Powered By Blogger

Friday, February 14, 2014

சிரிப்போம் - சிந்திப்போம் !

நண்பர்களே,

வணக்கம் ! "என்ன வாழ்க்கைடா சாமி இது ? சரியான நாய்ப் பிழைப்பு !" என்று யாரேனும் உங்களிடம் அடுத்தவாட்டி அலுத்துக் கொள்ளும் பட்சத்தில் அவர் மீது பச்சாதாபம் காட்டுவது அவசியமாகாது என்றே நினைக்கிறேன் ! ஏனெனில் - நாய்கள் பல இல்லங்களின் செல்லப் பிள்ளைகளாய் உள்ளன ; பல வேளைகளில் எஜமானர்களின் உயில் சாசனங்களில் உயர்வான இடத்தைப் பெறுகின்றன ; இன்னும் சில நேரங்களிலோ அவை பிரத்யேகமான காமிக்ஸ் தொடர்களின் ஹீரோக்களாகக் கூடவும் பரிணமிக்கத் தான் செய்கின்றன ! So - நாய்ப்பிழைப்பு எல்லா நேரங்களிலும் நாராசமான பிழைப்பாய் இருத்தல் அவசியமில்லை ! இதை இப்போது சொல்ல முகாந்திரமென்னவொ ? என்ற மண்டைச் சொறிதலுக்கு இடம் தந்திடாமல் விஷயத்துக்கு நேராகவே வருகிறேன் ! நமது காமிக்ஸ் அணிவகுப்பின் அடுத்த புதுவரவு ஒரு நாலுகாலார் என்பதே விஷயம் ! 


சரியாகச் சொல்வதாயின் இவரொரு (!!) புது வரவல்ல....நமக்கு ஏற்கனவே பழக்கமானவரே ! ஆனால் ஒரு exclusive கதைவரிசைக்கு lead character ஆகப் புரமோஷன் கண்டிடும் ஒரு வாய்ப்போடு நம்மை சந்திக்கக் காத்துள்ள நபர் - மிஸ்டர்.ரின் டின் கேன் ! லக்கி லூக் கதைகளில் அவ்வப்போது தலை காட்டும் இந்த அசகாய அரைவேக்காட்டு நாய்க்கென 1987 முதலாகவே பிரான்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகில் ஒரு தொடர் உள்ளது ! RANTANPLAN என்ற பெயரோடு அங்கு வலம் வரும் இந்த "டுபுக்கு" நாய்க்கு தனிக்கதை அந்தஸ்த்து வழங்கியது காமிக்ஸ் உலக ஜாம்பவான்களான எழுத்தாளர் கோசினியும், ஓவியர் மோரிசுமே ! லக்கி லூக்கின் கதை வரிசையில் 1962-ல் வெளியான ஆல்பத்தில் முதன்முறையாக டால்டன் சகோதரர்களைக் கண்காணிக்கும் "காவல் திலகமாய்" அறிமுகமான ரின் டின் கேன் - தொடரும் நாட்களில் ; தொடர்ந்த கதைகளில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்துக் கொண்டது !


லக்கி கதைகளில் ஜாலி ஜம்பர் ; பொடியன் பில்லி ; டால்டன் சகோதரர்கள் ; மா டால்டன் ; போன்றோர் எத்தகைய permanent slot பிடித்துள்ளனரோ - அதே மாதிரியான நிரந்திரத்தைத் தக்க வைத்துக் கொண்டது ரின் டின் கேன் ! டால்டன்களுக்குக் காவல் நிற்கச் சொன்னால் அதனைத் தலைகீழாய்ப் புரிந்து கொண்டு அவர்களை எஜமானர்களாய் எண்ணிப் பாசமழை பொழியும் குடாக்குத்தனத்திலாகட்டும் ; தனது கோணங்கித்தனங்களால் ஜாலி ஜம்பரை எரிச்சல் மூட்டுவதிலாகட்டும் ; ஆவ்ரெல்லைப் போல தன முன்னே வைக்கப்படும் சோப்புக் கட்டியைக் கூட கபளீகரம் செய்யும் ஆற்றலில் ஆகட்டும் - ரின் டின் கேனுக்கு நிகர் ஏதும் கிடையாது ! 1987 முதல் 2003 வரை பயணித்த ரி,டி.கே தொடரில் மொத்தம் 20 ஆல்பம்கள் உள்ளன ! அவற்றை மெது மெதுவாய் நாம் முயற்சிக்கவுள்ளோம் - 2014-ன் மையப் பகுதியிலிருந்து ! லக்கி லூக் கதைகளைத் தாண்டி - குட்டீஸ்களுக்கென பிரமாதமாய் நம்மிடம் சரக்கெதும் இல்லையென்ற குறையை  ரி,டி.கே கொஞ்சமேனும் சரி செய்யுமென்ற நம்பிக்கையோடு இத்தொடரினுள் தலை நுழைக்கிறோம் ! 


கார்ட்டூன் கதைகளென்ற தலைப்பினில் சஞ்சாரம் செய்திடும் வேளையில் சின்னதாய் ஒரு பிளாஷ்பாக் படலமும் என்னுள் ஓடியது ! இது நாள் வரை நமது காமிக்ஸ் இதழ்களுள் தொடர்ச்சியாய்த் தலைகாட்டிய நாயகர்கள் யாரெல்லாம் என்று யோசித்துப் பார்த்தேன் ! முத்து காமிக்ஸின் பெரும் பகுதிக்கு விச்சு & கிச்சு ; கபிஷ் ; அதிமேதாவி அப்பு போன்ற filler page நாயகர்களைத் தாண்டி வேறு எவரும் என் நினைவுக்கு வந்திடவில்லை ! "கார்ட்டூன் கதைகள் ஒரு முழு நீள காமிக்ஸ் இதழுக்கான படைப்புகளல்ல  !" என்பது அந்நாட்களில் முத்து காமிக்ஸ் தனக்குத் தானே போட்டுக் கொண்டதொரு கட்டுப்பாடு ! So - அந்த 1 பக்க ; 4 பக்க, page ரொப்பும் ஆசாமிகளை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் எஞ்சி நிற்பவர்கள் யாரென்று யோசித்த போது - ஆச்சர்யமூட்டும் விதத்தில் விட்டத்தை மட்டுமே என்னால் வெறித்துப் பார்க்க முடிந்தது ! சரி - முத்துவில் சீரியஸ் ரக கதைகள் மாத்திரமே என்ற சமாதானத்தோடு லயனின் பக்கமாய்ப் பார்வையைத் திருப்பினேன் ! 

லயன் காமிக்சிலும் ஆங்காங்கே தலைகாட்டிய ஜோக்கர் ; இரத்த வெறியன் ஹாகர் ; சிரிப்பின் நிறம் சிகப்பு ; பரட்டைத்தலை ராஜா ; மிஸ்டர் மியாவ் போன்றோரை bit players ஆக மட்டுமே கருதினால் - எஞ்சி நிற்கும் முழு நீளக் கதை நாயகர்களின் அணிவகுப்பு - சொல்லிக் கொள்ளும் சைசுக்குத் தேறவில்லை என்பதே நிஜம் ! 1984-ல் துவங்கிய லயனில் - முதன்முறையாக ஒரு கார்ட்டூன் கதைக்கு வாய்ப்புக் கிட்டியது 1989-ல் தான் ! அது எந்தக் கதை என்ற சிந்தனையில் நீங்கள் இருக்கும் போதே - கார்ட்டூனுக்கென பிரத்யேகமாய் சாலையமைக்க முனைந்த ஜூனியர் லயன் & மினி லயனைப் பார்ப்போமா ?   

அந்தரத்தில் ஸ்கிப்பிங் ஆடிக் கொண்டே 1987-ல் "சூப்பர் சர்க்கஸ் " இதழின் வாயிலாக நமக்கு அறிமுகமான லக்கி லூக் தான் நமது சிரிப்புலகப் பயணத்தின் முன்னோடி ! அது வரை ஒரு முழு நீளத் (தமிழ்) காமிக்ஸ் இதழில் ஒரு சர்வதேச முழுநீளக் கார்ட்டூன் வெளியானதில்லை என்பதை என்னால் இன்றளவும் நம்பிட இயலவில்லை ! (1980-களில்முத்து காமிக்ஸில் வெளியான "நாடோடி ரெமி" பெயரளவிற்கொரு கார்ட்டூன் இதாலே தவிர, கதையில் humour மிகக் குறைச்சலே என்பது நாமறிந்தது தானே ?!) லக்கி லூக்கின் தரமும், கார்ட்டூன் பாணியின் இதமும் ஒருசேர நம்மை மயக்கியத்தில் வியப்பில்லை தான் ! தொடர்ந்த ஜூனியர் லயன் இதழ் # 2-ல் அறிமுகமான அலிபாபா - இன்னுமொரு smash hit ! மொத்தம் மூன்றே கதைகளோடு இத்தொடர் படைப்பாளிகளால் மங்களம் பாடப்பட்டதென்பது தான் வேதனையே ! ஆனால் நல்ல காலத்திற்கு ஜோ.லயனின் இதழ் # 3-ல் தலைகாட்டிய சிக் பில் கோஷ்டிக்கும் படைப்பாளிகள் அதே போன்ற சொற்ப ஆயுள் நிர்ணயம் செய்திடாது - அவர்களது சிரிப்புத் தோரணத்தை 60+ கதைகளுக்கு நீட்டித்தனர் ! இன்று வரை நம்மிடையே தூள் கிளப்பி வரும் இந்த நவீன கவுண்டமணி-செந்தில் ஜோடிக்கு காமடி பட்டியலில் ஒரு பிரதான இடமுண்டு !  


சிக் பில் & கோவிற்கு ஆயுசு கெட்டியாக இருந்த போதிலும், அவரை நமக்கு அறிமுகம் செய்து வைத்த ஜூனியர் லயனுக்கு அந்தப் பாக்கியம் இருந்திடவில்லை ! நான்கே இதழ்களோடு மினி லயனின் ஜோதிக்குள் ஐக்கியம் ஆகிப் போனது ! மினி-லயனில் அலிபாபா ; சிக் பில் ; ஆகியோரது சாகசங்கள் தொடர்ந்தன ! அவர்களுக்கு அடுத்தபடியாய்ப் பெயர் சொல்லிக் கொள்ளுமொரு இடம் பிடித்தது வால்ட் டிஸ்னியின் அங்கிள் ஸ்க்ரூஜ் & டொனால்ட் டக் கோஷ்டியே ! "ஒரு நாணயப் போராட்டம்" ; "நடுக்கடலில் எலிகள்" இங்குள்ள இன்றைய தலைமுறைக்கு நினைவிருப்பது சிரமமே ; ஆனால் 1988 & 89-களில் நமது அபிமானிகளுக்கு அவை மறக்க இயலா classics ! தொடர்ந்து அறிமுகம் கண்டதும் கூட இன்னொரு smash hit கதைவரிசையே ! முதன்முறையாக ஹாலந்து மாட்டிலிருந்து - டச் மொழியிலிருந்து தமிழுக்குள் அடி வைத்த பெருமைக்குச் சொந்தக்காரர்களான "சுஸ்கி & விஸ்கி " தான் அவர்கள் ! இன்றளவும் ஐரோப்பிய சேகரிப்பாளர்களின் தேடலுக்கும், உள்ளூர் காமிக்ஸ் ஆர்வலர்களின் நேசத்திற்கும் உரிய இவர்களது 3 இதழ்களுமே வெளியான சமயத்திலேயே செம ஹிட்ஸ் ! ஆனால் ரொம்பவே குழந்தைத்தனமான இதன் கதைக்களங்களை அன்றைய நாட்களின் போதே எக்கச்சக்கமாய் எடிட் செய்ய வேண்டிய நெருக்கடியையும் சந்தித்தேன் என்பதும் நிஜமே ! இப்போது கூட - "சுஸ்கி & விஸ்கி" வருமா சார் ?" என்று கண்கள் மிளிர புத்தகவிழாக்களின் போது சில நண்பர்கள் வினவுவதும், நான் இதே பதிலைச் சொல்லுவதும் வாடிக்கையே ! 

அலிபாபா கதைகள் மூன்றோடு முற்றுப்புள்ளி பெற்றவை எனும் போது - அவர் விட்ட இடத்தைப் பிடிப்பார் சிந்துபாத் என்ற நப்பாசையோடு இந்த ஜெர்மானியப் படைப்பை களமிறக்கினோம் ! ஆனால் துளியும் பரபரப்பை ஏற்படுத்தத் தவறிய இந்தத் தலைப்பாகை வீரரை அவர்தம் தாயகத்துக்கே வழியனுப்பி விட்டோம் ! மினி லயனில் ஏராளமான ஒரு பக்க ; இரு பக்க கார்டூன்கள் மட்டுமல்லாது - one shot இதழ்களும் வந்திருந்தன ! காமெடி கர்னல் ; தூங்கிப் போன டைம் பாம் புகழ் (!!) ஏஜண்ட் 00 போன்றோரை நான் தொடர் நாயகர் பட்டியலில் சேர்க்கவில்லை ! 40 இதழ்களோடு மினிலயன் மண்ணைக் கவ்வியான பின்னே லயனுக்கு transfer வாங்கிக் கொண்டவர்கள் லக்கி லூக்கும் ; சிக் பில்லும் மாத்திரமே ! ஆனால் லயனில் முதன்முறையாக ஒரு கார்ட்டூன் சாகசத்தில் வெளியான பெருமை அவர்களைச் சாராது ! 1989-ல் "வாரிசு வேட்டை" இதழில் தலை காட்டிய "ஹெர்லக் ஷோம்ஸ்" தான் இப்பட்டத்தைத் தட்டிச் செல்லும் பிரகஸ்பதி ! பின்னாட்களில் - அதுவும் லயனின் 100-வது இதழுக்குப் பின்னதாகவே கார்ட்டூன் நாயகர்கள் சிக் பில் & லக்கி லூக் களமிறங்கியதாய் ஞாபகம் ! அதன் பின்னர் வாய்ப்புப் பிடித்த குள்ளக் கத்திரிக்காய் "மதியில்லா மந்திரி" இன்றளவும் active ஆகா இருப்பது ஒரு ஆறுதல் ! 2013-ல் நமக்குப் பரிச்சயம் தேடித் தந்த ஸ்டீல்பாடியாரையும் ; ப்ளூகோட் பட்டாளத்தையும் பட்டியலில் சேர்க்கும் போது -  this is how it reads :
 1. லக்கி லூக்  
 2. அலிபாபா 
 3. அங்கிள் ஸ்க்ரூஜ் 
 4. சுஸ்கி & விஸ்கி 
 5. சிந்துபாத் 
 6. ஹெர்லக் ஷோம்ஸ் 
 7. மதியில்லா மந்திரி 
 8. ஸ்டீல்பாடியார் 
 9. ப்ளூகோட் பட்டாளம் 
ஆக ஒரு 41 ஆண்டு கால முத்து காமிக்ஸ் பயணம் + almost 30 ஆண்டு கால லயன் காமிக்ஸ் பயணம் + 44 இதழ்களுக்கான ஜூ.லயன்+ மினிலயன் சஞ்சாரமும் ஒட்டு மொத்தமாய் நமக்கு நல்கியுள்ளது ஒன்பதே கார்ட்டூன் கதைவரிசைகள் மட்டுமே என்பது தான் hard facts ! இதனை சிறிது சிறிதாய் செப்பனிடும் பணியைத் துவக்குவது எத்தனை அவசியமென்பது எனக்கு நெத்தியடியாய்ப் புலனாகிறது ! நம் ரசனைகலுக்கெற்ற கார்ட்டூன் கதைகளுக்கு பஞ்சமா ? அல்லது ஆக்க்ஷன் ...கௌபாய்....டிடெக்டிவ் போன்ற genre களில் நாம் காட்டும் அதீத ஆர்வம் இப்பக்கமாய் நாம் திரும்பிட அவகாசம் தரவில்லையா ? சிந்திக்கும் குல்லாய்க்கு வேலை / வேளை வந்து விட்டதென்ற புரிதல் புலர்கிறது !

