நண்பர்களே,
வணக்கம். என்னடா பதிவின் ஆரம்பத்திலேயே நடுநாயகமாய் நம்ம கார்பீல்ட்காரு குந்தியிருக்கிறாரே என்று யோசிக்கிறீர்களா ? வேறு ஒன்றுமில்லை - சும்மா 'நொய்-நொய்' என்று மூக்கைச் சிந்திக் கொண்டே பதிவையும், பின்னூட்டங்களையும் போட்டு அலுத்துப் போய் விட்டது ; ஜாலியாய் ஏதாச்சும் எழுதுவோமே ; படிப்போமே என்று தோன்றியது ! அதன் பலனே கார்பீல்டை இங்கே வரவழைக்கத் தோன்றிய மகாசிந்தனை ! இனி ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு பதிவிலும் இந்த சாப்பாட்டு ராமப் பூனையினை இங்கே பார்த்திடலாம் ! Maybe an extra reason to visit this page ?!
இந்த வாரம் முழுக்கவே ஒரு செம வித்தியாசமான வாரம் எனக்கு !! பார்த்திருக்க டிசம்பரின் பாதி ஓடிவிட்டதே ; புத்தாண்டும், அடுத்த செட் புது இதழ்களும் கூப்பிடு தொலைவில் உள்ளனவே என்ற அலாரம் தலைக்குள் ஒலிக்க - வண்ண இதழ்களை முதலில் கரை சேர்ப்போமென்று தீர்மானித்தேன் ! தோர்கல் intense ஆனதொரு கதைக்களமாய் எப்போதுமே இருப்பது வாடிக்கை - ஆனால் அவை பெரும்பாலும் நேர்கோட்டுப் பயணங்களாகவே அமைந்திடும் ரகம் என்பதால் - அதனை கடைசியாகப் பார்த்துக் கொள்ளத் தீர்மானித்தேன் ! So பணி # 1 ஆக - லயன் கிராபிக் நாவலின் அலைகடல் அசுரர்களைக் கையிலெடுக்கத் தோன்றியது !! இந்தத் தொடரின் உரிமைகளை நாம் வாங்கி வருஷங்கள் இரண்டாகிறது ! 2016-ன் கடைசியில் வாங்கியிருந்தோம் எனும் போது - இந்தக் கதையின் CINEBOOK ஆங்கிலப் படிவங்களை நான் படித்ததுமே probably 2016-ன் மத்தியில் ! நல்ல நாளைக்கே நாழிப் பால் கறக்கும் என் ஞாபக சக்திக்கு சுமார் 25 மாதங்களுக்கு முன்பான வாசிப்பு எங்கே மண்டையில் நிற்கப் போகிறது ?!! And இதன் மொழிபெயர்ப்பும் சில பல மாதங்களுக்கு முன்னரே நமது கருணையானந்தம் அவர்களால் செய்யப்பட்டிருக்க - அந்தச் சாக்கிலும் பராகுடாவில் பயணம் போகும் வாய்ப்பு எனக்கு மிஸ் ஆகி விட்டிருந்தது ! So இப்போது எடிட்டிங்கின் பொருட்டு மொத்தமாய்த் தூக்கிக் கொண்டு அமரும் போது - `முற்றிலுமாய்ப் புதியதொரு கதையைப் படிக்கும் உணர்வே எனக்கு வழிநெடுக !! இந்தத் தொடரை ஏதோவொரு விதத்தில் ஏற்கனவே படித்திருக்கக் கூடிய வாசகர்கள் தொடரும் பத்தியினை skip செய்து விட்டால் தேவலாமென்பேன் - simply becos தொடரும் வரிகள் உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான சேதியை மறுஒலிபரப்பு செய்யவுள்ளன !!
கடற்கொள்ளையர் சார்ந்த கதைக்களங்கள் நமக்குப் புதிதாய் இருக்கலாம் தான் - ஆனால் பிரான்க்கோ-பெல்ஜியப் படைப்பாளிகளுக்கு இவை fairly frequent playgrounds ! ஆனால் அவற்றை தமிழில் வெளியிட எனக்கு நிறையவே தயக்கம் இருந்துவந்துள்ளது - பிரதானமாக வண்ணம் & தரம் அந்நாட்களில் நமக்கு சாத்தியமில்லாத காரணத்தால் ! நமது ஆதர்ஷ ஓவியர் வில்லியம் வான்சின் கடல்சார்ந்த "ப்ரூஸ் ஹாக்கர்" தொடரை வெளியிடும் நமநமப்பு எனக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னரே எழத் தான் செய்தது ! ஆனால் அந்தத் தொடரின் highlight ஆன சித்திரங்கள் + வர்ணஜாலங்கள் நமது அப்போதைய நியூஸ்பிரிண்ட் + black & white பாணிகளில் ரொம்பவே டப்ஸாவாகத் தெரிந்திடும் என்பதால் ரிவர்ஸ் கியரைப் போட்டுவிட்டேன் ! அது மாத்திரமின்றி - டிடெக்டிவ் ; கவ்பாய் ; ஆக்ஷன் என்ற வட்டத்துக்குள் மாத்திரமே நாம் உலவிடத் துணிந்திருந்த நாட்களவை ! கொஞ்சமே கொஞ்சமாய் அந்த வட்டத்தை விட்டு வெளியேறிப் பார்க்கும் தகிரியங்கள் கூட அப்போதைக்கெல்லாம் நமக்கு லேது ! So கடற்கொள்ளையர்கள் பிராங்கோ-பெல்ஜிய லோகத்தினில் அதகளம் செய்து வந்தாலும், நாம் கடல் அண்ணாச்சிகளிடமிருந்து ஒரு கணிசமான தூரத்தை தொடர்ந்தே வந்தோம் ! அதனில் மாற்றங்கள் ஏதும் நேர்ந்திராது தான் - "கி.நா" எனும் ஒரு தனிப் பயணத்தடத்தை ஏற்படுத்திடாது போயிருந்தால் & அந்த ரசனைக்கு நீங்கள் ஆரவாரமான வரவேற்புத் தந்திராவிட்டால் ! Enter லயன் கிராபிக் நாவல் & ஏகப்பட்ட புதுக் கதவுகள் படீர் -படீரெனத் திறந்தது போலொரு பீலிங்கு ! கதைகளில் வலுவும், வித்தியாசமும் தெறித்தால் அவற்றை ரசிக்க நீங்கள் ரெடி என்ற தைரியத்தில் - சமீப "பி-பெ" சூப்பர் ஹிட் தொடர்கள் எவை என்று அலசத்தொடங்கினேன் ! அப்போது பிரதானமாய்த் தட்டுப்பட்ட அரை டஜன் தொடர்களுள் "பராகுடா" கண்ணைப் பறித்தது!
இந்தத் தொடரோடு ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பாகவே எனக்கு லேசாயொரு அறிமுகம் இருப்பதும் அப்போது தான் மண்டையில் உறைத்தது ! Barracuda தொடரின் இரண்டாவதோ-மூன்றாவதோ ஆல்பம் வெளியாகவிருந்த சமயம் தான் நமது இரண்டாவது இன்னிங்சின் வேளையுமே ! ஒரு கணிசமான இடைவெளிக்குப் பின்பாக படைப்பாளிகளைச் சந்திக்க, அவர்களது பாரீஸ் ஆபீசுக்கு சென்றிருந்தேன் என்பதால் உள்ளுக்குள்ளே சன்னமாயொரு குறுகுறுப்பு - நீண்டதொரு லீவு போட்ட பின்னே வகுப்புக்குள் கால்வைக்கமுனையும் மாணவனைப் போல !! அவர்களது ஆபீசில் கீழுள்ள reception ஏரியாவில் - வண்டி வண்டியாய் சமீபத்தைய வெளியீடுகளை ஒரு "U" ஷேப்பில் அடுக்கி வைத்திருப்பார்கள் !! அதன் மையத்தில் உட்காரும் சோபாக்கள் இருக்கும் ! வேற்று தேசங்களிலிருந்து, உரிமைகளுக்கோசரம் வருகை தருவோரை நிறைய முறைகள் சந்தித்திருக்கிறேன் - அந்த ரிசப்ஷனில் ! அத்தனை பேரும் கோட்டிலும்-சூட்டிலும் கலக்கிக் கொண்டு பொறுமையாய் அமர்ந்திருப்பர் ! ஆனால் நானோ அரை லிட்டர் ஜொள்ளை கடைவாயோரம் ஒழுக விட்டபடிக்கே - அந்த U வடிவ ரேக்கில் உள்ள அத்தனை ஆல்பங்களையும் உண்டு-இல்லை என்று பண்ணிக் கொண்டிருப்பேன் ! அவற்றைப் பராக்குப் பார்ப்பதும், புரட்டிப் பார்ப்பதும் மெய் மறக்கச் செய்யும் பொழுதுபோக்கு !! BARRACUDA புது ஆல்பத்தின் வெளியீட்டுத் தருணம் என்பதால், அதனில் ஒரு 25 புக்குகளை அழகாய் அடுக்கி வைத்து அதன் மேலொரு கப்பல் மாதிரியான உருவ பொம்மையை அமர்த்தியிருந்தார்கள் ! ஒரு மெகா சைஸ் போஸ்டரும் பிரெஞ்சில் ஒட்டப்பட்டிருந்தது !! அது நாம் வண்ணத்தோடு கைகுலுக்கத் தயாராகி வந்த COMEBACK தருணம் என்றாலுமே, எனக்குள் நமது இரண்டாம் இன்னிங்சின் ஆயுட்காலம் பற்றியோ ; எங்களது மெனெக்கெடும் படலங்கள் எத்தனை தூரம் தொடர்ந்திடுமென்ற யூகிப்போ சிறிதும் இருக்கவில்லை ! So "இதுக்கு பேர் தான் பேலஸ் !!" என்று சொல்லி வாயைப் பிளக்கும் வடிவேலைப் போல - அந்த பராகுடா வண்ண ஆல்பத்தை ஒரு பெருமூச்சோடு புரட்டோ புரட்டென்று புரட்டினேன் ! கதை மீதோ - அந்த ஜானர் மீதோ நமக்கு அப்போதைக்கு ஆர்வம் கிடையாதென்றாலுமே - பக்கங்களை புரட்டும் போது - "ஆயிரத்தில் ஒருவன்" படத்தை காமிக்சாக வரைஞ்ச மாதிரியுள்ளதே !! என்று தோன்றியது ! And 2016-ல் இதனை வெளியிடும் உத்தேசத்தோடு பரிசீலிக்க நாம் தயாராக இருந்த வேளையில் - மொத்தம் 6 ஆல்பங்கள் வெளியாகி, இதுவொரு சூப்பர்-ஹிட் தொடராகிப் போயிருந்தது !!
BARRACUDA !! அது என்ன பேருடா சாமி ? என்ற குறுகுறுப்போடு தான் CINEBOOK ஆங்கில இதழிற்குள் புகுந்திருந்தேன் !! ஏற்கனவே நம்மால் CID லாரன்ஸ் என்று பெயர் சூட்டப்பட்ட நாயகருக்கு ஒரிஜினலாய் fleetway படைப்பாளிகள் தந்திருந்த பெயரும் பராகுடா தான் !! அதுவொரு மீன்வகையின் பெயர் என்று தெரியும் ; wikipedia-வைத் தட்டினால் - மேற்கொண்டு தகவல்களை புட்டுப் புட்டு வைத்தது ! ஒரு ராட்சச மீனினம் ; ரொம்பவே மூர்க்கமானது ; பார்க்கவும் சரி, பாய்ச்சலிலும் சரி - செம வில்லங்கமானது என்று விக்கி சொன்னது ! பக்கங்களை புரட்டிய சற்றைக்கெல்லாமே - "பராகுடா" என்பது கொள்ளையர்களின் கப்பலின் பெயர் என்பது புரிந்தது ! ஆக இது ஒரு பயணத்தின் கதை ; அந்தக் கப்பலில் பயணிக்கும் மனிதர்களின் கதை ; இங்கே ஹீரோ என்றெல்லாம் யாரும் இருக்கப் போவதில்லை என்பது புரிந்தது !! என்னை விட்டம் வரை வாய் பிளக்கச் செய்தது - அந்தச் சித்திர பிரம்மாண்டமும், வர்ணக் கலவையினில் தெறித்த அசத்தியமுமே !! ஒரு தொடரை CINEBOOK தெரிவு செய்திருப்பின், அதனில் நிச்சயம் weight இருக்குமென்ற திட நம்பிக்கை எனக்குண்டு !! (Of course - சிற்சிறு விதிவிலக்குகள் உண்டு தான் !!) So பர பரவென ஆல்பங்களை புரட்டிட - சற்றைக்கெல்லாம் செமத்தியானதொரு ஆக்ஷன் மேளாவை ரசித்த திருப்தி கிட்டியது !! ஆங்காங்கே சில பல மிட்நைட் மசாலாக்கள் தெளித்துக் கிடப்பதைக் கவனிக்க முடிந்தது தான் ; but அவற்றைச் சமாளித்துக் கொள்ளலாமென்ற தைரியத்தோடு - இந்தத் தொடருக்கு உரிமைகளைக் கொள்முதல் செய்யும் வேலையில் இறங்கி விட்டேன் ! அதுவும் சில மாதப் பணிகளுக்குப் பின்னே நிறைவுற, கதைகளும் வந்து சேர்ந்தன! 2018-ல் இரத்தப் படலம் மட்டும் மெகா சைஸ் நந்தியாய் குறுக்கே பிரசன்னமாகியிராவிடின் - நடப்பாண்டின் துவக்கத்திலேயே இந்த ஆல்பம் நம்மிடையே ஆஜராகியிருக்கும். But ஓவராய் பட்ஜெட் எகிறுகிற பயத்தில், சந்தா E எனும் சமாச்சாரத்தையே ஒரு வருஷம் தள்ளிப் போடத் தீர்மானித்ததால் - பராகுடாவுக்கும் ஓராண்டு ஓய்வென்றானது ; எனது ஞாபகப் பேழையிலும் (!!!) இது அடியே போகத் துவங்கிவிட்டது !
