Thursday, February 20, 2014

மேற்கே ஒரு புலியும் ; ஒரு கழுகும்...!

நண்பர்களே,

வணக்கம். பணிகளின் இறுதிக் கட்டங்கள் வழக்கம் போல் நேரத்தை விழுங்குவதால் இங்கு பதிவிட அவகாசம் கண்டு பிடிப்பது சிரமமாகிப் போனது ! அதன் மத்தியினில் - "மேற்கின் தளபதி - டெக்ஸா ? கேப்டன் டைகரா ?" என்ற பஞ்சாயத்து சாலமன் பாப்பையாவைக் கோரிடும் ரேஞ்சிற்கு இங்கு அரங்கேறுவதை அவ்வப்போது பார்த்திடத் தான் செய்தேன் ! இதோ - சம்பந்தப்பட்ட பார்ட்டிகளில் ஒருவர் களத்தில் இறங்கத் தயாராகி வருகிறார்  - முழு வண்ணத்தில் ! "அட்லாண்டாவில் ஆக்ரோஷம்" + "உதிரத்தின் விலை " என 2 பாகங்கள் இணைந்த இம்மாத வெளியீட்டின் அட்டைப்படம் இதோ : 
படைப்பாளிகளின் ஒரிஜினல் அட்டைப்படத்தினில் டைகர் & க்ரேசனின் முகங்களில் தேஜஸ் குறைவாய் தெரிந்ததால் - நமது ஓவியரைக் கொண்டு தனியாக ஒரு சித்திரத்தைத் தீட்டினோம்....ஆனால் அதனிலோ டைகர் & சகா ஓ.கே.வாய்த் தோன்றிட, background ரொம்ப சுமாராய் வந்திருந்தது ! So ஒரிஜினலின் பின்புலம் + நம் ஓவியரின் டைகர் என்ற கலவையாய் இம்மாத அட்டைப்படத்தினை அமைத்திட்டோம் ! வழக்கம் போல் அவர்களது ஒப்புதலைப் பெறும் பொருட்டு படைப்பாளிகளுக்கு இந்த டிசைனை அனுப்பிட - 30 நிமிடங்களிலேயே "Approved !" என்று பதில் வந்தது ! அவர்களுக்குப் பிடித்த டிசைன் உங்களுக்கும் பிடித்திருப்பின் இரட்டை சந்தோஷம் நமக்கு ! 


கதையைப் பொறுத்த வரை - இப்போது அரங்கேறி வருவது டைகரின் இளம் பிராயத்து சாகசங்கள் என்பதை நாம் அறிவோம் தானே... ?! ஒரு சங்கிலிக் கோர்வையாய் இந்தக் கதைவரிசை  பயணிப்பதால் - முந்தைய இதழ்களின் மாந்தர்களை ஆங்காங்கே நினைவில் வைத்திருத்தல் அவசியமாகிடும் !  ஒரு தொடர்கதை என்று சொல்லும் விதமாய் கதைகள் அமைக்கப்படவில்லை என்பது நிம்மதி தரும் விஷயம் ! இதோ இந்த சாகசத்திலிருந்து ஒரு சின்ன ட்ரைலர் ! வித்தியாசமான 'பளிச' ரக வண்ணங்களை வடிவமைத்திருப்பது ஜானெட் கேல் எனும் பெண்மணி ; so இந்த வர்ணங்களின் தோரணம் பிடித்திருப்பின் உங்கள் வாழ்த்துக்கள் அவரையே சார்ந்திட வேண்டும் !

கௌபாய் கதைகளின் தாக்கம் நம்மிடையே மிகுந்திருக்கும் இவ்வேளையில் - கடந்த பதிவின் பாணியிலேயே - இது வரை நாம் சந்தித்துள்ள "குதிரை மேய்ப்பர்களைப்" பற்றியதொரு பட்டியலைத் தயாரித்தால் என்னவென்று தோன்றியது ! So, here goes :

முத்து காமிக்ஸில் தொப்பி அணியும் உரிமைகளை நெடுங்காலமாய் குத்தகைக்கு வைத்திருந்தவர்கள் பட்லர் டெஸ்மாண்டும், மாயாஜால மன்னன் மாண்ட்ரேக்கும்  தான் என்பது எனது யூகம் ! முந்தைய இதழ்களை தலைக்குள்ளே slow motion -ல் ஓடச் செய்த போது நினைவுக்கு வந்த முதல் கௌபாய் ஆசாமி - சிஸ்கோ கிட் ! எனது நினைவு சரியாக இருக்கும் பட்சத்தில் "ரயில் கொள்ளை" என்ற சிஸ்கோ கதையே முத்துவின் முதல் அடி - கௌபாய் லோகத்தினுள் ! சிஸ்கோ & தொப்பை பாஞ்சோ அந்நாட்களிலேயே எனது personal favorites ! அவர்களது (ஆங்கிலக்) கதைகள் அந்நாட்களில் முத்து அலுவலகத்திற்கு தபாலில் வந்து சேரும் போது - முதலில் படிக்கும் வாய்ப்பு எப்போதுமே எனக்கே இருந்து வந்ததும் நினைவில் உள்ளது ! பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியில் இது போன்ற காமிக்ஸ் மேய்ச்சலில் ஈடுபடுவது எனக்கு அந்நாட்களில் சூப்பரானதொரு பொழுதுபோக்கு ! சிஸ்கோவைத் தாண்டி முத்து காமிக்ஸில் தலைகாட்டிய அடுத்த கௌபாய் எனக்கு நன்றாகவே நினைவில் நின்றதொரு one shot ஆசாமி ! அநேகமாய் 1982-ல் என்று நினைக்கிறேன் - "சூதாடும் சீமாட்டி" எனும் ஒரு கௌபாய் கதையினை முத்துவில் வெளியிட நேர்ந்தது ! அச்சமயம் நமது வழக்கமான மொழிபெயர்ப்பாளர் ஏதோ காரணத்தால் தாமதம் செய்திட - இக்கதையின் ஒரு 30% பகுதியினை அடியேன் எழுதித் தள்ளினேன் என்பதால் எனக்கு இக்கதையின் ஞாபகம் தலைக்குள்ளே ஒட்டிக் கொண்டுள்ளது ! பின்னாட்களில் முத்து காமிக்ஸ் எனது பொறுப்பிற்கு வந்தான பின்னே வெஸ் ஸ்லேட் கொஞ்ச காலம் குப்பை கொட்டிட - அதிரடி ஆட்டத்தைத் துவக்க வந்தார் நமது கேப்டன் டைகர் - தங்கக் கல்லறையின் மார்க்கமாய் ! நடு நடுவே.."ஒரு வீரனின் கதை" ; "எமனின் திசை மேற்கு" போன்ற ஒற்றை சாகச நாயகர்கள் தலை காட்டி இருப்பினும், கிட்டத்தட்ட 41 ஆண்டு காலமாய் வெளியாகிடும் நமது முத்துவின் "கௌபாய் பட்டியல் " குட்டிக் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலைப் போல நலிந்து - வெறும் மூன்றே நபர்களால் ஆனதாய் காட்சி தருவதை நம்ப முடிகிறதா ? சிஸ்கோ கிட் ; வெஸ் ஸ்லேட் ; கேப்டன் டைகர் !!!
சிறு வயதினில் நம் இரவுக் கழுகாரின் அதிரடிக் கதைகளை (ஆங்கிலத்தில்) மெய்மறந்து படித்த பரிச்சயம் ஏகமாய் இருந்ததால் லயன் காமிக்ஸிற்கு அவரை வெகு சீக்கிரமே அழைத்து வந்ததன் மூலமாய் லயனில் western கதைகளுக்கென ஒரு சாலையை அமைத்திடுவது சுலபமாகிப் போனது என்றே சொல்வேன் ! "தலை வாங்கிக் குரங்கு" ஒரு அட்டகாசமான கதையாய் மாத்திரம் இருந்திடாது - நமது ரசனைகளைப் புதியதொரு ஜன்னல் வழியாய் திசை திருப்பிய இதழும் கூட ! ஸ்பைடரும், ஆர்ச்சியும் கோலோச்சிய அந்த சூப்பர் ஹீரோ திருவிழா நாட்களிலேயே, தனக்கென ஆண்டுக்கு 3-4 கதைகளை ரிசர்வ் செய்து கொள்ளும் ஆற்றல் டெக்சுக்கு இருந்து வந்ததை நிச்சயம் நான் மறந்திடவில்லை ! ஆனால் என்ன தான் டெக்ஸ் சக்கை போடு போட்டு வந்தாலும், ஏகப்பட்ட காலத்திற்கு அவருக்கு அடுத்த கௌபாய் அறிமுகம் லயனில் தலை காட்டவே இல்லை என்பதே நிஜம் ! அந்தப் பெருமையை தட்டிப் பறித்தவர்கள் இருவருமே ஜூனியர் லயனின் தவப் புதல்வர்கள் ! லக்கி லூக் & சிக் பில் குழு தான் டெக்சுக்கு அடுத்தபடியாய் நமது இதழ்களில் குதிரைகளை பொதி சுமக்கச் செய்த புண்ணியவான்கள் ! இடையிடையே - ஆக்க்ஷன் கௌபாய் ஸ்டீவ் ; "இரத்த பூமி" போன்ற one shots தலை காட்டி வந்த போதிலும், லயனின் முதுகெலும்பாய் ஒரு கால கட்டத்தில் நின்றவர் இரவுக் கழுகாரும், அவர்தம் குழுவினரும் மட்டுமே ! வெகு சமீபமாய் NBS வாயிலாக மறு பிரவேசம் செய்துள்ள கமான்சே இப்போது நம் கௌபாய் கதைப் பட்டியலுக்கு லேசாய் கனம் சேர்க்கிறார் ! So - திரும்பிய திக்கெல்லாம் கௌபாய் கதைகளாய்த் தெரியும் மாயை லேசாய் தெளிகிறது என்னுள் - "டெக்ஸ் வில்லர் ; கமான்சே ; லக்கி லூக் ; சிக் பில் " என்ற இந்தச் சன்னமான கௌபாய் பட்டியலை வாசிக்கும் போது !!  இவர்கள் தவிர, (ரெகுலர்) கௌபாய் நாயகர்கள் வேறு எவரும் விடுபட்டுப் போய் இருப்பின் - சுட்டிக் கட்டுங்களேன் ப்ளீஸ் ?!! 


