நண்பர்களே,
வணக்கம். இது தள்ளிப் போகும் சீசன் போலும் !! நேத்திக்கான பதிவு, இன்னிக்கிக்குன்னு தள்ளிப் போயுள்ள சுண்டைக்காய் மேட்டரை மட்டுமே நான் குறிப்பிடலை folks ! தீபாவளி ஆக்டோபரின் பிற்பகுதியில் தான் அமைந்தது என்பதால் அக்டோபர் இதழ்களின் டெஸ்பாட்ச்சை 10 தேதிகளுக்குத் தள்ளிப் போட்டோம் ! அதன் பலனாய் - இதோ நவம்பரின் இதழ்களும் தாமாகவே கொஞ்சமாய் பின்னுக்குப் போய் விட்டுள்ளன ! பற்றாக்குறைக்கு இந்த சீஸனின் புத்தக விழா circuit-லும் கணிசமான தள்ளிப் போடல்ஸ் ! திருச்சி புத்தக விழா - மறுதேதியின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது ! கரூரும் தான் ! தென்காசியுமே ! விருதுநகருமே !! And if the news is to be believed - சேலம் புத்தக விழா கூட டிசம்பர் நடுவாக்குக்குத் தள்ளிச் செல்கிறதாம் ! உறுதியாகத் தெரியலை தான் - ஆனால் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகமுமே மத்திய, மாநில சர்க்கார் பணிகளில் பிசி என்பதால் இந்தவாட்டி புத்தகவிழா சார்ந்த முன்னெடுப்புகள் லைட்டாய் பின்சென்றுவிட்டுள்ளது போல் தென்படுகிறது ! And இந்த சீசனில் மாறி, மாறி ஒவ்வொரு ஊருக்காய் சட்டியையும், பெட்டியையும் கட்டிக் கொண்டு போய் ரெண்டு காசு பார்ப்பதே, சக்கரம் சுழல உதவிடும் தாரகம் ! ஆங்காங்கே தினமும் அரங்கேறிடும் ரொக்க விற்பனைகளில் தான் ஆண்டின் பிற்பகுதியில் பிழைப்பே ஓடிடுவது வாடிக்கை என்ற நிலையில், இந்தத் தொடர்ச்சியான தள்ளிப்போடல்ஸ் - நெரிச்சிங் the சங்கு !! So கொஞ்சமே கொஞ்சமாய் வேகமெடுத்து வரும் சந்தா சேகரிப்புகளின் முதுகில் உப்புமூட்டை கட்டிக் கொண்டு பயணிக்க வேண்டிய சூழலில் உள்ளோம் folks !! So இயன்றமட்டுக்கு கரம் கொடுக்கக் கோரிடுகிறோம் !!
'ஆஹா...விடிஞ்சி முழிச்ச ஒடனே ஆரம்புச்சிட்டானா ?' என்ற உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது மக்களே - but யதார்த்தங்களை உரைக்காது இருக்க முடிலீங்களே !! Anyways - இதோ நவம்பர் பக்கமாய் பார்வைகளை ஓட விடுமுன் "சாம்பலின் சங்கீதம்" சார்ந்த இடைச்செருகல்ஸ் ! எப்போதும் போல நவம்பர் மூன்றாம் வாரமே சேலம் விழா துவங்கி விடுமே என்ற நினைப்பில், "சாம்பலின் சங்கீதம்" சார்ந்த பணிகளை முதலில் முடித்து விட்டு, அப்புறம் மின்னல் வேகத்தில் நவம்பர் புக்ஸுக்குள் புகுந்திடலாமே என்ற நினைப்பில் கடந்த 2 வாரங்களாகவே ஐன்ஸ்தீன் சாரோடும், அமெரிக்க ப்ரெசிடெண்ட்ஸ் ; காம்ரேட் ஸ்டாலின் போன்ற வரலாற்றுப் பெருந்தகைகளோடே உலாற்றித் திரிந்தேன் ! But சேலம் விழாவானது டிசம்பர் பிற்பாதிக்கு என்ற ரீதியில் தகவல் காதில் விழுந்த பிற்பாடு, பேஸ்தடித்துப் போய் ரூட் மாற வேண்டிய அவசியத்தில் உள்ளோம் ! So பக்கம் 325-ல் சா.ச. ஓய்வெடுக்க, அடுத்த நாலைந்து நாட்களுக்குள் நவம்பரின் பணிகளைப் போட்டுத் தாக்குவது என்று தீர்மானித்துள்ளேன் !
இக்கட நெக்ஸ்டு ட்விஸ்ட் !
