Wednesday, April 05, 2023

புதுசாய் ஒரு சாயா !

 நண்பர்களே,

வணக்கம். பொன் கிடைத்தாலும் கிடைக்காத புதனில், கூரியர்களாச்சும்  உங்களுக்குக் காலத்தோடு கிடைத்தால் தேவலாம் என்பேன் ; நேற்றைக்கு முன்மதியமே டெஸ்பாட்ச் இவ்விடம் நிறைவுற்றது ! உங்களின் சந்தா தேர்வுகளுக்கேற்ப இம்மாதத்து கூரியர்களின் புஷ்டியும் அமைந்திருக்கும் என்பதை ஏற்கனவே கோடிட்டுக் காட்டியிருந்தேன் - so 'இன்னா கோவாலு....இந்த மாசம் புக் ஒயுங்கா போடலியா ?' என்றோ...."இன்னாமே பார்சல்லே புக் ஒண்ணே ஒண்ணு தான் கீது ?" என்றோ கண்சிவக்கும் முன்பாய், நீங்கள் இணைந்திடத் தவறியிருந்த சந்தாக்கள் உள்ளனவா ? என்பது குறித்து சரி பார்க்கக் கோருவேன் !

Doubtless - இம்மாதத்து மூன்று இதழ்களுமே தத்தம் பாணிகளில்  சிறப்பானவைகளே !  ஆனால் பருமனிலும், ஆக்கத்திலும் கண்ணைக் கவரவிருப்பது டிடெக்டிவ் சார்லி digest என்பதில் எனக்குப் பெரிதாய் ஐயங்கள் லேது ! படித்து ரசித்தாலும் சரி, 'பொம்ம' பார்த்து பக்கங்களைப் புரட்டினாலும் சரி ; தலைக்கு தாக்கான் கொடுக்கப் பயன்படுத்தினாலும் சரி  - இந்த குண்டு புக் நிச்சயம் உங்களுக்கு கணிசமான மகிழ்வைத் தந்திடாது போகாது folks ! MAXI சைஸின்  பாதியளவில் வெளியாகியுள்ள புக் எனும் போது, அது குறித்த அபிப்பிராய பேதங்களுக்குமே நிச்சயமாய் பஞ்சம் இருக்கப் போவதில்லை என்று ஸ்டீலின் பட்சிகள் சொல்லுகின்றன ! 'நான் கேட்டேனா ? உன்னே சைஸ் மாத்த சொல்லிக் கேட்டேனா ?' என்று ஒரு அணியும், "இத பண்ணச் சொல்லி தானய்யா தொண்டை தண்ணியெல்லாம் வத்துற மட்டுக்கு குரல் கொடுத்தேன் ?" என்று இன்னொரு அணியும் ஆஜராகின், நோ ஆச்சர்யம்ஸ் ! ஆளில்லா சமீப நாள் டீ-கடையில் யீ பஜ்ஜிகள் கொஞ்சம் சுவாரஸ்யங்களை ஏற்றினால் ஓ.கே. தான் ! கதைகளைப் பொறுத்தவரைக்கும் ஒரேயொரு மறுபதிப்பு நீங்கலாய் பாக்கி சகலமும் newbies ! So நீங்கள் க்ளாஸிக் ஜானர்களின் காதலர்களாக இருந்தாலுமே, பழைய கதைகளைக் கொண்டு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் அவசியங்கள் இராது ! கதைகள் உருவான நாட்கள் பழசு ; பாணிகளும் பழசு ; குறைந்த பட்சமாய் கதைகளின் தேர்வுகளிலாவது அந்தப் பழமை மிளிராது போகட்டுமே என்று நினைத்தோம் ! பொறுமையாய், நிதானமாய் சார்லியோடு பொழுதுகளை நகர்த்தியான பின்னே உங்களின் அபிப்பிராயங்களை மறவாது பகிர்ந்திடுங்களேன் - ப்ளீஸ் ? 

இம்மாதத்தின் ஒரே கலர் இதழான "எந்தையின் கதை" - in many ways இம்மாதத்து எங்களது சொந்தக் கதையை உணர்த்துமொரு தலைப்பாகவுமே அமைந்து விட்டுள்ளது ! சீனியர் எடிட்டரின் சுகவீனப் படலம் தொடர்ந்து சென்றிட, மருத்துவர்களிடமும், படைத்தவரிடமும் கரம் கூப்பி நின்று வருகிறோம் ! நம் XIII மர்மத்தின் "எந்தையின் கதை" ஆல்பமோ - ஜானதன் பிளையின் கதையை ரொம்ப crisp ஆகச் சொல்லியுள்ளது ! நண்பர் பழனி எங்கிருப்பினும் நிம்மதியாய் இருக்க ஒரு சிறு வேண்டுதலோடு இந்த இதழினுள் புகுந்திடுவோமே ? 

And ஏப்ரலின் மூன்றாவது இதழான V காமிக்ஸ் பற்றி போன பதிவிலேயே நிறைய பேசி விட்டாச்சு என்பதால் அதனோடு இணைத்திட தற்சமயத்துக்கு புதுசாய் சேதிகள் நஹி ! So இரு இத்தாலிய இமயங்கள் இணைந்திடும் அழகை ரசிக்க மாத்திரமே request வைப்பேன் உங்களிடம் ! 

ஆன்லைன் லிஸ்டிங்ஸ் ரெடி guys ; கடைகளுக்கும் இன்று முதல் அனுப்புகிறோம் ! So சந்தாக்களுக்கு அப்பாலுள்ள நண்பர்கள் களமிறங்கவும் all is ready ! Bye all ....see you around ! Have a great week ahead !


P.S : வரும் ஏப்ரல் 8 முதலாய் 18 தேதி வரைக்கும் திருவண்ணாமலை நகரில் புத்தக விழா நடைபெறவுள்ளது & நாமங்கு இருப்போம் ! Please do visit us !


Saturday, April 01, 2023

ஏப்ரல் ஏகாந்தம் !

 நண்பர்களே,

வணக்கம். தினுசு தினுசான இடங்களிலிருந்தெல்லாம் இந்தப் பக்கத்தின் பதிவுகளை எழுதி இருக்கிறேன் தான் ! ஆனால் அவற்றின் ஒவ்வொரு தடவைகளுமே, "சப்பானிலேர்ந்து ஜாக்கி சான் கூப்ட்டாகோ.....அமெரிக்காவுல இருந்து  மைக்கேல் ஸாக்ஸன் கூப்டாகோ" பாணியில் எங்கெங்கோ குந்தியிருந்திருப்பேன் ! ஆனால் மொதவாட்டியாய் உள்ளூரில், but வித்தியாசமானதொரு இடத்திலிருந்து இந்தப் பதிவினை டைப்புகிறேன் ! So இதுவொரு மித நீளப் பதிவாகவே இருக்கும் ; 'ஒன் பை டூ' சாயாவை பச்சக்கென்று ஊற்றிக் கொள்வது போல் ஒப்பேற்றிடக் கோருகிறேன் !

For starters - அறிவிக்கப்பட்டிருந்த திருவண்ணாமலை புத்தக விழாவானது மாவட்ட நிர்வாகத்தினரால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது ! புக் பார்சலெல்லாம் போட்டு அனுப்பி விட்டு, நம்மாட்கள் அண்ணாமலையார் நகருக்குக் கிளம்பியும் விட்டனர் தான் ; but பாதி  வழியில் ஊர் திரும்ப வேண்டியதாகிப் போயுள்ளது !  அநேகமாய் ஏப்ரலின் 10 தேதிவாக்கில் இந்த விழாவும், இன்னொரு மித சைஸ் நகர விழாவும் அரங்கேறிடக்கூடும் என்று தகவல் ! So நமது ஆன்லைன் புத்தக விழாவின் தேதி நிர்ணயத்துக்கு சொக்காயைக் கிழிக்குமொரு சூழல் ! Anyways அடுத்த வாரத்தில் திருவண்ணாமலை & அந்த other விழாவின் தேதிகளும் ஊர்ஜிதம் காணக்கூடும் என்று எதிர்பார்த்திருக்கிறோம் ; fingers crossed !