கௌபாய் பட்டியலின் strength அத்தனை பிரமாண்டமாய்த்  தெரியவில்லை என்பதற்காக  - புதுசாய் தொப்பிவாலாக்களைத் தேடி நான் புறப்படப் போவதில்லை ! இருக்கும் ஆசாமிகளுக்கு மத்தியிலான குடுமிப் பிடிக்கே தீர்வு காண முடியாத நிலையில், அசலூரிலிருந்து புது வரவுகளைக் கொணர்ந்து குட்டையைக் குழப்பும் உத்தேசம் நிச்சயமாய் இல்லை - இப்போதைக்காவது ! புறப்படும் முன்னே, சின்னதாய் ஒரு தகவல் : இம்மாத இதழ்களில் சூப்பர் சுவாரஸ்யம் தரும் ஒரு  அறிவிப்பு காத்துள்ளது ! அது என்னவாக இருக்குமென்று கண்டுபிடித்திட  உங்களின் யூகக் குதிரைகளைக் கட்டவிழ்த்து விடுங்களேன் - நமது மிரட்டும் கௌபாய்களின் பாணியில்  ! See you around folks ! Adios for now !

339 comments:

  1. Waiting for the post from our respected Author Mr.Vijayan...And happy to be the first in the list this time...I am so happy to read and enjoy the comics from Publishers.. expecting more from you sir...

    ReplyDelete
    Replies
    1. Simbubalan : நம் இதழ்களின் படைப்பாளி நானல்ல எனும் போது - "author " என்ற அந்தப் பட்டம் சின்னதாய் நெருடும்..! So எடிட்டராகவே இருந்து விட்டுப் போகிறேனே !

      கனிவான வார்த்தைகளுக்கு நன்றிகள் !

      Delete
  2. ய்யீயீயீக்க்க்...

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : என்னாச்சு ? எலியாரைப் பிடிக்கும் பொறிக்குள் பூனையின் வாலார் சிக்கிக் கொண்டாரா ? நள்ளிரவில் வீறிடல் ?

      Delete
    2. சிக்லீவ் கெடச்சிடுமில்ல...

      Delete
  3. Finally came to third place in commenting. Red Cap & Brown Coat with the original background is super.

    ReplyDelete
  4. இது என்ன, உங்கள் ஓவியர் டைகருக்கு பவுடர் போட்டு விட்டது போல் பளிச்சென்று வரைந்து விட்டாரே! டைகருக்கு பவுடர் alergy ஆச்சே! :P

    ReplyDelete
    Replies
    1. Prunthaban : Gun powder கூட குடும்பம் நடத்தும் ஒரு சிப்பாய்க்கு முகப் பவுடரெல்லாம் ஒரு மேட்டரா ?!!

      Delete
    2. //Gun powder கூட குடும்பம் நடத்தும் ஒரு சிப்பாய்க்கு முகப் பவுடரெல்லாம் ஒரு மேட்டரா ?!!// ஹ ஹ ஹ!
      என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க? நம்ம ஹீரோக்களுக்கு இந்த முகப்பவுடர், ரோஸ் பவுடர், கேச எண்ணை, லிப்ஸ்டிக்,பொட்டு ETC... இதயெல்லாம் எல்லாம் எப்படி பொருத்துக்குவாங்க?? அதுக்கு பதிலா ரத்தம் சிந்தி சாகறதே மேலுன்னு நினைக்கமாட்டாங்களா? உங்கள மாதிரி நம்ம மாலையப்பன் சாரும் அவ்வப்போது இத மறந்து தொலச்சிட்றார்! : )

      Delete
  5. Replies
    1. Hi Sir. சிஸ்கோ கிட் மீண்டும் வரும் சாத்தியம் உண்டா ?

      Delete
    2. Krishna Kumar : உடனடியாக இல்லையே...!

      Delete
    3. சிஸ்கோ கிட் கதைகள் இன்னமும் எவ்வளவு இருக்கிறது சார்?? அதன் ஓவியங்களின் CLEAN & CRISP ஸ்டைலுக்கு நான் எப்போதும் ரசிகன்!

      Delete
    4. விஸ்கி-சுஸ்கி : நிறையவே உள்ளன ! அவற்றைப் பற்றி கொஞ்ச காலம் முன்பாய் muthufan அவரது வலைப்பூவில் அழகாய் எழுதி இருந்ததாய் ஞாபகம் !

      Delete
  6. hai sir

    i am in top 5

    Good night sir

    Take care

    waiting for tiger

    ReplyDelete
  7. i think kodai malar special issue.

    May be Rs.500.00

    ReplyDelete
  8. //கிட்டத்தட்ட 41 ஆண்டு காலமாய் வெளியாகிடும் நமது முத்துவின் "கௌபாய் பட்டியல் " குட்டிக் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலைப் போல நலிந்து - வெறும் மூன்றே நபர்களால் ஆனதாய் காட்சி தருவதை நம்ப முடிகிறதா ?//

    "சிஸ்கோ கிட் ; வெஸ் ஸ்லேட் " ஏன் இவர்களை வைத்து ஒரு கறுப்பு வெள்ளை கெளபாய் ஸ்பெஷல் போடக்கூடாது?

    ReplyDelete
    Replies
    1. Pushparaj R : சிக்கியவர்களையெல்லாம் கொண்டு ஸ்பெஷல் போடுவது சிறப்பாய் இராதே ! அதற்கென ஒரு star value வேண்டுமல்லவா ?

      Delete
    2. // சிக்கியவர்களையெல்லாம் கொண்டு ஸ்பெஷல் போடுவது சிறப்பாய் இராதே ! அதற்கென ஒரு star value வேண்டுமல்லவா ?//

      Delete
  9. எடிட்டர் சார்,

    அட்டைப்படம் : புதிதாய் கட்டிய அந்த பில்டிங்கிற்கு சிவப்புக் குல்லாய் போட்ட திருஷ்டி பொம்மை ரொம்பவே அழகு! பொம்மையை இன்னும் கொஞ்சம் மேலே மாட்டியிருக்கலாம்.

    ஒரிஜினலை விட நமது ஓவியர் பொன்னர் வரைந்த ஓவியம் ரொம்பவே பளிச். பெரிதாய் எந்தவொரு டிசைன் மெனக்கெடல்களும் இல்லாத அட்டைப் படத்திற்கு அழகு சேர்ப்பது அவரின் கைவண்ணமே!

    பின் அட்டையில் கையில் துப்பாக்கி நீட்டிக் கொண்டிருக்கும் அந்தப் பெண் யார் சார்? ;)

    // சூப்பர் சுவாரஸ்யம் தரும் ஒரு அறிவிப்பு காத்துள்ளது //
    என்னுடைய அனுமானங்கள் பின் வருமாறு:

    * கார்சனின் கடந்த காலம் - கலரில்!
    * இரும்புக்கை மாயாவின் மறுபதிப்பு காம்போ இதழ் - ஏப்ரலில்!
    * 'இனி டைகர் கதைகள் வெளிவராது' என்ற அறிவிப்பு! (என்னா ஒரு நப்பாசை :D )
    * 30வது ஆண்டுமலருக்கான கதைப் பட்டியல்.

    சரிதானே சார்?

    ReplyDelete
    Replies
    1. அல்லது...
      'காமிக்ஸ் லைப்ரரி'யின் திறப்புவிழா பற்றிய அறிவிப்பாக இருக்கலாம்!

      Delete
    2. ////////////பின் அட்டையில் கையில் துப்பாக்கி நீட்டிக் கொண்டிருக்கும் அந்தப் பெண் யார் சார்? ;)//////////////

      பூனைக்கு பார்வையில் ஏதோ பிசகு என்று நினைக்கிறேன்.......

      /////////////////* 'இனி டைகர் கதைகள் வெளிவராது' என்ற அறிவிப்பு! (என்னா ஒரு நப்பாசை :D )/////////////

      அனைத்து கதைகளும் தீர்ந்துவிட்டாலும், வருடா வருடம் மெகா மறுபதிப்பு வந்து கொண்டிருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

      Delete
    3. // ஓவியர் பொன்னர் //

      ஓவியர் மாலையப்பர் என்று படிக்கவும். தீடீர்னு அட்டைப் படத்தை நடுராத்திரியில் பார்த்து நடுங்கிப்போனதால் நா குழறிவிட்டது. ஹி ஹி!

      Delete
    4. Erode VIJAY : //ரொம்பவே அழகு! ...ரொம்பவே பளிச்..! அட்டைப் படத்திற்கு அழகு சேர்ப்பது அவரின் கைவண்ணமே...! //

      இதற்குத் தான் backhanded compliments என்று பெயரோ ? தேவலையே...பூனைக்குள்ளும் பெருந்தன்மை பதுங்கியுள்ளதே !

      அப்புறம் உங்களின் யூகங்கள் - ஊஹும்...! கற்பனைக் குதிரையினை இன்னும் ப்ரீயாக விடுங்கள் !

      Delete
    5. //அப்புறம் உங்களின் யூகங்கள் - ஊஹும்...! கற்பனைக் குதிரையினை இன்னும் ப்ரீயாக விடுங்கள் ! //

      அமர் சித்திர கதை குழுமத்துடன் ஒரு ஒப்பந்தம்???

      Delete
    6. அல்லது, 19 பில்லியன் மற்றும் ஒரு ரூபாய்க்கு DC காமிக்ஸை நாம் விலைக்கு வாங்க போகும் அறிவிப்பு! : )

      Delete
  10. //இம்மாத இதழ்களில் சூப்பர் சுவாரஸ்யம் தரும் ஒரு அறிவிப்பு காத்துள்ளது //

    30வது ஆண்டுமலர் தனி டெக்ஸ் வில்லர் ஸ்பெஷலாக.

