Wednesday, July 29, 2026

ஆஹா ஆகஸ்ட் !

 நண்பர்களே, 

வணக்கம். ​ஜூலை இறுதியிலேயே ஒரு ஆரவார ஆகஸ்ட்  நமக்குப் புலந்துள்ளது. முன்பெல்லாம் இதுவே கூட ஒரு கொண்டாட்டத்துக்கான காரணமாக இங்கே நமக்கு அமைந்துட்டதுண்டு. ஆனால் இப்போதோ... ஆளில்லாத டீ கடையில் ஆத்துவது ராகி மால்ட்டாக இருந்தால் என்ன? பூஸ்ட்டாக இருந்தால் என்ன? கட்டன்சாயாவாக இருந்தால் என்ன ? என்பதே நிலவரம்! Anyways, ஒரு டஜன் ஆண்டுகளுக்கு முன்பாக இதே ஆகஸ்ட்டில், இதே ஈரோடு புத்தக விழா தருணத்தில், டெக்ஸ் & டைகரின் இதழ்கள் ஒருசேர வெளியாகி பட்டையைக் கிளப்பியது இந்த நொடியில் நினைவில் நிழலாடுகிறது. இதோ இன்னொரு ஆகஸ்ட்டில் கலக்கலாய் 'தல' & 'தளபதி' களம் காண்கிறார்கள். But இந்த மாதத்தின் நிஜமான ஹீரோக்கள் என்று சொல்வதாயின், இரு அணிகளைத் தான் நான் சுட்டிக்காட்டியாக வேண்டும்.

​முதலாவது, நமது பைண்டிங் டீம். ஈரோடு புத்தக விழா - வரும் வெள்ளி துவங்கவிருப்பதால், புக்ஸ் சகலமும் அதற்கு முன்பாகவே உங்கள் கைகளை எட்டிப்பிடிக்க வேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தது. Which meant despatch had to be for the 29th.... ஆனால் பணிகளோ 28-ஆம் தேதி காலை வரை அச்சுக்கூடத்திலேயே நிலைகொண்டிருந்தன ! ஒற்றை நாளில் ஐந்து இதழ்களைன  அசாத்தியமாய் பைண்டிங் செய்து நமது திட்டமிடலை ஜெயமாக்கிய முழுப்பெருமை பைண்டிங் நண்பருக்கே சேரும்.

Credit # 2 belongs to our entire team. கடந்த ஒரு வாரமாகவே டைப்செட்டிங்கிலும், எடிட்டிங்கிலும்  ஞாயிற்றுக்கிழமை கூட அடித்துக் கொண்டிருந்த கர்ணங்கள் சொல்லி மாளாது...​And, சகலத்தையும் ஒருங்கிணைக்க மைதீன் TVS XL-ன் டயர்கள் தேயும் அளவிற்கு சிவகாசியை அளந்து கொண்டிருந்தான். தயாரிப்புப் பணிகள் சகலமும் முடிவடைந்து டெஸ்பாட்ச்சுக்கு புக்ஸ் வந்தபோதுதான் உச்சக்கட்ட சிக்கல்களே!

**​ரெகுலர் சந்தாவில் 'GEN Z' தடம் வேணாம் என்று சொல்வோர்க்கு SINGLES தடம்.

**​இன்னொரு பக்கமோ, 'FAB 5' தனித்தடத்தின் முன்பதிவுகளில் சிலர் பங்கேற்றிருந்தனர், சிலர் வேணாமென ஒதுங்கியிருந்தனர்.

**​அதற்கப்புறம் இன்னொரு தனித்தடமான 'டெரிஃபிக் டெக்ஸ்'க்கு 'O' போட்டிருந்தோர் சிலர், போடாதோரும் சிலர்...!

​**அதற்கும் அப்புறமாய், அந்த 6 AI. புக்ஸ் வேணும் என ஆர்டர் தந்திருந்தோர் இன்னொரு டீம்.

​ஆக, "ஆட்டை தூக்கி குட்டியில் கொஞ்சம், குட்டியை தூக்கி பட்டியில் கொஞ்சம்" என்று போட்டு பேக்கிங் செய்வதற்குள் இன்று ரணகளமாகிப் போய்விட்டது! ​சகலத்தையும் செய்து கொண்டிருக்கும் போதே இன்னொரு பக்கம் சரமாரியாய் உங்களது போன் அழைப்புகள். And இன்னொரு பக்கமோ, 'டெக்ஸ் & டைகர்' என்ற மாதத்தின் உஷ்ணம் முகவர்களையும் எட்டிப்பிடித்திருக்க, அவர்களுமே "இன்றைக்கே டெஸ்பாட்ச் பண்ண முடியுமா?" என்ற ரீதியில் செல்போன்களை தெறிக்க விட்டுக்கொண்டிருந்தார்கள். So கணிசமான நாட்களுக்கு பின்பாய் ஒரு மெய்யான திருவிழாவை ஆபீஸில் தரிசித்த அனுபவம் எனக்கு. சகலத்தையும் திறன்படச் சமாளித்த ஜோதி & front desk பெண்களுக்கு ஒரு கைதட்டல் ! 

இந்த மாதத்தில் ஒரு விசித்திர நிகழ்வும் உண்டு. என்னவென்கிறீர்களா?

​பொதுவாய் லயனுக்கு இரண்டோ மூன்றோ வெளியீடுகள் இருப்பதுண்டு. அப்புறம் 'GEN Z' இதழானது லயன் மினியில் வந்துவிடும். And சில தருணங்களில் முத்து காமிக்ஸ் இருக்கும், சில மாதங்களில் இல்லாதும் போகும். ஆனால் முதல்முறையாக இந்த மாதம் 

  • 2 இதழ்கள் 'லயன் லைப்ரரி'யில், 
  • 1 இதழ் பழைய 'ஜம்போ' லோகோ சுமந்து, 
  • இன்னொரு இதழ் 'லயன் மினி' லோகோவோடு, 
  • And 'டைகர்' வந்திருப்பதோ 'முத்து காமிக்ஸ்' லோகோவோடு.

​ஆக, லயன் ரெகுலர் தடத்திற்கு இடமின்றிப் போன ஒரு அதிசய மாதம் இது.

​Honestly, இந்த மாத இதழ்களுள் எதை முதலில் படிப்பது என்ற கேள்வியை நமது வாட்ஸ்அப் கம்யூனிட்டியில் உங்களிடம் வைத்திருந்தபோது, 'டெக்ஸ் & டீம்' செம லீடிங்கில் பயணித்திருப்பது புரிந்தது. And trust me when I say this, புக்ஸ் கையில் கிடைக்கும்போது உங்களது எதிர்பார்ப்புகள் இம்மியும் பிசகி இருக்காது என்று நம்பலாம். எப்போதுமே கலரில் டெக்ஸ் ஆல்பங்கள் பட்டையைக் கிளப்புவது வாடிக்கையே. ஆனால் இம்முறை எல்லாமே எக்ஸ்ட்ரா ஸ்பெஷலாக  எனக்குத் தென்படுகிறது ! Oh yes, இதை ஒரே புக்காக ஹார்ட் கவரில் போட்டிருந்தால்...??? என்ற ஒரு சோககீதம் தவறாமல் ஒலிக்கும் என்பதில் எனக்கு ஐயமே கிடையாது. ஆனால் எனது துவக்கத் திட்டமிடலே வேறு ஆச்சே ? இவையெல்லாமே மறுபதிப்புகள் தானே என்பதால், இந்த மாதம் முதல் அத்தியாயமும், அடுத்த மாதம் இரண்டாவது அத்தியாயமும் வெளியிட்டால் சிறப்பு என்பதாகவே பிளான் பண்ணியிருந்தோம் plan பண்ணியிருந்தோம். And போனலியில் நாம் தெரிவித்திருந்ததுமே அவ்விதமே.ஆனால் அறிவிப்புக்குப் பிற்பாடு "மணந்தால் மகாதேவி, போட்டால் ஒரே மாதத்தில்" என்று நீங்கள் தீர்க்கமாய் சொல்லிவிட்ட பின்னே, அடுத்தடுத்த மாதங்களுக்கான இதழ்கள் என்பதை மாற்றி ஒரே மாதத்தில், என்று அமைத்துக் கொள்ள வேண்டிப்போனது. ஆனால் போனெலியிடம் போய் - இல்லே... ரெண்டு புக்கா போடலீங்க ; ஒரே புக்கா போடுற பிளான் இப்போ இருக்கு !" என்று சொன்னால் மண்டையில் குட்டு வைப்பார்கள் ! So வாங்கும் குட்டை உங்களிடம் வாங்கிட்டா போச்சு என்றபடிக்கே 2 இதழ்கள் என்ற concept -ல் உறுதியாக நின்று விட நேர்ந்தது ! இங்கே மிகப்பெரிய பிளஸ்ஸாக எனக்குப் படுவது, இரண்டு அட்டைப்படங்கள் அட்டகாசமாய் கிடைத்திருக்கும் சமாச்சாரமே. என்னதான் இணையத்திலும் போனிலும் நான் upload செய்துள்ள சித்திரங்களையும், அட்டைப்படங்களையும் நீங்கள் ரசித்திருந்தாலுமே, புத்தகத்தை நேரில் பார்க்கும்போது அது முற்றிலும் வேறொரு உச்சத்தைக் கண்ணில் காட்டப்போவது உறுதி!


