Powered By Blogger

Sunday, May 18, 2025

தி கோனார் நோட்ஸ்!

நண்பர்களே, 

இணைப் பிரபஞ்ச வணக்கங்கள்!

"நாளை போய் நேற்று வா"....! கடந்த ஒரு வாரமாய் ஈட்டியுள்ள அலசல்கள் சிண்டை பிய்த்துக் கொள்ளும் ரகத்தில் இருந்துள்ளதில் ஐயங்களில்லை! வித விதமான தியரிகள், அனுமானங்கள், யூகங்கள் - என தெறிக்க விட்டுள்ளனர் ஒரு சிறு அணியினர்!

'அடிக்கிற கத்திரி வெயிலில் ஊட்டாண்ட இருக்க நோவுகளையே சமாளிக்க முடிலே - இந்த அழகிலே டைம் லூப் ; காளான் சூப்புக்கு தான் பொறுமை இருக்காக்கும்?' என்றபடிக்கே மீத மக்கள் அமைதி காப்பதுமே கண்கூடு! "பொழுதுபோக்குக்கே வாசிக்க வர்றோம்... இந்த கூத்துக்களுக்கு நஹி!!" என்ற அவர்களது மைண்ட்வாய்ஸ் உரக்கவே கேட்கவும் செய்கிறது! இவையெல்லாம் என்றேனும் ஒரு தருணத்தின் இதழ்களே என்பதால் no விசனம்ஸ் ப்ளீஸ் மக்களே!  

Anyways இந்தக் கதையின் plot பற்றி நாம் ஆளுக்கொரு விதமாய் யூகம் செய்து வரும் நிலையில் கதாசிரியரிடமே அது பற்றி வினவினேன் - உங்களின் உத்வேகத்தை குறிப்பிட்டு! செம ஹேப்பி அவர் 😀😀😀!

இதோ - அவரது கதையாக்க விளக்கம் இங்கிலீஷில் + அதற்கான நமது தமிழாக்கம் ! Sure enough - நமது அலசல்கள் அவரது கற்பனைகளையும் விஞ்சியிருப்பது obvious 🥹🥹🥹!! "இவ்ளோவே தானா?" என்று இந்த விளக்கத்தை படித்த பிற்பாடும் சந்தேகங்கள் தொடரக்கூடும் என்பதுமே உறுதி! 

So படித்துப் பாருங்கள் ; தொடரக்கூடிய உங்கள் வினாக்களை TO : Mr. Marcello Bondi என்ற குறிப்புடன் இங்கேயே பதிவிடுங்கள் - அவருக்கே அனுப்பி பதில்கள் கோருவோம்!

லயன் வாசகர்களா - கொக்கான்னானாம் 💪💪....!

ரொம்ப காலம் கழித்துக் களை கட்டியுள்ள ப்ளாக் பார்க்கவே அற்புதமாய் உள்ளது! மௌனம் காக்கும் நண்பர்களும் இந்த விளக்கத்தை பார்த்த பின்னே கலந்து கொண்டால் - even better 🔥🔥🔥!

Happy Sunday all!!




131 comments:

  1. நீண்ட நாட்களுக்கு பிறகு me the First😘😘😘👍

    ReplyDelete
  2. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  3. வந்தான்..😄 சுட்டான்..😄செத்தான்..😄
    ரிப்பீட்டு.. 👍👍

    ReplyDelete
  4. இப்படி தான் இந்த googly இருக்கும்னு அனுமானித்தேன் சார்

    ReplyDelete
  5. இது ஒரு அப்ஸ்ட்ராக்ட் மாத்திரமே. நிகழ்வுகளுக்கான விளக்கங்கள் ஏதுமில்லை.

    சிறிது நேரம் கழித்து வருகிறேன் சார்

    ReplyDelete
    Replies
    1. சட்டைகள மாத்திட்டு ரெடியா இருக்கோம்.. வாங்க 😁

      Delete
    2. புது சட்டைய கிழிக்கிறதுல என்ன ஒரு ஆனந்தம்..

      Delete
  6. //Anyways இந்தக் கதையின் plot பற்றி நாம் ஆளுக்கொரு விதமாய் யூகம் செய்து வரும் நிலையில் கதாசிரியரிடமே அது பற்றி வினவினேன் - உங்களின் உத்வேகத்தை குறிப்பிட்டு! செம ஹேப்பி அவர் 😀😀😀!//

    😊😊😊😊😊😊😊

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. தங்களது பார்வையில் யாரேனும் மையப் புள்ளியை கண்டு பிடித்தார்களா, சார்

    ReplyDelete
  9. சிறுவன் மார்ட்டின் யேட்டர் எப்படி சார் கதையில் வந்தான்?

    ReplyDelete
    Replies
    1. நடந்து வந்தான் சார்.. (அடிக்க வராதீங்க)

      Delete
  10. இந்திய காமிக்ஸ் வரலாற்றில் முதல் முறையாக காமிக்ஸ் கோனார் நோட்ஸ்

    ReplyDelete
    Replies
    1. இவற்றை நம் வட்டம் தவிர்த்த வேறெந்த மொழியினரும் தொட்டுக் கூடப் பார்க்க மாட்டார்கள் சார்!

      Delete
    2. மறுக்க முடியாத உண்மை சார்

      Delete
  11. 1. டெவன் தான் ஜூலியாவின் பார்ட்னர். சக காவலாளியை கொலை செய்த பழி ஜூலியா மீது விழுகிறது. டெவன் என்ன ஆனான் என்பது தெரியவில்லை. ஆகையால் டெவன் தான் அந்தக் கொலையை செய்துள்ளான். (option 1)


    டெவன் தான் இறந்து போன சக அதிகாரியே (option 0)


    2. ஜூலியா ராஜினாமா செய்த பிறகு பழி போட ஆள் இல்லாததால் டெவனே, தான் செய்த குற்றத்தில் மாட்டிக் கொள்கிறான். (option 1)


    டெவன் தன்னால் இறந்து போய் விடுவான் என்று தெரிந்ததால் தான் ஜூலியா வேலையை ராஜினாமா செய்து விட்டு டெவனை விட்டு விலகி இருக்கிறாள் (option 2)


    3.. தன் தொழில்முறை எதிரியான லியனார்ட் மற்றும் அவனது வாரிசான மார்டினை கொல்வது தான் டெவனுக்கு கெல்டர் கொடுத்த assignment.. கெல்டர் மூலம் காப்பு கிடைத்த டெவன் காலப் பயணத்தில் சென்று மார்ட்டினை கார் ஏற்றி முதலில் கொல்லப் பார்க்கிறான். ஜூலியா காப்பாற்றி விடுகிறாள்.. வருங்காலத்துக்கு திரும்பிச் சென்ற டெவன் sniper மூலம் லியனார்டை கொல்லப் பார்க்கிறான். மீண்டும் ஜூலியா மாரடினை காப்பாற்றி இறந்து விடுகிறாள். (option 1)

    கெல்டரின் இந்த திட்டத்தை அறிந்துக் கொண்ட ஜூலியா கெல்டரை கொலை செய்ய முயற்சிக்க, அது விபரீதமாய் முடிந்து லியனார்டை தானே கொல்வது போல் ஆகிறது (option 0)


    4. இதை கண்டுபிடித்த லூ, காலப்பயணத்தில் சென்று டெவனை கொல்ல வருகிறான். (option 1)

    இந்த உண்மையை சொல்ல வந்த ஜூலியா மார்டினுக்கு உண்மையை புரிய வைக்க முயற்சிக்க, அவசர குடுக்கை மார்ட்டின் காலப்பயணம் மேற்கொள்ள எத்தனிக்க, ஜூலியா அவனை தடுக்க தோளில் சுடுகிறாள். அதையும் மீறி அவன் பயணம் செய்ய ஜூலியாவும் கடைசி வரை முயற்சிக்கிறாள். (option 0)


    டெவன் தான் வில்லன். இதை முதலில் வந்த வயதான ஜூலியா 2045ல் "ஒருக்கால்" என்று வானத்தை பார்த்து டெவன் ஸ்னைப்பருடன் இருப்பதை கண்டுபிடித்து லியனார்டை காப்பாற்றுகிறாள். (option 1)


    கெல்டர் தான் வில்லன், அவன் தான் டெவன் தனக்கு எதிரியாக இருக்கிறான் எனத் தெரிந்து லூவிடம் கால இயந்திரத்தை கொடுத்து டெவன்னை கொல்ல வருங்காலத்துக்கு அனுப்புகிறான். இதை தெரிந்துக் கொண்ட டெவன் தானும் கால இயந்திரத்தை கைப்பற்றி கடந்த காலத்துக்கு வருகிறான். (option 2)

    ReplyDelete
    Replies
    1. கிழிஞ்சு போன சட்டை இது தாங்க

      Delete
    2. //வருங்காலத்துக்கு திரும்பிச் சென்ற டெவன் sniper மூலம் லியனார்டை கொல்லப் பார்க்கிறான்.//

      செல்ல முடியாது

      Delete
    3. கதையை பற்றிய விளக்கம் சொல்ல சொன்னா நீங்களே ஒரு கதை எழுதுறிங்களே.. 😂

      Delete
    4. இணைப் பிரபஞ்சத்தில் ஜூலியாவுக்கு பதிலா டெவன் இருக்கா மெரி, இங்கே கதாசிரியர் Marcello Bondi -ன் இடத்தில் ஆட்கள் மாறுகிறார்களோ என்னவோ சார்!

