நண்பர்களே,
வணக்கம். "தேவைகளே கண்டுபிடிப்புகளின் அன்னை" என்று படித்திருக்கிறோம் ; இதோ இந்த அன்னையர் தினத்தினில் அதனை மறுக்கா ஒரு தபா நினைவூட்டிக் கொள்ள நமது ஆன்லைன் மேளா உதவி வருகிறது ! கொரோனா நாட்களில் , வெளியே தலைகாட்டக் கூட வழியில்லா அந்த வேளைகளில், நமது பயணத்தினை உயிர்ப்போடு தொடர்ந்திட ஒரு மார்க்கத்தினை தேடிய பொழுது அமைந்ததே இந்த ஆன்லைன் முயற்சி ! சலுகை விலைகளில் கையிருப்பு இதழ்களைக் கரைக்க ஒருபக்கம் முயற்சியெனில், அத்தோடு புது இதழ்களை இறக்கி விடுவதும் template என்றாகிப் போனது ! And 5 years down the line - இதோ நமது ஆண்டு அட்டவணையின் ஒரு முக்கிய வழித்தடமாய் இந்த மே வளர்ந்து நிற்கிறது !!
The கிரேட் ஆன்லைன் கிரிகாலன் ஷோ 💪
நிஜத்தை சொல்வதானால், ரொம்பவே மனநிறைவை தந்துள்ள காம்போ இம்முறை அமைந்துள்ளது என்பேன்! வழக்கமாய் குட்டியும், குரும்பாடுமாய், சிக்கிய சிறுத்தை மனிதன் ; லேடி ஜேம்ஸ் பாண்ட் என்றெல்லாம் உருப்படிக் கணக்கிற்கு ஆட்களை இந்த மேளா வேளையினில் நாம் திரட்டுவதுண்டு! ஆனால் இம்முறையோ கிட்டத்தட்ட ஒவ்வொரு தேர்வின் பின்னணியிலும் நிரம்பவே லாஜிக்கும் இருந்தது ; big names-ம் இருந்தன!
தல டெக்ஸ் @ மெக்சிகோ! Truth to tell - இந்த சாகசத்தின் நீளம் 504 பக்கங்களே என்பது முதல் தருணத்திலேயே எனக்குத் தெரிந்திருந்தால், சர்வ நிச்சயமாய் ஓட்டம் பிடித்திருப்பேன்! Crisp வாசிப்பு ; ரஸ்க் சேமிப்பு என்றெல்லாம் முழங்கி வரும் இந்த நாட்களில், இம்மா நீளக் கதைக்குள் தலை நுழைக்கவே எனக்கு தம் இருந்திராது - அது 'தல' தாண்டவமாகவே இருந்திருந்தாலும் ! But அந்த ஓட்டத்தில் ஒரு அற்புதமான டெக்ஸ் அதிரடியினை மிஸ் பண்ண நேர்ந்திருக்கும் என்பது இன்று புரிகிறது! நவம்பரில் ஒரு அத்தியாயம் ; தற்சமயம் கிளைமாக்ஸ் அத்தியாயம் என்றாலும், இம்மி கூட குறைவில்லா அந்த அனல் நம்மை நெடுக கட்டிப் போட்டிடுவதை நீங்கள் பார்க்கத் தான் போகிறீர்கள்! இதுக்கு மேலே பில்டப் அனாவசியம் ; புக்கை கையில் ஏந்த மட்டும் நீங்கள் நேரம் ஒதுக்கினால் மிச்சத்தை நம்மவரே பார்த்துக்குவார்! An absolute crackerjack!! இத்தனை காலமாய் டெக்ஸ் சாகசங்களுக்குள் ரவுண்டு அடித்து வந்தாலும் அவர் மீதான மையல் நம்மில் யாருக்குமே கிஞ்சித்தும் ஏன் குறைவதில்லை என்பதை yet again நான் உணர்ந்ததொரு தருணமிது! இந்த சாகசத்தின் highlight என்று நான் பார்த்தது 2 விஷயங்களை! கண்ணில் ஒற்றிக் கொள்ளும் நேர்த்தியிலான சிவிட்டலி சித்திரங்கள் முதல் plus எனில், மொத்த டீமும் அடித்து ஆட ஒரு களம் தொக்காக கிட்டியிருப்பது plus # 2. And அந்த சந்தர்ப்பம் ரொம்பவே உதவிடுகிறது - வெள்ளி முடியாரை டாடியும், புள்ளையும் வாரி, வாரி விளையாட 😁😁! So இந்த மேளாவின் தலைமகன் எப்போதும் போலவே நம்மவர் தான்!
சின்னத் தல ஸாகோர்!!
நம்மில் எத்தனை பேர் கவனித்திருப்போமோ தெரியல - but துவக்க நாட்களில் V காமிக்சில் குட்டிக் குட்டிக் கதைகளில் சுமாராய் வலம் வந்ததன் பிற்பாடு மனுஷன் அடித்திருப்பது சகலமுமே 100 மீட்டர் சிக்சர்கள் தான்!
*வஞ்சத்திற்கொரு வரலாறு
*பனிமலை பலிகள்
*சிரிக்கும் விசித்திரம்
என அத்தனையிலும் பின்னி எடுத்துள்ளார் ஸாகோர்! அந்த பாணி இங்குமே தொடராவிட்டால் தான் வியப்பு கொள்வேன் - becos "சிகப்பு நதி " ஒரு அக்மார்க் ஆக்ஷன் த்ரில்லர்! அட்டகாசமான கதைப் பின்னணி, ஒரு சிம்பிளான நேர்கோட்டு கதைக்கரு ; பிரமாதமான சித்திரங்கள் ; மின்னும் கலரிங் பிளஸ் ஒரு கம்பீரமான நாயகர் என்ற கூட்டணி சாத்தியமாகிடும் போது - ஒரு செம ஹிட் மட்டுமே பலனாகிட முடியுமென்பது basics ! "சிகப்பு நதி" என்று அட்டையிலும், "சிகப்பு ஏரி" என்று உள்ளேயும் பெயர் சுமந்து நிற்கும் இந்த சாகோர் saga சகல காமிக்ஸ் சாமுத்ரிகா லட்சணங்களையும் கொண்டிருப்பதால் ஜெயம் நிச்சயமென ஸ்டீலின் பட்சி சொல்கிறது காதில் ! இத்தாலிய மொழியில் "சிகப்பு நீர்" என்று பொருள்படும் விதமாய் பெயர் இருக்க, இந்த ஆல்பத்தினை மேலோட்டமாய் புரட்டிய கையோடு "சிகப்பு நதி" என்று பெயர் வைத்து விட்டேன் ! ஆனால் கதைக்குள் புகுந்த போது தான் அது நதியல்ல - ஏரி என்பது புரிந்தது ! ரைட்டு...அட்டையில் என்னவோ இருந்துவிட்டுப் போகட்டும் - தலைப்புப் பக்கத்திலாவது சரியாக இருக்கட்டுமே என்று நினைத்தேன் ! Doubtless இவர் சின்னத் தல தான் ; என்ன, இவருக்கான பேரவை தாரை தப்பட்டைகளை இன்னும் கொஞ்சம் தாட்டியமாய் முழங்கச் செய்தால் ஜம்பிங் தல popularity-களிலும் ஜம்ப் பண்ணி முன்னுக்குத் தாவி விடுவார் என்பேன் !
The மாயாவி மேஜிக் :
இங்கே புதுசாய் நான் சேர்க்க பெருசாய் எதுவும் லேது ; இரும்புக்கர நாயகரே சகலத்தையும் அட்டையிலேயே தெரிவித்து விடுகிறாரே ?! "ஒற்றைக்கண் மர்மம்" - முத்து காமிக்ஸ் வாரமலரை 21 இதழ்கள் வரைக்கும் இழுத்துச் சென்ற காரணிகளில் பிரதானம் இந்த சாகசமே ! கருணையானந்தம் அவர்களின் மொழிபெயர்ப்பில், கலரும், black & white பக்கங்களுமாய் வந்திருந்த இந்தக் கதைக்காகவும், அதிமேதாவி அப்புவுக்காகவுமே வாரமலர் வண்டி ஓடியது என்பது எனது அபிப்பிராயம் ! To a lesser extent - உள்ளிருந்த இன்ஸ்பெக்டர் ஈகிள் (கருடா) கதையும் உதவியிருக்கலாம் ! எது எப்படியோ - பிரதானமாய் இரவிலும், இருளிலும் அரங்கேறும் இந்த சாகசத்தை ஒரு புக்காய், MAXI சைசில், கண்ணை உறுத்தாத வர்ணச் சேர்க்கைகளில் பார்க்கவும், படிக்கவும் அம்சமாகவே உள்ளதாய் பட்டது ! And இது அப்பாவுக்கான சமர்ப்பணமுமே எனும் போது இதழ் நீட்டாக அமைந்து போனதில் மெய்யான சந்தோஷம் ! மாயாவியின் இதழ்களெல்லாமே புத்தக விழாக்களில் பொற்காசுகளுக்குச் சமானம் எனும் போது - சீக்கிரமே துவங்கவிருக்கும் 2025-ன் circuit க்கு இது உதவும் என்பது icing on the cake !!
தி கி.நா.படலம் !!
நிரம்ப பில்டப் சகிதம் ஆஜரான இதழ் தான் - "நாளை போய் நேற்று வா !" இதற்கு பெயரிட்ட கார்த்திக் நாளான்னிக்கியின் நாற்பதாவது நாளிலாவது இதை வாசித்து விடுவாரென்று நம்பும் வேளையில் உங்களில் கணிசமானோர் அதற்குள்ளாகப் போட்டுத் தாக்கியிருப்பது கண்கூடு ! And இது வரையிலும் கிட்டியுள்ள விமர்சனங்கள் 100/100 ரகமே !! அந்த மூன்றாம் பக்கத்தில் ஆரம்பிக்கும் சேஸ் கிளப்பும் தெறி ஸ்பீடானது - கதையின் இறுதிப்பக்கம் வரைக்கும் தொடர்வது தான் இங்கே highlight ! அந்த "மாநாடு" பட பாணியிலேயே காலப் பயணம், கொலை முயற்சி ; கொலை - என்று முன்னும், பின்னும் காலத்தில் அடிக்கும் ஷண்டிங் இந்த வாசிப்பை செம சுவாரஸ்யமாக்கிடுகிறது என்பது எனது அபிப்பிராயம் ! Of course - கதை முடிஞ்ச பிற்பாடு ஒரு விளக்கவுரை இருந்தால் கதை knot புரிபடாதோருமே சுலபமாய் புரிந்து கொள்ளலாமே ? என்ற முன்மொழிவு பதிவு செய்யப்பட்டது தான் ! ஆனால் கதாசிரியரின் பிரதான நோக்கமே நம்மை சிந்திக்கச் செய்வது தான் எனும் போது - "இன்ன மாரி...இன்ன மாரி இது இந்த வருஷம் நடக்குது ; அது அந்த வருஷம் முடியுது !" என்றெல்லாம் நான் பின்குறிப்பு தந்தால், "ஓஹோ" என்றபடிக்கே ஒற்றை வாசிப்போடு நகர்ந்து விடுவோம் தானே ? And யோசிக்க பெருசாய் அவசியங்கள் இல்லாது விளக்கத்தை தட்டில் வைத்துத் தந்து விட்டால் - மறுவாசிப்புக்கு self எடுக்கவும் செய்யாதே ? என்ற நெருடல் என்னுள் இருந்தது ! அதனால் தான் நீங்க சாத்தினாலும் பரால்ல....பாத்துக்கலாம் ! என கேள்விக்குறியோடு நிறுத்தியுள்ளேன் !
Your thoughts please folks ? On the album ? on my decision ?
And இதுவோ ஒரு இளம் இத்தாலியப் படைப்பாளிகளின் கூட்டு முயற்சியில் உருவான கதை ! போனெல்லி போல பளிச் என்று இவர்களை வெளியே யாருக்கும் தெரிந்திராது ; so இந்தக் கதையினை அகஸ்மாத்தாய் தேடிப் பிடித்ததே ஒரு தனிக்கதை ! And அவர்களுக்கோ அவர்களின் அனுபவங்களின் கூட்டுத்தொகையினை விடக் கூடுதல் வயதானதொரு பதிப்பகத்தின் லேபிலில் தங்களது படைப்பு வெளிவருவதில் மெத்தப் பெருமிதம் ! ரைட்டு...."நாளை போய் நேற்று வா" அலசல் கச்சேரியினை எப்போது வைத்துக் கொள்ளலாம் folks ?
