Sunday, October 11, 2015

ஒரு காமிக்ஸ் பூஸ்ட் !

நண்பர்களே,
     
வணக்கம். பெரிதாய் ஒரு காரணம் இல்லாவிட்டாலும் கூட, சில நாட்களில் மனதில் ஒரு உற்சாகம் ததும்புவதுண்டு ! அது மாதிரியானதொரு நாளில் – ஒன்றுக்கு இரண்டாக சந்தோஷ நிகழ்வுகள் பற்றிய சேதிகள் கிட்டும் போது – சாப்பாட்டைக் கண்ட ஆவ்ரெல் டால்டனைப் போல குஷியாகிப் போவதில் வியப்பில்லை தானே ? இரண்டு நிகழ்வுகளுமே எங்கோ ஒரு உலக மூலையில் அரங்கேறும் சமாச்சாரங்கள் எனினும் – காமிக்ஸ் சார்ந்தவை என்ற ரீதியில் அவற்றோடு நமக்கும் ஒரு துக்கனூண்டு சம்பந்தம் இருப்பது போலவே உணர்ந்தேன்!

முதலும், மெகா நிகழ்வுமானது இம்மாதம் 8ம் தேதி முதலாய் நியூயார்க் நகரில் நடந்து வரும் காமிக்-கான் தான்! இந்தியாவிலும் கடந்த சில ஆண்டுகளாக இந்தக் காமிக்ஸ் மேளா நடந்து வருவதும்; சிறுகச் சிறுகப் பிரபல்யம் அடைந்து வருவதும் நமக்குத் தெரிந்த விஷயம் தான் என்றாலும் entertainment industry –ன் தாய்வீடான அமெரிக்காவில் நடக்கும் காமிக்ஸ் சார்ந்த இந்தத் திருவிழாக்கள் ஒரு ஷங்கர் பட அனுபவத்தைப் போல படு பிரம்மாண்டமானவை! காமிக்ஸ்; கிராபிக் நாவல்கள்; மங்கா என்று விதம்விதமான பதிப்புகள் ஒரு பக்கமெனில் - ஓவியர்கள்; கதாசிரியர்கள்; திரைப்பட டைரக்டர்கள்; காமிக்ஸ் குழுமங்களின் தலைவர்கள் என ஒரு மெகா அணிவகுப்பு தினம்தோறும் ஆஜராவது இன்னொரு பக்கம். டி-ஷர்ட்; பொம்மைகள்; கப்; இத்யாதி... இத்யாதி என காமிக்ஸ் நாயகர்களின் உருவங்களைத் தாங்கிய பொருட்களின் விற்பனையும் தூள் பறக்க – இந்த காமிக் கான்களின் உச்சக்கட்ட உற்சாகம் “cosplay” என்றழைக்கப்படும் நிகழ்வே! காமிக்ஸ் நாயகர்களைப் போல வேஷமிட்டுக் கொண்டு சாரை சாரையாய் அணிவகுக்கும் இளசுகளையும், கிழசுகளையும் (!!) ரசிப்பது இந்த காமிக்-கான்களின் சிறப்பம்சம்! பஸ்ஸிலோ, இரயிலிலோ ஒரு காமிக்ஸ் புத்தகத்தை வாசிப்பது இன்னமும் சில பல மௌனப் புன்னகைகளை சுற்று வட்டாரத்தில் உற்பத்தி செய்திடும் விஷயமாக இங்குள்ள நிலையில் – பாருங்களேன் இந்த ரசிகர்களின் அட்டகாசங்களை! 


குட்டீஸ்களை அழைத்து வரும் சாக்கில், தொந்தியை உள்ளே இழுத்துக் கொண்டு தானும் ஒரு costume-க்குள் அடைக்கலமாகிடும் அப்பாக்களும்; ‘இந்த வயசிலே இதென்ன வேண்டிக்கிடக்கு?‘ என்ற விசனங்களில்லா அம்மாக்களும் என்னவொரு refreshing change என்று தான் பாருங்களேன்? நாலு நாள் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு நுழைவு டிக்கெட் சுமார் ரூ.7000 ! அதுவும் ‘Sold Out’ என்று போர்ட் போட்டிருப்பதைப் பாருங்களேன்! உலகின் காமிக்ஸ் தலைநகரில் இதுவொரு வருடாந்திர event என்ற போதிலும் – 2014-ன் வரவேற்பை விட, இந்தாண்டின வசூல்; வியாபாரம்; வருகைகள் எக்கச்சக்கமாய் கூடியுள்ளனவாம் ! சமீபமாய் இந்தியாவிலும் காமிக்-கான் அட்டகாச வரவேற்பைப் பெற்று வருவது சகஜம் என்றாகியுள்ள நிலையில் – இந்த மேளா நம் சிங்காரச் சென்னையை உதாசீனம் செய்து வருகிறதே என்ற ஆதங்கம் எப்போதையும் விட இப்போது அதிகமாகிறது! பௌன்சர்களும்; தட்டை மூக்கார்களும்; லக்கி லூக்குகளும்; ஆர்டின்களும்; டாக்புல்களும்; இரவுக்கழுகார்களும் ஒரே அரங்கில் சுற்றி வருவதை கற்பனையில் ரசித்தாலே தூள் கிளப்புகிறது – என்றோ ஒரு நாள் நிஜமாகின் பட்டையைக் கிளப்பிடாதா?


சந்தோஷ நிகழ்வு # 2 – 2016ல் நடைபெறவிருக்கும் ஒரு பிரான்கோ-பெல்ஜிய ஜாம்பவானின் 70வது பிறந்த நாள் கோலாகலம்! Yes – நமது பிரிய லக்கி லூக்கிற்கு வரும் ஆண்டோடு வயது 70 ஆகிறது! அதன் பொருட்டு 5 classic லக்கி கதைகள் (பிரெஞ்சில்) மறுபதிப்பாகிட; சில பல புது ஆல்பம்களும் தயாராகவுள்ளன ! தவிர, ஓவியர் மோரிஸின் ஏராளமான ஒரிஜினல் சித்திரங்களை முதன்முறையாக கண்காட்சியாக 2016-ல் ஆகஸ்ட் வரை வைத்திடப் போகிறார்கள் ! 28 ஆண்டுகளாய் இந்த ஒல்லிப்பிச்சான் கௌ-பாயை தமிழில் ஆராதித்து வரும் நமக்கும் இந்தக் கோலாகலங்களில் பங்கெடுத்துக் கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர் படைப்பாளிகள் ! அது மட்டுமின்றி – வெளியாகவிருக்கும் புத்தம்புது லக்கி ஆல்பம்களை அவை பிரஞ்சில் வெளியான சூட்டிற்கே தமிழிலும் பதிப்பிடும் வாய்ப்பைத் தர முன்வந்துள்ளனர்! ஏற்கனவே 2016-ன் அட்டவணையில் லக்கியாரின் கதைகளை இறுதி செய்து விட்ட நிலையில் – இந்தப் புதுப் படைப்புகளை உள்நுழைப்பது எவ்விதம் என்ற சந்தோஷமான குழப்பம் நமக்கு ! What say folks? புது ஆக்கங்களா? – classic கதைகளா? உங்கள் தேர்வுகள் எதுவாகயிருக்கும்?
உற்சாக மீட்டர் நமது பயணத்திலும் ஒரு உச்சத்தை எட்டும் சமயமல்லவா – தீபாவளி மலர் ; புத்தாண்டின் அட்டவணை என்ற மைல்கல்கள் காத்திருக்கும் காரணங்களால் ? இதோ – நவம்பரின் இன்னுமொரு வண்ண இதழிற்கான preview ! காதோர நரைமுடி; பளிச் மீசை என்று வலம் வரும் நமது வேய்ன் ஷெல்டனின் 2 பாக ஆக்ஷன் த்ரில்லர் தான் “வரலாறும்... ஒரு வல்லூறும்”! கதாசிரியர் தியரி கைலெஷீ நிறையவே தமிழ் படங்களைப் பார்த்திடும் பழக்கம் கொண்டவர் போலும் ; ஒரு 'அக்மார்க்' கோலிவுட் ஆக்ஷன் த்ரில்லரை – ஒரு ஐரோப்பிய கான்வாசில் படைத்துள்ளார் ! இதோ ஒரிஜினல் அட்டைப்படங்களின் தழுவல்கள் – நமது பாணியில் ! 

And – உட்பக்கங்களைப் பொறுத்த வரை – ஓவியர் க்ரிஸ்டியன் டினாயெர் ஒரு டிரக் / கார் ரசிகர்; வெறியர் என்பதில் ரகசியமேது? இந்தக் கதையில் டிரக்குகளை வரைய வாய்ப்பில்லை என்ற போதிலும் – கார்களையும், விமானங்களையும் மனுஷன் வரைந்துள்ள லாவகத்தைப் பார்த்தால் மூச்சடைத்துப் போகிறது ! ஷெல்டன் கதைகள் பெரும்பாலும் நேர்கோட்டில் செல்லும் ஆக்ஷன் சாகஸங்கள் என்பதில் இம்முறையும் பெரியதொரு மாற்றமெல்லாம் இல்லை தான் ; களங்கள் மட்டும் கண்டம் விட்டு கண்டம் தாவுகின்றன - பிரான்ஸ்; இத்தாலி; துருக்கி; ஆர்ஜென்டினா என்று ! ‘பளிச்‘ சித்திரங்கள் + ‘பளிச்சோ-பளிச்‘ வர்ணங்கள் என்பதால் இந்த இதழ் ஒரு visual treat ஆக அமையவிருப்பது உறுதி என்று தோன்றுகிறது! Fingers Crossed!
பழசை பரணிலிருந்து இறக்கித் தூசு தட்டி – புது மொந்தையில் அடைப்பது நமது பாணிகளெனில் – அதே பழசைத் தரையிறக்கி – அதற்கொரு ஒட்டுமொத்தப் புது அவதார் தந்து இன்னுமொரு சுற்று வரச் செய்வதே (பிரெஞ்சு) படைப்பாளிகளின் டிரேட் மார்க் போலும்! ரிப்போர்ட்டர் ஜானியைத் தொடர்ந்து – remake கண்டிடும் அடுத்த வீரர் இதோ கரடுமுரடாய் காட்சி தரும் இந்த ஆசாமி தான்! இவர் யாராக இருக்கக் கூடுமென்று கூகுள் பக்கம் போகாமல் ஒரு யூகம் ப்ளீஸ்?

