Powered By Blogger

Saturday, April 12, 2025

மே = மேளா 🔥🔥

நண்பர்களே,

வணக்கம்! 'மாதம் மூன்றே இதழ்கள்' என்ற template கொஞ்சமே கொஞ்சம் லேசாய் மூச்சு விட்டுக் கொள்ள அனுமதிக்கின்றது என்றே சொல்ல வேணும்! நான்கோ, கூடுதலோ புக்ஸ் உள்ள மாதங்களில் விக்கிரமாதித்தன் கதையே தான் அரங்கேறிடும் - ஒரு வேதாளத்தை மரத்தில் ஏற்றி அமர்த்தி விட்டு வருவதற்குள் அடுத்தது தோளில் தொற்றியிருக்கும்! But "மூன்று" என்பது கச்சிதமாக உள்ளது! மாதத்தின் முதல் வாரத்தில்- உங்களை எட்டிப் பிடித்திருக்கக்கூடிய புது புக்ஸ் சார்ந்த உங்கள் அபிப்பிராயங்களை ரசிப்பது; கம்யூனிட்டியில் மொக்கை போடுவது என பொழுதுகளை ஓட்டிவிட்டு, அடுத்தடுத்த மூன்று வாரங்களில்- வாரம்தோறும் 1 புக் என்று லாத்தலாகப் பணியாற்றினாலும் கரைசேர்ந்து விட முடிகிறது! ஏப்ரலில் அதை உணர முடிந்தது & இதோ- மே மாதத்தின் ரெகுலர் தட இதழ்களின் பெயரைச் சொல்­லி யும் அதே போலான ஒரு இலகுத்தன்மையை இப்போதும் அனுபவிக்க முடிகிறது! Of course இரண்டு லாத்தலான மாதங்கள் எனும் போது, அதைத் தொடரப் போவது ஏதாச்சுமொரு மெகாத் தருணமாகத் தானிருக்க வேண்டும்! அது தானே நம்ம நியதியும் கூட?! 

So வெல்கம் to The க்ரேட் ஆன்லைன் மேளா'25 ! கொரோனாவின் லாக்டௌன் சமயத்தில் - சமூக இடைவெளிகள்; சமோசாவுக்குக் கடைவீதிகள் என்ற தட்டுப்பாடுகள் புழக்கத்தி­லிருந்த வேளையில் இதற்கொரு பிள்ளையார்சுழி போட்டிருந்தோம்! அன்றைக்குத் துவங்கிய பழக்கமானது நமது ஆண்டு அட்டவணையில் ஒரு நிரந்தரமாகியுள்ளது! Moreso போன வருடம் Free Comic Book Day என்ற உலகளாவிய பழக்கத்தினை நாமும் தழுவிட- உற்சாகங்களுக்குப் பஞ்சமே இருந்ததில்லை! Oh yes- இலவசமாய்த் தந்திட்ட புக்ஸ்களை, நமது இதழ்களை வலை போட்டுத் தேடி வருவோரிடம் கர்ம சிரத்தையாய் கொண்டு சிலர் சேர்ப்பித்ததும், அவை தொடர்ந்த புத்தகவிழாக்களில் வைக்கோல் கன்றுகளாய் சுற்றுக்கு மீண்டு சென்றதும் ஒரு தனிக்கதை! So சில கர்மவீரர்களிடம் விலையின்றி ஒப்படைப்பதற்குப் பதிலாய் கணிசமான இதழ்களை, கணிசமோ -கணிசமான விலை குறைப்புடன் புத்தக விழாக்களுக்கு வருகை தரும் சிறார்களிடம் விற்றுப் போவது சாலச் சிறந்ததென்று தீர்மானித்துள்ளோம்! ஆகையால், அந்த Free கொட்டைப்பாக்கு Day இந்தாண்டு அம­லில் இராது! 

மாறாக, கையில் கணிசமாக ஸ்டாக் உள்ள இதழ்களுள், மாணாக்கருக்கு வழங்க இயலா புக்ஸ் எவையோ, அவற்றை மட்டும் இந்த ஆன்லைன் மேளாவினில் இரண்டு நாட்கள் சலுகை விலைகளில் விற்பனைக்குக் கொணர உள்ளோம்! 

And of course - ஆன்லைன் மேளாவிற்கென பிரத்தியேக இதழ்கள் இம்முறையும் உண்டு! Here we go!

ஆன்லைன் மேளாவின் திட்டமிடல்களுள் நடுவாக்கில் இருந்த தருணத்திலேயே என்ன மாதிரியான பட்ஜெட் சுகப்படும்? என்ற கேள்வியை நமது வாட்சப் கம்யூனிட்டியில் முன்வைத்திருந்தேன்! ரூ.1100 to 1200/- தான் சரியாக இருக்குமென்று பெரும்பான்மையினர் அபிப்பிராயப்பட்டிருக்க, அதையே ஒரு reference பாய்ண்டாக எடுத்துக் கொண்டோம்! கதைகளின் கலவைகளைப் பொறுத்தவரை ஓரிரு இதழ்கள் தம்மைத் தாமே தேர்வு செய்து கொண்டன! And அங்கே எனக்குக் கிஞ்சித்தும் யோசிக்க அவசியங்கள் இருக்கவில்லை! 

அவ்விதம் தேர்வான முதல் இதழே - நம்ம "தல' மிரட்டிடும்" "The மெக்ஸிகோ மேஜிக் ஸ்பெஷல்!' போன நவம்பரில் முதல் 252 பக்கங்கள் வெளியாகியிருந்த நிலையில்- அதன் தெறிக்கும் sequel-ஐ கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் வெளியிடுவோமென்று ப்ராமிஸ் செய்திருந்தேன்! நடப்பாண்டின் முதல் தருணம் இதுவே என்பதால் டகாரென்று 'டிக்' ஆனது "தல' தான்!

