நண்பர்களே,
வணக்கம்! கதிரவன் காய்ச்சி எடுக்கத் துவங்கிட, இதோ மார்ச்சின் நடுப்பகுதியும் வந்தாச்சு! And வழக்கம் போலவே அடுத்த செட் இதழ்களுக்குள் தலைகளை நுழைத்துக் கிடக்கின்றோம்! புண்ணியத்துக்கு இந்த மாதத்தில் 31 நாட்கள் இருப்பதால் - வாசிக்க உங்களுக்கும், தயாரிக்க எங்களுக்கும் கொஞ்சமாய் கூடுதல் அவகாசமுள்ளது! So இடைப்பட்ட இந்த இரண்டு வாரங்களுக்குள் டின்டினையும், சாபம் சுமந்த சுரங்கத்தையும், தோர்கலையும் (சு)வாசிக்க முடிந்தால் சூப்பரு!
Looking ahead சற்றே லாத்தலானதொரு ஏப்ரல் காத்திருப்பது தெரிகிறது! மாதா மாதம் 4 புக்ஸ்; சில தருணங்களில் 5 என்றெல்லாம் பழகிப் போன பின்னே - அத்தி பூத்தாற் போல ஒரு லைட்வெயிட் மாதத்தைப் பார்க்க முடியும் போது வாயெல்லாம் பல்லாகிப் போகிறது! ஆனால், அதைத் தொடர்ந்திடவுள்ள மே மாதம் வட்டியும், முதலுமாய் சுளுக்கெடுக்கத் தயாராக இருப்பதால்- இளிப்புக்கு ஒரு ப்ரேக் போட்டுக் கொண்டபடிக்கே ஏப்ரலின் ப்ரிவியூவுக்குள் புகுந்திட முனைகிறேன்!
வேய்ன் ஷெல்டன்!
2013 ஜனவரியில் எதிர்பாராதவிதமாய் நமது அணிவகுப்பினுள் புகுந்த நாயகர்! Truth to tell - முத்து காமிக்ஸின் NEVER BEFORE - ஸ்பெஷலின் துவக்கத் திட்டமிடல்களில் இந்த மீசைக்கார சாகஸக்காரர் கிடையாது தான்! ஆனால், நானூறு ரூபாய்க்கு புக்கை அறிவித்துவிட்டு- "இந்தப் பக்க எண்ணிக்கைகள் போதும் தானா? புக்கை கையில் ஏந்தும் நண்பர்கள்- "I want more emotions' என்று எதிர்பார்த்திடுவார்களோ?'' என்று தறிகெட்டுத் தெறிக்கவிட்ட பயத்தோடு மல்லுக்கட்டிய சமயம் ஷெல்டனையும் உட்புகுத்தினால் தேவலாமே?! என்று பட்டது! புது நாயகர்; புதியதொரு கதை பாணி; அட்டகாசமான சித்திரங்கள்; பற்றாக்குறைக்கு ஜாம்பவான் ஷான் வான் ஹாமின் கதை எனும் போது, இவரது addition நம்ம NBS-க்கு பெரும் மெருகூட்டுமென்று நம்பினேன்!
ஜனவரி 2013-ல் வந்த NBS பட்டையைக் கிளப்பவும் செய்தது & ஷெல்டன் நம் மத்தியில் ஒரு ஸ்ட்ராங்கான நாயகராகக் கால்பதிப்பதுமே நிகழ்ந்தது! ஆனால், அவரது career graph லார்கோவைப் போலவோ; XIII-ஐப் போலவோ ஒரு உச்சத்துக்குப் போகவெல்லாம் செய்யவில்லை என்பது தான் வார்னிஷ் பூசாத நிஜமும்! இன்றளவும் எனக்கொரு புரியாத புதிர்- ஷெல்டன் தற்போதிருக்கும் லெவலிலிருந்து உசக்கே போகாதது ஏன் என்பது தான்! இவரது தொடரில் துளி விடுதலுமின்றி சகல ஆல்பங்களையும் போட்டுவிட்டோம்! எல்லாமுமே தொங்கல்களின்றி முழுமையான சாகஸங்களாகவே இருக்கப் போய் முதல் சுற்று; மூன்றாம் சுற்று என்ற பஞ்சாயத்துக்களுக்கு இங்கே இடமுமில்லை! Yet - உலகத்தையே வலம் வரும் இந்த நரைமீசை நாயகருக்கு greater அபிமானம் கிட்டாது போயிருப்பது ஏனென்பது தான் புரியில்லா! உங்களில் யாருக்கேனும் அது குறித்த காரணம் புரிந்து இருப்பின் - பகிர்ந்திடலாமே ப்ளீஸ்?!
And இதோ ஏப்ரலில் காத்திருக்கும் ஷெல்டனின் லேட்டஸ்ட் ஆல்பத்தின் first look :
சாய்கான் புதையல்!!
