நண்பர்களே,
வணக்கம். சீனத்துத் தென்னைமரத்தினில் கொட்டிடும் தேளானது தமிழகத்துப் பனைமரங்களிலுமே நெரி கட்டக் செய்யுமோ ? தூரத்து சீன வுஹான் பிரதேசத்தில் ரணகளத்தைத் துவங்கியுள்ள கரோனா வைரஸ் ஊரெல்லாம் ஏற்படுத்திடும் ஆரோக்கியக் கோளாறுகள் ஒரு சோகக் கதையெனில், அதன் எதிரொலியாய் சீனாவிலிருந்து இறக்குமதி ஆகிடும் பொருட்களுக்குத் திடுமென விழுந்துள்ள பிரேக்கானது நமக்கும் குமட்டோடு ஒரு குத்து விட்டுள்ளது ! "அண்ணாச்சி...லயன் காமிக்சிலேர்ந்து பேசுறேன்...ஆர்ட் பேப்பர் ஒரு டன் வேணுமே ?" என்று வழக்கம் போல் போன் அடித்தால் மறுமுனையில் மௌனம் ! "சர்தான்...ரேட் கொஞ்சம் போல கூடியிருக்கும் போல !" என்று நினைத்துக் கொண்டே "இப்போ என்ன ரேட் அண்ணாச்சி ?" என்று கேட்டேன் ! தயங்கியபடியே மறுமுனையிலிருந்து ஒரு நம்பரைச் சொன்னார் ! எனக்கு காதில் லேசாய் ஈயத்தை ஊற்றியது போலிருந்தது !! "இன்னாது ? டன்னுக்கு அறுபத்தியெட்டாயிரமா ??????? அதுக்கு மேலே 12 % GST போடுவீங்கள்லே !! போன மாசம் கூட இவ்ளோ இல்லியே ?" என்று அலறினேன் ! ரொம்ப காலம் உள்ளாற இருந்துவிட்டு வெளியே வரும் கவுண்டர் "ஒத்த ரூபாய்க்கு ஒரு தேங்கா குடு" என்றபடிக்கே கடைக்குப் போய் நிற்பாரில்லியா ? அவரைப் பார்த்த மாதிரியே என்னையும் பேப்பர்ஸ்டோர்காரரும் பார்த்திருக்க வேண்டும் ! "மூணு வாரமா சைனாலேர்ந்து சரக்கே வர்றதில்லீங்க அண்ணே ! புதுசா ஆர்டர் எதுவுமே எடுத்துக்க மாட்டேங்கிறாங்க ! இப்போ இது தான் ரேட்டு ! இனி அடுத்த மாசம் மார்க்கெட்டில் சரக்கே இருக்காது போல் தெரியுது - என்ன விலைக்குனாலும் !!" என்று குண்டைத் தூக்கிப் போட்டார் !!
So இந்தப் பதிவை டைப்பும் அதே சமயத்தில் நம்மாட்கள் கடை கடையாய் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார்கள் - இருபது நாட்களுக்கு முந்தைய விலைக்கே விற்றிட யாரேனும் நியாயவான் கண்ணில் தட்டுப்படுகிறாரா ? என்று கண்டறிய ! சத்தியமாய் அதற்கெல்லாம் சாத்தியம் இராதென்பது புரிகிறது தான் ; ஆனால் பாழும் மனசும், டைட்டான பட்ஜெட்டும் கேட்டுத் தொலைக்கணுமே ?!! எது எப்படியோ - ஒண்ணும் கிடைக்காத பட்சத்தில் "புரட்சித் தீ" கதையில் வருவது போல ஊருக்கொரு வெள்ளைப் பசு மாட்டைப் பிடித்து அதன் மீதாவது படங்களையும், வசனங்களையும் வரைந்து சந்தாதாரர்கள் உள்ள ஒவ்வொரு தெருவுக்கும் இட்டுப் போவதென்றுள்ளேன் ! 'இந்தந்தத் தெருக்களில் இத்தினி மணிலேர்ந்து இத்தினி மணிவரைக்கும் மாடார் நிற்பார் ; அஜீஸ் பண்ணிப் படிச்சுக்கோங்களேன் !!' என்று Facebook ; Instagram ; Twitter-ல் பதிவுகளை போட்டால் படிச்சிற மாடீர்களா...சாரி..சாரி..மாட்டீர்களா - என்ன ? இதிலே ஒரு கூடுதல் ப்ளஸ் என்னான்னா - "குண்டு புக்" பிரியர்களுக்கு செம திருப்தியா இருக்கும் !! தோராயமாய் 350 - 400 கிலோ எடை எனும் போது 'இதுக்கு மேலே குண்டு புக் போடணும்னா ஜம்போ சர்க்கசுலேர்ந்து ஆனையைத் தான் இரவல் வாங்கிக்கணும் folks" என்று சமாளித்துக் கொள்ள முடியுமே ! அப்புறம் "என் புக்கிலே பைண்டிங் சரி இல்லை ; அச்சுத் தரத்தைக் கூட்டலாம் ; hardcover இல்லியா ? !' போன்ற சங்கடங்களுக்கும் இடமிராது தானே ?! So மாடு பிடிக்க சந்தையைத் தேடி நான் இன்னொரு பக்கம் புறப்பட உத்தேசம் ! Jokes apart - இதில் கொடுமை என்னவெனில் இந்த கரோனா வைரஸ் என்ற தற்காலிகச் சிக்கல்கள் ஒரு சில மாதங்களில் சரியாகிவிட்டாலும் - 'ஏறின விலை, ஏறினது தான் !' என்று இங்குள்ள வியாபாரிகள் உடும்புப்பிடியாய் நின்று விடுவார்கள் !! திரும்பவும் சகஜத்துக்கு விலைகளைத் திரும்பிட அனுமதிப்பார்களா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் !
