Powered By Blogger

Sunday, December 16, 2012

வானமே எல்லை !


நண்பர்களே,

வணக்கம். டிசம்பருக்கும், உஷ்ணத்துக்கும் ஏதோ ஒரு விதப் பிணைப்பு உண்டு போலும் இந்தாண்டு  ! பகல் பொழுதுகளில் வெப்பமானி இன்னமும் 32 டிகிரியினை வட்டமடித்து வருவது பற்றாதென்பது போல, நம் தளத்திலும் சூடு முழுவதும் தணிந்ததாய்த் தெரியக் காணோம் ! தற்சமயம் சிவகாசியில் நிலவி வரும் விசித்திரமான மின்வெட்டு நேரங்கள் புண்ணியம் சேர்க்க,NBS பணிகள் நடந்தேற ஏராளமாய் குட்டிக் கரணங்கள் அடிப்பது அவசியமாகியதால்  இந்த வாரம் முழுமைக்கும் இங்கே எட்டிப் பார்த்திடுவது எனக்கு  சாத்தியப்படவில்லை ! அதற்குள் இங்கு மேலும் சில வெப்பமான பதிவுப் பரிமாற்றங்கள்! Phew! வலையுலகக் கராத்தே;குங்-பு மோதல்களைப் பற்றிய எனது நிலைப்பாட்டையும் ; அவை என்னுள் எழுப்பிடும் மலைப்பு கலந்த சங்கடத்தைப் பற்றியும் ஏற்கனவே  தெளிவாக்கியுள்ளேன் என்பதாலும்,  பகிர்ந்திட இதை விட முக்கிய விஷயங்கள் தற்சமயம் இருப்பதாலும் - first things first என்று தீர்மானித்தேன் !

கடந்த சில தினங்களாய் சென்னை புத்தகக் கண்காட்சியின் தேதி & இட மாற்றம் பற்றி பேப்பர்களில், வலைத்தளங்களில் அடிபட்டு வந்த சேதி நிஜமாகிறது.ஒரு வாரத் தாமதத்தோடு ஜனவரி 11-ல் YMCA மைதானத்தில் துவங்கும் இந்தத் திருவிழாவின் நீளமும் இம்முறை குறைவே போல் தெரிகிறது ! ஜனவரி 22 -ல் show நிறைவு பெறுவதால்,அனைவருக்கும் கிடைக்கவிருக்கும் விற்பனை அவகாசம் கம்மியே  ! தவிர பொங்கலை நெருங்கிய இந்தத் திடீர் துவக்கத் தேதி நமது திட்டங்களையும், வெளியூரில் வசிக்கும் நண்பர்கள் பலரின் பயணத் திட்டங்களையும் நிறையவே குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும் என்பது நிச்சயம் !! Anyways, நம் கட்டுப்பாட்டில் இல்லாததொரு விஷயத்தை எண்ணி, வருந்துவதை விட, இப்போது சாத்தியப்படும் வழிகளைப் பற்றித் திட்டமிடுவதே பொருத்தமாக இருக்கும் அல்லவா ?!

Looking at the positive side, ஒரு வாரக் கூடுதல் அவகாசம் எனும் போது, காலில் வெந்நீர் ஊற்றிக் கொண்டில்லாது - பைண்டிங் பணிகளுக்கு தேவையான சமயத்தை  அனுமதித்தல் சாத்தியமாகும். ஒரு கிலோ எடையும் ; முக்கால் இன்ச் கனமும் கொண்ட இந்த இதழினை section sewing பாணியில் முழுவதுமாய்த் தைத்து விட்டு, பின்னர் முதுகில் பெவிகால் தடவி ஒட்டிடவிருக்கிறோம். So - 'நடுவிலே சில பக்கங்களைக் காணோம் 'என்று எவருக்கும் வருத்தங்கள் நேர்ந்திட வாய்ப்பிராது! இத்தனை விலை கொடுத்து வாங்கிடும் ஒரு இதழின் தரத்திலும், தயாரிப்பிலும் திகட்டலேதும் இருந்திடல் முறையாகாது என்பதால்  கூடுதலாய் கவனம் செலுத்திட எங்கள் டீமுக்கு வழங்கப்பட்ட எதிர்பாரா போனசாக இந்த விஷயத்தைப் பார்த்திடுகின்றோம்.

புத்தகத் திருவிழாவின் துவக்க நாளான ஜனவரி 11 தேதியன்று மாலையில் சென்னையில் நமது NBS இதழை என் தந்தை ரிலீஸ் செய்திடுவார் ! முத்து காமிக்ஸ் வெளியிட்டுக் கொண்டிருந்த நாட்களில் எனது தந்தை பல தொழில் முயற்சிகளுக்குள் கால் பதித்திருந்த படு பரபரப்பானதொரு மனிதர். அந்த நாட்களில் சிவகாசியின் Top 3 அச்சகங்களுக்குள் அவரது நிறுவனமும்  இருந்தது ; நின்று பேசக் கூட நேரமின்றி சதா சர்வ காலமும் பிஸியாக இருந்திட்டவர். So காமிக்ஸ் என்பது ஒரு காதலெனும் போது கூட, அதனை முழுமையாக ரசிக்கவோ ; வாசகர்களோடு தொடர்பில் இருக்க அவருக்கு அவகாசமோ ; வாய்ப்போ இருந்திடவில்லை. தவிர இன்றைய இன்டர்நெட் யுகமல்ல அது என்பதால் பழுப்பு நிறப் போஸ்ட் கார்ட்களைத் தாண்டிய வாசகர்களின் பங்களிப்பும் சாத்தியப்பட்டிடவில்லை ! பல காலமாய், கனவாய் மாத்திரமே இருந்து வந்த வண்ணமும், தரமும் இப்போது நமக்கு பரிச்சயம் ஆன நாள் முதல், ஓய்விலிருக்கும் அவருக்கு நம் முயற்சிகளில் active ஆன பங்கெடுத்திட அதீத ஆர்வமே ! ஆனால் காலத்தின் சுழற்சி பரிசளிக்கும் ஆரோக்யக் குறைவுகளுக்கு எவரும் விதிவிலக்கல்ல என்பதால்,  உள்ளத்தில் இன்னமும் துடிப்பாக இருக்கும் என் தந்தைக்கு நாங்களாக கட்டாய ஒய்வு அளித்திட்டோம் என்று தான் சொல்லிட வேண்டும். ஆனால் அவரது brain child ஒரு சந்தோஷ மைல்கல்லைத் தாண்டிடும் தருணத்தில் அவரது நேரடிப் பங்களிப்பு சிறிதேனும் இல்லாது போனால் - அந்த முயற்சி முழுமை பெறாதென்று எனக்குத் தோன்றியது. அது மட்டுமன்றி உங்களின் உற்சாகத்தை அவர் இது நாள் வரை நேரடியாய் அதிகம் அறிந்தவரில்லை ! So சென்னை புத்தகத் திருவிழாவில் நமது NBS இதழை உங்கள் மத்தியில் அவர் வெளியிடுவதென்பது ஒரு Never Before தருணமாய் அவருக்கும் ; நமக்கும் அமைந்திடுமே என்று நினைத்தேன் ! So, please do drop in everybody ! உங்கள் ஒவ்வொருவரின் வருகையும், நம்மோடு நீங்கள் செலவிடும் நேரமும் அந்த மாலைப் பொழுதை ஒரு Never Before evening ஆக்கிடும் என்பது நிச்சயம் ! முன்பதிவுக்கான பிரதிகள் அனைத்தும் 10-ம் தேதி காலையில் சிவகாசியிலிருந்து அனுப்பிடப்படும். குறைவான எண்ணில் மாத்திரமே NBS அச்சிடப்பட்டுள்ளது என்பதால், சென்னை திருவிழாவிற்கு கூடுதலாய் பிரதிகள் அனுப்பிடுவது சிரமமே ! நண்பர்கள் இன்னமும் முன் பதிவு செய்திருக்காத பட்சத்தில் - இன்றே செய்திட்டால் நிச்சயம் நல்லதொரு option ஆக இருந்திடும். ஜனவரி 11 & 12 தேதிகள் மாலைகளிலும் நமது ஸ்டாலில் நான் இருந்திடுவேன் என்பது கொசுறுச் சேதி.

உங்களின் காத்திருப்பை கொஞ்சம் போரடிக்காது இருக்கச் செய்ய, 2012-ன் இறுதி இதழான ஜானியின் "மரணத்தின் நிசப்தம்" வரும் புதன்கிழமை தயார் ஆகிடும்.  நமது பல கால  trade mark ஆன அந்தக் கறுப்பு-வெள்ளை ; ரூ.10 விலை பாணிக்கும் இதுவே  இறுதி இதழ் என்பதால், நிச்சயம் இதற்கொரு nostalgia value இருக்குமென்பது நிச்சயம். ஜானியின் மாமூலான இடியாப்ப-நூடில்ஸ் சிக்கல் ரகக் கதை தான் என்ற போதிலும்  சுவாரஸ்யம் குன்றாத கதை இது ! தைரியமாகப் படிக்கலாம் - வண்ணமின்மையை மறந்திட இயன்றால் !அப்புறம் கூடுதலாய் ஒரு வார அவகாசம் கிட்டி இருப்பதால், நமது 2013 -க்கான காமிக்ஸ் க்ளாசிக்ஸ் மறுபதிப்புகளில் இரு இதழ்களை ஜனவரியில் வெளியிட இயன்ற முயற்சிகள் அனைத்தையும் செய்திடவிருக்கிறேன் ! Detective ஸ்பெஷல் + மாயாவி ஸ்பெஷல் நிச்சயம் சென்னை புத்தகத் திருவிழாவிற்குத் தயாராகி விடும்  ; not promising, but முடிந்தால் ஜானி நீரோ ஸ்பெஷல் இதழையும் தயாரிக்க முற்படுவோம் !NBS -ன் வண்ணப் பக்கங்கள் முழுமையையும் தயாரிக்க ஆகிட்ட சிரமத்தை விட black & white பக்கங்கள் - அதுவும் குறிப்பாக மாடஸ்டி ப்ளைசி கதை பெண்டு  நிமிர்த்தி விட்டது என்று தான் சொல்லுவேன் . ஒரிஜினல்களின் அதே strip format-ல் வந்திடும் இக்கதைக்கு ஏற்கனவே ரொம்பவே நெருக்கமான..குட்டியான வசன பலூன்கள் ! அவற்றை தேவைக்கு மாற்றம் செய்து, கதையைத் தயார் செய்வது ; மாடஸ்டியின் சருமம் அவரது "காற்றோட்டமான"  பீச் ஆடைகளால் கறுத்திடாது போகும் பொருட்டு நமது ஆர்டிஸ்ட்கள் பணி புரிந்தது என்று சரியானதொரு சவால் தான் !
சமீப நாட்களாய் நம் தளத்தில் நிலவிடும் ஒரு சங்கடமான சூழ்நிலையைப் பற்றி நிறைய எழுதிக் கொண்டே செல்ல என் மனம் ஒப்பவில்லை. கருத்து சுதந்திரத்தை சிலாகிக்கும் அதே சமயம் , நமது எழுத்துக்களின் வீரியத்தையும் நாம் சற்றே கணக்கில் எடுத்துக் கொண்டால் நிறைய பிரச்சனைகளை தவிர்ப்பது சாத்தியமாகும் என்பது எனது எண்ணம் ! நேருக்கு நேராய் சந்திக்கும் பட்சத்தில் - 'எதைப் பேசலாம் ? எதை தவிர்த்திடுவது நலம் ?' என்று சிந்திக்கும் நாம், எண்ணங்களை எழுத்தாக்கும் சில வேளைகளில் அந்த சிந்தனைக்கு இடமளிக்காது போவது தான் நிறைய மோதல்களுக்கு அஸ்திவாரமாகிறது ! வார்த்தை யுத்தங்களை ; பகை வளர்ப்பை ஊக்குவிக்கும் எழுத்துக்களால் யாருக்குத் தான் பயன் இருந்திட முடியும் - அதுவும் நம்மைப் போன்றதொரு பொழுதுபோக்குத் தளத்தினில் ? துப்பறியும் வேலைகளை நமது ஜெரோமும் ; ராபினும் ; ஜில் ஜோர்டானும் கதைகளில் செய்து விட்டுப் போகட்டுமே ; 'பளிச்' என்று பதிலடி கொடுப்பதை பார்னேக்களும் ; லார்கோக்களும் ; கார்சன்களும் தங்கள் வழக்கங்களாய் வைத்திருக்கட்டுமே ! காமிக்ஸ் எனும் திரையில் இதனை ரசித்திட இயலும் போது, அதே பாணியை நாம் நிஜ வாழ்வில் கடைபிடிக்க எத்தனிக்கும் போது நெருடலாகத் தோன்றுவது  நிஜம் தானே ?

Comments moderation என்பது சிந்தனையில் முதிர்ச்சி வரப் பெறா நண்பர்களின் வருகை மிகுந்திருக்கும் தளங்களுக்கு அவசியப்பட்டிடலாம் ; நமக்கல்ல என்ற நம்பிக்கை எனக்கு இன்னமும் உள்ளது. ஒவ்வொரு பதிவையும்  நான் பரிசீலனை செய்து விட்டு பிரச்னையற்றவற்றை மாத்திரமே அனுமதிப்பது என்பது எனக்கொரு மெனக்கெடல் என்பதை விட, நம் நண்பர்களிடையே எனக்கு நேர்ந்திடும் நம்பிக்கைக் குறைச்சல் என்றே பொருள்படும் அன்றோ ? நாம் பாகுபாடின்றி ரசிக்கும் அந்த ஒற்றை சொல்லான காமிக்ஸ் -இது வரை இயன்றிடாத புதுத் தேடல்களை ; புதுப் பாதைகளை கண்டறிய முனைந்திடும் இந்தத் தருணத்தில் நாம் ஒன்றுபட்டுக் கை கோர்த்தால்  வானமே எல்லை ! கடலென பறந்து கிடக்கும் உலகக் காமிக்ஸ் நமக்காக சிகப்புக் கம்பளத்தை விரித்துக் காத்துள்ளது ! அந்த வரவேற்ப்பை ஏற்றுக் கொண்டு நம் காமிக்ஸ் காதலைத் தொய்வின்றித் தொடர்வது என்பதில் நான் தெளிவாக உள்ளேன் ! புதிய சில படைப்பாளிகளிடமும் புதிய சில கதைகளுக்காக சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்திட்டதில் நிறையவே வெற்றி நமக்கு ! NBS இதழோடு வரவிருக்கும் 2013-ன் ட்ரைலர்களில் பார்க்கத் தானே போகிறீர்கள் !!


தொடரும் நாட்களில் வித்தியாசமானதொரு பதிவோடு மீண்டும் சந்திப்பேன் ! Take care everybody !

P.S: சின்னதாய் ஒரு சந்தோஷப் பகிர்வு : ஜனவரியில் நமது இரண்டாவது இன்னிங்சைத் துவக்கி வைத்திட்ட "லயன் Comeback ஸ்பெஷல் " முழுவதுமாய் விற்றுத் தீர்ந்து விட்டது !! "நியூ லுக் ஸ்பெஷல் " இந்தப் பட்டியலில் அடுத்து இடம் பிடிக்கும் நிலை !!  Thanks guys !!

336 comments:

 1. தகவல்கள்..தகவல்கள்..தகவல்கள்... எதிர்பார்த்திருந்த பல கேள்விகளுக்கு விடைகளோடு அருமையானதொரு பதிவு. முதலில் நன்றிகள். மீண்டும் ஒரு தடவை படித்துவிட்டு வருகிறேன் சார்.

  ReplyDelete
 2. புரியற மாதிரி பளிச்சுன்னு சொல்லிட்டிங்க . புரிஞ்சா சரி.

