நண்பர்களே,
வணக்கம்! நடுவாக்கில் ஒரு வாரயிறுதிப் பதிவுக்கு அல்வா தந்து விட்டமைக்கு sorry! ஆனால், மே இதழ்கள் உங்கள் கைகளில் சுடச்சுட இடம் பிடித்திருந்த நிலையில் அதன் முதற்பார்வை அலசல்களில் வண்டியை ஓட்டி விடலாமென்று எண்ணியிருந்தேன்! And of course கடந்த சிலபல மாதங்களாகவே நமது வாட்சப் கம்யூனிட்டி பிஸியாகிவிட்ட பிற்பாடு இங்கே பதிவுப் பக்கமானது - வாரநாட்களின் மதிய ஷோக்களில் காற்று வாங்கும் சினிமா தியேட்டரைப் போல காலியாய் காட்சி தருவதால் "அப்பாலிக்கா பார்த்துக்கலாமே?!' என்று நினைக்கச் செய்தது! Of course காலவோட்டத்தோடு பிரசன்னமாகும் மாற்றங்களுக்கு எவையுமே விதிவிலக்காகிடாது என்பது புரிகிறது ; yet ஆளில்லாத கடையிலே டீ ஆத்துறோமோ? என்ற எண்ணத்தை இங்கு மட்டுப்படுத்துவது சுலபமாகவே இல்லை தான்! So குறைந்தபட்சமாய் பதிவுகளைப் படிக்கிறீர்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாய் ஏதேனும் புகை சமிக்ஞைகளையாவது அனுப்பித் தந்தால்- புதுப்பேட்டை பட க்ளைமேக்ஸில் "இங்கே ஆராச்சும் இருக்கீங்களா? பயம்மா இருக்கு'' என்று உள்ளாற புலம்பாமல் இருக்க முடியுமோ- என்னவோ?!
ரைட்டு, பதிவுக்குள் புகலாமா இனி?? மே மாத இதழ்கள் முன்கூட்டியே வெளிவந்து, செமத்தியான சிலாகிப்புகளையும் ஈட்டி வருவதில் செம ஹேப்பி! அதுவும் 'தல' டெக்ஸ் இல்லாததொரு முக்கூட்டணி பிரமாதமாய் சோபித்திருப்பது மெய்யாலுமே ஒரு pleasant surprise! Of course 'டெக்ஸ் வில்லர் இல்லீங்களா?' என்று வினவாத ஏஜெண்டே கிடையாது தான்; அவர்களைச் சரிக்கட்டுவதற்குள் நாக்கும் தொங்கிப் போய்விட்டது தான்! ஆனாலும், கதைகளும், நாயக / நாயகியரும் தாட்டியமாய் இருக்கும் பட்சங்களில், கரைசேர்வது மகாப் பிரயத்தனங்களே அல்ல என்பதை அவ்வப்போது உணர்ந்து கொள்வதில் ஒரு ஜாலி உள்ளது ! அதுவும் ஒரு புதுவரவு அந்தத் "தல' இல்லா மாதத்தில் ஆஜராகி அபிமானங்களை ஈட்டுவதென்பது அந்த குஷியை ஒரு மிடறு தூக்கலாக்கிடுகிறது!
ஸகுவாரோ! இந்த நீளக்கூந்தல் நாயகர் இரவுக்கழுகார் அல்லாததொரு பொழுதில் தலைகாட்ட நேர்ந்தது நிச்சயமாய் ஒரு தற்செயல் நிகழ்வே அல்ல! பொதுவாகவே ஒளிவட்டத்தின் முக்காலே மூன்று வீசத்தை குத்தகைக்கு எடுத்துக் கொள்ளும் டெக்ஸ் & டீம் களமிறங்காத ஒரு தருணத்தில் தான் இந்தப் புதியவரை உங்களிடம் காட்டிட வேண்டுமென்பதில் தீர்மானமாக இருந்தேன்! And எனது எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை என்பதைப் பார்க்கும் போது 'ராஜதந்திரங்களைக் கரைச்சுக் குடித்திருக்கிறாயடா புலிக்கேசி!' என்று பல்லிளிக்கத் தோன்றுகிறது! என்ன தான் இந்த ஸகுவாரோ மனுஷன் பேஷாய் கம்பு சுற்றுபவராக இருந்தாலும், காத்திருக்கும் டெக்ஸின் 'மெக்ஸிகோ மேஜிக் ஸ்பெஷல்' எனும் சூறாவளியோடு களமிறங்கியிருக்கும் பட்சத்தில் - வைபவ் சூர்யவம்சிக்கு பவுலிங் போட்ட இஷாந்த் ஷர்மா போல டாராகியிருக்கும் ஆபத்துக்கள் அதிகம்! Becos நம்ம டெக்ஸ் & டீம் மைதானத்தினுள் நுழையும் நொடியில் நம்மையறியாமலே கண்கள் அவர்கள் மீது மையல் கொள்வதெல்லாம் காலத்தின் கட்டாயங்கள் ; அனிச்சைச் செயல்கள் ! So ஒண்டியாளாய் உங்களைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பை ஸகுவாரோ கச்சிதமாய் பயன்படுத்திக் கொண்டதில் ஒரு திருப்தி - becos சமீப காலங்களின் புது வரவுகள் "பச்சக்' என ஒரு சீட்டை உறுதி செய்து கொள்ளும் பாணியானது தொடர்கிறதே என்று ?!
டிடெக்டிவ் ரூபின் வந்தார்- and கிட்டத்தட்ட நமது அணிவகுப்பின் முக்கிய தலைவி ஆகிவிட்டார்! ஸ்பூன் & ஒயிட் வந்தனர் - 'மக்கா... ஒரு ஸ்லாட்டுக்கும், ஒரு காமெடி கூத்துக்கும் நாங்க க்யாரெண்டி' என்று அழுந்தப் பதிவு பண்ணிவிட்டனர்! அந்த வரிசையில் தற்சமயம் ஸகுவாரோவும் ஒரு brilliant துவக்கம் கண்டிருப்பது நிறைவைத் தருகிறது!
Again இங்கே நாம் சிலாகிக்க வேண்டியது போனெல்லியின் கமர்ஷியல் பல்ஸ் உணர்ந்திடும் சாமர்த்தியத்தையும், சாணக்கியத்தனத்தையுமே என்பேன்! ஒரு செவ்விந்திய நாயகனை அந்த 1800-களின் காலகட்டங்களிலேயே உலவ விடாது - 1970களின் புத்திரனாகச் சித்தரிக்க எண்ணியது செம smart move! ஆனால், அதே சமயம் ஸகுவாரோவை கோட் சூட் போட்ட ஜித்தனாக நியூயார்க்கிலோ, வாஷிங்டனிலோ உலவ விடாது- பரிச்சயமான அதே பாலைப் பிரதேசங்களில் கரடுமுரடான நாயகராய் காட்டத் தீர்மானித்தது அவர்களது கதாசிரியர்களின் ஆற்றலுக்கொரு பறைசாற்றல் என்பேன்! Becos கதை நெடுக இழையோடும் ஒருவித rustic feel தான் இந்தக் கதையின் பெரும் பலமே! And 'வெள்ளையர்கள் அல்லாரும் தேவதூதர்கள்; பழங்குடியினர் சகலரும் காட்டான்கள்' என்ற பாணியில் அல்லாது, யதார்த்தமாய் கதை நகர்த்தல் பண்ணியுள்ளமைக்கு கதாசிரியர் இன்னொரு ஷொட்டுக்கு உரியவராகிடுகிறார்! எல்லாவற்றிற்கும் மேலாக - நவீன யுகத்திலுமே அந்தப் பழங்குடி நம்பிக்கைகளையுமே கதைக்குள் புகுத்தி ஒரு mystic feel தந்திருப்பதும் இங்கே முக்கிய factor ஆகத் தோன்றுகிறது!
இந்த நொடியிலொரு கேள்வி மக்களே! ஸகுவாரோவுக்கு தொடரும் ஆண்டில் எத்தனை ஸ்லாட்ஸ் தரலாமென்பீர்களோ?! 1? 2?
