Powered By Blogger

Thursday, February 06, 2014

சிங்கநகரில் நமது சிங்கம் !

நண்பர்களே,

வணக்கம். திருவிழா கூட்டத்தில் காணாமல் போன குழந்தையைப் போல ஒன்றரை டஜன் "Load More" கொடுத்து - உங்களின் பின்னூட்டக் குவியலுக்குள் தட்டுத் தடுமாறித் தான் நடமாட வேண்டியானது கடந்த பதிவினில் ! மேற்கின் மன்னர் யார் ? என்ற சர்ச்சைக்கு இப்போதைக்கொரு விடிவு பிறக்கப் போவதில்லை என்பதால் முன்செல்லும் காரியத்தைக் கவனிப்போமே ? நேற்றைய மதியமே பிப்ரவரியின் சந்தாப் பிரதிகளை கூரியர் & பதிவுத் தபால்களில் அனுப்பி விட்டோம். So - "காலையில் கூரியரைப் படை எடுப்போர்" சங்கத்தின் அங்கத்தினர் தம் பணியினை இன்று செய்திடலாம் ! அயல்நாட்டுச் சந்தாக்களும் அனுப்பியாகி விட்டோம் ; இங்கு சின்னதாய் ஒரு தகவல். நாளது தேதி வரை அயல்நாட்டுப் பார்சல்களை வான்மார்க்கப் பதிவுத் தபாலில் அனுப்ப இயன்றது - வழக்கமான தபால் கட்டணம் + சின்னதாய் ஒரு பதிவுக் கட்டணத்தோடு  ! ஆனால் கடந்த 15 நாட்களாய் இந்த முறையின் கட்டணங்களை கிட்டத்தட்ட இருமடங்காய் உயர்த்தி விட்டனர் ! So இம்மாதம் முதல் அனைத்து அயல்நாட்டுச் சந்தாக்களுமே பதிவுத் தபால் அல்லாத சாதா முறையிலேயே அனுப்பிடப்படுகிறது.(பதிவுத் தபாலெனில் - 3 இதழ்கள் கொண்ட பார்சலுக்கே ரூ.875 ஆகிறது இப்போது !!).

அயல்நாட்டில் நமது காமிக்ஸ் பற்றிய பேச்சு எழும் சமயத்திலேயே - சின்னதாய் இன்னொரு சந்தோஷத் தகவல் பரிமாற்றமும் கூட ! விளம்பரம் விரும்பா நமது நண்பர் ஒருவர் சிங்கப்பூரில் உள்ள 4 முக்கியப் பொது நூலகங்களுக்கு தன்னார்வத்தில் நமது காமிக்ஸ் இதழ்களை அன்பளிப்பாய் வழங்கியுள்ளார் ! அவற்றிற்குக் கிட்டிய நல்வரவேற்பா ?  அல்லது விடாமுயற்சியாய் நமது காமிக்ஸ்களைத் தருவித்து வைத்தால் இதற்கென ஒரு ஆர்வம் வளரும் என்ற நம்பிக்கையா ?.. தெரியவில்லை ! - ஆனால் அந்நூலகங்கள் நமது இதழ்களின் நிறையப் பிரதிகளை எவ்விதமோ வாங்கி தற்போது வைத்துள்ளனவாம் !! பாருங்களேன் பின்வரும் link களில் :சிங்கநகராம் சிங்கப்பூரில் வாழும் நமது நண்பர்கள் இதனைப் படிக்கும் பட்சத்தில், ஒரு எட்டு உங்களுக்கு அருகாமையில் உள்ள நூலகத்திற்குச் சென்று பார்த்திடலாமே ?! சிறு விதைகள் தான் பெரும் விருட்சங்களின் துவக்கம் எனும் போது - இது போன்றதொரு அற்புத தயாள சிந்தனை கொண்ட நம் நண்பருக்கு நமது நன்றிகளும், பாராட்டுக்களும் !! 

இம்மாத இதழ்கள் கிடைக்கப் பெற்ற பின்னே ; வழக்கமான உங்களின் அலசல்களுக்குப் பின்னே நான் அறிந்து கொள்ள விழையும் விஷயங்கள் சில உள்ளன :

1.ஜில் ஜோர்டன் கதையினைப் பற்றிய உங்களின் அபிப்ராயங்கள் ப்ளீஸ் ?  நகைச்சுவை இழையோடும் அதே சமயத்தில் சற்றே சீரியசாகவும் கதை சொல்ல எத்தனிக்கும் இந்தத் தொடரைத் தொடர்வதில் மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் உள்ளனவா ? கார்ட்டூன் பாணிச் சித்திரங்களோடு உள்ள இத்தொடர் நமது இளம் வாசகர்களைச் சென்றடையவும் உதவும் என்பது எனது தனிப்பட்ட அபிப்ராயம் ; but உங்களின் சிந்தனைகளையும் அறிந்து கொள்வதில் ஆவல் !

2.சாகச வீரர் ரோஜர் !! நெடுந்துயில் முடித்துத் திரும்பியுள்ள இந்த dashing adventurer பற்றியும் அதே கேள்வியே ! மெய்மறக்கச் செய்யும் சித்திரங்களை தனது மிகப் பெரிய பலமாய்க் கொண்டிருக்கும் இந்த நாயகரை நாம் active ஆக ரசித்தது சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பாக என்பதால் - இன்றைய நமது ரசனைகளின் எல்லைக்குள் இவர் தொடர்கிறாரா என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளவே இக்கேள்வி !

3.இடியாப்பக் கதைகளுள் பிரதானமானவரான நமது ரிப்போர்டர் ஜானி பற்றியே கேள்வி # 3 ! சமீபமாய் வெளியான ரிப்போர்டர் ஜானி ஸ்பெஷல் (மறுபதிப்பு) இதழினைப் படித்த பின்னே, இவரது கதைகளைக் கோரி கணிசமான மின்னஞ்சல்கள் வந்துள்ளன ! இம்மாத இதழும் ஒரு crystal clear சாகசம் என்பதால் நிச்சயமாய் ரசிப்பதில் சிரமம் இராது ! நமது தற்சமய நாயகர் அணிவகுப்பில் பெயர் சொல்லிக் கொள்ளும் அளவில் டிடெக்டிவ் என வேறு யாரும் இல்லாத நிலையில் - ஜானிக்கு பதவி உயர்வு தருவது ஒ.கே. ஆகுமா ?

4.நாயகர்களுக்கு அப்பால் எழும் கேள்வி இது ! 52 பக்க format (லயனில் மட்டும் 56) என்பது நமது 2014-ன் பாணி என்றான பின்னே - ஒவ்வொரு பிரான்கோ-பெல்ஜிய சாகசமும் 44 பக்கங்களை ஆக்ரமித்துக் கொண்டான பின்னே மாமூலாய் எனது தலையங்கம் ஒன்றல்லது, இரண்டு பக்கங்கள் ; சிங்கத்தின் சிறுவயதில் - 2 பக்கங்கள் ; அடுத்த வெளியீடுகளின் விளம்பரமென இன்னொரு 2 பக்கங்கள் அமைந்தான பின்னே, காலி விழும் பக்கங்களை நிரப்பிட filler pages தான் சிரமம் தருகின்றன ! மதியில்லா மந்திரியார் ; லக்கி லூக் குட்டிக் கதைகள் 6-8 பக்க நீளம் கொண்டவை என்பதால் அவற்றினை உள்ளடக்குவது சாத்தியமாகாது ! மாதம் 3 இதழ்களெனும் போது - ஒட்டு மொத்தமாய் சுமார் 6 பக்கங்கள் துண்டு விழுகின்றன ; அவற்றை சுவாரஸ்யமாய் ரொப்பிட, வழக்கமான காமிக்ஸ் gags ; புதிர் போட்டி என்றில்லாமல் வேறு என்ன செய்யலாம் ? முன்போல் "வாசகர் ஸ்பாட்லைட் " பாணியிலான பக்கங்களை ஒதுக்கும் ஆசை எனக்குள்ளது ; ஆனால் அது இப்போதைய நம் ரசனைகளுக்கு சரி வருமா ? அது தவிர, வேறு என்ன முயற்சிக்கலாம் ? (தொடர்கதைகள் என்பது நிச்சயம் ஒரு option ஆகாது ; ஆர்ட் பேப்பரில் வரும் நமது தற்போதைய இதழ்களில் தொடர்கதைப் பக்கங்களைக் கிழித்து வைத்து கதையினை ஒருங்கிணைக்க  நிச்சயம் யாரும் ஆர்வம் காட்டப் போவதில்லை தானே ?!)  What else can be done ?

5.லயனின் 30-வது ஆண்டுமலரின் கதைத் தேர்வுகள் ஒரு பக்கமிருக்க ; இந்த இதழில் நண்பர்களது பங்களிப்பும் நிச்சயம் இருந்திட வேண்டுமென்பது என் அவா ! குறைந்த பட்சம் 10 பக்கங்கள் உங்களின் சிந்தனைச் சிதறல்களுக்கென ஒதுக்கவிருக்கிறேன் ! "லயனும், நீங்களும் " என்ற ரீதியில் உங்களின் சந்தோஷங்கள் ; வருத்தங்கள் ; உற்சாகங்கள் ; ஆதங்கங்கள் எதுவாக இருப்பினும் பகிர்ந்து கொள்ளலாம் ! இப்போதிலிருந்தே உங்களின் பேனாக்களை / கீ போர்டுகளை இதன் பொருட்டு நீங்கள் பிஸி ஆக்கிடலாம் ! கடிதமாகவோ ; அல்லது மின்னைஞ்சலாகவோ "லயனும் -நானும்" என்ற தலைப்போடு அனுப்புங்களேன் ! 

வரும் சனிக்கிழமை முதலாய் (8th.Feb) திருச்சி நகரில் துவங்கவிருக்கும் ரோட்டரி சங்க புத்தக விழாவில் நாமும் பங்கேற்கிறோம் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறேன் ! உங்களின் வருகைகள் நமக்குப் பெருமை சேர்க்கும் ; please do visit folks !! மீண்டும் சிந்திப்போம் ! Bye for now !

திருச்சியில் இன்று துவங்கும் புத்தகக் காட்சியில் நமது ஸ்டால் நம்பர் 13 !

316 comments:

 1. Replies
  1. டியர் எடிட்டர்ஜீ!!!

   உலக அதிசயமாக நேற்று அனுப்பப்பட்ட புத்தகங்கள் இன்று அடியேனுக்கு வந்து சேர்ந்துவிட்டது.புத்தகங்களை பிரித்துப்படிக்க அவகாசமில்லாததால் அட்டைப்படங்களை மட்டும் பார்த்து ரசிக்க வேண்டியதாகிவிட்டது.

   நமது நிறுவனம் இதுவரை வெளியிட்ட அத்தனை காமிக்ஸ் இதழ்களின் அட்டைப்படங்களையும் "காலத்தின் கால்சுவடுகளில்" அட்டைப்படம் தூக்கி சாப்பிட்டு "ஸ்வாகா" செய்துவிட்டது.கிட்டதட்ட கால் நூற்றாண்டு கால இடைவெளியில் மறுபிரவேசம் செய்துள்ள சாகசவீரர் ரோஜர் நிச்சயம் இம்முறை பெரும் வெற்றிகளை ஈட்டுவார் என்பதை அட்டைப்படமும்,அசரவைக்கும் ஓவியங்களும் சான்று பகிர்கின்றன.

   அடுத்த ஆண்டு இவருக்கு கூடுதல் வாய்ப்பு தருவீர்கள் என்று நம்புகிறேன்.குறிப்பாக இவரது சாகசத்தில் வெளிவந்த "மர்ம கத்தி" வண்ணத்தில் மறுபதிப்பாக வெளியிடுமாறு வேண்டுகிறேன்.

   அது ஒரு அற்புத கதை!!!

   Delete
  2. saint satan : "மர்மக் கத்தி"யைக் கொண்டு 1986-ல் நான் பட்ட அல்லல் இன்னமும் நினைவுள்ளது சாத்தான்ஜி ! அன்றைய நாட்களில் இது போன்ற மாறுபட்ட ரகக் கதைகள் நமக்குப் புதிது என்பதால் நமது ரசனைகளுக்குச் சரி வருமா என்ற பயம் பேயாய் ஆட்டிப் படைத்தது எனனை !

   Delete
 2. hai இதோ கிளம்பியாச்சு! கூரியர் அலுவலகத்திற்கு!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கள்,புனித சாத்தான் மற்றும் ஸ்டீல் க்ளா!

   Delete
  2. மன்னிக்கவும்!
   வாழ்த்துகள்!புனித சாத்தான் மற்றும் ஸ்டீல் க்ளா!

   Delete
  3. நண்பரே , நான் ஒரு புன்னியார்ஜனை விழாவை சிறப்பிக்க செல்வதால் புத்தகம் வாங்க தாமதமாகலாம் ! முதல் புத்தகம் வாங்க உங்களுக்கு வாழ்த்துகள்(நன்றி சுஸ்கி -விஸ்கி ) !

   Delete
  4. // நான் ஒரு புன்னியார்ஜனை விழாவை சிறப்பிக்க செல்வதால் //

   "புன்னியார்ஜனை" என்றால் என்னது? எப்படியும் 9.30 ஆகும் புத்தகங்கள் கையில் வர.

   Delete
  5. புதுமனை புகுவிழா , நண்பரே கொரியர் ஆஃபீசில் வந்ததை கூப்பிட்டார்கள், அடுத்த ஐந்து நிமிடத்தில் கைப்பற்றி விடுவேன் ! வழக்கம் /டெக்ஸ் போல முதல் ,

   Delete
  6. புதுமனை புகுவிழா! நன்றி. புத்தகம் கையில் கிடைத்ததும் சொல்லிடுங்கள்,ஸ்டீல் க்ளா!

   Delete
 3. சார் கொரியர் ஆஃபீசில் இருந்துதான் வருகிறேன் , மதுரை பொட்டிய இன்னும் ஓடைக்கலயாம் ; பத்து மணிக்கு வர சொல்லிட்டாங்க !

  ReplyDelete
 4. நம் நூலகம் எந்த நிலையில் உள்ளது?

  ReplyDelete
  Replies
  1. senthilwest2000@ Karumandabam Senthil : இம்மாதம் தயாராகிடும். வரிசையாய் சென்னை ; இராமநாதபுரம் ; திருச்சி என புத்தகக் காட்சிகள் வந்து விட்டதால் ஆபீசில் ஆட்பற்றாக்குறை !

   Delete
 5. வாவ்! சிங்கப்பூர் அரசு பொது நூலகங்களில் நமது காமிக்ஸ்!! மகிழ்ச்சியான செய்தி!
  எங்கோ வெளிநாடுகளில்கூட பொதுநூலகங்களில் கூட நமது காமிக்ஸுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்க, 40 வருடமாக தமிழ்நாட்டில் இதை சாத்தியமாக்கிட முடியவில்லையே என்ற எண்ணம் கூசச்செய்கிறது. :(

  சிங்கப்பூரில் இதை சாத்தியமாக்கிய அந்த முகம் தெரியா நண்பர்களுக்கு நன்றிகளும். வாழ்த்துகளும்! (தமிழ்நாட்டு நூலகங்களில் நடப்பது மாதிரியே அங்கேயும் புக்ஸை யாரும் சுட்டுடாம பார்த்துக்கோங்க சார்)

  ReplyDelete
 6. ........சின்னமனூர்ல படிச்சாக! அந்த சிங்கப்பூர்லயும் படிக்கராக! இது எல்லாம் உங்களால சிங்கராஜா எல்லாம் உங்களால. காலை முதல் செய்தியே உற்சாகமான ஆரம்பத்திற்கு சான்று. வாழ்த்துக்கள் சார் .