And – போன பதிவிலேயே இடைச்செருகலாக இணைத்திருந்த நமது மறதிக்கார XIII-ன் இறுதி (??) ஆல்பத்தின் அட்டைப்பட first look! “May flower” என்றதொரு கருவைச் சுற்றி வந்த இந்த இரண்டாம் சுற்று இந்த ஆல்பத்தோடு நிறைவு பெறுகிறது! ஜேஸன் மக்லேனின் இரகசியங்கள் இந்த ஆல்பத்தில் வெளிவருகின்றனவாம்! டிசம்பர் முதல் வாரத்தில் வெளிவரவுள்ள இந்தப் படைப்பினை நாம் maybe ஜனவரியிலேயே போட்டுத் தாக்கி விடலாம் தான் – ஆனால் ஒரு புத்தாண்டைத் தொடங்கிட வேறு ஜாலியான கதைகள் better choice ஆக இருந்திடுமென்பதால் – மிஸ்டர் XIII-ஐ பிப்ரவரிக்குக் கொண்டு செல்வோம்!

And ஜனவரி 8-ல் துவங்குகிறது 2016-ன் சென்னைப் புத்தகவிழா! இம்முறையும் நமக்கு ஸ்டால் கிடைத்திட இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டு விரல்கள் சகலத்தையும் குறுக்கி வைத்து இப்போது முதல் காத்திருப்போம்! “என் பெயர் டைகரின்” முன்பதிவு எண்ணிக்கை கொஞ்சம் புஷ்டியானதொரு அளவை இம்மாத இறுதிக்குள் எட்டிப் பிடித்து விடும் பட்சத்தில் – ஜனவரியில் அந்த customized imprint சாத்தியமாகி விடும். தற்போதைய நிலவரம்: 105 வண்ண இதழ்கள் + 12 b&w இதழ்கள் என்பதே!! திங்கட்கிழமை அந்த early birds லிஸ்டை இங்கே upload செய்து விடுகிறேன்! இன்னமும் புக்கிங் செய்திருக்கா நண்பர்கள் கொஞ்சம் வேகம் காட்டினால் சூப்பராக இருக்கும்!

Before I wind off – இதோ இன்னுமொரு கேப்ஷன் போட்டி! கடந்த வார “ஸ்பைடர் தாத்தா” போட்டியின் பரிசை யாருக்குப் pack  செய்வது என்ற ஆராய்ச்சிக்குள் ஞாயிறின் பகலில் புகுந்திடப் போகிறேன் ! மீண்டும் சந்திப்போம் guys – have a great Sunday!

263 comments:

 1. Replies
  1. naan nooru thalaivare. muthalil vantha ungalukku vaalthukkal!
   ஆர்வத்தைத் தூண்டும் பதிவு. கறுப்பு வெள்ளை காதலர்களே, சீக்கிரம் குவியுங்கள் உங்கள் ஆதரவை.

   Delete
 2. முதலாவது . முதல் முறையாக

  ReplyDelete
 3. சித்த பொறுங்கோ பூஸ்ட் குடிச்சிட்டு வரேன்

  ReplyDelete
 4. வணக்கம் எடிட்டர் சார் மற்றும் நண்பர்களே . வேய்ன் காக காத்திருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. எங்கள் லக்கிக்கு வயது 70ஆ .நம்ப முடியவில்லை

   Delete
 5. லக்கி லூக்கை பொறுத்தவரை எனது ஒட் Classsicகே!

  ReplyDelete
 6. ஞாபக மறதிகாரரை தமிழில் சந்திக்க ஆவல் !

  ReplyDelete
 7. அமெரிக்கன் பதார்த்தங்கள் நமக்கு ஒத்துவருமா என்பது batmanஐ தவிர மிக பெரிய ????

  ReplyDelete
  Replies
  1. senthilwest2000@ Karumandabam Senthil : அமெரிக்க KFC சந்து, பொந்தில் எல்லாம் போட்டுத் தாக்குகிறது ; கோக் / பெப்சி இல்லாப் பட்டியும் கிடையாது ; சோப்பு ; சீப்பு ; கிரீம் ; ஜூஸ் என்று திரும்பிய திசையெல்லாம் அமெரிக்கப் பொருட்கள் நம் வாழ்க்கையினுள் நுழைந்துள்ளன சார் ! இதில் காமிக்ஸ் மட்டும் ஏன் தள்ளி நிற்க வேண்டும் ?

   எல்லாமே ஒரு சுவை தானே ? பழகப் பழக எல்லாமே ருசிக்கச் செய்யும் !

   Delete
  2. Agreed... Please allocate few slots for the batman next year

   Delete
 8. லக்கி லூக் புது கதைகள் வருவது மகிழ்ச்சியே... 2016ன் Preview எப்போது வரும் LMS,NBS போன்ற கதம்ப கதை உண்டா?

  ReplyDelete
 9. டியர் எடிட்டர்

  ஒரு 21 மணிநேர பக்திப் பயணமாய் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து (சனி விடியற்காலை மதுரை flight மீண்டும் சனி 10-10 PM சென்னை flight - எனவே சனி 3:00 AM முதல் இப்போது வரை - இருபது கிலோமீட்டருக்கு அருகில் இருந்தும் - வேண்டுதல் காரணமாய் முழுநாளும் செலவாகி விட்டது - ஜஸ்ட் மிஸ் ! அடுத்த முறை வரும்போது கண்டிப்பாய் இன்னொரு 20 கிலோ மீட்டர் கூட வருவேன் :-)

  --

  லக்கி லூக் புதுக்கதைகள் தனிச் சந்தாவில் ப்ளீஸ் :-) வெளியாகும் மாதமே வெளியிடல் நலமே !

  ReplyDelete
  Replies
  1. Raghavan : பெருமாளும், ஆண்டாளும் எப்போதுமே முதன்மையான முன்னுரிமைக்கு உரியவர்கள் தானே சார் !! அதிலும் புரட்டசிச் சனி தரிசனம் என்றால் சொல்லவும் வேணுமா ?

   And sure - அந்தக் கூடுதல் 20 கி.மீ. பயணம் செய்யும் சமயம் we'd be happy to see you !

   Delete
  2. ராகவன் சார் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை திருத்தலம் போனீர்களா? வெங்கடேசப்பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் தலம். காண கண் கோடி வேண்டும்

   Delete
 10. //28 ஆண்டுகளாய் இந்த ஒல்லிப்பிச்சான் கௌ-பாயை தமிழில் ஆராதித்து வரும் நமக்கும் இந்தக் கோலாகலங்களில் பங்கெடுத்துக் கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர் படைப்பாளிகள் ! அது மட்டுமின்றி – வெளியாகவிருக்கும் புத்தம்புது லக்கி ஆல்பம்களை அவை பிரஞ்சில் வெளியான சூட்டிற்கே தமிழிலும் பதிப்பிடும் வாய்ப்பைத் தர முன்வந்துள்ளனர்! ஏற்கனவே 2016-ன் அட்டவணையில் லக்கியாரின் கதைகளை இறுதி செய்து விட்ட நிலையில் – இந்தப் புதுப் படைப்புகளை உள்நுழைப்பது எவ்விதம் என்ற சந்தோஷமான குழப்பம் நமக்கு ! What say folks? புது ஆக்கங்களா? //

  வாழ்த்துகள் விஜயன் சார்...குழப்பமே வேண்டாம்...இரண்டுமே வேண்டும்.....க்ளாசிக்ஸ் மறுபதிப்பாக...புதியவை ரெகுலர் சந்தாவில்....XIII ஜனவரியிலேயே கொண்டு வரலாமே சார்.....

  ReplyDelete
  Replies
  1. Mohamed Harris : //குழப்பமே வேண்டாம்...இரண்டுமே வேண்டும்.....க்ளாசிக்ஸ் மறுபதிப்பாக...புதியவை ரெகுலர் சந்தாவில்//

   நான் mean பண்ணியது - புதுசாய் இப்போது உருவாகவிருக்கும் லக்கி லூக் கதைகளா ? அல்லது லக்கியின் பட்டியலிலுள்ள - நாம் போட்டிரா classic ரகக் கதைகளா ? என்பதை சார் !

   Delete
 11. மிடியல

  லூக் லக்கி லூக் கு


  70 வயதா!!!!

  பயபுள்ள இன்னமும் கல்யாணம் பண்ணிக்காம

  தனிமையே துணைவன்னு பாடிட்டிருக்காரே
  அவருக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நம்ம எடி ஏதாவது முடிவு எடுத்திருக்காரா அ இல்லையா ??!!

  ReplyDelete
  Replies
  1. Tex Sampath : அவருண்டு...வாயில புல்லுண்டு....அவரோட குதிரையுண்டு...என்று மனுஷன் 'அக்கடா'வென்று சுற்றித் திரிகிறார்..! அதில் ஒரு வெடியைப் பற்ற வைப்பானேன் ?

   Delete
 12. லக்கி லூக் , ஜாலி ஜம்பருக்கு எனது மனங்கனிந்த 70 வது பிறந்த நாள்வாழ்த்துக்கள். 2016 ல் தமிழில் வெளியிட படைப்பாளிகள் சம்மதம் தருவதே பெரிய விசயம்தானே. Classic கதைகள் எமது கட்டுப்பாடில்தானே இருக்கிறது. எனது ஓட்டு லக்கியின் புது கதைகளுக்கே. "வரலாறும் வல்லூறும்" சித்திரங்கள் எல்லாம் கலர்புள்ளாக மனதை அள்ளுகின்றன. நான் காத்திருக்கிறேன். " என் பெயர் டைகர்"இற்கானமுன் பதிவு இது வரை 117 ஆக இருந்தாலும் இனி கூடும் ஸார்.

  ReplyDelete
 13. முதலையா இல்ல சாகச வீரரா,கண்டிப்பா டைகர் இல்ல

  ReplyDelete
 14. சார்! திருச்சியில் நம் காமிக்ஸ் விற்பனை செய்து வந்த இரண்டு கடைகாரர்களுமே விற்பனை ஆகாததால் புத்தகங்களை எல்ல்லாமே திருப்பி அனுப்பிவிட்டோம் என்கிறார்கள். திருச்சியில் காமிக்ஸ் வாசிப்பவர்களுக்கு இங்கே புத்தகங்கள் கிடைக்கும் தகவல் சரியாக போய் சேரவில்லையோ? :(

  ReplyDelete
  Replies
  1. ஒரு வேளை திருச்சியில் உள்ள நம் வாசகர்கள் நம் சந்தாதாரர்களோ என்னமோ ?!

