Wednesday, August 14, 2013

காதலினால் அதகளம் செய்வீர் !
சுட்டியை சுவைக்கத் துடிக்கும் நம் குட்டி வாசகி !! 

212 comments:

  1. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

    மெதுவா படித்துவிட்டு வருகிறேன் :-)

    ReplyDelete
  2. Replies
    1. ஆச்சர்யக்குறி கேள்விக்குறியாகி விட்டதே ? பரவாயில்லை, tie-breaker தான் ! same to you. 19.55 :)

      Delete
    2. Thanks for letting the us (email subscribers) know about this post.

      Delete
  3. Replies
    1. நானும் கிட்ட தட்ட ஒரு காமிக்ஸ் பைத்தியம் தான். இந்த வலை தளத்தில் அதிகம் கமெண்ட்ஸ் போட்டது கிடையாது.

      ஈரோடு பக்கத்தில் ஒரு கிராமம் என் சொந்த ஊர். இப்போது வெளிநாட்டில் வேலை செய்வதால் என்னால் வர முடியவில்லை. சொந்த ஊருக்கு இவ்வளவு பக்கத்தில் நடந்த திருவிழாவிற்கு என்னால் வர முடியவில்லை என்பது பெரிய கொடுமை.

      C.I.D Robin அவரது கதைகள் திரும்ப வந்தால் சூப்பர். விங் கமாண்டர் ஜார்ஜ் கதைகள் இப்போதும் வருகின்றனவா என தெரிந்து கொள்ள ஆவல். இவர்கள் இருவரது கதைகளும் எப்போதும் ரசிக்க கூடியவை.

      Delete
    2. மறு பதிப்புகளை விட புது பதிப்புகள் மேல். உலகம் மிக பெரியது. பார்த்து, ரசித்து படிக்க வேண்டியவை கடலளவு உள்ளது. Old is Gold. But Gold 'only' is not good for life.

      Delete
    3. இந்த b&w low budget கதைகளுக்கென தனியாக ஒரு brand (மினி-lion போல) துவக்கினால் என்ன? அப்படியே இன்னொரு பிட்டு - இந்த இணை தளத்திலேய சந்தா அல்லது புத்தகம் வாங்கும் வசதியை துவக்கினால் என்ன?

      நோட்: தமிழில் எழுதி ரொம்ப நாள் ஆச்சு. எழுத்து பிழைகள் இருப்பின் மன்னிக்க.

      Delete
  4. Editor Sir ,

    Reading this post made me feel like as if I were in Erode Book Fair.
    Kudos to our Comic Family for their contribution... Way to go Guys.....

    ReplyDelete
  5. Greetings and my best wishes and congratulations to all who made this event a successful one for our favorite lion and muthu and for the wonderful news of Minnum Maranam.

    Regards

    Senthilkumar Sivakumar

    ReplyDelete
  6. //தற்போது வேறு கார்ட்டூன் கதைகள் நம்மிடம் active ஆக இல்லை என்ற குறைபாடு எப்போதையும்விட அன்று என்னை ரொம்பவே உறுத்தியது. //

    இந்த உறுத்தல் விரைவில் புதுவரவுகளைத்தரும் என்று தோன்றுகிறது. :)

    என்னதான் TV Channel - கள் தமிழாக்கத்தோடு கார்ட்டூன்களைத் தருவித்திருந்தாலும், புத்தகங்களின் தனித்தன்மையான சுவை நம்மூர் சிறுவர்களுக்கு எட்டாக்கனியாகவே தொடர்வதை உணரமுடிகிறது. Curious to see the new introductions!

    ReplyDelete
  7. மின்னும் மரணம், மீண்டு(ம்) வரும் எமது தங்க புதையல் !

    எங்கள் நீண்ட நாள் கனவான மின்னும் மரணம் மின்னலென ஒளிவீசிட, நீண்டுவிட்ட இந்த இடைவெளி (2015) எங்களுக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. இருந்தாலும், கனவுகளும் கற்பனைகளும் நிஜமாகிவிட்ட தருணம், பாலைவனச் சோலையாய் அனுபவித்த காலம் கடந்து; குயிலின் கானமும், வானம்பாடியின் கீதமும், வருடும் தென்றலும், வாசமாய் மலர்ந்திடும் மலர்களும், சுகமென திகழும் வசந்தகாலத்தில் அல்லவா நாம் அடியெடுத்து வைத்து விட்டோம் என்ற நினைப்பே எம்மை விண்ணில் மிதக்க வைக்கிறது !

    பாண்டிய சாம்ராஜ்ஜியத்தில் தற்போது மீண்டு எழுந்ததுவிட்ட தமிழ் காமிக்ஸ் பொற்காலத்தில், சிங்கமென சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் எங்கள் பாண்டிய தேசத்து காமிக்ஸ் மாமன்னன் எங்கள் வீர விஜயன் க்கு எமது உளங்கனிந்த நன்றிகள் என்றென்றும் உரித்தாகட்டும் !!!

    வாழ்க வீர விஜயன் ! வளர்க அவர்தம் புகழ் !

    ReplyDelete
    Replies
    1. // எங்கள் பாண்டிய தேசத்து காமிக்ஸ் மாமன்னன் எங்கள் வீர விஜயன் க்கு எமது உளங்கனிந்த நன்றிகள் //

      இதற்கு எடிட்டர் ஏற்கனவே இது போல் பதில் அளித்ததாக நியாபாகம்.
      " இந்த மாமன்னன் என்று அழைப்பது எல்லாம் வேண்டாமே, நாம் அனைவரும் இங்கு காமிக்ஸ் ரசிகர்கள்தான் "

      Delete
    2. நன்றி கார்த்திகேயன், எழுதும் போது, அதுபோல் தானாக வந்து விடுகிறது. ஆனால் மாமன்னன் என்று முதன்முறையாக தான் இங்கு குறிப்பிட்டுள்ளேன். இருந்தாலும் உங்களுக்காகவும், இங்கே இணைந்திருக்கும் வாசகர்களுக்காகவும் மாற்றப்பட்ட வரிகள் இதோ ;

      காமிக்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் தற்போது மீண்டு எழுந்ததுவிட்ட தமிழ் காமிக்ஸ் பொற்காலத்தில், சிங்கமென சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் எங்கள் காமிக்ஸ் காதலர் எங்கள் வீர விஜயன் அவர்களுக்கு, எமது உளங்கனிந்த நன்றிகள் என்றென்றும் உரித்தாகட்டும் !

      இவண்;
      ஒரு காமிக்ஸ் ரசிகன்

      Delete
    3. நன்றி மரமண்டை அவர்களே.

      Delete
  8. சுட்டிகளை மனதில் கொண்டு, இத்தகைய புத்தகத் திருவிழாவின் பொழுதாவது, நமது 'மினிலயன்' இதழ்களை மறுபதிப்பு செய்வதை பரிசீலிக்க வேண்டும்.

    1. ரூ.50/- விலையில் லக்கிலூக் மற்றும் சிக்பில் கதைகள் ஒவ்வொன்றாக.

    2. அல்லது ரூ.25/- விலையில் இரு வர்ணங்களில் சுஸ்கி-விஸ்கி, 'மாயதீவில் அலிபாபா' series , இரண்டு மூன்று கதைகள் சேர்த்து filler pages -க்காக வைத்திருக்கும் "மதியில்லா மந்திரி" series என்று வெளியிட முயற்சிக்கலாமே.

    ReplyDelete
    Replies
    1. லக்கிலூக் மற்றும் சிக்பில் கதைகள் ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக மறுபதிப்பு (Sunshine - specials வழியாக) செய்யப்படுகின்றன. அது தொடரும் என்று நம்புகிறேன்.

      சுஸ்கி-விஸ்கி & அலிபாபா series மறுபதிப்பு வந்தால் மகிழ்ச்சி!

      Delete
    2. உண்மைதான் நண்பரே. ஆனால் ரூ.100/- விலையில் வரும் இந்த special இதழ்கள் சுட்டிகளின் பாக்கெட்டிற்கு கொஞ்சமும் எட்டாதே. அதனால்தான் ரூ.50/- விலையில் அல்லது அதற்கும் குறைவான விலைகளில் வரவேண்டும் என வேண்டுகிறேன்.

      சுட்டிகளுக்கான "இன்றைய வெளியீடு - நாளைய முதலீடு".

      Delete
    3. ஆமோதிக்கிறேன். ரூ.50/- அல்லது ரூ.25/- வந்தால் சுட்டிகளின் பாக்கெட்டிற்கு பங்கம் விளைவிக்காது.

      சமீபத்தில், ஆங்கிலத்தில் லக்கிலூக் கதைகள் குறைந்த விலையில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன. முடிந்தால் எடிட்டரும் அதை தமிழில் செயல்படுத்தினால் நன்று

      Delete
  9. க்ரீன் மேணரின் சத்தமும் ரத்தமும் சிந்தனையை தூண்டுவதற்கே.
    திண்ணையில் இளைப்பாரும் தருணத்தில் நண்பர்களுடன் இக்கதையை பகிர்ந்து கொண்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான எண்ணத்தை வெளிப்படுத்துவர்.
    உதாரணமாக சிந்தனையில் ஊனமுள்ள ஒருவரின் கற்பனை ஊனத்தை வெளிப்படுத்தும் விதமாகவே அதாவது மற்றவர்களை குழப்பும் வகையிலேயே அமையும்.
    வெற்றிடமும்,வெள்ளைப்பக்கங்களும் சிந்தனையை தூண்டுவதற்கே அன்றி பாராட்டு விழாக்களும்,அரசியல் கூட்டங்களும் நடத்தும் சத்திரம் அதுவல்ல என்பதே நிஜம்.

    ReplyDelete
  10. உங்கள் அருகாமையில் அன்றைய தினத்தைக் கழிக்க முடிந்ததில் ரொம்ப மகிழ்ச்சி சார். பதினோரு மணி தொடங்கி மாலை நான் கிளம்பிப் போகும் வரையில் (அதன் பிறகு எத்தனை பேரோ?!!) உங்களிடம் மறுபதிப்பு குறித்தும் கிளாசிக்ஸ் குறித்தும் பேசியபோது சலிக்காமல், சளைக்காமல் நீங்கள் பதில் சொல்லிக் கொண்டிருந்ததைப் பார்க்கையில் ஆச்சரியமாகவே இருந்தது. பொறுமையும் தீர்க்க சிந்தனையும் உங்களிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள். மின்னும் மரணம் - மேட்டர் ஓவர், டன். கார்சனின் கடந்த காலம் - பரிசீலிப்போம், சரி. இத்தோடு சேர்த்து வாசக நண்பர்கள் வலியுறுத்திய மற்றொரு விசயத்தை நீங்கள் முற்றாக மறந்தது ஏனோ? சிங்கத்தின் சிறு வயதில் கண்டிப்பாக அச்சில் தனியாக வர வேண்டும் என மீண்டும் ஒரு முறை உங்களை கேட்டுக் கொள்கிறேன் விஜயன் சார். அன்று நான் சொன்னது போலத்தான் - ஆசிரியரின் இதயத்திலிருந்து நேரடியாகப் பிறக்கும் வார்த்தைகள் அவை - கண்டிப்பாக நீங்கள் அதனை தனிப்புத்தகமாகக் கொண்டு வரத்தான் வேண்டும்.

    ஈரோடு பயணத்தால் விழைந்த நன்மைகள் இரண்டு. 1. புதிதாய் கிட்டிய சில அற்புதமான காமிக்ஸ் நண்பர்கள். 2. இனி தொடர்ச்சியாய் நமது வலைத்தளத்தில் பதிவிட வேண்டும் என்கிற எண்ணம்.

    இந்தப் பதிவு பற்றி - எப்போதும் போல கிளாஸ். இறுதியாய் வரும் “தலை வணங்குகிறோம்” - விஜயன் எனும் ஒற்றை மனிதனாக அல்லாது லயன்-முத்து காமிக்ஸ் குடும்பம் என்கிற உங்கள் உணர்வுக்குத் தலைவணங்குகிறேன்.

    பிரியமுடன்,
    கார்த்திகைப்பாண்டியன்

    ReplyDelete
    Replies
    1. கா.பா.,

      பெருந்தகை சென்னை வந்துட்டு போனதையே நான் இணையதளம் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன். பரவாயில்லை.

      ஆனால் வெள்ளிகிழமை மதுரையில் இல்லை, பெரியகுளம் போறேன்னு சொல்லிட்டு என்னை சந்திக்காமலேயே விட்டுவிட்டு, ரெண்டு நாள் கழித்து ஈரோடு வந்து இருக்கிறீர்.

      என்னா வில்லத்தனம்?

      இருக்கட்டும், இருக்கட்டும். மொத்தமாக வைத்துக்கொள்கிறேன்.

      Delete
    2. @King Viswa

      தல..

      வெள்ளி சனி இரு நாட்களும் பெரியகுளத்தில் தம்பியோடு. தலைவரின் வருகை காரணமாக ஈரோடு புத்தகத் திருவிழா.

      தொடர்ச்சியாக இருமுறைகள் அரசரைச் சந்திக்க முடியாமல் போனதற்காக இந்தச் சிறுவன் மன்னித்து அருளும்படி உங்களைத் தண்டனிடுகிறேன்..:-))

      அடுத்த தபா சென்னைல கண்டிப்பா கண்டுக்கலாம் நைனா...

      Delete
    3. கா.பா.,

      இந்த மாத இறுதியில் இரண்டு நாட்கள் உங்கள் ஊரில்தான் இருக்கப்போகிறேன்.

      கிளம்புவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக உங்களிடம் உத்தரவு வாங்கிக்கொண்டுதான் வருவேன்.

      கண்டிப்பாக சந்திப்போம்.

      Delete
    4. //உத்தரவு வாங்கிக்கொண்டுதான் வருவேன்//

      தல..:-)))

      வாங்க. ஜமாய்ச்சிருவோம்..

      Delete
  11. எடிட்டர் மற்றும் காமிக்ஸ் காதலர்களுக்கு சுகந்திரதின நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. டியர் எடிட்டர்,

    *  சிறுவர்களுக்கான மலிவுவிலைப் பதிப்புகளின் ( புத்தகக் கண்காட்சிகளுக்கு வருகைதரும் மாணவர்களை கருத்தில்கொண்டு) தேவை குறித்த எண்ணங்கள் உங்கள் சிந்தனையில் ஓடத் துவங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதுகுறித்து 'சுட்டிகளுக்கான இன்றைய வெளியீடு - நாளைய முதலீடு' என்று அழகாகச் சொல்லியிருக்கும் 'மேற்கிலிருந்து ராஜவேல்' மற்றும் 'பெரியாரின்' கருத்துக்களை பலமாக ஆமோதிக்கிறேன். ('ஒரு கழுதையின் கதை'யை மலிவுவிலைப் பதிப்பாகக் களமிறக்கினால் அட்டகாசமாக இருக்குமென்று நினைக்கிறேன்)

    * 'மின்னும் மரணம்' மெகா இதழ் 'Arizona love'வுடன் இணைந்து வரயிருப்பது ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கிறது.

    * அடுத்த வருடம் வரயிருக்கும் 150 பக்க கிராபிக் த்ரில்லரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    * CID ROBIN. MARTIN குறித்து கருத்துச் சொல்லத் தெரியவில்லை!

    * அடுத்தமாதம் புதிதாய் களமிறங்கிடும் காமெடி ஹீரோ யார் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன் -என்று நீங்கள் புத்தகத் திருவிழாவுக்கு வந்திருந்தபோது சொன்னதாய் ஒரு ஞாபகம்! :)

    ReplyDelete
    Replies
    1. // CID ROBIN. MARTIN குறித்து கருத்துச் சொல்லத் தெரியவில்லை! //

      விஜய் இதுக்கு என்ன அர்த்தம்.

      Delete
    2. @ V Karthikeyan

      // விஜய் இதுக்கு என்ன அர்த்தம் //

      சில நேரங்கள்லே 'மியாவ்'னா வெறும் மியாவ் தான்! இதிலே எதுக்குங்க ஆராய்ச்சியெல்லாம் பண்றீங்க? :D

      Delete
    3. @ Erode Vijay

      yaen inda villathanam innum irandu vaarangal poruthal courier coverai pirithu
      pudu hero yaar endru teriyamal bookai varudidum podudu kidaikum unarvu

      blogliya udachitta - anda feeling kidaikkumaya kidaikkuma

      please konjam poruthukollungalaen

      Delete
  13. எடிட்டர் சார், பதிவில் புகைப்படங்களை மட்டுமே JPG formatல் வெளியிடுங்கள். தங்கள் கருத்துகளை வழக்கமான Html formatல் வெளியிடவும்! இம்முறை தங்கள் கருத்துகளை mobileல் படிக்கமுடியவில்லை!

