Powered By Blogger

Sunday, October 26, 2014

பில்லியனரின் வேளை இது ..!

நண்பர்களே,

வணக்கம். பழையன கழிதலும்..புதியன புகுதலும் காலத்தின் கட்டாயங்களே என்றாலும் , இப்போதெல்லாம் ஜெட் வேகத்தில் ஒவ்வொரு மாதத்தையும், ஒவ்வொரு இதழையும் கடந்து செல்வது நமக்கு வாடிக்கையாகி விட்டது ! "இரவே..இருளே..கொல்லாதே.." இதழின் இறுதிப் பணிகளுக்குள் மூழ்கியிருந்தது நேற்றுத் தான் என்பது போல் தலைக்குள் நினைவுகள் பசேலென்று நின்றாலும், இதழ் வெளியாகி, அதன் review -ம் அலசப்பட்டு, what next ? என்ற கேள்வியோடு நிற்கிறோம்! பதில் சொல்லக் காத்து நிற்பவர் கோடீஸ்வரக் கோமான் லார்கோ வின்ச் - தனது புதியதொரு சாகசத்தோடு ! 


"ஒரு நிழல் நிஜமாகிறது !" - லார்கோவின் கதை வரிசையில் அத்தியாயங்கள் 11 & 12 ! 1990-ல் துவங்கிய தொடர் எனினும், நிதானமாய் இரண்டாண்டுகளுக்கொரு பாகம் என்ற ரீதியில் படைப்பாளிகள் இதனை நகர்த்திச் சென்றுள்ளதால் கையிருப்புக் கதைகளின் எண்ணிக்கை இப்போது வரையிலும் 18-ஐத் தாண்டவில்லை ! தொடரும் நவம்பரில் அத்தியாயம் 19 ஐரோப்பாவில் ரிலீஸ் ஆகிறது - பெரும் விளம்பரமும், ஆர்வமும் படை சூழ ! ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக நான் பெல்ஜியம் பயணம் மேற்கொண்ட பொழுது - கதாசிரியர் வான் ஹாம்மேவை சந்திக்கத் துளியூண்டு வாய்ப்பாவது உண்டா ? என்று கேட்டிருந்தேன் ! "ஊஹூம் ...நல்ல நாளைக்கே அவர் பிசியோ பிசி ; தற்போது ஓவியர் பிரான்க் சகிதம் லார்கோவின் புதியதொரு ஆல்பத்தின் discussion -ல் மூழ்கியுள்ளார் ! நாங்களே அவரை அணுக வழியில்லை !' என்று கைவிரித்து விட்டனர் ! இதோ அந்நேரத்தில் பிரஸ்ஸல்ஸ் நகரில் இந்த ஜாம்பவான்கள் சந்தித்துக் கொண்ட போது click செய்யப்பட போட்டோ  !  

கண்ணாடி அணிநிதிருப்பவர் : கதாசிரியர் வான் ஹாம்மே. 
புதிய ஆல்பத்தின் கதைக்களம் இலண்டன் என்று தீர்மானமாகி உள்ளதாகவும், அங்கு டேரா போட்டு ஓவியர் பிரான்க் கதைக்கு வாகான location-களைத் தேடி வருகிறார் என்றும் பின்னாட்களில் அவரது வலைப்பதிவில் தகவல்கள் வெளியாகிய போதே லார்கோ ரசிகர்கள் தயாராகத் தொடங்கி விட்டனர் - ஒரு புது அதிரடியை வரவேற்க ! திரைப்படங்களுக்கு location பார்ப்பது போல் இலண்டனில் ஓவியர் சுற்றித் திரிவதைத் தான் பாருங்களேன்..! 


நேரில் பார்த்த இடங்களைப் புகைப்படங்களாக்கி ; பின்னர் அவற்றை சித்திரங்களாக்கும் லாவகத்தையும் ரசிக்க நிறையவே வாய்ப்புகள் நல்கியுள்ளனர் படைப்பாளிகள்  : 



தத்ரூபமும், நிஜவுலகின் நுணுக்கங்களும் இம்மி பிசகாது கிட்டிட வேண்டுமென்பதற்காக அவர்கள் மேற்கொள்ளும் பிரயத்தனங்களைப் பார்க்கும் போது பிரமிக்காமல் இருந்திட இயலவில்லை !  இன்றைய கணினி உலகில் ஓவியரின் பணிகள் கொஞ்சம் சுலபமாகி விட்ட போதிலும் - இது போன்ற dedicated முயற்சிகள் மட்டுமே அவர்களின் வெற்றி இரகசியமாய் தொடர்ந்து வருகிறது ! இதோ - லார்கோவின் புது வரவின் அட்டைப்படமும், உட்பக்கத்தின் ஒரு குட்டி preview -ம் ! 

Largo - 19
குழந்தையைக் கருவிலிருந்து சுமந்து, ஈன்றெடுத்து ; அதனைப் பராமரிப்பது போல - தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் படைப்பாளிகள் முழுவதுமாய் involve ஆகிக் கொள்வதைப் பார்க்க முடிகின்றது - அச்சுப் பிரிவிலும் ஓவியர் மும்முரமாய் நிற்பதைக் காட்டும் இந்தப் புகைப்படத்திலிருந்து ! 

Watching Largo get printed...!
இதழின் வெளியீட்டிற்கு முன்பாக படைப்பாளிகளின் டி.வி.பேட்டிகள் ; நகர் முழுவதும் போஸ்டர் தோரணங்கள் ; கவனத்தை ஈர்க்கும் விதமாய் ஒவ்வொரு காமிக்ஸ் புக் ஷாப்பிலும் பிரத்யேக கட் அவுட்கள் என்று நவம்பரில் ஐரோப்பாவில் ஒரு லார்கோ மேளா அரங்கேறும் என்பது நிச்சயம் ! தற்போது வெளியாவது புதுக் கதையின் முதல் அத்தியாயமே என்பதால் இதன் follow up 2015-ன் இறுதியில் அல்லது 2016-ல் தான் வெளிவரும் ! இம்மாதம் லார்கோ # 11 & 12-ஐ எட்டிப் பிடிக்கும் நாம் - கூடிய சீக்கிரத்திலேயே ஐரோப்பாவில் புது இதழ் வெளியாகும் தருணத்தை விரட்டிப் பிடித்து விடுவோம் !   

இதோ இம்மாதம் நாம் சந்திக்கவிருக்கும் லார்கோவின் அட்டைப்படம் + உட்பக்க டீசர் ! ஒரிஜினல் ராப்பரையே, லேசான வர்ண மாற்றங்களோடு முன்னட்டைக்குத் தயாரித்துள்ளோம் ! நீண்ட காலம் கழித்தொரு வெள்ளை background அட்டைப்படம் என்ற வகையில் இதுவொரு சிம்பிள் லுக் அட்டையே ! But  அட்டையின் சுலபத்தன்மைக்கு சவால் விடும் விதமாய் உட்பக்கங்களில் ஒரு பர பர ஆக்க்ஷன் saga காத்துள்ளது  ! அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டுள்ள இந்தக் கதையினில் சைமனும் முழுக்க முழுக்க பயணிக்கிறான் - புதியதொரு அவதாரில் ! 
நாளைய தினம் அச்சுப் பணிகள் துவங்குகின்றன கோமானை உங்களிடம் கூடிய சீக்கிரத்தில் கொணர்ந்து சேர்க்கும் பொருட்டு ! இதனோடு ரிபோர்டர் ஜானியின் "சைத்தான் வீடு" (வண்ண) மறுபதிப்பும் இணையவுள்ளது என்பதால் நவம்பரில் உங்கள் பொழுதுகளை சுவாரஸ்யமாக்கிட நிறையவே வாய்ப்புகள் இருந்திடும் ! எல்லாவற்றையும் விட 2015-ன் அட்டவணையும் இந்த இதழ்களோடு பயணம் செய்யவுள்ளதால் - நமக்கென கொஞ்சம் கூடுதலாகவே நேரத்தை இம்முறை நீங்கள் ஒதுக்கிடல் தேவையாகலாம் ! Please do keep your weekends free this November folks ! நவம்பர் 4-ஆம் தேதி இதழ்கள் + அட்டவணை உங்கள் இல்லங்களைத் தேடித் புறப்படும் ! 

அப்புறம் கடந்த பதிவில் ஜூனியர் எடிட்டரின் பிறந்த தினத்தை நினைவு கொண்டு வாழ்த்துச் சொன்ன நண்பர்களுக்கு (தாமதமான) நன்றிகள் ! அதே போல - சமீபமாய் வெகுஜன மீடியாவில் நம்மைப் பற்றியும், (தமிழ்) காமிக்ஸ் இதழ்களைப் பற்றியும் வெளிவந்திருந்த கட்டுரைகள் தொடர்பாக எழுந்த சிறு சலனத்தையும் சற்றே தாமதமாகவே பார்த்தேன் ! கட்டுரையாளர்களின் பார்வைகள் நமது தற்போதைய trend-ல் இருந்து சற்றே விலகி இருந்தாலும் கூட, அவர்களது நோக்கங்களில் குறைபாடுகள் இருப்பதாய் நிச்சயமாய் நான் நினைக்கவில்லை ! அதே போல ஹிந்துவின் கட்டுரையில் நிறையவே factual errors இருப்பதை நாமறிவோம் ; ஆனால் (தமிழ்) காமிக்ஸ் எனும் இந்தப் பிரத்யேக லோகத்திற்குள் ரெகுலராக ஷண்டிங் அடிக்க வாய்ப்பிலாத casual readers-களுக்கு மேலோட்டத் தகவல்களே சாத்தியம் என்பதால் - தவறுகளை தாண்டிச் செல்வதே நமக்கிருக்கும் ஒரே வலி(ழி) ! நமது காமிக்ஸ் பற்றி எழுதும் தருணங்களில் ஒரு முறை நம்மோடு சரி பார்த்துக் கொள்ளுங்களேன் ! எனக் கோரும் வாய்ப்புகளோ ; அரைத்த மாவுகளையே அரைக்காமல் புதுப் பார்வைக் கோணங்களில் காமிக்ஸ் பற்றிய கட்டுரைகளை எழுதலாமே ?! என்ற நம் ஆதங்கங்களை வெளிப்படுத்துவதோ easier said than done  ! வெகுஜன மீடியா எடிட்டர்கள் நம் கோரிக்கைகளை அத்தனை சீரியசாக எடுத்துக் கொள்ளும் வாய்ப்புகள் சொற்பமே ! தவிர ஒவ்வொரு பேட்டியின் போதும் நமது பதில்களின் சகலமும் அப்படியே அச்சுக்குச் செல்வது கிடையாது என்பதால் - சிற்சிறு communication இடைவெளிகள் நேர்வது தவிர்க்க இயலா விஷயங்களாகவே இருந்து வருகின்றன ! மேலைநாடுகளில் போல் ஒரு dedicated காமிக்ஸ் journal இருந்தால் தவிர - காமிக்ஸ் பற்றிய செய்திகளில் ஆழத்தை எதிர்பார்த்தல் சிரமமே ! ஆனால் அதற்காக நம் பக்கம் கிட்டும் focus -ஐ ஒதுக்குவதோ ; அதனை அலசி ஆராய்வதோ நமக்குத் துளியும் நன்மை தராது என்பதால் கிடைப்பதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முனைவோம்!     

Moving on to lighter things, தொடரும் அடுத்த பதிவு  ஒரு 'ஜூம்பல ஜூம்ம்பா'  topic -ல் இருக்கக் காத்துள்ளது ! அதனை இப்போதே மண்டைக்குள்ளே தயாரிக்கத் தொடங்கி விட்டேன் என்ற பில்டப்போடு  நடையைக் கட்டுகிறேன் ! அது என்னவாக இருக்குமென நீங்கள் 'ரோசனை' செய்யும் தருணத்தில் - நான் "கிங் ஸ்பெஷல் " இறுதிக்கட்டப் பணிகளைக் கவனித்து விடுகிறேன் ! See you around soon folks ! Bye & have a great weekend ! 

351 comments:

  1. ஐ லார்கோவோடு அதிரடி பதிவு. சூப்பர் சார்!!! படங்களால் ஒரு பதிவு!

    ReplyDelete
  2. /தற்போது வெளியாவது புதுக் கதையின் முதல் அத்தியாயமே என்பதால் இதன் follow up 2015-ன் இறுதியில் அல்லது 2016-ல் தான் வெளிவரும் !//
    நாம் கொடுத்துவைத்தவர்கள் - அடுத்தடுத்த இரண்டு பாகங்களை ஒன்றாகப் படித்துவிடுகிறோம் - மாதக்கணக்கில் காத்திருக்கும் அவஸ்தையின்றி.

    ReplyDelete
    Replies
    1. Podiyan : சில தருணங்களில் வருடக்கணக்கிலும் காத்திருப்பு உண்டு !!

      இம்மாதம் நாம் வெளியிடவிருக்கும் "நிழல் நிஜமாகிறது தயாரானது 2000-ல் ! அதன் தொடர்ச்சியான "சதுரங்கம் லார்கோ ஸ்டைல்" - 2002-ல் !!

      Delete
    2. யம்மா..டி... நமக்கு ஒரு இரத்தப்படலமே போதும் சாமியோவ்! :-)

      Delete
  3. படிச்சுட்டு வருவோம்

    ReplyDelete
  4. /நமது காமிக்ஸ் பற்றி எழுதும் தருணங்களில் ஒரு முறை நம்மோடு சரி பார்த்துக் கொள்ளுங்களேன் ! எனக் கோரும் வாய்ப்புகளோ ; அரைத்த மாவுகளையே அரைக்காமல் புதுப் பார்வைக் கோணங்களில் காமிக்ஸ் பற்றிய கட்டுரைகளை எழுதலாமே ?! என்ற நம் ஆதங்கங்களை வெளிப்படுத்துவதோ easier said than done ! வெகுஜன மீடியா எடிட்டர்கள் நம் கோரிக்கைகளை அத்தனை சீரியசாக எடுத்துக் கொள்ளும் வாய்ப்புகள் சொற்பமே ! //

    ஊடகங்களில் பணியில் உள்ள நண்பர்கள் இந்த விடயத்தில் சற்றே கவனம் செலுத்துவார்களாக. தற்போது நமது காமிக்ஸ்களின் தோற்றம், உள்ளடக்கம், நேர்த்தி, வெளிவரும் கால ஒழுங்கு போன்றன மிகப்பெரிய மாற்றத்துக்கு உள்ளாகியிருப்பதை ஃபோகஸ் செய்வது அவசியம். இப்போதும் 80 களிலேயே கட்டுரையாளர்கள் பயணித்துக்கொண்டிருப்பது ஏற்புடையதல்ல. கட்டுரைகள், பேட்டிகள் வெளிவரும்போது புதிய இதழ்களின் அட்டைப்படங்களுக்கும் போதிய இடம் வழங்கப்படவேண்டும். கூகிளாண்டவரிடம் தேடும்போது கிடைக்கும் பழைய, ஒருசில அட்டைப்படங்களே எல்லாக் கட்டுரைகளிலும் பேட்டிகளிலும்... ஹூம்...

