Wednesday, July 29, 2026

ஆஹா ஆகஸ்ட் !

 நண்பர்களே, 

வணக்கம். ​ஜூலை இறுதியிலேயே ஒரு ஆரவார ஆகஸ்ட்  நமக்குப் புலந்துள்ளது. முன்பெல்லாம் இதுவே கூட ஒரு கொண்டாட்டத்துக்கான காரணமாக இங்கே நமக்கு அமைந்துட்டதுண்டு. ஆனால் இப்போதோ... ஆளில்லாத டீ கடையில் ஆத்துவது ராகி மால்ட்டாக இருந்தால் என்ன? பூஸ்ட்டாக இருந்தால் என்ன? கட்டன்சாயாவாக இருந்தால் என்ன ? என்பதே நிலவரம்! Anyways, ஒரு டஜன் ஆண்டுகளுக்கு முன்பாக இதே ஆகஸ்ட்டில், இதே ஈரோடு புத்தக விழா தருணத்தில், டெக்ஸ் & டைகரின் இதழ்கள் ஒருசேர வெளியாகி பட்டையைக் கிளப்பியது இந்த நொடியில் நினைவில் நிழலாடுகிறது. இதோ இன்னொரு ஆகஸ்ட்டில் கலக்கலாய் 'தல' & 'தளபதி' களம் காண்கிறார்கள். But இந்த மாதத்தின் நிஜமான ஹீரோக்கள் என்று சொல்வதாயின், இரு அணிகளைத் தான் நான் சுட்டிக்காட்டியாக வேண்டும்.

​முதலாவது, நமது பைண்டிங் டீம். ஈரோடு புத்தக விழா - வரும் வெள்ளி துவங்கவிருப்பதால், புக்ஸ் சகலமும் அதற்கு முன்பாகவே உங்கள் கைகளை எட்டிப்பிடிக்க வேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தது. Which meant despatch had to be for the 29th.... ஆனால் பணிகளோ 28-ஆம் தேதி காலை வரை அச்சுக்கூடத்திலேயே நிலைகொண்டிருந்தன ! ஒற்றை நாளில் ஐந்து இதழ்களைன  அசாத்தியமாய் பைண்டிங் செய்து நமது திட்டமிடலை ஜெயமாக்கிய முழுப்பெருமை பைண்டிங் நண்பருக்கே சேரும்.

Credit # 2 belongs to our entire team. கடந்த ஒரு வாரமாகவே டைப்செட்டிங்கிலும், எடிட்டிங்கிலும்  ஞாயிற்றுக்கிழமை கூட அடித்துக் கொண்டிருந்த கர்ணங்கள் சொல்லி மாளாது...​And, சகலத்தையும் ஒருங்கிணைக்க மைதீன் TVS XL-ன் டயர்கள் தேயும் அளவிற்கு சிவகாசியை அளந்து கொண்டிருந்தான். தயாரிப்புப் பணிகள் சகலமும் முடிவடைந்து டெஸ்பாட்ச்சுக்கு புக்ஸ் வந்தபோதுதான் உச்சக்கட்ட சிக்கல்களே!

**​ரெகுலர் சந்தாவில் 'GEN Z' தடம் வேணாம் என்று சொல்வோர்க்கு SINGLES தடம்.

**​இன்னொரு பக்கமோ, 'FAB 5' தனித்தடத்தின் முன்பதிவுகளில் சிலர் பங்கேற்றிருந்தனர், சிலர் வேணாமென ஒதுங்கியிருந்தனர்.

**​அதற்கப்புறம் இன்னொரு தனித்தடமான 'டெரிஃபிக் டெக்ஸ்'க்கு 'O' போட்டிருந்தோர் சிலர், போடாதோரும் சிலர்...!

​**அதற்கும் அப்புறமாய், அந்த 6 AI. புக்ஸ் வேணும் என ஆர்டர் தந்திருந்தோர் இன்னொரு டீம்.

​ஆக, "ஆட்டை தூக்கி குட்டியில் கொஞ்சம், குட்டியை தூக்கி பட்டியில் கொஞ்சம்" என்று போட்டு பேக்கிங் செய்வதற்குள் இன்று ரணகளமாகிப் போய்விட்டது! ​சகலத்தையும் செய்து கொண்டிருக்கும் போதே இன்னொரு பக்கம் சரமாரியாய் உங்களது போன் அழைப்புகள். And இன்னொரு பக்கமோ, 'டெக்ஸ் & டைகர்' என்ற மாதத்தின் உஷ்ணம் முகவர்களையும் எட்டிப்பிடித்திருக்க, அவர்களுமே "இன்றைக்கே டெஸ்பாட்ச் பண்ண முடியுமா?" என்ற ரீதியில் செல்போன்களை தெறிக்க விட்டுக்கொண்டிருந்தார்கள். So கணிசமான நாட்களுக்கு பின்பாய் ஒரு மெய்யான திருவிழாவை ஆபீஸில் தரிசித்த அனுபவம் எனக்கு. சகலத்தையும் திறன்படச் சமாளித்த ஜோதி & front desk பெண்களுக்கு ஒரு கைதட்டல் ! 