Moving on, நம்ம சொப்பன சுந்தரி Felicity 'பளிச்' என பற்பல கண்களுக்கு வெளிச்சக் கீற்றுக்களை நல்கியிருப்பதில் வியப்பே இல்லை எனக்கு! Becos இதழின் overall உருவாக்கம் பிரமாதமாக வந்திருப்பதைப் பார்த்த கணமே இது ஹிட்டடிக்கும் சாத்தியங்கள் கணிசமென்று காதில் பட்சி சொல்வது கேட்டது! செம ஸ்டைலான அட்டைப்படத்தில் துவங்கி, உட்பக்கச் சித்திரங்கள், கலரிங், பிரிண்டிங் என எல்லாமே classy ஆக அமைந்ததால் ஒரு வில்லியுமே நாயகியாகிடலாமென்று பட்டது! நிஜத்தைச் சொல்வதானால், இந்த spin-off தொடரின் சுமாரான கதையாகவே இதை நான் பார்த்திருந்தேன்! ஏற்கனவே நெகடிவ் கேரக்டர், கதைத் தொடரிலும் இவருக்கென சொல்லிக் கொள்ளும் விதமான impact ஏதும் கிடையாது! Yet இந்த அம்மிணிக்கென ஒரு தனி ஆல்பமெல்லாம் ரொம்பவே டூ மச்சென்றே எண்ணியிருந்தேன்! ஆனால், இங்கு தான் கதாசிரியரின் ஆற்றல் மிளிர்கிறது! And இவர் நமக்கு டேங்கோ மூலமாய் பரிச்சயமான MATZ தான்! இங்கும், அங்குமாய் பெலிசிட்டியை ஓடச் செய்து, இந்த மைனா மீதுமொரு பச்சாத்தாபம் உருவாகச் செய்து, XIII தொடரின் சில பல பிரதான மாந்தர்களோடு கோர்த்தும்விட்டு வித்தைகளைக் காட்டியுள்ளார்! அவர் உருவகப்படுத்திய gold digger பெலிசிட்டிக்கு மொழியாக்கத்திலும் பொருத்தமான தமிழ் நடை அமைந்து போனதால், இந்த மஞ்சுவிரட்டில் நமக்குச் சேதங்களின்றித் தப்பித்தோம் என்பேன்! So சொப்பன சுந்தரி பேரவை வாழ்க!
Last but not the least - கேரட் கேச அழகி ரூபின்! ஓரளவிற்கு ஸ்ட்ராங்காகவே கால் பதித்து நின்ற இந்த நாயகி- "ஜன்னலோரமாயொரு மரணம்" ஆல்பத்தின் உபயத்தில் L&T சிமெண்டுடன் பேஸ்மென்ட் அமைத்து கச்சிதமாகக் காலூன்றிவிட்டார் என்பேன்! கதைக்குக் கதை ஏகப்பட்ட வித்தியாசங்களைக் காட்ட முனையும் கதாசிரியர் Mystic தான் இங்கு சிலாகிப்புகளுக்கு உரியவர்! இதுவரை வந்துள்ள நான்கு ரூபின் கதைகளுமே 4 பிரத்தியேக கதைபாணிகளில் அமைந்திருப்பது தற்செயலே அல்ல! So கிஞ்சித்தும் போரடிக்காது அம்மணியோடு சிகாகோ எங்கிலும் பயணிப்பது சாத்தியமாகிறது! 'இதே கதை சீரியஸான சித்திரங்களில், ஒரு செக்ஸியான நாயகியோடு வரையப்பட்டிருந்தால் தொடர் இன்னமும் ஆஹா.. ஓஹோ.. ரேஞ்சுக்கு பேசப்பட்டிருக்குமே?' என்று ஒரு நண்பர் என்னிடம் ஏதோவொரு புத்தகவிழா வேளையில் பகிர்ந்தது நினைவுக்கு வருகிறது! யோசித்துப் பார்த்தால் படைப்பாளிகளின் தீர்மானமே சரியென்று படுகிறது - becos சீரியஸான சித்திரங்களோடு ரூபினை ஒரு லேடி ஜேம்ஸ் பாண்ட் பாணியில் பயணிக்கச் செய்திருந்தால் Spy thrillers வரிசையில் பத்தோடு, பதினொன்றாக இதுவும் அமைந்திருக்கும்! And கதை நெடுக மெலிதாய் விரவி நிற்கும் ஒரு பகடி, ஒரு நக்கல் என்பனவெல்லாம் சீரியஸ் சித்திரங்களின் முன்னே மழுங்கிப் போயிருக்கக்கூடும் தான்! So இந்தப் பாத்திரப் படைப்புக்கு இந்தச் சித்திர ஸ்டைலே best என்பேன்! Of course 'கார்ட்டூனே புடிக்காது; இந்த லட்சணத்தில் கார்ட்டூன் ஸ்டைலில் ஒரு டிடெக்டிவா? விளங்கினா மாதிரித் தான்!' என்று பெருமூச்சிடும் ஒரு சிறு அணியினர் என் கருத்துக்களிருந்து மாறுபடலாம் தான்! But படைப்பாளிகள் know best! ஆக, ரூபின் ரசிக மன்றத்துக்குத் தலைவர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! ஒரே நபர் ரண்டு பதவிகளை ஆக்கிரமிக்க இயலாதென்பதால் நமது உம்மாச்சி 'தல' இங்கு விண்ணப்பிக்க வழி லேது!
On to recent happenings - மே முதல் தேதியன்று சேலத்தில் நடைபெற்ற சீனியர் எடிட்டருக்கான நினைவு அஞ்சலி பற்றி!
ஒன்றே கால் மாதங்களுக்கு முன்பாய் அப்பா இயற்கை எய்திய தருணத்திலேயே இது போலொரு ஏற்பாட்டினைச் செய்தே தீரணும் என்று எண்ணியிருந்தேன் தான்! And தொடர்ந்த வாரத்தில் மே 1 அதற்கான தேதியென்றும், சேலத்தில் சந்திப்பதென்றுமே அறிவித்திருந்தோம்! ஆனால், நாட்கள் நகர, நகர, வாழ்க்கைச் சக்கரங்கள் தன்பாட்டுக்கு மெதுமெதுவாய் சுழலத் துவங்கிய பிற்பாடு, நண்பர்களை இழுத்தடிக்கத் தான் வேணுமா? என்ற எண்ணம் தலைதூக்க ஆரம்பித்தது! இப்போதெல்லாம் ஒற்றை விடுமுறை தினமென்பது அக்ஷய திரதியைத் தங்கத்தையும் விட ஒசத்தியாக நம் அனைவருக்குமே தென்படுவது சகஜமாகிவிட்ட நிலையில் - அந்த விடுமுறை நாளை நாம் ஆக்கிரமிப்பது சரிப்படுமா? என்ற கேள்வி குடையத் துவங்கியது! And மே 1 நெருங்க நெருங்க - "எனக்குத் தோதுப்படாது; என்னால் வர இயலாது' என்று நிறையவே நண்பர்கள் கழன்று கொள்ள ஆரம்பித்த போது, ஒரு Zoom மீட்டிங்கிலேயே முடித்துக் கொண்டிருக்கலாமோ? என்ற நினைப்பு பிறாண்டி எடுத்தது! ஆனால், சேலம் இளவரசரும், STV-ம், மற்ற உள்ளூர் நண்பர்களும் ஏற்பாடுகளை செய்து முடித்திருந்த நிலையில் ரிவர்ஸ் கியர் போடலாகாது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்!
மே-1ம் புலர்ந்தது! கருணையானந்தம் அங்கிளை இதற்கென தொந்தரவு செய்திட மனமின்றி நானும், ஜுனியர் எடிட்டரும் மட்டுமே சேலத்தில் ஆஜாராகியிருந்தோம்! புது பஸ்டாண்டிலிருந்து சொற்ப தூரத்திலேயே இருந்த Zion Hall-க்கு காலை பத்தே கால் வாக்கில் போயிறங்கிய போதே நண்பர்கள் வெளியே அப்பாவின் படத்துடனான பேனரை கட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது! 'ஆஹா.. நாம பயந்த மாதிரி ஈயோட்ட வேண்டியிராது போல' என்ற நம்பிக்கையோடு நண்பர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டே மேலே இருந்த ஹாலுக்குள் புகுந்தோம்! நல்ல compact ஆன ஹால்.. இருபக்கத்துச் சுவர்களிலும் ACக்கள்; நீட்டான சின்ன மேடை என்று பாந்தமாக இருந்தது அரங்கம்! உள்ளே கணிசமான நண்பர்கள் ஏற்கனவே குழுமியிருக்க, களைகட்டியது!
வழக்கமான புத்தகவிழாச் சந்திப்புகளின் கலகலப்பு மட்டுப்பட்டிருந்தாலுமே அனைவரின் முகங்களையும் பார்க்கும் போது, மனசுக்கு ஆறுதலாக இருந்தது! ஹால் மித அளவிலானது தான் என்பதால் சுமார் 65 பேர் கூடியிருந்த போது, பொருத்தமாகத் தோன்றியது!
சீனியர் எடிட்டரின் படத்துக்கு மாலையிட்டு, அனைவரும் மரியாதை செலுத்திடும் சிறு நிகழ்வின் பின்னே நண்பர்களில் கணிசமானோர் தத்தம் முத்து காமிக்ஸ் சார்ந்த நினைவுகளையும், அப்பாவுடன் ஈரோட்டில் செலவிட்டிருந்த பொழுதுகளைப் பற்றியும் பேசியது மெய்யாலுமே அற்புதமாகயிருந்தது!