    ReplyDelete
  5. இரத்தப்படலம் புத்தகம் கூரியரில் அனுப்பி
    விட்டதாக மெயில் வந்துள்ளது.. நன்றி சார்
    மற்றும் பாம் பாம் நண்பருக்கும் மிக்க நன்றி ..
    ஆர்வமாக காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  6. டியர் சார் ,

    ஓட்டை வாய் உலகநாதன் அவர்களை எதிபர்த்திருந்தேன் :)
    ஆனால் பதிவு பெவிகோல் பெரியசமி அவர்களால் எழுதபட்டுள்ளது :(
    இன்னும் 1 மாதமே உள்ள நிலையில் கிங் ஸ்பெஷல் மற்றும் அட்டவணை ஒரு கொடு போட்டிருக்கலாம்

    I am waiting

    ReplyDelete
    Replies
    1. Suresh Natarajan : //இன்னும் 1 மாதமே உள்ள நிலையில் கிங் ஸ்பெஷல் மற்றும் அட்டவணை ஒரு கொடு போட்டிருக்கலாம் //

      காத்திருக்கப் 10 நாட்களே...!! நவம்பர் 5-ல் உங்களிடம் சகல பதில்களும் இருக்கும் !

      Delete
    2. Thank you Sir, Nov 5, seems to be a Long weight now :)

      Delete
  7. To Edi,
    சார், ஒரு நிழல் நிஜமாகிறது அட்டைப்படத்தில் காபி ஊற்றுண்டது போல அழுக்கு தென்படுகிறதே?

    ReplyDelete
    Replies
    1. பாலில் முக்கி புரட்சி தீ மாதிரி குடித்துப் பார்க்கவும் :-)

      Delete
  8. டியர் எடிட்டர்,

    டிசம்பெர்ல் நாலு வெளியீடுகளா? கொஞ்சம் உருதிப்படுத்துங்களேன் !

    I-I-K was superb - in line with a string of classical hits this second half of the year starting with Magic Wind !

    ReplyDelete
    Replies
    1. Raghavan :// டிசம்பெர்ல் நாலு வெளியீடுகளா?//

      5 !

      Delete
    2. Raghavan : //I-I-K was superb - in line with a string of classical hits this second half of the year starting with Magic Wind !//

      அந்தத் தரத்தை sustain செய்வதே இப்போதுள்ள சவால் !!

      Delete
    3. 5ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.. .....பேராவது சொல்லுங்கள் சார் ?

      Delete
    4. WOW...feeling excited...waiting for december....

      Delete
  9. Sir
    உங்களது பெயர் லிஸ்ட்டில்
    சஸ்பென்ஸ் சங்கரலிங்கனார்
    சர்ப்ரைஸ் சண்முகம்
    முதலிய பெயர்களை சேர்க்கலாமா என்ற ஆலோசனையில் சங்கம்

    ReplyDelete
    Replies
    1. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : "மொக்கை முத்தண்ணா" ஆகாத வரை ஷேமமே !!

      Delete
  10. நண்பர்களே இதுவரை வந்த லார்கோ கதைகளில் எந்த கதை சிறந்த கதை?

    ReplyDelete
    Replies
    1. Sankar.R : எனது favorite "ஆ.அ.செ" !

      Delete
    2. கான்க்ரீட் கானகம் நியு யார்க் ..சுறாவோடு சடு குடு

      Delete
    3. துரத்தும் தலைவிதி- விதியோடு விளையாடுவோம்

      Delete
    4. துரத்தும் தலைவிதி- விதியோடு விளையாடுவோம்

      Delete
    5. லார்கோ கதைகள் அனைத்துமே.!

      Delete
  11. டியர் எடிட்,

    லார்கோ ஓவிய கட்டங்கள் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லும்... அதற்கு பின்பான ஓவிய திறமை அபரிதம்.

    அட்டையில் உங்கள் டிசைனர் ஒரு தேசிய கொடி வர்ணமே தீட்டிவிட்டாரே. ;)

    ReplyDelete
    Replies
    1. Rafiq Raja : அட...இரவுக் கழுகளுக்குப் பஞ்சமே இராத சனியிரவு போல் தெரிகிறதே !!

      Delete
    2. டியர் எடி,

      புலரும் வாரத்தின் வேலை பளுவை எண்ணியே ஞாயிறு இரவுகள் அஸ்தமியக்கையில், என்றும் குறையா அட்சயபாத்திரமாக தோன்றுவது சனி இரவுகள் தானே :P

      Delete
    3. Rafiq Raja @ // புலரும் வாரத்தின் வேலை பளுவை எண்ணியே ஞாயிறு இரவுகள் அஸ்தமியக்கையில்,
      என்றும் குறையா அட்சயபாத்திரமாக தோன்றுவது சனி இரவுகள் தானே //
      நிஜம், வார்த்தைகள் மூலம் அருமையாக வெளிபடுத்தி உள்ளீர்கள் :-)

      Delete
  12. ஒரு சின்ன டவுட் ,

    பைக் பில்லியன்ல உக்காந்து போறவங்களதானே பில்லியனர்கள் அப்படீன்னுசொல்கிறோம் ..... .??

    ReplyDelete
    Replies
    1. பில்லியன் பைக் வைத்திருந்தா பிள்ளியனர்கல்தான் !

      Delete
    2. உட்கார்ந்து போறவங்க எப்படியோ ......பைக் ஆக்ஸிடென்ட் புள்ளி விவரங்களை பாத்தா ஓட்டிட்டு போறவங்கள்ள பாதிபேரு "மில்லி "யனர்கள்தான்

      Delete
  13. Largo winch after long time, thanks for providing insights into book preparation.

    Excited for reporter Johnny reprint.

    I-I-K , is it part of super 6 ?

    ReplyDelete
  14. ஐந்தா!
    1. King spl
    2. magic wind
    3.Danger Diabolik
    4.Graphic novel
    5. ?

    ReplyDelete
  15. ஐந்தாவது புத்தகம் என்ன நண்பர்களே
    any guesses

    ReplyDelete
    Replies
    1. 1. The King Special
      2. நள்ளிரவு நங்கை
      3.மேஜிக் விண்ட்
      4. டேஞ்ஜர் டயபோலிக்
      5. வானம் எங்கள் வீதி - GN

      Delete
  16. கார்சனின் கடந்த காலம்
    கதையின் ஆரம்பத்தில் அதன் சித்திரம்கள் மனதை நெருடியது உண்மை, ஆனால் கதையின் அடுத்த அடுத்த பக்கம்கள் என்னை கதைக்குள் முழ்கடித்த படியால் சித்திரம் பற்றிய நெருடல் காணாமல் போனது. அருமையான கதை, இதன் விளம்பரத்தில் குறிப்பிட்டது போல், காதல், நட்பு, பழிவாங்கல் என அனைத்தும் கலந்த தரமான கதை. சம பலம் வாய்ந்த எதிரிகள், டெக்ஸ்-ன் வழக்கமான ஹீரோ தனம் இல்லாத, கார்சனை அதிகம் நக்கல் பண்ணாத ஒரு இயல்பான கதையை படித்த திருப்தி.

    கருப்பு வெள்ளையில் வெளியான இந்தக்கதை புத்தகம் என்னிடம் உள்ளது, ஆனால் தற்போது படித்த போது எனக்கு ஒரு புது அனுபவத்தைதந்தது, அது வண்ணத்தில் வெளியான காரணமாக இருக்கலாம்; எனது நன்றி ஆசிரியர் மற்றும் லயன் அலுவலக நண்பர்கள் அனைவருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. என்னாது .. இந்திரா காந்திய சுட்டுட்டாங்களா :-)

      Delete
    2. [Mr.Paranitharan - take it easy - I could not control - sorry :-) :-) :-)]

      Delete
  17. 5. நள்ளிரவு நங்கை- டைலன் டாக்

    ReplyDelete
    Replies
    1. 3. Danger Diabolik இவர் வருவதாக நமது காமிக்ஸ் அட்டவணையில் குறிப்பிடவில்லை

      Delete
    2. பார்க்க புக்ஃபேர் ஸ்பெஷல்2

      Delete
    3. நன்றி, இதனை நான் கவனிக்கவில்லை!

      Delete
  18. 5. நள்ளிரவு நங்கை- டைலன் டாக்

    ReplyDelete
  19. 'ஜூம்பல ஜூம்ம்பா' magic wind பற்றியதா? 2015 அல்லது புதிய கதை நாயகர்களா? அறிய ஆவர்மாக உள்ளது.
    2015 வேறு ஏதும் காமிக்ஸ் தொகுப்புகள் வரவுள்ள வா என அறிய ஆவல்.

    ReplyDelete
    Replies
    1. லார்கோ கதை உருவாக்கத்தின் மேனக்கடலை புரிந்து கொள்ள கூடிய தகவலுடன் இந்த பதிவு வித்தியாசமாக உள்ளது.

      Delete
    2. இந்த வருடத்தின் இறுதியில் 5 புத்தகம்கள் வரவுள்ளன என்பது இனிப்பான செய்தி... புதிய வருடத்தை வரவேற்பதற்கு காமிக்ஸ் ரசிகர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்; டிசம்பர் மாதம் நமது காமிக்ஸ் வரலாற்றின் ஒரு சாதனையாக அமைய வாழ்த்துக்கள் விஜயன் சார்.

      Delete
    3. // மேலைநாடுகளில் போல் ஒரு dedicated காமிக்ஸ் journal இருந்தால் தவிர - காமிக்ஸ் பற்றிய செய்திகளில் ஆழத்தை எதிர்பார்த்தல் சிரமமே ! ஆனால் அதற்காக நம் பக்கம் கிட்டும் focus -ஐ ஒதுக்குவதோ ; அதனை அலசி ஆராய்வதோ நமக்குத் துளியும் நன்மை தராது என்பதால் கிடைப்பதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முனைவோம்! //
      +1

      Delete
    4. //இந்த வருடத்தின் இறுதியில் 5 புத்தகம்கள் வரவுள்ளன என்பது இனிப்பான செய்தி... புதிய வருடத்தை வரவேற்பதற்கு காமிக்ஸ் ரசிகர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்; //
      +1

      Delete
  20. லார்கோவின் வெற்றிக்குப் பின்னால் உள்ள உழைப்பை அருமையாக வெளிக்காட்டும் நல்ல பதிவு,லார்கோ என்றாலே தமிழிலும் திருவிழா தான்.

    ReplyDelete
  21. அக்டோபரில் தீபாவளி முடிந்தாலும் உண்மையான திருவிழா நவம்பர் மாதம் தான் ! நவம்பர் மாதம் Largo winch திருவிழா மாதம்! கார்சனின் கடந்த காலம் கறுப்பு வெள்ளையில் வேகமாக 1/2 நாளில் 2 பாகங்களை படித்த நான் வண்ணத்தில் நிதானமாக கடந்த 2 வார காலமாக ரசித்து படித்து வருகிறேன்! இன்னும் Halloween Special வேறு படிக்க வேண்டும்! நண்பர்களின் கருத்துகளில் இருந்து Halloween special Super Hit என தெரிகிறது!

    ReplyDelete
  22. ஏஜன்ட் ஒப்படைத்த பழைய காமிக்ஸ் லிஸ்ட் தருவதாக கூறினீர்களே?

    ReplyDelete
  23. இனிய காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  24. ஒரு மழை ஞாயிறின் ஈரமான காலை வணக்கம் நண்பர்களே.?

    ReplyDelete
  25. டிசம்பர் மாதம் ஐந்து காமிக்ஸ் வர உள்ளனவா
    Yipee.. :D

    ReplyDelete
    Replies
    1. நவம்பருக்கு முன்னாடியே டிசம்பர் வந்து விட்டால் நன்றாக இருக்கும் இல்லையா அல்லது சேர்ந்து வந்தாலும் சரிதான் ...

      Delete
    2. டிசம்பர் எப்போதும் ஒரு special தான்

      Delete
  26. காதுகுத்து functionஐ சிறப்பிக்க (ஆமாமா. கிடா விருந்தேதான்.) பயணித்து கொண்டிருப்பதால் பதிவில் என்ன படித்தேன் என்பதே நினைவில்லை. (எண்ணமெல்லாம் அந்த சின்ன விருந்தைப்பற்றி.) எனவே நேரம் கிட்டும் வேளையில் மீண்டும் பதிவை படித்துவிட்டு கமெண்டுகிறேன். இப்போதைக்கு ஹேப்பி சண்டே.(Sunday) ,.ஹிஹிஹி.!

    ReplyDelete
    Replies
    1. ஆடு இருக்கற அதே வேன்லதானே ஏறியிருக்கீங்க ?..;)

      Delete
    2. மங்கூஸ் மாமா நீங்களுமா ? நானும் ஓரு காது குத்து விழாவை சிறப்பிக்க 11:30க்கு போக இருக்கிறேன்.

      Delete
    3. நண்பர்களே இன்று நான் போக இருக்கும் விழா நம்முடைய காமிக்ஸ் நண்பர் ஒருவரின் வீட்டு விசேஷம். ஆம் ஸ்பைடர் வெறியர் ஆன அவரின் 3வயது குட்டி பாப்பாவுக்கு காது குத்து இன்று. அவரின் பெயர் ஸ்பைடர் ........... ஆசிரியருக்கு அவரை நன்கு தெரியும். இனம் நடக்கும் விழாவில் கலந்து கொள்ள இருக்கும் சில காமிக்ஸ் நண்பர்களை சந்திக்க ஆவலாக உள்ளேன். ஒரு மினி ஈரோடு எபக்டு இருக்கும் என் நினைக்கிறேன். மதியம் ஏதேனும் புதிதாக நண்பர்களை பார்த்தால் அதுபற்றி மாலை டைப்புகிறேன். இப்போது கிளம்பி போக ரெடியாகுறேன்.

