஒரு புத்தத் துறவி கதையின் தொடக்கத்தில் ஓடி வரும்போது, நீரைக் கண்ட தாகம் போல நமது முழு கவனத்தையும் தனதாக்கிக்கொள்கிறது புத்தகம்.

திபெத்தை ஆக்கிரமித்து, அதன் மத அடையாளங்களை முற்றிலும் அழிப்பதையே தனது நோக்கமாகக் கொண்டிருந்த சீனராணுவப்படைப்பிரிவு கம்யுனிச பழமைவாத கேப்டன் டோங்யு தலைமையில் புத்த மடாலயத்தை சூழ்ந்து, கண்ணில்படுவோரைக் கொன்று குவித்து, அனைத்தையும் தீயிட்டு அழிக்கும் அறிமுகக் காட்சிகளுடன் கதை தொடங்குகிறது. புராதன ரகசியங்களை ஆராய்வதற்காக மடாலயம் வந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஈகோன் பாயெர் இங்கே நமக்கு அறிமுகமாகிறார்.

நடுங்கவைக்கும் உயரத்தில் படபடப்பான மனநிலையில் இருக்கும் வாசகர்களை ஒரு பஞ்சி (bungee) கயிற்றை காலில் கட்டி உயரத்தில் இருந்து திடீரென தள்ளிவிட்டதைப் போல, சட்டென்று காட்சிகள் மாறி, பரபரப்பான காட்சிகள் அரங்கேறும், உலகின் கனவுத் தொழிற்சாலையான ஹாலிவுடின் ஸ்டுடியோவுக்குள் நம்மை கொண்டு சேர்க்கிறது அடுத்த காட்சி. இங்கே ஸ்டண்ட்மேன் டெட் கானெர்ட்டன், மற்றும் இயக்குனர் பாயெர் (ஈகோன் பாயெரின் தம்பி) நமக்கு அறிமுகமாகிறார்கள். டெட்டுக்கும் பாயெரின்அண்ணன் மகள் ஹெலனுக்கும் இடையே இருந்துவந்த நீண்டகால நட்பு காதலாக மாறும் தருணம். இங்கிருந்து மீண்டும் திபெத்துக்குத் தாவும் கதை, புத்த மடாலயத்தில் பேராசிரியரின் ஆராய்ச்சி முடிவுகளைக் கைப்பற்ற, சீன அரசாங்கம் அனுப்பும் இளம் பெண் ஏஜென்ட் ஜாங் ஜியி. தனியார் துப்பறிவாளர் மாக்ப்ரைட்டையும், அவரது யாருக்கும்-அஞ்சாத “TAKE IT EASY ” குணத்தையும், ஒரு சுவாரஷ்யமான சூழ்நிலையில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் கதாசிரியர்.

முக்கிய பாத்திரங்களின் அறிமுகத்தை அடுத்து கதை அபரிமிதமான வேகத்தில் பயணிக்கிறது. தந்தையைக் கண்டுபிடிக்க திபெத் பயணம் மேற்கொள்ள, தனது சித்தப்பாவின் அனுமதியை பெற்றுவிடுகிறாள் ஹெலன். ஹெலனின் நண்பன் டெட் அன்-அமெரிக்கன் ஆக்டிவிடீஸ் கமிட்டியின் மேல் தனக்குள்ள பற்றுதலால், ஹெலனின் பயணத்தை தடுக்க முயல, அவனயும் அவன் காதலையும் தூக்கியெறிகிறாள் ஹெலன். துப்பறிவாளர் மாக்ப்ரைடை, சித்தப்பா பாயெர் ஹெலனுடன் பாதுகாப்புக்காக அனுப்புகிறார். திபெத்தில் அவர்கள் பெண் ஏஜென்ட் ஜாங் ஜியியுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறார்கள்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் சிலுவையில் அறையப்பட்ட ஏசு, அதில் இருந்து உயிர் பிழைத்து தனது ரகசிய ஆதரவாளர்களுடன் திபெத் வழியாக காஸ்மீர் வந்தடைந்தார் மற்றும் அங்கே தனது காயங்களுக்கு சிகிச்சை பெற்றுக் குணமடைந்தார் எனும் குறிப்புகளை பண்டைய ஆவணங்கள் மூலம் அறிந்துகொண்ட பேராசிரியர் ஈகோன் பாயெர், சீன ராணுவத்தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து, சில புத்தத் துறவிகளின் உதவியுடன் வேறொரு மடாலயத்தை அடைகிறார். ஸ்ரீநகரில் உள்ள “யூஸ் ஆசாபின்” கல்லறை உண்மையில் ஏசு கிறிஸ்துவின் கல்லறை என்பதையும் திபெத்திய தேடலில் கண்டுபிடிக்கிறார். இந்த புத்தகத்தின் கதைக்கு இது முதுகெலும்பாக அமைகிறது.

ஏசுவின் வாழ்கையில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கதை பல்வேறு கிராமிய, நகரப் புராணக்கதைகளில் பல நுற்றாண்டுகளாக வாழ்ந்துவருகின்றது. ஸ்ரீநகரில் முஸ்லிம் மத துறவிகளின் கட்டுப்பாட்டில் உள்ள “யூஸ் ஆசாப்” எனும் துறவியின் ரோசா பால் கல்லறை அஹம்மத்திய முஸ்லிம்களால் ஏசுவின் கல்லறை என்று இன்றும் நம்பப்படுகிறது. மேலும் ஏசுவின் பணிரெண்டாம் வயது முதல் முப்பது வயதுவரை என்ன செய்துகொண்டிருந்தார் எனும் பதில் கிடைக்காத கேள்விக்கு, அவர் இந்தியாவிலும் திபெத்திலும் தங்கியிருந்து புத்த மத கோட்பாடுகளை கற்று ஞானம் பெற்றார் எனவும் இப்புராணக் கதைகள் பதில் சொல்வதுண்டு. இந்த புராணக்கதைகளின் நம்பிக்கைகளை அற்புதமாக தனது கதைக்கு பயன்படுத்தி அதனைசுற்றி நிகழ்வுகளை சுவாரஸ்யமாக கோர்க்கிறார் கதாசிரியர்.
புத்தகத்தின் கதாசிரியர் ராபெர்டோ டெல் ப்ரோ (Roberto Dal Pra’) , ஓவியர் பாவ்லோ க்ரெல்லா (Paolo Grella). பிரெஞ்சில் “Le Manuscript Interdit” எனும் பெயரில் தயாரிக்கப்பட்ட இந்தக் கதை மூன்று பாகங்களாக வெளிவந்தது. பின்னர் ஆங்கிலத்தில் “The Forbidden Manuscript” எனும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு, இப்போது லயன் காமிக்ஸ் சார்பாக அதன் எடிட்டர் திரு.விஜயன் அவர்களால், ஒரே பாகமாக “தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல” எனும் பெயரில் அழகுற தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது .

+ + +
  • கதாசிரியரின் அற்புதமான எடிட்டிங் திறனை புத்தகத்தின் பல கட்டங்களில் காணமுடியும். எந்தவொரு ஜெர்க்கும் இல்லாமல் காட்சிகளும் சூழல்களும் மாறுகின்றன. இந்த மாறுதல்களுக்கிடையே வாசகர்களின் கவனத்தைத் தொடர்ந்து புத்தகம் தன்னகத்தே தக்கவைத்துக்கொள்கிறது.
  • டா-வின்சி-கோட் சாயலில் சுவாரஸ்யமான கதைக்களம். பல வரலாற்றுக்குறிப்புகளும் அவை நிகழும் இடங்களும், நிஜத்தினை அல்லது நம்பிகையினை அடிப்படையாகக் கொண்டு கதை புனையப்பட்டுள்ளது.
  • கதை புத்தகத்தின் ஒரு கண் என்றால், அசாத்தியமான சித்திரங்கள் புத்தகத்தின் மறு கண்ணாக அமைகின்றன. மென்மையான /கடினமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகங்களாகட்டும், இயற்கை அன்னையின் மடியில் தவழும் மலை முகடுகளாகட்டும், அல்லது வானுயர்ந்த கட்டிடங்கள் நிறைந்த லாஸ் ஏஞ்செல்ஸ் வீதிகளாகட்டும், ஓவியர் பாவ்லோ க்ரெல்லா அசரடிக்கும் திறமையுடன் ஒரு ஓவிய விருந்து படைத்திருக்கிறார். 
  • அற்புதமான தமிழ் மொழிபெயர்ப்பு.
  • ஏஜென்ட் ஜாங் ஜியுவும், மாக்ப்ரைட்டும் கதையின் இறுதியில் மங்கலான ஒளியில் உணவு விடுதியில் அமர்ந்திருக்கும் போது “ஏசு கிறிஸ்துவுக்கு துரோகமிழைத்த போது ஜூடாஸ் தந்த முத்தத்தின் மீது எனது சிந்தனை லயித்திருந்தது” என மாக்ப்ரைட் சொல்ல, ஒரு ரொமாண்டிக் மூடுக்கு வரும் ஜாங் ஜியுவிற்கு, சட்டென்று அதன் அர்த்தம் புரியும்போது, அங்கே ஏற்படும் ட்விஸ்ட் ஒரு சினிமாவில் இடம்பெற்றிருந்தால் நிறைய கைதட்டலை பெற்றிருக்கும்.

--------
  • கதையை இன்னமும் கொஞ்சம் தத்துவார்த்தமாக நகர்த்தியிருக்கலாம். அதற்கான வாயப்புகள் ஏராளமாக இருந்தும் கதாசிரியர் பயன்படுத்திக்கொள்ளவில்லை. புத்தகத்தில் சினிமாக்களுக்கே உரிய ஒரு கமர்சியல் நெடி அடிக்கிறது.
காமிக்ஸ் அறிமுகமில்லாத புத்தக ஆர்வலர்களுக்கு, இந்தப் புத்தகம் அந்த அற்புத மாயா உலகத்தின் திறவுகோலாக அமைந்து அவர்களின் எண்ணங்களை வண்ணமயமாக ஆக்கிரமிக்கும் என்பதில் ஐயமில்லை. நினைவுகளிலிருந்து நீங்க மறுக்கும் நிறைவான புத்தகம்.  !
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த இதழ் வெளியான வேளையின் நமது பதிவினை வாசிக்கhttp://lion-muthucomics.blogspot.in/2014/08/blog-post_31.html
இந்த இதழினை இப்போது வாங்க விரும்பும் பட்சத்தில் : http://lioncomics.in/graphic-novels/2891-deva-ragasiyam-thedalukalla.html

Enjoy the day folks ! 