    ReplyDelete
  14. 12 -8-2013: இன்று கொஞ்சம் சுமாரான கூட்டமாக இருந்தாலும் . இரு மிக முக்கியமான நபர்களை சந்தித்தேன். ஒருவர் இந்திய மாஜிக் சங்கத்தின் தலைவர் எனது நண்பருமான திரு கார்டீசியன் சந்திர சேகர் ( சீட்டுக்கட்டு வித்தைகளில் நிபுணர்) . ம்ற்றொருவர் வீட்டில் தெரியாமல் விலைக்கு போட்டுவிட்ட காமிக்ஸை அடைந்தே தீருவதற்காக வீட்டைவிட்டு தெரியாமல் சிவகாசிக்கே பஸ் ஏறி ஓடிப்போய் புத்தகம் வாங்கியவர் இவர்களின் இருவருடய பேட்டிகளை அலைபேசியில் எடுத்தவற்றை இத்துடன் பகிற்துள்ளேன்
    13-8-2013: இன்று எனது நண்பரும் மிகச்சிறந்த காமிக்ஸ் ஓவியருமான வினோத் அவர்களை சந்திக்க நேரிட்டது. பல வருடங்களுக்கு முன் அவர் வரைந்த காமிக்ஸின் சில பக்கங்கள் இன்றும் என்னிட்ம் பாதுகாப்பாக உள்ளது
    http://tamilcomicskadanthapaathai.blogspot.in/2013/08/10.html#comment-form

    அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. ஆனந்தம் ஆரம்பம்! இனி குண்டு புத்தகங்களின் காலம்!
    ஜூலை 2014-ல் "லயன் 30-வது ஆண்டு" மஹா குண்டு புத்தகம்
    & ஜனவரி 2015-ல் "மின்னும் மரணம்" மெகா குண்டு புத்தகம்!
    இடையில் ஜனவரி 2014-ல் ஏதாவது ஒரு மினி குண்டு புத்தகம் வர வாய்ப்புள்ளதா சார்!

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் நம்ப கிளப் மெம்பர்தானா? :-)))

      Delete
  16. C I D ராபின் & மார்ட்டின் கதைகள் விரைவில் வருவது குறித்து மகிழ்ச்சி Sir!
    மார்ட்டின் கதைகள் அமானுஷ்ய ரக த்ரில்லர் என்றால்,
    ராபின் கதைகள் நல்ல சித்திரங்கள் கொண்ட விறுவிறுப்பான துப்பறியும் ரகம்!
    Welcome to Both of them!

    ReplyDelete
  17. இயக்குநர் சத்யஜித் ரே தனது பதெர் பாஞ்சாலி படத்தில் விதவை பெண் ஒருவர் ஜன்னல் வழியாக வெறிச்சோடி போயிருக்கும் சாலையை நீண்ட நேரம் பார்ப்பதாக காட்சி அமைத்திருந்தார். அதை பற்றி விமர்சகர்கள் அவரிடம் கேட்டதற்கு ''அவள் மனத்தில் இருக்கும் வெறுமையை உங்களுக்கு நான் எப்படித்தான் உணர்த்துவது'' என்றாராம்.
    க்ரீன் மேனரின் வெள்ளை பக்கங்கள் எனக்கு இந்த சம்பவத்தை நினைவு படுத்துகின்றது

    ReplyDelete
  18. டியர் எடிட்டர் ,
    நண்பர் ஸ்டாலின் மற்றும் விஜய் இன் புண்ணியத்தால் ஈரோடு புத்தக திருவிழா நேரடி வர்ணணைகளை தினந்தோறும் தரிசித்து வருகிறோம் . இருப்பினும் தங்களின் தோ .து 1, 2, 3, தொடர்பாக தெரிவித்த அறிவிப்பு பற்றி சிறு வேண்டுகோள் .ரத்த படலம் மறுபதிப்பு - தோ.து 3 பற்றிய முடிபுக்கான காரணம் ஓகே . "மின்னும் மரணம் "- தோ.து 2 முடிபு பற்றி ஏகோபித்த கரகோஷங்கள் !!!!!!!!!!!!!!. ஆனால் அந்த "நண்டு பிரை "- தோ .து 1 முடிபு மட்டும் ரொம்ப கவலை ஆக உள்ளது சார் . 630 கதைகளுள் எமக்கென பொறுக்கி பொறுக்கி பார்த்து வெளியிடுகிறீர்கள். வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற "கார்சனின் கடந்த காலம்" மறு பதிப்பை வெளியிட ஏன் இந்த தயக்கம் . புதியதை முடிச்சவிள்கும் தங்கள் முயற்சிக்கு என்றும் எமது ஆதரவு உள்ளதை போல் , தரமான ஒரே ஒரு மறுபதிப்பு ப்ளீஸ் ?????,,, வேண்டுமானால் தயவு செய்து முன்பதிவு ஒன்றை தொடங்கி பாருங்களேன் சார் . அப்போது கள நிலவரம் தெரியும் .

    CID ராபின் , மர்ம மனிதன் மார்ட்டின் இருவருக்கும் எனது ஏகோபித்த ஆதரவு என்றும் உண்டு . லக்கி லூக் இணை தாண்டி சிறுவர்களை கவர வேறு நாயகர்கள் வேண்டும் சார் .

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஆமாம், கையோடு ‘கார்சனின் கடந்த காலத்தையும்’ போட்டு விடுங்கள் ஸார்! என்னதான் ”புதியன கொட்டிக்கிடக்கின்றன..” என்ற வாதம் நியாயமாக இருந்தாலும்.. காமிக்ஸ் என்ற மெகா குடைக்குள் புதியதென்ன? பழையதென்ன? அது நமக்குள் ஏற்படுத்தும் நிறைவும், மகிழ்ச்சியும்தானே முக்கியம்? அதோடு எத்தனை முறை படித்திருந்தாலும் மனதுக்குப்பிடித்த பழைய புத்தகங்களை, தூசு தட்டி, வருடி, அடுக்கிவைப்பதில் உள்ள சுகமே தனிதான்..

      (யாருப்பா அது.. அப்படியே ஆர்ச்சி, ஸ்பைடர்னு ஆரம்பிக்கிறது.. மீ எஸ்கேப்பு.. ஹிஹி.. நாங்கள்லாம் வக்கீல் மாதிரி, வேணும்னா ஒரு பேச்சு பேசுவோம், இல்லைனா பிளேட்டை திருப்பிப் போட்டுடுவோம்)

      Delete
    2. டெக்ஸ் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற, மிகவும் எதிர்பார்க்கும், ‘கார்சனின் கடந்த காலத்தையும்’ அப்படியே மறுபதிப்பு செய்தால் double மகிழ்ச்சி

      Delete
  19. எடிட்டர் சார்,

    ரிப்போர்ட்டர் ஜானி ( ரிக் ஹோசெட் ) இன் கதைகளில் சுமார் 94 வெளிவந்தன . அதில் எமது காமிக் இல் எத்தனை வெளியாகின ? மிகுதிகள் வெளியாகும் சந்தர்பம் எப்போது ??????

    ReplyDelete
  20. வாவ்! சூப்பர் சார்! நண்பர்கள் எல்லோருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்! ஜெய்ஹிந்த்!

    ReplyDelete
  21. CID Robin and Martin Mystery should definitely come.

    Editor Sir,
    Variety of heroes/stories are always welcome, particularly after our new avatar i seriously miss detective and crime thrillers. We have enough Mass stories (Tex), intelligent mass(Tiger, Largo, shelton), cartoon (lucky luke, chick bill, iznogud), reality (graphic novels).
    What we are missing is murder mystery, crime, detective, fantasy stories.

    Just my two cents.

    ReplyDelete
  22. Dear Sir,

    சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். புத்தகக் கண்காட்சி வெற்றி மகிழ்ச்சியடைய செய்கிறது. கூடுதல் மகிழ்ச்சியாக மின்னும் மரணம் அறிவிப்பு (2015 வரை காத்திருக்க வேண்டுமா? :-( பேசாமல் டைகரை லயன் காமிக்ஸ்க்கு "TRANSFER" செய்து 30-வது ஆண்டு மலராக மின்னும் மரணம் வெளியிட்டு விடுங்கள் சார்.).

    ReplyDelete
  23. 12 நாட்கள் ஒரு தொடர் கொண்டாட்டத்திற்குப் பிறகு, 'ஈரோடு புத்தகத் திருவிழா' நேற்று நிறைவடைந்தது நண்பர்களே! :(

    * நிறைய எண்ணிக்கையிலான புதிய நண்பர்களைச் சந்தித்ததும்,
    * இந்த வலைப்பூவில் எழுத்துக்களாய் மட்டுமே அறிமுகமாயிருந்த இனிய நண்பர்களை நேரில் சந்தித்ததும்,
    *பல பழைய வாசகர்களுக்கு லயன்-முத்து இன்னும் வந்துகொண்டுதானிருக்கிறது என்று அறியப் படுத்தியதும்,
    * பல சிறுவர்களுக்கு முதன்முறையாகக் காமிக்ஸ் படித்திடும் இன்பம் கிடைக்கச் செய்ததும்,
    * பல புதிய, பழைய வாசகர்களின் கருத்துக்களையும், அனுபவங்களையும் அறிந்துகொள்ளச் செய்ததும்,
    * ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இத்தனை காமிக்ஸ் பிரியர்கள்/வெறியர்கள்
    இருக்கிறார்களா என்று எங்களை பிரம்மிக்க வைத்ததும்,
    * சுமார் 12 மணிநேரம் நம் வாசகர்களைவிட்டு ஒரு நிமிடமும் அகலாத ஒரு காமிக்ஸ் காதலரின் ஈரோடு வருகையும்

    இவ்விழாவின் முக்கிய நிகழ்வுகளாக, என்றுமே மறக்க இயலாத நீங்காத நினைவுகளாய் இருந்திடும்.

    பல மணிநேரப் பயணதொலைவிலிருக்கும் ஊர்களிலிலிருந்தும் நேரில் வந்திருந்து தனது காமிக்ஸ் காதலை வெளியடுத்திய பல நண்பர்களுக்கும்,
    நேரில் வரஇயலாவிடினும் பின்னூட்டம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தொடர்ந்து உற்சாகம் அளித்துவந்த நேசமிகு நெஞ்சங்களுக்கும்

    நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அடுத்த முறை ஈரோடு வரும்போது, உங்களையும், ஸ்டாலினையும் ‘செமத்தி’யாய் கவனிக்கலாம் என்று திட்டம் வைத்திருக்கிறேன்! தயாராக இருக்கவும்!

      Delete
  24. ஆசிரியருக்கு ..,
    உங்களை சந்தித்ததிலும் ,புத்தக திரு விழாவின் வெற்றி இலும் மிகுந்த மகிழ்ச்சி .புத்தக கண்காட்சியில் எனக்கு ஏற்பட்ட ஒரு வருத்தமான நிகழ்வை பற்றியும் ,அதனால் நான் மதியமே சென்றதன் காரணத்தையும் , என்னால் அதன் பிறகு அங்கு நிலையாய் இருக்க முடியாததன் காரணத்தையும் உங்கள் புது பதிவில் இட காத்திருந்தேன் .பட் இந்த பதிவில் உள்ள உங்கள் சந்தோசத்தையும் ,பதிவில் வரும் நண்பர்களின் மகிழ்ச்சி யையும் கெடுக்க விருப்பமின்றி அதை மனதிலே பூட்டி கொள்கிறேன் .எனவே எனது சந்தோஷ பகிர்வை பட்டும் பகிர்ந்து கொள்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K: //ஒரு வருத்தமான நிகழ்வை பற்றியும்//
      நேற்று நான் உங்களிடம் சொன்னது போல் யாரோ ஒரு முகமறியா புதிய நண்பர் பேசியதற்கு நீங்கள் இவ்வளவு விசனப்பட தேவையில்லையே கூல்...... :) :) :)

      Delete
    2. என்ன பிரச்சினை என்று தெரியாவிட்டாலும், பொதுவில் நீங்கள் இபப்டிச்சொல்வது கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது பரணி. நல்லதோ, தீதோ சொல்பவருக்கு நாம் தரும் முக்கியத்துவமே, அவர்தம் வார்த்தைகள் நம் மனதை அடையும் ஆழத்தை தீர்மானிக்கிறது. நீங்கள் அந்நபருக்கு முக்கியத்துவம் தருவதும், தராததும் உங்கள் விருப்பமே!

      Delete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. டியர் விஜயன் சார்,
    காமிக்ஸ் சின்னபுள்ளைங்க சமாசாரம் என்பவர்களை - //நடு மண்டையில் நச்சென்று குட்டு வைத்திடும் விளையாட்டை நடத்திடலாமென்ற தீர்மானம்//
    அப்பவும் "இது என்ன சின்னப் புள்ளத்தனமா குட்டிக்கிட்டு"ன்னுதான் சொல்லப் போறாங்க! ;)

    மின்னும் மரணம் மொத்தம் 11 பாகங்கள் என்பதால் குறைந்தது 550 பக்கங்களைத் தாண்டும் என்று நினைக்கிறேன். இதை ஒரே புத்தகமாக வெளியிட்டால் NBS-ஐ விட எடை கூடுதலாக இருக்கும்! ஆனால், நிச்சயம் படிப்பதற்கு வசதியாக இருக்காது! இரண்டு புத்தகங்களாக (ஒரே சமயத்தில்) அல்லது 11 புத்தகங்கள் அடங்கிய பாக்ஸ் செட் ஆக இதை வெளியிடுவது பற்றி உங்கள் கருத்து என்ன?! (யப்பா, கு.பு.கி. மெம்பர்களிடம் இருந்து தப்பிக்க எப்படி எல்லாம் டெக்னிக்கா கேக்க வேண்டி இருக்கு!).மற்றபடிக்கு, இது வழக்கமான மிக்ஸ்ட் மசாலா ஸ்பெஷல் இல்லை என்பது பெருத்த ஆறுதல்! ம.ம.மார்ட்டினும், சி.ஐ.டி.ராபினும் B&W-ல் வரலாம் தப்பில்லை, கொஞ்சம் வெரைட்டியாகவாவது இருக்கும்!

    டியர் விஜய் சார் :)
    //12 நாட்கள் ஒரு தொடர் கொண்டாட்டத்திற்குப் பிறகு, 'ஈரோடு புத்தகத் திருவிழா' நேற்று நிறைவடைந்தது நண்பர்களே! :(//
    உங்க வீட்ல "ஹய் ஜாலி... ஹய் ஜாலி... ஹய் ஜாலின்னு" தொடர்ச்சியா கத்தி இருப்பாங்களே?! ;)

    ReplyDelete
    Replies
    1. @ கார்த்திக்
      // "ஹய் ஜாலி... ஹய் ஜாலி"ன்னு தொடர்ச்சியா கக்தி இருப்பாங்களே?! //

      " அதுக்குள்ளவா முடிஞ்சிருச்சு "ன்னு கத்தினாங்க! ;)

      அப்புறம்... ஒரு எட்டு மாதங்களே என்னைவிட வயதில் குறைந்தவர் என்பதை காரணமாக வைத்து 'சார்' போட்டு நீங்கள் என்னை ஒரு 'பெரிசு' மாதிரி காட்டுவதோடு, மறைமுகமாக உங்களை 'யூத்'தாக்கிக் கொள்வதை நான் ஒருக்காலும் பொறுத்துக்கொள்ள முடியாது! ;)

      Delete
    2. //.. 11 புத்தகங்கள் அடங்கிய பாக்ஸ் செட் ஆக இதை வெளியிடுவது பற்றி உங்கள் கருத்து என்ன? ..//

      இது சூப்பர் ஐடியா. முதன்முறையாக லயன்-முத்துவில் collectors edition in BOX set. கொஞ்சம் கூடுதலான விலையில் இருந்தாலும், படிப்பதற்கு இலகுவாகவும், முக்கியமாக 11 விதமான அட்டைகள் கிடைக்கும் :)

      எடிட்டர் மனது வைப்பாராக.

      Delete
    3. புத்தகங்கள் அடங்கிய பாக்ஸ் செட் - hardcover


      EXCELLENT IDEA - 1lakh votes from me

      Delete
    4. சூப்பர் ஐடியா கார்த்திக்.... BOX set வேண்டும்.

      Delete
    5. கார்த்திக்கின் BOX SET ஐடியா சூப்பர்! என்றாலும்,
      * 'குண்டு புக்' கலாச்சாரத்தை அவ்வளவு எளிதில் ஒழித்துவிட முடியாது என்பதோடு,
      * 11 புத்தகங்களுக்கான (அட்டை, அட்டைப்பட டிசைன், பைண்டிங் செலவு) தயாரிப்புச் செலவு ஏகத்துக்கும் எகிறிவிட வாய்ப்பிருக்கிறது.
      * தயாரிப்புச் செலவு அதிகரித்தால் அது வாசகர்களின் பர்ஸையும் மெலியவைத்துவிடுமே!

