நண்பர்களே,
வணக்கம்! ரொம்ப ரொம்ப நாட்களாய் புத்தக விழாக்களில், பதிவுகளில்
என்னிடம் கேட்கப்படும் கேள்விகளின் தரவரிசைப் பட்டியல் இது போலிருப்பது வாடிக்கை:
- § இரும்புக்கை மாயாவி புக்ஸ் இப்போதெல்லாம் வர்றதில்லையா? (இது நமது மறுபதிப்புப் படலம் துவங்கும் முன்வரையிலான கேள்வி)
- §“இரத்தப் படலம்“ முழுத்தொகுப்பை திரும்பவும் போடும் உத்தேசமுண்டா? வண்ணத்தில்/ Black & Whiteல்?
- § “டிராகன் நகரம்“ மறுபதிப்பு எப்போது?
- § எங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்கு ஏற்ற மாதிரியாக; அடுத்த தலைமுறை இளம் வாசகர்களுக்காக ஏதாவது செய்யும் எண்ணமுண்டா?
இதில் முதற்கேள்வி
தற்சமயம் relevant இல்லையெனும் போது- கேள்விகள் # 2 & 3 க்கு ‘ஹி...ஹி...ஹி...’
ரகப் பதில்களை நல்கி விட்டு வேறு topicக்குத்
தாவுவது வழக்கம். ஆனால் கேள்வி # 4 ன்
பதிலாக ஒரு மௌனத்தையே இதுவரை முன்வைத்திருக்கிறேன். என் மௌனங்களை எதிர்மறை
பதிலுக்கு அடையாளமாகக் கருதிக் கொண்டு அடுத்த தலைமுறையைக் ‘கவனிக்க’ மறந்த மாபாதகனாக அவ்வப்போது ஆங்காங்கே என்னைப் போட்டுத் துவைப்பதும் உண்டு
என்பதில் இரகசியமேது? பொதுவாக இந்த விஷயத்தில் எனது thought process இதுவே:
அரை நிஜார் பாலகர்களாய் லயன் / திகில்
/ முத்து காமிக்ஸ் இதழ்களைக் கடைகளில் வாங்கியதொரு
(கி.மு. காலகட்டத்து) சூழல் இன்றைக்கு நடைமுறையில் கிடையாதல்லவா? நமது இதழ்கள்
தெரு முனையிலுள்ள கடைகளில் இப்போதெல்லாம் விற்பனையாவதும் கிடையாது ;
இன்றைய சிறார்கள் கடைகளுக்குப் போய் காமிக்ஸ்களைக் கேட்டு வாங்குவதும் (பரவலாகக்) கிடையாதெனும்
போது- குடும்பத்துப் பெரிய தலைகள் யாரேனும் மனசு வைத்தல் இங்கே அத்திவாசியம். And- குட்டீஸ்களின் பொருட்டு நாம் கார்ட்டூன் / காமெடிக் கதைகளைக் கோரினாலும் கூட அவை ‘அடுத்த இலைக்குப் பாயசம்!!’ என்ற கதையும் கூடத் தானே ? So நமது
வாசிப்புகளுக்கும் சுவாரஸ்யம் தரும் விஷயங்களாக அவை அமைந்திட வேண்டுமென்பதிலும் பரம
இரகசியங்களில்லை ! Which means - உங்களையும் ஓரளவிற்காவது வசியம் செய்தாலன்றி அந்தக்
கதைத் தொடர்கள் உங்கள் வீட்டு சுட்டீஸ்களைத் (தொடர்ச்சியாய்) சென்றடைவது சிரமமே
அல்லவா? Tintin;
Asterix போன்ற உலகப் பிரசித்தி பெற்ற
கார்ட்டூன் களங்கள் இந்தத் தேவைக்குக் கச்சிதமான பதில்களாக இருந்திடலாம் தான்- ஆனால்
அவை நமது reach-க்குள் இல்லா எட்டாக்கனிகள் எனும் போது பொறுமையுடன்
தேடல்களைத் தொடர்வதே எனக்கிருந்த உபாயம்! சிக்பில் கதைகளோ ப்ளுகோட் கதைகளோ இளம்
வரவுகளுக்குக் கதை சொல்ல ஏதுவானவையல்ல எனும் போது லக்கி லூக்கின் பாதையில் ரின்
டின் கேனையும் நுழைத்திட முயற்சித்தேன் ! ஆனால் ஒரு நாலுகால் ஜீவனுக்கு ஒரு ஆல்பமா?
என்ற ரீதியிலோ என்னவோ நம்மில் பலர் ரி.டி.கே.வை அத்தனை வாஞ்சையாய் ஆதரிக்கவில்லை
என்பதால் பயலைக் கொஞ்சம் ஓரம்கட்ட நேர்ந்தது. Of course- ஒரே கதையோடு அந்தத் தொடரைக் கைகழுவுவதாயில்லை தான்; ரின்னியின் மறுவருகை would be sooner than later !
நமக்குப் பிடித்து /
நம் வீட்டு குட்டீஸ்களுக்கும் பிடிக்கக் கூடிய இன்னொரு தொடரான சுஸ்கி-விஸ்கி
கதைகளுக்கான உரிமைகளைப் பெற்றிட சென்றாண்டு முயற்சி செய்து- கிட்டத்தட்ட கான்டிராக்ட்
போடும் நிலையிலிருந்தோம்! துரதிர்ஷ்டவசமாய் இறுதிக் கட்டத்தின் போது நமது நிதிநிலைமை தள்ளாட்டத்திலிருக்க –
கான்டிராக்டை ஜனவரிக்கு வைத்துக் கொள்வோம் என்றிருந்தேன்! ஆனால் நம் நேரமோ என்னவோ-
அந்தப் பொறுப்பிலிருந்த நிர்வாகி "சு.வி". கம்பெனியிலிருந்து இடைப்பட்ட நாட்களில் வெளியேறியிருக்க
ஜனவரியில் திரும்பவும் பிள்ளையார் சுழியிலிருந்து துவங்க வேண்டியது போலான சூழலைக்
காண முடிந்தது! ஜனவரியில் நமது ரெகுலர் இதழ்களுக்கான முன்பணப் பட்டுவாடாக்கள்
துவங்கிய ஜரூரில்- “சு.வி.யை“ கொஞ்சம் பொறுமையாகப் பார்த்துக் கொள்ளலாமே!' என்ற
எண்ணம் தலைதூக்க- நாட்கள் நகன்று விட்டன!