The விச்சர் & கிச்சர் ஸ்பெஷல் !
Again இந்த ஆல்பத்தின் பின்னணி ஒரு மழை நாளுக்கான கதை என்பேன் ! இதுவரைக்கும் குட்டிக் குட்டி filler pages-களாக நம் முன்னே கூத்தடித்திருக்கும் இந்த ஸ்போர்ட்ஸ் ஜோடி இம்முறை ஒரு பிரத்யேக இதழில் - புத்தம் புது மினிஸ்களுடன் full color-ல் வந்திருக்கும் போது, நமக்கு மாத்திரமின்றி, புத்தக விழாக்களில் குட்டிப் பசங்களுக்கென புக்ஸ் தேடும் பெற்றோர்களுக்குமே சுவாரஸ்யமூட்டுவர் என்று நினைத்தேன் ! And புதுசாய் வாசிக்கத் துவங்கும் ஜூனியர்களுக்கு இந்த 2 பக்க பாணி செம வசதியென்றும் எண்ணினேன் ; இன்னிக்கு ஒரு கதை - நாளைக்கொரு கதை என ரசித்துப் போகலாமன்றோ ? அப்புறம்...நம்ம வட்டத்திலுள்ள "பொட்டியை பிரிச்சு அடுக்குவோர் ; பிரிக்காமல் அடுக்குவோர்" சங்கத்துக்குமே இந்த gags பாணியானது "ஆத்தா...நான் பாஸாயிட்டேன் !!" என்று உற்சாகக் குரல் எழுப்ப உதவிடக்கூடும் தானே ?
And சமீப காலங்களில் செமத்தியான குஷியோடு நான் பேனா பிடித்தது இந்த விச்சப்பர்-கிச்சப்பர் கூட்டணிக்கே என்பது கொசுறுத் தகவல் !
ஆக -
1 க்ளாஸிக் சூப்பர் ஹீரோ - மெகா சைசில்.....வண்ணத்தில்.....!
2 அழுத்தமான ஆக்ஷன் சாகசங்கள் - again in color ...!
1 தெறி ஸ்பீடில் crisp reading-க்கென கி.நா. - மறுக்காவும் கலரில் ..!
1 ஜாலி லைட் ரீடிங் பாக்கெட் சைஸ் ஆல்பம் - விடாப்பிடியாய் கலரில் !
என 5 இதழ்களை உங்களிடம் தந்தாச்சு !
இதழ் # 6 - ஜுனின் Father's Day ஸ்பெஷலாக "பயணம்" மெகா கிராபிக் நாவலோடு அடுத்த மாசம் வரவுள்ளது ! தற்சமயமாய் ஞான் அந்த தந்தை + தனயன் கூட்டணியுடன் தான் அரவமற்ற அந்த பூமியில் பயணித்து வருகிறேன் ! யப்பா......ஓவியங்களை பார்க்கும் போது, கபாலத்தில் இல்லாத கேசங்களுமே நட்டுக்கா நின்று கொள்வது போலொரு உணர்வு உள்ளுக்குள் அலையடிக்கிறது ! அசாத்தியங்களின் உச்சம் இந்தப் படைப்பு !! ஆங்காங்கே பேனாவை கீழே போட்டுப்புட்டு ஆவென்று வாயைத் திறந்தால், மூட நிரம்ப நேரம் பிடிக்கிறது - அந்தப்புர வாசலில் அலிபாபா குகை வாயிலைப் போல அகலத் திறந்த வாயோடு நிற்கும் இயவரசருக்குப் போட்டியாக !! Absolutely breathtaking illustrations !! இந்த ஆல்பத்தினையெல்லாம் நாம் வெளியிடாது போனால் இத்தினி காலமாய் இங்கே குப்பை கொட்டியுள்ளதற்கு அர்த்தமே இல்லாது போய் விடும் folks !! மொத்தத்துக்கே ஒரேயொரு புக் தான் விற்குமென்றாலுமே இதனை வெளியிடத் தயங்கி இருக்கவே மாட்டேன் - becos இது போலான ஜென்ம சாபல்யம் தரவல்ல முயற்சிகள் நெதத்துக்கும் நம் முன்னே பிரசன்னமாவதில்லையே ?
அதே போலவே மிரட்டும் இன்னொரு கி.நா.வுமே செம வேகத்தில் ரெடியாகிங்ஸ் ! நண்பர் கார்த்திகை பாண்டியனின் மொழியாக்கத்தில் வரவுள்ள "சாம்பலின் சங்கீதம்" முக்கால்வாசி மொழிபெயர்ப்பு ஓவர் ! விரைவில் மீத கால்பகுதியும் நிறைவு பெற்றுவிட்டால், நம்மாட்களின் DTP பணிகளுக்குப் பின்பாக என் மேஜை நிரம்பி விடும் !! Phewww ....452 பக்க எடிட்டிங் வெயிட்டிங் !!! எண்ட கர்த்தாவே !!
அப்புறம் சென்னைக்கு விழுப்புரத்தில் உள்ள வீட்டடி மனைகள் "மிக மிக அருகில்" இருக்கின்றனவோ, இல்லியோ - இங்கே நம்ம முன்பதிவுகள் 300-க்கு மிக அருகில் நெருங்கி விட்டன !! Great show people !! Keep rocking !!! இன்னமும் முன்பதிவு செய்திருக்கா நண்பர்கள் : no time like now to do it please !!
Before I sign out - கூட்டமாயிருக்கும் கல்யாண வீட்டில் ஓரமாய் நின்னபடிக்கே - "பந்தியிலே இடம் கிடைக்குமா- கிடைக்காதா ?" என்று உள்ளுக்குள் பதட்டம் கொள்வோரைப் போல - "கி.நா.ங்கிறான்... சாம்பல்ங்கிறான்....சங்கீதம்ங்கிறான் .....பயணம்ங்கிறான் ! ஒண்ணுமே பிரிலே !" என்று லைட்டாக ஜெர்க் அடித்துக் கொண்டிருக்கும் க்ளாஸிக் காமிக்ஸ் ரசிகர்களுக்குமே இனிப்பான தகவல் :
உங்களின் நெடுநாள் கோரிக்கைகளுள் ஒன்றான CID ஜான் மாஸ்டர் ஸ்பெஷல் + இரட்டை வேட்டையர் ஸ்பெஷல் பச்சைக் கொடி கண்டுள்ளன !! "சதிவலை" அதே ஒரிஜினல் பெரிய சைசில் ; மாஸ்கோவில் மாஸ்டர் - அதே ஒரிஜினல் பாக்கெட் சைசில் ! ரெட்டை வேட்டையரின் "திக்குத் தெரியாத தீவில்" MAXI சைசில் !! எல்லாமே செம க்ளாஸியாக, வாகான புத்தக விழாத் தருணங்களில்,சொற்ப விலைகளில் வெளிவரவுள்ளன ! தற்போதைய வெயிட்லிஸ்டில் உள்ள புக்ஸ் பூர்த்தி கண்டவுடன் இவற்றை ஒரு ஓரமாய் நுழைத்து விடலாம் guys ! And செக்ஸ்டன் ப்ளேக்கும் தான் !
"ஆஹா...பழையபடிக்கே முருங்கைமரத்திலே ஏறுறானே முழியாங்கண்ணன் !! இவன் அம்பியா - அந்நியனா ?" என்று இப்போ ஜெர்க் அடிக்கும் புதுமை விரும்பிகளுக்கு one more தகவல் : இன்னொரு சித்திர சொர்க்கம் கண்ணில் பட்டுள்ளதுங்கோ !! ரொம்ப ரொம்ப வித்தியாசமான கி.நா. !!! சீக்கிரமே அதற்கொரு துண்டை போட்டு வைத்துவிட்டு தகவல் சொல்லுதேன் !
So அது வரை மூ.ச.வை ரெடி பண்ணும் முஸ்தீபுகளை தகிரியமாய் hold-ல் போட்டு வைக்கலாம் !! Bye all....see you around ! Have a great week ahead !
இவன் கேரக்டரையே புரிஞ்சுக்க முடிலியே....! Mindvoices somewhere ??
வணக்கங்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ
Deleteவாழ்த்துக்கள் தோழி
DeleteHai
ReplyDeleteHi
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteவணக்கம்
ReplyDeletePresent Sir !
ReplyDeleteஇன்னொரு சித்திர சொர்க்கம் கண்ணில் பட்டுள்ளதுங்கோ !! ரொம்ப ரொம்ப வித்தியாசமான கி.நா. !!! சீக்கிரமே அதற்கொரு துண்டை போட்டு வைத்துவிட்டு தகவல் சொல்லுதேன் ! //
ReplyDeleteதோனி மாதிரி அடிச்சு ஆடுறீங்களே சார்.. Pure enjoyment for us...
(பழைய)
Delete///(பழைய)///
Delete🤔🤔🤔
(பழைய) தோனி மாதிரி அடிச்சு ஆடுறீங்களே ....
Delete😂😂😂
Deleteடெக்ஸ்
Deleteகார்சன்
தோனி
வயசு ஏற ஏற அதிரடி சரவெடி தான்
*நேற்று போய் நாளை வா* (NO SPOILERS JUST PURE FEELINGS)
ReplyDeleteகதை 50 ஆம் பக்கத்தில் ஆரம்பிக்கிறது. அது வரை நாம் கடந்த பக்கங்கள் அனைத்தும் முன்னுரையே. முன்னுரை செம பட்டாசு. முதல் கியரில் மெதுவாக நகர ஆரம்பித்து இரண்டாவது கியரில் அழகை ஆராதித்து மூன்றாவது கியரில் அதுக்குள்ளே நாலாவது கியர் போடணுமா என்று வியந்து நாலாவது கியரை தொட்ட உடனே வண்டி 3500 RPMல் பறக்க, அட்ரீனலின் தொற்றிக் கொண்டு, ஐந்தாவது கியரில் பக்கங்களை புரட்ட புரட்ட, நானும் ஒரு FORD MUSTANG கில் ஏறி பறக்க ஆரம்பித்தேன். ஓவியத்தில் அநேகமாக HOOD SCOOP உடன் கூடிய ஒரு பிளைமவுத் கார் போல் தெரிந்தாலும், என் மனம் மஸ்டாங் தான் வேண்டும் என்று அடம் பிடித்தது.
50 ஆம் பக்கத்தில் நடப்பது தான் செம்மையான சம்பவம். இன்னும் நான் தெளியாமல் தான் இந்த அலசலை தொடர்ந்து கொண்டு இருக்கிறேன். கதையின் ஒரே துளியைக் கூட நான் இங்கு விமர்சிக்க போவதில்லை.
எனக்கு புரியாத சில விஷயங்களை கதையின் வேகத்தில் கடந்தும் சென்று விட்டேன். கதை நடக்கும் இடம் எது என்ற தெளிவிருந்தால் இன்னும் என்னால் விளங்கிக் கொள்ள முடியும். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் எடிட்டர் சாரிடம் தான் கேட்க வேண்டும்.
அலசல் தொடரும்
கதை 10/10
ஓவியம் 9.5/10
மேக்கிங் 9.5/10
அருமை சகோ 💐💐💐
Deleteநன்றி Sister
Delete// 50 ஆம் பக்கத்தில் நடப்பது தான் செம்மையான சம்பவம். //
Deleteஉண்மை சார்...