      Delete
    5. கற்பனை குதிரை தானே சார்

      Delete
  12. TO : Mr. Marcello Bondi

    1. What is the need of Lyla parker to save young Martin?

    2. How did Ted future and Lou got the time travel bangle?

    3. Is there a sequel or a prequel planned for this story?

    4. Is there something subtle you were trying to tell us through the calendar planner of Ted in April 2015?

    5. Young Lyla is soft hearted when compared to Lyla future. Is it due to the jail treatment she had faced?

    6. Did Ted future understood he had killed his old friend Lyla?

    ReplyDelete
    Replies
    1. செம்ம questions சுரேஷ்

      Delete
    2. கேள்விகள் இப்போ இத்தாலி சென்றாச்சு 💪💪

      Delete
    3. நன்றி சார்.. நன்றி குமார் சார்

      Delete
  13. My only வருத்தம் :

    "கி. நா. இல்லாட்டி தீ குளிப்போம், பஸ் ஓடாது, டிராக்டர் ஓடாது... க்ளாசிக்ஸா போட்டு உசிரை வாங்குறே!" என்று குரல் எழுப்பிய சங்கத்தினர் டீ குடிக்க கூட இந்தப் பக்கமா வரக் காணோம் என்பதே 🥶🥶

    ReplyDelete
    Replies
    1. இந்தக் குட்டியூண்டு வட்டம் மட்டுமே இவற்றை ரசிக்கப் போகுது எனில் - மரத்தை சுற்றும் மாஸ் காட்டும் நாயகப் பெருமக்கள் திக்கில் மரியாதையா வண்டிய விட வேணும் போலும் 🤕🤕!

      சம்முவைதீன்.... அடிச்சு விட்றா வண்டிய - மாயாபி, பேத்தாளர், இச்சுப்பைடர் வூடுகளாண்ட 🔥🔥!!

      Delete
    2. Sir. ரொம்ப simple.. நிறைய நண்பர்களுக்கு ஒரு image கட்டி வச்சிருக்காங்க.. ஒரு வேளை தப்பான விளக்கம் கொடுத்தா image கெட்டுப் போயிடும்னு பயம் இருந்திருக்கலாம்

      இல்லையேல்

      இன்னும் கதைய படிக்க நேரமில்லாமல் இருந்திருக்கலாம்

      Delete
    3. இல்லையேல் இதெல்லாம் தேவை இல்லாத ஆணி என்ற எண்ணமிருக்கலாம்!

      Delete
    4. இல்லைனா என்ன மாதிரி நெனைக்கறத கோர்வையா எழுத தெரியாதவங்களா கூட இருக்கலாம் சார்..

      Delete
    5. கதையை ரசித்து படிக்கும் எல்லோருமே விளக்கம் சொல்லும் திறன் வாய்ந்தவர்களாகவோ, அல்லது விளக்கம் சொல்ல விரும்புபவர்களாகவோ இருக்க வேண்டும் என்பதில்லையே சார்.

      Delete
    6. எனக்கு இதுபோன்ற கதைகள் தான் ரொம்ப பிடிக்கும். ஆனால் எனக்குப் படித்து புரிந்து கொள்ள மட்டுமே முடியும் அதை வெளியில் விளக்கிச் சொல்ல எனக்கு வராது. இந்த கதையை இதுவரை மூன்று முறை படித்திருக்கிறேன். அட்டகாசமாக இருந்தது ஆனால் எனக்கு விளக்கம் சொல்ல தெரியவில்லை. பொதுவாக எனக்குப் புரிந்ததை எப்படி சொல்வது கோர்வியாக எழுதுவது என்பது எனக்கு வராது. இது போன்ற கதைகளை நீங்கள் தொடர்ந்து வெளியிட வேண்டும். இங்கு எழுத்துக்கள் வராது என்பதால்தான் நான் மௌன பார்வையாளராக இருக்கிறேன். இப்போது கூட எங்கே இதுபோன்ற கதைகள் வராமல் போய்விடும் என்கின்ற அச்சத்தில் தான் இந்த பதிவையே இடுகிறேன் விஜயன் சார். இது போன்ற கதைகளை தொடர்ந்து வெளியிடுங்கள். என்னைப் போன்ற சிலர் இந்த கதைக்கு விளக்கம் மற்றும் விமர்சனம் எழுதுவதற்கு முடியாதவர்களாக கூட இருக்கலாம். எனவே அதில் கணக்கில் எடுத்துக் கொள்ளாது இது போன்ற கதைகளை தொடர்ந்து வெளியிடுங்கள் நன்றி
      எனக்கு இந்த கதை நல்ல தலைவாழை இலை விருந்து தான்.

      Delete
  14. இது போன்ற கதை தேர்வுகள் பெரும்பாலும் பாப்புலர் ரசனைக்கு எதிராக இருக்கும் என்றாலும், புத்தகத்தை தைரியமாக வெளியிட்ட ஆசிரியருக்கு பாராட்டுக்கள்!

    இப்பொது வாசகர்களிடையே நடக்கும் அலசல்கள் வியப்பூட்டுகிறது! AWESOME !

    "நாளை போய் நேற்று வா" கதாசிரியர் Concept மற்றும் Plot டை விவரித்து விட்டாலும், attention to details ஓவியங்களுக்கான விளக்கத்தை விரிவாக யாரவது பதிவிட்டால் இன்னமும் சுவராஸ்யம் கூடும். உதாரணமாக பக்கம் 64 லில் கண்ணாடியில் பிரதிபலிக்கும் டெவனின் பார்வை கோணம், etc ...

    மற்றொரு பார்வையாக, இங்கிருந்து தொடரப்போகும் லாஜிக்கல் டைம் லூப் எப்படியிருக்கும் என்றொரு கற்பனை!

    இரண்டு கேள்விகளே இந்த கற்பனையின் தொடக்கம் என்பதால்...

    1) இனி தொடரப்போகும் லூப், புதிய புதிய நபர்களுடன் தொடரப்போகும் infinite multiverse லூப்பா, இல்லை ஜூலி-டெவன்-லூ இவர்களிடையே மட்டும் மீண்டும் மீண்டும் நடக்கும் ஒரே மாதிரியான நிகழ்வுகளின் infinite single verse லூப்பா?

    2 ) இந்த infinite லூப் பிரேக் ஆகுமா? அப்படியானால் அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன?

    இந்த இரண்டு கேள்விகளுக்கான பதிலை தேடினால் கதையில் ஆர்வம் இன்னமும் கூடும்.

    ReplyDelete
    Replies
    1. உதாரணமாக பக்கம் 64 லில் கண்ணாடியில் பிரதிபலிக்கும் டெவனின் பார்வை கோணம், etc ...

      It i s not a.mirror. it is a photograph sir.

      Delete
    2. Agreed சார்! infinite என்பதே கதையின் கரு என்றாலும் அதை பிரேக் செய்வது எப்படி என்பதே ஹீரோவின் தேடலாக இருக்க முடியும். இங்கிருந்து எழும் மேலும் ஒரு கேள்வி, தொடர் infinite நிகழ்வுகளை பற்றிய தொடர் நினைவுகள் ஜூலியின் நினைவுகளில் பதிகிறதா அல்லது ஒவ்வொரு முறையும் memory refresh ஆகிவிடுகிறதா? என்பது! அப்படி memory refresh ஆகும் என்றால் ஏதாவது ஒரு எபிசோடில் டெவன் தன்னுடைய இடத்தை நிரப்புகிறான் என்பதை உணர்ந்த ஜூலியாவாள் மார்ட்டின் இடத்தை லூ நிரப்புவான் என்பதை யூகிக்க முடிந்து அவனை காலப்பயணம் செய்யவிடாமல் தடுத்தால் , லூப் பிரேக் ஆகிவிடும் அல்லவா?

      Delete
    3. இறக்கும் போது தான் ஜூலியா உணர்கிறாள். அதனால் தான் லூவிடம் இந்த வேலையை விட்டு விடு என்று கூறிவிட்டு இறந்து விடுகிறாள்.