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா! பொருத்தமான பாட்டு! :)

   Delete
  2. சேலம் Tex விஜயராகவன் : சேலத்திலேயும் படிச்சிட்டீகளா இந்த மாசக் கதைகளை ?

   Delete
 7. சார் ...சிங்கப்பூர் நண்பருக்கு முதலில் வாழ்த்துகளை கூறி கொள்கிறேன் .

  ஜில் ஜோர்டன் முதல் சாகசத்தில் என்னை கவர்ந்து விட்டார் .அடுத்து வருவதிலும் கண்டிப்பாக கவர்வார் என்ற நம்பிக்கை உண்டு .கார்டூன் பாணியாக இருந்தாலும் ....கதை சீரியஸ் ஆக இருந்தாலும் நாயகரின் சிஷ்யர் கார்ட்டூன் பாணிக்கு ஈடு கொடுப்பதால் தாராளமாக அவரை களம் இறக்கலாம் .

  ரோஜரை பொறுத்தவரை தாங்கள் சொன்னது போல பல வருடங்களுக்கு முன் சந்தித்திருந்தாலும் இப்போது கவர்வாரா என்பது அவரின் சாகசத்தை படித்த பின்னர் தான் தெரிய வரும் என்பதால் காத்திருக்கிறேன்.

  ஜானி திகிலில் பேட் மே ன் பிறகு மிகவும் ரசித்த ஹீரோ அவர் .தாரளமாக அவருக்கு பதவி உயர்வு அளிக்கலாம் சார் .

  துண்டு விழும் பக்கங்களுக்கு என்ன செய்யலாம் ...? என்ற வினாவிற்கு " சிங்கத்தின் சிறு வயதில் " கட்டுரையை இன்னும் இரண்டு பக்கத்திற்கு கூடுதல் ஆக எழுதலாம் என்பதே எனது ஆவல் . :-)

  ReplyDelete
 8. " லயனும் நானும் " என்ற பகுதியில் இடம் பெரும் நண்பர்களுக்கு " பழைய காமிக்ஸ் " ஏதாவது பரிசு அளிக்கும் திட்டம் உள்ளதா சார் ? :-)

  ReplyDelete
  Replies
  1. Paranitharan K : எங்கள் குடௌனில் இருந்து பழதாகிப் போனவைகளும் "பழைய புத்தகங்கள்" பட்டியலில் சேர்த்தி எனில் - நிச்சயமாய்த் தரலாமே !

   Delete
 9. சிங்கபூரில் சிங்கம்... பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது... ஜில் ஜோர்டான் கதை (ஒன்று மட்டுமே படித்துள்ள போதிலும்) உண்மையிலயே ஒரு வித்தியாசமான பாணி தான்.. கதை ஓட்டத்தை புரிந்து கொள்ள பெரிதாக அலட்டி கொள்ள வேண்டியதில்லை என்பதால் இளம் வாசகர்களுக்கு பிடித்த ஒன்றாகவே இருக்கும்.

  ReplyDelete
 10. சிங்கம் களம் இறங்கிடுச்சு .....

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. நல்ல செய்தி சார்

  ReplyDelete
 13. லயன் கால் சென்ட்டர் ..........

  ட்ரிங் ட்ரிங் ............
  வணக்கம் உங்கள் காமிக்ஸை IVR மூலம் தேர்வு செய்ய...............

  கீழ் கண்ட எண்ணை டயல் செய்யுங்கள்

  லயன் காமிக்ஸுக்கு எண் ஒன்றை டயல் செய்யுங்கள்

  முத்து காமிக்ஸுக்கு எண் இரண்டை டயல் செய்யுங்கள்

  SUNSHINE காமிக்ஸுக்கு எண் மூன்றை டயல் செய்யுங்கள்

  GRAPHIC காமிக்ஸுக்கு எண் நான்கை டயல் செய்யுங்கள்

  காமிக்ஸ் கிளாச்சிக்கு எண் ஐந்தை டயல் செய்யுங்கள்

  மறுபதிப்பு காமிக்ஸுக்கு எண் ஆறை டயல் செய்யுங்கள்

  SELECTED BLACK அண்ட் WHITE காமிக்ஸுக்கு எண் ஏழை டயல் செய்யுங்கள்.

  கேப்டன் டைகர் காமிக்ஸுக்கு எண் எட்டை டயல் செய்யுங்கள்.........

  சந்தாவை புதுபிக்க எண் ஒன்பதை டயல் செய்யுங்கள்......பீப் ஒலிக்கு பிறகு உங்கள் கிரெடிட் கார்ட் எண்ணை பதிவு செய்யவும்..............

  மெயின் மெனுவிற்கு செல்ல எண் பூஜியத்தை அழுத்தவும்

  லயன் கால் சென்ட்டர் அழைத்ததற்கு நன்றி ......................


  ReplyDelete
  Replies
  1. எந்திரு மாஸ்டர் எந்திரு............எந்திரு மாஸ்டர் எந்திரு............எந்திரு மாஸ்டர் எந்திரு............

   Delete
  2. எண் 8ஐ தவிர எல்லா எண்ணையும் அழுத்துவேனாக்கும். (பூனைகளுக்கு 8 - ராசியில்லாத நம்பர் ஹி ஹி)

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. முகுந்தனை பார்த்தா பூனை பதறுதே...............இதே புலியா இருந்தா நடக்கறதே வேற

   Delete
  5. - இரத்தப்படலம் கதைகளுக்கு எண் 13ஐ அழுத்தவும்.
   - மதியில்லா மந்திரியுடன் நேரடியாகத் தொடர்புகொள்ள... அருகிலிருக்கும் தண்ணீர் பக்கெட்டுக்குள் குதிக்கவும்...

   Delete
  6. இந்த மாதிரி IVR இருந்த எப்பிடி இருக்கும் ?

   Delete
  7. .....////////அருகிலிருக்கும் தண்ணீர் பக்கெட்டுக்குள் குதிக்கவும்...////////// அப்புறம் சுவர்க்கம் தான்

   Delete
  8. Dial 'M' for மந்திரியார் !

   Delete
 14. மேற்கின் மன்னன் தங்க தலைவன் டைகர் தான் எப்போதும்...!!!

  ReplyDelete
  Replies
  1. பிடிச்சிருக்கு

   Delete
  2. மறுபடியுமா....

   முடியுல..

   Delete
  3. அவுங்க பிடுங்கிற ஆணி எல்லாமே வேண்டாத ஆணி தான்

   Delete
 15. சிங்கம் மலைகோட்டை மாநகரில் நாளை !

  ReplyDelete
 16. //So - "காலையில் கூரியரைப் படை எடுப்போர்" சங்கத்தின் அங்கத்தினர் தம் பணியினை இன்று செய்திடலாம் ! //
  :-D

  //அயல்நாட்டில் நமது காமிக்ஸ் பற்றிய பேச்சு எழும் சமயத்திலேயே - சின்னதாய் இன்னொரு சந்தோஷத் தகவல் பரிமாற்றமும் கூட ! //

  //இன்னொரு சந்தோஷத் தகவல் // !!??? இந்த பத்தியின் முன்னே அயல் நாட்டில் காமிக்ஸ் பற்றிய தகவலில் தபால் விலை இரண்டு மடங்காக உயர்ந்ததை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். நிச்சயம் அது நமது அயல் தேசத்து மக்களுக்கு சந்தோஷ செய்தியாக இருக்காது. : (!

  //ஆனால் அந்நூலகங்கள் நமது இதழ்களின் நிறையப் பிரதிகளை எவ்விதமோ வாங்கி தற்போது வைத்துள்ளனவாம் !! //

  CLAP! CLAP! CLAP! :-)

  //இம்மாத இதழ்கள் கிடைக்கப் பெற்ற பின்னே ; // WAITING......!!!!


  //52 பக்க format (லயனில் மட்டும் 56) என்பது நமது 2014-ன் பாணி என்றான பின்னே - ஒவ்வொரு பிரான்கோ-பெல்ஜிய சாகசமும் 44 பக்கங்களை ஆக்ரமித்துக் கொண்டான பின்னே //

  52 பக்கங்களை விடுத்து 44 +2 பக்கங்கள் எனக்கொண்டு, மீதி பக்கங்களை சேமித்து அதன் மூலம் மிச்சமாகும் பணத்தை கொண்டு அட்டையை கனமாக்கிட சாத்தியங்கள் உள்ளதா சார் ? அப்படி வாய்ப்புகள் உள்ள தருவாயில் HARD BOUND தரத்தில் நமது காமிக்ஸ் வெளிவந்தால், பக்கங்கள் குறைகிறது என குறைபட்டுக்கொள்வோர் அதிகம் இருக்க மாட்டார்கள். நமது புத்தகமும் கைகளில் கனமாக தோன்றும். : )!

  //"லயனும், நீங்களும் " என்ற ரீதியில் உங்களின் சந்தோஷங்கள் ; வருத்தங்கள் ; உற்சாகங்கள் ; ஆதங்கங்கள் எதுவாக இருப்பினும் பகிர்ந்து கொள்ளலாம் ! //

  அருமையான முயற்சி.!"லயனும், நீங்களும் " / "லயனும்,நாங்களும்"

  ReplyDelete
  Replies
  1. விஸ்கி-சுஸ்கி : //52 பக்கங்களை விடுத்து 44 +2 பக்கங்கள் எனக்கொண்டு, மீதி பக்கங்களை சேமித்து அதன் மூலம் மிச்சமாகும் பணத்தை கொண்டு அட்டையை கனமாக்கிட சாத்தியங்கள் உள்ளதா ?//

   அட்டையை இதற்கும் மேல் கனமாக்கினால் கஞ்சி போட்ட வேஷ்டியின் விறைப்போடு நிற்கும் !

   Hardbound புக்ஸ் என்பது மாதந்தோறும் சாத்தியமாகாதே சார் ; அதற்கான equipment வாங்கிடாது கையால் செய்யும் முயற்சிகள் சொதப்பலாகவே இருக்கும் ! நமது long term planning -ல் இதற்கு நிச்சயம் ஒரு budget போட ஆர்வமுள்ளது எனக்கு !

   Delete
 17. //அயல்நாட்டில் நமது காமிக்ஸ் பற்றிய பேச்சு எழும் சமயத்திலேயே - சின்னதாய் இன்னொரு சந்தோஷத் தகவல் பரிமாற்றமும் கூட ! //
  +1

  ReplyDelete
 18. டியர் விஜயன் சார்,

  சிங்கப்பூர் நூலகத்தில் நமது காமிக் புத்தகங்களை இடம் பெறச் செய்த அந்த வாசகருக்கு வாழ்த்துகள்! :)

  பக்கங்களைப் பொறுத்த வரை, அட்டைகளின் பின்புறத்தைச் சேர்த்து மொத்தம் 54 (52 + 2) பக்கங்கள்; இதில், லயனில் (56 + 2) உள்ள கூடுதல் 4 பக்கங்கள் - சிங்கத்தின் சிறு *வலையில்* - பகுதிக்காக நீங்கள் ஒதுக்கி இருப்பது... சரிதானே?! :)

  லயன் (58):
  கதை - 44
  தலையங்கம் - 1 அல்லது 2
  சி.சி.வயதில் - 2
  சி.சி.வலையில் - 4
  விளம்பரங்கள் - 2 (முடிந்த வரை அட்டைகளின் பின்புறம் தள்ளி விடலாமே?!)
  மீதம் = 4 அல்லது 5 பக்கங்கள்! (~10% பக்கங்கள்!)

  முத்து / சன்ஷைன் (54):
  கதை - 44
  தலையங்கம் - 1 அல்லது 2
  விளம்பரங்கள் - 2
  மீதம் = 6 அல்லது 7 பக்கங்கள்! (>10% பக்கங்கள்!)

  மொத்தத்தில் நான்கு முதல் ஏழு பக்கங்கள் வரை மீதமிருக்கும்! ஒரு பக்க, இரு பக்க, மூன்று பக்க... என்று ரக வாரியாக ஃபில்லர் கதைகள் இருக்கின்றனவே? லக்கி லூக் & மந்திரி - இவர்களுடையதைத் தவிர, வேறு சிறு கதைகளே இல்லையா என்ன?!

  அட்லீஸ்ட், ஒரு பக்க ஃபில்லர் கதைகளைக் கொண்டு மீதமுள்ள பக்கங்களை நிரப்ப முயற்சி செய்யுங்கள்! அத்தகைய குட்டிக் கதைகள் அனைவருக்கும் பிடிக்கிறதோ இல்லையோ, வயதில் சிறியவர்களை / முழுநீள காமிக்ஸ் படிக்கும் பொறுமை இல்லாதவர்களைக் கவரக் கூடும்! நாளடைவில் அது நல்ல பயன் தரலாம்!

  இல்லை இந்தப் பிரச்சினையே வேண்டாம் என்றால், 10% பக்கங்கள் & ஃபில்லர் கதைகளுக்கான ராயல்டி தொகை - இவை மிச்சமவதால் சிறியதாக விலை குறைப்பு கூட செய்யலாம் - ₹60 என்பதை சற்றே குறைக்கலாம் (₹50 அல்லது ₹55?) - இதன் மூலம் (நேரடி) விற்பனையும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது! இந்த 'பக்கக் குறைப்பு' ஐடியாவை சொன்னதால், நான் குண்டு க்ளப் மெம்பர்களிடம் மொத்து வாங்கும் வாய்ப்பும் பலமாக இருக்கிறது! :D

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக நண்பரே .....

   ஏற்கனவே நாங்கள் பக்கம் குறைகிறது ..,குறைகிறது என்று கூவி கொண்டு இருக்கிறோம் .நீங்கள் இன்னும் வேற குறைக்க சொல்லி ஆசிரியரை தூண்டுகிறீர்.

   வேண்டாம் நண்பரே இந்த கொலை வெறி ....

   Delete
  2. பரணிதரன், பக்கங்களை இதற்குக்கீழே குறைப்பது நன்றாக இருக்காது என்றாலும் Filler கதைகள் பொருத்தமாக அமையாதபட்சத்தில் அவ்வப்போது ரூ50/- வெளியீடுகளை போடுவது Better தான் (இது நடைமுறைக்கு வராது என்பதும் தெரிந்ததே).

