நண்பர்களே,
வணக்கம். வருடத்தின் இறுதி 2 மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில் - நமது பார்வைகள் ஏற்கனவே 2015-ன் மீது நிலைகொண்டுள்ளது - 'நான் வளர்கிறேனே மம்மி' complan குழந்தையை நினைவுக்குக் கொண்டு வருகிறது ! உயரத்தில் மட்டுமன்றி விவேகத்திலும் வளரும் ஓர் வேளையாய் புதிய வருடம் நமக்குப் புலரும் பட்சத்தில் சந்தோஷமே ! சென்ற வாரப் பதிவில் 2015-ன் அட்டவணைக்குள் உரிமையோடு உட்புகும் TOP 5 நாயக-நாயகியரைப் பற்றிய preview பார்த்தோம்..! இம்முறையோ - எல்லைக்கோட்டில் நடனமாடிக் கொண்டிருக்கும் சில ஆசாமிகளை அடையாளம் பார்க்கும் பணிக்குள் தலை நுழைப்போமா ?
ஏற்கனவே நான் இங்கு பதிவிட்டிருந்தது போல - 2014-ன் பாடங்களை மறந்திடக் கூடாதென்பதிலும் ; கொஞ்சமே கொஞ்சமாய் சொதப்பும் நாயகர்களைக் கூட இம்முறை உப்புமூட்டை ஏற்றிக் கொள்வதில் நிறையவே யோசிக்கப் போகிறோம் என்பதிலும் தெளிவாக இருக்கிறேன் ! நம்மிடம் 'ஹீரோ பஞ்சம்' நிலவிடும் பட்சத்தில் - 'சரி..போனால் போகட்டும் ; இன்னும் கொஞ்சம் வாய்ப்புகள் நல்கிடலாம் !' என்று சிந்திக்கத் தோன்றிடும். ஆனால் நம்மிடமோ RAC ; Waiting List ; தத்கல் கோட்டா ; footboard பயணிகள் என்று எக்கச்சக்கமாய் ஆசாமிகள் இருக்கும் போது - தேர்வு அளவுகோல்களை சற்றே உயர்த்திப் பிடிப்பதில் தப்பில்லை தானே ?!
அதன் பலனாய் 2014-ன் முதல் மாதத்தை வரவேற்ற புண்ணியவானே இம்முறை முதல் தடுமாற்ற slot-ஐ தொட்டு நிற்கிறார் ! ! Yes - "சாக மறந்த சுறா" மூலமாய் மறுபிரவேசம் செய்த ப்ருனோ பிரேசில் தான் 2015-ன் danger zone-ல் நிற்கும் முதல் ஹீரோ ! என்ன தான் சித்திர வித்தகர் வான்சின் கைவண்ணம் மெருகூட்டினாலும் ; என்ன தான் ப்ருனோவின் "முதலைப் பட்டாளம்" நமது நேற்றைய ஆதர்ஷ நாயகர்களாக இருந்திருந்தாலும் - கதைக்களங்களின் புராதனம் நாசியில் புகுந்த மிளகாய் வற்றலாய் இன்றைக்கு கமறுவதைத் தவிர்க்க இயலவில்லை ! இக்கதைகள் உருவான 1970-களின் போது உலகெங்கும் திரைகளிலும். கதைகளிலும், ஜேம்ஸ் பாண்ட் எனும் ஒரு காந்த சக்தி வசீகரித்து வந்தது ! அதற்குப் போட்டியாய் - அதே சாயலில் உருவான ப்ருனோ - 45 ஆண்டுகள் கழிந்தான பின்னே - கீ கொடுக்கும் அந்நாளைய டைம்பீசை நினைவுபடுத்துவது காலச்சக்கரத்தின் சுழற்சிக்கு விதிவிலக்கு எவருமில்லை என்பதைப் புரியச் செய்கிறது ! "சாக மறந்த சுறா" நிறையப் பேரை "சட்டையைக் கிழிக்கச் செய்த சுறாவாக" அவதாரம் எடுத்ததெனில் - சில மாதங்களுக்குப் பின்னே வந்த "முகமற்ற கண்கள்" அதற்கு ஒரு படி மேலே போய் பீதியைக் கிளப்பியது ! இந்தக் கதை ஒரிஜினலாய் வெளியான நாட்களில் நிறைய சிலாகிக்கப்பட்டது என்பது மாத்திரமே எனக்கு ஞாபகத்தில் நின்ற நிலையில் - இந்த வண்ண மறுபதிப்பை தயார் செய்யும் பணிகளில் மறுவாசிப்பு செய்த போது "ஞே" முழி தான் மிஞ்சியது ! In any case, ப்ருனோ தொடரில் புதுக் கதைகள் ஜாஸ்தி இல்லை எனும் போது பின்பெஞ்ச் இருக்கைக்கு அவர் செல்ல நேரிட்டாலும் கூட - மறுபதிப்புகளுக்கு மாத்திரமே இடைஞ்சல் எனக் கருதலாம் !
2014-ல் இரண்டாம் மாதம் வந்தவர் தான் இரண்டாம் கத்திக்குக் கீழே துயிலும் பாக்கியவான் ! "காவியில் ஒரு ஆவி" புகழ் ஜில்லார் தான் அந்த dubious distinction -க்குச் சொந்தக்காரர் ! இங்கும் ப்ருனோவுக்குச் சொன்ன அதே set of reasons தான் - புராதனம் ; மிகவும் outdated ஆகத் தோன்றும் கதை பாணிகள் என்ற சிக்கல் ! இங்கு இன்னுமொரு பிரச்சனை என்னவெனில் - ஜில் ஜோர்டானின் சித்திர பாணிகள் கார்ட்டூன் ஸ்டைலில் அமைந்திருப்பதால் - அதனைக் கையில் எடுக்கும் போதே நாம் எதிர்பார்ப்பது ஒரு நகைச்சுவை விருந்தை என்றாகிப் போகிறது ! ஜில்லின் அசிஸ்டென்ட் வேறு நிமிஷத்துக்கு நாலு கடி ஜோக் விடும் ரகம் என்பதால் எதிர்பார்ப்புகள் கூடிப் போகின்றன ! ஆனால் Gil Jordan சிரிப்புப் போலீஸ் இல்லையென்பதால் இங்குமின்றி-அங்குமின்றி ஒரு விதத் திரிசங்கு நிலையில் இத்தொடர் தத்தளிப்பது கண்கூடு ! ஆனால் ஜில்லின் கதைகளை ஒரேடியாய் கடாசி விடப் போவதில்லை நாம் ; அவற்றுள் இன்னும் சிறப்பான கதைகளாகத் தேடி பிடித்து நிச்சயமாய் உருப்படியான வாய்ப்புகள் தருவோம் ! ஜில் maybe down..but certainly not out !!
மூன்றாவதாய் நான் யோசித்த பெயரைச் சொன்னால் நிறைய துடைப்பக்கட்டைகள் வெளிவருமென்பது சர்வ நிச்சயம் ! So - அதற்குப் பயந்தே எனது தீர்மானத்தை வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ! இந்நேரமே நான் குறிப்பிடுவது "இளம் டைகரின்" சாகசங்களை என்பது உங்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும் ! "கேப்டன் டைகர்" என்ற பெயரை மாத்திரம் மாற்றி விட்டு - "கேப்டன் ஜான்" ; "கேப்டன் டிம்மி" என்று ஏதோவொரு பெயரை நுழைத்து - தற்போதைய இளம் டைகர் episodes-ஐ வெளியிடும் பட்சத்தில் இந்நேரத்திற்கு தர்ம அடி விழுந்திருக்கும் என்பது தான் கலப்படமில்லா நிஜம் ! "டைகர்" எனும் அந்த மந்திரப் பெயருக்குள்ள மவுசை மூலதனமாக்கி ஒரு அமர கதாப்பாத்திரத்தை நகற்றிச் செல்ல படைப்பாளிகளின் புது டீம் முயற்சிப்பது கண்கூடாய் தெரிகிறது ! ஆனால் எத்தனை முயற்சித்தாலும் அந்த ஒரிஜினல் மேஜிக் மீண்டு வராது போவதும் ; நாம் ஆண்டுக்கு 2 கதைகள் மட்டுமே என்ற ரீதியில் செல்வதும் இளம் டைகரை ஆரிய பதார்த்தமாய்த் தெரியச் செய்வது நிஜம் ! 2015-ல் மின்னும் மரணம்" மட்டும் திட்டத்தில் இல்லாதிருப்பின், இளம் டைகரின் ஒரு 5-6 கதைகளை ஒருங்கிணைத்து one shot ஆல்பமாக்கியிருப்பேன் - அப்படியாவது சுவாரஸ்யம் கூடுகிறதா என்ற வேட்கையில் ! பிரான்சில் ஆண்டுக்கொரு ஆல்பம் என young blueberry இன்னமும் தாட்டியமாய்த் தொடர்ந்து செல்ல - மெய்யாகவே புலி வாலைப் பிடித்த கதை நமக்கு ! இந்த டைகரை விடவும் மனதில்லை ; தொடர்வதும் சுலபமில்லை !! 2016-ல் ஒரு collection ஆக இளம் டைகரின் புதுக் கதைகளை வெளியிடுவது பற்றிய உங்கள் சிந்தனைகள் என்னவோ guys ? இடுப்பைச் சுற்றி ஒரு ஊசிப்பட்டாசுச் சரத்தைக் கோர்த்து விடும் வேட்கையில் தளபதி ரசிகர்கள் இருப்பார்கள் என்பது உறுதி ; ஆனால் - I'm just being honest guys !!
சிந்தனையை வரவழைக்கும் அண்ணன் # 4 - நமது சாகச வீரர் ! ஒரே கதையால் நிறையப் பேரை (தப்பான காரணங்களுக்காக) திகலடையச் செய்த பெருமைக்கு சொந்தக்காரராகிறார் ரோஜர் ! 2014-ன் best அட்டைப்படம் ; amongst the best சித்திரங்கள் என்ற பெருமைகளை இந்தாண்டின் இவரது "காலத்தின் கால்சுவடுகளில்" கொண்டிருப்பினும், கதையில் இருந்த வெற்றிடம் நிறைய thumbs down ஈட்டச் செய்துள்ளது ! ஒரு பானைக்கு ஒரு கவளம் மாத்திரமே சரியான சாம்பிள் ஆகாது என்றும் வாதிடலாம் ; 'அய்யா..இது தாராளமாகவே போதும் !' என்றும் குரல் எழுப்பலாம் ! எப்படியிருப்பினும் மதில் மேல் ஹீரோவாய் நிற்கும் நாயகர் # 4 - ரோஜர் ! இவரது கதைவரிசையினில் கிட்டத்தட்ட 60 புதுக் கதைகள் இன்னமும் எஞ்சி இருப்பது சிந்தனையைத் தூண்டும் ஒரு விஷயம் !
Danger Zone-ல் ஐந்தாம் இடத்தைப் பிடிப்பவர் கூட எனக்கு நிறைய சாத்துக்களை சம்பாதித்துத் தரும் ஆற்றல் கொண்டவர் ! அது வேறு யாருமில்லை - நமது சுட்டி லக்கி தான் ! அறிமுகம் கண்ட முதல் இதழே super duper hit ; நம்மிடம் கிட்டத்தட்ட ஸ்டாக் தீர்ந்து விட்ட இதழ் ; ஒவ்வொரு புத்தக விழாவிலும் சரளமாய் விற்ற இதழ் என்ற பெருமைகளுக்கு சுட்டி லக்கி சொந்தக்காரனே ! ஆனால் மொத்தம் 4 இதழ்கள் வெளியாகியுள்ள இந்த தொடரில் நகைச்சுவை விகிதம் ரொம்பவே குறைச்சல் என்பது நிஜம். "நாக்கார்..மூக்கார்..குதிரையார்..பூனையார்...
என்று ஏதோ 'ஜில்பான்ஸ்' வேலை செய்து முதல் இதழை கரைசேர்த்து விட்டொமென்றாலும் - basically அக்கதையில் சிரிப்பில் வயிற்றைப் பதம் பார்க்கும் நிகழ்வுகள் மிகக் குறைவே ! அதே சமாச்சாரம் தான் சுட்டி லக்கியின் சாகசம் # 2 ல் கூடவும் ! குட்டி டால்டன்கள் ; சுட்டி லக்கி இணைந்து பள்ளிக்குச் செல்வது போன்ற இந்தக் கதை OKLAHOMA JIM என்ற பெயரில் வெளிவந்துள்ளது ; but இது ஒரு சிரிப்பு வெடி ரகம் அல்ல ! சரி, இதை டீலில் விட்டுவிட்டு அடுத்த கதைக்குத் தாவுவோமே என்று பார்த்தால் - ஆல்பம் # 3 - ஒற்றைப் பக்க சுட்டி லக்கி ஜோக்குகளின் தொகுப்பு ; ஆகையால் நமக்கு அதனில் பெரிதாய் சுவாரஸ்யம் கிடையாது ! ஆல்பம் # 4-ஐ இன்னமும் பரிசீலனை செய்யவில்லை ; அதனை பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்து அதன் பின்னர் ஒரு தீர்மானத்துக்கு வந்தாக வேண்டும் ! So கோட்டின் மேல் நிற்பது இந்தக் குட்டிப் பயலும் கூட !
சிந்தனையை வரவழைக்கும் அண்ணன் # 4 - நமது சாகச வீரர் ! ஒரே கதையால் நிறையப் பேரை (தப்பான காரணங்களுக்காக) திகலடையச் செய்த பெருமைக்கு சொந்தக்காரராகிறார் ரோஜர் ! 2014-ன் best அட்டைப்படம் ; amongst the best சித்திரங்கள் என்ற பெருமைகளை இந்தாண்டின் இவரது "காலத்தின் கால்சுவடுகளில்" கொண்டிருப்பினும், கதையில் இருந்த வெற்றிடம் நிறைய thumbs down ஈட்டச் செய்துள்ளது ! ஒரு பானைக்கு ஒரு கவளம் மாத்திரமே சரியான சாம்பிள் ஆகாது என்றும் வாதிடலாம் ; 'அய்யா..இது தாராளமாகவே போதும் !' என்றும் குரல் எழுப்பலாம் ! எப்படியிருப்பினும் மதில் மேல் ஹீரோவாய் நிற்கும் நாயகர் # 4 - ரோஜர் ! இவரது கதைவரிசையினில் கிட்டத்தட்ட 60 புதுக் கதைகள் இன்னமும் எஞ்சி இருப்பது சிந்தனையைத் தூண்டும் ஒரு விஷயம் !
Danger Zone-ல் ஐந்தாம் இடத்தைப் பிடிப்பவர் கூட எனக்கு நிறைய சாத்துக்களை சம்பாதித்துத் தரும் ஆற்றல் கொண்டவர் ! அது வேறு யாருமில்லை - நமது சுட்டி லக்கி தான் ! அறிமுகம் கண்ட முதல் இதழே super duper hit ; நம்மிடம் கிட்டத்தட்ட ஸ்டாக் தீர்ந்து விட்ட இதழ் ; ஒவ்வொரு புத்தக விழாவிலும் சரளமாய் விற்ற இதழ் என்ற பெருமைகளுக்கு சுட்டி லக்கி சொந்தக்காரனே ! ஆனால் மொத்தம் 4 இதழ்கள் வெளியாகியுள்ள இந்த தொடரில் நகைச்சுவை விகிதம் ரொம்பவே குறைச்சல் என்பது நிஜம். "நாக்கார்..மூக்கார்..குதிரையார்..பூனையார்...
என்று ஏதோ 'ஜில்பான்ஸ்' வேலை செய்து முதல் இதழை கரைசேர்த்து விட்டொமென்றாலும் - basically அக்கதையில் சிரிப்பில் வயிற்றைப் பதம் பார்க்கும் நிகழ்வுகள் மிகக் குறைவே ! அதே சமாச்சாரம் தான் சுட்டி லக்கியின் சாகசம் # 2 ல் கூடவும் ! குட்டி டால்டன்கள் ; சுட்டி லக்கி இணைந்து பள்ளிக்குச் செல்வது போன்ற இந்தக் கதை OKLAHOMA JIM என்ற பெயரில் வெளிவந்துள்ளது ; but இது ஒரு சிரிப்பு வெடி ரகம் அல்ல ! சரி, இதை டீலில் விட்டுவிட்டு அடுத்த கதைக்குத் தாவுவோமே என்று பார்த்தால் - ஆல்பம் # 3 - ஒற்றைப் பக்க சுட்டி லக்கி ஜோக்குகளின் தொகுப்பு ; ஆகையால் நமக்கு அதனில் பெரிதாய் சுவாரஸ்யம் கிடையாது ! ஆல்பம் # 4-ஐ இன்னமும் பரிசீலனை செய்யவில்லை ; அதனை பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்து அதன் பின்னர் ஒரு தீர்மானத்துக்கு வந்தாக வேண்டும் ! So கோட்டின் மேல் நிற்பது இந்தக் குட்டிப் பயலும் கூட !
