Powered By Blogger

Saturday, October 11, 2014

ஒரு கௌபாய் வானவில்..!

நண்பர்களே,

வணக்கம். கூப்பிடு தொலைவில் தீபாவளி காத்திருக்க - எங்கள் நகரம் எப்போதும் போல் ஜரூராய் காட்சி தருகிறது ! சீனா பட்டாசு ; குறைந்து வரும் பட்டாசு வெடிக்கும் பழக்கங்கள் என இடர்கள் இடையில் முளைத்திருப்பினும், பண்டிகைக்கால உற்சாகம் ஊரெங்கிலும் ! நம் பங்கிற்கும் தீபாவளிக்கு முன்பாகவே ஸ்பெஷல் இதழை உங்கள் கரங்களில் ஒப்படைக்க சகல வேலைகளும் நடந்தேறி வருகின்றன ! இம்முறை இதுவொரு dark-ஆன த்ரில்லர் கதையாக இருப்பினும், அதனை இந்த வேளையில் வெளியிட கூடுதலாய் ஒரு காரணம் உண்டு ; அடுத்த ஞாயிறின் பதிவின் போது preview + விபரங்கள் !! சரி...இடைப்பட்ட இந்த நாட்களை சுவாரஸ்யமாக்க என்ன செய்யலாம் என்ற கேள்வி எனக்குள்...! 2015 மீதான நம் பார்வைகள் தொடரும் இவ்வேளையில் அறிமுகமாகக் காத்திருக்கும் ஒரு வித்தியாசமான ஆசாமியைப் பற்றிய ஒரு teaser படலத்தை களத்தில் இறக்கி விட்டாலென்னவென்று தோன்றியது ! நவம்பர் வரை பெவிகால் போட்டு வாயைப் பூட்டி வைத்திருக்க ஆசை தான் ; ஆனால் இந்தப் பண்டிகைத் தருணத்தைக் கொஞ்சம் கலகலப்பாக்குவதில் தப்பில்லை தானே..? So here goes :

நமது தற்போதைய காதல் மையல் கொண்டிருப்பது கௌபாய் கதைகளின் மீதே என்பதில் இரகசியம் ஏதுமில்லை ! டெக்ஸ் வில்லர் தொடங்கி வைத்த relay ஓட்டப்பந்தயத்தைப் பின்னாட்களில் லக்கி லூக் ; கேப்டன் டைகர் ; கமான்சே என்று பலரும் தொடர்ந்து வருவதை நாம் ரசித்து வந்துள்ளோம். அந்த வன்மேற்கின் மீது நமக்குப் பிரேமம் உருவாகிட ஆதாரக் காரணம் என்னவென்று சொல்லத் தெரியவில்லை - ஆனால் கரடுமுரடான அந்த நாட்களை காமிக்ஸ்களின் மூலம் தரிசிப்பது நமக்கொரு favorite பொழுதுபோக்காகி விட்டது ! நமக்குத் தமிழகத்தில் வட ஆற்காட்டையோ, இராமநாதபுரத்தையோ அடையாளம் சொல்லத் தெரிகிறதோ இல்லையோ - டெக்சாஸ்.. மொன்டானா... நெப்ராஸ்கா... வ்யோமிங் என்ற அமெரிக்க மாநிலங்களை வரிசைப்படுத்துவது சுலபமாகி விட்டது - இந்தக் கௌபாய் காதலின் புண்ணியத்தில் ! சியௌக்ஸ் ; செயென்னீ... நவஜோ..சிப்பெவா....என்பதெல்லாம் கௌபாய் காமிக்ஸ் உலகிற்கு அப்பார் நிற்போர்க்கு  கெட்ட வார்த்தைகளாய்த் தோன்றினாலும் - நம் அகராதிகளில் அவை அன்றாடப் பதங்கள் !

டெக்ஸ் கதைகளில் மனிதர்கள் மீதே focus அதிகமிருப்பதால் அங்கே hero worship என்ற ரசனைக்கு இடம் தரும் விதமாய் கதைகள் அமைக்கப்பட்டிருக்கும் ! பெரு நகரமோ - சிற்றூரோ டெக்ஸ் & கோ நேராக அங்குள்ள சலூனிற்குச் செல்வது ; உள்ளூர் ஹோட்டலில் வறுத்த கறியைச் சப்புக் கொட்டுவது ; ஷெரிப் அலுவலகத்தில் யாரையாவது துவைத்துத் தொங்கப் போடுவது என்ற நேர்கோட்டில் டெக்ஸ் கதைகள் பிரயாணம் செய்யும் போது - சுற்றுப்புறம் ஒரு பின்னணியாக மாத்திரமே இருந்திடுவதில் வியப்பில்லை !

டைகர் கதைகளில் treatment முற்றிலும் மாறுபட்ட விதமாய் ! பஞ்சரான மூக்கு ; சவரம் காணா வதனம் ; முரட்டு சுபாவம் என ஓரளவிற்கு wild west-ன்  அன்றைய யதார்த்த மனிதர்களை ஒட்டிய பாத்திரப் படைப்பு எனும் போதே அங்கே மிகைப்படுத்தல் மட்டுக்குள் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது ! அதன் பலனாய் பாலைவனங்கள் ; மெசொக்கள் ; முரட்டுத்தனம் தலைவிரித்தாடும் சிறு நகரங்கள் ; மெக்சிக எல்லை ; கடுமையான இராணுவ வாழ்க்கை என்று அந்நாட்களைச் சாயம் பூசாமல் நமக்குக் கண்ணில் காட்ட அதன் படைப்பாளிகள் முனைந்திருப்பதைப் பார்த்திட முடியும் !

சமீபமாய் அறிமுகமாகி - அசாத்தியமான கதைக்களங்கள் எதையும் (இது வரையிலாவது) நம் முன்வைக்காமலே கூட தேர்ச்சி பெற்று நிற்கும் கமான்சே கதைகள் கௌபாய் வானவில்லின் ஒரு மத்திய பகுதியை ஆக்ரமிக்கும் ரகம் ! டெக்ஸ் போன்ற ஆரவாரம் கிடையாது ; டைகரின் ஆழமான plot கிடையாது ; இருப்பினும் இயல்பான அந்நாட்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதைகள் + ஓவியர் ஹெர்மனின் அழகான சித்திரங்கள் என்று ஸ்கோர் செய்வது கமான்சே ஸ்டைல் !

சரி...இந்த மூன்று விதமான கௌபாய் classic-களைப் பார்த்து விட்டோம் ; what next ? என்ற கேள்வி கொஞ்ச காலமாகவே என் முன்னே ! அப்போது தான் அந்தக் காலத்துப் படங்களில் வரும் flashback sequences போல் நான் மல்லாந்திருக்க ,வட்ட வட்டமாய் வர்ணங்களில் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன - ஒரு நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பானதொரு பொழுதுக்கு ! நமது COMEBACK ஸ்பெஷலுக்கெல்லாம் சில, பல ஆண்டுகள் முந்தைய தருணம் அது..! வேறு பணிகளின் நிமித்தம் இத்தாலி சென்றிருந்த வேளைதனில் அங்கு நடைபெற்றுவந்ததொரு சிறார் புத்தகத் திருவிழாவினில் எட்டிப் பார்ப்போமே என்று போலோனியா நகருக்கு ஒரு ட்ரிப் அடித்திருந்தேன் ! வழக்கமாய் பார்க்கும் பதிப்பகங்கள் நீங்கலாக ஒன்றிரண்டு   புதியவர்களையும் பார்த்து வைத்துக் கொண்டிருந்தேன். அப்போது பிரெஞ்சு ஸ்டால் ஒன்றில் ஒரு கௌபாய் உருவத்தின் போஸ்டர் பெரிதாய் டாலடிக்க, அவரது ஆல்பங்களில் சில அருகே இருப்பதைக் கண்டேன். பாஷை புரியாவிடினும் - ஆங்காங்கே நிகழும் கும்மாங்குத்துக்களையும் ; தோட்டாத் தோரணங்களையும் மண்டைக்குள் ஏற்றிக் கொள்வதற்கு மொழி அவசியமில்லை தானே ? So வரிசையாய்ப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்து விட்டு அவர்களிடம் ரெண்டு வார்த்தை பேசி விட்டு - 'ஊருக்குப் போய் கடுதாசி போடுகிறேன் !' என்று நடையைக் கட்டியிருந்தேன் ! இன்றைக்கோ - நாளைக்கோ என்று இழுத்துக் கொள்ளாத குறையாய் கிடந்த நமது அந்நாட்களது காமிக்ஸ் முயற்சிகளுக்கு புதிதாய்க் கதைகள் வாங்கும் தெம்போ, திராணியோ அச்சமயம் நம்மிடம் இருந்ததில்லை என்பதால் அந்தப் புதுக் கௌபாய் சுவாரஸ்யத்தைக் கிளப்பியிருப்பினும் மேற்கொண்டு ஏதும் செய்ய எனக்கு தோன்றவில்லை !  Flashback-ன் முதல் பாகம் 'டொட-டாயங்' என்று நிறைவு பெற ; இரண்டாம் பாகமானது தொடங்கியது சென்றாண்டின் ஒரு மத்திமப் பகுதியினில் ! நமது செகண்ட் இன்னிங்க்ஸ் துவங்கி ஜரூராய் வண்டி நகன்று கொண்டிருந்த வேளையில் அந்த "மறந்து போன கௌபாய் " மீண்டும் ஞாபகத்திற்கு வந்திருந்தார் - நமது கடல்கடந்த வாசக நண்பர் ஒருவரின் புண்ணியத்தில் ! அமெரிக்காவின் சியாட்டில் நகரில் வசிக்கும் நண்பர் நாச்சியப்பன் நாகப்பன் இந்த "ம.போ.கௌ." யின் 2 பாக ஆங்கிலப் படைப்பு ஒன்றினை எனக்கு அஞ்சலில் அன்பளிப்பாய் அனுப்பியிருந்தார் ! (நமது NBS 2013 ஜனவரியில் சென்னைப் புத்தக விழாவினில் வெளியான சமயம் தன்னால் பங்கு பெற இயலாது போயினும், தன சார்பாய் தந்தையை அனுப்பியிருந்த காமிக்ஸ் காதலர் அவர் ! ) என்றைக்கோ பிரெஞ்சில் பார்த்த ஆசாமி இப்போது ஆங்கிலத்தில் அட்டகாசம் செய்வதைப் பார்த்த சற்றைக்கெல்லாம் அதன் பதிப்பகத்தினரைத் தொடர்பு கொண்டு உரிமைகளுக்காக துண்டு விரித்தேன்! இந்தியாவோடோ ; இது போன்றதொரு சிறு மார்கெட்டுடனோ அதிகப் பரிச்சயம் கொண்டிரா அவர்கள் கோரிய ராயல்டி தொகை நமக்கு அஸ்தியில் ஜூரத்தை வரவழைக்காத குறை தான் ! 'O.k...ஊருக்குப் போய் கடுதாசி..!' என்று திரும்பவும் கழன்று கொண்டேன் 2013-ல் ! ஆனால் மண்டைக்குள்ளே ஒரு நமைச்சல் குடிகொண்டு விட்டால் அதனை அப்புறப்படுத்தாமல் அடுத்த வேலையில் கவனம் ஓடாதே ...!! So இந்தாண்டில் மீண்டுமொரு சுபயோக சுபதினத்தில் ஒரு ஐரோப்பியப் பயணத்தின் போது அவர்களது கதவுகளைத் தட்டினேன் நம்பிக்கையோடு ! 'அடடே..பயல் இவ்வளவு பிடிவாதமாகக் கோருகிறான் ; பிழைத்துப் போகட்டுமென உரிமைகளைத் தந்து விடுவார்களென்று எதிர்பார்த்தால் - கிடைத்ததோ மீண்டுமொரு பல்ப் தான் ! ஆனால் இம்முறையும் பஜ்ஜி-சொஜ்ஜிகளை அமுக்கி விட்டு  'ஊருக்குப் போய் கடுதாசி' என்று சொல்ல எனக்கே ஒரு மாதிரியாய் இருந்ததால் - சத்துக்கு மீறியும் நிறைய மேலே சென்றேன் நமது ராயல்டி கட்டணங்களில் ! ஏதேதோ பேசி ஒரு மார்க்கமாய்க் கைகுலுக்கிய போது புதியவர் நமக்கென உறுதியாகி இருந்தார் - கணிசமானதொரு தொகைக்கு !!  அது சரி...யாரந்த புது கௌபாய் ? என்ற கேள்விக்கு - தெனாவட்டாய் "பௌன்சர் "!! எனப்  பதில் கிடைக்கும் !

"அதிரடி அறிமுகம்" ; ஆக்க்ஷன் கௌபாய்" என்றெல்லாம் தேய்ந்து போன அடைமொழிகளோடு இவரை நான் அறிமுகம் செய்து வைக்கப் போவதில்லை ! சுருக்கமாய்ச் சொல்வதாயின் - 'இவர் வேற மாதிரி !!'  நிறைய கௌபாய் கதைகளைப் பார்த்து விட்ட நமக்கே இந்தப் புது வரவு ஒரு ஜெர்க் தரப் போவது நிச்சயம் ! 'அதென்ன பௌன்சர் ?' என்ற கேள்வி எழுப்பும் நண்பர்களின் பொருட்டு சின்னதொரு விளக்கம் : அந்நாட்களது பார்களில் 'சுதி' ஓவராய் ஏறிப் போய் சண்டித்தனம் செய்யும் அலம்பல் ஆசாமிகளைக் "கவனிக்க" பிரத்யேகமாய் சிலரை நிர்வாகம் வேலைக்கு வைத்துக் கொள்வதுண்டு ! இவர்களது வேலையே பாரில் அடாவடி தலைதூக்காது இருக்கச் செய்வதே ! இவர்களுக்குத் தான் Bouncer என்று பெயர் ! நமது புது வரவும் அத்தகையதொரு உத்தியோகஸ்தர் என்பதால் இக்கதைத் தொடரின் பெயரே THE BOUNCER ! வழக்கமான காமிக்ஸ் கதைக்களங்களின் நாசூக்குகளையோ ; கதாப்பத்திரங்களில் மனிதாபிமானங்களையோ ; இலைமறைகாயான வன்முறை சித்தரிப்புகளையோ இத்தொடரில் எதிர்பார்த்திடவே வேண்டாம் ! இங்கே வெட்டு ஒன்று - துண்டு பதிமூன்று தான் ! கெட்டவர்கள் ரொம்பவே கெட்டவர்களாய் இருப்பர் ; அன்றைய wild west -ன் மூர்க்கத்தனம் ; மனிதனின் மறு பக்கம் என சகலமும் உள்ளது உள்ளபடிக்கே சொல்லப்பட்டிருக்கும் ! Highlight -ன் உச்சம் என்னவெனில் பௌன்சருக்கு வலது கை கிடையாது !! ஒரு கரம் இல்லாமலே இவர் செய்யும் அதிரடிகள் பிடரியில் அறையும் ரகம் !