இன்றைக்கு ஹோ சி மின் (HCMC) என்று அறியப்படும் வியட்நாமின் ஆகப் பெரிய துறைமுக நகரின் அந்நாட்களது பெயர் தான் சாய்கான்! வடக்கு வியட்நாம் - தெற்கு வியட்நாம் என இரண்டாகப் பிளவுபட்டுக் கிடந்த தேசம் யுத்தத்தில் மூழ்கிப் போனதும்; அமெரிக்கா ஒரு பார்வையாளராக 1950-களில் புகுந்து; சற்றைக்கெல்லாம் போர் எனும் சுழலுக்குள் இழுக்கப்பட்டு; 1973 வரை வியட்நாமில் செம மாத்து வாங்கியதெல்லாம் வரலாற்றின் அழிக்க இயலாப் பக்கங்கள்! கிட்டத்தட்ட 60.000 அமெரிக்க வீரர்கள் வியட்நாமில் மரணத்தைத் தழுவியது மட்டுமன்றி - அமெரிக்க சமூகத்தின் மீதே இந்த யுத்தமானது ஆறாத வடுவொன்றை விட்டும் சென்றது!
இளவயது ஷெல்டன் அமெரிக்கக் கமாண்டாவோகச் செயல்படும் முன்கதை இருக்க, இந்தத் தொடருக்கு மீள்வருகை புரிந்திருக்கும் கதாசிரியர் வான் ஹாம், வியட்நாமின் கானகத்திற்குள் அவரை மறுபடியும் இழுத்துப் போகிறார்! செம சிம்பிளான கதைக்கரு; கணிசமான நிஜ நிகழ்வுகளின் பின்னணியில் எனும் போது, இந்த 46 பக்க சாகஸம் சிட்டாய்ப் பறக்கிறது!
And "வியட்நாம் வீடு'' ட்ராமாவையும், வியட்நாம் காலனி'' படத்தையும் தாண்டிய வேறெந்தப் பரிச்சயமும் இல்லாத நண்பர்களுக்கென இந்த ஆல்பத்தில் ஒற்றைப் பக்கத்தை ஒதுக்கி - சன்னமாயொரு வரலாற்றுப் பாடத்தை கூகுளாண்டவரின் புண்ணியத்தில் நடத்திட முயற்சித்திருக்கிறேன்! ஜுஜுலிப்பா!! So ஒரு ஆக்ஷன் நாயகரின் crisp சாகஸத்தினை ரசிக்க ரெடியாகிக்கலாமா folks? (அந்த "ஜுஜுலிப்பா"வுக்கான பொருள் புரிந்திராதோர் வல்லிய அறிஞரான இயவரசரிடமோ, அவர்தம் சிஷ்யப்புள்ளயிடமோ கேட்டுத் தெளிவு பெற்றுக்கொள்ளலாம்!💪)
ஏப்ரலில் இன்னொரு highlight காத்துள்ளதென்பேன்! And அது சமீப மாதங்களில் வித்தியாசமான கதைகளாலும், சித்திர ஜாலங்களாலும் சிக்ஸர் அடித்து வரும் டெக்ஸின் அடுத்த ரகளையே தான்! இம்முறையோ ஓவியர் சிவிடெலி என்பதால் - டெக்ஸும், கார்சனும் சும்மா புது மாப்பிள்ளைகளாட்டம் கதை முழுக்க ஜொலிக்கின்றனர்! போன மாசம் சுரங்கம்- சாபம் என்ற equation எனில், இம்முறை "சாபங்கள் சாவதில்லை!'' என்று முழுங்க நம்மவர்கள் காத்துள்ளனர்! "பளிச்' சித்திரங்கள் என்ற நொடியிலேயே அந்தக் கதையில் LED பல்ப் எரிவது போல வெளிச்சமாகிப் போகிறது & இதுவொரு110 பக்க சிங்கிள் ஆல்பமே எனும் போது, வாசிப்பு அனுபவம் தாறுமாறு ஸ்பீடில் அமைந்துவிடுகிறது! "படிக்க அவகாசமில்லை'' என்று புலம்பும் நம்மாட்களுக்கு maybe இனிவரும் நாட்களில் இது போலான சிங்கிள் ஸ்கூப் ஐஸ்க்ரீம்களைத் தான் பரிமாறணுமோ?? What say மக்களே?
இதோ- ஒரிஜினல் டிசைனுக்கு வர்ண மாற்றங்கள் செய்து, நமது கடல் கடந்த ஓவியை புதிதாய் உருவாக்கியுள்ள அட்டைப்படத்தின் முதல் பார்வை! And உட்பக்கங்களின் ப்ரிவியூவும் கூட!
2025-ன் yet another டெக்ஸ் ஹிட் லோடிங் என்பேன்!