இந்தக் கதைக்களம் உங்களுக்கு நன்கு பரிச்சயம் and அதன் க்ளைமேக்ஸ் பாகம் எவ்விதமிருக்கக் கூடும் என்பதுமே தெரியும் என்பதால் பெருசாய் பில்டப்கள் அவசியமாகிடாது என்றே நினைத்திருந்தேன்! ஆனால், ஓவியர் சிவிடெலியின் கைவண்ணத்திலான சித்திரங்களை, டாலடிக்கும் கலரில், மூச்சிரைக்கச் செய்யும் டெக்ஸ் & டீமின் சாகஸங்களுடன் எழுதவும், படிக்கவும் செய்த போது - "தல' ; தளபதி & தலைவர் படங்களின் முதல் ஷோவுக்குப் போனது போலான உற்சாகம் தொற்றிக் கொண்டது! Oh yes - சினம் கொண்ட TEX சிங்கம் என்னமாய் சீறிப் பாயும்? என்னமாய் எதிரிகளை துவம்ஸம் செய்திடும்?! என்பதெல்லாம் நான் சொல்லாமலே உலகுக்கே தெரியும் தான் - yet முதல் பாகத்தில் முடங்கி சிறையில் கிடந்த இரவுக்கழுகார்- ஒரு கைதேர்ந்த தளபதி போல் யுத்தத் தந்திரங்களை அட்டகாசமாய் செதுக்கியெடுத்து, எதிரிகளைக் கூண்டோடு கைலாசத்துக்கு அனுப்பும் அழகை இம்மியும் குறையின்றிப் படைத்துள்ளனர் இந்த ஆல்பத்தில்! And இங்கே கார்ஸனின் பங்கையும் சும்மா சொல்ல முடியாது தான்; கதாசிரியரே கதை நெடுக அவரைக் கலாய்ப்பதற்கும், அவர் கவுண்டர் பன்ச் அடிப்பதற்கும் வாய்ப்புகளை அள்ளித் தெளித்துள்ளார் ! சும்மாவே சாமியாடும் நமக்கு கா­லில் சலங்கையை வேறு கட்டிவிட்டால்- கட்டை "தேமே' என்று பொறுமை காக்குமா? இயன்ற மட்டிலும் மொக்கையாகத் தென்படாத வகையில் அந்தந்த frame-களில் கார்ஸனின் முகபாவனைகளுக்கு நியாயம் செய்யும் விதமாய் வரிகளை அமைக்க முயற்சித்துள்ளேன்! So நம்ம அழகு சுந்தர வெள்ளி முடியாரின் முகபாவங்ளை இந்த ஆல்பத்தினூடே பயணிக்கும் போது ரசிக்க மறவாதீர்கள் folks!

முதல் ஆல்பத்தின் அதே சைஸ் ; அதே template ; அதே தரம் & அதே விலை - So பட்ஜெட்டில் ரூ.350-ஐ "தல'' தரிசனத்துக்கென ஒதுக்கியாச்சு! 


And மேளாவின் இதழ் # 2 கூட தன்னைத் தானே தேர்வு செய்து கொண்டதொரு ஆல்பமே! இம்முறையோ அப்பாவின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கென வெளிவந்திட்டால் நலமென்று மனதுக்குப் பட்ட இரும்புக்கை மாயாவி சாகஸமே! கிட்டத்தட்ட மாயாவி ஆல்பங்களின் பெரும்பான்மை மறுபதிப்பு கண்டுவிட்டிருக்கும் நிலையில், 1982+ல் வெளியான ஒரு சில கதைகள் மட்டும் தான் இரண்டாவது சுற்றில் வந்திராது உள்ளன! அவற்றுள் பிரதானமானது "ஒற்றைக்கண் மர்மம்!'' என்பதால் அதனை கலரில் திட்டமிட்டு, ஆன்லைன் மேளா இதழ்களின் ஜோதியில் ஐக்கியமாக்கி விட்டோம்! And அதுவுமே நமது வாட்சப் கம்யூனிட்டியில் ஏற்கனவே பகிர்ந்தும் விட்ட தகவலே! So மாயாவியின் பெயரில் ரூ.150-ஐ ஒதுக்கிவிட்டால் - ரூ.500-க்கு பட்ஜெட் போட்டாச்சு!

அப்புறம் மேளாவின் இதழ் # 3 - உங்கள் புண்ணியத்தில் உட்புகுந்ததொரு கிராபிக் நாவல்!  நமது கம்யூனிட்டியில் உடனுக்குடன் பதில் கிட்டிடும் வசதி இருப்பதால் - சமீபப் பொழுதுகளில் ஏதாச்சும் புதுசான கதை(கள்) கண்ணில்படும் வேளைகளில், அவற்றைக் களமிறக்கலாமா? வேணாவா? என்ற ரீதியிலான கேள்விகளை அங்கே முன்வைக்க ஆரம்பித்துள்ளேன்! அவ்விதம் கோரப்பட்ட : எதிர்காலம்- நிகழ்காலம்- கடந்தகாலம் combo-வில் உருவாக்கப்பட்டிருக்குமொரு கிராபிக் நாவலைப் போடலாமா? என்று வினவிய போது ஏகோபித்த "YESS" பதிலாகக் கிட்டியது! அது மாத்திரமன்றி- அதற்கான பெயரை சூட்டிடும் பொறுப்பினையும் உங்களிடமே தந்திருந்தேன்! அடிச்சுத் துவைத்த ஒரு ரணகளப் பொழுதின் இறுதியில், நண்பர் கார்த்திக் சோம­லிங்காவின் முன்மொழிவான "நாளை போய் - நேற்று வா!'' தலைப்பாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தது! ஆக, உங்கள் inputs சகிதம் கச்சை கட்டத் தயாராகியுள்ள இந்த கி.நா. தான் புக் # 3. ரெகுலர் சைஸ்; கலர்; ரூ.125/- விலை! 