   Delete
  2. cap tiger : நிஜத்தைச் சொல்வதாயின் தமிழகப் பெருநகரங்களுள் நமக்கு மேக்சிமம் பல்ப் கொடுத்துள்ளது திருச்சி தான் !! ஒன்றுக்கு ஐந்தாய் கடைகளைத் தேர்வு செய்து ; புத்தகங்களை (கடனுக்கு) விநியோகம் செய்தும் - 4 மாதங்கள் கழிந்த நிலையில் ரூ.1000-க்குக் கூட விற்பனை நடந்திருக்கவில்லை !! மொக்கையோ மொக்கை தான் !!

   மலைக்கோட்டை மாநகரை எவ்விதம் அணுகுவது என்றே தெரியவில்லை !!

   Delete
  3. நான் அக்டோபர் மாதம் புக் இன்னூம் படிக்கவில்லை. இப்பதான் ஆன்லைன்ல ஆர்டர் பன்னபோறேன். November December காண ஆர்டர் ஸ்லாட் இப்பவே ஆன்லைன்ல போட்டூட்டா அதயும் ஆர்டர் பன்ணிடுவேன். ( i am form terrible trichy). இந்த வருடம் சாந்த கட்டியே அக வேண்டும்(வேறவழி)

   Delete
  4. பிரதம காரணம்:

   பல அந்நாள் முகவர்கள் தமது கடைகளை மூடிவிட்டார்கள் - மெய்ன் கார்டு கேட், ஸ்ரீரங்கம் மற்றும் பாலக்கரையில் நான் விசாரித்த வரை. தற்போது இருப்பவர்களில் காமிக்ஸ் PROMOTE செய்யக் கூடியவர்கள் எவர் என்று அளப்பது கடினமே.

   டியர் எடிட்டர்,

   ஒரே ஒரு இடமாய் மத்திய பேருந்து நிலையத்தின் தொடக்கத்தில் உள்ள புத்தகக் கடையில் முயற்சிக்கலாம் (நீங்கள் இன்னும் முயற்சிக்கவில்லை எனில்). மிக அதிக கூட்டம் புழங்கும் புத்தகக் கடையாய் இன்னும் இருக்கிறது.

   Delete
 15. சாகஸ வீர்ர் ரோஐரா ஸார்?

  ReplyDelete
  Replies
  1. Thiruchelvam Prapananth : அவரே தான் இவர் .....இவரே தான் அவர் !

   Delete
 16. அன்புள்ள எடிட்டர்,

  வெகுநாட்களாக, பெரும்பான்மையான வாசகர்கள் வேண்டுகோள் விடுத்து, முறையாக அறிவிக்கப்பட்டு, வாசகர் கருத்துகள் கேட்டறியப்பட்டு, அதற்கு பெரும்பான்மையான வாசகர்கள் ஆதரவு தெரிவித்த, டெக்ஸ்-ன் தனி track (மாதமொருமுறை அல்லது இருமுறை) மற்றும் டெக்ஸ்-ன் மறுபதிப்புகள் பற்றிய, 2016 plan-யைத் தெளிவாக அறிவிக்க வேண்டுகிறேன்

  முன்கூட்டிய நன்றிகள்! ..

  ReplyDelete
  Replies
  1. விக்ரமாதித்தன் தோத்தார் சார் உங்களிடம்!

   Delete
  2. இன்னும் சில மணி நேரங்களில் நிச்சயம் ் அனைத்தும தெரிந்து விடும் காத்திருப்போம் நண்பர்களே

   Delete
  3. இருக்காது என்பது என் கணிப்பு.

   Delete
 17. 105+12 அட்டகாசம் சார். காத்திருக்கிறோம்

  ReplyDelete
 18. கொஞ்சம் வகுறு சரியில்லாமல் போகவே படுக்கையில் புரண்டுகொண்டே 5நிமிடத்திற்கு ஒருமுறை மொபைலை பார்த்துக்கொண்டே இருக்க ஒன்னையும் காணோம். சிறிது நேரத்தில் கண் அசந்து மீண்டும் வகுறு கட முட பண்ண திறக்க இயலா இமைகனின் ஊடே நூலிலை அளவு இடைவெளி தெரிந்தது. தலைமாட்டில் இருந்த நம்மவரை எடுத்து நம்ம பக்கத்தை ஓப்பன் பண்ணா அல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுது. உடனே உடம்புல ஒரு பர பர. சரி முதல்ல நம்ம கடமையை முடிச்சுட்டு வந்து பாப்போம்னு சொல்லி முடிச்சிட்டு வந்து பாத்தா (இப்போ கொஞ்சம் பரவாயில்லை. 11/2 தெரியுது) ஆசிரியர் அதகளத்தை அவுத்து விட்டுருக்காரு. சரி நம்மளும் நம்ம பங்கை ராத்திரியோட ராத்திரியா ஆத்திருவோம் அப்படின்னு ரெண்டு பதிவ போடலாம்னு பாத்தா.....இருங்க அப்பு வந்திர்ரேன்

  ReplyDelete
  Replies
  1. @ rajasekarvedeha

   ஹா ஹா! 'முறை மாமன்' கவுண்டமணியின் 'பேதிப் பால்' காமெடி ஞாபகத்துக்கு வருகிறது! :D

   Get well soon!

   Delete
  2. rajasekarvedeha : புரட்டாசி என்பதை மறந்து போய் நைட் ஒரு முட்டை புரோட்டா அடித்ததன் பலனோ ?

   Delete
  3. நான் சுத்த சைவம் சார். சாயந்தரம் நிலக்கடலையும் மண்டை வெல்லமும் அதனுடைய மணமும் சேர்ந்து ஆளை கொஞ்சம் அசத்திருச்சு

   Delete
 19. Editor சார் மற்றும் கா. கா. அனைவருக்கும் காலை வணக்கம். சார் லக்கி கதைகளைப் பொறுத்த வரை மிகவும் குறைவான எண்ணிக்கைலான கதைகளைகளே அட்டவணையில் இடம் பிடிக்கின்றன. அதனால் Classic கதைகள் எப்போதும் போல ரெகுலர் அட்டவணையிலும், புதிய வரவுகளை 2016கோடைவிடுமுறை சமயத்தில் (கோடைமலர் 2016 என்று நாளை சரித்திரம் பேச வேண்டும்) ஒரு பெசலாக ஒரே புத்தகமாக போடலாமே., டலாமே, லாமே, மே. போட்டிங்கன்னா... போட்டிங்கன்னா ...போட்டிங்கன்னா., ம் ம் ம் ஒரு சின்ன சந்தேகம் தூக்கத்துல கனவா? கனவுல பதிவா? கனவுல பதிவா? பதிவுல கமெண்டா? அந்த அது நெசம். அப்ப மத்ததெல்லாம்? எதுக்கும் காலைல எந்திரிச்சு நெசம. பார்த்துக்குவோம்

  ReplyDelete
  Replies
  1. rajasekarvedeha : //தூக்கத்துல கனவா? கனவுல பதிவா? கனவுல பதிவா? பதிவுல கமெண்டா?//

   அர்த்த ஜாமத்தில் எழுந்து டைப் அடித்தால் - லார்கோவே , ஆவ்ரெல் போல் தெரியத் தான் செய்வார் !! இந்த சந்தேகங்கள் எழாமலா போகும் ? :-)

   Delete
 20. நண்பர்களுக்கு காலை வணக்கம்..

  ReplyDelete
 21. லக்கி கேப்சன் போட்டிக்காண்டி:;:; பொடியன்:;;- யப்பா வீட்ல அரிசி பருப்பு மளிகை சாமான் எல்லாம் காலியாப்போச்சாம் அம்மா உன்னைய கையோட கூப்பிட்டு வரச்சொன்னா , வாப்பா
  லக்கி:;;;-அவன் அப்பவே ச்சொன்னான். வேண்டாம்பா லக்கி விட்ரு நமக்கு இந்த கல்யாணம் கருமாந்திரமெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு ம் ம் ம் கேட்டுருக்கனும்
  ஜாலி:;:--ஹா ஹா ஹா தல இத நீ முதல்லயே யோசிச்சிருக்கனும். சரி அத விடு. ஓடுனதே ஓடுன ஒரு குருதையப் பிடிச்சுட்டு ஓடிருக்கக்கூடாது. (Mind voiceஎன்ன செய்ய வயசு 70 ஆயிருச்சுல்ல. அதான் குருதைக்கும் கழுதைக்கும் வித்தியாசம் தெரியாம வசமா மாட்டிக்கிட்டாரு)

  ReplyDelete
 22. ///? புது ஆக்கங்களா? – classic கதைகளா? உங்கள் தேர்வுகள் எதுவாகயிருக்கும்?///

  இந்த கேள்வி தங்களுக்கே வேடிக்கையாக இல்லை,???

  "ரெண்டுந்தான் வேணும் "

  ReplyDelete
 23. அந்த அம்பியப் பாத்தா ரோஜர் மாதிரி இருக்கு.
  ஷெல்டன் கதையில ஹானஸ்டியும் உண்டுதானே :-)

  ReplyDelete
  Replies
  1. அட்டைப்படத்திலியே ஹானஸ்டி அவுட் போலிருக்கே :((

   Delete
  2. KiD ஆர்டின் KannaN : ஹானஸ்டாகச் சொல்வதாயின் இந்தக் கதையில் ஒரே ஒரு பிரேமில் மட்டும் தான் ஹானஸ்டி தலை காட்டுகிறார் ! ஆனால் -

   மோனா என்றதொரு அழகி கதையின் முக்காலே மூன்று வீசத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார் !! பட்டாம்பூச்சி(கள்) இல்லா ஷெல்டன் கதையா ? No way !

   Delete

  3. ///மோனா என்றதொரு அழகி ///


   ஆஹா மோனா...
   பேரக் கேட்டாலே இனிக்குது தேனா...
   உனைக் காண மனம் ஏங்குது தானா...
   என் இத்தனைநாள் பிரம்மச்சரியம் இனி வீணா...?
   இனி நானே உனைச் சூரையாடும் சூனா-பானா...