200 comments:

  1. Replies
    1. முன்பொரு தினசரியில்(?) வெளியிடபட்ட இந்த கட்டுரையினை ஒரு லின்க் மூலமாக படித்த ஞாபகம்..சார்...

      அருமையான நடையில் எழுதபட்டுள்ள கட்டுரை....

      Delete
    2. டியர் எடிட்டர்

      இந்த ரவீந்திரன் வி வேறு யாரோ அல்ல - நமது ப்ளாக் நண்பர் சுஸ்கி-விஸ்கி தான் அவர் !

      Delete
    3. @ Raghavan : அடடே....அவரை "ரவி" என்று தான் எனக்குத் தெரியும் !!

      Delete
  2. இரண்டாம் இடம் முதல் முறைய

    ReplyDelete
  3. மூன்றாவது.....
    திடீர் எதிர்பாராத பதிவு... சூப்பர்...

    ReplyDelete
  4. MVசார்@ உங்களுக்காக எனவே போடப்பட்ட பதிவு இது...என்சாய்....

    ReplyDelete
  5. கலைஞரிடம் தளபதி 'மி.மி.' காண்பித்தால் கலைஞர் நிச்சயம் படிப்பார்.

    ReplyDelete
  6. நல்ல செய்தி சார் ..

    மடிப்பாக்கம் மாடஸ்தி சார் ...

    உங்களுக்கான அழகான பதிவு ..

    வாருங்கள் ...;-)

    ReplyDelete
  7. ஒண்ணுமே புரியலை.

    ReplyDelete
  8. கலைஞர் படித்தால் ..


    அவரின் விமர்சனத்தையும் ..


    அழகாக ...



    இதனை போலவே


    எதிர்பார்க்கலாம் ...

    வாழ்த்துக்கள் ..சார் ..

    ReplyDelete
  9. ஏழாவது. முதல்முறை.

    ReplyDelete
  10. 'தே.இ.தே' நல்ல கதை என்பதில் என்க்கு மாற்று கருத்து இல்லை. டாவின்ஸி கோட் நாவலில் இறுதியில் எதற்காக இவ்வளவு தேடல் என்பது திடீர் திருப்பமாக புரியும்படி முடியும். ஆன இதில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை எதிர்த்து ஆராய்ச்சி செய்வது எதற்காக என்பது விளக்கபடவில்லை.(இயேசு கிறிஸ்து இறக்காமல் இருந்தால் அதனால் என்ன ஆகி விடப்போகிறது). கமல் தசாவதாரம் கூறுவது 'சாமி இல்லை சொல்லவில்லை, சாமி இருந்த நல்ல இருக்கும் தான் சொல்றேன்' மாதிரி தான் 'தே.இ.தே' கதை இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஏசு சாதாரண மனிதர் தான். ஆனால் மதம் மூலம் புரட்சி செய்தவர். கடவுள் அல்ல என்பதை சீன கம்யூனிஸ அரசு நிரூபித்தால் என்னவாகும் என எண்ணி பாருங்கள். ஐரோப்பிய, அமெரிக்க வல்லரசு நாடுகளின் மீது பொருளாதார ரீதியாக , அரசியல் ரீதியாக அதிகாரம் செலுத்தும் வாடிகன் செல்வாக்கு சரியும். அதன் பிறகு கம்யூனிஸ கொள்கைகளை எளிதாக அந்த நாடுகள் மீது சீனா திணிக்க முடியும். :)

      Delete
    2. cap tiger @ என்ன ஒரு சிந்தனை! சூப்பர்!

      Delete
    3. கணேஷ்குமாரின் கேள்வியும் கேப் டைகரின் பதிலும் மகிழ்வளிக்கிறது.


      கிராபிக் நாவல்கள் பற்றிய கேள்விகளும் விவாதங்களும் தளத்தினை இன்னும் ஆரோக்கிய பாதையில் கொண்டு செல்லும்...

      இணையத்தி்ல் கிராபிக் நாவல் டிஸ்கஷன் போரம்கள் பலவும் பார்த்து வியந்து இருக்கிறேன்.....

      ஹாரிபாட்டர் உச்சத்தில் இருந்தபோது எண்ணிலடங்கா இணைய தளங்கள் அதனை பற்றி உற்சாகமுடன் இயங்கின....

      (அடுத்த வரக்கூடிய ஒரு பாகத்தின் ஒரு கதாபாத்திரத்தின் பெயரினை யூகிக்கும் அளவுக்கு)...

      அகதா கிறிஸ்டியின் படைப்புகள் இன்றளவும் விவாதிக்க பட்டு கொண்டுதான் இருக்கின்றன... ( தனி போரம்கள)...

      Z சந்தா அறிவிக்க பட்டபின் தளம் மிகவும் களைகட்டகூடும்....

      Delete
  11. வாரே வாவ் என்னவொரு மாறுபட்ட ரசனை,கை தட்டும் படங்கள் நூறு.

    ReplyDelete
  12. மன்னிக்கவும். ஆறாவது.
    முதல்முறையாக.

    ReplyDelete
  13. எந்த ஒரு கருத்தும் மற்றவர் சொல்லும்
    போதுதான் நமக்கு தெரிகிறது.தே.ர.தே
    புத்தகம் பற்றி கூறுகிறேன்.

    ReplyDelete
  14. இது போன்ற நல்லபடைப்புகளை காமிக்ஸ் வடிவில் தரிசிப்பது மகிழ்ச்சியான விஷயம்.

    ReplyDelete
  15. மி. ம. புத்தகம் படித்து விட்டு கலைஞர்
    மீண்டும் குழந்தையாக மாறி விட
    போகிறார்.

    ReplyDelete
    Replies
    1. ???!!!
      நண்பரே மி.ம. குழந்தைகள் படிக்கும் கதையா என்ன...?

      Delete
  16. கொரில்லா சாம்ராஜ்யம் கதைக்கு
    பதிலாக வேறு ஒரு மாயாவியின்
    கதையை வெளியிட்டு ( கொ சா) வை
    கலரில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  17. திடீர் பதிவுன்னு நண்பர்கள் சொன்னவுடன் குண்டு புக் அறிவிப்பு தான் வந்துடுச்சோன்னு நினைச்சிதான் வந்தேன்,ஹி,ஹி.

    ReplyDelete
    Replies
    1. கவலை வேண்டாம் ரவி ..

      கூடிய விரைவில் கூதுகுலமான அந்த திடீர் பதிவும் ..

      நாம் படிக்கும் சூழல் நிகழ போவதை

      என் மன கண் சொல்கிறது ....;-)

      Delete
  18. ஆசம் ஆசம்!!!

    தேவ ரகசியம் தேடலுக்கல்ல.!

    வந்தபோதே நிறைய கொண்டாடித் தீர்த்துவிட்டாலும் .,
    இந்த பதிவு இன்னொரு முறையும் கையிலெடுத்து கொண்டாடத் தூண்டுகிறது.!!!

    ஜெய் ஜாங் ஜியி :-)

    ReplyDelete
  19. எடிட்டருக்கும், சீனியர் எடிட்டருக்கும் ஜூனியர்எடிட்டருக்கும், அவர்களது குடும்பத்தின்ருக்கும், பணியாளர்களுக்கும் அவர்தம் குடும்பங்களிற்கும், நண்பர்பர்கள் அனைவரிற்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் :))
    .

    ReplyDelete
  21. // மின்னும் மரணம் பிரதியினை வாங்கிச் சென்றுள்ளனர் //
    Great news again! ஒருவேளை அதிலே தளபதி என்ற வார்த்தை ஸ்பெஷலாக கண்ணிலே பட்டிருக்குமோ?! ;)

    // தேவ இரகசியம் தேடலுக்கல்ல //
    அனைத்து பாகங்களையும் ஒரே புத்தகமாக திருப்தியுடன் படித்த ஞாபகம் வருகிறது. Deserves such an attention and review!

    ReplyDelete
  22. எடிட்டர் சார்.!

    இத..இதத்தான் எதிர்பார்த்தேன்.! நன்றி ,! தேவ ரகசியத்தை கதையில் தேடினார்களோ இல்லையோ ,நான் கதையை தேடி அலைந்தது உண்மை.! டியூப் லைட்டில் படித்து பழகி விட்டு,நைட் பல்ப்பான ஜீரோ வாட்ஸ் லைட் வெளிச்சத்தில் படிப்பது போன்ற வித்தியாசத்திலிருந்து ,கதையின் இயேசு கிருஸ்துவை பற்றிய பின்னனி, இந்துவான எனக்கு எனக்கு எப்படி புரியும்.அதுவும் எழத்துக்கள் இல்லாமல் கி.நா.ஸ்டையிலில்.? இந்த கதையை பற்றி தெரிந்து கொள்ள ரொம்பவும் தான் சிரமப்பட்டேன்

    ஒ.கே.! இந்த கதைவிளக்கம் நிச்சயம் மறுமுறை படித்து ரசிக்க உதவி செய்யும்.!மிகவும் நன்றி சார்.! கதையை படித்துவிட்டு வருகிறேன்.!

    ReplyDelete
  23. வணக்கம் MV sir
    நம்ம அதிரடி தேவதை மாடஸ்டியின்
    சொந்த ஊர் திருகழுக்குன்றம் பக்கத்தில்
    உள்ள கழுகு மலைக்கோட்டை என்றும்
    அவர் இந்து என்றா நினைத்து
    ரசிக்கிறோம். அவரும் ஒரு கிருஸ்த்துவரே.
    உண்மையில் தே ர தே மிக மிக சிறந்த
    படைப்பு. டாவின்சி கோட் போன்ற
    கதை அம்சம் உள்ளது.
    தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்
    நட்புடன் துரை.

    ReplyDelete
  24. மடிப்பாக்கம் சார்....!

    நமக்கெல்லாம் யாராவது இப்படி கோனார் நோட்ஸ் போட்டால்தான் புரியும் போல......!

    ReplyDelete
    Replies
    1. @ ஈரோடு விஜய்

      ஆம் நண்பரே.....!

      ஒ.சி.சு.வை புரிந்து கொள்ள கார்த்திக்கின் ப்ளேடு பீடியாவும்,

      இறந்த காலம் இறப்பதில்லை கதையை புரிந்துகொள்ள மரமண்டை அவர்களின் தமிழ் காமிக்ஸ் பள்ளிக்கூடமும் ,

      பேருதவியாய் இருந்தன...!

      இ.இ.கொ.வை பொறுத்தவரை கதாசிரியர் எந்தவொரு சூழ்நிலை விளக்கமும் கொடுக்காமல் சடாரென காட்சிகளை முன்னே, பின்னே அமைத்து பரபரப்பாக கொண்டு சென்றிருப்பார்.
      நிகழ் காலம்,கடந்த காலம், நாயகிக்கு தோன்றும் கனவுகள், பிரம்மை காட்சிகள் இவற்றையெல்லாம் வேறுபடுத்திக்காட்ட ஓவியர் வண்ணக்கலவைகளில் வித்தியாசம காட்டி இருப்பார்.என்னைப்போன்றவர்களுக்கு கதையை எளிதில் புரிந்துகொள்ள இது உதவியாய் இருந்தது...!

