நண்பர்களே,
உஷார் : ஊட்டி மலையில் வளைந்து போகும் ரயிலைப் போல இங்கேயும், அங்கேயுமாய் டிராவல் செய்திடும் பதிவு இது..! அஜீஸ் ப்ளீஸ் !!
வணக்கம். செப்டம்பரின் முதல் பாதி முற்றுப்பெறவிருக்கும் நிலையில், இம்மாத இதழ்கள் நான்குமே அழகாய் ஸ்கோர் செய்திருப்பது கண்கூடு. ஆனால், ஒளிவட்டத்தின் முக்காலே மூன்று வீசப் பகுதியினை, ஒரு ஒல்லிப்பிச்சான் வெட்டியானே கபளீகரம் செய்திருப்பது, in many ways a real surprise. ஓ யெஸ்... ஸ்டெர்ன் ஒரு தாக்கத்தை உருவாக்குவார் என்று எதிர்பார்த்திருந்தோம் தான். ஆனாலும், போட்டிக்கு Young Tex, Classic Tex, Blue Coats என கோதாவில் இம்முறை இருந்த, பாக்கிப் போட்டியாளர்கள் அனைவருமே சாம்பியன்களே. So, அவர்களை எல்லாமே மனுஷன் ஊதித் தள்ளிவிட்டு, வெள்ளிக்கும், வெங்கலத்திற்கு மட்டுமே போட்டி ! தங்கம் எனதே, என்று நிர்ணயித்தது, மெய்யான வியப்பே. இதுபோலான தருணங்கள், இந்த off-beat கதைகள் மீதான நம்பிக்கையை வளர்ப்பது மாத்திரமன்றி, கொஞ்சமே கொஞ்சமாய் எனக்குமே தெம்பூட்டும் விதம் இருப்பது மறுக்க இயலா உண்மை. So, இந்தப் பதிவினில், இன்றைய வாசிப்புக் களங்கள் பற்றி ஒரு பருந்தின் பார்வையில் எழுதிடவே நினைக்கின்றேன்.
ஈரோடு வாசக சந்திப்பிற்கு வந்திருந்த நண்பர்கள், நான் ஆத்தோ ஆத்தென்று ஆத்திய உரையின் போது குறிப்பிட்டதொரு விஷயத்தை, எத்தனை தூரம் கவனத்தில் கொண்டிருப்பீர்கள் என்பது எனக்கு சொல்லத் தெரியவில்லை. அது படைப்பின் ரகசியத்தை போட்டுடைக்கும் பிரம்மசூத்திரம் எல்லாம் அல்லவே அல்ல. Was just that - ஏப்ரல் 2026 முதலாகவே நமது online விற்பனைகளில் மெலிதாய் ஒரு தடுமாற்றம் தென்பட்டு வருவதாய் குறிப்பிட்டிருந்தேன். சரி, ஏப்ரலில் ஏதோ காரணங்களால் online விற்பனையில் சின்னதொரு பிறழ்வு போலும் என்று நான் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை தான். ஆனால் தொடர்ந்த மே மாதமும், ஜூனிலும், ஜூலையிலும் கிட்டத்தட்ட அதே பாணியில் வண்டி தடுமாறிய போது உள்ளுக்குள் நிரம்பவே jerk ஆனதை மறுக்கமாட்டேன். அதன் நீட்சியாகத்தான் ஆகஸ்டில் ஈரோட்டில் உங்களை சந்தித்தபோது இதைக் குறிப்பிட்டுப் பேசவும் செய்திருந்தேன். ஆனால் ஆகஸ்ட் முதலாய் ஓரளவிற்கு வண்டி மீண்டும் தண்டவாளத்தில் ஏறியிருப்பது கொஞ்சமாய் ஒரு நிம்மதி பெருமூச்சை விட அனுமதித்துள்ளது. In fact ஆகஸ்டில் தல + தளபதி என்ற காம்போதான் மறுபடியும் விற்பனைகளில் ஒரு வேகம் எடுக்கும் காரணமாக அமைந்தது எனலாம். பற்றாக்குறைக்கு Terrific Tex கலர் தனித்தடமும் ஆகஸ்ட் முதலாய் துவங்கியிருந்ததல்லவா ? So கொஞ்சமாய் சுணக்கம் கண்டிருந்த engine ஆகஸ்டிலிருந்து மறுபடியும் 'குப் குப் குப்' என வேகம் பிடிக்கத் துவங்கியுள்ளது.
இங்கே சின்னதாய் ஒரு இடைச்செருகலுமே இருந்தால் தப்பில்லை என்றே தோன்றுகிறது. And அதுவுமே நமது காமிக்ஸ் வட்டம் சார்ந்த நண்பரின் பதிவெனும் போது makes for interesting reading. இது சில நாட்களுக்கு முன்பாக நமது Facebook டைம்லைனில் வந்திருந்த நண்பர் கார்த்திகேயன் பாண்டியன் அவர்களின் சமீபத்தைய பதிவுகளில் ஏதோ ஒன்று. நான் ஆகஸ்டில் ஈரோட்டில் மேலோட்டமாய் எதைப் பற்றி பேசி இருந்தேனோ அதையே நண்பர் அங்கே எழுத்தில் பதிவிட்டிருந்ததாக எனக்குப்பட்டது.
========================================================================
சில நாட்களுக்கு முன்பு எழுத்தாளர் ___________ பேசிக் கொண்டிருக்கும்போது ஏன் இந்த வருடம் அதிகளவில் புத்தக அறிமுகக் கூட்டங்களோ, அல்லது விமர்சனக்கூட்டங்களோ நடைபெறவில்லை என்ற வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார். எப்போதும் ஏதாவது இலக்கிய நிகழ்ச்சி நடந்து கொண்டேயிருக்கும் சென்னையில் கூட கூட்டங்கள் குறைந்துவிட்டன என்றார்.