இடைப்பட்ட சமயங்களில் எனது ஆந்தைவிழிகள் அங்குமிங்குமாய் தேடல்களில்
ஈடுபடுத்திய வண்ணமே இருந்த போதிலும், உருப்படியாகக் கதைகள் சிக்கியபாடில்லை! அந்த
சமயம் அவ்வப்போது செய்திடும் சில தேடல்களின் முடிவுகளைப் போட்டு வைத்திருக்கும் folder-ன் நினைவு வந்தது ! அதனை எதேச்சையாய் உருட்டிய போது தான் சில “புதியவர்கள்“ பற்றிய நினைவுகள் refresh ஆயின ! ஒவ்வொரு விடுமுறையின் போதும் எங்களிடம்
குவிந்து கிடக்கும் முந்தைய இதழ்களை;
கேட்லாக்களை மட்டுமின்றி நெட்டிலும் சிதறிக் கிடக்கும் சில / பல தொடர்களைத் திரும்பத் திரும்பப் புரட்டுவது ஒரு
பொழுதுபோக்கு! காலங்கள் மாறும் போது நமது ரசனைகளில் / வாசிப்புக்களங்களில் மாற்றங்கள் நிகழ்வதும் உண்டு
என்பதை அனுபவம் உணர்த்தியிருப்பதால்- எந்தவொரு கதைத் தொடருக்கும் இப்போதெல்லாம்
ஒட்டுமொத்தமாய் reject முத்திரை
குத்துவதில்லை ! பத்தாண்டுகளாய் புரட்டிப் பார்த்த கையோடு மூலைசேர்த்த லார்கோவைத்
தான் பதினோறாம் ஆண்டு முதலாய் நாமொரு சூப்பர்ஸ்டாராய் ஸ்வீகாரம் செய்திருக்கிறோமல்லவா ? ஏகப்பட்ட காலமாய் ‘No-No’
ரகத்திலிருந்த பௌன்சரோ இன்றொரு டாப் வரவு நம்மிடையே ! ஆண்டாண்டு காலமாய் ‘ஙே’
என்ற பார்வையோடு பரணில் சாத்தி வைக்கப்பட்டிருந்த டைலன் டாக் இன்று நம்மிடையே புழக்கத்தில்
உள்ளார் ! So - நேற்றைய thought process-கள் இன்றைய ரசனைகளுக்கும் / தேர்வுகளுக்கும் அதே மாதிரியான தாக்கங்களையே
ஏற்படுத்துமென்ற கட்டுப்பாடுகளின்றி ஒவ்வொரு தொடரையும் fresh ஆகப் புரட்ட முயற்சிப்பேன்! அப்போது கண்ணில் பட்டது
தான் அந்த “ஊதா சமாச்சாரம்“!
வர்ணத்தைக் கொண்டு வில்லங்கமான விஷயமோ என்ற பயம் அவசியமில்லை...
ஏனெனில் நான் குறிப்பிடும் அந்த ‘நீல
உலகம்’ பிரான்கோ- பெல்ஜியக் காமிக்ஸ் உலகினில் ஒரு 57
ஆண்டுச் சகாப்தமாகும்! 1958ல் முதன்முதலாய் பெல்ஜியத்தில் தலைகாட்டிய அந்தத்
தக்கனூண்டு நீல மனிதர்களான SMURFS
பற்றித் தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ள அதிக
சிரமமிராது என்று நினைக்கிறேன்!
நமது முந்தைய கையிருப்புகளுள் நிறையவே இடம்பிடித்திருந்த SMURFS ஆல்பம்களை நீண்டதொரு இடைவெளிக்குப் பின்பாகப் புரட்டிய போது சின்னதாய் ஒரு பொறி தட்டியது என் சொட்டைத் தலைக்குள் ! முழு வண்ணம் ; ஆர்ட் பேப்பர்... பெரிய சைஸ் என்றதொரு decent பாணிக்கு புரமோஷன் கண்ட பின்னே இந்தத் தொடரை நமது அணிவகுப்பில் கற்பனை செய்து பார்த்த போது- ஒரே கல்லில் சீனியர் + ஜூனியர் taste-களுக்கான மாங்காய்கள் அடிக்க வாய்ப்புள்ளது போல் தோன்றியது ! So- ஓசையின்றி சில பல மாதங்களுக்கு முன்பாகவே இதன் உரிமைகளை பெற்றிடும் பொருட்டு வேலைகளை ஆரம்பித்திருந்தேன்! என்ன தான் ஈ-மெயில்; facebook இத்யாதி என்றெல்லாம் உலகம் முன்னேறியிருப்பினும்- இந்த உரிமைகள் கோரிப்பெறும் படலமானது எப்போதுமே ஒருவிதமான நெடிய process ஆக அமைந்திடுவதைத் தவிர்த்தல் சாத்தியமாவதில்லை! இலட்சங்களில் விற்பனை- பல்லாயிர யூரோ / டாலர்களில் ராயல்டி என்று களமிறங்கும் இதர தேசத்து ; இதர மொழிப் பதிப்பகங்களோடு இடுப்பில் கோணிச் சாக்கைக் கட்டிக் கொண்டு நாம் நடத்தப் பார்க்க முயற்சிக்கும் ஓட்டப் பந்தயங்கள் எவ்வித முடிவுகளைத் தருமென யூகிப்பதில் சிரமங்களேது? சில வேளைகளில் ஒரு சின்ன மின்னஞ்சல் வினவலுக்குப் பதில் கிட்ட சில பல மாதங்கள் கூட அவசியப்பட்டிடலாமெனும் போது மண்டைக்குள் எட்டிப் பார்க்கும் அயர்ச்சிகளை பக்குவமாய் ஓரம்கட்டியாக வேண்டியிருக்கும். So- சந்தர்ப்பம் கிட்டும் போதெல்லாம் படைப்பாளிகளின் முன்னே போய் "ஒரு நடமாடும் நினைவூட்டலாய்" நான் நிற்க முயற்சிப்பதன் காரணம் இதுவே! SMURFS கதைகளின் தேடலின் பின்னனிக் கதையும் இந்த ரகமே!