ஏப்ரலின் மூன்றாவது இதழான மார்ட்டினின் "சான்டா க்ளாஸைப் பார்த்தேன்' இதழுக்குள் நான் இன்னமுமே புகுந்திருக்கவில்லை என்பதால் அதற்கான முன்னோட்டம் அடுத்த ஞாயிறுக்கு!! 78 பக்கங்கள் கொண்ட Black & white சாகஸம்; இன்னமும் அதனுள் புகுந்திடக் கூட இயலவில்லை! Maybe நாளை நேரம் கிட்டின் - அடுத்த சில தினங்களிலேயே மொழிபெயர்ப்பை முடித்துவிட்டு ஜல்தியாய் ஆன்லைன் மேளா பணிகளுக்குள் "டைவ்' அடித்து விடுவேன்! மர்ம மனிதர் ரொம்பச் சோதிக்காமல் இருந்தாரெனில் பிழைத்தேன்! ஜெய் ஜாவா!
ஆன்லைன் மேளா புக்ஸ் எவையோ? என்று அவ்வப்போது நண்பர்கள் காதைக் கடிப்பதைப் பார்த்து வருகிறேன் தான்! Truth to tell - 3 பெரிய கலர் இதழ்களின் திட்டமிடல்; பணிகள் ரெடி! ஆனால், இந்த மூன்றுக்கே சுமாராய் ரூ.700/- ஆகிவிட்டதெனும் போது- மேற்கொண்டு எத்தனை காசுக்கு வெடி வைப்பதோ? என்ற யோசனை ஓடி வருகிறது! நேற்றைக்குக் கூட நமது வாட்சப் கம்யூனிட்டியில் இது சார்ந்த ஒரு கேள்வியினைக் கேட்டு, உங்களை ஓட்டுப் போடச் சொல்லியிருந்தேன்! But அங்கே மெஜாரிட்டி ரூ.1200/- to ரூ.1500/-க்குத் திட்டமிடச் சொல்லியிருந்தனர்! ஏற்கனவே ரூ.850/- விலையில் LA BOMBE வெடிக்கக் காத்திருக்கும் வேளையில் - இந்த ஆன்லைன் புத்தகவிழாவின் ரூபத்தில் மேற்கொண்டும் பொத்தல் போடப் பயந்து பயந்து வருது!
At the moment :ரூ.700-க்கு திட்டமிடல் ரெடி..!
மேற்கொண்டு எவ்வளவுக்குத் திட்டமிடலாம் என்பீர்கள் folks?
உங்களது பதில்களைத் தெரிந்து கொண்டால் அதற்கேற்ப அடுப்பில் அடுத்து ஏற்ற வேண்டியது பிரியாணி தேக்சாவையா? பாயாச அண்டாவையா? கேசரி பண்ண சின்னப் பாத்திரத்தையா? என்பதை நான் தீர்க்கமாகத் தீர்மானித்துக் கொள்வேன்! Your thoughts please folks?
Before I sign out இதோ இம்மாதத்து தோர்கலி ல் வந்திருந்ததொரு புதிரின் மீதான வெளிச்சம் :
அப்பா தோர்கலும், மகனார் ஜோலனும் மாயக் கதவுகளின் காவலர்களைத் தாண்டிய கையோடு முன்னேற வேண்டுமென்ற தருணத்தில் ஒரு புதிர் போடப்படுகிறது! "தந்தைக்கொரு தியாகம்'' ஆல்பத்தினைப் படித்திருக்கும் நண்பர்கள் இதைக் கவனித்திருக்கக் கூடும்! அந்தப் புதிரை ஜோலன் காஷுவலாகக் கையாண்டு, தாண்டிப் போக, தோர்கல் நம்மைப் போலவே பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருக்கிறார்! So சொல்லுங்க மக்களே - ஜோலன் அந்தக் காவலாளியிடம் என்ன கேட்டிருப்பான்?
இங்கே பொதுவெளியில் போட்டு உடைத்துவிட்டால், பின்வரும் நண்பர்களுக்கு சுவாரஸ்யம் மட்டுப்பட்டு விடும் என்பதால் - நமது வாட்சப் கம்யூனிட்டி நம்பருக்கு (96000 61755) தனிச்செய்தியில் உங்கள் பெயர்களோடு அனுப்புங்களேன் ப்ளீஸ்? சரியான விடையினை எழுதியனுப்பும் முதல் மூன்று நண்பர்களுக்கு தலா அரைக்கிலோ அல்வா பார்சல்ல்ல்ல்ல்!!
I repeat - இதற்கான பதில்களை இங்கேயோ, வாட்சப் கம்யூனிட்டி க்ரூப்பிலோ பொதுவில் பகிர்ந்திட வேணாம்- ப்ளீஸ்! தனிச்செய்தியில் மட்டுமே!
Bye all...மார்ட்டின் கூப்பிடுவதால் நடையைக் கட்டுகிறேன்! See you around! Have a Super weekend!
பின்குறிப்பு: "சாம்பலின் சங்கீதம்'' முன்பதிவுகள் 130-ஐ தொட்டாச்சு!!! இன்னமும் இணைந்திரா நண்பர்கள் give it some thought ப்ளீஸ்?!