யோசித்துப் பார்த்தால் இன்றைக்கு அந்த இடத்தை முழுமையாக அரசியல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் இத்தனை தீவிரமாக அரசியல் பேசுவதில் தவறேதும் இல்லை, ஆனால் அதற்காக மற்ற அடிப்படை விசயங்களைக் கைகழுவ வேண்டியதில்லை. இன்னும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு அச்சுத்துறை என்னவாயிருக்கும் என்ற கவலை நம்மைச் சூழ்ந்திருக்கும் நிலையில் குறைந்தபட்சம் அவரவர் வாசிக்கும் நூல்களைப் பற்றிய குறிப்புகளின் வழியே நம்முடைய எண்ணங்களைத் தொடர்ந்து பரிமாறிக் கொள்ளலாம். எந்த மாற்றமும் வெளியிலிருந்து உருவாகப் போவதில்லை, நாம்தான் உருவாக்க வேண்டும்.
=============================================================
இன்றைக்கெல்லாம் வாசிப்புக்கு tough தரக்கூடியவை திரைப்படங்களோ சின்னதிரைகளோ OTT தளங்களோ அல்ல என்றே தோன்றுகிறது. Insta எனும் அசுரனோடும், YouTube எனும் ராட்சசனோடும் கட்டிப்புரண்டு வாங்கும் பல்புகள் பற்றாதென இப்போதெல்லாம் அரசியல் பதிவுகளும், சட்டசபை சார்ந்த reels-களும் மக்களின் கவனங்களை முன்னெப்போதும் இல்லாததொரு பரிமாணத்தில் ஆக்கிரமித்துக் கொள்வது பட்டவர்த்தனமாய் தெரிகின்றது. Oh yes, முன்செல்லும் நாட்களில் இதன் தாக்கங்கள் கூடிடக் கூடுமே தவிர taper off ஆகிடுமா என்றெல்லாம் கணிக்க எனக்குத் தெரியவில்லை. And in any case மாற்றங்களும், முன்னேற்றங்களும் இன்றைய காலகட்டத்தில் absolutely inevitable என்பதை தலைக்குள் ஏற்றுக்கொண்டு விட்டேன் எனும் போது இந்தப் புதிய போட்டியாளர்களைக் கண்டு மிரட்சி மேலோங்கவில்லை. மாறாக இந்த புதியதொரு உலகிற்குள்ளும், மாறிவரும் ரசனைகளுக்கு மத்தியிலும், நமக்கு ஏதேனும் ஒரு குட்டியுண்டு slot இருந்திடாதா என்ற தேடலை தீவிரப்படுத்தும் உத்வேகமே தலையெடுக்கின்றது. In fact, புதியதொரு தலைமுறையை எப்படியேனும் ஈர்ப்பது என்பது ஒரு மெய்யான சவாலாகவே என் முன் ஆர்வத்தைக் கிளப்புகின்றது. அதற்காக ஏற்கனவே உள்ள வாசக வட்டத்தை லூசில் விடுவது என்றெல்லாம் லூசுத்தனமாய் சிந்திக்கப் போவதில்லை. சுவரே நீங்கள்தான் எனும்போது, புதுசாய் மேலே கட்டக்கூடிய மாடி பற்றிய சிந்தனைதான் அடுத்த Gen-Z தலைமுறை பற்றிய மெனக்கெடல்.
இந்த context-ல் சிந்திக்கும் சமயங்களில், ஸ்டெர்ன் போலான வித்தியாசமான கதைகள் வெற்றி காணும்போது ஒரு மிடறு கூடுதலாய் வேகம் தருவதை மறுப்பதற்கில்லை. Simply because, மரத்தைச் சுற்றி காலமாய் பாட்டுப் பாடி, பஞ்ச் டயலாக் பேசி, க்ளைமாக்ஸில் வில்லன்களை மொத்தி எடுக்கும் சினிமாக்கள் எத்தனை காலம் ஓடினாலும் சந்தோஷமே; ஆனால், இடையிடையே தலையெடுக்கும் இதுபோன்ற படைப்புகள் நிச்சயம் காலத்தை வென்று நிற்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. And ஒரு புது வாசிப்புத் தலைமுறைக்கு, எவ்வித பில்டப்களும் இல்லாத, இயல்பான கதைகளும் பிடிக்கவும் கூடும் என்றே நினைக்கத் தோன்றுகிறது ! Of course I may be wrong - ஆனால் எனது gut feel சொல்வது :Manga மாத்திரமன்றி அடுத்த தலைமுறை, அழுத்தமான காமிக்ஸையும் ரசிக்காது போகாது என்பதே ! So, ஸ்டெர்னை நீங்கள் உசத்திப் பிடித்த போது, பரபரவென்று டேபிளில் போய் குந்தி 2027-க்கான அட்டவணை சார்ந்த எனது திட்டமிடலை மறுக்கா பரிசீலிக்க ஆரம்பித்துவிட்டேன்.
நிஜத்தைச் சொல்வதானால், இந்த ஆகஸ்டின் இறுதியிலேயே அட்டவணையை லான்ச் செய்திட எல்லாமே ரெடிதான். ஈரோட்டுக்கு வந்த போதே என்னிடம் அட்டவணையும் ரெடி ! ஆனால், 'Terrific Tex தனித்தடம் இப்போதுதான் துவங்கியுள்ளது; 'Fab 5 முன்பதிவுத் தடத்திலும் ஒரே ஒரு இதழ்தான் வந்துள்ள நிலையில், அடுத்த வருஷச் சந்தாவினையும் அவசரமாய் அறிவித்து, சாதிக்கப் போவது எதுவுமில்லையே என்ற முன்ஜாக்கிரதை முனியசாமி மண்டையை நீட்டினான். அதுவும் சரிதான்... நாலு மாதங்களுக்கு முன்பாகவே அறிவித்துவிட்டு சவசவ வெனக் காத்திருப்பதற்குப் பதிலாக, எப்போதும் போலவே அக்டோபர் இறுதியில் அட்டவணையைக் கண்ணில் காட்டிக் கொள்ளலாம் என்றே தீர்மானித்தேன். And இதோ, இந்த செப்டம்பரின் நிகழ்வுகள் கூட எனது அட்டவணை சார்ந்த fine-tuning உதவியுள்ளன என்பேன்.