ஆக; ரூ.350+ ரூ.150.+ ரூ.125- ரூ.625 ஆகிறது!

இதழ் நம்பர் 4 : நமது செம ஆதர்ஷ, அபிமான, அன்புக்குரிய, பிரியமான ஜோடியின் தொகுப்பு! அவர்கள் வேறு யாருமல்ல - கிட்டத்தட்ட 53 ஆண்டுகளாய், மாயாவிக்களோடும், C.I.D லாரன்ஸ்- டேவிட்களோடும், ஜானி நீரோக்களுடனும், பயணித்து வந்திருக்கும் விச்சு & கிச்சு ஜோடி தான்! அவர்களது பாக்கெட் சைஸ் கலர் தொகுப்பு, முழுக்க முழுக்க புத்தம்புதுக் (மினி) கதைகளோடு; முழுவண்ணத்தில் compact ஆக, 40 பக்க ஆல்பமாய் வந்திடவுள்ளது! இந்த ஆல்பம் வெற்றி பெற்றிடும் பட்சத்தில் - தொடரக்கூடிய புத்தக விழாக்களிலெல்லாம் இந்த ஸ்போர்ட்ஸ் ஜோடியைக் களமிறக்கி விடலாம்! ரைட்டு, இவர்களது கலர் ஆல்பத்துக்கென இப்போது ரூ.75/- ஒதுக்கிடலாமுங்களா?

ஆக, total ரூ.700 ஆகிறது!

இதழ் # 5-க்கான தேர்வைச் செய்திடப் போவது நீங்களே மக்களே!! இது இரு போனெலி­ நாயகர்களிடையே ஆனதொரு straight மோதல்!! சமீப காலங்களில் செம வேகமெடுத்துக் கொண்டிருக்கும் ஸாகோர் & டைலன் டாக் தான் மோதிக்கொள்ள உள்ள நாயகர்கள்! So Zagor vs Dylan Dog என்பதே இந்த WWF மோதல்.

சிகப்பு நதி: என்ற பரபரப்பான முழுநீள த்ரில்லரில் ஸாகோர் அதிரடி செய்திடுகிறார்! வழக்கமான சைஸ்; கலர் & நமக்குப் பரிச்சயமான டார்க்வுட் கானகக் களம்! இது ஒரு option!

The குட்... பேட் & அக்ளி :

இது காலத்துக்கேற்ற பெயராகத் தோன்றலாம் தான்; ஆனால், இது அடியேனின் பெயர் சூட்டலே அல்ல! சமீப வருடங்களில் டெக்ஸ் வரிசையில் கலர் சிறுகதைகள் வெளிவருவது போல டைலன் டாக் வரிசையிலுமே மினி சாகஸங்கள் 32 பக்க நீளங்களில், மிரட்டலான டிஜிட்டல் கலரிங்கில் வெளிவந்து கொண்டிருப்பதைப் பார்த்து வருகிறோம்! அத்தகையதொரு கலர் தொகுப்பிற்கு அங்கே அவர்களே சூட்டியுள்ள பெயர் தான் இது!

So 3 ரொம்பவே வித்தியாசமான மினி சாகஸங்கள் கொண்ட இந்த ஆல்பம் - நம்ம V காமிக்ஸ் எடிட்டரின் தமிழாக்கத்தில் ரெடியாகவுள்ளது! இது Option # 2.

My Question is: 

ஸாகோரா? டைலனா? 

உங்கள் தேர்வு யாரோ என்பதே!!

ரைட்டு.... முதல் 5 இதழ்களினை இந்த வாரத்துக்கு வெளிச்சம் போட முனைந்துள்ளோம்! 

ஸாகோரோ, டைலனோ, யாரேனும் ஒருவரை இப்போதைக்குத் தேர்வு செய்தீர்கள் எனில், miss out ஆகிடும் நாயகர் - கோவை or சேலம் புத்தக விழாத்தருணத்தில் களம் காணுவார். So நடப்பாண்டில் இரு இதழ்களுமே கரைசேர்வது உறுதி!

My next question will be : 

*ஆறாவது ஸ்லாட்டுக்கு ஒரே கனமான களம் ஓ.கே.வா? 
அல்லது 
*Light reading-க்கு ஒத்து வருவது போல் 2 crisp இதழ்கள் ஓ.கே.வா? என்பதே! 

இரு விதங்களிலும் கைவசம் சரக்கு இருப்பதால் - உங்கள் ஆர்டருக்கு ஏற்ப பரோட்டாவா? சோளா பூரியா? சப்பாத்தியா? எதைப் போடுவது எனத் தீர்மானிக்கலாம்! So சொல்லுங்களேன் ப்ளீஸ்?

மீண்டும் சந்திப்போம் folks... Have a great weekend! Bye for now!

129 comments:

  1. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  2. இந்தியாவில் இருந்த வரை கிடைக்காத முதல் இடம் நெதர்லாண்ட்ஸில் இருக்கும் போது கிடைத்துள்ளது.

    ReplyDelete
  3. Dylan for மே மாதம்
    Zagor later

    கனமான களம் தற்சமயம்
    Light reading அப்பாலிக்கா சார்

    ReplyDelete
  4. ### *ஆறாவது ஸ்லாட்டுக்கு ஒரே கனமான களம் ஓ.கே.வா? "###

    ஒரே கனமான களம் sir

    ReplyDelete
  5. 1.ஸாகோரா? டைலனா?