   இப்படிக்கி,
   ஈனா வினா :)

   ( மேற்கண்ட கவிதையைப் பாராட்டி பரிசுகளை அனுப்ப விரும்புவோர் என் புரெஃபைல் ஐடியை ஒரு 'இங்கே கிளிக்' செய்து இன்பாக்ஸில் தொடர்பு கொள்ளவும். VPP கிடையாது) :D

   Delete
 24. நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம்.!

  ReplyDelete
 25. காலை வணக்கம் நண்பர்களே

  ReplyDelete

 26. * நியூயார்க் காமிக்-கானில் மக்கள் காட்டும் உற்சாகம் எனக்குள்ளேயும் கொஞ்சம் உற்சாகத்தையும், கூடவே கொஞ்சம் ஏக்கத்தையும் ஏற்படுத்துகிறது!

  * லக்கிலூக்கின் க்ளாசிக் கதைகள் முதலிலும், அதன் பிறகு புதிய ஆல்பங்களும் வேண்டும்!

  * பிப்ரவரியில் வரயிருக்கும் ஜேஸன் மக்லேன் நிச்சயம் அசத்துவார். காத்திருக்கிறேன்...

  * கரடுமுரடாகக் காட்சிதரும் அந்த ஆசாமி - டிடெக்டிவ் ராபின்???

  * ஷெல்டனின் அட்டைப்படம் நன்றாக இருக்கிறது!

  * 43 years old முத்து கூட தன் லோகோவை வண்ணத்தில் மாற்றிக்கொண்டு உதார் விட்டுவர, 31 வயசு யூத்து - லயன் - ஏன் இன்னும் கருப்பு-வெள்ளை லோகோவுடன் வலம்வர வேண்டும்? இதன் பின்னால் ஏதேனும் வெளிநாட்டுச் சதிகள் ஒளிந்திருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது! ;)

  * புத்தாண்டின் அட்டவணையைக் காண திக் திக் திக்....

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் கூட அது ராபின் தான்னு தோணுது...

   Delete
  2. உள்ளூர் சதி இருப்பதாக நான் நினைக்கிறேன் விஜய்

   Delete
  3. @ FRIENDS : காக்க-காக்க-பொறுமை காக்க - லயனின் புது அவதார் 2016-ல் !

   Delete
  4. //லக்கிலூக்கின் க்ளாசிக் கதைகள் முதலிலும், அதன் பிறகு புதிய ஆல்பங்களும் வேண்டும்!//
   +1

   Delete
 27. வணக்கம் காமிக்ஸ் நண்பர்களே.... அன்பும், பண்பும் பாசமும் கொண்ட எடிட்டர் அவர்களுக்கு... XIII ஐ முடிந்தால் இவ்வருட டிசம்பர் மாதமே வெளியிடவும்... டெக்ஸ் மற்றும் மாடஸ்டியின் தனிசந்தா பற்றிய அறிவிப்பை ஆவலுடன் எதிபார்க்கிறேன்.. இரட்டையர்கள் கதைகளை மறுபதிப்பு செய்ய ஆவண செய்யவும்...

  ReplyDelete
  Replies
  1. கரூர் சரவணன் : மாடஸ்டிக்கு தனிச் சந்தாவா ? ஆஹா !!

   போகிற போக்கில் விச்சு & கிசுவுக்கும் த.ச.கோரிக்கை எழுந்தாலும் ஆச்சர்யப்பட மாட்டேன் !

   Delete
  2. \\மாடஸ்டியின் தனிசந்தா\\
   +1

   Delete
 28. ஏன்? லக்கிக்கும், ஜாலிஜம்பருக்கும் மட்டும்தான் எல்லாரும் 'ஹேப்பி பர்த்டே' சொல்லுவீங்களா? அந்த ரின்டின்கேன் என்ன பாவம் பண்ணுச்சு? நாய்னா அவ்வளவு இளப்பமா உங்களுக்கெல்லாம்?

  நீ கவலைப் படாதேடா செல்லக்குட்டி... உன்னைச் சரியாப் புரிஞ்சுக்கிட்ட கலாரசிகன் நான் இருக்கச்சே நீ ஏன் வருத்தப்படணும்? கண்ணைத் துடைச்சுக்கோ... ஆங் அப்படித்தான்... சமர்த்து!

  ஹாப்பி பர்த்டே டா டியர் குட்டிமா!

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY : உங்கள் குட்டிமாவின் பிறந்த வருஷம் 1960 ! Happy 55th Birthday Rin Tin Can !!

   Delete
 29. வணக்கம் சார்....வணக்கம் நண்பர்ஸ்....இந்த ஆண்டு நான் மிகவும் எதிர்பார்த்த நண்பர் X111 ன் கிளைமாக்ஸ் வருவது ரெம்ப மகிழ்ச்சி சார்... (அப்பாடி ஒரு வழியா முடியுதே, சாமி....) முடிந்தால்,இந்த ஆண்டே நாமும் அவருக்கு பேர் வல் பார்ட்டி தந்து விடலாமே சார்......ஒற்றை பாக கதையில் ஏமாற்றிய வெய்ன் , இம்முறை அசத்துவார் என எதிர்பார்க்கலாமா சார்?.... ஜனவரியில் என்ன ப்ளான் என சற்றே தெளிவு படுத்தினீர்கள் என்றால், எங்கள் சேந்தம்பட்டி காரை ( தகர டப்பாவை) நாங்களும் தினம் தள்ளி தள்ளி பயிற்சி எடுத்துக்கொள்வோம் சார்....

  ReplyDelete
  Replies
  1. // ஜனவரியில் என்ன பிளான்,?//
   ஆகா சூப்பர் .!சிறு வயதில் தீபாவளி வருகிறது என்றாலே அடி வயிற்றில் பூரான் நெளியற மாதிரி ஒரு ஆனந்தம் வருமே.?அதைப்போல் சந்தோசமாக உள்ளது. (லட்டு வையும் மறக்கவில்லை.! )

   Delete
  2. சேலம் Tex விஜயராகவன் : இன்னமும் கிட்டத்தட்ட 3 மாதங்கள் உள்ளனவே.....நிதானமாய் யோசிப்போம் !

   Delete
  3. MV சார், எங்கே 4நாளாக காணோம், பிஸியா சார்??.... லட்டுவையும் மறக்கவில்லை///--- ஆகா இப்பவே இணிக்கிறதே சார். ...இம்முறை தவறாமல் வாருங்கள்...

   Delete
 30. சார் அட்டகாசம். முதல் சந்தோசம் போனவாரம் காட்டிய ரோஜரின் அந்த பல வணண ங்களில் பளிச்சிடும் அந்த ௐரு பக்கம் .அருமை.
  அடுத்து ஜேஸன் ஆஹா....
  லக்கி அங்கே வரும் போதே இங்கும் வரட்டுமே...ஒரு கதையாவது...
  ஷெல்டன் அட்டைபடம் யப்பா .....
  ஆக மொத்தம் அடுத்த வருடம் ஜிலீர் வருடம்தாம்

  ReplyDelete
  Replies
  1. சென்ற மாதம் வண்ணமயம் ...சிறைபறவைகள் கூட...
   தோர்கள் மாய வண்ணமயமென்றால் ...ஜானி மற்றும் சுட்டி மனம்கவரும் பளிச்

   Delete
  2. வானமே எங்கள் வீதி திடும் சந்தோச அறிவிப்பிற்க்கு ...ௐரு புதியகதை இணைப்பிற்க்கு சந்தோசம் கலந்த நன்றிகள் சார்

   Delete
  3. வானமே எங்கள் வீதி திடும் சந்தோச அறிவிப்பிற்க்கு ...ௐரு புதியகதை இணைப்பிற்க்கு சந்தோசம் கலந்த நன்றிகள் சார்

   Delete

 31. பக்கி S/o லக்கி : என்னோட மம்மி யாருன்னு சொல்றவரைக்கும் நீ எங்கே ஓடினாலும் உன்னை விடப்போறதில்லை டாடி... @€¢£^♦Π§¶...

  லக்கிலூக் : ஹூம்... அன்னைக்கு ராத்திரி ஜேனுடன் பேசிக்கிட்டிருக்கும்போது அந்த லாந்தர் விளக்கு மட்டும் திடீர்னு அணைஞ்சு தொலைச்சிருக்லேன்னா இன்னிக்கு எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது...

  ஜாலிஜம்பர் : ஹாஹாஹா... ஜன்னலுக்கு வெளியே நின்னுக்கிட்டு அந்த விளக்கை ஊதி அணைச்சதே நான்தானேப்பா...

  ReplyDelete
 32. Luckyன் classic மற்றும் புதிய கதைகளை கலந்து வெளியிடவும் சார் ...

  அது New Look Detective ராபின் என்று நினைக்கிறேன் ...

  முடிந்தால் XIIIஐ ஜனவரிலேயே வெளி இடவும் சார் ...

  ReplyDelete
  Replies
  1. Mks Ramm : XIIIஐ பிப்ரவரிக்கு வைத்துக் கொள்வோம் சார் !

   And அந்தக் கரடு முரடான புதுமுகம் - நம்மவர் (சாகச வீரர்) ரோஜர் தான் !

   Delete
 33. யார் இவர்? போட்டிக்கான

  விடை; வில்லி கார்வின்?!!

  (ஹிஹி. சைக்கிள் கேப்பில் மாடஸ்டி கதை வேண்டுவோர் சங்கம்)

  ReplyDelete
  Replies
  1. COMICSPRIYAN@SALEM.AMARNATH : மடிப்பாகத்தாரும் ஊர் ஊராய் டூர் கிளம்பி விட்டாரோ ?

   Delete
 34. வேய்ன் ஷெல்டன் ...டெக்ஸ் .....அடுத்த வருட லிஸ்ட் என ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கும் இம்மாத இதழ்கள் எப்போது கிடைக்கும் சார்

  ..தேதி பத்தை தாண்டி விட்டது...:-((

  ReplyDelete
 35. தோர்கல்.
  இது நமக்கு கிடைத்துள்ள புதிய காமிக்ஸ் அத்தியாயம் முதல் கதையிலேயே(பி,பு)ஹிட்கொடுத்தவர் தோர்கல்.இது ஒரு மாயாஜால புது வகை ஃபுட்.எடிட்டருக்கு நன்றி.
  காலனின் காலம்.
  நல்ல கதைகளம் எப்பவும் போல இக்கதையிலும் கொலைகாரனை யூகிக்க முடியவில்லை.ஓவியங்கள் ரசிக்கும்படி இருந்தது.வழக்கமான ஜானி கதைகளை விட சற்று சுறுசுறுப்பு.
  புய,பள்ளிகூடம்.
  சுட்டி லக்கி ரன் வேயில் வேகம் எடுக்கிறார்
  சிறைப்பறவைகள்.
  லாரன்சும் டேவிட்டும் இறுவேறாக பிரிந்து பின் சந்திக்கும் இடம் எதிர்பாரதது.மறுபதிப்புகளில் வந்த கதைகளே திரும்ப திரும்ப வருகிறதே ஏன் சார்?

