Powered By Blogger

Sunday, October 04, 2015

சித்திர வித்தகர்கள்...!

நண்பர்களே,

வணக்கம். சின்ன வயதுகளில் இரயிலைப் பிடித்து சென்னை போவதென்பது ஒரு செம உற்சாக அனுபவம்! திருச்சி-தஞ்சாவூர்-கும்பகோணம் என்று ஊரெல்லாம் சுற்றி அது கிட்டத்தட்ட 16 மணி நேரங்கள் கழிந்த பின்னே தான் சென்னையைத் தொடும் என்றாலும் ஒவ்வொரு ஸ்டேஷனைக் கடக்கும் போதும் ஒரு சன்னமான த்ரில் இருந்திடும் ! அதே போலவே இன்றைய நாட்களும் இருந்து வருகின்றன – ஒவ்வொரு மாதத்து இதழ் கற்றைகளைப் பூர்த்தி செய்து அடுத்த பணி மூட்டைகளுக்குள் புகுந்திடும் போதெல்லாம் ! ஆகஸ்ட்; செப்டம்பர்; அக்டோபர் என்று எக்ஸ்பிரஸ் இரயிலாய் நாட்களும், மாதங்களும் ஓட்டம் எடுக்க – வருஷத்தின் இறுதி 8 இதழ்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன தற்சமயம் ! அவற்றிலும் 7 இதழ்கள் மீதான பணிகள் 75% நிறைவு கண்டு – அச்சு + பைண்டிங்கின் பொருட்டு மட்டுமே காத்திருப்பது தான் highlight! பையில் விட்டமின் ‘ப‘ மட்டும் கணிசமாக இருப்பின் – நவம்பரிலேயே ஏழு இதழ்களையும் களமிறக்கி விட்டு – டிசம்பரில் ‘தங்கத் தலைவி‘க்கு மாத்திரம் தாலாட்டுப் பாடிக் கொண்டு காலாட்டிக் கொண்டு அமர்ந்திருப்பேன் ! ஆனால் அது கடைகளின் விற்பனைக்கும் தேவையற்ற சிரமம் என்பதால் 4 + 4 என்ற ஃபார்முலாவிலேயே நவம்பர் & டிசம்பர் மாதங்கள் புலர்ந்திடும்! இதோ – எஞ்சியுள்ள கதைகளின் லிஸ்ட்:

நவம்பர்:
தீபாவளி with டெக்ஸ் – ரூ.200/-
சா.வீ. ரோஜர் ‘மஞ்சள் நிழல்‘ – ரூ.60/-
வேய்ன் ஷெல்டனின் ‘வரலாறும்; வல்லூறும்‘ – ரூ.120/-
ஜானி நீரோவின் ‘மூளைத் திருடர்கள்‘ – ரூ.50/-

டிசம்பர்:
தோர்கலின் ‘மூன்றாம் உலகம்‘ – ரூ.120/-
கமான்சேவின் ‘சீற்றத்தின் நிறம் சிகப்பு‘ – ரூ.60/-
வானமே எங்கள் வீதி‘ பாகம் 3 – ரூ.60/-
மரணத்தின் முத்தம்‘ (மாடஸ்டி) – ரூ.50/-

இடையே கார்ட்டூன் ஸ்பெஷல் புகுந்ததன் காரணமாய் black & white கிராபிக் நாவல் மாத்திரம் postpone ஆகின்றது! DC காமிக்ஸின் அந்த கி.நா.வின் தொடர் உரிமைகளையும்; Batman கதைகளுக்கான உரிமைகளையும் ஒரு சேர வாங்கிட சென்றாண்டே பிரம்மப் பிரயத்தனம் செய்து வந்தோம்; அந்த நம்பிக்கையில் தான் அந்த Vertigo Comics-ன் கதையினை விளம்பரமும் செய்திருந்தோம்! ஆனால் ஸ்பைடர் + நமது மும்மூர்த்திகளின் மறுபதிப்பு உரிமைகள் புதுப்பிற்கே ஒரு மிகப் பெரிய தொகை முதலீடு செய்து முடிந்த நிலையில் இன்னுமொரு பெரிய கான்டிராக்டுக்கு கையிலும், பையிலும் வலு இருக்கவில்லை! So- இந்த Fleetway மறுபதிப்புப் படலத்தில் ஒரு பாதித் தூரத்தையாவது கடந்து விட்டோமேயானால் – கொஞ்சம் இலகுவாகும் சூழ்நிலையில் புதுக் கான்டிராக்டுகளைப் பூர்த்தி செய்ய நமக்கு சாத்தியமாகும் ! இது போன்ற சிக்கல்களுக்குள் சிக்கிடக் கூடாதே என்ற ஆதங்கத்தில் தான் ‘மும்மூர்த்தி மறுபதிப்பு‘ பக்கமாய் நான் துவக்கத்தில் பெரிய முனைப்பைக் காட்டவில்லை ! 2013-ல் அந்த மறுபதிப்புச் சந்தாவுக்கென நீங்களும் பெரியதொரு சுறுசுறுப்பைக் காட்டிடாத நிலையில் ஓசையின்றி அந்த project-ஐ ஓரம்கட்டிட முனைந்தேன் ! ஆனால் சற்றைக்கெல்லாம் மீண்டும் சூடு பிடித்த மறுபதிப்பு மோகம் எனக்கு வேறு வழியை விட்டு வைத்திருக்கவில்லை எனும் போது – Fleetway ஜோதியில் ஐக்கியமாவது அவசியமானது ! இன்றைக்கு இந்த மறுபதிப்புகளை நம்மில் ஒருசாராராவது ரசித்திடும் பட்சத்தில் கூட எனக்கு சந்தோஷமே ! வெறும் அலங்காரப் பொருட்களாய் உங்கள் அலமாரிகளை நமது மூத்த குடிமக்கள் ஆக்கிரமிக்காதிருப்பின் அவர்கள் பொருட்டு நமது மெனக்கெடல்களுக்கு ஒரு அர்த்தமிருக்கும்!

Moving onநவம்பரின் வண்ண இதழ்களில் அச்சுப் பணிகள் முடிந்த நிலையில் இப்போதே தயாராகவுள்ள நமது ரோஜரார் பற்றிய preview-ஐ பார்த்திடுவோமா ? ஓவியர் வில்லியம் வான்சின் அட்டகாச drawing அட்டைப்படத்தில் தகதகக்க – உள்பக்கங்களிலோ ரோஜரின் ஆக்ஷன் த்ரில்லர் காத்துள்ளது! ரிப்போர்டர் ஜானியின் கதைகளுக்கு ஒருவித template உள்ளது போலவே – ரோஜரின் கதைகளுக்கும் ஒரு பாணி இருப்பதை இம்முறையும் உணர முடியும் ! சித்திர பிரம்மாண்டம் ; ஆக் ஷன் கதைகள்; racy sequences ஆகியவையே ரோஜரின் முத்திரைகள் ! ஆழமான களங்களோ; plot-ல் வலிமையோ இங்கே பின்சீட்டுக்குப் போய்விடுவது சகஜமே 

சமீப காலத்துப் பாணியின் தொடர்ச்சியாய் இதோ அதே ஒரிஜினல் ராப்பர் – சிற்சிறு நகாசு வேலைகளுடன் ! பின்னட்டை எப்போதும் போலவே நமது கைவண்ணம் 
சென்றாண்டு நாம் வெளியிட்ட காலத்தின் கால்சுவடுகள் ஒரு நவீன யுக சாகஸமென்பதால் அதன் டிஜிட்டல் கலரிங் பாணிகள் hi-tech ஆக இருந்தன ! இதுவோ வான்ஸ் பணியாற்றிய 1970-ன் படைப்பு என்பதால் – சற்றே பளீர்-பளீர் வர்ணங்கள் நிறைந்த frame0கள் ஆங்காங்கே கண்ணில் படும்! இதோ உட்பக்கத்தின் ஒரு டீசர்:
நவம்பரின் star attraction சந்தேகமின்றி நமது இரவுக் கழுகாரும், அவரது பரிவாரங்களுமே! அதிலும் தற்போது எடிட்டிங் பணிகள் நடந்து வரும் “எமனின் வாசலில்.. கதையின் சித்திரங்கள் – எது மாதிரியும் இல்லாப் புது மாதிரி ! ‘மேக்னஸ்‘ என்ற புனைப்பெயர் கொண்ட இந்த இத்தாலிய ஓவியர் டெக்ஸ் தொடரில் இந்த ஒற்றைக் கதைக்காக மட்டுமே கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் மெனக்கெட்டாராம் – சித்திரங்கள் போட்டுத் தள்ள ! ராபெர்டோ ராவியோலா என்பது இவரது நிஜப்பெயர் இந்தக் கதையின் எடிட்டிங்கில் நிறையவே நேரம் பிடிக்கிறது – simply because சித்திரங்ளை ரசிக்க ஆங்காங்கே பிளக்கும் என் வாய் மூட ரொம்பவே நேரம் பிடிக்கிறது ! காட்டுக்குள்ளேயும், பள்ளத்தாக்கிலும் நடக்கும் இந்த சாகஸத்திற்குப் பின்னணியில் மனுஷன் செய்துள்ள வேலைப்பாடுகள் கற்பனைக்கு அப்பாற்பட்ட ரகம் ஒரு தனிமையான பிராந்தியத்தில் 7 ஆண்டுகள் தனியாய் இருந்து வெறித்தனமாய் பணியாற்றி - இந்த ஒற்றை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார் என்றால் - அந்த அர்ப்பணிப்பை என்னவென்பது ?  1996-ல் இயற்கை எய்தியிராவிடில் டெக்ஸ் தொடரில் மேற்கொண்டு சில அதகள படைப்புகளை மனுஷன் நிச்சயம் உருவாக்கியிருப்பார்! பாருங்களேன் அந்த ஓவிய மாயாஜாலத்தைவான்சின் தூரிகை ஒரு பக்கம்; ராவியோலாவின் அட்டகாசம் இன்னொரு பக்கமென - நவம்பர் ஒரு சித்திர விருந்தின் மாதமாய் அமையக் காத்துள்ளது என்று சொல்லலாம் ! 
Roberto Raviola (alias) Magnus
டெக்ஸின் அடுத்த சாகஸமாக வரவிருக்கும் கதைக்கான சித்திரங்கள் இதே refined பாணியில் இருக்காது தான் ; நில்-கவனி-சுடு கதைக்கான அதே ஓவியர் தான் இதற்கும் பணியாற்றியுள்ளார் ! ஆனால் கதையும் களமும் நமக்கு ரொம்பவே புதிது ! 330 பக்க நீ--மா-ன MAXI டெக்ஸ் வரிசையில் இடம்பிடிக்கும் பனிமலையில் ஒரு புதையலைத் தேடி” மிரட்டலானதொரு ‘தல‘ திருவிழா ! So- தீபாவளி with டெக்ஸ் எங்கள் ஊர் பட்டாசாய் பொறி பறக்கச் செய்யப் போவது நிச்சயம்!

ஒரு evergreen டாப்-ஸ்டாரின் topic-லிருந்து தற்போதைய சூப்பர் ஸ்டார் லார்கோவுக்குத் தாவுவோமா ? நமது கோடீஸ்வர பில்லியனர் காமிக்ஸ் உலகிற்கு அறிமுகமாகி இந்த நவம்பரோடு கால் நூற்றாண்டாகிறது! காத்திருக்கும் (புதிய) லார்கோ சாகஸத்தின் இரண்டாம் அத்தியாயம் 20 வினாடிகள் என்ற பெயரில் இந்த நவம்பரில் வெளிவருகிறது ! இதோ- அதன் அட்டைப்படம்!! 
நவம்பரில் “லார்கோவுக்கு வயது 25என்ற கொண்டாட்டங்கள் அரங்கேறவுள்ளன ! சென்றாண்டே புதிய ஆல்பத்தின் வெளியீட்டு விழாவை நீருக்கடியில் அமைத்து அட்டகாசம் செய்திருந்தனர் ! இம்முறை என்ன அசாத்தியங்கள் திட்டமிடலில் உள்ளனவோ - தெரியவில்லை   !
ஆனால் ஒரே நெருடலான விஷயமென்னவெனில் கதாசிரியர் வான் ஹாம்மே - லார்கோவின் கதைகளில் இனி பணியாற்றப் போவதில்லை ! ஓவியர் பிரான்க்கின் பொறுப்பினில் லார்கோ தொடருவார் !
லார்கோவின் பிதாமகர்கள் !
Drifting back to the day - இம்மாத இதழ்களின் பட்டியலில் தோர்கல் முதலிடம் பிடித்திருப்பதில் பெரியதொரு நிம்மதிப் பெருமூச்சு எனக்குள்! லாஜிக் பார்க்கா கதைக்களங்கள் ஏராளத்தை நாம் தாண்டி வந்திருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை! ஆனால் “fantasy based கதைக் களம்” என்பதை பருமனான எழுத்துக்களில் தாங்கி வரும் இந்தத் தொடரை நம்மில் பலரும் லேசான சங்கோஜத்தோடே அணுகி வந்துள்ளது அப்பட்டம்! ஆனால் இம்முறை தோர்கலின் முழு range 2 கதைகளிலுமே அட்டகாசமாய் வெளிப்பட்டிருக்க, தோர்கல் பற்றிய பல misconceptions காற்றில் கரையும் நேரமிது என்று தோன்றுகிறது! Early days yet- இன்னும் நிறைய நண்பர்களின் விமர்சனங்கள் வரவேண்டியுள்ளது தான்; அவையும் positive ஆக அமைந்திடும் பட்சத்தில் 'தோர்கல் எக்ஸ்பிரஸ்' டாப் கியரைத் தொட்டிருக்கும்! அதே போல்- இம்மாத ரிப்போர்டர் ஜானி கதையின் feedback-ம் நான் சுவாரஸ்யத்தோடு எதிர்பார்த்திடும் ஒரு சமாச்சாரம்! ஒவ்வொரு முறையும் அதே ஸ்டைலில் நூடுல்ஸ் போடுவது தான் நம்மவரின் ஸ்டைல் என்றாலும் – பண்டிகைகளையும்,திருநாள்களையும் போல ஆண்டுக்கொரு முறை மட்டுமே தலைகாட்டும் ஜானி இம்முறை தேறினாரா- இல்லையா ? என்றறிய ஆவல்!

And last but not the leastஅக்டோபரின் மறுபதிப்பான சிறைப் பறவைகள் பற்றியும் கொஞ்சமேனும் review (?!!) செய்திடலாமே?! புதிதாய் மொழிபெயர்ப்பு செய்திடும் அவசியம் மட்டும் கிடையாது; பாக்கிப் பணிகள் எல்லாமே ஒரு புது இதழுக்கான அதே லெவல்கள் தான் எனும் போது – இந்த மறுபதிப்புகள் மட்டும் ஓசையின்றி நம் பதிவுப் பக்கங்களில் அடங்கிப் போவது சின்னதொரு ஆதங்கத்தைத் தருகின்றது! Do give it a read & a review  folks!!