ஒரு வழியாய் அது வெளிச்சத்தைப் பார்க்கும் நேரமும் புலர்ந்திட - கதைக்குள் பணியாற்றத் புகுந்தவனுக்கு வித விதமான உணர்வுகள் !! ரொம்பவே சிம்பிளானதொரு கதைக் கரு ; அதனை பாகுபலி ரேஞ்சுக்கான ஒரு மெகா கேன்வாஸில் உருவாக்கத் துணிந்திருந்த கதாசிரியரை யாரென்று தெரிந்து கொள்ள ஆர்வம் உந்தியது ! மறுக்கா விக்கிப்பீடியாவைத்த தட்டினால் - அவரொரு பெல்ஜிய எழுத்தாளர் - பெயர் ஷான் ட்யூபோ என்றும் சொன்னது !! இவர் மட்டும் என்றேனும் நமது திரையுலகிற்கு கதை எழுதத் தீர்மானித்தால் - எக்கச்சக்க டிரெக்டர்கள் அவரது வீட்டு வாசலில் தவம் கிடக்கப் போவது உறுதி !!
மெர்செலாக்கும் ஆக்ஷனோடு ஆரம்பிக்கும் கதைக்குள் - சும்மா செண்டிமெண்ட் தாக்கம் கணிசம் ! அங்கிருந்து அடுத்த கியரைத் தூக்கினால் காதல் பிரவாகம் ; மோக தாண்டவம் ! "இவன் வில்லனின் மகனாச்சே - இவனும் விஷமாய் இருப்பானோ ?" என்று நினைக்கத் தோன்றும் கணமே - அவனுக்கு ஒரு ஹீரோவுக்கான ட்ரீட்மெண்ட் நல்கப்படுவதைக் கவனிக்க முடிந்தது ! அங்கே கட் பண்ணிய கையோடு பயணித்தால் - வித்தியாசமானதொரு உறவுமுறையினை பகீரென்று முன்வைக்கிறார் கதாசிரியர் !! "யப்பப்பா...இது என்ன புதுக் கூத்து ?" என்றபடிக்கே மிடறு விழுங்கிக் கொண்டு மேற்கொண்டு போனால் ஒரு துரோகத்தின் கதையை கண்முன்னே கொணர்கிறார் !! பெண்களின் மனதில் வஞ்சம் தீர்க்கும் வெறி புகுந்து விட்டால், வையகத்தில் அவர்களுக்கு எதுவும் துச்சமே என்பதைச் சும்மா அழுத்தம் திருத்தமாய்ப் பதிவிடுகிறார்! அதற்குள் பார்த்தால் ஒரு மிரட்டலான கெட்டப்புடன், ஒரு டெர்ரர் வில்லன் உதயமாகிறான் ! அவனுக்கு யார் மீது குரோதம் ? அவனது எதிரியின் flashback என்னவென்று கொஞ்ச நேரம் தட தடக்கிறது கதை !! அதன் மத்தியிலேயே காதலின் கரங்கள் ஆளாளை வசீகரிக்க - சில பல பிரமிக்கச் செய்யும் பீச் backdrop-களில் ஒரு சித்திர விருந்து !! இதற்கிடையே காமெடியையும் விட்டு வைப்பேனா நான் ? என்ற வேகத்தோடு கதாசிரியர் ஒரு மையப் பாத்திரத்துக்கு ஒரு கோமாளி முகமும் தந்திடுகிறார் !! அவனோடு லேசாய்ச் சிரித்து நகர - திடுமென கதையில் வேறொரு விதத்தில் twist !! எந்தக் கதாப்பாத்திரமும் இந்தப் பயணத்தின் முழுமைக்கும் உசிரோடு தொடரும் உத்திரவாதம் கிடையாது என்பது புரிகிறது - ஆம்லெட் போட முட்டையை உடைக்கும் லாவகத்தில் கதாசிரியர் ஒவ்வொருவரையும் போட்டுத் தள்ளும் பாங்கில் !! அப்புறம் அந்நாட்களது புரட்சித் தலைவரின் வாள்வித்தைகளை ஞாபகப்படுத்தும் sequences-ம் ஏராளம் !!
பேராசை ; காமம் ; காதல் ; துரோகம் ; வஞ்சம் தீர்க்கும் வெறி ; பணத்தாசை ; அடிமை வாழ்க்கை - புதையல் வேட்டை என்று ஒரு rollercoaster பயணத்தில் இந்த ஆல்பங்கள் நம்மை இட்டுச் செல்வதை ஒரு எடிட்டராய்ப் பார்க்கும் போது தலை கிறுகிறுத்து விட்டது !! ஒரு வாசகனாய் ஒரு கதையைக் கையாள்வதற்கும் , அதே கதையை ஒரு எடிட்டர் குல்லாயை மாட்டிக் கொண்டு கையாள்வதற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை மீண்டுமொருமுறை உணர முடிந்தது !! எங்கெல்லாம் டெய்லர் வேலை அவசியம் ; எங்கெல்லாம் அழுத்தம் தேவை ; எங்கெல்லாம் நீங்கள் நம்மை ஓட்டிடக் கூடிய இடங்கள் உள்ளன ? அங்கெல்லாம் ஏதேனும் செய்திட இயலுமா ? என்ற ஆராய்ச்சிகள் நெடுகத் தொடர்ந்தன ! அப்புறம் இது ஒரு புராதன கதைக் களம் என்பதாலோ - என்னவோ நமது கருணையானந்தம் அவர்களின் தமிழாக்கம் ரொம்பவே classical பாணியில் இருப்பதை லேசான நெருடலோடு கவனித்தேன் ! CINEBOOK -ன் ஆங்கில மொழிபெயர்ப்பு வேறொரு உச்சம் எனும் போது அதற்குக் கொஞ்சமேனும் ஒட்டியதாய் நமது தமிழாக்கம் இருத்தல் தேவலை என்று தோன்றிட - "Operation கோடு மேலே ரோடு" துவங்கியது ! மொழிபெயர்ப்பின் ஒரு பகுதியை மட்டும் தக்க வைத்துக் கொண்டு - redo செய்திடத் தேவையான பகுதிகளை ஒட்டு மொத்தமாகவே மாற்றியமைக்கத் துவங்க - மொத்தம் 160+ பக்கங்களுக்கான அந்தப் பணி, இந்த வாரத்தின் முழுமையையுமே கபளீகரம் செய்துவிட்டது !! சனிக்கிழமை பகலில் ஒரு வழியாய் எடிட்டிங் முடித்து அந்த சமுத்திரப் பயணத்திலிருந்து வெளிப்பட்ட போது பிரமிக்காது இருக்க முடியவில்லை - கதாசிரியரின் ஒவ்வொரு நுண்ணிய கற்பனைக்கும் சிறகுகளை நல்கியிருந்த ஓவியரை எண்ணி !! அவரைப் பற்றி ஆராய்ச்சி செய்து பார்த்தால் - மனுஷன் இது போன்ற classical கதைகளுக்குச் சித்திரம் போடுவதில் நிபுணர் என்று தெரிந்தது ! சித்திரங்கள் மட்டுமன்றி - கலரிங்குமே அவர் தான் ; and trust me folks - இந்த இதழின் வர்ணங்கள் முற்றிலுமாய் வேறொரு லெவல் !! இதோ - இவர் தான் ஓவியரும், வர்ணச் சேர்க்கையாளருமான ஜெரெமி ! 2007-ன் இறுதியில் பராகுடாவின் முதல் ஆல்பத்திற்கான பணிகளைத் துவக்கியவர் - ரொம்பவே இளவயதுக்காரர் ! நமது லயனுக்கும், இவருக்கும் ஒரே வயது தான் !!
இவர் ஓசையின்றி ஒரு வித்தியாசமான வேலையையும் செய்திருக்கிறார் - இந்தத் தொடரின் பயணத்தோடே !! ஆல்பம் # 1-ல் தனது சொந்தத் தாத்தாவையே வரைந்து கதையின் ஒரு பிரேமினுள் நுழைத்திருக்கிறார் ! அப்புறம் இதையே ஒரு போட்டி போல் சிருஷ்டித்து ஒவ்வொரு தொடரும் அல்பத்திலும், ஆர்வம் காட்டும் வாசகர்களின் முகங்களை கதை மாந்தர்களில் யாருக்கேனும் முகமாக்கியுள்ளார் !! 2016-ல் தொடர் முற்றுப் பெற்றிருக்க, இன்றைக்கு ஏகப்பட்ட ஐரோப்பிய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் இதுவொரு blockbuster hit !! நம்மிடையேயும் இது நிச்சயம் அழகான வரவேற்பினைப் பெற்றிடுமென்ற நம்பிக்கை எனக்குள்ளது !! தொடரும் வாரத்தில் துவங்கிடவுள்ள அச்சுப் பணிகளை ஒழுங்காகச் செய்து விட்டால் ஒரு அழகான இதழை உங்களிடம் ஒப்படைக்கும் திருப்தி நமதாகிடும் ! Fingers crossed !! ஆக ஆண்டின் முதல் வெளியீட்டுக்கானதொரு முரட்டு பில்டப்பை இத்தோடு நிறைவு செய்து கொண்டு - அடுத்த இதழ் பக்கமாய்க் கவனத்தைத் திருப்புகிறேன் !!
And who else but TEX - அதிரடிகளோடு புத்தாண்டைத் தொடர்ந்திட ?! "சாத்தானின் சீடர்கள்" ஒரு 220 பக்க முழுநீள ஆக்ஷன் அதிரடி ! அட்டைப்படம் நமது ஓவியர் மாலையப்பனின் கைவண்ணம் ! நாயகரும் சரி ; வில்லன்களும் சரி - போனெல்லின் ஓவியர்கள் வரைந்த சித்திரங்களே ! அவற்றை தேவையான சைசுக்கு பிரிண்ட் போட்டுக் கொண்டு, வர்ணம் தீட்டியிருக்கிறோம் ! So கூடுமானமட்டில் கை ; கால் ; மண்டை என அங்க அளவுகள் சரியாகவே உள்ளதாய் எனக்குத் தோன்றியது !! அக்மார்க் விளக்கெண்ணையோடு ரெடியாக நீங்கள் காத்திருப்பீர்களெனும் போது திருத்தங்களிருப்பின் செய்திடப் பார்த்திடலாம் !! And இதோ - உட்பக்க preview :
As always - வன்மேற்கின் இந்த அதிரடிகள் ஒரு அமர்க்களமான வாசிப்புக்கு guarantee என்பேன் !!
Before I sign off - சில பல கொசுறுத் தகவல்கள் :

- இதுவரையிலான சந்தாக்களின் பதிவினில் 97% - A B C D E என்ற 5 பிரிவுகளுக்கும் சேர்த்தே தான் என்பது செம சந்தோஷத் தகவல் ! Still a long way to go - ஆனால் இதுவரையிலான சந்தா பாணியே மேற்கொண்டும் தொடர்ந்திடும் பட்சத்தில் - "கி.நா" சந்தா நமது ஆதர்ஷச் சந்தாப் பிரிவுகளில் ஒன்றாகிடும் !!
- நிறைய நண்பர்கள் ஆன்லைனில் பணம் அனுப்பி விட்டு, அது சார்ந்த தகவல்களைத் தெரிவிக்காது உள்ளனர் !! எங்களது பேங்க் ஸ்டேட்மெண்ட்டில் சில நேரங்களில் செலுத்துவோர் பெயரிருக்கும் ; பல நேரங்களில் IMPS reference நம்பர் மாத்திரமே இருந்திடும். So பணம் அனுப்பிய கையோடு சிரமம் பாராது ஒரு மின்னஞ்சலைத் தட்டி விடுங்களேன் ப்ளீஸ் ? கிட்டத்தட்ட 30 பேரது தொகைகள் தற்போதைக்கு அனாமத்தாய் சஸ்பென்ஸில் தொங்கி வருகின்றன guys !! Please do the needful !!
