Powered By Blogger

Thursday, August 29, 2013

இது கேள்வி நேரம் !

நண்பர்களே,

வணக்கம். காலை எழுந்தவுடன் சிரிப்பு ; பின்பு ஆபீஸுக்குச் சென்றதும் சிரிப்போ சிரிப்பு ; மாலை முழுவதுமே சிரிப்பு ; தூங்கும் வரைச் சிரிப்பு ! கடந்த நாலைந்து நாட்களாய் எங்களது முழு நேர agenda இது தான் ! உரக்க ; கூரையில் ஏறி நின்று சிரிக்காத குறை தான் ! 'ஆஹா...வெயில் திரும்பவும் ஒரு ரவுண்ட் அடிக்கத் துவங்கியது நிஜம் தான்...சிவகாசியில் கொஞ்சம் ஓவரோ ?' என்ற சந்தேகம் உங்களுக்கு எழுந்தால் அது நியாயமே ! ஆனால் எங்களது தற்சமயச் சிரிப்பு - பெரும் புலவரின் வழிகாட்டலின் பொருட்டே ! 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று அவர் சொல்லி விட்டுச் சென்றான பின்னே, அதைப் பின்பற்றுவதைத் தாண்டி நமக்கெலாம் என்ன வேலை ? 

கடந்த 3 வாரங்களாகவே தறி கட்டுப் பாயும் நமது இந்திய ரூபாயின் மதிப்பு இந்த வாரம் பிறந்த நாள் முதலாய் தினமொரு புதுப் பாதாளத்தைத் தேடித் பயணம் செல்வதை நீங்களும் கவனித்திருப்பீர்கள் ! இன்றைய யூரோ மதிப்பு : ரூ.92-50 !! சென்ற மாதமோ - ரூ.72 ! உழைப்பைத் தாண்டி சகலமுமே அயல்நாட்டுச் சங்கதிகளைக் கொண்ட நமது இதழ்களுக்கு ரூபாய் வாங்கிடும் இந்த தர்ம அடி இரத்தக் கண்ணீரை வரவழைக்காத குறை தான் ! கதைகளுக்கான ராயல்டி ; அச்சுக் காகிதம் ; அச்சு இங்க் ; அச்சுப் பிளேட்கள் என முக்காலே மூன்று வீசம் - டாலர்களிலும், யூரோக்களிலும் பணம் அனுப்ப அவசியமாகிடும் செலவினங்கள்  நமக்கு ! வரலாறு காணா இந்த 'தொபுகடீர்' நம் கட்டுப்பாட்டில் இல்லா சங்கதி என்பதால், ஜாலியாக "நகுவதைத்' தாண்டி வேறென்ன செய்வதென்று இப்போதைக்குத் தெரியவில்லை ! இம்மாதத்திற்கும், அக்டோபருக்கும் அச்சுக் காகிதம் கையிருப்பு உள்ளதால் இப்போதைக்குத் தலை தப்பி விட்டது ! ஆனால் நவம்பரில் பேப்பர் வாங்கிடவிருக்கும் சமயம் நெஞ்சைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டே தான் முயற்சித்தாக வேண்டும் என்பது தெளிவு ! ஆர்ட் பேப்பரின் விலை தான் விண்ணைத் தொடுகின்றதென்று இல்லாது, 'சமத்துவம், சகலத்திலும்' என்ற பாணியில் - uncoated பேப்பரின்   விலைகளும் கண்ணுக்கு எட்டாத் தூரத்தை நோக்கிப் பயணம் செய்துள்ளன !  
ஆகஸ்ட் 15 விடுமுறையின் போது 2014-க்கான அட்டவணையை கிட்டத்தட்ட பூர்த்தி செய்திருந்தேன் ! இனி back to the drawing board once again ! குட்டிக்கரணங்கள் அடித்தேனும் இந்தாண்டை எப்படியாவது நிர்ணயித்த விலைகளிலேயே கொண்டு சென்றிடுவோம் ; ஆனால் 2014-ல் நமது விலைகள் உயர்வதைத் தடுக்க வழியே புலப்படவில்லை!அதிலும் மாதந்தோறும் படைப்பாளிகளுக்கான ராயல்டி அனுப்பும் நாட்களை நினைத்தால் இப்போதே குளிர் ஜூரம் வருவது போலுள்ளது ! Phew !  சரி...நமது 'சிரிக்கும் படலம்' ஓவர்..ஓவர்  ; இனி நமது updates பற்றி ! 

'செப்டெம்பர் இதழ்கள் எப்போது ?' என்று கடந்த பதிவினில் ஆங்காங்கே நண்பர்கள் பலரும் கோரியிருந்த போதிலும் என்னால் சரியான பதில் தர இயலாது போனதன் காரணத்தை வரும் செவ்வாயன்று வரவிருக்கும் புதிய பதிவைப் படிக்கும் போது நீங்களே புரிந்து கொள்வீர்கள் ! செப்டம்பர் 3-ஆம் தேதி இங்கிருந்து 2 இதழ்களுமே  அனுப்பிடப்படும் ! So - அது வரை பொறுமை ப்ளீஸ் ! 

அப்புறம் நவம்பரில் வரவிருக்கும் டெக்ஸ் தீபாவளி மலரில் ஒரு surprise காத்துள்ளது என்று நான் எழுதி இருந்தது நினைவிருக்கலாம்....! அது என்னவாக இருக்குமென்ற கேள்விகளும், யூகங்களும் - பின்னூட்டங்களாகவும்  சரி ; கடிதங்களாகவும் சரி, நிறையவே வந்து விட்டதால் - தேவையின்றி ஒரு suspense buildup வேண்டாமே என்று தோன்றியது ! தவிரவும் இந்த surprise -ல் உங்களின் பங்களிப்புகளும் இருக்கும் பட்சத்தில் இன்னமும் நிறைவாக இருக்குமே என்ற சிந்தனை மண்டைக்குள் சவாரி செய்வதால் -  here goes ! நமது டாப் கௌபாய் டெக்ஸ் வில்லர் நமக்கெல்லாம் எத்தனை பிரத்யேகமானவர் என்பதை 1985 முதல் அவரது சாகசங்களைப் படித்து வரும்  நாம் அனைவருமே அறிவோம் ! நமது இந்த 'டெக்ஸ் காதலை' நன்கு அறிந்து வைத்திருக்கும் இன்னொரு அணியும் உண்டு ; அது தான் இத்தாலியில் டெக்ஸ் கதைகளை உருவாக்கிடும் பொனெலி குழுமம் ! லட்சங்களில் இத்தாலிய மொழியிலும், கணிசமானதொரு  எண்ணிக்கையில் ஸ்பானிஷ் பேசும் தென்னமெரிக்காவிலும் சக்கை போடு போடும் டெக்ஸ் - நமது தமிழ் பதிப்புகளில் ஒரு பெரும் எண்ணிக்கையினை முன்னிறுத்தியதில்லை தான் ! ஆனாலும் circulation ; நம்மால் திரட்ட இயலும் ராயல்டி என்ற நம்பர்களைப் பிரதானமாய்ப் பார்த்திடாது, அவர்களது தேசத்து செல்லப் பிள்ளை நமக்கும் எத்தனை வாஞ்சையானவர் என்பதைப் புரிந்து கொண்டு  நமது முயற்சிகள் மீது எப்போதுமே நேசம் காட்டத் தவறியதில்லை !

சமீபமாய் அவர்களிடம் interact செய்து கொண்டிருந்த போது, டெக்சின் பின்னணி பற்றி ; அதன் தற்போதைய creative team பற்றிய கேள்விகளை முன்வைத்தால் என்னவென்று எனக்குள் தோன்றியது ! அதையே இன்னும் கொஞ்சம் develop செய்து, டெக்சின் கர்த்தாகளோடு ஒரு interview ஆகச் செய்ய முடிந்தால் சூப்பராக இருக்குமே என்ற எண்ணமும் உதித்தது ! 'மிகவும் பிஸியான வேலைப் பளுவினிடையே டெக்சின் கதாசிரியர் எவரேனும் நம் கேள்விகளுக்குப் பதிலளிப்பது சாத்தியமாகுமா ? ' என்று நான் கேட்ட போது - 'oh yes ! குழுமத்தின் தலைவரான திரு.டேவிட் பொனெலியெ உங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயாராக / ஆர்வமாக உள்ளார் ! என பத்தாவது நிமிடத்தில் பதில் மின்னஞ்சல் வந்து சேர்ந்தது - இன்ப அதிர்ச்சியாய்  ! மறைந்த செர்ஜியோ பொனெலியின் புதல்வரும், இன்றைய அவர்களது கட்டமைப்பின் சகலமுமாய் திகழ்பவர் திரு டேவிட் ! அத்தனை பெரிய நிறுவனத்தை ஆள்பவரின் பணிச்சுமை எத்தகையது என்பதை நானறிவேன் ; இருப்பினும், நமது டெக்ஸ் நேசத்தை மதித்து, அவரே பதில் தர முன்வந்தது நமக்குக் கிட்டியதொரு பெருமை guys !! Pat yourself on the backs !! அவரைப் பேட்டி கண்டு, அதனை டெக்ஸ் தீபாவளி மலரில் உங்களுக்கொரு குட்டி surprise ஆக வெளியிடுவதை விட, அந்தக் கேள்விகளை frame செய்யும் பணிகளையே உங்களோடு பகிர்ந்து கொள்வது இன்னமும் அழகாக இருக்குமே என்று தோன்றியது ! So - உங்கள் அபிமான டெக்ஸ் பற்றி நீங்கள் கேட்க எண்ணிடும் கேள்விகளை இங்கு பதிவிடலாம் ; அல்லது நமக்கு மின்னஞ்சல்களாகவோ ; கடிதங்களாகவோ அனுப்பிடலாம் ! 'உங்கள் சர்குலேஷன் என்ன ?' பாணியிலான வினவல்களைத் தவிர்த்து விட்டு, 'டெக்ஸ் நேற்று-இன்று-நாளை ' பற்றிய வினாக்களை தொடுத்திடலாம் ! So, get cracking !!
காலம் சென்ற திரு. செர்ஜியோ பொனெலி (1932-2011)
அக்டோபரில் இரத்தப் படலம் + பிளஸ் 6 வரிசையின் (புது) கார்டூன் அறிமுகம் ! நவம்பர் & டிசெம்பரில் தலா 3 இதழ்கள் ! (ஒரு லயன் / முத்து இதழ் ; ஒரு மறுபதிப்பு மற்றும் +6 வரிசைகளின் இவ்வாண்டுக்கான இறுதி 2 இதழ்கள் ) So இந்தாண்டின் இறுதிப் பகுதிகள் (எங்களுக்கு) செம tight ஆகப் பயணிக்கவிருப்பது இப்போதே அப்பட்டம் !   பணிச்சுமை கூடக் கூட, நான் இங்கு நமது வலைப்பதிவில் செலவிட சாத்தியமாகும் நேரம் குறைந்திடுவதை என்னால் உணர முடிகிறது ! அச்சமயங்களில் நண்பர்கள் காமிக்ஸ் பற்றி எழுதிடக் கூடிய சுவாரஸ்யம் தரும் பகுதிகளை இங்கே கொணர்ந்தால் என்னவென்று தோன்றியது ! ஏற்கனவே இந்த சங்கதி மீது மெலிதானதொரு விவாதத்தை நாம் துவக்கியது நினைவுள்ளது ; அதன் மீதொரு முடிவு எடுத்திடும் வேளை நெருங்குவதாய் மனதுக்குப் படுவதால் - இதன் சாதக-பாதகங்களைக் கொஞ்சம் அலசுவோமா ? What say folks ?

2014-க்கான அட்டவணை தயாரிப்பின் போது எனக்குள் எழுந்த கேள்விகள் சில !  அவற்றை ஒரு உரத்த சிந்தனையின் வெளிப்பாடாய்க் கூட எடுத்துக் கொள்ளலாம் ! கொஞ்சமாய் உங்களின் inputs கிட்டிடும் பட்சத்தில் எனது திட்டமிடல் தெளிவான வடிவம் பெற்றிடுவது சுலபமாகிடும் என்பதால் -  here I go again :
  • 2012 & (இது வரை )2013-ல் வெளியான கதைகளுள் - '2014-ல் வேண்டவே வேண்டாமே சாமி!' ரகத்தில் ஏதேனும் உள்ளனவா  ? (எதைத் தேர்வு செய்வதென்ற கேள்வியை விட, எதைத் தவிர்த்தல் அத்தியாவசியம் என்ற புரிதல் முக்கியமாய் தோன்றுகிறது எனக்கு ! )
  • கார்டூன்களுக்கு இப்போதிருக்கும் வாய்ப்புகள் ? >>>>> போதும் / கூட்டலாம் / குறைத்திடலாம் ?
  • 'சரி வர பயன்படுத்திடவில்லை ; இவருக்குக்  கூடுதலாய் வாய்ப்பு தந்து பார்க்கலாம் !' - என்ற ரகத்தில் நமது ஹீரோக்கள் யாரேனும் ஆழ்நித்திரையில் உள்ளனரா ? நினைவூட்டுங்களேன் ப்ளீஸ் ? (அதற்காக 'கபாலர் கழகம்' ரேஞ்சிலான புராதனங்களைத் தேடித் பிடித்திட வேண்டாமே ? ) இந்தக் கேள்வியை நான் முன்னிறுத்துவதன் காரணம் COMANCHE ! ஒற்றைக் கதையோடு கிடப்பிற்குச் சென்றவரை மீட்ட போது தான் ஒரு அழகான தொடரை மறந்த முட்டாள்தனம் எனக்கு உரைத்தது ! அந்தத் தவறு தொடர இடம் தர வேண்டாமே எனத் தோன்றியது ! 
  • Filler pages பற்றிய உங்களின் சிந்தனைகள் என்ன ? வண்ணத்தில் 6-8 பக்கச் சிறுகதைகள் எனும் போது லக்கி லூக் ; மதியில்லா மந்திரி ; ஸ்டீல் பாடியார் நீங்கலாக - பெரிதாய் நமக்கு options கிடையாது என்பதை நினைவில் கொண்டு - இவைகள் நம் இதழ்களுக்குச் சேர்க்கும் value பற்றிய உங்களின் எண்ணங்கள் ப்ளீஸ் ?
  • கார்ட்டூன் ; கௌபாய் ; டிடெக்டிவ் ; adventure  ; கொஞ்சமாய் கிராபிக் நாவல் என்ற களங்களில் தற்போது சவாரி செய்து வருகிறோம் ! புதிதாய் நீங்கள் பார்த்திட விரும்பும் ஒரு கதை ரகம் எனில் - அது என்னவாக இருக்கும் ?  Please make just 1 choice ! 
மேற்கண்ட வினாக்கள் முழுக்க, முழுக்க புது இதழ்களின் திட்டமிடலின் பொருட்டே என்பதால் - மறுபதிப்பு தொடர்பான பதில்கள் இவற்றிற்கு வேண்டாமே ? தனியாக இன்னொரு சந்தர்ப்பத்தில் மறுபதிப்புகள் பற்றிப் பேசிடுவோம் !

கிராபிக் நாவல்களின் களங்கள் சோகமோ ; வித்தியாசமான கதை பாணிகளோ (கிரீன் மேனர் ) மாத்திரமே என்ற நமது stereotype -ஐ சிதறச் செய்யும் விதத்திலிருந்த இருகதைகளை சமீபத்தில் படிக்க வாய்ப்புக் கிட்டியது ! இரண்டுமே பிரெஞ்சு ஆக்கங்கள் ; இரண்டுமே மூன்று பாகங்களானவை ! கதை சொல்லிய விதம் ; கதையின் புதுமை (நமக்கு) ; ஓவிய அசாத்தியம் என படித்த மாத்திரத்தில் திகைக்கச் செய்தன இரு நாவல்களும் ! இவற்றை எப்படியேனும் தமிழுக்குக் கொணர வேண்டுமே என்ற மண்டைக்குடைச்சல் அபரிமிதமாய் என்னுள் ! இது போன்ற கிராபிக் நாவல்களை நம் வாசிப்பு எல்லைகளுக்குள்ளே நுழைத்திடும் பட்சத்தில், நமது ஆக்க்ஷன் கதை ரசிகர்களும் நிச்சயம் குறை சொல்லிட மாட்டார்கள் என்பது உறுதி ! அவற்றில் ஒன்றை எப்படியேனும் 2014-ல் களமிறக்கிடுவோம் ; பிரயத்தனம் இரண்டையுமே கொணர்வதில் இருக்குமென்பதை நான் சொல்லிடவும்  வேண்டுமா -என்ன ? 
தூக்கத்தை நாடிப் புறப்படும் முன்னே சின்னதாய் இன்னுமொரு சந்தோஷ சேதியும் கூட : இன்று முதல் சென்னையின் 4 LANDMARK ஸ்டோர்களிலும் (ஸ்பென்சர் plaza ; அம்பா ஸ்கைவாக் mall ; சிடி சென்டர் ; நும்கம்பக்கம் ) நமது காமிக்ஸ்கள் சகலமும் (மீண்டும்) கிடைத்திட ஏற்பாடாகியுள்ளது ! :-)

See you around folks ! Take care ! 

365 comments:

  1. இன்னமும் யாரும் வரலையா?

    என்ன ஆச்சர்யம்?

    ReplyDelete
  2. சார்,

    //சரி வர பயன்படுத்திடவில்லை ; இவருக்குக் கூடுதலாய் வாய்ப்பு தந்து பார்க்கலாம் !' - என்ற ரகத்தில் நமது ஹீரோக்கள் யாரேனும் ஆழ்நித்திரையில் உள்ளனரா ? நினைவூட்டுங்களேன் ப்ளீஸ் ? (அதற்காக 'கபாலர் கழகம்' ரேஞ்சிலான புராதனங்களைத் தேடித் பிடித்திட வேண்டாமே ? ) இந்தக் கேள்வியை நான் முன்னிறுத்துவதன் காரணம் COMANCHE ! ஒற்றைக் கதையோடு கிடப்பிற்குச் சென்றவரை மீட்ட போது தான் ஒரு அழகான தொடரை மறந்த முட்டாள்தனம் எனக்கு உரைத்தது ! அந்தத் தவறு தொடர இடம் தர வேண்டாமே எனத் தோன்றியது//


    புதிய தொடர் வரிசை கதைகள் பல இருந்தாலும் நீங்கள் பழைய / கைவிடப்பட்ட கதைத்தொடர்களை பற்றி கேட்பதால், சட்டென்று நினைவுக்கு வந்த தொடரை பற்றி கேட்கிறேனே?

    அநேகமாக நீங்கள் மறந்துவிட்ட கதை வரிசைதான் - பால் ஃபோரான் (Paul Foran) என்ற ஹீரோவை CID மார்ஷல் என்கிற பெயரில் திகில் காமிக்ஸில் அறிமுகப்படுத்தி இருந்தீர்கள்.

    1. பிசாசு குரங்கு (திகில் வெளியீடு எண் 4, Apr 1986)

    2. மர்ம ஏரி (திகில் வெளியீடு எண் 10, Oct 1986)

    இதற்க்கு பிறகு தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் "விரைவில் வருகிறது" / "வாங்கி விட்டீர்களா?" என்று பூமிக்கொரு ப்ளாக்மெய்ல் கதையை விளம்பரப்படுத்தி இருந்தீர்கள்.

    இந்த கதைகள் அப்போது மிகவும் பிரபலமாக இருந்த கதாசிரியர் Jil மற்றும் ஓவிய மேஸ்ட்ரோ ஜீசஸ் ப்ளாஸ்கோ (இவர் நீங்கள் வெளியிட்ட பல இரும்புக் கை மாயாவி, சில டெக்ஸ் வில்லர் கதைகளுக்கும் வரைந்து இருக்கிறார்) காம்பினேஷனில் வெளிவந்தது. அப்போதே முழு வண்ணத்தில் வெளிவந்த இந்த தொடர் வரிசை ஓவியங்களுக்கு புகழ் பெற்று விளங்கியது.

    இதற்க்கு பிறகு எங்கள் குரு பின் நவீனத்துவ ஓவியர் ஜோர்டி பெர்னட் அவர்கள் இந்த கதைகளுக்கு ஓவியம் வரைந்தாராம். அந்த கதைகளும் முழு வண்ணத்தில் வந்தன. ஜோர்டியின் ஓவியங்களை மறுபடியும் தமிழில் காண மிகவும் ஆவல். நாம் வெளியிடாத முழு நீள கதைகளே இன்னமும் இரண்டு இருக்கின்றன.

    இந்த கதை வரிசையை பற்றிய உங்களது கருத்துக்களை அறிய ஆவல்.

    இந்த தொடர் இப்போதைய நமது ரசனைக்கு ஒத்து வருமா?

    அப்படியே இருந்தாலும் இப்போதைய நடைமுறைக்கு இவை டிஜிடல் கோப்புகளாக கிடைக்கப்பெறுமா?

    ReplyDelete
    Replies
    1. King Viswa : ஆர்ட்வொர்கில் உள்ள நேர்த்தி Paul Foran கதைக் களங்களில் இருப்பதில்லை என்பதே இத்தொடர் ஐரோப்பாவிலேயே துரிதமாய்ப் பரண் நோக்கிப் பயணம் செய்ததன் காரணம் ! 'பிசாசுக் குரங்கு' வெளியான 1986-ன் போதே - 'என்னமோ குறைகிறதே ! ' என்று எனக்கொரு நெருடல் இருந்து வந்தது ; இத்தனை காலம் கழிந்த பின்னே அவர் நம்மிடையே சோபிப்பாரா என்பது சந்தேகமே..!