ஆஜர்
ReplyDeleteசூப்பர் தோழரே
Deleteவாழ்த்துகள்
🙏🙏🙏
Deleteவாழ்த்துக்கள் சத்யா
Deleteநன்றி நண்பரே
Deleteவணக்கம்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteMe in🥰😘👍
ReplyDeleteHi
ReplyDeleteவந்துட்டேன்....
ReplyDeleteநானும்.
ReplyDeleteவணக்கங்கள்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவெய்ன் ஷெல்டன் ஏன் விற்பனையில் சுணங்கினார் என்பது இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது இவரது கதைகள் ஒன்று கூட சோடை போகவில்லை என்பது என் கருத்து
ReplyDeleteடெக்ஸ்...அட்டைப்படம் வழக்கம் போல் அசத்தலோ அசத்தல்..சார்...சூப்பர்...
ReplyDeleteஷெல்டன் எனக்கும் புரியாத புதிரே..
ReplyDeleteஅவரின் ஒவ்வொரு சாகஸமும் சரவெடி தான்...எனக்கு மிக மிக பிடித்த நாயகர்களில் அவரும் ஒருவர்...ஆனால் ஏன் தேங்குகிறார் என நானுமே குழம்புகிறேன் சார்...:-(
தலீவரே....?? வாட் இஷ் திஷ்? இந்நேரத்துக்கு உலாற்றிக்கிட்டு?
Deleteஉளறிக்கிட்டு.. 😄😄
Deleteஎன்று படித்துவிட்டேன் சார்.. 🫣🫣🏃♂️🏃♂️🏃♂️
வணக்கம் நண்பர்களே...இங்கே நெதர்லாண்ட்ஸில் நான், மார்ச்சின் மத்தியில், 6 டிகிரி குளிரின் மத்தியில்....
ReplyDelete10 சார்..வணக்கம் 🙏 😘🥰
Deleteநாங்க இங்க தமிழ்நாட்டுல 100° க்கு பக்கத்தில வெந்துக்கிட்டு.. 🫣🫣🫣
நம்ம வெய்யிலே சொர்க்கம் சார்..
Deleteஉள்ளேன் ஐயா
ReplyDeleteHi to all
ReplyDeleteவணக்கம் உறவுகளே.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ReplyDeleteஆகா சிவகாசியிலும் அல்வா பேமஸ் போல. எனக்கு இதுவரை தெரியாமல் போச்சே சார்
ReplyDeleteநாமளே இந்த கிண்டு கிண்டுறப்போ இக்கட உள்ள அல்வா மாஸ்டர்கள் விட்றவா போறாங்க சார்?
Deleteசிவகாசி அல்வா நான் சாப்பிட்டதே இல்லை சார்.. 😄😄
Deleteவணக்கமுங்க
ReplyDeleteஇன்றளவும் எனக்கொரு புரியாத புதிர்- ஷெல்டன் தற்போதிருக்கும் லெவலிலிருந்து உசக்கே போகாதது ஏன் என்பது தான்! //
ReplyDeleteஅதிரடிகள் வருடத்துக்கு 2 - 3 தொடர்ந்திருந்தால் ஹிட்டடிச்சிருப்பார் .. என்ன நீங்க யோசித்து யோசித்து வருசம் 1 போட்டதன் விளைவாக இருக்குமோ என்று ஒரு யோசனை
*டாங்கோ வருஷத்துக்கு எத்தனை?
Delete*ரிப்போர்ட்டர் ஜானி?
*ரூபின்?
*அட, லக்கி லூக்?
*மார்ட்டின்?
XIII?
தங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை எந்த செக்ஷன் உங்களுக்கு சரியோ அதற்க்கான பதிலையும் சொல்லிட்டீங்க டியர் எடி ..
Delete😉😉
வேய்ன் ஷெல்டன் கடைசியாக வந்த நான்கு கதைகள் எனக்கு பிடிக்கவில்லை
ReplyDeleteIt did not have the magic of previous shelton adventures in my point of view
Previous ஷெல்டன் கதைகளுமே பீப்பீ ஊதுவது ஏனென்றாவது சொல்லுங்களேன்?
DeleteSorry sir...சரியான காரணங்கள் புலப்படவில்லை
Deleteடெக்ஸ் அட்டைப்படம் அருமை
ReplyDeleteஎழுத்துருவ ஆக்கங்கள் மிக மிக அருமை
டெக்ஸ் அட்டைப்படம் செம்மையாக உள்ளது....எழுத்துரு ஆக்கங்கள் எனக்கு பெரிதாக கவரவில்லை 😢
ReplyDeleteநம்ம ஜகத் தான் இதுவுமே!