      Delete

    4. @ரவீ

      எதிர்காலம் பற்றிய தகவல்கள் முதிர் வயது ஜூலியாவால் இளவயது ஜூலியாவிடம் பகிரப்படுகிறது.

      முதல் பிரபஞ்ச வாழ்க்கையில் இருந்து ஜூலியா இணை பிரபஞ்ச வாழ்க்கைக்கு செல்லும்போது இந்த தகவல்கள் அனைத்தும் ஞானமாக அவள் மனதில் பொதிந்திருக்கும். இந்த இணை பிரபஞ்ச வாழ்க்கையில் ஜூலியா இறந்து விடுகிற பட்சம் அந்தத் தகவல்கள் பற்றிய ஞானம் அவளோடு மடிந்து விடுகிறது.

      முதல் பிரபஞ்ச வாழ்க்கையில் முதிர் வயது ஜூலியா இளவயது ஜூலியாவிடம் இந்த தகவல்களை பகிர்வதற்கு ஒரு வினாடி முன்பாக புதியதோர் டைம் லூப்
      துவங்குமாயின் இது பற்றிய எந்தவிதமான உணர்வும் அவளுக்கு இருக்காது.

      Delete
  15. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  16. Does it all happen due to Quantum entanglement...!? Since Lyla and Ted get replaced... Is it due to parallel universe interrupting or just a junior getting posting as the senior resigns...!?

    ReplyDelete
  17. கதையில் எந்தவிதமான அறிவியல் விளக்கங்களோ அதுசார்ந்த குறியீடுகளோ இன்றி வெகுசப்பென முடிந்தது போல் இருக்கிறது கதாசிரியரின் நோட்ஸ்!

    டோட்டலி டிஸ்அப்பாயிண்டட்!!

    ReplyDelete
    Replies
    1. Sometimes a solution to a problem can be very simple. னு என் வாத்தியார் ஒருத்தர் சொல்வார்

      Delete
    2. ஊப்பர் தேக்கோ ஜி!

      Delete
  18. கண்ணா நீங்க மண்டையை பிய்த்து கொள்ளுமளவுக்கெல்லாம் நாங்க கதை சொல்லலை. 1980 ல வந்த பேக் டு த ப்யூட்சர் மாதிரியான ஒரு கதையைத் தான் சொல்லி இருக்கோம்னு நம்மளை தூங்கச் சொல்லிட்டாங்க சார்...

    சிசா, தகாத எல்லாம் பார்க்கும் போது வான்ஹாம் நீர் தேவுடு என்றே சொல்லத் தோன்றுகிறது.

    ReplyDelete
  19. கிரிஸ் தனித்தடத்தில் வந்திருக்கும் தி மவுண்டன் ஆப் டைம் எல்லாம் டைம் ஜம்ப்... டைம் வார்ப் என கலக்கியிருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. எப்படியாவது அந்தக் கதைய மட்டும் தமிழ்ல வரவச்சு ரசிப்போமா சார்...

      Delete
    2. அதை தனியா படிக்க முடியாதுங்க சார்... 8வது புக் அது.

      Delete
  20. TO : Mr. Marcello Bondi

    1. HOW does the time itself replace TED for absence of LYLA? Is there any concept behind this?

    ReplyDelete
    Replies
    1. 2.Did you use any specific scientific theory to create this story? Or is it just the old, conventional concept of linear time travel backward?"

      Delete
    2. 3. The story doesn’t explain how Ted and Lou got the bracelets that made time travel possible.

      Delete
    3. 4. What happened to the time travel bracelets that Martin Future and Laila Future brought?

      Delete
    4. 5.What is the purpose of stating that young Laila saves the boy Martin from an accident? If Julia had been killed and Martin had not been saved, Martin would not have existed in the timeline. So, it would have been impossible for him to travel back in time and kill Laila. Wouldn’t this have created a paradox?

      Delete
    5. 6.Why is Martin Future, who is chasing Laila, bald?

      Delete
  21. அலசுறவங்கள்லாம் வரிசையில வந்து தமிழ்ல மட்டும் அலசுங்க.

    ReplyDelete
    Replies
    1. அது கதாசிரியருக்கான கேள்விகள சார்.. அலசல் அல்ல

      Delete
    2. மன்னிக்கவும் சார்.

      Delete
    3. இதுக்கு எதுக்கு சார் பெரிய வார்த்தை... நண.பர்களுக.குள் வேண்டாமே

      Delete
  22. டெவன் சுட்டது தன் தோழி ஜூலியாவை

    இத கண்டிப்பா டெவன் கண்டுபிடித்திருப்பான்

    ஆனா லூ தன்னை கடந்த காலத்தில் சென்று கொன்றால் கொலைப்பழி ஜூலியா மீது விழும்

    அதை தடுக்கனும்னா இளம் டெவன் சாகக் கூடாது..🥳

    ReplyDelete
  23. கதை வரும் முன்னரே ஒரு பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டீர்கள் சார்,
    அதன் தாக்கமே "இதில் கதையை தாண்டி என்ன உள்ளது?" என்ற விவாதங்களே.
    அதுக்கு நேர்மாறாக கதாசிரியரின் சுருக்கம்- கதையில் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் இரண்டு ஜூலியாக்களின் வியப்பு.
    கதையை பொறுத்தவரை செம ஆக்சன் த்ரில்லர் கதைதான்,
    ஆனாலும் சில கேள்விகளுக்கு விடை கிடைத்தால் பூரணமாக கதையை படித்த திருப்தி கிடைக்கும்.

    1)போலீஸ் அதிகாரியான ஜூலியா, தன் சக அதிகாரியை கொல்ல வேண்டிய அவசியம் என்ன?,

    2)ஜெயிலில் இருந்து தப்பித்த ஜூலியா, ஊரிலுள்ள குற்றவாளிகளை போட்டுத் தள்ளுகிறாள் என்றால், இவளை அந்த பொய்யான கொலைப் பழியில் மாட்டிவைத்த நபர் அந்த கூட்டத்தில் ஒருத்தனா? பால் கெல்டர்?.

    3)இதே போல, ஜூலியா யூகித்தது போலவே ஜூலியாவின் தோழர் டெவனுக்கும் நடக்கிறது என்றால் அவனை அந்த கொலைக் குற்றத்தில் சிக்க வைத்தது யார்?.
    விஞ்ஞானி லியனார்ட் யேட்டர்?.

    4)ஒருவேளை இவர்தான் (லியனார்ட் யேட்டர்)முக்கியப் புள்ளி என தெரிந்து கொண்ட எதிர்கால ஜூலியாவை- கடந்த காலத்தில் போட்டுத்தள்ளவே மார்ட்டின் வந்தானா?.

    5)இது எதுவும் தெரியாததால் தான், நிகழ்காலத்தில் லியனார்ட் யேட்டரை ஜூலியா காப்பாற்றினாளா?.

    6)குற்றம் சாட்டப்பட்ட டெவின்,
    விஞ்ஞானி லியானர்ட்டை சுட்டுத் தள்ள வர வேண்டிய அவசியம் என்ன?.

    7) நிகழ்காலத்தில் குற்றவாளியாக்கப்பட்ட டெவினுக்கு ஏதோ உண்மை தெரிந்து விட்டதாலயே,
    "ஜூலியாவை சுட்டவனை பழிவாங்க வேண்டும்" என்ற காரணம் காட்டி,
    டெவனை போட்டுத்தள்ள ஜூலியாவின் உதவியாளனை கடந்த காலத்துக்கு அனுப்பி வைத்தார்களா?.
    அப்படியென்ன ரகசியம் அந்த விஞ்ஞானியிடம்?.

    ReplyDelete

  24. தனது இணை பிரபஞ்சத்தில் இளம் வயது மார்ட்டினை ஜூலியா ஏன் காப்பாற்ற வேண்டும்?

    மார்ட்டின் தனது காலப்பயணத்திற்கு ஏன் அந்த தேதியை தேர்ந்தெடுத்தான்?

    அந்த தேதியிலோ அல்லது அதற்கு அடுத்த நாளிலோ ஜூலியா அல்லது மார்ட்டின் இருவரில் யாராவது ஒருவர் இறந்து அதற்கான பழி அடுத்தவர் மேல் விழுந்து அவர்கள் வாழ்க்கைப் போக்கு மாற வேண்டும்

    மார்ட்டினின் காலக்கைகாப்பு 30 வருடங்களுக்கு மேல் பயணிக்காது என்பதால் ஜூலியாவின் பைல்கள் மூலம் அவளது வாழ்க்கை சரித்திரத்தை அறிந்த மார்ட்டின் அந்த தேதியை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

    ஆனால் டெவன் மற்றும் ஜூலியா பிரபஞ்ச தொடர்பு பற்றி மார்ட்டின் அறிய மாட்டான்.