Decoding செய்ய முடியலேன்னா editor கிட்ட தஞ்சம் அடைவதை தவிர வேற வழியில்ல
Delete10
ReplyDeleteவணக்கம் காமிக்ஸ் உறவுகளே 😍
ReplyDelete//இன்னொரு சித்திர சொர்க்கம் கண்ணில் பட்டுள்ளதுங்கோ !! ரொம்ப ரொம்ப வித்தியாசமான கி.நா. //
ReplyDeleteஅருமை அருமை
//அந்தப்புர வாசலில் அலிபாபா குகை வாயிலைப் போல அகலத் திறந்த வாயோடு நிற்கும் இயவரசருக்குப் போட்டியாக //
ReplyDelete😂😂😂😂😂😂😂😂😂😂😂
Love this humor sense, Sir
Deleteஓஹோ 🤨
Deleteஅனைவருக்கும் வணக்கம்
ReplyDeleteஆஜர்
ReplyDelete///Absolutely breathtaking illustrations !!///
ReplyDeleteஆவலுடன் ஜூன் 15 எதிர் நோக்கி
உங்களின் நெடுநாள் கோரிக்கைகளுள் ஒன்றான CID ஜான் மாஸ்டர் ஸ்பெஷல் + இரட்டை வேட்டையர் ஸ்பெஷல் பச்சைக் கொடி கண்டுள்ளன !! "சதிவலை" அதே ஒரிஜினல் பெரிய சைசில் ; மாஸ்கோவில் மாஸ்டர் - அதே ஒரிஜினல் பாக்கெட் சைசில் ! ரெட்டை வேட்டையரின் "திக்குத் தெரியாத தீவில்" MAXI சைசில் !! எல்லாமே செம க்ளாஸியாக, வாகான புத்தக விழாத் தருணங்களில்,சொற்ப விலைகளில் வெளிவரவுள்ளன
ReplyDeleteஆஹா ஆஹா திக்கு தெரியாத தீவில் maxi சூப்பர் சார்
1. நேற்று போய் நாளை வா
ReplyDelete2. சிகப்பு ஏரி
3. விச்சு கிச்சு
//முன்பதிவுகள் 300-க்கு மிக அருகில் நெருங்கி விட்டன !! //
ReplyDeleteGood News...வெகு சீக்கரமே 400 தாண்டி, 500 தொடட்டும்
உள்ளேன் ஐயா
ReplyDeleteஆன்லைன் மேளாவின் அனைத்து புத்தகங்களும் ஹிட் என்ற மகிழ்ச்சியான செய்தி ஆகஸ்ட் புவிக்கு இன்னும் அதிக புத்தகங்கள் ஆசிரியர் தருவாரே என்று எதிர்பார்க்கச் செய்துள்ளது
ReplyDeleteஇரண்டு நாள் லீவு என்பதால் இன்னும் புக் வரலை.ஐ'ம் வெயிட்டிங்.மாயாவியின் அட்டகாச சாகஸம் எங்கள் பள்ளி நாட்களின் வாராந்திர பரபரப்பு.பழைய நினைவுகளின் கனவில் தொடர்ந்து வருவது.புஸ் ஸாயருக்கு இன்னும் ஒரு நல்ல தொகுப்பு போடலாம்.நெகிழ வைக்கும் மனிதார்த்த கதைகள் அந்த வரிசையில் உண்டு.
ReplyDelete26th
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteதிக்கு தெரியாத தீவில். Maxi size ல் எதிர் பாராத இன்ப அதிர்ச்சி தேங்க்ஸ் சார்
ReplyDeleteவிச்சு கிச்சு படித்தாயிற்று..அருமை நன்று சார்...
ReplyDelete#####
ஒற்றைக்கண் மர்மம்
இத்தனை பெரிய அளவில் அதுவும் அட்டகாசமான வண்ணத்தில் சீனியர் எடிக்கான சிறப்பு இதழ் இதுவே பொருத்தமான ஒன்று என நிரூபித்து விட்டது சார்..இதுவரை வாசிக்காத இதழ் என்பதுடன் இந்த முறை நல்ல விறுவிறுப்புடன் வாசிக்க முடிந்தது..சித்தரங்களின் வண்ணமும் அருமை வெளிக்கிரகவாசிகளின் ஒற்றைக்கண் மர்ம்மும் அருமை...விரைவில் புத்தக விழாக்களில் இந்த இதழ் காணாமல் போய்விடும் என்பது உறுதி..மேலும் அந்த இதழில் வருகிறது என் இது வரை வராத இதழ்களின் விளம்பரங்கள் ஓல்ட் க்ளாசிக் நாயகர்களின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே மிக்க மகிழ்ச்சியை கொடுக்கும் செய்தியும் கூட ..நானுமே ஆவுலுடன் வெயிட்டிங்..
*****
நாளை போய் நேற்று வா..
கதை..சித்திரங்கள் ..சிறப்பு பரபரப்பு..ஆனால் வாசித்து முடித்தவுடன் புரிந்தது போலவும் இருக்கிறது ..புரிப்படாதது போலவும் உள்ளது சார்..எனவே எனக்கு விளக்கம் ப்ளீஸ் சார்..
சங்க செயலாளருக்கு ஆறே ஆறு வெங்காய சமோசா வாங்கியாந்து கொடுத்துட்டா கதையை கரெக்ட் பண்ணிடுவார் தலீவரே !
Deleteஙே...:-)
Deleteஜான் மாஸ்டர் இரு கதைகளுமே ..இரட்டை வேட்டையர் ..
ReplyDeleteவாவ்..வாவ்...பட்டாஸான செய்தி சார்...சூப்பர்...
மாயாவியும், விச்சு கிச்சுவும் வண்ணத்தில் மயக்குகிறார்கள்.
ReplyDeleteநாளை போய் நேற்று வா. யப்பா. என்னா speed? படங்களே பரபரப்பை கூட்டுதே. ஜுலியாவின் கதையின் மையப்புள்ளி, கமாவாக மாறி அடுத்த கதைக்குள் நுழைகிறது. கால ஓட்டக்கதை சுவாரசியமாகத்தானே இருகிறது. நல்லாதான் இருக்குபா!
சூர்ய ஜீவா ரொம்ப டீடெய்லா உள்ள போய் spoilerஆக்காம நாசூக்காக விமர்சனம் போட்டுள்ளீர்கள் ரொம்ப தேங்க்ஸ் ஸார்
ReplyDeleteஒரு வாரம் காத்திருங்க என்று அன்பு கட்டளைகள் சார்.. இன்னும் விரிவா அலசினாலும் spoiler தவிர்த்திடுவேன் சார்
DeleteMe in😘🥰
ReplyDelete😘😘ஆஹா.. ஆஹா.. அறிவிப்புகள் ஆளை அசத்துதே @Edi சார் 😘😘💐💐
ReplyDelete@Edi சார் 😘😘👍
ReplyDeleteநம்ப சார்லியின் "திக்கு தெரியாத தீவில்" வெளி வர
வாய்ப்பிருக்குங்கிளா சார் 😘😘🥰
வந்துட்டேன்...
ReplyDeleteHi..
ReplyDelete,தீவாளிங்கிறாங்க.. பட்டாச்சுங்கிறாங்க...
ReplyDeleteவணக்கமுங்கோ…
ReplyDelete///உங்களின் நெடுநாள் கோரிக்கைகளுள் ஒன்றான CID ஜான் மாஸ்டர் ஸ்பெஷல் + இரட்டை வேட்டையர் ஸ்பெஷல் பச்சைக் கொடி கண்டுள்ளன !! "சதிவலை" அதே ஒரிஜினல் பெரிய சைசில் ; மாஸ்கோவில் மாஸ்டர் - அதே ஒரிஜினல் பாக்கெட் சைசில் ! ரெட்டை வேட்டையரின் "திக்குத் தெரியாத தீவில்" MAXI சைசில் !! எல்லாமே செம க்ளாஸியாக, வாகான புத்தக விழாத் தருணங்களில்,சொற்ப விலைகளில் வெளிவரவுள்ளன ! ///
ReplyDeleteசூப்பர் 😍😍😍😍
/// "சிகப்பு நதி" என்று அட்டையிலும், "சிகப்பு ஏரி" என்று உள்ளேயும் பெயர் சுமந்து நிற்கும் இந்த சாகோர் saga சகல காமிக்ஸ் சாமுத்ரிகா லட்சணங்களையும் கொண்டிருப்பதால் ஜெயம் நிச்சயமென ஸ்டீலின் பட்சி சொல்கிறது காதில் ! இத்தாலிய மொழியில் "சிகப்பு நீர்" என்று பொருள்படும் விதமாய் பெயர் இருக்க, இந்த ஆல்பத்தினை மேலோட்டமாய் புரட்டிய கையோடு "சிகப்பு நதி" என்று பெயர் வைத்து விட்டேன் ! ஆனால் கதைக்குள் புகுந்த போது தான் அது நதியல்ல - ஏரி என்பது புரிந்தது ! ரைட்டு...அட்டையில் என்னவோ இருந்துவிட்டுப் போகட்டும் - தலைப்புப் பக்கத்திலாவது சரியாக இருக்கட்டுமே என்று நினைத்தேன் ///
ReplyDeleteசார் இப்படி எல்லா தவறுகளையும் நீங்களே சுட்டிக்காட்டிட்டா அப்புறம் நாங்க மூ. சந்திற்கு சீரியல் லைட், பாணி பூரி கடையெல்லாம் வச்சு மெயின்டெய்ன் பண்ணி என்ன பயன்கறேன்?!!😌
IPL போட்டியையே ஒத்தி வைச்சாச்சு ; ஒரு பானி பூரிக் கடையை ஓரம் கட்ட முடியாதா - என்ன ? நாலே வாயிலே கடைச் சரக்கை வாரிச் சுருட்டிட்டு 'சர்ர்ர்ர்ர்ர்ர்' என்று அந்த பச்சை திரவத்தையும் உறிஞ்சிட்டா மேட்டர் ஓவர் ! ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!
DeleteMagic moments special
ReplyDeleteசெம கதை.. வஞ்சத்தை வேரறுக்க வியூகம், டெக்ஸ் at his best. இத்தனை பக்கம்னு தெரியாததால போட்டுட்டேன் தெரிஞ்சு இருந்தா இந்த கதைய தொட்டே இருக்க மாட்டேன்னு எடிட்டர் சொல்றார். இந்த மாதிரி எத்தனை சரவெடி கண்டுகொள்ளப் படாமல் இருக்குதோ. பாத்து ஏதாவது செய்ங்க் சார்..
விரிவான அலசல் நாளை
இந்த மாதிரி எத்தனை சரவெடி கண்டுகொள்ளப் படாமல் இருக்குதோ.//
Deleteஅதெல்லாம் கணிசமா இருக்கும் சார் - அதில் சந்தேகமே லேது !! அத்தனையையும் எட்டிப் பிடிக்க கணிசமோ, கணிசமான பட்ஜெட்டும் தேவைப்படும் என்பதில் தானே நிதானம் அவசியமாகிடுகிறது !
அப்படின்னா அடிக்கடி ஏதாவது ஒரு special தருனங்களை நாமே உருவாக்கிடுவோம் சார்..
Deleteதோனி 200 dismissals in IPL க்கு ஒரு தல special போட்டுடலாமா சார்
///"நாளை போய் நேற்று வா" அலசல் கச்சேரியினை எப்போது வைத்துக் கொள்ளலாம் folks ?///
ReplyDeleteஎப்ப வேணாலும் வச்சுக்கலாம் சார்! ஆனா எனக்கென்னமோ இந்த கதையை எல்லாராலுமே புரிஞ்சுக்க முடியும் என்று தான் நினைக்கிறேன்! பின்குறிப்பில் நீங்க சொல்லியிருந்த மாதிரி ஓவியங்கள் மேலயும் ஒரு கண்ணு வச்சா புரிஞ்சிக்கிறதுல சிரமம் இருக்காதுன்னு தான் தோணுது!
Yes - அதனால் தான் பிடிவாதமா விரிவுரையினை புக்கில் இணைக்க மறுத்து விட்டேன் ! அதை படித்து விட்டு கதையைப் புரட்டினால் - "ப்பூ...இம்புட்டு தானா ? நா அப்போவே நெனச்சேன் !!" என்று நகர்ந்து விடுவார்கள் ! இப்போதோ யோசிக்கச் செய்கிறதல்லவா ?
Deleteஅப்புறம் அந்த பாவப்பட்ட செ.ச.செ.பிள்ளைக்கு கதையைக் கொஞ்சம் புரிய வைக்கப்படாதா ? தடுமாறிக்கினு கீறாரே !!
எதுவுமே தெரியாத மாதிரி புரியாத மாதிரி முகத்தை வச்சுக்கிடறதும் ஒரு தனித்திறமைதானுங்களே எடிட்டர் சார்!!😝
Delete///இன்னொரு சித்திர சொர்க்கம் கண்ணில் பட்டுள்ளதுங்கோ !! ரொம்ப ரொம்ப வித்தியாசமான கி.நா. !!! சீக்கிரமே அதற்கொரு துண்டை போட்டு வைத்துவிட்டு தகவல் சொல்லுதேன் ! ///
ReplyDeleteஆவலுடன் காத்திருப்போம் சார் 😍😍😍😍
...நாளை போய் நேற்று வா...