Deleteநம்ப கார்த்தி க்கு எக்ஸாம் மசக்கை சார்.. 😄😄😄
Deleteஎல்லாமே கசக்குது 😄
புளிக்குது.. 🫣🫣
மங்கா வேணுமாம் சார்.. 🫣🫣🫣🏃♂️🏃♂️🏃♂️
ஜம்பிங் தலீவரே.. 🤣🤣🤣🤣🤣🤣🤣
Delete😂😂😂😂😂
Deleteஅன்னைக்கு பக்கங்கள் அதிகரித்தும் விலைய உயர்த்தலையே சார்...உங்களை எங்க வைப்பதுன்னு யோசித்தது அதிகம்....ஷெல்டன் அட்டைப்படம் தெறிக்க விட வண்ணங்கள் அதகளப் படுத்த ஷெல்டன் தோல்விக்கு காரணம் ஃஸ்மர்ஃப்போட இதுவுமொன்னு ...தெரியாது...2013 கம்பேக்ல நமக்கு இருகண்கள் லார்கோ வும் ஷெல்டனும் என்னைப் பொருத்த வரை இதயம் தொட்ட தோர்கள் இதயமாய்...டெக்ஸ் தானேன்னு அலட்சியமா வந்தா அட்டைப்படம் எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிட அட்டையும் நான்தான் டாப்புனு கெத்தா நிக்க...உள் பக்கங்கள் அடேயப்பா ...தலையில் லா போராளி ஓவியத்தை நிறுத்த...இதுக்கெல்லாம் கலரடிக்க மாட்டீங்களா சார்...
ReplyDeleteநம்ம மார்ட்டின் ஓட சீக்கிரம் வாங்க....
குண்டு நீங்க போடுங்க போடாட்டி போங்க..1200...1500 கங்கு தெறிக்க விடனும்...அம்புட்டுத்தே
26th
ReplyDeleteநமது கடல் கடந்த ஓவியை புதிதாய் உருவாக்கியுள்ள அட்டைப்படத்தின் முதல் பார்வை!
ReplyDelete////
முன்னட்டை டெக்ஸ் ரொம்ப நாள் கழித்து அருமையான போஸ்ல முன்புற அட்டையில் வருகிறார் ..அவரின் பின்புலம் லைட் ஷேடா இருந்தா இந்த அட்டை கெத்தா இருக்கும் .. இருட்டில வந்து மின்னல் வெளிச்சத்தில நீங்க வாட்ஸப்பில் போட்ட அந்த கெத்தான டெக்ஸ் இதில இல்லைங்க டியர் எடி .. கோச்சுக்காதீங்க என் மனசில பட்டதை சொன்னேன்
கதையின் பெயருக்கு மேல் வருகிற கோடு (லைன்) கூட வேணாமே டியர் எடி
Deleteண்ணா... அந்த file தான் இது.... இந்த file தான் அது!
Deleteஅது போல இது இல்லன்னு நான் சரி பார்த்த பின்னே சொன்னேங்க டியர் எடி
Deleteலார்கோவுக்கு இணையாக வேய்ன் ஷெல்டனுடைய கதைகளும் இருந்தன தான். ஆனால் ஏன் இந்த சுணக்கம் என்பது புரியாத புதிர் தான்! திரு டெக்ஸ் சம்பத் சொன்னதைப் போல அதிகமான கதைகள் வராமல் இருப்பதே அதற்கு காரணமாக இருக்குமா? ஆனால் உலகம் சுற்றும் டேங்கோ கதைகள் தெறி ஹிட் ஆனதே? ஹானஸ்ட்டி ஹானஸ்ட்டாக இல்லாமல் போனது காரணமாக இருக்குமோ?
ReplyDeleteடேங்கோ தொடரில் இல்லாத கோல்மால்களா சார்? Just one of those inexplicable things 🤕🤕
Deleteசார், சாம்பலின் சங்கீதத்தை கூட கொஞ்சம் லேட்டாக வைத்துக் கொள்ளலாம். மே மாத பட்ஜெட்டை குறைத்து விடாதீர்கள் ப்ளீஸ்.
ReplyDeleteஅட்லீஸ்ட் 1500..
அடடே சூப்பர்.எனது கருத்தும் இதுவே.
Deleteசூடா அறிவிச்சிட்டு பின் வாங்கினா எடிக்குத்தான் அவமானமா இருக்கும் நண்பர்களே கவர் போக்கில போவோம் .. சிலதை எடுத்து சொல்வோம் ..
DeleteCorrect சம்பத்
Deleteஅல்வா வா????
ReplyDeleteஎம்புட்டு நாளுக்கு தான் ரவுண்டு பன் சார்? 110...120 ன்னு முன்னேற புதுப் புது மார்க்கங்கள் தேட வாணாமா?
Deleteஅசத்துங்க சார்.
Delete///எம்புட்டு நாளுக்கு தான் ரவுண்டு பன் சார்? 110...120 ன்னு முன்னேற புதுப் புது மார்க்கங்கள் தேட வாணாமா?///
Deleteகிர்ர்ர்.. 😼
உங்களுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா கிடைக்க ஏற்பாடு செய்திருக்கோம் இளவரசே
DeleteAt the moment :ரூ.700-க்கு திட்டமிடல் ரெடி..!