  ReplyDelete
 36. //What say folks? புது ஆக்கங்களா? – classic கதைகளா? உங்கள் தேர்வுகள் எதுவாகயிருக்கும்?//

  classics focus பண்ணலாம் சார், நமக்கு முன்கூட்டி தெரிஞ்ச கதை 100%ஹிட் . புது கதை நீங்கள் மொழி பெயர்த்து படிக்கும்போது impress செய்தால் நிச்சயம் அதை கொண்டுவாருங்கள் எடிட் !

  ReplyDelete
 37. Can u share the shops where our comics sold at Trichy.

  ReplyDelete
 38. இந்தமாத சந்தா தாரர்களின்(என்னுடையது உட்பட) புத்தகத்தில் நிறைய குறைபாடுகள் இருபதான complaints சென்ற பதிவில் பதியகண்டேன் 2016 சந்தவை அணுகும் சமயத்தில் அதற்கு ஒரு வழி காண்பது அவசியம் எடிட் சார் .

  ReplyDelete
 39. //பௌன்சர்களும்; தட்டை மூக்கார்களும்; லக்கி லூக்குகளும்; ஆர்டின்களும்; டாக்புல்களும்; இரவுக்கழுகார்களும் ஒரே அரங்கில் சுற்றி வருவதை கற்பனையில் ரசித்தாலே தூள் கிளப்புகிறது – என்றோ ஒரு நாள் நிஜமாகின் பட்டையைக் கிளப்பிடாதா?//

  :)

  ReplyDelete
 40. ////‘இந்த வயசிலே இதென்ன வேண்டிக்கிடக்கு?‘ என்ற விசனங்களில்லா அம்மாக்களும் ////

  கொடுத்து வெச்ச மகராசனுங்க!!!

  "நான் ஏஏஏன் பிறந்தேன். "

  ReplyDelete
 41. //What say folks? புது ஆக்கங்களா? – classic கதைகளா?
  Classic story வேண்டும்.
  புதிய ஆக்கங்களும் ஓரிரண்டு களமிறக்குங்களேன்.

  ReplyDelete
 42. எடிட்டர் சார்.!

  2016 ன் கதைத்தேர்வுகள் அனைத்தும் , எலெக்சன் முன்பு பட்ஜெட் போடுவார்களே .? அதேபோல் அனைவரும் சந்தோசமாக ஏற்றுக்கொள்ளும்படி இருந்தால் நன்றாக இருக்கும்.!

  ReplyDelete
 43. பொடியன்: என்னயா ஜெயிலில் அடைத்தாய் இப்போது மாட்டிக்கொண்டாயா இப்படியே இழுத்து சென்று உன் கதையை முடித்துவிடுறேன்.
  ஜாலி ஜம்பர்: இன்னும் எவ்வளவு தூரம். முடியல.
  லக்கி: அதோ பின்னால் ராணுவபடை வருகிறது இருடா பொடியா பார்த்து விடலாம்

  ReplyDelete
 44. எடிட்டர் சார்.,
  நீண்ட நாட்களாய் நிறைய நண்பர்களின் மனதிலும் என்னுடைய கனவிலும் இருக்கும் ஒரு இதழுக்கான கோரிக்கை இது .

  சென்ற ஆண்டு EBF லயே வைக்கப்பட்ட ஒரு கோரிக்கை., டெக்ஸ் வில்லரின் 550 பக்க கதையொன்று இத்தாலியில் சக்கைபோடு போட்டதாமே., அதை தமிழில் வெளியிடுங்கள் சார் என்பதே.
  நீங்களும் சமயம் வரும்போது நிச்சயமாய் செய்வோம் என்று வாக்கு கொடுத்து இருந்தீர்கள்.
  2016 ல் நீங்கள் குறிப்பிட்ட சமயம் வர வேண்டும் என்பது என்னுடைய ஆசை!!
  மேலும் கருப்பு வெள்ளையில் ஒரு குண்ண்ண்டு இதழுக்கு இந்த கதை பெரிதும் உதவுமே சார்.
  LMS சைசில் குறைந்தது ஆயிரம் பக்கங்களில் ஒரு க / வெ ஷ்பபெசல் அடுத்த ஆண்டு தேவைப்படுகிறது சார் :-) .
  கலர் பக்கங்களுக்கு பதில் க / வெ பக்கங்கள் எனும் போது., பேப்பர் திக்னெஸ் குறையுமென்று நினைக்கிறேன்.
  அதனால் க / வெ யில் ஆயிரம் பக்ககங்கள் என்பது LMS -1.சைசுக்கு சரியாக பொருந்தும் என்பது என்னுடைய அனுமானம்.

  Option 1 :-
  முழுக்க முழுக்க டெக்ஸ் வில்லர் திருவிழாவாக - -

  550
  330
  220
  ---------
  1100 பக்கங்கள் (க /வெ)

  Option 2 -

  டெக்ஸ் வில்லரின் 550 பக்க கதையுடன்,
  ராபின்
  மார்ட்டின்
  மாடஸ்டி
  கி /நா -(க / வெ)
  ஜூலியா

  என கலந்துகட்டி ஒரு கதம்ப ஷ்பெசல் .
  நண்பர்களின் பெரும்பான்மை விருப்பத்தையும்., உங்களின் சாதக பாகங்களையும் ஆராய்ந்து., இரண்டில் ஒரு ஆப்சனை தேர்ந்தெடுத்து இதழினை 2016 ல் எங்கள் கையில் கொடுப்பீர்கள் என்ற பேராசையுடனும் பெருங்கனவுடனும் இருக்கிறேன் சார்.

  நண்பர்களே க / வெ ஷ்பெசலுக்கு ஆதரவளியுங்கள்.!!! _/|\_/|\_/|\_

  ReplyDelete
  Replies
  1. +11111111111111111111111111111111

   Delete
  2. Option 1 , option 2. -:ரெண்டுமே வேணும்! (அத்தனைக்கும் ஆசைப்படு ஹீஹீ)

   Delete
  3. Option 1,2,3,4,5...எதுவாக இருந்தாலும் பரவாயில்லை டெக்ஸ் பெரிய கதையுடன் 1000 பக்க காமிக்ஸ் என்பது ஒரு பெரிய கனவு,நனவாக்க நண்பர்களே ஆதரவு தாருங்கள்

   Delete
  4. கிட் ஆர்ட்டின் கண்ணன்.!@

   உங்கள் வாயில் சர்க்கரை அள்ளி போடனும் சார்.! சூப்பர் ஐடியா.! ஆப்சன் 2 மாடஸ்டி இருப்பதால் முதல் ஓட்டு.இரண்டும் கிடைத்தால் இன்னும் டபுள் சந்தோசம்.!


   அந்த காலத்திலேயே பத்து ரூபாய்க்கு புத்தகம் போட்டவர்.! அவர் அந்த காலத்திலே அப்படி.! எடிட்டருக்கு ரிஸ்க் எடுக்குறது எல்லாம் ரஸ்க் சாப்பிடமாதிரி.! ஒரு மெகா காக்டெய்ல் ஸ்பெஷல் கட்டாயம் வேண்டும் சார்.!

   Delete
  5. இரண்டில் எது வந்தாலும் எனக்கு ஒகே !ஆனா கண்டிப்பா வரணும். ........+11111111111111111111111

   Delete
  6. Option 2
   +111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111

   Delete
  7. சார் .....இந்த ஐடியாவுக்கு + 1....100..10000 என்றெல்லாம் ஆதரவு கொடுக்க முடியாது..எண்ண முடியாத அளவிற்கு என் ஆதரவை தெரிவித்து கொள்ளும் அதே சமயம் ரெண்டாவது ஆப்ஷன்ல யாரோ ஜூலியான்னு எழுதியிருக்காரு ..அதை மட்டும் ரப்பரை வச்சு அழிச்சுருங்க..

   அடுத்த வருட லிஸ்ட் புத்தகம் இன்னும் அச்சடிக்க வில்லை எனில் இதை அறிவிக்க பாருங்கள் சார் ..அச்சடித்து இருந்தால் ஒரு ஸ்டிக்கரை ஒட்டியாவது ரெடி பண்ணி விடுங்கள் சார் :-)

   Delete
  8. நண்பர்களே வணக்கம். இது என்ன கொடுமை? நீங்கள் வைத்திருக்கும் கோரிக்கை சின்னப்புள்ளதனமா இருக்கு. அது என்ன 1000, 1100 பக்கங்களாக கேட்டுகிட்டு, 2016 ல் வரும் நமது அபிமான லயன் காமிக்ஸின் 32 வது பிறந்த நாள் விழா மலராக 3200 பக்கங்கள் கொண்ட ஒரு சின்ன Spl ஐ கேட்கலாமே.( இப்படி கேட்டால் தான் நல்ல புஷ்டியான ஒரு 1500 பக்கங்கள் கொண்ட புத்தகமாவது கிடைக்கும் B/W ல் தான்)

   Delete
  9. நண்பர்களே வணக்கம். இது என்ன கொடுமை? நீங்கள் வைத்திருக்கும் கோரிக்கை சின்னப்புள்ளதனமா இருக்கு. அது என்ன 1000, 1100 பக்கங்களாக கேட்டுகிட்டு, 2016 ல் வரும் நமது அபிமான லயன் காமிக்ஸின் 32 வது பிறந்த நாள் விழா மலராக 3200 பக்கங்கள் கொண்ட ஒரு சின்ன Spl ஐ கேட்கலாமே.( இப்படி கேட்டால் தான் நல்ல புஷ்டியான ஒரு 1500 பக்கங்கள் கொண்ட புத்தகமாவது கிடைக்கும் B/W ல் தான்)

   Delete
  10. நண்பர் ஸ்ரீதர் சாருக்கும் கணக்கு வழக்கு இல்லாம ஒரு ப்ளஸ் போட்டுக்கிறேன் சார்..;-)

   Delete
  11. //ஜுலியா//
   தலைவரே.! அதுதானே .? என் மனதிலும் அது உறுத்தியது.! ஜுலியாவை ரப்பர் வைத்து அழித்தாலும் சரி ஆள் வைத்து கடத்தினாலும் சரி ஜுலியா வேண்டாம்.!