And – இரு பதிவுகளுக்கு முன்பாக சட்டித் தலையன் ஆர்ச்சியின் caption எழுதும் போட்டிக்கான பரிசை வெல்பவர் பூனைகளின் காதலர் ஈரோடு விஜய் தான்! ரிப்போர்டர் ஜானியின் புது பாணி (பிரெஞ்சு) ஆல்பத்தின் பிரதி ஒன்று அவருக்கு அனுப்பிடுவோம் பரிசாக! 2016-ல் தமிழில் வரக்காத்திருக்கும் ஜானி சாகஸம் இதுவே என்பது கிளைச் சேதி

ஆர்ச்சியை ஆட்டத்துக்குச் சேர்த்தான பின்னே, தலைவர் ஸ்பைடரை டீலில் விட்டு விட முடியுமா ? So இதோ நிற்கும் நம் முதிய தலைவரின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும் என்று எழுதித் தான் பாருங்களேன்   !  ஆளுக்கு 2 வாய்ப்புகள் மட்டுமே ! வெற்றி பெறும் caption-க்கு ஒரு FLEETWAY ANNUAL பரிசு ! 
மீண்டும் சந்திப்போம்! அது வரை – Have a great weekend !
P.S:
டிசம்பர் 2015-ல் பிரெஞ்சில் வெளிவருகிறது.....!!
வெகு சீக்கிரமே தமிழிலும்..!!

267 comments:

  1. எடிட்டர் & நண்பர்கள் அனைவருக்கும் அதிகாலை வணக்கங்கள் :)

    ReplyDelete
  2. ஞாயிறு வணக்கங்கள்....

    ReplyDelete
    Replies
    1. டியர் எடிட்டர்,
      க.வெ. கி.நா. - Road to perdition கதையா? இல்லையெனில் அது எப்பொழுது?

      Delete
  3. @Erode Vijay- கடமையை கரெக்டா செஞ்சிட்டீங்க :)
    Thanks for letting us know about editors new post

    ReplyDelete
  4. பார்ரா...
    சூப்பர் விஜயன் சார்

    இனி இரண்டு மாதங்கள் பொருமையாய் அடுத்த வருட கதைகள் லிஸ்ட் எடுக்க ஒர் அறிய வாய்ப்பு
    4 + 4 நவம்பரிலயே ரிலீஸ் பண்ணிடுங்க
    10000 வாலா பட்டாசை இந்த வருடம் கொளுத்திடலாம்

    டிசம்பரில் நியூ இயர் ஸ்பெஷல் என்று ஒரு குண்டு புக் போட்டிடலாம்


    ////////

    மஞ்சள் நிழல் முன் அட்டைப்படம் மிகவும் அருமையாக உள்ளது
    கதையும் அவ்"வண்ணமே" இருந்து விட்டால் ஒன்னரை வருடங்கள் கழித்து வரும் ரோஜரை ரசித்திடலாம்

    ////////

    தல யின்
    எதுமாதிரியும் இல்லா அந்த புதுமாதிரி யை ரசிக்க ஏக் தம்மில் காத்திருக்கிறோம் சார்

    /// 7 ஆண்டுகள் வெறித்தனமாய் ///

    டீசரே மனச அள்ளுது
    புக்கை படிக்க இப்பவே மனசு பறபறங்குது

    ////////

    நம்ம முத்துவில் லார்கோ 20 பாகம் எப்பொழுது வெளிவரும் எடி சார்??

    ReplyDelete
    Replies
    1. //டிசம்பரில் நியூ இயர் ஸ்பெஷல் என்று ஒரு குண்டு புக் போட்டிடலாம்//
      +11111111

      Delete
  5. // பண்டிகைகளையும்,திருநாள்களையும் போல ஆண்டுக்கொரு முறை மட்டுமே தலைகாட்டும் ஜானி இம்முறை தேறினாரா- இல்லையா ? என்றறிய ஆவல்!
    //

    நன்பர்களே ஜானியை கொங்சம் தேத்திவுட்டிங்கன்னா புன்னியமா போகும்

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. வாழ்ந்து மாதிரி தெரியலயே சம்பத் இது???

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. டெக்ஸ் ஓவியம் அப்படியே அல்லுது.
    ரோஜர் கதையின் உட்பக்கம் நீங்க சொன்ன மாதிரி வன்னக்கலவை ரொம்பவே பழமை தட்டுது.

    ReplyDelete
  9. அன்புள்ள எடிட்டர்,

    வெகுநாட்களாக, பெரும்பான்மையான வாசகர்கள் வேண்டுகோள் விடுத்து, முறையாக அறிவிக்கப்பட்டு, வாசகர் கருத்துகள் கேட்டறியப்பட்டு, அதற்கு பெரும்பான்மையான வாசகர்கள் ஆதரவு தெரிவித்த, டெக்ஸ்-ன் தனி track (மாதமொருமுறை அல்லது இருமுறை) மற்றும் டெக்ஸ்-ன் மறுபதிப்புகள் பற்றிய, 2016 plan-யைத் தெளிவாக அறிவிக்க வேண்டுகிறேன்

    முன்கூட்டிய நன்றிகள்! ..

    ReplyDelete
  10. ஈரோடு விஜய்சாருக்கு என் மனமார்ந்தவாழ்த்துக்கள். "தல" இன் சித்திரங்கள் எல்லாம் துல்லிதம் . எப்போது பார்ப்போம் என்று துடிப்பாக உள்ளது. லார்கோவின் அடுத்த ஆல்பம் "20 வினாடிகள்" நவம்பரில் வருகிறது என்ற தகவலுக்கு நன்றிகள் ஸார். வான்ஸ் லார்கோ உடைய இனி வரும்இதழ்களில் பணியாற்ற மாட்டாரா? எப்படி இருப்பினும் தொடரை இடையில் விட முடியாதுதானே? புது ஓவியர் எப்படிஉள்ளார் என பார்போமே. சோடை போக மாட்டார் என்பது என் நம்பிக்கை. ஏனெனில் பல லட்சம் ஆல்பங்கள் விற்பனை ஆகின்றது அல்லவா.

    ReplyDelete
    Replies
    1. @திருச்செல்வம் ப்ரபானந்த் !!!!

      கதாசிரியர் வான் ஹாம்மேதான் விலகுகிறார் ....

      ஓவியர் ப்ரான்க் கதை ,ஓவியம் இரண்டு பொறுப்பையும் ஏற்று கொள்கிறார் .........!!!!!!!

      Delete
    2. பிரிவுக்கு காரணம் வயதான தாலா...அல்லது அங்கேயும் ஈகோ மோதலா ??...செல்வம் ஜி, ஏதேனும் தகவல் தெரியுமா உங்களுக்கு???

      Delete
    3. ஈகோ மோதல்தான்......நண்பர் ஒருவர் இங்கு முதலில் சுட்டி காட்டி இருந்தார்......அதன் பின்னர் பிரான்க் பேட்டி. பற்றி இங்கு லிங்க் கொடுத்து இருந்தேன் டெக்ஸ்.......வான் ஹாமே லார்கோ படங்கள், டிவி சீரியல்கள் பக்கம் தனது கவனத்தை திருப்பி இருப்பது பற்றியும் எழுதி இருந்தேன்டெக்ஸ்........

      சார்லியர்க்கு பிறகு டைகருக்கு நேர்ந்த கதி லார்கோவுக்கு ஆகாமல் இருந்தால் சரி !!!!!!!!!!!!!

      Delete
    4. அட ஆண்டவா....80வயசில் கூட அந்த தாத்தாவுக்கு மெச்சூரிட்டி இல்லையா....
      ஆசிரியர் சார் லுக் அட் திஸ்......கதை உருவாக்குபவரே அடிதடி பன்றாரு, அதுவும் 80வயதில்.... நாங்கள்லாம் கதையை படிப்பவர்கள், அதுவும் பாதி வயது தானே சன்டை போடுவதில் தவறில்லை அல்லவா???.... ஹி...ஹி....

      Delete
    5. ///சார்லியர்க்கு பிறகு டைகருக்கு நேர்ந்த கதி லார்கோவுக்கு ஆகாமல் இருந்தால் சரி !!!!!!!!!!!!!//./----- இதில் சந்தேகமே வேணாம் , லார்கொ இனி காலி....இருவரும் இணந்திருந்த கதைகளே சிலது நம்மை பொறுத்து சொதப்பல்...தனி ஆவர்த்தனம், எப்போதும் ரசிக்காது....

      Delete
    6. @ FRIENDS : "வடக்கு-தெற்கு உள்நாட்டு யுத்தம்" என்ற canvas -ஐ விட்டுவிலகாது (இளம்) டைகரின் கதைகளில் பெரும்பான்மை பயணம் செய்வதாலேயே அங்கே வெவ்வேறு படைப்பாளிகள் தலைகாட்டிய பின்னரும் ஒரு சொல்லத்தக்க தாக்கம் நிகழவில்லை என்பது என் எண்ணம் ! ஆனால் லார்கோ கதைகளின் template ஆனது - உலகளாவிய பார்வை / களங்கள் என்பதே எனும் போது நிச்சயமாய் விறுவிறுப்பு தொடரும் என்றே எனக்குப் படுகிறது ! But அந்த corporate த்ரில்லர் கதைகளை வான் ஹாம்மே அளவுக்குக் கையாள ஒரு அசாத்திய லாவகம் தேவை என்பதையும் மறுப்பதற்கில்லை !

      Let's wait & watch...!

      Delete
  11. Tex I'm, waiting. Very good morning to all.

    ReplyDelete
  12. லார்கோவை புது ஓவியரின் கைவண்ணத்தில் தமிழில் காண ஆவல். இம்மாத இதழ்களில் படித்ததில் என்னை மிகவும் கவர்ந்தது சுட்டி லக்கி ! காலனின் காலமும் சோடை போகவில்லை! சிறைபறவைகள் இதுவரை படித்திராத கதை மறுபதிப்பிற்கு மிக்க நன்றி ! ஒரு வேண்டுகோள் மறுபதிப்பில் இதுவரை மறுபதிபிடாத அதிகம் வரவேற்பினை அந்த நாட்களில் பெற்ற கதைகளாக 2016 முதல் தேர்வு செய்யவும்.

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : எல்லாக் கதைகளையுமே மறுபதிப்பு செய்திட உள்ளதால் இங்கி - பின்கி-பாங்கி போட்டுத் தான் கதைகளைத் தேர்வு செய்து வருகிறேன் ! அதிகம் மறுபதிப்பு ஆகிடா இதழ்களையாய் தேர்வு செய்து ஆரம்பத்து ஆண்டுகளில் போட்டுத் தள்ளி விட்டால் - பின்பகுதி வெளியாகும் வருஷங்களில் தள்ளாட்டம் தலைகாட்டி விடும் அல்லவா ?

      Delete
  13. தோர்கல் இன்னும் படிக்கவில்லை !

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : இந்த ஞாயிறை அதற்கென ஒதுக்கிப் பாருங்களேன் நண்பரே ?

      Delete
  14. தலயின் “எமனின் வாசலில்" ஓவியர் எடுத்துக்கொண்ட காலம் 7 ஆண்டுகள் என அறியும்போது மெய்சிலிர்க்கிறது. சித்திரங்களும் மிகவும் நுணுக்கமாக உள்ளது

    ReplyDelete
  15. இந்த மாத இதழ்கள் அனைத்தும் படித்தாகி விட்டது.இது முதலிடம் ..இது இரண்டாம் இடம் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் போனமாதம் போலவே இந்த மாதமும் நான்குமே மனதை கவர்ந்து விட்டது.

    புயலுக்கொரு பள்ளிக்கூடம் ...


    சுட்டி லக்கி அதன் முதல் சாகசத்தில் என்னை கவர வில்லை என்பதே நிஜம் .ஒரு வேளை அந்த தர்பூசனி தபிதா போன்ற பட்ட பெயர்கள் எல்லாம் அதை அந்நியபடுத்தி விட்டதா என்று தெரியவில்லை.ஆனால் இம்முறை இப்போதைய லக்கி கதையை விட மிகவும் மனதை கவர்ந்தது என்பதே உண்மை.வாய் விட்டு சிரிக்க வைக்கா விட்டாலும் பல இடங்களில் புன்னகைக்க வைத்தன.கதை ஓட்டமும் அருமை.சித்திரங்கள் ..அச்சுதரம் ..ஹாட்லைன் ...சி.சிறு வயதில் ..அதைவிட தீபாவளி வித் டெக்ஸ் விளம்பரங்கள் என முழுமையாக திருப்தியை தந்த இதழ்...சி்..சிறு வயதில் திகில் ..மினிலயன் நிறுத்தம் பற்றிய தங்களின் நிலையை தெளிவாக எடுத்துரைத்த கட்டுரை மனதில் கனத்தை ஏற்படுத்தினாலும் அதற்குள் இத்தனை விரைவில் எக்ஸ்பிரஸ் வேகத்தில் இங்கே வந்தடைந்து விட்டாரே ஆசிரியர் என்ற கோபமும் வருகிறது தான் :-)
    சரி விரைவில் வரும் இந்த தொகுப்பு புத்தகத்தில் இதனை சரிபடுத்தி விடுங்கள்..மொத்ததில் சுட்டி லக்கியின் முதல் சாகஸமாக இது வந்திருந்தால் இன்னமும் நண்பர்களிடம் அதிகமாக வரவேற்பை பெற்று இருப்பார் இந்த சுட்டி புயல் .

    சுட்டி லக்கி...அருமை


    காலனின் காலம் :

    எனது பேவரைட் ஹீரோ..ஜானி..அவரின் சாகசத்தின் அட்டகாசமான சித்திர தரத்திற்காகவே மீண்டும் மீண்டும் ரசிக்கலாம் ..எப்போதும் போல அதே திருப்பு முனை கதை களம் தாம் எனினும் வழக்கம் போல விறுவிறுப்புடன் சென்றது.அட்டகாசமான சித்திர தரம் கதையை இன்னும் விறுவிறுப்புடன் கூட்டி சென்றது.என்ன ஒன்று எப்பொழுதும் ஆணழகனாக தோன்றும் ரிப்போர்ட்டர் ஜானி இம்முறை இரண்டு மாதமாக கட்டிங் பண்ணாமல் பள்ளியில் கடைசி பென்ச்சில் அடங்காமல் திரியும் மாணவனை போல காட்சி அளிக்கிறார் ..அடுத்த சாகசத்தில் தலை காட்டுவதற்கு முன் தலைமுடியை ஒழுங்காக கட் பண்ணி விட்டு பணிக்கு வருமாறு அவரின் பெற்றோருக்கு (படைப்பாளிகளுக்கு) தகவல் தெரிவிக்க வேண்டும் ..;-)

    ஜானி....அட்டகாசம்..


    சிறை பறவைகள் :

    பழைய மொத்த வெள்ளை தாளில் ..பெரிய சைசில் ..தெளிவான சித்திர தரத்துடன் லாரன்ஸ் டேவிட் கலக்கி விட்டார்கள்...சிசி இதழில் வந்த கதைதானே என்ற எண்ணம் முதலில் ஏற்பட்டாலும் கதை மறந்து விட்ட காரணத்தாலும் ..சிறிய சைசில் குட்டி எழுத்தில் கஷ்ட பட்டு உன்னித்து படித்த இந்த கதையை இப்பொழுது சிறந்த முறையில் படிப்பதும் மகிழ்ச்சியே..இணைப்பாக வந்த விச்சு கிச்சு புன்னகையை வரவழைத்தது...இந்த இதழும் ஏமாற்ற வில்லை..

    சிறைப் பறவைகள்...நன்று...