இந்த மாதத்தில் ஒரு விசித்திர நிகழ்வும் உண்டு. என்னவென்கிறீர்களா?

​பொதுவாய் லயனுக்கு இரண்டோ மூன்றோ வெளியீடுகள் இருப்பதுண்டு. அப்புறம் 'GEN Z' இதழானது லயன் மினியில் வந்துவிடும். And சில தருணங்களில் முத்து காமிக்ஸ் இருக்கும், சில மாதங்களில் இல்லாதும் போகும். ஆனால் முதல்முறையாக இந்த மாதம் 

  • 2 இதழ்கள் 'லயன் லைப்ரரி'யில், 
  • 1 இதழ் பழைய 'ஜம்போ' லோகோ சுமந்து, 
  • இன்னொரு இதழ் 'லயன் மினி' லோகோவோடு, 
  • And 'டைகர்' வந்திருப்பதோ 'முத்து காமிக்ஸ்' லோகோவோடு.

​ஆக, லயன் ரெகுலர் தடத்திற்கு இடமின்றிப் போன ஒரு அதிசய மாதம் இது.

​Honestly, இந்த மாத இதழ்களுள் எதை முதலில் படிப்பது என்ற கேள்வியை நமது வாட்ஸ்அப் கம்யூனிட்டியில் உங்களிடம் வைத்திருந்தபோது, 'டெக்ஸ் & டீம்' செம லீடிங்கில் பயணித்திருப்பது புரிந்தது. And trust me when I say this, புக்ஸ் கையில் கிடைக்கும்போது உங்களது எதிர்பார்ப்புகள் இம்மியும் பிசகி இருக்காது என்று நம்பலாம். எப்போதுமே கலரில் டெக்ஸ் ஆல்பங்கள் பட்டையைக் கிளப்புவது வாடிக்கையே. ஆனால் இம்முறை எல்லாமே எக்ஸ்ட்ரா ஸ்பெஷலாக  எனக்குத் தென்படுகிறது ! Oh yes, இதை ஒரே புக்காக ஹார்ட் கவரில் போட்டிருந்தால்...??? என்ற ஒரு சோககீதம் தவறாமல் ஒலிக்கும் என்பதில் எனக்கு ஐயமே கிடையாது. ஆனால் எனது துவக்கத் திட்டமிடலே வேறு ஆச்சே ? இவையெல்லாமே மறுபதிப்புகள் தானே என்பதால், இந்த மாதம் முதல் அத்தியாயமும், அடுத்த மாதம் இரண்டாவது அத்தியாயமும் வெளியிட்டால் சிறப்பு என்பதாகவே பிளான் பண்ணியிருந்தோம் plan பண்ணியிருந்தோம். And போனலியில் நாம் தெரிவித்திருந்ததுமே அவ்விதமே.ஆனால் அறிவிப்புக்குப் பிற்பாடு "மணந்தால் மகாதேவி, போட்டால் ஒரே மாதத்தில்" என்று நீங்கள் தீர்க்கமாய் சொல்லிவிட்ட பின்னே, அடுத்தடுத்த மாதங்களுக்கான இதழ்கள் என்பதை மாற்றி ஒரே மாதத்தில், என்று அமைத்துக் கொள்ள வேண்டிப்போனது. ஆனால் போனெலியிடம் போய் - இல்லே... ரெண்டு புக்கா போடலீங்க ; ஒரே புக்கா போடுற பிளான் இப்போ இருக்கு !" என்று சொன்னால் மண்டையில் குட்டு வைப்பார்கள் ! So வாங்கும் குட்டை உங்களிடம் வாங்கிட்டா போச்சு என்றபடிக்கே 2 இதழ்கள் என்ற concept -ல் உறுதியாக நின்று விட நேர்ந்தது ! இங்கே மிகப்பெரிய பிளஸ்ஸாக எனக்குப் படுவது, இரண்டு அட்டைப்படங்கள் அட்டகாசமாய் கிடைத்திருக்கும் சமாச்சாரமே. என்னதான் இணையத்திலும் போனிலும் நான் upload செய்துள்ள சித்திரங்களையும், அட்டைப்படங்களையும் நீங்கள் ரசித்திருந்தாலுமே, புத்தகத்தை நேரில் பார்க்கும்போது அது முற்றிலும் வேறொரு உச்சத்தைக் கண்ணில் காட்டப்போவது உறுதி!


