நண்பர்களே,
ஒரு மழைநாள் மாலையின் வணக்கங்கள் ! அது இன்னா மாயமோ தெரியலை, மழை சொட்டும் அழகை ஜன்னல் வழியே ரசிக்கும் போது உலகுக்கே ஏதாச்சும் சேதி சொல்லணும் போலவே தோணுறது (எனக்கு) வழக்கம் ! அதுவும் அந்த rainy day ஒரு saturday-ல் அமைந்து போனால், உள்ளுக்குள் அடைபட்டுக் கிடக்கும் அரிஸ்ட்டாட்டிலும், சாக்ரடீசும் 'நானு..நீயு'ன்னு போட்டி போட்டுக்கினு வெளிப்பட முனைகிறார்கள் ! 'கொஞ்சம் அடங்குங்கப்பா...லோகத்துக்கு ஏற்கனவே கொள்ளை பேரு டிசைன் டிஸைனா சேதி சொல்லிப்புட்டாங்க - நாமளும் சேர்த்துப்புட்டா பூமி தாங்காது !' என்று கெஞ்சிக் கூத்தாடி அவர்களது வருகைகளுக்கு அணை கட்ட வேண்டியதாகிப் போச்சு !
வேறு ஒண்ணுமில்லீங்க - ஆண்டின் இறுதியினை நோக்கி உலகமே நடைபோட்டு வரும் இந்த வேளையினில், உலகெங்குமுள்ள காமிக்ஸ் பதிப்பகங்கள் 2025-க்கெனத் திட்டமிட்டுள்ள சிலபல அசாத்திய ஆல்பங்கள் கண்ணில் பட்டு வருகின்றன ! ஒவ்வொன்றும் ஒரு பாணியில், ஒரு ஜான்ராவில், ஒரு அழகில் மூச்சிரைக்கச் செய்து வர, மொழி தெரியாமலேயே அவற்றை ரசிக்கும் போதுமே இந்தப் பத்தியின் முதல் வரியானது நிஜமாகிட முனைகிறது !! இன்ன தான் ஒரு காமிக்ஸ் ஆக்கத்தின் வரம்பு என்றெல்லாம் இல்லாது, இப்போதெல்லாம் கதாசிரியர்கள் கையில் எடுக்கத் துவங்கியுள்ள களங்கள் மெய்யாலுமே மெர்சலூட்டுகின்றன !
காதலின் பற்பல பரிமாணங்களை தகிரியமாய் கையிலெடுத்து அலசுகிறார்கள் !!
பிரபல புதினங்களைக் கையிலெடுத்து காமிக்ஸ் ஆல்பங்களாக்கி தெறிக்க விடுகிறார்கள் !
வரலாற்றுக்குள் புகுந்து செம்மையாய் ஒரு யு-டர்ன் போட்டு நாம் இதுகாரும் சிந்தைகளில் உருவகப்படுத்தி வைத்திருந்த சமாச்சாரங்களுக்கெல்லாம் புதுசாய் ஒரு கோணத்தில் விளக்கம் தர முற்படுகிறார்கள் !
சமகால உலக அரங்கில் அரங்கேறி வரும் அரசியல் சதுரங்கங்களை தோலுரித்து பட்டையைக் கிளப்புகிறார்கள் !
மருத்துவத்திற்கும் ஒரு காமிக்ஸ் பார்வையினை தந்து பார்க்கிறார்கள் !
கார்ட்டூன்களுக்கு புதுசாயொரு அர்த்தம் கற்பிக்கிறார்கள் !
அமானுஷ்யங்களை அசால்ட்டாக அரவணைக்கிறார்கள்...
And of course - நமக்குப் பிரியமான வெஸ்டர்ன் கதைகளையும் தடபுடலாக தாளித்துத் தள்ளுகிறார்கள் !!
So கடைவாயில் ஜொள்ளு ஒழுக இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது உள்ளுக்குள் கலவையாய் எண்ணங்கள் ஓட்டமெடுக்கின்றன !! பிரதானமானது - "நாம் இவுக உசரங்களுக்கு எண்ணிக்கைகளில், அளவீட்டில் வளர முடியாங்காட்டியும், பன்முகத்தன்மையிலாச்சும் நெருங்கிட நினைத்தால் இன்னமும் எத்தனை ட்ரம் காம்பிளான் குடிக்க வேணும் ?" என்பதே !!