    லூவுக்கும் இதே நிலைதான்.

    ஒருவேளை இதற்கான ஒரே தீர்வு ஜூலியா மற்றும் டெவன் பிரபஞ்சம் மற்றும் இணை பிரபஞ்சங்களில் நடக்கும் நிகழ்வுகள் ஏக காலத்தில் நடந்து கொண்டே இருப்பதாக உத்தேசிக்க வேண்டியது ஆகிறது.

    சரவணகுமார் சார், சுரேஷ், ரம்யா இது பற்றி உங்கள் கருத்து என்ன?

    2015-க்கு வந்து சேரும் லூ மற்றும் முதிர்வயது மார்ட்டின் இருவரும் இறந்த பிறகு இளவயது மார்ட்டின் ராஜினாமா செய்து மார்ட்டின் உடன் ஒரு பாதுகாப்பு காவலராக பணியாற்றி தொழிலதிபர் கருத்தரங்குக்கு வந்து 2045-ல் ஜூலியா கெல்டரை கொல்ல முயலும் போது தன் உயிரை தியாகம் செய்து லியோனார்ட்டை காப்பாற்றி மார்ட்டினை மீண்டும் காலப்பயணம் செய்யத் தூண்டலாம்.. இம்முறை பிணை கைதி யாரோ? அல்லது மார்ட்டின் இல்லாமல் வேறொருவர்?





    ReplyDelete
    Replies
    1. * இள வயது மார்ட்டின் x
      இளவயது டெவன் = சரி

      Delete
    2. நாமதான் சார் இப்படி யோசிச்சு பார்க்கிறோம். ஆனா கதாசிரியர் இது சிம்பிளான நேர்கோட்டு காலப்பயண கதையாக சொல்லிட்டாரே...

      2045 to 2015 இந்த ஓட்டம் தொடர்ச்சியா நடக்கும். மத்ததைப் பற்றி அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லையே!!

      Delete
    3. மார்ட்டின் தனது காலப்பயணத்திற்கு ஏன் அந்த தேதியை தேர்ந்தெடுத்தான்?

      அந்த தேதியிலோ அல்லது அதற்கு அடுத்த நாளிலோ ஜூலியா அல்லது மார்ட்டின் இருவரில் யாராவது ஒருவர் இறந்து அதற்கான பழி அடுத்தவர் மேல் விழுந்து அவர்கள் வாழ்க்கைப் போக்கு மாற வேண்டும்

      இதுவும் செம பாயின்ட் சார்.

      இந்த விளக்கத்தால அவன் செய்த பிளான் பக்காவா பொருந்திப் பகுதி

      கொலையை செய்றான்.. பழி சக அதிகாரி மீது.. இவன் மாட்டிக் கொள்ளக் கூடாது..

      Delete
    4. 2015-க்கு வந்து சேரும் லூ மற்றும் முதிர்வயது மார்ட்டின் இருவரும் இறந்த பிறகு இளவயது டெவன் ராஜினாமா செய்து மார்ட்டின் உடன் ஒரு பாதுகாப்பு காவலராக பணியாற்றி தொழிலதிபர் கருத்தரங்குக்கு வந்து 2045-ல் ஜூலியா கெல்டரை கொல்ல முயலும் போது தன் உயிரை தியாகம் செய்து லியோனார்ட்டை காப்பாற்றி மார்ட்டினை மீண்டும் காலப்பயணம் செய்யத் தூண்டலாம்.. இம்முறை பிணை கைதி யாரோ? அல்லது மார்ட்டின் இல்லாமல் வேறொருவர்?///

      இது ரொம்ப complex ஆவது சார்.. யோசிச்சு சொல்றேன்..

      Delete
  25. ஆத்தி...❤️👍👍...

    ReplyDelete
  26. ஒருக்கா எங்க யோகா மாஸ்டர், ஒரு session-ல, நான் ஒரு வார்த்தை சொல்றேன். உங்களுக்கு அது பத்தி என்ன தோணுதோ சொல்லுங்கனார்.

    எங்கிட்ட ஆரம்பிச்சு, first word "Sun" குடுத்தார்.
    நான் உடனே "Gigantic ball of hydrogen, fusion reaction" அது இதுன்னு சொன்னேன்.
    யோகா சார் "I was expecting something simple like "source of life", "ஜீவ நாடி", etc. You are talking like an IIT student".

    இப்ப இங்கயும் அது தான் நடக்குது போல. கதாசிரியர், simple-ஆ சொல்றார்.

    நாம தான் infinite single verse, multi verse, quantum entanglement ன்னு அவர கதற விடறோமோ

    ReplyDelete
  27. கதாசிரியரின் பதில்களின் முதல் தவணை வந்தூ...... 👍👍

    ReplyDelete
  28. கேட்கப்பட்ட கேள்விகள் :

    1. What is the need of Lyla parker to save young Martin from a speeding car?

    2. How did Ted future and Lou get the time travel bangles?

    3. Is there a sequel or a prequel planned for this story?

    4. Is there something subtle you were trying to tell us through the calendar planner of Ted in April 2015?

    5. Did Ted future understand he had killed his old friend Lyla?

    ReplyDelete
  29. Answer # 1

    * இந்தக் காட்சி கதைக்குள் எந்த உண்மையான பணியையும் செய்யவில்லை. இதை நீக்கிவிட்டாலும் கதை இயல்பாகவே செல்லும். எளிமையாகச் சொல்வதானால் , நான் திரைக்கதை எழுதியபோது, கதாபாத்திரங்களின் தலைவிதி ஒன்றுக்கொன்று மிகவும் பின்னிப் பிணைந்திருப்பதை உணர்ந்தேன். அதனால் லைலாவும் மார்ட்டினின் தலைவிதியும் ஆரம்பத்திலிருந்தே இணைந்திருந்தன என்பதையும், அவள் மார்ட்டினை காப்பாற்றாது விட்டிருந்தால், தனக்கு நிறைய பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்ட விரும்பினேன். "அன்று நான் வேறு மாதிரி செய்திருந்தால், ஒருவேளை..." என்று நாம் எல்லோரும் சொல்வதுண்டு. இதுவும் அதேதான், ஆனால் மிகைப்படுத்தப்பட்ட விதத்தில்.

    Answer # 2 :

    * கதையைப் பற்றிய எனது பார்வையில், எதிர்கால லைலா சுரங்கப்பாதையில் நமக்குச் சொல்வதெல்லாம் பின்னர் டெட் அனுபவிக்கிறான். அடிப்படையில், டெட்டின் மீது குற்றம் சாட்டப்பட்ட செய்தித்தாளை லைலா படிக்கும் ஒரு காட்சியை நான் சேர்த்தேன். டெட் லைலாவின் டைம்லனில் அவளுடைய இடத்தைப் பிடித்துவிட்டான் என்பதை தெளிவுபடுத்துவதற்காகவே இந்தக் காட்சி சேர்க்கப்பட்டது. எதிர்கால லைலா நடப்பு லைலாவை எச்சரித்து மார்ட்டின் யேட்டரை கொல்ல வைத்தாள். இதன் விளைவாக, எதிர்கால லைலா அவளிடம் சொன்ன எல்லா பிரச்சினைகளையும் தவிர்க்க லைலா காவல்துறையை விட்டு வெளியேறினாள், ஆனால் யாரோ ஒருவர் காலவரிசையில் அவளுடைய இடத்தைப் பிடித்திருக்க வேண்டும்... அது டெட் தான். உண்மையில், டெட்டும் லூவும் எப்படி அந்த கைப்பட்டிகளைப் பெற்றார்கள் என்பதற்கு நான் உண்மையான விளக்கம் கொடுக்கவில்லை. அது ஒரு ஸ்பின்-ஆஃப் அல்லது இதே ஆல்பத்தின் அடுத்த அத்தியாயத்துக்கான open end ஆக இருக்கலாம். எப்படியிருந்தாலும், எதிர்கால லைலா ஒரு கைப்பட்டியைப் பெற்றிருந்ததைப் போலவே, லூவும் டெட்டும் பெற்றார்கள் என்று வைத்துக்கொள்வோம். மேலும், எதிர்கால லைலா எந்த ஆண்டிலிருந்து வந்தாள் என்று நமக்குத் தெரியும், ஆனால் எதிர்கால டெட் எந்த ஆண்டிலிருந்து வருகிறான் என்று தெரியாது. எனவே, கைப்பட்டிகள் கிட்டத்தட்ட வணிகமயமாக்கப்பட்ட... எதிர்காலமாகவும் இருக்கலாமென்று ஊகிக்க முடியும். லூவும் டெட்டும் எப்படியோ அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் மீண்டும் சொல்கிறேன், நான் ஒரு தெளிவான பதிலைக் கொடுக்க விரும்பவில்லை, இப்போது நீங்கள் அதைக் குறிப்பிடுவதால், அது ஒரு தொடர் அல்லது ஸ்பின்-ஆஃப்க்கான யோசனையாக இருக்கலாம். உங்களுக்கு அது பிடிக்குமா?