  ReplyDelete
 3. Dear Editor,

  Thanks for the confirmation about Johny book release by Dec-2012 and confirmation of sending the NBS to subscribers by 10-Jan-2013.

  ReplyDelete
 4. பதிவைப் படித்து முடித்தவுடன் "இனியெல்லாம் சுகமே"ன்னு ஒரு பாடல் மனதுக்குள் ஓடத்துவங்குகிறது.
  தூக்கம் கண்களைத் தழுவுவதால் இங்கே சின்னதாய் ஒரு கர்சீஃப் போட்டுவிட்டு காலையில் வருகிறேனே, ப்ளீஸ்!

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY : பூனைகளின் பிரியரா நீங்கள் ? பெரியதொரு புன்னகையோடு உங்கள் logo -வில் சயனம் செய்யும் பூனையினை 2013-ல் நமது இதழ்களிலும் பார்த்திடப் போகிறீர்கள் ! விபரங்கள் விரைவில் !

   Delete
  2. நண்பர்களே,

   தனது எகத்தாளமான குறும்புகளால் உலக மக்களில் பலரை தனது ரசிகர்களாக்கிக் கொண்ட கொழுகொழுப் பூனை Garfield தனது அட்டகாசங்களை நமது லயனில் (அல்லது சிறுவர்களுக்கான புதியதொரு வெளியீட்டில்) தொடங்கவிருப்பதைத்தான்  எடிட்டர் மேற்கூரிய பதிலில் மறைமுகமாகச் சொல்லியிருப்பதாகத் தோன்றுகிறது. any other guess?

   Delete
  3. Erode VIJAY : நல்லதொரு guess - எனினும் சரியானதல்ல :-)

   Delete
  4. @ Editor: Logo of comics classics is a cat ? :)

   Delete
  5. Comic Lover (a) சென்னை ராகவன் : Good guess again...but nopes :-)

   Delete
  6. சார் இது 'ஆலிஸ் இன் வொண்டர் லேண்ட்'இல் வரும் cheshire என்ற பூனைதானே? அப்போ..... ஓ...ஹோ... ஆ..ஹா... கரெக்டா சாரே?

   Delete
  7. Podiyan : நல்ல முயற்சி...எனினும் தவறான யூகமே !

   Delete
  8. To Editor: ஆக, ஆசிரியரின் பதிலிலிருந்து, விஜய் அவர்களின் குறிப்புப் படத்தில் இருக்கும் அதே பூனையைப் பற்றிய தகவல் இதுவல்ல என்று தெரிகிறது. பிரெஞ்சுக் காமிக்ஸ் பக்கத்தில் பிரபலமான பூனையான FELIX ஆக இருக்குமோ?

   Delete
 5. //Comments moderation என்பது சிந்தனையில் முதிர்ச்சி வரப் பெறா நண்பர்களின் வருகை மிகுந்திருக்கும் தளங்களுக்கு அவசியப்பட்டிடலாம் ; நமக்கல்ல என்ற நம்பிக்கை எனக்கு இன்னமும் உள்ளது.//

  எங்களுக்கும் உள்ளது சார். பார்ப்போம். நண்பர்கள் மனது வைத்தால் நடக்காதது ஏதுமில்லை.

  //தொடரும் நாட்களில் வித்தியாசமானதொரு பதிவோடு மீண்டும் சந்திப்பேன் !//

  'வித்தியாசமானதொரு' என்பதை ஹைலைட் பண்ணியிருப்பதைப் பார்த்தால், ஏதோ ஸ்பெஷல் இருப்பதுபோலவே தெரிகிறது. காத்திருப்போம்!

  ஜனவரியில் போனசாக டைஜஸ்ட்டுக்களும் வரவிருப்பதால் அடுத்தவருட திருவிழாவுக்கான ஆரம்பம் இது என்று தெரிகிறது; Start the Music!

  ReplyDelete
  Replies
  1. நம் அனைவரையும் 2013ல் குதூகலிக்கச் செய்யும் முடிவினில்தான் ஆசிரியர் இருக்கிறார் போலும்..."வித்தியாசமான பதிவு" என்று எதைக் கூறப் போகிறார் தெரிகிறதா நண்பரே?

   Delete
  2. தெரியலியேப்பா...! ;)

   Delete
  3. டொண்ட டொண்ட டொண்ட டொண்ட டொண்ட டோயங் ...! டொ டொ டோயங் ....!! (Recollect Nayagan theme music ...!!) :) :)

   Delete
  4. Comic Lover (a) சென்னை ராகவன்

   நீங்க நல்லவரா? (உ-ம்: ஸ்பைடர் - நீதிக்காவலன்) கெட்டவரா? (உ-ம்: ஸ்பைடர் - குற்றவியல் சக்கரவர்த்தி)

   Delete
 6. //ஜனவரியில் நமது இரண்டாவது இன்னிங்சைத் துவக்கி வைத்திட்ட "லயன் Comeback ஸ்பெஷல் " முழுவதுமாய் விற்றுத் தீர்ந்து விட்டது !! "நியூ லுக் ஸ்பெஷல் " இந்தப் பட்டியலில் அடுத்து இடம் பிடிக்கும் நிலை !!//

  ஆஹா... நல்லவேளை... நண்பர்கள் கேட்டார்களே என்று கொடுத்ததுபோக ஒரு புத்தகம் எனக்கென்று எடுத்துவைத்தது நல்லதாகப் போயிற்று.!

  ReplyDelete
 7. பிப்ரவரியில் சிகப்பாய் ஒரு சொப்பனம்
  உடன் வெளிவரப்போகும் மற்றொரு இதழ் என்னவென்று அறிய ஆவலாக உள்ளேன்

  ReplyDelete
  Replies
  1. king sulthan : NBS -ல் 2013-க்கான முழு அட்டவணையே உள்ளது ! பிப்ரவரிக்கு மட்டுமல்ல, அடுத்தாண்டின் முழுமைக்குமான இதழ்களைப் பற்றிய அறிவிப்புகளைப் பார்த்திட இன்னும் சில வாரக் காத்திருப்பே பாக்கி !

   Delete
 8. //Detective ஸ்பெஷல் + மாயாவி ஸ்பெஷல் நிச்சயம் சென்னை புத்தகத் திருவிழாவிற்குத் தயாராகி விடும் ; not promising, but முடிந்தால் ஜானி நீரோ ஸ்பெஷல் இதழையும் தயாரிக்க முற்படுவோம் !//

  அடி பின்னிடீங்க , ஒரு திருவிழா எபக்ட் வந்துடுச்சு

  //Comments moderation என்பது சிந்தனையில் முதிர்ச்சி வரப் பெறா நண்பர்களின் வருகை மிகுந்திருக்கும் தளங்களுக்கு அவசியப்பட்டிடலாம் ; நமக்கல்ல என்ற நம்பிக்கை எனக்கு இன்னமும் உள்ளது. //

  சீண்டும் நண்பர்களே , இந்த வார்த்தையாவது உங்களை மாற்றுமா ?

  // ஜனவரியில் நமது இரண்டாவது இன்னிங்சைத் துவக்கி வைத்திட்ட "லயன் Comeback ஸ்பெஷல் " முழுவதுமாய் விற்றுத் தீர்ந்து விட்டது !! "நியூ லுக் ஸ்பெஷல் " இந்தப் பட்டியலில் அடுத்து இடம் பிடிக்கும் நிலை !! Thanks guys !!
  //

  ரெண்டாவது பதிப்பு போடும் காலமும் வரும்.

  ReplyDelete
  Replies
  1. Raj Kumar S : நீங்கள் சொல்வதும் சரியே...!.நமது வண்ண இதழ்கள் அனைத்துமே இப்போது டிஜிட்டல் files களாக இருப்பதால், ஆயிரம் பிரதிகளுக்கு அவசியம் நேர்ந்தால் கூட ஒரு இரண்டாம் பதிப்பை முயற்சிப்பது சாத்தியமாகும் !

   Delete
 9. Lot of good news, 3 (or 4) books are going to come out for January....... Huraaaaay.
  Best wishes for Chennai book festival.

  Editor sir,
  Why only limited no. Of copies for Chennai book festival? I had already preordered the book, but lot of other fans ( they could be new) may get disappointed if the book is sold out. May be i am jumping ahead......

  ReplyDelete
  Replies
  1. V Karthikeyan : NBS -க்கு அவசியப்படும் மூலதனம் நிறையவே என்பதால்,அதனில் நிறைய ஸ்டாக் வைத்து விற்க நினைப்பது - தேவையற்ற பளுவை நாமே நம் தோள்களுக்கு ஏற்றிக் கொண்டது போலாகிடும்.

   முன்பெல்லாம் ஐந்து ரூபாய் இதழ்களில் 2000 பிரதிகள் மீந்து போனால் கூட, அதனில் முடங்கிக் கிடக்கும் தொகை ரூ.10,000 ஐத் தாண்டாது ! ஆனால், இன்றைய நமது விலைகள் அதிகமென்பதால், பெரியதொரு எண்ணம் ஸ்டாக் விழுந்துவிட்டால் - அது நம் சக்கரம் சுற்றுவதில் வீண் சிரமத்தை ஏற்படுத்திடும். NBS முன்பதிவிற்கு அடிக்கடி நான் நினைவூட்டுவது இது காரணமாய் தான் !

   Delete
  2. Thanks for the explanation sir, makes sense.

   Delete
 10. A tongue has no
  bones.
  But its really strong
  enough to break a
  heart.
  So,becareful with
  your words.

  ReplyDelete
 11. புத்தகம் மேலும் மெருகேற ,பைண்டிங்கிலும் தரமேற இந்த தாமதம் உதவ போவது ஆஹா ..............எல்லாம் நன்மைக்கே !
  //So சென்னை புத்தகத் திருவிழாவில் நமது NBS இதழை உங்கள் மத்தியில் அவர் வெளியிடுவதென்பது ஒரு Never Before தருணமாய் அவருக்கும் ; நமக்கும் அமைந்திடுமே என்று நினைத்தேன் ! So, please do drop in everybody !//
  ஏற்றுகொள்கிறேன்!கண்டிப்பாக இது ஒரு கொண்டாட்ட இதழ் ;விழா மலர் என்பதால் முன் பதிவு செய்தாலும் நமது நிறுவனர் ,தலைமை ஆசிரியர் வெளிவிடுவது சால சிறந்ததே!மேலும் அன்றே அனைவர் கரங்களிலும் சூப்பர் !
  //ஜனவரி 11 & 12 தேதிகள் மாலைகளிலும் நமது ஸ்டாலில் நான் இருந்திடுவேன் என்பது கொசுறுச் சேதி.// ஆஹா பொங்கலின் சுவை மேலும் கூட உள்ளது !
  //உங்களின் காத்திருப்பை கொஞ்சம் போரடிக்காது இருக்கச் செய்ய, 2012-ன் இறுதி இதழான ஜானியின் "மரணத்தின் நிசப்தம்" வரும் புதன்கிழமை தயார் ஆகிடும்.//
  நிச்சயமாக சரியான முடிவே!கொரியர் செலவு இழப்பெனினும்!
  //சுவாரஸ்யம் குன்றாத கதை இது ! // நன்றி!
  // அப்புறம் கூடுதலாய் ஒரு வார அவகாசம் கிட்டி இருப்பதால், நமது 2013 -க்கான காமிக்ஸ் க்ளாசிக்ஸ் மறுபதிப்புகளில் இரு இதழ்களை ஜனவரியில் வெளியிட இயன்ற முயற்சிகள் அனைத்தையும் செய்திடவிருக்கிறேன் ! Detective ஸ்பெஷல் + மாயாவி ஸ்பெஷல் நிச்சயம் சென்னை புத்தகத் திருவிழாவிற்குத் தயாராகி விடும் ; not promising, but முடிந்தால் ஜானி நீரோ ஸ்பெஷல் இதழையும் தயாரிக்க முற்படுவோம் !//

  nbs ,மற்றும் ட்ரைலருக்கு ஈடான உற்ச்சாக அறிவிப்பே இது !சூப்பர் .............அட்டகாசம் மகிழ்ச்சியில் திளைக்க வைத்து விட்டீர்கள் !இவையும் நமது நிருவனரால் வெளியிட பட இருப்பது மேலும் சிறப்பாக இருப்பதுடன் ,மறு அவதாரம் எடுக்க விருக்கும் சாகா வரம் பெற்ற சாகசங்களுக்கு ,அதனை அளித்த நமது தலைமை ஆசிரியருக்கு நாம் செலுத்தும் நன்றி இதனை விட பெரிதாய் ஏதுமிருக்காது ;நம்மால் இதை விட பெரிதாய் ஏதும் அளிக்கவும் இயலாது !

  தலையை பிய்த்துகொள்ளும் இந்த ஒரு துரோகத்தின் கதை அட்டகாசமாய் சரியாக வெளி வர இருப்பது என்ன சொல்ல ..............அட்டகாசம் !
  நமது புத்தகங்கள் விற்பனையில் தூள் கிளப்ப போவது உறுதி !பொங்கலென பொங்க உள்ள நண்பர்கள் முன்பதிவை விரைந்து செயல் படுத்தி மேலும் உற்ச்சாகத்தை பொங்க வைப்பதுருதி!

  ReplyDelete
 12. வணக்கம் விஜயன் சார்!

  எனக்கு நெடுநாளாக ஒரு குழப்பம்.

  double-thrill ஸ்பெலல் "பனியில் ஒரு பரலோகம்"
  ஜானி கதையில்
  பக்கம் 69 ல் டாக்டர்
  அகோனி இறந்து விடுகிறார்.

  பக்கம் 76 ல் டிவியில்
  மீண்டும் தோன்றுகிறார்.

  இதற்கு கதையில்
  விளக்கம்
  தரப்படவில்லையே?

  கடைசிப் பக்கம் இல்லாத துப்பறியும் நாவலை போல இந்த இடம் உறுத்துகிறது விளக்கம் தர வேண்டுகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. Msakrates : இப்போதெல்லாம் ஏராளமான புதுக் கதைகளை புரட்டி வருவதால் 3-4 மாதங்களுக்கு முந்தைய இதழ்கள் கூட ஏதோ ஒரு மாமாங்கத்தில் வெளி வந்தவை போல் ஒரு feeling எனக்கு ! So, முடிந்தால் இன்று அந்தக் கதையைத் திரும்பவும் ஒரு முறை புரட்டிப் பார்த்து விட்டு பதில் சொல்ல முயற்ச்சிக்கிறேனே ?!

   அதற்கிடையே நண்பர்கள் யாரேனும் சாக்ரடெசின் சந்தேகத்திற்கு விடை தயாராக வைத்திருந்தாலும் இங்கே பதிவிடலாமே !

   Delete
 13. >> Detective ஸ்பெஷல் + மாயாவி ஸ்பெஷல் நிச்சயம் சென்னை புத்தகத் திருவிழாவிற்குத் தயாராகி விடும் ; not promising, but முடிந்தால் ஜானி நீரோ ஸ்பெஷல் இதழையும் தயாரிக்க முற்படுவோம் !

  Good news indeed. I thought Barracuda was next after the mayavi digest, and then Johnny Nero? Anyway I am happy with whatever order the books come out as long as the promised mayavi/barracuda/Nero stories come out without any last minute change of mind/cancellations.

  ReplyDelete
  Replies
  1. BN USA : When we go ahead and collect a subscription, we are bound to honor our commitment !So changes of minds don't come into the picture, nor do cancellations !