Moving on.....ஏப்ரலின் அட்டவணை சற்றே புதிரானது என்பேன் ! And கதை நாயகர்களின் கூட்டணியினை இம்முறை நான் குறிப்பிடவில்லை ; மாறாக - சந்தா தடங்களின் கூத்தை சுட்டிக்காட்ட விழைகிறேன் ! ஒருக்கால்..


*"க்ளாஸிக் நாயகர்களின் சங்காத்தமே வேணாம்டா சாமி" என்ற அணியினராய் நீங்கள் இருந்தால் - இம்மாதத்து டிடெக்டிக் சார்லி ஸ்பெஷல் உங்களுக்கு வர வாய்ப்பில்லை ! 

*V காமிக்ஸ் இரண்டாம் க்வாட்டருக்கு நீங்கள் சந்தா செலுத்தியிருக்கவில்லை எனில் - இம்மாதத்து "TEX vs ZAGOR" இதழ் உங்களுக்கு வந்திடாது தான் !

*And "இந்த கி.நா.வே எனக்கு புடிக்காதுடாப்பா !" என்ற அணியினராய் நீங்கள் இருந்து, 'உலகம் சுற்றும் வாலிபர்ர்ர்ர்ர்' சந்தாவை மறுத்துவிட்டு, Point டு Point சந்தாவில் மட்டுமே சேர்ந்திருக்கும் பட்சத்தில் - இம்மாதத்து XIII மர்மம் - "எந்தையின் கதை" உங்களைத் தேடிப் பயணிக்காது !

*ஒருக்கால் - மேற்படி 3 பத்திகளில் விவரித்துள்ள அத்தனை விஷயங்களுக்கும் - "ஆமாம்பா...ஆமாம் !" என்று ஆமோதிக்கும் நிலவரம் உங்களதாக இருக்கும் பட்சத்தில் - 'உங்களுக்கு பூரியே வைக்கலை' கதை தான் இந்த மாதம் ! There simply will be nothing to send you !

நமது இரண்டாம் இன்னிங்ஸ் துவங்கிய பிற்பாடு இது போலானதொரு மாதம் அமைந்திருக்கவே இல்லை தான் ; குறைந்த பட்சமாய் ஒரேயொரு புக்காவது main stream சந்தாவிலிருந்தாவது உங்களைத் தேடிப் புறப்பட்டிருக்கும் ! But இம்முறை திட்டமிடலின் போது இந்த ஆங்கிளில் யோசிக்கத் தவறி விட்டேன் ! So உங்களின் சந்தாப் புதுப்பித்தல்களையும் / சந்தாப் பிரிவுகளையும் ஒருவாட்டி செக் பண்ணி விடுங்களேன் ப்ளீஸ் ? And காத்துள்ள செவ்வாய் காலை தான் இம்மாதத்து கூரியர்கள்  கிளப்பிடவுள்ளன எனும் போது - V காமிக்ஸ் ஜோதியினில் இணைந்திடவோ, SUPREME '60s பாதையில் புகுந்திடவோ இந்த வேளையினை பயன்படுத்திக் கொள்ளலாமே folks ?

இம்மாதத்தின் despatch சற்றே லேட் ஆனதற்கு காரணங்கள் இரண்டு ! தவிர்க்க இயலா குடும்ப நிகழ்வினில் கிட்டத்தட்ட ஒரு வாரம் ஓடியே போய்விட்டது முதல், முக்கிய காரணமெனில், # 2 - இம்மாதத்து V காமிக்ஸ் ! எந்த நேரத்தினில் Team V இளம் மொழிபெயர்ப்பாளர்களை சமீப பதிவொன்றில் சிலாகித்தேனோ தெரியலை - இம்மாதம் சொதப்பல்ஸ் ஆப் சொக்கம்பட்டி ஆகிப் போச்சு ! இந்த ஸாகோர் vs டெக்ஸ் சாகசமானது நாமெல்லாம் ஆவலாய் எதிர்பார்த்திருக்கும் இதழ் என்பதில் no secrets & இது சமீபமாய் இங்கிலீஷிலுமே வெளி வந்துள்ளதொரு இதழும் கூட எனும் போது - இக்கட மொக்கை போட்டால் மூக்கு பழுத்துப் போகுமென்பது உறுதி ! ஏற்கனவே ஒழுங்காய், மருவாதியாய் எழுத முற்படும் வேலைகளிலேயே,  'நடை சரியில்லை..ஓட்டம் சரியில்லை...' என குறைபாடுகள் ஒலித்திட, Team V-ன் இளம் எழுத்தாளப் பெண்மணி தந்திருந்த வெகு சுமாரான script அப்படியே வெளியாகிடும் பட்சத்தில், டப்பா டான்ஸ் ஆடி விடுமென்பதை உணர்ந்த போதே மார்ச்சின் இறுதி வாரம் புலர்ந்திருந்தது ! சரி, வழக்கம் போல ராக்கூத்துக்கள் ; ரா பல்ட்டிகளை அடித்து மாற்றி எழுதிட வேண்டியது தான் என்றபடிக்கே தட்டுத்தடுமாறி பணிகளுக்குள் புகுந்தேன் ! 

ஆனால் போக போக பல்லெல்லாம் ஆடோ ஆடென்று ஆடத் துவங்க, உச்ச ஆதங்கத்தில் - "என்னம்மா இப்புடி பண்ணுறீங்களே ? இந்தா கீது இங்கிலீஷ் ஸ்கிரிப்ட்...இந்தா கீது உங்க மொழிபெயர்ப்பு....and இந்தா கீது அதனை இப்போ திருத்தி எழுதிய எனது ஸ்கிரிப்ட் ; இவ்ளோ வித்தியாசத்தில் எழுதினா எப்புடி தேத்துறது ?" என்று வாட்சப்பில் ஒருபாட்டம் அழுது மெசேஜ் அனுப்பினேன் ! கொஞ்ச நேரம் கழித்து, "ஐயோ...ரொம்ப சாரி சார், உங்க மொழிபெயர்ப்பை வாசிக்கும் போது நான் கோட்டை விட்டிருப்பது புரியுது ; ஆனால் ஏதோ குளறுபடி சார் !! எனது ஸ்கிரிப்ட் இதுவே அல்ல. நிறைய இடங்களில் ஓரிரு வரிகளை காணோம் ; நிறைய இடங்களில் நான் எழுதியது மாற்றி எழுதப்பட்டுள்ளது !" என்று குண்டைத் தூக்கிப் போட்டார் ! எனக்குமே  அந்நேரத்துக்குள் இந்த விஷயம் புரிந்திருந்தது and அப்புறம் தான் தெரிய வந்தது - நமது DTP பிரிவினர் எனது வேலையை சுலபமாக்கிடும் முயற்சியாய் அவர்களுக்குத் தெரிந்த மொழிமாற்றத்தை ஓசையின்றிச் செய்து, ஓட்டிங் & பிட்டிங் பண்ணியிருக்கின்றனர் என்பது ! கிறுகிறுத்துப் போனேன் !! ஒரு பக்கம் ஷெரீபிடமிருந்து கோரிப்பெற்றிருந்த இங்கிலீஷ் பக்கங்கள் ; இன்னொரு பக்கம் இளம் மொழிபெயர்ப்பாளர் எழுதி அனுப்பியிருந்த ஸ்கிரிப்ட் ; and மறு பக்கத்தில் நமது உள்ளூர் மொழிபெயர்ப்புடன் DTP செய்யப்பட தமிழிலான பக்கங்கள் ! கொஞ்ச நேரம் போராடிப் பார்த்தேன் - வெறும் பட்டி டிங்கரிங் செய்து கதையினைத் தேற்றிட ! ஆனால் தொங்கிப் போன நாக்கு - "இந்த ஆட்டத்துக்கு நான் வரவே இல்லைடா சாமி" என்று கதறி விட்டது ! அப்புறமென்ன ? ஆடுறா ராமா...தாண்டுறா ராமா..கதை தான் ; கோட்டை முழுசுமாய் அழிச்சிப்புட்டு பொரோட்டாவை முதல்லேர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன் ! 