So- கடந்த வாரம் ஐரோப்பாவில் எனக்கொரு பணி வாய்த்த போது-
சந்தடி சாக்கில் SMURFS-ன் படைப்பாளிகளையும்
சந்தித்து விடுவதென்ற தீர்மானத்தில் இருந்தேன்! வழக்கமாய் படைப்பாளிகளின் மைய
அலுவலகங்கள் பாரிஸ் ; பிரஸ்ஸல்ஸ்; மிலான்;
நியுயார்க்; இலண்டன் என உலகின் முக்கிய
நகரங்களில் - ஒரு ‘பளிச்’ இடத்தில் அமைந்திருப்பது வாடிக்கை! ஆனால் SMURFS-ன் படைப்பாளிகளோ பெல்ஜியத் தலைநகரிலிருந்து முப்பது
நிமிட இரயில்ப் பயண தூரத்திலொரு குட்டியான கிராமத்தில் அமர்ந்திருப்பதை கூகுள்
மேப்பில் பார்த்த போது வியப்பாக இருந்தது ! எனது இதர பணிகளை முடித்த கையோடு அவசரம்
அவசரமாய் இரயிலைப் பிடித்து மதியப் பொழுதில் அந்தக் குட்டியான ரயில் நிலையத்தில்
இறங்கிய போது லேசான சிலுசிலுப்புடனான காற்று மட்டுமே எனக்குத் துணைக்கிருந்தது! பூட்டிக்
கிடக்கும் ஒரு பாழடைந்த இரயில்வே ஸ்டேஷன்;
பரிதாபமாக நின்ற ஆட்டோமேடிக் டிக்கெட் வழங்கும் மிஷின் என்பதைத் தாண்டி அங்கே
நின்றவை மௌனமான இரு இரும்பு பெஞ்சுகள் மாத்திரமே! கூகுள் மேப்பில் ஒரு கிலோ மீட்டருக்குக்
குறைவான நடைதூரம் என்பதைக் கண்டிருந்த போதிலும் - உறுதிப்படுத்திக் கொள்ளலாமே என
ஸ்டேஷனுக்கு வெளியிலிருந்ததொரு பாகிஸ்தானிய மளிகைக் கடைக்காரரிடம் (!!) கேட்டுப்
பார்த்தால்- அவரோ உதட்டை வேக வேகமாய்ப் பிதுக்கி விட்டார்- ‘எனக்குத் தெரியாது’
என்று!! சரி... நடராஜா டிரான்ஸ்போர்ட் இருக்க பயமேன்? என்று நான் நடைபோட-
சுற்றுமுற்றும் வீடுகளும், சின்ன வயல்வெளிகளுமே கண்ணில்பட்டன! சரியான திசையில்
தான் நடக்கிறோமா ? - அல்லது எதிர்திசையில் சொதப்பிக் கொண்டிருக்கிறோமோ ? என்ற
சந்தேகத்தில்- அங்கே சாலைப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இருவரிடம்
கேட்டுப் பார்த்தேன்! நம் இங்கிலீஷ் அவர்களுக்கு ‘நஹி
மாலும்’... அவர்களது பிரெஞ்சு எனக்கு ‘புரிஞ்சில்லா... ’ என்ற போது- கையிலிருந்த SMURFS ஆல்பம் ஒன்றினைக் காட்டிய மறுகணம் அந்த மனுஷன்
முகத்தில் வெளிச்ச ரேகைகள்! அப்புறம் சைகை பாஷையில் பாதையை அவர் சுட்டிக்காட்ட-
சில பல நிமிடங்களில் ஒரு இறக்கத்தில் ஒரு ஸ்டைலான கட்டிடத்தின் கண்ணாடிச் சுவர்கள்
வழியாக ஒரு மந்தை நீலக் குள்ள மனிதர்கள் என்னை எட்டிப் பார்ப்பதைக் காண முடிந்தது! அத்தனையும் SMURFS அலுவலகத்தில் நின்ற
அலங்கார பொம்மைகள்!