ReplyDelete1000 க்ளாப்ஸ் ..டியர் எடி
.( 1200 - 1500 ) எல்லாருஞைய மொபைலிலும் இரண்டு சிம் உண்டு என்பதை கவனத்தில் கொள்க ( நானும் 2 சிம்மிலும் உங்களுடனே பேசி வருகிறேன் .. ஆனால் இரண்டு முறை ஓட்டு போட்டதில்லை )
இருந்தும் உங்க முடிவுக்கு தலை வணங்குகிறேன்
மேற்கொண்டு எவ்வளவுக்குத் திட்டமிடலாம் என்பீர்கள் folks?
ReplyDelete/////
1000 ரூபாய் சரியாக இருக்கும் என்பது என் மற்றும் சில ( வாட்ஸப் ) நண்பர்களின் கருத்தும்கூட
நரை மீசை வைத்த அடுத்த வீட்டு அங்கிள் லுக்கில் ஷெல்டன் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம்...! :-)
ReplyDeleteSago. 😉😉
Deleteஎனக்கென்னமோ அப்டி தான் இருக்குமென்ற பீலிங்கும் 🤕🤕
Deleteஅப்ப ஷெல்டன் மீசைக்கு கருப்பு மைய தடவுங்க சார்
Deleteவந்துட்டேன்
ReplyDeleteஅல்வா கிலோ கணக்கிலே வாங்கணும் போலிருக்கே? 🤔🤔
ReplyDeleteபதில்கள் குவிந்து வருகின்றன 🤔🤔
Googleலை நம்பினோர் கைவிடப்படார்
Deleteமுதல் 3 பதில்கள் தானே சார்.
Deleteஇதே பதிலை communityயில் கேட்டுவிட்டு இங்கே வந்தால்
Deleteஅனைவருக்கும் வணக்கம்
ReplyDelete@Edi Sir.. 😘🫣
ReplyDelete3 புக் -Rs. 700+கூரியர்
6 புக் -Rs. 1200+கூரியர் free
8 புக் -Rs. 1500+Courier free+gift
இப்படி மூணு விதமாக தரலாம் சார்.. 👍😘🥰
மூணு விதமோ, நாலு விதமோ - அவற்றைத் தயாரிக்க வேண்டியவன் ஒருத்தன் தானே ஜம்பிங் தல? அதையும் சித்தே கருத்தில் கொள்ளணுமில்லியா?
Deleteஅடுத்த மாதம் வரவிருக்கும் 3 கதைகளின் தலைப்பும் "சா" வென்று ஆரம்பிக்கிறது ரொம்ப புதுசா இருக்கிறது.
ReplyDeleteஅடடே! ஆமாம் ஜி 😃👍
Delete👌👌👌
Delete//ஷெல்டன். ..... //ஹானஸ்டி ஹானஸ்டாக இல்லாததும் ஒரு காரணம்// .நாகராஜ் சேதுபதி சார்கூறுவதுபோல்.நம்பளை பொறுத்தவரைஹீரோ கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருந்தாலும் ஏதோ கொஞ்சம் ஏத்துக்கறோம் .ஆனாலும் ஹீரோயின்ஹானஸ்டாக இருக்கோணும் . அது ஹானஸ்டியாவே இருந்தாலும்.இளவரசியே இந்த பிரச்சனையை தாண்டி வர எவ்ளோ போராட வேண்டி இருக்குது
ReplyDelete1200-1500
ReplyDeleteஇந்த மாத விளம்பரங்களை பார்த்ததுமே புரிந்து விட்டது அடுத்தமாசம் "Light Reading" மாசம் என,
ReplyDelete*மே மாதம் வட்டியும், முதலுமாய் சுளுக்கெடுக்கத் தயாராக இருப்பதால்*- ஏப்ரலுக்கும் சேர்த்து மே மாதம் ஃபுல் மீல்ஸ் கலந்து கட்டிடலாம்.
"சாய்கான் புதையல் " முன்னட்டையை விட பின்னட்டை "கதை பற்றிய தங்கள் முன்னுரைக்கு ஏற்ப எதிர்பார்க்க வைக்கிறது. படித்துவிட்டு நம்ம நண்பர்கள் போடும் தெறி விமர்சனங்களின் பலனாக, நம்ம "கார்த்தி பையன்" மாதிரியான காமிக்ஸ் ஆர்வலர்களில் ஒரு 4 பேராவது முந்தைய ஷெல்டன் இதழ்களை தேடி ஓடினால் மகிழ்ச்சியே.
"ஜூஜூலிப்பா" ஆஹா- இந்த வார்த்தையை ரெம்ப வருடங்களுக்கு பின் இங்க கேக்கறப்ப, "வியட்நாம் காலனி" திரைப்படத்தில் பிரபுவை கொஞ்சும் வினிதா ஞாபகத்துக்கு வருகிறார்.அப்ப அந்தளவுக்கு குதூகலமாக ஷெல்டன் இருப்பாரெனில் அடுத்த மாதத்தின் முதல் வாசிப்பு நம்ம ஷெல்டன் தான்.