      ஒல்லிப் பிச்சானாவும் இல்லாம, குண்டுப் பூசணியாவும் இல்லாம ANS சைஸில் 3+4+4 பாகங்களாக வெளியிட்டால் எல்லாத் தரப்பினரையும் திருப்திபடுத்திவிட முடியுமென்று தோன்றுகிறது!

      (புவியீர்ப்பு விசையை எதிர்த்துக்கொண்டு மேலெழும்பிய 'சுட்டி-லக்கி'யின் அட்டையை அதற்குள்ளாக மறந்துட்டீங்களா கார்த்திக்?) ;)

      Delete
    6. @கார்த்திக்,

      குண்டுபுக் கிளப் என்றால் சாதாரணமா? முதல் விதியே, தம்பிள்ஸ் எடுத்து கையை ஸ்ட்ராங்காக வைத்திருக்க வேண்டுமய்யா..

      ஐடியா குடுக்குறாராம் ஐடியா! தூக்கமுடியவில்லை என்பதையெல்லாம் கிளப் ஏற்காது. நல்ல பகல் வெளிச்சத்தில் தரையில் விரித்துவைத்துக்கொண்டு பக்கம் பக்கமாக புரட்டிக்கொண்டு ஆஹா.. ஆஹா!!

      குண்டு புக், ஷெல்ஃபில் இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கும் அழகே அழகுதான்!

      அதுவும் 11 புக்கெல்லாம் அநியாயம்.. ஒருவேளை ஆந்தையார் இந்த வேண்டுகோளுக்கு செவிசாய்ப்பாரானால் தயவுசெய்து இரண்டு புத்தகங்களாக பிரிப்பதோடு நிறுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

      Delete
  27. ஆசிரியர்க்கு ..,உங்களை பார்க்க ரஜினி படத்தை பார்க்க போகும் ஆவலுடன் காலை 8 மணிக்கே பஸ் ஏறிய நான் ,முந்தின இரவில் எப்பொழுதும் காமிக்ஸ் மட்டுமே கனவில் வருவது போய் இம்முறை சத்தியமாக நீங்கள் வந்தீர்கள் சார் .உங்களை வினாக்களால் துளைத்து எடுக்கிறேன் .அதே தைரியத்தோடு அங்கு வந்தால் உங்களை பார்த்தவுடன் "வக்கீல் வண்டு முருகன் "ஆகி விட்டேன் .எனவே 1008 முறை நீங்கள் எதிர் கொண்ட அந்த அரச பழசான மறு பதிப்பு வினாவை மட்டும் வினவி விட்டு ஒதுங்கி விட்டேன் .சிங்கத்தின் சிறு வயதில் போராட்ட குழுவின் தலைவர் என்ற முறையில் அதை பற்றி கூட வினவாமல் இருந்தால் என்னை என்ன சொல்வது .? உனக்கு வார்த்தை எல்லாம் வேலைக்கு ஆவாது பரணி ..லெட்டர் தான் சரி என மனசாட்சி சொல்வதால் கனவில் வினவிய வினா இப்பொழுது இங்கே ....

    ReplyDelete
  28. இங்கே கூடும் அனைத்து வாசகர்கள் சார்பில் உங்களை "சிங்கத்தின் சிறு வயதில் "தொகுப்பு வர வேண்டும் என்று வற்புறுத்த வில்லை சார் .கண்டிப்பாக வந்தே தீர வேண்டும் என்ற கட்டளை யோடு உத்தரவு போடுகிறோம் போராட்ட குழுவின் சார்பாக என்பதை அறிவித்து கொண்டு எனது வினாக்களை தொடுக்கிறேன் .

    1) தாங்கள் அறிவித்த லாரன்ஸ் &டேவிட் புதிய சாகசம் "பனி மலை அசுரன் " வருமா ? வராதா ..?

    2)காமெடி கௌ பாய் ஸ்பெஷல் ஆக அறிவித்த லக்கியின் "எதிர் வீட்டில் எதிரி " +சிக் பில்லின் "சிரிப்பை 2 சிப்பாய்கள் "எப்பொழுது வருகிறது ..?

    3)நமது இதழின் புது உத்வேகத்தால் ..,எங்களுக்கு எத்தனை பக்க புத்தகம் கொடுத்தாலும் இரண்டு நாளில் முடித்து விடுவதால் எதிர் காலத்தில் "வார இதழாக " வரும் சாத்தியமுண்டா ..?

    4)இப்பொழுது நமது புத்தகத்தின் வெற்றி இணைய தல வாசகர்களின் விமர்சனத்தை வைத்து தான் நிர்ணயிக்க படுகிறதா ..? ( இந்த வினாவின் காரணம் இணையத்தில் தோல்வி அடைந்த "S H S S "விற்பனை அதிகம் .(நீங்களே சொல்லி உள்ளீர் ).அதே சமயம் நீங்கள் குறிப்பிட்ட மாபெரும் வரவேற்பு பெற்றதாக சொன்ன "A N S "புத்தகத்தை கண்காட்சியில் நான் பார்த்த இரண்டு நாளில் அதிகம் யாரும் வாங்க வில்லை )

    5)நமது தளத்தில் சில சமயம் நண்பர்கள் இடையே தனி பட்ட முறையில் காரமாக வாக்கு வாதம் ஏற்படின் நீங்கள் தலை இடாததன் காரணம் என்ன ..?

    6)பெங்களூர் காமிக் கானில் 3 புத்தகங்கள் பதிலாக சஸ்பென்ஸ் வைத்து 4 புத்தகம் வெளி இட்ட போது மிக பெரிய ஈரோடு புத்தக கண்காட்சியில் ஒரு மறு பதிப்பு புத்தகம் கூட வராத தன் காரணம் என்ன ..?

    7)ஜனவரி 25 "அசுரர்களின் தேசத் தி ல் பதிவில் "கிராபிக் நாவல் ,புது பாணி விஷ பரீட்சை என இறங்கு வதால் பழைய நாயகர்களை இனி கை விட்டு விடுவோம் என நண்பர்கள் பயப்பட வேண்டாம் .புது பாணியில் சிறப்பானவற்றை மட்டும் அதுவும் சிறுக ,சிறுக " என்ற தங்களின் வார்த்தை இப்பொழுது கிடைத்த வரவேற்பால் மாறி விடுமா ..?

    இன்னும் இரண்டு வினாக்களின் பதில் இந்த பதிவில் தாங்கள் கூறி விட்ட படியால் நீக்கம் .

    மேலும் இந்த வினாக்களில் எதாவது தாங்கள் பதில் அளிக்க விருப்ப மில்லை என்றால் "நோ கமெண்ட்ஸ் "இட உங்களுக்கு முழு உரிமை உண்டு என்று உறுதி பட கூறி கொள்கிறேன் .
    நன்றி .(வினாக்களின் நாயகர் ஈரோடு விஜய் அவர்களுக்கு இதை சமர்பிக்கிறேன் )

    ReplyDelete
    Replies
    1. 1) தாங்கள் அறிவித்த லாரன்ஸ் &டேவிட் புதிய சாகசம் "பனி மலை அசுரன் " வருமா ? வராதா ..?

      arivicharlae kattayam varum
      avar enna arasiyalvadiya verum arivippa mattum kudukkuradukku

      vaarthai thavarada a.k.a vaaku tavarada edi sir ippo badil sollunga

      2.) one more question - neenga thigil classic announce panningalae ennachhu, nicea thigil -1 mattum print panni thappikka pakkureengala - not acceptable

      Delete
    2. Editor - pechu marakoodadu - when are the below being released?
      thigil 1 release pannitadala thigil 2,3 &4 club pannunga

      More than 15 months but we will not forget
      -------------------------------------------

      1. from editor blog dated Sunday, 25 December 2011
      நம் அபிமான துப்பறியும் ஜோடியான லாரன்ஸ் & டேவிட் புத்தம் புதிய சாகசங்களும் 2012 இல் நீங்கள் ரசிக்கப் போகிறீர்கள் ! "காணாமல் போன கடல் " வரிசையில் இவை இருக்கும்

      2. from editor blog 25th March 2012
      So அடுத்த மறுபதிப்பு - எனது லிஸ்டிலும் சரி ..உங்கள் எவரின் லிஸ்டிலும் சரி. வந்திடாத 3 இதழ்களின் ஒரு combo !! நமது ஆரம்ப திகில் காமிக்ஸின் இதழ் 1 ; 2 & 3 - மூன்றையும் ஒன்றிணைத்து "திகில் க்ளாசிக்ஸ் " என்ற பெயரில் அதே ஒரிஜினல் (பெரிய) சைசில் வெளியிட நினைத்துள்ளேன் !
      முதல் முறையாக இந்த இதழ்களைப் படிக்கப் போகும் நண்பர்கள் மெய்மறக்கப் போவது உறுதி !! மே இரண்டாம் வாரத்தில் இதழ் கிடைத்திடும் !

      Delete
    3. தாங்கள் அறிவித்த லாரன்ஸ் &டேவிட் புதிய சாகசம் "பனி மலை அசுரன் " வருமா ? வராதா ..?

      >> வரணும் அந்த புத்தகம் கண்டிப்பா வரணும் அத நாங்கள் பார்க்கணும் :-) நீங்க அத செய்வீங்க நம்பிக்கை இருக்கு :-)

      Delete
    4. விஜயன் சார்,

      Paranitharan K @
      2) காமெடி கௌ பாய் ஸ்பெஷல் ஆக அறிவித்த லக்கியின் "எதிர் வீட்டில் எதிரி " +சிக் பில்லின் "சிரிப்பை 2 சிப்பாய்கள் "எப்பொழுது வருகிறது ..?

      எப்ப சார் வருது? ஆவலுடன்!

      Delete
  29. ''அடுத்தமுறை புத்தகத்திருவிழா தம் ந‌கர்களில் அரங்கேறும்பட்சத்தில் ,இந்தப்பொறுப்புகள் யாவையும் ஏற்று நடத்தப்போவது தாங்களே என்று இப்போதே முஸ்தீபுகளில் இறங்கத்தயாராகிய ''

    அது எங்க திருப்பூர்தான் சார்......... சென்னை புத்தகக்க‌ண்காட்சியும் எங்கள் ஊர் புத்தகக்கண்காட்சியும் கிட்டத்தட்ட ஒரே நேரம் நடப்பது மட்டுமே சிறிய இடையூறு.....ஒரு சில நாட்கள் கேப் இருந்தால் போதும்......ஜமாய்த்துவிடலாம் சார்.....

    ReplyDelete
    Replies
    1. @ சிவ.சரவணக்குமார்

      அப்படியொரு வாய்ப்புக் கிடைத்திடும்பட்சத்தில் பின்னிப் பெடலெடுத்திட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
      நீங்கள், சிபி, ப்ளூபெர்ரி, சாரதி, கார்த்திக் (இவரை எந்த ஊர்க்காரரா வேணும்னாலும் அடையாளம் கொள்ளலாம்; தென்னிந்தியாவின் பெரும்பான்மையான ஊர்களில் தனக்கென ஒரு கதை வைத்திருப்பார்) உள்ளிட்ட நண்பர்கள் இருக்கும்போது அட்டகாசம் பண்ணிவிடலாமில்லை? ஈரோட்டிலிருந்தும் ஒரு குழு வந்து அவ்வப்போது தலைகாட்டிச் செல்லுமில்லையா? :)

      Delete
    2. @சிவ.சரவணக்குமார்,

      வணக்கம் நண்பரே, உங்களை இதுவரை சந்தித்ததில்லை. இந்த புத்தக கண்காட்சியிலும் சந்திக்க முடியவில்லை. மின்னும் மரணம் மறுபதிப்புக்கு நீங்களும் ஒரு காரணம் - எனது நன்றிகள் நண்பரே.

      //அது எங்க திருப்பூர்தான் சார்.........//

      திருப்பூர் புத்தக திருவிழாவில் நமது ஸ்டால் இடம் பெறவும், அது வெற்றிகரமாக நடந்தேறவும் முயற்சி செய்வோம் நண்பரே. விரைவில் சந்திப்போம் அப்பொழுது இதுபற்றி சிந்திப்போம் :)

      நன்றி !!!

      @விஜய்

      // ஈரோட்டிலிருந்தும் ஒரு குழு வந்து அவ்வப்போது தலைகாட்டிச் செல்லுமில்லையா? :)//

      அந்த நாட்களில் மட்டும் நீங்கள் திருப்பூர் ஆபீஸ் மாற்றல் பெற்று வந்து விடுங்கள் (பெயரை திருப்பூர் விஜய் என மாற்றி விட்டு உங்களது பூனையின் கன்னத்தில் ஒரு மறு (மச்சம்) ஒட்டி விட்டால் வேலை முடிந்ததது)

      :)


      Delete
    3. @ திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன்.......

      நான் சென்றபோது உங்களைப்பற்றி விசாரித்தேன்...... நீங்கள் கடந்த வரம் இரண்டு நாட்கள் அங்கே இருந்ததாக நண்பர்கள் தெரிவித்தனர்..... நம் ஊர்க்காரர் சிபியை மட்டும் சந்திக்க முடிந்தது.........

      திருப்பூர் புத்தகக்கண்காட்சி பற்றிய விவரங்களை சேகரித்துக்கொண்டுள்ளேன்....முழு விபரம் கிடைத்த‌வுடன் உங்களை அவசியம் சந்திப்பேன்.......

      Delete

  30. @ ஈரோடு விஜய்.....


    //அப்படியொரு வாய்ப்புக் கிடைத்திடும்பட்சத்தில் பின்னிப் பெடலெடுத்திட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! //

    நன்றி நண்பரே........ தங்களைப்போன்ற நண்பர்களின் முழு ஒத்துழைப்போடு கலக்கிவிடலாம்...... நல்லதே நடக்கும்...

    ReplyDelete
  31. sir.2014ல் நடக்கும் புக்பேர்க்கு ஸ்பெஷல் வெளியிடு ஏதேனும் உண்டா?

    ReplyDelete
  32. அனைத்து வாசகர்கள் சார்பில் ஆசிரியர்க்கு . நண்பர்கள் எல்லோருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்! ஜெய்ஹிந்த்...! hai friends adu nan type adikkala konjam cut konjam paste any way happy independance day for all friends

    ReplyDelete
  33. அனைத்து வாசகர்கள் சார்பில் ஆசிரியர்க்கு . நண்பர்கள் எல்லோருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்! ஜெய்ஹிந்த்...! hai friends adu nan type adikkala konjam cut konjam paste any way happy independance day for all friends

    ReplyDelete
  34. Dear Editor and Friends,

    ஒருவாறாக, ஈரோடு புத்தகத் திருவிழா நிறைவுக்கு வந்தவிட்ட நிலையில், நான் அங்கிருந்த நேரங்களில் நிறையாகவும்/குறையாகவும்/சரிசெய்யப்பட வேண்டியதாகவும்/கண்டுகொள்ளாமல் விடப்படவேண்டியதுமாகத் தோன்றிய சில விசயங்களை உங்கள் முன் வைக்கிறேன்.

    * நம் நண்பர்கள் டிசைன் செய்திருந்த பேனர்களே நம் ஸ்டால்-இன் Center of attraction என்றால் மிகையாகாது. வண்ணக் கலவைகளால் மக்களைத் திரும்பிப் பார்க்கவைத்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    * பெற்றோருடன் வந்த மாணவர்களின் தேர்வு பெரும்பாலும் 'சுட்டி-லக்கி'யாக இருந்து விற்பனையிலும் NO.1 ஆகத் திகழ்ந்தாலும், கிட்டத்தட்ட அதற்கு இணையாக (2 நாட்களுக்கு முன்பே) விற்றுதீர்ந்த 'சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்' லின் விற்பனையும் நிறையவே ஆச்சர்யப்படுத்தியது! (!)

    * மாணவர்களில் பலர் 'இங்லீஸ் காமிக்ஸ் இருக்கிறதா அண்ணா?' என்று கேட்டனர்.

    * catalogue கேட்டு ஏமாந்தவர்களும் பலர்!

    * 'முகமூடி வேதாளர் கதை கிடைக்குமா?' என்ற விசாரிப்புகளும் கணிசமாய் இருந்தது.

    * வயதில் மூத்தவர்களில் பலர் 'அட! இன்னும் முத்து காமிக்ஸ் வந்துட்டுதான் இருக்கா?' என்று சந்தோசக் குரலெழுப்பி, உடனே கடந்த கால நினைவுகளில் மூழ்கிப் போனதும் நிறையவே நடந்தது.

    * பொடியான எழுத்துக்கள் கொண்ட புத்தகங்களை சிலர் வாங்காமல் தவிர்த்ததையும் காணமுடிந்தது!

    * கண்ணைப் பறிக்கும் அட்டகாசமான வண்ண ஓவியங்களும், அருமையான கதையும் கொண்டிருந்தாலும் 'டல்லடிக்கும் அட்டைப் படம்' காரணமாக 'லார்கோ ஆக்ஸன் ஸ்பெஷல்'-இன் மேல் பல பார்வையாளர்கள் அக்கறை காட்டாமல் ஒதுக்கியதைக் காண முடிந்தது. அட்டைப்படங்களில் பளிச் வண்ணங்களே பார்வையாளர்களை அதிகம் கவருகின்றன.