      Delete
    4. நண்பர்களே இன்று என்ன 'காது குத்தும் படலமா'...மதுரை திருப்பரங்குன்றத்தில் என் ஜூனியருக்கும் இன்று காலைதான் 'காது குத்து'. எனக்கு வாய்த்ததென்னவோ Whatsapp, Skype-வழி தூரதர்சன் மட்டுமே...!?

      Delete
    5. உங்கள் ஜூனியருக்கு வாழ்த்துக்கள் ராஜவேல் சார்.இது காது குத்தும் வேளை! அடுத்த வாரம் லார்கோ "குத்தும்"வேளை!

      Delete
  27. @ Vijayan

    அடுத்த தடவை நீங்கள் பெல்ஜியம் போகும் பொது கதாசிரியர் வான் ஹாம்மேவை சந்தித்து பேச உங்களுக்கு வாய்ப்பு கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  28. இனிய காலை வணக்கம் நண்பர்களே!!!

    லார்கோ வின்ச்சின் கதைகள் எப்பொழுதுமே மனதுக்கு உற்சாகமூட்டுபவைகளே!!!
    Eagerly waiting for Nov.5 editor sir!!!

    //தொடரும் அடுத்த பதிவு ஒரு 'ஜூம்பல ஜூம்ம்பா' topic -ல் இருக்கக் காத்துள்ளது !//
    "கிங் ஸ்பெஷல்" பற்றின அறிவிப்போ?

    December க்கு 5 இதழ்களா...nice...!!!
    1. கிங் ஸ்பெஷல்
    2. மேஜிக் விண்ட்
    3. வானமே எங்கள் வீதி
    4. நள்ளிரவு நங்கை
    5. சிக்பில் & co?

    ReplyDelete
  29. @ ஆசிரியர் விஜயனுக்கு,

    லார்கோ உடன் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவை சுற்றிப்பார்க்க நவம்பர் முதல்
    வாரத்திற்க்கு பயணமாக,மூட்டைமுடிச்சிகளோடு நான் தயாராகிவிட்டேன் !

    அதற்கு முன்...தீபாவளி மலர்/இரவே இருளே..கொள்ளாதே!/ஜூனியர் தேர்வு/எனதுபார்வை...

    scrom,saw,the ring,wrongturn,house of wax,mirrors,the grudge இப்படி நிறைய இங்கே'கிளிக்'
    சூப்பர் 'ஹிட்' திகில் படங்களை 2 & 3முறை என பார்த்திருப்பேன். இந்தரீதியில் நான் படித்த,
    பார்த்த முதல் காமிக்ஸ் இந்த வருட தீபாவளி மலர்.மேலேகுறிப்பிட்ட திரைபடங்களில்
    வரும் ஒருவித திகிலுட்டும் பச்சை கலர் சித்திரங்கள் பார்த்ததுமே....இந்தகதை....

    எந்த திரைபடம்மாதிரி ? அந்த படம்மாதிரியா...என வேகமாக கணக்குபோடும் கற்பனை
    வோட்டத்தை நிறுத்தமுடியவில்லை,அவ்வளவு அருமையான நான் சந்தித்திரா... சித்திரங்கள் !
    ஒரு இடம் தவிர எங்கும் பிசிர் தட்டாத, தரமான திரைகதை, வசனங்கள், எடிடிங்குகள் !
    இது நிச்சயம் பேய் கதை தான்...இந்த மாதிரி திரைகதை இப்படித்தான் முடிப்பார்கள்,அடுத்த
    காட்சி இப்படி திரும்பும்,கொலைக்கு காரணமாக இதைகூறுவார்கள்...என்ற பல கணிப்புகள்
    'புஸ்'...
    பெட்சி&லிண்டா கார் விபத்துக்களை இப்போது நினைத்தாலும் 'டமார்' என நெஞ்சிலேயே
    மோதுகிறது. பெட்சிக்கு வரும் கனவு சீன்கள், தியேட்டரில் திகில்பட சீன், 'ஸ்கல் ராக்'
    காட்சிகள், பேஸி அரண்டு காரை கிளப்பும் பீதி...டாக்டர் 'சதக்' என தொண்டையை
    இப்படித்தான் கிழித்து கொல்லப்பட்டிருக்கலாம்...என்ற கற்பனை காட்சிகள், டிராபிக் சிக்னலில்
    'வவ்!' என நாயின் உறுமல்...செர்மன் வெறிகொள்ளும் காட்சி...'சர்ச்'யே பீதிகொள்ளசெய்யும்
    திகில் கட்டம்...வேஸ்லே-ன் தியேட்டர் முன் நடக்கும் களோபரம்...ஒரு மனநோயாளி சட்டென்று
    மாறி வெறியுடன் பயங்கரமாக தாக்கும் இடங்கள்...அப்பப்பா அட்டகாசமான movie இது.

    'ஒவ்வ்வ்வ்' ஒன்று கூறமறந்துவிட்டேன்..என்னை பொறுத்தவரையில் இ.வே.கொ படித்த
    போது சூப்பர் horror movie பார்த்ததுபோவே இருந்தது சார்.... இன்னும் நிறையசொல்லாம்...
    கதைபற்றி சென்னால் 'சஸ்பென்ஸ்' உடைத்த பெரிய குற்றத்திற்கு ஆளாவேனோ... !

    கதைபடிக்காதவர்களுக்கு ஒருவேண்டுகோள்...!
    சுற்றி நிறைய இருட்டும், படிக்க கொஞ்சம்வெளிச்சமும் உள்ள சூழ்நிலையில் படியுங்கள்...
    சித்திரங்களை உற்றுநோக்கி பாருங்கள்,அவை உருவாகும் கற்பனை சூழலுக்குள் மூழ்குங்கள்...
    ஒரு மெல்லிய பரபரப்பு படரும்,அந்த உணர்வுடணான திகில் பயணம் மிகமிக வித்தியாசம்
    அனுபவம் தான்.

    இந்தகதையை 'கொலையாளி யார்?' என்று தெரிந்துகொள்ளும் பார்வையில் மட்டும் படித்தால்
    சுமாராகத்தான் தோன்றும், இதை விரிவாக சொல்ல கைபரபரக்கிறது...எடிட்டர் இதை நிச்சயம்
    வரவேற்பார் என நினைக்கிறேன்,மேலோட்டமாக படித்தால் கதாசிரியர் சொல்லும் வித்தியாசமான
    கோணம் புரியவாய்பில்லை. கதை துவக்கத்தில் நமக்கு உணர்த்திய விஷயத்தையும்,முடிவில்
    ஒவ்வொருவரின் செயல்பாட்டிற்கும், உள்ளதொடர்பை கொஞ்சம் படங்களுடன் கூர்ந்துகவனித்தால்
    தான் திரைக்கதையை அட்டகாசமாக இரசிக்கமுடியும்.கதாசிரியர் சித்திரங்கள் மூலம் மனசிதைவு
    களின் வெளிப்பாடுகளை உணர்த்துவதை புரிந்துகொண்டால் "இப்படி ஒரு முடிவை இதுவரை
    நான் படித்ததில்லை சூப்பர்! உண்மையில் ஆழமான சிந்தனையை வெளிப்படுத்தும் அருமையான
    கிளைமாக்ஸ் ! இந்த கோணத்தில் இப்படி ஒரு முடிவை நான் எதிர்பாக்கவேல்லை சபாஷ்...
    ஜூனியர் ! உங்கள் தேடுதலின் ஆழம் இப்போதுதான் புரிகிறது.இது எங்கள் யாருக்கும் தோனவே
    இல்லை.இதை ஆங்கிலத்தில் படித்து புரிந்து கொண்டீர்களேன்றால் really great ! "
    என மனதார பாராட்டுவீர்கள் நண்பர்களே !

    சரியான கோணத்தில் பார்க்க,எழுத்துக்களில் விவரித்தால்... மேலும் குழப்பும், எனவே
    'கதை படித்தவர்களுக்கு மட்டும்' என ஒரு படங்களுடன் விளக்க நான் தயார்.
    எனக்கு அனுமதியுண்டா ?

    ReplyDelete
    Replies
    1. மாயாவி @ நீங்கள் எந்த அளவுக்கு ரசித்து படித்து உள்ளீர்கள் என புரிகிறது!

      எனக்கு இன்னும் புத்தகம் வரவில்லை.. உங்களின் இந்த விமர்சனம் கதையை எப்போது படிப்போம் என்ற ஆவலை தூண்டிவிட்டது.

      Delete
  30. ஆகா ....அடுத்த மாதத்தையும்....லார்கோ.....நான் படிக்காத ( அல்லது படித்து மறந்து போனதா ? ) ஜானி இருவரையும் நினைக்கும் பொழுதே மனம் துள்ளுகிறது .....நவம்பர் 4 நாளுக்காக "லிங்கா " போல் எதிர் பார்ப்பு பட்டையை கிளப்புகிறது .இந்த இதழ்களில் அடுத்த வருட "ட்ரைலர் " வேறு ....ஆகா ....
    ஓவியர்களின் சித்திர கதை களின் படைப்பிற்கு அவர்கள் உழைக்கும் உழைப்பு உண்மையில் என்னை ஆச்சிரிய படுத்துகிறது சார் .இனி கண்டிப்பாக படிக்கும் பொழுது ஒவ்வொரு சித்திர கட்டத்தையும் உன்னிப்பாக கவனித்து படிப்பேன் ...இது மட்டுமே என்னால அவர்களுக்கு கொடுக்க முடிவது சார் ...

    அடுத்த பதிவு ஜுமல ஜும்ம்பா வா .... சார் .....சஸ்பென்ஸ் தாங்க முடியலை ...அடுத்த வாரம் வரைக்கும் தாங்க முடியாது ...ஒரு இரண்டு நாளில் அடுத்த பதிவை இடுங்கள் சார் ....ப்ளீஸ் ...

    டிசம்பர் மாதம் 5 இதழ்களா ....? ஆகா ....சொக்கா

    .அடுத்த 2015 ம் ஆண்டில் டிசம்பர் மாதம் போல அனைத்து மாதமும் தாங்கள் வெளி இட்டால் நாங்கள் கோபம் எல்லாம் பட மாட்டோம் ....கண்டிப்பா சார் ....சாமி சத்தியமா ....

    ReplyDelete
    Replies
    1. //அடுத்த 2015 ம் ஆண்டில் டிசம்பர் மாதம் போல அனைத்து மாதமும் தாங்கள் வெளி இட்டால் நாங்கள் கோபம் எல்லாம் பட மாட்டோம் ....கண்டிப்பா சார்//
      +1

      Delete
  31. இரவே இருளே கொல்லாதே is a nice halloween treat

    ReplyDelete
  32. சார் விக்ரமுக்கு எனது தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் !

    ReplyDelete
  33. விஜயன் சார்,
    ஒரு வேண்டுகோள்- டிசம்பர் மாத 5 புத்தகம்கள் (வெவ்வேறு அளவுகளில் என நினைக்கிறன்) வர உள்ளதால் அவைகளின் பாகிங்ல் அதிக கவனம் செலுத்தும் படி கேட்டு கொள்கிறேன். கடந்த மாதம் வந்த, டைலன் மற்றும் xiii புத்தகம்கள் வெவ்வேறு அளவுகளில் வந்ததால் காலனின் கை கூலி முனைகள் மடங்கி வந்தது, எனவே முடிந்தால் (L.M.S போன்று) அட்டை பெட்டியில் வைத்து அனுப்பவும்.

    ReplyDelete
  34. தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்து போய் புஸ்சென்றிருக்கும் தருணத்தில்.... மீண்டும் கொண்டாட வைக்க அதிர்வெடியாய் லார்கோ தவிர வேறென்ன வேண்டும் !
    இன்றைய கால கட்டங்களில் லார்கோ குறித்து நேரிடையாய் அலசி செல்லும் ஆசிரியர், ஓவியர் அருமை ....வான் ஹாம்மே நாம் உயிரோடிருக்கும் காலம் வரை வாழ்ந்து விருந்து படைக்க வேண்டும் !
    அந்த கிங் ஸ்பெசல் யப்பா .....
    இன்னுமொரு எதிர்பார்ப்பை எகிற வைக்கும் புத்தகம் அந்த ஜானி கதை ...முதன் முறையாக ஒரு நண்பனுடன் புத்தகம் சேர்த்து வைப்போம் என கூறிய ஒருவரிடம் இழந்த முதல் இதழ் ...இக்கதை குறித்து சற்றும் நினைவில் இல்லை ....ஆனால் பெயர் தலைப்பே அப்போதைய ஜானி கதைகளை திகில் மட்டுமின்றி ஆர்வத்துடன் எதிர் நோக்க வைக்கும் ! லார்கோ போலவே வெகுவாய் எதிர் பார்க்க வைக்கும் இதழ் என்பதால் இன்னும் ஆர்வம் அதிகமே !
    அப்புறம் அந்த அட்டவனை ....அதன் ஒரு பக்கத்தையாவது சாம்பிள் காட்டியிருக்கலாம் !

    // தவறுகளை தாண்டிச் செல்வதே நமக்கிருக்கும் ஒரே வலி(ழி) ! //
    இது பல முறை நீங்கள் கரடியாய் கத்தியிருந்தாலும் சில நண்பர்களால்!!!??? தொடர்ந்து முன் வைக்க படும் ஒன்று . ஆனால் அதை எழுதியவர்கள் நண்பர்களிடம் வாங்கி எழுதிய சில செய்திகளை தினித்திருக்கலாம் ! ஆனால் தற்போதைய நிலையை , வரவை முன்னிலை படுத்த அந்த எழுதிய நண்பர்களை ஊக்குவிக்க காலம் கனியட்டும் ! ஆனால் ஏதோ ஒரு வகையில் நம்மை நோக்கி நீண்ட ஒளி வெள்ளத்திற்காக நிச்சயம் நன்றி சொல்லியே ஆகா வேண்டும் ! வழி(லி)களை கடந்து செல்வோம் ....