    ReplyDelete
    Replies
    1. 30/வது ஆண்டு மலர் கதம்பமாக இருக்கட்டும்.

      உங்களின் ஆசைக்காக டெக்ஸ்க்கு என்று தனி சிறப்பு மலர் வெளிவந்தால் நன்றாக இருக்கும்.

      Delete
    2. நம்முடைய ஆசைக்காக டெக்ஸுக்கு என்று தனி மாத இதழ் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

      Delete
  11. //நம் இரவுக் கழுகாரின் அதிரடிக் கதைகளை (ஆங்கிலத்தில்) மெய்மறந்து படித்த பரிச்சயம் ஏகமாய் இருந்ததால் //

    இரவுக் கழுகாரின் கதைகளை படிக்கின்ற எல்லோரும் மெய்மறந்துதான் போகின்றார்கள். நாம் சொல்லிவிடுகிறோம் ,சிலரை உண்மையை சொல்வதிலிருந்து எதுவோ தடுக்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. Meeraan : நள்ளிரவைத் தாண்டியதொரு அசதியான விமானப் பயணத்தையும் மீறி என்னைக் கட்டுண்ட போட்ட "தங்கக் கல்லறை" நாயகரைப் பற்றியும் நான் ஏகமாய் சிலாகித்து வேறெங்கோ எழுதியுள்ளதை நினைவுபடுத்தலாமா நண்பரே ? :-)

      Delete
    2. டெக்ஸ் 'கதைகளை'(பன்மை) சிலாகிப்பதர்க்கும் டைகர் 'கதையை'(ஒருமை) சிலாகிப்பதர்க்கும்

      வித்தியாசம் உண்டென்று ஒப்புகொண்டமைக்கு நன்றி சார்

      Delete
    3. அந்த ஒருமைக்கு இணையாக, பன்மையில் ஒரு ஒருமை கூட இல்லாததுதானே சிறுமை............

      Delete
    4. டைகர் கதைகள் எனும் முள்ளில் பூத்த ஒரே ஒரு ரோஜா அது....

      'முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே முள்ளுக்கு என்ன பெருமை'

      Delete
    5. "தங்கக் கல்லறை" கதையை பற்றி னீங்கள் சிலாகித்து எழுதியுள்ளதை நினைவுகூறுகிறேன் சார். ஆனால் டெக்ஸ் என்ற நாயகரின் வசீகரத்தை பற்றி இங்கே ஏராளமாக பதிந்துள்ளதை சிலருக்கு நினைவுபடுத்துகிறேன். டெக்ஸ் கதைகளுக்கென்று இத்தாலியில் தனி இதழ் வருவதிலிருந்து, அதன் மாத விற்பனை எண்ணிக்கை லட்சங்களில் என்றும், நமது இதழ்களின் போக்கை மாற்றியது டெக்ஸின் தலை வாங்கி குரங்கு என்றும், டெக்ஸ் பாசிட்டிவ் நாயகர் என்றும்,டெகஸ் கதைகளை (பன்மை)மெய் மறந்து படித்ததாகவும். 30 ஆவது ஆண்டு இதழை டெக்ஸ் தனி இதழாக வெளியிடலாமா என்று டெக்ஸ் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும் பதிந்துள்ளதை சிலருக்கு ஞாபகப்படுத்துகிறேன்

      Delete
  12. அற்புதமான பதிவு............

    டைகருக்கு காத்திருந்ததுபோக உங்கள் அறிவிப்பு வேற இன்னும் எதிர்பார்ப்பை உண்டுபண்ணிவிட்டது.

    அட்டைபடம் ஒன்டர்புல்......... இட் இஸ் காமிக்ஸ் மிராக்கிள்.............

    உலக காமிக்ஸ் வரலாற்றில் இதுவரை வந்த எந்த ஒரு காமிக்ஸ் அட்டை டிசைனும் இவ்வளவு அழகாக, அற்புதமாக வந்ததில்லை, இனிமேலும் வரப்போவதில்லை.....

    ReplyDelete
  13. மேலே உள்ள அட்டைப்படத்தின் அழகிற்கும், அடுத்துள்ள கருப்பின மனிதனை காப்பாற்றிய டைகரின் மனிதாபிமானத்திற்கும் தலைவணங்குவதுபோல் சிஸ்கோ கிட் படம், தனது குருவின் வருகையை பார்த்து மகிழும் லக்கிலுக், கீழே உள்ள டெக்சை பார்த்து குறைக்கும் ரின்டின் படம், இவைகளை இருண்டுபோன முகத்துடன் பார்க்கும் டெக்ஸ் என வரிசைகரமாக படங்களை வைத்துள்ளவிதம் அருமை.....

    ReplyDelete
    Replies
    1. Mugunthan kumar : "ஈரைப் பேனாக்கி....பேனை பெருமாள் ஆக்குவது" என்பது இது தானோ ? I am escapeeeee !!

      Delete
    2. இந்த டைகரின் உலக மகா நடிப்பை பார்த்து லக்கி சிரிப்பதையும் , டெக்ஸ் நீக்ரோவிற்கு நேர்ந்த கதி கண்டு தூக்கிய துப்பாக்கியை அமைதியாய் கையில் வைத்து (சிவப்பாய் ஒரு சிலுவை ) புன் முறுவல் செய்வதையும் மறைத்து விட்டீர்களே ! டெக்ஸ் வேறு பேனரில் இருந்தும் சூடாவது தெரிகிறதா ! விட்டால் அட்லாண்டாவிற்குள்ளும் புகுந்திடுவார் எங்கள் தலைவர் !

      Delete
    3. சூடேற்றிneeர்கள் எனில் டைகருக்கு கிடைத்திருக்கும் சிறு வாய்ப்புகளையும் தட்டி பரித்திடுவார் ஜாக்கிரதை !

      Delete
    4. பார்த்து பாஸ், இரும்பு ரொம்ப சூடாகி உருகிடப்போகுது........

      Delete
    5. பாஸ் கொஞ்சம் ................கொஞ்சம் வழி விட்டீங்கன்னா கமெண்ட் போட்டுக்குவேன்

      Delete
  14. ////////// டியர் எடிட்டர் ///////////

    கௌபாய் கதைகள் ஓவர்டோஸ் என்பதை சிறிதளவும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    காமெடியில் கலக்கும் சிக்பில், லக்கி இருவரையும் இந்த லிஸ்டில் சேர்க்க வேண்டாமே? தற்போது நமது இதழ்களில் டைகர், கமான்சே, டெக்ஸ் ஆகியோரை தவிர கௌபாய் நாயகர்கள் வேறு யாரும் இல்லை.

    டைகர் இதழ்களும் எண்ணிக்கையில் இன்னும் சிறிதளவே உள்ள நிலையில் வேறு ஏதாவது கௌபாய் நாயகர்களை இப்பொழுதே அறிமுகப்படுத்த தொடங்கினால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய எண்ணம்.

    சிஸ்கோ கிட், ஸ்டீவ், வெஸ் ஸ்லேட் போன்றோர் கதைத் தொடர்கள் இன்னும் உள்ளதா?
    அவ்வாறு இருந்தால் தொடர்ந்து வெளியிடலாமே...... கறுப்பு வெள்ளை என்றாலும் பரவாயில்லை. தீபாவளி மலர் அளவில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்......

    கௌபாய் கதைகளை பொறுத்தவரையில் நாம் இன்னும் கடும் பஞ்சத்திலேயே இருக்கிறோம்.
    காமிக்ஸ் கதைகளில் கௌபாய் கதைகள்தான் சிறந்தது என்பது என் எண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. @ Mugunthan Kumar
      //காமிக்ஸ் கதைகளில் கௌபாய் கதைகள்தான் சிறந்தது என்பது என் எண்ணம்.//

      நிச்சியமாய் !!!

      Delete
    2. // காமிக்ஸ் கதைகளில் கெளபாய் கதைகள்தான் சிறந்தது //

      நிச்சியமாய் + 1

      Delete
    3. @ FRIENDS : சற்றே பொறுமை ப்ளீஸ்....உங்கள் கௌபாய் தேடல்களுக்கு அழகாய் பதில் சொல்ல புது வரவு ஒருவர் தயாராகி வருகிறார் !

      Delete
    4. //புது வரவு ஒருவர் தயாராகி வருகிறார் ! //
      அருமை !
      என்னவோ தெரியவில்லை நீங்கள் அனைவரும் சிலாகிக்கும் சிஸ்கோ கிட, வெஸ் ஸ்லேட் ,ஸ்டீவ் அவ்வளவாய் என்னை அப்போதிருந்தே கவரவில்லை !

      Delete
    5. புது வரவா?.. சரி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கட்டும்...ரெண்டு கோஷ்டி இருந்தா சண்டை

      சுவாரசியமில்லாமல் போகும்னு மூணு கோஷ்டியாக்க பார்க்கறிங்களா??

      Delete
    6. இட நெருக்கடி காரணமாக கமெண்ட் போட முடியலை...........

      Delete
    7. Senthil Madesh : அட...இது தான் போட்டு-வாங்குறதோ ?

      Delete
  15. எடிட்டர் சார்,

    நண்பர் ஈரோடு விஜய் எதிர்பார்த்த மாதிரி கேப்டன் டைகரின் அட்டைப்படம் பயங்கரமாக இல்லாமல் சூப்பராக வந்துள்ளது.

    நீங்கள் குறிப்பிட்ட முத்து காமிக்ஸ் கௌ பாய் பட்டியலில் கணவாய்க் கொள்ளையர் ஜிம்மி யை விட்டுவிட்டீர்களே! மற்றபடி தங்களின் சென்ற பதிவும் இந்தப்பதிவும் ஒரு அட்டகாசமான அலசல் பதிவுகள்.