And எனக்கெல்லாம் இந்தக் கதை, தலைப்பைத் தாண்டி துளியும் நினைவே இல்லை என்பதால், இதனுள் பணி செய்வது செம refreshing-ஆக இருந்தது. கம்யூனிட்டியில் ஏற்கனவே நான் தெரிவித்திருந்தது போல, பழைய மொழிபெயர்ப்பை 90 விழுக்காடு தொடர்ந்திருக்கிறோம் ; தட்டையாகத் தென்பட்ட ஏரியாக்களில் மட்டும் எக்ஸ்ட்ரா எண்களைப் போட்டிருக்கிறேன்.​"அது எப்படி நீ சேர்க்கப்போச்சு? " என்று ஒரு பஞ்சாயத்தைக் கிளப்புவதாக இருந்தால் — most welcome ! காற்றாடும் நாயர்கடை, பஞ்சாயத்திலாவது சுறுசுறுப்பானால் no complaints at all!

​இந்த மாதத்தின் நிஜமான highlight என்று எனக்கு பர்சனலாக மனதில் படுவது 'வைகறைக்  கொலைகள்' தான். எனது ஞாபகம் சரியாக இருக்குமெனில், இது அநேகமாய் 2020-ல் அல்லது 2021-ல் வெளிவந்திருக்க வேண்டிய இதழ். அட்டைப்படமெல்லாம் அன்றைக்கே அடித்துப் போட்டாச்சு. இந்த ஆல்பத்தில் நான் ஆர்வம் காட்டியிருந்ததே, அந்த black & grey shades கலந்த சித்திர பாணியினால்தான் பிரதானமாய்! இது பிரான்ஸில் 1952-ல் நடந்திருந்ததொரு நிஜ சம்பவத்தின் சித்திரப் பார்வை. இங்கே மிகையோ கற்பனையோ கிஞ்சித்தும் கிடையாது. ​சுற்றுலாப் பயணிகளாய் பிரான்சுக்கு வந்திருந்த ஒரு வெள்ளையர் குடும்பம் இரவில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறது. பிரான்சின் கிராமப்புறத்தில் பலியான அந்த மூவரில் ஒரு 10 வயதுச் சிறுமியும் சேர்த்தி.​இந்தப் படுகொலைகளின் காரணகர்த்தா யார் ? என்ற விசாரணையும், அந்நாட்களின் கோணங்கித்தனமான புலனாய்வு முறைகளும், இன்றளவிலும் பிரான்சின் காவல்துறை மீதான ஒரு கருப்புப் புள்ளியாகவே தொடர்கிறது. 'The Dominici Affair' என்ற பெயரில் 1973-ல் இந்த விவகாரம் ஒரு திரைப்படமாகவும் வந்துள்ளது.

ஒரிஜினலாகவே ஆறோ ஏழோ ஆண்டுகளுக்கு முன்பாக இது வெளியாக இருந்த மாதத்தில் எடிட்டிங்கிற்கென எடுத்து வைத்தபோது, தமிழாக்கம் ரொம்பவே கிறுகிறுக்கச் செய்தது. அன்றைக்கே அதனை முழுசாய் ரிப்பேர் செய்திட எனக்குப் பொறுமையும் இருந்திருக்கவில்லை, அவகாசமும் இருந்திருக்கவில்லை. So சாவகாசமாய் பின்னே பார்த்துக்கொள்ளலாம் என்றபடி ஓரம் கட்டியிருந்தேன். அப்புறமாய் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே, 2024-ல் இந்தக் கதையின் நினைவு மறுக்கா எழுந்தது. "அட்டைப்படமெல்லாம் ரெடியாக இருக்கிறதே! மொழிபெயர்ப்பை மட்டும் செய்து முடித்துவிட்டால் ஏதேனும் ஒரு புத்தக விழாவில் இறக்கிவிடலாமே..." என்ற எண்ணத்தில், அந்நேரம் நம்மோடு கரம் கோர்த்திருந்த ஒரு புது எழுத்தாளரிடம் இதை ஒப்படைத்திருந்தோம். அவர் கணிசமாய் தமிழில் எழுதிக்கொண்டிருப்பவர்தான். So 52 பக்கங்கள் கொண்ட இந்த ஆல்பத்தைக் கையாள்வதில் பெரிதாய் சிரமங்கள் இருந்திருக்கக் கூடாது என்றே எதிர்பார்த்திருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாய் அவராலும் இந்தக் கதைக்கு நியாயம் செய்திட முடியவில்லை. So உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக - இரண்டாவது முறையாகவும் ஒரு மொழிபெயர்ப்பைப் பெற்ற பின்னரும், அந்தக் கதையைப் பரணுக்கே அனுப்ப வேண்டிப் போனது. "சரி, இதற்குமேலும் போட்டு ஜவ்வு இழுத்தால் வேலைக்கே ஆகாது" என்ற எண்ணத்தில் வம்படியாக Fab 5-ல் இதனை நுழைத்திருந்தேன் ! 