இத்தொடரின் கதாசிரியர் ஒரு சர்வதேச திரைப்பட டைரக்டரும் கூட ! 1929-ல் தென்னமெரிக்க நாடான சிலியில் பிறந்த  Alejandro Jodorowsky -க்கு திரைக்கதை எழுத்தாளர் ; நாடக ஆசிரியர் ; நடிகர் ; இசையமைப்பாளர் ; காமிக்ஸ் எழுத்தாளர் ; எனப் பன்முகங்கள் உண்டு ! Sci-fi கதைகளில் பெரும் வெற்றி கண்ட ஜோடோரோவ்ச்கி 2001-ல் இந்த பௌன்சர் தொடரினை பிரான்சே போக் என்ற ஓவியரின் கூட்டணியோடு  துவக்கினார் ! மொத்தம் ஒன்பது ஆல்பங்களே இத்தொடரில் (இது வரையிலும்) உண்டு என்றாலும், ஒரு  mega impact தரும் கதைவரிசை இது என்பதில் சந்தேகமே இல்லை !
கதாசிரியர் ஜோடோரோவ்ச்கி

ஓவியர் பிரான்சே போக்
இரு பாகங்கள் இணைந்து ஒரு கதை + மூன்று பாகங்களின் இணைப்பில் கதை # 2 + மீண்டும் ஒரு 2 பாகக் கதை என்பதே இந்த புதியவரின் கதையமைப்புகள் map என்பதால் அதே பாணியில் நாமும் வெளியிடவுள்ளோம் ! ஒவ்வொரு முழு எபிசோடும் ஒரு முழு இதழாய் உரிய விலையில் வெளியாகும் ! "Suggested for mature readers " என்ற பின்னட்டைக் குறிப்போடு ஆங்கிலப் பதிப்பே வெளியாகி இருக்கும் நிலையில் இத்தொடர் நேராய் நமது 2015-ன் கிராபிக் நாவல் பட்டியலுக்குள் (!!!) குதிக்கிறது ! லயன் காமிக்ஸ் லேபில் தாங்கியே வரவுள்ள  போதிலும் இவை ஆண்டின் மெயின் சந்தாவின் ஒரு அங்கமாய் இராது ! So  2015-ன் சூப்பர் 6-ன் மையமாக இருக்கவிருக்கும் BOUNCER கதைகளை விரும்பும் பட்சத்தில் மாத்திரமே நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் ! 'இந்த violence ; இந்த பாணிக் கதைகள் என் வீட்டுக்குள் வேண்டாமே !' எனக் கருதும் நண்பர்கள் தாராளமாய் skip செய்திடும் சுதந்திரம் இருக்கும் !

"ரௌத்திரம் பழகு !" இத்தொடரின் ஆல்பம் # 1 !!  கதைக்களம் யதார்த்தமெனும் கரடுமுரடோடு இருக்கும் போது  - அதன் மொழியாக்கம் வழக்கமான பாணியில் இருந்தால் பொருந்தாது என்பதை உணர அதிக நேரம் பிடிக்கவில்லை ! நிறைய அவகாசம் எடுத்துக் கொண்டு இப்போதே முதல் பாகத்தை எழுதிக் கொண்டுள்ளேன் - ஒரு சிறு பிள்ளையின் ஆர்வத்தோடு ! 2015-ன் ஏதோ ஒரு வேளையில் உங்கள் வீட்டுக் கதவுகளை பௌன்சர் தட்டும் போது - 'இந்த பில்டப் சரி தான் !' என்று உங்களுக்குத் தோன்றிடும் பட்சத்தில் - நாங்கள் கொடுக்க சம்மதித்த ராயல்டி கட்டணங்களுக்கும் சரி ; எங்களது மெனக்கெடல்களுக்கும்  சரி ஒரு பலன் இருந்ததாய் நம்புவோம் ! அது வரையிலும்  fingers crossed !
Album 1

சிறுகச் சிறுக சிறகுகளுக்கு தூரம் பறக்கும் ஆற்றலை வழங்குவதும் நீங்களே ; இந்தத் தேடல்களுக்கு எங்களைத் தூண்டுவதும் நீங்களே என்ற விதத்தில் இப்புதிய வரவின் credits உங்களையே சாரும் guys ! இன்றிலிருந்து ஒரு பத்து ஆண்டுகள் கழித்து "BOUNCER - The Complete Collection " என்றதொரு தொகுப்பை வெளியிட நீங்கள் குரல் கொடுக்கும் ஒரு தருணம் உருவாகும் பட்சத்தில் பௌன்சர் நிச்சயமாய் ஸ்கோர் செய்திருப்பார் என்பதை சந்தேகமின்றி புரிந்திருப்போம் ! அது மட்டுமன்றி - "கிராபிக் நாவல்களா ? ஆவ்வ்வ் !!" எனக் குரல் கொடுத்த நண்பர்களும் கூட 2015-ல் 'கி.நா.காதலர்களாய்' உருமாற்றம் கண்டால் - அதுவே பௌன்சரின் நிஜ வெற்றியாகி இருக்கும் ! பார்ப்போமே...!! மீண்டும் அடுத்த ஞாயிறு சந்திப்போம் guys ! அது வரை have fun ! Bye for now !  

514 comments:

  1. Replies
    1. 2nd place ஒரு ஷெகண்டுல மிஸ்ஸாயிடுச்சே.! ச்ச்ச்.!

      Delete
    2. நீங்க எப்போதும் first place தான் ரவி சார்...

      Delete
    3. அய்யய்யோ "பஸ்ட்டு " கமெண்ட் போட்ட குருநாதர் கோச்சுக்க போறார்.!!!

      (ஷங்கர் உரிமையோடு ரவி அல்லது மங்கூஸ் மட்டும் போதும் நண்பரே,! பின்னால் ஒட்டிக்கொண்டு வரும் இரண்டெழுத்து வேண்டாமே ப்ளீஸ்.)

      Delete
    4. ஒகே ரவி.. விஜய் கோவிச்சுக்க மாட்டார்..

      Delete
    5. சே சே! நான் எதுக்கு கோவிச்சுக்கப் போறேன்? ¶¢£×π#$*@ (நன்றி: ஜேன்)

      Delete
    6. பார்த்திங்களா ரவி. விஜய் கோவிச்சுக்கல...

      Delete
  2. சார்! எனக்கும் என் நண்பருக்கும் சேர்த்து கா.க.கா புத்தகம் 2 தேவைப்படுகிறது.. worldmart ல் கா.க.கா மட்டும் தனியாக order போட வசதி செய்யங்கள் சார்..

    ReplyDelete
  3. சனிக்கிழமையே பதிவு வழங்கி சந்தோஷப்படுத்திய ஆசிரியர் என் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுகிறேன்.. இன்னும் கா.க.கா படிக்காதது மனதை உறுத்துகிறது.. தனியாக order போட வசதி செய்யுங்கள் சார்.. நன்றி...

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. 4 th place. ok . hai friends have a wonderful another sunday. wishes to all

      Delete
  5. எடிட்டர் சார்,

    ஹைய்யா!! இன்னொரு கெள-பாய்!!!

    கேப்டன் பிரின்சுக்கு பிரியா விடை கொடுத்தபோது அவருக்கு இணையாக லார்கோவை அறிமுகப் படுத்தியதைப் போல, கேப்டன் டைகரின் இடத்தை இட்டு நிரப்ப ஒரு அடாவடி ஆசாமியை ஏற்பாடு செய்துவிட்டீர்கள் போலிருக்கிறதே?

    * பெளவுன்ஸரை வரவேற்கிறோம். அவர் பெளவுன்ஸர்களை மட்டுமல்லாது சிக்ஸர்களையும் விளாசித்தள்ள வாழ்த்துகள்!

    * பெளன்ஸருக்கு வலது கை இல்லாமலேயே அவர் எப்படி குடிகார ரெளடிகளை கட்டுக்குள் வைக்கிறார் என்ற ஆவலைக் கிளப்புகிறது. ரொம்ப நாள் காக்க வச்சுடாம சட்டுபுட்டுனு 2015 ஆரம்ப மாதங்களிலேயே களமிறக்குங்கள் சார்!

    * ஒவ்வொரு கதையையும் ஒரே புத்தகமாக வெளியிட நீங்கள் முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது!
    அடுத்த வருடமும் சூப்பர்-6 உண்டென்பதை உறுதிப்படுத்தியிருப்பதற்கு நன்றிகள்!

    * என்னாது... பெளன்ஸரின் மொழியாக்கத்தை இப்பொழுதே ஆரம்பிச்சுட்டீங்களா? வாவ்! உங்களது ஆர்வம் ஆச்சர்யப்படுத்துகிறது!!

    * மலைமுகடுகளையும், வனாந்திரத்தையும் காட்டும் அந்த வண்ணமயமான டீஸர் - அள்ளுகிறது!!

    ReplyDelete
    Replies
    1. டைகருக்கு பதிலாகவா? ஆரம்பிச்சாச்சா?

      Delete
    2. //பெளன்ஸருக்கு வலது கை இல்லாமலேயே அவர் எப்படி குடிகார ரெளடிகளை கட்டுக்குள் வைக்கிறார் என்ற ஆவலைக் கிளப்புகிறது. //
      //மலைமுகடுகளையும், வனாந்திரத்தையும் காட்டும் அந்த வண்ணமயமான டீஸர் - அள்ளுகிறது!! //
      +1

      Delete
  6. //இரு பாகங்கள் இணைந்து ஒரு கதை + மூன்று பாகங்களின் இணைப்பில் கதை # 2 + மீண்டும் ஒரு 2 பாகக் கதை என்பதே இந்த புதியவரின் கதையமைப்புகள் map என்பதால் அதே பாணியில் நாமும் வெளியிடவுள்ளோம்//

    சூப்பரப்பு.!

    பௌண்சருக்கு நல்வரவு.
    இன்னும் லோ புல்டாஸ்.,யார்க்கர், கூக்ளி, ராங்ஒன்,தூஸ்ரா,லெக்ப்ரேக், ஆஃப் ப்ரேக்,இன்ஸ்விங்,அவுட்ஸ்விங்,கேரம்பால் மற்றும் ட்ரிம்மர் போன்றோரும் வரவேண்டுமென விரும்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அடேயப்பா!! உங்களுக்கு ஃபுட்பாலில் பயங்கற ஆர்வம் போலிருக்கே?!!!

      Delete
    2. என்ன இப்படி கேட்டுட்டீங்க.?
      என்னோட கால்ஏஜ் (கரெக்ட்டுதானே) டீமுக்கு நாந்தான் வைஸ் (க்கு வந்த புதுசுல) கேப்டனாக்கும்.
      மூச்சு வுடாம பாடிக்கிட்டே போற ஒவ்வொரு தவனையும் குறைஞ்சது மூணு பேரையாவது தொட்டுவிட்டே கோட்ட தாண்டி வருவேன்.

      Delete
    3. ஹ .ஹா ..ஹா ....கிட்டி புல்லுன்னு தெளிவா சொன்னாதான் என்னவாம் ?.....

      Delete
    4. அல்லது, 'ஃபுல் கிட்டி'னு மப்புல சொன்னாலும் மதியாக்கும்! ;)

      Delete
  7. A warm welcome to Bouncer... ஒவியங்கள் அதில் வரும் பின்னணி மலைத்தொடர்கள் மிக்க அழகாக உள்ளன.. அதுவும் ஒரு கை இல்லா ஹீரோ என்பது ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது..

    ReplyDelete

  8. டீஸர் சும்மா அள்ளுது.
    பின்னனியில் தெரியும் மலைமுகடுகள் மற்றும் வண்ணங்கள் கண்களை கொள்ளை கொள்கிறது.

    எடிட்டர் சார்,
    ரௌத்திரம் பழகு,!
    .அடுத்தாண்டின் ஆரம்பத்திலேயே பௌன்சரை அனுப்புங்கள். பழகி பார்க்க ஆவலாக இருக்கிறோம்.

    ReplyDelete
  9. The Bouncer-அட்டகாசமான புது வரவு! Bouncer பற்றிய பொதுவான தகவல் இப்பொழுதும் Pubகளில் Bouncer உண்டு !

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஊரு டாஸ்மாக் பார்களில் Bouncers உண்டா என்பதை யாராவது தெரிவிக்க முடியுமா நண்பர்களே? (யார் முதலில் மாட்டப்போறாங்கன்னு பார்க்கிறேன் ஹிஹி!)

      Delete
    2. நடிகர், நடிகைகள் ஆகியோரிடம் பாதுகாப்பிற்காக bouncers உண்டு..

      Delete
    3. டாஸ்மாக் பாரா.! அப்படீன்னா என்னாங்க.?

      Delete
  10. வரும் ஆண்டின் மறுபதிப்பு நாயகர்கள் , கதைகள் பற்றி ஒரிரு வார்த்தைகள் கூறுங்கள் சார்..

    ReplyDelete
  11. சார் அருமை ! இன்றைய காலத்திலும் பௌன்சர்கள் தமிழக மதுபான கடைகளில் உண்டே !
    எப்படியோ அட்டகாசமாக இருக்கும் என்பது உறுதி ஆகி விட்டது ! தங்களது மெனக்கெடல்களுக்கு நன்றிகள் ...
    வன்னச்சித்திரங்கள் அருமை !
    அட்டை படங்கள் அவ்வளவாய் வசீகரிக்கவில்லை எனினும் ....அந்த காலத்தை தூசி தட்டி எடுத்தது போல உள்ளது ! குதிரைக்கு பதில் ஒரு நாய் பங்கெடுத்திருப்பது மாற்றம் நிச்சயம் உண்டு என்ற தங்களது விளக்கத்திற்கு நியாயம் சேர்க்கிறது ! அட்டை படத்தை வசீகரமாய் மாற்ற பெரும் மெனக்கெடல்கள் அவசியமாகலாம் ...அல்லது நமது சில நண்பர்கள் ஒரிஜினலை அப்படியே தாருங்கள் எனவும் குரல் கொடுக்கலாம் !
    அற்புதங்கள் அடுத்த வருடமும் சூப்பர் சிக்ஸ் மூலமாய் விதைக்கப்பட இருப்பது சந்தோசம் தருகிறது !
    அப்புறம் ஈரோட்டு திருவிழாவில் விமானம் வந்திறங்கும் கௌபாய் உலகை காட்டினீர்களே அந்த விளம்பரம் இந்த கதைக்குத்தானா என கூறினால் சந்தோசம் கொள்வேன் ! தாங்கள் கூறிய காலம் கனிந்து விட்டதென நினைக்கிறேன் ! எப்போது வரும் அடுத்த வருட வெளியீடுகள் அடங்கிய பட்டியல் என காத்திருக்கிறேன் லார்கோவின் மேல் உள்ள எதிர்பார்ப்பை விட.... அதிக எதிர்பார்ப்புடன் !
    ஒற்றை கையர் ஒருவர் ஏற்கனவே தூள் கிளப்பி சென்றுள்ளார் எனும் போது .....இது இன்னும் அற்புதமாய் வரும் போல தெரிகிறது .

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் அட்டை படம் ஒரு மார்க்கமாய் வசீகரிக்கத்தான் செய்கிறது ...மனது டெக்ஸ் நினைவுகளிலேயே உழல்கிறது ....அட்டை படம் என்றாலே டேச்தான் என என்னும் இந்த பாழும் மனதை இதாவது மாற்றுமா என பார்ப்போம் ! ம்ம்மம்மம்ம்ம்ம்....

      Delete
    2. //ஒற்றை கையர் ஒருவர் ஏற்கனவே தூள் கிளப்பி சென்றுள்ளார் எனும் போது .....இது இன்னும் அற்புதமாய் வரும் போல தெரிகிறது .///

      +1
      இரும்புக்கை மாயாவியும், இரும்புக்கை நார்மனும் கூட நம் காமிக்ஸ் பயணத்தில் ஏற்கனவே வெற்றிக்கொடி நாட்டிய 'ஒற்றைக் கை' ஆசாமிகள்தானே? அதுபோலவே இந்த பெளன்ஸரும் வெற்றி பெறுவார்!

      Delete
    3. //குதிரைக்கு பதில் ஒரு நாய் பங்கெடுத்திருப்பது///

      பெளன்ஸருடன் இருக்கும் அந்த நாய்க்கு ஒரு கால் இல்லை. கவனிச்சிங்களா ஸ்டீல்?
      கதை முழுக்க இன்னும் எத்தனை ஜீவன்கள் கை-கால்கள் இன்றி வலம் வரப்போகுதோ தெரியலை!

      Delete
    4. //ஆனாலும் அட்டை படம் ஒரு மார்க்கமாய் வசீகரிக்கத்தான் செய்கிறது ...//
      +1

      I am sure from reading the reviews I feel that we are up against one of epic master piece in terms of art and story !

      for more in-depth intro follow the link
      *****************spoiler alert************************
      this link has detail review part of story revealed
      *******************************************************
      http://comicattack.net/2011/10/humanoidsreviewbouncercain/

      Delete
  12. Bouncer will not fit for our Readers, I read first 4 parts, It have more vulgar then story and artwork. as for me its BAD Choice

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் ...ஒரே மாதிரி இருக்கு .......

      டைகர் ....விறுவிறுப்பு இப்பல்லாம் பத்தல ....