Marching on, March is just around the corner ! இதோ - காத்திருக்கும் மாதத்தின் ஒரே black & white இதழினில் தலைகாட்டக்காத்திருக்கும் 'தங்கத் தலைவி பிளைசியின்' அட்டைப்பட முதல்பார்வை !
ஏற்கனவே நான் எழுதியது தான் ; but still இன்னொரு மறுஒலிபரப்பு செய்தால் தப்பில்லை தான் ! அட்லாண்டிக் சமுத்திரத்தின் மறுபக்கம் வசிக்கும் ஓவியையே தற்சமயமாய் நமது அட்டைப்படங்களுக்கு டிசைன் போட்டுத் தருகிறார் ! டிஜிட்டலாகவே வரைந்து, டிஜிட்டலாகவே வர்ணம் தீட்டுவதும் இவரது பாணி என்பதால் - அழகாய் ஒரு ஒரிஜினலை மட்டும் ஒப்படைத்தால், ஒரே வாரத்தில் பின்னியெடுத்து விடுகிறார் ! இங்கொரு குட்டி இடைச்செருகல் : நடப்பு மாதத்தின் ஆர்ச்சி அட்டைப்பட டிசைனும் அவர் கைவண்ணமே ; ஆனால் background ரொம்பவே நாடக பாணியில் இருந்ததால், நமது DTP கோகிலா வேறொரு பின்னணியைப் புகுத்தி ; அந்த நட் + போல்ட் + பற்சக்கர டிசைனில் எழுத்துருக்களையும் ; கீழே ஸ்பான்னரில் "ஆர்ச்சி is back !" என்ற டிசைனையும் ரெடி செய்திருந்தார் ! அட்டைப்பட டிசைனை படைப்பாளிகளிடம் காட்டி approval வாங்கிட வேண்டியது அவசியம் என்பதால் மின்னஞ்சலில் லண்டனுக்கு அனுப்பினோம் ! மின்னல் வேகத்தில் ஓ.கே சொன்னவர்கள் - "இந்த டிசைன் ஏதேனும் பழைய Fleetway ஆக்கத்தின் மீது இப்போது வர்ணம் பூசியதா ?" என்று வினவினார்கள் ! "இல்லீங்கோ ; புதுசாய் இப்போது போட்டது !" என்ற போது மெய்யாலுமே சந்தோஷ ஆச்சர்யம் அவர்களுக்கு !! So கதைகள் தான் அசலூர் ; அயல்நாடு என்றால், இப்போதெல்லாம் அட்டைப்படங்களுமே made in மேல்நாடு தான் ! And அவரது திறனில் தயாராகியுள்ள இந்த மாடஸ்டி ராப்பர் - அந்த பெரிய சைசில் வெளியாகி, வழக்கமான மினுமினுக்கும் ஜிகினாக்களோடு கடைகளில் தொங்கிடும் போது நிச்சயமாய் காமிக்ஸ் ஆர்வலர்களைத் தாண்டியோரின் கவனங்களையும் ஈர்க்கும் என்றொரு நம்பிக்கை எனக்கு ! அப்புறம் இது ஒரு மாடஸ்டி வீடியோ கேஸட்டின் டிசைனை மறுக்கா வரைந்தது !! "அதை அப்டியே சுட்டுப்புட்டு அமெரிக்கால வரைஞ்சது ; ஆப்ரிகாலே வரைஞ்சதுன்னு கதை விட்றாண்டோய் !" என FB -ல் பறைசாற்றி மகிழ எண்ணும் நண்பர்கட்கு - sorry guys !! மாற்றி ; மறுக்கா வரைந்துள்ள image என்வசம் உள்ளதென்ற சேதியைச் சொல்லிக்கொள்கிறேன் ! கதையுமே இம்முறை fast paced & இந்த பெரிய சைசில் படிக்கும் போது ரொம்பவே ரசிக்க முடிகிறது - at least என்னளவில் ! So 'தங்கத் தலைவி' பேரவையினரைத் தாண்டியுமே இந்த ஆல்பம் ஹிட்டடிக்கும் என்று பட்சி சொல்கிறது ! And இந்த ஆல்பத்தைத் திறக்கும் போதே இன்னொரு சுவாரஸ்ய சேதி உங்களுக்குக் காத்திருக்கும் என்பது கொசுறுத் தகவல் !
