Tuesday, September 11, 2018

ஒரு டெக்ஸாஸ் அடைமழை !!

நண்பர்களே,

வணக்கம். கம்பெனி ரூல்ஸ்படி - இதோ உபபதிவு ; மறுபடியுமே "டைனமைட்டை" மையமாக்கி ! இதோ அந்த 507 பக்க மெகா வண்ண சாகசத்தை உட்பக்க டீசர் !! As always - நம்மவர் மஞ்சளில் மினுமினுக்கிறார் !!
இந்தாண்டின் back to back மாதங்களில் இரவுக் கழுகு & டீமை முழுவண்ணத்தில் ரசிக்க சாத்தியமாகியிருப்பது ஒரு அட்டகாசமான தற்செயலென்பேன் ! அது மாத்திரமன்றி - இரு சாகஸங்களிலுமே ரேஞ்சர்களின் முழு அணியும் இடம்பெறுவது highlight !! 

டைனமைட்டின் சாகசம் # 2-ல் டெக்ஸ் & கார்சன் மட்டுமே என்றாலும், முதன் சாகசத்தில் full team in action !!! இதழின் அந்திமப் பகுதியின் பக்கங்களை நிரப்பும் பணிகள் மட்டுமே தற்போதைக்கு எஞ்சி நிற்கின்றன !! அவற்றையும் முடித்த கையோடு black & white பக்கங்களையும், அட்டைப்படத்தையும் அச்சிட்டால் - பைண்டிங் பணிகளே அடுத்து !! 

என்னைப் பொறுத்தவரைக்கும், அடுத்த TEX biggie க்குள்ளே புகுந்தாயிற்று - "காதலும் கடந்து போகும்" தீபாவளி மலர் MAXI Tex சாகஸத்தின் பெயரைச் சொல்லி !! When it rains - it pours .. என்பார்கள் ! டெக்ஸ் எனும் மாரி பொழியத் துவங்கிட்டால் நமக்கெல்லாம் குஷி தானே !! Bye for now all !!

Saturday, September 08, 2018

ஒரு டைனமைட்டின் கதை...!

நண்பர்களே,

வணக்கம், என் மேஜையோரமிருக்கும் கம்ப்யூட்டரின் கீழே 'தேமே' என்றொரு தாள் சதா நேரமும் கிடக்கும்! தினமும் அதை ரெண்டு நொடிக்கேனும் கையில் ஏந்தியபடி மோவாயைத் தடவிக் கொண்டு சிந்தைனை செய்வது போல மூஞ்சை வைத்துக் கொள்ளவது வாடிக்கை! சிலைக் கடத்தல்  சார்ந்த துப்புக்களோ, குட்கா விசாரணைக்கு  வலு சேர்க்கக் கூடிய மேட்டர்களோ அதனில் கிடையாது! மாறாக-ஒவ்வொரு மாதத்தையும் கோழி கிறுக்கலாய் எழுதி-அவற்றின் அடியில் சந்தா A ; சந்தா B என்று திட்டமிடலின் இதழ்களைக் குறித்து வைத்திருப்பேன்! இப்போதெல்லாம் barcode சகிதம் நமது இதழ்கள் வெளிவருவதால், ஒவ்வொரு இதழுக்குமே நம்பர் அத்தியாவசியமாகிப் போகிறது! So முன்கூட்டியே இதழ்களின் வரிசைக்கிரமத்தை அந்தத் தாளில் எழுதி வைத்து ஓரமாய் வெளியீடு நம்பர்களையும் போட்டுக் கொண்டு, மோவாய் தடவலோடு யோசனைக்குள் ஆழ்ந்திடுவது சுகமானெதாரு பொழுதுபோக்கு எனக்கு! அந்நேரம் ஓடும் மகாசிந்தைனகளின் சாம்பிள் இதோ!

  • ·         ஆங்... இந்த மாசம் டெக்ஸ் சாகஸம் இல்லே... அதை ஈடு பண்ண சித்தே வலுவான கதையா எதைத் தேர்வு பண்ணலாம்??
  • ·         ம்ம்ம்... கார்ட்டூன் இல்லாத மாதமிது! ஓவராய் 'கடுங்காப்பி இதழ்களாய்' இந்த மாசம் போட்டுத் தாக்கப்படாது!
  • ·         ஷப்பா ... இது பெண்டு கழற்றும் மாதம்; இதற்கு முன்பான மாதத்தில் ஜாஸ்தி நோவு தரக்கூடிய இதழ்களைத்  திட்டமிடப்படாது!
  • ·         மொழிபெயர்ப்பில் கூடுதலாய் நேரம் பிடிக்கக் கூடிய இதழொன்று களமிறங்கும் மாதமிது! அந்த மாதத்தின் இதர வெளியீடுகள் கொஞ்சம் ஜாலியான பணிக்களங்களாய் இருந்தால் தேவலாம் ! 

எல்லாவற்றிற்குமான highlight - அந்தந்த மாதங்களது நிறைவோடு - அந்தந்த இதழ்களெல்லாம் அச்சாகி முடிந்திடும் சமயம், 'done & dusted' என்றொரு பெரிய டிக்காக அடிப்பதே! மிதமோ-நன்றோ; சொதப்பலோ-ஹிட்டோ -4 இதழ்கள் கொண்டதொரு கூட்டணி  மீதான பணிகள் முழுமை காணும் போது மனசுக்குள் லேசாயொரு விடுமுறை பீலிங்க் எழுந்திடும்! அதன் மறுமாதம் கடோத்கஜன் சைஸில் புது இதழ்கள் காத்திருந்து பீதியைக் கிளப்பினாலும்  அந்த "all is completed" தருணத்தின் சுகமே அலாதி தான்! அதே போல - ஒரு "ஒழுக்கமான புள்ளையாண்டான்" மூடில் இருக்கும் போது-பரபரவென மறுமாதத்து திட்டமிடல்களைச் செய்த கையோடு நம்மவர்களை குச்சியைக் கொண்டு குத்தாத குறையாக அவசரப்படுத்துவதுண்டு! ஆனால் பல நேரங்களில் "சோம்பேறி மாடன்" மூடே மேலோங்கும் என்பதால் - "ஆங்... நேரம் இருக்குதுல்லே.... பார்த்துக்கலாம்!" என்ற படிக்கே லாத்தலாகச் சுற்றுவதும் உண்டு! அத்தகைய தருணங்கள் தான் post இரத்தப்படல நாட்கள் ! இதழைத் தயாரித்து; ஈரோட்டில் ரீலிஸ் செய்து; உங்கள் கைகளில் ஒப்படைக்கவும் செய்தான பின்னே - அசுர உறக்கம் போடும் கும்பகர்ணனின் சோம்பல் தான் வியாபித்துக் கிடந்தது! தொடர்ந்த மாதத்து இதழ்களும் lightweights தான் எனும் போது - பாதி உறக்கத்திலேயே வண்டி ஓடி விட்டது! 

ஆனால் "அக்டோபரின் அட்டவணை"  என்ற சமாச்சாரத்தை சீரியஸாகக் கையில் எடுத்த கணத்தில் நெஞ்சுக்குள் பரிச்சயமான அந்தப் பரபரப்பு மறுக்கா குடிகொள்ளத் துவங்கியது! 777+பக்கங்களுடன் நம் டாப் நாயகர் பிறந்த நாள் கொண்டாடவிருக்கிறார் எனும் போது நான் சோம்பிக் கிடந்தால் புனித தேவன் மனிடோ கண்ணைக் குத்தி விடமாட்டாரா-என்ன? So அடித்துப் புடித்து பணிகள் சூடேறத் தொடங்கி விட்டன கடந்த 10 நாட்களாகவே!