- நமது புது வலைத்தளமான www.lion-muthucomics.com-ல் ஆன்லைன் கொள்முதல் ; சந்தா கட்டும் வசதிகள் உண்டு ! அங்குள்ள payment gateway - PAYTM என்பதால் பரிவர்த்தனைகள் பிசிறின்றி இருப்பதாய்த் தெரிகிறது ! தற்போதைய www.lioncomics.in தளத்தில் payment errors கொஞ்சம் தூக்கலாகவே இருந்து வருவதாய் சமீபத்தில் புகார்கள் ! அவற்றை ஒவ்வொருமுறையும் Worldmart மும்பை நிறுவனத்தோடு சரி பார்ப்பதற்குள் நாலைந்து நாட்கள் ஓடி விடுகின்றன ! So இதுவரையிலும் சந்தா செலுத்தியிரா நண்பர்கள் புதுத் தளத்தில் முயற்சித்துப் பார்க்கலாமே - ப்ளீஸ் ?
- And கரம் கூப்பிய வேண்டுகோள்கள் சந்தாக்களின் பொருட்டு !! 2019 எக்ஸ்பிரஸ் புறப்பட இன்னமும் இரு வாரங்களே உள்ளன என்பதால் - உங்களின் துரிதம் நமக்குப் பெரிதும் உதவும் !!
Bye all ; தோர்கலோடு ஞாயிறைக் கழிக்கக் கிளம்புகிறேன் !! See you around !! Have a fantastic Sunday !!
இனிய இரவு வணக்கம்
ReplyDeleteஹல்லோ...
ReplyDeleteஹாய்ய்..
Deleteஹல்லோ
ReplyDeleteஅலோ..
Delete4
ReplyDelete{மறுக்கா திறனேற்றப்பட்டது… ரெண்டாவது தபா முழுப்புள்ளி சுழியம் வகையறா
ReplyDelete(Reloaded version 2.0ன்னு சொல்ல வந்தேங்கோ)}
உள்ளேன் ஐயா..!!
வாங்கோ சார் ! திறனேற்றப்பட்ட ; மெருகூட்டப்பட்ட software-க்கு புச்சா DP நஹியா ?
DeleteDP யையும் மாத்திட்டா ... என்னோட ஐடின்னு எனக்கே தெரியாமப்பூடுமோன்னு பயந்துபோய் அப்படியே விட்டுடட்டேன் சார்..!
Deleteஅத்தோட ஆர்டினோட லானாவுக்கு ரொம்ப பிடிச்ச DPயாவும் இருப்பதால ...மாத்தமுடியலை சார்..! :-)
// மறுக்கா திறனேற்றப்பட்டது //
Deleteமருத்துவ விடுப்பில் சென்று மறுக்கா,மறுக்கா திறனேத்தி,மறுசுழற்சியாகி வந்துள்ள கண்ணரே வாங்கோ,வாங்கோ...
4.0
Deleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteவாங்கோ டெர்ரர் DPகார் !!
Deleteவெர்ஷன் 2.0 செம எண்ட்ரி போல,தெறிக்க விடுங்க ஈ.வி...
Delete7th
ReplyDeleteகார்பீல்டை்விட சாப்பாட்டு ராமனா மற்றும்சிரிக்க வைக்கிற பூனை ஒன்னு இன்னிக்கு வரும்...வரனும்...
ReplyDeleteகார்பீல்டருக்குப் போட்டியா ? அதுவும் பூவாவிலா ? கஷ்டம்ம்ம்ம் சார் !!
Deleteநம்ம ரின்டின் கேன் மறந்துட்டா எப்படி சார்
Delete//நம்ம ரின்டின் கேன் மறந்துட்டா எப்படி//
Deleteஅட...ஆமாம்லே ?
ஆஜர்..
ReplyDeleteஏற்கனவே பராகுடா எப்போ வரும்னு கெடந்து தவிச்சிக்கிட்டு இருக்கையில ...உங்களோட ப்ரீவியூ சத்தியமா தூக்கத்தை பறிச்சிடுச்சி சார்...!
ReplyDeleteஇப்போது வரப்போகிற பராகுடாவின் வெற்றி இன்னும் பலப்பல வேறலெவல் கதைகளுக்கான திறவுகோலாக இருக்குமென்று ஐயமற நம்புகிறோம் சார்..!!
கறுப்பு வெள்ளையில் டெக்ஸின் சித்திரங்கள் மிரட்டுகின்றன..!
ReplyDeleteபுத்தாண்டில் ஒரு அதகள சித்திரவிருந்து காத்திருக்கிறது போலும் ...!
நாம் இந்த ஓவியரின் பாணியில் பார்த்திடவிருக்கும் முதல் ஆல்பம் இது தானென்று நினைக்கிறேன் !
Deleteஇந்த ஜனவரியில் டெக்ஸ், தோர்கல், பராகுடா என கலக்கல் காக்டெய்ல் காத்திருக்கு போல...
ReplyDeleteமூன்றுமே ஹிட் அடிக்கும்...
Fingers crossed !!
Deleteபுத்தாண்டு இதழ்கள் அனைத்தும் அமர்க்களமாக இருக்கும் போல் தெரிகிறது. ஆண்டு அட்டவணையே அமர்க்களம். சாய்ஸில் விட அவசியமற்ற கதைகள். கூடவே லாயல்ட்டி பாயிண்டுகள் கலர் டெக்ஸ் போன்ற பரிசுகள் எல்லாம் சந்தாவை கவர்ச்சிகரமாக்குகிறது.
ReplyDeleteநண்பர்கள் அனைவரும் இணைந்து கட்டியதால் சற்றே தாமதமானாலும் வழக்கம் போல் இரட்டை சந்தாவை கட்டியாகி விட்டது. புக்கிற்காக காத்திருக்க வேண்டியது தான்.
2019 -ன் இறுதியில் மனநிறைவு விரவியிருப்பின் - நமது தேர்வுகள் தேறி விட்டன என்று எடுத்துக் கொள்வேன் !! பார்க்க வேண்டும் சார் !
Delete####2019 -ன் இறுதியில் மனநிறைவு விரவியிருப்பின்####
Deleteகேப்டன் டைகர் கதையை மட்டும் முழுதாக போடுங்களேன் சார்..
2019 கதைகளில் ஆக பெரிய குறை இது..
முன்பே கருத்து கூறாதது தவறுதான் ஆயினும் எனது வருத்தத்தை பதிவு செய்கிறேன்..
மறுபதிப்புகளில் லயித்துக் கிடக்காது புதுசுகளின் பக்கமாய்ப் பார்வைகளை ஓடச் செய்வதே 2019 -ன் பிரதான நோக்கம் ! So டைகர் ; ஸ்பைடர் என்ற கவலைகளை உதறிடுவோமே நண்பரே !
DeleteHello everybody
ReplyDeleteஎடிட்டர் சார்,
ReplyDeleteபராகுடா பற்றிய உங்களது விவரிப்புகள் எங்களின் எதிர்பார்ப்பு மீட்டர்களை ஏகத்துக்கும் எகிறவைக்கின்றன! கதாசிரியரின் எட்டுத்திக்கும் சிறகடிக்கும் கற்பனாசக்தி ஒருபுறம் மிரட்டுகிறதென்றால், ஓவியரின் வித்தியாசமான பாணிகள் மறுபுறம் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன! இவர்களோடு உங்களின்(+ கருணையானந்தம் அவர்களின்) தனித்துவமான மொழி பெயர்ப்பும் ஒன்றுசேருந்திடும்போது - அங்கே ஒரு சிலிர்க்க வைத்திடும் வாசிப்பு அனுபவம் உறுதி என்பது நச்சென்று புரிகிறது!
ஆவலுடன் - பராகுடாவுக்காண்டி!
டெக்ஸ் அட்டைப்படத்தில் டெக்ஸ் தவிர மற்ற அனைத்தும் அருமை! டெக்ஸின் முகம் வயதான தோற்றத்திலும், கால்கள் இயல்பான அளவைக்காட்டிலும் குட்டையாகவும் தெரிகின்றன! ( பேசாம டெக்ஸுக்கும் அந்த குக்ளஸ்கானின் முகமூடி + அங்கியை மாட்டிவிட்டுடுங்களேன்? ;) )
அதான் 70 வது பிறந்தநாள் கொண்டாடிட்டாரே.இன்னும் இளமையாவே இருந்தா டெக்ஸே வெக்கபடுவார்னு ஓவியர் நினைச்சிருப்பாரு..!
Delete// டெக்ஸ் அட்டைப்படத்தில் டெக்ஸ் தவிர மற்ற அனைத்தும் அருமை! //
Deleteஅதே,அதே, ஒருவேளை கதைக்கு திருஷ்டியா இருக்கட்டும்னு விட்டுருப்பாங்களோ?
அது ஒரிஜினல் போனெல்லி ஓவியரின் சித்திரமாக்கும் ; so பஞ்சாயத்து ஓவர்..ஓவர்....சொம்பு, ஜமுக்காளத்தை எடுத்து வண்டியிலே போட்டாச்சு !
DeleteJokes apart - ஏதாச்சும் திருத்தம் முடிகிறதாவென்று பார்க்கலாம் !
DeleteVery good morning.
ReplyDeleteDear Vijayan அண்ணாச்சி... உங்க பிரிவியூ பாத்ததுல இருந்து very much eagar to read ஷான் ட்யூபோ 's BARRACUDA!!
ReplyDelete//எந்தக் கதாப்பாத்திரமும் இந்தப் பயணத்தின் முழுமைக்கும் உசிரோடு தொடரும் உத்திரவாதம் கிடையாது என்பது புரிகிறது - ஆம்லெட் போட முட்டையை உடைக்கும் லாவகத்தில் கதாசிரியர் ஒவ்வொருவரையும் போட்டுத் தள்ளும் பாங்கில் !! //
Awesome!! waitingg to sail on the seas with the Pirates!!
Have a nice week ahead sir... :)
thank you !
Deleteபராகுடாவின் கதாசிரியர் 'ஷான் ட்யூபோ'வுக்கு எப்படி இப்படியொரு படைப்பாற்றல் சாத்தியமானது என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே அவரது புகைப்படத்தை உற்றுநோக்கியபோதுதான் ஒரு பளிச் உண்மை புலனாகியது!மனிதருக்கு பழைய கூலிங் க்ளாஸுகளை கடித்து விழுங்கும் பழக்கமிருக்கிறது போலிருக்கிறது..ஹிஹி!
ReplyDeleteமனுசர் எம்புட்டு ஃபீல் பண்ணி ரொமான்டிக் போஸ் குடுத்திருக்காப்ல ...பொசுக்குன்னு கவுத்துட்டுங்களே குருநாயரே..!
Deleteஎனக்கென்னவோ ..அவருடைய படைப்பாற்றலுக்கு அந்த ரொமான்டிக் லுக்கின் பின்னனிதான் காரணமாக இருக்குமோன்னு தோணுது ..!:-)
கதைக்குள் எக்கச்சக்க ரொமான்டிக் தருணங்கள் உள்ளன ; and இயன்றமட்டிலும் சென்சார் நஹி ! So கதாசிரியருக்கு நீங்கள் சீக்கிரமே 'ஜே' போடப்போவது உறுதி !
Deleteவேதாளர்(முகமூடி வீரர் மாயாவி - ராணி காமிக்ஸ்) கதைகளை வெளியிடலாமே? கதைகள் ராணி காமிக்ஸ் இல் வந்தவைதான். ஆனால் அது இருபது வருடங்களுக்கு முன்னர். சிறுவர்களுக்கான கதை என்றால் அது வேதாளர் தான். Lucky Luke, smurfs Vida சிறந்த , சிறுவர்களுக்கான கதை தளம் அதுதான். முயற்சி செய்யலாமே.
ReplyDeleteநீங்கள் சமீபத்தைய blog வாசகரென்றே நினைக்கிறேன் சார் ; ஏனெனில் இந்தத் தலைப்பை ஏகமாய் முந்தய பதிவுகளில், பல தடவைகள் அலசி விட்டிருக்கிறோம் !
Deleteam waiting..
ReplyDeletefor baraguda...
ReplyDelete29th
ReplyDeleteThank you very much sir.
ReplyDeleteஹலோ சார், பரகுடா எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாக Iஇருக்குm என்று நினைக்கிறேன். உங்கள் ரிவ்யூ எப்போ புக் வரும் என்ற ஆவலை தூண்டி விட்டது.
ReplyDeleteஇது மாதிரி புது ஜானர் கதைகளை அவ்வப்போது கண்ணில் காட்டுங்கள். நன்றி.
//புது ஜானர் கதைகளை அவ்வப்போது கண்ணில் காட்டுங்கள்//
Deleteநிச்சயமாக சார் !