   புலியை பார்த்து பூனை சூடு போட்ட போட்ட கதைதான்.! மாடஸ்டிக்கு நிகர் மாடஸ்டிதான்!

   ஸ்ரீதர் சொல்வது இன்னும் சரி.! எது , எப்படியோ ? காக்டெய்ல் ஸ்பெஷல் மெகா குண்டு புத்தகம் " லிப்கோ டிக்ஸ்னரி " மாதிரி இருந்தால்
   போதும்.! ஹேப்பி அண்ணாச்சி.!

   Delete
  12. என்னையும் இந்த ஆட்டத்துல சேத்துக்குங்க ..

   Delete
  13. கண்டிப்பாக ஒரு கதம்பமோ அல்லது தனி ஆவர்த்தனமோ 1000 பக்கத்திற்கு குறையாமல் ஒன்று வேண்டும்

   Delete
  14. ராஜசேகர் .!@ உங்கள் கனவு கிட் ஆர்ட்டின் மூலம் நனவு ஆகப்போகிறது.!

   Delete
  15. அந்த டெக்ஸ் தனி இதழாய் வரட்டுமே.....பிற நாயகர்களை இணைத்து ஒரு பெரிய புத்தகம் சார்

   Delete
  16. நன்றி வெங்கடேஸ்வரன் சார், முன்கூடிய நன்றிகள் கிட் ஆர்ட்டின் சார்

   Delete
 45. // பௌன்சர்களும்; தட்டை மூக்கார்களும்; லக்கி லூக்குகளும்; ஆர்டின்களும்; டாக்புல்களும்; இரவுக்கழுகார்களும் ஒரே அரங்கில் சுற்றி வருவதை கற்பனையில் ரசித்தாலே தூள் கிளப்புகிறது //

  Even பௌன்சர்...?!

  இவர்கள் யாருமே முழுமையான ஃபேன்டஸி சூப்பர் ஹீரோக்கள் அல்ல என்பதனால் சாத்தியங்கள் குறைவே. இரண்டாவது நமது தற்போதைய தீவிர வாசகர்களும்கூட வாசிப்பு என்கிற (ஆரோக்கியமான) ரீதியில்தான் காமிக் ஹீரோக்களைப் பார்க்கிறார்கள்.

  ஹீரோக்களும், கேரக்டர்களும் குறைந்த எண்ணிக்கை வாசகர்களால் அபரிமிதமாகக் கொண்டாடப்படுவதைவிட படைப்புகள் எந்தவகை வாசகர்களை மனதில்கொண்டு உருவாக்கப்பட்டனவோ அவர்களிடம் மட்டும் ரீச் பண்ணி போதுமான தாக்கத்தை உண்டுபண்ணினால் அதுவே ஒரு வெற்றிதான்!

  ReplyDelete
 46. //படைப்புகள் எந்தவகை வாசகர்களை மனதில்கொண்டு உருவாக்கப்பட்டனவோ அவர்களிடம் மட்டும் ரீச் பண்ணி போதுமான தாக்கத்தை உண்டுபண்ணினால் அதுவே ஒரு வெற்றிதான்!//
  +1

  ReplyDelete
 47. Vanakkam! நல்ல செய்திகளுடன் இன்றைய நாள் நகரட்டும்! லக்கியுடன், ரோஜரின் புதுமுகத்தையும் புதுமுகத்தையும் காண ஆவல்!

  ReplyDelete
 48. Vanakkam! நல்ல செய்திகளுடன் இன்றைய நாள் நகரட்டும்! லக்கியுடன், ரோஜரின் புதுமுகத்தையும் புதுமுகத்தையும் காண ஆவல்!

  ReplyDelete
 49. \\\\\\\ டியர் எடிட்டர் ///////////

  இதுவரை வீட்டில் காமிக்ஸ் படித்தாலே வேண்டா வெறுப்பா பார்ப்பாங்க. ஆனால் ஸ்மர்ப், தோர்கல், சுட்டிலக்கி வெளிவந்ததில் இருந்து வீட்டில் உள்ள அனைவரும் படிக்க ஆரம்பித்து விட்டார்கள். வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் கைகளில் இருந்து எனது கைக்கு வர போதும்போதுமென்றாகிவிடுகிறது.
  ஐரோப்பாவில் நடக்கும் புத்தக கண்காட்சி பற்றிய செய்திகளை நடந்து முடிந்தவுடன் தெரிவிக்காமல், 2 அல்லது 3 மாதங்களுக்கு முன்னரே தெரிவித்தால் நம் வாசகர்கள் யாராவது கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும் அல்லவா.

  டெக்சுக்குத்தான் தனி சந்தா இல்லையென்று ஆகிவிட்டது. டைகருக்காவது அடுத்த வருடம் முதல் வார இதழ் வெளியிடும் ஐடியா ஏதும் உள்ளதா?

  ReplyDelete
 50. This comment has been removed by the author.

  ReplyDelete
 51. ஹி ஹி லக்கியை ஓட்ட இது எனக்கு நல்ல வாய்ப்பு இந்த பொடியன் பில்லியை சுமந்துகிட்டு ஏற்கனவே மூணு ரவுண்டு இ ந்த பாலைவனத்தை சுத்தி வந்தாச்சு பாஸ்
  இன்னுமா உங்க முதுகு வலி தீரலே ...
  இன்னும் நாலே ரவுண்டுதான் ஜாலி ஜம்பர் ..ம்ஹ்ம் . முதுகு வலின்னு பொய் சொல்லி ,.திருப்பதி வெங்கடாசலபதிக்கு அங்க பிரதட்சணம் மாதிரி இந்த பாலைவனத்தை ஏழு ரவுண்டு இப்படியே சுத்தி வந்தாலாவது எடிட்டர் நமக்கு தனி சந்தா போடுறாரா பார்ப்போம் .

  ReplyDelete
 52. சார்,
  அட்டைப்படம் அசத்தல். வர்ணக் கலவைகள் அட்டகாசம். இரண்டாவது அத்தியாயத்தின் ஈர்க்கும் அட்டைப்படத்தை நமது இதழின் முகப்பு அட்டையாக்கியது நல்லதொரு முயற்சி! (ஒரிஜினல் அட்டையில் சிகப்பு வர்ணங்கள் கொண்டிருந்தால், அதைத் தாங்கள் தவிர்த்திடும் காரணம்தான் என்னவோ...?)

  என்ன, புது அவதாரில் சாகச வீரர் ரோஜரா..! வாவ்!. நாமெல்லாம், பழைய கதைகளைத்தான் தூசுத் தட்டுக்கிறோம் என்றால், அவர்கள் இப்போது பழைய கதாநாயகர்களையே தூசுத் தட்டி புது அவதாரில் காட்ட கிளம்பிட்டாங்கப் போலிருக்கு...!

  ReplyDelete
 53. ///பழைய கதாநாயகர்களை தூசிதட்டி.//

  அப்படியே மாடஸ்டியையும் தூசி தட்டி கொண்டு வாங்களேப்பா !புண்ணியமா போகும்.!

  ReplyDelete

 54. எடிட்டர் சார்,

  கேப்ஷன் போட்டிகள் காத்து வாங்குது! (எனக்குத் தெரிந்த) காரணம்... நீங்கள் தேர்ந்தெடுக்கும் பரிசுகள்!!

  சென்றவருடம் அந்த சென்னை நண்பர் சல்லீசு ரேட்டுக்கு உங்களுக்கு அனுப்பியிருந்த 500 புத்தகங்களில் உங்களுக்குத் தேவையில்லாத ஒன்றிரண்டை இங்கே கேப்ஷன் போட்டிக்குப் பரிசாய் அறிவித்தால் போட்டி களைகட்டும் என்பது உறுதி! அட்டை இல்லாத புத்தகம் என்றாலும் பரவாயில்லை... அல்லது புத்தகம் இல்லாத அட்டை என்றாலும் பரவாயில்லை! ;)

  பரிசாய்க் கொடுப்பதற்கு ஒரிஜினல் பிரெஞ்சு, இத்தாலி, ஆங்கில ஆல்பங்களைக்காட்டிலும் நூறு மடங்கு வீரியமானது நமது பழைய வெளியீடுகள் என்பதைத் தாங்கள் அறியாதவரல்லவே? :)

  தவிர, சுவத்தில முட்டிக்கினு தக்காளிச் சட்னி முகத்தில் வழிய வழிய நாங்கள் யோசிச்சு கேப்ஷன் எழுதணும்னா அதுக்கேத்தா மாதிரி வொர்த் இருக்க வாணாமா? ;)

  ReplyDelete
 55. // 28 ஆண்டுகளாய் இந்த ஒல்லிப்பிச்சான் கௌ-பாயை தமிழில் ஆராதித்து வரும் நமக்கும் இந்தக் கோலாகலங்களில் பங்கெடுத்துக் கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர் படைப்பாளிகள் ! //சூப்பர் சார் !

  ReplyDelete
 56. சார் அட்டகாசம். முதல் சந்தோசம் போனவாரம் காட்டிய ரோஜரின் அந்த பல வணண ங்களில் பளிச்சிடும் அந்த ௐரு பக்கம் .அருமை.
  அடுத்து ஜேஸன் ஆஹா....
  லக்கி அங்கே வரும் போதே இங்கும் வரட்டுமே...ஒரு கதையாவது...
  ஷெல்டன் அட்டைபடம் யப்பா .....
  ஆக மொத்தம் அடுத்த வருடம் ஜிலீர் வருடம்தாம்

  ReplyDelete
 57. சிறை பறவைகள் :-

  நிறைய முறை இறக்கை விரித்துவிட்ட பறவைகள்தான் எனினும் லாரன்ஸ் டேவிட் என்ற இரு சாகச வீரர்களால் மீண்டும் இறக்கை முறிக்கப்படுவதை படிக்க. சற்று சுவாரஸ்யமாகவே இருந்தது.

  30 வருசங்களை ஜெயில்லயே கழிச்ச பயலுக., வெளியே அவ்வளவு பெரிய படையை எப்படி உருவாக்கி இருப்பாங்க.!