   Delete
 14. நல்ல சமநிலையான பதிவு. எல்லாமே இருக்கு, ரொம்ப நல்லாவே இருக்கு. பந்த் அன்னிக்கு பஞ்சரான சைக்கிள தள்ளிக்கிட்டு மவுண்ட்ரோட்ட பராக்கு பார்த்துட்டு போற மாதிரி எங்க மனசுக்குள்ள திடிர்னு ஒரு feeling. மாற்றான் பட ரிசல்ட் மாதிரி எங்க கதையும் ஆயிடுச்சி. அதனால தீபாவளிக்கு வாங்கன பட்டாசு எல்லாத்தையும் தூர தூக்கிப் போட்டுட்டு பொங்கல் கொண்டாடர வழியப் பார்க்கலாமுன்னு நாங்க முடிவு செஞ்சிட்டோம். அதனால என் சகோதர சகோதர்களே நீங்களும், அடுத்தவனுக்கு அடிப்பட்டா நாம ஓடிப்போய் உதவி செஞ்சாலும் நமக்கு அடிப்படும் போது யாரும் உதவிக்கு வரமாட்டாங்கரத மனசுல வச்சிக்கிட்டோம், மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான் அதனால நாம தண்ணிய ஊத்த (திக்க) வேணாங்கறத மனசுல வச்சிக்கிட்டோம் பழையப்படி இங்க ஜாலியா வந்து போங்க அன்புள்ளங்களே.

  போன பதிவுல கிட்டத்தட்ட பத்து கமெண்ட் போட்டும் ஒருத்தர் கூட கண்டுக்கல. அப்பத்தான் ஒரு ராத்திரி ஒரு பகல்னு ராப்பகலா யோசிச்சி, ஒரு புது ப்ளாக் open செய்யலாமுன்னு முடிவுசெஞ்சி, ராத்திரியோட ராத்திரியா என் பேர்ல ஓபன் செஞ்சிட்டேன். இனி அங்க எழுத புதுசு புதுசா நெறைய யோசிக்கணும், ஒவ்வொரு ப்ளாக் கா போய் பார்மாலிட்டி செஞ்சி அவிங்கள நம்ப ப்ளாக் ல பார்மாலிட்டி செய்ய வச்சி Hit வாங்கணும், இடையிடையே நம்ப ஆபீஸ் வேலைய பார்க்கணும், அப்பப்பா இனி நேரமே இருக்காது.

  எனவே என் இனிய வாசக பெருமக்களே, தயவுசெய்து நிறைய நிறைய நீளமான பின்னூட்டங்களை தவிர்த்தும், Load more பிரச்சனை எழாமலும் பார்த்துக் கொண்டீர்கள் என்றால், எனக்கு கிடைக்கும் சிறிது நேரத்தில் சட்டென்று படித்து விட்டு ரெண்டு வரி தட்டிவிட ஏதுவாக இருக்கும். Happy NBS with sweet சக்கரைப்பொங்கல்.

  ReplyDelete
  Replies
  1. நீளநீள வர்ணணைகளும் கடிவாளமில்லா வரிகளுமே பின்னூட்டங்களை பெரிதாக்கிவிடுகின்றன...இயன்றவரை சுருங்கச் சொல்லி விளங்க வைத்தாலே அழகுதான்...

   Delete
  2. Raja babu: ஆம் உண்மை. வர்ணணைகள் பௌர்ணமி யின் இரவு போன்றவை.

   Delete
 15. சரியான நேரத்தில் வந்த அழகான பதிவு...சிறு வயதில் எங்களுக்கெல்லாம் முத்து காமிக்ஸ் மூலம் இரும்புக்கைமாயாவியை அறிமுகப்படுத்திய தங்கள் தந்தை எங்கள் தமிழ் ஆர்வத்திற்கும் காமிக்ஸ் காதலுக்கும் அடிப்படையாக இருந்தவராகையால் அவர்தம் பணி மகத்தானது...இடையில் இருக்கும் கிறிஸ்துமஸ், நியூஇயர் வியாபார பரபரப்பு ஆர்வங்களையும் மீறி ஜனவரி 11ல் இதழ் கிடைக்கப் போகும் தினத்தை எண்ணி இப்போதே மனம் மகிழத் தொடங்கிவிட்டது...அடுத்த பதிவு "வித்தியாசமான பதிவு" என்று கூறி எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறீர்களே சார்...(தங்கள் ஜூனியர் எழுதுவார் என யூகிக்கின்றேன்)...நம் சமீப இதழ்களின் மாற்றங்கள் வருங்கால தமிழ் காமிக்ஸ் உலகில் நீங்கா இடம் பெறப்போவது உறுதி...அதற்கு இப்போது கூடியிருக்கும் விற்பனையே சாட்சி...

  ReplyDelete
 16. ஏனோ தெரியவில்லை, மனம் இலகுவாக இன்று புலர்கிறது. மனதில் அமைதி வந்துவிட்டால் வானம் கூட எல்லையில்லை !!!

  ReplyDelete
  Replies
  1. மர மண்டை : உலகுக்கே அமைதியைக் கற்பித்தவர் உங்களின் புதிய logo -வில் அழகாய் வீற்றிருக்கும் போது, உள்ளத்து அமைதிக்குச் சொல்லவும் தேவையா - என்ன ?

   Delete
  2. நன்றி Vijayan sir, உள்ளம் அமைதியாக இருக்கும் போது இந்த உலகமே அழகாக தெரிகிறது! இந்த மானிட பிறப்பும் தவத்தின் பயனாய் தோன்றுகிறது!

   Delete
 17. பதிவு பட்டையை கிளப்புகிறது சார்.
  என்ன செய்வது எங்களுக்கு தான் ஒரு வாரம் ஒரு யுகமாக போகிறது.
  பரவாயில்லை அது புத்தகத்துக்கான தரம் மேம்பட உதவும் என்பதில் மகிழ்ச்சியே.

  அலுவலகங்களில் போனஸ் தருவதுபோல க்ளாசிக்ஸ் புத்தகங்கள் தருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
  சார் அப்போ இந்த மாதமே 3 க்ளாசிக்ஸ் முடிஞ்சுருச்சுனா வருடத்திற்கு 6 என்ற எண்ணிக்கையை உயர்த்த வாய்ப்பு உள்ளது அல்லவா.
  Fingers Crossed.

  மேலும் பல புதிய அறிமுகங்கள் காண மிக ஆர்வமுடன் உள்ளேன் சார்.
  வித்தியாசமான பதிவு அய்யோ அது என்னவாக இருக்கும்?

  ReplyDelete
  Replies
  1. பல நண்பர்கள் கூறியிருந்தாலும் நானும் ஒரு முறை நினைவு கூறுகிறேன் சார்.
   சிறுவர்களுக்கான ஜூனியர் லயன் போல ஒரு இதழ் வெளியிட வாய்ப்புள்ளத என கூறுங்கள் சார்.

   Delete
  2. கிருஷ்ணா வ வெ : காமிக்ஸ் க்ளாசிக்ஸ் இதழ்களை நாம் வெளியிடும் வேகத்தை விட, அவற்றின் விற்பனை வேகமே - வெற்றியை ; சாஸ்வதத்தை நிர்ணயிக்கும் ! So அதற்கும் சேர்த்து fingers crossed !

   Delete
 18. தங்களின் காமிக்ஸின் காதலை அறிந்த எங்களுக்கு, இந்த சரியான தருணத்தில் தாங்கள் அளிக்கவிருக்கும் தந்தையாருக்கு மரியாதை அவசியம்/கடமையானதும் கூட! அது இல்லாமல் NBS முழுமையாகாது! hats off to you sir. உடலுக்குத்தான் வயது உள்ளத்திற்கு அல்ல!

  ReplyDelete
  Replies
  1. MH Mohideen : நூற்றில் ஒரு வார்த்தை !

   வயதோ ; ஆரோக்யக் குறைபாடுகளோ எனது தந்தையின் உள்ளத்து உரத்தை ; உற்சாகத்தை காவு வாங்கிடவில்லை ! ஏதோ ஒரு விதத்தில் அவரது பங்களிப்புகளின்றி எங்களது சக்கரங்கள் இன்னமும் சுழல்வதில்லை !

   Delete
 19. டியர் எடிட்,

  காமிக்ஸ் மீது எனக்கு உண்டான தீராத காதலில் முதல் காலடி ராணி காமிக்ஸ் மூலம் விழுந்தாலும், ஒரு புதிய வண்ணமயமான உலகத்தை அறிமுகபடுத்தியது லயன் காமிக்ஸ் மூலம்தான். அதன் ஆதிமூலமான முத்து காமிக்ஸ், கூடவே வெளிவந்து கொண்டிருந்தாலும், அதன் மீதான ஈர்ப்பு அவ்வளவாக எடுபடவில்லை, அவ்வயதில். ஒரு வேளை மற்ற காமிக்ஸ் நண்பர்கள் போல அவர்கள் வெளியான காலகட்டங்களில் அவற்றை ரசிக்க நான் பிறவி எடுக்கவில்லை என்பது காரணமாக இருக்கலாம்.

  இருந்தாலும் லயன், மினி லயன், திகில் என்று எனக்கு காமிக்ஸின் பல களங்களை அறிமுகம் செய்து வைத்த விஜயன், மற்றும் பிரகாஷ் என்ற இரு நபர்களை, அத்துறைக்கு இட்டு வரும் பெரும் காரியத்தை செய்தவர் உங்கள் தந்தை என்ற முறையில், திரு சவுந்தரபாண்டியன் அவர்களுக்கு என் மரியாதைகள் என்றும் கடமையாகும்.

  NBS என்ற முயற்சிக்கு என்னுடைய நிலைபாடுகளை நான் ஏற்கனவே தெரிவித்திருந்தாலும், 40 வருட காலமாக தொடர்ந்து வரும் ஒரு காமிக்ஸ் சகாப்தத்தின் கொண்டாட்டங்களுக்கு இதை விட ஒரு சிறப்பான வழியை யோசிக்க முடியில்லை, என்பது உண்மை. அதுவும் அந்த சிறப்பு இதழை உங்கள் தந்தையே வெளியிடுவார் என்று கூறியது, மூலம் ஜனவரி 11 ஐ ஆவலுடன் எதிர்பார்க்க வைத்து விட்டீர்கள்.

  ஒரே கேள்வி, ஜனவரி 11 மாலை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள், சரியான நேரத்தை சொல்லி விட முடியுமா... மாலை 6 க்கு மேல் என்றால் அலுவலக வேலைகளை முடித்து கொண்டு அங்கு ஆஜர் ஆகி விடுவது சுலபமாகி விடும்.

  ReplyDelete
  Replies
  1. Rafiq Raja : புத்தக விழாவை தமிழக முதல்வர் அவர்கள் கரங்களால் துவக்கிட ஏற்பாட்டாளர்கள் முயற்சிப்பதாகப் படித்தேன் ; So அந்தத் துவக்க நேரத்து கோலாகலங்கள் நிறைவான பின்னே தான் ஸ்டால்களில் business துவங்கிடும். So மாலை ஆறு மணி என்பது practical ஆக இருந்திடும் ! அலுவலகப் பணிகளுக்கும் பாதிப்பின்றி நண்பர்கள் வருகை தந்திடவும் ஏதுவாக இருக்கும் ! Welcome !!

   Delete
 20. வெளியூரில் வசிக்கும் வாசகர் பொருட்டு NBS ரிலீஸ் விழாவை வீடியோ பிடித்து யூடியூப்பில் ஏற்றம் செய்ய முடியுமா? முத்து காமிக்ஸின் தந்தையை சந்திக்க ஏகப்பட்ட ஆவல்...

  ReplyDelete
  Replies
  1. நமது எடிட் அதற்கான ஏற்பாடை செய்திருக்காமல் போனாலும், அங்கு ஆஜர் ஆகும் நம் நண்பர்கள் மூலம் வீடியோ எடுக்கபட்டு பகிர்ந்து விடுகிறோம் :P

   Delete
  2. avudaiappan sankaran : நமக்கும், 'பளிச்' ஒளி வட்டத்திற்கும் ஏழாம் பொருத்தம் தானே ! So - கொஞ்சமாய் போட்டோக்களை எடுத்து நமது தளத்தில் வெளியிடுவதைத் தாண்டி பெரிதாய் எந்த ஏற்பாடுகளுக்கும் நான் திட்டமிடவில்லை ! ஆனால் ரபிக் சொல்வது போல - அன்று வருகை தரும் நண்பர்கள் உங்களின் ஆவலை நிச்சயம் பூர்த்தி செய்திடுவார்கள் !!

   Delete
  3. Please can somebody record video and share with us. This will immensely help overseas people.

   Delete
  4. Friend avudaiappan sankaran,
   We ll try to do that... But it ll be a raw video... No editing or sound mixing..

   Delete
 21. டியர் எடிட்,

  மேலே ஒரு நோஸ்டால்ஜியா கருத்து என்பதால், தனியாக இங்கே ஒரு கேள்விபடலம் :P

  1. ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பரில் 2 இதழ்கள் என்று சந்தா முறை இருந்தது. தற்போது ஜானி இதழ் மட்டுமே என்பதால், அந்த இன்னொரு இதழுக்கான சந்தாவை எவ்விதம் சரிகட்ட போகிறீர்கள்.

  2. டெக்ஸ் கதை போல ஜானி இதழையும் நிறுத்தி வைத்து, கலரில் வெளியிட ஒரு வாயப்பு இருந்தால் அதை பரிசோதித்து பார்க்கலாமே? இந்த 2 இதழ்களுக்கான சந்தாவை அடுத்த வருட சந்தாவில் கணக்கு வரவு வைத்து கொள்ளலாம்.

  3. தலை வாங்கி குரங்கு ரீபிரின்ட் முதலில், சந்தாதாரர்களுக்கு இலவசம் என்று குறிபிட்டிருந்தீர்கள். அது பின்பு சந்தாவில் ஐக்கியமாக்கபட்டு கொண்டது. அதற்கு பதிலாக 2012 ன் சந்தாதாரர்களுக்கு ஏதேனும் இலவசம் உண்டா ? :D

  3. சாதரணமாக, கேட்டலாக் என்று ஒன்று உருவாவதே, இந்த இந்த மாதங்களில் இப்படிபட்ட புத்தகங்கள் வெளியாகிறது என்பதை அறிவிப்பதற்கும். அனைத்து புத்தகங்களையும் வாங்க மொத்தமாக சந்தா கட்ட யோசனையில் இருக்கும், நபர்கள் அவ்வப்போது முன்பே பிளான் செய்து தனி தனி புத்தகங்களை வாங்க முடியும் என்பது தானே. 2013 ன் நம் கேட்டலாக் அம்முறையில் வெளியாவது தான் சிறப்பாக இருக்க முடியும். கொஞ்சம் காலம் தாழ்த்தி அக்கேட்டலாக்கை மாதம் இவ்விதழ் என்ற கட்டுபாட்டுடன் வெளியிட முடியாதா ?

  4. புத்தக கண்காட்சிக்கு வரும் நண்பர்கள், அங்கேயே 2013 க்கான லயன் முத்து மற்றும் கிளாசிக் சந்தா கட்டும் பட்சத்தில், அங்கே வெளியாகவிருக்கும் 2 காமிக்ஸ் கிளாசிக்களை சந்தா முறையில் அங்கேயே பெற்று கொள்ள முடியுமா ? புத்தகங்களை நேரில் பார்க்கும் போது சந்தாகளை ஆரம்பிக் எண்ணும் நபர்களுக்கு அது உதவ கூடும்.