சென்ற சனிக்கிழமை முதலாய்த் துவங்கிய திருச்சி புத்தகக் காட்சியைப் பற்றிச் சொல்வதாயின் - ஒரு மாநகருக்கு இது மிகச் சிறியதொரு முயற்சியே ! அதுவும் 27 ஆண்டுகளாய் நடந்திடும் இந்தப் புத்தக விழாவின் அளவு ; பங்கேற்போரின் எண்ணிக்கை ஜாஸ்தி இருக்குமென்றே எதிர்பார்த்தோம் ! ஆனால் சின்னதாய் ஒரு அரங்கம் ; இரண்டே வரிசைகளில் சிக்கனமாய் 60+ ஸ்டால்கள் ; அவற்றில் ஒரு 10 ஸ்டால்களாவது வெற்றிடங்கள் ! ஞாயிறன்று காலை நான் சென்ற போது அங்கு நிலவிய அமைதி ஊக்கம் தரும் விதத்தில் இல்லை என்பதே நிஜம் ! ஈரோட்டிலும், சென்னையிலும் நாம் பார்த்துப் பழகி இருந்த ஜனத் திரளோ, விற்பனை விறுவிறுப்போ மருந்துக்குமில்லை ! நமது ஸ்டாலில் நண்பர்கள் திருச்சி விஜயஷங்கர் ; கருமண்டபம் செந்தில் ; மற்றும் கிறுக்கல் கிறுக்கனார் மாத்திரமே ஆஜர் ! குளித்தலையிலிருந்து நண்பரொருவரும் கலந்து கொள்ள - சாவகாசமாய் அரட்டைக் கச்சேரி ஓடியது ! அவ்வப்போது வருகை தந்தவர்கள் ஒன்றும் இரண்டுமாய் நமது இதழ்களை வாங்கிடுவதும் ; 'அட..இன்னமும் இதெல்லாம் வெளியாகிறதா ? ' என்ற ஆச்சர்யக் கேள்விகள் எழுப்புவதும் சகஜமாய் இருந்தது ! இங்கிலீஷில் காமிக்ஸ் ஏதும் இல்லையா ? என்ற கேள்விகளும், மாயாவி இருக்காரா ? என்ற வினவல்களும் வழக்கம் போலவே அவ்வப்போது ! மதிய உணவை அங்கிருந்த FOOD FAIR (!!) -ல் நண்பர்களோடு முடித்துக் கொண்டு நான் நடையைக் கட்டிய போது - 'ஆஹா...தெரியாத்தனமாய் ஸ்டால் போட்டு விட்டோமே !" என்ற ஆதங்கம் எனக்குள் இருந்தது ! ஆனால் அன்றிரவு நான் சிவகாசிக்குத் திரும்பிய சற்றைக்கெல்லாம் இராதாகிருஷ்ணன் போன் செய்த போது 10,000 ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதென்று சொல்லக் கேட்ட போது எனக்கு 'அடடே..தேவலையே!' என்று நினைக்கத் தோன்றியது ! இவ்வாரத்தின் ஒரு நாள் நீங்கலாய் இதர நாட்கள் அனைத்திலும் சராசரியாய் ரூ.3000-ரூ.4000-க்கு விற்பனை எனும் போது - நிச்சயமாய் இதுவொரு பிரயோஜனமான முதலீடே என்பது உறுதியானது ! இன்னும் இரு நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் - நம்பிக்கையோடு காத்துள்ளோம் !


நமக்குக் கடல் கடந்தும் நண்பர்கள் ; ரசிகர்கள் உள்ளனர் என்பது நிஜமே ; ஆனால் சென்ற மாதம் நாம் வெளியிட்ட அதே கதையினை, அதே தலைப்போடும், அதே மொழிபெயர்ப்பொடும் அட்சர சுத்தமாய்  வெளியிடும் அளவிலான "ரசிகர்கள்" ஸ்ரீலங்காவிலிருந்து வெளியாகும் தினசரிப் பத்திரிகை ஒன்றிலும்  உள்ளதைப் பார்க்கும் போது திகைப்பாய் உள்ளது ! பாருங்களேன் - "யுத்தம் உண்டு..எதிரி இல்லை...!" - version 2 ! Phew !


379 comments:

 1. தல இத இத தான் நாங்க எதிர்பார்த்தோம்!!!

  ReplyDelete
 2. ரின் டின் கேன் ........CAN

  ReplyDelete
 3. Welcome ரின் டின் கேன்!

  .வானிலை அறிவிப்பு:
  கார்ட்டூன்புரம் பக்கமாக புயல் காற்று வீசும் அறிகுறிகள் தென்படுகிறது. தொடர் மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிகிறது :D

  ReplyDelete
 4. ஆசிரியர் அவர்களுக்குக் மதி இல்ல மந்திரி பார்த்து வெகு நாட்கள் ஆகிறது கண்ணில் சிறிது காட்டுங்களேன் சார்

  ReplyDelete
  Replies
  1. kabdhul & Ramesh Kumar : இந்தாண்டின் இறுதியில் மந்திரியார் மட்டுமே தலை காட்டும் ஒரு சிறுகதைத் தொகுப்புக்கு வாய்ப்புள்ளது !

   Delete
  2. ஹூம்! மந்திரி காட்டில் மழை!

   Delete
  3. மந்திரியாரின் சிறுகதை தொகுப்புக்கு முழு ஆதரவு. ஜில்ஜோர்டானால் ஏற்பட்ட தலைவலிக்கு மந்திரியும், ரின்டின் கேனும் மருந்தாக இருப்பார்கள்.

   Delete
 5. அலிபாபா மறுபதிப்பு காண வாய்ப்பு உள்ள தா சார்

  ReplyDelete
  Replies
  1. kabdhul : துரதிர்ஷ்டவசமாய் இப்போதைக்கு வாய்ப்பில்லை ! இவை அங்கு வெற்றி கண்டிடா கதைகள் ; so இவற்றிற்கு டிஜிட்டல் கோப்புகள் தயாரிப்பதில் படைப்பாளிகளுக்கு ஆர்வமில்லை !

   Delete
  2. அந்த கதைகள் வெற்றி பெறாதது வியப்பளிக்க்றது ! துரதிர்ஷ்டம் மட்டுமல்ல வேதனையான விஷயம் கூட !

   Delete
 6. ிறைய கார்ட்டூன் குழந்தைகளுக்கு மட்டும் அல்ல எங்களுகும் ரொம்ப பிடிக்கும்

  ReplyDelete
 7. புது வரவுக்கு வாழ்துகள் சார்

  ReplyDelete
 8. Seems everything unexpected about this post....Diagnosing. problem...

  ReplyDelete
 9. We are waiting for your update from Trichy Book fair. fast sir

  ReplyDelete
 10. (yakri) யாக்ரி ட்ரை பண்ணலாமே சார் ?

  ReplyDelete
 11. நீங்கள் சிந்தித்ததால் நாங்கள் சிரிக்க போகிறோம் !

  ReplyDelete
  Replies
  1. சுஸ்கி விஸ்கியோடு காலப்ணபயத்திர்க்கு வாய்ப்புண்டா சார் !

   Delete
 12. RIN TIN CANE - A SEPARATE STORY FROM 1987 ..KALKUNGA THALAVAI KALAKUNGU..

  ReplyDelete
 13. v want compilation of sporty (vichu & kichu)

  ReplyDelete
 14. 'ரின்-டின்-கேன்' என்னிக்காச்சும் ஒரு நாள் பெரிய ஆர்ட்டிஸ்டா வரும்னு நான் அன்னிக்கே நம்பிக்கை வச்சேன். என் நம்பிக்கை வீண் போகலை.( மூச் மூச்...). ச்சும்மா பூந்து வெளையாடு ரின்டின்கேன்! நீ எவ்ளோ ஒசரத்துக்குப் போனாலும் தமிழ்ல வாய்ப்புக்குடுத்த வாத்தியாரை மட்டும் என்னிக்கும் மறந்துடாத ஆமா!

  பூனைகளத்தான் தொரத்தி அடிக்கறீங்க; இந்த நாயையாவது வாழவிடுங்கப்பா ப்ளீஸ்!

  ReplyDelete
  Replies
  1. // பூனைகளத்தான் தொரத்தி அடிக்கறீங்க; இந்த நாயையாவது வாழவிடுங்கப்பா ப்ளீஸ்!//

   கோசினி & மோரிசின் படைப்பு வரிசை நல்ல Standard-ல இருக்கறதால ரின் டின் பிழைத்தது (அவங்க பிராணிகளை நல்லா வளர்க்கறாங்க. Ex: ஜாலி ஜம்பர்). பூனை Character-களும் வரவேற்பைப் பெறனும்னா நல்ல படைப்பாளிகளா பார்த்து காலை உரச ஆரம்பிங்க... இரவில் பாத்திரங்களை உருட்டக்கூடாது.

   சிக்பில் காமிக்ஸ்காரங்க கூட ஆரம்பத்துல சிலகதைகள்ள பிராணிகள்மேல பரிவா இருந்துட்டு அப்பறமா துரத்தியடிச்சிட்டாங்க... உர்ர்ர்ர்...

   Delete
  2. அதுல பாருங்க நாட்டாமை, எனக்கு ரின்-டின்-கேனை பிடிக்க இன்னொரு காரணம்: அது எப்பவுமே அணிஞ்சிருக்கும் 'ரேஞ்சர்' பேட்ச்! ஹி ஹி நட்சத்திரக் குறியீட்டோடு யார் பேட்ச் குத்தியிருந்தாலும் எங்களுக்கு உடனே பிடிச்சுப் போயிடுதே அது ஏன்னு தெரியலை!

   Delete
  3. ஓ.. அதனாலதான் அந்த ரின்டின், டக்ஸ் வில்லர் மாதிரியே சூப்பரா செயல்படுதுனு சொல்லவர்ரீங்களா?! பேஷ் பேஷ்! :D

   Same side goal, பூனையாரே!

   Delete
 15. After a long time a complete post on a topic - cartoon stories.

  Never read RinTinCan own stories, have mixed reaction - hopefully they turn out better.

  Swiske & Wiske - Definitely has some very good stories, their main attraction was adventure

  ReplyDelete
 16. Thirchy Book Fair - Hope the last days bring more sales.

  On Publishing our stories in srilanka newspaper - Are we going to pursue copyright infringement OR we are going to leave it because it can bring some publicity

  ReplyDelete
 17. காமிரேட்ஸ்,

  திருச்சி புத்தக கண்காட்சியை பற்றிய எடிட்டரின் கருத்துகள் வலையேற்றப்பட்டு உள்ளன (ஏற்கனவே இன்று மாலை இடப்பட்ட பதிவில் கடைசியாக போட்டோக்களுடன் அப்டேட் செய்துள்ளார்).

  ReplyDelete
 18. சபாஷ் ரின்-டின்-கேன்! இதுவரை 20 தனி ஆவர்த்தன கதைகளா!! இன்னும் ஓரிரு கதைகள் மட்டும்தான் பாக்கி; அப்புறம் அந்தப் 'புலி'யின் கொட்டத்தை அடக்க நீயே போதும்னு நிரூபிச்சிடலாம். ஹா ஹா!

  ReplyDelete
  Replies
  1. அந்த புலிய கிலி பிடித்து கொண்டது, கிளி கொத்தியே , நாமெல்லாம் ..........

   Delete
  2. டைகர் கதைகள் முடிந்துவிட்டாலும், மீண்டும் மீண்டும் மறுபதிப்புகளாக மறுஒளிபரப்பு செய்யப்படக்கூடும் என்ற அறைகூவலை எங்களுடைய புதிய எதிரியான :P ரின்டின்னுக்கு முதற்கண் சொல்லிக்காட்ட கடமைப் பட்டிருக்கிறோம்... ம்க்கும்... கர்.. உர்... புர்...

   இது பல side goal! :P

   Delete
  3. // எங்களுடைய புதிய எதிரியான ரின்டின்னுக்கு //

   ஹா ஹா ஹா! ஹோ ஹோ ஹோ! புலியின் நிலைமை ஒரு நாயுடன், அதுவும் சோப்ளாங்கி நாயுடன் போட்டி போடும் அளவுக்கு ஆகிடுச்சே! :D

   Delete
  4. /////////////////////////ஹா ஹா ஹா! ஹோ ஹோ ஹோ! புலியின் நிலைமை ஒரு நாயுடன், அதுவும் சோப்ளாங்கி நாயுடன் போட்டி போடும் அளவுக்கு ஆகிடுச்சே!///////////////////////////

   விஜய் வேற என்ன செய்வது சொல்லுங்க, டைகர் முன் மற்ற நாயகர்கள் சோப்ளாங்கி நாயைவிட, மிகவும் சோப்ளாங்கியாக அல்லவா உள்ளார்கள்.

   Delete
  5. ஆரம்பிச்சுடீங்களா .................

   (பலூன்) வட்டம் மாற்றி வசனம் அமைக்கும் போட்டி

   அற்ப பதர்

   மூக்கில குத்துனா தாடி தொண்டைக்குள்ள சிக்கிக்கும்

   முயற்சித்து தான் பாரேன்

   வெட்டியானுக்கு வேலை வந்துடுச்சு

   ஆறடி குழியில் துயில ஆசையா

   அமாம் அது நீண்ட பட்டியல் ஆயிற்றே

   போகிற பக்கமெல்லாம் இது தானே பார்க்கிறோம்

   வாழ்க்கை வெறுத்து விட்டதா

   முளை குடைச்சலை போக்க சிறந்த மருந்து தோட்டா தான்

   மென்னியை முறித்து விடுவேன்

   முதுகில விரித்த குடை அளவுக்கு ஓட்டை போடுவேன்

   எழுந்து நில் இன்னும் கொஞ்சம் படம் புகட்ட வேண்டி உள்ளது

   இன்றைக்கு கற்று கொண்டது பத்தாது போலும்

   இன்னும் வாய் கொழுப்பு அடங்கவில்லையா

   விரியன்கள்

   ............................

   நல்ல பாசிடிவ் பாத்திரம்டா சாமி ........

   இதுக்கு ரின் டின் கேனே தேவலாம் .................

