நண்பர்களே,
வணக்கம். எட்டித் தொடும் அண்மையில் ஆகஸ்டும் காத்திருக்க, நமது ஜாம்பவான்கள் களமிறங்க வேண்டிய வேளையும் நெருங்கி விட்டது! நான் குறிப்பிடும் ஜாம்பவான்களோ – கலர்-கலரான டி-ஷர்ட்டுகளை மாட்டிக் கொண்டு கைகளில் க்ரிக்கெட் மட்டைகளை ஏந்தி நிற்கும் வாசக வீரர்களல்ல – நமது ‘பொம்ம புக்‘ அணிவகுப்பின் ஜாம்பவான்களே! So அடுத்த சில நாட்களிலேயே உங்களை சந்திக்கக் காத்திருப்போருக்கு ‘ஹலோ‘ சொல்வோமா? Here they are:
டின்டின் & கேப்டன் ஹேடாக்
வேதாளர்
தாத்தாஸ்
டின்டின் பற்றியும், அவரது தயாரிப்பின் பின்னணிகள் பற்றியும் ஏகமாய் ஜனவரியிலேயே எழுதியிருந்தேன்! So புதுசாய் "நான் ஏழு மலைகளை ஏறினேன்; ஏழு சமுத்திரங்களைத் தாண்டினேன்" என்றெல்லாம் இன்னொரு தபா அள்ளி விடமாட்டேன்! நிஜத்தைச் சொல்வதானால் – நம்ம கார்த்திக் சோமலிங்காவோடு முதல் டின்டின் இதழின் முஸ்தீபுகளின் சமயத்தில் செய்த பணிகள் இன்றைக்கும் கைகொடுத்து வருகின்றன! Oh yes – “மீன்கள் விற்கப்படும்” என்ற ரேஞ்சுக்கு கார்த்திக் suggest செய்திருந்த பலவற்றை “காயாத கானகத்தே, நின்றுலாவும் காரிகையே” – இங்கே நயமான நெய் மீன்கள் நித்தமும் கிடைக்கும்” என்ற ரேஞ்சுக்கு நான் tweak பண்ணியிருந்தேன் தான்! But 'தத்தாபுத்தா'வென்றேனும் டின்டினுக்கான வசன பாணி template-ஐ செட் பண்ணிட சாத்தியமாகி, படைப்பாளிகளிடமும் உங்களிடமும் ஏற்கனவே ஓ.கே. வாங்கிட்டதால், டின்டின் எக்ஸ்பிரஸ் இந்தவாட்டி தடையின்றித் தடதடத்து விட்டது!
And மெர்சலூட்டும் அந்த கதைக்களம் எனது வேலையை ரொம்பவே சுலபமாக்கி விட்டதையும் சொல்லியே தீரணும்! டின்டின் தொடரின் டாப் சாகஸங்களுள் மிக முக்கியமானவை நாம் ஆகஸ்டில் ரசித்திடவிருக்கும் டபுள் ஆல்பங்கள் என்று சொல்லலாம்! எங்களது ஸ்கூல் லைப்ரரியில் அநேகமாக இந்த 2 புக்குகளுமே எனது கைரேகைகள் பட்டு ஓடாய்த் தேயாத குறை தான்! கணக்கே இராது – இவற்றை நானும் சரி, எனது நண்பர்களும் சரி – படித்து ரசித்த தடவைகளுக்கு! So ஒரு iconic தொடரின் iconic கதைகளைக் கையிலெடுக்கும் போது, மொழிபெயர்ப்பாளரின் பணி அந்தமட்டிற்கு சுலபமாகிப் போகிறது!
டின்டின் கதைகளின் அடிநாதமே அவருக்கும், கேப்டன் ஹேடாக்குக்கும், புரபஸர் கேல்குலஸுக்கும், நாலுகால் தோழன் ஸ்நோயிக்கும் இடையிலான நட்பு தான்! And இந்த டபுள் ஆல்பத்திலும் அதுவே அழுத்தமான முக்கியத்துவம் பெறுகிறது! காணாமல் போகும் புரபஸரைத் தேடி, காடு, மேடு, கானகம், பனி மண்டலம் என வெறித்தனமாய் தேடல் அரங்கேறுகிறது! போனவாட்டி திபெத்திலும், நேபாளத்திலும் நம்மவர்கள் சுற்றியலைந்தனர் என்றால் – இம்முறையோ களம் தென்னமெரிக்காவின் இன்கா பூமியில்! கொஞ்சம் மாந்த்ரீகம்; கொஞ்சம் வரலாறு; கொஞ்சம் இங்கிலாந்தில்; அப்புறம் முழுசாய் தென்னமெரிக்காவில்; என்று தடதடக்கிறது இந்த 124 பக்க சாகஸப் பயணம். கேப்டன் ஹேடாக் வழக்கம் போலவே தெறிக்க விட, டிடெக்டிவ் இரட்டையரான தாம்ஸனும், தாம்ப்ஸனும் தம் பங்கிற்கு கிச்சுக்கிச்சு மூட்டுகின்றனர். ஆக்ஷனுக்கும், ஜாலியான கதையோட்டத்துக்கும் மத்தியில் ஒரு டைட்டான, த்ரில்லராய் கதை நகர்த்தலை அமரர் ஹெர்ஜ் செய்திருப்பது தான் இங்கே highlight!