  5. மாடஸ்தி ப்ளைசி போன்ற கதைகள் ஸ்டிரிப் பார்மெட்டில் வெளிவந்தவைகள் என்பதால், இனி அவற்றை நமது 100 ரூபாய் இதழ்களின் சைஸுக்கு மாற்றி கஷ்டபடுவதை விட்டு விட்டு அந்த கதைகளை டெக்ஸ் கதைகள் போல தனியான சைஸுக்கு வெளியிடலாமே ? அம்முறையில் சின்ன பலூன்களின் நடுவே, அந்த கிளாசிக் கதைகளை கஷ்டபட்டு படிப்பதில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

  கடைசியாக கமெண்ட் மாட்ரேஷன் என்ற ஒரு விஷயத்தின் மீதான தங்கள் நிலைபாடை வரவேற்கிறேன். லயன் முத்து இதழ்களின் வாசகர்களை பொறுத்த வரை இக்கலம் ஒரு புதிய முயற்சி என்பதால், ஆரம்ப கால சிக்கல்களை தவிர்த்து நிதான போக்கை கையாள நமது வாசகர்களும் பலகி கொள்வார்கள் என்று நம்பலாம். எனவே, சுதந்திரமான கருத்துகள், அவ்வப்போது மாட்ரேஷன் கட்டுபாட்டுக்குள் வெளிவருவதற்கு எனது ஓட்டுகள் ஆஜர்.

  ReplyDelete
  Replies
  1. Rafiq Raja :இதோ எனது பதில் படலம் :

   1.டிசெம்பரில் வரவிருந்த இன்னொரு பத்து ரூபாய் (டெக்ஸ் வில்லர்) இதழுக்கும் சேர்த்து - 2012-ன் சந்தாவில் வசூலிக்கப்பட்டிருந்த தொகை - ரூ.30. (இதழ்களின் விலை ரூ.10 + ரூ.10 பிளஸ் தபாலில் அனுப்பிடக் கட்டணமாய் ரூ.5+5). டெக்ஸ் வில்லர் இப்போது கிடையாதென்பதால், ஜானியின் இதழை மாத்திரம் அனைவருக்கும் கூரியர் மூலமே அனுப்பிட்டால் - சந்தாத் தொகையினை நேர் செய்தது போலாகிடும் ; சிக்கலின்றி இதழும் உங்களைத் தேடி வந்திடுமே என்று நினைத்தேன்.(கடைசியாக தபாலில் அனுப்பிய மாதம், ஏராளமான தாமதங்கள் ; 'புக் கிடைக்கவில்லை' என்ற புகார்கள் ! ) ஒருக்கால் கூரியருக்குப் பணத்தை விரயம் செய்திட வேண்டாமே என்று நண்பர்கள் அபிப்ராயப்பட்டால், அவர்களுக்கு மாத்திரம் தபாலில் இதழினை அனுப்பி விட்டு, மீதமிருக்கும் ரூ.15 -ஐ 2013-க்கு கொண்டு செல்லத் தயாராக உள்ளோம் !

   2.ஜானியின் அட்டைப்படம் அச்சாகி ஆண்டுகள் பலவாகி விட்டன ; தவிர உள்பக்கங்களும் அச்சாகி 4 நாட்களாகி விட்டன ! So - கருப்பு வெள்ளை பாணியினை one last time ரசித்தே ஆக வேண்டும் !!

   3.கஜானாவின் நிதி நிலைமை சற்றே புஷ்டியாகட்டும்...சந்தா செலுத்தும் நண்பர்களின் அன்பிற்கு நிச்சயம் நன்றிக்கடன் செலுத்துவோம் !

   4.கேட்லோகில் 2013-க்கான அத்தனை இதழ்களின் விபரமும் உள்ளது. அவற்றில் எந்த இதழ் - எந்த மாதம் என்பது மாத்திரமே அறிவிக்கப்படாது இருக்கும் ! இது நமது பணி வசதியின் பொருட்டே...!எதிர்பாரா சில நிகழ்வுகளால் நமது scheduleகள் சில வேளைகளில் பாதிக்கப்படுவதால் ஓராண்டுக்கு முன்னதாகவே , சரியான மாதங்களை pinpoint செய்வதில் சிக்கல் உள்ளது.

   உதாரணம் சொல்வதானால் நமக்கு பிரெஞ்சு கதைகளை மொழிபெயர்ப்பு செய்திட்டுத் தரும் ஒரு இல்லத்தரசியின் மாமியார் சமீபத்தில் காலமாகி விட்டார். எப்போதும் சொன்ன தேதிக்கு 'டாண்' என்று கதைகளை மொழிபெயர்ப்பு செய்து தரும் அவரால் எதிர்பாரா இந்த சூழ்நிலையில் ஒரு மாதம் ஏதும் செய்திட முடியாது போனது ! அந்த சமயம் நாம் திட்டமிட்டிருந்த NBS schedule நிறையவே தள்ளாடிப் போனதென்றே சொல்லுவேன். இந்தாண்டின் துவக்கத்தில் நம் ஓவியரை நாய் கடித்து அட்டைபடப் பணிகளால் தாமதம் நேர்ந்தது இன்னொரு உதாரணம். சமீபமாய் நமது அட்டைப்பட கம்ப்யூட்டர் டிசைனருக்கு திருமணம் நடந்திட்டதால் - புது மாப்பிள்ளையை எப்போதும் போல் அவசரப்படுத்திட இயலாது போனது இன்னொரு நிகழ்வு. So இதழ்களின் ரிலீஸ் மாதங்களை நிர்ணயம் செய்திடுவது அந்த இதழுக்கான (அத்தியாவசியத்)தயாரிப்புப் பணிகள் 100% நிறைவு பெற்ற பின் இருந்திட்டால் foolproof என்பதை அனுபவம் உணர்த்தித் தந்துள்ளது.

   இப்போதெல்லாம் நாங்கள் 2-3 மாதங்களுக்கு அட்வான்ஸ் ஆகப் பணிகளை செய்திடப் பழகி வருவதால், தொடரும் 4 மாதங்கள் வரை இதழ்களின் வரிசையில் மாற்றமின்றிச் செய்திடுவது சுலபமே. 12 மாதங்களுக்கும் சாஸ்வதமானதொரு schedule நமக்கு சாத்தியமாக இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவையே !

   5.யெஸ் - அங்கேயே சந்தா செலுத்தி இதழ்களையும் வாங்கிக் கொள்வது நிச்சயம் முடியும் !

   6.இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட சங்கதி என்பதால் பெரிதாய் மாற்றம் செய்திட இயன்றிடவில்லை. வரும் ஆண்டுகளில் கறுப்பு -வெள்ளையும் வண்ணமும் ஒன்றாய் சங்கமிக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்திடும்.

   அவசரமாய் தீர்மானங்கள் எடுத்து விட்டு, ஆற அமர வருந்திய நாட்கள் இனியும் தொடர வேண்டாமே என்ற சிந்தனை மண்டைக்குள் தோன்றியதால் இந்த comments moderation -க்கு நான் கை தூக்கிடப் பிரியப்படவில்லை. தவிரவும் நீங்கள் சொல்லுவது போல் துவக்க கட்டச் சிக்கல்கள் எல்லா முயற்சிகளுக்கும் பொதுவானவையே ! அந்தப் பருவத்தை நிதானமாய்க் கடந்திட ஆண்டவன் துணை நின்றால் நம் பிரச்னைகள் கதிரவனைக் கண்ட பனித் துளிகளே !

   Delete
  2. தயவு செய்து Courier மூலம் மட்டுமே அனுப்புங்கள் சார்! இந்த ஆண்டின் இறுதி இதழை அடுத்த ஆண்டு பெற்றிடும் உத்தேசம் இல்லை! :)

   Delete
  3. Karthik Somalinga : பாவப்பட்ட எங்களது front office பணியாளர்களுக்காகவாவது இதழ்களைக் கூரியரிலேயே அனுப்புவது தேவலாம் என்று நினைக்கிறேன். தபாலில் அனுப்பிடும் தருணங்களில், இதழ்கள் கிடைக்கப் பெறாத நண்பர்களின் போன் அழைப்புகளுக்குப் பதில் சொல்லுவது சுலபக் காரியமல்லவே :-)

   Delete
  4. @ editor: "பாவப்பட்ட எங்களது front office பணியாளர்" - while I understand what made your write this - they should also be knowing that they belong to a unique publication team - a pioneering team, a team that has gotten to be part of such a joyous journey. Thanks to them for making so many days of our lives joyful! Appreciate if you can make them read this!

   Delete
  5. நிச்சயமாய் ! They are the wheels and the cogs that make the show possible...! They get their rightful place under the sun in NBS !

   Delete
 22. NBS மட்டுமே எதிர் பார்த்து இருந்த எங்களை CC வெளியீடுகள் பற்றிய அறிவிப்பு மிகுந்த சந்தோஷமளிக்கிறது. அதேநேரத்தில் சென்னை புத்தகக் கண்காட்சியில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற நினைவு வருத்தம் அளிக்கிறது. மற்ற வலைப்பூ நண்பர்களும் சென்னை புத்தகக் கண்காட்சியினை அவரவர் பாணியில் coverage செய்தாலும்...உங்களிடமிருந்து காமிக் காண்-ஐ போல சில பதிவுகளை 'கலந்து கொள்ள முடியாத வாசகர்கள்' சார்பில் எதிர் பார்க்கிறேன்.

  //Comments moderation என்பது சிந்தனையில் முதிர்ச்சி வரப் பெறா நண்பர்களின் வருகை மிகுந்திருக்கும் தளங்களுக்கு அவசியப்பட்டிடலாம் ; நமக்கல்ல என்ற நம்பிக்கை எனக்கு இன்னமும் உள்ளது.//

  இது உங்களது சிந்தனையின் முதிர்ச்சியை காட்டுகிறது. இந்த இடியாப்ப சிக்கலை எப்படி எதிர்கொள்ள போகிறீர்களோ என்று எண்ணியிருந்தேன். ஆசிரியர் என்னும் அந்த பெயருக்குண்டான பக்குவத்துடன் செயல் பட்டுள்ளீர்கள். "Kudos dear Edi".

  ReplyDelete
  Replies
  1. 2013 -க்கான லயன் காலண்டரும் தயாராகி கொண்டிருக்கும் என நம்புகிறேன்...!?

   Delete
 23. விஜயன் அவர்களே,

  கடைசியாக வரும் ஜானி புத்தகத்தில், வருகிற சென்னை புத்தக கண்காட்சிக்கு NBS வெளியிடை முன்னிட்டு ஒரு சின்ன அழைபிதழ் இன்னைத்து அனுப்பினால் நன்றாக இருக்கும்.

  It is a special and milestone event for us. Sending a Invitation to our comics family will be a nice gesture. It will encourage people to be part of the book release.

  ReplyDelete
  Replies
  1. நல்ல ஐடியா பாஸ்!

   Delete
  2. Mahesh : ஏற்கனவே அமல்படுத்தியாச்சு :-) தொடரும் சில நாட்களில் மரணத்தின் நிசப்தம் இதழோடு இதனைப் பார்த்திடப் போகிறீர்கள் !

   Delete
  3. ஆஹா...!

   அதுபோலவே, கடந்த சில வாரங்களுக்கு முன்னரான உங்கள் பதிவுகளில் வந்திட்ட 'சர்வே', காமிக்ஸ் அறிவுப்போட்டி முடிவுகளும் ஜனவரியில் வரப்போகும் NBS இல் இடம்பிடிக்குமா சார்?

   Delete
  4. Podiyan : ஒளி வெள்ளத்தில் முழுக்க முழுக்க முத்து காமிக்ஸ் மாத்திரமே திளைக்க வேண்டியதொரு தருணம் இது என்பதால், நமது சர்வே முடிவுகள் + லயன் காமிக்ஸ் சம்பந்தமான quiz -க்கான விடைகளை தொடரும் Feb '13 இதழில் வைத்துக் கொள்ளுவோமே என்று நினைத்தேன் ! எனினும் நமது தளத்தில் அவற்றை டிசம்பர் இறுதிக்குள் அரங்கேற்றிட்டால் போச்சு !

   Delete
  5. கேள்வி-பதில் ஓகே. ஆனால், சர்வே நம்ம 'முத்து' காமிக்ஸ் சம்பந்தப்பட்டதுதானே சார்? சரி, டிசம்பர் முடிவுக்குள் நமது தளத்தில் வந்தாலே ஓ.கே.தான்! காத்திருப்போம்; பிஸியில மறந்துடாதீங்க ப்ளீஸ்!

   Delete
 24. ஏனோ தெரியவில்லை ஏதோ எழுத வேண்டும் என்று ஆவல் தூண்டுகிறது. எழுதியதை இங்கே பதிவிட்டு மகிழ வேண்டும் என மனம் அலைப்பாய்கிறது. ஒருவேளை NBS மேலிருந்த ஆர்வம் முதன் முறையாக என் மன கட்டுப்பாட்டை மீறி தன் எண்ணங்களை சிதறடிப்பதால் இப்படி ஒரு நல்ல வினை எம்மை ஆட்கொள்வதாக நினைக்கின்றேன்!

  ஒவ்வொருவரின் ரசனைக்கேற்ப சிலரின் எண்ணங்கள் எண்ணங்களாகவே உருப்பெறுகின்றன, சிலரின் எண்ணங்கள் எழுத்துக்களாக உருமாற்றம் அடைகின்றன, சிலரின் எண்ணங்கள் கருத்துக்களாக பதிவிடப்படுகின்றன, சிலரின் எண்ணங்கள் அழகோவியமாக தீட்டப்படுகின்றன. இதில் இவர் இந்த நடையில் தான் எழுதவேண்டும் என்று கூறுவது, கருத்து திணிப்பு போன்ற ஒரு தோற்றத்தை நமக்கு ஏற்படுத்திவிடாதா நண்பர்களே! இங்கு உள்ள எழுதப்படாத விதியை மீறாத வரை தவறான வழிமுறையை எந்த ஒரு பதிவும் நமக்கு ஏற்படுத்தி விடாது அல்லவா! ஒருவரின் பெயர் ஒன்றே நமக்கு போதும், அவரின் கருத்துக்கள் நமக்கு பிடிக்குமா அல்லது பிடிக்காதா என்பதை, அந்த பதிவை படித்து தான் நாம் அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனை அங்கு தலை தூக்குவதே இல்லை அல்லவா!

  நான் NBS இரண்டுக்கு மேற்பட்ட புத்தகங்களை முன்பதிவு செய்துள்ளேன், எவருக்கும் கொடுக்கவோ அல்லது விற்பனைக்கோ அல்ல. என் வீட்டில் உள்ள கண்ணாடி Book Shelf ல் சுமார் 1000 காமிக்ஸ் புத்தககங்களை வைக்க முடியும், எனவே Rack க்கு ஒன்றாக, ஒரு ஓரம் முன் வைத்து பார்வையிடும் போதெல்லாம் அதன் அழகை ரசிப்பதற்காக! ஒவ்வொருவர் ரசனையும் ஒருவிதம் அதனாலேயே அவரவர் எழுத்துக்களும் பலவிதம்!

  அனைவரும் நமக்கு இனிய நண்பர்களே, நாம் அவர்களுக்கு நண்பர்களாக இருந்துவிட்டால்!!!

  ReplyDelete
 25. உங்கள் தந்தையார் தனது அச்சக & மற்ற நிறுவன பணிகளுக்கிடையே, காமிக்ஸ் காதலுக்கு ஒதுக்கிய நேரம் விரைவில் NBS-ஆக அவர் கையில் தவழப் போகிறது. உணர்வுபூர்வமான அந்த ஜனவரி 11 மாலையில் NBS-ஐ அவருக்கு வழங்கப் போவது, அவரது கைகளில் தவழ்ந்து வளர்ந்த புத்திரன் என்பது அவருக்கு நிச்சயம் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும்! ஒரு மனிதருக்கு இதைவிட பெரிய வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்திடுமா என்ன?! வாழ்த்துக்கள் சார்! :)

  ReplyDelete
  Replies
  1. Karthik Somalinga : அழகான வரிகள் :-)

   Delete
  2. @ Karthik: Lines from your heart! As we read our dear editors lines, I am sure most of us would have reflected on these thoughts.