Honestly, 2027-ன் அட்டவணையில் ப்ளூ கோட்ஸ்களுக்கு மனதில் மட்டுமே இடம் தருவதென எண்ணியிருந்தேன். சாரி, தீர்மானமே செய்திருந்தேன். ஆனால், இரண்டு காரணங்கள் மண்டையைக் கழுவ உதவியுள்ளன. காரணம் நம்பர் ஒன்று, கோட்டையில் ஒரு குட்டிப் புயல் உங்கள் மத்தியில் உருவாக்கியுள்ள சந்தோஷ அலைகளே !! ஸ்கூபியும் ரூபியும் negative vibes துளியும் தராது, அழகாய் ஒரு கதைக்குள் travel செய்யும்போது, இந்தத் தொடரே புதியதொரு மினுமினுப்போடு காட்சி தருவதை உணர முடிகின்றது. காரணம் நம்பர் இரண்டு, நம்மிடம் கைவசம் இருந்த ப்ளூகோட்ஸ் முந்தைய இதழ்களின் பெரும்பான்மையை ஒரு ஆர்டரில் மொத்தமாய் கொள்முதல் செய்திருக்கின்றனர். So, காத்திருக்கும் 2027-ல் ப்ளூகோட்ஸ் வெளிவராத பட்சத்தில், நம் லிஸ்டில் அவர்கள் துளியும் இடம் பிடித்திருக்க மாட்டார்கள் என்பது அப்பட்டமாய் தெரிந்தது. As a result, அவசர அவசரமாய் நீலச்சட்டையினரை உட்புகுத்தியாச்சு. And ஸ்டெர்ன் போலான high quality off-beat கதைகளுக்கு இன்னுமுமே ஒரு இடமுண்டு என்பதை நீங்கள் நிரூபிப்பது கணிசமாய் சிந்திக்கச் செய்துள்ளது. Of course all said & done - இந்த ஒல்லிப்பிச்சான் எந்தக் கோட்டையை எட்டிப்பிடித்தாலுமே, டெக்ஸ் எனும் ஜாம்பவானின் விற்பனைகளுக்குப் பக்கத்துத் தெருவில் கூட நிற்க இயலாது என்பதை தினம் தினம் உங்களது online ஆர்டர்களில் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றோம். So, அந்த commercial ஜாம்பவான்கள் as always தொடரத்தான் போகிறார்கள். ஒரு மாற்றத்திற்கென மாறுபட்ட களங்களை எந்த விகிதத்தில் சந்தாவினில் உட்புகுத்துவது என்பதே million dollar question !!
இங்கே இன்னொரு விஷயத்தையும் நான் குறிப்பிட்டே தீர வேண்டும். அதுதான் புத்தகவிழா சர்க்யூட் பற்றியது.
கிட்டத்தட்ட கடந்த நான்கு ஆண்டுகளாகவே ஜூன் இறுதியில் நெய்வேலி முதலாய் வேகமெடுக்கும் புத்தகவிழா சர்க்யூட்டுகள் ரவுண்டு கட்டி கிட்டத்தட்ட மார்ச் வரை தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் இடம்பிடித்துக் கொண்டிருந்தது நாமெல்லாம் அறிந்ததே. இந்நேரத்திற்கு மதுரை புத்தகவிழா, பின்னே கரூர், அதன் பிற்பாடு திருச்சி, தொடர்ந்து சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் என்றெல்லாம் திட்டமிடல்கள் இருந்திருக்கும். ஆனால் நடப்பாண்டினில் இப்போது வரையிலுமே மதுரைக்கான அறிவிப்புக்கே waiting. So புத்தகவிழாக்கள் circuit சீராகும் வரையிலும் என்ன எதிர்பார்ப்பதென்று யோசனையாகவே உள்ளது ! புத்தகவிழாக்கள் சார்ந்த வரவு செலவுகள் ஒருபுறம் இருக்க, Tier 2 & Tier 3 நகரங்களில், கணிசமான ஸ்கூல் பிள்ளைகளை ஈர்க்கும் வாய்ப்புகள் நமக்குக் கிட்டி வந்தன. அடுத்ததொரு தலைமுறையை எட்டிப்பிடிக்கும் பொருட்டு அவர்களையே நாம் மலைபோல் நம்பியிருந்தோம். ஆனால் புத்தகவிழாக்கள் சீராகத் தொடரத் துவங்கும் வரையிலும், இந்தப் பிள்ளைகளை எட்டிப்பிடிக்கும் வாய்ப்புகள் சொற்பமாகி விடுகின்றன.That is the bigger concern !