      Delete
    2. டியர் சார்...
      பல ஹீரோக்களுக்கு வாய்ப்பளிக்கிற மாதிரி paul foran& jess long போன்ற ஹீரோக்களுக்கும் ஒருமுறை வாய்ப்பளித்து பார்க்கலாமே? இவை தவிர நடுக்கடல் நரகம் மூலம் அறிமுகமான பீட்டர் பாலண்டைன், மற்றும் ரோஜர்& பில், ப்ரூனோ பிரேசில், சி,ஐ.டி.ராபின், மார்ட்டீன், ஜான் சில்வர் என இன்னும் பல பழைய ஹீரோக்களின் கதைகள் நிறைய உள்ளன. என்னதான் பழையதை தாங்கள் தொடர்ந்து புறக்கணித்தாலும் அதில் உள்ள ரசனைகள் இப்ப வரும் புதிய கதைகளில் உள்ளனவா? என்றால் இல்லை என்று தான் சொல்வேன்,ஒரு முறை படிக்கலாம்,ரசிக்கலாம் அவ்வளவுதான். அதே போல் இப்போது வரும் புதிய கதைகளை ஒருமுறைக்கு மேல் யாராவது படித்தார்களா என்று கேட்டு பாருங்கள் உங்களுக்கே புரியும், இதே பழைய கதைகளை இன்றும் எத்தனை முறை படித்தாலும் அதன் மேல் சலிப்பே வராது. ஆனால் இப்போது வந்து கொண்டிருக்கும் கதைகளை இன்னும் பத்து, பதினைந்து வருடங்களுக்கு பிறகு யாராவது ரீபிரிண்ட் கேட்பார்களா?என்றால் சந்தேகம்தான்.ஆதலால் பழைய ஹீரோக்களுக்கும் கொஞ்சம் வாய்ப்பளியுங்கள்.

      Delete
    3. பேட்மேன்& வேதாளர் கதைகளையும் ஒரே இதழில் வெளியிட்டு, அவர்களுக்கும்(பேட்மேன்&வேதாளர்) ஒரு முறை வாய்ப்பளித்து பார்க்கலாம்? கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்..

      Delete
    4. ப்ரூனோ ப்ரேசில் :

      paul foran : வாய்ப்பளிக்கலாம் ...ஆனால் இது வரையிலும் பிசாசுக் குரங்கு கதையை யாரேனும் நினைவில் வைத்துள்ளது போல் துளியும் அறிகுறி தெரியவில்லையே !

      Jes Long : தாங்காது சாமி ! 80% சுமார் கதைகள் கொண்ட தொடர் இது !

      பீட்டர் பாலண்டைன் : குளறுபடியானதொரு கதை....! தினசரி செய்தித்தாள்களில் தொடராக வந்ததை, அப்படியும், இப்படியுமாய் எடிட் செய்து எப்படியோ ஒரு கதையை ஒப்பேற்றினேன். நம்மிடம் இன்னுமொரு கதை 20 ஆண்டுகளாய் துயில் பயில்கிறது - செம மொக்கை என்ற காரணத்தினால் !

      ப்ரூனோ ப்ரேசில் : எஞ்சி இருப்பது ஒரே கதை மாத்திரமே ...அது ஏற்கனவே நமது அட்டவணையில் உள்ளது !

      மர்ம மனிதன் மார்டின் & CID ராபின் : நான் எப்போதுமே இவர்களது கதைகளின் விசிறி ; ஆனால் விற்பனையில் படு மந்தம் காட்டிய ஹீரோக்கள் இருவருமே...! அது ஏனென்று இன்றளவும் எனக்குப் புரியாப் புதிரே..!

      உங்கள் பின்னூட்டத்தின் இறுதியில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துக்கும் - அதன் முன்னே நீங்கள் பரிந்துரை செய்துள்ள நாயகர்களுக்குமிடையே உள்ள முரண்பாடே உங்கள் கேள்வியின் பதிலாகாதா ? இது வரை எத்தனை பேர் ஜெஸ லாங் கதைகளின் மறுபதிப்பைக் கோரியுள்ளனர் ? எத்தனை பேர் பீட்டர் பாலண்டைனை நினைவில் கொண்டுள்ளனர் ?

      நான் பழமைக்கு எதிரி அல்ல ; பழமைக்காக மாத்திரமே ஒரு தொடரை தாங்கிப் பிடிப்பதற்கு மட்டுமே மாற்று சிந்தனை கொள்ள எத்தனிப்பவன் !

      Delete
    5. ப்ரூனோ ப்ரேசில் : பேட்மன் நமது தற்சமய சர்குலேஷனுக்கும் ; சக்திக்கு மிஞ்சிய கை ! தவிர வேதாளரின் கதையோடு இணைப்பது இத்யாதியெல்லாம் சாத்தியங்களே இல்லா combinations ; இருவருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் !

      Delete
  3. Have to leave the office, so just glanced the post. Will read and comment after reaching home.

    Rupee against dollar - practical problem. Not only for us it will problem for all the business that imports something from outside.

    ReplyDelete
  4. ஏதேச்சையாக தூக்கம் கலைஞ்சு இந்தப் பதிவைப் பார்த்ததும் அதிர்ந்துபோய்விட்டேன். அரையாண்டு வினாத்தாள் மாதிரி எத்தனை கேள்விகள்!! உஸ்ஸ்... நிஜமாகவே கண்ணைக் கட்டுதே...!

    ReplyDelete
    Replies
    1. கிறுக்கும் பூனைக்குட்டி Erode VIJAY :தேவுடா.... பூனைகளுக்கும் அரையாண்டுத் தேர்வு உண்டா ? சொல்லவே இல்லை...!

      Delete
  5. டியர் எடிட்டர் ,
    "இடுக்கண் வருங்கால் நகுக " என்ற பொய்யா மொழி புலவரின் குறளுக்கு அமைய தாங்கள் சிரித்து சிரித்து , உங்களின் வயித்தெரிச்சலை குறைக்க முயன்று உள்ளது , நிலைமையின் தீவிரத்தை எமக்கு தெளிவாக விளங்கபடுதுகிறது . கவலையை விடுங்கள் சார் . அடுத்த வருடம் மட்டுமல்ல , இந்த வருடமே நீங்கள் விலையினை அதிகரித்தாலும் , சந்தா தொகையினை கூட்டினாலும் , எமது காமிக்ஸ் ரசிகர்கள் உங்களுக்கு என்றென்றும் பக்கபலமாக இருப்போம் .

    நியாயமான காரணங்கள் பலவற்றை நீங்கள் விளக்கும்போது , ஏறி வரும் டாலர் , யூரோ மதிப்பினை பலரும் அறிவார்கள் .
    இந்த சூழ்நிலையிலும் செப்டம்பர் 3 ம் திகதி இரு இதழ்களும் அனுப்ப ஆவன செய்த உங்களிற்கும் டீம் இற்கும் நன்றிகள் .
    டேவிட் பொனொலியெ அவர்களே எமது கேள்விகளுக்கு நேரடியாக பதில் தர முன் வந்தது எமது அதிஸ்டம் .

    1)2012, 2013, வெளியான கதைகளுள் வேண்டவே வேண்டாம் ரக கதை எதுவும் இருப்பதாக தெரியவில்லை . எல்லாம் முத்துக்களே ! எதை எடுக்க எதை விட?????
    2)கார்டூன்களுக்கு வாய்ப்புகள் - புதிய கார்ட்டூன் நாயகர்கள் வரவேற்கபடுகிறார்கள் . மிகுதி இடங்களை வேறு புதிய ரக கதைகளுக்கு ஒதுக்கவும் .
    3) மர்ம மனிதன் மார்டின் , சரி வர பயன்படுத்த படவில்லை என்பது எனது தாழ்மையான கருத்து ?????
    4) filler Pages இற்கு மதியில்லா மந்திரி ,லக்கி லுக் , தவிர astrix ,வேறு டீம் கண்டுபிடித்து அறிமுகம் செய்ய முடியுமா சார்?
    5) கார்ட்டூன், கௌபாய் டிடெக்டிவ் , அட்வெஞ்சர் , தவிர புதிய சூப்பர் ஹீரோஸ் , மற்றும் அனுமானுஷ்யம் , சரித்திர தேடல் ,கடத்கொள்ளையர் - (Periotes of Carrebiens போல), யுத்த கள கதைகள்

    தங்களுக்கு பிடித்த இரு பிரெஞ்சு கதைகளின் பெயர் என்ன சார்? முடிந்தால் நானும் அவற்றை வாசித்து பார்க்க ஆவலாக உள்ளேன் ??

    ReplyDelete
    Replies
    1. Thiruchelvam Prapananth : // filler Pages இற்கு மதியில்லா மந்திரி ,லக்கி லுக் , தவிர astrix ,வேறு டீம் கண்டுபிடித்து அறிமுகம் செய்ய முடியுமா சார்? //

      Asterix கதைகளை முழுமையாய் வெளியிட உரிமைகள் வாங்குவதே பயங்கர காஸ்ட்லி ஆனதொரு சங்கதி எனும் போது அவற்றை filler pages -க்குப் பயன்படுத்திடக் கோரினால் கட்டி வைத்து உதைக்கப் போகிறார்கள் சார் !

      Delete
    2. // 3) மர்ம மனிதன் மார்டின் , சரி வர பயன்படுத்த படவில்லை என்பது எனது தாழ்மையான கருத்து ???? // Me too! மர்ம மனிதன் மார்டின் என்னுடைய பிடித்தமான நாயகர்! .

      Delete
  6. முதல் 10குள் வந்து விட்டேன்

    ReplyDelete
  7. //2012 & (இது வரை )2013-ல் வெளியான கதைகளுள் - '2014-ல் வேண்டவே வேண்டாமே சாமி!' ரகத்தில் ஏதேனும் உள்ளனவா ? //

    சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல், ஸ்டீல் பாடி, புதிர் நேரம் வேண்டவே வேண்டாம்.

    // கார்டூன்களுக்கு இப்போதிருக்கும் வாய்ப்புகள் ? >>>>> போதும் / கூட்டலாம் / குறைத்திடலாம் ? //

    போதும்

    // 'சரி வர பயன்படுத்திடவில்லை ; இவருக்குக் கூடுதலாய் வாய்ப்பு தந்து பார்க்கலாம் !' - என்ற ரகத்தில் நமது ஹீரோக்கள் யாரேனும் ஆழ்நித்திரையில் உள்ளனரா ? நினைவூட்டுங்களேன் ப்ளீஸ் ?//

    Bob Morane (சாகச வீரர் ரோஜெர் ) - Great art work with very interesting story lines.

    // Filler pages பற்றிய உங்களின் சிந்தனைகள் என்ன ? வண்ணத்தில் 6-8 பக்கச் சிறுகதைகள் எனும் போது லக்கி லூக் ; மதியில்லா மந்திரி ; ஸ்டீல் பாடியார் நீங்கலாக - பெரிதாய் நமக்கு options கிடையாது என்பதை நினைவில் கொண்டு - இவைகள் நம் இதழ்களுக்குச் சேர்க்கும் value பற்றிய உங்களின் எண்ணங்கள் ப்ளீஸ் ? //

    Personally, i would prefer a B&W short story as a filler page option. But this option has been already shutdown, so how about newspaper cartoons? Currently we have haggar, we can add calvin and hobbes, blondie, small disney stories if possible

    // கார்ட்டூன் ; கௌபாய் ; டிடெக்டிவ் ; adventure ; கொஞ்சமாய் கிராபிக் நாவல் என்ற களங்களில் தற்போது சவாரி செய்து வருகிறோம் ! புதிதாய் நீங்கள் பார்த்திட விரும்பும் ஒரு கதை ரகம் எனில் - அது என்னவாக இருக்கும் ? Please make just 1 choice ! //

    Mystery


    Sorry my google input tools extension doesn't work suddenly, hence half tamil and half english

    ReplyDelete
    Replies
    1. V Karthikeyan : சாகச வீர ரோஜர் ! good suggestion....

      Delete
    2. Thanks Vijay Sir, hope to see சாகச வீர ரோஜர் next year :)

      Delete
    3. Super! I too vote for Rojer & Bill

      Delete
  8. Questions to Tex Creator
    1. How does the original authors thought about to write a story about american western in ITALY?
    2. Which story is your favorite? (so that we can publish that in tamil also :)
    3. Why tex stories always end in a good note? tex always wins
    4. Is there any tex story that explores tex in his childhood/teenager?
    5. Is there any plan to replace tex's son as main hero?

    ReplyDelete
    Replies
    1. குட் கொஸ்டின்ஸ். இதை அப்படியே நான் கேட்டதா எழுதிக்குங்க.. :-)))

      Delete
    2. //2. Which story is your favorite?// +1

      Delete
    3. @ V Karthikeyan

      கேள்வி எண் 1,2,4 ஆகியவை சூப்பர்! :)

      Delete
    4. @ V Karthikeyan
      அருமையான கேள்விகள் !

      Delete
    5. நன்றி நண்பர்களே

      Delete
  9. கேள்வியின் நாயகர் @கிறுக்கும் பூனைகுட்டி இன்னும் ஆசிரியரின் கேள்விகளுக்கு பதில் போடவில்லை?

    கேள்விகள் மட்டும் தான் கேக்க தெரியுமோ? :)

    இந்த பதிவை பற்றி தெரிவித்த @கிங் விஸ்வா மற்றும் @radja அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. V Karthikeyan : ஆஹா... சும்மாவே கேள்வி ஏவுகணைகளை வீசும் பூனையாரை உங்கள் பங்கிற்கு உசுப்பி வேறு விட்டால் பூமி தாங்குமா ?

      Delete
    2. எப்படிபட்ட ஏவுகணை வந்தாலும் தனி மனித இராணுவமாக (ஒன் மென் ஆர்மி ) சமாளிப்பவர் தான் எங்கள் விஜயன் சார்! அப்படி தானே,நண்பர்களே?

      Delete
    3. @ siva subramanian

      // எப்படிப்பட்ட ஏவுகனை வந்தாலும் தனி மனித இராணுவமாக சமாளிப்பவர்தான் எங்கள் விஜயன் சார்! அப்படித்தானே நண்பர்களே?//

      எடிட்டர் : "நானும் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வலிக்காத மாதிரியேயய... நடிக்கறது?" :)

      Delete
    4. கிறுக்கும் பூனைக்குட்டி Erode VIJAY : ஏவுகணைகளின் முனைகள் பெரும்பாலும் அன்பெனும் முலாம் பூசி வரும் போது நிச்சயம் அவை காயம் செய்வதில்லை ! தவிர நம் இலக்குகளை நாமே கடினமானவைகளாக நிர்ணயித்துக் கொண்டு சிறிது சிறிதாய் உந்தி முன்னே எட்டு வைக்க முனையும் இந்தச் சவாலிலும் ஒரு சுவாரஸ்யம் உள்ளது :-)

      Delete
  10. //2012 & (இது வரை )2013-ல் வெளியான கதைகளுள் - '2014-ல் வேண்டவே வேண்டாமே சாமி!' ரகத்தில் ஏதேனும் உள்ளனவா ? //
    இல்லை
    // 'சரி வர பயன்படுத்திடவில்லை ; இவருக்குக் கூடுதலாய் வாய்ப்பு தந்து பார்க்கலாம் !' - என்ற ரகத்தில் நமது ஹீரோக்கள் யாரேனும் ஆழ்நித்திரையில் உள்ளனரா ? நினைவூட்டுங்களேன் ப்ளீஸ் ?//
    அவற்றை சொன்னால் இப்போது வந்தவர்களுக்கு பாதிப்புண்டாகுமே! புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக இருந்தால் அனைவரும் விரும்பும் வேதாளர்,பேட்மேன், ரோஜர், இப்போது வந்த டயபாளிக் கூட

    // கார்ட்டூன் ; கௌபாய் ; டிடெக்டிவ் ; adventure ; கொஞ்சமாய் கிராபிக் நாவல் என்ற களங்களில் தற்போது சவாரி செய்து வருகிறோம் ! புதிதாய் நீங்கள் பார்த்திட விரும்பும் ஒரு கதை ரகம் எனில் - அது என்னவாக இருக்கும் ? Please make just 1 choice ! //
    கடற்கொள்ளையர், சாகச பயணங்கள்,விளையாட்டு கதைகள் ஒரு ஃபுட்பால் ப்ளேயரின் கதை வந்ததே மிநிலயனில் அதுபோல,மாயாலோக கதைகள் இப்போது நீங்கள் வெளியிட போவதை ஒரு கிராஃபிக் நாவல் காட்டினீர்களே அதனை உடனே வெளியிடவும் ,அந்த விமான கதையும்

    எல்லாவற்றிற்கும் மேலாக டாலரின் வீழ்ச்சியில் தங்கள் முடிவு, என்ன சொல்லவென்றே தெரியவில்லை ,என்நாள் முடிந்த நன்றி என்ற ஒற்றை சொல்லை உதிர்க்கிறேன்!
    டெக்ஸ் ஆசிரியருக்கு கார்சனின் கடந்த காலம், டெக்ஸ்சின் கடந்த காலம் (அவர் மனைவி ) போன்ற கதைகளை மேலும் உருவாக்குங்கள்.ஓவியங்கள் கார்சனின் கடந்த காலம் பாணியில் இருந்தால் நன்று!

    ReplyDelete
    Replies
    1. ஓவியங்கள் கார்சனின் கடந்த காலம் பாணியில் இருந்தால் நன்று! அதாவது முக அமைப்பு!

      Delete
  11. ரத்தபடலம் வரும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : October அதிக தொலைவில்லையே...!

      Delete
  12. டியர் விஜயன் சார்,

    விலையேற்றம் தவிர்க்க முடியாதது. 100 ரூபாய் 'ஸ்பெஷல்' இதழ்களின் விலையை ஏற்றினாலும் கூட நமது காமிக்ஸ் வாசகர்கள் கண்டிப்பாக தொடர்ந்து வாங்குவார்கள். ஆனால் புதிதாய் பார்ப்பவர்களுக்கு ₹100-ஐ விட அதிகமான விலை என்பது ஒரு psychological barrier ஆக அமைந்து விடக்கூடாது. ஒரு உதாரணத்திற்கு 2014ல் ஸ்பெஷல் இதழ்களின் விலை ₹110 என நிர்ணயிக்கப்பட்டால் அதற்கு அடுத்த வருடம் அது ₹120 அல்லது ₹125 ஆக உயரக் கூடிய வாய்ப்பு பலமாக இருக்கிறது.

    மாறாக, ₹100 ஸ்பெஷல் இதழ்களுக்கு நிரந்தர விடை கொடுத்து விட்டு, மாதம் தோறும் இரண்டு ₹50 இதழ்களாக வெளியிட்டால், விலையேற்றம் பல வருடங்களுக்கு கண்களை உறுத்தாது (₹100 ஐத் தாண்டும் வரையிலுமாவது!). புத்தக கண்காட்சிகளில், சிறுவர்கள் உட்பட பல புதிய வாசகர்கள் நமது இதழ்களை வாங்கவும் வசதியாக இருக்கும். கூரியர் செலவுகளை கட்டுக்குள் வைத்திட, மாதம் தோறும் இரண்டு இதழ்களையும் ஒரு சேர அனுப்பி வைத்தால் போதுமானது!

    நமது இதழ்களை Amazon.in-ல் விற்பனைக்கு கொண்டு வர முயற்சிப்பதாக கூறி இருந்தீர்கள்! அதே போல, Flipkart-இலும் விற்பனைக்கு கொண்டு வருவது சாத்தியமா?! ஒவ்வொரு மாதமும் புத்தகங்களை அவர்களுக்கு ஒட்டு மொத்தமாக அனுப்பி வைத்தால், ஆர்டரின் பேரில் அவர்களே பேக் செய்து, கூரியரும் செய்து விடுவார்கள் (என்றே நினைக்கிறேன்!). ஒரே ஆர்டரில் தேவையான புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம் - கூரியர் செலவும் குறையும். தற்போது Ebay Shop-ல் நீங்கள் அந்த வசதியை அளிக்கவில்லை! Ebay-ஐ விட Flipkart மூலம் புதிய வாசகர்களை எளிதில் அடையலாம் என்பது என் கருத்து!

    PS: "என்பது என் கருத்து": இதை டெம்ப்ளேட்டாக ஒவ்வொரு பதிவின் அடியிலும் போட வேண்டி இருக்கிறது!!! :D

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga : Welcome to the முன்ஜாகிரதை template club :-)

      முகவர்கள் மூலம் செய்திடும் விற்பனைக்கு உதவிடும் என்ற angle -ல் இந்த விலையேற்ற வில்லங்கம் திடுமெனத் தலை தூக்குவதன் முன்பாகாவே 2014-ல் மாதம் 2 x ரூ.50 இதழ்கள் என்பது முடிவாகி இருந்தது ! In fact 2014-ன் அட்டவணையை பூரணமாய் முடித்து - ஜூனியர் எடிட்டர் அதை அழகாய் ஒரு Excel file ஆகப் போட்டுத் தந்திருந்தார் ! 'இத்தனை முன் ஏற்பாடுகள் உடம்புக்கு ஆகாது தம்பி ! ' என டாலராரும், யூரோவாரும் டிரவுசரைக் கழற்றும் போது - மார்கெட்டில் புதிதாய் என்ன பட்டாப்பட்டி ட்ராயர் கிடைக்கிறது ? என்ற தேடலை இப்போது துவக்க வேண்டியுள்ளது !

      எது எப்படி இருப்பினும் - 2014 முதல் மாதம் 1 லயன் + 1 முத்து காமிக்ஸ் என இரு இதழ்கள் தனித் தனியே வந்திடும் !

      Flipkart இந்தாண்டின் துவக்கத்தில் நம்மோடு பேசியது நிஜம் ; ஆனால் ஏனோ தெரியவில்லை அதன் பின்னே அது materialize ஆகிடவில்லை !

