Powered By Blogger

Thursday, August 08, 2013

தொடரும் ஒரு திருவிழா...!

நண்பர்களே,

குலுங்கும் சிரிப்பில் வயிற்றைப் பிடித்துக் கொண்டே வணக்கம் வைக்க முயற்சித்துப் பாருங்களேன் - ஏதோ ஒரு புது வகை 'யூத் டான்சின் ' ஸ்டெப் போட்டது போலிருக்கும் ! கடந்த பதிவில் நீங்கள் அத்தனை பெரும் அடித்துள்ள அதகள லூட்டியின் பலனாய், தனியே அமர்ந்து நான் சிரிப்பில் உருள்வதைப் பார்க்கும் நம்மவர்கள், 'நேற்று வரை ஆந்தை விழியார் ஒழுங்காகத் தானே இருந்தார் ? இன்று மொச்சைக் கொட்டைப் பல்லாருக்கு வேலை கொடுத்து  'கெக்கே-பிக்கே' சிரிப்பாருக்கு முன்னுரிமை கொடுத்தது ஏனோ ?' என்ற குழப்பத்தில் உள்ளனர் ! சிரிக்கும் சாத்தான்களும் ; அறுக்கும் கத்தியார்களும் ; கிறுக்கும் பூனையார்களும் ; குடைமூக்கர்களும் ; கொள்ளி விழியான்களும், இன்ன பிற சூராதி சூரர்களும் உலவும் ஒரு தளத்தில் நான் பயணிக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியாதே ?! 100+ பதிவுகளை சந்தித்துள்ள நம் தளத்தில் ஒரு out & out சிரிப்பொலி சேனல் அரங்கேறும் முதல் முறை இதுவென்று சொல்லலாம் - awesome show ! Take a bow guys !!! (நிஜமான தமிழாக்கத்தில் பொருள் எடுத்துக் கொண்டு கிரீன் மேனர் பாணியில் வில்லோடு வேட்டையில் இறங்கிட வேண்டாமே - ப்ளீஸ் !!)
ஈரோட்டுப் புத்தகத் திருவிழாவினில் சென்னைக்கு இணையான விற்பனையை எதிர்பார்த்தல் சாத்தியமல்லவே என்பது ஏற்கனவே தெரியும் தான் என்ற போதிலும், இது வரையிலான sales + interest சந்தோஷம் தருகின்றன ! புதிதாய் நம் இதழ்களைப் பரிச்சயம் கொள்ளும் வாசகர்களும்  ; பால்யத்தோடு காமிக்ஸ்களுக்கு விடை கொடுத்து விட்டு, இப்போது அந்தக் காதலை மீட்டிட எண்ணும் நண்பர்களும் ; பள்ளிகளில் இருந்து வருகை தரும் குட்டீஸ்களும்  -ஒரு சேரக் காட்டி வரும் உற்சாகம் ஒரு பெரும் ஆத்மபலத்தைத் தருகின்றன !எல்லாவற்றிற்கும் மேலாய் ஒவ்வொரு புத்தக விழாவின் போதும் நாம் ஜெயிக்க வேண்டுமென்ற உள்ளன்போடு எங்கெங்கு இருப்பினும் தமது ஆத்மார்த்தமான அன்பையும், ஆதரவையும் பதிவு செய்து வரும் அத்தனை உள்ளங்களும் சரி - இந்த இருவாரத் திருவிழாவை தம் வீட்டு விசேஷமாய்ப் பாவித்து அசாத்தியங்களை நடத்திக் காட்டும் நமது ஈரோடு நண்பர்கள் படையும் சரி - நம்மைத் தீர்க்க இயலாக் கடனாளியாய் ஆக்கி வருவது நிஜம் ! எத்தனை முறை கால் விரலை கடவாயில் செருகினாலும்  இந்த அன்புக் கடனை அடைக்க இயலாதென்பது உறுதி !!! இது போன்ற நாட்களில் தான் மலையைக் கூட முதுகில் சுமந்திட முடியுமென்ற தைரியங்கள் பிறக்கின்றன ! ('அயோடெக்ஸ் இருக்கா ? 'என்று வீட்டுக்குள் பின்னே தேடி அலைவது தனிக் கதை !) 

ஜாலியான updates வரிசையில் முதலில் சொல்ல விரும்புவது : NBS இன்றோடு சுத்தமாய்க் காலி என்ற சேதியே ! ரூ.400 விலையென்பது  இன்றைய  நிஜ மதிப்பில் ஒரு ராட்சசத் தொகை ஆகாது என்ற போதிலும், காமிக்ஸ் களத்திற்கு அது ஒரு giant leap என்பதில் ஐயம் ஏதும் கிடையாது ! உங்களின் உற்சாகமான முன்பதிவுகள் + சென்னை புத்தகத் திருவிழாவின் 'விறு விறு' விற்பனை இணைந்து இதை சாதித்துக் காட்டியுள்ளது ! So - NBS (கொஞ்ச காலத்துக்காவது) இனி நம் நினைவுகளில் மாத்திரமே உலவிடப் போகும் ஒரு சங்கதி ! 'சரி - NBS காலி ; what next ?' என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது தான் !! பொறுமை ப்ளீஸ் !! 

Update # 2 : இம்மாத இதழ்களில் வந்த filler pages பற்றியது ! ஸ்டீல்பாடியார் கதைகளில் 60%-40% என்ற விகிதமே success percentage என்பதை எதிர்பார்த்தே இத்தொடரின் முதல் கதையை வாங்கினோம் ! ஆல்பம் # 1 - சிறுகதைகளின் தொகுப்பு ! தொடரும் பாக்கி 3 ஆல்பம்கள் முழு நீளக் கதைகள் ; so அவற்றை முழுவதுமாய்ப் பரிசீலனை செய்தால் தவிர அவை உங்களைப் பதம் பார்க்கப் போவதில்லை ! அவற்றில் நிஜமான தரம் இருப்பின், ஸ்டீல் பாடியார் மறு பிரவேசம் செய்வார் ! இப்போதைக்கு அவர் ஸ்காட்லாந்து கிளம்பியாச்சு ஒய்வு நாடி !

Update # 3 : ஆச்சர்யமூட்டும் விதத்தில் GARFIELD & HEATHCLIFF நிறையப் பேரைக் கவரவில்லை !! சர்வதேச செய்தித்தாள் கார்டூன் வரிசைகளில் சண்டியர்களான இவ்விரு பூனையார்களுக்கும் கொடுக்க அவசியாகும் ராயல்டி தொகையும் மிக ஜாஸ்தி ! உலகுக்கே பிடித்துள்ள இவர்களை நம்மில் பலருக்குப் பிடிக்காது போனதன் காரணம் கண்டறிய மண்டையாரை, விரலார் 'பர பரவென்று'  சொறிகிறார் ! So - கொஞ்ச காலத்திற்கு filler pages பொறுப்புகளைப் பகிர்ந்திடப் போவது மந்திரியாரும், லக்கி லூக்கின் சிறுகதை கலெக்ஷனுமே !

Update # 4 : "Kaun Banega Graphic Designer " இன்னமும் தொடரவிருக்கிறது - உங்களின் எழுத்துத் திறமைக்கும் சின்னதொரு சவாலோடு ! வெகுஜன பத்திரிகைகளில் நமது இதழ்களின் மறுவருகை குறித்து விளம்பரம் செய்திட இருப்பது பற்றி கொஞ்ச வாரங்களுக்கு முன்னே பதிவிட்டிருந்தது நினைவிருக்கலாம் ! அது நடைமுறைக்கு வரும் நாள் நெருங்கி விட்டதென்பதால், நமது விளம்பரங்களை டிசைன் செய்திட ஆர்வமுள்ள நண்பர்கள் தம் creative திறமைகளைக் கட்டவிழ்த்து விடலாம் ! விளம்பர வாசகமும் உங்களது கற்பனயில் உதிக்க வேண்டுமென்பதால் - இது டிசைன் செய்வதற்கு மட்டுமல்லாது copy writing திறமைக்கும் ஒரு வெளிப்பாடாய் இருக்கும் ! Game for it folks ? (குமுதம் ரிப்போர்டர் ; ஜூனியர் விகடனின் அரைப்பக்க அளவு ; black & white )

Update # 5 : தொடரும் மாதத்துப் பணிகள் ஒரு பக்கம் நடந்தேறி வருகின்றன ! சமீபமாய் இரத்தப் படலம் பாகம் 21-ன் சித்திரங்களும், வண்ணச் சேர்க்கைகளும் வந்திருந்தன ! ஓவியர் வில்லியம் வான்சிற்கு சவால் விடும் தரத்தில் சித்திரங்கள் மிளிர்வதை ரசிக்க முடிந்தது ! பாருங்களேன் ஒரு பக்கத்தை !  
அதே பக்கத்தின் வண்ணக் கலவை தனியாக !! கலரிங் ஆர்டிஸ்டின் ஆசாத்திய உழைப்பைப் பாருங்களேன் !! 
Update # 6 : வலைத்தளம் ; இன்டர்நெட் - இவற்றிற்கு இன்னமும் பரிச்சயமில்லா நண்பர்கள் தொடர்ச்சியாய் ; நம்பிக்கையோடு கடிதங்கள் எழுதி வருகின்றனர் - மாதந்தோறும் ! அவர்களது சமீப ஆதங்கம் - வலைத்தள விசுவாசிகளின் குரல்களுக்கே முக்கியத்துவம் தருவது நடைமுறையாகி வருகிறது  ; எங்களின் அபிப்ராயங்களுக்கு மதிப்பிலாது போகின்றது' என்பதே ! வலைபதிவினில் நண்பர்களது குறைகளுக்கு முடிந்தளவு நேரடியாய் நானே பதில் தருவது சாத்தியமாகிறது ! ஆனால் நெடிய கடிதங்களுக்கு நிதானமாய், பதில் போடுவது எல்லா நேரங்களிலும் முடியாது போகின்றது ! அன்னியமாகப் பார்க்கப்படுவதாய் நண்பர்களில் ஒரு சாரார் வருந்துவது சங்கடம் தரும் சங்கதி ! இதனை எவ்விதம் நிவர்த்தி செய்வதென்று குழம்பியுள்ளேன் ! நமது இதழ்களில் இணையத்திற்கு அப்பாற்பட்ட நண்பர்களும்  பங்கேற்கும் விதத்தில் புதிதாய் ஏதேனும் பகுதிகளை இணைப்பது பற்றி ஏதாவது suggestions guys ?

Update # 7 : லக்கி லூக்கின் "புரட்சித் தீ" இதழின் மறுபதிப்புக் கோரி இது வரை வந்துள்ள கடிதங்கள் ஒரு கத்தை தேறும் !  சிக் பில் (மறுபதிப்பு)  ஸ்பெஷலில் 1 சிக் பில் reprint+ "புரட்சித் தீ " வெளியிட்டால் ஒ.கே.வாக இருக்குமென்று தோன்றுகிறதா? உங்களில் எத்தனை பேரிடம்  "புரட்சித் தீ" ஒரிஜினல் இதழ் உள்ளது என்று தெரிந்திட ஆவலும் கூட  !


Update # 8 : "KAUN BANEGA TRANSLATOR -  சீசன் 3" வெகு விரைவில் ! இம்முறை பங்கேற்கும் அத்தனை நண்பர்களும் சுமாராகவோ ; சூப்பராகவோ தங்கள் திறமைகளைக் காட்டி - மொழிபெயர்ப்பினை எழுதி அனுப்பி போட்டியினில் முழுமையாகக் கலந்திடல் அவசியம் !  No போங்கு ஆட்டம் please ! சென்ற போட்டிகளின் போல் 6 பக்கம் ; 7 பக்கம் என்று இல்லாமல் - இம்முறை 16 பக்கங்கள் கொண்ட சிறுகதை(கள்) தரப்படும் ; 15 நாட்கள் அவகாசமும் வழங்கப்படும் ! ! பதிவு செய்ய விரும்பும் நண்பர்கள் ஒரு மின்னஞ்சலை தட்டி விடுங்களேன் !

ஞாயிறு காலை ஈரோடில் நமது ஸ்டாலில் உங்களை சந்திக்கும் ஆவலோடு ஆந்தை விழியார் ஆஜராகி இருப்பார் என்ற சேதியோடு கூடாரத்தை நாடி இப்போதைக்கு நடை பயில்கிறேன் ! Take care guys ! 

283 comments:

 1. Replies
  1. பதில்களை தயார் செய்வதற்கான முயற்சியில் முதலிடத்தை கோட்டை விட்டுவிட்டேன். வெறுமனே 'me the first' போன்ற கமெண்டுகளை, முதல் கமெண்ட் களாக கருதமாட்டோம் - இப்படிக்கு "வருத்தப்படாத வயோதிகர்கள் சங்கம்".

   Delete
  2. முதலிடம் பிடித்த நண்பர் விஜய்க்கு வாழ்த்துக்கள் ...

   முதல் இடம் பிடிக்க அவர் போட்ட துண்டை காணவில்லையாம், யார் எடுத்து இருந்தாலும் அவரிடம் திருப்பி கொடுத்து விடுங்கள் :)

   Delete
  3. @ Vijay - வாழ்த்துக்கள்.
   @ ப்ளுபெர்ரி - துண்டா...நான் பார்த்தது எனக்கு முன்னால் சென்ற ஒரு பூனைக்குட்டியைத்தான். பூனை குறுக்கே சென்றதால் சற்றே தாமதித்தேன்.

   Delete
 2. மீ தி பஸ்டு....இந்த பகுதி தயாராகும் போதே preview-ல் படிப்பதும் சுகமாகத்தான் இருந்தது...!

  => இப்போதைய trend-ஆன 'யார் ' மிகுதிக்கு இன்ஸ்பிரேசன் 'வெள்ளி முடியார்' தானே. இந்த புது trend -ஆல் நம் லக்கி சுட்டியின் ஆயுசு கெட்டி. இனி லக்கிக்கு "தனக்கு தானே போட்டியாகிகொண்ட ஒரு கௌபாய்" என்று tag-line போட்டு கொள்ளலாம்.

  => நம் ஈரோடு நண்பர்களின் ஆர்வம் என்னைப் போன்றவர்களுக்கு 'ஈரோடிலேயே இருப்பதான ஒரு உணர்வை தருகிறது. ஈரோடு - இனி என்றும் ஈர்ப்போடு. ( நீங்கள் அயோடெக்ஸ்-க்கு அலைகிறீர்கள்...நாங்கள் 'டெக்ஸ்'-க்கு அலைகிறோம்.)

  => NBS - Never Before Success என்று எண்ணிக்கொள்ளுங்கள். மேலும் வரும் ஜனவரி-2014-க்கு , உங்கள் கால் கட்டை விரலை advance புக் செய்துகொள்ளுங்களேன். நாங்களும் advance booking ஆட்டத்திற்கு தயாராகவே உள்ளோம்.

  => KBGD -யிலும் வழக்கம் போல நம்மவர்கள் அதகளம் செய்யப் போகிறார்கள்.

  => இன்னும் ஒரு 10 ஆண்டுகளில்...இரத்தபடலம் - 50 தொகுப்பு கேட்டு மன்றாட வேண்டியதுதானோ. (என்னதான் வர்ணங்களுக்கு மாறினாலும், எனக்கு ஏனோ இந்த கருப்பு + வெள்ளை பக்கங்களின் மீதான ஈர்ப்பு இன்னமும் விட்டுப் போய்விடவில்லை. என்னுடைய ஒட்டு b + w இதழ்களுக்கே. For me it gives some freedom to visualize. )

  => 'ஹாய் மதன்' போல 'ஹலோ வாசகர்களே' என்று ஒரு பகுதி ஆரம்பிக்கலாமே. அதில் கடிதவாசகர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள். வலைதள வாசகர்களுக்கும், கடிதவாசகர்களின் 'pulse' தெரிந்திடும்.

  => 'புரட்சித் தீ' என்னுடைய 'Ever Green Special '-ல் இடம்பெறும் ஒன்று. என் வசமுள்ள பிரதி சற்றே சிதிலமடைந்துள்ளது. எனவே மறு பதிப்பிற்கான மன்றாடல்களில் '+1' ப்ளீஸ். அதனுடன் 'பூம் பூம் படலம்'-மும் இணைந்து ஒரு லக்கி ஸ்பெஷல் எதிர் பார்க்கிறேன். சிக் பில் ஸ்பெஷலில் "தேவை ஒரு மொட்டை + இரும்புக் கௌபாய்" நலம். எனவே ஒரு "மறுபதிப்பு ஸ்பெஷல் +1" இன்றைய சுட்டிகளுக்கும், நேற்றைய சுட்டிகளுக்கும் வரும் 2014-சென்னை திருவிழாவிற்கு தயாராகிடும் தானே.

  * விடை பெறுங்கள் ஆந்தைவிழியாரே...இல்லையெனில் விழி வலியார் ஆகிவிடுவீர்கள்...ஏனெனில் இது நள்ளிரவு....நல் இரவு.

  ReplyDelete
  Replies
  1. 'ஹாய் மதன்' போல 'ஹலோ வாசகர்களே' என்று ஒரு பகுதி ஆரம்பிக்கலாமே. அதில் கடிதவாசகர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள். வலைதள வாசகர்களுக்கும், கடிதவாசகர்களின் 'pulse' தெரிந்திடும்.//

   இணையதள வாசகர்களின் கேள்விகளும், அதற்கான பதில்களும் அனைவருக்குமானவை. ஆனால் கடிதம் இரண்டு நபர்களுக்கு இடையேயானது. மிகவும் சிரமமான விஷயமே.. ஒவ்வொரு வாசகருமே உங்கள் பதிலை எதிர்நோக்கித்தான் காத்திருப்பார்கள். அவர்களை திருப்தி செய்வது கடினம். ஒரு பக்கம் அதற்காக ஒதுக்கி சிறந்த கருத்துகளை, கேள்விகளை மட்டும் தேர்ந்தெடுத்து நீங்கள் பதில் தந்தால் அனைவருக்கும் அது பொதுவாகும். அதோடு ப்ரிண்டில் தங்கள் பெயரைப் பார்க்கும் அந்த வாசகர்கள் மிகவும் மகிழ்வார்கள். ஆனால் சின்ன ஃபாண்ட் சைஸில் நிறைய பேருக்கு இடமளிக்கவேண்டும். ராஜவேலின் யோசனை ‘கடிதம்’ பகுதியிம் மேம்பட்ட வடிவமாக இருந்தாலும் அதை விட பெட்டராக ஒன்றும் தோன்றவில்லை.

   Delete
  2. இணையத்துக்க அப்பால் உள்ள வாசகர்களுக்கு இணையத்தை எப்படி உபயோகிப்பது என்பதை பற்றி எளிமையான குறிப்புகளை நமது இதழிகளில் வெளியிடலாம்.

   நமக்கு வெகு சுலபமானது என தோன்றுவது, கணினியை அதிகம் உபயோகிக்காத நண்பர்களுக்கு வெகு கடினமாக தோன்றலாம்.

   வெகு எளிய குறிப்புகள் வாயிலாக இணையவழிப்பயணத்துக்கான தொடக்கத்தை நாம் அவர்களுக்கு அளிக்கமுடியுமானால் WHO KNOWS?? அவர்கள், இங்கே பிரபலமாக பின்னூட்டமிடும் நண்பர்களை தூக்கி சாப்பிடும் நாள் வெகு தொலைவில் இல்லை எனும் காலம் விரைவில் வரலாம்.

