Powered By Blogger

Monday, August 15, 2022

வந்தார்கள்...வென்றார்கள்..!

 நண்பர்களே,

வணக்கம். அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !! பிள்ளைகள் பள்ளிகளிலிருந்து பத்திரமாய்க் கொண்டு வந்திருக்கக்கூடிய மிட்டாய்களை லவட்டி வாயில் போட்டபடிக்கே செல்லை நொண்டிக் கொண்டிருக்கக்கூடிய இந்த விடுமுறைப் பொழுதினை இன்னும் ஜாலியானதொரு வேளையாக்கிட இதோ உங்களுக்கென சில கேள்விகளும்...அறிவிப்புகளும்...! 

கேள்விகளோடு கச்சேரியினை ஆரம்பிப்போமா ? இயன்றமட்டிலும் இவற்றிற்கு பதிலளிக்க அனைவருமே நேரம் எடுத்துக் கொண்டால் நிரம்ப மகிழ்வேன் - simply becos உங்களின் பதில்களே காத்திருக்கும் 2023-ன் நமது வாசிப்பு அனுபவங்களுக்கு உரம் சேர்த்திடவுள்ளன !! So here goes :

கேள்வி 1 .பழசா ? புதுசா ? என்ற கே.பி.சுந்தராம்பாள் காலத்துக் கேள்வி ஒவ்வொரு காலகட்டத்திலும் மண்டையை உசத்தியிருப்பதும், இயன்றமட்டுக்கு "புதுசே ஜெயம் நோக்கிய பாதை !!"  என்று சாதித்தபடிக்கே நகர்ந்திட நான் முற்படுவதிலும் இரகசியங்களே இல்லை ! ஆனால்...ஆனால்...நமது இரண்டாவது இன்னிங்சின் முதல் தசாப்தம் பூர்த்தியாகியிடவுள்ள வேளைதனில் ஒரு clearcut pattern பதிவாகி இருப்பதை மறுக்கவே இயலாது ! 

2012 துவக்கம் முதல் இப்போது வரைக்கும் தோராயமாய் 430 புக்ஸுக்கு அருகாமையில் வெளியிட்டிருப்போம் என்பது ஒரு உருட்டுப்பொதிக் கணக்கு ! (முத்து ; லயன் ; சன்ஷைன் ; ஜம்போ ; லயன் கிராபிக் நாவல் ; லயன் லைப்ரரி) இவற்றுள் நம்மிடம் கிட்டத்தட்ட 65 சதவிகிதம் இப்போதும் ஸ்டாக்கில் உள்ளன ! காலியாகியுள்ள புக்ஸ் எவை ? சூப்பர் ஹிட் அடித்துள்ள புக்ஸ் எவை ? என்று மேலோட்டமாய் ஒரு பரிசீலனை செய்தால் கிட்டிடும் ரிஸல்ட்ஸ் ரொம்பவே சுவாரஸ்யம் !! சூப்பர் ஹிட்ஸ் பட்டியலொன்று போடுவதாயின் இதோ - இதுபோல் இருந்திடும் :

**NBS 2013

**LMS 2014 

**இரத்தப் படலம் வண்ணத்தொகுப்பு(கள்)

**மின்னும் மரணம் (வண்ணத்தொகுப்பு)

**இரும்புக்கை மாயாவி - ALL BOOKS 

**'தல' டெக்ஸ் வில்லர் - in particular - டைனமைட் ஸ்பெஷல் ; சர்வமும் நானே ; லயன் 250 ; தீபாவளி with டெக்ஸ் ; கார்சனின் கடந்த காலம் ; நிலவொளியில் நரபலி etc etc   

**ஒல்லியார் லக்கி லூக் - ALL BOOKS 

**கழுகுமலை கோட்டை - பாக்கெட் சைஸ் + கலர் 

**வேதாளர் ஸ்பெஷல் - 1 

**ரிப் கிர்பி ஸ்பெஷல் - 1 

**சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல் - 1 

**நிஜங்களின் நிசப்தம் (கிராபிக் நாவல்)

Of course - இந்தப் பட்டியலில் சிலபல விடுதல்கள் இருக்கலாம் தான் ; இந்தப் பதிவை டைப்பிடிக்கும் நொடியினில் எனக்கு மண்டைக்குள் உலாற்றிய பெயர்கள் மாத்திரமே மேலுள்ளவை ! And இவை தவிர்த்த நூற்றுக்கணக்கான அட்டகாச இதழ்களும் உண்டு தான் - லார்கோவின் prime books ; தோர்கலின் மறக்கவியலா இதழ்கள் ; மா துஜே ஸலாம் ; பிரிவோம்..சந்திப்போம்...போன்ற ஜம்போ one shots ; பவுன்சர் ;  ட்யுராங்கோ போன்ற cult classics ;  மார்ட்டினின் "மெல்லத் திறந்தது கதவு ; ARS MAGNA ; கென்யா - போல !! ஆனால் "அடிபிடி அதகள விற்பனை" என்ற அடையாளங்களை அவற்றிற்கு வழங்கிட இயலாது தான் !! So "வந்தார்கள்...வென்றார்கள்" என்ற லிஸ்டுக்குள் புகுந்திருக்கும் புக்சின் பெரும்பான்மை - மறுபதிப்புகளே ; அல்லது டெக்ஸ் & லக்கி என்ற 35 ஆண்டுகால ஜாம்பவான்களின் ஆக்கங்களே !! 

இந்தப் பத்தாண்டுகளில் நாம் சந்தித்துள்ள புது நாயக/ நாயகியரின் பட்டியலை என்றைக்கேனும் ஒரு வாசக சந்திப்பு தினத்தினில் எழுதிப்பார்க்க முனைந்தால், நிச்சயமாய் மிரட்சி மேலோங்கும் தான் - for the sheer numbers & varieties !! பவுன்சரை ரசிக்கின்றோம் ; ரூபினை சிலாகிக்கின்றோம் ; ட்யுராங்கோவை வரவேற்கின்றோம் தான் .....ஆனால் ....ஆனால்...டிரவுசர் போட்ட நாட்களின் நாயகர்கள் ஆஜராகும் வேளைகளில் பிரவாகமெடுக்கும் அந்த வேகத்தை பார்த்திட முடிவதில்லையே ? 

நடப்பாண்டே இதற்கொரு prime example : முத்துவின் ஐம்பதாவது இதழுக்கென கிட்டத்தட்ட 4 மாதங்கள் உழைத்தோம் - ஒரு வண்டி புதுக்கதைகளோடும், நாயகர்களோடும் ! பிரமாதமாய் விற்பனை கண்டது தான் ; சிறப்பாய் வரவேற்கவும்பட்டது தான் - ஆனால் ஒரு சோப்புசொக்காய் போட்ட முகமூடிக்காரர் "வேதாளர்" என்ற பெயருடன் black & white-ல் வந்தார் - அரைநூற்றாண்டுக்கு முன்பான க்ளாஸிக் கதைகளோடு .....அவரது வதனத்தைப் பார்த்த நொடியில் நீங்கள் ஆரவாரமாய் சிதறவிட்ட சில்லறைகளை, ஆல்பாவும் , சிஸ்கோவும் ; டேங்கோவும் 'ஆ'வென்று பராக்குத் தான் பார்த்தார்கள் !! இதோ - இந்த மாதத்தினில் கூட SMASHING 70 s க்கு சந்தா கட்டிடும் நண்பர்களுக்கு பஞ்சமே இல்லை !! 'சிவனே' என்று முத்துவின் ஐம்பதாவது ஆண்டுமலருக்கு வேதாளரையும், ரிப்பையும், காரிகனையும் ஒன்றிணைத்தொரு 600 பக்க மெகா ஆல்பத்தை வெளியிட்டிருந்தால் விசில்கள் விண்ணைத் தொட்டிருக்குமோ ? 

I agree, SMASHING 70s தயாரிப்புத் தரம் சூப்பர் தான் ; மெகா சைசில் வேதாளரும், ரிப் கிர்பியும் மிளிர்கிறார்கள் தான் - ஆனால் நயன்தாராவையும், சமந்தாவையும் நேரில் பார்த்த உற்சாகங்கள் இக்கட பதிவாவது unmistakeably clear !! அதே நேரத்தினில் கிஞ்சித்தும் தயாரிப்புத் தரங்களில் சோடை போயிரா FFS-க்கு நம்ம லெஜெண்டார் ரேஞ்சுக்கே வரவேற்பெனும் போது உங்களின் உள்ளக்கிடக்கு பிரிய மாட்டேன்கி !! வாசகப் பெருந்தகையான நீவிர் சொல்ல வரும் மேட்டர் தான் இன்னா நைனாஸ் ? கொயப்பக் கதைகள் படிக்க நேரமில்லை என்கிறீர்களா ? பொறுமைகள் லேது என்கிறீர்களா ? சிம்பிளா , ஜிலோன்னு ஓடற வண்டி தான் சொகப்படும் என்கிறீர்களா ? கொரோனா சார்ந்த ஒரு விஷயமாய் மாத்திரமே நான் இந்த phenomenon-ஐப் பார்த்திடவில்லை - becos இந்த செமத்தியான ஹிட்ஸின் பெரும்பகுதி 2020-க்கு முன்னானவைகளே !So கொஞ்சம் புரியச் செய்யுங்களேன் ப்ளீஸ் ?

கேள்வி # 2 : சூப்பர்ஹிட் அடித்திருக்கும் இந்த வருடங்களது வேதாளர் ; ரிப் கிர்பி & சுஸ்கி-விஸ்கி இதழ்களில் நீங்கள் மெய்யாலுமே வாசித்திருக்கக்கூடியது எத்தனை சதவிகிதமாக இருக்கும் ?

  • Option A : இன்னா சகோ - முழுசையும் கர்ச்சு குடிச்சிட்டேன்லே ?
  • Option B : அது வந்து மாமூ...புல்லீங்க இஸ்கூல் போக ஆரம்பிச்சதிலேர்ந்து நேரம் சித்தே டைட்.... ஒரு பாதிக் கதைகளை படிச்சிருப்பேன் !
  • Option C : ஒரே மேகமூட்டமா இருக்கா ; its so windy ...அட்டைப்படம்லாம் மாஸ்யா...புக்கு மேக்கிங் இன்னா மெரி கீது தெர்மா ? எவ்ளோவாட்டி புரட்டி..புரட்டி படம் பாத்திருப்பேன் தெர்மா ? அது வந்து என் ஒன்னுவிட்ட அத்திம்பேர் ரிட்டையர் ஆகுறதுக்குள்ளே படிச்சி முடிச்சிடுவேன் !!

மேற்படி மூன்றுக்குள் நீங்கள் எங்கே என்பதை கூச்சமின்றிப் பகிர்ந்திடுங்களேன் ப்ளீஸ் ? வாசிப்புகளன்றி, வெறும் பீரோக்களின் அலங்காரங்களாய் நமது இதழ்கள் தொடர்வதில் எனக்குத் துளியும் ஏற்பு நஹி guys ; அதற்குப் பதிலாய் புக்சின் எண்ணிக்கைகளைக் கம்மி பண்ணிவிட்டு, உங்களுக்கு வாசிக்க உரிய அவகாசம் தந்து விட்டாவது போகலாம் !

கேள்வி # 3 : "பழசு தான் புளகாங்கிதம்" என்பதே இந்த நொடியின் flavour ஆகத் தென்பட்டு வரும் வேளையினில் - இந்தக் கோரிக்கைகளை once & for all பைசல் பண்ணிவிட்டாலென்ன ? என்றுமே தோன்றுகிறது !! கொலைப்படை ; ஜான் மாஸ்டர் ; மனித எரிமலை ; வேட்டையர் ; என்ற ரேஞ்சில் இன்னமும் யாரெல்லாம் உங்களின் கனவுகளில் கானா பாடி வருகிறார்கள் guys ? கவிஞருக்கு கொஞ்சமாய் க்ளோரோபார்ம் கொடுத்து ஓரமாய்ப் படுக்க வைத்த கையோடு உங்களின் பழசுகள் சார்ந்த wishlist ஒன்றைப் போடுங்களேன் - தம் கட்டி அவற்றினை ரெகுலர் தடங்களுக்கு பாதிப்பின்றி ; முன்பதிவு சேனலில் வெளியிடத் திட்டமிட இயலுமா என்று பார்க்கலாம் ! காயாத கானகத்தே நின்றுலாவும்.......!!! ஓஓஓஓஓ.!!