டெக்ஸ்ன் அட்டைப்பட பின்னணி கலரிங் புத்தகமா பாக்கறப்ப இன்னும் பொலிவுடன் இருக்கும்.
சித்திரங்களும் இந்த முறை கூடுதல் பொலிவு.
//இனிவரும் நாட்களில் இது போலான சிங்கிள் ஸ்கூப் ஐஸ்க்ரீம்களைத் தான் பரிமாறணுமோ??//
"படிக்க அவகாசமில்லை" என்பவர்களை விட, "படிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு" முன்னுரிமை தந்து,
மாதம் 500 அ 600 பக்கங்களுக்கு
புத்தகங்கள் தந்தால் படிக்க நாங்க ரெடி.❤️👍
ஏற்கனவே மார்ட்டின்னா பலர் தெறிச்சு ஓடறாங்க,
//மர்ம மனிதர் ரொம்பச் சோதிக்காமல் இருந்தாரெனில்//
இப்பவே மக்கா வவுத்துல பீதிய கெளப்பறீங்களே சார்.😄😄.
போடுங்க சார் பாத்துக்கலாம்...👍.
//ஆன்லைன் மேளா மேற்கொண்டு எவ்வளவுக்குத் திட்டமிடலாம் என்பீர்கள் folks?//
1000 அல்லது அதுக்கு மேல் 100, 200 என 1200 ஓகேதான்.
"சாம்பலின் சங்கீதம்" 130👌👏👏👏👏👏. மகிழ்ச்சிங்க சார் மகிழ்ச்சி ❤️.
ஜூஜூலிப்பா!!
Deleteஇதுக்கு தான் ஒரு பெசலிஸ்ட் வேணும்னு சொல்றது!!
😌❤️😌
Deleteஜூஜூலிப்பா!!
Deleteஜூஜூலிப்பா!!
ஜூஜூலிப்பா!!
ஜூஜூலிப்பா!!
ஷெல்டன் நல்ல தொடர் தான். விறுவிறுப்பான தொடர். அப்போது குண்டு புக் ஆர்வத்தில் இருந்த போது, இந்த கதை சீக்கிரம் முடிந்து விடுவதாக தோன்றியிருக்கலாம். தற்போதைய crispy readingக்கு, சரியாக வரலாம்.
ReplyDeleteஇரண்டாவது,ஒரு ஆக்சன் கதைக்கு, tempo மெதுவாக ஆரம்பித்து, விறுவிறுப்பாக போக வேண்டும். இந்த கதை எடுத்த உடனே பரபரப்பாக ஆரம்பித்து ஒரு knot வரவேண்டிய இடத்தில் முடிந்து விடுவதாக இருக்கலாம்.
But, I love shelton stories... it may fit now for crispy reading sir.
காதோரம் நரைத்த இவர், ஹானஸ்டியுடன் சுற்றுவது அதே வயதொத்த நமது நண்பர்களுக்கு பொறாமையாக கூட இருந்திருக்கலாம் சார்...
ReplyDeleteஎனக்கென்னமோ இதுதான் மிகச்சரியான காரணமாக தோன்றுகிறது😁😁😁😝
Deleteபொறாம..... 🤕🤕🤕
Delete😂😂😂😂
DeleteHi..
ReplyDeleteஷெல்டனின் தேக்கம் ஹானஸ்டியாய் எனக்கு புரியவில்லை..
ReplyDelete🤣🤣🤣🤣
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteடெக்ஸ் அட்டைப்படத்தின் பின்னட்டை டிசைனும் செம
ReplyDeleteSHELDON IS AT PAR WITH LARGO .. EVEN BETTER THAN SOME OF OUR OTHER HEROES .. REALLY DONT KNOW D REASON SIR ..
ReplyDeleteSINGLE SHOT TEX NEVER INTERESTED ME .. DOUBLE OR TRIPLE ALBUMS BETTER SUITED FOR TEX ..
// At the moment :ரூ.700-க்கு திட்டமிடல் ரெடி..!
ReplyDeleteமேற்கொண்டு எவ்வளவுக்குத் திட்டமிடலாம் என்பீர்கள் folks?
//
Another 500
இந்த வருடம் குண்டு புத்தகம் 850 விலையில் வரவுள்ள நிலையில் ஆ பு மே 1200 விலையில் வந்தால் அனைவராலும் வாங்க முடியும் சார்.
Deleteஇதில் சுட்டி லக்கி அல்லது ஸ்மர்ப் அல்லது ரின் டின் கேன் கதையில் ஏதாவது ஒன்று வர வாய்ப்பு உள்ளதா சார்
ReplyDeleteஷெல்டன் மார்டன் நேர்கோட்டு கதை, எனக்கும் மிகவும் பிடிக்கும். ஒரு வேளை அந்த ஒரே மாதிரி டெம்ப்ளேட் நமக்கு பிடிக்கவில்லையோ?