      Delete
    2. @ JSK

      உங்களின் வெளிப்படையான பேச்சு ரசிக்கவைக்கிறது! :)

      ச்சும்மா ஜாலிக்காண்டி ஒரு விளக்கம்:

      கதாசிரியரே வரிக்குவரி விளக்கியிருந்தால் அது - சாதா காமிக்ஸ்
      சிலவற்றை நாமே அனுமானித்துப் புரிந்துகொள்ள கதாசிரியர் அனுமதித்திருந்தால் அது - கி.நா! ;)

      (கதாசிரியரின் முடிச்சை நாம் புரிந்துகொண்டால்) பின்னதில் ஒரு 'கிக்' உண்டு! :)

      Delete
    3. உண்மை..!
      அந்த 'கிக்'கை அனுபவிக்க நானும் தயாராகிக்கொள்கிறேன்...!

      Delete
    4. ஜேடர் பாளையம் சரவணக்குமார்.!

      //அந்த கிக்கை அனுபவிக்க நானும்...//

      உண்மை.புரிந்து கொள்ள சிரமமாக இருந்தாலும் படித்தபின் ஒரு கிக் இருப்பது உண்மை.!

      Delete
    5. ஜேடர் பாளையம் சரவணக்குமார்.!

      நம்மைப்போல் வெளிப்படையாக எல்லோரும் பேசதாதாலே கி.நா.தனி சந்தாவில் போய்விட்டது.இல்லா விட்டால் எடிட்டர் ஏதாவது செய்திருப்பார்.!

      Delete
    6. அட ஏன்னா சும்மா சும்மா கி.நா.னனுட்டு..அட போன்னா..! அது தனித் தவுலு..தனியாவே இருக்கட்டுமே..!

      Delete
    7. அட ஏன்னா சும்மா சும்மா கி.நா.னனுட்டு..அட போன்னா..! அது தனித் தவுலு..தனியாவே இருக்கட்டுமே..!

      Delete
    8. ஆம் ...நானும் தனி தவிலை மட்டுமே ஆதரிக்கிறேன் ..;-)

      Delete
  25. வாங்கிப் படிக்கணும் லிஸ்ட்ல இதயும் சேர்த்து

    ReplyDelete
  26. டாவின்ஸி கோட் பார்த்த போது 'அட...என்னவொரு மாறுபட்ட சிந்தனை' என்ற வியப்பு மேலோங்கிய கொஞ்ச நாளிலேயே தேவ ரகசியமும் கையில் கிடைத்து அந்த வியப்பு இன்னும் ஒருபடி அதிகமானது...

    கதையில் ஜீஸஸ் இமயமலையில் இருப்பதான காட்சிகளை வாசிக்கும் போது சூப்பர் ஸ்டாரின் பாபாவும் நினைவுக்கு வந்தது.

    அதில் மகா அவதார் பாபாஜி இமயமலையில் இயேசுவை சந்தித்தார் என்ற வசனம் வரும்..

    கதைக்களம் அமெரிக்கா, திபெத், காஷ்மீர் என சட் சட்டென மாறினாலும் பரிதலில் எந்த சிரமமும் வைக்கவில்லை.

    என்னைக்கவர்ந்த ஒரு சில கி.நா.க்களில் இதற்கு முதலிடம் உண்டு....!

    ReplyDelete
  27. விஸ்கி-சுஸ்கி என்கிற ரவீந்திரன் அவர்களுக்கு காமிக்ஸ் உலகின் நன்றிகளும், வாழ்த்துகளும்!

    பல மாதங்களாக உங்களை இங்கே காணாத தவிப்பிலிருக்கிறோம் நண்பரே!

    உங்களது பின்னூட்டங்களை மீண்டும் காண ஆவலாய் காத்திருக்கிறோம்...

    ReplyDelete
  28. நண்பர்களே,

    அதிரவைக்கும் கதையைக் கொண்ட தேவரகசியம் தேடலுக்கல்ல கி.நா'வை அலசி ஆராய்ந்து, மேலும் பல அதிரவைக்கும் உண்மைகளைப் படங்களோடு விளக்கியிருக்கிறார் நமது நண்பர் மாயாவி சிவா . அவரது அந்தப்(பழைய) பதிவைக்காண "இங்கே க்ளிக்குங்க பாஸு"

    ReplyDelete
  29. KALAINAR MM I PAARTHAAL MIKAVUM KUTHOOKALIPAAR IVVALAVU TAHARMAANA THAALIL ATTAKAASAMAANA KATHAI PADITHUVITTU NICHAYAM PAARAATTUVAAR ARASIYAL NILAIPAADUKALIL MAATRU KARUTHU KONDA ENPOANDRAVAKALUM AVARIN ELUTHU AALUMAIKKU ADIMAI

    ReplyDelete
  30. தமிழக அரசியல் தலைவர்கள்,எழுத்தாளர்கள் கவனத்தை நம் காமிக்ஸ் கவர்ந்திருப்பது நல்ல விஷயம்

    ReplyDelete
  31. தமிழக அரசியல் தலைவர்கள்,எழுத்தாளர்கள் கவனத்தை நம் காமிக்ஸ் கவர்ந்திருப்பது நல்ல விஷயம்

    ReplyDelete
  32. தமிழக அரசியல் தலைவர்கள்,எழுத்தாளர்கள், மற்றும் பிரபலம்கள் கவனத்தை நம் காமிக்ஸ் கவர்ந்திருப்பது சந்தோஷம் தரும் விஷயம்! இந்த வருடம் மிக சிறப்பாக ஆரம்பித்து உள்ளது!

    ReplyDelete
    Replies
    1. அடி வானத்தில் விடி வெள்ளி ஒன்று முளைக்கிறது..! சித்திரக் கதைகளின் பிரகாசமான எதிா்காலத்தின் துவக்கப் புள்ளி அது..!

      Delete
  33. ரவீந்தரன், அருமையான விமர்சன பதிவு! வாழ்த்துகள்!

    ReplyDelete
  34. தளபதி நம் ஸ்டாலுக்கு வந்திருந்தார், தலைவரிடம் நமது மெகா இதழை காட்டுவதாக சொல்லி சென்றார் என்பது எத்தனை சந்தோஷம் தரும் செய்தி ! ! !

    தலைவரிடமிருந்து பாராட்டுக் கடிதமோ அல்லது விமர்சனமோ வந்தால் அப்படியே கண்ணுல காட்டிருங்க சார் ! என் தரப்பில் நிறைய பேரோட வாயை அடைக்க உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  35. தேவ ரகசியம் தேடலுக்கல்ல..........
    மறுபக்கம்.........................
    நேற்று ஓர் கிறித்துவ தோழியிடம் இந்த கதையை பற்றி பிரஸ்தாபித்தபோது இனிய சுபாவம் உடைய அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது...

    ஏசு பற்றி வேதாகமம் கூறும் விஷயங்களை முரண்படுத்தும் எதையும் அவர் ஏற்று கொள்ள தயாராக இல்லை.......
    வெறும் கதைதான் என்ற முன்வைப்பையும் அவர் மறுத்து விட்டார்......
    இப்படி எழுத முனைவது தவறு என அழுத்தமாக சொல்லிவிட்டார்.....
    மத நம்பிக்கைகள் உடன் சற்றே முரண்படும் கதைகளும் கத்தி மேல் நடப்பது போல்தான்......

    ReplyDelete
    Replies
    1. செல்வம் அபிராமி சார்.!

      ஹாஹாஹா........மதத்தை பற்றி பேசுவது டைனமைட் மீது உட்கார்ந்து தம் அடிப்பது போன்று அபயகரமானது போலும்.! இங்கே இப்படி என்றால் கதையாசிரியர் அங்கு எவ்வளவு எதிர்ப்பை சம்பாதித்தாரோ.?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. ம்ஹூம்.....குணா ! சாதாரண மனிதனின் மத பற்று உண்மை சார்ந்தது அல்ல....உணர்வுகளும் வளர்ப்பும் சார்ந்தது.....அது அறிவு சார்ந்ததும் அல்ல....அப்துல் கலாமும்,ஐன்ஸ்டீனும் மத பற்று மிக்கவர்கள்தான்....தவிர மத விஷயத்தில் எது உண்மை???...உங்களது கடைசி வரிகள் சற்று கடினமாக புனையப்பட்டு இருப்பதாக உணர்கிறேன்...............

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. selvam abirami sir good to see your reviews on Lady S! keep rocking history doctor !:P

      Delete
  36. தேவ ரகஸியம் தேடலுக்கு இல்லை கதையை பொருத்த வரை, ஏசுவின் கல்லறை காஷ்மீரில் இருப்பதான வதந்தியை என் போன்றோர்களில் பலர் ஏற்கனவே அறிந்தே வைத்துள்ளோம்.

    அஹமதியா இயக்கத்தை தோற்றுவித்த மிர்ஷா குலாம் என்பவரால் யூஸ் ஆஸாஃபின் கல்லறை ஏசுவின் கல்லறையாக அறிவிக்கப் பட்டது. அவர் தன்னை ஏசுவின் மறுபிறப்பாக கூறியதால் , பாரம்பரியமான முஸ்லீம்கள் மற்றும் கிறுஸ்துவர்களின் நம்பிக்கையான ஏசு பரலோகத்தில் இருக்கிறார் என்பதை மறுப்பதற்காக ஏற்கனவே இருந்த ஏசு இறந்துவிட்டார் தான்தான் ஏசுவின் மறுபிறப்பு. யூஸ் ஆஸாஃபின் கல்லறைதான் ஏசுவின் கல்லறை என அறிவித்தார்.

    இந்த செய்தி என் போன்றவர்கள் நம்பும் திருக்குரானின் வசனங்களுக்கு நேரெதிராக இருப்பதால் இந்த செய்தியை ஏற்றுக்கொள்வதுமில்லை, நம்புவதுமில்லை.

    மேரியின் மகன் அதிஷயங்களை மட்டுமல்ல ஆழ்ந்த மர்மங்களையும் விட்டு சென்றுள்ளார் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. @மீரான்

      வாங்க,வாங்க...ரொம்பவே நீண்ட இடைவேளைக்கு பின் உங்க கமெண்ட்ஸை பார்கிறேன் மீரான். நலமா நண்பரே..?

      Delete
    2. @ mayavi. siva

      migavum nalamaga uLLen nanbare ! ungalin akkaraiyana vaarththaigalukkum, pirathanaikkum nanrigal !

