நண்பர்களே,
வணக்கம். ஜெர்மனியின் மைனஸ் 7 டிகிரிக் குளிருக்கு அணிந்த ஸ்வெட்டரோடு லார்ட் லபக்தாசைப் போல் சென்னையில் வந்திறங்கிய போது பிடறியோடு அறைந்து வரவேற்றது நமது கோடை வெப்பம் ! எண்ணெய் வழிந்த முகமும், வியர்வையும் இனி சில, பல மாதங்களுக்கு இலவச இணைப்புகளே என்ற நினைப்பு தலைக்குள்ளே எட்டிப் பார்த்த கணமே - ஆண்டின் இந்த வேளையினை அத்தனை ஆவலாய் எதிர்பார்த்திட்ட 3 x 10 ஆண்டுகளுக்கு முந்தைய நாட்களும் நினைவுக்கு வரத் தப்பிடவில்லை!
ஏப்ரல், மே மாதங்கள் என்றாலே நமது லயனின் துவக்க காலம் முதல் ஒரு பரபரப்பு எங்களுக்குள் தொற்றிக் கொள்வது வழக்கம் . பள்ளியின் ஆண்டு விடுமுறைகள் என்பதால் காமிக்ஸ் வழக்கத்தை விடக் கூடுதலாய் விற்பனை ஆகுமென்ற கணிப்பில் வியாபாரிகள் நம்மிடமிருந்து மொத்தமாய் முந்தைய கையிருப்பு இதழ்களை வாங்கிடுவர். 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ரூ.5000-க்கு ரொக்க பில் போடுவதென்பது விவரிக்க இயலாததொரு த்ரில் அனுபவம் ! மலேசியாவிற்கும் நம் பிரதிகள் பயணமாகி வந்த சமயமது ; கடல் கடந்து சென்றிடும் பிரதிகளின் எண்ணிக்கையும் கூட கோடையினில் கணிசமாய் இருந்திடும். கையில் கொஞ்சமாய் காந்தி படமிட்ட நோட்டுக்கள் புழங்கத் துவங்கிட்டாலே , எனக்குள் உறங்கிடும் பாலே நடனக் கலைஞன் பரபரப்போடு துயில் எழுந்து கால் கட்டை விரலைத் தேடத் துவங்கிடுவது வழக்கம் ! அவ்வேளையில் நிலவிய விற்பனை சூழல்களும் பிரமாதம் என்பதால், நமது முகவர்கள் அனைவருமே எனது "வாய்க்குள் விரல்" நடனத்தின் முன்சீட் ரசிகர்கள் ! தமிழ் பத்திரிகை உலகினில் ஒரு ரூபாய் ; இரண்டு ரூபாய் விலைகளைத் தாண்டி இதழ்கள் ஏதுமே கிடையாது என்ற நிலையில் - ஐந்து ரூபாய்க்கும், பத்து ரூபாய்க்கும் "கோடை மலர்கள்" வெளியிடும் நம் அசட்டுத் துணிச்சல் ஏஜெண்ட்களுக்கு சுலபமாய் 25% கமிஷன் ஈட்டிடும் ஒரு வாய்ப்பாய் அமைந்தது. சொல்லி வைத்தாற்போல நீங்களும் அவற்றை பரபரப்பாய் வாங்கித் தள்ளியதால் கோடை வியாபாரம் துளி ரிஸ்க்கும் இல்லாது போய் விடுவது வழக்கம் !