    ReplyDelete
    Replies
    1. //ஆனால் ஏதோ ஒரு வகையில் நம்மை நோக்கி நீண்ட ஒளி வெள்ளத்திற்காக நிச்சயம் நன்றி சொல்லியே ஆகா வேண்டும் ! //

      +1

      its rare and needed articles for our brand, I thanks them from my heart no disrespect for what ever details they given.

      Delete
  35. கார்சனின் கடந்த காலம் வண்ணத்தில் மூழ்கி எடுத்த முத்து அது !

    ReplyDelete
  36. டிசெம்பர் எப்போதுமே கர்ண நாட்கள்தாம் கடந்த ஓரிரு ஆண்டுகளில் ....! அருமை ! அடுத்த பதிவில் மாயாஜாலங்கள் நிகழ போகிறது ! அந்த கிரேக்க கதை குறித்து ஒரு கோடா ......!

    ReplyDelete
  37. தீபாவளி ஏமாற்றம்

    சார் இரவே இருளே கொல்லாதே இதழ் எனக்குப் பிடிக்கவில்லை. முதலில் அட்டை மிக சன்னமாக இருந்தது. பிரித்த சிறிது நேரத்திலேயே சுருண்டு விட்டது. முன்னெப்போதும் இப்படி நடந்ததில்லை.

    நம் தீபாவளி ஸ்பெஷல் புத்தகங்கள் எப்போதுமே பட்டையை கிளப்பும். ஆனால் இந்த ஆண்டு திருஷ்ட்டி பரிகாரம். திகில் என்ற ஜானரில் புத்தகங்கள் வெளியிட வேண்டும் என்பதற்காகவே வெளியிட்ட மாதிரி தெரிகிறது. கதையில் விறு விறுப்பு இல்லை, ஸ்லொவாக செல்லும் சொதப்பலான கதை. திகில் ஜானரில் எங்களுக்கு கதை தேவை தான் ஆனால் இந்த மாதிரி கதைகள் வேண்டாமே. ரூ 150 க்கு எந்த நியாயமும் இந்த கதை செய்யவில்லை. ஏமாற்றம். :-(

    ReplyDelete
    Replies
    1. //பிரித்த சிறிது நேரத்திலேயே சுருண்டு விட்டது. முன்னெப்போதும் இப்படி நடந்ததில்லை. // true!

      Delete
    2. //அட்டை மிக சன்னமாக இருந்தது. பிரித்த சிறிது நேரத்திலேயே சுருண்டு விட்டது//
      +1

      Delete
  38. நண்பர்களுக்கு வணக்கம்!

    வெகுநாட்களுக்குப் பிறகு வருகை தந்திருக்கிறேன். காரணம் "இரவே..இருளே..கொல்லாதே.." அதற்கு முன்பாக எடிட்டருக்கு ஒரு கேள்வி - சேலம் புத்தகத்திருவிழாவில் நமது ஸ்டால் உண்டா?

    இப்போது - "இரவே..இருளே..கொல்லாதே.."

    புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் படையல் இலைகளில் கலர்ஃபுல்லாக காட்சியளிக்கும் பூசணிக்காய்களை இப்படி செத்த முண்டங்களின் தலையாக பார்ப்பது சகிக்கவில்லை.

    சரி... கதை பற்றி சொல்லலாம் என்றால் ... எனது கமெண்ட்...

    காரணம்?

    முதலில் எனக்கு கதை புரியவில்லை... இதை ஒப்புக் கொள்வதில் எனக்கு தயக்கமோ, வெட்கமோ இல்லை. ஏனெனில் நானெல்லாம் சாதாரணமாக தல - தளபதி காமிக்ஸ் தான் எனது எல்லை.

    பிலுபிலுவென்று யாராவது சண்டைக்குத் தயாரானீர்கள் என்றால்... அவர்களுக்கு எனது அன்பு வேண்டுகோள் என்னவென்றால்... முன்று பாக கதை ஏன் ஒரே பாகமாக வெளியிடப்பட்டது என்று சிந்தித்தீர்களா?

    ஒவ்வொரு பாகமும் வழக்கமான Rs.60 விலையில் தனித்தனியாக வெளியிடப்பட்டிருந்தால் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும்.

    ஆசிரியரின் அடியார்கள் வேண்டுமென்றால் கதையை சிலாகிக்கலாம். (நான் பெரிதும் மதிக்கும் கிங்விஸ்வா போன்ற பெரிய மனிதர்கள் ரசனையை இதில் சேர்க்க வேண்டுவதில்லை)

    காமிக்ஸில் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய கதைகள் தேவையில்லை எனபதே எனது வேண்டுகோள். தீபாவளி போன்ற சந்தோஷகரமான பண்டிகை தினத்தில் இப்படி ஒரு கதை... ஏன் சார் இப்படி ஒரு விபரீத சிந்தனை?

    புத்தகத்தை திருப்பி அனுப்ப உத்தேசித்திருந்தேன். ஆசிரியர் எனது உணர்வையும் புரிந்து கொண்டார் என்றால் சந்தோஷமே!

    மௌனமாக இத்தலத்தில் உலவுபவர்கள், கதையைப் படித்தவர்கள், தங்களது கருத்தை பதிவு செய்தால் மெத்த மகிழ்ச்சியடைவேன்...

    ReplyDelete
    Replies
    1. // காமிக்ஸில் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய கதைகள் தேவையில்லை எனபதே எனது வேண்டுகோள். //

      +1 இதை negative vibration இல்லாமல் எப்படி பகிர்வது எனத்தயங்கி நோட்டமிட்டுக்கொண்டிருந்தேன். Proper'ஆன வார்த்தை பிரயோகத்தோடு இதனை தெரிவித்ததற்கு நன்றி. என்னுடைய கருத்தையும் இதிலேயே சேர்த்துவிடுகிறேன்.

      இ.இ.கொ கதை சொல்லப்பட்ட விதம் ஒரு உயர்தரமான காமிக்ஸ் எழுத்தாளரின் மூலமாக Sophisticated ஆக உள்ளது என்பதில் சந்தேகமில்லை. இவ்வளவு கதாபாத்திரங்களின் குணாதிசையங்களை விளக்குவது, சூழ்நிலைகளை சுவாரஸ்யம் குறையாமல் வெளிப்படுத்துவது, Logic இடறாமல் சம்பங்களை கோர்ப்பது போன்ற விஷயங்களில் இந்தக்கதை இந்த காலத்தில் நமக்கு அவசியமானதே.

      இது "ரசனை உயர்வு" சம்பந்தப் பட்டதல்ல, கதை சொல்பவரின் தொழில் ரீதியான முதிர்ச்சி மற்றும் வாசிப்பவருக்கு வாசிப்பில் கிடைக்கும் Sophistications நமக்கு அவசியம்.

      கவனத்தில்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், அடுத்த சில க்ராஃபிக் நாவல்கள் சைக்கோ த்ரில்லர், மற்றும் விளிம்பு நிலை மனிதர்கள் போன்ற களங்களிலிருந்து மாறுபட்டு Soft சஸ்பென்ஸ் / அட்வென்ச்சர் / த்ரில்லர் ஆக இருந்தால் எல்லா வாசகர்களும் இம்மாதிரி தரமான கதைகளின் (கதைக்களம் எப்போதாவது வேறுபட்டாலும்) பின்புலத்தில் உள்ள படைப்புத்திறனை கண்டுகொள்ள ஆரம்பிப்பார்கள். (takes some time and couple of successful attempts)

      On the flip side, படைப்பாளர்கள் தொழில் ரீதியாக எவ்வளவு முன்னேற்றம் கண்டிருந்தாலும் கதையின் Content Abnormal ஆக இருந்தால் கண்டிப்பாக ரிஸ்க்தான். கொஞ்சம் வெகுஜன வரவேற்பை நாம் பெறவேண்டுமானால் விளிம்பு நிலை மனிதர்கள் போன்ற கதைக்களங்களை தவிர்ப்பது / குறைப்பது அவசியம்.

      இரண்டாவது, டெக்ஸ் வில்லர் கதைகளை ரசிப்பவர்கள் மாறுபட்ட களங்களை வரவேற்கமாட்டார்கள் என்பது போன்ற ரசனை ஏற்றத்தாழ்வு முத்திரை/விமர்சனங்கள் விழாமல் இருப்பது அவசியம். பொழுதுபோக்கு என வந்துவிட்டால் கனமான வாசிப்பு (நாவல்) இலகுவான வாசிப்புக்கு (Tex) எல்லாமே சமம்தான். எனவே கதையைப்பற்றிய தன்னுடைய விமர்சனங்களை முன்வைப்போருக்கு இந்த ரீதியில் தயக்கம் நேராமல் இருப்பது அவசியம்.

      Delete
    2. S.V.Venkateshh :

      ஒரு கதை பிடிப்பதும், பிடிக்காது போவதும் அவரவர் தனிப்பட்ட ரசனைக்குரியதே....நிச்சயம் ஏற்றுக் கொள்கிறேன் !

      உங்களுக்கு இந்தக் கதை ரசிக்கவில்லையா - அதனைப் பதிவு செய்யும் சுதந்திரமும் உங்களுக்கு உள்ளது - ஏற்றுக் கொள்கிறேன் !

      ஆனால் உங்களுக்குப் பிடிக்காத விஷயம் அடுத்தவருக்குப் பிடித்திருந்தால் அவர் "அடியார்" பட்டியலில் இடம்பிடிக்கத் தகுதியானவர் என்பதில் நியாயமோ. லாஜிக்கோ துளியூண்டு கூடத் தென்படுவதாகக் காணோமே ?

      உங்களுக்கு முந்தைய பின்னூட்டத்தில் நண்பர் ராஜ் குமார் கூட "பிடிக்கவில்லை" என்ற அபிப்ராயத்தை அழுத்தமாய் பதிவிட்டிருக்கிறார் - சுற்றி இருப்போர்க்குச் சேதாரம் ஏற்படுத்தாமல் ! ஆனால் "அடிகளார்" ; "பெரிய மனிதர் - சின்ன மனிதர்" என்ற எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் சகிதமுள்ள உங்களின் பதிவில் focus வேறு பக்கமாய்த் திரும்புவது அப்பட்டமாய்த் தெரியவில்லையா ?

      தவிரவும் இது போன்ற experiments கட்டாயச் சந்தாவில் திணிக்கப்படக் கூடாதென்பதாலேயே - அவற்றைத் தனிமைப்படுத்தி - 'இஷ்டப்பட்டால் வாங்கிக் கொள்ளலாமே !" என்ற ரகத்தில் உலவச் செய்கிறோம் ! So - இவற்றில் என்ன எதிர்பார்த்திடுவது என்பது பற்றி உங்களக்கொரு fair idea இல்லாது போக வாய்ப்பில்லை !

      'தல-தளபதி' மட்டுமே போதுமென்று நீங்கள் கருதினால் - நிச்சயம் அதனில் தவறில்லை ! அதே வேளையில் நம் வாசிப்புக் களங்களை இம்மி இம்மியாகவாவது விசாலப்படுத்த வேண்டுமென்ற வேட்கையிலும் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை !

      Delete
    3. S.V.Venkateshh & Ramesh Kumar : //// காமிக்ஸில் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய கதைகள் தேவையில்லை எனபதே எனது வேண்டுகோள். ////

      எல்லாக் கற்பனைகளும் ஒரு நிஜத்தின் பிரதிபலிப்பு தானன்றோ ? நாம் வாழும் உலகில் விளிம்பு மனிதர்கட்குப் பஞ்சமா இல்லை ? மூன்று வயதுப் பிஞ்சுகள் நாசமாகும் நாட்களைத் தானே ஊடகங்கள் நம் முன்னே கொணர்ந்து நிறுத்துகின்றன நித்தமும் ?

      நாவல்களில் கிரைம் ; சமூகம் ; குடும்பம் ; வன்முறை இத்யாதி என சகல ரகங்களும் உண்டு ; திரைப்படங்களிலும் இல்லாத variety கிடையாது ! ஆனால் காமிக்ஸ் என்று வரும் போது feel good factor கொண்ட களங்கள் மட்டுமே நிலைத்திட வேண்டுமென்று நாம் விரும்புவது முரணாகாதா ?

      "இது குழந்தைகள் சமாச்சாரம் மட்டுமல்ல ; 7-77 வரை அனைவருக்கும் !! என்று உரக்கச் சொல்லிக் கொண்டே - சற்றே முதிர்ச்சியான கருக்களை காமிக்ஸில் சந்திக்கும் முதல் தருணத்தில் நாம் பின்வாங்குவதை எவ்விதம் பார்த்திட இயலும் ?

      Delete
    4. Ramesh Kumar : //பொழுதுபோக்கு என வந்துவிட்டால் கனமான வாசிப்பு (நாவல்) இலகுவான வாசிப்புக்கு (Tex) எல்லாமே சமம்தான். எனவே கதையைப்பற்றிய தன்னுடைய விமர்சனங்களை முன்வைப்போருக்கு இந்த ரீதியில் தயக்கம் நேராமல் இருப்பது அவசியம்.//

      +1

      Delete
    5. "விளிம்பு நிலை மனிதர்கள் "- including TEX and Tiger most of (fantasy,fictional)comics world dealing with villain who are having the characters suiting this word. I think in இ.இ.கொல்லாதே, they went little deeper and almost all the characters were mentally unstable personalities, but its most expected(at least I expect) in horror(?) I believe.

      Delete
    6. // "இது குழந்தைகள் சமாச்சாரம் மட்டுமல்ல ; 7-77 வரை அனைவருக்கும் !! என்று உரக்கச் சொல்லிக் கொண்டே - சற்றே முதிர்ச்சியான கருக்களை காமிக்ஸில் சந்திக்கும் முதல் தருணத்தில் நாம் பின்வாங்குவதை எவ்விதம் பார்த்திட இயலும் ? //

      இ.இ.கொ வில் செஸ்டர் கேரக்டர் மற்றும் தொடர்புடைய சம்பவங்களில் பிரச்சனையில்லை - மேலோட்டமானவை என்பதனால் சென்ஸார் சிக்கல்கூட இல்லை. மற்ற கதாபாத்திரங்கள் அனைத்துமே ஒருவிதத்தில் வன்முறையோடு பிணைந்திருப்பதனால் Horror என்ற களத்தை தாண்டி Psycho வகையில் சேர்வது எல்லோருக்கும் பொருந்துமா என்ற ஒரு நெருடல் தருகிறது (Including age-wise mature ones).