ReplyDeleteமுதன்முறையாக காமிக்சில் ஒரு காலப் பிரயாணக் கதை.
சித்திரங்கள் தான் கதையின் பலமே.
ஜூலியாவிடம் இன்று ஆரம்பமாகி, டெவன்னிடம் இன்று முடியும் கதை. இடையில் நுழைவது தான் நாளையும், நேற்றும்.
கதையை அவசியம் படியுங்கள். புரியும்.
ஒரு கொசுறு தகவல்.
கிட்டத்தட்ட இதே காலப் பிரயாணத்தில் மரணத்தை மாற்றி அமைக்க முயலும் கதை
தான் சூர்யாவின் 24 படம்.
அற்புதமான கதைத் தேர்வு சார். பாராட்டுக்கள்.
//முதன்முறையாக காமிக்சில் ஒரு காலப் பிரயாணக் கதை.//
Deleteதோர்கலின், சிகரங்களின் சாம்ராட் காலப் பயணக் கதை தானே சார்..
நான் "மாநாடு" படம் தான் பார்த்திருந்தேன் - 24 பார்க்கலை ! நேரம் கிடைக்கும் போது பார்க்கணும் போல !
Delete/// தோர்கலின், சிகரங்களின் சாம்ராட் காலப் பயணக் கதை தானே சார் ///
Deleteஅதை நான் மறந்து விட்டேன் சார். நன்றி.
கிராபிக் நாவலில் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
@editor sir
Delete24 திரைப்படம் காலப்பயணம் இல்லை சார்
மாறாக காலத்தையே reset செய்வது மற்றும் freeze செய்வது.. Youtubeலே உள்ளது
@Padmanaban sir
Deleteநன்றி சார்
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteகாலத்தை திருத்தி அமைக்கும் கடிகாரம் குழந்தை சூர்யா கையில் கட்டியிருப்பதாக கடைசியில் காட்டுவது அருமையான சீன்.
DeleteThis comment has been removed by the author.
DeleteYes sir
Delete///அந்தப்புர வாசலில் அலிபாபா குகை வாயிலைப் போல அகலத் திறந்த வாயோடு நிற்கும் இயவரசருக்குப் போட்டியாக ///
ReplyDeleteவாசலில் நிற்கும்போது மட்டும் தான் சார் அந்த 'குகை' எஃபெக்ட் எல்லாம்! உள்ளே நுழைஞ்சிட்டா நம்ம ஜம்பிங் தலைவரின் பேவரைட் எமோஜி மாதிரி எப்பவும் வாயை கூமாச்சியமா தான் வச்சிக்கிட்டிருப்பேன் 😝😝
EV 😘😘😘
Delete😁😁😁 பேரவையின் எல்லா உறுப்பினர்களும் ஒரே மாதிரி தான் போலயே!!
Deleteபூரிக் கட்டையை வாயிலேயே செருகி குமுறு-குமுறுன்னு குமுறும் போதும் வாய் அப்டிக்கா தான் நிக்குமாம் - Gemini சொல்லுச்சு !!
Deleteஇளவரசரே 😂😂😂
Deleteஒரு இளவரசர் சந்தோஷப்பட்டு கிடக்கிறதுல நாட்டு மக்களுக்கு அப்படி என்ன பொறாமைன்னு தெரியல! உடனே கடைவாய்க்குள்ள கட்டைகளை விட்டு ஆட்டிப்புடிடறாங்க 😤
Delete...மெக்ஸிகோ மேஜிக் ஸ்பெஷல்...
ReplyDeleteஇதைப் படிக்க நேற்று முதல் பாகத்தை மறுபடி படித்துவிட்டு இன்று காலை இந்த இரண்டாம் பாகத்தை ஏக்தம்மில் படித்து முடித்தேன்.
ஆன்லைன் புக் ஃபேர்க்கு சிறந்த கதைத் தேர்வு.
ஒலிவேராவை மடக்க டெக்ஸ் தீட்டும் திட்டங்கள் அபாரம்.
பக்கத்துக்கு பக்கம் விறுவிறுப்பு.
மாண்டாலெஸ் ஏனோ ரொம்ப வயதானவராகத் தெரிகிறார்.
தந்தையும், மகனும் ஏகத்துக்கு கார்சனை கலாய்த்து தள்ளுகின்றனர்.
டெக்ஸின் மற்றொரு வைரக்கல்.
நாளை உங்க பரிசு கிளம்பிடும் சார் !
Deleteவாவ்... நன்றி சார்.
Deleteஎடிட்டர் சாருக்கு என்னவொரு ஞாபக சக்தி பாத்திங்களா பத்து சார்?!!😇😇
Deleteஜம்பிங் தலைவர்ட்ட கொஞ்சம் ஸ்பெஷல் எமோஜிகளை கடன் வாங்கி சிவகாசி பக்கமா காற்றிலே பறக்க விடுங்க!😁
நாளை போய் நேற்று வா,
ReplyDeleteவாசித்து முடித்ததும் தமிழில் "24" ,இன்று நேற்று நாளை,மாநாடு போன்ற படங்கள் நினைவில் வந்து போயின...
இதுபோல காலப் பயணத்தை சிக்கல் இல்லாமல் புரிதல் எல்லைக்கு உட்பட்டு கதை சொல்லும் உத்தி ரொம்பவே சிரமம் என்பேன்...
புரியாத கி.நா வை,புரியற மாதிரி கமர்சியல் பாணியில் கதை சொல்வதே பெருவெற்றி தானே,அப்பதான் அந்தக் களம் நிறைய வாசகர்களையும் சென்றடையும்,அவர்களுக்கு வாசிக்கவும் ஆர்வம் எழும்...
முற்பாதியில் மார்ட்டின் யேட்டர்,பிற்பாதியில் டெவன் செமையான திரைக்கதை பின்னல்...
நிகழ்கால ஜூலியாவிற்கும்,அந்த குட்டி மார்ட்டின் யேட்டருக்குமான காட்சியமைப்பு செம...
அடுத்த பேனலில் ஜூலியாவின் சம்பவ தொடர்ச்சியில் டெவன் இடம்பெறுவதும் செம...
24 மூவியில் காலக் கோட்டில் பின்னோக்கி செல்வதில் தந்தை சூர்யா வருடத்தை மட்டும் பொருத்தி இருப்பார்,மகன் சூர்யா பின்னாளில் அதில் உள்ள குறையை சரிசெய்து நாள்,மாதம்,நேரம் என அனைத்தையும் பொருத்துவார்,இக்கதையில் ஓர் இடத்தில் அது தீர்வாய் இருக்குமோன்னு தோணிச்சி...
இன்று நேற்று நாளையில்,நிகழ்கால பாத்திரத்தின் முன்,எதிர்கால பாத்திரம் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் நேர்கோட்டில் சந்திக்க முடியாதவாறு கதை சொல்லப்பட்டிருக்கும்,அதற்கு விளக்கமும் சொல்லப்பட்டிருக்கும்...
ஆனால் இக் கி.நாவில் இதற்கு எதிர்மறையான பாத்திர படைப்புகள் உள்ளன,இதற்கான இயற்பியல் விளக்கம் என்னவாக இருக்கும் ?!
ஜூலியாவிற்கு காலப் பயணத்திற்கான காப்பு எப்படி கிடைச்சிருக்கும் ?!
ஒரு படைப்பின் வெற்றியே வாசிப்பாளனின் மனதில் கேள்வியை எழுப்புவதும்,தொடர்ச்சியான சிந்தனைகளை தூண்டுவதும்தான்,அந்த வகையில் இந்த கி.நா அசத்தல் படைப்பு...
நாளை போய்,நேற்று வா,உண்மையிலேயே காலத்தோடு ஒரு சடுகுடு ஆட்டம்தான்...
இறுதி வெற்றி காலத்திற்கா ?!
வாசிச்சி முடிச்சிட்டு விமர்சனத்தை பற்றி யோசிப்பதில் கொஞ்சம் தடுமாறித்தான் போனேன்,எங்கே ஆரம்பிக்க,எப்படி முடிக்க,எந்த விதத்தில் வார்த்தைகளைக் கோர்க்க...
இதுபோன்ற கதைக்களத்தில் அவ்வப்போது களமாடுங்கள் சார்,கொஞ்சம் முடி கொட்டினாலும் வாசிப்புக்கு செம தீனி உறுதி...
என்னளவில் "நாளை போய் நேற்று வா" களத்தை புரிந்து கொண்டேன் என நம்புகிறேன்...
-அறிவரசு@ரவி.
நிறைய கேள்விகளுடன் ஓவியங்களில் விடையை தேடிக் கொண்டிருக்கிறேன் சார்
Deleteஆங்காங்கே பொறி வைத்து கதைக்களம் பின்னப்பட்டுள்ளது போல சார்...
Delete//இதுபோன்ற கதைக்களத்தில் அவ்வப்போது களமாடுங்கள் சார்,கொஞ்சம் முடி கொட்டினாலும் வாசிப்புக்கு செம தீனி உறுதி...//
Deleteநான் ரெடி சார் எப்போவுமே .....களமாடவும்....முடியை பிய்த்துக் கொள்ளவும் !!
அருமையா எழுதியிருக்கீங்க அறிவரசு ஜி!💐💐👏👏👏👏
Delete//ஆங்காங்கே பொறி வைத்து கதைக்களம் பின்னப்பட்டுள்ளது போல சார்...//
Deleteகதை நடக்கும் இடம்
கதை நடக்கும் நாள்... நேரிடையாக சொல்லப்படவில்லை சார்
அங்கு தான் பொறிகள. உள்ளது
ரவி அண்ணா அருமையான விமர்சனம். இந்த வருடத்தின் டாப் கதைகள் 3 இந்த மாதத்தில் வந்து இருப்பது என்ன ஒரு coincidence
Delete1. ரூபின்
2. பெலிசிட்டி
3. நாளை போய் நேற்று வா.
//கதை நடக்கும் இடம்
Deleteகதை நடக்கும் நாள்... நேரிடையாக சொல்லப்படவில்லை சார்
அங்கு தான் பொறிகள. உள்ளது//
ஆமாங்க சகோ
ரூபின் பிடிச்சிருந்தது,நாளை போய் நேற்று வா தரமான சம்பவம்,பெலிசிட்டி விறுவிறுப்பா இருந்தாலும் ஸ்பின் ஆப் என்பதாலோ என்னவோ என்னை பெருசா ஈர்க்கலை தம்பி...
DeleteJohn Master, both the atories... thanks a lot Sir..
ReplyDelete//நாளான்னிக்கியின் நாற்பதாவது நாளிலாவது இதை வாசித்து விடுவாரென்று//படப்பொட்டியே இன்னும் வரலைங்க சார்! :-)
ReplyDeleteஅறிவரசு ரவி சார் செம. (வந்த உடனே படிச்சு ,உடனே விமர்சனமும்)பழைய ஃபார்ம் திரும்பிட்டிங்க.
ReplyDeleteமே புக்ஸை மட்டுமே தற்போதைக்கு வாசித்துக் கொண்டுள்ளேன்,ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான இதழ்களில் ஒரு சில இதழ்களைத் தவிர மீதம் எல்லாம் நிலுவையில் தான் இருக்கு ஜி,அதை எல்லாம் எப்போது முடிப்பேன்னு தெரியலை...
Delete//இதுபோன்ற கதைக்களத்தில் அவ்வப்போது நடமாடுங்கள்சார்.கொஞ்சம் முடி கொட்டினாலும் வாசிப்புக்கு செம தீனி உறுதி//
ReplyDeleteஇளவரசர் ஜி . இதெல்லாம் வரலாறு.நீங்க சொன்ன பொசிசன்ல ஒரு செல்ஃபி ப்ளீஸ்
ReplyDeleteசெல்பி எதுக்குங்க ராஜசேகரன் ஜி? அந்தப்புரத்தில் பார்வையாளர்கள் பகுதிக்கான கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சீக்கிரமே திறப்பு விழா நடத்தப்படும். உங்களை மட்டும் டிக்கெட் இல்லாமல் அனுமதிக்கலாம்னு இருக்கேன்!