And எனக்கெல்லாம் இந்தக் கதை, தலைப்பைத் தாண்டி துளியும் நினைவே இல்லை என்பதால், இதனுள் பணி செய்வது செம refreshing-ஆக இருந்தது. கம்யூனிட்டியில் ஏற்கனவே நான் தெரிவித்திருந்தது போல, பழைய மொழிபெயர்ப்பை 90 விழுக்காடு தொடர்ந்திருக்கிறோம் ; தட்டையாகத் தென்பட்ட ஏரியாக்களில் மட்டும் எக்ஸ்ட்ரா எண்களைப் போட்டிருக்கிறேன்.​"அது எப்படி நீ சேர்க்கப்போச்சு? " என்று ஒரு பஞ்சாயத்தைக் கிளப்புவதாக இருந்தால் — most welcome ! காற்றாடும் நாயர்கடை, பஞ்சாயத்திலாவது சுறுசுறுப்பானால் no complaints at all!

​இந்த மாதத்தின் நிஜமான highlight என்று எனக்கு பர்சனலாக மனதில் படுவது 'வைகறைக்  கொலைகள்' தான். எனது ஞாபகம் சரியாக இருக்குமெனில், இது அநேகமாய் 2020-ல் அல்லது 2021-ல் வெளிவந்திருக்க வேண்டிய இதழ். அட்டைப்படமெல்லாம் அன்றைக்கே அடித்துப் போட்டாச்சு. இந்த ஆல்பத்தில் நான் ஆர்வம் காட்டியிருந்ததே, அந்த black & grey shades கலந்த சித்திர பாணியினால்தான் பிரதானமாய்! இது பிரான்ஸில் 1952-ல் நடந்திருந்ததொரு நிஜ சம்பவத்தின் சித்திரப் பார்வை. இங்கே மிகையோ கற்பனையோ கிஞ்சித்தும் கிடையாது. ​சுற்றுலாப் பயணிகளாய் பிரான்சுக்கு வந்திருந்த ஒரு வெள்ளையர் குடும்பம் இரவில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறது. பிரான்சின் கிராமப்புறத்தில் பலியான அந்த மூவரில் ஒரு 10 வயதுச் சிறுமியும் சேர்த்தி.​இந்தப் படுகொலைகளின் காரணகர்த்தா யார் ? என்ற விசாரணையும், அந்நாட்களின் கோணங்கித்தனமான புலனாய்வு முறைகளும், இன்றளவிலும் பிரான்சின் காவல்துறை மீதான ஒரு கருப்புப் புள்ளியாகவே தொடர்கிறது. 'The Dominici Affair' என்ற பெயரில் 1973-ல் இந்த விவகாரம் ஒரு திரைப்படமாகவும் வந்துள்ளது.

ஒரிஜினலாகவே ஆறோ ஏழோ ஆண்டுகளுக்கு முன்பாக இது வெளியாக இருந்த மாதத்தில் எடிட்டிங்கிற்கென எடுத்து வைத்தபோது, தமிழாக்கம் ரொம்பவே கிறுகிறுக்கச் செய்தது. அன்றைக்கே அதனை முழுசாய் ரிப்பேர் செய்திட எனக்குப் பொறுமையும் இருந்திருக்கவில்லை, அவகாசமும் இருந்திருக்கவில்லை. So சாவகாசமாய் பின்னே பார்த்துக்கொள்ளலாம் என்றபடி ஓரம் கட்டியிருந்தேன். அப்புறமாய் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே, 2024-ல் இந்தக் கதையின் நினைவு மறுக்கா எழுந்தது. "அட்டைப்படமெல்லாம் ரெடியாக இருக்கிறதே! மொழிபெயர்ப்பை மட்டும் செய்து முடித்துவிட்டால் ஏதேனும் ஒரு புத்தக விழாவில் இறக்கிவிடலாமே..." என்ற எண்ணத்தில், அந்நேரம் நம்மோடு கரம் கோர்த்திருந்த ஒரு புது எழுத்தாளரிடம் இதை ஒப்படைத்திருந்தோம். அவர் கணிசமாய் தமிழில் எழுதிக்கொண்டிருப்பவர்தான். So 52 பக்கங்கள் கொண்ட இந்த ஆல்பத்தைக் கையாள்வதில் பெரிதாய் சிரமங்கள் இருந்திருக்கக் கூடாது என்றே எதிர்பார்த்திருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாய் அவராலும் இந்தக் கதைக்கு நியாயம் செய்திட முடியவில்லை. So உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக - இரண்டாவது முறையாகவும் ஒரு மொழிபெயர்ப்பைப் பெற்ற பின்னரும், அந்தக் கதையைப் பரணுக்கே அனுப்ப வேண்டிப் போனது. "சரி, இதற்குமேலும் போட்டு ஜவ்வு இழுத்தால் வேலைக்கே ஆகாது" என்ற எண்ணத்தில் வம்படியாக Fab 5-ல் இதனை நுழைத்திருந்தேன் ! 

​And கதையை எழுதக் கையில் எடுத்த பிற்பாடுதான் நிறைய விஷயங்கள் புரிபட்டது. இது மாமூலான ஒரு கிரைம் த்ரில்லரோ, கிரைம் நாவலோ அல்லவே அல்ல! நிஜத்தின் பிரதிபலிப்பு. And அந்த நிஜத்தின் பெரும்பகுதி ஒரு கிராமத்துப் பெருங்குடும்பம். அந்தக் குடும்பத்தின் அங்கத்தினரின் மத்தியில் நிலவிய கோபதாபங்கள், விருப்பு வெறுப்புகள், சகலமும் வெவ்வேறு ரூபங்களில் வெடித்துக் கிளம்பும்போது, அந்தக் கேஸ் ரங்கராட்டினம் சுற்றுவது போல் புலனாய்வாளர்களைக் கிறுகிறுக்கச் செய்திருக்கிறது. பேனா பிடித்த என்னையுமே குவாட்டர் அடித்த கொரில்லாவாய் கிறங்கிப் போகவே செய்தது!இது ஒரு நிஜ வாழ்க்கை விவகாரம் என்பதால், அந்தப் புலனாய்வில் அரங்கேறிய சமாச்சாரங்களை நெட்டில் பூரணமாய் படித்துத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப கதைக்குள் பயணிக்க ஆரம்பித்தபோது கொஞ்சமாய் தாக்குப்பிடிக்க முடிந்தது.


நிறைய வசனங்கள் இருக்கும் guys!