    அந்த சூப்பர் சுவாரஸ்யம் தரும் அறிவிப்பு : அநேகமாக நமது லயன் 30 வது ஆண்டு மலர் பற்றி இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Radja சார்,
      அட்டைப்படம் பயங்கர அழகா வரும்னு நினைச்சேன். ஆனா அழகா-பயங்கரமா வந்திருக்கு! :D

      Delete
    2. Radja from France : One shot நாயகர்களை நான் அவ்வளவாய் focus செய்திடவில்லையே...! தொடர்ச்சியாய் நம்மிடையே தலை காட்டிய குதிரைக்காரர்களையும், அந்தக் கலையில் நம்மை மெய்மறக்கச் செய்த தொப்பிவாலாக்களையும் மாத்திரமே பட்டியலிட முனைந்தேன் !

      ஆண்டுமலர் பற்றிய அறிவிப்பு ஏப்ரல் 15-க்கு !!

      அப்புறம் இந்த நாலு கால் + ஒரு புசு புசு வால் கொண்ட விமர்சகர்கள் கூட புலியின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தானே..! So அவ்வப்போது வேறு மாதிரி உரக்க சவுண்ட் கொடுத்தாலும் இரத்த பாசம் விலகாது புலியிடமிருந்து !

      Delete
    3. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : மியாவ்வ் !

      (பூனை பாஷையில் - "ஆமாம் ...சாமியோவ் !" ன்னு இதற்கு பொருள்படுத்திக் கொள்ளவும் !

      Delete
    4. இங்கயும் கமெண்டுக்கு இடமில்லை

      Delete
  16. எடிட்டர் சார் டைகரின் அட்டைப்படத்தை நன்றாக திருஸ்டி சுற்றி போடவும்.
    சின்ன கவுண்டர் படத்தில் வரும் கண்களைவிட, பல கொடுரமான கண்கள் நமது வலைதளத்தில் உலவி வருகின்றன.

    மைக்கேல் ஏஞ்சலோ, டாவின்சி போன்றோரின் ஓவியங்களைவிட நமது ஓவியரின் கைவண்ணத்தில் உருவான நமது டைகரின் அட்டைப்படம் உயர்ந்தது.

    ReplyDelete
    Replies
    1. Mugunthan kumar : நல்ல காலம் சார் - மைக்கேல் ஏஞ்சலோ, டாவின்சி மேலுலகில் இருந்து நம் வலைப்பதிவுகளைப் படிக்காது இருப்பது !!!

      Delete
  17. கேப்டன் டைகர் நம் ஒவியரின் கைவண்ணத்தில் தகதகவென மின்னுகிறார்! வாழ்த்துகள் நம் ஒவியர் மாலையப்பன் அவர்களுக்கு!

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : மின்னும் மரணத்தின் நாயகரும் மின்னுவது இயற்கை தானே சார் ?

      Delete
  18. இந்த பதிவு ஒட்டுமொத்ததில் நம் காமிக்ஸில் வெளிவந்த cowboy heroesக்கான tribute என கருதுகிறேன். வரும் இதழில் இருக்கும் surprise filler pages கிடையாது.சரிதானா sir?!;-)

    ReplyDelete
  19. தலயே டெக்ஸ் முதுகெலும்பு அப்டின்னு சொல்லிட்டாரு, அதனால இனி எந்த argument ஒரு தேவை இல்லை.

    ReplyDelete
    Replies
    1. balaji ramnath : கோர்த்து விடாதீங்க பாஸ் ! நான் பாட்டுக்கு 'சிவனே' ன்னு பராக்குப் பார்த்து விட்டு நடையைக் கட்டுறேனே !

      Delete
    2. கடுகு கூடத்தான் சிருசுங்க ஆனா காரம் ரொம்ப பெருசுங்க..."கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை" இது டென்காலி காட்டின் அடச்சே தமிழ் நாட்டின் முது மொழிங்க!!! வாழ்க பரட்டை!!!!

      Delete
    3. அல்ல அல்ல குறையா அமுத பாத்திரம் ! இதுவும்......

      Delete
    4. தல உங்க கூட நடைய கட்ட நாங்க இருக்கோம் ( க்ளா , ஈரோட் விஜய், கிறுக்கல், ஜான் , பரணிதரன், ஆதி , ரமேஷ் , கனகசுந்தரம் , சிவா , முகுந்தன், செந்தில் , கார்த்திக் , சூப்பர் விஜய் , மீரான், கிங் விஸ்வா, அஜய் , ரம்மி , கண்ணன், சரண் , சிம்புபாலன், எழில், விஸ்கி சுஸ்கி, கிருஷ்ண குமார் , சபரி, புஷ்பநாதன் மற்றும் பலர் )

      Delete
    5. ஸ் ஸ் ஸ் ...........முடியல

      Delete
    6. தல அவர்களுக்கு பின் மந்திரியாரே எங்களது பயணத்திற்கு துணை!!

      Delete
  20. சமீபத்திய இதழ்களின் மறுபதிப்பு செய்தியா....???

    ReplyDelete
    Replies
    1. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : ஊஹூம் !

      Delete
  21. // படைப்பாளிகளுக்கு இந்த டிசைனை அனுப்பிட, 30 நிமிடங்களிலேயே "Approved!" என்று பதில் வந்தது! //

    பார்த்தமாத்திரத்திலேயே approve பண்ணிவிட்டு அவசர அவசரமாக டாய்லெட்க்கு ஓடியிருப்பார்னு நினைக்கிறேன்... :D

    ReplyDelete
    Replies
    1. ,''பின்புறம் பிராண்டியார் ''
      விடமாட்டார் போல இருக்கே

      Delete
    2. என்னது பிராந்தியா? சரியா கேக்கலை!! (ரின் டின் போல ஹீ ஹீ ஹீ )

      Delete
    3. ///////////''பின்புறம் பிராண்டியார் '' /////////////
      ''அந்த''பின்புற இடத்தை மொழி பெயர்த்தாலும் ......... - - -TOCKS என்று தானே முடிகிறது...........
      அங்கேயும் வந்து பூனையார் டொக்சை கீறினால்...............

      என்ன தான் பூனை ரசிகர் என்றாலும்.........

      பூனையின் கன்னத்தில் உள்ள டொக்கில் தோட்டாவால் நிரப்பிட்டு

      சொல்லும் பஞ்ச் டயலாக் ...நான் டொக்ஸ் இல்லடா ...................S

      ஹ ஹ ஹ ............செம காமெடி

      Delete
    4. இனிமேல் பின்புறத்தை பார்க்கும் போது இது தான் தோன்றும்................தோணனும்

      Delete
    5. பூனையின் ஹிட் (& பிறாண்டல்) லிஸ்டில் நெம்பர் 2 : "ம..ந்..தி..ரி" விஸ்க்...விஸ்க்... சர்...சர்...

      Delete
  22. AMARKKALAM PANNAPORAR TIGER!!! VALGA PARATTAI!!!

    ReplyDelete
  23. அட்டைப்படம் வெகு அழகு சார் ......

    கதையும் அவ்வாறு இருந்தால் இன்னும் மகிழ்ச்சி....

    தாங்கள் அறிவித்த அந்த " சஸ்பென்ஸ் " தயவு செய்து இங்கே அறிவிக்க வேண்டாம் .புத்தகத்தில் பார்த்து " அதிர்ச்சி " அடைய காத்திருக்கிறேன் ...

    சார் ....போன பதிவில் " மினி லயன் " பற்றிய கருத்துக்கு தங்களின் பதிலை அறிய ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : //போன பதிவில் " மினி லயன் " பற்றிய கருத்துக்கு தங்களின் பதிலை அறிய ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன் .//

      சிரமம் பாராது அதைக் கொஞ்சம் இங்கே மறு பின்னூட்டம் இடலாமா பரணி சார் ? நான் கவனித்ததாக நினைவில்லை !

      Delete
  24. BOUNCER NAMMA RASIGARGALIN RASANAIKKU OTHU VARUMA JI?

    ReplyDelete
    Replies
    1. John Simon C : ஏற்கனவே இது பற்றி எழுதியுள்ளேனே ஜி !

      Delete
    2. நன்றிங்க ஜி! ஹீ ஹீ ஹீ எனக்கு ஞாபக மராத்தி அடச்சே மறதி ஹி ஹி ஹி அதிகம் ஜி! முதல் முதல் பதில் பெற்ற ஆனந்தத்தில் விரல்கள் தடுமாறுகின்றன ஹி ஹி ஈஈ

      Delete
  25. 30 TH LION ANNUAL HEROS SELECTIONTHANE THALAIVARE?

    ReplyDelete
  26. சார் கடந்த காலத்திற்குள் கை பிடித்து அழைத்து செல்லும் அற்புதமான உற்ச்சாக பதிவு ! தற்போதைய பதிவுகளில் டாப்! கௌ பாய் கதை வரிசையில் ஓநாய் கணவாய் , அந்த ஒரு வீரனை சக்கரத்தில் பினைத்திருப்பார்களே சில்வர் ரெட் , அப்புறம் எப்போதும் மனதை வந்து கவ்வி கொள்ளும் , ஒரு பிரம்மை பிடித்த குழப்பமான மனதில் சோகம் வருடி செல்லும் நான் காவியம் என கொண்டாடும் ,தன்னை தானே தூக்கு கயிற்றிற்கு முத்தமிட கொரியர் சுமந்து செல்லும் கா பாயை , ஒரு மாந்த்ரீகனின் கதையை எப்படி மறந்தீர்கள் !

    ReplyDelete
    Replies
    1. கார்சனின் கடந்த காலம் ! அந்த விசேச அறிவிப்பில் என நினைக்கிறேன் ! அட்டை படம் பின்புலம் ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்க , அந்த ஒரு பக்கம் மனதை ஈர்க்கிறது ! எப்போது வரும் என நாங்கள் போட்ட சண்டையையும் மீறி ஒரு எதிர்பார்ப்பை ஏகமாய் விதைத்து விட்டார் டைகர் !