   இம்மாதத்து ஜானி கதையில் 7 பக்கங்களை ஒரு B&W திகில் சிறுகதை அடைத்துவிட்டது. இம்மாதிரிக் கதைகள் தற்கால வாசகர்களுக்கு ஒத்துவருமா என்பது சந்தேகமே. அதற்கு பதிலாக விலை/பக்கம் குறைவது நல்ல அணுகுமுறையே என்பதை சற்று தயக்கத்துடன் கூறிக்கொள்கிறேன்! :D

   Delete
  3. @பரணிதரன்:

   என்னைப் பொறுத்த வரை பிரதானக் கதையையும், உள்ளட்டைகளைச் சேர்த்து அதிக பட்சம் ஆறு பக்கங்களுக்கு மிகாத ஆசிரியர் பகுதிகளையும் (தலையங்கம் + சி.சி.வ. + விளம்பரம் + வெளியீடு விபரம்) தவிர்த்து வேறெதுவுமே முக்கியம் கிடையாது! முக்கியத்துவம் குறைவான பகுதிகளை தவிர்ப்பதன் மூலம், இதழின் விலையை ₹50 அல்லது ₹55 ஆக நிர்ணயிக்க முடியுமானால், என் ஓட்டு அதற்கே! அடுத்த வருடம் விலை உயர்ந்தால் மீண்டும் ₹60-க்கே திரும்பி விடலாம், டோன்ட் வொர்ரி! ;)

   50-50:
   ஐம்பது பக்கம், ஐம்பது ரூபாய்! ;) ஃபில்லர் கதைகளை தவிர்ப்பதன் மூலம், சந்தா கட்டியவர்களுக்கு, ஆண்டு இறுதியில் மீதமிருக்கும் தொகையில் சில கூடுதல் புத்தகங்களும் கிடைக்கும் (அதாவது, முழுநீளக் கதைகள்!)!

   இதில் இன்னொரு வசதியும் இருக்கிறது! இனி வரும் காலங்களில் ஆசிரியர் புத்தகத்தின் விலையை ஏற்றினாலும், இதற்கு மேலும் பக்கங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவே முடியாது அல்லவா?! ;) கடந்த ஆண்டு இதே சமயம் வெளியான 'வில்லனுக்கொரு வேலி' இதழுடைய வண்ணப் பக்கங்களின் எண்ணிக்கை 58; அதோடு போனஸாக 16 கருப்பு வெள்ளைப் பக்கங்களும் வந்தன - அழகான பெர்ஃபெக்ட் பைண்டிங் வேறு! அதே போல, 2012-ல் பக்கங்களின் விகிதம் 2013-ஐ விடவும் அதிகம்!

   ஒவ்வொரு ஆண்டும் சிறிது சிறிதாக "விலையேற்றம் + பக்கங்கள் குறைப்பு" என்று இரண்டு பக்கமும் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதற்குப் பதில், எப்போதும் ஒரே போல ஐம்பது பக்கங்கள் என்ற கான்செப்ட் எவ்வளவோ பெட்டர் அல்லவா?! (விலையேற்றம் தவிர்க்க முடியாத ஒன்று!)

   //வேண்டாம் நண்பரே இந்த கொலை வெறி .... //
   'இல்லை இல்லை, பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேண்டும்' என்று நீங்கள் வலியுறுத்தினால், அதற்கான யோசனையையும் ஏற்கனவே நான் சொல்லி இருக்கிறேனே நண்பரே?! ;)

   //ஒரு பக்க, இரு பக்க, மூன்று பக்க... என்று ரக வாரியாக ஃபில்லர் கதைகள் இருக்கின்றனவே? லக்கி லூக் & மந்திரி - இவர்களுடையதைத் தவிர, வேறு சிறு கதைகளே இல்லையா என்ன?! அட்லீஸ்ட், ஒரு பக்க ஃபில்லர் கதைகளைக் கொண்டு மீதமுள்ள பக்கங்களை நிரப்ப முயற்சி செய்யுங்கள்! அத்தகைய குட்டிக் கதைகள் அனைவருக்கும் பிடிக்கிறதோ இல்லையோ, வயதில் சிறியவர்களை / முழுநீள காமிக்ஸ் படிக்கும் பொறுமை இல்லாதவர்களைக் கவரக் கூடும்! நாளடைவில் அது நல்ல பயன் தரலாம்!//

   பின்குறிப்பு:
   சி.சி.வ. (சிங்கத்தின் சிறு வயதில்) என்ற சுருக்கமான எழுத்துக்களை சட்டென பார்க்கையில், "சிவ சிவ" என்றே தெரிகிறது! :)

   @Ramesh Kumar:
   //இம்மாதத்து ஜானி கதையில் 7 பக்கங்களை ஒரு B&W திகில் சிறுகதை அடைத்துவிட்டது//
   கேட்கவே பயமாக இருக்கிறது! :D

   Delete
  4. // கேட்கவே பயமாக இருக்கிறது! :D //

   கதையின் பெயர் "எஸ்டேட் பேய்!"

   இரவில் படிக்கவும்!

   Delete
  5. கார்த்திக்கின் 50-50 யோசனை அபாரமானதாகத் தோன்றுகிறது. ஃபில்லர் பேஜ்களை இழக்கிறோம் என்பது தக்கனூண்டு வருத்தமளிக்கும் விசயமென்றாலும், 'இனி பக்கங்களைக் குறைக்கவே வாய்ப்பில்லாத விலையேற்றம் மட்டுமே' என்ற நிலைத்தன்மை ஏற்படும் என்பதோடு, இன்னுமொரு முழுநீள கதையுடன் ஒரு புத்தகமும் கிடைத்திட வாய்ப்பிருக்கிறதென்ற அந்த தொலைநோக்கு சிந்தனைக்கு எழுந்துநின்று கை தட்டுகிறேன் (உட்கார்ந்தபடி தட்டினால் தொப்பையில் இடிக்க வாய்ப்பிருக்கிறது ஹி ஹி).

   அட்டகாசமான சிந்தனை கார்த்திக்!

   எடிட்டருக்கு இதில் எந்தவகையான சிக்கல் எழும் என்பது எனக்குத் தெரியாதபோதிலும், செயல்படுத்திட சாத்தியப்பட்டால் என் முழு ஆதரவும் இந்த யோசனைக்கே! :)

   Delete
  6. யோவ்.. பக்கங்களைக் குறைக்கும் ஐடியாவை யாரு, எந்தக் காரணத்துக்காக சொன்னாலும் நேர்ல வந்து உதைப்பேன். ஜாக்கிரதை!

   ஐடியா சொல்றாங்களாம் ஐடியா! போங்கையா வேலையப் பாத்துகிட்டு.. :-)))))

   போடறதுக்கு ஒண்ணுமில்லன்னா, காமிக்ஸ், காமிக்ஸ்னு எழுதி அந்தப் பக்கங்களை பில்லப் செய்தாக்கூட போதும். காமிக்ஸ்னு படிச்சாலே காமிக்ஸ் படிச்ச திருப்தி கிடைச்சிடும். :-)))))

   Delete
  7. // யோவ்.. பக்கங்களைக் குறைக்கும் ஐடியாவை யாரு, எந்தக் காரணத்துக்காக சொன்னாலும் நேர்ல வந்து உதைப்பேன். ஜாக்கிரதை! //

   ஒரு நாலைந்து பக்கங்களைதானே குறைக்க சொல்றாங்கோ (கவனிக்கவும்: அது நானில்லை). அதனால் இலேசாக உதைக்கவும்... :D

   Delete
  8. @ரமேஷ்,

   :-)))))))

   பின்ன என்ன? இந்த ஒல்லி புக் எப்படியும் விற்பனைக்கு உதவப்போவதில்லை. 200 பக்கம் 200 ரூபாய்னாலும், 50 பக்கம் 50 ரூபாய்னாலும் கான்செப்ட் ஒண்ணுதான். 200 புக்கு 4 விக்கிற இடத்துல 50 ரூபா புக்கு 16 புக்கு விக்கணும். வாங்கறவங்களுக்கு சாய்ஸ் குடுக்குறது நியாயம்தான் என்றாலும் அது விற்பனையை குறைக்கத்தானே செய்யும். இந்த சென்னை புக் பேர்ல புக் நிறைய எண்ணிக்கையில வித்தாலும், NBS குண்டு தந்த விற்பனையை எட்டமுடியாமல் போனதை அனுபவத்தால் உணர்ந்தோமே!

   வாசகர் ஏழ்மையை கணக்கில் கொள்ளவேண்டுமே என்பது ஒல்லி புக் கான்செப்டுக்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது. என்னைக் கேட்டால் அதுவும் வீக்கான வாதமே! ஒருவரிடம் 50 ரூபாய் இருக்கிறது. 200 புக்கை வாங்கமுடியவில்லை, ஏக்கமாக பார்க்கிறார் என வைத்துக்கொள்வோம். அவருக்காக 50 ரூ புக் ஒன்று போட்டால் பரவாயில்லை, நியாயம். நாம் என்ன செய்கிறோம்? 50 ரூபாயில் 4 புக்கு போடுறோம். ஏன் மிச்ச 3 புக்கை வாங்க முடியலைனு அவர் ஏங்க மாட்டாரா? என்ன கதை இது? இன்னொரு வகையில், காமிக்ஸுக்கு 50 ரூ இந்தக் காலத்தில் எந்த ஏழையாலும் கொடுக்கமுடியாது என்பது வேறு விஷயம்.

   இந்த அழகுல புக்கை இன்னும் ஒல்லியாக்கணுமாம்!! பிச்சி பிச்சி!!
   (திரும்பவும் முதல்ல இருந்தா.. முடியல.. -ஆசிரியர்)

   Delete
  9. +1 for @Adhi idea
   200 pages = 200 rs
   OR
   100 pages = 100 rs - i think this could be the optimal size


   Delete
  10. எஸ்டேட் பேய் - ஸ்ஸ்ஸ் யப்பா... முடியல! பொறுங்கள், அந்த துப்பறியும் கம்பியூட்டர் ஜானியிடமே கேட்டுச் சொல்கிறேன்...

   "இது போன்ற மொக்கைக் கதைகளுக்குப் பதில், ஆதி அவர்களின் அகிடியாவையே வழிமொழிகிறேன்! பேசாமல், அந்த ஏழு பக்கங்களிலும் காமிக்ஸ்... காமிக்ஸ்... காமிக்ஸ்... காமிக்ஸ்... காமிக்ஸ்... காமிக்ஸ்... காமிக்ஸ் என்று பெரிய எழுத்துக்களில் பிரிண்ட் செய்து விடுங்கள்!"

   என்று ஜானி, தன்னுடைய பழைய பில்ட்-இன் டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டரில் கதறக் கதற பிரிண்ட் போட்டுக் கொடுத்திருக்கிறது! :D

   @ஆதி தாமிரா:
   //பக்கங்களைக் குறைக்கும் ஐடியாவை யாரு, எந்தக் காரணத்துக்காக சொன்னாலும் நேர்ல வந்து உதைப்பேன்//
   ஷீக்கிரம் வாங்க ஜி!!! பெண்களூர் குளிர்ல, பைக் ஷ்டார்ட் பண்றது ரொம்ப கஷூட்டமாக ஹிருக்கு! தினம் காலையில் வந்து உதைஷ்ஷுக் கொடுஷ்துட்டுப் போங்க!!! :D

   @Ramesh Kumar:
   //(கவனிக்கவும்: அது நானில்லை). அதனால் இலேசாக உதைக்கவும்... :D//
   ஏன், நீங்களா இருந்தா பலமா உதைக்கலாமோ?! :D

   @ஆதி தாமிரா:
   நோட் த அபவ் & பிலோ லா பாயின்ட்ஸ் ப்ரம் ரமேஷ்! :)
   //விலை/பக்கம் குறைவது நல்ல அணுகுமுறையே என்பதை சற்று தயக்கத்துடன் கூறிக்கொள்கிறேன்!//
   தயக்கமில்லாமல் பலமாக உதைக்கவும்! நாட்டாமையிடம் அநேகமாக என்பீல்ட் புல்லட் இருக்கும், ஸ்டார்ட் செய்வது கடினம்! :D

   @ஆதி தாமிரா again:
   //200 பக்கம் 200 ரூபாய்னாலும், 50 பக்கம் 50 ரூபாய்னாலும் கான்செப்ட் ஒண்ணுதான். 200 புக்கு 4 விக்கிற இடத்துல 50 ரூபா புக்கு 16 புக்கு விக்கணும்//

   சூப்பர் ஜி, சூப்பர் ஜி!!! நல்லா கணக்கு போடறீங்க! ;) கேப்டனுக்கு அடுத்து நீங்க தான்! :D 50-50 பிடிக்கலன்னா என்ன இப்போ?! ஒரு 44-45?! (ஹையா கஷ்டமான கணக்கு கொடுதுட்டேனே!!!) :D

   @எடிட்டர்:
   கா.கா.சு. அ.ப.மும், மு.கா. லோகோவுக்கு போட்டிருக்கும் ம.க. பார்டரும் மி.அ.! :)

   Delete
  11. Karthik Somalinga //கா.கா.சு. அ.ப.மும், மு.கா. லோகோவுக்கு போட்டிருக்கும் ம.க. பார்டரும் மி.அ.! :)//

   திரும்பிய திசையெல்லாம் கா.க ..கி.க ..என எங்கள் மாநிலமே அதகளமாகி வரும் இந்நாட்களில் "ச.பா." பயன்படுத்தவே பயமாகவுள்ளது ! Anyways பா.ந. !!

   Delete
  12. ஆதி தாமிரா : //ஒருவரிடம் 50 ரூபாய் இருக்கிறது. 200 புக்கை வாங்கமுடியவில்லை, ஏக்கமாக பார்க்கிறார் என வைத்துக்கொள்வோம். அவருக்காக 50 ரூ புக் ஒன்று போட்டால் பரவாயில்லை, நியாயம். நாம் என்ன செய்கிறோம்? 50 ரூபாயில் 4 புக்கு போடுறோம். ஏன் மிச்ச 3 புக்கை வாங்க முடியலைனு அவர் ஏங்க மாட்டாரா?//

   ரூ.50 x 4 எனும் போது ஒவ்வொன்றாய் - வசதிப்படும் போதெல்லாம் வாங்கும் சுதந்திரம் உண்டல்லவா ? தவிர பிடித்தமில்லாக் கதைகளைத் தவிர்க்கும் ஒரு வாய்ப்பையும் இது தர வல்லது தானே ?

   2 நாட்களுக்கு முன்பாய் எனனை சந்தித்த நண்பரொருவர் - "தோர்கல் எனக்குப் பிடிக்கலை சார் ; இதை ஏன் அனைவரும் இவ்வளவு சிலாகித்தார்கள் ? " எனக் கேட்டார் ! அது போன்ற நண்பர்களுக்கு 'pick n choose ' வசதியினை தற்சமய பாணி வழங்குகிறதே !

   Delete
  13. decoding :

   கா.கா.சு. = காலத்தின் கால்சுவடுகளில்
   அ.ப.மும் = அட்டைப்படமும்
   மு.கா. லோகோவுக்கு = முத்து காமிக்ஸ் லோகோவுக்கு
   ம.க. பார்டரும் = மஞ்சள் கருப்பு பார்டரும்
   மி.அ. = மிக அருமை

   விஜயன்;

   "ச.பா." = சங்கேத பாஷை
   Anyways பா.ந. = Anyways பாராட்டுகளும் நன்றிகளும் :)

   Delete
  14. @ FRIENDS : டாலர் & யூரோவின் எதிராக நமது ரூபாயின் மதிப்பு இதற்கும் மேலாய் ஏதேனும் புதுப் பாதாளங்களைத் தேடி குப்புற விழாதிருந்தால் - 2015-ன் இறுதி வரையிலாவது நமது தற்சமய விலை - பக்கம் ratio வினை மாற்றி அமைக்கும் எண்ணமில்லை எனக்கு ! So நம்பிக்கை வைப்போம் நம் நாட்டின் ஸ்திரத்தன்மையின் மீது !