   அய்யா டொக்ஸ் வில்லர் பதிவின் முதல் வரியை படிக்கவும்

   Delete
  6. // மூக்கில குத்துனா தாடி தொண்டைக்குள்ள சிக்கிக்கும் //
   Offtopic, என்னப்பாது, இதைக்கொஞ்சம் கற்பனை செஞ்சி பார்த்தால் ரின்டின் கார்ட்டூனை விட காமெடியா இருக்கு! :D

   Delete
  7. உங்களுக்காவது புரியுதே ரமேஷ்

   Delete
  8. டெக்ஸ் வில்லர் கதைகளை ஆசிரியர் விரும்பி வெளியிட காரணம் என்னவென்று சிந்தித்த போது உண்டான ஞானம் பின்வருமாறு...
   1. அட்டை படத்திற்க்கு மட்டும் சிறிது அளவே மெனக்கெட்டால் போதும்.
   2. மொழிபெயர்ப்புக்கும் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை. மேலே உள்ள வசனங்களை பலூனையும் பக்கத்தையும் மாற்றி போட்டால் போதும்.
   3. கதை ஓட்டத்தையும் சிந்தித்து மொழிபெயர்க்க தேவையில்லை.
   4. ஒரு குண்டு புக்கு கணக்கு முடிந்தது.. இன்னும் கொஞ்ச நாள் பிரச்சனை இருக்காது.
   5. மறுபதிப்பும் யாரும் கேட்க மாட்டார்கள் எவ்வளவு வருடங்கள் ஆனாலும் சரி.
   6. ஒரு டெக்ஸ் கதை மூலம் கௌ பாய் ரசிகர்களை திருப்தி படுத்துவதோடு மட்டும் இல்லாமல் பேண்டசி கதை ரசிகர்களையும் சமாளித்து கொள்ளலாம்.
   7.டெக்ஸ் கதைகளை படிக்க வைப்பதன் மூலம் எந்த கதைகளுமே ஓவர் பூ சுற்றல் இல்லை என்று நம்ப வைக்கலாம் (தோர்கல் போன்ற பாண்டஸி வகையறா நமக்கு ஏற்கனவே அறிமுகமான genere ஆகவே இருக்கும்).
   இவ்வளவு தொலைநோக்கு சிந்தனையும் ஒவ்வொரு டெக்ஸ் கதைக்கும் பின்னாலிருக்கும்.

   டெக்ஸ் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்...

   Delete
  9. //விஜய் வேற என்ன செய்வது சொல்லுங்க, டைகர் முன் மற்ற நாயகர்கள் சோப்ளாங்கி நாயைவிட, மிகவும் சோப்ளாங்கியாக அல்லவா உள்ளார்கள்.//
   டைகரு,க்கு கற்பனை வளம் அதிகம் , அப்படி நினைத்து கொண்டுதான் சோப்லாங்கிகளுடன் மட்டும் மோதி மூக்கை உடைத்து கொள்கிறார் போலும் !

   Delete
  10. டெக்ஸ் வில்லர் கதைகளை ஆசிரியர் விரும்பி வெளியிட காரணம் என்னவென்று சிந்தித்த போது உண்டான ஞானம் பின்வருமாறு...
   //1. அட்டை படத்திற்க்கு மட்டும் சிறிது அளவே மெனக்கெட்டால் போதும்.//
   ஆம் மேக் அப் தேவை இல்லை ; அழகுபடுத்த என தனி நேரம் ஒதுக்க தேவை இல்லை !

   //2. மொழிபெயர்ப்புக்கும் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை. மேலே உள்ள வசனங்களை பலூனையும் பக்கத்தையும் மாற்றி போட்டால் போதும்.//
   ஆம் பார்த்தாலே போதும் அனைத்தும் புரியும் !
   //3. கதை ஓட்டத்தையும் சிந்தித்து மொழிபெயர்க்க தேவையில்லை.//
   ஆம் தெசை பார்த்தாலே சிந்திக்காமலே அருவியாய் வார்த்தைகள் கொட்டும் !

   4. ஒரு குண்டு புக்கு கணக்கு முடிந்தது.. இன்னும் கொஞ்ச நாள் பிரச்சனை இருக்காது.
   உண்மை !
   //5. மறுபதிப்பும் யாரும் கேட்க மாட்டார்கள் எவ்வளவு வருடங்கள் ஆனாலும் சரி.//

   ஏனென்றால் அனைவரும் டெக்ஸ் என்றாலே வாங்கி விடுவர் ! தொலைத்து விடாமல் பத்திராமாய் பொக்கிசத்தை பாதுகாப்பதால்
   //6. ஒரு டெக்ஸ் கதை மூலம் கௌ பாய் ரசிகர்களை திருப்தி படுத்துவதோடு மட்டும் இல்லாமல் பேண்டசி கதை ரசிகர்களையும் சமாளித்து கொள்ளலாம்.//
   ஆமாம் இரண்டு கல்லிலே ஒரு மாங்காய் !
   7.டெக்ஸ் கதைகளை படிக்க வைப்பதன் மூலம் எந்த கதைகளுமே ஓவர் பூ சுற்றல் இல்லை என்று நம்ப வைக்கலாம் (தோர்கல் போன்ற பாண்டஸி வகையறா நமக்கு ஏற்கனவே அறிமுகமான genere ஆகவே இருக்கும்).
   //ஆம் ஒரு ஹீரோத்தனம் ! ஆனால் தோர்கள் அளவுக்கு வராதுதான் !
   //இவ்வளவு தொலைநோக்கு சிந்தனையும் ஒவ்வொரு டெக்ஸ் கதைக்கும் பின்னாலிருக்கும்.

   டெக்ஸ் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்...//
   இப்ப புரியுதா அப்பாவி டைகர் வால்களே !

   Delete
  11. மந்திரியரே எதிரியை அச்சுறுத்த வேண்டுமல்லவா !

   Delete
  12. அய்யய்யோ.. இதுக்கு ஒரு முடிவே கிடையாதா... Escape!

   Delete
  13. மூக்கை உடைத்தது ஜெனரல் டாட்ஜ் தானே அன்றி எதிரிகள் அல்ல ..............
   அவ்வளவு தெகிரியம் யாருக்கு இருக்குன்னேன்

   Delete
  14. எங்கள் மன்னருக்கு சட்டையில் தான் அழுக்கே அன்றி மனதில் அல்ல .............

   ''டொக்சும் ஒரு பாலைவன ஒனிடா வாஷிங் மஷினும்''

   Delete
  15. /////////////////////////மந்திரியரே எதிரியை அச்சுறுத்த வேண்டுமல்லவா !/////////////////////////////

   டெக்ஸ் கதைகளில் வரும் எதிரிகள் எல்லோரும் 2 அடியில் உள்ள காட்டெருமையைகூட குறி வைத்து சுட தெரியாத ஆளாத்தான் (இந்த வசனத்தை டெக்சே ஒரு கதையில் கூறி இருப்பார்) இருக்கிறார்கள் பாவம் அந்த அப்பாவிகளைபோய் ஏன் அச்சுறுத்தனும்.

   மந்திரியாரே கார்சன் வயதான காலத்தில் பிழைக்க வழியில்லாமல் ஒரு அள்ளக்கையாக இருந்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறார் அவர் வயிற்றில் அடிக்க வேண்டாம். விட்டுத்தள்ளுங்க.......

   இன்னொரு விசயம் டெக்ஸ் கதைகளை படிக்கும்போது பவர் ஸ்டாரும், சாம் ஆண்டர்சனும்தான் நினைவுக்கு வருகிறார்கள். டெக்ஸ் கதைகளை எல்லாம் காமெடி லிஸ்டில் எடிட்டர் சேர்த்திருந்தால் இவ்வளவு விவாதம் வந்திருக்காது.

   Delete
  16. //எதிரிகள் எல்லோரும் 2 அடியில்//
   எல்லோரும் அல்ல ! பில்ட் அப் கொடுக்கும் ஒரு சிலர் , நகரை அச்சுறுத்தி வைப்பார் , அவர்களை கூட காக்க டைகர் போன்றோரால் ஏலாது , அப்பா வருவாரு பாருங்க எங்க டெக்ஸ் , முகத்திரையை கிழிக்க ஊரே தைரியம் பெற்று விடும் !

   Delete
  17. //முளை குடைச்சலை போக்க சிறந்த மருந்து தோட்டா தான் //

   சூப்பர் !

   Delete
  18. //முளை குடைச்சலை போக்க சிறந்த மருந்து தோட்டா தான் //

   // சூப்பர் ! //

   அப்புறம் ஏன் இன்னமும் டெக்ஸ் சாகாமல் இருக்கிறார்? ஆகட்டும்... :P

   Delete
  19. //அப்புறம் ஏன் இன்னமும் டெக்ஸ் சாகாமல் இருக்கிறார்?//

   அவர்தானே வைத்தியர் .

   Delete
  20. அவர் ஒரு வைத்தியர் அல்ல

   ஒரு பைத்தியர்

   Delete
  21. //////////////////எல்லோரும் அல்ல ! பில்ட் அப் கொடுக்கும் ஒரு சிலர் ////////////////////////

   அந்த ஒரு சிலர் 1) டொக்ஸ் என்ற டக்ஸ் வில்லர் 2) அள்ளக்கை என்று எல்லாராலும் அன்புடன் அழைக்கப்படும் கார்சன்

   Delete
  22. பைத்தியத்திற்கு , துர்குணம் கொண்டவர்களுக்கு ,கெட்டது செய்பவர்களுக்கு ,மற்றும் தீமைக்கு எதிரான வைத்தியர்.

   ஏமாளியாய் வாழும் டைகரே ........................

   Delete
  23. அவர்தானே வைத்தியர் .

   மற்றவர்களுக்குத் தரும் மருந்துதானே வைத்தியருக்கும்...அவருக்கு மூளைக்குடைச்சல் வந்ததே கிடையாதா? பொறுப்பான மனிதர்களுக்கு மூளைக்குடைச்சல் அடிக்கடி வரும். For example டைகருக்கு 24/7 மூளைக்குடைச்சல்தான்!

   Both side goal :P

   Delete
  24. மற்றவர்களுக்கு தீங்கு செய்ய வேண்டுமென்ற மூளைக்குடைச்சல் பிக் பாஸுக்கு ஏற்படுவதில்லை. புற்றுனோய்க்கு செய்யும் வைத்தியத்தை கைப்புண்ணுக்கு செய்யக்கூடாது .

   Delete
  25. \\\\\\\\\\\\\\\\ஏமாளியாய் வாழும் டைகரே\\\\\\\\\\\\\\\\\\

   டெக்சை போல செவ்விந்தியர் நல அதிகாரியாக இருந்து கொண்டு அவர்களை ஏமாற்றி வாழும் திறமை இல்லாததால் டைகர் ஏமாளியே........

   சில நேரங்களில் நல்லவர்களுக்கு இந்த உலகத்தில் ஏமாளி என்ற பெயரும் உண்டு.

   Delete
  26. // மற்றவர்களுக்கு தீங்கு செய்ய வேண்டுமென்ற மூளைக்குடைச்சல் பிக் பாஸுக்கு ஏற்படுவதில்லை. //

   ஓ அதுவா! அது உலகத்தில உள்ள எந்த காமிக்ஸ் ஹீரோவுக்கும் வராது. காரணம் ஹீரோவோட நல்ல குணம் அல்ல, கதாசிரியரோட Decision! :D

   Delete
  27. என்ன குற்றம் சொன்னாலும் அதற்கு ஒரு சம்பந்தமில்லாத நொண்டி சாக்கு சொல்லும் டெக்ஸ் ரசிகர்கள் 2015/ம் ஆண்டு சென்னை புத்தக திருவிழாவில் வெளியாகும் மின்னும் மரணம் இதழை போல, 2015/ம் ஆண்டு ஈரோடு புத்தக திருவிழாவில் டெக்சின் ஒரு ஸ்பெசல் இதழுக்கு எடிட்டரிடம் கோரிக்கை வைத்து வெற்றி பெற்று உங்கள் திறமையை காண்பியுங்கள் பார்ப்போம்.
   டைகர் ரசிகர்களுக்கு உள்ள திறமையில் எள்ளளவுகூட டெக்ஸ் ரசிகர்களுக்கு கிடையாது.

   Delete
  28. This comment has been removed by the author.

   Delete
  29. //அவருக்கு மூளைக்குடைச்சல் வந்ததே கிடையாதா? //
   //டைகருக்கு 24/7 மூளைக்குடைச்சல்தான்!//


   இது யாருடைய Decision ?

   Delete
  30. //டைகர் ரசிகர்களுக்கு உள்ள திறமையில் எள்ளளவுகூட டெக்ஸ் ரசிகர்களுக்கு கிடையாது.//

   எங்களுக்கு எந்த திறமையும் தேவை கிடையாது . டெக்ஸ் கதைகள் அதிகமாக வெளியிடுகின்றோமோ என்று ஆசிரியரே கேட்கும் அளவிற்கு வெளியிடப்படுகின்றன. இன்னும் பலனூறு கதைகள் வர இருக்கின்றன. யாரும் கேட்காமலேயே டெக்ஸின் ஸ்பெஷல் இதழாக தீபாவளி மலர் வெளிவந்தது. இன்னும் வரும். சிலரின் விருப்பத்தை னிறைவேற்றும் ஆசிரியர் ஆயிரகணக்கான டெக்ஸின் ரசிகர்களை எப்படி திருப்தி படுத்த வேண்டும் என்பதை அறிவார்.ஜெயிக்கிற பக்கத்திற்கு வாங்க நண்பரே !

   Delete
  31. // ஜெயிக்கிற பக்கத்திற்கு வாங்க நண்பரே ! //

   அப்ப நான் ரின்டின் பக்கம்! :D

   Delete
  32. // இது யாருடைய Decision ? //

   " டைகருக்கு 24/7 மூளைக்குடைச்சல்" - Intended for same side goal! :P

   "எல்லா Decision -ம் கதாசிரியரோடதுதான்" அப்படீன்னு டெக்ஸ்/டைகர் எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு போடு போடலாம்னு நெனச்சேன்! :D

   Delete
  33. ஏப்ரலுக்கு கார்சனின் கடந்த காலம் வரும்னு சொன்னாரே !

   Delete
  34. எங்களுக்கு எந்த திறமையும் கெடயாது ! ஆனா ஜெயிக்கிற பக்கம் கோடி தூக்க தெரியும் ! நியாயம்தானே ஜெயிக்கும் !

   Delete
  35. ////////////////எங்களுக்கு எந்த திறமையும் கெடயாது, ஆனா ஜெயிக்கிற பக்கம் கோடி தூக்க தெரியும்////////////////

   அதுதான் எங்களுக்குத் தெரியுமே. டெக்சும் அவரது ரசிகர்களும் அப்படித்தான் இருப்பார்கள்.

   தொடர்ந்த தோல்வியை சந்திக்கும் அணியை வெற்றி பெற செய்வதே டைகர் மற்றும் அவரது ரசிகர்களின் பாணி.

   அதனால திறமையான டைகர் மற்றும் அவரது ரசிகர்களுக்கு, கொடி பிடிக்க டெக்ஸ் ரசிகர்களை அழைக்கிறோம்.