   Delete
 3. என்னிடம் புரட்சித் தீ இல்லை. முன்பு வந்த அதே மொழிபெயர்ப்புடன் வந்தால், சூப்பர்

  ஆனால், இதற்காக சிக்-பில் ஸ்பெஷல்-ல் கை வைக்காமல், தனியாக வெளியிடவும். அறிவித்ததை விட அதிக புத்தகங்கள் வந்தால் மகிழ்ச்சியே :)

  ReplyDelete
 4. டியர் எடிட்டர்,

  NBS வரலாறாகிப் போனதற்கு வாழ்த்துக்கள்! சென்னை புத்தகத் திருவிழாவில் வாசகர்களை நோக்கித் தன் பயணத்தைத் துவங்கிய NBS, ஈரோடு புத்தகத் திருவிழாவில் பிரியாவிடை பெற்றிருக்கிறது. சந்தோஷமான விசயமென்றாலும், கூடவே இருந்த நண்பனொருவன் பிரிந்து சென்றுவிட்டதைப் போன்ற உணர்வு எழுவதையும் தவிர்க்க முடியவில்லை!

  ஈரோடு புத்தகத் திருவிழாவில் எங்களது பங்கு மிகக் குறைவு என்பதே உண்மை எனும்போது, நீங்களும் மற்ற நண்பர்களும் எங்களைப் பாராட்டு மழையில் நனையவைப்பது கொஞ்சம் அதிகப்படியாகத் தோன்றுவதோடு, சற்றே நெளியவும் வைக்கிறது!

  'புரட்சித் தீ'யுடன், 'ஜேன் இருக்க பயமேன்' அல்லது 'தாயில்லாமல் நானில்லை' அல்லது 'Billy the kid- part2'வை இணைத்து "லக்கி ஸ்பெஷல்-2" என்று வெளிவருவது சிறப்பாயிருக்குமென்று தோன்றுகிறது. அடுத்த வருட மறுபதிப்புகளில் இதைக் கொண்டு வரலாம். எனினும், இதைப் பற்றிய நண்பர்களின் கருத்துக்களைக் கேட்டறிய உங்களைப் போலவே நானும் ஆவலாயிருக்கிறேன்.

  கடிதமெழுதும் நண்பர்களின் ஆதங்கம் நியாயமானதே! யோசிப்போம்...

  KBT-3 க்கான 16 பக்கக் கதையை நேராக பெங்களூருவாசிகளுக்கு மட்டும் அனுப்பி வையுங்களேன்? கொரியர் செலவாவது மிச்சமாகுமில்லையா?;)

  ReplyDelete
  Replies
  1. KBT-3 க்கான 16 பக்கக் கதையை நேராக பெங்களூருவாசிகளுக்கு மட்டும் அனுப்பி வையுங்களேன்?//

   மண்ணைக் கவ்வ நான் தயாராகிக்கொண்டிருக்கும் போது என்ன பேச்சு இது விஜய்? வாங்க எனக்குக் கம்பெனி வேண்டாமா?

   Delete
  2. @ ஆதி
   // வாங்க எனக்குக் கம்பெனி வேண்டாமா? //

   பசித்தாலும், பூனைகள் மண்ணைத் திண்பதில்லை! :)

   Delete
  3. @ஆதி தாமிரா

   நீங்க தொடர்ச்சியா இந்த தளத்துல இயங்குறதப் பார்க்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு தல. இந்த தடவை உங்களோட சேர்ந்து நாங்களும் ஒரு கை போடுவோம்ல..:-))

   Delete
  4. வாங்க காபா, கை கோத்துக்கோங்க.. இது ஒரு தனி உலகம்! ஒண்ணா போலாம்.

   பை தி வே, இங்க தல, ’ஆந்தை விழியார்’ மட்டும்தான், மற்றெல்லோரும் அவரது சிறகுகள்தாம்! :-))))))

   Delete
 5. நமது இதழ்களில் முன்பு வாசகர் ஹாட்லைன் என்ற பகுதி இருந்தது,

  அதை மீண்டும் கொண்டு வந்து கடித வாசகர்களுக்கு புத்தகத்திலேயே பதிலளித்து விடலாமே சார்!

  ReplyDelete
 6. சார் ஒவ்வொரு தடவையும் நங்கள் எதிர்பர்க்கும் சங்கதியை மறந்து விட்டு சென்று விடுகிறர்கள்.

  ReplyDelete
 7. Aanthai vizhiyarai santhikka innum 3 natkal irukkirathu. Comics padippathum aanthai vizhiyarin pathivukalai padippathum nijamaga pre anupavamaga irukkirathu. Santha, mun panam ethuvum illamal vilaiyilla comics (aanthai vizhiyarin pathivugal)..
  Raththa padalam sithirangal migavum arumai. Aavalodu kaththirukkirom.. :-)
  Graphic design page dimentions sonnal vasathiyaga irukkum sir..
  Thank you for your updates..

  ReplyDelete
 8. ஈரோடு புத்தகத் திருவிழா (5th day)
  * கடந்த இரு நாட்களைவிடவும் மிக அதிகமாக இன்று பள்ளி/கல்லூரிகளின் கூட்டம் காலையில் துவக்க நேரத்திலிருந்தே ஆரம்பித்து, மாலை வரை மொத்த அரங்கமும் திக்குமுக்காடிப் போனது. நமது டைம்-டேபிளை வாங்கிட ஏக தள்ளு-முள்ளு; கூட்டத்தை சமாளிப்பதற்குள் எங்களுக்கு ஆங்ஞை வற்றிவிட்டது. ;)
  * சிவகாசியிலிருந்து இன்று அனுப்பட்டிருந்த 10 ரூபாய் இதழ்களை மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். கொஞ்சம் வசதிபடைத்த மாணவர்கள் சுட்டி-லக்கியை விரும்பி வாங்கினர். சிலர் சுட்டி-லக்கியின் விலையைக் கேட்டுவிட்டு அதிர்ச்சியில் உறைந்ததும் நடந்தது.
  * ஒரு மாணவர் கும்பல் ஆளுக்குக் கொஞ்சம் காசு போட்டு சுட்டி லக்கியை வாங்கிக்கொண்டு, யார் முதலில் படிப்பது என்ற விவாதத்துடன் நடையைக் கட்டினர்.
  * சில மாணவர்களுக்கு ஆர்ச்சியையும், இரும்புக்கை மாயாவியையும் தெரிந்திருந்தது!
  * பல மாணவர்கள் ஆங்கிலத்தில் காமிக்ஸ் ஏதும் இல்லையாவெனக் குறைபட்டுக்கொண்டனர்.
  * தந்தையுடன் வந்திருந்த மாணவன் ஒருவன் பத்து ரூபாய் இதழ்கள் அடங்கிய 217 ரூபாய் பண்டில்தான் வேண்டுமென்று அடம்பிடித்து வாங்கிச் சென்றது வினோதமாய் இருந்தது!
  * ஒரு மாணவன் 4 புத்தகங்களை எடுத்துவந்து என்னிடம் காட்டி அவை எந்தமாதிரியான கதையைக் கொண்டவை என்று கேட்டுத் தெரிந்து, பிறகு அதில் ஒன்றைத் தேர்வு செய்து வாங்கிச்சென்றான். அவன் வாங்கியது 'நிலவொளியில் ஒரு நரபலி'.
  * மாலையில், ஒரு மாணவன் நம் ஸ்டாலுக்குள் புகுந்து வெகுநேரமாகப் புத்தகங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்க, அவன் பெற்றோர் அமைதியாக அவனது நடவடிக்கையைக் கவனித்தபடியிருந்தனர். அவன் பெற்றோரிடம் நைஸாகப் பேச்சுக் கொடுத்ததில், அந்த மாணவன் நிறையப் புத்தகங்கள் படிக்கும் பழக்கமுள்ளவனாம்; சில நாட்களுக்கு முன்பு 'மாண்டவன் மீண்டான்' கதையை எதேச்சையாகப் படித்தவனுக்கு அது ரொம்பவே பிடித்துப்போய்விடவே, எனக்கு நிறைய காமிக்ஸ் வேண்டுமென்று சொல்லி பெற்றோரை புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து வந்தானாம். அவனே தேர்வு செய்த தங்கக் கல்லறை, மேற்கே ஒரு சுட்டிப் புயல் உட்பட ஐந்தாறு புத்தகங்களை வாங்கிக் கொண்டார் அவன் தந்தை! மாணவனை அழைத்துப் பாராட்டிவிட்டு, அவன் பெற்றோரிடம் காமிக்ஸ் படிப்பதால் ஏற்படும் நன்மைகளை விளக்கிக்கூறி, நமது காமிக்ஸ் ஈரோட்டில் எங்கு கிடைக்குமென்பதையும் சொன்னோம். ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால் தொடர்புகெள்ள 'ஈரோடு காமிக்ஸ் க்ளப்'பின் விசிட்டிங் கார்டையும் கொடுத்தனுப்பினோம்.
  * அந்தியூர், நாமக்கல், திருச்செங்கோடு, மேட்டூர் ஆகிய ஊர்களிலிருந்தும் இதுவரை நாம் சந்தித்திராத பல பழைய வாசகர்கள் வந்திருந்து தங்களிடம் இல்லாத புத்தகத்தை வாங்கிக்கொண்டு, சிறிது நேரம் தங்களது காமிக்ஸ் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, எடிட்டர் வருகைதரும் நாளன்று நிச்சயம் வருவதாக உறுதியளித்துச் சென்றனர்.
  * மற்றொரு நிறைவானதொரு நாள்!

  அன்புடன்

  விஜய்

  * நண்பர் விஜய் தான் கொடுத்த வாக்குப்படி பல சுட்டிகளுக்கு மிக குறைந்த பணத்தை பெற்றுக்கொண்டு தனது சார்பாக சுட்டி லக்கியை வாங்கிகொடுத்தார் . super....... vijai
  * விஜய் குறிப்பிட்ட அந்த குட்டிக்கு ஆக்ஸன் கதைகள் மட்டும் வேண்டுமாம். இன்னொரு சிறப்பு விஷயம் அவருக்கு பிடித்த படங்கள் எதுதெரியுமா? பழயகாலத்து ஜெய்சங்கர் படங்கள் ( CID யாக வருவதினால் ) இரண்டாவது எம்.ஜி.ஆர் படங்கள். இந்த படங்களைப் பற்றி கேள்விகேட்டால் பயல் குஷியாக பதிலளிக்கிறார். இவருக்கு பிடித்த நாயகன் இரும்புக்கை என்பதனை கேட்ட்கும்பொழுது இந்த சுட்டி இப்பொழுதே பழமைவிரும்பியாக உள்ளது ஆச்ச்ரியத்தை ஏற்படுத்துகிறது. வீடியோவில் பேசச்சொன்னால் அதெல்லாம் நான் பேச மாட்டேன் அதை எங்க அப்பா பாத்துக்குவார் என நழுவுகிறான். அவர்களின் பேட்டி இதோ... வருங்கால துப்பறியும் சுட்டிக்கு வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  ம.ஸ்டாலின்
  http://tamilcomicskadanthapaathai.blogspot.in/2013/08/5th-day-7-8-2013.html#comment-form

  ReplyDelete
  Replies
  1. //நண்பர் விஜய் தான் கொடுத்த வாக்குப்படி பல சுட்டிகளுக்கு மிக குறைந்த பணத்தை பெற்றுக்கொண்டு தனது சார்பாக சுட்டி லக்கியை வாங்கிகொடுத்தார் . super....... vijai//

   சூப்பர் விஜய்!அப்படி ஒரு பரிசு கொடுக்கும்போது ஒரு சின்ன பொது அறிவு கேள்விய கேட்டு அதுக்கு பரிசா இந்த புத்தகம்ன்னு கொடுங்க! THEN THESE YOUNG CHAPS WOULD START FEELING THAT THEY FULLY DESERVE TO GET THIS PRICE AND THEY WOULD TREASURE THIS GIFT FOR LIFE LONG!

   Delete
  2. விஸ்கி-சுஸ்கி @ Very good suggestion! I agree!!

   Delete
  3. @ விஸ்கி-சுஸ்கி

   அருமையான யோசனை! (எப்படிங்க இப்படியெல்லாம் தோணுது?). செயல்படுத்த முயற்சிக்கிறேன். கிட்டத்தட்ட இதேமாதிரியான வேறொரு ஐடியாவும் உங்கள் புண்ணியத்தில் உதித்திருக்கிறது. ;)

   Delete
  4. விஸ்கியின் யோசனை நன்று. ஒரு கேள்வியாக இல்லாமல், ஜிக்ஸா பஸில்ஸ் அல்லது பொது அறிவு/அறிவியல் விளையாட்டு போன்ற சிறு விசயங்களை ஸ்டாலில் வைத்து அதில் ஜெயிக்கும் குழந்தைகளுக்கு புத்தகப் பரிசு அளிக்கலாம்.

   ஆனால், இதற்கு அதிக புத்தகங்களும் அதற்கான ஸ்பான்ஸர்ஸும் தேவைப்படுவார்கள். ஆர்வமுள்ள நண்பர்கள் கைகோர்க்கலாமே!!

   Delete
  5. நண்பர்களே,
   மிகுந்த ஆர்வம் காட்டிய ஓரிரு மாணவர்களுக்கு நான் செய்த உதவி, நண்பர் ஸ்டாலினால் கொஞ்சம் ஓவராகவே இங்கு பில்ட்-அப் கொடுக்கப்பட்டிருக்கிறது.
   ஓவர் பில்ட்-அப்களைக் கண்டு ஏமாறவேண்டாம் என்று விழாக் குழுவின் சார்பாக காமிக்ஸ்வாழ் மக்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். :)

   Delete
  6. இதை நம்ம லயன் அலுவலகம் வாயிலாகவே ஆபீசியால்'லாக செய்தால் என்ன??

   எப்படியேன்றால், "சுட்டி லக்கி" புத்தகங்கள் 20 துக்கு ஆகும் தொகை ஆயிரம். அதை வழக்கமான சந்தா வங்கி கணக்கில் வரவு வைத்து அதன் மூலம் பெறப்படும் புத்தகங்களை புத்தக திருவிழாவுக்கு தனி பார்சலாக அனுப்ப ஒரு கோரிக்கை வைத்தால் அது நிச்சயம் சாத்தியப்படும். அரங்கில் உள்ள நம்ம நண்பர்கள் மிச்சத்த பாத்துக்கமாடாங்களா என்ன ???

   Delete
  7. உங்களுடைய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் விஜய். நண்பர் விஸ்கி-சுஸ்கியின் யோசனை மிக அருமை. வாங்கும் திறன் இல்லாத, ஆர்வம் மட்டுமே கொண்ட சுட்டிகளுக்கு நிச்சயமாக இத்தகைய புத்தகப் பரிசுகள் எதிர்வரும் காலங்களில் மிகபெரிய உந்து சக்தியை ஏற்படுத்தும்.

   Delete
  8. சிறுவயதில் என்னிடமிருந்த ரூ.2.50-க்கு 'சிறுபிள்ளை விளையாட்டு', 'மிஸ்டர் மர்மம்' மற்றும் 'மரண ராகம்' இதழ்களில் எதை தேர்ந்தெடுப்பது என்று திணறி, கடைசியில் 'சிறுபிள்ளை விளையாட்டை வாங்கினேன். மற்ற இரு இதழ்களை வாங்க நான் கிட்டத்தட்ட 30 நாட்கள் போராட வேண்டியிருந்தது ஞாபகத்திற்கு வருகிறது. ஆர்வமுள்ள சுட்டிகளுக்கு comics பரிசு, நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆனால் இது ஊர் கூடி தேர் இழுக்க வேண்டிய விசயமும் கூட. எதோ நம்மால் முடிந்தால் ஒரு 5-10 சுட்டிகளுக்கு மட்டுமே செய்யமுடியும். எனவே ஒரு 'காமிக்ஸ் plus' series-களை (aka மினி லயன்) சுட்டிகளை கருத்தில் கொண்டு, ஆசிரியர் முயற்சிக்க வேண்டுகிறேன்.

   Delete
 9. ஒரு இதழை படித்து முடித்தவுடனே மீண்டும் முதல் பக்கத்திற்கு தாவி மீண்டும் நான் படித்த இதழ் புரட்சித்தீ இதில் வரும் பதிப்பாளரின் நிலையும் இன்றய ஆசிரியரின் நிலையும் ஒன்றுதான். எப்படியேனும் இதழை கொண்டு வருவதில் படுதீவிரமாக உள்ளனர். இன்று இந்த புத்தகத்தின் ஓரங்களை கரயாண் தின்றுவிட்ட போதிலும் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். மீழ் ஆவலுடன் வரவேற்கிறேன் + பூம் பூம் படலத்துடன் ( லக்கி ஸ்பெஷல் -2 )

  ReplyDelete
 10. வரும் ஞயிறு அன்று நடைபெற உள்ள விளையாட்டு

  *முந்தியடித்து பின்னேதள்ளி ஆந்தைவிழியாரை அனுகும் விளையாட்டு
  *திக்கு முக்காட கேள்வி கேட்டு திணரடிக்கும் விளையாட்டு
  * மறுபதிவை மாற்றி மாற்றி கேட்டு மலைக்க வைக்கும் விளையாட்டு
  * இரும்புக் கம்பி யை எடுத்துக்காட்டி இரும்புகையை கேட்கும் விளையாட்டு
  * குண்டூசியால் குத்திக்குத்தி வண்ணத்தில் இரத்தம் (படலம் ) வரவழைத்தல்
  *ஆக்ஸன் கதைகளை மட்டும்அள்ளித்தந்திட கத்தியை வைத்து கழுத்தில் படம் வைரயும் விளையாட்டு ( இதற்கு விளம்பரதாரர் தாரமங்கலம் -பரணீதரன்)
  * மின்னும் மரணத்தை வண்ணத்தில் மின்ன வைக்க மின்னல் வேகத்தில் பறிக்கும் ( கழுத்து, கைகளில் உள்ளதை) விளையாட்டு
  * புதிய NBS கேட்டு அழுது அழுது ஆறாய் ஓட வைக்கும் அற்புத விளையாட்டு

  இன்(னல்)னும் பல விளையாட்டுக்கள் நடக்கும் இடம் : வா.உ.சி மைதானம் - ஈரோடு

  வாருங்கள் நண்பர்களே.... முந்தி வருபவர்களுக்கு மூன்று பவுன் சங்கலியும் அடுத்து வருபவருக்கு அரைப்பவுன் மோதிரமும் புனித சாத்தான் வழங்க உள்ளார்

  ReplyDelete
  Replies
  1. Stalin @
   // மின்னும் மரணத்தை வண்ணத்தில் மின்ன வைக்க மின்னல் வேகத்தில் பறிக்கும் ( கழுத்து, கைகளில் உள்ளதை) விளையாட்டு //
   யாரோட கழுத்துலன்னு சொன்னா வசதியா இருக்கும் :-)
   // *முந்தியடித்து பின்னேதள்ளி ஆந்தைவிழியாரை அனுகும் விளையாட்டு
   *திக்கு முக்காட கேள்வி கேட்டு திணரடிக்கும் விளையாட்டு
   * மறுபதிவை மாற்றி மாற்றி கேட்டு மலைக்க வைக்கும் விளையாட்டு
   * இரும்புக் கம்பி யை எடுத்துக்காட்டி இரும்புகையை கேட்கும் விளையாட்டு
   * குண்டூசியால் குத்திக்குத்தி வண்ணத்தில் இரத்தம் (படலம் ) வரவழைத்தல் //
   இந்த விளையாட்டுகளுக்கு தலைமை நம்ம எடிட்டர் :-)

   Delete
  2. விளையாட்டின் பொழுது நடை பெரும் நிகழ்வுகளை லைவ் கமெண்டரி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

   Delete
  3. அப்படியே அந்த நீளமான குச்சிய மறக்காம எடுத்து வைங்க விஜய்! நீங்க மறந்தாலும் நாங்க மறக்கமட்டோமுள்ள !! : ) : D

   Delete
  4. உங்க விளையாட்டு லிஸ்ட் படிக்கும் நம்மையே கலவரப்படுத்துகிறது. ஆந்தை விழியார் எஸ்கேப் ஆகிவிடப்போகிறார் ஜாக்கிரதை!