   Delete
 19. புத்தகங்கள் கிடைத்து விட்டது. அனைத்து அட்டைப்படமும் அருமை.!

  ReplyDelete
 20. சிங்கப்பூரின் நூலகங்களில் நமது இதழ்கள் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது... நண்பருக்கு நன்றிகள்.

  ReplyDelete
 21. நானும் கொரியர் அலுவலகம் படை எடுப்போர் சங்கத்தில் இணைந்து 5 நிமிடங்கள் ஆகின்றன ! அட்டைப்படங்கள் ஓஹோ !

  ReplyDelete
  Replies
  1. senthilwest2000@ Karumandabam Senthil : ST கூரியரின் வரலாறு சங்கத்தைப் போற்றட்டும் !!

   Delete
 22. மிகச்சரியாக 12:25 மணியளவில் முகத்தில் ஒரு புன்முறுவலுடன் வழக்கமான ST கொரியர் நண்பர் புத்தகங்களை பத்திரமாக தந்துவிட்டு நன்றிகளை பெற்றுக்கொண்டு சென்றார். வாழ்க அவர்கள் நிறுவனம்! : ))))!

  புத்தக உரையை பிரிக்கும் போது ஒரு சிறு யோசனை தோன்றியது. நீண்ட தொலைவு செல்லும் புத்தகத்தின் முனைகள் மழுங்காமல் இருக்க அதன் CORNERரில் மட்டும் ஒரு சரிய அளவிலான பிளாஸ்டிக் ஷீல்ட்டை, புத்தகத்தின் ஓரங்களில் சாக்ஸ்சை போல போட்டு/மாட்டி விடலாம். அதிக செலவு பிடிக்காத விஷயம்.

  புத்தகத்தின் அட்டைப்படங்கள் அனைத்தும் அருமை. குறிப்பாக ரோஜரின் முன்/பின் அட்டைப்படங்கள் உள்ளத்தை கொள்ளை கொள்கிறன.

  புத்தகங்களின் உள்ளே விரைவாக ஒரு பார்வை செலுத்தியதில், ஜானி அதிக அளவிலான ஆக்சனுடனும்,ஜில் அதிக அளவிலான காமெடியுடனும், ரோஜர் ஒரு VISUAL TREAT ADVENTURE ஆகவும் தெரிகிறது. பிரிண்டிங் தரம் அருமை. வண்ணங்கள் பளிச் ரகம்.

  ஆசிரியருக்கும் பதிப்பக பணியாளர்களுக்கும் நன்றிகள்!

  மீண்டும் சந்திப்போம்! : )))))!

  ReplyDelete
  Replies
  1. விஸ்கி-சுஸ்கி : ரோஜெரின் அட்டைப்படம் சமீப அட்டைப்படங்களுள் ஒரு standout என்பதில் ஐயமில்லை ! இதழ்களைப் படித்து விட்டு அபிப்ராயங்களையும் சொல்லுங்களேன் !

   Delete
 23. புத்தகங்கள் வந்துவிட்டது. இப்போதெல்லாம் முதலில் வாசிப்பது சிங்கத்தின் சிறுவயதில் தொடரையே! சி.சி.வ நிச்சயம் உற்சாகமளிக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. Ramesh Kumar : போராட்டக் குழுத்தலைவரின் கண்ணில் உங்கள் பின்னூட்டம் படாத வரை நன்றிகள் !!

   Delete
 24. புத்தகத்திலிருந்து கண்களை விலக்க முடியவில்லையா ? ஏன் இவ்வளவு அமைதியா இருக்கு ?

  ReplyDelete
 25. விஜயன் சார், 3 புத்தகம்களும் கிடைத்துவிட்டன! நன்றி!

  3 புத்தக அட்டை படம்களும் அருமை! ஜில் ஜோர்டன் அட்டை படத்தில் கருமை நிறத்திற்கு பதில் வேறு வண்ணம் உபயோகபடுத்தி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்! விரைவாக 3 புத்தகம்களை புரட்டியதில் ரோஜேர் கதையின் சித்திரம் மற்றும் வண்ணம் மிகவும் கவர்ந்தது! 3 புத்தகம்களிலும் வண்ண குளறுபடிகள் ஏதும் இல்லை! முக்கியமாக ஜானி கதையின் காமிக்ஸ் டைம்-ல் இந்த புத்தகத்தை இந்த மாதம் கொண்டு வந்துவரை "அப்டேட்" செய்து வெளி விட்டது அருமை!

  அலுவலக பணியாளர்கள் அனைவர்க்கும் எனது நன்றி!

  ஜில் ஜோர்டன் எனக்கு பிடித்த நாயகர், அவரது கதைகளை தொடர்ந்து வெளி இட வேண்டும்! துப்பறியும் போது அவரது மனிதாபிமானதையும் வெளிபடுத்தும் விதம் அருமை! என்னை பொறுத்தவரை அவரது சாகசம் டின்-டின் சாகசம்களுக்கு இணையானது!

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : இப்போதைக்கு நமக்கு எட்டும் தூரத்தில் உள்ள "டின்டின்" இவரே !

   Delete
 26. ஸ்டீல் பாடி என்ன அவ்ளோ மோசமாவா இருக்கு ? யூஸ் பண்ணலாமே !!

  க்ரீன் மனோர் டைப் சிறுகதைகள் ஏதாவது இருந்தால் வெளியிடலாம்

  Spirou and Fantasio ட்ரை பண்ணலாம் (by க்ரீன் மனோர் author )

  Tales from the Crypt ?????

  Grimm's Ghost stories????

  http://www.vintage-books.co.uk/Graphicshortstoryprize/Shorties/

  Once in a while, we can keep வாசகர் ஸ்போட் லைட் போட்டி 2 பேஜ் மட்டும்.

  எவ்ளவோ இருக்கு fill பண்ண, இதெல்லாம் கேட்டுகிட்டு, நல்ல முடிவா எடுங்க சர் சீக்கிரம்...

  ReplyDelete
 27. ஃபில்லர் பேஜ்களுக்கு என்ன செய்யலாம்...

  ஐடியா(1):
  'வாசகர் ஸ்பாட்லைட்'டுக்கு பதிலாக ஒரு மாறுதலுக்காக 'வாசகர் குடும்ப ஸ்பாட்லைட்' கொண்டுவரலாம்.

  ஐடியா(2) :
  பெண்கள்/குழந்தைகள் மட்டுமே பங்குகொள்ளும்படியான போட்டி ஏதாவது நடத்தலாம்
  உதாரணத்திற்கு,
  * டெக்ஸ்வில்லர் பற்றி ஒருபக்கத்திற்கு மிகாமல் ஒரு கவிதை வரைக.
  * இப்புத்தகத்தில் 'டெக்ஸ்' என்ற பெயர் எத்தனைமுறை உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது?
  * இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மொத்த எழுத்துப் பிழைகளின் எண்ணிக்கை யாவை?
  * ஓவியப் போட்டி - நமது பிரதான கெள-பாய்களில் யாராவதொரு டீசன்டாக ஷேவ் செய்து, நல்ல உடையணிந்த நபரை வரைந்து அனுப்புதல்
  ....போன்றவை.

  நம்மை ஏதோ வேற்றுக்கிரக வாசியைப் போல பார்க்கும் நம் குடும்ப நபர்களிடமும் இம்மாதிரியான போட்டிகள் மூலம் காமிக்ஸ் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்திடும் நோக்கமே மேற்கூறிய கருத்துக்கள்.ஹிஹி!

  ReplyDelete
  Replies
  1. அஸ்கு புஸ்க்கு ..........
   இஸ்கு லக்கடி லாலாலக்கடி கோலா கொப்புற கொய்யா.............

   Delete
  2. இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மொத்த எழுத்துப் பிழைகளின் எண்ணிக்கை யாவை?//

   விரைவில் ஆந்தை விழியாரிடம் மொத்து வாங்க ஒரு முதுகு தயாராகிவருகிறது. :-)))

   Delete
  3. ஆதி தாமிரா : நண்டு ப்ரையில் ஒரு நாலு குண்டூர் வத்தலைச் சேர்த்துப் போடச் சொன்னால் போச்சு !

   Delete
  4. தங்க தலைவனை வம்புக்கு இழுத்து வாங்கி கட்டிக்கிறதே வேலையா போச்சு!!!
   அடுத்த ரௌன்ட் ஆரம்பிக்கலாம்னா TTT(தங்க தலைவன் டைகர்) பாசறை தயாராகவே இருக்கிறது...

   Delete
 28. ஸ்டீல் பாடி சிறுகதைகள் ,க்ரீன் மனோர் டைப் சிறுகதைகள் வெளியிடலாம் . நன்றி!

  ReplyDelete
  Replies
  1. selvas : இதற்கு மேலும் என் முதுகில் எண்ணெய் தடவிக் கொண்டால் தோசையே சுட்டு விடலாம் அதன் மீது ! :-)

   Delete
  2. I just finished our 'green manor' stories in 'All New special' - these are perfect short stories for filler pages - not sure whether the publisher would have allowed us to use them as fillers. But the short story quality (Hitchkock type) with tamil translation were great, i am surprised that lot of people didn't like them.

   Delete
  3. V Karthikeyan : //I just finished our 'green manor' stories in 'All New special' //

   என்னது காந்தி செத்துட்டாரா :)

   மொத்தம் வெளிவந்த கதைகள் மொத்தமே மூன்று பாகம் தான் என்று நினைக்கிறேன். அனைத்தையும் ஆசிரியர் இரண்டு புத்தகத்தில் பதிப்பித்து விட்டார். கொலை செய்வீர் கனவான்களே (ANS) + மனதில் மிருகம் வேண்டும் - (இரண்டு பாகம்). எனவே க்ரீன் மேனர் நாம் கேட்டாலும் கிடைக்காது :)

   Delete
 29. ஜாம்பவான்களின் ஜனவரி போய் 'சப்'பென்ற பிப்ரவரி யாக அமையவிருந்ததை ஜானியின் 'கனவுகளைத் துரத்துவோம்' மூலம் அதிரடியாக இணைத்து மீண்டுமொரு பெல்ஜிய அணிவகுப்பு மாதமாக மாற்றிவிட்டீர்கள்!


  ஜோர்டான்: டிடெக்டிவ் கார்டூன் நாயகர் இவர் மட்டுமே என்பதால் தக்கவைத்துக்கொள்ளலாம் .

  ரோஜர்; என் அபிமான ரோஜர் நீண்ட இடைவெளிக்குப்பின் வந்தாலும் ஏமாற்றவில்லை!. இதுவரை வில்லியம் வான்ஸின் கைவண்ணத்தில் பார்த்தவரை முதல்முறையாக கோரியா கைவண்ணத்தில் பார்க்கும் போது சற்றே மாறுபட்டு படு இளமையாகவே தெரிகிறார். ரோஜர் சொற்ப கதைகளில் மாத்திரமே தலையைக்காட்டியிருந்தாலும் எதிலும் ஏமாற்றியதில்லை. இதுமட்டும் விதிவிலக்காயிடுமா என்ன..? (அட்டை - அட்டை அடி பின்னிடீங்க!)

  ரோஜரின் 'மர்மக்கத்தி' என்னுடைய ஆல் டைம் favorite. அந்த spaceship, பல நூற்றாண்டுகள் பின்நோக்கிப் பயணம், spaceship-பை கைப்பற்றத் துடிக்கும் ஓர் வில்லன். ப்பா, சான்சே இல்ல.(ரோஜாரைப் பற்றி எப்பொழுது எழுதினாலும் இந்த வரிகள் தானாகவே எப்படித்தான் வந்து தொலைகிறதோ தெரியமாட்டேன் என்கிறது?) வண்ணத்தில் அடுத்தாண்டு வெளிவந்தால் அடி தூள்!

  ஜானி: இடியாப்ப சிக்கலை முடிச்சவிழ்க்கும் ஒரே நாயகன். க்ரைம் கதைகளின் முடிசூடா துப்பறியும் மன்னன். இவரின் மொத்தக் கதைகளில் நாமொரு 25% கதைகளை பார்த்ததில் சொதப்பல்கள் குறைவென்பதால் பாஸ் மார்க் வாங்கி ப்ரொமோட் ஆகிறார்.

  பாட்டம்லைன்: இவர்களுக்கு என்னதான் மறுவாய்ப்பு வழங்கலாமென்றாலும், நாயகர்களின் இடநெருக்கடியில் வருடத்திற்கு ஓரிடம் கிடைத்தாலே அதிகம்தானே...

  filler pages: புக்கின் நடு பக்கத்தில் தொடர்க் கதைகளை வெளியிடலாம். (4 பக்கங்கள்) பின்னை நீக்கி எடுத்து வைத்துக்கொள்ள வசதியாகயிருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. // புக்கின் நடு பக்கத்தில் தொடர் கதைகளை வெளியிடலாம் (4 பக்கங்கள்) பின்னை நீக்கி எடுத்து வைத்துக்கொள்ள வசதியாகயிருக்கும். //

   அட! சென்டர்-பின் அடிப்பதில் இப்படியொரு வசதி இருக்கா!! இதுவும் கொஞ்சம் நல்ல ஐடியாதான். மொத்தத் தொடரும் முடிஞ்சதுக்கப்புறம் ஒரு அட்டைப் படத்தையும் எடிட்டர் அனுப்பிட்டார்னா அப்படியே பைண்டிங் பண்ணி வச்சுக்கலாம்! :)

   Delete
  2. MH Mohideen : //filler pages: புக்கின் நடு பக்கத்தில் தொடர்க் கதைகளை வெளியிடலாம். (4 பக்கங்கள்) பின்னை நீக்கி எடுத்து வைத்துக்கொள்ள வசதியாகயிருக்கும்.//

   இதில் ஒரே சிக்கல் - முழுக் கதையைப் படிக்கும் போது இடையே தொடர்கதையின் 4 பக்கங்கள் குறுக்கிடுவது தான் ! தவிர, தொடர்களைப் பொறுமையாய் சேகரித்துப் படிக்கும் பழக்கங்கள் அன்றைய ஆனந்த விகடன் ; கல்கி இதழ்களோடு காலாவதியாகிப் போனதொரு பொழுது போக்கு என்றல்லவா நான் எண்ணிக் கொண்டுள்ளேன் ?!

   இங்குள்ள நண்பர்களில் எத்தனை பேருக்கு தொடர்கதைகள் ஒ.கே. ? Let me know please...

   Delete
  3. 'நரகத்தைப் பார்த்தேன்' வகையிலான திகில் அட்வென்ச்சர் (இழையோடும் சோகத்தோடு) கதைகள் தொடராக வந்தால் நன்றாக இருக்கும். ஆவலோடு அடுத்த மாதத்தை எதிர்பார்க்க வைக்கும். வண்ணத்தில் இருந்தால் இன்னும் சிறப்பு!

   Delete
  4. Erode VIJAY : நமது 30-வது ஆண்டுக் கொண்டாட்ட வருடத்தில் அழுகாச்சிகளுக்கு ஒரு temporary ஒய்வு !