நவம்பரின் ஒரு முக்கிய இதழாய் அறிவிக்கப்பட்டிருந்த லார்கோ சாகசமான "போர் கண்ட சிங்கம்" டிசம்பருக்கு மாற்றம் காண்கிறது ! இந்தக் கதை பங்குச்சந்தை சார்ந்த செம complex கதைக்கரு கொண்டதாலேயே இதனுள் மண்டையை நுழைக்கத் தயங்கியிருந்தோம். But இந்தத் துறையில் அனுபவம் கொண்டவரான நண்பர் மதுரை நாகராஜ சேதுபதி இதனை மொழிபெயர்க்க முன்வந்திருக்க, அவருக்கே பரிவட்டம் கட்டி விட்டிருந்தோம். நண்பரும் இயன்ற பெஸ்ட்டை முயற்சித்துள்ளார் - ஆனால் துறையில் அனுபவம் இருப்பினும், முழுநீள மொழியாக்கம் அவருக்குப் புதிதே என்பதை ஸ்கிரிப்ட் சொல்கிறது ! So கணிசமாகவே உட்புகுந்து பணியாற்ற வேண்டியிருப்பது புரிகிறது ! போன மாசம் கம்பியூட்டர் டெக்கீ அவதார் எடுத்து ராபின் 2.0 சகிதம் பயணிச்சாச்சு ! இனி பீரோவுக்குள் அந்து உருண்டைகளுக்கு மத்தியில் எங்கயாச்சும் கிடக்கக்கூடிய கண்ணால கோட்டை மாட்டிக்கிட்டு பங்குச்சந்தை பார்ட்டியாகவும் ஒரு ரவுண்டு அடிச்சுப் பார்த்திட கொஞ்சமே கொஞ்சமாய் அவகாசம் தேவைப்படுது folks ! அதனால் லார்கோ moves to டிசம்பர் ! எண்ட குருவாயூரப்பா - ஈ வயசிலேயே அடிக்க அவசியமாகிடும் பல்ட்டிகள் இன்னும் எத்தனை காத்துள்ளனவோ ?
குருதியில் பூத்த குறுஞ்சிமலர் !!
(எனக்குமே) கொஞ்சம் மர்மம் சூழ்ந்த கதையாகவே தொடர்ந்து வரும் ஆல்பம் இது !! And நேற்றைக்குத் தான் இதனுள் பணியாற்றப் புகுந்துள்ளேன் என்பதால் - விழிகள் மேற்கொண்டும் அகண்ட நிலையில் ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டி வருகிறேன் ! Trust me guys - மிரண்டே போகப்போகிறீர்கள் - வன்மேற்கின் இந்த லேட்டஸ்ட் அனுபவத்தினில் !! இந்தக் குறுந்தொடருக்கு ஒரிஜினலில் CATAMOUNT என்று பெயர் ! பிரெஞ்சில் 4 ஆல்பங்களில் நிறைவுறும் ஒரு ஆக்ஷன் அதகளம் இது ! அது இன்னாய்யா பெயர் ? என்ற கேள்வியோடே கொஞ்சமாய்த் தேடிய போது தான் - (BIG) CAT of the MOUNTAIN என்று பொருளாகிடும் விதமான பெயர் இது என்பது புரிய வந்தது ! அதாவது மலைச்சிங்கம் (Cougar) ; மலைச் சிறுத்தை (Panther) போலான முரட்டு வன விலங்குகளைக் குறிப்பிட அந்நாட்களில் பயன்படுத்தப்பட்ட சொல்லாம் இது !
இப்போது தான் எழுதத் துவங்கியுள்ளேன் என்பதால் இந்தப் பெயருக்கான context பற்றி இன்னும் தெரியலை - but இந்தப் பெயருக்கொரு தமிழாக்கம் அவசியமாகிடும் பட்சத்தில் உங்களின் பரிந்துரை(கள்) என்னவாக இருக்குமோ மக்களே ? இந்தக் குறுந்தொடர் உள்ளபடிக்கே தனித்தனியாய் படிக்கவும் சாத்தியம் தருவதால் மேற்கொண்டு இதன் பின்புலத்தினை ஆராய்ந்தேன் - உரிமைகளை வாங்கிடும் முன்பாக ! அப்போது தான் புரிந்தது - இந்தத் தொடரானது பிரெஞ்சில் கௌபாய் நாவல்கள் பல எழுதி வந்ததொரு பிரபல novelist ஆல்பர்ட் போனோவின் காமிக்ஸ் தழுவல் என்பது !