​And ஜேம்ஸ் பாண்ட் பாணியில் டமால்-டுமீல் அதிரடிகளெல்லாம் மருந்துக்கும் இராதுதான்....! அதேபோல, ஏகப்பட்ட முன்னேற்றங்கள் கண்டிருக்கும் இன்றைய நாட்களில், 75 ஆண்டுகளுக்கு முன்பான புலனாய்வு வழிமுறைகள் நமக்கு கிச்சுகிச்சு மூட்டவும் செய்யலாம்தான். ஆனால், அந்தக்காலகட்டத்தில் அவர்களுக்குச் சாத்தியப்பட்டிருந்த டெக்னாலஜியைக் கொண்டு அவ்வளவே முடிந்திருந்தது. ​So, சித்திரங்களை ரசித்தபடியே, வரலாற்றுக்குள் புதைந்து கிடக்கும் ஒரு மர்மத்தின் மத்தியில் உலா போகத் தயார் எனில், ‘வைகறை கொலைகள்’ will fascinate you! மாறாக - ​"எனக்கு இந்த ராவடியெல்லாம் வேணாம்; சிம்பிளா, சூப்பரா கதை இருக்கணும்" எனும் பட்சத்தில்... இது கதையே அல்ல, நிஜம்! And அதை மறந்துட வேண்டாம், ப்ளீஸ்!

​ஆகஸ்ட்டின் ஆளுமைகளுள் இன்னொரு முக்கியஸ்தர் நமது 'இளம் டைகர்'!

​ஆண்டுக்கு ஒற்றை ஸ்லாட்டில் வந்தாலும், அடுத்த ஆல்பம் வருவதற்கு முன்பாகவே முந்தைய இதழ் தீர்ந்துபோய்விடுவது இந்த ஜாம்பவானின் ஆற்றலுக்கு ஒரு testimony. ‘கரையெல்லாம் கண்ணீரே’ — நான் ஏற்கனவே சொன்னது போல, ஒரு நிஜச் சம்பவத்தின் பின்னணியில் புனையப்பட்டுள்ள கற்பனைக்கதை. இடப்பற்றாக்குறை காரணமாய் அந்த வரலாற்றுச் சம்பவத்தை விரிவாக எழுத வாய்ப்பின்றிப் போனது. ஆனால், நீங்கள் நெட்டில் தேடிப் பார்த்திட சின்னதாய்க் குறிப்பு மட்டும் தந்துள்ளோம். So, கதையைப் படித்த பிற்பாடு, மறவாமல் ஒருமுறை கூகுளின் சகாயத்தோடு கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு அவல நிகழ்வைப் பற்றித் தெரிந்துகொள்ளத் தவறாதீர்கள்! கதையைப் பொறுத்தவரை, ஒரு பழங்குடி மாந்திரீகனே இந்த ஆல்பத்தின் முதுகெலும்பு. வழக்கம் போல் கிளைமேக்ஸில் பிரசிடென்ட் லிங்கனும் தாடியைச் சொரிந்தபடியே காட்சி தந்துவிடுகிறார்; எப்போதும் போலவே 'பிங்கர்டன் ஏஜென்சி'யின் ஆலனும் சொட்டை மண்டையை ஒரு வட்டத் தொப்பியால் மறைத்தபடிக்கு ஜம்மென்று ஆஜராகிறார்! செம டிஜிட்டல் கலரிங்! வளவளவென்ற ஜவ்வுமிட்டாய் வசனங்கள் இன்றி பரபரப்பாய் நகர்ந்திடும் கதைக்களம்! So, வாசிக்க நிச்சயம் ஈர்க்கும் என்பதில் எனக்கு ஐயமே இல்லை!


And last but not least... ஜென்சியின் 'மின்னும் அசுரன் !"

​நான் ஏற்கனவே சொல்லியிருந்தது போல, இந்த குட்டி புக் சீரிஸ் நாம் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டியிருக்கவே இல்லைதான். So, இது அடுத்த ஆண்டிற்குத் தொடர்வதெல்லாம் ரொம்பவே சந்தேகம். ​Maybe, இல்லாதபோதாச்சும் ஒரு விஷயத்தின் அருமை கொஞ்சம் கூடுதலாய்த் தெரியுமோ, என்னவோ! 'ஜூனியர் டிடெக்டிவ்ஸ்' yet another குட்டி மர்மத்தைக் குதூகலமாய் முடிச்சவிழ்ப்பதை 'மின்னும் அசுரன் !' இதழில் பார்த்திடப் போகிறீர்கள்.

​எல்லா இதழ்களும் ஆன்லைனிலும் listings போட்டாச்சு! So, சந்தாவிலோ முன்பதிவுத் தடங்களிலோ இடம் பிடித்திருக்காதவர்கள்கூட 'பச்சக்'கென ஆர்டர் பண்ணிடலாம்.

https://lion-muthucomics.com/latest-releases/1485-2026-august-pack.html

Before I sign off... ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஈரோட்டில் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடக்கவிருக்கும் நமது வாசகர் சந்திப்பு பற்றிய ஒரு நினைவூட்டல்! அந்தப் பக்கமாய் ஒரு visit அடிக்க முயற்சிக்கலாமே, ப்ளீஸ்!

​Bye all, see you around! Have a great week ahead!

139 comments:

  1. Replies
    1. வாழ்த்துகள் சகோ💐💐💐

      Delete
    2. என்ன ரொம்ப பிஸியா நண்பரே?

      Delete
  2. வந்தாச்சு முதல்ல... ரொம்ப நாளைக்கு அப்புறம்..!

    ReplyDelete
  3. அப்படித்தான் நானும் நெனச்சேன்...

    ReplyDelete
  4. அடடே சூப்பர் சார்

    ReplyDelete
    Replies
    1. ஒரேயொரு ஊரிலே....
      ஒரேயொரு நாயர்.... !
      ஒரேயொரு நாயருக்கும்...
      ஒரேயொரு டீக்கடை ...!

      Delete
  5. செம்மையா உற்சாகம் ததும்பும் பதிவு. ஆகஸ்ட் மாதம், ஈரோடு புத்தக விழா வந்தாலே அந்த உற்சாகம் வந்து விடுகிறது.

    ReplyDelete
  6. At least with in 15😃 good evening team 👍

    ReplyDelete
  7. //சகலத்தையும் திறன்படச் சமாளித்த ஜோதி & front desk பெண்களுக்கு ஒரு கைதட்டல் ! //

    பலத்த கைதட்டல்கள் எங்களிடமிருந்து சார்

    👏👏👏👏👏👏👏👏👏

    ReplyDelete
  8. இந்த முறை Gen Z முதலில், பிறகு வைகறை கொலைகள், அப்பறம் டைகர், கடைசியாக டெக்ஸ்.

    எல்லாம் முடித்த பிறகு AI Comics. ஞாயிறு ஈரோடு. போன சண்டே வில் இருந்தே பிசி சார்.

    ReplyDelete
  9. மீ வெயிடிங் பார் வைகறை கொலைகள்

    ReplyDelete
  10. //ஆட்டை தூக்கி குட்டியில் கொஞ்சம், குட்டியை தூக்கி பட்டியில் கொஞ்சம்"//


    😂😂😂😂😂

    ReplyDelete
  11. Gen z புத்தகங்கள் கோவையில் பாதி பெற்றோர்களை கவர்ந்ததுங்க, சார்

    ReplyDelete
    Replies
    1. சப்பை சைஸ்னாலே பாதி தான் கவர்ந்திருக்கும் போல 🤔

      Delete
  12. சூப்பர் ட்ரெய்லர் 👍❤️👌.
    அனைத்து இதழ்களும் வெற்றிவைகை சூட வாழ்த்துக்கள்.
    பிறகு....
    இத்தாலியை போலவே ஒரே கதையை 2 ஆக 3 ஆக பிரித்து போடுவது என்பதற்கு நம்மவர்கள் பழகவே இல்லை.
    ஆனா நீங்கள் இந்த விசியத்தில் இன்னமுமே விடாமுயற்சியாக உள்ளீர்கள் இதுதான் ஆச்சரியமாக உள்ளது.