எது எப்படியிருப்பினும் டைகர் நீங்கலாக பாக்கி 4 பேரும் சுத்தமாய் 2015-ன் பட்டியலில் கிடையாதென்று எண்ணிட வேண்டாமே...! குட்டி எழுத்துக்களில் "கடைசி நிமிட மாற்றங்களுக்கு உட்பட்டவை" என்ற rider அவசியமுண்டு ! So உள்ளே-வெளியே ஆட்டம் தொடரும் - நவம்பர் 1-ஆம் தேதி வரையிலும் !
சரி...2015-க்கு முழுக் கவனமும் கொடுத்திடும் வேளையில் நடப்புகளையும் கொஞ்சம் பார்த்தாக வேண்டும் தானே ?! இம்மாதத்து 3 இதழ்களும் ஒவ்வொரு பாணிகளில் மாறுபட்டவை என்பதில் ஐயமே கிடையாது ! எப்போதும் போல இத்தாலியக் கதைகள் (டெக்ஸ் & டைலன்) , படித்திட,புரிந்திட சுலபமெனில் - பிரான்கோ-பெல்ஜியக் கதைகள் வேறொரு தளத்தில் இருப்பதை highlight செய்கிறது "காலனின் கைக்கூலி" ! அழகாய் உருவாக்கப்பட்டுள்ள இந்த கிராபிக் நாவலைப் பொறுத்த வரை - எடிட்டிங் யுக்திகள் ; frames வடிவமைப்பு ; நிகழ்காலம் & கடந்த காலம் என நொடிக்கொரு முறை தாவும் கதை சொல்லும் பாணி என்று சகலமுமே புதுயுகக் கருவிகளோடு நகருமொரு படைப்பு என்பதைப் பார்த்து விட்டோம் ! ஆனால் எனக்கிருக்கும் ஒரே நெருடல் - XIII கதைத் தொடரே ஒரு சாம்பார் + நூடுல்ஸ் கூட்டணி எனும் போது அவற்றைச் சார்ந்து வரும் இந்த spin-offs எத்தனை தூரத்துக்குப் புது வாசகர்களைக் கவரும் என்பது மாத்திரமே ! இங்குள்ள நண்பர்களுள் சமீபகால வாசகர்கள் இருப்பின் இது பற்றி அவர்களது அபிப்ராயங்களைத் தெரிவித்தால் XIII-ன் குழப்பம் தீருகிறதோ -இல்லையோ - என்னுடைய குடைச்சலில் கொஞ்சம் அடங்கிடும் ! Would love to hear on this !
எதிர்நோக்கியுள்ள நவம்பர் இதழ்களைப் பொறுத்த வரை - தீபாவளிக்குள் மூன்று இதழ்களையும் உங்களிடம் கொண்டு சேர்ப்பது இயலாக் காரியம் என்பதோடு - 2015-ன் அட்டவணைக்கு எனக்கு அவகாசமும் சற்றே தேவைப்படும். So -சூப்பர் 6-ன் தீபாவளி மலரான "இரவே..இருளே..கொல்லாதே..!" இதழினை மட்டும் அக்டோபர் 18-க்கு இங்கிருந்து அனுப்பிடுவோம் - தீபாவளிக்கு முன்னதாக உங்களை எட்டிடும் வகையில் ! பாக்கி 2 இதழ்களும் (லார்கோ + சைத்தான் வீடு) ; 2015-ன் அட்டவணை சகிதமாய் நவம்பர் 3-ஆம் தேதி உங்களை வந்து சேரும் !
அதன் பின்னே எஞ்சி நிற்கப் போகும் 2014's biggie - THE KING SPECIAL மாத்திரமே ! அது பற்றிய அறிவிப்பு லார்கோவில் வந்திடும் - விபரமாய் ! So அது வரை யூகங்களின் ராஜ்ஜியமே ! யூகங்கள் என்ற தலைப்பில் இருக்கும் போதே - 2015-ன் புதுமுகங்கள் யாராக இருப்பர் என்பது பற்றிய உங்கள் அனுமானங்களையும் களம் இறக்கிடலாமே ? புதுவரவின் முதல் ஆசாமியை அடுத்த ஞாயிறுக்குக் கண்ணில் காட்டுகிறேன்..! அது வரை happy reading ! See you around soon !
சரி...2015-க்கு முழுக் கவனமும் கொடுத்திடும் வேளையில் நடப்புகளையும் கொஞ்சம் பார்த்தாக வேண்டும் தானே ?! இம்மாதத்து 3 இதழ்களும் ஒவ்வொரு பாணிகளில் மாறுபட்டவை என்பதில் ஐயமே கிடையாது ! எப்போதும் போல இத்தாலியக் கதைகள் (டெக்ஸ் & டைலன்) , படித்திட,புரிந்திட சுலபமெனில் - பிரான்கோ-பெல்ஜியக் கதைகள் வேறொரு தளத்தில் இருப்பதை highlight செய்கிறது "காலனின் கைக்கூலி" ! அழகாய் உருவாக்கப்பட்டுள்ள இந்த கிராபிக் நாவலைப் பொறுத்த வரை - எடிட்டிங் யுக்திகள் ; frames வடிவமைப்பு ; நிகழ்காலம் & கடந்த காலம் என நொடிக்கொரு முறை தாவும் கதை சொல்லும் பாணி என்று சகலமுமே புதுயுகக் கருவிகளோடு நகருமொரு படைப்பு என்பதைப் பார்த்து விட்டோம் ! ஆனால் எனக்கிருக்கும் ஒரே நெருடல் - XIII கதைத் தொடரே ஒரு சாம்பார் + நூடுல்ஸ் கூட்டணி எனும் போது அவற்றைச் சார்ந்து வரும் இந்த spin-offs எத்தனை தூரத்துக்குப் புது வாசகர்களைக் கவரும் என்பது மாத்திரமே ! இங்குள்ள நண்பர்களுள் சமீபகால வாசகர்கள் இருப்பின் இது பற்றி அவர்களது அபிப்ராயங்களைத் தெரிவித்தால் XIII-ன் குழப்பம் தீருகிறதோ -இல்லையோ - என்னுடைய குடைச்சலில் கொஞ்சம் அடங்கிடும் ! Would love to hear on this !
எதிர்நோக்கியுள்ள நவம்பர் இதழ்களைப் பொறுத்த வரை - தீபாவளிக்குள் மூன்று இதழ்களையும் உங்களிடம் கொண்டு சேர்ப்பது இயலாக் காரியம் என்பதோடு - 2015-ன் அட்டவணைக்கு எனக்கு அவகாசமும் சற்றே தேவைப்படும். So -சூப்பர் 6-ன் தீபாவளி மலரான "இரவே..இருளே..கொல்லாதே..!" இதழினை மட்டும் அக்டோபர் 18-க்கு இங்கிருந்து அனுப்பிடுவோம் - தீபாவளிக்கு முன்னதாக உங்களை எட்டிடும் வகையில் ! பாக்கி 2 இதழ்களும் (லார்கோ + சைத்தான் வீடு) ; 2015-ன் அட்டவணை சகிதமாய் நவம்பர் 3-ஆம் தேதி உங்களை வந்து சேரும் !
அதன் பின்னே எஞ்சி நிற்கப் போகும் 2014's biggie - THE KING SPECIAL மாத்திரமே ! அது பற்றிய அறிவிப்பு லார்கோவில் வந்திடும் - விபரமாய் ! So அது வரை யூகங்களின் ராஜ்ஜியமே ! யூகங்கள் என்ற தலைப்பில் இருக்கும் போதே - 2015-ன் புதுமுகங்கள் யாராக இருப்பர் என்பது பற்றிய உங்கள் அனுமானங்களையும் களம் இறக்கிடலாமே ? புதுவரவின் முதல் ஆசாமியை அடுத்த ஞாயிறுக்குக் கண்ணில் காட்டுகிறேன்..! அது வரை happy reading ! See you around soon !
1st
ReplyDelete1
ReplyDeleteok ok just miss
ReplyDeleteசார் இந்த மாதத்து புத்தகங்களில் கா.க.கா மட்டும் தனியாக வேண்டும். worldmart ல் order போட அதற்குரிய வசதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. நன்றி..
ReplyDeletepresent!
ReplyDeleteஉள்ளேன் ஐயா.!
ReplyDeleteஜில் ஜோர்டானுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாம்
ReplyDeleteஇரத்தப்படலம் படிக்கவில்லை.. அதை படிக்காமல் வி.வி, கா.கை.கூ படித்தால் கதை புரியுமா?
ReplyDeleteகொஞ்சம் கஷ்டம்! இதனை தவிர்பதற்கு இது போன்ற கதைகளில் XII வந்துள்ள இந்த காதபாத்திரம் பற்றிய சிறு குறிப்பை முன்பக்கத்தில் நுழைத்தால் நன்று!
Deletethanks parani sir..
Delete//கொஞ்சம் கஷ்டம்! இதனை தவிர்பதற்கு இது போன்ற கதைகளில் XII வந்துள்ள இந்த காதபாத்திரம் பற்றிய சிறு குறிப்பை முன்பக்கத்தில் நுழைத்தால் நன்று!//
DeleteIs it possible ?
This comment has been removed by the author.
Deleteகஷ்டம்தான், ஆசிரியர் கொஞ்சம் நேரம் செலவழிக்க வேண்டியது இருக்கும்.
Deleteஎன்னதான் ஆசிரியர் சிறு குறிப்பு பெரு குறிப்பு வரைந்தாலும் , இரத்த படலம் முழு தொகுப்பை படிக்காமல் வி.வி. , கா. கை. கூ வை புரிந்து கொள்ளமுடியாது.
DeleteKing special அறிவிப்பு பற்றி மீண்டும் ஒரு சஸ்பென்சா?
ReplyDeleteவிஜயன் சார்,
Delete// சூப்பர் 6-ன் தீபாவளி மலரான "இரவே..இருளே..கொல்லாதே..!" இதழினை மட்டும் அக்டோபர் 18-க்கு இங்கிருந்து அனுப்பிடுவோம் - தீபாவளிக்கு முன்னதாக உங்களை எட்டிடும் வகையில் ! பாக்கி 2 இதழ்களும் (லார்கோ + சைத்தான் வீடு) ; 2015-ன் அட்டவணை சகிதமாய் நவம்பர் 3-ஆம் தேதி உங்களை வந்து சேரும் ! //
நல்ல முடிவு! இதற்கு முந்தைய காலம்களில் குறைந்த நாட்களில் கொடுத்த வாக்குபடி எல்லா புத்தகம்களையும் அனுப்பவேண்டும் என்று அனுப்பி ஏற்பட்ட அனுபவம்கள் மீண்டும் ஏற்படாமல் இருக்க இது போன்ற முடிவுகள் மிக அவசியம், இதற்கு எனது ஆதரவு.
இளம் டைகரின் ஒரு 5-6 கதைகளை ஒருங்கிணைத்து one shot ஆல்பமாக வெளி ஈடுவதில் தவறில்லை, ஆனால் அதனை அனைவரும் வாங்கும் விலையில் கொடுக்கவேண்டும்; மி.ம முன்பதிவு சுமார் என்ற நிலையில் இது போன்ற முயற்சிகளுக்கு ஒருமுறைக்கு 2 முறை யோசித்து முடிவெடுத்தல் நலம் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
முதலை பட்டாளம் & ரோஜேர் முடிவு ஏற்று கொள்ள கூடியது; ஆனால் இவர்களின் மிக சிறந்த கதை அனைவருக்கும் பிடிக்கும் என உங்களுக்கு தோன்றினால் அடுத்த வருடம் வெளி ஈட வேண்டும்; ஜில் ஜோர்டனுக்கும் இது பொருந்தும் (எனக்கு இவரின் கதைகள் மிகவும் பிடிக்கும்)
//இளம் டைகரின் ஒரு 5-6 கதைகளை ஒருங்கிணைத்து one shot ஆல்பமாக வெளி ஈடுவதில் தவறில்லை, ஆனால் அதனை அனைவரும் வாங்கும் விலையில் கொடுக்கவேண்டும்; மி.ம முன்பதிவு சுமார் என்ற நிலையில் இது போன்ற முயற்சிகளுக்கு ஒருமுறைக்கு 2 முறை யோசித்து முடிவெடுத்தல் நலம் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். //
Deleteடைகர் கதைகள் நன்றாகவே உள்ளன ! இதனை தவிர்க்க limited edition இதற்கும் உதவட்டும் !~
// டைகர் கதைகள் நன்றாகவே உள்ளன ! இதனை தவிர்க்க limited edition இதற்கும் உதவட்டும் !//
DeleteTAT !
:)
+1
ஐயோ டைகரூ... உன் நிலைமை இப்படி கவலைக்கிடமாப் பூடுச்சேப்பா... பூஊஊவ்வ்...
ReplyDeleteஹிஹிஹி.!!!
Deleteடைகர் பத்தி நினைக்கும்போது. பாவமாகத்தான் இருக்கு... டெக்ஸ் ரசிகர்கள் சேர்ந்து ஆசிரியரிடம் recommend செய்யலாமா டைகருக்காக? பாவம் தானே..
Deleteஇரத்தப்படலம் படிக்காததால் அதோடு தொடர்பாய் வரும் கதைகளை படிக்க, வாங்க தயக்கமாக உள்ளது சார்.. புரியுமா என்ற எண்ணம் மட்டுமே காரணம்..
ReplyDeleteJill Jordanக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். டெக்ஸ் வில்லர் கதை களங்கள் இதே போல தொடர்ந்தால் கேப்டன் டைகர் நேர்ந்த கதிதான் 2016ல் டெக்ஸ் வில்லர்க்கும்! எச்சரிக்கை மணி டெக்ஸ் வில்லருக்கு அடிக்க தொடங்கிவிட்டது! உஷார்!
ReplyDeleteஇரசிகர்களின் king என்று அழைக்கப்படுபவர் டெக்ஸ் மட்டுமே.. அவர் ஸ்பெஷல் தானே சார்.?
ReplyDeleteRe-post
ReplyDelete********************************************************************************************************************
senthilwest2000@ Karumandabam Senthil21 September 2014 12:25:00 GMT+5:30
அனைத்து ஊர்களிலும் நமது வெளியிடுகள் கிடைக்கும் கடைகளின் முகவரிகளை, தொலைபேசி எண்ணையும் வெளியிடுமாறு கேட்டுகொள்கிறேன் !
Satishkumar S21 September 2014 12:52:00 GMT+5:30
+1
it will be usefull if this details publish this details in lionmuthucomics.com
Vijayan21 September 2014 15:53:00 GMT+5:30
@ FRIENDS : நாளையே செய்திடுவோம் ; பணிகளின் மும்முரத்தில் மறந்து போய் விடுகின்ற விஷயமிது !
********************************************************************************************************************
Edit sir before next Sunday(?) plz ...
we need shops list sir.. please try
Delete+1
Deleteகார்சனின் கடந்த காலம் கதை ஒரு வெல்கம் சேஞ்ச்.... சித்திர தரம் அருமை!!! அதிலும் குறிப்பாக 250 வது பக்கதிலிருந்து கண்களை விலக்கவே முடியவில்லை... 2 வது பிரேமில் தெரியும் அந்த அநாயசமான கம்பீரம் ...அப்பப்பா!!! இது வரை டெக்ஸ் கதைகளில் பார்த்திராத ஒன்று!!!!
ReplyDeleteஅடடே ஆச்சரியக்குறி
Delete!
Delete+1
XIII ன் அவஸ்தை எல்லோருக்கும் புரியுது ....சீக்கிரம் குணமாக ....தெளிவாக எல்லாம் வல்ல டெக்ஸ் தனை பிராத்திக்கிறோம் நண்பரே !
Delete@ மாயாவி சிவா
Deleteதயவு செய்து எனக்காகவும் மக்களுக்காகவும் அந்த 250வது பக்கத்திக்கொரு
இங்கே 'கிளிக்' கொடுத்து உதவவும்!!!
ஆரிய பதார்த்தம் ????? அப்படின்னா என்ன அர்த்தம் சார் ?ஜில் ஜோர்டானை கொஞ்சம் அப்பப்ப ஞாபகம் வச்சுக்கங்க சார் ....