Which automatically makes the சந்தா efforts all the more precious. 2012 முதலாகவே நமது இரண்டாவது இன்னிங்ஸின் தூண்களில் இரண்டரையாக சந்தா நண்பர்கள் இருந்து வந்துள்ளனர். மீத ஒன்னரைத் தூண்களாய் - ஆன்லைன் விற்பனைகளும், ஏஜெண்டுகள் சார்ந்த விற்பனைகளும், புத்தகவிழா விற்பனைகளும் இருந்து வந்தன. இன்றைக்கோ அந்த ஒன்னரைத் தூண்களில் ஒரு பாதி லைட்டாக ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் நிலையில், இனி அந்த நடுக்கத்தைச் சரி செய்யும் பொறுப்பினையுமே சந்தா நண்பர்களே ஏற்றுக் கொள்ள வேண்டி வருமோ ? என்று ஒரே யோசனையாக உள்ளது. And இந்த நிலவரத்தில் மாதாமாதம் நான்கும் ஐந்துமாய் புக்ஸைப் போட்டு உங்களுக்கும் சலிப்பு ஏற்பட அனுமதிக்கலாகாதே என்ற பயமும் தலைக்குள் நிழலாடுகிறது. So, முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த 2027-க்கான அட்டவணையில் என்முன்னே காத்திருக்கும் சவால்கள் ஒரு வண்டி. எனது priorities என்னவென்று இதோ பட்டவர்த்தனமாய் லிஸ்டே போட்டு விடுகிறேனே:
1. மாதம்தோறும் வாசிப்பில் உங்களை குட்டிக்கரணம் அடித்தேனும் ஈர்த்தே தீர வேண்டும்.
2. தெறிக்கும் விலைவாசிகளின் உயர்வுகளை இயன்றமட்டிற்கு கட்டுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமே தவிர உங்கள் தலையில் சாத்தக்கூடாது. குறிப்பாய் எகிறி வரும் கூரியர் கட்டணங்கள் & packing material கிறுகிறுக்கச் செய்து வருகின்றன !
3. கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வரும் அந்த சந்தாத் தொகை threshold ரூ.6200 சொச்சம் எனும் நம்பரை மீறிவிடவே கூடாது. At least ரெகுலர் சந்தாவினில்.
4. As always கமர்ஷியல் கதைகளுக்கும் இங்கே இடம் இருக்க வேண்டும். மாறுபட்ட களங்களையும் புறக்கணிக்கலாகாது.
5. நம் மீதான அபிமானத்திலும், நேசத்திலும் புக்ஸ் வாங்குவது அற்புதமானதொரு விஷயமே. ஆனால் அவைகள் மாத்திரமே உங்களது சந்தாக்களின் முதுகெலும்பாகிவிடக் கூடாதே. "எனக்கு இதைப் படிக்கணுமே, எனக்கு இதை ரசிக்கணுமே.." என்ற உத்வேகத்தை உங்களுக்குள் விதைத்தே தீர வேண்டும். And here - விடிய விடிய புதியவர்களைப் பற்றியும், மாறுபட்டவர்களைப் பற்றியும், புதிய யுகங்களைப் பற்றியும் நான் சிலாகிச்சாலும், ஒரு மனுஷன் 55 ஆண்டுகள் கழித்து வந்து நிற்கின்றார். சுண்டுவிரலால் அத்தனை பேரையும் 'லைனா ஓரமா போய் நின்னுக்கோங்க கண்களா' என்றபடியே வெற்றிக்கொடி நாட்டிப் போய்க்கொண்டிருக்கிறார். அவர் நமது மாயாவி மாமா என்பது நமக்கு தெரியும். கிட்டத்தட்ட அதே வீரியத்தோடு கிங் ஸ்பெஷல் நாயகர்கள் அனைவருமே இன்றளவும் விற்பனையில் சாதித்தே வருகின்றனர். So, வழுக்குப்பாறையார் தெளிய வைத்துத் தெளிய வைத்துச் சாத்துவார் என்று தெரிந்தாலும், நமது சங்கப் பொருளாளர் சங்கடப்படுவார் என்பது புரிந்தாலும், புதுப்புது ID-களில் ஆஜராகி, நமக்குப் பரிச்சயமான ஒருவர் அறிவுரைகள் பல நல்குவார் என்றாலும் கிளாசிக்களுக்கு நம் மத்தியில் உள்ள இடத்தினை நான் மதித்தே தீர வேண்டும்.ஆக, ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும், ஈயம் செலவாகாத மாதிரியும் இருக்கணும்; நான் இப்படி சுத்தறப்ப நீ அப்படி சுத்தணும்" என்று கவுண்டர் பேசும் டயலாக்கை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, மறுக்கா சந்தா இதழ்களை மறுபரிசீலனை செய்தும் வருகின்றேன். Classics are just an unstoppable force these days !!!
இந்த நொடியில் நமது 'FAB 5' தனித்தட அறிவிப்பு பற்றியும் பேசுவது பொருத்தமாக இருக்கும் என்று படுகிறது. Maybe the timing of this announcement wasn't too great. ஆனால் இந்தத் தனித்தட அறிவிப்பில் நாம் திட்டமிட்டிருக்கும் ஐந்து இதழ்களுமே அந்த 575 ரூபாய் பணத்திற்குப் பரிபூரண நியாயம் செய்திடக்கூடிய படைப்புகளே. எந்த ஒரு இதழுமே சின்ன பிரிண்ட் ரன் என்பதற்காகக் கூடுதல் விலையில் அறிவிக்கப்பட்டிருக்கவே இல்லை. இதோ அக்டோபரில் காத்திருக்கும் "கதிரவன் கண்டிரா கணவாய்" 160 பக்கங்கள் கொண்டது - 125 ரூபாய் விலையில்தான். காத்திருக்கும் ஸாகோர் கதையும் சரி, "என் பெயர் அந்நியனும்" சரி, "உலகத்தின் கடைசி நாள்" (மார்ட்டின் பிளஸ் டயலன் டாக் சாகசமும்) சரி... will offer unbeatable value for money for sure.
"என் பெயர் அந்நியன்" ஒரு தெறிக்கும் Dark Noir ஸ்பை த்ரில்லர் சாகசம்! "உலகத்தின் கடைசி நாள்" பற்றி கேட்கவே வேண்டாம்; மார்ட்டினும் டைலன் டாக்கும் ஒன்றிணையும் போது, சர்வ நிச்சயமாய் அந்தக் கதை பத்தோடு பதினொன்றாக இராது என்று நம்பலாம்.