And கேள்விகள் முடிந்தன என்பதால் இதோ அறிவிப்புகள் : மாங்கு மாங்கென்று டைப்படிப்பதற்குப் பதிலாய் விளம்பரங்களில் விஷயத்தைச் சொல்லி விடுகிறேனே : அக்டோபர் துவக்கம் - காத்திருக்கும் 3 ஸ்பெஷல் வெளியீடுகளின் பட்டியல் இதோ :



அக்டோபர், நவம்பர் & டிசம்பர் என - மாத்துக்கொரு  ஸ்பெஷல் இதழ் வீதம் இவை மூன்றுமே வெளிவரவுள்ளன ! வரிசைக்கிரமம் முன்னே, பின்னே மாறிடலாம் - but இதழ்களில் மாற்றங்கள் இராது ! இவை மூன்றுமே முன்பதிவுகளுக்கான இதழ்கள் மாத்திரமே ! 

PICK ALL 3 எனில் கூரியர் கட்டணங்கள் நஹி   - ரூ.650 (தமிழகத்தினுள்) & ரூ.700 (வெளி மாநிலம்)

PICK ANY 2 எனில் - இதழ்களின் விலைகள் + ரூ.50 

PICK ANY 1 எனில், ஆன்லைன் லிஸ்டிங்கில் வாங்கிடலாமே - ப்ளீஸ் ?

கையிலுள்ள கதைகளில் ஒரு குட்டியூண்டு பகுதியினை நடப்பாண்டிலேயே இறக்கி வைக்க முனையும் இந்த முயற்சிக்கு - எப்போதும் போலவே உங்களின் ஆதரவுகளை எதிர்நோக்கியிருப்போம் !! ஒரே நேரத்தில் ஓவராய்ப் போட்டு உங்களையும், முகவர்களையும் திண்டாடச் செய்ய வேண்டாமென்ற எண்ணத்தினில் அட்டவணையினை அக்டோபர் ; நவம்பர் & டிசம்பர் என திட்டமிட்டுள்ளோம் ! முன்பதிவுகள் செய்திடவுமே அவகாசமிருக்கும் என்பதால் - hope it works well !!

ரைட்டு...கிளம்புகிறேன் guys !! இன்று மாலை நமது ஈரோட்டுப் புத்தக விழாக் குழு நண்பர்களின் முன்னெடுப்பினில் ஒரு ஆன்லைன் மீட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது ! மாலை 4-30 to 5-30 என ஒரு மணி நேரம் மாத்திரமே !! அதற்கான லிங்கை நண்பர் ஸ்டாலின் அனைவருக்கும் அனுப்பி வைப்பார் (எனக்கே இன்னும் வரலீங்கோ !!) ; கலந்து கொள்ள முயற்சியுங்களேன் ப்ளீஸ் all ? அப்பாலிக்கா அந்த ஆன்லைன் மீட்டிங்கின் போது சமீபத்தில் வந்த கென்யா இதழிலிருந்து கேள்விகளும் கேட்கப்படும் ; top மார்க்குகள் பெற்றிடும் 5 நண்பர்களுக்கு இந்த ஸ்பெஷல் முன்பதிவு இதழ்கள் மூன்றுமே நமது பரிசுகளாகிடும் ! அல்லது....மிகக் குறைவான VARIANT கவர் சகிதமாக கென்யா இதழே பரிசாகிடும் ! சாய்ஸ் வெற்றி பெறுவோரது !!


Google Meet joining info

Video call link: https://meet.google.com/spi-ffhi-bvr

So lets get cracking folks !!  Bye all...see you around !!

338 comments:

  1. வணக்கம் நண்பர்களே.

    ReplyDelete
  2. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  3. // கேள்விகளோடு கச்சேரியினை ஆரம்பிப்போமா ? //
    இதை இதைத்தான் எதிர்பார்த்தோம்...

    ReplyDelete
  4. 10க்குள்ளே நம்பர் ஒன்று சொல்வேன்.....8

    ReplyDelete
  5. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் சார்...

    ReplyDelete
  6. வணக்கம் காமிக்ஸ் சொந்தங்களே..

    ReplyDelete
  7. அடடே நான் எதிர் பார்த்த அறிவிப்பு வந்து விட்டதே இப்போதே 650 அனுப்பி விடுகிறேன். எடிட்டர் சார் வாழ்க வாழ்க வாழ்க

    ReplyDelete
  8. இம்மாதம் வந்த டெக்சின் மௌன நகரம் கதை நன்று. சித்திரங்களும் பிரமாதம். பணத்தாசை கொண்டு நகர மக்களே அநீதி செய்து உண்மையை மறைத்து விடுகின்றனர். இறுதியில் தெய்வம் நின்று கொல்லும் என்பது போன்ற க்ளைமாக்ஸ் மிக்க நன்று.

    ஸ்மாஷ் 70ஸ் வரிசையில் இம்மாதம் வந்துள்ள மாண்ட்ரேக் கதைகள் என்னை ஏனோ பெரிதும் ஈர்க்க வில்லை. மிகவும் சிரமப்பட்டு ஐந்து கதைகளை வாசித்து எடுத்து வைத்து விட்டேன். அட்டைப்படம், பிரிண்டிங் மற்றும் பைண்டிங் என புத்தக மேக்கிங் அனைத்தும் மிகவும் தரம் என்றாலும் கதை தேர்வு நிறைவில்லை என்பது என் கருத்து. மாண்ட்ரேக் வரிசையில் இன்னும் சற்று ரிசர்ச் செய்து நல்ல கதைகளை எடிட்டர் பிடித்திருக்கலாம். (ஆனால் முந்தைய இரண்டு ஸ்மாஷ் 70ஸ் இதழ்களும் அருமையான ஒன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)

    தோர்கள் வாசிக்க வில்லை.. இந்த வரிசையை அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாசித்ததால் இந்த தொடரின் மேஜிக் என்னை சரியாய் எட்ட வில்லை. ஆகையால் இந்த தொடர் முழுமையும் வாங்கிய பிறகு ஒரு பிரீ டைமில் வான் ஹாம் மேஜிக்கில் மூழ்கிட வேண்டும்.

    கைப்புள்ள ஜாக். எனக்கு சுத்தமாக ரசிக்க வில்லை.

    ஜட்ஜ் ட்ரேட். அடி தூள்.

    இம்மாத வெளியீடுகளில் மாண்ட்ரேக் தான் டாப்பாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் சுஸ்கி விஸ்கி தான் டாப் லெவலில் உள்ளனர். அடுத்து டெக்ஸ். (தோர்கள் வாசிக்க வில்லை.).

    ReplyDelete
  9. // இவை மூன்றுமே முன்பதிவுகளுக்கான இதழ்கள் மாத்திரமே ! //
    நல்ல அறிவிப்புகள்...
    மேகி கேரிஸன் இது லிஸ்ட்லயே இல்லையே...!!!

    ReplyDelete
  10. 1. Breezy Reading கதைகள் படிக்க அருமையாக உள்ளது.
    2.option -A கரைத்து குடிக்கவில்லை என்றாலும், படித்து முடித்துவிட்டேன்.
    3. Robot Archie, அலிபாபா, அதிரடிப்படை

    ReplyDelete
  11. கேள்வி 1

    எனக்கும் புரியலீங்க சார். ஆனா அந்த லிஸ்டில் நிஜங்கள் நிசப்தம் இருப்பதால், I AM HAPPY. ஏனெனில் மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் கதைகளே என் FAVOURITE.

    கேள்வி 2

    வேதாளர் முடித்து விட்டேன். 8/10
    ரிப் கிர்பி முடித்து விட்டேன் 10/10
    சுஸ்கி விஸ்கி ஒரு கதை முடித்து விட்டேன். 7/10

    கேள்வி 3

    பழசோ புதுசோ கதை விறுவிறுப்பா இருந்தா புளகாங்கிதம் சார் நான்

    ReplyDelete
    Replies
    1. // எனக்கும் புரியலீங்க சார். ஆனா அந்த லிஸ்டில் நிஜங்கள் நிசப்தம் இருப்பதால், I AM HAPPY. ஏனெனில் மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் கதைகளே என் FAVOURITE. // எனக்கும்

      Delete
  12. //கொலைப்படை ; ஜான் மாஸ்டர் ; மனித எரிமலை ; வேட்டையர் ; என்ற ரேஞ்சில் இன்னமும் யாரெல்லாம் உங்களின் கனவுகளில் கானா பாடி வருகிறார்கள் guys ?//

    சார்லி, விங் கமாண்டர் ஜார்ஜ், கிஸ்கோ கிட் இவர்களும்தான் சார்.

    ReplyDelete
  13. உங்கள் தரப்பு சிரமங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல்
    பதில்கள்

    1. ஆல்பா, டாங்கோ - பிரமாதம்
    சிஸ்கோ கவரவில்லை.

    புதிய கதைகளே நெடுநாள் பயணம் செய்ய உத்தரவாதம்.

    பழைய கதைகளை வணிக நோக்கிலும், புதிய கதைகளை ஆத்ம திருப்திக்காகவேனும் வெளியிடலாம்.

    தனிப்பட்ட முறையில்
    ஆல்பாவின் கதை >வேதாளர்+ ரிப் கிர்பி+ மாண்ட்ரேக் என்பதே என் நிலை

    2. Option B

    வேதாளர் கதைகளில் இரண்டு
    கிர்பி கதைகளில் நான்கு
    மாண்ட்ரேக் கதைகளில் நான்கு

    இன்னும் பாக்கியுள்ளன.

    தொடர்ந்து இக்கதைகளை வாசிக்க இயலவில்லை என்பதே நிஜம்.

    இம்மாதத்துக்குள் வாசிக்க முடியும் என நினைக்கிறேன்..

    3. பழைய கதைகள் எதுவும் என் லிஸ்ட்டில் இன்றைய தேதியில் இல்லை..உண்மையில் நீங்கள் கொடுத்துள்ள லிஸ்டை நினைத்தால் கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  14. // கேள்வி # 2 :வேதாளர் ; ரிப் கிர்பி & சுஸ்கி-விஸ்கி இதழ்களில் நீங்கள் மெய்யாலுமே வாசித்திருக்கக்கூடியது எத்தனை சதவிகிதமாக இருக்கும் ? //

    Option A :எல்லாமே...

    ReplyDelete
  15. இந்த பதிவை தான் நான் சனிக்கிழமை எதிர்பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. கென்யா வாசித்து ரெடியாகியிருக்கலாம்... லாஸ்ட் டைம் நியூஸ்... எப்படி பதில் சொல்வது என்றே தெரியலை...

      Delete
  16. கேள்வி 1: நிச்சயமாக புதுசும் வேண்டும் தான் சார். பழசு மனசிற்கும் பர்சிற்கும்.

    கேள்வி 2: option D. எவ்வளவு முயன்றும் smashing 70s படிக்க முடியவில்லை. அதுவும் மாண்ட்ரேக் எல்லாம்.. ஹீம். காரிகனுக்கு waiting. சிறுவயதில் என்னுடைய favourite hero. இந்த சுற்று oldies Not my cup of tea போல. ஆனால் as a collector நிச்சயமாக 60s வந்தால் வாங்குவேன். அதே சமயம் சுஸ்கி விஸ்கி மிகவும் பிடித்திருந்தது.

    கேள்வி 3: 2011 come back பிறகான புத்தகங்களே என்னிடம் இருப்பதால் அதற்கு முன்பு வந்த எந்த புத்தகம் மறுபதிப்பு என்றாலும் எனக்கு ஜாலி தான்.

    ReplyDelete
  17. நான் ஊரில் இல்லாத நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கரூர் திரும்பிய போது என் புதல்வன் நான்கு மாத புத்தகங்களையும் கண் முன்னே பரப்புகிறான்..
    விழிகள் வேதாரையும்,ரிப் கிர்பியையும் ஒரு சேரத் தேடி வாரி எடுத்து கட்டியணைத்து உச்சி முகர்கிறேன்..
    பிறகு சமீபமாய் வந்து சேர்ந்த சுஸ்கி விஸ்கியை ஆசை தீரப் பார்க்கிறேன்..
    சொர சொரப்பான அந்த குட்டியூண்டு பாக்கெட் சைஸ் அட்டைப் படம் நினைவு வந்து போனது..

    கொச்சம் கூட புராதன வாடை ஏதும் தெரியவே இல்லை..
    அட..அட..
    இத்துனை காலமும் ஏன்தான் நிலுவையில் வைத்திருந்தாரோ நம் எடிட்டர்..!

    முதல் வாசிப்பிற்கு வேதாளர்,ரிப் கிர்பி,மாண்ட்ரேக்,சுஸ்கி விஸ்கி இவர்களை தேர்வு செய்து விட்டு அடுத்ததாக விழிகள் மேய்ந்தது நம்ம தல டெக்சையும்,குட்டி தல லக்கியையுமே..!!
    ♦அடுத்த தேர்வாக தோர்கலை தெரிவு செய்து விட்டு..
    ஆல்பாவையும்,வெட்டியானையும் ஙே லென பார்க்க ஆரம்பிக்கிறேன்..