"எல்லாம் சரி ; ஆனால் "டைனமைட்டின் உட்பொருட்கள் என்னவோ? என்ன கதை? என்ன சமாச்சாரம்?" என்று நீங்கள் புருவத்தை உயர்த்தி யோசிப்பது புரிகிறது! ஓவர் சஸ்பென்ஸ் உடம்புக்கு ஆகாது என்பதாலும்-ஆரோக்கியமான எதிர்பார்ப்புகளும் ; விவாதங்களும்; அலசல்களும் -அந்த இதழ் மீதான ஆர்வத்தைப் பரவலாக்கிட உதவிடும் என்பதாலும்- வாய் நிறையக் குழைத்து பூசியிருந்த பெபிக்காலைப் பரபரவென களைந்திட முயற்சிக்கிறேன்! Oh yes folks-என்ன தான் நான் "இந்திரன்-சந்திரன்" என்று ஒரு நாயகருக்கு பில்டப் தந்தாலும் அவரை நீங்கள் ஒட்டுமொத்தமாய் அலசி ஆராயும் போது கிட்டும் பாசிடிவ் அதிர்வுகளின் தாக்கம் -பற்பல மௌன வாசகர்களையும் - ஆர்வமாய் வாங்கிடும் வாசகர்களாய் உருமாற்றி வருவதைப் பார்க்க முடிகிறது! "மெல்லத் திறந்தது கதவு" இதழின் போது நீங்கள் செய்த அதிரடி அலசல்களின் புண்ணியத்தில், ஒரே மாதத்தில் அந்த இதழ் விற்றுத் தீர்ந்து (கதையின் தன்மையைக் கண்ட 'டர்ரில்' நான் முன்கூட்டியே பிரிண்ட் ரன்னை கணிசமாய்க் கம்மி பண்ணியிருந்தேன் என்பது வேறு விஷயம் !!); "நிஜங்களின் நிசப்தம்" இதே விஷயத்தை நடைமுறைப்படுத்திக் காட்டியது அதிரடியாய் !! And இதோ இம்மாதத்து "களவும் கற்று மற" கூட உங்களின் உத்வேகமான வரவேற்புகளால் சார்புநிலைகள் ஏதுமின்றி- "புடிச்சா வாங்குவோம்!" என்றிருக்கும் வாசகர்களை உந்தித் தள்ளும் சக்திகளாக வேகம் பெற்று வருகின்றன ! 

ஓரிரு மாதங்களது அனுபவங்களென்றில்லாது - over a period of time நான் கவனித்துள்ள விஷயமிது guys : பிடிக்காதவைகளைக் கூட நயமாய்; பகடியாய் சொல்லி விட்டு, பாராட்ட வேண்டிய சமாச்சாரங்களை நீங்கள் highlight செய்திடும் பட்சங்களில், அந்த இதழ் தலையில் துண்டைப் போடாது தேறிவிடுகிறது ! So ஒவ்வொரு இதழின் வெற்றியிலும் ,தோல்வியிலும் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் ஸ்பஷ்டமாய் உள்ளதென்பதே யதார்த்தம் ! உங்கள் ஒவ்வொருவரையும் நான் தொங்கோ தொங்கென்று  தத்தம் அபிப்பிராயங்களை பகிரக் கோருவதும்  இதன் காரணமாகவே ! காமிக்ஸ் மீதான ஆர்வத்திலும், நம் மீதான அன்பிலும் நண்பர்கள் சில தருணங்களில், இங்கோ - வேறெங்கோ கொஞ்சம் தூக்கலாய் பாராட்டுக்களை நல்கிடலாம் தான் ! அப்போதெல்லாம் அவர்கட்கு அழகாய் வழங்கப்படும் "ஜால்ரா விற்பன்னர்கள்" என்ற அடைமொழியை விடவும் "விற்பனைத் தூதர்கள்"; "நமது பிராண்ட் அம்பாசிடர்கள்" என்ற அடையாளங்கள் பொருந்திடும் ! ஒரு ஆகச் சிறிய வட்டத்தைப் பாட்டுப் பாடி; ஆட்டம் போட்டு அயர விடாது தொடரச் செய்வதற்கு  உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் எத்தனை உதவுகின்றன என்பதை நீங்களே அறியமாட்டீர்கள் guys ! ஆனால் உங்களுக்குள்ளே உறையும் சக்தியின் பரிணாமங்களை நாங்கள் அறிவோம்!ஆங்... உசிலம்பட்டியில் ஆரம்பிச்சு ஊட்டி வழியா உஸ்பெகிஸ்தான் போய் விட்டேன் என்பது புரிவதால் சடுதியாய் ஒரு U-டர்ன் போட்டு இந்த மேட்டரைத் துவக்கிய புள்ளிக்கே திரும்பிடுகிறேன்!

The Dynamite Special!

இரு முழு நீள சாகசங்களோடு இந்த மெகா இதழ் தயாராகி வருகிறது!

கதை #1 - "புயலுக்கொரு பிரளயம்!" நமது 33 ஆண்டு கால "டெக்ஸ் பயணத்தில்" நாம் இதுவரை சந்தித்திரா ஒரு புது அனுபவம் இதன் மூலம் காத்துள்ளது என்பேன்-simply becos இதுவொரு மெ-கா-மெ-கா சாகஸம் என்பதால்! டபுள் ஆல்பங்கள் 220 பக்கங்களில்; சில ஸ்பெஷல்கள் 260 பக்கங்களில்; Maxi ஆல்பங்கள் 330 பக்கங்களில் என்பதே இதுவரையிலான நமது உச்ச வாசிப்புகளாய் இருந்து வந்துள்ளன - இரவுக்கழுகாருடனான சவாரிகளில்! ஆனால் முதன்முறையிலாக "500" என்றதொரு உயரத்தையும் தாண்டவிருக்கிறோம் இந்த ஒற்றை சாகஸத்தின் வாயிலாக! Oh yes - 507 பக்கங்கள் கொண்டதொரு முழு நீள -முழு வண்ண சாகஸமிது! டெக்ஸ் தொடரின் longest சாகஸம் 586 பக்கங்கள் கொண்டதென்று ஞாபகம் ; தற்போதைய தேர்வு இரண்டாமிடமோ; மூன்றாமிடமோ பிடித்திடக்கூடும் ! And இது பற்றி நாம் ஏற்கனவே 2 வருடங்களுக்கு முன்பாகவே பேசியிருக்கிறோம் ! நம்மவரைத் தூக்கி "மாமியார் வீட்டுக்குள்" போட்டு பாடாய்ப்படுத்தி எடுக்கும் காட்சிகளை முன்னமே பார்த்த ஞாபகம் உள்ளதா? அந்தக் கதையே தான் டைனமைட்டின் முழு வண்ண block! இதோ சில previews!



சிறையில் கல்லுடைப்பதும்; கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்படுவதும்; சித்திரவதைக்கு உள்ளாவதும் இதனில் டெக்ஸ் சந்திக்கவுள்ள அல்லல்களுள் சில! இது போனெல்லியின் கிளாசிக் கதை வரிசைகளுள்  ஒன்று என்பதால்-அவர்களது டாப் படைப்பாளிகளின் கைவண்ணத்தில் மிளிர்கிறது! கதை: G.L. போனெல்லி ; சித்திரங்கள் எரியோ நிக்கோலோ ! 507 பக்க சாகஸம் என்பதற்காக பல டஜன் சில்லுமூக்குச் சிதறடிப்புகளை இங்கே நாம் பார்த்திடப் போவதில்லை! மாறாக-டெக்ஸ்&கோ-வின் மதியூகத்தை; திட்டமிடும் பாணிகளை; தெளிந்த நீரோடை போலான ஸ்க்ரிப்டில் ரசித்திடவுள்ளோம்! And வர்ணங்களில் சும்மா மின்னுகிறார் நமது பிறந்தநாள் நாயகர்!! அச்சிலும் ரொம்பவே அழகாய் இந்த இதழ் அமைத்துள்ளதாய் மனத்துக்குப்பட்டது! நிச்சயமாய் புக்கைப் புரட்டவே நிறைய  நேரம் எடுத்துக் கொள்வீர்களென்று பட்சி சொல்கிறது! So டெக்ஸ் தொடரின் ஒரு மைல்கள் சாகஸம் - waiting!

இதழின் b&w சாகஸமோ ஒரு 266 பக்க crackerjack ஆக்ஷன் மேளா ! டெக்ஸ்&கார்சனின் அதிரடிகள்; நக்கல்கள்; நையாண்டிகள்; சில்லுமூக்குச் சிதறடிப்புகள் என்று அட்சர சுத்தமாய் பட்டையைக் கிழப்பும் சாகஸம் ! கதாசிரியர் க்ளாடியோ நிஸ்ஸியின் அதிர்வேட்டுப் படைப்புகளுள் இதற்குமொரு முக்கிய இடமுண்டு! இதன் preview அடுத்த வாரம் !! வண்ண சாகஸத்திற்கும்; b&w கதையினிற்கும் க்ளைமேக்ஸில் ஒரு ஒற்றுமையுண்டு! இதழைப் படிக்கும் போது அதனை நீங்களே புரிந்து கொள்வீர்கள் ! 

