நண்பர்களே,
வணக்கம்! முன்னெல்லாம் சென்னை கிண்டியில் நெதமும் குதிரை ரேஸ் நடப்பது வாடிக்கை! மதியம் மூன்று அடித்துவிட்டாலே சென்னையின் ஆபீஸ்களில் பற்பல சேர்கள் சொல்லி வைத்தாற் போல காலியாகி விடுமாம்! "சாயா அடிச்சிட்டுத் திரும்பிடறேன் சேட்டா.. மூச்சா பெய்ஞ்சிட்டு வந்திடறேன் பாசு..'' என்று காணாது போகும் ஊழியர்கள் - அங்கே ரேஸ் மைதானத்தில் ஏதாச்சுமொரு குருத மேலே பணத்தைக் கட்டிட்டுப்புட்டு - "கமான்.. கமான்''என்று கூக்குரலிட்டுக் கொண்டிருப்பார்களாம்! So அப்போல்லாம் "மூணு மணி நமைச்சல்'' என்றால் ரொம்பப் பிரசித்தம்!
நமக்கோ கொஞ்சம் வித்தியாசமானதொரு அரிப்புண்டு - and அது ஆகஸ்டின் முதல் வாரயிறுதியோடு தொடர்பு கொண்டது!! அதற்கு "ஆ. அ. ஆ'' என்று பெயர்.. அதாவது ஆகஸ்டின் அளப்பரிய ஆனந்தம்! Oh yes- பதினோரு ஆண்டுகளாய் ஒவ்வொரு ஆகஸ்டின் முதல் வாரத்து இறுதியினை ஈரோட்டில் எல்லைகளில்லா அன்புகளின் மத்தியில் களித்திருந்து கழித்து வந்திருக்கிறோம்! கொரானா அசுரன் இடைப்பட்ட மூன்று ஆண்டுகளை விழுங்கியிருக்க, விட்டதைப் பிடிக்கும் உத்வேகத்தில் 2023 & 2024 செம அதகளப் பொழுதுகளாக்கிக் கொண்டதெல்லாம் நமது பயணத்தின் மைல்கல் தருணங்கள்!
2014-ல் துவங்கிய இந்தக் காதல் கதைக்குத் தான் எத்தனை - எத்தனை அத்தியாயங்கள்?!
*LMS ரிலீஸ்
*தல - தளபதி திருவிழா
*மின்னும் மரணம் அறிவிப்பு
*எழுத்தாளர் சொக்கன் அவர்களின் வருகை
*முதலும், கடைசியுமாய் அம்மா கலந்து கொண்ட ஈரோட்டு விழா!
*இரத்தப் படலம் கலர்த் தொகுப்பின் ரிலீஸ் அதகளங்கள்..!
*முத்து ஐம்பதாவது ஆண்டுக் கொண்டாட்டங்கள்!
*லயன் @ 40 லூட்டிகள்..!
என்று அடுக்கிக் கொண்டே போகலாம் - ஈரோட்டின் மண்ணில் நாம் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள அற்புத நினைவுகளை! அதிலும் அந்த VOC பார்க் திடலில் புத்தகவிழா நடந்து வந்த நாட்களில், Le Jardin ஹோட்டலிலும் சரி, மரத்தடிகளில் மாலைப் பொழுதுகளிலும் சரி, நாம் அடித்த கூத்துக்கள் ஒரு ஆயுட்கால நினைவுகள் என்பேன்! சகலத்தையும் மூட்டை கட்டிவிட்டு, வீட்டாண்ட ஒரு ஓரமாய் குந்திக் கிடக்க வேண்டியதொரு எதிர்காலத்து நாளில்- மஞ்சள் மாநகருடன் நமக்குள்ள இந்தப் பந்தம் பற்றியும், இங்கே நாம் உணர்ந்த மட்டற்ற அன்புகள் பற்றியும் அசை போடும் போது தான், இங்கே நாம் ஏற்றிக் கொண்ட மின்சாரங்களின் வீரியத்தின் முழுப் பரிமாணம் என்னவென்பது புரியும் என்பேன்!
But இந்த மகிழ்வுகளில் பங்கேற்று வந்த சீனியர் எடிட்டர் இன்று நம்மோடு இல்லை எனும் போது, நடப்பாண்டில் ஈரோட்டிற்கென பெருசாய் எதுவும் திட்டமிடலை! அடுத்த வாரயிறுதியில் (ஞாயிறு - ஆகஸ்ட்-10) ஒரு நாளுக்கு மட்டும் "பிரபல வைத்தியர் ஈரோடு வருகை'' என்ற பாணியில் ஒரு flying visit திட்டமிட்டுள்ளேன்! ஏதேனுமொரு தோதான இடத்தில் சந்திப்பு நடத்திட நமது ஈரோட்டு சர்வாதிகாரியும், நண்பர்களும் தேடி வருகின்றனர்! அடுத்த ஓரிரு நாட்களில் தகவல்கள் தருகிறேன் folks - ஈரோட்டுப் பக்கமாய் அன்றைக்கு எட்டிப் பார்க்க உங்களுக்கு இயலுமெனில் wud love to see you!
சந்திப்புகளுக்குப் பெரிதாய் இம்முறை மெனக்கெடவில்லை என்றாலும் ஆகஸ்டை அதகளமாக்கிட நாம் தவறவில்லை! போன பதிவில் சொன்னது போலவே 4 x T's...!
Tintin
Tiger
Tex
The Classic Kings
என எக்கச்சக்க அதிரடி நாயகர்ஸ் இந்த மாதம் உங்களை சந்தித்து வருகின்றனர்! And எனது ஆரம்ப அனுமானமோ - முதலிடத்துக்கான போட்டி இம்முறை டின்டினுக்கும், டைகரின் தங்கக் கல்லறைக்கும் மத்தியிலிருக்கும் என்றேயிருந்தது! ஆனால், "இன்டிகேட்டரை இப்டிக்கா - அப்டிக்கா போட்டுப்புட்டு நேரா போற வித்தையிலே நாங்களுமே ஜித்துக்கள்டா தம்பு!'' என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள் guys! And இதுவரையிலான முதற்பார்வையின் தகவல்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் ஆறு நாயகர்கள் கலந்து கலக்கிடும் The King's ஸ்பெஷல்-1 தான் இம்மாதத்து show stealer....!!
வேதாளர்; ரிப் கிர்பி; சார்; காரிகன்; மாண்ட்ரேக் & விங் கமாண்டர் ஜார்ஜ் என அமெரிக்க அந்நாள் ஜாம்பவான்ஸ் ஒற்றை இதழில் இணைந்து களமிறங்குவது அஜால் குஜால் ரகளையாகவே இருக்குமென்று எனது திட்டமிடலில் சொல்லியிருந்தது! ஆனால், நடுவாக்கே ஏதோவொரு கலந்துரையாடலின் போது- "ஐயே... எனக்கு அவரைப் புடிக்காதே...! இவர்னா ஆகாதே!'' என்ற ரீதியில் கொஞ்சக் குரல்கள் ஒலித்த வேளையில் லைட்டாக வயிற்றில் புளியைக் கரைத்தது! ஆனால், ultimately எனது துவக்கத்து gut feel பொய்க்கவில்லை என்பதைக் கடந்த மூன்று தினங்களின் feedfack நிரூபித்து வருகின்றன!" ஒரே நாயகரை விடாப்பிடியாய் படிப்பதைக் காட்டிலும், இந்த variety பிரமாதம்!'' என்ற எண்ணங்கள் பரவலாக உலவிடுவதைப் பார்க்கும் போது மெய்யாலுமே ஹேப்பி!
Of course புராதனத்தின் பிள்ளைகளே இந்த நாயகப் பெருமக்கள்! ஆனால், யாருக்கும் சிக்கல் தராது, தனித்தடத்தில், தெளிவான அடையாளத்தோடு, இவர்கள் பவனி வரும் போது- "பிடித்தால் மட்டும் வாங்கிக்கலாம்! no தலைகளில் திணிப்பு! என்ற சாத்தியம் கை கொடுக்கிறது ! நம் மத்தியில் இந்த க்ளாஸிக் ஹீரோக்களை ஆராதிக்கும் அணியினர் கணிசமாய் இருப்பதால் அவர்களை உதாசீனம் செய்வது முறையாகாதே?! Truth to tell - வேதாளரும், ரிப் கிர்பியும், சார்லியும் மட்டுமே எனது current ரசிப்பு லிஸ்டில் இடம் பிடித்துள்ளனர்! பாக்கி மூவரை முன்பு போல ஆராதிக்கத் தடுமாறுகிறது! ஆனால், இன்று நண்பர்களின் முகங்களில் தாண்டவமாடும் புன்னகைகளை உணர்ந்திடும் போது, எனது தடுமாற்றத்தை ஒரு பொருட்டாக்காமல் விட்டது உத்தமம் என்பது புரிகிறது! So இதே பாணியில் The King's ஸ்பெஷல்-2 ஜரூராய் தயாராகி வருகிறது! And அதனிலுமே ஏதேனும் ஒரு க்ளாஸிக் சூப்பர்ஹிட் மறுபதிப்பு இடம்பிடித்திடும்! Hail the Kings!!
டின்டின்! ரொம்பச் சிலருக்கே கேல்குலஸ் படலத்தை வாசித்திட அவகாசம் கிட்டியிருக்கும்! Yet இதுவொரு மெகா ஹிட்டாகிடும் என்பதில் எனக்குத் துளியும் ஐயமில்லை! அதுவும் ஆன்லைனில் அனல் பறக்க டின்டின் காணும் விற்பனைகள் மிரட்டல்!! ஒரு அசாத்திய ஜாம்பவான் - என்றைக்குமே, எங்குமே ஜாம்பவான் தானென்பதை இம்மியும் ஐயமின்றி புரியச் செய்கின்றன! இதோ- இப்போதே அடுத்த டின்டினின் பணிகளை ஆரம்பிச்சாச்சு! The Crab with the Golden Claws!!
TEX!! Again - பொம்ம பார்ப்பதைத் தாண்டி இந்த நெடும் சாகசத்தினை ரசித்திட யாருக்கும் பெருசாய் அவகாசம் கிட்டி இராதென்று நினைக்கிறேன்! Whenever that happens - தல ஒரு சூறாவளியைக் கிளப்பாது போக மாட்டார் என்பேன்! Simply becos - ஒற்றை நாயகராய், துணைக்கு கார்சன் கூட இல்லாது, கிட்டத்தட்ட 300 பக்கங்களை நகர்த்திடுவதற்கெல்லாம் ஒரு அசாத்திய ஆளுமை அவசியம்! அதிலும் தமிழ் சினிமாவின் சாயல்கள் மிகுந்திருக்கும் இந்தக் களத்தில் நாம் ரசிக்க கணிசமான சமாச்சாரங்கள் உண்டு! எனது ஒரே ஆதங்கம் : இதில் மட்டும் கார்சனும் இருந்திருந்தால் கதை இன்னும் ஒரு notch மேலே சென்றிருக்கும் என்பதே!!
ரைட்டு... கை நிறைந்திருக்கும் இதழ்களின் அலசல்களில் இந்தப் பகுதியினை இனி சற்றே கலகலப்பக்கினால் சிறப்பு என்பேன்! உங்களின் உற்சாக அலசல்களே, மதில் மீதான மியாவ்களை சட்டென்று ஆர்டர் செய்திடத் தூண்டிடும் க்ரியாஊக்கிகள்! So முன்பு போலவே இதழ்கள் சார்ந்த அலசல்களை இங்கே கொஞ்சம் அழுத்தமாக்கிடலாமா folks?
Before I sign out - 4 கேள்விகள் :
1.அட்டவணையில் ஒரு லாரி லோடு டெக்ஸ் ; இரண்டோ - மூன்றோ டின்டின் என்றான பின்னே மிஞ்சிடும் slots மிகக் குறைவே! லக்கி, சிக் பில், ரூபின் etc etc என இன்றியமையா நாயக / நாயகியர் உட்புகுந்த பிற்பாடு எஞ்சிடுவதோ கொஞ்சத்திலும் கொஞ்சமே! So 2026 அட்டவணையில் - "புது வரவுகள்" எனும் பெட்ரோமாக்ஸ் லைட் அவசியமே அவசியம் தானா?
2.நடப்பாண்டின் ஹீரோ / ஹீரோயின் யாருக்கேனும் ஒரு சின்ன பிரேக் தர அவசியம் இருக்கிறதா?
3.காதில் தக்காளி சட்னி கேள்வி : ஆண்டுக்கு எத்தினி TEX மதி சாரே?
4.And உங்களது favorite ஈரோடு நினைவுகள் எவையோ?
Bye all... See you around! Have a great weekend!
Hi
ReplyDeleteவாழ்த்துகள் சகோ 💐💐💐
DeleteThanks அக்கா
DeleteFirst
ReplyDeleteTex 10 for the year
ReplyDeleteWe need G.N like barracuda in 2026
ReplyDeleteYep
DeleteIf you ask me the real hit is Horror Special. All the stories were unique and Twists. Completed Thanga Kallarai too (I don't know how many times I read it). Currently reading Tex (half way through :-)
ReplyDelete//real hit is Horror Special//
Delete😊😍
Me in🥰😘🥰😘🥰😘
ReplyDeleteபடித்து விட்டு வருகிறேன்.
ReplyDeleteVijayan sir, please give an image in this post. Without image, post looks like without sugar in the tea. 🙂
ReplyDeleteஅட, நீங்க வேற சார்! Blogger என்ன செய்துள்ளார்களோ தெரியலை - இன்னிக்கி இமேஜஸ் ஏற்ற முடியலை 🤕
Deleteஅப்போப்ப கமெண்ட் போடுறதே இரண்டு மூணு தடவை முயற்சி பண்ண வேண்டியதாக உள்ளதுங்க
DeleteTo be frank, if there is no Tex for a month I hesitate to start reading. I don't know why :-)
ReplyDeleteHi
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteவணக்கம் 🙏🙏
ReplyDeleteVijayan sir, please try to publish 'piralayam' aka pandemonium with sensor in 2026.