   நமது படைப்புக்களின் பரிணாம வளர்ச்சி நமது கைகளில் தவழ்ந்திடும் வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லையே ! It is going to be an emotional yet remarkable moment. நிறைந்த நெஞ்சங்களும், பனித்த விழிகளும் அங்கு கூடிடுவது இப்போதே கண்ணில் தெரிகின்றதே !!

   BTW folks, YMCA Nandanam is about a KM from my house - walkable for sure - so I am pinching myself on my luck :)

   Delete
  3. பொறமை தீய எரிய விடுறீங்களே Comic Lover (a) சென்னை ராகவன். :) ஹ்ம்ம்ம் எங்களுக்கு தானா அலைச்சல்? அந்த பஸ் கூட்டத்த நெனச்சா தான் பீதியா இருக்கு :(

   Delete
 26. அருமையான பதிவு.
  இந்த வருடத்து சென்னை புத்தக கண்காட்சியின் சிறப்பே நமது காமிக்ஸின் NBS வெளியீடே,நிச்சயமாக .
  வெளியீட்டை எதிர்நோக்கி .......
  நன்றியுடன் ....

  ReplyDelete
 27. டியர் எடிட்டர்,

  ஜனவரி 10தாம் தேதி காமிக்ஸ் கிளாசிக்ஸ் புத்தகங்களும் சந்தா செலுத்தியவர்களுக்கு அனுப்ப பட்டு விடுமா? நெடுநாளைக்குப் பின்னர் பல காமிக்ஸ் புத்தகங்கள் ஒரே சமயத்தினில் வந்திடும் விஷயம் ஒரு சிறிய இனம் புரியா மகிழ்வினை, மலர்வினை மனத்துள் எழச் செய்கின்றது. We have to go back to eighties to really find simultaneous release of multiple comic books. Hats off to the team and to the intent behind your publications. Eagerly awaiting this January ...!

  ReplyDelete
  Replies
  1. Comic Lover (a) சென்னை ராகவன் : இயன்ற அளவிற்கு முயற்சிப்போம் ; ஆனால் இங்கு practical ஆனதொரு சிக்கல் உண்டு ! கூரியரின் எடை ஒரு கிலோவைத் தாண்டும் போது கட்டணங்கள் பன்மடங்கு கூடுகின்றன ! ஏற்கனவே NBS -ன் எடை ஒரு கிலோ என்பதால், அதனோடு CC இதழ்களையும் இணைத்து அனுப்புவது சாத்தியப்படாது ! அதே 10 தேதியன்று இயலாது போனாலும், ஓரிரு நாட்களுக்குள் CC பிரதிகளையும் அனுப்பிடுவோம் !

   இந்தப் பொங்கல் விடுமுறைகளை வேறு எதற்கும் செலவிட உங்களுக்கு சமயம் இருக்கப் போவதில்லை என்பது மாத்திரம் நிச்சயம்:-)

   Delete
  2. குடியரசு தினத்தினை ஒட்டிய ஒரு வாரம் விடுமுறை எடுத்துள்ளேன்! இல்ல விழா ஒன்று. இந்த காமிக்ஸ்களைப் படித்திடும் காரணம் ஒன்று. உங்கள் அனைவரையும் சந்தித்திடும் ஆர்வம் ஒன்று. ஆக மொத்தம் முப்பெரும் விழா ..! காத்திருக்கிறேன் ..!!

   எந்த புத்தகத்தினை எப்போது வேண்டுமானாலும் அனுப்பிடுங்கள். படித்திடுவேன் ..! சும்மா ஒரு ஆர்வக் கோளாரினால் கேட்ட கேள்வி அது.

   Delete
 28. //Vijayan: 16 December 2012 09:52:00 GMT+05:30
  Karthik Somalinga : அழகான வரிகள் :-)//

  இந்த முறை 50ஆவது பின்னூட்டம் ஆசிரியரதே! :)

  ReplyDelete
 29. வந்து கலந்து கொள்ள வில்லை என்றாலும் எங்கள் மனம் ஒப்பாது. திரும்ப எவ்வாறு ரெயிலிலோ பஸ்சிலோ அந்த பொங்கல் நெருக்கடியில் இடம் பிடித்து பயணிப்பது என்ற குடைச்சல் ஒன்றே தற்போது மண்டையினுள். பார்க்கலாம். பொங்கலுக்கு பின்னரும் நீங்கள் அங்கு வரும் வாய்ப்புகள் உறுதியாக உண்டா எடிட்டர் சார்?

  ReplyDelete
  Replies
  1. புத்தக ப்ரியன் : உங்கள் சிரமங்கள் புரிகிறது ! எதிர்பாரா இந்தத் தேதி மாற்றம் அனைவருக்கும் சிக்கல்களே !

   கடந்த 3 மாதங்களாய் பயணங்கள் ; அல்லது பணிகள் என்று சற்றே தீவிரமாய் இருந்து விட்டதால் பொங்கல் விடுமுறைகளை (வீட்டிலுள்ள) குடும்பத்தோடு கழித்திட்டால் நலம் என்ற சூழல்..! உங்களால் சென்னைக்கு வந்திட இயலாது போயினும், சிவகாசிக்கு வருவது சாத்தியப்பட்டால்,most welcome too !

   Delete
  2. மிக்க நன்றி சார் அழைப்பிற்கு. எடிட்டர் என்னை (நம்மை) அங்கு அழைத்தால் நாம் அங்கு அவர் வீட்டில் ஒரு working லஞ்ச் & dinner & etc etc விற்கு கூடி விடுவோமா? :) what say நண்பர்களே? எடிட்டர் சார் இது ஓகே தானே உங்களுக்கு? :)

   Delete
  3. //கடந்த 3 மாதங்களாய் பயணங்கள் ; அல்லது பணிகள் என்று சற்றே தீவிரமாய் இருந்து விட்டதால் பொங்கல் விடுமுறைகளை (வீட்டிலுள்ள) குடும்பத்தோடு கழித்திட்டால் நலம் என்ற சூழல்..!// எடிட்டர் சார் வீட்டிலுள்ள குடும்பத்தோடு என்று அழுந்த பதிந்து மறுபடியும் தனது உஷார்தனத்தை காட்டி உள்ளார்... சீக்கிரமா இந்த பாயிண்ட்ட நோட் பண்ணுங்க நண்பர்களே :)

   Delete
 30. Dear Sir,

  NBS மேலும் சில நாட்கள் தள்ளிப்போவது வருத்தமே.
  மேலும் வெளிப்படியாக சொல்லியே புரியாதவர்களுக்கு துப்பறிந்து சொல்வது உதவாது தான்.
  நீங்கள் ஏற்கனவே என்னிடம் வலியுருத்திருந்ததை போல இனி செயல்படுவேன்.
  நன்றி சார்.

  Awaiting for the huge victory of NBS.

  ReplyDelete
  Replies
  1. கௌண்டமணி: நாராயணா இந்த கொசு தொல்ல தாங்க முடில்ல நாராயணா!!! :)

   Delete
  2. மொட்ட மண்டை : மன்னிக்க வேண்டும் வாசகரே! இதுபோன்ற பதில்களால் ஆசிரியர் படும் சங்கடத்தை இந்த பதிவில் ஆசிரியர் தெளிவாகவே குறிப்பிட்டு எழுதி உள்ளார். இனியும் முடிந்த பிரச்சனையை தோண்டுவது எந்த விதத்தில், எவருக்கு நிம்மதியை தரக்கூடிய செயலாக இருக்கமுடியும் என்று மற்றவர்களைப் போலவே எனக்கும் தோன்றவில்லை! நிச்சயமாக நாம் இங்கு இனிமையாக இளைப்பாற ஒதுங்கும் இடமாக தானே இது இருக்க வேண்டும்? தயவு செய்து நம்மை பற்றி மட்டுமே நாம் சிந்திப்போம்! இனிமையான ஞாயிறாக காலையிலிருந்து இங்கே இந்த தளம் இருக்கிறது, அதை மேலும் சிறக்க வைப்பது மட்டுமே நம் கடமை அல்லவா?

   Delete
  3. அவரது தொனி எரிச்சல் படுத்தியதால் நாகரீகமாகவே நையாண்டி செய்தேன். தவறு என்றால் மன்னிப்பை கோருகிறேன் அனைவரிடமும்.

   Delete
 31. //Vijayan: ஒளி வெள்ளத்தில் முழுக்க முழுக்க முத்து காமிக்ஸ் மாத்திரமே திளைக்க வேண்டியதொரு தருணம் இது என்பதால், நமது சர்வே முடிவுகள் + லயன் காமிக்ஸ் சம்பந்தமான quiz -க்கான விடைகளை தொடரும் Feb '13 இதழில் வைத்துக் கொள்ளுவோமே என்று நினைத்தேன் ! எனினும் நமது தளத்தில் அவற்றை டிசம்பர் இறுதிக்குள் அரங்கேற்றிட்டால் போச்சு !//

  கேள்வி-பதில் ஓகே. ஆனால், சர்வே நம்ம 'முத்து' காமிக்ஸ் சம்பந்தப்பட்டதுதானே சார்? சரி, டிசம்பர் முடிவுக்குள் நமது தளத்தில் வந்தாலே ஓ.கே.தான்!

  ReplyDelete
 32. //புத்தகத் திருவிழாவின் துவக்க நாளான ஜனவரி 11 தேதியன்று மாலையில் சென்னையில் நமது NBS இதழை என் தந்தை ரிலீஸ் செய்திடுவார் !//
  அன்றே அனைத்து நண்பர்களும் கூடுவோமே !

  ReplyDelete
  Replies
  1. நண்பரே ஸ்டீல் க்ளா திரும்ப நாம் ஊர் செல்வதை எண்ணி பாராது பேசுகிறீர்கள் போலும். சென்னை பட்டினமே வெள்ளி சனி இரு தினங்களில் தான் பண்டிகைக்கு வெளியேறும். நான் ஒரு முறை அந்த நேரத்தில் மாட்டி உள்ளேன். பொங்கலுக்கு பின்னர் நாம் கூட இயலுமா? இல்லை எனில் எங்கள் வீட்டில் எரிமலை வெடிக்கும். :( உங்கள் வீட்டில் அவ்வாறு இல்லை போலும். கொடுத்து வைத்தவர் போலும் நீங்கள்... நற நற நற) :)

   Delete
  2. கொடுத்து வைத்தவர்தான் !ஒரே பஸ்சில் இடம் கிடைக்காது அடித்து பிடித்து ,மாறி மாறி செல்வதும் சந்தோசமாய் இருக்கும் நண்பரே !

   Delete
  3. நிறுவனருக்கு நாம் காடும் மரியாதை மற்றும் நன்றியாகவும் அமையுமே !

   Delete
  4. புத்தகங்களை நேசிக்க உதவியதற்கும்,காமிக்ஸ் காதலரை மகனாக நம் முன்னே நிருத்தியதர்க்கும்,அவரை சிறு வயதிலே ஊக்கபடுத்தியதர்க்கும் .......இக்கதைகள் தொடர அவரும் இப்போதும் உதவுவதற்காகவும்,நமது வாழ்வில் எதற்காகவும் இழக்க கூடாத ஒரு அற்புதம் அந்த நாள் ! என்பதே எனது எண்ணம் !

   Delete
  5. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : உங்களது அசாத்தியப் positive சிந்தனைகள் பிரமாதம் !

   Delete
 33. //புதிய சில படைப்பாளிகளிடமும் புதிய சில கதைகளுக்காக சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்திட்டதில் நிறையவே வெற்றி நமக்கு ! NBS இதழோடு வரவிருக்கும் 2013-ன் ட்ரைலர்களில் பார்க்கத் தானே போகிறீர்கள் !!//
  நண்பர்களே ஊகிக்க முடிகிறதா?

  ReplyDelete
  Replies
  1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : யூகிக்க சுலபமான (புதுக்) கதைத் தொடர்களல்ல இம்முறை ! எனினும் முயற்சிகள் செய்திடலாம் !

   Delete
 34. Cool cool cool it's really a pretty awesome news that we are going to have multiple issues in the same month also eager to see your father in the book fair. Honouring your father by making our dreams true. Hats off you sir. This going to be the biggest milestone for publishing industry. Great to hear right :).
  And
  Can we do our next year subscription during book fair?
  Could you please reconsider "Kollaikara mayavi" reprinting in digest as it was recently published in comics classics. I believe most of our readers having the book. Instead you can publish some other Mayavi story which is not yet reprinted. please consider this sir.

  Adios amigos,

  Giri

  ReplyDelete
  Replies
  1. Giridharan V : Yes of course, you can subscribe right there at the Book Fair ! Will see if we can do something about 'Kollaikaara Mayaavi' too !

   Delete
  2. Yahooooooo!!!!!!!! thanks for the reply sir and thanks for considering my request :)

   Delete
  3. >> Could you please reconsider "Kollaikara mayavi" reprinting in digest as it was recently published in comics classics. I believe most of our readers having the book. Instead you can publish some other Mayavi story which is not yet reprinted. please consider this sir.

   Dear Editor:

   How about reprinting Pathazha nagaram instead? This one came out in the very first classics issue in 2001 and many people missed it, including myself (if you still remember the forumhub mayyam.com discussion you and I had participated in 2001: http://forumhub.com/tlit/819.24320.18.24.43.html & http://forumhub.com/cgi-bin/list_or.pl?start=/home/forumh3/forumhub/www/tlit/8406.20648.03.46.30.html&all=1 ).

   By the time I heard that the classics were being reprinted and placed my order the first classics issue had already sold out. So please consider this for a reprint. Of course the final decision is up to you, but I wanted to suggest something that will make an old reader like myself and others happy.

   Delete
 35. அந்த பூனை கதை - Blacksad தானே?
  சிறுவர்களுக்கான "Yakari" கதையையும் பரிசீலிக்கலாமே சார்...

  ReplyDelete
  Replies
  1. Tamil Comics - SoundarSS : இன்னுமொரு நல்ல யூக முயற்சி - ஆனால் தவறான விடையே !

   Delete
  2. செளந்தர் ஏன் இந்த கொலவெறி:-) blacksad storya உங்கள் வலைதளத்தில் படித்து உங்கள் விமர்சனத்தை படித்த பிறகும் blacksadaaaaaaaa

   Delete
 36. Respected திரு சவுந்தரபாண்டியன் is the "Father of Tamil comics".
  Without his service, many generations would not have gotten the opportunity of this "beautiful and no-words-to-describe" experience of reading Tamil comics. Muthu and Lion were the pioneers in this movement.

  ReplyDelete
 37. Missed the "sir" in my urgency to post the message

  Respected திரு சவுந்தரபாண்டியன் Sir is the "Father of Tamil comics".
  Without his service, many generations would not have gotten the opportunity of this "beautiful and no-words-to-describe" experience of reading Tamil comics. Muthu and Lion were the pioneers in this movement.

  ReplyDelete
  Replies
  1. organicyanthiram : நமக்கும் முன்னோடிகள் இல்லாதில்லை ! Maybe அவர்கள் விடாப்பிடியாக comics வெளியீட்டைத் தொடராது போனதே அவர்களில் நிறையப் பேரை நமக்கு மறந்து பொய் விட்டதன் காரணமாக இருக்கலாம் ! பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவியான Ms .பிரபாவதி இது தொடர்பாகச் செய்துள்ள ஆராய்சிகளை ; தேடல்களைப் படிக்க இயன்றால் மலைத்துப் போய் விடுவோம் !