So ஒரு கிளாசிக் மெகா..... நீள சாகஸமும்; இன்னோரு நீ-ள-மா-ன  சாகஸமுமாய் இணைந்து உங்களது அக்டோபரை  மெர்சலாக்க வருகின்றன ! செப்டம்பர் 30-க்கு உங்கள் கைகளில் இதழை ஒப்படைப்பதே இப்போதைக்கு எங்களது ஒரே இலட்சியம்! அப்புறம் இந்த இதழின் பிற்பகுதியில் நமது  'டெக்ஸ் காதலைப்' பதிவு செய்திட பக்கங்கள் சிலவற்றை ஒதுக்க எண்ணியுள்ளேன்! எனது கதகாலட்சேப நீளங்களில் அல்லாது - "நறுக்"கென்று உங்களது பார்வைகளில் இரவுக்கழுகாரையும் அவருடனான நமது பயணங்களையும் பற்றி எழுதி அனுப்புங்களேன்? அல்லது இங்கேயே கூடப் பதிவிடலாம் ?!
  • நீங்கள் வாசித்த முதல் டெக்ஸ் இதழ் பற்றி....
  • உங்களது all-time favorite சாகஸம் பற்றி ...
  • டெக்ஸ் & கோ மீது தீராக் காதல் நமக்கெல்லாம் தொடர்ந்திடுவதன் காரணம் என்னவாக இருக்ககூடும் என்பது பற்றி

crisp ஆக எழுதிட  முயற்சியுங்களேன் folks? ஓவிய திறமை கொண்ட நண்பர்கள் நம்மவரை வரைந்தும் கூட அனுப்பலாம் ! 

அவகாசம் அதிகமில்லை என்பதால் -இன்றே; இப்போதே; இங்கேயே ஒரு தொடக்கம் தந்திடலாமே?

Back to the present - செப்டம்பரின் மாதத்தில் 3 முக்கிய கேள்விகளுக்கான விடைகள் எனக்குக் கிட்டியுள்ளன- ஒரு சேர ! பிரதானமானது சமீப நாயகர் ட்ரெண்ட் சார்ந்தது! இவரது அலட்டலில்லா பாணிக்கு முதல் ஆல்பத்திலேயே பரவலான வரவேற்பு கிட்டியிருந்தாலும்- 'ஆக்ஷன் இல்லாம இந்தாள் பேசிக்கிட்டே திரியறானே?' என்ற புகாரை நண்பர்களில் ஒரு சிறு அணியினர் வாசித்து வந்ததில் ரகசியமேது? so அதன் இரண்டாவது ஆல்பத்திற்கு கிட்டிடக்கூடிய வரவேற்போ -விளக்குமாற்றுப் பூசையோ தான் இவரது எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடும் என்பது அப்பட்டமாய் தெரிந்தது ! ஆல்பம் #2 கிட்டதட்ட கி.நா. பாணியில் கவித்துவமாய் பயணிக்கும் ஒரு உணர்வுபூர்வமான கதையே எனும்போது இங்கே ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் லேது என்ற சமாச்சாரம் லைட்டாக பிகில் ஊதியது தலைக்குள் ! so போட்டுத் தாக்கப் போகிறீர்களா?-அல்லது வாஞ்சையாய் அரவணைத்திடப் போகிறீர்களா? என்ற கேள்விகளுக்கு என்னிடம் ஹேஷ்யமாகவே பதில்கள் இருந்தன! கதையினில் இழையோடியதாய் நான் நினைத்த அரூப ஈர்ப்பானதும் ; பிரமிக்கச்செய்யும் சித்திர ஜாலங்களும் கரை சேர்த்துவிடும் என்ற நம்பிக்கை நிரம்ப இருந்தாலும்- எதையும் taken for granted ஆகக் கருதுவதை நான் சரியென்று எண்ணவில்லை! So இதழ் உங்கள் கைகளை எட்டி; உங்களது வாசிப்புகளுக்கு உள்ளாகி; கலக்கலான பாராட்டுக்களை குவிக்கும் வரையிலும் 2019-ன் அட்டவணையின் ஸ்லாட்களை இறுதி செய்திடாதே தொங்கலில் தொடரச் செய்திருந்தேன்! ஆனால் இந்த ஆண்டில் memorable இதழ்களுள் 'களவும் கற்று மற' முக்கியமானதொன்றாகிடும் அளவுக்கு இந்த ஆல்பத்தை நீங்கள் உசத்திப் பிடித்திருப்பதால் ட்ரெண்ட் முன் நான் போட்டு வைத்திருந்த சிறு கேள்விக்குறி இப்போது ஒரு முரட்டு ஆச்சரியக்குறியாக மாறிவிட்டுள்ளது ! Of course- 'ஙே' என்ற ரியாக்ஷனோடு இந்த ஆல்பத்தை அணுகியுள்ள நண்பர்களும் உண்டென்பது புரிகிறது தான் ; ஆனால் அவர்களுமே தொடரும் காலங்களில் இந்த தொடரின் ரம்யத்தில் மனதைப் பறிகொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது ! மொத்தமே 8 ஆல்பங்கள் தான் ட்ரெண்டின் தொடரினில் எனும் போது- ஆண்டுக்கு 2 ஸ்லாட்கள் ஒதுக்கினாலே 2021-ல் மங்களம் பாடியிருப்போம்! So எனக்கான விடை #1 இது!

கேள்வி #2-கார்ட்டூன் ஜானரில் மறுவருகை தந்துள்ள ஹெர்லக் ஷோம்ஸ்  சார்ந்தது! எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலுமே பரிட்சயமான லக்கி லூக் & சிக் பில் ஜோடியைத் தாண்டி கார்ட்டூன்களில் உங்களிடையே மத்தாப்பு மலரச் செய்யும் ஆற்றலை பிற சிரிப்பு நாயகர்கள் பெற்றிடுவதில்லை என்பது புலனாகி வரும் தருணத்தில் இந்த மாறுவேஷப் புலி களம் இறங்கியுள்ளார் ! Truth to tell - இவருக்கு என்ன மாதிரியான reception கிட்டிடுமென்றும் யூகிக்க தெரியவில்லை! Granted - இவர் நம்மிடையே புதியவரல்ல தான்; ஏற்கனவே மினி லயனில் இவரை ரசித்துள்ளோம் தான்; ஆனால் அதெல்லாமே 20+ ஆண்டுகளுக்கு முன்பாய் எனும்போது அதே ரசனைகளும்; வாஞ்சைகளும்; தொடர்ந்திடுமென்ற உத்தரவாதம் கிடையாது தானே? So 'எடுறா துடைப்பதை!' என்று நீங்கள் பொங்கிடும் பட்சத்தில்-ஷோம்ஸின் அந்த மாறுவேஷப் பையை இரவல் வங்கிக்கு கொண்டு ஜார்கண்ட் பக்கமாய் ஏதேனும் கோவேறு கழுதை வேஷமிட்டு திரியத்தான் வேண்டுமென்று நினைத்திருந்தேன்! ஆனால் ஜார்கண்ட் தப்பித்தது! நானுமே தான்..... ஷோம்ஸ் & வேட்ஸ்மே தான்!  So கார்ட்டூனில் யார் இடத்தில் யார்? என்ற எனது கேள்விக்கொரு பதிலும் கிட்டிவிட்டது செப்டெம்பரில்!

Last but not the least-கேள்வி # 3- நமது இளவரசி சார்ந்தது!! தள்ளாட்டம் கண்டு வரும் நமது தானைத் தலைவியை இம்முறை தூக்கி நிறுத்தப் போகிறீர்களா? அல்லது வாரிடப் போகிறீர்களா? என்பதை அறிந்திட ஆவலாகவே இருந்தேன்! And இம்முறை ஒரு சோடை போகா சாகஸமுமே ! So இதுவொரு செம comeback ஆக அமைந்திடா பட்சத்தில் 'ரோசனைகளே' நமக்கான அடுத்த கட்டமென்பதும் புரிந்தது! இதுவரையிலும் சிதறல்களாய் சில பாராட்டுக்கள் மாத்திரமே பதிவாகியிருப்பதை பார்க்க முடிந்துள்ளதெனும் போது-கையை பிசையத்தான் தோன்றுகிறது! மாடஸ்டி அணியினரே கரை வேஷ்டிகளை மாற்றிக் கொண்டு விட்டார்களா ? அல்லது கட்சியையே கலைத்து விட்டார்களா ? என்று சொல்லத் தெரியவில்லை - இந்த muted response-தனைப்  பார்த்திடும் போது! So கேள்வி #3-க்குக் கிட்டியுள்ள பதிலில் அத்தனை தெளிவில்லை என்பதே நிலவரம்!

இதற்கு மேலுமாய் 2019-ன் அட்டவணைக்கென waiting list களைத் தொடர்ந்திட இயலாதென்பதால்-final charting செய்து ரயிலைத் துவக்கும் பணிகளுக்குள் இந்த ஞாயிறு புகுந்திடவுள்ளேன் folks! So இப்போதைக்கு கிளம்புகிறேன் !!Have a lovely weekend all !!  Bye for now!