  இன்னொரு தகவல். :-

  லாரன்ஸ் டேவிட்டை சுடும்போது டேவிட் அணிந்திருந்த புல்லட் புரூப் ஜாக்கெட் அவரை காப்பாத்துவது போல வசனம் அமைந்துள்ளது.
  டேவிட் ஐ சோதனையிட்டபோது இதனை கவனிக்க தவறி இருப்பர் என்றும் ஒரு விளக்கமும் நண்பர்களால் தரப்பட்டது.

  ஆனால் லாரன்ஸ் சுடும்போது தோட்டா டேவிட்டின் கோட்டில் இருக்கும் உலோக பட்டனை சரியாக தாக்குகிறது. இதுவே லாரன்ஸ் டேவிட் இருவரும் கண்களால் பரிமாறிக்கொண்ட சேதியாகவும் இருக்கக் கூடும்.
  மேலும்., டேவிட் பின்னர் அந்த பட்டனை பிடித்துக்கொண்டு தானே வசனம் பேசுகிறார். ஜாக்கெட்டை அல்லவே.! !!! !

  துப்பாக்கியை காட்டி மிரட்டும்போது சிரிக்கும் வில்லன்கள். , க்ளைமாக்ஸில் எங்களை ஜெயிலில் போட்டு விட வேண்டாம் என்று கெஞ்சுவது ரின்டின் கேனை விட காமெடி :-)

  ReplyDelete

 58. ***** சிறைப் பறவைகள் *******

  ரொம்பச் சின்ன வயதில் படித்த கதையென்பதால் கதை சுத்தமாய் ஞாபகத்தில் இல்லை! ஆனால் சித்திரங்கள் எவ்வளவு வலிமையானவை என்பதை சில படங்கள் இப்போதும் ஞாபகத்திலிருப்பதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது! குற்றவாளிகள் யாரென்று ஒரு பிடியே கிடைக்காமல் லாரன்ஸும் டேவிட்டும் தடுமாறுவதும், பின்பு தனித்தனியே துப்பறியக் கிளம்புவதும், கிளைமாக்ஸில் சரியாக இணைந்து கொள்வதும் அன்றைய காலகட்ட திறமையான கதையமைப்புகள்!

  இன்றைக்குப் படிக்கும்போது ஒரு சில லாஜிக் ஓட்டைகள் கண்ணில் பட்டாலும், அன்றைய காலகட்டத்தில் நமக்கெல்லாம் இதுவொரு சூப்பர்ஹிட் டிடெக்டிவ் கதையாக இருந்திருப்பதில் ஆச்சர்யமில்லைதான்!

  கிளைமாக்ஸ் கொஞ்சம் 'பொசுக்' ரகம்!

  ReplyDelete
 59. சார் தோர்கள் மொழி பெயர்ப்பு இயல்பாய் அமைந்து தூள் .....தலைமை ஆசிரியருக்கும் நன்றி..+
  எங்கே இன்றய உற்ச்சாக இணைப்பு....

  ReplyDelete
 60. லக்கி லூக்கும் ,XIII ம் சுடச்சுட தமிழில் பறிமாறப்பட இருப்பதற்கு வாழ்துகளும். நன்றிகளும் !

  ReplyDelete
 61. வேறே ஒண்ணுமில்லே..லக்கில்லூக்குக்கு மாயா படத்தை பார்க்கவும் ஆசை..அதே சமயம் பயமாவும் இருக்காம்
  அதான் கட்டி இழுத்துட்டு போறோம்

  ReplyDelete
 62. திங்கள் கிழமை அந்த Early birds list ஐ Upload செய்திடுவேன். //் இன்னும் ஒன்னையும் கானோமே சார்

  ReplyDelete
 63. மணி 3 ஆய்டிச்சு சார். List எப்போ சார்

  ReplyDelete
 64. wat abt 1.5 million special..???? editor sir 1.5 million special vendumm

  ReplyDelete
 65. சார் மணி 6 ஆகப்போகுது. எல்லோரும் காத்திருக்கிறோம். பத்தாப்பு பரீட்சை ரிசல்ட் பாக்குறதுக்காக மாலை முரசுக்கு கூட இவ்வளவு ஆவலா காத்திருந்ததில்லை

  ReplyDelete
 66. This comment has been removed by the author.

  ReplyDelete
 67. குண்டு புக்கே!
  குண்டு புக்கே!

  எப்போது நீ வரப்போகிறாய்!
  பேரின்பம் தரப்போகிறாய்!

  எப்போது நீ வரப்போகிறாய்!
  பேரின்பம் தரப்போகிறாய்!

  ஆயிரம் பக்கங்களில் அற்புதமாம்!
  அழகிய கருப்புவெள்ளை சித்திரமாம்!
  அழகிய கருப்புவெள்ளை சித்திரமாம்!

  பாதிக்கு டெக்ஸாம்!
  பாதிக்கு டெக்ஸாம்!

  மீதிக்கு
  கிநாவும் ராபினுமாம்!
  மாடஸ்டியும் மார்டினுமாம்!
  மாடஸ்டியும் மார்ட்டினுமாம்!


  கதம்பமாய் கட்டிய மாலையாம்!
  கருப்பு வெள்ளையில் தோரணமாம்!
  காண கண்ணிரண்டு போதாதாம்!
  காண கண்ணிரண்டு போதாதாம்!

  குண்டு புக்கே!
  குண்டு புக்கே!

  எப்போது நீ வரப்போகிறாய்!
  எப்போது நீ வரப்போகிறாய்!  பின் குறிப்பு :-

  ஒண்ணுக்கு கீழ ஒண்ணாவும்., ரெண்டு ரெண்டு தபா எழுதியதாலும் , இது "கவிதை "ன்னு நான் சொல்லாமலேயே உங்களுக்கு புரிஞ்சிருக்கும். :-)

  ReplyDelete
  Replies
  1. நான் ஏதோ சினிமா பாட்டென்று நினைச்சிட்டேன்

   Delete
 68. ஆகா.! கிட் ஆர்ட்டின் கண்ணன்.!@


  " பாட்டாவே பாடிவிட்டீர்களே.! " சூப்பர்.!

  1984 ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக அடிக்கடி கோடை மலர் , தீபாவளி மலர் , என்று காக்டெய்ல் ( கதம்பம் ) குண்டு ஸபெஷல் புத்தகங்கள் வெளியிட்டு பட்டையை கிளப்புவார்.! அந்த யூத் விஜயன் சாரை வலைவீசி தேடுகிறோம்.! யப்பா.! அது ஒரு கணாக்காலம்.! இன்னமும் ரூபாய் 10₹ க்கு வெளிவந்த தீபாவளி மலரை அடிச்சுக்க ஆளில்லை.!

  ReplyDelete
  Replies
  1. பொங்கல் மலர்...கோடைமலர்...ஆண்டுமலர்... தீபாவளி மலர் .....பழைய லயன் காமிக்ஸ் பட்டியலில் பார்க்கும் போதே அருவி கொட்டும்....நேரில் பார்த்து படித்த உங்களுக்கு சொல்லவா வேணும்....
   ஆசிரியர் சார்@ மீண்டும் வருமோ அந்த வசந்த காலம்......
   ஆசி

   Delete
  2. விஜய ராகவன் சார்.! @

   அதில் ஒரு விஷேசம் பாருங்கள் சார்.! பாயாசம் இல்லாத பந்தியா.?என்கிறமாதிரி ஒவ்வொரு ஸ்பெஷலிலும் கட்டாயம் மாடஸ்டி இருப்பார்.!

   " நினைத்தாலே இனிக்கும் "

   Delete
  3. க்ர்ர்......க்ர்ர்......
   அந்த கால கட்டத்தில் வந்த 5முக்கிய மலர்களில் திகில் கோடை மலரும் ஒன்று, அதிலும் மாடஸ்தி சாகசம் வந்துள்ளதா MV சார்??

   Delete
  4. விஜய ராகவன் சார்.!

   ஆரம்பகாலங்களில் , லயன் காமிக்ஸ் மட்டுமே ராஜதானி எக்ஸ்பிரஸ் மற்றும் துரந்தோ எக்ஸ்பிரஸ் மாதிரி வேகத்திலும் முக்கியத்துவத்திலும் பட்டையை கிளப்பும். ! திகில் காமிக்ஸ் கதைகள் அந்த சிறிய வயதில் அவ்வளவாக மனதை கவரவில்லை.! 1989 மேல் எங்கள் ஊரின் கடைகளிலே திகில் காமிக்ஸே வரவில்லை. நான் அதை தேடவும் அக்கறை படவில்லை.!!

   முத்து காமிக்ஸ் , கூட்ஸ் ரயில் மாதிரி, லயன் காமிக்ஸ் என்னும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வழிவிட்டுவிட்டு ஒரு ஓரமாக நிற்கும்.!

   அந்த காலகட்டங்களில் எடிட்டரின் " செல்லம் " லயன் காமிக்ஸ்தான்.! எனவே எங்களுக்கும் லயன் மீது ஈர்ப்பு அதிகம்.!அதில் வரும் ஹீரோ மற்றும் குண்டு புத்தகங்களுக்குத்தான் நாங்களும் தீவிர ரசிகர்கள்.!

   ஆரம்பத்தில் மாடஸ்டி கதைகள் அவ்வளவாக ஈர்த்தது கிடையாது.! சென்னையில் செட்டில்ஆகி திருமணம் ஆனபின் , என் மனைவி டெக்ஸ் கதைகளையும் மாடஸ்டி கதைகளையும் விரும்பி படிப்பாள். டெக்ஸ் கதைகள், ,புதிதாக படிப்பவர்களுக்கு எளிதில் பிடித்துபோவதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் மாடஸ்டி கதை ஏன் பிடிக்கின்றது என்று குழம்பிவிட்டேன்.! பின் அவளுடன் கதைகுறித்து விவாதித்த பின் , நானும் ஒவ்வொரு கதையாக திரும்ப படித்தேன் .அப்பொழுதுதான் உணர்ந்தேன். செவ்விந்தியர் கையில் கிடைத்த " மஞ்சள் உலோகம் " போல் இவ்வளவு நாட்களாக மாடஸ்டி கதைகளை பூட்டிவைத்துள்ளேனே.! என்று நினைத்து வெட்கப்பட்டேன்.!

