Powered By Blogger

Wednesday, January 02, 2013

ஒரு பனி இரவின் உரத்த சிந்தனை !


நண்பர்களே,

வணக்கம் ! புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! புலர்ந்திருக்கும் 2013 நம் அனைவருக்கும் நலமும், வளமும், அழகாய் நிறைய காமிக்ஸும் தந்திட வேண்டுவோமே ! கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கே தலைகாட்டிச் சென்ற நான் புத்தாண்டு வரை காணாது போய் விட்டதற்கு sincere apologies ! தவிர்க்கவே இயலா குடும்பப் பணிகள் எனது கவனத்தின் பெரும்பகுதியினை ஆக்ரமித்துக் கொண்டபடியால் - அவ்வப்போது உங்களின் பின்னூட்டங்களை எனது  செல்போனில் பார்த்திட்டதோடு திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டிப் போனது ! இன்றிரவு ஒரு புதிய பதிவினை வலையேற்றிய பின்னர், நாளைய நடுஜாமத்தை முந்தைய பதிவின் பின்னூட்டங்களுக்குப் பதில் அளிக்கப் பயன்படுத்திட எண்ணியுள்ளேன் ! So -  இங்கும் அங்குமாய் பயணிக்கும் சிரமத்தை இவ்வொருமுறை பொருட்படுத்திட வேண்டாமே - ப்ளீஸ் ?! 

First things first..! NBS பணிகள் 95% முழுமையடைந்திடும் நிலை என்பதால், இப்போதெல்லாம் எனது சிந்தனை அதைத் தாண்டிய மாதங்களை / இதழ்களைப் பற்றியே ! NBS வெளிவரும் ஜனவரி நீங்கலாய், பாக்கியுள்ள 11 மாதங்கள் என்பது மெய்யாகவே மிகக் குறைச்சலானதொரு அவகாசமாய்த் தோன்றுவது ஏனோ தெரியவில்லை ! லார்கோ ; டைகர் ; லக்கி லூக் ; டெக்ஸ் வில்லர் ; டேன்ஜர் டயபாலிக் ; வேய்ன் ஷெல்டன் ; சிக் பில் ; XIII என்று prime நாயகர்களின் பட்டியல் பெரிதாய் இருக்கையில், ஆண்டொன்றுக்கு ஆளுக்கு ஒரே ஒரு வாய்ப்புத் தந்தால் கூட  - மாதங்கள் 6-7 ஓடிப் போய் விடும் ! எஞ்சி நிற்கும் மாதங்களில் புது வரவுகளான ஜில் ஜோர்டான் ; ஸ்டீல் பாடி ஷெர்லாக் ; (ஒன்றோ இரண்டோ) கிராபிக் நாவல்கள் என்று திட்டமிடும் போது, நமது காலெண்டர் கிட்டத்தட்ட நிரம்பி இருக்கும் ! புதிதாய் முயற்சிக்க பாணிகள் ; தொடர்கள் நிறையவே இருப்பது ஒரு பக்கமென்றால் ; existing நாயகர்களின் புதுக் கதைகள் ஏராளமும்   காத்துள்ளன என்பது வானவில்லின் மறுபக்கம் ! 1948 -ல் துவங்கிய டெக்ஸ் கதைகளின் எண்ணிக்கை, தலை சுற்றச் செய்யும் 625 + ! 1962 -ல் துவங்கிய டயபாலிக் தொடரில் சில நூறு கதைகள் காத்துள்ளன !  லக்கி லூக்கில் 72+ கதைகள் வெளி வந்துள்ளன ; லார்கோ கதைகள் இப்போதும் பயணிக்கும் ஒரு current தொடர் ! 


கதைகள் இத்தனை காத்துள்ள போது 'தொபுக்'கென நம் இதழ்களின் எண்ணிக்கையைக் கூட்டிட மண்டைக்குள் நமைச்சல் எடுக்கத் தான் செய்கிறது என்றாலும்  ; கூடுதல் பழுவினைச் சுமக்க நமது infrastructure -ல் ஏற்பாடுகளைச் செய்திடாது, 1987-ல் செய்திட்ட அதே தவறைத் தொடர்ந்திட வேண்டாமே என்ற எச்சரிக்கை மணியும் தலைக்குள்ளே ஒலிக்காமலில்லை ! 1986-ல் லயன் காமிக்ஸின் வெற்றி - "திகில் " என்ற அடுத்த முயற்சிக்கான தைரியத்தைக் கொடுத்திட்டது ! திகில் லேசாய் தடுமாறிய போதிலும் மறு ஆண்டே "ஜூனியர் லயன் " ; "மினி லயன்" என்று சிங்கத்தின் குட்டிகளை வரவேற்க எத்தனித்ததற்கு எனது ஆர்வக் கோளாறே பிரதான காரணம் ! அன்றைய ஆர்வக் கோளாறு கற்றுத் தந்த பாடத்தை அசை போட ஆண்டுகள் 25 கிடைத்துள்ளன என்பது மட்டுமல்லாது, எங்களிடம் சின்னதாய் ஒரு மாற்றமும் இருப்பதாய் எனக்கு ஒரு நம்பிக்கையின் துளிர்!   நமது NBS வெளிவரும் தருணம், நாட்காட்டியின் ஒன்பது மெல்லிய காகிதங்களுக்குப் பின்னே கிடந்தாலும் இந்த ஒட்டு மொத்த முயற்சி எனக்கு significant ஆனதொரு விஷயத்தை ஏற்கனவே உணர்த்தியுள்ளது ! ஸ்தம்பிக்கச் செய்யும் மின்வெட்டின் இடையே கூட எங்களது குட்டியான டீமால் NBS போன்றதொரு மெகா பணியினை செய்து முடித்திட இயன்றுள்ளது எனும் போது, சரியாகத் திட்டமிட்டுச் செயலாற்றும் பாணியினை இத்தனை காலம் கழித்தாவது கற்றிட சரியான சாலையில் தான் இருக்கிறோம் என்று நினைக்கத் தோன்றுகிறது ! விற்பனையாள நண்பர்களின் ஒத்துழைப்பு மட்டும் இன்னமும் கொஞ்சம் வேகமெடுக்கும் பட்சத்தில், நமது பயணத்தின் வேகமும், பரிமாணமும் நிச்சயம் உயரே செல்லும் என்றும் மனதுக்குப் பட்டது

கால் நூற்றாண்டுக்கு முன்னே செய்த அதே தவற்றினை ஒரு உற்சாக உந்துதலில், திரும்பவும் செய்திட வேண்டாமே என்ற முன்ஜாக்கிரதை நிதானத்தின் அவசியத்தை புகட்டி வருவது ஒரு பக்கம் !  இன்னொரு பக்கம், ரூ.10 ; ரூ.20 என்ற price tags  எல்லாமே பரணுக்குப் பார்சல் செய்யப்பட்ட சங்கதிகளாகி விட்ட நிலையில், ரூ.100 விலைகளில் வந்திடும் இதழ்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - இளம் வாசகர்களின் வாங்கும் திறனை நிஜமாகவே சோதித்திடுமே என்ற பயமும்  ! இந்த சூழலில் எனக்குள் தோன்றியதொரு சிந்தனையின் உரத்த வெளிப்பாடு இது : 

நம்மிடம் தற்சமயம் உள்ள ஏற்பாடுகளை சற்றே ஸ்திரப்படுத்திக் கொண்டிட இயலும் பட்சத்தில், ஆண்டொன்றுக்கு ரூ.50 விலையிலான black & white இதழ்களில் இன்னும் கூடுதலாய் 6 issues தயாரிப்பது சுலபமாய் சாத்தியமே !( வண்ணத்தில் 400 பக்கங்களோடு NBS -ல் மல்லுக் கட்டிய பின்னர், டெக்ஸ் வில்லரின் b&w  கதைகளில் இன்றைக்குப் பணியாற்றுவது - மிகச் சுலபமாய்த் தோன்றுகிறது !!) பைண்டிங் பணிகளுக்கான ஏற்பாடுகளையும், இதழ்களை despatch செய்திடும் நம் அலுவலக ஏற்பாடுகளையும் செம்மைப்படுத்தி விட்டால், இந்த +6 கனவு சிக்கலின்றி அரங்கேறிடும் ! ஏற்கனவே 2013-க்கான நமது ரெகுலர் schedule -ல் ஐம்பது ரூபாய் விலையில் சில இதழ்களை திட்டமிட்டுள்ள நிலையில்,மேற்கொண்டு 6 இதழ்கள் ரூ.50 விலையினில் எனும் போது, இளம் வாசகர்களுக்கும் வாங்கிட சற்றே சிரமம் குறையும் என்று தோன்றியது.  இந்த  +6 கனவை நாம் நிஜமாக்கிட முனையும்  பட்சத்தில் டெக்ஸ் வில்லர் ; டயபாலிக் ; மர்ம மனிதன் மார்டின் ; CID ராபின் ; ஆகியோரது பெயர்கள் 'பளிச்' என்று மனதில் நிழலாடுகின்றன ! அல்லது அயல்நாடுகளில் செய்திடுவது போல - டெக்ஸ் போன்ற ஏதாவது ஒரே ஹீரோவின் கதைகளை exclusive-ஆக வெளியிடவும் செய்திடலாம் ! இவர்களைத் தவிர்த்து வேறு நாயகர்களை முயற்சிக்க விரும்பும் பட்சத்தில் உங்களின் தேர்வுகள் என்னவாக இருக்கும் என்றறிய ஆசை ! உங்களின் கனவில் உலா வரும் அந்த b&W ஹீரோ யாரென்று பகிர்ந்திட்டால், அவரை நம் அணிவகுப்பிற்குக் கொணர இயல்கிறதா என்று முயற்சிக்க முடியும் ! அதற்காக இந்த +6 கனவிற்கு மாயாவி ; ஸ்பைடர் ; மறுபதிப்புகள் என்ற ரீதியிலான suggestions-களோ ; நாம் தற்சமயம் வண்ணத்தில் வெளியிட்டு வரும் டைகர் போன்ற நாயகர்களின் கதைகளையோ ; Asterix; Tintin : Batman போன்ற வண்ணத்தில் அசத்தும் புதுத் தொடர்களையோ பரிந்துரை செய்திட வேண்டாமே - ப்ளீஸ் ?! இப்போதைக்கு இது ஒரு உரத்த சிந்தனை மாத்திரமே என்பதால்,இதனை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் நிறையவே அவகாசம் நமக்குத் தேவைப்படும் என்பதை ஒரு முறை நினைவூட்டிட விரும்புகிறேன் ! 


இப்போதெல்லாம் கண்களை மூடினாலே கலர் கலராய் கௌபாய்களும் ; வித விதமான விமானங்களில் பயணிக்கும் jet setting ஹீரோக்களுமே கனவினை குத்தகைக்கு எடுத்து வருகின்றனர் ! நண்பர்களோடு பேசும் போது கூட மொழிபெயர்ப்புப் பாணியில் பேசாதிருக்க பெருமுயற்சி எடுத்திட வேண்டியுள்ளது ! 'ஹாட்லைன் எழுதுகிறேன் பேர்வழி' ; 'வலைப்பதிவுக்கு விஷயம் தேவை ' என்று வீட்டுக்குள் ரூம் ரூமாய், பேனாவும் கையுமாய், முகத்தில் ஒரு அசட்டுப் பார்வையோடு சுற்றுவது மனைவியின் முறைப்புகளை சம்பாதித்துக் கொடுத்தாலும் - சமீப காலமாய் ஒரு சுவாரஸ்யமான பொழுது போக்காகிப் போய்விட்டது ! இந்த ஓராண்டு கால காமிக்ஸ் reading + blogging அனுபவங்கள் நம் அனைவரின் நாட்களுக்கும் சின்னதாய் ஒரு மெருகேற்றி இருப்பதால், ஆங்காங்கே நம் இல்லங்களில் ஓடிடக் கூடிய இந்த "காமிக்ஸ் பஞ்சாயத்துகளை" சந்தோஷமாய் சந்திக்க நமக்கு சாத்தியப்படும் என்றே தோன்றுகிறது !  

சந்தோஷங்களைப் பற்றிப் பேசிடும் போது, வரவிருக்கும் சென்னைப் புத்தகத் திருவிழாவினில் நமக்கெனப் பிரத்யேகமான ஸ்டால் கிட்டியுள்ளது என்பது இன்னொரு சந்தோஷச் சேதி !இதற்கென முயற்சித்த  நம் நண்பர்களுக்கும், அபிமானிகளுக்கும், புத்தகத் திருவிழாவின் குழுவினருக்கும் நமது நன்றிகள் என்றும் உண்டு ! இதோ - ஸ்டால்களின் வரைபடம் ! நமக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஸ்டால் எண் : 343 ! 


ஜனவரி 11-ல் துவங்கிடும் இந்தத் திருவிழாவின் முதல் நாள் மாலையில் உங்களை சந்திக்கக் காத்திருப்போம்-எங்களது நெஞ்சார்ந்த வரவேற்புகளோடு ! Please do drop in guys !! 

379 comments:

 1. டியர் விஜயன் சார்,

  தங்களுக்கும், தாங்கள் குடும்பத்தார் மற்றும் நமது அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் 2013 – இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  // அழகாய் நிறைய காமிக்ஸும் தந்திட வேண்டுவோமே //
  அள்ளிக் கொடுத்திட நீங்கள் இருக்கும்பொழுது, பெற்று கொள்ள எங்களுக்கு கசக்குமா என்ன? அப்படியே வேண்டிடுவோம்.

  // கனவில் உலா வரும் அந்த b&w ஹீரோ //
  டெக்ஸ் கதைகள் 625+ என்கின்ற பொழுது, நாம் ஏன் டெக்ஸ் கதை வரிசை வெளியிட முயற்சிக்க கூடாது?
  பெரிய தலையணை சைசில் டெக்ஸ் கதைகளை மீண்டும் படிக்க ஆசை ...
  எனது விருப்பம் +6 வரிசை:
  டெக்ஸ் வில்லர். டெக்ஸ் வில்லர். டெக்ஸ் வில்லர்
  (ப்ளுபெர்ரி கலரில் கலக்குவதால் இந்த போட்டிக்கு அவர் வரவில்லை)

  +6 B&W திட்டம் இந்த வருடமே நடைமுறை படுத்தப்படுமா சார் ?


  ஜனவரி 11 – மாலை நேரத்தை எதிர்நோக்கி,
  திருப்பூர் ப்ளுபெர்ரி

  ReplyDelete
  Replies
  1. திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : +6க்கும், 2013-க்கும் work out ஆகிறதாவென்று பார்ப்போமே !

   Delete
  2. நிச்சயம் work out ஆகும் சார்.

   2012 இல் டெக்ஸ் வராத குறையை இந்த வருடம் +6 தீர்த்து வைக்க வேண்டும் என்பதே எங்களது ஆவல்.

   Delete
 2. Sir, Glad to hear the +6 news..! Planned to come to book fair after Pongal.. WIll you be there after pongal days?

  ReplyDelete
  Replies
  1. Arun Kamal : Sorry, but right now my plans are for the 11th & 12th.Jan. If at all I'd be dropping in after Pongal too, I'll keep you posted. Thanks !

   Delete
 3. டியர் சார்!

  எந்த கதைகள் வாசகர்களால் மொழிபெயர்ப்பு செய்யப்படும்?

  மொழிபெயர்ப்பு செய்ய முன் வரும் நண்பர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்!

  மொழிபெயர்ப்பு குறித்து சில கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்!

  ­மொழிபெயர்ப்பு செய்வதை ஒரு கடமையாகவும், தொழிலாகவும் மட்டுமே செய்யும்போது மொழிபெயர்ப்புக்குள்ளாக்­கப்படும் படைப்பின் உண்மையான சுவை பெரும்பாலும் வாசகனுக்கு வந்து சேர்ந்து விடுவதில்லை!

  கதையை மொழிபெயர்ப்பவர் முதலில் அது என்ன கூற வருகிறது, எத்தகைய உணர்ச்சிகளுடன் அக்கதை கூறப்படுகிறது என்பதை தெளிவாக புரிந்து அக்கதையை ரசிப்பவராக இருக்கவேண்டும். இல்லையேல் வெறும் சொற்களிற்கான மொழிபெயர்ப்பே நிகழ்த்தப்படும். அதனை அகராதியே செய்து விடும்!

  எத்தனை மொழிபெயர்ப்பாளர்கள் மூலப்படைப்பின் உயிரோட்டத்தை தங்கள் மொழி பெயர்ப்பில் கொண்டு வந்து விடுகிறார்கள் என்பதை கூறத்தேவையில்லை!

  மொழிபெயர்ப்பு ஒரு கலை அதுதொழில் மட்டும் அல்ல!

  மொழி பெயர்க்கபடும் மூலம் மட்டுமல்ல, அந்த ஊடகத்தின்மீதும் உண்மையான அக்கறை உள்ள ஒருவரால் மட்டுமே, அந்த கதையை தரம் குறையாமல் மொழிபெயர்க்க முடியும்.

  மொழிபெயர்ப்பது என்பது மிகவும் அர்ப்பணிப்புடன் செய்யப்பட வேண்டிய ஒரு விஷயம் அரிதாகவே அப்படியான மொழிபெயர்ப்புக்களை காணமுடிகிறது!

  ஆக்‌ஷன் கதைகளை சுலபமாக மொழிபெயர்த்து விடலாம், நகைச்சுவை கதைகளை மொழிபெயர்ப்பது அப்படி அல்ல. நல்ல நகைச்சுவை உணர்ச்சியும், மொழிபெயர்க்கும் மொழியில் அசலில் உள்ள நகைச்சுவை உணர்வை பிரதிபலிக்கும் மொழியாளுமைப் பக்குவமும் இல்லாவிடில் எந்த ஒரு நகைச்சுவைக் கதையும் பிரேதத்தை அலங்கரித்த சடங்காகவே இருக்கும்!

  தமிழில் சினிமா காமெடி வரிகளை வைத்து அலங்காரம் நடத்தப்படுகிறது.
  அதுதான்காமெடி எனவும் வாசகர்களிடம் கூறப்படுகிறது. இது உண்மையல்ல. மொழிபெயர்ப்பாளர்களின் வறண்ட கற்பனையை மறைக்க போடப்படும் திரைதான் இது.

  மொழிபெயர்ப்புதான் கதையின் ஜீவநாடி என்பதை புரிந்து கொள்ளுங்கள்

  உங்கள் முழு திறமையை பயன்படுத்துங்கள் நண்பர்களே!

  நன்றி!

  ReplyDelete
 4. Dear Vijayan Sir,
  Wish you a very Happy New Year to you and the lion comics team.
  -Udhay

  ReplyDelete
 5. Oxford 2013
  Sir, Wishing you and your family
  a very happy and prosperous NBS !!!