126 பக்கங்களிலான கதை இது & நிஜத்தைச் சொல்வதானால் குறைந்தது 150 பக்கங்களிலாவது சொல்லப்பட்டிருக்க வேண்டிய கதை - at least in my opinion ! So வசனங்கள் கணிசமோ, கணிசம் ! மாமூலான V காமிக்ஸ் ஸாகோர் கதைகளைப் போல இங்கேயும் சித்திரங்கள் மிகுந்து ; வஜனங்கள் குறைச்சலாய் இருந்திருந்தால் தலை தப்பியிருப்பேன் ! But கதாசிரியர் மௌரோ போசெல்லியின் கைவண்ணம் & 2 இத்தாலிய ஜாம்பவான்கள் சந்தித்துக் கொள்ளும் கதையுமே எனும் போது, கம்பி மேல் நடக்கும் லாவகத்தில் கணிசமான டயலாக்ஸ் சகிதம் கதை நகர்கிறது ! 'இந்தா..ஆக்ஷன் sequence வந்திருச்சிலே..டுபாய்ங்..டுபாய்ங்..என்று சுட்டபடிக்கே பக்கங்கள் ஓடி விடுமென்று பார்த்தால் - ஊஹூம் ....ரைபிள்களை இறக்கி விட்டு மறுக்கா பேச ஆரம்பிக்கிறார்கள் ! ஒரு டெக்ஸ் / ஸாகோர் சிங்கிள் ஆல்பத்தில் ; அதுவும் இங்கிலீஷில் உள்ளதொரு புக்கில் இத்தனை குட்டிக்கரணம் போட வேண்டியிருக்குமென்று சத்தியமாய் நான் எதிர்பார்த்திருக்கவில்லை ! வெள்ளியிரவு தான் என் பணிகள் முழுசுமாய் முடிந்து, சனி மதியம் தான் பிரிண்டே ஆனது ! And கொடுமையிலும் கொடுமை, எங்க ஊரின் தகிக்கும் வெயிலுக்கு மத்தியிலேயே மழை கொட்ட ஆரம்பித்தது !! So பைண்டிங் போக மாலை வரைக்கும் வாய்ப்பின்றிப் போய்விட்டது ! திங்கள் தான் பைண்டிங் துவக்கிடுவார்கள் & செவ்வாய் டெஸ்பாட்ச் ! Phew ....சாரி guys !! 

இதோ - இந்த இதழின் அட்டைப்படம் & உட்பக்க பிரிவியூ !!


இங்கே ஜம்பிங் பேரவையினர் மட்டுமன்றி, நாமும் தெரிந்து கொள்ளுமொரு ஆச்சர்ய விஷயம் உள்ளது ! ஸாகோர் நம் மத்தியில் அறிமுகமானது தான் லேட்டே ஒழிய, கதை உருவாக்கத்தின்படி, வயதில் அவர் டெக்ஸுக்கு ரொம்பவே சீனியர் ! So கல்கதாயுதம் ஏந்திய நமது மாயாத்மாவுக்கு கிட்டத்தட்ட டெக்சின் தந்தை வயதென இந்த ஆல்பம் மூலமாய் நிறுவப்பட்டுள்ளது ! பேரவை தலைவர் கொஞ்சமாய் ஜம்ப்பிக்கை மட்டுப்படுத்துவரா இதன் பொருட்டு ? - தொடர்ந்து விவாதிப்போம் ! 

Moving back.....ஒரு குட்டியான ஜாலி பகிரல் !! 

பிப்ரவரியின் இறுதியினில் தேசத்தின் தலைநகருக்கு ஒரு விசிட் அடிக்க நேர்ந்தது & புது டில்லி புத்தக விழாவே அதன் பின்னணி ! ஒவ்வொரு சர்வதேசப் புத்தக விழாவிலும் ஏதேனும் ஒரு நாட்டைத் தேர்வு செய்து அதன் தலைசிறந்த படைப்பாளிகளை ; படைப்புகளை கவுரவிப்பது வாடிக்கை ! And 2 ஆண்டு இடைவெளிக்குப் பின்பாய் மறுக்கா களமிறங்கியிருக்கும் டில்லி புத்தக விழாவினில் பிரதம விருந்தாளிகளாய் கெளரவிக்கப்பட்டது : பிரான்ஸ் ! So அவர்களின் தேசத்து top எழுத்தாளர்கள் ; சிந்தனையாளர்கள் ; முக்கிய பதிப்பக பிரதிநிதிகள் என்று சரமாரியாக டில்லிக்குப் படையெடுத்திருந்தனர் & இவற்றிற்கான  அத்தனை ஏற்பாடுகளையும் முன்னின்று ஒருங்கிணைத்து வந்தது டில்லியிலுள்ள பிரெஞ்சு தூதரகத்தின் கலாச்சாரப் பிரிவு ! அவர்களின் அயரா செயல்பாடுகளின் ஒரு பகுதியாய் - பிரெஞ்சு தேசத்துடன் நெடும் காலத் தொடர்பு கொண்டுள்ள இந்திய பதிப்பகங்களுள் ஒரு சிறு எண்ணிக்கையிலானோரை மட்டும் தூதரகத்தில் ஒரு காலை ப்ரேக்பாஸ்ட மீட்டிங் ஏற்பாடாகி இருந்திருக்கிறது ! And அந்த காலைச் சந்திப்பின் முக்கிய விருந்தினராக இருக்கவிருந்தது - பிரெஞ்சு பதிப்பக சங்கத்தின் தலைவர் போலும் ! அவரைச் சந்திக்கக்கூடிய இந்தியப் பதிப்பகங்களின் பட்டியலை தூதரகம் தயார் செய்த போது, 38 ஆண்டுகளாய் பிரெஞ்சு காமிக்ஸ் உலகோடு கரம்கோர்த்துள்ள நமது பெயரும் அதனில் இடம் பிடித்திருக்கிறது ! So ஜனவரியின் ஒரு பொழுதிலேயே நமக்கொரு மின்னஞ்சலைத் தட்டி விட்டிருந்தனர் - "டில்லி சந்திப்பினில் நீங்களும் கலந்து கொள்ள முடியுமாவென்று கேட்டு !" கவுண்டர் பாணியில்..."சேலத்திலே மாநாடு...டில்லியில் மீட்டிங்கு" என்றெல்லாம் பிகு பண்ணிடாது - "Oh yes ...தேதியையும், நேரத்தையும் மட்டும் சொல்லுங்கஜி....இந்த ஆந்தையன் டணால் தங்கவேலுவாய் - டணாளென்று அங்கே ஆஜராகிப்புடுவான் !" என்று பதில் போட்டேன் ! இதை விடவும் நமக்கு ஆணி பிடுங்கும் வேலை வேறு என்ன இருக்க முடியும் ? 

அதைத் தொடர்ந்து கிட்டிய பதிலில், சந்திப்புக்கான ஏற்பாடுகள் ; கலந்துகொள்ளவிருக்கும் இதர 11 இந்திய பதிப்பகங்களின் விபரங்கள்,  என சகலமும் இருந்தது ! அந்தப் பட்டியலில் நாம் ஒருத்தர் மட்டுமே முழுக்க முழுக்க 'பொம்ம புக்' போடும் பார்ட்டி ; பாக்கிப் பேரெல்லாம் இலக்கியம் ; வரலாறு ; தத்துவம் ; கலைகள் என்று specialize செய்வோர் ! ஹிந்தியில் டின்டின் வெளியிடும் பதிப்பகத்தினர் கூட பட்டியலில் இருந்தனர் ; ஆனால் கிட்டத்தட்ட 15,000 தலைப்புகளில் புக்ஸ் வெளியிட்டு வரும் அந்த ஜாம்பவான்களுக்கு, காமிக்ஸ் ஒரு கூடுதல் ஜானர் மட்டுமே ; அது தவிர்த்து வேறு துறைகளில் வண்டி வண்டியாய் பிரெஞ்சு புக்ஸை மொழிமாற்றம் செய்து ஹிந்தியில் வெளியிட்டு வருகின்றனர் ! And breakfast பட்டியலில் நம்மைத் தவிர்த்து 2 தமிழ் பதிப்பகங்களும் இருந்ததையும் கவனித்தேன் - தத்துவம் & வரலாறு துறைகளில் பிரான்ஸோடு கரம் கோர்த்த அனுபவத்துடன் ! பொதுவாக இங்கேயே 'பொம்ம புக்' வெளியீட்டாளர்கள் என்று லைட்டான பரிகாசப் பார்வைகள் நம் மீது படிவதை நிறைய முறைகள் உணர்ந்துள்ளோம் தான் ; இப்போ இப்போ, புத்தக விழாக்களுக்கு தவறாது attend பண்ணுவதாலும், ஆங்காங்கே நீங்கள் அதிரடியாய் தரும் ஆதரவானது கவனங்களை ஈர்ப்பதாலும், அந்தப் பார்வைகளில் புரிதல் புலர்ந்துள்ளது ! ஆனால் ஒரு Pan India பதிப்பகப் பெரியவர்களின் மீட்டிங்கில், வெறும் பொம்ம புக் மட்டுமே வெளியிடும் ஒரு 'மதராசியை' எவ்விதம் ஏற்றுக்கொள்வார்களென்று கணிக்க இயலவில்லை ! 