ReplyDelete"ஆறிய " பதார்த்தம்.,
Deleteஆர்வ மிகுதியால்
"ஆரிய " பதார்த்தம்
ஆகிவிட்டதென நினைக்கிறேன்.
ஆரிய பதார்த்தம் - Peda, Alu Bujiya, Rotti..
Deleteஹா !ஹா ! நன்றி மங்கூஸ் ......சமீபத்தில் பெரியார் பிறந்த நாள் வந்து போனதால் ஏற்பட்ட எண்ண குழப்பம் ....
Delete@sathish ஒரே நேரத்தில் சரியான மற்றும் தவறான விளக்கம் என்றாலும் உமிழ்நீர் சுரப்பிகளை டாப் கியர் போட்டு கிளப்பி விட்டீர்கள் சதீஷ் ....:)
//2016-ல் ஒரு collection ஆக இளம் டைகரின் புதுக் கதைகளை வெளியிடுவது பற்றிய உங்கள் சிந்தனைகள் என்னவோ guys ?//
ReplyDeleteI have low opinion on young blueberry, if you find it very tough to sell young blueberry lets save Tiger brand name and stop it as you wish!, but sir my request is please continue and complete rest of marshal tiger in a single album!
Happy sunday to all
ReplyDeleteஉங்க கிட்டே இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்
ReplyDeleteஉங்க கிட்டே இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்
ReplyDelete//abujack ravanan://
Deleteஇரத்தப் படலம் contest result எதிர்பார்க்கிறோம்(?)
:)
//எது எப்படியிருப்பினும் டைகர் நீங்கலாக பாக்கி 4 பேரும் சுத்தமாய் 2015-ன் பட்டியலில் கிடையாதென்று எண்ணிட வேண்டாமே...!//
ReplyDelete+1
Edit sir don't have to move out all this heroes based on one or two failures, if you find any best of best among this hero's plz do field it !
//Edit sir don't have to move out all this heroes based on one or two failures, if you find any best of best among this hero's plz do field it !//
Delete+1
//2016-ல் ஒரு collection ஆக இளம் டைகரின் புதுக் கதைகளை வெளியிடுவது பற்றிய உங்கள் சிந்தனைகள் என்னவோ guys ?//மூன்று கதைகளை இணைத்து ஒரு ஆல்பமாக வெளியிடுங்கள் சார். முடிந்தால் ஒரு முன்கதை சுருக்கம் அரைபக்கத்திற்க்கு.
ReplyDelete(டைகர் மூக்கில் வாங்கிய குத்தால் உள்வாங்கிட்ட மூக்கை சரிசெய்ய சிகிச்சை மேற்கொண்ட சமயம் அது. அப்போது தெற்கத்தி படையினர் டைகருக்கு போட வைத்திருந்த டிங்ச்சர் பாட்டிலை கடத்திவிட கொதித்தெழுகிறார் டைகர்,,..இனி,..)
இது மாதிரி ஒரு கதைச்சுருக்கம் போட்டு வெளியிடுங்கள் சார்.
//ஒரு கதைச்சுருக்கம் போட்டு வெளியிடுங்கள் சார்.//
Delete+1
Good Morning Vijayan Sir
ReplyDeleteGood Morning my fellow comic friends
goood morning Sea Guitar..!
DeleteGood Morning Satishkumar :)
Deletein case the contest continues ...
ReplyDeletemy no:9
Img9
ஜில் ஜோர்டானை திரும்ப முயற்சி செய்யலாம். சுட்டி லக்கி ஒரிஜினல் எப்படி இருந்தாலும் உங்கள் மொழிபெயர்ப்பு அதை சிரிப்பு வெடியாக மாற்றிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.டைகர் ஒரே தொகுப்பாக வெளியிடுவது நல்லது என்று நினைக்கிறேன் . other s no commends.. :-)
ReplyDelete//ஜில் ஜோர்டானை திரும்ப முயற்சி செய்யலாம். சுட்டி லக்கி ஒரிஜினல் எப்படி இருந்தாலும் உங்கள் மொழிபெயர்ப்பு அதை சிரிப்பு வெடியாக மாற்றிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.//
Delete+1
ஜில் ஜோர்டான் பெரிதாய் சோபிக்காவிட்டாலும் நிச்சயமாய் உவ்வே ரகம் கிடையாது. சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து வெளியிடலாமே சார்.?
சுட்டி லக்கி + சுட்டி டால்டன்ஸ் கதைக்களமே சூப்பரா இருக்கே.! உங்கள் வசனங்களுடன் வரும்போது இன்னும் சூப்பராக இருக்கும் சார்.!
எனவே காமெடிக்கு பஞ்சம் இருந்தாலும் OKLAHOMA JIM ஐ பார்க்க ஆவலாகவே இருக்கிறோம்.நம்பி வெளியிடுங்கள் சார்.,நன்றாகவே விற்பனையாகும்.!
டியர் எடிட்டர் ,
ReplyDeleteசாகச வீரர் ரோஜரின் மீதமுள்ள கதைகளில் நம் தேர்வுக்கு நிறைய choice இருக்கும் .2014-ன் இதழ்களில் காலத்தின் கால் சுவடுகள் "மகா மோசம்"ரகம் இல்லை .Best அட்டைப்படமும் அருமையான சித்திரங்கள்,வண்ணங்கள் என அழகான collection அது .கதை சுமார் தான் என்றாலும் மீதமுள்ள 60 -ல் 10-15 ந்தாவது நன்றாக இருக்க வாய்ப்பிருக்கும் பட்சத்தில் ரோஜரை substitute ஆக வைக்கலாம் .
அடுத்து ;இளம்.கேப்டன் டைகரின் 4-5பாகங்களின் தொகுப்புக்கு என்னுடைய நிபந்தனையற்ற ஆதரவு உண்டு .சொல்லப்போனால் இந்தப்பதிவின் electrifying news இது தான் ...2016 நீண்ட தொலைவில் இருந்தாலும் காத்திருக்க தயார் ..
//அடுத்து ;இளம்.கேப்டன் டைகரின் 4-5பாகங்களின் தொகுப்புக்கு என்னுடைய நிபந்தனையற்ற ஆதரவு உண்டு .சொல்லப்போனால் இந்தப்பதிவின் electrifying news இது தான் ...2016 நீண்ட தொலைவில் இருந்தாலும் காத்திருக்க தயார் ..//
Delete+1 +2 +Masters +PHD
43
ReplyDeletein case friends didn't understand Its definitely not the total number of comments Steel planned to post
Delete!
Delete:D
Deleteவிஜயன் சார், இந்த வருட இறுதியில் வருவதாக உள்ள விமானங்கள் கொண்ட கதை (கதை பெயர் சட்என்று ஞாபகம் வர மாட்டேன் என்கிறது) வெளிவருபதில் மாற்றம் ஏதும் இல்லை என நினைக்கிறன்! இந்த கதைக்கான விளம்பரம் கடந்த வருடம் வந்தது, அதனை இந்த வருட இறுதியில் வெளி ஈடுவதாக சொன்னபடி எங்களுக்கு கொடுக்கவேண்டும். ஏதாவது காரணம் சொல்லி அடுத்த வருடம் தள்ளி வைத்து விடாதீர்கள், தாங்க முடியாது!
ReplyDeleteவானமே எங்கள் வீதி?
Deleteநிச்சயம் தெருவில் இல்லை ! டிசெம்பர் கொண்டாட்டம் அதுவே !
Deleteஇந்த மாத இதழ்களை பொறுமையாய் புரட்டுங்களேன் !
Deleteஸ்டீல், இந்த மாத புத்தகம்கள் இன்னும் வரவில்லை எனக்கு! இந்த பதிவில் டிசம்பர் மாதம் "கிங் ஸ்பெஷல்" வெளி வருவதாக கூறியதை கண்டு எழுந்த கேள்வி.
Deleteஆஹா ஆழ்ந்த இரங்கல்கள் ! காலனின் கைக் கூலி முன்னட்டை பின்புறம் உள்ளது நண்பரே !
Deletemy contestant no 10
ReplyDeleteImg10
Edit sir I have one request ""the Fascinating Madame Tussaud" as one shot in your 2016 supper six!
ReplyDeleteMy Unconditional support for Captain Tiger n Chutti Lucky
ReplyDeleteMathilla Mannthiri Kaithagal once in a while etti parthal balls irrukum
ReplyDeleteGil Jordan is not bad,he can survvive
டியர் எடிட்டர்,
ReplyDeleteடிசம்பர் மாதம் நான்கு இதழ்களா?
1) தி கிங் ஸ்பெஷல்
2) Dylan Dog
3) புக் பேர் ஸ்பெஷல் - 2 (மேஜிக் வின்ட் ???)
4) வானம் எங்கள் வீதி
எனக்கும் அதே கேள்விதான்!
Delete//எனக்கும் அதே கேள்விதான்!//
Delete+1
1) தி கிங் ஸ்பெஷல்
Delete3) புக் பேர் ஸ்பெஷல் - 2 (மேஜிக் வின்ட் ???)
both are must since its part of 2014 supper six!
2) Dylan Dog - not sure
4) வானம் எங்கள் வீதி is it scheduled for 2014 or for 2015?
1)தி கிங்ஸ் ஸ்பெஷல்
Delete2)உயரே ஒரு ஒற்றை கழுகு
3)நள்ளிரவு நங்கை
4)வானம் எங்கள் வீதி
டிசம்பர் வெளியீடு இவைதான் என்று நினைக்கிறேன்
சார் அடுத்த வருடம் வரும் மறு பதிப்பில் ரிப்போர்ட்டர் ஜானி மற்றும் பிரின்ஸ் கதைகளை தொடர்ந்து வெளி இடவும். சிக்பில் நிழல் ஒன்று நிஜம் ஒன்றுக்கு பதிலாக இரும்பு கவ்பாய் இன்னும் பல அற்புத கதைகள் மறு பதிப்பாக வர காத்துள்ளன, கால தாமதம் ஆனாலும் பரவாயில்லை நல்ல கதைகளுக்கு நாங்கள் காத்திருக்க தயார் :)
ReplyDeleteசென்ற மாதம் வந்த புத்தகத்தில் காலனின் கைக்கூலி எல்லா முனைகளும் மடங்கி பழைய புத்தகம் போல வந்தது, எனக்கு மட்டும் இல்லை இன்னும் பல பேருக்கு இதே கதிதான், இதற்க்கு காரணம் எல்லா புத்தகங்களும் டிபரண்ட் டிபரண்ட் சைசில் இருப்பதுதான், இதன் காரணமாக பெரிய சைஸ் புத்தகங்கள் அதுவும் தடிமனாக இல்லாத புத்தகங்கள் ஈசியாக மடக்க பட்டு விடுகின்றன, எல்லா புக்குகளின் அளவையும் ஒரே சீராக இருக்குமாறு பின் பற்றினால் இந்த பிரச்சனையை களையலாம். 25 வருடங்களுக்கு முன் வந்த புத்தகங்களையே நாங்கள் முனை மடிய விடுவதில்லை :).
ஜில் ஜோர்டான் வேண்டவே வேண்டாம்
XIII-போதும்டா சாமின்னு ஆகி விட்டது :)
ரோஜர் , சுட்டி லக்கி நிச்சயமாக வேண்டும்
டைலான் டாக் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, அந்தி மண்டலம் ஓகே ரகம் என்றால் இந்த மாத கதை வீதியெங்கும் உதிரம் படிக்க முடியவில்லை செம கடி
கடைசியாக
முன்பெல்லாம் பழைய முத்து புத்தகங்கள் 1000, 2000 சொல்வார்கள், நீங்கள் சிறிது நாள் முன் கொடுத்த பேட்டியில் வைரஸ் எக்ஸ் 13,000 ற்கு விற்பனை ஆனதாக கேள்வி பட்டேன் என்று சொல்லி இருந்தீர்கள் , அதில் இருந்து இப்போது பழைய முத்து ஒன்று 10,000 இப்பொழுது :). நேற்று ஒரு நண்பர் இரண்டு பழைய முத்து புத்தகங்களுக்கு 20,000 ரூபாய் என வாய் கூசாமல் பதில் அனுப்பி இருந்தார். இதெற்கெல்லாம் ஒரே தீர்வு வருடம் 5 புத்தங்கள் சேர்ந்தார் போல் இரண்டு Digestகளை வெளி இடுவதுதான், ஏற்கனவே நாம் பேசி பேசி புளித்து போனதுதான் இருந்தாலும் மற்றும் ஒருமுறை கோரிக்கை வைத்தால் தப்பில்லை என்று தோன்றியது :)
// ஒரே தீர்வு வருடம் 5 புத்தங்கள் சேர்ந்தார் போல் இரண்டு Digestகளை வெளி இடுவதுதான், ஏற்கனவே நாம் பேசி பேசி புளித்து போனதுதான் இருந்தாலும் மற்றும் ஒருமுறை கோரிக்கை வைத்தால் தப்பில்லை என்று தோன்றியது :) //
Deleteஇதற்கு எனது நிபந்தனை இல்லா ஆதரவு என்றும் உண்டு!
//சிக்பில் நிழல் ஒன்று நிஜம் ஒன்றுக்கு பதிலாக இரும்பு கவ்பாய் இன்னும் பல அற்புத கதைகள் மறு பதிப்பாக வர காத்துள்ளன, கால தாமதம் ஆனாலும் பரவாயில்லை நல்ல கதைகளுக்கு நாங்கள் காத்திருக்க தயார் :)//
Deleteஆமாம் சுவாமி.
இதற்கு எனது ஆதரவு என்றும் உண்டு.
Delete//ஒரே தீர்வு வருடம் 5 புத்தங்கள் சேர்ந்தார் போல் இரண்டு Digestகளை வெளி இடுவதுதான்,//
Delete+1
எனக்கும் கோரிக்கை வைத்தால் தப்பில்லை என்று தோன்றியது
//XIII-போதும்டா சாமின்னு ஆகி விட்டது//
DeleteXIII mangoose was selected as best of 2014! I differ in this opinion. I am curious to know rest of spin off series(mangoose) story quality Edit sir!
//சார் அடுத்த வருடம் வரும் மறு பதிப்பில் ரிப்போர்ட்டர் ஜானி மற்றும் பிரின்ஸ் கதைகளை தொடர்ந்து வெளி இடவும். //
Delete+1
ஜானி, ப்ரின்ஸ் கதைகள் மறுபதிப்பு கண்டிப்பாக வேண்டும் சார் ப்ளீஸ்...
Deleteஒன்று சொல்ல மறந்து விட்டேன், கார்சனின் கடந்த காலம் குறித்த என் நண்பர் மற்றும் அதி தீவிர காமிக்ஸ் ரசிகர் AHMEDBASHA TK அவர்களின் கருத்துக்கு உடன் படுகிறேன். அவரின் கருத்துக்கள் அவரது இதயத்தின் வெளிப்பாடு, சிறு குழந்தை போல நமது காமிக்ஸை நேசிக்கும் ரசிகர் அவர். உங்கள் பதிவிற்காக வெப் refresh செய்து செய்து அவரின் கை ரேகைகள் கூட மறைந்து போய் இருக்கும் என்று நினைக்கிறன் :). இந்த மாதிரி மைல் ஸ்டோன் இதழ்களை வெளியிடும்முன் விலையேற்றதிற்கான காரணத்தை சொன்னால் நிச்சயம் நண்பர்கள் மறுக்க போவதில்லை. நீங்கள் இந்த புத்தகத்தை நீள அகலம் குறையாமல் அப்படியே வெளி இட்டு இருந்தீர்கள் என்றால் அற்புதமாக இருந்திருக்கும் :)அட்டை படத்திற்கும் பழைய ஒரிஜினல் Design ai பயன்படுத்தி இருந்தால் பட்டையை கிளப்பி இருக்கும் ..
Deleteஎன் கண்களுக்கும் மனதுக்கும் பலமுறை விருந்தளித்த புத்தகம் கம்பேக் ஸ்பெஷல்,டபுள் த்ரில் ஸ்பெஷல்,
Deleteபிரின்ஸ் ஸ்பெஷல் மற்றும் பயங்கரப் புயல்.எனவே நான் இவற்றை வழிமொழிகிறேன்
//// ஒரே தீர்வு வருடம் 5 புத்தங்கள் சேர்ந்தார் போல் இரண்டு Digestகளை வெளி இடுவதுதான்//
Delete+2 million
This comment has been removed by the author.
ReplyDeleteநண்பர் கிரிதரன் சொன்னது போல வருஷத்துக்கு 2 அல்லது 3 டைஜஸ்ட் மட்டுமாவது வெளியிடுங்க எடிட்டர் சார்.பழைய புத்தகங்களின் விலையை கேட்டாலே தலையை சுற்றுகிறது.சில பேர் இப்படி விக்கறத ஒரு பொழப்பாவே வெச்சுருக்காங்க.