   Delete
  2. Dear Vijayan Sir,
   it shows your and senior editor திரு சவுந்தரபாண்டியன் Sir's down to earth personality. You may be right sir, but in our generation - i mean during the 80s - though there were many comics, it was Lion-muthu's publication and particularly the Mayavi character that stood out and pulled us -a group of 20 to 25 boys- into comics reading habit which is continuing to this date. So it is only apt title to திரு சவுந்தரபாண்டியன் Sir.

   Delete
  3. Sir is there any online link to read her research about comics or any other way. If you could help us to read her research would be really appreciated:). Also is there any chance to publish her research in any of our comics.

   Delete
  4. Vijayan Sir,

   I second Giri! It would be nice to read Ms.Prabavathi's reasearch on Tamil Comics! Would it be possible for you to publish them on this blog or on any of our books?

   Delete

 38. //நேருக்கு நேராய் சந்திக்கும் பட்சத்தில் - 'எதைப் பேசலாம் ? எதை தவிர்த்திடுவது நலம் ?' என்று சிந்திக்கும் நாம், எண்ணங்களை எழுத்தாக்கும் சில வேளைகளில் அந்த சிந்தனைக்கு இடமளிக்காது போவது// எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் சார். ஒரு தேர்ந்த எழுத்தாளருக்கே உரிய வார்தை பிரயோகம்.

  தங்கள் பதிவை படித்ததிலிருந்து மனம் துள்ளிக் குதிக்கிறது. அப்படியே "NBS" வெளியீட்டை காண இந்தியாவிற்கும் ஒரு டிக்கெட் போட்டுவிடலாமா என்று யோசனை செய்து கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Radja from France : பத்து மணி நேரப் பயணத்தின் மறு முனையில் இருக்கும் உங்களின் உற்சாகம் உள்ளத்தை நிறையச் செய்கிறது ! காமிக்ஸ் எனும் ஒற்றைச் சொல்லின் ஆற்றலுக்கு இதை விட வேறென்ன விளம்பரம் வேண்டும் ?! நம் வரவேற்பு என்றும் உண்டு !!

   Delete
 39. ஆசிரியர்க்கு,ஒரு சிறிய கோரிக்கை .பலர் ஆசைபட்டாலும் N .B .S .இன் அட்டைபடம் மற்றும் அடுத்தவருட tralior புக் ஆகியவற்றை புத்தகத்தில் பார்த்து சந்தோஷ பட ஆசை படுகிறேன் .எனவே இங்கு அதை முன் கூட்டி வெளியீட்டு எங்கள் surprisai குறைக்க வைத்து விடாதிர்கள் .ப்ளீஸ் .மேலும் கிராபிக் நாவல்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து எங்கள் அதிரடி நாயகர்களை பின் தள்ளுவது போலே தோன்றுகிறது.வருடத்திற்கு ஒரு கிராபிக் நாவல் போதுமே.( அதுவும் கௌ பாய் கதையாக)

  ReplyDelete
  Replies
  1. Paranitharan K : கவலை வேண்டாம் ! NBS-ல் ஒரு suspense ..ஒரு காத்திருப்பு எஞ்சி இருக்கும் விதமே திட்டமிட்டுள்ளேன் !

   கிராபிக் நாவலைத் தேடி என்று பிரத்யேகமாய் நாம் வலை வீசுவதில்லை ; நல்ல கதையாக இருப்பதே முதல் எதிர்பார்ப்பு ! அதே போல் "எமனின் திசை மேற்கு" ஒரு கௌபாய் ரக நாவலாக அமைந்தது தற்செயலே ! தொடரும் நாவல்கள் அனைத்துமே கௌபாய் பாணியில் இருந்திடாது !

   Comic Lover (a) சென்னை ராகவன் சுட்டிக் காட்டுவது போல், சிறிது சிறிதாய் நம் எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே செல்வதும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தானே ?! கவலை வேண்டாம்...அதிரடிக் கதைகளுக்கு என்றுமே நான் ரசிகனே !!

   Delete
 40. ஆஹா...ஆஹா... புத்தகக்கண்காட்சியை நினைத்து கனவுகளிலும் கற்பனைகளிலும் மனது சிறகடித்துப்பறக்கிறது. ஆசிரியரையும் நம் நண்பர்களையும் சந்திக்க் என் மனம் எப்போதோ சென்னைக்கு வந்து அங்கேதான் சுற்றிக்கொண்டிருக்கிறது. என் உடல் மட்டும் இங்கே...

  ReplyDelete
 41. இதுவரை இரண்டு கிராபிக் நாவல்கள் தான் ப்ளானில் பார்த்த ஞாபகம். எனினும். பன்னிரண்டு மாதங்களில் இரு கிராபிக் நாவல்கள் வருதல் - அதுவும் இடைவெளி விட்டு - நன்றாகவே இருந்திடும் எனப்ப் படுகிறது.

  இன்னொரு விளக்கம்: ஆங்கில பதிப்பகத்தினர் பெரும்பாலும் இப்போது காமிக்ஸ் என்ற பொதுப்பெயரை நீக்கிவிட்டனர். படக்கதைகள் பெரும்பாலானவை கிராபிக் நாவல் என்றே அழைக்கப்படுகிறது. எனவே நாமும் புதிய genres நோக்கிய பயணத்திற்கு சித்தமாய் இருத்தல் வேண்டும்.

  (எனக்கும் டெக்ஸ் வில்லர் and now recently டைகர் மீது மிகப்பெரிய அபிமானமே என்ற போதிலும் இதனைப் பதிவிடுகிறேன்).

  இன்னும் எத்தனை நாள்தான் 'டொக் டொக்' என்று ஓடும் குதிரையின் மீதமர்ந்த நாயகன் 'டுமீல்' 'டுமீல்' சத்தங்கள் எழுப்பக் கேட்டிடுவது :) :)

  ReplyDelete
 42. டியர் விஜயன் சார்... எங்கள் தலைமுறை மட்டுமல்லாது வரும் தலைமுறையினரும் படிக்கும் பழக்கத்தை தொடர தயவு செய்து ஏதேனும் செய்வீர்கள் என்று நம்புகிறோம். தமிழில் ஒரு நல்ல் தரமானதொரு சிறுவர் பத்திரிக்கை இல்லை என்ற குறையை நீக்க முயற்சி செய்வீர்களா?

  ReplyDelete
  Replies
  1. Comics Rasigan : Your request is very valid

   In 1982
   we had Ambulimama, Balamithra, Rathnabala, Poonthalir, Gokulam, Every shop had Mayajala kathaigal, something vaguely i remember called "Pappa Manjari" and many more i would have forgotten. we had our own Muthu-Lion family, Rani, Mehta and many unbranded. So many children novels i read from an authour called "Alandur Mohanrangan" and so many others failed to note the names. Libraries were in every street corner and stocked lot of children books. Our Reading habits were very strong that at an age of 10 or 14, we also used to read shankarlal, rajesh kumar and rajendra kumar novels. It was very vibrant. interesting part is , we all would read everything.

   30 years later now in 2012, looking at a 11 - 14 year old, i get heart attack looking at their vocabulary and their ignorance in tamil as well as english language.

   Delete
  2. @ OY, oh those days! How many books for children we had ...! Let me look at comics alone: Tamil: Muthu Comics, (later) Lion Comics, Junior Lion, Mini Lion, Thigil, Rani Comics, Jamesbond Comics.

   English: Indrajal Comics, Star Comics, Amar Chitra Katha, Tinkle, Dalton Comics, Falcon Comics, Kiran Comics.

   Every week we had 2-3 comic books to read ...! Golden years of Indian children and comic fans !

   Delete
  3. @CL. Yes. Those were the days......Particularly Summer holidays with all these rocking names like Kodal Malar, Raatshasha special etc and special editions. We will be in cloud 9.

   Delete
  4. காமிக்ஸ் ரசிகன் ;organicyanthiram ;Comic Lover (a) சென்னை ராகவன் :

   நியாயமான சிந்தனைகளே ! ஏற்கனவே நம் நண்பர்களில் பலரும் முந்தையப் பதிவுகளில் இதனை எழுப்பியுள்ளார்கள் !

   இதே சூழ்நிலையில் நானொரு பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கும் பட்சத்தில், இளையவர்களை target செய்து எப்போதோ இன்னுமொரு இதழைத் தயாரிக்கக் கச்சை கட்டி இருப்பேன். ஆனால் அந்த சிந்தனை வேகத்தை, செயலிலும்,விற்பனையிலும் sustain செய்திடுவதில் சிரமங்களை சந்தித்து, சொதப்பியும் இருப்பேன் நிச்சயமாய் !

   கொஞ்சமேனும் ஒரு திட்டமிடல் ; ஒரு ஒழுங்கு சமீப காலமாய் தான் தலைக்குள்ளே துளிர் விட்டு வருவதால், 'எடுத்தோம் ; கவிழ்த்தோம்' என்றில்லாது, செய்வது எதுவாகினும் திருத்தமாய் இருந்திட வேண்டுமென்ற தீவிரம் உருவாகி உள்ளது ! நிதானமாய் அசை போட்டு வருவோம் ; சரியான தருணம் நெருங்கும் போது நிச்சயம் அதனை தவற விட மாட்டோம் !

   Delete
  5. @organicyanthiram: அநேகமாக நீங்கள் எல்லா இதழ்களையும் குறிப்பிட்டுவிட்டீர்கள் என்றே நினைக்கிறேன். எண்ணிப்பார்த்தால் குழந்தைகளுக்காக மட்டுமே 5-10 இதழ்கள் இருந்துள்ளன என்பது இப்போது ஆச்சரியமாக இருக்கும். நான் 2 ஆம் வகுப்பு படிக்கும் போதே புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்து விட்டேன். நம் நண்பர்கள் அனைவருமே அப்படித்தான். ஆனால் இப்போது எல்லா குழந்தைகளும் டிவி முன்னால். தமிழ் உரைநடை வார்தைகளே பல அவர்களுக்கு அந்நியமாகப்போய் விட்டன. தமிழ் வாசிப்பு பற்றி சொல்லவே வேண்டாம். 200 - 300 ரூபாய் விலையில் ஆங்கில புத்தகங்களை கேள்வி கேட்காமல் வாங்கிக்கொடுக்கும் பெற்றோர்கள் தமிழ் புத்தகங்களும் வாங்கிக்கொடுக்க வேண்டும். நல்ல புத்தகங்களின் வழிகாட்டலுடன் அவர்களுக்கான உலகத்தில் அவர்களை விட்டால் நல்ல முறையில் வளர்வார்கள். நல்லதொரு தலைமுறை உருவாகலாம்.

   Delete
  6. விஜயன் சார்.. மிக்க நன்றி...

   // கொஞ்சமேனும் ஒரு திட்டமிடல் ; ஒரு ஒழுங்கு சமீப காலமாய் தான் தலைக்குள்ளே துளிர் விட்டு வருவதால், 'எடுத்தோம் ; கவிழ்த்தோம்' என்றில்லாது, செய்வது எதுவாகினும் திருத்தமாய் இருந்திட வேண்டுமென்ற தீவிரம் உருவாகி உள்ளது ! நிதானமாய் அசை போட்டு வருவோம் ; சரியான தருணம் நெருங்கும் போது நிச்சயம் அதனை தவற விட மாட்டோம் !//

   நீங்கள் செய்வது எதுவாகினும் அதற்கான எங்களின் முழு ஒத்துழைப்பு என்றும் உண்டு. அப்படி ஒரு இதழ் வரும் பட்சத்தில் முதலில் அதை எங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுக்கும் பெற்றோர் நாங்களாகத்தான் இருப்போம்.

   Delete
  7. Thanks Vijayan sir for noting our request. You know when and what to do.
   @comics rasigan - Indeed what you say is absolutely right. Fully agree

   Delete
 43. இது நமது lion muthu வாசகர்களுக்கு ஆன ஒரு சிறிய கோரிக்கை .நமது புத்தககளை நமது ஊரில் விளம்பர படுத்த ஒரு யோசனை.இன்டர்நெட் காணாத பல நண்பர்களுக்கு இன்னமும் நமது lion muthu வருவது அறிய வில்லை .எனவே முடிந்த வாசகர்களால் நமது காமிக்ஸ் மாதம் தவறாமல் 50 மற்றும் 100 விலைகளில் வண்ணத்தில் ,பெரிய சைஸ் இல் நேரடி யாக உங்கள் இல்லத்திற்கே இப்போது வந்து கொண்டு இருக்கிறது என சில நமது நாயகர் களின் படத்துடன் 200,300 பிட் நோட்டிஸ் அடித்து செய்தி தாள் விற்பனையாலரிடம் கொடுத்தால் அவேர்களே செய்தி தாளில், மற்றும் புத்தகத்தில் வைத்து விளம்பர படுத்தி விடுவார்கள் .இதற்கான செலவு மிகவும் குறைவே.தாரமங்கலத்தில் புது வருடத்தில் நான் இதை செய்ய நினைக்கிறன் .பல வருடங்களுக்கு முன் எனது ஊரில் காமிக்ஸ் நண்பர் பலர் இருந்தனர். ஆனால் இப்போது என்னை தவிர வேறு எவருக்கும் தெரிவதாய் காணோம் .அவர்களை காணவும் முடியவில்லை. இதன் மூலம் ஒரு பழைய வாசகர் கிடைத்தாலும் எனக்கு மகிழ்ச்சி தான் .முடிந்த நண்பர்கள் இதை செயல் படுத்த பாருங்களேன் .ப்ளீஸ். .....

  ReplyDelete
  Replies
  1. Parani, You suggestions are very good.

   Additionally, i would also suggest that we take this message personally to our friends. When we read comics 2 or 3 decades back, we would have had our friends circle and the same friends are still there, but distributed around in various cities and countries. there are really not aware that Lion and Muthu is still rocking the comics world. I personally decided to gift comics to those friends and relatives and also planning to put a word to all those fellows.

   Delete
  2. @ Organicyanthiram, I started doing this too :) Am gifting NBS to 4 other friends who grew up reading comics with me. I had told all of them months ago and since the start of this month I am getting several "eppodaa varum" calls! I am hoping at least two of them turn subscribers and two others turn to order through the net. Fingers crossed !

   Delete
  3. @CL, very good to hear. Hats off to you.

   Delete
 44. டிக்கெட் தேதிகளை மாற்ற வேண்டியதுதான் .....எது எப்படியாயினும் உற்சாகம் பீறிடுகிறது ...ஒரு அருமையான ,சந்தோஷமான அனுபவத்திற்கு சற்று காக்க வேண்டுமென்றாலும் நான் ரெடி .சீனியர் எடிட்டர் அவர்களின் திருக்கரங்களால் தான் நான் பெற்றுக்கொள்வேன் ....நண்பர்களே ....உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாய் உள்ளேன் .....

  ReplyDelete
 45. ஆஹா! டியர் எடிட்டர் ..! அழகான் ஞாயிறு .. முன்மாலை வேளை! டிவியினில் மேட்ச் பார்த்துக்கொண்டு காமிக்ஸ் நண்பர்களுடனும் உங்களுடனும் இப்படி கருத்துப் பரிமாற்றம் செய்யும் ஒரு அனுபாவமாய்ச் செல்லுகின்றது. Oh what an afternoon ...!

  ReplyDelete
  Replies
  1. 'மள மள ' வென்று இன்னும் ஒரு நாலைந்து விக்கட்டுகள் வீழ்ந்தால் (நாக்பூர் மாட்சில் தான் !!!) இன்னும் களை கட்டிடும் தான்....