      லக்கி ...சிரிப்பு கொஞ்சம் கம்மியா வருது...இப்படி எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சா எடிட்டர் வேற என்ன செய்ய முடியும் .....போதுமான கத்திரி -க்கு அப்புறம் ஆசிரியர் வெளியிடுவார் ....ரெகுலர் சந்தாவில் வெளிவராததால் யாருக்கும் சிரமம் இருக்க போவதில்லை ..விருப்ப பட்டோர் வாங்கட்டும் ...ஒரு கதையின் ஒட்டுமொத்த ரசனை பற்றி தீர்மானிப்பது கஷ்டமான காரியம் ....பொறுத்து இருந்து பார்ப்போம் ..

      vulgarity -ஒவ்வொருவர் பார்வைக்கும் வித்தியாசபடலாம் ....

      ஒரு fiction -ல் ஏன் இப்படி என கேள்வி எழுந்தால் life is more fictitious than fiction என்பதுதான் பதிலாக இருக்க முடியும் ....

      Delete
  13. ஒத்தகையாரை வரவேற்கிறோம்

    ReplyDelete
  14. ஆஹா... சூப்பரப்பு!!!

    ஞாயிற்றுக்கிழமை காலைல ஒரு நல்ல சேதி :)

    ஒரு கிராபிக் நாவல் ரசிகன் என்ற வகையில் 'ஒரு கௌபாய் கதையில் கி.நா-க்கு தேவையான ஆழம் இருக்குமா?' என்ற நெருடல் எழுந்தது. But, உங்கள் கதைத் தேர்வின் மீது உள்ள நம்பிக்கை அதைப் புறம் தள்ளி விட்டது :-) So, welcome Bouncer....

    கூகுள் செய்து பார்த்தால், ஓவியங்கள் சிறப்பாக உள்ளன.. Art paper-ல் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை உண்டு.

    விஜயன் அய்யா, 2 கேள்விகள்:

    1. இணையதில் பல பக்கங்கள் இந்தத் தொடரில் வன்முறை தூக்கலாக இருப்பதைக் குறிக்கின்றன. தாங்களும் இதைக் கூறி விட்டீர்கள். So, இதில் எந்த அளவு சென்ஸார் இருக்கும்? கி.நா எனும் Badge-ஐத் தாங்கி வரும் பட்சத்தில், முடிந்த வரை சென்ஸார் குறைக்கலாமே please...
    2. இவருக்குத் தமிழில் பெயர் சூட்டு விழா எதுவும் இல்லையா?

    பிரியப்பட்ட அன்பர்களுக்கு, Bouncer பற்றிய ஒரு குட்டி வீடியோ இங்கே: http://www.youtube.com/watch?v=ui8Ucbj_JNo

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. +1
      good video ref friend ! from the video

      top five European comics
      -> Lucky luke
      -> Comanche
      -> Blue berry
      -> Durango (do we have this in tamil ....? Edit sir is it scheduled for 2015 or for 2016?)
      -> Bouncer (Wow ..!)

      Delete
  15. டுமீல் டுமீல் டமால் டமால் பவுன்சரின் ஆதிக்கம் தொடரட்டும்!

    ReplyDelete
    Replies
    1. டிஷ்யூம் ...டிஷ்யூம் ...வரட்டும் ..பௌன்ஸர் வரட்டும் .....

      டுமீல் ..டுமீல் ....splash ...wham ....boom ....காமிக்ஸ் -ல் வரும் இந்த மாதிரி வார்த்தைகளை onamatopoeia என்று சொல்கிறார்கள் .chirp ...பறவைகளின் சப்தம் ...டிக் டாக் ..கடிகாரம் ...
      சைமன் சார் உங்களுக்கும் துப்பாக்கி -க்கும் நெருங்கிய தொடர்புண்டு ..எந்த துப்பாக்கியில் இருந்து டுமீல் என்று சப்தம் வருகிறது ..:))

      Delete
  16. To: Edi, பௌன்சரை தமிழுக்கு கொண்டுவரும் ஆசிரியருக்கு நன்றி. ஆங்கிலத்தில் படித்துவிட்டாலும் தமிழில் இவரது வருகைக்காகி ஆவலோடு காத்திருக்கிறேன். தல, தளபதி ரசிகர்கள் எல்லாரும் இனி இவரையும் கொண்டாடப்போவது நிச்சயம். லார்கோவுக்கு அடுத்து நமது காமிக்ஸ்களின் நிஜ அதிரடி அறிமுகம் இவர்தான் சார். சித்திரங்களை சிறிதாக்கிடாமல் வெளியிட முயலுங்கள் (சென்சாரும் அளவோடு இருக்கட்டுமே! ;-) ). மெய்மறக்கக் செய்யும் சித்திரங்களை கொண்ட தொடர் அல்லவா, இது? (அடுத்த அதிரடி அறிமுகம் யார் சார்? கமான், கட்டை விரலை எடுத்து வாயில் வைத்து.... ஹி...ஹி..)

    ReplyDelete
    Replies
    1. +1
      //அடுத்த அதிரடி அறிமுகம் யார் சார்?//

      அடுத்த அதிரடி அறிமுகம் Durango வா Edit சார் ?

      Delete
  17. விஜயன் சார்,
    1. இந்த ஒத்தகை நாயகன் ஏனோ எனக்கு பிடிக்கவில்லை, ஒரு வேலை ஒரு கை இல்லாதது கூட காரணமாக இருக்கலாம். இவரின் முதல் கதையை படித்த பின் இவரை பிடிக்க ஆரம்பிக்கலாம் என்ற ஆர்வத்துடன் காத்துஇருக்கிறேன்.
    2. கடந்த போட்டியில் வென்ற நமது நண்பர்களை அறிவிப்பதில் ஏன் தாமதம்? தாமதிக்காமல் வெற்றியாளரை அறிவிப்பது நலம்.
    3. இது போன்ற போட்டிகளை ஏன் இணையதளத்திற்கு அப்பால் உள்ள நமது வாசக நண்பர்களுக்கு வைப்பதுஇல்லை? நமது மாத இதழ்களில் இது போன்ற போட்டிகளை அறிவித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
    4. இந்த வருடம் அனைவராலும் ஏற்று கொள்ளபட்ட "magic wind"-ன் அடுத்த கதை இந்த வருட இறுதியில் வெளி வர வாய்புகள் உண்டா? இவருக்கு அடுத்த வருடம் 2-3 கதைகளாவது ஒதுக்க வேண்டும்.
    5. அடுத்த வருடம் வெளி வர உள்ள "collector edition" பற்றி ஒரு முன்னோட்டம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.. ஆர்வமுடன் எதிர்பார்ப்பது தோர்கல்.
    6. இந்த வருடம் (December 2015) இறுதியில் வெளி வரவுள்ள புத்தகம்களின் எண்ணிக்கை மற்றும் அவைகளின் பெயர் பற்றி இங்கு குறிபிட்டால் சந்தோஷபடுவோம்.

    கடந்த மாதம் எனக்கு அனுப்பிய கா.கு.இ கதையின் பக்கம்கள் முன்னுக்கு பின் முரணாக, சில பக்கம்கள் இரண்டாக இருந்தது. இதுபற்றி மின் அஞ்சல் மூலம் சொன்ன மறுநாள் எனக்கு புதிய புத்தகத்தை அனுப்பியது மிகவும் பாராட்டு கூறியது. இதற்கு முன் சில தருணம்களில் இது போன்ற நிகழ்வுகளிலும் எனக்கு மாற்று புத்தகம் உடன் அனுப்பி உள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வருடம் வர உள்ள ....நிற்க ....இரத்த படலம் குறித்தா, மின்னும் மரணம் குறித்தா என தெளிவு படுத்துங்கள் பரணி ................

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Steel @ அடுத்த வருடம் மிண்ணும் மரணம் தவிர வேறு எந்த மெகா மறுபதிப்புக்கு எனது ஓட்டு இல்லை! இப்போதைக்கு கருப்பு வெள்ளை கிளாச்சிக் காமிக்ஸ் மறுபதிப்புக்கு மட்டும் எனது ஆதரவு.

      வருடம் ஒரு மெகா வண்ண மறுபதிப்புடன் நிறுத்தி கொள்வோமே? இப்போதுதான் நாம் கொஞ்சம் நமது காமிக்ஸ் தலைதூக்கி வருகிறது, இது போன்ற கோரிக்கைகளை அடிக்கடி வைத்து நமது காமிக்ஸ் சக்கரத்தை நிறுத்தி விட வேண்டாம்.

      அடுத்த வருடம் ரத்த படலம் வேண்டாம்.

      Delete
    4. @ Parani from Bangalore

      கேட்டவுடன் என்றைக்குத் தூக்கிக் கொடுத்திருக்கார் நம்ம எடிட்டர்? அடுத்த வருசம் வேணும்னு கேட்டாத்தானே அதற்கடுத்த வருசமாவது கிடைக்கும்? ;)

      Delete
    5. அதற்கடுத்த வருடமா?.தாங்காது விஜய் சார்... அடுத்த வருட தீபாவளிக்குள் வேண்டும் என்று கேட்போமே! ப்ளீஸ்ஸ்ஸ்...

      Delete
    6. நடக்கட்டும்... நாராயணன் செயல். நாராயணா நாராயணா.

      Delete
  18. //பௌன்சருக்கு வலது கை கிடையாது !! //
    நெட் கோல்டன் (எமனின் திசை மேற்கு) நினைவுக்கு வருகிறார்.அக்கதையும் முறையற்ற காதலை மையமாக கொண்டதெனினும் வக்கிரமாய் தோன்றவில்லை.பௌன்சர் எப்படியோ.?
    மாடஸ்டியைவிடவா சென்சார் அதிகமாக தேவைப்பட்டு விடப்போகிறது.?

    ReplyDelete
  19. இரத்தப்படலம் முழு வண்ணத்தொகுப்பிற்கு வலைத்தளத்தில் ஒட்டெடுப்பு பகுதி ஆரம்பிக்க ஆசிரியரிடம் வேண்டுகிறேன்... (இதே கோரிக்கை உள்ளவர்கள் please support this)

    ReplyDelete
    Replies
    1. வேண்டும் ....வேண்டும்....இரத்த படலம் வேண்டும் ...

      Delete
    2. இரத்தப்படலம் - 18 பாகங்களும் - 3 தொகுப்புகளாய் - Hard boundல் - நீண்ட கால முன்பதிவு அடிப்படையில் Target fix செய்யப்பட்டு - விரைவில் வேண்டும்- வேண்டும்.

      Delete
    3. //இரத்தப்படலம் - 18 பாகங்களும் - 3 தொகுப்புகளாய் - Hard boundல் - நீண்ட கால முன்பதிவு அடிப்படையில் Target fix செய்யப்பட்டு - விரைவில் வேண்டும்- வேண்டும்.//
      +100

      //இரத்தப்படலம் - 18 பாகங்களும் - ஒரே தொகுப்பாய் கலரில் - 800 பக்கங்களாய் Hard boundல் - 2016 ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு வேண்டும்...//
      +1000000000

      Delete
    4. //இரத்தப்படலம் - 18 பாகங்களும் - 3 தொகுப்புகளாய் - Hard boundல் - நீண்ட கால முன்பதிவு அடிப்படையில் Target fix செய்யப்பட்டு - விரைவில் வேண்டும்- வேண்டும்.//
      +1 +2 +Masters +PHD

      //இரத்தப்படலம் - 18 பாகங்களும் - ஒரே தொகுப்பாய் கலரில் - 800 பக்கங்களாய் Hard boundல் - 2016 ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு வேண்டும்...//
      +1 +2 +Masters +PHD

      Delete
    5. இரத்தப்படலம் வண்ணத்தில் ஒட்டெடுப்பு நடத்துங்கள் சார்.. பின்பு முடிவு செய்யுங்கள்.. மி.மி க்கு பிறகு அடுத்த complete collection ஆக இரத்தப்படலத்தை கொண்டு வாருங்கள்.. சிறுவயதில் தொடர்ந்து படித்து இடையில் தொடர்பு விட்டுப்போய் தற்போது தொடர்ச்சியாக (2014 பிப்ரவரியில் நடைபெற்ற திருச்சி book fair ல் தான் நமது காமிக்ஸின் மறுபிறப்பு பற்றி தெரிந்த கொண்டேன். கடந்த 2 ஆண்டுகளில் வந்த முக்கிய இதழ்களை miss பண்ணியது தெரிந்து வருத்தப்பட்டேன் . தங்ககல்லறை, NBS, wwspecial, cowboy Spl, double thrill Spl போன்றவை..) இது போல பல ரசிகர்கள் மிஸ் செய்த இரத்தப்படலத்தை முன்பதிவு அடிப்படையில் வண்ணத்தில் வெளியிட்டு எங்கள் தீராத ஆசையை அடுத்த தீபாவளிக்குள் தீர்த்து வையுங்கள் சார்...

      Delete
    6. //இரத்தப்படலம் - 18 பாகங்களும் - 3 தொகுப்புகளாய் - Hard boundல் - நீண்ட கால முன்பதிவு அடிப்படையில் Target fix செய்யப்பட்டு - விரைவில் வேண்டும்- வேண்டும்.//
      வேண்டும் ....
      வேண்டும் ....

      Delete
  20. மிக மகிழ்ச்சியான செய்தி.
    கண்டிப்பாக நான் இதனை எதிர்பார்க்கவில்லை.

    ஆங்கிலத்தில் அனைத்து பாகங்களையும் படித்தித்துவிட்டேன்.

    ஒன்லி பார் MATURE AUDIENCE என்று நீங்கள் முடிவுசெய்துள்ளத்தை வரவேற்கிறேன்.
    வெறும் படங்களில் சென்சார் செய்தால் முடியாது அதன் கதைக்களமே mature audience கு தான் இருக்கும்.

    தயவு செய்து அதிகமாக கத்திரி போட்டு விடாதீர்கள்.
    அதே போல வரிசை கிராமமாகவே வெளியிடுங்கள்.ஒரு சில கதாபாத்திரங்களை அதன் முந்தய பாகத்தை படித்திருந்தால் மட்டுமே தெரியும்.

    கண்டிப்பாக முதல்முதலாக படிபவர்களுக்கு கதைகளம் ஆச்சர்யத்தை கொடுக்கும்.
    தமிழில் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு ஒரு கை போல அவரது நாயிற்கும் ஒரு கால் கிடையாது.
      அவரது உற்ற நண்பன்.அதன் கதாபாத்திரமும் நன்றாக இருக்கும்

      Delete
    2. ஆஹா எதிர்பார்ப்பை இருமடங்காக்கி விட்டீர்கள் !

      Delete
    3. கண்டிப்பாக வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

      Delete
    4. //
      தயவு செய்து அதிகமாக கத்திரி போட்டு விடாதீர்கள்.
      அதே போல வரிசை கிராமமாகவே வெளியிடுங்கள்.ஒரு சில கதாபாத்திரங்களை அதன் முந்தய பாகத்தை படித்திருந்தால் மட்டுமே தெரியும்.//

      +1
      me too ஆவலுடன் இருக்கிறேன்!

      Delete
  21. Editor sir,
    ரெகுலர் சந்தா, ஆப்ஷனல் சந்தா.,எல்லாவற்றையும் மொத்தமாக கட்டத் தயாராக இருக்கும் என் போன்ற வாசகர்களுக்கு ஏதாவது சலுகைகள் உண்டா சார்.?
    ஏனெனில்,
    அங்காடிகளில் வாங்கிக்கொள்வோர் அறிவாளிகள்.
    புத்தக திருவிழாவில் வாங்குவோர் புத்திசாலிகள்.
    ஃபுல் சந்தா கட்டுவோர் மட்டும் "புன்னகை மன்னன்கள் " என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
    (நடைமுறை சிக்கல் இருக்கலாம்.,சிறிதேனும் சலுகை என்ற ஒன்று கிடைத்தால் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாமல்லவா.!,?)

    ReplyDelete
    Replies
    1. //அங்காடிகளில் வாங்கிக்கொள்வோர் அறிவாளிகள்.
      புத்தக திருவிழாவில் வாங்குவோர் புத்திசாலிகள்.
      ஃபுல் சந்தா கட்டுவோர் மட்டும் "புன்னகை மன்னன்கள் " ///

      ஹாஹாஹா!
      நாமும் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை மங்கூஸ்! :)

      Delete
  22. வாவ் .....மீண்டும் ஆவலுடன் எதிர் பார்த்த ஒரு புது "கௌ -பாய் " ...அட்டகாசம் .........ஆனால் இதை கிராபிக் .....தனி சந்தா .....விரும்பியவர் வாங்கலாம் என தனி வழி.......என்ற தங்களின் நிலை பாடு தான் ஏன் என்று புரிய வில்லை சார் ......' கௌ பாய் ' விரும்பாத காமிக்ஸ் காதலர் யார்தானோ ......?