   Delete
  36. ////Mugunthan kumar
   என்ன குற்றம் சொன்னாலும் அதற்கு ஒரு சம்பந்தமில்லாத நொண்டி சாக்கு சொல்லும் டெக்ஸ் ரசிகர்கள் 2015/ம் ஆண்டு சென்னை புத்தக திருவிழாவில் வெளியாகும் மின்னும் மரணம் இதழை போல, 2015/ம் ஆண்டு ஈரோடு புத்தக திருவிழாவில் டெக்சின் ஒரு ஸ்பெசல் இதழுக்கு எடிட்டரிடம் கோரிக்கை வைத்து வெற்றி பெற்று உங்கள் திறமையை காண்பியுங்கள் பார்ப்போம்.
   டைகர் ரசிகர்களுக்கு உள்ள திறமையில் எள்ளளவுகூட டெக்ஸ் ரசிகர்களுக்கு கிடையாது.///////

   ஆனால் மின்னும் மரணத்திற்காக போராடியது எங்கள் தளபதி , ஈரோடு விஜயர் என்பதை ஞாபகபடுத்த கடமைப்பட்டுள்ளேன்

   Delete
  37. //என்ன குற்றம் சொன்னாலும் அதற்கு ஒரு சம்பந்தமில்லாத நொண்டி சாக்கு சொல்லும் டெக்ஸ் ரசிகர்கள்//

   கருத்துக்குதான் பதில் சொல்லப்படுகிறது.வார்த்தைக்கு வார்த்தை பதில் வேண்டுமெனில் அது டைகரை (நீங்கள் டெக்ஸை வ்சைபாடுவது போல்) வசை பாடவேண்டியதாகவே இருக்கும். தேவையற்ற செயலாக கருதுவதால் வார்த்தைக்கு வார்த்தை பதில் வைப்பதில்லை.

   நீங்கள் மேலே பதிந்துள்ள கருத்தில் டைகர் ரசிகர்கள் வெற்றி பெற்றதைப்போல் அவர்களின் திறமையை மெச்சி பதிவு செய்துள்ளீர்கள். அதற்கான என் பதில் உங்களை (அதாவது டைகர் ரசிகர்களை ) குறை கூறாமல்; டெக்ஸ் ரசிகர்கள் ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் விதமாக ஜெயிக்கின்றபக்கம் வாருங்கள் என்று மறைமுகமாக உங்கள் கருத்துக்கு எதிர் கருத்தை வைத்திருந்தேன்.இது ஒரு உதாரணமே. இதைப் போன்றே டெக்ஸ் /டைகர் விஷயத்தில் அனைத்துக் கருத்தையும் பதிந்துள்ளேன்.

   Delete
  38. விடுங்கள் மீரான் தூங்குபவர்களை எழுப்பலாம் , தூங்குவது போல நடிப்பவர்களை ....

   Delete
  39. // தூங்குபவர்களை எழுப்பலாம் //
   அது பாவம்!

   // தூங்குவது போல நடிப்பவர்களை.... //
   எழுப்பலாம்! :D

   Delete
 19. டியர் எடிட்டர்ஜீ!!!

  //1987 முதல் 2003 வரை பயணித்த ரி,டி.கே தொடரில் மொத்தம் 20 ஆல்பம்கள் உள்ளன ! அவற்றை மெது மெதுவாய் நாம் முயற்சிக்கவுள்ளோம் - 2014-ன் மையப் பகுதியிலிருந்து ! //

  புரியவில்லையே ஸார்...? "ஷன்ஷைன் கார்ட்டூன்" என்ற நாமகரணத்தில் புதிய இதழ் ஏதேனும் வெளியிட உத்தேசித்துள்ளீர்களா என்ன...?

  அப்படி ஏதேனும் ஐடியா இருப்பின் குழந்தைகளும் வாங்கக்கூடிய வகையில் குறைந்த விலையில் (ஆர்ட் பேப்பரில் அல்லாது சாதாரண பேப்பரில்) வெளிவந்தால் நன்று!

  அவ்வாறில்லாது நமது வழக்கமான இதழ்களினூடே இக்கதைகள் வெளிவருமானால் அவற்றிற்கான தனி சந்தா அறிவிப்பை சற்று விரைவாக வெளியிட கோருகிறேன்.

  காரணம்,ஒரு பூனையின் தொல்லை தாளவில்லை.ரி.டி.கே.உதவியுடன் அதை அடக்க திட்டமிட்டிருக்கிறேன்.ஹிஹி!!!

  ReplyDelete
  Replies
  1. ஷன்ஷைன் கார்ட்டூன் அல்லது லயன் கார்ட்டூன்
   கார்ட்டூன் கதைகளுக்கு தனி சந்தா என்பது ஒரு அருமையான யோசனை.

   Delete
 20. Sir,you got to know about that "Republication"!!!!

  ReplyDelete
 21. நண்பர்கள் திருச்சி விஜயஷங்கர் ; கருமண்டபம் செந்தில் ; மற்றும் கிறுக்கல் கிறுக்கனார் வரிசைபடுத்துங்களேன் !

  ReplyDelete
  Replies
  1. From Left To Right:

   1. பச்சை டி ஷர்ட்: நாகர்கோயில் கிறுக்கல் கிறுக்கர் ஷல்லும் பெர்னாண்டஸ் அவர்கள்
   2. பெயர் தெரியவில்லை (திருச்சி சிவா சார் என்று நினைக்கிறேன்)
   3. (கோடு போட்ட சட்டை)திருச்சி தளபதி திரு விஜயஷங்கர் L அவர்கள்
   4. (கட்டம் போட்ட சட்டை) திருச்சி கருமண்டபம் திரு செந்தில் அவர்கள்

   Delete
  2. 2. My Daddy(T.K.Lakshmi Kanthan - Retd.from Highways Dept) who instilled in my blood to taste comics.

   Delete
  3. நன்றி கிங் ! விஜய் நீங்கள் கொடுத்து வைத்தவர் !

   Delete
 22. ரின்டின்கேன் லக்கிலூகை மிஞ்சிடிவார் என தோன்றுகிறது! அட்வான்ஸ் வாழ்த்துகள் RINTINCANE!:-)

  ReplyDelete
 23. 2.திருச்சி விஜய்(விஜயசங்கர்) அவர்களின் தந்தை இவர் கடந்த 70வருடங்களுக்கு மேலாக காமிக்ஸ் வாசகர் மற்றும் சேகரிப்பாளர்!

  ReplyDelete
 24. This comment has been removed by the author.

  ReplyDelete
 25. காமெடி நாயகர்களில் நான் இதுவரையில் படித்தது லக்கிலூக்,சிக்பில்,ஸ்டீல்பாடியார் மற்றும் Bluecoats பட்டாளம் கதைகள் மட்டுமே!

  ReplyDelete
 26. நண்பர்களே!

  திருநெல்வேலியில் நமது புதிய காமிக்ஸ் வெளியீடுகள் கிடைக்கும் இடம்:

  சக்தி புக்ஸ் & வீடியோ லைப்ரரி
  43R/S. Shah complex
  near hotel annapoorna
  trivandrum road
  palai-627002
  CELL- 9790906490

  ReplyDelete
 27. // சிந்திக்கும் குல்லாய்க்கு வேலை / வேளை வந்து விட்டதென்ற புரிதல் புலர்கிறது !//

  வாவ்! கிராபிக் நாவல்களுக்கேன்றே ஒரு தனி banner உருவாக்கியதை போன்று காமெடி கதைகளுக்கேன்றே ஒரு புதிய banner உருவாக்கும் எண்ணம் அந்த "சிந்தனை குல்லாயில்" இருந்து வெளிப்பட வேண்டும்! மிக விரைவில் இது சாத்தியமாகும் என்று ஸ்டீல் க்ளாவின் பட்சி ட்வீட் செய்கிறது! : ). கூடுதலாக அந்த bannerரை அறிமுகப்படுத்தும் படலமாக ஒரு 500-600 பக்கங்களுக்கும் exclusive காமெடி/கார்ட்டூன் கதைகளை கொண்ட ஒரு ஸ்பெஷல் இதழ் வெளிவரும் என்று ஒரு ரகசிய தகவலையும் ட்வீட் செய்தது. : ))))!

  //நிச்சயமாய் இதுவொரு பிரயோஜனமான முதலீடே என்பது உறுதியானது ! // +1

  //அதே தலைப்போடும், அதே மொழிபெயர்ப்பொடும் அட்சர சுத்தமாய் வெளியிடும் அளவிலான "ரசிகர்கள்" ஸ்ரீலங்காவிலிருந்து வெளியாகும் தினசரிப் பத்திரிகை ஒன்றிலும் உள்ளதைப் பார்க்கும் போது திகைப்பாய் உள்ளது ! //

  shocking! : (! உடனடியாக காப்புரிமை சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவும் சார்!


  ReplyDelete
  Replies
  1. \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ (! உடனடியாக காப்புரிமை சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவும் சார்!)\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

   இலங்கையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு எதிராக நம் நாட்டில் (அதுவும் தமிழ்நாட்டில்) இருந்து போராடினால் நியாயம் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா? வீண் பண விரயம், மன உளைச்சல்தான் உண்டாகும்.

   Delete
  2. இன்று படு அட்டகாசமாக 4 என்று இலக்கம் வேறு போடப்பட்டு வந்துள்ளது.

   Delete
 28. இதுவரை வில்லன்களாகவே இருந்த நாலுகாலார்கள் (துயில் எழுந்த பிசாசுகள், பலி கேட்ட புலிகள்) ஹீரோவாக வருவது ஒரு வரவேற்க்க தக்க மாற்றமாகவே இருக்கும்.ரேன்ஜர்களின் ஆஃபீஸில் கூட்ட நெருக்கடி ஆகப்போகிறது.ஒரு விசயம் உறுத்தாமலில்லை.... இது குழந்தைகளுக்கவா இல்லை என்னை போன்ற குயந்தைகளுக்காகவா என்பதுதான்... ஏற்கனவே ஸ்டீல் பாடியார் அடித்த அடியில் வந்த ரத்தத்தையே இன்னும் துடைத்து முடிக்கவில்லை... மறுபடியும் ஸேம் பிளட் கதை ஆகாமல் இருந்தால் சரி... ஒடின் மேல் பாரத்தை போட்டு விட்டு நாலு காலாரை வரவேற்க்க மனசை திடப்படுத்தி கொள்வோம் !!!!

  ReplyDelete
  Replies
  1. // ரேஞ்சர்களின் ஆபீஸில் கூட்ட நெருக்கடி ஆகப்போகிறது //

   ஹா ஹா ஹா! Factu factu!

   Delete
  2. ஸ்டீல், ஜில் ஜோர்டான் நமக்கு கொடுத்த சோதனையை நிச்சயம்
   ரின்டின் நமக்கு கொடுக்காது என்று நம்புவோம்.

   Delete
 29. டெக்ஸ் வில்லர் கதைகளை ஆசிரியர் விரும்பி வெளியிட காரணம் என்னவென்று சிந்தித்த போது உண்டான ஞானம் பின்வருமாறு...
  1. அட்டை படத்திற்க்கு மட்டும் சிறிது அளவே மெனக்கெட்டால் போதும்.
  2. மொழிபெயர்ப்புக்கும் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை. மேலே உள்ள வசனங்களை பலூனையும் பக்கத்தையும் மாற்றி போட்டால் போதும்.
  3. கதை ஓட்டத்தையும் சிந்தித்து மொழிபெயர்க்க தேவையில்லை.
  4. ஒரு குண்டு புக்கு கணக்கு முடிந்தது.. இன்னும் கொஞ்ச நாள் பிரச்சனை இருக்காது.
  5. மறுபதிப்பும் யாரும் கேட்க மாட்டார்கள் எவ்வளவு வருடங்கள் ஆனாலும் சரி.
  6. ஒரு டெக்ஸ் கதை மூலம் கௌ பாய் ரசிகர்களை திருப்தி படுத்துவதோடு மட்டும் இல்லாமல் பேண்டசி கதை ரசிகர்களையும் சமாளித்து கொள்ளலாம்.
  7.டெக்ஸ் கதைகளை படிக்க வைப்பதன் மூலம் எந்த கதைகளுமே ஓவர் பூ சுற்றல் இல்லை என்று நம்ப வைக்கலாம் (தோர்கல் போன்ற பாண்டஸி வகையறா நமக்கு ஏற்கனவே அறிமுகமான genere ஆகவே இருக்கும்).
  இவ்வளவு தொலைநோக்கு சிந்தனையும் ஒவ்வொரு டெக்ஸ் கதைக்கும் பின்னாலிருக்கும்.

  டெக்ஸ் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்...

  ReplyDelete
  Replies
  1. டெக்ஸ் வில்லர் கதைகளை ஆசிரியர் விரும்பி வெளியிட காரணம் என்னவென்று சிந்தித்த போது உண்டான ஞானம் பின்வருமாறு...
   //1. அட்டை படத்திற்க்கு மட்டும் சிறிது அளவே மெனக்கெட்டால் போதும்.//
   ஆம் மேக் அப் தேவை இல்லை ; அழகுபடுத்த என தனி நேரம் ஒதுக்க தேவை இல்லை !

   //2. மொழிபெயர்ப்புக்கும் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை. மேலே உள்ள வசனங்களை பலூனையும் பக்கத்தையும் மாற்றி போட்டால் போதும்.//
   ஆம் பார்த்தாலே போதும் அனைத்தும் புரியும் !
   //3. கதை ஓட்டத்தையும் சிந்தித்து மொழிபெயர்க்க தேவையில்லை.//
   ஆம் தெசை பார்த்தாலே சிந்திக்காமலே அருவியாய் வார்த்தைகள் கொட்டும் !

   4. ஒரு குண்டு புக்கு கணக்கு முடிந்தது.. இன்னும் கொஞ்ச நாள் பிரச்சனை இருக்காது.
   உண்மை !
   //5. மறுபதிப்பும் யாரும் கேட்க மாட்டார்கள் எவ்வளவு வருடங்கள் ஆனாலும் சரி.//

   ஏனென்றால் அனைவரும் டெக்ஸ் என்றாலே வாங்கி விடுவர் ! தொலைத்து விடாமல் பத்திராமாய் பொக்கிசத்தை பாதுகாப்பதால்
   //6. ஒரு டெக்ஸ் கதை மூலம் கௌ பாய் ரசிகர்களை திருப்தி படுத்துவதோடு மட்டும் இல்லாமல் பேண்டசி கதை ரசிகர்களையும் சமாளித்து கொள்ளலாம்.//
   ஆமாம் இரண்டு கல்லிலே ஒரு மாங்காய் !
   7.டெக்ஸ் கதைகளை படிக்க வைப்பதன் மூலம் எந்த கதைகளுமே ஓவர் பூ சுற்றல் இல்லை என்று நம்ப வைக்கலாம் (தோர்கல் போன்ற பாண்டஸி வகையறா நமக்கு ஏற்கனவே அறிமுகமான genere ஆகவே இருக்கும்).
   //ஆம் ஒரு ஹீரோத்தனம் ! ஆனால் தோர்கள் அளவுக்கு வராதுதான் !
   //இவ்வளவு தொலைநோக்கு சிந்தனையும் ஒவ்வொரு டெக்ஸ் கதைக்கும் பின்னாலிருக்கும்.

   டெக்ஸ் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்...//
   இப்ப புரியுதா அப்பாவி டைகர் வால்களே !

   Delete
  2. Rummi XIII :- நீங்க என்ன சொல்ல வருகின்றீர்கள் ? ஆசிரியர் சோம்பல் பட்டு டெக்ஸ் கதைகளை வெளியிடுகின்றார் என்கின்றீர்களா ? அப்படி என்றால் அவர் உங்களை ஏமாற்றுகின்றார் என்று நீங்கள் கூறுவதாகத்தானே அர்த்தம்.