  Lifco 2013
  (கானக) காமிக்ஸ் அரசன் க்கு (லயன்)
  முத்தான (muthu) புதுமலர் NBS வாழ்த்துக்கள் !!!

  கோனார் தமிழ் உரை 2013
  கானக அரசன் சிங்கத்தின் பெயரில் காமிக்ஸ் பட்டத்து இளவரசனாய்
  அவதானித்து இன்று தமிழ் காமிக்ஸ் உலகின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக்
  கொள்ளப்போகும் ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு NBS மணிமகுட வாழ்த்துக்கள் !!

  விருப்பம் கொண்ட வாசகர்கள் அனைவரும் வருகைத்தர ஆண்டவன் அருள் புரிந்து,
  காமிக்ஸ் தமிழ் உலகம் தங்களை வாழ்த்த NBS பட்டாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடந்து,
  காமிக்ஸ் தமிழ் உலகின் சக்கரவர்த்தியாக அரியணை ஏற தங்களை மனதார வாழ்த்துகிறேன் !!!

  வாழ்க லயன் காமிக்ஸ் !
  வாழ்க முத்து காமிக்ஸ் !!
  வாழ்க காமிக்ஸ் க்ளாஸிக்ஸ் !!!

  வாழ்க வளமுடன் !!!

  ReplyDelete
  Replies
  1. மர மண்டை : கனிவான வாழ்த்துக்களுக்கு நன்றிகள். ஆனால் "சக்கரவர்த்தி ; பட்டாபிஷேகம் ; அரியணை " என்பதெல்லாம் நமக்குப் பொருந்தா சொற்கள் ! இங்குள்ள ஒவ்வொருவரையும் போல் நானுமொரு காமிக்ஸ் காதலனே என்றதொரு அடையாளமே சந்தோஷமளிக்கும் சங்கதி !

   Delete
  2. ஆசிரியர் விஜயன் : இந்த பதவிகளை நீங்கள் விரும்பாவிட்டாலும், இறைவனால் ஏற்கனவே எழுதப்பட்டவை! அது தங்களை தேடி தானே வரும்! என் வாழ்த்துக்கள் மெய்ப்படும்! சரியாக இன்னும் ஐந்து வருடத்தில் இது நிச்சயமாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும்! இதுவே இறைவனின் விருப்பம் !!!

   Delete
 6. +6 சிந்தனைக்கு ஒரு ஜே!

  ஏதோ கனவு நனவாகிக் கொண்டிருப்பதாக மனது குதூகலிக்கிறது!

  என்னுடைய ஓட்டுக்கள் ' டெக்ஸ் வில்லருக்கே! '

  6/6ம் டெக்ஸ்வில்லர் என்றாலும் சரி; அல்லது ஒரு மாற்றம் தேவைப்படும்பட்சத்தில் 4 டெக்ஸ், 1 டேஞ்சர் டயபாலிக், 1 ராபின் என்றாலும் சரி!

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY : பூனையாரைக் காணோமே ?!

   Delete
  2. 'மியாவி'ன்னு கெஜட்டில் பேர் மாற்றம் செய்யப் போயிருக்கு சார்! :)

   Delete
  3. Erode VIJAY : 'பந்திக்கு முந்துவது' என்பது இது தானோ ? :-)

   Delete
 7. சென்ற பதிவின் பின்னூட்டத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்டவை...
  எத்தனை ஆசைகள் :

  1. முழு வண்ண வெளியீடுகள் தற்போதைய அளவில், தற்போதைய
  தரத்தில்1000 புத்தகங்கள், அதுவும் சாத்தியப்படக்கூடிய குறுகிய காலத்தில் !

  2. காமிக்ஸ் க்ளாஸிக்ஸ் வெளியீடுகளும் தற்போதைய லயன் முத்து அளவில் !

  3. X111, மின்னும் மரணம், வனரேஞ்சர் ஜோ, மர்ம மனிதன்
  மார்ட்டின், டைகர் கதைகள் முழு வண்ண மறுபதிப்பு, 150 பக்கங்களில் மட்டும் !

  ReplyDelete
 8. சார்,உங்களுக்கும் லயன் அலுவலக நண்பர்களுக்கும் காமிக்ஸ் வாசகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்…
  நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல நாம் இதுவரை கலரில் பார்த்திடாத நாயகர்களான டெக்ஸ்,மார்டின்,மாடஸ்டி போன்றோரை மட்டும் வைத்து SHSS போல b&wல் அதிக பக்கங்களுடன் அதிகக் கதைகளுடன் வந்தால் லோ பட்ஜெட்டில் blockbuster hit ஆகக்கூடிய நல்ல கதையம்சம் உள்ள படங்களைப் போல மெகாஹிட் ஆகும்.. வண்ணங்கள் தேவையான லார்கோ,சிக்பில்,லக்கிலூக் போன்றோரின் கதைகளை எப்போதும்போல் கலரிலேயே வெளியிடலாம்...கறுப்புவெள்ளையில் 100 விலைக்கு குறைந்தது 300 பக்கங்களாவது போடலாம்...அதில் எப்படியும் நீங்கள் குறிப்பிட்ட நாயகர்களில் டெக்ஸைத்தவிர மற்றவர்களது சாகசங்கள் ஆறு அல்லது ஏழு கூட (கலவையாக) போட வாய்ப்புள்ளது…
  அம்மாதிரி செய்தால் எங்களுக்கும் கொஞ்சம் அதிகக் கதைகளைப் படித்த திருப்தி கிடைக்கும் சார்…என்னதான் வண்ணத்தில் படித்தாலும் இரண்டே கதைகள் என்பது எங்களுக்கு மனசு நிரம்ப மாட்டேன் என்கிறது சார்…வருடம் மூன்று இதழ் 300 பக்கங்களில் b&wலிலும் 8 இதழ் வண்ணநாயகர்களுக்காக நூற்றுச்சொச்ச பக்கங்களிலும் ஒன்று வண்ண மறுபதிப்பாகவும் வந்து தீபாவளி அல்லது கோடைதோறும் NBS போல நானூறுவிலையில் ஒன்று அல்லது இரண்டு இதழ்களோ(சற்றுப் பேராசையோ?) வந்தால் எங்கள் காமிக்ஸ் பசிக்கு சோளப்பொறி போலவாவது இருக்கும் என நினைக்கின்றேன்…

  ReplyDelete
 9. ஸார், என்னுடைய தேர்வு டெக்ஸ் வில்லர் மட்டுமே! டெக்ஸ் வில்லர் ன் கதைகள் தான் 600+ உள்ளது, கருப்பு வெள்ளையில் உருவாக்கப்பட்டது. பிற்காலத்தில் வண்ணத்தில் வெளிவர வாய்ப்பில்லாதது! எனவே //அயல்நாடுகளில் செய்திடுவது போல - டெக்ஸ் போன்ற ஏதாவது ஒரே ஹீரோவின் கதைகளை exclusive-ஆக வெளியிடவும் செய்திடலாம்// டெக்ஸ் வில்லர் ஒரு வெற்றி நாயகர் என்பதால் விற்பனைக்கும், collection க்கும், வாசகர்களின் முழு ஆதரவுக்கும் உகந்ததது !!!

  ReplyDelete
 10. //6 இதழ்கள் ரூ.50 விலையினில் எனும் போது, இளம் வாசகர்களுக்கும் வாங்கிட சற்றே சிரமம் குறையும் என்று தோன்றியது. இந்த +6 கனவை நாம் நிஜமாக்கிட முனையும் பட்சத்தில் டெக்ஸ் வில்லர்// கதை வரிசையை மட்டுமே தயவுசெய்து வெளியிடவும் !!! இதுவரை வெற்றி நடை போட்டவர் இனிமேலும் வெற்றி நடை போடுவார்! கருப்பு வெள்ளைக்கு உகந்த கதை தேர்வு டெக்ஸ் வில்லர் கதைகள் மட்டுமே! (வண்ணத்தில் இனி வாய்ப்பே இல்லாதபோது)

  ReplyDelete
 11. இன்னோரு சிறிய suggestion…ஆங்கிலத்தில் வருவது போல டைஜெஸ்ட்டாக புதிய கதைகளை b&wல் டெக்ஸ்,மார்ட்டின்,ஜோ,ராபின்,ஜானி போன்றோருக்கு தனித்தனியே ஒவ்வொரு ஸ்லாட் கொடுத்தால் அற்புதமாக இருக்கும்…ஒரே இதழில் முன்னூறு பக்கங்களில் மார்ட்டின் சாகசங்கள் ஆறு அல்லது ஏழு என்று இருந்தால் யோசித்துப் பார்த்தாலே நெஞ்செல்லாம் தித்திக்குது சார்…
  அதேபோல டெக்ஸின் 300 பக்க சாகசம் ஒரே இதழினில் என்று கற்பனை செய்தாலே கலக்கலாக உள்ளதே சார்…
  பார்த்துச் செய்யுங்கள் சார்…என்னைப் பொறுத்தவரை பணம் பிரச்னை அல்ல.ஆனால் நிறைய கதைகள் வேண்டும்… இதன் மறுபக்கமான வியாபார விஷயங்களை நீங்கள் அலசி நல்ல முடிவாக(நிறைய கதைகளாக) கொடுங்கள் சார்…

  ReplyDelete
  Replies
  1. Raja Babu: ஒரு மார்டின் / ராபின் / டெக்ஸ் வில்லரின் முழுக் கதையின் குறைந்த பக்க நீளம் 114 பக்கங்கள் எனும் போது ஆறு / ஏழு கதைகள் 300 பக்கங்களுக்குள் சாத்தியமல்லவே ! Let's plan well...

   Delete
 12. கறுப்புவெள்ளைக்கு உகந்த நாயகர்கள் என நான் கருதுபவர்கள் ரிப்போர்ட்டர் ஜானி(மரணத்தின் நிசப்தத்தின் தெளிவான அச்சுத்தரத்தைப் பார்த்தபின் தோன்றியது),மார்ட்டின், மாடஸ்தி பிளைசி,ராபின், டயபாலிக், லாரன்ஸ் டேவிட்(புதிய சாகசங்கள்), வன ரேன்சர் ஜோ, டெக்ஸ் வில்லர் , மதியில்லா மந்திரி...
  சார், ஐம்பது ரூபாய் விலையில் +6 இதழ்களும் வரும் என்றால் சந்தாவில் மாற்றம் வருமோ? அதே போல +6 இதழ்களின் சைஸ் என்ன?

  ReplyDelete
  Replies
  1. ஒரு உரத்த சிந்தனை உண்மையாகும் சமயம் நெருங்கிடும் போது அளவு ; சந்தாக்கள் பற்றியெல்லாம் எழுதிடுகிறேனே !

   Delete
 13. அடியேனுடைய தேர்வு டெக்ஸ் வில்லர் மட்டும்தான்.+6 கதைகளில் அதிக பட்சம 4 கதைகளாவது நம்ம இரவு கழுகு-க்கு ஒதுக்க படவேண்டுமாய் கோருகிறேன்.
  மொத்தமாக வருடத்திற்கு 6 கதைகள் டெக்ஸ் வில்லருக்கு ஒதுக்கினால் கூட இன்னும் நூறு வருடங்களில் இப்போதுள்ள டெக்ஸ் வில்லர் கதைகள் அத்தனையும் வெளியிட்டுவிடலாம்.இதற்க்கு மேல் வெளிவரும் கதைகளை நூறு வருடங்களுக்கு பிறகு வெளியிட்டு கொள்ளலாம்.அடுத்த சில நூறு வருடங்களில் நமது இதழ்களின் எண்ணிக்கையை வருடத்திற்கு 50-ஆக உயர்த்தி கொள்ளலாம்.ஆவன செய்யவும்.
  ஆங்......சொல்ல மறந்துவிட்டேன்.அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. saint satan : என்னுள் இந்த +6 சிந்தனையைத் தூண்டியதன் பிரதான காரணம் நம் இரவுக் கழுகின் பரந்து விரிந்து கிடக்கும் கதை சாம்ராஜ்யமே ! பார்க்கலாமே ...மற்ற நண்பர்களும் என்ன அபிப்ராயப்படுகிறார்களென்று !

   Delete
  2. 6 Tex stories in a year will be good.(All big Stories in single edition (with all parts))

   Delete
  3. டியர் எடிட்டர் சார்.
   டெக்ஸ் வில்லர் கதைகள் மட்டும் 600 க்கு மேல் இருக்கும்போது ,choose செய்ய நிறைய நல்ல கதைகள் மலை போல அதில் குவிந்து கிடக்கும்போது ,வேறு
   நாயகர்களின் கதைகளை நாடுவது உங்களுக்கே நியாயமாக படுகிறதா?
   மர்ம மனிதன் மார்ட்டின் கதைகள் நமக்கு தேவைதானா?சுவாரஸ்யமில்லாத வரட்டுத்தனமான வரலாற்று விவரங்கள்,மாந்த்ரீகம் கலந்த விஞ்ஞானம்,இறுதியில் கதை முடிந்ததா?இல்லையா?என்றே புரிந்துகொள்ள முடியாத "குழப்ப க்ளைமாக்ஸ்"என்று மார்ட்டின் கதைகள் பெரும்பாலும் ஒரு தினுசான ரகமாக இருக்கிறது.நாற்பது வயதை கடந்த எனக்கே அவரது கதைகள் புரிவதில்லை.இன்றைய இளம்வயது ,மற்றும் புதிய வாசகர்கள் அவரை ஏற்பார்களா என்பது சர்ச்சைக்குரியது.
   புதிய வாசகர்களை கவர டெக்ஸ் வில்லரால் மட்டுமே முடியும் என்பது அடியேனின் தாழ்மையான அபிப்ராயம்.
   இரவு கழுகார் நமது இதழ்களில் தலை காட்டியே பல வருடங்கள் ஆகிவிட்டன.கடைசியாக கௌ-பாய் ஸ்பெஷலில் (பனி புயல் படலம்)வந்துவிட்டு போனவர் இன்னும் திரும்பியே வரவில்லை.(ஒருவேளை,நல்ல பிசாசிற்கு பயந்து பதுங்கி கொண்டிருக்கிறாரோ?ஹிஹி).

   Delete
 14. மரணத்தின் நிசப்தம் புத்தகத்தை பார்த்து பிரமித்தேன்.காரணம் 2.முதலாவது;இருபது ரூபாய் மதிப்புள்ள புத்தகத்தை பாதி விலையில் கொடுத்தது.இரண்டாவது;இது வரை பத்து ரூபாய் விலையில் வந்த அத்தனை புத்தகங்களின் அட்டை படத்தையும் மரணத்தின் நிசப்தம் அட்டை படம் தூக்கி சாப்பிட்டுவிட்டது.அட்டை படத்திற்கே பத்து ரூபாய் கொடுக்கலாம்.
  கதையை பற்றி; நண்பர் சிவ.சரவணகுமார் தான் இதுவரை படித்த ஜானி கதைகளில் ''முதல் முறை படித்தவுடன் புரிந்த கதை '' இதுதான் என எழுதியிருந்தார்.
  அண்ணாரது கருத்தே அடியேனது கருத்தும்.

  ReplyDelete
 15. சென்ற 2012 டிசம்பர் 21 ஆம் நாள் மாயன் காலண்டர்படி உலகம் அழிந்திருக்க வேண்டும்.துரதிர்ஷ்டவசமாக அந்த நல்ல காரியம் நடக்கவில்லை.
  இதுகுறித்து நம்ம நல்ல பிசாசு ,பிரபல மாயன் மந்திரவாதி 'மச்சினியோ மச்சானோ'வை பிரேசில் நாட்டிலுள்ள யுகாட்டானில் சந்தித்து உரையாடியபோது..........

  நல்ல பிசாசு; கும்புடறேன் சாமி.நான் இந்தியாவுலேருந்து வர்றேன்.அடியேனின் திருநாமம் நல்ல பிசாசு.உக்காரலாங்களா?

  மச்சினியோ மச்சானோ; டிகிதாகி டகிடியா.டுகுமேசு சபாடுகீடா .

  நல்ல பிசாசு; சாமீ .உங்க மாயன் காலண்டர்படி உலகம் அழியலையே?அது ஏன் சாமீ?

  மச்சினியோ மச்சானோ; இனிக்காவோ நலிக்காவோ எனிக்கொமி டிக்டிக்காடா மர்கோகிபோ ஜிகர்குஜி .

  நல்ல பிசாசு; வெலங்கலீங்களே சாமீ?

  மச்சினியோ மச்சானோ; சூக்குடிமாக்கி பகுதிமா சபாக்கிகோடே லிக்லிலொக்கடா ..

  நல்ல பிசாசு; சாமீ.புரியறமாதிரி சொன்னீங்கன்னா பரவால்லே .

  மச்சினியோ மச்சானோ; குமி குமி மாக்கி கபாடா விக்கிமியாலி ஜுபிவுட்டா புடிமாசிகேவா .

  நல்ல பிசாசு; அடங்கொப்புரானே. இது ஒரு பாஷையாடா ..? வெளங்கற மாறி சொல்லுடா அணுமின் தலையா....

  மச்சினியோ மச்சானோ; ஸ்பானியோ பிரசிலியோ அர்கந்தினோ சிலியோ பனாமோ வாக்கி டாக்கி....

  நல்ல பிசாசு; என்னது....? வாக்கி டாக்கியா...?அது போலிஸ்கிட்ட இல்ல இருக்கும். எதுக்கும் ஜான் சைமன் கிட்ட கேட்டு பாக்கறேன்.மாயன் காலண்டர் பத்தி சொல்லுடா ஸ்பெக்ட்ரம் மண்டையா ....

  மச்சினியோ மச்சானோ; மாயோ அஸ்டெக்கோ பெருவோ உருகுவோ நிகராகுவோ ....

  நல்ல பிசாசு; ஒன்னுமேவோ புரியலவோ .....தெளிவா பேசுடா செம்மண்ட தலையா......

  மச்சினியோ மச்சானோ; சூகிலி பாக்கிலி மடியோ பஸ்மிகாக்கோ அனுஷ்கா ......

  நல்ல பிசாசு; ஏற்கனவே சமந்தா ,நமீதா பத்தி எழுதி வாங்குன ஒதெ பத்தாதாடா......? இப்ப அனுஷ்கா-ன்னு சொல்லி என்னோட ஆயுள முடிக்கலாமுன்னு
  பாக்கறியாடா அபோகாலிப்டோ தலையா ....

  மச்சினியோ மச்சானோ; லம்லம் லொமி லாமிகாதி சிக்காலா நின்னிஜந்தி லாகும்னே காமிலேதி ....

  நல்ல பிசாசு; டேய் ......என்னோட வெறிய கெளப்பாதே......கேட்ட கேள்விக்கு மரியாதையா பதில் சொல்லுடா லேப் -டாப் வாயா ...

  மச்சினியோ மச்சானோ; டடாங்கே ஐயோடாக்கி வாகீஈடா ......... டடாங்கே ஐயோடாக்கி வாகீஈடா............