    ReplyDelete
    Replies
    1. Answer # 3 :

      * நான் ஏற்கனவே இதற்கொரு தொடர்ச்சியைப் பற்றி யோசித்திருந்தேன் . But, தற்போது அது திட்டமிடப்படவில்லை.இந்த காமிக் நன்றாகப் போனால், இந்த யுனிவெர்சை,மீண்டும் கையில் எடுத்து விரிவாக்க நான் மறுக்கவில்லை. ஆனால் இன்று ஒரு காமிக் உருவாக்குவது என்பதெல்லாம் , கைவசம் ஒரு ஆர்வமான பதிப்பகம் இல்லையென்றால் மிகவும் சோர்வளிக்கும் சமாச்சாரம் , எங்களிடம் அப்படியொரு பதிப்பகம் தற்சமயம் இல்லை (ஆனால் இதைப் பற்றி அடுத்த பதில்களில் பேசுவேன்). யாருக்கும் தெரியாத சில செய்திகள் என்னிடம் உள்ளன: இந்த கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு வானொலி நாடகம் தயாரிக்கத் திட்டமிடப்பட்டது. அதற்கான திரைக்கதை ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது, துரதிர்ஷ்டவசமாக, அந்த திட்டம் நின்றுவிட்டது. இருப்பினும், அன்பான வாசகர்களே, இந்த கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், லயன் காமிக்ஸ் வெளியிடவிருக்கும் எனது அடுத்த தொகுதிகளை வாங்க உங்களை அழைக்கிறேன் ( நான் லயன் காமிக்ஸ் பதிப்பகத்திற்கு நிறைய படைப்புகளை முன்மொழிந்துள்ளேன்... அவர்கள் அவற்றை வெளியிட முடிவு செய்வார்கள் என்றும் நீங்கள் அவற்றைப் படிப்பீர்கள் என்றும் நம்புகிறேன்!

      Answer # 4 :

      * இதில் எந்த மர்மமும் இல்லை. வெறுமனே, நான் இந்த கதையின் திரைக்கதையை எழுதியது 2015 ல். நான் தேதிகளை மாற்றியிருக்கலாம், ஆனால் நான் அதை அப்படியே விட விரும்பினேன், : ஒரு காமிக் உருவாக்க 10 ஆண்டுகள் நிலையான காலம் அல்ல... துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் சிரமங்களை சந்தித்தோம். நாங்கள் ஆரம்பித்தபோது, நானும் நிகோ டாம்புரோவும் மட்டும்தான் இருந்தோம். எந்த பதிப்பகமும் இல்லை, இந்த கதையை உருவாக்க எங்களுக்கு யாரும் பணம் கொடுக்கவில்லை. நிகோ டாம்புரோ பாதி வழியில் திட்டத்தை கைவிட வேண்டியதாயிற்று, மற்ற வேலைகளுக்கு முன்னுரிமை கொடுக்க. காலம் கடந்தது, நான் மற்றொரு ஓவியரை கண்டுபிடிக்க முயற்சி செய்தேன், ஆனால் அது எளிதாக இல்லை. பலர் முயற்சி செய்து பின்னர் கைவிட்டார்கள்... சாமுவேல் போர்சாகாவை கண்டுபிடிக்க எனக்கு பல ஆண்டுகள் ஆனது, அவருக்கு வேலையை முடிக்க சரியான ஆர்வம் இருந்தது. எனவே 2015-ல் துவங்கிய நாங்கள் 2025 இல் நிற்கிறோம் ... எப்படியிருந்தாலும், நாங்கள் இன்னும் ஒரு குழுவாக இருக்கிறோம், தற்போது இந்த வேலையிலிருந்து எதுவும் சம்பாதிக்கவில்லை. நாங்கள் அதை ஆர்வத்திற்காக மட்டுமே செய்தோம்.

      Answer # 5 :

      * இதற்கு நான் தெளிவான விளக்கம் கொடுக்க முனைந்திருக்கவில்லை , ஆனால் கதையைப் பற்றிய எனது பார்வையில், NO. டெட்டுக்கு அவன் தன் நண்பியைக் கொன்றது தெரியவில்லை. தலைவிதி, நான் முதல் பதிலில் குறிப்பிட்டது போல், நம்மை எப்படி கேலி செய்கிறது என்பதற்கான மற்றொரு சோகமான அம்சம் ( நான் LOST- ன் பெரிய ரசிகன், உங்களுக்குப் புரிகிறதா?).

      நீங்கள் விரும்பினால், உங்கள் வாசகர்களுடன் இணையவழி சந்திப்புக்கும் நான் தயாராக இருக்கிறேன், எனக்கு உதவக்கூடிய ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பாளர் நண்பருடன். Bye!

      Delete
    2. பின்புலங்கள் ஏதுமின்றி, ஆர்வத்தை மட்டுமே மூலதனமாக்கி இதனை உருவாக்கியுள்ள படைப்பாளியின் உள்ளம் திறந்த மடல்.... 🤕🤕

      Delete
    3. அடடே தெறிக்க விடுகிறாரே இந்த கதையின் ஆசிரியர். அப்போ சீக்கிரமா ஒரு google meet ஏற்பாடு பண்ணுங்க சார்.

      Delete
    4. திருப்திகரமான பதில்கள் சார்.. கதையை எந்த பக்கத்திலும் develop செய்ய ஏகப்பட்ட open end scenes வச்சிருக்காரு..

      Delete
    5. விஜயன் சார்.. கதாசிரியருக்கு ஒரு royal salute..

      Delete
    6. Super sir...Thanks to Marcello Bondi

      எங்களுக்காக கேள்விகள் அனுப்பி பதில்களை பெற்று தந்து உங்களூக்கு நன்றிகள் பல, சார் 💐💐💐💐💐

      Delete
    7. மன்னிக்கவும் எடிட்டர் சார்....

      நாங்கள் எதிர்பார்த்தது தர்க்க ரீதியான பதில்களைத்தான்..
      பழகுவதற்கு இனிமையான ஒரு மனிதராக அவர் மிகவும் மதிக்கப்படுகிறார்.

      ஒரு படைப்பாளிக்கான அங்கீகாரத்தை பெற வேண்டுமாயின் காலப்பயணம் குறித்த படைப்பாக அது இருக்குமாயின் ஏதாவது ஒரு வகையில் அறிவியல் பூர்வமாக, குறைந்தபட்சம் தர்க்க ரீதியான கோட்பாடுகளை அந்த படைப்பு சுமந்து நிற்க வேண்டும்.

      அந்த வகையில் இது ஏமாற்றமே.

      Delete
    8. சூப்பர் சார்.. நமக்கு மேலே நிகழும் விதியையும் குறிப்பிட்டிருக்கிறார். ஓப்பன் எண்டிங்கும் வைத்தே இருக்கிறார். வாழ்த்துக்கள்..

      Delete
    9. இந்தப் பதிவில் நான் அடிக்கோடிட்டது அதனையே சார் ; புல்லட் ட்ரெயின் அல்ல இது ; வந்தே பாரத் தான் என்பதை உணர்த்த லைட்டாக முனைந்தேன்!

      Delete
    10. கதாசிரியரின் ஆர்வத்துக்கும் & அவரின் விடா முயற்சிக்கும் பாராட்டுக்கள் எடிட்டர் சார்.