      Delete
    2. வணக்கம் இரும்பாரே முகநூலில் அரட்டைக்கு வாரவே ஹி ஹி வரவே மாட்டுறீங்க!! அங்கேயும் தங்களின் முத்திரையை பதிக்க வரவேற்கிறேன் ஜி! என்றும் அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஹீ ஹீ ஹீ விடாது கருப்பு !!!

      Delete
    3. அந்த சிரிப்பில் போட்டு கும்மலாம் எனும் எண்ணம் ஏதுமில்லையே நண்பரே !

      Delete
  27. \\முத்து காமிக்ஸில் தொப்பி அணியும் உரிமைகளை நெடுங்காலமாய் குத்தகைக்கு வைத்திருந்தவர்கள் பட்லர் டெஸ்மாண்டும், மாயாஜால மன்னன் மாண்ட்ரேக்கும் தான் என்பது எனது யூகம் ! \\

    சார் மறுபடியும் மாண்ட்ரேக் கதைகள் வர வாய்ப்புள்ளதா ?

    ReplyDelete
    Replies
    1. kanagasundaram : அந்நாட்களிலேயே தத்தித் தடுமாறி விற்பனை கண்டவை மாண்ட்ரேக் கதைகள் ! இன்னும் சொல்லப் போனால் - மாண்ட்ரேக் கதைகளின் அறிவிப்பு வந்தாலே ஆர்டர் தராமல் பதுங்கிக் கொண்ட ஏஜென்ட்கள் ஏராளம் !!

      Delete
    2. எனக்கும் , தொடர தொடர மாண்ட்ரேக்கின் கதைகலில் ஒரு ஆயாசம் மேலிட்டது !

      Delete
    3. // மாண்ட்ரேக் கதைகளின் அறிவிப்பு வந்தாலே ஆர்டர் தராமல் பதுங்கிக் கொண்ட ஏஜென்ட்கள் ஏராளம் !! //

      எனக்கு எந்தவொரு மாண்ட்ரேக் கதையையும் முழுதாகப் படித்துமுடித்த ஞாபகம் இல்லை. பக்கங்களை அதிவேகமாகப் புரட்டவைக்கும் மாயசக்தி மாண்ட்ரேக்குக்கு உண்டு! :D

      Delete
    4. // பக்கங்களை அதிவேகமாகப் புரட்டவைக்கும் மாயசக்தி மாண்ட்ரேக்குக்கு உண்டு //

      ஹா ஹா ஹா!

      Delete
    5. // பக்கங்களை அதிவேகமாகப் புரட்டவைக்கும் மாயசக்தி மாண்ட்ரேக்குக்கு உண்டு //

      ஆமாம் !

      Delete
    6. Friends :
      கடைசியாக வெளிவந்த மாண்ட்ரேக் கதைகளை வைத்து இப்படி பேசுகிறீர்கள்.
      ஆனால் 70 இறுதிகளில் வந்த "விபரீத வித்தை", "உதவிக்கு வந்த வஞ்சகன்", விண்ணில் நீந்தும் சுறா" போன்ற கதைகள் அட்டகாசமாக இருக்கும்.

      எடிட்டர் சிவகாசியில் லைப்ரரி திறந்தவுடன்(!) அல்லது நீங்கள் ஆட்டையை போட்டவுடன் இவைகளை படித்துப் பார்க்கவும் :-)

      Delete
    7. படித்த வரையில் ''நிழல் எது நிஜம்'' எது மட்டுமே என்னை கவர்ந்தது. ஆரம்ப கால மாண்ட்ரேக் கதைகள் நிறையப் படித்துள்ளேன். பெயர்கள் ஞாபகமில்லை. ஆனால் அப்பொழுதும் மாண்ட்ரேக் என்னிடத்தில் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. எடிட்டர் சிவகாசியில் லைப்ரரி திறந்தவுடன் சில நாட்கள் கழித்து நீங்கள் சொன்ன கதைகளை படித்துபார்க்கிறேன்.

      Delete
    8. @ FRIENDS : நண்பர் ராட்ஜாவின் கூற்று சரியே !

      அந்த ராட்சசக் கரையான்களின் கதையை எனக்கு ஒரு நூறு தடவையாவது என் தந்தை சொல்லி இருப்பார் என் சிறு வயதில் !

      60' களின் கடைசிகள் + 70 களின் துவக்கங்கள் - மாண்ட்ரேக்கின் பொற்காலங்கள் !

      Delete
  28. விஜயன் சார்,

    அட்டைபடம் மிகவும் அருமையாக உள்ளது.ஓவியருக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளை தெரிவிக்கவும்!

    // இம்மாத இதழ்களில் சூப்பர் சுவாரஸ்யம் தரும் ஒரு அறிவிப்பு காத்துள்ளது !//
    ஆஹா! புத்தகங்கள் எப்போது அனுப்பி வைக்கப் படும்,சார்?
    நாள் முழுதும் யூகமெல்லாம் செய்தும், விடை தெரியாமல் இரவு தூக்கம் தான் பாழாகும் சார்,புத்தகம் வரும் வரை. இந்த த்ரில் தான் வர போகும் நாட்களை சுவாரசியமாக்க போகின்றது!

    ReplyDelete
    Replies
    1. //சார்,புத்தகம் வரும் வரை. இந்த த்ரில் தான் வர போகும் நாட்களை சுவாரசியமாக்க போகின்றது!//
      +1

      Delete
  29. // சூப்பர் சுவாரஸ்யம் தரும் ஒரு அறிவிப்பு காத்துள்ளது //

    1. +6 or +12

    2. புதிய இதழ் (மினி லயன் போல)

    3.புதிய தொடர்

    4.டெக்ஸின் 550 பக்க கதை

    5.சாலமன் பாப்பையா பட்டி மன்றம்

    6. பல குண்டு புக் அறிவிப்புகள்

    7.பதுக்கல் ஸ்பெஷல் (வாங்கி பதுக்குபவர்களுக்காக)

    8.ஒரு மெகா மெகாஆஆஆஆஆஆஆஆ 1000 பக்க ஸ்பெஷல்

    ReplyDelete
    Replies
    1. 1, 2, 3, 6, 7, 8/க்கு ஆதரவு, 5/க்கு ஆதரவுமில்லை எதிர்ப்புமில்லை
      4/க்கு வெளிநடப்பு செய்கிறோம்.

      Delete
    2. அப்படீன்னா பதுக்கல் ஸ்பெஷலுக்கும் ஆதரவு இருக்கு

      Delete
    3. எப்படியோ விற்பனை அதிகரித்தால் சரி........
      நான்கூட எல்லா புத்தகத்தையும் ரேக்கில் பாதுகாப்பாக அடுக்கி வைத்திருக்கிறேன் அதுவும் பதுக்கலில் சேருமோ?

      Delete
    4. ஹா!ஹா! வெளிநடப்பு செய்யும் அளவுக்கு டைகர் அபிமானிகள் சிறுபான்மையினர் என்று

      ஒத்துகொண்டதற்கு நன்றிகள் பல

      Delete
  30. டெக்ஸ் மெகா spl !
    இரத்த படலம் !
    கார்சனின் கடந்த காலம் !
    ஏற்கனவே அறிவித்த லாரன்ஸ் !
    கிடப்பில் போடப்பட்ட கருப்பு வெள்ளை டிடேக்டிவ் spl
    மும்மூர்த்திகளின் மீள் வருகை !
    மில்லினியம் ஹிட்ஸ் spl !

    ReplyDelete
    Replies
    1. இவற்றுகெல்லாம் மேலாய் அந்த எஞ்சிய ஸ்பைடர் முழு வண்ணத்தில் !

      Delete
    2. லாரன்ஸ், மும்மூர்த்திகளை தவிர அனைத்திற்கும் +1

      Delete
    3. பனியில் ஒரு அசுரன்?

      Delete
    4. பழைய கதைகள் வேண்டாமே என்ற எண்ணத்தில்தான் அப்படி பதிவிட்டேன்...........
      புதிதாக இன்னும் கடலளவு காமிக்ஸ் கொட்டிக் கிடக்கும்போது இன்னும் அரைத்த மாவையே ஏன் அரைக்க வேண்டும் என்பதால்தான்.

      Delete
  31. கறுப்புக் கிழவி டைஜஸ்ட் ஹீ ஹீ ஹீ ஹீ

    ReplyDelete
    Replies
    1. // கறுப்புக் கிழவி டைஜஸ்ட் //

      பல் இல்லாத பாட்டிகளின் மேல் (மரியாதை கலந்த) பயம் தோன்றிடக் காரணமாய் இருந்த அந்த கிழவி திரும்பவும் வேண்டும். அந்தக் கிழவி அளவுக்கு வேறு யாராலும் பேய்த்தனமாக அட்வைஸ் செய்துவிட முடியாது.

      Miss you so badly, black பாட்டி...

      Delete
  32. // வெகு சமீபமாய் NBS வாயிலாக மறு பிரவேசம் செய்துள்ள கமான்சே இப்போது நம் கௌபாய் கதைப் பட்டியலுக்கு லேசாய் கனம் சேர்க்கிறார் //

    not in NBS ,it was reintroduced in ANS - All New Special

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி ஆந்தைக்கும் அடி சறுக்குமில்லையா? :)

      Delete
  33. // "மேற்கின் தளபதி - டெக்ஸா ? கேப்டன் டைகரா ?" //

    தளபதி டெக்ஸ் தான், ஆனா ராஜா யாரு? டைகர் தானே...


    ReplyDelete
    Replies
    1. ஆனா போட்டி நடந்தது தளபதி பதவிக்கே ! அதில் டெக்ஸ் ஜெயித்ததை அறிவித்து விட்டீர்கள் !
      ராஜா பதவிக்கு போட்டி நடக்கட்டும் ! அப்போ பார்ப்போம் !

      Delete
    2. சூப்பர் விஜெய் அற்புதம்.......
      அந்த டெக்சின் தளபதி பதவிக்கும் ரின்டின் கேன் ஆப்பு வைத்துவிடும் போல் உள்ளதே

      Delete
    3. ராஜாவுக்கு ஆப்பு வைப்பதைத்தனே இது வரை கண்டும் கேட்டும் இருக்கிறோம் ....