ReplyDeleteHi..
ReplyDeleteசார் ஆண்டுக்கு 24 டெக்ஸ் வேண்டும்
ReplyDeleteஆத்தி.. முன்பே இந்த message பார்த்திருந்தா நானும் இதையே கேட்டிருப்பேனே..
Delete😂😂😂
Deleteவணக்கமுங்க
ReplyDelete1.புது வரவுகள் கண்டிப்பாக அவசியம்...
ReplyDelete2.வந்தவரை எல்லோரும் நலம் என்றுதான் நம்புகிறேன்...
3.ஆண்டுக்கு 15 ஆசை,12 வது வந்தால் மதி என்பேன்...
4.All is Well...
வணக்கம்
ReplyDeleteThe Crab With The Golden Claws
ReplyDeleteதல ஹேட்டாக் & டின்டின் இருவருக்கும் ஏற்படும் முதல் சந்திப்பே இதில்தான்...
அதனால்தான் இந்த இதழ் one of my favourite டின்டின் சாசகசம்
கொஞ்சம் சட்டுபுட்டுன்னு போட்டுத் தாக்குங்க சார்... இன்னும் நாலஞ்சு மாசமாக்கிடாதீங்க தெய்வமே...
🙏🏼🥺
😘🥰👍🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
Delete1. புது வரவுகள் அவசியம் தான் சாரே .. எனினும் அதிகம் இடம் பெறாமல் இருப்பதே மதி ( இல்லையேல் உங்களை மூ.ச.மிதி ..😉😉 Just Fun )
ReplyDeleteகுழந்தைகளை கவருகிறது போல் சிறுவர் மலரில் வெளி வந்த எக்ஸ்ரே கண் + பல முக மன்னன் ஜோ + பேய்ப்பள்ளி + ஒரு குண்டு பையன் சாப்டிட்டே இருப்பானே பெயர் மறந்து விட்டது இவர்களின் கதைகளையும் புக்ஃபேரில் விச்சு கிச்சு போல் வெளியிட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் சார்
2. தாத்தாஸ் க்கு கொஞ்ம் கேப் விடலாம் சார் .. + ஸ்டெர்ன் + ஸ்பூன் & வொய்ட்
3. 09 சரியானது .. அப்பும்தான் ஸ்பெஷல் ல் போட்டு தாக்குறீங்களே .. 😍😍 ( முக்கியமா குட்டி இலவச இதழ்கள் .. விலைக்கென்றாலும் சரி மறுபடியும் கொண்டு வாருங்கள் சார் )
4. 2016 ஆண்டு லீதார்ஜன் ல் அரங்கு நிறைந்த அந்த தருணம் நேரிலே பார்க்காத அத்துணை நண்பர்களையும் நேரில் பார்த்து அளவாவியது .. மூத்த ஆசிரியர் + அம்மா + சொக்கன் சார் என அனைவரையும் நேரில் சந்தித்து அளவாவியது ..
+
2024 ஆம் வருடம் முத்து 50'S
குண்டன் பில்லி
Delete1. பெட்ரோமாக்ஸேதான் வேணும்
ReplyDelete2.
3. 12 புத்தகங்களாவது Tex வேண்டும்
4. என் இரட்டை பசங்களை கை குழந்தைகளாக உங்களிடம் அறிமுகம் செய்தது...
😘😘😘
Delete1. டியூராங்கோ, அண்டர்டேக்கர் மாதிரியான கமர்சியல் நாயகர்களாக இருந்தால் புது நாயகர்கள் வரட்டும்.
ReplyDelete2. தோர்கல் அல்லது ஜானி
3. 24
4. 2016 ஆகஸ்ட் புத்தக விழா. முதல் தடவை உங்களை, சீனியர்/ஜூனியர் எடிட்டர்களை, நண்பர்களை என சந்தித்த தருணம். ஒரு Jerry Maguire moment ன் போது என்னை ரீ சார்ஜ் செய்தது 2016 ஈபுவி தான்.
1.புது வரவுகள் அல்லது புது வரவு அவசியம் சார்
ReplyDelete2.முடிந்தால் மேகி கேரிசன் மற்றும் Durango சீக்கிரம் போட்டு முடிச்சு விடுங்க சார்
3.ஆண்டுக்கு TeX 10 இளம் டெக்ஸ் 10
(கொஞ்சம் ஓவரா போறோமோ... போவோம்)
4.கா.க.காவில் இரு ஜாம்பவான் நண்பர்களிடம் autograph வாங்கிய சமயம்
இளம் டெக்ஸ் , நன்றிகள் சகோ
Delete25th
ReplyDelete28th
ReplyDelete//புது வரவுகள்" எனும் பெட்ரோமாக்ஸ் லைட் அவசியமே அவசியம் தானா?//
ReplyDeleteஒன்றாவது தாருங்களேன், சார்
The கிங்ஸ் ஸ்பெசல் - 1.
ReplyDeleteமுதல் கதை. புது புது அர்த்தங்கள்.
'வேதாளருக்கு திருமணம்' ஏற்கனவே வந்து விட்டது. இது அதற்கு முந்தைய கதை.
டயானாவை திருமணம் செய்ய நகரத்தில் சம்பாதித்து இயல்பு வாழ்க்கை வாழ முடியுமா? என்ற பெருங்குழப்பத்தில் வேதாளர்.
கானகத்தைச் சுற்றி round அடித்து, நமக்கும் சுற்றிக் காட்டி விட்டு, பிரியா விடை பெற்று, நகர வாழ்க்கையில் நுழைகிறார். நேர்மையாய் கூலி வேலை செய்து சம்பாதிக்க பாடுபடுகிறார். கூடவே டெவில்.
'ஊருக்குள்ள ஓநாய் புகுந்த மாதிரி' என்று சொல்வார்களே, அந்த மாதிரி ஊருக்குள் வேதாளரோடு நிஜ ஓநாய் டெவில்!
நம்ம வேதாளரோ 'பாட்சா' மாணிக்கம் கணக்காய், தன்னை ஏமாற்றுபவனை கூட ஒன்றும் செய்யாமல் அமைதியாய் வாழப்பார்க்கிறார். நேர்மையாய் நகரத்தில் வாழ்வது எவ்வளவு சிரமம் நமக்குத் தெரியாததா?
ஒரு கட்டத்தில், மக்களைக் காப்பாற்ற வேறு வழியில்லாமல் நாலு முரடர்களை கும்மாங்குத்து விட, 'வேதாளர் முத்திரை' மூலம் 'மாணிக் பாட்சா' வந்திருப்பது ஊருக்குள் தெரிந்து போகிறது. அமைதியாய் பதுங்குகிறார்கள் ஊர்த் திருடர்கள்.
அதிலும், ஒரு ஹைலைட் என்னவென்றால் இரவில் தனியே நடக்கும் வேதாளரிடம் 'ஊருக்குள் வேதாளர் வந்திருக்கிறார். எந்தப் பிரச்சனையும் செய்து விடாதே!' என்று எச்சரித்து விட்டுப் போகிறான் ஒரு திருடன். ஹா..ஹா..ஹா....
'திருநெல்வேலிக்கே அல்வாவா'!
நல்ல சுவாரசியம்தான்!
அப்புறம் என்ன முடிவெடுத்தார் வேதாளர்?
வேறு வழியில்லை.
ஈடன் கார்டனுக்கு போவதைத் தவிர!
அப்பாடா! நமக்கும் இனி கதைகள் கிடைக்கும்!
நல்ல வித்தியாசமான வேதாளர் கிளைக்கதை.
Good for Kings special.
🥰😘👍💐semma ji😘
Deleteஅட்டகாஷ்
Delete///காதில் தக்காளி சட்னி கேள்வி : ஆண்டுக்கு எத்தினி TEX மதி சாரே?///
ReplyDelete12 என்பது இந்தாண்டு 9-ஆக உள்ளதுங்க, சார்
இந்த 9-பதை குறைக்காமல் இருந்தால் ஜெயம், சார்
//And உங்களது favorite ஈரோடு நினைவுகள் எவையோ? //
ReplyDelete2016 முதன் முதலில் வந்த ஈரோடு மீட்😊😊😊😊😊😍😍😍😍
முதன் முதலில் காமிக்ஸ் அன்பர்களை சந்தித்த அனுபவம். அனைவரின் காமிக்ஸ் குதுகலத்தை நேரில் காண கிடைத்த முதல் சந்தோசம்.
Deleteசகோதரர்களின் அன்பும் நட்பும் கிடைத்தது.
ஹாட்லைன், ப்ளாக், புகைப்படம் இவற்றில் மட்டும் அறிமுகம் இருந்த தங்களை நேரில் பார்த்து உரையாடிய தருணம்
தங்கள் பெற்றோரை ஒரு சேர சந்தித்தது. தங்கள் தாயார் அருகில் உட்கார்ந்து பேசும் வாய்ப்பும் கிடைத்தது.
தங்கள் சிறுவயது காமிக்ஸ் காதலை பகிர்ந்து கொண்டார்.
மரத்தடி மீட்டில் சிறிது நேரம் உரையாடவும் முடிந்தது. காமிக்ஸ் நேசங்களை விடைபிரிய மனமில்லாமல் விடை பெற்ற தருணம்.
🙏🙏🙏
ReplyDeleteநீண்ட நாட்களாச்சோ.... பதிவு வந்து.
ReplyDelete//நடப்பாண்டின் ஹீரோ / ஹீரோயின் யாருக்கேனும் ஒரு சின்ன பிரேக் தர அவசியம் இருக்கிறதா?//
ReplyDeleteஎன் பார்வையில் யாரும் இல்லைங்க, சார்
என் பார்வையிலும்
Deleteசூப்பர் சார்...உங்க உற்ச்சாகம் என்னையும் தொத்திகிச்சு....
ReplyDelete1. டெக்ஸ் போடுவீங்களோ மாட்டீங்களோ...ஆனா புது நாயகர்கள் நிச்சயம் வேணும்....புதுசுன்னாலே தேடலுமாவலும் சகஜம் தானே
2.இல்லை...இல்லாமலில்லை
3.முதல் கேள்விக்கு எனது பதிலிடித்தாலும்...டெக்ஸ் மாதாமாதம்....
4.முதன்முறை பரணி ஈவி சிபி புனிதர் ஸ்டாலின் தங்களை சந்தித்த என்பிஎஸ் ஆண்டுக்கு முந்தயாண்டே...எல்லாமே கவிதை...அதகளங்கள்
😊😊😊💐💐
DeleteTex12 with your choices sir any other barracuda also
ReplyDeleteஉண்மைதான் சார்..
ReplyDeleteசீனியர் இல்லாத விழாவை நினைத்து பார்க்க முடியவில்லை. ஈரோடு விழாவை தள்ளி தவிர்த்தது நல்ல விசியம் தான்.
சிரிக்க சிரிக்க டின்டின் முடித்ததும்
டெக்ஸ் எடுத்தாச்சுங்க சார்.
கதை வழக்கமான டெக்ஸ் பாணியில் இல்லாமல் வேறு விதமான பாணியில் வேறு ஏதோ ஹீரோ கதை படிப்பது போல் வித்தியாசமான ரீடிங்ல் சுவாரஸ்யமாக உள்ளது.
1) புது வரவுகள் அவசியம் சார்.
ரெகுலர் ஹீரோக்கள் பாணி நமக்கு தெரிந்ததுதான், புதிய வரவுகளின் பாணிகள்,கதைகளங்கள் நாம் அறியாதது.
ஆகவே புதிய நாயகர்கள் வருகை அவசியம் சார்.
இந்தாண்டு வந்த ஸகுவோரா அருமையான ஹீரோ.
2) ஜானிக்கு கொஞ்சம் ரெஸ்ட் தரலாம்.
3) இந்த வருடம் போல கதைத்தேர்வுகள் நச்சுனு இருப்பின் மாதமாதம் டெக்ஸ் தெறிக்க விடுவார்.
ஆனால் மற்றவர்களுக்கும் வழி விடும் நோக்கில் ஒரு மாதம் விட்டு 1 மாதம் என 6 டெக்ஸ் அதில் தீபாவளி ஸ்பெஷலாக ஒரு 700 பக்க குண்டு புக் + ஏதாவது மறுபதிப்பு.
4)2022.
40 வருட கற்பனை கனவுலக ஜாம்பவான்களை நேரில் பார்த்து திகைத்தது.
உண்மையில் நாம் பார்ப்பது ஆஸ்தான ஆசிரியர் விஜயன் சார் தானா? என மகிழ்ச்சியில் திளைத்து மகிழ்ந்த வருடம்.
தொடர்ந்த 2 வருடத்தில் சீனியர் ஐயா, கருணையானந்தம் சார் என ஜாம்பவான்களை கண்குளிர பார்த்து ரசித்தது.
நன்றி.
*Kings ஸ்பெஷல்* 😘🥰👍🙏
ReplyDeleteசெம்ம சார் 😘🥰👍🙏
இதே ஸ்டைல் தொடருங்கள் sir😘🥰
வரும் நடப்பாண்டில்
ReplyDeleteஇளம் டெக்ஸ்,
விஷம்,
டெக்ஸ் 75 வது சிறப்பிதழ் களுக்கு வாய்ப்பு உண்டாங்க சார்?.
ஆவலுடன் waiting 🔥🔥.
இளம் டெக்ஸ் தனித்தொடராக வேண்டுங்க, சார்
ReplyDelete👍
Deleteவழிமொழிகிறேன் 👍
Delete💪💪💪💪💪
Deleteசார் ஏற்கனவே எத்தனைனு நீங்க கேட்டப்ப ஆண்டுக்கு 12என்றே பெரும்பான்மையோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.(அதிலும் "குண்டு"புக்கு12)வேணுமுனு நீங்க கேட்காமலேபெரும்பான்மையோர் தெரிவித்திருந்தோம்.