    Zagor ..

    2. ஆறாவது ஸ்லாட்டுக்கு ஒரே கனமான களம் ஓ.கே.வா?
    அல்லது
    *Light reading-க்கு ஒத்து வருவது போல் 2 crisp இதழ்கள் ஓ.கே.வா? என்பதே!

    கனமான களம் ஓ.கே ..

    ReplyDelete
  6. 1. ஸாகோர் எனது சாய்ஸ்.
    2. கனமான கதைக்களம் எனது சாய்ஸ்.

    ReplyDelete
  7. //நம்ம அழகு சுந்தர வெள்ளி முடியாரின் முகபாவங்ளை இந்த ஆல்பத்தினூடே பயணிக்கும் போது ரசிக்க மறவாதீர்கள் folks!//

    😂😂😂

    ReplyDelete
  8. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  9. ஐயா ஸாகோர் முதலில் வெளியிடுங்கள் பின்னர் டைலன் டாக் வெளியிடுங்கள்

    ReplyDelete
  10. // ஸாகோரா? டைலனா? //
    நமக்கு எது வந்தாலும் ஓகேதான் சார்,அதான் அடுத்து இன்னொருத்தர் பின்னாடியே வரப் போறாரே...

    ReplyDelete
  11. // ஆறாவது ஸ்லாட்டுக்கு ஒரே கனமான களம் ஓ.கே.வா? //
    ஒரே புக்கா வந்தா களமும் கனமா இருக்கும்,இதழும் கொஞ்சம் கனமா இருக்கும்...

    ReplyDelete
  12. ஸாகோர்,டைலன் இருவருமே ஆர்வத்தை தூண்டுகிறார்கள்...

    ReplyDelete
  13. நிச்சயம் என் ஆதரவு டைலனுக்கு தான்...... மிரட்டலான அட்டைப்படம் 🔥🔥🔥

    ReplyDelete
  14. அசத்தலான அறிவிப்பு 👌👏👏👏👏👏👏👏👏.

    மாதம் 3 புத்தகங்கள் என்பது எங்களுக்கும் சற்று ஆசுவாசமாகவே உள்ளதுங்க.
    ஆனாலும் இந்த மாசம் போல மொத்தமாவே 260 பக்கங்கள் என்பது சற்று,சற்றே சற்று சின்ன குறைதான். குறைந்த பட்சம் 260+150+90 விகிதங்களில் கொடுத்தால் நிறைவாக இருக்கும். மத்தபடி வேறு எதும் கேளேன் பராபரமே.

    "மெக்ஸிகோ மேஜிக் ஸ்பெஷல்" டிசைனிங் அட்டகாசம் சார்,
    "மேஜிக் மூவ்மென்ட் ஸ்பெஷல் -2 (MMS-2)" என குறிப்பிட்டிருந்தால்,
    முதல் புத்தகத்துக்கும் பக்கபலமாக இருந்திருக்கும்.

    விச்சு கிச்சுவை இப்படியொரு வண்ணத்தில் பார்ப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை, கண்ணைப் பறிக்கும் கலர்ஃபுல்லான அட்டை ❤️.
    விற்பனை தூக்கல் இப்பவே கண்முன் தெரிகிறது.
    ஆன்லைன் மேளாவின் வெளியீட்டு அட்டைப் படங்கள் அனைத்தும் ஒன்றையொன்று மிஞ்சுகிறது.
    இதில் விச்சு கிச்சுவும் போட்டி களத்தில் உள்ளது நம்ப முடியாத அதிசயம்.

    பட்ஜெட் 1200 க்குள் எனும்போது,5 வந்து ஆப்சனில் உள்ள ஸாகோர்& டைலன் 2 மே வெளியிடலாமே சார்.கோவைக்கு வேணா வேற எதுனா போடுங்களேன்.

    பின்ன 6 வது க்கு நல்ல கனமானதாவே தாங்களேன்.
    க்ரிப் வாசிப்புக்குத்தான் மாதமாதம் வருகிறதே.

    ReplyDelete
    Replies
    1. சப்போஸ் 5 ல் ஏதாவது 1 மட்டுமே என்றால் "டைலன்" ஓகே.

      Delete
  15. 1. ஜாகோர்
    2. கனமான களம்

    ReplyDelete
  16. இத்தனை ஜாம்பவான்கள் மத்தியில் விச்சு கிச்சுவை களமிறக்கி விட்டீங்களே.
    அதுதான் சார் இன்னிக்கு ஹைலைட் அறிவிப்பு.👌😀👍❤️

    ReplyDelete
  17. எல்லா இதழ்களும் கலரா? B/W ல ஏதாவது போடுங்க சார்...?

    ReplyDelete
  18. முழுக்க முழுக்க புதுக் கதைகளை எதிர்பார்த்தேன். Online மேளா புதுக்கதைகளுக்கும், புது முயற்சிக்கும் மட்டுமே என்று கூறி இருந்தீர்கள். ஆனால் மறுபடியும் இதிலும் கிளாசிக் பார்ட்டிகளுக்கு ரூபாய் 225 ஒதுக்கி ஒன்று அல்லது இரண்டு புதிய வெளியீடுகள் வருவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது

    ReplyDelete
    Replies
    1. மாயாவி இந்த லிஸ்டில் இணைந்திருப்பது ஏனென்று தெரிந்த பின்னேயும் இந்தக் கேள்வி அவசியம் தானா?

      And விச்சு &கிச்சு பழசும் இல்லை- அவ்வளவுமே புதுசு என்றாச்சு!

      குறைகளை சுட்டிக்காட்டுவதில் தப்பில்லை தான்; ஆனால் அதுவே ஒரு way of life ஆகிட த் தான் வேணுமா?