ReplyDeleteவிலை தலை சுற்றுகிறது... மிக உண்மை...
Deleteஉங்க எல்லாருக்கும் தலை மட்டும்தான் சுற்றியது. எனக்கு இதயமே நின்னுடும் போல இருந்தது. ஆசிரியர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்..... டைஜஸ்ட் போடுவதாக இருந்தால் “ ரிப் கெர்பி” யை மறந்துவிடாதீர்கள்.
Delete//2015-ன் புதுமுகங்கள் யாராக இருப்பர் என்பது பற்றிய உங்கள் அனுமானங்களையும் களம் இறக்கிடலாமே ? //
ReplyDeleteQuestion pass.
Coad name மின்னல்
சைனா மேன் .
(எப்போதே விளம்பரங்களாய் பார்த்திட்ட ஞாபகம்)
இலக்கில்லா யாத்திரை.!?!?!?
அன்புள்ள ஆசிரியருக்கு,எனக்கு இந்த மாத வெளியிடாக வந்த க.க.கா இதழின் முன் அட்டையின் மேல்பக்கம் சற்றே கிழிந்து வந்துள்ளது.ஆகஸ்டில் வெளிவந்த லயன் magnam special இதழுடன் வந்த டைகரின் புத்தகம் சற்றே மடங்கி வந்தது.இரு வேறு வடிவத்தில் புத்தகங்களை வெளியிடும்போது packing ல் தயவுசெய்து சற்றே கவனம் செலுத்தவும்.July வெளியிடான ஆ.அடங்குவதில்லை இதழில் நிறைய பக்கங்கள் தொடர்ச்சி இல்லாமல் முதல் பக்கமே நிறைய மறு பிரிண்ட் ஆகியிருந்தன.இது போன்ற நிகழ்வுகள் மனதை வருத்தம் கொள்ள செய்கின்றன.நமது புத்தகங்களை நான் பொக்கிஷமாக கருதுகிறேன்,எனவே பொக்கிஷம் பழுதடையாமல் இருப்பது முக்கியம் அல்லவா.இதை பற்றி நம் அலுவலகத்துக்கும் போன் செய்து தெரிவித்து விட்டேன்.ஆகவே இனியாவது packing லும்,புத்தகங்கள் பளுதடையாமலும் அனுப்பவும்.
ReplyDelete//ஆகஸ்டில் வெளிவந்த லயன் magnam special இதழுடன் வந்த டைகரின் புத்தகம் சற்றே மடங்கி வந்தது// எனக்கு சிறிய புத்தகங்களுடன் வந்த எல்லா பெரிய புத்தகங்களின் நிலைமையும் இதுதான்..
DeleteB&W , விலை குறைவில் மாதாமாதம் ஒரு புத்தகம் அதில் ஆர்ச்சி , ஸ்பைடர், மாடஸ்டி, ப்ரின்ஸ் , ஜானி, மாயாவி, சிஸ்கோ கிட், போன்றவர்களின் பழைய கதைகள் வரவேண்டும்..என்று ஆசை...
ReplyDeleteI support for this
Delete+1
//வரவேண்டும்..என்று ஆசை//
Delete+1
My ஆசை too!
சார் ரோஜர் மற்றும் ஜில்லின் சிறந்த கதைகளை ஒதுக்கி விட வேண்டாம் !
ReplyDeleteஅது போலவே சுட்டி லக்கியின் கதைகளும் ....நகைச்சுவை பிரதானமல்ல ....இந்த கதை பயணிக்கும் திசை அருமையாகவே உள்ளது ...பள்ளி செல்லும் டால்டன்களை காண ஆவலாய் உள்ளேன் !
இரத்த படலத்தை பொறுத்தவரை தொகுப்பை முதலில் களம் இறக்குங்கள் .....ஆனால் ஸ்டீவ் , ஸ்டன்ட் மேன் , ஃப்ளை போன்றவர்களை காண மிகுந்த தாகத்துடன் இருந்ததால் வெகுவாய் ரசிக்க இயலுகிறது காலனின் கைக்கூலி போன்ற கதைகளை !
தீபாவளிக்கு அடுத்து வரும் வாரங்கள் கனவுகளுடன் கழிய போகிறது ! காத்திருப்போம் லார்கோ ,சைத்தான் வீடு ,,, விளம்பரங்களுக்காக ~!
//இரத்த படலத்தை பொறுத்தவரை தொகுப்பை முதலில் களம் இறக்குங்கள் .....ஆனால் ஸ்டீவ் , ஸ்டன்ட் மேன் , ஃப்ளை போன்றவர்களை காண மிகுந்த தாகத்துடன் இருந்ததால் வெகுவாய் ரசிக்க இயலுகிறது காலனின் கைக்கூலி போன்ற கதைகளை !//
Delete+1
எடிட்டர் சார்,
ReplyDelete2015ல் க./வெ கதைகள் நிறைய வரப்போகும் பட்சத்தில்.,
வைரஸ் X,
சிறை மீட்டிய சித்திர கதை,
ரோஜா மாளிகை ரகசியம்
போன்ற (தங்களின் டாப் டென்னில் இடம் பிடித்த) கதைகளின் மறுபதிப்புக்கு ஓரிரு இடங்களை ஒதுக்கி தர இயலுமா.?
I support this...
Delete+1
DeleteEdit sir plz make it as 2015 B/W collectors edition(!).... in proper size and price it accordingly !
Deleteஇத்துடன் குரங்கு தேடிய கொள்ளையர் புதையலையும் சேர்த்து கொள்ளுங்கள் ஏன் எடிட்டர்
Deleteஇதில் ஆர்வம் காட்ட மறுக்கிறார் 2013லேயே வருகிறது என விள ம்பரம் செய்யப்பட்ட தொகுப்பு
நிஜம் ஒன்று நிழல் ரெண்டை கடாசி விட்டு இதை கொண்டு வரலாமே
When Editor announced reprint idea, there was only 100+ booking only received for black and white story. So he dropped that idea. He may not reprint black and white I guess
Deleteகலெக்ட்டர்ஸ் ஸ்பெசல் வெளியிடவில்லை எனும் முடிவை எடிட்டர் மேற்கொள்ளும் பட்சத்தில்
Deleteஇனிமேல் பழைய முத்து காமிக்ஸ்களை வாங்கவேண்டும் எனில் பேங்க் லோன் பெற
வேண்டியதாகிவிடும் .... அந்த நிலைமை வர எடிட்டர் சம்மதிப்பாரா? சூப்பர் சிக்ஸ் வரிசையிலாவது
பழைய முத்து கலெக்க்ஷன் வெளி வந்தால் நல்லது ..நமது காமிக்ஸ் காதலை உபயோகித்து
ஒரு சந்தை உருவாவது நல்லதா என்பதையும் நாம் யோசிக்கவேண்டும்,,, பழைய முத்து கலெக்க்ஷன்
வெளிவர நம்மால் என்ன செய்யமுடியும் என்பதை யோசித்து நண்பர்கள் ஆலோசனை
சொல்லவேண்டும் ,,,,(மாண்ட்ரேக் கொள்ளைக்காரனா? இதழின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்
ஒன்றினை இரண்டாயிரம் விலை கொடுத்து வாங்கியதால் பழைய இதழ்கள் எப்படி பணம்
காய்க்கும் மரமாக இருக்கிறது என்று அனுபவ ரீதியில் தெரிந்து கொண்டேன் )
//மாண்ட்ரேக் கொள்ளைக்காரனா? இதழின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்
Deleteஒன்றினை இரண்டாயிரம் விலை கொடுத்து வாங்கியதால்//
@செந்தில் மாதேஷ் ...
டியர் செந்தில் ..ஒரிஜினல் இதழ்களாவது பரவாயில்லை ...ஸ்கேன் மற்றும் CD வடிவில் நமது இதழ்களை பெறுவது காப்பி ரைட் சட்டப்படி குற்றம் மட்டும் அல்ல ...காமிக்ஸ் வளர்ச்சியை நம்மை அறியாமலே நாமே தடை செய்யும் செயலும் கூட ......
டியர் செல்வம்
Deleteவாங்கப்போனது ஒரிஜினல்தான் .ஆனால் கிடைத்ததோ நகல் மட்டுமே அப்புறம் அசலை என்
தீபாவளி முன்பணம் அனைத்தும் கொடுத்து வாங்கினேன் ...ஆனால் அது
முக்கியமில்லை ,,காப்பிரைட் பற்றிய கவலை இல்லாமல் இந்த விற்பனை தொடர்ந்து நடந்து
கொண்டுதான் இருக்கும் ..அந்த போக்கினை தடுப்பது பற்றிதான் நண்பர்களின் கருத்துக்களை
கேட்கிறேன்.,,ஸ்கேன் வடிவில் அனைத்து கதைகளும் கிடைப்பதாக இருந்தால் இந்த பிசினெஸ்
எவ்வளவு பிரம்மாண்டமானது என்று யோசித்து ..நிவர்த்தி செய்யும் வழிமுறையை சொல்லுங்கள்
பழைய கதைகள் படிக்க என்னதான் வழி? எடிட்டர் மனது வைக்கும் வரையில் இந்த பிசினெஸ்
தடுக்க முடியாத நிலையில்தான் இருக்கும்.. பழைய இதழ்கள் இம்முறையில்தான் கிடைக்கும்
வேறுவழி இல்லை என்றால் என்னதான் செய்வது நமது காமிக்ஸ் காதலர்கள் என்னதான்
செய்வார்கள்?(இதை பற்றி அந்த நபரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார் சார்
நம்மில் புது படங்களின் CD இல்லாத வீடு காண்பியுங்கள் பார்க்கலாம்?அப்படி CD இருப்பது
குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளக்கூடிய குற்றம் தெரியுமா?)
முதலில் அதிக விலை கொடுத்து பழைய காமிக்ஸ் வாங்குவதை உங்களை போன்றவர்கள் நிறுத்த வேண்டும். இதனால்தான் பழைய காமிக்ஸ் விற்பவர்கள் அதிக விலை வைத்து விற்பனை செய்கிறார்கள். அதிக விலையில் பழைய காமிக்ஸ் விற்பனை தவறு என்பது போல் அதிக விலை கொடுத்து பழைய காமிக்ஸ் வாங்குவதும் தவறு எனது அபிப்பிராயம்.
DeleteScanning the old prints n selling them should be stopped,this is not good for comics
DeleteEven I need the old comics, but I don't try this
Let's show our love for comics
If we stop creating demand ,the copycats will stop with no buyers
Stop silly reasons for the want of comics
டியர் விஜயன் சார்,
ReplyDelete//XIII கதைத் தொடரே ஒரு சாம்பார் + நூடுல்ஸ் கூட்டணி எனும் போது அவற்றைச் சார்ந்து வரும் இந்த spin-offs எத்தனை தூரத்துக்குப் புது வாசகர்களைக் கவரும்?//
அது கதைகளைப் பொருத்தது! மங்கூஸ் (வி.வி.) புதிதாகப் படிப்பவர்களையும் கவரக் கூடிய வகையில் அமைந்திருந்தது! ஆனால், ஸ்டீவ் ரோலான்ட்டின் (கா.கை.கூ.) கதையோ, ஏற்கனவே XIII Complete Collection படித்தவர்களைக் கூட, ஓ.மை.கா.(ட்). சொல்ல வைக்கும் வல்லமை படைத்தது! :D
கோவை ஸ்டீவ்(ல்) ரோ'க்ளா'ன்ட், சாக்ரடீஸ் ஆகியோரைப் போல - XIII தொகுப்பைக் கரைத்துக் குடித்த நண்பர்கள் இதில் சேர்த்தி கிடையாது! ஆனால், இத்தொடரை ஒரே ஒரு முறையோ அல்லது பல வருடங்களுக்கு முன்னர் ஓரிரு முறைகளோ வாசித்து மறந்தவர்களுக்கு... அதாவது, என்னைப் போன்றவர்களுக்கு, "XIII மர்மம்" - ஒரு தொடரும் குழப்பம் மட்டுமே! :(
அதற்காக, இக்கதைகள் வேண்டாம் என்று சொல்லவில்லை! முடிந்தால், XIII முழுத்தொகுப்பில் வெளியிட்டிருந்த கதைச் சுருக்கத்தோடு, மேலும் சில விடுபட்ட / புதிய தகவல்களை இணைத்து, இனி வரப் போகும் ஒவ்வொரு XIII கதைகளோடும் வெளியிடுங்கள் - அல்லது, அதை இங்கே ஒரு பதிவாகப் போட்டு, புத்தகத்தில் அதற்கான URL-ஐக் கொடுத்து விடுங்கள்! அது, புதிய வாசகர்களுக்கும்; இந்த மெகா தொடரின் நாயகன் XIII-ஐப் போன்றே மறதி வியாதியால் அவதிப்படும், என் மாதிரியான ஆசாமிகளுக்கு ரெம்.....ப உதவியாக இருக்கும்! :)
சூப்பர் நாயகர்களின் சுமாரான (தொடர்) கதைகளை, முன்பதிவின் பேரில், ஒரே தொகுப்பாக வெளியிடுவது நலம்! அப்புறம், தோர்கள் தொகுப்பு பற்றி பேச்சு மூச்சே காணுமே?!
//XIII முழுத்தொகுப்பில் வெளியிட்டிருந்த கதைச் சுருக்கத்தோடு//
Deleteமுழுத்தொகுப்பில் அல்ல, சென்ற வருடம் XIII-ன் புதிய பாகம் ஏதோ வெளிவந்ததே?! அதில் வந்திருந்த க.சு.! :) பார்த்தீர்களா என் மறதியை! :P
//அது கதைகளைப் பொருத்தது! மங்கூஸ் (வி.வி.) புதிதாகப் படிப்பவர்களையும் கவரக் கூடிய வகையில் அமைந்திருந்தது! ஆனால், ஸ்டீவ் ரோலான்ட்டின் (கா.கை.கூ.) கதையோ, ஏற்கனவே XIII Complete Collection படித்தவர்களைக் கூட, ஓ.மை.கா.(ட்). சொல்ல வைக்கும் வல்லமை படைத்தது! :D//
Deletehummm...!
// XIII முழுத்தொகுப்பில் வெளியிட்டிருந்த கதைச் சுருக்கத்தோடு, மேலும் சில விடுபட்ட / புதிய தகவல்களை இணைத்து, இனி வரப் போகும் ஒவ்வொரு XIII கதைகளோடும் வெளியிடுங்கள்//
+1
//சூப்பர் நாயகர்களின் சுமாரான (தொடர்) கதைகளை, முன்பதிவின் பேரில், ஒரே தொகுப்பாக வெளியிடுவது நலம்! அப்புறம், தோர்கள் தொகுப்பு பற்றி பேச்சு மூச்சே காணுமே?!//
:) +1
@Satishkumar S:
Delete//hummm...!//
+1 :) :)
@எடிட்டர்:
கேப்ஷன் எழுதும் போட்டிகளில் கலந்து கொள்வது, கேப் விடாமல் வந்து குவியும் கேப்ஷன்களை படிப்பது எல்லாம் படு பயங்கரமாக போரடித்து விட்டது! XIII கதைத் தொடருக்கு, விரிவான கதைச் சுருக்கம்(!!!) எழுதும் போட்டியை தாங்கள் அறிவிக்கலாமே? :) சவாலான அந்தப் போட்டியில் கலாந்து கொள்ளாமல் வெளிநடாப்பு செய்ய, இப்போதே நான் அயாத்தமாக உள்ளேன்! :P
தோர்கல் படித்து ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் மறையவில்லை.... மறுபடியுமா......? மிஸ்டர் காமா . சோமா......! வாசகர்கள் “ கோமா” வில் விழுந்துவிடப்போகிறார்கள்.
DeleteKarthik S //XIII கதைத் தொடருக்கு, விரிவான கதைச் சுருக்கம்(!!!)//
Delete+1
I feel even if its not for a contest, Interested friends need to blog it for new audience sake ( + more hits assured /Edit may consider adding the same as annex for rest of spinoff story).
(if this is the way forward for rest of spin off story, then Edit may have to consider scheduling இரத்த படலம் multicolor for new audience/to expand XIII fan base)
ஆனால் எனக்கு விரியனின் விரோதியை விட ஸ்டீவின் கதை பல முடிச்சுகளை அவிழ்த்ததால் மிக மிக....பிடித்திருந்தது ! அது ஒரு அற்புதமான அனுபவம் கார்த்திக் ! ஏறத்தாள இருபது வருடங்கள் கழித்து தாகம் தீர்ந்த நிலை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் !