   :-))))))))))))

   Delete
  5. Parani from Bangalore,ஆதி தாமிரா: விளையாட்டை நடத்துவது மட்டும்தான் நாங்கள் அதற்கு பரிசு வாங்கிக்கொடுப்பது நீங்கள் தானே :)

   Delete
 11. டியர் விஜயன் சார்,

  //இப்போதைக்கு அவர் ஸ்காட்லாந்து கிளம்பியாச்சு ஒய்வு நாடி !//
  ஹப்பாடா...

  //உலகுக்கே பிடித்துள்ள இவர்களை நம்மில் பலருக்குப் பிடிக்காது போனதன் காரணம்//
  மேலை நாடுகளில் பூனை நம்பர் ஒன் செல்லப் பிராணி (நாய்களுக்கு இணையாக!)! இங்கேயோ அதை காமெடிக்காக பிரியாணி போடுவதோடு சரி! ;) பூனைகளின் குண இயல்புகள் பற்றி ஓரளவுக்கேனும் அறிந்திருப்பது இவ்வகை வேடிக்கை ஸ்ட்ரிப்களை ரசித்திட மிகவும் அவசியம் (அது ஒரு கர்வமான செல்லப் பிராணி, தனிமை விரும்பி, சொல் பேச்சு கேட்காது, etc. etc.). நம்மாலோ ஒரே ஒரு பூனையாரைக் கூட இன்னமும் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை! ;) நியூஸ் பேப்பரில் தினமும் பார்ப்பதால் Garfield-ஐ ஓரளவுக்கு ரசிக்கக் கற்றுள்ளேன் - ஆரம்பத்தில் எனக்கும் பிடிக்கவில்லைதான். செல்ல நாய்களைப் பற்றிய ஃபில்லர் கதைகளை வெளியிடுங்கள், நிச்சயம் ஹிட்டாகும்! குறைந்த பட்சம் Garfield-ஆவது தொடரலாமே?!

  //குமுதம் ரிப்போர்டர் ; ஜூனியர் விகடனி//-ல் விளம்பரம்:
  வாழ்த்துக்கள்! புதிய வாசகர்கள் இணைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது!

  //அதே பக்கத்தின் வண்ணக் கலவை தனியாக !! கலரிங் ஆர்டிஸ்டின் ஆசாத்திய உழைப்பைப் பாருங்களேன் !!//
  இரு பதிவுகளுக்கு முன்னர் இங்கே நடந்த சுவாரசியமான உரையாடல்களைத் தொடர்ந்து, கலரிங் ஆர்ட்டிஸ்ட்கள் மீதும் ஒளிவெள்ளம் பாய்வது மகிழ்ச்சி தருகிறது! நமது இதழ்களில் கதாசிரியர், ஓவியர் பெயர்களோடு முடிந்தால் இவர்கள் பெயர்களையும் இணைக்கலாமே?!

  //நமது இதழ்களில் இணையத்திற்கு அப்பாற்பட்ட நண்பர்களும் பங்கேற்கும் விதத்தில் புதிதாய் ஏதேனும் பகுதிகளை இணைப்பது பற்றி//
  இணைய நண்பர்களின் கருத்துக்கள் வாசகர் கடிதம் பகுதியில் வெளியாவதில்லை. கடித நண்பர்களின் கருத்துக்கள் இணையத்தில் வெளியாவதில்லை - அவ்வளவுதான் வித்தியாசம். இருந்தாலும் அவர்கள் வருத்தத்தைப் போக்க, அவர்கள் கடிதங்களை உங்கள் அலுவலர்கள் மூலம் compose செய்து அவர்கள் பெயர்களுடன் இங்கேயே பின்னூட்டமாக இடலாம் (ஒரு தனி Google ID வாயிலாக!). அவர்கள் கருத்துகளையும் நாங்கள் அறிந்தது போல இருக்கும், நீங்களும் அவர்களுக்கு பதிலளிக்க வசதியாக இருக்கும். தேவைபட்டால் அவைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கேள்வி பதில்களை "சிங்கத்தின் சிறு வலையில்" பகுதியில் இணைக்கலாம்.

  //1 சிக் பில் reprint+ "புரட்சித் தீ " வெளியிட்டால் ஒ.கே.வாக இருக்குமென்று தோன்றுகிறதா?//
  தோன்றவில்லை!

  //"KAUN BANEGA TRANSLATOR - சீசன் 3" வெகு விரைவில் !//
  'இணையத்திற்கு அப்பாற்பட்ட வாசகர்கள்' தாங்கள் அன்னியமாகப் பார்க்கப்படுவதாய் வருந்துவதாக எழுதி இருக்கிறீர்கள். அடுத்த போட்டிக்கான அறிவிப்பு இணையத்தில் இணையாத நண்பர்களும் இணைந்து கொள்ளும் வாய்ப்போடு ஆகஸ்ட் இதழில் வெளியாகும் என்றும் சில பதிவுகளுக்கு முன்னர் சொல்லி இருந்தீர்கள். வெகு விரைவில் என்பது செப்டம்பர் இதழில் என்றால் ஏதும் பிரச்சினை இல்லை! மாறாக இங்கேயே அறிவிக்கப்பட்டால் அது கடித வாசகர்களின் வருத்தத்தை மேலும் அதிகரிக்கக் கூடும்!

  //பதிவு செய்ய விரும்பும் நண்பர்கள் ஒரு மின்னஞ்சலை தட்டி விடுங்களேன் !//
  செப்டம்பர் இதழில் இதற்கான அறிவிப்பு வந்த பின்னர் போட்டிக்கான விண்ணப்பங்களை வரவேற்பதே சரியாக இருக்கும் என்பது என் கருத்து!

  //போட்டியினில் முழுமையாகக் கலந்திடல் அவசியம் ! No போங்கு ஆட்டம் please !//
  போங்கு ஆட்டம்?!!! போட்டி என்றால் அதற்கு பரிசு என்று எதுவும் இல்லையா சார்?! உங்களிடம் இருக்கும் காமிக்ஸ் கலெக்ஷனில் அரிய புத்தகம் ஒன்றையோ அல்லது குறைந்த பட்சம் ஒரு டைம் டேபிளையோ பரிசாக அனுப்பி வைக்கலாமே?! ;) பழைய இதழ்களில் எந்த இதழை பரிசாக அறிவிக்கப் போகிறீர்கள் என்பதை சீக்கிரம் அறிவித்தீர்களானால் போட்டிக்கான பங்கேற்புகளும் களைகட்டி விடும். என்னுடைய சாய்ஸ் முத்து காமிக்ஸ் முதல் இதழ்! :)

  //இம்முறை 16 பக்கங்கள் கொண்ட சிறுகதை(கள்) தரப்படும்//
  சிறுகதைகள்?!!! முதலாவது கதையை ஒருவரும், இரண்டாவது கதையை இன்னொருவரும் சூப்பராக மொழிபெயர்த்திருந்தால் குழப்பம் நேருமே?! இது டூ இன் ஒன் KBT-யா?! இதற்கு பதிலாக 48 பக்க முழுக்கதையை வேண்டுமானால் முயற்சித்துப் பார்க்கலாம் - ஆனால், பெரும்பாலான வாசகர்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது! எனவே நீங்கள் ரஸ்க் சாப்பிட வேண்டாம்! :)

  ReplyDelete
  Replies
  1. Karthik Somalinga @ // செப்டம்பர் இதழில் இதற்கான அறிவிப்பு வந்த பின்னர் போட்டிக்கான விண்ணப்பங்களை வரவேற்பதே சரியாக இருக்கும் என்பது என் கருத்து! //

   Thats the way to go! Please consider this.

   Delete

  2. // போட்டி என்றால் அதற்கு பரிசு என்று எதுவும் இல்லையா சார்?!//
   அதானே....!

   //பழைய இதழ்களில் எந்த இதழை பரிசாக அறிவிக்கப் போகிறீர்கள் என்பதை சீக்கிரம் அறிவித்தீர்களானால் போட்டிக்கான பங்கேற்புகளும் களைகட்டி விடும்.//

   அருமையான ஐடியா ! I SECOND IT

   // என்னுடைய சாய்ஸ் முத்து காமிக்ஸ் முதல் இதழ்! :)// SLURPPPPPP....

   Delete
  3. நண்பர் கார்த்திக்

   உங்களது புதிய ஸ்பைடர் போஸ்டர் ஆபீஸ் நெட்வொர்க் பிளாக் செய்வதால் பார்க்க முடியவில்லை. முடிந்தால் tiruppurblueberry@gmail.com க்கு ஒரு மெயிலில் அட்டச்மெண்ட் செய்து அனுப்பிடுங்களேன்.

   Delete
  4. @திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன்:
   //உங்களது புதிய ஸ்பைடர் போஸ்டர் ஆபீஸ் நெட்வொர்க் பிளாக் செய்வதால் பார்க்க முடியவில்லை//
   நண்பரே, அது ஃபேஸ்புக் லிங்க் என்பதால் தெரியவில்லை என நினைக்கிறேன். இந்த இணைப்பில் தெரியும்:

   http://2.bp.blogspot.com/-bUjCPYGCYys/UgNfUEglvmI/AAAAAAAACeE/F0z08CBahRw/s1600/Spider-Banner.jpg

   மின்னஞ்சலும் செய்கிறேன்!

   Delete
  5. நண்பர் கார்த்திக்,

   கலக்கறீங்க போங்க ... போஸ்டர் அருமையாக உள்ளது.

   ஸ்பைடர் ரசிகர்கள் நிச்சயம் சந்தோசப்பட்டிருப்பார்கள்.


   Delete
  6. @ Friends : ஏற்கனவே அறிவித்திருந்தபடி - இந்தப் போட்டி வலை + வலைக்கு அப்பால் உள்ள நண்பர்கள் என அனைவருக்குமே ஓபன் ! இதற்கான அறிவிப்பு செப்டம்பர் இதழில் ரெடியாக உள்ளது !

   Delete
  7. Karthik Somalinga ://மேலை நாடுகளில் பூனை நம்பர் ஒன் செல்லப் பிராணி (நாய்களுக்கு இணையாக!)!//

   வீட்டில் ஒன்றுக்கு, மூன்றாக பூனை வளர்த்த அனுபவம் உள்ளதால், அடியேன் அந்த மியாவ் ஜாதியின் தீவிர ரசிகன் !

   Anyways இதழுக்குள் ஒட்டு மொத்தமாய்ப் பூனைகளாய் உலவுவது நண்பர்களுக்கு சலிப்பை எற்படுத்திடக் கூடும் என்பதால் அவற்றைப் பிரித்துப் பிரித்து இனி ஆஜராக்குவோம் !

   Delete
  8. பூனை addiction ல் முன்னோடியாக உள்ள மேலை நாடுகளில் - அதன்மீதுள்ள அதீத ஈடுபாடுள்ளவர்களைக் குறித்த ஜோக்குகளும் சகஜமாகிவிட்டது. So ஜாக்கிறதை!

   Btw, வீட்டில் பூனைகளை வளர்த்த அனுபவமுள்ளவர்களுக்கு அதனுடன் ஏற்படும் அன்யோன்யம் விசித்திரமானது! பூனையின் movements, different poses மற்றும் குட்டிப்பூனைகளின் curiosity are really addictive!

   Delete
 12. விஜயன் சார், என்னிடம் புரட்சித் தீ இல்லை. ஆனால் படித்து இருக்கிறேன்.
  "போங்கு ஆட்டம்" அப்படினா என்ன என்பது நிறைய பேருக்கு தெரியாது! உங்களுக்கு மட்டும் தான் தெரியும் என பேசிகிறாங்க :-)

  ReplyDelete
 13. 1. இன்னமும் "மின்னும் மரணத்திற்கு" புக்கிங் ஆரம்பிக்காமல் இருப்பது மன சிலேஷத்தை ஏற்படுத்துகிறது.. அடுத்த வருடம் இரண்டு குண்டு & 2014 புது வெளியடான மினி லயன் என்ற நம்பிக்கையில் சுமார் மூஞ்சியார்..

  2.ஸ்டீல் பாடியார் எங்கள் விழியார் ரத்தம் சிந்த வைத்துவிட்டார்.. (அடுத்த அல்பம்s நிஜமாகவே நன்றாக இருந்தால் நமது 2014 புது வெளியடான மினி லயனில் போடலாம் )

  3. ஹீட்ளிப், கார்பில்ட் எல்லாம் தினமும் பேப்பர்ல பாக்கறோம், வேனும்னா நம்ம 2014 புது வெளியிடான மினி லயனில் பில்லர் ஆக use பண்ணலாம். லக்கி லுக் சிறு கதைகளா ? சார் சொல்லவே இல்ல.. அதையும் நாம 2104 புது வெளியிடான மினி லயனுக்கு (மெயின் ஸ்டோரி ஆக) வச்சுக்கலாம்..

  4. ரிப்போர்டர் & ஜூவியா? என்ன சார், குமுதம் or ஆனந்தா விகடன்ல போடுங்க சார், வசிய மோதிரம், கோமாதா பூஜை எல்லாம் முழுபக்கத்தில் வண்ணத்தில் வருது ஆனந்தா விகடன்ல, நம்ம பண்ண முடியாதா சார்... ( I understand the liability, but ஒரு ஆதங்கம்). இது onetime விளம்பரமா இல்ல regularஆ ? @கார்த்திக் சோமலிங்கா ரெடியா?

  5. ஏனோ ரத்த படலம் புது கதை படிக்க வேண்டும் என்று ஆவல் பீறிட வில்லை. Maybe சேத்து வச்சு ஒரு 5-6 வருடத்திற்கு பின் "ர-ப கலர் குண்டு - பார்ட் 2" ஆக வெளியிடலாம் (அதற்குள் "ர-ப கலர் குண்டு - பார்ட் 1" வெளிவந்து பலகாலம் ஆகியிருக்குமல்லவா ?)

  6. மேற்கிலிருந்து ம. ராஜவேல்இன் ஹாய் மதன் போல ஹாய் Mr.விஜயன் சூப்பர் ஐடியா...

  7.புரட்சித் தீ "லக்கி ஸ்பெஷல்-2" இல் வருவது தான் நல்லது...

  8."KAUN BANEGA TRANSLATOR - சீசன் 3" @ ஈரோடு விஜய், அப்போ பெங்களூருவாசிகள் எல்லாம் வேலை இல்லாமல் இருக்கோம்னு சூட்சகமா சொல்லரிங்களா ? நான் ஏற்கனவே translation பணிகளை ஆரம்பித்துவிட்டேன்... (அதாவது பொன்னியின் செல்வன்/குண்டலகேசி புக்இல் நோட்ஸ் எடுக்க...)

  ReplyDelete
  Replies
  1. 4. ரிப்போர்டர் & ஜூவியா? என்ன சார், குமுதம் or ஆனந்தா விகடன்ல போடுங்க சார், வசிய மோதிரம், கோமாதா பூஜை எல்லாம் முழுபக்கத்தில் வண்ணத்தில் வருது ஆனந்தா விகடன்ல, நம்ம பண்ண முடியாதா சார்... ( I understand the liability, but ஒரு ஆதங்கம்).

   Please Consider it sir..

   Delete
  2. //புரட்சித் தீ "லக்கி ஸ்பெஷல்-2" இல் வருவது தான் நல்லது...//

   சூப்பர் கருத்து சூப்பர் விஜய் :)

   Delete
  3. @ Sathya: திரும்ப திரும்ப சொன்னா, எடிட்டர் ஒரு வேளை நாமதான் சொல்லிருப்போமோனு நினைச்சு மினி லயன் அரம்பிப்பாரோன்னு ஒரு நற்பாசை தான்..

   Sunshine மறுபதிப்புகளுக்கு மட்டும் இருந்ததால் நல்லது தானே

   Delete
  4. சூப்பர் விஜய் : //ரிப்போர்டர் & ஜூவியா? என்ன சார், குமுதம் or ஆனந்தா விகடன்ல போடுங்க சார், வசிய மோதிரம், கோமாதா பூஜை எல்லாம் முழுபக்கத்தில் வண்ணத்தில் வருது ஆனந்தா விகடன்ல, நம்ம பண்ண முடியாதா சார்... //

   ஆசையும், ஆர்வமும், பேங்க் பாலன்சைப் பார்க்க நேரிடும் போது - சமயோசிதத்துக்கும், சப்பைக்கட்டுக்கும் வழி விடும் மர்மம் தான் என்னவோ ?

   Delete
 14. விஜயன் சார், வாசகர் கடிதத்தில் உள்ள கேள்விகளை மட்டும் தனியாக எடுத்து கேள்வி பதில் பகுதி ஆரம்பிக்கலாம்... ஆந்தை கண்ணாரிடம் கேள்ளும்கள் (அல்லது) கொட்டாவி சிங்கம். அடிக்க வராதிங்க :-)

  ReplyDelete
  Replies
  1. //மேற்கிலிருந்து ம. ராஜவேல்இன் ஹாய் மதன் போல ஹாய் Mr.விஜயன் சூப்பர் ஐடியா..//

   //விஜயன் சார், வாசகர் கடிதத்தில் உள்ள கேள்விகளை மட்டும் தனியாக எடுத்து கேள்வி பதில் பகுதி ஆரம்பிக்கலாம்...//

   +1

   Delete
  2. @ friends : ஸ்பைடர் & மாயாவி மறுபதிப்புகளுக்குப் பதில் சொல்லியே 'ஹாய் விஜயன் ' - 'bye விஜயன் ' ஆகிடும் வாய்ப்புகளே அதிகம் :-)

   Delete
  3. Offline readers still love the yesteryear (today and forever) legends....

   Delete
 15. சில கதைகளின் தோல்விகள் ஏன் ? ஓர் அலசல் : ஸ்டீல் பாடி ஷெர்லாக் ஹோம்ஸ் !