      Delete
    2. திருநாவுக்கரசு @ மாயாவி இந்த விழாவில் வருவதற்கான காரணம் வாட்ஸப் கம்யூனிட்டி மற்றும் இங்கு தெளிவாக சொன்ன பிறகும் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா இல்லை இவைகளை முழுவதுமாக படிக்காமல் பதிவிடீங்களா 😞😞😞😞

      Delete
  19. சிறு கதைகளை நாம் என்றுமே பெரிதாக விரும்பியதில்லை. ஆகையால் எனது chiice Zagor. டைலன் கதையை பொறுத்தவரை, இந்த தலைப்பு மற்றும் அட்டை படத்தை, சிறு கதைகளில் தொகுப்புக்கு பதில் ஒரு முழு கதைக்கு பயன்படுத்தலாம்

    ReplyDelete
    Replies
    1. போனல்லிக்குத் தான் இந்த அறிவுரையினை சொல்ல வேண்டியிருக்கும்!

      Delete
  20. எனக்கு ஸாகோர் 😘+
    கனமான கதை களம்🥰🥰

    ஒரு வேலை வாய்ப்பிருந்தால் டைலனும் கொடுங்க சார் 😘🥰🙏

    ReplyDelete
    Replies
    1. Yes எனக்கும் கனமான கதைக் களம் தான் வேண்டும்

      Delete
  21. அந்த மே மேளா Rs.1200/- gpay பண்ணிடலாங்களா சார்... 😘😘😘

    ReplyDelete
    Replies
    1. சும்மாவே ஜம்பிங் பேரவை பார்ட்டீஸ் பறப்பாங்க.. முழு நீள கலர்ங்கிற உடுக்கையை வேற அடிச்சிவிட்டீங்க... இந்த வாரம் பூரா அவுங்க தாவிட்டு தான் இருப்பாங்க சார்..

      Delete
    2. பொறுங்க தல...... 😄😄

      Delete
  22. 5 ஆவது ஸ்லாட் ஸாகோர்

    ReplyDelete
  23. 1. ஜாகோர்
    2. கனமான களம்

    ReplyDelete
  24. ஆறாவதாக எதை தேர்ந்து எடுப்பது என்பதை கதைகளை பட்டியலிட்டால் தான் சரியான முடிவை எடுக்க இயலும்.

    ReplyDelete
  25. டைலன், கனமான களம்

    ReplyDelete
  26. டைலன், கனமான களம்

    ReplyDelete
  27. ஸோகோர்

    கனமான களம்

    விச்சு கிச்சுவை வரவேற்கிறேன்...

    ReplyDelete
  28. இளவரசர் அளவுக்கு கனமாக இல்லாவிட்டாலும் கிட் ஆர்டின் கண்ணன் அளவுக்காவது கனமான ஒரே கதைக்களம்

    ReplyDelete
    Replies
    1. ரண்டு பேரையும் சேத்தா மெரி வெயிட்னாலும் ஓகே வா சார்?

      Delete
    2. 16 கிலோ கேஸ் சிலிண்டரை தூக்க கஷ்டப்படும் பைசப்ஸ் 50 கிலோ காதலியை தூக்க சிரமப்படுவதில்லை சார் 😁

      Delete
    3. செல்வம் சார் 😜🤣🤣🤣🤣🤣😂

      Delete
    4. ///
      16 கிலோ கேஸ் சிலிண்டரை தூக்க கஷ்டப்படும் பைசப்ஸ் 50 கிலோ காதலியை தூக்க சிரமப்படுவதில்லை சார் ///

      என்னா ஒரு உவமானம் உவமேயம்!!😂😂😂😂

      Delete
  29. ரொம்ப நாள் கழிச்சு பாக்கெட் சைஸ். வெல்கம் விச்சு&கிச்சு

    ReplyDelete
  30. Sir - No Ganam as La Bomb is already so ganam. Please make it light reading - fast reading.

    ReplyDelete
    Replies
    1. 🤔🤔.... லைட் எத்தனை votes? ஹெவி எத்தனை votes?

      Delete
  31. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  32. அட்டை படமெல்லாம் அட்டாகாசமா இருக்குதுங்க sir... ❤️👍👍...

    ReplyDelete
  33. Zagor and டைலன் இருவருமே வரட்டும். Heavy ஆன கதை வரட்டும். லைட் ரீடிங் தான் எல்லா மாசமும் வருதுங்களே.

    ReplyDelete
  34. 1. ஜாகோர்
    2. கனமான களம்

    ReplyDelete
  35. // ஸாகோரா? டைலனா? //

    ஸாகோர

    //ஆறாவது ஸ்லாட்டுக்கு ஒரே கனமான களம் ஓ.கே.வா? //
    கனமான களம்

    Variety is import sir. :-)

    ReplyDelete
  36. டைலன், கனமான களம் !

    ReplyDelete
  37. Hi Editor , for last question , 2 crisp stories .
    Zagor or Dylon - Zagor is my choice sir

    ReplyDelete
  38. Tex wrapper is awesome sir ! Avlo Azahgu 😊

    ReplyDelete
  39. Dear Edi need a Gundu book (ganam)

    ReplyDelete
  40. ஸாகோர் vs டைலன் வேண்டாமே...

    எனக்கு 2 பேரும் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. இப்போதைக்கு ஒருத்தர் மட்டுமே!