Saturday, September 01, 2018

ஒரு இலையுதிர் மாதத்து ரம்யங்கள் !!

கண்மணி....அன்போடு ஆந்தைவிழியன்  நான் எழுதும் கடிதம்..லெட்டர்.... கடுதாசி...இல்லே..பதிவு  ! பொன்மணி... உன் வீட்டில டெக்ஸ்... ட்ரெண்ட்... இளவரசி... ஷோம்ஸ்...சௌக்கியமா ? நாங்க இங்கு சவுக்கியமே  !! 

நண்பர்களே,

வணக்கம். நேற்றைக்கு ராவில் பார்த்த படத்தின் பாதிப்பா ? அல்லது இம்மாதத்து இதழ்களை நீங்கள் வாஞ்சையோடு வரவேற்றுள்ளதன் சந்தோஷமா ? என்று சொல்லத் தெரியவில்லை ; கவிதை சும்மா அருவியாய்க் கொட்டுது !! ஆனால் நம் மத்தியில் மெய்யான கவிஞர்களும், எழுத்தாளர்களும், இலக்கிய ஆர்வலர்களும் இருக்கும் போது உப்மா கவிஞர்கள் அடங்கிக் கிடப்பதே சாலச் சிறந்தது என்பது புரிவதால் - பெருமூச்சோடு அந்த கவிதை mode-க்கு விடை கொடுத்து நகர்கிறேன் !! கவிதை mode-க்கு நான் டாட்டா காட்டினாலும், நம் கதையோடு அது இம்முறை பின்னிப் பிணைந்திருப்பதால் - சித்தே அதனோடு உலாவியே தீர வேண்டும் நான் !! ஆனால் இதழ்களுக்குள் புகும் முன்பாய் உங்கள் சந்தோஷ வரிகளுக்கு நன்றி சொல்லும் கடமை எனக்குள்ளது !!

முதல் பார்வைகளின் வேளை மாத்திரமே இது ; இன்னமும் கதைகளுக்குள் புகுந்திருக்க முக்கால்வாசிப் பேருக்கு வாய்ப்பிருந்திராது ; அந்தக் கிணறுகளை தாண்டிட ஏகமாய் ஆற்றல் தேவை - என்பதெல்லாம் புரிகிறது ! ஆனால் கூரியரை உடைத்த நொடியிலேயே உங்களின் முதல் reactions கலப்படமிலா குஷியாய் அமைந்து விட்டதில் ஒரு சன்னமான திருப்தி  ! Oh yes - ஏழு கழுதை  வயசாகிப் போய் "நிறையவே பார்த்தாச்சு ; நிறையவே உணர்ந்தாச்சு" என்ற நிலையில் இருப்பினும் - உங்கள் ஒவ்வொருவரின் சந்தோஷங்களும்  "ஹை !!" என்று கண்கள் அகல என்னை மகிழ்வூட்டத் தவறுவதில்லை ! "எங்களுக்குத் தெரியும்லே...இந்த மாச புக்ஸ் ஹிட்டடிக்கும்னு எதிர்பார்த்தோமலே !!" என்ற தெனாவட்டு இதுநாள் வரையிலும் எழுந்ததில்லை ; and இம்மாதமும் அதற்கு விதிவிலக்கல்ல தான் ! இன்னும் சொல்லப் போனால் - "இரத்தப் படலம்" இதழுக்குப் பின்பாய் களம் காணும் இதழ்களென்ற முறையில் அவை ரொப்பிட வேண்டிய பூட்ஸ்களின் பரிமாணம் ரொம்பப் பெருசு என்ற புரிதலும், பயமும் கணிசமாகவே இருந்தன !! தவிர, வினோதமான "கள்ளமாட்டு syndrome" ஒன்றும்  "இரத்தப் படலத்தின் ரிலீசுக்குப் பின்பாய் என்னைப் பீடித்திருந்தது ! 'அட....பெருசையே தாண்டியாச்சு ; பொடுசுகளை ஊதிப்புட மாட்டோமா ?" என்றபடிக்கே நாட்களை விரயமாக்கித் திரிய  -ஆகஸ்டின் பெரும் பகுதி ஓட்டமெடுத்து விட்டது !! So முதுகில் நாலு சாத்து சாத்தி - மறுக்கா பள்ளிக்கூடத்துக்கு ஒரு மாதிரியாய் பிள்ளையை அனுப்பி வைப்பது போல என்னை நானே பணிகளுக்குள் ஆழ்த்திக் கொள்ள அவசியப்பட்டது !!

இம்முறை உங்களின் ஒருமித்த முதல் impression - அட்டைப்பட தரம் + பிரிண்டிங்கின் தரம் பற்றியே இருந்ததைக் கவனித்தேன் !! இம்முறை அதன் ஒரு கணிசமான பங்கை நமது inhouse அணி கோரிடலாமென்பேன் - simply becos இம்மாதத்து 4 ராப்பர்களுமே  கோகிலாவின் உருவாக்கமே !! "சைத்தான் சாம்ராஜ்யம்" மட்டும் நமது ஓவியர்களின் பணிகள் ; பாக்கி மூன்றின்  வடிவமைப்பும் நமது DTP அணியின் கைவண்ணமே ! அப்புறம் டிசைன் அழகாய் அமைந்துவிட்டால் - அச்சில் அட்டகாசம் செய்யும் தொழில் நுட்பங்களெல்லாம் இப்போது சந்து  பொந்தில் கூடப் பிரசித்தம் என்றாகிப் போயிருக்க ராப்பர்கள் டாலடிப்பதில் வியப்பில்லை என்பேன் ! உட்பக்கங்களைப் பொறுத்தவரை அச்சில் மிளிரும் அந்தக் கூடுதல் தரத்துக்குக் காலரைத் தூக்கி வீட்டுக் கொள்ள வேண்டியது படைப்பாளிகளே தவிர்த்து நாமல்ல ! டிரெண்ட் ; ஷோம்ஸ் - என இந்த இரு தொடர்களுக்குமே வர்ணமூட்டியது புராதன நாட்களிலல்ல !! So லேட்டஸ்ட் கம்பியூட்டர் கலரிங் யுக்திகள் ; புதுயுக ரசனைகள் என்று நிறைய ப்ளஸ் பாய்ண்ட்கள் தாமாய் அமைந்து விட்டுள்ளன இந்த new age ஆக்கங்களில் !! ஆதி காலத்துக் கதைகளெனில் -  ஏகமாய் அடர் வர்ணங்கள் ; நிறைய பஞ்சு மிட்டாய்க் கலர்கள் என்றிருக்கும் போது அச்சிலும் அவை பெருசாய்க் கண்னை பறிப்பதில்லை !! ஆனால் இம்முறையே அந்தச் சிக்கல்கள் லேது என்பதால், நீங்கள் புரட்டிடும் பக்கங்கள் உங்களைக் கட்டுண்டு போகச் செய்வதில் ஆச்சர்யங்களில்லை !! And "சைத்தான் சாம்ராஜ்யம்" பற்றிப் பேசவே அவசியமேது ? 'தல' நின்றாலும் அழகே ; நடந்தாலும் அழகே ; கறுப்பிலும் அழகே ; வர்ணத்திலும் அழகோ அழகே எனும் போது எங்கள் பாடு சுலபமாகிப் போனது !! So நாங்கள் வழக்கம் போலவே பணியாற்றியிருப்பினும் கிட்டியுள்ள ஒரிஜினல்களின் தரத்தின் புண்ணியத்தில் கொஞ்சம் பாராட்டுக்களில் நனைந்து கொள்கிறோம் !! 

Moving on, இம்மாதத்து இதழ்கள் பற்றிய உங்களது முதல் வரிகளுள் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய விஷயமொன்றுமிருந்தது !! அது தான் "சைத்தான் சாம்ராஜ்யம்" சார்ந்த மௌனம் !! ஜம்போவின் தரத்தையும், இளவரசியின் ஒயிலையும் , டிரெண்டின் சித்திர ஜாலங்களையும்  சிலாகித்தோருள் கலர் மறுபதிப்புக்கு பெருசாயொரு mention கூட இருக்கவில்லை என்பதை நீங்கள் கவனித்தீர்களோ - இல்லையோ ; நான் கவனித்தேன் !! In many ways - அதன் பொருட்டு எனக்கு வருத்தமில்லை !! புதுசுகள் கொணரும் ஒரு freshness முன்பாய் 'தல'யே ஒரு மறுபதிப்போடு வந்தாலும் பெரிதாயொரு  தாக்கம் இல்லையெனில் - அது என்னைப் பொறுத்தவரையிலுமாவது, ஊக்கமூட்டும் சமாச்சாரமே !! So அந்த சந்தோஷத்தோடே - இதழ்களுக்குள் புக முயல்கிறேனே !!   