  ஸ்டீல் பாடியார் ஓய்வு நாடி ஸ்காட்லாந்து கிளம்பி விட்டது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. எனக்கு இந்த தொடர் மிகவும் பிடித்திருந்தது. இப்படி நான் சொல்வதால்; சிலர் ''இவர் என்ன பாஸா இல்லை லூஸா'' என்ற டயலாக்கை வாசகன் இடத்தில் வைத்து என்னை நக்கலாக பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் :)

  நீங்கள் இங்கு கூறுவது போல மதியில்லா மந்திரியும் தொடர்ந்து filler page ஆக வருமானால்; அதுவும் கதையோ அல்லது உற்சாக மிகுதியில் கதைக்களத்தை விட்டு விலகிய மொழிபெயர்ப்போ சுவாரசியத்தை தராமல் போய்விடுமானால் அதுவும் நம் ரசனையின் வரவேற்பை கண்டிப்பாக இழந்து விடும். அதனால் ஸ்டீல் பாடியாரின் தோல்வியின் தன்மைகளை அலசி ஆராய்வதே சிறந்த வழியாகும். ஏனெனில் ஸ்டீல் பாடி என்னை பொறுத்தவரை வித்தியாசமான நகைச்சுவை உணர்வை கொண்டுள்ளது; இக்கதைகளின் மூலம் சில அரிய விஷயங்களின் அறிவையும் விளையாட்டாய் பெற்றுவிட்டோம்; ஃபில்லர் பேஜுக்கு இதைவிட வேறு அதிகம் தேவையில்லை அல்லவா ?

  முதல் காரணம்: முன் பின் முரணான வெளியீடு..? தடகளத்தில் ஒரு அதகளம் + கூலியில்லா கைக்கூலி ALL NEW ஸ்பெஷலில் வந்திருக்கலாம்; கூலியில்லா கைக்கூலி மூலம் நிச்சயம் ஒரு வெற்றியை இரண்டு கதைகளும் ஈட்டியிருக்கும் !

  இரண்டாவது காரணம்: தொடர்ந்து filler page ஆக வரும்போது எந்த கதை தொடரும், சலிப்பின் எல்லையை அருகில் சென்று ஆராய ஆரம்பிக்கும் !

  மூன்றாவது காரணம்: கதைக்களம், அதன் காலக்கட்டம் ஆகியவற்றை விலகி நிற்கும் மொழிபெயர்ப்பு..? உதாரணமாக ஜெல்லிபிஷ் மண்டையா? இதுபோன்ற தமிழ் சினிமாவின் ட்ரேட் மார்க் வசனங்கள். இந்த வசனங்களில் நாம் ஊடுருவும் போது திடிரென ஒரு கவுண்டமணியோ அல்லது கைப்புள்ள வடிவேலுவோ வந்து நம் கண்முன் நின்று விடுவார்கள். எனவே கதைக்களத்திற்கும் அதன் காலக்கட்டத்திற்கும் பொருத்தமான வசனங்கள் நாம் கதையோடு ஒன்றிட வழிவகுக்கும் !

  காமிக்ஸ் என்பது யாதெனில் முன்னட்டையில் நாம் போகும் ஊரின் பெயர் பார்த்து: அதன் சித்திரங்கள் எனும் வாசல் வழியே நுழைந்து; நிகழ்காலம் மறந்து போய்விட்ட கற்பனையில்; கதானாயகனோடும் கதைகளத்தோடும் நாமும் பயணித்து; அதன் காலக்கட்டத்தில் கொஞ்சநேரம் வாழ்ந்திருப்பதே அதன் வெற்றி என்பது என் கருத்து !

  ReplyDelete
  Replies
  1. @ மி.மரமண்டை

   //காமிக்ஸ் என்பது யாதெனில் //
   ரசிக்க வைத்திடும் விளக்கம்!

   Delete
  2. மிஸ்டர் மரமண்டை //ஒரு parody ; நையாண்டி ரகக் கதை எனும் போதே - 'எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள் ; இது ஜாலியான கலாய்ப்பு' என்று அதன் ஆசிரியரே சொல்லாமல் சொல்லி விடுகிறார் ! So - இந்தக் கதைக்கான களம் ; அதற்கான mood ; மொழிபெயர்ப்பு மரபுகள் என்றெல்லாம் தலையைப் பிய்த்துக் கொள்வது அவசியம் ஆகாது என்பது எனது கருத்து !

   சிக் பில் ; லக்கி லூக் கதைகளைப் போலொரு natural background அமைத்த பின்னே, கதையினில் ; நிகழ்வுகளில் ; சம்பாஷணைகளில் காமெடி பின்னப்படும் போது மேற்சொன்ன அத்தனையும் நிச்சயம் தேவை !

   Delete
 16. இந்த profile pictureக்கு வசனம் தேவையில்லைதானே? :(

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY @ profile-la தேவை இல்ல :-)

   Delete
  2. பூவ்வ்வ்... ம்மியாவ்...
   இன்னிக்கு காலையில் ஸ்காட்லாந்துக்குப் புறப்படும் ஸ்டீல் பாடியாரோடு நானும் கிளம்பறேன். பை!பை!

   'வந்தா(பூனையா)ரை வாழ வைக்கும் தமிழகம்'னு சொன்னாங்க! நம்ம்ம்பி வந்தேனே...இப்புடி நடுரோட்டில் நிக்க வச்சுட்டாங்களே...

   உங்க வீடுகள்ல பூனைய வளர்த்து கொஞ்சம் பிரியமா இருக்கக் கத்துக்கோங்க! நான் மீண்டும் வருவேன். என்றாவது ஒரு நாள் இந்தியாவே
   பூனைகளின் ராஜியமாகிடும். அதுவரை...
   விளைந்த வயல்களில் கொழுத்த எலிகள் துள்ளி விளையாடட்டும்!

   Delete
  3. பூவ்வ்வ்... ம்மியாவ். @ ஸ்காட்லாந்துக்கு போக ஈரோடுல இருந்து புதுசா டைரக்ட் பஸ் விட்டு இருக்காங்க. அப்படி இல்லேன்னா கடலூர் பக்கம் ஷார்ட் கட்ல போக போட் சர்வீஸ் இருக்காம். பார்த்து போய் வாங்க.

   Delete
  4. Erode VIJAY : மேயாவ்வ்...மியாவ்...முயாவ்...!

   Google catliteration-ன் மொழிபெயர்ப்பின்படி "மூட்டையை கட்டி இருப்பது ஒல்லிப் பிச்சான் ஸ்டீல் மாத்திரமே ; நாங்கள் அல்ல!" என்று பொருளாம் !

   Delete
 17. //இப்போதைக்கு அவர் ஸ்காட்லாந்து கிளம்பியாச்சு ஒய்வு நாடி !//

  தப்பிச்சேன்டா சாமி ! :-) அப்படியே விட்டுடுங்க நிரந்தர ஓய்விலே இருக்கட்டும். :-)
  அப்படியே இந்த மியாவியும் கோட்டாவிலேயே இருக்கட்டும்.

  //கொஞ்ச காலத்திற்கு filler pages பொறுப்புகளைப் பகிர்ந்திடப் போவது மந்திரியாரும், லக்கி லூக்கின் சிறுகதை கலெக்ஷனுமே ! //

  சூப்பர் ! முழுமனதோடு வரவேற்கிறேன். அதிலும் லக்கி லூக் சிறுகதைகள் என் நீண்டநாள் ஆசை நிறைவேறப்போவது என்னைப்பொருத்தவரையில் திருப்தியே.

  மேலும், நண்பர்கள் ஈரோடு ஸ்டாலின் மற்றும் விஜய் ஆகியோரின் புத்தக திருவிழா தினசரி அப்டேட் அருமை.

  ReplyDelete
 18. // 'சரி - NBS காலி ; what next ?' என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது தான் !! பொறுமை ப்ளீஸ் !!
  //

  Hmmm....interesting : ) : )


  //அவற்றில் நிஜமான தரம் இருப்பின், ஸ்டீல் பாடியார் மறு பிரவேசம் செய்வார் ! இப்போதைக்கு அவர் ஸ்காட்லாந்து கிளம்பியாச்சு ஒய்வு நாடி !
  //

  ஸ்டீல் பாடியாருக்கு இன்னமும் கொஞ்சம் அவகாசம் கொடுத்திருக்கலாமோன்னு தோணுது. BUT NOT A BAD DECISION EITHER!

  //ஆச்சர்யமூட்டும் விதத்தில் GARFIELD & HEATHCLIFF நிறையப் பேரைக் கவரவில்லை !! //

  அடிப்படையில் அதிரடி ஆர்பாட விரும்பிகளாகவே நம்மில் பலர் இருக்கிறோம். ஒரு கிரிக்கெட் கிரௌண்டில் உள்ள ஆர்பாட்டதியா பாருங்கள் அதே வேலையில் ஒரு டென்னிஸ் கிரௌண்டில் உள்ள மௌன்னதை பாருங்கள்.ஹ்ம்ம்ம்.... SILENT ஹுமேர்ருக்கும் நமக்கும் ரொம்ப தூரம். இருந்தாலும் அவற்றுள் தி பெஸ்ட் அவ்வப்போது வருமாறு ஏற்பாடு செய்யுங்களேன்.

  //"Kaun Banega Graphic Designer " இன்னமும் தொடரவிருக்கிறது //

  எங்க மேல் பெரு நம்பிக்கை வச்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சார். அப்படியே அந்த விளம்பரங்களுக்கான LENGTH -BREADTH,RESOLUTION அளவுகள் கொடுத்துட்டீங்கன்ன இன்னமும் வசதியா இருக்கும். B & W ஒரு LETTING DOWN. கனவுகள் கருப்பு வெள்ளையிலேயே வருவதால் அதை வேண்டாமுன்னா சொல்றோம் ???

  // இரத்தப் படலம் பாகம் 21-// WOW !


  //வலைத்தள விசுவாசிகளின் குரல்களுக்கே முக்கியத்துவம் தருவது நடைமுறையாகி வருகிறது ; எங்களின் அபிப்ராயங்களுக்கு மதிப்பிலாது போகின்றது' என்பதே //

  கசப்பான உண்மை. அவர்கள் தங்களை UPDATE செய்யாதவரை பிரச்னையே. இன்னமும் ஒரு பத்து பதினஞ்சு ஆண்டுகள் போன இந்த பிரச்னை இருக்காது. இது ஒரு TRANSITION நேரம்.இப்போது நடைமுறையில் உள்ள "சிங்கத்தின் சிறு வயதில்" மற்றும் "வாசகர் கடிதம்" இந்த இடைவெளியை சரியான விகிதத்தில் குறைகிறது எனபது எனது கருத்து.


  //KAUN BANEGA TRANSLATOR - சீசன் 3//

  சூப்பர்! அப்படியே போட்டி அறிவிப்புகளுக்கு ஒரு சின்ன பரிசு பற்றிய அறிவிப்பும் இருந்தா நண்பர்களின் உற்சாகம் இன்னமும் அதிகம் ஆகும். : ) : )

  ReplyDelete
  Replies
  1. விஸ்கி-சுஸ்கி : //KAUN BANEGA TRANSLATOR - சீசன் 3//

   சூப்பர்! அப்படியே போட்டி அறிவிப்புகளுக்கு ஒரு சின்ன பரிசு பற்றிய அறிவிப்பும் இருந்தா நண்பர்களின் உற்சாகம் இன்னமும் அதிகம் ஆகும். : ) : )//

   செய்தால் போச்சு !!

   Delete
 19. விஜயன் சார், லக்கி லுக் மற்றும் சிக் பில் கதைகள் தொடர்ந்து வெளிவருவதை பார்த்தால்... கடந்த சில மாதம்களாக நமது காமிக்ஸ் சிறுவர்/சிறுமியர்களை நமது காமிக்ஸ்க்கு கொண்டுவரும் பாதையில் செல்வதை நினைத்து சந்தோசமாக உள்ளது. Really good move.

  ReplyDelete
 20. //இந்த இருவாரத் திருவிழாவை தம் வீட்டு விசேஷமாய்ப் பாவித்து அசாத்தியங்களை நடத்திக் காட்டும் நமது ஈரோடு நண்பர்கள் படையும் சரி//

  அவர்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும்.போக முடியாத குறையை தினசரி பதிவுகள் மெல்லாம் தீர்த்து வைக்கிறார்கள்.

  //இப்போதைக்கு அவர் ஸ்காட்லாந்து கிளம்பியாச்சு ஒய்வு நாடி !//

  என்னவோ தெரியவில்லை இக்கதைகளிள் ஈர்ப்பு குறைவாக உள்ளதாக தோன்றுகிறது.

  சார் அப்போ அறிவித்த படி இவ்வருடம் இரத்தப்படலம் 20 & 21 சேர்ந்து வருகிறதா?
  கதையின் போக்கு நன்றாக உள்ளதா.

  இவை தவிர கதாபாத்திரங்களுக்கு என்று தனிக்கதைகள் வந்ததை முயற்சி செய்து பார்கலாமா சார்?

  // ஸ்பெஷலில் 1 சிக் பில் reprint+ "புரட்சித் தீ "//

  கண்டிப்பாக வேண்டாம் சார்.சிக்பிள்ளிடம் கை வைக்க வேண்டாம்.
  தனியாக மற்றொரு லக்கி ஸ்பெசலாக வெளியிடுங்கள்.
  கண்டிப்பாக இருப்பதில் மாற்றம் வேண்டும் யெற்றால் ஜானி ஸ்பெசலை சிறுது delay செய்துவிட்டு இதனை வெளியிடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. // ஜானி ஸ்பெசலை சிறுது delay செய்துவிட்டு இதனை வெளியிடுங்கள்.//
   disagree with this!

   Delete
  2. ஜி கண்டிப்பாக இருப்பதில் மாற்றம் வேண்டும் என்றால் மட்டுமே இந்த கருத்து.
   கண்டிப்பாக எனக்கும் ஜானி வேண்டும்.ஜானி அல்லது லக்கி என்று வரும் பொழுது எனது ஓட்டு லக்கிக்கு செல்கிறது அதனையே நான் குறிப்பிட்டுள்ளேன்.

   Delete
  3. கிருஷ்ணா வ வெ @
   3 கதைகள் சேர்ந்து ஒரே புத்தகமா வரபோகுது என நினைகிறேன்! அதனால மற்ற கதைகள் மாற்றம் இல்லாமல் வரும். வரணும் இல்ல அழுது விடுவேன் :-(

   Delete
  4. கிருஷ்ணா வ வெ : //இவை தவிர XIII கதாபாத்திரங்களுக்கு என்று தனிக்கதைகள் வந்ததை முயற்சி செய்து பார்கலாமா சார்?//

   XIII -ன் மீதே துவக்கத்தில் இருந்த ஈர்ப்பு பாகம் 12-க்குப் பின்னே குறைந்து விட்ட நிலையில், துணைப் பாத்திரங்களைக் கொண்டு பின்னப்பட்ட இந்த spinoff ரகக் கதைகள் அதி தீவிர XIII ரசிகர்களைத் தாண்டி எவருக்கும் ரசிக்காது என்றே நினைக்கத் தோன்றுகிறது !

   Delete
  5. /// ஜானி ஸ்பெசலை சிறுது delay செய்துவிட்டு இதனை வெளியிடுங்கள். ///

   No, dont touch Johny special - Looking forward more than Lucky Luke Special

   Here,
   Reporter Johny Fan Club
   USA

   Delete
 21. "puratchi thee "ennidam innamum puthiyai ulladhu. Maru padipu idungal.but chik bill il kai waika wayndaam sir.
  Filler pagil punaiyaargalai stop waithathil mikka magilchi.miyavium engaluku wayndaam.
  NBS ku padilaga udanadiyaga oru 500 roobai vilaiyil arivippu veli idavum.

  ReplyDelete
 22. என்னுடைய புராதன கோரிக்கையான '' புரட்சித்தீ '' தற்போதாவது நிறைவேறவுள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சி......புத்தகம் என்னிடம் இல்லை.....எனினும் கதை நன்றாக நினைவிருக்கிறது [ அநீதிக்கு எதிரான பத்திரிக்கையின் போராட்டம்....அதற்கு லக்கிலூக்கின் ஆதரவு ]

  எனினும் சிக்பில் இதழோடு சேர்ப்பதை விட , இன்னொரு லக்கி லூக்கின் சாகசத்தோடு சேர்த்து லக்கிலூக் ஸ்பெஷல் - 2 ஆக வெளியிடலாம்.....

  இது நெட்டைக்கொக்கார் -ன் பணிவான கோரிக்கை [ பெயர்க்காரணத்தை ஈரோட்டு நண்பர்கள் வரும் ஞாயிறன்று அறியலாம் .......]

  ReplyDelete
 23. // ஞாயிறு காலை ஈரோடில் நமது ஸ்டாலில் உங்களை சந்திக்கும் ஆவலோடு //

  சார் ... ஞாயிறு மாலை தங்கள் தரிசனம் கிடைக்குமா? காரணம் என்னால் மாலை தான் கலந்துகொள்ள முடியும்.......

  ReplyDelete
  Replies
  1. சிவ.சரவணக்குமார் : நிச்சயம் இருப்பேன் சார் ! 'தரிசனம்' தரும் ரேஞ்சுக்கு அடியேன் சுவாமி விஜயானந்தா ஆகிடவில்லையே !!

   Delete
 24. நண்பர்களே, ஹாட்லைனில் நம்ப வாத்தியார் +6 வரிசையில் அடுத்த மாதமும் ஒரு காமெடி ஹீரோ கதை, நமது காமிக்ஸ்க்கு புதியவர் என குறிப்பிட்டு உள்ளார். யாராவது அது யார் என யூகிக்க முடிந்ததா?

  ReplyDelete
  Replies
  1. விஜயன் சார், முடிந்தால் அந்த காமெடி ஹீரோ பெயரின் முதல் மற்றும் கடைசி எழுத்தை தவிர நடுவில் உள்ள எழுத்துகளை மட்டும் சொன்னால் எப்படியாவது கஷ்டப்பட்டு அந்த ஹீரோ பெயரை கன்டுபிடிச்சி விடுவோம்.. Please

   Delete
  2. Parani from Bangalore : ஒரே மாதம் பொறுத்துக் கொண்டால் புத்தகத்தையே கையில் கொடுத்து விடுவேன் - நிதானமாய் நீங்கள் guess பண்ண முயற்சிக்கலாம் ! :-)

   Delete
 25. டியர் விஜயன் சார்

  //'சரி - NBS காலி ; what next ?' என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது தான் !!//

  வருடத்திற்கு இரண்டு 'குண்டு'புத்தகங்கள் வெளியிடலாம் என எண்கள் 'குண்டு' புத்தக சங்கத்தின் சார்ப்பாக வேண்டுகோள் வைக்கப்படுகிறது. (நண்பர் ஆதிதாமிரா கவனிக்க!)

  நீங்கள் முன்பு கூறிய 'தீபாவளி மலரில்' ஒரு surprise அடுத்த 'குண்டு' புத்தகம் பற்றி தானே? லயனின் 30 ஆவது ஆண்டுமலர் ஆயிரம் பக்ககளுடன் ... காத்திருக்கிறோம்

  // 1 சிக் பில் reprint+ "புரட்சித் தீ "//

  இந்த பரிசோதனை வேண்டாமே சார், இப்பொழுது வரக்கூடிய ரீ-பிரிண்ட் புத்தகங்கள் எல்லாமே ஒரே நாயகர்களின் சிறந்த கதைகளை தாங்கி வருகிறது, இதை மாற்ற வேண்டாம்.

  லுங்கி லுக் ஸ்பெஷல் 2 இல் "புரட்சித் தீ " உடன் வேறுஒரு சோர்ந்த லக்கி லுக் கதையை சேர்த்து வெளிடுங்கள்.


  திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்

  ReplyDelete
  Replies
  1. எனது சாய்ஸ் புரட்சி தீ & பூம் பூம் படலம்.