      Delete
    2. மாதா மாதம் 2 இதழ்கள்ங்கிறது மகிழ்ச்சியான சேதி. ஒல்லியாவாம பாத்துகிட்டா சந்தோஷம்! அதோட தீபாவளி டெக்ஸ் குண்டுவைத் தொடர்ந்து பொங்கல்+சென்னை புக்ஃபேர் குண்டு ஸ்பெஷல் கண்டிப்பாக வேண்டும், சொல்லிவிட்டேன். நான் பாக்கத்தான் காமெடி மாதிரியிருப்பேன், உள்ளுக்குள்ள டெரர் ஸார் டெரர்! எப்படியும் புக்ஃபேருக்கு வருவீங்கள்ல.. எங்க ஏரியா.. ஆளு வைச்சு அடிப்போம். ஜனவரி குண்டு வரலைனா தெரியும் சேதி!! :-)))

      Delete
    3. // 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று அவர் சொல்லி விட்டுச் சென்றான பின்னே, அதைப் பின்பற்றுவதைத் தாண்டி நமக்கெலாம் என்ன வேலை ? //
      அதன்படியே நடப்பதென்றால் தினம் தினம் சிரிப்பு தான் ,சார்.

      //கடந்த 3 வாரங்களாகவே தறி கட்டுப் பாயும் நமது இந்திய ரூபாயின் மதிப்பு இந்த வாரம் பிறந்த நாள் முதலாய் தினமொரு புதுப் பாதாளத்தைத் தேடித் பயணம் செல்வதை நீங்களும் கவனித்திருப்பீர்கள் ! இன்றைய யூரோ மதிப்பு : ரூ.92-50 !! சென்ற மாதமோ - ரூ.72 ! உழைப்பைத் தாண்டி சகலமுமே அயல்நாட்டுச் சங்கதிகளைக் கொண்ட நமது இதழ்களுக்கு ரூபாய் வாங்கிடும் இந்த தர்ம அடி இரத்தக் கண்ணீரை வரவழைக்காத குறை தான் ! கதைகளுக்கான ராயல்டி ; அச்சுக் காகிதம் ; அச்சு இங்க் ; அச்சுப் பிளேட்கள் என முக்காலே மூன்று வீசம் - டாலர்களிலும், யூரோக்களிலும் பணம் அனுப்ப அவசியமாகிடும் செலவினங்கள் நமக்கு ! வரலாறு காணா இந்த 'தொபுகடீர்' நம் கட்டுப்பாட்டில் இல்லா சங்கதி என்பதால், ஜாலியாக "நகுவதைத்' தாண்டி வேறென்ன செய்வதென்று இப்போதைக்குத் தெரியவில்லை ! / /

      இந்த புது நெருக்கடியை நாம் கையாள போவது எப்படி?

      Delete
    4. கார்த்திக் --> ஒல்லி புக் கிளப் மெம்பர் (50 ரூபாய் புத்தகங்கள் வேண்டும்)

      ஆதி--> குண்டு புக் கிளப் மெம்பர் (குண்டு புக் வரலேண்ணா ஆள் வைத்து அடிப்பேன்)

      பூனைக்குட்டி--> ஒவ்வொரு மாதமும் குண்டா ஒன்னு, ஒல்லியா ஒன்னு - க்ளப் மெம்பர். ;)

      Delete
    5. நானும் குண்டு புக் கிளப் தான். 50 ரூபாய் புத்தகம் என்றால் stapler பண்ணித்தான் வரும் :( பார்க்கவே சகிக்காது :(

      Delete
    6. குண்டு புக் கிளபில் என்னயும் சேத்துகோங்கோ

      Delete
    7. @ friends : ரெண்டு ஒல்லி புக்கை ஒன்றாக இணைத்தால் ஒரு குண்டு புக்காகிடும் கிளப்பின் உறுப்பினர் நான் :-)

      Delete
  13. Present, Vijayan sir.

    செவ்வாய் பதிவிற்கு காத்திருகின்றேன்.
    டெக்ஸ் கதைகளில் "கபால முத்திரை + சதுப்பில் ஒரு சதிகார கும்பல்" போல குதிரைகள் இல்லாத கதைகள் வேறு ஏதும் உள்ளதா? விஜயன்,சார்.

    2014 விலை உயர்வு குறித்த விளக்கம் நியாயமானதே! தரமான காமிக்ஸ்களை தரும் உங்களுக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம்,சார்.

    @ திருச்செல்வம் பிரபானாந்த் //

    // 1)2012, 2013, வெளியான கதைகளுள் வேண்டவே வேண்டாம் ரக கதை எதுவும் இருப்பதாக தெரியவில்லை . எல்லாம் முத்துக்களே ! எதை எடுக்க எதை விட????? // நானும் இதை வழிமொழிகின்றேன்,

    ReplyDelete
    Replies
    1. Siva Subramanian //டெக்ஸ் கதைகளில் "கபால முத்திரை + சதுப்பில் ஒரு சதிகார கும்பல்" போல குதிரைகள் இல்லாத கதைகள் வேறு ஏதும் உள்ளதா? //

      பாவம் சார், அந்த நாலு கால் ஜீவன்களும் கதைகளில் ஒரு ஓரமாய் வந்து குப்பை கொட்டி விட்டுப் போகட்டுமே :-)

      Delete
  14. @ கார்த்திக் சோமலிங்கா // PS: "என்பது என் கருத்து": இதை டெம்ப்ளேட்டாக ஒவ்வொரு பதிவின் அடியிலும் போட வேண்டி இருக்கிறது!!! :// ஹா! ஹா!

    ReplyDelete
  15. நன்கு சிரிக்கலாம் ஸார், உங்களோடு சேர்ந்து சிரிக்க நாங்களும் இருக்கும்போது.. அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில்!

    நமது குட்டியூண்டு சர்குலேஷனுக்கு மத்தியிலும், டெக்ஸ் குழுமம் நம் மீது மரியாதை கொண்டுள்ளது, உண்மைக்குக் கிடைத்த பரிசு. மகிழ்வாக இருக்கிறது. ஆனால் என்ன கேள்வி கேட்பது என்றுதான் தெரியவில்லை. கேள்விக் கணைகளோடு நம் எக்ஸ்பர்ட்ஸ் வருவார்கள் என நம்புகிறேன். ‘ஒரு எட்டு சென்னை வந்துபோக முடியுமா?’ என்று கேளுங்கள். அலையலையாய்த் திரண்டு வந்து அன்பைத் தெரிவிக்கலாம் நாம்.

    1. வேண்டவே வேண்டாம்: சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்தான் வேறென்ன? ஆனால் புதிய சூப்பர் ஹீரோக்கள் யாரும் இருப்பின் அவர்கள் வருவதில் ஆட்சேபணையில்லை.

    2. கார்டூன்களுக்கான வாய்ப்பு: இடமிருந்தால் நிச்சயம் கூட்டலாம் ஸார். அல்டிமேட் நோக்கமான சிறார்களை (இன்க்ளூடிங் மீ) அதிகம் நெருங்கலாம்.

    3. --

    4. ஃபில்லர் பேஜஸ்: மதியில்லா மந்திரி கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. லக்கி லூக் சிறுகதைகள் இதுவரை நான் பார்த்ததில்லை, ஆகவே அதைக்காணவும் மிக ஆவல். ஸ்டீல்பாடியும் எனக்கு ஓகேதான். இதில்லாமல் புதிதை நீங்கள் கண்டுபிடித்தாலும் மகிழ்ச்சிதான். ஒன்பேஜ் பூனைகளும் ஒருவித தனி ரசனைதான். இதில் ஒபீனியனே அவசியமில்லைனு நினைக்கிறேன். நீங்கள் எதைத்தந்தாலும் மகிழ்ச்சிதான்.

    5. புதிய களங்கள்: ரொமான்ஸ்! :-))

    புதிய 2 பிரெஞ்சு ஆக்கங்கள். ஒண்ணு, புக்கு வரம்போது பில்டப் பண்ணுங்கள்.. இல்லைனா சும்மாயிருங்க. எதையாவது பில்டப் பண்ணி ஆவலைத்தூண்டிவிட்டு ‘அப்பால முடிஞ்சா பாக்கலாம்’கிறதே உங்க வேலையாப் போச்சு.. அழுதுருவோம் சொல்லிட்டேன்!!

    ReplyDelete
    Replies
    1. // கார்டூன்களுக்கான வாய்ப்பு: இடமிருந்தால் நிச்சயம் கூட்டலாம் ஸார். அல்டிமேட் நோக்கமான சிறார்களை (இன்க்ளூடிங் மீ) அதிகம் நெருங்கலாம்.// me too..

      Delete
    2. // 5. புதிய களங்கள்: ரொமான்ஸ்! :-)) //

      இதை எதிர்ப்பார்க்கலை :)

      Delete
    3. ஆதி தாமிரா : //புதிய சூப்பர் ஹீரோக்கள் யாரும் இருப்பின் அவர்கள் வருவதில் ஆட்சேபணையில்லை.//

      'நீண்டு செல்லும் டாப் 25 காமிக்ஸ் தொடர் நாயகர்கள்' எனவொரு பட்டியலும் அது பற்றிய குறிப்பும் சமீபமாய் படித்தேன் ! முதலாம் இடத்தில் இருப்பவர் Batman ; பாக்கியுள்ள பெரும்பான்மையான இடங்களில் கலர் கலரான jockey ஜட்டிகளும் ; நீள நீளமாய் டைட்டான முழு நிஜார்களும் போட்ட 'அந்த man ; இந்த man ' என சூப்பர் ஹீரோக்களின் லிஸ்ட் ! சத்தியமாய் நமக்கு அவர்களில் ஒரு குட்டியூண்டு ஆசாமி கூட ஒத்து வர மாட்டார் !

      ஐரோப்பிய ரசனைகளும் - அமெரிக்க ரசனைகளும் தென் துருவம் - வட துருவம் போலானவை ! முன்னதில் ஊறி விட்ட நமக்கு பின்னது செட் ஆவது மிகச் சிரமமே !

      Delete
    4. ஆதி தாமிரா : புதிய களங்கள்: ரொமான்ஸ்! :-))

      அட...! இது கூட பரீட்சார்த்தமானதொரு genre ஆகத் தேர்வாகும் வாய்ப்பு கொண்டது தானோ ?

      Delete
  16. ஃபார் கமெண்ட்ஸ் பாலோ அப்!

    ReplyDelete
  17. எது எப்படி இருப்பினும் - 2014 முதல் மாதம் 1 லயன் + 1 முத்து காமிக்ஸ் என இரு இதழ்கள் தனித் தனியே வந்திடும் ! அப்போ புக்பேர்க்கு ஸ்பெஷல் வெளியிடு எதுவும் இல்லையா சார்???,?

    ReplyDelete
    Replies
    1. ranjith ranjith : இப்போதெல்லாம் எணிப்படிகளின் காதலன் நான் ! ஒன்றொன்றாய் ; பத்திரமாய் எட்டு வைப்போமே...!

      இத்தனை மட்டும் சொல்லுவேன் - 2014 உங்களில் எவரையும் ஏமாற்றம் கொள்ளச் செய்யாது !

      Delete
    2. ஆஆஆ ஒன்றுமில்லை என் கையை கிள்ளி பார்த்தேன் இது கனவா.நிஐமா.என்று நம் விஐயன் சார் நாம் அனைவரருக்கும் பதிலளித்துள்ளார்

      Delete
  18. விலையேற்றத்தை ஏற்கிறோம், அதேசமயம் nominal ஆக உயர்த்த விரும்புகிறோம்.October விருந்திற்கு காத்திருக்கிறோம்!;-)

    ReplyDelete
  19. @விஜயன் சார்:
    //Karthik Somalinga : Welcome to the முன்ஜாகிரதை template club :-)//
    ஹா ஹா.... அதான்... அதேதான்! ;)

    //எது எப்படி இருப்பினும் - 2014 முதல் மாதம் 1 லயன் + 1 முத்து காமிக்ஸ் என இரு இதழ்கள் தனித் தனியே வந்திடும் !//
    சூப்பர்!

    //குழுமத்தின் தலைவரான திரு.டேவிட் பொனெலியெ உங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயாராக / ஆர்வமாக உள்ளார் !//
    இதானா சார், உங்க சஸ்ஸ்...பென்...ஸ்ஸ்! :( இருந்தாலும் அவர் ஆனானப்பட்ட டெக்ஸூக்கே பாஸ் என்பதால் மனதை தேற்றிக் கொண்டு ஒரே ஒரு கேள்வி! :)

    Dear Bonelli,
    Why are you not promoting Tex Willer in English speaking countries including the United States? Is it possible to have an Indian edition for Tex in English? India is very fond of Wild West Adventures, I am sure Tex will get at least a few million more fans from India if you do this! (என்பது என் கருத்து!) :P


    ***
    @அஞ்சு கேள்V Karthikeyan:
    Wow, superb questions buddy! :)

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga : இந்தக் கேள்விக்கு நானே பதில் சொல்லிடுவேன் கார்த்திக் ! அமெரிக்க மார்கெட்டை ஊடுருவும் ஆசையோடு - அமெரிக்க ஓவியர் Joe Kubert -ஐ சித்திரங்கள் போடச் செய்து ஒரு pilot edition தயாரித்திருந்தார்கள் ! பெரிய சைஸ் ; hardcover ; அழகான வண்ணங்கள் - என கலக்கலாய்த் தான் இருந்தது ; அதன் மாதிரியை ஒரு இத்தாலியப் புத்தக விழாவின் போது நானும் பார்க்க நேர்ந்தது ! சோகக் கதை என்னவெனில் - அமெரிக்கா முழுவதுமாய் அதற்குக் கிட்டிய ஆர்டர் 1150 பிரதிகள் மாத்திரமே ! வெறுத்துப் பொய் அந்த ப்ரொஜெக்டை அப்படியே கடாசி விட்டார்கள் !

      பின்னாளில் "சைத்தான் வேட்டை" என நாம் வெளியிட்ட கதை தான் அது !

      இந்தியாவைப் பொருத்த வரை - நமது ரசனைகளுக்கும், வட இந்திய வாசகர்களின் அபிமானங்களுக்கும் நிறையவே வேறுபாடு உள்ளது ! நாம் ரசிப்பது போல் அவர்களும் கௌபாய் கதைகளை ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை அங்குள்ள காமிக்ஸ் பதிப்பகங்களுக்குக் கிடையாது !

      Delete
  20. 2014 புக்பேர்ரை எதிர்கொள்ள நம்மிடம் பெரிய புத்தகம் தற்போது கைவசம் எதுவும் இல்லை?

    ReplyDelete
    Replies
    1. இது தான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி! பெரிய புத்தகங்கள் விற்றுத் தீர்வது இப்படியான புத்தகத் திருவிழாக்களில் தானே!

      Delete
    2. @ friends : இப்போதெல்லாம் எணிப்படிகளின் காதலன் நான் ! ஒன்றொன்றாய் ; பத்திரமாய் எட்டு வைப்போமே...!

      இத்தனை மட்டும் சொல்லுவேன் - 2014 உங்களில் எவரையும் ஏமாற்றம் கொள்ளச் செய்யாது !

      Delete
  21. @ Editor:
    2012 & (இது வரை )2013-ல் வெளியான கதைகளுள் - '2014-ல் வேண்டவே வேண்டாமே சாமி!' ரகத்தில் ஏதேனும் உள்ளனவா ?

    1. Miaaaviiii
    2. Miaaaviiii
    3. Miaaaviiii
    4. steel body
    5. steel body

    கார்டூன்களுக்கு இப்போதிருக்கும் வாய்ப்புகள் ? >>>>> போதும் / கூட்டலாம் / குறைத்திடலாம் ?

    definetly கூட்டலாம் கூட்டலாம் கூட்டலாம்

    'சரி வர பயன்படுத்திடவில்லை ; இவருக்குக் கூடுதலாய் வாய்ப்பு தந்து பார்க்கலாம் !' - என்ற ரகத்தில் நமது ஹீரோக்கள் யாரேனும் ஆழ்நித்திரையில் உள்ளனரா ? நினைவூட்டுங்களேன் ப்ளீஸ் ? (அதற்காக 'கபாலர் கழகம்' ரேஞ்சிலான புராதனங்களைத் தேடித் பிடித்திட வேண்டாமே ? ) இந்தக் கேள்வியை நான் முன்னிறுத்துவதன் காரணம் COMANCHE ! ஒற்றைக் கதையோடு கிடப்பிற்குச் சென்றவரை மீட்ட போது தான் ஒரு அழகான தொடரை மறந்த முட்டாள்தனம் எனக்கு உரைத்தது ! அந்தத் தவறு தொடர இடம் தர வேண்டாமே எனத் தோன்றியது !

    Bruno Brazil in color(possible?)


    Filler pages பற்றிய உங்களின் சிந்தனைகள் என்ன ? வண்ணத்தில் 6-8 பக்கச் சிறுகதைகள் எனும் போது லக்கி லூக் ; மதியில்லா மந்திரி ; ஸ்டீல் பாடியார் நீங்கலாக - பெரிதாய் நமக்கு options கிடையாது என்பதை நினைவில் கொண்டு - இவைகள் நம் இதழ்களுக்குச் சேர்க்கும் value பற்றிய உங்களின் எண்ணங்கள் ப்ளீஸ் ?

    - Filler pages mandatory (except steel body)- main kadai flop aanalum sila samayam filler pages thooki kudukkum

    கார்ட்டூன் ; கௌபாய் ; டிடெக்டிவ் ; adventure ; கொஞ்சமாய் கிராபிக் நாவல் என்ற களங்களில் தற்போது சவாரி செய்து வருகிறோம் ! புதிதாய் நீங்கள் பார்த்திட விரும்பும் ஒரு கதை ரகம் எனில் - அது என்னவாக இருக்கும் ? Please make just 1 choice !

    - Fantasy comics

    ReplyDelete
    Replies
    1. கால்வின் : //Bruno Brazil in color(possible?) //

      2014-ன் அட்டவணையில் இவரது சாகசம் வண்ணத்தில் வருகிறது !

      Delete
    2. Dear Editor

      If we remove the filler pages, will it be possible to avoid the price raise ?. I am o.k for the price hike but now only we have got new readers and if we increase then they may not buy.

      Delete
  22. @விஜயன் சார்:
    //அச்சமயங்களில் நண்பர்கள் காமிக்ஸ் பற்றி எழுதிடக் கூடிய சுவாரஸ்யம் தரும் பகுதிகளை இங்கே கொணர்ந்தால் என்னவென்று தோன்றியது !//
    வீண் குழப்பங்களை விளைவிக்கும்! லயன்-முத்து அதிகாரபூர்வ தளமான இதில் மற்றவர்களை எழுத வைப்பது சற்று நெருடலான விஷயமாகத் தெரிகிறது! Bonelli அவர்கள் வேண்டுமானால் ஒரு பதிவு போடட்டும்! :)

    //வேண்டவே வேண்டாமே சாமி//
    மொக்கை ஃபில்லர் கதைகள்!

    //கார்டூன்களுக்கு இப்போதிருக்கும் வாய்ப்புகள்//
    சற்றே கூட்டலாம். வெகு சமீபத்தில் Smurfs காமிக்ஸ் படித்தேன். (குழந்தை மனம் கொண்ட) நமது வாசகர்களுக்கு பிடிக்கும் என்றே தோன்றுகிறது.

    * http://www.dupuis.com/catalogue/UK/s/117/les_schtroumpfs.html#.Uh7LKD_8CEE

    * http://www.papercutz.com/comics/the-smurfs/

    //சரி வர பயன்படுத்திடவில்லை//
    பேட்மேன் - ராயல்டி அதிகம்தான், ஆனால் ஒரு கதையையாவது 2014ல் வெளியிடலாமே?

    //Filler pages பற்றிய உங்களின் சிந்தனைகள் என்ன ?//
    விலையை கட்டுக்குள் வைத்திட உதவிடும் என்றால், ஃபில்லர்களை கூடிய அளவு தவிர்த்தல் நலம் எ.எ.க! வேண்டுமானால் (ஒரே ஒரு) ஒரு பக்க கார்ட்டூன்கள் மட்டும் இருந்துவிட்டுப் போகட்டும்!

    //புதிதாய் நீங்கள் பார்த்திட விரும்பும் ஒரு கதை ரகம்//
    Sci-Fi!

    //இன்று முதல் சென்னையின் 4 LANDMARK ஸ்டோர்களிலும்//
    நெக்ஸ்ட் பெங்களூர்?

    கடந்த பதிவிலிருந்து...
    ***
    @ஆதி தாமிரா:
    //ரியாலிஸ்டிக், கார்டூன், கோட்டோவியம் என்ன எந்த பாணியாக இருந்தாலும் வசீகரம் பொதுவானது. அதன் தரத்தை முடிவு செய்வது ஓவியரின் திறன் மட்டுமே!//
    ஏற்றுக் கொள்கிறேன்! எப்படி, கார்டோ மால்டிஸை இந்த பதிவிலும் கொண்டு வந்தோம்ல! ;)

    ***
    @கால்வின் சத்யா:
    //i think the story name is super car - nan padichadilayae for whatever reason en manadil aani aditha madri padintha oru dialogue//
    இங்கேயும் இதே கதைதான் சத்யா!

    //ungalidam inda puthagam, MR Z edavudu irukkirada//
    இருந்துச்ச்சூ, ஆனா இப்ப இல்ல! :) :)

    //இன்று முதல் மேன்மை பொருந்திய கதறி ஆழும் குழந்தையார். சிறிது வளர்ந்து கால்வின் என்ற மாறுவேஷத்தில் உலா வருவான்//
    "கால்வின் சத்யா" :)

    ReplyDelete
    Replies
    1. @விஜயன் சார்:

      //அச்சமயங்களில் நண்பர்கள் காமிக்ஸ் பற்றி எழுதிடக் கூடிய சுவாரஸ்யம் தரும் பகுதிகளை இங்கே கொணர்ந்தால் என்னவென்று தோன்றியது !//
      வீண் குழப்பங்களை விளைவிக்கும்! லயன்-முத்து அதிகாரபூர்வ தளமான இதில் மற்றவர்களை எழுத வைப்பது சற்று நெருடலான விஷயமாகத் தெரிகிறது! Bonelli அவர்கள் வேண்டுமானால் ஒரு பதிவு போடட்டும்! :) //

      //சரி வர பயன்படுத்திடவில்லை//
      பேட்மேன் - ராயல்டி அதிகம்தான், ஆனால் ஒரு கதையையாவது 2014ல் வெளியிடலாமே?//

      //புதிதாய் நீங்கள் பார்த்திட விரும்பும் ஒரு கதை ரகம்//
      Sci-Fi!//
      இவை அனைத்தையும் நானும் ஆமோதிகின்றேன்.நண்பரே!