அதைத் தொடர்ந்து மைக் என்னிடம் வர சற்றேர நாற்பது நிமிடங்களுக்குப் பேசினேன்! ஒரு 83 வயதினரின் வாழ்க்கைப் பயணத்தை முழுமையாய் பதிவு செய்வதெல்லாம் ஓரிரு மணி நேரங்களில் சாத்தியமாகிடா சமாச்சாரம் எனும் போது - அப்பாவின் வாழ்க்கையின் வெளியே தெரிந்திராத சில பல விஷயங்களைச் சொல்லவே சாத்தியப்பட்டது! 'M.சௌந்திரபாண்டியன்- The சீனியர் எடிட்டர்' பற்றி மட்டும் பேசுவதா? அல்லது 'M. சௌந்திரபாண்டியன்- The அப்பா' பற்றியும் பேசுவதா? என்பதே எனது dilemma நிஜத்தைச் சொல்வதானால் சீனியர் எடிட்டர் அவதாரின் பின்னணிகளின் முக்காலே மூன்று வீசத்துத் தகவல்களை ஏற்கனவே அவ்வப்போது பகிர்ந்துள்ளோம் தான் & முத்து காமிக்ஸின் 50-வது ஆண்டுவிழா மலரின் பக்கங்களில் அவை நிரந்தரத் தரவுகளாகவுமே பதியப்பட்டுள்ளன! So மறுக்கா மைக் பிடித்து அதை மட்டுமே பேச எனக்கு ரசிக்கவில்லை! Rather, இந்த 83 ஆண்டுப் பயணத்தின் இறுதியில் ஒரு அன்பான அப்பாவாய் விட்டுச் சென்றுள்ள நினைவுகளை முன்நிறுத்தவே விழைந்தேன்! And அப்பாவின் வெற்றிகளை மட்டுமன்றி, தோல்விகளைப் பற்றியுமே மறைவின்றிப் பேச முனைந்தேன்! அவரது தேக ஆரோக்கியம் பற்றி ; அதனில் அவர் சந்தித்த சவால்களைப் பற்றி; கடைசி இரண்டு மாதங்களில் அவரது கஷ்ட நிலமை பற்றிப் பேசினேன்! In hindsight "இதில் கொஞ்சத்தை சொல்லாமல் விட்டுருக்கலாமோ? வாழ்க்கையின் சில தாழ்வான தருணங்களைப் பற்றியெல்லாம் பேசாது விட்டிருக்கலாமோ?" என்று எனக்குத் தோன்றவே இல்லை! Simply becos இந்த வாழ்க்கைப் பயணமானது - அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் கிட்டிய அதே செழிப்போடு தடதடத்தது அல்லவே அல்ல; நாம் பார்த்திருக்கா பள்ளங்கள் கிடையவே கிடையாது என்பதை பொதுவில் பகிர்வது எவ்விதத்திலும் கௌரவக் குறைச்சலே அல்லவென்று நினைத்தேன்! So என் மகனுக்கே அதுவரைத் தெரிந்திருக்காத விஷயங்களைக் கூட நண்பர்களின் மத்தியில் பேச எவ்விதத் தயக்கமும் எனக்கிருக்கவில்லை!
Of course உரைக்கு சுவாரஸ்யம் சேர்த்திட - அவரைப் பற்றி ; இவரைப் பற்றி ; 2016 பற்றியெல்லாம் நான் பேசியிருக்கலாம் தான்! ஆனால், அது முழுக்கவே அப்பாவின் வாழ்க்கைப் பயணம் பற்றி; அவரது பணிகள் பற்றி; சாதனைகள் பற்றி; கனவுகள் பற்றிப் பதிவிட வேண்டிய தருணம் என்பதால் ஒளிவட்ட வேட்கையில், சொந்தப் புராணங்கள், சிலபஸிற்கு அப்பாற்பட்ட சமாச்சாரங்களைத் தவிர்த்திட்டேன்!
And என்னைத் தொடர்ந்து மூன்றரை நிமிடங்களுக்கு மைக் பிடித்த ஜுனியர் எடிட்டரே அன்றைய பொழுதின் Show Stopper என்றால் மிகையாகாது! 'நறுக்' என்று டாடிப்பாவிடம் தான் கற்றுணர்ந்த 5 விஷயங்களைப் பற்றி விக்ரம் பேசிய போது, கூடியிருந்த நண்பர்களுக்கு மட்டுமல்ல, எனக்குமே பெருமிதத்தில் தொண்டை அடைக்காத குறை தான்! இது நாள் வரை நமது சந்திப்புகளில் புன்முறுவலோடு பார்வையாளராக மட்டுமே இடம்பிடித்திருந்த ஜுனியர் அன்று நிகழ்ச்சிக்கு வரும் வரையிலுமே "நான் பேசலை.. நீங்களே வழக்கம் போலப் பார்த்துக்கோங்க..!! என்றே சொல்லியிருந்தான்! ஆனால், அன்றைய உணர்வுப்பூர்வமான பகலில், எவ்விதத் தயாரிப்புமின்றி, மைக்கை வாங்கி மனதிலிருந்து பேசிய போது- உரிய தருணம் புலரும் வேளையில் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள ஜுனியர் எடிட்டர் ரெடி என்பது அழுந்தப் பதிவானது! அரங்கில் அன்று விக்ரம் பேசியதை ரசிக்க அப்பா நிஜத்தில் இல்லையே என்ற ஒற்றைக் குறை மட்டுமே என்னுள் நீடித்தது!
இரும்புக்கை மாயாவியின் 'ஒற்றைக் கண் மர்மம்' இதழ் அப்பாவுக்கான tribute ஆக நமது ஜம்பிங் தல வசம் ஒப்படைக்கப்பட்ட பின்னே முன்பதிவு செய்திருந்த நண்பர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது! And தொடர்ந்து மகளிரணித் தலைவியின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவு கண்டது!
அப்புறமாய் அங்கே பரிமாறப்பட்ட சுவையான சைவ மதிய உணவு வயிற்றையும் நிறைத்திட, இரண்டரை மணிவாக்கில் நண்பர்கள் சிற்சிறு அணிகளில் கிளம்பத் தொடங்கினர்! டீம் சேலம் துளியும் பிசிறின்றி எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்திருக்க, நிறைவான மனதோடு நாங்களும் விடைபெற்றோம்! And அன்றைய தினத்தின் முத்தாய்ப்பாய் நமது ப்ளாக்கிலோ; வாட்சப் க்ரூப்களிலோ அங்கமே வகித்திடாத மூத்த வாசகர் வீமன் அவர்கள் தானாய் வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றதோடு,ஓரிரு வார்த்தைகள் மைக்கில் பேசியதும் அழகு சேர்த்தது!
விண்ணிலிருந்து சகலத்தையும் அப்பா பார்வையிட்டுக் கொண்டிருப்பார் ; இதோ - இந்தப் பதிவைக் கூட 'Me the first from above' என்றபடிக்கே படிக்கத் தவறமாட்டாரென்பது எனது திட நம்பிக்கை! தொடரவிருக்கும் ஒவ்வொரு மார்ச் 27 தினத்தினையும் "தமிழ் காமிக்ஸ் தினமாக'' இனி நாம் சர்வநிச்சயமாய் கொண்டாடிடுவோம்! காமிக்ஸ் வாசிப்பை கடைக்கோடிக்கும் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற அவரது கனவுக்கு நிச்சயமாய் உரம் சேர்ப்போம்! Thanks all! Thanks for everything! மீண்டும் சந்திப்போம்.! Bye for now!
Have a lovely Sunday!
![]() |
COMING VERY SOON! |
முன்பதிவுகள் 200-ஐ நெருங்கி வருகின்றன...! நீங்களும் இணைந்து கொண்டிடலாமே folks?
வணக்கங்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
Deleteசூப்பர் சகோ...
Deleteநன்றி தோழரே 💐💐💐
Deleteநன்றிகள் குமார் சகோ 💐💐💐
நன்றி
ReplyDelete💐
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteTrue. Me the first என்றே காத்திருப்பார். இனிய பயணம் தொடரட்டும்..
ReplyDelete5வது பாஸ்
ReplyDeletePresent sir
ReplyDelete🙏🙏
ReplyDelete//என்னைத் தொடர்ந்து மூன்றரை நிமிடங்களுக்கு மைக் பிடித்த ஜுனியர் எடிட்டரே அன்றைய பொழுதின் Show Stopper என்றால் மிகையாகாது! //
ReplyDeleteஉண்மைதான் சார், நாங்களும் எதிர்பார்க்கவில்லை. நன்றாக பேசினார், சார்
ஆமா நல்ல அருமையான பேச்சு. இன்னும் கொஞ்சம் பிராக்டீஸ் இருந்தால் போதும். உங்களை போலவே பிளந்து கட்டுவார்.
DeleteI'm in :-)
ReplyDeleteI'm also in
Deleteஸகுவாரோ ஆண்டுக்கு 2 அல்லது 3 slot sir
ReplyDelete@Edi Sir😘🥰💐
ReplyDeleteMe in💐😘🥰👍
வணக்கம்.
ReplyDeleteHi..
ReplyDelete//அப்பாவின் வெற்றிகளை மட்டுமன்றி, தோல்விகளைப் பற்றியுமே மறைவின்றிப் பேச முனைந்தேன்!//
ReplyDeleteIt was great knowing about Senior sir...he is really an inspiration
// மார்ச் 27 தினத்தினையும் "தமிழ் காமிக்ஸ் தினமாக'' இனி நாம் சர்வநிச்சயமாய் கொண்டாடிடுவோம் //
ReplyDeleteசிறப்பு,சிறப்பு,சிறப்பு...