   அது சரி...சைக்கிள் காப்பில் உங்கள் போராட்டக் குழுத் தலைவரின் கோட்பாடுகளுக்கு ஒவ்வாத கருத்தை கசிய விட்டுச் செல்கிறீர்களே - ஏதேனும் உட்கட்சிப் பூசலா ? தொகுதிப் பேச்சுவார்த்தையை நாம் ஒரு ஓரமாய் துவக்கி விடுவோமா ?

   Delete
  5. //இங்குள்ள நண்பர்களில் எத்தனை பேருக்கு தொடர்கதைகள் ஒ.கே. ? Let me know please...//

   தொடர்கதைகள் - எனக்கு ஏற்பு இல்லை சார். ஒரு ஆல்பம் அல்லது ஒரு புத்தகம் என்று காமிக்ஸ்கள் முழுமையானதாக இருக்க வேண்டும். பின்னொரு நாளில் தேடி எடுத்து வைத்துப் படிப்பதோ ; புத்தகத்தை கிழித்து பக்கங்களை சேகரித்து வைப்பதோ ; அடுத்த பாகம் என்னவென்று தெரியாமல் அல்லாடுவதோ - இந்த காலத்திற்கும் சரிவரும் என்று எப்படி நினைக்க முடியும் சார் ?!

   Delete
  6. நடு பக்கம் கதா ........................நஹி நஹி ..........நஹி

   Delete
  7. விஜயன் சார், அப்படியா தலைய தூக்கி மேல பாத்தீங்கன்ன ஸ்பைடர் ரோட sinisterseven ரொம்ப நாளா பரண் மேல தூங்கீட்டு இருக்கறதா பாக்கலாம். தொடர் கதைக்கு ஏத்த போர்மட் அது.நீங்க translate கூட பண்ண வேணாம். நம்ம கார்த்திக் கிட்ட கொடுத்தீங்கன்னா மனுஷன் உயிரை கொடுத்து மொழி பெயர்த்து கொடுத்திடுவார். ஸ்பைடர் கதைன்ன அவருக்கு அப்படி ஒர ஈர்ப்பு. நம்ம ரமேஷ் typeset பண்றதுக்கு ஆர்வமாஇருக்கார். :-). ட்ரை பண்ணலாமே.

   Delete
  8. // ஸ்பைடர் கதைடயன்னா அவருக்கு அப்படி ஓர் ஈர்ப்பு //

   ஹா ஹா ஹா! மொத்தக் கதையையும் மொழிபெயர்த்து முடிச்சதுக்கப்புறம் தனக்குத்தானே தலைக்கு மேலே ஒரு 'RIP' போர்டை வச்சுக்கிட்டு மல்லாக்கப் படுத்துடுவார். :D

   Delete
  9. // நம்ம கார்த்திக் கிட்ட கொடுத்தீங்கன்னா மனுஷன் உயிரை கொடுத்து மொழி பெயர்த்து கொடுத்திடுவார். ஸ்பைடர் கதைன்ன அவருக்கு அப்படி ஒர ஈர்ப்பு. நம்ம ரமேஷ் typeset பண்றதுக்கு ஆர்வமாஇருக்கார். :-). ட்ரை பண்ணலாமே. //

   @விஸ்கி-சுஸ்கி, நீங்க சட்டத்தைக் கையில எடுக்கறவிதம் எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு! :D

   Delete
 30. விஜயன் சார்,

  கருப்பு கிழவி , திகில் ஆரம்ப் இதழ்களில் வந்த சின்ன கதைகள் , துப்பறியும் கம்ப்யூட்டர் , ஆர்ச்சி சின்ன கதைகள், ஸ்பைடர், மாயாவி சின்ன கதைகள், குட்டி குரங்கு கபிஷ், இன்ஸ்பெக்டர் ஆசாத், விச்சு & கிச்சு, பஞ்சதந்திர கதைகள் (குட்டீஸ் மிகவும் விரும்புவார்கள்), பூந்தளிர் இதழ்களில் வந்த பிற நாட்டு நீதி கதைகள்/ மற்ற கதைகள், DC காமிக்ஸ் superman மற்றும் batman or other characters with சின்ன சின்ன கதைகள் ட்ரை பண்ணலாம். வேறு ideas வந்தால் போஸ்ட் பண்ணுகிறேன்.
  குபேரன் - சென்னை

  ReplyDelete
  Replies
  1. KUBERAN : குபேரன் சார் - Batman ; Superman போன்ற சர்வதேச சூப்பர் ஹீரோக்களை நாம் filler pages க்கு முயற்சிக்கக் கோரினால் என்னை ஒரு வாரம் ஊறப் போட்டு உதைப்பார்கள் ! ஸ்பைடர் ; மாயாவி வரிசைகளின் குட்டிக் கதைகள் almost done and dusted ! கபிஷ் ; இன்ஸ்பெக்டர் ஆசாத் போன்ற கதைகளை தயாரித்து, விற்பனை செய்து வந்த நிறுவனம் கடை மூடி ரொம்ப காலம் ஆகி விட்டது ! அமர்சித்ரக் கதா நிறுவனப் படைப்புகளான சிறு கதைகளைக் கோரிப் பார்க்கலாம் - ஆனால் வெறும் filler pages ஆக மாத்திரமே காலமெல்லாம் அவர்களது ஆக்கங்களைப் பயன்படுத்திட அவர்கள் சம்மதிப்பார்களா என்பது சந்தேகமே ! கேட்டுப் பார்க்கலாம் !

   Delete
  2. // ஆனால் வெறும் filler pages ஆக மாத்திரமே காலமெல்லாம் அவர்களது ஆக்கங்களைப் பயன்படுத்திட அவர்கள் சம்மதிப்பார்களா என்பது சந்தேகமே ! கேட்டுப் பார்க்கலாம்! //

   Curious to see it happen! :)

   அவர்கள் டைஜஸ்ட்களாக வெளியிடும் கதைகளைத் தருவார்களா என்பது சந்தேகமே (Ex: காக்கை காளி, வேட்டைக்கார வேம்பு etc). ஆனால் தனியாகவும் உதிரிக்கதைகளாகவும் வெளிவந்தவைகளுள் நமக்குப் பொருத்தமான ஒருடஜன் கதைகளின் list-உடன் பேசிப்பார்த்தால் சம்மதிக்க வாய்ப்பு அதிகம். ஏனெனில் உதிரிக்கதைகள் அவர்களுடைய Reprint Plan-ல் இருக்காது என்பதால் அவை மீண்டும் வெளிவருவது அவர்களும் வரவேற்கக்கூடிய விஷயமாக இருக்கும்.

   ஆனால் உதிரிக்கதைகளை தேர்வுசெய்து எடுப்பதுதான் கஷ்டமான காரியம். பழைய வெளியீடுகளிலிருந்து பொருமையாக வாசித்து தேர்வு செய்வது tiresome job தான்.

   Delete
 31. காலத்தின் சுவடுகள் வித்தியாசமான அட்டைப்படம் ! ஓவியங்கள் அற்புதமாய் அமைந்ததுடன் வண்ணக்கலவைகள் தூள் ! உள்ளே நெஞ்சை அள்ளும் ஓவியங்கள் !பின்னட்டை தூள் !
  காவியில் ஒரு ஆவி அட்டைபடம் எதோ வகையில் மனதை ஈர்க்கிறது ! பின்னட்டை அசத்தல் !
  நினைவுகளைத் துரத்துவோம் அட்டை படம் அழகிய ஓவியம் ! பின்னட்டை எப்போதோ பார்த்தது போல உள்ளது !
  ஆக மொத்த அட்டைகளும் சூப்பர் !
  சிங்கத்தின் சிறுவயதில் என் மனதை கொள்ளை கொண்ட லயன் சூப்பர் ஸ்பெசல் கதை தேர்வுகள் வெகு சுவாரஸ்யம் ! இந்த முறை மனதை திறந்த ஆசிரியர் இக்கட்டான சூழல் துணிச்சலை தந்ததை குறிப்பிட்டார் !
  அருமை ! அடுத்த இதழுக்காக காத்திருக்கிறேன் !

  ReplyDelete
  Replies
  1. நில் கவனி சுடு என நிஜமான ஆக்' ரோசத்துடன் டெக்ஸ் !
   முகமற்ற கண்கள் ,தோர்கள்,விரியனின் விரோதி அட்டகாசமான தலைப்பில் பதிமூன்றின் எதிரி மங்கூசின் பார்வையில் சார் சீக்கிரம் காலனின் கைக்கூலி ராலண்டை வெளிவிடுங்கள் ......

   Delete
  2. ஆஹா நீண்ட நாட்களுக்கு பின் நீண்ட நெடும் நாட்களுக்கு முன்னர் மனதை கொள்ளை கொண்ட துப்பறியும் கம்ப்யூட்டர்

   Delete
  3. கருப்பு கிழவி , திகில் ஆரம்ப் இதழ்களில் வந்த சின்ன கதைகள் , துப்பறியும் கம்ப்யூட்டர் , ஆர்ச்சி சின்ன கதைகள், ஸ்பைடர், மாயாவி சின்ன கதைகள், விச்சு & கிச்சு, ஃபில்லரில்

   Delete
  4. ஜில் ஜோர்டானின் வண்ணக்கலவைகள் அருமை ! வண்ணத்தில் வெளியிட ஏற்ற புத்தகல் !

   Delete
  5. ஃபில்லரில் விளம்பரங்களை வெளியிடலாம் ! கார்த்திக்கின் யோசனையும் அருமை !

   Delete
  6. நடுவில் நான்கு பக்கங்களை வண்ணத்தில் தொடராக சில கதைகளை /டெக்ஸ் கூட இடலாம் , கிழித்து பைன்ட் செய்ய எதுவாக !

   Delete
  7. இங்க பாத்தீங்களா! இவரே கமெண்ட் போட்டுட்டு, இவரே அதுக்கு 6 ரிப்ளைஸும் கொடுப்பாராம்!!! :D

   Delete
  8. // இங்க பாத்தீங்களா! இவரே கமெண்ட் போட்டுட்டு, இவரே அதுக்கு 6 ரிப்ளைஸும் கொடுப்பாராம்!!! :D //

   ha ha ha LOL

   Delete
 32. "லயனும் நா(நீ)ங்களும்" என்ற பகுதிக்கு ஒதுக்கலாம் அந்த துண்டுப் பக்கங்களை, என்பது என் கருத்து

  ReplyDelete
  Replies
  1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் : அது லயன் 30-வது ஆண்டுமலரினை அலங்கரிக்க மாத்திரமே !

   Delete
 33. மான்ரெக், ரிப்கெர்பி, திகில், மிக்கி அண்ட் டொனல்ட் கதைகளில் உள்ள சின்ன கதைகளை தேர்வு செய்யலாம்

  ReplyDelete
  Replies
  1. lion ganesh : Mandrake ; Rip Kirby வரிசைகளில் சிறு கதைகள் கிடையாதே !

   Delete
 34. புத்தகங்கள் கிடைத்தன. அனைவரும் பெறும் அதே தினத்தில் பெறுகிறேன் முதல் முறையாக.. :-)))))))

  ரோஜர், ஜோர்டன் கதைகளின் அட்டைகள் மிகச்சிறப்பானவை. ஜானி அட்டை ஓகே ரகம்! இன்னும் படிக்கவில்லை. கிளான்ஸ் பார்த்தவரை ரோஜர் கதையின் ஓவியங்கள் பிரமிப்பூட்டுகின்றன. Awesome!!

  போன பதிவின் பின்னூட்ட களேபரங்களில் இறங்கலாம் என முதலில் ஒரு ஐடியா இருந்தது. நேரமின்மையால் முடியவில்லை. இங்கே கருத்துச் சொல்லி இங்கேயும் ஒரு விவாதத்தை துவக்க விரும்பவில்லை. இருப்பினும் விளையாட்டு, காமெடி என்பதையும் தாண்டி ஓரிரு இடங்களில் இரண்டு ஹீரோக்களுமே எதிரணியினரால் கேரக்டர் அஸாஸினேட் செய்யப்பட்டது சற்றே வருந்தச்செய்தது. டைகர்-டெக்ஸ் ஒப்பீடு என்பதே முதலில் தவறென்பது என் கருத்து. சிங்கம் வேறு, புலி வேறு. இருவரிடமும் ஆர்ட், கமர்ஷியல் இரண்டுமே இருந்தாலும் கமர்ஷியலை தூக்கலாக விரும்புபவர்களுக்கு டெக்ஸும், ஆர்ட் விரும்பிகளுக்கு டைகரும் பிடிக்கலாம். அவ்வளவே... எ.எ.க!

  :-))))))

  ReplyDelete
  Replies
  1. @ ஆதி

   // டைகர்-டெக்ஸ் ஒப்பீடு என்பதே முதலில் தவறென்பது என் கருத்து //

   ம்க்கும், இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல. அங்ஙன நாலஞ்சு பேர் ஒரு அப்பாவிப் பூனையைப் போட்டு புரட்டி எடுத்திட்டிருத்தப்பல்லாம் எட்டி நின்னு வேடிக்கை பார்த்துட்டு, இப்போ எனக்கு இன்சூரன்ஸ் க்ளைம் பண்ற நிலைமைல இருக்குபோது வந்து சமாதானம் பண்றீயலோ? பிச்சி பிச்சி, பிச்சோ பிச்சுனு பிச்சி!

   Delete
 35. சுமார் 6 பக்கங்கள் துண்டு விழுகின்றன ; அவற்றை சுவாரஸ்யமாய் ரொப்பிட, வழக்கமான காமிக்ஸ் gags ; புதிர் போட்டி என்றில்லாமல் வேறு என்ன செய்யலாம்?//

  பிற வார, மாத இதழ்களைப் போல எந்தப் பகுதிகளும் நம் இதழ்களுக்குப் பொருந்தாதவை. பக்கங்களுக்குப் பொருத்தமான காமிக் சிறுகதைகளை கண்டறிவதே ஒரே வழி. அதை உங்களை விட சிறப்பாக வேறு யார் செய்துவிட முடியும். இந்தக் கதைகள் புதிதாகத்தான் இருக்கவேண்டுமென்றில்லாது வரவேற்பைப் பெற்ற பழங்கதைகளின் மறுபதிப்பாகவும் இருக்கலாம். அதில் தவறொன்றுமில்லை. அவ்வாறான சமயங்களில் ஓரிரு பக்கங்கள் போதவில்லை எனின் சி.சி.வ, எடிட்டர் பக்கங்கள் தவிர்த்து மற்ற கடிதங்கள், ஸ்பாட் லைட், விளம்பரங்கள் போன்ற பகுதிகளை வெட்டிடலாம்... எ.எ.க!

  ReplyDelete
  Replies
  1. // கடிதங்கள், ஸ்பாட்லைட், விளம்பரங்கள் போன்ற பகுதிகளை வெட்டிடலாம் //

   அடுத்த மாதத்திற்கான காமிக்ஸ் ஏக்கத்தை/எதிர்பார்ப்பை தூண்டுபவையே இந்த 'வருகின்றன' விளம்பரங்கள்தான். அதில் நோ கத்தரி ப்ளீஸ்!