ReplyDelete+99999
Deleteஇப்பவும் அதே . 2026ல் டெக்ஸ் குண்டு புக் 12 குடுங்க சார்
ReplyDelete👍👍
Deleteவந்துட்டேன்...
ReplyDeleteவாங்க சகோ
Deleteமாண்ட்ரேக் . இம்முறையும் ஸயன்ஸ் ஃபிக்ஷன்.சார்60 களில்இதுபோல் கதைகள் எழுதப்பட்ட போது வித்யாசமான புதுமையான கதைக் களமாகக் கொண்டாடப்பட்டன.அதற்குபிறகு மர்ம மனிதர் மார்ட்டின்,நேற்று போய் நாளை வா போன்ற பல வித்யாசமான கதைகளை நாமே கொண்டாடி விட்டோம் எனும் போது கிளாசிக் கதைகளில்ஸயன்ஸ் ஃபிக்ஷன் கதைகள் வெகுவாக கவரவில்லை ங்க சார் (குறிப்பாக மாண்ட்ரேக் கதைகளில் )கிளாசிக்கில்முடிந்தவரை ஸயன்ஸ் ஃபிக்ஷன் வேண்டாம் சார்.
ReplyDelete❣️
ReplyDeleteவணக்கம் நண்பர்களே 💐🙏💐
ReplyDeleteஇளம் டெக்ஸ் 2 குண்டு 5+5 =10
ReplyDeleteடெக்ஸ் 10 double, single, triple and குண்டு
3. கேள்விக்கு பதில்.
ReplyDeleteஆண்டுக்கு 24 டெக்ஸ் புத்தகங்கள் (தீபாவளி ஸ்பெஷல் சேர்க்காம) மட்டும் போதும். 👍
👍👍👍
Deletec.s.khannan sir உங்கள் விமர்சனத்தில் மாணிக் பாட்சா ஒப்பீடு செம .ரசித்து மீண்டும் மீண்டும் சுவாரஸ்யமாகபடித்துக் கொண்டுள்ளேன்
ReplyDeleteThanks sir.
Deleteஈரோடு புத்தக திருவிழா அனுபவங்கள் எல்லாம் மறக்க முடியாத இனிமையான நினைவுகள்.
ReplyDeleteTex குறைந்தது 24 புக் ..(யங் டெக்ஸ் சேர்த்து).. டெக்ஸ் 110 ல் சுவாரஸ்யம் எப்போதுமே குறைவுதான் சார், எனவே குண்டு குண்டாக...
ReplyDeleteநாங்கள் என்ன சொன்னாலும் நீங்கள் பட்ஜெட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை.. Inflation கூ டிக்கொண்டே போவதால் வருடத்திற்கு 10% ஆவது ஆண்டு சந்தா பட்ஜெட்டை ஏற்ற முயற்சி செய்யலாமே. அதிக புத்தகங்களும் கிடைக்கும் வாய்ப்பு இருக்குமே.
இப்போதெல்லாம் மாதத்திற்கு இரண்டு புத்தகங்களே வருவதால் மிகவும் வறட்சியாக இருக்கிறது சார்..
+123456
DeleteMe too sir
Delete+999999
Deleteஜானி, தாத்தா, ஸ்பூன் , இவர்களை ஒதுக்கி, வேதாளரை ஸ்பெஷல் இதழ்களுக்கு மாற்றி பட்ஜெட்டில் புதிய வரவுகளை புகுத்தலாம் சார்.. தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை யுவர் ஆனர்!!
ReplyDeleteRest to Spider , Archie
ReplyDeleteDear sir, Consider publishing Balance 7 episodes of Thorgal as 2 shots in 2026.
ReplyDeleteAlso look into the possibility of publishing Eagle's Doomlord (B&W) which once came in Rathinabala as Vithiyannal( if my memory is right)
7 தோர்கல்..... ஆத்தீ!
DeleteDoomlord...... ஆத்தாடியோவ்!
பயந்து பயந்து வருது சார் - இந்தக் கோரிக்கைகளை வாசிக்கும் போது!
1. ஒவ்வொரு ஆண்டும் புது ஹீரோக்களை கொண்டு வாருங்கள்.... பிடித்திருந்தால் கூட வைத்திருப்போம் இல்லையேல் மூட்டை கட்டுவோம். டெக்ஸ் டைகர் எல்லாம் புதிதாக வந்தவர்கள் தானே அப்போது .... வரவேற்போம் அனைவரையும் 🌹🌹🌹. 2. இந்த ஆண்டு வந்த ஹீரோக்கள் நன்றாக தான் போய்க்கொண்டிருக்கிற மாதிரி.தெரிகிறது..
ReplyDelete3. ஒவ்வொரு மாதமும் டெக்ஸ் உடன் சேர்ந்து காடு மேடு சுற்றுவதை தவிர்க்க முடியவில்லை.... முடிந்தால் இரண்டாக கொடுத்தால் கூட சந்தோஷமே ❤️❤️❤️❤️.
4. நாலாவது கேள்விக்கு நான் அம்பேல்.ஏனென்றால் இதுபோன்ற சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத துரதிஷ்டசாலி.. வீட்டில் நடக்கும் நல்லதுக்கே கலந்து கொள்ள முடியாத வாழ்க்கை. வெளிநாட்டு வாழ்க்கை ஒரே சந்தோசம் நமது காமிக்ஸ் படிக்கும் போது மட்டுமே. ❤️❤️❤️❤️
ஆண்டுக்கு 12 டெக்ஸ்+ யங் டெக்ஸ் இரண்டு வேண்டும் ஆசிரியரே
ReplyDelete+9
Deleteபொஸ்தவம் வந்த மறு நாளே குரூப்ல விலைக்கு போடவா தெய்வமே? அதுக்கு பருத்தி மூட்ட குடவுனிலேயே இருந்திடலாமே?
Deleteயாரேனும் நான்கைந்து பேர் சேல் போடுவதால், பெரும்பாலான வாசிப்பாளர்களின் விருப்பத்தை குடோனில் வைத்திட வேண்டாமே சார்
Deleteயங் டெக்ஸ் மிக அருமையான தொடர்
ப்ளீஸ் சார்
ரம்யா @ உங்கள் கருத்தை வரவேற்கிறேன்
Deleteநன்றிகள் சகோ
DeleteHi editor sir ,
ReplyDelete1. Yes .
3.For Tex, 10 books for an year sir
Kamache series , really enjoyed this cowboy stories sir. Is there any chance of his stories coming in future sir ?
🥹🥹🥹🥹
Deleteபுதுசு வேணும் சார்...
ReplyDeleteஅது தான் நமக்கு பொக்கிஷங்களை வெளியே திறந்து காட்டும் சாவி
அதே அதே
Delete1. புது வரவுகள் இல்லாத அட்டவணை முழுமை அடையாது. கண்டிப்பாக புது வரவுகள் தேவை
ReplyDelete2. ரெகுலர் சந்தாவில் இருக்கும் வேதாளரை கிளாசிக் சந்தாவுக்கு மாற்றி விடுங்கள். அந்த இடத்தை வேறு எவருக்கேனும் கொடுக்கலாம்
3. இரத்த வாந்தி எடுக்கும் அளவுக்கு நாங்களும் மாதம் ஒரு டெக்ஸ் என்று வருடத்திற்கு 12 வேண்டும் என்று ஒவ்வொறு முறையும் பதில் கொடுத்து கொண்டு இருக்கிறோம்.
ஆனால் அதை கடை பிடிப்பதில்லை. பின்பு இந்த கேள்வியை கேட்பதில் என்ன பயன்
4. இரத்தப்படலம் ரிலீஸ், முத்து 50, லயன் 40 என அடுக்கி கொண்டே போகலாம். எந்த ஒரு ஈரோடு சந்திப்பும் இதுவரை சோடை போனதில்லை. We love erode book festival with our meeting
//புது வரவுகள் இல்லாத அட்டவணை முழுமை அடையாது. கண்டிப்பாக புது வரவுகள் தேவை
Deleteநாங்களும் மாதம் ஒரு டெக்ஸ் என்று வருடத்திற்கு 12 வேண்டும் என்று ஒவ்வொறு முறையும் பதில் கொடுத்து கொண்டு இருக்கிறோம்.//
+9
//எந்த ஒரு ஈரோடு சந்திப்பும் இதுவரை சோடை போனதில்லை//
Delete💐💐💐
சந்தா எண்ணிக்கையை கூட்டி விட்டு special வரவுகளை குறைத்தால் நலம். லயன், முத்துவைக் காட்டிலும் லயன் லைப்ரரியின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது
ReplyDeleteஇது பல மைல்கள் இலக்கை அடைய வேக தடையாக உள்ளது. இது பற்றி நிச்சியம் நாம் சிந்திக்க வேண்டும்.
லைப்ரரியின் எண்ணிக்கையை குறைத்து லயன், முத்துவின் எண்ணிக்கையை கூட்டுங்கள்
கிளாசிக் சந்தாவில் அனைத்து கிளாசிக் பார்டிகளையும், கிளாசிக் கதைகளையும் அடைத்து விடுங்கள். அதை வருடம் முழுதும் கிளாசிக் விரும்பிகள் விரும்பும் விதத்தில் அவ்வப்போது கொடுத்து கொண்டே இருங்கள், புத்தக விழா, ஆன்லைன் மேளா என்று அனைத்தையும் சேர்த்து தான் சொல்கிறேன்
சந்தா, கிளாசிக் சந்தா என இரண்டு வகைகள் பிரித்த பின்பு, கிடைக்கும் Special தருணங்களில் புதிய முயற்சிக்கும், வாய்ப்பு கிடைக்காத நாயகர்களுக்கும் பகிர்ந்து கொடுங்கள்.
இதிலும் கிளாசிக் கதைகளை புகுத்தாதீர்கள் என்பதே எனது கோரிக்கை.
For questions 3
ReplyDelete15 tex books. 12 regular, 2 dewali spl, 1 kodai spl
For question 2
Stop cartoon series. Give a break
For question 1
New commers must. Introduce atleast 3 new heros.
Don't include classic in regular subscription
Ensure atleast 4 books for month.
Introduce weekly one book review club and Google meet with us for our review share
Comicselva
//!2014-ல் துவங்கிய இந்தக் காதல் கதைக்குத் தான் எத்தனை - எத்தனை அத்தியாயங்கள்?!////
ReplyDelete2013ல நடந்த முதல் ஈரோடு சந்திப்பை விட்டுட்டீங்களே ஆசிரியர் சார்.
2014ல் இருந்து தான் ஈரோடுக்கு என ஸ்பெசல் வெளியீடுகள் திட்டமிடுகிறோம். LMS ஆரம்ப புள்ளி.
2012ல ஈரோடு விழாவில் நமக்கு தனி ஸ்டாலுக்கு கடைசி நொடிவரை முயற்சித்து அது கிட்டாமல் போனதால் இரு வேறு ஸ்டால்களில் வைத்து நமது வெளியீடுகளை விற்பனை செய்ய ஈரோடு நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கேதான் ஈரோடு, பள்ளிபாளையம் பகுதி வாசகர்கள் இணைந்து உள்ளார்கள். அதை தொடர்ந்து 2013ல லயன்-முத்துக்கு என தனி ஸ்டால் கிடைக்கப்பெற்று தாங்களும் 2வது வாரத்தில் விஜயம் செய்து உள்ளீர்கள்.
மரத்தடியில் நம்ம வாசகர்கள் உடன் சந்தித்து காலை முதல் மாலை வரை கச்சேரி போட்டிருந்தோம். ஆக்ஸ்போர்டு ஓட்டலில் தங்களோடு முதல் முறையாக உணவு உண்டு மகிழ்ந்தோம். எத்தனை யுகங்கள் ஆனாலும் மறக்காத இனிய தருணும் அது.
பின்னாளில் அந்த சந்திப்பு பற்றி நானும் எழுதி இருந்தேன்..
https://salemtex.blogspot.com/2015/07/to-2013.html?m=1
///அடுத்த வாரயிறுதியில் (ஞாயிறு - ஆகஸ்ட்-10) ஒரு நாளுக்கு மட்டும் "பிரபல வைத்தியர் ஈரோடு வருகை'' என்ற பாணியில் ஒரு flying visit திட்டமிட்டுள்ளேன்!////---
ReplyDeleteசின்ன மீட்டானாலும் தங்களையும் நண்பர்களையும் சந்திக்கும் உத்வேகம் அதேபோல தான் தொடரும்...
காத்திருக்கிறோம் அடுத்த ஞாயிறு சந்திப்புக்கு
///டின்டின்! ரொம்பச் சிலருக்கே கேல்குலஸ் படலத்தை வாசித்திட அவகாசம் கிட்டியிருக்கும்! Yet இதுவொரு மெகா ஹிட்டாகிடும் என்பதில் எனக்குத் துளியும் ஐயமில்லை! அதுவும் ஆன்லைனில் அனல் பறக்க டின்டின் காணும் விற்பனைகள் மிரட்டல்!! ///
ReplyDeleteடின்டின் அதளம் இதழை வாசித்தபோதே புரிந்து போயிற்றுங் சார்...
ரொம்ப ரசிச்சி சிரிச்சி சிரிச்சி என்ஜாய் பண்ணி வாசிச்சேன்..💞💞💞💞💞
ரணகள காமெடி அட்வென்ஜர்....👌👌👌👌
The Crab with the Golden Claws!!
ReplyDeleteவாவ்.... பெயரே பட்டையை கிளப்புதே...அடுத்த ஆண்டு சந்தாவின் இதழாக தங்க கால் நண்டு வர்றாராங் சார்????
1.புது வரவுகள்... என்னங்க சார் இப்படி கேட்டுட்டீங்க....
ReplyDeleteலார்கோ
தோர்கல்
வெய்ன் ஷெல்டன்
பெளன்சர்
ஜேசன் ப்ரைஸ்
டியூராங்கோ
அண்டர்டேக்கர்
ட்ரெண்ட்
ஸ்டெர்ன்
ரூபின்
என புதிய புதிய நாயகர்கள் கிடைச்சதை எப்படி விட முடியும்???