ரொம்ப... ரொம்ப... ஸ்டைலாக; அட்டகாசமான ரசனையோடு வடிவமைக்கப்பட்டிருந்ததொரு
அலுவலகத்திற்குள் நான் காலடி வைக்க- புன்னகையோடு என்னை வரவேற்று உள்ளே அழைத்துச்
சென்றார்கள்! திரும்பிய பக்கமெல்லாம் SMURFS பொம்மைகள்; மாடல்கள்; கட்-அவுட்கள்; விளையாட்டுச் சாமான்கள்; ஆல்பம்கள்! மேற்கொண்டு நான் கதையளப்பதற்கு முன்பாக- இந்த SMURFS உலகத்தைப் பற்றிக்
கேள்விப்பட்டிரா நண்பர்களுக்கென சின்னதாயொரு preview நல்கிடல் நலமென்று தோன்றுவதால்- சடக்கென்று 1929க்குத்
தாவுகிறேன்! அந்த வருஷம் தான் பெல்ஜியம் தலைநகருக்கருகே பியரி கலிபோர்ட் என்றதொரு
ஆற்றலாளர் பிறந்தார்! ஆரம்ப நாட்களில் சின்ன சின்னதாய் ஏதேதோ வேலைகள் பார்த்தவர்-
சீககிரமே காமிக்ஸ் உலகத்தினுள் ஈர்க்கப்பட்டு லக்கி லூக்கின் படைப்பாளியான மோரிஸ்
போன்ற ஜாம்பவான்களிடமெல்லாம் உதவியாளராகப் பணிபுரிந்திருக்கிறார்! ஒரு வரலாற்றுக்
காமிக்ஸ் தொடரை துவக்கத்தில் போட்டுக் கொண்டிருந்த மனுஷன் 1958ல் இந்த SMURFS-களை முதன்முதலாகக்
கற்பனையில் சிருஷ்டித்திருக்கிறார்!
ஒரு தூரத்து மாய உலகிலுள்ள
சிறு கிராமம் தான் கதையின் பின்னணி. சுண்டுவிரல் உயரத்துக்கே இருக்கும் நீலக்கலரிலான ஜாலியான குட்டி மனிதர்கள் தான் அந்த கிராமத்தின் வாசிகள்! காளான் வடிவிலான
வீடுகள்; கேக் மீது அலாதி ஆசை; தங்களுக்கே தங்களுக்கான SMURFS பாஷை என்பன தான் இந்த SMURFS-களின் முக்கிய அடையாளங்கள்!
ராஜா ஸ்மர்ஃப்; தாத்தா ஸ்மர்ஃப்; பேபி ஸ்மர்ஃப்; சிடுமூஞ்சி ஸ்மர்ஃப்; கவிஞர் ஸ்மர்ஃப்; மந்திரவாதி கார்காமெல் என்று ஏகப்பட்ட குட்டியாசாமிகள் கதைநெடுகிலும் வந்து செல்வர்!
இந்தக் கதைகளின் இன்னுமொரு விசேஷ அடையாளம் அவர்கள் பேசிக் கொள்ளும் பாஷையும், அதன் பாணியுமே! “ஸ்மர்ஃப்“ என்ற வார்த்தை கிட்டத்தட்ட எல்லாவித அர்த்தங்களையும் வழங்கும் விதமாய் அநேக சம்பாஷணைகளிலும் இடம்பிடித்திடுவது வாடிக்கை!

“முக்கியமான ஸ்மர்ஃப் இருக்கு... அதனால் தான் ஸ்மர்ஃப்- ஸ்மர்ஃபா ஓடிட்டிருக்கேன்...!“
“என்னவொரு ஸ்மர்ஃப் உனக்கு? இவ்ளோ ஸ்மர்ஃப்பை விரயம் பண்ணிட்டு வந்திருக்கியே?“
ஸ்மர்ஃப் எனும் வார்த்தை கதை முழுக்க
ரவுண்ட் கட்டியடிப்பது இங்கொரு டிரேட்மார்க் ! ரொம்பச் சீக்கிரமே பிரான்கோ-பெல்ஜியக்
காமிக்ஸ் உலகில் தனக்கென ஒரு தனியிடத்தை இந்த நீல ஆசாமிகள் ஆக்கிரமித்துக் கொள்ள-
ஆல்பம்கள்; ஒற்றைப்பக்க கார்ட்டூன்கள்; அப்புறமாய் தினசரிகளில்
வெளிவரக்கூடிய strips என நிறைய வடிவங்கள் உருவாயின. 1992ல் SMURFS-களின் பிதாமகரான பீயோ (புனைப்பெயர்) மரணத்தைத் தழுவுவதற்கு
முன்பாக 16 ஆல்பம்களை உருவாக்கி இருந்தார். அவரது மறைவுக்குப் பின்பும் இதர
ஆர்டிஸ்டுகள் /
கதாசிரியர்கள் துணைகளுடன் தொடரும் இந்தக் கதைவரிசையில் ஆல்பம் # 34 வெளியாகக் காத்துள்ளது ! பொதுவாக ஐரோப்பாவில் சாதிக்கும் காமிக்ஸ் தொடர்கள்
அமெரிக்கக் கரைகளில் அட்டகாசம் செய்வது அதிசயமே! ஆனால் டி.வி. கார்ட்டூன் தொடராக
1981-ல் அமெரிக்காவினுள் எட்டிப் பார்த்த இந்த நீல மனிதர்கள் அங்குள்ள இளம்
தலைமுறைகளை வசியம் செய்து விட்டனர். 256 எபிசோட்கள் இன்றளவும் உலகின் கிட்டத்தட்ட
70 நாடுகளில் ஒளிபரப்பாகி வருகிறதாம் ! (தமிழிலும் ஒரு முன்னணி TV இதனை தங்களது
சுட்டிகளது சேனலுக்காக தற்போது டப்பிங் செய்து தயார் செய்து வருவது கொசுறுத்
தகவல்!)