    ரசனை சார்ந்த விசியத்தில் ஆழ ஊன்றி பரபரத்து திளைக்கறப்ப சட்டென அவர்களை வெளியே இழுத்து போட்டு "அடுத்த மாசம் பாத்துக்கலாம்" என்பது சரி வராத ஒன்று.
    இதனால் அந்த கதை மீதே வெறுப்பு தோன்றலாம்.
    (உதாரணம் சமீபத்தில் வெளியான ராபின் 3 பாக த்ரில்லர்.)
    இன்னுமே யங் டெக்ஸை கையில் தொடாத வாசகர்கள் பலர் உண்டு.
    ஆகவே முடிந்தவரை இந்த கதைகளை பாகமாக பிரித்து போடும் திட்டத்தை கைவிடுவது நல்லது.
    அப்டியே போட்டாலும் அடுத்தடுத்த பாகங்களை அடுத்தடுத்த மாதங்களில் போட்டால் அந்த கதைகள் பலரையும் சென்றடைய வாய்ப்புகள் அதிகம்,சேகரிப்புக்கும் சிரமமில்லாது இருக்கும்.

    நன்றி 🙏

    ReplyDelete
    Replies
    1. ராபின் amongst the superhits of the year சாரே! வெறுப்பை ஈட்டிய ஒரு இதழ் கூட செமையாய் ஹிட் அடிக்குமெனில் - கறை நல்லது!

      Delete
  13. சூப்பர் பதிவு எடிட்டர் சார்! ஒரு அசாத்திய மாதத்திற்கான வேலைகளை அர்ப்பணிப்போடு கூடிய உழைப்பால் குறித்த நேரத்தில் நிகழ்த்திக் காட்டியிருக்கும் பைண்டிங் டீம், மைதீன், ஜோதி & மற்ற சகோக்கள், DTP டீம் - அனைவர்க்கும் வாழ்த்துக்கள்!!💐💐💐💐💐😍😍😍👏👏👏👏

    ReplyDelete
  14. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  15. வணக்கம் சார் & நண்பர்களே ..!

    ReplyDelete
  16. சூப்பர் சார்....கதைகளெல்லாம் வேற லெவல்ல இருக்கும் போல....எனக்கு எல்லையில் ஒரு யுத்தம் படித்தேனா என்றே நினைவில் இல்லை....காத்திருக்கிறேன்....முதலில் ஜுனியரின் ஏஐ என நினைத்த எனது ஆர்வத்தை தாண்டி உங்க விவரிப்பு வைகறைக் கொலைகளுக்குள் இருக்குது....கைக்கு வந்த பின்....நீண்ட நாட்களுக்கு பின் நாளைக்காக பரபரப்பான ஆவலுடன்

    ReplyDelete
  17. Hi sir ,
    Vanakam .
    All wrappers looking awesome . You already shown the preview of tex and tiger books. It looks great.
    All AI books looks very nice sir .

    ReplyDelete
  18. ஆகஸ்ட் இதழ்கள் பட்டியல் வழக்கம் போல அமர்க்களம். 🥰😍

    ReplyDelete
  19. // ஜூலை இறுதியிலேயே ஒரு ஆரவார ஆகஸ்ட் நமக்குப் புலந்துள்ளது. //

    ஆமாம் சார்.

    ReplyDelete
  20. ஆகா ஒரு சூப்பரான வெரைடி விருந்து காத்திருக்கு. சூப்பர் சார்.

    ReplyDelete
  21. // நமது பைண்டிங் டீம். ஈரோடு புத்தக விழா - வரும் வெள்ளி துவங்கவிருப்பதால், புக்ஸ் சகலமும் அதற்கு முன்பாகவே உங்கள் கைகளை எட்டிப்பிடிக்க வேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தது. Which meant despatch had to be for the 29th.... ஆனால் பணிகளோ 28-ஆம் தேதி காலை வரை அச்சுக்கூடத்திலேயே நிலைகொண்டிருந்தன ! ஒற்றை நாளில் ஐந்து இதழ்களைன அசாத்தியமாய் பைண்டிங் செய்து நமது திட்டமிடலை ஜெயமாக்கிய முழுப்பெருமை பைண்டிங் நண்பருக்கே சேரும். //

    Thank you Team!!!!

    ReplyDelete
  22. ஈரோடு உங்களை அன்போடு வரவேற்கிறது sir

    ReplyDelete
  23. // ஆகஸ்ட்டின் ஆளுமைகளுள் இன்னொரு முக்கியஸ்தர் நமது 'இளம் டைகர்'! //

    After a long time 'இளம் டைகர்' eagerly waiting sir.

    ReplyDelete
  24. குவாட்டர் அடித்த கொரில்லா...... 🤣🤣🤣🤣🤣 செம்ம வரிகள் சாரே... 🤣🤣🤣

    ReplyDelete
  25. Genz junio detectives is a smash hit among my daughter and her friends. Please continue. In fact she is asking for more.

    ReplyDelete
  26. இப்போதான் Agent Robin முதல் பாகம் படிக்க ஆரம்பிச்சேன். ஒரு சின்ன suggestion... புத்தகத்தின் அட்டையிலேயே 18+ன்னு போட்டுடுங்க சார். இல்லனா வீட்டுல ரேஷன் கார்ட்ல இருந்தே நம்ம பேரை எடுத்துடுவாங்க போல! 😂

    ReplyDelete
  27. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  28. பொக்கிஷப் பெட்டியை கைப்பற்றியாச்சி...

    ReplyDelete
    Replies
    1. அடடே... எல்லாம் ஓகேவா சார்?

      Delete
    2. இரவு 08.00 மணிக்குதான் பெட்டியை பிரிக்கமுடிந்தது சார்,குட்டி இதழ்கள் அரைடஜனாய் ஜொலிக்க,அழகாய்,மின்னும் அசுரனும் மின்ன,இளவரசி அட்டையில் டாலடிக்க,வைகறைக் கொலைகள் வித்தியாசமான ஓவியத்தில் ஆர்வமூட்ட,கரையெல்லாம் கண்ணீரே என டைகர் குதிரையில் பறக்க,எல்லாவற்றிற்கும் மேலே எல்லையில் ஒரு யுத்தம் இரு பாகங்களாய் எகிடுதகிடாய் எகிறியடிக்க,ஆகஸ்ட் சும்மா தெறிக்குது போங்க...
      ஒரே வெரைட்டி ஜாலம்...
      ஆகஸ்டின் டைகரும்,டெக்ஸும் தாறுமாறு ஹிட் ஆகும்னு தோணுது...

      Delete
  29. Replies
    1. எடப்பாடி போட்ட மெரி all pass தலீவரே!

      Delete
    2. ஒரு வரி பப்ளிஷ் ஆகிறது..ஆனால்..

      Delete
  30. Terrific Tex missing in my subscription box

    ReplyDelete
  31. எல்லா கதைகளும் அட்டைகள் வேற லெவல் சார்.....குட்டி புத்தகங்கள் குட்டி பயலுக அள்ளிக் கொள்ள...யார் அவள் என என் மகன் வாசிக்க....அதகளம் சார்...இது வரை பந்தலிலே அனைத்து அட்டைகளுமே (வைகறை கொலை பரவாஇல்லை)டாப்பா இருந்ததில்லை...

    ReplyDelete
  32. நெட்ல இரண்டாம் பாக டெக்ஸ் யாப்பா தெரிய....முதல் பாகம் நேர்ல அள்ளும் கலரட்டை வேற லெவல் சார்...இதோ தீபாவளி....ஈடு தருமா ஈரோடு

    ReplyDelete
  33. ஜீனியரின் அனைத்து அட்டைகளும் நச்...செதுக்கபட்டிருக்கு....பயலுவ அதோட சுத்துரானுக

    ReplyDelete
  34. குட்டி குட்டி அசத்தல் வண்ணக் கனவுகள்.....அசத்தும் அர்னால்ட் அப்ரசண்டி...ஆழ்கடலில் என் மகன்களோடு பயணம்...தலைப்பை வாசித்து விட்டான்

    ReplyDelete
  35. அப்பாடா பதிவாகிறது...:-)

    ReplyDelete
  36. // இதே ஈரோடு புத்தக விழா தருணத்தில், டெக்ஸ் & டைகரின் இதழ்கள் ஒருசேர வெளியாகி பட்டையைக் கிளப்பியது இந்த நொடியில் நினைவில் நிழலாடுகிறது. இதோ இன்னொரு ஆகஸ்ட்டில் கலக்கலாய் 'தல' & 'தளபதி' களம் காண்கிறார்கள். //

    மறக்க முடியமா சார்! அந்த நாட்களை! உங்களின் ரெகுலர் பதிவு எங்களுக்கு வாரம்தோறும் ஓடுவதற்கு பூஸ்ட் ஆக இருந்தது என்றால் அட்டவணை பதிவு, சென்னை மற்றும் ஈரோடு புத்தக பதிவுகள் எங்களுக்கு ஹார்லிக்ஸ் + போர்ன்விட்டாவாக வருடம் முழுவதும் புத்துணர்வுடன் இருக்க செய்தன! இன்றும் என்றும் உங்கள் பதிவுகள் உணர்வை தருகிறது தரும்!