      Delete
  37. தேவரகசியம் தேடலுக்கல்ல உண்மையிேலே ஒரு சிறந்த கிராபிக்நாவல் இது போன்ற சிறந்த காமிக்ஸ் புத்தகங்களை ஆசிரியர் வெளியிடவேண்டும் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக வருடத்தின் Top 3 இதழில் ஒன்றாக ஒரு கிராபிக்நாவல் தேர்வாகவேண்டும் 😂😂😂😂

    ReplyDelete
  38. மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல பத்தி சொல்லியாச்சு,
    அடுத்து TWO மில்லியன் ஹிட்ஸ பத்தி சீக்கிரமா சொல்லுங்கோ ஆசிரியரே..........

    ReplyDelete
    Replies
    1. ஷல்லூம் சார்.!

      ஒவ்வொரு ஸ்பெஷலை எடிட்டர் அறிவிக்கும் போது,வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்று ஆனந்தமாக இருக்கும்.உதாரணம் என்.பி.எஸ்,எல்.எம்.எஸ்.இரத்தப்படலம்.எம்பிஎஸ் என்று எல்லாமே அறிவிக்கும்போதும் சரி,இதோ வருகிறது என்றவுடன் இருப்பு கொள்ளாமல் தவிப்பதும்.அந்த ஸ்பெஷலை இரவு நினைத்து இனிமையாக தூங்க போகும்போதும் சரி,காலையில் விழிக்கும் போது அந்த ஸ்பெஷலை நினைத்தால் உடம்பில் மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு.டீன் ஏஜ் காதலில் கிடைக்கும் சந்தோச உணர்வுக்கு இணையான சந்தோச உணர்வு அது!. இது இந்த வருடம் மிஸ்ஸிங் எடிட்டர் சார்.!எனவே இந்த வருடத்தில் என் பெயர் டைகர் ஸ்பெஷலையெல்லாம் ஸ்பெஷல் என்று கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் சீக்கிரம் ஒரு நல்ல முடிவு எடுங்கள்.ஒன்றும் அவசரம் இல்லை அடுத்த பதிவில் கூறினால் போதும்.!

      Delete
    2. உண்மையோ உண்மை

      Delete
  39. நான் கடந்த சில நாட்களுக்கு முன் ஒய் எம் சி ஏ வளாகத்தில் ஸ்டாலில் கொஞ்ச நேரம் நின்று இருந்தேன்.! அப்போது 13 வயது மதிக்க தக்க ஒரு சிறுவன் வந்தான்.டெக்ஸ் கதையைப்பற்றி கேட்டான்.மற்றும் அரை மணிநேரம் அலாசிவிட்டு இ.இ.கொ. கதையை எடுத்துக்கொண்டான்.நான் அப்படியே ஆச்சர்யம் அடைந்தேன்.நல்ல இருக்குமா என்றான்.நன்றாக இருக்கும் என்றேன்.!

    எனக்கு ஒன்றுமே புரியவில்லை.! ஷெரீப்பிடம் உதை வாங்கி தலைசுற்றி நிற்க்கும் கிட் ஆர்ட்டின்(நம்ம மேச்சேரிகாரர் அல்ல .)மாதிரி ஆகிவிட்டேன்.நடுநிலையாளர்கள் இது பற்றி விளக்கினால் நன்றாக இருக்கும்.!

    ReplyDelete
    Replies
    1. @ M.V

      கெளபாய் உலகம் அந்தப் பையனுக்கு புதிதென்பதால் தனக்குப் புரியாமல்போய்விடும் வாய்ப்பிருக்குமோ என நினைத்து, கொடுத்த காசுக்கு பங்கம்விளையாமலிருக்க மினிமம் கியாரண்டியை அளிக்குமென்று (அவனே கனித்துக்கொண்ட) 'த்ரில்லர்' ரக 'இ.இ.கொ'வை வாங்க முடிவுசெய்திருக்கலாம்!
      பையன் நுணுக்கமாகப் படிக்கும் திறனுள்ளவனாக இருந்தால் எடுத்த எடுப்பிலேயே கி.நா/காமிக்ஸுக்கு (நம்மைப்போல)ஆயுட்கால அடிமையாக வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை எதிர்வினையாகிவிடுமானால், அடுத்த வருடம் நமது ஸ்டாலைத் தவிர்த்துக்கொண்டு நடையைக்கட்டவும் வாய்ப்பிருக்கிறது!
      இந்தக் காலச் சிறுவர்கள்/குழந்தைகளின் கிரகிக்கும் திறன் மிக அதிகம் என்ற வகையில் முன்னதே நடக்கும் என்று நம்புவோமாக! ;)

      Delete
    2. EV,

      இது தவறல்லவா? Child abuseஐ அடித்தளமாக கொண்ட கதையை படிக்க வேண்டிய வயதா இது?

      Delete
    3. // எனக்கு ஒன்றுமே புரியவில்லை.! //

      புரட்டிப்பார்க்கும்போது கவரும் விதத்தில் கிராஃபிக் நாவல்களின் சித்திரங்கள் உள்ளன என்கிறவகையில் பார்த்தால் இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. மோட்டாவான சைஸில் ஏகப்பட்ட வசனங்களுடன் உள்ள டெக்ஸ் வில்லர் கதைகள் முதல் பார்வையில் சிறார்களைக (அல்லது யாரையும்) கவர்வது கடினம்.

      Delete
    4. @ Arun

      நல்லவேளையாக அந்தப் பையனின் தேர்வு 'பெளன்ஸர்' கதைகளாக இல்லையே என்ற பெருமூச்சு எனக்கு! ;)

      Delete
    5. 14 வயதுக்கு உட்பட்ட வர்கள் இ.இ.கொ படிக்க கூடாது.

      Delete
    6. // நல்லவேளையாக பௌன்சர் கதைகளாக இல்லை.!//

      Delete
    7. //திரில்லர் ரக புத்தகத்தை வாங்க முடிவு செய்திருக்கலாம்.!//

      இதைப்போல என்னைப்போன்ற காமிக்ஸ் நண்பர் ஓருவர் காமிக்ஸ் பற்றிய அதிகம் பரிச்சயம் இல்லாத அவர் தன் மனைவியிடம் இ.இ.கொ. கதையை கொடுத்த போது அவர் அதை ஓரே மூச்சாக படித்துவிட்டு அந்த கதையை சூப்பர் என்று பாராட்டி உள்ளார்.இது நடந்த ஒரு வாரத்திற்கு முன்னால் அவர் எனக்கு போன் செய்து இ..இ.கொ.என்ன கதை சார் என்று என்னிடம்(????)கேட்டார்.!( நானே பாயை பிராண்டிக்கொண்டு இருந்தேன்)நானும் அவரும் போனில் புலம்பிக்கொண்டோம்.அதன் பிறகு எடிட்டருக்கு நான்கு பக்கங்கள் இ.இ.கொ.கதையை திட்டி( சந்தானம் பாணியில்) கழுவி கழுவி ஊற்றி கடிதம் எழதினேன்.!(பிறகு நேரில் மன்னிப்பு கேட்டுவிட்டேன்.)

      சமீபத்தில் வெளியான முனி பேய்படத்திற்கு எனது மகன் நச்சரிப்பில் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றபோது தியேட்ரில்.,குழந்தைகள் பெண்கள் கூட்டம் நிறைந்ததாக இருந்தது.பேய் படம் என்றால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பிடிக்கும் போல .!

      Delete
    8. //பேய் படம் என்றால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பிடிக்கும் போல .! ///

      குறிப்பாய் பெண்களுக்கு பேய்ப் படம் என்றால் ஏன் (ஆண்களைவிட) அதிகம் பிடிக்கிறது என்ற சந்தேகம் எனக்கு ரொம்பவருடங்களாகவே உண்டு! ஏன் ஏன் ஏன்?
      செனா அனா உள்ளிட்ட நண்பர்கள் யாராவது விளக்கமளித்தால் தேவலை!

      Delete
    9. ஈரோடு விஜய்.!

      //இந்தக்கால சிறுவர்களுக்கு கிரகிக்கும் ஆற்றல் அதிகம்.!//

      உண்மை.!உண்மை.!அதுவும் பெண் பிள்ளைகளுக்கு " ஸ்கொயர்" திறமை(பசங்களைவிட)

      Delete
    10. மேற்காணும் எனது சந்தேகத்தைத் தீர்த்து வைப்பர்களுக்கு சிறப்புப் பரிசாக (போராட்டக்குழுவின் சார்பில்) சிங்கிள்-டீ வித் பன் - காத்திருக்கிறது! ;)

      Delete
    11. செயலாளர் ..அவர்களே ...

      திருமணம் ஆகாத நண்பர்கள் இந்த கேள்வியை கேட்டால் ஓகே ...ஆனால் திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் நீங்கள் இந்த கேள்வியை கேட்பதை நினைத்தால் ஆண் குல அப்பாவிகள் சார்பாக அழுவதா ..சிரிப்பதா என தெரியவில்லை ....

      தனது பெர்பாம்ன்ஸை இன்னமும் கூட்டி கொள்வத்ற்கு அந்த பேய் படங்கள் பல வகைகளில் அவர்களுக்கு தோள் கொடுத்து உதவும் பொழுது தாய்குலங்களுக்கு பேய் படங்கள் பிடிக்காமல் இருக்குமா என்ன ?....

      ஆனால் இங்கே பார்வையிடும் பெண் பார்வையாளர்கள் விதி விலக்கு என்பதை உறுதியுடன் நான் கூறி கொள்வது ....



      நான் வீதிக்கு வராமல் இருப்பதற்கு தான் என்பதை தாங்கள் உணர்நதே இருப்பீர்கள் என "காஞ்சனா "மீது உறுதியாக நம்புகிறேன் ...

      Delete
    12. //தனது பெர்பாம்ன்ஸை இன்னமும் கூட்டி கொள்வத்ற்கு அந்த பேய் படங்கள் பல வகைகளில் அவர்களுக்கு தோள் கொடுத்து உதவும் பொழுது ///

      :D பின்றீங்க தலீவரே!

      'பேய்படம்னா ஏன் உங்களுகெல்லாம் இவ்ளோ பிடிக்குது? பேய்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?' அப்படீன்னு வீட்டம்மாகிட்டே ஒருநாள் கேட்டேன்...
      அதன்பிறகு நான் கண்விழித்தபோது வழுக்கிவிழுந்து மண்டையில் அடிபட்டுவிட்டதாகச் சொன்னார்கள்.

      ஹூம்...!

      Delete
    13. தலைவரே.!& ஈரோடு விஜய்.!


      ஹாஹாஹாஹாஹாஹா...................!