    ஒரே பாகமாக முழு கதையாக .....இதை தான் எதிர் பார்க்கிறோம் சார் .....நன்றி ...நன்றி ...நன்றி .......

    அடுத்த வருடமும் ...... + 6 .......ஆகா .....சூப்பர் சார் ....ஆனால் மொத்த சந்தா தொகையையும் ஒரே சமயத்தில் அறிவித்து விடுங்கள் .....முடிந்தவர்கள் இரு தவணை ஆகவும் கட்ட வசதி செய்து விடுங்கள் ...விடுவீர்கள் என்ற நம்பிக்கை எப்பொழுதும் உண்டு ...

    அடுத்த வருட மறுபதிப்பு பட்டியலின் உங்கள் விருப்பதை கொஞ்சம் கோடிட்டு காட்டினால் மிகவும் மகிழ்வோம் சார் ...நிறைய புது இதழ்கள் என்பதால் "மறுபதிப்பை " தடை செய்து விடாதீர்கள் சார் ...ப்ளீஸ் ...

    ReplyDelete
    Replies
    1. தனி சந்தா என ஆசிரியர் சொல்வதற்கு அதன் content தான் காரணம்.
      கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் என்பதால் விரும்பியவர்கள் வாங்கிகொள்ளலாம் என்பதற்கே.

      Delete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete

  24. //மீண்டும் அடுத்த ஞாயிறு சந்திப்போம் guys ! அது வரை have fun ! Bye for now ! ///

    எடிட்டரின் மேற்கண்ட வரிகளைப் பார்த்தால் "கண்ணுங்களா... நான் ஊருக்குப் போய்ட்டு திரும்பி வர்ற வரைக்கும் நீங்கல்லாம் சண்டைப் போடாம சமத்தா விளையாடிட்டு இருக்கோணும். சரியா?" ன்னு சொல்ற மாதிரி இல்ல? ;)

    ReplyDelete
  25. Welcome one more wild west series! :)

    // கிராபிக் நாவல்களா ? ஆவ்வ்வ் !!" எனக் குரல் கொடுத்த நண்பர்களும் கூட 2015-ல் 'கி.நா.காதலர்களாய்' உருமாற்றம் கண்டால் - அதுவே பௌன்சரின் நிஜ வெற்றியாகி இருக்கும் ! //

    ஆண்டுக்கு ஒருமுறை நாம் க்ராஃபிக் நாவல் என்கிற பெயரின் பொருளை மாற்றிவிடுகிறோமோ எனத்தோன்றுகிறது. தனிப்பட்ட கதை மற்றும் கதைத்தொடர்களுக்கு கிடைக்கவேண்டிய விமர்சனங்கள் அநியாயத்துக்கு கிராபிக் நாவல் என்ற Universal'ஆன பெயரை Impact செய்வது பொருத்தமாகத் தோன்றவில்லை.

    தொடர்ந்து சில வரலாற்று சோகக்கதைகள் வந்தபோது "இதுதான் க்ராஃபிக் நாவல்" என்ற புரிதலை (தேவையில்லாமல் ) கொண்டு வந்துவிட்டோம் (Thanks to பரணிதரன்+விஜயன் சார் combo on blog!) . It is more to do with story selection. Not about the definition of கிராபிக் நாவல்.

    இந்த ஆண்டு சில Variety'களை கொண்டு வந்ததன் மூலமாக "காமிக்ஸ்" என்ற வார்த்தையை எப்படி நமது சிறிய வட்டம் ஏற்கிறதோ அதேபோல கிராபிக் நாவல் என்ற வார்த்தை கொஞ்சம் மரியாதை பெற்றுது முன்னேற்றம்.

    ஒரேவொரு Request: லார்கோ முதற்கொண்டு நமக்குப் பரிச்சையமான வெற்றிகரமான கதைத் தொடர்கள் பலவும் (கிராபிக்) நாவல் என்கிற Definition'உடன் தான் வருபவை. ஒருவேளை Bouncer போன்ற புதிய முயற்சிகள் பெரிய வரவேற்பைப் பெற இயலாதபட்சத்தில் அது க்ராஃபிக் நாவல் என்கிற வார்த்தையையோ Definition'னையோ பாதிக்காமல் பார்த்துக் கொள்வோமே.

    இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் நமது விளம்பரங்களில் காமிக்ஸ் என்கிற பெயருக்கு இணையாக தாராளமாகப் பயன்படுத்த தகுதியுள்ள வார்த்தைதான் கிராபிக் நாவல். தற்கால புதிய வாசகர்களை Convince செய்ய இந்த வார்த்தையை / பெயரை நிறைய பயன்படுத்துவது அவசியம் என்பதால் பழைய வாசகர்கள் மத்தியில் இதன் Meaning திரிந்துவிடாமல் கொண்டுசெல்வது பயனளிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. // It is more to do with story selection. Not about the definition of கிராபிக் நாவல்.

      இந்த ஆண்டு சில Variety'களை கொண்டு வந்ததன் மூலமாக "காமிக்ஸ்" என்ற வார்த்தையை எப்படி நமது சிறிய வட்டம் ஏற்கிறதோ அதேபோல கிராபிக் நாவல் என்ற வார்த்தை கொஞ்சம் மரியாதை பெற்றுது முன்னேற்றம். //
      +1
      //நமது விளம்பரங்களில் காமிக்ஸ் என்கிற பெயருக்கு இணையாக தாராளமாகப் பயன்படுத்த தகுதியுள்ள வார்த்தைதான் கிராபிக் நாவல். தற்கால புதிய வாசகர்களை Convince செய்ய இந்த வார்த்தையை / பெயரை நிறைய பயன்படுத்துவது அவசியம் என்பதால் பழைய வாசகர்கள் மத்தியில் இதன் Meaning திரிந்துவிடாமல் கொண்டுசெல்வது பயனளிக்கும்.//
      +1

      Delete
    2. @Ramesh Kumar:
      //It is more to do with story selection. Not about the definition of கிராபிக் நாவல்//
      +1

      கிராஃபிக் நாவல் அலெர்ஜி அலை இங்கு அடிக்கும் முன்னரே, லயன் / முத்துவில் பல கிராஃபிக் நாவல்கள் அந்த முத்திரை இன்றி வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன என்பது தான் உண்மை! தவிர, இந்த கிராஃபிக் நாவல் பற்றிய definition எல்லாம் ஆளாளுக்கு / ஊர் ஊருக்கு மாறுபடக் கூடியவை என்பதால் - "அது ஒரு இசை, இது ஒரு இசை, இதுவும் ஒரு இசை" காமெடி சீன் பாணியில், இப்போதெல்லாம் இது பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை! :)

      Delete
  26. காலை வணக்கம் நண்பர்களே :):):)

    ReplyDelete
  27. பௌன்சரின் காமிக்ஸ் ஆல்பம்-
    www.humanoids.com/album/219#.VDoFUVcpBrs
    டிஜிட்டல் வடிவில் உள்ள ஒரு புத்தகத்தின் விலை $30...

    ReplyDelete
  28. //இந்த வருடம் (December 2015) இறுதியில் வெளி வரவுள்ள புத்தகம்களின் எண்ணிக்கை மற்றும் அவைகளின் பெயர் பற்றி இங்கு குறிபிட்டால் சந்தோஷபடுவோம்.//
    +1

    //கடந்த போட்டியில் வென்ற நமது நண்பர்களை அறிவிப்பதில் ஏன் தாமதம்? தாமதிக்காமல் வெற்றியாளரை அறிவிப்பது நலம்.//
    ஒரு வேளை ஆசிரியர் எதிர்பார்த்த அளவுக்கு யாரும் caption எழுதவில்லையோ...இல்லையே...ஈரோடு விஜய் அண்ணனும் BAM BAM BIGELOW நண்பரும் நல்லாத்தானே பதிவிட்டுயிருந்தார்கள்...

    எடிட்டர் சார்...இரத்தப்படலம் பரிசு என்று சொல்லிவிட்டு இன்னும் வெற்றியாளாரை அறிவிக்காமல் இருந்தால் எப்படி சார்...operation கிட்நா வை தொடங்க வேண்டும் சார்...புரிஞ்சுக்குங்க...

    ReplyDelete
    Replies
    1. @ Sathiya

      எனக்கென்னவோ... "கேப்ஸன் போட்டி வையுங்க, என்னோட இரத்தப் படலம் புக்கை அனுப்பி வைக்கிறேன்"னு சொன்ன அந்த முகம் காட்ட விரும்பாத நண்பர் மனசுமாறி"இந்த மாதிரி மொக்கை கமெண்ட்ஸுக்கெல்லாம் இரத்தப்படலத்தை அனுப்பி வச்சா கம்பெனிக்கு கட்டுப்படி ஆகாது... வேணுமின்னா கொஞ்சூண்டு இரத்தப்பொறியலை அனுப்பி வைக்கிறேன்"னு சொல்லிட்டாரோ என்னவோ? :D

      Delete
    2. //வேணுமின்னா கொஞ்சூண்டு இரத்தப்பொறியலை அனுப்பி வைக்கிறேன்"னு சொல்லிட்டாரோ என்னவோ?//
      ஹா..ஹா...ஹா..பின்றீங்க ப்ரதர்... :)
      இந்த கமென்ட்டுக்கே அந்த நண்பர் இரத்தப் படலம் புக்கை அனுப்பனும்...:D

      Delete
    3. புரட்டாசி முடியட்டும் "இரத்தப்பொறியலையே" வாங்கிக்கொள்வோம்...:D
      அதன் பிறகு போராட்டத்தை ஆரம்பிச்சட வேண்டியது தான்... "வேண்டும் ....வேண்டும்....இரத்தப்படலம் கலரில் வேண்டும் ..."
      என்ன எடிட்டர் சாரை நினைசாத்தான் கவலையா இருக்கு...இத்தனை போராட்டதைத் தாங்குவாரான்னு :D

      Delete
    4. விஜய்..ரத்த பொரியல் இஷ்டமே மேலும் மொக்கைகள் தொடரவா?

      Delete
    5. பரிசை அறிவிக்கிற வரைக்கும் யாரையும் விடக் கூடாது பாம்பாம் நண்பரே! ம்ம்ம்... எடுத்து விடுங்க...

      Delete
    6. @ BAMBAM BIGELOW:

      பாஸ்...நான் நிறைய caption யோசிச்சி வெச்சிருந்தேன்...அதெல்லாம் எனக்கே மொக்கையா தெரிஞ்சதானால...இங்கே பதிவிடவில்லை...
      நீங்க நல்ல form la இருக்கீங்க பாஸ்...இந்த தடவை பரிசை விடக்கூடாது...ம்ம்ம்ம் ஆரம்பியுங்கள்...

      பின் குறிப்பு:
      தங்களின் வீட்டு முகவரி என்னவோ ? கிட்நா...கிட்நா...கிட்நா... :D

      Delete
    7. //operation கிட்நா வை தொடங்க வேண்டும் சார்...புரிஞ்சுக்குங்க...//
      +1

      Delete
  29. புது வரவு Bouncer ஐ ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...Bouncer ன் கண்களை கவனித்தீர்களா..."ஒற்றைக்கை என்றாலும் நான் ஒரு வீரனே" என்னும் எண்ணம் அவர் மனதில்...
    எடிட்டரின் தேர்வு என்றும் சோடை போனதில்லையென்று நிறுபிப்பார் என்றே நம்புவோமாக...

    ReplyDelete
  30. Re-post
    ********************************************************************************************************************
    senthilwest2000@ Karumandabam Senthil21 September 2014 12:25:00 GMT+5:30
    அனைத்து ஊர்களிலும் நமது வெளியிடுகள் கிடைக்கும் கடைகளின் முகவரிகளை, தொலைபேசி எண்ணையும் வெளியிடுமாறு கேட்டுகொள்கிறேன் !

    Satishkumar S21 September 2014 12:52:00 GMT+5:30
    +1
    it will be usefull if this details publish this details in lionmuthucomics.com

    Vijayan21 September 2014 15:53:00 GMT+5:30
    @ FRIENDS : நாளையே செய்திடுவோம் ; பணிகளின் மும்முரத்தில் மறந்து போய் விடுகின்ற விஷயமிது !
    ********************************************************************************************************************

    Edit sir before next Sunday(?) plz ...

    ReplyDelete
    Replies
    1. சார் தொடர்ந்து கேட்டு வருகிறோம் புத்தக கடை விவரங்களை.. பணி நிமித்தும் விதமாக வெளியூர் செல்லும்போது அந்த ஊரில் நமது காமிக்ஸ் விற்கும் கடை இருந்தால் ஒரு விசிட் அடிக்க புத்தகம் வாங்க வசதியாக. இருக்கும் என்பதால் அனைத்து புத்தக கடை விவரங்களை தெரிவியுங்கள் சார்.. கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள் சார்.

      Delete
  31. பவுன்சர் கதைகள் தற்போதைக்கு 9 மட்டும்தான் எனும் போது 10 ஆண்டுகள் கழித்து எதற்கு கம்ப்ளீட் கலைக்சன் 2015 தீபாவளி ஸ்பெஷல் ஆக பவுன்சர் கம்ப்ளீட் கலைக்சன் விடலாமே

    ReplyDelete
    Replies
    1. அப்படிக் கேளுங்க ராஜா அவர்களே!

      +1

      Delete
    2. +1

      or as a book for every month and make 2015 as year of bouncer/or a book for every alternate month!,
      lets have pleasure of reading complete series by releasing it in regular interval Edit sir!

      Delete
  32. ஐயோ அம்மா இந்த கொசுக்கடி தாங்க முடியலியே..
    நல்லவேளை சார்ஜ்..கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க டிரசிலே நுழைந்த தேள்
    கடிச்சுதான் கத்தறீங் களோன்னு நினச்சேன்

    ReplyDelete
    Replies
    1. சுதி கொஞ்சம் குறையுதே...
      ஊருக்குப்போயிருந்த உங்க வீட்டுக்காரம்மா திரும்ப வந்துட்டாங்களா, பாம்பாம் நண்பரே? :D

      Delete
    2. போட்டியில் வென்றவர்கள் பற்றி அறிவிக்க தாமதம் ஆவதால் எல்லாம் குறையத்தான் செய்யும்.

      Delete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Edit sir excited about your Bouncer !
      one of the review command in Good reads about Bouncer :

      //from one of the book review comment: The start of the famous western comic by Jodorowsky and Boucq. Second only in my view to Blueberry by Moebius and Charlier.
      Comes highly recommended, the hero is not however your typical hero ( he's missing an arm) //

      I am thrilled by your announcement and my excitement hit the roof top after reading some of reviews and after seeing the world level reception for Bouncer !

      some of ref links :
      http://www.bookgasm.com/reviews/comics/bouncer/
      www.goodreads.com/book/show/56246.Bouncer
      http://comicattack.net/2011/10/humanoidsreviewbouncercain/

      Delete
  34. டியர் விஜயன் சார்,

    பௌன்சர்!!! :) உரிமங்களை கைப்பற்றியதற்கு முதலில் வாழ்த்துகள்! முதல் தடையைக் கடந்து விட்டபடியால், இனி Humanoids பதிப்பகத்தாரின் Incal, Metabarons போன்ற, மற்ற புகழ்பெற்ற தொடர்களின் உரிமங்களைப் பெறுவதில் சிரமம் இருக்காது, இல்லையா?!

    Back to Bouncer...

    //சத்துக்கு மீறியும் நிறைய மேலே சென்றேன் நமது ராயல்டி கட்டணங்களில்// & //இவை ஆண்டின் மெயின் சந்தாவின் ஒரு அங்கமாய் இராது// & //ஒவ்வொரு முழு எபிசோடும் ஒரு முழு இதழாய் உரிய விலையில் வெளியாகும் !//

    எப்படியும் இவை சந்தாவில் இணைந்து வரப் போவதில்லை, விலையும் கூடுதலாக இருக்கும் வாய்ப்ப்புகள் பலமாக இருக்கிறது என்பதால்; இந்த இதழ்களை மட்டும், Hardcover உடன், சற்றே பெரிய அளவில் - முடிந்தால் A4 அல்லது ஒரிஜினல் ஆல்பத்தின் அளவிலேயே (7.9 x 10.8 inches) வெளியிட முடியுமா? இத்தொடரின் அட்டகாசமான ஓவியங்களை முழுமையாக ரசிக்க அது வகை செய்யும்!