      Delete
  41. செம சார்...அனைத்திதழ்களும் நெஞ்சையள்ளுது....சாகோர் தலைப்பும் அட்டையும் இப்பவே வாங்கச் சொல்லுது....டைலனுமே ...சின்னவர் ஆக்கம்....டைலனை வரட்டும்....கோவை சாகோர்....அந்த கடைசி கதையும் கனமான களனாகவே இருந்துட்டு போகட்டுமே...லைட் ரீடிங் தான் மாசாமாசம் போய்ட்டிருக்கே....விச்சு கிச்சு அட்டை அழகு

    ReplyDelete
  42. ஸாகோர் & கனமான களம்

    ReplyDelete
  43. விச்சு,கிச்சு..பாக்கெட் சைஸ்,,கலர்,,
    ஆகா..ஆகா..ஆகா..ஆகாகாகாகா...😍😍😍😍😍😍😍❤️❤️❤️

    ReplyDelete
  44. டைலன இனக்குங்க சார்..கனமான கதைக்களம்னு வேற சொல்றீங்க..🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  45. 5 ஜம்பிங் ஸ்டார் ஜாகோர் வரவேண்டும்.
    6 ஸ்லாட்டுக்கு பெரிய கதையாக போட்டு விடுங்கள்.
    விஜயன் சார் குரங்கு வால் சிங்கம் பரட்டை எப்போது வர வாய்ப்பு இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நடப்பாண்டின் ஏதேனும் ஒரு புத்தக விழாவில் பார்க்கலாம் சார்!

      Delete
    2. ஆஹா இந்தச் செய்தி என் காதில் தேனாமிர்தமாக விழுகிறது. சேலத்துக்கு இந்த கதையை முயற்சி பண்ணலாம் என்று நினைக்கிறேன் சார்.
      எப்படியாயினும் இந்த வருடம் குரங்கு வால் சிங்கம் பரட்டை பராக் பராக்காக இருக்க வேண்டும் சார்

      Delete
  46. 1. Zagor
    2. தற்போதைய லைட் ரீடிங் கதைகள் தான் எனக்கு பிடிக்கிறது மேலும் ஒரே குண்டு க்கு பதில் 2 லைட் ரீடிங் கிடைக்கிறது என்பதால் எனது ஓட்டு 2 லைட் ரீடிங் கதைகளுக்கே (அவை கார்ட்டூன் கதைகளாக இல்லாத வரை)




    ReplyDelete
    Replies
    1. கார்ட்டூன் வேணாமா 🤕🤕...

      அவற்றை விட light reading இருக்கவாச்சும் முடியுமா கிருஷ்ணா?

      Delete
    2. மன்னிக்க சார் சமீபத்திய ஸ்பூன் எபெக்ட் நண்பர்களுக்கு அவர் பிடித்தாலும் எனக்கு பிடிக்க வில்லை ஆகையால் அந்த PS 😢

      Delete
  47. சார், ஜாகோர் நீளமான கதையாக கொடுங்கள், அவைகள் தான் நன்றாக இருக்கிறது. நமது v காமிக்ஸில் வந்த லைட் ரீடிங் போல உள்ள ஜாகோர் கதைகள் வேண்டாம்.

    ReplyDelete
  48. சார் - லைட் ரீடிங் என்றால்
    மாடஸ்டி -

    ReplyDelete
  49. கனமான ரீடிங் என்றால்
    ஜூலியா -
    இந்த டீலீங் ok - வா சார்..

    ReplyDelete
  50. ///ஆறாவது ஸ்லாட்டுக்கு ஒரே கனமான களம் ஓ.கே.வா?
    அல்லது
    Light reading-க்கு ஒத்து வருவது போல் 2 crisp இதழ்கள் ஓ.கே.வா? ///

    ஒரே கனமான களம் 😍😍😍😍

    ReplyDelete
  51. விச்சு-கிச்சு மீண்டும் வருவது ரொம்பவே மகிழ்ச்சி அளிக்கிறது சார்! வண்ணத்தில் வர இருப்பது எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிற வைக்கிறது.
    ஆனால் உள்பக்க வண்ணங்கள் முன்னட்டையில் இருப்பது போல் இருக்குமா? அல்லது பின் அட்டையில் இருப்பது போல் இருக்குமா? என்று (நான் உட்பட ) சில பல நண்பர்களுக்கு சந்தேகம் இருப்பது போல் தெரிகிறது..

    நீங்க என்ன நினைக்கிறீங்க எடிட்டர் சார்?

    ReplyDelete
  52. ஸாகோர். லைட் ரீடிங். லைட் ரீடிங்ல இந்த டைலனும் வந்தா சந்தோசம்

    ReplyDelete
  53. ஆன்லைன் மேளா சிறப்பிக்கட்டும். மேவில் எந்த தேதி என்று என முடிவு செய்து விட்டீர்களா, எடி ?!

    ReplyDelete
    Replies
    1. முன்பதிவுகளுக்கு ஒரு மாத அவகாசமாச்சும் கிட்டும் விதமாய் மே 20 அனுசரிச்சு சார்!

      Delete
  54. 5)டைலன் டாக்

    6)ரெண்டு லட்டு தின்ன ஆசை சார்...

    ReplyDelete
  55. விச்சு & கிச்சு டாப் சேல்ஸில் இருக்கப்போகிறது. புத்தக விழாக்களில் மாணவர்களுக்கு சிபாரிசு செய்யலாம். காமிக்ஸ் ஆர்வமூட்ட பரிசளிக்கலாம்.
    நாளை போய் நேற்று வா - எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    சீனியர் எடிட்டருக்கு அஞ்சலி செலுத்த வரும் மாயாவிக்கு நன்றி.
    Tex வழக்கமான எதிர்பார்ப்பு.
    ஸாகோர் o.k

    ReplyDelete
  56. ஆன்லைன் மேளாவுக்கான முன்பதிவு அறிவிப்பு எப்போது சார்?