   Delete

 69. பொடியன் : இப்போ புரியுதா லக்கி அங்கிள்...? பாலைவனத்துல பத்து நிமிஷம் ஓடினதுக்கே உங்களுக்கு இப்படி நாக்கு தள்ளிருச்சே... 80 வருஷமா நீங்க பாடும் 'தனிமையே என் துணைவன்' பாட்டைக் கேட்டுக்கிட்டு காடு மேடெல்லாம் ஓடிக்கிட்டிருக்கற ஜாலிஜம்பருக்கு எப்படி இருந்திருக்கும்...?

  லக்கிலூக் : புத்தி புகட்டியது போதும்டா பொடியா... துளியூண்டு மட்டுமே சதைப்பற்றோட இருக்கும் என்னோட பின்புறம் மொத்தமும் முழுசாய் கருகிப்போறதுக்குள்ள இந்தக் கயிறை அவிழ்த்துவிடு மொதல்ல!

  ஜாலிஜம்பர் : ஹா ஹா... லக்கி... ஒவ்வொரு கதையின் கடைசியிலயும் 'தனிமையை என் துணைவன்'னு நீ பாடும்போது ஏன் எப்பவும் முதுகுப்புறமாவே காட்டுறாங்க தெரியுமா...? கர்ண கொடூரமா நீ பாடும்போது உன் முகத்தைப் பார்த்து யாரும் பயந்துடக் கூடாதேன்னுதான்!

  ReplyDelete
 70. பொடியன்: ஹைய்யா! என்ன லக்கி தாத்தா மாட்டி கிட்டீங்களா ?

  ஜாலிஜம்பர்: ஹி ஹி ஹி ! பாஸ் ! நோட் பண்ணீங்களா! லக்கி தாத்தாவாம் !!!! ஹோ ஹோ ஹோ !!! லக்கி தாத்தா ! லக்கி தாத்தா !

  லக்கிலூக்:
  ஐயோ டா!
  நல்லவேளை யாரும் பாக்கல!
  ஹ்ம்ம். ....அத விட முக்கியமா யாரும் கேக்கல!
  ஜாலிலிலி ஜம்பர் #&(*&F#$R#@$#@!
  இப்போ சிரிக்கித நிறுத்த போறிய இல்லையா !

  ReplyDelete
 71. லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தாமதமாக புத்தகங்கள் கிடைத்து இப்போதுதான் படிக்க முடிந்தது.

  இந்த இதழ்களில் நான் மிகவும் எதிர்பார்த்தது தோர்கல். சீனியர் எடிட்டரின் பங்களிப்பும் ஒரு காரணம். மொழிபெயர்ப்பு கச்சிதம். தலையில் ' ஹெல்மெட் ', 'லேட்'டாகிக்கொண்டிருக்கிறது.. போன்ற ஆங்கில வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம்..

  சுட்டி லக்கி - முதல் கதையை விட இது சிறப்பாகவே இருந்தது. ஓரிரு இடங்கள் தவிர பெரும்பாலும் பலூனுக்குள்ளேயே வசனங்கள் அமைத்திருப்பது அழகு. இது தொடர முயற்சிக்க வேண்டும்.

  ஜானி - ஒரு குறையுமில்லை. ஆனால் ஜானி கதைகளில் இப்போதெல்லாம் பாதி கதை வரும்போதே குற்றவாளி யாரென்று எளிதாக யூகித்து விட முடிகிறது :)

  சிறைப்பறவைகள் - இப்போது வரும் மறுபதிப்புகளில் எதையுமே இதற்கு முன் நான் படித்ததில்லை. அதனால் எல்லா மறுபதிப்புகளையும் ரசித்து படித்து கொண்டிருக்கிறேன். ஸ்பைடர் கதைகள் படிக்கும் போது மட்டும் கொஞ்சம் சிரிப்பு வரும் :))

  ReplyDelete
 72. திங்களும் போய் செய்வாய் வந்தது டும் டும் டும்

  ReplyDelete
  Replies
  1. ராஜசேகர்.!@

   அவர் எந்த நாட்டின் மீது விமானத்தில் பறந்துகொண்டு இருக்கின்றாறோ.?

   Delete
  2. ஆஹா அதத் தெரிஞ்சுக்கிட்டுதான் நண்பர்கள் எல்லோரும் காணாம போய்ட்டாங்களா. நான் மட்டும் தான் மங்குனியா

   Delete

  3. போங்க சார்! நீங்க ரொம்ப லேட் பிக்கப்பு! :-)

   Delete
 73. சமீபத்திய சில தமிழ் உலக நடவடிக்கைகளை கவனிக்கும் போது; இந்த தளமும் ,தமிழ் காமிகஸ் உலகமும் மிகப் பெரும் ஜாம்பவான்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருவதை புரிந்து கொள்ள முடிகிறது.

  ReplyDelete

 74. செய்தி : இந்தத் தளம் மிகப்பெரும் ஜாம்பவான்களால் கவனிக்கப்பட்டு வருகிறது!

  அனுகுமுறை:

  ' நம் வீடு - நாம்தான் இருக்கிறோம்' என்ற நிலையில் ஏகத்துக்கும் கொட்டமடிக்கலாம் தான்... ஆனால், விருந்தினர்கள் யாராவது ( அதுவும் ஜாம்பவான்களாய்) வரும்போது நம் லூட்டிகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு சமத்து பிள்ளைகளைப் போல கைகட்டி நிற்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

  வாதம் - விதண்டாவாதம் கூடாது! யார் எது கேட்டாலும் "சரிங்" என்று பவ்யமாகப் பதிலளிக்க வேண்டும்.

  கெக்கேபிக்கே சிரிப்புகள் கூடாது. எவ்வளவு பெரிய காமெடியாக இருந்தாலும் 'ஹெஹ்' என்று சிம்பிளாக முடித்துக்கொள்ள வேண்டும்.

  விருந்தோம்பல் மிக அவசியம். மணிக்கு ஒரு தரமாவது அந்த ஜா.விருந்தினர் அகமகிழும்படி "ணா.. டிபன் சாப்டீங்களாண்ணா?", "ணா.. காப்பி சாப்டீங்களாண்ணா?" என்று கேட்டுவைக்க வேண்டும்.

  ஒருவழியாக நம் ஜா.விருந்தினர் மூட்டையைக் கட்டிக்கொண்டு சென்றபிறகு "யாயாயா ஹீஈஈஈஈ" என்று கூப்பாடு போட்டுக்கொண்டே நம் வழக்கமான ரகளைகளைக் கண்டினியூ பண்ணலாம்! ;)

  ReplyDelete
  Replies
  1. இம்மாதி கமெண்ட்டுகளுக்கு கண்டிப்பாக யாராவது தமிழ் To தமிழ் மொழிபெயர்ப்பு செய்தால் நன்றாக இருக்கும்.

   @Meeraan, ஆவன செய்க - என்பது என் தாழ்மையான விண்ணப்பம்.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 75. Hello editor sir, tex santha, kundu book, classic stories reprint- ippadiye 3,4 maasama pesikittu irukkome? blue coats, jil Jordan,martin... ivanga ellam konja naala kanome? ivanga ellaam eppo varuvanga?

  ReplyDelete
 76. Hello editor sir, tex santha, kundu book, classic stories reprint- ippadiye 3,4 maasama pesikittu irukkome? blue coats, jil Jordan,martin... ivanga ellam konja naala kanome? ivanga ellaam eppo varuvanga?

  ReplyDelete
 77. லக்கி கேப்ஷன்:

  சிறுவன்: லக்கி அண்ணாத்தே... லாஸ்ஸோவில் உங்களைப் பிடிச்சிட்டேன் பார்த்தீங்களா..? ஒத்துக்கிட்டதுமாதிரி கொஞ்சநாளைக்கு ஜாலி ஜம்பரை என்னோட அனுப்பிருங்க... இனிமேதான் அந்தத் "தனிமையே என் துணைவன்" பாட்டு அண்ணாத்தைக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கப்போகுது! ஹி ஹி!

  லக்கி லூக்: கர்ர்ர்ர்... @#$%^&*

  ஜாலி ஜம்பர்: கெக்கெ பிக்கெ!

  ReplyDelete

 78. பக்கி S/o லக்கி டாடி! நிழலைவிட வேகமா சுடுவேன்னு பீத்திக்கறீங்க... ஆனா மம்மி பூரிகட்டையை கையில் எடுத்த அடுத்த நொடியே இப்படி நிழலைவிட வேகமா வீட்டைவிட்டு ஓடிவந்துடறீங்களே... என்னதான் பிரச்சினை உங்களுக்கு?

  ஜாலிஜம்பர் : ஹோ ஹோ ஹோ... அப்படிக்கேளுடா என் செல்லக்குட்டி! பேசாம உங்க டாடியை 'அன்லக்கிலூக்'னு பேரை மாத்திக்கச் சொல்லு!

  லக்கிலூக் : ((((@€¢£$% &%)))) உனக்கு விளக்கிச் சொல்லும் மூடு இப்ப எனக்கில்லைடா மை சன்! வேணுமின்னா, பத்துமணி டூட்டிக்கு எட்டுமணிக்கே ஆபிஸுல வந்து உட்கார்ந்துக்கறாங்களே நம்ம வாசகர்கள்... நீ அவங்களைக் கேட்டுக்கோ!


  ReplyDelete
 79. கேப்ஷன் போட்டிக்கு -1 :-

  பொடியன் .:ஹே லூக்கு! எங்கப்பாரு . சித்தப்பாரை எல்லாம் அடிக்கடி புடிச்சி ஜெயில்ல போட்ருவியாமே? அதான் உன்னை கட்டி இழுத்து வந்திருக்கேன்.! எங்கப்பாரு வந்தவுடனே உன்னைய பொலி போடப்போறோம்.!

  ஜாலி : பையன் ஜோ டால்னோட வாரிசு லூக். போயும் போயும் பொடியன்கிட்ட மாட்டிகிட்டியே.! ஹெஹ் !ஹெஹ்! ஹெஹ்!

  லூக் : யாரு மாட்டிக்கிட்டா? டால்டன் பயலுகளை தானா வந்து சிக்க வைக்கத்தான்,. நான், இந்த பொடிப்பபய கிட்ட மாட்டினா மாதிரி நடிச்சேன். ஜோ வரட்டும்., ஏண்டா! பயலையாவது ஒசரமா வளத்தியிருக்கலாமேன்னு நாக்க புடுங்குறா மாதிரி கேக்குறேன்.!!!

  ReplyDelete