    //"Suggested for mature readers " என்ற பின்னட்டைக் குறிப்போடு ஆங்கிலப் பதிப்பே வெளியாகி இருக்கும் நிலையில்//
    தமிழிலும் அப்படியே வெளியிட்டால், ஆனானப் பட்ட அந்த பௌன்சரே பல குத்துக்கள் வாங்க வேண்டியிருக்கும் இல்லையா?! :)

    ரௌத்திரம் பழகு - நல்ல தலைப்பு!!

    //நிறைய அவகாசம் எடுத்துக் கொண்டு இப்போதே முதல் பாகத்தை எழுதிக் கொண்டுள்ளேன் - ஒரு சிறு பிள்ளையின் ஆர்வத்தோடு !//
    :)

    ReplyDelete
    Replies
    1. //Humanoids பதிப்பகத்தாரின் Incal, Metabarons போன்ற, மற்ற புகழ்பெற்ற தொடர்களின் உரிமங்களைப் பெறுவதில் சிரமம் இருக்காது, இல்லையா?!//
      +1 இல்லையா? Edit சார்
      //தமிழிலும் அப்படியே வெளியிட்டால், ஆனானப் பட்ட அந்த பௌன்சரே பல குத்துக்கள் வாங்க வேண்டியிருக்கும் இல்லையா?! //
      :D true!

      Delete
    2. @ Karthik Somalinga

      Cartonné: 56 pages
      Editeur : Les Humanoïdes Associés (20 juin 2001)
      Collection : One Arm Bouncer
      Langue : Français
      ISBN-10: 2731614269
      ISBN-13: 978-2731614268
      Dimensions du produit: 31,6 x 23,4 x 1 cm என பெரிய சைசில் வந்திருப்பதால்
      இப்போது வரும் 245mmX185mm வெளிவரும் என்று நினைக்கிறேன் நண்பரே !

      Delete
    3. //Mayavi Sir:
      ISBN-10: 2731614269
      ISBN-13: 978-2731614268//

      One long time doubt why don't we have ISBN in our books ? I raised it to Edit(via 2 / 3 mails ) but no answer, if any of our friends answer my doubt will be cleared !

      Delete
  35. இரத்தப்படலம் வண்ணத்தில் ஒட்டெடுப்பு நடத்துங்கள் சார்.. பின்பு முடிவு செய்யுங்கள்.. மி.மி க்கு பிறகு அடுத்த complete collection ஆக இரத்தப்படலத்தை கொண்டு வாருங்கள்.. சிறுவயதில் தொடர்ந்து படித்து இடையில் தொடர்பு விட்டுப்போய் தற்போது தொடர்ச்சியாக (2014 பிப்ரவரியில் நடைபெற்ற திருச்சி book fair ல் தான் நமது காமிக்ஸின் மறுபிறப்பு பற்றி தெரிந்த கொண்டேன். கடந்த 2 ஆண்டுகளில் வந்த முக்கிய இதழ்களை miss பண்ணியது தெரிந்து வருத்தப்பட்டேன் . தங்ககல்லறை, NBS, wwspecial, cowboy Spl, double thrill Spl போன்றவை..) இது போல பல ரசிகர்கள் மிஸ் செய்த இரத்தப்படலத்தை முன்பதிவு அடிப்படையில் வண்ணத்தில் வெளியிட்டு எங்கள் தீராத ஆசையை அடுத்த தீபாவளிக்குள் தீர்த்து வையுங்கள் சார்...

    ReplyDelete
  36. சார் தொடர்ந்து கேட்டு வருகிறோம் புத்தக கடை விவரங்களை.. பணி நிமித்தும் விதமாக வெளியூர் செல்லும்போது அந்த ஊரில் நமது காமிக்ஸ் விற்கும் கடை இருந்தால் ஒரு விசிட் அடிக்க புத்தகம் வாங்க வசதியாக. இருக்கும் என்பதால் அனைத்து புத்தக கடை விவரங்களை தெரிவியுங்கள் சார்.. கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள் சார்.

    ReplyDelete
  37. I read Bouncer in English. It was shock to me at first as it was very very raw and unconventional story.

    But after the first story, i could appreciate the story, art and wild west.

    I am very eager to see how Editor handles the climax of the first story :-).


    As Karthik mentioned, the original story book is big in size. Will we be able to publish in the original size + hardcover.

    ReplyDelete
  38. இந்த வாரம் இரண்டு பதிவுகள் உண்டு என்று ராகவன் instinct கூறுகிறது.. (instinct work out ஆகுமா என்று பார்ப்போம்..)

    ReplyDelete
    Replies
    1. ராகவன்’னா யாருங்க?

      ஒரு வாரம் அப்படி, ஒரு வாரம் இப்படின்னு இருப்பாரே, அவரா?

      Delete
    2. வேட்டையாடு விளையாடு கமல் தான் அந்த ராகவன் instinct... ச்சும்மா...

      Delete
  39. எடிட்டர் சார், மதிய வணக்கம் !

    * //இந்த மூன்று விதமான கௌபாய் classic-களைப் பார்த்து விட்டோம் ; what next ?// என்ற கேள்விக்கு
    விடைதேடிபிடித்து, இங்கு அறிவித்த அறிவிப்புகள் உண்மையில் தீபாவளி 'ஸ்வீட்ஸ்'!
    * // வரிசையாய்ப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்து விட்டு அவர்களிடம் ரெண்டு வார்த்தை பேசி விட்டு -
    'ஊருக்குப்போய் கடுதாசி போடுகிறேன் !' என்று நடையைக் கட்டியிருந்தேன் !//
    // 'O.k...ஊருக்குப் போய் கடுதாசி..!' என்று திரும்பவும் கழன்று கொண்டேன் 2013-ல் !//
    // So இந்தாண்டில் மீண்டுமொரு சுபயோக சுபதினத்தில் ஒரு ஐரோப்பியப் பயணத்தின் போது அவர்களது
    கதவுகளைத் தட்டினேன் நம்பிக்கையோடு !//
    என நீங்கள் விடமால் முயன்றதை படித்தால்...பல காமிக்ஸ் நண்பர்கள் ஒவ்வொருமுறையும் நகரில்
    உள்ள (பழைய) புத்தகக்கடையை கடக்கும்போதெல்லாம்,அண்ணே நல்ல காமிக்ஸ் கலெக்சன் ஏதாவது...
    அந்த பக்கெட் சைஸ்ல முத்துகாமிக்ஸ்...இரும்புகை படம்போட்ட ஏதாவது கண்ணில்பாட்டதுங்களா....
    இந்த பெருசா இரும்பு மனுஷன் சைக்கிள் ஓட்டறமாதிரி...ஒருத்தர் பாரசுட்டல குதிக்கிரப்பல...குதிரைல
    தொப்பிபோட்டுகிட்டு...கோவிச்சுக்காதீங்க அண்ணே,நீங்க சொல்ற முத்து,லயன்காமிக்ஸ் தாண்ணே,
    வந்தா ஒரு போன்...நிறைய பேர் நெம்பர் கொடுத்திருறாங்களா...சரி உங்களுக்கே தெரியும், ரொம்ப
    வருசமா வந்துவந்து பாக்கிறேன்,பாத்து செய்ங்கண்ணே...கடைக்கு புக்வந்தே ரொம்ப வருசமாவுதா...
    நீங்களே fb ல தேடுரிங்க்களாண்ணே...?எக்ஸ்ரா பணத்துக்கே கிடைக்கிலையா.. ஓகேண்ணே ஆன்லைன்ல டிரைபன்றேன்,உங்களுக்கு கிடைச்சா ஒரு போன் ப்ளிஸ்ண்ணே...மறந்துடாதிங்க...வர்றேண்ணே !
    ...என ஆர்வத்துடன் கதவை தட்டும் பலரின் முயற்சிகளை தண்டிய,உங்கள் கதவை தட்டும் முயற்சி
    ( நண்பர்கள் 2 ரூபாய் புக்கை 500,1000 என வாங்கவது போல நீங்களும் எக்ஸ்ரா கொடுத்து) வெற்றி
    பெற்றுவிட்டதை (அதிஷ்டம்+பலன் எங்களுக்கு தான்) நினைக்கும்போது...
    "ரெண்டுநாள்ல தீபாவளி! எங்கப்பா நாளைக்கு மதியமெல்லாம் வந்துடுவாரு! ஊர்ல இருந்து எனக்கு
    ஸ்விட்டு,பட்டாசு,புது துணி,விளையாட பொம்ம..இப்பிடி எல்லாம் கொண்டுவருவாரு,தெரியுமா.."என
    நண்பர்களிடம் கூறிவிட்டு, கூட்டநெரிசலில், அடிச்சிபுடிச்சி தவறாமல் பரிசுடன் வரும் அப்பாவை நம்பி சிரித்துக்கொண்டே தூங்கும் குழந்தையின் மனநிறைவை போலவே எனக்குள் ஒரு நிறைவு !
    "நம்ம விஜயன் சார் இருக்காரே...மனுஷன் நம்மையெல்லாம் தூக்கி சாப்பிற அளவுக்கு பயங்கர காமிக்ஸ் ரசிகர்! எப்பிடியாச்சும் பல்டிஅடிச்சி,எந்தஊர்னாலும் தேடிபிடிச்சி நம்மளையெல்லாம் அசத்தாம மனுஷன் தூங்கவேமாட்டாருங்க தெரியமா..!" என்ற பல நண்பர்களின் சந்தோஷ வெளிப்பாடுகள் என்னுள் ஓடுகிறது.

    முக்கியமாக //இன்றிலிருந்து ஒரு பத்து ஆண்டுகள் கழித்து "BOUNCER - The Complete Collection " என்றதொரு தொகுப்பை வெளியிட நீங்கள் குரல் கொடுக்கும் ஒரு தருணம் உருவாகும்//
    என நீங்கள் கணிக்கிறிர்கள் என்றால்,2015 காமிக்ஸ் பயணம் பட்டையை கிளப்பபோகிறது,
    நண்பர் கிருஷ்ணா.வ.வெ வேறு சூடேற்றி விடுகிறார்.

    நவம்பர் வரை, பெவிகால் போட்டு வாயைப் பூட்டி வைத்திருக்க இருந்த ஆசை கரைத்த மழைக்கு,
    ஒரு ஸ்பெஷல் சல்யுட்!
    சின்னபுள்ள தனமாய் 3 கேள்வி...
    * கிங் ஸ்பெஷல் அதகளஅறிவிப்பு படங்கள் bouncer தானே....
    * மிண்ணும் மரணம்-முன்பதிவு நிலை பற்றிய தகவலே இல்லையே...
    * caption போட்டி பரிசு பெற்றவர்கள் அறிவிப்புகள்...

    ReplyDelete
    Replies
    1. /"ரெண்டுநாள்ல தீபாவளி! எங்கப்பா நாளைக்கு மதியமெல்லாம் வந்துடுவாரு! ஊர்ல இருந்து எனக்கு
      ஸ்விட்டு,பட்டாசு,புது துணி,விளையாட பொம்ம..இப்பிடி எல்லாம் கொண்டுவருவாரு,தெரியுமா.."என
      நண்பர்களிடம் கூறிவிட்டு, கூட்டநெரிசலில், அடிச்சிபுடிச்சி தவறாமல் பரிசுடன் வரும் அப்பாவை நம்பி சிரித்துக்கொண்டே தூங்கும் குழந்தையின் மனநிறைவை போலவே எனக்குள் ஒரு நிறைவு !///
      +1

      அடுத்த வருடத்திற்கான கதைப் பட்டியலை தீபாவளிக்குள் வெளியிட்டால் குழந்தைகளின் குதூகலம் இன்னும் அதிகரிக்கும்...

      Delete
    2. நண்பர்களே...அப்புறம் ஒரு விஷயம், இந்திய காமிக்ஸ் வரலாற்றில் 858 பக்கத்தில்
      வந்த ஒரே காமிக்ஸ் ஜாம்போ ஸ்பெஷல் என்றபெருமை XIII ஐ சேருமென்றால்...
      XIII ஐ ரசித்து நெஞ்சில் பச்சை குத்திக்கொண்டஇந்தியாவில் (உலகளவில் என்று
      கூட சொல்லலாம்) ஒரே நபரான rummi XIII...தான் !
      நேற்று இரவு போன் செய்து,அவருடைய மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்து
      கொண்டார்.... பார்க்கஇங்கே'கிளிக்'
      பார்த்துவிட்டு நீங்களும் ஒரு வாழ்த்து சொல்லுங்கள் நண்பர்களே...!

      Delete
    3. குட்டி மாடஸ்டியின் வரவால் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் RUMMIXIIIக்கு என்னுடைய வாழ்த்துகளும்! :)

      Delete
    4. //எந்தஊர்னாலும் தேடிபிடிச்சி நம்மளையெல்லாம் அசத்தாம மனுஷன் தூங்கவேமாட்டாருங்க//

      +1

      that's the trust that our brand earned with its rare choices !

      Delete
    5. வாழ்த்துக்கள் Rummi XIII நண்பரே :):):)

      Delete
    6. வாழ்த்துக்கள் RummyXlll,

      தங்களின் குட்டி தேவதை வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன்.
      வாழ்க.! வளர்க!

      Delete
    7. வாழ்த்துக்கள் friend RummyXlll !

      Delete
    8. //ரெண்டுநாள்ல தீபாவளி! எங்கப்பா நாளைக்கு மதியமெல்லாம் வந்துடுவாரு! ஊர்ல இருந்து எனக்கு
      ஸ்விட்டு,பட்டாசு,புது துணி,விளையாட பொம்ம..இப்பிடி எல்லாம் கொண்டுவருவாரு,தெரியுமா.."என
      நண்பர்களிடம் கூறிவிட்டு, கூட்டநெரிசலில், அடிச்சிபுடிச்சி தவறாமல் பரிசுடன் வரும் அப்பாவை நம்பி சிரித்துக்கொண்டே தூங்கும் குழந்தையின் மனநிறைவை போலவே எனக்குள் ஒரு நிறைவு !//

      மாயாவி :-
      நெஞ்சு நிறைக்கும் வரிகள். குழந்தை பருவ நினைவுகள், எனக்கு எப்போதும் ஒருவித ஏக்கத்தையே தோற்றுவிக்கும். ஏனென்பது தெரியவில்லை.! இதைப் போன்ற வரிகளை படிக்கும்போது மனம் கனத்து போகின்றது என்பதே உண்மை. (எனக்கு)

      Delete
    9. ரம்மியின் வாழ்வில் ரம்மியம் சேர்த்திட
      மம்மியின் மனதில் மலர்ச்சி பெருக்கெடுக்க
      ஊஞ்சலில் ஆட வந்த ஒளிவிளக்கே! ஓவியமே !
      ஏஞ்சலே !இளந்தளிரே !வாழியவே !...

      வாழ்த்துக்கள் ரம்மி ...

      Delete
    10. வீடு குட்டி சுவர்க்கமாக மாற வாழ்த்துகிறேன் நண்பரே ..

      Delete
    11. XIIIஐ ரமேஷ் காதலிக்கிறார் என்பதை இந்த புகைபடம் சொல்லும்!
      அவருடைய காமிக்ஸ் காதலுக்கு ஒரு சல்யுட் !!!
      புகைபடம் பார்க்க......இங்கே'கிளிக்'

      Delete
    12. வாழ்த்துக்கள் ரமேஷ் :)

      Delete
  40. வேற ஒன்னும் ஆசை இல்லேடா அப்படியே நிறைய சண்டைகள்ளே கலந்து கிட்டு மாவீரன்னு பேர் வாங்கணும்.. அப்படியே ஜெனரல் ஆகணும் அப்படியே எ லெ க் சன்லே ஜெயிச்சு மக்களின் முதல்வர்
    ஆகணும்
    அப்படியே அந்த ஒயின் சாப் காரனை அதட்டல் போடணும் சாயன்காலத் துக் குள்ளே அடமானம்
    வச்ச டிரஸ் ச திருப்பலென்னா பொழப்பு நாறிடும்னுட்டான்

    ReplyDelete
  41. அட்டகாசமான அறிமுகம். மகிழ்ச்சி! 2015 ட்ரைலர் காணும் ஆவலை அடக்கமுடியவில்லை. நவம்பரை எதிர்நோக்கி..