@Edi சார்.. 💐😘
ReplyDeleteJunior ன் பேச்சு சீனியர் அவரை உள்ளிருந்து இயக்குவது போல எனக்கு தோன்றியது 💐🙏
....
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDelete// இந்த நொடியிலொரு கேள்வி மக்களே! ஸகுவாரோவுக்கு தொடரும் ஆண்டில் எத்தனை ஸ்லாட்ஸ் தரலாமென்பீர்களோ?! 1? 2? //
ReplyDelete2 ஸ்லாட்கள் தாரளமாய் தரலாம் சார்,ஸகுவாரோ முதல் களத்திலேயே தனது முத்திரையை அழுத்தமாய் பதிவு செய்து விட்டார்...
2 ஓகே.
Delete//ஏதேனும் புகை சமிக்ஞைகளையாவது அனுப்பித் தந்தால்//
ReplyDeleteஅடுத்த தபா அனுப்பிடுறோங்க, சார்
//And அன்றைய தினத்தின் முத்தாய்ப்பாய் நமது ப்ளாக்கிலோ; வாட்சப் க்ரூப்களிலோ அங்கமே வகித்திடாத மூத்த வாசகர் வீமன் அவர்கள் தானாய் வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றதோடு,ஓரிரு வார்த்தைகள் மைக்கில் பேசியதும் அழகு சேர்த்தது!//
ReplyDelete💐💐💐💐💐💐💐💐💐
23rd
ReplyDelete////ஸகுவாரோவுக்கு தொடரும் ஆண்டில் எத்தனை ஸ்லாட்ஸ் தரலாமென்பீர்களோ?! 1? 2?///
ReplyDeleteஓன்று போதும் சார்..
அந்த இன்னொரு இடத்தில் வேறொரு புதுமுகம் வந்தால் மகிழ்ச்சி சார்.
////மே முதல் தேதியன்று சேலத்தில் நடைபெற்ற சீனியர் எடிட்டருக்கான நினைவு அஞ்சலி////
ReplyDeleteமே 1 அன்றும் வேலை வைத்து படுத்தி எடுத்தனர், நான் வேலை செய்யும் நிர்வாகத்தினர் சார்
ஒரு சாம்ராஜ்யத்தை தலைமை தாங்கும்போது..
ReplyDeleteஇருக்கும் இடத்தை தக்க வைத்து கொள்ள போராட வேண்டும்,
உறவுகள், நட்புக்கள், பகைகள் ஆகியோரை திறம்பட சமாளிக்க வேண்டும்,
தம்மை நம்பி இருப்போரை கை விடக்கூடாது,
நம்பிக்கை & நாணயத்தை காப்பாற்றிட வேண்டும்..
என பலவற்றையும் கவனித்திட வேண்டும் என்னும்போது
ஒரு சில நேரங்களில் சில சறுக்கல்கள் ஏற்படதான் செய்யும்..
ஆனால் அந்த சறுக்கல்களை வீழ்ச்சியாக கருதி தொய்ந்து போய் விடாமல் முழு மூச்சுடன் போராடி வெற்றி பெற்ற சீனியரின் வாழ்க்கை எங்கள் அனைவருக்குமே "வாழ்க்கை பாடம்".. 💐💐🙏🙏
Hats off Senior Sir💐🙏🙏👍
அருமையாக சொன்னீங்க சாய்பாபு சகோ
Deleteஜம்பிங் தல... செம 💐💐💐💐💐💐💐💐
Deleteஸகுவேரா ஒரு ரேம்போ effect தருகிறார்,நல்வரவு! பிற கதைகளும் விரைவு வாசிப்பை உறுதி செய்தன.எங்கள் பால்யத்தின் பொற்காலத்தின் உரிமையாளரான சீனியர் எடிட்டர் நினைவுகளை என்றும் போற்றுவோம்.
ReplyDelete///ஸகுவேரா ஒரு ரேம்போ effect தருகிறார்,நல்வரவு!///
Deleteயெஸ்! எனக்குமே கூட அப்படித்தான் தோன்றியது"
ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால் மே 1 ல் அஞ்சலியில் கலந்து கொள்ளாத குறையை தங்களின் விரிவான பதிவும், நண்பர்களின் பதிவுகளும் போக்கிவிட்டது.மகிழ்ச்சி.
ReplyDeleteவரும் காலங்களில் மார்ச் 27 ஒரு சிறப்பான தினமாக அமைய துணை நிற்போம் சார்.
மீண்டும்மொரு சூப்பரான ஆக்சன் ஹீரோவை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் சார்.அருமையான கதைக்களம்,
"அடுத்து இனி என்ன செய்யப் போகிறாரோ?" என எதிர்பார்ப்பு எகிறுகிறது.
அடுத்த ஆண்டில் சந்தேகமின்றி 2 இதழ்களை அவருக்கு தாரைவார்க்கலாம் சார்.
அது ரெகுலர் ஸ்லாட்டோ, அல்லது ஸ்பெஷலோ ஏதாவது ஒன்றில் அவரை கூட்டிவாருங்கள் சார். ஆவலுடன் வெய்ட்டிங்.....
இந்த புத்தகங்கள் இன்னும் ஆன்லைனில் வரவில்லையே!
ReplyDeleteதயாராக வேண்டுமே சார்!
Deleteஸகுவாரோவுக்கு மூன்று ஸ்லாட்டுகள் கண்டிப்பாக வேண்டும் சார்.
ReplyDelete//முன்பதிவுகள் 200-ஐ நெருங்கி வருகின்றன...! //
ReplyDeleteசூப்பர் சார்
சேலம் நினைவஞ்சலியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்த வாசகவாசகியர் அனைவருமே கொடுத்து வைத்தவர்கள் என்னும் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.. நெகிழ்வான நிமிடங்கள் அவை.. விக்ரமின் குரல் கம்பீரமாக சீயோனை நிரப்பியது வீடியோ வடிவில் காணக் கிடைத்தது. குட்டி சிங்கமென்றால் சும்மாவா.. மிக்க மகிழ்ச்சி..
ReplyDelete///விக்ரமின் குரல் கம்பீரமாக சீயோனை நிரப்பியது ///
Deleteஉண்மை! இளம் சிங்கம் கர்ஜித்ததைப் போல இருந்தது!
//ஸகுவாரோவுக்கு தொடரும் ஆண்டில் எத்தனை ஸ்லாட்ஸ் தரலாமென்பீர்களோ?! 1? 2?//
ReplyDelete2
வந்துட்டேன்...
ReplyDeleteசார் ஆன்லைன் புத்தக விழா புத்தகங்கள் எப்போது கிடைக்கும்?
ReplyDelete43வது
ReplyDelete// ஓரளவிற்கு ஸ்ட்ராங்காகவே கால் பதித்து நின்ற இந்த நாயகி- "ஜன்னலோரமாயொரு மரணம்" ஆல்பத்தின் உபயத்தில் L&T சிமெண்டுடன் பேஸ்மென்ட் அமைத்து கச்சிதமாகக் காலூன்றிவிட்டார் என்பேன்//
ReplyDelete+9
இன்று காலை படித்து முடித்தேன்,மற்ற மூன்று கதைகளிலும் மாறுபட்டு இருந்தது என நினைத்தேன், அதுவே எழுதி உள்ளீர்கள், கதாசிரியரின் முயற்சியில் வெற்றி வாகை சூடி உள்ளார் ரூபின்
🤩🥳
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்
ReplyDeleteHi
ReplyDelete//முன்பதிவுகள் 200-ஐ நெருங்கி வருகின்றன...! நீங்களும் இணைந்து கொண்டிடலாமே folks?//
ReplyDeleteDone sir !
Sorry sir வர முடியவில்லை
ReplyDeleteவணக்கமுங்க!!
ReplyDeleteசார் சாகுவேரா பற்றி வேண்டுமானால் கேள்வி கேட்டு பிறகு முடிவு செய்யலாம்.ரூபின் எத்தனைஅதிகம்?.முடிவுசெய்திருப்பீர்களே?.சொல்லுங்கசார் சொல்லுங்க சாகுவேரா. 2
ReplyDeleteரூபின் 2 மினிமம்
Delete// டீம் சேலம் துளியும் பிசிறின்றி எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்திருக்க //
ReplyDeleteசூப்பர் சூப்பர். எக்ஸெலன்ட் டீம் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
என் சின்ன வயசு நினைவுகள், முத்து காமிக்ஸ் பொன்விழா கொண்டாட்ட அரங்க நிகழ்வுகள், சீனியர் எடிட்டரிடம்.. அவர் சாப்பிட்டு முடித்தபின் தட்டை வாங்க நான் கை நீட்டிய போது... ஒரு புன்னகையுடன் அவர் மறுத்தது.... அய்யா கருணையானந்தம் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தது,புரவிப்பாளையம் தோட்டம்.. தாத்தா வீடு... எல்லாம் ஒரு அலை போல ஒரே சமயத்தில் என் மீது வந்து மோதியத்தில்... தொண்டை அடைத்துக்கொண்டது.. என்னால்
ReplyDeleteபேசவே முடியலைங்க sir... ❤️🙏
நிறைய பேச நினைத்தேன்... உணர்வு வயப்பட்டு... சில நிமிடங்கள் மட்டும்.. என்னால் முடிந்தது... ❤️🙏
ReplyDeleteபேசியவரை சிறப்பாகவே இருந்தது நந்தீஸ் ஜி 👍💐
Deleteநன்றி.. விஜய்... ❤️👍🙏..