  நல்ல பிசாசு; (திகைப்புடன்) இத எங்கியோ படிச்சுருக்கறனே...!

  மச்சினியோ மச்சானோ; (திடீரென்று தமிழில்) எனக்கு எழுபத்தெட்டு மொழி தெரியுண்டா ஏழரை நாட்டு சனிதலையா ....என்னையே வாய்க்கு வந்தபடி திட்டுறியா ....?உன்னெ எங்களோட மானிடோ தேவதைக்கு 'நரபலி'கொடுத்தாத்தாண்டா எம்மனசு ஆறும். யாரங்கே....?இவன இழுத்துட்டு போய்
  பலிபீடத்துல படுக்க வச்சி முள்ளு கயிறால கட்டி வைங்க. பக்கத்து ஊருல மனித உரிமைகள் மாநாடு நடக்குது. நான்தான் சீப் -கெஸ்ட் .
  போய் 'மரண தண்டனை ஒரு மனித நேயமற்ற செயல்'ங்கற தலைப்புல பேசிட்டு வந்துடறேன்...

  நல்ல பிசாசு கதற கதற மாயன்கள் அவரை பலிபீடத்திற்கு இழுத்து செல்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. நல்ல பிசாசு :இதுவரை நான் படித்த தங்களின் பின்னூட்டங்களில், மிகவும் சிறந்த நகைச்சுவையும், மன அழுத்தத்தின் மறைப்பொருளும் ஒன்றாய் கலந்திருப்பதாக முதன் முறையாக உணர்கின்றேன்! உணர்ந்து ரசிக்கின்றேன்! ரசித்து பாராட்டுகின்றேன்! அப்படி என்றால் ZZ போல் நீங்கள் தான், from SOUTH and WEST END நண்பர்களா? உடனே, இந்த கேள்விக்கான பதிலை ''மச்சினியோ மச்சானோ'' வை கேட்க சொல்லி விடாதீர்கள்! ஏனெனில் எனக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது !!!

   எல்லாம் தெரிந்த மச்சினியோ மச்சானோ அவர்களுக்கு : மனித உரிமைகள் மாநாட்டிற்கு சென்று பேசிவிட்டு ஊர் திரும்பும் போது YZ என்கின்ற டாக்டர் ஐயா வை, மன்னிக்கவும் Dr.Sundar,Salem மற்றும் XZ என்கின்ற புத்தகப்பிரியன் அவர்கள் இருவரையும் இங்கு பதிவிட அழைத்து வரவும் !!!

   நேற்று மனம் விட்டு சொல்லாதிருந்தேன்,
   மனம் களையிழந்தது !!!

   இன்று வாய் விட்டு சிரித்தேன்,
   மனம் கவலையிழந்தது !!!

   Delete
  2. நல்வரவு...புனித சாத்தான் அவர்களே......எங்கே சார் கொஞ்ச நாள் காணாமப்போயிட்டீங்க?

   மாயன் காலண்டருக்கும் நம்ம சிவகாசி காலண்டருக்கும் நடந்த போட்டியில் நம்ம சிவகாசிக்கே வெற்றி.....

   Delete
  3. Saravanakumar,
   மாயன் காலண்டருக்கும் நம்ம சிவகாசி காலண்டருக்கும் நடந்த போட்டியில் நம்ம சிவகாசிக்கே வெற்றி.....
   ----------> உண்மை! அருமை!! மிக அருமை!!!

   Delete
 16. சூப்பர் தகவல் ஜி! மார்ட்டின் மற்றும் ராபினை வழிமொழிகிறேன்! Happy 2013 sir! Thanks again for ur consideration on 50 rs. Books!

  ReplyDelete
 17. Wish you a happy new year sir :) let me come up with my ideas later on .

  ReplyDelete
 18. எடிட்டர் சார், கருப்பு வெள்ளை புத்தகங்கள் எவ்வளவு பக்கங்களில் திட்டமிட்டு உள்ளீர்களோ தெரியவில்லை.ஆனால் விலை ரூ50 என்பது எனக்கு சற்று அதிகமாக தோன்றுகிறது. 100ரூபாய் கலர் இதழ்களும் 10ரூபாய் கருப்பு-வெள்ளை இதழ்களும் value for money என்ற கோணத்தில் ஓரளவு அனைவைரையும் திருப்பதி படுத்தியவை. இதை வைத்து பார்க்கையில் 50ரூபாய் கருப்பு-வெள்ளை இதழ்கள் குறைந்தபட்சம் 300 பக்கங்களாவது இருந்திட வேண்டும். கொஞ்சம் over dose ஆகிவிடப் போகிறது..

  கருப்பு-வெள்ளை இதழ்களுக்கான என் பரிந்துரைகள் :
  1. டெக்ஸ்
  2. ராபின்
  3. மார்ட்டின்
  4. மாடஸ்டி
  5. வன ரேஞ்சர் ஜோ
  6. டேஞ்சர் டயாபாலிக்
  7. ரிப்போர்டர் ஜானி

  ReplyDelete
  Replies
  1. 'டிடெக்டிவ் ஜெரோம்' ஐ யாரும் ரெக்கமண்ட் செய்யவில்லையே.... தம்பி அவுட் டா?

   Delete
  2. உண்மை அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்.

   Delete
  3. SIV : ரூ.10 என்பதெல்லாம் இன்றைய விலைகளில் ஒரு கனவாக மாத்திரமே இருந்திட இயலும். ஓரளவிற்காவது தரத்தை நாடிடாது திரும்பவும் newsprint காகிதம் ; சுமாரான அச்சு என்று ரிவர்ஸ் கியர் போட்டிட நினைத்தால் மட்டுமே 50 ரூபாய்க்குக் குறைவான விலைகள் சாத்தியமாகும்.

   Delete
  4. தங்கள்ளின் பதிலுக்கு நன்றி சார். 10ரூபாய் இதழ்கள் என்பது சாத்தியம் இல்லை என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் 2013 ல் ஏற்கனவே சுமார் ரூ2400 ஐ காமிக்ஸ் காக செலவிட்ட நிலையில் (lion&Muthu - 1420, CC - 560, NBS - 430) இன்னும் கூடுதல் சுமையை எங்கள் பர்ஸுக்கு வைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்
   ...
   லயன்-முத்து வின் தற்போதைய price tags பற்றி - சுய சம்பாத்தியம் உள்ள என் போன்றவர்களுக்கே இந்த தொகைகள் மலைப்பாக உள்ளதைப் பார்த்தால் மாணவர்கள்-சிறுவர்களுக்கெல்லாம் காமிக்ஸ் என்பது எட்டா கனி ஆகி விடுமோ என்ற ஆதங்கம் மனதில் வலிமையாக எழுகிறது. ஆனாலும் உங்களின் நடைமுறை சாத்தியங்கள் ஆனது விலை குறைப்பிற்கு பாதகமாக உள்ளதையும் புரிந்து கொள்ள முடிகிறது. தாள்களின் தரத்தை சற்று குறைத்தல் மூலம் விலையை குறைக்க இயலுமெனில் அதற்கு நான் ஆதரவாகவே உள்ளேன்.

   Delete
  5. @SIV:
   //'டிடெக்டிவ் ஜெரோம்' ஐ யாரும் ரெக்கமண்ட் செய்யவில்லையே.... தம்பி அவுட் டா?//
   ஜெரோம் வண்ணத்தில் வரட்டுமே! :) :)

   Delete
 19. சார் உங்களுக்கும் நமது குழுவினருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.//அழகாய் நிறைய காமிக்ஸும் தந்திட வேண்டுவோமே//
  எங்களுடைய ஆசையும் அதுவே.

  +6 கதைகள் எனபது மிகவும் சந்தோசம் அளிக்ககூடிய செய்தி.
  அதில் 3 கதைகள் இரவுக்கழுகு இருக்கட்டும் சார்.
  மீதி 3 கதைகள் ஒரு variety க்காக ராபின்,மார்டின்.மற்றும் டயபாலிக் இருக்கட்டும்.
  காரணம் டெக்ஸ் கதைகள் 600+ இருந்தாலும் அவை அனைத்துமே நன்றாக இருக்கும் எனபது கிடையாது.
  மற்றும் அளவிற்கு அதிகமாக படித்தால் சற்றே அதன் மோகம் குறைய வாய்ப்பு இருக்கிறது.
  ஆனால் வெளிவரும் கதைகள் அனைத்தும் தலையணை சைசில் இருக்கவேண்டும் கட்டாயமாக.
  ஒரு 3 மாதத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக டெக்ஸ் தலையணை சைசில் வந்தால் மிக நன்றாக இருக்கும் எபது எனது கருத்து.

  விரைவில் முன்பு போல மாதம் 2 புத்தகங்கள் லயன் மற்றும் முத்து வரவேண்டும் சார்.
  அது தவிர கிளாசிக்ஸ்.

  //ஜனவரி 11-ல் துவங்கிடும் இந்தத் திருவிழாவின் முதல் நாள் மாலையில் உங்களை சந்திக்கக் காத்திருப்போம்//
  சார் தவிர்க்க முடியாத காரணங்களால் நான் பொங்கலுக்கு ஊருக்கு செல்கிறேன் சார்.
  லக்கி கதை வரும் சமயத்தில் நீங்கள் அங்கு இருப்பீர்களா சார்.
  அல்லது கண்காட்சி முடியும் நாட்களில் ஒரு நாள் அங்கு இருக்க முயற்சி செய்து பாருங்கள் சார்.
  இப்பொழுது வர முடியாத என்னை போல் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. கிருஷ்ணா வ வெ ; SIV : தொடர்ச்சியாக டெக்ஸ் கதைகளை வெளியிடும் பட்சத்தில் சற்றே overdose ஆகிடும் அபாயமும் உண்டென்பதில் நானும் உடன்படுகிறேன் ! இது பற்றி பிற நண்பர்களின் சிந்தனைகளை கேட்டறிவோமே..?

   Delete
  2. எடிட்டர் சார், லிஸ்டல் ஒரு கதையாவது முகமூடி வீரர் வேதாளருக்கு. அவருக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

   Delete
 20. சார், உங்களின் எந்த பட்டியலிலும் "முதலைப் பட்டாளம்" இல்லையே.. கதைகள் முடிந்த விட்டனவா?

  ReplyDelete
  Replies
  1. If possible please try to publish those two stories in 2013 sir. After lion’s new look we have never experience William Vance in high quality color

   Delete
 21. First of all wish you a very happy new year sir :)

  ReplyDelete
  Replies
  1. Giridharan V : Many thanks & we'll wish you a wonderful 2013 too !

   Delete
 22. டெக்ஸ் வில்லர் ,மார்டின் ,ராபின் மூன்றுமே சிறந்த தேர்வு.
  நன்றி .

  ReplyDelete
 23. திரு.விஜயன் அவர்களுக்கும், உங்கள் குடும்பத்தினர், அலவலகப் பணியாளர்கள், நண்பர்கள் அனைவரும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.

  6 புத்தகங்கள் மேலதிகமாக வெளியிடப்படும்பட்சத்தில், அதில் ஒரு கதையை மட்டும் டெக்ஸ்க்கு ஒதுக்குங்கள். மற்றைய கதைகளை வேறு புதிய நாயகர்களுக்கு ஒதுக்கிடுங்கள். அல்லது, எங்களது இதழ்களின் எவர்க்ரீன் ஹீரோக்களான (டைஜஸ்ட்டில் வராத) விங்கமாண்டர் ஜார்ஜ், மர்ம மனிதன் மார்ட்டின், கானகவீரர் ஜோ, முதலைப்பட்டாளம், ஜெஸ் லாங், சிஸ்கோ கிட், சார்லி (சாயர்), காரிகன், மாடஸ்டி போன்றவர்களுக்கு ஒதுக்குங்கள்.

  டெக்ஸ் கதைகள் ஹிட் ஆகும் என்பது உண்மைதான். ஆனால், மறுபடியும் முன்புபோல ஒரு வட்டத்துக்குள் நாங்கள் போய்விழ வழி அமைத்துவிடும் தொடர்ச்சியான ஒரு ஹீரோவின் 'மோனோ ஆக்ட்'. புதிய நாயகர்கள் கறுப்பு வெள்ளைக் கதைகளுக்கு ஏற்றவாறு இருந்தால், அவர்களைக் களமிறக்கலாம்.

  ReplyDelete
 24. டியர் எடிட்டர்,

  உரத்த சிந்தனைகள் பற்றிய எண்ணம் ஒரு காமிக்ஸ் வாசகனாய் என்னை மகிழ்வுறச் செய்திடும் சமயம் கீழ்கண்ட points உங்களின் பார்வைக்காக வைக்கிறேன். Some of these are related to your points in this post. Others are in because of your stress on 'உரத்த சிந்தனை' :

  1. 18 இதழ்கள் மொத்தம் சாத்தியமெனில் (டைஜெஸ்ட் தவிர) - we could have clear agendas for Lion and Muthu brands. உதாரணம்: லயன் காமிக்ஸினில் : டெக்ஸ், டயபாலிக், லக்கி லூக், இத்யாதி ... முத்து: டைகர், ப்ருனோ பிரேசில், லார்கோ போன்றவை. Brand / Genre building is a very important part of comics world - you know better.

  2. புதிய ஆறு புத்தகங்கள் நீங்கள் கூறுவது போல ஒரே ஹீரோ சார்ந்ததாக இருக்கலாம் - especially until the continuity of a particular series ends

  3. For future celebrations: பல ஹீரோக்களின் கதைகள் கொண்டிட்ட ஒரே ஜம்போ ஸ்பெஷல் நமது ஸ்டைலாக இருந்து வந்துள்ளது. As we attempt to take our brand totally world class, we can look instead at:

  ஒரே ஹீரோவின் பல கதைகள் (முற்றிலும் முழுமை கொண்ட)இரண்டோ அல்லது மூன்றோ டைஜெஸ்ட் இதழ்கள். Example for 'Lion' 30 years we could look at:

  One Tex complete collection, One Lucky Luke collection and say one Lion complete classics reprint - these are just examples. This facilitates collectors to collect individual streams and non-collectors to enjoy multiple books.

  4. இந்த முயற்சிகளுக்கெல்லாம் அடிநாதம் நமது மொழிபெயர்ப்பு முயற்சிகள் கூர் தீட்டப்பட்டு செம்மைப்படுத்தப்படுவதே ஆகும். தேவையெனில், உங்களது மொழிபெயர்ப்பு அணி விரிவாக்கப்பட்டு நம்மில் இரு மொழிகளிலும் காமிக்ஸ் படித்திடும் ஆர்வலர்கள் ஒரு review committee ஆக தேர்ந்தெடுக்கலாம். அல்லது முழுவதும் விற்பன்னர்களைக் கொண்டிட்ட ஒரு review committee தாங்களே அமைத்திடலாம்.

  5. In 2012 the focus was on new size, color, new heroes etc. 2013 - we can focus on regularity, logistics (courier, binding related), genre division between Lion/Muthu brands, getting to the next level of translation etc. Followed by such streamlining we can launch 2014 with your +6 idea on the occasion of 30 years of Lion. By mid of 2014, we can be truly world class with an amazing fan base if we go step by step.

  6. சற்றே இன்னும் உரத்த சிந்தனை:

  You can form a high level feedback committee - based on your readers - again with rotating tenures so that the committee does not become monopolize / polarized by long term members. This will be unique to comics publication world - you can include from among your most loyal fan base, your absolutely neutral well wishers and definitely also your most vociferous critics from across the world - in these days of teleconferences and videoconferences this is an easy thing. This team can meet once in three months - tenure for the reviewers being an year at a time - and discuss suggestions for taking the publications to even higher levels.

  In the best interests of Tamil Comics - to keep seeing the Lion roaring!

  ReplyDelete
 25. டியர் எடிட்டர் சார்
  இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். கருப்பு வெள்ளையில் 6 இதழ்கள் அதிகரிப்பது மகிழ்ச்சிக்குரியது.
  கருப்பு-வெள்ளை இதழ்களுக்கான என் பரிந்துரைகள் :
  1. டெக்ஸ் வில்லர்
  2. ஆர்ச்சி
  3. மார்ட்டின்
  4. மாடஸ்டி
  5. வன ரேஞ்சர் ஜோ
  6. டேஞ்சர் டயாபாலிக்
  7. ரிப்போர்டர் ஜானி
  8. ஜேம்ஸ்பாண்ட்
  எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

  ReplyDelete
 26. ---

  தனி ஸ்டால் - அற்புதம்

  11ஆம் தேதி முதல்வரால் புத்தகக் காட்சி தொடங்கும் என்ற நிலை இருப்பதால், மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும். அவர் எத்தனை மணிக்குத் தொடங்கி வைப்பார் என்ற தகவல்கள் தெரியாத நிலையில் 11-ஆம் தேதி மாலை 6 மணி என்பதில் எதாவது மாற்றம் இருக்க வாய்ப்பு உண்டா ?