      Delete
  30. @Palladam Saravnakumar

    //HOW does the time itself replace TED for absence of LYLA? Is there any concept behind this?//

    இதற்குதான் அந்த கொரியன் டிராமா "Marry My Husband" கதையினை உதாராம் குடுத்து இருந்தேங்க, சகோ

    ReplyDelete
  31. மதியம் டூ மாலை தலைவலி, இங்கிட்டு வரலை, மீண்டும் நிறேயா பேசி இருக்காங்க

    தலைவலி எதனால் என்றால், நேற்றிரவிலிருந்து காலை வரை சரியாக தூங்காமல் ப்ளாக் பக்கமே புரண்டு கொண்டிருந்ததால்
    இன்று எதுவும் படிக்க போவதில்லை

    நாளை எல்லாமே

    ReplyDelete
    Replies
    1. மாலையிலிருந்து மறுபடி மதியம் வரை ஒரு 5 மணி நேரம் மட்டும் பின்னோக்கி பயணித்து மறுபடி தலை வலி இல்லாத மதியம் டு மாலை ஆல்டர்னேட் டைம் லைன் தரவல்ல கால கைகாப்பு ஒன்று கைவசம் உள்ளது வேண்டுமா ரம்யா? வெறும் 5 மணி நேரம் மட்டுமே பயணிக்க முடியும் 😁

      Delete
    2. விடாது கருப்பு 🤣

      Delete
    3. I am fine Doctor saab, Thank you 😁😁😁

      Delete
  32. //பின்புலங்கள் ஏதுமின்றி, ஆர்வத்தை மட்டுமே மூலதனமாக்கி இதனை உருவாக்கியுள்ள படைப்பாளியின் உள்ளம் திறந்த மடல்....//

    முதலில் இந்த படைப்பாளிகளின் முயற்சிக்கு வாழ்த்துகள். ஆரம்பநிலை படைப்புகளில் இருக்கக்கூடிய சில கருத்தியல் தொய்வுகள் தவிர்த்து வாசிப்பிற்கு தொய்வில்லாத கதையோட்டம் கொண்டதாகத் தான் இக்கதை இருந்தது. அறிவியல்சார் கதைகளை உருவாக்கும்போது ஏதேனும் ஒரு கருத்தியல் தெளிவுடன் அல்லது அது சார்ந்த கருதுகோள்களை ஏற்கும் விதத்திலான புனைவுகள் கதைகளுக்கு வலுசேர்ப்பதுடன் இதுபோன்ற கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்களுக்கு சரியான ஒன்றாக அமையும்.

    ReplyDelete
  33. கதை ஒன்று - ஒரு மொட்டை மண்டைப் படலம்!

    காலக்கோடு ஒன்று, 27-ஆம் பக்கம்:
    > கெல்டரைப் போட்டுத் தள்ளும் முயற்சியில், தனது தந்தை "லியனார்ட்" தவறுதலாகப் பலியாகும் நாளன்று, தலை நிறைய முடியுடன் இருக்கிறான் "மார்டின்"!

    காலக்கோடு ஒன்று, 30-ஆம் பக்கம்:
    > தனது தந்தையின் கொலையாளியான ஜூலியாவைப் பழிவாங்கக் கிளம்பும் நாளன்று, சற்றே முதிர்ந்த தோற்றத்தில் மொட்டைத் தலையுடன் இருக்கிறான் "மார்டின்"!

    காலக்கோடு இரண்டு, 58-ஆம் பக்கம்:
    > கெல்டரைப் போட்டுத் தள்ளும் முயற்சி நடக்கும் நாளன்று, தலை நிறைய முடியுடன் இருக்கிறான் "மார்டின்"!

    காலக்கோடு இரண்டு, 61-ஆம் பக்கம்:
    > அதே நாள், அதே நேரம் - ஜூலியாவின் கொலையாளியை பழிதீர்க்க உறுதி பூணும் "லூ" இளமையான தோற்றத்தில் இருக்கிறான்!

    காலக்கோடு இரண்டு, 65-ஆம் பக்கம்:
    > தனது சீனியர் ஜூலியாவை (தவறுதலாகக்) கொலை செய்த டெவனைப் பழிவாங்க முயற்சிக்கும் நாளன்று, சற்றே வயது முதிர்ந்த தோற்றத்தில் காணப் படுகிறான் "லூ"!

    விடுபட்ட விளக்கங்கள்:
    1) ஆக, காலக்கோடு எதுவாக இருப்பினும், கொலை நடந்த சில ஆண்டுகள் கழித்தே பழிவாங்கக் கிளம்புகிறார்கள் என்றாகிறது.
    2) முதலாவது காலக்கோட்டில், "காலப்பயணம்" தந்தையின் (லியனார்ட்) கண்டுபிடிப்பு என்பதால், மகனுக்கு (மார்டின்) அது எளிதாகக் கிட்டிவிடுகிறது என வைத்துக் கொள்ளலாம்.
    3) இரண்டாவது காலக்கோட்டில், "லியனார்ட்" மற்றும் "மார்டின்" இவர்கள் இருவரும் இணைந்து, "லூ"-வின் காலப்பயணத்திற்கு உதவுகின்றனர் என வைத்துக் கொள்ளலாம். இரண்டாம் காலக்கோட்டின், இருவேறு காலகட்டங்களில் ஜூலியா, மகனை (மார்டின்) கார் விபத்திலிருந்தும், தந்தையை (லியனார்ட்) துப்பாக்கிச் சூட்டிலிருந்தும் காப்பாற்றி இருக்கிறாள் என்ற நன்றி உணர்வு அதன் பின்னனணியில் இருக்கலாம்!

    கதை இரண்டு - பழிவாங்கும் மொட்டை! (சிவகாசியில் இத்தாலி ஸ்பெஷல்)

    காலக்கோடு ஒன்று - இக்கதையை லயன் வாசகர்கள் படிக்கும் முன்னர்:
    > லயன் காமிக்ஸ் எடிட்டரும், இந்த கிராஃபிக் நாவலின் கதாசிரியரும் (ஓரளவுக்கேனும்) தலை முடியுடன் உலாவி வரும் வேளையில், வேலையில்லாத வேலையாக ல.கா. எடிட்டர், "லயன் பிளாக் படிச்சோமா, மீ த பர்ஸ்டு போட்டோமா" என்று தேமேயென சுற்றிக் கொண்டிருந்த வாசகர்களை, "இது ஒரு காலப் பயணம், கலந்துரையாட கண்டிப்பா வரணும்" என்று உசுப்பி விடுகிறார்! இச்சம்பவம், அந்த இத்தாலியக் கதாசிரியருக்கே தெரியாமல் நடந்தேறுகிறது!

    காலக்கோடு ஒன்று (ஆமாம் சார், அதே ஒன்று தான்) - இந்தக் கதையைப் படித்த வாசகர்கள் புதுப் புதுக் கதைகளாக அள்ளி விடுவதைப் படித்த பின்னர்:
    > ல.கா. எடிட்டர் கி.நா. எழுத்தாளருக்கு "டவுட்டு" கேட்டு லெட்டர் போட, அதைப் படித்து பயங்கர டென்ஷனாகும் கி.நா. எழுத்தாளர், எஞ்சியிருக்கும் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு, மொட்டைத் தலையுடன், கைத்துப்பாக்கியை கால்சட்டையில் சொருகிக் கொண்டு, காலக்கோடு ஒன்றின் பின்னோக்கிப் பயணிக்கிறார்!

    காலக்கோடு ஒன்று (ஆமாம் சார் ஆமாம், மீண்டும் அதே ஒன்று தான், ஆனா பாருங்க இது ஒரு மாசம் பின்னாடி - ஏப்ரல் 2025-இல்):
    > லயன் அலுவலகம், சிவகாசி...
    "ஆக, இக்கதையை தமிழில் வெளியிட முடிவு செய்துள்ளேன்..." - என்று, ல.கா. எடிட்டர் ஈமெயில் எழுதி "Send"-ஐ அமுக்க எண்ணிய அதே நொடியில், சட்டென்று கரண்ட் கட்டாகி விட, ஜன்னல் வழியே கசிந்த நிலவின் வெளிச்சம் பட்டு, அணைந்திருந்த மானிட்டர் திரையில், ஒரு மொட்டைத் தலையும், சிறு பிஸ்டல் நுனியும் ஒரு சேர எதிரொளித்தன...!

    (தொடரும்)

    ReplyDelete
    Replies
    1. ஆகா நீங்களும் களத்தில் இறக்கியாச்சா 😄

      Delete
    2. ஆமாம் பரணி! :-) எப்படியும் வளவள விளக்கங்களை யாரும் படிக்கப் போவதில்லை என்பதால், பதிவின் பின்பாதியில் இருக்கும் புதுக்கதையை மட்டும் மறுபதிவு செய்கிறேன் (spoiler free)!

      கதை இரண்டு - பழிவாங்கும் மொட்டை! (சிவகாசியில் இத்தாலி ஸ்பெஷல்)

      காலக்கோடு ஒன்று - இக்கதையை லயன் வாசகர்கள் படிக்கும் முன்னர்:
      > லயன் காமிக்ஸ் எடிட்டரும், இந்த கிராஃபிக் நாவலின் கதாசிரியரும் (ஓரளவுக்கேனும்) தலை முடியுடன் உலாவி வரும் வேளையில், வேலையில்லாத வேலையாக ல.கா. எடிட்டர், "லயன் பிளாக் படிச்சோமா, மீ த பர்ஸ்டு போட்டோமா" என்று தேமேயென சுற்றிக் கொண்டிருந்த வாசகர்களை, "இது ஒரு காலப் பயணம், கலந்துரையாட கண்டிப்பா வரணும்" என்று உசுப்பி விடுகிறார்! இச்சம்பவம், அந்த இத்தாலியக் கதாசிரியருக்கே தெரியாமல் நடந்தேறுகிறது!