2011-ல் சோனி நிறுவனம் ஸ்மர்ஃப்களைக் கொண்டதொரு கார்ட்டூன் 3D திரைப்படத்தை உருவாக்க- உலகளவில் வசூலை வாரிக் குவித்ததைத் தொடர்ந்து SMURFS-களின் ராஜ்ஜியம் விரிவாகிக் கொண்டே போனது! சுமார் 25 உலக மொழிகளில் இன்று வரைக்கும் கிட்டத்தட்ட 25 மில்லியன் ஆல்பம்கள் விற்பனை கண்டுள்ளன ! சராசரியாய் ஒவ்வொரு பிரெஞ்சு ஆல்பமும் 150,000 பிரதிகள் விற்கின்றனவாம்! காமிக்ஸ் விற்பனை என்ற களத்தில் மட்டும் வெற்றிக்கொடி என்றில்லாது- merchandising என்று சொல்லப்படும்- காமிக்ஸ் கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாக்கப்படும் வியாபார வாய்ப்புகளில் SMURFS கற்பனைக்கெட்டா சாதனைகள் செய்துள்ளனர்! கதைப் புத்தகங்கள்; நாவல்கள்; டிராயிங் / கலரிங் புத்தங்கள்; ABC புத்தகங்கள்; மழலைகளுக்கான ஓசை எழுப்பும் புத்தகங்கள்; ஸ்டிக்கர் ஆல்பம்கள்; CDகள்; கம்ப்யூட்டர் கேம்கள்; பொம்மைகள்; சாக்லேட்கள்; ஏகப்பட்ட விளம்பரங்களுக்கு உதவிடும் பிராண்ட் தூதுவர்கள்; என இவர்களது ஒவ்வொரு வியாபார முயற்சியும் அசாத்திய வெற்றிகள்!
Cut & back to my புராணம்!

SMURFS-களின் அசாத்திய வெற்றிகளுக்கு சாட்சிகளாக அவர்களது மீட்டிங் ஹால் முழுவதிலும் இறைந்து
கிடந்த கட்-அவுட்களை; பொம்மைகளை ‘ஆ’வென்று நான் பார்த்துக்
கொண்டிருக்க மெதுவாக தங்களது அசுர வெற்றிக்கு உறுதுணை செய்துள்ள இந்தக் குட்டி
மனிதர்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள்! கடந்த 30+ ஆண்டுகளில் நானும் உலகின் எத்தனையோ டாப் காமிக்ஸ்
நாயகர்களின் marketing யுக்திகளைப் பார்த்துள்ள போதிலும்- இந்தக் "குட்டிப்
பசங்களை" மட்டுமே வைத்துக் கொண்டு இவர்கள் தொட்டிருக்கும் உயரங்கள் பிரமிப்பைத்
தந்தன! நாம் பிரான்கோ-பெல்ஜிய உலகினுள் 1985-ல் புகுந்த நாட்களிலேயே ஸ்மர்ஃப்களும் இருந்தனர் தான் என்ற போதிலும்- அவர்களது பேசும் பாணிகளும்;
கதைக்களங்களும் நமக்கு சுவாரஸ்யம் தருமோ-தராதோ என்ற தயக்கம் என்னிடமிருந்ததால்
அந்நாட்களிலேயே இத்தொடரை அரவணைக்க நான் பெரியதொரு ஆர்வம் காட்டியிருக்கவில்லை! ஆனால்
இன்றைய நமது தேடல்களுக்கு இந்தக்
குட்டிக்கும்பல் சரிவருமென்று பட்டது! So- ஊர்க் கதை ; உலகக் கதை என்றெல்லாம்
பேசிவிட்டு நமது சமீப இதழ்களையெல்லாம் காட்டினேன் - ‘மி.மி.’ உட்பட!
‘அட... இந்தியாவில் கூட எங்கள் தேசத்துத் தயாரிப்புகளில் இத்தனை கதைத்தொடர்கள்
உலவுகின்றனவா ? ’ என்ற ஆச்சரியம் அவர்களிடம்
வெளிப்பட்டது ! ஆங்கிலத்தில் Papercutz என்ற நிறுவனம் வெளியிட்டு வரும் SMURFS ஆல்பம்களை ; சீனாவில் ; இந்தோநேஷியாவில் வெளியான ஆசிய ஆல்பம்களை காட்டினார்கள் ! ‘Graphic Novel’ என்று ஆங்கிலப் பதிப்புகளில் பெயரிட்டிருப்பதைப் பார்த்த போது எனக்குள் ஒரு
குட்டிப் புன்னகை! ஒவ்வொரு தேசத்திலும்; ஒவ்வொரு மார்கெட்டிலும் ஒரே
சொற்றொடருக்குத் தான் எத்தனை மாறுபட்ட அர்த்தங்கள் என்று நினைத்துக் கொண்டேன்! ராயல்டி
பற்றி, நமது விற்பனை முறைகள் பற்றியெல்லாம் பேசி முடித்த சமயம் - “வாருங்களேன்- எங்களது studio-வை ஒரு ரவுண்ட் பாருங்களேன்!“ என்று அழைத்தார்கள்! ‘ஆஹா...
இதைத் தானே எதிர்பார்த்தாய் பாலகுமாரா...!’ என்ற கதையாக நான் துள்ளிக்
குதித்து அவர்களைப் பின்தொடர்ந்தேன்!