   Delete
  2. // எனது சாய்ஸ் புரட்சி தீ & பூம் பூம் படலம்.//

   நண்பர் கிருஷ்ணா வ வெ - இன் கருத்தை நானும் வழிமொழிகிறேன் (லக்கி ஸ்பெஷல் - 2)


   Delete
  3. @நாகராஜன்&அதர்ஸ்,

   படிக்க காமிக்ஸே இல்லை என்பதால்தான் குண்டு புக்ஸ் கேட்கிறோம்.

   ஆனால் இதில் ஒரு சிக்கல் என்னெவெனில் நியூ கம்மர்ஸ், சிறுவர்களின் பட்ஜெட் இடிக்கிறது என்பதுதான்.

   அப்படியாயின் இன்னொரு ஐடியா! 20 ரூ, 40 ரூ, 50 ரூபாக்கும் ஒல்லி புக்ஸ் வரட்டும். ஆட்சேபணை இல்லை. ஆனால் மாசம் பத்து புக்ஸ் வரணும்.. எப்பூடி நம்ப புது ஐடியா?

   ஆந்தை விழியார் இந்த அகுடியாவுக்கு ரெடியா? :-))))))))

   Delete
  4. ஆதி தாமிரா : பேங்க் பெட்டகத்தை மொத்தமாய் 'லவட்டித்' தர நண்பர் டயபாலிகாரைத் தேடி ஆந்தையார் இத்தாலிக்கு ஜூட் !

   Delete
 26. ஹுர்ர்ரே... புரட்சித் தீயை வரவேற்கிறேன். லக்கி ஸ்பெஷல் 2 (புரட்சித் தீ + பூம் பூம் படலம்) நல்ல தேர்வாக இருக்கும்.

  @ஈரோடார்களுக்கு: உங்களது தினசரி புத்தக திருவிழா பதிவுகள் நேரில் பார்த்த உணர்வுகளை தருகின்றன. மிக்க நன்றி.

  ReplyDelete
 27. Vijayan sir,
  Please do not cut Chickbill story to get “புரட்சித் தீ”. We are eagerly waiting to read Chick bill stories.
  As other friends have suggested, புரட்சித் தீ can be published in +6 or wait until 2014.
  In business world, if Lucky luke is our star performer, in 2014 we can print “புரட்சித் தீ” along with another Chick bill story. So that whoever buy “புரட்சித் தீ”, will get introduced to Chick bill & Co.
  Regards,
  Mahesh

  ReplyDelete
 28. ஈரோடு புத்தக திருவிழா வெற்றிக்கும்,

  NBS முழுவதுமாக விற்று திர்ந்தது எனும் செய்திக்கும் வாழ்த்துக்கள் ...

  லக்கியின் புரட்சி தீ கதையை லக்கி லுக் ஸ்பெஷல் 2 ஆக பயங்கர பொடியன் 2 இணைத்து வெளியிட வேண்டுகிறேன்.

  தயவுசெய்து சிக்பில் உடன் சேர்க்க வேண்டாமே.

  ReplyDelete
 29. To: Editor,

  வார இறுதி வருமுன்பே அதிரடி போஸ்ட் போட்ட ஆந்தை விழியாருக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். அறிவிப்புகள் ஆஹாஹா...ஹா... (இப்போ வெறும் அறிவிப்புகளோடே நிற்காமல் அவை செயல்வடிவும் பெறுவதால் எந்தவித டவுட்டுமில்லாத சந்தோஷ ஒலிக்குறிப்பு!!).

  Note:

  இரத்தப்படலம் - நீங்கள் கொடுத்த காட்சி இரண்டையும் ஒன்றாக இணைத்து ஒரு ஜில்பாஸா -- இங்கே:
  http://i39.tinypic.com/ekepux.jpg

  ReplyDelete
  Replies
  1. பொடியன்:

   டயலாக்ஸ்.. செமை!!

   Delete
  2. சூப்பர் நண்பரே ,
   உங்களின் கற்பனை வளமும் குறும்பும் அருமை .

   Delete
  3. @ பொடியன்

   ஹா ஹா! செம க்ரியேடிவிட்டி! வார்த்தைகளில்லாத டயலாக் பலூன்களைப் பார்த்தவுடன் என்னமாய் ஊற்றெடுக்குது கற்பனைகள்!!!! :)

   Delete
  4. Erode VIJAY : // வார்த்தைகளில்லாத டயலாக் பலூன்களைப் பார்த்தவுடன் என்னமாய் ஊற்றெடுக்குது கற்பனைகள்!!!! :)//

   புதிய போட்டி எண் : 114 தயார் !!

   Delete
  5. To: Editor,
   சார். போட்டி எண் 114, காப்பிரைட்ஸ் எனக்கு... எனக்கு...!!

   Delete
 30. அழகழகான அப்டேட்ஸ்.. ஆந்தை விழியாருக்கு நன்றியார்!

  (மற்றவங்க ஏதும் ரொம்ப டேமேஜ் பண்ணிடுவாங்களோனு பயந்துபோய் நீங்களே மீடியமாய் ஆந்தை விழியார்னு பெயர்வைத்துக்கொண்டு முந்திக்கொண்ட புத்திசாலித்தனத்தை ரசிக்கிறேன்)

  இதுவரை எந்த கதைக்கும் மாற்றுக்கருத்தே பெரும்பாலும் எழுந்ததில்லை எனக்கு. ஆனால்.. இரத்தப்படலம்.? இரத்தப்படலம் ஒரு மெகா ஹிட் கதை என்பதிலும் சந்தேகமில்லை. எனக்கு மிகவும் பிடித்த மெகா குண்டு புக்காகவும் வந்து என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியதையும் மறக்கவில்லை.

  ஆனால், கன்னித்தீவு போல முடியாது தொடர்ந்துகொண்டிருப்பதுதான் கொஞ்சம் இடிக்கிறது. அதோடு கதைத் தொடர்ச்சியை தவறவிட்டவர்கள், முந்தைய பகுதிகளை படிக்காதவர்கள் நிலை? எப்படியும் இந்த பாகங்களும் இன்னும் தொடரத்தான் போகின்றன.. ஆக ஒரு நீண்ட சங்கிலியின் நடுவில் இருக்கும் இரண்டு கண்ணிகளின் நிலைதான் வரப்போகும் இரத்தப்படலம் பாகங்கள். இதனால் ஏனோ அந்த இதழின் மேல் ஒரு ஆர்வம் இன்னும் வரமாட்டேன் என்கிறது.

  அதையும் மீறி இந்தப்பாகங்கள் தனியே வாசிக்கவும் ஏற்றவையாக அமைந்தால் மகிழ்ச்சியே!!

  ReplyDelete
  Replies
  1. நண்பர் ஆதி தாமிரா அவர்கட்கு ,
   "இரத்த படலம் கதையின் முந்தைய பகுதிகளை படிக்காதவர்களின் நிலை?" தங்களின் ஆதங்கம் சரியானதே . வரும் பாகங்கள் நீண்ட சங்கிலியின் நடுவில் இருக்கும் இரு கண்ணிகளின் நிலை என்ற விளக்கமும் எனக்கு புரிகிறது. தயவு செய்து வர உள்ள இந்த இதழின் மீது தங்களின் ஆர்வத்தை கூடுதலாக செலுத்தும்படி வேண்டி கேட்டுகொள்கிறேன் . எல்லாவற்றையும் மீறி இந்த இரு பாகங்களும் தனியே வாசிக்க கூடியளவுக்கு சுவாரஸ்யமானவைதான் . தனித்தனியே இரண்டும், முந்தய பாகங்களுக்கு விறுவிறுப்பில் சளைத்தவையில்லை என்பதை வாசிக்கும்போது உணருவீர்கள் .

   Delete
  2. @ஆதி தாமிரா, @Thiruchelvam Prapananth

   //அதோடு கதைத் தொடர்ச்சியை தவறவிட்டவர்கள், முந்தைய பகுதிகளை படிக்காதவர்கள் நிலை//

   'ரத்த படலம்' வண்ண மறுபதிப்பு வந்தால் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்குமே (நம்ம ஆபீஸ் கொடௌனில் எந்த 'குண்டு' புத்தகமும் ஸ்டாக் இல்லை.

   கொஞ்சம் யோசிச்சு பாருங்க ...


   => அல்வா இல்லாத திருநெல்வேலி
   => லட்டு இல்லாத திருப்பதி
   => பஞ்சமிர்தம் இல்லாத பழனி

   => 'குண்டு' புக் ஸ்டாக் இல்லாத நம்ம லயன்-முத்து ஆபீஸ்


   அப்படியே 'மின்னும் மரணம்' அப்படியின்னு எதோ ஒரு குண்டு புக்கு இருக்காமே ?   Delete
  3. அந்த நண்டு ப்ரை அறிவிப்பு? "கார்சனின் கடந்த காலம் " , "மின்னும் மரணம் " மறுபதிப்பு எப்போது ?
   ஈரோடு புத்தக திருவிழாவில் எடிட்டர் அறிவிப்பை வெளியிடுவாரா ?

   Delete
  4. ஆதி தாமிரா ://(மற்றவங்க ஏதும் ரொம்ப டேமேஜ் பண்ணிடுவாங்களோனு பயந்துபோய் நீங்களே மீடியமாய் ஆந்தை விழியார்னு பெயர்வைத்துக்கொண்டு முந்திக்கொண்ட புத்திசாலித்தனத்தை ரசிக்கிறேன்)//

   பந்திக்கு முந்தினால் தொந்தி ரொம்பிடலாம் ; ஆனால் 'கலாய்ப்சுக்கு' முந்திக் கொண்டால் காதோரக் குருதிச் சேதாரம் குறைச்சலாய் இருக்கும் அல்லவா ?

   Delete
 31. Filler pageஆக Lucky luke என்றால் Jollyதான்!:-)

  ReplyDelete
 32. @ comic experts

  neenda naal sandegam - why sunshine comics was introduced? ungal karuthu ennavo

  adil varum kadaigalai vaithu kandupidikka muyarchittaen, evvalo thupparingjalum inda steelbodyala kandupidikka mudiyalayae......


  ReplyDelete
 33. @ Spider Fans


  King Viswavin blogil spider pathi oru super post(old one) irukku

  Check it out

  Idu varai vanda lion familyil vantha anaithu spider coverum parkalalam!

  Background music

  partha vizhi parthapadi poothu irukka
  kaathirunda kaatchi ingu kaana kidaikkka


  Enjoy

  ReplyDelete
 34. "Update # 3 : ஆச்சர்யமூட்டும் விதத்தில் GARFIELD & HEATHCLIFF நிறையப் பேரைக் கவரவில்லை !! சர்வதேச செய்தித்தாள் கார்டூன் வரிசைகளில் சண்டியர்களான இவ்விரு பூனையார்களுக்கும் கொடுக்க அவசியாகும் ராயல்டி தொகையும் மிக ஜாஸ்தி ! உலகுக்கே பிடித்துள்ள இவர்களை நம்மில் பலருக்குப் பிடிக்காது போனதன் காரணம் கண்டறிய மண்டையாரை, விரலார் 'பர பரவென்று' சொறிகிறார் ! So - கொஞ்ச காலத்திற்கு filler pages பொறுப்புகளைப் பகிர்ந்திடப் போவது மந்திரியாரும், லக்கி லூக்கின் சிறுகதை கலெக்ஷனுமே !"


  Calvin & Hobbes mudiayada????????

  ReplyDelete
  Replies
  1. Sathya : கார்பீல்டே உதை வாங்கும் போது Calvin & Hobbes - சான்சே இல்லை !

   Delete
 35. RATHAPADALAM matra pagangal (jumbo special thavrira)aavalaga irukirom!

  ReplyDelete
 36. @karthi - email comment subscribe pannitaen

  i have to tell you something.....

  DANKU

  puriyaliya - idae epdi padikkanumnu Belham solrar kelunga

  DANK -U

  ReplyDelete
 37. Spider digestku (reprint) ulla adharavai Editor Sir kavanithirupar. Reprintku avana seivar enna nambovomaga!-
  INGANAM,
  SPIDER MARAKA MUDIYADOR IYYAKAM

  ReplyDelete
 38. புரட்சித் தீ என்னிடம் உள்ளது வேறு கதைகளுடன் சேர்த்து வெளி இட்டால் நன்றாக இருக்கும்

  ReplyDelete
 39. ***
  @Parani from Bangalore:
  //போங்கு ஆட்டம்" அப்படினா என்ன என்பது நிறைய பேருக்கு தெரியாது! உங்களுக்கு மட்டும் தான் தெரியும் என பேசிகிறாங்க :-)//
  வேணாம் பரணி சார், நேத்து விஜய் எடுத்த ரிஸ்க்கை விட நீங்க பெரிய்ய ரிஸ்க் எடுக்கறீங்க! ;)

  ***
  @Erode VIJAY:
  கற்றுக் கொடுத்த குருவுக்கே கிளாஸ் எடுப்பவர்களை அப்ளாஸ் செய்து பேசும் அளவுக்கு நல்ல முன்னேற்றம் கண்டு இருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள் நண்பரே! ;) நம்ம டார்ச் லைட் நண்பர் இதைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்! :P

  இதுல கொடும என்னன்னா, இதையே நான் சொன்னா மட்டும், சிலர் டைரக்டாவும், இன்-டைரக்டாவும் ரௌண்டு கட்டி அடிக்கறாங்க! ;) என்னமோ போங்க!

  //ஓவர் பில்ட்-அப்களைக் கண்டு ஏமாறவேண்டாம்//
  ஓவர் பில்ட் அப்புகள் நமக்கு புதுசா என்ன?! என் பக்கத்துக்கு வீட்டு குட்டிப் பெண்ணுக்கு தியாகராஜ பாகவதர் படங்கள் என்றால் ரொம்ப இஷ்டம்! :)

  //மிகுந்த ஆர்வம் காட்டிய ஓரிரு மாணவர்களுக்கு நான் செய்த உதவி//
  உண்மையில் நீங்கள் செய்தது உன்னதமான செயல்தான் விஜய்! புத்தகங்களை பரிசளிப்பது போன்ற சிறந்த செயல் வேறெதுவும் இல்லை! நிஜமான பாராட்டுகள்!

  ***
  @சூப்பர் விஜய்:
  //ஸ்டீல் பாடியார் எங்கள் விழியார் ரத்தம் சிந்த வைத்துவிட்டார்.. (அடுத்த அல்பம்s நிஜமாகவே நன்றாக இருந்தால் நமது 2014 புது வெளியடான மினி லயனில் போடலாம் )//
  என்னது அல்ப்பமா?! :) பில்லர் கதைகள் தீர்ந்ததால்தான் நாம் தப்பித்தோம். ;) மற்றபடிக்கு அவரின் முழு நீள கதையை தனி இதழாக வெளியிட்டு (பரி)சோதிக்க விரும்பினாலும் ஒன்றும் வருத்தமில்லை! எத்தனையோ பார்த்துட்டோம் இதைப் பார்க்க மாட்டோமா என்ன? ;) அப்படியே கார்ஃபீல்ட், ஹீத்க்ளிப், அடடே விமானி, ஜெரோம், ஜில் ஜோர்டான் இவை போன்ற கதைகள் புறக்கணிக்கப்படும் காரணங்களையும் அலசி ஆராய்ந்து, குறைகள் களைந்து ஃபில்லர் பக்கங்களாக அல்லது முழுநீள இதழ்களாக வெளியிட கோரிக்கை வைக்கலாம்!

  //திரும்ப திரும்ப சொன்னா, எடிட்டர் ஒரு வேளை நாமதான் சொல்லிருப்போமோனு நினைச்சு மினி லயன் அரம்பிப்பாரோன்னு ஒரு நற்பாசை தான்//
  :) :)

  ***
  @விஸ்கி-சுஸ்கி:
  //நமக்கு வெகு சுலபமானது என தோன்றுவது, கணினியை அதிகம் உபயோகிக்காத நண்பர்களுக்கு வெகு கடினமாக தோன்றலாம்.//
  இது மட்டுமே காரணமாக இருக்காது. வேறு பல காரணங்களும் இருக்கலாம். சிலருக்கு இணையம் என்றாலே பிடிக்காமல் கூட இருக்கலாம்.

  //அடிப்படையில் அதிரடி ஆர்பாட விரும்பிகளாகவே நம்மில் பலர் இருக்கிறோம். ஒரு கிரிக்கெட் கிரௌண்டில் உள்ள ஆர்பாட்டதியா பாருங்கள் அதே வேலையில் ஒரு டென்னிஸ் கிரௌண்டில் உள்ள மௌன்னதை பாருங்கள்//
  ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும் காரணம் அதுவல்ல! நீங்கள் மேலை நாட்டவர்களின் Soccer மைதானங்களை பார்த்ததில்லையா என்ன?!

  ஆனால், காரணம் என்னவென்றால் அளவான பரிகாசம், நயமான நையாண்டி, வித்தியாசமான & மறைவான நகைச்சுவை அடங்கிய துணுக்குகளை நமக்கு சட்டென பிடிக்காமல் போவதுதான்! என்னுடைய இந்த பின்னூட்டத்தில் இருக்கும் நயமான நையாண்டிகளும் சிலருக்கு பிடிக்காமல்தான் போகப் போகிறது, என்ன செய்ய?! பத்திரிக்கைகளில் வரும் (அரசியல்) கேலிச் சித்திரங்களும் இவ்வகையைச் சார்ந்தவையே! அவற்றிற்கும் நம் நாட்டில் ரசிகர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்?! அதே போல அப்படிப்பட்ட கேலிச்சித்திரங்கள் வரைபவர்களை தூக்கி உள்ளே போடும் ஆட்சியாளர்களும் இங்கு இருக்கவே செய்கிறார்கள்! :(

  ***
  @Podiyan:
  //இரத்தப்படலம் - நீங்கள் கொடுத்த காட்சி இரண்டையும் ஒன்றாக இணைத்து ஒரு ஜில்பாஸா -- இங்கே: http://i39.tinypic.com/ekepux.jpg//
  சூப்பர் நண்பரே! :) :)

  ***
  @Sathya:
  //@karthi - email comment subscribe pannitaen i have to tell you something.....DANKU//
  :) வெல்கம் நண்பரே!