Sir appatiyellaam terringer smithaiyum கண்ணுல காட்டுங்களேன் கருர் ராஜா sekaran
ReplyDeleteபாரகுடா முன்னோட்டம் ஆவலை தூண்டுகிறது. காலனின் கானகம் ஏமாற்றம்தான் சாத்தானின் சீடர்கள் சோடை போகாது என நம்புகிறேன்.
ReplyDelete//சாத்தானின் சீடர்கள் சோடை போகாது என நம்புகிறேன்//
Deleteநானுமே !!
அலை கடலின் அசுரர்களை அரவணைக்க ஆவலோடு..!
ReplyDeleteஆக்ஷன் ஸ்பெஷல்!
ReplyDeleteபுத்தகம் நெடுகிலும் குட்டி குட்டி கதைகளே கோலோச்சுவதால் லேசான ஒரு அயற்சி உண்டாகிறது!
ஆனாலும் ஒரு ஈர்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை!
பிரிட்டனின் அழகு ஓவியங்களுக்கு அடிமை நான்!
ஆரம்பம் முதலே முழுநீளக் கதைகளாகவே வாசித்துப் பழகியவர்கள் நாம் ; so இந்தச் சிறுகதைத் தொகுப்புகள் நமக்கு சற்றே பழகிட நேரம் எடுக்கலாம் !
Deleteடீசரே இப்படி பட்டையை கிளப்பினா மெயின் பிச்சர் எப்படி வெடிக்க போவுதோ ..ஆவலுடன் வெயிட்டிங்..
ReplyDelete###
பரகுடா
காலை வணக்கம் நண்பர்களே
ReplyDeleteபரகுடாவின் அடுத்த செட் கதைகள் எப்போது வரும் சார்? மிச்சமுள்ள பரகுடாவின் கதைகள்!
ReplyDeleteஜனவரியில் அறிவிப்பு இருக்கும் சார் !
Deleteபாரகுடா முன்னோட்டம் ஆவலை தூண்டுகிறது.புத்தாண்டு அருமையான துவக்கத்தில் இருப்பதாக தெரிகிறது. நம்ம ஈவி 2.0 தெரிவித்தது போல் டெக்ஸ் உருவம் இன்னமும் நன்றாக இருக்கலாம் என நினைக்கிறேன்.
ReplyDeleteஒரிஜினல் போனெல்லி டிராயிங் சார் ; நாம் அதனை செராக்ஸ் எடுத்து ஒட்டி, மேலே கலர் மாத்திரம் பூசியுள்ளோம் !
Deleteஆக்சன் ஸ்பெஷல்:
ReplyDeleteஇயந்திரனின் முதல் சில பக்கங்கள் மெதுவாக சென்றது அடுத்த சில பக்கங்களில் கதையுடன் ஒன்று ஆரம்பித்து விட்டேன். இவன் மனிதன் இல்லை இயந்திரம் என்று மனிதனை தங்கள் வேலைக்கு பயன்படுத்திய அதிகாரிகள் மேல் கோபம் வந்தது.
ஒற்றைக்கண் ஜாக் முதல் முறையாக படித்தேன். சிறு சிறு கதைகளாக இருந்தாலும் படித்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.
ரப்பர் மண்டையன்: ஜோ என்ற பெயரில் தினமலரில் வந்த போது படித்து ரசித்து இருக்கிறேன். மீண்டும் அவனை நமது காமிக்ஸில் பார்ப்பது மகிழ்ச்சி. இவனின் அனைத்து கோணங்கி சேட்டைகளையும் ரசித்தேன். எனது குழந்தைகள் இவனைப் பார்த்து குலுங்கின.
அட்டைப்படம் டாப்.
இது போன்று சிறு சிறு கதைகளாக வந்த கார்டூன் கதைகளை ஆர்வமுடன் ரசித்தேன் ஆனால் இந்த புத்தகத்தை படிக்க -:(
அடுத்த முறை கொஞ்சம் பெரிய கதைகளாக கொடுங்கள், ரிப் கெர்பி, ஸ்பைடர் மற்றும் புதிய ஆர்ச்சியை.
///ரப்பர் மண்டையன்: ஜோ என்ற பெயரில் தினமலரில் வந்த போது படித்து ரசித்து இருக்கிறேன். மீண்டும் அவனை நமது காமிக்ஸில் பார்ப்பது மகிழ்ச்சி. இவனின் அனைத்து கோணங்கி சேட்டைகளையும் ரசித்தேன்.///
Deleteநானும் ...
ரிப் கிர்பி fleetway குடும்பச் சரக்கல்ல சார் !
Deleteஆர்ச்சியை கூட குழந்தைகளுக்கு படித்துக் காட்ட ஏதுவாக இருக்கும் என ஏற்றுக் கொள்ளலாம். ரிப் கிர்பி...இப்பவெல்லாம்்படிக்க முடியுமான்னு தெரியலை.
Deleteவிஜயன் சார்,
Delete// ரிப் கிர்பி fleetway குடும்பச் சரக்கல்ல சார் !//
அப்ப ரிப் கிர்பி குடும்பத்தில் உள்ளவர்களை மட்டும் இணைந்து ஒரு குண்டு புத்தகத்தை போட்டு தாக்குங்கள்.
வந்திட்டேன்..!
ReplyDeleteகாலனின் கானகம்: ஒரு கிட்நாப் வழக்கை புலனாய்வு செய்ய கிளம்பும் டெக்ஸ் அங்கு நிகழும் எதிர்பாராத திருப்பம் இறுதியில் கிட்நாப் செய்யப்பட்ட நபரை மீட்டு வருகிறார் ஆம் பிணமாக. கொஞ்சம் பழைய கதை போன்று தெரிந்தாலும் மிகவும் ரசித்தேன். பக்கங்கள் விறுவிறுவென்று சென்றது.
ReplyDeleteடெக்ஸ் மிளகு.
"கடலோர களரிகள் "
ReplyDeleteவாவ்..! என்னே ஒரு கவித்துவமான தலைப்பு.ரொம்பவே என்னை இம்ப்ரஸ் செய்தது.
சார்....நம்ம கவிதையெல்லாம் 'டச்சக்கு ..டும் டும்' ரேஞ்சுக்குத் தான் இருக்கும் ! இந்தப் பதிவின் தலைப்புகளெல்லாமே டைப்பிடித்து முடிக்கும் முதல் நொடியில் தலைக்குள் எழும் பெயர்களே !
Deleteரப்பர் ஜோ ஜே
ReplyDelete+1
Deleteபாராகுடா கதையின் ஓவியர் ஜெரெமி வித்தியாசமானராகத் தெரிகிறார். ஆம் சில நிஜமாந்தர்களையும் தனது ஓவியங்களில் இணைப்பது. இவரின் சித்திர விருந்தை சுவைக்க தயாராக உள்ளேன். பாராகுடா பற்றிய உங்கள் பதிவு எனது ஆர்வத்தை பண்மடங்கு அதிகரித்து விட்டது.
ReplyDeleteசாத்தானின் சீடர்கள்: அட்டைப் படம் வித்தியாசமாக உள்ளது. பின் அட்டையில் துப்பாக்கியால் சுட்டு கொண்டு இருக்கும் இரண்டு நண்பர்களும் நமது டெக்ஸ் மற்றும் கார்சன் போல் இல்லை. அதுவும் டெக்ஸ் நமது கருப்பு வெள்ளை நாயகர் ஜானி போல் தெரிகிறார். இதனை கொஞ்சம் சரி செய்தால் நல்லது.
பின்னட்டையில் உள்ள எல்லாப் படங்களுமே கதையிலிருந்து எடுக்கப்பட்டுள்ள ஒரிஜினல் படங்களே சார் ! அவற்றை எவ்விதம் சரி பண்ணுவது ?
Delete// அவற்றை எவ்விதம் சரி பண்ணுவது ? //
Deleteவேறு படத்தை போடலாமே?
ஆக்ஷன் ஷ்பெசல் :
ReplyDeleteபக்க நிரப்பிகளாக வந்த ரப்பர் மண்டையன் ரிக்கி நன்றாகவே சிரிக்க வைக்கிறான் ..!
சூப்பர் கம்ப்யூட்டர் மாக்ஸின் 13ஆவது தள கதைகள் வித்தியாசமாக படிக்க நன்றாகவே இருக்கின்றன..!
ஒற்றைக்கண் ஜாக்கும், இயந்திரனும் இன்றைய நமது ரசனைக்குத் தீனிபோட தவறிவிட்டார்களோ என்று தோன்றுகிறது.!
விற்பனையையும் நண்பர்களின் ஆதரவையும் கணக்கில் கொண்டு ஆக்ஷன் ஷ்பெசலை தொடரலாமா வேண்டாமா என்பதை எடிட்டர் சாரின் முடிவுக்கே விட்டுவிடுவோம் ..!
// பக்க நிரப்பிகளாக //
Deleteஹா,ஹா,ஹா...
// சூப்பர் கம்ப்யூட்டர் மாக்ஸின் 13ஆவது தள கதைகள் வித்தியாசமாக படிக்க நன்றாகவே இருக்கின்றன..!//
உஷாரா முதல்லயே இதை படிச்சிட்டோமுல்ல...
விற்பனையில் thumbs up ! ரசனையில் 50 - 50 என்பதே இதுவரையிலான நிலவரம் !
Deleteஎனக்கும் 13 வது தள கதைகள் மிகவும் பிடித்தது.
Deleteமேடையில் ஒரு மன்மதன் :
ReplyDeleteஒரு மேடை நாடக கும்பலை எதேச்சையாக சந்தித்து உடன் செல்கிறார் லக்கி.!
அந்த நாடகம் நடக்கும் ஊர்களில் எல்லாம் சொல்லிவைத்தார் போல் திருட்டு நடக்கிறது .!
லக்கிக்கு மட்டுமல்ல நமக்குமே யார் திருடனாக இருப்பார்கள் என்று யூகிக்க முடிந்தாலும் அதை லக்கி நிரூபிப்பதுதான் கதையே.!
கதைமுழுக்க சிரிக்க பல விசயங்கள் உள்ளன.! முதன்முதலாய் நாடகத்தை பார்க்கும் மக்களின் ரியாக்ஷன் செம்ம காமெடி.!,வில்லன் ஹீரோயினை துன்புறுத்தும் போது ஹிரோ காப்பாற்ற வருவதற்கு முன்னரே பார்வையாளர்கள் வில்லனை அடிக்க பாய்வார்கள் ..! ஆனால் ஜெயில் கைதிகளுக்காக நாடகம் நடக்கும்போது ஹீரோயினை வில்லனிடமிருந்து காப்பாற்ற வரும் ஹிரோவை அடித்து விரட்டுவார்கள் ..! லக்கிலூக் கதைகளுக்கே உரித்தான மறைமுக ஹாஸ்யம் ..!! :)))
அதிரடிப் பொடியன் :
சிறை தண்டனை அனுபவித்து வரும் பொடியன் பில்லியை வேறோரு வழக்கில் விசாரிக்க அழைத்துவரச் சொல்லி ஆர்டர் வரும்.! பில்லியை அழைத்துச் செல்லும் பொறுப்பு லக்கி லூக்கிடம் ஒப்படைக்கப்பட ..தொடர்வது ஒரு அட்டகாச காமெடி மேளா ..! வழியில் .. பில்லி இன்னொரு போக்கிரியின் உதவியுடன் தப்பிக்க முயல்வதும், முயற்சிகள் சொதப்புவதும் சிரிப்புத் தோரணங்கள்.!
அரும்பாடுபட்டு பில்லியை கொண்டுபோய் கோர்ட்டில் ஆஜர்படுத்தினால் அங்கே அவனுக்கு வழங்கப்படும் தண்டனையும் அவனை நம்பி ஏமாந்த போக்கிரி பெர்ட்டுக்கு கிடைக்கும் தண்டனையும் ஹாஹாஹா....காமெடி க்ளைமாக்ஸ் ..!
// வில்லன் ஹீரோயினை துன்புறுத்தும் போது ஹிரோ காப்பாற்ற வருவதற்கு முன்னரே பார்வையாளர்கள் வில்லனை அடிக்க பாய்வார்கள் ..! ஆனால் ஜெயில் கைதிகளுக்காக நாடகம் நடக்கும்போது ஹீரோயினை வில்லனிடமிருந்து காப்பாற்ற வரும் ஹிரோவை அடித்து விரட்டுவார்கள் ..! லக்கிலூக் கதைகளுக்கே உரித்தான மறைமுக ஹாஸ்யம் ..!! :))) //
Deleteபாயிண்ட்,பாயிண்ட்...
Classic LL !!