DeleteIPL போட்டிகளின் வெற்றியைக் கண்டு இளவரசருக்கு தோன்றிய ஐடியா தான் இந்த 'பார்வையாளர் பகுதி' சமாச்சாரம்!😇
பார்வையாளர்களின் பார்வை, அந்தப்புறம், இந்தப்புறம் திரும்பாம அந்தப்புரத்தை மட்டும் பாக்குற மாதிரி கட்டுமானம் இருக்குமுங்களா ஈ.வி?....
Deleteபத்து ஜி.. எல்லாரோட பார்வையும் ஆணி அடிச்ச மாதிரி நிலைகுத்தி இருக்கும்போது அந்தண்டை இந்தண்டை திரும்புறதாவது? யாரும் திறந்த வாயை மூடப் போவதில்லை. அப்போ ஆறாய் வழிந்தோடும் ஜொள்ளை கலெக்ட் பண்றதுக்கும், அதை ரீசைக்கிள் பண்ணி பேக்கேஜ்டு டிரிங்கிங் வாட்டரா மாத்தி பார்வையாளர்களுக்கே வித்துடறதுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செஞ்சிருக்கேன்!😇
DeletePadmanaban சகோ 😂😂😂
Deleteஇளவரசரே சிறப்பு ஏற்பாடுகள் சிறப்பாக நடக்கட்டும் 😜😜😜
ONLINE MELA FIRST LOOK RATING
ReplyDelete1. நாளை போய் நேற்று வா
2. ஒற்றைக்கண் மர்மம்
3. மெக்சிகோ மேஜிக் ஸ்பெஷல்
4. சிகப்பு நதி எனும் சிகப்பு ஏரி
5. விச்சு கிச்சு ஸ்பெஷல்
After reading rating
1. நாளை போய் நேற்று வா
2.மெக்சிகோ மேஜிக் ஸ்பெஷல்
2.சிகப்பு நதி எனும் சிகப்பு ஏரி
3.ஒற்றைக்கண் மர்மம்
4.விச்சு கிச்சு ஸ்பெஷல்
வணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteபாத்தீங்களா மக்களே.. அந்தப்புரத்தை பற்றி பேசும்போது மட்டும் உடனே ஓடி வந்து வணக்கம் போடுறார் பாருங்க! 🤨
Deleteதங்களின் அந்தபுரத்துக்கு விசிறிகள் அதிகமாகி கொண்டே போறாங்க, இளவரசரே
Deleteவிசிறின்னு சொன்னத்துக்காக, விசிறியாக இவர்களே பயன் படுத்தி விடாதீர்கள்
///விசிறின்னு சொன்னத்துக்காக, விசிறியாக இவர்களே பயன் படுத்தி விடாதீர்கள்///
Deleteசகோ.. 😂😂😂😝
This comment has been removed by the author.
Deleteசிகப்பு நதி,
ReplyDelete"ஆகாயத்தின் கீழே உள்ள அனைத்துமே தங்களுக்குச் சொந்தமானது என்பது வெள்ளையரின் எண்ணம்"
-பணபலமும்,படைபலமும்,அதிகாரமும் ஒருங்கே குவிந்தவர்கள் அப்படித்தானே நினைக்கிறார்கள்...
"வாய்க்குப் போடப்பட்டிருக்கும் பயமெனும் பூட்டு உடைபட்டால்"
-நல்ல பஞ்ச்...
"அவன் எப்போதுமே தன் தேவைக்கு மீறி எதையுமே எடுத்துக் கொண்டதில்லை,அளவுக்கு மீறி கிடைத்தாலும் அவன் நெஞ்சில் பேராசை இருந்ததில்லை,மாறாக நன்றியுணர்வு மாத்திரமே இருந்தது"
-அருமையான வரிகள் உண்மையாக இயற்கையை நேசிக்கும் மனிதனின் எண்ணவோட்டம் இப்படித்தான் இருக்கும்...
ஸாகோரின் தரநிலைகள் உயர்ந்து கொண்டே போவதில் மகிழ்ச்சி...
ஓவியங்கள் அசத்தல்,
அற்புதமான வர்ணச்சேர்க்கைகளும்,காட்சியமைப்புகளும் சிகப்பு நதிக்கு உரமூட்டுகின்றன...
இதழின் தயாரிப்பு தரம் சிறப்பாக உள்ளது...
பரபரப்பான வாசிப்புக்கு உத்தரவாதம்...
-அறிவரசு@ரவி.
நச்!👌👌👌💐💐💐
DeleteSuper sir
Delete👍👍👍
Deleteசிகப்பு நதி எனும் சிகப்பு ஏரி ஆர்ட், கலரிங் கதை, மொழி பெயர்ப்பு எல்லாமே அருமை. அந்த அமானுஷ்யம் கடைசி வரை தொடர்ந்து வருவது யார் அந்த கொலைகளுக்கு காரணம் என்பதை என்னால் கடைசி வரை கண்டு பிடிக்க முடியவில்லை. ஸாகோர் is here to stay. என்னதான் சின்ன தளபதி, சின்ன தல என்று பட்டம் கொடுத்தாலும் he is one and only ஸாகோர். ஜம்பிங் ஸாகோர்.
ReplyDeleteஎனது மதிப்பெண் 10/10
செம
Delete// அந்த அமானுஷ்யம் கடைசி வரை தொடர்ந்து வருவது // முதலில் கொஞ்ச தூரம் அமானுஷ்யம் மட்டுமே பயணிக்கிறது,"பெர்ட் " டுக்கு குறுநகர் பகுதியில் நடக்கும் அசம்பாவிதம் அமானுஷ்ய கணிப்பை சற்றே அசைக்கிறது,
Deleteஇருப்பினும் புதிர் அவிழாமல் இன்னும் கொஞ்ச தூரம் அமானுஷ்யமும் பயணிக்கிறது,இறுதியில் அமானுஷ்ய காரணம் தொடர ஸாகோர் எடுக்கும் முடிவும் ஏற்புடையதாகிறது...
ONLINE MELA FIRST LOOK RATING
ReplyDelete1. Mexico Magic Special
2. சிகப்பு நதி
3. ஒற்றை கண் மர்மம்
4. நாளை போய் நேற்று வா
5. விச்சு கிச்சு
நாளை போய் நேற்று வா - இதை இந்த சைசில் நான் எதிர்பார்க்கவில்லை. என்ன தான் சித்திரங்கள் உள்ளே வித்தியாசமாக இருந்தாலும், பைண்டிங்கும், சைசும் முழுதாக கொண்டு சேர்க்க வில்லை. ஒரிஜினல் சைஸ் தான் என்றாலும் இது ஒரு குறையே ஆகும். மேலும் இந்த கிறு கிறு கிராபிக் நாவலின் 64 பக்கத்திற்கு 125 ரூபாய் என்பது உண்மையிலேயே கிறு கிறுக்க வைக்கிறது.
விச்சு கிச்சு அட்டையில் இருக்கும் பளிச் உள்ளே பல இடங்களில் இல்லை. மேலும் பாதி கதை வண்ணத்தில் இல்லாமல் கறுப்பு வேளையில் உள்ளது. இங்கும் பக்கங்களில் எண்ணிக்கைக்கு விலை ரொம்பவே ஜாஸ்தி
மற்ற மூன்று இதழ்களும் முழு நிறைவைக் கொடுத்துள்ளது முதல் பார்வையில். Outstanding தரம் & மேக்கிங். அதிலும் டெக்ஸ் கதை அற்புதமாய் ஜொலிக்கிறது
கிச்சு- விச்சு படித்து முடித்து விட்டேன். பால்யகால இனிய நினைவுகளை திரும்ப கிடைத்த உணர்வு 😍
ReplyDeleteசூப்பர் சார்...நெட் ஸ்லோவால் பதிவிட இயலலை.....சும்மா தெறி வேகத்ல உங்களோட நானும்.....கிநாவும் விச்சு கிச்சு விச்சுவும் செம்....விமர்சனம் நாளை பயணத்தோடு....சதிவலை அதே சைசில்....இரட்டையர் மேக்சி....பாக்கெட் சைஸ் மாஸ்டர் ....புத்தம் புது கிநா....அணுகுண்டு...பயணம் அடடா
ReplyDeleteநாளை போய் நேற்று வா :
ReplyDeleteஅந்த அளவுக்கு complex ஆன ஸ்டோரி இல்ல சார் ..but very interesting read .. need stories lyk this sir .. please bring more of these types in book fair ..
இதுபோன்ற கதைக்களத்தில் அவ்வப்போது களமாடுங்கள் சார்,கொஞ்சம் முடி கொட்டினாலும் வாசிப்புக்கு செம தீனி உறுதி...
*சிகப்பு ஏரி (சிகப்பு நதி)*
ReplyDeleteநமது மேச்சேரியாரின் மிகவும் சிறப்பான மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள கதை இது. Honey badger என்றால் வளைக்கரடி என்று தெரிந்துக் கொண்ட நாள் இன்று. நன்றி ஜமீனையா.
நான் படித்தவரை சாகோரின் வித்தியாசமான கதை இது. போனெல்லியை பொறுத்தவரை கதையை உருவாக்கி விட்டு இந்த கதை எந்த கதாநாயகனுக்கு செட் ஆகும் என்று யோசித்து அதன் பின்பு கதையை விரிவாக்கம் செய்வார்களோ என்பது போல இந்தக் கதை இருந்தது. இந்தக் கதையை ஆங்காங்கே கொஞ்சம் திருப்பினாலும் போனெல்லியின் எந்த கதாநாயகர்களை இந்த கதையில் உலவ விடலாம். சாகோர் கல் கதாயுதத்தை கடைசி வரை உபயோகிக்க மாட்டாரோ என்று யோசிக்கும் அளவுக்கு அதற்கு வேலையே இல்லாமல் கதை செம வேகமாக நகர்கிறது.
சிகப்பு ஏரி என்றதும், பாசிப்படலத்தின் மலரும் தருணத்தில் இப்படி நீர்நிலைகள் சிகப்பாக மாறும் என்ற கோணத்தில் படித்துக் கொண்டு சென்றேன், ஆனால் இது சூரியன் மறையும் தருணத்தில் ஒளி விளையாடும் செயல் என்று புரிந்துக் கொண்டதும், அட இப்படி ஒரு கோணம் இருப்பதை யோசிக்கவே இல்லையே என்று ஆச்சரியப்பட்டேன். இது போல, கதை நெடுக வில்லன் யார் என்பதும், ஏன் இப்படி கொலைகள் நடக்கிறது என்றும், துப்புகளை தூவிச்சென்றாலும், சரியான கோணத்தில் பார்க்காமல் வேறு திசையில் தான் வாசகனாக பயணித்தேன் என்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். ஒவ்வொரு முறையும் வில்லன் யார் என்று யூகிக்க தவறும் பொழுதும் முதலில் சொன்னது போல இப்படி ஒரு கோணத்தை யோசிக்க ஏன் மறந்தேன் என்று தான் ஆச்சரியப்பட்டேன்.
ஒரிஜினல் வில்லனின் மீது நம் பார்வை திரும்பாதபடி கடைசி வரை கதையை கொண்டு சென்றது அற்புதம்.
வழக்கமாக கருப்பு வெள்ளையில் அசத்தும் சாகோரின் ஓவியங்களும், கலரிலும் சோடை போகவில்லை. ஒரு சில இடங்கள் தவிர்த்து பல இடங்களில் வண்ண விளையாட்டு தான்.
இந்தக் கதையில் அறிமுகமாகும் ரோசாசுடன் பல்வேறு கதைகளில் சாகோர் சாகசம் செய்துள்ளார் என்று ஒரு பேனலையை ஒதுக்கி இருப்பது, எதிர்காலத்தில் எப்படிப்பட்ட கதைகள் நமக்காக காத்திருக்கின்றது என்று கட்டியம் சொல்லி செல்கிறது. எடிட்டர் சார், WE ARE WAITING.
அமானுஷ்யம் இல்லாமல் சாகோரோ? ஆம் இந்தக் கதையில் வரும் அமானுஷ்ய கதை, நம்மை சரியான திசை நோக்கி செலுத்தாமல் ஒரு DIVERSION TECHNIQUE காக பயன்படுத்தி இருந்தாலும், இந்த கதையின் ஒரு அங்கமாகவே உள்ளது. இந்த அமானுஷ்ய கதைகள் ஒவ்வொருவரின் பார்வையிலும் வேறு வேறு மாதிரி சொல்லப்படுவதும் அந்தக் கதைகளில் ஒளிந்திருக்கும் இந்தக் கதைக்கான பின்னணியும் அட போட வைக்கிறது.