பிரான்சில் 20-ம் நூற்றாண்டின் மத்தியில் கௌபாய் நாவல்கள் கன்னா பின்னாவென பிரபலமானவைகளாம் !! அந்தக் காலகட்டத்தில் இந்த எழுத்தாளர் வெவ்வேறு புனைப்பெயர்களில் டிடெக்டிவ் நாவல்கள், சாகச நாவல்கள், இளைஞர்களுக்கான நாவல்கள் என்றெல்லாம் கிட்டத்தட்ட 750 நாவல்கள் வரை எழுதியுள்ளாராம் ! நிறையவே எழுதியிருந்த போதிலும், மிரட்டலான கௌபாய் நாவல்களில் இவர் கிங் போலும் ! அதிலும் 1929-ல் துவங்கிய இந்த CATAMOUNT நாவல் தொடர் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு, 70-க்கும் மேற்பட்ட கௌபாய் நாவல்களுடன் வெளுத்துக் கட்டியுள்ளது. அதன் ஹீரோ Catamount செமயானதொரு ஆக்ஷன் நாயகராய், வீட்டிலிருந்தபடிக்கே வன்மேற்கை தத்ரூபமாய் தரிசிக்கும் வாய்ப்பினை பல தலைமுறை பிரெஞ்சு வாசகர்களுக்கு வழங்கி வந்துள்ளார் ! அவரை 2015-ல் காமிக்ஸ் உலகினுள் புதியதொரு பதிப்பகம் இட்டு வந்திருக்க, 4 இதழ்கள் கொண்ட இக்குறுந்தொடர் 2021-ல் முற்றுப் பெற்றுள்ளது ! அன்று முதலே இத்தொடர் நம்மள் கி ரேடாரில் இருந்து வர,போன வருஷம் இப்புது நிறுவனத்துடன் கைகுலுக்கி இருந்தோம் ! And here we are !!
இதோ - மிரளச் செய்யும் அதன் அட்டைப்பட first look !! இந்தத் தொடரின் ஒவ்வொரு ராப்பருமே இதே போல் அல்லு விடும் ரகத்தில் இருப்பது செம highlight ! உட்பக்கச் சித்திரங்களிலும் புதியதொரு ஸ்டைலில் ஓவியர் மெர்சலூட்டியுள்ளார் ! இன்னமும் DTP ஆரம்பிக்கலை என்பதால் உட்பக்க preview தமிழில் இல்லை இந்த நொடியில் ! Maybe நாளை இங்கே upload செய்கிறேன் !
"நரகத்திற்கொரு புரவி" என 2026-ல் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள அடுத்த அத்தியாயம் ஒரு டபுள் ஆல்பம் என்பது சமீபமாய்த் தான் தெரிய வந்துள்ளது ! So எப்படியேனும் அதனை ஒரு டபுள் ஆல்பமாகவே 2026-ல் களம் காணச் செய்து விடுவோம் !! ஆகையால் கூகுளில் தேடிய கையோடு தம் கட்டி அர்ச்சனை செய்திடும் வேலை உங்களுக்கு மிச்சம் guys !! இதோ உட்பக்க previews from the original !!
நவம்பரில் காத்துள்ள மீத 2 இதழ்களின் லிஸ்ட் இதோ :
ப்ளூகோட் பட்டாளத்தின் - "ஊழியம் செய்ய விரும்பு"
&
மிஸ்டர் நோ !
வண்டி வண்டியாய் பணிகள் வெயிட்டிங் என்பதால் அவற்றிற்கான previews அடுத்த வாரப்பதிவினில் folks !! Bye now....See you around ! Have a lovely Sunday !!



ஹாய்
ReplyDeleteசூப்பர். மகிழ்ச்சி
Deleteவாழ்த்துகள் சகோ
Deleteநன்னி...
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteSecond
ReplyDeleteபத்துக்குள்ள..!
ReplyDelete10 kulla
ReplyDeletePresent sir
ReplyDeleteவணக்கம்
ReplyDelete🌹
ReplyDelete😘😘😘🥰Me in😘💐😄
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவணக்கமுங்க!!
ReplyDeleteவணக்கங்கள்
ReplyDeleteGood morning all
ReplyDelete// இந்தப் பெயருக்கொரு தமிழாக்கம் அவசியமாகிடும் பட்சத்தில் உங்களின் பரிந்துரை(கள்) என்னவாக இருக்குமோ மக்களே ? //
ReplyDeleteமலைக் கள்ளன்...
சார் - மலைசிங்கத்துக்கும் கள்ளனுக்கும் இன்னா லிங்க் ?
Deleteசம்மந்தப் படுத்திக்கிட்டோம்.!
Deleteஹி,ஹி...