இன்றைக்கெல்லாம் "அவை மேற்கத்திய ரசனைகள் !...நமக்கு ரசிக்காது !" என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்வது சரிப்படாது ! Netflix தளத்துக்குள் நுழைந்தால் அமெரிக்காவில் ஓடக்கூடிய டி-வி தொடர்கள் முதற்கொண்டு அணிவகுத்து நின்று சக்கை போடு போட்டு வருகின்றன ! So டாலர் தேசங்களும் சரி, யூரோ பூமிகளும் சரி, இன்றைக்கெல்லாம் ரசனைகளில் நமக்கு அந்நியமே அல்ல தான் ! யதார்த்தங்களும், மாறி வரும் பொழுதுபோக்கு பாணிகளும் புது ரூட்களில் சீறிப் பாய - நாம மட்டும் இன்னமும் "மாசிலா உண்மைக் காதலி !! மாறுமோ - செல்வம் வந்த போதிலே'ன்னு தலைவர் காலத்தின் மரங்களை சுற்றி டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறோமே ?!! அது why மக்கா ? எல்லாமே மாறி வரும் இந்த வேளைகளில் - ஒரு குட்டியூண்டு வட்டத்தின் காமிக்ஸ் வாசிப்புகள் மட்டும் ஒரு அகழி சூழப்பட்டதொரு இரும்புக்கோட்டையாய் ; பழசை ஆராதிக்கும் படையாய் ; மாற்றங்களை பகிஷ்கரிக்கும் பட்டாளமாய்த் தொடர்வது ஏனோ ? Why மக்கா ?
ஜன்னல் வழியே மழைத் தாண்டவங்களைப் பார்க்கும் போதே நமது ஜம்போ காமிக்ஸ் முயற்சியானது மனசில் 'ரா...ரா....சரசுக்கு ரா...ரா !!' என்று குதிக்கிறது ! ஜம்போ காமிக்ஸ் பின்னணியில் நாம் கொண்டிருந்தது - நாயக பிம்பங்களின் அவசியங்களின்றி, கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்திடும் one-shots இங்கு அணிவகுத்திட வேண்டும் என்ற அவாவே ! I agree - அங்கு நமது கதைத்தேர்வுகள் எல்லா தருணங்களிலும் bang on target இருந்திருக்கவில்லை தான் ; but அதே சமயத்தில் அந்த தனித்தடமே மூணு, நாலு ஆண்டுகளில் மூலை சேர்ந்திட வேண்டிய அளவிற்கு டப்ஸாவாக இருக்கவுமில்லை தான் ! So why did it not click ? என்ற கேள்வியே இந்த நொடியில் என்னுள் !!
சாப்பாட்டு பாணிகளில் மாற்றங்களை ஆர்வமாய் அரவணைத்திருக்கிறோம் ! நம்மூர் உணவுகளில் "பனீர்" எனும் ஐட்டத்தை நான்லாம் ஒரு 20 வயதான பிற்பாடு தான் பார்க்கவே செய்திருப்பேன் ! "ஷவர்மா' என்றால் ஷவரில் குளித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அம்மாவிடம் உணர்த்தும் வார்த்தையாக மட்டுமே என் காலத்தில் இருந்து வந்தது ! KFC ; Subway ; McDonalds ; Popeyes ; Dominos ; Pizzahut என்பனவெல்லாமே அமெரிக்கா போயிட்டுத் திரும்புவோரின் பீட்டர்களில் காணப்பட்டு வந்த பெயர்களாய் மாத்திரமே இருந்து வந்தன ! ஆனால் இன்றைக்கோ நிலவரம் என்ன சொல்லுங்களேன் ? நம் வீட்டு அரை டிக்கெட்கள் தாமாய் KFC-ல் ஆர்டர் போட முனைந்து வருகின்றன !!
பொழுதுபோக்கு வழிமுறைகளிலும் தான் எம்புட்டு மாற்றங்கள் ? தூர்தர்ஷனில் ராமாயணம் சீரியலைப் பார்க்க ஞாயிறு காலையில் தேசமே டிவி பெட்டிகளின் முன்னே குவிந்த காலங்களெல்லாம் இன்றைய OTT தலைமுறைக்கு என்னவென்று கூடத் தெரியாது தானே ? "கொரியன் சினிமா பிடிக்கும் ya ; I like Scorcese ; இரானியன் சினிமாக்கள் ரெம்போ different தெரியுமா ? என்ற சம்பாஷணைகள் இன்றைக்கு நார்மலே !!
- கபிஷ் ஸ்பெஷல் 1 - ரெடி !
- க்ளாஸிக் சூப்பர்ஸ்டார்ஸ் ஸ்பெஷல் 3 - ரெடி !
- ELECTRIC '80s - முதல் இதழான ஸ்பைடர் ஸ்பெஷல் - ரெடி !


