  ----

  ReplyDelete
 27. ஆஹா !உற்ச்சாகத்திர்க்கு குறைவிருக்காது என சத்தியமாய் உரக்க ஒலித்துள்ளீர்கள்!நமது பயணம் துள்ளளுடன் ,பாய்ச்சலாகவும் இருக்க போவது குறித்து துள்ளி குதிக்கிறேன் இப்போதும் !நாயகர்கள் லார்கோ ; டைகர் ; லக்கி லூக் ; டெக்ஸ் வில்லர் ; டேன்ஜர் டயபாலிக் ; வேய்ன் ஷெல்டன் ; சிக் பில் ; XIII அணிவகுப்பு நம்மை உற்ச்சாகத்தின் விளிம்புகளுக்கு அழைத்து செல்லவிருப்பதுடன் மாதம் ஒரு நாயகர் என அணிவகுத்தாலே தலை சுற்றி போகுமே என்பது நிச்சயமே தொடர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால் !மனம் கவர்ந்த லார்கோ ,வரவிருக்கும் புதிய XIII,அறிமுகத்தின் வாயிலாகவே அசத்தி உள்ள வேய்ன் ஷெல்டன் ஆகியோரின் தொடர்களை விரைவு படுத்தினாலே வருடம் மூன்று போதாதே எனும் போது தலை கிறு கிறுப்பது உற்ச்சாகத்தினாலா அல்லது குழப்பத்தினாலா என ஏனோ தலை சுற்றுகிறது எனக்கு ,தங்கள் நிலை ?!லார்கோ இன்னும் தொடர்வது இன்னும் மாதங்களை அதிகரிக்க போவதுடன் ,விரைவில் வர உள்ள மாதங்களை எதிர் பார்ப்புடன் கரைய செய்வது நிச்சயம் !எப்படி வேர்ல்ட் கப் மேட்சின் போது வரவிருக்கும் நாட்களின் கவுன்ட் டோவ்ன் ஸ்டார்ட் உச்ச பட்ச எதிர்பார்ப்புடன் ஸ்டார்ட் ஆகுமோ அது போல NBS நாட்களை குறைத்து வந்தால் வரவிருக்கும் இதழ்களும் அது போலவே என்பது ஆஹா !வருடம் மூன்று லார்கோ தொடர்களை வெளியிடலாமே என ஏங்குகிறேன் !வருடம் ஒரு இதழ் இந்த முன்னணி நாயகர்கள் என்பது ஏனோ வருத்தமாய் இருக்கிறது ,இனி தொடர உள்ள தொடர்கள் என தாங்கள் கூறுவது சந்தோசத்தை கூட்டினாலும் ,மலைப்பை அதிகரிக்கிறது !மீண்டும் மூன்று இதழ்கள் நிச்சயமாய் தேவை படும் !டெக்ஸ்சுக்கு என பிரத்தியோகமாய் தனி இதழ் ஆஹா இனிக்கிறது உள்ளமெங்கும் ,இது போல லார்கோ ,வேய்ன், XIII போன்ற நாயகர்கள் ஒவொருவருக்கும் த/கனி இதழ்கள் வராதா என ஏக்கம் மனதின் ஒரு ஓரத்தில் வந்து செல்கிறது !ம்ஹூம்..... "திகில் " ; "ஜூனியர் லயன் " ; "மினி லயன்" என்று அன்று தோல்வியை தழுவி இருக்கலாம் என்பதை விட வேகம் குறைந்திருக்கலாம் ,மேலும் தரமான இதழ்களை வெளி விட அன்று இயலவில்லை அப்போதைய விலையில் ,அப்போதைய தரத்தில்,அப்போதைய வடிவில் என்பதும் உண்மையான காரணங்களே என்பதையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் ,வேகம் குறைந்த கதைகளும் காரணமே !இப்போது தரமான தொடர்கள் ,பர பரப்புகள் என வர உள்ளதால் தங்களை சற்றே ஆசுவாச படுத்தி கொண்டு மீண்டும் முழு வேகத்தில் சீராக பயணிக்கலாமே !நமது புதிய பரிணாமம் மாற்றங்களை,வேகத்தை தாங்கி கொள்ள தயாராகி விட்டதென்றே தோன்றுகிறது தங்களது உர்ச்சாகத்திலும் ,நண்பர்களின் ஆதரவை பார்க்கும் போதும் ,மலைக்க வைக்கும் சித்திரங்களுடன் அதிரடியுடன் போட்டி போட்டு கொண்டு களமிறங்கும் நாயகர்களாலும் ,மேலும் அப்போது போல போட்டி இல்லையே தனிகாட்டு ராஜாவிற்கு !வர உள்ள ஆண்டு சென்ற ஆண்டை விட இனிக்கும் ,மலைக்கும் ஆண்டாக இருக்க போவது நிச்சயம் !

  ReplyDelete
 28. Dear Editor & Staff,

  Wishing you All a Happy and Prosperous New Year!

  My humble request is all & exclusive TEX!
  Overdose? no chance. It is like dream comes true for me

  PS:3000+ hits from Oman. Oh My god! all from me i am sure.
  Mr. Vijayan you have to reward me for this feat(TEX WILLER)

  Aldrin Ramesh
  From Oman

  ReplyDelete
 29. +1 for +6.

  Sir,
  please consider changing +6 to +12 because of the following reasons
  1. There is lot of comics in your comics stable which is enough for even 100 years
  2. We have time and energy to read 1 comics atleast in 1 weekend so effectively 4 comics per month
  3. We get a kick and enjoyment reading lion-muthu comics. i did not experience this with any other comics whether it is in english or tamil. Your experience and involvement is unmatched in the industry.
  4. It may not be that difficult for you to change it from +6 to +12 and it will not place any additional pressure on your infra or employees.
  5. I sincerely believe all the current subscribers will welcome it and sunscribe also to this.

  Organic Yanthiram.

  ReplyDelete
 30. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ....அருமையான புத்தாண்டுப்பதிவு ....ஏற்கனவே NBS என்னும் குதூகலமே ஆட்டிப்படைக்கிறது ....அப்படி இருக்க ,இன்று முதல் பதிவிலேயே +6 இதழ்களைப்பற்றி அறிவித்து புத்தாண்டின் முதல் உண்மையான சந்தோஷத்தை பரிசாக கொடுத்துவிட்டீர்கள் ,,,,,அநேக நண்பர்களின் தேர்வு tex willer ஆகத்தான் இருக்கும் ....என்னுடைய தேர்வும் tex willer தான் ....மேற்கொண்டு முடிவு நம் அன்பு ஆசிரியர் அவர்களின் கைகளில் ....

  ReplyDelete
 31. சார், முதலில் உங்களுக்கும் நம் அலுவலக பணியாளர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். ரெண்டு வருடம் முன்பு இப்படி ஒரு காமிக்ஸ் புத்தாண்டை நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டோம். ஆனால் நிஜமானது ஆண்டவனுக்கும் , வாசகர்களுக்கும் நன்றி.

  +6 இதழ்கள் ஒரு இனிய அதிர்ச்சியே. வாசகர் கூட்டம் அதிகரிக்க நிச்சயம் உதவும். எத்தனை கூட வேண்டுமானாலும் கொடுங்கள் என்று சொல்லும்போதே, மொழிபெயர்ப்பு மண்டைக்குள் குடைகிறது.

  கணினியில் வன்பொருள், மென்பொருள் மாதிரி , காமிக்ஸில் வன்பொருள் பிரிண்டர் என்றால் மென்பொருள் மொழிபெயர்ப்பு. வன்பொருள் எங்களிடம் இருக்கிறது என்ற காரணத்துக்காக கூடுதலாக மொழிபெயர்ப்பு சரி இல்லாமல் புத்தங்கள் வருவதை வாசகர்கள் விரும்ப மாட்டார்கள். கூடுதலாக +6 புத்தகங்களையும் தரமுடன் மொழிபெயர்க்க முடியுமென்றால் நீங்கள் கூறினால் நான் உங்களுடன் இருக்கிறேன்.

  இல்லையென்றால் ஏற்கனவே வெளியிட்ட கதையை மறு பதிப்பு செய்யலாம். திரும்பவும் மொழி பெர்யர்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

  எனது தேர்வு டெக்ஸ், மதியில்லா மந்திரி, சிக் பில் தான்.

  ReplyDelete
 32. Happy New year to everyone...Sir, Its a good idea on +6. My Choice is "TEX".

  ReplyDelete
 33. I am not interested with Martin and Robin! It is possible to bring "வன ரேஞ்சுர் ஜோ" into the Rs.50 edition?

  ReplyDelete
  Replies
  1. I am also not interested with Martin and Robin! It is possible to bring "வன ரேஞ்சுர் ஜோ" into the Rs.50 edition?
   AND CAPTAIN PRINCE TOO.

   Delete
  2. Both series have no new tales !

   Delete
 34. எடிட்டர் சார்.
  இரும்புக்கை எத்தன் எல்லா பாகங்களும் 2013 க்குள்ளாகவாவது வருமா சார்?
  பாதி கதையுடன் பல ஆண்டுகள் காத்துக்கொண்டிருக்கிறேன்.
  இது பற்றிய விவரத்தை நண்பர்களாவது தெரிவியுங்களேன் ப்ளீஸ்

  ReplyDelete
  Replies
  1. இருபுக்கை எத்தன அனைத்து பாகம்களும் இந்த வருடம் வருகிறது! அசிரியர் இரண்டு பதிவுகளுக்கு முன் கூறியுள்ளார் !!

   Delete
  2. // செமத்தியாகப் பெற்றிட்டு முன்னணியில் இருப்பது கேப்டன் டைகரின் இரும்புக்கை எத்தனின் வண்ண reprint -க்கான கோரிக்கையே ! என்னை நேரில் சந்தித்த நண்பர்களின் பெரும்பான்மையினரும் சரி ; கடிதம் மூலம் சிந்தனைகளைப் பகிர்ந்திடும் அன்பர்களின் நிறையவர்களும் இதனையே வழி மொழிந்துள்ளனர் ! லக்கி லூக்கின் "புரட்சித் தீ" ; "பயங்கரப் பொடியன் " போன்ற கதைகளைக் கோரி ஓரளவிற்குக் குரல்களும், கேப்டன் பிரின்சின் ஹிட்ஸ்களை வண்ணத்தில் மறுபதிப்பு செய்திட சன்னமாய்க் கொஞ்சம் குரல்களும் ஒலித்துள்ளன ! எனினும், பெரியதொரு எதிர்ப்பின்றித் தேர்வாவது கேப்டன் டைகரே ! So மே மாதம் இந்த வண்ண மறுபதிப்பு நமது காமிக்ஸ் க்ளாசிக்சில் வெளி வந்திடும் ! அதே மே மாதமே, இது வரை வெளியாகாத இதன் இறுதி 2 பாகங்களும் நமது முத்து காமிக்ஸில் ரூ.100 விலையில் வந்திடும் ! இந்தக் கோடை - இந்த அழுக்கு சிப்பாயின் ராஜ்யமே //

   Delete
  3. THANKS PARANI FROM BANGALOE & TIRUPPUR BLUE BERRY (A) NAGARAJAN
   AND HAPPY NEW YEAR TO ALL !!!

   Delete
 35. Had left my new year wishes at the fag end of the last entry. So here we go again:

  Happy New Year 2013 to the Editor, to the publication team and all our friends in this forum.

  Wish you all the best of health, prosperity and success!

  ReplyDelete
 36. சார், என் சாய்ஸ் இவைதான். முடியுமா என்று பாருங்கள்! மர்ம மனிதன் மார்டின், முகமூடி வேதாளர், டெக்ஸ் வில்லர், இரண்டாம் உலக யுத்த கதைகள்(commando)

  ReplyDelete
 37. Sir,
  IS this a Probable schedule?
  SL no Description Pages Format Size Rate Frequency Total issues/yr

  1 Lion Comics 140 color 12’ X 10’ ₹ 100 Bi-Monthly 6
  2 Muthu Comics 140 color 12’X 10’ ₹ 100 Bi-Monthly 6
  3 Comics Classics 300 B&W 6’X 5’ ₹ 50 Bi-Monthly 6
  4 Comics Classics 140 Color 12’X 10’ ₹ 100 Yearly 1
  4 Lion Digest 300 B&W 6’X 5’ ₹ 50 Bi-Monthly 6
  5 Mini Lion 64 Color 12’X 10’ ₹ 50 Bi-Monthly
  6 Other Specials ?

  Pls clarify.
  (Can 64 pg issues be called Mini Lion?)
  (Can the new +6 issues called Lion digest be a separate line of comics from the print house?)

  Sl no Month Issue Format Rate Pages Status Quo Remarks
  1 Jan NBS Special 400 400 Confirmed Ensemble cast
  2 Jan Mini Lion Color 50 64 Confirmed Lucky Luke
  3 Jan Comics Classics B&W 50 300 Confirmed Detective Special
  4 Jan Comics Classics B&W 50 300 Confirmed Mayavi Special
  5 Feb Lion Digest B&W 50 300 Confirmed TEX
  6 Feb Comics Classics B&W 50 300 Confirmed Johnny Nero Special

  Pls continue this schedule. It can change i understand, but a probable schedule will do to understand.


  Ps: I’ve promised my wife to quit smoking to accommodate comics’ expenses.

  Thanks,
  Vijay

  ReplyDelete
  Replies
  1. காமிக்ஸிற்காக புகைப் பழக்கத்தை விட்டொழித்த உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! பெருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே!

   எனக்கு மனதில் எழும் சில (குறும்பு)சந்தேகங்களுக்கு நீங்கள் விரும்பினால் பதிலளிக்கலாம்:
   1. காமிக் கானுக்கு சென்றதைப்போல சென்னை புத்தகக் கண்காட்சிக்கு மைசூரிலிருந்து காரில் செல்லும் எண்ணமுள்ளதா?
   2. புகைப் பழக்கத்தை இதற்கு முன் எத்தனை முறை நிறுத்தியிருக்கிறீர்கள்?
   3. உங்கள் வருமானம் உயரும்போது மீண்டும் சிகரெட் கையிலெடுக்கப்படுமா?

   Delete
  2. 1. Just joined a new job, so probably difficult to go to the exbn.
   2&3. Hope and wish this would be the last time

   Happy new year..

   (when will our edi release the proper schedule?)

   Delete
  3. ஈரோடு விஜய்யின் குறும்பு கேள்விகளில் நியாயம் இருக்கிறது நண்பரே. இதுவே கடைசியாக இருந்தால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நல்லது. நல்ல பழக்கத்தின் மூலம் ஒரு தீய பழக்கத்தை ஒழிக்க வாழ்த்துக்கள். :D

   Delete
  4. Ps: I’ve promised my wife to quit smoking to accommodate comics’ expenses. :- Super Vijay!! keep up the promise!!

   Delete
 38. Happy New year to ALL...

  ReplyDelete
 39. +6 B&W கதைகளுக்கு எனது தேர்வு
  1. டெக்ஸ் தான் பெஸ்ட் so +3 நவஜோகளின் தலைவருக்கே
  2. வனரேஞ்சர் ஜோ வனங்களின் காவலனால் வனங்களூடே பயணித்து வனங்களை தரிசிக்கலாம் என்பதால்
  3. மர்மமனிதன் மார்டின் வரலாற்று புதிர்களையும் நிகழ்காலத்தின் நிகழ்வுகளோடு இணைத்து வியக்க வைப்பதால்
  4. மாடஸ்டி-வில்லி சொல்லி அடிக்கும் கில்லி இக்கட்டிலும் பதற்றமில்லாமல் வெல்லும் மனஉரத்துகாக
  5.ராபின் சிக்கல்களை சீரிய சிந்தனையினால் கண்டறிவதால்
  6.வேதாளர் நாங்கள் பார்காத கானக அழகையும் வீரத்தையும் புகட்டுவதால்

  ReplyDelete
  Replies
  1. மாண்ட்ரேக், திசையில்லா யாத்திரை கதைவரிசை, ஜெஸ்லாங், யுத்தகதைகள், ஜெரோம், டிடெக்டிவ் டிரேசியின் கனவேகொல்லாதே என்று ஒரு கதை வந்ததே inception படத்தின் கதை போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட கதை.விங்கமேண்டர் ஜார்ஜ்

   Delete
 40. டெக்ஸ் வில்லர் டெக்ஸ் வில்லர் டெக்ஸ் வில்லர் டெக்ஸ் வில்லர் டெக்ஸ் வில்லர் டெக்ஸ் வில்லர்

  ReplyDelete
 41. New year 2013 wishes to you all.

  Dear Editor,

  New Year 2013 wishes. Exciting announcement (+6) made the grand start for 2013. Obviously Tex Willer will be the first choice from most of us. Would like to see Chick-Bill, Bruno Brazil, Captain Prince and Modesty if possible

  ReplyDelete
  Replies
  1. Periyar : Many thanks & greetings to you as well ! Chick Bill's for the color editions....and Captain Prince is done with. Modesty Blaise is a possibility.

   Delete
 42. hello sir my NBS done good sir yes cute baby born for me.

  ReplyDelete
 43. ஹலோ சார், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  புது இதழ்களின் நடுவே, சில பழைய காமிக்ஸ்களை தேர்வு செய்து முன் காலத்தில் வெளியட்ட மாதிரி (உதரணத்துக்கு 1987 தீபாவளி மலர்) அப்படியே அச்சாக இப்பொழுது மறு வெளீட்டு செய்தால் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.
  மேலும், 'filler'களுக்கு திகில், ஜூனியர், மினி லயன் கதைகளை உபயோகித்தால்நன்றாக இருக்குமே?
  i still remember a story from the 80s in thigil- where the hero goes to venice to sort out an almost paranormal happening, that has to also do with someone who dies. cant remember the hero or the title. Losing the book was a tragedy for me.

  ReplyDelete
 44. கூடுதலான +6 ஒரு நல்ல முயற்சி. 300 பக்கங்கள் கெண்ட புத்தகம் ரூபாய் 50 என்பதைவிட, 25 ரூபாய்க்கு 150+ பக்கங்கள்கெண்ட புத்தகம்மென்றால், இன்னும் நிறைய புதிய வாசகர்களை கொண்டுவரக்கூடும். திருநெல்வேலியில் நமது நண்பர்கள் உதவியால் இப்பொழுது காமிக்ஸ் விற்பனை சிறப்பாக நடகின்றது. இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. குறைந்த விலையில் வந்தால் (ரூபாய் 25), அதிக வாசர்களை சென்றடையும். மேலும், பழைய முகவர்களுக்கு, இது உதவியாக இருக்கும். டெக்ஸ் வில்லர், ராபின், மார்டின் மற்றும் கருப்பு வெள்ளைக்கா புனையப்பட்ட கதைகளுக்கு ஒதுக்குங்கள். வழக்கத்தில் உள்ள கதைகளை(கருப்பு/வெள்ளை), இன்றைய நாட்களுக்கு ஒத்துவரக்கூடிய நல்ல கதைகளை கொண்டுவாருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. Ramesh : விற்பனை எண்ணிக்கையினைப் பொருத்தே விலையும், பக்கங்களும் நிர்ணயம் செய்திடல் சாத்தியமாகும். அதற்கு சற்றே அவகாசம் அவசியத் தேவை.....! சற்றே தெளிவான வடிவம் என்னுள் தயாரான பின் தெரிவிக்கிறேனே !

   Delete
 45. happy nbs year 2013 for all comic lovers! count down starts! 9 days to go!

  ReplyDelete
 46. ஆசிரியர் அவர்களே,

  என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் Lion Staffs

  +6 B/W - நீங்கல் எந்த கதையை தேர்வு செய்தாலும் அது நன்றாகவே இருக்கும். என்னுடைய choice டெக்ஸ் வில்லர் கதைகளுக்கே

  ReplyDelete
 47. Sir,

  Great news... My preference is given below.

  டெக்ஸ் வில்லர் - 3,
  டயபாலிக் - 3;
  மர்ம மனிதன் மார்டின் - 1
  CID ராபின் - 2

  Humble request:
  6 is not enough.. Please make it as 9 or 12 books :)

  If possible please increase number of re-prints scheduled in 2013 also.
  We like to read those golden issues printed 80's again in 2013.