      சமீபத்தில் வந்த தேவரகசியம் தேடலுக்கல்ல கதை - Graphic'ஆக சில கட்டங்களை (இரத்தம் etc) கொண்டிருந்தாலும் கதையோட்டம் Normal என்பதனால் ஏற்பதில் சிக்கலேயில்லை. கொஞ்ச காலத்துக்கு சற்று அந்த ரீதியிலான கதைகளுடன் தொடர்ந்தால் க்ராபிக் நாவல் வரிசை (அதாவது உதிரிக் கதைகள்) பலருக்கு ஏற்பாக அமையலாம் என்கிற நப்பாசைதான்.

      Delete
    7. "இ.இ.கொ வில் செஸ்டர் கேரக்டர் மற்றும் தொடர்புடைய சம்பவங்களில் பிரச்சனையில்லை - மேலோட்டமானவை என்பதனால் சென்ஸார் சிக்கல்கூட இல்லை. மற்ற கதாபாத்திரங்கள் அனைத்துமே ஒருவிதத்தில் வன்முறையோடு பிணைந்திருப்பதனால் Horror என்ற களத்தை தாண்டி Psycho வகையில் சேர்வது எல்லோருக்கும் பொருந்துமா என்ற ஒரு நெருடல் தருகிறது (Including age-wise mature ones)." - மிக சரியாக சொன்னீர்கள் ரமேஷ் சார். இதேதான் இதுவே தான் சார். இந்த மாதிரி சரியான வார்த்தைகள் வராமல் தடுமாற்றம் வரும் போதுதான் பிரச்சினைகள் ஆரம்பம்.

      Delete
    8. //ஆனால் உங்களுக்குப் பிடிக்காத விஷயம் அடுத்தவருக்குப் பிடித்திருந்தால் அவர் "அடியார்" பட்டியலில் இடம்பிடிக்கத் தகுதியானவர் என்பதில் நியாயமோ. //
      //உங்களுக்கு முந்தைய பின்னூட்டத்தில் நண்பர் ராஜ் குமார் கூட "பிடிக்கவில்லை" என்ற அபிப்ராயத்தை அழுத்தமாய் பதிவிட்டிருக்கிறார் - சுற்றி இருப்போர்க்குச் சேதாரம் ஏற்படுத்தாமல் ! ஆனால் "அடிகளார்" ; "பெரிய மனிதர் - சின்ன மனிதர்" என்ற எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் சகிதமுள்ள உங்களின் பதிவில் focus வேறு பக்கமாய்த் திரும்புவது அப்பட்டமாய்த் தெரியவில்லையா ? //
      +1

      Delete
    9. S.V.Venkateshh சார்,

      //ஆசிரியரின் அடியார்கள் வேண்டுமென்றால் கதையை சிலாகிக்கலாம். (நான் பெரிதும் மதிக்கும் கிங்விஸ்வா போன்ற பெரிய மனிதர்கள் ரசனையை இதில் சேர்க்க வேண்டுவதில்லை)//

      யார் சார் நீங்க? ஏன் என் மீது இந்த கொலைவெறி? என்று மற்றவர்களைப்போலவே எனக்கும் கேட்க தோன்றுகிறது. ஆனால் உங்களை எனக்கு தெரியும் என்பதால் கேட்கவில்லை.

      நீங்கள் 2013-ஆம் ஆண்டு சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்தது,

      தமிழில் லயன் முத்து காமிக்ஸ் மறுபடியும் வருகிறதா என்று ஆவலுடன் வினவியது,

      பின்னர் சேலம் திரும்பி பழைய (ஸ்டாக்கில் இருந்த) புத்தகங்களை ஆர்டர் செய்து வரவழைத்தது,

      அந்த செட்டில் உங்களுக்கு வந்த நெவர் பிஃபோர் ஸ்பெஷலில் உங்களுக்கான புத்தகத்தில் பக்கங்கள் மாறி பைண்ட் ஆகி இருந்தது,

      உங்களுக்கு அதில் இருந்த லார்கோ கதையை படிக்கும் முன்பாக எடிட்டர் என் பெயர் லார்கோவை படிக்க சொன்னது,

      ஸ்பைடர் கதைகளை நீங்கள் வேண்டாம் என மறுத்தது, டையபாலிக் உங்களுக்கு பிடிக்காமல் போனது,

      நடுவில் உங்கள் பெயரை S.V.Venkateshwaran என்று மாற்றியது, பின்னர் உடனடியாக அதனை மறுபடியும் S.V.Venkateshh என்றே மாற்றியது,

      சேலத்தில் நண்பர் கர்ணனிடம் புத்தகம் வாங்கியது, டெக்ஸ் விஜயராகவனையும், ஸ்ரீதரையும் சந்தித்தது (இதில் ஸ்ரீதர் பெயரில் இருக்கும் ”ஸ்ரீ”ஐ தமிழில் டைப் செய்யமுடியாமல் தடுமாறியது), விஜயராகவன் அவர்களிடமிருந்து (அட்டை போட்ட) இரத்தப்படலம் வாங்கி இரண்டு முறை படித்தது,

      திரு சௌந்திரபாண்டியன் அவர்களை எழுத வைக்குமாறு வேண்டுகோள் வைத்தது (சிப்பிக்குள் முத்து?) பகுதி,

      ”நண்பர் சேரலாதன்” புதிய காமிக்ஸ் வரப்போகிறது என்று புலி வரும் கதையை கிளப்ப, அதற்க்கு நீங்கள் கொடுத்த அம்மாவின் சமையல் + கடையில் வாங்கும் பர்கர் உதாரணம்,

      LMS இதழுக்கு Index வைக்குமாறு கேட்டது

      என்று உங்களைப்பற்றி ஒரு பெரிய Flash Back என் கண்முன்னே ஓடி மறைந்தது.

      உங்களை நான் சந்தித்ததோ, பேசியதோ கிடையாது என்றாலும் காமிக்ஸ் மீதான உங்கள் காதல் உங்களை ஒரு நெருங்கிய ந்ண்பனாகவே பாவிக்க சொல்கிறது. எனவே அந்த நட்பின் அடிப்படையில் ஒரே ஒரு வேண்டுகோள்: நாம், நமது என்று மட்டுமே பேசப்பழகிக் கொள்ளலாம் சார், (அப்போது தான் உதடுகள் ஒட்டும்).

      மற்றவர்களை பற்றிய கவலை நமக்கு தேவை இல்லை. எனவே இனிமேல் நீங்கள் உங்களையும், உங்களை பாதிக்கும் கருத்துக்களையுமே முன்வைக்க ஒரு சிறிய கோரிக்கையை முன்வைக்கிறேன்.

      “உன்னை விட இந்த உலகத்தில் பெரிய மனிதனும் கிடையாது, அதைப்போலவே உன்னை விட தாழ்ந்தவரும் யாரும் கிடையாது” என்று ஐய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் இந்திரனின் தந்தை ஒருமுறை சொல்லி இருக்கிறார்.

      அடுத்தவர்களை பற்றிய விமர்சனமும், மதிப்பீடும் நமக்கு தேவை அல்லவே? Even God does not propose to judge a man until the end of his days, அப்படி இருக்க நாமெல்லாம் எந்த மூலைக்கு? எதற்க்கு அடுத்தவர்களை பெரியவர், சிறியவர், அடியார், ஆழ்வார் (Oops, அது அஜித் படமாச்சே.... ) என்று மதிப்பீடு செய்யவேண்டும்?

      நமக்கு தேவை இல்லாத விஷயங்களை தவிர்த்து விட்டால் /
      தேவைப்படுமெனில் அதில் நம்முடைய கருத்தை மட்டும் சொல்லி விட்டு விலகினால் /
      அடுத்தவர்களின் கருத்துக்கும் இடமளித்து /
      அதே சமயம் தேவைப்பட்டால் மட்டுமே அதில் நம் கவனத்தை திருப்பினால் /
      நாம் உண்டு, நமது வேலை உண்டு என்று மட்டும்(மே) இருந்தால்,

      நமது ப்ளாக்கில் / நாட்டில்(மே கூட) 90% பிரச்சினைகள் சுலபமாக தீர்ந்துவிடும்.

      பின் குறிப்பு: எதுவுமே சொல்ல தோணவில்லை. :)

      Delete
    10. //அடுத்தவர்களை பற்றிய விமர்சனமும், மதிப்பீடும் நமக்கு தேவை அல்லவே? Even God does not propose to judge a man until the end of his days, அப்படி இருக்க நாமெல்லாம் எந்த மூலைக்கு? எதற்க்கு அடுத்தவர்களை பெரியவர், சிறியவர், அடியார், ஆழ்வார் (Oops, அது அஜித் படமாச்சே.... ) என்று மதிப்பீடு செய்யவேண்டும்?

      நமக்கு தேவை இல்லாத விஷயங்களை தவிர்த்து விட்டால் /
      தேவைப்படுமெனில் அதில் நம்முடைய கருத்தை மட்டும் சொல்லி விட்டு விலகினால் /
      அடுத்தவர்களின் கருத்துக்கும் இடமளித்து /
      அதே சமயம் தேவைப்பட்டால் மட்டுமே அதில் நம் கவனத்தை திருப்பினால் /
      நாம் உண்டு, நமது வேலை உண்டு என்று மட்டும்(மே) இருந்தால்,

      நமது ப்ளாக்கில் / நாட்டில்(மே கூட) 90% பிரச்சினைகள் சுலபமாக தீர்ந்துவிடும்.

      //
      +1 :)

      //பின் குறிப்பு: எதுவுமே சொல்ல தோணவில்லை. :)//

      +1 :D

      Delete
  39. இரவே இருளே கொல்லாதே ....கதையின் முதலிரண்டு பக்கங்கள் அருமையான துவக்கம் ....தானே பொம்மையோடு பேசி செல்லும் சிறுமி அடஹ்ர்க்கேற்ற வரிகள் என அருமையான துவக்கம் எதிர்பார்ப்புடன் துவக்கியது ....கதை வழக்கமாய் வரும் திகில் படம் போல பழி வாங்கல்தான் ....கோரமான மனது கொண்டு நிரம்பி கிடக்கும் மனிதர்கள் மட்டுமே ....ஏதோ பாதிப்பு கொண்ட மனிதர்களை மட்டுமே சுற்றி சுலழும் கதை !
    ஆனால் நீங்கள் கூறியது போல இரண்டாம் முறை படித்தால் இன்னும் அற்புதமான கதைதான் .....உதாரணத்திற்கு கண் திறக்கும் இரண்டாம் பக்க பெட்சி அவளது uncle என அஞ்சும் போது கண் முன்னே அந்த உதவியாளர் ...கடைசியில் அவர் கொல்ல பட ....கடைசி இரு பக்க கட்டங்கள் அதனை நிறைவு செய்வது போல அந்த ஷெரிப் உதவியாளர் கொல்ல வாடும் போது அவள் உச்சரிக்கும் வசனங்கள் ....அனைத்து பக்கங்களும் தொடர்பை ...முடிச்சை அழகாய் இணைக்கின்றன ....
    பரவாயில்லை ரகமே இந்த கதை ....ஆனால் திரைப்படம் போல செல்லும் காட்சிகள் அருமை !

    ReplyDelete
  40. டியர் எடிட்டர் ,
    இது வரை வந்த கிராப்பிக் நாவல் எதுவுமே எனக்கு பிடிக்க வில்லை ஆனால் இம்மாதம் வந்த இரவே இருளே கொள்ளாதே. வுன்மையிலே சூபர் த்ரில்லர். சான்சே இல்லே ஒரு திகில் படம் பார்த்த எபெக்ட். அதற்காக நான் கிராப்பிக் நாவல் ஆதரவாளன் ஆக மாற மாட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. குற்றச் சக்கரவர்த்தி : நண்பரே, கிராபிக் நாவல்கள் நம்மைத் தேடி வரவில்லை ; நாம் தான் அவற்றைத் தேடிப் பயணம் புறப்பட்டு இருக்கிறோம் ! அவற்றை ஆதரிப்பதோ - நிராகரிப்பதோ நிச்சயமாய் நம் ரசனைகள் சார்ந்த விஷயம் மாத்திரமே !

      எல்லாமே காமிக்ஸ் தான் என்ற புரிதல் புலரும் நாளில் நிறைய புதுப் பாலங்கள் உருவாகி இருக்கும் !

      Delete
    2. "பொழுதுபோக்கு என வந்துவிட்டால் கனமான வாசிப்பு (நாவல்) இலகுவான வாசிப்புக்கு (Tex) எல்லாமே சமம்தான். எனவே கதையைப்பற்றிய தன்னுடைய விமர்சனங்களை முன்வைப்போருக்கு இந்த ரீதியில் தயக்கம் நேராமல் இருப்பது அவசியம்.//+1" - என ஆசிரியரே சொல்லி விட்டதால் , விமர்சனம் செய்பவர்கள்களை யாரும் தயவுசெய்து கும்ம வேண்டாமே நண்பர்களே. அப்புறம் உங்கள் இஷ்டம் .

      Delete
    3. //விமர்சனம் செய்பவர்கள்களை யாரும் தயவுசெய்து கும்ம வேண்டாமே நண்பர்களே. அப்புறம் உங்கள் இஷ்டம் .//

      எதிர் விமர்சனங்கள் நிச்சயம் தேவை. அவை இல்லாவிட்டால் எந்தச் செயலும் திருத்தங்களின்றி நடக்காது. ஆனால், வித்தியாசமான கதைக்களங்களை ரசித்து சிலாகிக்கும் வாசகர்களை கேவலமாக பேசுவதை நிச்சயம் ஏற்றுக்கொள்ளமுடியாது. டைகர் கதைகளையோ, டெக்ஸ் கதைகளையோ ஆகா ஓகோ வென்று கொண்டாடி பதிவிடும் நண்பர்கள் யாரையும் இதுவரை யாராவது இப்படி அநாகரிகமாக எழுதியிருக்கிறார்களா? 'ஒரு சிப்பாயின் சுவடுகளில்' கதையை எத்தனை தடவை படித்தாலும் அலுக்காது எனக்கு. அதற்காக அதனை பிடிக்கவில்லை என்று பதிவிட்ட நண்பர்களை கேவலமாக நினைக்கவோ எழுதவோ முடியுமா? அவரவர்க்கு தனிப்பட்ட ரசனை உள்ளது. அதை முதலில் மதிக்கவேண்டும். மற்றதெல்லாம் அப்புறம்தான்!