   Delete
  2. //அடுத்த மாதத்திற்கான காமிக்ஸ் ஏக்கத்தை/எதிர்பார்ப்பை தூண்டுபவையே இந்த 'வருகின்றன' விளம்பரங்கள்தான். அதில் நோ கத்தரி ப்ளீஸ்!//
   +1

   Delete
  3. ஆசிரியர் இந்த கதைகள் இந்த வருடம் என சிறிய கையடக்க பிட்டு புத்தகம் இனி கொடுக்க கூடாது , இவையும் நம் எதிர்பார்ப்பை குறைக்கிறது ! விரைவில் என ஐந்து பக்கங்களை எண்பதுகளில் நிரப்புவாறே அதற்க்கு எதுமே ஈடாகாது !

   Delete
  4. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : //இந்த கதைகள் இந்த வருடம் என சிறிய கையடக்க பிட்டு புத்தகம் இனி கொடுக்க கூடாது , இவையும் நம் எதிர்பார்ப்பை குறைக்கிறது ! //

   கவலை வேண்டாம்...! அறிவிக்கப்பட்டவை ஒரு பக்கமிருக்க ; அறிவிக்கப்படாதவைகளும் ஆண்டுதோறும் உண்டு ; so அந்த சஸ்பென்ஸ் தொடரும் !

   Delete
  5. ஆதி தாமிரா : //கடிதங்கள், ஸ்பாட் லைட், விளம்பரங்கள் போன்ற பகுதிகளை வெட்டிடலாம்... //

   கடிதம் எழுதும் கலையை இன்னமும் உயிர்ப்போடு வைத்திருக்கும் சிறுபான்மையினரில் நம் காமிக்ஸ் காதலர்கள் ஒரு பெரும்பான்மை எனச் சொன்னால் அது மிகையாகாது ! இந்த மின்னல் யுகத்திலும், அழகாய் எழுதி தங்கள் சிந்தனைகளைப் பகிர முனையும் நண்பர்களுக்கு நாம் செய்திடக் கூடிய இக்குறைந்த பட்ச மரியாதையினை dispensable என நான் பார்த்திடவில்லை !

   இன்னமும் கூட "கடத்தல் குமிழிகள்" இதழில் எனது கடிதம் பிரசுரமாகியது ; 'டிராகன் நகரில்" எனது பெயர் வந்துள்ளது என்று சொல்லிப் பூரிக்கும் நண்பர்களுக்கு - வாழ்வின் சில எளிய சந்தோஷங்களைத் தரும் தருணங்கள் இப்பக்கங்கள் !

   Delete
  6. //கடிதம் எழுதும் கலையை இன்னமும் உயிர்ப்போடு வைத்திருக்கும் சிறுபான்மையினரில் நம் காமிக்ஸ் காதலர்கள் ஒரு பெரும்பான்மை எனச் சொன்னால் அது மிகையாகாது !//
   +1

   Delete
 36. ஒரு ஊரிலே என துவங்கும் அம்புலிமாமா ரக கதைகள் !

  ReplyDelete
 37. // ஜானிக்கு பதவி உயர்வு தருவது ஒ.கே. ஆகுமா ? //

  Yes yes yes - He definitely deserves it.

  ReplyDelete
 38. wow ! ஒரு நாள் பழைய போஸ்ட்... படித்து விட்டு வருகிறேன் :)

  வெளியூர் சென்று விட்டதால் ஆசிரியரின் பதிவை படிக்க முடியவில்லை ; கமெண்ட் follow up செய்ய முடியவில்லை ; என் கருத்துகளை தெரிவிக்க முடியவில்லை ; புத்தகம் வாங்க முடியவில்லை ; அது எப்படி இருக்கும் என்றும் தெரியவில்லை ; இங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை :)

  என்ன கொடுமை சார் இது ?

  ReplyDelete
 39. வாழ்த்துகள் (ச்சும்மா)

  நண்பர்களே வணக்கம். நண்பர் விஸ்கி கூறியபடி நம்மில் பலரும் 'வாழ்த்துகள்' என்றே இங்கு பதிவிட்டு வந்துள்ளோம். 'பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்' என்ற பழமொழியை வாழவைக்கும் விதமாக நாம் இதுகாறும் தவாறாக எழுதிவந்த வாழ்த்துக்கள் - இரண்டு நாட்களுக்கு முனால் நம்மிடம் மாட்டி கொண்டது நம் அனைவருக்கும் மிகவும் சந்தோஷமே.

  ஆனால் ஒவ்வொருவரின் வாழ்த்தையும் இங்கு படிக்கும் போது - ஆசிரியர்க்கு வாத்துகள் ; ஈரோடு விஜய்/கு வாத்துகள் ; வாத்துகள், புனித சாத்தான் மற்றும் ஸ்டீல் க்ளா - வாத்துகள் வாத்துகள் என்றே கேட்பதான பிரமை எனக்கு தொடர்கிறது. இது போல் உங்களில் யாருக்காவது வாத்துகள் என்று கேட்கிறதா ? இதுவரை இல்லாவிட்டாலும் இனி அப்படி கேட்கும் பாருங்கள் ;)

  ReplyDelete
  Replies
  1. டியர் மரமண்டை!!!

   அடியேனுக்கு கேட்கிறது ;-)

   Delete
 40. டியர் விஜயன் சார், [ 52-44+1+1+2+2=4-6=(-2)=54-4=50? ]

  இவ்வளவு சிக்கலான வழிமுறை நமக்கு தேவையா சார் ? இருந்தாலும் சில நண்பர்கள் இங்கு கூறியுள்ள யோசனைகளை நன்றாக இருக்கிறது. ஆனால் அது செயல்வடிவம் பெறும்போது - இன்று இப்படி செய்தால் நன்றாக இருக்கும் ; நாளை எப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்காலமும் மறைந்து ஒளிந்துக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிகிறது. எனவே நாம் எல்லா காலத்திற்கும் பொருந்தும் விதமாக - ஒரு தீர்க்கமான முடிவை வரும் 2015 முதல் எடுக்க முடியுமா சார் ?

  உதாரணமாக நம்முடைய புத்தகங்கள் அனைத்தும் 100 பக்கங்களை மட்டுமே கொண்டது ; இரண்டு சூப்பர் ஹிட் ஆல்பங்களை உள்ளடக்கியது ; வண்ணத்தில் ஒரு ஃபில்லர் கதையை போனசாக தருவது ; பெர்ஃபெக்ட் பைண்டிங் முறையில் மட்டுமே வெளிவருவது - விலை ஏறினாலும் நம்முடைய அளவிலும் தரத்திலும் மாற்றம் ஏற்படுவதே இல்லை - என இப்படி ஒரு consistency/standard நம் நிறுவனத்தின் அடையாளமாக இருந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள் சார்...

  இந்த வருடம் இப்படியே போகட்டுமே. ஆனால் அடுத்த வருடம் முதற் கொண்டு மேற்கூறிய அளவுகோலில் கொண்டுவர முயற்சிக்கலாமே சார். விலை குறைவே விற்பனைக்கு வழிவகுக்கும் என்ற concept/ற்கு மாறாக பல விஷயங்களை பட்டியல் போடுவதை விட இந்த பதிவை மட்டும் இப்படி சுருக்கமாக எழுதியதில் திருப்தி அடைகிறேன் சார்.

  ReplyDelete
 41. எடிட்டர் ரஜினி மாதிரி சொன்னதையும் செய்வேன் சொல்லாததையும் செய்வேன்னு ஒரு பிட் போட்டு இருக்காரே அதை யாருமே நோட் பண்ணலையா??? அதையும் இதையும் சொல்லி ஒரு வதந்தியை கிளப்பி என்ன விசயம்னு அவரு வாயாலயே சொல்ல வைக்கிறது தான் அடுத்த டாஸ்க்... யாரெல்லாம் ஆட்டத்திக்கு வர்றீங்க???
  நம்ம பங்கு அது ரத்த கோட்டை வண்ண மறுபதிப்பு தான்னு தோணுது...

  ReplyDelete
 42. புத்தங்கள் கிடைக்க பெற்றே ன் சார் ...மூன்று புத்தங்கள் சூப்பர் .ரோஜர் அட்டைபடம் அழகு .ரசிப்பதிலும் ...ஹாட் -லைன் ..,வாசகர் கடிதம் என ஒரு நாள் போனதில் கதையை இன்று தான் படிக்க வேண்டும் .போன மாதம் போலவே இந்த மாதமும் அச்சு தரத்தில் பட்டையை கிளப்பி விட்டர்கள் .நன்றி .

  சிவகாசி ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு புதுசேரி விஜயன் அவர்களின் வாசகர் கடிதத்திற்கு பலமான ஒரு ஓ .

  இம்மாத மாதம் ஒரு வாசகரில் பெண் வாசகரின் முடிவில் விரும்பும் ஹீரோ டெக்ஸ் வில்லர் என கூறி இருப்பதையும் ..,நீண்ட கால ஆசை வண்ணத்தில் டெக்ஸ் என்பதயும் இங்கே சொல்லி " அவர்களை " கடுப்படிக்க போவதில்லை ....:-)

  விஜய் அவர்களே ...இங்கே தொடர் கதையை வேண்டாம் என்று முடிவெடுத்தால் உங்களுக்கு " சோகத்தோடு தொடர் கதை " வேண்டுமோ ...? நற..நற.....மீண்டும் இப்படி நீங்கள் முழங்கினால் " மியாவியில் அந்த பூனையை அடைத்த கூண்டில் உங்களையும் இணைத்தே அடைக்க படும் .ஜாக்கிரதை .

  சார் ..அடுத்த மாதம் இரண்டு இதழ்களும் முத்து காமிக்ஸ் என்றாலும் தவறாமல் " சிங்கத்தின் சிறு வயதில் " தொடரை இணைக்கவும் .சஸ்பென்ஸ் தாங்க வில்லை .

  ReplyDelete
  Replies
  1. @ பரணிதரன்

   சிரிச்சுக்கிட்டே படிச்சுப் பாருங்க தலைவரே, அவ்வளவு சோகமா எல்லாம் இருக்காது. :)

   Delete
 43. காமிரேட்ஸ்,

  இன்று பிறந்த நாள் காணும் திருச்சியின் தவப்புதல்வர் நண்பர் செந்தில் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

  நண்பருக்கு நேரில் வந்து வாழ்த்து சொல்ல விரும்புபவர்கள் இந்த ஞாயிறு அன்று திருச்சி புத்தக கண்காட்சியில் அவரை சந்தித்து சொல்லலாம்.

  இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் Senthil Kumar Sir.

  இந்த ஆண்டு(ம்) எல்லா வளமும் பெற்று சிறப்பாக அமைய வேண்டுகிறேன்.

  இந்த நன்னாளில் ...........................

  உதிப்பவை எல்லாம் உன்னதம் ஆகட்டும்,

  நீங்கள் விரும்பியது எல்லாம் உங்கள் வசம் ஆகட்டும்.

  எல்லா வளமும் பெற்று இந்த ஆண்டு(ம்) சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

  என்றும் போல இன்றும் உங்கள் எண்ணங்கள் சிறக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. காமிரேட்ஸ்,

   மேலே கருமண்டபம் செந்தில் என்ற பெயரில் பதிவிட்டுள்ள நண்பரே நமது திருச்சி செந்தில்.

   Delete
  2. கருமண்டபம் செந்தில் அவர்களுக்கு ஈரோடு விஜயின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

   Delete
  3. கருமண்டபம் செந்தில் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

   Delete
 44. பேசாமல் காமிக்ஸ் அல்லாத்தையும் .......பிளாஸ்டிக்ல் போட்டா என்ன ...........ரோம்ம்ம்மம்ம்ம்ப நாள் வருமே

  ReplyDelete
 45. திருச்சி விஜயர்களே ...............கைல கொஞ்சம் மசியும்......... கொஞ்சம் பேப்பரும் கொண்டு போய் காமிக்ஸ் ஆசானிடம் கொடுத்து உடனே ஒரு காமிக்ஸ் பிரிண்ட் பண்ணி வாங்கி வாங்கோ பார்க்கலாம் ..............''''ஆசிரியர் ஸ்பாட் லைட்'''

  அப்பிடியே எனக்கு ஒரு ''கோப்ரா தீவில் ஸ்பைடர்'' ஒன்று பார்சல்

  ReplyDelete
 46. டியர் விஜயன் சார்,

  ஒரு பிப்ரவரி மாத காமிக்ஸ் - முதல் பார்வை !

  இன்று 3 காமிக்ஸ்/ம் கிடைக்கப்பெற்றேன். எதை எடுப்பது, எதை வைப்பது, எவற்றை முதலில் வாசிப்பது - ஹாட்லைன்... ஆ ஆ ஆ .. காமிக்ஸ் டைம்...ஆ ஆ ஆ .. சிங்கத்தின் சிறு வயதில்.. ஆ ஆ ஆ .. வாசகர்கடிதம் .. ஆ ஆ ஆ .. என்றும் - முதலில் எதைப் பார்ப்பது அட்டைப்படம்.. ஆ ஆ ஆ .. கண்ணைக் கவரும் வரும் - வருகிறது விளம்பரம்.. ஆ ஆ ஆ .. கா.கா.சு. சித்திரங்கள்.. ஆ ஆ ஆ .. நி.து. சித்திரங்கள்.. ஆ ஆ ஆ .. கா.ஒ.ஆவி சித்திரங்கள்.. ஆ ஆ ஆ .. என்று என் மனம் பரபரவென்று பரிதவிக்கிறது.

  ஒட்டு மொத்தமாக மூன்று அல்லது நான்கு இதழ்களும் கையில் தவழும் போது - ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற மனநிலையை தவிர்க்கவே முடிவதில்லை. எனவே வாரம் ஒரு காமிக்ஸ் என்று - பிரதி வியாழக்கிழமை அன்று - நீங்கள் அனுப்பிவைத்தால் மட்டுமே மனம் அமைதியாய் இருக்க கற்றுக் கொள்ளும். (கூரியர் ச்சார்ஜஸ் சம்பந்தமாக என் அபிப்ராயத்தை உங்களுக்கு தனியாக ஒரு ஈமெயில் மூலம் அனுப்பி வைக்கிறேன்). மாறாக இதுபோன்ற நடைமுறை தொடர்ந்திடும் பட்சத்தில் எனக்கு blood pressure (BP) வரும் சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. அப்படி எனக்கு BP வந்து விட்டால் அதற்கு காரணம் நீங்களாகத்தான் இருப்பீர்கள் விஜயன் சார் :)

  ReplyDelete
 47. ஒரு பிப்ரவரி மாத காமிக்ஸ் - முதல் பார்வை [2]

  1.ஹாட்லைன்/காமிக்ஸ் டைம் :
  இந்த இனிய வலைப்பூவின் தாக்கத்தால் ஆசிரியர் பின்குறிப்பு (P.S) என்று புதிதாக பதிவிட்டுள்ளாரா என்று தெரியவில்லை.

  2.வருகிறது விளம்பரங்கள் :
  கண்களையும் சிந்தையையும் ஒருசேர ஆக்கிரமிக்கின்றன.

  3.போஸ்ட்பாக்ஸ் :
  உண்மையில் சுவாரசியமான பகுதி. எனவே தொடர்ந்து வெளியிடவும்.

  4.மாதம் ஒரு வாசகர் :
  அவசியம் வெளிவர வேண்டும் [முடிந்தால் என் பெயரும்] :D

  5.சிங்கத்தின் சிறு வயதில் :
  interval ற்கு பிறகு தொடங்கும் சினிமாவைப் போல உற்சாகமான கட்டத்தை நெருங்கி பயணிப்பது எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.