Deleteசில நிமிடங்கள் ஆனாலும் உளமாற உரையாற்றினீர்கள் நண்பரே...
Deleteநன்றி.. பரணி சகோ... ❤️🙏..
Deleteடீம் சேலத்துக்கு ❤️🙏.. நன்றி.. 🙏🙏..
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDelete// அன்று விக்ரம் பேசியதை ரசிக்க அப்பா நிஜத்தில் இல்லையே என்ற ஒற்றைக் குறை மட்டுமே என்னுள் நீடித்தது! //
ReplyDeleteபுரிந்து கொள்ள முடிகிறது சார்.
சூப்பர் சார்
ReplyDeleteஜூனியரின் உரை நிஜமாகவே ஒரு சர்ப்ரைஸ் தான்! நிகழ்ச்சி நிரலில் ஜூனியரின் உரை இடம் பெறவில்லை என்றாலும், 'எதற்கும் கேட்டு வைப்போமே' என்று நினைத்தபடியே நிகழ்ச்சியின் நடுவே ஜூனியரை நெருங்கி கிசுகிசுப்பான குரலில் 'தாத்தாவைப் பற்றி நீங்க ஏதாவது பேச விரும்பறீங்களா விக்ரம்?' என்று கேட்டு வைத்தேன்! ' யெஸ்.. பேசறேன்' என்று அவர் சொன்ன போது எனக்கு சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ்!
ReplyDeleteஅந்த நொடியில் இருந்தே ஜூனியரின் உரையை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தது மனசு!
எடிட்டரும், நண்பர்களும் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது மனசுக்குள் ஒரு திக் திக்! எங்கே இந்த இடைப்பட்ட நேரத்தில் மனசு மாறி 'இல்லங்க.. நான் பேசலை' என்று சொல்லி விடுவாரோ என்ற பயம் உள்ளுக்குள் கொஞ்சமாய் ஓடிக் கொண்டிருந்தது நிஜம்!
அதன் பிறகு அவர் மைக் பிடித்து பேசியதெல்லாம் வரலாற்று சம்பவம்! தனது பிரியத்துக்குரிய டாடிப்பாவைப் பற்றி கணீர் குரலில் பேச ஆரம்பித்தார்! "டாடிப்பா கலர் கலராக சட்டைகள் அணிந்திருந்தாலும் அவர் மனசு எப்போதும் வெள்ளை தான்' என்று பேசிய போது நண்பர்களின் கரகோஷம் மண்டபத்தில் விரிசல் விழச் செய்யும்படி இருந்தது! சில நிமிடங்களே பேசினாலும் தனது கன்னி உரையை தெளிவாக, தீர்க்கமாக நிகழ்த்தினார்! உரையின் இறுதி பகுதியில் அவர் பேசிய விஷயம் மனசுக்குள் ஒரு சந்தோஷ அதிர்வை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல!
டாடிப்பாவின் ஆசிர்வாதம் என்றென்றும் உங்களுக்கு நிறைந்திருக்கும் விக்ரம்! ஒவ்வொரு புத்தக ஆக்கத்தின் பின்புலத்திலும் சத்தமின்றி பல ஆக்கப்பூர்வமான வேலைகளை செய்து கொண்டிருக்கும் நீங்கள் - ' திக்கெட்டிலும் உள்ள எல்லா சிறுவர்களின் கையிலும் காமிக்ஸ்' என்ற உங்கள் டாடிப்பாவின் கனவுகளை நிறைவேற்ற இன்னும் பல புதுமைகளோடு களம் இறங்குவீர்கள் என்ற நம்பிக்கை உங்களின் இந்த உரையின் மூலம் எங்களுக்குத் துளிர் விட்டிருக்கிறது!
தொடர்ந்து அசத்துங்கள் விக்ரம்! எங்களது உடம்பில் தெம்பிருக்கும் வரை கூடவே சேர்ந்து பயணித்து எங்களால் இயன்ற ஆதரவை எப்போதும் அளித்திடுவோம்!💐🤝💪
👍😘💐அட்டகாஷ் EV ஜி 😘
DeleteYes இயவரசரே....ஈரோட்டில் ஜூனியரை பேசக் கோரும் போதெல்லாம் நான் சிரித்து மழுப்பி வருவேன் - simply becos அவனுக்காகப் பேசத் தோன்றும் பொழுது வரையில் கட்டாயப்படுத்த வேணாமே என்று தான்! இதோ - இயல்பாய் அந்த உந்துதல் எழுந்துள்ளதே!
Deleteஅருமை செயலரே...உண்மை..
DeleteGood to hear this Vijay!
DeleteYes.. Dear விஜய்.. ❤️👍🙏...
DeleteHello
ReplyDeleteகாமிக்ஸ் சொந்தங்களுக்கு இனிய காலை வணக்கம்..🙏🏻🙏🏻
ReplyDeleteசீனியர் எடிட்டரின் நினைவஞ்சலி நிகழ்வுகள் சிறப்பாக நடந்தேறியதற்கும், அதன் பின்புலமாய் இருந்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் சார்.
ReplyDelete30ம் தேதி என் தாயாரின் சிரார்த்த திதி. அதனால் தான் என்னால் வர இயலவில்லை.
மார்ச் 27 தமிழ் காமிக்ஸ் தினமாக கொண்டாடப்படும் அறிவிப்பு, சீனியருக்கான சிறப்பான அர்ப்பணம்.
ஒவ்வொரு ஆண்டும் அன்றைய தினத்தில் ஒரு புதுக்கதை + ஒரு க்ளாசிக் (சீனியரின் படைப்பு) கதை என ஒரு Combo புக் வெளியிடுங்கள் சார்.
அதுதான் அவருக்கு நாம் செலுத்தும் அன்பு காணிக்கை.
நன்றி.
மூன்றரை நிமிடங்களுக்கு மைக் பிடித்த ஜுனியர் எடிட்டரே அன்றைய பொழுதின் Show Stopper என்றால் மிகையாகாது! 'நறுக்' என்று டாடிப்பாவிடம் தான் கற்றுணர்ந்த 5 விஷயங்களைப் பற்றி விக்ரம் பேசிய போது, கூடியிருந்த நண்பர்களுக்கு மட்டுமல்ல, எனக்குமே பெருமிதத்தில் தொண்டை அடைக்காத குறை தான்! ////
ReplyDeleteஉண்மை சார்..!
யதார்த்தமான.. உணர்வுப்பூர்வமான உரை..👏👏👏
Dear LionMuthuV Travels,
ReplyDeleteவரும் 2026 காமிக்ஸ் பயணத்திற்கு, கவ்பாய்களின் விடிவெள்ளி, செவ்விந்திய சிங்கம், ஏஜெண்ட்களின் ஏந்தல், எங்கள் அன்பு அண்ணன், காமிக்ஸ் உலகின் Divine Ponytail
"ஸகுவாரோவிற்கு இரண்டு ஸீட்"
ரிஸெர்வ் செய்து அருள் புரியுமாறு
Shadow Wolves பேரவை சார்பில் கேட்டுக் கொள்கிறோம்..
இவண்,
Shadow Wolf AKK
கேய் வால்கனுக்கு ஆர்மி ஆரம்பிக்கலாம்னு ஒரு யோசனை டாக்டர்.!
Deleteநீங்க வேற இன்னொரு ஜடாமுடியை நினைவுபடுத்தாதீங்க சாரே 🥹🥹
Delete😂😂😂😂
Deletethis month rating
ReplyDelete1. சாகுவேரா - ok .. can come once a year .. 7/10
2. RUBIN - LADY SUPERSTAR OF OUR COMICS .. CAN COME TWICE A YEAR .. SODA S ALSO SAME TEMPLATE .. CARTOON DRAWINGS WITH SERIOUS PLOT .. CANT UNDERSTAND Y ITS A FLOP ,, 9/10..
3. FELICITY - SAW DIFFERENT SHADES OF THIS CHARACTER IN THIS STORY .. 9/10
இந்த நொடியிலொரு கேள்வி மக்களே! ஸகுவாரோவுக்கு தொடரும் ஆண்டில் எத்தனை ஸ்லாட்ஸ் தரலாமென்பீர்களோ?! 1? 2? ////
ReplyDeleteஅதென்ன.. 1.? 2.?
1+2 = 3 ன்னு இருக்கட்டுமே சார்...
அப்புறம் சாகோர் ஒரு 6..😍
சித்தே மேலே உள்ள கமெண்ட் தேக்கோ ஜி!