    ReplyDelete
  37. // கணிசமான நாட்களுக்கு பின்பாய் ஒரு மெய்யான திருவிழாவை ஆபீஸில் தரிசித்த அனுபவம் எனக்கு. சகலத்தையும் திறன்படச் சமாளித்த ஜோதி & front desk பெண்களுக்கு ஒரு கைதட்டல் //

    // சகலத்தையும் ஒருங்கிணைக்க மைதீன் TVS XL-ன் டயர்கள் தேயும் அளவிற்கு சிவகாசியை அளந்து கொண்டிருந்தான். //

    நன்றி நண்பர்களே! உங்களின் பணி பாராட்டுக்குரியது!! கோடி நன்றிகள்!

    ReplyDelete
  38. // இன்னொரு பக்கமோ, 'டெக்ஸ் & டைகர்' என்ற மாதத்தின் உஷ்ணம் முகவர்களையும் எட்டிப்பிடித்திருக்க, அவர்களுமே "இன்றைக்கே டெஸ்பாட்ச் பண்ண முடியுமா?" என்ற ரீதியில் செல்போன்களை தெறிக்க விட்டுக்கொண்டிருந்தார்கள். //

    வாரே வா! எங்கள் காமிக்ஸ் தல தளபதி என்றால் சும்மாவா! சும்மா அதிருது!

    ReplyDelete
  39. // லயன் ரெகுலர் தடத்திற்கு இடமின்றிப் போன ஒரு அதிசய மாதம் இது. //

    இதனை இங்கு சொன்னதற்கு நன்றி! அப்ப ஈரோடு சஸ்பென்ஸ் ஸ்பெஷல் புத்தகம் லயன் லோகோவின் கீழ் வருகிறதா சார் :-) குமார் நோட் திஸ் பாயிண்ட்.

    ReplyDelete
  40. // இரண்டு அட்டைப்படங்கள் அட்டகாசமாய் கிடைத்திருக்கும் சமாச்சாரமே. //

    உண்மை சார்! அதிலும் டெக்ஸ் தனியாக துப்பாக்கியுடன் ஸ்டைல்லாக நிற்கும் படம் செம மாஸ் சார்.

    ReplyDelete
  41. // காற்றாடும் நாயர்கடை, பஞ்சாயத்திலாவது சுறுசுறுப்பானால் no complaints at all! //

    ROFL!

    ReplyDelete
  42. // 'வைகறைக் கொலைகள்' //
    கிராபிக் நாவல்கள் எப்போதும் எனக்கு எப்போதும் பிடிக்கும்! அதுவும் இந்த கதையின் தலைப்பு என்னை மிகவும் கவர்ந்து விட்டது சார்! சித்திரங்கள் பென்சில் shading செய்தது போல உள்ளது, பார்க்க நன்றாக உள்ளது! புத்தகம் வந்த பிறகு படித்து விட்டு மற்றவற்றை சொல்லுகிறேன் சார். அட்டைபடம் சூப்பர் சார்.

    ReplyDelete
  43. // ஆண்டுக்கு ஒற்றை ஸ்லாட்டில் வந்தாலும், அடுத்த ஆல்பம் வருவதற்கு முன்பாகவே முந்தைய இதழ் தீர்ந்துபோய்விடுவது இந்த ஜாம்பவானின் ஆற்றலுக்கு ஒரு testimony. //

    டைகர் டைகர் தான் சார்! டைகரின் வண்ண கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும், சித்திரங்கள் மற்றும் அதற்கு என்றால் போல அதன் வண்ணகலவையை ரொம்பவே ரசிக்கும் படி இருக்கும்! ஒரு இயல்பான கதைநாயகனாக டைகரை காண்பித்து கதையை கொண்டு செல்வது எப்போதுமே சிறப்பு! இந்த முறை கண்டிப்பாக டெக்ஸ் மற்றும் டைகர் கதைகளில் எதனை முதலில் படிப்பது என்ற மன போராட்டம் எல்லோருக்கும் வரும் சார். :-)

    ReplyDelete
  44. கரையெல்லாம் கண்ணீரே

    America Civil War-ல பரபரப்பா story start ஆகுது. முதல் 10 pages-க்கு ஏகப்பட்ட intro, ஏகப்பட்ட spies! 😵‍💫 "திருட்டுப்பயலே" Vivek மாதிரி, " யாரை யாரடா spy பண்ணுறீங்க?"ன்னு நாமளே குழம்பிடுறோம்.

    டக்குனு President Lincoln உள்ளே வர, story-ல இருந்த எல்லா links-மும் correct-ஆ set ஆகி, first half sema-ஆ முடிஞ்சிடுது.

    2nd half முழுக்க chasing, action, fantasy elements கலந்து கதை fantastic train-ல வேகமா பாயுது. கடைசியில் ஒரு open-ended climax-ஓட முடிகிறது.

    இந்தக் கதையோட actual hero ஒரு .மந்திரவாதி பெருசு. அதுதான் இந்த title ஓட plus-உம் minus-உம். Tiger-ஐ விட அவருக்குத்தான் அதிக முக்கியத்துவம். இந்த அலப்பறை நடுவுல Tiger ஒரு extended cameo மாதிரி தான் தெரிகிறார்.

    ஒரு சின்ன doubt...

    ஒரு இடத்தில் மட்டும் Captain Blueberryன்னு mention இருக்கு.
    அப்புறம் Red Indians தலைவரை தேர்ந்தெடுக்கும் சண்டை சம்பந்தமான dialogue-ல, மாறி மாறி dialogue வந்த மாதிரி தோணுது. நான் தவறாகப் புரிந்திருந்தால் திருத்துங்கள்

    ReplyDelete
  45. விக்ரம் தூக்கம் தள்ள தள்ள நான்கு கதைகளையும் கேட்டு முடிந்த பின்தான் இறங்கினார்கள்.....அதும் பிரமிட் புதையல் கைல தரும்போது தூக்கம் தள்ளி லைட்ட ஆஃப் பற்றியும் விடாமல் எழுப்பி படிச்ச பின்தான் தூங்கினான் என் மகன்...அவர்கள் ஆர்வத்தை தூண்டுது....விற்பனை இனி சொல்லட்டும்......திகில் லோகோவை பாக்கைலதான் என்னவோர் உற்ச்சாகம்......உள்பக்க படங்கள் அதகளம்

    ReplyDelete
  46. வைகறைக் கொலைகள் ஓவியங்கள் அள்ளுது சார்...டைகர் புத்தகத்தை திறந்ததும் கதைப்படி முதல்ல என்கிறது மனது....அதை உறுதி செய்யுது உங்க காமிக்ஸ் டைம்....குடிகளை அப்புறப்படுத்தும் வரிகள்...டெக்ஸ் நச்

    ReplyDelete
  47. ஆகஸ்ட் மாத நமது காமிக்ஸ் புத்தகங்கள் இன்று கிடைத்துவிட்டது. நன்றி சார்.

    ReplyDelete
  48. எல்லையில் ஒரு யுத்தம் இனுடைய அட்டை படங்கள், தளபதியின் அட்டை படங்கள் செம . வைகறை கொலைகள் இன் அட்டை படம் இணை விட உட்பக்க சித்திங்கள் அருமை .

    ReplyDelete
  49. //ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஈரோட்டில் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடக்கவிருக்கும் நமது வாசகர் சந்திப்பு பற்றிய ஒரு நினைவூட்டல்! அந்தப் பக்கமாய் ஒரு visit அடிக்க முயற்சிக்கலாமே, ப்ளீஸ்! //

    Sure sir.