So alternate மாதங்களில் வரக் காத்திருக்கும் இந்த FAB 5 இதழ்களுக்கு இன்னமுமே கொஞ்சம் முன்பதிவு வலு சேர்த்தால், எங்கள் நாக்குகள் சற்றே வாய்க்குள் திரும்பிச் சென்று ஓய்வெடுக்க சாத்தியப்படும். இந்த நொடியில், வீதி வரை நீண்டு அவை தெருவினைக் கூட்டிய வண்ணமே உள்ளன! Terrific Tex மாத்திரம் இந்த நொடியில் இல்லாது போயிருந்தால், நிரம்பவே ஆட்டம் கண்டிருப்போம் என்பதுதான் வார்னிஷ் அடிக்காத நிஜம். So, ஒவ்வொரு மாதமுமே ஏதேனும் ஒரு புள்ளியில் கவனங்களைக் குவிக்கும் ஒரு இதழாவது இருந்திடல் ரொம்பவே அத்தியாவசியம் என்றாகியுள்ளது ! ஒற்றை மாதத்தினை கொஞ்சம் இலகுவாய் விட்டால் கூட அந்த tempo குறைந்து விடுகிறது. And அந்த இதழ் சார்ந்து நீங்கள் செய்திடும் அலசல்கள், அந்த இதழை மாத்திரமன்றி, அந்த மாதத்து விற்பனையையுமே ஒரு புது உச்சத்திற்கு இட்டுச் செல்வதைப் பார்க்க முடிகின்றது. You have been simply awesome these last 2 months folks !! இப்போது நாம் தம் கட்ட முனைந்து கொண்டிருப்பது, டெக்ஸ் மாமூலாய் சலூனில் சந்திக்கும் ஒண்ணேமுக்கால் அணா வில்லன்களோடு அல்ல! ஒவ்வொரு எதிராளியும் மெஃபிஸ்டோவுக்குச் சித்தப்பாவாய், யமாவுக்கு மச்சானாய், ஆங்க ஓங்கமாய் உலகத்தைக் கடவாய்க்குள் போட்டு விழுங்கும் தடிமனுடன் நிற்கின்றார்கள். So, முன் எப்போதையும் விட உங்களது ஒத்தாசைகளும், உறுதுணைகளும் இந்த நொடியில் ரொம்பவே தேவை.
உங்களை மாதம்தோறும் புதுப்புது குஷிப் படலங்களில் ஆழ்த்த, ஆன அத்தனை குட்டிக்கரணங்களையும் அடிக்க ஃபிரெஷ்ஷாகத் தயாராகி வருகின்றோம். இதோ காத்திருக்கும் அக்டோபரில் உங்களுக்கு சின்னதொரு சர்ப்ரைஸ் getting ready. அதை தயார் செய்துவிட்டுப் பேசுகிறேனே!இப்போதைக்கு அது சார்ந்த பணிகளுக்குள் பிசியாக வேண்டியிருப்பதால் நடையைக் கட்டுகிறேன்.
Bye guys, see you around! And thanks for making this September just wonderful! Bye for now!
முன்கூட்டிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் !!




Me first
ReplyDeleteவாழ்த்துகள் சகோ 💐💐💐
Deleteஹாய்...
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteAfter a long time reached the goal again
ReplyDeleteசூப்பர் சார்
ReplyDeleteஆஜர்
ReplyDelete"உலகத்தின் கடைசி நாள்" வேன்டும் சார்
ReplyDeleteவாணாம் சார் அவ்ளோ சீக்கிரமா... இன்னும் பாக்க வேண்டிய, படிக்க வேண்டிய, ரசிக்க வேண்டிய காமிக்ஸ் ஒரு வண்டி கீது !
Delete😘💐Me in😘😘
ReplyDeleteபத்துக்குள்ள...
ReplyDeleteமுதலும் நானே..பத்தும் நானே..
ReplyDeleteசூப்பர் பதிவு 👍
ReplyDeleteஅதுக்குள்ளாற படிச்சாச்சா நண்பரே..?
Delete2027 அட்டவணைக்கு ஆவலுடன் Waiting...
ReplyDeleteWow
ReplyDeleteஅக்டோபரில் அந்த சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் 🤔🤔
ReplyDeleteஅதானே... ? என்னவா இருக்கும் ?
Deleteசார் அப்படியே க்ளூ ஏதாவது கொடுங்க
Delete😂😂😂
Deleteஅட்டைப்படம் உறுமுது சார்...இது வரை வந்ததிலேயே டாப் இந்த இரண்டுமே....வேற லெவல்.....இரண்டுமே அடுத்த மாதமேவா
ReplyDeleteநானும் உத்து உத்துக் கேட்டுப் பாக்கறேன் - முனுமுணுப்பு கூட கேக்க மாட்டேன்கி ஸ்டீல்!
Deleteஎங்க கோவை கவிஞரின் பார்வையே வேற லெவல் சார்
Deleteஅடடே கேட்காமலே பதிவு....
ReplyDeleteஇன்னொரு வாழைப்பழம் 😊😁
Delete23rd
ReplyDeleteவணக்கங்கள்
ReplyDelete"கதிரவன் கண்டிரா கணவாய்" & "என் பெயர் அந்நியன்" அட்டைப்படங்கள் செம மாஸ் 🔥🔥🔥
ReplyDelete+1
Deleteவணக்கம் அனைவருக்கும்
ReplyDeleteHi
ReplyDelete❤️👍🙏🙏🙏...
ReplyDeleteகடந்து வந்த பாதையையும், இனி சந்திக்கவிருக்கும் சவால்களையும் எதார்த்தமான எழுத்துக்களில் பதார்த்தமாகச் சொல்லும் - சிந்திக்கச் செய்யும் பதிவு இது எடிட்டர் சார்!