  Thanks.
  Mahesh


  ReplyDelete
 48. For +6 do consider this
  Jess Long
  Mandrake
  Chinaman
  Johnny hazard [George] - If there is any unpublished stories of him
  Jerome
  War based stories  ReplyDelete
 49. Happy new year to our lion team and friends...
  my choices for another 6 issues
  1.Lucky -2
  2.Tex-2
  3.Dayabolic-2

  ReplyDelete
 50. டியர் எடிட்டர் சார்.
  டெக்ஸ் வில்லர் கதைகள் மட்டும் 600 க்கு மேல் இருக்கும்போது ,choose செய்ய நிறைய நல்ல கதைகள் மலை போல அதில் குவிந்து கிடக்கும்போது ,வேறு
  நாயகர்களின் கதைகளை நாடுவது உங்களுக்கே நியாயமாக படுகிறதா?
  மர்ம மனிதன் மார்ட்டின் கதைகள் நமக்கு தேவைதானா?சுவாரஸ்யமில்லாத வரட்டுத்தனமான வரலாற்று விவரங்கள்,மாந்த்ரீகம் கலந்த விஞ்ஞானம்,இறுதியில் கதை முடிந்ததா?இல்லையா?என்றே புரிந்துகொள்ள முடியாத "குழப்ப க்ளைமாக்ஸ்"என்று மார்ட்டின் கதைகள் பெரும்பாலும் ஒரு தினுசான ரகமாக இருக்கிறது.நாற்பது வயதை கடந்த எனக்கே அவரது கதைகள் புரிவதில்லை.இன்றைய இளம்வயது ,மற்றும் புதிய வாசகர்கள் அவரை ஏற்பார்களா என்பது சர்ச்சைக்குரியது.
  புதிய வாசகர்களை கவர டெக்ஸ் வில்லரால் மட்டுமே முடியும் என்பது அடியேனின் தாழ்மையான அபிப்ராயம்.
  இரவு கழுகார் நமது இதழ்களில் தலை காட்டியே பல வருடங்கள் ஆகிவிட்டன.கடைசியாக கௌ-பாய் ஸ்பெஷலில் (பனி புயல் படலம்)வந்துவிட்டு போனவர் இன்னும் திரும்பியே வரவில்லை.(ஒருவேளை,நல்ல பிசாசிற்கு பயந்து பதுங்கி கொண்டிருக்கிறாரோ?ஹிஹி).

  ReplyDelete
  Replies
  1. ஆஹா வந்துட்டாரையா வந்துட்டாரையா ;-)

   ஹி ஹி ஹி
   .

   Delete
  2. டெக்ஸ் வில்லர் கதைகள் மட்டும் 600 க்கு மேல் இருக்கும்போது ,choose செய்ய நிறைய நல்ல கதைகள் மலை போல அதில் குவிந்து கிடக்கும்போது ,வேறு
   நாயகர்களின் கதைகளை நாடுவது உங்களுக்கே நியாயமாக படுகிறதா?
   புதிய வாசகர்களை கவர டெக்ஸ் வில்லரால் மட்டுமே முடியும் என்பது அடியேனின் தாழ்மையான அபிப்ராயம்.

   Delete
  3. அய்யா புதியவரே.இதெல்லாம் உங்கள் கருத்தா?மேலே உள்ள saint satan -என்ற பிரஹ்ருதியின் கருத்தை களவாடலாமா?

   Delete
  4. // டெக்ஸ் வில்லர் கதைகள் மட்டும் 600 க்கு மேல் இருக்கும்போது ,choose செய்ய நிறைய நல்ல கதைகள் மலை போல அதில் குவிந்து கிடக்கும்போது ,வேறு
   நாயகர்களின் கதைகளை நாடுவது உங்களுக்கே நியாயமாக படுகிறதா?
   புதிய வாசகர்களை கவர டெக்ஸ் வில்லரால் மட்டுமே முடியும் என்பது அடியேனின் தாழ்மையான அபிப்ராயம். //

   இதை நான் வழிமொழிகிறேன் :) வெல்கம் திரு. புனித சாத்தான் அவர்களே.

   Delete
  5. //மர்ம மனிதன் மார்ட்டின் கதைகள் நமக்கு தேவைதானா?சுவாரஸ்யமில்லாத வரட்டுத்தனமான வரலாற்று விவரங்கள்//
   அதே !அதே !!
   சிபியும் வந்துட்தாரையா வந்துட்டாரு !

   Delete
  6. Why this kolaveri on Martin and Robin guys? Tex is ok for 2 to 3 issues out of six. Rest of the issues we can see the different heros like Martin, Robin, Danger Diabolic. yellame tex yendral athu salithu vidum

   Delete
  7. saint satan : கவலை வேண்டாம்....2013-ன் டாப் நாயகர்கள் பட்டியலில் இரவுக் கழுகார் உள்ளார் !

   Delete
  8. ''மர்ம மனிதர் மார்ட்டின் '' பற்றிய நண்பர் புனித சாத்தான் அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்......உண்மையில் இதுவரை எனக்கு ஒரு கதை கூட புரிந்ததில்லை......

   Delete
 51. வாவ் சூப்பர் விஜயன் சார்
  புத்தாண்டு மிக இனிமையாக பிறந்திருக்கிறது இதனை நிருபிக்கிறது தங்களின் அதிரடி அறிவிப்பு

  ஆறு அல்ல பன்னிரண்டு என்றாலும் எங்களுக்கு ஓகே தான் :))

  இன்னமும் எட்டு நாட்கள் எஞ்சி யுள்ளன அதன் பின் இதே மாலை வேளையில் எங்கள் கைகளில் தவழ்ந்திடும் என நினைக்கும் போதே சிலிர்க்கிறது
  மிக்க நன்றி சார் :))
  .

  ReplyDelete
 52. +6 அல்லது +60 எவ்வளவு புத்தகம் வந்தாலும் சரி.வாங்க நாங்க ரெடி

  ReplyDelete
 53. டெக்ஸ் வில்லர் கதைகள் மட்டும் வெளியிட்டால் புதிய வாசகர்கள் வரமாட்டார்கள்,
  நமது பதிபகத்தின் பலமே வித விதமான கதை கலங்களே, நமது பதிப்பகம் கௌ பாய் காமிக்ஸ் ஆகாமலிருக்க அணைத்து கருப்பு வெள்ளை ஹீரோ வெளியிடுங்கள்.

  ReplyDelete
 54. அ​ணைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்- எனது ஓட்டு தரமான க​தைகளுக்கும் அழகான சித்திரங்களுக்கும்.. பின்வரும் க​தை வரி​சை
  அ​​னைத்​தையும் ​வெளியிடுமாறு ​கேட்டுக்​கொள்கி​றேன்-
  ​டெக்ஸ், டயபாலிக், மார்ட்டின், ராபின், ​ஜெ​ரோம், ​ஜேம்ஸ் பாண்ட், முத​லை ப​டை, சுஸ்கி விஸ்கி, ​​ஜெஸ்லாங்.

  சார் ​டெக்ஸின் பூத​வேட்​​டை ​வெளியிட மறக்க ​வேண்டாம்.

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. ஜான் வில்பர்​னே-டெக்ஸாஸ் ( WEST ) : உங்களுக்கு என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

   Delete
  2. புத்தாண்டு வாழ்த்துக்கள்!

   Delete
 55. Saint Satan:
  மர்ம மனிதன் மார்ட்டின் கதைகள் நமக்கு தேவைதானா?சுவாரஸ்யமில்லாத வரட்டுத்தனமான வரலாற்று விவரங்கள்,மாந்த்ரீகம் கலந்த விஞ்ஞானம்,இறுதியில் கதை முடிந்ததா?இல்லையா?என்றே புரிந்துகொள்ள முடியாத "குழப்ப க்ளைமாக்ஸ்"என்று மார்ட்டின் கதைகள் பெரும்பாலும் ஒரு தினுசான ரகமாக இருக்கிறது.நாற்பது வயதை கடந்த எனக்கே அவரது கதைகள் புரிவதில்லை.

  >> உண்மை! ராபின் மற்றும் மார்டின் கதைகள் வேண்டாம்!! அப்படியே வெளி இட்டாலும் 50 ரூபாய் பதிப்பில் தனியாக வெளியீட வேண்டாம் !! வேண்டாம்! தயவு செய்து வேண்டாம்!! உரக்க மீண்டும் ஒருமுறை வேண்டாம்!!

  ReplyDelete
 56. Hi sir its really good to hear that we are going to have 6 more books in this year,as far as I am concerned tex willer stories are the best one to consider for those. Also you could try to reprint tex's super hit stories like you reprinted recently one of the classic story Thalai vanki kurangu. Please consideR to reprint "Pavala silai marmam" ,"Saithan samrajyam",etc....I believe 50 rs book should be having at least 360 pages, so we can easily have 3 stories in one book 2 new one old, probably it may work out. It's my opinion only. Totally 24 books in a yeaR pretty awesome year ahead of us right :):):):):):):):) love you my lion comics :)

  ReplyDelete
 57. ஆசிரியருக்கும், நண்பர்களுக்கும் தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)

  ReplyDelete
  Replies
  1. இது நடைமுறைப் படுத்தப்பட்டால், 12*100 ரூபாய் இதழ்கள் + 12*50 ரூபாய் இதழ்கள்! அப்படித்தானே சார்?! 15 நாட்களுக்கு ஒரு இதழ் என பிரித்து அனுப்பிடாமல், ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு வசதிப் படும் போது இரண்டு இதழ்களையும் தயாரித்து விட்டு, பிறகு இரண்டையும் ஒன்றாக அனுப்பி வைத்தால் குரியர் செலவுகள் குறையும் என்பது என்னையும் சேர்த்து மேலும் சில நண்பர்களின் அபிப்ராயம்! :)

   Delete
  2. Karthik Somalinga : நன்றிகளும், வாழ்த்துக்களும் !

   இயன்ற போதெல்லாம் இதழ்களை சேர்த்து அனுப்பிட நிச்சயம் முயற்சிப்போம்.கூரியர் செலவுகளை மட்டுப்படுத்திடுவது பிரதான objective !

   P.S: பையனுக்கு LKG சீட் வாங்கியாச்சா ?

   Delete
  3. நினைவில் நிறுத்தி விசாரித்ததிற்கு நன்றிகள் சார்! :)

   ஒரு வழியா வாங்கியாச்சு.... literally!!! :) :) :) சென்னை & CBSE கனவுகள்தான் நிறைவேறவில்லை. அதே போல, பெங்களூரில் LKG சீட்டுக்கு வயது வரம்பு அதிகம் என்பதால் நர்சரி சீட் மட்டுமே கிடைத்தது!

   பெங்களூரில் அடிக்கடி நிகழும் ஸ்கூல் வேன் விபத்துகள் & இதர சகிக்க முடியாத செய்திகளை பார்த்து பயந்ததில், வீட்டுக்கு வெகு அருகாமையில் இருக்கும் ICSE பள்ளியிலேயே சேர்த்து விட்டோம்!

   Delete
 58. ஆசிரியர் மற்றும் காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் , காமிக்ஸ் விருந்து மழை நடந்து , எதனை முதலில் படிப்பது என்று முடிவெடுக்க முடியாமல் திணற வைக்க , ஆசிரியருக்கு அனைத்து சக்தியையும் அருளுமாறு ஆண்டவனிடம் வேண்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. The Lion King : உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!! அங்க தேசத்து அரசன் சென்ற பதிவிலேயே வாழ்த்து சொல்லிவிட்டதால் அவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வழ்த்துக்கள் !!!

   Delete
  2. @ மரமண்டை : நன்றி நண்பரே..

   Delete
  3. இடைச்செருகலாக வரும் புத்தகங்களை நான் மகிழ்வுடன் வரவேற்கிறேன். நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தில் வருடம் 24 புத்தகங்கள் கிடைத்தால் மிக அருமையாக இருக்கும் என எழுதியிருந்தேன். அது இந்த வருடம் முதலே நடந்தால் எனக்கு டபுள் ஓகே.

   இரவுக்கழுகார், ஜெஸ்லாங், ப்ருனோ பிரேசில் , வேதாளர், மடஸ்தி, ரிப் கெர்பி .... இவ்வாறு வாய்ப்பு கொடுக்க முடிந்தால் மிக நன்று..

   Delete
  4. நன்றிகள் சிம்பா !

   Delete
 59. +6ல் அனைத்துமே டெக்ஸ் கதைகள் என்றால் நானும் மிக்க மகிழ்வேன்.

  ஒருவேளை, 50 ரூபாய்க்கு உண்டான அளவுக்கு டெக்ஸ் கதையின் நீளம் போதாதபோது, கூடவே ஒரு டயபாலிக் அல்லது ராபினைக் களமிறக்கலாம். (கவனிக்கவும் : இங்கே நான் மார்ட்டினுக்கு ஆதரவு தரவில்லை!)

  அதாவது,

  +6ன் அனைத்து இதழ்களிலும் டெக்ஸ் வில்லருக்கு நிரந்தர இடமும்; மற்றவர்களுக்கு டெக்ஸ் கதையுடன் அவ்வப்போது இணைப்பாகவும் வாய்ப்பளிப்பது குழப்பத்திற்கு ஒரு தீர்வு தரக்கூடும்.

  ReplyDelete
 60. மர்ம மனிதன் மார்ட்டின் ஐ மறுப்பது ஏன் வாசகர்களே !
  வண்ண மறுபதிப்பும், முழு வண்ண முதல் பதிப்பும் வேண்டும் என்பதாலா !!!

  பழைய பதிவேட்டிலிருந்து ( நினைவுகளுக்கு வயது நாற்பது )

  3.மர்ம மனிதன் மார்ட்டின் :
  உண்பது உறங்குவது மட்டும் வாழ்க்கையில்லை. அதற்கும் மேலே அறிவை விசாலப்படுத்தவும், மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்ட சக்திகள் இன்னும் இருக்கு, அதற்கு முன்னால் நாம் சாதராணமானவர்கள் மற்றும் பெரிய அப்பா-டக்கர் அல்ல என்பதை நமக்கு உணர்த்தவும் இன்னும் கல்யாணம் கூட செய்து கொள்ளாமல் நமக்காக பாடுபடும் ஒரு நல்ல மனிதர்!

  4.சரித்திரத்தை சாகடிப்போம்:
  கடைசியில் அந்த அலெக்ஸாண்ட்ரியன் லைப்ரரி வெடித்து சிதறியபோது என் நெஞ்சம் பல நிமிடம் பதறிதுடித்து விட்டது. இன்றும் இங்கு பல ஆயிரம் புனிதர்களையும், நம் பண்பாடுகளையும்,கலாச்சாரங்களையும்,உறவின் மதிப்பு மரியாதைகளையும் சீர்குலைக்கும் இங்குள்ள அங்கி கும்பலுக்குமுன் அது சாதாரணமானது என்ற உண்மையை உணரவைத்த கதை!

  2.பேழையில் ஒரு வாள், காலத்திற்கு ஒரு பாலம்:
  கதையை படித்து முடித்தவுடன், கற்பனைகள் எல்லாம் உண்மையெனவும், உண்மைகள் யாவும் கற்பனைகள் எனவும் கதையை படித்த பலரின் மண்டைக்குள் திணித்த அருமையான கதை!

  3. X111, மின்னும் மரணம், வனரேஞ்சர் ஜோ, மர்ம மனிதன்
  மார்ட்டின், டைகர் கதைகள் முழு வண்ண மறுபதிப்பு, 150 பக்கங்களில் மட்டும் !

  நன்றி! மலரும் நினைவுகள் !!!

  ReplyDelete
 61. ஆசிரியர் விஜயன் : தற்போதைய புதிய அளவில் வரும் வண்ண வெளியீடுகள் மற்றும் கருப்பு வெள்ளை இதழ்கள் ஆகியவை 150 பக்கங்களுக்கு மிகாமல் இருப்பதே மிகவும் அழகானது ! கிட்டத்தட்ட தற்போதைய கணக்கின்படி 25 இதழ்கள் ஒரு வருடத்திற்கு என வரும்போது overdose என்கின்ற வாதத்திற்கும், கதை படித்தவுடன் முடிந்து விட்டது என்கின்ற பேச்சிற்கும் சற்றும் இடம் இருப்பதாக தெரியவில்லை! எனவே எல்லாவகையிலும் சிறந்ததே எங்கும் உயர்ந்ததாக கருதப்படும்! அதுவே நம்மையும், நம் சாதனையையும் பெருமைக்கொள்ள செய்யும்! எங்கும் உள்ளதைப்போல் உலகத்தோடு ஒத்துப்போவோம், வரும் சரித்திரம் நம்மையும் ஒருநாள் வாழ்த்த தொடங்கும்!

  ReplyDelete
 62. Dear editor
  New books are happy news for this New Year but first I want to tell something. don’t forgot our old comics is sold by hanging in shops now its not possible we have to purchase directly but u never improve infrastructure for this…….. First understand every one cant yearly subscribed (every one cant pay one year subscription for comics) most of our readers buy single books even when it is rs 100 for month is not much more cost but when we need to pay 1200 for 12 month is huge amount. Please make easy to buy a single book this customer is 90% in our comic’s family but u never do anything for them and talking about Rs-50 is much more cost to buy.
  1. make sure everyone can buy our loin comics easily every month (cost is not a matter)
  2. ebay is not working for past one week make it alive and upload to buy our old/new comics, make some other option to sell our books and make easy for many transfer for books
  3. think anything new to reach our comics to everyone then u think about new books because for me each and every book is a treasure when we publish a book it will sold out in few months do something for that

  hi friends don’t hate me for this topic I also wish for new books but I wish every one can easily buy our comic book

  ReplyDelete
  Replies
  1. Giri : சில சிந்தனைகளை நடைமுறைப்படுத்திப் பார்த்திடும் போதே அவற்றில் உள்ள சிக்கல்கள் பற்றித் தெரிய வாய்ப்புள்ளது.

   மாதந்தோறும் கடைகளில் இதழ்களை விற்பனைக்கு அனுப்பிடுவது சுலபமானதொரு option ஆக இருந்திடும் பட்சத்தில், தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல் கூரியர்களில் பிரதிகளை அனுப்பிட நாங்கள் எதற்காக முயற்சிக்கப் போகிறோம் ?

   27 ஆண்டுகளாய் முயற்சித்து ; வெறுத்து ; சலித்து ; சில லட்சங்களை வராக் கடன்களில் இழந்த பின்னரே இந்த நேரடி விற்பனைக்கு வந்துள்ளோம். இன்றைக்கும் முன்பணம் அனுப்பி இதழ்களை வாங்கிடும் சொற்ப ஏஜெண்டுகளுக்கு நிச்சயம் முன்னுரிமை தருகிறோம் ; ஆனால் 'முன்பணம் தரப் போவதில்லை ; விற்பனை ஆனால், அதன் பின்னே பார்ப்போம் ' என்ற ரீதியினிலிருக்கும் பெரும்பான்மையான ஏஜெண்டுகளுக்கு என்ன பதில் சொல்லிட இயலும் ?

   முன்னணிப் பத்திரிகைகளுக்குத் தவிர வேறு எல்லா பதிப்பகங்களுக்கும் இந்த நிலை பொதுவானதே ! ஒவ்வொருவரும் வசூலுக்கு ஊர் ஊராய்..நடையாய் நடப்பது வெளியே புலப்படா சங்கதி.