      Delete
    2. Karthik Somalinga : Smurfs படிக்க நம் நண்பர்கள் ரொம்பவே பால்யம் நோக்கிய பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும் ! 2 புது கார்டூன் அறிமுகங்கள் காத்துள்ளன (1 இந்தாண்டிலும் ; இன்னொன்று 2014-ன் முன் பகுதிகளிலும்) ! இவை சிக் பில் & லக்கி லூக்கோடு சேர்ந்து கொஞ்சம் காமெடி பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள் !

      ////இன்று முதல் சென்னையின் 4 LANDMARK ஸ்டோர்களிலும்//
      நெக்ஸ்ட் பெங்களூர்?//

      Fingers crossed !

      Delete
  23. தவறவிடப்பட்டவர்களில்: சாகசவீரர் ரோஜர் மற்றும் முதலைப் பட்டாளத்தினரைக் கட்டாயம் கொண்டுவாருங்கள் சார். அவற்றிலுள்ள அபாரமான கதைப் பின்னலும், அசத்தும் ஓவியங்களும், சஸ்பென்ஸ்சும் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் - புதிய வாசகர்கள் உட்பட.

    விலையேற்றம் என்பது சில சந்தர்ப்பங்களில் தவிர்க்கவியலாததுதான்! ஆனால், விலை உயரும்போது அதற்கு ஏற்ப கதைத் தேர்வுகளும் அச்சுத்தரமும் இருந்திடவேண்டுமென்ற எதிர்பார்ப்பும் வாசகர்களிடம் ஏறிவிடும் என்பதையும் கவனியுங்கள். கறுப்பு வெள்ளையில் புதிய கதைகளை களத்தில் இறக்குவது இன்னும் வாசகர் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்பது எனது எண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. Podiyan : சாகச வீரர் ரோஜருக்குள்ள fanclub ஆச்சர்யம் தருகிறது ! இத்தனை காலம் பெரிதாய் அவருக்கொரு சிலாகிப்பு கிட்டாத காரணத்தால் நம் பார்வை வரம்புக்கு அப்பால் சென்று விட்டார் ! பிடித்து வருவோம் மனுஷனை !

      தரத்தின் மீதான எதிர்பார்ப்புகள் விலையேற்றம் இல்லாத போதிலும் எங்கும் விலகிப் போகப் போவதில்லையே ! அது 24/7 நம்மோடு ஜீவிக்கும் ஒரு சங்கதியன்றோ ?

      Delete
  24. hi Edi,


    ஒரு சஜசென் - முன்னமே ராயல்டி கட்டி பரணில் இருக்கும் கதைகளை யூஸ் செய்யலாமே

    நேற்று முன்தினம் நான் ஒரு ஸ்பைடர் புக்(கிங் ஆப் க்ரூக்ஸ்) ஆர்டர் செய்ய எத்தணித்தேன் 120+பக்கங்கள் விலை Rs.1100+

    பல இது போன்ற புத்தகங்கள் அதிக விலையினால் வாங்க மனம் வருவதில்லை, இதையே நம்ம தமிழ்ல 50 ஆர் 100 ரூபாய்க்கு நீங்கள் தருகிறீர்கள். அதனால் என்னை பொறுத்த வரை இத்தனை ஆண்டுகளாய் நீங்கள் மிக நியாமான விலையை தான் நிர்ணயிக்க்ரீர்கள், அதனால் நீங்கள் விலையை ஏற்ற முடிவு செய்தாலும் என் சப்போர்ட் கட்டாயமாய் உண்டு .

    என்னை போன்றே எல்லோரும் என்பது என் எண்ணம்.
    அவசியமான விலை ஏற்றத்திற்கு எதிரனவகள் அல்ல நம் வாசகர்கள் என்பது திண்ணம்.

    ReplyDelete
  25. அன்பு ஆசிரியரே...ரூபாயின் வீழ்ச்சியால் தாங்களுக்கு எற்பட்டிருக்கும் சிரமம் புரிகிறது..ஒன்றை மட்டும் உறுதியாக கூறுகிறேன்...கடைசி மூச்சு வரை உஙளுடன் இருப்பேன்..INSHA ALLAH..

    ReplyDelete
    Replies
    1. AHMEDBASHA TK : உங்களின் அன்பும், அபிமானமும் என்றும் நம்மைக் கடனாளியாக்கும் விஷயங்கள் ! Thanks ever so much !

      Delete
  26. @எடிட்டர்

    ஒரு அட்வைஸ்/அன்பான ஆர்டர்
    1. விலை ஏற்றத்தை சமாளிக்க தயவு செய்து சிப்ஸ் பிஸ்கட் கம்பெனி மன்றி quantity குறைக்காதீர்கள் - அதாவுது எக்காரணம் கொண்டும் பக்கத்தை குறைக்காதீர்கள்

    ஒரு ஷொட்டு
    2. தலையில் இல்லாத தொப்பியை தூக்குகிறேன் பிரிண்ட் செய்த போது போட்ட விலைக்கே இன்றும் ச்டோக்கில் இருக்கும் புத்தகத்தை விற்பதற்கு! அதாங்க "Hats off to you"

    ReplyDelete
  27. 2014l plan seiyum pothu mattrangal ethum ellatha vagaiyil thittamidungal Sir! 2013 pola muthalil arivithuvittu piragu matri veliyitathu pola vendam, kuripaga classic comics pola!!! 2014l planner ullathai maatrangal ethum endri veli vara virumbukirom! Aagave nadraga plan seithu urithiyaga veliyiduvathai mattume ariviyungal. Ithanal engal ematram thavirkapadalam!

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : ALL NEW SPECIAL -ல் ஜேசன் ப்ரைஸ் கதை நீங்கலாக 2013-ல் நிகழ்ந்த மாற்றங்கள் வேறு எவையோ ?? அதன் காரணத்தையும் ஏற்கனவே சொல்லி விட்டேனே....! முறை தவறிய உறவை மையமாகக் கொண்ட அந்த பிரெஞ்சுக் கதையை மொழியாக்கம் செய்தான பின்னே தான் படிக்க இயன்றது ! மாற்றம் அவசியமானது அதன் காரணமாகவே !

      Delete
  28. டாலர் ஏற்றத்திற்கான என் ரியாக்ஷன் என் profile போட்டோ மூலம் முன்னமே காட்டி விட்டோம் - இவண் - தீர்கதரிசி

    ReplyDelete
  29. 1) டெக்ஸ் வில்லர் பெயரை தேர்ந்தெடுத்தது எப்படி?
    2) ஒரு வெஸ்டேர்ன் சூப்பர் ஹீரோ கனவின் பின்னணி என்ன? ஹோலிவுட் வெஸ்டேர்ன் திரைப்படங்களின் தாக்கம் ஏதேனும் உண்டா?
    3) 40 வயது முதிர்ந்த ஹீரோ மற்றும் ஒரு 50 வயது முதிர்ந்த துணை ஹீரோ மற்றும் அவரது மகன் மற்றும் அவரின் மனைவியின் தம்பி என்று 20-30-40-50 combination எவ்வாறு அமைந்தது?
    4) அப்படி அமைந்த கூட்டணி எவ்வாறு வெற்றிபெறும் என்று ஏதேனும் உறுத்தல் உங்களுக்கு இருந்ததுண்டா?
    5) இல் சிகாரியோ (நமது டிராகன் நகரம்) உருவான கதை?

    எதோ என்னால்... என் மனதில் உடனடியாய் தோன்றிய கேள்விகள் இவை..
    ஸ்ரீராம்...

    ReplyDelete
    Replies
    1. // 1) டெக்ஸ் வில்லர் பெயரை தேர்ந்தெடுத்தது எப்படி? //

      நல்ல கேள்வி

      Delete
  30. விலையேற்றம் தவிர்க்க முடியாது தான். நாங்க சமாளிச்சுடுவோம். சுட்டிகள்?

    ReplyDelete
  31. டியர் சார் ! தவிர்க்கமுடியாத இந்த விலை உயர்வை தோள்கொடுத்து பகிர்ந்துகொள்ள நாங்களும் இருக்கோம். அனைவரும் சேர்ந்தே அடிப்போமே அந்த குட்டிக்கர்ணத்தை!

    //சரியான பதில் தர இயலாது போனதன் காரணத்தை வரும் செவ்வாயன்று வரவிருக்கும் புதிய பதிவைப் படிக்கும் போது நீங்களே புரிந்து கொள்வீர்கள் !//

    well i 'm smelling some interesting stuff here ! : )

    //டெக்சின் கர்த்தாகளோடு ஒரு interview ஆகச் செய்ய முடிந்தால் சூப்பராக இருக்குமே என்ற எண்ணமும் உதித்தது//

    அட்ரா சக்கை ! அட்டகாசமான ஏற்பாடு!

    //குழுமத்தின் தலைவரான திரு.டேவிட் பொனெலியெ உங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயாராக / ஆர்வமாக உள்ளார் ! என பத்தாவது நிமிடத்தில் பதில் மின்னஞ்சல் வந்து சேர்ந்தது - இன்ப அதிர்ச்சியாய் !//

    அப்படி போட்டு தாக்குங்க ! கொஞ்சம் நாளுக்கு முன்னாடி என்னோட ஒரு பின்னூட்டத்தில இந்த பத்தி போட்டிருந்தானே!

    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@

    விஸ்கி-சுஸ்கி9 August 2013 14:31:00 GMT+5:30

    //அடுத்த முறை ஐரோப்பா செல்லும் சமயம் இங்கு இக்கதைகள் பெற்றுள்ள வரவேற்பை அதன் ஆசிரியரை / ஓவியரை சந்தித்து சொல்லிட ஆசை !//

    அப்படி படைப்பாளர்கள சந்திக்க முடிஞ்சா, நம்ம புக்க அவங்க கைல கொடுத்து நீங்க கூட நின்னு ஒரு போட்டோ புடிச்சுட்டு வாங்க சார்.

    அதை அப்படியே ப்ளோக்ல போட்ட எங்களுக்கு பேரானந்தம்.

    இதுக்கு முன்னாடி நீங்க நம்ம ஹீரோக்கள படைச்ச படைப்பாளர்கள( ஓவியர் / கதாசிரியர் ) சந்திச்ச்துண்டா??? உங்க அனுபவத்தையும் புகைப்படங்களையும் எங்க கூட ஷேர் பண்ண கூடாதா ???

    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

    நன்றி சார் ! உங்க இந்த முயற்சி, நம் நண்பர்கள, காமிக்ஸ் உலக ஆன்மாவுக்கு இன்னமும் ஒரு அடி நெருக்கமா அழைத்து செல்லுது!

    //நண்பர்கள் காமிக்ஸ் பற்றி எழுதிடக் கூடிய சுவாரஸ்யம் தரும் பகுதிகளை இங்கே கொணர்ந்தால் என்னவென்று தோன்றியது ! //

    எழுதுவதோடு நின்று விடாமல் தமது கிராபிக் திறமைகள் மொழிபெயர்ப்பு ஆற்றலையும் நண்பர்கள் இங்கே அரங்கேற்றலாம்!
    இங்கே ஒரு சின்ன யோசனை! www.digitalcomicmuseum.com என்ற வலைத்தளத்தில் copy write free comics புத்தகங்கள் ஆயிரக்கணக்காக உள்ளன. நண்பர்கள் தமக்கு பிடித்த ஏதாவது ஒரு short strip பை எடுத்து மொழிபெயர்ப்பு செய்து ஆசிரியருக்கு அனுப்பினால் அதை ஆசிரியர் தமது சைடில் இருந்ந்து பதிவேற்றம் செய்தால் நமது பொழுதுகளின் உற்சாகம் கூடுமல்லவா ??




    ReplyDelete
    Replies
    1. விஸ்கி-சுஸ்கி //இங்கே ஒரு சின்ன யோசனை! www.digitalcomicmuseum.com என்ற வலைத்தளத்தில் copy write free comics புத்தகங்கள் ஆயிரக்கணக்காக உள்ளன. நண்பர்கள் தமக்கு பிடித்த ஏதாவது ஒரு short strip பை எடுத்து மொழிபெயர்ப்பு செய்து ஆசிரியருக்கு அனுப்பினால் அதை ஆசிரியர் தமது சைடில் இருந்ந்து பதிவேற்றம் செய்தால் நமது பொழுதுகளின் உற்சாகம் கூடுமல்லவா ?? //

      அட்டகாசமானதொரு சிந்தனை சார் ! Awesome suggestion...இதை செயலாக்கிப் பார்ப்போமா guys ?

      Delete
  32. sir,
    for filler pages why we try to get Tom and jerry and Donald Duck cartoons...

    ReplyDelete
    Replies
    1. kanagasundaram : Donald Duck in 1 page gags is very ordinary...

      Delete
  33. 2012 & (இது வரை )2013-ல் வெளியான கதைகளுள் - '2014-ல் வேண்டவே வேண்டாமே சாமி!' ரகத்தில் ஏதேனும் உள்ளனவா ?



    கார்டூன்களுக்கு இப்போதிருக்கும் வாய்ப்புகள் ? >>>>> போதும் / கூட்டலாம் / குறைத்திடலாம் ?

    இப்போதைக்குப் போதும்..! (பின்னாடிப் பாத்துக்கலாம்..!)

    'சரி வர பயன்படுத்திடவில்லை ; இவருக்குக் கூடுதலாய் வாய்ப்பு தந்து பார்க்கலாம் !' - என்ற ரகத்தில் நமது ஹீரோக்கள் யாரேனும் ஆழ்நித்திரையில் உள்ளனரா ? நினைவூட்டுங்களேன் ப்ளீஸ் ? (அதற்காக 'கபாலர் கழகம்' ரேஞ்சிலான புராதனங்களைத் தேடித் பிடித்திட வேண்டாமே ? ) இந்தக் கேள்வியை நான் முன்னிறுத்துவதன் காரணம் COMANCHE ! ஒற்றைக் கதையோடு கிடப்பிற்குச் சென்றவரை மீட்ட போது தான் ஒரு அழகான தொடரை மறந்த முட்டாள்தனம் எனக்கு உரைத்தது ! அந்தத் தவறு தொடர இடம் தர வேண்டாமே எனத் தோன்றியது !

    முதலைப் பட்டாளம் புரூனோ பிரேசில், சி.ஐ.டி. ஜான்மாஸ்டர் (இவர் இன்னும் இருக்கிறாரா..? கிட்டத்தட்ட ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் இருக்கும் - டென்னிஸ் வீரர் கம் துப்பறிவாளர்..!)

    Filler pages பற்றிய உங்களின் சிந்தனைகள் என்ன ? வண்ணத்தில் 6-8 பக்கச் சிறுகதைகள் எனும் போது லக்கி லூக் ; மதியில்லா மந்திரி ; ஸ்டீல் பாடியார் நீங்கலாக - பெரிதாய் நமக்கு options கிடையாது என்பதை நினைவில் கொண்டு - இவைகள் நம் இதழ்களுக்குச் சேர்க்கும் value பற்றிய உங்களின் எண்ணங்கள் ப்ளீஸ் ?

    Filler pages நம் சுட்டிகளுக்கானவை என்று முன்னர் சொன்ன ஞாபகம். பேசாமல் சுட்டிகளுக்கென்று காமிக் கார்டூன்களை (லக்கி லுக், சிக் பில்) தனி இதழ்களாகக் கொடுத்திடலாம்... (பழைய உள்ளட்டை ஃபில்லர்கள் மாதிரி இப்ப இல்லை என்றே தோண்றுகிறது..! - மதியில்லா மந்திரி விதிவிலக்கு)

    கார்ட்டூன் ; கௌபாய் ; டிடெக்டிவ் ; adventure ; கொஞ்சமாய் கிராபிக் நாவல் என்ற களங்களில் தற்போது சவாரி செய்து வருகிறோம் ! புதிதாய் நீங்கள் பார்த்திட விரும்பும் ஒரு கதை ரகம் எனில் - அது என்னவாக இருக்கும் ? Please make just 1 choice !

    நீங்கள் முன்பொருமுறை சொன்ன "What If..." ரக வரிசைகள் எப்படி இருக்கும்? (நிலவில் முதலில் கால் வைத்தது ரஷ்யர்களாக இருந்தால் எப்படி இருக்கும்..? - இது உங்கள் உதாரணம் தான்..!)

    ReplyDelete
    Replies
    1. Arun Kamal : //சி.ஐ.டி. ஜான்மாஸ்டர் (இவர் இன்னும் இருக்கிறாரா..? கிட்டத்தட்ட ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் இருக்கும் - டென்னிஸ் வீரர் கம் துப்பறிவாளர்..!)//

      Nopes, இரண்டே கதைகளோடு மங்களம் பாடி விட்டார்கள் இவருக்கு !

      Delete
  34. 1. வேண்டவே வேண்டாமே சாமி!' ரகத்தில் ஏதேனும் உள்ளனவா?
    Personal ஆக இது எனக்குப்பிடிக்கவில்லை என்று சொல்லும்படி எதுவுமில்லை. ஆனால் நமது புத்தகங்கள் வீட்டின் ஹாலிலும், சோஃபாவிலும் ஒரு பொதுப்பொருளாக ஊடுருவியிருப்பதனால் குறிப்பாக சில கதைகளுக்கு மட்டும் எனது NO: வன்மம், Dark Humor நிறைந்த Green Manor வகைக்கதைகளை தவிற்பது நலம் (Green Manor ஒரு சிறந்த படைப்பு என்பது வேறு விஷயம்). நிற்க, பிரளயத்தின் பிள்ளைகள் மாதிரி ரியலிச கதைகளிலும், Action, Cowboy கதைகளின் வன்முறையும் எந்த விதத்திலும் பிரச்சனை இல்லாதவை. Dark Humorன் பிரச்சனை ஆழமான Serious Philosophy என்கிற சாயத்துடன் இளவயதினரை (age group of 13 to 18) குழப்புவதுதான் "என்பது என் கருத்து!" :D

    2. கார்டூன்களுக்கு இப்போதிருக்கும் வாய்ப்புகள்?
    தயவு செய்து கூட்டலாம், பெருக்கலாம்!

    3. சரி வர பயன்படுத்திடவில்லை; இவருக்குக் கூடுதலாய் வாய்ப்பு தந்து பார்க்கலாம்! - என்ற ரகத்தில் நமது ஹீரோக்கள்?
    Walt Disneyன் Donald Duck, Uncle Scrooge Series களை மீட்டெடுக்க முடியுமா? மினிலயனில் வெளிவந்த "நடுக்கடலில் எலிகள்" போன்ற தரமான pieceகள் தற்போது கிடைக்க வாய்ப்புள்ளதா?

    4. Filler Pages பற்றிய உங்களின் சிந்தனைகள் என்ன?
    Filler pages ன் பங்கு மிகவும் ஆழமானது. தரமான குட்டிக்கதைகள் தரும் ரிலாக்ஸ்னஸ் ஒரு Tonic மாதிரி. தற்போதைய குறை என்னவென்றால் Steel Body ரொம்பவே சிக்கலான கதைக்களமாக இருப்பதால் ஒரு சிறுகதை தரும் உற்சாகத்தைத்தர மறுக்கிறது. லக்கி லூக் மற்றும் மதியில்லா மந்திரி பரவாயில்லை. என்னைப் பொறுத்தவரையில் Filler Page கதைகள் 3 பக்கங்களுக்கு மேல் நீளாமல், பல சிறிய கதைகளாக இருந்தால் அதுதான் சாலச்சிறந்தது. வீட்டிலிருக்கும் வாண்டு சுண்டைக்காய் முதல், Main கதையை படிக்காமல் பக்கத்தைமட்டும் புரட்டிவிட்டு மூடிவைக்கும் பெரியவர் வரை அனைவரும் கவனம் சேலுத்தும் இடம் ஓரிரு பக்க குட்டிக்கதைகள்தான். So filler pages short & simple கதைகளாக இருந்தால் சிறப்பு!

    5.புதிதாய் நீங்கள் பார்த்திட விரும்பும் ஒரு கதை ரகம் எனில் - அது என்னவாக இருக்கும்?
    மாயாஜாலக்கதைகள்! (ஐயோ அடிக்காதீங்க, அடிக்காதீங்க தப்பை ஒத்துக்கறேன்!)

    ReplyDelete
    Replies
    1. Ramesh Kumar : //Steel Body ரொம்பவே சிக்கலான கதைக்களமாக இருப்பதால் ஒரு சிறுகதை தரும் உற்சாகத்தைத்தர மறுக்கிறது.//

      You've hit the nail on its head on this one !

      //Donald Duck, Uncle Scrooge Series களை மீட்டெடுக்க முடியுமா? மினிலயனில் வெளிவந்த "நடுக்கடலில் எலிகள்" போன்ற தரமான pieceகள் தற்போது கிடைக்க வாய்ப்புள்ளதா?//

      டாலரின் அசுர ஏற்றம் சேர்த்திடும் முதல் புண்ணியம் , அமெரிக்கப் படைப்புகளை அண்ட விடாது செய்வதே ..... ! தவிர வால்ட் டிஸ்னி போன்ற "பெரிய பெயர்களை" அணுகிட நமக்கு இன்னும் கொஞ்சம் போஷாக்கு அவசியம் !