   Delete
  3. வாதம் டைகர் டோக்க்சுக்கும் மட்டுமே இதில் காமிக் ஆசானை இழுக்க வேண்டாமே ..............

   Delete
 30. ஆசிரியர் மற்றும் வாசகர்களுக்கு LATE BUT NOT WASTE கதம்பம்speacial கேட்டவர்களை நோக்கி ஆசிரியர், வாசகர் என்ற 2 IN 1 ஆகஇருக்கக்கூடிய ஒரே நபர் நமது VIJAYANsir அவர்கள் தான். எவ்வளவோ தடங்கங்களுக்கு மத்தியில் காமிக்ஸ்பால் கொண்ட காதலால் train engine ஆக இருந்து நம்மை எல்லாம் சேர்த்துக்கொண்டு பயணம் செய்கிறார் என்றால் அவருடைய (நாம்) பயணத்திற்கு எரிப்பொருளாக இருக்கவேண்டும் அல்லவா?
  30ஆவது ஆண்டு மலர் கதம்பம் speacial வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் இங்கு என் மனத்தில் சில கேள்விகள் சில சந்தேககங்கள்? ஆசிரியர் கருத்து உங்களின் கருத்து இவற்றை கொண்டு அவை:
  1. தொடர் கதை வேண்டாம்
  2. முத்து காமிக்ஸ் heroகள் வேண்டாம் (இது முழுக்க முழுக்க lion 30 ஆவது ஆண்டு மலர்)
  3. lion comics heroகள் list தோராயமாக ஸ்பைடர்,ஆர்ச்சி,இரும்புகை நார்மன்,மாடஸ்ரீ,ஜான் மாஸ்டர், லரென்ஸ் & டேவிட் (lionஇல் சில கதைகளில் வந்துள்ளத்தால்), Prince,இரட்டை வேட்டயர், lucky luck, சிக்பில், அதிரடி படை, ரிப்கர்பி,பெருசாலி பட்டாளம்,X111,டையப்பளிக்,வேகின்ஷெல்ட்ன் இது தவிர ஒரு சில heroகள் ஒரு சில கதைகளில் வந்து போய் இருக்கலாம் (சரியாக நியாபகம் இல்லை வெளிநாட்டில் இருப்பதால்) கடைசியாக நமது super star டெக்ஸ் வில்லர்.
  4. lion 30 வது ஆண்டு மலர் வண்ணத்தில் 464 பக்கம் என்று ஆசிரியர் கூறி உள்ளார் பக்கமும் விலையும் குறைத்துவிட்டதே என்று ஆதங்க படும் வாசகனின் list-ல் அடியானுக்கும் ஓர் இடம் உண்டு. இருந்தாலும் ரூபாய் 500/- சிறிதும் மகிழ்ச்சிதான் அப்படி பட்ட ஒரு இதழ் கதம்ப specialஆக வேண்டும் என்று கேட்கும் வாசகனை நோக்கி! மேலே உள்ள list-ல் hero-களை தொகுத்து ஒரு special வெளியிட்டால் அது super. ஆனால் இவர்களின் கதைகள் இப்போது இருக்கின்றனவா? அல்லது வண்ணத்தில் தான் உள்ளதா? இரண்டுமே இல்லை. so கதம்ப special வேண்டும் என்று நினைக்கும் வாசகர்கள் இனிமேல் புதிதாக எந்த hero-வை எப்படி சேர்க்க போகிறீர்கள். அதுஉம் இது போன்ற special-ல்.
  ஒரு புத்தகத்தை மீண்டும் மீண்டும் படிக்க தோன்றும் கதை தான் வெற்றி பெற்றதாக அர்த்தம். அது படி பார்த்தால் இப்போது உள்ள நிலவர படிஇப்போது lion-ல் டெக்ஸ் மாத்திரமே.
  இத்தாலி-ல் டெக்ஸ்-கு special release இருப்பது போல் lion 30வது ஆண்டு மலர் டெக்ஸ் special-ஆக போட்டு தாக்கி நமது இந்த இதழ் இத்தாலி -உம் ஒரு கலக்கு கலக்குவதோடு இல்லாமல் (இப்படி ஒரு இதழா?) போனலி ஆஃபீஸ்-ன் முகப்பு கண்ணாடி-ல் இந்த இதழ் அலங்கரிக்க வேண்டும் என்பது என் ஆசை. வாகர்கள் அனைவரும் ஆண்டு மலரை டெக்ஸ் மலராக வெளி-இட தோல்கொடுப்போம் (ஆசிரியரின் முடிவு எப்போதுமே தெளிந்த நீரோடை போன்றது special-ன் போது, வாகர்கள் ஆகிய நாம் கல் எறிந்து குழப்பாமல் இருந்தாலே போதும்) இறப்பதற்குள் எவ்வளவு டெக்ஸ் கதைகளை படிக்க முடியும் என்பது தான் இப்போது உள்ள million கேள்வி ஆசிரியர் மனதுவைத்து டெக்ஸ்-கு மாத இதழ் கொடுப்பாரா? நன்றி வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. அப்படி போடுங்க பாஸ் ! டெக்ஸ் ரசிகர்கள் பெருமை படலாம்தான் ! ஆனால் நீங்கள் மேலே கூறிய அந்த வரிசை ஹீரோக்களின் சிறந்த கதைகளுடன் கருப்பு வெள்ளையில் ஐநூறுக்கும் , வண்ணத்தில் கதம்பமாக டெக்ஸ் ன் ஒரு கதையுடன் பிற நாயகர்களும் கலந்து அடித்தால்தான் அது மலராஹா இருக்கும் என்பது எனது தாழ்மையான எண்ணம் !

   Delete
  2. அதாவது இன்னொரு ஐநூறுக்கு வண்ண மலர் டெக்ஸ் இணைந்தே !

   Delete
  3. //lion 30வது ஆண்டு மலர் டெக்ஸ் special-ஆக போட்டு//

   ஆஹா !

   Delete
  4. இது தீபாவளி மலர், கோடை மலர், பொங்கல் மலர் போல அல்ல, லயன் 30/ம் ஆண்டு மலர். இதில் அனைத்து நாயகர்களையும் சிறப்பிப்பதுதான் சிறந்தது.
   இன்று பல ரசிகர்களின் எண்ணம் என்னவென்றால் டெக்ஸ் கதைகள் அனைத்தும் ஒன்றுபோலவே உள்ளது என்பதுதான். கௌபாய் கதை என்பதால் 3 மாதத்திற்கு ஒன்று என்று படித்தால்கூட யாருக்கும் டெக்ஸ் மீது சலிப்பு ஏற்படாது. மொத்தமாக 464 பக்கமும் டெக்ஸ் கதைதான் என்றால் சிறிதுகூட ஜீரணிக்க முடியாது. மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள மலர் அது கதம்பமாக வந்தால்தான் 30/ம் ஆண்டு மலர் கொண்டாட்டம் சிறப்பாக இருக்கும்.

   மின்னும் மரணம் அளவுக்கு ஒரே தொடராக ஏதாவது ஒரு விறுவிறுப்பான டெக்ஸ் கதை இருந்து அதை மொத்தமாக ஏதாவது ஒரு புத்தக திருவிழா ஸ்பெசலாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

   Delete
  5. ஒரு சிறப்பு வாய்ந்த இதழை வீணடிக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் கதம்ப மலர் வேணும்னு சொல்றோம்... 464 பக்க வண்ண பூ சுற்றலை தாங்கிற அளவுக்கு மன தைரியம் இல்லை தலைவா...

   Delete
  6. ஆனால் அந்த கதம்பத்திலே மணம் சேர்க்க டெக்ஸ் வேண்டும் ஒரு கதையாய் ! பிற நாயகர்கள் டெக்ஸ் தலைமையில் அணி வகுக்கட்டுமே !

   Delete
  7. //////////////////////ஆனால் அந்த கதம்பத்திலே மணம் சேர்க்க டெக்ஸ் வேண்டும் ஒரு கதையாய் ! பிற நாயகர்கள் டெக்ஸ் தலைமையில் அணி வகுக்கட்டுமே !///////////////////

   பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும் என்பதுபோல கதம்ப மலரில் நாறும் (டெக்ஸ்) மணந்துவிட்டு போகிறது.

   ஒரு குழந்தையை நன்கு குளிப்பாட்டி, தலைவாரி பவுடர் போட்டு அழகுபடுத்தும் தாய் கடைசியாக குழந்தைக்கு கண் பட்டுவிடக்கூடாது என்ற காரணத்திற்காக கறுப்பா ஒரு திருஸ்டி பொட்டு வைப்பார் பாருங்க அது மாதிரி நமது எடிட்டர் லயன் 30/ம் ஆண்டு மலரை அழகாக தயார் செய்து அதற்கு திருஸ்டி பொட்டாக டெக்ஸ் கதையை வைக்கலாம்.

   Delete
  8. கணிப்பு: கதம்பம் போட்டால் அதில் டெக்ஸை சேர்ப்பது கடினம். காரணம், வண்ணப்பதிப்பு கதைகளின் சைஸ் டெக்ஸ் கதையின் சைஸோடு Match ஆகாது (unless we have a rare Tex Willer story with different size!).

   டெக்ஸ் கதை போட்டால் புத்தகம் முழுவதும் தீபாவளி ஸ்பெஷல்போல டெக்ஸ் கதையாகவே இருக்க வாய்ப்புள்ளது (Unless we have other hero stories that matches this size)

   2 தனித்தனி புத்தகமா பிரிச்சி போட்டா பார்க்க அபூர்வ சகோதரர்கள் மாதிரி ஆகிடும்! :D

   Opinion: இந்தக்குறைபாடுகளைக் களைய ஒரே வழி, டெக்ஸைத் தூக்குவதே... :P

   (ஹைய்யா.. என்மீது அழகிய முட்டைகளும், சத்தான தக்காளிகளும் விழப்போகுது)

   Delete
  9. Have a look at lion jolly special,tex suits to new size

   Delete
  10. // Have a look at lion jolly special,tex suits to new size //

   I never seen that book, missed to buy!

   Delete
  11. //////////////இந்தக்குறைபாடுகளைக் களைய ஒரே வழி, டெக்ஸைத் தூக்குவதே//////////////

   உங்கள் கருத்துக்கு ஆளுயர ரோஜா மாலை காத்துள்ளது. இந்த கோரிக்கையை எடிட்டர் ஏற்றால் ஈரோடு புத்தக திருவிழாவிலேயே கோடிக்கணக்கான டைகர் ரசிகர்கள், ஒரு சில டெக்ஸ் ரசிகர்கள் முன்பு அணிவிக்கப்படும்.

   Delete
  12. // உங்கள் கருத்துக்கு ஆளுயர ரோஜா மாலை காத்துள்ளது. //

   அதை போடறதுக்கு முதல்ல ஆள் முழுசா இருக்கனுமே.. இப்போதைக்கு Safe-ஆ பதுங்கிடறேன்... D

   Delete
  13. 'ஆளுயர மாலை போடுறோம் வாங்க'னு சொல்லி, அப்பால படுக்க வச்சுப் போட்டுடப் போறாங்க பார்த்து நடந்துக்கங்க எசமான்...

   Delete
  14. விஜய் சார், இப்பதான் உங்க Avatar caption-ஐப் பார்த்தேன், Brilliant, super :P

   அப்பறம்... ஆங்! டெக்ஸ் ரொம்ப நல்லவர்!

   Delete
  15. // அழகுபடுத்தும் தாய் கடைசியாக குழந்தைக்கு கண் பட்டுவிடக்கூடாது என்ற காரணத்திற்காக கறுப்பா ஒரு திருஸ்டி பொட்டு வைப்பார் பாருங்க //
   அவ்வளவு அழகு படுத்திய குழந்தைக்கு அந்த திருஷ்டி போட்டுதான் காக்கும் கடவுள்னு தாய் நினைக்குறா பாருங்க , அது போலதான் எங்க டெக்ஸ் ! புரிதா ! புரிதா !! புரிதா !!!

   Delete
  16. //பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும் என்பதுபோல கதம்ப மலரில் நாறும் (டெக்ஸ்) மணந்துவிட்டு போகிறது.//
   அந்த நார்தானே பூக்க்களை ஒன்றிணைத்து அழகிய மாலையாக தருகிறது ! உழைக்கும் நாங்கள் பிறர் கண்களுக்கு கூட தெரிவதில்லை ! உடைந்த மூக்கனின் ரசிகர்களே !

   Delete
  17. டிராகன் நகரிலிருந்து பார்சனையும் , டெக்ஸ் கில்லரையும் அழைத்து வந்தால்தான் அடங்குவீர்களோ !

   Delete
  18. திருஸ்டி பொட்டு என்பது ஒரு குறை, அமங்கலம் என்ற அர்த்தத்தை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். நார் இல்லாவிட்டாலும் உதிரிப்பூ ரொம்ப அற்புதமாகத்தான் இருக்கும். பூவை வைத்துத்தான் நாருக்கு பெருமையே ஒழிய, நார் (டெக்ஸ்) இல்லாவிட்டாலும் பூ (லயன் 30/ம் ஆண்டு மலர்) மணக்கும்.

   Delete
  19. படுத்து வாங்கினாலும், நின்னு வாங்கினாலும் மாலை எங்களுக்குத்தான்

   Delete
  20. //464 பக்க வண்ண பூ சுற்றலை தாங்கிற அளவுக்கு மன தைரியம் இல்லை//

   கதை என்றாலே கற்பனைதான். அப்புறம் பூச்சுற்றல் என்றால் என்ன ? யதார்த்தம்தான் வேண்டும் என்றால் ரோட்டை வேடிக்கைப் பார்க்க வேண்டியதுதான். அதுதான் ரொம்ப யதார்த்தமாக இருக்கும்.

   Delete
  21. // படுத்து வாங்கினாலும், நின்னு வாங்கினாலும் மாலை எங்களுக்குத்தான் //

   படுத்துக்கிட்டு வாங்கற மாலையோட அர்த்தம் வேற... அது எனக்கு விழும்னு தெரியுது... அவ்!

   Delete
  22. // டெக்ஸ் ரொம்ப நல்லவர் //

   இத இதத்தான் எதிர்பார்த்தேன். டால்டன் கும்பலை எசமானர்கள்-னு நம்பின ரின்டின்கேன் மாதிரியே நீங்களும் இத்தனை நாளா அந்தப் புலிக் கேப்டனை நல்லவன்னு நம்பியிருந்துட்டீங்க நாட்டாமை அவர்களே!
   போகட்டும். உங்களை டெக்ஸ் மன்றத்தின் சார்பாக வரவேற்கிறோம்.

   இனி நீங்களும் நல்லவர்தான் நாட்டாமை அவர்களே! :)

   Delete
  23. திருஷ்டி போட்டு என்பது திருஷ்டி நீங்குவதற்காக வைக்கும் பொட்டு !
   நாரில்லாமல் பூ நிச்சயம் மணக்கும் ! நாரினால்தான் தனிதனி பூக்கள் இணைந்து ஒரு அழகை கொடுக்கும் ! இப்போது டெக்ஸ் போல மணம் வீசும் பிளாஸ்டிக் நார்கள் கூட வந்து விட்டன !