    ReplyDelete
  42. //இரு பாகங்கள் இணைந்து ஒரு கதை + மூன்று பாகங்களின் இணைப்பில் கதை # 2 + மீண்டும் ஒரு 2 பாகக் கதை என்பதே இந்த புதியவரின் கதையமைப்புகள் map என்பதால் அதே பாணியில் நாமும் வெளியிடவுள்ளோம் ! ஒவ்வொரு முழு எபிசோடும் ஒரு முழு இதழாய் உரிய விலையில் வெளியாகும் !//
    hope same size and style of print Edit sir!

    // லயன் காமிக்ஸ் லேபில் தாங்கியே வரவுள்ள போதிலும் இவை ஆண்டின் மெயின் சந்தாவின் ஒரு அங்கமாய் இராது ! So 2015-ன் சூப்பர் 6-ன் மையமாக இருக்கவிருக்கும் BOUNCER கதைகளை விரும்பும் பட்சத்தில் மாத்திரமே நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் ! 'இந்த violence ; இந்த பாணிக் கதைகள் என் வீட்டுக்குள் வேண்டாமே !' எனக் கருதும் நண்பர்கள் தாராளமாய் skip செய்திடும் சுதந்திரம் இருக்கும் !//

    skip செய்திடும் சுதந்திரம் +1.

    Waiting for 2015 subscription fee structure Edit sir, hope that will have all in one option with lotsssss(?!) of discounts !

    ReplyDelete
  43. கிங் என்றால் அது டெக்ஸ் மட்டும்தான். இருப்பினும் பௌன்சருக்கு சிவப்புக்கம்பளம் விரிக்கிறோம் சார்!

    ReplyDelete
  44. இரத்தப் படலம் முழுவண்ணத் தொகுப்பு வெளிவரும் வாய்ப்புகள்.:-
    2015ல் பத்துக்கு ஜீரோ
    2016ல் பத்துக்கு மூன்று
    2017ல் பத்துக்கு ஐந்து

    இருந்தாலும் நண்பர்களுக்காக. ,
    சார் ரத்தப்படலம் முழுவண்ணத் தொகுப்பு விரைவில் வேண்டும் ண்டும் டும் ம்.!!!

    ReplyDelete
    Replies
    1. மங்கூஸ்,

      மேலோட்டமாகப் பார்த்தால் நீங்கள் சொல்வதில் நிறையவே உண்மையிருக்கிறது. ஆனால், customized imprints முறையில் வெளியாக இருக்கும் 'மின்னும் மரணம்' மாபெரும் வெற்றியடைந்தால் உங்கள் கணிப்பிலும் பெரிய மாற்றமிருக்கும் எ.எ.க! ஒருவேளை 'மி.ம' சுமாரான வெற்றிதான் என்றால், அடுத்த 5 வருடங்களுக்கு 'கேப்ஸன் போட்டி'யை மட்டும்தான் நம்பியிருக்கவேண்டும்! :)

      Delete
    2. 2018ல் பதினெட்டுக்கு 13வாய்ப்பு !

      Delete
    3. எனக்கும் கேட்க ஆசைதான் ....ஆனால் ...

      1.இன்னும் LMS. எவ்வளவு பிரதிகள் மீதமுள்ளது ?

      2.மாடஸ்டி -க்கு கூடுதலாக கொடுத்த ராயல்டி அதிகமா ?

      3.கார்சனின் கடந்த காலம் வண்ணத்தில் கொடுத்ததால் கையை சுட்டு கொண்டது எவ்வளவு ?

      4.மின்னும் மரணத்தில் முடக்க போகும் தொகை எவ்வளவு ?

      5.பவுன்சர் ராயல்டி -க்கு சிரம தொகை எவ்வளவு ?

      இந்த கேள்விகளுக்கு விடை தெரியா குற்ற உணர்வு காரணமாக வண்ண ரத்த படலம் கேள்வி தொண்டையிலேயே நின்று விடுகிறது ..

      Delete
    4. // customized imprints முறையில் வெளியாக இருக்கும் 'மின்னும் மரணம்' மாபெரும் வெற்றியடைந்தால் உங்கள் கணிப்பிலும் பெரிய மாற்றமிருக்கும் எ.எ.க//
      விஜய்.,
      என் கணிப்பில் மாற்றம் ஏற்ப்பட்டால் மிக்க மகிழ்ச்சியடைவேன்.
      சில கருத்துக்களை முன்வைக்க கடமைப்பட்டுள்ளேன்.!

      மின்னும் மரணம்.,
      தனித்தனி கதைகளாய் பலவருடங்களாய் பிச்சி பிச்சி வெளியிடப்பட்ட ஒன்று. இன்னும் இறுதி பாகமும் புதிதாக சேர்ந்தே தற்போது கலெக்டர்ஸ் எடிசன் வரவிருக்கிறது.
      முழுத் தொகுப்பையும் புதிய க்ளைமாக்ஸும் சேர்த்து வண்ணத்தில் முதல் முறையாக பார்க்கப் போகிறோம்.மட்டுமில்லாமல் முதல்பாகம் வெளிவந்து பதினைந்து வருடங்களுக்கு மேல் இருக்கும். எத்துனை பேர் எல்லா பாகங்களையும் வைத்துள்ளார்கள் என்பதும் தெரியாது.?!
      எனவே மின்னும் மரணம் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம்.

      ஆனால் ரத்தப் படலம் முழுத்தொகுப்பாக வெளியாகி ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள்தான் இருக்கும். மட்டுமின்றி இரண்டு வருடங்களுக்கு முன் வரை அது ஸ்டாக்கில் இருந்தது. பத்தில் குறைந்தது ஏழு வாசகர்களிடம் ர.படலம் முழு தொகுப்பும் இருக்கும் வாய்ப்பு அதிகம். வண்ணம் என்ற ஒரே காரணத்திற்காக எத்தனை பேர் வாங்க முன்வருவார்கள் என்பதும் தெரியாத விஷயம்.
      லிமிட்டேடு பிரின்ட்ஸ் எனும்போது விலையும் விண்ணைத் தொடும் வகையில் இருக்கும்.
      எடிட்டரின் தரப்பில் இதன் பொருட்டு முடக்கப்படும் தொகையும் அசாதாரணமான ஒன்றாகவே இருக்கும்.

      ஆனால் இவற்றையெல்லாம் மீறி ரத்தப் படலம் தொகுப்பு வண்ணத்தில் வெளியாகும் பட்சத்தில் முந்திக் கொண்டு முன்பதிவு செய்வோரின் பட்டியலில் பிராதானமாய் என் பெயர் இடம்பெறும் என்பது மட்டும் உறுதியான ஒன்று. ஹிஹிஹி.!!!

      Delete
    5. //Ravi: முன்பதிவு செய்வோரின் பட்டியலில் பிராதானமாய் என் பெயர் இடம்பெறும் என்பது மட்டும் உறுதியான ஒன்று. //
      +1

      Delete
    6. @ Mecheri Mangoose

      //முழுத் தொகுப்பையும் புதிய க்ளைமாக்ஸும் சேர்த்து வண்ணத்தில் முதல் முறையாக பார்க்கப் போகிறோம்.மட்டுமில்லாமல் முதல்பாகம் வெளிவந்து பதினைந்து வருடங்களுக்கு மேல் இருக்கும். எத்துனை பேர் எல்லா பாகங்களையும் வைத்துள்ளார்கள் என்பதும் தெரியாது.?!
      எனவே மின்னும் மரணம் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம்.//
      அருமையான விளக்கம் நண்பரே !
      வெற்றி வாய்ப்புகள் பற்றிய சரியான கணிப்புகள் !
      படிக்க அவ்வளவு சந்தோசமாக உள்ளது மிஸ்டர் மங்கூஸ்...!
      (நீங்கள் பொருளாதாரம் படித்தவரா....or ஷேர் மார்கெட் டிரேடிங் கிங்கா...)

      Delete
    7. இப்போது வாசிக்கும் பலரும் காமிக்ஸ் வெகுவாய் பிடித்தவர்களே ! காமிக்ஸின் காவியமான வண்ணத்தில் இரத்த படலம் என்பது இவர்களை ஈர்க்க போதுமானதே !

      Delete
  45. என்னடா அந்த காட்டான் கிட்டே கிசுகிசு
    சாரி சார்ஜ் என்னாலே அயன் பண்ணாத எந்த டிரஸ் ஐயும் போட முடியாது..அதான் பக்கத்திலே
    லாண்ட்ரி இருக்கான்னு கேட்டுகிட்டு இருந்தேன்

    ReplyDelete
  46. கடந்த பத்தாண்டுகளுக்குள் வெளிவந்த கதைகளை மீளப் பதிப்பு செய்வதை விட்டு இது போன்ற புதிய கதைகளை பதிப்பியுங்கள் சார். நண்பர்களும் மீள் பதிவு கோரிக்கைகளை தள்ளிவைத்துவிட்டு புதிய கதைகளை கொண்டுவர கோரிக்கையை முன்வையுங்கள். போராட்ட குழு அன்பர்களே ஓவர் டூ யூ ப்ரண்ட்ஸ்!! :-)

    ReplyDelete
  47. எடிட்டர் சார் பவுன்சரை வரவேற்கிறேன். கீழே உள்ளவர்களும் உங்கள் தேடல் பட்டியலில் இருப்பார்கள் என்று நம்புகிறேன். 2015ம் ஆண்டு சந்தா அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளேன்.

    1. Jonah Hex 2. Bat Lash 3. Rawhide Kid 4. Kid Colt 5. Two-Gun Kid 6. Desperadoes 7. Lone Ranger
    8. Boys’ Ranch 9. Ghost Rider 10. Blueberry 11. (Son of) Tomahawk 12. Cheyenne Kid 13. Firehair
    14. Graveslinger 15. Ringo Kid 16. Gunhawks 17. Johnny Thunder 18. El Diablo 19. Bouncer
    20. Amargo 21 (tie) Ken Parker 21 (tie) Scalphunter 21 (tie) The Presto Kid 24. Loveless 25 (tie) The Kents
    25 (tie) Comanche 27 White Indian 28 Nighthawk 29 Outlaw Kid 30 Pow-wow Smith
    31 Black Rider 32 (tie) Trigger Twins 32 (tie) Lobo 32 (tie) Jim Cutlass

    ReplyDelete
  48. பவுன்சர் வருவது நல்லதே.

    ஆனால் அதே சமயம் சேலம் கர்ணன் அவர்கள் இதைக்கண்டு பொங்கி எழுந்து பொங்கலாகி கமெண்ட் போடுவாரோ என்ற அச்சமும் மேலெழுகிறது.

    எடிட்டர் எதற்க்கும் ஒரு முறை “நமது கலாச்சார காவலர்களிடம்” உத்தரவு வாங்கிக்கொள்வது உசிதம்.

    இல்லையெனில்,,,,,,,

    கொஞ்சம் விஸ்வரூபம் ரிலீஸ் ஆகும் முன்பு கமல்ஹாசனின் நிலையில் நமது எடிட்டரை யோசித்து பாருங்கள்!

    (நான் நினைச்ச நல்ல, நல்ல காமிக்சை வெளியிட முடியவில்லை என்றால்.....

    இந்த நாட்டை விட்டு வெளியேறி எங்கு காமிக்ஸ் சென்சார் இல்லாமல் வெலியாகிறதோ அங்கு போய் குடியேறி, காமிக்ஸ் வெளியிடுவேன்).

    ஒன்லி ஃபார் நகைச்சுவை நண்பர்களே,,

    இந்த பகடிக்கும் நீங்கள் பொங்கி எழுந்து கமெண்ட் போட்டு என்னை போட்டு தள்ளிவிடாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. @M.S.குரு பிரசாத்,

      வணக்கம் நண்பரே.!

      //எடிட்டர் எதற்க்கும் ஒரு முறை “நமது கலாச்சார காவலர்களிடம்” உத்தரவு வாங்கிக்கொள்வது உசிதம்.//
      ஒவ்வொரு கதையை வெளியிடுவதற்க்கும் யாராவது சிலரிடம் அனுமதி பெற வேண்டும் என்றால் காமிக்ஸின் நிலமை கவலைக்கிடமாகிவிடும்.
      என்னிடம் கருத்து கேட்டால் மாடஸ்டியை வேண்டாம் என்றே சொல்வேன். நானும் ஸ்டீலும் விரும்பவில்லை என்பதற்காக மாடஸ்டி வராமல் இருக்கப்போவதில்லை.(நாங்களும் வாங்கி படிக்காமல் விடப்போவதில்லை. ஹிஹிஹி...)
      தவிரவும் பௌன்சர் ஆஃப்ஷனல் சந்தாவில்தானே வரப்போகிறார். தடுமாறும் நண்பர்கள் தவிர்த்துவிடலாம்..

      பின் குறிப்பு.:-
      ஒருநாள் தினசரி பத்திரிக்கைகளை முழுதாக படியுங்கள். அல்லது நியூஸ் சேனல்களை முழுதாக பாருங்கள். நம் நாட்டின் "கலாச்சாரம்." "பண்பாடு " போன்றவற்றின் நிலை தெளிவாக புரியும்.
      காமிக்ஸ் கதைகளில் வரும் சில விசயங்களை தடை செய்வதால் மட்டும் எல்லாம் மாறிவிடப் போவதில்லை. காலம் தன் வழியில் தடையின்றி போய் கொண்டேதான் இருக்கும்.

      (குரு பிரசாத், தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பரே.! நன்றி.!)

      Delete
    2. //ஒருநாள் தினசரி பத்திரிக்கைகளை முழுதாக படியுங்கள். அல்லது நியூஸ் சேனல்களை முழுதாக பாருங்கள். நம் நாட்டின் "கலாச்சாரம்." "பண்பாடு " போன்றவற்றின் நிலை தெளிவாக புரியும்.
      காமிக்ஸ் கதைகளில் வரும் சில விசயங்களை தடை செய்வதால் மட்டும் எல்லாம் மாறிவிடப் போவதில்லை. காலம் தன் வழியில் தடையின்றி போய் கொண்டேதான் இருக்கும்.//
      +1 தவிரவும் வேண்டுவோர் வாங்க இது தனி சந்தா எனும் பொது பாதிப்பில்லையே !

      Delete
    3. //ஒன்லி ஃபார் நகைச்சுவை நண்பர்களே,,

      இந்த பகடிக்கும் நீங்கள் பொங்கி எழுந்து கமெண்ட் போட்டு என்னை போட்டு தள்ளிவிடாதீர்கள்.//

      இப்படி ஒரு டிஸ்க்ளைமர் போட்டதே உங்களை மாதிரி ரெண்டு மாசத்துக்கு முன்னடி இந்த சைட்டுக்கு வந்து, ஆரம்ப கால விஷயங்கள் தெரியாமல் இருப்பவர்களிடம் இருந்து தப்பிக்க தான்.

      விதி வலையது.

      மங்கூஸ்,

      கொஞ்சம் பழைய விஷயங்களை தெரிந்துகொண்டு பதில் அளிக்கவும்,

      இல்லையெனில் ஒன்றுமே பெறாத ஒரு விஷயத்திற்க்கு இவ்வளவு பெரிய, சீரியஸான பதில் அளித்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

      இதற்க்காகத்தான் வடிவேலு அப்போதே சொன்னார்: வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே என்று.

      பின் குறிப்பு: மேலே இருக்கும் பதிலே மொக்கை. இதில் பின் குறிப்பு வேறேயா? தாங்காதுடா சாமீய்ய்ய்ய்.

      இதுல நான் பேப்பர் வேற முழுசா படிக்கணுமா? சார், கொஞ்சம் பழைய பதிவுகளை தூசி தட்டி படியுங்கள்.