      Delete
  35. மாதா மாதம் 2 இதழ்கள்ங்கிறது மகிழ்ச்சியான சேதி ஆனால் விலையேற்றம் தவிர்க்க முடியாதது.
    கறுப்பு வெள்ளையில் புதிய கதைகளை களத்தில் இறக்குவது இன்னும் வாசகர் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்பது எனது எண்ணம்.


    //2012 & (இது வரை )2013-ல் வெளியான கதைகளுள் - '2014-ல் வேண்டவே வேண்டாமே சாமி!' ரகத்தில் ஏதேனும் உள்ளனவா ? //வருடத்துக்கு 2 கிராபிக் நாவல்கள் போதும்
    -------------
    //கார்டூன்களுக்கு இப்போதிருக்கும் வாய்ப்புகள் ? //
    கூட்டலாம்
    -----------------
    Filler pages
    விலையை கட்டுக்குள் வைத்திட உதவிடும் என்றால், ஃபில்லர்களை கூடிய அளவு தவிர்த்தல் நலம் எ.எ.க! வேண்டுமானால் (ஒரே ஒரு) ஒரு பக்க கார்ட்டூன்கள் மட்டும் இருந்துவிட்டுப் போகட்டும்!
    ps :thanks Karthik Somalinga
    -------------
    //புதிதாய் நீங்கள் பார்த்திட விரும்பும் ஒரு கதை ரகம் எனில் ...//
    அனுமானுஷ்யம் , சரித்திர தேடல்

    ReplyDelete
  36. //'2014-ல் வேண்டவே வேண்டாமே சாமி!' ரகத்தில் ஏதேனும் உள்ளனவா ? //

    கதைகளில் இது வரை உங்கள் தேர்வு சோடை போனதில்லை சார்! எனக்கு எல்லா இதழ்களுமே பிடித்திருந்தன.

    அற்புதமான ஓவியத்தரத்துடன் படைக்கப்பட்ட படைப்புகள் மீது சற்றே கவனம் செலுத்தலாம்.
    இந்த வகை கதைகள் புதிய genre ஆகா இருந்தாலும்!

    நமது அட்டைப்படத்தின்( முன்/பின் ) தரம் ஒரு consistency லெவல்க்கு வர வேண்டும். coming soon விளம்பரங்களின் வடிவமைப்பில் இன்னமும் கொஞ்சம் சுவராஸ்யம் கூட்டும் வகையில் வடிவமைக்க வேண்டும்.

    //கார்டூன்களுக்கு இப்போதிருக்கும் வாய்ப்புகள் ? >>>>> போதும் / கூட்டலாம் / குறைத்திடலாம் ?//

    பத்தாது தான்! : )

    இதழ்களின் எண்ணிக்கை கூடுமேனகொண்டால் கூட்டலாம், தற்போதைய எண்ணிக்கையில் எனக்கொண்டால் போதும்!

    // 'சரி வர பயன்படுத்திடவில்லை ; இவருக்குக் கூடுதலாய் வாய்ப்பு தந்து பார்க்கலாம் !' - என்ற ரகத்தில் நமது ஹீரோக்கள் யாரேனும் ஆழ்நித்திரையில் உள்ளனரா ? //

    jill jordan

    // Filler pages பற்றிய உங்களின் சிந்தனைகள் என்ன ? வண்ணத்தில் 6-8 பக்கச் சிறுகதைகள் எனும் போது லக்கி லூக் ; மதியில்லா மந்திரி ; ஸ்டீல் பாடியார் நீங்கலாக - பெரிதாய் நமக்கு options கிடையாது என்பதை நினைவில் கொண்டு - இவைகள் நம் இதழ்களுக்குச் சேர்க்கும் value பற்றிய உங்களின் எண்ணங்கள் ப்ளீஸ் ?//

    தற்போதைய Filler pages தரம் அருமை. ஒரு புல் மீல்ஸ்சுக்கு பிறகு போடும் பீடாவை போல நமது main stream கதைகளுக்கு இவை சுவை சேர்க்கின்றன. நகைசுவைகதைகள் என்பதோடு மட்டும் நில்லாமல் entire genre spectrum மையும் கலந்தது கொடுக்க வேண்டும். உம: நகைசுவை கதை main stream என்றால் த்ரில்லர் கதை filler ரில் எனபது போல! : )

    //! புதிதாய் நீங்கள் பார்த்திட விரும்பும் ஒரு கதை ரகம் எனில் - அது என்னவாக இருக்கும் ? Please make just 1 choice ! //

    HARD CORE THRILLER

    இன்னமும் ஒன்னே ஒன்னு மட்டும் ப்ளீஸ் ...... : )

    MAGICAL FANTASY!

    //அவற்றில் ஒன்றை எப்படியேனும் 2014-ல் களமிறக்கிடுவோம் ;//

    ஆஹா! ஆஹா! இங்கே யாராவதுகிட்ட TIME MACHINE இருக்கா ??? : )

    வாழ்க்கைல முதல்முறைய எல்ல கேள்விகளுக்கும் ANSWER போட்டாச்சு ! சட்டு புட்டுன்னு திருத்தி கொடுங்க சார் ! : )

    ReplyDelete
    Replies
    1. விஸ்கி-சுஸ்கி : //வாழ்க்கைல முதல்முறைய எல்ல கேள்விகளுக்கும் ANSWER போட்டாச்சு ! சட்டு புட்டுன்னு திருத்தி கொடுங்க சார் ! : )//

      'இரண்டடி பாய்ந்தால் பற்களுக்குச் சேதாரம் உண்டாகாதா ?' என நான் சிந்திக்கும் நேரத்திற்குள்ளாக பத்தடி தாவிக் காட்டும் இந்த வகுப்பின் சகலரும் distinction -ல் தூள் கிளப்பும் மாணாக்கர் ஆச்சே ..? பேப்பரைத் திருத்தும் வேலையே கிடையாது ! Double promotions ...

      Delete
  37. கும்புட்றேன் வாத்யாரே? பில்லர் பேஜ் ன்னா கத போவ மிச்சம் இருக்குற பேஜ் தானே வாத்யாரே? அதுக்கு நம்ம பரட்ட,குண்டன் பில்லி,விச்சு&கிச்சு இவிங்களை எல்லாம் போட்டா குஜாலா இருக்கும். அப்டி இல்லாங்காட்டி நம்ம ஹீரோங்கோ BLOW UP போட்டா ஷோக்கா இருக்கும்.இல்லாங்காட்டி நம்ம வாத்யாரோட BLOW-UP கூட போடலாம்.இந்த சென்னைவாசியோட BLOW UP கூட போடலாம்.சும்மா சேல்ஸ் பிச்சுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. chennaivaasi : //இல்லாங்காட்டி நம்ம வாத்யாரோட BLOW-UP கூட போடலாம்.இந்த சென்னைவாசியோட BLOW UP கூட போடலாம்.சும்மா சேல்ஸ் பிச்சுக்கும்.//

      நல்லா தானே போயிட்டு இருக்கு ..? why this கொலைவெறி ?

      Delete
  38. ///எது எப்படி இருப்பினும் - 2014 முதல் மாதம் 1 லயன் + 1 முத்து காமிக்ஸ் என இரு இதழ்கள் தனித் தனியே வந்திடும் !//

    அட ! இத சொல்லுங்க முதல்ல ! எனன ஒரு அட்டகாசமான மைல் கல்! ஸ்வீட் கொடுத்து சொல்ல வேண்டிய விசயமாச்சே ! : )

    ReplyDelete
    Replies
    1. அதானே? தலைப்புச் செய்திகளைக்கூட தக்கணூன்டு செய்தியாகப் போட்டு அதன் முக்கியத்துவத்தை குறைச்சுடறார் நம்ம எடிட்டர்! ஒவ்வொரு மாதமும் ஒரு லயன் - ஒரு முத்து என்பது கொண்டாடப்படவேண்டியதாயிற்றே? :)

      Delete
    2. விஸ்கி-சுஸ்கி & கிறுக்கும் பூனைக்குட்டி Erode VIJAY :

      செய்து விட்டுக் கொண்டாடுவோமே ? என்ற எண்ணம் தான் :-)

      Delete
  39. என் பதிலகள் இதோ:

    1. கொஞ்ச நாளைக்கு டெக்ஸ் கதைகளுக்கு ஒய்வு தேவை
    2. கார்டூன்கள்- கரெக்டான அளவில் வருகிறது
    3. மார்ட்டின் வாய்ப்பு தேவை
    4. ஃபில்லர்- இருக்கட்டும்
    5. GROO

    ReplyDelete
    Replies
    1. Dr. அல்கேட்ஸ் : //கொஞ்ச நாளைக்கு டெக்ஸ் கதைகளுக்கு ஒய்வு தேவை//

      'ஒய்வு' என்பதை விட, இன்னும் சற்றே கவனமான கையாள்தல் தேவை என்று வைத்துக் கொள்வோமே !

      Delete
  40. Dear Editor,

    Here are my questions for Mr. David Bonelli.

    1. What is the name of the first Tex Willer story published in Italian language?
    2. In which stories, his father "Ken" & brother "Sam" appears?
    3. Who is the best villain - according to you in a Tex Willer story? Is it Mefisto?
    4. Is it true that Tex Willer's character was inspired by actor Gary Cooper?
    5. Who gave the title "Eagle of the night" to Tex in his stories? What is the reason for that?
    6. Is Kit Willer was named after Kit Carson?
    7. Why Tex Willer stories have been stopped in English after "The Lonesome Rider" by SAF comics?

    ReplyDelete
    Replies
    1. krisamar : See my reply to Karthik Somalinga on your Question # 7......

      Delete
  41. Sir, consider this questions for Mr. David Bonelli.

    1.Is it true that the real life hero "John Coffee Hays aka Captain Jack" inspired Mr.Bonelli to create Tex Willer?If not then who inspired Mr.Bonelli to create Tex?

    ReplyDelete
  42. சார்,

    ஒருமுறை நீங்கள் இந்த வலைத்தளத்தில் 'இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் ஜெயித்திருந்தால் உலகம் எப்படி இருந்திருக்கும்?, கென்னெடி assassination நடக்காமல் இருந்தால் எப்படி இருந்திருக்கும்? போன்ற Reality + Fantasy + History = Combination பற்றி குறிப்பிட்டு எழுதியதாக ஞாபகம்!

    Can You Try This Time?

    ReplyDelete
  43. விஜயன் சார், விலை ஏற்றத்தை சமாளிக்க filler பேஜ் மற்றும் நமது காமிக்ஸ் விளம்பரம்களை filler பேஜ்களின் வெளி இடுவதை தவிர்ப்பது நலம். மேலும் 2014-இல் வெளிவரும் சிறப்பிதழ்களை தவிர நமது ரெகுலர் காமிக்ஸ்களின் விலைகளை 50 அல்லது 100-க்குள் மட்டும் வெளி இட வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

    நமது காமிக்ஸ் விளம்பரம்களை முன் மற்றும் பின் அட்டைகளின் உட் பக்கம்களில் மட்டும் வெளி இட வேண்டும்.

    Filler பேஜ்களில் commercial விளம்பரம்களை வெளி இட வாய்ப்பு இருந்தால் வெளி இட வேண்டும், இதன் மூலம் நமது காமிக்ஸ் விலையை கட்டுபாட்டுக்குள் (அல்லது விலையை குறைக்க முடியும்) வைக்க முடியும் என நான் நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : விலையை கட்டுக்குள் வைத்திடும் அளவுக்கு நாம் ஈட்டக் கூடிய விளம்பர வருவாய் இருந்திடுமென்று எதிர்பார்பதெல்லாம் சற்றே ஓவர் தான் ! But அதனை நோக்கிய முயற்சிகளை துவக்க எண்ணியுள்ளோம் ! As always, fingers crossed !

      Delete
  44. திரு டேவிட் எனது கேள்வி: டெக்ஸ் வில்லர் கதாபாத்திரத்தை உருவாக்க தூண்டியது எது?

    ReplyDelete
    Replies
    1. 2. டெக்ஸ் வில்லர் கதைகளில் மோசமான கதை என விமர்சனம் செய்யப்பட்டது?
      3. டெக்ஸ் வில்லர் உலகம் முழுவதும் ஏற்றுகொள்ளப்பட்டு எவர் கிரீன் ஹீரோவாக உலா வர காரணமாக நீங்கள் நினைப்பது எது?
      4. கார்சன் கடந்த காலம் போல் டெக்ஸ் வில்லரின் கடந்த காலம் என கதை வெளி இட எண்ணம் ஏதும் உள்ளதா?
      5. உங்கள் டீம் டெக்ஸ் வில்லரின் மிக சிறந்த கதை என நினைத்து வெளி இட்ட கதை ஆனால் அது வாசகர்களிடம் வெற்றி பெறாமல் போன கதைகள் உண்டா? அப்போது உங்கள் டீம்-ன் மனநிலை என்ன?

      Delete
  45. Dear Editor,

    நீங்கள் அடுத்த பதிவில் செப்டம்பர் மாதத்து புது காமிக்ஸ் ஹீரோ யார் என்று reveal செய்ய போகிறீர்களா?

    தயவு செய்து சொல்லுங்கள், சோ தட் ஐ வில் விசிட் ப்ளாக் ஒன்லி ஆப்டர் ரிசிவிங் தி புக் பிசிகல்லி அண்ட் என்ஜோயிங் இட்.

    இவனோடு சரியான ரவுஸுபா!!! இங்கிலிஷ்ல தமிழ் அடிக்கறது , இல்லேன்னா தமிழில் இங்கிலீஷ் அடிக்கறது...

    ReplyDelete
    Replies
    1. மேஜர் சுந்தர்ராஜனின் ரசிகரா நீங்கள் சத்யா ? :-)

      Delete
  46. Martin
    Bob Morane (சாகச வீரர் ரோஜெர் )
    Grim ghost
    Horror stories
    Samson

    ReplyDelete
    Replies
    1. It's my suggestions Samson-Thanga nagaram

      Delete
    2. தங்க நகரம் ஒரு மாயாஜாலக்கதைதானே? மனித உடலும் மிருக தலையும் கொண்ட ஜந்துக்கள் கூட்டமாக எங்கோ walk பண்ணுமே அந்தக்கதையா இது? :D ஹி ஹி இந்தமாதிரி கதைகள்தான் எனக்கும் பிடித்தவை!

      Delete
  47. சிங்கத்தின் சிறு வயதில் ,
    சிங்கத்தின் சிறு வலையில்,
    வாசகர் கடிதம்,
    விளம்பரங்கள்,
    போன்றவற்றை முன்பு போல் கறுப்பு வெள்ளையில் வெளியிட்டு விலையை கட்டுக்குள் வைக்க முயற்சிக்கலாமே SIR....

    ReplyDelete
    Replies
    1. Msakrates : இன்றைய தலையாய சிக்கல் ; அச்சுத் துறைக்கு வெளியே நிற்கும் நண்பர்களுக்கு பேப்பர் சந்தையின் மர்மப் பயணங்களை புரிய வைப்பதே ! இன்று டாலர் விலையேற்றத்தைத் தொடர்ந்து ஆர்ட் பேப்பர் உச்சாணிக்குச் சென்றுள்ளது ; ஏற்றுக் கொள்ள முடிகின்றது ! ஆனால் இந்தாண்டின் துவக்கத்திலேயே, அனைத்து மில்களும் சாதா ரகத் தாள்களின் விலைகளில் செய்த விலையேற்றம் வயிற்றில் அனல் தகிக்கச் செய்யும் சங்கதி ! பற்றாக்குறைக்கு இப்போது ஆர்ட் பேப்பரின் விலையேற்றத்தை ஒட்டி, இவர்களும் மீண்டும் விலைகளை revise செய்து விட்டார்கள் ! So - அச்சுக் கூலிகள் + ப்ராசஸ் செலவுகளில் மாத்திரமே கொஞ்சமாய் மிச்சமிருக்கும் இப்பக்கங்களை black & white -ல் வெளியிடுவதில் !

      But - சிறு துளியும் வெள்ளம் தானே...சேமிக்க முடிந்த வரையிலும் லாபம் தானே ? நிச்சயமாய் பரிசீலிப்பேன் !

      Delete
  48. 1. நல்ல ஹீரோக்கள் இருப்பினும் மொக்கை கதைகளாய் போன "பூத வேட்டை", ஹாட் 'ன் கூல் ஸ்பெஷல் லில் வந்த சிக் பில் கதை போன்றவைகள் வேண்டாம் .
    2. மர்ம மனிதன் மார்ட்டின் - ஐ உயிர்தெழ செய்தால் நன்றாக இருக்கும்.Detective கதைகளுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் தரலாம்
    3. "Filler pages" தேவை தானா என யோசிக்கலாம்.
    4. Horror genre ட்ரை செய்யலாம்.

    ReplyDelete
    Replies
    1. Senthilvel Samatharman : //ஹாட் 'ன் கூல் ஸ்பெஷல் லில் வந்த சிக் பில் கதை போன்றவைகள் வேண்டாம் . //

      :-) இந்தாண்டின் உச்சப் பாராட்டுகளைப் பெற்ற கதை இது !

      Delete
  49. எடிட்டர் சார்,

    தங்களின் கேள்விகளுக்கு என்னுடைய பதில்கள்/கருத்துக்கள் .

    வேண்டவே வேண்டாம் என்ற நிலையில் எந்த ஹீரோவும் இதுவரை இல்லை.

    கார்டூன்களுக்கு இப்போதிருக்கும் வாய்ப்புகளே போதும். கூட்டவும் வேண்டாம் குறைக்கவும் வேண்டாம்

    வாய்ப்புகள் தந்து பார்க்கலாம் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் முன் என் தனிப்பட்ட கருத்து :
    எல்லா மாதமும் நமது இதழ்கள் வண்ணத்தில் தான் வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நீங்கள் எழுதியதுபோல் 2014 ஆண்டு முதல் இரு இதழ்கள் வருவதென்றால் ஒன்று வண்ணத்திலும் மற்றொன்று கருப்பு வெள்ளையிலும் வெளியிடலாம். முறையே லயனும் முத்துவும் ஒவ்வொரு மாதமும் வண்ணத்திலும் கருப்பு வெள்ளையிலும் வந்தால் கருப்பு வெள்ளை நாயகர்கள் மற்றும் நாயகி (மாடஸ்டி?) ஆகியோருக்கு வாய்ப்பளிக்க நிறைய இடம் இருக்கும்.
    எனது லிஸ்டில் உள்ள heros : மார்டின், ராபின்,சாகச வீரர் ரோஜர், மீதமிருக்கும் சில ப்ருனோ பிரேசில் கதைகள், பீட்டர் பாலண்டைன்.

    Filler Pages : Steel Body Sherlock என்னை கவர வில்லை - சாரி. அதேபோல், மியாவி (நண்பர்கள் விஜய் மற்றும் பெயர் சூட்டிய கார்த்திக் என்னை மன்னிப்பார்களாக ! )முழுவண்ணத்தில் அல்லாது இரு வண்ணத்தில் வாய்பிருக்கும் என்றால் எனது choice - Indian made ஆன கபிஷ், காக்கை காளி. என்னுடைய all time favorite - பரட்டை தலை ராஜா.

    பின்குறிப்பு : 80s வெளிவந்த ஜார்ஜ் நோலனுடன் துப்பறியுங்கள் மற்றும் கம்ப்யூட்டருடன் துப்பறியுங்கள் அட்டகாசமான filler pages. இப்பவரும் steel body எல்லாம் இவர்களிடத்தில் நெருங்கவே முடியாது.

    புதிதாய் பார்க்க விரும்பும் ரகம் : Horror கதைகள்

    விலை ஏற்றத்தை பற்றிய எனது பார்வை : எனது எண்ணப்படி தற்போது காமிக்ஸ் வாசிப்பவர்கள் நடு வயதினரே. சுட்டீஸ் / குட்டீஸ் என்பது ஒரு மிக மிகச் சிறிய அளவினரே. ஆகையால் விலை ஏற்றத்தால் இந்த மிகச் சிறிய அளவினர் பாதிக்கப் படுவர் என்ற காரணத்தை புறந்தள்ளி ஆசிரியரை செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. @ Radja from France

      // ஒன்று வண்ணத்திலும் ஒன்று கருப்புவெள்ளையிலும் வெளியிடலாம்//

      என் எண்ணமும் அதுவே!

      Delete
    2. Radja from France & கிறுக்கும் பூனைக்குட்டி Erode VIJAY :

      முன்பு 'Ripley 's Believe it or not..' என்று நம்ப சிரமமான நிஜங்களின் தொகுப்பு ஒரு பக்க filler வெளி வந்தது நினைவுள்ளதா ? இன்றைய விலைகளின்படி - சுட்டி லக்கி அளவிலான ஆர்ட் பேப்பர் வண்ண இதழை விட - பூத வேட்டை அளவிலான black & white இதழ் costly ஆகிடுகிறது ! குறைவான விலைகளை எட்டிப் பிடிக்க வேண்டுமெனில் - நியூஸ்பிரிண்ட் மாத்திரமே நமக்கிருக்கும் option ! Phew...

      Delete
  50. சரி வர பயன்படுத்திடவில்லை; இவருக்குக் கூடுதலாய் வாய்ப்பு தந்து பார்க்கலாம்! - என்ற ரகத்தில் நமது ஹீரோக்கள்?
    --> மர்ம மனிதன் மார்டின் மற்றும் detective சார்லஸ் (விபரீத விதவையில் அறிமுகமான)

    ReplyDelete
  51. Sir please dont delay for any reason we are waiting

    ReplyDelete
  52. மதிப்பிற்குரிய டேவிட் பெனொலி அவர்களிடம் கேட்கவேண்டிய கேள்விகளாக இங்கே நண்பர்கள் கார்த்திகேயன், கார்த்திக், Krisamar, Parani உள்ளிட்ட பலர் பல நல்ல கேள்விகளை ஏற்கனவே கேட்டுவிட்டதால், பெனொலி அவர்களிடம் 'கேட்கக்கூடாத' சில ஏடாகூட கேள்விகளாக இதோ சில:

    * பாலைவனத்தில் பல நாட்கள் சுற்றியலைந்தாலும் டெக்ஸுக்கு தாடி வளராமலிருப்பதன் ரகசியமென்ன? (விஷேசமான லோஷன்கள் ஏதாவது...?)

