நண்பர்களே,
புது முயற்சிகளோடு நமக்குத் துவங்கிட்ட 2012 -ன் மையப் பகுதியினை நெருங்கிடும் நேரமிது...! உங்களின் உற்சாகம் தந்திடும் உத்வேகத்துடன் 'தடதட' வென நமது காமிக்ஸ் எக்ஸ்பிரஸ் உருண்டோடிச் செல்கின்றது ! பயணத்தின் நடுவே நாம் கடந்து செல்லக் காத்திருக்கும் "ஸ்டேஷன்களை" ஒரு ஜன்னலோரப் பார்வையாய் சற்றே ரசித்திடுவோமா ?
ரிப்போர்டர் ஜானியின் கிரைம் த்ரில்லர் கதைகள் எப்போதுமே சுவாரஸ்யமானவை ! அவற்றிற்கு வண்ணம் எனும் வீரியத்தை சேர்த்திடும் போது - அட்டகாசமானதொரு end -product கிட்டுவதை சீக்கிரமே நீங்களும் ரசிக்கப் போகிறீர்கள் ! "பனியில் ஒரு பரலோகம்" அட்டகாசமாய் முழு வண்ணத்தில் தயாராகி உள்ளது ! இதோ -சில பக்கங்கள் உங்கள் பார்வைக்காக !!
பனியில் ஒரு பரலோகம்- 46 பக்கங்கள்...முழுநீள..முழு வண்ண சாகசம் !
ரிப்போர்டர் ஜானியுடன் கைகோர்க்கக் காத்திருப்பது அநேகமாக கேப்டன் டைகரின் "இளமையில் கொல்" தொடரின் கதை # 4 ! கேப்டன் டைகரின் சாகசங்களை வரிசைக்கிரமமாய் வெளியிட எண்ணியுள்ளேன்...so தொடர்ச்சியாய் டைகரின் இளம் பிராயத்து சாகசங்களை நிறைவு செய்திட்டு அதன் பின்னர் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் இதர டைகர் கதைகளைக் கவனித்திடுவதாய் உத்தேசம் !
"மரண நகரம் மிசூரி "
46 பக்கங்கள்..முழு வண்ணத்தில்..முதல் முறையாய் கேப்டன் டைகர் ! |
'இந்தப் பூனையும் பால் குடிக்குமா ?' என்று எண்ணச் செய்திடும் தோற்றத்தோடு தன்னை அறிமுகம் செய்து கொண்ட நமது புது நண்பரான லார்கோ வின்ச் - 'இந்தப் பூனை பாலும் குடிக்கும் ; குரல்வளையையும் கடிக்கும் ' என்று நிரூபித்திடும் விதத்தில் அடுத்த அதிரடிக்குத் தயாராகி வருகிறார் ! " கான்க்ரீட் கானகம் " லார்கோவின் கதை வரிசையில் எண் 3 !
"கான்க்ரீட் கானகம் " |
கதை எண் 3 & 4 இணைந்தே ஒரு முழுநீள சாகசம் என்பதால் இவற்றைப் பிரிக்கும் விஷப்பரீட்சைகள் ஏதுமின்றி..ஒரே இதழில் பாகம் 3 & 4 வந்திடும். "சுறாவோடு சடுகுடு" - லார்கோவின் ஒரு action masterpiece !
"சுறாவோடு சடுகுடு" |
தொடர்ந்து இன்னுமொரு கேப்டன்;இன்னுமொரு பரட்டைத்தலை..இன்னுமொரு அழுக்குக் கும்பல் ! ஆனால் இவர்களும் நம் அன்பையும் ; அபிமானத்தையும் சம்பாதித்ததொரு சாகசக் கும்பல் ! "பரலோகப் பாதை பச்சை" - நம் அபிமான கேப்டன் பிரின்சின் முழுவண்ண முழு நீள சாகசம் ! தற்சமயம் பிரின்ஸ் கதை வரிசையில் நாம் பிரசுரிக்காது உள்ள ஒரே புது சாகசம் இது மாத்திரமே ! So - இனி புதிதாய் பிரின்ஸ் கதைகள் உருவாக்கப்படாத பட்சத்தில், இதுவே பிரின்சின் farewell !!
"பரலோகப் பாதை பச்சை" |
நண்பர் புனித சாத்தானின் உபயத்தில் "லயன் நியூ லுக் ஸ்பெஷல்" என்ற hep நாமகரணத்துடன் வரவிருக்கும் நம் ஆண்டுமலரில் தூள் கிளப்பிட நமது லக்கி லூக்கும் தயார் ஆகி வருகின்றார் ! "பனியில் ஒரு கண்ணாமூச்சி" + "ஒரு வானவில்லைத் தேடி " - இரு classic லக்கி லூக் சாகசங்கள் !
ஆண்டுமலரைத் தொடர்ந்து நம் "அந்தக் காலத்து ஜாம்பவான்கள்" - லயன் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலில் அதிரடி செய்யவிருக்கிறார்கள் ! இங்கே உங்களில் பெரும்பான்மையினர் சூப்பர் ஹீரோக்களுக்கு செம ஆதரவாய் குரல் கொடுத்தது வீண் போகவில்லை ! So திட்டமிட்டபடியே ரூபாய் 100 விலையில் முழுக்க முழுக்க black & white -ல் மாயாவி ; ஸ்பைடர் & ஆர்ச்சி களம் இறங்குவார்கள் !!
இவை தவிர நமது black & white - பத்து ரூபாய் இதழ்களின் எஞ்சியுள்ள (புது) வரவுகள் இதோ :
இவை தவிர புது ஹீரோவான டிடெக்டிவ் ஜெரோம் துப்பறியும் "சிவப்புக் கன்னி மர்மம் " & தற்செயலாய் ஒரு தற்கொலை" தலா ரூபாய் 10 விலையில் வரவிருக்கின்றன ! இவ்வாண்டின் இறுதியினில் இன்னமும் நிறையவே புதுக் கதைகள்..புது அறிமுகங்கள் காத்துள்ளன ! உங்களின் அன்பான ஆதரவு தொடர்ந்திடும் வரை, வானமே நமக்கு எல்லை ! Fingers crossed !
இவை தவிர நமது black & white - பத்து ரூபாய் இதழ்களின் எஞ்சியுள்ள (புது) வரவுகள் இதோ :
இவை தவிர புது ஹீரோவான டிடெக்டிவ் ஜெரோம் துப்பறியும் "சிவப்புக் கன்னி மர்மம் " & தற்செயலாய் ஒரு தற்கொலை" தலா ரூபாய் 10 விலையில் வரவிருக்கின்றன ! இவ்வாண்டின் இறுதியினில் இன்னமும் நிறையவே புதுக் கதைகள்..புது அறிமுகங்கள் காத்துள்ளன ! உங்களின் அன்பான ஆதரவு தொடர்ந்திடும் வரை, வானமே நமக்கு எல்லை ! Fingers crossed !