Deleteவில்லன் ஹீரோயினை துன்புறுத்தும் போது ஹிரோ காப்பாற்ற வருவதற்கு முன்னரே பார்வையாளர்கள் வில்லனை அடிக்க பாய்வார்கள் ..! ஆனால் ஜெயில் கைதிகளுக்காக நாடகம் நடக்கும்போது ஹீரோயினை வில்லனிடமிருந்து காப்பாற்ற வரும் ஹிரோவை அடித்து விரட்டுவார்கள் ..! லக்கிலூக் கதைகளுக்கே உரித்தான மறைமுக ஹாஸ்யம் ..!! :))) //
DeleteClassic
எப்படியோ கணக்கில் இருந்து பணத்தை தூக்கிட்டீங்க
ReplyDeleteஉங்கள் கணக்கு....உங்கள் வங்கி...உங்கள் பணம்...அதனை அனுப்பிட நினைப்பதும் உங்கள் தீர்மானம் ! இதில் நான் "தூக்கும் படலம்" எங்கிருந்து வந்ததோ ?
Deleteஅனுப்ப வேண்டாம் என்று நினைத்தால் கூட எங்களால் அனுப்பாமல் இருக்க முடியாது.
Deleteஅதைதான் குறிப்பிடுகிறார்.
சந்தா வ சொன்னேன்
ReplyDelete,யார் அந்த மரணதூதன் :
ReplyDeleteமுப்பத்தியிரண்டே பக்கங்களில் ஒரு டெக்ஸ் வில்லரின் கிராபிக் நாவல் ..!
செனட்டர் ஒருவரை போட்டுத்தள்ள வரும் கொலைகாரன் ஒருவன் குறிப்பிட்ட கோச்சில் பயணிக்க இருப்பதாக தகவல் வர. , டெக்ஸ் அதே கோச்சில் மாற்றுப்பெயரில் புகுந்து துப்பறிய முயல்கிறார்.! ஆனால் கோச்சில் பயணிக்கும் ஐவருமே ஒரு மார்க்கமாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலேயே தோன்றுகின்றனர்.! முன்னதாகவே நகரில் காத்திருக்கும் கார்சனோடு இணைந்து..ஐவரையும் கண்காணிக்க இறுதியில் கொலைகாரன் மாட்டுகிறான். .அதுவும் சந்தேகத்துக்கு அப்பாற்ப்பட்ட வேடத்தில் ..! சரிதான் கதை முடிந்தது என நினத்தால் ட்விஸ்டே அதற்குப்பிறகுதான் ...!
அந்தப் பெண் செனட்டரை தனிமையில் சந்தித்து பேசிக்கொண்டிருக்கையில் டெக்ஸும் கார்சனும் பணி முடிந்த திருப்தியில் நகரைவிட்டு வெளியேறுகின்றனர். .பின்னனியில் ஒரு டுமீல் கேட்கிறது ..!
அந்த டுமீல் சத்தத்திற்கு இரண்டு வியாக்கியானங்கள் தரலாம்.!
ஒன்று பெரும்பான்மையினர் ஏற்கும் முடிவு ...அதாவது செனட்டரை கொல்ல ப்ளான் A ப்ளான் B ன்னு ரெண்டு இருந்திருக்கலாம் ...! ப்ளான் A வான பாதிரியார் சொதப்பியதால் ப்ளான் Bயான டீச்சர் செனட்டரின் கதையை முடித்திருக்கலாம் ..! என்மீது யாருக்கும் சந்தேகம் எழுந்திடவில்லை என்ற டீச்சரின் வசனம் நம்மை இந்த முடிவுக்கு வர தூண்டுகிறது.!
இரண்டாவது ...
(என்னுடையது)
செனட்டருக்கும் டீச்சருக்கும் ஏற்கனவே நெருங்கிய உறவு இருப்பது அவர்கள் பேசிக்கொள்வதில் எளிதாக புரிபடுகிறது.! செனட்டர் அவளைப்பார்த்து அதிர்ச்சியில் சிடுசிடுக்கும்போது கண்ணியமான டீச்சர் அடையாத்தோடு வந்திருப்பதாக அந்தப்பெண் சொல்கிறாள்.! எனவே அவள் அந்த ஊருக்கு வந்ததே செனட்டரை சந்திக்கத்தான் ..! சற்றுமுன்னர்தான் தன் குடும்பம் தன் நேர்மை நல்லொழுக்கம் பற்றியெல்லாம் செனட்டர் மக்களிடம் அளந்துவிட்டு வந்திருப்பார்.! எனவே இவளால் தனக்கு அவப்பெயர் வருமென்ற எண்ணத்திலோ ..அல்லது பணம் கறக்க வந்திருக்கிறாள் என்ற ஆத்திரத்திலோ செனட்டரே அந்தப் பெண்ணை டுமீல் செய்திருக்கலாம் ..!
எது எப்படியோ ...நல்ல சஸ்பென்ஸ் கதை ..!
// செனட்டருக்கும் டீச்சருக்கும் ஏற்கனவே நெருங்கிய உறவு இருப்பது அவர்கள் பேசிக்கொள்வதில் எளிதாக புரிபடுகிறது.! செனட்டர் அவளைப்பார்த்து அதிர்ச்சியில் சிடுசிடுக்கும்போது கண்ணியமான டீச்சர் அடையாத்தோடு வந்திருப்பதாக அந்தப்பெண் சொல்கிறாள்.! எனவே அவள் அந்த ஊருக்கு வந்ததே செனட்டரை சந்திக்கத்தான் ..! சற்றுமுன்னர்தான் தன் குடும்பம் தன் நேர்மை நல்லொழுக்கம் பற்றியெல்லாம் செனட்டர் மக்களிடம் அளந்துவிட்டு வந்திருப்பார்.! எனவே இவளால் தனக்கு அவப்பெயர் வருமென்ற எண்ணத்திலோ ..அல்லது பணம் கறக்க வந்திருக்கிறாள் என்ற ஆத்திரத்திலோ செனட்டரே அந்தப் பெண்ணை டுமீல் செய்திருக்கலாம் .//
Deleteஇது தான் நான் குழம்பிய விஷயம். நல்ல வேளை தெளிவு படுத்தி விட்டீர்கள்.
அப்பறம் நம்ப டெக்ஸ் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக முடிக்கவில்லை என எடுத்துக் கொள்ளலாமா?
///
Deleteஅப்பறம் நம்ப டெக்ஸ் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக முடிக்கவில்லை என எடுத்துக் கொள்ளலாமா?///
அதை எப்படி என் வாயால சொல்லுவேன் ....:-)
அப்பறம் நம்ப டெக்ஸ் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக முடிக்கவில்லை என எடுத்துக் கொள்ளலாமா?..##
Deleteசெனட்டரை எதிரியிடம் இருந்து காப்பாற்ற வந்த டெக்ஸ் சரியான விதத்தில் காப்பாற்றி விட்டார் என்றே சொல்லலாம்.டீச்சரை பொறுத்தவரை செனட்டர் ஏமாற்றுகாரன் ,மோசடி பேர்வழி என்தும் நமக்கு தெளிவுபடுத்தும் பொழுது தீயவனை டீச்சர் சுட்டு கொள்வதாகவே எடுத்து கொள்ளலாம் ( கொண்டேன் ..) நியாயமான காரணத்தினால் தீயவனை சுட்டுகொல்வதில் டெக்ஸ் பாகுபாடு காட்டுவதில்லை என்பதால் டெக்ஸ் ம் சரியாக கடமையாற்றி விட்டார் டீச்சரும் சரியாக கடமையாற்றி விட்டார் என்றே எடுத்து கொள்ளலாம் ( எடுத்து கொண்டேன்.)
ie...
Deleteoperation success patient dead
அதாவது இப்போதைய ட்ரென்ட்டுக்கு ...இதை
வெற்றிகரமான தோல்வின்னு எடுத்துக்கலாம் இல்லையா தலீவரே..! :-)
உம்...:-(
Delete// அப்பறம் நம்ப டெக்ஸ் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக முடிக்கவில்லை என எடுத்துக் கொள்ளலாமா? //
Deleteகிட்டதட்ட கி.நா பாணியில் கதையை முடித்திருப்பதால் முடிவு நம் அனுமானத்திற்கே விடப்படுகிறது,கண்ணன் சொன்னது போல் வெற்றிகரமான தோல்வின்னு கூட வெச்சிக்கலாம்.
ஆனால் ஆசிரியர் சொன்னது போல் அந்த கடைசி பேனலில் டூமீல் இல்லாமல் இருந்தால் முடிவை நாம் வேறு மாதிரியும் எடுத்துக் கொள்ளலாம்...
மொத்தத்தில் ஒரு குட்டியான கதைக்களத்தில் பல்வேறு கோணங்களில் நம்மை யோசிக்க வைப்பதே இந்தக் கதையின் வெற்றி...
வெறும் 32 பக்கங்களுக்குள் ஒரு கதையையும் சொல்லி ; அதனில் ஒரு விவாத மேடைக்கு இடம் அமைத்துத் தந்திருப்பதுமே கதாசிரியரின் வெற்றி தானே நண்பர்களே ?
Delete// வெற்றிகரமான தோல்வின்னு எடுத்துக்கலாம் //
Deleteஆமாம்மா ஆமாம். +1
// இனி ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு பதிவிலும் இந்த சாப்பாட்டு ராமப் பூனையினை இங்கே பார்த்திடலாம் ! Maybe an extra reason to visit this page ?! //
ReplyDeleteஆம் நீங்க ஈனா வினாண்ணாவ சொல்லவில்லை தானுங்களே சார்
😜
சாப்பாடா 😋😋😋
கேக்கவே நன்னா இருக்கே
காமிக்ஸும் கறிசோறும் இரு கண்களாச்சே எங்க சங்கத்துக்கு 🙏🏼🙏🏼🙏🏼
//ஆம் நீங்க ஈனா வினாண்ணாவ சொல்லவில்லை தானுங்களே//
Deleteஇன்னும் கொஞ்சம் விட்டால், காரபீல்டைப் போல அந்த சூப்பர்மார்கெட் ஷாப்பிங் வண்டியில், ஈனாவீனாவை உட்கார வைத்துத் தள்ளிக் கொண்டு போய் விடுவீர்கள் போலுள்ளதே சார் ?
பாவம் சார். அந்த வண்டியும் அதுல செயலரை வைச்சு தள்ளறவரும். 😜
Delete// அந்த சமுத்திரப் பயணத்திலிருந்து வெளிப்பட்ட போது பிரமிக்காது இருக்க முடியவில்லை - கதாசிரியரின் ஒவ்வொரு நுண்ணிய கற்பனைக்கும் சிறகுகளை நல்கியிருந்த ஓவியரை எண்ணி !! //
ReplyDeleteவாவ் 😍
கேட்கவே சூப்பரா இருக்குங்கோ சார்
எப்படா ஜனவரி வருமுன்னு காக்க வைச்சிட்டீங்களே சார் 😍😍😍
// And who else but TEX - அதிரடிகளோடு புத்தாண்டைத் தொடர்ந்திட ?! "சாத்தானின் சீடர்கள்" ஒரு 220 பக்க முழுநீள ஆக்ஷன் அதிரடி ! //
ReplyDeleteTex இருக்க பயமேன் 💪🏼💪🏼💪🏼
.
This comment has been removed by the author.
ReplyDeleteசூப்பர்
Deleteஅருமை நண்பரே..
Deleteஒவ்வொரு புதுச்சந்தா ரகத்துக்கும் 1 point என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள் சார் ; ஜம்போவுக்கும் 1 !
Deleteபராகுடா பராக் பராக்
ReplyDelete:-)
Deleteபராகுடா எப்ப வரும்ன்னு பராகு பார்த்து கிட்டே இருக்க போறேன்.
Deleteமதியில்லா மந்திரி
ReplyDeleteமுதல் கதையில் அல்வா கடிசன் என்கிற பாக்தன் விஞ்ஞானி " சப்பாத்தி போல தட்டையா இருக்கிற பூமியோட மத்தியில் இருப்பது பாக்தாத் " அண்ட பால்வெளி யை பற்றி அவர் கொடுக்கும் விளக்கமே அதிரடி சிரிப்பு.
அல்வ கடிசன் கண்டு பிடித்த விண்வெளி போகும் ஆனால் திரும்பி வரமுடியாத ராக்கெட்டில் சுல்தானை ஏற்றி அனுப்ப முயற்சி செய்யும் மதி மந்திரி, பிறகு என்ன நடக்கும் என்று கனிக்க நமக்கு ராக்கெட் சயின்ஸ் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
"சந்திரனை தொட்டு பார்க்கிற தூரத்துக்கு போகத் தயார்... ஆனாக்க பாக்தாதோட மார்கெட் வரைக்கும் போக முடியாதாக்கும்?"" என்ன பேச்சு இது என்று கடுப்பாகும் மந்திரயிடம்.
"ஆமா.. நிலாவுக்கு நடந்து போக தேவையில்லை தானே" என்ற கலிபாவின் லாஜிக் கான மதில் மற்றும் அவர்களின் சித்திரம் சிரிப்பு வெடி.
மந்திரயின் மானாக்கன்!
இரண்டாவது கதை : தூர தேசத்தில் இருக்கும் கோபக்கார ராஜவின் 32 வது மகனுக்கு நல்லறிவு வளரக்கூடியது கல்வி கற்பிக்கும்!!! பொறுப்பு மந்திரயிடம் ஒப்படைக்க படுகிறது.