சந்தாவில் ஒவ்வொரு முறையும் எதிர்பார்க்க வைப்பது புதிய அறிமுகமே!!
ஆடலும் பாடலும் இரந்தே ஆகணும்..ஆமா...
யெஸ் 💪💪💪
Delete2.இந்தாண்டு யாரும் ட்ராப் லிஸ்ட்க்கு...
ReplyDeleteம..ம..மா..மா...ஜா..ஜா.. ஹி..ஹி....
விற்பனை ரீதியாக யார் சோபிக்கலயோ அவுங்களை தாராளமாக கழட்டிடலாம். விற்பனை ஆகும் நாயகர்களுக்கு அந்த இடத்தை வழங்கிடலாம் என்பது என் தாழ்மையான கருத்துங் சார்.
3.டெக்ஸ்.....
ReplyDeleteஆண்டுக்கு 12.. மாதந்தோறும் டெக்ஸ் வெறேன்ன... மறுபதிப்போ புதுசோ.. மாதந்தோறும் தல வந்தா போதும்.
ஆனா 2016க்கு பிறகோ ஒன்றௌ ரெண்டோ ஆண்டுகள் தான் 12மாதமும் டெக்ஸ் வந்துள்ளது.
ஆமாங்க சகோ
Delete100வது ங்கோ..
ReplyDelete4.ஃபேவரைட் ஈரோடு நினைவுகள்..
ReplyDeleteஎதை விட எதை சொல்ல....அத்தனையும் பொக்கிசங்கள்...
2013-மரத்தடி முழு நேர மீட், அனைத்து நண்பர்களும் முதல் முறை அறிமுகம்
2014-LMS ரீலீஸ், KOK அங்கிள்& ப்ரெண்ட்ஸை பெயர்கள் தெரியாமலே சந்தித்தது
2015-முத்து 350கார்டூன் ஸ்பெசல் வெளியீடு
2016-ஈரோட்டில் இத்தாலி, மாப்பு மஹியோடு முதல் சந்திப்பு, "என்ற சகோ"- வோடு முதல் சந்திப்பு.
2017-இரத்தகோட்டை ரீலீஸ் விழா, செனா அனாவோடு முதல் சந்திப்பு, மாப்பு ரட்ஜாவோடு முதல் சந்திப்பு, மாப்புவோட அன்பு கலந்த ஷாம்பெயின் சாப்பிட்டது.
2018 இரத்தகளரிகளுக்கு பின்பேயான இரத்தப்படலம் விழா..இலங்கை நண்பர் மது பிரசன்னாவோடு சந்திப்பு
2019-விடுமுறை கிடைக்காம மிஸ் ஆனது
2020&21-நோ விழா
2022-ஆசிரியர் வர்லனாலும் நண்பர்கள் சந்தித்தோம்..தமிழய்யாவோடு முதல் சந்திப்பு
2023 முத்து 50 சகாப்தம்
2024 லயன் 40 திருவிழா
என தூக்கத்தில் கூட மறக்காத நினைவுகளோடு ஈரோடு விழா பொதிந்துள்ளது. 2019வரை நாங்கள் முன்னின்று நடத்தியபோதும், 2023&24களில் நாங்களே பார்த்துகிறோம்னு ஈரோடு நண்பர்களால் செல்லப்பட்டு கலந்து கிட்டபோதும், ஈரோடு சந்திப்பின் மேல் உள்ள ஈடுபாடு ஒன்றே!
"""வாசகர் சந்திப்பின் வசீகர புன்னகை--ஈரோடு"""
❤❤❤❤❤💛💙💚💜
Deleteநன்று மிக சிறப்பு
Deleteஈரோடுன உடன் நினைவு வரும் மற்றோரு நிகழ்வு...
ReplyDeleteமுன்பெலாம் ஒரு வழக்கம் உண்டு, நண்பர்கள் அவரவர் ஊரில் என்ன திண்பண்டம் பேமஸ்ஸோ அதை ஈரோடு புத்தக திருவிழா சமயத்தில் வாங்கி, அவர்கள் வராவிட்டால் கூட நண்பர்கள் வாயிலாகவோ கொரியரிலோ அனுப்பி வைப்பது வழக்கம்.
இதுவரை அப்படி ருசி பார்த்த பதார்த்தங்கள்,
1.ஆம்பூர் மக்கன் பேடா-நண்பர் பாசா பாய் அன்பளிப்பு
2.கோவில்பட்டி கடலை மிட்டாய்-நண்பர் ராஜசேகரன் வேதிகா அன்பளிப்பு
3.ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா-இதுவும் நண்பர் ராஜசேகர்
4.மல்லூர் பொரி-நண்பர் அறிவரசு ரவி
5.நாகர்கோவில் மீன் வருவல்-நண்பர் ஷல்லூம் பெர்னாண்டஸ்
6.அமெரிக்க பாறை மிட்டாய்-கேப்சன்"சரவணன்".
7.மாஸ் கெடா வெட்டு-நண்பர்கள் ப்ரான்ஸ் ஹசன், அஜய்சாமி,மஹிஜி மற்றும் பலர்
8.பிரத்யேக கெடா வெட்டுக்கள்.......;,........;.....
9.கும்பகோணம் சின்ன ஜாங்கிரி
10.பெயர்கள் மறந்து போன & விட்டு போன சிலபல ஸ்நாக்ஸ்.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்......கம்பெனி வழங்கும் """"சிவகாசி பன்"""
அருமை அருமை 😍😍😍
Deleteபிளாக்கில் பெயர்களாய் தெரிந்த இன்றைய காமிக்ஸ் நண்பர்கள் பலரை எனக்கு அறிமுக படுத்தியது ஈரோடு புத்தக திருவிழா தான். கள்ளம் கபடமற்ற உள்ளங்கள் பலரை என்னக்கு கொடுத்த மஞ்சள் மாநகரம். முதல் முறை வந்த போது நீங்கள் தான் பெங்களூர் பரணியா என்று நண்பர்கள் ஆர்வமுடன் கேட்டபோது கிடைத்த மகிழ்ச்சி வாழ்வில் என்றும் மறக்க முடியாது. பரணி அடுத்தமுறை உங்கள் கேமராவை அந்த பக்கம் வைத்து விட்டு உங்களுடன் நிறைய நேரம் பேச வேண்டும் என்று சொன்ன அமெரிக்க நண்பர். குடும்பத்துடன் ஈரோடு சென்ற போது மதிய உணவின் போது எனது குழந்தைகளுக்கு வேண்டியதை தேடி பிடித்து பரிமாறிய இளவரசர், மனதில் இருந்து எழுதுகிறீர்கள் என்று சொன்ன மருத்துவர் & எனது காமிக்ஸ் நண்பனுக்கு தைரியத்தை கொடுங்கள் என்று சொன்ன அதே மருத்துவர், ஏலே வாலே என்பது தனது வீட்டுக்கு வரவைத்து கோழி குழம்பு இட்லி என பரிமாறிய மக்கா & அவன் மனதை பாரமாக்கிய விஷயத்தை புன்னகையுடன் செந்தூரான் இருக்கிறான் என்று புன்னகையுடன் ஓடிக்கொண்டு இருக்கும் மக்கா, கோயம்பத்தூர் குடும்பத்துடன் வருகிறேன் என்றவுடன் நாங்கள் இருந்த இடதுக்கு பல கிலோமீட்டர் பயணம் செய்துவந்து எனது குழந்தைகளுக்கு பரிசுகளை கொடுத்து மகிழவந்த கடலம்மா, உங்கள் கடையில் இந்த டப்பா இருக்கா என்று கேட்கும் போது எல்லாம் தாமதம் செய்யாமல் போட்டோக்களை அனுப்பி ஆர்டர் செய்ததை உடனே பார்சல்செய்து அனுப்பும் விஜயராகவன், பட்டு துணி வேண்டும் என்ற உடன் தனது வேலையை எனக்காக தள்ளிவைத்து விட்டு செய்து கொடுத்த கண்ணா, அமைதியின் மறுஉருவம், அவன் பெயரை மொழிபெயர்புக்கு அவனிடம் கேட்காமல் சொன்னதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட நண்பா-நண்பா நண்பா என்று என்று ஆத்மார்தமான கூப்பிடும் நண்பன், வீட்டில் ஊருக்கு சென்று உள்ளார்கள் என்ற உடன் நேற்று இரவு என்னை அழைத்து சாப்பிட்டயாபா என்று விசாரித்த பெங்களூரு RMC யார்டு அன்பு ரவுடி, லீகலாக மனதை காயப்படுத்தி கொண்டு இருந்த விஷயத்தை போன் செய்து சொன்னஉடன் எனக்காக நேரம் ஒதுக்கி தேவையான விளக்கம் கொடுத்து, லூசா விடுங்க நான் பார்த்து கொள்கிறேன் என்று ஆறுதல் சொன்ன ஜட்ஜ் அய்யா-இவரை கடந்த வருடம்தான் ஈரோடில் நேரில் சந்தித்தேன் ஆனால் ஒரு நண்பனுக்கு மேலாக எனக்கு உறுதுணையாக இருக்கிறார், அண்ணா என்று அனுப்புடன் அழைக்கும் அன்பு தம்பிகள், கோயில் பூஜை பொருளை தேடிப்பிடித்து அனுப்பிய குடந்தையார், அம்மாவின் கால்வலிக்கு தனக்கு தெரிந்த மருந்தை கொடுத்து சரிசெய்ய முடியுமா என்று முயன்ற நாகர்கோவிலார். இன்னும் நிறைய கொடுத்த ஈரோட்டை உயிர் உள்ளவரை மறக்க முடியாது.
ReplyDeleteகாமிக்ஸ் அளித்த மிகசிறந்த நண்பர்களில் நீங்களும் ஒருவர் பரணி....
Deleteமுதன் முறையாக உங்க ஊர் இனிப்பு சுவைத்த தருணம் இன்றும் இனிக்கிறது..உங்கள் அன்போடு கலந்து இருந்ததும் காரணமாக இருக்க வேண்டும்.
நன்றி. அனைத்தையும் பாராட்டும் உங்கள் நல்லமனம் வாழ்க.
Deleteதொடரும்.,..
Deleteதனது புதிய இல்ல விழாவுக்கு குடும்பத்துடன் கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைத்த அருமை நண்பர் அறிவரசு, சிற்காழி வந்து உள்ளேன் என்ற உடன் எனது குழந்தைகளுக்கு பைநிறைய இனிப்புகளுடன் ஓடிவந்த மயிலை ராஜா. நீங்கள் எல்லாம் யாருப்பா என்மேல் இவ்வளவு அன்பு செலுத்த, எனது கல்லூரி வாழ்கைக்கு பிறகு மீண்டும் இயல்பான நண்பர்களை கொடுத்தது நமது லயன் ஈரோடு புத்தக திருவிழா தான். உங்கள் அன்பை என்றும் மறக்க மாட்டேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Deleteநேற்று சிம்பிளாக எழுதி இருந்தீங்க
Deleteஎன்னடா ரொம்ப சின்னதாக சொல்லி உள்ளார் என நினைத்தேன்
இன்று தாங்கள் எழுதிய நெகிழ்ச்சியான தருணங்கள் படித்து கண்கள் நெகிழ்வாகின, சகோ
அருமை சகோ
நன்றி ரம்யா. நேரம் சரியா இப்போது எல்லாம் கிடைக்க மாட்டேன் என்கிறது.
Deleteகிங் ஸ்பெஷல், டெரர் லைப்ரரி இரண்டும் படித்தாகிவிட்டது. பொறுக்கி எடுக்கப்பட்ட மணியான கதைகள். வேதாளர், கிர்பி, காரிகன், சார்லி, விங் கமாண்டர் ஜார்ஜ் என ஒவ்வொரு கதைகளும் தேர்ந்தெடுத்து கோர்த்த நவரத்ன மாலை. அடுத்த ஸ்பெஷலுக்கு வெயிட்டிங்.
ReplyDeleteடெரர் லைப்ரரி. இதுவரை நான் படிக்காத கதைகள். எல்லாமே அருமை. இதிலும் அடுத்த ஸ்பெஷல் வந்தால் மகிழ்வேன்.
பாராட்டுக்கள் சார்.
ReplyDelete*டின்டன்:- கேல்குலஸ் படலம்*
ஆகஸ்ட் மாத சர்ப்ரைஸ் சந்தா இதழ் டின்டின்னின் கேல்குலஸ் படலமே இம்மாத முதல் வாசிப்புனு அது அதிரடியாக ஆகஸ்ட் மாத ஷெட்யூலில் புகுத்தபட்டபோதே முடிவு பண்ணினேன்.
கதை என்னவோ ஆங்கில படங்களிலும் நாவல்களிலும் காமிக்ஸிலும் பலமுறை நாம பார்த்த ஓன்றே... *ஓரு அதிபயங்கர பேரழிவு ஆயுதம், ஒரு நொடியில் ஒரு பெரிய நகரத்தை அழிக்கும் வல்லமையுடையது*. இந்த ஆயுதததை வைத்திருக்கும் நாடு உலகை வென்று ஓரே குடையின் கீழ் ஆளும் சர்வ வல்லமை கிடைக்கப்பெற்றதாகிடும்.
டின்டின்& ஹடாக்கின் நண்பரான புரொஃபஸர் கேல்குலஸ், 2ம் உலகபோரின் சமயத்தில் அமெரிக்கா நடத்திய பல்வேறு ஆயத ஆராய்சிகளில் ஒன்றான அல்ட்ராசோனிக் சவுண்ட்டை பயன்படுத்தி ஒரு அழிவு ஆயுதத்தை கண்டுபிடிக்கிறார். இதை அடைய துடிக்கின்றன இரு அண்டை நாடுகள்.
ஹடாக்கின் மாளிகையிலயே அவரை கடத்திடும் முயற்சியும் நடக்கிறது.