​And கதையை எழுதக் கையில் எடுத்த பிற்பாடுதான் நிறைய விஷயங்கள் புரிபட்டது. இது மாமூலான ஒரு கிரைம் த்ரில்லரோ, கிரைம் நாவலோ அல்லவே அல்ல! நிஜத்தின் பிரதிபலிப்பு. And அந்த நிஜத்தின் பெரும்பகுதி ஒரு கிராமத்துப் பெருங்குடும்பம். அந்தக் குடும்பத்தின் அங்கத்தினரின் மத்தியில் நிலவிய கோபதாபங்கள், விருப்பு வெறுப்புகள், சகலமும் வெவ்வேறு ரூபங்களில் வெடித்துக் கிளம்பும்போது, அந்தக் கேஸ் ரங்கராட்டினம் சுற்றுவது போல் புலனாய்வாளர்களைக் கிறுகிறுக்கச் செய்திருக்கிறது. பேனா பிடித்த என்னையுமே குவாட்டர் அடித்த கொரில்லாவாய் கிறங்கிப் போகவே செய்தது!இது ஒரு நிஜ வாழ்க்கை விவகாரம் என்பதால், அந்தப் புலனாய்வில் அரங்கேறிய சமாச்சாரங்களை நெட்டில் பூரணமாய் படித்துத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப கதைக்குள் பயணிக்க ஆரம்பித்தபோது கொஞ்சமாய் தாக்குப்பிடிக்க முடிந்தது.


நிறைய வசனங்கள் இருக்கும் guys!

​And ஜேம்ஸ் பாண்ட் பாணியில் டமால்-டுமீல் அதிரடிகளெல்லாம் மருந்துக்கும் இராதுதான்....! அதேபோல, ஏகப்பட்ட முன்னேற்றங்கள் கண்டிருக்கும் இன்றைய நாட்களில், 75 ஆண்டுகளுக்கு முன்பான புலனாய்வு வழிமுறைகள் நமக்கு கிச்சுகிச்சு மூட்டவும் செய்யலாம்தான். ஆனால், அந்தக்காலகட்டத்தில் அவர்களுக்குச் சாத்தியப்பட்டிருந்த டெக்னாலஜியைக் கொண்டு அவ்வளவே முடிந்திருந்தது. ​So, சித்திரங்களை ரசித்தபடியே, வரலாற்றுக்குள் புதைந்து கிடக்கும் ஒரு மர்மத்தின் மத்தியில் உலா போகத் தயார் எனில், ‘வைகறை கொலைகள்’ will fascinate you! மாறாக - ​"எனக்கு இந்த ராவடியெல்லாம் வேணாம்; சிம்பிளா, சூப்பரா கதை இருக்கணும்" எனும் பட்சத்தில்... இது கதையே அல்ல, நிஜம்! And அதை மறந்துட வேண்டாம், ப்ளீஸ்!

​ஆகஸ்ட்டின் ஆளுமைகளுள் இன்னொரு முக்கியஸ்தர் நமது 'இளம் டைகர்'!

​ஆண்டுக்கு ஒற்றை ஸ்லாட்டில் வந்தாலும், அடுத்த ஆல்பம் வருவதற்கு முன்பாகவே முந்தைய இதழ் தீர்ந்துபோய்விடுவது இந்த ஜாம்பவானின் ஆற்றலுக்கு ஒரு testimony. ‘கரையெல்லாம் கண்ணீரே’ — நான் ஏற்கனவே சொன்னது போல, ஒரு நிஜச் சம்பவத்தின் பின்னணியில் புனையப்பட்டுள்ள கற்பனைக்கதை. இடப்பற்றாக்குறை காரணமாய் அந்த வரலாற்றுச் சம்பவத்தை விரிவாக எழுத வாய்ப்பின்றிப் போனது. ஆனால், நீங்கள் நெட்டில் தேடிப் பார்த்திட சின்னதாய்க் குறிப்பு மட்டும் தந்துள்ளோம். So, கதையைப் படித்த பிற்பாடு, மறவாமல் ஒருமுறை கூகுளின் சகாயத்தோடு கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு அவல நிகழ்வைப் பற்றித் தெரிந்துகொள்ளத் தவறாதீர்கள்! கதையைப் பொறுத்தவரை, ஒரு பழங்குடி மாந்திரீகனே இந்த ஆல்பத்தின் முதுகெலும்பு. வழக்கம் போல் கிளைமேக்ஸில் பிரசிடென்ட் லிங்கனும் தாடியைச் சொரிந்தபடியே காட்சி தந்துவிடுகிறார்; எப்போதும் போலவே 'பிங்கர்டன் ஏஜென்சி'யின் ஆலனும் சொட்டை மண்டையை ஒரு வட்டத் தொப்பியால் மறைத்தபடிக்கு ஜம்மென்று ஆஜராகிறார்! செம டிஜிட்டல் கலரிங்! வளவளவென்ற ஜவ்வுமிட்டாய் வசனங்கள் இன்றி பரபரப்பாய் நகர்ந்திடும் கதைக்களம்! So, வாசிக்க நிச்சயம் ஈர்க்கும் என்பதில் எனக்கு ஐயமே இல்லை!