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteWayne Sheldon and Largo came together. And the first issue of both were read together and compared. Largo became 10 times better in action and stories but Wayne Sheldon stuck in a same template. Going abroad and rescuing friend or something.
ReplyDeleteAfter 10 years, the tastes changed and Wayne Sheldon became boring now. Even Largo don't have a better story to tell. They both are as boring as new XIII issues. The novelty is gone.
Unfair to compare Largo & Wayne Shelton sir....
DeleteLargo has a distinct advantage with 100 pages to narrate each story. Shelton had 46 most of the times!
130...சூப்பர்.. வாழ்த்துக்கள் sir...
ReplyDeleteஜோலனின் கேள்வி... ரொம்ப எளிமை sir... 😄😄❤️👍... அப்புறம்
சொல்றேன்... அந்த நம்பர்ல... 👍
அங்கே அல்வா பேக் பண்ணியாச்சு சார் 🤕🤕
Deleteவர வர அல்வாவும் கிண்ட ஆரம்பிச்சாச்சி சார்...
Deleteஜோலனின் புதிர் கேள்வி :
ReplyDelete======================
ஜோலன் அந்தக் காவலாளியிடம் என்ன கேட்டிருப்பான்?
*“ஐயா, உங்களின் சக காவலாளியிடம் மிட்கார்ட் செல்லத் திறக்க வேண்டிய கதவு எது என்று கேட்டால், அவர் எந்த கதவினை காட்டுவார் ?”*
இது தான் ஜோலனின் கேள்வி..
எந்த கதவு சுட்டிக்காட்டப்படுகின்றதோ அதனை விட்டுவிட்டு மற்றொரு கதவின் வழியே நுழைந்தால் மிட்கார்ட் சென்றுவிடலாம்.
=====================
சரியான விடையை ஏகப்பட்டோர் எழுதி அனுப்பி இருப்பதால் - முதல் மூவருக்குப் பதிலாய் முதல் 10 பேருக்கு தலா கால் கிலோ அல்வா அனுப்பத் தீர்மானம் 😁😁!
அந்த அல்வா பார்ட்டீஸ் லிஸ்ட் இதோ :
**1.கார்த்திக்
2.T. S. Murugesh, திருச்சி
3.சுரேஷ், திருவண்ணாமலை
4.M. செந்தில் குமார், கோபி.
5.V. குமார் சேலம்
6.ரம்யா கடல்யாழ், கோவை
7.Ms. விஜயலக்ஷ்மி, பெங்களூரு.
8.சிவா, சென்னை
9.இயவரசர், அந்தப்புரத்துக்கு அருகே.
10.இளவிஜய், சென்னை* .
*
நாளை கூரியரில் அனுப்பிடும் பொருட்டு - உங்களின் முகவரிஸ் ப்ளீஸ் லேடீஸ் & ஜென்டில்மென்?
Happy to see my name in top 3
Deleteபசையான,இனிப்பான வாழ்த்துகள்...
Deleteபாராட்டுக்கள் நண்பர்களே
DeleteSaa Sa booking by 25th sir ! Have ordered the English copy now.
ReplyDelete// இம்முறை "சாபங்கள் சாவதில்லை!'' என்று முழுங்க நம்மவர்கள் காத்துள்ளனர்! " // ஓவியங்கள் அருமை,முன் அட்டைப்படம் செம கெத்து...
ReplyDelete// வியட்நாமின் ஆகப் பெரிய துறைமுக நகரின் அந்நாட்களது பெயர் தான் சாய்கான்! //
ReplyDeleteபரபரப்புத் திரியை பற்றவைக்கும் ஷெல்டனுக்காக வெயிட்டிங்...
// 2025-ன் yet another டெக்ஸ் ஹிட் லோடிங் என்பேன்! //
ReplyDeleteகண்டிப்பாக,அதில் சந்தேகம் ஏதுமில்லை...
// ஏப்ரலின் மூன்றாவது இதழான மார்ட்டினின் "சான்டா க்ளாஸைப் பார்த்தேன்' //
ReplyDeleteஅட மார்ட்டின் வர்றாரு,சூப்பரு...
// At the moment :ரூ.700-க்கு திட்டமிடல் ரெடி..!
ReplyDeleteமேற்கொண்டு எவ்வளவுக்குத் திட்டமிடலாம் என்பீர்கள் folks? //
1200 முதல் 1500 வரை எனில்,தாரளமாய் 800 ரூபாய் சேர்த்துக் கொள்ளலாம் சார்,அதிகமாய் தெரிந்தால் 799 ரூபாய் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம் சார்...
அப்படி சொல்லுங்க அண்ணா
Deleteஅல்வா பரிசு பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete109வது
ReplyDeleteபரிசு பெற்ற நண்பர்களுக்கு (அல்வா)வாழ்த்துக்கள்.
ReplyDelete