Deleteசரிங்க சார்.. அவருக்கும் வேணாம் எனக்கும் வேணாம்.. உங்களுக்கும் வேணாம்..
Deleteஅவர் கேட்ட 1 நான் கேட்ட 3 ரெண்டையும் சேர்த்து நாலா போட்ருவோம் சார்..😇
Shaguvara we can give thtee slots sir.
ReplyDeleteபடிக்கிறேன் ஐயா.
ReplyDelete
ReplyDeleteசாகுவேரா
கதையின் துவக்கம் அருமையாகவே இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.. வித்தியாசமான கதை நாயகன் மிகவும் மாறுபட்ட கதை பின்னணி. சம்பவங்களின் அழுத்தத்தினாலே பின்னப்பட்ட ஒரு கதை. ஆனால் கதையின் போக்கு எப்படி இருக்கும் என்பதை அனுமானிக்க முடியவில்லை .
சக்கர வியூகத்தை உடைக்க தெரிந்த அபிமன்யுவுக்கு வெளியில் வர தெரியவில்லை.
பிரம்மாஸ்திரத்தை விடுவிக்கத் தெரிந்த அசுவத்தாமனுக்கு அதை திரும்ப பெற தெரியவில்லை.
துவக்கம் நன்றாகவே இருப்பினும்
இன்னும் இரண்டு இதழ்கள் வரட்டுமே. தெளிவாக முடிவெடுத்து விடலாம்.
இவ்வளவு இதழ்கள் வெளிவந்திருப்பினும் ஜம்பிங் ஸ்டாரை கூட மிஸ்டர் நோவுக்கு கீழே தான் வைத்திருக்கிறேன்.
// துவக்கம் நன்றாகவே இருப்பினும்
Deleteஇன்னும் இரண்டு இதழ்கள் வரட்டுமே. தெளிவாக முடிவெடுத்து விடலாம்.
//
+1
எனது எண்ணமும் இதுவே சார்
1 ok now. Will. decide later
Deleteசகுவாரா 1,ரூபின் 1
ReplyDelete"தமிழ் காமிக்ஸ்" - உலகின் தலைமகன் - சீனியர் எடிட்டர் அவர்களின் நினைவு அஞ்சலி
ReplyDelete- நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது அறிந்து மிகவும் மகிழ்ச்சி சார்..
(தந்தையை - இழந்திருக்கும் காமிக்ஸ் நண்பர்களும் அவரவர்
தந்தையை நினைத்துப் பார்க்கும் ஒரு தருணமாகவே அமைந்திருக்கும்..)
அப்றம் - நினைவு தினத்தை விட
சார் - பிறந்த தினமாகிய 24. டிசம்பர் .. என்பதை "காமிக்ஸ் தினம் "என்று சிறப்பு செய்தால்
நன்றாக இருக்குமே சார்..
ஜீனியர் எடி பேச மாட்டார் என்றே நானும் நினைத்து இருந்தேன்..ஆனால் அவர் எழுந்ததுமே ஆச்சர்யமாய் அருகில் இருந்த நண்பரிடம் நானுமே கூறினேன் ஏப்பா முதல் முறையாக ஜீனியர் எடி உரையாற்ற போகிறார் என ..ஆனால் அவரின் உரை முதல் உரை போலும் அல்ல தடுமாற்றமும் அல்ல..ஆத்மார்த்தமாய் உரையாற்றினார்..
ReplyDeleteடீம் சேலம்...
ReplyDeleteமனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்...
*பல பணி சிரமங்களால் இந்த முறை நறுக் சுருக் விமர்சனம்...*
ReplyDelete1. *நிழல் ஓநாய்கள்*
ஸகுவாரோ ..அட்டைப்படங்களும் சித்தரங்களும் அட்டகாசம் எனில் கதையிலும் இந்த புதுமுக நாயகர் அட்டகாசபடுத்தி விட்டார்..நாயகனுக்கு ஓவர் பில்டப்பும் இல்லாமல் சரியான விதத்தில் ஆக்ஷனும் கலந்து ஓர் அழகான விறுவிறுப்பான சாகஸத்தை படித்த திருப்தி ..நாயகனை விட கதையில் வந்த அந்த சிறுவன் என்னை அதிகமாகவே கவர்ந்து விட்டான்...வசனங்களும் ,மொழிநடையும் சிறப்பு...இந்த அறிமுக நாயகர் ஸகுவாரோ அவர்களை தாராளமாக மாதம் இருமுறை சாரி வருடம் இரு முறைக்கும் மேலும் கொண்டு வந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே...
2.*மைனாவோடு மஞ்சுவிரட்டு*
என்னை பொறுத்தவரை இரத்தப்படலத்தின் ஸ்பின்ஆப் கதைகள் எதிலுமே விருப்பம் கிடையாது...காரணம் வாசித்த ஸ்பின் ஆப் கதைகள் எதுவுமே (மங்கூஸ் தவிர..) ஒரு முழுமையான சாகஸம் போலவும் மனதில் ஒன்றவில்லை..இரத்தப் படல கதை ஓட்டத்திற்கான ஒட்டுதலும் அந்த ஸ்பின்ஆப் கதைகளில் எனக்கு புலப்பட வில்லை..எனவே ஆர்வமே இல்லாமல் தான் இந்த மைனாவை தொடர ஆரம்பித்தேன்..ஆனால் ஸ்பின்ஆப் கதைகளில் ரசித்த ஒரே மங்கூஸ் சாகஸத்தை விட இந்த மைனாவின் சாகஸம் அட்டகாசம்...ஒரு ஆன்டி ஹீரோ (யின் ) சாகஸத்தை பரபர ,விறுவிறு வென செம அட்டகாசமாய் கதை நகர்ந்து சென்றது ..சித்திரங்கள் செம விருந்து எனில் மொழி ஆக்கமும் அழகு..இந்த இதழின் ப்ளஸ் பாயிண்டே இரத்த படலம் இதழை வாசிக்காதவர்கள் கூட இந்த இதழை வாசிக்க நேர்ந்தால் எந்த குழப்பமும் இன்றி வாசிக்க வைக்கும் கதை போக்கு தான்...மைனாவோடு மஞ்சு விரட்டு வெகு சிறப்பு..
3.*ஜன்னலோரமாய் மரணம்*
டிடெக்டிவ் ரூபின் இந்த முறையும் சாகஸத்திலும் சரி ..காமெடியிலும் சரி கலக்கி விட்டார்..ஆரம்ப முதல் இரு பக்கங்களே வாய்விட்டு சிரிக்க வைக்க ..நாயகி ரூபினோ தவறான ரூட்டிலியே விசாரித்து கொண்டு போய் இறுதியில் அட்டகாசமாய் துப்பறிந்த இந்த சாகஸமும் மனதை கவர்ந்து விட்டது ..சித்திரங்கள் தான் ஒரு வித்தியாச கார்ட்டூன் பாணியில் அமைந்து இருப்பது ப்ளஸ் பாயிண்டா மைனஸ் பாயிண்டா என குழப்பத்தில் இருக்க வைக்க ஆசிரியர் அதையும் தெளிவு படுத்தி விட்டார்...
ரூபின் நன்று..
சூப்பர் தல
Deleteதலைவரே, எந்தையின் கதையை விட மைனா top தான்.. ஆனா எந்தையின் கதை உங்களுக்கு பிடிக்கல என்பதே ஆச்சரியமா இருக்கே
DeleteSURYAJEEVA @ என்ன சார் உங்களுக்கு இன்னும் தலையின் ரசனையை புரிந்து கொள்ள முடியவில்லையா, மைனாவின் கதை வரை மயக்கி விட்டது! :-)
Deleteமைனாவே மைனாவே இது என்ன மாயம்
Deleteதலைவரே மயங்கினா கிடைக்குமா நியாயம்..
நடு சாமத்தில் மைனா பதிவுக்கு தலைவர் பின்னூட்டம் போட்டத மறந்து போச்சா 😃
Deleteபரணி சகோ 😂😂😂
DeleteSir, full flowல இருக்கீங்க போல்.. நடத்துங்க
Delete// தலைவரே மயங்கினா கிடைக்குமா நியாயம்..//
Deleteதலைவர் நியாயத்துக்கு போராடினாரா, நியாமா சொல்லுனும் என்றால் இதுவரை வாழைபூ வடைக்கு தான் போராடி இருக்கிறார் ☺️
வரப்போகும் கிராபிக் நாவல் விளக்கவுரை குறித்து என் கருத்து,
ReplyDeleteநாளை போய் நேற்று வா
இந்த புத்தகத்தை ஒருவர் பத்து அல்லது இருபது வருடம் கழித்து முதன் முறையாக படிக்கிறார் என்றால், அவருக்கு நாம் புத்தகத்தின் கடைசியில் கொடுக்கும் மின் அஞ்சல் முகவரியும், தொலைபேசி என்னும் அப்போதும் அவருக்கு உதவும் வகையில் செயல்பாட்டில் இருக்குமா, இருந்தாலும் இந்த கதையை ஞாபகம் வைத்து விளக்கம் கொடுக்க முடியுமா.