ஆயுதத்தை செம்மை படுத்திட ஸ்விட்சர்லாந்து செல்லும் புரொஃபஸர் கேல்குலஸை ஸ்விஸின் நியோன் நகரில் இருந்து கடத்துகின்றனர்.
புரொஃபஸரை மீட்க ஹடாக்கும் டின்டின்னும் களமிறங்க, கடத்திய நாட்டிடம் இருந்து இன்னொரு
நாடு கேல்குலஸை அபகரிக்கிறது.
டின்டின்னும் ஹடாக்கும் கேல்குலஸை மீட்டனரா??? பேரழிவு ஆயுதம் எந்த நாட்டிற்கு கிடைகிறது? என்பதை பல ட்விஸ்ட்கள் காமெடி ரகளைகளுக்கு பின்னர் சிரிச்சி சிரிச்சி பங்சர் ஆகிப்போன வயிறோடு தெரிந்து கொள்ளலாம்.
ஒரு வரி கதையை வைத்துக் கொண்டு பல நாடுகள் பயணித்து செமத்தியான ரகளைகளுக்கு மத்தியில் அற்புதமான அட்வென்ஜர் படைப்பாக *ஹெர்ஜ்* அவர்கள் செய்துள்ளார். கதையை தூக்கி நிறுத்துவது *லயன் காமிக்ஸ் ஆசிரியர் திரு விஜயன்* அவர்களது இளமையான எழுத்துக்களே..
பல இடங்களில் வாய் விட்டு சிரிக்கும் அளவுக்கு ஃப்ரி ப்ளோயிங் ஆக வசனங்களை அமைத்துள்ளார் எடிட்டர் சார். ஹடாக்குக்கு இணையாக இன்னொரு இன்சூரன்ஸ் ஏஜெண்ட் "குடாக்கும்" இணைய காமெடி கூத்து களை கட்டுகிறது உச்சமாக.
கதை முழுதும் நான் ரசித்த இன்னொரு விசயம் டின்டின்னின் நாய் ஸ்நோயியின் அழிச்சாட்டியங்களே...அது வரும் ஒவ்வொரு ப்ரேமிலும் அதன் முக பாவனை அசாத்தியம். நவரசங்களை காட்டுது ஸ்நோயி.
துவக்க பக்கத்தில் கிளம்பும் டெலிபோன் ரகளையில் ஆரம்பிக்கும் குபீர் சிரிப்பு கடைசி பேனல் வரை கொஞ்சமும் குறையாது உள்ளது.. கதை மாந்தர்களின் உடல்மொழி கதைக்கும் கதையோட்டத்துக்கும் கூடுதல் வலு சேர்க்கிறது.
ஹடாக், குடாக், ஸ்நோயி, கேல்குலஸ், தாம்ஸ்ன்&தாம்ப்ஸன், இரு நாடுகளின் கோமாளி அதிகாரிகள், இத்தாலிய பாடகி, சிறையதிகாரி, கறிகடைகாரன், டெலிபோன் ஆபரேட்டர்கள்.. என கதையின் அத்தனை கேரக்டர்களும் செம லூட்டி அடிக்கின்றனர்.
*ஆகஸ்ட் அட்ராக்ஸன் டின்டின்னே!!!!!!*
செம செம
Delete//ஹடாக், குடாக், ஸ்நோயி, கேல்குலஸ், தாம்ஸ்ன்&தாம்ப்ஸன், இரு நாடுகளின் கோமாளி அதிகாரிகள், இத்தாலிய பாடகி, சிறையதிகாரி, கறிகடைகாரன், டெலிபோன் ஆபரேட்டர்கள்.. என கதையின் அத்தனை கேரக்டர்களும் செம லூட்டி அடிக்கின்றனர்//
Delete+9
நண்பர்கள் தின வாழ்த்துகள்
ReplyDeleteஅனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்
DeleteThe King ஸ்பெஷல்..
ReplyDeleteவேதாளர் - ரிப்கிர்பி, - மாண்ட் ரெக்-
என்ன அட்டகாசமான கதைத் தேர்வுகள்...
மன்னிக்கவும்..
இது போன்ற க்ளாஸிக் - கதைகள் வரும் வரை
க்ராபிக் நாவல் - ஸ்டைல்
கதைப்பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டேன்..சார்..
டெக்ஸ் வருடத்துக்கு கண்டிப்பாக 12 வேண்டும் அது இளம் டெக்ஸ் + கிளாசிக் டேக்ஸ் கதைகள் + ரெகுலர் டேக்ஸ் கதைகள் கொண்டதாக இருந்தாலும் ஓகே. ஆனால் கண்டிப்பாக மாதம் ஒரு டெக்ஸ் வேண்டும்.
ReplyDeleteபுதிய கதைகள் வேண்டும் அதேநேரம் சமீபத்தில் எங்கள் உள்ளங்களை கவர்ந்த தாதாஸ், நவீன வெட்டியான் மற்றும் அண்டர்டேக்கர் கதைகள் கண்டிப்பாக அடுத்த வருடம் வேண்டும் சார். அட்டவணையில் இவர்கள் கண்டிப்பாக இருக்கும் படி பார்த்து கொள்ளுங்கள் சார். இந்த வருடம் இவர்கள் இல்லாததை கஷ்டப்பட்டு ஏற்றுகொண்டேன் சார்.
ReplyDeleteஅப்புறம் அந்த பவுன்சர் கதை கண்டிப்பாக அடுத்த வருடம் வேண்டும்.
இவர்களுக்கு ஸ்லாட் இல்லை என்றால் புதிய அறிமுகத்துக்கு பதில் இவர்களை கொடுங்கள் சார்.🙏🏻
நேற்று ஆல்பா, அஸ்ஸியா டொன்கோவா... இவர்கள் கலக்கிய 3 அத்தியாயம் கொண்ட தொகுப்பை மீண்டும், மீண்டும் படித்து முடித்தேன்.. Sir.. ❤️❤️❤️❤️... அப்போ நான் வியந்தது உங்களைதான்... 🤭🤭அட்டகாசமான selection... ❤️🙏... ஓவியங்கள் 🤭🤭... எப்படி இப்படி கதையை செலக்ட் பன்றார் என்று
ReplyDeleteவியந்தேன்.. வாழ்த்துக்கள்.. 👍🙏❤️.... ஆல்பா வுக்கும், அஸ்ஸியா
வுக்கும்... கண்ணாலம், காச்சி ஆன கதை இருந்தா போட்டு வுடுங்க sir... ப்ளீஸ்... என்ன ஆனாங்களோ... மனசு அடிச்சிக்குது... ❤️...
நந்தி அண்ணே@ அஸ்ஸியா டொன்கோவா, ரஷ்ய ராணுவ அதிகாரியோட மனைவி..
Deleteஏதோ ஒரு இரவு ஆல்ஃபாவுக்கு கருணை காட்டுது...அது ஒரு இனிமையான சம்பவம் அவ்வளவே.. அதற்கு பிறகு ஆல்ஃபா மேலும் இரு குட்டிகளோடு கும்மாளம் போடுறான், அடுத்தடுத்த பாகங்களில்....😜😜😜
மஹி சார்பில்... முத்து பொன் விழா கொண்டாட்ட அரங்கில் நான் விருது வாங்கிய நிகழ்வு... ❤️❤️❤️❤️🙏🙏🙏 என் வாழ்வில் என்றுமே நினைவில் உள்ள அற்புத கணம்....❤️❤️❤️.. தம்பி மஹிக்கு எப்படி நன்றி சொல்வேன்.. ❤️❤️🙏🙏🙏🙏... அப்புறம்.... ஒரு சமயத்தில போஸ்ட் கார்ட் டா
ReplyDeleteபோட்டு.. அதோட விலையை ஏத்தின, .. ஆபீஸ் ஐ போஸ்ட் கார்டு ல குளிப்பாட்டிய பாரதி
நந்தீஸ்வரன் இவர்தாங்க " 😄😄என்று வாசகர்களுக்கு என்னை
நீங்கள் அறிமுகம் செய்த நிகழ்வும்...❤️👍🙏 பசுமை நிறைந்த நினைவுகளே... ❤️❤️❤️
😍😍😍😍😍
Deleteபரணி சகோ... ❤️❤️❤️🙏
Delete😄😄😄😄.. ராகவன்..எத்தனை குட்டிகளோடு கும்மாளம் போட்டாலும் true love ன்னு ஒன்னு
ReplyDeleteஇருக்குது தான... அதை ரொம்ப சூப்பர் ஆ ஓவியரும், writer ம்... கொண்டு வந்திருப்பாங்க.. அதைத்தான் நான் பிரமிச்சேன்... ஒரு frame... பறக்கும் விமானத்தை அசியா பார்ப்பாள்.. சூப்பர்... "இந்த கன்றவியான அரசியல் உலகத்தை விட்டு ஆல்பவோடு நம் வாழ்க்கை கிடைக்காதா..." போயிடலாமா...என்ற ஏக்கம்.. அட்டாஹாசம்.. ஒரே frame..
🤭🤭🤭❤️❤️❤️...
'கேல்குலஸ் படலம்.'
ReplyDeleteடின் டின்னின் துப்பறியும் படலம்.
அல்ட்ராசானிக் சவுண்ட் அலை மூலம் கண்ணாடிக்களையும், பீங்கான்களையும் உடைத்து சாதிக்கிறார் புரபசர் கேல்குலஸ். இதில் முதலில் பாதிக்கப்படுவது கேப்டன் ஹேடாக்கின் வீடுதான்!
என்ன ஏதென்று புரியாமல் ஹேடாக்கும், டின்டின்னும் விழித்து, புரபசர் கடத்தப்பட்ட பின் புரிந்து, அவரைக் காப்பாற்ற நாடு கடந்து அலைகிறார்கள்.
டிடெக்டவ் திரில்லர்தான்!
ஆனால், பக்கத்துக்கு பக்கம் காமெடியை நுழைத்திருக்கிறார்கள். கதையின் வேகத்தோடு பயணிப்பதா? ஓரமாய் நின்று சிரித்து விட்டு பின் தொடர்வதா? என்ற குழப்பத்தோடே ஒரு வழியாய் கதையைப் படித்தாயிற்று.
கதையில் காமெடி தெறிக்காத, சீரியசான ஒரே மனிதர் டின்டின்தான். மற்றபடி அனைவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ மனதிற்குள் சிரிக்க வைக்கிறார்கள்!
இன்சூரன்ஸ் ஏஜண்ட் ஜாலிலோ ஜிம்தான் டாப்! கோட்டுச் சித்திரத்திலேயே அவரின் உற்சாகமான சிரிப்போடு காணப்படும் முகபாவனைகளும், காமெடி வசனங்களும் (உபயம்: எடிட்டர்) அபாரம்!
கடைசியாய் சிக்கன் குனியாவைக் கேட்டு மாறிப் போன முகபாவம் அதைவிட அற்புதம்! ஓவிருக்கு வாழ்த்துகள்!
கேப்டன் ஹேடாக்குக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் சிரிப்பு வசனங்களை தமிழில் கொடுக்க எடுத்த முயற்சிதான் 17 முறை எடிட்டரைப் படிக்க வைத்திருக்கிறது.
அறிவியல் கலந்த, நிஜத்துக்கு நெருக்கமாக டின்டின் கதைச்சம்பவங்கள் இருப்பதால்தான் டின்டின் உலகமெங்கும் சுற்றுகிறார்.
மொத்தத்தில் கதையை ரசிப்பதா? சிரிப்பதா? என்ற குழம்ப வைத்ததில் கூட கதாசிரியருக்கும், மொழிபெயர்ப்பாளருக்கும் வெற்றிதான்.
O.K. Nice story! 😊
Excellent review
DeleteThank you sir
Deleteதங்கக்ககல்லறை மறுபதிப்பு பழய மொழி பெயர்ப்பில் வேண்டும் என்று அடம்பிடித்து கேட்ட நண்பர்கள் யாரும் இந்த புத்தகத்தை பற்றி ஒருவரி கூட எழுதாதது எனக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது
ReplyDeleteநீங்க எழுதுங்க
Deleteடின் டின் - கடந்த சில மாத புத்தகங்கள் இன்னும் படிக்காத நிலையில் இந்த கதையை படித்து விட்டேன். எல்லாம் உள்ள ஜனரஞ்சகமான கதை, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உள்ளது டின் டின் சிறப்பு.
ReplyDeleteகடந்த முறை ஸ்னோயி வசனங்கள் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இதமுறை அது மிஸ்ஸிங்.
டின் டின் கதையின் மிக அற்புதமான பெரிய பிளஸ் பாசிட்டிவ் முடிவு; கதைய படித்த உடன் மனதுக்கு ஒரு புத்துணர்வை தரும்.
"உதிரம் பொழியும் நிலவே..."