Delete//அதனால் லார்கோ moves to டிசம்பர் ! //
ReplyDeleteசூப்பர் சார்
லார்கோ Vs யங் டெக்ஸ்
மிஸ்டர் நோ அடுத்த மாதம் வருவது அருமை
😍😍
DeleteAyyo
ReplyDeleteBluecoat aaaaaa
Aandavaa.
Mudiyalaaa. saami
அட்டவணையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பதைக் கண்டு 13 மாசம் கழிந்த பின்னே தெறிக்கிறீங்களே நண்பரே - செம ஸ்பீடு போங்க !!
Deleteஅப்ப டிசம்பரில்தான் நவம்பரா சார் ?!
ReplyDeleteவரும் வாரக் கடைசியில் வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன்...
டிசம்பரில் நவம்பரா ??? அது ஏன் சார் ?
Deleteநவம்பரில், நவம்பர் !
ஹை சூப்பரு...😍🤩
Deleteகுருதியில் பூத்த குறிஞ்சி மலர் அட்டைப் படம் தெறிக்குது...
ReplyDeleteமலை சிறுத்தை
ReplyDeleteஞாயிறு காலை வணக்கம் அனைவருக்கும்...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteCatamount....
ReplyDeleteவர்ரே வாஹ்...
இதுவே நல்லாதான் இருக்குங்க சார்..
அட்டைப்படம் 🔥🔥🔥🔥🔥
ReplyDelete💗🎇
ReplyDeleteCatamount...
ReplyDeleteசித்திரங்கள் அள்ளுது சார்..😍😍
' குருதியில் பூத்த குறிஞ்சி மலர்' - அட்டைப்படமே பயங்கரமாக மிரட்டுகிறது!! 👁️👁️
ReplyDeleteஅந்தக் குழந்தையின் கண்களில் தெரியும் பயம் - ஊஊய்!!😯
பின்பக்க அட்டையும் பயங்கர மாஸ்!! அந்த கமான்ச்சேவை வரைந்திருக்கும் விதம்😲😲
கதையோடு கூடவே ஓவியங்களும் மிரட்டப்போவது உறுதி!!
// இந்தப் பெயருக்கொரு தமிழாக்கம் அவசியமாகிடும் பட்சத்தில் உங்களின் பரிந்துரை(கள்) என்னவாக இருக்குமோ மக்களே ? //
ReplyDeleteமலை விலங்கு
மலைக்குரங்கு..
ReplyDelete🏃🏃🏃🏃🏃
😂😂😂
Delete// இந்தப் பெயருக்கொரு தமிழாக்கம் அவசியமாகிடும் பட்சத்தில் உங்களின் பரிந்துரை(கள்) என்னவாக இருக்குமோ மக்களே ? //
ReplyDeleteபாந்தெரா மலை
பாந்தெரா - பெரிய பூனை இனம்
Hi..
ReplyDeleteஓய்..
Deleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteஅடர் சிகப்பு வண்ணத்தில் அட்டைப்படம் மிரட்டலாக உள்ளது சார். ஆவலுடன் waiting.
ReplyDeleteகூடவே ப்ளுகோட் வாவ், சூப்பர்.
நவம்பர் & டிசம்பர் கோட்டா இப்போதுதான் டக்கரா கீது.
மலைச்சிங்கம் பெயரே நன்றாகவே உள்ளதுங்க, சார்
ReplyDeleteமலை இளவரசன் (அல்லது) மலை அரசன்
Deleteவைக்கலாம்
இந்தப் பெயர்லாம் "மருதநாட்டு இளவரசி" level க்கு கீது ரம்யா 🥴
Delete😂😂😂
Deleteமலைச் சிங்கம், மலைச் சிறுத்தை இவைகளே நன்று தான். இருந்தாலும், இதையும் யோசிப்போம்.
ReplyDelete1. மலை வேங்கை
2. மலைப் புலி
அப்புறம், நரகத்திற்கு ஒரு புரவி யின் ஓவியங்கள் அபாரம்.
அதுவும், காட்டருவியின் பின் long shot ல் ஒரு புரவி, மற்றும் back lightல் புரவி மேல் கௌபாயின் தோற்றம் ஆகியவை போட்டோகிராபி போல் உள்ளது. என்ன ஒரு camera angle vision. ஓவிருக்கு அபார ரசனை. இந்த மாதிரி எல்லா கதைகளும் வந்தால், காமிக்ஸ் இன்னும் பிரபலமடையும். அருமை 👍
//! So எப்படியேனும் அதனை ஒரு டபுள் ஆல்பமாகவே 2026-ல் களம் காணச் செய்து விடுவோம் !! ஆகையால் கூகுளில் தேடிய கையோடு தம் கட்டி அர்ச்சனை செய்திடும் வேலை உங்களுக்கு மிச்சம் guys//
ReplyDeleteஎன்னங்க சார், எங்களுக்கு வேலை இல்லாம பண்ணிட்டீங்க
கடல் ஹிஹிஹி
Deleteவந்துட்டேன்
ReplyDeleteSigarangalin Siruthai
ReplyDeleteஇதுவும் sounds gud...