மார்ச்சில் கார்ட்டூன் லூட்டியும் உண்டென்பது எனக்கும், சக கார்ட்டூன் காதலர்களுக்கும் ஜாலி நியூஸ் ! And இம்முறை ஆஜராகவிருப்பதோ உட்ஸிடியின் சிரிப்பு டீம் ! அடிக்கடி உச்சரிக்கும் வரிகளே ஆனாலும், இன்னொருக்கா இங்கே repeat செய்வதில் தப்பில்லை என்று நினைக்கிறேன் ! பக்கத்துக்குப் பக்கம் ; பிரேமுக்கு பிரேம் கிச்சு கிச்சு மூட்டலை எதிர்பாராது, அழகாய், இலகுவாய், ஜாலியாய்ப் பயணிக்கும் கதையினை, சித்திரங்களை ரசித்தபடிக்கே உள்வாங்கிட்டால் - ஒரு அரை மணி நேரத்துக்காவது காற்றில் பறக்கும் உணர்வு உத்தரவாதமாய் உண்டென்பேன் ! இதோ - நடப்பாண்டின் one & only கிட் ஆர்டின் + டாக் புல் சாகசத்தின் அட்டைப்பட preview !
ஒரிஜினல் டிசைன், சன்னமான வர்ண மாற்றங்களோடு என்பதால் இது கோகிலாவின் ஆக்கமே ! And உட்பக்கங்கள் எல்லாமும் ரெடியாகி, இந்த இதழ் அச்சாகியே ஒரு வாரத்துக்கு மேலாகி விட்டது ! துரதிர்ஷ்டவசமாக உட்பக்கங்களின் டிஜிட்டல் கோப்புகளை வாங்கி வைக்க மறந்து போய் விட்டதால், உட்பக்கத்துப் preview இப்போது சாத்தியம் நஹி !
இனி தொடர்வது கொஞ்சம் கேள்விகள் guys !!
***நடப்பு மாதத்தில் வில்லரின் இடி முழக்கத்தை தாண்டியும் "தனியே தன்னந்தனியே" தனி ஆவர்த்தனம் செய்திருப்பதை நிரம்பவே ரசித்துப் பார்த்து வருகிறேன் ! நம்மைப் பொறுத்தவரையிலும் 'ஹாரர்' எனும் ஜானர் மறந்து போனதொன்றே ! கடைசியாய் எப்போது ஒரு அக்மார்க் திகில் கதையினை வெளியிட்டோம் என்று கூட சட்டென்று நினைவுபடுத்திப் பார்க்க எனக்கு இயலவில்லை ! So வரும் நாட்களில் இந்த ஓரம்கட்டப்பட்ட கதை பாணிக்கு முக்கியத்துவம் தந்து நம் தேடல்களை முடுக்கி விடலாமா ? என்ற சிந்தனை உள்ளுக்குள் ! What is your take on this folks ? "H " for ஹாரர் சுகப்படுமா ? அல்லது இப்போது போலவே ஒன்றிரண்டை மட்டும் கி.நா.சந்தாவினுள் அடைக்கலம் காணச் செய்வதே போதுமென்பீர்களா ?
***ரொம்பவே சீக்கிரமே இந்தக் கேள்விக்கு ! ஆனால் கடந்த சில வாரங்களாக நமது ஆன்லைன் ஸ்டோரில் வேகம் காணும் விற்பனை ஜேம்ஸ் பாண்டின் "பட்டாம்பூச்சிப் படலம்" + "ஆர்ச்சி இருக்க பயமேன் ?" ஆல்பங்களே ! கடைகளின் விற்பனை நிலவரம் இன்னமும் சரியாகத் தெரியவில்லை - but ஆன்லைனின் போக்கு கடைகளிலும் தொடரின், இந்த black & white ; மித விலை ; நேர்கோட்டுக் கதைகள் இன்னமும் கொஞ்சம் விரிவாக்கிடலாமா ? I mean - பக்க எண்ணிக்கையினை 48 ஆக்கி ; விலையினை அதற்கேற்ப சன்னமாய்க் கூட்டி விட்டு ; ஓரம்கட்டப்பட்டுள்ள சில பிரான்க்கோ-பெல்ஜியத் தொடர்களை b & w -ல் இதனுள் புகுத்திடலாமா ? சாகச வீரர் ரோஜர் ; LADY S ; கமான்சே ; டிடெக்டிவ் ஜெரோம் போன்றோர் பளிச் என நினைவுக்கு வருகின்றனர் ! உங்கள் சிந்தனைகள் ப்ளீஸ் ?