ReplyDeleteபுத்தகத் திருவிழாக்களும், மக்களின் படிக்கும் ஆர்வமும் திரும்பவும் சூடு பிடிக்கும் என்று புனித மனிடோவை வேண்டிக் கொள்வோம்!
ராமருக்கு அணில் பிள்ளையாக- உங்களது முயற்சிகள் அனைத்திற்கும் எங்களது ஆதரவை எப்போதும் வழங்குவோம் என்று உறுதி கூறுகிறோம்!
+1
DeleteHai🥰😍💐
ReplyDeleteFab Five அட்டைப்படங்கள் இரண்டுமே கலரிங்கில் அனல் தெறிக்கிறது!!🔥🔥🔥🔥😍😍😍
ReplyDeleteSuper sir
ReplyDelete///உங்களை மாதம்தோறும் புதுப்புது குஷிப் படலங்களில் ஆழ்த்த, ஆன அத்தனை குட்டிக்கரணங்களையும் அடிக்க ஃபிரெஷ்ஷாகத் தயாராகி வருகின்றோம். இதோ காத்திருக்கும் அக்டோபரில் உங்களுக்கு சின்னதொரு சர்ப்ரைஸ் getting ready. அதை தயார் செய்துவிட்டுப் பேசுகிறேனே///
ReplyDeleteஐ!!😍😍😍😍
கதிரவன் கண்டிரா கணவாய்
ReplyDeleteஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
Cristophe Bec is one of my favourite Euro Comic writers...
தகவலுக்கு நன்றி சகோ
Deleteமீ டூ ஆவலுடன் வெயிடிங்
39th
ReplyDeleteSurprise-ஆ மீண்டும் இரத்தப் படலம் reprint! எனக்கு Black & White-ல தான் வேணும்! 😎🔥
ReplyDeleteI tooo....
ReplyDeleteI three
Deleteசர்ப்ரைஸ் பதிவு...:-)
ReplyDeleteகதிரவன் கண்டிரா கணவாய்.
ReplyDeleteஎன் பெயர் அந்நியன் இரண்டு இதழ்களின் அட்டைப்படமும் இங்கேயே பளீச் பளீச் என கண்ணை கவர்கிறது சார்...அருமை..
அக்டோபரில் சர்ப்ரைஸா...ஆஹா அது என்னவாக இருக்கும் என இப்பொழுதே ஆவல் பீறிடுகிறதே...
ReplyDeleteஎன்னவாக இருக்கும்....?!
சார் அடுத்த மாதம் 2027 அட்டவனை வெளிவந்து விடும் தானே...?!
ReplyDeleteஇந்த மாதம் வெளிவந்த ஸ்டெர்ன்னும் சரி..ப்ளூகோட் பட்டாளமும் சரி மிக மிக அருமை ...ஒன்று காமெடியிலும்...இரண்டு மனதை கனமாக்கியும் மனதை கவர்ந்த இதழ்கள் சார்...இரண்டு இதழ்களுமே அரைமணி நேர வாசிப்பு தான்..ஆனால் அந்த அரைமணி நேரமும் அவரவர்கள் ஜானர் பாணியில் நம்மை மிகவும் நெருக்கமாகி விட்டார்கள்..
ReplyDelete🙋🏻♂️
ReplyDeleteஸ்டெர்ன் வெற்றி பெற்றதில் பெரு மகிழ்சசி. சமீபத்திய அறிமுகங்களில் மனங்கவர்நதவர் ஸ்டெர்ன்.
ReplyDeleteமேற்கே போ மாவீரா- கதை அருமை. ஒரே ஒரே வேண்டுகோள். இந்த மாதிரி கமர்சியல் ஹீரோக்கள் இல்லாத கதைகள் மறுபதிப்பில் திருத்த வாய்ப்பில்லாதவை. எனவே ஒரிஜினல் மாதிரியே வெளியிட்டு விடுங்கள். உள்ளே ஓவியங்களில் பெரிதாக லயிக்க வாய்ப்பில்லாமல் போயி விட்டது.
ReplyDeleteஒரு பேனலில் அது என்ன ஓவியம்னே தெரியாத அளவு வசன பலூன்
Delete“Blue Coats”-க்கும் இதே மாதிரி ஒரு problem இருந்தது. வசன balloons எல்லாம் ஓவியங்களை மறைத்து இருந்தன. For example, ஒரு Blue Coat சிப்பாய் beering குண்டில் கிலுகிலுப்பு செய்ததாக சொல்லும்போது, அந்த கிலுகிலுப்புக்கு மேலேயே ஒரு dialogue balloon வைக்கப்பட்டிருந்தது, அதனால் artwork முழுசாக மறைந்து இருந்தது.
Deleteபுத்தக விழாக்கள் தடுமாறுவது வருத்தமாக இருக்கிறது. காமிக்ஸ் விற்பனை தாண்டி வாசிக்கும் வழக்கத்தை உருவாக்க மாணவர்களிடையே இது ஒரு வாய்ப்பாக இருந்தது. 😖
ReplyDelete//காமிக்ஸ் விற்பனை தாண்டி வாசிக்கும் வழக்கத்தை உருவாக்க மாணவர்களிடையே இது ஒரு வாய்ப்பாக இருந்தது//
Delete+9
புத்தகத் திருவிழாக்கள் முன்பை விடவும் புதிய உத்வேகத்துடன் சீக்கிரமே களைகட்டும் என்று உள்ளுக்குள்ளே ஒரு பட்சி சொல்கிறது.
Deleteஅப்படியே நடக்க விரும்புகிறேன்
DeleteHi sir ,
ReplyDeleteFab 5 both wrappers are looking awesome.
I am yet to read stern stories . I will read the new one and previous stories.
Your video makes it more interesting sir.
Please post video whenever your time permits .
Eagerly waiting for new announcement for October
Hi sir ,
ReplyDeleteFor last 3 years , you are announcing the following year books slightly before than the previous year:)
2025 - October 4th
2024 - October 12 th
2023 - October 28 th
Hope this continues and you will release it before the previous year date.