   Delete
  2. பீட்டர்சன் அவுட்டானது - திடீரென்று நீங்கள் 'மினி லயன்' வெளியீடு பற்றி ஒரு அறிவித்தலை விடுப்பதுபோல இருந்தது! #lol

   Delete
  3. @ எடிட்டர்,

   பெரும்பாலான சமயங்களில் நடுநிலை வகித்திடுவது போல இப்போதும் - I am enjoying the contest. இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்று மனம் எண்ணிடும் அதே வேளையில் முதன் முறை பல ஆண்டுகட்கு பிறகு இங்கு ஜெயிக்கத் துடிக்கும் england அணி வீறு கொண்டு விளையாடிக்கொண்டிருக்கின்றது. Fingers Crossed ..! Let the best team win ..!

   Delete
 46. ஒரு பூனை இந்த அளவுக்கு நம்மை மண்டை குடைய வைக்கிறதே? 2013 வரை காத்திருக்கத்தான்வேண்டும் போல.... ம்..ஹ்..ம்...

  ReplyDelete
  Replies
  1. Podiyan : "நாலு கால் நண்பன் " உங்களது favorite கதைகளில் ஒன்று தானே ?!!

   அந்த நாலு கால் + ஒரு வால் பார்ட்டிக்காக இன்னும் கொஞ்சம் முயற்சித்துத் தான் பாருங்களேன் ?!

   Delete
  2. To Editor: விக்கிரமாதித்தன் கதையாக முயற்சி தொடர்கிறது. (மண்டை வெடிக்காது என்ற தைரியத்தில்!)

   ஆக, ஆசிரியரின் பதிலிலிருந்து, விஜய் அவர்களின் குறிப்புப் படத்தில் இருக்கும் அதே பூனையைப் பற்றிய தகவல் இதுவல்ல என்று தெரிகிறது.

   பிரெஞ்சுக் காமிக்ஸ் பக்கத்தில் பிரபலமான பூனையான FELIX ஆக இருக்குமோ?

   Delete
  3. "நாலு கால் நண்பன் " மறக்கமுடியாத - நினைவுகளில் என்றும் நிழலாடும் கதை சார்.

   Delete
  4. Podiyan : விக்ரமாதித்தனின் தளரா முயற்சியைப் பாராட்டினாலும், வேதாளம் திரும்பவும் அதன் ஜாகைக்கே சென்று விட்டதாம் ! காரணம் - இம்முறையும் விடை சரியல்ல என்பதால் !

   Delete
  5. @ Editor, Thigil comics is coming back? With cat as logo?!

   Delete
  6. சஸ்பென்ஸ் கூடிக்கொண்டே போகிறதே சார்...

   Delete
  7. Comic Lover (a) சென்னை ராகவன் : The vethaalam stays up for sure..!Wrong guess !

   Delete
  8. To Editor: அப்படீன்னா, 'Korky' தான் சார். இதுக்குமேல டாம் (ஜெர்ரி) இல்லைன்னை கேட்-வுமன் தான் வரணும் கண்டுபிடிக்க!

   Delete
  9. Podiyan : அப்படீன்னா call the cat-woman !! அவராலும் இயலாது போனால் கவலை வேண்டாம்...அடுத்த வாரமே இந்த suspense குடைச்சலுக்கு முற்றுப் புள்ளி வைத்திடுகிறேன் !

   Delete
  10. இதுவும் தப்பா..? ஓ.கே. ஓ.கே. இப்போதைக்கு ஸ்டாப்பு. கொஞ்சம் இடைவெளிவிட்டு யோசிப்போம். நெக்ஸ்ட்டு - ரெஸ்ட்டு!

   Delete
  11. Azrael, Heathcliff, catdog, Carlyle, Sylvester Pussycat, Top Cat, Mr.Jinks இவங்களுக்குள்ளயும் இல்லை என்றால், சத்தியமா நான் வரல இந்த விளையாட்டுக்கு. அடுத்தவாரம் தெரிஞ்சுகொள்ளலாம்!? :(

   Delete
 47. It's so enjoyable to read our users comments as you are replying back :)

  ReplyDelete
 48. @ Editor,

  2013-ஐ அழகாய்ப் plan செய்திட்ட நீங்கள் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு திரும்பிப் பார்த்தால் 2014 ஜூலை கண்களில் தெரியும். :) :) கடந்த சில வாரங்களாக இதே சிந்தனையில் உள்ளேன். ஆம் .. லயனின் முப்பதாம் ஆண்டு ... வெகு விரைவில் ...! மீண்டும் வாய்க்குள்ளே கால் நுழைக்க உங்களுக்கு ஒரு chance..:) :)

  [இப்போதெல்லாம் ஒன்னரை ஆண்டுகள் மின்னலாய்க் கடந்துவிடுகிறதே ...!].

  ReplyDelete
  Replies
  1. Comic Lover (a) சென்னை ராகவன் : ஆஹா...!! இது வரை யாரும் இதனைக் கவனிக்காது உள்ளனரே என்றிருந்த எனது mind voice ஐநூறு கிலோமீட்டருக்கு அப்பாலும் கேட்டு விட்டது போலும் !

   'ஸ்டார்ட் மியூசிக்' சொல்லிட இன்னொரு அழகான தருணம் ! வாய்க்குள் காலை விட்டுக் கொண்டு பாலே நடனமாடிடவும் ஒரு வாய்ப்பு !!

   Delete
  2. தாராளமாக நடனமாடலாம் சார். அப்படியே எங்களுக்கு கொடுத்த மொபைல் இலக்கத்தையும் ஏதாவது ஒரு நாள் ஒரு மணிநேரம் 'ஆன்' பண்ணி வைத்தால் நாங்கள் அங்கேயும் டார்ச்சர் குடுப்போமில்ல...

   Delete
  3. Wow...
   Editor Sir,
   Lets plan advance for our Lion Comics 30 years landmark celebration...
   I wish it should be bigger than NBS celebration...

   Delete
 49. ஆஹா ஆசிரியரின் இந்த ப்ளாக் இன்று பார்ப்பதற்கு எவ்வளவு ஆசையாக, ஆர்வமாக இருக்கிறது. நண்பர்களின் உபயோகமான ஆர்வமான கேள்விகள் அதற்கு ஆசிரியரின் பதில்கள்... அடடா நன்றி நண்பர்களே.

  ReplyDelete
 50. P.Karthikeyan : நிஜம் தான் ! இன்றைய பகல் பொழுதின் வருகைப் பதிவு மாத்திரமே ஆயிரத்தைத் தாண்டி விட்டதெனும் போது - உற்சாகத்தின் அளவுகளை உணர்ந்திட இயல்கின்றது ! Thanks folks !!

  ReplyDelete
  Replies
  1. Dear Sir, Thanks for your kind replies and messages. எழுத்தாளர் சுஜாதா அவர்கள் சில வருடங்கள் முன்பு (2003- 04) தனது வாசகர்களுடன் 'சாட்'டில் உரையாடுவார், பதிலளிப்பார். அவரோடு உரையாடும் சந்தர்ப்பமும், பின்னர் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த 'சாட்'டிங் காலத்து புளகாங்கிதமும், புரியாத உணர்வும் - இன்று மாலைப் பொழுதிலும் மீண்டுவந்தது - உங்களால்; மிக்க நன்றி.

   Delete
  2. If you have some time, please check your official email sir. Thanks.

   Delete
  3. Podiyan : எழுத்தாளர் சுஜாதாவின் வீட்டுக் கதவும், ஜன்னல்களும் கூட சுவாரஸ்யமாய் பேசிடும் கலை அறிந்து வைத்திருக்கும் என்பது எனது நம்பிக்கை ! அவர் நமக்குத் தந்திட்ட சந்தோஷத் தருணங்களில் ஒரு 1% கூட எனக்கு சாத்தியப்பட்டால், நான் பெருமைப் படுவேன் !

   And, உங்கள் மின்னஞ்சலுக்கு ஏற்கனவே பதிலும் அனுப்பி விட்டேன் !

   Delete
  4. @ Podiyan: Same feelings. எழுத்தாளர் சுஜாதா எனக்கு பெரியப்பா முறை. சில ஞாயிறு பின் மாலைகளில் அவரை சென்னை ரங்கா ரோடு இல்லத்தில் சந்தித்து உரையாடிய நினைவுகள் இன்று மீள்கின்றது.

   இந்த ஞாயிறும் நமது உரையாடல்களால் இனிதாய்க் கழிந்தது. நன்றி எடிட்டர் மற்றும் நண்பர்களே ..!

   Delete
  5. இதே போன்றதொரு புத்தகக்கண்காட்சியில் ஒரு முறை சுஜாதா அவர்கள் வந்திருந்தார். அவரை சந்தித்து அன்று வாங்கியிருந்த அவர் எழுதிய புத்தகத்தில் அவரிடம் கையொப்பம் வாங்கியது மறக்க முடியாத தருணம்...

   Delete
  6. விஜயன் சார்... lionmuthucomics@yahoo.com இதுதானே தங்கள் மின்னஞ்சல் முகவரி?

   Delete
  7. Comic Lover (a) சென்னை ராகவன் : வரம் வாங்கி வந்த பேனாக்களும், கீ -போர்டுகளும் உங்கள் குடும்பச் சொத்துக்கள் போலும் !! Awesome !

   Delete
  8. காமிக்ஸ் ரசிகன் : lioncomics@yahoo.com

   Delete
 51. முகம் அறியா வாசக நண்பர்கள் Dr.Sundar,salem and Mr.saint satan அவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்!

  ஏனோ தெரியவில்லை என் இதயம் இங்கே இப்பொழுது கணக்கிறது. இங்கே சமிபமாய் சங்கமித்தவன் நான், ஒரு மண்டலம் கூட இன்னும் முழுமை அடையவில்லை! இதுவரை நம் வாசகர்கள் எவரையும் அறிந்திலேன் நான், அங்ஙனமே என்னை தாங்களும். ஆனால் இந்த தளத்தில் தங்களிடம் நான் கண்ட நேர்மை ஒன்றே என்னை ஏனோ இங்கு தவிக்க விடுகிறது. எவர் எப்படி வேண்டுமெனிலும் தங்களை சிறுமைப்படுத்தி இருக்கலாம் அதற்காக தங்களின் பெருமையை எடுத்திட இறைவன் நினைத்திருந்தால், நான் இங்கல்ல இன்றல்ல என்றோ எங்கோ அழிந்திருப்பேன்! ரசனையால் ஓன்று சேருகிறோம், விசனத்தால் விலகி நிற்கலாமா! நாம் யாரென்று ஒருவரையொருவர் அறியோம், ஆயின் தூற்றுதலின்பால் தாங்கள் கண்ட வேதனையை விட யாம் காணும் துன்பம் பெரிது! நாமும் நம் பொறுப்பில் ஒரு வலைப்பூ இருந்திருந்தால் ஆசிரியரை விட ஒரு சிறந்த முடிவை கனவில் கூட நினைத்திருக்க முடியுமா என்பது சந்தேகமே!

  ஆசிரியரும் இங்கு பதிலளித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இதோ தங்களுக்கு நான் எழுதும் இந்த மடலும் எனக்கு எதிர் விளைவையே ஏற்படுத்தும் என்பதும் நான் அறியாதது அல்ல. அதற்காக யாம் சத்தியத்தை மறந்து பெருமைப்பட்டோ, புகழப்பட்டோ என்ன நான் காணப்போகும் பிறவிப்பயன்! முற்பகல் செய்வது பிற்பகல் விளையும் என்பதும் காலத்தின் கையில் தானே உள்ளது! அதற்காக நம் பொழுதை ஏன் இங்கு நாம் வீணாக்கிட வேண்டும்!

  நம்மை நம்புபவர்களிடம் நம்மை பற்றி விளக்க அவசியமில்லை, நம்மை நம்பாதவர்களிடம் நம்மை பற்றி விளக்கி பயனில்லை! பெருமையும் சிறுமையும் எமக்கு ஒன்றாக தோன்ற ஆரம்பித்து பல காலம் கடந்து விட்டது. அதனால் இம்மடலையும் தயக்கமின்றி தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்! தாங்கள் இங்கு வருவதே ஆசிரியருக்கு வெற்றி, தங்களின் நேர்மைக்கு கிடைக்கும் வெற்றி என்று என் உள் மனம் கூறுகிறது! மின்னும் மரணம் டைகர் ஐ விடவா நாம் அவதிப்பட்டு விட்டோம்! இதற்கு மேல் வேறு எப்படி சொல்வது என்று தெரியவில்லை!!!


  ReplyDelete
 52. நன்றி சார். மாதத்திற்கு ஒருமுறையேனும் தாங்கள் எங்களுடன் இதுபோல் அதிகநேரம் உரையாடினால் நாங்கள் மிகவும் சந்தோசப்படுவோம்.

  ReplyDelete
  Replies
  1. தமிழ் காமிக்ஸ் பிரம்மா மரியாதைக்குரிய தங்கள் தந்தை மற்றும் தங்களுடனும் போட்டோ எடுத்துக்கொள்ள புத்தக திருவிழாவின்போது வாசகர்களை அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

   Delete
  2. P.Karthikeyan : எங்கள் நகர மின்னிலாக்கா நண்பர்களில் எவரேனும் இங்கு நமது வலைத் தளத்தின் ஆர்வலரோ, என்னவோ தெரியவில்லை ! இன்றின் பெரும்பான்மைக்கு மின்வெட்டே இல்லை ! அதனாலேயே relaxed ஆக இங்கு நேரம் செலவிட இயல்கின்றது !

   தவிரவும் NBS-ல் என் பங்குப் பணிகள் முழுவதுமாய் முடிந்து விட்டதால்,சின்னதாய் ஒரு holiday mood இன்றைக்கு !! மதில் போன்றதொரு இதழின் பணிகளை முடித்த பின்னே, மறுபதிப்புகள் தொடர்பான வேலைகள் இலவம் பஞ்சாயத் தோன்றுகின்றன ! நிச்சயம் மாதத்தில் ஒரு ஞாயிறை இது போல் செலவிட முயற்சிப்போம் !

   Delete
  3. P.Karthikeyan : "குற்றச் சக்ரவர்த்தி ஸ்பைடர்" ; "சட்டித் தலைய்யன் ஆர்ச்சி " ; "மர்ம மனிதன் மார்டின்" போன்ற அடைமொழிகள் நம் நாயகர்களுக்குப் பொருந்துமே தவிர, நமக்கல்ல ! உங்களோடு போட்டோ எடுத்துக் கொள்வது எங்களது சந்தோஷமாகவும் இருந்திடும் !

   Delete
 53. Karthik Somalinga: Any plan to visit Chennai book fair? I wish to make a visit for this at-least a day if my back pain allow.

  ReplyDelete
  Replies
  1. @Parani: Thanks for asking! I just sent you a mail on this.

   //I wish to make a visit for this at-least a day if my back pain allow//
   Get well soon!

   Delete
 54. About the trailer for "ooru chigapaiyen chuvadugal": this graphics novel is going to be release sir? looks like the book cover is ready, while preparing NBS and CC digest how do you find time or how do you work on this?

  ReplyDelete
 55. உண்மை ...நானே இங்கு நீண்ட நாள்களாக வராத காரணம் எனது முதல் commentsay ஆசிரியர் யை வருத்தப்பட வைத்தது போலே தோன்றியது,மீண்டும் ஆசிரியர் மட்டும் அல்லாது மற்ற நண்பர்களையும் கூட அறியாமல் காயபடுத்தி விட்டால் என்ன செய்வது என்ற நோக்கதில் தான் அதிகம் நான் இங்கு கமெண்ட்ஸ் இட வருவதில்லை.காரணம் எதிரிகளை சம்பாதிக்க இங்கு 1000 வழிகள் இருக்க நமக்கு இந்த காமிக்ஸ் என்னும் அழகிய பூந்தோட்டத்தில் தானா சம்பாதிக்க தோன்றும்.எனவே அணைத்து நண்பர்களும் ஒன்று கூடுங்கள் நண்பர்களே.இந்த ப்ளாக் இன் மூலம் பல நண்பர்களை நான் பெற்று உள்ளேன் .எதிரிகளை அல்ல. எனவே அனைத்தயும் மறந்து dr .சுந்தர்,புனித சாத்தான் ,மரமண்டை,மொட்டமண்டை ,கர்ணன்,மற்றும் வராமல் இருக்கும் அணைத்து நண்பர்களையும் கும்மி அடிக்க (சந்தோஷ கும்மி ) வருக ..வருக என ஆசிரியர் சார்பாக இரு கை கூப்பி வரவற்கிறேன்.நன்றி....