***"குண்டு புக் "மோகம் ; "ஏக் தம்மில் படித்து விட வேண்டும்" என்ற வேகம் - நமக்கு எப்போதுமே கையருகே உலவிடும் சங்கதிகள் ! ஆனால் எல்லாத் தொடர்களிலும், எல்லாத் தருணங்களிலும் இது நடைமுறை சாத்தியமாவதில்லை ! So அந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாமே நான் செய்வது - அத்தகைய தொடர்களை நம் ரேடாருக்கே கொணராது விலகிப் போவதே ! ஆனால் ஒரே ஒருவாட்டி இந்தத் தொடர் பாணி எப்படித்தான் உள்ளதென்று பார்த்தல் என்ன guys ? Say ஆறு பாகங்கள் கொண்ட தொடர் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ; மாதமொரு பாகம் என 6 மாதங்களுக்கு இதனைத் திட்டமிட்டால், மாதா மாதம் ஒரு சஸ்பென்சோடு வாசிப்புகள் இருந்திடாதா ? முன்னாட்களில் ஆடிக்கும், அமாவாசைக்கும் நாம் பிக்குகள் வெளியிட்டு வந்த நிலையில் தொடர்கள் - தொ-ட-ர்-க-ள் ஆகிப் போகும் ஆபத்திருந்தது வாஸ்தவமே ! ஆனால் இப்போது நாம் பங்க்சுவாலிட்டி பரமானந்தங்களாய்ப் பரிணமித்துள்ள நிலையிலும் இந்தத் தொடர் பாணி ஒரு no-no என்றே சொல்லுவீர்களா ? 'மணந்தால் குண்டு புக் தேவி தான் !" என்ற நம் வைராக்கியங்களின் உபயத்தால் நிறையவே கதைகளை நாம் உதறிடுகிறோமோ ? என்ற நெருடல் என்னுள் ! Hence இந்தக் கேள்வி !
***அப்பாலிக்கா சித்தே லைட்டான கேள்விகளும் : முதல் தபா சிவகாசிக்கு வந்தது ; முதல்வாட்டி புத்தக விழாக்களில் சந்தித்தது என்ற ரேஞ்சில் போன பதிவினில் அகஸ்மாத்தாய் ஆளாளுக்குப் பரிமாறிக் கொண்டது வாசிக்க சுவாரஸ்யமாக இருந்ததாய் நினைத்தேன் ! நீங்கள் வாசித்த (நம் குழுமத்து) முதல் காமிக்ஸ் இதழ் பற்றிக் கொஞ்சம் மலரும் நினைவுகளை எடுத்து விடுங்களேன் ? அதே போல நீங்கள் நேரில் சந்தித்த முதல் சக நண்பர் பற்றியும் கூடச் சொல்லுங்களேன் ? எங்கே ? எப்போது ? எந்தச் சூழலில் ?
***Before I sign off - உங்களின் தேர்வு அவசியமாகிறது எனக்கு ! லக்கி லூக்கின் MAXI மறுபதிப்புகளில் அடுத்தாண்டிற்குத் தேவையான கதைகளை shortlist செய்து வருகிறேன் ! (Oh yes - 2021 அட்டவணை உருட்டல்கள் என்னளவிற்கு துவங்கியாச்சு !!) இப்போதைக்கு நான் குறித்து வைத்துள்ள பெயர்கள் "சூ..மந்திரகாளி " & "கௌபாய் எக்ஸ்பிரஸ்" ! இவை ஓ.கே. தானா ? அல்லது வேறேதேனும் ?
Bye all...have a super weekend !! See you around !!
P.S.நாள்தோறும் லோகத்தில் நல்லது நடக்கிறதோ ; கரோனா கதை ஓடுகிறதோ - "அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை எங்களுக்கு !! கருமமே கண்ணாய் - நாளொன்றுக்கு இந்த வலைப்பக்கத்துக்கு 7000+ பார்வைகளைத் தந்து பம்ப் அடிப்பதை நாங்க விடுவதாக இல்லை !" என்று அந்த அனாமதேயப் பரோபகாரிகள் பிசியாக இருக்கிறார்கள் ! கடந்த ஒற்றை மாதத்துப் பார்வைகள் மட்டுமே 208,000 !! So ஐந்தே மாதங்களுக்கொரு மில்லியன் ஸ்பெஷல் போட நாங்கள் முஸ்தீபுகள் செய்தாகணும் போலும் !! பின்றீங்கோ சார்ஸ் !!