ReplyDeleteஏற்கனவே நான் சொன்னது போல....வழக்கம் போல டெக்ஸ் ன் உதிரம் பொழியும் நிலவே என்னை சரியாக இரண்டு மணி நேரத்திற்கு வன்மேற்கு உலகில் உலவ வைத்து விட்டது...இதழின் அட்டைப்படமும்..அதன் பருத்த கனமுமே இதழை வெகுவாக ரசிக்க வைக்க கதையை வாசிக்க ஆரம்பித்தேன்...ஆரம்பத்தில் ஒவ்வொரு பேனலாக சித்திரத்தை கவனித்து கொண்டு இதழை வாசிக்கும் பொழுது சித்திரங்கள் சிறிது நெருக்கத்தை காட்ட தவறினாலும் கதையின் பக்கங்கள் நகர,நகர அந்த சித்திரங்களும் நம்முள் உட்கொள்ள 200+ பக்கங்களும் நம்மை வன்மேற்கு உலகில் அழைத்து செல்ல தவற வில்லை...பதினாறு வருடங்களுக்கு முன் என ஒரு சாகஸமும் அதற்கு பின் 16 வருடங்களுக்கு பின் என அடுத்த சாகஸமும் ஆக இந்த இதழ் இரு சாகஸங்களாக படை எடுக்கிறது...நீண்ட நாட்கள் கழித்து செவ்விந்திய வீரன் வில்லனாக...ஆனால் க்ளைமேக்ஸ் வரை வில்லன் டெக்ஸை தன்னை நேருக்கு நேராக கூட சந்திக்க வைக்காமல் இருக்கும் அதே நேரம் தன்னை தேடியே டெக்ஸ் குழுவை யே தேடி ..தேடி வர வைக்கும் வில்லனாக பலம் காட்ட இறுதி சில பக்கங்கள் அடுத்து என்ன நடக்க போகிறது என பதைபதைக்க வைக்கும் விதத்தில் சூடு பறக்கிறது...பாலைவனத்தில்..புயலில். ..என வில்லனை தேடும் டெக்ஸ் குழுவில் ஒருவராக நாமும் இருக்க டேனியல் எனும் மகனின் பாத்திரமும்..டெக்ஸ் தோழியுமான அவன் தாய் மற்றும் தந்தையின் (?) பாத்திரமும் வெகு சிறப்பு ...இறுதியில் வழக்கம் போல் டெக்ஸ் கதையை படித்தவுடன் ஓர் இனம் புரியா மகிழ்வுடன் ஒரு புன்னகையுடன் இதழை மடித்து வைப்போமே அதே போல் தான் இம்முறையும் இந்த "உதிரம் பொழியும் நிலவே " இதழும்...
அருமை தலீவரே 💐💐💐
Deleteதலைவர் தலைவர் தான்
Delete' தி டெரர் லைப்ரரி'.
ReplyDeleteஇது போன்று நிறையப் படித்திருக்கிறோம்தான்.
பெரிதாக பாதிப்பு ஏற்படுத்தவில்லை
என்றாலும்,
'பயங்கரப் பொம்மைகள்' நன்றாகத்தான் இருந்தது.
சற்றே ரசிக்க வைத்தது.
மற்ற கற்பனைகள், கற்பனைகள்தான் என்று கோடிட்டு காட்டி விட்டன.
இருந்தாலும், வருடத்திற்கு ஒரு இப்படி ஒரு வித்தியாசம் இருக்கலாம்.!
நன்று சார்
Deleteஆஹா.. வாழ்த்துக்கள் சகோ... ❤️👍..நான் இந்த வாரம் தான் அனைத்தையும் வாங்குவேன்...❤️👍
ReplyDelete"டின் டின்" . ஆபத்திற்க்கு உதவி வேண்டி ஹெலிகாப்டரில் இருந்து நம்மாளுங்க sosஎன்று ரேடியோ அலை வரிசையில் தொடர்பு கொள்ள தொடர்பில் வருவது ஜாலிலோ ஜிம்இன்ஸ்யூரன்ஸ் ஏஜெண்ட்; .நம்ம இன்ஸ்யூரன்ஸ் பாலிசி என்னாச்சு? போட்றலாமா? வெடிச் சிரிப்பு .இந்தமுறை டின் டின் வெடிப்பதெல்லாம் தவுசண்ட்வாலா சிரிப்பு பட்டாசு
ReplyDeleteஉண்மை
Deleteஆமாங்க சகோ
Delete*தி கிங்ஸ் ஸ்பெஷல்...*
ReplyDelete( எப்பொழுதும் எனது விமர்சனங்கள் கதையை சொல்லாது ..ஆனால் இந்த க்ளாசிக் நாயகர்களின் சாகஸங்களின் கதையை சொல்வதால் வாசிக்காதவர்கள் வாசித்தாலும் எவ்வித குறையும் கதையில் நேராது..ஏனெனில் ஏற்கனவே அறிந்து போன நாயகர்களின் பாணியை அனைவரும் அறித்தே இருப்பார் கள் எனும் பொழுது இம்முறை.....:-)
1) புது புது அர்த்தங்கள்..
வேதாளின் சாகஸம்...
நாம ஒரு சூப்பர் ஹீரோவா இருந்துட்டு எப்ப பாத்தாலும் குற்றவாளியை தேடி புடிச்சுட்டும்..நியாயத்தை நிலை நாட்டுறதுமே பொழப்பா இருக்கேடா மாயாவி மத்த சாதாரண மனுஷங்க மாதிரி நாமும் வேலைக்கு போய் சம்பாதிச்சுட்டு டயானாவை கல்யாணம் பண்ணிட்டு குழந்த குட்டிகளை பெத்துட்டு ஒரு சாதாரண மனுசனா வாழனும்டா என வேதாளர் முடிவு எடுத்துட்டு வேதாளர் முகமூடிய கழட்டிட்டு வாக்கரா சாதாரண மனுசரா நகரத்துக்கு வர்றாரு நம்ம வேதாளரு..இங்க வந்தா இங்கேயும் வன்முறை..களவு..பேங்க் கொள்ளை..ரவுடியிஸம் என தலைகாட்டி கொண்டே இருக்க இது என்னடா வம்பா போச்சு சூப்பர் ஹீரோ வேதாளரா இருந்தப்ப கூட ஒரு கேஸ் தான் வரும் முடிச்சுட்டு மண்டை ஓட்டு குகைக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தோம்...சாதாரண மனுசனா இருந்தா இங்கே அதை விட வேலை அதிகமா வருது..நியாயமா வேலை செஞ்சும் சம்பாதிக்க முடில பேசாம நாம சூப்பர் ஹீரோவே ஆயிரலாம் அதான் பெஸ்ட்ன்னு நம்ம வேதாளர் திரும்ப தனது காட்டுக்கே போயிறாரு...
இதுதாங்க புது புது அர்த்தங்கள் நல்லா ஜாலியா கத போகுது..சூப்பரு...
2)ஆழ் கடல் அதகளம்..
கடலில் கொள்ளை அடித்த தங்களுக்கு சொந்தமான பணம்..நகைகளை மீட்க என ஒரு குழு ரிப் கெர்பியை வேண்ட அந்த புதையல் இருக்கும் இடத்தை அறிந்த இன்னொரு குழு வுடன் ரிப் ,டெஸ்மான்ட் இணைந்து அந்த புதையலை கண்டுபிடிக்க முயல..அந்த புதையல் உண்மையிலேயே யாருக்கு சொந்த்தானது..புதையலை ரிப்கெர்பி கைப்பற்றினாரா என்பதை நல்ல விறுவிறுப்பாகவே கொண்டு செல்லும் சாகஸம் தான் இந்த ஆழ்கடல் அதகளம்..எனக்கு எப்பொழுதும் ரிப்கெர்பி பிடித்தமானவர்..அவரது சாகஸமும் நிதானம் ஆக நிஜத்தின் அருகில் தான் இருக்கும் அது போலவே இந்த சாகஸமும்....சூப்பரு...
3) மேகமாய் வந்து போகிறாய்...
மாண்ட் ரேக் சாகஸம்..
மாயாஜால மன்னன் மாண்ட்ரேக் என்றாலே காதில் பூ சுற்றும் ரகமான கதைகள் தாம் என்பது ஆணித்தரமான நிஜம் என்பது ஏற்கனவே அறிந்த காரணத்தால் இந்த கதையும் அந்த ரகமே என்பதில் யாருக்கும் ஆச்சர்யம் ஏற்படாது தான்..வேற்றுகிரக வாசிகள் பூமியில் இருக்கும் உயிரினங்களை தூண்டில் போட்டு ஆகாயத்தில் உள்ள தங்களது விண்களத்திற்கு இழுத்து செல்ல (?) அதில் நமது மாயாஜால மன்னனும்..நர்மதாவுமே மாட்டிக்கொள்ள வேற்று கிரக வாசிகளிடம் இருந்து அவர்கள் தப்பித்தார்களா ,இல்லையா என்பதை சுவைப்பட விவரிக்கிறது இந்த மேகமாய் வந்து போகிறாய் சாகஸம்..இறுதியில் இது நிஜமா அல்லது கனவா என்பதை மாண்ட்ரேக்கும் சந்தேகிக்கலாம் ..நாமும் சந்தேகிக்கலாம்...மொத்தத்தில் ஓகே
4)புனித சிலை
காரிகன் சாகஸம்..
இந்த க்ளாசிக் நாயகர்களில் எனது விருப்பத்தில் இருக்கும் கடைசி நாயகர் இவர்..ஓர் தீவு போன்று இருக்கும் நாட்டில் இருந்து அவர்களின் குலச்சாமி போல் இருக்கும் கடவுளின் சிலையை ஓர் குழு அபகரித்து அதன் மூலம் அந்த நாட்டில் போர் சூழலை ஏற்படுத்தி அந்த நாட்டை கைப்பற்றி அந்த நாட்டின் வளங்களை அபகரிக்க முயல நமது நாயகர் காரிகன் அந்த சிலையை மீட்டு போர் சூழலை நிறுத்தினாரா என்பதே இந்த புனித சிலையின் சாகஸம்...காரிகனின் ஒரே சாகஸம் எனவே இதுவும் ஓகே சாகஸம் தான்..
5) டாப் சீக்ரேட்..
விங் கமாண்டர் ஜார்ஜ் சாகஸம்...
இவரின் சாகஸமும் எனக்கு பிடித்த ஒன்று ..இந்த சீக்ரெட் ரகசியம் குறுகிய சாகஸம் ஆக இருந்தாலும் வழக்கம்போல விறுவிறுப்பான சாகஸமே..அரசு நிறுவனத்திடம் இருந்தே ஓர் டாப்சீக்ரெட் ரகசிய பைல் காணாமல் போக அது காணாமல் போன ரகசியமும்..தற்போதைய அந்த பைலின் ரகசிய இடத்தையும் அறியும் துப்பறியும் சாகஸமே இந்த டாப் சீக்ரெட்.. நன்று...
ஒரு நாளைக்கு ஓர் சாகஸம் என முடிவெடுத்து இருத்தாலும்..விடுமுறையின் காரணமாக ஒரே நாளில் இந்த ஐந்து சாகஸங்களையும் வாசித்து முடித்தாயிற்று..ஐந்தும் ஐந்து சுவைகள் என்பதால் போரடிக்காமல் ருசிக்க வைத்தது... இதுவே அனைத்து கதைகளும் ஒரே நாயகரின் கதைகள் எனில் கண்டிப்பாக ஓர் அயற்ச்சியை ஏற்படுத்தி இருக்கும்...ஆனால் இந்த முறை கிங் ஸ்பெஷல் உண்மையிலேயே இந்த மாதம் கிங் தான்..மேலும் அட்டகாசமான அட்டைப்படம் ..தரமான பைண்டிங்..அழகான சித்திரங்கள் ..அன்றைய சிறப்பான நாயகர்களின் தொகுப்பு என பழைய முத்து காமிக்ஸ் கோடை மலரை இந்த இதழ் நினைவுப்படுத்துகிறது.
Excellent தல
Deleteஅருமை தலீவரே
Deleteதலைவர் இவ்வளவு ரசித்து விமர்சனம் எழுதுகிறார் என்றால் கிங் ஸ்பெஷல் சீக்கிரம் ஸ்டாக் அவுட் ஆக போகிறது என்று அர்த்தம்.
Deleteஆமாங்க சகோ
Deleteஒவ்வொரு கதையையும் ரசித்துள்ளார்
கேல்குலஸ் படலம்
ReplyDeleteசெம விறுவிறுப்பாக இருந்தது அந்த ஆல்பம்.
துப்பறியும் வேலையில் தீவிரமாக டின்டின் இருக்க, கேப்டன் ஹேடாக் டின்டினுடன் இணைந்து சீரியஸ் மனிதராக வலம் வந்தாலும் அவர் பண்ற அலும்புகளும் பேசிடும் வசனங்களும் சிரிப்பு வெடிகள்.
இந்த கதையின் பிரதான நபர் அறிவியல் கண்டுபிடிப்பாளர் புரபோஸர் கேல்குலஸ். இவருக்கு ஆபத்து ஏற்பட, இவரை காப்பாற்றிட டின்டின் & கேப்டன் ஹேடாக் களம் இறங்குகின்றனர். இரண்டாம் உலகப்போர் பின்பு cold war நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஐரோப்ப நாடுகள் தங்கள் ஆயுதக் கிடங்களை பலப்படுத்துவதில் தீவரமாக இருந்தன, அதனை அடிப்படையாய் கொண்டு கேல்குலஸை பின்னனியாக வைத்து கதை பின்னப்பட்டுள்ளது.
புரபோசர் கேல்குலஸ் - காது கேட்காது, ஆனால் அதை ஒத்துக்க கொள்ள மாட்டார், சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதையும் கவனிக்க மாட்டார், தன் கண்டுபிடிப்பு தன் வேலை என்று மும்மராக இருக்கும் ஒரு ஜீவன். இவரோடு கேப்டன் ஹேடாக் நடத்திடும் சம்பாஷணைகள் நமக்கு சிரிப்பை வரவழைத்திடும், ஆனால் கேப்டன் ஹேடாக்கை மண்டை பிச்சுக்க வைத்திடும். எப்போதும் குடையை விட மாட்டார், இவருக்கு பதிலாக இக்கதையில் ஸ்நோயி குடையோடு சுத்துகிறது.
புரபோசர் கேல்குலஸ் தன் கண்டுபிடிப்பு கெட்ட நோக்கத்தில் பயன்படக்கூடும் என்பதும், அதன் காரணமாக தனக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதை யோசித்து, தன் கண்டுபிடிப்பு சூத்திரங்களை மறைமுகமாக ஒளித்து வைக்கும் யோசனை தோன்றியதில் அவ்வப்போது அறிவியலை தாண்டி சிந்திக்கவும் செய்கிறார் என்பதை காட்டுகிறது.