"களவும் கற்று மற !" டிரெண்டின் இந்த ஆல்பம் வெளிவரும் தருணம் இங்கு நிச்சயம் சுவாரஸ்ய அலசல்களுக்குப் பஞ்சமிராதென்று நான் போன மாதமே எங்கோ எழுதியிருந்தேன் !! அந்நேரம் நண்பர் கா.பா.வின் மொழிபெயர்ப்பு முயற்சி பற்றிக் கூட எனக்குத் தெரிந்திருக்கவில்லை !! இருப்பினும் இந்த ஆல்பத்தின் கதையினில் எனக்குத் தோன்றியதொரு ஈர்ப்பை நீங்களும் உணராது போக மாட்டீர்கள் என்ற ஒரு நப்பாசையில் / நம்பிக்கையில் அந்த comment போட்டு வைத்தேன் ! பின்னாட்களில் நண்பரின் கவிதை மொழிபெயர்ப்புத் தொகுப்பு பற்றிய தகவலும் கிட்டிய போது ஒரு சட்டி சுண்டக் காய்ச்சிய பாலைப் பார்த்த மியாவியைப் போலானது என் வதனம் !! வெகு சீக்கிரமே பொருளாளர் இதற்கென எழுதவிருக்கும் அலசல் கட்டுரைகளும் ; நண்பர்கள் மிதுனன் ; கோவிந்தராஜ் பெருமாள் ; J ;  et al செய்திடவுள்ள அகழ்வாராய்ச்சிகளையும் &  அவற்றைப்  படித்த கையோடு இதர நண்பர்களெல்லாம் அடிக்கவிருக்கும் லூட்டிகளையும் மனக்கண்ணில் நிறுத்திப் பார்த்ததன் பலனாய் விளைந்த புன்னகை அது !! இப்போதிங்கே  கதையின் களம் பற்றி in depth நான் போகப் போவதில்லை - because உங்களுள் பெரும்பாலோர் இன்னமும் அதனைப் படித்திருக்கத்  துவங்கியே இருக்க மாட்டீர்கள் !! So எப்போதும் போலே நீங்களாய் படித்து, அலசி, ஆராய்வதே சுகப்படும் என்பதால் - நான் பராக்குப் பார்க்க முன்வரிசையில் ஒரு சீட்டுக்குத் துண்டை மட்டும்  போட்டு  வைத்திருக்கிறேன் ! ஆனால் ஒரு வரலாற்றுக் கவிஞனின் படைப்புகள், நமக்கு மிகவும் பரிச்சயமானதொரு   இலக்கியவாதியின் கைவண்ணத்தில் மொழிமாற்றம் கண்டு தமிழுக்கு அழகாய் வரும்  அதே தருணத்தில் தானா  - "யே..டமுக்கு டப்பா..!! யே...தகர  டப்பா ...!!" என்று பாட்டெழுதும் நானும் அதே கவிஞன் சார்ந்த கதையைக் கையிலெடுப்பேன் ???  ஈரோட்டில் நம் கலந்துரையாடலின் போது - கதைகளின் மத்தியில் வரும் கவிதைகள் பற்றிய பேச்சு எழுந்த போது - "செப்டெம்பரில் காத்துள்ளது ஒரு கவிதை பிரவாகம் !!" என்று நான் வாய்மலர்ந்த சமயம் கூட எனக்கு இந்தச் சமாச்சாரம் தெரியாது !! இல்லையெனில் நோகாமல் தருமியாகிப் போயிருப்பேன் - கோவில் மண்டபத்தில் பாட்டெழுதி வாங்கிடும் விதத்தில் !! என்னவொரு கொடுமை கா.பா. சார் !! எது எப்படியோ -தொடரும் நாட்களில் நிறையவே கூத்து காத்துள்ளது என்று மட்டும் தெரிகிறது !! ஏதோ - பார்த்து "செஞ்சிடுங்க" சகோஸ் !! 

On a sober note - டிரெண்டின் கதை இரு extreme ரியாக்ஷன்களைக் கொணர வல்லது என்பது புரியாதில்லை எனக்கு ! "அய்யே !!" அணி  பெரும்பான்மையாக அமைந்தாலுமே நான் பெரிதாய்க் கவலை கொள்ள மாட்டேன் - because இந்தத் தொடரின் முழுமையுமே ஒரு மென்னுணர்வுகளின் குவியல் + சித்திர சொர்க்கம் என்பது எனக்குத் தெரியும்  !! கனடாவின் தூதரகத்தில் பணியாற்றும் நண்பர் காரைக்கால் பிரசன்னாவின் ஒத்தாசைகளின்றியே ; விசாவுமின்றி ; டிக்கெட்டுமின்றி ; வெறும் 75 ரூபாய்க்கு கனடாவின் அதகள இயற்கை எழிலை ரசிக்கும் வாய்ப்பு நித்தமும் வாய்த்திடாது தானே ? !! So சில்லு மூக்குகள் சிதறாவிடினும் இந்தப் புதியவருக்கு சற்றே சலுகை காட்டிடலில் தவறில்லை என்று படுகிறது !! And சமீபமாய் இதன் ஆல்பம் # 3 -ஐப் பார்த்தேன் ; Uffffff ...சித்திரங்கள் உலுக்கி எடுக்கின்றன !! So ஆண்டுக்கு ஒருமுறையேனும் இதுபோன்ற கண்ணுக்கு விருந்தினை அனுமதிப்பதில் பிழையிராதென்றே தோன்றுகிறது !! ஆவலாய்க் காத்திருப்பேன் இந்த இதழின் அலசலுக்கு !! இலையுதிர் காலத்தின் வருகையை உணர்த்துவதே பழுப்பேறும் இலைகளும் ; மஞ்சளாய்க் காட்சி தரும் மரங்களுமே !! அத்தகையதொரு அட்டைப்படத்தோடு ட்ரென்டின் இந்த ஆல்பம் கனகச்சிதமாய் இலையுதிர்காலத்தின் இறுதி மாதத்தில் நம் முன்னே நிற்பதும் அழகானதொரு coincidence தானோ ? 
ஜம்போ !!! சில தருணங்களில் லேட்டானாலும், லேட்டஸ்ட்டாய் ; அழகாய்ப் பணிகள் அரங்கேறிடுவதுண்டு !! ஜம்போ காமிக்சின் அனுபவங்களும் இந்த ரகத்திலானவை தான் !! இதுவரையிலுமான  2 இதழ்களுமே தத்தம் பாணிகளில் score செய்துள்ளது ஆண்டவனின் கொடையென்பேன் !! ஹெர்லக் ஷோம்ஸ் நமக்கு ஏற்கனவே பரிச்சயமான நாயகரே என்றாலும், இவரை வண்ணத்தில் தரிசிப்பது ஒரு புது வித அனுபவம் தான் !! இதன் பிதாமகர் ஜூல்ஸ் இந்தாண்டு தனது 90 வது அகவையைக் கொண்டாடும் ஜாம்பவான் !! முழுக்க முழுக்க லாஜிக்கெனும் சமாச்சாரமே இல்லா ஜாலியான ஆக்கங்கள் மட்டுமே எனும் போது - தீவிர கார்ட்டூன் ரசிகர்களின்றி மற்றவர்களுக்கு இவை அவ்வளவாய் சுகப்படாது என்ற புரிதல் இருந்தாலுமே - இதனை ஒரு breezy read-க்கென உங்கள் முன் கொணரும் ஆசையை எனக்கு அடக்கிட இயலவில்லை ! இந்தத் தொடருக்கான உரிமைகள் ரொம்பவே costly என்றாலும் - அந்தக் குடைமிளகாய் மூக்கு டிடெக்டிவ்வை மறுக்கா நம் அணிவகுப்பினில் அழகு பார்க்க வேண்டுமென்ற நமைச்சல் சென்றாண்டில் வெற்றி கண்டது ! போன நவம்பரிலேயே கதையை வாங்கி விட்டிருந்த போதிலும், வழக்கமான கார்ட்டூன் சந்தாவில் நுழைத்திட வேண்டாமேயென்று பட்டது ! All serious கதைகள் கொண்ட ஜம்போவின் தடத்தில் ஒரேயொரு light read இருந்தால் தேவலாமென்று நினைத்ததால் ஷோம்ஸ் & wasteமகன் ஜோடியை துயில் பயிலச் செயதேன் என்  பீரோவினில் !! இந்தக் கதைகளை உங்கள் வீட்டு சிறுசுகளுக்கும் சொல்ல முயற்சித்துப் பாருங்களேன் guys - நிச்சயம் ரசிக்குமென்று பட்சி சொல்கிறது !! 
Next in line - இளவரசி !! என்ன சொல்வது இவரைப் பற்றி ?!! "காணோமே..காணோமே..எங்க மாடஸ்டியைக் காணோமே.." என்று பதை பதைத்து வந்த நண்பர்களிடமே இனி பந்தை  லாவகமாய் அடித்து ஆடும் பொறுப்பு தங்கியுள்ளது !! ஒரு decent அட்டைப்படத்தோடு - ஒரு ஆக்ஷன் கதையினை - எவ்வித ஓட்டுக்களுமின்றி - தெளிவான சித்திரங்களில் - நார்மலான  மொழிபெயர்ப்போடு வழங்கியுள்ளோம் ! So இதனில் கிட்டும் வெற்றியோ-தோல்வியோ தான் இத்தொடரின் litmus test - நம்மளவிற்காவது !! Oh yes - ஒரு உலகளாவிய நாயகியை எடை போடுமளவுக்கு நாமெல்லாம் அப்பாடக்கர்கள் அல்லவே & நாம் போடும் மார்க்குகள் அந்த சர்வதேச சூப்பர்ஸ்டாரின் தரம் மீதானதொரு statement-ம் ஆகிடாது !! நாம் வெளியிட்டாலும்,வெளியிடாது போனாலும் மாடஸ்டி ஒரு சகாப்தம் என்பதில் ஐயமேது ? ஆனால் சின்னதான நம் வட்டத்துக்கு இன்னமும் இந்தத் தொடர் மீது மையல் தொடர்கிறதா  - இல்லையா ? என்பது மாத்திரமே இந்தத் தருணத்தின் நம் வினா !! And  "ஒரு விடுமுறை வில்லங்கம்" சொல்லவிருக்கும் பதிலே நாம் செல்லவிருக்கும் திசைக்கொரு வழிகாட்டி !! ஆகையால் ரொம்ப ரொம்ப ஆர்வமாய்க் காத்திருப்போம் உங்களின் அலசல்களை அறிந்திட !! 
TEX in Color & COLOR TEX !!! வண்ணமூட்டப்பட்ட முந்தைய தலைமுறையின் கதை "சைத்தான் சாம்ராஜ்யம்" !! அது Tex in Color !!! And  வண்ணத்திலேயே உருவாக்கப்பட்ட இந்தத் தலைமுறையின் புத்தம் புதுப் படைப்புகளில் ஒன்றே "மண்ணில் துயிலும் நட்சத்திரம் !!" அது COLOR TEX !! டெக்ஸ் வில்லர் கதைகளில் பணியாற்ற முன்வரும் எக்கச்சக்கப் புது கதாசிரியர்களுக்கும், ஓவியர்களுக்கு ஒரு பரிசோதனைக் களமாய் அமைவது இந்தச் சிறுகதைத் தொகுப்புகள் ! 32 பக்கங்களில் 'நச்'என்று கதை சொல்லும் டீம் பின்னாட்களில் முழுநீளக் கதைகளில் பணியாற்றும் promotion-க்கு தகுதி பெறுகிறார்கள் என்றே நினைக்கிறேன் !! எது எப்படியோ - மாறுபட்ட பாணியில் டெக்ஸ் & கோ-வை மீண்டுமொருமுறை உங்கள் முன்னே களமிறக்கிய  திருப்தியோடு நான் நடையைக் காட்டுகிறேன் ! Before I sign off - ஒரு குட்டியூண்டு கேள்வி !! "சைத்தான் சாம்ராஜ்யத்தில்" ஒரு சின்ன வித்தியாசமுள்ளது ! கவனித்தீர்களா ??
Bye all !! Have an awesome weekend !! செப்டெம்பர் இதழ்களின் விமர்சனங்களை ரவுண்டு கட்டி அடிப்பீர்களென்ற அவாவோடு புறப்படுகிறேன் !! See you around !!