But surprise....அந்தக் காலைச் சந்திப்பின் போது அனைவரும் இயல்பாகவே பழகினர் ! And சந்திப்பின் ஹைலைட்டே - அன்றைய மீட்டிங்கின் நாயகரான பிரெஞ்சுப் பதிப்பகத் துறையின் தலைவரானவர் நாம் காலமாய் கரம் கோர்த்து வரும் காமிக்ஸ் குழுமத்தின் தலைவருமே என்பது தான் ! செம வாஞ்சையோடு நமது மார்க்கெட் பற்றி ; நம் வாசக வட்டம் பற்றி ; ரசனைகள் பற்றியெல்லாம் பேசினார் & அவருக்கு மாத்திரமன்றி அங்கு குழுமியிருந்த அனைவருக்குமே வியப்பு - ஒரு பிராந்திய மொழியினில், பிரெஞ்சுப் படைப்புகளுக்கு இத்தனை காலமாய் ஆர்வம் தொடர்வதில் ! And வெகுஜன ஜானர்கள் மாத்திரமன்றி, "நிழல்களின் நிசப்தம்" போலான இருண்ட கி.நா.க்கள் கூட எங்களது சிறுவட்டத்துக்கு அத்துப்படி என்று நான் கெத்துக் காட்டிய போது மெய்யாலுமே பெருமையாக இருந்தது folks ! அளவில் நம் வட்டமானது "அபூர்வ சகோதரர்கள்" அப்புவாய் இருக்கலாம் தான் ; ஆனால் இந்த வட்டம் சாத்தியப்படுத்திக் காட்டும் சாகசங்களோ  'விக்ரம்' கமல் ரேஞ்சுக்கானவை என்பதை அந்த நொடியில் மறுக்கா உணர முடிந்தது ! Thanks ever so much all - for making this journey a lifetime of fun and passion !!

ரைட்டு....அப்புறமாய் நமது "ஆன்லைன் புத்தக விழா" பற்றி : 

ஒரு வாரம் தவிர்க்க இயலா காரணங்களினால் செலவாகிப் போக, நமது ஆன்லைன் விழாவும் அதற்கேற்ப ஒரு வாரம் பின்செல்கிறது ! ரம்சான் புனித நாளில் துவங்கிடவுள்ளது (ஏப்ரல் 22) ஒன்பது இதழ்கள் நிச்சயம் ; இன்னும் கூடுதலாக்கிடுவது லட்சியம் ! And trust me guys - உங்கள் பாக்கெட்களை பெரிதாய் பதம் பார்க்கப் போவதில்லை இந்தக் கத்தை & சுவாரஸ்யத்தில் குறை வைத்திடப்போவதில்லை !

And V காமிக்ஸ் அடுத்த 3 மாதங்களுக்கான சந்தா புதுப்பித்தல் இன்னும் செய்திருக்கா பட்சத்தில் - why not give it a go now folks ?

Bye all...பகிர்ந்திட நிறைய உள்ளன ; பணிகளுமே நிறைய இருப்பதால் இப்போதைக்கு கிளம்புகிறேன் ! See you around ! Have a great weekend !

Sunday, March 19, 2023

பன்னிரெண்டுக்கும், பதினான்குக்கும் மத்தியிலே..!

 நண்பர்களே,

வணக்கம். ஏப்ரலும் நெருங்கியிருக்க, நண்பர் பழனிவேலின் நினைவலைகள் மனதில் நிழலாடுகின்றன ! அவரது ஆதர்ஷ XIII-ன் பிதாமகர் வில்லியம் வான்ஸ் போன இடத்துக்கே பழனியும் புறப்பட்டுப் போய் ஓராண்டாகிறது ! அதன் பின்பான 365 நாட்கள் ஏதேதோ மும்முரங்களில், நகர்ந்து விட்டுள்ளன தான் ! இங்கே சின்னதாயொரு முரண் உணர்வு எனக்கு ! ஓராண்டுக்கு முன்பாய் வைத்தியம் பார்க்கும் பொருட்டு சென்னைக்கு வந்து இறங்கிய கையோடு, மனுஷன் போன் அடித்து எனக்கு தைரியம் சொன்னதெல்லாம்( !!!)  ஏதோவொரு யுகத்து நிகழ்வாய்த்  தோன்றுகிறது ! ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்னே, ஒரு பத்து மாதக் கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஈரோடு வரைக்கும் பைக்கிலேயே பயணம் செய்து, முகம் நிறைந்த புன்னகையோடு தன்னை அறிமுகம் செய்து கொண்ட அந்த நாளோ, நேற்றைக்குப் போல் படுகிறது ! Wonder why ??? 

அதன் பின்பாய் சந்தித்த போதெல்லாம் ; கடுதாசி போடும் போதெல்லாம் ; இங்கே பின்னூட்டமிடும் போதெல்லாம் - பன்னிரெண்டுக்கும், பதினான்குக்கும் நடுப்பட்ட அந்த நம்பரையே ஜெபம் போல மனுஷன் உச்சரித்துக் கொண்டே இருந்ததை நாமறிவோம் ! And நிறைய தருணங்களில், காதில் தக்காளிச் சட்னி கசியும் அளவுக்கு அவரது XIII காதல் ரீங்காரம் தொடர்ந்ததில் எனக்கு நிறையவே அயர்வு ஏற்பட்டிருந்ததை மறுக்க மாட்டேன்  ! "XIII-ஐ தாண்டியுமொரு லோகம் உள்ளது பழனி...ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க !" என்றும் அவருக்கு கடுதாசி எழுதியதும் உண்டு தான் ! ஆனால் போன மே மாதத்தில் டாக்டர் ராஜா சாருடன், கரூருக்கு அருகிலுள்ள அவர்தம்  வீட்டுக்குப் போய்ப் பார்த்த போது தான், XIII என்பது ஒரு கதை ; காமிக்ஸ் ; புனைவு என்ற நிலையெல்லாம் தாண்டி, பழனிக்கொரு உணர்வாகவே மாறியிருப்பதைப் புரிந்திட முடிந்தது ! அவர் வீட்டில், திரும்பிய பக்கமெல்லாம் XIII - ஏதோவொரு ரூபத்தில் ! கண்மூடித்தனமான அந்த நேசத்தினை பார்த்த போது - அழுவதா ? சிரிப்பதா ? என்றே தெரிந்திருக்கவில்லை எனக்கு - simply becos புரியாத ஐரோப்பிய மொழியில் வெளியாகியிருந்த XIII ஆல்பங்களைக் கூட தனது சேகரிப்பில் அடுக்கி வைத்திருந்தார் ! அவற்றின் பின்னே தென்பட்ட பழனியின் காமிக்ஸ் காதலும் புரிந்தது ; அதனுள் முடங்கி கிடந்த பணத்துக்கு நிச்சயம் வேறு நல்ல உபயோகங்கள் இருந்திருக்க முடியும் என்பதுமே புரிந்தது தான் ! Anyways, அவர் உசிரோடு இருந்த வேளையில் நமது ரேடாரில் இருந்திருக்கா அந்த XIII Spin-off கதைகள், அவரது பெயரைச் சொல்லும் விதமாய் ஒவ்வொரு எப்ரலிலும் வெளிவர உள்ளது தான் விதியின் விளையாட்டு போலும் ! ஏக நேரத்தில் சந்தோஷமும், சங்கடமும் சூழ்கிறது பழனி - இந்த இதழின் திட்டமிடலில் !! 