1984 முதல் வித விதமாய் நாம் வெளியிட்ட கோடைமலர்களில் பல எனக்கு வெறும் அட்டைப்படங்களாக மாத்திரமே இன்று நினைவில் நின்றிட்டாலும், நான் ரொம்பவே ரசித்துப் பணியாற்றிய "கோ.ம" இதழ்களில் பிரதானமானவை என்று வரிசைப்படுத்தினால் - இது போன்றதொரு லிஸ்ட் உருவாகும் : (இது முழுக்க முழுக்க "கோ.ம." பட்டியல் மாத்திரமே)
1.லயன் கோடை மலர் - 1986
2.திகில் கோடை மலர் 1987
3.லயன் கோடை மலர் - 1987
4.மினி லயன் - சம்மர் ஸ்பெஷல் 1988
5.மினி லயன் - ஹாலிடே ஸ்பெஷல் 1989
1986 லயன் கோடை மலர் பற்றி "சிங்கத்தின் சிறுவயதில்" பகுதியினில் வெகு சமீபமாய்த் தான் எழுதி உள்ளேன் என்பதால் அதனை மீண்டுமொருமுறை துயில் எழுப்பிட வேண்டாமே என்ற எண்ணத்தில், பட்டியலின் பாக்கி இதழ்களை நினைவுக்குக் கொணர முயற்சித்தேன்...!1987-ல் லயன் காமிக்ஸ் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த வேளையினில், ஸ்பெஷல் வெளியீடுகள் அதனில் தலை காட்டியதில் பெரியதொரு வியப்பில்லை தான் ; ஆனால் தத்தித் தடுமாறிய நடையோடே காலம் தள்ளி வந்த திகில் காமிக்ஸில் ஒரு 5 ரூபாய் ஸ்பெஷல் என்பதெல்லாம் கொஞ்சம் 'டூ மச் 'என்ற நிலை அப்போது ! பற்றாக்குறைக்கு நமது மினி லயன் & ஜூனியர் லயன் இதழ்களும் கூட அந்நேரங்களில் வெளி வந்து கொண்டிருந்தன !
விற்பனை எண்ணிக்கை குறையும் போதெல்லாம் professional பத்திரிகைகள் ஏதேனும் புதுப் பாணிகளை ; இலவசங்களை ; விளம்பரங்களைக் கொணர்வது வழக்கம் ; ஆனால் எனக்கோ விற்பனை துவளும் சந்தர்ப்பங்களில் இன்னமும் கூடுதலாய் கதைகளை வழங்குவதைத் தாண்டி வேறேதும் செய்ய மண்டைக்குள் தோன்றிடவில்லை. 'அந்தக் கதை பிடிக்காது போனால், maybe இதாவது பிடிக்கும் தானே ..?' என்ற ரீதியில் மாற்றி மாற்றி எதையாவது வழங்கிட வேண்டுமென்ற உத்வேகம் மட்டுமே அந்த வயதில் என்னுள் ஓடியதன் பலனே இந்தக் கோடை மலர் 1987! இரு அயல்நாட்டுப் பயணங்களின் பலனாய் கழுதைப் பொதியளவுக் கதைகள் கையில் இருந்திட்டதால் எனது பல்டிகள் அத்தனைக்கும் நிறையவே களங்கள் சாத்தியமாகி.அன்றைய நாட்களில் ! தமிழ் காமிக்ஸ் உலகினில் இரும்புக்கை மாயாவி முடிசூடா மன்னராய் கோலோச்சி வந்த அந்நாட்களில் ; முத்து காமிக்ஸின் பொறுப்பும் என் கைக்கு முழுமையாய் வந்திருக்காத அச்சமயத்தில் - கையில் இரும்பு மாதிரி எதையேனும் வைத்திருக்கும் எந்தக் குடாக்குக் கேரக்டர் சிக்கி இருந்தாலும் அவரையும் நமது காமிக்ஸ் உலகிற்க்குக் கொணர நான் தயாராக இருந்த சமயம் அது !அப்போது இங்கிலாந்தின் மற்றொரு காமிக்ஸ் ஜாம்பவான்களான D.C .Thomson & கோ.வின் படைப்பான IRONFIST எனும் ஹீரோ நமது திகில் நாயகர்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாய் இருந்திட்டதால் - முதலில் 'டிக்' ஆனவர் அவரே ! ஓவராய்க் காதில பூ சுற்றும் ரகமாக அல்லாது - ஒரு நார்மலான துப்பறியும் ஆக்க்ஷன் ஹீரோவாக அவரைப் பார்த்திடல் சாத்தியம் என்பதால் எனக்கு அவரைப் பிடிக்கும் என்பதும் ஒரு காரணம். இந்த இதழின் ஸ்டார் attraction என நான் கருதியது இந்த இரும்புக்கை நண்பரையும், தொடர்ந்திட்ட ஏஜெண்ட் ரோஜர் மூரையும் ! தெளிவான சித்திரங்கள் ; மிதமான ஆக்க்ஷன் என்று இரு நாயகர்களுமே நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தோன்றியது. அவர்களோடு கூட்டணி சேர அடுத்து என் வசமிருந்தவர் இன்னொரு பிரிட்டிஷ் ஹீரோவே ! கொஞ்சம் புராதன நெடியடித்தாலும், 1960s களில் வெளியான VALIANT வார இதழில் சுவாரஸ்யமான துப்பறியும் கதைகள் பலவற்றில் சாகசம் செய்த செக்ஸ்டன் ப்ளேக் தான் அந்த ஆசாமி. (இன்றைய ஜெரோம் ; ரிப் கிர்பி போல் சற்றே பரபரப்புக் குறைச்சலான டிடெக்டிவ் இவர்!!)