Thursday, August 30, 2018

ஒல்லிகளின் மாதமிது !!

நண்பர்களே,

வணக்கம். 'ஆகஸ்டில் செப்டெம்பர்" என்று அதே மொக்கையான தலைப்பை இந்தப் பதிவுக்கும் இட மனதில்லை ; so இன்றைக்கு பகலில் உங்களது கூரியர்கள் சகலமும் கிளம்பிவிட்ட போதிலும் - தலைப்பை மட்டும் வேறு விதமாக்கியுள்ளேன் !! So 31 காலையில் கூரியர் ஆபீஸ் படையெடுப்பை நீங்கள் துவக்கிடலாம் - சற்றே ஒல்லிப்பிச்சானான டப்பாக்களை சேகரித்துக் கொள்ள !! 'தல' வண்ண மறுபதிப்பு நீங்கலாய் பாக்கி இதழ்கள்  எல்லாமே 50 ; 64 பக்கங்கள் என்றிருப்பதால் இம்முறை loads of breezy reads என்பேன் !! "இரத்தப் படலம்" எனும் பகாசுரனுக்கும் ; "டைனமைட் ஸ்பெஷல்" எனும் பயில்வானுக்கும் மத்தியில் இந்த lightweights எனக்குக் கொஞ்சம் மூச்சு வீட்டுக் கொள்ள அவகாசம் தருகிறார்கள் என்பதால் - இம்மாத இதழ்களை வாஞ்சையோடு பார்க்கின்றேன் !! நீங்களுமே இவர்களை குஷியாய் வரவேற்று ஏற்றுக் கொள்ளின் - சூப்பர் தான் !! 

And இதோ - ஜம்போ சந்தாதாரர்கள் பட்டியல் ! இன்னமும் ஜம்போவின் சந்தாக்கள் open என்பதால்  இதுவரையிலும் அந்தத் தடத்தில் பயணிக்க உத்தேசித்திரா நண்பர்கள் இந்தத் தருணத்தில் கூட ஜோதியில் ஐக்கியமாகிடலாம் !!  ஓரிரு நண்பர்கள் முகவரி தராது இன்னமும் உள்ளனர் என்பதால் அவர்களுக்கு புக் அனுப்பிட இயலவில்லை ! தவிர விடுதல்கள் ஏதேனும் இருப்பின், அதையும் சுட்டிக் காட்டிடுங்களேன் ப்ளீஸ் ! 


செப்டெம்பர் இதழ்கள் பற்றிய உங்களது அலசல்களை எப்போதும் போலவே ஆவலோடு எதிர்நோக்கியிருப்போம் !! Happy Reading folks !!!

பி.கு. நாளை முதல் மதுரைப் புத்தக விழாவும் துவங்குகிறது !! 

Saturday, August 25, 2018

Life after இ.ப....& Life before டை.ஸ்பெ..!

நண்பர்களே,

வணக்கம். சில தருணங்களில், இதர பணிகளின் தீவிரத்திலோ ; அல்லது ஏதேனும் சொந்த ஜோலிகளின் மும்முரத்திலோ, காமிக்ஸ் பக்கமாய் ஒரு நாலைந்து நாட்களுக்குத் தலையே வைக்க நேரமின்றிப் போய் விடுவதுண்டு ! ஆனால் வாரயிறுதி .......  பதிவிற்கெனத் தயாராக வேண்டிய சமயம்  - என்று புலர்ந்திடும் வேளையில், திருவிழாவில் காணாமல்போன குழந்தையைப்  போல மலங்க மலங்க விழித்துக் கொண்டே தான் கம்பியூட்டரின் முன்னே அமர வேண்டி வரும் ! இடைப்பட்ட நாட்கள் நாலோ-ஐந்தோ தான் என்றாலும், ஏதோ ஒரு யுகத்து இடைவெளி விழுந்துள்ள உணர்வு தலைதூக்கிட  - பின்னூட்டங்களை பயபக்தியோடு படித்து வைப்பேன் - புதுசாய் பதிவுக்கு மாவு பினையத்  துவங்கும் முன்பாக !! இந்த வாரமும் நிலவரம் அதுவே !! "இரத்தப் படலம்"....TEX கலர் தொகுப்பு ; கூப்பிடு தொலைவிலிருக்கும் செப்டெம்பர் இதழ்கள் என சகலமும் தற்காலிகமாய் மண்டையின் பின்சீட்டுக்குச் சென்றிருக்க - இப்போது தான் மறுபடியும் ஒவ்வொன்றையும் அதனதன் இடத்திற்கு மாற்றம் செய்து வருகிறேன் !! வழக்கம் போல பாப்பநாயக்கன்பட்டியில் ஆரம்பித்து - U-டர்ன் அடித்து பிலடெல்பியாவுக்கு வண்டியைத் திருப்புவதற்குப் பதிலாய் இம்முறை - காத்திருக்கும் புது இதழ்களின் preview படலத்தினுள் புகுந்து விடுகிறேனே?!  