இன்னும் விரிவாக இந்த கதையை அலசலாம் ஆனால் அது வாசகர்களின் ஆச்சரியப்படும் தருணங்களை சிதைப்பது போலாகும். ஒரு துப்பறியும் கதையை விரும்பும் வாசகரா நீங்கள் வாங்க ஒரு அற்புதமான விருந்தே காத்துள்ளது. விருந்தில் அனைத்து பண்டங்களும் சுவையாகவே உள்ளது, அந்த சுவை எப்படி உள்ளது என்று வார்த்தைகளால் வடிக்க இயலாது. ஆகையால் சுவைத்து பார்த்து விட்டு பரவசம் அடையுங்கள்.
கதை 11/10
ஓவியம் 11/10
மேக்கிங் 9.5/10
செம சார்...
DeleteThank you sir
Deleteசிம்ப்ளி சூப்பர்
Deleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteஇன்னொரு சித்திர சொர்க்கம் கண்ணில் பட்டுள்ளதுங்கோ !! ரொம்ப ரொம்ப வித்தியாசமான கி.நா. !!! சீக்கிரமே அதற்கொரு துண்டை போட்டு வைத்துவிட்டு தகவல் சொல்லுதேன் ! ///
ReplyDeleteஅட்டகாசம் 😍
விச்சு,கிச்சு...
ReplyDeleteகிச்,கிச் மூட்டுகிறது,வண்ணத்தில் பார்க்க மிக மகிழ்ச்சியா இருக்கு,நடுவில் கொஞ்சம் க&வெ பக்கங்களை தவிர்த்து முழு வண்ணத்தில் தந்திருந்தால் முழுநிறைவான படைப்பாய் இருந்திருக்கும்...
MMS - 2
ReplyDeleteMMS 1 ல் தொங்கலில் விடப்பட்ட கேள்விகளுக்கு பதிலை இந்த கதையில் அற்புதமாக தந்திருக்கிறார்கள். கோன்சிட்டா என்னஆனாங்க?கோப்ராதப்பிச்சாரா? பாதிரியார் மாட்டிகிட்டாரா? டெக்ஸும் கார்சனும் வந்தவேலைமுடியலையே, வில்லன்களை என்னபண்ணபோறாங்க? இப்படியான கேள்விகளுக்கு பதிலை அற்புதமாய் கொடுத்து இருக்கிறார்கள்.
முதல் 60 பக்கங்கள் கொஞ்சம் மெதுவாகவே கதை நகருகிறது. நினைவலைகளில் படிந்துள்ள ஒட்டடைய தூசி தட்டி, முதல் பாகத்தின் கதையை கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கதைக்குள் கொண்டு வர, நமக்கு நேரம் தருகிறார்கள். பட்டாசின் திரியை கிள்ளிவிட்டு தீப்பொறி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து, சடாரென்று சர சர என்று பரவும் காட்சி எனக்கு மிகவும் பரவசமூட்டும் காட்சி. அது வெடிக்குதோ புஷ்வாணமாக போகுதோ, அதை பற்றி கவலையில்லை. தீ வேகமாக பரவும் காட்சி உள்ளுக்குள் அட்ரினலை சுரக்க செய்யும் செயலாகவே நான் உணர்ந்துள்ளேன். அது போல் 60 ஆம் பக்கத்தில் பரவிய தீ, பக்கங்களை புரட்ட புரட்ட சூடு பிடித்து கதை ஓட்டம் பிடிக்க ஆங்காங்கே கதையின் தொய்வை சரி செய்ய நால்வர் கூட்டணி(மொண்டெல்சும் இணைந்துக் கொண்டு கலாய்க்கிறார்) கார்சனை கலாய்க்க, சிறு சிறு புன்முறுவலுடன், ஆங்காங்கே வெடிச்சிரிப்புடன் வாசித்தபடி, கடைசி சில பேனல்களுக்கு முன், கார்சன் சொல்வது போல, கதை முடிய ஒரு யுகமே கடந்தது போலிருந்தது.
டெக்ஸ் தீட்டும் திட்டங்கள், fans க்கு தீனி போடும் சமாச்சாரங்கள். அடுத்து என்ன திட்டம் தீட்டுகிறார். அந்த திட்டம் எப்படி முடிந்தது, அடுத்து என்ன திட்டம் என்று நம் எதிர்பார்க்க வைத்து, வாசிப்பு மீட்டரை ஏகத்துக்கும் எகிற வைத்திருக்கிறார்கள். ஒரு வேளை இப்படி திட்டம் தீட்டுவாரோ, அப்படி திட்டம் தீட்டுவாரோ என்று நம்மை யோசிக்க கூட விடாமல், நம்மையும் அந்த ஐவர் கூட்டணியுடன் உலவ விட்டுள்ளதற்கு சபாஷ்.
குள்ள நரிகளை படிப்படியாக ஒடுக்கி சட்டத்தின் ஆட்சியை அமைத்து அனைத்தும் சுபம் போடும் வேளையில் டெக்ஸ் ஏன் விற்பனையில் சாதிக்கிறார் என்பது புரிகிறது. அவர்கள் ஏற்றுக் கொள்ளா விட்டாலும், இந்தக் கதையை பாயாச பார்ட்டிகளும் ரசித்திருப்பார்கள்.
எஸ்க்லேண்ட் சிறைச்சாலை ஒரு எலிப்பொறி என்று கார்சன் சொல்ல, இங்கே உள்ளே செல்லப் போவது எலிகள் அல்ல மூன்று கிழட்டு சிங்கங்கள் என்று டெக்ஸ் சொல்ல, ஆஹா.. சிங்கம் சிங்கம் தான் அது கிழடாக இருந்தால் மட்டும் சளைத்ததா என்ன என்று என்னை போன்ற FAN BOYS விசில் அடித்த தருணம்.
"Truth to tell - இந்த சாகசத்தின் நீளம் 504 பக்கங்களே என்பது முதல் தருணத்திலேயே எனக்குத் தெரிந்திருந்தால், சர்வ நிச்சயமாய் ஓட்டம் பிடித்திருப்பேன்! Crisp வாசிப்பு ; ரஸ்க் சேமிப்பு என்றெல்லாம் முழங்கி வரும் இந்த நாட்களில், இம்மா நீளக் கதைக்குள் தலை நுழைக்கவே எனக்கு தம் இருந்திராது - அது 'தல' தாண்டவமாகவே இருந்திருந்தாலும் ! But அந்த ஓட்டத்தில் ஒரு அற்புதமான டெக்ஸ் அதிரடியினை மிஸ் பண்ண நேர்ந்திருக்கும் என்பது இன்று புரிகிறது! "
எடிட்டரின் வலைப்பூவில் இருந்த அவரது எண்ணவோட்டம், இதற்கு கேள்வி எழுப்பி
"இந்த மாதிரி எத்தனை சரவெடி கண்டுகொள்ளப் படாமல் இருக்குதோ. பாத்து ஏதாவது செய்ங்க் சார்.."
என்று நான் கேட்க
"அதெல்லாம் கணிசமா இருக்கும் சார் - அதில் சந்தேகமே லேது !! அத்தனையையும் எட்டிப் பிடிக்க கணிசமோ, கணிசமான பட்ஜெட்டும் தேவைப்படும் என்பதில் தானே நிதானம் அவசியமாகிடுகிறது !"
என்று எடிட்டரின் பதில் இப்படியாக உள்ளது.
டெக்ஸ் ஒரு தங்க சுரங்கம் தான் போல, வாசகருக்கு நல்ல கதை என்ற தங்கம், பதிப்பாளருக்கு நல்ல வியாபாரம் என்ற தங்கம், கதாசிரியரும் வாசகனை குஷிப்படுத்திய தங்கம், வருஷத்துக்கு ஒரு குண்டு புக்காக இது போன்ற கதைகளை தேர்ந்தெடுங்கள் சார். தங்கம் விலையே தாறுமாறா இருக்கும் பொழுது தங்க சுரங்கம் மட்டும் சும்மாவா கிடைக்கும். நாங்க எப்படியாவது வாங்கிடுவோம்
கதை 11/10
ஓவியம் 10/10
மேக்கிங் 10/10
அபாரமான விமர்சனம் நண்பரே! ரசித்து, ருசித்து, புசித்து எழுதியிருக்கிறீர்கள்!! 👏👏👏👏👏😍😍😍😍💐💐💐💐
Deleteஇ லைக் இட்
Deleteசூப்பர்ப்.. நாம் ஆசைப்படுவதும் அதே சைஸ் அதே டிசைனில்தானே.. நிஜமான மெர்சல் அறிவிப்பு..
ReplyDeleteசூர்ய ஜீவா . Super sir
ReplyDeleteநன்றி சார்
Delete***** மெக்சிகோ மேஜிக் ஸ்பெஷல் *****
ReplyDeleteஅம்மாடியோவ்!!!
நம்ம ஸ்டீலின் பாணியில் சொல்வதென்றால்.. இதுவரை வந்த டெக்ஸ் கதைகளிலேயே இதான் பெஸ்ட்!!
முதல் பாகத்தை படித்த போது "தல.. இப்படி மூக்குலயும் முகரையிலும் அடி வாங்கி ஜெயில்ல கிடந்து சாகுறியே தல" என்று மனசு அழுதது நிஜம்! அதிலும் குறிப்பாக இரண்டாவது பாகம் என்று ஒன்று இருக்கிறது என்பது அப்போது தெரியாதென்பதால் கதையை படித்து முடித்த போது "ஜெயிலில் இருந்து தப்பிப்போவது மட்டும்தான் உன் தலை எழுத்தா தல.. டால்டன் பிரதர்ஸ் மாதிரி ஆயிட்டியே தல!!" என்று நொந்து கொள்ள தோன்றியது!! அப்புறம் இரண்டாவது பாகமும் இருக்கிறது என்று தெரிய வந்த போது தான் மனசுக்குக் கொஞ்சம் நிம்மதியானது!!
'தல எப்படி திருப்பி தர போகிறாரோ' என்று மிகுந்த ஆவலோடு சில மாதங்கள் காத்திருந்தது வீண் போகவில்லை! அதிக காத்திருப்புக்கு அவசியம் இன்றி மிக விரைவிலேயே இரண்டாம் பாகத்தையும் கொடுத்து அசத்திய எடிட்டர் அவர்களுக்கு பல நூறு நன்றிகள்!! பிடியுங்கள் பூங்கொத்துகளை 💐💐💐💐💐💐😍😍🙏
ஜெயிலில் இருந்து தப்பித்து வெளியேறி பிழைச்சோம் டா சாமி என்று நிம்மதி பெருமூச்சு விட்ட தல - இந்த இரண்டாம் பாகத்தில் சதிவலை பின்னும் குள்ள நரிகளின் நயவஞ்சகத் திட்டத்தை அவர்களின் போக்கிலேயே விட்டு அடிச்சாரு பாருங்க சிக்ஸு!! அடின்னா அடி அப்படியொரு மரண அடி!!
நண்பர் சூர்ய ஜீவா சொன்ன மாதிரி சற்றே மெதுவாக நகரும் முதல் அறுபது பக்கங்களை கடந்து விட்டால் அதன் பிறகு மண்டையில் சுர்ர் என்ற உணர்வுடன் மின்னலாய் நகர்கிறது கதை!!
எனக்கு தெரிந்து இதுவரை வெளியான தலயின் கதைகளிலேயே இதில் தான் அதிக வியூகங்கள் வகுத்திருப்பார் என்று தோன்றுகிறது! அத்தனை வியூகங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட லாஜிக்கோடு நகர்வதால் துளியும் தொய்வின்றி இறுதிவரை அனல் பறக்கிறது!
இன்னும் இதுபோல எத்தனை புதையல்கள் நம்மிடம் இருந்து மறைந்து கிடக்கிறதோ! அது அத்தனையையும் தோண்டி எடுத்து அழகு மிளிர நம் கைகளில் தர வேண்டிய பொறுப்பு எடிட்டிருக்கும் ஜூனியர் எடிட்டிருக்கும் தான் சேரும்!
ஏதோ பார்த்து பண்ணுங்க எசமான்ஸ்!!😍😍
ஆமாங்க எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை இந்த மாதிரி புதையல்களை கொண்டு வந்துடுங்க சார்..
