நண்பர்களே,
வணக்கம். ஒரு "அப்பாடா" பதிவு..😃!! நீண்ட நாட்களுக்கு பிறகு மண்ணை குளிர்ச்சியாக்கப் பெய்த மழையைபோல மனதை நிறைவாக்கி விற்பனையில் திக்குமுக்காட வைத்து ஆன்லைன் புத்தக மேளாவை "கிராண்ட் சக்சஸ்" ஆக்கிய நண்பர்களுக்கு கோடானுகோடி நன்றிகள் 🙏 ஆந்தை விழியனின் விழிகள் தெறித்து விழும் அளவிற்கு புக்கிங்குகள், விற்பனைகள்..👍நமது சின்னஞ்சிறு டீமின் மெம்பர்கள் இப்போதுதான் கடைசி புத்தக பார்சலை அனுப்பிவிட்டு "அப்பாடா" என்று உட்கார்ந்தார்கள்.. ! (நன்னி ஜம்பிங் பேரவை தலைவரே !! ஏதேனும் ஒரு பொழுது போகாத நாளில் சும்மானாச்சும் ஒரு தபா, நம்ம வாராந்திரப் பதிவை ஆளாளுக்கு எழுதினால் எப்புடி இருக்குமென்று பார்க்க வேணும் போலும் !!)
Oh yes, இரண்டே இரண்டு ஆர்டர் நீங்கலாய் பாக்கி சகலத்தையும் நம்மாட்கள் அனுப்பி முடித்து விட்டார்கள் ! And of course - அந்தப் புது இதழ்களை அடுத்த வாரத்தினில் அனுப்பிட வேண்டும் ! இந்த வாரத்தின் திங்களும், புதனும் கோவில் திருவிழாவினையொட்டி உள்ளூர் விடுமுறைகள் என்பதால் டெஸ்பாட்ச் கொஞ்சம் தேங்கி விட்டது ! இல்லாவிடினுமே இம்முறை வந்திருந்த ஆர்டர்களுக்கும் சரி, அந்த FCBD புக்குகளுக்கும் சரி, இரண்டு கிட்டங்கிகளிலும் உருட்டி புக்ஸை எடுக்க வேண்டியிருந்ததால் அநியாயத்துக்கு நேரத்தை விழுங்கியதை மறுக்க இயலாது ! பத்தாண்டுகளுக்கு முன்பான இதழ்களை, படர்ந்து கிடந்த தூசுப் படலங்களைத் தட்டிய கையோடு சேகரித்துக் கொண்டு வருவதே ஒரு பெரும் பிரயத்தனமாகிப் போனது !! Anyways - கண்ணாலம் ஆன பிற்பாடு தாய்வீட்டை விட்டுப் பிரியத் தடுமாறும் பாசமான புள்ளீங்களை ஒரு பெருமூச்சோடு வழியனுப்புவது போல, நம்மோடே இத்தினி காலமாய் ஐக்கியமாகியிருந்த சில பல புக்ஸ்களுக்கு பிரியாவிடை தந்து அனுப்பி வைத்திருக்கிறோம் ! And பழைய புக்ஸை இந்தத் தருணத்தில் பார்த்த போது பற்பல மலரும் நினைவுகளும் நிழலாடத் தவறவில்லை ! "ஹைய்யோ ...இந்த புக்குக்குத் தானே புளியமரத்திலே கட்டி வைச்சு கும்முனாங்க !"......"ஆத்தீ....இந்த புக்கோட தானே மொதவாட்டி மூத்திர சந்துப் பயணம் !!" ......"அச்சோ....இந்த புக்குக்கோசரம் முட்டுச் சந்திலே மொத்து வாங்கி எம்புட்டு நாளாச்சு ?!!" என்ற ரேஞ்சில் அந்தக்காலத்து ஈஸ்ட்மேன் கலரில் flashbacks ஜிவ்வென்று ஓட்டமெடுத்தன !! In fact - வாய்ப்பு அமையும் வேளையில் - "இதே நாள் - இதே மாசம் - பத்தாண்டுகளுக்கு முன்னே" என்று திட்டமிட்டு, அந்தத் தருணத்தின் பதிவினை மறுக்கா இங்கே publish பண்ணி, அதனோடு இப்போது ஒருமுறை fresh-ஆகக் கும்மியடித்துப் பார்க்கலாமோ ? என்று கூடத் தோன்றுகிறது ! ஒவ்வொன்றிலும் தான் எத்தனை நவரசங்கள் ? What say people ?