    ReplyDelete
  18. ///கேள்வி # 3 : "பழசு தான் புளகாங்கிதம்" என்பதே இந்த நொடியின் flavour ஆகத் தென்பட்டு வரும் வேளையினில் - இந்தக் கோரிக்கைகளை once & for all பைசல் பண்ணிவிட்டாலென்ன ? என்றுமே தோன்றுகிறது !! கொலைப்படை ; ஜான் மாஸ்டர் ; மனித எரிமலை ; வேட்டையர் ; என்ற ரேஞ்சில் இன்னமும் யாரெல்லாம் உங்களின் கனவுகளில் கானா பாடி வருகிறார்கள் guys ?///

    விஜயன் sir... உயிரைத் தேடியை தாங்கள் வெளியிடுவது போல Scream மற்றும் Eagle இதழ்களில் Monster என்ற பெயரில் தொடராக வந்த அங்கிள் டெர்ரி கதையை வெளியிட வேண்டுகிறேன்.

    Monster episode guide:

    Scream! issues 1-15 (episodes 1-15)
    Eagle issues 128-158 (episodes 16-46)

    ReplyDelete
    Replies
    1. ராஜ்குமார் சார் வாழ்க. Monster அங்கிள் டெர்ரி சூப்பர் choice

      Delete
    2. அடேயப்பா இவ்வளவு கதைகளா.....நானிரண்டு கதைகளை மட்டுமே அசோக் காமிக்ஸின் வாசித்துள்ளேன்....அட்டகாசமான கதை ஆங்கிள் டெர்ரியின் மர்ம பங்களா...ஏதோ பூதம்....நிச்சயமா வேண்டும்

      Delete
    3. @பொன்ராஜ் sir... அங்கிள் டெர்ரி மொத்தமே 166 பக்கங்கள் கொண்ட ஒரே கதைதான். Scream இதழ் 15 இதழ்களோடு நின்று போனது ஆகையால் அதில் வந்த தொடர்கள் அனைத்தும் முற்றுப்பெறாமலே நின்று போனது. அதில் வந்த முதல் பாகம்தான் நாம் அசோக்கில் வாசித்தது. மர்ம பங்களா மற்றும் இரத்த பூதம் என்ற தலைப்பில்.

      பின்னர் சில மாதங்களுக்கு பின் scream கதைகளில் சில Eagle இதழுக்கு மாற்றம் கண்டது. அதில் நின்று போன அங்கிள் டெர்ரி கதையும் வெளிவந்து நிறைவடைந்தது.

      நம் எடிட்டர் மனது வைத்தால் உயிரைத் தேடி போல அங்கிள் டெர்ரியை நாம் மீண்டும் காணலாம்.

      Delete
    4. அருமை...மனதை தொட்டில் கதை....ஆனால் ஆசிரியர் தயங்குகிறார்....நேரம் வரும் போது கேட்போம்

      Delete
  19. கேள்வி 1: சார் இந்த மரத்தை சுற்றி டூயட் பாடும் காலம் எல்லாம் கடந்து விட்டது சார். ஏதாவது வித்தியாசமாக படிக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

    கேள்வி 2: Option A

    கேள்வி 3: இரட்டை வேட்டையர், அதிரடிப் படை, ஜான் மாஸ்டர், விங் கமாண்டர் ஜார்ஜ், Buz சாயர், முக்கியமான ஒன்று இரும்புக்கை நார்மன். இப்போதைக்கு இவ்வளவு தான்.

    ReplyDelete
  20. The old ones are the best..in my opinion..

    ReplyDelete
  21. கேள்வி 3: wishlistஐ நண்பர்கள் குறிப்பிடுவார்கள் , தாங்கள் அதை குண்டு புத்தங்களாக வெளியிடுங்கள் sir 😊

    ReplyDelete
  22. // கேள்வி # 3 : "பழசு தான் புளகாங்கிதம்" என்பதே இந்த நொடியின் flavour ஆகத் தென்பட்டு வரும் வேளையினில் //
    பழசேதான் வேண்டுமென நான் பொதுவாக நினைப்பதில்லை,பழைய இதழ்களுக்கு பொதுவாய் ஒரு எதிர்பார்ப்பு நிறைய பேரிடம் உண்டு,அது சேகரிக்கவோ படிக்கவோ இருக்கலாம்,நான் எது வந்தாலும் ஒருமுறையாவது படித்து விடுவேன்,அப்போது தான் எனக்கு திருப்தி...
    பழசு வந்தா உடனே விக்குது,கல்லாவிற்கு உடனடி பலன்,அதனால் புத்தக விழாக்ககளை மையமாக வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பழைய பதிப்புகளை அளவான எண்ணிக்கையில் வெளியிடலாம்...

    ReplyDelete
  23. கேள்வி 1: சார் இந்த மரத்தை சுற்றி டூயட் பாடும் காலம் எல்லாம் கடந்து விட்டது சார். ஏதாவது வித்தியாசமாக படிக்கவேண்டும் என்று விரும்புகிறேன்... இது ரொம்ப நாளைக்கு நடக்கும்மான்னு தெரியலை..

    கேள்வி 2: Option A

    கேள்வி 3: என்னைப் போன்ற 2k kidsகளுக்கு இந்த பெயர்கள் எல்லாம் தெரியாது..

    ReplyDelete
  24. // கேள்வி 1 .பழசா ? புதுசா ? //
    மில்லியன் டாலர் கேள்வி சார்,இது சார்ந்த நிலைப்பாட்டில் உங்களுக்கே குழப்பம் வந்தாலும் வியப்புற ஏதுமில்லை...
    எனக்கு புதுசு நிறைய,பழசு கொஞ்சம்...
    எனினும்,புத்தக விழா விற்பனைகள் கூறும் மதிப்பீடுகள் மதில் மேல் பூனையாய் நம்மை திணற வைக்கிறது...
    பெரும்பான்மையானவர்களின் பழமைத் தேடல் வரும்காலங்களில் குறையும் என்பதைத் தாண்டி வேறு என்ன எதிர்பார்த்து விட முடியும்,மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருப்போம்...
    தற்போதைக்கு விட்டமின் "ப" முக்கியம்...
    யார் கண்டது எதிர்காலத் தேடலுக்கு அது ஊக்கமாக,உரமாக அமையலாம்...

    ReplyDelete
  25. கேள்வி 1: "காலையில பழைய சோறு ஊறுகாய் & மதியம் லெக் பீஸ் வச்ச மட்டன் பிரியானி " அது மாதிரி கிளாசிக் 30% & லையனுக்கு புதுசு 70%

    கேள்வி 2: வேதாளரில் 1 பாக்கி, ரிப் பாதி & மாண்ட்ரேக் 2 பாக்கி, சாமிக்கு வெட்டிய கிடாவவில் கொஞ்சம் கறியை எடுத்து உப்புகண்டம் போட்டு, ஒரு வருடம் வைச்சு சாப்பிடும் சுகம்...அடடா😋😋

    கேள்வி 3: பெருச்சாளி பட்டாளம், மின்னல் படை போன்ற அட்வென்சர் கதை. இவை போர் கதைகள் தான் ஆணால் கி.நா பானி கிடையாது. Note this point your honour.🙏

    ReplyDelete
    Replies
    1. ஆமா இதை விட்டு விட்டேன். மின்னல் படை அண்ட் பெருச்சாளி பட்டாளம்.

      Delete
  26. தற்போதைய வேதாளர் ரிப் கிர்பி பாணியில் க்ளாசிக் 007 கதைகளையும் வெளியிடலாம்!

    மெகா சைசில் ஜேம்ஸ் பாண்ட்..
    ஆகா..
    நெஞ்சம் கள்ளூருதே..!!!!

    ReplyDelete
    Replies
    1. அழகியைத்தேடி "மாதிரி"யான கதைகளை நீங்க பெருசா பார்க்க ஆசைப்படுறீங்க.. அதானே..அப்படியே நானும்.. ஹி..ஹி..

      Delete
  27. Okay, commenting here as I am really worried that we would be stopping the new book explorations.
    Yes, I bought S70, but only for the fear of missing out. I read Phantom fully, but had to push myself to do it. I read only two or three of the Rip special and I couldn't get past the second page of Mandrake. Suski and wiski was amazing and I read it in one shot.
    If S70 continues, I would buy it. But reading it might be an entirely different question. I support for Suski and Wiski to continue in the cartoon stream, but I doubt other oldies would strike the same chord.. it is hard to go back to Mandrake when you have read Cisco and Tango.

    This is my opinion alone and I know there are plenty of old book lovers out there. I just wish to let you know that there are people out there who love the experimentation you do over the occasional regression to old stories.

    ReplyDelete
    Replies
    1. This is the fact. // I just wish to let you know that there are people out there who love the experimentation you do over the occasional regression to old stories. //

      Delete
  28. கடத்தல் ரகசியம்

    குரங்கு தேடிய கொள்ளையர் புதையல்

    சிறை மீட்டிய சித்திரக்கதை

    இஸ்தான்புல் சதி

    திக்குத் தெரியாத தீவில்


    வெடிக்க மறந்த வெடிகுண்டு

    ஒருநாள் மாப்பிள்ளை

    யார் அந்த அதிஷ்டசாலி

    சார்லிக்கொரு சவால்

    இரத்த வாரிசு

    பேய்த் தீவு ரகசியம்

    ஒரு கைதியின் கதை

    இதெல்லாம் சேர்ந்து ஒரே இதழாய்..

    ♥♥♥♥ சார்லி ஸ்பெஷல்! ♥♥♥♥

    ReplyDelete
  29. நண்பர்கள், ஆசிரியர் மற்றும் அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 🥗💐🙏🤝

    ReplyDelete
  30. விங் கமாண்டர் ஜார்ஜ்
    முதலைப் பட்டாளம்
    இரட்டை வேட்டையர்கள்
    ஜான் மாஸ்டர்
    இரும்புக் கை நார்மன்

    எக்சட்ரா..♦எக்சட்ரா..

    ReplyDelete
  31. வேதாளர், ரிப் கிர்பி & மாண்ட்ரேக் புத்தகங்கள் முழுமையாகப் படித்து முடித்து விட்டேன்.

    சுஸ்கி விஸ்கி ஸ்பெஷல் இப்பத்தான் ஸ்டார்ட் பண்ணப் போறேன்.

    ReplyDelete
  32. பழையவைகள் ஒரு தடத்தில் பயணிக்கட்டுமே...
    யாருக்கும் பாதகமில்லாமல்..

    ReplyDelete
  33. கேள்வி 1

    சிம்பிளா , ஜிலோன்னு ஓடற வண்டி தான் சொகப்படும் என்கிறீர்களா ?
    100% yes.
    No கி.நா or No complex emotional multi layered dark & neo noir plots please

    கேள்வி # 2 :

    சூப்பர்ஹிட் அடித்திருக்கும் இந்த வருடங்களது வேதாளர் ; ரிப் கிர்பி & சுஸ்கி-விஸ்கி இதழ்களில் நீங்கள் மெய்யாலுமே வாசித்திருக்கக்கூடியது எத்தனை சதவிகிதமாக இருக்கும் ?

    Option A : இன்னா சகோ - முழுசையும் கர்ச்சு குடிச்சிட்டேன்லே ? - வேதாளர் மட்டும் கொஞ்சம் பாக்கி

    கேள்வி # 3

    ரெட்டை வேட்டையர்
    Wing கமாண்டர் ஜார்ஜ்
    Buz Sawyer
    வன ரேஞ்சர்
    More ஸ்பைடர்
    More ரிப்போர்ட்டர் ஜானி
    மொத்தத்தில் More yesteryear British Lion & Fleetway ஹீரோஸ்

    ReplyDelete
    Replies
    1. Would be happy if Sukie Wiskie replaces the slot of Woodcity folks.

      Delete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. // .. கொலைப்படை ; ஜான் மாஸ்டர் ; மனித எரிமலை ; வேட்டையர் ... //

    அத்துடன்

    லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷல்,
    2000 க்கு முன்பு வந்த அனைத்து கோடை & தீபாவளி மலர்களும்
    - முடிந்தால் அதே அட்டைகளுடன், அதே சைஸில் 😁

    அத்துடன்

    அலிபாபா ஸ்பெஷல்,
    இரும்புக்கை நார்மன் ஸ்பெஷல்,
    இரட்டை வேட்டையர் ஸ்பெஷல்,
    மார்ஷல் துப்பறியும் பிசாசுக் குரங்கு + மர்ம ஏரி

    மறுபதிப்பு வராத

    ஸ்பைடரின், "பாட்டில் பூதம்" ,
    ரிப்போர்ட்டர் ஜானியின், "இரத்தக்காட்டேரி மர்மம்",

    ஆர்ச்சி ஸ்பெஷல் - உலகப்போரில் ஆர்ச்சி, ஆர்ச்சிக்கோர் ஆர்ச்சி, யார் அந்த ஜூனியர் ஆர்ச்சி etc..,
    இரும்புக்கை மாயாவி கதைகள்.