    * ராதா கிருஷ்ணன் அண்ணாச்சியும், வேலுவும் அருமையான விற்பனையாளர்கள்; எனினும் நம் காமிக்ஸ்களின்மேல் காதல்கொண்ட 'மூன்றாவது நபர்' ஒருவர் அங்கே இருந்திட்டால், புதிதாய் காமிக்ஸ் வாங்க வருவோரின் விருப்பத்தைக் கேட்டறிந்து அதற்கேற்றாற்போல் கதைகளை தேர்வுசெய்து கொடுத்திடவும், அவர்களது காமிக்ஸ் ஆர்வத்தை அதிகரித்திடவும் உறுதுணையாய் இருந்திடும். (இதற்கு எடிட்டர் தரப்பில் செய்யக்கூடியது பெரிதாய் ஒன்றுமில்லை எனும்போது இங்கே நண்பர்களின் பங்களிப்பு அவசியமாகிறது)

    * நண்பர் புனித சாத்தான் 'ஸ்டிக்கர் லேபிள்'ஐ பரிந்துரை செய்திருந்தாலும், வந்துசேர்ந்ததோ 'டைம் டேபிள்'கள்!! எனினும், மாணவர்களிடம் இதுவும் சக்கைப்போடு போட்டது. கேட்டதுமே தயார் செய்துகொடுத்த எடிட்டருக்கு நன்றி!

    * அடுத்த முறை, கண்காட்சி தொடங்கும் நாளிலேயே 'மேசை விரிப்பு'களையும் கொண்டு வந்துவிடல் நலம்!

    * சிகப்பாய் ஒரு சொப்பணம், பூதவேட்டை, சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் ஆகியவை முதல்வார இறுதியிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டாலும் (அதை நான் குறிப்பிட்டும்) மறுபடி வந்து சேரவில்லை. டெக்ஸின் கதைகளை கண்ணை மூடிக்கொண்டு வாங்கிடப் பலர் உண்டு என்பது நிதர்சனமான உண்மை!

    * 'ஆர்ட் பேப்பர்'ல் வரும் நம் புத்தகங்கள் இரவில் படிக்கும்போது விளக்கு வெளிச்சத்தைப் பிரதிபலிப்பதாகவும், அதனால் படிக்கும்போது சற்று எரிச்சலடைவதாகவும் 'மிகச் சில' புகார்கள் வந்தன.

    * பழைய முத்து காமிக்ஸ் ஹீரோக்களின் புத்தகங்களைக் கேட்டு 'ஒன்று கூடவா இல்லை?' என்று நமது புதிய ஹீரோக்களை (லார்கோ, ஷெல்டன், டயபாலிக்) கடுப்புடன் பார்த்துவிட்டு நடையைக் கட்டிய(வயதில் மூத்த)வர்களின் எண்ணிக்கையும் கணிசமானதே!

    * 'இரண்டே கதைகளுக்கு நூறு ரூபாயா?' என்று அதிர்ச்சியானவர்களும் இல்லாமலில்லை!

    * சந்தா செலுத்தும் வழிமுறைக்கு ஒத்துவராமல், 'நேரடியாகக் கடைகளில் பெற்றுக் கொள்வதையே விரும்புகிறோம்' என்று கூறியவர்களும் பலருண்டு. அவர்களுக்காகவாவது, புத்தகத் திருவிழா நடக்கும் அந்தக் குறிப்பட்ட நகரில் எந்தக்கடைகளில்/நபர்களிடம் நம் காமிக்ஸ்கள் விற்பனைக்குக் கிடைத்திடும் என்ற விவரம் ஸ்டாலுக்குள் ஒட்டப்பட்டால் நல்லது!

    இறுதியாக,

    * ஸ்பைடரும், இரும்புக்கை மாயாவியும் முத்து காமிக்ஸின் ஒரு அங்கமாகவே பார்த்திடும் பலரையும் காண முடிந்தது. இந்த நாற்பதாண்டு கால அடையாளம் எதிர்காலத்தில் பல புதிய ஹீரோக்களினால் வலுவிழந்துவிடும் நாளொன்று வரும்வரையிலாவது, (குறைந்தபட்சம் )புத்தகக் கண்காட்சிகளிலாவது நம் சூப்பர் ஹீரோக்களின் மறுபதிப்புக்கள் ஒன்றிரண்டு காணக் கிடைத்தல் நலம்!

    (முற்றும்)  :)

    ReplyDelete
    Replies
    1. அருமையான முடிவுரை விஜய்! உங்க அழமான காமிக்ஸ் காதல பாக்கும் பொது ரொம்ப நெகிழ்ச்சிய இருக்கு. நம்ம ஆசிரியர் மட்டுமல்ல நாங்களும் உங்களுக்கு கடமைபட்டிருக்கோம்.

      உங்களோட dedicated உழைப்புக்கு என்னால முடிஞ்சதெல்லாம் ஒரு உற்சாகமான (((BIG HUG ))) !GREAT JOB நண்பா ! : )

      //'சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்' லின் விற்பனையும் நிறையவே ஆச்சர்யப்படுத்தியது! (!)// குறைந்த விலைக்கு நிறைய பக்கங்கள், கனமான இதழ் ...இந்த CONCEPT எப்போவுமே HIT ஆகும்!இன்னொன்னு சூப்பர் ஹீரோக்கள் மேல உள்ள GRACE நம்ம பழைய வாசகர்களுக்கு எப்போவும் போகாது.சூப்பர் ஹீரோக்கள் இதழ்கள எப்போவும் ஸ்டாக் வைசுக்கறது நம்மள விட்டு பிரிஞ்சு போன பழைய வாசகர்கள நம்மோட மீண்டும் இணைகறதுக்கு உத்தரவாதமான வழி!

      மீண்டும் இணையர பழைய வாசகர்களுக்கு லார்கோவும் ஷேல்டனும் நிச்சயம் ரொம்ப அந்நியம தெரிவாங்க. அவங்கள போன்றவங்கள உள்ள இழுக்கறதுக்கவது நம்ம சூப்பர் ஹீரோக்களோட தயவு நமளுக்கு தேவை.

      //மாணவர்களில் பலர் 'இங்லீஸ் காமிக்ஸ் இருக்கிறதா அண்ணா?' என்று கேட்டனர்.//

      ஆங்கிலத்துல வெளியிடறது இந்திய அளவில நம்மள ELEVATE பண்ணும், ஆனா அதுக்கு COPYRIGHT கொடுப்பாங்களா அப்படிங்கறது கேளிவிக்குறியே!

      //catalogue கேட்டு ஏமாந்தவர்களும் பலர்/

      நம்ம NBS இதழோட வந்த CATALOGUE என்ன ஆச்சு?? அட்டகாசம இருந்துச்சே !!

      //அருமையான கதையும் கொண்டிருந்தாலும் 'டல்லடிக்கும் அட்டைப் படம்' காரணமாக //

      நம்ம அட்டைபடம் அவ்வப்போது சொதப்பிடுது! சற்று அதிக கவனம் தேவை !

      //ராதா கிருஷ்ணன் அண்ணாச்சியும், வேலுவும் அருமையான விற்பனையாளர்கள்; எனினும் நம் காமிக்ஸ்களின்மேல் காதல்கொண்ட 'மூன்றாவது நபர்' ஒருவர் அங்கே இருந்திட்டால், புதிதாய் காமிக்ஸ் வாங்க வருவோரின் விருப்பத்தைக் கேட்டறிந்து அதற்கேற்றாற்போல் கதைகளை தேர்வுசெய்து கொடுத்திடவும், அவர்களது காமிக்ஸ் ஆர்வத்தை அதிகரித்திடவும் உறுதுணையாய் இருந்திடும்//

      இங்கே நம்மால செய்ய முடியற ஒரு முக்கியமான விஷயம் ஒவ்வொரு புத்தகத்தின் பின்னால அத பத்தி ஒரு நாலு வார்த்த நல்ல விதமா படிக்கறவங்கள கவர் பன்ற மாதிரி PUBLISH பண்றதுதான்.புத்தக திருவிழாவிலயாவது காமிக்ஸ் பத்தி தெரிஞ்ச DEDICATED STAFFவின் சேவை நிச்சயம் பெருமளவில் உதவி புரியும்.

      //நண்பர் புனித சாத்தான் 'ஸ்டிக்கர் லேபிள்'ஐ பரிந்துரை செய்திருந்தாலும், வந்துசேர்ந்ததோ 'டைம் டேபிள்'கள்!! எனினும், மாணவர்களிடம் இதுவும் சக்கைப்போடு போட்டது. கேட்டதுமே தயார் செய்துகொடுத்த எடிட்டருக்கு நன்றி//

      புனித சாத்தன் அருமையான ஐடியா கொடுத்திருக்கீங்க! வாழ்த்துக்கள். இந்த மாதிரி சிறிய பங்களிப்புகள் சில வேலை பெரிய ட்விஸ்ட்ட பின்னாடி கொடுக்கறதுக்கு நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கு !

      //சிகப்பாய் ஒரு சொப்பணம், பூதவேட்டை, சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் ஆகியவை முதல்வார இறுதியிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டாலும் (அதை நான் குறிப்பிட்டும்) மறுபடி வந்து சேரவில்லை//

      ஒருவேள OUT OF STOCK கா ?? அல்லது மினிமம் ஸ்டாக் QUANTITY யா ??


      //'ஆர்ட் பேப்பர்'ல் வரும் நம் புத்தகங்கள் இரவில் படிக்கும்போது விளக்கு வெளிச்சத்தைப் பிரதிபலிப்பதாகவும், அதனால் படிக்கும்போது சற்று எரிச்சலடைவதாகவும் 'மிகச் சில' புகார்கள் வந்தன.//

      //'இரண்டே கதைகளுக்கு நூறு ரூபாயா?' என்று அதிர்ச்சியானவர்களும் இல்லாமலில்லை!//

      WE CANT HELP IT !


      //சந்தா செலுத்தும் வழிமுறைக்கு ஒத்துவராமல், 'நேரடியாகக் கடைகளில் பெற்றுக் கொள்வதையே விரும்புகிறோம்' என்று கூறியவர்களும் பலருண்டு. அவர்களுக்காகவாவது, புத்தகத் திருவிழா நடக்கும் அந்தக் குறிப்பட்ட நகரில் எந்தக்கடைகளில்/நபர்களிடம் நம் காமிக்ஸ்கள் விற்பனைக்குக் கிடைத்திடும் என்ற விவரம் ஸ்டாலுக்குள் ஒட்டப்பட்டால் நல்லது!//

      மிக மிக அர்த்தமுள்ள கருத்து. நம்ம ப்ளாக் லயே இந்திந்த நகர்ல இன்ன புத்தகக்கடையில நம்ம புத்தகங்கள் கிடைக்குது அப்படிங்கறத நம்ம ஆசிரியர் போஸ்ட் செய்யலாம்

      //)புத்தகக் கண்காட்சிகளிலாவது நம் சூப்பர் ஹீரோக்களின் மறுபதிப்புக்கள் ஒன்றிரண்டு காணக் கிடைத்தல் நலம்!//

      ANOTHER VALID POINT ! ஆசிரியரின் கவனத்துக்கு !

      //(முற்றும்) :)// : ( : (      Delete
    2. // பழைய முத்து காமிக்ஸ் ஹீரோக்களின் புத்தகங்களைக் கேட்டு 'ஒன்று கூடவா இல்லை?' என்று நமது புதிய ஹீரோக்களை (லார்கோ, ஷெல்டன், டயபாலிக்) கடுப்புடன் பார்த்துவிட்டு நடையைக் கட்டிய(வயதில் மூத்த)வர்களின் எண்ணிக்கையும் கணிசமானதே!//

      ம்... இரும்புக்கை மாயாவியின் ஒரே ஒரு கதையை மட்டுமாவது நிறைய எண்ணிக்கையில் Black & White + பாக்கெட் சைஸ் combination இல் மறுபதிப்பு செய்து வைப்பது worth ஆக இருக்குமோ? எளிதாக சொல்லிவிட்டேன் ஆனாலும் Rs100 புத்தகங்களைவிட இதில் risk ரொம்ப கம்மி என்பதும் தெளிவு. ஆசை யாரை விட்டது? :P

      Delete
    3. * 'ஆர்ட் பேப்பர்'ல் வரும் நம் புத்தகங்கள் இரவில் படிக்கும்போது விளக்கு வெளிச்சத்தைப் பிரதிபலிப்பதாகவும், அதனால் படிக்கும்போது சற்று எரிச்சலடைவதாகவும் 'மிகச் சில' புகார்கள் வந்தன.

      ADA nan en kannuladan prechanainnu summma irundaen pa
      Enna madri ethanae per irukkangalo!

      aaanal English bookil inda prachanai nan kandaduillai.

      Vijayan Sir, plz do something about this glaring :-) (glare) issue

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. @ Ramesh kumar

      என் நோக்கம் அதுவல்ல எனினும் நீங்கள் சொல்வதிலும் அர்த்தம் இல்லாமலில்லை. இந்தத் தளத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்களை நான் என்றுமே விரும்பமாட்டேன்.
      நீங்கள் குறிப்பிட்டதை நானே நீக்கிவிட்டேன்.
      சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!

      Delete
    6. அருமையான முடிவுரை விஜய்! உங்க அழமான காமிக்ஸ் காதல பாக்கும் பொது ரொம்ப நெகிழ்ச்சிய இருக்கு. நம்ம ஆசிரியர் மட்டுமல்ல நாங்களும் உங்களுக்கு கடமைபட்டிருக்கோம்.

      உங்களோட dedicated உழைப்புக்கு என்னால முடிஞ்சதெல்லாம் ஒரு உற்சாகமான (((BIG HUG ))) !GREAT JOB நண்பா ! //

      ரிப்பீட்டு!

      Delete
    7. ஈரோடு விஜய் @
      * பழைய முத்து காமிக்ஸ் ஹீரோக்களின் புத்தகங்களைக் கேட்டு 'ஒன்று கூடவா இல்லை?' என்று நமது புதிய ஹீரோக்களை (லார்கோ, ஷெல்டன், டயபாலிக்) கடுப்புடன் பார்த்துவிட்டு நடையைக் கட்டிய(வயதில் மூத்த)வர்களின் எண்ணிக்கையும் கணிசமானதே!
      ++ நமது வாத்தியார் இதற்கு கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும்.

      * 'இரண்டே கதைகளுக்கு நூறு ரூபாயா?' என்று அதிர்ச்சியானவர்களும் இல்லாமலில்லை!
      ++ உண்மை. நமது காமிக்ஸ்க்கு மேலும் பல வாசகர் கிடைத்து & நமது மாத CIRCULAR கூடினால் நமது வாத்தியார் நமது காமிக்ஸ் விலையை குறைக்க முடியும். அந்த நன்னாள் வெகு தொலைவில் இல்லை!

      * சந்தா செலுத்தும் வழிமுறைக்கு ஒத்துவராமல், 'நேரடியாகக் கடைகளில் பெற்றுக் கொள்வதையே விரும்புகிறோம்' என்று கூறியவர்களும் பலருண்டு. அவர்களுக்காகவாவது, புத்தகத் திருவிழா நடக்கும் அந்தக் குறிப்பட்ட நகரில் எந்தக்கடைகளில்/நபர்களிடம் நம் காமிக்ஸ்கள் விற்பனைக்குக் கிடைத்திடும் என்ற விவரம் ஸ்டாலுக்குள் ஒட்டப்பட்டால் நல்லது!
      ++ அருமையான ஐடியா! உங்க வீட்டுல காமிக்ஸ் பற்றி யோசிக்க நிறைய நேரம் கொடுப்பதை பார்த்தால் பொறாமையாக இருக்கு :-)

      * ஸ்பைடரும், இரும்புக்கை மாயாவியும் முத்து காமிக்ஸின் ஒரு அங்கமாகவே பார்த்திடும் பலரையும் காண முடிந்தது. இந்த நாற்பதாண்டு கால அடையாளம் எதிர்காலத்தில் பல புதிய ஹீரோக்களினால் வலுவிழந்துவிடும் நாளொன்று வரும்வரையிலாவது, (குறைந்தபட்சம் )புத்தகக் கண்காட்சிகளிலாவது நம் சூப்பர் ஹீரோக்களின் மறுபதிப்புக்கள் ஒன்றிரண்டு காணக் கிடைத்தல் நலம்!
      ++ நமது வாத்தியார் கண்டிப்பாக இதற்கு எதாவது செய்வார் என நம்பிக்கையுடன் காத்திருப்போம் :-)

      Delete
    8. விஸ்கி-சுஸ்கி & ஈரோடு விஜய்
      //'சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்' லின் விற்பனையும் நிறையவே ஆச்சர்யப்படுத்தியது! (!)// குறைந்த விலைக்கு நிறைய பக்கங்கள், கனமான இதழ் ...இந்த CONCEPT எப்போவுமே HIT ஆகும்!இன்னொன்னு சூப்பர் ஹீரோக்கள் மேல உள்ள GRACE நம்ம பழைய வாசகர்களுக்கு எப்போவும் போகாது.சூப்பர் ஹீரோக்கள் இதழ்கள எப்போவும் ஸ்டாக் வைசுக்கறது நம்மள விட்டு பிரிஞ்சு போன பழைய வாசகர்கள நம்மோட மீண்டும் இணைகறதுக்கு உத்தரவாதமான வழி!