ஆனால், அந்த பிலிம்ரோலையும் மறதியாக தன் அறையிலே விட்டு வந்தது அறிவியலாளர்களுக்கே உரிதான குணம். பிலிம் ரோலை அழிக்கிறேன் பேர்வழி என்று ஹேடாக்கை இறுதியாக துன்புறுத்தியது😂😂😂
ஹேடாக்கின் வசனங்கள்
வாய்விட்டு சிரிக்க வைத்தன, ஆங்கிலத்தில் சொல்வதெனில் LOL
அந்த இன்ஸூரன்ஸ் ஏஜென்ட்டோடு போடும் வாய்ச் சண்டைகள், கோபத்தில் அவரை அடிக்காத குறை மட்டுமே
ரொம்ப சீரியஸான தருணத்தில் வருவது ஐயாவின் ஸ்பெஷல் போல, அதுவும் மாட்டுவது நம்ம கேப்டன் தான், பாவம் ஹேடாக்.
ஹெலிகாப்டரிலிருந்து உதவிக்கு ரேடியோ லைனில் முயற்சிக்கும் போது போலீஸ் கிடைக்காது என்பது தெரிந்தது, சரி யார் லைனில் வருவார் என நினைத்த போது வந்தார் பாருங்க இன்ஸுரன்ஸ் ஏஜெண்ட் 😂😂😂. சேஸ்ஸிங் நடுவில் லைனை மாற்றவும் முடியாமல், அந்த மொக்கையில் இருந்து தப்பிக்கவும் முடியாமல், வேறு யாரிடமும் உதவி கேட்க முடியாமல் ஹேடாக்கின் நிலைமை பரிதாபம். செம கலாய் இங்கு.
விடாது டேப்
பெரியவங்களான பின்பும் சின்ன விசயங்களில் யோசைனையின்றி சிறுபிள்ளைகள் போல் நடந்து கொள்வதை அந்த ப்ளாஸ்டிக் டேப் மூலம் காண்பித்து உள்ளார், கதாசிரியர்.
டேப் கையில் ஒட்டிக் கொண்டு விடும்போது இன்னொரு கையால் பிய்த்து எடுத்து சுருட்டி போடாமல் கேப்டன் ஹேடாக்கும் மற்ற பயணிகளும் பண்ற லூட்டிகள், அந்த நிமிடங்களில் ஹேடாக்கின் முக பாவைனைகள் 😂😂😂, ஹேட்ஸ் ஆப் டூ Herge
அது திரும்பவும் ஹேடாக்கிடம் வந்துவிடுவது இன்னும் ஹைலைட்😂😂😂
போனில் ஒட்டு கேட்டுட்டு இருப்பாங்க என சமயோகிதமாக யோசித்து டின்டின் மாற்றி பேசிடுவார், உளவாளிகள் முக்கியமான விசயம் வரும் கவனமாக இருப்போம் என்று சொல்லும்போது அடுத்த விநாடி வரும்பாருங்க ஹேடாக் வசனங்கள் 😂😂😂😂😂
ஹேடாக் கவனம் இல்லாமல் போய் அங்கும் இங்கும் முட்டி கொள்ளும் போது இது தலையா பாறாங்கல்லா என தோன்ற வைத்தது. நியான் நகரில் ஆராய்ச்சியாளர் ஆல்பிரெடோ வீட்டில் வைன் பாட்டிலை ஏக்கமாய் பார்த்திடும் பாவனைகள்😍😍😍, அதை குடிப்பதற்கு இவர் படும் பாடுகள் 😂😂😂😂😂
டின்டின் சமயோகிதமாக செயல்பட்டு எதிரிகளின் தகிடுதத்தங்களை கண்டுபிடித்து அடுத்துஅடுத்து திட்டங்கள் தீட்டி கேல்குலஸை காப்பாற்றிவதில் பெரும் பங்காற்றுகிறார். சாமர்த்தியமான டிடெக்டிவ் டின்டின்.
Deleteஸ்நோயிக்கு குறைவான பங்கென்றாலும் கிடைக்கும் சந்தப்பர்களில் லூட்டி அடித்திட தவறவில்லை.
ஒரு செயலை செய்யும்போது
Sudden turn of fortunate and unfortunate events அரேங்கேறிடும். அவைகளை அற்புதமாக கடத்தி சென்றுள்ளார் கதாரிசியர் Herge. பிக் சல்யூட் டூ Herge.
Akk Raja சகோ இந்த ஆல்பத்தை ரொம்ப எதிர்பார்த்து பாராட்டி கொண்டு இருந்தார், ஏன் என்பது கதையை படித்த போது புரிந்தது.
பொதுவாக சமீப நாட்களில் எந்த கதையினை படித்திட மூன்று முதல் ஏழு நாட்கள் எடுத்து கொள்வேன், ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரே நாளில் முடித்த கதை.
கதையின் வெற்றிக்கு காரணம் Herge என்றாலும் தமிழில் கதையை சுவைக்க சுவைக்க வசனங்களால் நிரம்பி உள்ளது.
ஹேடாக் & ஜில்லோ இன்ஸுரன்ஸ் ஏஜெண்ட் வசனங்கள் மிக மிக ரசித்து சிரிக்க வைத்தன.
சில சாம்பிள்ஸ்
பட்டணத்துக்கு பொட்டணம் கட்டிட்டு வந்தனாம், சுக்கு காபிக்கு சுடுகாட்டுக்கு போனானாம்.
வெங்காயம் விக்கிற வெங்கம் பயலுகளா,
பட்டுப் போன கட்டு மரமே,
விவஸ்தை கெட்ட வெடக்கூகை,
நட்டாற்றிலே விட்டுப்போன நாரைகளா
நகைச்சுவை மட்டும் என்றில்லை கதையோட்டத்திற்கு அனைத்து வசனங்களும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன.
கதை என்றில்லாமல் ஓவியங்களிலும் மிக அருமையாக படைத்துள்ளார் Herge.
ரொம்ப ரசித்து படித்தத அப்படியே அழகாக எழுதி இருக்கிறீர்கள் ஸ் பாராட்டுகள். டின் டின் கதை எவ்வளவு வேலை இருந்தாலும் ஒரே நாளில் படித்து விடுவேன். அதுதான் டின் டின் மேஜிக்.
Delete// ஆல்பிரெடோ வீட்டில் வைன் பாட்டிலை ஏக்கமாய் பார்த்திடும் பாவனைகள்😍😍😍, அதை குடிப்பதற்கு இவர் படும் பாடுகள் //
Deleteஎஸ் எஸ் எஸ் 😍
//டின் டின் கதை எவ்வளவு வேலை இருந்தாலும் ஒரே நாளில் படித்து விடுவேன். அதுதான் டின் டின் மேஜிக்//
Deleteஆமாங்க சகோ
நன்றிகள் பரணி சகோ
Deleteகேல்குலஸ் படலத்தில், புரோபசர் கேல்குலஸ்க்கு ஆரம்பத்தில் லிப்ட் குடுத்திடுவது தப்பான போன்காலில் கேட்கப்படும் கறிக்கடை கேப்ஸ்.
ReplyDeleteஇரு பேணல்களில் மட்டும் கறிக்கடையின் பெயரை காட்டிடுவார்கள்
எனக்கு இந்த கசாப்பு கடை ஃபோன் கால் எதுக்கு நம்ப கேப்டன் வீடுக்கு வருது என்று புரியவில்லை. ஆங்கிலத்தில் படித்த போதும் புரியவில்லை. ஒருவேளை இது காமெடிகக்கா உருவாக்கபட்டதா ?
Deleteஆமாங்க சகோ
Deleteஇதற்கு பின் வரும் ஆல்பங்களில் தலைகாட்டிடுவார் என்று சொல்லப்பட்டிருந்தது
This comment has been removed by the author.
Deleteஓகே. வெயிட்டிங் நன்றிஹை
Deleteஇப்ப எல்லாம் ஆசிரியர் பதியவ போட்ட அடுத்த வினாடி வாட்சப் பக்கம் போய் விடுகிறார். இங்கு நண்பர்களுடன் உரையாட முன்புபோல் வருவது இல்லை. 😢
ReplyDeleteஆமாங்க சகோ
Deleteஇன்றைக்கு பதிவு உண்டா சார்?
ReplyDeleteஅதான் தெரியலை சகோ
Deleteஇன்றா அல்லது நாளையா என்று
பதிவு இன்று வருமா வராதா என்று ஒரு போல் வைக்க சொல்லலாமா
Deleteசார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteஈரோட்டில் நேரில் போய் கேளுங்க குமார்
Delete*உதிரம் பொழியும் நிலவே* (SPOILERS ALERT)
ReplyDeleteஅடா அடா அடடா
இந்தக் கதையின் நாயகன் கண்டிப்பாக டெக்ஸ் இல்லை, டெக்ஸ் மட்டுமே வருகிறார். அவருடன் கார்சன் இல்லை, கிட் இல்லை, ஜாக் இல்லை என்றவுடனே புரிந்துக் கொண்டிருக்க வேண்டும். இது டெக்சின் கதை இல்லை என்று. ஆரம்பத்தில் அறிமுகமாவது கிட்டத்தட்ட கிட் வில்லர் 6 வயதடைந்த காலகட்டத்தை சார்ந்த டெக்ஸாக இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு.
எது எப்படியோ. அடா ஸ்டார்க், அல்ல அல்ல; அடா சைமன்ஸ் மிரட்டியிருக்கிறார். இந்தக் கதையில் டெக்ஸ் தவிர்த்து, மொத்தம் நான்கு பிரதான கேரக்டர்கள். அடா சைமன்ஸ், ரிக் சைமன்ஸ், டேனியல் சைமன்ஸ் மற்றும் மிரட்டும் வில்லன் சார்வெஸ்.
பிற கதாபாத்திரங்கள் கதைக்கு வலு சேர்க்கும் விதமாக சேர்க்கப் பட்டிருக்கிறது. ஆனால் அதற்காக எந்த கதாபாத்திரமும் சோடை போனதாக தெரியவில்லை. கார்ல் ராபின்ஸ், சைலன்ட் புட், மேட் ராய்டன், ஜெரி, கார்போரல் அல்கலா, என்று கதை நெடுக வரும் பிற கதாபாத்திரங்களும் கூட எதோ ஒரு வகையில் கதைக்கு உதவி புரிகிறார்கள்.
இந்தக் கதையின் ஒன் லைனை இப்படி மெனக்கெட்டு பெரிதாக்க முடியுமா என்பதே கதையை படித்து முடித்தவுடன் நான் வியந்த காரியம். ரொம்ப சிம்பிளான கதை.
ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை ஒருவன் கவர்ந்து செல்கிறான், அவள் காப்பாற்றப் படுகிறாள். அவள் என்ன ஆனாள் என்பதே கதை.
பாலியல் வன்முறை என்பது எத்தகைய உளவியல் அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது என்பது ஒரு பெண்ணாக இருந்தால் மட்டுமே அனுபவிக்க இயலும். ஆனால் ஓரளவு நம்மால் உணர முடிகிறது. இருளின் ஆட்சியில், நிழலின் கைப்பிடியில், அயர்ந்து தூங்கும் சமயங்களில், அதிர்ந்து எழுந்து தூக்கம் தொலைத்த இரவுகளாகவே பலர் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அடா அப்படிப்பட்ட பெண்ணாக வளர்ந்தாளா?
ரிக் சைமன்ஸ், இப்படியொரு கேரக்டரை, ஒரு ஆணாதிக்கவாதி போல் ஆரம்பத்தில் சித்தரித்திருப்பது கதையின் கிளைமாக்ஸுக்கு உதவி புரிந்திருந்தாலும், அந்த கதாபாத்திரத்தின் மற்றொரு முகத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. தன் முதலாளியின் மீதான விசுவாசம், தான் பார்த்து வளர்த்த பெண்ணை கடைசி வரை காப்பாற்ற வேண்டும் என்ற உள்ளுணர்வு. தான் மகன் என்று வரித்துக் கொண்ட ஒருவனை ஒரு நல்ல தந்தையாக வளர்த்து எடுக்க வேண்டிய கடமை. ராயல் சல்யூட் ரிக்.
டேனியல் சைமன்ஸ்,பெரும்பாலும் தான் யார் என்பதை முடிவு செய்ய வேண்டிய 15 வயதை உடைய இளைஞன். அடா வின் வளர்ப்பும் ரிக்கின் அன்பும் இந்த இளைஞனை எப்படி புடம் போட்டு உள்ளது என்பதை கடைசி கட்டங்களில் விவரிக்கிறார் கதாசிரியர்.
கட்டக் கடைசியாக சார்வெஸ். காட்டெருமையின் பலம் கொண்ட நரிப்பயல். டெக்ஸ் பல நேரங்களில் தோற்றுப் போக வேண்டிய நிலை வருகிறது. இதற்காக தான் டெக்ஸை இந்தக் கதையில் நுழைத்துள்ளார்கள் போனெல்லி குழுமத்தினர். சார்வெஸ்ஸின் பலம் என்ன என்பதை டெக்ஸ் இல்லாமல் நிரூபித்திருக்க முடியாது. ஆனால் அவன் விதி யார் கையால் முடிய வேண்டும் என்பதை கதாசிரியர் தீர்மானித்த விதம் அருமை.
ஒரு பெண் நினைத்தால், ஒரு பெண் துணிந்தால், வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் சுகிக்கும் என்பதற்கு இந்தக் கதை ஒரு எடுத்துக் காட்டு.
ஓவியரும் சும்மா சொல்லக் கூடாது, மழை பொழியும் இரவை இவ்வளவு அற்புதமாக சித்திரப்படுத்த பேராற்றல் வேண்டும். அத்தகைய ஆற்றலாளராக MASTANTUONO உலா வருகிறார்.
எடிட்டர் சார், இப்படி ஒரு விருந்தை படைத்ததற்கு நன்றிகள். உங்களுடைய மொழியாக்கமும் சும்மா பட்டையை கிளப்புகிறது. இந்த வருடம் வந்த அனைத்து டெக்ஸ் கதைகளும் ஒவ்வொன்றும் ஒரு ரகம். அது மட்டுமல்லாமல் தெறி ரகம்.