அந்த பையனை டென்ஷன் செய்தால் அவருடைய அப்பா கோபம் தலைக்கேறி தன்னுடைய கலிபாவை கலி செய்து விடுவார் என்ற ஆசையில் ,அந்த பையனை கோபத்தை வரவைக்க மந்திரி அடிக்கும் லுட்டிதான் இரண்டாவது கதை.
கெத்தான அந்த பையன் மந்திரியை படுத்தும் பாடு கமெடி யின் உச்சம்.
கனவெல்லாம் கலிபா:
ஏதோச்சையாக ஒரு மந்திர வாதியை மந்திர காப்பாற்ற "நீ கானும் நல்ல கனவு நீ விருப்ப பட்டால் பலிக்கும்"எனறு வரம் கொடுப்பார்.அதன்பிறகு மந்திரி கனாம் ஒவ்வொரு கனவுகளும் சிரிப்பு ரனகளம்.
கடைசி கதையில் மந்திர வாதி ஒருவரிடம் வாங்கும் பென்சில் எதிரில் இருப்பவர்களை தத்ரூபமாக வரைந்து தான் கைபட கிழித்து விட்டால் , எதிரில் இருப்பவர் தூர தேசத்துக்கு சென்று விடுவார்.
கலிபாவை மந்திரி சரியாக வரையவில்லை என்று ஜல்ரா பாய் கூறும் போது "எந்த உலக புகழ்பெற்ற ஓவியர்கள் வரைந்தது மற்றவர்களுக்கு புரிந்து இருக்கிறது" என்று தன்னையே மெச்சி கொள்ளும் விதமே தனி காமெடி.
சூப்பர் விமர்சனம்
Delete/// "நீ கானும் நல்ல கனவு நீ விருப்ப பட்டால் பலிக்கும்"எனறு வரம் கொடுப்பார்.அதன்பிறகு மந்திரி கனாம் ஒவ்வொரு கனவுகளும் சிரிப்பு ரனகளம்.///
Deleteஹாஹாஹா...!
அதுவும் அந்த ஏ..டசக்கு டசக்கு டசக்கு டும்டும் ...
இப்ப நினைச்சாலும் சிரிப்பு வருது..!
இப்படியாப்பட்ட மந்திரிக்கு அடுத்த வருஷம் இடமில்லைனு நெனைக்கும்போது....,😭😭😭😭
DeleteAbsolutely - great laugh - one of the best Iznogoud albums. The icing on the December cakes. Well translated - Kudos Editor !!
Deleteசிறுகதைத் தொகுப்பு என்றாலும், அவை ஒட்டு மொத்தமாய் செமையாய் அமைவது குறிப்பிட்ட சில தருணங்களில் தான் ! We got lucky this time !!
Deleteவிரிவான விமர்சனம் அட்டகாசம் கணேஷ்குமார் சார் !!
@ Raghavan : Cinebook ஆங்கில ஆல்பத்துக்கே அந்தப் பெருமையின் பாதி சேர்ந்திட வேண்டும் !! அதிலிருந்து மொழிபெயர்ப்பது எப்போதுமே ஒரு ஜாலியான task தான் !
Delete
Deleteபேசாம எங்களை மாதிரி கார்ட்டூன் ரசிகர்களுக்கு ஆகஸ்ட்ல ஒரு கார்ட்டூன் ஸ்பெசல். மந்திரி, பென்னி, லக்கி, எல்லாரையும் சேத்தி தனி முன்பதிவுக்குனு ஒன்னு அறிவிச்சுடுங்க 😉
அப்புறம் எங்களை மாதிரி ஆளுக்கு ஒரு கதம்ப குண்டு புக்கு போட்டுருங்க...
Deleteஅப்புறம் ஸ்பேஸ் கதைகளை பற்றி ஒரு தொகுப்பும் போடுங்க...
அப்புறம்... அப்புறம்...
இருங்க யோசிச்சிட்டு வரேன்
இருங்க அவர் ஒன்னை மொதல்ல அப்ரூவ் பண்ணட்டும். அப்புறமா அடுத்ததை கேப்போம். இல்லன்னா எஸ்கேப் ஆயிடுவாரு.
Delete// பேசாம எங்களை மாதிரி கார்ட்டூன் ரசிகர்களுக்கு ஆகஸ்ட்ல ஒரு கார்ட்டூன் ஸ்பெசல். மந்திரி, பென்னி, லக்கி, எல்லாரையும் சேத்தி தனி முன்பதிவுக்குனு ஒன்னு அறிவிச்சுடுங்க 😉 //
Deleteஅதே அதே +1
பேசாம எங்களை மாதிரி கார்ட்டூன் ரசிகர்களுக்கு ஆகஸ்ட்ல ஒரு கார்ட்டூன் ஸ்பெசல். மந்திரி, பென்னி, லக்கி, எல்லாரையும் சேத்தி தனி முன்பதிவுக்குனு ஒன்னு அறிவிச்சுடுங்க 😉 //
Delete+11
// 2018-ல் இரத்தப் படலம் மட்டும் மெகா சைஸ் நந்தியாய் குறுக்கே பிரசன்னமாகியிராவிடின் - நடப்பாண்டின் துவக்கத்திலேயே இந்த ஆல்பம் நம்மிடையே ஆஜராகியிருக்கும். //
ReplyDeleteதெரிஞ்ச கதைதானே சார்,லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கேன்னு சந்தோஷப்பட வேண்டியதுதான்...
அப்படீங்கிறீங்க ? +1
DeleteThis comment has been removed by the author.
Deleteசாத்தானின் சீடர்கள் தலைப்பும் சரி அட்டைப்படமும் சரி அமர்க்களமாக உள்ளது .கடல் கொள்ளைக்காரர்கள் பற்றிய கதை ..பராகுடா ..எதிர்பார்ப்பை ஏகத்திற்கும் எகிறிவிட்டிருக்கிறது ..போதாக்குறைக்கு தோர்கலு ம் வருகிறார்.2019 ஆரம்பமே அட்டகாசம்தான்.2.0 reloaded version இனி பொறிபறக்கும் என்று காத்திருக்கிறேன் .
ReplyDeleteவரிக்கு வரி வழிமொழிகிறேன்..:-)
DeleteA job well begun is half done என்பார்கள் தானே சார் ? So ஆண்டினை அழகாய்த் துவங்கிடத் தான் அத்தனை மெனெக்கெடலும் !
Deleteஆனா என்னதான் ஆசிரியர் டீசரை தெறிக்க விட்டாலும் புத்தாண்டின் முதல் சாகஸம் எங்கள் உடன்பிறவா ரேஞ்சர் டெக்ஸ் உடன் தான் என்பதை இங்கே ஆணித்தரமாக சொல்லி கொள்கிறேன்..
ReplyDeleteடெக்ஸுக்கு எப்போ கரைவேட்டி வாங்குனீங்க தலீவரே ? சொல்லவே இல்லே ?
Deleteடெக்ஸ் இல்லாத சந்தா கம்பினேஷன் இந்த வருடம் இல்லை. அதனால் சந்தா குடும்பத்தில் இருந்து விலகி online குடும்பத்தில் ஐக்கியமாக முடிவெடுத்துள்ளேன்.
ReplyDeleteGanesh Kumar - I need the Tex set alone for my Friend. So if you are OK you pay the full SANTHAA and divert the TEX books (B) to me. We can ask Office to re-direct. I will transfer you the difference. Game ?
Delete@ Raghavan : சார்...அது சுகப்படாது ; நம்மாட்கள் எதையாச்சும், யாருக்காச்சும் மாற்றி அனுப்பி விட்டு சிக்கலாக்கி விடுவார்கள் ! தவிர சென்னைக்கொரு கூரியர் ; பெங்களூருக்கொரு கூரியரென்ற செலவும் தண்டமாகிப் போகும் !!
Delete@ Editor : அப்போ tex புத்தகங்களுக்கு அட்டை விலை தவிர கூறியருடன் சேர்த்து எவ்வளவு ஆகும் என்று தெரியப்படுத்துங்கள் சார்.
Delete@spGK
Deleteஆன்லைன்ல மற்ற எல்லா புக்கையும் தனியாக வாங்குவது உங்களுக்கு டெக்ஸ் சந்தாவை சேத்துகட்டுவதை விட அதிகம் வருட செலவு ஆகும். பேசாம சந்தாவை கட்டிட்டு புக்கை வாங்கிக்குங்க. வருடக் கடைசில எல்லா டெக்ஸ் புக்கையும் (மினி கலர் டெக்ஸ் உள்பட) உங்களிடமிருந்து ்நான் விலைக்கு வாங்கிக்கறேன். நீங்களும் மாதம் ஒரு தடவை படிச்சுட்டு டெக்ஸை கழுவி ஊத்தலாம். நம்ம எல்லாருக்குமே செம வின் வின் ஆப்சன் இது. டீலுக்கு நீங்க ஓகேயா?
இது நல்ல ஐடியா வா இருக்கே. நாளை சந்தா கட்டி விடுகிறேன்.
Deleteஆனா இந்த டீலிங்கின் யதார்த்தம் எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு !
Deleteபழையது:
ReplyDelete---------
1. காலன் தீர்த்த கணக்கு - இதில் டெக்ஸ் தன் மனைவி மற்றும் நவஜோக்கள் சாக காரணமாக இருந்த வில்லனை கடைசியில் பழி வாங்கி விடுகிறார். ஆனால் இவ்வளவு முக்கியமான கதையை எங்கோ ஆரம்பித்து
எங்கயோ முடித்தது ஏன் என்று தெரியவில்லை, சூப்பராக சொல்ல நினைத்து எங்கயோ கோட்டை விட்டது போன்ற எண்ணம் ஏற்படுகிறது.
2. தேடி வந்த தூக்கு கயிறு - மாடஸ்டியின் கலக்கல் சாகசம், இதில் மாடஸ்டி சாவின் நுனிக்கு சென்று உயிர் தப்பிக்கிறார், அதற்கு வெறும் அதிர்ஷ்டம் மட்டுமே காரணம். வழக்கமான ஆக்ஷன் கதை. இப்பொழுது
படிக்கும்போது மாடஸ்டி சொதப்பிய கதைகள் வெறும் சொற்பமே. எல்லா கதையும் சூப்பராக இருக்கிறது. இதனுடன் ஸ்பைடர் குள்ளன் - இது ஒரு மறுபதிப்பு ஆனால் இதை மெயின் கதையுடன் இனைந்து
வருகிறது.
புதியது
-------
1. வீரியனின் விரோதி - மாங்கூசின் ஒரிஜின் கதை. செம செம செம.. கிழி கிழி கிழி
2. ரிப்போர்ட்டர் ஜானி ஸ்பெஷல் -
ஓநாய் மனிதன் , ஊடு சூனியம் - இந்த இரு கதைகளுமே என்னிடம் இல்லை, முதன் முதலில் கலரில் படித்தது ரொம்ப அட்டகாசமாக இருந்தது.
ஓநாய் மனிதன் கதையில் கலர்கள் நார்மலாக இருந்தன, ஆனால் ஊடு சூனியம் கதைக்காகவே மங்கலாக மாற்றி அமைக்க பட்டு இருந்தது. இந்த கலர் வித்தியாசங்களை பார்ப்பதற்காகவே, நான் முன் கதையும் இந்த கதையும் மாத்தி மாத்தி compare பண்ணி கொண்டு இருந்தேன்.
வி ரியனின் விரோதி - XIII spin-offs குவியலுள் the best என்பேன் !
Deletenot a chance - பலரால் குழப்படி என்று ஒதுக்கித் தள்ளப்பட்ட ஸ்டீவ் ரோலண்ட் தான் ஆகச்சிறந்த ஆல்பம். XIII அருகே வைத்தபடி ஒரு முறை படித்துப் பார்க்கவும்.
DeleteI'm so so eagerly waiting for January books sir. Your preview too has heightened the expectations. My ever favorite heroes are largo and thorgal. It's been a year since last thorgal and I don't know how many times I have read it again and again. And barracuda too has so many high points as it seems. I have one question for you editor Sir what about the 1000 book of lion muthu comics ? I think it is due this year and I hope some special book and waiting for the announcement and pre-booking we need something very very special for the milestone.
ReplyDeleteமைல்கல்கள் தாமாய் வரட்டும் சார் ; நாமாய் விரட்டி விரட்டிப் போவானேன் ? லயன் 350 சீக்கிரமே காத்துள்ளது ! இப்போதைய இலக்காக அதை வைத்துக் கொள்வோமே ?
DeleteOK sir as u say. One more doubt for me regarding the points. Singathin siruvayathil Tex book a? Or the real "Singathin siruvayathil a? " clarify this please as I've to decide what to do with my loyalty points. If I want to buy the book with money instead of loyalty points am I allowed?
DeleteSorry no sir..merchandise related to loyalty points will not have a price tag to it !