Delete*சிகப்பு நதி* எனும் *சிகப்பு ஏரி*
ReplyDeleteகதையை பற்றி பாராட்டுவதற்கு முன் அட்டகாசமான அட்டைப்படத்திற்கும்..அமர்க்களமான சித்திரத்தரத்திற்கும்..அருமையான வண்ணத்திற்கும் ..செம்மையான மொழி ஆக்கத்திற்கும் என அனைத்திற்கும் பலத்த கைத்தட்டல்களை முதலில் கொடுத்து விடலாம்...
அமான்ஷ்ய போர்வையில் ..ஓர் அட்டகாசமான த்ரில்லர் சாகஸ உடை அணிந்து ...ஓர் துப்பறியும் சாகஸமே இந்த சிகப்பு ஏரி...
நாயகர் ஸாகோர் டெக்ஸ்வில்லரை போலவே கலக்குகிறார்..அதே பலம் ..அதே மதியூகம்...அதே செவ்விந்தியர்களிடம் அவருக்கு உள்ள நன்மதிப்பு என செயல்பட சில சமயம் ஸாகோரின் கூடவே நடமாடும் தொப்பையன் எனும் நண்பனும் கார்ஸனை நினைவு கூறலாமா என நினைக்க வைக்கிறது...கதையில் வரும் மற்றும் ஓர் வேட்டைய நண்பன் இடம் தாம் இருவரும் இணைந்து சந்தித்த வில்லன்களை பற்றி ஸாகோர் விவரிக்கும் பொழுது அந்த சாகஸங்களை எப்பொழுது நாம் காணப்போகிறோம் என்ற ஆவல் உடனடியாக எழுந்து விடுகிறது ...டெக்ஸ் வில்லர் சாகஸம் போலவே ஒவ்வொரு ஸாகோர் சாகஸமும் முடிந்தவுடன் ஓர் இனம் புரியா மகிழ்வும்..அடுத்த ஸாகோர் சாகஸம் எப்போழுது என்ன எண்ணமும் கூடவே எழுந்து விடுவது ஸாகோரின் வெற்றி பயணத்திற்கு ஒரு சான்று...
அது போலவே தான் போன ஸாகோர் சாகஸம் வாசித்ததும் கேட்ட வினாவேதான் இப்பொழுதும் கேட்க தோன்றுகிறது ... ஸாகோர் மாதம் ஒரு முறை தோன்றுவாரா சார்...?!
மொத்ததில்
சிகப்பு நதிக்கு சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்கலாம்...
செம தலைவரே..
Deleteசிகப்பு நதிக்கு சிவப்பு கம்பளம் பஞ்ச் நல்லா இருக்கு தலைவரே...
Deleteஎப்படி தல இப்படி 😊
DeleteMMS-2,
ReplyDeleteஅட்டகாசமான ஆக்ஷன் பிளாக் பஸ்டர்...
கார்சனை கலாய்ப்பது கொஞ்சம் தூக்கலா இருப்பது போல் ஒரு ஃபீலிங்...
அருமையான வர்ணச்சேர்க்கைகளும்,அசத்தலான ஓவியங்களும் கதைக்க் கூடுதல் பலம்...
இதழும் கனம்,கதையும் கனம்...
கணத்திற்கு கணம் கதையின் பரபரப்பும் உச்சம் தொடுகிறது...
எஞ்சினில் உச்சஅளவில் கரி அள்ளிக் கொட்டி இரயிலை பறக்க வைப்பது போல,கதையிலும் அனல்பறக்கிறது,கதைக் களமோ இன்னும் பரபரக்கிறது...
கதை நகரும் வேகத்தில் வில்லரின் வியூகங்கள் எல்லாம் சாத்தியமான்னு கூட யோசிக்க வைக்காமல் நம்மைக் கட்டி இழுத்துச் செல்கிறது...
களத்தில் டெக்ஸ் எனும் மாஸ் ஹீரோவுக்கான Elements சற்றே கூடுதலாகவே கொடுக்கப்பட்டுள்ளது...
சர்வமும் நானே இதழுக்கு இணையான ஒரு மாஸ் படைப்பாக இருப்பினும் கெட்டி அட்டையில் வந்திருந்தால் இன்னமுமே சிறப்பான மைல்கல் வெளியீடாக அமைந்திருக்குமோ தோணுச்சி...
மற்றபடி நிறைவான வாசிப்பு...
-அறிவரசு@இரவி...
அசத்தல் சார்..
Delete👍
DeleteGood good
Deleteஹலோ...
ReplyDelete//டால்டன் பிரதர்ஸ் மாதிரி ஆயிட்டயே தல! என்று நொந்து கொள்ள தோன்றியது.//குவாரன்டைன் ஃபீரியடுக்கு அப்புறம் இப்பதான் பழைய ஃபார்ம் க்கு வந்திருக்கிங்க இளவரசே .
ReplyDelete//களத்தில் டெக்ஸ் என்னும் மாஸ் ஹீரோவுக்கான elimentsசற்றே கூடுதலாகவே கொடுக்கப்பட்டுள்ளது//. அறிவரசு ரவி. M m s. 2 நண்பர்களின்பாஸிட்டிவ்வான கொண்டாட்டமான விமர்சனங்கள் கதையை உடனே படிக்க தூண்டுகிறது.
ReplyDelete❤️👍🙏
ReplyDeleteநாளை போய் நேற்று வா
ReplyDeleteநாளை இறந்து நேற்று பிறந்தவர்களின் இன்றைய கதை.
ராமு: நாளை போய் நேற்று வா படிச்சாச்சா?
சோமு : படிச்சாச்சு.
ராமு: படிச்ச உடனே உன் மனசுல தோணுன முதல் எண்ணங்கள் என்ன?
சோமு : 1. பிரிநிலையின் மையப்புள்ளி. (Point of Divergence)
2. காலக்கோடு பிரிதல் அல்லது இணை பிரபஞ்சம் ( Bifurcation of timeline or Parallel Universe ) 3. இணை பிரபஞ்சங்களுக்கிடையேயான கால வளையம் (Time loop).
ராமு: பிரிநிலைன்னு நீ எதை சொல்ல வர்ற?
சோமு : 2045 ஏப்ரல் மாதம் தொழில் அதிபர்கள் கருத்தரங்கில் நடக்கும் நிகழ்வுகளே பிரிநிலை என்று கருதிக் கொள்ளலாம்.
இங்கேதான் எல்லாமே துவங்குகிறது. 30 ஆண்டு காலம் மட்டும் கடந்த கால பின்னோக்கிய பயணம் என்ற ஒரு preset உடன்.
ராமு: அதாவது?
சோமு : தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் கால வளைய நிகழ்வுகளின் ஒரு பகுதியை மற்றும் பிறிதோர் நிகழ்வின் ஆரம்பப் பகுதியை மட்டும் நாம் படிக்கிறோம்.
ஜூலியாவுக்கு முன்னும் இவை நிகழ்ந்திருக்கலாம். டெவனுக்கு பின்னும் இவை தொடரலாம்.
ராமு: புரியலையே?
Deleteசோமு : பக்கம் 35 மற்றும் பக்கம் 37 இவற்றில் காட்டப்படும் ஒரு பெண்ணின் படமும் பக்கம் 64 ல்
காலண்டரில் ஏப்ரல் ஒன்று ஷூட்டிங் ரேஞ்ச் வித் லைலா என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பெண்ணின் பெயரும் ஒருவேளை டெவனின் காதலியாக இருக்கக்கூடும் என்பதை உணர்த்துகிறது. ஜூலியா டெவெனின் நெருங்கிய தோழி மாத்திரமே. காதலி அல்ல.
இளவயது ஜூலியா மற்றும் முதிர் வயது ஜூலியா இரண்டு பேரையும் பிடிக்க மார்ட்டின் யேட்டர் டெவனை பிணையாக வைத்தது போல் லூ
டெவனை பிடிக்க லைலாவை பிணையாக பயன்படுத்தக்கூடும்.
வரும் நாட்களில் ஜூலியா மற்றும் டெவன் இடத்தை லைலா பிடிக்கக் கூடும்.
ராமு: அதற்கு லைலா குறைந்த பட்சம் ஒரு போலீஸ்காரியாக இருக்க வேண்டுமே.
சோமு : ஷூட்டிங் ரேஞ்ச் வித் லைலா என காலண்டரில் போடப்பட்டிருப்பதால் இது துப்பாக்கி பயிற்சி எடுக்கும் இடம் என்பதால் லைலா போலீஸ்காரியாக இருக்க வாய்ப்பு அதிகம்.
ராமு: காலக்கோடு பிரிதல் என்றால் என்ன.? அதற்கு முன் காலக்கோடு அல்லது டைம் லைன் என்றால் என்ன?
Deleteசோமு : கோர்வையாக நடக்கும் நிகழ்வுகளை நேரத்துடன் தொடர்புபடுத்தி ஒரு பார்வையாளனின் வசதிக்காக வரையப்படும் ஒரு கோடு காலக்கோடு. 2045 வரை பல போராட்டங்களுடன் வாழ்ந்து முடித்து மறுபடியும் 2015க்கு வரும் முதிர் வயது ஜூலியா இளைய வயது ஜூலியாவை சந்தித்தபின் நடக்கும் தொடர் நிகழ்வுகளின் முடிவுக்கு பின்னர் இளம் வயது ஜூலியா இப்படி போராட்டம் நிறைந்த வாழ்க்கை வேண்டாம் என்று நினைத்து போலீஸ் வேலையை ராஜினாமா செய்கிறாள். இந்த இடத்தில் ஜூலியா வாழ்க்கையின் காலக்கோடு பிரிகிறது. அதாவது வேறொரு இணை பிரபஞ்சத்தில் அவள் வாழ்க்கை துவங்குகிறது. ஒரு இணை பிரபஞ்சம் என்பது ஒவ்வொரு தனிமனித முடிவினால் உருவாகிறது. எதை அவன் அல்லது அவள் தேர்ந்தெடுக்கிறான் அல்லது தேர்ந்தெடுக்கிறாள் என்பதை பொறுத்தது.
ராமு: டைம் லூப் அல்லது கால வளையம் இதில் எதைக் குறிக்கிறது?
சோமு : இந்த கால வளையம் பல இணை பிரபஞ்சங்களுக்கு இடையேயான ஒன்றாக தோன்றுகிறது.
ராமு: இணை பிரபஞ்சம் என்றால் என்ன?
சோமு : ஏற்கனவே சொன்னேன். ஒருவன் அல்லது ஒருத்தி எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் இணை பிரபஞ்சம் தோன்றும். ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு இணை பிரபஞ்சம்
ராமு: அப்படியானால் பல கோடி பல கோடி பல கோடி இணை பிரபஞ்சங்கள் இருக்க வேண்டுமே.
Deleteசோமு : அப்படித்தான் சொல்லப்படுகிறது.
ராமு: ஜூலியாவின் இணைபிரபஞ்சத்தில் மார்ட்டின் யேட்டர் சாலை விபத்தில் இருந்து முதல் முறை இளவயது ஜூலியாவால் 2015-ல் காப்பாற்றப்படுவதற்கும் மறுபடி 2045 இல் முதிர் வயது ஜூலியாவால் மறுபடியும் காப்பாற்றப்படுவதற்கும் என்ன தொடர்பு?
சோமு : அது பற்றி யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது. முதிர் வயது ஜூலியா தனது முதல் பிரபஞ்ச வாழ்க்கையில் கெல்டரை சுடுவதாக நினைத்து லியோனார்ட் யேட்டரை சுட்டு விட்டாள்.( கதை சுழற்சியை வைத்துப் பார்த்தால் தனது மகன் மார்ட்டின் யேட்டர்
கெல்டருக்கு பதிலாக சுடப்படுவதை தவிர்க்க லியோனார் ட் யேட்டரே குறுக்கே விழுந்திருக்க கூடும் 😁. லியோனார்ட்
யேட்டருக்கும் ஜூலியாவுக்கும் முன்பாக இந்த கால வளையத்தில் ஒரு பங்கு இருக்கக்கூடும் 🥺.
ராமு: ரொம்ப சிக்கலாக இருக்கிறதே.?
சோமு : இது வெறும் என்னுடைய பார்வை தான். கதாசிரியர் சொல்ல வருவது வேறு விதமாகவும் இருக்கலாம். மற்றவர்களும் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்
ராமு: இளம் வயது ஜூலியாகும் முதிர் வயது ஜூலியாகவும் சந்திப்பது முரண் அல்லவா?