    லிஸ்ட் தொடரும் ....😁😀

    ReplyDelete
    Replies
    1. ஆகா...எம் மனசுல உள்ளத பூராம் அப்படியே சொல்லுறீகளே....

      Delete
    2. மறக்க முடியாத கதைகள் திரும்பவும் வந்தால் நன்றாகவே இருக்கும்

      Delete
    3. Periyar 
      இதுக்கு நீர் ஒரு time machine வாங்கி பின்னாடி போய்டும் :-)

      Delete
    4. Raghavan -

      I would love to..

      டைம் மெஷினுடன் அப்படியே ஆர்ச்சியையும் என் கூட அனுப்பவும் ... 😁

      உலகப்போரை ஆர்ச்சியுடன் பாத்துட்டு வர்றேன் 😁

      Delete
  36. மினி லயனின் மூன்றாவது இதழாக வெளி வந்த புயல் வேக இரட்டையரின் கறுப்புப் பாதிரி மர்மம்..
    ஜெட் வேகக் கதை..
    வாய்ப்புள்ளதா ஆசிரியரே..??!!

    ReplyDelete
  37. கொலைப்படை

    இரும்பு மனிதன்

    சதி வலை

    முகமூடி வேதாளனின் கதை

    ஜூம்பா

    மற்றும் முத்துவில் 100க்குள் வந்த காரிகன், ரிப் கிர்பி, கில்டேர் கதைகள்

    ReplyDelete
  38. Suskie Wiskie Success was expected and both the stories were a laughing riot.

    I remember some cartoon fans started preaching others how to "enjoy" cartoon based comics, when some of the cartoon comics were not hits. They went to the extent of saying if you dont like cartoons you are probably not happy within.

    Success of Suskie Wiskie proves how wrong they were. Its content that always wins.

    ReplyDelete
  39. கேள்வி 1.
    நேர்கோட்டு கதைகள்தான் எனக்கு எப்போதுமே சிம்பிளா போட்டுத் தாக்குங்கள்.
    கேள்வி 2
    வேதாளர் ரிப் இரண்டுமே படித்து முடிச்சாச்சு. மாண்ட்ரேக் இந்த வாரம் முடித்து விடுவேன். இந்த வருடம் வெளிவந்த புத்தகங்களில் இவை தவிர டெக்ஸ் மற்றும் லக்கிலுக் மட்டுமே படித்து முடித்துள்ளேன்.
    கேள்வி 3
    இரும்பு மனிதன் கொலைப்படை சதிவலை இந்த மூன்றும் அதே சைசில் முடிந்தால் வண்ணங்களில்.
    Smashing 70 இதேபோன்று ஜான் சில்வர் கதைகள் மற்றும் ஜார்ஜ் சார்லி கதைகள் இரும்புக்கை நார்மன் முத்து காமிக்ஸில் வெளிவந்த கௌபாய் இதழ்கள் கணவாய் கொள்ளையர் சூதாடும் சீமாட்டி
    ஓவரா கேட்கிறோமோ

    ReplyDelete
    Replies
    1. நீ கலக்கு தல...
      செம்ம லிஸ்டிங்..

      Delete
    2. // ... இரும்பு மனிதன் கொலைப்படை சதிவலை இந்த மூன்றும் அதே சைசில் முடிந்தால் வண்ணங்களில். .. //

      🤩🤩 சூப்பர்... ஐயாம் வெயிட்டிங்

      Delete
  40. கேள்வி # 3 - அவ்வப்போது நீங்கள் வெளியிடும் கிளாசிக் ஸ்பெஷல் எனக்கு நிறைவைத் தருகிறது.. எனவே பழசு எனக்கு வேண்டாம் சார். இதுவரை வந்த கதைகளே போதும். ஓவராக பழசு பழசு புளித்து விடப் போகிறது.

    கேள்வி 2: ஸ்மாஸிங் 70 - இந்த கிளாசிக் கதைகளை இதுவரை படித்தது இல்லை. வேதாளர் & ரிப் கதைகளை முழுவதும் படித்து முடித்து விட்டேன். மாண்ட்ரேக் படித்து கொண்டு இருக்கிறேன், இருளின் விலை இரண்டு கோடி ஒடிக்கொண்டு இருக்கிறது. ஸ்மாஸிக் 60 & 80 கதைகள் வந்தால் அவைகளையும் படிப்பேன். எனக்கு காமிக்ஸ் என்று எந்த கதைகள் வந்தாலும் படித்து விடுவேன். கேள்வி 3ல் கிளாசிக் கதைகளை வெளியிடுவதாக இருந்தால் இது போல் சிறப்பு வெளியிடாக கொடுங்கள். அனைத்து கதைகளையும் ஒன்றாக வாங்க வேண்டும் என்ற இதே முறையை கடை பிடியுங்கள். ஸ்மாஷிங் 70 வெற்றி பெற்று வருவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இந்த முறையை தொடர்ந்து செயல் படுத்துங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கேள்வி 1: புதுசு வேண்டும் sure hit கதைகளை வெளியிடுங்கள். தயவு செய்து டாக்குமெண்டரி டைப் கதைகள் வேண்டாம். தோர்கல் போன்ற நல்ல தொடர்களை நிறுத்த வேண்டாம். விற்பனை குறைவாக உள்ளது என்றால் இதுபோன்ற கதைகளின் பிரிண்ட் ரன்னை குறைத்து அல்லது முனபதிவுக்கு என வெளியிடுங்கள்.

      Delete
  41. ஐ மேரி கேரிசன் ஸ்பெஷல் இதழ். சந்தோஷம்.

    ReplyDelete
  42. ஒற்றன் வெள்ளை நரி

    10 டாலர் நோட்டு

    நெப்போலியன் பொக்கிஷம்

    சுறாமீன் வேட்டை

    பனியில் புதைந்த ரகசியம்

    பிழைத்து வந்த பிணம்

    மரண மச்சம்

    பனியில் புதைந்த ரகசியம்

    கொரில்லா வேட்டை

    கொலைகாரக் கபாலம்

    சிங்கத்திற்கொரு சவால்

    மோசடி மன்னன்

    பெங்குவின் படலம்

    பழி வாங்கும் புகைப்படம்

    டாலர் வேட்டை

    மரண ரோஜா

    ஒரு திகில் திருமணம்

    விண்ணில் ஒரு குள்ளநரி

    விங் காமாண்டர் ஜார்ஜின் அதிரடி சரவெடி அதகளங்கள்!

    ReplyDelete
  43. ஆன் லைன் சந்திப்பு மகிழ்ச்சி. என்ஜாய் நண்பர்களே. போட்டியில் வெற்றி பெற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். போட்டியில் வெற்றி பெரும் நண்பர்களுக்கு அருமையான பரிசு.

    ReplyDelete
  44. சார் பழம் கதைகளை பொறுத்த வரை ஸ்பைடரையும்....ஆர்ச்சி மையும்.....வேதாளரையும்....மாயாவியையும் ...லாரன்சையும்.....சுஸ்கியையும் மட்டுமே தேடினேன்....அன்று ரிப் ...காரிகன் பிடிக்காது...இப்ப பிடிக்குது....வேதாளம் ரிப்பும் பாதி படிச்சாச்சு....நேரம் போது வில்லை....ஆனாலும் ஒரே நாளில் பல கதைகளை படித்து விடுவேன் தாகத்தில்....கதைகளை குறைக்க வேண்டாம்

    ReplyDelete
  45. டெக்ஸ்....லக்கி போன்ற கதைகளை தனித் இடத்திலும்.....கென்யா போன்ற சிறந்த கதைகளை அளவான எண்ணிக்கையிலும் விடலாமே....

    ReplyDelete
  46. Pack all three - பணம் அனுப்பி விட்டேன் சார்.

    ReplyDelete
  47. லார்கோவின் prime books ; தோர்கலின் மறக்கவியலா இதழ்கள் ; மா துஜே ஸலாம் ; பிரிவோம்..சந்திப்போம்...போன்ற ஜம்போ one shots ; பவுன்சர் ; ட்யுராங்கோ போன்ற cult classics ; மார்ட்டினின் "மெல்லத் திறந்தது கதவு ; ARS MAGNA ; கென்யா - போல//
    இவைகள் இல்லாம இனிய சாத்தியமில்லை....தேவைப்படும் எண்ணிக்கையில் வெளியிட்டால் நம் அனைவருக்குமே வெற்றி நிச்சயம்

    ReplyDelete
  48. அடுத்த மூன்று இதழ்களும் அக்டோபரா.....சினிஸ்டர் இடத்தை மேகி கேரிசன் பிடிச்சது ஒன்றே வருத்தம்

    ReplyDelete
  49. பிணம் காத்த புதையல் காரிகன் ஸ்பெசலில் இடம்பெற்றால் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி..

    ReplyDelete
  50. வேதாளர் - படிச்சாச்சு
    ரிப் கிர்பி - படிச்சாச்சு
    சுஸ்கி விஸ்கி - இன்னும் கையில் கிடைக்கவில்லை. வந்தவுடன் முதலில் படிப்பது இதுவே..

    சுலப வாசிப்புக் களங்கள் என்றுமே வெற்றி பெறும். அதுவும் பழைய கதைகள்...

    ஒருவேளை முத்து காமிக்ஸ் நூற்றாண்டில் சிஸ்கோ டேங்கோ கதைகளை மறுபதிப்பு கேட்டு போராட்டம் நடக்குமோ??


    ReplyDelete
  51. Amount transferred to lion comics account. For pick all 3.

    ReplyDelete
  52. **** ஈரோடு புத்தகத் திருவிழா - ஸ்பெஷல் ஆன்லைன் மீட்டிங் *** எடிட்டருடன் ஒரு இனிய மாலை!!****

    நாள் : இன்று மாலை 4:30 to 5:30

    நிகழ்ச்சி நிரல்:

    4:30 to 4:45 PM : எடிட்டரின் சிறப்புரை

    4:45 to 5:00 PM : 'கென்யா - மர்மதேசம்' கதையிலிருந்து கேள்வி-பதில் போட்டி. போட்டியை எடிட்டரே நடத்துவார்.

    5:00 to 5:30 PM : open session எடிட்டருடன் நண்பர்கள் உரையாடல் நிகழ்ச்சி

    5:30 : நன்றியுரை

    *** போட்டிக்கான விதிமுறைகளில் சில ****

    * மொத்தம் 15 அல்லது 20 கேள்விகள் (நேரத்தைப் பொருத்து) கேட்கப்படும்
    * கென்யா கதையின் ஒவ்வொரு பாகத்திலிருந்தும் தலா 3 அல்லது 4 கேள்விகள் இடம்பெறும்.
    * கேள்விக்கான பதில்களை லயன் அலுவலக வாட்ஸ்அப் எண் 9842319755 க்கு மட்டுமே அனுப்பவேண்டும்.
    * போட்டியில் வெற்றி பெற்றவர்களை எடிட்டரே பின்னர் அறிவிப்பார்.

    போட்டிக்கான மற்ற விபரங்கள் ஆன்லைன் மீட்டிங்கின்போது எடிட்டரால் சொல்லப்படும்!

    அருமையான பரிசுகள்!! அற்புதமான வாய்ப்பு!!

    வெற்றிபெறயிருப்பவர்களுக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்!!


    மீட்டிங்கில் ( 4:30PM ) இணைவதற்கான லிங்க் கீழே:

    "ஈரோடு காமிக்ஸ் திருவிழா 2022 - எடிட்டருடன் ஒரு இனிய மாலை"

    ReplyDelete
  53. Google Meet joining info
    Video call link: https://meet.google.com/spi-ffhi-bvr

    ReplyDelete
  54. கென்யா வேரியண்ட் கவர் - ஆயிரம் பொன்னாச்சே... ஆயிரம் பொன்னாச்சே.. சொக்கா.. சொக்கா..

    சார் வேறு வகையில் கலக்ட்டர்களுக்கு இந்த வேரியண்ட் கவர் புத்தகம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் ப்ளீஸ்... முன் கூட்டியே எனது நன்றிகள்.

    ReplyDelete
  55. If you decode success it will be classic and mega specials. Mega special success also because of the cocktail of multiple genere. Muthu 50 is mega special but it has only action and hence not a hit

    Old classics will be fine for now but will not take it forward. So a balance to be ensured.
    While selecting new ones, it needs to be carefully selected to avoid failure.

    Also it will be good to publish a new heros along with a classic one to provide a chance to readers to know about new heros.

    ReplyDelete
  56. சார் அந்த variant கவர் புத்தகம் விற்பனைக்கு கிடையாதா???