    * டெக்ஸ் குழுவினர் இந்தியாவுக்கு (குறிப்பாகத் தமிழ் நாட்டிற்கு) வந்து சாகசம் செய்வதுபோன்ற கதையை எதிர்காலத்தில் உருவாக்கிடும் உத்தேசமிருக்கிறதா? (எங்கள் ஊரிலும் ரெளவுடிகளுக்கும், திருட்டுக் கும்பலுக்கும் பஞ்சமேயில்லை! Infact, எங்கள் வாசகர்களில் சிலர்கூட பின்னூட்டமிட்டே பீதியைக் கிளப்பும் ரவுடி வகையறாவைச் சேர்ந்தவர்களே!)

    * இத்தாலியில் பழைய புத்தகக் கடைகள் உண்டா? உண்டெனில், அங்கே அதிகம் கிடைப்பது டெக்ஸ் கதைகளா? அல்லது, உங்கள் போட்டிக் கம்பெனியின் டயபாலிக் கதைகளா?

    * இத்தாலியில் மாதம் இரண்டு டெக்ஸ் கதைகள் வெளிவந்தாலும் 'எப்போதுமே கெள-பாய் கதைகள்தானா?' என்று உங்கள் ஊர் மக்கள் குறைபட்டுக் கொள்வதேயில்லையா? மக்களிடம் இந்தத் தனியாத கெள-பாய் மோகத்தை எப்படி ஏற்படுத்தினீர்கள்?!

    * கார்ஸனை வில்லனாக்கி டெக்ஸுடன் மோதவிடும் எண்ணமிருக்கிறதா? (கதையின் இறுதியில் அதை ஒரு நாடகம் என்று சொல்லி எளிதாக சரிகட்டிவிடலாம்)

    * எந்தச் சண்டையிலும் கிழியாத அந்த மஞ்சள்நிறச் சட்டை எந்தச் சந்தையில் வாங்கப்பட்டது?

    * சில வருடங்களுக்கு முன்பு வெறும் 5 ரூபாய்க்கு வெளியான டெக்ஸ் கதைகளை ரூ.5000 கொடுத்தும் வாங்கத் தயாராக இருக்கும் 'காமிக்ஸ் வெறியர்கள்' பலரைத் தமிழ்கூறும் நல்லுலகம் பெற்றிருப்பதை நீங்கள் அறிவீர்களா?

    மேற்கூறிய அனைத்தும் 'என்பது என் கருத்து' template வகையறாவைச் சேர்ந்தவை (நன்றி: கார்த்திக் சோமலிங்கா) :)

    ReplyDelete
    Replies
    1. //எந்தச் சண்டையிலும் கிழியாத அந்த மஞ்சள்நிறச் சட்டை எந்தச் சந்தையில் வாங்கப்பட்டது?//

      ஹாஹாஹா!!!!

      Delete
  53. First time entering ma comment.. Felt exciting.

    ReplyDelete
    Replies
    1. @ Balaji ramnath

      நல்வரவு நண்பரே!

      Delete
  54. சார் புதுசா எதுனா 3D காமிக்ஸ் இருந்தா போடாலாமே?

    ReplyDelete
    Replies
    1. டியர் பாலாஜி ராம்நாத் !!!
      கிழிஞ்சது போங்க.ஏற்கனவே இங்கே நெறைய நண்பர்கள் "க்ளார்"பிரச்னையால் அவதிப்படுகிறார்கள்.இதில் 3d வேறா....?

      Delete
  55. இத்தாலிய மொழியில் வெளிவரும் டெக்ஸ்ஸின் கதைகள் ஏன் அமெரிக்க பின்புலத்தை கொண்டே அமைக்கபடுகின்ரன?

    ReplyDelete
    Replies
    1. டியர் சுந்தரமூர்த்தி !!!
      மண்டை தொலி உறிப்பாளர்கள் அமெரிக்காவில் தானே வசிக்கிறார்கள்:-)

      Delete
  56. குமுதத்தில் முன்பு “ப்ளாண்டி” என்கிற ஒரு பக்க கதை வெளிவந்தது...... அதை நாமும் முயற்சிக்கலாமே?

    ReplyDelete
    Replies
    1. மேலும் சிறுவர் மலரில் வெளிவந்த "பலமுகமன்னன் ஜோ", சோனிப்பையன் மற்றும் பேய்ப்பள்ளி போன்றவை தற்போதைய நமது சைஸுக்கும் கலருக்கும் செட்டாகும்! ;)

      Delete
    2. டியர் சுந்தரமூர்த்தி !!!
      குமுதத்தில் வேண்டுமானால் முயற்சிக்கலாம்.ஹிஹி!!!

      Delete
  57. மாதம் ஒரு லயன் ... ஒரு முத்து ....... ரூ.50 விலையில் ...... விஜயன் சாருக்கு எல்லாரும் ஒரு “ ஓ” போடுங்க.

    ReplyDelete
    Replies
    1. டியர் சுந்தரமூர்த்தி !!!
      ///மாதம் ஒரு லயன் ... ஒரு முத்து ....... ரூ.50 விலையில் ...... விஜயன் சாருக்கு எல்லாரும் ஒரு “ ஓ” போடுங்க///
      ரூ.50 விலையிலான நமது இதழ்கள் காலம்சென்ற எழுத்தாளர் ராஜேந்திரகுமார் பாஷையில் "ஞே"என்று சவலைபிள்ளையை போல தோற்றமளிக்கும்.உங்களுக்கு ஓ.கே.வா...?:-)

      Delete
    2. // "ஞே"என்று சவலைபிள்ளையை போல தோற்றமளிக்கும்.உங்களுக்கு ஓ.கே.வா...?//

      இது தீவிர காமிக்ஸ் ரசிகர்களின் Point of view மட்டுமே என்பது என் கருத்து. நாம் ஒரு wide ஆன audience ன் பார்வையில் கவனித்தால் 32 அல்லது 48 பக்க காமிக்ஸ்கள் சரியான அளவாகவும், அதைவிட பெரிய மற்றும் குண்டான ஸ்பெஷல் இதழ்கள் Over Dose ஆகவும் தெரியும்.

      சிறிய புத்தகங்கள் மாதாமாதம் சரியான தேதியில், ஒரே விலையில் கிடைக்கும் பட்சத்தில் நமது காமிக்ஸ்களின் circulation அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது தீவிர வாசகர்களுக்கு தீனிபோடாதுதான் - ஆனால் இந்த Approach காமிக்ஸின் Reachஐ அதிகரிக்குமானால் நியாயமான Compromise தான்.

      Delete
    3. //சிறிய புத்தகங்கள் மாதாமாதம் சரியான தேதியில், ஒரே விலையில் கிடைக்கும் பட்சத்தில் நமது காமிக்ஸ்களின் circulation அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது தீவிர வாசகர்களுக்கு தீனிபோடாதுதான் - ஆனால் இந்த Approach காமிக்ஸின் Reachஐ அதிகரிக்குமானால் நியாயமான Compromise தான்.//

      மிகச்சரியான வாதம். நண்பர் ரமேஷ் குமார் கருத்துக்கு +1.good one !

      @ saint sathan
      //சவலைபிள்ளையை போல தோற்றமளிக்கும்.உங்களுக்கு ஓ.கே.வா...?:-)//

      ஓகே இல்லை தான் ! ஒரு நான்காயிரம் பேர் படிக்க மட்டும் தமிழ் காமிக்ஸ் என்ற நிலை மாற வேண்டுமானால் இது ஒரு நியாயமான compromise ஆகவே படுகிறது!

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  58. டியர் எடிட்டர்ஜீ!!!
    முத்து காமிக்ஸின் அந்நாளைய நாயகர்களான சிஸ்கோ கிட்&பாஞ்சோ ஜோடி பல வருடங்களாக எங்கள் கண்களில் படாமல் தலைமறைவு ஆகிவிட்டார்கள்.அட்டகாசமான அந்த கௌ பாய் ஜோடியை மீண்டும் மறுபிரவேசம் செய்திட்டால் என்ன?
    2014-ஆம் ஆண்டிலிருந்து மாதம் ஒரு லயன் மற்றும் முத்து காமிக்ஸ் வருமென கூறியுள்ளீர்கள்.அவை ரூ.50 இதழ்களா?அல்லது ரூ.100 இதழ்களா?விளக்கம் ப்ளீஸ் !!!
    திரு .டேவிட் போனெல்லி அவர்களுக்கு அடியேனின் "சிங்கிள்"கேள்வி!!!
    டியர் போனெல்லி. டெக்ஸ் வில்லரின் ஆரம்ப கால கதைகள் பல பிரமாதமான கதைகளோடும்,அதே சமயம் மிக சுமாரான சித்திரத்தோடும் வெளிவந்துள்ளன.(உ.ம்.-தலைவாங்கி குரங்கு).அக்கதைகளை தற்கால நவீன சித்திர பாணியில் மறு உருவாக்கம் செய்ய வாய்ப்புண்டா..?

    ReplyDelete
    Replies
    1. சிஸ்கோ கிட் கதைகள் எனக்கும் பிடிக்கும்!

      Delete
    2. டியர் புனித சாத்தான் அவர்களே,

      ///மாதம் ஒரு லயன் ... ஒரு முத்து ....... ரூ.50 விலையில் ...... விஜயன் சாருக்கு எல்லாரும் ஒரு “ ஓ” போடுங்க///
      ரூ.50 விலையிலான நமது இதழ்கள் காலம்சென்ற எழுத்தாளர் ராஜேந்திரகுமார் பாஷையில் "ஞே"என்று சவலைபிள்ளையை போல தோற்றமளிக்கும்.உங்களுக்கு ஓ.கே.வா...?:-) //
      எனக்கு ஓகே இல்லை !!!

      @ விஜயன் சார்,
      // 2014-ஆம் ஆண்டிலிருந்து மாதம் ஒரு லயன் மற்றும் முத்து காமிக்ஸ் வருமென கூறியுள்ளீர்கள்.அவை ரூ.50 இதழ்களா?அல்லது ரூ.100 இதழ்களா?விளக்கம் ப்ளீஸ் !!!//

      Delete
  59. Dear editor
    1. வேண்டவே வேண்டாமே சாமி!' ரகத்தில் ஏதேனும் உள்ளனவா?
    Steel body sherlock holmes,Modesty
    2. கார்டூன்களுக்கு இப்போதிருக்கும் வாய்ப்புகள்?
    Current level is ok .But please consider "Sirpin niram sigapu",Dennis, Tiger etc
    3)சரி வர பயன்படுத்திடவில்லை; இவருக்குக் கூடுதலாய் வாய்ப்பு தந்து பார்க்கலாம்! - என்ற ரகத்தில் நமது ஹீரோக்கள்?
    Detective Jerome
    Jess Long
    Jil Jordan
    Cid Robin
    Wing commander George[Unpublished stories.]
    Pisau Pattalam
    Minnal Padai
    Mandrake
    4)Filler Pages :Consider iznogoud , Inspector danger [Quiz:No contest needed.],Big no to Lucky luke.A short story featuring lucky luke had never been good.If u considering B& w pages as filler then we can republish top stars of golden days[Spider,Archie etc] stories in parts.By doing like this it will bring satisfactions to old & new members.
    5)Here are my questions for Mr. David Bonelli.

    a)Is there any idea to introduce any new character apart from regulars Tex,Kit,Carson ,Tiger Jack
    b) In which story Tex and Kit Carson joined together for the first time?
    C) which is the best / worst story of tex viller according to fans in Italy
    d)Is there any specific reason behind naming characters of Tex,Carson etc
    e)Is Kit carson / Kit are married?
    f)How tiger jack become so much dedicated to Tex and in which story they appeared together
    g)Any idea to start separate series featuring Kit or Kit Carson alone
    h)Is there any story of tex based on Gold hunt?

    ReplyDelete
  60. மாதம் ஒரு ஒரு லயன் முத்து என்பது அற்புதமான முடிவு

    விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது. விலை 125க்கு மிகாமல் பார்த்துக் கொள்ளவும்.
    இந்த விலை அனைவராலும் ஏற்றுக்கொள்ள கூடியதே.நமது புக் தரத்திற்கு இது ஒன்றும் அதிகம் இல்லை.

    தயவு செய்து 50க்கு கலர் பெரிய சைஸ் குறைந்த பக்க புக் வேண்டாம்.மரண அவஸ்தை ஒரு மாதம் காத்திருந்து படிக்கும்போது பிட் நோட்டீஸ் படித்த உணர்வே ஏற்படுகிறது.

    Filler Pages பரட்ட,குண்டன் பில்லி,விச்சு&கிச்சு, மதி இல்லா மந்திரி ஓகே

    Steel Body Sherlock, ஜில் ஜோர்டான், மியாவி தயவு செய்து வேண்டாம்

    டைகர், கிராபிக் நாவல், டெக்ஸ் வில்லர், லார்கோ, கமான்சே, லக்கி லுக், சிக் பில் லயன் முத்துவில் இந்த வரிசையில் ஆண்டு முழுவதும் தொடர்ந்து வெளியிடலாம்

    டயபாலிக், மாடஸ்தி, ரோஜர் ஆகியோருக்கு அதிக வாய்ப்பு கொடுக்கலாம். ஜேம்ஸ்பாண்ட் மற்றும் கருப்பு கிழவி கதைகளுக்கு வாய்ப்புள்ளதா?

    +6ல் புதுப்புது கதைகளாக வெளியிட்டு அதில் வெற்றி பெறுவதை அடுத்த வருட சந்தாவில் இணைத்து கொள்ளலாம்.

    தயவுசெய்து முடிந்தளவு கருப்பு வெள்ளை கதைகளை தவிர்த்து விடுங்கள்.

    ReplyDelete
  61. சிஸ்கோ கிட் கதைகள் அற்புதமான தேர்வு

    டிடெக்டிவ் ஜெரோம் வேண்டாம்

    ReplyDelete
  62. 1.வேண்டவே வேண்டாம் ரகம்- பெரிய ஸ்பெஷல் வெளியீடுகளில் டைகர் போன்ற கதைளை பாதி வெளியிட்டு மீதியை அந்தரத்தில் தொங்க விட வேண்டாம்.
    2.கார்ட்டூன் ஹுரோ அதிமாக்கலாம்/ தனியாக அஅவர்களுக்கு என்றே மினிலயன் போன்ற பிராண்டில் மாதம் 50 விலையில் ஒரு புத்தகம் .வெளியிடலாம்
    3. மர்மமனிதன் மார்டின், ஜில் ஜோர்டன், சாகஸவீரர் ரோஜர்,மின்னல் படையினர்
    4.குழந்தைகளை கவரும் வகையில் டிஸ்னி கதைகள் பரட்டைதலை விச்சுகிச்சு முயற்சிக்கலாம்
    5. சரித்திர ம் சம்பந்தமான துப்பறியும் கதைகள்/ மாயாஜாலகதைகள்

    ReplyDelete
    Replies
    1. மஞ்சள் சட்டை மாவீரன் @ வேண்டவே வேண்டாம் ரகம்- பெரிய ஸ்பெஷல் வெளியீடுகளில் டைகர் போன்ற கதைளை பாதி வெளியிட்டு மீதியை அந்தரத்தில் தொங்க விட வேண்டாம்.

      I echo the same too.

      Delete
    2. கீரீன் மேன்னர் போன்று அடுத்தடுத்து வெளியிடுவது அவசியம்.

      Delete
  63. விஜயன் சார்,

    இந்திய ரூபாய் மதிப்பு குறைவதால் ஏற்படும் சிரமம்களை புரிந்து கொள்ள முடிகிறது அதற்காக நமது காமிக்ஸ் விலையை கூட்ட வேண்டாம் அதே நேரத்தில் நமது காமிக்ஸ் தரத்தையும் குறைக்க வேண்டாம்.
    இதற்கு மாறாக நமது காமிக்ஸ் விற்பனையை அதிகரிக்க வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
    இது தவிர நமது காமிக்ஸில் தங்கள் பொருள்களின் சிறுவர்/சிறுமியர்கள் விளம்பரம்களை வெளி இட ஆர்வம் உள்ளவர்களை கண்டு பிடித்து நமது காமிக்ஸில் வெளி இட ஏற்பாடு செய்யலாம். முக்கியமாக தீபாவளி சமயம் சிவகாசியில் உள்ள பட்டாசு கம்பெனிகளின் விளம்பரம்களை குறைந்த தொகையில் வெளி இடலாம்.

    1. காமெடி கதைகள் போதவில்லை, இவைகளை அதிகமாக்க வேண்டும்; இதன் மூலம் மேலும் பல சிறுவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் நமது காமிக்ஸ் உலகத்திற்கு கொண்டு வர முடியும்.
    2. 2013 வெளி வந்த கதைகளில் எந்த கதையும் சோடை போகவில்லை, சிறந்த ஓவியம் பிரளயத்தின் பிள்ளைகள் என்னை மிகவும் கவர்ந்தது (கதையை படிக்கச் இன்னும் சரியான நேரம் அமையவில்லை).
    3. ஜில் ஜோர்டன் இன்னும் வாய்ப்புகள் கொடுக்கலாம், அவரின் கதைகள் தொடர்ந்து வரவேண்டும்.
    4. வண்ணத்தில் ரசிக்க சிறந்த கதை மற்றும் ஓவியம் உள்ளவை முதலை பட்டாளம் கதைகள் இவை ளை வண்ணத்தில் வெளி இட வேண்டும், அதன் ஓவியம்களை வண்ணத்தில் காண ஆசையுடன் காத்திருக்கிறேன். மாடேஸ்டி கதைகளை வரும் வருடமாவது (2014) குறைந்தது 2 கதைகளையாவது வெளி இட வேண்டும்.

    ReplyDelete
  64. விஜயன் சார்,
    இந்த (செப்டெம்பர்) மாதம் 6+ வரிசையில் ஒரு புதிய காமெடி ஹீரோ கதை வருவதாக கூறினீர்கள், அதனை இந்த மாதம் வெளி இடாமல் போன காரணம் என்ன? அந்த காமெடி ஹீரோ யார், அதன் வெளிஈடு தள்ளி போனதால் அந்த ஹீரோ பெயர் சொல்ல முடியுமா?

    ReplyDelete
  65. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள நமது தீவிர காமிக்ஸ் வாசகர்களில் விரும்புகிறவர்களை விளம்பர ஏஜென்டாக நியமித்து அந்த மாவட்டத்தில் உள்ள பெரிய நகைகடை மற்றும் பெரிய ஜவுளி கடைகளை விளம்பர கேன்வாஸ் செய்தால் நமது புத்தக தரம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் வெளியாவதால் வருடம் முழுவதும் குறைந்தது 6 பக்கங்களாவது தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும்.

    ஆரம்பத்தில் குறைந்தது 1 மாதமாவது நடையாய் நடக்க வேண்டியிருக்கும்

    ReplyDelete
  66. //1வேண்டவே வேண்டாம் ரகம்- பெரிய ஸ்பெஷல் வெளியீடுகளில் டைகர் போன்ற கதைளை பாதி வெளியிட்டு மீதியை அந்தரத்தில் தொங்க விட வேண்டாம்.//

    கீரீன் மேன்னர் போன்று அடுத்தடுத்து வெளியிடுவது அவசியம்.

    ReplyDelete
  67. சார்,

    விலையேற்றத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள ஒரு சின்ன யோசனை. நமக்கு தேவையானவற்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் பட்சத்தில், வெளிநாட்டிலிருக்கும் ஏதாவது நம் நண்பர்களிடம் சொல்லி அங்கேயே டாலரிலோ/யுரோவிலோ அங்கேயே பணம் கட்ட சொல்லி பிறகு அவர்கள் அக்கௌண்டில் நாம் பணம் பரிமாற்றம் செய்வோமேயானால் இது சாத்தியமாகுமே? (நம் காமிக்ஸ் நண்பர்கள் யாராவது flat ரேட்டை(say 50$ / 55$) ஏற்றுக்கொள்வார்களா? / முன்வருவார்களா?

    என் கருத்து!
    1. வருடத்திற்கு ஒரு கிராபிக் நாவல் போதும்!
    2. கார்ட்டூன் கதைகளை அதிகம் எதிர்பார்க்கிறேன்!
    3. சிஸ்கோ & பாஞ்சோ, சாகச வீரர் ரோஜர் (மர்மக்க்கத்தி என்னுடை ஆல்டைம் favorite, இதைப்போல் ஒரு அட்டகாசமான science fiction கதையை நான் வேறு எதிலும் படித்ததில்லை. And more ஓவர் 2014-ல் மறுபதிப்பில் இடம் பிடிக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.) மற்றும் ஜானி போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுங்களேன்.
    4. இப்போது வரும் filler பக்கங்களை வீணடிக்கின்றன, அதற்கு மாற்றாக ஒரு முழுநீளக் கதையை பத்து பக்கங்களில் வருமாறு தொடராக வெளியிடலாம்? மாண்ட்ரேக் ஓகே? and
    திகிலில் வெற்றிபெற்ற batman கதைகளை மறுபதிப்பாக வண்ணத்தில் வெளியிடலாம்?
    5. புதிய ரக தேடலில் science fiction கதைகளை முயற்சிக்கலாமே?

    ReplyDelete
  68. அது சரி கிராபிக் நாவலுக்கும் காமிக்ஸுக்கும் என்னங்க வித்தியாசம்
    அதுலயும் படம் போட்டு பலூன் டயலாக் தான் வருது இதுலயம் அப்டிதான்

    ReplyDelete
    Replies
    1. எனக்குத்தெரிந்த வித்தியாசம்: கிராபிக் நாவல் என்பது ஒரு தனிக்கதையாகவோ, இதழாகவோ நிறைவுறும் (அதுதான் நாவல்களின் பொதுவான format). காமிக்ஸ் என்பது ஒரு ஹீரோ அல்லது conceptஐ பல சிறு இதழ்களாகவோ தொடராகவோ கொண்டது.