Deleteடெக்ஸ் மட்டும்தனி சந்தாவாக இல்லாத காரணத்தால் சந்தா வேண்டாம் என்ற ஒரு சில நண்பர்களை டெக்ஸ் ப்ளஸ் சந்தா A வில் மட்டும் இணைய நண்பர்களை பரிந்துரைந்து உள்ளேன்..:-)
ReplyDeleteபார்டா !!
Deleteகாலனின் கானகம் :
ReplyDeleteமுதலில் வித்தியாசமான பாணி சித்திரங்களுக்கு பாராட்டுகள்.!
கதையும் நன்றாகத்தானே இருக்கு ..! இதை வெளியிட தயங்கியிருக்கவே வேண்டாம் சார்..!
ரொம்ப சிம்பிளான நேர்கோட்டுக் கதை (டெக்ஸோட ஷ்பெசாலிட்டியே அதானே) . பணக்காரத் தந்தை ஒருவர் தன் மகளின் காதலனை சந்திக்க காத்திருக்கையில் காதலன் கடத்தப்படுகிறான் ..!
இடையில் நுழையும் டெக்ஸ் காதலனை மீட்டு காதலியுடன் சேர்த்தாரா இல்லையா என்பதே கதை ..!
காதலன் ஜிம்மி பார்க்கருக்காக கோட்டீஸ்வரி மார்க்ரேட் அவ்வளவு உருகும்போதே ஜிம்மி தவறான ஆளாகத்தான் இருப்பான் என்று எளிதில் யூகித்துவிடலாம்.! இந்த இடத்தில் ..மார்க்ரேட்டின் தந்தையே ஜிம்மியை கடத்தியிருக்கலாம் என்ற ஒரு யூகமும் வந்து பொய்த்துப்போனது ..! ஆனாலும் க்ளைமாக்ஸில் மார்க்ரேட்டிடம் உண்மையை கூறாமலேயே முடித்திருக்கும் விதத்தை பாராட்டலாம்.!
எனக்கு இக்கதையில் ஒரேயொரு சிறிய சந்தேகம்தான் ....
கோட்டீஸ்வர பண்ணை அதிபரின் ஒரே மகளான மார்க்ரேட்டை திருமணம் செய்துகொள்ள ஜிம்மி பார்க்கருக்கு எந்த தடையும் இல்லை ..! மகளின் விருப்பத்தை நிறைவேற்ற தந்தையும் தயாராகவே இருக்கிறார்..! அவளை திருமணம் செய்து கொண்டாலே மொத்த சொத்துக்கும் ஜிம்மி வாரிசாகிவிடலாம் ..அப்படியிருக்கையில் பிசாத்து 20000 டாலர்களுக்காக பத்து போக்கிரிகளின் துணையுடன் ஜிம்மி தன்னைத்தானே கடத்திக்கொண்டு ப்ளாக்மெய்ல் செய்து என்னெத்தை சாதிக்க நினைத்தான் ..!
காலனின் கானகம் : காதலின் நாடகம்
// அப்படியிருக்கையில் பிசாத்து 20000 டாலர்களுக்காக பத்து போக்கிரிகளின் துணையுடன் ஜிம்மி தன்னைத்தானே கடத்திக்கொண்டு ப்ளாக்மெய்ல் செய்து என்னெத்தை சாதிக்க நினைத்தான் ..! //
Deleteஇந்த பாயிண்ட் கதையை ரொம்பவே பலவீனப்படுத்தி விட்டதாகவே தோன்றுகிறது,இதற்கு நாமே ஒரு வியாக்கியானத்தை வைத்துக் கொள்ள வேண்டியதுதான்...
இந்தக் கதை எனக்கு ஏற்படுத்திய ஜெர்க்கே இது தான் !! பயபுள்ள உரிமையோடு முழுச் சொத்தையும் அனுபவிக்க ரூட் க்ளியராக இருக்கும் போது கடத்தல் நாடகம் ; புடலங்காயென இத்தனை மெனெக்கெடுவானேன் ? என்ற ரோசனை தான் இதனை வெளியிடும் தயக்கமாக உருமாறியது !
Deleteஆனால் கதைக் கொள்முதல் ; மொழிபெயர்ப்புச் செலவுகள் ; அட்டைப்படத் தயாரிப்பு என நிறைய முடங்கியான பின்னே அதனைக் கடாசும் சக்தி இல்லாது போயிற்று நமக்கு !
// பயபுள்ள உரிமையோடு முழுச் சொத்தையும் அனுபவிக்க ரூட் க்ளியராக இருக்கும் போது கடத்தல் நாடகம் ; புடலங்காயென இத்தனை மெனெக்கெடுவானேன் //
Deleteதனது நண்பர்ஙளுக்காக கடைசியாக ஒரு முறை என எடுத்துக் கொள்ளலாமே?
///தனது நண்பர்ஙளுக்காக கடைசியாக ஒரு முறை என எடுத்துக் கொள்ளலாமே?///
Deleteஅந்த கும்பலில் ஜிம்மிக்கு பெரிதாக முக்கியத்துவம் இருப்பதாக தெரியவில்லையே பரணி.!
அவர்களுக்கு ஜிம்மி கடமைப்பட்டு இருப்பதாகவும் தெரியவில்லை.!
அப்படியே இருந்தாலும் பண்ணை அதிபரான பின்னர் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்திருக்க முடியுமே..!?
இது ஜிம்மி ஏதோ ஒரு த்ரில்லிங்கிற்காக செய்த வேலை என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்..!:-)
இந்த இலக்கியத்தை விவாதிக்க இவ்வளவு பண்டிதர்களா ? :-D
Deleteபாணபத்திர ஓணான்டிகளுக்கு பஞ்சமேது சாரே ..!! :-)
Delete// தனது நண்பர்ஙளுக்காக கடைசியாக ஒரு முறை என எடுத்துக் கொள்ளலாமே? //
Deleteஒருவேளை கையில் பல்க்காக ஒரு தொகை இருப்பு இருந்தால் கெத்தாக இருக்கலாம்,யாரையும் எதிர்பார்க்க தேவையில்லை என்று பார்க்கர் நினைத்திருக்கலாம்.
மனுஷனோட புத்திதான் அப்பப்போ நிலைத்தன்மை இல்லாமல் மாறுமாமே,அதனால நேர்வழிகள் இருப்பினும் குறுக்குசால் ஓட்டுவதில் பார்க்கருக்கு ஒரு குரூர திருப்தியோ என்னவோ?!
தவறான முடிவுகளால் பலவற்றை மனிதர்கள் இழப்பதை நடைமுறையிலேயே பார்க்கிறோம். கதையில் ஏற்படக் கூடாதா என்ன?
Deleteடெக்ஸ் கதைல ஏம்பா ரொம்ப லாஜிக் எதிர்பார்க்கிறீங்க? ஜாலியா டைம் பாஸா இருந்துச்சா? அதுவே போதும். டெக்ஸ் கதையெல்லாம் அனுபவிக்கனும். ஆராயக் கூடாது.
Point is Jimmy does not like that girl and does not want to live with her forever and only wants huge money - 20K USD in those times is huge money.
Deleteமகிஜி.. லாஜிக், டெக்ஸ் கதைக்கு மட்டுமல்ல, எந்த கதைக்கும் பார்க்க வேண்டாம் என்பதே என் நிலைப்பாடு..
DeletePossibly
Deleteஇம்மாதிரி லேடி கில்லர்களின் மனவோட்டம் இப்படித்தான் இருக்கும் என்பதை கணக்கில் எடுத்து கொள்ள தவறுகிறோமோ என்னவோ ?
பார்க்கரின் மனநிலை பற்றி பேச வேண்டுமாயின் ஒரு ப்ளேபாய் என்ன மாதிரி யோசிப்பான் என்பதாகவே இருக்கும் ..
லேடிகில்லர்கள் வன்முறையில் நாட்டமற்றவர்கள்...அதற்காகவே பார்க்கருக்கு ஆட்கள் துணை தேவைப்படுகிறது ....
தவிர இவர்களால் ஒரு பெண்ணுடன் வாழ்நாளை கழிப்பது என்பதெல்லாம் சாத்தியமற்றது....
இவர்கள் அன்பு நடிப்பு என்பதால் அதை தொடர்ந்துசெய்வது இயலாது ..பெரும்பாலும் மாட்டி கொள்வார்கள் ...அல்லது கழண்டு கொள்வார்கள் ..
வாழ்நாள் முழுதும் ஒரு பெண்ணின் கையை எதிர்பார்த்து இவர்களால் குப்பை கொட்ட முடியாது ..
பெண்ணை கொன்று சொத்தை கைப்பற்றும் எண்ணம் இவர்களுக்கு அறவே வராது ....கோழைகள் !!!!!(???)
பார்க்கர் இதை தன் மனதளவில் உணர்ந்து இருக்கத்தான் வேண்டும்...
கோடீஸ்வர மனைவிக்கு வாழ்க்கைப்பட்டு காலம் தள்ள போவதாக பார்க்கரே கதையில் சொன்னாலும் நிஜம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் ..
பன்னிரண்டாம் வகுப்பு படித்த போது படித்த ஒரு ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் நாவலின் முழுமையும் ஒரு கேஸநோவோ-ன் இம்மாதிரிகடத்தல் நாடக முயற்சி+ பணம் பறிப்பு + அதைவிட முக்கியம் அவனின் மனநிலை பற்றியதுதான் ...
இதற்கு மேலும் ப்ளேபாய் பற்றி அறியவேண்டுமாயின் ரீலோடட் ஈவி –இடம் கேட்கலாம் !!!! :)
// லாஜிக், டெக்ஸ் கதைக்கு மட்டுமல்ல, எந்த கதைக்கும் பார்க்க வேண்டாம் என்பதே என் நிலைப்பாடு.. //
Deleteஅதாவது கரூர் ஜி என்ன சொல்ல வர்றார்னா,காமிக்ஸ் என்பது லாஜிக் இல்லா மேஜிக்...அதானே ஜி...
// டெக்ஸ் கதைல ஏம்பா ரொம்ப லாஜிக் எதிர்பார்க்கிறீங்க? //
Deleteஎல்லாம் ஒரு டைம் பாஸ்தான் மஹி,ஒரு ஜாலியான விவாதம்தான் வேறென்ன....
டிசம்பர் மாத இதழ்களை இப்போதுதான் படித்து முடித்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் ஜம்போ ஸ்பெஷல் பாக்கி உள்ளது.
ReplyDeleteமதியில்லா மந்திரியின் கனவெல்லாம் கலீபா ஒரு நகைச்சுவை விருந்து. நேற்றிரவு படித்து தனிமையில் சத்தம் போட்டு சிரித்துக்கொண்டிருந்தேன். ஆங்கிலத்திலேயே இது Iznogoudன் சிறந்த ஆல்பங்களில் ஒன்று. தமிழிலும் நன்றாக வந்திருப்பது சிறப்பு. சமீபத்தில் இவ்வளவு நகைச்சுவை கலந்த ஆல்பம் வேறு படிக்கவில்லை.
--
லக்கி லுக் டபுள் ஆல்பமும் பல இடங்களில் வயிற்றைப் பதம் பார்த்தது. பயங்கர பொடியன் - அதில் பில்லியை விடுவிக்க வருபவன் ஒவ்வொரு முறையும் சொதப்புவது - a laugh riot.
--
Tex - காலனின் கானகம் - ஒரு short yet sweet story. ரொம்ப பிடிச்சிருக்கு. செம action. இதனை இவ்வளவு நாள் போடாமல் இழுத்தடித்தது ஏனோ? Personally எனக்கு இந்த கதை Dynamite ஸ்பெஷலை விட பிடித்தே இருந்தது.
--
ஆக மொத்தம் the regulars had a fitting sign-off. இம்மாத ரெகுலர்கள் நிச்சயம் சூப்பர்ஹிட்ஸ் !
மந்திரியாரை இம்முறை நானுமே ரொம்பவே ரசித்தேன் சார் ; அவரது பாணிக்கு இன்னும் நிறைய ரசிகர்கள் கிட்டாது போனது தான் புதிர்களுள் பிரதானமானது !!
Delete\\பயங்கர பொடியன் - அதில் பில்லியை விடுவிக்க வருபவன் ஒவ்வொரு முறையும் சொதப்புவது - a laugh riot\\
Deleteநானும் தான் ....
மேலும் ஒரு ஊரில் பொடியன் பில்லியை பாரத்து நடங்குவதும், ஒரு ஊரில் அவனை மொத்து மொத்து என்று மொத்துவதும். செம
Point is Jimmy does not like that girl and does not want to live with her forever and only wants huge money - 20K USD in those times is huge money.
ReplyDeleteBut that hasnt been clearly established in the story...i guess this could be a translation issue...its a clear amiss...it weakened the plot and atlast the story was like full of damaals and dumeels...I can understand why the editor postponed this..