இதோ - "எந்தையின் கதை" preview படலம்  ! XIII தொடரின் மாந்தர்களை எனக்கு ஞாபகம் இருப்பதைக் காட்டிலும் உங்கள் ஒவ்வொருவருக்குமே சிறப்பாய் நினைவிருக்குமென்பது உறுதி ! So "ஜானதன் ப்ளை இன்னார்...இன்னார்...அவர் குலமிது, கோத்திரமிது' என்ற அறிமுகங்களெல்லாம் அனாவசியம் தானே ?! 

XIII தொடரின் வெவ்வேறு 13 கதை மாந்தர்களைத் தேர்வு செய்து, வெவ்வேறு படைப்பாளிகளிடம் அவர்களை ஒப்படைத்து, ஆளுக்கொரு பின்னணிக் கதையை உருவாக்கச் செய்திருந்தனர் - இந்த spin-off வரிசைக்கு ! பிதாமகர் வான் ஹாம்மின் மேற்பார்வையில் இம்முயற்சி நடந்திருப்பினுமே, ஒவ்வொரு கதாசிரியருக்குமான தனிப்பட்ட பார்வைகள் நாம் பழகியிருந்த XIII template-க்கு சற்றே அந்நியப்பட்டு நிற்கப் பார்த்திருக்கிறோம் ! And இந்த spin-off வரிசையானது மெயின் தொடருக்கு இணையாய்ப் பேசப்படாது போனதற்கு இதுவும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது ! ஆனால் 13 ஆல்பங்கள் கொண்ட இந்த "XIII மர்மம்" தொடரினில், சிலவற்றுக்குக் கிட்டியிருக்கும் treatment - ஒரு சபாஷ் போட வைக்காதும் இல்லை தான் ! காத்திருக்கும் "எந்தையின் கதை" அந்தச் சிறுபான்மையில் ஒன்று ! ஒரு நெடும் தொடருக்குள் பின்னிக் கிடக்கும் ஒரு complex கதாப்பாத்திரத்துக்கு நெருடல்களில்லா ட்ரீட்மெண்ட் தருவது சுலபக் காரியமே அல்ல தான் - moreso ஒரிஜினலுக்குக் கதை எழுதியது ஒரு ஜாம்பவான் எனும் போது ! ஆனால் இம்முறை புதுக்கதாசிரியர் லுக் ப்ரன்ஷ்விக் நிச்சயம் சோடை போயிருக்கவில்லை ! ரொம்பவே இயல்பானதொரு கதை....நம்ப சிரமங்கள் தந்திடா ஒரு மர்ம முடிச்சு ; ஜானதன் ப்ளைக்கு அழகானதொரு பின்னணி என்று தந்து, மெயின் கதையுடனான இணைப்பினை லாவகமாய் கையாண்டுள்ளார் ! So பழனியின் பெயரைச் சொல்லி ஒரு அழகான வாசிப்பு அனுபவம் நமக்கு வெயிட்டிங் ! இதோ - அட்டைப்படம் + உட்பக்க previews :




துவக்க நாட்களது XIII மொழிபெயர்ப்புகளின் போது நேர்ந்த பிழைகள் சமீப பொழுதுகளில் தொடர்ந்திடலாகாதென்பதில் ரொம்பவே கவனமாய் இருந்து வருகிறேன் ! So "எந்தையின் கதை" இயன்றமட்டுக்கு ஒரிஜினலை ஒட்டிப் பயணித்திடும் வரிகளுடன் இருக்கவுள்ளது ! அட்டைப்படமோ - ஒரிஜினல் சித்திரத்துடன் ; வண்ணப் பின்னணியில் மாத்திரமே மாற்றங்களுடன் ! 

இது XIII மர்மம் தொடரினில் நாம் வெளியிடும் ஆறாவது ஆல்பம் ! இன்னமும் 7 எஞ்சியுள்ளன - up and down அனுபவங்களைத் தரும் ஆற்றலோடு ! ப்ளஸ் தொடரின் முக்கிய கதாப்பாத்திரமான ஜோன்ஸுக்கென ஒரு 3 பாக spin-off வேறு புதிதாகத் தயாராகி வருகிறது ! And மெயின் தொடரினில் ஏற்கனவே 1 புது ஆல்பம் காத்துள்ளது + அடுத்தாண்டு வரவுள்ள இன்னொரு ஆல்பத்தோடு இரண்டாம் சுற்றை நிறைவு செய்திட உள்ளார்களாம் ! So அடுத்த ஒரு டஜன் ஆண்டுகளுக்காவது பழனிக்கான tributes தொடர்ந்திட வழிவகையுள்ளது ! மெயின் தொடரும் அதற்கு மத்தியில் "மூன்றாம் cycle" என புறப்படும் பட்சத்தில், of course there will be more !  

Moving on, "உயிரைத் தேடி" பணிகளின் இறுதி stretch ஓடி வருகின்றன ! நாளை மறுநாள் black & white பதிப்பானது அச்சுக்குச் செல்கிறது ! And அடுத்த வாரயிறுதியனில் வண்ணப் பதிப்பும் பிரிண்ட் நோக்கிப் பயணிக்கத் தயாராகிட வேண்டும் - fingers crossed ! நமது ஆன்லைன் புத்தக விழாவின் மெயின் பார்ட்டிக்களே இவர்கள் தான் எனும் போது - இவர்களை உருப்படியாய் தயார் செய்து விட்டாலே ஒரு பெரும் சுமை தோள்களிலிருந்து இறங்கியிருக்கும் ! அதன் பின்பாய் பாக்கி இதழ்களை போட்டுத் தாக்க வேண்டியது தான் ! And இங்கே சின்னதாயொரு தகவலுமே : 

புத்தக விழா கேரவனானது மறுபடியும் புறப்பட தயாராகியுள்ளது - இம்முறை விழுப்புரம் & திருவண்ணாமலை நகர்களை நோக்கி !!

**மார்ச் 25 முதல் ஏப்ரல் 5 வரை விழுப்புரத்திலும்

**மார்ச் 27 to ஏப்ரல் 6 வரை திருவண்ணாமலையிலும்

விழாக்கள் துவங்கிடவுள்ளன ! So நம்மாட்கள் இங்கும், அங்கும் பிசியாக இருப்பர் எனும் போது ஆன்லைன் புத்தக விழா ஏப்ரல் 1 & 2 தேதிகளுக்கு சாத்தியமாகிடாது ! Will have to be ஏப்ரல் 15 & 16 ! மறுக்கா fingers crossed !!

இரு இலக்குகளுமே (நமக்கு) புத்தக விழா firsts என்பதால், என்ன மாதிரியான வரவேற்பு கிட்டுமென்று கணிக்க தெரியவில்லை ! In fact விழுப்புரத்துக்கே இது முதல் புத்தக விழாவாம் ! எப்படியாயினும் மக்களின் பார்வைகளில் பட்டிடக் கிடைக்கும் இத்தகைய வாய்ப்புகளை, வரவு-செலவுகளுக்கு அப்பாற்பட்ட அழகான விஷயமாகவே நாம் பார்த்திடுகிறோம் ! வெறுமனே மகசூல்களை மட்டுமே கவனிக்கும்  பட்சத்தில், சிறு நகரங்களின் ஒரு சில விழாக்கள் வறண்டு தென்படலாம் தான் ; ஆனால் ஒரு நெடும் பயணத்திற்கு சகல திக்குகளிலிருந்து கிட்டும் சகாயங்களும் அவசியம் என்பதால் இந்த அனுபவங்களையும் உற்சாகமாய் அரவணைத்து வருகிறோம் ! 