  ReplyDelete
 56. I am not sure if you get a chance to read my e-mail and this post: Sorry to putting the same comment here.

  Dear Editor SIR,

  It is possible to share the NBS booking details, this will help us to see other possibilities for increasing our booking / sale.

  During the Bangalore comics con meeting you have mentioned that you are planning to give advertisement about our NBS in Tamil Magazine and TV; do you have any update on this, we have less than a month for our release! Sorry for reminding this again and again.

  Every December there use to be a book exhibition in Bangalore, but the dates are not known to me. Sorry for the late news, may be you can plan for this next year onward.

  Please enable the word verification again, I support this!! We are spending lot of time in typing our post here, but we hesitate to spend little bit extra few seconds in word verification :-)

  My top 5 Heros
  ==============
  Modesty & Carvin: Ture different people, have very good understanding between them. Carvin have great respect with Modesty and have full faith and ready to sacrifice his life. They maintain the line between then, and some time my eyes fill with tears. They live for each other.

  Larance David:

  Two good friends, David never ask questions when larance say some thing. Laracne is very intellience!! and skillful. David is good in stunt and some time the way he takes risk to rescue david is ever green action.

  Jhony Nero: I was impressed with his life style when i was child; his holidays were very impressed. The way he detects the problem is realistic. His assistance stella will be behind him when he gets into trouble, ture secretary.

  Mayavi: Poor guy, never able to show his face to the public. But he never care about the criticismfrom the nelal padai, and do good for the nation always. We should not think of logic in his stories... :-)

  Tiger: Great guy, never looks like a hero but his action speaks..

  ReplyDelete
 57. புனைபெயரும் புரியாத பல குழப்பங்களும்! ( a Box office hit )

  part 1 of 2

  காமிக்ஸ் காமிக்ஸாய் படித்து, ஊரெல்லாம் கதை கதையாய் பேசுகின்றோம்! டைகரின் தீரத்தை, வில்லரின் வீரத்தை, மாயாவியின் சாகசத்தை, மாண்ட்ரேக்கின் ஜாலத்தை, மார்ட்டீனின் அறிவு விசாலத்தை, ஜானியின் தேடலை, வனரேஞ்சர் ஜோ வின் அர்ப்பணிப்பை, லக்கி லூக்கின் தன்னலமற்ற சேவையை, சிக்பில்லின் வெகுளித்தனத்தை, மாடஸ்டி யின் தடம் மாறி வந்த நேர்மையை, பாண்ட் ன் அதிரடியை, லாரன்ஸ்&டேவிட் ன் இணைப்பிரியா நட்பை, ஜானி நீரோவின் கண்ணியத்தை, ரிப்கெர்பி யின் எளிமையை, XIII ன் வாழ்க்கையில் ஏற்படும் விதியின் விளையாட்டை, ஜெரோமின் அப்பாவித்தனத்தை, பெர்ரி மேசன் னின் தொழில் தர்மத்தை, இன்னும் இது போன்று எத்தனை எத்தனையோ ! ஆனால் நாம் இவற்றில் எதைக் கற்றோம் என்று எம்மை நாமே கேட்டுக்கொண்டு, இந்த சலசலப்புகளுக்கு எமக்கு நாமே வைத்துக்கொள்ளக்கொடிய ஒரு முற்றுபுள்ளியாக இன்றைய ஆசிரியரின் பதிவு அமைந்துள்ளதாக எனக்கு தோன்றுகிறது!

  contd part 2 :-

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 58. This comment has been removed by the author.

  ReplyDelete
 59. ​சென்​னை புத்தக ​திருவிழாவிர்க்கு நானும் இம்மு​றை வருகி​றேன், இதுதான் எனது முதல் வரவு, ​மேலும் ஆசிரியரின் ​கையால் 2 NBS ​பெற்றுக்​கொள்​வேன்
  நன்றி.

  ஹிப்..ஹிப்...ஹி...கோ

  ReplyDelete
 60. டியர் விஜயன்,

  //Detective ஸ்பெஷல் +மாயாவி ஸ்பெஷல் நிச்சயம் சென்னை புத்தகத் திருவிழாவிற்குத் தயாராகி விடும் ; not promising, but முடிந்தால் ஜானி நீரோ ஸ்பெஷல் இதழையும் தயாரிக்க முற்படுவோம் !//

  ஜானி நீரோ ஸ்பெஷல்-க்கு பதிலாய், நம் லக்கி லூக்கின் 'புரட்சித்தீ, சூப்பர் சர்க்கஸ், பயங்கர பொடியன், பூம் பூம் படலம்," அல்லது ஒரு 'சிக் பில்' கதையை, 'நியூ லுக் ஸ்பெஷல்" போன்ற ஒரு 'பளிச்' அட்டைப்படத்துடன் வண்ணத்தில் சிறுவர்களுக்காக ரூ.50 விலையில் வெளியிடலாமே...புத்தக கண்காட்சிக்கு வரும் இளைய தலைமுறையை, ஈர்க்க நல்ல முயற்சியாக அமையும். (பையில் நூறு ரூபாய் மட்டும் வைத்துக்கொண்டு, உங்கள் அலுவலகத்திற்கு வந்து ஏக்கத்துடன் மற்ற இதழ்களை பார்த்து, 'நியூ லுக் ஸ்பெஷல்' மட்டும் வாங்கி சென்ற 'அந்த இளைய தலைமுறை'யையும் மனதில் கொண்டு).

  ReplyDelete
  Replies
  1. நல்ல யோசனை. வண்ணத்தினில், அதுவும் வெகு விரைவாக வெளியிட முடியுமா என்பது பற்றி எடிட்டர் என்ன சொல்கிறார் பார்க்கலாம்.

   Delete
  2. ம. ராஜவேல் : Sorry, வண்ண மறுபதிப்பை முயற்சிக்க அவகாசம் இல்லை இப்போது !

   Delete

 61. நான் அலுவலகம் செல்லும் வழியில் வழக்கமாக புத்தக கண்காட்சி நடக்கும் பள்ளி உள்ளது. முன்பே நான் கூறியபடி மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால் அந்த இடம் தற்சமயம் உகந்தது இல்லை என எண்ணினேன். அதுமாதிரியே தற்பொழுது YMCA மைதானத்திற்க்கு மாற்றபட்டுள்ளதால் அதிக இடவசதியோடு உள்ளது. கடந்த முறை வேறொரு ஸ்டாலுடன் நமது காமிக்ஸ் ஸ்டால் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இம்முறை தனி ஸ்டால் ஆக இருக்கும் என நம்புகிறேன்.

  கடந்த புத்தக கண்காட்சியிலேயே நான் பல வருடங்களுக்கு பிறகு நமது காமிக்ஸ் புத்தகங்களை வாங்கினேன் சந்தாவும் அங்கேயே கட்டினேன். அங்கு கம்பாக் ஸ்பெஷல் வாங்கி தமிழ் காமிக்ஸ் கலரில் தரமான காகிதத்தில் வந்ததை பார்த்து அன்று பிறந்த உத்வேகம் கனவுகள் இந்த வருடம் முழுக்க அது பிரதிபலித்தது. இந்த முறை கண்காட்சி அதை விட அதிக உத்வேகம் பலருக்கு தர வேண்டும் என வேண்டுகிறேன்.

  "Detective ஸ்பெஷல் + மாயாவி ஸ்பெஷல் நிச்சயம் சென்னை புத்தகத் திருவிழாவிற்குத் தயாராகி விடும்" என்ற செய்தி பழைய வாசகர்கள் பலரை கவர்ந்திழுக்கும்.  ReplyDelete
 62. May be Tom and Jerry coming in our lion comics?

  ReplyDelete
  Replies
  1. :-) would love to publish Tom & Jerry....! But wrong guess !

   Delete
 63. டியர் எடிட்டர் மற்றும் டியர் பிரண்ட்ஸ்,

  உங்கள் அனைவரையும் புத்தக கண்காட்சி அன்று மாலை, நமது புத்தக வெளியீட்டு விழாவில் சந்திக்க ஆவலாக உள்ளேன்.

  ஒரு பர்சனல் கவலை :) அன்றைய தினம் இரவு 9.00 மணிக்கு எனக்கு ஊருக்கு (சென்னை டு திருப்பூர்) செல்ல ரயிலில் முன்பதிவு செய்து உள்ளேன் (பொங்கல் என்பதால் நான்கு மாதம் முன்பு அடித்து பிடித்து பதிவு செய்தது). அன்றைய தினத்தை முழுமையாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாதோ என்ற ஏக்கம் மனதில் ....


  Hope I will be travelling with NBS and CCs :)

  Thanks

  ReplyDelete
 64. ஆஹா ! பகல் பொழுது இவ்வளவு இனிமையாக கழிந்ததா !? நான் எப்பொழுதுமே நடுஇரவில் வருவதால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகின்றது. வாழ்த்துக்கள் நண்பர்களே!

  ReplyDelete
 65. 2014 ஜூலையில் லயன் 30 வது ஆண்டுமலரைப் பற்றிய சிந்தனைகள் ஊற்றெடுக்கும் வேளையில்(நன்றி : Comic lover), நடுவே ஒரு ஞாபகக் கீற்று குறுக்கிட்டு 2013 தீபாவளி மலரைப் பற்றி நினைவூட்டுகிறது.
  அனேகமாக, இந்தத் தீபாவளிமலர் பற்றிய அட்டகாசமானதொரு அறிவிப்பும் NBSஉடன் இணைப்பாக வரவிருக்கும் ட்ரெயிலர் புத்தகத்தில் முக்கிய இடம் பிடிக்குமென நேற்றிரவு என் கனவில் ஒரு பட்சி உரக்கக் கூவிச் சென்றது.
  கனவு பலித்தால்... 

  * 300 பக்கங்களில்
  * ரூ.250 விலையில்
  * 6 அட்டகாசமான கதைகளுடன்
  * 5 முழு வண்ணத்திலும், ஒரு கருப்பு-வெள்ளையிலும்

    ஆஹா!

  ReplyDelete
  Replies
  1. அதோடு, இதுவரை வாக்கெடுப்பில் அதிக ஓட்டுகள் பெற்று முன்னிலை வகிக்கும் கேப்டன் டைகரின் 'இரும்புக்கை எத்தன்'  முழுவண்ணத்தில்; மறுபதிப்பாக; அடுத்த டிசம்பரில் - என்ற அறிவிப்பும் NBS ட்ரெயிலர் இணைப்பில் வரக்கூடுமோ?!

   Delete
  2. Erode VIJAY : இன்றைய கனவுகள்....நாளைய நிஜங்களோ ? :-) கனவுகள் தொடரட்டும் !!

   Delete
 66. ''PUSS in BOOTS '' என் மகனோட DVD சேகரிப்பில் இருக்கின்றது. ஆனால் இது காமிக்ஸாய் வந்துள்ளதா என்று தெரியவில்லை . பூனையை பற்றி பேச்சு வந்ததால் சொல்கிறேன் .

  ReplyDelete
 67. ஆசிரியர் அவர்களே,
  இந்த பதிவின் அறிவிப்புகள் சரவெடி ரகம். புத்தக கண்காட்சியில் மாயாவியும் வருகிறார் என்பது போனஸ் செய்தி.
  புத்தக கண்காட்சியில் மூத்த ஆசிரியர் மற்றும் உங்கள் தந்தை திரு சௌந்தர பாண்டியன் அவர்களையும், தங்களையும் மீண்டும் ஒருமுறை சந்திக்க போவதை நினைக்கும் போது உள்ளம் பூரிக்கிறது. 2008ம் வருடம் டிசம்பர் மாதம் தங்கள் இருவரையும் சிவகாசியில் சந்தித்துள்ளேன்.

  உங்கள் சஸ்பென்ஸ் அறிவிப்புப் பற்றி:
  என் யூகம் சரியாக இருந்தால் அந்த நாலு கால் + ஒரு வால் கொண்ட பூனை நண்பன் நீங்கள் தமிழில் 2013ல் அறிமுகப்படுத்தப் போகும் அஸ்டரிக்ஸ் (Asterix) & குழுவினை சேர்ந்தவன் சரியா?

  ReplyDelete
 68. Asterix இல் பூனை இல்லை நண்பரே. ஆசிரியர் 'அவ்வப்போது' என்று குறிப்பிட்டிருப்பதால் நம் இரத்தவெறியன் ஹேகர், விச்சு-கிச்சு மாதிரி ஒரு ஒன்றிரண்டு பக்க கதைகளாகவே அவை இருக்குமென்று நினைக்கிறேன்.

  Azrael, Heathcliff, catdog, Carlyle, Sylvester Pussycat, Top Cat, Mr.Jinks இவங்களுக்குள்ளயும் இல்லை என்றால், சத்தியமா நான் வரல இந்த விளையாட்டுக்கு. அடுத்தவாரம் தெரிஞ்சுகொள்ளலாம்!? :(

  ReplyDelete
 69. //Asterix இல் பூனை இல்லை நண்பரே//
  Yes Podiyan,
  You are right, there is no cat in the series. I am sorry for the wrong input..

  May be your analysis be correct.
  Anyway we ll see the answer very soon...

  ReplyDelete
 70. Editor Sir,
  One more guess,
  Is that is the new series "Billy, the cat"?
  Probably this time, I might be right...

  If not, I ll try again...

  ReplyDelete
  Replies
  1. Sir,
   One more guess... or one more option...
   It can be an one more Belgian comic book series: Spirou, Fantasio and Marsupilami...(species like cat)   Delete
 71. தங்கள் வரவு தங்க வரவாகுக! அப்பா வரவு பிளாட்டின வரவாகுக! சென்னை தங்கள் வரவால் மிகுந்த மகிழ்ச்சி அடையும் அன்று!

  -சந்தாதாரர் என்றாலும் தபாலில் வாங்காமல் NBS, CC புத்தக கண்காட்சியிலேயே உங்களிடம் பெற்று கொள்ள எனக்கு அனுமதி உண்டா?
  -நெவெர் பிபோர் ஸ்பெஷல் முன்பதிவு போக இன்னும் கொஞ்சம் தேவையான நண்பர்களுக்காக கிடைக்க வாய்ப்பிருக்கிறதா?
  -ஒரு பதிவிட்டு இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் எண்ணங்களின் வண்ணங்களை அள்ளித் தெளித்து எங்களை புளகாங்கிதத்தில் ஆழ்த்தியமைக்கு மிக்க நன்றி ஜி!
  கலக்குங்கள் என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சார்! ஆமா ரெண்டு நாள் மட்டும்தான் இருப்பீங்களா?

  ReplyDelete

 72. அந்த பூனை கதையை நான் சரியாக கண்டுபிடித்து விட்டேன் என நினைக்கிறேன். அது "Batman-Catwoman - Follow the Money"

  அந்த கதையின் அட்டைபடத்தில்தான் விஜயன் சார் சொன்னபடி "பெரியதொரு புன்னகையோடு சயனம் செய்யும் பூனையினை" காணமுடியும்.

  அட்டகாசமான அட்டைப்படம் அது!!

  ReplyDelete
 73. அட்டை படம் மட்டும் எனது ப்ளாக்ல் உள்ளது.

  ReplyDelete