Deleteதப்பு பன்னிட்டிங்க எடிட்டர் சார் தப்பு பன்னிப்புட்டிங்க... மொதல்ல தல டெக்ஸ் பற்றி எழுத்திட்டு அப்பால பராகுடாவோ இல்ல பறக்கும் குடாவோ எழுதி இருக்கோனும். உடனே பதிவ மாத்திபூடுங்க. இல்லாங்காட்டி நாளைக்கே சாந்தாவ கட்ட நெனச்சேன். இப்போ ரெண்டு நாள் கழிச்சிதான் கட்டுவேன். ஆமா சொல்லிபுட்டேன். ☺😊😁
ReplyDelete///நாளைக்கே சாந்தாவ கட்ட நெனச்சேன். இப்போ ரெண்டு நாள் கழிச்சிதான் கட்டுவேன். ஆமா சொல்லிபுட்டேன். ☺😊😁 ///
Delete:)))))
குடும்பத்தில் குழப்பம் வராமல் "சாந்தா" மேட்டரைப் பார்த்துக்கோங்க சார் !
Deleteவிஜயன் சார், லக்கி லூக் கிளாசிக்கில் பொடியனின் இரண்டு கதைகளையும் இணைத்து கொடுத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். குழந்தைகளுக்கு பில்லியின் டெரர் முகம் தெரிந்து அவர்கள் இன்னும் ரசித்து இருப்பார்கள்.
ReplyDeleteஇன்று தான் கவனித்தேன் பொடியன் பில்லி முதல் பாகம் சன் சைன் லைப்ரரியில் லக்கி ஸ்பெஷல் என்ற தொகுப்பில் ஏற்கனவே வந்து விட்டது.:-)
Deleteவிஜயன் சார், இரண்டு மூன்று கதைகள் இணைந்து வரும் குண்டு புத்தகங்களுக்கு புக் மார்க் ஆக பயன்படுத்திட நூலுடன் தயார் செய்யுங்களேன். சமீபத்திய இதழ்களில் இது மிஸ்ஸிங். அவ்வப்போது நீங்கள் சில நாயகர்களின் கார்டு கொடுத்தாலும் நூல்தான் எனக்கு பெஸ்ட்.
ReplyDelete+1. ஏன்னா இந்த மாதிரி வர கார்டெல்லாம் வீட்ல இருக்கிற ஒரு பவர்புல்லான ஆளு எங்கிட்ட இருந்து புடுங்கிக்கறாங்க☹️
Delete///அவ்வப்போது நீங்கள் சில நாயகர்களின் கார்டு கொடுத்தாலும் நூல்தான் எனக்கு பெஸ்ட்.///
Deleteஎனக்குமே ..!!
///இந்த மாதிரி வர கார்டெல்லாம் வீட்ல இருக்கிற ஒரு பவர்புல்லான ஆளு எங்கிட்ட இருந்து புடுங்கிக்கறாங்க☹️.///
எங்கிட்ட யாரும் பிடுங்கிறதில்லே ..மாறாக நானே பயந்துபோய் பரண் மேல போட்ருவேன்...!
(டைகர் கார்டையான்னு யாரும் கேட்றாதீகப்பு ..:-))
Present Sir
ReplyDeleteBarracuda is one hell of a selection and its going to be a success..
ReplyDelete'கனவெல்லாம் கலீபா'வில் மதிமந்திரி வழக்கத்தைக்காட்டிலும் பல படிகள் அதிகமாகவே ரசிக்கவும் சிரிக்கவும் வைத்தார்!! எல்லாக் கதைக்கருக்களுமே அவருக்கேற்ற தோதான களங்களாகிட - எல்லா பால்களையும் சிக்ஸருக்குத் தூக்கியிருக்கிறார் மதிமந்திரி!! அதற்கு மிக முக்கிய காரணம் - ரசித்து ரசித்து எழுதப்பட்ட வசனங்கள்!!! இதைவிடவும் சிறப்பாக எழுதிவிடமுடியாது எனும் அளவுக்கு பக்கத்துக்குப் பக்கம் - காமெடி ரணகளம்!!
ReplyDeleteமந்திரியாரின் ரசிகர்களிடையே இனி இதுவே நம்பர்-1 சூப்பர்ஹிட் இதழாக இருந்திடும்!!
பிரிஞ்சு போகும்போது மனதில் ஒரு நீங்காத தடத்தைத் பதிச்சுப்புட்டுப் போறீங்களே மந்திரியாரே.. இது நியாயமா?!
// மந்திரியாரின் ரசிகர்களிடையே இனி இதுவே நம்பர்-1 சூப்பர்ஹிட் இதழாக இருந்திடும்!! //
ReplyDeleteசரிதான் ஈ.வி,மிகவும் இரசித்த இதழ் இது...
///பிரிஞ்சு போகும்போது மனதில் ஒரு நீங்காத தடத்தைத் பதிச்சுப்புட்டுப் போறீங்களே மந்திரியாரே.. இது நியாயமா?!///
Deleteமெய்தான் ..!
இந்த வருடத்தில் இது இரண்டாவது முறை நடக்கிறது ..முதலாவது நீலப்பொடியர்கள்..!!
இந்த டான்ஸ் போட்டி ; பாட்டுப் போட்டியில் வருவது போலொரு wildcard slot இனிமேல் ஆண்டுக்கொன்று ஒதுக்கி வைப்போமா guys ? அருகதையுள்ள, ஆனால் ஏதேனும் காரணங்களினால் விடுபட்டுப் போன நாயகர்களை நுழைக்க சாத்தியப்படுமல்லவா ?
Deleteவிஜயன் சார், சூப்பர். அப்படியே அவர்கள் அந்த மாத விற்பனையிலும் சாதித்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி.
DeleteWildcard slot வருவதற்கு முழு சம்மதம். அதுவும் முழுவதும் cartoon னாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி.
Delete///இந்த டான்ஸ் போட்டி ; பாட்டுப் போட்டியில் வருவது போலொரு wildcard slot இனிமேல் ஆண்டுக்கொன்று ஒதுக்கி வைப்போமா guys ? அருகதையுள்ள, ஆனால் ஏதேனும் காரணங்களினால் விடுபட்டுப் போன நாயகர்களை நுழைக்க சாத்தியப்படுமல்லவா ?///
Deleteநல்ல யோசனையாக தெரிகிறதே..!?
Wildcard slotல் முதல் நாயகராக ஜில் ஜோர்டானுக்கு எனது வாக்கை செலுத்திகிறேன் சார்...!
புதிய வரவுகள் உற்சாகமளிக்கின்றன.சிங்கத்தின்சிறுவயதில் தனியாக கிடைக குமா மறுபதிப்புகளில சில புத்தகங்கள் இரும்புகை மாயாவி-மந்திரவித்தை,கொலைகாரகுள்ளநர்ரி,கொள்ளைகாரபிசாசு,பாதாளுலகம,ஒற்றைகண்மர்ம்ம்,லாரன்ஸ்டேவீட்- பார்முலாதிருடர்கள்,காணாமல் போன கடல்,போன்றவை.
ReplyDelete்,
நமது வலைத்தளத்தில் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ள புக்குகள் மாத்திரமே நம்மிடம் உள்ளன சார் !
Deleteஒரு சிங்கிள் ஷாட், க்ளோஸ் -அப்பில் முழு பக்கத்தையும் ஆக்ரமிப்பது நமது காமிக்ஸில் இதுவே முதல்முறை என்று நினைக்கிறேன். அதிலும் கருப்பு பிண்ணணியில் எழுத்துக்களை சிகப்பில் படரவிட்டிருப்பது கொஞ்சம் மிரட்சியைக் கூட்டுகிறது.
ReplyDeleteஒற்றைக் கண்ணோடு , முக்காடுபோட்டு முக்கால் பாகத்தில் நடுநாயகமாக இருந்தாலும் அவர் நாயகனா? என்பதே முன்னிருக்கும் கேள்வி.
எந்தவித உணர்ச்சியைக் காட்டாத அந்த முகம் ஆயிரம் மர்மங்களை மறைத்துள்ளது.
ஒரு கண் மறைக்கப்பட்டும், மறுகண் இருண்டு கிடந்தாலும் பார்வையின் தீட்சண்யம், தயவுதாட்சணத்திற்க்கு இடமில்லை என உரைக்கிறது.
முகத்தில், குறுக்குமறுக்காக உள்ள விழுப்புண்கள் , அந்த ஆசாமியின் மீதான எண்ணங்களைத் தூய்மையாக்குகிறது.
கம்பீரமான முகத்தின் மீசையும், தாடியும் 'தகுதி உள்ளதே தப்பிப் பிழைக்கும்' என்னும் விகுதிக்கு விடையாக உள்ளது.
சாதாரணமான மெல்லிய திகிலொன்று மெது, மெதுவாக பூதாகரமாகி மெல்ல, மெல்ல நம்மையும் ஆக்ரமிப்பது போலொரு எண்ணம்.
அட்டைப் படத்திலேயே ஆயிரம் விசயங்களை அடக்கி அவையடக்கத்தோடு, வித்தியாச அனுபவத்தை தருவது தோர்கலின் ஸ்டைல். கிட்டத்தட்ட அதே ஃபீலிங் பாரகுடா அட்டைப்படத்திலே தெரிகிறது.
எனவே,
பாரகுடா தோர்கலுக்கு கடுமையான போட்டியை உண்டுபண்ணும் என கண்டுகொண்டேன்.
கூட வில்லரும் கைகோர்ப்பதால்,
2019ன் முதல் இதழ்களே ராக்கெட் வேகத்திற்கு பிள்ளையார் சுழி போடும் என உறுதிபடுகிறது.
@GP...
Deleteசெம...
கோவிந்தா @ அட்டைப் படத்திற்கே விமர்சனம். போட்டு தாக்குங்கள்.
Delete@GP
Deleteஉங்க அட்டைப்பட விமர்சனத்தைப் படிக்கும்போதே அப்படியே புகையா கெளம்பற மாதிரியும், தூரத்துல ஒரு நாய் ஊஊஊஊ'ன்னு கத்துறாப்புலயும் இருக்கே!!
@ G P
Deleteஉங்க அட்டைப்பட விமர்சனத்தைப் படிக்கும்போதே காத்துல லேசா மல்லியப்பூ வாசம் வீசுறமாதிரியும் கதவு ஜன்னல்லாம் படபடன்னு அடிச்சுக்கிற மாதிரியும் இருக்கே..!!
லகலகலகலகலக...!
Deleteஹாஹா...ஹாஹா...ஹாஹா..!
ஹேஹே..ஹேஹே..ஹேஹே...!
இந்த அட்டைப்பட டிசைனை ஒரு blow up போட்டுத் தந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன் !!
Deleteஎங்க வீட்டில் மாட்ட முடியாது சார்.
Deleteகாமிக்ஸ் குறள்
ReplyDelete--------------------------
படிக்க பழுதற படித்தவை படித்தபின்
தளத்தில் வந்து எழுதுக
இந்தா இந்தா என்று வீட்டிற்கே வரும் லயனுக்கு
சந்தா கட்டி மகிழ்வீர்
எக்காமிக்ஸ் யார்யார் கை இருப்பினும் அக்காமிக்ஸ்
லயன் முத்தாயின் நன்று
கடைகளால் ஆகாதெனினும் சந்தா வீட்டுக்கே
வரவழைக்கும் காமிக்சை
எக்காமிக்ஸ் படித்தோர்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
ஸ்கேன் காமிக்ஸ் படித்தோர்க்கே
டெக்ஸ் இனிது டைகர் இனிது என்பர் 13
ரத்தப்படலம் வண்ணத்தில் படிக்காதோர்
செம்ம...!!!!
Deleteஅருமை...
Delete@நச்சினார்க்கினியன்
Deleteபின்றீங்க புலவரே!!! அட்டகாசம்!!
சூப்பர்...!
Deleteஷப்பா....தூள் கிளப்புறீங்களே சார் !!
Deleteடெக்ஸ் இனிது டைகர் இனிது என்பர் 13
Deleteரத்தப்படலம் வண்ணத்தில் படிக்காதோர்\\\
பாடலில் பிழை உள்ளது. மிண்ணும் மரணம் XIII விட ஆக சிறந்த படைப்பு.
///படிக்க பழுதற படித்தவை படித்தபின்
Deleteதளத்தில் வந்து எழுதுக ///
பழுதற படிக்கிறா மாதிரியே, பழுதற எழுதுக அப்படீன்னும் சொல்லிடுங்க புலவரே... அதுவும் நம்ம ஸ்டீல் க்ளா காதுல வுழுகிறா மாதிரி நச்சின்னு சொல்லிப்புடுங்க!
டெக்ஸ் மெபிஸ்டோ, யுமா கதைகளையும் போடுங்க எடிட்டர் சார்வாள். புண்ணியம போகும்.
ReplyDeleteசேர்த்து வைத்திருப்பதே சொற்பம் எனும் போது, அதையும் போகச் செய்ய வழி தேடுவானேன் சார் ?
Delete