And தொடர் சங்கிலியாய் புத்தக விழாக்கள் அரங்கேறி வரும் சூழலில், கொஞ்சமாய் கைவசமுள்ள இதழ்களின் பலத்தினை அதிகம் பண்ண வேண்டியுள்ளது ! Of course சொற்ப விலைகளிலான மினி காமிக்ஸ் அதற்கு உதவிடும் தான் ; ஆனால் லக்கி லூக் ; மாயாவி & 'தல' டெக்ஸ் தான் சகல விழாக்களின் பிரதம showpieces எனும் போது, அவர்களின் கையிருப்புகளில் இன்னும் கொஞ்சம் எண்ணிக்கைகளைக் கூட்டிட வேண்டியுள்ளது ! புது லக்கி லூக் & புது டெக்ஸ் ஆல்பங்கள் ஒருபக்கம் வெளிவந்து கொண்டுள்ளன என்றாலும், கையிருப்பின் எண்ணிக்கையினை 'டக்'கென்று உசத்த மறுபதிப்புகளே அருமருந்து ! So மேற்படி 3 தொடர்களிலும் சரி, இன்னும் ஓரிரு prime நாயகர்களின் தொடர்களிலும் சரி, நீங்கள் பார்த்திட விரும்பும் மறுபதிப்புகள் பற்றிய பரிந்துரைஸ் ப்ளீஸ் ? அதற்காக "ஜான் மாஸ்டர்..இரட்டை வேட்டையர்.....என்ற ரேஞ்சுக்குப் போக வேணாமே ப்ளீஸ் ? கோப்புகளை படைப்பாளிகள் ரெடி செய்திடும் வரையிலும் அவற்றிற்குள் தலைநுழைக்க சாத்தியங்கள் கிடையாது ! நான் கோரிடுவது, இந்தக் கடைசிப் 11 ஆண்டுகளில் வெளிவந்து, தீர்ந்து போன இதழ்களுக்குள்ளிருந்தான தேர்வுகளை மட்டுமே ப்ளீஸ் ?! இவை சகலமும் டிஜிட்டல் கோப்புகளாய் இருப்பதால், மறுபதிப்புச் செய்வது சுலபம் ! So suggestions please ?

Bye all...V காமிக்சின் TEX vs ZAGOR இதழினை பராக்குப் பார்க்கப் புறப்படுகிறேன் ! இள ரத்தங்களுடன், டீம் V அழகாய் துளிர் விட்டு வருவது ரொம்பவே மனநிறைவைத் தருகிறது ! மொழிபெயர்ப்பாளர்கள் அனைவருமே under 35 !! அவர்களின் லேட்டஸ்ட் பணியை பார்க்கவும், அவசியப்பட்டால் ரோசனைகள் நல்கவும் நடையை கட்டுகிறேன் ! V காமிக்ஸ் அடுத்த 3 மாதங்களின் சந்தா செலுத்தியிருக்கா நண்பர்கள் இன்றைக்கே அனுப்பிடலாமே - ப்ளீஸ் ? 

Rs .300 for Lion & Muthu subscribers !

Rs .400 for newcomers !

See you around ! Enjoy the Sunday !

Saturday, March 11, 2023

சீக்கிரமே சார்லி...!

 நண்பர்களே,

வணக்கம். நாயர் கடையிலே புச்சா ஒரு மாஸ்டர் டீ போட வந்தா - அடடே, கூட்டம் அள்ளுதே !! முன்னமே தெரிஞ்சிருந்தா கொஞ்சம் போண்டாவும், வடையும் சேர்த்தே போட்டிருக்கலாமோ ? Anyways காத்திருக்கும் பொழுதுகளுக்கென கணிசமான ஐட்டங்கள் ரெடியாகி வருகின்றன எனும் போது சீக்கிரமே ஜமாய்ச்சுடலாம் ! 

ஆன்லைன் புத்தக விழாவுக்கென பணிகள் ஒரு பக்கம் ஓடி வருகின்றன என்றால் - SUPREME '60s தடத்தின் இதழ் # 2 இன்னொரு பக்கம் தடதடத்து வருகின்றது ! And இம்முறை தலைகாட்டவுள்ளது நமது பப்லிமாஸ் கன்ன புகழ் சார்லி தான் ! 1970-களின் ஏதோவொரு பொழுதில், முதன் முதலாய் இந்த கொழு கொழு நாயகர் நமது முத்துவில் அறிமுகமான நாட்கள் நம்மில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்குமோ - ஞானறியேன் ; ஆனால் எனக்கு பளிச்சென்று நினைவில் உள்ளது ! "கடத்தல் ரகசியம்" என்றதொரு பாக்கெட் சைஸ் ஆல்பத்தில் இந்த டிடெக்டிவ் சார் entry ஆகியிருந்தார் ! வள வள ஆர்ட்பேப்பரில் பிரிண்ட் போடப்பட்டு கதைகளின் ஒரிஜினல்கள் அந்நாட்களில் நமக்கு வந்து சேர்ந்திடும் and more often than not - அந்தப் பார்சல்களை நான் ஸ்கூலிலிருந்து திரும்பும் வரைக்கும் உடைக்காமலே முத்து காமிக்சின் ஆபீசில் வைத்திருப்பார்கள் ! நல்ல பெரியதொரு டார்க் மஞ்சள் நிற கவர் மேஜையில் காத்திருக்கும் - உள்ளாற வேதாளரையோ ; மாண்ட்ரேக்கையோ ; ரிப் கிர்பியையோ தாங்கி ! இம்முறை Buz Sawyer என்றொரு புதியவரின் கதையொன்றும் உள்ளுக்குள் இருக்க, எனக்கு முதற்பார்வையிலேயே காதல் - இந்த மனுஷன் மீது ! ஏனோ தெரியலை, ஆனால் அந்த கள்ளம் கபடமில்லாத புன்சிரிப்பும், கொஞ்சம் cartoony பாணியிலான சித்திரங்களும் பச்சக்கென மனதில் ஒட்டிக்கொண்டன ! கதையை வீட்டுக்குக் கொண்டு போய்ப் படிக்கும் பொறுமையெல்லாம் இல்லை ; அங்கேயே அமர்ந்து படித்த அந்தக் கதை தான் அடுத்த சில மாதங்களில் "கடத்தல் ரகசியம்" என்று ஒரு மஞ்சள் நிற அட்டைப்படத்துடன் வெளியானது ! So கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்குப் பிற்பாடு, the very same "கடத்தல் ரகசியம்" கதையினையும் உள்ளடக்கியதொரு "சார்லி ஸ்பெஷல்" இதழினை ரெடி செய்திடும் வேளையில், நிரம்ப மலரும் நினைவுகள் !

நீங்கள் 1.9K அல்லது 2K கிட்ஸாக இருந்து ; க்ளாஸிக் நாயகர்களோடு இப்போது தான் அன்னம், தண்ணீர் புழங்கிடுவதாக இருந்தால் - மீசையில்லாத ஜெமினி கணேசன் போலான இந்த டிடெக்டிவை உங்களுக்குப் பரிச்சயமிருக்கும் வாய்ப்புகள் குறைச்சல் ! Buz Sawyer என்ற நம்ம சார்லி - நாம் மாமூலாய்ப் பார்த்திடும் "கையிலே கன்" ரகத்து ஆக்ஷன் நாயகரெல்லாம் கிடையாது தான் ! "கால்நடைகளைக் காணோம்" என்ற புகார் வந்தாலும் களமிறங்குவார் ; கோடி ரூபாயைக் காணோமென்றாலும் துப்பறியத் துவங்கிடுவார் ! யதார்த்தமான பல மனிதர்கள் ; மித ரக வில்லன்கள் ; தெளிந்த நீரோடையாய் ஓடும் கதைக்களங்கள், என இவரோடு பயணம் பண்ணுவது - ஒரு விக்கிரமன் படம் பார்த்த feel good உணர்வினைத் தரத் தவறுவதில்லை ! Of course - நிச்சயமாய் இதற்கு மாற்று அபிப்பிராயங்கள் இல்லாது போகாது - but நீங்களாகவே சார்லியோடு ஒருவாட்டி டிராவல் செய்துவிட்டு அப்புறமொரு தீர்மானத்துக்கு வருவது நலமென்பேன் ! 