    சாகாவரத்தின் சாவி :


    அட்டை படமே அசத்தலாக இருந்து முதலில் படிக்க தோன்றினாலும் ஏற்கனவே தோர்கலால் பட்ட சோதனையை ஆரம்பத்திலியே பட வேண்டுமா என்ற எண்ணத்தில் கடைசியாக ஆரம்பித்தேன் .அதுவும் மாயாஜாலா கதை ..முன் பாகம் எல்லாம் மறந்து விட்டது..எனவே குழப்பி விடுமோ என்ற தயக்கத்தில் முதலில் வந்த இரு தோர்கல் ..மற்றும் இதையும் இணைத்து ஒன்றாக படிக்க ஆரம்பித்தேன் ..நீங்களும் ...நண்பர்களும் சொன்னது போல இம்முறை தோர்கல் ஏமாற்றவில்லை என்பது மட்டுமல்ல ..மனதையும் கவர்ந்து விட்டார் என்பதே உண்மை.கதையை படித்து முடிக்கும் வரை தோர்கலின் உலகத்திலியே பயணம் செய்த உணர்வு ஏற்பட பெரும் பங்கு ஓவியருக்கே செல்ல வேண்டும் என்பது போல அதை விட அதிகமாக மொழிபெயர்பாளருக்கும் செல்ல வேண்டும் என்பதும் உண்மை.உங்கள் தந்தையாருக்கு மனமார்ந்த பாராட்டுக்களை நண்பர்கள் சார்பாக தெரிவித்து விடுங்கள் ..விறுவிறு ..பரபரவென்று சென்ற கதையில் ...கடைசியில் ஆரிசியா மறைவுடன் முடிந்தது மனதில் பாரத்தை ஏற்படுத்தியது ..அதுவும் முதல் சாகசத்தில் இருந்து ஓரே மூச்சில் மொத்தமாக படித்ததில் ஆரிசியா மனதினுள் ஆழமாக பதியும் நிலையில். அவளின் மரணம் வருத்தமே...மகிழ்ச்சியான முடிவுரையாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் ..மனதில் பாரத்தை ஏற்படுத்தாமல் ஆனந்தந்தை ஏற்படுத்தி இருக்கும் .அடுத்த தோர்கல் சாகஸத்திற்காக காத்து இருக்கிறேன் ..

    தோர்கல் அதகளம்....



    மொத்ததில் போன மாத இதழ்கள் அனைத்தையுமே ஆர்வமுடன் எதிர்பாரத்து அனைத்துமே மனதை திருப்தி செய்த இதழ்கள்..ஆனால் இந்த மாதம் நான் ஆவலுடன் எதிர் பார்த்தது ஜானி சாகசம் மட்டுமே.மற்ற மூன்று இதழ்களையும் அவ்வளவாக எதிர்பார்க்க வில்லை என்பதே உண்மை.ஆனால் போன மாதம் போலவே இந்த மாதமும் நான்கு இதழ்களுமே மனதினுள் முழு திருப்தியுடன் உள்ளே நுழைந்துவிட்டது .சிறந்த முறையில் அளித்த தங்களுக்கும் ...தங்கள் பணியாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி சார் ...

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : தலீவருக்குப் பிஞ்சு மனசு என்பது இன்னொருமுறை நிரூபணம் ஆகிறது ! தண்ணிக்குள் குதித்த ஆரிசியாவை அத்தனை சீக்கிரமாய் படைப்பாளிகள் கை கழுவி விடுவார்களா - என்ன ?

      Delete
    2. அட .. இன்னும் எவ்ளோவோ இருக்குது friends .. ஒரு ONE SHOT "லப் டப்" விறுவிறு திகில் கதையும் உண்டு ஆரிசியாவை இணைத்து .. அப்புறம் எங்க ஆரிசியா டிக்கட் வாங்குவது .. வெயிட் பண்ணுங்கப்பா :-)

      Delete
  16. @தலீவர் ......ஆரிசியா கடலில் குதித்ததாக உள்ளது ....இறந்ததாக இல்லையே !!!!!!


    அலைகள் மீது அடிமைகள் தலைப்பின் கீழ்

    தோர்கல் தனது மனைவி ,மகள் ,மகனுடன் நிற்பதாக படம் இருப்பதை கவனிக்கவும் ...!!!!

    ReplyDelete
  17. அன்பு ஆசிரியரே....
    இம்மாதமும் அருமையாய் அமைந்துவிட்டது.
    ஒவ்வொன்றையும் ரசித்து படித்தேன்.
    தோர்கல் அருமையான கதை. சித்திர விருந்து.(1.5 D மற்றும் சற்றே சொதப்பலான பிரின்டிங்).நீண்ட இடைவேளைக்குப்பின் ஜானியும் ஒரு சந்தோஷமான வரவு.டக்கரான சித்திரங்களும் வண்ணங்களும்(சில இடங்களில் 1.5D...கவனம் தேவை.)
    சுட்டி லக்கி ஓர் அட்டகாசமான இதழ்.டிரேட் மார்க் மொழிநடை/மிக
    துல்லியமானமான அச்சுதரம்.
    மொத்தத்தில் இம்மாதமும் ஹிட் லிஸ்டில் இடம் பெறுகிறது.
    அடுத்த மாதம் சீக்கிரமே வந்துவிடாதா என காத்துக்கொண்டிருக்கின்றேன்.

    ReplyDelete
  18. Replies
    1. வாழ்த்துகள் குருநாயரே.!!!! கேசன்ட்ராவுக்கு கேப்ஷன் எழுதி ஜானியை பெறும் பூனைக்கு வாழ்த்துகள். :-)

      Delete
  19. நண்பர்களுக்கு காலை வணக்கம்

    ReplyDelete
  20. MV சார் மனம் நிறைந்தத (மரணத்தின் முத்தம்)

    ReplyDelete
    Replies
    1. பாஸ்கரன்.!வணக்கம் .!ஆம் நண்பரே.!! மனம் குளிர்ந்த,நிறைந்த செய்திதான்.!

      Delete
  21. விஜயன் சார், தங்க விரல் மர்மம் மறுபதிப்பில் அறிவித்து விட்டு அதற்கு பதில் வேறு ஒரு கதையை வெளி இடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

    ஒருவருடத்தில் வரும் புத்தகம்களின் மாதம்களை மாற்றிகொள்ளலாம், ஆனால் அறிவித்த கதைக்கு பதில் வேறு ஒரு கதையை மறுபதிப்பில் வெளி இடுவது எனக்கு பிடிக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. தலீவர்ரோட தலீவர் படம் பார்ப்பதுன்னு ஆயிட்டது....காளியோ...ஜானியோ....
      தட்டி உடுங்கள் பரணி....

      Delete
    2. டெக்ஸ் விஜயராகவன்.! டெக்ஸின் ஓவியங்களை கவனித்தீர்களா.? யப்பா ! சான்சே இல்லை.!ஓவியங்களை ரசிப்பதில் நான் நடுநிலையாளன் .!ஆனால் ஓவியங்களை பாரத்தவுடன் எனக்கு உற்சாகத்தில் வயிற்றில் பூராண் ஓடுறமாதிரி இருந்தது.!

      Delete
    3. ஆம் MV சார்... அட்டகாசமாக இருக்கிறது...ஓவிய ரசிகர்களுக்கு அசத்தல் விருந்து தான்..... ஆனால் அந்த நில் கவனி சுடு- ஸ்டைல் ஓவியங்கள் கொண்ட முதல் கதை எனக்கு பூரானை அல்ல அனகொன்டாவையே ஓடச் செய்கிறது..

      Delete
    4. அறிவித்த கதைகளை வெளி இடாவிட்டால் அதனை பற்றிய ஒரு முன் அறிவிப்பையாவது செய்வது நலம். என்ன இருந்தாலும் தங்க விரல் மர்மம் இந்த வருடம் வராதது எனக்கு வருத்தமே!

      Delete
  22. வணக்கம் சார்.. வணக்கம் நண்பர்ஸ்....
    வெற்றி பெற்ற பூனையாருக்கு வாழ்த்துக்கள்....
    ஆனால் பூனையார் எல்லா கமெண்ட்ஸ்ம் " நோ போட்டி ஒன்லி லூட்டி"- என்றே அனுப்பி இருந்தால் சார், பிறகு எப்படி அவர் வென்றார்???-- சின்ன சந்தேகம் அவ்வளவே....ஹி..ஹி...
    ஏற்கனவே நாங்கள் சந்தாகட்டிய தொகையை விட கூடுதல் மதிப்பிற்கு இப்போது புத்தகங்களை தருகிறீர்கள் சார், நன்றிகள் ...நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. ஈரோடு விஜய்.!

      போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.!
      //கூடுதல் புத்தகம் தருகிறீர்கள் // +1

      Delete
    2. அப்பாடா மாடஸ்டி கதை வருவது உறுதியாகிவிட்டது.!நன்றி எடிட்டர் சார்.!_____/\____

      Delete
  23. Replies
    1. வாழ்த்துக்கள் MV சார்.... இம்முறையாவது தலைவி ஜொலிக்கனும், ......( ஹூம்...அதெல்லாம் நடக்க கூடியதா ?.... --- என நீங்கள் அங்கே புலம்புவது கேட்கிறது....)

      Delete
    2. // தலைவி ஜொலிக்கனும்.//
      டெக்ஸ் விஜயராகவன் சார்.! மாடஸ்டி விஷயத்தில் இதற்கு எனக்கு கவலையே இல்லை.!
      ஏனென்றால் விஜயன் சார் தேர்வு மாடஸ்டி விஷயத்தில் என்றுமே சொதப்பியதே கிடையாது.!

      :நி.நி.யு. கதைகூட புதியபாணி ஓவியங்கள் ஆரம்பத்தில் படிக்கும் போது கொஞ்சம் உறுத்தியது உண்மை.! ஆனால் பழகப் பழக த்திரீ டி டைமன்ஸன் போல் அந்த ஒவியங்களும் வசீகரித்தது.!

      ஏன் தோர்கல் கதைகூட 15 பக்கங்கள் படிக்க நிறைய சிரமப்பட்டேன்.பின்பு காந்தம் போல் ஈர்த்துக் கொண்டது.!அது போலத்தான் நி.நி.யு.!

      Delete
    3. Madipakkam Venkateswaran : //தோர்கல் கதைகூட 15 பக்கங்கள் படிக்க நிறைய சிரமப்பட்டேன்.பின்பு காந்தம் போல் ஈர்த்துக் கொண்டது.!//

      அடடே...அடடடே...!

      Delete
    4. ///:நி.நி.யு. கதைகூட புதியபாணி ஓவியங்கள் ஆரம்பத்தில் படிக்கும் போது கொஞ்சம் உறுத்தியது உண்மை.! ஆனால் பழகப் பழக த்திரீ டி டைமன்ஸன் போல் அந்த ஒவியங்களும் வசீகரித்தது.!///

      "வருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்க "ன்னு கத்துவாரே ஒருத்தர்.,

      ஏனோ அவர் ஞாபகத்துக்கு வராரு.! :-)

      Delete
    5. ////:நி.நி.யு. கதைகூட புதியபாணி ஓவியங்கள் ஆரம்பத்தில் படிக்கும் போது கொஞ்சம் உறுத்தியது உண்மை.! ஆனால் பழகப் பழக த்திரீ டி டைமன்ஸன் போல் அந்த ஒவியங்களும் வசீகரித்தது.!////----- ஹா ...ஹா...
      காக்கைக்கும் தன் குழந்தை.....
      பொன் குழந்தை....

      Delete
    6. கிட் ஆர்ட்டின் &சேலம் இரவு கழுகு.!

      உண்மைதான் நண்பரே., கார்வின் நண்பியை எவ்வளவு அழகாக வரைந்து இருப்பார் தெரியுமா.? என்ன ,மழை பெய்யும் போது கார் கண்ணாடி வழியே உற்று பார்ப்பது போல் உற்று பார்க்கவேண்டும் அதுதான் கஷ்டம்.!

      Delete
    7. MV சார் @ நானும் கிட்டாரும் சும்மா கலாய்த்தோம்....அதற்காக கவலை வேணாமே...சொதப்புவது யாவருக்கும் சகஜமே....டெக்ஸ் அவ்வப்போது சொதப்பல்களை தர்ராரு, இருந்தாலும் கூட நான்லாம் மனம் தளராமல் நிமிர்நடை போட்டு வர்ரேனே....சிக்பில் வாங்காத சாத்தாஆஆஆஆ!!!... பீ கூல் சார் ....இம்முறை இளவரசி அனைவரையும் கவர்வாள்.......சரி உங்களுக்காக எனக்கு பிடித்த இளவரசி டயலாக். ...." ஏக காலத்தில் வாட்களை வீசனும் சகோதரா......"

      Delete
    8. ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி நண்பர்களே.! கத்திமுனையில் மாடஸ்டி,முத்துவின் கழுகு மலை கோட்டை முதல் நி.நி.யு.வரை அனைத்து மே என்னை பொருத்தவரை சூப்பர் கதைகள்தான்.! திரும்ப திரும்ப அதிகம் படிப்பது மாடஸ்டி கதைகளுயும் ஒன்று, பிறகு பாக்கெட் சைஸ் பொடி எழத்துக்கள், ,வயதானதால் படிக்க சிரமப்படுகிறேன்.! (,டாக்டர் வேறு கண்ணாடி போடனும்னு சொல்றார் )ஸ்பைடர் இரும்புக்கை மாயாவி,ஜானி நீரோ போல் மறுபதிப்புகளில் பெரிய எழத்தாக இருந்தால் நன்றாக இருக்கும்.ஹும் என்னமோ போடா மாதவா.!என்றும் வாராதோ ஒர் விடியலே.?என்று காத்துஉள்ளேன்.!

      Delete
  24. @ ஈனா வினா !!!!!!! வாழ்த்துக்கள் !!!!!!!!! பாத்தீங்களா ????? நான் சொன்ன தோஷ பரிகாரம் பண்ணியவுடனே கை மேல் பலன்.......:-)

    ReplyDelete
  25. தோர்கல்...............
    அங்கிட்டு சுத்தி வந்து இங்க வந்து பார்த்தா அட்டையில் தோர்கலும் “ புலியை” விட்டு வைக்கல.........:-)
    சாகாவரத்தின் சாவி& அலைகளின் மீது அடிமைகள்
    பிரெஞ்சில் பல மில்லியன்கள் விற்பதாக சொல்லப்படும் இந்த வரிசை இவ்வளவு sedately paced ஆக இருக்கின்றதே என்ற மன மயக்கத்தை தூளாக்கும் வகையில் படிக்க அவ்வளவு ஆர்வமாக இருந்தது !!!!!!!!
    இரண்டு கதைகளும் படிக்க சுவாரஸ்யமே.....!!!!!!!!!
    தோர்கலின் நிஜ பிம்பம் மெல்ல உருவெடுப்பது கதைபோக்கிற்கு மெருகூட்டுகிறது.
    ஷானியா, இளவரசன் வெர்னோர், எவிங் பாத்திர படைப்புகள் பிரமாதம்....
    நெருடல்........
    எட்டாவது பக்கத்தில் ஆரிசியா மாவீரன் அலெக்சாண்டர் பற்றி கூறுவது...
    வைகிங்குகள் காலகட்டத்தில் கதை நடப்பதாக உள்ளது..(.கி.மு 1077-793).
    இதற்கு பிறகு Viking age ஐ தொடர்வது Germanic iron age (கிமு 800-400).
    மாவீரன் அலெக்சாண்டர் கிமு 356 –ல் பிறந்து கிமு 323- ல் இறந்து போனார்.
    இது மட்டுமே ஒரு சின்ன உறுத்தல்......
    //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    ம்....ம்....ம்.....மொழிபெயர்ப்பு.......எப்படி சொல்வது....??????
    புஷ்பவனம் குப்புசாமி தம்பதியரின் நாட்டுபுற பாடல்கள் இனிமையானவை...எளிமையானவை....மனதை தொடுபவன....
    ////////இது சீனியர் எடிட்டரின் மொழி பெயர்ப்பு//////////
    ...............................................................................................................................................................