   செருப்புத் தேயும் இந்த வசூல் வேட்டை நடத்தி ஓய்ந்து போய்த் தான் வந்துள்ளோம். மீண்டும் அதுனுள் இறங்கிடவோ ; இழந்திடவோ நம்மிடம் ஆற்றலுமில்லை ; பணமுமில்லை என்பதே நிஜம். 27 ஆண்டுகள் அந்த வட்டத்தில் சிக்கி உழன்றது இந்த ஆயுளுக்குப் போதும் !

   நம் தற்சமய இதழ்களின் வெற்றியினைத் தொடர்ந்து, சிறுகச் சிறுக விற்பனையாளர்கள் நம்மிடம் திரும்ப வருவது நிகழ்கின்றது. அது முழுமை அடையும் வரை தற்சமய கூரியர் சுமை தவிர்க்க இயலா சங்கதியே !

   Delete
  2. //நம் தற்சமய இதழ்களின் வெற்றியினைத் தொடர்ந்து, சிறுகச் சிறுக விற்பனையாளர்கள் நம்மிடம் திரும்ப வருவது நிகழ்கின்றது. அது முழுமை அடையும் வரை தற்சமய கூரியர் சுமை தவிர்க்க இயலா சங்கதியே !//
   இது ஒன்றே மாற்று வழி ! நமது புத்தகங்களின் வெற்றி வசந்த காலத்தை மீட்டெடுக்கும் நிச்சயமாய் !விறுவிறுப்பான கதைகளை அதிகரியுங்கள் !அதுவே சிறந்த தேர்வு !

   Delete
  3. Dear Sir
   //27 ஆண்டுகளாய் முயற்சித்து ; வெறுத்து ; சலித்து ; சில லட்சங்களை வராக் கடன்களில் இழந்த பின்னரே இந்த நேரடி விற்பனைக்கு வந்துள்ளோம். இன்றைக்கும் முன்பணம் அனுப்பி இதழ்களை வாங்கிடும் சொற்ப ஏஜெண்டுகளுக்கு நிச்சயம் முன்னுரிமை தருகிறோம் ; ஆனால் 'முன்பணம் தரப் போவதில்லை ; விற்பனை ஆனால், அதன் பின்னே பார்ப்போம் ' என்ற ரீதியினிலிருக்கும் பெரும்பான்மையான ஏஜெண்டுகளுக்கு என்ன பதில் சொல்லிட இயலும் ?

   செருப்புத் தேயும் இந்த வசூல் வேட்டை நடத்தி ஓய்ந்து போய்த் தான் வந்துள்ளோம். மீண்டும் அதுனுள் இறங்கிடவோ ; இழந்திடவோ நம்மிடம் ஆற்றலுமில்லை ; பணமுமில்லை என்பதே நிஜம். 27 ஆண்டுகள் அந்த வட்டத்தில் சிக்கி உழன்றது இந்த ஆயுளுக்குப் போதும் ! //
   I agree with u, i am not asking to sell books from book stall
   i try to explain to make easy to buy books in direct selling
   i am not talk about book cost or courier cost
   i asking you to make essay for every single book to purchase
   eBay is not working..... then how can we purchase book
   ///ரூ.50 விலையினில் எனும் போது, இளம் வாசகர்களுக்கும் வாங்கிட சற்றே சிரமம் குறையும் என்று தோன்றியது/// please understand RS 10 book or RS 50book or RS 100 book money is not a matter i wish every one can easily buy every single book rs-100 or RS-150 is essay to spend money for every month but
   don't think every one can order one year subscription
   make sure every one buying online or sending money order or sending internet money transfer what ever it may for direct purchase make it essay not only eBay make some other option to sell our book and make essay to every one can buy our books

   Delete
  4. நண்பர் கிரி அவர்களே, உங்கள் வாதம் ஞாயாமான ஒன்றே. ஆனால் உங்களுக்கு ஒரு சின்ன செய்தி, நமது காமிக்ஸ் நிறுவனத்தில் என்றுமே ஒருவருட சந்தாவை ஒரே தவணையில் அனுப்பிட கூறுவதில்லை. தற்பொழுது ஆன்லைன் மூலமாக முன்னூறு ரூபாய் அனுப்பினால் கூட ஏற்றுக்கொள்கிறார்கள். சில நேரங்களில் , மும்பே பரீட்சியமான நபர் எனில், பணம் இல்லாமலும் கூட புத்தகங்கள் அனுப்பபடுவதுண்டு.

   இங்கு பணம் ஒரு விசயமே அல்ல. தேவையான பிரதிகளை எந்நேரம் வேண்டுமானாலும் அலுவலகத்துக்கு அழைத்து பெற்றுக்கொள்ளலாம். இருந்தாலும் சிறுக சிறுக முகவர்கள் மூலமாகவும் விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

   Delete
  5. சிம்பா : என்னை பற்றி தங்களுக்கு தெரியாது என்பதால் என்னை பற்றிய,
   என் எண்ணங்களை பற்றிய ஒரு பதிவு தங்களின் பார்வைக்கு! ( வாசக நண்பன் என்ற முறையில் )

   ஒரு வாசகனாய் என் உரிமை !!!

   மொத்தமாக சந்தா செலுத்தி என்னால் வாங்க முடியும் என்றால் நான் சந்தா கட்டி வாங்கிக்கொள்வேன்! அப்படி சந்தா கட்ட முடியாவிட்டால் என்னால் வாங்க முடியவில்லை என்று கூறுவேன் ! ஆனால் இப்படி ஒரு payment சிஸ்டம் இருந்தால் அடுத்தவரால் வாங்க முடியாது என்று கூறி அதை இங்கு பதிவிட எனக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை. அதுபோல் ஆசிரியரின் முடிவை தவறாக பேச எனக்கு எந்த உரிமையும் இல்லை. என்னால் வாங்க முடிந்தால், எனக்கு பிடித்திருந்தால் நான் வாங்குவேன். ஏனெனில் இது அவருடைய உழைப்பு, அவருடைய முதலீடு, அவருடைய தொழில், அதனால் அவரை விட single வாசகனாகிய எனக்கு என்ன உரிமை வந்துவிடும்! அதுபோல் உரிமை இருப்பதாக மாயை தோன்றினால் வேறு ஏதாவது இது போன்ற உரிமைக்குரல் எழுப்பும் இடமோ, வாங்கும் பொருளோ, வியாபார ஸ்தலமோ எனக்கு தெரிந்து அதை இங்கு நான் தெரிவித்திருக்க வேண்டும் ! அடுத்தவருக்கு சிரமம் என்று ஆசிரியரை துன்புறுத்த மாட்டேன். ஏனெனில் நான் ஒரு வாசகன் மட்டுமே அதை தாண்டிய எந்த உரிமையும் எனக்கு இல்லை. இப்படித்தான் ஆசிரியர் செய்யவேண்டும் என்று கட்டளை இட எனக்கு என்ன உரிமை இருக்கிறது !!!

   Delete
  6. நண்பரே நீங்க எழுதியது நான்கு முறை படித்து பார்த்து விட்டேன். சத்தியமா ஒன்னும் புரியலை...:(

   Delete
  7. /நண்பர் கிரி அவர்களே, உங்கள் வாதம் ஞாயாமான ஒன்றே. ஆனால்உங்களுக்கு ஒரு சின்ன செய்தி/... உங்களின் இந்த பதிவின் தொடர்ச்சியாக மட்டுமே என் பதிவை இணைத்துப் பார்க்கவும் அல்லது படிக்கவும் !!! குழப்பமென்றால் மீண்டும் ஒருமுறை தெளிவாக சொல்லி விடுகிறேன். ஆனால் என்னை சண்டைக்கு யாரவது இழுத்து விட்டால் எவருமே எனக்கு ஆதரவு தரமாட்டார்கள் !

   Delete
 63. டெக்ஸ் வில்லர்

  ReplyDelete
 64. ஆசிரியர், லயன் - முத்து காமிக்ஸ் பணியாளர்கள் மற்றும் இங்கு வருகை தரும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  50 ரூபாய் காமிக்ஸ் பற்றி என்னுடைய எண்ணம் : டெக்ஸ் கதைகளை மட்டுமே வெளியிடாமல் நீங்கள் குறிப்பிட்ட ஹீரோக்களையே ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டால் நன்றாக இருக்கும். அயல்நாடுகளில் exclusive-hero கதைகளில் ஒன்று இரண்டு கதைகள் சொதப்பினாலும் யாரும் அவ்வளவாக கண்டுகொள்ள மாட்டார்கள் ஆனால் தமிழில் நிலைமை அப்படியில்லை என்பது என் எண்ணம்.

  ReplyDelete
  Replies
  1. Radja from France : நிஜமே ! நமக்கு இங்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கதையும் குறைந்த பட்ச திருப்தியைத் தந்திடல் அவசியம். பெரிய ஹீரோவாக இருப்பினும் சொதப்பல் - சொதப்பலே நம் மார்கெட்டில் !

   Delete
 65. டியர் சார்!
  இது இங்கே எனது கடைசி கடிதம்.

  இங்கே ஜால்ரா மட்டுமே அடிக்கலாம் என்பதும் இதழின் தரம் குறித்த கேள்விகளுக்கோ விவாதங்களுக்கோ இடமில்லை என்பதும் உறுதியாகி விட்டது!

  கதைகள் சிதைக்கப்படக்கூடாது என்பதற்காகவும் மொழிபெயர்ப்பின் தரத்திற்காகவும் போராடினேன்.

  எனக்கு கிடைத்ததெல்லாம் புறக்கணிப்பும் மன உளைச்சலும்தான்,

  இனி இங்கே என் குரல் ஒருபோதும் ஒலிக்கப்போவதில்லை.

  தங்கள் வாசகனாய் தொடரப்போவதும் இல்லை.

  மதியாதார் தலைவாசல் மிதிக்கக்கூடாதல்லவா?

  குட்பை குட்லக்........

  ReplyDelete
  Replies
  1. Dear Friend,

   Everyone has their own views, if your views are not accepted by many, then probably you can revisit ur views, no harm in it. There is no point in getting angry on our editor.

   I would like to put it this way, no other publisher in the world is as interactive with readers as ours. We have the privilege of presenting our thoughts and most of the time our views are adhered to.

   As far as the translation is concerned, even now translations are done by humans, and our readers are as good as one. And mind you there will be a through scrutiny by Editor before publishing the translated issues and i am sure the scrutiny will be more vicious than it usually is when done by professionals. It would only be an added burden to Editor. Hence i would welcome this translation option of editor. and be rest assured his decisions never fail as he has more exp in comic world than anyone here in this blog,

   Delete
  2. And finally if u don't wanna be a reader anymore, it is no-ones loss but yours who will lose the opportunity that very few have to read these wonderful comics in Tamil.

   Delete
  3. Msakrates : உங்களின் பிரச்னை என்னவென்று எனக்குச் சுத்தமாய்ப் புரியவில்லை.

   ///கதைகள் சிதைக்கப்படக்கூடாது என்பதற்காகவும் மொழிபெயர்ப்பின் தரத்திற்காகவும் போராடினேன்.///

   இங்கே கதைகளைச் சிதைப்பதற்காக நாங்கள் செயல்படுவது போலவும், தரத்தைத் தாங்கிப் பிடித்திட "போராட்டம்" நடத்திடல் அவசியம் போலவும் உங்களுக்குள் ஒரு சிந்தனை ஓடிடும் பட்சத்தில் அது உங்கள் கற்பனையே. செய்யும் தொழிலை இங்குள்ள ஒவ்வொருவரும் எத்தனை தூரம் மதிக்கிறார்களோ - அதே அளவுக்கு மதிப்பவன் நானும். என்னால் இயன்ற உச்சத்தை தந்திடத் தான் ஒவ்வொரு முறையும் முயற்சிக்க முனைவேனே தவிர, சிதைத்திடவல்ல.

   தவிர உங்களின் எண்ணவோட்டத்திற்கு உடன்பாடு கிட்டிடாத வேளைகளில் இங்குள்ள அனைவரின் எண்ணங்களையும் "ஜால்ரா" என்று முத்திரை குத்திடுவது குழந்தைத்தனமே ! தத்தம் சிந்தனை முதிர்ச்சிக்கு சர்டிபிகேட் எதிர்பார்த்திடும் நிலையில் இங்குள்ள நண்பர்களில் எவருமில்லை என்பது உறுதி.

   Delete
  4. நல்லா சொன்னீங்க ஸார். சிலருடைய எண்ணமே, ஏதோ தங்கள்தான் காமிக்ஸ் வளர்ச்சியை தூக்கி நிறுத்தியவர்கள் என்று. இப்படிப்பட்டவர்கள் ஊருக்குள் 'பில்ட் அப்' கொடுத்துவைத்திருக்கும் பேர்வழிகள். இப்படி மிரட்டினால் ஏதோ சாதித்துவிட்டோம் என்று மனசுக்குள் மார்தட்டிக் கொள்பவர்கள். இவர்களும் ஒரு வகையில் மன நோயாளிகளே! உண்மையில் ஏதாவது விளக்கம் தேவைப்பட்டிருந்தால் உங்களுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டிருக்கலாம். இல்லை தபாலில் எழுதிப் போட்டிருக்கலாம். அதைவிட்டு, இங்கே போஸ்ட் போட்டு, அதை அப்படியே பேஸ்புக் கில் பல இடத்திலும் போட்டு கும்மி அடித்திருக்கமாட்டார். உண்மையான வளர்ச்சியில் ஆர்வம் என்பது இதுவா? இவர்கள் தங்கள் மீது வெளிச்சம் விழவேண்டும் என்று 'போராடுபவர்கள்'தான்! இங்கே அவர் கேள்விக்கு பல நண்பர்கள் பதிலளித்துவிட்டார்கள். அதற்குப் பிறகும் இப்படி புலம்புவது கேவலம்!

   Delete
  5. @ Msakrates.......

   மாபெரும் தத்துவஞானியின் பெயரை புனைப்பெயராக வைத்துக்கொண்டால் மட்டும்போதுமா? சிறிது நிதானம் வேண்டாமா? உங்கள் பிரச்சினை எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும்..........ஆனால் நாங்கள் யாரும் வேலையற்ற‌வர்கள் அல்ல......காமிக்ஸ் மீதான காதல் மட்டுமே எங்கள் அனைவரையும் ஒரே புள்ளியில் இணைக்கிறது......அவையறிந்து எழுதிப்பழகுங்கள் முதலில்.....உங்கள் மேலான ''அறிவுரைகள்'' எல்லாம் அப்புறம்......

   Delete
  6. அனைத்து வாசகர்களுக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள் !!! வேண்டாம் நண்பர்களே, தூற்றுவது மிகவும் எளிதான ஓன்று! ஆனால் அதனால் காயப்படும் இதயம் மிகவும் பரிதவித்துப் போய்விடும் ! Msakrates க்கு ஆசிரியரே பதிலளித்து விட்டப்பின், மேலும் பலர் அதற்கு பதிவிடுவது சரியான ஒன்றாக நிச்சயமாக எனக்கு தோன்றவில்லை! தயவு செய்து இனியும் அவரை காயப்படுத்த வேண்டாம் ! சில நேரங்களில் நாம் நிதானத்தை இழக்கிறோம், அதனால் கருத்திலே தெளிவை மறக்கிறோம், அது நபரின் குற்றம் மட்டும் அல்ல, நம்மை சூழ்ந்து விடும் சந்தர்ப்ப சூழ்நிலைகளே காரணமாகி விடுகின்றன !!!

   Delete
  7. என்னை பொறுத்தவரை இது போன்ற கேள்விகளுக்கு அசிரியர் பதில் அளிபதுதான் முறை! நாம் அமைதி காப்பது முறை!! அவர் நம்மை காயபடுதுக்கிறார் என்பதுக்காக, நமது பதில் அடுத்தவரை காயபடுத்த கூடாது!! மீண்டும் சண்டை வேண்டாம்!!

   இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
   நன்னயஞ் செய்து விடல்.

   Delete
  8. I agree with Parani .. we have no rights to name or brand nor hurt others.

   Delete
  9. இங்கே வந்து பெரிய லயன், முத்து காமிக்ஸ் காதலர்கள் போல படம் காட்டிவிட்டு, அங்கே கூட்டமாக சேர்ந்து கும்மி போடுபவர்களை அப்போ என்ன செய்ய சொல்கிறீர்கள் நண்பர்களே? அதே முகத்தை இங்கேயும் காட்டட்டும். அங்கே ஒன்று இங்கே ஒன்று வேண்டாம் என்பதே இங்குள்ள நண்பர்களின் எண்ணம்!

   Delete
  10. கருத்து சொல்ல துணிவு வேண்டும். இந்த வீட்டில் பிரச்சனை என்றால், நாலு வீடு தள்ளிப்போய் கும்பல் சேர்த்து கத்தக்கூடாது. கருத்தை இங்கேயே சொல்லவேண்டும்!

   Delete
  11. அதை விட்டுவிட்டு, நான் வரமாட்டேன், வாசிக்கமாட்டேன் என்று புலம்புவது சரியா? நீங்களே சொல்லுங்கள். ஒரு பொருள் வாங்கி, அது பிடிக்காவிட்டால் ரிட்டர்ன் கொடுப்பதா? இனிமேல் வாங்காமல் விடுவதா? என்பதை ஒருவர் தானேதான் தீர்மானிக்கவேண்டும். அதை விட்டு ஒவ்வொரு பதிவு பதிவாக வந்து புலம்பக்கூடாது. அந்தக் கேள்வியை எத்தனை தரம் போஸ்ட் செய்திருப்பார். பதில் கிடைக்கவில்லை என்றால், புடிக்கவில்லை என்றால், காரமாக தொலைபேசி எடுத்துக் கேட்டிருக்கலாம், மின்னஞ்சல் அனுப்பியிருக்கலாம், இல்லை நேரில்போய் கேட்டிருக்கலாம். இங்கிருக்கும் பலர் அப்படித்தான். இங்கே வந்து நல்ல பிள்ளைகளாக கருத்துக்களை இடுவது. பின்னர் வேறு இடங்களில் கூட்டத்தோடு சேர்ந்து கும்மி அடிப்பது. இதெல்லாம் ஒரு பிழைப்பு! முடியுமானால் ஒரு முகத்தோடு வாழப்பழகுங்கள்!

   Delete
 66. Hi Sir,
  This is very pleasant surprise for us. My Choices: Tex, Martin, CID robin and Ranger Jo
  Can you please tell us, how many pages and stories will be in one book?
  are there any unpublished ranger Jo stories?

  ReplyDelete
  Replies
  1. niru : I still have just a vague picture in my head about this whole project...! So we need some time before something tangible is worked out ! And no - Ranger Jo is over !