      மீண்டும் இணையர பழைய வாசகர்களுக்கு லார்கோவும் ஷேல்டனும் நிச்சயம் ரொம்ப அந்நியம தெரிவாங்க. அவங்கள போன்றவங்கள உள்ள இழுக்கறதுக்கவது நம்ம சூப்பர் ஹீரோக்களோட தயவு நமளுக்கு தேவை.

      +100000000000000000000000000000000
      ஆனா நம்ப வாத்தியார் இத கண்டுகிறதும் இல்ல (அல்லது) எப்ப பார்த்தாலும் எதாவது சால்ஜாப்பு சொல்லி தப்பிச்சுகிறார்.

      Delete
    9. Erode VIJAY : 'இன்டர்நெட்டா...? வீசம்படி எவ்வளவு ?' என்று கேட்குமொரு விடுமுறை ஸ்தலத்தில் இரு நாட்களாய்க் குடும்பத்தோடு செலவிட்டதால் இந்தப் பக்கமாய் வர வசதிப்படவில்லை !

      ஒருவாராய் பின்னூட்டங்களின் வால் பகுதியிலிருந்து பதில் சொல்லத் துவங்கியதிலேயே ஒரு மணி நேரம் ஓடி விட்டது ; நீங்களானால் செல்போனிலேயே பத்தி பத்தியாய் பதிவுகள் போடுவது "கிறுக்கும் பூனையார்" என்பதை விட "Quick Gun பூனையார்" என்ற பெயர் உங்களுக்குப் பொருத்தமாய் இருக்குமென்று நினைக்கச் செய்கிறது ! வரிக்கு வரி எனது reactions -ஐ பதிவிடுவதை விட, பதில் தெரிவித்தால் பொருத்தமாய் இருக்குமென்று எண்ணச் செய்த points -க்கு மாத்திரம் முக்கியத்துவம் தருகிறேன் :

      // catalogue கேட்டு ஏமாந்தவர்களும் பலர்!//
      நிறைய cataloguesஅச்சிட்டு அவை இங்கும், அங்குமாய்க் காலுக்குள் மிதி படுவதும், மிளகாய் பஜ்ஜி சாப்பிட்ட பின்னே கை துடைக்கவும் பயனாவதை ரசித்துள்ள அனுபவம் எனக்குள்ளது ! 'வேண்டாமே அந்த விரயம் !' என்பதால் தான் இந்த முயற்சியினை தொடர்வதில்லை !

      //* ராதா கிருஷ்ணன் அண்ணாச்சியும், வேலுவும் அருமையான விற்பனையாளர்கள்; எனினும் நம் காமிக்ஸ்களின்மேல் காதல்கொண்ட 'மூன்றாவது நபர்' ஒருவர் அங்கே இருந்திட்டால், புதிதாய் காமிக்ஸ் வாங்க வருவோரின் விருப்பத்தைக் கேட்டறிந்து அதற்கேற்றாற்போல் கதைகளை தேர்வுசெய்து கொடுத்திடவும், அவர்களது காமிக்ஸ் ஆர்வத்தை அதிகரித்திடவும் உறுதுணையாய் இருந்திடும்.//

      எனது ஆதங்கமும் அதுவே ! முன்பு நம்மிடம் பணியாற்றிய ஓவியரான சிகாமணி நீங்கலாய் - நம் இதழ்களின் தொடர்புடைய எந்தவொரு பணியாளரும் ஒரு காமிக்ஸ் ரசிகர் அல்லவே ! அவர்களுக்கு இது ஒரு பணி மாத்திரமே எனும் போது அவர்களிடம் இது பற்றியதொரு ஆழமான புரிதலோ ; காதலோ இருப்பது சாத்தியமாகாதே !

      //Art paper - glare //- பார்க்க - ஆங்காங்கே நான் கொடுத்துள்ள காரணங்கள்..!

      //பழைய முத்து காமிக்ஸ் ஹீரோக்களின் புத்தகங்களைக் கேட்டு 'ஒன்று கூடவா இல்லை?' என்று நமது புதிய ஹீரோக்களை (லார்கோ, ஷெல்டன், டயபாலிக்) கடுப்புடன் பார்த்துவிட்டு நடையைக் கட்டிய(வயதில் மூத்த)வர்களின் எண்ணிக்கையும் கணிசமானதே!//

      "மாயாவி & கோ. கதைகளை வெளியிடா பட்சத்தில் இதர இதழ்களைத் திரும்பியே பார்க்கப் போவதில்லை' என்ற வைராக்கியத்தில் உள்ள நண்பர்களும் இங்கேயே நம் தளத்திலேயே உண்டு தானே ?! கடிதங்கள், நேரடிச் சந்திப்புகள் ; இணைய தளக் கேள்விகள் என வெவ்வேறு ரூபங்களில் இந்த வினவலை நான் கேட்டுப் பழகி விட்டதால் எனக்கு அது பழகிப் போய் விட்டதோ - என்னவோ ?! வெகுஜன ரசனைக்கு அப்பால் நிற்கும் காமிக்ஸ் எனும் வண்டியை செலுத்துவது ஆர்வமும், ஒரு வரையறைக்குள்ளான பட்ஜெட்டும் மாத்திரமே எனும் போது - அவை இரண்டுக்கும் சிக்கலை உருவாக்கா முயற்சிகள் தானே பிரதானமாய் இருத்தல் முக்கியம் ? பழமை விரும்பிகள் கோரும் மாயாவிகளிலும் , ஜானி நீரோக்களிலும் புதிய கதைகள் வெளியாகிக் கொண்டிருக்கும் பட்சத்திலாவது 'எங்கள் ஆதர்ஷ நாயகர்களின் கதைகளையும் இடையிடையே வெளியிடுங்கள் ' என்றொரு கோரிக்கைக்கு வலு சேர்ந்திடும். ஆனால் அந்த 13 + 13 +13 கதைகளையே மறுபதிப்பாய் நான் பல்செட் மாட்டும் நாள் நெருங்கும் வரை போட்டுக் கொண்டே இருப்பதில் என்னவொரு சுவாரஸ்யம் இருக்க முடியும் எங்களின் தரப்பில் ? வியாபார நோக்கம் முன் சீட்டுக்கு வரும் வேளையில் பரணைத் தேடி புறப்படுவோமே ? இப்போதைக்கு லார்கோக்களும் ; டெக்ஸ் வில்லர்களும் பிழைத்துப் போகட்டுமே ? :-)

      // சந்தா செலுத்தும் வழிமுறைக்கு ஒத்துவராமல், 'நேரடியாகக் கடைகளில் பெற்றுக் கொள்வதையே விரும்புகிறோம்' என்று கூறியவர்களும் பலருண்டு. அவர்களுக்காகவாவது, புத்தகத் திருவிழா நடக்கும் அந்தக் குறிப்பட்ட நகரில் எந்தக்கடைகளில்/நபர்களிடம் நம் காமிக்ஸ்கள் விற்பனைக்குக் கிடைத்திடும் என்ற விவரம் ஸ்டாலுக்குள் ஒட்டப்பட்டால் நல்லது!//

      DONE ! செய்தால் போச்சு !

      Delete
  35. ஆசிரியர் மற்றும் லயன் அலுவலக அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் !

    ரொம்ப நாளைக்கப்புறம் வார இடை நாள்ல ஒரு விடுமுறை. அதுக்கு சுவை சேக்கர மாதிரி இங்கே ஒரு புதிய பதிவு.அருமை! : )

    மர்ம மனிதன் மார்டின் & CID ராபின் கருப்பு வெள்ளை இதழ்கள் நிச்சயம் வரலாம், BUT NOT AT THE EXPENCE OF 100RS OR 50 RS ISSUES. : )

    //150 பக்க கதிகலங்கச்செய்யும் த்ரில்லர் கிராபிக் நாவல் ,3௦ ஆவது ஆண்டுமலர் மெக ப்ராஜெக்ட், மின்னும் மரணம் மெக இதழ், அவ்வப்போது SUNSHINE னில் SURPRISE SPECIAL //

    நம்ம SHEDULE அட்டகாசமா இருக்கே!SLURRRRRRPPPPPPP : )


    //அல்லது 11 புத்தகங்கள் அடங்கிய பாக்ஸ் செட் ஆக இதை வெளியிடுவது பற்றி உங்கள் கருத்து என்ன?! //

    அமர்க்களமான ஐடியா! வாய்ப்புகள் இருக்கா ஸார் ??

    ReplyDelete
    Replies
    1. விஸ்கி-சுஸ்கி : நமக்கும் "மின்னும் மரணம்" மறுபதிப்புக்குமிடையே ஒன்றரை ஆண்டுகள் இடைவெளி இருக்கும் போது சிந்தனைக் குதிரைகளை நிதானமாய் அச்சமயம் தட்டி விடுவோமே ?

      Delete
  36. ஆசிரியர், நண்பர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  37. சிறுவர்களையும் வாங்கத்தூண்டும் விதமாக குறைந்த விலையில் இதழ்கள் வெளியிடுவது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. இதில் கார்ட்டூன் கதைகள் மட்டும் என்றில்லாமல் குழந்தைகளுக்கான வேறு பல கதைகள் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும். ( இது அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக காமிக்ஸில் இருந்து மாறி “பூந்தளிர் / கோகுலம்” போல வந்தாலும் சந்தோஷமே ;-))
    மின்னும் மரணம் மறுபதிப்பை நீங்கள் உறுதி செய்திருப்பதும் சந்தோஷமான விஷயம். மொத்தமாக எல்லா கதைகளையும் ஒரே நேரத்தில் வெளியிடுவதால் இதழின் வடிவத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் சார். கார்த்திக் கூறியது போல இரண்டு புத்தகங்களாகவோ அல்லது பாக்ஸ் செட்டாகவோ வெளியிடலாம். இதில் என்னுடைய தேர்வு – பாக்ஸ் செட்!
    இந்த இடத்தில் இதே பதிவில் ஈரோடு விஜய் குறிப்பிட்ட விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன்:
    == 'ஆர்ட் பேப்பர்'ல் வரும் நம் புத்தகங்கள் இரவில் படிக்கும்போது விளக்கு வெளிச்சத்தைப் பிரதிபலிப்பதாகவும், அதனால் படிக்கும்போது சற்று எரிச்சலடைவதாகவும் 'மிகச் சில' புகார்கள் வந்தன.==
    மேலே உள்ள கருத்து கவனிக்கப்படவேண்டியது.
    மின்னும் மரணம் மறுபதிப்பை வண்ணத்தில், ஆனால் ஆர்ட் பேப்பர் அல்லது, நாம் தற்போது கருப்பு வெள்ளை இதழ்களுக்கு உபயோகிக்கும்தரமான காகித்தில் பாகஸ் செட்டாக வெளியிட்டால் என்ன சார்?

    ReplyDelete
    Replies
    1. காமிக்ஸ் ரசிகன் (எ) புதுவை செந்தில் : ஆர்ட் பேப்பருக்கு டாடா காட்டி விட்டு normal paper -க்கு குதிப்பதில் எங்களுக்கு நிறைய சிரமங்கள் மிச்சம் ! (ஆர்ட் பேப்பரின் அச்சுப் பணிகள் கம்பி மேல் நடக்கும் சமாச்சாரம் ; நார்மல் பேப்பர் தலைவலிகளே இல்லா சங்கதி !)

      ஆனால் ஆர்ட் பேப்பரில் பார்த்துப் பழகியான பின்னே - நார்மல் காகிதத்தில் வண்ண அச்சு நிச்சயமாய் 'ஞே' என்ற முழியோடு தான் நின்றிடும் ! நிச்சயமாய் அதில் திருப்தி கிட்டாது !

      glare தேவலையா .."ஞே" தேவலையா ? என்ற கேள்விக்கு விடை வைத்திருக்கும் சாலமன் பாப்பையா எங்கு உள்ளாரோ ?

      Delete
  38. ==இன்னும் 2 ஆண்டுகள் சீராய் செல்லட்டுமே….ஊன்றுகோலின்றி கால் பதித்து நிற்க நமது பதிப்பகப் பிரிவிற்கு வலு சேர்ந்திடும்! அன்றையபொழுது – ‘பழமையைப் புறக்கனித்தவன்’ என்ற பெயருக்கு விடுதலை தந்திடுவோமே?==
    We will wait sir..

    ==150 பக்கம் நீளம் கொண்டதொரு கதிகலங்கச்செய்யும் கிராபிக் நாவல்==
    Eagerly waiting!

    2014ல் சி.ஐ.டி ராபின், மார்ட்டின் இவர்களோடு – விங்கமாண்டர் ஜார்ஜ், ரிப் கிர்பி, காரிகன் ஆகியோரும் வந்தால் நலம்!

    ReplyDelete
    Replies
    1. >> 2014ல் சி.ஐ.டி ராபின், மார்ட்டின் இவர்களோடு – விங்கமாண்டர் ஜார்ஜ், ரிப் கிர்பி, காரிகன் ஆகியோரும் வந்தால் நலம்!

      +1

      Delete
  39. @Karthik Somalinga, விஸ்கி-சுஸ்கி
    //அல்லது 11 புத்தகங்கள் அடங்கிய பாக்ஸ் செட் ஆக இதை வெளியிடுவது பற்றி உங்கள் கருத்து என்ன?! //

    அமர்க்களமான ஐடியா! வாய்ப்புகள் இருக்கா ஸார் ?? //    ஐடியா சூப்பர், ஆனா நடுவுல ஒரு புக்க தொலைச்சிட்டு ,நடுவுல உள்ளது மட்டும் ரீப்பிரிண்ட் கிடைக்குமா என்று நாக்க தொங்கபோட்டு அலையவேண்டிவரும் சாத்தியங்கள் அதிகமல்லவா. நான் பொன்னியின் செல்வனை 11 சிறு புத்தகங்களாக வாங்கிவிட்டு நடுவுல 2 புத்தகங்களை தொலைத்துவிட்டு, மீண்டும் வாங்கி பின் தொலைத்து தற்போது ஒரே புத்தகமாக தலையணை சைசில் வாங்கியிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. டியர் ஷல்லூம் !!!
      அடியேனின் கருத்தும் இதுவே!!! மின்னும் மரணம் மொத்தமும் ஒரே புத்தகமாக வந்தால் மட்டுமே வெற்றி பெரும்.11கதைகளையும் தனி தனி புத்தகமாக வெளியிட்டால் விலை கூடுவதோடு ,வேறுபல குளறுபடிகளும் ஏற்பட வாய்ப்புண்டு.ஒரே புத்தகமாக அச்சிடும்போது எடை கூடி ,தூக்கி படிக்க சிரமபடுத்தும் என்பது சரியான வாதமல்ல.
      ஏராளமான பிரச்சனைகளை அனாயாசமாக கையாளும் கேப்டன் டைகரின் அபிமானிகளுக்கு இந்த எடையெல்லாம் ....ச்சும்மா தூசு மாதிரி...!!!நாங்கள்ளாம் சஞ்சீவி மலையையே தூக்குன ஆஞ்சநேயர் பரம்பரையாக்கும்....ஹிஹி!!!

      Delete
    2. நண்பர் புனித சாத்தானின் கருத்தை நான் வழிமொழிகிறேன்......இப்படிக்கு..... குண்டு புக் ரசிகர் மன்ற

      Delete
    3. அப்படிப்போடுங்க புனித சாத்தான்!

      Delete
  40. Any format we will get minnun maranam . Now a dream come true friends...

    ReplyDelete
  41. ஒரு புக்க தொலைச்சிட்டு ,நடுவுல உள்ளது மட்டும் ரீப்பிரிண்ட் கிடைக்குமா என்று நாக்க தொங்கபோட்டு அலையவேண்டிவரும்

    very valid point, but i think neenga ponniyin selvan vena apdi tholaichiruppeenga
    inga nammalu reprint pannavae mattaengradala Usharadan iruppeeenga ஷல்லூம்
    p.s - enakku unga ஷல்லூம் per romba pidichirukku - very nice name

    ReplyDelete
    Replies
    1. ஐயோ... ஐயோ...... தாங்க முடியல. அந்த சத்யா தம்பிக்கு ஒரு டீ சொல்லு.