மேலும் இந்த கணனி உலகில் புத்தகம் படிக்கவே நேரம் ஒதுக்குவது சிரமம், அப்படியே ஒதுக்கினாலும் மண்டையை குடையும் கிராபிக் நாவல்களுக்குள் நுழைவது மேலும் சிரமம், இந்த காரணத்தை கூறி தான் light reading பக்கம் சாய்ந்து விட்டோம். இப்போது இந்த புத்தகத்தை படித்து விட்டு இந்த கால நெருக்கடியில் எத்தனை பேர் நேரம் ஒதுக்கி விளக்கம் கேட்க போகிறார்கள். இரவு நேரத்தில் படிப்பவர்களுக்கு எப்படி உடனே பதில் கிடைக்கும்.
கிராபிக் நாவல்களை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டுமெனில் விளக்கவுரை கண்டிப்பாக புத்தகத்தில் வேண்டும். இதை தான் நான் பத்து வருடமாக கூறி வருகிறேன். தீவிர வாசகர் தவிர்த்து மற்றவர்கள்/புத்தக விழாக்களில் வாங்கும் புதியவர்கள் கிராபிக் நாவல் என்றால் இப்படித்தான் என்று முத்திரை குத்தி விட்டு கடந்து போய் விடுவர். விடை தெரியாமல் படித்து என்ன பயன். இது கிராபிக் நாவல் படிப்பவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்கும்.
சகலத்துக்கும் 2 பார்வைக் கோணங்கள் சாத்தியமே நண்பரே! ஆனால் அது சகலருக்கும் சதா காலமும் சாத்தியம் அல்ல தான்! There are bound to be exceptions and this is one such instance!
Deleteபுக்கை படித்திருக்கும் ஒரே நபர் என்ற வகையிலும், பொதுவான வாசகப் பார்வையினை கணிக்க முயற்சிப்பவனும் என்ற வகையில், இது சார்ந்த தீர்மானம் எடுக்க உங்களைக்காட்டிலும் I'm in a better position for sure! So chill!
கதையை தேர்வு செய்தவனுக்கு, அதை முறையாய் கையாளவும் தெரியும் என்று நம்ப முயற்சி பண்ணித் தான் பாருங்களேன்!
RIP to senior editor.
ReplyDeletenew hero SAGUERA very good 2 slots might be given a year
ReplyDeleteI attended the Salem meet and enjoyed editor and junior editor speeches.The arrangment was great.
ReplyDeleteநன்றி சார் 👍👍
Deleteசார்,
ReplyDeleteஅடுத்த வருஷம் "Felicityக்கு" எத்தனை இடங்கள்...!?
🤔😌
மனதிலோரிடம்
Deleteதற்சமயமாய் காலியாய் உள்ள பொறுப்புகள் :
Delete1."க்வீன் ரூபின்" பேரவை தலீவர் பதவி!
2."ஹாட் பெலிசிட்டி" நற்பணி மன்றத் தலைவர் பதவி!
3."ஷூகர் கேய் " அகில உலக நற்பணி மன்றம்!
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!
Saguvera x 2 per annum
ReplyDeleteமுடிந்தால் ரூபினுக்கு இரண்டு ஸ்லாட்கள் 😁😁😁
ReplyDelete🙋♂️
ReplyDeleteடாக்டர் சார் . நீங்க ஏற்கனவே இளவரசி பேரவையில முக்கியமான போஸ்ட்ல இருக்கிறிங்க அத மறந்துறாதிங்க
ReplyDeleteசுரேஷ் சார் .நீங்க மாட்டினமாதிரியே நானும் மாட்டியிருக்கேன் . கதை படிச்சு முடிச்சிட்டேன் ,அப்படினதும் சட்டைய பிடிச்சு முழுகதையை சொல்லுன்னு உட்கார வச்சிருக்காங்க. அதற்க்கு பிறகுதான் வாசிப்பின் மீது வேறுமாதிரி ஆர்வமே பொங்கியது.
ReplyDeleteGreat sir
Delete*ரூபின்..*
ReplyDeleteஆக்சன் நாயகி மட்டும் அல்ல, கவனியுங்கள் கதையிடையே அவரது நகைச்சுவையும் இளைந்தோடும்.
*ஜன்னலோரம் மரணம்* கதையில் இறுதியில் விழாவில் கிடைக்கும் சீப், அயல்நாட்டு அதிபர் அவர்களின் பாராட்டை நக்கலும் நையாண்டியுமாக கவுண்டமணி + வடிவேல் பாணியில் மனதிற்குள் கருத்து சொல்லும் நகைச்சுவை கடைசி பேனல் வரை நிற்கவே இல்லை அதனாலே ரூபின் அவரது கதை வரிசையில் சற்று தனித்து தெரிகிறார்
*டிடெக்டிவ் ரூபின்*
ReplyDeleteஇறுதியாக வந்த
மங்களமாய் ஒரு மரணம்
ஜன்னலோரம் மரணம்
இரண்டு கதைகளிலும் மொழிபெயர்ப்பு செம அசத்தல் ரகம் சகோதரி சுகன்யா அவர்களுக்கு பாராட்டுக்கள்..🔥💐
சோடா ஃபெயில் என்று தற்போது காரணம் தோன்றினாலும்..
ReplyDeleteகார்ட்டூன் பாணியிலான ஆக்சன் கதைகளுக்கு *ரூபின்* மற்ற நாயகர்களுக்கும் சேர்த்து கதவை முதலாளாய் திறந்து உள்ளார் சமீப காலத்தில்.
*சோடா* இனிவரும் காலங்களில் இதன் விளைவாக வாசகர் மனதில், ரசனையில் இன்னும் நெருக்கமாக இடம் வாய்ப்பு உள்ளது
ஜன்னலோரம் மரணம் - துப்பு கொஞ்சம் கூட இல்லாத நிலையில் கொலையாளி யார் அதற்கான காரணம் என்பதை கண்டுபிடிக்கும் ரூபின் பாணி செம. செம நக்கலாக பல இடங்களில் சமாளிக்கும் விதம், புதுமை. கொலையாளியை கண்டுபிடிப்பதை விட கொலைக்கான காரணத்தை கண்டுபிடிப்பது தனக்கு முக்கியம் என தனது தனித்துவத்தை அழகாக சொல்லி விட்டார். இதுபோன்று பக்கத்துக்கு பக்கம் விறுவிறுப்பான கதைகளை படித்து பல வருடங்கள் ஆகி விட்டது. படங்கள் பல விஷயங்களை சொல்கிறது. கொலையாளியின் நோக்கம் என்ன என்று முதல் சில பக்கங்களில் கவனித்தால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த அம்மணி அதனை கண்டுபிடிக்கும் விதம் மற்றும் சுவாரசியமான முறையில் கொடுத்த கதாசிரியரின் திறமைக்கு தலைவணங்குகிறேன்.
ReplyDeleteஒவ்வொரு கதையிலும் ரூபின் சிக்ஸர் அடித்து நமது காமிக்ஸ் அட்டவணையில் நிரந்தர நாயகி என்ற அந்தஸ்துக்கு உயர்ந்து வருகிறார்.
கலக்கல்
Deleteசாகுவேரா - அடுத்த வருடம் 1 கதை போதும் சார்.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஎன்ன பரணி பொசுக்கு என்று இப்படி சொல்லிட்டீங்க?
Deleteமுந்தைய சில அறிமுக நாயகர்கள் கதைகளின் அனுபவம். இவரின் இன்னும் சில கதைகள் வந்த பிறகு இவருக்கு அதிக ஸ்லாட் கேட்கலாம்.
DeleteSorry Kumar :-)
DeleteI would have voted For SODA as a good book, I enjoyed reading it, The voting was rigged to say only why you dont like it , so may be in future polls we can have one option if you are a person who like it
ReplyDelete//sஒவ்வொரு கதையிலும் ரூபின் சிக்ஸர் அடித்து நமது காமிக்ஸ் அட்டவணையில் நிரந்தர நாயகி என்ற அந்தஸ்த்துக்கு உயர்ந்து வருகிறார்//உண்மை. ஒன்று பத்தாது இரண்டு வேண்டும்
ReplyDeleteஒண்ணு மட்டும் போதும் சார். விற்பனையில் தொடர்ந்து சாதித்தால் வரும் காலங்களில் 2 கதைகள் கேட்கலாம்.அவசரம் வேண்டாம்.
Delete**** ஸகுவாரோ*** நிழல் ஓநாய்கள் ****
ReplyDeleteசேனமிடாத குதிரைகளில் அமர்ந்தகொண்டு வில்லம்புகளையும், பழைய பேரல் துப்பாக்கிகளையும் ஏந்திய படியே 'யாயாஹூ' என்று பாய்ந்து வரும் செவிந்தியர்களுடனேயே இத்தனை நாளும் அன்னம்-தண்ணி புழங்கிவந்த நமக்கு, பிஸ்டலை ஏந்தியபடி பைக்கில் பயணித்து வரும் ஜீன்ஸ் பேண்ட் போட்ட இந்த மாடர்ன் செவ்விந்தியர் ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவமாகத் தெரிகிறார்.