மொத்தம் 11 கதைகள் & அவற்றுள் ஒன்றே ஒன்று மட்டும் மறுபதிப்பு ! And சைசும் வழக்கமான MAXI அல்லாது, அதனில் பாதி சைசில், 392 பக்கங்கள் கொண்டிருக்கும் ஹார்ட் கவர் இதழிது ! So இந்த பழைய நாயகர் + புது format கூட்டணி பற்றிய உங்களின் எண்ணங்களை அறிந்திட எப்போதும் போல் ஆர்வத்துடன் காத்திருப்போம் ! அப்புறம் சின்னதாய் இக்கட ஒரு குறிப்பு : "புராதன நெடி நாசியை துளைக்கீ" என்ற ரீதியிலான stating the obvious சமாச்சாரங்கள் வேணாமே ப்ளீஸ் ! இது க்ளாஸிக் சரக்கிற்கான பிரேத்தியேகத் தனித்தடம் & காலத்தில் பின்னோக்கிப் போயே கதைத்தேர்வினைச் செய்தும் உள்ளோம் என்பதை நெற்றியிலே ஒட்டித் திரிகிறோம் எனும் போது - சமகாலத்து அளவுகோல்களை இங்கு நடைமுறைப்படுத்திப் பார்த்தலில் ஆதாயங்கள் இருந்திடப் போவதில்லை !  பீம்சிங் காலத்து black & white படங்களைப் பார்த்திடத் தான் டிக்கெட் வாங்கிடுகிறோம் என்பதை நினைவினில் இருத்திக் கொண்டால் திரையில் Schindler's List-ஐ மிஸ் செய்திட மாட்டோமல்லவா ? 

ஒற்றை மறுபதிப்பு நீங்கலாய் பாக்கிக் கதைகள் சகலத்துக்கும் மொழிபெயர்ப்பு கருணையானந்தம் அங்கிள் தான் ! இப்போதெல்லாம் நேர்கோட்டுக் கதைகளில் பணியாற்றுவது எனக்கு 'டர்' அனுபவமாகவும், மூக்கை முன்னூறு தபா சுற்றும் கதைகளில் பணியாற்றுவது அங்கிளுக்கு அயர்வு தரும் அனுபவமாகவும் அமைவதால் - எங்களுக்கு மத்தியிலான கோட்டை தெள்ள தெளிவாய்ப் போட்டுக் கொள்ள முடிகிறது ! So கோட்டுக்கு அப்டிக்கா நான் போறதே இல்லை and in fact இந்த ஆல்பத்தினை பெரிதாய் எடிட் செய்திட மெனெக்கெடவெல்லாம் இல்லாது பிழை திருத்தங்கள் மட்டும் செய்த கையோடு அச்சுக்கு அனுப்பிடவே சபலம் தட்டியது ! And வாகாய் நமது நண்பர் ஒருவரும் பிழை திருத்தம் பார்த்துத் தர முன்வர, மொத்தப் பக்கங்களையும் அவரிடம் தூக்கி அனுப்பி விட்டு இதர பணிகளுக்குள் மண்டையை நுழைத்து விட்டிருந்தேன் ! நண்பரும் ஒரே வாரத்துக்குள் மொத்தத்தையும் proof reading செய்து அனுப்பியிருக்க, 'ரைட்டு - பிரிண்டிங்குக்கு ரெடி பண்ணிடலாம் மைதீன் !' என்று சொல்லியிருந்தேன் ! இக்கட ஒரு குட்டி கொசுறு தகவல் ! 2012-க்குப் பின்பான நமது இரண்டாம் இன்னிங்சில் கிட்டத்தட்ட 475+ இதழ்களை வெளியிட்டிருப்போமென்று தோராயமாய் சொல்ல தோன்றுகிறது ! (Maybe a bit more ; or a bit less) இந்த 475+-ல் பிள்ளையார் சுழி முதல் சுப மங்களம் வரைக்கும் நான் பணியாற்றிடாத இதழே கிடையாது - ஒன்றே ஒன்று நீங்கலாய் !! The Mystery ஸ்பெஷல் என்றதொரு மர்ம மனிதன் மார்ட்டின் புக்கினை மட்டும் அம்மாதத்து பணிநெருக்கடி காரணமாய் தொடக்கூட எனக்கு முடிந்திருக்கவில்லை ; இம்மியும் எடிட் செய்திடாது வெளியிட்டிருந்தோம் ! அநேகமாக அதற்குப் பின்பாக இந்த "சார்லி ஸ்பெஷல்" தான் நான் மண்டையை நுழைக்கவே செய்திருக்கா இதழ் # 2 ஆக இருந்திடுமென்று தோன்றியது ! But நம்ம பப்லிமாஸ் சார்லியை வாசிக்காது கழற்றிவிட உள்ளுக்குள் கொஞ்சமாய் நெருட - சரி...மேலோட்டமாய், வேக வேகமாய் வாசிப்போமே என்று ஆரம்பித்தேன் ! போகப்போக எழுத்துப் பிழைகளும் நிறையவே  கண்ணில் பட ஆரம்பித்தன & கதைகள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு விதத்தில் என்னை வசீகரிக்கவும் துவங்கின ! அப்புறமென்ன - கண்ணில்பட்ட பிழைகளைத் திருத்தியபடியே 11 கதைகளையும் 'ஏக் தம்மில்' ஒன்னரை நாட்களில் (சு)வாசித்தேன் ! உள்ளதைச் சொல்வதாயின் இந்த SMASHING '70s தடத்திலும் சரி, SUPREME '60s தடத்திலும் சரி, இத்தனை சுளுவாய் வாசிக்க எனக்கு சாத்தியப்பட்டோர் இருவர் தான் ! And they are : ரிப் கிர்பி & சார்லி ! வேதாளரில் கூட இந்த ஜாலியான யதார்த்தம் ஒரு மிடறு குறைவாக இருந்தது போல்பட்டது எனக்கு ! 11 கதைகளும் ஒவ்வொரு விதத்தினில் அமைந்துள்ளன & ஒவ்வொன்றையும் நீங்கள் நேரம் கிட்டும் போதெல்லாம் வாசிக்கலாம் ! So நான் நிரம்ப ரசித்த சார்லியை நீங்களும் ரசித்திடுவீர்களா ? என்பதை அறிய ஏப்ரலுக்கோ வெயிட்டிங் ! இதோ - சென்னை ஓவியர் + நமது டிசைனர் கோகிலாவின் கூட்டணியிலான அட்டைப்பட முதற்பார்வை & உட்பக்க டிரெய்லர் :



Moving on, V காமிக்ஸின் அடுத்த க்வாட்டருக்கான வரவேற்பு தெறி ரகம் என்பதைச் சொல்லியாக வேண்டும் ! காத்திருக்கும் ஏப்ரல் இதழில் ஜம்பிங் ஸ்டாரும், 'தல' டெக்ஸும் பட்டையைக் கிளப்பவிருப்பது ஒரு கூடுதல் காரணம் என்று புரிகிறது ; but still, V பெற்று வரும் இந்த கவனம் ரொம்பவே ஸ்பெஷல் ! And இந்த சுலப வாசிப்பு template சிறுகச்சிறுக வேரூன்றி விடும் என்ற நம்பிக்கையினை உங்கள் உற்சாகங்கள் தருகின்றன ! Fingers crossed !


அப்புறம் ஆன்லைன் புத்தக விழா சார்ந்த பணிகள் எதிர்பார்த்தது போலவே அத்தினி பேரது குறுக்குகளையும் இங்கே கழற்ற துவங்கி விட்டது ! "லட்சியம் ; நிச்சயம்னு பன்ச் டயலாக் பேசிப்புட்டு, லூசு கோர்த்து விட்ருச்சி ; இங்கே ஆளாளுக்கு நாக்கு தொங்குதுடோய் !" என்ற நம்மாட்களின் மைண்ட்வாய்ஸ் அனுதினமும் கேட்டு வருகிறது தான் - but நம் வண்டியை ஓட்டமெடுக்கச் செய்யும் பெட்ரோலே இது போலான சவால்கள் தான் எனும் போது, அதன் லேட்டஸ்ட் அத்தியாயத்தை எதிர்கொள்ள அந்தர்பல்டிக்களை சரளமாய் அடிக்க ஆரம்பிச்சாச்சு ! ஏப்ரலின் ரெகுலர் இதழ்களை அடுத்த சில நாட்களில் பூர்த்தி செய்து விட்டால் அப்புறம் full steam ahead தான் - ஆன்லைன் விழா சார்ந்த ஸ்பெஷல்களின் திக்கில் ! And ஆன்லைன் விழா நடந்திடும் வாரயிறுதி எதுவாக இருப்பினும், ஏற்கனவே சொன்னது போல - ஒரு சூப்பர் அறிவிப்பினை நடுவாக்கில் நுழைத்திடவும் all is ready !!  