இங்கே உள்ளூரில் விடுமுறை என்றாக, சொந்த ஜோலியாய் நானும் சில நாட்களுக்கு சென்னைக்குப் பயணமாக, ஸ்பெஷல் இதழ்களின் இறுதிக் கட்டப் பணிகளுக்குள் இன்று முதலே மறுக்கா தலை நுழைக்க முடிந்துள்ளது ! ரைட்டு....பதிவைப் போட்டுப்புட்டு தொடரலாமென்று இங்கே ஆஜராகி, உங்களின் last batch of comments-களுக்குள் புகுந்தால், திடீரென்று "தானைத் தலைவர் ஸ்பைடருக்கொரு ஸ்பெஷல் !!" என்ற கோரிக்கை எழுந்திருப்பதைப் பார்க்க முடிந்தது !! "ஹை..இதென்ன புது ஐட்டமா இருக்கே ?" என்ற கேள்வியோடு முகத்திலொரு புன்னகை விரிந்ததை மறுக்க மாட்டேன் ! புதுசாய் நமக்கு வேலை வைக்காமல், அப்டிக்கா சூடு பண்ணி, அப்டியே பரிமாறக்கூடிய மறுபதிப்புப் பதார்த்தங்களென்றால் எனக்கு எப்போதுமே ஓ.கே. தான் ; ஆனால் மெய்யாலுமே இவற்றை நாம் இன்று ரசிக்கும் வாய்ப்புகள் எத்தனை சதவிகிதம் ? என்ற கேள்வியை என்னை நானே கேட்டுக் கொண்ட போது கிடைத்த பதிலில் அத்தனை வலு இருந்திருக்கவில்லை!
In fact ஐம்பது ரூபாய்க்கு க்ளாஸிக் ஸ்பைடர் கதைகள் மறுபதிப்பான 2015 / 2016 ஆண்டுகளில் நம்ம கூர்மண்டையரை வாருவதே நிறைய பேருக்கு மாதாந்திர ஆதர்ஷப் பொழுதுபோக்காக இருந்து வந்தது ! ஒரு கட்டத்தில் எனக்கே போதுமென்று பட்டதாலே, கடைசி batch ஸ்பைடர் இதழ்களை அன்றைக்கு மறுபதிப்பிடவில்லை ! பழசோ, புதுசோ பொதுவாக நமது இதழ்களை வாங்கிடும் அந்த core குரூப் நீங்கள் தான் என்பதில் எனக்குச் சந்தேகங்களில்லை ! So உங்கள் விருப்பங்களுக்கேற்ப ஒரு க்ளாஸிக் ஸ்பெஷலை ரெடி பண்ண முயற்சிக்கலாம் தான் ; ஆனால் எனது நெருடலோ - இவற்றை வாங்கிடக்கூடிய புது வாசகர்களை எண்ணியே ! Of course -மஞ்சக் கொடிய புடிச்சுக்கிட்டு, கூட்டம் கூட்டமால்லாம் புதிய வாசகர்கள் படையெடுக்கப் போவதில்லை தான் ; but still புத்தக விழாக்களில் ஒரு குறிப்பிட்ட அளவுக்காவது newcomers நமது இதழ்களை அள்ளிச் செல்கின்றனர் என்பது நிஜம் ! அந்தப் புதியவர்கள், அந்த manga தலைமுறை, நம்ம இஸ்பைடர் சாகசங்களை இன்றைக்குப் படிக்கும் பட்சத்தில், அவர்களது ரியாக்ஷன்ஸ் என்னவாக இருக்குமோ ? என்ற குழப்பம் தான் எனக்கு ! இந்த ஜனவரிக்கு சென்னைக்கென நாம் மறுபதிப்பு செய்த லக்கி லூக் இதழ்களெல்லாம் தெறி ஹிட்ஸ் ! வசனங்களில் நிறைய tweak செய்திருந்தோம் & அந்தக் கதைகள் சகலமுமே செமத்தியான evergreen hits ! So அவற்றை நாம் (சு)வாசித்தாலும் சரி, புதியவர்கள் வாசித்தாலும் சரி, வண்டி ஓடி விடுகிறது ! Oh yes, ஸ்பைடரின் சூப்பர்-ஹீரோ சாகசங்கள் - அமெரிக்காவில் விண்ணைத் தொடும் விற்பனை காணும் அந்த மனிதன்-இந்த மனிதன் சாகசங்களுக்குச் சளைத்தவைகளே அல்ல தான் & நம்மை தாங்கிப் பிடித்த ஜாம்பவானும் இவரே ! So அவரை மட்டம் தட்டும் எண்ணம் கிஞ்சித்தும் கிடையாது ! But மாறியுள்ள காலங்களில் / ரசனைகளில் இவருக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்த curiosity என்னுள் நிறைய உள்ளது !! கொஞ்சம் பேசுங்களேன் guys இது பற்றி ?