      கமிக்ஸ் வங்கி வாங்கி தொலைத்து தொலைத்து விளையாடும் விளையாட்டை 20 வருடமாக விளையாடி வருகிறேன்

      Delete
  42. Dear Friends: //ஆர்ட் பேப்பர்'ல் வரும் நம் புத்தகங்கள் இரவில் படிக்கும்போது விளக்கு வெளிச்சத்தைப் பிரதிபலிப்பதாகவும், அதனால் படிக்கும்போது சற்று எரிச்சலடைவதாகவும் 'மிகச் சில' புகார்கள் வந்தன//

    நண்பர்களே எதில் தான் குறையில்லை ?

    லக்ஸரி கார் ஓட்டினால் பெட்ரோல் அதிகமாக செலவாகிறது;
    அதற்காக ஓட்டை கார் ஓட்டினால் ஓசோனில் ஓட்டையாகிறது !

    தரம் அதிகம் எதிர்பார்த்தால் நம் பாக்கெட் ஓட்டையாகிறது;
    அதற்காக நாம் தராதரம் எதிர்பார்க்காவிட்டால் நம் ரசனைக்கு வேட்டாகிறது !

    ஒன்றிருந்தால் ஒன்றில்லை,;
    அதற்காக ஒன்றிற்காக ஒன்றை இழப்பதில் அர்த்தமில்லை !

    தயவு செய்து தரத்தில் நாம் பின்னோக்கி பயணிக்க வேண்டாமே; வேண்டுமானால் கருப்பு வெள்ளையில் மறுபதிப்பாக, பெரிய லாபமற்ற விலை அடக்கத்தில், புத்தகக் கண்காட்சிகளில் சிறுவர்களுக்கென தயாரிக்கப் படும் சிறிய புத்தகங்களுக்கு என் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், அதற்காக எமது தற்போதைய தரத்தை இழந்து விடக்கூடும் எந்தவொரு எதிர்மறை கருத்தையும் பதிவிடும் முன்பு நம் நண்பர்கள், தயவு செய்து ஒரு நிமிடம் யோசிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் !

    ReplyDelete
    Replies
    1. @ Mister M - ungalai ungal punai peyaral kuppida Yeano enakku pidikkavillai:-)

      i dont agree with you

      nangal sonnadu tharathai kuraikka alla

      only to reduce glare - nichayamai edi avargal tarattai kuraithu idarkku solution tara mattar
      maybe he will investigate and resolve the issue by changing to better art paper...

      apparam namma technical friendslamae idae patthi netla research panni oru solution kuddukka kuda vaippu neriya iurrku - they have done it before- they will do it again - for the benefit of all

      so all of us want only improvement and not reducing quality

      Kalllulaendu sila (statue) seiyra madridanae namma comics ippo valarndukittu irukku

      chinna chinna kurai yellam point out pannadanae sirpi seri seyvaar

      Delete
    2. Sathya : //maybe he will investigate and resolve the issue by changing to better art paper...//

      இதில் துப்பறியும் ஸ்டீல்பாடியாருக்கு வேலைகள் நிச்சயமாய்க் கிடையாது நண்பரே ! ஆர்ட் பேப்பரின் தரம் கூடக் கூட அதன் மேலுள்ள glossy coating கூடுதலாகிக் கொண்டே செல்லும் ! அந்த gloss கூடக் கூட ஒளியை பிரதிபலிக்கும் தன்மையும் கூடிக் கொண்டே போகும். Glare அடிப்பது போல் தோன்றுவதன் காரணம் இது தான் ! இந்த சிக்கல் தவிர்க்கப்பட வேண்டுமெனில் காகிதத் தரத்தில் கீழ் நோக்கிச் செல்லல் அவசியம் !

      Delete
    3. தரத்தில் கீழ் நோக்கி போவதில் நிச்சயம் பெரும்பாலானோர் விரும்புவோரில்லை. எனினும்
      glossy ஆர்ட் பேப்பர் உபயோகிக்காமல் matt ஆர்ட் பேப்பர் உபயோகித்தால் இந்த கண்கூசும் பிரச்சனை
      இருக்காது தானே சார், தரமும் குறையாது. விலையும் சொற்பமே ஜாஸ்தியானால், கட்டுப்படியானால்
      முயற்சிக்கலாமே சார்...?

      Delete
    4. காகிதத் தரத்தில் கீழ் நோக்கிச் செல்லல் தற்கொலைக்கு சாமானம் - எப்படி எங்க தமிழ் ?

      முடிந்தால் உதய் சொல்வதை பரீட்சிக்கலாமே

      Delete
  43. ஸ்டீல் க்ளா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

    ReplyDelete
  44. ***
    @Erode VIJAY:
    //" அதுக்குள்ளவா முடிஞ்சிருச்சு "ன்னு கத்தினாங்க! ;)//
    உண்மையில் விஜய்யின் துணைவியார் சொல்ல நினைத்தது என்ன?:

    ஒரு 12 நாளுக்கு நைஸா பூனை மாதிரி, மிட்நைட் 12 மணிக்குத்தான் வீட்டுக்கு வந்துகிட்டு இருந்தாரு! அப்புறம் மூணு மணிநேரம் ஒக்காந்து லயன் ப்ளாக்ல பதிவு போட்டுட்டு, மறுபடி காலைல 3 மணிக்கு ஈ.பு.க. கிளம்பிறுவாரு! நமக்கும் தொல்லை இல்லாம இருந்துச்சு! மனுஷன் இப்ப திடீர்ன்னு புத்தக கண்காட்சி முடிஞ்சுருச்சுன்னு சொல்லி வயித்துல புளியக் கரைக்கறாரே!!! அதுக்குள்ள்ள்ள்ளவா முடிஞ்சிருச்சூசூசூ?! அந்த லயன் காமிக்ஸ் ஸ்டாலையாவது வருஷம் முழுக்க போட்டிருக்கலாம்! ஹீம்ம்ம்!!! :(

    நாங்களும் மைண்ட் வாய்ஸ் போடுவோம்ல :)

    ***
    @கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ):
    //நடுவுல ஒரு புக்க தொலைச்சிட்டு ,நடுவுல உள்ளது மட்டும் ரீப்பிரிண்ட் கிடைக்குமா என்று நாக்க தொங்கபோட்டு அலையவேண்டிவரும்//
    அதாவது, 'நடுவுல கொஞ்சம் புத்தகத்தக் காணோம்னு' சொல்றீங்க? :) ஆனா, ஒரே புக்கா வாங்கி அது ஒட்டு மொத்தமா தொலைஞ்சு போறதுக்கு இது பெட்டர் இல்லியா?! ;)

    ***
    @saint satan:
    //ஒரே புத்தகமாக அச்சிடும்போது எடை கூடி ,தூக்கி படிக்க சிரமபடுத்தும் என்பது சரியான வாதமல்ல//
    ஒரே புத்தகமாக வந்தாலும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை சாத்தான் ஜி. இது போன்ற ஒரு அழகிய புத்தக தாங்கியை விஜய் மூலமாக 'ஈரோடு காமிக்ஸ் க்ளப்' செலவில் வாங்கி, ஹாயாக படிப்பேனாக்கும்! :)

    ReplyDelete
    Replies
    1. // அழகிய புத்தகத் தாங்கியை //

      பல் டாக்டர்களாக இருக்கும் நம் வாசகர்களுக்கு இதைப் புதிதாய் வாங்கவேண்டிய அவசியமிருக்காது! பேஷண்ட் வராத நேரங்களில் ஜம்முனு படுத்துட்டே 'மின்னும் மரணம்' படிக்கலாம்! :)

      Delete
    2. @ கார்த்திக்

      உங்க 'மைன்ட் வாய்ஸ்' கனகச்சிதமாக பொருந்துகிறது! :)

      Delete
  45. ஈரோடு புத்தக விழாவை பற்றிய ஒரு பதிவு .அடியேனின் மொக்க வலைப்பூவில்!!!

    ReplyDelete
  46. Sir 2014 Schedule pls...

    ReplyDelete
    Replies
    1. Schedule கேட்கறத அங்கேயும் விடலயானு முதுகுக்கு பின்னாடி திடீர்னு வந்து எட்டிபார்த்த Project director, அட முத்து காமிக்ஸ் இன்னும் வருதானு கேட்டுட்டு என்னோட deskல இருந்த சுட்டி லக்கிய Suit waist coat உள்ள மறைச்சு எடுத்துட்டு போயிட்டார்..

      ஒரு 60+ வாசகர் மீள்வரவு..

      Delete
    2. சூப்பர் விஜய் : நான் தற்சமயம் படித்துக் கொண்டிருக்கும் புக் - '90 நாட்களில் schedule போடுவது எப்படி ?' முடித்து விட்டு வருகிறேனே ?

      Delete
  47. காதலினால் அதகளம் புரிந்தீர்கள் ஆதலினால் வாழ்த்துக்கள் ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு!
    இதுவரை வந்த திருவிழா கலை நிகழ்ச்சிகள் கட்ட, மின்னும் மரணம் குறித்த அறிவிப்பு விழாவின் உச்ச கட்ட சந்தோசத்தின் முக்கிய பகுதி! ஒரே புத்தகமாக வந்தால்தான் வித்தியாசமாய் இருக்கும்! சிறப்பு மலர் என்றாலே அதுதானே அர்த்தம்! புத்தகம் தூக்கி படிப்பது குறித்த நண்பர் நல்ல பிசாசுவுடன் உடன்படுகிறேன்!
    சிறுவர்களை கவர மலிவு விலை பதிப்புகள் என மறுபதிப்பை வெளியிடாமல், இந்த காமிக்ஸ் கடலில் மூழ்கி உள்ள நல முத்துக்களை திரட்டினால், இப்போது வாங்கி கொண்டிருக்கும் நம்மவர்களும் வாங்குவர்!
    தவிர்க்க முடியாத காரங்கன்களால் நண்பர்களை சந்திக்க இயலாமல் போய் விட்டது!
    என்ன சொல்லி பாராட்ட நண்பர்களை, தூள் நண்பர்களே !
    ஆசிரியர்,கிறுக்கும் பூனையார் ,கார்த்திக்,ஸ்டாலின், ஸ்டாலின், சிவ சுப்பிரமணியன் போன்ற நண்பர்கள் வர்ணனை மூலம் அங்கு இருந்தால் இத்தனை விஷயங்கள் என் கவனத்தை ஈர்த்திருக்குமா என என்னுமளவிற்கு தூள் கிளப்பி விட்டார்கள் வீட்டிலிருந்தே கிரிக்கெட் பார்ப்பது போல! ஆனாலும் மைதானத்தில் அதகளம் பண்ண இயலவில்லை!

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் பேக் ஸ்டீல்!

      ஒரு கொண்டாட்டத்தை அநியாயமாக மிஸ் பண்ணிவிட்டீர்கள்! நீங்கள் வராததில் எனக்கும் வருத்தமே! :(

      Delete
  48. @ ஈரோடு விஜய்: கண்கள் பனிக்கின்றன காமிக்ஸ் உலகிற்கான உங்கள் சேவை எண்ணி... கலந்து கொள்ள முடியாமைக்கு மிகுந்த வருத்தம்.. பெங்களூர் காமிக் con இல் எதுவுமே செய்யாமல் இருந்ததற்கு வெட்கப்பட வைத்துவிட்டீர்.. (KBT3 modeஇல் இருப்பதால் சுந்தர தமிழ் நாவில் நர்த்தனம் ஆடுகிறது)

    @ கார்த்திக் : "ஜன்னி பர்மாத்" உங்களுக்காக சௌராஷ்டிரா மொழியில் கற்றுக்கொண்ட வார்த்தை, பக்கத்துக்கு சீட் யவன யுவதியிடம். (வாழ்த்துக்கள் தானே அர்த்தம் ?)Hardcover, box set idea super.

    naan appave sonnen 2014இல் mini layan varum endru, parthieerkala ... Parungakappa parunga, naanum rowdy thaan..

    ReplyDelete
    Replies
    1. @ சூப்பர் விஜய்

      'காமிக்ஸுக்காக ஏதாவது செய்யவேண்டும்' என்ற எண்ணம் உங்களிடம் மேலோங்கியிருப்பது உங்களது வார்த்தைகளிலேயே வெளிப்படுகிறது நண்பரே! இந்த எண்ணங்கள் போதும்; வாய்ப்பு வரும்போது அதை பயன்படுத்திக்கொள்ள!! :)

      Delete
  49. இன்னும் அறிவிக்கபடவில்லை என்றாலும், என் கணக்கில் இருக்கட்டுமே என்று ரூ.3000ஐ 'அடுத்த வருட' சந்தாகவாக (ஈரோடு புத்தகத் திருவிழாவில்) அண்ணாச்சியிடம் செலுத்திவிட்டேன். Me, the first? :)

    ReplyDelete
    Replies
    1. டியர் விஜய்!!!
      உங்கள் பெயர் இனி கிறுக்கும் பூனையார் அல்ல.முந்திரி கொட்டையார்:--)

      Delete
    2. Erode VIJAY : Yes, you the first !!

      சந்தாவைக் "கிறுக்கும் பூனையார்" என்று வரவு செய்யச் சொல்வதா ?

      Delete
  50. please issue black and white issues for book fairs...

    ReplyDelete
  51. நண்பர்களே! பதிவின் 4வது புகைபடத்தில் உள்ள நண்பர்கள் யார் யாரென்று சொல்லுங்களேன்?

    (இடமிருந்து வலமாக 4வது நபர் நண்பர் புனித சாத்தான் அவர் தானே?)

    நண்பர்களை தெரிந்து கொள்ள விரும்புகின்றேன். ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. @ Steel Claw மற்ற நண்பர்களின் பெயர்கள்?

      Delete
    2. டியர் சிவசுப்பிரமணியன் !!!
      அந்த புகைப்படத்தில் உள்ள நண்பர்களின் பெயர்கள் ;
      ( இடமிருந்து வலமாக; ஈரோடு விஜய்,ஈரோடு ஸ்டாலின்,சேலம் கர்ணன்,புனித சாத்தான்,எடிட்டர்ஜீ,சிவ.சரவணக்குமார்,சேலம் டெக்ஸ் விஜயராகவன்.)

      Delete
    3. டியர் புனித சாத்தான்! மிக்க நன்றி. உங்களை மட்டுமே முதலில் அடையாளம் காண முடிந்தது.

      ஆனாலும் எடிட்டர் அவர்களை பார்க்கும் போது எனது பள்ளி தலைமை ஆசிரியர் நினைவுக்கு வந்து தானாக பயம் வருகின்றது. (விஜயன் சார் மன்னியுங்கள்!)

      ( நல்ல வேலை நான் வரவில்லை, இவர்கள் மத்தியில் நான் ஒரு பொடியனாக தோன்றி இருப்பேன்.)

      Delete
    4. Siva Subramanian : //ஆனாலும் எடிட்டர் அவர்களை பார்க்கும் போது எனது பள்ளி தலைமை ஆசிரியர் நினைவுக்கு வந்து தானாக பயம் வருகின்றது//

      எனக்கே என் போட்டோக்களைப் பார்த்தால் பயமாக இருக்கும் போது - உங்களைக் குறை சொல்வானேன் ?! :-)

      Delete
    5. அன்புள்ள விஜயன் அவர்களுக்கு,

      பதிலுக்கு நன்றிகள்,சார்.

      பள்ளியின் முதல் நாள் முதல் என் தலைமை அசிரியர் மீது தோன்றிய பயமானது 10வது இறுதி தேர்வின் இறுதி நாளில் நான் அவரை சந்தித்த வரை , பள்ளியில் பல நூறு மாணவர்கள் இருந்தும் பல பணிகள் இருந்தும் என் மீதும் தனிகவனம் செலுத்தி என்னை வழிநடத்திய அவர் மீது தொடர்ந்தது.

      அத்தகைய மரியாதை கலந்த பயமே அவருக்கு பிறகு உங்களை கண்டதும் (மட்டுமே) என் மனதில் தோன்றியது. (பயம் மட்டுமல்ல ).

      Delete
  52. Friends, I am not able to use the google Tamil type writer since last week. When I type in English it is not listing the equivalent Tamil words. I am getting the same problem using other browsers, did anyone come across such problem please help me to resolve this issue.

    ReplyDelete
    Replies
    1. Mr Balasubramanian : Google is forcing us to use the "Google Input Tools" instead of Google Transliteration. You have to install the Google input tools as explained in their website and you can get the tamil fonts as before.

      Delete
    2. தமிழில் டைப் செய்வது இப்படி: இணையத்தில் புதியதாக வருகை தரும் நண்பர்கள் பலருக்கும் தமிழில் டைப் செய்வது சற்றே கடினமாக தெரியும். அதே சமயம் அவர்கள் கேள்வி எதையாவது கேட்டால், உதவியாக இருக்கும் என்று சொல்லப்படும் பதில்கள் பலவும் அவர்களுக்கு புரிவதும் இல்லை. ஆகையால் ஒரு ஆரம்ப நிலை விஷயமாக இந்த பதிவு.