And last but not least... ஜென்சியின் 'மின்னும் அசுரன் !"

​நான் ஏற்கனவே சொல்லியிருந்தது போல, இந்த குட்டி புக் சீரிஸ் நாம் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டியிருக்கவே இல்லைதான். So, இது அடுத்த ஆண்டிற்குத் தொடர்வதெல்லாம் ரொம்பவே சந்தேகம். ​Maybe, இல்லாதபோதாச்சும் ஒரு விஷயத்தின் அருமை கொஞ்சம் கூடுதலாய்த் தெரியுமோ, என்னவோ! 'ஜூனியர் டிடெக்டிவ்ஸ்' yet another குட்டி மர்மத்தைக் குதூகலமாய் முடிச்சவிழ்ப்பதை 'மின்னும் அசுரன் !' இதழில் பார்த்திடப் போகிறீர்கள்.

​எல்லா இதழ்களும் ஆன்லைனிலும் listings போட்டாச்சு! So, சந்தாவிலோ முன்பதிவுத் தடங்களிலோ இடம் பிடித்திருக்காதவர்கள்கூட 'பச்சக்'கென ஆர்டர் பண்ணிடலாம்.

https://lion-muthucomics.com/latest-releases/1485-2026-august-pack.html

Before I sign off... ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஈரோட்டில் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடக்கவிருக்கும் நமது வாசகர் சந்திப்பு பற்றிய ஒரு நினைவூட்டல்! அந்தப் பக்கமாய் ஒரு visit அடிக்க முயற்சிக்கலாமே, ப்ளீஸ்!

​Bye all, see you around! Have a great week ahead!

75 comments:

  1. வந்தாச்சு முதல்ல... ரொம்ப நாளைக்கு அப்புறம்..!

    ReplyDelete
  2. அப்படித்தான் நானும் நெனச்சேன்...

    ReplyDelete
  3. அடடே சூப்பர் சார்

    ReplyDelete
    Replies
    1. ஒரேயொரு ஊரிலே....
      ஒரேயொரு நாயர்.... !
      ஒரேயொரு நாயருக்கும்...
      ஒரேயொரு டீக்கடை ...!

      Delete
  4. செம்மையா உற்சாகம் ததும்பும் பதிவு. ஆகஸ்ட் மாதம், ஈரோடு புத்தக விழா வந்தாலே அந்த உற்சாகம் வந்து விடுகிறது.

    ReplyDelete
  5. At least with in 15😃 good evening team 👍

    ReplyDelete
  6. //சகலத்தையும் திறன்படச் சமாளித்த ஜோதி & front desk பெண்களுக்கு ஒரு கைதட்டல் ! //

    பலத்த கைதட்டல்கள் எங்களிடமிருந்து சார்

    👏👏👏👏👏👏👏👏👏

    ReplyDelete
  7. இந்த முறை Gen Z முதலில், பிறகு வைகறை கொலைகள், அப்பறம் டைகர், கடைசியாக டெக்ஸ்.

    எல்லாம் முடித்த பிறகு AI Comics. ஞாயிறு ஈரோடு. போன சண்டே வில் இருந்தே பிசி சார்.

    ReplyDelete
  8. மீ வெயிடிங் பார் வைகறை கொலைகள்

    ReplyDelete
  9. //ஆட்டை தூக்கி குட்டியில் கொஞ்சம், குட்டியை தூக்கி பட்டியில் கொஞ்சம்"//


    😂😂😂😂😂

    ReplyDelete
  10. Gen z புத்தகங்கள் கோவையில் பாதி பெற்றோர்களை கவர்ந்ததுங்க, சார்

    ReplyDelete
    Replies
    1. சப்பை சைஸ்னாலே பாதி தான் கவர்ந்திருக்கும் போல 🤔

      Delete
  11. சூப்பர் ட்ரெய்லர் 👍❤️👌.
    அனைத்து இதழ்களும் வெற்றிவைகை சூட வாழ்த்துக்கள்.
    பிறகு....
    இத்தாலியை போலவே ஒரே கதையை 2 ஆக 3 ஆக பிரித்து போடுவது என்பதற்கு நம்மவர்கள் பழகவே இல்லை.
    ஆனா நீங்கள் இந்த விசியத்தில் இன்னமுமே விடாமுயற்சியாக உள்ளீர்கள் இதுதான் ஆச்சரியமாக உள்ளது.