      இது முழுக்க முழுக்க சிரிக்கும் மனநிலையிலேயே எழுதப்பட்டது என்பதை நிறுபிக்க :)

      Delete
    4. //பின் குறிப்பு: மேலே இருக்கும் பதிலே மொக்கை
      . இதில் பின் குறிப்பு வேறேயா?//

      பாராட்டுக்கு நன்றி குருபிரசாத்.!

      //உங்களை மாதிரி ரெண்டு மாசத்துக்கு முன்னடி இந்த சைட்டுக்கு வந்து, ஆரம்ப கால விஷயங்கள் தெரியாமல் இருப்பவர்களிடம் //

      நீங்கள் குறிப்பிடும் ஆரம்பகாலம் என்பது ஒரு இருபது வருசத்துக்கு முந்தி இருக்குமா.?
      லார்கோவின் கதைகளை வீட்டில் வைத்து படிக்க முடிவதில்லை என்று சில நண்பர்கள் கருத்து தெரிவித்திருந்திருப்பார்கள்.அல்லது பலான புத்தகம் போல் மறைத்து வைக்க வேண்டியிருக்கிறது என்று புலம்பியிருக்கலாம். அல்லது வெளியிடவே வேண்டாம் என்று கூட பொங்கியிருக்கலாம். ஷெல்டன் விஷயமும் அப்படியே.!!
      ரெண்டு மாசத்துக்கு முந்தி சைட்டுக்கு வந்தா மக்குன்னு அர்த்தமில்லை நண்பரே.!?

      நான் சீரியஸா பதில் எழுதினேன்னு நீங்களே நெனச்சிக்கிட்டா எப்புடிங்க.?!
      இதுவும் ஜாலியான பதில்தான்.:):):)

      Delete
    5. //நீங்கள் குறிப்பிடும் ஆரம்பகாலம் என்பது ஒரு இருபது வருசத்துக்கு முந்தி இருக்குமா.?
      லார்கோவின் கதைகளை வீட்டில் வைத்து படிக்க முடிவதில்லை என்று சில நண்பர்கள் கருத்து தெரிவித்திருந்திருப்பார்கள்.அல்லது பலான புத்தகம் போல் மறைத்து வைக்க வேண்டியிருக்கிறது என்று புலம்பியிருக்கலாம். அல்லது வெளியிடவே வேண்டாம் என்று கூட பொங்கியிருக்கலாம். ஷெல்டன் விஷயமும் அப்படியே.!!//

      வாண்டடா வண்டியில வந்து ஏறிட்டு இன்னமும் மீசையில் மண் ஒட்டலன்னு சொல்லிட்டே இருந்தா எப்படி?
      உங்களை எங்காவது மக்குன்னு சொன்னனா?

      நான் பாட்டுக்கு ஒரு கமென்ட் போட்டேன். அதுக்கு நீங்க விஷயம் தெரியாம வந்து ஆயிரம் அட்வைஸ் பண்ணுவீங்க, நான் ஒரே ஒரு அட்வைஸ் பண்ணா உங்களால தாங்க முடியலையே?

      கொஞ்சம் விஷயம் தெரிஞ்சுட்டு வாங்கண்னு சொன்னது அவ்வளவு பெரிய குத்தமாய்யா? இது ஜாலியான பதில்ன்னு இதுல கடைசியா போட்டு இருந்தீங்களே, அதுதான் செமையான மொமெண்ட்.

      இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை. அந்த விஷயம் என்ன என்பதற்க்கு நானே நண்பர் கர்ணன் பேரை சொல்லி க்ளூ குடுத்து இருக்கேன் (கர்ணன் அண்ணனிடம் புக்கு வாங்கியவன், பழகியவன் என்ற உரிமையில் அந்த கமெண்ட்).

      இப்படி ஜாலியா போய்ட்டு இருந்த இந்த கமெண்ட்டில் வாண்டட் ஆக வந்து அந்த ஜாலியான கமெண்டின் போக்கையே திசை திருப்ப பார்த்தது உங்க கமெண்ட்.

      மறுபடியும் இந்த ப்ளாகில் ஒரு கலவரம் வரவேண்டாம் என்று பார்த்து ஒரு அட்வைஸ் சொன்னால் ,,,,,,,,,

      சரி, சரி, நீங்க மக்கு மங்கூஸ்,,,,,,, இல்லை. போதுமா?

      Delete
    6. நீங்க குடுத்த க்ளூவுக்குள்ள போக விரும்பாததால வேற மாதிரி சொன்னேன்.
      மற்றபடி திசை திருப்பும் வேலையெல்லாம் ஒண்ணுமீல்லீங்கோ.!

      (நீங்க சொல்லவந்த மேட்டர் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டதுண்டு.)

      தொடர வேண்டாம்,
      ஃப்ரீயா விடுங்க.!

      Delete
    7. மங்கூஸ்,

      //நீங்க குடுத்த க்ளூவுக்குள்ள போக விரும்பாததால வேற மாதிரி சொன்னேன்.
      மற்றபடி திசை திருப்பும் வேலையெல்லாம் ஒண்ணுமீல்லீங்கோ.!

      (நீங்க சொல்லவந்த மேட்டர் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டதுண்டு.)//

      இந்த ரெண்டு ஸ்டேட்மெண்ட்டுக்கும்,

      //லார்கோவின் கதைகளை வீட்டில் வைத்து படிக்க முடிவதில்லை என்று சில நண்பர்கள் கருத்து தெரிவித்திருந்திருப்பார்கள்.அல்லது பலான புத்தகம் போல் மறைத்து வைக்க வேண்டியிருக்கிறது என்று புலம்பியிருக்கலாம். அல்லது வெளியிடவே வேண்டாம் என்று கூட பொங்கியிருக்கலாம். ஷெல்டன் விஷயமும் அப்படியே.!!//

      இதுக்கும் கொஞ்சமும் சம்பந்தமும் இல்லை.

      சரி, சரி - நீங்களே பின்வாங்கியதால் இந்த சங்கதி இத்துடன் கைவிடப்பட்டது.

      Cheers.

      Delete
    8. //இந்த ரெண்டு ஸ்டேட்மெண்ட்டுக்கும்.இதுக்கும் கொஞ்சமும் சம்பந்தமும் இல்லை.//
      நான்தான் வேற மாதிரி சொன்னேன்னு சொல்லிட்டேனே.! பிறகு எப்படி சம்மந்தம் இருக்கும்.?
      பேப்பரை முழுசா படிச்சா நிலமை புரியும் என்று பொதுவாக சொல்லிவிட்டேன். (தங்களை குறித்து அல்ல) . அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.
      Hot &cool special..,மற்றும் கூரியர் டெலிவரி என்றெல்லாம் விளக்கமாக சொன்னால்தான் விடுவீர்களா சார்.?

      இப்பவும் சம்மந்தம் இல்லாத மாதிரி உங்களுக்கு தோன்றினால், புரிய வைக்க முடியாத நான் நிச்சயம் மக்கு மங்கூஸ்தான்.
      வெற்றி உங்களுக்கே சார்.?!!
      இதனை இத்தோடு விட்டுவிடுங்கள் சார்.!!

      Delete
  49. அன்பின் ஆசிரியருக்கு,

    ஹொடொரோவெஸ்கியைத் தமிழில் வாசிக்கப்போகிறோம் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. எனது வெகுநாள் ஆசை நிறைவேறப் போவதில் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது. விரைவில் நமது காமிக்சில் இனகாலையும் வாசிக்கக் காத்திருக்கிறேன்.

    நண்பர்களே,

    கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களில் வெறும் ஐந்தே படங்களை இயக்கிய ஒரு மனிதரை இன்றளவும் சினிமா ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் எனில் அது ஹொடொரோவெஸ்கி மட்டுமே. அவரது திரைப்படங்களில் எல் டோபோவையும் ஹோலி மவுண்டைனையும் நண்பர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். கதையின் நாயகன் பவுன்சர் ஒற்றைக்கையோடு இருப்பதில் எனக்கு எந்த ஆச்சரியமுமில்லை. ஏனெனில் உருச்சிதைந்த விளிம்பு நிலை மனிதர்களின் உலகம்தான் ஹொடொரோவெஸ்கியின் உலகமும். அவரது திரைப்படங்களைப் பார்த்த நண்பர்கள் யாரேனும் இந்த உரையாடலைத் தொடர்ந்தால் பெருமகிழ்ச்சியடைவேன்.

    ஆசிரியருக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.

    பிரியமுடன்,
    கார்த்திகைப்பாண்டியன்

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா,

      நானும் காலையில் இருந்து கமெண்ட்டுகளை படித்துக்கொண்டு இருக்கிறேன். யாராவது ஒருவராவது இந்த திசையில் பயணிப்பார்கள் என்று காத்துக்கொண்டு இருந்ததில் நண்பர் கா.பா மட்டுமே இதைப்பற்றி பேசியுள்ளார்.

      கா.பா,

      நீங்கள் அவரது பிரிட்டிஷ் படங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லையோ?

      பெர்சனலாக எனக்கு அவரது தி ரெயின்போ தீஃப் மிகவும் பிடிக்கும் (இது அவரது படைப்புகளிலேயே மிகவும் லைட் ஆனது என்ற கருத்து இருந்தாலும்கூட).

      ஹோலி மவுண்டன் அவரது ஆகச்சிறந்த படைப்பு.

      நினைவூட்டியமைக்கு நன்றி கா.பா.

      Delete
    2. கா.பா,

      //கதையின் நாயகன் பவுன்சர் ஒற்றைக்கையோடு இருப்பதில் எனக்கு எந்த ஆச்சரியமுமில்லை. ஏனெனில் உருச்சிதைந்த விளிம்பு நிலை மனிதர்களின் உலகம்தான் ஹொடொரோவெஸ்கியின் உலகமும். அவரது திரைப்படங்களைப் பார்த்த நண்பர்கள் யாரேனும் இந்த உரையாடலைத் தொடர்ந்தால் பெருமகிழ்ச்சியடைவேன்.//

      கடைசியாக வலையுலகமும், நண்பர்களும் அவரைப்பற்றி பேசியது பாலாவின் நான் கடவுள் விவாதத்தின்போதுதானே?

      Delete
    3. ////கதையின் நாயகன் பவுன்சர் ஒற்றைக்கையோடு இருப்பதில் எனக்கு எந்த ஆச்சரியமுமில்லை. ஏனெனில் உருச்சிதைந்த விளிம்பு நிலை மனிதர்களின் உலகம்தான் ஹொடொரோவெஸ்கியின் உலகமும்.//

      Jodorowsky & Psychomagic

      //from Wiki: Jodorowsky spent almost a decade reconstructing the original form of the Tarot de Marseille.[35] From this work he moved into more therapeutic work in three areas: psychomagic, psychogenealogy and initiatic massage. Psychomagic aims to heal psychological wounds suffered in life. This therapy is based on the belief that the performance of certain acts can directly act upon the unconscious mind, releasing it from a series of traumas, some of which practitioners of the therapy believe are passed down from generation to generation. Psychogenealogy includes the studying of the patient's personality and family tree in order to best address their specific sources. It is similar, in its phenomenological approach to genealogy, to the Constellations pioneered by Bert Hellinger.//

      from the highlighted parts we can understand his way of seeing disabled lives, as a researcher(!?). May be his art works reflecting his psychomagic studies(!?)

      ref: http://en.wikipedia.org/wiki/Alejandro_Jodorowsky

      Delete
  50. லயனின் மீள் வரவிற்கு பின் அறிமுகமான கதை நாயகர்களில் லார்கோவும் , ஷெல்டனுமே சிறந்த அறிமகமாக உள்ளனர்.

    அவர்களின் முதல் கதையே பட்டாசு கொளுத்தியதை போல் அதிரடியாக இருந்தது.

    லார்கோ தமிழில் வெளி வருவதற்கு முன் அந்த கதையை பற்றிய எந்த அபிமானமும் என்னிடம் இல்லை.

    மேலும் அதன் வருகிறது விளம்பரங்களும் என்னை கவரவில்லை.

    குறிப்பாக லார்கோவின் முகத்தோற்றம் என்னிடம் எந்த ஈர்ப்பையும் ஏற்படுத்தவில்லை.

    எனினும் கதையை படிக்க தொடங்கிய முதல் லார்கோ ஏற்படுத்திய ஈர்ப்பு அபரிமிதமானது.

    நான் தற்போது தங்களிடம் எதிர்பார்ப்பது அதை போன்ற ஒரு நிகழ்வை எனக்கு ஏற்படுத்த வேண்டுமென்பதையே.

    அவர் கௌபாய் நாயகராக இருந்தாலும் சரி அல்லது சராசரி ஆசாமியாக இருந்தாலும் சரி தேவை ஒரு பரபரப்பான கதை.

    ReplyDelete
    Replies
    1. இந்த பின்னூட்டத்தை நானும் பலமாக வழிமொழிகிறேன்

      Delete
  51. பதிமூன்றின் வருகையை மின்னும் மரணத்தின் வெற்றி நியாய படுத்தும் ! இரத்த படலம் வேண்டும் பிரதிகளுக்கு தகுந்த விலை வைத்து வெளியிடலாம் ! வண்ணத்தில் ஒரு பாகம் ஆயிரம் ரூபாய்க்கு விற்கபட்டிருக்கிறது ! வேண்டுவோருக்கு மட்டும் ஆசிரியர் சிறப்பு விலையில் சிறப்பு பிரதிகள் வெளியிட ஆவன செய்யவேண்டும் !

    ReplyDelete
    Replies
    1. "மின்னும் மரணம் வெற்றி! மின்னும் மரணம் வெற்றி!" என்று நாமேதான் சொல்லிக் கொள்ள வேண்டும். ஆசிரியரைக் கேட்டால் முன்பதிவு "S-l-o-w" என்கிறார். பின்பு எங்கிருந்து வரும் வெற்றி? இந்த collectors ஸ்பெஷல் எல்லாம் மின்னும் மரணத்தின் தோல்வி (?) யோடு சரி :(

      Delete
    2. பிருந்தாபன் நாம் குறைந்த எண்ணிக்கைதான் ...ஆனால் ஓரளவுக்கு அதிக விலை என்றாலும் வாங்கி கொள்ள முடியும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இதில் அதிகம் ! சிறந்த கதைகள் இப்போதைய தரத்தில் வேண்டும் எனும் நண்பர்களுக்கான ஒரு முயற்சி ! நிச்சயமாக ஆசிரியருக்கு இதில் லாபம் எது இருக்க போவதில்லை ....அவர் கையை சுட்டு விடாமல் இருக்க இந்த முயற்சி ! முன் பதிவுக்கு மட்டும்தான் என மின்னும் மரணம் கிடைக்கட்டும் ! அப்புறம் பாருங்கள் ....இந்த ஒரு முறை மட்டும் சந்தாவின்றி ஒரு புத்தகமும் அச்சிடாமல் இருக்கட்டும் ....ஆசிரியர் இதனை வெள்ளோட்டமாய் செயல்படுத்தி பார்க்க வேண்டும் ....வந்த பின்னர் பார்த்து கொள்ளலாம் என காத்திருந்த என் இருப்பை தட்டி போட்டு சிவகாசி சென்று வாங்க வைத்த பெருமைக்குரியது இரத்தபடலம்தானே ....அதற்க்கு காரணம் கடைகளில் கிடைக்காது என்பது தவிர வேறென்ன !

      Delete
    3. சில விஷயங்கள் வெற்றியா தோல்வியா என அறிய முடியாமல் போவதே தோல்விக்கு காரணமாகி விடுகிறது .

      Delete
    4. இரண்டு புத்தகங்கள் விற்பதற்கு பதில் ஒரே புத்தகத்தில் எடுக்கலாம் லாபத்தை ....பாலகுமாரனின் கதைகள் போல ...உடைக்காமல் ஆம்லேட் போட இயலுமா ?

      Delete
    5. //கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்: சிறந்த கதைகள் இப்போதைய தரத்தில் வேண்டும் எனும் நண்பர்களுக்கான ஒரு முயற்சி !//
      +1
      considering XIII is still a hot cake with new formats(spin offs, etc..) its better to re-release the base 18 stories for new audience(who ever don't have original 18 books / or B/W collectors edition / who ever impressed with latest XIII books but don't understand most of characters / and their behavior) sake. I feel any new audience getting impressed with XIII may have the same request in their mind!

      its highly recommendable to raise the request to re-release(or schedule the release of) the multicolor (better quality)print of the same.