'பிசாசு வனம்' என்ற ஒரு மிதமான மர்மக் கதையில் அவருக்கு வாய்ப்புக் கிட்டியது. இந்த இதழின் பாக்கிப் பக்கங்களை ஆக்ரமித்தவர்களும் கூட அத்தனை பெரிய பெயர்கள் அல்ல தான் ! ஜான் ராம்போ என்ற இன்னொரு DC THOMSON-ன் ஹீரோவின் ஒரு சாகசம் ; கறுப்புக் கிழவியின் 2 கதைகள் (கிழவியின் காதலர் நண்பர் ஜான் சைமன்- இந்த இதழைப் படித்தாகியாச்சா ?) ; கேப்டன் பிரின்சின் ஒரு துக்கடாக் கதை என்று படிக்க நிறையவே பக்கங்கள்.
இவர்கள் தவிர 2 சூப்பர் ஸ்டார் சூப்பர் ஹீரோக்களும் இதழில் இடம் பிடித்திருந்தனர். முதலாமவர் நமது அப்போதைய டாப் ஸ்டார் ஸ்பைடர் - "விண்வெளிப் பிசாசு 'எனும் விட்டலாசார்யா பாணி தொடர்கதையில் ; இரண்டாமவர் BATMAN - சின்னதானதொரு அறிமுகத்தோடு ! தொடர்ந்திட்ட மாதங்களில் BATMAN முழு நீள சாகசங்கள் பலவற்றில் தூள் கிளப்பிய போது - கோடை மலரிலே அவருக்கு இன்னமும் கொஞ்சம் பெரிய பங்களிப்பைத் தந்திருக்கலாமோ என்ற எண்ணம் தலை தூக்காதில்லை ! ஆஸ்தான பாக்கெட் சைசில் ; ஐந்து ரூபாய்க்கு வந்திட்ட இந்த இதழோடு - எனக்குத் தெரிந்தே ஒரே விற்பனை யுக்தியாய் ஒரு தாய விளையாட்டையும் இலவசமாய் வழங்கியது நினைவுள்ளது. (அது என்னவென்று நினைவில்லை என்பது வேறு விஷயம்!!) சமீபமாய் சென்னை புத்தகத் திருவிழாவில் என்னை சந்தித்த நண்பரொருவர் "NBS -க்குக் கூட ஒரு தாய விளையாட்டை தந்திருக்கலாமே ?" என்று கேட்ட போது அவர் ஹேஷ்யமாய் கேள்வியினைப் போட்டாரோ என்ற சந்தேகம் எனக்கு. ஆனால் - அந்தத் தாய விளையாட்டுக்கள் ஒரு காலத்தில் எத்தனை சந்தோஷத்தைத் தந்தவை என்பதையும், இத்தனை காலம் கழிந்த பின்னும் கூட அந்த நாட்களின் உற்சாகத்தை மறக்க இயலவில்லை என்று ரொம்பவே உணர்வுபூர்வமாய் அவர் சொன்ன போது - நினைவுகளுக்கு வயதாவதில்லை என்பது மீண்டுமொருமுறை நிரூபணமானது.