      Delete
    2. @கால்வின் சத்யா:
      //அது சரி கிராபிக் நாவலுக்கும் காமிக்ஸுக்கும் என்னங்க வித்தியாசம்
      அதுலயும் படம் போட்டு பலூன் டயலாக் தான் வருது இதுலயம் அப்டிதான்//
      இதைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ள வடிவேலுவின் 'பில்லா கருப்பா பயங்கரமா இருப்பான். நீ பயங்கர கருப்பா இருக்கே' காமெடி சீனைப் பார்க்கவும்! :)

      உண்மையில் இதை வரையறுப்பது சற்று கடினம்தான். மேலோட்டமாகச் சொல்வது என்றால் புதுமையான அல்லது 'பொதுவாக காமிக்ஸ் கதைகள் பயணித்திராத களங்களில்', கனத்த கதையம்சத்துடனோ அல்லது மாறுபட்ட ஓவிய பாணியைக் கொண்டோ வெளிவரும் காமிக்ஸ்களை கிராஃபிக் நாவல்கள் எனலாம்!

      'எவனோ ஒருவனின்' கதை சொல்லும் one shot தனிப்படைப்புகளும் கிராஃபிக் நாவல்கள் என்றே அழைக்கப்படுகின்றன! ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத தனித்துவமான ஒவ்வொரு காமிக்ஸ் படைப்பும் ஒரு கிராஃபிக் நாவல்தான் - அவற்றில் சில தெளிவான சித்திரங்களை கொண்டிருக்கும், சில கதைகளோ 'மிக நேர்த்தியான ஓவியங்களுடன்' செதுக்கப்பட்டிருக்கும், இன்னும் சிலவோ குழந்தைகள் கிறுக்கும் படங்களை விட மோசமான சித்திர அமைப்பை கொண்டிருக்கும். சுருக்கமாக சொல்வதானால், பொதுவான எந்தவொரு வரைமுறைகளிலும் அடங்காத கதைகளையும், சித்திரங்களையும் உள்ளடக்கிய ஒவ்வொரு காமிக்ஸும் ஒரு கிராஃபிக் நாவலே!

      மேற்சொன்னது இணையத்தை அலசியதில் நான் புரிந்து கொண்ட கருத்துக்கள் மட்டுமே. ஆனால், இந்த நிலவரம் மாறி பல ஆண்டுகள் ஆகிறது! இப்போது நீங்கள் நிஜமாகவே உங்கள் ப்ரொஃபைல் போட்டோவில் இருப்பது போல மண்டையை பிய்த்துக் கொண்டு அலறுவது தெரிகிறது! ;)

      இப்போதெல்லாம் குழந்தைகள் படிக்கும் Geronimo Stilton (சுட்டி டிவியில் ஆல் இன் ஆல் அழகுராஜவாக வலம் வரும் அந்த எலி கேரக்டர்!) காமிக்ஸ் கதைகளைக் கூட கிராஃபிக் நாவல் என்றுதான் அழைக்கிறார்கள். ரமேஷ் கூறிய விளக்கமும் சரியே! ஆனால், ஒரு கிராஃபிக் நாவல் என்பது தனிக்கதையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உண்மையில் தொடர்கதைகளாக நீளும் ப்ளூபெர்ரி, XIII - இவை கூட கிராஃபிக் நாவல் வகையைச் சார்ந்தவையே! அல்லது ஒரே ஒரு நாயகர் தோன்றும் தனித்தனி கதைகளின் தொகுப்புகளும் கிராஃபிக் நாவல்களே (உதாரணம்: லக்கி லூக்!).

      முதலில் சொன்னவாறு, கிராஃபிக் நாவல்கள் சற்றே மாறுபட்ட பாணி கதைகளைக் கொண்டிருக்குமானால், குழந்தைகளுக்கான Geronimo Stilton கதைகள் இந்த வகையில் எப்படி சேர்ந்தது என்று நீங்கள் கேட்கலாம். மொத்தத்தில் இப்படி வகை பிரிக்க முடியாமல் பயங்கர குழப்பமாக இருப்பதுதான் கி.நா.! :)

      ஆனால், உண்மை நிலவரம் என்னவென்றால் அமெரிக்கா போன்ற நாடுகளில் எல்லா காமிக்ஸ் கதைகளுக்கும் கிராஃபிக் நாவல் என்று முத்திரை குத்துவது ஒருவித பேஷன் ஆகி விட்டது! அவர்களைப் பொறுத்தவரை ராணி காமிக்ஸ் போல ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் (மாதம் ஒருமுறை, இருமுறை அல்லது வாரா வாரம்!), குறிப்பட்ட தேதியில் தொடர்ந்து வெளியாகும் காமிக்ஸ் புத்தக்கங்களை "காமிக்ஸ்கள்" என்றும், (முந்தைய) முத்து & லயன் மற்றும் தற்போதைய சன்ஷைன் லைப்ரரி போல எந்தவொரு publishing frequency ஐயும் கொண்டிராமல், அவ்வப்போது வெளியாகும் காமிக்ஸ்களை கிராஃபிக் நாவல்கள் என்றும் அழைக்கிறார்கள்!

      மேற்சொன்ன வழக்கமான "காமிக்ஸ்" வடிவத்தில் வெளியாகி ஹிட் ஆன, கதைகளை / தொடர்களை, மீண்டும் நல்ல தரத்தில் பிரிண்ட் செய்து, ஹார்ட்கவர் பைண்டிங்கில் அதிக விலைக்கு விற்பார்கள் - "கிராஃபிக் நாவல்கள்" என்ற முத்திரையுடன்! :) மொத்தத்தில் கிராஃபிக் நாவல் எனப்படுவது காமிக்ஸிற்கு அளிக்கப்பட்டிருக்கும் ஒரு கூடுதல் பெயர் மட்டுமே... என்பது என் கருத்து! :) :) :)

      நம் லயனைப் பொறுத்தவரை அழுவாச்சி காவியங்கள் மட்டுமே "கிராஃபிக் நாவல்கள்" என்ற முத்திரையுடன் வந்து கொண்டிருக்கின்றன! ;) ஆனால், இந்த இமேஜை உடைப்பதற்கான பணிகளில் எடிட்டர் தீவிரமாக இருப்பது மட்டும் நன்றாகப் புரிகிறது!

      //கிராஃபிக் நாவல்களின் களங்கள் சோகமோ ; வித்தியாசமான கதை பாணிகளோ (கிரீன் மேனர் ) மாத்திரமே என்ற நமது stereotype -ஐ சிதறச் செய்யும் விதத்திலிருந்த இருகதைகளை சமீபத்தில் படிக்க வாய்ப்புக் கிட்டியது ! இரண்டுமே பிரெஞ்சு ஆக்கங்கள் ; இரண்டுமே மூன்று பாகங்களானவை ! கதை சொல்லிய விதம் ; கதையின் புதுமை (நமக்கு) ; ஓவிய அசாத்தியம் என படித்த மாத்திரத்தில் திகைக்கச் செய்தன இரு நாவல்களும் ! இவற்றை எப்படியேனும் தமிழுக்குக் கொணர வேண்டுமே என்ற மண்டைக்குடைச்சல் அபரிமிதமாய் என்னுள் ! இது போன்ற கிராஃபிக் நாவல்களை நம் வாசிப்பு எல்லைகளுக்குள்ளே நுழைத்திடும் பட்சத்தில், நமது ஆக்க்ஷன் கதை ரசிகர்களும் நிச்சயம் குறை சொல்லிட மாட்டார்கள் என்பது உறுதி !//

      Delete
    3. சிறுவர்களுக்கான சித்திரக்கதைகளை காமிக்ஸ் புத்தகங்கள் எனவும் பெரியவர்களுக்கான சித்திரக்கதைகளை கிராபிக் நாவல்கள் எனவும் தற்போதைய ட்ரெண்டில் அழைக்கலாம் போல தெரிகிறது. பெரும்பான்மையான நேரங்களில் இந்த லாஜிக் ஒத்துவருகிறது. : )

      Delete
    4. @ கார்த்திக், வி-சு

      கொஞ்ச நாளாகவே மண்டைக்குள் குடைந்துகொண்டிருந்த 'கிராபிக் நாவல்னா என்ன?' என்ற கேள்விக்கு அழகாக விளக்கமளித்திருக்கிறீர்கள். நன்றி!

      ஆனாலும் இந்த விசயத்தில் இன்னும் குழப்பம் தீர்ந்தபாடில்லை என்பதால் சொன்ன நன்றியை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்! ;)

      நீங்க சொல்வதைப் பார்த்தால் 'மியாவி'யைக் கூட 'கிராபிக்ஸ் நாவல்' என்று சொல்லலாம் போலிருக்கிறதே?! :D

      Delete
    5. எனக்கு தெரியும் பெருசுங்க சில காமிக்ஸ் படிக்கறேன்னு சொல்றதுக்கு வெக்கப்பட்டு கிராப்பிக் நாவல் அப்டின்னு சும்மா இன்னொரு பேர் சூடீருக்காங்க

      @கார்த்திக்

      எனக்கு இந்த அளவுக்கு விளக்கமாய் எழுத வராது, சோ, கேள்வி கேட்டா யாரவுது இப்டி தெளிவான பதில் எழுதி நாட்டு மக்களுக்கு கிராபிக் நாவலும் காமிக்ஸும் ஒன்றே என்று புரிய வைப்பீர்கள் என்று எதிர்பார்தேன். அருமையான விளக்கத்திற்கு நன்றி.

      என் கருத்து - கிராப்பிக் நாவல் என்ற பெயரை சூட்டி கொண்டு பெரியவர்களையும் காமிக்ஸ் பக்கம் கவர ஒரு வியாபார யுக்தி

      பின் கருத்து - ஆங்கிலத்தில் பல ஹிட் ஆனா நாவல்கள்(லைக் James patterson, அகதா christie) கிராப்பிக் நாவலாக வெளி வந்துள்ளன.

      @ரமேஷ் @ விஸ்கி-சுஸ்கி
      தங்கள் விளக்கங்களும் சுவையாக உள்ளன (லஞ்ச் டைம் அதான் இப்படி பாராட்ரேன் )


      @all

      இதனால் சொல்ல வரும் கருத்து என்னன்னா
      எல்லாமே காமிக்ஸ்தான்
      சும்மா படிங்க
      ஜாலியா இருங்க பாஸ்

      Delete
    6. //எனக்கு தெரியும் பெருசுங்க சில காமிக்ஸ் படிக்கறேன்னு சொல்றதுக்கு வெக்கப்பட்டு கிராப்பிக் நாவல் அப்டின்னு சும்மா இன்னொரு பேர் சூடீருக்காங்க //

      ஆமாமா! க்ராஃபிக் நாவல் என்கிற பெயர் கொஞ்சம் கௌரவப் பிரச்சனைகளை தீர்த்துவிடுகிறது!

      Delete
    7. என்னை பொறுத்தவரை நாவலாக வர கூடிய இயல்பான கதைகளுக்கு காமிக்ஸ் வடிவம் கொடுத்தால் அது கிராபிக்ஸ் நாவல்! இந்த மாதிரி கதைகளில் கதை தான் ஹீரோ!

      Delete
  69. வேண்டவே வேண்டாம்: I feel heroes like Tex, Lucky and Reporter Jhony are in overdose phase. They can have some rest. Or their frequency can be reduced.

    கார்டூன்களுக்கு: I think present mix is ok

    இவருக்குக் கூடுதலாய் வாய்ப்பு தந்து பார்க்கலாம் :

    1. CID Robin, CID Robin, CID Robin

    2. Muthalai pattalam

    3. Marma manithan Martin

    4. Rex (the hero appeared in 'Puyal padalam - Muthu comics. Forgot the story. But super art work)

    Filler pages: I think we can bring some best of Walt Disney’s stories

    புதிதாய் ஒரு கதை ரகம் எனில்: We can have some super heroes like superman, bat man. (Yearly maximum one or two)

    ReplyDelete
  70. நமது ஸ்பைடர், ஆர்ச்சி, இ.கை.மாயாவி ஆகியோருக்கு நிரந்தர ஓய்வு கொடுத்துவிட்டாலும், காமிக்ஸ் என்ற வட்டத்திற்குள் குறைந்தபட்சம் ஒரு பிரத்யேக சூப்பர் ஹீரோவாவது தேவைப்படுகிறது ( குறிப்பாக இன்றைய சிறுவர்களுக்கு).

    'வேதாளர்' ???
    'பேட் மேன்'???

    ReplyDelete
    Replies
    1. கதையில் Strong ஆன Concept இல்லாதபட்சத்தில் சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் Comedy piece களாக பார்க்கப்படுவது இந்த காலத்தின் கட்டாயம் (அதற்கு நாம் காமெடி கதைகளையே நேரடியாக தேர்ந்தெடுத்துவிடலாம்). நமது பழைய சூப்பர் ஹீரோக்களின் புதிய கதைகள் அயல்நாடுகளில் சோபிக்காதபட்சத்தில் இங்கே மீண்டும் இறக்குமதி செய்வது கடினம்.

      அந்தந்த காலத்திற்கு புதிது என்று தோன்றிய Technology ஐ மட்டுமே ஆச்சரியத்தின் Trickஆக பயன்படுத்திக்கொண்ட சூப்பர் ஹீரோ கதைகள் அனைத்தும் அதற்கு அடுத்த 20 ஆண்டுகளுக்குள் Outdate ஆவது வயிற்றெரிச்சலான உண்மை! :D

      Delete
  71. Dear Editor,

    I would like to suggest Rs.60 X 2 Books every month, a 20% raise from our normal rates will not be noticed that much (even that is not enough considering the 50% raise in dollar value).

    \\சரி வர பயன்படுத்திடவில்லை ; இவருக்குக் கூடுதலாய் வாய்ப்பு தந்து பார்க்கலாம் !\\

    I would personally like to see Detective Jerome and Jill Jordan and Martin Mystery, all are good stories.

    \\கார்டூன்களுக்கு இப்போதிருக்கும் வாய்ப்புகள் ? >>>>> போதும் / கூட்டலாம் / குறைத்திடலாம் ?\\

    If you see any good cartoon stories, you can always publish it

    \\2012 & (இது வரை )2013-ல் வெளியான கதைகளுள் - '2014-ல் வேண்டவே வேண்டாமே சாமி!' \\

    No

    \\Filler pages பற்றிய உங்களின் சிந்தனைகள் என்ன ?\\

    We can cut the filler stories and keep our rates at Rs.50 X 2 with filler stories Rs.60 X 2, my personal feeling.

    \\கார்ட்டூன் ; கௌபாய் ; டிடெக்டிவ் ; adventure ; கொஞ்சமாய் கிராபிக் நாவல் என்ற களங்களில் தற்போது சவாரி செய்து வருகிறோம் ! புதிதாய் நீங்கள் பார்த்திட விரும்பும் ஒரு கதை ரகம் எனில் - அது என்னவாக இருக்கும் ? \\

    We have a platter full, may be we can publish some war stories

    ReplyDelete
  72. 1.தொடர்ந்து மூன்று மாதஙளுக்கு கிராபிக் நாவல் இனிவேண்டவே வேண்டாம்
    2.கார்டூன் காமெடி கொஞம் கூட்டிக்கொள்ளாம்
    3.சிஸ்கோ கிட், ரோஜர் மூர்,புரூனோ பிரேசில் போன்ரவர்களை மீண்டும் கொண்டு வரவேண்டும்.
    4.டொல்லர் பேஜ்...பரட்டை,விச்சு&கிச்சு, மீண்டும் கொண்டு வரவேண்டும்.

    ReplyDelete
  73. ஹாலிவுட்டில் ஜாலி போன்ற நகைச்சுவை கதைகளை மறந்து விட்டீர்களே ஸார்....

    ReplyDelete
  74. @விஜயன் சார்:
    //சென்டர் பின் அடிப்பதற்கும், perfect binding -க்கும் costing-ல் நன்றாகப் போனால் ரூ.750 மிச்சம் ஆனாலே பெரிய விஷயம் ! விஷயம் என்னவெனில், பெர்பெக்ட் பைண்டிங் செய்திட இதழின் பக்கங்களின் எண்ணிக்கை அதிகமாய் இருத்தல் அவசியம் ! இது போன்ற வெறும் 56 பக்கங்களை PB செய்வது சிரமம் மாத்திரமன்றி, நாளடைவில் பக்கங்கள் ஒன்றொன்றாய் உதிர்ந்து விடும் தலைவலியும் உண்டு !//

    சிரமம் பார்க்காமல், ஒல்லிப்பிச்சான் புத்தகங்களையும் Perfect Binding முறையிலே பைண்ட் செய்ய வேண்டும் என்பது என் விருப்பம்! என்னிடம் உள்ள சில PB முறையில் பைண்ட் செய்யப்பட்ட மெலிதான புத்தகங்கள் இன்னமும் பக்கங்கள் உதிராமல் அப்படியேதான் இருக்கின்றன. ஆனால், "மேற்கே ஒரு சுட்டிப் புயல்" டைப் லாமினேட்டட் அட்டைகளில், செனட்டர் பின் அடித்த ராணி காமிக்ஸ்களோ நடுப்பகுதி வளைந்து போய் பரிதாபமாக காணப்படுகின்றன! செனட்டர் பின் அடித்த பல லயன் & ராணி காமிக்ஸ்களின் நடுப்பக்கங்கள், 'துருப்பிடித்த பின்களை' டைவர்ஸ் செய்து விட்டு ஒவ்வொன்றாக வெளிநடப்பு செய்து கொண்டிருக்கின்றன!

    ***
    @கால்வின் சத்யா:
    //எனக்கு இந்த அளவுக்கு விளக்கமாய் எழுத வராது, சோ, கேள்வி கேட்டா யாரவுது இப்டி தெளிவான பதில் எழுதி நாட்டு மக்களுக்கு கிராபிக் நாவலும் காமிக்ஸும் ஒன்றே என்று புரிய வைப்பீர்கள் என்று எதிர்பார்தேன்.//
    என்னா ஒரு வில்லத்தனம்?!!! ரெண்டு நாள் ரூம் போட்டு யோசிச்சு உங்களுக்கு விளக்கம் சொன்னா, தங்கவேலு மாதிரி "அதான் முதல்லேயே தெரியுமே"ன்னு சொல்றீங்க! கிர்ர்ர்ர்....

    ***
    @Ramesh Kumar:
    //Dark Humor நிறைந்த Green Manor வகைக்கதைகளை தவிற்பது நலம் - Dark Humorன் பிரச்சனை ஆழமான Serious Philosophy என்கிற சாயத்துடன் இளவயதினரை (age group of 13 to 18) குழப்புவதுதான் "என்பது என் கருத்து!" :D//
    இக்கதைகள் குழந்தைகளுக்கு ஏற்றதல்ல என்பதை ஏற்றுக் கொள்கிறேன்! அதே சமயம், க்ரீன் மேனர் கதைகள் 'சில பெரியவர்களைத்தான்' ஏகத்துக்கும் பாதித்து இருக்கின்றன என்பதை சமீபத்தில் கவனித்தேன்! :)

    //நாம் ஒரு wide ஆன audience ன் பார்வையில் கவனித்தால் 32 அல்லது 48 பக்க காமிக்ஸ்கள் சரியான அளவாகவும், அதைவிட பெரிய மற்றும் குண்டான ஸ்பெஷல் இதழ்கள் Over Dose ஆகவும் தெரியும்//
    உண்மை! பழைய லயன் & முத்து இதழ்கள் பெரும்பாலும் ஒரே ஒரு கதையை மட்டுமே தாங்கி வந்தன என்பதை மறந்து விடக் கூடாது!