Delete+1 for thorgal collection.
Deleteப்ருனோ பிரேசில் மற்றும் ரோஜருக்கு எனது ஆதரவு உண்டு :))
ReplyDeleteஎன்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் யுவர் ஆனர்
ஹ்ம்ம்ம்ம்
அம்மாவ உள்ள போட்டாலும் போட்டாங்க
எத எழுதினாலும் கோர்ட் வசனம் மாதிரியே வந்துடுது :(
.
It will be nice getting reprint of old Muthu Comics
ReplyDeletePpl trying to sell these comics for 1000 n more,not good at all
The Prices set by the Editor for his reprint comics is not too much at all
I request the Editor let the prints be good without any damages, since we comic fans are ready to buy the books at the prices set by the Editor and give our full support
தம்பி seaguitar எல்லோரும் படிக்கனும்னா தமிழில் கமெண்ட் போட கத்துக்குங்க
DeleteOK brother :)
Deleteஉண்மைநிலை என்னவென்று சம்பந்தப் பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும்..இருந்தாலும் பழைய
ReplyDeleteகதைகளின் தொகுப்பு எல்லோரும் விரும்புவதை சம்பந்த பட்டவர்கள் உணர்ந்தால் சரி
101
ReplyDeleteநண்பர்களே விடுமுறையை குழந்தைகள் உடன் கொண்டாட,3 நாட்கள் இன்ப சுற்றுலா!
Deleteஇடையில் எடிட்டர்-ன் பதிவை எட்டிப்பார்த்தால் 100 கமெண்ட்கள் என எகிறிகுதித்து
ஓடிக்கொண்டுள்ளது....இடையில் நான் என்ன சொல்ல,'நல்ல பிசாசு' என செல்லமாக
அழைக்கப்படும் ஈரோடு நண்பருக்கு, உடல் நலக்குறைவு என ஈரோடு விஜய் நேற்றைய
பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
//இங்குமின்றி-அங்குமின்றி ஒரு விதத் திரிசங்கு நிலையில்// என எடிட்டர் குறிப்பிட்டது
போல...காமெடி,சீரியஸ் இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு காமிக்ஸ் பிரார்த்தனை!
அருமை நண்பர் திரு புனித சாத்தான் அவர்களின்
உடல்நலம் வேண்டி நடக்கும் பிரார்த்தனை பற்றிய
அறிவிப்பு பார்க்க......இங்கே'கிளிக்'
மாயாவி சிவகுமார் சார் balloon களில் fill செய்யும் கலையை எங்களுக்கும் கொஞ்சம் சொல்லி தாருங்கள் ! உங்களின் வசனகளுக்கு நான் ஒரு ரசிகன். Well done !
Deleteபுனித சாத்தான் பூரண நலம் பெற வேண்டுகிறேன் !
Delete@ senthilwest2000@ Karumandabam Senthil
Deleteநண்பரே பாராட்டுக்கு நன்றிகள் ! balloon களில் fill செய்யும் வேலை எளிதே !
கொஞ்சமாக கற்பனை ,கொஞ்சமாக கம்ப்யூட்டர் இது போதும் ....!
முத்து காமிக்ஸ் பழைய Classic கதைகளில் ஒரு collectors special எதிர்பார்க்கிறோம். கேப்டன் டைகர் இளம் பிராய கதைகளை ஒரே தொகுப்பாக வெளியிட எனது நிபந்தனை அற்ற ஆதரவினை தெரிவித்து கொள்கிறேன்! Marshal Tigerன் மீதம் இருக்கும் இரு கதைகளை ஒரே ஆல்பம் ஆக வெளியிடவும் !
ReplyDeleteடியர் சார்,
ReplyDeleteபதிவைப் படித்த உடன் உங்களுடன் நேருக்கு நேர் சண்டையிட கிளம்ப துடிக்கிறது.
கீழே வரும் கருத்துக்களில் கொஞ்சம் காரம் அதிகமிருந்தால் மன்னிக்கவும்:
முதலில் சமீபத்திய டைகர் கதைகளின் தரம் சார்லியர் தரத்துக்கு ஈடாகவில்லை என்ற உங்களின் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால் நீங்கள் ஒன்றைக் கணக்கில் கொள்ள வேண்டும். நாம் அனைவருமே டைகரின் ஒவ்வொரு கதையும் "மின்னும் மரணம் (அல்லது) தங்கக் கல்லறை (அல்லது) இரத்தக் கோட்டை தொடர்" போன்றே எதிர்பார்க்கிறோம் என்பது உண்மை. ஆதலால் நமக்கு இப்போது வரும் கதைகள் திருப்தி அளிப்பதில்லை.
சச்சின் சதமடித்தால் மட்டுமே நம்மை திருப்தி படுத்த முடியும் ஏனையோர் 30-40 ரன்கள் அடித்தாலே அவர்களை நாம் ஓகே என்று விட்டு விடுவோம். அது போலவே இப்போது நம்மிடையே டைகரின் நிலை.
அனைவருமே மேற்குறிப்பிட்ட தொடர்களோடு ஒப்பிட்டே டைகரைக் குறை கூறுகிறோமே ஒழிய "அட்லாண்டாவில் ஆக்ரோசத்தையும்" "காவல் கழுகையும்" ஒப்பிடுவதில்லை. காவல் கழுகுடன் ஒப்பிட்டால் அட்லாண்டாவில் ஆக்ரோஷத்தின் தரம் தெரியும்.
உடனே தாங்கள் டெக்ஸ் கிட்டங்கியைக் குத்தகைக்கு எடுப்பதில்லை என்று கிளம்புவீர்கள். சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் கூடத்தான் கிட்டங்கியை குத்தகைக்கு எடுக்கவில்லை. அப்போது வரிசையாக ஸ்பைடர் மாயாவி ஆர்ச்சி கதைகளை வெளியிட வேண்டியதுதானே.
//டைகர்" எனும் அந்த மந்திரப் பெயருக்குள்ள மவுசை மூலதனமாக்கி ஒரு அமர கதாப்பாத்திரத்தை நகற்றிச் செல்ல படைப்பாளிகளின் புது டீம் முயற்சிப்பது கண்கூடாய் தெரிகிறது ! ஆனால் எத்தனை முயற்சித்தாலும் அந்த ஒரிஜினல் மேஜிக் மீண்டு வராது போவதும் ; நாம் ஆண்டுக்கு 2 கதைகள் மட்டுமே என்ற ரீதியில் செல்வதும் இளம் டைகரை ஆரிய பதார்த்தமாய்த் தெரியச் செய்வது நிஜம் !//
இரத்தப் படலம் தொடரின் தற்போதைய கதைகள் கூட வான் ஹாம்மேவின் தரத்தோடு ஒப்பிட்டால் ஒரு லாரி மண்ணைக் கவ்வுகிறது. விட்டேனா பார் என்று வெளியிடத்தானே செய்கிறீர்கள்.
இப்போது வரும் புதிய கதைகளுக்கோ இல்லை நமது 2014 ஆம் வருட மற்ற கதைகளுக்கோ எவ்விதத்திலும் டைகரின் கதைகள் குறைந்து போவதில்லை.
டைகர்-க்கு எப்போதிருந்து பிரச்சனை ஆரம்பித்தது:
ReplyDelete1. தங்கக் கல்லறை மறுபதிப்பு:
அது கூட கலெக்சனில் சாதனை படைத்த கதைதான். இத்தனைக்கும் பழைய மொழிபெயர்ப்பை மாற்றி எங்களை வெறுப்பேற்றிய பொழுதிலும்.
2. இரும்புக்கை எத்தன் (மறுபதிப்பு) & இரத்தத் தடம்:
இதன் தோல்விக்கு?! (தோல்வி என்று கூட சொல்ல முடியாது) முழு முதற் காரணம் பிரிண்டிங் தரம் மிக மோசமானதே.
3. மரண நகரம் மிஸ்ஸெளரி & கான்சாஸ் கொடூரன்
இவற்றிலிருந்தே நீங்கள் இளவயது டைகர் கதைகளை தொடர ஆரம்பித்தது. இப்போது உள்ள பலரிடம் கௌபாய் ஸ்பெஷல் கிடையாது (FB பரிமாற்றக் குழுக்களில் இந்த புத்தகம் இப்போதும் நல்ல விலைக்கோ அல்லது புத்தகத்திற்கோ பரிமாறப்படுகிறது.). எனவே இளமையில் கொல் என்ற முதல் மூன்று பாக அடிப்படை சங்கதிகள் தெரியாமலே நிறையப் பேர் "மரண நகரம் மிஸ்ஸெளரி" கதையைப் படித்தனர்.
இதற்கு ஆதாரம் பலர் மரண நகரம் மிஸ்ஸெளரி எதன் தொடர்ச்சி என்று கேள்வி எழுப்பியது.
இதில் பெரிய கூத்தாக நீங்களே குழம்பி போய் இரண்டு பாக கதைகளை ஒரு பாகம் என்று எண்ணி தனியே வெளியிட்டது. சமீப காலம் வரை நம் மக்கள் இந்தக் கதை போன பாகத்தின் தொடர்ச்சியா இல்லை தனிக்கதையா என்று இங்கு மற்றும் முகநூலில் பலமுறை கேட்டுள்ளனர். இப்படி ஒரு குழப்பத்தை உண்டாக்கியது டைகரின் தவறா?
இந்த இரு பாகக் கதைகளை இணைத்தோ அல்லது அடுத்தடுத்த மாதங்களிலோ வெளியிடாமால் மிகப் பெரிய இடைவெளியில் வெளியிட்டது நம் தவறேயன்றி டைகர் தவறல்ல.
4. இருளில் ஒரு இரும்புக் குதிரை & வேங்கையின் சீற்றம்
இதக் கதையை குறை கூற யாராலும் முடியாது. முதல் பாகத்தில் டைகரின் யுக்திகள் அவரின் VINTAGE சாகசங்களுக்கு (நம்மைப் பொருத்தவரை தங்கக் கல்லறை, மின்னும் மரணம்) எள்ளளவும் குறையாத கதை. இதையும் பிரித்து நீண்ட இடைவெளிக்கு பின் வெளியிட்டு காலி செய்து விட்டீர்கள்.
ஏன் உங்களின் புதிய ஆதர்ச நாயகன் லார்கோவின் முதல் பாக கதையை ஜனவரியிலும் இரண்டாம் பாகத்தை டிசம்பரிலும் சில காலம் வெளியிட்டுதான் பாருங்களேன்.
5. அட்லாண்டாவில் ஆக்ரோஷம் & உதிரத்தின் விலை
இந்தக் கதை வெளிவரும் காலத்தில் இவ்வளவு காலமும் நடைபெற்ற குளறுபடிகளால் டைகர் கதைகளின் மேல் நம்மவர்களுக்கு ஒரு அயர்ச்சியே தோன்றி விட்டது. மேலும் நீங்கள் வேறு சார்லியர் காலத்தைப் போல் டைகர் கதை இல்லை என்று பலமுறை Demotivate ஆகும் விதமாக எதிர்மறைக் கருத்துக்களை வேறு பதிவு செய்து வருகிறீர்கள்.
அப்புறம் ரிசல்ட் என்ன ஆகும்?
இருந்தும் இக்கதை மற்ற கதைகளுக்கு (குறிப்பாக காவல் கழுகு, காமான்சே) எவ்விதத்திலும் குறைந்ததல்ல. இது கதையைப் படித்தவர்களுக்கு புரியும்.
6. மார்ஷல் டைகர்
இதுவும் மூன்று பாக கதை இதில் ஒன்றை மட்டும் வெளியிட்டு யானைப் பசிக்கு சோளப் பொரி கதையாக்கி விட்டீர்கள். இருந்தும் இந்தக் கதையும் நெகடிவ் மார்க்ஸ் பெறக் கூடிய கதையே அல்ல.
//தீர்மானத்தை வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் !//
தீர்மானத்தை வாபஸ் பெற்ற பொழுதும் ஏன் இவ்வளவு பெரிய பின்னூட்டம் என்றைக்கும் இல்லா வகையில் என்று உங்களுக்குத் தோன்றலாம்.
//மூன்றாவதாய் நான் யோசித்த பெயரைச் சொன்னால்// இனிமேல் இவ்வாறு நீங்கள் யோசிக்கக் கூட கூடாது என்பதே டைகர் விசிறிகளின் நோக்கம்.
இப்போதும் கூறுகிறேன் டைகரின் இப்போதைய கதைகள் ஏனைய எந்த நாயகனின் கதையையும் விட ஒரு படி மேல். ஆனால் அவரின் பெஞ்ச் மார்க் ஸ்டோரீஸ்தான் அவரைப் பாதிக்கின்றன சமீபகாலமாக ...
வழக்கமாய் முழு நீள பதிவுகளை கண்டித்து நான் பலமுறை இங்கு பதிவிட்டிருக்கிறேன். ஆனால் இம்முறை என்னால் தவிர்க்க இயலவில்லை. மன்னிக்கவும்.
ஷிநாபா -வின் கருத்தில் உண்மை இருக்கிறது ....டைகரின் முந்தைய வெளியீடுகளில் உள்ள தரத்தை Gold Standard என கொண்டு தற்போதைய கதைகளை மதிப்பீடு செய்ய கூடாது ..
Deleteசார் !..எங்கள் எல்லோரையும் விட நீங்கள் ஒரு பெரிய ரசிகர் ...ஹானஸ்டி என எடுத்து கொண்டாலும் டைகர் பற்றிய உங்களது பார்வை எடிட்டர் +ரசிகர் என்ற வகையில் வெயிட்டேஜ் மிகவும் அதிகமானது .......
உங்களது இந்த prejudiced view (தவறாக இருப்பின் மன்னிக்கவும் )டைகரின் இளம் வயது கதைகளை பற்றி biased opinions நண்பர்களிடையே உருவாக வழிவகுத்து விடலாம் .........
தனிப்பட்ட முறையில் டைகரின் தற்போதைய கதைகள் டைகரல்லாத பல பிற கதைகளை விட நன்றாக உள்ளதாகவே உணர்கிறேன் .........
எனவே டைகரின் 2016 collection -க்கு +++++++++++++++++++++++++
TSI-NA-PAH : சின்னதாய் ஒரு விஷயத்தை நினைவு கொண்டிட முயற்சித்திருக்கும் பட்சித்தில் - 'தம்' கட்டி இத்தனை ஆதங்கங்களைப் பதிவிட்டிருக்க அவசியமிராது நண்பரே..!
Deleteடைகரோடு எனக்கு வாய்க்கால், வரப்புத் தகராறும் கிடையாது ; டெக்ஸ் வில்லரோடு எனக்கு நெருக்கமான பந்தமும் கிடையாதெனும் போது நான் favorites விளையாட அவசியம் எங்கிருந்து எழுகிறது ? எங்கோ ஒரு பிரெஞ்சு மூலையில் துயில் பயின்று கொண்டிருந்த ப்ளூபெர்ரி கதைகளைத் தேடித் பிடிக்கக் காரணமாக இருந்தது அவற்றின் தரங்களே ; இன்று அவற்றை என்ன செய்வதென்று தெரியாது தலையைச் சொரியும் அவசியம் நேர்வதும் அவற்றின் (குறைகின்ற) தரங்களாலேயே !
"இரத்தத் தடம்" சொதப்பியதற்கு அதன் அச்சுத் தரம் தான் பிரதான காரணம் ; ஏற்றுக் கொள்கிறேன் ! ஆனால் அச்சில் துல்லியம் இருந்ததிருக்கும் பட்சத்தில் மட்டுமே அந்த அத்தியாயத்தின் ஒற்றைப் பரிமாணக் கதையோட்டத்தை முக்காடு போட்டு மூடி விடல் இயலுமென்று நினைக்கிறீர்களா ? ?
'கண்மூடி ரசனை' என்றதொரு concept வேகமாய்க் காலாவதியாகி வருகிறதென்பதை நான் இன்னமும் உணராது இருப்பின் என்னை விடப் பெரிய கும்பகர்ணன் வேறு யாரும் இருக்க சாத்தியமாகாது ! டைகருக்கு மட்டுமென்றில்லாது - XIII ; டெக்ஸ் போன்ற long running நாயகர்களுமே லேசாய்ச் சறுக்கும் முதல் தருணத்திலேயே மண்டையில் குட்டு விழுவது தானே நாம் பார்த்திடும் யதார்த்தம் ? ஒரு "காவல் கழுகு" ; ஒரு "பூத வேட்டை" அதன் die-hard ரசிகர்களையே லேசாய் உலுக்கிப் பார்த்திடும் இந்நாளில் டைகராக இருந்தாலும் சரி ; சூப்பர்மேனாக இருந்தாலும் சரி - பெருங்காய வாசனையில் காலம் தள்ளுவது நிரம்பக் கஷ்டமே !