      Delete
    14. தன் உடன் பிறவா சகொதர சகோதரி களை screen ல பார்க்க அவுங்களுக்கு சந்தொஷமாதன இருக்கும்

      Delete
    15. ஹா...ஹா...@ தலீவர்,ஈனா வினா.

      செம...செம....


      குழந்தைகள்.....

      அவர்கள் பேய் படம் பார்க்க போவதில்லை என நினைக்கிறேன்..

      தனது யூனிபார்ம்,சாக்ஸ்,சட்டை ,அப்பா போன்ற வஸ்துக்களை அடித்து துவைத்து தள்ளுவண்டி காய்கறிகாரன்,ஹவுஸ்மெய்டு,சற்று தாமதமாக வரும் கேஸ் சிலிண்டர் டெலிவரி பாய் போன்றவர்களுக்கு சிம்ம சொப்பனம் என விளங்கும் அம்மா பயப்படும்தருணங்களும் உண்டு என்பதை பார்த்து ரசிக்கவே போகிறார்கள் என நினைக்கிறேன்....

      !!!!!!

      Delete
    16. கணேஷ் குமார் உங்கள் கருத்து செம சூப்பர் உண்மையும் அதுவே

      Delete
    17. @ செனா அனா

      குழந்தைகள் ஏன் பேய்படம் பார்க்கிறார்கள் என்ற உங்களது கருத்து ஏற்புடையதாக இருக்கலாம்தான்!

      ஆனால் என் கேள்விக்கான பதில் இதுவல்லவே?

      உரிய பரிசைப் பெற நீங்க இன்னும் சாஸ்தி உழைக்கணும் நண்பரே! ;)

      Delete
    18. அம்மாவுக்கு பிடிச்சதெல்லாம் பிள்ளைகளுக்கு ம் பிடிக்கும்

      Delete
    19. // தனது பெர்பாம்ன்ஸை இன்னமும் கூட்டி கொள்வத்ற்கு அந்த பேய் படங்கள் பல வகைகளில் அவர்களுக்கு தோள் கொடுத்து உதவும் பொழுது தாய்குலங்களுக்கு பேய் படங்கள் பிடிக்காமல் இருக்குமா என்ன ?...//

      // தன் உடன் பிறவா சகொதர சகோதரி களை screen ல பார்க்க அவுங்களுக்கு சந்தொஷமாதன இருக்கும் //

      ha ha ha LOL! :-)

      Delete
  40. 13 வயது இளையர்கள் படிக்கக்கூடிய கதையல்ல அது (இரவே இருளே கொல்லாதே).

    ReplyDelete
  41. கடைசி நாளன்று ஸ்டாலுக்குச் சென்றிருந்தேன்.

    1. ஆண்டுச்சந்தா பற்றிய தகவல்கள் இன்னமும் சிறப்பாக விளம்பரப்படுத்த வேண்டும்.

    2. இந்த ஆண்டு வர இருக்கும் புத்தகங்கள் பற்றிய புக்லெட் இல்லை. (தீர்ந்து விட்டதாம்). புதிய வாசகர்களை நாடிச்செல்ல வேண்டிய வேலையில் இப்படியா இருப்பது?

    3. தகவல் குறிப்பு பாம்ப்ளேட் எதுவுமே இல்லை.

    4. சென்னையில் எங்கு கிடைக்கும் என்ற கேள்விக்கு 3 எலெபெண்ட் என்று சொன்னால் மட்டும் போதுமா?

    icing on the cake: ஒரு 40 வயது நபர் வந்து ஒன்றாம் வகுப்பு படிக்கும் பெண்ணுக்கு காமிக்ஸ் கேட்கிறார். யாரோ ஒருவர் அவருக்கு லக்கிலூக் எடுத்து கொடுக்கிறார் (அநேகமாக ஆர்வக்கோளாறு வாசகராக இருக்கக் கூடும்).

    இதுபோல தவறாக பரிந்துரை செய்யப்பட்ட புத்தகம் வாங்கியவர்கள்தான் நமக்கு முதல் Word of mouth publicity செய்பவர்கள். ஆனால், negative ஆக. ஆமாம், 5-6 வயது பெண்ணுக்கு எதற்கு லக்கி லூக் கதை?

    இன்னமும் நிறைய எழுதலாம். ஆனால், அவையெல்லாம் வீண் ஆக எனது நேரத்தை எடுத்துக்கொள்ளும் என்பதால்,

    சுபாய நமஹ.

    ReplyDelete
    Replies
    1. ////icing on the cake: ஒரு 40 வயது நபர் வந்து ஒன்றாம் வகுப்பு படிக்கும் பெண்ணுக்கு காமிக்ஸ் கேட்கிறார். யாரோ ஒருவர் அவருக்கு லக்கிலூக் எடுத்து கொடுக்கிறார் (அநேகமாக ஆர்வக்கோளாறு வாசகராக இருக்கக் கூடும்).

      இதுபோல தவறாக பரிந்துரை செய்யப்பட்ட புத்தகம் வாங்கியவர்கள்தான் நமக்கு முதல் Word of mouth publicity செய்பவர்கள். ஆனால், negative ஆக. ஆமாம், 5-6 வயது பெண்ணுக்கு எதற்கு லக்கி லூக் கதை//////

      நீங்கள் தலையிட்டு "ஸ்மர்ப்ஸ்"" பரிந்துரைத்து இருப்பீர்கள் என மனமாற நம்புகிறேன்..Mr.அருண்.

      Delete
    2. //நீங்கள் தலையிட்டு "ஸ்மர்ப்ஸ்"" பரிந்துரைத்து இருப்பீர்கள் என மனமாற நம்புகிறேன்..Mr.அருண்.//

      நானும் அவ்வண்ணமே நம்புகிறேன்!

      Delete
    3. nope. i didn't had the chance to do so.

      Delete
    4. செல்வம் அபிராமி.!ஈரோடு விஜய்.!

      :-)

      Delete
    5. அவ்வண்ணமே அடியேனும்..!

      Delete
    6. //ஒரு 40 வயது நபர் வந்து ஒன்றாம் வகுப்பு படிக்கும் பெண்ணுக்கு காமிக்ஸ் கேட்கிறார். யாரோ ஒருவர் அவருக்கு லக்கிலூக் எடுத்து கொடுக்கிறார் (அநேகமாக ஆர்வக்கோளாறு வாசகராக இருக்கக் கூடும்)//

      இது தவறா என்று தெரியவில்லை. என் மகள் ஆறு வயது & அவளுக்கு லக்கி லுக், அதில் வரும் ஜாலி மற்றும் ரின் டின் கேன் மிகவும் பிடிக்கும். கிட்டத்தட்ட 15-20 (Cinebook வரிசை) புத்தகம் படித்து இருக்கிறாள். குறிப்பாக பயங்கர பொடியனில் வரும் பில்லி கடைசியில்(ooo..this guy butt naked )அடி வாங்கும் காட்சியில் விழுந்து விழுந்து சிரிப்பார். வீடியோ கேம்ஸ்க்கு பதிலாக பெரும்பாலும் வெளியில் போகும்போது பொழுதை போக்க இந்த மாதிரி ஏதாவது ஒரு புத்தகம் கொடுத்து விடுவோம். அவளுக்கு bluecoatsம் மிகவும் பிடிக்கும். என்னை பொறுத்தவரை கதைக்களம் (போர், cowboy) பற்றி அவர்களுக்கு தெரியாது. சில்லியாக இருக்கும் கட்சிகள்/வசனங்கள்தான் அவர்களை கவர்ந்து விடுகின்றன.

      நாம் படிக்கும் பழக்கத்தை சிறு வயதிலேயே அறிமுகப்படுத்தி விடும் போது குழந்தைகள் அடுத்த கட்ட புத்தகங்களுக்கு விரைவில் சென்று விடுகின்றனர். மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டாலும், என் மகள் என்ன புத்தகம்/படம் பார்க்க/படிக்க வேண்டும்என்பதை அவளே அல்லது நாங்களே தீர்மானிக்கிறோம்.

      Delete

    7. @ M.P

      //இது தவறா என்று தெரியவில்லை//

      நண்பர் அருண் அந்தக் கேள்வியை எழுப்பியபோது எனக்கும் (உங்களைப் போலவே) இப்படி ஒரு எண்ணம் வந்தது. 'ஸ்மர்ஃப்ஸ்' இருக்கும்போது லக்கியை பரிந்துரை செய்ததுவேண்டுமானால் ஒரு சிறப்பான அணுகுமுறையாக இல்லாதிருக்கலாம். ஆனால் 'தவறான பரிந்துரை' என்பதை என்னால் முழுவதுமாக ஏற்கமுடியவில்லை!

      என் 6 வயது மகளுக்கு சுட்டிலக்கி, ஸ்மர்ஃப்ஸைத் தொடர்ந்து தோர்கல் கதை ரொம்பவே பிடித்திருக்கிறது. 'மூன்றாம் உலகம்' கதையை ஒருவரி பாக்கியின்றி படித்துக்காட்டி கதை சொல்லியிருக்கிறேன். ஆரிஸியாவை மீட்க தோர்கல் செய்யும் சாகஸங்களும், கதையில் வரும் மாயாஜால உலகமும் அவளை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. ' மீதி கதை (அடுத்த புத்தகம்) எப்போ வரும் டாடி?' என்று என்னிடம் என்கொயரி வேறு! அவளுக்கு இக்கதை முழுவதுமாகப் புரிந்திருக்க வாய்ப்பில்லையென்றாலும் ( நமக்கே முழுசா புரியாதுன்றது வேற விசயம்!), அந்தப் புத்தகத்தில் அவளுக்கு என்ன தேவையோ அதை எடுத்துக்கொண்டிருக்கிறாள் என்ற விசயத்தில் நானும் உங்களைப் போலவே திருப்தியாய், சந்தோசமாய் உணர்க்கிறேன்! :)

      Delete
    8. //நமக்கே முழுசா புரியாதுன்றது வேற விசயம்!// lol

      Delete
    9. இந்த காலத்து குழந்தைகள் அதிபுத்திசாலிகளாக உள்ளனர்.அதிலும் பெண் குழந்தைகள் படு ஷார்ப்.!

      Delete
  42. இதுபோன்ற கதைகளை - ஸ்பெஷல் சந்தா வகையறாவுக்குள் தேர்வுசெய்து வெளியிடுங்கள் சார்!

    ReplyDelete
  43. Tiruppur Book Fair Lion Comics Stael No; 20..

    ReplyDelete
  44. @ ALL : திருப்பூரில் (நமக்கொரு) திடீர் திருவிழா !

    நாளை துவங்கவிருக்கும் திருப்பூர் புத்தக விழாவினில் கடைசி நிமிடத்தில் நமக்கு ஸ்டால் ஒதுக்கியுள்ள அமைப்பாளர்களுக்கும், அதனை செயல்படுத்திட உதவிய நண்பர் குமாருக்கும் நன்றிகள் !