    ரசனை சார்ந்த விசியத்தில் ஆழ ஊன்றி பரபரத்து திளைக்கறப்ப சட்டென அவர்களை வெளியே இழுத்து போட்டு "அடுத்த மாசம் பாத்துக்கலாம்" என்பது சரி வராத ஒன்று.
    இதனால் அந்த கதை மீதே வெறுப்பு தோன்றலாம்.
    (உதாரணம் சமீபத்தில் வெளியான ராபின் 3 பாக த்ரில்லர்.)
    இன்னுமே யங் டெக்ஸை கையில் தொடாத வாசகர்கள் பலர் உண்டு.
    ஆகவே முடிந்தவரை இந்த கதைகளை பாகமாக பிரித்து போடும் திட்டத்தை கைவிடுவது நல்லது.
    அப்டியே போட்டாலும் அடுத்தடுத்த பாகங்களை அடுத்தடுத்த மாதங்களில் போட்டால் அந்த கதைகள் பலரையும் சென்றடைய வாய்ப்புகள் அதிகம்,சேகரிப்புக்கும் சிரமமில்லாது இருக்கும்.

    நன்றி 🙏

    ReplyDelete
    Replies
    1. ராபின் amongst the superhits of the year சாரே! வெறுப்பை ஈட்டிய ஒரு இதழ் கூட செமையாய் ஹிட் அடிக்குமெனில் - கறை நல்லது!

      Delete
  12. சூப்பர் பதிவு எடிட்டர் சார்! ஒரு அசாத்திய மாதத்திற்கான வேலைகளை அர்ப்பணிப்போடு கூடிய உழைப்பால் குறித்த நேரத்தில் நிகழ்த்திக் காட்டியிருக்கும் பைண்டிங் டீம், மைதீன், ஜோதி & மற்ற சகோக்கள், DTP டீம் - அனைவர்க்கும் வாழ்த்துக்கள்!!💐💐💐💐💐😍😍😍👏👏👏👏

    ReplyDelete
  13. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  14. வணக்கம் சார் & நண்பர்களே ..!

    ReplyDelete
  15. சூப்பர் சார்....கதைகளெல்லாம் வேற லெவல்ல இருக்கும் போல....எனக்கு எல்லையில் ஒரு யுத்தம் படித்தேனா என்றே நினைவில் இல்லை....காத்திருக்கிறேன்....முதலில் ஜுனியரின் ஏஐ என நினைத்த எனது ஆர்வத்தை தாண்டி உங்க விவரிப்பு வைகறைக் கொலைகளுக்குள் இருக்குது....கைக்கு வந்த பின்....நீண்ட நாட்களுக்கு பின் நாளைக்காக பரபரப்பான ஆவலுடன்

    ReplyDelete
  16. சூப்பர் சார்....கதைகளெல்லாம் வேற லெவல்ல இருக்கும் போல....எனக்கு எல்லையில் ஒரு யுத்தம் படித்தேனா என்றே நினைவில் இல்லை....காத்திருக்கிறேன்....முதலில் ஜுனியரின் ஏஐ என நினைத்த எனது ஆர்வத்தை தாண்டி உங்க விவரிப்பு வைகறைக் கொலைகளுக்குள் இருக்குது....கைக்கு வந்த பின்....நீண்ட நாட்களுக்கு பின் நாளைக்காக பரபரப்பான ஆவலுடன்

    ReplyDelete
  17. Hi sir ,
    Vanakam .
    All wrappers looking awesome . You already shown the preview of tex and tiger books. It looks great.
    All AI books looks very nice sir .

    ReplyDelete
  18. ஆகஸ்ட் இதழ்கள் பட்டியல் வழக்கம் போல அமர்க்களம். 🥰😍

    ReplyDelete
  19. // ஜூலை இறுதியிலேயே ஒரு ஆரவார ஆகஸ்ட் நமக்குப் புலந்துள்ளது. //

    ஆமாம் சார்.

    ReplyDelete
  20. ஆகா ஒரு சூப்பரான வெரைடி விருந்து காத்திருக்கு. சூப்பர் சார்.