    ReplyDelete
  50. சார் குட்டிக் கதைகள் பிரமிட் புதையல்....ஆழ்கடல் ....யார் அவள் முடிச்சாச்சு ....மூன்றுமே அதகளம் அதனதன் பாதையில்.....குட்டி பசங்க கதைக என் மகன்களோடு திரிவதால் அந்த கதை பற்றி சொல்லவே வேண்டாம்...காட்சி வண்ணம் அசத்தல்....

    சாலையில் வந்த மங்கை இதான் என் யூகிக்க அட்டைப் படமே உதவினாலும் தாள்களை புரட்ட புரட்ட ....போதை தலை விரித்தாடும் இந்நாட்களில் ஜுனியரின் முதல் கதையே அதிரிடியாய் பாய....சும்மா விரட்டி செல்லும் மனதை சாந்தப்படுத்துது தொடரும் கையூட்டு பெற்று வேண்டா வெறுப்பா வெளிவிடும் ஷெரீப்...நாம் விக்காட்டியும் யாரோ ஒருத்தர் விக்கதான போறாங்க...அங்க வாங்கதான போவாங்க என தன்னைத்தானே சமாதானப்படுத்தி செல்வோரையும்....என்ன செய்யலாம்னு நம் மனம் தரும் தண்டனை என்ன....அதை பூர்த்தி செய்ததா கதை....வேற லெவல் சார்....சைக்காலஜியயும் கலந்தே கட்டி கதை கட்டிய விக்ரமுக்கு வாழ்த்துக்கள்....முதல் கதையே வேற லெவல்...சித்திரங்கள் பிரம்மிப்பு பளிச்...

    ReplyDelete
  51. நாளைக்கு இந்நேரம் 🤩🥰😍💐🎉

    ReplyDelete
  52. வைகறைக் கொலைகள்
    இது ஒரு Unsolved Mystery Thriller

    இந்தக் கதை 1952-ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற ஒரு நிஜமான கொடூரக் கொலை வழக்கையும் அதைத் தொடர்ந்து நடந்த நீதிமன்ற விசாரணைகளையும் அடிப்படையாகக் கொண்டது.

    ‎பிரிட்டிஷ் விஞ்ஞானி, அவரது மனைவி மற்றும் 10 வயது மகள் ஆகிய மூவரும் பிரான்சின் 'லூர்ஸ்' என்னும்பகுதியில் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள்.

    ‎இந்தக் கொலை நடந்த இடத்திற்கு அருகில் பண்ணை வைத்திருந்த காஸ்டன் டொமினிசி என்ற 80 வயது முதியவர் மீது காவல்துறையின் சந்தேகம் திரும்புகிறது (படத்தின் அட்டையில் கைகளில் முகத்தை தாங்கி அமர்ந்திருக்கும் முதியவர்தான் காஸ்டன்).

    ‎போதிய தெளிவான சாட்சியங்கள் அல்லது பலமான ஆதாரங்கள் இல்லாத நிலையிலும், குடும்ப உறுப்பினர்களின் முரண்பாடான வாக்குமூலங்கள் மற்றும் காவல்துறையின் கடுமையான அழுத்தங்களால் காஸ்டன் டொமினிசி குற்றவாளியாக அறிவிக்கப்படுகிறார்.

    ‎அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

    ‎சந்தேகத்திற்கு இடமான ஒரு வழக்கில், ஊடகங்களும் காவல்துறையும் ஒரு முதியவரை எவ்வாறு குற்றவாளியாக்க முயல்கின்றன என்பதையும், இதில் மறைந்துள்ள உண்மைகளையும் இந்த புத்தகம் சுவாரஸ்யமாக விளக்குகிறது.

    ‎பொறுமையாக படித்தால், Rs.65/- ரூபாயில் நல்லா classic Alfred Hitchcock கிரைம் திரில்லர் படம் பார்த்த திருப்தி கிடைக்கும்.

    ReplyDelete
  53. ஈரோடு முத்து & லயன் வாசகர்கள் சந்திப்பு-

    1. கிராஃபிக் நாவல் மறுபடியும் வர வாய்ப்புகள் உள்ளன
    2. டைகர் 60 வருட சிறப்பாக அவரின் சிறுகதை வண்ண தொகுப்புபாக வர உள்ளது
    3. மினி டெக்ஸ் மீண்டும் வர வாய்ப்பு இருக்கிறது.
    4. இளம் டெக்ஸ் மாதம் மாதம் ஒரு கதை வெளியிடலாமா என்ற கேள்விக்கு வழக்கம் போல் நோ என்று பலர் சொல்லி முழுகதைகளாக மட்டும் கொடுங்கள் என்றார்கள்.
    5. கார்ட்டூன் அதிக பட்சம் வருடம் 4 கதைகள் மட்டும் வேண்டும் என்று பலரின் விருப்பம்.
    6. பவுன்சர் கதை 425 ரூபாய் என்றால் நண்பர்கள் வாங்க விருப்பம் இருக்கிறதா என்று ஒரு கேள்வி கேட்டார், பலர் அதற்கு விருப்பம் தெரிவித்தார்கள்.
    7. ரூபினி புத்தக திருவிழாவில் பெரியதாக சோபிக்கவில்லை என்பதால் அவரை அடுத்த வருடம் சேர்கலாமா என்று ஒரு கேள்வி, அதிக பேர் வேண்டும் என்றார்கள். மக்களே உங்களால் முடிந்த அளவு சோசியல் மீடியாவில் நமது காமிக்ஸ் பற்றி எழுதுங்கள்.
    8. சோடாவின் புதிய கதைகள் புதியவர்களை கொண்டு உருவாக்கிய கதை வேண்டுமா என்று கேட்டதற்கு வேண்டும் என்று பலர் சொன்னார்கள்.
    9. டெக்ஸ் மாதம் ஒரு கதை கண்டிப்பாக வேண்டும் என்பது பலரது கோரிக்கை.
    10. இ (கி)ளவரசி அடுத்தவருடமும் வருவார் என்று நினைக்கிறேன், எனக்கு வேண்டாம் என்று சொன்னேன்.
    11. ஆசிரியர் ஆன்லைன் சேல்ஸ் குறைந்து விட்டதாக சொன்னார், நண்பர்கள் தாங்கள் படித்த கதைக்கு ஒரு சில வரியாவது அவரவர் சோசியல் மீடியாவில் எழுத சொன்னர்.
    12. சாகோர் வருடம் எத்தனை கதைகள் என்ற கேள்விக்கு பலரின் பதில் 2 என்று நினைக்கிறேன்.
    13. டெக்சின் மாறுபட்ட கதைகள், நித்திரை மறந்த நித்திரையன் போன்ற கதைகள் வருடம் 1,2 ரெண்டு கதைகள் பற்றிய கேள்வி இருந்தது, அநேகமாக இது போன்ற வித்தியாசமான கதை வருடத்திற்கு ஒன்று மட்டும் வர வாய்ப்புள்ளது.
    14. ராபின் கதைகள் முடிந்து விட்டதால் புதிய க்ரைம் நாயக அல்லது நாயகி கதை ஏதாவது வரவாய்ப்புள்ளது.
    15. டெக்ஸ், டைகர்,டின் டின் கதைகள் + மற்ற எல்லா கதைகளும் புதிய நாயக நாயகியர்களை கொண்டு ஒரு காமிக்ஸ் அட்டவணை கொடுத்தால் எப்படி இருக்கும் என்பதற்கு பெரியதாக ஆதரவு இல்லை 🙁
    16. சாம்பலின் சங்கீதம் வாங்கி படித்தவர்கள் எத்தனை பேர் என்பதற்கு வந்து இருந்தவர்களில் பலர் கை தூக்கினார்கள், ஆசிரியரை இது சந்தோசம் கொள்ள செய்தது.

    இதில் ஏதாவது மாற்றம் இருந்தால் ஆசிரியரே பொறுப்பு 🏃 😉

    22 வயது இளைஞர் ஈரோடு ஸ்பெஷல் மாயாவியின் கதையை 82 வயது இளையருக்கு கொடுத்தது விழாவின் சிறப்பு.