ஏப்ரல் இதழ்கள் எனும் போது - காத்திருக்கும் XIII Spin-off (எந்தையின் கதை) பற்றிச் சொல்லாது இருக்க இயலாதென்பேன் ! XIII தொடரின் ஒருசில மறக்கவியலா images உண்டெனில் - குட்டிப்பையன் ஜேசன் தன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையிலொரு கரடி பொம்மையைப் பற்றியிருக்கும் சித்திரத்தை சொல்லிடலாம் ! அந்த டாடி ஜானதன் பற்றிய கதை தான் இந்த spin off எனும் போது, இ.ப.ரசிகர்களுக்கு இது நிரம்பவே முக்கியத்துவம் பெற்றிடும் என்பதில் ஐயங்களில்லை எனக்கு ! And இந்தக் கதைக்கென பேனா பிடித்த அனுபவம் நடப்பாண்டின் highlight-களுள் நிச்சயம் இடம்பிடித்திடும் எனக்கு ! பிரெஞ்சில் இந்த ஆல்பத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதிய மனுஷன், சும்மா பின்னிப் பெடல் எடுத்துள்ளார் & அவற்றை பிசகின்றி தமிழுக்கு கொணரும் முயற்சியானது எனது இவ்வாரத்து இரண்டரை நாட்களை தொடர் குட்டிக்கரணப் பொழுதுகளாக்கின என்று தாராளமாய்ச் சொல்லலாம் ! அதுவும் அனல் பறக்கும் அரசியல் வசனங்கள் இடம்பிடிக்கும் தருணங்களெல்லாம் மாடு கழனித்தண்ணி குடிக்காத குறை தான் எனக்கு ! இந்த ஆல்பம் வெளியாகிடும் பொழுது நிரம்ப சுவாரஸ்யம் இல்லாது போயின் நிச்சயம் வியப்படைவேன் ! பழனி....this one's for you !! வாக்குத் தந்திருந்தது போலவே இந்த இதழிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையானது நண்பரின் குடும்பத்துக்குச் சென்றிடவுள்ளது ; so இயலும் பட்சத்தில் maybe ஒரு பிரதி கூடுதலாய் இந்த ஆல்பத்தினில் மட்டும் வாங்கிட முயற்சிக்கலாமே guys ? And தொடரவுள்ள ஒவ்வொரு ஏப்ரலிலும், "XIII அல்லது XIII Spin-off" என்ற இந்த நடைமுறை தொடர்ந்திடும் !

Bye all...மார்ச்சின் அலசல்களோடு தொடருவோமே ? See you around...have a fun Sunday !

Monday, March 06, 2023

V = WE = அடுத்த 3 மாதங்கள் !

 Hi Boss,

வணக்கம். விக்ரம் ஹியர் ! நம்ம V காமிக்ஸின் முதல் quarter புக்ஸ்களை நல்லபடியாக உங்களிடம் கொண்டு சேர்த்ததில் ரொம்பவே மகிழ்ச்சி ! ஸாகோர் ஆரம்பித்து விட்டிருக்கும் இந்த short & sweet வாசிப்புகள், நம்ம V காமிக்சின் அடையாளமாகி விட்டால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி ! ஆக்ஷன் கதைகள் ; பிரமாத அர்ட்வொர்க் ; சிம்பிள் ஸ்டைல் என்பதோடேயே V தொடர்ந்து வெளி வரும் & இதோ அடுத்த 3 மாதங்களுக்கான புக்ஸ் பற்றிய விபரங்கள் ! 

***லயன்-முத்து சந்தாவில் இருப்பவர்களுக்கு தனியாக கூரியர் காசு கட்ட தேவை இருக்காது - ரூ.300 அனுப்பினால் போதும். 

***சந்தாவில் இல்லாவிட்டால் ரூ.400 அனுப்ப வேண்டி வரும் !

Please can you subscribe ?!

அப்பா ஏற்கனவே சொல்லி வருவது போல, ஸாகோரும்-(இளம்) டெக்ஸ் வில்லரும் சந்தித்துக் கொள்ள (அடித்துக் கொள்ள) இருக்கும் 128 பக்க சாகசம் தான், இந்த ஆண்டுடைய இரண்டாவது quarter-ல் highlight ஆக இருக்க போகிறது ! இது வரைக்கும் வந்துள்ள 2 ஸாகோர் கதைகள் டிரெய்லர் மாதிரி என்றால், மெயின் பிக்ச்சர் ஏப்ரல் மாதம் வெயிட்டிங் ! 

அதற்கு பிறகு ஸாகோரின் டார்க்வுட் நாவல்ஸ் வரிசையில் கதை # 3 & ஏஜெண்ட் ராபினின் அடுத்த க்ரைம் த்ரில்லர் ! ராபினின் இந்த ஆல்பத்துக்கு, டேவிட் ரிகமாண்டி என்றொரு இளம் கதாசிரியர் பொறுப்பேற்றிருக்கிறார் & ராபின் 2.0 தொடரின் வெற்றியின் பெரும் பங்கு இவருக்கே போகும் என்று நெட்டில் வாசித்த போது தெரிந்து கொள்ள முடிந்தது ! ஒரிஜினல் கதாசிரியர் நிஸ்ஸியை விடவும் இவர் ராபினுக்கு கூடுதல் வெயிட் தந்துள்ளார் என்று ரொம்பவே பாராட்டுக்கள் ! So இத்தாலியில் போலவே  நம்ம V காமிக்சிலும் ராபின் அடுத்த கியரை போட - "தப்புத் தப்பாய் ஒரு தப்பு" உதவிடும் என்று நினைக்கிறேன் ! 

2023-ன் மூன்றாவது quarter-ல் ஜங்கிள் ஸ்டார் MISTER NO அறிமுகமாகிறார் & இன்னொரு புது தெறி ஆக்ஷன் ஹீரோவும் அறிமுகம் ஆகிறார் ! அநேகமாய் ஜூலை முதலான அந்த quarter-ல் நம்ம V காமிக்ஸ் மாதம் 2 புக்ஸ் என்று வரக்கூடும் ! முதல் தேதியின் புக், லயன் & முத்து காமிக்ஸ் டப்பாக்களுக்குள் செலவின்றி டிராவல் செய்திடும் ; 15-ம் தேதிகளுக்கான புக் மட்டும் போஸ்டல் சர்வீஸில் அனுப்பினால் செலவு குறைவாக இருக்கும் அல்லவா ?

And மினி-காமிக்ஸ் வேலைகளும் வேகமாக நடந்து வருகின்றன ! செம funky ஆக ஒரு லோகோவை, அட்ரஸ் இல்லாத ஒரு ஈ-மெயிலில்  வாசகர் ஒருவர் அனுப்பியிருக்கிறார் ! அதை இன்னும் கொஞ்சம் improve செய்து பயன்படுத்திட இருக்கிறோம் ! வானிச்சாமி விஜய் சார், உங்களுக்கு நன்றிகள் ! உங்கள் contact details அனுப்புங்கள் ப்ளீஸ் ! 

இந்த முதல் 3 மாதங்களுக்குள்ளேயே நிறைய பாடங்கள் படித்திருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாய் குறைகளை சரி செய்து கொண்டு, இன்னும் தெளிவான புக்ஸ்களோடு ஜூன் மாதம் மீண்டும் உங்கள் முன்னே ஆஜராகிறேன் ! Thank you very much for supporting me ! Bye everybody !