    நமது ஸ்டால் நம்பர் 20 ! நடைபெறவிருக்கும் இடம் : KRC சிட்டி செண்டர், டைமண்ட் திரையரங்கம் எதிர்புறம். ! PLEASE DO VISIT US FOLKS !!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியான செய்தி....
      வாழ்த்துக்கள் சார்....
      விற்பனை நன்றாக நடைபெற முன்கூட்டமுன்கூட்டிய வாழ்த்துக்கள் சார்..

      Delete
    2. விற்பனையில் சாதனை படைக்க வாழ்த்துக்கள் ஆசிரியரே

      Delete
    3. அடடே! சந்தோசமான செய்திதான்!
      ஸ்டால் கிடைக்க உதவிய நண்பர் குமாருக்கு நன்றி கலந்த வாழ்த்துகள்!

      வரும் ஞாயிறு அன்று புத்தகத் திருவிழாவுக்கு ஒரு விசிட் அடிக்கலாமா நண்பர்களே?

      Delete
    4. குமாருக்கு நன்றிகள் பல
      நல்ல முயற்சி எடுத்து ஸ்டால் வாங்கி உள்ளார்.
      பாராட்டுக்கள்

      Delete
    5. ///வரும் ஞாயிறு அன்று புத்தகத் திருவிழாவுக்கு ஒரு விசிட் அடிக்கலாமா நண்பர்களே?///--- ஓகே..நிச்சயமாக ஒரு விசிட் அடிக்கலாம் விஜய்.........
      நாங்கள் ரெடி, சேலத்தில் இருந்து ஒரு மினி டீம் வந்து விடுகிறோம்....

      Delete
    6. வாவ் ! சூப்பர் நியூஸ் .விற்பனை சுறுசுறுப்பாக நடக்கும் சார் ! என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

      Delete
    7. நண்பர் குமார் அவர்கட்கு என் நன்றிகள் .

      Delete
    8. உங்கள் வாழ்த்துக்கு நன்றி இதில் சம்பத் அண்ணாக்கும் பங்கு உண்டு

      Delete
    9. அடடே! 'அண்ணா' சம்பத்துக்கு தமிழ் கி.நா - சந்தா-Z ரசிகர் மன்றத்தின் சார்பில் நன்றிகளும் வாழ்த்துகளும்!

      எடிட்டர் சார்! பிப்ரவரி வெளியீடுகளை ஞாயிறன்று நாங்கள் தரிசித்திடும் பாக்கியம் கிடைக்கப் பெறுவோமா? குறைந்தபட்சம், தயாரான இதழ்களையாவது?

      Delete
    10. ///எடிட்டர் சார்! பிப்ரவரி வெளியீடுகளை ஞாயிறன்று நாங்கள் தரிசித்திடும் பாக்கியம் கிடைக்கப் பெறுவோமா? குறைந்தபட்சம், தயாரான இதழ்களையாவது///--- சர்ப்பு ரைசாக உங்களையே சந்திக்க இயலுமோ ஆசிரியர் சார்????

      Delete
    11. டெக்ஸ் சம்பத்துக்கும்,திருப்பூர் குமார் அவா்களுக்கும் நன்றிகள் கோடி!

      Delete
    12. டெக்ஸ் சம்பத்துக்கும்,திருப்பூர் குமார் அவா்களுக்கும் நன்றிகள் கோடி!

      Delete
  45. Replies
    1. அடடே!ஜெய சேகர் சார்.! வணக்கம்.! நலமா.?

      Delete
  46. நல்ல செய்தி..! உதவிய நண்பர் திருப்பூர் குமாருக்கு எனதுபாராட்டுகள்..!

    திருப்பூர் குமாரை பார்க்க..இங்கே'கிளிக்'

    ReplyDelete
    Replies
    1. மாயாவி சார்.! எங்கே ஆளைக்காணோம் ? மாடஸ்டி கதைகள் பற்றிய லிஸ்ட் கொடுத்தற்கு மிகவும் நன்றி.! லிஸ்டை வைத்து விடுபட்ட இரண்டு கதைகளை தேடும் வேட்டையில் இறங்கி விட்டேன்.! உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி.!

      "அந்த வானத்தை போன்ற மனம் படைத்த மன்னவனே.!" என்று பாடத்தோன்றுகிறது.!நன்றி.!

      Delete
    2. அடடே! இவர்தான் குமாரா? நன்றி .!

      குமார் சார்.! எந்த தேதி வரை சார்.?

      Delete
    3. // லிஸ்டை வைத்து விடுபட்ட இரண்டு கதைகளை தேடும் வேட்டையில் இறங்கி விட்டேன்.! //

      MV சாரிடமே மாடஸ்டி புத்தகங்கள் இல்லியா :(
      .

      Delete
    4. MV அவர்களே...கையில இருந்த இஸ்டியூமெண்ட் என்னைய கைவிட்டுட்டதால அதிகம் தலைகாட்ட முடியலை..! :(

      Delete
    5. சிபி சார்.!

      1990 லிருந்து 1997 வருடம் என்னைப்பொருத்தவரை எனக்கு காமிக்ஸ்இருண்ட காலம்.அந்த காலகட்டத்தில் இன்னும் 15 புத்தகங்கள் இன்று வரை நான் கண்ணில் பார்த்தது கூட கிடையாது.என்னிடம் உள்ள லயன்கலெக்ஷனில் 23 புத்தகங்கள் மிஸ்ஸிங்.! அதில் சுமார் 15 புத்தகங்கள் அந்த காலகட்டத்தை சேர்ந்தது.இரத்த சிலை கதை மாடஸ்டி கதை என்றவுடன் இருப்பு கொள்ளவில்லை.விரைவில் கைப்பற்றி விடுவேன்.!

      Delete
  47. அடடே! 'அண்ணா' சம்பத்துக்கு தமிழ் கி.நா - சந்தா-Z ரசிகர் மன்றத்தின் சார்பில் நன்றிகளும் வாழ்த்துகளும்!////-- குமார் & தம்பி டெக்ஸ் சம்பத்,இருவருக்கும் அப்படியே நாங்களும் நன்றிகள்+ வாழ்த்துக்கள் சொல்கிறோம்...இவன்...
    1000 பக்க க.வெ. குண்ண்ட்ட்ட்டு வேண்டுவோர் சங்கம்......

    ReplyDelete
    Replies
    1. //1000 பக்க க.வெ. குண்ண்ட்ட்ட்டு வேண்டுவோர் சங்கம்....//

      சங்கம் வாழ்க.! வளர்க.!

      Delete
    2. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்_ ​/\_

      1000 பக்க க.வெ. குண்ண்ட்ட்ட்டு வேண்டுவோர் சங்கம்......
      1000 பக்க கலர் குண்ண்ட்ட்ட்டு வேண்டுவோர் சங்கம்...... :))
      .

      Delete
  48. !
    ஷ்ஹப்பா....... மீண்டு(ம் ) வரும் கி.ந. trend எடிட் சார் thumps up !

    +1

    அப்புறம் அந்த சந்தா Z .....?

    ReplyDelete
  49. தேவ இரகசியம் தேடலுக்கல்ல!:

    இந்த புத்தகத்தின் ஒவொரு சித்திரமும் உயர் ரகம். ஒரு காட்சியில் பில்டிங் பின்புறம் சூரியனும் பில்டிங் உட்புற காட்சியில் அதன் ஒளி சிதறலும் ஒப்பற்ற சித்திர தரம்.

    nostalgia:
    விடிய விடிய refresh செய்ததும் எடிட் அதிரடி சிறப்பு பதிவு அதி காலையில் தந்ததும்.

    நாம் கடந்த மைல் கல் ஒரு nostalgia special screen shot கிளிக்: 1000000 hits

    ReplyDelete
    Replies
    1. @ Sathishkumar S

      சூப்பர்! 999999 ஹிட்ஸை screen shot போடத் தோன்றிய உங்களுக்கு ஒரு சபாஷ்!! :)

      Delete
  50. SA://கிராபிக் நாவல்கள் பற்றிய கேள்விகளும் விவாதங்களும் தளத்தினை இன்னும் ஆரோக்கிய பாதையில் கொண்டு செல்லும்...//

    special +1

    ReplyDelete
    Replies
    1. //கி.நா.பற்றிய விவாதங்கள்.//

      கி.நா.பற்றிய விவாதங்கள் என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் அவசியம்.!

      நான் முதன்முதலில் கி.நா. வில் படித்து ரசித்த கதை வானமே எங்கள் வீதி
      கதையை மிகவும் சிரமப்பட்டு நானே யாருடைய உதவி இல்லாமல் புரிந்து படித்தேன்.அது புதுவித உணர்வை கொடுத்தது.வழக்கமாக படிக்கும் காமிக்ஸை விட பலமடங்கு சந்தோசம் என்றால் அது மிகையாகாது.இரண்டாவது கதை நம் மேச்சேரிகாரர் கிளிப்பிள்ளைக்கு விளக்கம் கொடுப்பது போல்100% சந்தேகத்தையும் தீர்த்து வைத்த ஒ.சி.சு. கதை.அதுவும் ஒரு விதமான சந்தோச உணர்வை கொடுத்தது.மூன்றாவது கதை நேற்றுதான் படித்தேன்.அதற்கு எடிட்டருக்குதான் நன்றி சொல்லவேண்டும்.பொதுவாகவே என்னைப்போன்றவர்கள்.பளிச்சென்று மதிய வெயிலில் நடக்கும் கதைகளை போல் படித்து விட்டு.ஜீரோ வாட்ஸ் வெளிச்சத்தில் நடக்கும் கதைகளை படிக்கும் போது கொஞ்சம் எரிச்சலாகத்தான் உள்ளது.ஆனால் தொடர்ந்து படிக்கும் போது நாமும் அந்த உலகில் நுழைந்தது போல் ஒரு பிரம்மை.மொத்தத்தில் கி.நா.படிக்கும்போது நெஞ்சில் பூரான் ஓடுவது போன்ற ஓர் உணர்வு ஏற்படத்தான் செய்கிறது.!

      எல்லாம் நல்லாத்தான் இருக்கு .ஒவ்வொரு இதழ் வரும்போது நான் ஒவ்வோர் வீட்டு வாசல் கதவையும் தட்டிக்கொண்டு இருக்க முடியாது.!எடிட்டர் எங்களைப்போன்று திரிசங்கு சொர்க்கத்தில் உள்ளவர்களுக்கு ஏதாவது வழிசெய்தால் நன்றாக இருக்கும்.இல்லாவிட்டால் என் பெயரை கேட்டால்.,கிட் ஆர்ட்டின் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓட வாய்ப்பு உள்ளது.!.புத்தக கண்காட்சியில் மரு ஒட்டிக்கொண்டு மாறுவேடத்தில் வர வாய்ப்பு உள்ளது.இங்கும் போலி ஐ.டி.யில் உலாவ வாய்ப்பு உள்ளது.! கி.நா.படிக்கும் ஆனந்ததத்தை நம் நண்பர்கள் அனைவருக்கும் சென்றடைய ஏதாவது செய்யுங்கள்.!