ஒரிஜினலைப் போலவே இரட்டை ஆல்பங்களாய், ஒரிஜினலின் அதே அட்டைப்படங்களோடு, அதே பக்க அமைப்புகளோடு, இம்மி கூட வேற்று சமாச்சாரங்களுக்கு இடமின்றி இந்த இரு ஆல்பங்களும் வந்திடவுள்ளன! And போன இதழைப் போலவே தயாரிப்புத் தரமும் இருந்திடும் - அதே பெங்களூரு ஏற்றுமதிக் குழுமத்தின் கைவண்ணத்தோடு! இந்தவாட்டி கிட்டத்தட்ட 2 மாதங்களாகிப் போச்சு - அவர்கள் ப்ராசசிங் & அச்சை முடித்து, முழுவதுமாய் மிஷினில் பைண்ட் செய்து புக்ஸை மொத்தமாய் சப்ளை செய்வதற்கு! And போன தடவையைக் காட்டிலும் கட்டணங்கள் சற்றே உசந்தும் போயிருக்கின்றன! Yet, கைகளில் ஏந்தும் போது, உணர முடியும் கெத்து, அந்தக் காசுக்கு நியாயம் செய்வதாய் சொல்கிறது! Fingers crossed - உங்களுக்குமே அதே திருப்தி கிட்டிட! இதோ - அட்டைப்பட previews & உட்பக்க ட்ரெய்லர்கள்:
ஆகஸ்டின் all-color மேளா மாதத்தினை வித்தியாசமானதொரு பாணியில் பட்டாசாய்ப் பொறியச் செய்யவிருப்பது ஏற்கனவே நாம் பிரிவியூ செய்து விட்ட நம்மள் கி தாத்தாஸ் தான்! லயன் கிராபிக் நாவல் தடத்தின் இதழிது என்பதால் நீங்கள் அதற்கும் சேர்த்தான சந்தா செலுத்தியிருக்கும் பட்சத்தில் பெருசுகளின் yet another ராவடியை ராவாக ரசித்திடலாம்! தொடரின் முதல் மூன்று ஆல்பங்கள் - தலா ஒவ்வொரு தாத்தாவினை மையப்படுத்திப் பயணித்தன என்றால் - இந்த நான்காம் ஆல்பத்தில் focus இருப்பது பேத்தி ஸோஃபி மீது! By now, இந்தத் தொடரின் ‘போட்டுத் தாக்கு‘ வசன பாணிக்கு நாம் பரிச்சயமாகியிருப்போம் என்பதால் பெரிய புருவ உயர்த்தல்களின்றி பயணித்திடலாம் என்பேன்! Can't wait for தாத்தாஸ் to reach you! சின்னதொரு reminder yet again guys: முந்தையை 3 ஆல்பங்களையும் ஒருக்கா புரட்டி விட்டு இந்த ஆல்பம் # 4-க்குள் புகுந்திட்டால் நலம்!
ஆகஸ்டின் V காமிக்ஸில் வரவிருப்பவர் வேதாளர். Sy Barry-ன் அட்டகாசமான கைவண்ணத்தில் உருவானதொரு சாகஸமான “அதிர்ஷ்டத்தைத் தேடி” முழு வண்ணத்தில் வரவிருக்கிறது! And இம்முறை கலரிங் பொறுப்புகளை ஏற்கனவே வேதாளர் கதைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டதொரு வடஇந்திய டிஜிட்டல் ஆர்டிஸ்ட் கையாண்டுள்ளார். இதோ - அட்டைப்பட preview !
உட்பக்க கோப்புகளை கேட்டு வாங்க மறந்துப்புட்டேன் ; நாளை இங்கே upload செய்து விடுகிறேன் !!
புக்ஸ் சகலமும் அச்சாகி விட்டன! In fact டின்டின் புக்ஸ் டப்பிகளில் டெலிவரியாகி, ஒரு வாரத்துக்கு மேலாச்சி. தாத்தாக்களும் ரெடி! வேதாளர் மாத்திரம் பைண்டிங்கில் உள்ளார்! அவரும், விலையில்லா ஒரு டெக்ஸ் 32 பக்க கலர் இதழும் பைண்டிங் முடிந்து செவ்வாய் மாலை நம்மிடம் வந்து சேர்ந்திடும் & புதனன்று இங்கிருந்து புறப்பட்டு விடும். So ஆகஸ்ட் முதல் தேதிக்கு இந்தப் புது இதழ் கத்தை உங்கள் கைகளில் இருந்திட வேண்டுமென்று திட்டமிடல்! PLEASE NOTE : சந்தாப் பிரதிகளை ஈரோட்டுக்கு கொண்டு வருவதாக திட்டமிடல் நஹி ! So "என்னோட பொஸ்தவங்களை அங்கே வாங்கிக்கிறேன் !" என்ற கோரிக்கைகள் வேணாமே - ப்ளீஸ் !