Delete👌👌👌
Deleteகு.பூ.கு.மலர் அட்டைப்பம் செம கலக்கல் சார்..பட்டையை கிளப்புகிறது..!
ReplyDeleteபாந்தெரா மலை + 5
ReplyDeleteதலைப்பு வசீகரமாகவும் அதே வேளையில் ஆர்வத்தையும் தூண்டுகிறது.
பாந்தெரா - பெரிய பூனை இனம்
மலைப் புலி😸😸😸😸
ReplyDeleteசிகர வேங்கை
ReplyDeleteஇது தேவலாம்... 🤔
Deleteமலை மாயன், மலை மல்லன், மலை காடன்😀😀😀😸😸😸
ReplyDeleteஅடேயப்பா வேற லெவல் அட்டை...இனிமேல் இதான் டாப்பெனும் வார்த்தைகள் வராதென்பது நிச்சயம்
ReplyDelete😊😊😊
Deleteலார்கோ தள்ளிப் போவது வருத்தமானாலும் நோவும் ப்ளூவும் முன்னால் வருவதும் காரணத்தோடு தானே....சூப்பர் சார்...குண்டு வெடிப்பை காணவும் லோடு ஆவலோடு
ReplyDeleteஅவ்வளவு தான். அடுத்த மாதம் செம்மையாக இருக்கப் போகிறது
Deleteஅவ்வளவு தான். அடுத்த மாதம் செம்மையாக இருக்கப் போகிறது
Deleteவணக்கம் நண்பர்களே🙏🙏
ReplyDeleteப்ளூ coats, Action கௌபாய், Mr. நோ எல்லாம் ஒரு மாதிரி கலவையாக சூப்பர் ஆக இருக்கு.
ReplyDeleteThe power of variety sir...
Deleteதீபாவளி தந்த தித்திப்பிலும், தீபாவளி மலர்கள் தீபாவளிக்கே கிடைத்த சந்தோஷத்தில், நவம்பர் புக்ஸ் என்பதே மறந்து போனதுங்க சார், இன்று இந்த பதிவு படிக்கும் வரை.ஆகையால் பொறுமையாகவே நவம்பர் இதழ்கள் வரட்டும்.
ReplyDeleteபுதிது புதிதான தங்களது அட்டகாசமான தேடல் இன்னமும் வியக்க வைக்கிறது,
அதிலும் இந்த வன்மேற்கு என்கிறபோது விழி விரிய பலமடங்கு ஆவலை தூண்டுகிறீர்கள் சார்.
மேலும் தாங்கள் தேர்வு செய்யும் கெளபாய் கதைகள் என்றும் சோடை போனதில்லை,
"ஒரு குன்டா சக்கரை பொங்கலுக்கு ஒரு சோறு சுவை" என்பது போல,
"மிரண்டே போகப் போகிறோம்" என்பதற்கு புதிதாக களமிறங்கியுள்ள இந்த கு பூ கு வின் மாஸ் காட்டும் அட்டைப்படமே சாட்சி.
அதே போல
"நரகத்திற்கொரு புரவி" படங்களே ஒரு வித்தியாசமாக மிரட்டுகிறது.
ஆவலுடன் waiting....
இது தனித்தனி கதைகளாக படிக்க ஏதுவாகும் என்னாலும், அனைத்து ஆல்பங்களையும் 2026 லேயே போட்டு முடிப்பது நல்லது.
இந்த பாகங்கள் தள்ளிப்போவது என்றாலே இப்ப அங்கங்கே சலசலப்பு எழுவதை பார்க்க முடிகிறது.
தற்போது வெளியான ராபின், வந்த வேகத்தில் அனைவரிடமும் போய் சேர்ந்து, பலரிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது,
அதே சமயம் அந்த முடிவு பாகம் அடுத்த பிப்ரவரியில் எனும்போது சிலர், "முடிவு புக் வந்ததும் படிச்சுக்கலாம்" என அதை எடுத்து வைக்கும் சூழலும் உள்ளது.
எவ்வளவுதான் பாஸிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும், இது போன்ற குறைகள்
அந்த விமர்சனங்களை சற்றே மங்கச் செய்கிறது.