      சோதா ராஜாவானால் ஆப்பு எதற்கு?, நாட்டைகாக்கும் , வலிமைமிக்க தளபதிக்குதானே அப்பு வைக்க

      முடியும்

      Delete
    4. மேற்கின் மன்னர் யார் ? என்பதுதானே போட்டி .

      Delete
    5. அதுதான் டைகர் என்று முடிவாகிவிட்டதே..........
      அவர் மேற்கிற்கு மட்டுமல்ல அகில உலகத்திற்கும்கூட

      தளபதி போட்டியில் லக்கி வென்றுவிட்டார்.

      இனிமேல் டால்டன் சகோதரர்களுடன் லக்கியிடம் உதை வாங்கும் போட்டிக்குத்தான் டெக்ஸ் மோத வேண்டி இருக்கும்.

      Delete
  34. சார், நீண்டநாட்களாக ஒரு சிறு நெருடல்,

    டைகர் தெற்கத்தவர் அக இருப்பினும், ப்ளூ கோட்ஸ் ஆர்மிஐ சேர்ந்தவர், (Yankees) அவர்கள் சீருடை, தொப்பி உட்பட எப்போதும் ப்ளூ கலரிலே இருக்கும், காக்கி தொப்பி தெற்கத்தவரின் சீருடை (Southerners).. ஹிஸ்டரி உதைகிறது,

    சீருடை

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் விஜய் : டைகரின் சீருடை ப்ளூ நிறத்தில் இருத்தல் அவசியம் என்பதனால் தான் - பின்னட்டையில் இருக்கும் சித்திரம் அவ்விதம் உள்ளது ! ஆனால் முன்னட்டை டைகர் இருப்பதோ - தெற்கத்தியர்களின் கோட்டையான அட்லாண்டா நகரில் - மப்டியில் ! இங்கும் அவர் நீலச் சீருடையில் உலாற்றினால் வரலாறு உதைக்காது போகலாம் - ஆனால் நம்மவர் வதைபட்டுப் போவாரே !!

      Delete
    2. i beg to differ sir, ஒரிஜினல் படத்தில் ப்ளூ சட்டையும் தொப்பியும் தான போட்டிருக்கார் தல??? நான் இந்த படத்தை மட்டும் சொல்லவில்லை சார், இதுவரை வந்ததில் எந்த அட்டைபடதிலும் டைகர் "ப்ளூ கோட்ஸ்" சீருடை அணியவே இல்லையே அதான் கேட்டேன்.

      Delete
    3. சூப்பர் விஜய் : இம்மாதம் கதை வந்தான பின்னே படித்துப் பாருங்களேன் - அட்லாண்டாவில் டைகர் முழுக்க முழுக்க incognito வாக செயல்படுவது புரியும். சீருடையில் நம்மவர் பெரும்பாலும் இருப்பதும் கிடையாதே !

      Delete
  35. எடிட்டர் சார் கனவாய்கொள்ளையர் எனும் அற்புத கதையை மறந்துவிட்டீர்களா? ....

    "எல்லை என் இலக்கு தொடரும் ஷெரிப்புக்கு நானே இலக்கு"


    பாடலை மறக்கமுடியமா?

    பாடலுடன் சுவாரசியமான சஸ்பென்ஸ் ஒன்றும் இருக்கும் காமிக்ஸ் அற்புதங்களில் அதுவும் ஒன்று

    ரிப்கிர்பி,காரிகன்,வேதாளர் போன்றோரின் மறுபதிப்பு வெளியீடுகள் பற்றிய அறிவிப்பு மட்டுமே

    இப்போது உள்ள சூழ்நிலையில் உற்சாகம்தரக்கூடிய சுவாரசியம்........

    ReplyDelete
    Replies
    1. yes i read this story many times super story

      Delete
    2. Senthil Madesh : //ரிப்கிர்பி,காரிகன்,வேதாளர் போன்றோரின் மறுபதிப்பு வெளியீடுகள் பற்றிய அறிவிப்பு மட்டுமே....இப்போது உள்ள சூழ்நிலையில் உற்சாகம்தரக்கூடிய சுவாரசியம்........//

      யாருக்கென்று சொல்ல மறந்து விட்டீர்களே ?! சம்பந்தப்பட்ட கனவான்களுக்கா ?

      Delete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. இந்த மாதம் தங்க தலைவனின் வருகையை முன்னிட்டு 25ஆம் தேதியே புக் கிடைக்க வாய்ப்பு உள்ளதா??
    காமிக்ஸ் உலகின் ஒப்பற்ற ஒரே சூப்பர் ஸ்டாரான டைகர் புக்குக்கு காத்திருக்க முடியவில்லை...
    ஆனாலும் தலை வாங்கி குரங்கையும் , தங்க கல்லறையையும் ஒப்பிடுவது குரங்கையும் , புலியையும் ஒப்பிடுவது போல தான் இருக்கிறது...!!!

    2 பதிவுக்கு முன்னால் வாக்களித்த படி ( தொடரும் மாதங்களில் - "குறைந்த பட்சம் 3 இதழ்கள் ; இயன்றால் 4 !" என்பதே நமது பார்முலாவாக இருந்திடிட வேண்டும் என்பதையும் தலைக்குள் பதித்துக் கொண்டேன் ! ) ஒரு புது வரிசையின் அறிவிப்பாக ( +20) இருக்கலாமோ??? இல்லை ரத்த கோட்டை வண்ண மறுபதிப்பு?? சிங்கத்தின் சிறு வயதில்??? சொக்கா!!!!!!

    ReplyDelete
    Replies
    1. //ஆனாலும் தலை வாங்கி குரங்கையும் , தங்க கல்லறையையும் ஒப்பிடுவது குரங்கையும் , புலியையும் ஒப்பிடுவது போல தான் இருக்கிறது...!!!//
      +1

      Delete
  38. இந்த பதிவின் தலைப்பை மேற்கே ஒரு புலியும் ஒரு கிழடும்னு படிச்சுட்டேன்... தலைப்பில் ஆசிரியர் ஏதாவது எழுத்துபிழை பண்ணிட்டாரா????

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே ஏக பட்ட பிழைகள் மேற்கே ஒரு எலியும் , ஒரு கழுகும் என படிக்குமாறு எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார் , அதனை உங்கள் பார்வைக்கு அனுப்பி விட்டேன் !

      Delete
    2. நண்பா நான் படிக்கும் பொது மேற்கே ஒரு கழுதைபுலியும் ஒரு கழுகும்னு இல்ல வாசிச்சேன்      Delete
    3. நீங்கள் படித்ததும் சரியே ,பன்முக தோற்றம் கொண்டவரல்லவா அவர் !

      Delete
  39. உரிய தேதியில் வந்தாலே சொதப்புவாரு டைகரு. இதுல 25க்கே மண்ணு கவ்வி ஆசையா.

    ReplyDelete
    Replies
    1. தலை வாங்கி குரங்கு பத்தி ஒன்னும் கருத்தே சொல்லலே!!!

      Delete
    2. தலை வாங்கி குரங்கு தமிழ் காமிக்ஸை புரட்டி போட்ட கதை ! சூப்பர் ஹீரோசின் ஆதிக்கத்திலிருந்து லயனை மீட்ட காவியம் என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளாரே !

      Delete
  40. இன்னொரு விஷயம் டைகர் டெக்ஸ் ரெண்டு பேருமே கௌபாய்ஸ் இல்ல, ரெட் டஸ்ட் (comanche) மட்டும் தான் இந்த லிஸ்ட் இல் கவ் பாய்...

    western கதை என்றுவேனால் பொதுவில் சொல்லலாம், குதிரல போறவங்க எல்லாரும் கௌ பாய் என்று பொதுவில் கூறுவது , தென்னிந்தியர் எல்லோரும் மதராசி என்று நார்தில் கூறுவது போலத்தான்..

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கென்று எந்த குடியிருப்புமின்றி செல்பவர்களும் கௌ பாய்ஸ் தானே ! லக்கியை கௌ பாய் என்றுதானே குறிப்பிடுகின்றனர் !

      Delete
    2. டெக்ஸ் கால்நடை பண்ணை பரமரிப்பாலறாய் பனி புரிந்த கதைகளும் உண்டு !

      Delete
  41. இந்த மாதம் "அட்லாண்டாவில் ஆக்ரோஷம் " & "கப்பலுக்குள் களேபரம் !" - தலைப்புகள் அட்டகாசம்

    ReplyDelete
  42. ஆசிரியர் அவர்களுக்கு ....,

    தாங்கள் இனி இரண்டு இதழ்களுக்கு பதில் மூன்று இதழ்கள் ( 60 ரூபாய் ) என்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சி .மாதம் ஒரு லயன் ..,மற்றும் மாதம் ஒரு முத்து அடுத்து ஒரு இதழ் என்பதில்

    லக்கி 60 + இருப்பதால் .......

    சிக் 40+ இருப்பதால் .....

    ரின் டின் 20+ இருப்பதால் ...

    மற்றும் ப்ளூ கோட் பட்டாளம்.....பழைய காமெடி கர்னல் ..,கொள்ளை கார கார் ..,ராஜா...ராணி ..ஜாக்கி போன்ற சில மினி லயனின் மறுபதிப்பு ( எப்பொழுது ஆவது ) கொண்டு தாங்கள் மீண்டும் " மினி லயனை "கொண்டு வந்தால் தங்களின் மாதம் மூன்று என்ற நிலைப்பாடும்..,எங்களின் மீண்டும் " மினி லயன் " என்ற நிலைப்பாடும் சமன் படுமே சார் ...இதற்கு தங்களின் நிலை பாட்டை அறிந்து கொள்ள இப்பொழுதே ஆவல் சார் .....ப்ளீஸ் ...நல்ல பதிலாக சொல்லுங்கள் .

    ( இது போன பதிவில் வினவிய வினா சார் ...தங்களுக்காக மறுபதிப்பில் .....)