    சங்கராபரணம் பாடல்கள் அருமையானவை....மனதின் உள் நுழைந்து ஏதோ செய்பவை....ஆன்மாவோடு கலக்கும் வல்லமை உள்ளவை.....
    //////////////////இது நமது எடிட்டரின் மொழிபெயர்ப்பு///////////////////////
    .....................................................................................................................................................................
    எனக்கு இரண்டும் பிடித்தமானவைதான்......

    ஆனால் பின்னது முன்னதைவிட பல பல பல பல மடங்கு அதிகம்......

    ReplyDelete
    Replies
    1. selvam abirami :எடிட்டிங்கின் போது கவனிக்கத் தவறியிருந்தேன் ; ஆனால்முழு இதழாகப் படித்துப் பார்க்கும் போது தான் அந்த அலெக்சாண்டர் மன்னர் timeline உறுத்தலாய் இருப்பதை உணர்ந்தேன் ! படைப்பாளிகள் எப்படி கோட்டை விட்டனரோ - தெரியவில்லை !

      Delete
    2. செனா அனா.! நீங்கள் வரலாறு,மொழிகள் , ,இலக்கியம்,அறிவியல்,மற்றும் எல்லாத்துறையிலும் வெளுத்து கட்டுறீங்களே.! சூப்பர் சார்.! நீங்கள் நடமாடும் பல்கலைக்கழகம் சார்.!

      Delete
  26. வாழ்த்துகளுக்கு நன்றி நண்பர்களே!

    "இங்கே க்ளிக்குங்க!"

    ReplyDelete
  27. We like fantasy stories but Thorkal this time is a below average kind of a story

    ReplyDelete

  28. ****** காலனின் காலம் ******

    வழக்கமான ஜானி கதை! வழக்கம்போலவே சுவாரஸ்யமாய் இருந்தது!
    கலர்ஃபுல்லான சித்திரங்கள் கண்ணுக்குக் குளிர்ச்சி! ஜானி கதைகளை இப்படி கலர்ஃபுல்லாகப் படிப்பது ஒரு பரவச அனுபவம்!
    முதல் பக்க 'intro' யுக்தி நிறையவே உதவியது. ஜானி கதைகளுக்கு இனி இந்த யுக்தியை மறக்காமல் உபயோகப்படுங்கள் எடிட்டர் சார்!
    'வீட்டினுள்ளே அனைத்தும் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டிருந்தன' போன்ற காட்சி விவரிப்புகள் மட்டுமே இக்கதையின் புராதணத்தைப் பறைசாற்றுகின்றன!

    'காலனின் காலம்' தலைப்பு மட்டும் அவ்வளவாய்ப் பொருந்திப் போகாததைப் போல தோன்றுகிறது. மாத்தி யோசித்ததில் "மரண யோகம்" மனதுக்குப் புலப்பட்டது!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : நலமோடும், வளமோடும் இந்தாண்டும், ஒவ்வொரு ஆண்டும் வாழ்ந்திட வாழ்த்துக்கள் !

      //முதல் பக்க 'intro' யுக்தி நிறையவே உதவியது. ஜானி கதைகளுக்கு இனி இந்த யுக்தியை மறக்காமல் உபயோகப்படுங்கள் //

      சமீபமாய் படித்த புத்தகம்: "30 நாட்களில் முதுகு பழுப்பது எப்படி ? "

      Delete
    2. வாழ்த்துகளுக்கு நன்றி எடிட்டர் சார்! :)

      'காலனின் காலம்' - மற்றொரு மாத்தி யோசி - " சுப மரண காலம்"

      Delete
    3. மற்றொரு மாத்தி யோசி - "கெட்ட காலம் பொறக்குது!"

      Delete
    4. சரியான தலைப்புதான்.!ஆனால் ,மரணம்,கொலை,கல்லறை போன்ற அவச்சொல்லை தலைப்பாக வைக்கக்கூடாது என்று சில வாசக நண்பர்கள்
      ஸ்டே வாங்கிவிட்டார்கள்.! (தமிழிலும் ஆங்கிலத்திலும் எழத்துக்களை மாறி மாறி டைப் செய்வதும் ,,பேஸ்ட் செய்வதும் இன்னும் பழக வில்லை.ஒரு முறை மொழியை தவறாக மாற்றம் செய்து மூன்று நாள் போனை பிராண்டி பின் என் மனைவியை காக்கா பிடித்து மீண்டும் தமிழில் டைப் செய்ய தாவு தீர்ந்து போச்சு.!)

      Delete
  29. என்ன பார்க்கிறீங்க ..ஸ்பைடர் காமா இருக்கானே பத்துநாள் கோமா விலே இருந்தது மாதிரின்னு தானே ......
    நிஜம்மாவே காய்ச்சல்தான் ..இந்த ஆர்தினி பயலை ஆம்பூர் பிரியாணி கடையிலே ரத்தப் பொ ரியல் வாங்கிட்டு வாடான்னேன் அவன் என்னத்தையோ குடுக்க நான் சாப்பிட ...எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்..இருக்கு அவனுக்கு ..இந்த சாக்லேட்டை அவனுக்காகவே ஸ்பெசலா செஞ்சிருக்கேன் வயாகராவுக்கு அப்பனா வேலை செய்யும்டானு சொல்லியிருக்கேன் நாக்கை தொங்க போட்டுட்டு .வரப்போறான் திங்கப்போறான் ..அப்புறம் பாருங்க எந்த காமிக்ஸைப் பார்த்தாலும் கிராபிக் நாவலாவே தெரியப்போகுது ..பய மண்டையை பிச்சுக்கப் போறான்

    ReplyDelete
    Replies
    1. ///எந்த காமிக்ஸைப் பார்த்தாலும் கி.நா.தெரியப்போகுது பய மண்டையை பிச்சுக்கப் போறான்.!//
      ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ.....................!

      Delete
    2. சூப்பர் சூப்பர்...பரிசு இம்முறை உங்களுக்கே...

      Delete
  30. Very good morning dear editor sir
    The 2015 is over and out, the thrill of 2016 is just 8 books away. Eagerly waiting for the 2016 schedule and surprises

    ReplyDelete
  31. காலை வணக்கம் எடிட்டர் & நண்பர்களே.

    ReplyDelete
  32. ****** காலனின் காலம் ******

    வழக்கமான ஜானி கதை! சிமராசி என்றாலே மோசமானவர்கள் என்ற மூடத்தனம் கதையை படித்து தோன்றாமல் இருந்தால் எல்லாம் சுகமே.

    அப்புறம் எனக்கு வந்த புத்தகம் முப்பரிமான overlap printing ஆகா வந்தது, நாம் புத்தகத்தை சந்தா தாரர்களுக்கு அனுப்பும் முன் verify செய்வதாக ஒரு நடைமுறை இருந்ததே அது இன்னமும் இருகிறதா எடிட் சார்

    SampleClip1
    SampleClip2

    2016 வருட சந்த அறிவிப்பை நெருங்கும் நேரத்தில் இந்த pointஐ reiterate செய்வது அவசியம் ஆகிறது. இந்த வருடத்தில் எனக்கு வந்த 2வது இத்தகைய புத்தகம், சென்ற வருடத்தை காட்டிலும் நம்பிக்கையுடன் இப்பொழுது பார்சலை பிரிகின்றேன் என்பது நிஜம். சந்தா தாரர்கள் நம்பிக்கைஐ உறுதி செய்யும் verification நடை முறையில் ஓரிரு மனித பிழைகள் வருவது ஏற்ககூடியதே ஆனால் நிச்சயம் இது தொடர்ந்தால் அடுத்த அடுத்த பார்சலை ஒரு வித நம்பிக்கை இன்மையுடன் பிரிக்கும் பழைய மனோபாவமே எழுந்திடும். இத்தகைய பிழைகள் அதிகமாகாமல் பார்க்கும் நடைமுறை மட்டுமே சந்தா தாரர்கள் நம்பிக்கையை தக்க வைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. // 2016 வருட சந்த அறிவிப்பை நெருங்கும் நேரத்தில் இந்த pointஐ reiterate செய்வது அவசியம் ஆகிறது. //
      உண்மை! அவசியமான விசயம்!

      Delete
  33. டைகரின் இதழ் முன்பதிவிற்கான பக்கத்தை தனி இணைப்பு தாளாக இணைக்காதது ஏன் ஆசிரியரே,போன மாதம் விடுபட்டவர்களுக்கு இந்த மாத இதழுடன் தனியாக இணைத்து அனுப்பி இருக்கலாமே.

    ReplyDelete
  34. தீபாவளிக்கான டெக்ஸ்சின் கதைத்தேர்வு அருமை ஆசிரியரே,ஓவியங்கள் கண்களுக்கு விருந்தாகும் போல,இது அற்புதமான மறக்க முடியாத தீபாவளியாக பலருக்கு அமையும் என்பதில் ஆச்சிரியம் இல்லை,
    ஏனெனில் கதைதேர்வுகள் அப்படி அமைந்துள்ளன,
    ரோஜரும்,வேய்ன் ஷெல்டனும் வழக்கம்போல் அசத்துவார்கள் என்று நம்பலாம்.கூடவே அடுத்த ஆண்டுக்கான இதழ்களின் வெளியீட்டு அறிவிப்பும் போனஸ் என்பது மகிழ்ச்சி.

    ReplyDelete
  35. தோர்கல்

    இந்த மாதம் நான் படித்த முதல் புத்தகம் என் தேர்வுக்கு அட்டைபடம் முழு காரணம் . தொர்கல் மெல்லிய ஓடை போன்ற கதை ஓட்டம் மிகவும் ரசித்தேன். colorfull ஓவிய படைப்பு நமது வழக்கமான அதிரடி scheduleஇல் மிகவும் தேவையான verity.இந்த கதை அமைப்பு சீனியர் எடிட் மொழிபெயர்ப்பு ஸ்டைல்க்கு சரியான தேர்வு.சில இடத்தில "டார்லிங்","சார்" போன்ற வார்த்தைகள் தவிர்த்து ஒரு பழங்காலத்து சொல்லாடல் சரியாக கதைக்கு பொருந்தியது.
    சீனியர் எடிட் ஒரு பால்லில் சதம் அடிப்பாது எப்படி என்று புத்தகம் எழுதலாம்! எனக்கு அந்த எழுது நடை அவ்வளவு பிடித்து போனது.மொத்தத்தில் இந்த மாத புத்தகத்தில் முதலிடம் தோர்கல் தான்.

    ReplyDelete
  36. //எது மாதிரியும் இல்லாப் புது மாதிரி ! ‘மேக்னஸ்‘ என்ற புனைப்பெயர் கொண்ட இந்த இத்தாலிய ஓவியர் டெக்ஸ் தொடரில் இந்த ஒற்றைக் கதைக்காக மட்டுமே கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் மெனக்கெட்டாராம் – சித்திரங்கள் போட்டுத் தள்ள !//

    :) ஆர்வத்தை தூண்டும் வார்த்தைகள் எடிட் ! waiting to see Depawali spl !

    ReplyDelete
  37. அச்சு மற்றும் வண்ணத் தரங்களை பொருத்தமட்டில் முன்னைவிட இப்போது நல்ல முன்னேற்றம் தெரிகிறது,ஆனாலும் சிறுகுறைகள் ஆங்காங்கே தட்டுபடத்தான் செய்கிறது.
    எனக்கு இந்த மாதம் வந்த சுட்டி லக்கியில் சிலபக்கங்கள் மொற மொறவேன்றும் சிலபக்கங்கள் வளுவளுப்பகவும் இருந்தன.
    அதேபோல் தோர்கில் இதழில் சிலபக்கங்கள் 2 D எபெக்டில் இருந்தது, இந்த குறைகளை களைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  38. //இடையே கார்ட்டூன் ஸ்பெஷல் புகுந்ததன் காரணமாய் black & white கிராபிக் நாவல் மாத்திரம் postpone ஆகின்றது! DC காமிக்ஸின் அந்த கி.நா.வின் தொடர் உரிமைகளையும்; Batman கதைகளுக்கான உரிமைகளையும் ஒரு சேர வாங்கிட சென்றாண்டே பிரம்மப் பிரயத்தனம் செய்து வந்தோம்; அந்த நம்பிக்கையில் தான் அந்த Vertigo Comics-ன் கதையினை விளம்பரமும் செய்திருந்தோம்! ஆனால் ஸ்பைடர் + நமது மும்மூர்த்திகளின் மறுபதிப்பு உரிமைகள் புதுப்பிற்கே ஒரு மிகப் பெரிய தொகை முதலீடு செய்து முடிந்த நிலையில் இன்னுமொரு பெரிய கான்டிராக்டுக்கு கையிலும், பையிலும் வலு இருக்கவில்லை! So- இந்த Fleetway மறுபதிப்புப் படலத்தில் ஒரு பாதித் தூரத்தையாவது கடந்து விட்டோமேயானால் – கொஞ்சம் இலகுவாகும் சூழ்நிலையில் புதுக் கான்டிராக்டுகளைப் பூர்த்தி செய்ய நமக்கு சாத்தியமாகும் !//

    இந்த வருட கி ந வில் ஒரு காமிக்ஸ் மிஸ் ஆனது ஏற்க முடியாத செய்தி. எடிட் நிச்சயம் இந்த கதையை 2016இல் ஆவது கொண்டுவாருங்கள் !

    அறிவிக்க பட்ட புத்தகத்தை வெளியே எடுக்கும் முறை கடைபிடிக்க படுவது சந்தாதாரர் என்ற முறையில் எனக்கு கிஞ்சித்தும் விருப்பமில்லை ! பெரும்பான்மை என்ற தத்துவம் அறிவிக்கப்பட்ட subscription list இல் பிரயோகிக்க வேண்டாம் என்பது எனது கருத்து எடிட் சார்!

    ReplyDelete
  39. செயலாளர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.....செயலாளர் அவர்களே மொழி புரியாவிட்டாலும் உங்களுக்கு கவலை இல்லை....உடனடியாக தமிழிலும் வருகிறார்ராம்....உங்கள் பிறந்த நாள் பரிசு அட்டகாசம் ....


    ஆசிரியர் சார் ....ஜானி கதைக்கு மட்டும் இந்த முதல் அறிமுக பக்கங்கள் கண்டிப்பாக வெளியிடுங்கள் .....புது வாசகர்கள் மட்டுமல்லாது பழைய வாசகர்களுக்குமே இது பயன் பெற கூடியது தான் ..காரணம் கதாபாத்திரங்கள் பலர் டூ இன் ஒன் பெயர் அமைத்து இரண்டும். கலந்து வருவது கண்கூடு எனவே இந்த அறிமுக பக்கம் தவறாது வெளியிடுங்கள் ...

    ********

    அப்புறமா

    ஆரிசியா இறக்க வில்லையா ....கடலில் அடித்து செல்ல பட்டுள்ளாள் என்றவுடன் இறப்பதாக தான் முடிவுடுக்க முடிந்தது.. ஓ. இது மாயாஜால கதை அல்லவா ...அப்படி என்றால் ஓகே.....

    .**********###

    இனிவரும் எட்டு இதழ்களில் அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவனே கதையை தவிர மற்றவை அனைத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறது ...:-)

    ReplyDelete
    Replies
    1. ///
      இனிவரும் எட்டு இதழ்களில் அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவனே கதையை தவிர மற்றவை அனைத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறது ...:-)//// ஹா..ஹா....இரு தலீவரே அது?