   Delete
  24. அந்த திருஷ்டி போட்டு தாய் எதற்க்காக வைக்கிறாள் என்பதை யோசியுங்கள், குழந்தையை அது காக்குமே என்றுதான் ! ஆனால் பாருங்கள் , குழந்தைக்கு வெகுவாக அழகை கொடுப்பது அந்த திருஷ்டி பொட்டும்தான்
   என்பது உங்களுக்கும் தெரியுமே ! அது போலதான் ,,,,,

   Delete
  25. இரும்பாரே .....திருஷ்டி பொட்டு வைகிரேன்னு நினைச்சு டோக்சுக்கு தாடி மீசை வரஞ்சுடாதீங்க ..........அப்புறம் வில்லன் யாருன்னே தெரியாது போய்டும்.........

   Delete
  26. அற்புதமான கருத்துக்கள் நண்பர் shaik அவர்களே. ஆசிரியர் மனது வைப்பார?.

   Delete
 31. This comment has been removed by the author.

  ReplyDelete
 32. 30 ஆவது ஆண்டு மலர் கல்யாண சாப்பாடு போல் இருக்க வேண்டும்
  (10 கதைகள் ) ஒரே ஒரு பிரியாணிய (டெக்ஸ்) வச்சு டெக்ஸ் ஆண்டு மலர் வேண்டாம்

  ReplyDelete
  Replies
  1. @ஸ்டீல் க்ளா, புரிந்துதான் + போட்டீர்களா? :)

   Delete
  2. \\\\\\\\\\\\\\\\@ஸ்டீல் க்ளா, புரிந்துதான் + போட்டீர்களா? :)\\\\\\\\\\\\

   இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்

   Delete
  3. புரிந்துதான் நண்பரே ! டெக்ஸ் எங்க ஆல் என்றாலும் பிறருக்கும் வாய்ப்பை கொடுப்போமே என்ற நல்ல எண்ணத்தினால்தான் ! பிறகு கை கொடுக்க போவது டெக்ஸ் மட்டும்தானே ! பின்னர் பொறுமையாக படித்து கொள்வோமே !

   Delete
  4. // புரிந்துதான் நண்பரே! டெக்ஸ் எங்க ஆல் என்றாலும் பிறருக்கும் வாய்ப்பை கொடுப்போமே என்ற நல்ல எண்ணத்தினால்தான்! //

   +1

   // பிறகு கை கொடுக்க போவது டெக்ஸ் மட்டும்தானே ! பின்னர் பொறுமையாக படித்து கொள்வோமே ! //

   -1

   Delete
 33. எடிட்டர் சார்,

  செவ்விந்தியர்களின் நலம் விரும்பி 'கேப்டன் டைகர்' எதற்காக அட்லாண்டா சென்றார்? மத்திய அமெரிக்காவிலுள்ள அனைத்து செவ்விந்தியர்களும் அழிக்கப் பட்ட பின், எஞ்சியிருப்பவர்களைத் தேடி டைகர் அட்லாண்டாவிற்குச் சென்றாரா? தோராயமாக எத்தனை உயிர்கள் பலியாகின என்பதைக் கோடிட்டுக் காட்டுவீர்களானால், இப்பொழுதே மனதை சற்று திடப்படுத்திக் கொள்ள வசதியாய் இருக்கும்.

  எண்ணற்ற உயிர்கள் எனில்,

  எனக்கு அடுத்தமாத 'அ.ஆ'விற்குப் பதிலாக 'சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்' ஒன்று அனுப்பி வைக்குமாறு தங்களைத் தாழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மீரான் :கோல் இல்லன்னா SAME SIDE இல்ல ..........

   இரும்பு :என்ன சொல்ல வர்ரே...

   மீரான் :side இல்லன்னா ரோடு இல்ல

   இரும்பு:சொல்ல வர்றத சுருக்கமா சொல்லு ...

   மீரான் :அந்த ரோட்டோர பூனைய அக்கரரைக்கு அனுபிடுவோம் ......
   .
   இரும்பு: நானும் அதையே தான் நினச்சுகிட்டு இருக்கேன்..........

   தார் ரோட்டு பூனை ........ஹையா கேன் கேன் ரிண்டின் கேன் ............(டால்டனுக்கும் லக்கிக்கும் வித்தியாசம் தெரியாத பூனை.........இது எங்க டைகரையும் டொக்சையும் கண்டு பிடிக்க போகுது )

   டிங் டிங் டிங் .................பூனை ரோட்டை தாண்டி ஓடுகிறார்

   முகுந்தன் :வாங்க பூனையாரே எந்த பக்கம் இருந்தாலும் SAME SIDE கோல் தானே போட போறீங்க

   Delete
 34. எடிட்டர் சார்,

  இலங்கையில் அந்த நாளிதழ் முறையான அனுமதியின்றி நம் 'யு.உண்டு எ.இல்லை' கதையை தொடராக வெளியிட்டது கண்டனத்துக்குரியது.

  அதே நாளிதழில் 'இக்கதையை முழுதாகப் படித்து இன்புற இன்றே வாங்குவீர் லயன்-முத்து காமிக்ஸ்' என்று நாம் ஒரு விளம்பரம் கொடுத்தால் என்ன? ஹி ஹி!

  ReplyDelete
  Replies
  1. இப்படி எல்லாம் யோசிக்க எங்க கத்துகிட்டீங்க ?

   Delete
  2. // அதே நாளிதழில் 'இக்கதையை முழுதாகப் படித்து இன்புற இன்றே வாங்குவீர் லயன்-முத்து காமிக்ஸ்' என்று நாம் ஒரு விளம்பரம் கொடுத்தால் என்ன? ஹி ஹி! //

   இம்மாதிரி Official ஆக encourage பண்ணினால், Original படைப்பாளர்களின் பார்வையில் தவறாகத்தெரியும். இலங்கை நாளிதழுக்கு இதுதொடர்பான சிக்கலை விளக்கிவிடுவதே Better.

   // யு.உண்டு எ.இல்லை //
   ஆ...!

   Delete
  3. SAME SIDE SPECIALIST தானே அவரு ................பச்சா பூனை............. விடுங்க மீரான்

   (அரே பூனைஜி ஹிந்தி மாலும் னா ....பச்சான்னா குழந்தைன்னு அர்த்தம் )

   Delete
  4. // பச்சா பூனை //
   பாய்ந்தால் புலி!

   // அரே பூனைஜி ஹிந்தி மாலும் னா//
   தோடா தோடா கூட மாலும் நஹி ஹை! ஓன்லி டமிழ் மாலும் ஹை! :)

   மந்திரியாரின் பின்புறத்தை ஒரு பூனை பிறாண்டிவிட, அடுத்த ஆறு மாசத்துக்கு கலீபாவின் சிம்மாசனம் மட்டுமன்றி எந்த ஆசனத்திலுமே அமரமுடியாதபடிக்கு ஒரு நிலைமை வந்து சேருமென்று ஸ்டீலின் பட்சி கரைந்துவிட்டுப் போனது... ;)

   Delete
  5. // பச்சா பூனை //
   // பாய்ந்தால் புலி! //
   எப்ப பாயும்?

   // ஸ்டீலின் பட்சி கரைந்துவிட்டுப் போனது... //
   ஓ அப்ப அது காக்கையா?

   Delete
 35. ஏறாத மலையின் கீழ் மூச்சு வாங்குவது போல், இன்னும் சில கதைகளே உள்ள டைகரை ''டெக்ஸுடன்'' ஒப்பிடுவது ஏனோ ? படிக்கும் போது பரவசத்தை உண்டு பண்ணவில்லை எனில் ''டெக்ஸின்'' வெளியிட்டாளர்கள் மீண்டும் மீண்டும் கதையை உண்டு பண்ணுவது ஏன் ? உங்கள் கூற்றுப்படி ரசிகர்களின் வறவேற்பு இல்லாத ஒன்று 600 க்கும் மேலான கதைகளை கொண்டிருப்பது எப்படி ? டெக்ஸுக்கு என்று தனி இதழ் வெளிவருவது ஏன்? ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை ''டைகர்'' பெற்றவர் என்றால், அவர் கதைகள் அதன் படைப்பாளர்களால் மீண்டும் உருவாக்கப்படாமல் இருப்பதன் காரணம் என்ன ?

  ReplyDelete
  Replies
  1. படைப்பாளர் ஓடினிடம் போயிட்டாங்க பாஸ் :(

   Delete
  2. ஆனால் டெக்ஸ் க்கு உள்ள வரவேற்பால் புதிய படைப்பாளர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள் , இதுதான் காலம் கடந்த போதும் தொடரும் ஒரே நட்சத்திரம் டெக்ஸ் என்பதை உணர்த்த இது ஒன்று போதாதா ?

   Delete
  3. இரும்பு கையாரே டெக்ஸ் கதைகளை எழுத பெரிதா யோசிக்க தேவையில்லைங்கிற போது நிறைய படைப்பாளிங்க வர்றது சகஜம்தானே.. ஆனா டைகர் கதை எழுத நிறைய மென கெடனுமே... அதான் யாரும் வரலை.. அவரு ரொம்ப unique பா.

   Delete
  4. @ஸ்டீல் க்ளா, மேலே பாருங்க... ஒரு வழிப்போக்கர் புரிஞ்சி வச்சிருக்கிற விஷயம்கூட நமக்குப் புரியாம இருந்திருக்கு! :D

   Same Side goal, but which side am I? :D

   Delete
  5. ///////////////சுண்டெலியை தேடிய பெருச்சாலி//////////////////////

   டெக்ஸ் வீட்டு கிச்சனில் இருந்த செவ்விந்தியர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ஒரு வறுத்த கறி துண்டு காணாமல் போய்விடுகிறது. அதை எடுத்தது ஒரு எலி என்று கண்டுபிடிக்கும் டெக்ஸ், அதை கண்டுபிடித்து, வறுத்த கறி துண்டை மீட்க டெக்சும் அவருக்கு உதவியா கார்சனும் ஒவ்வொரு ஊரா போய் தேடுறாங்க......... அந்த ஊரில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டு, அங்குள்ள பெண்ணிடம் வழிந்து அசிங்கப்படுகிறார். இது அனைத்து ஊரிலும் தொடர்கதையாக நடக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோவில் பாதிரியார், அந்த ஊர் ஸ்கூல் வாத்தியார்ன்னு எல்லாத்தையும் போட்டு அடிச்சி தான் பெரிய வீரன்னு பேர் வாங்குகிறார். கடைசியில் அந்த எலி மெக்சிகோ தப்பி போய் அந்த நாட்டு ரானுவத்திடம் உதவி கேட்கிறது. ஒரு பெரும் படையுடன் வருகிறது மெக்சிகோ ரானுவம், அதை எதிர்கொள்ளும் டெக்சும் கார்சனும் ஒரு சாதாரண கைத் துப்பாக்கியால சுடறாங்க...... சுடுறாங்க......... சுட்டுகிட்டே இருக்காங்க. துப்பாக்கில குண்டு தீர மாட்டேங்குது............. ரீலோடுகூட செய்ய மாட்டேங்கிறாங்க................ ஆனா குண்டு வந்துகிட்டே இருக்குது, மெக்சிகோ ரானுவத்திலே கொத்து கொத்தா சாவுறாங்க.............
   பாவம் மெக்சிகோ ரானுவமும் பீரங்கி, விமானப்படையில் இருந்தெல்லாம் குண்டு வீசுது. ம்ம்ம் ஒரு குண்டுகூட இருவர் மீதும் பட மாட்டேங்குது. ஏன் குண்டு வெடிச்ச துசி கூட இரண்டு பேர் மீதும் பட மாட்டேங்குது. தலமுடிகூட கலைய மாட்டேங்குதுன்னா பார்த்துக்கோங்க........ இரண்டு பேரும் சும்மா பளபளன்னு மின்னுறாங்க, கடைசியில் எல்லா ரானுவ வீரனும் செத்து போயிடுறான்.
   கடைசில அந்த எலி அந்த கறி துண்ட டெக்ஸ்கிட்ட கொடுத்துட்டு செத்து போயிடுது. அதை கொண்டு வந்து டெக்சும் கார்சனும் செவ்விந்தியர்களிடம் கொடுத்து இத சாப்பிட்டு எல்லோரும் சந்தோசமா வாழுங்க சொல்லி, அமெரிக்கா கொடுக்கிற செவ்விந்திய நலநிதி மொத்தத்தையும் சுருட்டிக்கிட்டு நீதி பரிபாலனத்தை கட்டிக் காக்கிறாங்க...... கதை அவ்வளவுதான்.

   கதைக்கு நடுவுல ஆங்காங்கே மானே....... தேனே....... பொன்மானேன்னு போட்டுக்குங்க.......... சாரி சாரி அதுக்கு பதிலா மதியில்லா மந்திரியோட இந்த பதிவை சேர்த்து கொள்ளவும்.

   (அற்ப பதர், மூக்கில குத்துனா தாடி தொண்டைக்குள்ள சிக்கிக்கும், முயற்சித்து தான் பாரேன், வெட்டியானுக்கு வேலை வந்துடுச்சு, ஆறடி குழியில் துயில ஆசையா, அமாம் அது நீண்ட பட்டியல் ஆயிற்றே, போகிற பக்கமெல்லாம் இது தானே பார்க்கிறோம், வாழ்க்கை வெறுத்து விட்டதா , முளை குடைச்சலை போக்க சிறந்த மருந்து தோட்டா தான் , மென்னியை முறித்து விடுவேன், முதுகில விரித்த குடை அளவுக்கு ஓட்டை போடுவேன் , எழுந்து நில் இன்னும் கொஞ்சம் படம் புகட்ட வேண்டி உள்ளது , இன்றைக்கு கற்று கொண்டது பத்தாது போலும், இன்னும் வாய் கொழுப்பு அடங்கவில்லையா, விரியன்கள்

   /////கதை முகுந்தன் /////////////உதவிஆசிரியர் மதியில்லா மந்திரி

   அப்பாடா............ இன்றிலிருந்து நானும் டெக்ஸ் கதை படைப்பாளிதான்..................................

   Delete
  6. //இரும்பு கையாரே டெக்ஸ் கதைகளை எழுத பெரிதா யோசிக்க தேவையில்லைங்கிற போது நிறைய படைப்பாளிங்க வர்றது சகஜம்தானே.. ஆனா டைகர் கதை எழுத நிறைய மென கெடனுமே... அதான் யாரும் வரலை.. அவரு ரொம்ப unique பா.//
   ஆனால் விற்பனை தூள் கிளப்பினால் யோசிக்க ஆட்களா இல்லை !

   Delete
 36. அட்ரா அட்ரா அட்ரா அட்ராசக்கண்னானாம்....தலைவா எல்லாம் ஏன் தலைவா இப்படி டெக்ஸ்சு, டைகர்ன்னு அடிச்சுக்கறாங்க...உங்க பாணியில அடி தூள் கெளப்புங்க தலைவா ஏன்னா நானும் டெக்ஸ் ரசிகன்தான். டெக்ஸ் ஆண்டு மலர் வாழ்க! விஜயன் வாழ்க! டெக்ஸ் வாழ்க! ( அப்பப்ப நான் வந்தாத்தான் கொஞ்சம் பயம் இருக்கும் )

  ReplyDelete
  Replies
  1. 'அட்ரா சக்கை' புகழ் ரவிகிருஷ்ணணை வெகுநாட்களாக இங்கே காண முடியவில்லையே? வெல்கம் பேக்! :)

   Delete
  2. அடிக்கடி இங்க வந்துட்டுப்போங்க. உங்களோட Sound Effects-ம் Special Effects-ம் ரொம்ப நாளா இங்க missing!