      Delete
  52. பௌன்செர் சென்சார் இல்லாமல் சந்தாவுக்கு வெளியே வருகிறார் சரி. அப்படியே நம்ம மாடஸ்டியையும் சந்தாவுக்கு வெளியே அனுப்பி விட்டு... உங்க ஆபீஸ் டைலர்களை எல்லாம் VRS கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டால் நல்லா இருக்கும். ஹி.. ஹி...

    ReplyDelete
  53. ஆசிரியர் .....இந்த பதிவிற்கும் தலை காட்ட மாட்டார் போல இருக்க .... : (

    அமைதியாக சென்று கொண்டு இருக்கும் நமது குழு மீண்டும் இதற்காக போராட்டத்தில் குதிக்க வேண்டுமா செயலாளர் அவர்களே .....?

    ReplyDelete
    Replies
    1. தலைவர் அவர்களே,

      'ஒரு சிறுபிள்ளையின் ஆர்வத்தோடு' நமது எடிட்டர் தற்போது மொழிபெயர்த்து வருவது ஒரு கரடுமுரடான, வன்மேற்கின் கோரமான முகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டிடும் ஒரு தொடரை! - அதாவது பெளன்ஸரின் 'ரெளத்திரம் பழகு' கதையை!
      இப்படியொரு மொழிபெயர்ப்பினூடே எடிட்டர் நமக்கு பதிலளிக்க நேர்ந்தால் (அக்கதையின் தாக்கம் காரணமாக) அவரையும் அறியாமல் சரமாரியான கெட்ட வார்த்தைகள் இங்கே விழுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமில்லையா? அதைத் தவிர்க்க நினைத்தே இங்கு பதிலளிக்காமல் விலகியிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.
      (ஜேனுக்குப் போட்டியாக அவர் உருவெடுப்பதை அவரே விரும்பவில்லை போலும்!)

      அடுத்தவருடம் இந்தக் கதை வெளியான பின், நமது தளம் இந்தமாதிரியான குறியீடுகளால் நிரம்பி வழியுமோ என்னவோ? Ψ✂☠*¶€♐✁ $@*

      Delete
    2. @Erode vijay

      உங்களுக்கு ஜேன் மிகவும் பிடித்த கதாபாத்திரம் ஆகிவிட்டார் போல

      Delete
    3. விஜய் ஆசிரியர் தீபாவளிக்கு லார்கோவை கொடுத்தே ஆக வேண்டும் என்று காலில் சக்கரம் கட்டி கொண்டு போய் கொண்டிருக்கிறார் ....இங்கே நின்று brake அடித்து பேசி செல்ல நேரம் இல்லை ! இதில் அடுத்த வருட புத்தகங்கள் பட்டியல் வேறு ....நமக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் வேறு உண்டாம் ....இன்ப அதிர்ச்சி ...இன்ப அதிர்ச்சி !

      Delete
    4. தலைவர், செயலாளர் அவர்களே இரண்டு பதிவுகளாக ஆசிரியர் வரவில்லை.. மொத்தம் 15 நாட்களுக்கு மேலே ஆகப்போகிறது என்பதை நினைவு படுத்துகிறேன்.. ஒரு 10 நிமிடம் வந்து போக சொல்லுங்கள் தலைவரே...

      Delete
  54. Warm Welcome to Bouncer

    அவருடைய என்ட்ரிகாக காத்திருக்கிறேன்

    ReplyDelete
  55. எதுடா பழம் நீ மட்டும் சாப்பிடறே
    ம்..நீங்க இந்த டிரஸ் ஐ கட்டி விடும்போது அதிலே பூ வா இருந்தது.. அது பிஞ்சாகி காயாகி
    பழமாகிடிச்சி எதுக்கும் கொடுப்பினை வேணும் சார்ஜ்

    ReplyDelete
  56. எப்படியும் இந்த ஆப்பரே சன்லே எதிரி என்னை கொன்னுடுவான். நான்
    செத்ததுக்கு அப்புறம் என்னுடைய இந்த டிரஸ் ஐ கழட்டி என்னோட சொந்த ஊருக்கு அனுப்பி வைங்க சார்ஜ்
    எதிரி கொல்றானோ இல்லையோ ஒன்னோட இந்த வேண்டுகோளாலே என்னை கொன்னுட்டேடா

    ReplyDelete
  57. Unique Spine Designs for Series..

    Tex Willer நமது காமிக்ஸ் இதழ்களிலேயே மிகப் பெரிய நாயகர். இருப்பினும் நாம் அவருக்கென தனி இம்ப்ரிண்ட் அல்லது ஸ்பெஷல் Treatment எதுவும் கொடுத்ததில்லை. Customized Imprint பற்றி பேச ஆரம்பித்துள்ள நாம் குறைந்தபட்சம் புத்தகத்தின் தண்டுப் பகுதியாவது ஒரே வடிவத்தில் வருவதை போல வடிவமைக்கலாம்.

    ஒவ்வொரு தொடர் கதையும் ஒரே விதமான Spine Design- ஐ பின்பற்றும் போது, புத்தக அலமாரிகளில் காட்சிப்படுத்த மிகவும் அற்புதமாக இருக்கும். மேலும் அவற்றை பார்க்கும் பொது ஏற்படும் பரவசத்தை விளக்க வார்த்தை ஏது?

    ஒவ்வொரு தொடருக்குமான Spine Design- ஐ வடிவமைக்க தாங்களே வழக்கம் போல ஒரு போட்டியை அறிவிக்கலாம்..

    2015 ம் வருடப் பதிப்புகளில் இருந்தாவது இத்தகைய முயற்சியை நாம் மேற்கொள்ளலாமே?

    ReplyDelete
    Replies
    1. //ஒவ்வொரு தொடர் கதையும் ஒரே விதமான Spine Design- ஐ பின்பற்றும் போது, புத்தக அலமாரிகளில் காட்சிப்படுத்த மிகவும் அற்புதமாக இருக்கும். //
      +1
      good suggestion I feel Edit sir need to consider following this from Bouncer, Comanche and rest of series... !

      Delete
  58. விட்ரா விட்ரா கலை தாகம் உள்ளவங்களுக்கு என்னோட உணர்ச்சி புரியும்டா
    இருந்தாலும் திண்டுக்கல் ரீட்டா வோட ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்காக டிரஸ் ஐ
    வித்துட்டு வந்திருக்க கூடாது சாரஜ்

    ReplyDelete
  59. இங்கே பாரு..isis பசங்களை அடியோடு ஒழிக்கணும் நதி நீர் பிரச்னையை தீர்க்கணும்
    அம்மாவை வெளியே கொண்டு வரணும் ஏகப்பட்ட சவால்களை நாமதாண்டா சந்திக்க வேண்டி இருக்கு
    விளக்கெண்ணை கொஞ்சம் கிடைக்குமா சார்ஜ் ..ஒரு செந்தட்டி இ லை மாட்டிகிச்சுன்னு
    நினைக்கிறேன் ரொம்ப நேரமா அரிக்குது

    ReplyDelete
  60. நேற்றிரவு திகில் வெளியீடு எண்;41 -
    நரகத்தின் எல்லையில் ....
    கேப்டன் பிரின்ஸ் சாகசம் படித்துக்கொண்டிருந்தேன் .உணர்ச்சி பூர்வமான பல போராட்டங்கள் இடம்பெறும் இந்த கதையில் மனித உணர்வுகளையும் அவர்களின் பரிதாப நிலைகளையும ஜீவன் பிசராமல் நமது ஆசிரியர் எழுத்துக்களில் வடித்திருப்பதை பாராட்ட வார்த்தைகள் போதா ...
    இதோ அவற்றில் ஒன்று ;
    செடி கொடிகளைக்கொண்டு ஒரு படுக்கை தயாரித்து,குளிர் காய்ச்சலினால் நடுங்கிக்கொண்டிருந்த பிரின்சை அதில் கிடத்தி ,கொஞ்ச நஞ்சமிருந்த தங்களுடைய சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி அதை தூக்கிக்கொண்டு வயதான ஒரு கிழவனும் ,இன்னமும் முழு வளர்ச்சியடையாத சிறுவனும் தள்ளாடி நடந்த பரிதாபத்தைக் காண சகிக்காமல் தானோ என்னவோ சூரியன் மேல் திசையில் கீழிறங்கி மறைந்து போனான் .// நெஞ்சை பிசையும்
    இந்த காட்சியின் சித்திரம் (பக்கம் 63) என்றும் நினைவில் நிற்கும் .

    ReplyDelete
  61. டியர் எடிட்,

    Dupius Lombard போன்ற நிறுவனங்களிடம் மட்டும் இருந்து வந்த பிரஞ்சு கூட்டணி, தற்போது Humanoids டமும் தொடர்வது அறிந்து மகிழ்ச்சியே. Guardians of Galaxy மூலம் வின்வெளி கதைகளத்திற்கு காமிக் சம்பந்தபட்ட திரைபடங்கள் நுழைந்திருககம் இவ்வேளையில், பல வித Sci-Fi கதைகளுக்கு பெயர் போன Humanoid உடன் கைகோர்த்து தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு பல புதிய கதையம்சங்களை அறிமுகபடுத்தி வைக்க ஒரு கதவு திறந்தது போல இதை நான் உணர்கிறேன்.

    ஆனால், தமிழ் காமிக்ஸ் ரசிகர்களை, Vulgar என்ற ஒரு காட்சிகலனுக்கு பரிச்சயம் செய்யாமல், ஆடைகளை போர்த்தி விடுவது, கதைகலன்களை மாற்றுவது, என்ற Moral Policing ல் தாங்கள் ஆர்வமாக இருக்கும் இவ்வேளையில், பவுன்சர் போன்ற கதைகளங்களிளுக்கு தமிழ் காமிக்ஸ் ரசனைகள் இன்னும் தயாராகிவிடவில்லை என்று கண்டிப்பாக நம்பலாம். Vulgar என்ற சொல்லுக்கு தலையை வெட்டி காவு கொடுப்பது, அங்கங்கள் கவர்ச்சி என்று மட்டும் பழகி போன ரசிகர்களுக்கு, பாலியல் உறவு, அம்மா/தந்தை, மகன், மகள் என்ற Incest கதைகளன்களுக்கு பெயர் போன Jodrowsky (பவுன்ஸர் கதைகளனும் இதற்கு விதிவிலக்கல்ல) கதைகள் சற்றே ஓவர் ரகம் என்று பட்டுவிடலாம் - அந்த அந்த கதைக்கு அக்காட்சி அமைப்புகள் ஒரு முக்கிய பங்காற்றுகின்றன என்ற கூற்றை எத்தனை பேர் ஒப்புக்கொள்வார்கள் என்பது ஒரு கேள்விகுறி. Incal, Metaborons, Son of the Gun, போன்ற Humanoidன் பல வித கதைதொடர்களில் இந்த கதைபாங்கு தான் பிரசித்தம்.

    Only for Mature Readers, சந்தாவில் இடம்பெறாது என்ற அடைமொழியுடன் நீங்கள் இப்புத்தகங்களை வெளியிட முனைந்தாலும், கதைகளத்தில் இவற்றை மறைக்கிறேன் பார் என்று, காட்சிகளை மாற்றி அமைப்பது, கதாபாத்திரங்களை மாற்றி எழுதுவது, என்று அடிப்படை கதைநாடியை சிதைப்பதை விட, அவற்றை விட்டு விலகி இருப்பது சரியென்பேன். ஏற்கனவே, டிடெக்டிவ் ஜெரோம் போன்ற ஒரு கதைதொடருக்கு முடிவை மாற்றி அமைத்து அதன் தனித்தன்மையை விலக்கி, அது ரசிகர்களிடையே எடுபடாத கதை தொடர் என்று பெயர் வாங்கியது ஞாபகம் இருக்கலாம்.

    மற்றபடி கதை தொடரை வெளியிட்டே தீருவேன் என்று நீங்கள் முனைப்போடு இருந்தால், அது மூலகதையை அப்படியே உள்வாங்கும் முயற்சி என்று இருக்கும் வரையில், பல வித ஜோடரவ்ஸ்கியின் கதைகலன்களுக்கு ரசிகனான என்னை பொறுத்த வரையில் மனப்பூர்வமான ஆதரவு என்றும் இருக்கும். உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //Vulgar என்ற சொல்லுக்கு தலையை வெட்டி காவு கொடுப்பது, அங்கங்கள் கவர்ச்சி என்று மட்டும் பழகி போன ரசிகர்களுக்கு, பாலியல் உறவு, அம்மா/தந்தை, மகன், மகள் என்ற Incest கதைகளன்களுக்கு பெயர் போன Jodrowsky (பவுன்ஸர் கதைகளனும் இதற்கு விதிவிலக்கல்ல) கதைகள் சற்றே ஓவர் ரகம் என்று பட்டுவிடலாம்//
      I am impressed by book reviews(some say one of important comics on wild west),. after reading the early years of Jodrowsky in wiki I had similar though of yours about the moral of himself and his works, but considering the story hero stands by good side I am hoping for good series!

      I still feel its too early to talk about how audience will receive the book, but your doubts regarding culture shock are valid,I don't know how Edit will handle this.

      "Cliché genre" of Jodrowsky with epic art work of Francois Boucq on bouncer side, I am waiting for Bouncer with optimistic curiosity as you are friend !

      Delete
    2. One Clarification :

      I did mention that I am great fan of Jodorowski's works, including his Graphic Novels.... so Bouncer is one of my all-time favourite cowboy stories (a fact highlighted at the end of my comment).

      What I am instead worried/scared is that such great work shouldn't be changed from source, citing the reason of censorship by Editor, or by the whims of certain reserve reader pool. It will do more bad for the intent of publishing this world renowned series in Tamil, than any good.

      Delete
    3. நண்பர் ரபீக் ராஜா,


      நலமா .. ஆபீஸ் மாறிய பின், பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது .. !


      நீங்கள் சொல்லும் வாதத்தில் பொருளிருந்தாலும்,


      a ) சக்திக்கு மீறிய ராயல்டி தொகை

      b ) புதிய மொழிபெயர்ப்பு நடை

      c ) for mature audience only


      போன்ற கவனங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்படிருக்கும் போது, நாம் மறுபடியும் பழைய விஷயங்களைக் நினைக்க வேண்டாமே! இவ்வரிசை புதிதாக, தனியாக ஒரு பாணியில் வந்திடும் என்று நம்புவோமே.


      பொறுத்தார் .. பூமியாள்வார் - பௌன்சரும் ஆள்வார் !

      Delete

    4. //What I am instead worried/scared is that such great work shouldn't be changed from source,//
      +1
      The censor may needed for legal reasons or considering conventional tamil audience(or for any other reason or prerogative of Edit), but I stand by the though censoring should never go to the level of changing the main stream story !

      Delete
  62. டியர் எடிட்டர்,


    புதிய பாணி மொழிபெயர்ப்பைப் பற்றி படித்து மகிழ்ந்த அதே நேரத்தில் 'சவரம் காணா வதனம்' என்ற வாக்கியத்தைப் படித்து ஒரு சில நொடிகள் அர்த்தம் புரியாமல் 'திரு ..திரு ..' வென்று முழித்தேன். It took me a while to figure out that it actually is 'மழிக்கப்படா முகம்'. Phew ! :-) காமிக்ஸில் இப்படி வராது தானே ?


    All the same - a warm welcome to BOUNCER and thanks for your efforts towards expanding into new comic lines !

    ReplyDelete
  63. ரௌத்திரம் பழகு - Superb title
    Waiting to watch the action...!!

    என்னுடைய சின்ன விருப்பம். இது போன்ற தொடர்களுக்கு பொதுவான ஒரு பெயரை வைத்து ஒவ்வொரு பாகத்துக்கும் தனியான தலைப்பை வைத்தால் நன்றாக இருக்கலாம்.
    உ: இரத்த படலம் - 7 - ஆகஸ்ட் 3ன் இரவு
    மின்னும் மரணம் - 6 - காற்றில் கரைந்த கூட்டம்

    சிலவேளை இடையே புதிதாக சேரும் வாசகர்கள் தொடர் கதை என்று புறந்தள்ள கூடுமோ?

    ReplyDelete