Start Engine...
DeletePut right indicator...
Stick left hand out...
&
Go straight...!
ஒரு ஞானி கற்றுத் தந்த வழிமுறை சார்!
///
Delete2025 - October 4th
2024 - October 12 th
2023 - October 28 த்
///
யப்பா!! புள்ளி விவரப் புலி ஜி நீங்க!!💐💐
Hi editor sir,
DeleteExpect the unexpected is your way sir .
Waiting eagerly for next year book announcement soon sir
Hi @Erode Vijay sir,
DeleteThat’s my regular hobby to read previous year blog post . Mainly the yearly announcements previous years 😊
Super Bathri Sago
Deleteஇந்த தடவை எந்த சர்ப்ரைஸ் தேதியோ 😁
Delete///That’s my regular hobby to read previous year blog post . Mainly the yearly announcements previous years 😊///
Deleteபாத்தீங்களா எடிட்டர் சார் - Bathri ஜி மாதிரி வாசகர்கள் இருக்கற வரைக்கும் உங்களை யாரும் அசச்சுக்க முடியாது.. அசச்சுக்க முடியாது!!😍😍😍
வணக்கம் சார்
ReplyDeleteமுதல் வரியை படித்தவுடன் - தற்போது அப்பர் பெர்த்தில் பெங்களூர் பயணம் செய்யும் பஸ்சும் இபடிதான் சொல்லுகிறது சார் 😄
ReplyDeleteபதிவை படித்து பதில் போட முடியாத அளவுக்கு உள்ளது ☺️
இளம் டெக்ஸ் கதையின் சித்திரங்கள் இந்த முறை வாசிப்பு அனுபவத்தை ஒரு பக்கா ஆக்சன் படத்தை பக்கத்தில் இருந்து பார்த்து அனுபவத்தை கொடுத்தது 🤩
ReplyDelete// இதோ காத்திருக்கும் அக்டோபரில் உங்களுக்கு சின்னதொரு சர்ப்ரைஸ் getting ready. //
ReplyDeleteசூப்பர் சார். ஆவலுடன் காத்திருக்கிறேன்.
2027 Time table October books oda vara poguthu !!
Deleteஉண்மை...
ReplyDeleteகடந்த இரண்டு மாதங்களாக
ஒரே மொபைல் போன் பார்த்து நேரத்தை போக்கி விட்டு அப்றம் டைம் வேஸ்ட் பண்ணிட்ட மேன்னு
ஃபீல் பண்ணியது நிஜம்..
காமிக்ஸ் புத்தகங்களையும் ரொம்ப சாகவாசமாய்படித்ததுதான் ...
இந்த மாதம் கதையே வேறு...
புத்தகத்தை கைப்பற்றி ய அன்றே ஸ்டெர்ன் & டெக்ஸை படித்து முடித்து விட்டேன்..
இரண்டு கதைகளுக்கு உள்ள தொடர்பு..
உடனடி பின்னூட்டம் என்று ஆர்வமாக வே சென்றது ...
YouTube -யில் சினிமா பாட்டைத் தவிர வேறு பார்ப்பதில்லை என்று முடிவுசெய்து விட்டேன் ...
அப்றம் இந்த மாத மூன்று இதழ்களையுமே எக்ஸ்ட்ரா காப்பி ஒன்று வாங்கி வைத்து மற்றவர்களுக்கு படிக்க குடுக்க
(ரசிக்க ) செய்ய வேண்டும்... சார்...
// YouTube -யில் சினிமா பாட்டைத் தவிர வேறு பார்ப்பதில்லை என்று முடிவுசெய்து விட்டேன் ...
Deleteஅப்றம் இந்த மாத மூன்று இதழ்களையுமே எக்ஸ்ட்ரா காப்பி ஒன்று வாங்கி வைத்து மற்றவர்களுக்கு படிக்க குடுக்க
(ரசிக்க ) செய்ய வேண்டும்... சார்... //
நல்ல முடிவு சார்
///அப்றம் இந்த மாத மூன்று இதழ்களையுமே எக்ஸ்ட்ரா காப்பி ஒன்று வாங்கி வைத்து மற்றவர்களுக்கு படிக்க குடுக்க
Delete(ரசிக்க ) செய்ய வேண்டும்... சார்.///
அருமை!!👏👏👏👏💐💐💐💐
//ஆரம்பத்திலே ரெண்டு பேருக்கு நடுவிலே சும்மா வாக்குவாதம் தான் வரும்!கடைசியிலே ஒருத்தன் பிணமாத் தான் விழுவான்!
ReplyDeleteஅப்புறம் செத்தவனோட அண்ணனோ தம்பியோ பழிவாங்க கிளம்பு வான்!
அதுக்கப்புறம் ரெண்டாவதா செத்தவனோட தம்பி தன் பக்கம் நியாயம் கேட்கத் துப்பாக்கியை தூங்குவான்!
அண்ணன் தம்பிகள் எல்லாரும் செத்துப் தீர்ந்ததும் இந்தப் பகை அப்படியே கசின்களுக்கு மாறும்! கசின்களும் தீர்ந்ததுக்கப்புறம் அது அவங்களோட பசங்களுக்கும் போய் சேரும்!
இப்படி ரெண்டு குடும்பங்களும் வேரோடு அழிஞ்சா மட்டும்தான் அந்தப் பகையே முடிவுக்கு வந்ததாக கணக்கு!
இது அமெரிக்கர்களுக்கே உரிய குணமாகவும் இருக்கலாம் !மனுசப்புத்தியே இது தானோ ?என்னவோ?//
வன் மேற்கின் மொத்தவரலாறே இது தானே!
இதையே லக்கி லூக் கின்
//எதிர் வீட்டில் எதிரிகள்//
ரொம்ப ஜாலியா சொல்லியிருப்பாங்க!