தரைத்தளத்தில் அலுவலகம் ; கீழ்தளத்தில் ஆர்டிஸ்ட்களின் ஸ்டுடியோ என அமைத்திருந்தனர். அலுவலகத்தின் சுவர்கள் ப்ளூ ; அனைத்து மேஜைகளின் நிறம் ப்ளூ ; பின்னணியின் பொருட்கள் சகலமும் ப்ளூ என அதுவே ஒரு குட்டி ஸ்மர்ஃப் உலகமாய்க் காட்சி தந்தது ! பீயோவின் மறைவுக்குப் பின்னே அவரது வாரிசுகளின் நிர்வாகத்தில் ஸ்மர்ஃப் படைப்புகள் தொடர்வதாகவும், வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு ஓவியர்கள் பணியாற்றி இருப்பதாகவும் சொன்னார்கள் ! நான் போன சமயம் புதிதாய் வெளியாகவிருக்கும் ஆல்பமின் பணிகளில் தலைமை ஓவியர் ஜெரொயென் டி கொனின்க் மும்முரமாய் ஈடுபட்டிருந்தார் ! மேஜையில் பென்சில் ஸ்கெட்ச் போட்ட பக்கங்கள் ; பக்கவாட்டில் ஒரு மெகா சைஸ் கம்பியூட்டர் ; பின்னே நிறைய ஸ்மர்ப் மாடல் பொம்மைகள் ; என்று குவிந்து கிடந்தன ! துளியும் பந்தாயின்றி நேசத்துடன் கைகுலுக்கி விட்டு, அழகான இங்கிலீஷில் எனது கேள்விகளுக்குப் பதில் சொன்னார் ! அவர்களது புது ஆல்பம்கள் நிறைய தேசங்களில் நம்மூர் திரைப்படங்களைப் போல விமரிசையாக வெளியாகும் சங்கதிகள் என்பதால் - புதுத் தயாரிப்புகள் அரங்கேறும் சமயம் அது பற்றிய தகவல்கள் வெளியே கசிந்திடாது பார்த்துக் கொள்கின்றனர் என்பதால் - 'ஹி..ஹி..நான் போட்டோ எடுத்துக்கவா ?' என்ற அசட்டுக் கேள்வியை கேட்கத் தோன்றவில்லை எனக்கு ! தவிர, இன்னமும் அவர்களோடு ஒரு காண்டிராக்ட் போட்டிருக்கா நிலையில் அவர்களை தர்மசங்கடப்படுத்தத் தோன்றவில்லை எனக்கு ! So திறந்த வாயை மூடாது பராக்குப் பார்த்துக் கொண்டு நின்றேன் அவரது விரல்கள் செய்யும் ஜாலங்களை !
அவருக்கு அருகாமையில் இன்னுமொரு ஓவியர் அமர்ந்து வேறேதோ செய்து கொண்டிருந்தார்....என்னுடன் வந்திருந்த பெண்மணி எட்டிப் பார்த்து என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்க - பத்தாண்டுகளாய் வேலை செய்து விட்டு ஒய்வு பெறப் போகும் டெலிபோன் ஆபரேட்டருக்கு ஒரு அழகான ஸ்மர்ப் கார்டூன் போட்டு கீழே தன பெயரையும் கையொப்பமிட்டுக் கொண்டிருந்தார் ! என்னவொரு அட்டகாசமான memento என்று நினைத்துக் கொண்டேன்..! அவருக்குப் பின்னே இருந்த கண்ணாடிச் சுவற்றில் ஒரு குட்டி ஸ்மர்ப் பயல் தொற்றி நின்று அடுத்த கேபினுக்குள் எட்டிப் பார்ப்பது போலொரு லைன் டிராயிங் ஒட்டி இருந்தது ! ஜாலியான மனுஷன் தான் என்பதை அவரது மின்னும் கண்களும் ; சிரித்த முகமும் சொல்லின ! வழக்கமாய் கேட்கும் அதே பழைய பல்லவியை இவர்களிடமும் கேட்டு வைத்தேன் - "ஒரு பக்கத்தை உருவாக்க எத்தனை நாட்கள் பிடிக்கும் ?" என்று ! சராசரியாய் பென்சில் ஸ்கெட்ச் முடிக்க 3 நாட்கள் ; அதன் பின்னே இந்தியன் இந்க்கில் அவுட்லைன் போடவொரு இரு நாட்கள் என்று சொன்னார் ஜெரொயென் ! லெட்டெரிங்க் பணிகள் வேறொரு பிரிவின் பொறுப்பு என்று சொன்னார் !
வர்ணக் கலவைகள் இன்னொரு பக்கம் கம்பியூட்டரில் நடந்து கொண்டிருந்தது சில இளைஞர்களுடன் ! இந்தக் கதைவரிசையின் mood எப்போதுமே ஜாலியானது என்பதால் 'பளிச்' கலர்களாகவே தேர்வு செய்து கொண்டிருந்தார்கள் ! இங்கே ஒரு பக்கத்துக்கு சுமாராய் 4-5 நாட்கள் என்ற அட்டவணையில் வண்டி ஓடுகிறது ! So சராசரியாய் ஒரு 48 பக்க ஆல்பத்தின் கதைப் பணிகளைச் சேர்க்காமலே டிராயிங் & கலரிங் மட்டுமே 250 நாட்களை விழுங்கி விடுவதைப் புரிந்து கொள்ள முடிந்தது ! காமிக்ஸ் வாசிப்புகளுக்குப் புதியவர்களின் பார்வைகளில் எல்லாமே "பொம்மை புத்தகங்கள்" தான் என்றாலும் - இந்த "பொம்மை படங்கள் நிறைந்ததொரு புக்கை உருவாக்கிட இத்தனை ஆற்றலும் ; இத்தனை அவகாசமும் அவசியப்படுவதை நினைத்த போது கண்ணைக் கட்டியது ! இன்னொரு பக்கமோ கம்பியூட்டரின் முன்னே அமர்ந்திருந்த இன்னொரு இளைஞன் 3D மாடல்களை உருவாக்கிக் கொண்டிருந்தார் ! ஸ்மர்ப் கையைத் தூக்கிக் கொண்டு நிற்பது போல் ; இப்படித் தலை சாய்த்து நிற்பது போல் ; அப்படி காலைத் தூக்கி நின்று கொண்டிருப்பது போல் என விதம் விதமாய் அவர் செய்திருந்த பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன ! அவை உருவாக்கப்படும் விதம் பற்றி பிரெஞ்சு கலந்த ஆங்கிலத்தில் வேக வேகமாய்ப் பேசிட, நான் "யெஸ்..யெஸ்..