    ***
    @கிபூகு Erode VIJAY:
    //* எந்தச் சண்டையிலும் கிழியாத அந்த மஞ்சள்நிறச் சட்டை எந்தச் சந்தையில் வாங்கப்பட்டது?//
    அந்த மஞ்சள் சட்டையும், ப்ளூ ஜீன்ஸும் திருப்பூரில் இருந்துதான் எக்ஸ்போர்ட் ஆகிறது விஜய்! ;)

    ***
    @Siva Subramanian:
    Editor's posts, Batman, Sci-Fi ... //இவை அனைத்தையும் நானும் ஆமோதிகின்றேன்.நண்பரே! //
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  75. 2012 & (இது வரை )2013-ல் வெளியான கதைகளுள் - '2014-ல் வேண்டவே வேண்டாமே சாமி!' ரகத்தில் ஏதேனும் உள்ளனவா ? (எதைத் தேர்வு செய்வதென்ற கேள்வியை விட, எதைத் தவிர்த்தல் அத்தியாவசியம் என்ற புரிதல் முக்கியமாய் தோன்றுகிறது எனக்கு ! )
    >>

    கார்டூன்களுக்கு இப்போதிருக்கும் வாய்ப்புகள் ? >>>>> போதும் / கூட்டலாம் / குறைத்திடலாம் ?
    >> குறைத்திடலாம்

    'சரி வர பயன்படுத்திடவில்லை ; இவருக்குக் கூடுதலாய் வாய்ப்பு தந்து பார்க்கலாம் !' - என்ற ரகத்தில் நமது ஹீரோக்கள் யாரேனும் ஆழ்நித்திரையில் உள்ளனரா ? நினைவூட்டுங்களேன் ப்ளீஸ் ? (அதற்காக 'கபாலர் கழகம்' ரேஞ்சிலான புராதனங்களைத் தேடித் பிடித்திட வேண்டாமே ? ) இந்தக் கேள்வியை நான் முன்னிறுத்துவதன் காரணம் COMANCHE ! ஒற்றைக் கதையோடு கிடப்பிற்குச் சென்றவரை மீட்ட போது தான் ஒரு அழகான தொடரை மறந்த முட்டாள்தனம் எனக்கு உரைத்தது ! அந்தத் தவறு தொடர இடம் தர வேண்டாமே எனத் தோன்றியது !
    >> ப்ருனோ பிரேசில், மார்டின் மிஸ்ட்ரி, சாகச வீரர் ரோஜர் அத்துடன், மற்ற கருப்பு வெள்ளை ஹீரோயின்(மாடஸ்டி :)/ஹீரோக்களையும் சேர்த்துக் கொள்ளவும்

    Filler pages பற்றிய உங்களின் சிந்தனைகள் என்ன ? வண்ணத்தில் 6-8 பக்கச் சிறுகதைகள் எனும் போது லக்கி லூக் ; மதியில்லா மந்திரி ; ஸ்டீல் பாடியார் நீங்கலாக - பெரிதாய் நமக்கு options கிடையாது என்பதை நினைவில் கொண்டு - இவைகள் நம் இதழ்களுக்குச் சேர்க்கும் value பற்றிய உங்களின் எண்ணங்கள் ப்ளீஸ் ?
    >> விலையேற்றத்தை கருத்தில் கொண்டால், Filler Pages மொத்தமாக எடுத்துவிட்டு, முடிந்தால் அதே ரூபாய் 100-ல் வெளி வந்தால் நல்லது

    கார்ட்டூன் ; கௌபாய் ; டிடெக்டிவ் ; adventure ; கொஞ்சமாய் கிராபிக் நாவல் என்ற களங்களில் தற்போது சவாரி செய்து வருகிறோம் ! புதிதாய் நீங்கள் பார்த்திட விரும்பும் ஒரு கதை ரகம் எனில் - அது என்னவாக இருக்கும் ? Please make just 1 choice !
    >> ஹி ஹி ... அனைத்து fleetway series ஹீரோக்களும் :)

    ReplyDelete
  76. சார்,

    உங்கள் லயன் முத்து காமிக்ஸ் மட்டுமல்ல நான் பூந்தளிர் , பார்வதி சித்திர கதைகள், ராணி காமிக்ஸ் போன்றவற்றிற்கும் ரசிகன் நான், பூந்தளிர் போன்ற இதழ்களை மறு பதிப்பு செய்ய உங்களால் இயலும்? copyright வாங்கி (from Amar Chitra Kathas) செய்யும் எண்ணம் இருக்கிறதா?

    ReplyDelete
  77. @விஜயன் ஸார்,

    2014 இல் மாதம் 2 புத்தகம் நல்ல விஷயம் . ஆனால் இரண்டும் 100 ரூபாய் விலைஇல்
    வந்தால் நன்றாக இருக்கும்.

    ஏற்கனவே நமது புத்தகத்தின் சைஸ் குறைந்து கொண்டே வந்து தற்போது 112 பக்கங்கள் என்ற நிலையில் உள்ளது. இதற்கும் மேலும் குறைய வேண்டாமே.

    நமது கம் பாக் ஸ்பெஶல் 200 பக்கங்கள் இருந்தது. பலருடைய விருப்பமான ஸைஸ் இதுவாகவே இருக்கும்.தற்போது இதை எதிர்பார்க்க முடியாது.

    50 ரூபாய் வண்ண இதழ்கள் படிப்பதற்குள் முடிந்து விடுவதாக தோன்றுகிறது.

    வண்ண இதழ் ஆக இருந்தால் 100+ ரூபாய் விலையில் மட்டுமே வெளியிடவும்.பலருடைய எதிர்பார்ப்பும் இதுவாகவே இருக்கும்.












    ReplyDelete
  78. Ippothu irukkum tharaththai , alavai kuraikkamal enne seithalum enaku ok than sir.

    ReplyDelete
  79. 1. வேண்டாம்னு ஏதாவது இருக்குதா?
    குழு 1: இல்லவே இல்ல, கண்டினூ!
    குழு 2: ஒண்ணு ரெண்டு இருக்கு, ஆனா பரவால்ல.
    குழு 3: *** வேணவே வேணாம். *** வேணவே வேணாம்.

    2. கார்டூன்களுக்கு வாய்ப்பு?
    குழு 1: வேணவே வேணாம், இப்ப இருக்குறதே ஓவர்!
    குழு 2: கரெக்டா இருக்கு, இப்படியே போலாம்.
    குழு 3: பத்தவே பத்தாது. நல்லா நாவகம் வைச்சுக்குங்க.. குட்டீஸ்க்கு புடிக்கும்! அப்பால உங்க இஷ்டம்.

    3. மிஸ்ஸிங் ஹீரோஸ்?
    குழு 1: *** இவர அப்படியே விட்டுட்டீங்க, இவர்னா எனக்கு உசுரு. *** இவர கொண்டுவரமுடியுமா?, ***, ***, **,****,*** இவங்கல்லாம் கண்டிப்பா வேணும்.
    குழு 2: இப்ப இருக்குறவங்க போதும்னு நினைக்கிறேன்.
    குழு 3: புதுச்சா யார்னா இருக்காங்களானு பாருங்களேன்.

    4. ஃபில்லர் பேஜஸ்:
    குழு 1: ஒண்ணியும் நல்லால்ல, வாணாம், தூக்கிருங்க. நல்லா நாவகம் வைச்சுக்கங்க, அது காஸ்ட் கட்டிங் கூட!
    குழு 2: மதியில்லா மந்திரி, ஸ்டீல் பாடி, லக்கி எல்லாம் செமை சூப்பர், கண்டிப்பா வேணும்.
    குழு 3: லக்கி சூப்பர், ம. மந்திரி ஓகே, ஸ்டீல்பாடி மொக்கை!

    5. புதிய கதைக்களம்:
    குழு 1: அது!
    குழு 2: இது!
    குழு 3: எதுவும்!

    6. மியாவி?
    குழு 1: செமை சூப்பர்! கண்டிப்பா வேணும்.
    குழு 2: பரவால்ல!
    குழு 3: செமை மொக்கை, கண்டிப்பா வேணாம்!

    7. புக்ஸ் சைஸ்?
    குழு 1: குண்டுதான் வேணும்!ஒல்லி கண்ட்ராவி!
    குழு 2: ஒல்லிதான் வேணும்! (ரிமம்பர் சைல்ட் ரீடர்ஸ்)
    குழு 3: எதுனாலும் பரவால்ல!

    8. புக் எண்ணிக்கை, விலை?
    குழு 1: மாசம் ரெண்டா? ஹை.. ரெண்டும் 100ல போடுங்க! கூடுனாலும் பரவால்ல.. பூரா கலரா போடுங்க, கருப்பு வெள்ளை வேஸ்டுங்க..
    குழு 2: ஓ.. ரெண்டா? சந்தோஷம்ங்க.. விலை பாத்துங்க 50ல ஒண்ணு, 100ல ஒண்ணு போடுங்க.. கலர்ல ஒண்ணு, கருப்புல ஒண்ணு, நியாயமா இருக்கும்.
    குழு 3: கருப்பு வெள்ளைங்கிறது ஒரு தனி ரசனை. கண்டிப்பா அதுவும் வேணும். விலையும் குறையும்.



























    சைக்யாட்ரிஸ்ட்:
    என்ன ஸார் உங்க பிரச்சினை?

    ஆந்தைவிழியார்:
    ஒரு சின்ன குழப்பம். முடிவெடுக்குறதப்பத்தி ஒரு முடிவுக்கு வரமுடியல..

    சைக்:
    இதென்ன பெரிய பிரச்சினை?
    ஆப்ஷன் 1: உங்களுக்கு தோண்றதைச் செஞ்சிடுங்க. இல்லைனா,
    ஆப்ஷன் 2: உங்க வெல்விஷர்ஸ்கிட்ட கேட்டு அவங்க சொல்றதை செஞ்சுடுங்க. இல்லைனா,
    ஆப்ஷன் 3: அவங்க சொல்றதையும், நீங்க நினைச்சதையும் மிக்ஸில போட்டு அடிச்சி, வர்ற வழியையும் பின்பற்றலாம்.

    ஆ.வி:
    தேங்ஸ்ங்க. உங்க ஃபீஸ் எவ்ளோ?
    ஆப்ஷன் 1: 100 ரூபா குண்டு கலரா?
    ஆப்ஷன் 2: 50 ரூபா ஒல்லி கலரா?
    ஆப்ஷன் 3: 50 ரூபா குண்டு பிளாக்&ஒயிட்டா?

    சைக்:
    ஙே!!!!!!

    ReplyDelete
    Replies
    1. @ஆதி தாமிரா: கலக்குறீங்க போங்க!

      Delete
    2. @ ஆதி தாமிரா! ரொம்ப அருமை நண்பரே! ஒரு முடிவு எடுக்கறது எவ்ளோ கஷ்டம்னு அழகா சொல்லிடீங்க!

      நாம இனி விஜயன் சார் எடுக்குற முடிவு என்ன"னு பாக்கலாம்?!

      Delete
    3. @ஆதி தாமிரா:
      நம்ம நண்பர்களை எல்லாம் நல்லா கலாய்ச்சிட்டு கடைசியில முக்கியமான மூணு பாய்ண்டை விட்டுட்டீங்களே பாஸ்! இது நியாயமா?! ;)

      எடிட்டர்:
      ஹை, ஜாலி! இப்படி ஏதாவது கருத்து கேட்டு ஒரு போஸ்டை போட்டுட்டம்னா நம்ம பாய்ஸ் ஒரு வாரம் முழுக்க ஐடியாவா அள்ளி விட்டுகிட்டு இருப்பாங்க! நாம பாட்டுக்கு நம்ம ஜூனியர் ஏற்கனவே ரெடி பண்ணி வச்சிருக்கிற excel sheet-ல Find "50" and replace with "55" or "60" ன்னு மாத்திட்டோம்னா வேலை முடிஞ்சது!

      ஜூனியர் எடிட்டர்:
      நாம என்னதான் பக்காவா டைம் டேபிள் போட்டுத் தந்தாலும், இவரு மாத்தி மாத்தி தான் ரிலீஸ் பண்ணுவாரு! இவரு கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலியே!

      லயன் ஆஃபிஸ் அண்ணாச்சி & கோ.:
      என்னாது இனிமே 100 ரூவா புக்கு இல்லியா?! இது வரைக்கும் லக்கி ஸ்பெஷல் ரெண்டு, லார்கோ ஸ்பெஷல் நாலுன்னு ஈசியா ஆர்டர் கேட்டு பொட்டலம் கட்டி கூரியர் பண்ணோம்! இனி நம்ம பாஸ் அந்த படலம், இந்த மர்மம்னு மறுபடி நீள நீளமா பேர் வைக்க ஆரம்பிச்சுருவாரே!!!

      பி.கு: மேற்கண்ட கலாய்ப்புகள் எடிட்டர் அளித்திருந்த கீழ்க்கண்ட தகவல்களின் அடிப்படையிலேயே செய்யப்பட்டுள்ளன :)
      //இந்த விலையேற்ற வில்லங்கம் திடுமெனத் தலை தூக்குவதன் முன்பாகாவே 2014-ல் மாதம் 2 x ரூ.50 இதழ்கள் என்பது முடிவாகி இருந்தது ! In fact 2014-ன் அட்டவணையை பூரணமாய் முடித்து - ஜூனியர் எடிட்டர் அதை அழகாய் ஒரு Excel file ஆகப் போட்டுத் தந்திருந்தார் !//

      //காமிக்ஸ் கிட்டங்கியினில் நாளெல்லாம் கழித்தாலும், கதைகளின் நான்கு பக்கங்களைக் கூடப் புரட்டிடாத எங்களின் பணியாளர்களுக்கும் இவ்விதப் பெயர்கள் நினைவில் கொண்டிடச் சுலபமான யுக்திகள் ! நித்தமும் உங்களோடு போனில் பேசிடும் ஸ்டெல்லாவோ ; புத்தகக் கண்காட்சிகளில் அளவளாவிடும் ராதாகிருஷ்ணனோ - காமிக்ஸ் என்றால் 'வீசம்படி எவ்வளவு ? என்று கேட்டிடும் ரகங்களே ! So - இந்தப் 'டமால் ஸ்பெஷல்' ; டுமீல் ஸ்பெஷல் ' ரக பெயர்சூட்டல் வைபவத்தின் பின்னணியினில் இதுவும் உண்டு !//

      Delete
    4. @ karthi

      " எடிட்டர்:
      ஹை, ஜாலி! இப்படி ஏதாவது கருத்து கேட்டு ஒரு போஸ்டை போட்டுட்டம்னா நம்ம பாய்ஸ் ஒரு வாரம் முழுக்க ஐடியாவா அள்ளி விட்டுகிட்டு இருப்பாங்க! நாம பாட்டுக்கு நம்ம ஜூனியர் ஏற்கனவே ரெடி பண்ணி வச்சிருக்கிற excel sheet-ல Find "50" and replace with "55" or "60" ன்னு மாத்திட்டோம்னா வேலை முடிஞ்சது! "

      எடிட்டர் அப்டிதாங்க, ஆனா அதுக்குல்லாம் நம்ம அசந்துருவோமா என்ன

      அவர் பிறந்த நாள் என்ன ?

      எனக்கு தெரிந்து அவர் ஆங்கில ஸ்டார் sign Taurus

      காரணம் தெரிய விரும்புவோர் செக் அவுட் லிண்டா குட்மன் சன் Signs

      சுவையான (அட சே டின்னெர் டைம் ஆயிடுச்சு அதான் நம்ம கை இப்டி வர்ணிக்குது ) புத்தகம்

      Delete
    5. @ஆதி தாமிரா: Super! Small addition to your post
      6. மியாவி?
      குழு 4: செமை சூப்பர்! கண்டிப்பா வேணாம்!
      குழு 5: செமை மொக்கை, ஆனா கண்டிப்பா வேணும்.

      Delete
  80. @ ஆதி

    ஆப்ஷன் 1 : உருண்டு புரண்டு சிரிச்சேன் (ROFL)
    ஆப்ஷன் 2 : வாய்விட்டு சிரிச்சேன் (LOL)
    ஆப்ஷன் 3 : :-)

    :D

    ReplyDelete
  81. வேண்டவே வேண்டாமே சாமி!' ரகக்கதைகள் - முதலில் நீங்கள் கண்ணை மூடிகொண்டு கதைகளைத்தேர்வு செய்பவர் இல்லை. மேல்நாடுகளில் சர்குலேஷனில் சக்கை போடுபோடும் கதைகளைக்கூட நமக்கு ஒத்து வருமா என்று யோசித்தே முடிவெடுப்பீர்கள். இதில் ஒருசிலசமயங்களில் ரசனை வேறுபாடுகள் இருக்கலாம். இருக்கும். ஆனால் “வேண்டவே வேண்டாம்” என்று எதையும் சொல்லத்தோன்றவில்லை.
    என்னைப்பொறுத்தவரை ஸ்டீல்பாடி கவரவில்லை!

    கார்டூன்களுக்கு இப்போதிருக்கும் வாய்ப்புகள் ? – கூட்டலாம். கார்ட்டூன் கதைகளுக்கு ஒரு தனி இடம் ஒதுக்கினால் இன்னும் சிறப்பு. பேசாமல் SUNSHINE LIBRARYஐ கார்ட்டூன் ஸ்பெஷலாக ஆக்கினால் என்ன?
    கூடுதலாய் வாய்ப்பு தந்து பார்க்கலாம் - வாய்ப்பிருக்கும் பட்சத்தில் எல்லா கருப்புவெள்ளை நாயகர்களுக்கும்! என்னமோ தெரியவில்லை, கருப்புவெள்ளையின் ஈர்ப்பு அதில் இருக்கும் அந்நியோன்யம் கலரில் வரவில்லை. கருப்புவெள்ளையில் கதையுடன் பயணிக்கும் நான் கலரில் வெறும் பார்வையாளனாய் இருப்பதுபோல் தோன்றுகிறது. வண்ணத்தை ரசிக்க முடிகிறது ஆனால் லயிக்க முடியவில்லை.

    Filler pages பற்றிய உங்களின் சிந்தனைகள் என்ன ? – Filler Pagesஐ பொறுத்தவரை விச்சு கிச்சுவை அடிச்சுக்க ஆளே இல்லை.
    Ramesh Kumar
    "Filler pages ன் பங்கு மிகவும் ஆழமானது. தரமான குட்டிக்கதைகள் தரும் ரிலாக்ஸ்னஸ் ஒரு Tonic மாதிரி. தற்போதைய குறை என்னவென்றால் Steel Body ரொம்பவே சிக்கலான கதைக்களமாக இருப்பதால் ஒரு சிறுகதை தரும் உற்சாகத்தைத்தர மறுக்கிறது. Filler Page கதைகள் 3 பக்கங்களுக்கு மேல் நீளாமல், பல சிறிய கதைகளாக இருந்தால் அதுதான் சாலச்சிறந்தது. வீட்டிலிருக்கும் வாண்டு சுண்டைக்காய் முதல், Main கதையை படிக்காமல் பக்கத்தைமட்டும் புரட்டிவிட்டு மூடிவைக்கும் பெரியவர் வரை அனைவரும் கவனம் செலுத்தும் இடம் ஓரிரு பக்க குட்டிக்கதைகள்தான். So filler pages short & simple கதைகளாக இருந்தால் சிறப்பு!"

    Giri
    "வேண்டுமானால் (ஒரே ஒரு) ஒரு பக்க கார்ட்டூன்கள் மட்டும் இருந்துவிட்டுப் போகட்டும்!"

    Radja from France
    "முழுவண்ணத்தில் அல்லாது இரு வண்ணத்தில் வாய்பிருக்கும் என்றால் எனது choice - Indian made ஆன கபிஷ், காக்கை காளி. என்னுடைய all time favorite - பரட்டை தலை ராஜா."

    Arun Prasad
    "If u considering B& w pages as filler then we can republish top stars of golden days[Spider,Archie etc] stories in parts.By doing like this it will bring satisfactions to old & new members."

    SIV
    "Filler pages: I think we can bring some best of Walt Disney’s stories"

    Filler pages பற்றிய மேற்கண்ட நண்பர்களின் கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை. இவையே என் எண்ணமும்.

    கார்ட்டூன் ; கௌபாய் ; டிடெக்டிவ் ; adventure ; கொஞ்சமாய் கிராபிக் நாவல் என்ற களங்களில் தற்போது சவாரி செய்து வருகிறோம் ! புதிதாய் நீங்கள் பார்த்திட விரும்பும் ஒரு கதை ரகம் எனில் - அது என்னவாக இருக்கும் ?
    கார்ட்டூன் ; கௌபாய் ; adventure ; கொஞ்சமாய் கிராபிக் நாவல் எல்லாம் OK. டிடெக்டிவ்??? ஒரு நல்ல டிடெக்டிவ் கதையைப்படித்து ரொம்ப நாளாச்சு சார்… சஸ்பென்ஸ் தாங்க முடியாமல் கடைசிக்கட்டத்தைப்பார்க்கத்தூண்டும் SUSPENSE THRILLER கதைகள் நிறையக்கொண்டு வாருங்கள் சார்… இடியாப்பக்கதை நாயகர் ரிப்போர்ட்டர் ஜானியை ரொம்பவே மிஸ் பண்றோம்!

    ReplyDelete
    Replies
    1. ரிப்போர்ட்டர் ஜானியை ரொம்பவே மிஸ் பண்றோம்!
      +20

      Delete
  82. டெக்இஸ் வில்லர் கேள்வீ:
    டெக்இஸ் வில்லர் பாத்திரத்தா உருவாக்க வேண்டும் ஏன்ற
    எண்ணாம் மலர்ந்த்து எப்படீ?
    அதன் பின்னால் ஏதாவது காரணாம்‌ / கதை உள்ளதா?

    ReplyDelete
  83. எடிடர் சார்,

    எனக்கு ஒரு சந்தேகம்,

    இதுவரை வந்த அனைத்து lion முத்து காமிக்ஸ் அனைத்தையும் soft copy ஆக்கி வைத்திருக்கிறீர்களா?

    அப்படி ஏதேனும் புத்தகங்கள் MISS ஆனால், வாசகர்களிடம் கேட்டு பார்க்கலாமே.

    தற்சமயம் CLASSICS COLLECTION வருகிறதா?

    ReplyDelete
  84. டியர் விஜயன் சார்,

    //சோகக் கதை என்னவெனில் - அமெரிக்கா முழுவதுமாய் அதற்குக் கிட்டிய ஆர்டர் 1150 பிரதிகள் மாத்திரமே !//
    அடக் கொடுமையே! அவர்களின் வரலாறு சார்ந்த கதைகளைப் படிக்க அவர்களுக்கே பிடிப்பதில்லை போலும் - அதுவும் ஐரோப்பியர்களின் வாயிலாக!

    //Smurfs படிக்க நம் நண்பர்கள் ரொம்பவே பால்யம் நோக்கிய பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும்//
    உண்மைதான்! ஆனால், சுட்டி லக்கி வரிசையில் புதிய குட்டி வாசகர்களை நிச்சயம் ஈர்க்கும்! ஆனால், கதைப்படி ஸ்மர்ஃப் மொழியில், ஒவ்வொரு வாக்கியத்திலும் மற்ற சொற்களுக்கு பதிலாக ஸ்மர்ஃப் என்ற சொல் இடம் பிடிக்கும் என்பதால் இதை தமிழில் சுவையாக கொண்டுவருவது சற்று சவாலாகத்தான் இருக்கும்! தவிர, ஏற்கனவே 2 புது கார்ட்டூன்கள் வேறு அறிமுகமாக இருப்பதால் இப்போதைக்கு அவையே போதும்!

    ReplyDelete
  85. HI SIR,
    Can We try Mr Zet, Rip Kerbi in future. Once we had a Story named PUYAL PADALAM which is released before 16 years , if i am r8 rex is the hero of the story why dont we try him in future. This is such an xcellent tale.

    ReplyDelete