      Delete
    2. .....இருந்தாலும் தலீவரே , க்ளமாக்ஸ் பாகம் அல்லவா அது?....

      Delete
    3. தலைவரே.! அது சூப்பர் கதை தலைவரே.! அந்த திமிரும் தெனாவெட்டு பார்வை பார்க்கும் அந்த ஹன்னா வை காண நான் ஆவலுடன் உள்ளேன் தலைவரே.!

      Delete
    4. ஆடு பகை....ஆட்டு குட்டு உறவாவாம்....க்ர்ர்....

      Delete
    5. சேலம் இரவு கழுகு.!

      ஒரு அக்மார்க் ஒரிஜினல் கி.நா.வில் இதுவரை யாருடைய உதவி இல்லாமல் நானே கதையை முழுமையாக புரிந்து படித்து ரசித்த கதை.!

      ஒரே சிக்கல், கி.நா.வில் கதையை கணிக்கவே முடியாது.! ஹன்னா மற்றும் வொர்னர் முடிவு என்ன ஆனதோ என்று பதைபதைப்புடன் உள்ளேன்.!

      Delete

  40. ***** நோ போட்டிக்காண்டி ******
    ****** ஒன்லி லூட்டிக்காண்டி ******

    ஸ்பைடர் : எல்லோரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க ஸார்... அப்போ நான் குற்றச்சக்கரவர்த்தியா இருக்கச்சே கொள்ளையடிச்ச ஒரு பேங்க்லயே இப்போ எனக்கு ATM வாட்சுமேன் வேலை போட்டுக் கொடுத்திருக்காங்க...

    ReplyDelete

  41. ***** நோ போட்டிக்காண்டி ******
    ****** ஒன்லி லூட்டிக்காண்டி ******

    ஸ்பைடர் : இ..இல்ல... எனக்கு ஸ்பைடர்னு யாரையும் தெரியாது. உ..உங்களுக்கு பில் போட்டுடச் சொல்லவா... இல்ல, காப்பி கீப்பி ஏதாச்சும் சாப்பிடுறீங்களா...?

    ReplyDelete
  42. ஸ்பைடர் :

    சார் ,நான் ஸ்பைடர்.!

    ஸ்பைடர் ;:

    சத்தியமா நான்தாங்க ஸ்பைடர். வேணும்ன்னா ஐ.டி.காட்டட்டுமா.? வயசாகி சுகர்வேற வந்துடுச்சு.!அதனால் துரும்பா இளைச்சு போய்ட்டேன்.! வெள்ளை எழத்து வேற அதான் கண்ணாடி போட்டிருக்கேன்.!

    ReplyDelete
  43. எங்கே கார்த்திக் சோமலிங்காவை காணோம்.?புத்தகம் கிடைத்து விட்டது போலும்.! சீக்கிரம் வாருங்கள்.! உங்கள் ஒப்பீனியன் காண ஆவல்.!

    ReplyDelete
  44. ///எமனின் வாசலில்..” கதையின் சித்திரங்கள் – எது மாதிரியும் இல்லாப் புது மாதிரி ! ///

    ஒவ்வொரு பக்கத்தையும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது செலவிடமால் தாண்டமுடியாது போலிருக்கே.!!!!!

    ReplyDelete
  45. Gud mrng editor sir :)
    Gud mrng dear frnds :)

    ReplyDelete
    Replies
    1. அடடே!,சத்யா அண்ணா.! வணக்கம்ன்ணா.!எங்கிங்கண்ணா ஆளையே காணோம்.?

      Delete
  46. சார். ஜானி மற்றும் தோர்கல் சில பக்கங்கள் 1.5D யில் பிரிண்ட் ஆகியிருந்தன.

    ReplyDelete
    Replies
    1. ராம்ஜீ சார்.! எல்லோரும் என்னவோ குறைகளை சுட்டி காட்டறாங்க.? எனக்கு எதுவும் தெரியல .!அதில் ஒன்னு 1.5டி பிரிண்ட்.,அப்படின்னா என்ன சார்.?இன்னொரு வாசகரும் கூறியிருந்தார்.!( செனா அனாவின் அலெக்ஸ்ஸாண்டர் புரிந்ததது.)

      Delete
    2. மேலே நமது நண்பர் Satishkumar S தனது பதிவில் படத்துடன் இதனை பற்றி கூறியுள்ளார்.

      Delete
  47. கேப்ஷன் போட்டிக்கு : -

    ஸ்பைடர் : ரிட்டையர் ஆன கையோட இங்கே வேலைக்கு வந்துட்டேன்.
    பேக்கரியில வேலை செய்ய., எதுக்கு இந்த கெட்டப்புனு கேக்குறிங்களா.? ரிட்டையரான மிலிட்டெரி ஆபிசருங்க சினிமாவுல யூனிஃபார்மோடயே இருப்பாங்களே., அதே மாதிரிதான் இதுவும். கெத்தை விட்டுக் கொடுக்க முடியாதே!
    முதுகுல இருக்குற சிலிண்டர்கள்ல லெமன் ஜூசும் சாத்துக்குடி ஜூசும்தான் இருக்கு. பயப்படாம சாப்பிட்டுவிட்டு மறக்காம டிப்ஸ் கொடுத்திட்டு போங்க சார். (ஹூம்.,எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.)

    ReplyDelete
  48. சிறை பறவைகள் :

    ஒரு த்ரில் + action கதை. கதை B/W இதழ்கள் என்ற சந்தா தொகுப்பிற்கு verity எனும் வழு சேர்கிறது. இக்கதை மொழி நடை சித்திரத்துடன் ஒட்டவில்லை!.

    ReplyDelete
  49. கடைக்காரரே..போனமாசம் 17ம் தேதி உங்க கடையிலே நான் வாங்கின வெள்ளெழுத் து கண்ணாடியோட ரசீது....அத்தோட அந்தகண்ணாடி வைக்கிற பெட்டி ரெண்டு துண்டா உடைஞ்சி போச்சி மாத்திதர முடியுமா..
    என்னாது ..முடியாதா கண்ணா டிக்குதான் கா ரெண்டி ...மூடிக்கு கிடையாதா.. தேவுடா ...

    ReplyDelete
  50. கேப்ஷன் போட்டிக்கு :-

    ஸ்பைடர் : ஹெஹ் ஹெஹ் ஹே!!! நல்லா ஏமாந்திங்களா.?
    நான் ஸ்பைடர் கிடையாது. அவர் உருவாக்கின லேட்டஸ்ட் ரோபோ.!ஸ்பீடு ஒன் மெகா பைட் மெம்மரி ஒன் ஜிகா பைட்.
    நெத்தியில இருக்குற கீறலுக்கு காரணம்.. , பக்கத்துவீட்டு மகா வோட ஃபைட்.!!!

    ReplyDelete
  51. ***** நோ போட்டிக்காண்டி ******
    ****** ஒன்லி லூட்டிக்காண்டி ******

    உஸ்......ஆருகிட்டயும் சொல்லாதீங்க .....ஏர்போர்ட் டெர்மினல் தாண்டற வரைக்கும் இந்த கெட்டப்புதான்....

    ....நான் சிவ கார்த்திகேயன்........!!!!!!!!!

    ReplyDelete
  52. ஸ்பைடர்.:
    சார்,! சாமி சத்தியமா ஸ்பைடர் தாங்க நம்புங்க ப்ளீஸ்.! மாடஸ்டி மாதிரி ஜீரோ சைஸ் உடம்பை குறைக்கபோய்.,சீக்கு வந்த கோழிமாதிரி ஆயிட்டேன்.!

    ReplyDelete
  53. ***** நோ போட்டிக்காண்டி ******
    ****** ஒன்லி லூட்டிக்காண்டி ******

    ஸ்பைடர்.....ஒண்ணும் கேட்காதீங்க.....நேத்து நைட் ஷோ புலி பாத்தேன்......

    ReplyDelete

  54. எடி சார் போடறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க.மாடஸ்டியை கலர்ல சிவகாசி பட்டாசு போல வெடிக்க வைத்தால் நிரம்ப மகிழ்ச்சி

    ReplyDelete
  55. first balloon: பயப்படதீங்க

    first balloon: Jodorowskyயோட அந்த பேட்டிய நானும் பாத்தேன் அப்படி எல்லாம் நம்ள கொள்ளமுடியாது,
    தீபாவளி sweet சாம்பிள் ட்ரை பண்றீங்களா.

    ReplyDelete

  56. first balloon: என்ன பாக்கறீங்க

    first balloon: நானேதான் Spider, சூட்டிங் டீ பிரேக் ல இருக்கேன். இது ஒரிஜினல் face இன்னும் கிராபிக்ஸ் work ஆரம்பிக்கள முழிக்காதீங்க. பலகாரம் எடுத்துகோங்க.

    ReplyDelete
  57. //Raghavan(from previous post):
    Infact அடுத்த ஆண்டு மறுபதிப்பில் விடுபட்டுப் போன கமாஞ்சே கதையினை வண்ண மறுபதிப்பாய் இணைந்ததால் நலமே !//

    +1

    அவனை செய்யுங்கள் எடிட் சார் !

    ReplyDelete
    Replies
    1. *ஆவன செய்யுங்கள் எடிட் சார் !

      Delete
  58. @ ALL : புதிதாய் ஒரு வாக்கெடுப்பு - பதிவின் மேல் இடது கோடியினில் பாருங்களேன் !

    ReplyDelete
  59. ஸ்பைடரின் டயலாக்:

    "ஏன் இப்படி விசித்திரமா பார்க்கறீங்க சார்..?"

    "ஒரு சர்வர் முதுகில் இரண்டு சிலிண்டர்களோடு உங்களுக்குப் பரிமாறுவதில் என்ன பிரச்சனை?"

    "நீங்க சாப்பிடும் பிஸ்கெட்ல ஈ மொய்க்காமல் இருக்க, மருந்தடிக்கதான் அந்த சிலிண்டர்.. போதுமா..?"

    ReplyDelete
  60. ஈரோடு விஜய் @ கஜினி போல் பலமுறை படையெடுத்து போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  61. ஈரோடு விஜய் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  62. விஜயன் சார்,

    தீடிர் என்று உங்களின் இந்த வாக்குஎடுப்பின் காரணம் புரியவில்லை, காரணம் தெரியாமல் ஒரு வாக்கெடுப்பில் பங்கேற்க விருப்பம் இல்லை. அதே நேரம் இந்த இணைய தளத்திற்கும் அப்பால் உள்ள நண்பர்களிடமும் இது போன்ற நேரம்களில் கருத்து கேட்டு முடிவு செய்வது நலம்.

    கடந்த வருடம் (2014) மெயின் சந்தாவில் இருந்தவரை இந்த வருடம் (2015) தனி சந்தா என சொல்லிவிட்டு அவரை மெயின் சந்தாவில் மீண்டும் போட வாக்கு எடுப்பது ஏன் என்று எனக்கு புரியவில்லை :-(

    தோர்கல்க்கு மெயின் சந்தாவில் இணைப்பது என்றால் வருடம் எத்தனை கதைகள் வரும் என சொல்ல முடியுமா? அப்படி இணைப்பதால் மெயின் சந்தாவில் வரும் கதைகள் குறையும். அதே போல் தோர்கல் கதை இப்போதுதான் வேகம் எடுக்க தொடக்கிஉள்ளது, இந்த நேரத்தில் மெயின் சந்தாவில் கொண்டு வந்து அதன் எண்ணிக்கையை குறைத்து அது படிக்கும் (டைகர் கதைகளை) ஆர்வத்தை தயவு செய்து குறைத்து விடாதிர்கள்.

    ஒருவேளை அடுத்தவருடம் இதனை மெயின் சந்தாவில் இணைத்தால், புதிதாக இந்த கதையை படிபவர்களுக்கு தலையும் புரியாமல் வாலும் புரியாமல் போக வாய்ப்புகள் அதிகம் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டுகிறேன்.

    எனக்கு இந்தவருடம் பௌன்ச்ர் வந்தது போல் அடுத்தவருடம் தோர்கல் மூன்று புத்தகமாக வரவேண்டும். ரெகுலர் சந்தாவில் இணைப்பதால் தோர்கல் கதைகள் அடுத்தவருடம் குறைவதாக இருந்தால் கண்டிப்பாக வேண்டாம்.

    எனக்கு தோர்கல் கதை தனி சந்தாவில் வருவதே பிடித்து இருக்கிறது என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சரியான கருத்து! வாக்கெடுப்புக்கான விவரங்கள் போதுமானதாக இல்லை! தோர்கலை திடீரென்று மெயின் சந்தாவில் இணைப்பதாக இருந்தால் அதன் சாதக பாதகங்களைக் கொஞ்சம் அலசி ஆராயவேண்டியதிருக்கும்!

      என்னுடைய தனிப்பட்ட ஆசை( சமீபத்திய தோர்கல் இதழைப் படித்தபிறகு தோன்றியது இது) : அடுத்தவருடம் சுமார் 10 பாகங்களை முன்பதிவின் அடிப்படையில் (இரண்டு அல்லது மூன்று தொகுப்புகளாக) வெளியானால் மகிழ்வேன்!

      Delete
    2. //என்னுடைய தனிப்பட்ட ஆசை( சமீபத்திய தோர்கல் இதழைப் படித்தபிறகு தோன்றியது இது) : அடுத்தவருடம் சுமார் 10 பாகங்களை முன்பதிவின் அடிப்படையில் (இரண்டு அல்லது மூன்று தொகுப்புகளாக) வெளியானால் மகிழ்வேன்!//

      ×100

      Delete
  63. “எமனின் வாசலில்" கதையின் சித்திரங்கள் நமது டயபோலிக் கதையின் சித்திரம்களை நினைவுபடுத்திகிறது. அருமையாக உள்ளது! ஆர்வமுடன் காத்துகொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  64. நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்!

    ***** நோ போட்டிக்காண்டி ******
    ****** ஒன்லி லூட்டிக்காண்டி ******

    ஸ்பைடர் : ஐயா... தர்மவான்... நீங்க என்னோட தட்டுல எதுவுமே
    போடலைன்னாலும் பரவாயில்ல... அதோ அங்க கிராப்பு வச்ச காண்டாமிருகமாட்டம் பல்லைக் காட்டிக்கிட்டு உட்கார்ந்திட்டிருக்கானே ஆர்டினிப் பய... அவனுக்கு மட்டும் எதுவும் போட்டுடாதீங்கய்யா... உங்களுக்குப் புண்ணியமாபோவட்டும் சாமே...

    ReplyDelete
  65. இந்தமாத இதழ்களுக்கான என்னுடைய ரேட்டிங்:

    1. தோர்கல் - 5/5
    2. சுட்டிலக்கி - 4/5
    3. ரிப்போர்ட்டர் ஜானி - 4/5

    ReplyDelete
  66. என்னது, அதுக்குள் நவம்பர் இதழ் 'சாகச வீரர் ரோஜரின் - மஞ்சள் நிழல்' தாயாரா...? ஒக்கே ஒக்கே இதழை மட்டும் கொஞ்சம் அவசர கதியில் பைண்டிங் பண்ணி கொஞ்சம் கூரியரில் நமக்கு தள்ளிவிட்டிங்கனா புண்ணியமா போகும்..!

    தோர்கல் தனி சந்தாவிலேயே வரட்டுமே...இந்த முறை இரண்டு பாகமாக வரும் போதே அடுத்ததென்ன என்று எதிர்பார்க்க வைக்கின்றது. அதுத்தாண்டு குறைந்தது நான்கு கதைகளை இணைத்து ஒன்றாக வெளியிடும் போது சுவராஸ்யம் கூட வாய்ப்புக்கள் அதிகம்.