ஒற்றை இதழ், இரண்டு இதழ்களென்றால் கூடப் பரவாயில்லை ; ஆனால் ஒரு முழுநீளத் தொகுப்பென்பது totally a different beast !! அதனை சமாளித்து விடலாமென்று மெய்யாலுமே நினைக்கிறீர்களா folks ? இதோ - ஆகஸ்டில் நம்ம தானைத் தலைவர் மெகா சைசில், கலரில், "விண்வெளிப் பிசாசு" உடனான மோதலில் களமிறங்கிடவுள்ளார் - நம்ம கரூர் ஸ்பைடர்மன்றத் தலைவரின் மொழிபெயர்ப்புடன் ! விண்வெளிப் பிசாசை ரசிச்சுக்கிட்ட பிற்பாடு, இந்த ஸ்பைடர் டைஜெஸ்ட்டை, டைஜஸ்ட் செய்வது பற்றியொரு தீர்மானம் பண்ணுவோமே guys ? What say ?
And ஏற்கனவே ஏதோவொரு சமயத்தில் பிராமிஸ் செய்திருந்த "மாண்ட்ரேக் ஸ்பெஷல்-2" பெண்டிங் உள்ளது ! அவரைக் கரைசேர்க்கும் பொருட்டு, இம்முறை டக்கரான கதைகளையாய்த் தேர்வு செய்து, கொஞ்சம் கொஞ்சமாய் ரெடி செய்து வருகிறோம் ! So அவர் சூட்டவிருக்கும் புய்ப்பங்களோடு, ஸ்பைடரும் ஒரு கொத்தைச் சூட்டச் செய்தால், ஈரோட்டுக்கு வரும் போது அம்புட்டு பேரும் ஊட்டியின் மலர்க்கண்காட்சிகளிலிருந்து ஓடியாந்தோர் போலிருப்பது உறுதி ! பரால்லீங்களா ?
Moving on, வருஷத்தில் ஒரு பாதியினைக் கடக்கும் தருவாயினை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் எனும் போது - 40-வது லயன் ஆண்டுமலர் ; ஈரோடு ; தீபாவளி ; கிறிஸ்துமஸ் - என்பனவற்றையெல்லாம் தாண்டி, அடுத்த ஆண்டினுள் பார்வைகளை ஓட விடும் சபலங்கள் மேலோங்குகின்றன ! And காத்துள்ள 2025-ல் முத்துவின் இதழ் # 500 வெயிட்டிங் ! In fact முத்துவின் ஆண்டுமலரே இதழ் நம்பர் ஐநூறாகவும் இருந்திடவுள்ளது ! So அதற்கு என்ன திட்டமிடுவது ? என்ற கேள்வி தலைக்குள் இப்போதே உருட்டி வருகிறது !
அடுத்தாண்டுக்கென என்னிடமுள்ள அடுத்த கேள்வி - பொதுவானது !! இது வரையிலும் குண்டு புக்ஸ் ; புஷ்டியான புக்ஸ் - என்று டிராவல் செய்திருந்த நாம், 2024-க்கென crisp வாசிப்புகள், முன்செல்லும் பாதையென்று தீர்மானித்திருந்தோம் ! And அந்த முனைப்போடு நடப்பாண்டின் அட்டவணையினையும் அமைத்திருந்தோம் ! இதோ - முதல் 5 மாதங்கள் ஓட்டமெடுத்திருக்கும் நிலையில், எனது கேள்விகள் இவையே :
1.இந்த வாசிப்பு அனுபவம் எவ்விதம் ரசிக்கிறதோ மக்கா ? 'எடுத்தோம்-படிச்சோம்' என்ற ஸ்டைல் சுகப்படுகிறதா ? இதோ - இந்த மே மாதம் கூட ஒரு க்ளாஸிக் உதாரணம் ! போனவாட்டி, இதே டேங்கோவையும், இதே சிக்பில்லையும், துணைக்கு ரூபின் அம்மணியையும் கூட்டிக் கொண்டு, கூட்டணி இதழாய் வெளியிட்டு, அதே மாதத்தில் மேற்கொண்டும் இரண்டு இதழ்களை வெளியிட்டிருந்தோம் ! ஆனால் இம்முறை, ஒவ்வொன்றும் தனித்தனியாய், நறுக் என்ற crisp பாணியில் !! இது ஓ.கே. என்பீர்களா ? அல்லது 'என்ன இருந்தாலும் குண்டூஸ் மெரி வருமா ? என்பீர்களா ?