      Delete
    2. //MV//
      +1


      //ஒ.சி.சு. கதை.அதுவும் ஒரு விதமான சந்தோச உணர்வை கொடுத்தது.மூன்றாவது கதை நேற்றுதான் படித்தேன்.அதற்கு எடிட்டருக்குதான் நன்றி சொல்லவேண்டும்.//
      +1
      MV sir நீங்களும் கி ந (சரியான)பாதையில்...! :)

      //கி.நா.படிக்கும் ஆனந்ததத்தை நம் நண்பர்கள் அனைவருக்கும் சென்றடைய ஏதாவது..//

      நாம் அனைவரும் கி ந புத்தகத்தை பற்றிய கருத்தை கேள்விகளும் விவாதங்களும்ஆகா our history வாத்தியார் சொன்னது போல பகிர்வதே தீர்வு என்று நானும் கருதுகிறேன்

      Delete
    3. நன்றி.! சதீஸ்குமார் அவர்களே.!

      Delete
  51. கோலாகலமாக துவங்கவிருக்கும் திருப்பூர் புத்தக திருவிழா
    மதியம் எடுத்த புகைப்படங்கள் கொஞ்சம் தாமதமாகிற்று

    எனது முதல் முயற்சி இதற்கு உதவிய அன்பு உள்ளங்கள் மாயாவி சிவா & ஈரோடு விஜய்
    அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் _ /\_

    தவறு ஏற்பட்டால் பொறுத்தருளவும் நன்றி _ /\_

    திருப்பூர் புத்தகத்திருவிழா முகப்பு

    ReplyDelete
  52. Replies
    1. Nice photos.sibiji...kindly update whenever plausible...

      Thanks a lot....

      Delete
    2. சூப்பர் சிபி ஜி!

      மேலே செனா அனா சொன்ன மாதிரியே செய்யுங்க ப்ளீஸ்!

      //வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்//

      வாழ்த்த எப்போதான் வயதுக்கு வருவீங்களாம்? கேக்குறேன்...கிர்ர்ர்ர்...

      Delete
    3. @ சிபி

      நல்ல அப்டேட்ஸ், தொடருங்க..!! ஆமா அதுஎன்ன முதல்முயற்சிக்கு உதவின..??? இது எப்படி இருக்கு தெரியுமா..???

      எலி-பொறி-வடை = உதவி-வாழ்த்து-மா.சி [அதாவது ஏதாவது சொல்லி சிக்கவெச்சுடுறிங்க..உர்ர்ர்ர்]

      Delete
    4. போட்டோ புடிச்சி., ப்ளாக்குல போடுற பட்டப்படிப்பை.,
      சீமைக்கு போய் படிச்சி போட்டு வந்திருக்கும் சிபிஜியை வாழ்த்த வார்த்தையில்லாம வணக்கம் போட்டு மருவாதி பண்றேன்.!!!

      Delete
    5. // வாழ்த்தும் வயது எப்போதுதான் வரும்.!//

      ஹாஹாஹாஹா............

      சிபி சார்.! போட்டோக்கள் சூப்பர்.! நன்றி.!

      Delete
    6. நன்றி

      செனா அனா , Erode VIJAY, mayavi. siva, KiD ஆர்டின் KannaN, Madipakkam Venkateswaran அவர்களே _ /\_
      .

      Delete
  53. "ஒரு பட்டா போட்டி " நடைபெற இருக்கும் "திகில் நகரில் ... டெக்ஸ் " களமிறங்கி., அங்கே நிலவும் "மஞ்சள் பூ மர்மம் " என்னவென்பதை கண்டறிந்து., அதற்கு காரணமானவர்களுக்கு "சட்டமும் சுருக்குக் கயிறும் " தயாராக இருக்கின்றன என்று என்றைக்கு உறுதி செய்யப் போகிறார்????

    (அதாவது., பிப்ரவரி மாச புக்ஸ் எப்போ கிடைக்கும்னு சிம்பிளா கொஸின் பண்ணியிருக்கேன் ., தட்ஸ் ஆல்) :-)

    ReplyDelete
    Replies
    1. எல்லாருமே மாயாஜாலம் காட்ட முயற்சி பண்றாங்கப்பா....க்ர்ர்..

      Delete
    2. தனிதவில் வித்வான் ரெடி ஆயிட்டார் போல..! :P

      Delete
    3. ///தனிதவில் வித்வான் ரெடி ஆயிட்டார் போல..! :P///

      நீங்க ஆடத் தயாருன்னா நான் அடிக்க எப்பவுமே ரெடிதான் வேதாளரே! ! ! : -)


      ///எல்லாருமே மாயாஜாலம் காட்ட முயற்சி பண்றாங்கப்பா....க்ர்ர்..///

      வழக்கமான மாயாசாலத்துல பத்துல ஒரு பங்கு கூட கொஞ்ச நாளா காட்டுறத்துக்கு டைம் கிடைக்குறதேயில்ல கண்ணு.! !

      புதுசா முயற்சியெல்லாம் பண்ண வேண்டிய ஆளா நாங்க.! !

      டர்ர்ர்ர்ர்ர்ர்ர் …………………!!!

      Delete
    4. வித்வான் வாசிச்சா ஆட்டக்காரன் ஆடித்தானே ஆகணும்..வாசிப்புக்கு தானே ஆட்டமே...![வாசிப்பில்லாம ஆடினா கிறுக்குபயன்னு சொல்லமாட்டங்க]

      Delete
    5. // (அதாவது., பிப்ரவரி மாச புக்ஸ் எப்போ கிடைக்கும்னு சிம்பிளா கொஸின் பண்ணியிருக்கேன் ., தட்ஸ் ஆல்) :-) //

      ஹ்ம்ம் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவாரு

      ஒ சி சுக்கு அட்டகாசமா விளக்கம் தந்தப்பவே நீங்க ரெடியாயிட்டீங்கன்னு புரிஞ்சது

      இவர கி நாவுக்கு விளக்கம் கேட்டவர கேக்கோணும் :))
      .


      .

      Delete
  54. Does it makes sense to add these links to the lioncomics.in website alongside the book sale page ?
    It will provide a review / additional context for the buyers to decide on buying a particular book.

    http://plusminusnmore.rapo.in/devarakasiyangal-tedalukkalla-vijayan/
    http://lion-muthucomics.blogspot.in/2014/08/blog-post_31.html

    ReplyDelete

  55. //குறிப்பாய் பெண்களுக்கு பேய்ப் படம் என்றால் ஏன் (ஆண்களைவிட) அதிகம் பிடிக்கிறது என்ற சந்தேகம் எனக்கு ரொம்பவருடங்களாகவே உண்டு! ஏன் ஏன் ஏன்?
    செனா அனா உள்ளிட்ட நண்பர்கள் யாராவது விளக்கமளித்தால் தேவலை! //

    //மேற்காணும் எனது சந்தேகத்தைத் தீர்த்து வைப்பர்களுக்கு சிறப்புப் பரிசாக (போராட்டக்குழுவின் சார்பில்) சிங்கிள்-டீ வித் பன் - காத்திருக்கிறது! ;)//


    போட்டிக்ககான எனது பதில்: [பொதுவான போட்டி வெச்சி பரிசு அறிவிக்கற விஜ...ன்னு ஆரம்பிக்கறவங்க அப்படியே அம்போன்னு அபீட் ஆயிடுவாங்க அதை இந்த தபா இத்தாலி விஜ[ய்]...உடைகிறாரா பாப்போம்]

    பொதுவா பழங்காலம் தொட்டு எந்த மாயாஜால கதை எடுத்துகிட்டாலும் அதுல சூனியக்காரி தான் பெரும்பாலும் இருப்பாங்க. சூனியக்காரன் இருக்கமாட்டாங்க, அப்படியே இருந்தாலும்கூட இன்றளவும் சூனியக்காரிகள் கேரக்டர்களுக்கு தான் மொவுஸ் அதிகம்..!

    அதேமாதிரி எந்த ஆதிகாலத்து பேய் கதைகள் எடுத்து படிச்சாலும் அதுல 'நீண்ட கூந்தல் வெளீர்நிறத்துல ஒரு பயங்கர பெண் பேய்..' அப்படின்னுதான் வரும், 'முரட்டு மீசைவைத்த ஆண் பேய்..' ன்னு வராது..!

    இதுக்கு காரணம் மண்தோன்றி முன்தோன்றா காலம் தொட்டே மொத்த பெண்வர்க்கத்தையும் அரசாங்கமும், ஆண்வர்க்கமும் பண்ணின ஆதிக்கத்துக்கு பழிவாங்கற மாதிரி அந்த காலம் தொட்டே எழுதப்பட்ட ஆதங்க கதைகளை மொத்த பெண் வர்க்கமும் தேடிபிடிச்சி படிச்சி கொடுத்த ஆதரவுதான் காரணம்..!

    அந்த காலத்துல சமூகம் பண்ணின உருட்டல் மிரட்டல்களை இன்னிக்கு வீட்டிக்குள்ள வீட்டுகாரன்கிற பேர்ல அப்பப்போ [ஜென்ம தொடர்பு] பண்ணிட்டுதான் இருக்கான். அவனை எப்படியாச்சும் அடிச்சி மிதிக்க ஒரு வழிஏதும் கிடைக்காதா..? ஒரு வேளை பேயாமாறிட்டா எப்படியேல்லாம் டெக்னிகலா பழிதீர்கலாம் [அதே ஜென்ம தொடர்பு] அப்படிங்கிறதை அப்டேட் பண்ணிக்க லேடிஸ் தேடிபிச்சி பேய் படமா பார்க்குறாங்க... ஓகேவா...கைஸ்..!