    ReplyDelete
  21. // நமது பைண்டிங் டீம். ஈரோடு புத்தக விழா - வரும் வெள்ளி துவங்கவிருப்பதால், புக்ஸ் சகலமும் அதற்கு முன்பாகவே உங்கள் கைகளை எட்டிப்பிடிக்க வேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தது. Which meant despatch had to be for the 29th.... ஆனால் பணிகளோ 28-ஆம் தேதி காலை வரை அச்சுக்கூடத்திலேயே நிலைகொண்டிருந்தன ! ஒற்றை நாளில் ஐந்து இதழ்களைன அசாத்தியமாய் பைண்டிங் செய்து நமது திட்டமிடலை ஜெயமாக்கிய முழுப்பெருமை பைண்டிங் நண்பருக்கே சேரும். //

    Thank you Team!!!!

    ReplyDelete
  22. ஈரோடு உங்களை அன்போடு வரவேற்கிறது sir

    ReplyDelete
  23. // ஆகஸ்ட்டின் ஆளுமைகளுள் இன்னொரு முக்கியஸ்தர் நமது 'இளம் டைகர்'! //

    After a long time 'இளம் டைகர்' eagerly waiting sir.

    ReplyDelete
  24. குவாட்டர் அடித்த கொரில்லா...... 🤣🤣🤣🤣🤣 செம்ம வரிகள் சாரே... 🤣🤣🤣

    ReplyDelete
  25. Genz junio detectives is a smash hit among my daughter and her friends. Please continue. In fact she is asking for more.

    ReplyDelete
  26. இப்போதான் Agent Robin முதல் பாகம் படிக்க ஆரம்பிச்சேன். ஒரு சின்ன suggestion... புத்தகத்தின் அட்டையிலேயே 18+ன்னு போட்டுடுங்க சார். இல்லனா வீட்டுல ரேஷன் கார்ட்ல இருந்தே நம்ம பேரை எடுத்துடுவாங்க போல! 😂

    ReplyDelete
  27. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  28. பொக்கிஷப் பெட்டியை கைப்பற்றியாச்சி...

    ReplyDelete
    Replies
    1. அடடே... எல்லாம் ஓகேவா சார்?

      Delete
    2. இரவு 08.00 மணிக்குதான் பெட்டியை பிரிக்கமுடிந்தது சார்,குட்டி இதழ்கள் அரைடஜனாய் ஜொலிக்க,அழகாய்,மின்னும் அசுரனும் மின்ன,இளவரசி அட்டையில் டாலடிக்க,வைகறைக் கொலைகள் வித்தியாசமான ஓவியத்தில் ஆர்வமூட்ட,கரையெல்லாம் கண்ணீரே என டைகர் குதிரையில் பறக்க,எல்லாவற்றிற்கும் மேலே எல்லையில் ஒரு யுத்தம் இரு பாகங்களாய் எகிடுதகிடாய் எகிறியடிக்க,ஆகஸ்ட் சும்மா தெறிக்குது போங்க...
      ஒரே வெரைட்டி ஜாலம்...
      ஆகஸ்டின் டைகரும்,டெக்ஸும் தாறுமாறு ஹிட் ஆகும்னு தோணுது...

      Delete
  29. Terrific Tex missing in my subscription box

    ReplyDelete
  30. எல்லா கதைகளும் அட்டைகள் வேற லெவல் சார்.....குட்டி புத்தகங்கள் குட்டி பயலுக அள்ளிக் கொள்ள...யார் அவள் என என் மகன் வாசிக்க....அதகளம் சார்...இது வரை பந்தலிலே அனைத்து அட்டைகளுமே (வைகறை கொலை பரவாஇல்லை)டாப்பா இருந்ததில்லை...

    ReplyDelete
  31. நெட்ல இரண்டாம் பாக டெக்ஸ் யாப்பா தெரிய....முதல் பாகம் நேர்ல அள்ளும் கலரட்டை வேற லெவல் சார்...இதோ தீபாவளி....ஈடு தருமா ஈரோடு

    ReplyDelete
  32. ஜீனியரின் அனைத்து அட்டைகளும் நச்...செதுக்கபட்டிருக்கு....பயலுவ அதோட சுத்துரானுக

    ReplyDelete
  33. குட்டி குட்டி அசத்தல் வண்ணக் கனவுகள்.....அசத்தும் அர்னால்ட் அப்ரசண்டி...ஆழ்கடலில் என் மகன்களோடு பயணம்...தலைப்பை வாசித்து விட்டான்

    ReplyDelete
  34. அப்பாடா பதிவாகிறது...:-)

    ReplyDelete
  35. // இதே ஈரோடு புத்தக விழா தருணத்தில், டெக்ஸ் & டைகரின் இதழ்கள் ஒருசேர வெளியாகி பட்டையைக் கிளப்பியது இந்த நொடியில் நினைவில் நிழலாடுகிறது. இதோ இன்னொரு ஆகஸ்ட்டில் கலக்கலாய் 'தல' & 'தளபதி' களம் காண்கிறார்கள். //