ஆகஸ்ட் பிறந்த மறுநாளே, ஈரோட்டு புத்தக விழா துவங்கவிருப்பதும், அதைத் தொடர்ந்த வாரயிறுதினில் நமது ஈரோட்டுச் சந்திப்பும் காத்திருப்பதால் நம்மாட்கள் அனைவரும் பம்பரமாய் சுற்றிக் கொண்டுள்ளனர். டீம் ஈரோடும் அங்கே ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டுள்ளனர் - தங்களது சொந்த வேலைகளையெல்லாம் கிடப்பில் போட்டு விட்டு!
And ”ஈரோட்டுக்கு வாரீகளா?” என்ற வினவலுக்கு "Oh yes" என்று கிட்டத்தட்ட 245 நண்பர்கள் பதில் தந்துள்ளனர். போன தபா சுமார் 175 பேர் வருகை தந்திருந்ததே ஒரு திருவிழா feeling ஏற்படுத்தியிருந்தது; இம்முறை அந்த நம்பரை ஆராமாய் விஞ்சிடல் சாத்தியம் போல் தென்படுவதால், அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் குத்துடான்ஸ் போட்டு வருகின்றன! சகல ஏற்பாடுகளும் கச்சிதமாய் அமைந்து அன்றைய பொழுதில் நம் அனைவருக்குமே மகிழ்ச்சி பிரவாகமெடுக்க பெரும் தேவன் மனிடோவும், ஓடினும் அருள்புரிவாராக!
நான் மறந்துவிடும் முன்பாக இங்கொரு interlude: "ஈரோடு ஸ்பெஷல்ஸ்" என இரண்டே இதழ்கள்தான் வெளிவருகின்றன:
- மாண்ட்ரேக் ஸ்பெஷல் - 2 : ரூ.450
- ஸ்பைடர் Vs ஆர்ச்சி ஸ்பெஷல் : ரூ.80
இரண்டுமே ஈரோட்டு சந்திப்பன்று (ஞாயிறு - ஆகஸ்ட் 4) Hotel Oasis அரங்கிலேயே விற்பனைக்குக் கிடைக்கும். So வருகை தர எண்ணியுள்ள நண்பர்கள் கூரியர்களுக்கு தண்டம் அழத் தேவையின்றி, நேரில் அங்கேயே வாங்கிக் கொள்ளலாம். உங்களுக்கு அவை தேவையெனில் இங்கோ, நமது அலுவலக வாட்சப் நம்பருக்கோ - "1 செட்" என்றொரு confirmation மட்டும் செய்திடக் கோருகிறேன் ! அதற்கேற்பவே புக்ஸை கொண்டு வருவதாக உள்ளோம் !
ஈரோடு வந்திட இயலா நண்பர்கள் கூரியர் கட்டணமாய் ரூ.60 (தமிழகம்) சேர்த்து ரூ.590 அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம். வெளி மாநிலமெனில் ரூ.90/- கூரியர் !
Before I sign out - கோவை புத்தக விழா சார்ந்த news !! வாரநாட்களில் அத்தனை விறுவிறுப்பு இல்லது போக, கொஞ்சமாய் பேஸ்தடித்திருந்தது சேல்ஸ் ! ஆனால் வாரயிறுதியில் அனல் பறக்கும் விற்பனை செமத்தியாக கைதூக்கி விட்டுள்ளது ! கடைசி நாளான நாளைக்கும் அதே வேகம் இருக்கும் பட்சத்தில் போன வருஷத்து ரெக்கார்டை சமன் செய்திடலோ, விஞ்சுவதோ சாத்தியமாகிடும் !! Fingers Crossed கோவை மக்கா !
ரைட்டு...2025 அட்டவணையினில் பெயர் சூட்டும் படலம் ஓடிக்கொண்டிருப்பதால், அதனைத் தொடர்ந்திடக் கிளம்புகிறேன் !
"உதிரம் பொழியும் நிலவே !"
"இளமை எனும் பூங்காற்று...!!" -
இவையெல்லாம் டெக்சின் தலைப்புகள் !! நம்பவாச்சும் முடியுதா ?
Bye all....have a cool weekend !! See you around !







.jpg)


.jpeg)