    ReplyDelete
  43. கேள்வி: சிஸ்கோ கிட்டுக்கும் மற்ற கௌபாய்களுக்கும் என்ன வித்தியாசம்?
    பதில்: மற்ற ஹீரோக்களை வரையும் ஓவியருக்கு எந்த சிக்கலும் இல்லை, ஆனால் சிஸ்கோவை வரைபவர் ஒவ்வொரு பேனலுக்கும் அவருடைய சட்டைக்கு கருப்பு வண்ணமடித்து, வெள்ளையில் பூ வேலைப்பாடுகளை வரையனும்! :D

    ReplyDelete
    Replies
    1. ஆனால் பாருங்கள் யாரும் பெரிதாய் சிஸ்கோவை சட்டை செய்வதில்லை !

      Delete
    2. எம்ப்ராய்டரியில் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமாவது சிஸ்கோ மீது ஆர்வம் காட்டக்கூடும்!

      Delete
    3. சிக் பில்லுக்கு சட்டையில் கட்டம் வரையனும்.

      Delete
    4. டைகர் போல் அல்ல............... சிஸ்கோ ஒரு சோப்ளாங்கி

      Delete
    5. // சிஸ்கோ ஒரு சோப்ளாங்கி //

      இருக்கலாம். ஆனால் மற்ற கெள-பாய்ஸ் மாதிரி இல்லாமல் சிஸ்கோ-பாஞ்சோ இரண்டு பேருமே எப்பவும் சிரிச்ச முகத்தோடவே இருப்பாங்க. அடுத்த வேளை சாப்பாட்டுக்கே ஏதாவது வேலை தேடணும்ங்கற அந்த இயல்பான கதைக் களம் எனக்குப் பிடிக்கும்...

      Delete
  44. // சூப்பர் சுவாரஸ்யம் தரும் அறிவிப்பு //

    * மின்னும் மரணம் - விலை அறிவிப்பு. புக்கிங் ஆரம்பம் (கடைகளில் கிடைக்காது- அதானே சார்?)

    * போனெல்லி இந்தியா வருகை - ரசிகர்களுடன் கலந்துரையாடுகிறார்.

    * லயன் காமிக்ஸ் சார்பாக 'தீவிர டெக்ஸ்' ரசிகர்கள் என அறியப்படும் 5 பேர்களுக்கு ஒரு இத்தாலியச் சுற்றுப் பயணம் - முற்றிலும் இலவசமாக!

    * லயன்-முத்து காமிக்ஸின் 40ஆண்டு கால சேவையைப் பாராட்டி தமிழக அரசின் சிறப்பு விருது.

    * ரூ. 10000துக்கு சந்தா வரவு வைப்பவர்களுக்கு ஒரு அயர்ன் பாக்ஸ் - ஃப்ரீ!

    * புத்தகத் திருவிழாக்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய 'புக் ஃபேர் ஸ்பெஷல்' வெளியீடு அறிமுகம்.

    * சென்னையில் ஒரு காமிக்ஸ் கண்காட்சி - 40 ஆண்டுகால புத்தகங்கள் அனைத்தும் வாசகர்களின் பார்வைக்கு (மட்டும்).

    இவ்வளவு விஸ்தீரனம் போதுமா எடிட்டர் சார்? ;)

    ReplyDelete
    Replies
    1. ஊஹும்...!பத்தாது விஜய் !

      * 19 பில்லியன் மற்றும் ஒரு ரூபாய்க்கு DC காமிக்ஸை நாம் விலைக்கு வாங்க போகும் அறிவிப்பு! : )

      *அடுத்த இதழில் சித்திரங்கள் 3D தொழில்நுட்பத்துடன் பிரிண்டிங் செய்யப்படும்

      * அதை 3D யில் பார்பதற்கு கூகிள் கிளாஸ் இலவசமாக கடைகளில் கேட்டு வாங்கிக்கொள்ளவும் ! : )!

      * லார்கோ,ஷெல்டன்னை தொடர்ந்து "வீரவிஜயன்" என்ற பெயரில் ஒரு காமிக்ஸ் சூப்பர் ஹீரோ EXCLUSIVE அறிமுகம்!

      * முகமறியா ஒரு வாசகர் BATMAN, சூப்பர் MAN, டிஸ்னி,TINTIN போன்ற கதைகளுக்குகான தமிழ் உரிமையை ஒரு சிறிய தொகைக்கு வாங்கி நமது புத்தகங்களில் பதிப்பிக்க பரிசளித்துள்ளார் .

      *BBC,CNN,TIMES மற்றும் இன்னமும் சில பிரபல சர்வதேச ஊடகங்கள் ஆசிரியரை சிறப்பு பேட்டி கண்டு வெளியிட உள்ளன.

      * விரைவில் ஆசிரியர் சூப்பர் ஹீரோவாக அறிமுகமாகும் ஹாலிவுட் படம் ஒன்று தொடங்கப்பட உள்ளது. அர்னால்டு மற்றும் STALLONE இந்த படத்தில் நமது ஆசிரியரின் வில்லன்களாக நடிக்கவுள்ளார்கள்.ஹீரோயினாக யாரை தேர்வு செய்வது என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.: D

      இன்னமும் வளரும்....

      முடியலைன்னு....ஆசிரியர் இந்த பதிவிலயே அந்த ரகசியத்தை சொல்ல வைச்சிடலாம் ! : ))))!

      Delete
    2. @வி-சு

      ஊப்ஸ்! ஒவ்வொருத்தரோட உள்மன ஆசைகள் எப்படியொரு பிரவாகமா வெளிப்படுது. ஒவ்வொன்னும் தினுசு தினுசா... அழகா... ஆச்சர்யப்படும்படியா... சூப்பர்!

      நெக்ஸ்ட்?

      Delete
    3. // நெக்ஸ்ட்? //

      "கற்பனைக் குதிரையினை இன்னும் ப்ரீயாக விடுங்கள்!"

      :D

      Delete
    4. ஹி ஹி ஹி...

      *லயன் டிவி என்று ஒரு புதிய தொலைக்காட்சி தொடங்கவுள்ளோம். காமிக்ஸ் நாயகர்கள் எல்லோரும் தொடர்களாக அதில் வர உள்ளனர்.

      *நமது காமிக்ஸ் BRAND AMBASSADORராக காஜல் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

      * புதிதாக சீனாவில் ஒரு பேப்பர் மில்லையும் ,ஜெர்மனியில் ஒரு பிரிண்டிங் இயந்திரம் தாயரிக்கும் தொழிற்சாலையையும், பெல்ஜியத்தில் ஒரு மை தயாரிக்கும் தொழிற்சாலையையும், நமது நிறுவனம் தமிழ் காமிக்ஸ் வெளியிடுவதற்கென்றே விலைக்கு வாங்கியுள்ளதால், இனி தினமும் ஒரு காமிக்ஸ் வெளியிடப்படவுள்ளது.: )

      *செவ்வாய் கிரகத்துக்கு தற்போது சென்றுகொண்டிருக்கும் நமது மாங்கல்யான் விண்கலம் , நடுவில் யாரும் எதிர்பாராத விதமாக வேற்றுலக வாசிகளின் விண்கலத்தை எதிர்கொண்டு அவர்களுடன் கலந்துரையாடியதில், நம்மிடம் இருந்து நமது பழைய காமிக்ஸ்களுக்கு பதிலாக அவர்களுடைய கோடிக்கணக்கான வண்ண காமிக்ஸ்களை பரிமாறிக்கொள்வது என்று ஒப்பந்தம் முடிவாகியுள்ளது.இந்த ஒப்பந்தத்தை நமது ஆசிரியர் முன்னின்று நடத்தவுள்ளார்.! : )))!

      ....
      *

      Delete
    5. யப்பா.............. டெக்ஸ் கதைகூட தேவலாம் போல உள்ளது.

      Delete
    6. பாருங்க எடிட்டர் சார் பாருங்க. 'கற்பனை குதிரைகளை ஃப்ரீயா அவுத்துவிடுங்க'ன்னு சொன்னாலும் சொன்னீங்க; நம்ம வி-சு தன்னோட குதிரையை வேற்றுக்கிரகம் வரை ஓட்டிட்டுப் போய்ட்டாரு.

      சீக்கிரமா அந்த 'சுவாரஸ்யமான அறிவிப்பு' என்னன்னு நீங்க சொல்லலைன்னா அடுத்த மாத புத்தகங்களை மொத்தமா நீங்க ஏர்வாடிக்குத்தான் அனுப்ப வேண்டியதிருக்கும் போலிருக்கு! :D

      Delete
    7. ஆட்டையை க்ளப் மெம்பர்ஸ்:

      Message: அந்த அறிவுப்பு வெளிவரும் முன்னரே 500-ஐயும் தூக்கிடனும்.
      Action: தூக்கல்
      Date: 21/02/1914
      Venue: பட்டாசுபுரம்
      Team: பில்லி, இரும்பு, வடைவிரும்பி

      Delete
    8. // 1914 //

      ன்னா நாட்டாமை, நீங்க தொழிலுக்கு புச்சா? முதல் தபா ஆட்டயை போடறச்சே அல்லாத்துக்கும் இப்படித்தான் தடுமாறும்.

      Delete
    9. தேதி எப்பொவும் 100 வர்சம் குன்ஸா இருக்கனும்னு சொல்னாங்ளே, ரூல்ஸை இப்போ மாத்தீட்டாங்களா தலீவரே...

      Delete
    10. @ FRIENDS : கற்பனைக் குதிரைகளுக்குக் கடிவாளங்களைக் காணோமாம் !

      கடிவாள விற்பனையாளர்கள் அணுகிட வேண்டிய முகவரி : லயன்-முத்து வலைப்பூ ! (Note : வாழைப்பூ அல்ல!!!)

      Delete
  45. பாஸ் ரொம்ப நாள் கழித்து (அதாவது லைன் காமிக்ஸ்.com commentsku பின்பு) இன்று ஒரு பின்னுட்டம்.

    Bros please don’t kick me for getting into too old stuff.