  ***
  @திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன்:
  //போஸ்டர் அருமையாக உள்ளது.. ஸ்பைடர் ரசிகர்கள் நிச்சயம் சந்தோசப்பட்டிருப்பார்கள்.//
  மிக்க நன்றி! :)

  ReplyDelete
  Replies
  1. // என் பக்கத்துவீட்டுக் குட்டிப் பெண்ணுக்கு தியாகராஜ பாகவதர் படங்கள் என்றால் ரொம்ப இஷ்டம் //

   எதற்கும் அந்தக் குட்டிப்பெண்ணிடம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க, கார்த்திக்! நீங்க சொல்லுறத வச்சுப் பார்த்தால் அந்த குட்டிப்பெண்ணுக்குள் ஒரு கிழவியின் ஆவி புகுந்திருக்கிற மாதிரி தோணுது!
   எதுக்கும் நம்ம ஜான் சைமனுக்கு ஒரு போன் போட்டு கிழவிப் பேய்களை அடிமையாக்குவது எப்படின்னு கேட்டு வச்சுக்கங்க! :)

   Delete
  2. @Erode VIJAY:
   //எதற்கும் அந்தக் குட்டிப்பெண்ணிடம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க, கார்த்திக்! நீங்க சொல்லுறத வச்சுப் பார்த்தால் அந்த குட்டிப்பெண்ணுக்குள் ஒரு கிழவியின் ஆவி புகுந்திருக்கிற மாதிரி தோணுது!//
   ஹப்பாடா, என் நயமான நையாண்டியை லைட்டாக ரசித்து விட்டு, நைஸாக வேறு மேட்டருக்கு தாவி விட்டீர்கள்! இனி நான் தைரியமாக ஈரோடு வரலாம்தான்! :)

   //எதுக்கும் நம்ம ஜான் சைமனுக்கு ஒரு போன் போட்டு கிழவிப் பேய்களை அடிமையாக்குவது எப்படின்னு கேட்டு வச்சுக்கங்க! :)//
   அந்த கறுப்புக் கிழவி புகழ் ஜான் சைமனையா சொல்றீங்க?! அவர் எங்கேயாவது ஆஃப்ரிகன் காமிக்ஸ் ஃபேஸ்புக் க்ரூப்ல "தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு இரவு வணக்கங்கள், இதை மொபைல் மூலமா லயன் ப்ளாகில் போட முடியல தங்கங்களே - இதை அங்க போய் சேர்த்துருங்க ஜி... ஹீ ஹீ ஹீ'"-ன்னு கமெண்ட்டு போட்டுகிட்டு இருப்பார்! :) இந்தக் கதை உங்களுக்கும் தெரியும்தானே? இல்லை என்றால் ஈரோட்டில் சொல்கிறேன்!

   ***
   @Parani from Bangalore:
   //இப்படி சொல்லுறதுல ஏதாவது உள்குத்து சைடு குத்து ஏதும் இல்லைல :-)//
   இல்லை பரணி ஜி! :)

   Delete
  3. //இது மட்டுமே காரணமாக இருக்காது. வேறு பல காரணங்களும் இருக்கலாம். சிலருக்கு இணையம் என்றாலே பிடிக்காமல் கூட இருக்கலாம்.//

   இணையத்தை அவர்களுக்கு பிடிக்க வைப்பது தானே இந்த முயற்சியின் நோக்கம். இணையத்தை அந்நியமாய் பார்பவர்களுடைய முக்கியமான பிரச்னையே அதில் உள்ள complex structure தானே ??
   அதை இப்படியும் சுலபமா உபயோகிக்கலாம் ன்னு நாம அவங்களுக்கு புரியவைச்ச ஒரு வேலை இணையம் அவங்களுக்கும் பிடிபடலாம். "ஒரு வேலை " தான்.

   இங்கே முக்கியமான விசயமே நாம அதுக்கு முயற்சி செஞ்சோமாங்கறது தான். இதுக்கு உங்க கிட்ட வேற ஏதாவது ஐடியா இருக்கா ???

   //நயமான நையாண்டி, வித்தியாசமான & மறைவான நகைச்சுவை அடங்கிய துணுக்குகளை நமக்கு சட்டென பிடிக்காமல் போவதுதான்!//

   ஹ்ம்ம்ம் ....மறைவான நகைச்சுவை சில வேலை புரியலைன தலை-நோவ தர்ற வகையறை. இது போன்ற துணுக்குகள் நாளிதழ்களுக்கு தான் BEST FIT ஆகும்ன்னு நினைக்கறேன்.

   Delete
  4. Karthik @ // இல்லை பரணி ஜி! :) //
   ஆகா இது புது மாதிரி குத்தா தெரியுதே :-) உன்ன போட்டுதள்ள முடிவு பண்ணிடாண்கல ... :-) ஏல பரணி ஓடி ஒழிஞ்சுகோல...

   Delete
 40. Karthik @
  // வேணாம் பரணி சார், நேத்து விஜய் எடுத்த ரிஸ்க்கை விட நீங்க பெரிய்ய ரிஸ்க் எடுக்கறீங்க! ;) //
  ரிஸ்க் எல்லாம் நமக்கு ரஸ்க் சாப்பிடுறது மாதிரி :-)

  // பரணி சார் //
  இப்படி சொல்லுறதுல ஏதாவது உள்குத்து சைடு குத்து ஏதும் இல்லைல :-)

  ReplyDelete
 41. டியர் எடிட்டர் ,
  NBS இன் பிரதிகள் முழுவதும் விற்று தீர்ந்து விட்டன என்ற செய்தி மகிழ்ச்சியே. நேற்றிரவுதான் நான் NBS க்கு ஆர்டர் அனுப்பினேன். தாமதமாகி விட்டதுக்கு மன்னிப்பை கோருகின்றேன் . ஸ்டீல் பாடியாருக்கு கல்தா கொடுத்து ஸ்காட்லாந்துக்கு அனுப்பியதில் எனக்கு உடன்பாடில்லை . வாசகர்களின் அதிக வாக்குகளை பெற தவறி விட்டார். Garfield கதாபாத்திரம் சிறுவர்களையே அதிகம் கவரும் என்று நினைகிறேன் . "புரட்சி தீ " இதழினை தனியாக வெளியிட முடியாத சார் ?
  சார் , Dargaud Edition இன் வெளியிடாக வந்த Dernier -Templier எனும் சாகசத்தினை எமது லயன் காமிக்ஸில் வெளியிட முடியுமா ? 4 பாகமாக வந்த வெளியீடு இது. இதில் வந்த சித்திர தரமும் அருமையாக உள்ளது. Please consider this request . link : http://www.dargaud-templier/alerte

  ReplyDelete
  Replies
  1. Thiruchelvam Prapananth : நிச்சயம் அந்தத் தொடரைப் பரிசீலிப்போம் !

   Delete
 42. இரத்தப் படலம் பாகம் 22 (புலன் விசாரணை பகாம் 13 ஐ நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்) பிரான்சில் நவம்பர் 22 ம் தேதி தான் வெளியாகிறது. அதற்குள்ளாகவே நமக்கு சித்திரங்களும், வண்ணச் சேர்க்கைகளும் வந்துவிட்டதென்றால் நாம் ரொம்பவும் அட்வான்ஸ் ஆகத்தான் இருக்கிறோம். Super!

  ReplyDelete
  Replies
  1. Radja from France : நான் தற்போது வெளியிடப் போவது பாகம் 20 & 21 தானே !

   இந்த நவம்பரில் வரவிருக்கும் part 22 -ஐ டிசெம்பரில் நாம் வெளியிட விரும்பினால் அதுவும் சாத்தியமே - ஆனால் இன்னுமொரு பாகம் அடுத்த ஆண்டு தயாரான பின்னே 22 & 23-ஐ இணைத்து ஒரு இதழ் ஆக்குவோம் என்ற சிந்தனை என்னுள் !

   Delete
 43. ஈரோடு நண்பர்கள் மெய் சிலிர்க்க வைக்கின்றனர். Hats off to them!

  ReplyDelete
 44. "புரட்சி தீ" லக்கி ஸ்பெஷலில் மட்டும் வெளியிடுங்கள் சார்! ஸ்டீல் பாடி ஷெர்லாக் அப்படியொன்றும் மோசமான கதையாக தெரியவில்லை!
  மெல்லிய புன்னகையை வரவழைக்கும் நகைச்சுவை ஏன் எடுபடவில்லை என்று புரியவில்லை!
  "மியாவி" மற்றும் "கார்பீல்ட்" மட்டுமாவது தொடரட்டும் சார்!
  தீபாவளி மலரில் உள்ள சந்தோஷ ஆச்சரியம் என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளது!

  ReplyDelete
  Replies
  1. WillerFan@RajaG : No worries...மியாவி & கார்பீல்ட் தொடர்வார்கள் !

   Delete
 45. டியர் விஜயன் சார், சிக்பில் கதைகள் இரண்டுமே வண்ணத்தில் வேண்டும்! புரட்சிதீ rs 50/ வெளியீடாக 2014 பொங்கள் வெளியீடாக மலர்ந்த்தால் நலம்!
  erode bookfair யை தங்கள் குடும்ப விழா போல் அசத்தும் நண்பர்கள் ஸ்டாலின்,விஜய், ஸோமசுந்தர், மற்றும் ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
  விஜயன் சாருக்கு, சனிக்கிழமை இரவு 'பள்ளிப்பாளயம்' சிக்கன் உடன் அசத்தும் விருந்து ,நம்ப ஈறோட்டு சர்வாதிகாரியும், மியாவியும் ஏற்ப்பாடு செய்யபோவதாக ரகசிய தகவல்! நாங்களும் கலந்த்துக்கலாமா?:)

  ReplyDelete
  Replies
  1. Dr.Sundar, Salem : விருந்தார்களைப் பற்றித் தெரியாது - ஆனால் ஆந்தை விழியார் இப்போதெல்லாம் சைவம் என்பதால் பள்ளிப்பாளயத்துப் பறவைகளார் உயிர் பயமின்றி நிம்மதியாய் ஜீவிக்கலாம் !

   Delete
 46. ஈரோடு காமிக்ஸ் திருவிழா ( 6th day)

  * வேலைப் பழு காரணமாக ( கவனிங்க கோவை செல்வராஜ்: எங்களுக்கும் வேலையிருக்கு) பகல்பொழுதில் அங்கே ஆஜராகமுடியாததாலும், பூனை இனத்தையே ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டிவிட எடிட்டர் இன்று முடிவெடுத்துவிட்டதாலும் 'கிறுக்கும் பூனையார்' ஏகத்துக்கும் அப்செட்! :(

  * இன்று காலையிலேயே நம் ஸ்டாலில் ஆஜராகிவிட்ட ஆட்டையாம்பட்டி ராஜ்குமார் ஆர்வமுடன் காமிக்ஸ் களப்பணியில் ஈடுபட்டு நம் ஸ்டாலிற்கு வருகை தந்த காமிக்ஸ் பிரியர்களிடம் பேச்சுக்கொடுத்து காமிக்ஸ் வளர்த்ததோடு, அண்ணாச்சி மற்றும் வேலுவுக்கு விற்பனையிலும் உதவியாய் இருந்தார்.

  * ஆர்வமாய் வந்து நம்மிடம் அறிமுகம் செய்து கொண்ட மகேஷ் என்ற நண்பர் தன் அறிமுகத்தை முடிக்கும் முன்பே அவசர அவசரமாக "எனக்கு இரத்தப்படலம் 200 ரூபாய் புத்தகம் உடனே பத்து வேண்டும்" என்றார். அவரது அறியாமையை என்னவென்பது? அவர் 'ஒன்று மட்டும் வேண்டும்' என்று கேட்டிருந்தால் 'நண்பர்களிடம் கேட்டுப்பார்க்கலாம்' என்றிருப்பேன்;  'இரண்டு வேண்டும்' என்று கேட்டிருந்தால் 'வாய்ப்பில்லை' என்றிருப்பேன். அவர் கேட்டதோ 'பத்து' என்பதால் எனக்கு குபீரென்று சிரிப்பு வந்துவிட்டது. எவ்வளவு எடுத்துச் சொல்லியும் சமாதானமடையாத அவர், நமது ஸ்டாலின் ஒரு பக்கத்தில் பேனராக ஒட்டப்பட்டிருந்த இரத்தப் படலம் போஸ்டரை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். "எதற்காக இத்தனை?" என்று கேன்டதற்கு 'நண்பர்களிடம் விற்பனை செய்வதற்கு' என்றார். அவரிடம் மேற்கொண்டு ஏதும் கேட்டிட விருப்பமில்லாமல் போனது ஏனென்று தெரியவில்லை! "முழுத் தொகுப்பும் அடுத்த வருடங்களில் வண்ணத்தில் வர வாய்ப்பிருக்கிறது" என்று சமாதானம் சொல்லி அனுப்பிவைத்தேன்.

  * மேற்கூறிய அதே சமாதானத்தை ஐம்பதைத் தொட்டுவிடும் வயதிலிருந்த வேறொருவரிடம் கூறியபோது "எனக்கு கலர்ல வேண்டாங்க; ப்ளாக் அண்டு வொய்ட்டில் தான் வேணும்" என்றார். சற்றே ஆச்சர்யமாகி "ஏன்?" என்றேன். "கருப்பு-வெள்ளைதாங்க கவர்ச்சி. அதிலே படிக்கும் திருப்தி வேறு எதிலும் கிடைப்பதில்லை" என்றார். இரத்தப் படலத்தின் ஒவ்வொரு ஓவியத்தையும் தான் வெகுவாக இரசித்திருப்பதாகவும், துரதிர்ஷட வசமாக அது தன்னிடம் இல்லாமல் போய்விட்டதாகவும் தெரிவித்தார்.

  *இரத்தப்படலம் பற்றி எழுதும்போதுதான் நேற்று நான் சொல்ல மறந்த இன்னொரு விசயமும் ஞாபகம் வருகிறது. சிலர் சும்மாவேணும் ஏதாவது கேள்வி கேட்டு தகவல் சேகரித்துக்கொண்டே இருப்பார்கள். அம்'மாதிரி'யானவர்களுக்கு தங்களது கேள்வியின்மீதோ அல்லது சொல்லப்படும் பதிலின்மீதோ எந்தவொரு நோக்கமும் இருந்திடாது. அப்படிப்பட்ட, நடுத்தர வயதுள்ள ஒருவர், போகிற போக்கில் நம் ஸ்டாலில் ஒட்டியிருந்த இரத்தப்படலம் பேனரில் ஸ்டைலாக நின்றிருந்த XIIIஐ கூர்ந்து கவனித்துவிட்டு, "ஏங்க, இவரு பேரு என்ன?" என்றார். ஓரிரு வினாடிகள் தடுமாற்றத்திற்குப் பின் "இவரு பேரு ஜேஸன் மக்லேன். பதிமூனுன்னு சொல்வாங்க" என்றேன். "இது என்னமாதிரியான கதை?" என்றார். "அது வந்து... இவரு பேரு என்னன்னு இவரே கண்டுபிடிப்பார் - அதான் கதை" என்றேன். லேசாக முறைத்தவர் "இதுக்கெல்லாமா கதை எழுதுவாங்க; என்னமோ போங்க" என்று சொல்லி திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டினார்.

  * காமிக்ஸ் மீது தணியாத ஆவல் கொண்ட பல புதிய நண்பர்களும் ஒருவர் மாற்றி ஒருவர் தொடர்ந்து நம் ஸ்டாலை ஆக்கிரமித்தபடி இருந்தனர். அதில் பலர், காமிக்ஸ் பற்றி பேச ஆரம்பித்ததுமே உற்சாகமாகி, இதற்குமுன் ரொம்ப நாள் பழகியவர்கள் போல பேசுவதெல்லாம் நிச்சயம் இந்த 'காமிக்ஸ் பந்தத்தில்'அன்றி வேறு எதிலும்/எங்கும் கண்டிட முடியாது.

  மொத்தத்தில், சற்றே வித்தியாசமான நாளிது என்பேன். ஏற்கனவே பத்தி பத்தியாக எழுதியாகிவிட்டது என்பதால், ஒரு வித்தியாசமான மனிதருடன் எனக்கு ஏற்பட்ட சிறிய அனுபவத்தை நாளை தொடர்கிறேன் நண்பர்களே! :)

  ReplyDelete
  Replies
  1. ஓரிரு வினாடிகள் தடுமாற்றத்திற்குப் பின் "இவரு பேரு ஜேஸன் மக்லேன். பதிமூனுன்னு சொல்வாங்க" என்றேன். "இது என்னமாதிரியான கதை?" என்றார். "அது வந்து... இவரு பேரு என்னன்னு இவரே கண்டுபிடிப்பார் - அதான் கதை" என்றேன். லேசாக முறைத்தவர் "இதுக்கெல்லாமா கதை எழுதுவாங்க; என்னமோ போங்க" என்று சொல்லி //

   நல்ல ரசனையான ஆளுங்க நீங்க..

   Delete
  2. Erode VIJAY : இரத்தப் படலத்தின் தேடல் படலம் தொடர்கிறது !

   ஜேசன் தன் கடந்த காலத்தைத் தேடுகிறான் என்றால், நமது ரூ.200 தொகுப்பைத் தவற விட்ட நண்பர்கள் அதன் தேடலில்...!

   ஒன்றரை ஆண்டுகளாய் நம்மிடம் குமிந்து கிடந்த போது கிட்டாத வரவேற்பு - தீர்ந்து போன பின்னே இப்போது உச்சத்தில் இருப்பது ஏனோ என்ற கேள்விக்கு விடை அறியாத் தேடல் எனக்கு !

   Delete
  3. dear vijayan ji:
   ஈரோடு புத்தக கண்காட்சியில் மட்டும் இதுவரை எனக்குத்தெரிந்து 300 நபர்களுக்கு மேலாவது இரத்தப்படலம் கேட்டிருப்பார்கள் . வெகுவிரைவில் இரத்தப்படலத்தை வண்ணத்தில் எதிர்பார்க்கலாமா?

   Delete
 47. "மனதில் மிருகம் வேண்டும்" கதைகள் மிகவும் அருமையாக உள்ளது சார்!

  "நீதிக்கு ஒரு தீர்ப்பு" கதையின் இறுதியில் அந்தப் பெண் நீதிபதியை ஏன் சுட்டாள் என்பது எனக்குப் புரியவில்லை, யாரேனும் விளக்க முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. இறுதியிலா? தன் கணவனின் தண்டனையைக் குறைக்க முடியாது என்றதும் முதலிலேயே சுட்டுவிடுகிறாள் நண்பரே! ஆனால் வயதான அந்த நீதிபதி தனக்கு ஹார்ட் அட்டாக் வந்ததாக எண்ணிக்கொண்டு விரைவாக நடவடிக்கை எடுக்கிறார்! நிரபராதி விடுவிக்கப்பட்டவுடனேயே அவரது உயிர் பிரிகிறது…!

   Delete
 48. 1) NBS போல ஒரு ஸ்பெஷல் 2014 புத்தாண்டு ஸ்பெஷலாக இப்போதே புக்கிங்கை ஆரம்பிக்க வேண்டும்.
  2)புரட்சித் தீயை சிக்பில்லோடு இல்லாமல் லக்கிஸ்பெஷல்-2 வில் வெளியிடுங்கள்.
  3)சுட்டி லக்கி போன்ற கதைகளை அடிக்கடி வெளியிடுங்கள் - என் மனைவிக்குக் கூட பிடித்திருக்கிறது…!
  4)பில்லர் பேஜஸ்க்கு ரேண்டமாக ம.மந்திரி,லக்கிலூக்,குண்டன் பில்லி, பேய்ப் பள்ளிக்கூடம்,ரத்த வெறியன் ஹேகர், இன்ஸ்பெக்டர் நோலன்,அங்க்கிள் ஸ்குரூஜ், மணியன்,ரிச்சி ரிச் இவர்களது கதைகளை போட்டால் ஓரளவு அலுப்புத் தட்டாமல் இருக்கும்…!
  5)இணையத்தில் இல்லாத வாசகர்களுக்கு கேள்வி-பதில் பகுதி தொடங்குவது ஒன்றே தீர்வு.
  6)விஸ்கிசுஸ்கி, மதியில்லா மந்திரி,அலிபாபா, ஹெர்லக் ஷோம்ஸ் போன்ற முன்னாள் ஹீரோக்களின் சாகசங்களை ஒரு 200/- இதழாக humour special ஆக வெளியிட்டால் குட்டீஸ்கள் ஓட்டினை அள்ளலாம்…!
  7)அடுத்த கோடை மலராக(2014) கேப்டன் டைகர் ஸ்பெஷல் 500 பக்கங்களில் வந்தே ஆக வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. krishna babu : //சுட்டி லக்கி போன்ற கதைகளை அடிக்கடி வெளியிடுங்கள் - என் மனைவிக்குக் கூட பிடித்திருக்கிறது…!//

   (சீனியர்) லக்கி லூக் கதைகளையும் படிக்கச் சொல்லிப் பாருங்களேன்...!