முடிந்தவரை பாகங்கள் கொண்ட கதைகளை ஒரே இதழாக போடலாம் அல்லது அந்த வருடத்திலேயே மீத பாகங்களையும் வெளியிடலாம்.
இந்த கு பூ கு வின் மீத ஆல்பங்களையும் 2026 லேயே வெளியிட ஆவண செய்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி. சந்தாவில் போட இயலாத பட்சத்தில்
ஏதாவது ஸ்பெஷல் இதழாக வெளிடலாம்.
ஏனெனில் இந்த கதை பற்றிய தங்களின் முன்னோட்டம், காத்திருக்க பொறுமையின்றி இந்த கருத்தை சொல்ல வைக்கிறது.
தீபாவளியின் 4 வகை பலகாரங்களில் நவம்பரில் இந்த கதைகளுடன் ப்ளூகோட் & மிஸ்டர் நோ வருவது கூடுதல் மகிழ்ச்சி ❤️.
சார் - வந்தா ஈரோவா தான் வருவேன் ; படிச்சா மொத்தமா தான் படிப்பேன் - என்ற சலசலப்புகளுக்கு நான் விடாப்பிடியா காது கொடுத்து வந்திருந்தால்,
Delete*இரத்தப் படலம் இருந்த தெருப்பக்கம் கூடத் தலை வைச்சுப் படுத்திருக்க மாட்டோம்! *மின்னும் மரணம் மின்னிக்கிட்டே அவுக ஊரில் மட்டுமே இருந்திருக்கும் - தமிழுக்கு வந்திராது!
*இரத்தக் கோட்டையும் தான்...!
*அட, இளம் டைகரின் முழுத் தொடருமே தான்!
அப்புறம் ராபின் 2.0 மொத்தமாய் 10 கதைகளுமே ஒற்றை story arc என்பது தான் போனலியின் திட்டமிடல் ! போட்டா மொத்தமா தான் போடணும் என்று இருப்பின், இந்தத் தொடரே வந்திராது!
படைப்புகளின் தரம் பேசும் - ஒண்டியாகவோ, கூட்டிலோ! நமது நடைமுறை சாத்தியங்களும் இங்கே கவனம் கோருவதை நான் நிராகரிக்க வாய்ப்பு லேது எனும் போது - Relax sir..
நான் பார்த்துக்கிறேன்!
//இரத்தப் படலம் இருந்த தெருப்பக்கம் கூடத் தலை வைச்சுப் படுத்திருக்க மாட்டோம்! *மின்னும் மரணம் மின்னிக்கிட்டே அவுக ஊரில் மட்டுமே இருந்திருக்கும் - தமிழுக்கு வந்திராது!
Delete*இரத்தக் கோட்டையும் தான்...!
*அட, இளம் டைகரின் முழுத் தொடருமே தான்!//
+9
ரைட்டு... ஒற்றை நொடி... ஒன்பது தோட்டா - 5 பார்ட்ஸ் கொண்ட திரில்லர்! ஏக் தம்மில் நாக்குத் தொங்க வெளியிட்டோம்!
Deleteசொல்லுங்களேன் - அது ஈட்டிய ரெஸ்பான்ஸ் பற்றி? அற்புதமான தொடர்.. But hardly got the recognition!
இந்த reason எனக்கு புரியவே இல்ல, ஒ நொ ஓ தோட்டா 3 வது முறையாக படித்து பாதி முடிந்து விட்டது, ஆனா இந்த கதையை இன்னுமே பலர் தொடாமல் இருப்பது ஆச்சரியம்.
Deleteஅதே கதையை இரத்தப் படலம் போல பிரித்துப் போட்டிருந்தால் 5 அத்தியாயங்களில் மிரட்டி இருக்கும் சார்!
Deleteஅடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பால் ஈர்ப்பு கூடி இருக்கும்
Delete// அதே கதையை இரத்தப் படலம் போல பிரித்துப் போட்டிருந்தால் 5 அத்தியாயங்களில் மிரட்டி இருக்கும் சார்! //
Deletewithout a doubt sir.
// சார் - வந்தா ஈரோவா தான் வருவேன் ; படிச்சா மொத்தமா தான் படிப்பேன் - என்ற சலசலப்புகளுக்கு நான் விடாப்பிடியா காது கொடுத்து வந்திருந்தால், //
Deleteசார் நாங்க தலைகீழாக தான் குதிப்போம்!