"இரத்தப் படலம்" !!! ஒற்றை மாதம் முழுசுக்கும்  தனது மெகா துண்டை விரித்து வைத்திருக்க - தொடரும் மாதத்தின் நார்மலான இதழ்களின் பணிகளுக்குள் புகுவது ஒரு தினுசான அனுபவமாகவே இருக்கிறது !! Maybe in some ways - இது போன்ற "பெரும் எதிர்பார்ப்பு" இதழ்கள் நம்மிடமிருந்து அவசியத்துக்கும் அதிகமாகவே சக்தியை உறிஞ்சிடுகின்றனவோ - என்னவோ  - எஞ்சி  நிற்கும் இதழ்களை அணுகும் போதே ஒருவிதமான flat feeling தான் மேலோங்குகிறது !! பற்றாக்குறைக்கு அடுத்த மாதமே அடுத்த 'பீம்பாய்' இதழ் - டைனமைட் ஸ்பெஷல் ரூபத்தில் காத்திருக்க - ரெகுலர் இதழ்களையெல்லாம் பார்த்து  - ''தம்பி....அப்டி ஓரமாய் போயி விளையாடுங்கப்பா !!" என்று சொல்லவே தோன்றுகிறது !! Of course - ஒவ்வொரு இதழும் நமக்கொரு புதுத் துவக்கம் ; புதுச் சவால் தான் எனும் போது - ஒவ்வொரு பிள்ளையார் சுழியிலும் - நமது பாட்டெரிகள் முழு சார்ஜில் இருந்திடல் அவசியமென்று எண்ணுபவன் நான் !! ஆனால் இருக்கும் மின்சாரத்தை முழுசும், இந்த 2 மெகா இதழ்களே  உறிஞ்சிய பின்பாய் - அரை பாய்ண்ட்டில் மட்டுமே சார்ஜ் இருப்பது போலவே தோன்றுகிறது !! ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஸ்பெஷல் இதழும்  ஏற்படுத்திடும் எதிர்பார்ப்புகளின் பலனிது என்பது புரிகிறது !!

இந்தப் பின்னணியே - இம்முறை ஈரோட்டில் நான் பிடிவாதமாய் பெவிகால் பெரியசாமியாய் வலம் வந்ததன் காரணம் !! "குண்டு புக் ; மெகா புக் ; அத்திரி பாட்சா ஸ்பெஷல் ; குப்புற பல்டி ஸ்பெஷல் " என்று மறுக்கா கால்களை அ-க-ல-மா-ய் விரித்துக் கொண்டு, அப்புறமாய்த் திரு-திருவென்று முழிக்க வேண்டாமே என்ற முன்ஜாக்கிரதை தான் இம்முறை வீட்டிலிருந்து நான் பேக் செய்திருந்த முதல் வஸ்து ! ஒற்றை மாத இடைவெளியில் டைனமைட்....அதன் மறு மாதம் 2019-ன் அட்டவணை என மேற்கொண்டும் இரு முரட்டுக் குதிரைகள் காத்து நிற்க - அவற்றை சவாரி செய்திடும் முன்பாய் அடுத்த பயணம் பற்றி யோசிப்பானேன் ? என்று அந்தத் தருணத்தில் பட்டது !! ஆனால் தட்டுத் தடுமாறி - "டைனமைட்" பணிகள் + அக்டொபரின் ரெகுலர் பணிகள் என தொடரும் வாரத்தினில் என்னளவுக்கு முடித்து விட்டேனென்றால் - ஒரு சிகப்பு கோட்டைப் போட்டுக் கொண்டு, தம்மாத்துண்டு பிரீஃப் கேஸையும் தூக்கிக் கொண்டு - "புதிய வானம்-----வா-ன-ம்ம்ம்ம்......புதிய பூமி..." என்று கிளம்பிடுவேன் !! So அதற்கு முன்பாய் here come the september previews :

ஜம்போவின் புக் # 2 தான் - இம்மாதத்தின் கார்ட்டூன் கோட்டாவின் பிரதிநிதி !! And துவக்கத்திலேயே நினைவூட்டி விடுகிறேன் guys - இது லயன் - முத்து ரெகுலர் சந்தாவின் அங்கமே அல்ல !! So ஜம்போவுக்கு சந்தா செலுத்தியிருந்தால் மாத்திரமே - இம்மாதத்து கூரியரில் இந்த இதழ் இடம்பிடித்திடும் !! விளம்பரங்களை மட்டுமே பார்த்து விட்டு - "எனக்கு எப்படி அந்த புக் அனுப்பாமப் போச்சு ?" என்று நெற்றிக்கண் திறந்திடல் வேண்டாமே - ப்ளீஸ் !! And ஜம்போவுக்கு சந்தா செலுத்திய போதே - "இது வேண்டாமே" என்று opt செய்திருந்தோருக்கு இந்த இதழ் அனுப்பிடப்படாது !! ஷப்பா....மூச்சு வாங்குது சாமி !! 

ஹெர்லக் ஷோம்ஸ் : ஒரு 90 வயதுப் பிதாமகரின் படைப்பே இந்த உட்டாலக்கடி டிடெக்டிவ் !! இவர் நமக்குப் புதியவர் அல்லர் ; லயனில் ; மினிலயனில் - '90s களில் இவரைச் சந்திக்க நமக்கு சொற்பமாய் வாய்ப்புகள் கிட்டியுள்ளன ! So ஒரு 20 + ஆண்டு கால இடைவெளிக்குப் பின்பாய் தலை காட்டும் ஆசாமியை நமது சமீபத்தைய வாசகர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் கம்மி !  இருப்பினும், அமர கதாப்பாத்திரமான ஷெர்லாக் ஹோல்ம்ஸின் பகடியே இந்த நாயகர் என்பதை நான் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லையே !! ஹெர்லக் & அவரது தோஸ்தான டாக்டர் வேஸ்ட்சன்(all good doctors மன்னிச்சூ !!) மர்மங்களைத் துப்புத் துலக்கும் பாணிகள் அலாதி ! நொடியில் ஏதேதோ வேஷங்களைப் போடும் ஆற்றல் ; தப்பான இடத்தில் சரியான வேளையில் இருக்கும் ஆற்றல் என்று இவர்களுக்குக் கைவந்த கலைகள் ஏராளம் ! கொஞ்சம் அட்வென்ச்சர் ; கொஞ்சம் சிரிப்பு ; கொஞ்சம் பகடி - என்ற கலவையே "ஒரு குரங்கு சேட்டை / வேட்டை " ! பக்கத்துக்குப் பக்கம் ; பிரேமுக்கு பிரேம் சிரிப்பு என்றெல்லாம் எதிர்பார்த்திடாது - ஒரு ஜாலியான மூடில் இந்த ஆல்பத்தைக் கையில் எடுத்தால் - நிச்சயம் ஏமாற்றமிராது என்பேன் ! And வீட்டிலுள்ள 10 வயது & thereabouts குழந்தைகளுக்குக் கதைசொல்லவும் இந்த இதழ் செமையாக அமைந்திடும் என்பேன் ! இதோ அதன் அட்டைப்படம் : 
ஒரிஜினல் டிசைன் ; லேசாய் நாம் கூட்டல்கள், கழித்தல்கள் செய்து வழங்கியுள்ளோம்  !! வழக்கமான அடர் வர்ணங்களின்றி, இம்முறை வெள்ளை & மஞ்சள் combo !! And கதையின் தலைப்பின் எழுத்துரு நம் ஓவியர் சிகாமணியின் கைவண்ணமே !! தொடர்வது உட்பக்கத்து preview : தெளிவான சித்திர பாணி ; கண்ணை உறுத்தா வர்ண சேர்க்கை - என பார்த்தவுடன் ரசிக்க இங்கே சமாச்சாரங்கள் உள்ளன ! அச்சிலும் அழகாய் அமைந்திருக்க - this looks a cool album !! சீக்கிரமே உங்கள் கைகளில் !! 
வண்ணத்திலிருந்து ஒரே தாவாய் black & white பக்கமாய் பயணித்தால் - இளவரசியின் சோலோ சாகசம் காத்துள்ளது !! "ஒரு விடுமுறை வில்லங்கம்" என்பதே இந்த ஆல்பத்தின் டைட்டில் ! ஒரிஜினலாக C.I.D ராபின் சகிதம் - "த்ரில்லர் ஸ்பெஷல்" என்று வந்திருக்க வேண்டிய கதையிது ! ஆனால் அடுத்த 4 மாதங்களை நகற்றிட போதுமான எண்ணிக்கையில் இதழ்கள் மீதமில்லை என்பதால் - ராபினைத் தனியாகவும், மாடஸ்டியைத் தனியாகவும் களமிறக்க வேண்டிப் போயுள்ளது !! So "சிங்கம் சிங்கிளாத் தான் வரும் !!" போன்ற தமிழர்களின் எவெரெடி,காவிய வரிகளை இப்போதைக்கு வரவழைத்துக் கொள்ளலாம் என்பேன் !! இதோ - அட்டைப்பட preview : 
இந்த அட்டைப்படத்தின் பின்னேயொரு துக்கடா சேதியும் உண்டு !! நம் ஓவியருக்கு எப்போதுமே ஸ்பைடர் ; ஆர்ச்சி போன்ற டெர்ரர் முகங்கள் செமையாக சோபித்திடும்  ; ஆனால் மாடஸ்டி ; ஜானி நீரோ ; மாயாவி - போன்ற ரம்ய முகங்கள் எனில் 50 - 50 தான் ! விதிவிலக்காக டெக்ஸ் வில்லரின் பெரும்பான்மை கவர்களில் முகங்கள் ஓ.கே. ஆகிவிடுவதுண்டு !! சிலபல மாதங்களுக்கு முன்பாய் மாடஸ்டியின் அட்டைப்படத்தைப் போடச் சொல்லிய சமயமே எனக்குள் லேசாய்த் தயக்கம் தான் ! இருந்தாலும், newspaper strip feature ஆன மாடஸ்டி கதைகளுக்கு ஒரிஜினல் அட்டைப்படங்கள் என எதுவும் கிடையாதெனும் போது - நாமாய்த் தயாரிக்கும் அவசியம் தவிர்க்க இயலாததொன்று ! So ஒரு மாதிரியையும் எடுத்துக் கொடுத்து டிசைனும் போட்டு வாங்கி ; ஓரளவுக்கு ஓ.கே. என்றும் தீர்மானித்து விட்டேன் !!