    ReplyDelete
    Replies
    1. சார்.,தோர்கல் நிலையே மாறிவிட்டது.! தற்போது டாப் கீர் போட்டு எகிறி போய்க்கொண்டு இருக்கிறது.!யாருமே பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை.!எனவே அனைத்து தரப்பினரும் ரசிக்க மெயின் சந்தாவில் இணைப்பதுதான் நியாயம்.!

      தனி ட்ராக் கடினமான மற்றும் புதிய பாணி கதைகளுக்காக போட்ட தனி பாதை.,எனவே தனிவழிக்கு தோர்கல் பொருத்தம் கிடையாது.!

      எல்லோரும் விரும்பி படிக்கும் கதையை,விரும்பியவர்கள் மட்டும் வாங்கி கொள்ளலாம் என்பது சரியாக வருமா.?

      Delete
    2. தனி கி.நா.சந்தாவில் தொர்கல் வந்தால் தான் 4கதைகள் அல்லது 6 வரும் வாய்ப்பு கிடைக்கும்.... மெயின் சந்தாவில் ஒரு வாய்ப்பு , அரை வாய்ப்புக்கே தாளம் போடனும்...எனவே 4வாய்ப்பு என்ற உறுதி படுத்தப்பட்டால் மெயின் சந்தாவிலேயே வரட்டும்

      Delete
    3. தோர்கலின் மேல் நம்பிக்கை இப்போதுதான் துளிர் விட ஆரம்பித்துள்ளது. அது செடியாக, மரமாக ஓரிரண்டு வருடமாகவாது வேண்டும். இந்த தோர்கல் இல்லாமல் நானில்லை என்ற நிலையையடையும் போது தனி சந்தாவிற்கு கல்தா கொடுக்கலாம். இந்த வருடம் தனி சந்தாவில் வந்த பௌன்சர் அடுத்தாண்டு ரெகுலர் சந்தாவில் வருவதாக ஒரு கேள்வி!? அதற்கு காரணம் என்னவாகயிருக்கும்...? think about it,

      Delete
    4. அதற்கு காரணம் பெளன்சர் தொடரில் இன்னும் இரு பாகங்கள் மட்டுமே பாக்கி , அதனால் மெயின்லயே வருது போல.....ஆனால் தொர்கல் 2016 லும் கி்.நா.விலேயே தொடரட்டும்....எப்படி ஆயினும் இப்போதைய வாக்கெடுப்பு 2017ல் தானே செயல்படுத்தப்படும், அதானே நடைமுறை..... ஹி்ஹி...

      Delete
    5. எது எப்படியோ எனக்கு தோர்கல் தனிசந்தாவில் தான் வர வேண்டும்!

      Delete
    6. தனி சந்தாவோ .? மெயின் சந்தாவோ .?எப்படியோ எல்லோருடைய எண்ணமும் ஒட்டுமொத்தமாக நிறைய பாகங்கள் படிக்க வேண்டும் என்பதில் மாற்றுகருத்து இல்லை.!எனவே ஏதாவது ஸ்பெஷல் என்று தோர்கல் குண்டு புத்தகம் கேட்டு வாங்கிவிடவேண்டியதுதான்.!

      Delete
    7. //மெயின் சந்தாவில் ஒரு வாய்ப்பு அரைவாய்ப்புக்கே தாளம் போடனும்.!///

      ஹஹஹஹஹ..................!

      பெங்களூர் பரணி பயப்படுவதில் அர்த்தம் உள்ளது.!

      டெக்ஸ் விஜயராகவன்.!@ உங்கள் மாமா எழதுவதாக கூறிய " பவளச்சிலை மர்மம் " என்ன ஆச்சு.?

      Delete
    8. ////பெங்களூர் பரணி பயப்படுவதில் அர்த்தம் உள்ளது.!////...... ஹா..ஹா.....
      அவர் பயம் அவருக்கு....
      கிட்டார் , கொஞ்சம் பிஸி ...ஆனால் வர வேண்டிய நேரத்தில் வருவார்....

      Delete
  67. எடிட்டர் சார்.!

    நான் அனைத்து தொடர்களையும் ஒன்றாக பைண்டிங் செய்து படித்து ரசிப்பது வழக்கம்.(உதாரணமாக , இரத்தக்கோட்டை ,கொடுரவனத்தில் டெக்ஸ் போன்ற தொடர்கள் )பிளாக் & ஒயிட் விஷயத்தில் ஒ.கே. ஆனால் தற்போது வரும் தரம் மேம்பட்ட லார்கோ கதைகளை மொத்தமாக பைண்டிங் செய்து படிக்க சாத்தியமா.?

    (லோக்கல் பிரஸில் லார்கோ வின் ஐந்து புத்தகங்களையும் அட்டையை எடுத்துவிட்டு பைண்டிங் செய்யகொடுத்தபோது இது சாத்தியம் இல்லை என்று கூறி திருப்பிகொடுத்து விட்டார்.!)

    ReplyDelete
  68. எமனின் வாசலில் "தல" யின் கனதக்கு வனரந்துள்ள ஓவியம் பற்றிய விளம்பர ேம அள்ளுது. படிக்க ஆவலாக உள்ளது.

    ReplyDelete
  69. அட்டை படங்கள் கலக்கின்றன . ஓவியர் இந்த அற்புதமான சித்திரங்களை உருவாக்க 7 வருடங்கள் எடுத்து கொண்டது தகும் சார். எப்போது வரும் என்று எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது.

    ReplyDelete
  70. எமனின் வாசலில் "தல" யின் கனதக்கு வனரந்துள்ள ஓவியம் பற்றிய விளம்பர ேம அள்ளுது. படிக்க ஆவலாக உள்ளது.

    ReplyDelete
  71. இளவரசியின் வண்ண இதழ் கண்டிப்பாக ெவளியிடவும். ஆவலாக உள்ளது.
    ேதாா்கல் கனத ேபண்டசி உலகிற்ேக அனழத்து ேபாகுது.

    ReplyDelete
  72. இந்த மாதம் நான்கு இதழ்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். புராதன டிடெக்டிவ் , இடியாப்ப டிடெக்டிவ், ஃபேன்டசி மற்றும் காமெடிஎன்று ஒரு வித்தியாசமான கலவைகள். முதலில் கையிலெடுத்தது ஜானி கதையைத்தான், ரொம்ப நாளைக்கப்புறம் என்பதால்.

    காலனின் காலம்: / கைராசிக்காரன்: / ராகு கேது: / ராசியில் ஒரு கண்டம்: /

    விடுமுறையைக் கழிக்க பெல்லிஸ் கிராமத்திற்கு வருகின்றனர் ஜானியும், கமிசனரும். அவர்களின் காட்டேஜ் பக்கத்திலுள்ள வீடு தீப்பற்றி எரிந்து அசம்பாவிதம் நிகழ்கிறது. அடுத்து கமிசனர் தங்கியுள்ள காட்டேஜ் ஓனர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். உள்ளூர் கார் டிரைவர் மிகப்பெரிய விபத்திலிருந்து மயிரிழையில் உயிர் பிழைக்கிறார். கலைப்பொருள் வியாபாரி வெடி விபத்திலிருந்து தப்புகிறார். இவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு ராசி. தினசரி பேப்பரில் வரும் ராசிப்பலன் பகுதியில் இவர்கள் ராசியில் எச்சரிக்கையாக இருக்கும்படி வந்த செய்திகளை அலட்சியம் செய்ததினால் விபத்திற்குள்ளகின்றனர் என்று ஜானி துப்பறிகிறார். இது சம்பந்தமாக அந்த ஊரு பத்திரிக்கைக்கு ரசிப பலன் எழுதும் ஜோதிடரை சந்திக்கிறார். நான் குறி சொல்பவனல்ல, சாத்தியமாவதை மட்டுமே சொல்பவன் என்கிறார். இதற்கெல்லாம் காரணம் ஜோதிடர் இல்லையெனில் அதற்கு பின்னணியில் உள்ளவர் யார்? அதற்கு காரணம் என்ன..? ஜானி தன் வழக்கமான பாணியில் கண்டுபிடிப்பதே இந்த காலனின் காலம்.

    ராசிக்கும் , மூடநம்பிக்கைக்கும் வைக்கும் நம்பிக்கைகளை நம்புவதால் ஏற்படும் விபரீதங்களை கதையின் கருவாக சொல்லப்பட்டுள்ளது. ஜானியின் வழக்கமான அக்ஃமார்க் ரகம். அடுத்தாண்டு புது பாணியில் ஜானி எப்படியென்று ஆவல் ஊற்றெடுக்கிறது. முதல் பக்கத்தின் கதாபாத்திரத்தின் அறிமுகப்படலத்தில் அந்த ஆறாவது கட்டத்தில் உள்ளவற்றை படித்தவுடன் சிரிப்பு வந்துவிட்டது.

    ReplyDelete
  73. இந்தா புடி ப்ரொபசர் பெல்ஹாமும் நானும் சேந்து செஞ்ச pen drive , dongle அந்த CD ய மட்டும் ஓட்ட வாயி அர்டினி ட்ட குடு
    நான் யாரு தெரியுமா மச்சி
    அப்பவே SMS ல யும் ANDROID ல யும் பூந்து APP , APP ன்னு அப்புனவங்க ளாக்கும்

    ReplyDelete
  74. மீண்டும் ஒரு மதிப்பெண் பட்டியல்.(நாங்கள் எல்லாம் கணக்கில் ரொம்ப வீக்.!)

    அனைத்து கதைகளுக்கும் எனது மதிப்பெண் 100/100.

    இந்த தடவை எல்லா கதைகளும் சித்திரங்களும் அருமை.!

    லாரி ஸ்டிரைக் என்பதால் தமாதமாக புத்தகங்கள் கிடைக்கும் நமது மீதி நண்பர்களும் சேர்ந்து கொண்டால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.!

    ReplyDelete
  75. லாரன்ஸ் டேவிட் கதையும் படித்து விட்டேன் - சீராக இருந்தது. முத்து காமிக்ஸ் முன்பு அதிகம் படித்ததில்லை ஆதலால் லாரன்ஸ் டேவிட் கதைகள் எனக்கு பிடித்திருக்கின்றன. அடுத்து ஜானி நீரோ கதைகளும் பிடிக்கும். ஸ்பைடர் கதைகள் கண்டிப்பா படிப்பேன் - for the sheer reckless fantasy.

    மாயாவி (உறைபனி மர்மம்​) இன்னும் படிக்கவில்லை :-) புக்க எடுத்தாலே தூங்கி விடுகிறேன்.

    ஜானி கதை - சமீபத்தில் வந்த ஜானி கதைகளில் எனக்கு இது பிடித்திருந்தது. கொஞ்சம் வித்யாசமான பிளாட்.

    அடுத்த மாதம் டெக்ஸ் வில்லருடன் Wayne Shelton வருவது மகிழ்ச்சி.

    தோர்கல் கிராபிக் நாவல் trackலேயே இரு தொகுதி தொகுப்புக்களாய் வருதல் நலம். அல்லது சில கதைகள் 2-3-4 புத்தகங்கள் என்ற அளவில் Story Arc கொண்டிருக்கும் - அவை முழுத் தொகுதியாய் வந்தாலும் நலமே !

    ReplyDelete
  76. மிஸ்டர் மரமண்டை.! எங்கே உங்கள் நெத்தியடி விமர்சனம் ? லாரி எல்லாம் ஸ்டிரைக் என்பதால் இன்னும் புத்தகங்கள் கைகளில் கிடைக்கவில்லையா . ???

    ReplyDelete
    Replies
    1. Madipakkam Venkateswaran : வணக்கம் Mv சார் ! தங்களின் நட்பிற்கும், அன்பிற்கும் மனமார்ந்த நன்றிகள் !!

      அடுத்த நாளே எனக்கு அனைத்து காமிக்ஸூம் கிடைத்து விட்டது. ஆனால் இன்னும் படிக்க மட்டுமே நேரம் கிடைக்கவில்லை. கடந்த நான்கு மாதகாலமாக எனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரம் மிகவும் குறைந்து விட்டது. ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் வெளியூர் பயணம் ; உள்ளூரில் கிடைக்கும் 20-25 நாட்களில் கடுமையான வேலை நெருக்கடி என்று என் வாழ்க்கைச் சக்கரம் சட்டென்று மித அதி வேகம் எடுத்துச் சுழல்வதால், முன்போல் விமர்சனங்களையும் பதிவுகளையும் இங்கு பதிவிட வாய்ப்பு இருப்பதில்லை. இருந்தாலும், இவையனைத்தும் என் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான படிக்கட்டுகள் தான் எனும்போது இந்தச் சிரமங்களை மிகவும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன். இன்னும், இன்னும், இதுபோன்ற கடுமையான வேலை நெருக்கடிகளும், தொழில் சிரமங்களும் கிடைக்காதா ; இல்லை, இன்னும் கொஞ்சம் கூட அதிகமாகாதா - என்று மனம் ஏங்க ஆரம்பிக்கிறது :)

      contd...

      Delete
    2. வணக்கம் Mv சார் (2)

      சென்ற மாதமும், ஏன் பௌன்சர் விமர்சனம் விரிவாக எழுதவில்லை என்று கேட்டிருந்தீர்கள், காரணம் என்னைப் பொறுத்தவரை ஒன்று தான்- அது, அதில் இழையோடும் வக்கிரம் மட்டுமே ! நம் வாசக நண்பர்கள் அனைவரும் ''ஆஹா... ஓஹோ'' என்று தத்தம் விமர்சனங்ளைப் பதிவிட்டு வரவேற்ற நிலையிலும் - என்னால் பௌன்சரை முழுமனதோடு வரவேற்க இயலவில்லை ; இது காமிக்ஸ் கதைதானே என்று முழுதாக ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. அதற்கான காரணத்தை ஏற்கனவே இந்த வலைதளத்தில் பதிவிட்டு விட்டேன் என்றாலும் - மீண்டும் படிக்க வேண்டும் என்றால் இங்கே க்ளிக்செய்யவும்.

      அங்கே செல்ல முடியாதவர்களுக்கு ஒரே ஒரு சாம்பிள் விமர்சனம். மனம் எவ்வளவு விகாரப்பட்டுப் போயிருந்தால் ; மனம் எவ்வளவு வக்கிரம் நிறைந்த சிற்றின்ப ஈடுபாடு கொண்டிருந்தால் ; தன் தனித் தன்மையை வெளிக்காட்ட, அதையே வியாபார வெற்றிப் பொருளாக்க - ஒருவர் (கதாசிரியர்) இந்தளவு முனைவார் என்ற எண்ணம் மட்டுமே என்னுள் எழுந்தது. காரணம், ஒட்டிப் பிறந்த இரட்டைப் பெண்டீரில், ஒருத்தி மட்டும் சயனித்திருக்க, ஒருத்தி மட்டும் விரகத் தாபத்தோடு பார்த்திருக்க, ஒருத்தியிடம் மட்டுமே கொள்ளும் உடலுறவே கதையின் மையக் கருவாக அமைந்துள்ள பௌன்சரின் கறுப்பு விதவை ! படித்து முடித்து விட்டு பரண் மேல் தூக்கி எறிந்து விட்டாலும் அது விட்டுச் சென்ற நினைவுகள் அவ்வளவு எளிதில் நீங்கி விடுமா என்ன ?!