   Delete
 67. புது வருட பரிசாக நமது நண்பர்களுக்கு சந்தா​வை அறிமுகம் ​செய்யலா​மே. என் நண்பர் ஒருவர் நீண்ட நாட்களாக என்னிடம் இரவலாக காமிக்ஸ் வாங்கி படிப்பவர் இந்த வருட முதல் சந்தா கட்டப்​போவதாக வாக்களித்துள்ளார் ​மேலும் என்னால் முடிந்தவ​ரை காமிக்ஸில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்க​ளை எனது ப​ழைய நண்பர்களுக்கு அறிமுகம் ​செய்கி​றேன். இப்ப​டை ​தோற்கின் எப்ப​டை ​​வெல்லும்.

  ReplyDelete
 68. Dear Editor,

  KINDLY UPDATE THE LION COMICS WEBSITE WITH THE YEARS SCHEDULE AND PICTURES, ALONG WITH SUBSCRIPTION DETAILS.

  THAT LINK CAN BE SHARED WITH FRIENDS ON FB OR TWITTER, WHO DON'T FOLLOW OUR BLOG, TO KNOW THE PROCEEDINGS OF OUR CROUCH FROM SABBATICAL (Well! Almost)

  plsssssssssssss REPLY

  ReplyDelete
 69. டியர் விஜயன்,
  சிவகாசி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட விஸ்வநத்தம் ரோட்டில் உள்ள ஒரு அச்சகத்தில் தீ விபத்து என்று செய்தி படித்தேன். நமது லயன் அலுவலகத்தில் எல்லோரும் மற்றும் எல்லாமும் நலம்தானே.

  ReplyDelete
 70. மேற்கிலிருந்து ம. ராஜவேல் : நம் தரப்பில் அனைவரும் நலமே...விபத்துக்குள்ளான அச்சகம் நமக்குப் பரிச்சயமானதே...நிறைய சேதங்கள் ! சிவகாசியில் இது நாள் வரை பட்டாசு ஆலைகளில் மாத்திரமே நேர்ந்து வந்திட்ட தீ விபத்துக்கள் முதன்முறையாக அச்சுக்கூடத்தையும் தாக்கியுள்ளது ! வருத்தமான நிகழ்வு !

  ReplyDelete
 71. Vijay S and others : ஆசிரியரின் இந்த பதிவிலிருந்து...

  கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கே தலைகாட்டிச் சென்ற நான் புத்தாண்டு வரை காணாது போய் விட்டதற்கு sincere apologies ! தவிர்க்கவே இயலா குடும்பப் பணிகள் எனது கவனத்தின் பெரும்பகுதியினை ஆக்ரமித்துக் கொண்டபடியால் - அவ்வப்போது உங்களின் பின்னூட்டங்களை எனது செல்போனில் பார்த்திட்டதோடு திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டிப் போனது ! - Editor S.VIJAYN.

  ReplyDelete
  Replies
  1. Can you please gimme a gud reason why this was pointed out to me?

   Delete
  2. மன்னிக்கவும் தங்களின் இந்த பின்னூட்டத்தை பார்க்கவே இல்லை. தாங்கள் ஆசிரியரிடம் இருந்து பதிலை ஆவலுடன் எதிப்பார்த்துக் கொண்டிருந்ததாலும் அது போல் சில நண்பர்களும் ஆர்வமாய் இருந்ததால் ஆசிரியரின் அந்த பதிவை மேற்கோள் காட்டினால் தங்களின் காத்திருப்புக்கு அர்த்தம் இருக்கும் என்று நினைத்து பதிவிட்டேன் ! கீழே நீங்கள் ஆசிரியருக்கு பதிவிட்டவைகளிலிருந்து...

   Vijay "Father of the Pride"26 December 2012 15:40:00 GMT+05:30 My Encounters with lion..
   Pls reply sir.. Pls announce Next year schedule in sequence..

   Vijay S3 January 2013 08:48:00 GMT+05:30Dear Editor,KINDLY UPDATE THE LION COMICS WEBSITE WITH THE YEARS SCHEDULE AND PICTURES, ALONG WITH SUBSCRIPTION DETAILS.THAT LINK CAN BE SHARED WITH FRIENDS ON FB OR TWITTER, WHO DON'T FOLLOW OUR BLOG, TO KNOW THE PROCEEDINGS OF OUR CROUCH FROM SABBATICAL (Well! Almost) plsssssssssssss REPLY

   Delete
 72. சார், +6 இதழ்களை 10/-இதழ் சைசில் ஐம்பது ரூபாய் விலையில் போட்டால் 300 பக்கங்களில் மூன்று கதைகளை வெளியிடலாமே..எனவே ஒரு ராபின்,ஒரு மார்ட்டின், ஒரு டயபாலிக் என வெரைட்டியான மூன்று கதைகளைப் போடலாம்…
  அடுத்த வெளியீட்டில் முழு நீள டெக்ஸ் சாகசத்தைப் போடலாம்…
  மார்ட்டின் கதைகளை சிலர் ஏன் பிடிக்கவில்லை என சொல்கின்றனர் தெரியவில்லை… எனக்கென்னவோ மார்ட்டின் சாகசங்கள் இண்டியானா ஜோன்ஸ் மற்றும் நேசனல் ட்ரெஷர் படங்களை நினைவுபடுத்துகின்றன…hmmmmm… ஆளுக்கோர் ரசனை…
  அதே போல் ரிப்கிர்பி,காரிகன் ஆகியோரையும் சேர்க்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து…

  ReplyDelete
 73. ஒரு உரத்த சிந்தனை !

  இது நம்மால் உருவாக்கப்பட்ட Brand !
  இது நம் மொழிப்பெயர்ப்பால் 40 வருட காலமாய் முத்திரை பதித்து வருவது !
  இன்று ஆலமரமாய் விழுதுகளும் பலம் கொள்ள ஆரம்பித்து விட்டது !

  வென்றவர் பின் தங்கியவர்களிடம் வெற்றியை பகிர்ந்துக்கொண்டால்
  Lightning Bolt ( எ ) Usain Bolt ஐ யாரென்று இன்று யாருக்குமே தெரிந்திருக்காது !

  Landmark, Higginbotham's போன்ற High-profile bookstore ல் Display
  சூடு பிடித்துவிட்டால், விற்பனை எண்ணிலடங்காது ! பிரிண்டிங் கணக்கிலடங்காது !

  நாம் வெல்வது நிச்சயம் என்று நம் விதியால் நிர்ணயிக்கப்பட்டு விட்டால் வால்மார்ட்
  கூட நம்மிடம் வாங்க முன்பணமாய் முழுப்பணமும் செலுத்திவிட்டு பொறுமையாக காத்திருக்கும் !!!

  ReplyDelete
  Replies
  1. Disclaimer :

   இது நம்மால் உருவாக்கப்பட்ட Brand !
   இது நம் மொழிப்பெயர்ப்பால் 40 வருட காலமாய் முத்திரை பதித்து வருவது !

   இந்த வரிகள் குறிப்பது முழுமையாக '' Editor's Family '' யை மட்டுமே !!!
   ஆசிரியர் விஜயன் அவர்கள் இதை கூறுவதை போல் புனையப்பட்டது ! அதுவே உண்மையாகப்பட்டது !!!

   Delete
 74. ஆசிரியருக்கு, மேலதிகமாக கறுப்பு வெள்ளைக் கதைகள் என்பது வரவேற்கத் தக்கதுதான். ஆனால், அயல்நாட்டு வாசகர்கள் பற்றியும் சில விடயங்களை சிந்திக்கக் கோருகிறேன்.

  அதாவது, வர்ணத்தில் ரூபா 50 புத்தகத்தை வெளியிடுவது என்பது நடைமுறைச் சாத்தியமாகிவிட்ட பின்னர், அதே விலையில் கறுப்பு-வெள்ளை புத்தகங்களையும் வெளியிட முயலும்போது, கறுப்பு வெள்ளை இதழ்களின் பக்கங்களை அதிகரிக்கவேண்டிய தேவை உங்களுக்கு இருக்கும். இதனால் புத்தகத்தின் எடை அதிகரிக்கும் -

  சூப்பர் ஹீரோ சுப்பர் ஸ்பெஷலின் விலை ரூபா 100 ஆக இருந்தபோதும் அதன் எடை, எமது வர்ண இதழ்களின் எடையைவிட அதிகமாகவே இருந்தது - பக்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால்! இது கொரியர் மூலம் உள்நாட்டில் புத்தகங்களைப் பெறுவோருக்கு பெரிய அளவில் (குறித்த எடை அளவுக்குள் கட்டணங்கள் மாறாது என்பதால்)தாக்கங்களை ஏற்படுத்தாது (?!). ஆனால், வெளிநாட்டு வாசகர்களுக்கு புத்தகங்கள் அனுப்பப்படும்போது தபால் கட்டணம் பெரிய அளவில் அதிகரிக்கப்போகிறது.

  எனவே, வர்ணத்தில் - ஆர்ட்பேப்பரில் - வரும் ரூபா 50 இதழ்களை விடவும், (பக்கங்கள் அதிகமாக இருந்தாலும்) ரூபா 50இல் கறுப்பு வெள்ளையில் வரும் இதழ்களுக்கு அதிக பணம் செலவிடவேண்டிய அவசியம் வெளிநாட்டு வாசகர்களுக்கு ஏற்படும். இதனை அவர்கள் எவ்வாறு பார்க்கப்போகிறார்கள் என்பதும், ரூபா 50 இதழ்களுக்கு - வர்ண இதழுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைப்பணமும், கறுப்பு வெள்ளை இதழ்களுக்கு இன்னொரு தொகையும் செலுத்துவது என்பது சற்றே குழப்பத்தை ஏற்படுத்தலாம். இது தொடர்பாகவும் தாங்கள் சிந்திக்க வேண்டுகிறேன்.

  ReplyDelete
 75. அசிரியர் இன்னும் கடந்த பதிஊ சொன்ன படி நமக்கு பதில் போடவில்லை!! என்ன வேலையோ!! ஆவலுடன் அவரின் பதிலை எதிர்பார்த்து கொண்டிருன்கிறேன்!

  ReplyDelete
 76. சார் இன்னோரு விண்ணப்பம்..100/-விலையில் வருடந்தோறும் வரப்போகும் பன்னிரெண்டு இதழ்களில் ஆறை கறுப்புவெள்ளையில் அதே நீள சைசில் 300 பக்கங்களில்(SHSS போல) வெளியிட்டால் இன்னும் நிறைய கதைகளை (ஒரு இதழுக்கு ஐந்தாறு கதைகளாவது நிச்சயம் அச்சேற்றலாம்) வெளியிடலாமே…ஒரு மாதம்வரை நாங்களும் திரும்பதிரும்ப படிக்க நிறைய கதைகளும் இருக்கும்…ப்ளீஸ்…

  ReplyDelete
 77. மர மண்டை: Good to see that you are on right track!!

  ReplyDelete
 78. டியர் சார்,

  புத்தகங்கள் நிறைய வருவது சந்தோஷம்தான். அதிலும் டெக்ஸ் கதைகள் அதிகமாக வருவது என்னைபோன்ற டெக்ஸ் அபிமானிகளுக்கு சொல்லவேவேண்டாம்.

  எல்லாம் சரி, 2013 க்கு இவ்வளவு சந்தா என்று பிக்ஸ் பண்ணிட்டிங்க. அந்த சந்தாக்குள்ளேயே இந்த வருடம் 100 புக் வரமாதிரி பார்த்துகிட்டா நல்லது. :-)

  ReplyDelete
 79. அன்புள்ள ஆசிரியருக்கும், குடும்பத்தினருக்கும் (லயன், முத்து குழு இதில் அடங்கிவிடும் என்பதால் தனியாக குறிப்பிடவில்லை) தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  முதல் தேதி அன்று எதிர்பார்த்த உங்களின் பதிவு ஒரு நாள் தள்ளிப்போய் விட்டாலும். மேலும் 6 கதைகள் என்ற நல்ல செய்தியுடன் வந்திருப்பதால் மகிழ்ச்சி.

  1. டெக்ஸ்வில்லர்
  2. மார்ட்டின்
  3. ராபின்
  4. ரிப் கெர்பி
  5. வன ரேஞ்சர் ஜோ மற்றும் பீட்டர் பாலண்டைன்
  6. மின்னல் படை

  மேலே உள்ளது என் விருப்பம்.

  நீங்கள் யார் கதைகளை வெளியிட்டாலும் ஓகே. ஆனால் 6 கதைகளுக்கும் ஒவ்வொரு கதாநாயகர்களை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும் (டெக்ஸ் -க்கு மட்டும் 6 ல் 2-ஐ ஒதுக்கி விடுங்கள் :-) ).

  மேலும் ஒரு வேண்டுகோள்:

  எத்தனை கதைகளை அதிகரித்தாலும் வாசகனாக எனக்கு அது மிகவும் மகிழ்ச்சி தரக் கூடிய செய்தியே. ஆனால் கடைகளில் விற்பனை செய்திட முயற்சிக்கையில் FIXED DATES அவசியப்படுகிறது சார். எனவே 6 கதை வந்தாலும் 12 வந்தாலும் அது குறிப்பிட்ட நாட்களில் (உதாரணத்திற்கு 1 முதல் 10 தேதிகளுக்குள் அல்லது 10 முதல் 20 தேதிகளுக்குள் என்ற FIXED DATE இருந்தால் வாசகர்களை எளிதில் சென்றடைய முடியும்) தவறாமல் வெளியிட்டால் நன்றாக இருக்கும். இல்லையென்றால் போனமுறை 5 ஆம் தேதி கடையில் வாங்கிய வாசகர் மீண்டும் அடுத்த மாதம் 5 அல்லது 6 தேதிகளில் கடைக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டி வரும். இந்த விசயத்தில் நாம் கொஞ்சம் அதிக அக்கறை காட்டினால் நல்லது.

  ReplyDelete
 80. விஜயன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினர் , அலுவலக நண்பர்கள் , வலை நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ! அப்படியே அண்ணாச்சிக்கும் சொல்லிடுங்க ...

  ReplyDelete
 81. ரட் ..........ரட் ..........ரட் ..........ரட் ..........ரட் ..........ரட் ..........ஆறு தோட்டாக்கள்

  ReplyDelete
 82. டெக்ஸ் வில்லருக்கு ஆதரவாக (!)களமிறங்கியுள்ள (?)அடியேனின் மற்றொரு "அதிக பிரசங்கி "ஐடியா !
  ஒவ்வொரு மாதமும் இரண்டு இதழ்கள்.முத்து காமிக்ஸ் முதல் மாதம் என்றால் ,அடுத்த மாதம் லயன் காமிக்ஸ் .அதாவது ,இப்போது கடைபிடிக்கப்படும் அதே பாணி.இவற்றுள் 100ரூபாயுள்ள வண்ண இதழ்களும்,50ரூபாயுள்ள இரண்டு இதழ்களும் அடக்கம்.
  காமிக்ஸ் க்ளாசிக்ஸ் மொத்தம் 6இதழ்களும் ,+6இதழ்களும் ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் வெளியிடலாம் .அதாவது முத்து காமிக்ஸ் வெளிவரும் மாதத்தில் காமிக்ஸ் க்ளாசிக்ஸும் ,லயன் காமிக்ஸ் வெளிவரும் மாதத்தில் +6 கதைகளில் ஒன்றும் (டெக்ஸ் வில்லர்.ஹிஹி)வெளியிடலாம்.
  மர்ம மனிதன் மார்ட்டின் ,ராபின்,மற்றும் டேஞ்சர் டயபாலிக் கதைகளை வருடம் ஒருமுறை லயன் காமிக்ஸில் shss இதழ்போல் 100ரூபாய் விலையில் வெளியிடலாம்.
  நமது அபிமான டெக்ஸ் வில்லரை மற்ற ஹீரோக்களோடு இணைத்து "கூட்டத்தில கோவிந்தா"போடவைத்து விடாதீர்கள் என மன்றாடி கேட்டுகொள்கிறேன். தனி இதழ்களில் அவரது கதைகள் வெளியிடுவதே அண்ணாருக்கு நாம் காட்டும் உரிய மரியாதையாகும் என்பது அடியேனின் அபிப்ராயம்.

  ReplyDelete
 83. Something happened to the e-bay link. Our e-bay page and stock were not visible until a while ago.

  ReplyDelete
 84. ஆசிரியருக்கும் காமிக்ஸ் நண்பர்களுக்கும் மீண்டும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். +6 கதைகளில் டெக்ஸ் வில்லர் கதைகளை அதிகம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். திகில் நகரில் டெக்ஸ் கதையை கண்டிப்பாக வெளியிட வேண்டிகொள்கிறேன். த்ரில்லர் கதை எனும்போது இன்னும் ஆர்வம் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. எனது வேண்டுகோள் நிறைவேற்றப்படுமா சார்?

  ReplyDelete
 85. //Vijayan has left a new comment on the post "ஒரு பனிஇரவின் உரத்த சிந்தனை !":
  Msakrates : உங்களின் பிரச்னை என்னவென்று எனக்குச் சுத்தமாய்ப் புரியவில்லை.//

  2// ­கிறிஸ்துமஸ் தினத்தன்றுஇங்கே தலைகாட்டிச் சென்ற நான் புத்தாண்டு வரை காணாது போய்விட்டதற்கு sincere apologies! தவிர்க்கவே இயலா குடும்பப்பணிகள் எனது கவனத்தின் பெரும்பகுதியினை ­ ஆக்ரமித்துக் கொண்டபடியால் - அவ்வப்போதுஉங்களின் பின்னூட்டங்களை எனது செல்போனில் பார்த்திட்டதோடு ­ திருப்திப்பட்டு ­க்கொள்ள வேண்டிப் போனது !//

  உங்களுக்காக மீண்டும் ஒருமுறை....