    நாடோடி ரெமி - ரொம்ப சின்ன வயசுல கலர்புல்லா படிச்சதா ஞாபகம்! அது கார்ட்டூன் கதையா? இல்ல ஒரு மெலிதான சோக கதையானு சரியாய் ஞாபகம் இல்ல! (அப்போ ஒரு டைம் டேபிள்'ஒ இல்ல சில labels தந்ததா நினைவு)
    Infact recent a நீங்க அதை சொன்னதும்தான் அது முத்து காமிக்ஸ் என்று தெரிந்தது. அது reprint செய்ய எதாவது வாய்பிருக்கா?

    அது போல "தனி வேங்கை ஸ்கார்பியோ" nu ஒரு கதை முத்து ஸ்பெஷல் புக்'ல வந்தது! கடைசி வரை யாருன்னு சொல்லாம "யார் அந்த ஸ்கார்பியோ?" அப்படினு முடிச்சிருபாங்க! அது ரொம்ப இண்டெரெச்டிங்க விறு விறுப்பான கதையா இருந்துச்சு. (that's one reason I still remember it ) அவரு யாருன்னு கண்டுபிடிக்க முடிச்சதுங்க்ல? இல்ல உங்களக்கும் தெரியாதுங்களா? 
    I mean avar next book yedhavathu irukungala?

    And about this month surprise, I think it should be about the stories for annual edition?

    Appram transilarate pannarathukula thaavu thenthiruthu boss..
    Sss abba…


    R.Saravanan.

    ReplyDelete
    Replies
    1. @ R. Saravanan

      நான்கு நாட்களுக்கு முன்புதான் 'நாடோடி ரெமி'யை முதல் தபா படிச்சேன். வித்தியாசமா, கொஞ்சம் சோகமா ஆரம்பிச்ச கதை அப்பால அலுப்புத் தட்ட ஆரம்பிச்சுட்டுது. ஒரு சிறுவனின் நாட்குறிப்பை வேக வேகமா புறட்டினா மாதிரி உப்புச்சப்பில்லா கதைக் களம். 'மறுபதிப்பு'க்கு எல்லாம் தேறாது என்பது என் கருத்து.

      Delete
    2. சோகம் ! ஆனால் இப்போது எடுபடுமா என தெரியலை ! கதை நன்றாகவே இருக்கும் ! இதயத்தை பிழிந்து விடும் !

      Delete
    3. விஜய் கையில் புத்தகம் கிடைத்தவுடன் தேவையில்லை என்று சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

      Delete
    4. அப்படியெல்லாம் இல்லீங்கோ! எடிட்டரிடம் பரிசாய் வாங்கியது எதுவாய் இருந்தாலும் பொக்கிஷம்தானுங்களே! :)

      Delete
    5. @ ALL : முதல் பதிப்புக்கே தேறாத சோகம் தான் "நாடோடி ரெமி " வண்டி வண்டியாய் அதன் மிஞ்சிய பிரதிகளை எடைக்குப் போட்ட காட்சி இன்னமும் என் நினைவில் நிற்கிறது !

      Delete
  46. சார் , இன்று ஓய்வாக சிப்பின் சுவடுகளை புரட்ட ஆரம்பித்தேன் ! நெஞ்சை தொட்டு விட்டது கதை ! இதுவரை அதிரடி கதைகள், காமெடி என தொடர்ந்து வந்து விட்டது மாறுதலுக்காக அது போல இருந்தால் மரணம் மறந்த மனிதர்களை முயர்ச்சிப்போமே !
    என்னை பொறுத்த வரை இப்போது படிக்கும் மூடில் உற்ச்சாகமாக படிக்க அமர்ந்த எனக்கு சென்ற வருட வெளியீடுகளில் இதற்க்கு நிச்சயம் கனமான முக்கியத்துவம் வுண்டு !

    ReplyDelete
    Replies
    1. // இன்று ஓய்வாக சிப்பாயின் சுவடுகளை புரட்ட ஆரம்பித்தேன் ! நெஞ்சை தொட்டு விட்டது கதை! //

      ஏனோ ரின்டினை ஞாபகப்படுத்திவிட்டீர்கள் நண்பரே...! :D

      Delete
    2. வித்தியாசமான கதைகளத்துடன் வரும் கிராபிக் நாவல்கள் எப்போதும் அற்புதமானவையாகத்தான் உள்ளது. கிராபிக் நாவலுக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு. எடிட்டர் அவர்கள் அதை தொடர்ந்து வெளியிட முயற்சிக்க வேண்டும்.

      Delete
  47. மரணம் மறந்த மனிதர்கள் !
    புதிதாய் வரவுள்ள அண்டத விடு பட்ட டிடெக்டிவ் !
    டைலான் !
    அந்த மாயாஜால வண்ண கதை ஒன்று விளம்பர் படுத்தினீர்களே வலைதளத்தில் !
    விமானத்தின் கதை !
    ஸ்பைடர் மீண்டும் வில்லனை மாறி புதிதாய் ஆரம்பிக்க பட உள்ள கதை !
    இலக்கில்லா யாத்திரை !
    சூப்பர் ஹீரோ சூப்பர் spl 2

    ReplyDelete
  48. மூன்று நாட்களுக்கு சிக்-லீவு போட்ட பின்பு ரொம்ப நாளாகப் படிக்காமல் வைத்திருந்த டிடெக்டிவ் ராபினின் 'சித்திரமும் கொல்லுதடி'யை இன்று புரட்டினேன்.
    உண்மையில், அதுதான் என்னைப் புரட்டிப் போட்டது! என்ன ஒரு வித்தியாசமான கதைக்களம்! என்ன ஒரு வித்தியாசமான பாத்திரப் படைப்புகள்!! குறிப்பாக, வரையும் திறமையால் சம்பவங்களை வெளிக்கொணரும் அந்த விசித்திரக் குள்ளன் - அஷ்ட கோணலான முக அமைப்பைக் கொண்டிருந்தாலும் அத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்திடும் அந்தச் சித்திரங்களின் நேர்த்தி!

    அப்பப்பா! அசந்துவிட்டேன்! மிகமிக தரமான படைப்பு அது! தமிழில் ரசிக்க வைத்த எடிட்டருக்கு(சற்றே தாமதமான) நன்றி பல!

    ReplyDelete
    Replies
    1. கொலைப் பொக்கிஷமும் நன்றாக இருக்கும்.

      Delete
  49. டோரேமொன் (ドラえもん, Doraemon) விசிறிகளான அபர்ட்மெண்ட் குட்டீஸ் மத்தியில் மயில்(மகள்) தான் ராணி, என்னா எங்க வீட்ல மட்டும் தான் நோபிடா, சுநியோ , சுசுக்கா (Nobita, Suniyo, Susuka - main characters in Doraemon ) வோட பவரைட் காமிக்ஸ் கிடைக்கும். என்னடா புக் ஷெல்ப் இல் இருந்து கொஞ்ச கொஞ்சமா புக்ஸ் கொரயுதேனு பாத்தா, தனியா அபர்ட்மெண்ட்ல ஒரு காமிக்ஸ் லென்டிங் லைப்ரரியே நடத்திட்டு இருகாங்க அம்மணி.. (படம் பார்க்க ). ஒண்ணுக்கும் படிகத்தெரியாது அது வேற விஷயம் (all in 5+ yrs age group ) அப்பா தமிழ் சொல்லித்தாங்க , அங்கிள் தமிழ் சொல்லித்தாங்கன்னு டெய்லி ஒரு notebook எடுத்துட்டு வந்துடுதுங்க...

    புதுசா வாங்குன அபர்ட்மெண்ட்ல ஏற்கனவே இருந்த பசங்க கோஷ்டி யோட mingle ஆக கஷ்ட பட்டுடு இருந்துச்சு குழந்த, நம்ம காமிக்ஸ் புண்ணியத்தில், இப்போ அவள சேத்துக்கிட்டது மட்டும் இல்லாம அவ தான் காங்லீடர் ரேஞ்சுக்கு ட்ரீட்மென்ட் வேற... " மயில் ஹாப்பி அண்ணாச்சி "

    Thanks from my heart to Editor, Have to feel to know, how much it would mean for the children and us, seeing them happy.

    ReplyDelete
    Replies
    1. சின்ன பசங்க மத்தியில் ஒரு காமிக்ஸ் அலை உருவாகி கொண்டு இருப்பதாய் தோன்றுகிறது, டோரேமொன் வருகையால்.. பெங்களூர் தமிழர்கள் மத்தியில் மட்டுமா இல்ல தமிழ் நாட்லயும் சேம் பிளட்டா ? hungama / disney channelஇல் 24X7 இதுதான் ஓடுது, இதுல மட்டும் ஒரு விளம்பரம் குடுத்தோம் பிசினஸ் பிச்சுக்கும்..

      நோபிடாவின் ப்வொரைட் காமிக்ஸ் இப்போது தமிழில், மினி லயன் காமிக்ஸ் ஆக, வங்கிவிட்டீர்களா இப்போது விற்பனையில் "யக்கரி - and Great Eagle" எப்படி, சும்மா அதிருதில்ல...

      Delete
    2. என் வீட்டு எஜமான் BEN 10 ன் தீவிர விசிறி .

      Delete
  50. ஜாக்கி ஸ்டார் என்ற ஒரு கதை நாயகரும் ஞாபகம் வருகிறார். அந்த கதையில் நகைசுவை சிறப்பாகவே இருந்தது.

    ReplyDelete
  51. ஹாய் கோகுல கிருஷ்ணன் கட்டை விரலை வாயில் வைத்து விட்டாரோ... ஹா ஹா ஹா

    ReplyDelete
  52. எடிட்டர் சார்,

    அடுத்த வருஷம் டிடெக்டிவ் ராபின் கதைகளுக்கு கணிசமான இடம் ஒதுக்கலேன்னா நீங்க கடுமையான பல போராட்டங்களைச் சந்திக்கவேண்டியதிருக்கும் சொல்லிப்புட்டேன்.

    ReplyDelete