      உடனே சிலர் அதற்கும் பட்டிமன்ற பேச்சாளராக பிரிந்து நிற்பர் ; இது ஏற்கனவே ஓரிடத்தில் உண்மையாக நடந்தச் சம்பவமே என்று கட்டியம் கூறுவர் ; ஆதாரம் கூகுளாண்டவர் என்று பறைசாற்றுவர் - ஆம் ஏற்றுக் கொள்கிறேன் நண்பர்களே, இது உண்மையாக இருக்கலாம், உலகில் எங்கோ ஒரு மூலையில் ஒரே ஒரு முறை நடந்தும் இருக்கலாம் - அதற்காக ?!

      இன்னும் கூட நரமாமிசம் சாப்பிடுபவர் அமேசான் காட்டில், ஆப்பிரிக்க வனாந்திரத்தில் இருக்கிறார்கள் என்பதால் - நரமாமிசம் செய்வது எப்படி ? ஒவ்வொரு மனித உறுப்புகளின் சுவைகள் எப்படி இருக்கும் ? மசாலா கலந்து சுட்டெரிக்கும் போது, பாதி பச்சைக் கறியாக சாப்பிடும் போது, எந்த எந்த உறுப்புகளின் இயற்கைச் சுவை மாறும் ? - என்று நாமும் கூட விலாவாரியாக செய்முறை விளக்கத்தைப் படிக்கத் தான் வேண்டுமா என்ன ? - என்பதே என் கேள்வி ?!

      contd..

      Delete
    3. மிஸ்டர் மரமண்டை.!

      காமிக்ஸ் பற்றி மட்டும் பேசுவோமே நண்பரே.! பழைய குப்பைகளை கிளறி நாம் ஏன் மனசை புண்படுத்திக்கொள்ளவேண்டும்.?
      நமக்கு பல முகங்கள் இருந்தாலும் காமிக்ஸ் ரசிகன் என்ற முகத்தை மட்டும் இங்கே காட்டலாமே.! ( யார் என்று தெரிந்தால் தானே தன்மான பிரச்சினை . எங்களை பொருத்தமட்டிலும் நீங்கள் கருத்துருவம் மட்டுமே.!)

      பௌன்சர் கதை எனக்கு மிகவும் பிடித்துபோய் விட்டது.

      நான் கல்லூரியில் சட்டவியல் படித்தபோது ,நாம் காட்டுமிராண்டி வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சட்டங்கள் பரிணாம வளர்ச்சியில் தற்போதய நிலையை அடைந்துள்ளோம்.!
      இதைப்போலவே பௌன்சர் கதையையும் படிக்கும் போது அவர்களின் தற்போதய நிலையை ஒப்பிட்டுப்பார்த்தேன்.!

      நிலையான அரசாங்கமும் சட்டமும் இல்லையென்றால் எல்லோரும் காட்டுமிராண்டிகளே.!

      இம்மாத இதழ்களை சீக்கிரம் படித்துவிட்டு சூப்பராக இயல்பாக ஒரு விமர்சனம் போடுங்கள்.! ஆவலுடன்..................!

      Delete
    4. யார் என்று தெரிந்தால் தானே தன்மான பிரச்சினை

      Delete
  77. "இங்க நான் ஒரே பிசி "

    மனதில் உற்சாகத்தின் சதவீதம் சற்றே குறைவாக இருப்பதால்., இம்மாத வெளீயீடுகள் அனைத்தையும் படிக்க இயலவில்லை. சுட்டி லக்கி மட்டும் படித்து முடித்திருக்கிறேன். இன்றுதான் தோர்கலோடு தோள்சேர்ந்து தூங்கப்போகிறேன்.
    தோர்கல் படிக்கும் முன்னரே என்னுடைய கருத்தை சொல்கிறேன். இந்த வருடத்தை போலவே தோர்கல் தனித்தடத்தில் கிநா வரிசையில் இரண்டு அல்லது மூன்று இணைத்து தொகுப்பாக வருவதையே விரும்புகிறேன்.!

    ReplyDelete
    Replies
    1. @ கிட்ஆர்ட்டின்

      இதுமாதிரி மனதில் உற்சாகத்தின் சதவீதம் சற்றே குறையும்போது 'அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தே' அல்லது 'ஒரு கழுதையின் கதை'யை ஒருமுறை படியுங்களேன்? மனசு அப்படியே மயிலிரகு மாதிரி ஆகிடும்!

      Delete
  78. புயலுக்கொரு பள்ளிக்கூடம் : -

    Simply super.!
    விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல லக்கியின் வேகம் , லாவகம் அனைத்தும் சிறு வயதிலேயே தெரிகிறது. ஒரே கல்லில் ஐந்து பேரை தாக்குவதும்., ஜிம்மின் தந்தையின் இடைபெல்ட்டை கவண் ஆக்கி., அவருடைய பர்சில் இருந்த பொருட்களையே கல்லாக்கி டால்டன்ஸையும் ஜிம்மையும் தாக்குவது என லக்கிலூக் கின் சாகசங்களுக்கு எவ்விதத்திலும் குறைந்தவனல்ல சுட்டி லக்கி.!
    லக்கியின் தாத்தா போக்கர் ஆடும் சம்பவங்கள் நல்ல நகைச்சுவை. ஒவ்வொரு முறையும் ஐந்து ஆஸ்.,ஐந்து கிங்ஸ் என பித்தாலாட்டம் செய்து தார்குளியலும் இறகு போர்வையுமாக சலூனை விட்டு துரத்தப்படுவது செம்ம காமெடி.
    அதிர்ஷ்ட தங்கக்கட்டி கையைவிட்டு போனதும் முதல்முறையாக நேர்மையாக ஜெயித்துவிட்டு திருதிருவென முழிக்கும் தாத்தாவின் ரியாக்ஷன்., ஊரையே ஜெயித்தபிறகு அதே அதிர்ஷ்டசின்னம் திரும்பவும் கிடைத்த அடுத்த நொடி ஒரே ஆட்டத்தில் அத்தனையும் இழந்து முழிப்பதும் என தாத்தா கலக்கியெடுக்கிறார்.

    ஸ்கூல் பசங்களை கொள்ளையடிக்க தயார் செய்வதும்., ஸ்கூல் மிஸ்களை ஜொள்ளுவிட வைப்பதும் என ஓக்லஹோமா ஜிம் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். (ஆனாலும் மஸ்ரூம் சிட்டி மிஸ் ஜூ ரொம்பவே ஓவர். அந்த ஸ்கூல்ல அட்மிசன் கிடைச்சா நான் சேர்ந்து கொள்ள தயார். இந்த மிஸ்ஸு ஜெஸ்ஸி ஜேம்ஸை கன்னாலம் கட்டிக்கிற கதையை படிக்கவும் ஆவலா இருக்கு.)
    வழக்கமான ஜோ மற்றும் ஆவ்ரேல் ப்ளஸ் ரெண்டு டால்டன்கள்.
    ஆவ்ரேலின் வயிறு சிறுவயதில் போடும் கூப்பாடே பிணம்தின்னி ராக்காச்சியின் சத்தம் போல இருந்திருக்குன்னா இப்போ எப்படி இருக்கும்?? தம்பிகளை ஓடவிட்டு குதிரையில் பயணிக்கும் ஜோ எப்போதும் போலவே.! அப்போதிருந்து லக்கியை போட்டுத் தள்ள எடுத்த முயற்சியில் இன்னும் வெற்றி கிடைக்காமல் அலையும் ஜோவுக்கு அனுதாபங்கள்.

    மொத்தத்தில் சுட்டி லக்கி வருடம் ஒருமுறையாவது தலைகாட்டியே தீரவேண்டும் என்பது என்னுடைய தீரவே தீராத ஆசை.!!!

    ReplyDelete
    Replies
    1. அடடே! உங்கள் விமர்சனத்தை படித்தபின் திரும்ப ஒருமுறை படிக்க தூண்டுகிறது.! சூப்பர்.

      Delete
    2. இந்த கதையின் மிகப்பெரிய காமெடி என்றால் ஜோ ஒரு குதிரையில் பயணித்து கொண்டு இன்னும் ஒரு குதிரையை துணைக்கு அழைத்து செல்லும் இடம், அவனின் சகோதரர்கள் பின்னால் வேர்க்க விறுவிறுக்க ஓடி வரும் அந்த இடம், அங்கு இடம் பெரும் வசனம்கள் படம்கள் மிகவும் சிரிக்க செய்யும் இடம்.

      Delete
  79. காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு .
    மாண்ட்ரேக், ரிப்கிர்பி, மாடஸ்டி?, சைமன், ராபின், சிஸ்கோகிட்,
    வெஸ்சிலேட்(மரணமண்), ஏஜண்ட் ஜான் ஸ்டீல், வேதாளர், டிடக்டிவ் சார்லஸ்,
    சாகஸவீர ர் ரோஜர்,பில்?, இன்னும் பலர்
    2016 ல் இவர்களில் எத்தனை பேர்களை பார்க்க முடியுமோ தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. அமர்நாத் அவர்களே...
      நீங்கள் மேற்கூறியவர்களில் ஓரிருவர் தவிர மற்றவர்களுக்கெல்லாம் இனி மனதில் மட்டுமே இடம் என்பதைத் தாங்களும் அறியாதவரல்லவே? ;)

      Delete
  80. தோர்கல்: பகுதி 1 :

    கடைசியில் சொல்ல வேண்டியதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். கதை, சித்திரங்கள், வர்ணங்கள், வசனங்கள், பிரிண்டிங் என எல்லாமே fantastic. ஆக்சன், அட்வென்சர், வன்மேற்கு, காமெடி போன்ற ஜானர்களில் தொடர்ந்து கதைகளைப் படித்து விட்டு, இதுப் போன்ற ஃபேண்டஸி எனும் மாய, மந்திர கதைகளில் நுழைவது ஒரு refreshing change என்றே சொல்லாம். ஏறக்குறைய ஃபேண்டஸி கதை களங்களெல்லாம் ஒரு கூடை பூவை காதில் சுற்றும்படியாகவேயிருக்கும். ஆனால், இந்த கதையை வாசிக்கும் போது அதுப் போலில்லாமல், ஒரு காலஎந்திரத்தைக் கொண்டு நானே அந்த மாயலோகத்திற்கு சென்று வந்ததுப் போன்ற ஒரு உணர்வைத் தந்தது, அதுவே அந்த கதையின் வெற்றிக்கு சாட்சி.

    வாருங்கள் இனி கதைக்குள் நுழையலாம்...
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    தோர்கல்: பகுதி 1 -> ‘சாகாவரத்தின் சாவி’ : / ‘மாயாலோகத்திற்கோர் பயணம்:’
    தோர்கல் தன் மனைவி ஆரிசியாவுடன் எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் ஒரு காட்டில் பயணிக்கையில் திடீரென அங்கு பிரசன்னமாகும் ‘ஆரோன்’ ராஜ்ஜியத்தின் ஒரு பொடியன் அவர்களை தங்கள் ராஜ்ஜியத்திற்கு விருந்துண்ண வருமாறு அழைக்கிறான். அங்கு செல்ல தயங்கும் தோர்கல் தன் மனைவியின் விருப்பத்தின் பேரில் அங்கு நுழைகிறார்கள். அங்கு நான்கு புற இணைப்புகள் கொண்ட நெக்லஸ் – சை காண்கின்றனர். ஒரு அம்பின் மூலம் அதை கைப்பற்றுவோர் அந்த ராஜ்ஜியத்தின் பேரரசர் ஆவாரென்பது ஐதீகம். நம்மால் முடியுமா என் தோர்கல் தயங்கி நிற்க, ஆரிசியா ஒற்றை அம்பைத் கொண்டு தன் கைகளாலேயே கைப்பற்றி தன் கழுத்தில் அணிகிறாள் அதன் விபரீதத்தை உணராதவளாக. கழுத்தில் அணிந்ததால் ‘ஆரோன்’ ராஜ்ஜியத்தின் மகாராணியாக போற்றப்படுகிறாள். கோட்டைக்கு கொண்டு செல்லப்படும் ஆரிசியாவை தடுக்கும் போராட்டத்தில் மயக்கமுறும் தோர்கலை ஓநாய்களுக்கு விருந்தாக விட்டு செல்கின்றனர். பின்பு மயக்கம் தெளிந்து கோட்டைக்குள் நுழைவும் தோர்கல் அங்கு ஆரிசியா போதை மயக்கத்திருப்பதால் தான் யாரென்று அறியாததால் திரும்பவும் கோட்டை மேலிருந்து தண்ணீரில் குதித்து தான் மட்டும் தப்புகிறான்.
    ராணியாகவுள்ள ஆரிசியாவின் சுயம்வரம் போட்டியில் பங்குகொள்ள பல தேசங்களிலிருந்து எட்டு வீரர்கள் அழைப்பின் பேரில் பங்கு கொள்கின்றனர். மூன்று நிலைத் தேர்வில் வெற்றி பெறுரும் மாவீரர் ராணியின் மணமகனாவதும், இந்த ராஜ்யத்தின் பேரரசராவார் என்றும் அறிவிக்கப்படுகிறது. அதில் தோர்கலும் கலந்து கொள்கிறார்.
    அதில் தோர்கல் வெற்றிப் பெற்றாரா ? ஆரிசியாவை தோர்கல் காப்பாற்றினாரா.? ‘ஆரோன்’ ராஜ்யத்தின் கதியென்ன? அவர்கள் 3 நிலைத் தேர்வு வைக்க காரணம் என்ன? போன்ற கேள்விக்கு பதிலளிக்கிறது இந்த ‘சாகாவரத்தின் சாவி’
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    இதுப்போன்ற நெடுந்தொடர் கதைகளை வெறும் 2 பகுதிகளாக படித்து முடித்தவுடன் வாட் நெக்ஸ்ட்..? என்ற உணர்வு மேலோங்குகிறது. குறைந்தது ஐந்து பகுதிகளை கொண்ட இதழாக அமைத்தாலொழிய, இதுப் போன்ற கதைகளில் ஒன்றுவது சிரமமாகலாம். அடுத்தாண்டு தோர்கல் ஐந்து பாகங்கள் கொண்ட இதழாக 300/- விலையில் வரவேண்டியதென்பது காலத்தின் கட்டாயம். எ. பெ. டை. விலை விஷயத்தில் நமக்கு பாடங்கள் கற்றுக் கொடுத்திருந்தாலும், தனித்தனி இதழுக்கு கொடுக்கப் போவதை மொத்தமாகக் கொடுக்கலாம் என்பது என் வாதம். இல்லையெனில், இளம் டைகர் கதைக்கு ஏற்பட்ட நிலைமை (கதை புரிதல்) இதற்கும் நேரலாம். ஆனால், அதை தடுக்க வேண்டியது அவசியம் மற்றும் கடமையும் கூட எ. எ. க.

    ReplyDelete
    Replies
    1. @ MH Mohideen

      ஆனந்த விகடனில் ஒரு நேர்த்தியான திரை விமர்சனம் படித்ததைப் போல இருந்தது!

      //ஏறக்குறைய ஃபேண்டஸி கதை களங்களெல்லாம் ஒரு கூடை பூவை காதில் சுற்றும்படியாகவேயிருக்கும். ஆனால், இந்த கதையை வாசிக்கும் போது அதுப் போலில்லாமல், ஒரு காலஎந்திரத்தைக் கொண்டு நானே அந்த மாயலோகத்திற்கு சென்று வந்ததுப் போன்ற ஒரு உணர்வைத் தந்தது, அதுவே அந்த கதையின் வெற்றிக்கு சாட்சி. //

      +10000000 அருமையாகச் சொன்னீர்கள்!