யெஸ்.." என்று மண்டையை ஆட்டி வைத்தேன் ! அவர்களது merchandising பிரிவின் பொருட்டு இந்த மாடல்கள் உருவாகி வருகின்றன என்பதை மட்டும் கிரகித்துக் கொள்ள முடிந்த போதிலும், அதன் பின்னணி செயல்முறை விளக்கங்கள் லத்தீன் மொழி போல் சுத்தமாய்ப் புரியவே இல்லை ! சீனாவில் ஒரு புத்தக விழா சமீபமாய் நடந்ததாகவும், அங்கே ஸ்மர்ப் கதைகளை வெளியிடும் பதிப்பகம் தமது ஸ்டாலுக்குப் பக்கத்தில் ஒரு குட்டியான ஸ்மர்ப் கிராமத்தையே பிளாஸ்டர் ஆப் பாரிசில் செய்து மாடலாக வைத்து அட்டகாசம் செய்ததாகவும் அவர் சொன்னார் ! விரைவில் மத்திய கிழக்கில் துவங்கவிருக்கும் ஒரு தீம்பார்க்கில் "ஸ்மர்ப் உலகம்" என்றே ஒரு தனிப் பகுதி ஏகப்பட்ட விளையாட்டுக்களோடு இருக்கப் போவதாகவும், அதன் creative பின்னணி நான் பேசிக் கொண்டிருந்த இளைஞர் தான் என்றும் சொன்னார்கள் ! அந்தத் தளத்தின் இன்னொரு பகுதியிலோ கதை விவாதங்கள் ஓடிக் கொண்டிருந்தன ஒரு கண்ணாடி அறையினுள் ! மிட்டாய்க் கடையைப் பார்த்த பச்சைப் புள்ளையைப் போல வெளியில் நின்றே வேடிக்கை பார்த்தேன் - அவர்களது பணிகளைத் தொந்தரவு செய்திட வேண்டாமே என்று ! இன்னொரு பக்கமோ ஒரு யுவதி உலகெங்கிலிருந்தும் வந்து சேரும் ஸ்மர்ப் வேற்று மொழிப் படைப்புகளின் அட்டைப்படங்களை ; டிசைன்களை சரி பார்த்து ஒப்புதல் வழங்கும் வேளையில் ஈடுபட்டிருந்தார் !
சுண்டு விரல் சைஸ் மனிதர்களாக இருப்பினும், இவர்களுக்குப் பின்னே இத்தனை உழைப்பும், சிந்தனையும் மூலதனமாகிடுவதை நேரில் பார்க்கும் போது "காமிக்ஸ் is indeed serious business !" என்பது நெத்தியடியாய் புரிந்தது ! ஒரு மாதிரியாய் திரும்பவும் மேல் தளத்துக்கு வந்து சம்பிரதாய bye -bye சொல்லி விட்டு ரயில் நிலையத்தை நோக்கிய வாபஸ் பயணத்தைத் தொடர்ந்த சமயம் என் மண்டைக்குள்ளே ஸ்மர்ப் டயலாக்கள் ஓடத் துவங்கியிருந்ததன ! ஆங்கிலத்தினில் போல தமிழில் உச்சரிக்கவும், எழுதிடவும் இந்தப் பெயர் அத்தனை சுலபமல்ல எனும் போது அவர்கள் பயன்படுத்தும் அத்தனை இடங்களிலும் நம்மாலும் அந்த "ஸ்மர்ப்" வார்த்தையினை லாவகமாய்ப் பயன்படுத்தல் சாத்தியமாவென்று எனக்கு சொல்லத் தெரிந்திருக்கவில்லை ! Anyways காண்டிராக்ட் கைக்கு வந்து, நாம் பணம் அனுப்பி, அதன் பின்னே கதை(கள்) கைக்கு வந்து சேர்ந்திட இன்னமும் அவகாசம் உள்ளதேனும் போது - அதற்குள் இந்த ஸ்மர்ப் பாஷையைக் கற்றுத் தேர்ந்து கொள்ளப் பார்ப்போமே என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன் ! தொடரும் இந்த வாரத்தினில் காண்டிராக்ட் நம் கைகளுக்குக் கிட்டி விடுமென்றும் ; காத்திருக்கும் நமது கார்ட்டூன் ஸ்பெஷல் இதழினில் இந்த நீல மனிதர்களை உலா வரச் செய்வது சாத்தியமாகிடுமென்றும் நம்புகிறேன்...!
இதே போலவே இன்னமும் 2 புது வரவுகளுக்காக துண்டை விரித்து வைத்து, படைப்பாளிகளின் பதில்களுக்காக waiting என்பதால் தான் கா.ஸ்பெ. பற்றிய அறிவிப்பு இன்னமும் தாமதம் காண்கிறது ! வழக்கமாய் போடும் கதைகளை ஒன்றிணைத்து அது தான் ஸ்பெஷல் என்று உங்கள் தலைகளில் சுமத்துவதை விட - கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டாவது அழகான-புதுக் கதைகளோடு உங்களை சந்திக்க முயற்சித்து வருகிறேன் folks ! இன்னொரு ராட்சசப் பதிப்பகமோ - "4 வார அவகாசம் கொடுங்கள் எங்கள் தீர்மானத்தைச் சொல்லிட" என்று கோரி 15 நாட்கள் ஆகின்றன ! அதுவும் நமக்கு சாதகமாய் அமைந்திடும் பட்சம் ஒரு கார்ட்டூன் ஸ்பெஷல் மட்டுமல்ல - ஒரு நூறு ஸ்பெஷல்கள் சாத்தியமாகிடும் என்பதால் பொறுமையாய்க் காத்திருக்கிறேன் ! இம்முயற்சிகளின் வெற்றி-தோல்வி பற்றிய கணிப்புகள் செய்திடும் திறன் என்னிடமில்லை ; and இதைப் பற்றி நான் வெளியே பேசாதேவும் இருந்திடுவது தான் எனது வழக்கமும் கூட ! மாம்பழம் கிட்டும் போது அதைப் பற்றிப் பேசிக் கொள்ளலாம் ; கல் மட்டுமே திரும்ப வந்து முன்மண்டையைப் பதம் பார்க்கும் பட்சத்தில் சத்தமின்றி வீக்கத்துக்கு ஒத்தடம் கொடுத்து விட்டு 'ஒட்டலியே..மீசையில் மண்ணே ஒட்டலியே.." என்று வண்டியை ஓட்டியும் இருக்கலாம் ! ஆனால் உங்களுள் பலருக்கும் இதழ் பற்றிய அறிவிப்பைக் காணோமே என்ற ஆதங்கம் தலைதூக்குவதாலேயே தான் திரைக்குப் பின்னே இருக்க வேண்டிய சில சங்கதிகள் முதல்முறையாக மேடைக்கு வருகின்றன ! So please relax folks....rest assured we are not lacking on efforts..!