      தமிழில் டைப் செய்ய ஆசைப்படுபவர்கள் தொடர்ந்து படிக்கவும், மற்றவர்கள் மன்னிக்கவும்.

      ஸ்டெப் 1: கூகிள் எழுத்துரு மாற்ற இணைய பக்கத்திற்கு செல்லுங்கள். அல்லது இந்த லிங்க் ஐ க்ளிக் செய்யுங்கள்.

      Picture 1

      ஸ்டெப் 2: எளிமையாக டைப் செய்ய, இந்த பக்கத்தில் இருக்கும் அந்த English KeyBoard ஐ நீக்கி விடுங்கள். அதனை நீக்குவது மிகவும் சுலபம். அந்த English KeyBoard பெயர் இருக்கும் அதே லைனில் X என்று ஒரு பட்டன் இருப்பதை பாருங்கள். அதனை ஒரு முறை க்ளிக் செய்யுங்கள். உடனே அந்த English KeyBoard இந்த பக்கத்தில் இருந்து விலக்கப்பட்டு விடும்.

      Picture 2

      ஸ்டெப் 3: இப்போது அந்த பக்கத்தில் இருக்கும் பெட்டி போன்ற அமைப்பில் English என்று Default ஆக இருக்கும் ஆப்ஷனில் இருக்கும் Drop Down Box ஐ கிளிக் செய்யவும். அதில் உங்களுக்காக மொத்தம் 89 வகையான எழுத்துரு மாற்ற வசதிகள் இருக்கின்றன. அதில் 77ஆவது ஆக இருக்கும் Tamil ஐ க்ளிக் செய்யுங்கள்.

      Picture 3

      ஸ்டெப் 4: இனிமேல் உங்கள் ராஜ்ஜியம் தான். தமிழில் டைப் செய்ய ஆரம்பியுங்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் டைப் செய்யும்போது வரும் மாற்றங்களை கவனியுங்கள்.

      Picture 4

      உதாரணமாக ஸ்பைடர் என்ற பெயரை தமிழில் டைப் செய்ய spider என்று டைப் செய்து மாற்ற முடியாது. அப்படி செய்தால் ச்பிதர் என்றே காண்பிக்கும். நீங்கள் இதனை இரண்டு வார்த்தையாக பிரித்து spai (ஸ்பை) + dar (டர்) என்று வருவதை கவனித்து உபயோகிக்க வேண்டும்.

      Delete
    3. கிங் விஸ்வா,

      இங்கு இது மிகவும் தேவையான ஒன்று , நான் பலமுறை தமிழில் டைப் செய்ய முயன்று முடியாமல் தமிளிங்கிளிஷ் அடித்து அனைவரையும் சோதிக்க வேண்டாமே என்று கமெண்ட் செய்யாமலே சென்றிருக்கிறேன் .

      நன்றி.
      சுரேஷ்

      Delete
    4. காற்று வெளியிடை கண்ணம்மா ......

      என்ன பாக்குறீங்க தமிழ்ல தட்ட ஆரம்பிசிட்ட்டோம்லே அதான் பாட்டா கொட்டுறது

      Delete
    5. டியர் சத்யா !!!
      உங்கள் பாட்டை கேட்டு குழந்தை ...பாவம் வீறிட்டு அழுகிறது:-)

      Delete
    6. Radja from France & King Viswa: Thanks a lot for your input and suggestions.

      Delete
    7. கணினியில் அழகுத்தமிழில் எழுத மேலும் இரண்டு வழிகள்:

      1. http://software.nhm.in/products/writer

      இந்தப்பக்கத்துக்கு சென்று NHM இலவச மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துகொள்ளவும்.

      இது ஆன்லைன், ஆஃப்லைன் மட்டுமல்லாது, பெரும்பாலும் உங்கள் கணினியிலுள்ள அனைத்து செயலிகளிலும் கூட தமிழில் எழுதும் திறன்வாய்ந்தது. (தமிழ் மட்டுமல்லாது அனைத்து இந்திய மொழிகளில் எழுதவும் கூட இது உதவுகிறது)

      தமிழ் எழுத பிரதானமாக இப்போது பயன்பாட்டில் இருக்கும் 3 வழிகளையும் இது வழங்குகிறது.

      ஒன்று: தமிழ் டைப்ரைட்டர் வழிமுறை (தமிழ் டைப்பிங் கீபோர்டு தெரிந்தவர்களுக்காக)

      இரண்டு: தமிழ்99 வழிமுறை (டைப்ரைட்டர் தெரியாதவர்களுக்காக, ஆனால் ஃபோனடிக்கை விட சிறந்த வழியாகும்)

      மூன்று: ஃபோனடிக் எனப்படும் ஒலியெழுத்து முறை (இதுவே தமிழ் ஒலியை அப்படியே ஆங்கில எழுத்துகளில் தருகிறது. தமிழ் டைப்பிங் அறியாதவர்கள் பலரும் பரவலாக பயன்படுத்தும் முறை. a+m+maa= அம்மா, kaa+mi+k+S=காமிக்ஸ்)

      இதைப்போன்ற வேறு சில மென்பொருட்களும் கூட கிடைக்கின்றன.

      -----------

      வழி இரண்டு:

      கணினியில் எந்த இன்ஸ்டாலும் செய்ய இயலாதவர்களுக்காக.. ஆனால் இது ஆன்லைனில் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்தமுடியும்

      tamileditor.org

      இந்த தளத்துக்கு சென்று மேற்சொன்ன ஃபோனடிக் முறையில் டைப் செய்து, நமக்கு தேவையான இடத்தில் காப்பி, பேஸ்ட் செய்துகொள்ளலாம்.

      Delete
    8. டியர் விஸ்வா & ஆதி
      உங்களோட டிப்ஸ் புதிய வாசகர்களுக்கு பெருதவியா இருக்கும். பொதுவா google transliterator நம்மளோட அன்றாட இணையவழி UNICODE தகவல் பரிமாற்றத்துக்கு ரொம்பவே வசதியா இருக்கு. ஆனா இதைய photoshop போன்ற போட்டோ எடிட்டர்ல உபயோகப்படுத்தறது ரொம்ப கடினம். காரணம் தமிழ்ல விதவிதமான வடிவங்கள்ல(FONT STYLE ) FONTS கிடைக்குதுன்னாலும் அவை எல்லாம் UNICODE கிடையாது. பெரும்பான்மையானவை TSCII மற்றும் TAB வகையறைகள்.
      இவங்ககிட்ட UNICODEடெல்லாம் வேலைக்கு ஆகாது. தமிழ் கீ-போர்ட் பயிற்சி இங்கே நமக்கு ரொம்ப உதவி செய்யும்.
      இதுல்ல இன்னொரு தலைவலி தமிழ் TRUE TYPE FONT ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு LAYOUT இருக்கறது.
      TRANSLITERATOR பரிச்சயம் ஆகரதுக்கு முன்னாடி இந்த தளம் http://www.suratha.com/reader.htm UNICODE CONVERSION க்கு ரொம்ப உதவிய இருந்துச்சு !

      Delete
    9. http://www.quillpad.in/index.html#.UhAG_FO6xqQ

      இதையும் உபயோகித்து பாருங்கள். ஆனால் இது ஆன்லைனில் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்தமுடியும்

      Delete
  53. Replies
    1. டியர் சார்!!!
      உங்கள் பெயர் கே.அப்துல் -ஆ ....இல்லை...கப்துல்-ஆ ...?

      Delete
  54. என்னதான் குண்டுபுக் கிளப் மெம்பராக நான் இருந்தாலும், சிறுவர் பட்ஜெட் என்ற ஒரு பாயிண்டை பிடித்துவைத்துக்கொண்டு ஆந்தையார் உட்பட பல தொண்டர்படையும் செண்டிமெண்ட் கிளப்புவது நியாயமே. நானும் அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் மலிவு விலை பதிப்பு என்ற பெயரில் மீண்டும் சாணித்தாள், பி&ஒ என்று நிலை இறக்கம் கொள்வது சரியாகுமா தெரியவில்லை. அந்த பாணி, இக்காலத்தில் சரிவராது என்பதால்தானே, நாம் நவீனத்துக்கு மாறியிருக்கிறோம். ஆந்தையார் இந்தப்பிரச்சினையை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்று பார்க்க ஒரே ஆவலாக இருக்கிறது. எதிர்வரும் காலத்தில் சில பல குண்டுகள் காத்திருப்பதால் என்னளவில் திருப்தியாகவே, ஒல்லி புக்ஸுக்கு எதிரான நிலையைத் தளர்த்திக்கொண்டு இந்தப் பிரச்சினையை வேடிக்கை பார்க்க காத்திருக்கிறேன்.. ஹிஹி!!

    அதிலும் மின்னும்மரணம், ஸ்பெஷல், கிராஃபிக் என 2014ல் நிறைய குண்டுகளுக்கான வாய்ப்பு தெரிவதால் எனக்கு மிக மகிழ்ச்சியே!!

    ReplyDelete
    Replies
    1. ஆதி தாமிரா : //மலிவு விலை பதிப்பு என்ற பெயரில் மீண்டும் சாணித்தாள், பி&ஒ என்று நிலை இறக்கம் கொள்வது சரியாகுமா தெரியவில்லை. அந்த பாணி, இக்காலத்தில் சரிவராது என்பதால்தானே, நாம் நவீனத்துக்கு மாறியிருக்கிறோம்.//

      திரும்பவும் கற்காலத்தை நோக்கி நடை போடும் எண்ணம் சத்தியமாகக் கிடையாது !

      இன்றைய விலைவாசிகளில் - "மலிவு விலையில் சிறுவர்களுக்கென இதழ்கள்" என்றதொரு சிந்தனை மெய்ப்பட வேண்டுமெனில் - இன்றியமையாத் தேவைகள் ஒரு mass circulation + விளம்பர வருவாய் ! இவ்விரண்டும் நமது பலங்கள் அல்லவெனும் போது, நம்மால் செய்யக் கூடியது குறைவான பக்கங்கள் கொண்டு - ரூ.25 விலை சுமாருக்கு ஒரு குட்டிகளுக்கான இதழைத் தயாரிப்பதே ! இதற்கெனவொரு பொருத்தமான கதைக் களத்தை உருவாக்காமல் உடனடியாக செயலில் இறங்கவும் சாத்தியமாகாது ! சிறுவர்கள் இதழ் என்பதற்காக மொக்கையாய் ரெண்டு கார்ட்டூன் கதைகள் ; கொஞ்சம் games போதுமென்ற எண்ணத்தில் அல்லாது, நிஜமான சிறப்போடு கதைகள் அமைந்திட வேண்டுமென்பது என் ஆசை !

      So 'காதலிக்க நேரமில்லை' நாகேஷைப் போலவே ஆந்தையாரும் "கதை...கதை..." தேடி அலைகிறார் !

      Delete
  55. அப்டேட்ஸ் ஒவ்வொன்றும் அழகு, மகிழ்ச்சி! நன்றி ஸார்!

    ReplyDelete
  56. Replies
    1. ஆஹா.......வந்துட்டாருய்யா.....வந்துட்டாரய்யா....!!!

      Delete
    2. ஏனுங்க பு.சா.,

      நான் இங்கிட்டு வரக்கூடாதா?

      Delete
    3. டியர் LFLP !!!
      அடியேனின் சந்தோச கூச்சலை சந்தேகப்படலாமா ....?ஹிஹி !!!

      Delete
  57. விஜயன் சார், கருப்பு வெள்ளை கதைகளுக்கு ரசிகர்கள் அதிகம் என்பதை இந்த புத்தக திருவிழா நம் அனைவருக்கும் புரியவைத்துள்ளது! இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி நமது கருப்பு வெள்ளை நாயகர்களின் (ஸ்பைடர், ஆர்ச்சி, லாரன்ஸ்&டேவிட், மாடஸ்டி, ராபின், வன ரேஞ்சர் ஜோ) "சிறந்த" கதைகளை குறைந்த விலைகளில் அல்லது வருடம் ஒரு குண்டு புத்தகமாக வெளி இட்டால் நன்றாக இருக்கும் [கு.பு.நண்பர்களோட ஆதரவை பெற எப்படி எல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு]. நமது காமிக்ஸ் வாசிப்பவர்கள் முக்கால் வாசி பேர் பழைய வாசகர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை அதே போல் புதிய வாசகர்கள் கருப்பு வெள்ளை கதைகள் வேண்டாம் என சொல்லவும் இல்லை. கடந்த ஆண்டு நண்பர்கள் பலர் கருப்பு வெள்ளை Digest எதிர்ப்பு தெரிவித்தார்கள் ஏன் என்றால் பலமுறை நமது கருப்பு வெள்ளை நாயகர்களின் கதைகளை மறு பதிப்பு செய்து விட்டதால் என நம்புகிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் கொடுக்கும் விளக்கத்தை (புதியவைகளை ரசிப்போம், [புதிய காமிக்ஸ் கதைகள் கடல் போல் உள்ளன) என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை, அதையும் தாண்டி வேறு காரணம் இருப்தாக எனக்கு தோன்றுகிறது. நான் கேட்பது பழைய ஹீரோகளின் "புதிய சிறந்த" கதைகளை மட்டும் தான். இவைகளை கொண்டு மேலும் பல புதிய (இளைய) மற்றும் பழைய தலைமுறை வாசகர்களை கொண்டுவர முடியும், மேலும் இந்த புத்தகம்களை அனைவரும் வாங்கும் விலையில் விற்பனை செய்ய முடியும், புத்தக திருவிழாகளில் மற்றும் நமது புத்தக முகவர்கள் மூலம் விற்பனையை அதிகரிக்க முடியும்.

    இது பற்றி மீண்டும் நீங்கள் யோசிக்க வேண்டும் என அன்புடம் கேட்டுக்கொள்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. இது தான் விடாது கருப்புன்னு சொல்லுறாங்களோ :-)

      Delete
    2. Balasubramanian S : சின்னதாய் ஒரு சங்கதி !

      கறுப்பு-வெள்ளை இதழ்களும் ; குறைந்த விலைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை என்ற காலம் மலை ஏறி சுமார் 6 மாதங்கள் ஆகி விட்டன ! இந்தாண்டின் பள்ளிப் பாடப் புத்தகங்கள் ; நோட்புக் சீசனின் போது தமிழக காகித உற்பத்தியாளர்கள் அனைவரும் செய்த விலையேற்றம் வரலாறு (பூகோளம் ; சயின்ஸ் ) பார்த்திராத ரகம் !

      ஆகையால் black & white இதழ்களில் குண்டு புக்ஸ் ; b&w-ல் சிறுவர்களுக்கு சொற்ப விலை editions இத்யாதியெல்லாம் கனவுலகச் சாத்தியங்கள் மாத்திரமே ! மீண்டும் நியூஸ்பிரிண்ட் காகிதத்தை நாடிச் சென்றால் மட்டுமே மலிவு விலைகளைப் பற்றிய திட்டங்கள் நிஜமாகிட முடியும் ; ஆனால் திரும்பவும் அந்தப் புராதனக் காலங்களுக்கு சாலை அமைக்க நான் தயாரில்லை !

      தவிர கறுப்பு -வெள்ளை என்றான உடன் திரும்பவும் லாரன்ஸ்-டேவிட் ; ஸ்பைடர் ; ஆர்ச்சி என்றபடிக்கு பரணை நோக்கி ஏணியைப் போடுவதும் வேண்டாமே ! "பழைய ஹீரோக்களின்" புதிய கதைகள் உருவாக்கப்படவே இல்லையே - நாம் அவற்றை நாடி திரும்பவும் ஓடிட ?! ஆர்ச்சியிலும், லாரன்ஸ் டேவிடிலும் எஞ்சியுள்ள கதைகள் 1960-களில் உருவாக்கப் பட்டவைகள் மாத்திரமே ! வன ரேஞ்சர் ஜோ கதைகள் காலி ! எஞ்சி நிற்கும் ராபின் ; மாடஸ்டி ; மர்ம மனிதன் மார்டின் ஆகியோர் - "பழைய நாயகர்கள் " என்ற அடைமொழிக்கு பொருந்தா நபர்கள் என்றாலும், 2014-ல் அவ்வப்போது தலை காட்டுவார்கள் !

      சின்னதாய் ஒரு post script -ம் கூட : ஒரு கதையை வெளியிடுவதா-வேண்டாமா ? என்பதை நிர்ணயிக்க அதன் தரத்தையும், வாசகர்களிடையே அது பெற்றுள்ள வரவேற்பையும் மாத்திரமே அளவுகோல்களாகக் கொண்டிடுவோமே ? ஒரு தொடர் கறுப்பு-வெள்ளையில் இருப்பதை மட்டுமே காரணமாகக் கொண்டு அதற்கு வாக்களிப்பது பொருத்தமாய் இராதே ?