   Delete
 49. krishna babu:

  //இறுதியிலா? தன் கணவனின் தண்டனையைக் குறைக்க முடியாது என்றதும் முதலிலேயே சுட்டுவிடுகிறாள் நண்பரே! ஆனால் வயதான அந்த நீதிபதி தனக்கு ஹார்ட் அட்டாக் வந்ததாக எண்ணிக்கொண்டு விரைவாக நடவடிக்கை எடுக்கிறார்! நிரபராதி விடுவிக்கப்பட்டவுடனேயே அவரது உயிர் பிரிகிறது…!//

  இப்போது புரிகிறது நன்றி !

  ReplyDelete
  Replies
  1. Msakrates : எனக்கும் கூட நிறையக் கதைகளின் twist முதல் வாசிப்பில் புலப்படவில்லை ; நிதானமாய் மறு தடவை படிக்கும் போது தான் விடுபட்டுப் போன சின்னச் சின்ன நுணுக்கங்கள் முன் நின்றன ! மொத்தமாய் 3 பாகங்களையும் ஒரு நாள் சாவகாசமாய்ப் படித்துப் பாருங்கள் - நிச்சயம் ஒரு புதுச்சுவை தெரியும் !

   Delete
  2. @krishna babu & Msakrates

   //நிரபராதி விடுவிக்கப்பட்டவுடனேயே அவரது உயிர் பிரிகிறது//

   நீதிபதியின் உயிர் முடிவில் பிரிவதில்லை. மருத்துவ உதவிக்காக சுற்றியுள்ளோர் விரைவதாக அங்கே காண்பிக்கப்படுகிறது.அப்படி உயிர் பிரிவதாக காட்டியிருந்தால் அந்த பெண் கொலைக்குற்றத்துக்கான பலியை சுமக்க நேரிட்டிருக்கும்.

   தன கணவனை அநியாயமாக இழக்கப்போகிறோம் என்கின்ற ஆற்றாமையால் உச்சபட்ச எல்லைக்கு சென்று விடுகிறாள். அவளது அந்த முயற்சியையே கடவுள் அவளுக்கு சாதகமாக்கி அவனை விடுவிப்பதற்கு உதவுவதாக கதாசிரியர் சித்தரித்துள்ளார்.

   Delete
 50. கிட் லக்கி அருமையாக உள்ளது!

  ReplyDelete
 51. விஜயன் சார், கருப்பு வெள்ளை ஹீரோகளின் கதைகளை வெளி இட இது சரியான சமயம் என நினைகிறேன். கடந்த வருடம் நமது ப்ளாக்-ல் நண்பர்களின் எண்ணிக்கை சுமார் 250-ல் இருந்தது இந்த வருடம் 420+ ஆகிவிட்டது. மேலும் நமது காமிக்ஸ் புத்தக திருவிழாக்கள் மூலம் பல பழைய மற்றும் புதிய வாசகர்களை நமது பயணத்தில் இணைத்துள்ளதை மறுக்க முடியாது. புத்தக திருவிழா, வாசக கடிதம் மற்றும் இணையதள நண்பர்களின் கோரிக்கை கருப்பு வெள்ளை மீண்டும் வரவேண்டும். அவைகளை குற்ற திருவிழா புத்தக சைஸ்-ல் சுமார் Rs.40-50 விலைகளில் வெளி இட நீங்கள் முன் வரவேண்டும். எனது விருப்பம் நமது கருப்பு வெள்ளை முன்னால்/இன்னால் ஹீரோகளின் "புதிய மிக சிறந்த கதைகளை மட்டும்" மற்றும் ஒரு புதிய 6+ வரிசையில் வெளி இட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். Rs.40-50 விலைகளில் நமது கருப்பு வெள்ளை காமிக்ஸ் வெளி வரும் போது வெளிவரும் போது இன்னும் பலரால் நமது
  காமிக்ஸ்-ஐ வாங்க முடியும்.

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : இல்லாததைத் தேடுவது தானே மனித மன இயல்பு :-)

   ஆண்டாண்டு காலமாய் கறுப்பு-வெள்ளையில் நாம் அடிக்காத கும்மியா ? அதே போல தற்சமயம் Black & white சங்கதிகளை ஒட்டு மொத்தமாய் மூட்டை கட்டிடவும் இல்லையே ? டெக்ஸ் வில்லர் ; டயபாலிக் இன்னமும் அவற்றின் பிரதிநிதிகளாய் இருப்பதோடு ; மர்ம மனிதன் மார்டின் & CID ராபின் மறு பிரவேசம் செய்திடும் சமயம் கூடுதல் கவனிப்பைப் பெறப் போவதையும் பார்த்திடத் தானே போகிறோம் ?

   Delete
  2. // மர்ம மனிதன் மார்டின் & CID ராபின் மறு பிரவேசம் செய்திடும் சமயம் கூடுதல் கவனிப்பைப் பெறப் போவதையும் பார்த்திடத் தானே போகிறோம் ? //

   Hoooray

   Delete
 52. இம்மாத புத்தகங்களின் முழு பார்வை :
  "கிட் லக்கி " -என்ன சொல்வது .அட்டகாசம் .,சூப்பர் .,அருமை ..எதை வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம் .எதிர் பார்த்ததை விட அசத்தி விட்டார் எங்கள் குட்டி .மொழி ஆக்கத்தில் லக்கி லுக் போலவே வந்திருந்தால் இன்னும் அட்டகாசமாக இருந்திருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து .இதில் வந்த சிறு காமெடி கதை அதிகம் கவர வில்லை .இருந்தாலும் எனக்கு ,என் மகனுக்கு என்று இரண்டு புத்தகமாக வாங்கியதில் எந்த தவறும் இல்லை என நிருபித்து விட்டார் கிட் .வாழ்த்துகள் .
  "மனதில் மிருகம் வேண்டும் "...-வாவ் ...என்ன அழகான சித்திரம் .சூப்பர் .விளம்பரத்தில் வந்த டெக்ஸ் கதையை சொல்கிறேன் .விளம்பர ஓவியத்தை பார்த்தவுடன் பழைய டெக்ஸ் கதைகள் நினைவு வருவது தவிர்க்க முடிய வில்லை .
  இது வரை மூன்று முறை படித்து விட்டேன் .அடுத்த பாகத்திற்கு காத்து கொண்டு இருக்கிறேன் ."சிங்கத்தின் சிறு வயதில் "தான் சொல்கிறேன் .நமது புத்தகம் கூட தோல்வி அடைய என்ன காரணம் .காத்து கொண்டு இருக்கிறேன் .அதே போல ஹாட் லைனில் "பரீட்சை " அவ்வபொழுது .எப்பொழுதும் இல்லை என்பதிலும் மிக்க ,மிக்க மகிழ்ச்சி .ஸ்டீல் பாடி ப்ளைன் ஏறியதில் எனக்கு வருத்தம் தான் .பூனையார்கள் மொத்தமாக புத்தகத்தில் கும்மி அடித்தது வருத்தம் .அவைகளை அனுப்பிய விதத்தில் மிக்க நன்றி (ஈரோடு விஜய் மன்னிக்க ).

  ReplyDelete
  Replies
  1. Paranitharan K : சின்ன திருத்தம் ; ஒய்வு நாடிக் கிளம்பி இருப்பது ஸ்டீல்பாடியார் மட்டுமே ! பூனைகள் கும்பல் ஒட்டு மொத்தமாய் நாடு கடத்தப்படப் போவதில்லை ; பிரிந்து பிரிந்து உலா வரும் !

   Delete
 53. நண்பர்களுக்கு நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள். ரம்ஜான் முபாரக்!!

  ReplyDelete
 54. சுட்டி லக்கி விமர்சனம்:

  நம்ம சுட்டி லக்கி இன்ஸ்டன்ட் ஹிட் ஆனதுக்கு ஒரு காரணம் , இப்போ நம்ம கிட்ட இருக்கிற பெரும்பான்மையான ஹீரோக்கள் retirement ஆகுற வயசில இருக்கும்போது ஒரு young & innocent ஹீரோவுக்கு ஒரு பெரிய வெற்றிடம் உருவானது இருக்கலாம் . சுட்டி லக்கி & சுட்டி ஜாலி ஜம்பர் very very cute pair.

  முன் அட்டைப்படம் டைட்டில் background ட விட்டுட்டு பாத்தா செம சூப்பர்.பின்னட்டை சுமார்.

  perfect binding ல வர்ற ஒரு feeling staple pin 'ல வர்றது இல்ல. இறந்தாலும் நோ issues.

  கதாசிரியர், ஓவியர் , மொழிபெயர்ப்பாளர் , இவங்களுக்கு credits புத்தகத்துல கொடுக்கல. நம்மள பெத்தவங்கள நாம மறக்கலாமா ???

  பெருசா கதைன்னு சொல்லிக்கறதுக்கு ஒன்னும் இல்லன்னாலும் படிக்க செம ஜாலியா இருக்கு. விஜயன் சாரோட மொழிபெயர்ப்பு தற்போது எப்போதும் இல்லாத ஒரு புதிய உயரத்துல்ல இருக்குன்னு சொல்லாம். காமெடி கதைன்ன சார் பின்னியெடுத்திருக்கார்.

  வெள்ளை இன குழந்தைகளை செவ்விந்திய பழங்குடி மக்கள் கடத்திட்டு போய் தங்களோட இன வழக்கப்படி அவங்கள வளர்க்கற ஒரு செயல சுத்தி கதை பின்னப்பட்டிருக்கு. இது மாதிரி "எமனின் திசை மேற்கு" கதைளையும் வருதில்லையா?? இது ஒரு வகையில அவங்களோட பழிவாங்கும் செயலா தெரியுது.

  கதையில் வர்ற பெயர்கள் ரொம்ப ரசனைய வைக்கப்பட்டிருக்கு.timing காமெடிகள் கதையில் ஏராளம்.

  சுட்டி லக்கி நம்மை முழுமையா ஆக்கிரமிச்சாலும் ஒரு "சூப்பர் சர்க்கஸ்" அளவுக்கு ஒரு தாக்கத்த எற்படுத்துலேன்னு தான் சொல்லுவேன். நாம நம்ம இளமை காலங்களை கடந்துட்டது ஒரு முக்கியமான காரணம இருந்தாலும் ஓவியங்களில ஒரு சின்ன perfection குறையறது,ஒரு வலிமையான கதைக்களம் இல்லாததும், அதுக்கு ஒரு காரணமா இருக்கலாம்.

  ஒரு சுட்டி ஹீரோவுக்கு நம்மகிட்ட இருக்கிற வறட்சிய சுட்டி லக்கி செமையா தீர்த்துவைக்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. விஸ்கி-சுஸ்கி : நூற்றுக்கு நூறு ஒத்துக் கொள்ள வேண்டிய கருத்து ! ஒரு சூப்பர் சர்கஸில் இருந்த விசாலமான கதைக் களம் சுட்டிக்குக் கிடையாதென்பதால், ஆங்காங்கே காமெடி புகுத்துவது இயல்பாய் நடவாது ! சூழ்நிலைகள் ஏற்படுத்தித் தரும் natural humour ஐ அடித்துக் கொள்ள முடியாதே !

   தவிர, நமது தற்போதைய வயதுகளும் இங்கே ஒரு முக்கிய factor என்பதை மறக்கவோ / மறுக்கவோ இயலாது !

   கதாசிரியர் & ஓவியருக்கான credits அவசரத்தில் மறந்து போனதேன்பதே நிஜம் !

   Delete
  2. Sutti Lucky, Front cover looks like my son's LKG book... First i thought it was his book. Story was good. But book looks like, it is for small children. In that way, author has attained his goal.

   Delete
  3. @Maran Mani,
   சரியாக சொன்னீங்க! ஆனா இதுல்ல இருக்கற ஒரு சிக்கல் ஸ்கூல் புக் மாதிரி இருந்தா பிள்ளைங்க பாஞ்சு ஓடிரமாட்டாங்களா??? : )

   Delete
 55. மனதில் மிருகம் வேண்டும் :விமர்சனம்

  அட்டைப்படம் அட்டகாசம். இந்த அட்டை இதுவரை வந்ததில் "THE BEST " ன்னு சொல்லலாம். உள்ளே இருக்கற கதையின் GENEREருக்கு ஏத்த மாதிரி ஒரு DARK பீலிங்க புத்தகம் INSTANT'டா கொடுக்குது.
  எல்லா விதத்திலயும் ஒரு PERFECTION, இந்த அட்டைபடத்துள்ள இருக்கு.

  முதல்ல ஒவ்வொரு கதைக்கு தனித்தனியே அட்டகாசமான பொருத்தமான பெயர் வச்சதுக்கு ஆசிரியருக்கு ஒரு மெகா SALUTE.
  இது நிச்சயம் சுலபமான வேலை கிடையாது.
  அவரோட DEDICATED உழைப்பு தலைப்புகளிலேயே தெரியுது. EXCELLENT WORK SIR!

  மொழிபெயர்ப்பு இந்த கதைகளில அட்டகாசமா இருந்தாலும் இன்னமும் கொஞ்சம் புகுந்து விளையாண்டிருக்கலாம்ன்னு சொல்லுவேன். அதற்கான வாய்புகள் ஏராளமா இருந்தாலும், அதற்கான ABILITY நாம ஆசிரியர் கிட்ட இருந்தாலும் நேரமின்மை காரணமா இருக்கலாம். இதை ஏன் சொல்றேன்ன இந்து போல ஒரு களம் இன்னொரு முறை அமைவது கடினம். ABLE மொழிபெயர்பாளருக்கு இந்த மாதிரி களங்கள் பாலும் பழமும் தேனும் கலந்ததை போன்று மொழிபெயர்ப்பு சுவையை கொடுக்க கூடியது. இந்த கதைதொடரை தேர்ந்தேடுத்ததுக்கு இதுவே ஒரு முக்கிய காரணமா இருக்கலாம். NEVERTHELESS இந்த புத்தகம் ஒரு THROUGH ROCKING ENTERTAINER.

  ஒவ்வொரு கதையும் மனதின் ஏதாவது ஒரு மூலையில ஒரு IMPACT'ட கொடுக்குது. கடைசியில கதாசிரியர் வைக்கற TWIST "WOW" சொல்ல வைக்குது.

  ஓவியங்களின் ஸ்டைல் கதைக்கான BEST SUITED STYLE ன்னு சொல்லலாம். ஒரு PORTRAIT ஓவியங்கள் மூலமா ஒரு முகத்தின் பின்னால் உள்ள சாந்தத்தையும் குரூரத்தையும் பேராசையும் மிருகத்தனத்தையும் வெளிப்படுதுறது இயலாத காரியம். இந்த கார்ட்டூன் பாணியிலான சித்திரங்களை பாருங்க, ஒரு CHARACTER முகமே அவன பத்தி பல கதைகள சொல்லும்.

  ஒவ்வொரு கதையும் நான்கு ஐந்து பக்கங்கலேன்னாலும் அதுக்குள்ளே பொதிஞ்சுள்ள விசயங்கள நாம பாக்க முடிஞ்சா ஒரு நூறு பக்க கதைக்குன்டான வாசிப்பு அனுபவத்தை அது கொடுக்கும். உதாரணதுக்கு அந்த டார்வின் கொள்கையை தனக்கு சாதகமா வளைசுக்கற அந்த சைக்கோவோட முடிவு அவனோட சித்தாந்தத்தின் படியே முடியறது, தண்ணீல உயிருக்கு போராடும்போது,அந்த குரூர சிரிப்பு காணாமபோயி வெளிப்படற உயிர் பயமே, அவன அவனது கொள்கைகள் தவறுன்னு அவனுக்கு புரிய வைக்குது. முடிவு எப்படி போனாலும் உலகம் வழக்கம் போலவே இயங்கும் கறத்துக்கு இந்த புன்னகை அந்த சிறுமியின் முகத்துக்கு தாவிடுது.

  இப்படி ஒவ்வொரு கதைய பத்தியும் சொல்லிட்டே போகலாம்.

  மூணாவது கதையின் தொடக்கத்துல டாக்டர் கனவுல பீலோ, சில ரோஜா பூக்களையும் புதர்களையும் வெட்டுவது போலவும் BACKGROUND ல ஒரு பறவையை வெளிப்படுத்தாமல் அதன் குரலை மட்டும் வெளிப்படுத்துவதைபோல சித்தரிக்கப்பட்டிருப்பதற்க்கும், இறுதியில் உண்மையில் அதே போல ஒரு தோட்டத்தில் அந்த பறவையை காண்பித்து டாக்டரின் மனைவியின் கைகளில் ரோஜா முள் குத்தி ஒரு பூவின் மேல் ரத்தம் படிந்திருப்பதை போல சித்தரிக்கப்பட்டிருப்பதற்க்கும் காரணம் இல்லாமல் இல்லை. நண்பர்களால் யுகிக்கமுடிகிறதா ???

  ReplyDelete
  Replies
  1. டிஸ்கவரியுடன் தொடர்பிலிருக்கும் சென்னைவாசிகளுக்கு இன்னும் புக்கு வந்துசேரவில்லை. கடுப்ஸ் ஆஃப் இண்டியா! கிரீன் மெனார் ரசிகனாக இதில் உங்க விமர்சனம் இன்னும் வயித்தெரிச்சலை உண்டுபண்ணுகிறது யுவர் ஆனர்!

   Delete
  2. 'முன்பணம் கொடுக்கும் ஏஜெண்டுகளுக்கு' தாமதமின்றி அனுப்பிவிடுவோம் என்று ஆசிரியர் குறிப்பிட்டுவிட்டாரே!

   'அவங்க' அனுப்பினாத்தானே இவங்களும் அனுப்ப?? 'அவர்களுடன்' தொடர்பிலிருக்கும் நண்பர்களை "அனுப்பவேண்டியதை" உரிய நேரத்துக்கு அனுப்பச் சொல்லி ப்ரஷர் பண்ண சொல்லுங்க!

   Delete
  3. விஸ்கி-சுஸ்கி : அழகான விமர்சனத்திற்கு நன்றிகள் ! ஒவ்வொரு கதையையும் frame by frame ரசித்திருப்பது புரிகிறது ! அடுத்த முறை ஐரோப்பா செல்லும் சமயம் இங்கு இக்கதைகள் பெற்றுள்ள வரவேற்பை அதன் ஆசிரியரை / ஓவியரை சந்தித்து சொல்லிட ஆசை !

   மொழிபெயர்ப்பைப் பொருத்த வரை - ANS -ன் "கொலை செய்வீர் கனவான்களே" பாணியையே தொடர்ந்திருக்க இயலும் ; ஆனால் அது ரொம்பவே 'சிரமம் தந்த தமிழ் ' என நிறைய நண்பர்கள் (கடிதம் மூலமும்) அபிப்ராயப்பட்டிருந்தனர் ! உரிய தாக்கத்தையும் உருவாக்கும் ஆற்றல் இல்லாது போயின் அந்த அழகுக்கு பயனில்லையே என்ற சிந்தனையில் தான் ஒரு லெவல் குறைத்துக் கொள்ள தீர்மானித்தேன் !