    ReplyDelete
  57. சார்,
    1. Full time அமானுஷ்யம் டைலன் அப்புறம்...
    Part time அமானுஷ்யம் ஸாகோர் இப்போ🙂

    2. அதிக light கண் கூச செய்யும் என்பதால்,
    கனம் for இந்தக் கணம் 👍

    ReplyDelete
  58. ஷெல்டன் - படங்கள் வண்ணத்தில் நன்றாக இருந்தது. கதை ஓகே. பெரிய ஆக்சன் காட்சிகள் இல்லை, படித்து முடித்தபின் ஷெல்டன் கதை படித்த திருப்தி இல்லை.

    ReplyDelete
  59. Book fair spl க்கு பணம் கட்டியாச்சு சார்.

    ReplyDelete
  60. *சான்டா க்ளாசை பார்த்தேன்*

    மிக நேர்த்தியான சித்திரங்கள் காட்சிகளை ரசிக்க வைக்கிறது
    முக்கியமாக முகபாவைனைகள்

    எப்போதும் விசித்திர நிகழ்வு ஒன்றில் ஆரம்பிக்கும் மார்டின் கதைகளுக்கு சளைக்காது ரொம்பவே விசித்திர நிகழ்வுகளில் ஆரம்பமாகிறது இக்கதையும். உலகின் வெவ்வெறு இடங்களில் ஓரே நேரத்தில் காணப்படும் காட்சிகளின் சித்திரங்களால் நம்மை பிரமிக்க வைக்கின்றனர்.
    இறுதி காட்சியாக சான்டா க்ளாஸ்(இங்க மட்டும் ஏன் சான்டா க்ளாஸ் என்ற கேள்வியும் வருகிறது), உண்மையா (அ) பிரமையா என்றறிய பைலட் எடுக்கும் முயற்சியில் குறும்புதனமா சான்டாவை காண்கின்றான், அதுவும் அந்த சம்பவத்தில் பைலட் உண்மையிலே இறந்து விட்டான் என்றே நினைக்க வைத்தது, மார்டின் கதையல்லவா, விசித்திர சம்பவங்களில் ஆபத்து இருக்குமே

    நியூயார்க்கில் வசிக்கும் ஏஞ்சலா என்ற அழகிய பெண்ணுக்கு வேறு விதமான பிரச்சனை, தன் அழகை ரசிக்கமால் இருக்கும் காதலன் தான் அந்த பிரச்சனை
    என்னதான் கவர்ச்சியா ஒரு பெண் இருந்தாலும் , மனப் பிரச்சினைனு வந்துட்டா, அந்த அழகை ரசிக்க மாட்டான்னு இக்கதையில் சொல்றாங்க
    நோ கவலை ஏஞ்சலா
    இக் கதையை படிப்போருக்கு அந்த பிரச்சனை இல்லைனு நினைக்கிறேன்

    இப்படியாக விசித்திரமான பிரச்சனை மார்டினிடம் வர, முதலில் பார்த்த பைலட் உயிரோடிக்கிறான் என்றாகிறது.
    ரொம்ப சீரியஸ் இல்லையெனில் அப்போது அங்கு என்னதான் நடந்தது என்ற வினாவும் கூடவே வருகிறது நமக்கு.

    இதே சமயம் அரசாங்க ரகசிய ஏஜெண்ட்ஸ்களும் மார்டினை அணுகுகின்றனர், அதுவும் சான்டா க்ளாஸ் கெட்டப்பில் 😐😐😐(சீசன்க்கு ஏற்ற மாதிரி மாறுவேடமாம்)
    இவர்களை சான்டா க்ளாஸ் ஆட்கள் என்று தவறாக முதலில் நினைத்து விட்டேன்😅😅😅

    மார்டினை அணுகிய காரணம், எதையும் அதன் பொருட் கொண்டு பார்க்கும் கண்ணோட்டம் மற்றும் அவரது திறனறிவு.
    இது நம் மார்டினின் குணத்தை சிறந்து பறை சாற்றுவதாகும்

    ஒவ்வொரு நாட்டு மக்களின் கிறிஸ்துமஸ் கடிதங்கள் எழுதும் பழக்கம் குறித்து மார்டின் விளக்கி கூறுகிறார், இதான் முதல் தடவை இப்படியொரு விசயத்தை பற்றி நான் கேள்விபடுவது
    இதுவரை நான் அறியாத தகவல்

    வழக்கமான சீரியஸான மிஸ்ட்ரி இயல்பில் இருந்து விலகி நிற்கிறது இக்கதை.

    மார்டினும் சான்டா க்ளாஸும்
    இருவரும் ஒருவரை ஒருவர் அறிவர், ஆனால் ஒருவருக்கு ஞாபகமுண்டு, இன்னொருவருக்கு இருக்கு, ஆனா இல்லை
    அது எப்படினா, கதையை படிச்சா தெரிஞ்சுடும் 😁😁😁

    ஒரு டெக்னிகல் கிளிட்ச்சினால் ஏற்பட்ட தவறினால் விசித்திர நிகழ்வுகளுக்கு காரணம் என்கிறது சான்டா க்ளாஸ் க்ருப்.
    சான்டா க்ளாஸின் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடம் செம பிரமாண்ட சித்திர காட்சி

    ஒரே வண்டியில் உலகத்தை சுற்றி வருபவர் என்ற ஒன்றை மக்கள் நம்பி கொண்டிருக்க, அதுவும் கிறிஸ்துமஸ் முன்னிரவில் மட்டுமே என்பதை உடைதெறிகிறார்கள் இங்கே,
    ஓர் இரவில் நடப்பவை இல்லை, அதே போன்று விஞ்ஞான வளர்ச்சியில் வளர்ந்தவர்கள் என்று காட்டுகின்றனர்
    யூ சி வி ஆர் டெக்னாலஜிக்கலி வெரி அட்வான்ட் பீப்பள் என்று காமித்து விடுகின்றனர்
    (You see we are technologically very advanced people )