இளம் டைகரின் கதைகள் ஒரு அயர்ச்சியை ஏற்படுத்த நிஜமான காரணமாய் நான் பார்ப்பது - விறுவிறுப்பற்றதொரு கதை knot -ஐ மட்டுமே கையில் வைத்துக் கொண்டு அதே கோட்டில் படைப்பாளிகள் விடாப்பிடியாய் பயணிக்க முயல்வதே ! களங்கள் மாறினால் ; கதையின் மைய நோக்கம் அவ்வப்போது மாறினால் சலிப்பின்றி முன்செல்தல் சிக்கலாக இருந்திடாதா ?! நான் demotivating ஆக கமெண்ட் போடாத "சிப்பாயின் சுவடுகளும் " ; "பூத வேட்டைகளும் " ; "டயபாலிக்களும்" மண்ணைக் கவ்வியதன் இரகசியம் ரொம்பவே சிம்பிள் தானே ?
நிஜத்தை ஒத்துக் கொள்வதற்கோ ; உள்ளதை ஒப்பனைகளின்றிச் சொல்வதற்கோ தயங்க அவசியமில்லா நாட்களாகி விட்டன இன்றைய காலகட்டங்கள் ! இல்லாத நிஜத்தை இருப்பதாய் சாதிக்க முயற்சித்து காமெடி பீசாய் காட்சி தருவதை விட நிஜத்தைச் சொல்லி விட்டு அதன் fallouts களை சந்திப்பது விவேகம் ஆகாதா ?
selvam abirami : //உங்களது பார்வை எடிட்டர் +ரசிகர் என்ற வகையில் வெயிட்டேஜ் மிகவும் அதிகமானது .//
DeleteExactly my point too..! உள்ளதை உள்ளபடிக்குப் பார்த்திடும் அவசியம் நேர்வதே இந்த இரட்டைப் பார்வைகளின் பொறுப்பு என்வசம் இருக்கும் காரணத்தினாலேயே !
A fan can afford to be swayed by reputations ; but தேர்வுப் பொறுப்புகளைக் கையில் வைத்திருப்பவனும் அதே காரியத்தைச் செய்வது சரியாகுமா ?
Vijayan : இங்கே சின்னதொரு விளக்கமும் அவசியமென்று எண்ணுகிறேன் ! 2015-ன் கதைத் தேர்வுகள் பற்றிய கண்ணோட்டம் மாத்திரமே எனது இன்றைய பதிவின் நோக்கம் ; நாயகர்களின் long term எதிர்காலங்களைப் பற்றிய அலசலோ ; தீர்மானங்களோ எடுக்கும் வேளையல்ல இது என்பதை நினைவூட்டுகிறேன் ! அதே போல டைகரின் கதைகளை ஒரு தொகுப்பாய் வெளியிடுவோமா என்று கேட்டேனே தவிர, பரணுக்கு pack பண்ணிடுவோம் என்று சொல்லிடவில்லை ! So - relax guys !
Deleteஎனது கருத்து ஒன்றே ஒன்றுதான் சார்.
Deleteடைகரின் கதைகளோ சித்திரத் தரமோ தற்போதைய/மற்றைய கதைகளுக்கு எவ்விதத்திலும் குறைந்து விடவில்லை. மேற்குறிப்பிட்ட UNFORTUNATE குளறுபடிகளால் டைகருக்கு சற்றே பின்னடைவு நேர்ந்துள்ளதே தவிர நிரந்தர சருக்கல் கிடையாது.
நீங்கள் குறிப்பிடிருப்பது போல் COLLECTION ஆக வெளியிட்டாலும் அல்லது இப்போதுள்ளது போல் சரியான விதத்தில் பாகங்கள் வர ஆரம்பித்தாலும் போதும் டைகர் மீண்டும் வெற்றிக் கொடி நாட்டுவார் என்பது உறுதி.
உங்களுக்கு லக்கி லூக் போல் எங்களுக்கு டைகர். எங்க ஆள நாங்க விட்டுக் கொடுக்க முடியுமா?. மற்றபடி டெக்ஸ், டைகர் போன்றவர்களை எங்களுடனே வளர்த்தது தாங்கள்தான் என்பது என் நினைவில் இல்லாமல் இல்லை. அதை மறக்கவும் இயலாது.
ஆனாலும் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் எங்க ஆளுக்கு உங்களின் சப்போர்ட் கொஞ்சம் குறைந்து வருவது போல் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை.
நண்பர் TSI-NA-PAH-வின் கருத்துரையின் ஒவ்வொரு வரிகளையும் நூறு முறை ரிப்பீட் செய்கிறேன். டைகர் கதைகளின் தொய்வுக்கு முழுக்க முழுக்க ஆசிரியராகிய நீங்கள் செய்த இந்த சின்னச்சின்ன தவறுகள்தான் முழுக் காரணம்!
Deleteஇப்போதுதான் ஆசிரியரின் பதிலைப்பார்க்கிறேன். இருப்பினும் கருத்தில் மாற்றமில்லை. :-)))))))))))
Deleteஇரத்த தடம் தோல்விக்கு காரணம் பிற்பகுதி துரோகமும் சேர்த்து டைகரின் ஹீரோயிசத்தை கேள்விக்குறியாக்கியதாலெ என எண்ணுகிறேன் !
Deleteமற்றபடி பிற டைகர் கதைகள் தூள் !
ஏன் இரும்புக்கை எத்தன் டைகரின் மின்னும் மரணம் , தங்க கல்லறைக்கு இளைத்ததல்ல ! ஆனால் இரண்டாம் பாகம் .....?!
@Vijayan Sir,
Deleteகதைகள் / ஹீரோக்கள் குறித்த தங்களின் தனிப்பட்ட பார்வைகளை வாசகர்களோடு பகிர்ந்துகொள்வதில் என்றுமே ரிஸ்க் உள்ளது. ஏனென்றால் லார்கோ, ஷெல்டன், கமான்சே, XIII, தோர்கல் போன்ற எந்த தொடருக்கும் ஒரு கட்டத்தில் படைப்பாளிகள் வித்தியாசப்படுவதும் தரம் மாறுவதும் (Up or Down) பொதுவான விஷயமே. ஒரு கட்டத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமும்கூட Unfortunately.
வாசகர்களிடம் ஒரு கதையின் / தரத்தின் வீக்னஸை சுட்டிக்காட்டுவதைவிட, அவை விற்பனை / வரவேற்பில் அடிவாங்குவதை (in case) சுட்டிக்காட்டி தப்பிப்பதே நீண்ட நாள் நிம்மதிக்கு உத்தரவாதமான வழி என்பது என் தாழ்மையான கருத்து. :)
//TSI-NA-PAH: நீங்கள் குறிப்பிடிருப்பது போல் COLLECTION ஆக வெளியிட்டாலும் அல்லது இப்போதுள்ளது போல் சரியான விதத்தில் பாகங்கள் வர ஆரம்பித்தாலும் போதும் டைகர் மீண்டும் வெற்றிக் கொடி நாட்டுவார் என்பது உறுதி.//
Delete+1
//கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்:மற்றபடி பிற டைகர் கதைகள் தூள் ! //
+! :)
+1
//Ramesh Kumar: கதைகள் / ஹீரோக்கள் குறித்த தங்களின் தனிப்பட்ட பார்வைகளை வாசகர்களோடு பகிர்ந்துகொள்வதில் என்றுமே ரிஸ்க் உள்ளது. // true, but i believe Edit is unbiased in this case,
I feel may be the audience response and sales response pushing our Edit to take some of hard decisions, and autopsy for the failure may vary according to the individuals perspective. talking with hypothetical details I feel its true the album(more than one episodes) books giving positive feelings towards the book while reading among the readers in same time huge time gap between the episodes not adding any interest towards story!
I feel there is a need that that sequels(not only for tiger) need to be flushed out in quick manner, If albums are not fitting the framework(cost) i feel all such sequel stories need to be released in continues months(!?) or some way the time gap between the episodes needs to be reduced.
பாகங்களை பிரித்து பிய்த்து ஒவ்வொரு ஆல்பமும் தனித்தனி கதை போல் தோன்றுவதால் தான் யங் புளுபெர்ரி வரிசை இவ்வளவு விமர்சனங்களை சந்திப்பதாக தோன்றுகிறது!!!
Delete5 அல்லது 6 ஆல்பம்களை ஒரே தொகுப்பாக வெளியிடும் எண்ணத்திற்க்கு முழு ஆதரவு கிடைக்கும் !!
ஒரு மாதத்திற்க்கு 4 புத்தகங்கள் என்ற அளவில் பார்க்கும் போது இது spl போல அல்லாமல் இந்த ஒருதொகுப்பையே ஒரு மாத புத்தகமாக வெளியிடலாம்!!
Please complete Marshal Tiger in 2015 and one shot 5 or 6 stories of young blueberry in 2016.
Deleteப்ரூனோ பிரேசில், ரோஜர் பற்றிய உங்கள் முடிவுக்கு கருத்து இல்லை.
ReplyDeleteசுட்டி லக்கி, ஜில் ஜோர்டன் குறித்த முடிவை தாங்கள் மாற்றிக்கொள்ளவேண்டும். சுட்டி லக்கி ஒரு அற்புதமான ரசனை. காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் தராதீர்கள். லக்கிலூக் எனும் ஒரு அரிய காரெக்டரின் இன்னொரு முகமாக பாருங்கள். என்னைப்பொருத்த வரை சுட்டி லக்கி எனும் காரெக்டரே ஒரு க்யூட் அனுபவம் தருவதாக இருக்கிறது. ஜில் கதையைப் பொருத்தவரை, கார்டூன் என்றால் காமெடிதான் வேண்டும் என தாங்களாகவே முடிவு செய்துகொண்டால் என்ன நியாயம்? ஜில் என்னைப் பொருத்தவரை டின்டின் வகைமையில் வரக்கூடிய ஒரு அட்டகாசமான கதாப்பாத்திரமாவார். ஜில் தொடரவேண்டும் என்பது என் ஆவல்!
டைகர் கதைகள் பற்றி ஏற்கனவே கருத்து தெரிவித்தாயிற்று.
என்னைப்பொருத்தவரை XIII Spin offs தனிப்பட்ட வாசிப்புக்கும் உகந்தவையே.. அவ்வகையில் மீதமிருக்கும் கதைகள் அனைத்தும் 2015ல் வெளியாகவேண்டும் என்பது என் (பேர்)ஆசை!
//சுட்டி லக்கி ஒரு அற்புதமான ரசனை. காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் தராதீர்கள். லக்கிலூக் எனும் ஒரு அரிய காரெக்டரின் இன்னொரு முகமாக பாருங்கள். என்னைப்பொருத்த வரை சுட்டி லக்கி எனும் காரெக்டரே ஒரு க்யூட் அனுபவம் தருவதாக இருக்கிறது.//
Delete//என்னைப்பொருத்தவரை XIII Spin offs தனிப்பட்ட வாசிப்புக்கும் உகந்தவையே.. அவ்வகையில் மீதமிருக்கும் கதைகள் அனைத்தும் 2015ல் வெளியாகவேண்டும் என்பது என் (பேர்)ஆசை! //
+++++++++++++++++++++++++++++++
டியர் எடிட்டர்,
Deleteஜில் ஜோர்டான் இரண்டாவது கதை காமெடி நன்றாகவே இருந்தது - நீங்கள் அதற்காக உழைத்ததும் அறிவேன். சுட்டி லக்கி - ஒக்லஹமா ஜிம் - ஆங்கில பதிப்பைப் படிக்காமல் பிரெஞ்சு பதிப்பை ஒரு மறுவாசிப்பு செய்யவும் - முதல் கதை அளவிற்கு இருக்கும்.
இவர்கள் இருவரையும் 2015ல் தொடரலாமே ப்ளீஸ் !
+1
Delete// கார்டூன் என்றால் காமெடிதான் வேண்டும் என தாங்களாகவே முடிவு செய்துகொண்டால் என்ன நியாயம்? //
Deleteஇந்த நியாத்திற்கு எனது ஆதரவு!
// கார்டூன் என்றால் காமெடிதான் வேண்டும் என தாங்களாகவே முடிவு செய்துகொண்டால் என்ன நியாயம்? //
Deleteகார்ட்டூன்கள் காமெடிக்கு மட்டுமே என எடிட்டர் முடிவு செய்திருந்தால்.,
க்ரீன் மேனர் கதைகள் வெளிவந்திருக்க வாய்ப்பில்லையே.?
நாம் ப்ளூகோட்ஸை ப்ளாக் ஹ்யூமர் என்கிறோம்.(அது நிஜமல்ல கதை என்பதை மறந்து)
ரின் டின் கேன் சிரிப்பு வரவழைக்கவில்லை, அல்லது எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறோம்.
எனவே நகைச்சுவை குறைவாக உள்ள கதைகளை வெளியிட எடிட்டர் தயக்கம் காட்டுகிறார் என நினைக்கிறேன்.(அல்லது அவருக்கே அக்கதைகள் பிடிக்கவில்லையோ என்னவோ.?)
// 2015-ல் மின்னும் மரணம்" மட்டும் திட்டத்தில் இல்லாதிருப்பின், இளம் டைகரின் ஒரு 5-6 கதைகளை ஒருங்கிணைத்து one shot ஆல்பமாக்கியிருப்பேன் - அப்படியாவது சுவாரஸ்யம் கூடுகிறதா என்ற வேட்கையில் ! //
ReplyDeleteமின்னும் மரணம் புத்தகம் முன் பதிவு செய்வோருக்கு மட்டுமே என்ற Category'ல் அமைவதால் 2015'ஐப் பொருத்தவரையில் மி.ம வாங்காதோருக்கு + புதிய வாசகர்களுக்கு ஒரு 250 ரூபாய் டைகர் ஸ்பெஷல் அயற்சியாகத்தோன்ற வாய்ப்பு குறைவே. (So please reconsider if something can be done within 2015)
அனுமானிக்க இயலும் ஒரேவொரு குழப்பம் என்னவென்றால் மி.ம வெளிவந்து ஒரு 6 மாதங்களுக்குப் பின்னர்தான் இந்தப் பரிசோதனைகூட பொருந்தும். மி.ம வெளிவரும் நாள் உறுதியாகாத நிலையில் இந்த அடுத்த முயற்சி 2016'ல் மட்டுமே சாத்தியம் என்ற ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மையும் இருக்கிறது.
ReplyDeleteஇன்றைய 05.10.2014 “TIMES OF INDIA”- வில் தமிழ் நாட்டில் தர்மபுரியில் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புதிர் அரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பற்றிய செய்தி வந்துள்ளது. இது சமீபத்தில் லயன்-முத்து காமிக்ஸ்-ல் வந்த ஒரு வித்தியாசமான கருத்தோடு என்னை கவர்ந்த LMS-ல் வந்த மர்ம மனிதன் மார்ட்டின் தோன்றும் “கட்டத்தில் ஒரு வட்டம்...!” சம்பந்தப்பட்டது.
மிகவும் சுவாரசியமான கதை. இதுபோன்ற வரலாற்று பின்னணி உள்ள கதைகள் மனதை மிகவும் கவரும். மேலும் விவரங்களுக்கு எனது ப்ளாக்கை பார்க்கவும்.
தீபாவளிக்கு தலை தான் இல்லை என்று சொல்லி விட்டீர்கள் சார் . சரி போகட்டும் . ஆனால் ஆனால் ஆனால் இந்த கிராபிக் நாவல் சோதனை தீபாவளி எல்லாம் வேண்டவே வேண்டாம் சார். தலை இல்லாத குறையை போக்கும் வகையில் சின்ன தலை லார்கோவுடனாவது இந்த தீபாவளி கொண்டாட ஏற்பாடு செய்யவும் சார். லார்கோவை 18க்கும் மற்றவைகளை பிறகும் தந்து இந்த தீபாவளியை சிறப்பிக்க இன்னமும் அவகாசம் உள்ளது சார். எங்கே கால் கட்டை விரலை எடுத்து வாயில் வைக்க ஆரம்பியுங்கள் சார்
ReplyDeleteGood post
ReplyDeleteSham1881@Erode
Erode saint Sathan good well soon
ReplyDeleteஆகவே நண்பர்களே.!
ReplyDeleteஇன்றைய வாக்களிப்புகளின்படி ரோஜர் மற்றும் புருனோ இருவரும் மதிலுக்கு வெளிப்பக்கம் தள்ளப்பட வேண்டியவர்கள்.