ஆனால் ஸ்டெர்ன் மனசு வலிக்க சொல்லியிருக்காங்க.
ஸ்டெர்ன் வன் மேற்கின் வரலாறு
இந்த sequence எழுதும் போது நிரம்பவே ரசித்தேன் சார்! பச்சையாய் உடைத்துப் பேசுவது சுளீரென்றும் இருக்கணும் - கொஞ்சம் சுய எள்ளல் போலவும் அமையணும் என விரும்பினேன்...
Deleteராஜசேகர் சார் @ அது அட்டகாசமான எளிதான ஆனால் வீரியமான வசனம். நானும் படிக்கும் போது ரொம்ப ரசித்தேன், இவ்வளவு எளிதாக நச் என்று யாராலும் சொல்ல முடியாது.
Deleteஸ்டெர்ன் and ப்ளூகோட்ஸ் are simply superb sir. Expecting both of them in 2027 too sir.
ReplyDeleteஅனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் 💐💐💐
ReplyDeleteSir. அந்த அக்டோபர் surprise என்னவென்று எங்களுக்கு முன்கூட்டியே தெரியும்... 😊❤️🥮🥮
ReplyDeleteசூப்பர் சார்.... 💪💪
Delete2020 ஜனவரி 1 ம் தேதி டிவியிலே ஜோசியர்கள் சொன்ன ஆரூடங்கள் ரேஞ்சுக்கு உங்கள் கி யூகம் இருக்குமென்பது புரிகிறது!
// அடுத்ததொரு தலைமுறையை எட்டிப்பிடிக்கும் பொருட்டு அவர்களையே நாம் மலைபோல் நம்பியிருந்தோம். ஆனால் புத்தகவிழாக்கள் சீராகத் தொடரத் துவங்கும் வரையிலும், இந்தப் பிள்ளைகளை எட்டிப்பிடிக்கும் வாய்ப்புகள் சொற்பமாகி விடுகின்றன.That is the bigger concern ! //
ReplyDeleteஉங்கள் ஆதங்கம் நன்றாக புரிகிறது சார்; விரைவில் சரியாகும் சார். இதுவும் விரைவில் கடந்து போகும் சார்.
கதிரவன் கண்டிரா கணவாய் , என் பெயர் அந்நியன் படங்கள் சூப்பர் . அதிலும்கதிரவன் கண்டிரா கணவாய் பல வித வர்ணங்கள் செம .
ReplyDelete"என் பெயர் Tiger" → "என் பெயர் அந்நியன்" hmmm
ReplyDeleteeighty five
ReplyDeleteஅக்டோபருக்கு இன்னும் ஏன்தான் பதினைந்து நாட்கள் மீதமிருக்கிறதோ...ம்ஹ்ம்..
ReplyDeleteகோட்டையில் ஒரு குட்டிப் புயல் (Blue Coats)
ReplyDeleteBlutch மற்றும் Sergeant Chesterfield ஒரு abandoned baby-யை கண்டுபிடிக்க, அந்தக் குழந்தையை Fort Bow-க்கு கொண்டு வர்றாங்க. அங்கே Colonel-ஓட மகள் Amélie Appeltown அந்தக் குழந்தை மேல ரொம்ப பாசமா ஆகிடுறாங்க.
அதுக்கப்புறம் அந்தக் குழந்தையைச் சுற்றியே நடக்குற கலாட்டாதான் இந்தக் கதையின் main highlight. War நடக்குற சூழ்நிலைக்குள்ள ஒரு innocent baby வர்றதால, வழக்கமான Blue Coats comedy இன்னும் ஒரு different flavour-ல இருக்கு.
இந்த album-ல ஒரு பெரிய continuous story கிடையாது. Baby-யை மையமா வைத்து ஐந்து short stories இருக்கு. ஒவ்வொரு கதையும் வெவ்வேறு விதமான comedy situations-ஐ கொண்டு போகுது.
எனக்கு இந்தக் கதையில் ரொம்ப பிடிச்ச விஷயம் Blutch தான். எப்போதும் army-யை விட்டு தப்பிக்கணும், உயிரைக் காப்பாத்திக்கணும்னு பார்க்குற Blutch, இந்த baby விஷயத்துல unexpected-ஆ ஒரு mother hen மாதிரி மாறிடுறது செம comedy! 😂
ஆனா ஒரு minus இருக்கு. ஐந்து கதைகளும் ஒரே level-ல இல்ல. சில episodes செமையா work ஆகுது, சிலது average-ஆ போயிடுது. ஒரு பெரிய, emotional-ஆன single adventure மாதிரி எதிர்பார்த்து படிச்சா கொஞ்சம் ஏமாற்றமா இருக்கலாம்.
மொத்தத்தில், இது ஒரு light-hearted, charming Blue Coats album. வழக்கமான Chesterfield–Blutch battlefield comedy-யிலிருந்து கொஞ்சம் வித்தியாசமான experience. Absolute best Blue Coats albumன்னு சொல்ல முடியாது... ஆனா ஒரு குட்டி baby-யை வைத்து ஒரு முழு military camp-ஐயே அல்லோலப்பட வைக்கிறாங்க! 😂
Alredy mention panna mathri. வசன balloons எல்லாம் ஓவியங்களை மறைத்து இருந்தன
Ovvoru கதைக்கும் proper ending இல்லாமல், திடீர்னு jump cut-ஓட முடிஞ்சிடுது. இந்த 5 stories-ஐயும் 5 chapters-ஆ பிரிக்காமல், சிறிது நாட்கள் கழித்து, சிறிது நாட்கள் கழித்து nu "24" Padathaula Surya basically “I am watch mechanic”னு படம் முழுக்க நம்மள படுத்துற மாதிரி, album முழுக்க நம்மள படுத்துறாங்க
என்னோட rating: 6/10