2.இந்த ஆண்டினில் இதுவரைக்கும் பதினைஞ்சோ, பதினாறோ இதழ்கள் வெளியாகியிருக்கும் என்று நினைக்கிறேன் ! அவற்றுள் நீங்கள் வாசித்தது எத்தனையை ? என்று சொல்லுங்களேன் ப்ளீஸ் ?
3.லார்கோ ; டின்டின் ; பெளன்சர் ; டேங்கோ ; ராபின் ; டெட்வுட் டிக் - என crisp reading களங்களிலும் ஸ்கோர் செய்துள்ள புக்ஸ் இருந்துள்ளன இம்முறை என்ற எனது இந்த அனுமானம் சரிதானுங்களா ? இல்லாங்காட்டி, நான்பாட்டுக்கு கனா கண்டுக்கினு இருக்கேனுங்களா ?
உங்களின் மெய்யான பதில்கள், அடுத்த ஆண்டிற்கென ஒரு blueprint போடும் முதற்கட்டப் பணிகளுக்கு உரம் சேர்க்கும் என்பதால், தவறாது பதில்ஸ் ப்ளீஸ் ? இதோ - இந்தப் பதிவில் நான் தருமி அவதாரில் கேட்டுள்ள கேள்விகளின் தொகுப்பு - பதிவுகளும் crisp ஆக இருந்தால் தேவலாமென்று எண்ணிடும் நண்பர்களுக்கோசரம் !! So மேஜர் சுந்தர்ராஜனாய் ஒருக்கா performance பண்ணிய கையோடு நான் கிளம்புகிறேன் !! கபாலத்துக்கு மேல் பணிகள் காத்திருப்பதால் ஓட வேண்டுமுங்கோ !! Bye all....see you around ! Have a bright Sunday !!
QUESTIONS AT A GLANCE :
1.ஒரு பொழுது போகாத நாளில் சும்மானாச்சும் ஒரு தபா, நம்ம வாராந்திரப் பதிவை என் மொக்கை பாணியில் ஆளாளுக்கு எழுதினால் எப்புடி இருக்குமென்று பார்ப்போமா ?
2.வாய்ப்பு அமையும் வேளையில் - "இதே நாள் - இதே மாசம் - பத்தாண்டுகளுக்கு முன்னே" என்று திட்டமிட்டு, அந்தத் தருணத்தின் பதிவினை மறுக்கா இங்கே publish பண்ணி, அதனோடு இப்போது ஒருமுறை fresh-ஆகக் கும்மியடித்துப் பார்க்கலாமா ?
3.விண்வெளிப் பிசாசை ரசிச்சுக்கிட்ட பிற்பாடு, இந்த ஸ்பைடர் டைஜெஸ்ட்டை, டைஜஸ்ட் செய்வது பற்றியொரு தீர்மானம் பண்ணுவோமா ?
4.முத்து காமிக்சின் இதழ் நம்பர் 500-க்கு உங்கள் பரிந்துரை என்னவாக இருக்குமோ ?
5.நடப்பாண்டின் crisp reading பாணி உங்களுக்கு எப்படிப்படுகிறது ? ஓ.கே.வா ? Not ஓ.கே.வா ?
6.நடப்பாண்டினில் இது வரை வெளியாகியிருக்கும் இதழ்களுள் நீங்கள் வாசித்தது எத்தனையோ ?
7.லார்கோ ; டின்டின் ; பெளன்சர் ; டேங்கோ ; ராபின் ; டெட்வுட் டிக் - என crisp reading களங்களிலும் ஸ்கோர் செய்துள்ள புக்ஸ் இம்முறை இருந்துள்ளன என்ற எனது அனுமானம் சரிதானுங்களா ?
P.S : பன் போட்டியில் வென்று, நமது இஸ்திரியில் பெயர் பொறித்திருக்கும் நண்பர், தனது அட்ரஸ் & போன் நம்பரை நமக்கு மின்னஞ்சலில் அனுப்பிடக் கோருகிறேன் ப்ளீஸ் ! ஒரு வேளை பன் பார்சலை இரக்க சிந்தனை கொண்ட கிளவரசருக்கு, ச்சீ..சீ.....இளவரசருக்கு அனுப்பிட எண்ணினாலும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் சாத்தியமே !!

















