      Delete
    2. உங்கள் விமர்சனம் அருமை.

      Delete
    3. +1

      //என்ற உணர்வு மேலோங்குகிறது. குறைந்தது ஐந்து பகுதிகளை கொண்ட இதழாக அமைத்தாலொழிய, இதுப் போன்ற கதைகளில் ஒன்றுவது சிரமமாகலாம். //

      note this point Edit sir!

      Delete
  81. மொய்தீன் சார்.!

    உங்கள் விமர்சனம் அதிஅற்புதம்.!

    ஆகா மொத்தம் நெ. 1 இடத்தைப்பெற்றுவிட்டதாக கூறினால் மிகையாகாது.!

    புத்தகங்கள் கிடைத்த ( ஒருசில பேர் என்னுடன் தொடர்பில் உள்ள )
    மௌனபார்வையாளர்களையும் தோர்கல் மிகவும் கவரந்துள்ளது !.

    ReplyDelete
  82. Thorgal கதை சூடுபிடித்துவிட்டது. Van Hammeன் சித்திரங்கள் மாயலோகதிற்கே இட்டு செல்கிறது.The Hobbit புத்தக வடிவில் படித்த உணர்வு!

    ReplyDelete
    Replies
    1. செந்தில் !!!!

      வான் ஹாம்மே கதாசிரியர் ....

      ரோசின்ஸ்கி ......ஓவியர் ...

      பின் அட்டையிலேயே இருக்கிறதே ..!!!

      Delete
    2. @ செனா அனா

      நம்ம தலீவர் மாதிரியே இவரும் மந்திர ஜாலங்களில் மயங்கிக் கிடக்கிறார் என்று நினைக்கிறேன்! அடுத்ததா "கடலில் குதித்த மாடஸ்டியின் கதி என்ன?"வென்று யாராவது கேட்டாலும் கேட்பார்கள்! ;)

      தோர்கல் தொடர் இப்போதுதான் தன் வேலையைக் காட்டத் தொடங்கியிருக்கிறது...

      Delete
    3. எங்கள் தலைவி , சுனாமியிலே ஸ்விமிங் போவாங்க.!!!!!

      Delete
    4. selvam abirami//செந்தில் !!!!

      வான் ஹாம்மே கதாசிரியர் ....

      ரோசின்ஸ்கி ......ஓவியர் ...

      பின் அட்டையிலேயே இருக்கிறதே ..!!!//மன்னிக்கவும் கதை சுவாரசியத்தில் ஓவியரின் பெயரை கவனிக்கவில்லை! பிழையை சுட்டி காட்டியமைக்கு நன்றி செல்வம் அபிராமி !

      Delete

  83. ***** நோ போட்டிக்காண்டி ******
    ****** ஒன்லி லூட்டிக்காண்டி ******

    ஸ்பைடர் : சுவீட் எடுத்துக்கோங்க! என்னோட நீண்டநாள் கோரிக்கைக்கு சிவகாசி எடிட்டர் ஒருவழியா சம்மதம் தெரிவிச்சுட்டார்... ஆமா, இதுவரை வெளிவராத என்னோட 'சினிஸ்டர் செவன்' கதையோடு ' சூ.ஹீ.சூ.ஸ்பெஷல்-II ' 2016ல் அட்டகாசமா வெளிவரப்போகுது. சர்வ வல்லமை பொருந்திய இந்த ஸ்பைடரின் அசத்தலான மறுவருகையை... ஹே... எங்கே ஓடறீங்க...? நில்லுங்க... ஹம்! ஓடிட்டாங்க.. தலைதெறிக்க ஓடிட்டாங்க! ஹிஹி... முன்பதிவு செய்யறதுக்காத்தான் இந்த ஓட்டம்னு நினைக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. விஜய் உங்களுடைய இந்த உற்சாகமான சந்தோசமான கமெண்ட் கண்டு சந்தோசம் ..வாழ்க உங்கள் காமிக்ஸ் காதல் .

      Delete
    2. ***** நோ போட்டிக்காண்டி ******
      ****** ஒன்லி லூட்டிக்காண்டி ****** //

      இப்படி சொல்லி சொல்லியே
      எல்லா பரிசையும் ஆட்டய போட்டுடுறாரே
      என்ன பண்ணலாம் ம்ம்ம்ம் :))
      .

      Delete
    3. @ சிபி

      அந்த டெக்னிக் உங்களுக்கும் தெரிஞ்சுபோச்சா? ஹிஹி! ;)

      Delete
  84. Spider caption.
    வாசகர்களே Sweet எடுங்க கொண்டாடுங்க
    Mind voice . எத்தனை பயபுள்ளைக நம்ம படத்த பார்த்து கேப்சன் போட்டிக்கு எழுதி எழுதி நம்மள மாதிரியே ஆகப்போறாங்களோ? என்னமோ போடா மாதவா(just jolly)

    ReplyDelete

  85. ***** நோ போட்டிக்காண்டி ******
    ****** ஒன்லி லூட்டிக்காண்டி ******

    ஸ்பைடர் : இப்போதைக்கு இதை சாப்பிடுங்க. கிழங்கு சேகரிச்சுட்டுவர காட்டுக்குள் போயிருக்கும் ஆர்டினியும் திரும்பிவரும் நேரமாச்சு. நிமிஷத்துல பயல் கிழங்கை வேகவச்சு சுடச்சுட டின்னருக்கு ரெடி பண்ணிடுவான்...
    ஹூம்! என்னத்தைச் சொல்ல... (லொக் லொக்) புரொஃபஸர் பெல்ஹாமின் மறைவுக்குப் பிறகு எங்களோட வாழ்க்கையும் அஸ்தமித்துப் போச்சு. அவரோட கண்டுபிடிப்புகளை கையாள தெரியாமலும், பழுது பார்க்க முடியாமலும் ஒரு கட்டத்தில் அவைகள் எல்லாமே காயலாங்கடை சரக்கா மாறிடுச்சு. ஓரளவு நல்லா இருந்த ஹெலிகார்களை வித்துத்தான் போன வருஷம் கண் ஆப்பரேஷன் பண்ணிக்கிட்டேன். என்னோட பாசறையை அரசாங்கம் கைப்பற்றி பப்ளிக் டாய்லெட்டா மாத்திட்டாங்க. நாட்டைவிட்டே வெளியேறனுமின்னு சொல்லிட்டாங்க. நான் எங்கே போவேன்? நேக்கு யாரைத் தெரியும்? அதான் ஊருக்கு ஒதுக்குப்புறமா காட்டுப்பகுதியில ஒரு குடிசையப் போட்டுகிட்டு, ஆர்டினியின் ஒத்தாசையோட கொசுவலைகள் செஞ்சு வித்து, அதில் கிடைக்கும் சொற்பக் காசை வச்சு வாழ்க்கையை ஓட்டிக்கிட்டிருக்கேன்...... (லொக் லொக்) இந்த 'வலை மன்னன்' இப்போ - கொசுவலை மன்னன்! ஹெஹ்... ஹெஹ்... ஹே...

    போவட்டும்! இந்தப் பகுதியின் EB லைன்மேனான உங்களைக் கூப்பிட்டு வச்சு இதெல்லாம் நான் ஏன் சொல்றேன் தெரியுமா? தீபாவளிக்கு முந்தினநாள் 'நோம்பிக் காசு கொடுங்க சார்'னு நீங்க தலைய சொறிஞ்சுக்கிட்டு இங்கே வந்து நின்னா உங்களுக்குக் கொடுக்க எங்கிட்டே ஒரு தம்படி கூடக் கிடையாதுனு உங்களுக்குப் புரியவைக்கத்தான்!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப சுளுவா முடிச்சிட்டீங்க பூனையாரே

      இன்னும் கொஞ்சம் எழுதினாத்தான் அந்த கட்டத்துக்குள்ள அடங்கும் ;-)
      .

      Delete
    2. @ சிபி

      :D. நக்கலு?

      Delete
    3. நோ நோ

      ஒன்லி லூட்டிக்காண்டி ;-)
      .

      Delete
  86. மாதம் தவறாமல் கடைகளில் காமிக்ஸ் வாங்கி வாசித்து ரசிக்கும் எங்களுக்கு இந்த மாதம் லாரி வேலை நிறுத்தத்தால் புத்தகங்கள் இன்னும் கிடைக்கவில்லை.சந்தா கட்டிய அன்பர்களின்,நண்பர்களும் பதிவைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்....நன்றி... டேவிட் லாரன்ஸ் ...... ஹூம்...இந்த மாத காமிக்ஸ் படிக்காமல் டங் டங் டங் மண்டையில் சுத்திலால் தட்டினால்போல் இருக்குது...

    ReplyDelete
  87. Batman கதைகளுக்கான உரிமைகளையும் //

    யாஹூ
    இப்பவாச்சும் சொல்லுங்க சார் அடுத்தாண்டு Batman களமிரங்கப்போவது உறுதிதானே :))
    .

    ReplyDelete
  88. ஒரு தனிமையான பிராந்தியத்தில் 7 ஆண்டுகள் தனியாய் இருந்து வெறித்தனமாய் பணியாற்றி - இந்த ஒற்றை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார் //

    சித்திரங்கள் அருமை சார்

    RIP :(
    .

    ReplyDelete
  89. ஆர்ச்சியின் caption எழுதும் போட்டிக்கான பரிசை வெல்பவர் பூனைகளின் காதலர் ஈரோடு விஜய் தான்! //

    வாழ்த்துக்கள் நண்பரே :))
    .

    ReplyDelete
    Replies
    1. தவறுதலா வாழ்த்துக்கள் சொல்லிட்டேன் மன்னிச்சு :(

      வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் _/\_

      இதுபோல பற்பல பரிசுகள் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக
      .

      Delete
  90. போன வருசம் எடிட்டர் வைத்த பரிட்சையில்., கேட்கப்பட்ட ஒரு கேள்வி :
    யார்யாரை பரணுக்கு அனுப்ப வேண்டுமென நினைக்கிறீர்கள்.?
    இதற்கான பதிலாய்.,
    டயபாலிக்., தோர்கல்., மேஜிக்விண்ட் என நான் எழுதியிருந்தேன்.
    ஆனால் இம்மாத தோர்கலை படித்தபிறகு என்னுடைய விடைத்தாளை ஏதோ பேப்பர்சேஸாமே அது செய்து., அந்த பதிலில் இருந்து தோர்கல் பெயரை அழித்துவிட முயன்றுவருகிறேன்.!!!

    ReplyDelete
  91. சாகாவரத்தின் சாவி :-
    இதை நான் சொல்லியே ஆகணும். ஆரிசியா செம்ம அழகு (ஆரம்ப பக்கங்களில்) . லார்கோவை படைத்த அதே வான் ஹாமேதான் தோர்கலையும் படைத்தவரா? ஆச்சர்யம்!!!
    முதல் கதை விறுவிறுப்பான மாயாஜாலம். தயாள தெய்வங்கள் குடியிருக்கும் ஏரிமாளிகை அட்டகாசமாக வரையப்பட்டுள்ளது.
    ஆரிசியாவை மணக்க வரும் போட்டியாளர்களிடையே நடக்கும் போட்டி ருசிகரம். (சைகர்ட்டின் முடிவு பரிதாபமானது)
    நிக்கார் நாட்டு மதியூகி (?????) வால்சங் பௌன்சர் கதைகளில் வந்திருக்க வேண்டியவன். சாவிகளின் காவலாளியை ஆவலாய் ரசித்துக் கொண்டிருந்த வேளையில் மரமோடு மரமாகி பீதியை கிளப்பிவிட்டார்.!!!

    நீர் கதவு., காற்று கதவு , அக்னி கதவு மூன்றுக்கும் முறையே தங்க வெள்ளி ஈய சாவிகள்.
    சரியான கதவை திறந்தால் இரண்டாம் உலகம் இல்லையேல் மேலுலகம். (இரண்டாம் உலகத்திலும் அதே சாவிகளின் காவலாளி. இம்முறை காற்றில் கரைந்து விடுகிறாள்.)
    இரண்டாம் உலகத்தில் தோர்கல் சந்திக்கும் நபர்களும்., அந்த குடுவையை கொண்டு வரவேண்டிய காரணமும் அருமையான கற்பனைகள். (வணங்குகிறோம் வான் ஹாமே) .

    இன்னும் கதையை படித்திராத நண்பர்களின் நலனுக்காக., கதையை அதிகமாக வெளிப்படுத்த விரும்பவில்லை. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

    ஆரம்பம் முதல் இறுதி வரை குறையாத விறுவிறுப்பு. தோர்கல் நானும் உனது ரசிகனாகிவிட்டேன் நண்பனே!!! .

    ReplyDelete
    Replies
    1. அலைகளின் மீது அடிமைகள். :-

      மாயஜாலமோ., மந்திரதந்திரமோ கிஞ்சித்தும் இல்லாத., முதல்கதைக்கு நேரெதிரான இரண்டாம் கதை. (கதை தொடர்ச்சியாகத்தான் இருக்கிறது.)
      ஒரு விடலைப் பெண்ணின் விரகதாபத்ததின் ரூபத்தில்., தோர்கலின் வாழ்க்கையில் விதி விளையாடுவதே கதை.
      கடல் சாம்ராஜ்ய சக்கரவர்த்திகள்., கடற்கொள்ளையர்கள் , கடல் அடிமைகள்.,எளிய விவசாயிகள் என கதை மாந்தர்கள் அனைவரும் யதார்த்தம். மாயாஜால மிகைப்படுத்துதல் எதுவுமில்லை.
      தூர விலகி போனாலும் துயரம் சுத்தி அடிக்குதே ங்குற கதையாய்., செய்யாத தவறுக்கு கைதியாக்கப்படும் தோர்கல்., வைகிங்குகளின் உதவியாலும் தன்னுடைய சமயோசித சமார்த்தியத்தாலும் தப்பி , தன்னுடைய கிராமத்துக்கு திரும்பிய போது முற்றிலும் தீக்கிரையான கிராமம் கண்முன்னே விரிகிறது. கர்ப்பிணியான மனைவி ஆரிசியா கடலில் மூழ்கினாள் என்ற சேதியுடன் சோகமயமாய் நடந்து செல்லும் தோர்கலின் முதுகில் முடித்திருக்கின்றனர் கதையை. அடுத்த பாகத்தை ஆர்வத்தோடு எதிர்பார்க்க வைத்துவிட்டாய் தோர்கல்.!!!

      செம்ம., சூப்பர்., தூள்., டக்கர் இன்னும் பல வார்த்தைகளை உனக்கு அர்பணிக்கிறேன் தோர்கல்.!!!!!!

      Delete
  92. சாகாவரத்தின் சாவி -
    மாற்றி யோசித்த தலைப்பு :-
    "சாஸ்வதத்தின் சாவி "

    (ஹிஹிஹி)

    ReplyDelete
    Replies
    1. இப்போது ரிப்போர்ட்டர் ஜானியுடன் ரிங்கா ரிங்கா ரோஸஸ் ஆடிவிட்டு தூங்கப்போகிறேன்.!!!!

      Delete

  93. ***** நோ போட்டிக்காண்டி ******
    ****** ஒன்லி லூட்டிக்காண்டி ******
    ***** மானசீக காமெடி வாத்தி - கவுண்டமணிக்கு அர்ப்பணம் *****

    ஸ்பைடர் : சுவீட் எடுத்துக்கோங்க சார்!
    அட ஃப்ரெஷ்தான் சார்... சித்தே முன்னாடிதான் கழுவி வச்சேன்!

    ReplyDelete