  3//Msakrates 25 December 2012 03:35:00 GMT+05:30
  ஆசிரியரே!
  உங்களிடம் எனக்கு சிறிய வருத்தம்......
  புதிரில்லா கதையில்லை!
  விடையில்லா புதிரில்லை!
  சில பதிவுகளாய் நான் கேட்கும் ஒரு கேள்விக்கு விடை தராமல்
  கண்டும் காணாமல் கடந்து போகிறீர்கள்!
  உங்களிடம் வாங்கிய பொருளில்சந்தேகம்
  கேட்கும் வாடிக்கையாளனுக்கு
  விளக்கம் தரும்
  கடமையை புறக்கணிக்கிறீர்கள்,
  இதன் காரணம் எனக்கு புரியவில்லை
  இப்போதும் உங்கள் பதில் மெளனம் தான் என்றால் இனியும் இது குறித்து நான் கேள்வி எழுப்புவதில் அர்த்தமில்லை
  நன்றி!
  அந்த கேள்வி:
  //வணக்கம் விஜயன் சார்!
  எனக்கு நெடுநாளாக ஒரு குழப்பம்.
  double-thrill ஸ்பெஷல்"பனியில் ஒரு பரலோகம்"
  ஜானி கதையில்
  பக்கம் 69 ல் டாக்டர்
  அகோனி இறந்து விடுகிறார்.
  பக்கம் 76 ல் டிவியில்
  மீண்டும் தோன்றுகிறார்.
  இதற்கு கதையில்
  விளக்கம்
  தரப்படவில்லையே?
  கடைசிப் பக்கம் இல்லாத துப்பறியும் நாவலை போல இந்தஇடம் உறுத்துகிறது விளக்கம்தர வேண்டுகிறேன்!//
  //­Msakrates : இப்போதெல்லாம்ஏராளமான புதுக் கதைகளை புரட்டி வருவதால் 3-4 மாதங்களுக்குமுந்தைய இதழ்கள் கூட ஏதோ ஒரு மாமாங்கத்தில் வெளி வந்தவைபோல் ஒரு feeling எனக்கு ! So,முடிந்தால் இன்று அந்தக் கதையைத் திரும்பவும் ஒரு முறை புரட்டிப் பார்த்து விட்டுபதில் சொல்ல முயற்ச்சிக்கிறே­னே ?!
  அதற்கிடையே நண்பர்கள் யாரேனும் சாக்ரடீசின் சந்தேகத்திற்கு விடை தயாராகவைத்திருந்தாலு­ம் இங்கே பதிவிடலாமே!// Reply Delete

  //Mahesh has left a new comment on the post "ஒரு பதிவின் பயணம் !":
  காமிக்ஸ்-ல precise லாஜிக் தேடரிங்களே தலைவா.
  //திரையில் தெரியும் உருவம்ஜானியின் கூற்று படிஅது வேடம் அணிந்தவனகவோ, அல்லது போலியாக உருவாக்கப்பட்ட வர்ப்பகவோ இருக்கலாம்//
  அந்த இடத்திற்கு மேல் டாக்டர் வேறெங்கும் வருவதில்லை. அப்படி இருக்க உங்களுக்கு என்ன குழப்பம் கதையில்.
  on the lighter side,
  கதைபடி ஜானியால் கூட யுகிக்க முடியவில்லை, நீங்களும் அதை யுகிக்க முயற்சிக்காதிர் ­கள்.
  Post a comment.
  Unsubscribe to comments on this post.
  Posted by Mahesh to Lion-Muthu Comics at 28 December 2012 23:45:00 GMT+05:30//
  // Msakrates has left a new comment on the post "ஒரு பதிவின் பயணம் !":
  Mahesh:
  // ­ அந்த இடத்திற்கு மேல் டாக்டர் வேறெங்கும் வருவதில்லை. அப்படி இருக்க உங்களுக்கு என்ன குழப்பம் கதையில். on the lighter side, கதைபடி ஜானியால் கூட யுகிக்க முடியவில்லை, நீங்களும் அதையுகிக்க முயற்சிக்காதிர்கள் ­.//
  நண்பரே!
  கதை அரைகுறையாக இருந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறீர்களா?
  கதைகள் ஒரிஜினலில் இருந்துதமிழுக்கு வரும்போது சிதைக்கப்பட்டு இருந்தால் அவற்றின் சுவை குறைகிறதே!
  Podiyan:
  // ­ மொழிபெயர்ப்பது கதையின் உயிரோட்டத்தையே சிதைத்துவிடாதா? ('இப்ப மட்டும் என்னவாம், அப்படித்தானே இருக்கிறது' என்று சொல்லும் நண்பர்களின் வாதங்களும் இருக்கின்றன).//
  கரெக்ட்!
  தங்கக்கல்லறை புதிய மொழிபெயர்ப்பில் ­ எனக்கு இந்த அனுபவம் தான் கிடைத்தது!
  கதையின் ஜீவன் பொருத்தமற்றவசனங்களால் சாகடிக்கப்பட்டு ­ள்ளது!
  விளைவு டைகர் கதைகளில் ஒரு மெகா ஹிட்டான தங்கக்கல்லறை கலரில் வந்தும் அதன் சுவையைநாம் முழுமையாக அனுபவிக்க இயலவில்லை!
  முதல் பதிப்பு மொழிபெயர்ப்புடன ­் புதிய மொழிபெயர்ப்பை ஒப்பிட்டு பார்த்தால் இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்!
  மொழிபெயர்ப்பு அதன் மூல கதையையோ கதாபாத்திரங்களி ­ன்குணாதிசயங்களை ­யோ சிதைத்து விடாமல் அர்ப்பணிப்புடன் ­ செய்யப்பட வேண்டிய ஒன்று...
  Post a comment.
  Unsubscribe to comments on this post.
  Posted by Msakrates to Lion-Muthu Comics at 29 December 2012 05:27:00 GMT+05:30//

  சார் என் பிரச்னை இதுதான்
  ஜானி கதை முழுமையாக இல்லாமல் வெட்டு பட்டு இருப்பதாக எண்ணுகிறேன்!

  இதுபற்றி ஒரு மாதமாக கேட்டும் தங்களிடம் பதில் இல்லாததால் எனக்கு மன உளைச்சல்!

  ReplyDelete
  Replies
  1. உலகில் எவ்வளவோ பிரச்கனை இருக்க.... இதற்கு மன உளைச்சல்... ச்சூ ச்சூ.... போய்ப் பொழப்பப் பாருங்கப்பா... காமிக்ஸ் வாங்கினா வாசிச்சுட்டு செல்ஃப்பில வைங்க! முதுகில கட்டிட்டு அலையாதீங்க!

   Delete
  2. வாசகரே! பிடிவாதமும், விதாண்டாவாதமும் என்றுமே வென்று விடுவதில்லை!உங்கள் கேள்வி நியாயமானதாக உங்களுக்கு மட்டும் தோன்றினாலும், அதற்கான பதில் வரும் வரை காத்திருப்பதே முறையானதாகும்! உடனே எதிர்ப்பார்க்க உங்களுக்கு நிறைய அவகாசம் கிடைத்தாலும், ஆசிரியருக்கு இதற்கு பதிலளிப்பதை தவிர வேறு வேலையே இருக்க கூடாது, உங்கள் ஒருவரின் பிரச்சனையை முடித்து விட்டுத்தான் மற்ற விவகாரங்களை பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது, நம் போன்ற குடும்ப தலைவர் பொறுப்பில் உள்ள நிலைக்கு பொருந்துமா என்று தெரியவில்லை !

   பின்குறிப்பு : //உங்களிடம் வாங்கிய பொருளில் சந்தேகம் கேட்கும் வாடிக்கையாளனுக்கு விளக்கம் தரும்கடமையை புறக்கணிக்கிறீர்கள்// வாடிக்கையாளரின் உரிமை என்று எதை நீங்கள் கருதுகிறிர்கள் என்று புரியவில்லை ! இங்கு இப்படி வாய்ப்பு இருப்பதால் அப்படி உங்களுக்கு எழுத தோன்றுகிறது என்றே முடிவாகிறது! உதாரணத்திற்கு கோகோ கோலாவில் கரப்பான் பூச்சி இருந்ததை MNL கம்பனிக்கு சுட்டிக்கட்டியவர்க்கு அவர் கொடுத்த 12 ரூபாய் திருப்பிக்கொடுத்து வாடிக்கையாளரின் உரிமை காப்பாற்றப்பட்டது !!!

   மீண்டும் நீங்கள் இந்த பதிவிற்கு பதிலளிக்க முடிவு செய்தால் சில
   வாசகர்கள் இங்கு கூறியது சரியான பார்வையாக எல்லோருக்கும் தோன்றி விடும் !!!

   Delete
  3. Msakrates: Can you please let me how you are typing in your Nokia 110 mobile phone? are there any software for Nokia 110 model. I just wonder how you use that mobile to type such big messages, I would like to learn since I have same mobile model!

   Did you get the mail from Mahesh for the original story of Jhony to verify?

   Delete
  4. Parani from Bangalore :
   வாசக நண்பர் பரணிக்கு இந்த Replay. Mahesh to Msakrates.
   (கவனிக்கவும் பரணிக்கு மட்டும் என்னுடைய Reply )

   Mahesh29 December 2012 09:45:00 GMT+05:30
   சந்தேகத்தில் பாண்டிய மன்னனை மிஞ்சிவிடுவீர்கள் போல் இருக்கிறது,
   தங்களுக்காக ஒரிஜினல் கதையை Download செய்ய முயற்சிக்கிறேன், ஒப்பிட்டு பார்த்துவிட்டு கூறுகிறேன்.

   Mahesh29 December 2012 11:38:00 GMT+05:30
   நண்பரே,
   உங்கள் E-mail ID தந்தீர்கள் என்றால் ஒரிஜினல் கதையை அனுப்பி வைக்கிறேன்.

   Delete
  5. I thought it is for Msakrates, because initially Mahesh told trying to download English version to clarify his doubts and not for me. Also Msakrates given his mail-id on the same blog, which is sakrates1991@gmail.com.

   Delete

 86. +6 இதழ்களில் வருவதற்கு நான் விருப்பபடும் நாயகர்கள்:

  1. டெக்ஸ் வில்லர்
  2. மாடஸ்டி பிளைஸி
  3. ரிப் கெர்பி
  4. முகமூடி வேதாளர்
  5. சி.ஐ.டி.ராபின்
  6. காரிகன்

  நான் இதுவரை நமது லயன்/முத்து காமிக்ஸில் வேதாளர் கதைகளை படித்ததில்லை. ராணி காமிக்ஸில் முகமூடி வீரர் மாயாவியாக மட்டுமே பார்த்துள்ளோம். பரிசீலனை செய்யவும்.

  ReplyDelete
 87. @Vijayan Sir,

  I think the question asked by Msakrates is valid and he has been asking this many times. But still no reply.

  Another thing I have observed in this blog is that when you someone posts a question to you specifically, so many other people reply instead of you. This is not a good thing , I feel.

  Their reply also is not in right spirit and this demotivates people to come here and expressing their thoughts.

  From now on, if there is a specific question posted to you, it is better than others refrain from answering that. If you see them answering still, you should remove it , if it offends anyone.

  In the name of humour and love for our lion comics , some people here reply without thinking through the other person's views.You can check the replies to Msakrates above.

  All - I am not a friend/known person to Msakrates. So dont assume and create another story.

  ReplyDelete
 88. If Modesty stories are published in Color, they would make some interesting reactions from the readers. Is there any objections, Sir?

  ReplyDelete
 89. Editor Sir,

  I got a subscription number by email, confirming my payment for 2013. This is something which I and many others have been asking for many times.

  A specific subscription number given to every subscriber will help in many ways. Thanks for providing the same.

  ReplyDelete
  Replies
  1. i agree with srini.....
   no conformation for subscription amount
   with out subscription number how can we ask questions about our issues
   do anything special for early subscription (like something special gift or discount...etc)

   Delete
 90. 'வாசகர் மொழிபெயர்ப்பு வாய்ப்பு' எந்த நிலையில் சார் இருக்கிறது? ஜனவரி முதலாம் திகதி pdf file அனுப்புவோம் என்று பதிவிட்டிருந்தமாதிரி ஒரு ஞாபகம்...... நண்பர்கள் யாருக்காவது மின்னஞ்சல் வந்ததா?

  ReplyDelete
  Replies
  1. இல்லை நண்பரே, மின்னஞ்சல் ஏதும் இது வரை வரவில்லை!

   Delete
 91. WoW. Saintji is back with a bang.Welcomeji

  ReplyDelete
  Replies
  1. நன்றி !!!நண்பர் ஆர்கானிக்யந்திரம் அவர்களே!!!உங்கள் பெயர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதே?பின்நவீனத்துவ பெயரோ?

   Delete
  2. தாங்கள் பெயரும் வித்தியாசமாக உள்ளது திரு செயின்ட் ஜி அவர்களே .
   i just chose that name as i always believe that all the so called living beings are made up of carbon, oxygen and hydrogen and so we are all a kind of organic machines. It must be possible to create a duplicate of a man, woman, plant, animal if we perfect the science of organic chemistry.

   Delete
  3. on the lighter side :

   பூலோகமும் பேய்லோகமும் இன்று சந்தித்து விட்டது. கிழக்கும் மேற்கும் போல் அல்லாமல் விஞ்ஞானமும் (ஸ்பெல்லிங் தெரியல) அஞ்ஞானமும் (நல்ல பிசாசு) இங்கு ஓன்று சேர்ந்தே விட்டது. கடவுளே இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ ! மாயன்களின் அழிவிற்கு பிறகு ஒரு பயங்கர கூட்டணி (இந்த வலைரோஜாவின் நல்ல விஷயத்திற்கு) உருவாகி விட்டதா !!!

   Delete
  4. @மர மண்டை
   Since you talked about Mayans, i'am going to tell a piece of history many of you may not know. Ancient Tamils were good sea adventurers and travelers. It is proven by facts that some of the Ancient tamils traveled to the present day Mexico and mixed with the tribes there. the genration were named as Mayans. Lot of similarities between Tamils and the present day Mexico.

   Delete
 92. Re-Posting:

  Dear Editor,

  KINDLY UPDATE THE LION COMICS WEBSITE WITH THE YEARS SCHEDULE AND PICTURES, ALONG WITH SUBSCRIPTION DETAILS.

  THAT LINK CAN BE SHARED WITH FRIENDS ON FB OR TWITTER, WHO DON'T FOLLOW OUR BLOG, TO KNOW THE PROCEEDINGS OF OUR CROUCH FROM SABBATICAL (Well! Almost)

  It would be easy for them to understand what is in store for them and subscribe. If we give a link to this blog it would be difficult for new comers to know what the subscription bring in.

  plsssssssssssss REPLY

  ReplyDelete
 93. @Bond 2012
  Don't chastise Msakrates. We all love lion comics like anything and have it close to our hearts. Though Msakrates behaviour looks childish, i was astonished looking at his love for comics to the extent that he has become mentally ill because of his perceived issue with a storyline.

  @Msakrates.
  please understand that don't take things very seriously. You are no doubt the biggest lover of lion-muthu comics. But at the same time, do not use words like "this is my last letter" etc.
  we need to understand that the editor may be very busy because of NBS and book fair arrangements and he is just having a small team. and by that time another post had come. So @Msakrates don't take things personal. Don't Worry. Be happy.

  see our "adiyen" and "hee hee" saintji was missing for several weeks and has returned now and we are all very happy. He is rocking on this blog and we are all enjoying his comments.

  Personally, i would like to thank all you lion-muthu comics fans, especially the editor and Saintji as Lion comics was the one which gave me morally and have the strength and courage to come out of continuous and major disasters in my life successfully.

  -Organic Yanthiram.
  After all, Every LIVING BEING including Humanoids is just an ORGANIC MACHINE.

  ReplyDelete
 94. அருமை நண்பர் சாக்ரடீஸ் அவர்களின் கோபம் நியாயமானதே.அவருடைய சந்தேகத்தை பலமுறை வெளியிட்டும் நாம் (எடிட்டர் உட்பட)அதை அலட்சிய படுத்தியிருக்க கூடாது.அவருடைய சுயமரியாதை இங்கே காயப்பட்டிருக்கிறது என்பதை அடியேனால் புரிந்துகொள்ள முடிகிறது.நடந்ததை மறந்து நண்பர் சாக்ரடீஸ் அவர்கள் தொடர்ந்து இங்கே பதிவிட வேண்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. //நடந்ததை மறந்து நண்பர் சாக்ரடீஸ் அவர்கள் தொடர்ந்து இங்கே பதிவிட வேண்டுகிறேன்.//

   நானும் கூட ஆமோதிக்கிறேன்...
   நண்பர் சாக்ரடீஸ் அவர்களே!
   நமது காமிக்ஸ் நட்பு ஒப்பற்றது... அதனை இழந்து போக வேண்டாம். நாங்களும் உங்களின் நட்பினை இழக்க வேண்டாமே...

   Delete
  2. //நமது காமிக்ஸ் நட்பு ஒப்பற்றது... அதனை இழந்து போக வேண்டாம். நாங்களும் உங்களின் நட்பினை இழக்க வேண்டாமே... //

   Delete
 95. //இங்கே ஜால்ரா மட்டுமே அடிக்கலாம் என்பதும் இதழின் தரம் குறித்த கேள்விகளுக்கோ விவாதங்களுக்கோ இடமில்லை என்பதும் உறுதியாகி விட்டது! கதைகள் சிதைக்கப்படக்கூடாது என்பதற்காகவும் மொழிபெயர்ப்பின் தரத்திற்காகவும் போராடினேன்.
  மதியாதார் தலைவாசல் மிதிக்கக்கூடாதல்லவா//

  நண்பர் சாக்ரடீஸ் ன் இந்த வார்த்தைகளே மிகவும் தவறானவையாக எல்லோராலும் பார்க்கப்படும். அவருக்கு இரண்டாவது முறையே ஆசிரியர் அவர்களால் கீழ்கண்டவாறு பதிலளிக்கப் பட்டுள்ளதால் ஆசிரியர் அவரை அலட்சியப்படுத்தி விட்டதாக யாருமே கூறமுடியாது. அதே போல் மகேஷ் அவர்களின் பதிவும் கீழே உள்ளது. உண்மை இப்படி இருக்கையில் எப்படி யார் அவரை அலட்சியப்படுத்தியதாக கூற முடியும்! எது எப்படி இருந்தாலும் நடந்ததை மறந்து நண்பர் சாக்ரடீஸ் அவர்கள் தொடர்ந்து இங்கே பதிவிட நானும் வேண்டுகிறேன்.

  Vijayan16 December 2012 08:09:00 GMT+05:30Msakrates : இப்போதெல்லாம் ஏராளமான புதுக் கதைகளை புரட்டி வருவதால் 3-4 மாதங்களுக்கு முந்தைய இதழ்கள் கூட ஏதோ ஒரு மாமாங்கத்தில் வெளி வந்தவை போல் ஒரு feeling எனக்கு ! So, முடிந்தால் இன்று அந்தக் கதையைத் திரும்பவும் ஒரு முறை புரட்டிப் பார்த்து விட்டு பதில் சொல்ல முயற்ச்சிக்கிறேனே ?!
  அதற்கிடையே நண்பர்கள் யாரேனும் சாக்ரடெசின் சந்தேகத்திற்கு விடை தயாராக வைத்திருந்தாலும் இங்கே பதிவிடலாமே !

  Mahesh29 December 2012 09:45:00 GMT+05:30
  சந்தேகத்தில் பாண்டிய மன்னனை மிஞ்சிவிடுவீர்கள் போல் இருக்கிறது,
  தங்களுக்காக ஒரிஜினல் கதையை Download செய்ய முயற்சிக்கிறேன், ஒப்பிட்டு பார்த்துவிட்டு கூறுகிறேன்.

  Mahesh29 December 2012 11:38:00 GMT+05:30
  நண்பரே,
  உங்கள் E-mail ID தந்தீர்கள் என்றால் ஒரிஜினல் கதையை அனுப்பி வைக்கிறேன்.

  ReplyDelete