கதை 10/10
ஓவியம் 10/10
மேக்கிங் 10/10
வெல்கம் பேக். ராகிங் ரிவியூ
Deletethank you sir
Deleteகேல்குலஸ் படலம்
ReplyDeleteஇரண்டாம் உலகப்போரின் சமயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை நாஜிக்கள் மேற்கொண்டது உலகறிந்த விஷயம். இந்த கதையில் வரும் லெஸ்லி ஏர்ல் சைமன் எழுதிய புத்தகம் கற்பனை இல்லை. அது நிஜமாகவே புழக்கத்தில் இருந்த புத்தகம் தான். அந்த அட்டை பட விமானத்தில் இருந்த நாஜிக்களின் ஸ்வஸ்திகா இலச்சினையை மட்டும் மறைத்து விட்டார் ஹெர்ஜ். அப்படி பட்ட ஆராய்ச்சிகளில் தோல்வியடைந்த ஒரு சங்கதியை தான் நம் PROFESSOR கால்குலஸ் கையெலெடுக்கிறார். அதனால் என்ன நிகழ்ந்தது. டின்டின் எப்படி எதிரிகளை முறியடித்தார் என்பதே கதை.
இந்த முறை புதிதாக ஒரு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ஹெடாக்கை படுத்தி எடுக்கிறார். அதுவும் கிளைமாக்சில் குடும்பத்துடன் அவர் ஹெடாக் மாளிகையில் லூட்டி அடிக்க, கேப்டனுக்கு சிக்கன் குன்யா என்று கேல்குலஸ் சொல்ல, முதலில் பகடி செய்யும் ஜாலிலோ சிக்கன் குன்யா தோற்று வியாதி என்று மிரளும் இடம் சிரிப்பு மேளா தான்.
ஸ்னோவி கால்குலஸின் குடையை காப்பாற்றுவதிலேயே குறியாக சுற்றுவது ஹாஸ்யத்துக்கு உரம் சேர்க்கிறது. யாரோ ஒருவரின் குடையை கால்குலஸின் குடை என்று கொண்டு வருவது என்னடா ஸ்னோவியை நாலு கால் ஞானசூனியமாக மாற்றி விட்டாரே ஆசிரியர் என்று பரிதாபப்பட்டேன். ஆனால் கடைசியில் ஸ்னோவி தான் கால்குலஸின் குடையை கைப்பற்றி வெற்றி வாகை சூடுகிறது.
டின்டின் வழக்கம் போல துப்பறிகிறார். கிடைக்கும் துப்புகளை வைத்து அபாரமாக விளையாடுகிறார். கருப்பு சசிட்ரேன் கார் ஒன்றை வழிமறித்து லிப்ட் கேக்கும் பொழுது தடுமாறி விட்டாரோ என்று எண்ணினாலும், நம்பர் பிளேட் வேறு வேறு என்று விளக்கும் பொழுது, அட ஹெடாக் போல் நானும் ஏமாந்து விட்டேனே என்று எண்ணினேன். மீண்டும் நம்பர் பிளேட் மீது பார்வையை செலுத்திய பிறகே புரிந்தது, ஹெர்ஜ் நமக்கு நம்பர் பிளேட் மாறியதை தெரிவிக்கவில்லை என்று.
கேப்டன் ஹெடாக்கும் கதை நடுவே வசை மாறி பொழிந்துக் கொண்டே இருக்கிறார். இந்தக் கதையில் வரும் சில உளவாளிகளை அதே போல் வசைமொழிகளை பொழிய, கதை முழுவதும் வசை மொழிகளை படித்த படியே சென்றது கொஞ்சம் அயர்ச்சியை தந்தது.
ராங் கால்ஸ் மற்றும் பார்டுரியன் நாட்டினருக்கு செல்லும் தொலைபேசி அழைப்புகள் அந்த காலத்து டெக்நாலஜி குறித்து பகடி செய்திருந்தாலும், தற்சமயம் நம் நாட்டில் அலைபேசிகளில் இதே ரோதனை தான் என்பது கொடுமையாக உள்ளது.
பல இடங்களில், படங்களில் செம detailing. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருமே ரசித்து படிக்கலாம்.
கதை 10/10
ஓவியம் 10/10
மேக்கிங் 10/10
அருமை சகோ
Deleteகலக்கிட்டீங்க
நன்றி sister
Delete// இந்தக் கதையில் வரும் சில உளவாளிகளை அதே போல் வசைமொழிகளை பொழிய, கதை முழுவதும் வசை மொழிகளை படித்த படியே சென்றது கொஞ்சம் அயர்ச்சியை தந்தது. //
Deleteஉண்மை உண்மை சார்.
இந்த கதையில் சைலண்டாக பல இடங்களில் தொடர் சித்திரங்கள் சிரிப்பை வரைக்கும். ஸ்நோயி குடை கொண்டு வரும் சீக்வன்ஸ் அதனை கவனித்து டின் டின் வாங்கி குடைய விரிக்கும் போது மழை நின்று இருக்கும்
Deleteஆமாம் சார்.. முக்கியமாக அந்த பிளாஸ்திரி..
DeleteYes
Deleteஅந்த வைன் பாட்டில் சீக்வென்ஸ்
Delete***** உதிரம் பொழியும் நிலவே! ******
ReplyDelete16 வருடங்களுக்கு முன்னே ஒரு வெள்ளை இன பெண்ணை கடத்திக் கற்பழித்த ஒரு செவ்விந்திய கொடூரனை, ஒரு நீண்ட நெடிய தீக்கனவில் இருந்து விடுபடும்பொருட்டு அந்தப் பெண் டெக்ஸின் உதவியுடன் பழி தீர்ப்பதே - ஒன்லைன் ஸ்டோரி!😮
துளிக்கூட தொய்வே இல்லாத பரபரப்பான கதை! படிக்க ஆரம்பித்தால் நடுவில் நிறுத்தவே முடியவில்லை! டெக்ஸ் தன் துப்பாக்கியைக் காட்டிலும் மதியூகத்தை அதிகமாக பிரயோகித்திருப்பது அபாரம்! கதை நெடுகவே உளவியல் ரீதியான வார்த்தை பிரயோகங்களும், நுட்பமான கணிப்புகளும் என்று அசத்தியிருக்கிறார்கள் படைப்பாளிகள்!! 👏👏👏👏👏
கிளைமாக்ஸுக்கு முன்புவரைக்கும் பிரதான வில்லனை அதிகம் காட்டப்படுவதில்லை என்றாலும் கூட, அவனைப் பற்றிய பயமுறுத்தும் ஒரு பிம்பத்தை நமக்குள் கதை வாயிலாகவே விதைத்து விடுகிறார்கள்! அதனால் நாமும் ஒரு வகையான அச்சத்தோடே டெக்ஸ் குழுவினரோடு பயணிக்கிறோம்! 🥶
கார்சனோ, கிட் வில்லரோ, டைகர் ஜாக்கோ இல்லாமல் ஒரு முழுநீளக் கதையை டெக்ஸ் மட்டுமே தனியொருவராய் நகர்த்திச் சென்றிருப்பது மற்றொரு ஆச்சரியம்! 😯
மலையிலிருந்து உருண்டு விழுந்து உடல் எங்கும் ரத்தக்களறியாய் விழுந்து கிடக்கும் ஒருவன் - அடுத்த சில நிமிடங்களிலேயே ஒற்றைக் ஒற்றை மோதும் அளவிற்கு தயாராகி விடுவதெல்லாம் நம் டெக்ஸை தாண்டி வேறு எங்கும் நடக்காது!😅
இறுதிமோதல் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கலாம் - என்று நினைக்கத் தோன்றியது!😑
மற்றபடி டெக்ஸின் மணிமகுடத்தில் இதுவும் ஒரு மாணிக்கம் என்பதை மலைமுகட்டில் ஏறிநின்று உரக்கக் கத்திச் சொல்லலாம்!💐💐💐
//இறுதிமோதல் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கலாம் - என்று நினைக்கத் தோன்றியது!😑//
Deleteஇதுவே பயங்கரமா இழுத்திருக்காங்க.. இருக்க மேல இழுத்திருந்தா அறுந்து போயிருக்கும் சார்..
படிச்சுட்டு வரேன்
Deleteஅட... சூப்பர் இளவரசரே
Deleteரொம்ப நாள் கழித்து
இன்றைக்கும் நாளைக்கும் பதிவு கிடையாது போல தெரிகிறது!! நான் தூங்க போகிறேன்
ReplyDeleteநாளை ஈரோட்டில் சர்ப்ரைஸ் மறுபதிப்பாக டெக்ஸ் கிளாசிக் கதை ஒன்று வண்ணத்தில் கண்டிப்பாக வரும் என்று நான் நம்புகிறேன்.
ReplyDeleteநான் கூடத்தான் ஏதேதோ நினைக்கிறேன். அது எல்லாம் நடந்து விடுகிறதா? என்ன கொடும சார் இது?
Deleteஉதிரம் பொழியும் நிலவே...
ReplyDeleteஅருமையான தலைப்பு... இந்த ஆளு வந்தா அப்புறம் என்ன தேனும் .. பாலுமா பொழியும்???
எங்க வம்பு சண்டை இழுக்கலாம்ன்னு தா திரிவாப்பில்லே.
ஆளு இருவதாம் பக்கத்திலே ஒரு பெரிய அதிகாரிக்கு அப்பரன்டீஸா என்ட்ரி ஆகராப்பிலே.. வழக்கமான பில்டப் தா,..
ஒரு பிள்ளையை வந்து தூக்கிட்டு போயிடறாங்க அங்க போய் பாத்தீங்கன்னா முதல்லியே தெரியும் பெரிய அதிகாரி வந்து உசுரோட வரமாட்டாரன்னு.. அதேதான் நடந்தது...
சிவனேனு அப்படியே விட்டு இருக்கலாம் ஆனா 16 வருஷம் கழிச்சு இந்த அப்ரண்டீஸ் வந்து திருப்பி அதே பண்ணைக்கு வர்றப்புடி.. ஏழரை அங்க தான் ஆரம்பிக்குது 290 பக்கமும் நம்ம படிக்கணும்
🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂
Deleteபரணி ஜி. நல்லதே நினைக்கின்றிங்க நல்லதே நடக்கட்டும்.
ReplyDelete🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Deleteஎன்னபா ஈரோடு மீட்டிங் 10 மணிக்கு ஆரம்பிக்கும் என்று சொன்னார்கள், கொஞ்சம் அப்டேட் கொடுங்க
ReplyDeleteஎன்ன இந்த முறையும் அதே 12 மணி தானா 🤔🥲
Deleteபிளாகில் நான் பதிவிட்டு கிட்ட தட்ட இரண்டு வருடமே ஆகி இருக்கலாம். பல காலம் கழித்து இங்கு மீண்டும் பதிவிடுகிறேன்
ReplyDeleteகேல்குலஸ் படலம்:
அட்டகாசம்... வசனங்களை விடுத்து காட்சிகளிலுமே அந்த slapstick காமெடி சிரிப்பை மூட்டுகிறது
கேப்டன் ஹாட்டாக்கின் பிளாஸ்த்ரீ, அவரை விடாமல் துரத்தி நாடு விட்டு நாடு வருவதெல்லாம் சிரிப்பு வெடி.
Calculus காது கேட்காமல், மற்றவர்கள் சொல்வதை புரிந்து கொள்ளாமல், இவர் வேறு ஏதோ ஒன்றை பேசுவது அதிர்வேட்டுச் சிரிப்பை வரவைக்கிறது.
இந்த முறை ஹாட்டாக்கின் வசைகள் ரொம்பவே ஓவர். ஒரிஜினல் கதையிலுமே ஓவராக திட்டுகிறாரா என்று தெரியவில்லை.
இந்த முறை டின்டின் படித்து முடிக்க ஒன்னரை மணி நேரம் ஆனது. இருந்தாலும் ஒரே ஷாட்டில் படித்து முடித்துவிட்டேன்.
குறைகள்: ஒரே ஒரு ஸ்பெல்லிங் mistake கண்டு பிடித்தேன். ஆனாலும் அது டிண்டினில் எப்படி வந்தது என்று தெரியவில்லை.
பிரின்டிங் issue : என்னுடைய புத்தகத்தில் ஒரு பக்கத்துக்கு பிரிண்ட் pixelette ஆகி இருந்தது.
The King's Special:
இந்த kings special கதைகளில்
My favorites' order
1. புதுப்புது அர்த்தங்கள் (Phantom)
( இது மாதிரியான வித்தியாசமான ஒரு கதை படித்ததில்லை. இதில் வேதாளர் Soul Searching இல் ஈடுபடுகிறார். காணாகமே தனக்கு சிறந்தது என்று நகரம் உணர்த்துகிறது)
2.சிறை மீட்டிய சித்திரகதை (சார்லி)
(இந்த ஒரு கதை தான் நான் ஏற்கனவே படித்தது. இருந்தாலும் இதை அடித்து கொள்ள மற்ற கதைகளால் முடியவில்லை)
3. ஆழ்கடல் அதகளம் (ரிப்)
4. டாப் சீக்ரெட் (Johnny Hazard)
5. ஒரு பாதி படத்தின் படலம் (ரிப்)
6. புனிதச் சிலை (Corrigan)
7. குகையில் ஒரு களேபரம் (Phantom)
8. புரட்சிக்கொரு பயிற்சி (Johnny Hazard)
9. மேகமாய் வந்து போகிறாய் (Mandrake)
(Mandrake கதைகளில் எக்க சக்க சூப்பர் டூப்பர் கதைகள் இருக்க ஏன் இந்த கதை தேர்ந்து எடுக்க பட்டது என்று புரியவில்லை)
வாங்க பிரபு சந்தோசம்
Deleteசமீபத்தில் நீங்கள் இங்கு பின்னூட்டம் இட்டதாக ஞாபகம்.
Delete200
ReplyDelete