இந்த புத்தகத்தில் இன்னும் ஒரு பாகம் கூட முடிக்காத ஆட்களில் நானும் ஒருவன் சார். மன்னிக்கவும். அதிக நண்பர்களால் புகழ்ந்து பேசப்பட்ட கதை, நானும் ஆர்வமுடன் வாங்கினேன்! நேரம் சரியாக அமையாத காரணத்தால் இன்னும் இதனை முழுமையாக படித்து முடிக்கவில்லை! நீங்கள் சொன்னது போல தனித்தனி கதையாக வெளியிட்டு இருந்தால் படித்து முடித்து இருப்பேன் என்று நம்புகிறேன் சார்.
குண்டு புத்தகம் என்றால் டெக்ஸ் மட்டுமே மிக சரியான ஆள் சார்.
மற்றவர்கள் கதை என்றால் இரண்டு பாகங்களுக்கு மேல் இணைத்து இனிவரும் காலங்களில் வெளியிட வேண்டாம் என்பது எனது தாழ்மையான எண்ணம் சார்.
வேதாளருக்கு (ஆண்டு அட்டவணை வரிசையில்) நீதி வேண்டும்:
ReplyDelete♦️சமீபத்திய வருட அட்டவணையில் வேதாளருக்கு இடமில்லை அதே சமயம் விற்பனையில் பின் தங்கி உள்ள விற்பனையே ஆகாத ஹீரோக்களின் கதைகளுக்கு இடம் உண்டு (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) இது என்ன நியாயம்?
♦️கிளாசிக் ஹீரோக்களுக்கு இடமில்லை என்றால் Zen X வரிசையில் இடம் பெற்றுள்ள ஒரு ஹீரோ மற்றும் ரெகுலர் அட்டவணை வரிசையில் இடம் பெற்றுள்ள சில ஹீரோக்கள் கிளாசிக் நாயகர்கள் தானே( இப்பொழுதும் பெயர் குறிப்பிட விரும்பவில்லை) அவர்களுக்கு மட்டும் எப்படி இடம் கிடைத்தது?
♦️விற்பனையில் சாதிக்காத ஒரு ஹீரோக்களுக்கு இடம் இல்லை என்றால் உங்களை விட்டு செல்ல மாட்டேன் உங்களை விட்டு பிரிய மாட்டேன் என அடம் பிடித்து (கல்யாணமாகி செல்லும் புது பெண் போல😂) விற்பனையாகாமல் குடோனில் தங்கி இருக்கும் இரண்டு ஹீரோக்களுக்கு ரெகுலர் இடத்தில் இடம் உள்ளது வேதாளருக்கு ஏன் இல்லை?
♦️விற்பனையில் ஸ்டாக் அவுட் ஆகி இருப்பதற்கு இடம் இருக்கிறது என்றால் அத்தனை புத்தகமும் ஸ்டாக் அவுட் ஆகி இருக்கும் வேதாளருக்கு ஏன் இடமில்லை?
♦️ஒருமுறை சாப்பிட்ட அதே உணவை மறுமுறை சாப்பிடும் போது சலிப்பு ஏற்படுவது இயற்கை, அதுபோல நன்றாக இருந்தாலும் கூட விற்பனையில் ஜொலித்தாலும் கூட ஒரே நாயகரின் இதழை (இப்பொழுதும் பெயர் வேண்டாம்😇) வருடம் முழுவதும் மாதம் தோறும் கேட்பது என்ன நியாயம்?
♦️ஒரே நாயகரின் இதழை அதிகமாக கேட்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் அதிகமான இதழை தனித்தடத்தில் ஒதுக்காமல் (விற்பனையில் சாதிக்கும் வேதாளரை தனித்தடத்தில் ஒதுக்கி பர்ஸுக்கு பாம் வைக்கும் வேலை😢) ரெகுலர் ஆண்டு அட்டவணையில் ஒதுக்குவதையே வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.?
♦️ வெரைட்டி காமிக்ஸ் மற்றும் அனைத்து நாயகர்களின் கதைகளையும் (மாதம்தோறும் வேண்டும் என கேட்கும் நாயகரையும் சேர்த்து😝 ) கேட்பவர்கள் ஒரே நாயகரின் கதையே வருடம் முழுவதும் படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
♦️புதிய புதிய கதைகள் வருவதில்லை அயல்நாட்டு காமிக்ஸ் வெளியீட்டு நிறுவனம் யாரும் இந்த காமிக்ஸ் நாயகரின் கதையை தொடர்வதில்லை எனக்கூறி வேண்டாம் என்ன சில நாயகர்களை அட்டவணையில் இடமில்லை என ஒதுக்கினால் தற்பொழுது வரை புதிய கதை வெளிவரும் வேதாளருக்கு ஏன் இடமில்லை?