      Delete
    4. //Podiyan: அவரவர்க்கு தனிப்பட்ட ரசனை உள்ளது. அதை முதலில் மதிக்கவேண்டும்.//

      +1

      Delete
    5. // அவரவர்க்கு தனிப்பட்ட ரசனை உள்ளது. அதை முதலில் மதிக்கவேண்டும். மற்றதெல்லாம் அப்புறம்தான்!//
      +1
      விமர்சகர்கள் கதைகளை கும்மலாம் ....ரசிகர்களின் ரசனையை அல்ல !

      Delete
    6. //சிப்பாயின் சுவடுகளில்'//
      முதலில் பிடிக்கவில்லை ....எந்த கவன திசை திருப்பலுமின்றி அமர்ந்து படித்த போது என் முன்னே எழுந்த கேள்வி அப்போது ஏன் பிடிக்கவில்லை !

      Delete
    7. // விமர்சகர்கள் கதைகளை கும்மலாம் ....ரசிகர்களின் ரசனையை அல்ல ! //
      சோக்கா சொன்னீங்க ஸ்டீல்!
      +1

      Delete
    8. "ஆனால், வித்தியாசமான கதைக்களங்களை ரசித்து சிலாகிக்கும் வாசகர்களை கேவலமாக பேசுவதை நிச்சயம் ஏற்றுக்கொள்ளமுடியாது"-உண்மை உண்மை உண்மை. நமக்கு பிடிக்க வில்லை என சொல்ல நிச்சயம் உரிமை உள்ளது. பிடிக்கிறது-என சொல்லும் நண்பர்களை அவமரியாதை செய்ய யாருக்கும் உரிமை இல்லை.

      Delete
    9. //எதிர் விமர்சனங்கள் நிச்சயம் தேவை. அவை இல்லாவிட்டால் எந்தச் செயலும் திருத்தங்களின்றி நடக்காது. //
      //அவரவர்க்கு தனிப்பட்ட ரசனை உள்ளது. அதை முதலில் மதிக்கவேண்டும்//\
      +1

      Delete
    10. ஒருவர் தனக்கு கதை பிடிக்கவில்லை என்பதற்கு மாற்றாக இன்னொருவர் அதே கதையை பிடித்திருக்கு என்று கூறுவதையே விமர்சிப்பவரை கும்முவது என்ற அர்த்தத்தில் பார்க்கப்படுவதாக எண்ணுகின்றேன்.

      Delete
  41. காது குத்து விருந்து நல்லா திருப்திகரமான ஒன்றாக அமைத்து இருந்தது நண்பர்களே. மட்டன் பிரியாணி , சிக்கன் வறுவல், குடல் பிரை என தொண்டை வரை உண்டு விட்டு வந்தோம். நண்பர் ஸ்பைடர் ........ ஸ்பெசல் கவனிப்பு வேறு. விருந்துக்கு முன்பு நமது காமிக்ஸ் நண்பர்களுடன் கலகலப்பான மற்றும் காரசாரமான உரையாடல் என உற்சாகத்துடன் கும்மாளம். அடுத்த ஆண்டு பெரிய விருந்து இனி ஆசிரியர் கையில் . நிச்சயமாக பலமான மற்றும் எதிர் பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்று எதிர் பார்க்கலாம். தலைக்கு தனி மரியாதை உண்டாங் சார் ?

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்ம் விருந்து நமக்கு கொடுத்து வைக்கவில்லை :-(

      Delete
    2. அடப்பாவி....கடல்ல போற கப்பல தவிர தூத்துக்குடில நீந்தி போற பிற ஜீவராசிக அனைத்துமே நீங்க தூத்துகுடிய விட்டு எப்படா கிளம்புவீங்கன்னு கேட்டது கோவை வரை கேட்கிறதே !

      Delete
    3. விருந்து தூத்துக்குடி பக்கமா? சொல்லவே இல்ல... Just miss :-)

      Delete
    4. பரணி சார் சீக்கிரம் தூத்துக்குடிய விட்டு கிளம்புங்கள் . பாருங்கள் போன வாரம் 20ரூபாய்க்கு விற்பனை ஆன மீன் துண்டு இப்போது ரூபாய் 40 என கேள்வி.இன்னும் ஒரு வாரம் உங்கள் வாசம் அங்கே நீடித்தது என்றால் ரூபாய் 60ஆகி விடும் என முன்னறிவிப்பு செய்கிறார்கள்கலாம்.

      Delete
    5. பரணி அவர்களே, போனதுதான் போனீர்கள், தூத்துக்குடியிலிருந்து தலைமன்னாருக்கு (இலங்கை) புதிதாக கப்பல் சேவை ஒன்று ஆரம்பிக்க போவதாக கதை பரவலாக பேசப்படுகிறது. நிஜமா என்று கேட்டு சொல்லுங்களேன்? நாங்கள் அவ்வப்போது விசிட் அடிக்க உதவியாக இருக்கும்.

      Delete
    6. சேலம் Tex விஜயராகவன் @ தூத்துக்குடிய விட்டு கிளம்பி 2 நாட்கள் ஆகிவிட்டது! விலை ஏற்றத்திற்கு நீங்கள் (காது குத்தல் குரூப்) தான் காரணம் என ஊருக்குள் பேசி கொள்வதாக கேள்விப்பட்டேன்

      Podiyan @ நானும் பேப்பரில் படித்தேன், இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து ஆரம்பிப்பதாக கேள்விபட்டேன். ஆனால் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்பதுதான் உண்மை.

      Delete
  42. To: Edit,
    இந்தக் கதையை படித்திடும் வாய்ப்பு இன்னமும் கிட்டவில்லை என்றாலும், வித்தியாச முயற்சிகள் வரவேற்கப்படவேண்டியவை என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. தல-தளபதி போன்றவர்களே இப்போது வித்தியாச களங்களை தேடும்போது அவர்களின் ரசிகர்களும் ரசனை மாற்றம் கொள்ளவேண்டியது அவசியமே. முகமூடி வீரர் மாயாவி (வேதாளர்) யின் முன்னைய கதைகளுக்கும் இப்போது ஆங்கிலத்தில் வரும் கதைகளுக்குமே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத உயர வித்தியாசம் இருக்கிறதை நண்பர்கள் அறிவார்கள். இப்படிப்பட்ட கதைகளை வாசித்து ரசிப்பவர்கள் 'அடியார்கள்' என்ற பட்டத்துக்குரியவர்கள் என்றால் அப்படியே இருந்துவிட்டுப்போகிறோம்! :-)

    ReplyDelete
  43. தளபதிக்கு தனி மரியாதை எந்த அளவில் உள்ளது சார் ? என்னை பொறுத்து தீபாவளி மலர் நிச்சயமாக ஏமாற்றம் இல்லை என்பேன் சார். இந்த ஆண்டின் மற்ற திகில் (?) கதைகளுக்கு இது பல மடங்கு தேவலை சார். கிங் ஸ்பெசல் பற்றி ஏதும் உளறுங்களேன் சார் ?

    ReplyDelete
    Replies
    1. //கிங் ஸ்பெசல் பற்றி ஏதும் உளறுங்களேன் சார் ?//

      :)

      Delete
    2. ஒத்துக்கரன் சார் ஒத்துக்கரன் இன்று நீங்கள் சாப்பிட மட்டும் தான் வாயை திறப்பீர்கள் என்று ஒத்துக்கரன். ரைட்டு நெக்ஸ்ட் பதிவில் மீட் பன்ரன் சார்.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. ஸ்டீல் @ சில புத்தகம்களில் வந்த அந்த "கிங் ஸ்பெசல்" பற்றிய படம்களை பார்த்த பின்னும் இதே நம்பிக்கையா? ஈரோடு புத்தகத்திருவிழாவின் போதே அது ஸ்பைடர் கதை இல்லை என நாம் புரிந்து கொண்ட விஷயம் தானே. அனேகமாக அது ஒரு கௌபாய் கதை களமாக இருக்கும். காத்திருந்து ரசிப்போம்.

      Delete
    5. பரணி ஆசிரியர் ரொம்பவே நல்லவர்....கடைசி நேரத்துல மனசு கேக்காம நம்ம கனவு நாயாகர கொண்டு வந்துருவார் ....பாருங்களேன் !

      Delete
  44. எடிட்டர்ர சார்,

    அடியார் என்ற வார்த்தைப் பிரயோகம் உங்களை காயப்படுத்தியதா? விளிம்பு நிலை மனிதர்களின் மனநிலையை எளிதாக புரிந்து கொள்கின்ற உங்களால் satire வகையிலான வார்த்தைப் பிரயோகமாக அடியாரை எடுத்துக் கொள்ள முடியவில்லையா?

    சரி எப்படியென்றாலும் வருத்தம் தெரிவிக்கிறேன். மன்னியுங்கள்.

    அதே சமயத்தில் வரவிருக்கின்ற பௌன்சர் கதைகளும் விளிம்பு நிலை மனிதர்களை உள்ளடக்கியது என்பதாக முந்தைய பதிவுகளில் சில பதிவுகளை பார்த்தேன்.

    நண்பர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். மரண நகரம் மிசௌரி உடன் இணைந்து வந்த எமனின் திசை மேற்கு என்ற கிராபிகை.

    ஒரு ஒற்றைகையர் தான் ஹீரோ... எத்தனை பேர் ரசித்தீர்கள்?

    நான் ஜில்ஜோர்டனை மிகவும் ரசித்தேன். ஆனால் நிறையபேரின் லிஸ்ட்டில் அவர் இல்லை. ஆனால் அவர்கள் தான் இரவே இருளே கொல்லாதேவை கொண்டாடுகிறார்கள். அதிலும் புத்தகத்தைப் படிக்காமலேயே சூப்பர் என்று சொல்வதெல்லாம் எந்த வகையில் நியாயமோ தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. //புத்தகத்தைப் படிக்காமலேயே சூப்பர் என்று சொல்வதெல்லாம் எந்த வகையில் நியாயமோ தெரியவில்லை.//

      புத்தகத்தை படிக்காமல் கருத்து பதிவது நியாயமில்லை! but if you are referring to some one('s) its better point him(/them) friend!

      Delete
    2. S,V.Venkateshh : தொடர் தடுமாற்றம் ஏனோ ?? உங்களுக்குப் பிடித்த ஜில் ஜோர்டான் "அவர்களுக்குப்" பிடிக்காதது ஒரு குற்றமா ? Wild West Special-ல் வந்த ஒற்றைக்கை ஆசாமி தான் அந்தாண்டில் அதிகம் ரசிக்கப்பட்ட நபர் !

      இது முழுக்க முழுக்க ரசனை சார்ந்த விஷயம் எனும் போது உங்கள் அபிப்ராயங்களை உங்களதாய் மட்டுமே பதிவிடல் நலமாகாதா ? ஒப்பீடுகளும், 'இது பிடித்தால் - அதுவும் பிடிக்க வேண்டும் !' என்ற மாதிரியான எதிர்பார்ப்புகளும் எவ்விதம் பிரயோஜனப்படப் போகின்றன ?

      Delete
    3. @ Vijayan

      சார் இடையூருக்கு மன்னிக்கவும்,பொதுவாக காமிக்ஸ் கதைகள் மேலோட்டமாக படித்தாலே,பிடித்தும்
      பிடிபட்டும் விடும்.ஆனால் இ.இ.கொ பொறுத்தவரை மிகமிக வித்தியாசமான ரகம், காரணம் கதையின்
      பின்னணியில் பின்னப்பட்டிருக்கும் பல விஷயங்கள் சட்டென்று புரியாதவிதத்தில் மறைந்திருப்பதே...
      கேள்விக்கும்,குழப்பத்திற்கும் காரணம்.தவறு கதையை புரிந்துகொள்ளும் கண்ணோட்டத்தில் உள்ளது இதை எளிதாக புரிந்துகொண்டு, அட்டகாசமாக கதையை ரசிக்க...நாளை படங்களுடன் விவரித்து வரிசைபடுத்துகிறேன்.(நீங்கள் கவனிக்க தவறியவை உள்ளபட)

      விவரங்களுக்கு பின் நிறைய நண்பர்கள்,இந்த கதையை முற்றிலும் வேறு கண்ணோட்டத்தில் படித்து
      ஜீனியர் பக்கம் திரும்புவார்கள்...wait and see tomorrow sir...!

      Delete
    4. // தவறு கதையை புரிந்துகொள்ளும் கண்ணோட்டத்தில் உள்ளது இதை எளிதாக புரிந்துகொண்டு, அட்டகாசமாக கதையை ரசிக்க...நாளை படங்களுடன் விவரித்து வரிசைபடுத்துகிறேன். //

      ஆ...!

      Delete
    5. மிக மிக ரசித்த கதையில் அந்த எமனின் திசை மேற்கு க்கு எப்போதும் இடம் உண்டு நண்பரே !
      மாயாவியின் மாயங்களுக்காக காத்திருக்கிறேன் !

      Delete
    6. மாயாவியின் கிராபிக்ஸ் அசத்தல்களுக்காக மியாவி வெய்ட்டிங்...

      Delete
  45. காமிக்ஸின் தலை சிறந்த காலங்களை நோக்கி நாம் சென்று கொண்டு இருக்கிறோம் என்றே
    நினைக்கின்றேன்..spider ,மாயாவி போன்ற கதைகள்..நமக்கு காமிக்ஸின் ஆனா ஆவன்னா வை
    கற்று கொடுத்தன என்றால் தேவ ரகசியம் தேடலுக்கல்ல வும் சரி..இன்றைய இ இ கொல்லாதே யும் சரி
    காமிக்ஸ்ல் இப்படியும் வித்தைகள் காட்ட முடியும் என்பதைத்தான் சுட்டி காட்டுகின்றன..இறந்த காலம்
    இற ப்பதில்லையை விழுந்து விழுந்து பாராட்டினோம்..அதே பாணி கதைதான் இதுவும்.. முதல் தடவை
    படித்தவுடன் புரியாதுதான்..நாம்தான் எந்த ஒரு காமிக்ஸ் ஐயும் புதையல் போல் பத்திரபடுத்தி படிப் பவர்கள்
    ஆயிற்றே..திரும்பவும் படியுங்கள்..ஆனால் எந்த ஒரு ரசிகனுக்கும் தனிப்பட்ட ரசனை இருக்கவே செய்யும்..
    அது பிறர் மனதை காயப்படுத்தாத அளவில் வெளிப்படட்டும்.