      காலக்கோடு ஒன்று (ஆமாம் சார், அதே ஒன்று தான்) - இந்தக் கதையைப் படித்த வாசகர்கள் புதுப் புதுக் கதைகளாக அள்ளி விடுவதைப் படித்த பின்னர்:
      > ல.கா. எடிட்டர் கி.நா. எழுத்தாளருக்கு "டவுட்டு" கேட்டு லெட்டர் போட, அதைப் படித்து பயங்கர டென்ஷனாகும் கி.நா. எழுத்தாளர், எஞ்சியிருக்கும் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு, மொட்டைத் தலையுடன், கைத்துப்பாக்கியை கால்சட்டையில் சொருகிக் கொண்டு, காலக்கோடு ஒன்றின் பின்னோக்கிப் பயணிக்கிறார்!

      காலக்கோடு ஒன்று (ஆமாம் சார் ஆமாம், மீண்டும் அதே ஒன்று தான், ஆனா பாருங்க இது ஒரு மாசம் பின்னாடி - ஏப்ரல் 2025-இல்):
      > லயன் அலுவலகம், சிவகாசி...
      "ஆக, இக்கதையை தமிழில் வெளியிட முடிவு செய்துள்ளேன்..." - என்று, ல.கா. எடிட்டர் ஈமெயில் எழுதி "Send"-ஐ அமுக்க எண்ணிய அதே நொடியில், சட்டென்று கரண்ட் கட்டாகி விட, ஜன்னல் வழியே கசிந்த நிலவின் வெளிச்சம் பட்டு, அணைந்திருந்த மானிட்டர் திரையில், ஒரு மொட்டைத் தலையும், சிறு பிஸ்டல் நுனியும் ஒரு சேர எதிரொளித்தன...!

      (தொடரும்)

      Delete
    3. பதிவின் இறுதி வரிக்கு ஒரு சில வரிகள் முன்னாடி, "ஒரு மாசம் பின்னாடி - ஏப்ரல் 2025-இல்" என்று எழுதி இருப்பதை, "ஒரு மாசம் முன்னாடி - ஏப்ரல் 2025-இல்" என்று மாற்றிப் படித்துக் கொள்ளவும்! முன்னாடி இதை எழுதும் போது, முன்னாடிக்குப் பதிலாக பின்னாடி என்று தவறுதலாக எழுதி வைத்திருக்கிறேன்! இதை பின்னாடிப் படித்துப் பார்த்த பின்பு தான், இப்படி முன்னாடி பின்னாடியாக எழுதி வைத்திருப்பது தெரிய வந்தது! அதற்குப் பின்னாடி தான், அப்பதிவின் பின்னாடி இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்

      Delete
  34. இரண்டு காலச் சுழற்சிகளுக்கே இப்படி என்றால், "All You Need Is Kill" என்ற மங்காவைப் படித்துப் பாருங்கள்! நூற்றுக் கணக்கான டைம் லூப்களில் சிக்க வைத்து, "பிச்சிக்க" வைப்பார்கள்... சுழற்சிக்கான காரணத்தை தர்க்க ரீதியாகவும் விளக்கி இருப்பார்கள்! மெகா சீரியல் மங்காக்களுக்கு இடையே, மிக அரிதான ஒன் ஷாட் கதை இது - எடிட்டரின் கவனத்திற்கு!

    ReplyDelete

  35. நாளை போய் நேற்று வா

    கதை சிறிது ஏமாற்றம் அளித்தது என்றாலும் கதையை சுற்றி இங்கு இணையதளத்தில் நடந்த நிகழ்வுகள் மிகவும் மகிழ்வையே அளித்தன.

    இங்கு வாக்குவாதத்தில் பங்கு பெறாமல் இருந்திருந்தால் எழுதப்பட்ட கதையையே மிகவும் தவறாக புரிந்து இருப்பேன் என்பது தெரிகிறது. ஆனால் கற்றுக்கொள்; பரிணமி என்பது தானே வாழ்க்கை.
    (Learn and evolve)

    மெத்தடிக்கலாக செயல்பட்ட ரம்யா,
    மிகவும் ஆர்வமுடன் செயல்பட்ட சுரேஷ் தனபால், அமைதியாக ஆனால் சீரிய கருத்துக்களை வழங்கிய பல்லடம் சரவணகுமார் சார் இன்னும் மற்றும் பலர் வழங்கிய பங்களிப்புகள் மிகவும் அற்புதமானவை..

    இந்த வகையில் பார்த்தால் நாளை போய் நேற்று வா ஒரு வெற்றிகரமான புத்தகமே.

    எதிர்காலத்தில் இது போன்ற புத்தகங்கள் வெளியாகும் போது பெரும்பாலான வாசகர்கள் தங்கள் தங்கள் கருத்துகளை வெளியிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். ஒருவேளை நமது கருத்து தவறாக இருக்குமோ என்ற அச்சம் வேண்டுவதில்லை.
    மற்றவர்கள் அது பற்றி விளக்கம் அளிக்க தயாராகவே இருப்பார்கள்.
    எடிட்டர் சாருக்கும் அதை மிகவும் மனநிறைவை அளிக்கும். தவறான புரிதல் இருந்தாலும் கலந்துரையாடலில் ஈடுபடும் போது அது அகற்றப்படும். தனிப்பட்ட முறையில் இந்த விஷயத்தில் நான் வெட்கப்படுவதே இல்லை. சரியான விளக்கத்தை நான் அறியும்போது என்னுடைய அறியாமை அகற்றப்பட்டு விடுவதால் நானும்'ஞானி' ஆகிவிடுகிறேன் என்பதால்.😁. வாசித்து பெற்றாலும் சரி மற்றவர்கள் சொல்லித் தெரிந்தாலும் சரி எந்த வகையிலும் அதை ஞானம் தானே.

    எடிட்டர் சாருக்கும் ஒரு வேண்டுகோள்.. கதையின் முன்னணி நாயக நாயகி பெயர்களை மாற்றியது ஆனால் முக்கியமான லீட் கொடுக்கும் காலண்டரில் அந்த பெயரை மாற்றாமல் விட்டது எனக்கு சங்கடத்தை அளித்தது. எதிர்காலத்தில் இதுபோன்ற புத்தகங்களில் பெயர் மாற்றம் செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நான் இதன் ஆங்கில மூலத்தை பார்க்கவில்லை. பார்த்த சூர்யா ஜீவா ( சுரேஷ் தனபால் ) சொல்லித்தான் இது பற்றி தெரியும்.

    காலப்பயணம் குறித்த பல்வேறு அறிவியல் விஷயங்களை படிக்க இந்த புத்தகம் தூண்டுகோலாக இருந்தது என்பது இந்த புத்தகத்தின் வெற்றிதான்.

    2025 மே - 9.55 AM ஒரிஜினல் டைம் லைனில் இருந்து 🤣



    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார்... பெயர் மாற்றங்கள் வேண்டாமே... ப்ளீஸ்!!
      லைலா, டெட் இந்த பெயர்களும் நன்றாகத்தான் இருக்கிறது.

      Delete
    2. // தவறான புரிதல் இருந்தாலும் கலந்துரையாடலில் ஈடுபடும் போது அது அகற்றப்படும். தனிப்பட்ட முறையில் இந்த விஷயத்தில் நான் வெட்கப்படுவதே இல்லை. சரியான விளக்கத்தை நான் அறியும்போது என்னுடைய அறியாமை அகற்றப்பட்டு விடுவதால் நானும்'ஞானி' ஆகிவிடுகிறேன் என்பதால்.😁 //

      LOL

      Delete

  36. @கா சோ..

    தமிழில் வெளியாகும் லயன் முத்து காமிஸ்களை படிக்காமல் ஜப்பானிய மங்கா, கொரியன் டிராமாக்கள், மங்கோலிய நாடோடிக் கதைகள், சோமாலியாவின் நாட்டுப்புறக் கதைகள் இவற்றை நீங்கள் நாடுவதால் இரும்புக்கை மாயாவி, இரும்பு மனிதன் ஆர்ச்சி, ஸ்பைடர் இவர்களின் கதைகளையையே மறுபடி மறுபடி படிக்கும் ஒரு சிங்கிள் இன்ஃபனைட் டைம் லூப்பில் உங்களை மாட்டி வைக்க என்னால் ஆன ஏதுவை செய்யப் போகிறேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் 😁

    ReplyDelete
    Replies
    1. @செனா அனா: அட அப்படி எல்லாம் ஒன்றுமில்லைங்க டாக்டர்! ஏதோ ஒரு காரணத்திற்காக, அந்தப் புத்தகத்தை கடந்த ஆண்டு மே மாதம் 26-ஆம் தேதி வாங்கி இருக்கிறேன் என்று அமேசான் ஆர்டர் ஹிஸ்டரி சொல்கிறது! மற்றபடி அவ்வப்போது ஓரிரு புத்தகங்களையும், எனது மனைவி வாட்சப்பில் அனுப்பும் பலசரக்கு லிஸ்டையும் படிப்பதோடு சரி! :-)

      Delete
    2. //அவ்வப்போது ஓரிரு புத்தகங்களையும், எனது மனைவி வாட்சப்பில் அனுப்பும் பலசரக்கு லிஸ்டையும் படிப்பதோடு சரி!//

      😂😂

      Delete
    3. // இரும்புக்கை மாயாவி, இரும்பு மனிதன் ஆர்ச்சி, ஸ்பைடர் இவர்களின் கதைகளையையே மறுபடி மறுபடி படிக்கும் ஒரு சிங்கிள் இன்ஃபனைட் டைம் லூப்பில் உங்களை மாட்டி வைக்க என்னால் ஆன ஏதுவை செய்யப் போகிறேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் //

      Excellent plan Selvam sir.