♦️குழந்தைகளுக்கான அட்டவணை வரிசையில் உண்மையுடன் நடந்து கொள்ள வேண்டும், வனவிலங்குகளை துன்புறுத்த கூடாது, (எடுத்துக்காட்டு வேதாளரின் ஜும்போ காமிக்ஸ்) இயற்கை சமநிலையை பேண வேண்டும் என நீதிநெறிகளை கூறும் வேதாளரின் கதைகள் தானே அட்டவணை இடம்பெற வேண்டும்?
♦️புத்தகத் திருவிழாக்களில் புத்தகங்களை வாங்காதவர்களை வாங்க வைக்க நிதி தேவை என்ற ஆக்சிஜனை அதிகப்படுத்த வேதாளர் கதைகள் தேவைப்படுகின்றன பிறகு ஏன் வருடம் முழுதும் வாங்குபவர்களுக்கு ஆண்டு அட்டவணையில் வேதாளருக்கு இடமில்லை?
♦️ மேற்கூறிய கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிப்பது எடிட்டர் அவர்களுக்கே வெளிச்சம்😉
அது தான் எடிட்டருக்கே வெளிச்சம்னு சொல்லிடீங்களே நண்பரே - அவரே பார்த்துப்பார் 👍
Deleteமாட்டிகிட்டீங்களா
Deleteஇந்த பக்குவமான, பஞ்ச் சான பதிலை கேள்வி கேட்ட நண்பர் எதிர் பார்திருக்க மாட்டார்.
Deleteஅவர கேக்குறீங்களோ?
Deleteபின்சீட் டிரைவிங் மேலே நிறைய பேருக்குத் தீரா காதல் உண்டு சார் - அதை எப்போதோ புரிஞ்சுக்கிட்டேன்!
Deleteமலை காடன், மலை கானகன், கான் மலே, மலையன்,
ReplyDeleteகுருதியில் பூத்த குறிஞ்சி மலர் அட்டைப்படம் செம மிரட்டலாக உள்ளது. இதனை பார்த்தே புத்தக திருவிழாவில் பலர் இந்த புத்தகத்தை வாங்கி செல்வார்கள்.
ReplyDeleteஆவலுடன் காத்திருக்கிறேன்.
சார், இன்றைய பதிவு ரொம்ப சின்னதாக உள்ளது சார். தயவு செய்து உங்கள் கைகளை சில நண்பர்கள் சொல்வதற்காக எழுதுவதற்கு கட்டிப்போட வேண்டாம் சார்.
ReplyDeleteவேலை அதிகம் என்ற காரணத்தினால் அதிகம் எழுத முடியவில்லை என்றால் ஓகே சார்.
Deleteவேலை அதிகம் போல PFB...
DeleteOkay Arivarasu!
Delete"குருதி வீரன்"
ReplyDeleteசிகரங்கள் வரிசையில் பார்த்தால்
"சிகரங்களின் அரிமா" தோன்றிறறு
//! So எப்படியேனும் அதனை ஒரு டபுள் ஆல்பமாகவே 2026-ல் களம் காணச் செய்து விடுவோம் !! ஆகையால் கூகுளில் தேடிய கையோடு தம் கட்டி அர்ச்சனை செய்திடும் வேலை உங்களுக்கு மிச்சம் guys//
ReplyDeleteஅதெல்லாம் முடியாது வார்டன்னா அடிப்போம்
அதே அதே தோழரே 😁😁
Delete// இந்தப் பெயருக்கொரு தமிழாக்கம் அவசியமாகிடும் பட்சத்தில் உங்களின் பரிந்துரை(கள்) என்னவாக இருக்குமோ மக்களே ? //
ReplyDeleteகிரிபுலி
புலிக்கடல்
சிம்ஹவேல்
மலையன்
மலையில் ஒரு புறாஞ்சி - A Wildcat in the Mountains
பர்வதராஜ் - Mountain King
மலைக்காவலன்
மலை நிழல் – Shadow of the Mountain
copilot உபயம் இது - ஓடுடா பரணி ஓடு
பரணி சகோ🤣🤣🤣
Deleteஎன்னமா இது இப்படி சிரிச்சி காமெடி பண்ணுறீங்க :-)
Deleteசிம்ஹவேல் - பேரரசு பட டைட்டில் மாதிரி இருக்கும், அதற்காக ரிஜெக்ட் பண்ண வேண்டாம் சார்
Deleteஓவியங்கள் அட்டாஹாசம் sir... ❤️👍🙏...
ReplyDeleteஅறிமுகம் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.
ReplyDelete100
ReplyDeleteமலைக்காட்டு மாயன், காட்டு மாயன்
ReplyDeleteகடுவன் பூனை , கடுவன் சிறுத்தை , மலை கடுவன் ..
ReplyDelete