ஒரு வியாபாரத்தின் துரிதத்தையோ / மந்த கதியையோ நிர்ணயம் செய்திடும் அதிகாரம் எல்லா நேரங்களிலும் நம் கைகளில் இருப்பதில்லை என்பது தான் யதார்த்தம் ! தவிர, நிறைய நேரங்களில் கதைகளின் உரிமைகளைக் கோரிப் பெறும் பணிகள் அதன் படைப்பாளிகளின் சட்டபூர்வ வாரிசுகளின் ஒப்புதல்களுக்காகத் தாமதப்படுவதும் நடைமுறை ! சில தருணங்களில் உரிமைகள் ஒரு legal trust வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கவும் செய்யும் ; அவ்வேளைகளில் பேரம் பேசுவதென்பது கண்ணாடி மேல் நடப்பது போலானதொரு அனுபவம் ! காலில் தக்காளிச் சட்னி ஒழுகினாலும் கூட காட்டிக்காமல் புன்னகை மன்னனாய் தொடர்ந்திட வேண்டி வரும் ! இந்த நர்த்தனங்கள் எல்லாமே எங்கள் பணியின் ஒரு அங்கமென்பதால் இவற்றை பெருசாய் நான் சிலாகிப்பது முறையாகாது ! உங்களிடமிருந்து நாங்கள் கோரிப் பெறும் பைசாக்களும், பாராட்டுக்களும் இந்த சங்கடங்களுக்கும் சேர்த்தே தான் எனும் போது இது பற்றிய நீட்டி முழக்கல்கள் நியாயமாகாது தான் ! ஆனால் இந்த சூழலில் நண்பர்களுக்கு கொஞ்சமே கொஞ்சமாய் ஒரு புரிதல் புலர்ந்திடும் பொருட்டே இந்தப் பிலாக்கனங்கள் சகலமும் ! And yes, முயற்சிகளில் தற்போதைக்கு வெற்றி கிட்டாது போயின், இருக்கும் இட்லியையே உப்மாவாக்கிப் பரிமாறும் ஹி..ஹி..வைபவங்களுக்கும் வாய்ப்புகள் உண்டே... ; but இயன்றமட்டிலும் காத்திருந்து பார்ப்போமே என்ற சின்னதொரு வைராக்கியம் தான் இம்முறை என்னை இயக்கி வருகிறது ! நம்புவோம்...நல்லது நடக்குமென்று !!
Before I sign off - கடந்த சில நாட்களாய் இங்கே அரங்கேறி வரும் களேபரம் பற்றிய எனது ten cents : வாழ்க்கையில் ஒவ்வொரு தினமும் ஒருவிதச் சவாலை முன்வைக்கும் வேளைகளில் இது போன்ற ஒன்றரை அணா பெறாத மோதல்களை நமக்குள்ளே நடத்திக் காட்டி நாம் சாதிக்கப் போவது தான் என்னவோ ? இதில் தவறு யார் மீது ? ; எதனால்..? எங்கிருந்து ஆரம்பித்தது ? போன்ற ஆராய்ச்சிகளில் செலவிடும் நேரத்தை ஆரோக்கியமான எத்தனையோ பல விஷயங்களில் காட்டித் தான் பார்ப்போமே guys ? நமக்குள் அபிப்பிராய பேதங்கள் நேரும் பொழுதுகளில் சட்டென்று ரியாக்ட் செய்திடாது அந்த கணத்தைக் கொஞ்சமாய் தாண்டிப் போகத் தான் விட்டுப் பார்ப்போமே - மனதின் கனம் அந்த அவகாசத்தில் சற்றே குறைகிறதா என்று பார்த்திடும் பொருட்டு ? பிரச்சனைகள் எதுவாக இருப்பினும், முற்சந்தியில் வைத்து அவற்றை சலவை செய்ய முற்படுவதும், சக வாசகரின் குடும்பத்தை இந்த சண்டைகளுக்குள் இழுப்பதும் நிச்சயமாய் வேதனைக்கு வித்திடும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்துக்கள் இருந்திட முடியாது ! நட்பை ; நேசத்தைச் சம்பாதிக்க ஒரு ஆயுட்காலம் போதாது guys; அதனை நான்கே சூடான வரிகளினாலும், சில நொடிப் பொழுதுகளின் ஈகோ மோதல்களாலும் ; பழசைச் சேகரிக்கிறேன் - விற்கிறேன் பேர்வழி என்ற முயற்சிகளினாலும் அநியாயமாய் கடாசும் வேலை நமக்கெதற்கு ? வார்த்தைக்கு வார்த்தை ; கருத்துக்குக் கருத்து என்று அறிக்கைப்போர் விடும் அக்கப்போரை நம் தலைவர்களிடம் விட்டு விட்டு - நாம் தல..தளபதி அபிமானிகளாய் மாத்திரமே தொடர்ந்திடுவோமே ? Peace be with us ! See you around all..Bye for now !
P.S: ஜூன் இதழ்கள் புதன் காலையில் இங்கிருந்து புறப்படும் ! அன்றைய காலைப் பதிவில் "விடுதலையே உன் விலையென்ன ?" ட்ரைலர் பிரசன்னமாகிடும் !