    ReplyDelete
    Replies
    1. கடைசி பால் வரை டென்சன் சற்றும் குறையாமல் , இறுதி பாலில் முடியும் கிரிக்கெட் ஆட்டங்களில் பிரசன்டேசன் போது திரு ரவி சாஸ்திரி அவர்கள் சொல்வார் :its a fantastic contest between bat and ball. at the end of the day no one is the winner , but cricket is the real winner. நண்பர்கள் இடையே ரசனை வேறுபட்டாலும் இறுதி வெற்றி காமிக்ஸ்சிற்கே.!

      Delete
    2. சேலம் Tex விஜயராகவன் @ // நண்பர்கள் இடையே ரசனை வேறுபட்டாலும் இறுதி வெற்றி காமிக்ஸ்சிற்கே.! //
      எப்படி இப்படி... கலக்குறிங்க!
      +1

      Delete
    3. சேலம் Tex விஜயராகவன் : மதிய விருந்தின் effect ? :-)

      Delete
    4. அப்பாடி சிங்கம் கிக்கிட்டது

      Delete
    5. @ Bambam, Tex vijayaraghavan

      அழகாய் சொன்றீர்கள் நண்பர்களே!
      +1

      Delete
  46. எங்கப்பா போனாய்ங்க ஒரு 2,3 நண்பைங்க, ஒரே கலாட்டா வா. இருக்கும். ஒரு தம்பி பூனையோ எலியோ படம்லாம் போட்டிருக்கும். இன்னொரு மாமா மங்ங்கூஸோ இல்ல சாக்பீஸோ ன்னு பட்ட பேர் லாம் வச்சிருப்பாரு. சீக்கிரம் வாங்கையா .

    ReplyDelete
    Replies
    1. ஆமா..என்ன இவ்வளவு நேரமாகியும் இவர்கள் இருவரையும் இன்னும் காணோம்...பெரிய்ய்ய்ய கிடா விருந்துக்கு ஏதும் சென்று விட்டார்களோ?

      Delete
    2. @ டெக்ஸ் விஜயராகவன்

      பந்தியில உட்கார்ந்து தொந்திய ரொப்புனது மங்கூஸ் மட்டும்தான்! பூனைகளுக்கு நேற்று முழுக்க பழைய சாதமும், பச்சை மிளகாயும் தான்!

      Delete
  47. விஜயன் சார்,

    * டிசம்பர் மாதம் ஐந்து புத்தகங்கள், மனம் எப்பொழுது டிசம்பர் மாதம் வரும் என எதிர்பார்கிறது ...

    * நவம்பர் லார்கோ மாதம், சைமன் இதில் நடிகராக வருகிறார் என நீங்கள் முன்பே கூறியுள்ளீர்கள். அதிகம் எதிர்பார்க்கும் இதழ் இன்னும் சில நாட்களில் ....

    * இ.இ.கொ - தொடக்கம் முதல் இறுதி வரை ஒரு திரில்லர் சினிமா பார்த்தது போலவே அருமையாக இருந்தது. ஜூனியர் selection உண்மையிலேயே அருமை. இது போன்ற கதைகள் நாம் அவ்வப்பொழுது வெளியிட வேண்டும்.

    * அடுத்த வருட கதைகளின் பட்டியலை காண ஆவலாக உள்ளோம். ஆனால் தொடக்கத்திலேயே எல்லா கதைகளையும் சொல்லி விடுவதை காட்டிலும், சில கதைகளை சொல்லாமல் வைத்திருந்து கடைசியில் சொல்லலாமே :)

    ReplyDelete
    Replies
    1. திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் @ // ஆனால் தொடக்கத்திலேயே எல்லா கதைகளையும் சொல்லி விடுவதை காட்டிலும், சில கதைகளை சொல்லாமல் வைத்திருந்து கடைசியில் சொல்லலாமே :) //
      Why திஸ் கொலைவெறி :-)

      Delete
  48. //அடுத்த வருட கதைகளின் பட்டியலை காண ஆவலாக உள்ளோம். ஆனால் தொடக்கத்திலேயே எல்லா கதைகளையும் சொல்லி விடுவதை காட்டிலும், சில கதைகளை சொல்லாமல் வைத்திருந்து கடைசியில் சொல்லலாமே :) //

    கவலையே படாதீர்கள் புளுபெர்ரி நண்பரே...சஸ்பென்ஸே இல்லாமல் என்றைக்குத்தான் நமது ஆசிரியர் முழுப் பட்டியலையும் கூறியுள்ளார்!!!
    சஸ்பென்ஸ் எப்பொழுதுமே உண்டு...ஆனால் அது எந்த மாதிரி கதை, எந்த ஹீரோ என்பதில் தான் உண்மையான சஸ்பென்ஸே...

    ReplyDelete
  49. எடிட்டர் சார்,

    தடுமாற்றங்கள் ஏதுமில்லை என்னிடம். சிப்பாயின் சுவடுகள், எமனின் திசை மேற்கு, இறந்த காலம் இறப்பதில்லை, போன்ற கதைகள் என்னைக் கவர்ந்தவைகள் தான்.

    ஆனால் தற்போதைய இஇகொ வை அந்த பட்டியலில் சேர்த்திடல் சாத்தியமானதொன்றல்ல... இணைய உலாவிகளைத் தவிர்த்த வாசகர்களின் அபிப்பிராயங்களை நீங்கள் அறியும் காலத்தில் எனதுணர்வையும் நீங்கள் ஏற்பீர்களென நம்புகிறேன்.

    மற்றபடி லார்கோவின் அறிவிப்புக்குப்பின்னர்தான் தீபாவளி உற்சாகம் வந்தது என்னிடம்...

    சார் சேலம் புத்தகத் திருவிழா பற்றி கேட்டதற்கு பதில் சொல்லவில்லை நீங்கள்...

    ReplyDelete
    Replies
    1. S.V.Venkateshh : புத்தக விழாக்களுக்குள் தலை நுழைப்பது நம்மைப் போன்ற புதியவர்களுக்கு (!!) அத்தனை சுலபக் காரியமாய் இருப்பதில்லை ! அங்கீகரிக்கப்பட்ட பதிப்புலக வட்டத்தினுள் நாமும் ஒரு அங்கத்தினராய் ஏற்றுக் கொள்ளப்படும் நாள் புலரும் வரை தட்டுத் தடுமாறியே நமது புத்தகத் திருவிழா விஜயங்கள் இருந்திடும் !

      Delete
    2. S.V.Venkateshh : இயன்றால் தேதிகளையும், நடத்தும் நிறுவன விபரங்களையும் மட்டும் அனுப்பித் தாருங்களேன் சார் !

      Delete

    3. //தடுமாற்றங்கள் ஏதுமில்லை என்னிடம். சிப்பாயின் சுவடுகள், எமனின் திசை மேற்கு, இறந்த காலம் இறப்பதில்லை, போன்ற கதைகள் என்னைக் கவர்ந்தவைகள் தான்.//
      +1

      //ஆனால் தற்போதைய இஇகொ வை அந்த பட்டியலில் சேர்த்திடல் சாத்தியமானதொன்றல்ல...//
      true, we cannot equate(in terms of depth in story, art wise) இஇகொ with இறந்த காலம் இறப்பதில்லை, சிப்பாயின் சுவடுகள்.

      Delete
  50. ----------------
    என் பெயர் லார்கோ - முதன் முதலாக ஒரு ஆங்கிலப் படத்தை, ஒரு காமிக்ஸ் படிக்கும் உணர்வை ஏற்படுத்திய கதை. அதற்கு முன் அந்த அளவு ஸ்டைலிஸ்சான ஒரு காமிக்ஸ் கதையைப் படித்ததில்லை. காமிக்ஸ் புத்தகத்தில் எடிட்டிங் யுக்திகளை மிக அற்புதமாக கையாண்ட விதம். ஒரு பேனல் 20 வருடங்களுக்கு முன் , அடுத்த பேனல் தற்காலம் என்று கலந்து கட்டின சூப்பர் கதை.

    சிப்பாயின் சுவடுகள் - இந்தக் கதையைப் படித்து முடிக்க கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆனது. ஆனால் மீள் வாசிப்பிற்காக சற்றே ஒரு ரம்மியமான நாளிலில் அமைதியாக படிக்கும் போது, ப்ரென்ச் கிராமம் ஒன்றின் குளிர்காற்று முகத்தில் படுவது போன்ற ஒரு உணர்வு.

    எமனின் திசை மேற்கு - இந்தக் கதை எவ்வளவு அவசரமாக படித்தாலும் ஒரு கனத்த உணர்வை உடனடியாக படித்தவர்களுக்கு கடத்தும் கதை (திருட்டு விசிடியில் சுமார் பிரிண்டில் ஆட்டோ கிராஃப் படத்தைப் பார்த்துவிட்டு இதே உணர்வு)

    க்ரீன் மேனார் - மாடர்ன் கருப்புக் கிலவி கதை. ஒவ்வொன்றும் அற்புதம்.

    எதற்கு இப்படி பீடிகை என்றால்

    சில மெக ஹிட் கதைகள் எப்போது படித்தாலும் மனதில் பதியும்.

    சில கதைகளைப் படிப்பதற்கு என்று ஒரு அமைதியான நிலை தேவைப் படுகிறது.

    என் பெயர் லார்கோ, எ.தி.மே - முதல் வகை
    சி.சுவடுகள், இரவே இருளே கொல்லாதே - இரண்டாம் வகை.

    இந்த மாதிரி முயற்சிகள் தொடரவேண்டும்.

    the shawshank redemption ரிலீஸ் ஆன போது சுமாரக ஓடியது. ஆனால் இப்பொது அந்த படத்தின் நிலை ???.. அதுபோல க்ரின் மேனார் மற்றும் இந்த மாதிரி கதைகள் இன்னும் சில வருடங்கள் கடந்த உடன் மிகவும் வரவேற்கப் படும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது.


    ----------
    என் கீபோர்டில் ஆங்கிலத்தில் Y க்கு அடுத்த கீ work ஆகவில்லை. அதனால் சில ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் :-)

    ReplyDelete
    Replies
    1. //என் பெயர் லார்கோ - முதன் முதலாக ஒரு ஆங்கிலப் படத்தை, ஒரு காமிக்ஸ் படிக்கும் உணர்வை ஏற்படுத்திய கதை. அதற்கு முன் அந்த அளவு ஸ்டைலிஸ்சான ஒரு காமிக்ஸ் கதையைப் படித்ததில்லை.//
      +1
      எனக்கு டெக்ஸ் வில்லரின் "சாத்தான் வேட்டை" யையும் படித்த போதும் கூட இதே உணர்வு எழுந்தது!!!

      //என் பெயர் லார்கோ, எ.தி.மே - முதல் வகை
      சி.சுவடுகள், இரவே இருளே கொல்லாதே - இரண்டாம் வகை.
      இந்த மாதிரி முயற்சிகள் தொடரவேண்டும்.
      the shawshank redemption ரிலீஸ் ஆன போது சுமாரக ஓடியது. ஆனால் இப்பொது அந்த படத்தின் நிலை ???..//

      இந்தப் படத்தைப் பற்றி "imdb.com" ல் பார்த்தபொழுது, இந்த படத்திற்குப்போய் இவ்வளவு rating கொடுத்திருக்காங்களேன்னு தோன்றியது...
      ஆனால் மனம் அமைதியாக இருக்கும் ஒரு பொழுதில் அப்படத்தைப் பார்க்கையில் மிகவும் பிடித்து விட்டது...

      அதுபோல தான் சில காமிக்ஸ்களும்(க்ராஃபிக் நாவல்), புக் வாங்கி விட்டோமே படிச்சு முடிக்கணுமே என்று சில வேளைகளில் நான் படித்தபொழுது பிடிக்காமல் போய்...மீண்டும் அமைதியான சூழலில் படிக்கும்பொழுது மிகவும் பிடித்து விட்டது...
      மிகச்சிறந்த உதாரணம்-க்ரீன் மேனர் கதைகள்....

      Delete
    2. RAMG75 : தாமதமாகவேணும் புது முயற்சிகள் ஒரு நேசப் பார்வையை ஈட்டுவது சந்தோஷமாக உள்ளது ! இதுவும் ஒரு பொது ரசனையாகும் நாள் நிச்சயமாய் புலருமென்ற நம்பிக்கை எனக்குள்ளது !

      Delete
    3. //என் பெயர் லார்கோ - முதன் முதலாக ஒரு ஆங்கிலப் படத்தை, ஒரு காமிக்ஸ் படிக்கும் உணர்வை ஏற்படுத்திய கதை. அதற்கு முன் அந்த அளவு ஸ்டைலிஸ்சான ஒரு காமிக்ஸ் கதையைப் படித்ததில்லை. காமிக்ஸ் புத்தகத்தில் எடிட்டிங் யுக்திகளை மிக அற்புதமாக கையாண்ட விதம். ஒரு பேனல் 20 வருடங்களுக்கு முன் , அடுத்த பேனல் தற்காலம் என்று கலந்து கட்டின சூப்பர் கதை//

      +1, அப்படியே என் மனதில் உள்ள வார்த்தைகள்

      Delete
    4. //என் பெயர் லார்கோ - முதன் முதலாக ஒரு ஆங்கிலப் படத்தை, ஒரு காமிக்ஸ் படிக்கும் உணர்வை ஏற்படுத்திய கதை. அதற்கு முன் அந்த அளவு ஸ்டைலிஸ்சான ஒரு காமிக்ஸ் கதையைப் படித்ததில்லை. //
      //சிப்பாயின் சுவடுகளை மீள் வாசிப்பிற்காக சற்றே ஒரு ரம்மியமான நாளிலில் அமைதியாக படிக்கும் போது, ப்ரென்ச் கிராமம் ஒன்றின் குளிர்காற்று முகத்தில் படுவது போன்ற ஒரு உணர்வு.//
      +1
      //சில கதைகளைப் படிப்பதற்கு என்று ஒரு அமைதியான நிலை தேவைப் படுகிறது.//
      +1

      Delete
    5. //க்ரீன் மேனார் - மாடர்ன் கருப்புக் கிலவி கதை. ஒவ்வொன்றும் அற்புதம்.//
      மைனஸ் 1
      என்னோடதுல மைனஸ் key இயங்கலை !