      Delete
  37. கதை கதையாம் காரணமாம்!
    காரணத்துக்கு ஒரு தோரணமாம்!
    தோரணத்தில் ஒரு வைக்கோப்புல்லாம்!

    வைக்கோபுல்ல மாட்டுக்குப் போட்டா
    மாடு பால் கொடுத்ததாம்!

    80 'ஸ் கிட்ஸ் அல்லது 90 'ஸ் கிட்ஸ் பெரும்பாலும் சிறுவயதில் பாட்டியிடமோ , தாயிடமோ இந்த கதையை கேட்டிருப்போம்! கதை சொல்லு! , கதை சொல்லு! என படுத்தும் குழந்தைகளை சமாளிக்க தாய்மார்கள் பயன்படுத்தும் ஒரு யுக்தி!

    புதிய புதிய கதைகளை தேடும் அவஸ்தையில் விடுபட, பெரும் முயற்சி தேவைப்படாத, காரணத்தில் தோரணம் கட்டி தொடர்ந்து குழந்தைகளின் கவனத்தை தன்வசப்படுத்தி வைக்கும் தந்திரம்!

    தோரணத்தில் எப்படி வைக்கோப்புல் என கேட்க எத்தனித்த தருணத்தில் கதை காடு, மாடு, பால், கடைக்காரன்,தேங்காய்... என பல படிநிலைகளை கடந்து இருக்கும்!

    நம்முடைய நிலையும் more or less இப்போது அப்படிதான்!

    SapceX , NASA , ISRO லெவெலுக்கு எல்லாம் யோசிக்காதீங்க, இது ஒரு சிம்பிள் டைம் லூப் கதை. கதையிலோ ஓவியத்திலேயோ பெரிதாக எதையும் ஒளித்து வைக்க வில்லை என சொல்ல எத்தனிக்கும் கதாசிரியர். ஆனால் நாம் இங்கே மொட்டை தலைக்கும்(!) முழங்காலுக்கும் முடிகிச்சு போட்டுக்கொண்டிருக்கிறோம்!

    But , sci-fi வாசகர்களை கதை தன்வசப்படுத்தியதா என்றால், yes ! அவர்களின் அலசல் ஆர்வத்துக்கு justice செய்ததா என்றால் சந்தேகமே!

    கதாசிரியரின் பதில்கள் grounded and stops speculations ! எங்களின் நன்றிகள் !

    ReplyDelete
    Replies
    1. மொட்டைத் தலை = மார்டின்

      முழங்கால் யார் இருக்கும் என இன்னும் நா போ நே வா பிரபஞ்சத்திலேயே உலவிக் கொண்டிருக்கிறேன்

      Delete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. /// அட அப்படி எல்லாம் ஒன்றுமில்லைங்க டாக்டர்! ஏதோ ஒரு காரணத்திற்காக, அந்தப் புத்தகத்தை கடந்த ஆண்டு மே மாதம் 26-ஆம் தேதி வாங்கி இருக்கிறேன் என்று அமேசான் ஆர்டர் ஹிஸ்டரி சொல்கிறது! மற்றபடி அவ்வப்போது ஓரிரு புத்தகங்களையும், எனது மனைவி வாட்சப்பில் அனுப்பும் பலசரக்கு லிஸ்டையும் படிப்பதோடு சரி! ///
    சில சமயங்களில் நாம் படிக்கும் புத்தகங்களை விட, மனைவி அனுப்பும் பலசரக்கு லிஸ்ட் சுவாரஸ்யமாகவும், அதே சமயம் ஒரு மூன்றாம் உலகப் போர் ரேஞ்சுக்கான உள்நாட்டு யுத்தத்திற்கு காரணமாக அமைவதும் உண்டு சார்

    ReplyDelete
    Replies
    1. அது என்னவோ உண்மை தான் சார்! தற்போது Flipkart Minutes புண்ணியத்தில் ஓரளவுக்குச் சமாளித்துக் கொள்ள முடிகிறது!

      Delete
  40. சா .கி. நா .‌ மா.பெரும் வெற்றி. தொடரட்டும் கி.நா .பாதை.

    ReplyDelete
  41. லயன் காமிக்ஸில் வெளியான "நேற்று போய் நாளை வா" கதை, ஒரு சிக்கலான காலப் பயணக் கதை. இது டெவன் என்ற ஒரு கதாபாத்திரத்தைச் சுற்றியும், அவனது தொழில்முறை எதிரியான லியனார்ட் மற்றும் அவரது வாரிசான மார்டின் ஆகியோரைப் பற்றியும் சுழல்கிறது.

    கதையின் முக்கிய அம்சங்கள்:

    * **காலப் பயணம்:** டெவன், கெல்டர் என்பவர் மூலம் காலப் பயணத்திற்கான ஒரு கருவியைப் பெறுகிறான். இதன் மூலம் கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் பயணம் செய்து சில நிகழ்வுகளை மாற்ற முயற்சிக்கிறான்.
    * **கொலை முயற்சி:** டெவனுக்கு கெல்டர் கொடுத்த அசைன்மென்ட், லியனார்ட் மற்றும் மார்டின் இருவரையும் கொல்வது.
    * **ஜூலியாவின் பங்கு:** ஜூலியா என்ற கதாபாத்திரம் இதில் முக்கியப் பங்காற்றுகிறாள். டெவன் காலப் பயணத்தில் மார்டினை கார் ஏற்றி கொல்ல முயலும்போது, ஜூலியா அவனை காப்பாற்றுகிறாள். மீண்டும் எதிர்காலத்திற்குச் சென்று டெவன் ஸ்னைப்பர் மூலம் லியனார்டை கொல்ல முயலும்போது, மீண்டும் ஜூலியா மார்டினை காப்பாற்றி இறந்துவிடுகிறாள்.
    * **இணைப் பிரபஞ்சங்கள் (Parallel Universes) மற்றும் டைம் லூப்கள் (Time Loops):** கதை இணைப் பிரபஞ்சங்கள் மற்றும் டைம் லூப் போன்ற கருத்துக்களைக் கொண்டுள்ளது. ஜூலியா இறக்கும் பட்சத்தில், அந்த பிரபஞ்சத்தில் அவள் கொண்டிருந்த தகவல்கள் மறைந்து விடுகின்றன. ஒரு புதிய டைம் லூப் ஆரம்பித்தால், ஜூலியாவிற்குப் பழைய தகவல்கள் நினைவில் இருக்காது.
    * **லூவின் வருகை:** லூ என்ற ஒரு கதாபாத்திரம், காலப் பயணத்தில் டெவனைக் கொல்ல முயற்சிக்கிறது.
    * **சிக்கலான முடிச்சு:** கதை மிகவும் சிக்கலான திருப்பங்களைக் கொண்டுள்ளது. ஜூலியா டெவனைக் காப்பாற்ற முயல்வதும், அவள் இறப்பதும், டைம் லூப்களும் கதையை மேலும் குழப்புகின்றன. ஒரு கட்டத்தில், கெல்டரின் திட்டத்தை அறிந்த ஜூலியா, கெல்டரைக் கொலை செய்ய முயற்சிக்க, அது விபரீதமாக முடிந்து லியனார்டை அவளே கொல்வது போல் ஆகிறது.

    மொத்தத்தில், "நேற்று போய் நாளை வா" ஒரு த்ரில்லான, மனதைக் குழப்பும் காலப் பயணக் கதை. இதில் நிகழும் நிகழ்வுகள், கதாபாத்திரங்களின் செயல்கள், மற்றும் காலப் பயணத்தின் விளைவுகள் போன்றவை வாசகனை ஆழமாக சிந்திக்க வைக்கும் ஒரு காமிக்ஸ் கதையாகும்.

    ReplyDelete
  42. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
    Replies
    1. புகை சமிக்ஞை அனுப்பியாச்சுங்க, சார்

      Delete