      Delete
    3. உங்கள் பதில் நிம்மதி அளிக்கிறது சார் ..நமது காமிக்ஸ் எழுச்சி பெற்றது என்றால் அது தரமான காகிதம் மற்றும் வண்ணத்தில் தான் ...(ஷைனிங் அடிக்கிறது என்றெல்லாம் சொல்வது கேட்கவே கொடுமையாக உள்ளது )மீண்டும் பழைய தரத்தை கற்பனை பண்ணக்கூட முடியவில்லை ...

      Delete
    4. என்னை பொறுத்தவரை நமது காமிக்ஸ் எழுச்சி பெற்றதன் முழு முதற்காரணம் நேரம்/மாதம் தவறாமல் வருவதுதான்.

      அதே போல் கருப்பு வெள்ளை என்பது வருடம் ஒரு சில/பல இதழ்களை நேரம் கிடைக்கும் போது வெளி இட இந்த கோரிக்கை! மாமூலாக வரும் இதழ்களில் நான் எந்த மாற்றமும் கேட்கவில்லை என தெளிவு படுத்தி கொள்ள விரும்புகிறேன் நண்பர்களே.

      நான் புதிய மற்றும் பழைய கதைகளையும் ரசிப்பவன் கூறிக்கொள்ள ஆசைபடுகிறேன்.

      Delete
  58. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் காமிக்ஸ் மீது கொண்ட காதலால் உதவி செய்த ஈரோடு நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

    நிகழ்வுகளை உடனுக்குடன் பதிவுசெய்த விஜய் மற்றும் ஸ்டாலினுக்கு ஸ்பெசல் நன்றிகள்.

    வரமுடியாவிட்டாலும் நிறைவான ஒரு சந்தோசத்தை உங்கள் பதிவுகள் கொடுத்தது என்றால் மிகை ஆகாது.

    மின்னும் மரணம் கலரில் மறுபத்திப்பு எனபது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.

    சார் 600 புத்தகங்கள் இருந்தாலும் கார்சனின் கடந்த காலம் ஒரு ஸ்பெசலான கதை அதுவும் உங்களது மொழிபெயர்ப்பில் இன்னும் அருமையாக இருக்கும்.அந்த ஒரு கதையை மட்டும் சேர்த்துகொள்ளுங்கள் சார்.

    அக்கதை கலரில் வந்துள்ளதா?

    ஒரே புத்தகமாக இருந்தால் படிக்கும் பொழுது பைண்டிங் பிரிய வாய்ப்புள்ளதா என்று தெரியவில்லை.

    2 அல்லது 3 ஆக வந்தால் படிக்க சௌகரியமாகவும் 3 குண்டு புத்தகங்கள் கிடைத்தது போலவும் இருக்கும்.

    எது நீண்ட நாட்கள் வைத்து பாதுகாக்க முடியுமோ அப்படி முடிவு செய்யுங்கள்.

    ஆர்ட் பேப்பர் சம்பந்தமாக எனக்கும் ஒரு சந்தேகம்.

    நாம் ஏன் சினிபூக் புத்தகங்களில் வருவது போல சற்றே கெட்டியான மற்றும் பளீர் வெள்ளை நிற பக்கங்களை உபயோகிக்க கூடாது.

    அதில் இருக்கும் நிறை குறைகள் பற்றி கூறுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. கிருஷ்ணா வ வெ :// ஆர்ட் பேப்பர் சம்பந்தமாக எனக்கும் ஒரு சந்தேகம்.

      நாம் ஏன் சினிபூக் புத்தகங்களில் வருவது போல சற்றே கெட்டியான மற்றும் பளீர் வெள்ளை நிற பக்கங்களை உபயோகிக்க கூடாது.//

      ஆர்ட் பேப்பரின் வண்ண மிளிர்வு (gloss ) இதர வகைக் காகிதங்களில் சாத்தியமில்லை ! நாமும் சினிபுக் பயன்படுத்தும் ரகத்திலான நார்மல் பேபரை உபயோகிக்கும் பட்சத்தில் - தற்சமயமுள்ள அச்சுத் தரத்தின் 70% தான் கிட்டும் !

      Delete
  59. விஜயன் சார், மாடஸ்டியின் புதிய சிறந்த கதைகளை வருடம் ஒரு முறையாவது நமது காமிக்ஸ்-ல் வெளி இட வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Balasubramanian S : பார்ப்போமே...!

      Delete
  60. ஆகா நம்ப வாத்தியார் நினைச்ச மாதிரியே பதில் போட ஆரம்பிச்சுவிட்டார் :-)

    ReplyDelete
  61. Friends, sorry for the confusion in my profile names (Balasubramanian/Parani From Bangalore). I have changed back to Parani From Bangalore.

    ReplyDelete
  62. ஈரோடு விஜய் & ஸ்டாலின், தங்களின் காமிக்ஸ் மேல் உள்ள தீராத காதலை ஈரோடு புத்தக திருவிழா எனக்கு புரிய வைத்துள்ளது.

    ReplyDelete
  63. சார் நமது கௌபாய் ஸ்பெஷல் -ல் இடம் பெற்ற டெக்ஸ் வில்லரின் -பனி கடல் படலம் கதையின் ஓவியர் யார் ?அவருடைய சித்திரங்கள் தான் டெக்ஸ் வில்லரின் கதைகளிலேயே மிகவும் அருமையானவை ....அவரின் கைவண்ணத்தில் இன்னும் டெக்ஸ் கதைகள் உள்ளனவா ?

    ReplyDelete
  64. நண்பர்களே 41வது ஆண்டு மலரை மறந்துவிட்டீர்கள் !!!!!!!

    ReplyDelete
  65. சார் இதுவரை நான் இங்கு கமெண்ட் இட்டதில்லை ...அனால் இன்று கமெண்ட் போட காரணம் ஒன்று ....பழைய பேப்பர் தரம் (b&w) வேண்டாம் என்று சொல்லவும் ...இரண்டு .....அப்போது வெளிவந்த அணைத்து காமிக்ஸ்களையும் வாங்கி தொலைத்த அல்லது தவற விட்ட பெருமை (???)எனக்கு உண்டு .என்னை போன்ற பலர் இருப்பார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு .. எனவே சில மாஸ் &கிளாஸ் ஆன கதைகளை திரும்ப கலரில் நல்ல தரமான ஆர்ட் பேப்பரில் வெளியிட வேண்டும் (மின்னும் மரணம் ,கார்சனின் கடந்த காலம் )என்ற கோரிக்கை ...

    ReplyDelete
    Replies
    1. சாரி ...வாங்கி படித்து முடித்து அஜாக்கிரதையால் தொலைத்த என்று படிக்கவும் ....

      Delete
  66. அன்பு நண்பர்களே,

    ’சிங்கத்தின் சிறு வயதில்’ தொடரின் இதுவரை வந்த பாகங்களை முழுமையாக படித்ததில்லை நான். இதை யாரேனும் மொத்தமாக எழுத்துவடிவிலோ, ஸ்கேன் வடிவிலோ வலையேற்றியுள்ளனரா? அப்படியாயின் லிங்க் கிடைக்குமா?

    கிங் விஸ்வா, கிறுக்கும் பூனையார்.. ஹெல்ப் ப்ளீஸ்..

    ReplyDelete
    Replies
    1. ஆதி,

      இப்படி எல்லா சிங்கத்தின் சிறு வயதில் பாகங்களையும் தொகுக்கும் முயற்சி இங்கே இருக்கிறது. (பகுதி 0 முதல் பாகம் 12 வரை மொத்தம் 13 பகுதிகள்).

      ஆரம்ப கால பாகங்கள் இப்போது கிடைப்பது கடினம். ஆகையால் படித்து கொள்ளுங்கள்.

      இதற்க்கு பின்னால் வந்த இதழ்களின் விமர்சன பகுதிகளில் சிங்கத்தின் சிறு வயதில் இருக்கும். சற்று சிரமம் மேற்கொண்டு தேடிப்பிடித்து படியுங்கள். அநேகமாக என்னுடைய வலைப்பூவில் மிச்சம் இருக்கும் பல பகுதிகள் கிடைக்கும்.

      Delete
    2. நன்றி விஸ்வா!

      Delete
    3. நன்றி ஆதி தாமிரா

      Delete
  67. எடிட்டர் சார்
    பழைய பேப்பர் தரத்தில் வெளியிடும் முயற்சி இனிமேல் வேண்டாம். இன்று அனைவரும் தரத்தை மட்டுமே விரும்புவதால் தற்போதைய தரத்திலேயே தொடர்ந்து வெளியிடவும். இதனால் நமக்கு பல புதிய காமிக்ஸ் ரசிகர்கள் கிடைப்பார்கள். என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் கார்சனின் கடந்த காலம் மற்றும் மின்னும் மரணம் தவிர வேறு எந்த மறுபதிப்பும் தேவையில்லை. ஏனென்றால் வருடத்திற்கு நாம் வெளியிடுவது 25 முதல் 30 புத்தகம் மட்டுமே. இன்னும் ஏராளமான தரமான கதைகள் உள்ளதால் புது கதைகளையே தொடர்ந்து வெளியிடவும். நன்றி

    ReplyDelete
    Replies
    1. இப்போதைய தரத்தில் கார்சனின் கடந்த காலமும், மின்னும் மரணம் முழுதும் விற்று தீர்ந்ததும் இரத்த படலமும் வேண்டுமே!

      Delete
    2. மின்னும் மரணமும், இரத்த படலமும், லார்கோவும் நமது அசைக்க முடியாத ஆசிரியரின்(வேதாளருக்கு போல) முத்திரைகளே!

      Delete
  68. சிங்கத்தின் சிறு வயதில் தனி புத்தகமாக வெளியிடுவதாக இருந்தால் அதை சந்தாவில் இணைக்க வேண்டாம்.தேவைப்படுபவர்கள் மட்டும் தனியாக பெற்றுக் கொள்ளட்டும்.

    ReplyDelete
  69. மாடஸ்தி கதைகள் அனைவரும் விரும்பும் ரகம்தான். புதிய கதைகளை கலரில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
    வருட சந்தாவை போல் சில பத்திரிகைகளில் இருப்பதுபோல் ஆயுட் சந்தா என்று ஒன்றை நாமும் தொடங்கலாம்.

    ReplyDelete
  70. //'சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்லின்' விற்பனையும் நிறையவே ஆச்சர்யப்படுத்தியது! (!)//

    வாங்கிப்போனார்கள் சரி, படித்து முடித்தார்களா, ரசித்தார்களா என்பது விடை தெரியா கேள்வி.. உதாரணத்திற்கு நீங்கள் ஒரு பழைய முத்து காமிக்ஸ் வாசகர், பலவருடங்களாக காமிக்ஸ் பற்றி நினைப்பே இல்லாமல் இருக்கிறீர்கள், திடீரென்று ஒரு நாள் நீங்கள் 20 வருடம் முன் படித்த அந்த காமிக்ஸ் மற்றும் லேட்டஸ்ட் ஹை டக் ஹீரோவின் ஆங்கில திரைப்பட பாணி காமிக்ஸ் இரண்டையும் ஒரு சேர பார்த்தால், உங்களுக்கு பழக்கப்பட்ட அந்த பழைய ஹீரோ காமிக்ஸ்அய் தானே தேர்வு செய்வீர்கள்? அது தான் நடந்துள்ளது, என்பது எனது யூகம்.
    80ஸ் இறுதியில் காமிக்ஸ் கோமாவிற்கு சென்றவர்களுக்கு, "என்னது சிவாஜி செத்துட்டாரா ? " என்பது தான் reaction ஆக இருக்கும் spider/மாயாவி இல்லா முத்து காமிக்ஸ். மற்றும் ராணி காமிக்ஸ் முத்துவை விட சிறிது popular ஆகவும், ஈசியாகவும் கிடைத்தால், பலருக்கு மாயாவி என்றால் வேதாளர் தான் நினைவுக்கு வரும், சிலர் வேதாளர் கதை என்று நினைத்தும் வாங்கி இருக்கலாம். பெங்களூர் காமிக் கான் 2012 இல் ஞாயிரு இரவு ஒரு 1hr இருந்ததில் 3-4 பேர், வேதாளர் ஐ மாயாவி இருக்கா என்று கேட்டு, நானும் நண்பர் ஸ்ரீராமும் இரும்புக்கை மாயாவியை SHSS காட்டி அறிமுக படுத்தியும் வாங்காமல் சென்று விட்டனர்.
    ஏன் நாமே SHSS இற்கு எவ்வளவு வேண்டினோம், இப்போது மற்ற spl இதழ்களுக்கு மத்தியில் அதனை வரிசை கடைசிக்கு அனுப்பவில்லையா?

    ITS TIME to MOVE ON...

    வருடத்திற்கு ஒரு லக்கி, பிரின்ஸ், சிக் பில் spl வரும் என்று நம்புகிறேன், அது அல்லாமல் ஒரு மெகா மறுபதிப்பு, வண்ணதிலோ அல்லது க/வெ இலோ கதைகளை பொருத்து.. 2015- மின்னும் மரணம் போல, 2014 / 2016 இல் க/வெ இல் ஒரு 10 கதைகள் சேர்த்து வெளியிடலாம். 12 புது பதிப்புகள், +6 இல் புது முயற்சிகள், சன்ஷைன் இல் 4 மறுபதிப்புகள் அதில் ஒன்று குண்டு மற்றும் ஒரு சிறுவர் மாதாந்திர இதழ்.. இது அனைவர்க்கும் ஏற்க கூடிய தாக இருக்கும் என நம்புகிறேன் .. What say, folks?

    ReplyDelete
  71. சூப்பர் விஜய் @ ஏன் நாமே SHSS இற்கு எவ்வளவு வேண்டினோம், இப்போது மற்ற spl இதழ்களுக்கு மத்தியில் அதனை வரிசை கடைசிக்கு அனுப்பவில்லையா? It depends upon the people interest :-)

    ReplyDelete
  72. விஜயன் சார், நமது ரெகுலரான வண்ண இதழ்களை ஆர்ட் பேப்பரின் வண்ண மிளிர்வுடன் எப்போதும் போல் வெளி இட வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்; மேட் பினிஷ் அல்லது சினி புக் பேப்பர் தரத்தில் வெளி இட வேண்டாம்!

    ReplyDelete
  73. முகமூடி வேதாளரின் கதைகள் மீண்டும் நம் இதழில் வெளியாவதற்கான வாய்ப்புள்ளதா? இதுபற்றி எடிட்டர் ஏற்கனவே ஏதாவது சொல்லியிருக்கிறாரா நண்பர்களே?
    முகமூடி வேதாளருக்கென்றே ஒரு ரசிகர் வட்டம் இப்போதும் இருந்திடுவதே என்னை இவ்வாறு கேட்கத் தூண்டியது!

    ReplyDelete
    Replies
    1. பெரியவர்களை மட்டுமின்றி, சிறியவர்களையும் நன்றாகவே வசீகரித்திருக்கிறார் என்பது 'வேதாளரின்' கூடுதல் சிறப்பம்சம்!

      Delete
    2. நிச்சயமாய் வேதாளர் இருவரையும் சந்தொசபடுத்துவார் ....ஹாய் ஹாய்.....

      Delete
  74. முகமூடி வேதளரின் கதைகள் இனி வர வாய்ப்பில்லை என முன்பே எடிட்டர் கூறியதாக ஞாபகம்

    ReplyDelete
  75. வேண்டும் வேண்டும் சிங்கத்தின் சிறு வயதில் தனி புத்தகமாக வேண்டும்

    ReplyDelete
  76. steel today we expect any post from editor ?

    ReplyDelete
  77. விஜயன் சார், நமது காமிக்ஸ் புத்தகத்தில் "Commercial" விளம்பரம்கள் வரும் வாய்ப்பு உள்ளதா? இதில் தங்களின் நிலைப்பாடு என்ன? நமது காமிக்ஸ்-ல் சில பக்கம்களை விளம்பரத்திற்கு என ஒதுக்கினால் நமது காமிக்ஸ்-ன் விலை குறைய வாய்ப்புள்ளதா? நாம் யாரையாவது இது விசயமாக அணுக வாய்ப்புள்ளதா?

    "Commercial" விளம்பரம் கொடுபவர்கள் நமது வாசகர் வட்டத்தின் அளவை பொருத்தது முடிவு செய்வார்கள் என நெனைகிறேன்.

    இது வரை நமது காமிக்ஸ் புத்தகத்தில் "Commercial" விளம்பரம்களை பார்த்தது இல்லை மேலும் விளம்பரம் பற்றி நமது காமிக்ஸ்-ன் நிலைபாடு பற்றி தெரியாததால் இந்த பதிவு.

    ReplyDelete

  78. புதிய கதைகள், மறுபதிப்புகள், விலை, தரம் என்று பலதரப்பட்ட வாசகர்களின் எண்ணங்கள் அனைத்திற்கும் ஆசிரியர் மதித்து விளக்கங்கள் கூறி நடைமுறை சாத்தியதிற்கேற்ப செயல்படுத்துவது பாராட்டுக்குரியது.

    ReplyDelete