ஜில் மற்றும் சு.லக்கி இருவரும் மதிலுக்கு உட்ப்பக்கம் பாதுகாப்பாக இறக்கப்பட வேண்டியவர்கள்.
எஞ்சி இருக்கும் ப்ளூபெர்ரி மதில் மேலேயே தங்கி இருக்க வேண்டியவராக தெரிகிறார்,
(2016ல் ஒரு தொகுப்பாக வரும்வரை) ...சரிதானே.,?
// நம்மிடம் 'ஹீரோ பஞ்சம்' நிலவிடும் பட்சத்தில் - 'சரி..போனால் போகட்டும் ; இன்னும் கொஞ்சம் வாய்ப்புகள் நல்கிடலாம் !' என்று சிந்திக்கத் தோன்றிடும். ஆனால் நம்மிடமோ RAC ; Waiting List ; தத்கல் கோட்டா ; footboard பயணிகள் என்று எக்கச்சக்கமாய் ஆசாமிகள் இருக்கும் போது - தேர்வு அளவுகோல்களை சற்றே உயர்த்திப் பிடிப்பதில் தப்பில்லை தானே ?!
ReplyDelete//
சார் அளவுகோல்கள் உயரட்டும்; லயனின் பிடரியில் புதிய சிறந்த கதைகள் தழைக்கட்டும் !
பாகங்களை பிரித்து பிய்த்து ஒவ்வொரு ஆல்பமும் தனித்தனி கதை போல் தோன்றுவதால் தான் யங் புளுபெர்ரி வரிசை இவ்வளவு விமர்சனங்களை சந்திப்பதாக தோன்றுகிறது!!!
ReplyDelete5 அல்லது 6 ஆல்பம்களை ஒரே தொகுப்பாக வெளியிடும் எண்ணத்திற்க்கு முழு ஆதரவு கிடைக்கும் !!
ஒரு மாதத்திற்க்கு 4 புத்தகங்கள் என்ற அளவில் பார்க்கும் போது இது spl போல அல்லாமல் இந்த ஒருதொகுப்பையே ஒரு மாத புத்தகமாக வெளியிடலாம்!!
காரிகன் உண்டா ???
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம் .......தாமதமான வரவிற்கு மன்னிக்கவும் சார் .இந்த பதிவு என்னை பொறுத்த வரை "என் மனதில் " உள்ளதை பறை சாற்றுவதை போலவே தான் உள்ளது .அதற்காக எனது வாழ்த்துக்கள் .முதலில் உங்கள் "டைகர் " முடிவிற்கு நண்பர்கள் பலர் மாறு பட்ட கருத்தை அளித்துள்ளதால் எனது கருத்தையையும் இங்கே "கடிதமாக " எழுதுவதில் தவறு இல்லை என்றே நினைக்கிறேன் .
ReplyDelete"டைகரை "பொறுத்தவரை உங்கள் முடிவை நான் வரவேற்கிறேன் .கண்டிப்பாக இது "டெக்ஸ் போராட்ட குழு உறுப்பினர் "என்ற முறையில் இதை நான் தெரிவிக்க வில்லை .சாதாரண "காமிக்ஸ் "ரசிகனாக தெரிவிப்பதை நண்பர்கள் உணர்ந்து கொள்ள வேண்டுகிறேன் ."தங்க கல்லறை "முதல் பதிப்பை தாங்கள் வெளி இட்டதும் எனது வாசகர் கடிதத்தில் இனி என்னுடைய முதல் ஹீரோ "டைகர் "தான் ...டெக்ஸ் அடுத்த படி தான் என்று என்று எழுதி இருந்ததை தாங்களும் ..,நண்பர்களும் நினைவில் கொண்டு வர வேண்டுகிறேன் .இப்போதைய "டைகர் " கதைகளை பொறுத்த வரை நண்பர் சொன்னது போல தங்க கல்லறை ..,மின்னும் மரணம் போன்றவற்றுடன் நாங்கள் ஒப்பிட போவது இல்லை .அது முடியாத ஒன்று என்பதும் நாங்கள் அறிந்ததே .....டெக்ஸ் கதைகளிலும் "மொக்கை "உண்டு என்பதும் நாங்கள் அறிந்துள்ளோம் .அவற்றை "ட்ராகன் நகரம்...கழுகு வேட்டை ..பழி வாங்கும் பாவை " ஆகியவற்றுடன் ஒப்பிட முடியாது என்பதும் ஆணித்தரமான உண்மை .அதே சமயம் "மொக்கை "என்று அழைக்க படும் டெக்ஸ் சாகசங்கள் கூட படித்து முடிக்கும் வரை ஒரு வித விறுவிறுப்புடன் சென்று ..,பிறகு படித்து முடித்தவுடன் தான் இது கொஞ்சம் சுமார் தான் ....ஹும்..இது மொக்கை என்று நினைக்க தோன்றுகிறது ....ஆனால் இப்போதைய டைகர் கதைகள் படிக்க...படிக்க "பள்ளி வரலாறு "புத்தகத்தை தான் நினைவு படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மை .போர் ....அங்கே ..இங்கே ..இடமாற்றம் ....போர்......அனைத்தும் இதே விதம் எனில் என்ன தான் ரசிக்க முடியும் .இதில் கொண்டு செல்ல படும் விதமும் "ஒரு வரலாற்று போர் " என்ற விதத்தில் விறுவிறுப்பாக ரசிக்க முடியாமல் ....எப்பொழுது பக்கம் முடியும் என்ற "அயர்ச்சியை "தாம் அவை தருகிறது .இதில் நீங்கள் பாக ..பாக மாக ..கொடுத்தாலும் சரி ....ஒரு "முழு நீளம்மாக " கொடுத்தாலும் சரி ...இப்போதைய டைகர் கதைகள் "வரலாற்று புத்தகத்தை " தாம் நினைவு படுத்தும் .எனவே தாங்கள் தங்க கல்லறை ...மின்னும் மரணம் போல் எல்லாம் வேண்டாம் ....சாதாரண "தோட்டா தலை நகரம் " போல கொஞ்சம் விறுவிறுப்பான டைகர் கதைகள் தேடி.... கிடைத்தால் வெளி இடலாம் ...இல்லை எனில் அது வரை காத்திருத்தல் நலம் .இதை தாங்கள் தவிர்த்தால் ....கண்டிப்பாக ஒன்று மட்டும் நடக்கும் ...
"அது சிலருக்கு என்றுமே வெறுக்காத கௌ பாய் கதைகள் கூட வெறுக்க ஆரம்பித்து இதற்கு பதிலாக தாங்கள் "கிராபிக் நாவல்" வெளி இடலாமே என்ற சூழ் நிலை ஏற்பட்டு விடும் "அபாயமும் " உள்ளது .எனவே டைகர் ரசிகர்கள் போலவே ஒரு விறுவிறுப்பான டைகர் கதையை நானும் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் .அதுவரை அவருக்கு "ஓய்வு "கொடுப்பது அவரது வேண்டுதல் மட்டுமல்ல ..நமது கடமையும் கூட ......
**********************************
சுட்டி லக்கி பற்றிய தங்கள் கருத்தையும் நான் வழி மொழிகிறேன்....ரோஜர் .....ப்ருனோ வை பொறுத்த வரை டைகரை போலவே "தேடி " பொக்கிஷம் கிடைத்தால் அவர்களை மீண்டு கொண்டு வாருங்கள் .....தவறு இல்லை .....
********************************
அடுத்த மாதம் 2015 விளம்பரம் தாங்கள் வெளி இட போவதால் கொஞ்சம் "மறுபதிப்பையும் "தாங்கள் நினைவுக்கு கொண்டு வருவதில் தவறு இல்லை என்றே நினைக்கிறன் .ஆனால் அது கண்டிப்பாக நிழல் 1 நிஜம் 2 போல அல்ல என்பது தாம் பல நண்பர்களின் நிலை .பல நண்பர்கள் கூறியது போல இங்கே எங்களுக்கு தேவையான மறுபதிப்பு இதழ்கள்
ஒரு டிடக்டிவ் ஸ்பெஷல்.....பிரின்ஸ் ...ஸ்பெஷல் .....சைத்தான் வீடு போல ஜானி ஸ்பெஷல் ......என்ற மிக பழமையான இதழ்களை தான் தான் ....இவைகள் தாம் பழைய நண்பர்களும் சரி ....புது நண்பர்களும் சரி விரும்புவது ......சிக் பில்லில் கூட .....விண் வெளியில் ஒரு எலி ...இரும்பு கௌ பாய் போன்ற பழைய இதழ்களை விடலாம் ....எனவே "ஜனவரியில் " நிழலை விட்டு வேறு இதழை வெளி இட ஆவன செய்யவும் ......
**************************************
"கடிதம் " கொஞ்சம் நீளமாக போவது போல தெரிவதால் இத்துடன் முடித்து கொள்கிறேன் சார் ...
நன்றி ...............வணக்கம் ...........
***************************************
//ஒரு டிடக்டிவ் ஸ்பெஷல்.....பிரின்ஸ் ...ஸ்பெஷல் .....சைத்தான் வீடு போல ஜானி ஸ்பெஷல் ......என்ற மிக பழமையான இதழ்களை தான் தான் ....இவைகள் தாம் பழைய நண்பர்களும் சரி ....புது நண்பர்களும் சரி விரும்புவது ......சிக் பில்லில் கூட .....விண் வெளியில் ஒரு எலி ...இரும்பு கௌ பாய் போன்ற பழைய இதழ்களை விடலாம் ....எனவே "ஜனவரியில் " நிழலை விட்டு வேறு இதழை வெளி இட ஆவன செய்யவும் ......//
Delete+1
போராட்டக் குழு தலைவரின் தாக்குதல் தொடுக்கும் பாணி என்றுமே அலாதியானது! 'வேண்டவே வேண்டாம்' எனும் விசயங்களைக்கூட மிகப் பாந்தமாகப் பதிவிட்டு; அதேசமயம் தன் நிலைத் தன்மையை மிக அழுத்தமாகத் தெரிவித்துவிடுவதில் தலைவருக்கு நிகர் தலைவரேதான்!
Deleteசரி! தலைவரைப் பற்றி நம்ம எடிட்டர் என்ன சொல்றார்னு தெரிஞ்சுக்க இங்கே 'க்ளிக்'குங்க பாஸு!
பழைய "சிறந்த" கதைகள்(reprint & reprints as grand albums) = வரவேற்பு!
ReplyDeleteபழைய Hero புதிய சிறந்த கதைகள்( if its series make it as album) = வரவேற்பு!
புதிய one shot "சிறந்த கதைகள்" = வரவேற்பு!
புதிய hero "சிறந்த கதைகள்" = வரவேற்பு!
total tally
Delete( more "சிறந்த கதைகள்" + best art quality+ more benefits for subscribers+ continues on time release of committed books) - printing mistakes mishaps for subscribers = 2015 expectation from Lion
+1
Deleteஎனது காமிக்ஸ் குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் அனைவருக்கும் இனிய பக்ரீத் என்னும் தியாகப்பெருநாள் வாழ்த்துக்கள் .
ReplyDeleteநண்பர்களின் குடும்பத்தினர் மீதும் ஏக இறைவனின் அருள் என்றென்றும் நின்று நிலவட்டுமாக ..
வாழ்த்துக்கள் நண்பா!
Deleteஇனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள் .........
Deleteஇனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள் நண்பரே.!
Deleteஉங்களுக்கும், மற்ற நண்பர்களுக்கும் பக்ரீத் நல்வாழ்த்துகள் நண்பரே!
Deleteஇனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள் நண்பரே.!
Deleteகார்சனின் கடந்த காலம் கதையின் இத்தாலிய தலைப்பு (Italian Title) யாருக்கேனும் தெரியுமா ?
ReplyDeleteநண்பர்களே ..சேலம் தேசன் புக் ஷாபில் புத்தகங்கள் வந்துவிட்டது .
ReplyDeletecoimbatore-il enke ?
Deletefollowing is the official shot details i got from Lion office couple of months back
DeleteCoimbatore shop details-A.M.M.Book stall,263,N.S.Road,Townhall,coimbatore,cell-90929 95768
this shop is near the town hall signal (near the entrance of the Town hall building opposite road, its small road side book shop)
This comment has been removed by the author.
Delete@ SatishKumar
DeleteThe shop is closed today for Bakrid
When I enquired the bookshop owner on Oct 2nd,he said the comics will arrive on Oct 8
Thanks for the info friend!
DeleteTiger must be continued (at least 1 every yr ) ... In Roger and Bruno s case their best stories can be published ... XIII series must be continued (maybe with recap of story ) ....
ReplyDelete///2016-ல் ஒரு collection ஆக இளம் டைகரின் புதுக் கதைகளை வெளியிடுவது பற்றிய உங்கள் சிந்தனைகள் என்னவோ guys ?///
ReplyDeleteவரவேற்கிறேன். இவை முந்தைய பாகங்களின் தொடர்ச்சி எனில், தேவையான முன் கதைச் சுருக்கத்தோடு இருப்பது நலம்! ஒருவேளை, இப்படியொரு கலெக்ஷன் வேண்டாம் என நீங்கள் ஏக மனதாக முடிவெடுத்தாலும் வருத்தமில்லை
//வரவேற்கிறேன். இவை முந்தைய பாகங்களின் தொடர்ச்சி எனில், தேவையான முன் கதைச் சுருக்கத்தோடு இருப்பது நலம்!//
Delete+1
??ஒருவேளை, இப்படியொரு கலெக்ஷன் வேண்டாம் என நீங்கள் ஏக மனதாக முடிவெடுத்தாலும் வருத்தமில்லை??
-1
169
ReplyDeleteஎன்னாச்சி நண்பர்களே.?
ReplyDeleteதளம் செய்வினை வெச்சா மாதிரி இம்பூட்டு டல்லா இருக்கு.!
நாம ஆசைபடறது கெடைக்கலேன்னா கெடச்சத விரும்பனும் அப்படீன்னு பெரிய மனுஷாளுங்க சொல்லி இருக்காங்க.! எனவே.,.,,,,,,,,,,
மாடஸ்டி பிளைசியை வரவேற்க்க தயாராக போகிறேன்.கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் முயற்சி செஞ்சி பார்க்கிறேன்.
முதல் அடியாக ரொம்ப நாளாக பரணில் கிடந்த "பூமிக்கொரு ப்ளாக் மெயில் "ஐ கையில் எடுத்துள்ளேன்.
எப்பாடுபட்டாவது படிக்க முயற்சி செய்ய போகிறேன். கையிரண்டும் வெடவெடக்குக்குது. யாராவது ஊக்கம் கொடுங்களேன்.!!
தூக்கம் வரும் வேளையிலா
Deleteஊக்கம் கேட்பது????
இந்த கதையில வர்ற வில்லன் ரொம்ப நல்லவரா தெரியறாப்லயே.!!!
Deleteபடங்கள் தெளிவா தெரியல.
(ஊக்கமளிக்க முயன்ற பெர்னான்டஸ்க்கும்., முயலாத நண்பர்களுக்கும் ஹாவ்வ்வ்வ் நன்றி.)
தூக்கம் வர்.,,,,,ர்ர்.,,,,த்..,,,.
போச்சுடா !
Deleteமாடஸ்டி தங்களுக்கும் கனவு நாயகியாகி விட்டாரா !
Deleteஇல்லை ஸ்டீல்.! முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் முடியவில்லை. மாடஸ்டி வந்தவுடன் மேற்கொண்டு படிக்க சிரமமாக இருந்ததால்.,அப்படி இப்படி புரட்டிவிட்டு புக்கை மூடிவிட்டேன்.வந்த தூக்கமும் தடம் தெரியாமல் போய்விட்டது.
இப்போது டிடெக்டிவ் டோனி ஜெரோமின் சிகப்பு கன்னி மர்மம் படித்து கொண்டு இருக்கிறேன். அடுத்து தற்செயலாய் ஒரு தற்கொலை.
மாடஸ்டி ப்ளைஸி :- ம்ஹூம்.
போக போக எல்லாம் செட்டாயிரும் !
DeleteTo: Editor,
ReplyDeleteமாடஸ்தி கதைகளை தேர்வுசெய்யும்போது ஓவியர் Enrique Badía Romero வரைந்த கதைகளாகத் தேர்ந்தெடுங்கள். அல்லது jim holdaway வரைந்தவை. மற்றவை சொதப்பல்கள்.