    ReplyDelete
  57. Edi Sir..
    முன்பதிவு அறிவிப்புக்கு நன்றிகள்! ..💐💐💐

    முன்பதிவுல ஸ்னிஸ்டர் 7 அ விட்டுட்டீங்களே..😏

    ReplyDelete
  58. இன்னும் படிக்காத கதைகள் :

    1. எப்போதும் போல ஒரு டஜன் அதிகாரி கதைகள் பாக்கி
    (சந்தாவில் இல்லாத முழுவண்ண அதிகாரி கதைகள் அனைத்தும் வாங்கிவிடுகிறேன். ஆனால் ஜவ்வு போல இழுக்கும் அதிகாரி கதைகளை படிப்பது தலைநோவு என்னளவில்...!)

    2. ஒ.நொ.ஒ.தோட்டா - ஒரு நல்ல நாளிலே ஒரே தம்மில், படித்துவிட வேண்டும் என நேரம் காலம் பார்த்தே படிக்க முடியவில்லை...!

    3. மாண்ட்ரேக் - ஈர்ப்பில்லை! படிக்க முடியல...! பார்ப்போம் இன்னும் நேரம் இருக்கிறது...!

    இவை தவிர சகலத்தையும் படித்து விட்டேன்...!

    மறுவாசிப்பில் - சிலபல லக்கிலூக் கதைகள் படிப்பதுண்டு...!

    2016 - 2021 வரையிலான 6 ஆண்டுகளில் வருடத்திற்கு ஒருமுறையேனும் "23 வைரங்களை" (மறுமறு....வாசிப்பு) படிக்கத் தவறுவதே இல்லை...!

    இந்த வருடம் அதற்காக நேரம் ஒதுக்க வேண்டும்...!

    ReplyDelete
  59. Edi Sir..

    கேள்வி 1க்கான எனது பதில்:
    நேஸ்டாலஜியா கதை வரிசையில் புதிய இதுவரை வராத கதைகள் வேண்டும்.

    கேள்வி 2க்கான எனது பதில்:
    Option A-எல்லா S70யுமே படிச்சுட்டேன். (அதைவிட வேற வேலை என்னங்க இருக்கு). S60, S80 S100..க்காக வெயிட்டிங்..😍

    கேள்வி 3க்கான எனது பதில்:
    சிஸ்கோ கிட்,
    லாரன்ஸ்& டேவிட்,
    Buz sawyer,
    ஆர்ச்சி &co.,
    ..etc.,
    (தொடரும்)

    ReplyDelete
  60. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  61. Option A Finished Rip kirby and phantom smashing hits 70. Now reading mandrake

    ReplyDelete
  62. எடிட்டருடன் மீட்டிங் தொடங்கிவிட்டது...

    ReplyDelete
  63. 1. New Books- 70% Old Books (Reprint) - 30%
    2. Raed All 3 Option A/B/C
    3. I will buy all Oldies for my Collection definitely.

    ReplyDelete
  64. ஆஹா பதிவு வருவதை கூட நினைவில் கொள்ள மறந்து விட்டேனே...:-(

    ReplyDelete
  65. வினா ஒன்று...

    புது ரகமோ ,பழைய ரகமோ சார்...படிக்க எனக்கு விறுவிறுப்பு இருந்தால் போதுமானது ...பழைமை இதழ்களை பொறுத்தவரை இதுவரை மறுபதிப்பு காணாத இதழ்கள் மறுபதிப்பு ஆகும். பொழுது இன்னமும் ஆவல் கூடி விடுகிறது எனபதே உண்மை..

    ReplyDelete
  66. வினா 2.

    அனைத்து கதைகளுமே படித்து விட்டேன் சார்...

    ReplyDelete
  67. வினா 3

    அதிரடிபடை
    ஜான் மாஸ்டர்
    இரும்புகை நார்மன்
    சிஸ்கோ

    ReplyDelete
    Replies
    1. ஆனா நீதி தேவன் எல்லாம். முடில சார்..சில நண்பர்கள் போன் போட்டு எல்லாம் கதைக்கு அர்த்தம் கேக்குறாங்க சார்..ஒருத்தர் என்னன்னா குற்றவாளியை பிடிசசு கொடுத்த காரணத்தால் உனக்கு தண்டனை ன்னு சொன்னவுனவே என்னய்யா ஹீரோ இதுன்னு அடுத்த பக்கத்துக்கே நான் போகலைன்னு திட்றாங்க சார்..


      ( அப்புறம் எனக்கு ஏன் போன் போடுறாங்கன்னு கேக்குறீங்களா நான் நீதி வழுவாதவன் என்பதால் இருக்கலாம் சார...:-)

      Delete
  68. நான் அலுவலத்தில்..:-(


    இணைய இணைப்பில் கலந்து கொள்ளா முடியா நிலையில்

    :-(

    ReplyDelete
  69. End of the day, விற்பனை என்பது மிகவும் முக்கியம். ஷ்யூர் ஹிட்(டெக்ஸ், லக்கி) கதைகளை சந்தாவிலும் ஒன் ஆப் பழசுகளை தனி முன்பதிவுக்கென S70 போன்ற க்ளாசிக் சந்தாக்கு தனியாக கொண்டு செல்வலாம். அட்டவணையில் கிட்டங்கி பிரியர்களுக்கு விடுதலை அளிக்க இன்றே சிறந்த நாள். அவற்றில் சிறந்த தேர்ந்த தொடர்களை தனி முன்பதிவுக்கு என குறைந்த எண்ணிக்கை அடிப்படையில் கொண்டாரலாம்.(இதன் மூலம் தோர்கல் டைகர் போன்று சிறு எண்ணிக்கை கொண்ட வாசகர் குழாமையும் திருப்திப்படுத்த முயலலாம்). நீங்கள் எப்படி முடிவெடுத்தாலும் உடன் இருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. ////நீங்கள் எப்படி முடிவெடுத்தாலும் உடன் இருப்போம்.////+100

      Delete
  70. கேள்வி.2
    தொடர்ந்து வந்த உடல் உபாதைகளால் 40 சதவிகித புத்தகங்கள் படிக்க வில்லை உடல் தகுதியை. எட்டியவுடன் எல்லா புத்தகங்களையும் படித்து விடுவேன் காமிக்ஸ் தான் எனக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்கு நண்பன்

    ReplyDelete
  71. கேள்வி.3
    1.இரட்டை வேட்டையார்கள் smazing 70 தரத்தில் வரவேண்டும்
    2. ஜான் மாஸ்டர்
    3.ஜெஸ்லாங் கதைகள்
    4.திகிலில் வந்த ரிப்போர்ட்டர் ஜானி கதைகள்
    5.அதிரடிப்படை
    6.இரும்புக்கை வில்சன்
    7.கொலைப்படை சதிவலை இரும்பு மனிதன் மூன்று கதைகளும் அதே சைசில்
    8.விச்சு கிச்சு தொகுப்பு
    9.இரும்பு மனிதன் ஆர்ச்சி
    மரணப் பணி .ஆர்ச்சிக்கோர் ஆர்ச்சி.யார் அந்த ஜூனியர் ஆர்ச்சி ஒரே பதிப்பாக
    10.அப்பல்லோ படலம்
    11.இரண்டாவது வைரக்கல் எங்கே

    ReplyDelete
  72. கேள்வி 1. அதுவுந்தேன்...இதுவுந்தேன்.

    பழசும் வேண்டும்.புதுசும் வேண்டும்.
    பழசு கொஞ்சம் !!!
    புதுசு நிறைய.

    ReplyDelete
  73. கேள்வி 2. வேதாளர் , ரிப் கிர்பிலாம் எப்பவோ படிச்ச முடிச்சாச்சு. சுஸ்கி விஸ்கி படித்துக் கொண்டிருக்கின்றேன்.

    ReplyDelete
  74. கேள்வி 3. இதுவரை மறுபதிப்பு காணாத கதைகளை வெளியிட்டால் தேவலாம். மனித எரிமலை , ஜான் மாஸ்டர் , கில்டேர் , இ வேட்டையர் , கானகம் சார்ந்த கதைகள் மற்றும் கடல் சார்ந்த கதைகளையும் எதிர்பார்க்கின்றேன்.

    ReplyDelete
  75. This comment has been removed by the author.

    ReplyDelete
  76. This comment has been removed by the author.

    ReplyDelete
  77. முத்து காமிக்சின் மிகப்பெரிய ஹீரோவின் தொகுப்பு இல்லாமல் முத்துவின் ஐம்பதாவது ஆண்டு நிறைவடையாது... தங்க தலைவனிற் தொகுப்பு விரைவிலியே வரும் என எடிட்டர் கூகுள் மீட்டிங்க்கில் எழுச்சியுரை...

    ReplyDelete
    Replies
    1. Tex க்கு பெரும் பட்ஜெட் ஒதுக்கியுள்ளதாக Editor அறிவிப்பு..🙏💐🇮🇳😍

      இதுதான் உண்மையான உண்மை..

      Delete
    2. #முத்து காமிக்சின் மிகப்பெரிய ஹீரோவின் தொகுப்பு இல்லாமல் முத்துவின் ஐம்பதாவது ஆண்டு நிறைவடையாது... தங்க தலைவனிற் தொகுப்பு விரைவிலியே வரும் என எடிட்டர் கூகுள் மீட்டிங்க்கில் எழுச்சியுரை#...

      .. பொய்..
      பச்சை பொய்..🤓😃😃
      நம்பாதீர்கள் நண்பர்களே..
      கெஞ்சினார்கள்..
      கதறினார்கள்..
      டைகர் கதை வேண்டும் என்று..😜

      ஆனால் Edi காது கொண்டு கேட்கவில்லை..

      இதுதான் உண்மை..👍

      Delete
  78. விஜயன் சார், இந்த பதிவும் முழுமையாக இருந்த மாதிரி எனக்கு தெரியவில்லை. ஏதோ dashboardல் உள்ளதை படித்தது போல் எனக்கு உள்ளது சார்.

    ReplyDelete
  79. எடிட்டர் உடன் இன்றைய மீட்டிங்கில் பேசிய முக்கிய விஷயங்களை நண்பர்கள் யாராவது இங்கு பகிர்ந்து கொள்ள முடியுமா?

    ReplyDelete
  80. *ஆசிரியர் உடனான கூகுள் மீட் கலந்துரையாடல் முக்கிய அம்சங்கள்*

    *பிரளயம் சென்சார் செய்ய முடியாத அளவுக்கு இருப்பதால் அது ஹோல்டில் உள்ளது.*

    *அங்கிள் டெர்ரி வானத்தை போல சினிமாவைப் போல் இருக்கும் என்பதால் அது வெளியிடுவது கஷ்டம்.*

    *யங் டைகர் யாராவது மொழிபெயர்க்க தயாராக இருந்தால் பார்க்கலாம்.*

    *மீதமுள்ள தோர்கல் கதைகள் முடிக்க இன்னும் நான்கு வருடங்கள் ஆகும். வான் ஹாம் இல்லாததால் இணைத்தொடர்கள் டவுட்புல். தோர்கல் விற்பனையில் சிக்கல் இருப்பதால் ஹார்ட்கவர்கள் வெளியிடுவதில் சிரமம். தோர்கல் அற்புதமான தொடர்..ஆனால் ரீச் ஆகவில்லை என்று அனைவரும் பகிர்ந்த விஷயம்.*

    *ஜேம்ஸ் பாண்ட் கதைகள் outdated ஆகிவிட்டதால் வாய்ப்பில்லை.*

    *பவுன்சர் பார்ப்போம்.*

    *டேங்கோ மொத்தமே ஆறு கதைகள். அடுத்த மாதம் ஒன்று வருகிறது. மெதுவாக வரும்.*

    *இளமையில் கொல் அடுத்த பகுதிகள் 2 & 3 வரும்.*

    *2025 இல் S70 கலரில் வெளிவர வாய்ப்பு*

    * *டெக்ஸ் 75* க்கு கணிசமான பட்ஜெட் ஒதுக்கீடு...

    *முத்து50 கொண்டாட்டத்திற்கு இன்னமும் வாய்ப்பு உள்ளது.....💃💃💃💃* விபரங்கள் விரைவில்....

    *முத்து 50 கொண்டாட்டம்+வாசகர்கள் சந்திப்பு+ ஆசிரியர் வருகை* இருக்கும்; கூடுதலாக சிறப்பு வெளயீடு இருக்காலம்..

    *சந்திப்பின் போது நிறைய சர்ப்ரைஸ்கள் இருக்கும்... மிக முக்கியமானதும் எதிர்பார்க்கப்படுகிறது...*

    *கென்யா குவிஷ்ம் நன்றாக இருந்தது

    ----தொகுப்பு டாக்டர் & STV!

    ReplyDelete
    Replies
    1. இன்றைய மீட்டிங்கை சிறப்பாக ஏற்பாடு செய்த ஈரோடு ஸ்டாலின்ஜி& செயலர் இருவருக்கும் அனைவரின் சார்பில் நெஞ்சார்ந்த மகிழ்ச்சி!😍

      Delete
    2. // யங் டைகர் யாராவது மொழிபெயர்க்க தயாராக இருந்தால் பார்க்கலாம் //

      நம்ப மகேந்திரன் அல்லது ஜனார்த்தனன் இதற்கு சரிப்படுவார்கள் என நினைக்கிறேன்:-)

      Delete
    3. நன்றி விஜயராகவன்.