    மார்டின் கதைகளில் எல்லாவற்றிர்க்கும் அறிவியல் பிணைப்பு இருக்கும், சான்டா க்ளாஸ் வேலையை விஞ்ஞான ரீதியாக சொல்ல முற்பட்டுள்ளனர்

    உளவுத்துறைகள், சின்ன தடயம் கிடைத்தாலும் தோண்டி துருவாமல் இருக்க மாட்டோம், குட்டியுண்டு தகடுல்களை வைத்து பெரிய மெஷினை கண்டுபிடிப்பது செம
    அவர்கள் அனைவரும் ஏமாற்றபடுவது இன்னும் சிறப்பு

    ஜாவாவை பற்றி சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காது, மார்டின்க்கு உறுதுணையாக இருக்கிறார்
    மார்டின் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார், சந்தேகம் எழுப்புகிறார், எச்சரிக்கை செய்கிறார், ஆனால்
    அவர் பேசிடும் பாஷையை மொழி பெயர்த்து அவரது வசனங்களையும் மார்டினே பேசி விடுகிறார்.
    சண்டை நடக்கும் போது,பலத்தில் ஜாவாவே பெரிய ஜாம்பாவான் என்றாகிறது

    *ஜாவா : க்ர்ர்ர், கர்ர்ர், கிர்ர்ர்*
    அது என்ன சொல்றாருன்னா

    நான் சான்டா க்ளாசை பார்த்தேங்க, அதை தெரிஞ்சிக்க இந்த கதையை மிஸ் பண்ணாமல் படிங்க என்று சொல்கிறார்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சகோ 💐💐💐

      Delete
    2. //நியூயார்க்கில் வசிக்கும் ஏஞ்சலா என்ற அழகிய பெண்ணுக்கு வேறு விதமான பிரச்சனை, தன் அழகை ரசிக்கமால் இருக்கும் காதலன் தான் அந்த பிரச்சனை
      என்னதான் கவர்ச்சியா ஒரு பெண் இருந்தாலும் , மனப் பிரச்சினைனு வந்துட்டா, அந்த அழகை ரசிக்க மாட்டான்னு இக்கதையில் சொல்றாங்க
      நோ கவலை ஏஞ்சலா
      இக் கதையை படிப்போருக்கு அந்த பிரச்சனை இல்லைனு நினைக்கிறேன்.//

      😂😂😂😂😂😂😂

      //*ஜாவா : க்ர்ர்ர், கர்ர்ர், கிர்ர்ர்*
      அது என்ன சொல்றாருன்னா

      நான் சான்டா க்ளாசை பார்த்தேங்க, அதை தெரிஞ்சிக்க இந்த கதையை மிஸ் பண்ணாமல் படிங்க என்று சொல்கிறார்//

      😅😅😅😅😅

      நம்ம ரம்மி ஒரு தடவை சொன்னாரு ஒரு விமர்சனத்தை படிச்சிட்டு..

      ""காபியை விட கப்பு சூடா இருக்கிற மாதிரி கதையை விட விமர்சனம் நல்லா இருக்கு ""

      அது உங்களுடைய இந்த விமர்சனத்துக்கு நன்றாக பொருந்தும் ரம்யா சிஸ் 🌹

      Delete
    3. //"" காபியை விட கப்பு சூடா இருக்கிற மாதிரி கதையை விட விமர்சனம் நல்லா இருக்கு ""//

      😊😊😊😊😊
      நன்றிங்க செல்வம் அபிராமி சகோ 💐💐💐💐💐💐💐💐💐❤❤❤❤❤

      Delete
    4. ஹா ஹா.. 😁😁😁 கடல் சகோ.. நகைச்சுவை தத்தும்ப, இயல்பாக, ரசித்து ரசித்து எழுதி அசதியிருக்கிறீர்கள்!! நாளுக்கு நாள் உங்களுக்கு விமர்ச்சனத்தின் தரம் எகிறிக்கொண்டே இருக்கிறது. வாழ்த்துக்கள் சகோ! 💐💐💐

      Delete
    5. நன்றிகள் இளவரசரே💐💐💐
      எல்லாம் காமிக்ஸ் சகோதரர்களுடன் பேச பேச வளர்ந்த நகைச்சுவை தாங்க

      இளவரசரின் பாராட்டு பொற்கிழியை பெற்றது போன்றது 😊😁

      Delete
  61. கடல். சிஸ்டர் இப்படிலாம் உங்களுக்கு விமர்சனம் எழுத தெரியுமா? சூப்பர் . தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. எதோ அப்போப்ப, சகோ 😁😁😁

      நன்றிகள் 💐💐💐

      Delete
    2. அவங்க பெண்ணிய பார்வையில் கலக்குவாங்க சார்..

      Delete
  62. இந்த விமர்சனம்சூர்ய ஜீவானு நெனச்சேன் பார்த்தா அடுத்ததா சூர்ய ஜீவா வாழ்த்தி கமெண்ட்பண்ணிருக்காரு.

    ReplyDelete
    Replies
    1. அவரு பெட்டி வந்த உடனே படிச்சுட்டு சுடசுட விமர்சனம் போட்டுட்டார் சகோ

      Delete
    2. இந்த மாசம் லைட்டோ லைட் reading.. 2 - 3 மணி நேரத்துல முடிஞ்சுடுச்சு

      Delete
  63. கடல் சகோ "சூர்ய ஜீவா" இந்த மாசம் விமர்சனம் .அப்பவே ரிப்ளை பண்ணிட்டேங்க.இருந்தாலும் உங்களோட இந்தப் பதிவும் அவர் போலவே இருந்ததை சொல்ல நினைத்தேன்

    ReplyDelete