  6.வாசகர் கடிதம் :
  S.விஜயன், புதுச்சேரி - அட நம் எடிட்டர் பெயர் என்று ஆச்சர்யப்பட வைக்கிறது :)

  ReplyDelete
 48. ஒரு பிப்ரவரி மாத காமிக்ஸ் - முதல் பார்வை [3]

  7.மியாவி :

  இதை படித்த/பார்த்தப் போது அந்த பூனை - நம் நண்பர் ஈரோடு விஜய்யை ஞாபகப் படுத்துகிறது. பெட்டிக்குள் அடைக்கும் அந்த நபர் முகுந்தன் குமார்/ ஆக இருக்குமோ என்ற எண்ணம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. இந்த முறை இப்படிப்பட்ட மியாவியை ஆசிரியர் தேர்ந்தெடுத்ததிற்கு ஏதாவது மறைமுக காரணம் இருக்குமோ ;)

  இந்த பதிவு நண்பர் ஈரோடு விஜய்/கு சமர்ப்பணம் :D

  ReplyDelete
  Replies
  1. @ மிஸ்டர் மரமண்டை

   மியாவியை கூண்டுக்குள் அடைச்சது முகுந்தன்தானான்னு எனக்குத் தெரியாது; ஆனால் மியாவி ரொம்பவும் பயந்துபோனது - கையில் தடுப்பூசி சகிதம் முகம் காட்டாமல் நிற்கும் அந்த டாக்டரை கண்டுதான் - என்பதை இங்கு தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் டாக்டர் மரமண்டை அவர்களே!

   @ எடிட்டர்
   பூனைகளை இவங்க இந்த வலைப்பூவில் புரட்டி எடுப்பது போதாதா சார் உங்களுக்கு? நீங்கவேற ஃபில்லர் பேஜ் போட்டு புரட்டி எடுக்கணுமா?
   சரி, அடுத்த தபாவாவது மியாவி அந்த ரெண்டு பேரையும் குனியவச்சு நாலு பிறாண்டு பிறாண்டற மாதிரி ஒரு மியாவி கதையை தேடிப்பிடிச்சுப் போடுங்க சார். இல்லாங்காட்டியும் நம்ம ஓவியர் பொன்னன் அவர்களையாவது அந்தமாதிரி வரையச் சொல்லுங்க. ஆகற செலவை நான் பார்த்துக்கறேன்.

   Delete
  2. // டாக்டர் மரமண்டை அவர்களே! //

   haha! :D

   Delete
  3. // டாக்டர் மரமண்டை அவர்களே! //

   haha! :D

   Delete
 49. சர்ர், ரோஜர் அட்டகாசம் நதிக்கரைகளில், நதியில் தொடரும் ஆபத்துகளும் தொடர்ந்து வரும் பச்சை வண்ண காடுகளும், சுழன்று வரும் நீரோட்டமும் கொள்ளை கொள்கின்றன ! சிதிலமடைந்த புராண கால கட்டிடங்கள் மனதை எதோ செய்யதவறவில்லை , அந்த நாகரிகங்களின் வாழ்வை நினைத்து ஏங்கியும் ; அழிவை கருத்தில் கொண்டு வாட்டியும் ! ரோஜர் அட்டகாசம் ! மர்மக் கத்தி வெளிவிடலாமே மறுபதிப்பில் என கோரிக்கை வைக்க வைத்து விட்டது !

  ReplyDelete
 50. விஜயன் சார்,

  ரோஜர் கதை முதலில் படித்தது ... ஓவியங்கள் மிகவும் அருமை அப்படியே அமேசான் காட்டுக்குள் சென்று வந்ததை போலவே ஒரு உணர்வு.

  நண்பர் காமிக்ஸ் டா (காமிக் டா) ராஜ்குமார், என் மன வானில் என எழுத தொடங்கினால் ரோஜர் கதையின் அனைத்து பக்கங்களையும் வலையேற்ற வேண்டி இருக்கும் :)

  அடுத்து படிக்க இருப்பது ஜானி (டாப் 5 இல் இது ஒன்று என கூறி உள்ளதால் அதிக எதிர்பார்ப்பு)

  ஜானியின் எல்லா கதைகளில் கடைசியாக புதிர்கள் அவிழ்வது - அவரது கதையின் சிறப்பு சுருக்கமாக சொன்னால் ராஜேஷ்குமார் நாவல் படிப்பது போல ...

  ஜில் கடைசியாக ....

  திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்

  ReplyDelete
 51. இந்த மாதத்தின் புத்தகங்கள் வந்துவிட்டன… மூன்றுமே அழகு… ரோஜர் கதையின் அட்டைபடம் வித்தியாசமாக நன்றாகவே உள்ளது.

  புத்தகங்களை மேலோட்டமாக புரட்டிப்பார்த்த்தில் ஒரு விஷயம் சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது. புத்தகம் முழுவதும் சித்திரங்களை விட பலூன்களும் வசனங்களுமே கண்ணில் பளிச்சென்று படுகிறது. வண்ணப்பக்கங்களில் கருப்புவெள்ளை பலூன்கள் அதிக contrast உடன் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது பலூன்களின் அளவும் எழுத்துக்களின் அளவும் கொஞ்சம் பெரியதாக இருப்பதால் அப்படித்தோன்றுகிறதா தெரியவில்லை. Comeback special போன்ற ஆரம்ப இதழ்களைத்தவிர மீதி எல்லா இதழ்களிலும் எனக்கு நெருடலாக தோன்றிய விஷயம் இது.
  ஒருவேளை தற்போதுள்ள FONT SIZE சிறிது குறைக்கப்படுமானால் இது சரியாகுமா தெரியவில்லை. முயற்சி செய்து பார்க்கலாமே சார்…

  ReplyDelete
  Replies
  1. @ புதுவை செந்தில்

   நானும்கூட சில சமயங்களில் அப்படி ( ஓவியங்களை விட பலூன்களும், எழுத்துக்களும் அடர்த்தியாகத் தெரிவதை) நினைத்திருக்கிறேன். Font sizeஐ குறைப்பது தீர்வாகிடுமா என்று தெரியவில்லை (ஒவர் டூ நாட்டாமை or எடிட்டர் or யாராவது). அப்படி எழுத்துக்களின் அளவைக் குறைத்தால் நிறைய நண்பர்களிடமிருந்து கண்டனக்குரல் எழவும் வாய்ப்பிருக்கிறது.
   மாறாக, பலூனுக்கும், எழுத்துக்களுக்கும் கருப்பு மையின் அடர்த்தி அளவைக் குறைத்தால்? அல்லது 'டார்க் க்ரே'வண்ணத்தை கருப்பிற்குப் பதிலாக உபயோகிக்க முடிந்தால்?

   Delete
  2. 1.ஒருவேளை தற்போதுள்ள FONT SIZE சிறிது குறைக்கப்படுமானால் இது சரியாகுமா தெரியவில்லை//

   சிறிய எழுத்துகளைத் தொடர்ந்து படித்து வந்தால் நமக்கு பார்வை குறைபாடு ஏற்படும். கண்ணாடி போட வேண்டும்.

   2.மாறாக, பலூனுக்கும், எழுத்துகளுக்கும் கருப்பு மையின் அடர்த்தி அளவைக் குறைத்தால்?//

   பிரிண்டிங் குறைபாடு போல் தோன்றும். இங்க் தீர்ந்து விட்டதா என்று கிண்டல் செய்வார்கள் ;)

   (ஒவர் டூ நாட்டாமை)

   Delete
  3. டியர் Erode VIJAY & மிஸ்டர் மரமண்டை..,

   மேலும் ஒரு விஷயம் எனக்குத்தோன்றுவது என்னவென்றால், ஒரு பேனலில் பலூனின் அளவை பெரியதாக்க இடம் இல்லாத பட்சத்தில் அங்கே FONT SIZEஐ குறைக்கப்பட்டிருக்கிறது. அதே பக்கத்தில் வேறொரு பேனலில் இடம் இருக்கும் பட்சத்தில் பலூனின் அளவு பெரிதாக்கப்பட்டு எழுத்துக்களின் அளவும் பெரிதாக உள்ளது. இது சில சமயம் பக்கத்து பேனலுக்கும் செல்கிறது. இதனால்தான் பலூன்களும் வசனங்களும் சித்திரங்களை DOMINATE செய்கிறதோ தெரியவில்லை!

   இன்னும் சிறிதளவு font size குறைப்பதால் (இப்போது இருக்கும் அளவிற்கு அடுத்தது) கண்களுக்கு எந்தப்பிரச்சனையும் வர வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். சிறிய எழுத்துக்களைப்படிப்பதால் மட்டுமே கண்களுக்கு எந்தப்பாதிப்பும் வந்துவிடாது என்பதே நான் அறிந்தது.

   OVER TO நாட்டாமைஸ்... ;)

   Delete
  4. // ஒவர் டூ நாட்டாமை//
   வவ் வவ், க்ர்ர்ர்ர்ர்...

   // Font sizeஐ குறைப்பது தீர்வாகிடுமா என்று தெரியவில்லை //

   Yes. ஆனால் இதர தீர்வுகளும் உள்ளன.

   Font Size: எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அதிக Space-ஐ எடுத்துக்கொள்வது உறுத்தலுக்கு முதல் காரணம். இதைத்தவிர்க்க Font Size-ஐ குறைப்பது சில இடங்களில் போதுமானதாக இருக்கும். ஆனால் எல்லா இடங்களிலும் சாத்தியமாகாது, நிரந்தரத் தீர்வல்ல.

   Font Style: இரண்டாவது காரணம் Boldness / Weight / thickness அதிகமாக இருப்பது ரொம்ப Dense ஆன உணர்வைத்தரும். தற்போது உள்ள எழுத்துக்களின் Weight-ஐ குறைக்க முடியுமென்று நினைக்கிறேன். இது Occupy பண்ணும் Area-வை குறைக்க உதவாது எனினும் Overall look எழுத்துக்களால் மலிந்திருப்பது போன்ற "உணர்வை" கணிசமாகக் குறைக்கும்.

   Color: அடர் கருப்பு நிறத்தைத் தவிர வேறு எந்த நிறமும் (Gray உட்பட) Clarity-க்கு உதவாது. எனவே ஒரே Choice - 100% கருப்பு மட்டுமே.

   Font type & Readability: ஆங்கிலத்தில் காமிக்ஸுக்கென, இட நெருக்கடியைக் கருத்தில் கொண்டு ஏகப்பட் எழுத்துருக்கள் உள்ளன. தமிழில் அவ்வளவாக இல்லை என்பதுதான் சோகம். ஓரளவுக்கு intelligent-ஆக இடத்தைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப் பட்ட Font ஒன்று உள்ளது - ஏற்கெனவே பரிச்சயமானதுதான்.

   இதனைப் பார்க்கவும்

   இதை சிறிதாக்கினாலும் Readability மற்ற Fonts-ஐவிட Better ஆக இருக்கும். இந்தவகை Font-ஐ சிறிய Size-ல் முயற்சித்துப் பார்க்கலாம். May be on filler pages first.

   Delete
  5. Ramesh Kumar :

   இப்படி உங்கள் கமெண்டில் உள்ளது போல் Bold letters கொண்டு (blog கமெண்ட்) வருவது எப்படி ?

   Delete
  6. நாட்டாமை:

   இப்படி தீர்ப்பு சொல்லாம விட்டுட்டீங்களே இது ஞாயமா ?

   Delete
  7. மிஸ்டர் மரமண்டை, for these kinf of things, you can get help just through google search, that's why I didn't answer! ;)

   // இப்படி தீர்ப்பு சொல்லாம விட்டுட்டீங்களே //

   இதோ தீர்ப்பு: நாட்டாமை என்கிற வார்த்தையை 4 வருஷத்துக்கு நாடு கடத்துகிறேன்.. :P

   Delete
 52. நண்பர் Erode விஜய்/கு ஒரு கேள்வி :

  ஆசிரியர் கூறிய நூலகம் (500 காமிக்ஸ்) சிவகாசியில் ஆரம்பிக்கப்படுமா ?
  அல்லது
  எதிர்வரும் ஈரோடு புத்தகத் திருவிழாவின் போது ஈரோட்டில் ஆரம்பிக்கப்படுமா ?

  இவண்;
  ஆருடம் அம்பலவாணன் ;)

  ReplyDelete
  Replies
  1. இரண்டு இடங்களிலுமே ஆரம்பிக்கப்படும். முதலில் சிவகாசியிலும், ஓரிரு நாட்களுக்குப் பின் ஈரோட்டிலும் ஆரம்பிக்கப்படும். அதற்கான 'ஏற்பாடுகளை' போராட்டக் குழுவினர் செய்துவருகின்றனர்.

   உலகிலேயே ஆரம்பிக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே (புத்தகங்கள் எதுவுமே இல்லாமல் போனதால்) மூடுவிழா நடத்தப்பட்ட முதல் லைப்ரரி என்ற பெருமையை 'சிவகாசி காமிக்ஸ் லைப்ரரி' தட்டிச் செல்லும்! ;)

   P.S : 'ஈரோடு காமிக்ஸ் லைப்ரரி' ஒரு லெண்டிங் லைப்ரரியாகவே செயல்படும். ஹி ஹி!

   Delete
  2. டியர் விஜய்,

   நான் உங்கள் 'போராட்டக் குழுவினரின்' ஆட்டையைப் பற்றி கேட்கவில்லை..
   மிகவும் சீரியஸாக கேட்கப்பட்ட கேள்வி அது. சிவகாசியா அல்லது ஈரோடா ?

   Delete
 53. நாளைய தினம் தொடங்கும் திருச்சி புத்தக் கண்காட்சி திருவிழாவில் ஞாயிறு அன்று பரிமாறப்படும் மதிய விருந்து ;)

  அனைவரும் தவறாமல் வருக ! வருக !

  ReplyDelete
 54. புத்தங்கங்கள் அனைத்தும் கிடைக்க பெற்றேன்!! ஆனா இன்னும் எதையும் படிக்கல.. ஒல்லி புக்க பார்த்த படிக்கவே தோன மாட்டேன்குது.. . போன மாச கேப்டன் புக் மட்டும் தான் படிச்சேன்.. என்ன சொல்லறதுன்னு தெரியல?!!! இது என்ன மாதிரியான வியாதின்னு புரியல?!!

  ReplyDelete
  Replies
  1. இதற்கென ஒரு மாபெரும் மருந்தும் , பெரும் மருந்தும் நமது ஆசிரியரிடமே உள்ளது நண்பரே ! இரத்த படலம் எனும் மாபெரும் வண்ணப்புத்தகத்தினையும் , கார்சனின் கடந்தகாலம் எனும் பெரும் வண்ணபுத்தகத்தினையும் இருபுறமும் வைத்து நடுவில் அமர்ந்து இருபுறமும் பார்த்தவாறே ஒல்லி புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தால் இந்த நோய் காலப்போக்கில் குணமாகலாம் அல்ல நிச்சயம் குணம் ஆகிவிடும் ! ஆசிரியர் பிணி தீர்க்கும் மருந்துகளை அளிப்பார் ; எனினும் உடனடி நிவாரணம் பெற அடுத்த மாதமே தந்தால் இனி வரும் அடுத்தமாத இரண்டு புத்தகங்களை படிக்க வைத்த புண்ணியம் கிட்டும் !