      Delete
    4. அருமையான தொகுப்பு. ஏற்பாடு செய்த நண்பர்களுக்கும் தொகுத்தளித்தவர்களுக்கும் மிக்க நன்றி

      Delete
    5. சூப்பர் நண்பரே....முத்து விழாவா சூப்பர்....
      தோழர்கள் லிமிட்டெட்ல விட்டுட்டு அந்த இடத்துக்கு புது நாயகர்கள் விடலாம்

      Delete
    6. //2025 இல் S70 கலரில் வெளிவர வாய்ப்பு//

      இதுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.


      Delete
    7. பிரளயம் மெச்சூர்ட் ஆடியன்ஸ் லேபிளில் லிமிடெட் ப்ரிண்ட் ரன்னில் வர கிஞ்சித்தேனும் வாய்ப்புள்ளதா?

      Delete
    8. எடிட்டர் சாரை ஸ்கிரீன் ஷாட் டிலேனும் பார்க்க முடிந்தது மகிழ்ச்சி.

      Delete
    9. // பிரளயம் மெச்சூர்ட் ஆடியன்ஸ் லேபிளில் லிமிடெட் ப்ரிண்ட் ரன்னில் வர கிஞ்சித்தேனும் வாய்ப்புள்ளதா? // Doctor Sir வாழ்க. கொஞ்சம் consider பண்ணுங்க சார்.

      Delete
    10. யங் டைகர் மொழி பெயர்ப்புக்கு ஷெரீப் மஹியை வழிமொழிகிறேன்....

      Delete
    11. // 2025 இல் S70 கலரில் வெளிவர வாய்ப்பு //
      பெரும் பட்ஜெட் பிடிக்கும் விஷயம்...
      இந்த ப்ட்ஜெட் மற்ற வெளியீடுகளுக்கு தடை ஆகிவிடக் கூடாது...

      Delete
  81. நண்பர்களே கென்யா க்விஸ் பதில்களை எந்த எண்ணுக்கு அனுப்ப வேண்டும்? நான் அனுப்பிய எண்ணில் இன்னும் அதை படிக்கவேயில்லை.

    ReplyDelete
    Replies
    1. அந்த அறிவிப்பிலயே எண் இருந்தது சங்கர்......!!

      ///4:45 to 5:00 PM : 'கென்யா - மர்மதேசம்' கதையிலிருந்து கேள்வி-பதில் போட்டி. போட்டியை எடிட்டரே நடத்துவார்.

      * கேள்விக்கான பதில்களை லயன் அலுவலக வாட்ஸ்அப் எண் 9842319755 க்கு மட்டுமே அனுப்பவேண்டும்.
      * போட்டியில் வெற்றி பெற்றவர்களை எடிட்டரே பின்னர் அறிவிப்பார்.

      போட்டிக்கான மற்ற விபரங்கள் ஆன்லைன் மீட்டிங்கின்போது எடிட்டரால் சொல்லப்படும்!
      /////

      -----5.25க்குள் அனுப்ப சொல்லி இருந்தார்கள்.... இம்முறை அந்த எண்ணை சேமித்து கொள்ளுங்கள்.. அடுத்த போட்டியில் உபயோகமாகும்.

      Delete
    2. I sent to this number only within the time. But no bule ticks.

      Delete
  82. சார்....செல் ஸ்விட்ச் ஆஃப் ஆனதால் கேள்விகள் கேக்க முடியல.....உங்களை நண்பர்களை சந்தித்தது மகிழ்ச்சி

    ReplyDelete
  83. நானும் பன்னிரண்டு விடைகளை கண்டுபிடிச்சேன்....ஆர்வமில்லாம பேனாவை தூக்கல....கேள்விகள் பாக்க பாக்க பேனாவை கிடைக்காம பென்சிலை தேடி எடுத்தேன்....ஒரு கால் வந்ததும் கேள்விக மறஞ்சதால வெளிய வர வேண்டியதா போச்சி....நெக்ஸ்ட் பாப்பம்

    ReplyDelete
  84. Sir, Sent pre-booking for OCTOBER TIRUVIZHAA PICK ALL 3 OPTION. Tomorrow your staff will wonder what it is for may be :-)

    ReplyDelete
    Replies
    1. By now they're used to all of my குரங்கு பல்டிஸ் sir !

      Delete
  85. 1.பழசா? புதுசா?

    S70ஐ பொறுத்தவரையில் பழைய நாயகர்கள் என்ற போதும் கதைகளில் பெரும்பாலும் வெளிவராத புதியவற்றையே தேர்வு செய்துள்ளீர்கள். பழைய கதைகள் இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாம் என்று ஆதங்கப்படும் நண்பர்களையும் காண நேரிடுகிறது. தன் பால்யத்தை மறுபதிப்புகள் வழியாக மீட்டுப் பார்க்க நினைக்கும் நண்பர்களும் கணிசமானோர் உண்டுதான். ஆக இது நிச்சயம் இரட்டைக் குதிரைச் சவாரிதான்.

    ரெகுலர் சந்தா எப்போதும் போல வெரைட்டியாக இருக்கட்டுங்க சார். அதுதானே ஆணிவேர்.

    கிளாசிக்ஸ் மற்றும் மறுபதிப்புகளுக்கு தனிச்சந்தா...

    ஸ்பெஷல் வெளியீடுகள் முன்பதிவின் அடிப்படையில்...

    பழசு 25% புதுசு 75%.

    ReplyDelete
  86. கேள்வி -1:
    மிகவும் திரில்லான புதிய சாகசக் கதைகள் (லார்கோ & ஷெல்டன், ) போல வேண்டும். இன்னும் சொல்லப்போனால் எம். ஜி. ஆர் படம் மாதிரி நல்லவன் ஜெயிக்க வேண்டும்.

    கேள்வி-2
    மாண்ட்ரேக் தவிர அனைத்தும் படித்து விட்டேன்.

    கேள்வி-3.
    மிக பழமையான ( நான் படித்திருகாத) கார்ட்டூன் ஸ்பெஷல்.
    உதாரணமாக சிக்பில் ஸ்பெஷல் (10 கதைகளை சேர்ந்து குண்டு புக்) , ஷெர்லாக் ஹோம்ஸ் ஸ்பெஷல்(10 கதைகளை சேர்ந்து குண்டு புக்) .

    ReplyDelete
  87. டெக்ஸ் , லக்கிலூக் மற்றும் ஜேம்ஸ் 2.O இப்போது போலவே இருக்கட்டும். கேப்டன் பிரின்ஸ் கதைத் தொகுப்பும் வேண்டும்.
    தயவுசெய்து அழுகாச்சி காவியம் (கிராஃபிக் நாவல்) , ஜட்ஜ் அய்யா கதைகள் வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. ///கேப்டன் பிரின்ஸ் கதைத் தொகுப்பும் வேண்டும்.///

      +123

      Delete
  88. கேள்வி -2: வேதாளர் கதைகளில் இன்னும் இரண்டு மீதி உள்ளது. அதற்குள் அடுத்த மாத புத்தகங்கள் வந்துவிட அது கிடப்பில் போடப்பட்டது.

    ரிப் கிர்பி கதைகள் வேதாளரை விட நன்றாக இருந்தது. ஆனாலும் இன்னமும் பாக்கி உள்ளது.

    மாண்ட்ரேக் முதல் மூன்று கதைகளைத் தாண்டி இன்னும் போகவில்லை. ஏனோ பெரிதாக ஈர்க்கவில்லை.

    சுஸ்கி விஸ்கி முதல் கதை படித்தாயிற்று . அட்டகாசம்!!அடுத்தது விரைவில்...

    ஒட்டு மொத்தமாக கிளாசிக் கதைகளை ஒரேமூச்சில் படிக்குமளவுக்கு கவரவில்லை என்பதே நிஜம்.

    ReplyDelete
  89. சார்ஜ் இல்லாததால் இப்பக் கேள்வி.....
    அந்த ஆயிரம் பக்க கௌபாய் கதை முத்து 50 ல் வர வாய்ப்பு உண்டா சார்

    ReplyDelete
  90. கென்யா வெளியாகிவிட்டதா?! இது சந்தாவில் வந்த இதழா?

    ReplyDelete
    Replies
    1. @KS..

      #கென்யா வெளியாகிவிட்டதா?! இது சந்தாவில் வந்த இதழா?#


      #என்னாது காந்தி செத்துட்டாரா# 😄😃😀😍
      moment..

      Delete
    2. @Shribabu:
      சரி சரி, ஆக கென்யா வந்து விட்டது! :) :) :) Variant Cover என்று வேறு ஆசிரியர் ஏதோ எழுதி இருக்கிறார்! எனக்கு வந்த அட்டை எந்த அட்டை என்று தெரியவில்லை. என்னிடம் இல்லாத அந்த அட்டையை மட்டும் தனியாக வாங்கிக் கொள்ளலாமா? (காமிக்ஸ் கலெக்டர் பரிதாபங்கள்)

      Delete
  91. விங் கமாண்டர் ஜார்ஜ், சார்லி சாயர், இரும்புக்கை நார்மன்.இரட்டை வேட்டையர்கள். மாடஸ்டிபிளைசி,சிஸ்கோகிட் கதைகள் . அது போக தேவைப்படும் கதைகள் . 1.சிங்கத்திற்கொரு சவால் (சிங்கிள் ஷாட் பைக் ரேஸ் கதை) 2.வெறிநாய் வேட்டை (சிங்கிள் ஷாட். பழிவாங்கும் அதிரடி ஆக்சன் கதை தஹீரோவின்பார்வையில் தன்னிலையில் கூறப்படும் கதை.) 3.குள்ளநரிகளின் இரவு(ப்ரூனோபிரேசில்)
    அப்புறம் புத்தகங்கள் கையில் கிடைத்தவுடன் படித்துமுடித்துவிட்டே தூங்கப் போவதுரொம்பவருடமா எனது பழக்கம்.. சார்இப்பல்லாம் நாட்கள் ரொம்பசீக்கிரமா ஓடுத்.. எனவே புதிய கதைகள் அதிகமா வர்ற மாதிரி பாத்துக்குங்க. அப்பத்தான் சிலவருடங்கள்கழித்து மறுபதிப்புகள் கேட்கமுடியும். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  92. Edi Sir..
    *Pick all 3-Advance booking Rs.650/*- அனுப்பிச்சாச்சுங்க..💐🙏

    ReplyDelete
  93. @ஆசிரியர் சார்...

    ////2012 துவக்கம் முதல் இப்போது வரைக்கும் தோராயமாய் 430 புக்ஸுக்கு அருகாமையில் வெளியிட்டிருப்போம் என்பது ஒரு உருட்டுப்பொதிக் கணக்கு ! (முத்து ; லயன் ; சன்ஷைன் ; ஜம்போ ; லயன் கிராபிக் நாவல் ; லயன் லைப்ரரி) ////

    ----- மீட்டிங் முடிந்த பின்னே புதிய பதிவுல கேள்விகளுக்கு பதில் போடலாம்னு வந்தேன்... கம்பேக் ஆனதில் இருந்தான இதழ்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு உள்ளீர்கள். சரி நாமும் கணக்கு பார்ப்போம்னு என் பாக்கெட் டைரி,பேனா சகிதம் ஒரு மணி நேரத்தை செலவிட்டதில் ஆச்சர்யமான எண்ணிக்கை கிடைத்தது. ஒவ்வொரு முறையும் தங்களுடைய உருட்டுப் பொதி கணக்கு எனக்கு ஆச்சர்யத்தையே தரும். இம்முறையும் அப்படியே..
    .. மொத்த இதழ்களின் எண்ணிக்கை 457.... தாங்கள் 430என மனகணக்காகவே குறிப்பிட்டு உள்ளீர்கள் செம சார்... தங்களது சூப்பர் பிரைனை எண்ணி வியக்காம இருக்க முடியல...💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. கையை கொடுங்க வாழ்த்துகள் சார்....💐💐💐💐💐💐

      கம்பேக் ஆன பிறகான இதழ்கள் எண்ணிக்கையில் "4.5" சென்சுரி" போட்டுள்ளீர்கள் சார்.....

      சென்றமாதம் வெளியாகி இருந்த முத்து "காலனின் காகிதம்"- இதழ் கம்பேக் ஆனதில் இருந்து 450வது இதழ்....

      பத்தரை ஆண்டுகளில் 450இதழ்கள் என்பது இன்றைய காலகட்டத்தில் நம் வட்டத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த வாசிப்புலகிற்கே அசாத்திய ஸ்கோர் சார்....