    ReplyDelete
    Replies

    1. ///போட்டிக்ககான எனது பதில்: [பொதுவான போட்டி வெச்சி பரிசு அறிவிக்கற விஜ...ன்னு ஆரம்பிக்கறவங்க அப்படியே அம்போன்னு அபீட் ஆயிடுவாங்க ///

      ஹாஹாஹா! மாயாவி அவர்களே... உங்களோட இந்த ஆதங்கத்துக்காகவே ஒரு சிறப்புப் பரிசு ( சிங்கிள் சுக்கு-டீ வித் க்ரீம்-பன்னு) உண்டு! :)))

      ஆனா 'அந்த ' விஜ...னு பேர் வச்சிருக்கிறவர் அப்படி எத்தனை போட்டி வச்சுட்டு அம்போனு அப்பீட் ஆகிட்டார்? என்ன... ஒரு ஐஞ்சாறு போட்டிவச்சு ஒரு ஏழெட்டுமுறை தானே அப்பீட் ஆகியிருக்கார்? ;) இதெல்லாம் ஒரு ப்ரச்சினையா? :))
      பொதுவாவே விஜ..னு பேரை வச்சிருக்கிறவங்க ரொம்ப இன்னசன்ட்! நல்லவங்க! கஷ்டப்படவே பிறந்தவங்க! பொம்மை பொஸ்தவம்னா அவிங்களுக்கு ரெம்ம்ப்ப்ப பிடிக்கும்! அவங்க மத்தவங்களுக்கு புக்கு படிக்க கொடுப்பாங்க; பழசுபட்டையை பரிசாக்கூட கொடுப்பாங்க... அ..ஆனா அவங்களுக்கு யாருமேஏஏஏ புக்குக் கொடுக்கமாட்டாங்க...

      பாவம்ல...? ;)

      Delete
    2. மாயாவி !& ஈரோடு விஜய்.!

      ஹாஹாஹாஹாஹா.....................

      Delete
    3. ஈனா வினா! ,

      இப்போ மாயாவி க்கு டீயும் பன்னும் நீங்க வாங்கித் தரிங்களா? இல்லே நான் வாங்கி தந்திடட்டுமா!!?

      எவ்ளோ பெரிய்ய பதில்! !!!

      Delete
    4. @ கிட்ஆர்ட்டின்

      // எவ்ளோ பெரிய பதில் ///

      :)))

      இவரு (மாயாவி) வேன் எல்லாம் வச்சுக் கடத்தியிருக்கிறார்ன்றதுக்காக நான் டீ,பன் போன்ற உயர் ரக பரிசுகளை வாரி வழங்கிவிட முடியுமா என்ன!! ;)

      Delete
    5. @ மக்களே

      ஆக மக்களே விஜ...ன்னு பெயருள்ளவங்க எப்பவுமே அப்படிதான்னு திரும்பவும் கிளீனா புரூவ் ஆயிடிச்சி..! எம்மாம்பெரிய விளக்கத்தை கொடுத்திருக்கேன்.அதைபத்தி " தம்பி பதில் சுமாரா இருக்கு...இல்ல ஒத்துகிறேன்...இல்லாங்காட்டி இன்னும் புதுசா யோசி.." ன்னு எதுனா சப்ஜட்டா பேசாம, வழக்கம்போல அபீட் ஆகி... "தம்பி டி இன்னும் வரலை.."ன்னு கொடுத்த ஆன்சர் பேப்பரை பஜ்ஜிக்கு டவலா எடுத்து தொடச்ச விதம்...'உங்களோட இந்த ஆதங்கத்துக்காகவே ஒரு சிறப்புப் பரிசு ( சிங்கிள் சுக்கு-டீ வித் க்ரீம்-பன்னு) உண்டு!'ன்னு பதில் சொன்ன டெக்னிக்...

      யப்பா..இந்த ப்ளாக்ல போட்டியா.....????.....~@#$%^&*(+_:<|{)..........ஆளை விடுங்க..!

      Delete
    6. //வீட்டுக்குள்ள வீட்டுக்காரன் என்ற பெயரில்.....//

      மாயாவி சார்.! இந்த அதிசியம் எங்க நடக்குது ன்னு சொன்னா நல்லாயிருக்கும்.தண்ணீர் ஊற்றி பைக் ஓட்டுவேன் னு சொல்லுங்கள் நம்புகிறோம்.


      மூஞ்சையும் உடம்பையும் விறைப்பா வைச்சுக்கிட்டு நடப்பவர்களை அவர் வீட்டில் புலி யாக இருப்பார் நினைத்தால் அது தவறு.!

      Delete
    7. @ மாயாவி

      :))))))))))))) LOL

      பின்றீங்க! திடீர்னு உங்க நகைச்சுவை உணர்வு பல மடங்கு கூடிட்டமாதிரி இருக்கே!
      /// கொடுத்த ஆன்சர் பேப்பரை பஜ்ஜிக்கு டவலா எடுத்து தொடச்ச விதம்...///

      :))) சூப்பர்! இதுக்கே ஒரு சிறப்புப் பரிசு கொடுக்கலாம் ( மசாலா-டீ வித் ரவுண்டு பன்னு)

      Delete
    8. MV அவர்களே...
      //மூஞ்சையும் உடம்பையும் விறைப்பா வைச்சுக்கிட்டு நடப்பவர்களை அவர் வீட்டில் புலி யாக இருப்பார் நினைத்தால் அது தவறு.!//
      வீட்டுக்கு அடக்கமா அடிவாங்கிட்டு அமைதியா குடும்பம் நடத்தவங்க தமிழ்நாட்ல ரொம்பவே சொற்ப்பம்..அதாவது காமிக்ஸ் காதல்ர்கள்ன்னு வெச்சிக்கங்களேன்...நான் மெஜாரட்டிய இருக்கறவங்களை பத்தி சொல்றேன்... [டொண்டடயின்..]

      @ மக்களே

      பாத்துகோங்க...விஜ...ங்கிற கெத்தை காப்பாத்துற மாதிரியே இன்னும் மெயின் மேட்டைரை பேசாம...சொன்ன பதிலுக்கு பரிசு இருக்கணும் சொல்லாம...புள்ளையாருக்கு தேங்காய் உடைக்காம...[புள்ளைங்க பக்கமா ;)] வேற பக்கமாவே தேங்காய் உடைச்சி, பரிசை அறிவிச்சி தள்ளுறார் பாருங்க மக்களே..!

      Delete
    9. மாயாவி ஜி & ஈரோடு விஜய் ஜி

      ஹி ஹி ஹி பின்னுறீங்க போங்க ;)
      .

      Delete
    10. மாயாவி சிவா சார்,

      எனக்கு கூட விஜய் கிட்டயிருந்து "சிங்கிள் டீ வித் பன்" pendig :-)

      Delete
    11. @ Radja

      'பரிசுகள் பார்சலில் அனுப்பப்பட மாட்டாது; நேரில் வந்து மட்டுமே பெற்றுக்கொள்ள வேணும்"ன்ற போட்டி விதிமுறையை மறந்துட்டீங்களா?

      திருப்பூர், சேலத்திலிருந்தெல்லாம் கூட வந்து பரிசை வாங்கிச்கிட்டு சிங்கிள்-டீயை சர்புர்னு உறிஞ்சிக் குடிச்சவங்க இருக்கும்போது, இதோ இந்தண்டை இருக்கும் பிரான்சிலேர்ந்து பரிசை வாங்கிக்க நீங்க இம்புட்டு டயம் எடுத்துக்கிட்டா அது நான் என்ன பண்றது?! ;)

      Delete
  56. இன்று பிறந்த நாள் கொண்டாடும் திருப்பூர் ப்ளூபெர்ரி என்கிற நாகராஜன் சாந்தன் அவர்கள் இன்று போல் என்றும் கைநிறைய காமிக்ஸ் உடன் மகிழ்ச்சி யாக இருக்க வாழ்த்துகிறேன்......
    வருடா வருடம் அவருடன் மீதம் இருக்கும் யங் ப்ளூபெர்ரி கதைகளை நாமும் படித்து மகிழ ஆண்டவர் அருள் வேண்டும்---,சேலம் நண்பர்கள்...

    ReplyDelete
    Replies
    1. அவ்வண்ணமே வேண்டும் - ஈ.வி

      பிறந்தநாள் வாழ்த்துகள் ப்ளூ! :)

      Delete
    2. நாகராஜன் அவர்களுக்கு.!பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.!

      Delete
    3. பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவரே! :)

      Delete
    4. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

      திருப்பூர் ப்ளூபெர்ரி என்கிற நாகராஜன் அவர்களே _ /\_
      .

      Delete
  57. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நாகராஜன் சார் !

    ReplyDelete
  58. இன்று புத்தக திருவிழா சற்றே அமைதியாக இருந்தது
    வழக்கமாக சனிக்கிழமைகளில் இருக்கும் சுறுசுறுப்பு இல்லை
    நாளை இதற்கு சேர்த்து வைத்து சுறுசுறுப்பாக இருக்கும்

    சேலம் சேந்தம்பட்டி குழு மற்றும் ஈரோடு இளைஞர் குழு
    நாளை மதியம் ஒரு 2-3 மணியளவில் புத்தக திருவிழாவிற்கு வருகை தர இருப்பதாக
    உறுதி படுத்தப்பட்ட வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன

    ஆங்காங்கே உள்ள நண்பர்களும் வந்து சேரும்படி கேட்டுக்கொள்கிறோம்

    புத்தகத்திருவிழாவிற்கு இன்று வந்த ஒரு இளைஞர் அவர் கேட்டது டெக்ஸ் மற்றும் மாயாவி :))


    அந்த இளைஞரை காண

    கைவசம் உள்ள டெக்ஸ் புத்தகங்கள் இவை மட்டுமே

    அழகுடன் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நமது புத்தகங்கள் 1

    அழகுடன் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நமது புத்தகங்கள் 2

    அழகுடன் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நமது புத்தகங்கள் 3

    .

    ReplyDelete
  59. நடுவுல அந்த ஆயிரம் பக்கத்தை மறந்து விடாதீர்கள் நட்பூக்களே............

    ReplyDelete
    Replies
    1. Hi 🙋 friends it's me

      Shallum fernandas

      This is my பேக் id

      Delete
    2. Ha..ha............................................

      Delete
    3. Ha..ha............................................

      Delete
  60. இன்னும் புதிய பதிவு வரவில்லையே???
    திருப்பூர் புத்தக திருவிழா பயணம்
    இன்னும் சில மணித்துளிகளில்.!!!

    ReplyDelete
  61. இன்னும் பதிவக் காணலியே... ஒருவேளை, ரோபோ ஆர்ச்சியின் கலர் பதிப்புக்கு காப்பிரைட் வாங்க சிங்கம் சீமைக்கும் போய்டுச்சா?!!!

    ReplyDelete
  62. சிபி சார்.! நன்றி.!

    ஷல்லூம் சார்.! வணக்கம்.!

    என்ன ஆச்சு.! பதிவை இன்னும் காணோம்.எடிட்டர் தூங்கிவிட்டாரா.? ராக்கோழி கூவி எழப்பிவிட மறந்து விட்டதா.?


    ஈரோடு விஜயின் அறிவிப்பை(என்ட் கார்டு ) ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம்.!

    ReplyDelete