Deleteசோமு : இல்லை. ஏனெனில் கடந்த கால பயணம் என்பதே ஒரு கோட்பாடோ (theory), கற்பித கொள்கையோ (hypothesis), நிஜமோ (reality) அல்ல. இன்றைய நிலையில் அது ஒரு சிந்தனை (idea) மாத்திரமே. காலப்பயண முரண்பாடுகள் பல உண்டு.
அதில் முக்கியமானது Granfather paradox. அதாவது கடந்த கால பயணத்தில் சென்று எதிர்பாராத விதமாக பயணி தனது தாத்தாவை தனது பெற்றோர்கள் பிறப்பதற்கு முன்பாக கொன்று விடுவது. அப்பா அம்மாவே இல்லையென்றால் கடந்த காலத்திற்கு பயணித்திருக்கும் பயணியின் ஜீவிதம் எவ்வாறு சாத்தியம்?
மாநாடு போன்றவை groundhog day paradox வகையைச் சார்ந்தவை.
அதாவது ஒரே நாள் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் துவங்கிக் கொண்டே இருப்பது. இதில் சம்பந்தப்பட்ட மனிதர் ஒரே நாளைத்தான் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்வார்.
Hitler paradox அதாவது கடந்த காலத்தை நோக்கி பயணித்து இரண்டாம் உலகப்போரை துவங்குவதற்கு முன்பே ஹிட்லரை கொன்று விடுவது.
(What if போன்றவை இணை பிரபஞ்சங்களை பற்றி பேசுபவை.
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா தோற்று இருந்தால் என்பது மாதிரி).
Predestination paradox, Newcombe's paradox போன்றவையும் வித்தியாசமானவை. ஆனால் நமது கதைக்கும் இதற்கும் அதிகம் தொடர்பில்லை என்பதால் விட்டு விடலாம்.
ராமு: கதை பார்க்க எளிமையாக தோன்றுகிறது. ஆனால்?
சோமு : உண்மைதான். சிக்கலான கதை தான். கதை பற்றிய விவாதம் ஆரம்பிக்கும் போது எடிட்டர் மூலமாகவும் மற்ற வாசகர்கள் மூலமாகவும் முடிச்சு அனைத்தும் அவிழ்ந்து விடலாம்.
செம அலசல் செனா அனா சார்.. இன்னும். ஒரே ஒரு முடிச்சை அவிழ்த்து விட்டால் எனது அலசலை கூறி விடுவேன்
Deleteசெம செம
Deleteஒரே ஒரு முடிச்சுன்னு சொல்லி இப்ப இடியாப்ப சிக்கலில் பிச்சுகிட்டு இருக்கேன்
Deleteஅட்டகாஷ் அலசல்
Delete
ReplyDeleteவிச்சு கிச்சு
முதலில் படித்தது இதுவே. ரசித்து மகிழ்ந்தாயிற்று. மதிப்பெண் எல்லாம் தேவையில்லை என்றாலும்
9.5/10
சிவப்பு ஏரி
சாபங்கள் சாவதில்லை கதையில் டெக்ஸின் பங்களிப்பு போல் இக்கதையும். டிடெக்டிவ் கதைகள் வரிசையில் இது இரண்டையும் சேர்க்கலாம் போல. கதை சொல்லி சென்ற விதம் மிகவும் அற்புதம். இதுவரை படித்த ஸாகோர் கதைகளிலேயே மனதை மிகவும் கவர்ந்தது இதுவே. இறுதி வரை கதை முடிவை யூகிக்க முடியாமலே போனது. இதேபோல் ஆழம் மிகுந்த
கதைகள் தொடர்ந்து வருமாயின்
ஸாகோருக்கும் நெஞ்சில் இடம் ஒதுக்க வேண்டியது அவசியம் தான் போல.
9.3/10
மெக்சிகோ மேஜிக் ஸ்பெஷல்
ஒரு தரமான டெக்ஸ் சாகச பயணம். அற்புதமான கதை விருந்து.
9.5/10
// செக்ஸ்டன் ப்ளேக்கும் //
ReplyDeleteஎஸ்கேப் 😊
ReplyDeleteஇது நேர்கோட்டு கதை அல்ல.
ஜூலியாவின் முதல் பிரபஞ்ச வாழ்க்கையில் எதிர்காலத்தில் இருந்து இரு நபர்கள் வருகிறார்கள். முதிர் வயது ஜூலியா மற்றும் மார்ட்டின்.
இவர்கள் இருவருமே இறக்க நேரிடுகிறது.
ஏனெனில் இளம் வயது ஜூலியா மற்றும் பத்து வயது சிறுவனான மார்ட்டின் இருவருமே இந்த டைம்லைனில் இருக்கிறார்கள்.
நிகழ்கால ஜூலியா நிகழ்கால மார்ட்டின் இவர்களோடு எதிர்கால ஜூலியா எதிர்கால மார்ட்டின் இருவரும் ஒரே டைம் லைனில் வாழ்க்கையை நடத்த இயலாது .
It's just incompatible. ஏனெனில் எதிர்கால ஜூலியா எதிர்கால மார்ட்டின் இவர்கள் இருவரும் தங்களுக்கு இயல்பான தங்களின் எதிர்காலத்திற்கு பயணிக்க இயலாது அவர்கள் அணிந்திருக்கும் காலகைகாப்பு
30 வருடம் பின்னோக்கி மட்டுமே பயணிக்கும்.
மார்ட்டின் தனது தந்தையின் மரணத்தை தவிர்க்க இளவயது ஜூலியாவை கொன்றால் மட்டுமே அது சாத்தியம் என்பதை உணர்ந்து இளவயது ஜூலியாவை கொல்லவே முயல்கிறான். கடைசி தருணத்திலும் இளம் வயது ஜூலியவையே அவன் கொல்ல முயல்கிறான். முதிர் வயது ஜூலியா தன்னை பின்னால் இருந்து சுட்டுவிட்டபோதிலும் அவன் இளம் வயது ஜூலியா வையே குறி வைக்கிறான். ஆனால் முதிர் ஜூலியா தானாகவே முன்வந்து துப்பாக்கி குண்டுகளை நெஞ்சில் ஏந்தி இளவயது ஜூலியாவை காப்பாற்றுகிறாள். இது மிகவும் அவசியமான ஒன்று. இளம் வயது ஜூலியா இல்லை என்றால் முதிர் வயது ஜூலியாவின் பிரபஞ்ச இருப்பே கேள்விக்குறியாகிவிடும். ஒருவகையில் தாத்தா கால முரண்.
(Grand father paradox).
மார்ட்டின் ஜூலியாவை பிடிக்க டெவனை பிணையாக பயன்படுத்துகிறான்.
லூ டெவனை பிடிக்க யாரைப் பிணைக் கைதியாக பயன்படுத்துவான்? கண்டிப்பாக ஜூலியாவை அல்ல. ஏனெனில் மார்ட்டினுக்கும் டெவனுக்கும் அறிமுகம் இல்லை. ஆனால் லூவுக்கும் ஜூலியாவுக்கும் அறிமுகம் உண்டு.
நான் லைலா என்ற நபரை லைலாவும் ஜூலியாவும் ஒன்றுதான் என்று அறியாமல் லைலா லூவின் பிணைக்கைதி என்று சொன்னேன். ஆனால் அது வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஜூலியாவை தவிர.
விச்சு & கிச்சு ஸ்பெஷல் 1
ReplyDeleteமொத்தம் 38 பக்கங்கள் 19 கதைகள் 8 பக்கங்கள் அதாவது 4 கதைகள் கருப்பு வெள்ளையில். குழந்தைகள் வாசிப்பு அனுபவத்தை நெருங்க இது போன்ற ஷார்ட் அண்ட் ஸ்வீட் கதைகள் அபாரமானது. இரண்டு கதைகளை நானே ரசித்தேன்.
கலரிங் இல்லாமல் கருப்பு வெள்ளையிலேயே இருந்திருக்கலாம் என்பது என் எண்ணம். ஒரு சில கதைகளில் கலரிங் செம சொதப்பல்.
கதைகள் 9/10
ஓவியம் 9/10
மேக்கிங் 8/10
*நாளை போய் நேற்று வா!*
ReplyDeleteநேர்கோட்டு காலப்பயணத்திலான ஒரு லூப்! எதிர்காலத்திலிருந்து இறந்த காலத்தை தேடிச் சென்று பழிவாங்குவதுதான் கதையின் ஒற்றைவரி!
பெரிய குழப்பங்களில்லாத காலப்பயண கதை விரும்பிகளுக்கு சரியான தீனி... எந்த ஒரு பாராடக்ஸும் ஏற்படாத வண்ணம் வடிவமைக்கப் பட்ட சாதாரண டைம் லூப்...
சிகரங்களின் சாம்ராட், தலைகாத்த தனயன், தி மவுண்டன் ஆப் டைம் மாதிரியான தோர்கல் கதைகள் போல குழப்பமேற்படுத்தக் கூடிய பேரடாக்ஸ்களோ டைம் ஜம்ப்களோ இல்லையென்பது ஒரு வகை மிஸ்ஸிங்தான்..
டெவன்- ஜூலியா பிரபஞ்ச இணைகள் (அதாவது copy of the same entity of a multiverse), என்டேங்கிள் செய்யப்பட்ட குவாண்டம் இணைகளாகக் கொண்டாலும் சரி!
எதிர்கால ஜூலியா மூலம் தன்னால் தவறுதலாக டெவன் கொல்லப் படுவதை தெரிந்து கொள்ளும் நிகழ்கால ஜூலியா அதை தவிர்க்கும் பொருட்டு தன்னை பணியிலிருந்து விடுவித்துக் கொள்கிறாள்.
அதன் பின்னர் தன்னுடைய டைம் லைன் டெவனுக்கு நடந்து வருவதை அறிந்து கொண்டும் அதை எந்த விதத்திலும் மாற்ற முற்படாமல் பிப்ரவரி 17, 2045ல் (காலண்டரில் குறித்து வைக்கப்பட்டுள்ளது) நடக்கும் மீட்டிங்கிற்காக காத்திருக்கிறாள்.
எதற்காக??
இதற்கான விடைதான் கதையின் முடிச்சு.
மற்றபடியான டைம் லூப்களும், ஆக்சன் அதிரடிகளும் வழமையானவையே என நினைக்கிறேன்.
பி.கு:
லியானர்ட்டை காப்பாற்றுவதுதான் ஜூலியாவின் குறிக்கோள். தான் செய்த தவறை தானே திருத்தும் முயற்சியில் தன் உயிரை இழந்து விடுகிறாள்.
இந்த பாயிண்ட்டைதான் அவள் காத்திருப்பது எதற்காக எனக் கேட்டிருந்தேன். மற்ற நிகழ்வுகள் எல்லாம் ஒன்று போல் அவளது பிரபஞ்ச இரட்டையால் நிகழ்த்தப் படும்போது லியானர்டின் கொலையும் நடக்கும் என்பதை எதிர்பார்த்தே அந்த நாளை காலெண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அவரைக் காப்பாற்றும் பொறுத்து காத்திருக்கிறாள்
//எதிர்கால ஜூலியா மூலம் தன்னால் தவறுதலாக டெவன் கொல்லப் படுவதை தெரிந்து கொள்ளும்//
Deleteஐயனே பாத்து செய்ங்க, இப்ப தான் தெளிவாகியிருக்கேன்..
நைஸ்
Deleteஸ்வீட் கிஃப்ட் கொரியர் இன்று வந்து சேர்ந்தது. எடிட்டர் சாருக்கு மனமார்ந்த நன்றிகள்.
ReplyDelete.இது வரை தோழனின் கதைக்கு மட்டுமே இவ்வளவு விமர்சனங்கள் வந்துள்ளன.கி.நா.வை விமர்சனங்களில் கொண்டாடும் நண்பர்களுக்கு நன்றிகள்
ReplyDeleteசார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteநாம புகை சமிக்ஞை அனுப்பி ஞாபக படுத்தினாலும், அவரு இப்பெல்லாம் ஞாயிற்றுக்கிழமை தான் பதிவு போடுகிறார்
Deleteநாம நம்ம வேலையை செய்வோம்.
Deleteநாளை பதிவை நேற்றே படிக்க ஐடியா..
DeleteGeorge and Treak ?
ReplyDeleteGeorge and Drake?
ReplyDelete