   Delete
  2. விரைந்து ஆவன செய்ய செய்யுமாறு காமிக்ஸ் கடவுள் ஓடினை வேண்டுகிறேன் !

   Delete
  3. இந்த அருமருந்து உடனடியாக கிடைத்தால் மாபெரும் பேரு பெற்றவன் ஆவேன் ..

   Delete
  4. // இது என்ன மாதிரியான வியாதின்னு புரியல?!! //

   வியாதியின் பெயர் "பழக்க தோஷம்".

   நம்முடைய குண்டு புத்தகங்களை Regular அமெரிக்க காமிக்ஸ் வாசகர்களிடம் காண்பித்தால் "இது Collection-க்கு Ok ஆனா படிக்க உதவாதே?" என்பார்கள்.

   Delete
  5. ரமேஷ் , அப்போ அமெரிக்க நண்பர்களிடம் காமித்து விடாதீர்கள் !
   அமெரிக்கா போகும் பொது கேப்பாங்க அப்பவும் காமிச்சுராதீங்ககககக.........................

   Delete
  6. அமெரிக்க காமிக்ஸ்கள் 24 பக்கம் + 8 பக்க விளம்பரம் என்ற ரேஞ்சிலெல்லாம் பெரும்பாலும் இருப்பதால் சுட்டிக்காட்டினேன்!

   // அமெரிக்கா போகும் பொது.. //

   யார் சொன்னா? :P மேற்கு பக்கமா நான் அதிகபட்சம் நகர்ந்தது கோயம்பத்தூர் வரை மட்டுமே. இப்ப அங்கதான் இருக்கேன் - ஒரு நாள் உங்க வலது கை எப்படி இருக்குன்னு பார்க்க வரேன் :D

   Delete
 55. Sir plz keep publishing Comanche, Thorgal, Diabolik, Gil jordan, Steel body sherlock. I am waiting to read these series. thank you

  ReplyDelete
 56. டியர் எடிட்டர்ஜீ!!!

  ஜில் ஜோர்டனின் காவியில் ஒரு ஆவி படித்தேன்.கதை ஸிம்ப்ளி சூப்பர்ப்!!!

  ஜில் ஜோர்டனின் எதிர்காலம் மிக பிரகாசமாக இருக்கும் என்பதை அற்புதமான ஓவியங்களும்,குபீர் சிரிப்பை வரவழைக்கும் வசனங்களும் உணர்த்துகின்றன.குறிப்பாக பச்சை நிறத்தில் எது கிடைத்தாலும் சாப்பிடும் எருமை. நமது அச்சுத்தரம் உயர்ந்துள்ளதை இவ்வருட புத்தகங்கள் ஏழும் நிரூபிக்கின்றன.காவியில் ஒரு ஆவியும் மிக அழகான அச்சுத்தரத்துடன் பிரமாதமாக வந்துள்ளது.நமது அச்சக ஊழியர்கள் பாராட்டுக்குரியவர்கள்!!!

  கதையில் திட்டமிட்டு புகுத்தப்பட்டுள்ள அச்சு பிழைகள் இருக்க,இயல்பாக வரும் அச்சு பிழைகள் இல்லாதது ஒரு அழகான முரண்பாடு;-)KEEP IT UP:-)

  ReplyDelete
  Replies
  1. saint satan : சாத்தான்ஜி- அச்சக ஊழியர்களிடம் உங்களின் பாராட்டுக்களை சந்தோஷமாய்ச் சேர்த்து விடுகிறேன் ! அப்புறம் - அது பசு மாடு ; எருமை அல்ல :-)

   Delete
 57. காவியில் ஒரு ஆவி அருமை ! மூன்று இடங்களில் விழுந்து தொலைத்தேன் , சாரி சிரித்தேன் ! இன்ஸ்பெக்டர் , சில்லின் உதவியாளர் அடிக்கும் கூத்துக்கள் அருமை ! அதிலும் பல்டி அடிப்பாரே ! சொல்லி கொண்டே களனி நீர் தொட்டியில் விழுவது என கண்ணில் நீரை வரவழைக்க தவறவில்லை சிரிப்பால் !

  ReplyDelete
  Replies
  1. ஜில்லுக்கு ஜில்லென கண்ணில் நீரை வரவழைக்கும் சாமர்த்தியம் உள்ளதால் , அவரது வருகை சிலீர் அனுபவமே ! அட்டகாசம் ! அருமை !! அமர்க்களம் !!! தொடரட்டும் இவர்கள் உடன் நமது பயணமும் ! ஆனால் சுஸ்கி - விஸ்கி வேண்டுமென இவர்களை படிக்கும் போது எழும் ஆவல் தாளவில்லை !

   Delete
 58. வாழ்த்துகளுக்கு நன்றி தோழர்களே!

  ReplyDelete
 59. இந்த மாத புத்தங்களின் சுருக்கமான பார்வை....எனது பார்வையில் மட்டும் .....

  " காமிக்ஸ்களை துரத்துவோம் "

  barani with comics.blogspot.com.

  ReplyDelete
  Replies
  1. துரத்துவோம் என்றால் “ பின்னாலயே துரத்திகொண்டு போவதா?” ( தேடி பிடித்து வாங்குவது) அல்லது “ வீட்டை விட்டு துரத்துவதா” ( வாங்காமல் இருப்பது).

   Delete
  2. அது நீங்கள் அங்கே வந்து பார்த்தால் தெரிந்து விட போகிறது .

   Delete
 60. 'காலத்தின் கால் சுவடுகளில்' படித்தேன்...

  சித்திரங்கள் நிறையவே ரசிக்கும்படியாய் இருக்கிறது என்பதைத் தாண்டி இதில் ரசிப்பதற்கு வேறு எதுவுமே இல்லை என்பது என் கருத்து.

  நிறைகள் :
  * அட்டகாசமான அட்டைப்படம் (முன்,பின் இரு அட்டைகளுமே)
  * கண்களைக் குளிர்விக்கும் ஓவியங்கள்

  குறைகள்:
  * கதையே இல்லாத 'கற்பனை வறட்சி'. கதாசிரியர் 'ஹென்றி வெர்ன்ஸ்' எங்கோ அவசரமாக பயணம் கிளம்பும்முன் ஓவியரிடம் ஒற்றை வரியில் ஒரு கதையைச் சொல்லி 'எதையாவது வரைந்து வையுங்கள்' என்று சொல்லியிருப்பார் போலும்!
  * காட்சிகளும் வசனங்களும் கோர்வையே இல்லாமல் 'ஏதோ ஒரு ஃபோட்டோ ஆல்பத்தைக் காட்டி சம்பவங்களைச் சொல்வது போல்' சொல்லப்பட்டிருக்கும் விதம்
  * துளியும் விறுவிறுப்பு ஏற்படுத்தாக கதை நகர்வு

  தீர்ப்பு:
  ரோஜர் ஏமாற்றிவிட்டார். :(

  ReplyDelete
 61. விஜயன் சார்,
  ஜில் ஜோர்டன் கதை அருமை! மேயர் மற்றும் ஜில் உதவியாளர்களின் காமெடி தூக்கல்! ஜானி கதை வழக்கத்தை விட முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை விறுவிறுப்பு; இடியாப்ப சிக்கல் இல்லாமல் நேர் கோட்டில் பயணிக்கும் கதை! ஜானி மற்றும் ஜில் ஜோர்டன் கதைகள் தொடர்ந்து நமது காமிக்ஸ்-ல் வெளி இட வேண்டும்!

  குறைகள்: ஜில் மற்றும் ஜானி கதைகளில் 2 இடம்களில் எழுத்து பிழைகள்! மற்றபடி நிறைகள் தான் அதிகம்!

  ரோஜேர் கதையை இன்னும் படிக்கவில்லை, ஆனால் படம்களை மட்டும் ரசிக்க நேரம் கிடைத்தது; பல இடம்களின் காமிக்ஸ் என்பதை தாண்டி நேரில் ரசிக்கும் இயற்கை காட்சி என்ற பிரமையை சித்திரம்கள் ஏற்படுதியன என்றால் மிகையில்லை!

  //கடிதம் எழுதும் கலையை இன்னமும் உயிர்ப்போடு வைத்திருக்கும் சிறுபான்மையினரில் நம் காமிக்ஸ் காதலர்கள் ஒரு பெரும்பான்மை எனச் சொன்னால் அது மிகையாகாது !//
  நமது காமிக்ஸ்-ல் வாசகர்கள் கடிதம் மற்றும் வாசகர் ஸ்பாட் லைட் பகுதிகள் தொடர்ந்து வெளி வர வேண்டும்!

  ReplyDelete
 62. //திருச்சியில் இன்று துவங்கும் புத்தகக் காட்சியில் நமது ஸ்டால் நம்பர் 13 !//

  'XIII' !

  ReplyDelete
 63. கிரீன் மனோர் கதைகளுக்கு பெருவாரியான ஆதரவு கிடைக்காதமைக்கு
  ஏமாற்றம் அடைந்தேன். எனினும் நாம் நம்முடைய ரசனையை சிறிது சிறிதாக வளர்த்துக்கொள்ள முடியும் என்றே தோன்றுகிறது. ஸ்டீவ் ரொலண்டின் பார்வையில், காலனின் கைகூலி யும், மங்கூசீன் பார்வையில் கதையும் ஒன்றுதானா?

  ReplyDelete
 64. சார், ஜானியின் கதை முதலில் பாராட்டு பெறுவது அழுத்தமான வண்ணத்திற்க்காக ! என்னவொரு பதிப்பு , லார்கோ போல அற்புதமாய் வண்ணக்கலவைகள் மனதை கொள்ளை கொள்கின்றன ; அப்படியே தரமான வண்ணத்தை பளிச்சிட செய்த அச்சக நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் , நன்றிதனையும் தெரிவியுங்கள் ! கதை ஜானியின் கதைகளில் நிச்சயம் டாப் , ஏன் நமது சமீபத்திய வெளியீடுகளில் இதற்க்கு முக்கியமான இடம் உண்டு ! பரபரப்பாய் நகரும் கதை விறுவிறுப்பை மனதில் விதைக்க தவறவில்லை ! புதிய ஜானி கதைகள் சமீபத்தில் மொக்கை போட்டதுண்டு , அதற்க்கு வட்டியும் முதலுமாய் இந்த கதை ! இது போன்ற ஜானியின் கதைகள் தொடரட்டும் !

  ReplyDelete
 65. நான் ரசித்த கதைகள் இந்த மாதம் எனது அக வரிசைப்படி
  1. நினைவுகளைத் துரத்துவோம் !
  2. காவியில் ஒரு ஆவி !
  3. காலத்தின் கால் சுவடுகளில் !

  ReplyDelete
 66. நமது திருச்சி ஸ்டால்களில் இடம் பிடித்த போஸ்டர் நாயகர் யார் ?
  அட நம்ம டாப் ஸ்டார் !

  ReplyDelete
  Replies
  1. திருச்சி புத்தக விழா வெற்றி பெற வாழ்த்துகிறோம் !

   Delete
 67. //சுமார் 6 பக்கங்கள் துண்டு விழுகின்றன ; அவற்றை சுவாரஸ்யமாய் ரொப்பிட, வழக்கமான காமிக்ஸ் gags ; புதிர் போட்டி என்றில்லாமல் வேறு என்ன செய்யலாம்?//

  மொழிபெயர்க்கப்பட்ட அமானுஷ்ய கதைகள், ஆவிக்கதைகளை எழுத்துவடிவில் பிரசுரிக்கலாம் என்பது எனது கருத்து. திகில் லைப்ரரியில் இவ்வாறான கதைகள் வந்ததாக ஞாபகம்.

  ஆனாலும் கறுப்பு கிழவி மாதிரியான திகில் கதைகள் வந்தால் அதிக வாசகர்களை கவரும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. //மொழிபெயர்க்கப்பட்ட அமானுஷ்ய கதைகள், ஆவிக்கதைகளை எழுத்துவடிவில் பிரசுரிக்கலாம் என்பது எனது கருத்து. திகில் லைப்ரரியில் இவ்வாறான கதைகள் வந்ததாக ஞாபகம்.//
   +1
   //ஆனாலும் கறுப்பு கிழவி மாதிரியான திகில் கதைகள் வந்தால் அதிக வாசகர்களை கவரும் என்று நினைக்கிறேன்.//
   +2

   Delete
 68. கடைசி நேரத்தில் ஏதோ ஒரு உள்ளுணர்வு எடிட்டரை உந்தித் தள்ள, அவர் ஜானியை அதிரடியாகக் களமிறக்கியது ஒரு wise decision என்பேன்!
  ஸ்ட்ரெச்சரில் படுத்துக்கொண்ட ரோஜரையும், நொண்டிக்கொண்டே ஓடி வந்த ஜில்-ஜோர்டானையும் தன்னுடன் இழுத்துக்கொண்டே ஒரு அதிவேக ஓட்டப் பந்தயத்தில் ஓடி ஜெயித்திருக்கிறார் ரிப்போர்ட்டர் ஜானி!
  குழப்பமே இல்லாமல் சீராக, பரபரப்பாகப் படித்து முடித்த முதல் ரிப்போர்டர் ஜானி கதை இதுவே என்பேன்.
  அடர்த்தியான வண்ணக் கலவை  ஒரு நல்ல வாசிப்பு அனுபத்திற்கு உறுதுணையாய் வழிநெடுக வியாபித்திருப்பது தனிச் சிறப்பு!
  'பன்முக' திறமை கொண்ட வில்லன் நம்மை பயமுறுத்துவது குறைவென்றாலும், எப்போதும் அதிர்ச்சியைக் காட்டும் ஜானியின் அழகிய முகமே கதை நெடுக பரபரப்பை தக்கவைக்கிறது.

  கடைசி நேரத்தில் அவசரமாகத் தயாரிக்கப்பட்ட இதழ் என்பதற்கான எந்தவொரு தடயமும் இல்லாமல் மிக நேர்த்தியாகக் அளித்திருக்கும் எடிட்டருக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்!

  ReplyDelete
  Replies
  1. ஸ்டீல்,
   அடுத்த மாச 'அட்லாண்டா அட்டூழியம்'-இன் அட்டையிலும் 'மிஸ்டர் புலி' அவர்களின் முகத்தை க்ளோஸ்-அப்பில் பார்க்க வேண்டியதாயிடுமோன்னு எல்லோரும் பயந்து கெடக்காங்களோ என்னமோ!

   Delete
  2. ஜானிக்கு ஜே! அடுத்தப் போட்டி ஜானி Vs டக்ஸ் வில்லன் :P

   Delete
 69. அடுத்த பதிவின் தலைப்பு இப்படி இருக்கலாமோ?...
  "ஒரு மலைக்கோட்டையும், ஒரு மனக்கோட்டையும்" ;)

  ReplyDelete
  Replies
  1. இப்ப தான் ப்ளாக் அமைதியா இருக்கு..................ஹையா இனிக்கு ப்ளாக் விடுமுறை

   Delete
  2. // இப்ப தான் ப்ளாக் அமைதியா இருக்கு..................ஹையா இனிக்கு ப்ளாக் விடுமுறை //

   விடுமுறை நாளிலும் Overtime பார்ப்போர் 3 பேர்!

   Delete