   Delete
  4. //அழகான விமர்சனத்திற்கு நன்றிகள் ! // இதை தான் கரும்பு தின்ன கூலியாங்கறது. கிரீன் மேனர் இவ்வளவு சீக்கிரம் முடியறது வருத்தமா இருக்கு. இன்னொரு பக்கம் பாத்தா வளவளன்னு பல பாகங்களா இழுத்துட்டு போகாம குறைந்த பாகங்கள் இருக்கறதாலத்தான், இதன் தனித்துவம் செம்மையா வெளிப்படுத்துன்னு நினைக்கறேன். : )

   பதிலுக்கு நன்றிகள் சார்!

   Delete
  5. @ ஆதி
   //வயித்தெரிச்சலை உண்டுபண்ணுகிறது// ஏதோ எங்களால முடிஞ்சது! : ) .

   Delete
  6. //அடுத்த முறை ஐரோப்பா செல்லும் சமயம் இங்கு இக்கதைகள் பெற்றுள்ள வரவேற்பை அதன் ஆசிரியரை / ஓவியரை சந்தித்து சொல்லிட ஆசை !//

   அப்படி படைப்பாளர்கள சந்திக்க முடிஞ்சா, நம்ம புக்க அவங்க கைல கொடுத்து நீங்க கூட நின்னு ஒரு போட்டோ புடிச்சுட்டு வாங்க சார்.

   அதை அப்படியே ப்ளோக்ல போட்ட எங்களுக்கு பேரானந்தம்.

   இதுக்கு முன்னாடி நீங்க நம்ம ஹீரோக்கள படைச்ச படைப்பாளர்கள( ஓவியர் / கதாசிரியர் ) சந்திச்ச்துண்டா??? உங்க அனுபவத்தையும் புகைப்படங்களையும் எங்க கூட ஷேர் பண்ண கூடாதா ???

   Delete
  7. //ஒவ்வொரு கதையும் நான்கு ஐந்து பக்கங்கலேன்னாலும் அதுக்குள்ளே பொதிஞ்சுள்ள விசயங்கள நாம பாக்க முடிஞ்சா ஒரு நூறு பக்க கதைக்குன்டான வாசிப்பு அனுபவத்தை அது கொடுக்கும்.//

   உண்மை! 3 பாகங்களையும் படித்தவுடன் தெளிவான ஒரு விஷயம் சாமர்த்தியமான கதை அமைப்பின் மூலமாக நீளத்தைக்குறைத்து density -
   ஐ உயர்த்திய writer - ன் அணுகுமுறை. உண்மையில் இதே பாணியில் story telling செய்யப்படும்பட்சத்தில் கொலை, வன்மம் தவிர வேறுபல கதைக்களங்கள் கூட standout ஆகும் என்று தோன்றுகிறது. உதாரணமாக கறுப்புக்கிழவியின் கதைகள் (Green Manor அளவுக்கு Depth இல்லையென்றாலும் மற்றசில ஒற்றுமைகள் இரசிக்கத்தக்கவை).

   இதே மாதிரியான formatல் வேறு கதைகள் இருந்தால் அவற்றையும் try பண்ணலாம்!

   Delete
 56. @பொடியன்,

  ‘கவனிக்கிற’ விதத்துல ‘கவனிச்சா’த்தான் இனி சரிப்பட்டுவரும் நண்பரே! போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. :-))

  @ஆந்தைவிழியார்,

  என்ன ஸார் சிரிப்பு? பிச்சு பிச்சு!

  ReplyDelete
  Replies
  1. @ ஆதி தாமிரா : அது சிரிப்பல்ல ; ஒரு பத்தி டைப் அடிக்கும் வேலையை நண்பர் பொடியன் மிச்சப்படுத்தி விட்டாரே என்ற புன்முறுவல் !

   Delete
 57. வணக்கம் எடிட்டர் சார் , filler pages க்கு நம்ம குண்டன் பில்லி , பரட்டை தலை ராஜா,மற்றும் விச்சு &கிச்சு இவர்கள் திரும்பவும் வற வாய்ப்பில்லையா? மதியில்லா மந்திரி வெகு சுமார் ரகமாக எனக்கு தோன்றுகிறது.லக்கி லுக் ஒ.கே. முன்னர் நமது மினி லயனில் வந்திட்ட ஒற்றை கண் ஜாக் நோஞ்சான் சார்லி இவர்கள் வந்தால் அருமையாக இருக்கும், சாத்திய கூறுகள் உண்டா சார்?

  ReplyDelete
 58. பதிலுக்கு நன்றி சார்!

  நீதிபதி சுடப்பட்டது எப்போது என்பதில்தான் குழம்பி விட்டேன்!

  ReplyDelete
 59. //// 'சரி - NBS காலி ; what next ?' என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது தான் !! பொறுமை ப்ளீஸ் !! ////
  41வது (2014) ஆண்டு ஸ்பெஷல்!!!!!!!!!!.

  ReplyDelete
 60. BIG NOoooooooooo for this. Chickbill has to come up 2 stories.

  //Update # 7 : லக்கி லூக்கின் "புரட்சித் தீ" இதழின் மறுபதிப்புக் கோரி இது வரை வந்துள்ள கடிதங்கள் ஒரு கத்தை தேறும் ! சிக் பில் (மறுபதிப்பு) ஸ்பெஷலில் 1 சிக் பில் reprint+ "புரட்சித் தீ " வெளியிட்டால் ஒ.கே.வாக இருக்குமென்று தோன்றுகிறதா? உங்களில் எத்தனை பேரிடம் "புரட்சித் தீ" ஒரிஜினல் இதழ் உள்ளது என்று தெரிந்திட ஆவலும் கூட ! //

  ReplyDelete
 61. விஸ்கி-சுஸ்கி :

  //மூணாவது கதையின் தொடக்கத்துல டாக்டர் கனவுல பீலோ, சில ரோஜா பூக்களையும் புதர்களையும் வெட்டுவது போலவும் BACKGROUND ல ஒரு பறவையை வெளிப்படுத்தாமல் அதன் குரலை மட்டும் வெளிப்படுத்துவதைபோல சித்தரிக்கப்பட்டிருப்பதற்க்கும், இறுதியில் உண்மையில் அதே போல ஒரு தோட்டத்தில் அந்த பறவையை காண்பித்து டாக்டரின் மனைவியின் கைகளில் ரோஜா முள் குத்தி ஒரு பூவின் மேல் ரத்தம் படிந்திருப்பதைபோல சித்தரிக்கப்பட்டிருப்பதற்க்கும் காரணம் இல்லாமல் இல்லை. நண்பர்களால் யுகிக்கமுடிகிறதா ???//

  எவ்ளவோ யோசித்து விட்டேன் புரியவில்லை நீங்களே சொல்லி விடுங்களேன்!

  ReplyDelete
 62. உங்களில் எத்தனை பேரிடம் "புரட்சித் தீ" ஒரிஜினல் இதழ் உள்ளது என்று தெரிந்திட ஆவலும் கூட !
  என்கிட்ட இல்ல சார்

  ReplyDelete
 63. காமிக்ஸ் திருவிழா (7வது நாள்- வெள்ளிக்கிழமை)

  * ரம்ஜான் விடுமுறையென்பதால் நிறைய எண்ணிக்கையில் குடும்பம் குடும்பமாக மக்கள் அரங்கம் முழுவதும் காணக்கிடைத்தனர். கூடவே நிதானமாக புத்தகம் தேடும் இளைஞர்களும், யெளவன யுவதிகளும்!

  * நம் ஸ்டாலிலும் இன்று நிறையவே கூட்டம். பெரும்பாலான நேரங்களில் நம் ஸ்டால் நிரம்பி வழிந்தது. நீண்ட நெடுங்காலமாக காமிக்ஸ் படித்துவரும் பல புதிய நண்பர்களையும், அங்கிள்களையும் பிரகாசமான முகங்களோடு நிறைய எண்ணிக்கையில் கண்டிட முடிந்தது. அதே உற்சாகம்! அதே ஆர்வம்! ஈரோடு பகுதிகளில் இத்தனை காமிக்ஸ் ரசிகர்களா!!!

  * இன்றைய நாளின் முக்கிய நிகழ்வாக, பல பதின்பருவ சிறுவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்திருந்து தங்களுக்குப் பிடித்த காமிக்ஸ்களை அள்ளிச் சென்ற சந்தோஷ சம்பவங்களைக் கூறலாம். எதிர்கால சந்தாதாரர்கள் நிறைய எண்ணிக்கையில் உருவாகிவருவதை மனது நிறைவாய் உணர்ந்தது.

  * ஒரு பதினாலு வயதுச் சிறுவன் தினமும் நமது ஸ்டாலிற்கு வந்து காமிக்ஸ் வாங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அவனிடம் விசாரித்ததில் சமீப காலத்தில்தான் தனக்கு காமிக்ஸ் அறிமுகமானதாகவும், தனக்கு லார்கோ, டெக்ஸ் வில்லர் கதைகள் பிடித்திருப்பதாகவும் தெரிவித்தான்.

  * 'சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்' தனக்குப் பிடித்திருப்பதாக பனிரெண்டு வயது சிறுமி ஒருத்தி சொன்னது நம் நண்பர்களை அதிர்ச்சியடைய வைத்தது. SHSSஐ தான் இருமுறை படித்துவிட்டதாகவும், சுட்டிலக்கியை தான் விரும்பவுல்லை என்றும் கூறி மேலும் அதிர்ச்சியடைய வைத்தாள் (தியாகராஜ பாகவதர் படங்களை விரும்பிப் பார்த்திடும், நண்பர் கார்த்திக்கின் பக்கத்துவீட்டுப் பெண் ஞாபகம் வந்தது).

  * கணவன்-மனைவி இருவருமே தீவிரக் காமிக்ஸ் பிரியர்களாக இருந்திடுவது அத்தி பூத்தாற்போல் மிகவும் அரிததென்பது நாம் அறிந்ததே! அப்படிப்பட்ட ஒரு தம்பதிகளையும் சந்தித்திட முடிந்தது. தான் டெக்ஸ் வில்லரின் தீவிர ரசிகையென்றும், கிட்டத்தட்ட எல்லா டெக்ஸ் கதைகளையும் தான் படித்துவிட்டதாகவும் அப்பெண்மணி பெருமை பொங்க சொன்னபோது, கார்ஸனுடன் துப்பாக்கி பிடித்து சண்டைக்கு ரெடியாகிக்கொண்டிருந்த (நண்பர் பொடியனின் கைவண்ணம்) என் 'தல' யை பெருமையுடன் பார்த்துக் கொண்டேன்.

  விற்பனையிலும், மக்கள் காட்டிய ஆர்வத்திலும் நிறைவாய் உணரவைத்த மற்றுமொரு அழகான நாள்! :)

  (P.S: மேற்கூறிய நபர்களின் புகைப்படத்துடன் கூடிய பதிவு: நண்பர் ஸ்டாலினின் வலைப்பூவில்; விரைவில்...)

  ReplyDelete
 64. பிரபலப் பதிவர் 'வால் பையன்' நமது புத்தகங்கள் பற்றியும், ஈரோடு புத்தகத் திருவிழாவில் நமது பங்கெடுப்புக் குறித்தும் ஒரு அலசல் பார்வைப் பதிவிட்டிருக்கிறார்.

  அவருக்கு காமிக்ஸ் உலகின் நன்றிகள் உரித்தாகட்டும்!

  http://valpaiyan.blogspot.in/2013/08/blog-post_7425.html

  ReplyDelete
 65. இது ஒரு அழகிய திருவிழா காலம்!

  ReplyDelete
 66. முதன் முதலில் தொலைகாட்சிகளில் டாம் அண்ட் ஜெர்ரி யை பார்த்து சிலாகித்த நமக்கு, இந்த அசைவில்லா பூனைகளிடம் நாட்டம் ஏற்படாமல் போனதில் வியப்பில்லை.

  ஆனாலும் Filler Pages தேவை. தேடல் தொடரட்டும்.

  NBS காலி,! பொறுமை ப்ளீஸ் !! பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டுதானே?

  இரத்தப் படலம் கலர் மறுபதிப்பு இபொழுது கிடையாது என்று முடித்துவிட்டு அவ்வப்பொழுது இரத்தப் படலம் பற்றிய தகவல்கள் கருத்துக்கள் கூறி அந்த ஆவலை தூண்டுவது "தொட்டிலையும் ஆட்டிவிட்டு கிள்ளியும் விடுவார்கள் என்பார்களே அதுவா?

  சீரான இடைவெளியில் இப்பொழுது காமிக்ஸ் வருவதால் எல்லாவித போட்டிகளையும் புத்தகத்தில் அறிவிப்பது நலம்.

  ReplyDelete
 67. 2 ந்தேதி அனுப்பிய புஸ்தகம் 9ம் தேதி கிடைக்கிறது . . கொஞ்சம் ST யை கவனிங்க சார்:-@

  ReplyDelete
 68. *நண்பர் ராஜ்குமார் தொடர்ந்து நான்கு நாட்களாக காலை முதல் இரவுவரைஸ்டாலில் இருந்து வரும் நபர்களுக்கு காமிக்ஸ் குறித்து எடுத்துரைக்கிறார்

  * ஞாயிற்றுக்கிழமை ஆசிரியரை சந்திக்க புதிய வாசகர்கள் அனேகம் நபர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்

  * இன்று இரவு கரூரை சார்ந்த சாமி நாதன் என்ற நண்பர் சந்தா செலுத்திய நபர்களை மட்டும்தான் ஆசிரியர் பார்ப்பாரா? என ஒரு அப்பாவித்தனமான கேள்வியை கேட்ட பொழுவது எனக்கு சிரிப்புத்தான் வந்தது ( இவரை உச்ப்பிவிட்ட அந்த குறும்புக்கார நண்பர் யாரோ? ). புதிய வாசகர்களை பார்க்கத்தான் அவர் மிகவும் சந்தோஷ்ப்படுவார் என்றவுடன் நாளை காலை முதல் ஆளாக ஆஜராகிவிடுவதாக கூறினார்

  * மகாஜனா பள்ளியை சேர்ந்த ஒவிய ஆசிரியர் பழைய கதைகள் குறித்து பல மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். சுமார் 70+ தாண்டிய தனது தந்தையுடன் வந்திருந்த அவர் தனக்கு காமிக்ஸை அறிமுகபடுத்தியது தனது தந்தைதான் என்றும் அதற்காக என்றும் நன்றிகடன் பட்டுள்ளேன் என்றார். அவர் தந்தையும் காமிக்ஸ் அரங்கை பார்ப்பதற்காகவே வந்ததாக கூறியது நெகிழ வைத்தது . அவர் நாளை ஆசிரியரை சந்தித்து பழைய இதழ்களுக்காக சண்டைப்போடப்போவதாக கூறியது வேறுகதை

  * இதுவரை பள்ளிகளின் ஓவிய ஆசிரியர்கள் மட்டும் எனக்கு தெரிந்து குறைந்த பட்சம் 15 நபர்களாவது இருப்பார்கள்

  சுட்டியை ரசிக்கும் சுட்டி:http://tamilcomicskadanthapaathai.blogspot.in/2013/08/7-8-9.html#comment-form

  ReplyDelete
 69. இன்று ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு வருகைதரும் மதிப்பிற்குரிய எடிட்டர் திரு. விஜயன் அவர்களையும், நண்பர்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறோம்!

  - ஈரோடு காமிக்ஸ் நண்பர்கள்.

  ReplyDelete
  Replies
  1. wishing you all to have great fun and good time with our comics friends and editor !

   Delete
 70. தினத்தந்தி 12-08-2013

  "மறுபதிப்புக்கு உடன்படாத காமிக்ஸ் எடிட்டர், வாசகர்களால் சிறை பிடிப்பு" - ஈரோட்டில் பரிதாபம்!

  ReplyDelete
  Replies
  1. Erode விஜய் : நேரடி ஒளிபரப்பு ஏதும் கிடையாதா ?

   Delete
 71. கருத்துசுதந்திரம் பற்றி இங்கே வாய் கிழிய பேசும் சிலர் தங்கள் வலை பூவில் அதை பின்பற்றுவதில்லை. அவர்களால் ஜீரணிக்க முடியாத கருத்தை பதிவு செய்தால் உடனே அழித்து விடுகின்றனர்.
  வாழ்க புத்தர் !

  ReplyDelete
 72. புத்தக விழாவில் ஆசிரியருடன் பங்கேற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் ...கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக விஷக்காய்ச்சலால் அவதிப்படுவதால் வரமுடியாமல் போனதற்கு வருத்தப்படுகிறேன் ..

  ReplyDelete
  Replies
  1. Don't worry ji. Let's meet at Chennai Book Fair in January!

   Delete
 73. HOT NEWS!!!!

  நமது நண்பர்களின் தொடர் வற்புருத்தலின் பேரில் எடிட்டர் விஜயன் அவர்கள் 'மின்னும் மரணம்' வண்ண மறுபதிப்பை ஜனவரி 2015 ல் வெளியிடுவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

  (அன்பான வற்புறுத்தலின் முன்ணனியில் நின்று காரியத்தை சாதிக்க உதவிய நண்பர் சிவ.சரவணகுமார் அவர்களுக்கு நன்றி!!!)

  ReplyDelete
  Replies
  1. கனவை நனவாக்க தோள் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல பல ...

   மகிழ்ச்சியால் இதயம் துள்ளி குதிக்கிறது ....

   நன்றிகள் பல பல ...
   Delete
  2. Whats up to Crabe Fry? That is "Karsanin Kadanthakalam "????????? Any Anoncement from Editor?

   Delete
 74. Super hit Anoncement from Editor. Thanks Guys for the comitments. At least 2015 our dream comes true.

  ReplyDelete
 75. ஈரோடு புத்தக திருவிழாவை ரொம்பவே மிஸ் பண்ணிட்டோம் என்று வருத்தமாக உள்ளது!

  ReplyDelete
 76. "Minnum Maranam reprint by Jan'2015!" Wonderful to hear!

  ReplyDelete
 77. என்னப்பா மணி இரவு 12 ஆகுது, இன்னும் ஒரு விவரத்தையும் காணோம்?

  ReplyDelete
  Replies
  1. நண்பரே...அதே ஆர்வத்துடனே ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் refresh செய்து பார்த்துகொண்டிருக்கிறேன். யாராவது update செய்யுங்களேன்.

   Delete
 78. ஈரோடு விஜய் மற்றும் ஸ்டாலின் எங்கிருந்தாலும் தயவு செய்து இங்கு வரவும்.

  At least, say that our working on the updates..

  ReplyDelete
 79. @ Radja from France, Thiruchelvam, willerFan and ALL

  நேற்று எடிட்டருடன் இரவு 10:30 வரை உரையாடிவிட்டு வீடு திரும்பிபோது நேரம் 11:30ஐ தாண்டிவிட்டது! நேற்று நான் சொன்ன 'HOT NEWS'க்கே பெரியதொரு response இல்லாததால், காமிக்ஸ் உலக மக்கள் நேற்று விடுமுறைக் கொண்டாட்டத்திலிருப்பதாக நினைத்துக்கொண்டு நானும் தூங்கிப்போய்விட்டேன்.
  நிச்சயம் இன்று மதியப் பொழுதுக்குள் நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்க்கிறேன்!

  ReplyDelete