மாங்கு மாங்கென்று திகில் இதழுக்காக நிறைய யோசித்து (!!) ஒரு இதழை உருவாக்கிடுவது அவசியமான அதே வேளையினில் - 'சூ ..மந்திர காளி!' என்றதும் ஒரு லயன் ஸ்பெஷல் இதழைத் திட்டமிடுவது சாத்தியம் என்ற சுலப நிலை நிலவியது !! ஒரு ஸ்பைடர் + ஒரு ஆர்ச்சி + ஒரு டெக்ஸ் வில்லர் + கைக்குச் சிக்கிய சில கதைகளின் கூட்டணி = 1 லயன் ஸ்பெஷல் இதழ் என்பது தான் அன்றைய recipe ! அதே 1987-ல் ; அதே கோடையினில் இந்த லயன் மலரும் தயாராகிய போதிலும் (Lion KM- April ; Thihil K.M.-May) - எங்களிடம் அப்போதெல்லாம் பணியாற்றிய ஆர்டிஸ்ட் பட்டாளம், அதகளம் செய்திடும் ஆற்றலைக் கொண்டிருந்ததால் - துளி டென்ஷனும் இன்றி இரு இதழ்களையும் வடிவமைக்க இயன்றது. மாடஸ்டியின் ஒரு முழு நீள சாகசம் (கார்வினின் யாத்திரைகள்) ; லாரன்ஸ் டேவிட் ஜோடியின் ஒரு குட்டி சாகசம் ; அன்றைய ஆக்க்ஷன் மன்னர்களான "இரட்டை வேட்டையரின்" ஒரு சாகசம் பிளஸ் மாமூலான விச்சு, கிச்சு என்று இதுவும் ஒரு பாக்கெட் சைஸ் அதிரடியே ! திகில் கோ.ம.க்கு தாய ஆட்டம் இலவசம் என்பதால் இதற்கொரு டைம் டேபிள் ப்ரீ! பாக்கெட் சைசுக்கு டெக்ஸ் கதையினை மாற்றி அமைப்பதைத் தவிர்த்து இந்த இதழில் வேறெங்குமே சிரமம் நேர்ந்திடவில்லை ! ஸ்பைடர் சின்னதாய் ஒரு cameo கதையினில் மாத்திரமே தலையைக் காட்டி இருப்பினும், எங்களது சூப்பர் ஸ்டார் அவரே என்பதால், அட்டைப்படத்தில் முக்காலே மூன்று வீசம் அவருக்கும், பாக்கி இருந்த இடம் சட்டித் தலையன் ஆர்ச்சிக்குமென்று ஒதுக்கப்பட்டது. நம் ஓவியர் மாலையப்பன் இந்த இதழுக்கு வரைந்திட்ட அசத்தலான அட்டைபடம் இன்றும் நம் கிட்டங்கியில் பளீரென்ற வண்ணங்களோடு கால் நூற்றாண்டுக்கு முந்தையதொரு சந்தோஷக் கோடையை நினைவூட்டும் சின்னமாய் கிடக்கின்றது !
காலங்கள் தான் எத்தனை மாறி விட்டன....நம் ரசனைகளில் தான் மாற்றங்கள் எத்தனை நேர்ந்து விட்டன என்ற சிந்தனைகள் எழும் போது - தேய்ந்து போன அந்த cliche தான் நினைவுக்கு வந்தது...'மாறாதது மாற்றம் மாத்திரமே !' கோடை கொணர்வது வெப்பத்தை மட்டுமல்ல...சில சுகமான சிந்தனைகளையும் கூடத் தான் என்ற புரிதலோடு இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன். பாக்கி 2 (மினி லயன்) கோடை மலர்கள் பற்றி இடைப்பட்டதொரு சந்தர்ப்பத்தில் எழுதிடுவேன் ! புது இதழ்கள் இரண்டும் (ஹாட் n ' கூல் ஸ்பெஷல் + டைகர் ஸ்பெஷல்) ஏப்ரல் 7க்கு உங்களைத் தேடித் புறப்படும் ! அதே போல நாளைய தினம் "KAUN BANEGA TRANSLATOR -சீசன் 2" க்கான பக்கங்கள் கூரியரில் அனுப்பிடப்படும். Get cracking guys ! Adios for now !