      Delete
    6. +1

      // ஒரு ரம்மியமான நாளிலில் அமைதியாக படிக்கும் போது, ப்ரென்ச் கிராமம் ஒன்றின் குளிர்காற்று முகத்தில் படுவது போன்ற ஒரு உணர்வு.///

      ரசணை ரசணை! :)

      Delete
  51. விஜயன் சார், லார்கோ கதையின் மாதிரி பக்கம்களின் வசனம்கள் புதிய ஸ்டைலில் உள்ளது, ரசிக்கும் படி உள்ளது. இது உங்களின் கைவண்ணமா அல்லது புதியவரா என அறிய ஆவல் சார்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : மாற்றம் பாணியில் மாத்திரமே...பேனாவில் அல்ல ! :-)

      Delete
    2. Parani from Bangalore : ஒரு seamless transition .....இதுவே நமது long term குறிக்கோள் !

      Delete

  52. ஏஏஏஏஏவ்வ்வ்வ்வ்வ்வ்.!!!!

    ReplyDelete
    Replies
    1. Right-u விருந்தே தான்!!!

      Delete
    2. Tex மாமா & Sathiya,
      நீங்க. ரெண்டு பேரும் கலக்கும் போது., நாங்க உள்ள வந்தா., எங்க இமேஜ்.,டேமேஜ் ஆயிடுன்றதால ரெஸ்டு எடுத்துகினு இருந்தோம்.!
      (அத்தோட நான் சொல்ல நெனச்ச எல்லா மேட்டரையும், நண்பர்கள் நிறைய பேரு பிரிச்சி மேஞ்சிட்டதால மேற்கொண்டு புதுசா கெடைக்குமான்னு ரோசன பண்ணிணூகீறேன்.)

      Delete
    3. //Tex மாமா & Sathiya,
      நீங்க. ரெண்டு பேரும் கலக்கும் போது., நாங்க உள்ள வந்தா., எங்க இமேஜ்.,டேமேஜ் ஆயிடுன்றதால ரெஸ்டு எடுத்துகினு இருந்தோம்.! //
      சத்தியமா அது நான் இல்லைங்க :D

      Delete
    4. இந்த ஐஸ் எல்லாம் வேணாம்..ஒழுங்கா அடுத்த தடவை "கிடா" விருந்துக்குப் போகும்போது light ah ஒரு hint கொடுங்க...அவர் எனக்கு அறிமுகமே இல்லைன்னாலும் வந்துவிடுகிறேன்...
      இதலெல்லாம் நான் கூச்சப்படறதேயில்லையாக்கும் :D

      Delete
    5. சத்யா.,
      அடுத்த காதுகுத்தி கிடா விருந்த நம்மளே போட்ருவோம்.
      நம்ம காமிக்ஸ் வாசக நண்பர்கள் எல்லோரையும் கூப்பிட்டு விழாவா சிறப்பிக்க வெச்சிரலாம்.
      காதுகுத்த கடுக்கன் கொண்டுவரும் பொருப்பு டெக்ஸ் மாமாவுக்கு.,
      விருந்துக்கு கிடாயும்., சாப்பாட்டு செலவும் உங்க பொருப்பு,
      காதுகுத்துக்கு முக்கியமா தேவைபடற "காது " கொண்டுவர்றது என்னோட பொருப்பு. , ஓ.கே.வா.?

      Delete
    6. //காதுகுத்துக்கு முக்கியமா தேவைபடற "காது " கொண்டுவர்றது என்னோட பொருப்பு. , ஓ.கே.வா.?//
      :-):-):-):-):-):-) செம!!!

      Delete
  53. @Vijayan Sir
    Thank you Sir for nice post and comments :)

    ReplyDelete
  54. நண்பர்களே
    ஒரு சாப்பாடுனலே நமக்கு சாம்பார் புளிகுழம்பு ரசம் மோர் என தேவை படும்போது காமிக்ஸ் என்றாலே டெக்ஸ் மற்றும் tiger என்றால் எப்படி நானும் நம் காமிக்ஸ்சை ஒரு 25 வருடங்கள் ஆக படித்து வருகிறேன் மாத மாதம் டெக்ஸ் என்றல் i பெற கண்டிப்பாக போர் அடித்து விடும் நமக்கு ஒரு change வேண்டும் அல்லவா ? எனக்கு டெக்ஸ் சூம் வேண்டும் லார்கோ வேண்டும் அதே மாதிரி கிரீன் மனோர் ,எமனின் திசை ,சிப்பாயின் சுவடுகள்,இ .இ.கொ.போன்றவையும் வேண்டும் .நான் தான் மதி இல்ல மந்திரி வேண்டும் என்று எடிடோரிடும் தொடர்ந்து வேண்டுபவன் .எனக்கு பாஷா வேண்டும் அன்பே சிவமும் வேண்டும் நான் கடவுள் வேண்டும் லிங்கவும் வேண்டும் ஆசிரியர் கூறியதை போல் choice is ours .ரொம்ப நீஈஈஈஈலமன பதிவு ? sorry guys


    சொல்ல மறந்து விடேன் கதை சூப்பர் junior we ? sorry i expect more !





    ReplyDelete
  55. இ.இ.கொல்லாதே.!

    சூப்பரப்பூ. நெசமாவே நல்லாருக்கு.!
    தீபாவளிக்கு டெக்ஸ் இல்லன்ற வருத்தம் இருந்தாலும்., ஹாலோவீன் கொண்டாட்டம் திருப்தியாவே இருந்துச்சி.!
    முதல் தடவை பிடிபடாத சில நுண்ணிய விசயங்கள் ரெண்டாவது வாசிப்புல சுலபமா பிடிபட்டுச்சி.
    கதையை ரெண்டு முறை படிச்ச பிறகே இந்த விமர்சனம்.
    ஹாரர் +சைக்கோ ஷ்பெசல். கிட்டத்தட்ட கதையின் அனைத்து மாந்தர்களுமே (சிறிதளவேனும்) மனநோயாளிகளாக சித்தரிக்கப் பட்டுள்ளனர்.
    கொலையாளி யாரென்பதை யூகிப்பதில் சற்றே சிரமம் இருந்தது உண்மை.
    பிரித்து போட்டிருந்தால் இந்த த்ரில் நிச்சயம் மிஸ் ஆகியிருக்கும். ஒரே இதழாக வெளியிட எடிட்டரை தூண்டிய பட்டாம்பூச்சி விளைவு எதுவாக இருந்தாலும்., என்னுடைய மனமார்ந்த நன்றி.
    இன்னும் படித்திராத நண்பர்களுக்காக என்னுடைய பிரசங்கத்தை இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.!
    அடுத்த ஆண்டின் அட்டவணையிலும் இதுபோன்ற த்ரில்லர்கள் இடம்பிடிக்கும் என்றால்.,..,.,சூப்பரேஏஏஏஏஏ.!!

    ReplyDelete
  56. Next year how many reprints stories Sir?

    ReplyDelete
    Replies
    1. @Shankar. R
      மின்னும் மரணம்., வர்றதாலே வேற ரீப்ரின்ட்., டவுட்டுதான்.
      அதான் மாடஸ்டி அக்கா வாராகளே., அவுகளையே ரீபிரிண்டா வெச்சிக்கலாமே.!?

      Delete
    2. @Macheri Mangoose,
      மாடஸ்டி உங்களுக்கு அக்கான்னா நீங்க எனக்கு மச்சினன்... ஹி... ஹி... :)

      Delete
    3. அடடே.!
      நான் சங்கருக்கு மாடஸ்டியை அக்கா என்று சொன்னேன்.!
      என்னைப்போல சிறுவனுக்கு மாடஸ்டி.,பாட்டி முறை வரும்.
      வேண்டுமானால் பிருந்தாபன் உங்களை தாத்தா என்று ஏற்றுக் கொள்கிறேனே.!!

      Delete
    4. ஹாஹாஹா! கலக்கல் மங்கூஸ்!

      Delete
  57. Replies
    1. @ Sankar
      விசாரிப்புக்கு நன்றி சங்கர்! நேற்று வீட்டில் ஏகப்பட்ட வேலை. இன்னிக்கு ஆபிஸுக்கு கிளம்பிட்டேனில்லையா, இனிமே ஃப்ரீதான்! ;)

      Delete
  58. டிட்டர் சார்,

    இரவே இருளே கொல்லாதே - இந்த முறை அங்கு வெளிவந்த சில நாட்களிலேயே, இங்கு உறவினர் ஒருவர் மூலமாக கிடைக்கப் பெற்றேன். முதல் வாசிப்பிலேயே என்னை மிகவும் கவர்ந்து விட்டது.

    கதையின் காலத்திருக்கு மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் colouring டோன், ஷெரிப்பின் அந்த புலனாய்வு பிளாஷ் back, கடந்த காலம், நிகழ் காலம் என மாறும் எடிட்டிங் technic என திகில் கதை வரிசயில் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இது போன்ற வித்யாசமான கதைகளை அடிக்கடி வெளியிடுங்கள் சார்.

    சொல்ல மறந்து விட்டேனே - பிரிண்டிங் quality excellent . நாளுக்கு நாள் நமது தரம் முன்னேறி செல்கிறது. இப்போதெல்லாம் படங்களை மறைக்கும் பெரிய பலூன்கள் இல்லை, படங்கள் எல்லாம் ஷார்ப்பாக இருக்கின்றன. Kudos to you and your team members.

    ReplyDelete
    Replies
    1. //கதையின் காலத்திருக்கு மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் colouring டோன், ஷெரிப்பின் அந்த புலனாய்வு பிளாஷ் back, கடந்த காலம், நிகழ் காலம் என மாறும் எடிட்டிங் technic என திகில் கதை வரிசயில் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இது போன்ற வித்யாசமான கதைகளை அடிக்கடி வெளியிடுங்கள் சார்.///

      ரசணை ரசணை! அதே அதே!

      Delete
  59. விமர்சகர்களையும், விமர்சனங்களையுமநஙகள் கையாளும் உளவியல் ரீதியான அணுகுமுறை ஒரு சிறந்த பள்ளி ஆசிரியரை நினைவு படுத்துகிறது

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே அவரைப் பார்த்து நம்ம பரணிதரன் உள்ளிட்ட பலபேர் (நானும்தான் ஹிஹி) பயந்து நடுங்கறாங்களாம்...

      இப்படியே போனா "பசங்களா, நாளைக்கு வரும்போது 'சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்' பாடத்த தரவ்வா படிச்சுட்டு வந்துடுங்க... எந்தப் பக்கத்திலேர்ந்து கேள்வி கேட்டாலும் பதில் சொல்லணும். இல்லேன்னா பிரம்பு பிஞ்சுபோய்டுமாக்கும். ஆம்மா!" அப்படீன்னு சொன்னாலும் சொல்லுவாரு!
      ஆத்தாடியோவ்! :-O

      Delete
    2. கேள்வி கேட்டா கூட எதையாவது சொல்லி சமாளிச்சிடலாம்.
      படம் வரைஞ்சி பாகங்களை குறி.! என்று பரிட்சை வைத்தால் என்னாவது.?
      நிச்சயமாய் நான் ஜீரோதான்.!

      Delete
  60. டியர் சார், "இரவே இருளே கொல்லாதே!" அற்புதமான கதை தேர்வு. அபாரமான சித்திரங்கள் மற்றும் ஆளை அசரடிக்கும் வண்ண சேர்க்கை. ஒரு அட்டகாசமான வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது இந்த புத்தகம். விறுவிறுப்பான மொழிபெயர்ப்பு மேலும் புத்தகத்துக்கு வலு சேர்த்தது. வழக்கமான ஆக்சன் கதைகளுக்கு மத்தியில், இது போன்ற வித்தியாசமான OFF-BEAT கதைகளை அவ்வப்போது வெளியிடுவது காமிக்ஸ் மேலுள்ள ஆர்வத்தை குன்றாமல் வைத்திருக்க உதவுகிறது.


    ஆசிரியரின் கவனத்துக்கு:

    1. இந்த புத்தகத்தின் அட்டை கனம் குறைவாக உள்ளதால் சுலபமாக சுருண்டு விடுகிறது.

    2.LIONCOMICS@YAHOO.COM அகவுண்டுக்கு வரும் ஈமெயில்கள் மேல் கூடுதல் கவனம் தேவை. சமீபத்திய எனது இரண்டு ஈமெயில்கள் கேட்பாரற்று கிடக்கிறது என நினைகிறேன். முதலாவது சந்தா செலுத்திய விபரத்தை கொண்டது. ஐந்து நாட்களுக்கு பின்னும் பதில் வராததால், இரண்டு நாட்கள் முயன்று அலுவலகத்தை தொலைபேசி கோளாறுகளுக்கு இடையே, தொடர்பு கொண்டு உறுதிசெய்தேன்.

    இரண்டாவது கடந்த 21 ஆம் தேதியிட்ட இமெயிலில் எனக்கு வந்த புத்தகத்தில் இருந்த பிரிண்டிங் விடுபட்ட சுமார் எட்டு பக்கங்களை புகைப்படத்துடன் குறைபாட்டை சுட்டிக்காட்டியிருன்தேன். அதற்கும் இதுவரை பதில் இல்லை.

    அலுவலக முகவரிக்கு வரும் ஈமெயில் கடிதங்களுக்கு இன்னமும் கொஞ்சம் கூடுதல் ATTENTION தேவை சார்.

    ReplyDelete
  61. எடிட்டர் சார்,

    சேலம் புத்தகத் திருவிழா நவம்பர் 7 முதல் 16 வரை

    இடம் : போஸ் மைதானம்

    மைதானம் மாநகராட்சிக்கு சொந்தமானது. மாநகராட்சியில் பணிபுரியும் தனது நண்பரிடம் தகவல் திரட்டிக் கொண்டு உங்களை தொடர்பு கொள்ளவிருக்கிறார் சேலம் டெக்ஸ் விஜயராகவன்.

    ReplyDelete