    மறக்க முடியமா சார்! அந்த நாட்களை! உங்களின் ரெகுலர் பதிவு எங்களுக்கு வாரம்தோறும் ஓடுவதற்கு பூஸ்ட் ஆக இருந்தது என்றால் அட்டவணை பதிவு, சென்னை மற்றும் ஈரோடு புத்தக பதிவுகள் எங்களுக்கு ஹார்லிக்ஸ் + போர்ன்விட்டாவாக வருடம் முழுவதும் புத்துணர்வுடன் இருக்க செய்தன! இன்றும் என்றும் உங்கள் பதிவுகள் உணர்வை தருகிறது தரும்!

    ReplyDelete
  36. // கணிசமான நாட்களுக்கு பின்பாய் ஒரு மெய்யான திருவிழாவை ஆபீஸில் தரிசித்த அனுபவம் எனக்கு. சகலத்தையும் திறன்படச் சமாளித்த ஜோதி & front desk பெண்களுக்கு ஒரு கைதட்டல் //

    // சகலத்தையும் ஒருங்கிணைக்க மைதீன் TVS XL-ன் டயர்கள் தேயும் அளவிற்கு சிவகாசியை அளந்து கொண்டிருந்தான். //

    நன்றி நண்பர்களே! உங்களின் பணி பாராட்டுக்குரியது!! கோடி நன்றிகள்!

    ReplyDelete
  37. // இன்னொரு பக்கமோ, 'டெக்ஸ் & டைகர்' என்ற மாதத்தின் உஷ்ணம் முகவர்களையும் எட்டிப்பிடித்திருக்க, அவர்களுமே "இன்றைக்கே டெஸ்பாட்ச் பண்ண முடியுமா?" என்ற ரீதியில் செல்போன்களை தெறிக்க விட்டுக்கொண்டிருந்தார்கள். //

    வாரே வா! எங்கள் காமிக்ஸ் தல தளபதி என்றால் சும்மாவா! சும்மா அதிருது!

    ReplyDelete
  38. // லயன் ரெகுலர் தடத்திற்கு இடமின்றிப் போன ஒரு அதிசய மாதம் இது. //

    இதனை இங்கு சொன்னதற்கு நன்றி! அப்ப ஈரோடு சஸ்பென்ஸ் ஸ்பெஷல் புத்தகம் லயன் லோகோவின் கீழ் வருகிறதா சார் :-) குமார் நோட் திஸ் பாயிண்ட்.

    ReplyDelete
  39. // இரண்டு அட்டைப்படங்கள் அட்டகாசமாய் கிடைத்திருக்கும் சமாச்சாரமே. //

    உண்மை சார்! அதிலும் டெக்ஸ் தனியாக துப்பாக்கியுடன் ஸ்டைல்லாக நிற்கும் படம் செம மாஸ் சார்.

    ReplyDelete
  40. // காற்றாடும் நாயர்கடை, பஞ்சாயத்திலாவது சுறுசுறுப்பானால் no complaints at all! //

    ROFL!

    ReplyDelete
  41. // 'வைகறைக் கொலைகள்' //
    கிராபிக் நாவல்கள் எப்போதும் எனக்கு எப்போதும் பிடிக்கும்! அதுவும் இந்த கதையின் தலைப்பு என்னை மிகவும் கவர்ந்து விட்டது சார்! சித்திரங்கள் பென்சில் shading செய்தது போல உள்ளது, பார்க்க நன்றாக உள்ளது! புத்தகம் வந்த பிறகு படித்து விட்டு மற்றவற்றை சொல்லுகிறேன் சார். அட்டைபடம் சூப்பர் சார்.

    ReplyDelete
  42. // ஆண்டுக்கு ஒற்றை ஸ்லாட்டில் வந்தாலும், அடுத்த ஆல்பம் வருவதற்கு முன்பாகவே முந்தைய இதழ் தீர்ந்துபோய்விடுவது இந்த ஜாம்பவானின் ஆற்றலுக்கு ஒரு testimony. //

    டைகர் டைகர் தான் சார்! டைகரின் வண்ண கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும், சித்திரங்கள் மற்றும் அதற்கு என்றால் போல அதன் வண்ணகலவையை ரொம்பவே ரசிக்கும் படி இருக்கும்! ஒரு இயல்பான கதைநாயகனாக டைகரை காண்பித்து கதையை கொண்டு செல்வது எப்போதுமே சிறப்பு! இந்த முறை கண்டிப்பாக டெக்ஸ் மற்றும் டைகர் கதைகளில் எதனை முதலில் படிப்பது என்ற மன போராட்டம் எல்லோருக்கும் வரும் சார். :-)

    ReplyDelete