      ஆகஸ்ட்டு மாத இதழ்களோடு 457ல் வந்து நிற்கிறோம்...

      இதழ்களின் பிரேக்அப் இதோ...,

      முத்து----154

      லயன்----209

      சன்சைன்- 26

      கி.நா.--- 25

      ஜம்போ--- 24

      மேக்ஸி--- 8

      முத்துமினி- 6

      தி லயன் லைப்ரரி-5

      மொத்தம்--457....

      *வெளியீடு எண் இல்லாத துண்டு துக்கடா, டெக்ஸ்ஃப்ரீ, எலீஸ், கைப்புள்ளைஸ் & இலவச இதழ்கள் எதுவும் கணக்கில் சேர்க்கப்படல....!!!!

      *இன்னும் இந்தாண்டு பாக்கியுள்ள இதழ்கள் & அடுத்தாண்டு வரவுள்ள இதழ்களையும் சேர்த்தால் ///"கம்பேக் 500"-ஸ்பெசல்///---ம் 2023லயே வருகிறது! ஏற்கனவே தல 75க்கு ஒரு மெகா செலபரேசன் இருப்பதால் இந்த 500வது ஸ்பெசலை ஒரு சின்ன குண்டுபுக்காக மட்டுமே ப்ளான் பண்ண வேண்டுகிறோம் சார்......

      ---STV with கனவுலகம் ப்ரெண்ட்ஸ.!

      Delete
    2. கிராஸ் செக் பண்ணுவதற்காக தங்களது 2012ஜனவரி பதிவுகளை ஆராய்ந்து கொண்டு இருந்தேன் சார்...
      இந்த பட்டிலில் விடுபட்ட சில கதைகள் இருப்பதை அறிந்து கொண்டேன்.... மாலை திருத்தப்பட்ட பதிப்போடு வருகிறேன்......

      Delete
  94. கேள்வி 1 : இந்த இரண்டு வாரத்தில் கிடைத்த சந்தர்பங்களில் படித்த கதைகள் கென்யா & ரிப் கிர்பி ஸ்பெசல். ரிப் கதைகள் நன்றாக தான் இருக்கிறது. குறை ஏதும் இல்லை. ஆனால் கென்யா கதையை படிக்கும் போது கிடைத்த அனுபவம், பரவசம், உற்சாகம், பரபரப்பு எல்லாம் புதிய உச்சம் சார். அதை இந்த க்ளாசிக் படைப்புகளால் தர முடியாது என்பதே நிஜம்.

    சிம்பிளாக சொல்வது என்றால் அறுசுவை சைவ/அசைவ விருந்து கென்யா, ஒ.ஒ.தோட்டா, ARS மேக்னா, பராகுடா, பி.பி.விடை etc.,. போன்ற கதைகள்.

    விருந்தை புல் கட்டு கட்டிய பின் லைட்டாக, ரிலாக்ஸாக அருந்த ஒரு நீர் மோர், லெமன் ஜீஸ், பீடா போன்றவற்றை கண்கள் தேடும். அவை தான் இந்த க்ளாசிக் நேர்கோட்டுக் கதைகள்.

    ஒரு சில சமயம் அறுசுவை உணவில் சொதப்பல் ஏற்பட்டு, அல்லது ஒரு மாறுதலாக நீர் மோரும், சர்பத்தும் அமிர்தமாய் தோன்றும். அதற்காக அவற்றை கொண்டே அடுத்த முறை முழுப்படையல் ஆக்கினால் result எவ்விதம் இருக்கும் என்று உங்கள் யூகித்துக்கே விட்டு விடுகிறேன்.

    இதில் டெக்ஸ் தினசரி உணவான இட்லி, தோசை போன்றது. எத்தனை முறை சாப்பிட்டாலும் சலிக்காதது, தவிர்க்கவும் முடியாதது. (டெக்ஸின் புதிய கதைகளுக்கே இந்த credit, மறுபதிப்புகளுக்கல்ல)

    So my choice new : 90%, classic & reprints : 10%

    கேள்வி 2 :
    வேதாளர் - முழுவதும் படித்தாயிற்று.
    ரிப்கிர்பி - 5 Finished, 3 Pending.
    மாண்ட்ரேக் - உள்ளே நுழைய போராடிக் கொண்டிருக்கிறேன்.

    கேள்வி 3 : இரும்புக்கை நார்மன். வராவிட்டாலும் வருத்தம் இல்லை.




    ReplyDelete
    Replies
    1. ////சிம்பிளாக சொல்வது என்றால் அறுசுவை சைவ/அசைவ விருந்து கென்யா, ஒ.ஒ.தோட்டா, ARS மேக்னா, பராகுடா, பி.பி.விடை etc.,. போன்ற கதைகள்.

      விருந்தை புல் கட்டு கட்டிய பின் லைட்டாக, ரிலாக்ஸாக அருந்த ஒரு நீர் மோர், லெமன் ஜீஸ், பீடா போன்றவற்றை கண்கள் தேடும். அவை தான் இந்த க்ளாசிக் நேர்கோட்டுக் கதைகள்.

      ஒரு சில சமயம் அறுசுவை உணவில் சொதப்பல் ஏற்பட்டு, அல்லது ஒரு மாறுதலாக நீர் மோரும், சர்பத்தும் அமிர்தமாய் தோன்றும். அதற்காக அவற்றை கொண்டே அடுத்த முறை முழுப்படையல் ஆக்கினால்....../////

      -------+10000

      Delete
  95. மௌன நகரம் :

    படிக்கும்போது சிலபல தமிழ் சினிமாக்களை நினைவுபடுத்தும்னு நம்ம எடிட்டர் சார் சொல்லியிருந்தார்.!

    யாராவது சொன்னிங்களான்னு தெரியலை.. சொல்லியிருந்தாலும் பரவாயில்லை.. நான் என்னோட சனநாயக கடமையை ஆற்றிப்புடுறேன்..!

    கதையோட ஆரம்பத்துல ரேஞ்சர் ப்ரெய்ன் எழுந்து நடக்கவே அஞ்சாறு மாசம் ஆகும்னு டாக்டர் சொல்வாரு.. ஆனா நம்ம ப்ரெய்ன் வில்லனை பழிவாங்கனும்கிற வைராக்கியத்தோட அஞ்சே நாள்ல ஜாகிங் போவாரு.. அதைப் பாத்த டாக்டர்.. இது ஒரு மருத்துவ மிராக்கிள் அப்படீம்பாரு...

    இந்தக் காட்சியை தாண்டும்போது நினைவுக்கு வந்த படங்கள்..

    வைஜெயந்தி ஐபிஸ்
    சத்ரியன்
    தில்
    இன்னும் நிறைய போலிஸ் படங்கள்..
    முத்தாய்ப்பாக.. மிர்ச்சி சிவா நடித்த
    தமிழ் படம்

    அப்புறம்... காணமல் போன காவல்துறை அதிகாரியைப் பற்றி விசாரித்துக்கொண்டு வரும் அதிகாரிகளிடம்.. ஒட்டுமொத்த நகரமும் குற்றத்தை மறைத்து விசாரனைக்கு ஒத்துழைக்க மறுப்பதோடல்லாமல்.... விசாரனை அதிகாரிகளின் கதையையே முடிக்கத் தயாராவதைப் படிக்கும்போது நினைவுக்கு வந்த திரைப்படம்.. தென்னிந்திய டெக்ஸ்வில்லர் ஜெய்சங்கரின்..

    துணிவே துணை

    காணாமல் போய்விட்ட அதிகாரியை தேடிக்கொண்டு கிராமத்திற்கு வரும் போலிஸ் அதிகாரி ஜெய்சங்கரை பேய் பிசாசு முதல்கொண்டு அனைத்து வித்தைகளாலும் ஒட்டு மொத்த கிராமமுமே மிரட்டும்.!
    இக்கதையில் ஷலூன் ஓனர் வெஸ் மொட்டைத்தலையுடன்.. அந்தப்படத்தில் நடிகர் அசோகன் மொட்டைத்தலையுடன் இருப்பது போலவே அச்சுஅசலாக இருக்கிறார்.!

    படத்தில் கிராமத்தலைவர்.. கோயில் பூசாரி.. பண்ணையார் என எல்லோருமே குற்றவாளிகள்.. குற்றத்தை மறைத்து.. விசாரனைக்கு ஒத்துழைக்காமல் விசாரிக்க வந்த ஜெய்யை போட்டுத்தள்ள பார்ப்பார்கள்..! அதேபோல இக்கதையிலும் மேயர்.. ஷெரீப்.. எம்போரியம் ஓனர்.. ஷலூன் ஓனர் என ஊரார் மொத்தமுமே குற்றத்துக்கு உடந்தை.. விசாரிக்க வந்த டெக்ஸ் , கார்சனுக்கு ஒத்துழைக்க மறுத்து அவர்களையே போட்டுத்தள்ள முயற்ச்சிக்கிறார்கள்.!

    ஆக.. இத்தாலியின் துணிவே துணை தான் இந்த மௌண நகரம்..!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி எங்க தலைவர் ஜெய் சங்கர் பற்றி சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி.

      Delete
    2. சினிமா என்றல்லாது பார்த்தால்
      1920 -களிலும் அதற்கு முன்பும் பல அமெரிக்க சிறுநகரங்களில் நடந்ததுதான்.நியாயம் ஆனால் நகர மக்களின்பால் இருக்கும்.

      ஊர்நன்மைக்காக ஒருவனை, ஒரு குடும்பத்தை, நகரின் ஒரு சிறு பகுதியையே ஊர்மக்கள் திரண்டு அழித்த சம்பவங்கள் வரலாற்றில் உண்டு.

      ஒருவனை அழித்த சம்பவத்தில் மிஸௌரி மாகாண ஸ்கிட்மோர் நகர கென் ரெக்ஸ் மெக்கெல்ராய் 1981- ஜூலையில் பட்டப்பகலில் கொல்லப் பட்ட நிகழ்வு அமெரிக்கா முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

      மகா போக்கிரியான KEN REX MCELROY பட்டப்பகலில் லோக்கல் பாருக்கு முன் தனது பிக்அப் வேனில் 45 குண்டு காயங்களுடன் மரணித்தபோது சுற்றிலும் 70 பேருக்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் இருந்தனர். இவர்கள் அனைவரும் ஒருமித்து சொன்னது. "நான் எதையும் பாக்கல." "எனக்கு எதுவும் தெரியாது."
      ஷெரீஃப், உள்ளூர் ஜட்ஜ்கள் யார்மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை.

      NO ONE SAW A THING,
      IN BROADDAYLIGHT

      என மினி டெலிசீரியல்கள் வந்தன.

      நமது காமிக்ஸில் அழியா இடம் பெற்ற நிஜங்களின் நிசப்தம் கதையின் மூலச் சம்பவம் இதுதானே.
      ( இதில் நியாயம் மரணித்தவர் மேல்)

      Delete
    3. அருமை செனா..!
      டெக்ஸ் கதைகள் அத்தனையுமே முத்தானவை.!

      Delete
    4. அருமையான விமர்சனம்;
      செனா அனா ஜியின் விளக்கும் இன்னும் சிறப்பு...

      பாவம் அந்த ஆண்ட்ரெரை மக்கள் அனைவரும் போட்டு தள்ளும்போது அடிவயிறை பிசையும்...!!!!

      Delete
    5. நாலு பேருக்கு நல்லது செய்யனும்னா எதுவுமே தப்பில்லே..

      (நன்றி:நாயகன் கமல்)

      Delete

  96. /// So my choice new : 90%, classic & reprints : 10% ///
    My opinion also .

    ReplyDelete
  97. This comment has been removed by the author.

    ReplyDelete
  98. கேள்வி. 2 க்கு எனது பதில் , option B.
    ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை புத்தகங்கள் pending.
    பாஸ்போர்ட், விசா, அமெரிக்க பயண ஏற்பாடுகள், குடும்ப நிகழ்ச்சிகள் என பலவகையிலும் நேர நெருக்கடி. (கென்யா மட்டுமே அமெரிக்க பயணத்தில் உடன் பயணித்தது. மறுவாசிப்புக்கு )
    இந்த வாரம் முதல் வாசித்தல் தொடக்கம்.
    (இதுக்குக் கூட ஆகஸ்ட் 15 வேணும் போல)

    ReplyDelete
  99. வில்லனுக்கு ஒரு வேலி ஈரோட்டில் வாங்கினேன் அதை இன்று காலை தான் படித்தேன். என்ன ஒரு அட்டகாசமான மொழிபெயர்ப்பு தெறித்து சிரிக்க வைத்தது பல இடங்களில் அதுவும் லக்கி செவ்விந்தியன் போல மாறுவேடத்தில் வரும் போது அவரிடம் விக்கல் நிற்க மருந்து கேட்டு ஒரு செவ்விந்தியன் வரும் இடம் யப்பா என்ன ஒரு கற்பனை. அதை நினைத்து இன்னும் சிரித்துக் கொண்டு இருக்கிறேன்.