    நண்பர் ரகுவின் காமிக்ஸ் காதல் கண்களை ஈரமாக்கியது.

    களத்தில் சிறப்பாக காமிக்ஸ் பணியாற்றிய ரம்யா மற்றும் கோவிந்தன், ஹமீத் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி மற்றும் பாராட்டுகள்.

    காலேஜ் முதல் வருடம் செல்லும் இளைஞர் ஸ்மர்ப் கதையை நண்பர்களுக்கு அறிமுக படுத்தி அவர்கள் ஸ்மர்ப் ரசிகர்களாக மாற்றியது பாராட்டுக்குரியது. தற்போது நமது அலுவலகத்தில் ஒரே ஒரு ஸ்மர்ப் கதைதான் உள்ளது, அவன் ஸ்மர்ஃப்பின் மற்றகதைகளை தேடி வருகிறான்.

    ஆசிரியர் ஸ்மர்ப் கதையை மீண்டும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

    விழா 11 மணிக்கு தொடங்கியது என்றாலும் சரியாக 2 மணிக்கு முடிந்து விட்டது; இது பல நண்பர்கள் தங்கள் ஊருக்கு நேரத்தோடு சென்று நாளை வேலைக்கு செல்ல வசதியாக இருக்கும். சொன்ன நேரத்தில் விழாவை முடிந்தது இன்னும் சிறப்பு, மகிழ்ச்சி.

    விழாவை சிறப்பாக திட்டமிட்டு நடத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி மற்றும் பாராட்டுகள். சாப்பாடு அருமை.

    ReplyDelete
  54. எல்லையில் ஒரு யுத்தம் classic

    ‎மெக்ஸிகோவிலிருந்து வந்த ஒரு கயவர் கும்பல் ஒரு நபரை
    ‎ வெறியுடன் விரட்டுகிறது.வழியிலேயே எதிரிகளின் குண்டுகளுக்கு இரையாகித் தீவிரமாகக் காயமடைந்து குதிரையிலிருந்து கீழே விழுகிறான்.
    ‎உயிருக்குப் போராடும் நபர் டெக்ஸிடம் தன் இறுதி மூச்சில்
    ‎"பாயாட் கோட்டை கமாண்டரிடம் போய் சொல்லுங்கள்... டோராடோ பண்ணை..."என்ற கவலை சொல்லிவிட்டு இறந்து போகிறார்.

    ‎டெக்ஸ் இறந்தவர் உடலையும் அவரது தகவலையும் எடுத்துக்கொண்டு பாயாட் கோட்டைக்கு சென்றவுடன்,

    ‎இறந்தவர் லெப்டினென்ட் பகோ மோரெனோ என்பதும், அவர் மெக்ஸிகோவில் ரகசியத் துப்பறியும் விசாரணையில் ஈடுபட்டிருந்தார் என்பதும் , மெக்ஸிகோ எல்லைப் பகுதியில் கள்ள நோட்டு கும்பலின் ரகசியத்தைக் கண்டுபிடித்த லெப்டினென்ட் மோரெனோ, எதிரிகளால் துரத்தப்பட்டு சுடப்பட்டு இருக்கிறார் என்று தெரிய வருகிறது. தெரியவருகிறது.

    ‎அந்தப் பகுதியில் பெருமளவில் போலி கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகவும் ,அந்தப் போலி நோட்டுகள், அசல் ஃபெடரல் பேங்க் நோட்டுகளைப் போலவே துல்லியமாக அச்சிடப்பட்டுள்ளன என்பதும் தெரிய வருகிறது.

    ‎அசல் பேங்க் நோட்டுகளை அச்சிடப் பயன்படும் இரண்டு அச்சு மேட்ரிஸ்கள்
    ‎ ஆறு மாதங்களுக்கு முன்பு அச்சுக்கூடத்திலிருந்து காணாமல் போயிருப்பது தெரியவருகிறது.

    ‎இந்தக் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்தால், அமெரிக்கப் பொருளாதாரமே சீர்குலைந்துவிடும் என்ற ஆபத்தை ராணுவக் கர்னல் டெக்ஸிடம் விளக்குகிறார்.

    ‎அதன் பிறகு எப்போதும் போல கள்ள நோட்டு கும்பலை பிடிக்க பொறுப்புகளை தன் கையில் எடுத்துக்கொண்டு tex and kit களத்தில் இறங்குவது தான் கதை.

    ‎பிரிண்டிங் குவாலிட்டி இந்த முறை மிக அருமையாக , பளிச்சென்று இருப்பது போல் தெரிகிறது.



    ReplyDelete
  55. Yellayil Oru Yuddham was amazing sir - breezy and full of action. Long time since I read a comic and it was worth the time. Just so relaxing ! Thank you so much for bringing it back. For me it was a first read.

    ReplyDelete
    Replies
    1. யெஸ் சார் - பட்டாசாய் பர பரவென தெறிக்க விட்ட ஆக்ஷன் மேளா!

      Delete
  56. *வைகறை கொலைகள்*

    ஜம்போ காமிக்ஸில் இது வர போகிறது என அறிவித்த நேரத்திலிருந்து கதை தலைப்பு, முன்னட்டை மற்றும் டீசர் செய்த சித்தர பாணியும் ஈர்ப்பை குடுத்து கொண்டு இருந்தது. எப்போ எப்போ என வாசகர்கள் அவ்வப்போது கேட்பது வழக்கம்.
    ஒருவழியாக Fab Five-ல் வந்ததில் மகிழ்வாகிற்று

    சித்திர பாணி மிக மிக பிடித்திருக்கிறது.
    *நடந்திட்ட நிகழ்வுகளை உணர்ச்சி பூர்வமாக நமக்கு தருகிறது இந்த சித்திரங்கள்.*

    ஸ்பாய்லர் பிடிக்காது என்பதால் எடிட்டர் சார் இது பற்றி எழுதியதை கூட படிக்கலை
    கதை படித்து முடித்து படித்தேன் இது கதையல்ல நிஜத்தின் புலனாய்வு என்று சொல்லி இருக்கிறார்.
    அதே அதே என மனம் சொன்னது

    நடந்த விசயத்தை அப்படியே குடுத்துள்ளார்கள், ஆனால் அயற்சி ஏற்படுத்தாமல் செல்கிறது.
    படிக்கும் நம்மை சம்பவங்களுடன் பயணிக்கும் விதமாக படைத்துள்ளார்கள். அருமை
    காட்சிகள் ஊடே பயணிக்க பயணிக்க பல கேள்விகள் எழுகிறது.
    நிஜம் இதுதான் என ஒன்றை சொல்லி பின்னர் மாற்றி மாற்றி குழப்பங்கள் ஏற்படுத்தினாலும், சரியான அக்கப்போரப்பா இவர்களுடன் என நீதிபதியையே கதர வைத்தாலும் குற்றவாளி இவர் தான் என சிறையில் தள்ளி விடுகின்றனர். ஆனாலும் காலங்கள் பல கடந்தும் உண்மையில் நடந்தது என்ன? என்ற கேள்விக்கு விடையறியாமலே போய் விடுகிறது.


    *நேரம் செல்லச் செல்ல .... தடங்கள் அழியும்*... சாட்சிகள் தடுமாறுவார்கள்!
    உண்மை ஆவியாகி விடும்!*
    *
    என்பது பொருத்தமாகி விடுகிறது.

    வசனங்கள் நன்றாகவே வேலை வைத்துள்ளன என்பது புலப்படுகிறது.
    பாராட்டுகள் சார். Have done an awesome job.

    ReplyDelete
  57. **** வைகறைக் கொலைகள் *****

    முக்கால் நூற்றாண்டுக்கு முன்பு பிரான்ஸில் நிஜத்தில் நடந்த குற்றச் சம்பவம் அலங்காரங்கள் ஏதுமின்றி இயல்பாய் காமிக்ஸ் வடிவில் தரப்பட்டுள்ளது!