நண்பர் பரணீதரன் இறந்த காலம் இறப்பதில்லை கிராபிக் நாவலா சார்? என முன்பொருமுறை எடிட்டரை வினவியபோதும் பின்னர் ஒருமுறை எடிட்டர் பேட்மேனிலும் கிராபிக் நாவல் உண்டு என அதே நண்பருக்கு பதில் எழுதியபோதும்..............
ReplyDeleteகாமிக்ஸ் என்றால் என்ன.... கிராபிக் நாவல் என்றால் என்ன...என்ற கேள்வி பலமுறை எழுந்தது எனினும் காமிக்சோ, கிராபிக் நாவலோ வடையை தின்ன சொன்னால் துளையை ஏன் எண்ணுவானேன் என்ற மனோபாவத்தால் அந்த எண்ணத்தை தாண்டிசெல்லவேண்டியதாயிற்று........
ஆனால் சமீபத்தில் ஓர் நெடுஞ்சாலை உணவகத்தில் வடை ஆர்டர் செய்தபோது 4 போர்க் 5 ஸ்பூன் அடங்கிய ஒரு ஸ்டேண்டும் தோசையின் விட்டமும் ஊத்தப்பத்தின் தடிமனும் கொண்ட வஸ்துவை கலைபாடுள்ள ஓர் தட்டில் 7 வகை சட்டினியுடன் ½ லிட்டர் சாம்பாரை அழகிய சித்திரங்கள் உள்ள ஜக்கில் என்னைவிட சுத்தமாக தோன்றிய வெயிட்டர் கொண்டு வைத்தபோது ....வடையின் சுவை உட்பட எல்லாமே புதிய அனுபவமாக இருந்தது...ஒரு வடை காபிக்காக கிரெடிட் கார்ட் கொடுக்க நேர்ந்ததும் புதிய அனுபவமே..........
வடையை பற்றிய நினைவு(மாலை)களை அனுமாருக்கு சார்த்திவிட்டால் எஞ்சி இருப்பது அந்த பழைய கேள்விதான்..........
காமிக்ஸ் versus கிராபிக் நாவல் .....ஓர் எளிய பார்வை.......
காமிக்ஸ்
Delete1. பக்கங்கள் பொதுவாக 50 அல்லது 60.
2. உள்ளடக்கம் ( content) பொதுவாக எளிமையானது.
3. தினசரி, வாராந்திர strip –களின் தொகுப்பாக இருக்கலாம். (compilation or compendium)
4. மாதங்கள், வருடங்கள் என தொடராக வரலாம்.
5. Cliffhangers, changeover of plotline காமிக்ஸ் –ல் சாத்தியம்......
.cliffhanger என்பது “ கடைசி படியில் ஹம்சா கால் வைத்தபோது அங்கு இருந்த பாம்பு உஸ் என சீறியது...பாம்பு ஹம்சாவை கடித்ததா....அடுத்த எபிசோடில் காண்க......” என்பதுதான்........... changeover of plotline ......ஆதி தாமிராவின் பரிசு வென்ற caption குறிப்பது இதைத்தான்...எடிட்டர் கூட ரத்த படலம் குறித்து எழுதுகையில் 14 பாகங்களுக்கு பிறகு ஏன் ஜவ்வு மாதிரி இழுக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.......
6. சித்திர தரம்....பொதுவாக மிக நன்று என்றாலும் in collation or distinction with graphic novel –ஒப்புமை நோக்கையில் பின்னடைவுதான்.......
7. காமிக்ஸ் குழந்தைகளுக்கானது என்ற பரவலான தவறான கருத்து உலகம் முழுதும் நிலவுகிறது.....{.பட்டா பட்டி போட்ட பொடியன்கள் நாம்-எடிட்டர் பலமுறை சொல்லியிருப்பது...}
காமிக்ஸ் ,காமெடி போன்றவை komos என்ற கிரேக்க சொல்லில் இருந்து வந்தவை.....பொதுவான அர்த்தம் intentionally funny or merrymaking எனலாம். (revelers – எனப்படும் கிரேக்கபிரிவினர் உற்சாக பானம் அருந்தி ஊர்வலமாக சென்று மக்களுக்கு கேளிக்கை ஊட்டினர்...komos-ன் நேரடி பொருள் இதுதான்........) {இதுதான் இப்பவும் டாஸ்மாக் இருக்கும் தெருக்களில் தினமும் நடக்குதே என சொல்ல கூடாது.......} .
{தற்போதைய காமிக்ஸ் –களை பற்றி subversive transgression என்ற வார்த்தை அடிக்கடி அடிபடுகிறது............}
Comix என்ற பெயரில் அண்டர்கிரவுண்ட் காமிக்ஸ் அமெரிக்க கலாச்சார(counterculture comics) அரசியல் மாறுதல் வேண்டி செயல்படுகிறது......
கிராபிக் நாவல்........
Deleteகிராபிக் நாவலா......அந்த வார்த்தை வெறும் மார்க்கெட்டிங் தந்திரம்.காமிக்ஸ் படிக்கிறேன் என சொல்ல தர்ம சங்கடபடுபவர்கள் உபயோகிக்கும் வார்த்தை.......ஒரு garbage cleaner-ஐ sanitation engineer என சொல்வதை போல், ஒரு hooker பெண்மணியை lady of the evening என சொல்வதை போல் இதை கருதலாம்.....
---------- ஆலன் மூர்-(creator of watchmen)-------
1. பக்கங்கள் பொதுவாக 22௦- 25௦ (அதற்கு மேலும்) ஆக இருக்கலாம்....
2. உள்ளடக்கம் -- ஓர் முழுமையான கதை – ஆரம்பம், நடு பகுதி, முடிவு பகுதி என தெளிவானது.....ஆனால் சிக்கல்தன்மை உண்டு.. கதையின் plotline அல்லது கதை சொல்லும் விதத்தில் (presentation) கண்டிப்பாக complexity உண்டு.....
3. ஒரு குறிப்பிட்ட time span-ல் இரண்டு அல்லது மூன்று பாகங்கள் மட்டுமே......
4. கதாசிரியர்-க்கு முழுமையான சுதந்திரம் ... எதையும் திணிக்க சொல்லியோ இழுவையாக்க சொல்லியோ நிர்ப்பந்தம் இல்லை..
5. சித்திர தரம்...simply phenomenal....இந்த துறையை சேர்ந்தவர்கள் தங்கள் பாணியை மேதமையை நிரூபிக்க தோதான களம்.....
6. கிராபிக் நாவல்கள் intellect hungry adult –க்கானது என்ற பரவலான தவறான கருத்து உலகம் முழுதும் நிலவுகிறது.....
7. சில விஷயங்கள்...... உயர்ரக பேப்பர்(high grade matte finish or similar slicky finish) ,பைண்டிங்,glossy overall finish,அப்புறம் ஹன்ஷிகா மாதிரி இருக்கும் பர்ஸை ஜெனிலியா மாதிரி மாற்றும் factor........... வேறென்ன விலைதான்..........( graphic novels have spines.....binding பற்றி)
8. கிராபிக் நாவல்களின் literary மற்றும் visual merits உலகெங்கும் மதிக்கபடுகின்றன..சில மதிப்பு மிக்க பல்கலைகழகங்களில் கிராபிக் நாவல்கள் உயர்படிப்பு பாட திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.(நாம படிக்கும்போது இல்லாம போச்சே.....)
9. சிலசமயம் postapocalyptic , post war scenerioஅல்லது tragicomics , holocaust என்ற வகையில் சில சோகம் ததும்பி வரலாம்...... ( ஆசிரியர் இந்த வகை கிராபிக் நாவலை முதலில் ஏன் வெளியிட்டார் என்ற எண்ணம் லேசாக தலை தூக்கியது..) ஆனாலும் ஹோலோகாஸ்ட் வகையை சேர்ந்த maus –-------pulitzer award வாங்கியது குறிப்பிட தகுந்தது......
• அமெரிக்காவில் மட்டும் 2௦12-ல் வெளியான கிராபிக் நாவல்களின் எண்ணிக்கை சுமார் 56 லட்சம்.
Delete• விக்கிபீடியாவில் டைகர்(blueberry) கதைகளின் format என்ற கோட்டுக்கு நேரே கிராபிக் நாவல் என்று இருப்பதை பார்த்தபோது ஒரு சிறு புன்னகை தோன்றியது....
• கிராபிக் நாவல்களை படிக்க கொஞ்சூண்டு பொறுமையும் நிறையவே ஒருவிதமான mindset (mood என சொல்லலாமா)-ம் தேவைபடுகிறது என்று எழுத தோன்றுகிறது..............
• 2௦15-ல் ஆசிரியர் தேர்ந்தெடுக்க போகும் கிராபிக் நாவல்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்...............
Selvam Abiraami -
Deleteஉங்களின் ஆர்வமும் தேடலும் பாராட்டுதலுக்கும் வணக்கத்திற்க்கும் உரியன.
சூப்பரப்பு.
//விக்கிபீடியாவில் டைகர்(blueberry) கதைகளின் format என்ற கோட்டுக்கு நேரே கிராபிக் நாவல் என்று இருப்பதை பார்த்தபோது ஒரு சிறு புன்னகை தோன்றியது....//
ரொம்ப நாட்களுக்கு முன்னமே நானும் இதனை படித்திருக்கிறேன்.
ஏனோ இங்கே குறிப்பிட தோன்றவில்லை.
// கிராபிக் நாவல்களை படிக்க கொஞ்சூண்டு பொறுமையும் நிறையவே ஒருவிதமான mindset (mood என சொல்லலாமா)-ம் தேவைபடுகிறது என்று எழுத தோன்றுகிறது //
Deleteதாராளமாக குறிப்பிடலாம் :)
பலநாள் குழப்பங்களுக்குப் பிறகு எனக்குநானே Define பண்ணிக்கொண்டது இதுதான்: இலேசான பொழுதுபோக்காக இருந்தால் அது காமிக்ஸ். படிப்பதற்காக நாம் Prepare ஆகவேண்டியிருந்தால் அது (க்ராஃபிக்) நாவல். காமிக்ஸ் ஒரு Luxury என்றால் நாவல் மூளைக்கு ஒரு விதமான Luxurious Exercise. :D
// ஒரு garbage cleaner-ஐ sanitation engineer என சொல்வதை போல் //
ஒரு சம்பந்தமில்லாத விளக்கம்: தற்காலத்தில் கிட்டதட்ட எல்லா பணிகளுமே ஓரளவுக்காவது முறையான பயிற்சி, தகுதி மற்றும் ஒழுங்குக்கு உட்பட்டே நடைபெறுவதால் இதற்ககுப் பொருத்தமான பெயர்களும், முறையான விதத்தில் அங்கீகாரமும் அவசியமாகிறது. எனவே பணிகளுக்கு / பணியாளர்களுக்கு இடப்படும் பெயர்களை கௌரவ விஷயமாக பார்ப்பதைவிட தொழில்+நுட்ப முன்னேற்றமாக பார்ப்பதே சரி. (Don't mess this with hooker etc, that's different case :P )
On topic, க்ராபிக் நாவல் என்கிற வார்த்தையின் Psycological மற்றும் வியாபார ரீதியான பயனை நாம் பயன்படுத்திக்கொள்ள தவறுகிறோமோ என தோன்றுகிறது.
///Selvam Abiraami -
Deleteஉங்களின் ஆர்வமும் தேடலும் பாராட்டுதலுக்கும் வணக்கத்திற்க்கும் உரியன.
சூப்பரப்பு.//
+1
இதுகூட க்ராபிக் நாவல் படிச்சா மாதிரியே... இருந்திச்சி. இன்னிக்கே நானும் ஏதாவது சாலையோர உணவகத்துல ஏழு வகைச் சட்னியுடன் வடை சாப்பிட்டுப் பார்க்கிறேன். ஏதாவது தோணுதான்னு பார்ப்போம். ;)
நண்பரே உங்கள் தேடல்களுக்கும் அழகாக அவற்றை ஒழுங்கமைத்துத் தந்தமைக்கும் மிக்க நன்றி. நிறைய எதிர்பார்க்கிறோம் இதுபோல...
DeleteSelvam abirami good work... good information..
Delete//ஆனாலும் ஹோலோகாஸ்ட் வகையை சேர்ந்த maus –-------pulitzer award வாங்கியது குறிப்பிட தகுந்தது...... .. //
Deleteஅப்போ இந்த கதய ....
செல்வம் அபிராமி ...அபாரம்...கதை என்றால் சிறியது ...நாவல் என்றால் பெரியது என எண்ணி கொண்டிருந்தேன் ...காமிக்ஸும் அது போன்றே ! லார்கோவை எதில் அடக்கலாம் !
டிடெக்டிவ் டோனி ஜெரோமின் கதையை மீண்டும் இப்போது படிததபோது நன்றாக இருப்பதாக தோன்றுகிறது.
ReplyDeleteசிகப்பு கன்னி மர்மம்
தற்செலாய் ஒரு தற்கொலை
ஆர்ப்பாட்டமில்லாத அழகான க்ரைம் ஸ்டோரி.ஜூலியாவின் கதைக்கு எவ்விதத்திலும் குறைந்ததாக தெரியவில்லை.
ஜூலியாவை ஆஹா ஓஹோவென கொண்டாடும் நாம் டோனியை ஊரைவிட்டு தள்ளி வைத்தது ஏனோ.?
எடிட்டர் சார்,
டோனி ஜெரோமின் கதைகளை தேர்ந்தெடுத்து ஒன்றிரண்டை வெளியிட்டு பரிட்சித்து பாருங்கள். சொதப்பினால் இருக்கவே இருக்கு ரூல் நம்பர் 5.(அப்படியே பின்வாங்கிடறது.)
To: Edit,
Deleteஇந்தக் கருத்தை பலமாக ஆமோதிக்கிறேன். அண்மைய சில வருடங்களுக்குள் அறிமுகமான நாயகர்களுள் எமக்கு மிக நெருக்கமானவராக, அயல்வீட்டு பையன்போல, எந்தவித ஆர்ப்பாட்டமுமில்லாமல், நேர்த்தியான கதை அமைப்பு மற்றும் சித்திரங்கள் மூலம் என்னை மிகவும் கவர்ந்தவர் ஜெரோமேதான்! கறுப்பு வெள்ளை கதைகளை வெளியிடும் சிந்தனை துளிர்க்கும்போது அவருக்கும் ஒரு 'டிக்' அடித்துப் பாருங்களேன் சார்!
என்டமூரி வீரேந்திரநாத்தின் நாவல்களை தமிழில் சுசீலா கனகதுர்காவின் மொழிபெயர்ப்பில் படித்தவர்கள் இவ்வாறான கதைகளை நிச்சயம் சிலாகிப்பார்கள்.
Deleteஅருமையாச் சொன்னீங்க மங்கூஸ்!! டிடெக்டிவ் ஜெரோம் எனக்கும் ஃபேவரிட்! ( ஏன், எடிட்டருக்கும் கூட!) . அசர வைத்திடும் சித்திரங்கள் இதன் ப்ளஸ் பாயிண்ட்! ஜெரோமுக்கு வாய்ப்புக் கிடைச்சா நானும் சந்தோசப்படுவேன்.
Delete//டிடெக்டிவ் டோனி ஜெரோமின் கதையை மீண்டும் இப்போது படிததபோது நன்றாக இருப்பதாக தோன்றுகிறது.//
Deleteஇது போன்றே நிறைய கதைகள் எனக்கும் தோன்றியுள்ளது !
காரணம் படிக்கும் மன நிலையில் ...நல்ல நிலையில் இருக்கும் போது அந்த கதையின் தாக்கம் நம்மை முழுதும் ஆக்கிரமிப்பதே காரணம் ! சிப்பாயின் சுவடுகள் கூட இதில் சேர்த்தி ...
ஆனால் எப்போதும் நம்மை ஆக்கிரமிக்கும் டெக்ஸ் ,லார்கோ ...தனி ரகம்
// படிக்கும் மன நிலையில் ...நல்ல நிலையில் இருக்கும் போது அந்த கதையின் தாக்கம் நம்மை முழுதும் ஆக்கிரமிப்பதே காரணம் ! //
Deleteஏற்றுக்கொள்ள முடியாது ஸ்டீல், அதே நல்ல மனநிலையில் முதலில் படிக்க தொடங்கியது பூ.ஒ.ப்ளிக்மெயில், பெரிதாக எந்த தாக்கத்தையும் உண்டாக்கவில்லையே.?
மாறாக டோனி ஜெரோம் தாக்கம் உண்டாக்கினார்.
நல்ல கதைகள் இறுக்கமான மனநிலையையும் சீர்படுத்தும். சில கதைகள் நல்ல மூடையும் டல்லாக்கும் வல்லமை கொண்டவை என்பது என் கருத்து.