    எனது மதிப்பெண் 100/10

    ReplyDelete
  100. Option B : Tex ella kadhaigalum padithuviten.. Vedhaler and Girby ஒரு பாதிக் கதைகளை படிச்சிருப்பேன் ! the key reason is I have a almost 2 year old son sir.... LOL

    ReplyDelete
  101. Question 1: நான் நினைப்பது என்னவென்றால், இங்கே பிளாக்கில் கும்மியடிக்கும் பெரும்பாலானோர் சந்தாதாரர்கள். எதைக் குடுத்தாலும் வாங்குவார்கள். வெளியே ஒரு சிறு மார்கெட் இருக்கிறது என நினைக்கிறேன். பழைய காமிக்ஸ் வாசகர்கள். அவர்கள் தாம் பழைய வடையை விரும்பி வாங்குகிறார்கள் என நினைக்கிறேன்
    Question 2: i read everything
    Question 3: NO reprints Pleaseeeee.....

    ReplyDelete
  102. ஆசிரியருக்கு சில பிராக்டிகல் ஐடியாக்கள்:
    1. நான் முன்பே கூறியிருந்த மாதிரி, எல்லா காமிக்ஸ் சந்தாதாரர்கள், ஆன்லைனில் வாங்குவோர், புக் ஃபேரில் வாங்குவோர் வாட்சப் நம்பரை வாங்கி சேமித்து, பிராட்காஸ்ட் லிஸ்ட் செய்யவும். இதே கேள்விகளை ஒரே சொடுக்கில் அவர்கள் அனைவரிடமும் கேட்கலாம். அதைக்கேட்டு செய்தால், சிந்தாமல் சிதறாமல் 2023ன் லிஸ்ட் போட்டு குடோனிற்கு வேலை இல்லாமல் செய்யலாம்.
    2. லயன் காமிக்ஸ் யூட்யூப் சேனல் தொடங்குவது. வாரம் ஒரு லயன் வெறியரை வீடியோ போட சொல்லுவது. உங்கள் கிட்டங்கியில் இருக்கும் ஒரு புக்கிற்கு ஒரு வீடியோ வீதம் சிலாகித்து பேசுவது. இங்கேயே நீங்கள் பிளாக்கில் யாருக்கு இன்ட்ரஸ்ட் உள்ளது என கேட்கலாம். எனக்கும் ஒரு நாலு புக் தரவும். சும்மா பிச்சு உதறிடுவேன். எடிட்டிங் வேலை, கீழே ஸ்க்ரோலர் போடுறதை மட்டும் நீங்க பாத்துக்குங்க. எடுத்த வீடியோவை அப்லோட் செய்ய உங்கள் ஐடி பாஸ்வேர்ட் பெர்சனலா தரவும். அப்லோட் செய்த பின் மாற்றி விடவும். இதே டெக்னிக்கை புதிதாய் வரும் காமிக்ஸ்க்கு நீங்களோ ஜூனியரோ செய்யலாம். இல்லாட்டி, அதையும் இங்கே லீசில் விடலாம். விற்பனை கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இப்பெல்லாம் யார் சார் பிளாக் படிக்கிறாங்க? 80s,90s கிட்ஸ் மட்டும் தான் அலாரம் வெச்சு எழுந்து இங்கே உலவுகிறார்கள். நாற்பது பேர் நானூறு கமென்ட் போடுகிறார்கள். உணமையான சோசியல் மீடியா பிரசன்ஸ் இன்றைக்கு யூட்யூபே

    ReplyDelete
    Replies
    1. 2 வாரங்களுக்கு ஒரு முறை 2700 வாசகர்களுக்கு வாட்சப் broadcast போய்க்கொண்டுள்ளன சார் - கடந்த 6 மாதங்களாய் ! இவர்கள் சந்தாக்களில் இருப்போரே அல்ல ! பதிலுக்கு hi ...good morning என்ற மெசேஜஸ் தான் வருகின்றன !!

      யூடியூப் சேனல் எற்கனவே உள்ளதைத் தூசி தட்டிப்புடுவோம் சார் ரொம்பச் சீக்கிரமே !! And முதல் வீடியோவை நீங்களே ஆரம்பித்து விடுங்கள் !

      Delete
  103. Option A
    பழைய நாயகர்கள் அனைவரையுமே முயற்சித்துப் பார்க்கலாம்.

    ReplyDelete
  104. 1.த்ரில்லான மாஸான கதையோட்டம் கொண்ட கதைதொடர்களே பெரும் வெற்றியை பெற்றவை..... நாயகர் பேதம் இல்லாமல் யார்னாலும், நாயகனே இல்லாத கதையே நாயகனாக இருந்தாலும் ஓகே தான் சார்......!!!

    பழைமையைவிட புதியவைகளில தான் இதற்கு வாய்ப்பு எனும்போது 75:25என்ற ரீதியில் மைஃபேர் புதியவைகளுக்கு! எக்ஸிஸ்டிங் நாயகர்கள் ஸ்லாட்கள் போக மீதி புதுமைகள் தொடரட்டும்....

    2.சுஸ்கி விஸ்கி படிச்சாச்சுது.. புதுமையான ரைட்டிங், நவீன பாணி தயாரிப்பு இந்த சீரியஸை எதிர்பார்க்க வைக்கிறது நிறைய...

    3.பர்சனல் சாய்ஸ் எதுவும் இல்லை.... விற்கும்னு தோணும் பழசை மட்டுமே போடுங்க... குடோன் நிரப்பிகளை தவிர்த்து விடலாம் சார்....

    ReplyDelete
  105. அக்டோபர் காமிக்ஸ் திருவிழாவை ஆரவாரத்துடன் வரவேற்கிறேன்....3ல் இரண்டு புதிய நாயகர்& கதை எனும்போது ஆர்வத்தை கூட்டிட்டது.....

    வன்மேற்கின் கதைக்கு மிக ஆவலுடன்.....

    ReplyDelete
  106. Question 1: In my point of view, our comeback is really huge hit because of new books. I've read all the new books released.

    Question 2: Regarding reprints, my view (really not to hurt others) Bought smashing 70's. Apologies, I could not read them and kept as collectors edition. But liked Suski & Co and read both the stories. Like other Tex fans, I used to read all Tex reprints too. For nostalgia we can collect, but will love to read new stories.

    Question 3: War stories, Thigil Collectors edition, Chickbill, Alibaba (especially Sorgathin Saavi, Vellai Pisasu).

    Going forward, love to see lots of New stories from you sir. Thanks again for the August 15th get together arrangements friends.

    ReplyDelete
  107. உயிரை தேடி கருப்பு வெள்ளை ? A Big Disappointment sir :( ..

    ReplyDelete
  108. இதற்கு நீங்கள் இந்த புத்தகத்தை வெளிடாமலே இருப்பதே மேல்

    ReplyDelete
  109. . டியர் சார்,
    காமிக்ஸ், படிப்பது என்பதே மறுபடி படிக்க ஆவலை ஏற்படுத்துவதும் - அந்த ஹீரோயிசத்தில்- அதாவது பால்யத்தில்- மெய்மறந்துபோகும் நிலையும்தானே. எனவே, புதிய ஜானர் கதைகள் ஒரு தடவை படிக்கலாம்-அதைத் தாண்டி பெரிய ஆர்வம் இல்லைதான்.
    "வேதாளர்" - "ரிப் கிர்பி "_அனைத்து கதைகளும் படித்து முடிந்துவிட்டேன்-- "மார்ண்ரேக்"-குமே ஒவ்வொரு கதைகளாக படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.. ரசனையுடன்.
    'இன்னும் ஒருபக்கம் கூட படிக்காதஇதழ் என்றால் - அது "தோர்கல்" - தான்-ஸாரி -.-ii
    "டெக்ஸ்:_ வழக்கமான கதைகளாக இருந்தாலும் - தற்போதைய அட்டைப்படத்தினம் வடிவமைப்பு-கதையை படிக்க
    வை த்துவிடுகிறது..
    மேலும், மறுபதிப்புகளில் ஏதிர்பார்ப்பது-
    மாடஸ்டியின் ஆரம்ப வெளியீடுகளை மட்டும் (முதல் மூன்று கதைகள்-க. முனை.மா.-மா. in இ_ ம.கோ) தற்போதைய தரத்தில் தந்துவிட்டால் அப்றம் மாடஸ்டியை கேட்க மாட்டேன்.
    அடுத்தது-அப்பலோ படலம் - (ப்ருனோ,
    ரிப்ஜானியின்_சிவப்புப்பாதை.
    மற்றபடி ஸ்பைடர்-ஆர்ச்சி, இரட்டைவேட்டையர்-எல்லாம் பெரிதாக ஆர்வமில்லை..
    புதிய கதைகளில் நிறைய
    'சே மிப்பில் வை
    த்திருக்க ஆர்வமில்லை- என்ன செய்வது என்றும் தெரியவில்லை.."
    மறுபடி ஒரு தடவை பிடிவாதமாக படித்துவிட்டு முடிவு செய்ய வே ண்டும்.. என்று எண்ணியுள்ளேன்..நன்றி..

    ReplyDelete
  110. *சுஸ்கி விஸ்கி ஸ்பெசல் கதை 1... ராஜா ராணி ஜாக்கி*

    கார்டூன் கதைகளை எப்போதும் அந்த மாத கடைசியாக வாசிப்பேன்.. இம்முறை சு.வி.....

    அருமையான தயாரிப்பு, கவரும் வண்ணச்சேர்க்கை, நிறைவான நடைனு பெர்ஃபெக்ட் கலவையான கதை....

    கதை கோல்டன் ஓல்டிஸ் என்பதால் அதுபற்றி அதிகம் சொல்ல வேணாம்...முற்பாதியில் பக்கா காமெடி; பிற்பாதியில் செம சீரியஸ்!

    மாடர்ன் ரைட்டிங்ஸ்ம்,நவீன பாணி தயாரிப்பும் ஒரு ஃப்ரெஷ்னஸ் அளித்து தற்கால கதை என்ற எண்ணத்தையே தருகிறது. அருமையான முயற்சி! இதேபோல தொடருமானால் சு.வி. ரெகுலர் நாயகர்களாக ரொம்ப நாள் கோலோச்சுவார்கள், கார்டூன் ஜானரில்...

    வெளிர் நிற பின்னணியில் பளீரிடும் வண்ணங்கள் ஒவ்வொரு பக்கத்தையும் மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கின்றன...

    ஓவியங்களில் நகரும் கதை இது... ஓவயங்களை கூர்ந்து கவனித்தால் அந்த ஓவியரது நேர்த்தியான பாணியோடு ஒன்ற இயலும்....

    ஒவ்வொரு பேனலிலும் விஸ்கி பாப்பாவின் சிகையலங்காரம் கண்கொள்ளாக் காட்சி... அந்த முடியை மேல்வாக்கில் உச்சிமண்டையில் போட்டுள்ள டிசைன் தங்க நிறத்தில் ஜொலிக்கிறது....ஒவ்வொரு பேஜ் புரட்டும்போதும் விஸ்கியின் சிகையை பார்த்து ரசித்துட்டுதான் வாசித்தேன்....

    கதை முழுதும் ஒவ்வொருவரின் முகபாவங்கள் அருமையாக கையாளப்பட்டுள்ளது..
    மெதுமெதுவாக திருப்பு அவற்றை ரசிக்கவே நிறைய நேரம் பிடித்தது, ரொம்ப நன்றாக இருந்தது....
    கதை முழுக்க வில்சன், மிக்கி,டுகாஸ்டல் அடிக்கும் ரகளைகள் வாய்விட்டுச்சிரிக்கை வைக்கின்றன... இப்படி சிரிந்து வெகு நாட்கள் ஆகின்றன....

    ரொம்ப ரசித்த இடங்கள் சிலவற்றையாவது சொன்னாதான் ஓவியருக்கு மரியாதை...

    #பக்கம் 9ல் டிக்கி ஆன்டியின் சேட்டைகள்

    #பக்கம் 12 மிக்கியின் மூக்கு தீயும் இடம், அவர் நீரில் குனிந்து மூக்கை குளிர்விக்க சு.வி. அவரது முதுகில் ஏறி ஓட...

    #பக்கம் 13ல வில்சன் மண் கவ்வுவது...

    #பக்கம் 15- டோபியாஸ் நாயின் வீட்டம்மா மைண்ட் வாய்ஸ்...

    #பக்கம் 24&27ல ராக்கெட்...

    #பக்கம் 34,35&37ல விஸ்கியின் அட்ராசிடிகள்..

    #பிற்பாதி வேகமெடுக்கும் கதையில் மிக்கி& வில்சன்- சீட்டுகளுடன் அடிக்கும் கூத்துகள்....

    அடுத்து கதை2....ல

    ReplyDelete