   Delete
  3. Ravi Krishnan : சும்மாவே அதிரும் களம் உங்களின் DTS சவுண்ட் எபக்டோடு அதகளம் தான் ! போட்டுத் தாக்குங்க !

   Delete
 37. எடிட்டர் சார்,

  திருச்சியில் புத்தகத் திருவிழாவுடன் சேர்த்து உணவுத் திருவிழாவும் நடந்ததென்று நீங்கள் எழுதியிருந்ததைப் படித்ததும் ஒரு ஐடியா தோன்றியது.
  நமது ஸ்டாலில் '500ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் வாங்கினால் ஒரு வாழைப்பூ வடைக்கான டோக்கன் இலவசமாக வழங்கப்படும்'னு ஒரு போர்டு போட்டுப் பாருங்களேன்! இலவசமா ஏதாவது கிடைக்கும்னா ஆயிரக்கணக்கில் செலவு பண்ணத் தயங்க மாட்டாங்க நம்ம தமிழ்நாட்டுப் பயபுள்ளைக!

  கோச்சுக்காதீங்க சார். ச்சும்மா டமாசுக்குத்தான் எழுதினேன்.

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY : வாழைப்பூ வடையின் வரலாறை என்றோ ஒரு நாள் - யாரோ ஒரு புண்ணியவான் தேடிக் கிளம்பும் போது அதன் மகிமைகளைப் பற்றிப் புரிந்திட இந்த வலைபூ ஒரு முக்கிய ஆவணமாய் அமையப் போவது உறுதி ! வாழ்க போராட்டக் குழு !

   Delete
 38. எடிடெர் ஸார்,இன்றும் வரும் ஸ்பைடர்,இரும்பு கை மாயாவி,ஆர்ச்சீ கோரிக்கைகளை யோசித்து பாருங்கள்.இது வெறுமனே அவர்களுக்கான கூட்டம் என்று சொல்ல முடியாது.அதை வைத்தே வாசகரை எடை போடுவதும் சரியல்ல என்பது என் கருத்து.ஏன் என்றால் அவர்கள் இன்னொரு முகம் சூப்பர் ஹீரொக்கள் என்பது.


  சிறுவர் விடயத்தில் வெறும் கார்ட்டூனை நம்பாது புதிதாக சூப்பர் ஹீரொ சிலரை அணியில் சேர்த்து பாருங்களேன்.வெற்றி நிச்சயம் என நம்புகிறேன்.காதில பூ என்று இனி கூற முடியா நிலையை தோர்கள் தந்துள்ளார்.


  சின்ன வயதில் டாம் அன்ட் ஜெர்ரியை விட கண்ணால் கதிர்வீச்சு அடி ,கையில் கத்தி முளைப்பது ,செங்குத்தாக எழும்பும் ஜெட் என என XMEN கலக்கிய கலக்கு தான் பாடசாலையில் கார்டூன் சமாச்சாரங்களில் பிரதான பேசு பொருள் ஆக இருந்தது.அது போல் Ninja Turtles,mask,Conan,Biker Mice போன்றவையும் அன்று சிறுப்பராயத்தில் பிரபலம்.


  ஆர்ச்சீ மாதிரி தகர டப்பாவாக ஆரம்பித்து இன்று அதி நவீன மாற்றம் பெற்ற Iron man யுகத்தில் போகாது இன்னும் ஆர்ச்சியின் காலத்தில் இருக்கும் தமிழ் காமிக்ஸ் முன் நோக்கி செல்ல வழமை போல் காட்டு ராஜா சின்னம் கொண்ட காமிக்ஸ் ராஜா நீங்கள் தான் தங்கள் வசதிக்கேட்ப களமிறங்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பட்டியலுக்கு மேலதிகமாக என்ற முறையிலேயே இவை

   Delete
 39. இலங்கையில் உங்கள் அனுமதி பெற்று,இல்லை பழைய ஐஸ் பெர்க் போல் படைப்பாளிகள் உரிமை பெற்று தான் வெளியிடுகிறார்கள் என நினைத்தோம்.இதட்காக எம் அனைவரையும் தப்பாக எண்ணாதீர்கள் ஸார் !

  புதிய காமிக்ஸ் யாழ்பாணம் வர முன்னே 3 வாரம் அதுவும் உதயன் பத்திரிகையில் வர எப்படி சந்தேகம் வரும்?இது குறித்த உங்கள் கருத்துக்கள் உரியோரை சென்றடைய வேண்டும்.வாசகர் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நீங்கள் தெரிவிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. அதே வேளை இப்படி சட்ட விரோதமாக இல்லாது உங்கள் உரிமை பெற்ற "கோகுலம் வாசக வட்டம்" போல் உங்கள் தரப்பினர் மூலம் உங்களுக்கு பிரச்சினை வராத பழைய இதழ்களை வெளியிட அனுமதி கொடுத்தீர்கள் எனில் காமிக்ஸ் வருவதை அறியா, விலைவாசியை காரணமாக்கி தூர உள்ள, பலர் பயன் அடையவும் கூடும்.

   Delete
  2. Abhisheg : சின்னதொரு திருத்தம் நண்பரே....! நாம் வெளியிடும் எந்தவொரு கதைத்தொடருக்கும் உரிமைகளை வழங்கும் அதிகாரம் நம்மைச் சாராது ; படைப்பாளிகளையே சாரும் ! ஆகையால் பழைய இதழ்களுக்கு அனுமதி தருவது ; புதிய கதைகளின் தொடர் உரிமைகளை வழங்குவதெல்லாம் out of question.

   உலகம் மிகச் சிறியதொரு கோள் என்றாகிப் போன இந்நிலையில் - நமது இதழ்கள் நம் முகவர்கள் மார்க்கமாய் உங்கள் கரைகளை எட்டிப் பிடிக்கும் வரை அவை வேறு எவர் கண்ணிலும் பட வாய்ப்பிராது என்று எதிர்பார்த்திட அவசியம் கிடையாதே ! ஜனவரியின் துவக்கத்தில் தினகரன் நாளிதழின் வசந்தம் இணைப்பில் இக்கதையின் விபரங்களைக் காண நேரிட்ட காமிக்ஸ் பிரியரின் ஆர்வக் கோளாறு ஏற்படுத்தி இருக்கும் 'ஈ அடிச்சான்' விவகாரமாய் இது இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை ! தவிரவும் இது அந்நாளிதழின் நிர்வாகத்தின் ஒப்புதலோடு அரங்கேறியிருக்குமென்று நான் எண்ணிடவில்லை ! எழுதியுள்ளோம் அவர்களுக்கு - பார்ப்போமே !

   Delete
 40. ஒரு காமிக்ஸின் எடிட்டர் என்கிற முறையில் வரவிருக்கும் இதழ்களுக்கான முன்னோட்ட பதிவினையும், காமிக்ஸ் வெளியீடு சார்ந்த தகவல்களையும் மட்டுமே அதிகமாக தாங்கி வந்த இந்த வலைரோஜாவில் சமீப காலங்களில் முதன்முறையாக ஒரு மாறுபட்ட பதிவு.

  (இந்த வலைரோஜாவை ஆரம்பித்த புதிதில் எடிட்டரின் சில குறிப்பிட்ட பதிவுகள் -

  மினி லயன் கள்ளப்பருந்தின் கதை ,

  முத்து காமிக்ஸ் கொள்ளைகார மாயாவி ,

  திகில் காமிக்ஸ் பனி மலை பூதம் ,

  மினி லயன் ஒரு நாணயப் போராட்டம்

  இந்த மாதிரி இட்டிருந்ததை இந்த சமயத்தில் நான் நினைவு கூறுகிறேன்).

  ஒரு பப்ளிஷர் என்ற வரையறையை தாண்டி கடந்த இரண்டு வருடங்களில் இங்கே இடப்பட்ட மிகச்சிறந்த பதிவு இதுதான் என்பதில் இருவேறு கருத்து இருக்கவே முடியாது.

  இது போன்ற ஒரு காமிக்ஸ் சார்ந்த அலசலை தான் அடிக்கடி எதிர்பார்க்கிறோம்.

  சமூக வலைதளங்களில் இப்போதெல்லாம் கமெண்ட் இடும்போது வாழ்த்துகளையும் சேர்த்தே சொல்லுவதுதான் Fashion என்பதால்,

  வாழ்த்துகள் விஜயன் சார்.

  ReplyDelete
  Replies
  1. //////////////மதியில்லா மந்திரி22 May 2012 11:15:00 GMT+5:30

   Meeraan இதுவரை மந்தியார் கலங்கியது இல்லை ஆனால் இன்று நெஞ்சை பிசைந்து விட்டீர்கள்... வாழ்க மண்ணெண்ணெய் ஊற்றிய மீரான்
   Meeraan22 May 2012 22:33:00 GMT+5:30

   மதியில்லா மந்திரியாரே:-வாழ்த்துக்கு நன்றி !/////////////////

   அடடே பிளாஷ் BACK ...................நன்றி கிங் விஷ்வா

   Delete
  2. ////////////////////திகில் இல்லா திகில் !////////////////பதிவில் கண்டவை

   Delete
 41. காமிரேட்ஸ்,

  உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்ற இரத்தப்படலம் தொடரின் (அப்போதைய) முடிவுக்கு பின்னர், அந்த ப்ராண்ட்'ஐ வைத்து கல்லா கட்ட நினைத்த அந்த பதிப்பகத்தார், XIII மிஸ்ட்ரி என்ற பெயரில் தனி வரிசையை (Series) ஆரம்பித்தனர்.

  அந்த தொடரில் வரும் முக்கியமான பாத்திரங்களின் முன்கதை சுருக்கம் போல இந்த தொடரின் கதைகள் அமைந்து இருக்கும். உதாரணமாக தொடரின் முக்கியமான வில்லராக (மரியாதை தான்) மங்கூசின் பிறப்பு, வளர்ப்பு பற்றியோ அல்லது அவர் எதற்க்காக அப்படி ஒரு வில்லனாக மாறினார் என்பது பற்றியோ நமக்கு தெரியாது. அதனை தெரிவிக்க அவரது பெயரில் ஒரு தனி ஆல்பம் இந்த XIII மிஸ்ட்ரி தொடரில் வந்துள்ளது.

  இதைப்போலவே ஸ்டீவ் ரோலண்ட், கேப்டன் ஜோன்ஸ், இரீனா என்று இதுவரை ஆறு ஆல்பங்கள் இதுவரையில் வெளிவந்துள்ளன.

  அந்த தொடரில் நம்ம ஹீரோவுக்கு உதவும் பெட்டியின் கதை இந்த ஆண்டு ஜூன் மாதம் தனி கதையாக ஏழாவது ஆல்பமாக வருகிறது. அந்த புத்தகத்தின் அட்டையை அதன் கிரியேட்டர் ஸில்வெய்ன் வாலே தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்டு இருந்தார். இதோ அந்த அட்டைப்படம் மற்றும் உள்பக்க படங்கள்:

  XIII மிஸ்ட்ரி - பெட்டி பார்நோவ்ஸ்கி - அட்டைப்படம்

  XIII மிஸ்ட்ரி - பெட்டி பார்நோவ்ஸ்கி - உள்பக்க படங்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆர்வத்தைத் தூண்டும் அட்டகாசமான தகவல்களுக்கு நன்றி விஸ்வாஜி!
   இதுவரை ஆறு, வரும் ஜூனில் ஏழாவது மிஸ்டரி ஆல்பங்கள் எனில் அந்தப் பதிப்பகத்தாரின் வேகமும், XIIIன் உலகளாவிய வெற்றியும் மலைக்க வைக்கிறது.

   XIIIன் மெயின் கதையே இரண்டாவது அத்தியாயத்தை ஆரம்பித்திருக்க, இந்த கிளைக் கதைகளும் கூடவே பயணிக்க...

   இதெல்லாம் வேண்டுமென்று நாம் அழுது அடம்பிடித்தோமானால், நம் எடிட்டரின் பாடு திண்டாட்டம்தான்! :)

   Delete
 42. நண்பர்களே போன வாரம் முழுவதும் வேலை பளு அதிகம். ஸ்டாலுக்கு வெள்ளிகிழமை மற்றும் சனிக்கிழமை சென்று அண்ணாச்சி ராதாக்ருஷ்ணன் மற்றும் குட்டி பையனையும் பார்த்து விட்டு 9 மணி வரை சேல்ஸ் கொஞ்சம் உதவி கொண்டிருந்தேன். சனிக்கிழமை கிளம்பும் போது (பக்கத்து food mela வில் இருந்து ஹோம் மினிஸ்டர் 15 வது முறையாக போன் செய்ததால் கிளம்பினேன்) ஸ்டாலில் இருந்த புத்தகங்கள் வெகு சொற்பமே. ANS , மனதில் மிருகம் வேண்டும் , ரத்தபடலம் , tiger ஸ்பெஷல் , இரத்ததடம், வேங்கையின் சீற்றம் தலா 10 புத்தகங்கள் இருக்கும். லக்கி, டெக்ஸ், டயபாலிக் , ஜானி , ஜில் ஜோர்டான் முழுவதுமாக தீர்ந்துவிட்டன. பழைய வாசகர்களிடம் டெக்ஸ் அறிமுகம் இருப்பதால் அவர்கள் tiger க்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. உடனே டெக்ஸ் தான் டாப் உங்கள் டைகர் டூப் -ன்னு கிளம்பிடாதீங்க . அண்ணாச்சி ராதாக்ருஷ்ணன் வெள்ளிகிழமை அன்று போயிருந்தபோது மிச்சமான புத்தகங்களை sunday நைட் pack செய்ய யாராவது கிடைப்பார்களா என்று கேட்டார். ஆனால் அண்ணாச்சி ராதாக்ருஷ்ணன் வெறும் பணத்துடன்தான் ஊருககு கிளம்புவார் என்று நினைக்கிறேன். சேல்ஸ் updation போதும் . நான் இருந்த வரையில் வந்தவர்கள் எல்லோரும் கேட்ட கேள்வி Where is இரும்புக்கை மாயாவி ? அதிலும் ஒரு வாசகி என்னிடம் சண்டைக்கு வந்து விட்டார். இரும்புக்கை மாயாவி புத்தகம் இருந்தால் இந்நேரம் எல்லா புத்தகங்களும் விற்று இருக்கும். ஏன் கொண்டு வரவில்லை என்று. ஒரு சிலர் மாண்ட்ரேக் மற்றும் ரிப் கெர்பி கதைகள் கிடைக்குமா என்று கேட்டனர். நிறைய சிறுவர்களிடம் காமிக்ஸ் அறிமுகபடுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்களிடம் நான் வாய்த்த ஒரே கோரிக்கை தொலைகாட்சி பெட்டியை அணைத்து விட்டு காமிக்ஸ் படியுங்கள். இன்று நான் வேலை பார்க்கும் கல்லூரியில் convocation. நான் மாலையில் செல்லும் போது அனேகமாக அண்ணாச்சி ராதாக்ருஷ்ணன் மற்றும் குட்டி பையன் ஊருக்கு கிளம்பி கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். நாளை update செய்கிறேன் .