போன மாதமோ, எப்போதோ - ஒரு பதிவினில் - 'மாடஸ்டியின் ஆல்பம் சிங்கிளாய் வருகிறது " என்று நான் எழுதியிருக்க - இளவரசி முன்னேற்றக கழகத்தின் தலைவர் அதை வரவேற்ற கையோடு - "அட்டைப்படம் தீயா இருக்கோணும் : பார்த்தாக்கா கண்ணிலே காதல் மிளிரோணும் ; நாங்க பாத்துப் பாத்து கிறங்கி போகோணும் " என்று கோரிக்கை விடுத்திருந்தார் !! நான்பாட்டுக்கு அட்டைப்படத்தை ஓ.கே. சொல்லிவிட்டு எங்கோ தேசாந்திரம் போய்விட்டிருந்தேன் !! இந்தப் பின்னூட்டத்தைப் படித்த கையோடு - அன்றிரவு நமது ஓவியரின்  அட்டைப்பட டிசைனை மனக்கண்ணில் நிறுத்திப் பார்த்தேன் ; உட்கார்த்திப் பார்த்தேன் ; ஓடவிட்டுப் பார்த்தேன் !! ஆனால் எப்படிப் பார்த்தாலும் அங்கே காதல் மிளிரக் காணோம் ! அட...நம் தானைத் தலைவரின் "ரொமான்டிக் லுக்" ரேஞ்சுக்கு வேண்டாமய்யா ; at least ஒரு உள்ளூர் நெஞ்சை உருக்கும் அளவிலாவது காதல் சொட்ட வாய்ப்புள்ளதா ? என்று பார்க்கப் பார்க்க, எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது !! நானிருந்த தேசத்தில் அப்போது குளிர்காலம் என்றாலும், எனக்கோ வியர்க்கத் துவங்கிவிட்டது - இந்த ராப்பரை நீங்கள் எப்படியெல்லாம் "வச்சு செய்வீர்களென்று" யோசித்துப் பார்க்கையில் ! அடித்துப் -பிடித்து மைதீனுக்கு போன் அடித்தேன் ; "முன்னாடி இருக்கதை தூக்கிப் பின்னாடி போட்டுடு !!" என்று !!  பின்னட்டைக்கென நாம் தயாரித்திருந்த டிசைனாவது ஒரிஜினல் ஓவியரின் கைவண்ணத்தில், இளவரசியின் எழிலுக்கு நியாயம் செய்வதாய்த் தோன்றியது ! So முன்னும், பின்னும் இடமாறிப் போயின - ஒரு காதல் கவிதையைக் கண்ணாலேயே நீங்கள் வாசிக்க ஏதுவாய் !! And உட்பக்கக் கதையையும் வாசிக்க உங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்திட - இதோ ஒரு preview பக்கம் !!  
"ஐயோ....அய்யய்யோ...கத்திரி போடுறீங்களே இளவரசி கதைக்கு !!" என்று வேர்க்க, விறுவிறுக்க என்னிடம் பதைபதைப்பு காட்டிய நண்பர்களுக்கு இந்தவாட்டி கொஞ்சம் நெஞ்சங்கள் குளிர்ந்திட வாய்ப்புகள் பிரகாசம் என்பேன் ! Anyways - கத்திரிகளோ ; காஜா போடும் மிஷின்களோ ஒரு கதையின் வெற்றியைத் தீர்மானிக்கப் போவதில்லை என்பதால் - இளவரசியின் merit -ல் மாத்திரமே வண்டி ஓடிட வேண்டுமென்பது அப்பட்டம் ! And இம்முறை கூட்டணியின்றி, தனித்தே தேர்தலைச் சந்திக்கிறார் எனும் பொழுது - ஜெயமோ - வேறென்னமோ - சகலத்துக்கும் அவரே பொறுப்பேற்றிடும் சூழல் !! Fingers  crossed big time - இளவரசிக்காகவும்...அவரது கழகக் கண்மணிகளுக்காகவும் !!!

ஆக இந்த 2 இதழ்களின் preview சகிதம் செப்டெம்பரின் கோட்டா பூர்த்தி காண்கிறது ! சகல இதழ்களும் அச்சாகி விட்டன என்பதால் - தொடரும் நாட்களில் பைண்டிங் முடிந்த கையோடு டெஸ்பாட்ச் துவங்கிடும் ! So "இடைப்பட்ட ஒரு மாதத்துக்கு நார்மல் இதழ்களைக் காணோமே !" என்று கவலைப்பட்ட நண்பர்கள் சீக்கிரமே புன்னகைக்கலாம் ! And இந்த மாதத்து 4 இதழ் கூட்டணியில் 'தல'யின் "சைத்தான் சாம்ராஜ்யம்" நீங்கலாய் starpower கொண்ட இதழ்கள் குறைச்சலே என்றாலும், இம்முறை வெவ்வேறு காரணங்களுக்காக நாங்கள் இவற்றின் ரிஸல்ட்களை எதிர்பார்த்துக் காத்திருப்போம் ! முக்கியமாய் டிரெண்டின் - "களவும் கற்று மற" !! - நிச்சயம் இங்கே பல சுவாரஸ்யப் பின்னூட்டங்களை இந்த இதழ் கொணரவிருக்கிறதென்று இப்போதே பட்சி சொல்கிறது ! 

Moving on - மதுரைப் புத்தக விழா ஆகஸ்ட் 31 -ம் தேதி தமுக்கம் மைதானத்தில் துவங்கிடவுள்ளது ! And அங்கே நமது ஸ்டால் நம்பர் 172 ! வழக்கம் போல் அண்ணாச்சி அங்கிருப்பார் - நமது இதழ்களுடன் ! Please do drop in folks !!இதோ ஸ்டால்களின்  லே-அவுட் : 
அப்புறம் சென்னையின் பீனிக்ஸ் மாலில் புதிதாயொரு காமிக்-கான் போன்ற முயற்சி அரங்கேறவிருப்பதாய் தகவல் வந்துள்ளது ! காமிக்-கான் நிர்வாகிகள் சிங்காரச் சென்னைக்கு thumbs up தரத் தயங்கிவரும் வேளையில் இந்தப் புதிய முயற்சி ANIMECON வெற்றி ஈட்டினால் நலமே !! We'll wish them the best !!
டைனமைட்டின் பணிகளைத் தீயாய்ப் பார்த்திட வேண்டியிருப்பதால் இப்போதைக்குக் கிளம்புகிறேன் guys !! Have a beautiful weekend !! Bye for now !!