கார்,ஹெலிகாப்டர் என்று கிட்டத்தட்ட சமகாலத்திய கதை நகர்வைக் கொண்டிருந்தாலும் - அதே பாலைவனம், பள்ளத்தாக்கு, மலைமுகடுகளில் கதை பயணித்து செல்லும்போது மனசுக்கு ஒரு இனம் புரியாத நிம்மதி!
எடிட்டரும், நம்ம கிட்ஆர்ட்டின் கண்ணனும் இணைந்து வசனங்களில் அனல் பறக்க விட்டிருக்கிறார்கள்! நிறைய இடங்களில் வசனங்கள் சபாஷ் சொல்ல வைக்கிறது! 👏👏💐💐
ஸகுவாரோ - நினைத்ததை விடவும் ஒருபடி மேலேயே நம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து, முதல் இன்னிங்ஸிலேயே செஞ்சுரி அடித்திருக்கிறார்!! அடுத்த கதையிலும் இதைத் தக்க வைத்துக் கொள்வாரா என்பதே இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி!!
நல்வரவு ஸகுவாரோ!!💐💐💐🤝
நிழல் ஓநாய் பேரவை எப்ப தொடங்க போறீங்க சார்
Deleteவெயில் கொஞ்சம் குறையட்டும் ஜி.. 😝
Deleteஅந்தப்புரம் செல்லாமல் விமர்சனக்களத்தில் பட்டையைக் கிளப்பும் இளவரசர்.... வாழ்க
ReplyDeleteஇல்லீங்க ராஜசேகர் ஜி.. பணிப்பெண்கள் உணவு விடுமுறையில் சென்றிருந்த கேப்பில் எழுதிய விமர்சனம் இது!😝😝
Deleteவிஜய் & ராஜசேகர் சார், 😁😁😁🤣🤣🤣🤣 சபாஷ் சரியான காமெடி
Deleteஅவங்கெல்லாரையும் அப்படியே டிஸ்மிஸ் பண்ணிட்டு முழுக்க விமர்சனத்துக்கு வாங்க .நல்லா எழுதறிங்க ஜி.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசேலத்தில் காமிக்ஸ் எந்தக் கடையில் கிடைக்கும் என்பதை சேலம்
ReplyDeleteநண்பர்கள் பதிவிடவும்.
வள்ளலார் புத்தக நிலையம், வள்ளுவர் சிலை அருகில் சேலம். அமுதம் புத்தக நிலையம் அஸ்தம்பட்டி, தேசன் புத்தக நிலையம் சுப்ரமணிய நகர் செகண்ட் கேட், சோனா காலேஜ் அருகில் சேலம்
Deleteவள்ளலார் புத்தக நிலையம், சேலம்
ReplyDeleteநன்றி 🙏.
Delete9080498756
ReplyDeleteவள்ளலார் புத்தக நிலையம் ,
சேலம் பழைய பேருந்து நிலையம்,
ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோவில் அருகில்
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis month Saguvara and felicity Spin off shines. Saguvera yearly 2 slots
ReplyDeleteஎன்ன குமாரே வழக்கமான பின்னூட்டம் போட்டு ஆசிரியருக்கு ஞாபகபடுத்திடலாமா 😊
ReplyDelete😂😂😂
Deleteஇன்று பதிவுக் கிழமைங்க, சார்
ReplyDeleteபுகை சமிக்ஞை அனுப்புறோம்
😁
Deleteசார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteஆன்லைன் புத்தக விழா நேற்று ஆரம்பம்...
எல்லாம் சேர்த்து ஒரு பெரிய பதிவாக போடுங்க சார்
//எல்லாம் சேர்த்து ஒரு பெரிய பதிவாக போடுங்க சார்//
Deleteஆமாங்க பெரிய பதிவு வேண்டுங்க 😊😁
// சார் இன்று பதிவுக் கிழமை //
Deleteஆமாம் சார் 😊
ஆன்லைன் புத்தக விழா விற்பனை சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்த வாரமும் பதிவுக்கு அல்வா தந்து விட்டாரா ஆசிரியர்
ReplyDeleteஇன்று வந்து விடும் என்று நம்புவோம் சார்.
Deleteஆன்லைன் புத்தக திருவிழாவில் பிஸி. இன்று இரவு பதிவு வரலாம். காத்திருப்போம்
Deleteநம்பிக்கை தானே வாழ்க்கையே ங்க சார்
ReplyDelete****** நாளை போய் நேற்று வா *****
ReplyDeleteஇதுவரை நாம் கண்டிராத வித்தியாசமான கி. நா! காலப்பயணம் என்ற சமாச்சாரம் நமக்கெல்லாம் புதிதல்ல என்றாலும், இங்கு கால பயணத்தோடு கூடவே விதியின் விளையாட்டையும் இணைத்துவிட்டு ஒரு வித்தியாசமான, ஆச்சரியப்பட வைக்கும் வாசிப்பு அனுபவத்தை கொடுத்திருக்கிறார்கள். 'காலங்கள் மாறலாம்.. கதாபாத்திரங்களும் மாறலாம்.. ஆனால் விதி எழுதிய கதை மட்டும் மாறவே மாறாது' என்பதுவே இங்கே சொல்லப்பட்டிருக்கும் ஒன்லைன் ஸ்டோரி!
சித்திரங்களும் வண்ணங்களும் மெருகூட்ட, ஒரு பரபரப்பான 'வேற லெவல்' வாசிப்பு அனுபவம்!
வாசிப்பு ரசணையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் இது போன்ற கதைகள் வருடத்திற்கு ஒன்றிரெண்டாவது கட்டாயம் வேண்டும்!!
நாம் அனைவரும் வாட்ஸாப் கம்யூனிட்டியிலிருந்து வெளி நடப்பு செய்து... லயன் ப்ளாக் ஸ்பாட்டிலேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினால் தான் நம் ஆசிரியர் இங்கு வருவார் என நினைக்கிறேன்...
ReplyDelete😆
Delete*நாளை போய் நேற்று வா!*
ReplyDeleteநேர்கோட்டு காலப்பயணத்திலான ஒரு லூப்! எதிர்காலத்திலிருந்து இறந்த காலத்தை தேடிச் சென்று பழிவாங்குவதுதான் கதையின் ஒற்றைவரி!
பெரிய குழப்பங்களில்லாத காலப்பயண கதை விரும்பிகளுக்கு சரியான தீனி... எந்த ஒரு பாராடக்ஸும் ஏற்படாத வண்ணம் வடிவமைக்கப் பட்ட சாதாரண டைம் லூப்...
சிகரங்களின் சாம்ராட், தலைகாத்த தனயன், தி மவுண்டன் ஆப் டைம் மாதிரியான தோர்கல் கதைகள் போல குழப்பமேற்படுத்தக் கூடிய பேரடாக்ஸ்களோ டைம் ஜம்ப்களோ இல்லையென்பது ஒரு வகை மிஸ்ஸிங்தான்..
டெவன்- ஜூலியா பிரபஞ்ச இணைகள் (அதாவது copy of the same entity of a multiverse), என்டேங்கிள் செய்யப்பட்ட குவாண்டம் இணைகளாகக் கொண்டாலும் சரி!
எதிர்கால ஜூலியா மூலம் தன்னால் தவறுதலாக டெவன் கொல்லப் படுவதை தெரிந்து கொள்ளும் நிகழ்கால ஜூலியா அதை தவிர்க்கும் பொருட்டு தன்னை பணியிலிருந்து விடுவித்துக் கொள்கிறாள்.
அதன் பின்னர் தன்னுடைய டைம் லைன் டெவனுக்கு நடந்து வருவதை அறிந்து கொண்டும் அதை எந்த விதத்திலும் மாற்ற முற்படாமல் பிப்ரவரி 17, 2045ல் (காலண்டரில் குறித்து வைக்கப்பட்டுள்ளது) நடக்கும் மீட்டிங்கிற்காக காத்திருக்கிறாள்.
எதற்காக??
இதற்கான விடைதான் கதையின் முடிச்சு.
மற்றபடியான டைம் லூப்களும், ஆக்சன் அதிரடிகளும் வழமையானவையே என நினைக்கிறேன்.
பி.கு:
லியானர்ட்டை காப்பாற்றுவதுதான் ஜூலியாவின் குறிக்கோள். தான் செய்த தவறை தானே திருத்தும் முயற்சியில் தன் உயிரை இழந்து விடுகிறாள்.
இந்த பாயிண்ட்டைதான் அவள் காத்திருப்பது எதற்காக எனக் கேட்டிருந்தேன். மற்ற நிகழ்வுகள் எல்லாம் ஒன்று போல் அவளது பிரபஞ்ச இரட்டையால் நிகழ்த்தப் படும்போது லியானர்டின் கொலையும் நடக்கும் என்பதை எதிர்பார்த்தே அந்த நாளை காலெண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அவரைக் காப்பாற்றும் பொறுத்து காத்திருக்கிறாள்.