  ReplyDelete
  Replies
  1. அர்பணிப்பு உணர்வுடன் வேலை செய்துள்ளீர்கள் ! பாராட்டுகள் ! அனாலும் அது என்ன //உடனே டெக்ஸ் தான் டாப் உங்கள் டைகர் டூப் -ன்னு கிளம்பிடாதீங்க . // உண்மைய சொல்ல தயக்கம் !

   Delete
  2. Trichy Vijay : உங்கள் பணியின் மத்தியினில் செய்து வரும் உதவிகளுக்கு நம் நன்றிகள் ! பெரியதொரு ஆர்ப்பாட்டம் இன்றியே சுமார் ரூ.45,000 க்கு விற்பனை நடந்துள்ள போது - இதே புத்தகக் காட்சி இன்னும் சிறப்பாய் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பின் இன்னும் எத்தனை அற்புதமாய் இருந்திருக்குமென்ற சிந்தனை வராமல் இல்லை !

   Delete
  3. இது என்னை போன்ற வாசகர்களுக்கு சந்தோஷமான வேலைதான் சார் . அதிக நேரம் செலவிடமுடியவில்லை என்றுதான் வருத்தம்.

   Delete
  4. அடுத்த புத்தக விழாவில் நிறைய சாதிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. 30வது ஆண்டு மலரை தயவு செய்து கதம்ப மலராக மட்டுமே வெளியிடவேண்டும்.

   Delete
  5. // அடுத்த புத்தக விழாவில் நிறைய சாதிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது //

   பாராட்டுக்குரிய வார்த்தைகள்! நிச்சயம் சாதிப்பீர்கள், திருச்சி விஜய் அவர்களே! களப்பணிக்கும் என் வாழ்த்துகள்!

   Delete
  6. கடுமையான அலுவலக பணிசுமைகளுக்கிடையே நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து நமது காமிக்ஸ் ஸ்டாலில் கால் கடுக்க நின்று,

   வரும் வாசக வாசகிகளுக்கு நமது காமிக்ஸ் பற்றி எடுத்து சொல்லி,

   சிறுவர்களுக்கு சுட்டி லக்கி, ப்ளூகொட்ஸ் பட்டாளம் போன்ற கதைகளை சிபாரிசு செய்து

   தமிழில் காமிக்ஸ் படிக்கும் பழக்கத்தை / குறிப்பாக தமிழில் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க

   அயராது உழைத்த

   திருச்சி விஜயஷங்கர் அவர்களுக்கு ஒரு சிரம் தாழ்ந்த வணக்கம்.

   நண்பர்களே, தயவு செய்து ஒரே ஒரு நிமிடம் செலவழித்து விஜயஷங்கர் வர்களுக்கு ஒரு நன்றி சொல்லிவிடுங்களேன்? நம்முடைய இதுபோன்ற சிறிய விஷயங்கள்தான் அவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய கைம்மாறு.

   Hats Off To You, L Vijaya Shankar Sir.

   Thanks a Ton for Your Dedicated Effort.

   Delete
  7. பிரதிபலன் பாராது நமது காமிக்சுக்கு செய்யும் உங்களது உதவி பாராட்டுக்குறியது....... நன்றி

   Delete
 43. Thalaiva namma lionin 30th year intha varusham celebrate panrapa engala mari Spider veriyarkalin neenda nal korikaiyana avarathu classic hits collectionsai veliyitu sirapikalame ... Namathu 1st super starai paratum porutu ithai seiyalame..... Please Editor Sir....

  ReplyDelete
  Replies
  1. வண்ணத்தில் வின்வெளி பிசாசு அல்லது அந்த எஞ்சிய ஸ்பைடரை .......

   Delete
 44. விஜயன் சார் , டிசம்பர் இதழ்கள் 4 க்கும் Rs. 310 கட்டியிருக்கிறேன். திங்கள்கிழமை எனக்கு கொரியர் போட ஸ்டெல்லா மேடம்-க்கு instruction கொடுங்கள் சார். நானும் நாளை காலை போன் செய்கிறேன்.

  ReplyDelete
 45. மேச்சேரி ரவிக்கண்ணன் அவர்களிடமிருந்து எடிட்டருக்கு:

  * சார், நீங்கள் சில மாதங்களுக்கு முன்பு சொல்லியிருந்த 150 பக்க வித்தியாசமான கிராஃபிக் நாவல் என்னவாயிற்று, சார்? அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...

  * முழுக்க முழுக்க காமெடி கதாநாயகர்களை மட்டுமே கொண்ட ஒரு காமெடி கதம்ப சிறப்பிதழ் தீபாவளிக்கு வரவாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறதே? அது சாத்தியமா சார்?

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY வாயிலாக - மேச்சேரி ரவிக்கண்ணன் : 150 பக்க கிராபிக் நாவல் உண்டு...! காத்திருங்களேன் அறிவிப்பு வரும் சமயம் வரை !

   ஆங்காங்கே நண்பர்களுக்கு இந்த மாதிரி சேதிகள் பல சொல்லிச் செல்லும் பட்சி அவற்றை எனக்கு மட்டும் சொல்லாது செல்லும் ஓரவஞ்சனை ஏனோ -தெரியவில்லையே !!

   Delete
  2. நீங்க கார்சனின் கடந்த காலத்த அடுத்த மாதமே விட்டு பாருங்க , பட்சி தினமொரு நல்ல சேதி சொல்லும் !

   Delete
  3. அந்த பட்சி (இரவு கழுகு) சம்மர் ஸ்பெஷல் டெக்ஸ் புக் தான் அப்டின்னு எனக்கு சொல்லிச்சி க்ளா!!!

   Delete
 46. ஆசிரியருக்கு வணக்கம்,
  என்னதான் முத்துவும், லயனும் உங்களுடைய காமிக்ஸ்கள்தான் என்றாலும், சமீப காலமாக லயனை அதிகம் புறக்கணிப்பது போல் தோன்றுகிறதே. இந்த வருஷம் எல்லா மாதமும் லயன் உண்டுனு சொல்லிபுட்டு இதோ மார்ச்ல லயனே இல்லை. இதுக்கு என்ன காரணமோ?

  ReplyDelete
 47. கடந்த 3நாட்களாக மாநாடு காரணமாக போக்குவரத்து சரிவர இல்லாததால் house arrest! Trichy vijay வேலை பளு இடையிலும் book fairல் activeஆக இருந்ததிற்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 48. சந்தா கட்டாத காரணத்தினால், நமது காமிக்ஸை வாங்குவதற்கு இருதினங்களுக்கு முன்பு சென்னை ஸ்பென்சரில் உள்ள LANDMARK சென்றிருந்தேன். தரை தளம் முழுவதும் பரிசு பொருட்கள், முதல் தளம் முழுவதும் புத்தகங்கள். பல்வேறு தலைப்புக்களில் ஆயிரக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நமது காமிக்ஸை தேடி தேடி அலுத்து போய் அங்குள்ள பணிப்பெண்ணிடம் கேட்டேன். இரண்டாம் தளத்தில் சென்று பார்க்குமாறு கூரினார்.
  இரண்டாம் தளம் முழுவதும் 1 முதல் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள். அந்த தளத்தின் கோடியில் ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கான “ ஆத்திசூடி , தமிழ் எழுத்தின் வரிவடிவம், நீதி கதைகள், படம் பார்த்து கதை சொல்க,” போன்ற புத்தகங்களுடன் கலந்து நமது காமிக்ஸும் வைக்கபட்டிருந்தது.

  பிப்ரவரி மாத புத்தகம் இன்னும் வரவில்லை. 3 முதல் 7 வயதுடைய குழந்தைகளின் பெற்றோர் மட்டுமே வந்து செல்லும் பகுதியது. என்னடா நமது காமிக்ஸுக்கு வந்த சோதனை என்று நினைத்தேன்.

  LANDMARK கிலும் நமது புத்தகம் கிடைக்கிறது என்று பெருமைபட்டு கொள்வதா....... அல்லது யார் கண்ணிலும் படாமல் ஒரு மூலையில் இருக்கிறதே என்று வருத்தபடுவதா..........

  பணக்காரனின் காலணியாக இருப்பதைவிட ஏழையின் தலைப்பாகையாக இருப்பது மேல் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நண்பர் சுந்தரமூர்த்தி,

   அநேகமாக நீங்கள் சொல்வது ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள லேண்ட்மார்க் ஆக இருக்கலாம்.

   எனது அலுவலகத்துக்கு அருகில் உள்ள (நுங்கம்பாக்கம்) லேண்ட்மார்க் கடையில், நமது காமிக் இதழ்கள், தமிழ் புத்தகங்களுக்கு உண்டான வரிசையில் தனி அடுக்கில் முதன்மையாக வைக்கப்பட்டு உள்ளது.

   அதாவது தமிழ் புத்தகங்கள் உள்ள பகுதியில் நுழையும் எவருமே நமது புத்தகங்களை காணாமல் கடந்து செல்ல முடியாது.

   மற்ற லேண்ட்மார்க் கடையினை பற்றி எனக்கு தெரியவில்லை ....


   Delete
  2. // தமிழ் புத்தகங்களுக்கு உண்டான வரிசையில் தனி அடுக்கில் முதன்மையாக வைக்கப்பட்டு உள்ளது //
   இப்போதுதான் என் உள்ளம் குளிர்ந்தது. :)

   //எவருமே நம் புத்தகங்களை காணாமல் கடந்துசெல்ல முடியாது //
   என் உள்ளம் மேலும் குளிர்ந்தது. :))

   // மற்ற லேண்ட்மார்க் கடையினை பற்றி எனக்குத் தெரியவில்லை //
   என் உள்ளம் இப்போது இலேசாக சூடாகிவிட்டது.

   Delete
  3. நண்பர் ஈரோடு விஜய் (எ) பூனையாரே,

   // மற்ற லேண்ட்மார்க் கடையினை பற்றி எனக்குத் தெரியவில்லை //
   என் உள்ளம் இப்போது இலேசாக சூடாகிவிட்டது.

   நமது புத்தகங்கள் லேண்ட்மார்க் கடைகளில் கிடைக்க ஆரம்பித்த பிறகு ஏனோ அங்கு செல்ல முடியவில்லை. உங்கள் மனதை இன்னும் குளிவிக்க (நேரம் கிடைக்கின்ற பொழுது) கண்டியப்பாக ஒரு விசிட் அடித்து விட்டு அப்டேட் செய்கிறேனே :)


   Delete
 49. காமிரேட்ஸ்,

  சென்னையில் இருக்கும் லேண்ட்மார்க் புத்தக சந்தையில் நமது பிப்ரவரி மாத காமிக்ஸ்களை இன்று மாலை சுமார் 6 மணிக்கு வாங்கி, அதில் இருக்கும் ஒரு எழுத்துபிழையை சுட்டிக்காட்டி என்னிடம் பேசினார் புதிய தலைமுறையை சார்ந்த திரு யுவா.

  அவர் சென்றது நுங்கம்பாக்கத்தில் இருக்கும் லேண்ட்மார்க் கடைக்கு.

  நேற்று சிட்டி சென்டரில் இருந்த கடையில் இருந்து நண்பர் ஒருவர் போன் செய்து இந்த மாத இதழ்கள் இரண்டுதானே? இங்கே மூன்று இருக்கிறதே? என்று கேட்டு, சந்தேக நிவர்த்தி பெற்று மூன்று இதழ்களையும் வாங்கி சென்றார் ஆன்லைனுக்கு அவ்வளவாக வராத ரிட்டையர்ட் ஆன காமிரேட் ஒருவர்.

  இந்த வாரம் புதன் கிழமை அன்று நான் ஸ்பென்சர் ப்ளாசாவில் இருக்கும் லேண்ட்மார்க் கடைக்கு செல்ல நேரிட்டது. அங்கே காமிக்ஸ்களை வைக்கும் இடம் முதல் மாடிதான் (அதாவது கடையில் நுழைந்து பில்லிங் கவுண்டருக்கு எதிராக இருக்கும் படியில் மேலே ஏறி சென்றால் வரும் மாடி).

  இங்கே தான் நமது ஆஸ்ட்ரிக்ஸ், டின்டின், ஆர்ச்சி போன்ற இன்டர்நேஷனல் காமிக்ஸ் பதிப்பக இதழ்களையும் வைத்து இருக்கிறார்கள். காமிக்ஸ் வரிசையில் இருக்கும் அனைத்து இதழ்களுமே இங்கேதான் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன.

  அந்த வரிசையில் கிளாசிக்ஸ் என்ற வரிசையில் இருந்த நமது காமிக்ஸ் இதழ்களை நான் போட்டோ எடுத்து என்னுடைய Facebook பக்கத்தில் வெளியிட்டு இருந்தேன். இதோ அந்த போட்டோக்கள்:


  புதன்கிழமை எடுக்கப்பட்ட ஸ்பென்சர் பிளாசா லேண்ட்மார்க் கடையில் நமது காமிக்ஸ் இதழ்கள் 1


  புதன்கிழமை எடுக்கப்பட்ட ஸ்பென்சர் பிளாசா லேண்ட்மார்க் கடையில் நமது காமிக்ஸ் இதழ்கள் 2

  அப்புறம் மற்றுமொரு விஷயம்:

  லேண்ட்மார்க் நிறுவனத்தின் வர்த்தக முடிவுகள் இப்போதைக்கு புனேவில் இருக்கும் அவர்களின் தலைமையக அலுவலகத்தில் இருந்தே எடுக்கப்படுவதால், நமது இதழ்கள் விற்பனைக்கு ரெடியான பிறகு அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் அங்கிருந்து பர்சேஸ் ஆர்டர் அனுப்பி, அதன் பேரிலேயே நமது இதழ்களை அனுப்பி வருகிறோம்.

  நாமாக இதழ்களை அனுப்பினால் கூட அங்கிருக்கும் இன்வென்ட்ரி சிஸ்டம் நமது இதழ்களை கடைக்கு உள்ளே அனுமதிக்காது. ஆகையால் கடைக்கு புத்தகங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டால் அதற்க்கு முழு காரணம் அவர்களது ஆபரேஷனல் சிஸ்டமே ஒழிய நமது தரப்பு கிடையாது என்பதை எடிட்டர் இதுவரையில் ஐந்து முறைக்கு மேலாக இந்த வலைரோஜாவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

  இந்த முறை லேண்ட்மார்க் கடைகளில் சனிக்கிழமை முதல் விற்பனைக்கு வந்து இருக்கிறது.

  அப்புறம் கடைசியாக ஒரு விஷயம்: லேண்ட்மார்க் புத்தக கடைகளில் ஒவ்வொரு வாரமும் புத்தகங்களை Shuffle செய்து மாற்றுவார்கள். அப்படி இருந்தாலுமேகூட நமது இதழ்கள் வழமையான இடத்திலேதான் இருக்கும்.

  சென்னை நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க் கடையில் நுழைந்தவுடனே Right Hand Sideல் இருக்கும் தமிழ் புத்தக வரிசையில் தனியாக நமது புத்தகங்கள் வைக்கப்பட்டு இருக்கும். இதனை நான் ரெகுலர் ஆக கவனித்து வருகிறேன். ஒவ்வொரு லேண்ட்மார்க் கடையிலுமே இப்படி நமக்காக தனி Display வசதி செய்து தந்து இருக்கிறார்கள். இதற்காகவே லேண்ட்மார்க் நிறுவனத்திற்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்.

  ReplyDelete