    சுற்றுலாப் பயணிகளாய் பிரான்சுக்கு வந்திருந்த ஒரு வெள்ளையர் குடும்பம் இரவில் சுட்டுக் கொல்லப்படுகிறது. பிரான்சின் ஒரு ஒதுக்குப்புறமான கிராமத்தில் பலியான அந்த மூவரில் ஒரு 10 வயதுச் சிறுமியும் உண்டு.​ இந்தப் படுகொலைகளைச் செய்தது யார்.. கொலையாளியின் நோக்கம் என்ன என்ன என்பதையெல்லாம் கதையைப் படித்துத் தெள்ளத் தெளிவாய் தெரிந்து கொள்ளலாமா என்றால் அதுதான் இல்லை! ஆனால் இறுதியில் நாமே ஒரு யூகத்துக்கு வந்து விடும் படியாகத் தான் கதையை நகர்த்தியிருக்கிறார்கள்!

    போலீஸாரின் சந்தேக பார்வையில் சிக்கும் ஒரு கிராமத்து குடும்பத்தினரின் மொத்த உறுப்பினர்களும் இந்த வழக்கிலிருந்து தப்பிக்க போலீசாரிடம் அண்டப் புளுகு, ஆகாசப் புழுகை அள்ளி விடுவதும், போலீஸார் மண்டை குழம்பி நிற்பதும் ரசிக்க வைக்கிறது!

    சித்திரங்கள் சிறப்பு! அருமையான மொழிபெயர்ப்பே பலம்!
    வசனங்கள் சற்று கூடுதலாக இருப்பது சற்றே வேகத்தடைதான் என்றாலும், இந்தக் கதைக்கு இப்படி இருப்பது தான் பொருந்திப் போகிறது!

    மிகக் குறைந்த விலையில் ஒரு வித்தியாசமான கதை - சற்றே வித்தியாசத்தை விரும்புபவர்களுக்கு மட்டும்!

    🤴

    ReplyDelete
    Replies
    1. //போலீஸாரின் சந்தேக பார்வையில் சிக்கும் ஒரு கிராமத்து குடும்பத்தினரின் மொத்த உறுப்பினர்களும் இந்த வழக்கிலிருந்து தப்பிக்க போலீசாரிடம் அண்டப் புளுகு, ஆகாசப் புழுகை அள்ளி விடுவதும், போலீஸார் மண்டை குழம்பி நிற்பதும் ரசிக்க வைக்கிறது!//

      ஆமாங்க சகோ

      Delete
    2. //சித்திரங்கள் சிறப்பு! அருமையான மொழிபெயர்ப்பே பலம்!//
      +9

      Delete
    3. சிறப்பு மிகவும் சிறப்பான விமர்சனம்

      Delete
  58. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
    Replies
    1. சார், தெரியும் சார்… ஒவ்வொரு வாரமும் நீங்க வந்து சொல்லுறதால calendar-ஐ தூக்கி எறிஞ்சுட்டோம். 😂

      Delete
  59. //போலீசாரின் சந்தேகப் பார்வையில் சிக்கும் ஒரு கிராமத்து குடும்பத்தினரின் மொத்த உறுப்பினர்களும் இந்த வழக்கிலிருந்து தப்பிக்க அண்டப் புழுகு ஆகாசப் புழுகை அள்ளி விடுவதும் போலீசார் மண்டை குழம்பி நிற்பதும் "ரசிக்க" வைக்கிறது//

    கதையும் மொழிபெயர்ப்பும்ரசிக்க வைக்கிறதுதான்!'

    ஆனாக்கா அவனுக மேல கொல வெறி வருது.நமக்கே இப்படின்னா நிமிசத்துக்கு நிமிசம் இவனுக மாறுவதை பார்க்கும் போலீசாருக்கும் நீதிபதிக்கும் என்ன மாதிரி வெளிவந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. // ஆனாக்கா அவனுக மேல கொல வெறி வருது.நமக்கே இப்படின்னா //

      இது தான் கதையின் வெற்றி சார்.

      Delete
  60. ஆமாங்க சார், ஒரு கேரக்டர் ஒரு தகவல் சொல்லிட்டு உடனேயே அது மாத்தி பேசுறாங்க. அதே கேரக்டர் தான் இதுவாநாம்தான் தப்பா புரிஞ்சுகிட்டோமாஅப்படினு குழம்பற அளவுக்கு கேரக்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளனர்
    மொத்தத்தில் கிராபிக்.நாவல்களுக்கு உரிய அனைத்து அம்சங்களும் சிறப்பாக அமைந்துள்ளன.. கி.நா. பிரியர்களுக்கு செம விருந்து இந்த வைகறை கொலைகள். ரசிச்சு படிக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. உண்மை சார். ரொம்ப ஈடுபாடுடன் படித்து இருக்கீங்க.

      Delete
  61. Both Tex and Blueberry albums are amazing sir ..

    ReplyDelete
  62. வாழ்த்துக்கள் விக்ரம் அரவிந்த்

    ReplyDelete
  63. இன்றைய பதிவில் ஈரோடு புத்தகவிழா அலசல் இருக்குமா குமார்?

    ReplyDelete
    Replies
    1. அது மட்டும் இல்லாமல் அட்டவணை 2027 பற்றியும் இருக்கும்

      Delete
  64. சுதந்திர தின வாழ்த்துக்களுடன் உடன் ஈரோடு புத்தக திருவிழா விற்பனை நாயகர்கள்/நாயகிகள் பற்றிய அலசல் பதிவுக்கு ஆர்வமுடன் காத்திருக்கிறோம் சார்.

    ReplyDelete
  65. அப்ப நம்ப தலைவர் fail ஆ 😉

    ReplyDelete
  66. //அப்ப நம்ம தலைவர் fail ஆ//
    நம்ம தலீவர் எப்பவுமே passதான்

    ReplyDelete
  67. குமார் சார. . இன்னும் காணாமே

    ReplyDelete
  68. கடந்த இரண்டு வாரங்களாக அராத்துக்கள் அடங்குவதில்லை கதையுடன் உலாவிவருகிறேன்! இந்த கதையை இரண்டு முறை படித்துவிட்டேன், கதையில் பலவிஷயங்கள் மிகவும் அழகாக சொல்லி இருக்கிறார்கள்! இந்த கதையில் டமால் டூமில் நக் சத் எதுவும் இல்லை ஆனால் கதை பட்டாசாக செல்கிறது! கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு விதத்தில் என்னை கவர்ந்து விட்டார்கள்; இறுதி பக்கத்தில் இறந்து போன தங்கள் நண்பியை பற்றி நினைவு கூறும் கூட்டத்தில் பேசும் வசனம் உண்மை, இறுதி காலத்தில் நாமும் இது போலவே இந்த உலகத்தை விட்டு போக வேண்டும் என்று நினைவுறுத்தியது!

    இந்த இளமையான அராத்துகள் கதை அடங்க கூடாது, அடுத்த வருடமும் இந்த அராத்துக்கள் இதே தடத்தில் தேவை சார்.

    ReplyDelete
    Replies
    1. நல்லா ரசித்து உள்ளீர்கள் என்பது தங்கள் எழுத்துகளில் புரிகிறதுங்க, சகோ

      Delete
    2. //இந்த இளமையான அராத்துகள் கதை அடங்க கூடாது, அடுத்த வருடமும் இந்த அராத்துக்கள் இதே தடத்தில் தேவை சார்.//

      +9

      Delete
  69. வருமா குமார் வருமா இந்த வாரமாவது பதிவு வருமா குமார்!

    ReplyDelete
    Replies
    1. வரும் என்று நம்புவோம். பரணி

      Delete
    2. கண்டிப்பாக வரவேண்டும் குமார்.

      Delete
  70. //இந்த இளமையான அராத்து கள் கதை அடங்கக் கூடாது. அடுத்த வருடமும் இந்த அராத்து கள் இதே தடத்தில் அடுத்த வருடமும் இந்த அராத்து கள் இதே தடத்தில் தேவை சார்//

    ReplyDelete
  71. வரும் வரும். வரூம்ம்ம்....ம்ம்ம்

    ReplyDelete
  72. இந்த மாதம் இந்த அராத்துகள் டெக்ஸ் & டைகர் போன்ற பசங்களை அந்த பக்கம் போய் ஓரமாக விளையாடுங்கள் என்று சொல்லி விட்டார்கள்.

    ReplyDelete